PDA

View Full Version : Makkal thilagam mgr part 7



Pages : 1 2 3 4 5 6 [7] 8 9 10 11 12 13 14 15 16

fidowag
14th January 2014, 02:02 PM
காலஞ்சென்ற நடிகை அஞ்சலிதேவி அவர்கள், புரட்சி நடிகருடன் சர்வாதிகாரி,மன்னாதி மன்னன்,சக்கரவர்த்தி திருமகள்,உரிமைக்குரல்
ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையில் துணை தலைவராகவும்,
புரட்சி நடிகருக்கு பிறகு, தென்னிந்திய நடிகர் சங்க தலைவராக 1959 முதல் 1960 வரை இருந்தபோது ,மக்கள் திலகத்திடம் கலந்து ஆலோசித்து நடிகர் சங்க லோகோவை தேர்வு செய்தார். -தமிழ் இந்து.

அன்னாருக்கு ,அனைத்துலக எம்.ஜி.ஆர். பொதுநல சங்கம் மற்றும் மற்ற அமைப்புகளின் சார்பாக நமது ஆழ்ந்த
இரங்கலை அவரின் குடும்பத்தினருக்கு தெரிவித்து கொள்கிறோம்.

http://i39.tinypic.com/2rnhgxu.jpg

fidowag
14th January 2014, 02:04 PM
http://i44.tinypic.com/2cf4buu.jpg

ainefal
14th January 2014, 02:22 PM
http://i44.tinypic.com/m98045.jpg
http://i44.tinypic.com/2yxqkw7.jpg

In my opnion, Almighty would have never accepted such storyline and the title. Let "Time Pass" do "some other work" for time pass.

Anyway, thanks for the posting Sir.

fidowag
14th January 2014, 02:25 PM
http://i41.tinypic.com/16igw92.jpg

விண் தொலைகாட்சியில் , நீதிக்காக என்கிற நிகழ்ச்சியில் முன்னாள்
சுகாதார அமைச்சர்,திரு.எச் .வி. ஹண்டே ,மற்றும், திரு.லியாகத்
அலி கான் அவர்களின் பேட்டி இடம் பெற்றது.

புரட்சி தலைவருடன்,தமது அனுபவங்கள்,அவரின் அறிவுரைகள்,திறமைகள், ஆட்சி செயல்பாடுகள், நிர்வாகத்திறமை,
தொண்டர்களை மதிக்கும் பாங்கு, சக தலைவர்களை அனுசரித்து போவது, மத்திய மாநில அரசுகளுடன் சுமுக உறவு, எந்த விஷயத்திலும் பொதுமக்களுக்கு பங்கம் வராமல் பாதுகாப்பது, ஆரம்ப காலத்தில் முதல்வரானவுடன் எதிர்கட்சிகளை சமாளிக்கும் விதம், ஏழைகளுக்கு
எண்ணற்ற உதவிகள், நலத்திட்டங்கள், போன்ற பலவற்றில் எம்.ஜி.ஆர்.
அவர்களது செயல்பாடுகள் குறித்த கேள்விகளுக்கு பிரமாதமாக
பதில் அளித்தனர்.

குறிப்பாக,அப்போதைய ஆந்திர முதல்வர் திரு.என்.டி.ஆரிடம், தெலுங்கு கங்கை குடிநீர் சென்னைக்கு கொண்டு வருதல் பற்றிய உரையாடல்.

கர்நாடக முதல்வர் திரு.குண்டுராவ் அவரை அணுகி, உடனடியாக
காவிரி நீர் 10 டி.எம்.சி. கொண்டு வர ஏற்பாடு செய்தது ஆகியன.

fidowag
14th January 2014, 02:29 PM
http://i39.tinypic.com/33ueh5c.jpg


விண் தொலைகாட்சியில், நீதிக்காக நிகழ்ச்சியின் போது, இடையே
கீழ்கண்ட வாசகங்கள் புரட்சி தலைவரை பெருமை படுத்தும் விதம்
ஒளிபரப்பாயின .

1.படப்பாடல்கள் ஒவ்வொன்றும் பாடம்.

2.வார்த்தைக்குள் அடைபடாத வசீகரத்திற்கு சொந்தக்காரர்.

3.இன்றும் பலரது இல்லங்களிலும், உள்ளங்களிலும் சுடர்விடும் ஒளிவிளக்கு .

4.சோர்வுற்ற மனிதர்களுக்கு இவரது படங்கள்/பாடல்கள் ஒரு உற்சாக ஊற்று.

5.எட்டாவது வள்ளல் என பெயர் பெற்றவர்.

6.மக்களுக்கு அறிவுரைகளை,திரைத்துறை மூலம் வழங்கிய திருவள்ளுவர் .

7.அரசாட்சியை பிடிப்பதற்காக திரைத்துறையை ஏணியாக ,சரியான
முறையில் பயன்படுத்திய புரட்சியாளர்.

8.மறைந்தும் மறையாமல் மக்கள் மனதில் வாழும் தலைவர்.

9.மக்களின் நாடித்துடிப்பை துல்லியமாக கணித்த, அறிந்த தலைவர்.

10. இளைஞர்களையும், பெண்களையும் எளிதில் ஈர்க்ககூடிய மாபெரும் மக்கள் சக்தி.

11.தன வீட்டுக்கு வந்தவரை நன்கு உபசரிப்பதில் வல்லவர்.

12.பிறர் உண்டு பசியாறுவதை தான் கண்டு மகிழ்ந்து பசியாறும் உன்னத தலைவர்.


ஆர். லோகநாதன்.

ainefal
14th January 2014, 03:10 PM
http://www.youtube.com/watch?v=D9MQXGO6Skk

Richardsof
14th January 2014, 04:37 PM
பொங்கல் .....
http://i41.tinypic.com/f1efzn.jpg

சென்னையில் மக்கள் திலகத்தின் ராமாவரம் தோட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் தினத்தன்று திரைஉலக - அரசியல் உலக பிரமுகர்கள் பலரும் , ரசிகர்களும்
தொண்டர்களும் அவருடைய வீட்டிற்கு வந்து பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்து விட்டும் ,மக்கள் திலகம் அளிக்கும் பரிசினையும் பெற்று ஆனந்த வெள்ளத்தில்
மிதந்த அந்த இனிய நாட்கள் மீண்டும் வருமா ?

Scottkaz
14th January 2014, 05:40 PM
WISH YOU HAPPY PONGAL FOR ALL
http://i41.tinypic.com/sfdt93.jpg

ENDRUM ENGAL KULADEIVAM MGR

oygateedat
14th January 2014, 05:50 PM
VILANKURICHI ROAD, NEAR SIGNAL, COIMBATORE

http://i44.tinypic.com/2cp6sxx.jpg

oygateedat
14th January 2014, 05:53 PM
http://i41.tinypic.com/1zl5coz.jpg

oygateedat
14th January 2014, 05:54 PM
நேற்று முன்தினம் கோவை பீளமேடு VILANKURICHI சாலையில் சென்றபோது கண்ணில்பட்ட தலைவர் நினைவு நாள் சுவரொட்டிகள் சில. ஆச்சரியம் என்னவென்றால் சுமார் 20 நாட்கள் சென்றும் வேறு எந்த போஸ்டர்களையும் தலைவர் போஸ்டர் மீது ஒட்டவில்லை
http://i41.tinypic.com/2m5njt0.jpg

oygateedat
14th January 2014, 05:54 PM
http://i44.tinypic.com/xbfdx0.jpg

oygateedat
14th January 2014, 05:57 PM
http://i43.tinypic.com/2d11xfs.jpg

Richardsof
14th January 2014, 06:01 PM
courtesy- kanndasan -varalaru
‘ராணி சம்யுக்தா’ வரலாற்றுப் படம் ‘

இவற்றுள் 1962 – ஆம் ஆண்டு திருநாளில் வெளியான படமே ராணி சம்யுக்தா. சரஸ்வதி பிக்சர்ஸ் தயாரித்து, டி. யோகானந்த் இயக்கிய இப்படத்தின், திரைக்கதை, வசனம், பாடல்கள் அனைத்தையும் எழுதியவர் கவியரசர் கண்ணதாசனே.

முதல் சுற்றில் முழு வெற்றியை எட்டாத இப்படம். பின்னர் கவிஞரின் தெவிட்டாத இன்பத்தைத் தேனாய்ப் பொழிந்த கருத்து நிறைந்த பாடல்களுக்காகவும்; கனிரசமான வசனங்களுக்காகவும் தமிழகமெங்கும் வெற்றிக்கொடியை ஏந்திப் பவனி வந்தது.

ராணி சம்யுக்தாவாக நாட்டியப் பேரொளி பத்மினியும், பிருதிவிராஜனாகப் புரட்சி நடிகரும், ஜெயச்சந்திரனாக சகஸ்வர நாமமும், கோரி முகமதுவாக எம்.என். நம்பியாரும் நன்றாகவே நடித்திருந்தனர்.

கொள்கைப் பாடல்
இப்படத்தில் புரட்சி நடிகரின் அன்றைய இயக்கமான தி.மு.கழகத்தின் தேர்தல் சின்னமான உதயசூரியன் சின்னத்தை, நாட்டு மக்களின் உள்ளத்தில் பதிய வைக்கும் எண்ணத்தில் கவியரசர் ஒரு பாடலை எழுதினார்.

அதனை இப்போது காண்போமா?

“இதழிரண்டும் பாடட்டும்! இமையிரண்டும் மூடட்டும்!
உதயசூரியன் மலரும்போது உனது கண்கள் மலரட்டும்!”

இதுவோர் தாய் பாடும் தத்துவத் தாலாட்டு. கணவனோ போர்க்களத்தில் பகைவர்களைப் பாய்ந்து, பாய்ந்து வெட்டிச் சாய்த்து வெற்றி காணச் சென்றுள்ளான். அவனது தலைவியோ, பெற்ற மகனைத் தொட்டிலில் இட்டு, அந்த மகன் துயர் நீங்கிச் சுகமாக நித்திரை கொள்ளத் தாலாட்டுகிறாள்.

அந்தத் தலைவியாம் தாய் பாடும் தாலாட்டில், தென்றலென இன்ப சுகம் மிதந்து வரும்படிக் கவிஞர் எழுதிய நயமான வரிகளைக் கண்டீர்களா?

ஓர் இயக்கத்தின் சின்னத்திற்கு இதைவிட எப்படி ஏற்றம் பெற்றுத்தர முடியும்?

இந்த இனிய கீதம் இன்னும் தொடரும் விதத்தை நம் இதயங்கள் அறிய வேண்டாமா? தொடரும் கீதத்தை அறிந்திட வாருக்கள்!

“புதிய காலம் பிறந்ததென்று போர்முகத்தில் ஏறிநின்று
பகைவர் வீழப் போர்புரியும் நாட்டிலே – நீயும்
பழம்பெருமை விளக்க வந்தாய் வீட்டிலே – கண்ணே!
இதழிரண்டும் பாடட்டும்! இமையிரண்டும் மூடட்டும்!
உதயசூரியன் மலரும்போது உனது கண்கள் மலரட்டும்!”

அறிந்தீர்களா! அற்புதமான கீதத்தை….!

பழமைமிகு வரலாற்றுக்கதை கொண்ட திரைப்படத்தில், நாட்டு நடப்பினை நடமாட வைத்து, தமது இயக்கம் வளரும் தன்மையையும் இலைமறைக்காயாகக் காட்டி, தமது இயக்கச் சின்னத்தையும் நாட்டு மக்களின் இதயங்களில் இடம்பெறச் செய்த அற்புதத்தை அறிந்தீர்கள்!

இப்படி, திரைப்பட உலகில், கொண்ட கொள்கைகளை எடுத்துக்கூறி வளர்க்க எல்லோராலும் இயலுமா? அது எம்.ஜி.ஆர். போன்ற ஏற்றமிகு நடிகராலும், கண்ணதாசன் போன்ற கருத்தாழம் கொண்ட கவிஞராலும் மட்டுமே முடியும்.

நெஞ்சிருக்கும் வரைக்கும்!
‘ராணி சம்யுக்தா’ படத்தின் பாடல்கள் அனைத்துமே நம் நெஞ்சங்களை நெகிழவைத்து, சுவைகூட்டும் பாடல்களே!

பாரதி கண்ட புதுமைப்பெண்கள் புதிய வரவாய், புறப்பட்டு வரும் நாட்டிலே, பெண்கள் படும் இன்னல்களை நம் கவிஞர் கண்ணதாசன் பட்டியலிட்டுக் காட்டும் பாங்கினையும், பி. சுசீலா தம் குரலில் வேதனையோடு வெளிப்படுத்துவதையும் கேட்போமே!

“சித்திரத்தில் பெண்ணெழுதி
சீர்படுத்தும் மாநிலமே!
ஜீவனுள்ள பெண்ணினத்தை
வாழவிட மாட்டாயோ?”

பாடலின் தொடக்கத்திலேயே வெடித்துக் கிளம்பும் புரட்சியின் வேகம் புரிகிறதா?

இவைபோன்ற பாடல்களைப் புரட்சி நடிகர் தலைவரைப் பற்றி இப்படத்தின் நாயகி கூறுவதாகக் கவிஞர் எழுதிய காவிய கீதம் ஒன்றையும் கேட்போமே!

“நெஞ்சிருக்கும் வரைக்கம் நினைவிருக்கும் – அந்த
நினைவினில் அவர் முகம் நிறைந்திருக்கும் – எந்தன்
நெஞ்சிருக்கும் வரைக்கும் நினைவிருக்கும் – அந்த
நினைவினில் அவர் முகம் நிறைந்திருக்கும்!”

எம்.ஜி.ஆர். புகழை, என்றைக்கும் எடுத்துச் சொல்லும் காவிய கீதந்தானே இது.

இப்போதும் மக்கள் நெஞ்சங்கள் சொல்லும் உண்மை இதுதானே!

இன்னும் அவர்தோற்றம் எப்படியாம்?

“கொஞ்சும் இளமை குடியிருக்கும் – பார்வை
குறுகுறுக்கும்! மேனி பரபரக்கும்!”

- என்றும் பதினாறு எம்.ஜி.ஆரைக் கவிஞர் வேறு எப்படிச் சொல்லுவார்?

“வாளினிலே ஒருகை மலர்ந்திருக்கும்!”

என்றும்,

“தோளினுக்கும் மலைக்கும் தொடர்பிருக்கும்!”

என்றும், வெற்றித்திருமகன் எம்.ஜி.ஆரைக் கவியரசர் போற்றிப் புகழ்ந்திடுவார். புகழ்வதென்ன? உண்மை நிலையைத்தானே உலகறியக் கவிவேந்தன் கவிதை, சொல்லிச் சென்றது.

Richardsof
14th January 2014, 06:04 PM
courtesy- kannadasan varalaru
உன்னையறிந்தால்…?…..!
1964 – ஆம் ஆண்டு வெளிவந்த புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர் படங்கள் ஏழு. அவற்றில் வேட்டைக்காரன் என் கடமை, பணக்காரக் குடும்பம், தாயின் மடியில் ஆகிய நான்கு படங்களுக்குக் கண்ணதாசன் பாடல்களை எழுதினார்.

‘எம்.ஜி.ஆருக்குக் காதல் காட்சிகளில் நடிக்கத் தெரியாது!’ என்று, விளம்பரமிக்க சினிமா செய்திகளை அதிகம் வெளியிடும் நாளிதழ் எழுதிவிட்ட செய்தியொன்று, எம்.ஜி.ஆருக்குப் பெரும் மனத்தாங்கலை ஏற்படுத்தியிருந்த நேரம்.

தேவர் பிலிம்ஸ் சார்பில் ‘வேட்டைக்காரன்’ படம் தயாரித்துக் கொண்டிருந்த சமயமும் அதுவே. 1957 – ஆம் ஆண்டு ‘மகாதேவி’ படத்திற்குப் பின்னர், 1963 – ஆம் ஆண்டு ‘பரிசு’ படத்தில் நடித்த ‘நடிகையர் திலகம்’ சாவித்திரி எம்.ஜி.ஆரோடு இணைந்து நடிக்கும் படமும் அதுவே.

கவிஞருக்கு, சூழ்நிலையின் தன்மை புரிந்தது. எம்.ஜி.ஆரும் சற்று மாறுபட்ட ஜேம்ஸ்பாண்ட் பாணி உடையில் கம்பீரத்தோடு புலியை வேட்டையாடும் வேட்டைக்காரனாக நடித்தார்.

கவிஞருக்குச் சொல்லவா வேண்ண்டும்? படத்தில் காதல் ரசம் சொட்டும் பாடல்களையும், நீதி சொல்லும் பாடல்களையும், கே.வி. மகாதேவன் இசையில் கேட்போர் மயங்கும் வகையில் வாரி வாரித் தந்தார்.

“என்……
கண்ணனுக் கெத்தனை கோவிலோ?
காவலில் எத்தனை தெய்வமோ?
மன்னனுக் கெத்தனை உள்ளமோ?
மனதில் எத்தனை வெள்ளமோ?…”

எனத் தொடங்கி,

“என் கண்ணன் தொட்டது பொன்னாகும்! – அவன்
கனிந்த புன்னகை பெண்ணாகும்!
மங்கை எனக்குக் கண்ணாகும்!
மறந்து விட்டால் என்னாகும்?”

என்று, கதையின் நாயகன் எம்.ஜி.ஆர். புகழுபாடும் கீதமாக, பி. சுசீலாவின் குரலில், நாயகி பாடுவதாக முதல் பாடல் படத்தில் எழுந்தது.

இரண்டாவதாக,

ஆண்: மஞ்சள் முகமே வருக!
மங்கல விளக்கே வருக!

பெண்: கொஞ்சும் தமிழே வருக!
கோடான கோடி தருக!”

என, எம்.ஜி.ஆரின், பழுதுபடாத அன்றைய குரலைக் கொஞ்சும் தமிழாக்கிக் கோடான கோடி இன்பம் தரும் கோமானாக்கி’

“கேட்டாலும் காதல் கிடைக்கும் – மனம்
கேளாமல் அள்ளிக் கொடுக்கும்”

என்றே, அவரைக் காதல் தலைவனாக்கியே பாடல் ஒலிக்கும்.

மூன்றாவதாக,

பெண்: “கதாநாயகன் கதை சொன்னான்! – அந்தக்
கண்ணுக்குள்ளும் இந்தப்பெண்ணுக்குள்ளும் ஒரு
கதாநாயகன் கதை சொன்னான்!”

இப்படிக் கண்ணுக்குள்ளும், பெண்ணுக்குள்ளும் காதல் கதை பேசும் கதாநாயகன்;

பெண்: “காவிரிக் கரைக்கு வரச் சொன்னான் – இளங்
கன்னத்திலே ஒன்று தரச் சொன்னான்!
கையுடன் கைகளைச்
சேர்த்துக் கொண்டான் – எனைக்
கட்டிக் கொண்டான்! நெஞ்சில் ஒட்டிக் கொண்டான்!”

எனக் ‘காவிரிக்கரையில் இளமை தவழும் தன் கன்னத்தில் ஒன்று தரச் சொன்னான்!’ என்றே, நாயகனின் காதல் ரசனை பற்றிய பாடலைத் தொடர்ந்து,

காதல் மொழிகளைக் கவிதையில் கவிஞர் வாரி வாரி இறைத்து,

ஆண்: “மாமல்லபுரத்துக் கடல் அருகே – இந்த
மங்கை இருந்தாள் என்னருகே!
பார்த்துக் கொண்டிருந்தது வான்நிலவு – நாங்கள்
படித்துக் கொண்டிருந்தோம் தேன்நிலவு!”

என, இளைய நெஞ்சங்களில் இன்பக் கோயிலையே, கண்ணதாசன் கட்டி முடிப்பார்.

எம்.ஜி.ஆருக்கா, காதல் காட்சிகளில் நடிக்கத் தெரியாது! காதல் வேட்டையாடும் கட்டிளங்காளையாம் வேட்டைக்காரனைப் போய்ப் பாருங்கள்! என்ற வேகத்தையே இப்பாடல் காட்சிகள் எழுப்பியது.



அந்த அளவிற்கு, அன்றைய இளைய சமுதாயத்தை, சாதாரண நிலையில் தயாரிக்கப்பட்ட ‘வேட்டைக்காரன்’ படம் ஈர்த்துப் பெரும் வெற்றியைப் படைத்தது.

இப்படத்தில், இன்னும்,

பெண்: “ஹூம்…ஹூம்….ஹூம்!
மெதுவா மெதுவா தொடலாமா?
மேனியிலே கை படலாமா?”

என்று தொடரும் பாடலில்,

பெண்: “வேட்டைக்கு வந்தது நினைவில்லையா?
நினைவில்லையா? – இங்கு
வேறொரு புள்ளிமான் கிடைக்கல்லையா?
கிடைக்கல்லையா?
காட்டுக்குள்ளே இந்த நாடகமா?
காதலென்றால் இந்த அவசரமா? அவசரமா?”

என்றே எழுந்து வரும் வரிகளும்:

ஆண்: “குளிர்ந்த காற்றாய் மாறட்டுமா? மாறட்டுமா – உன்
கூந்தலில் நடனம் ஆடட்டுமா? ஆடட்டுமா!
கொல்லும் கண்களை வெல்லட்டுமா?
கோடிக்கதைகள் சொல்லட்டுமா?”

இப்படித் தொடர்ந்து கவிஞர் தொடுத்த கவிதை வரிகளும், டி.எம்.எஸ். பி. சுசீலாவின் இனிய குரல்களில் இனிமையில், மக்கள் திலகம் எம்.ஜி.ஆர், நடியையர் திலகம் சாவித்திரியின் பொருத்தமான நடிப்பில், காதல் பூகம்பத்தையே எழுப்பிப் புதிய வரலாற்றையே படைத்தது எனலாம்.

சரி வெறும் காதலை மட்டுமா சொல்லுவார் எம்.ஜி.ஆர்? சமுதாயத்திற்குச் சொல்லவேண்டிய சமாச்சாரங்களையும் சொல்லுவாரே! பின் என்ன சொல்லாமலா விடுவார்?

அதற்கும் கண்ணதாசனின், எண்ணக் கருத்துகள் எழுந்து வரும் விதம் காணீர்!

“வெள்ளிநிலா முற்றத்திலே
விளக்கெரிய விளக்கெரிய
உள்ள மென்னும் தாமரையில்
உனையெடுத்துக் கொண்டு வந்தேன்!”

பாடலின் ஆரம்பத்தைப் பார்த்தீர்கள்!

வேட்டைக்காரன் பாபு, தன் காதல் தலைவியை, வாழ்க்கைத் துணைவியாக்கி, அதன் வரப்பிராதமாக வந்த மகன் ராஜாவை அன்புடன் அணைத்து வளர்க்கிறார்.

காரணம், வாழ்க்கைத் துணைவயான காதல் தலைவி, காசநோயின் தாக்குதலில் தத்தளிக்கிறாள். எனவேதான் பிள்ளைக்குத் தந்தையான பாபுவே, தாயின் அன்பையும் சேர்த்து ஊட்டும் கடமையின் சொந்தக்காரராகிறார்.

உள்ளமெனும் தாமரையில் கொண்டு வந்த மகனுக்கு உணவூட்டிக் கொண்டே, நல்லுணர்வுகளை ஊட்டிட, நன்னெறிகள் வளர்ந்திட வாழ்த்தியே பாபு பாடுகிறார்.

வாழ்த்துவதைப் பாருங்களேன்!

வேலெடுக்கும் மரபிலே
வீரம் செறிந்த மண்ணிலே
பால் குடிக்க வந்தவனே
நடையைக் காட்டு! – வரும்
பகைவர்களை வென்றுவிடும்
படையைக் காட்டு!”

பார்த்தீர்களா?

பால் குடிக்க வந்தவன்… எங்கே இருந்து….? வீரம் செறிந்த மண்ணில் இருந்து! எந்த மரபில் இருந்து? வெற்றிவேல் எடுக்கும் மரபில் இருந்து!

அப்படியானால் அவன் எப்படி இருக்கவேண்டும்?

வெற்றி நடையைக் காட்டவேண்டும்! பகைவர்களை வென்றுவிடும் படைபலத்தையும் காட்டவேண்டும்!

சரிதானே! இவை போதுமா?

“முக்கனியின் சாறெடுத்து
முத்தமிழின் தேனெடுத்து
முப்பாலிலே கலந்து எப்போதும்
சுவைத்திருப்பாய்!”

எப்படியாம்?

உடல் உரம் பெற்றிட முக்கனிச் சாறெடுத்து உண்ண வேண்டும்!

சிந்தையைத் தெளிவாக்க, செவிக்உக உணவான, முத்தமிழாம் தேனை, வள்ளுவர் தந்த முப்பாலிலே கலந்து, எப்போதுமே சுவைத்திருக்க வேண்டுமாம்!

அப்போதுதானே தமிழரின் பண்பாட்டோடு, தமிழரின் வீரமும் தழைத்து வளரும்.

இவையும் போதா? இன்னும்……

“நான்கு பேர்கள் போற்றவும்
நாடு உன்னை வாழ்த்தவும்
மானத்தோடு வாழ்வதுதான்
சுயமரியாதை! – நல்ல
மனமுடையோர் காண்பதுதான்
தனி மரியாதை!….”

ஆமாம்! நல்லோர், நான்கு திசையிலுள்ளோர் போற்ற வேண்டும்! நாடு உன்னை வாழ்த்தவேண்டும்! ‘மயிர் நீப்பின் வாழாக் கவரிமான் போல்’ மானத்தோடு வாழ்வதே சுய மரியாதையாகும்.

அத்தகு நல்மானம் கொண்டோர்தான், அவர்கள் காண்பதுதான் சுயமரியாதையாகும்.

இப்படியெல்லாம் மகனுக்கு வீர உணர்வூட்டித் தன்மானத்தோடு வாழ்ந்திட வழி சொல்லும் தந்தை பாபுவாக எம்.ஜி.ஆரும்; மகன் ராஜாவாக அன்றைய பெயர் பெற்ற குழந்தை நட்சத்திரம் பேபி ஷகிலாவும் தோன்றி நடிக்கும் காட்சியைக் கண்டு மகிழாமல் இருந்திட இயலுமா?

படத்தின் உசகட்டப் பாடலோ, சாக்ரடீஸின் தத்துவத்தை மூலமந்திரமாக்கிக் கவிஞரின் கவிதைக் கருவில் தோன்றிய உயர் பாடலே;

“உன்னையறிந்தால் – நீ உன்னையறிந்தால்
உலகத்தில் போராடலாம்!
உயர்ந்தாலும் தாழ்ந்தாலும் – தலை ‘
வணங்காமல் நீ வாழலாம்!”

என்று ஆரம்பமாகும் பாடலமாகும்.

மற்றவரைப் பற்றி உனக்கென்ன மனக்கவலை! ‘உன்னையே நீ அறிவாய்!’ என்று கிரேக்கஞானி சாக்ரடீஸ் சொன்னாரே; அவர் சொன்ன மொழியை ஏற்று முதலில் நீ உன்னை அறியக் கற்றுக்கொள்! உன்னை நீ அறிந்துகொண்டால், நீ உலகத்தில் எழுந்து நின்று போராடலாம்.

அப்போதுதான் உன் வாழ்க்கையில் உயர்வு வந்தாலும், தாழ்வு வந்தாலும் பிறர்க்குத் தலை வணங்காமல் நீ வாழ்ந்திடலாம். என்கிறார். யார்? எம்.ஜி.ஆர்.

“மானம் பெரியதென்று வாழும் மனிதர்களை
மானென்று சொல்வதில்லையா?…தன்னைத்
தானும் அறிந்துகொண்டு
ஊருக்கும் சொல்பவர்கள்
தலைவர்கள் ஆவதில்லையா?…ஓ….ஓ…ஓ…”

‘இங்கும், மானமே பிரதானமாகச் சொல்லப்படுகிறது.

மானமே பெரியதென்று வாழும் மனிதர்களே, கவரிமான் இனத்தைச் சார்ந்தவர்கள் என்று சொல்லப்படுவார்கள்!

மானத்தொடு, நல்லது கெட்டதை அறிந்துகொண்டு, அறிந்ததை ஊருக்குள் சொல்பவர்களே தலைவர்களாவார்கள்!’

அரிய கருத்துக்களே! அனைவரும் அறிந்துகொள்ள வேண்டிய கருத்துகளே!

இன்னும் எம்.ஜி.ஆர். வாயிலாகச் சொல்லப்படுவன என்ன? இதோ!….

“பூமியில் நேராக வாழ்பவர் எல்லோரும்
சாமிக்கு நிகரில்லையா?…பிறர்
தேவையறிந்து கொண்டு வாரிக் கொடுப்பவர்கள்
தெய்வத்தின் பிள்ளையில்லையா?….ஓ….ஓ….ஓ…”

என்னே அருமை!

பூமியல் சாமிக்கு நிகரானவர் யாராம்? நேர்மையாக வாழ்கின்றவர் எல்லோருமே சாமிக்கு நிகரானவரேயாம்! அது மட்டுமா?

பிறரது தேவைகளை அறிந்துகொண்டு, தன்னிடம் உள்ள செல்வத்தை வாரி வாரிக் கொடுப்பவர்களே தெய்வத்தின் பிள்ளைகளாம்!

(அந்த வகையில் வாரி வாரிக் கொடுத்த வள்ளலாம் எம்.ஜி.ஆரும் தெய்வத்தின் பிள்ளைதானே! கண்ணதாசன் பார்வையில் எம்.ஜி.ஆர் அவ்வாறு தோன்றிய விதத்தால்தானே பாடலும் இவ்வாறு பிறந்தது.)

அடுத்து என்ன? அடுத்து வரும் பாடல் வரிகள்தான்….. எம்.ஜி.ஆரின் வாழ்க்கைக்கே இலக்கணமான இலக்கிய வரிகள்…..

“மாபெரும் சபைகளில் நீ நடந்தால் – உனக்கு
மாலைகள் விழவேண்டும்! – ஒரு
மாற்றுக் குறையாத மன்னவன் இவனென்று
போற்றிப் புகழவேண்டும்!….ஓ….ஓ….ஓ….”

அடேயப்பா!

‘மாபெரும் சபைகளுக்குள் நீ நடந்து வந்தாலே, உன் மகிமையறிந்து மாலைகள் வந்து விழவேண்டும்! ஒரு குறையும் சொல்ல முடியாத, மாற்றுக் குறையாத பொன்னான மன்னவன் இவனென்றே, இந்த உலகம் உன்னைப் போற்றிப் புகழவேண்டுமாம்!’

இவையெல்லாம் மன்னாதி மன்னன் எம்.ஜி.ஆர். வாழ்க்கையில் நடந்தவையல்லவா? நாம் கண்டவையல்லவா? இவற்றைத் தானே கவியரசர் கண்ணதாசன் அன்றே சொன்னார்! அவர் சொன்ன வாக்கு இவ்வையகத்தில் வாழ்ந்த எம்.ஜி.ஆர். வாழ்க்கையில் பலித்தவைதானே!

எத்தனையோ பாடல்கள்…. கவிஞரின் கருத்துகளில் இருந்து உருவாகியிருந்தாலும்; எவர் எவர்க்கோ அவர் எழுதியிருந்தாலும், எம்.ஜி.ஆருக்குப் பொருந்திய விதங்களே வியத்தகு சிறப்புக்கு உரியன எனில் மிகையாகா.

Richardsof
14th January 2014, 06:06 PM
courtesy - kannadasan varalaru

ஜெயந்தி பிலிம்ஸ் தயாரித்து, ப. நீலகண்டன் இயக்கத்தில், கே.வி. மகாதேவன் இசையில், கண்ணதாசன் பாடல்களோடு, எம்.ஜி.ஆர். இரட்டை வேடங்களில், ஜெயலலிதா, லட்சுமி ஆகிய இருவரோடு நடித்த ‘மாட்டுக்கார வேலன்’ 14.1.1970 அன்று, தமிழர் திருநாளில் வெளியானது.

சென்னையில் ‘மாட்டுக்கார வேலன்’ திரையிடப்பட்ட பிளாசா, பிராட்வே, சயானி, கிருஷ்ணவேணி ஆகிய நான்கு திரையரங்குகளிலும், தொடர்ந்து தினமும் மூன்று காட்சிகளுக்குக் குறையாமல் நூறு நாள்கள் ஓடி சாதனைச் சரித்திரம் படைத்தது.

இத்தகு சாதனைக்குரிய படத்தில், நம் சாதனைக் கவிஞர் கண்ணதாசன் எழுதிய அனைத்துப் பாடல்களுமே பரபரப்பான வரவேற்பினைப் பெற்றன.

டி.எம்.எஸ். குரல் கொடுத்து, எம்.ஜி.ஆர் நடித்த பாடல் காட்சிக்காகக் கவிஞர் தந்த பாடல்… ஒன்று… இதோ!….

“ஒரு பக்கம் பாக்குறா!
ஒரு கண்ணெ சாய்க்குறா! – அவ
உதட்டை கடிச்சுக்கிட்டு – மெதுவா
சிரிக்கிறா சிரிக்கிறா சிரிக்கிறா!….”

பாடலின் தொடக்கம் கண்டீர்!

நாற்பது வயதை எட்டி நிற்கும் பலருக்கும் பாடல் முழுமையும் நினைவுக்கு வரலாம்… இல்லையெனில் பாடல் காட்சியாவது நினைவுக்கு நிச்சயம் வரலாம்?

அடுத்து…
“தொட்டுக் கொள்ளவா… நெஞ்சில்
தொடுத்துக் கொள்ளவா!
பட்டுக் கொள்ளவா…மெல்லப்
பழகிக் கொள்ளவா!”

என்று தொடங்கி…..

“தங்கத்தினால் கலசம் வைத்த கோபுரம்
நடை தவழும்போது குலுங்கும் இசை ஆயிரம்”

என்றே வளரும் இனிய பாடலையும் கவியரசர் படைத்திட்டார்.

சத்தியம் நீயே! தர்மத்தாயே!
‘கோமாதா எங்கள் குலமாதா’, எனப் பால் கொடுக்கும் பசுவின் பெருமையைப் பாடிப் புகழ்ந்தவரே கண்ணதாசன்.

அவர்தான் மாட்டுக்கார வேலன் மகிழந்து, பசுவைப் புகழ்ந்து பாடுவதற்காக அருமையான பாடலொன்றை ஆக்கித் தந்தார்.
அப்பாடல்தான்,

“சத்தியம் நீயே! தர்மத்தாயே!
குழந்தை வடிவே! தெய்வ மகளே!
குங்குமக் கலையோடு குலங்காக்கும் பெண்ணை
குணத்தில் பசுவென்று சொல்வார்கள் கண்ணே!
காலையில் உன் முகம் பார்த்த பின்னே
கடமை செய்வாள் எங்கள் தமிழ்நாட்டுப்
பெண்ணே!”

இப்படித் தொடங்கும் பாடல்.

இப்பாடல் காட்சியில் ஆரவாரத்துடன் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் தோன்றிடும்போது, திரையரங்குகளில் எழுந்த கரவொலி ஒசைகள், ஆர்ப்பாட்ட ஆனந்தக் காட்சிகள் அப்பப்பா….! அந்தக் காலகட்டங்கள்…. இனி திரையுலகில் திரும்புமா?

இப்பாடல் முழுவதுமே கருத்துகளை அள்ளி அள்ளித் தரும் அழகோ, தனி அழகுதான்! கேளுங்களேன்!

“பால் கொடுப்பாய்! அது தாயாரைக் காட்டும்!
பாசம் வைப்பாய்! அது சேயாகத் தோன்றும்!
அம்மாவை அம்மா என்றழைக்கின்ற சொல்லும்
அன்பான தமிழுக்கு நீ தந்ததன்றோ!…..”

கேட்டீர்களா?

என்னே விநோதம்!
‘அன்பான தமிழாம்….

அதற்கு ‘அம்மா!’ என்றழைக்கின்ற சொல்லைத் தந்ததே பால் கொடுக்கும் பாசமுள்ள பசுவாம்!’

இன்னும் பெருக்கெடுத்து வரும் இனிய வரிகளைத்தான் வாசிப்போமே….!

“வளர்த்தவரே உன்னை மறந்துவிட்டாலும்,
அடுத்தவரிடத்தில் கொடுத்துவிட்டாலும்,
வளர்ந்த இடத்தை நீ மறக்காத செல்வம்!
வாய் மட்டும் இருந்தால் மொழிபேசும் தெய்வம்”

வாசித்தோம்….!

யோசிப்போம்!

‘நன்றி மறவாத, பேசும் வாய் இல்லாத செல்வம்… அந்தப் பசுவிற்குப் பேசும் வாய் இருந்தால்… அதுவே மொழிபேசும் தெய்வமாம்!’

‘கண்ணதாசா! கருத்துக் கவிக்கடலே! உன்னை எப்படியப்பா தன் எண்ணத்திலிருந்து எம்.ஜி.ஆரால் அகற்ற முடியும்?’ என்றல்லவா இக்கவிஞர், இன்றிருந்தால் நாமும் கேள்விதனைக் கேட்போம்! அப்படித்தானே!

பாடலின் முடிந்த முடிவு!….

“தன்னையே கொடுப்பதில் வாழைக்கு ஈடு
சம்சாரி வாழ்வுக்கு ஒரு பசு மாடு
பொன்னையே தந்தாலும் உனக்கேது ஈடு
பூப்போல வைத்துன்னைக் காப்பதென் பாடு!”

சரிதானே!

‘நார், இலை, பூ, தண்டு, பழம் என அனைத்தையும் கொடுக்கும் வாழைக்கு ஈடே பசு…. குடும்ப வாழ்க்கை நடத்தும் சம்சாரிக்கு ஒரு பசுவே போதும். பொன்னையே கொட்டிக் கொடுத்தாலும் அந்தப் பசுவுக்கு ஈடாகாது. எனவே அப்பசுவைப் பூப்போல வைத்துக் காப்பதே எனது பாடாகிய உழைப்பின் உயர்வாகும் என்று மாட்டுக்கார வேலனாய் நின்று எம்.ஜி.ஆர். சொல்லும் தத்துவம், என்றைக்கும் எல்லோரும் ஏற்றுக்கொள்ளும் தத்துவந்தானே’.

இந்தத் தத்துவத்தைப் படத்தில் கூறி நின்ற எம்.ஜி.ஆரும்; பாடலில் தந்த கண்ணதாசனும் என்றும் தமிழகத்தின் தத்துவ நாயகர்களே எனில் தவறாகா.

இப்படத்தின் பாடல்களைப் பாடிய டி.எம். சௌந்தரராஜனும், பி. சுசீலாவும், ஒலித்த அவர்களின் குரல்க்ள மூலம் நம் இதயங்களில் என்றும் நிலைத்திருப்பார்கள் என்பதும் நிஜமே.

Richardsof
14th January 2014, 06:07 PM
courtesy - mgr patriot song

சாளுக்கிய இளவரசி மதுரைக்கு வருகிறார். அவரை வரவேற்பதற்காக வெடிகளுடன் கூடிய வரவேற்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப் படுகிறது. வழக்கம்போல் வெடிகள் வெடித்த உடன் இளவரசி அமர்ந்திருக்கும் யானை மிரண்டு ஓடுகிறது.

அப்போது புலவர் பைந்தமிழ்குமரன் யானைமேல் ஏறி யானையை கட்டுப் படுத்தி சாளுக்கிய இளவரசியைக் காப்பாற்றுகிறார்.

ஏற்கனவே புலவரின் புரட்சிகரப் பாடல்களைப் பற்றிக் கேள்விப் பட்டிருக்கும் சாளுக்கியப் பைங்கிளி புலவரை அரசவையில் கவுரவிக்க எண்ணுகிறார். அப்போதைய டம்மி பாண்டிய அரச்வைக்கு அவர் வரவழைக்கப் படுகிறார்.

அங்கு பாண்டியர்களை தூற்றி சோழர்களுக்குப் பட்டங்கள் வழங்கப் படுகின்றன. பாண்டியர்களைத் தூற்றுப் போதெல்லாம் புலவர் பைந்தமிழ் குமரனும் அவரது மாணவனும் கொதித்துக் கொண்டிருக்கின்றனர்.

புலவருக்கு கவுரம் அளிப்பதற்காக மாலை அணிவிக்க இளவரசர் ராஜராஜர் வருகிறார். மாலை அணிவிக்கும்போது சற்று குத்தலாக பேசி அவரைப் பாடச் சொல்கிறார். பாடலுக்கு பிறகு மாலை அணிவிக்கப் போவதாகச் சொல்லிவிடுகிறார்.

தனதுபாடல் ஏழை மக்களுக்கானது என்றும் அதில் சோகச்சுவைத்தான் மேலோங்கி நிற்கும் என்று கூறி புலவர் பைந்தமிழ் குமரன் மறுக்கிறார். சொற்சுவை, பொருட்சுவை நிறம்பிய தமிழ்ப்பா எந்தச் சுவையில் இருந்தாலும் ரசித்து இன்புற முடியும் என்று விருந்தினர்களான சாளுக்கிய அரசரும் இள்வரசியும் சொல்ல தனது பாணியிலான பாடலைப் பாட அவர் ஒத்துக் கொண்டு பாடல் படுகிறார்.

அவர் பாடும் திரைப்பாடல்:-

தாயகத்தின் சுதந்திரமே எங்கள் கொள்கை
தன்மானம் ஒன்றேதான் எங்கள் செல்வம்
தாயகத்தின் சுதந்திரமே எங்கள் கொள்கை
தன்மானம் ஒன்றேதான் எங்கள் செல்வம்


ஒற்றுமையாய் பகைவர்களை ஓட வைப்போம்
உழைப்பாலே நம் நாட்டை உயர்த்தி வைப்போம்

தாயகத்தின் சுதந்திரமே எங்கள் கொள்கை
தன்மானம் ஒன்றேதான் எங்கள் செல்வம்

கோட்டையிலே நமது கொடி பறந்திட வேண்டும்
கொள்கை வீரர் தியாகங்களை ஏற்றிட வேண்டும்

புரட்சியிலே சரித்திரத்தை மாற்றிட வேண்டும்
பொதுவுடமை சமுதாயம் மலர்ந்திட வேண்டும்

கண் கவரும் கலைகள் எல்லாம் வளர்ந்தது இங்கே
களங்கமுள்ள பகைவராலே தாழ்ந்தது இங்கே

நீதியோடு நேர்மை காக்கும் மறவர்கள் இங்கே
நிமிர்ந்தெழுந்தால் தாடகை எல்லாம் உடைந்திடும் இங்கே

வீரமுண்டு வெற்றி உண்டு
விளையாடும் களமிங்கே உண்டு
வா வா என் தோழா

வீரமுண்டு வெற்றி உண்டு
விளையாடும் களமிங்கே உண்டு
வா வா என் தோழா

பூனைகள் இனம்போலே பதுங்குதல் இழிவாகும்
புலி இனம் நீ எனில் வாராய்

வீரமுண்டு வெற்றி உண்டு
விளையாடும் களமிங்கே உண்டு
வா வா என் தோழா

தென்பாங்கு தென்றல் பண்பாடும் நாட்டில்
தீராத புயல் வந்ததேனோ?

தென்பாங்கு தென்றல் பண்பாடும்
நாட்டில் தீராத புயல் வந்ததேனோ?
நீர் வாழும் மீன்கள் நிலம் வீழல் போலே
நெஞ்சங்கள் துடித்திடலாமோ


வா வா என் தோழா
வீரமுண்டு வெற்றி உண்டு
விளையாடும் களமிங்கே உண்டு
வா வா என் தோழா

oygateedat
14th January 2014, 06:34 PM
கோவை - துடியலூர் முருகன் திரை அரங்கில் கடந்த வெள்ளி அன்று வைகுண்ட ஏகாதேசியை முன்னிட்டு நடு இரவுக்காட்சி மக்கள் திலகத்தின் மகத்தான காவியமான அடிமைப்பெண் திரையிடப்பட்டது. அரங்கு நிறைந்தது.

http://i41.tinypic.com/eiw00w.jpg
தகவல் திரு.ஹரிதாஸ், கோவை.

oygateedat
14th January 2014, 06:57 PM
சென்னை ஆல்பர்ட் மற்றும் பத்மம் திரையரங்குகளில் தற்பொழுது ஆயிரத்தில் ஒருவன் பட முன்னோட்டம் காண்பிக்கப்பட்டு வருகின்றது.

மக்கள் திலகத்தைப் பற்றி முன்னாள் தமிழக அமைச்சர் திரு.ஹண்டே win தொலைக்காட்சியில் இன்று இரவு 9 மணி முதல் 9.30 வரை பேசுகிறார்.

இந்த தகவலை திரு ஹண்டே அவர்கள் பேராசிரியர் செல்வகுமார் அவர்களுக்கு குறுஞ்செய்தி மூலம் தெரிவித்துள்ளார்.

http://i43.tinypic.com/2r7rrtc.jpg

தகவல் - பேராசிரியர் செல்வகுமார்

Richardsof
14th January 2014, 07:54 PM
http://youtu.be/jZh7KdMye3Y

ujeetotei
14th January 2014, 08:47 PM
In my opnion, Almighty would have never accepted such storyline and the title. Let "Time Pass" do "some other work" for time pass.

Anyway, thanks for the posting Sir.

Kalathin Kodumai Sir.

ujeetotei
14th January 2014, 08:58 PM
http://i43.tinypic.com/2055vgw.jpg

Thanks Loganathan Sir.

ujeetotei
14th January 2014, 09:01 PM
Today Golden Jubilee Year - Vettaikaran

http://i125.photobucket.com/albums/p49/kannantheking/Mayyam%20Upload/Vettaikaaran_1964_film_zpsd03e5d62.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/Mayyam%20Upload/Vettaikaaran_1964_film_zpsd03e5d62.jpg.html)

ujeetotei
14th January 2014, 09:02 PM
http://i125.photobucket.com/albums/p49/kannantheking/Mayyam%20Upload/vettaikaran_50_zpsee834669.jpg (http://s125.photobucket.com/user/kannantheking/media/Mayyam%20Upload/vettaikaran_50_zpsee834669.jpg.html)

Latest post on Golden Jubilee Year

http://mgrroop.blogspot.in/2014/01/golden-jubilee-year-vettaikaran.html

ainefal
14th January 2014, 09:51 PM
Vinod Sir,

Very unfortunate, Just now I happened to see such good images of இறைவன் எம். ஜி. ஆர்.பக்தர்கள். Is it possible to provide/give the details of the previous 2 years [MK thread number 1,2,3,4,5 or 6]wherein images were posted sir in Mayyam Makkal Thilagam Thread, I prefer to have them in my personal web sir. Thanks.

I am still searching for it but not able to find it in Mayyam Sir. I am sure that இறைவன் எம். ஜி. ஆர்.பக்தர்கள் images would have been posted in Mayyam for the first 2 years as well, anyone in Mayyam for the past 3 years could also help me [Professor Sir, Kaliyaperumal Sir, Loganathan Sir], please. I want to have it from "Kanni Sami" 1st year onwards that is why I am requesting again. If it is not in Mayyam, no problem, shall appreciate if the images could be mailed to me. Thanks.

ainefal
14th January 2014, 10:59 PM
http://www.youtube.com/watch?v=GMzM3vcH_uE

Almighty always ahead of time very modernized, should have made this film in Colour [my personal opnion].

siqutacelufuw
14th January 2014, 11:09 PM
I am still searching for it but not able to find it in Mayyam Sir. I am sure that இறைவன் எம். ஜி. ஆர்.பக்தர்கள் images would have been posted in Mayyam for the first 2 years as well, anyone in Mayyam for the past 3 years could also help me [Professor Sir, Kaliyaperumal Sir, Loganathan Sir], please. I want to have it from "Kanni Sami" 1st year onwards that is why I am requesting again. If it is not in Mayyam, no problem, shall appreciate if the images could be mailed to me. Thanks.


Dear Sailesh Sir,

I have the relevant photographs and CDs right from its beginning. I will mail them to you after 17th

Thanks & Regards,


Ever Yours : S.Selvakumar

Onguga Aalayam Kanda Aandavan MGR.

Endrum MGR
Engal Iraivan

ainefal
15th January 2014, 12:11 AM
Dear Sailesh Sir,

I have the relevant photographs and CDs right from its beginning. I will mail them to you after 17th

Thanks & Regards,


Ever Yours : S.Selvakumar

Onguga Aalayam Kanda Aandavan MGR.

Endrum MGR
Engal Iraivan



Evening Professor Sir,

Thank you very much Sir.

Richardsof
15th January 2014, 05:58 AM
1965-2014

பொன்விழா ஆண்டு துவக்கம் .

மக்கள் திலகத்தின் கலை உலக வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனை உண்டாக்கிய ஆண்டு -1965

இந்திய திரைப்பட வரலாற்றில் ''எங்கவீட்டு பிள்ளை '' - ''ஆயிரத்தில் 'ஒருவன் '' இரண்டு படங்களும் உண்டாக்கிய

வசூல் தாக்கம் - புதுமை படைப்பு - பிரமாண்ட படங்கள் - மக்களின் மனம் கவர்ந்த நாயகன் - சிறந்த நடிகர்

என்ற பெருமைகள் எம்ஜிஆருக்கு கிடைத்த ஆண்டு 1965.


எங்கவீட்டு பிள்ளை - என்றென்றும் விநியோகஸ்தர்களின் ''அமுதசுரபி ''
பணம் படைத்தவன் - மக்கள் திலகத்தின் வெற்றி படைப்பு .
ஆயிரத்தில் ஒருவன் - முக்கால வசூல் பெட்டகம் .
கலங்கரை விளக்கம் - இன்னிசை சித்திரம்
கன்னித்தாய் - பொழுதுபோக்கு படம்
தாழம்பூ - பொழுது போக்கு படம்
ஆசைமுகம் . - புதுமை படைப்பு .

1965ல் வந்த மக்கள் திலகத்தின் 7 படங்களிலும் இடம் பெற்ற பாடல்கள் எல்லாம் சூப்பர் .

ஆசை முகம் - நாளொரு மேடை ....
தாழம்பூ - எங்கே போய்விடும் காலம் ....
கன்னித்தாய் - கேளம்மா சின்ன பொண்ணு கேளு ...
கலங்கரை விளக்கம் - சங்கே முழங்கு .....
ஆயிரத்தில் ஒருவன் - ஏன் என்ற கேள்வி ....
பணம் படைத்தவன் - கண் போன போக்கிலே கால் போகலாமா .....
எங்கவீட்டு பிள்ளை - நான் ஆணையிட்டால் ........

இந்த 7 பாடல்களும் சமுதாயத்தில் அன்றும் இன்றும் என்றும் ஒலித்து கொண்டிருக்கும் பாடல் .மக்களுக்கு
அறிவுரை - வாழ்வியல் - சிந்தனை - மொழிப்பற்று -சமுதாயத்தின் அவலநிலை - காலாச்சார சீரழிவு போன்றவற்றை
மக்களுக்கு எடுத்துரைத்து அவர்களின் முன்னேற்றத்திற்காக அறிவுரைகளும் , வழி முறைகளும் தன்னுடைய
பாடல்களின் நடிப்பின் மூலம் இந்த சமுதாயத்திற்கு வழங்கிய சமூக சிற்பி நம் மக்கள் திலகம் .

Richardsof
15th January 2014, 06:50 AM
ARTICLE FROM ''CINEMA AND POLITICS''-BY PR-NET

1950′s was in many ways the heydom of social cinema. Movies had a message and the dialogues, story were unabashedly a political propaganda tool for a party and its social message. It had its downsides too, with an overactive congress ruled state decrying these movies and censoring them to the extent of making them comical. Movies and politics persisted. Using subtle dialogues, double entendre, both actors, writers and politicians continued to make movies and used them very effectively as campaign tools.

Anti-congress messages, praise for the Dravidian culture, social upliftment messages and the Hindi agitation of ’65 resulted in a weakening of the congress party. The DMK party capitalized on this with a barrage of political movies that saw the meteoric rise of M.G Ramachandran (MGR) a constant in the party and an actor since 1953.
http://i39.tinypic.com/208ximc.jpg
movies during that period included the very popular Aayirathil Oruvan (1965), Enga Veettu Pillai (1965), Anbe Vaa (1966) that extolled the virtues of the poor, downtrodden and the dignity of the labourer. With politically influenced costumes and songs that projected the hero and his party as the savior of the Dravidian people, the movies hit home. Congress lost the election in a landslide to the DMK and never recovered its base in the state. Post 1960′s, social messages took a backseat to personality politics.

This was aggravated with the very contentious split within the DMK with MGR going on to find his own party, the ADMK (1972) (Later the AIADMK). Movies became a stomping ground for personalities, and social change took a backseat to infighting within and without.

ainefal
15th January 2014, 08:28 AM
https://soundcloud.com/nikilnikil/mgr-speech-at-rajaparvai-movie

Almighty's Speech At Rajaparvai Movie 100 Days Celebration

Richardsof
15th January 2014, 08:55 AM
BANGALORE - AYIRATHIL ORUVAN -1965

KANNADA PAPER ADVT

http://i44.tinypic.com/2rmp0t0.jpghttp://i42.tinypic.com/mimlhs.jpg

Richardsof
15th January 2014, 08:59 AM
http://i40.tinypic.com/15n885c.jpg

Richardsof
15th January 2014, 09:06 AM
http://i44.tinypic.com/28sprth.jpghttp://i41.tinypic.com/r2kl94.jpg

Richardsof
15th January 2014, 09:14 AM
superb sowkar janaki's performance.
http://youtu.be/FevCCrPz7Nc

Richardsof
15th January 2014, 09:24 AM
courtesy - sathiskumar - net

எம்.ஜி.ஆர்!

இந்த மூன்றெழுத்தின் சக்தி அளப்பரியது! ஒவ்வொரு குடும்பத்திலும் அவரால் பயன் பெற்றவர்கள் என்று (நேரடியாகவோ, மறைமுகமாகவோ, அவரது சட்டங்கள் மூலமாகவோ, நல திட்டங்கள் மூலமாகவோ) ஒருவரேனும் இருப்பார்கள்.

அமெரிக்காவில் புரூக்ளின் மருத்துவமனையில் எம்.ஜி.ஆர் உயிருக்கு போராடிக்கொண்டு இருந்தபோது, சென்னை எண்ணூரில், ஒளிவிளக்கு திரைப்படத்தின் பாடலை உச்ச ஸ்தானியில் ஒலிக்கவிட்டு, தங்களை தாங்களே எரித்து கொண்டு இறந்தவர்களை தூர நின்று பார்க்க நேர்ந்திருக்கிறது எனக்கு, என் சிறு வயதில்!

"உன்னுடனே வருகின்றேன், என்னுயிரை தருகின்றேன், மன்னன் உயிர் போகாமல் இறைவா நீ ஆணையிடு!"

இறந்து இதோ இருபத்து இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டது! இன்னமும் அவர் இறந்ததை சிலரால் நம்ப முடியவில்லை! எங்கேயோ உயிருடன் தான் இருக்கிறார்... மாறுவேடத்தில் வாழ்கிறார் என்றெல்லாம் நம்பிக்கொண்டிருப்போர் பலர்... எம்.ஜி.ஆர் படத்துக்கு பூஜை அறையில் இடம் ஒதுக்கி வழிபாடு மேற்கொள்வோர் பலர்....

எப்படி சம்பாதித்தார் இத்தனை அன்பு?

அவர் மக்களுக்காக வாழ்ந்தவர், மக்களின் வலிகளை உணர்ந்தவர், மக்களின் தேவைகளை அவர்களுக்கு தெரியாமலேயே தீர்த்து வைப்பவர்...

ஒரு முறை திருச்சி திமுக மாநாடு! அப்போதெல்லாம் மாநாடு ஐந்து நாட்கள் வரை நடக்கும்! நுழைவு கட்டணமும் உண்டு! எல்லா ஊர்களில் இருந்தும் வண்டி வாகனங்களில் மாநாட்டுக்கு வந்து மாநாட்டு பந்தலிலே தங்கி இருப்பார்கள் தொண்டர்கள்!

ஒரு நாள் விடிகாலை, மறுநாள் நிகழ்வு குறித்தான ஆலோசனைக்காக அண்ணா, கருணாநிதி,சம்பத் போன்றோர் மாநாட்டு திடலுக்கு வந்தபோது திடல் அருகே பெரிய அளவிலே சமையல் நடந்து கொண்டு இருந்ததாம்.... விசாரித்தால் வெளியூரில் இருந்து வந்து தங்கி இருக்கும் தொண்டர்களுக்காக எம்.ஜி.ஆர் தன சொந்த செலவில் உணவு தயார் செய்து கொண்டு இருந்தாராம்.....

அந்த தொண்டர்களுக்கே அப்போது அது தெரியாது! அவன் பசி பற்றி அவன் உணரும் முன்பே உணர்த்து அதை தீர்க்க முற்பட்டவர் எம்.ஜி.ஆர்! அந்த குணம் தான் தன்னை பற்றி கவலைப்பட ஒரு தலைவன் இருக்கிறான் என்று எல்லோருக்குள்ளும் நம்பிக்கை தந்தது!

செம்பரம்பாக்கம் ஏரி உடைந்தபோழுது, அதனை பார்வையிட்டு செப்பனிட அப்போதைய உள்ளாட்சி துறை அமைச்சரான காளிமுத்துவை அனுப்பினாராம் எம்.ஜி.ஆர். ஆனால் மழையில் வழி தெரியாமல் நீண்ட நேரமாக அங்கே நின்றுகொண்டிருந்த காளிமுத்து, வெகு நேரத்துக்கு பின்னால் யாரோ சிலர் வருவது அறிந்து தெம்பு அடைந்தாராம். வந்தது வேறு யாரும் அல்ல... எம்.ஜி.ஆரும் சில அதிகாரிகளும் தானாம்! அமைச்சரை அனுப்பி விட்ட பிறகும் அதை பற்றியே சிந்தித்துக்கொண்டு, தானே களத்தில் இறங்கிய முதல் அமைச்சர் அவர்... அவரும், காளிமுத்துவும், அதிகாரிகளும், பொதுமக்களுமாக அந்த நள்ளிரவில் செம்பரம்பாக்கம் ஏரியை சீர்படுத்த துவங்கினார்கலாம்.. (இது கோவை பாப்பநாயக்கன் பாளையம் பொதுக்கூட்டத்தில் திரு காளிமுத்துவே சொன்னது)

இப்படி அவரை பற்றிய, அவரது மக்கள் நலம் குறித்தான செய்திகள் சில புத்தகங்கள் அளவுக்கு தேறும்!

இத்தனை ஆண்டுகளுக்கு பிறகும் தமிழக அரசியலில் அவர் பெயரை சொல்லாமல் அவருக்கு வேண்டாதவர்கள் கூட பிழைக்க முடியாத அளவுக்கு மக்கள் செல்வாக்கை வளர்த்து வைத்திருந்தவர் அவர்!

கல்வி, வேலைவாய்ப்பு, சமூகம், பொருளாதாரம், உள்கட்டமைப்பு, மாநில வளர்ச்சி, தொழில் துறை மேம்பாடு என்று சகல துறைகளிலும் முற்போக்கான சிந்தனைகளால் தமிழகத்தை வேகமாக முன்னெடுத்து சென்றவர் அவர்! இன்றைக்கு நாம் எல்லோரும் இந்த அளவுக்கு கல்வியும் வேலைவாய்ப்பும் பெற்றதற்கான முதல் புள்ளியை ஊன்றி வைத்தவரே அவர் தான்!

மொத்த தமிழகத்தை தன சொந்த வீடாக கருத்தி, அனைவரையும் தனது குடும்பத்தினராக கருதி, அவர்களுக்கான தேவைகளை வளர்ச்சிக்கான வாய்ப்புக்களை ஏற்படுத்தி கொடுத்தவர் அவர்!

எம்.ஜி.ஆரை பற்றி சொல்லிக்கொண்டே போவதானால் தீரவே theraathu!

வைரமுத்து "இந்த குளத்தில் கல் எறிந்தவர்கள்" நூலில் சொன்னதை போல "உலகத்தில் ஒரே ஒரு சூரியன் தான்; உலகத்தில் ஒரே ஒரு சந்திரன் தான்; உலகத்துக்கு ஒரே ஒரு எம்.ஜி.ஆர் தான்"

Russellail
15th January 2014, 01:30 PM
http://i40.tinypic.com/2v2jv3m.jpg


சின்னவர்- யுகபுருஷன்-சகலகலாவல்லவன்-புரட்சி தலைவர்-
உலக நாயகன் எம்.ஜி.ஆர்.

செம்பொன்முகங் போற்றி முகம்பொழி கருணை போற்றி
யாவரும் துதிக்க நின்ற வெற்றித்தோள் போற்றி - காஞ்சி
மன்னன் வைகும் இதயக்கனி மலரடி போற்றி - யன்னான்
கொற்றம் போற்றி, திருபுகழ் என்றும் போற்றி போற்றி.

ainefal
15th January 2014, 02:55 PM
https://www.youtube.com/watch?v=jZh7KdMye3Y

uvausan
15th January 2014, 03:01 PM
என் இனிய நண்பர் வினோத் சார் - உங்களுக்கும் , மற்ற இந்த திரிக்காக தினம் உழைக்கும் நண்பர்களுக்கும் இந்த சிறிய பதிவை இங்கு இடுவதில் பெருமை அடைகிறேன் - அருமையாக சிவகுமார் அவர்கள் பேசி உள்ளார் . இந்த பொங்கல் நேரத்தில் - இந்த பதிவு எல்லோருக்கும்
சக்கரை பொங்கலை விட இனிப்பாக இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை !!!

அன்புடன்
ரவி
:):smokesmile:

http://www.youtube.com/watch?v=DWJ2ZS3ST4o&feature=share

fidowag
15th January 2014, 03:06 PM
நண்பர் திரு.வினோத் அவர்களுக்கு வணக்கம்.

1964 மற்றும் 1965 படங்கள் பற்றிய விமர்சனம் மற்றும் இதர பதிவுகள்
அருமை.

ஆயிரத்தில் ஒருவன் பெங்களுரு/மைசூரு கன்னட விளம்பரங்கள் காண்பதற்கு இனியவை.

பெங்களூரில் தமிழ் சங்கம் ஏற்பாடு செய்யும் புரட்சி தலைவர் பிறந்த நாள் விழா மற்றும் முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் திரு.முனியப்பா அவர்களின் எம்.ஜி.ஆர். மன்றம் துவக்க விழா போன்ற செய்திகள் அறிய
ஆவலாக உள்ளோம். விரிவாக செய்திகள் அளிக்கவும்.

ஆர். லோகநாதன்.

fidowag
15th January 2014, 03:24 PM
என் இனிய நண்பர் வினோத் சார் - உங்களுக்கும் , மற்ற இந்த திரிக்காக தினம் உழைக்கும் நண்பர்களுக்கும் இந்த சிறிய பதிவை இங்கு இடுவதில் பெருமை அடைகிறேன் - அருமையாக சிவகுமார் அவர்கள் பேசி உள்ளார் . இந்த பொங்கல் நேரத்தில் - இந்த பதிவு எல்லோருக்கும்
சக்கரை பொங்கலை விட இனிப்பாக இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை !!!

அன்புடன்
ரவி
:):smokesmile:

http://www.youtube.com/watch?v=DWJ2ZS3ST4o&feature=share


நண்பர் திரு.ரவிச்சந்திரன் அவர்களே,

மாட்டு பொங்கல் தினத்தன்று சர்க்கரை பொங்கலாக திரு.சிவகுமார்
அவர்களின் பேட்டியை பதிவு செய்ததற்கு நன்றி. ஏற்கனவே ஜெயா தொலைகாட்சியில் பார்த்த நிகழ்ச்சிதான். இருப்பினும் சுவை குன்றாமல் இருந்தது. நன்றி.

ஆர். லோகநாதன் .

fidowag
15th January 2014, 03:29 PM
ஆயிரத்தில் ஒருவன் ட்ரைலர் விழா பற்றிய புகைப்படங்கள் தொடர்ச்சி.

http://i41.tinypic.com/73fal4.jpg

Richardsof
15th January 2014, 03:31 PM
இனிய நண்பர் திரு ரவி சார்

திரு சிவகுமார் அவர்களின் பேட்டியை மக்கள் திலகம் திரியின் ரசிகர்களுக்காக
மக்கள் திலகம் திரியில் பதிவிட்டுள்ளது குறித்து மிக்க மகிழ்ச்சி . நடிகர் சிவகுமாரின்
பேட்டி மிகவும் அருமை .மக்கள் திலகம் திரியின் சார்பாக உங்களுக்கு மீண்டும் எங்களுடைய அன்பு வணக்கத்தை தெரிவித்து கொள்கின்றோம் .

fidowag
15th January 2014, 03:34 PM
http://i39.tinypic.com/mal05s.jpg

fidowag
15th January 2014, 03:39 PM
http://i41.tinypic.com/6gkm53.jpg

Richardsof
15th January 2014, 03:41 PM
இனிய நண்பர் திரு லோகநாதன் சார்

19.1.2014 அன்று தமிழ் சங்கத்தில் நடை பெற உள்ள மக்கள் திலகத்தின் பிறந்த நாள்
விழா அழைபிதழ் விரைவில் இங்கு பதிவிடப்படும் .பெங்களுர் தமிழ் சங்கத்தில் முதல் முறையாக நடை பெற உள்ள மக்கள் திலகத்தின் பிறந்த நாள் என்பதால மிகவும்
சிறப்பாக நடந்திட அனைவரின் ஒத்துழைப்புடன் விழா பணிகள் மும்மரமாக நடந்து
வருகிறது .

திரு முனியப்பா - பெங்களுர் -காந்திநகர் முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் அவர்களின்
ஆலோசனை கூட்டம் விரைவில் நடை பெற உள்ளது .

மக்கள் திலகத்தின் நினைவு நாள் மற்றும் ஆயிரத்தில் ஒருவன் - பட தகவல்கள் பற்றிய
உங்களின் பதிவுகள் அமர்க்களம் .

இனி மக்கள் திலகத்தின் பிறந்தநாள் சென்னை நகர போஸ்டர்கள் திரியில் உங்களால்
களை கட்ட போகிறது. வாழ்த்துக்கள்.

fidowag
15th January 2014, 03:44 PM
http://i44.tinypic.com/2hxtulk.jpg

fidowag
15th January 2014, 03:56 PM
http://i44.tinypic.com/2h3qtu9.jpg

fidowag
15th January 2014, 04:01 PM
http://i39.tinypic.com/2eaqwcn.jpg

fidowag
15th January 2014, 04:08 PM
http://i40.tinypic.com/jr7g2x.jpg

fidowag
15th January 2014, 04:14 PM
http://i44.tinypic.com/2vmsmk9.jpg


அனைத்துலக எம்.ஜி.ஆர். பொது நல சங்கம், இறைவன் எம்.ஜி.ஆர். பக்தர்கள் குழு, இணைந்து விழா நாயகனுக்கு பூஜை செய்கின்றனர்.

fidowag
15th January 2014, 04:20 PM
http://i44.tinypic.com/2e49j81.jpg

fidowag
15th January 2014, 04:25 PM
http://i39.tinypic.com/ort1dt.jpg

fidowag
15th January 2014, 04:31 PM
http://i44.tinypic.com/2wqc40p.jpg

fidowag
15th January 2014, 04:38 PM
http://i42.tinypic.com/swz95j.jpg

fidowag
15th January 2014, 04:47 PM
http://i39.tinypic.com/o6i98l.jpg



பொன்மனச்செம்மல் ஸ்ரீ. எம்.ஜி.ஆர். நற்பணி மன்றம், உரிமைக்குரல்
ஆசிரியர் திரு.பி.எஸ். ராஜு, திரு.பிரதீப் (எம்.ஜி.சக்கரபாணி பேரன் ) ஆகியோர் புரட்சி தலைவருக்கு வாழ்த்தொலி தரும் காட்சிகள்.

fidowag
15th January 2014, 04:56 PM
http://i41.tinypic.com/1zflafo.jpg

fidowag
15th January 2014, 05:42 PM
திரு.முருகேசன், அனைத்துலக எம்.ஜி.ஆர். பொது நல சங்கம்
புரட்சி நடிகருக்கு ஆரத்தி எடுக்கிறார்.

http://i40.tinypic.com/2vbaiqs.jpg

fidowag
15th January 2014, 05:46 PM
http://i43.tinypic.com/21k9tnn.jpg

fidowag
15th January 2014, 05:52 PM
சத்யம் அரங்க வளாகத்தில் ஆயிரத்தில் ஒருவன் பேனர்.

http://i39.tinypic.com/2hcqfs0.jpg

fidowag
15th January 2014, 06:03 PM
விழா மேடையில் ஆயிரத்தில் ஒருவன் பேனர்.

http://i41.tinypic.com/zmkt39.jpg

fidowag
15th January 2014, 06:08 PM
விழாவிற்கு வந்திருந்த பின்னணி பாடகியர் திருமதி.பி.சுசீலா , எல்.ஆர். ஈஸ்வரி அவர்கள்

http://i42.tinypic.com/zv7yva.jpg

fidowag
15th January 2014, 06:14 PM
பின்னணி பாடகியருடன் திருவாளர்கள் .சங்கர்,ரவிக்குமார், செல்வகுமார், லோகநாதன் ஆகியோர்.

http://i41.tinypic.com/11to0gl.jpg

fidowag
15th January 2014, 06:18 PM
பின்னணி பாடகியருடன் திரு.லக்ஷ்மன் ஸ்ருதி

http://i41.tinypic.com/317789d.jpg

fidowag
15th January 2014, 06:22 PM
பின்னணி பாடகியருடன் திருமதி.பி.ஆர்.விஜயலட்சுமி, நிகழ்ச்சி தொகுப்பாளர் ஆகியோர்.

http://i44.tinypic.com/2ilzrc8.jpg

fidowag
15th January 2014, 06:26 PM
திருமதி பி.ஆர்.விஜயலட்சுமியுடன் ,திருவாளர்கள்: செல்வகுமார், பிரதீப், லோகநாதன்.
http://i42.tinypic.com/zkjui9.jpg

fidowag
15th January 2014, 06:32 PM
பேராசிரியர் திரு.செல்வகுமார் திரு. லக்ஷ்மன் ஸ்ருதி அவர்களுக்கு
அனைத்துலக எம்.ஜி.ஆர். பொது நல சங்க பேட்ஜை அணிவிக்கிறார்.

http://i41.tinypic.com/14j3q02.jpg

fidowag
15th January 2014, 06:37 PM
சத்யம் அரங்கத்தில் திரு.லக்ஷ்மன் ஸ்ருதி ,திரு.செல்வகுமார்,
ஸ்ரீமுருகன் தியேட்டர் அதிபர் பரமசிவ முதலியார் புதல்வன், திரு.மாரிமுத்து,திவ்யா பிலிம்ஸ் திரு. சொக்கலிங்கம், திரு பிரதீப்
திரு. லோகநாதன். ஆகியோர்.

http://i42.tinypic.com/15psuiu.jpg

fidowag
15th January 2014, 06:42 PM
திரு.முருகேசன், திரு.பி.எஸ்.ராஜு, திரு.பிரதீப், திரு.லோகநாதன்,
திருமதி ஜெயந்தி (ஏ எல்.எஸ்.), நடிகை ராஜஸ்ரீ, திரு.செல்வகுமார், திரு.மாரிமுத்து.

http://i39.tinypic.com/2nasa5s.jpg

fidowag
15th January 2014, 06:47 PM
திரு.முருகேசன், நடிகை ராஜஸ்ரீ ,ஏ .எல்.எஸ். திருமதி ஜெயந்தி, திருமதி
பி.சுசீலா, பாடகி எல்.ஆர். ஈஸ்வரி , திரு.செல்வகுமார்.

http://i39.tinypic.com/15rmcqp.jpg

fidowag
15th January 2014, 06:50 PM
http://i39.tinypic.com/2agonye.jpg

fidowag
15th January 2014, 06:56 PM
திருமதி ஏ.எல்.எஸ். ஜெயந்தியுடன் ,அபிராமி தியேட்டர் அதிபர். ராமநாதன்.

http://i39.tinypic.com/2cxg6r7.jpg

Richardsof
15th January 2014, 07:47 PM
எம்ஜிஆர் எப்படி ரசிகர்களையும் மக்களையும் மனம் கவர்ந்தார் ?
http://i43.tinypic.com/2ngd4pe.jpgமக்கள் திலகம் வாழ்ந்த ராமாவரம் இல்லம்
வசீகர தோற்றம்
சிரித்த முகம்
வள்ளல் குணம்
எதிரிகளையும் வாழ வைத்தல்
மன்னிக்கும் பெருந்தன்மை
மனித நேயம்
தொண்டனுக்கும் ரசிகனுக்கும் அளித்த மரியாதை
சீர்திருத்த கொள்கைகள்
நடிப்பில் மென்மை
வீரத்தில் விவேகம்
சகலகலாவல்லவர்
அடக்கம்
அன்பு
கடின உழைப்பு
நேர்மறை சிந்தனை....
சொல்லி கொண்டே போகலாம் . முடிவில்லாத ''எம்ஜிஆர் ''.

fidowag
15th January 2014, 08:24 PM
திரு. தாமோதரன், திரு. லோகநாதன், திரு.பி. வாசு, திரு. செல்வகுமார்.

http://i39.tinypic.com/28lazgn.jpg

fidowag
15th January 2014, 08:28 PM
திரு. செல்வகுமார்., திரு.நாகராஜன் (எம்.டி.சி.), திரு.பி. வாசு.

http://i44.tinypic.com/1e9gyd.jpg

fidowag
15th January 2014, 08:32 PM
திரு. செல்வகுமார். திரு.லோகநாதன்,திரு.ராஜ்குமார்,திரு.பி. வாசு, திரு.மாரிமுத்து .

http://i42.tinypic.com/2e4i42q.jpg

fidowag
15th January 2014, 08:36 PM
திருவாளர்கள் :பிரதீப், லோகநாதன், செல்வகுமார், ஜாக்வார் தங்கம்,
ஹயாத், கே.பாபு.

http://i42.tinypic.com/2j5la3s.jpg

fidowag
15th January 2014, 08:42 PM
திருவாளர்கள்: நாகராஜன், பிரதீப், ராஜ்குமார்,ஜாக்வார் தங்கம்,
செல்வகுமார், பாபு, லோகநாதன்.

http://i40.tinypic.com/2w4l01u.jpg

fidowag
15th January 2014, 08:48 PM
திருவாளர்கள்:திருநின்றவூர் நிர்வாகி கலைவாணன்,ராஜ்குமார்,ஹயாத்,
ஜாக்வார் தங்கம், செல்வகுமார், பாபு.

http://i39.tinypic.com/2uo1etu.jpg

Richardsof
15th January 2014, 08:51 PM
http://i1273.photobucket.com/albums/y412/esvee6/798c7bc0-ae27-48bf-8478-facda99a01a2_zps63358dac.jpg (http://s1273.photobucket.com/user/esvee6/media/798c7bc0-ae27-48bf-8478-facda99a01a2_zps63358dac.jpg.html)

fidowag
15th January 2014, 08:52 PM
திருவாளர்கள்: மாரிமுத்து, செல்வகுமார், லோகநாதன், ஹயாத்
ஆகியோருடன் நடிகர் விவேக் அவர்கள்.

http://i41.tinypic.com/wi9e1u.jpg

fidowag
15th January 2014, 08:57 PM
திரு.நாகராஜன்,திரு. பி.ஆர்.பந்துலு அவர்களின் புதல்வன்,திருமதி.பி.ஆர்.விஜயலட்சுமி, திரு.சந்திரசேகரன்,
திரு.செல்வகுமார்.

http://i40.tinypic.com/2hzqr14.jpg

fidowag
15th January 2014, 09:01 PM
பின்னணி பாடகியருடன் திரு.பி.வாசு, திரு.லக்ஷ்மன் ஸ்ருதி

http://i41.tinypic.com/104j4nn.jpg

fidowag
15th January 2014, 09:05 PM
தென்னிந்திய நடிகர் சங்க தலைவர் திரு.சரத்குமார், திருப்பூர் திரு.
சுப்பிரமணியம் (விநியோகஸ்தர்)

http://i41.tinypic.com/2epouqb.jpg

fidowag
15th January 2014, 09:10 PM
திருமதி.பி.ஆர். விஜயலட்சுமி,நடிகர் விவேக்,நடிகர் சங்க தலைவர் திரு.சரத்குமார் ,திருப்பூர் விநியோகஸ்தர் திரு.சுப்ரமணியம் ஆகியோர்.

பின் வரிசையில் திரு.மாரிமுத்து, திரு.லோகநாதன், திரு. சிவா

http://i44.tinypic.com/9ftfa1.jpg

fidowag
15th January 2014, 09:14 PM
சத்யம் அரங்க வெள்ளி திரை மேடையில் மக்கள் திலகம் எம்.ஜி. ஆரின்
பிரம்மாண்டங்களின் பிரம்மாண்டமான "ஆயிரத்தில் ஒருவன்" பேனர்.

http://i42.tinypic.com/24dg3v7.jpg

fidowag
15th January 2014, 09:18 PM
விழாவின் நிகழ்ச்சி தொகுப்பாளர் அனைவரையும் வரவேற்று பேசுகிறார்.

http://i44.tinypic.com/2wrknrm.jpg

ainefal
15th January 2014, 09:49 PM
பின்னணி பாடகியருடன் திரு.லக்ஷ்மன் ஸ்ருதி

http://i41.tinypic.com/317789d.jpg

லக்ஷ்மணை அல்லது [அவரது சகோதரர் ராம்] அவர்களை பார்க்கும் பார்க்கும் போது தெய்வத்தின் அன்பே வா பாடல் நினைவிற்கு வருகிறது: நானும் அன்று மாணவன்
நாலும் கற்று தெரிந்தவன் பறவை போல் பறந்தவன் கவலைகள் மறந்தவன் நான் - அந்த நாள் ஞாபகம்.

அற்புதமான புகைப்படங்களுக்கு மிக்க நன்றி

fidowag
15th January 2014, 10:13 PM
http://i41.tinypic.com/fl8qkw.jpg

fidowag
15th January 2014, 10:17 PM
திருமதி பி.சுசீலா அவர்களுக்கு திவ்யா பிலிம்ஸ் உரிமையாளர் திரு.
சொக்கலிங்கம் பொன்னாடை போர்த்துகிறார்.

http://i39.tinypic.com/1z6gzes.jpg

fidowag
15th January 2014, 10:21 PM
பின்னணி பாடகி எல்.ஆர்.ஈஸ்வரி அவர்களுக்கு திவ்யா பிலிம்ஸ் உரிமையாளர் திரு.சொக்கலிங்கம் பொன்னாடை போர்த்துகிறார்.

http://i43.tinypic.com/e0h7om.jpg

fidowag
15th January 2014, 10:29 PM
நடிகை ராஜஸ்ரீ அவர்களுக்கு திவ்யா பிலிம்ஸ் உரிமையாளர் திரு.சொக்கலிங்கம் பொன்னாடை போர்த்துகிறார்.

http://i41.tinypic.com/2rmxptx.jpg

fidowag
15th January 2014, 10:33 PM
தென்னிந்திய நடிகர் சங்க தலைவர் திரு.சரத்குமார் அவர்களுக்கு திவ்யா பிலிம்ஸ் உரிமையாளர் திரு.சொக்கலிங்கம் பொன்னாடை போர்த்துகிறார்.

http://i40.tinypic.com/a2x8qd.jpg

fidowag
15th January 2014, 10:37 PM
இயக்குனர் திரு.பி.வாசு அவர்களுக்கு திவ்யா பிலிம்ஸ் உரிமையாளர் திரு.சொக்கலிங்கம் பொன்னாடை போர்த்துகிறார்.

http://i40.tinypic.com/2chac3.jpg

fidowag
15th January 2014, 10:41 PM
அபிராமி தியேட்டர் அதிபர் திரு.ராமநாதன் அவர்களுக்கு திவ்யா பிலிம்ஸ் உரிமையாளர் திரு.சொக்கலிங்கம் பொன்னாடை போர்த்துகிறார்.

http://i42.tinypic.com/2iaqt4x.jpg

fidowag
15th January 2014, 10:45 PM
திரு திருப்பூர் சுப்பிரமணியம் (விநியோகஸ்தர்) அவர்களுக்கு திவ்யா பிலிம்ஸ் உரிமையாளர் திரு.சொக்கலிங்கம் பொன்னாடை போர்த்துகிறார்.

http://i43.tinypic.com/2eelu0w.jpg

fidowag
15th January 2014, 10:52 PM
திருமதி பி.ஆர்.விஜயலட்சுமி அவர்களுக்கு திவ்யா பிலிம்ஸ் உரிமையாளர் திரு.சொக்கலிங்கம் பொன்னாடை போர்த்துகிறார்.

http://i39.tinypic.com/5wb4ue.jpg

idahihal
15th January 2014, 10:54 PM
http://www.tamiltvshows.net/2014/01/kaalai-malar-special-vivek-interview-15-01-2014-jaya-tv-mattu-pongal-special-program/
இன்று காலை ஜெயா டிவியில் மக்கள் திலகத்தின் புகழ்பாடிய நடிகர் விவேக் அவர்களது பேட்டி. இடையில் சிறு தடங்கல் பொருத்தருள்க.

fidowag
15th January 2014, 10:57 PM
திரு.பி.ஆர்.பந்துலு அவர்களின் புதல்வனுக்கு திவ்யா பிலிம்ஸ் உரிமையாளர் திரு.சொக்கலிங்கம் பொன்னாடை போர்த்துகிறார்.

http://i44.tinypic.com/2yo2xdt.jpg

fidowag
15th January 2014, 11:01 PM
ஸ்டன்ட் மாஸ்டர் திரு.ஜாக்குவார் தங்கம் அவர்களுக்கு திவ்யா பிலிம்ஸ் உரிமையாளர் திரு.சொக்கலிங்கம் பொன்னாடை போர்த்துகிறார்.

http://i42.tinypic.com/2aezdbc.jpg

idahihal
15th January 2014, 11:05 PM
http://i44.tinypic.com/2i1dnpl.jpg

fidowag
15th January 2014, 11:05 PM
ஸ்ரீ முருகன் தியேட்டர் அதிபர் திரு.பரமசிவ முதலியார் (புரட்சி தலைவரின் நண்பர்) அவர்களின் புதல்வன் ,திரு சொக்கலிங்கம்
அவர்களுக்கு பொன்னாடை போர்த்துகிறார் .

http://i41.tinypic.com/260v2wm.jpg

idahihal
15th January 2014, 11:12 PM
http://i43.tinypic.com/vngfh0.jpg
என் அண்ணாவை ஒரு நாளும் என் உள்ளம் மறவாது

fidowag
15th January 2014, 11:15 PM
திவ்யா பிலிம்ஸ் உரிமையாளர் திருமதி.சாந்தி சொக்கலிங்கம் ,நடிகை ராஜஸ்ரீ, பின்னணி பாடகி எல்.ஆர்.ஈஸ்வரி ,திருமதி பி .ஆர்.விஜயலட்சுமி ,பின்னணி பாடகி திருமதி பி.சுசீலா ஆகியோர்
குத்துவிளக்கு ஏற்ற ,அருகில் திரு.சொக்கலிங்கம்,அவரது மகன்,
திரு.நிகில் ஆகியோர்.
http://i43.tinypic.com/11bov7m.jpg

idahihal
15th January 2014, 11:22 PM
http://i42.tinypic.com/vwvbr6.jpg

Richardsof
16th January 2014, 06:02 AM
http://i44.tinypic.com/2i1dnpl.jpg
1971 ஆண்டு பொம்மை சினிமா மாதழ் நடத்திய ''மக்கள் திலகத்துடன் ஒருநாள் '' நிகழ்ச்சியில் கலந்து கொள்ள குலுக்கல் முறையில் வாசகர்கள் தேர்ந்தெடுக்க படுவார்கள் என்று அறிவித்தார்கள் .பல்லாயிரம் வாசகர்கள்
கடிதங்கள் அனுப்பினார்கள் .சேலத்தை சேர்ந்த வாசகி ஒருவர் அதிர்ஷ்டசாலியாக தேர்ந்தெடுக்கப்பட்டார் .

மக்கள் திலகம் நினைத்தை முடிப்பவன் படப்பிடிப்பில் இருந்தபோது சேலம் வாசகி அன்று ஒரு நாள் முழுவதும்
படப்பிடிப்பில் எம்ஜிஆரை பேட்டி கண்டு மகிழ்ந்தார் .அவருடைய கேள்விகளுக்கு மக்கள் திலகம் இன்முகத்துடன்
பதில்கள் - கலந்துரையாடல் மிகவும் அருமையாக இருந்தது .

1971- பொம்மை இதழ் நண்பர்கள் யாரிடமாவது இருந்தால் மக்கள் திலகம் - வாசகி கலந்துரையாடல் பகுதியை
இங்கு பதிவிடலாம் .

Richardsof
16th January 2014, 06:21 AM
http://i43.tinypic.com/14cqwwx.jpg
இன்று ராஜ் டிவியில் மக்கள் திலகத்தின்

அடிமைப்பெண்

மாட்டுக்காரவேலன்

இரண்டு படங்கள் ஒளிபரப்பாக உள்ளது . மக்கள் திலகத்தின் பிறந்த நாளையொட்டி தமிழகமெங்கும் பட்டி தொட்டிகளில் மக்கள் திலகத்தின் பிறந்த நாள் வாழ்த்து போஸ்டர்ஸ் மற்றும் வண்ணமிகு பதாகைகள்
அலங்கரித்து வைக்கப்பட்டுள்ளது .

fidowag
16th January 2014, 08:13 AM
விழா துவக்கத்தில் குத்து விளக்கேற்றிய ஐவர மேடையில் காட்சி.

http://i42.tinypic.com/2wphzfb.jpg

fidowag
16th January 2014, 08:16 AM
விழாவில் அனைவரையும் வரவேற்றும், நன்றி தெரிவித்தும் ,
திரு.சொக்கலிங்கம் பேசினார்.

http://i39.tinypic.com/20qjkn5.jpg

fidowag
16th January 2014, 08:21 AM
விழா மேடையில் திருவாளர்கள் :ஜாகுவார் தங்கம்,திருப்பூர் சுப்ரமணியம் ,அபிராமி ராமநாதன், நடிகர் விவேக் .

http://i39.tinypic.com/2llefyo.jpg

Richardsof
16th January 2014, 08:22 AM
MAKKAL THILAGAM M.G.R

http://i42.tinypic.com/jtuwea.jpg

Richardsof
16th January 2014, 08:24 AM
1968- OCTOBER - PESUM PADAM - READER'S COMMENT PORTION

http://i40.tinypic.com/2zodc2r.jpg

fidowag
16th January 2014, 08:26 AM
விழா மேடையில் இயக்குனர் திரு.பி.வாசு,நடிகை ராஜஸ்ரீ ,பின்னணி பாடகியர் எல்.ஆர்.ஈஸ்வரி , பி.சுசீலா , நடிகர் சங்க தலைவர் திரு.சரத்குமார் ஆகியோர்.

http://i41.tinypic.com/55r0py.jpg

Richardsof
16th January 2014, 08:28 AM
http://i41.tinypic.com/nxklg6.jpg

http://youtu.be/IED4SXkugA4

fidowag
16th January 2014, 08:37 AM
விழா மேடையில் வெளியிட உள்ள "ஆயிரத்தில் ஒருவன்" டிஜிடல்
இசை தட்டு

http://i39.tinypic.com/audr1t.jpg

fidowag
16th January 2014, 08:43 AM
விழா மேடையில் "ஆயிரத்தில் ஒருவன்" டிஜிடல் இசைத்தட்டு
வெளியிடப்படுகிறது .

http://i44.tinypic.com/u3m0i.jpg

siqutacelufuw
16th January 2014, 08:46 AM
நம் இதய தெய்வத்தின் 97வது பிறந்த நாளினையொட்டி, நாளை 17-01-2014 அன்று மாலை 5.30 முதல் 6.30 மணி வரை, "ஆயிரத்தில் ஒருவன்" trailor மற்றும் digital audio இசை வெளியீட்டு விழா - மொத்த நிகழ்ச்சியும் "ஜெயாபிளஸ்" சேனலில் ஒளிபரப்பாகிறது. - உறுதி செய்யப்படாத தகவல்.

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !

அன்பன் : சௌ. செல்வகுமார்


என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

fidowag
16th January 2014, 08:51 AM
http://i40.tinypic.com/2rc29up.jpg

fidowag
16th January 2014, 08:59 AM
http://i43.tinypic.com/209kfeo.jpg

fidowag
16th January 2014, 09:10 AM
http://i43.tinypic.com/விழா மேடையில் "ஆயிரத்தில் ஒருவன்" டிஜிடல் ட்ரைலர்
வெளியிடப்படுகிறது .

http://i43.tinypic.com/2hr1g79.jpg

Richardsof
16th January 2014, 10:28 AM
http://i39.tinypic.com/25a7vhu.jpg

Russellisf
16th January 2014, 11:38 AM
Happy birthday thalaiva


2970

Russellisf
16th January 2014, 12:08 PM
2971

மனித நேயத்திற்கு பிறந்த நாள்

புனித தெய்வத்திற்கு பிறந்த நாள்

எட்டாவது வள்ளலுக்கு பிறந்த நாள்

ஏழைகளின் தலைவனுக்கு பிறந்த நாள்

அன்னை சத்யாவின் மைந்தனுக்கு பிறந்த நாள்

அண்ணாவின் இதயக்கனிக்கு பிறந்த நாள்

தர்மத்திருக்கு பிறந்த நாள்

தாய்குலத்தின் தங்கமகனுக்கு பிறந்த நாள்

தங்கத்திற்கு பிறந்த நாள் -கொள்கை

சிங்கத்திற்க்கு பிறந்த நாள்

மொத்தத்தில் கடவுள் கடவுளை படைத்த நாள்

Richardsof
16th January 2014, 01:53 PM
சென்னை, ஜன. 16–

எம்.ஜி.ஆர். பிறந்த நாளையொட்டி அ.தி.மு.க பொதுச் செயலாளரும், முதல்–அமைச்சருமான ஜெயலலிதா அ.தி.மு.க. தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:–

அ.தி.மு.க நிறுவனத் தலைவர், இதய தெய்வம் புரட்சித் தலைவர் ‘பாரத் ரத்னா’ டாக்டர் எம்.ஜி.ஆரின் 97-ஆவது பிறந்த நாள் விழாவினை முன்னிட்டு, என் உயிரினும் மேலான எனதருமைக் கழக உடன்பிறப்புகளாகிய உங்கள் ஒவ்வொருவரையும் இந்த மடல் வாயிலாக சந்திப்பதில் நான் எல்லையில்லா மகிழ்ச்சி அடைகிறேன்.

‘பொன்மனச் செம்மல்’ என்றும், ‘புரட்சித் தலைவர்’ என்றும், ‘மக்கள் திலகம்‘ என்றும், ‘இதயக்கனி’ என்றும், இன்னும் என்னென்னவோ வாழ்த்துரைகளாலும், எத்தனை, எத்தனையோ தலைமுறைகளுக்கு தமிழர்கள் நம் இதய தெய்வம் எம்.ஜி.ஆரை வாழ்த்தியும், வணங்கியும், பின்பற்றியும் மகிழப் போகிறார்கள். ‘எம்.ஜி.ஆர்.’ என்ற மூன்றெழுத்தே ஒரு மந்திரம் தான். நினைக்கும் போதும், உச்சரிக்கும் போதும் உற்சாகத்தையும், உயர்வையும் தருகின்ற திருமந்திரம் ‘எம்.ஜி.ஆர்.’ என்னும் திருமந்திரம். திரையுலகிலும், அரசியலிலும் ஒருசேர பயணித்து, இரண்டு துறைகளிலும் வெற்றிக் கொடியை நாட்டிய ஒரே தலைவர் நம் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்.

ஏழை, எளிய மக்களின் உயர்வுக்காகவும், உழைப்பால் உலகை ஒவ்வொரு நாளும் புதுப்பித்துக் கொண்டிருக்கும் சாமான்ய மக்களுக்காகவும் நல் உள்ளத்தோடு பாடுபடுகின்ற உயர்ந்த மனிதர்களை ஒவ்வொரு நாட்டின் வரலாற்றிலும் பார்க்க முடியும். எம்.ஜி.ஆர். அத்தகைய ஒரு வரலாற்று மனிதர் மட்டுமல்ல, அவரை ஒத்த சரித்திர நாயகர் களுக்கெல்லாம் இல்லாத மேலும் பல சிறப்புகளைப் பெற்றவர் ஆவார்.

இப்படிப்பட்ட ஒரு சரித்திர நாயகரை தலைவராகப் பெற்றிருக்கின்ற பெரும் பாக்கியம் இறைவனால் நமக்கு அருளப்பட்டது என்பதை நினைக்கும் போது உள்ளம் நெகிழ்கிறது. உணர்ச்சிகளின் மேலீட்டால் கண்களில் நீர் கசிகிறது. இப்படிப்பட்ட தலைவருக்கு விசுவாசமான தொண்டராக, உடன்பிறப்பாக, ரத்தத்தின் ரத்தமாக இறுதி மூச்சுவரை வாழும் வீர சபதம் மேற் கொள்ளும் தருணம் தான் எம்.ஜி.ஆரின் பிறந்த நாள் விழா.

பேரறிஞர் அண்ணாவின் இதயக்கனியாக விளங்கியவர் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். தி.மு.க.-வின் வளர்ச்சிக்கு உரமாகவும், வேராகவும் இருந்து அல்லும் பகலும் அயராது உழைத்து திமுக-வை ஆட்சிப் பீடத்தில் அமர்த்திய பெருமை புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆருக்கு உண்டு.

பேரறிஞர் அண்ணாவின் மறைவிற்குப் பின், எம்.ஜி.ஆர். தி.மு.க.-வின் தலைமைப் பதவிக்கும், முதல்–அமைச்சர் பதவிக்கும் போட்டியிட்டு வென்றிருக்க முடியும். அந்த அளவுக்கு மக்கள் மத்தியிலும், தொண்டர்கள் மத்தியிலும் செல்வாக்கு பெற்று விளங்கியவர் நம் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். இருப்பினும், அரசியலில் கிடைக்கும் பதவியினை ஒரு பொருட்டாகவே அவர் நினைத்ததில்லை. அதனால் தான், பேரறிஞர் அண்ணாவின் மறைவிற்குப் பிறகு ஒரு “கிங் மேக்கராக” செயல்பட்டு கருணாநிதியை முதல்–அமைச்சர் ஆக்கினார் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்.

ainefal
16th January 2014, 03:32 PM
http://i40.tinypic.com/nx2xx2.jpg

http://www.youtube.com/watch?v=5hG-CRYcdHc

http://www.youtube.com/watch?v=x9gKAuLvMsU

Richardsof
16th January 2014, 04:34 PM
http://i43.tinypic.com/29gis7r.jpghttp://i42.tinypic.com/2lvb5td.jpg

Richardsof
16th January 2014, 06:18 PM
http://i44.tinypic.com/16jopkk.png

Richardsof
16th January 2014, 06:21 PM
http://i43.tinypic.com/2aflp1g.png

Richardsof
16th January 2014, 06:26 PM
super still sailesh sir
thanks
http://i43.tinypic.com/kf494k.jpg

idahihal
16th January 2014, 07:19 PM
http://i40.tinypic.com/2iv1h52.jpg
Superb Sailesh Bashu sir,
All the works done by Mr.Vivekanandan Krishnamoorthi is excellent. Please introduce him to our thread. We are very eager to know about him. Thanking you,

idahihal
16th January 2014, 07:20 PM
http://i40.tinypic.com/2iv1h52.jpg
Superb Sailesh Bashu sir,
All the works done by Mr.Vivekanandan Krishnamoorthi is excellent. Please introduce him to our thread. We are very eager to know about him. Thanking you,

idahihal
16th January 2014, 07:25 PM
http://i42.tinypic.com/vwvbr6.jpg

fidowag
16th January 2014, 07:50 PM
http://i42.tinypic.com/2lvdzcm.jpg

fidowag
16th January 2014, 07:52 PM
http://i41.tinypic.com/28uoi9i.jpg

http://i42.tinypic.com/14imx3o.jpg

fidowag
16th January 2014, 07:56 PM
http://i1273.photobucket.com/albums/y412/esvee6/798c7bc0-ae27-48bf-8478-facda99a01a2_zps63358dac.jpg (http://s1273.photobucket.com/user/esvee6/media/798c7bc0-ae27-48bf-8478-facda99a01a2_zps63358dac.jpg.html)


இனிய நண்பர் திரு. வினோத் அவர்களுக்கு மிக்க நன்றி.

ஆர். லோகநாதன்

fidowag
16th January 2014, 08:05 PM
.நண்பர் வினோத் அவர்களே,

பெங்களுரு தமிழ் சங்க அழைப்பிதழ் கண்டு மகிழ்ச்சி.
விழா இனிதே வெற்றி பெற அனைத்துலக எம்.ஜி.ஆர். பொதுநல சங்கம்
நிர்வாகி என்கிற வகையில் அட்வான்ஸ் நல்வாழ்த்துக்கள் .

விழா குழுவினருக்கு தெரியபடுத்தவும்.

நண்பர் திரு.சைலேஷ் பாபு அவர்களே,

மக்கள் திலகத்தின் கருப்பு வெள்ளை படங்களை அவ்வப்போது வண்ணத்தில் வெளியிடுவது குறித்து மிக்க மகிழ்ச்சி.
மலைக்கள்ளன் ஸ்டில் அருமை. கருப்பு வெள்ளை வெற்றி படங்கள்
முழுதும் வண்ணத்தில் வெளி வந்தால் நம் உள்ளமெல்லாம் மகிழும்.
அந்நாள் எந்நாளோ . தொடரட்டும் தங்கள் முயற்சி.

Richardsof
16th January 2014, 08:10 PM
http://www.youtube.com/watch?v=jLgJ42Uy8qs&list=PLAD90070B90522C56&feature=share

fidowag
16th January 2014, 08:12 PM
நடிகர் திரு.ராஜன் (மக்கள் திலகத்தின் ரசிகர்) அவர்களுக்கு ,திரு.சொக்கலிங்கம் பொன்னாடை போர்த்தி வரவேற்கிறார்.

http://i44.tinypic.com/2m6ucmu.jpg

fidowag
16th January 2014, 08:16 PM
நடிகர் விவேக் புரட்சி தலைவரை அழகாக வர்ணித்து பேசுகிறார்.

http://i44.tinypic.com/5vdjf9.jpg

fidowag
16th January 2014, 08:21 PM
விழா மேடையில் சிறப்பு விருந்தினர்கள் .

http://i39.tinypic.com/vertps.jpg

oygateedat
16th January 2014, 08:23 PM
http://i39.tinypic.com/11u7qeu.jpg

oygateedat
16th January 2014, 08:29 PM
இன்று தொலைக்காட்சியில் மக்கள் திலகத்தின் காவியங்கள்

ராஜ்

அடிமைப்பெண்

மாட்டுக்கார வேலன்

ராஜ் degital plus

குடியிருந்தகோயில்

ரகசிய போலீஸ் 115

fidowag
16th January 2014, 08:33 PM
தென்னிந்திய நடிகர் சங்க தலைவர் திரு.சரத்குமார் அவர்கள்
புரட்சி தலைவரை யாராவது தவறாக பேசினால் , நானே உதைப்பேன்
என்பதோடு ,புரட்சி தலைவரின் அழகு, நடை,கம்பீரம்,உடற்கட்டு,நடிப்பு,
உழைப்பு,வாள் /கத்தி சண்டை வீச்சு ஆகியன பற்றி பிரமாதமாக
வர்ணித்து பேசினார்.
http://i44.tinypic.com/2qm3sxl.jpg

oygateedat
16th January 2014, 08:41 PM
மதுரை சென்ட்ரல் திரை அரங்கில் சென்ற வெள்ளி முதல்

மக்கள் திலகத்தின் வண்ணக்காவியம்

மாட்டுக்கார வேலன் வெற்றிகரமாக நடைபெற்று வருகின்றது.

ஞாயிற்றுகிழமை மாலைக்காட்சி அரங்கு நிறைந்தது.

தகவல் - திரு.ஆர்.சரவணன், மதுரை

fidowag
16th January 2014, 08:41 PM
இறுதியாக மறைந்த தயாரிப்பாளர் திரு.பி.ஆர்.பந்துலு அவர்களின் மகள் திருமதி.பி.ஆர்.விஜயலட்சுமி ,மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.அவர்களுக்கு
தன தந்தையார் "ஆயிரத்தில் ஒருவன் "படத்திற்கு அட்வான்ஸ் வழங்கியது குறித்தும் ,படத்திற்கு ஒத்துழைப்பு அளித்த விதத்தையும்
பேசினார்.
http://i39.tinypic.com/2i8x152.jpg

oygateedat
16th January 2014, 08:42 PM
http://i42.tinypic.com/11r3k9j.jpg

நாளை மக்கள் திலகத்தின் பிறந்த நாள்.

மனித நேய நாள்.

உழைப்பவரே உயர்ந்தவர் என்று தம் வாழ் முழுவதும்

சொல்லியவர். உழைப்பால் உயர்ந்தவர்.

காவியதலைவன் புகழ் வாழ்க வாழ்க

மக்கள் திலகத்தின் பக்தன்

எஸ் ரவிச்சந்திரன்.

fidowag
16th January 2014, 08:51 PM
விழா மேடையில் திரு.லக்ஷ்மன் ஸ்ருதி (இசை அமைப்பாளர் )அவர்கள் திரு.சொக்கலிங்கம், நடிகை ராஜஸ்ரீ, பின்னணி பாடகியர் எல்.ஆர்.ஈஸ்வரி ,பி.சுசீலா ஆகியோருக்கு மலர்மாலை அணிவித்தார்.
http://i43.tinypic.com/27xibli.jpg

oygateedat
16th January 2014, 08:55 PM
AVINASHI ROAD, TIRUPUR

http://i40.tinypic.com/30safdf.jpg

fidowag
16th January 2014, 08:56 PM
விழா மேடையில் இறுதி காட்சி. இத்துடன் "ஆயிரத்தில் ஒருவன்" ட்ரைலர் மற்றும் டிஜிடல் இசைத்தட்டு வெளியீட்டு விழா இனிதே நிறைவுற்றது.

http://i40.tinypic.com/dw5coy.jpg

ainefal
16th January 2014, 08:58 PM
கருப்பு வெள்ளை படங்களை வண்ணத்தில் வெளியிடுவது நண்பர் திரு ஜெய்சங்கர் முன்பு பதிவு செய்தது போல் திரு. விவேகாநந்தன் கிருஷ்ணமூர்த்தி அவர்கள். In fact the credit goes to him and to Mr. Nihar Deen, Abu Dhabi for providing wonderfel photoshop images of the Almghty.

http://i40.tinypic.com/qnnrep.jpg
http://i42.tinypic.com/23v1aid.jpg

தெய்வத்தின் பிறந்த நாளை கொண்டாடும் அணைத்து ரதத்தின் ரத்தங்களுக்கும், அமைப்புகளுக்கும், பொது மக்களுக்கும் எனது வாழ்த்துகளையும் நன்றியையும் இங்கே பதிவு செய்கிறேன்.

Richardsof
16th January 2014, 09:07 PM
மக்கள் திலகம் - எம்ஜிஆர் -97 17.1.2014
http://i44.tinypic.com/1zv4rnt.jpg
இன்று மக்கள் திலகத்தின் பிறந்த நாள் .உலகமெங்கும் உள்ள பல்வேறு நாடு , மக்கள் , மொழி , இனம்
கடந்து அவரை நேசிக்கும் மக்கள் - ரசிகர்கள் - தொண்டர்கள் எம்ஜிஆரின் பிறந்த நாளை சிறப்பாக
கொண்டாடி வருவது மகிழ்சியான செய்தியாகும் .

பல மாற்றங்கள் நிகழ்ந்து வரும் திரை உலகில் நவீன தொழில்நுட்பம் மூலம் திரை உலகின் வளர்ச்சி
என்னதான் அபரிதமாக முன்னேறினாலும் , புதிய படங்கள் வாழ்வு முதல் வாரத்துடன் கதை முடிந்து விடுகிறது . இன்றைய கதாநாயகர்கள் தங்களை நம்பாமல் - எந்த கடின உழைப்பும் இல்லாமல் -வெறும் கூச்சல் - பஞ்ச் வசனம் என்ற பெயரில் அடிக்கும் இவர்களின் கொடுமை ....

மக்கள் திலகத்தின் படங்களை இன்று பார்த்தாலும் மனதிற்கும் கண்ணுக்கும் விருந்தாக உள்ளது .
அருமையான படத்தின் தலைப்பு - இனிமையான பாடல்கள் - புதுமையான காட்சிகள் - சமூக
நலனில் அக்கறையான காட்சிகள் - மக்களுக்கு அறிவுரை - மக்கள் திலகத்தின் எழிலான தோற்றம்
அருமையான நடிப்பு என்று படத்திற்கு படம் ரசிகர்களுக்கு விருந்த தந்த காலம் திரை உலகின் பொற்காலம் .

மக்கள் திலகம் நடிப்பு துறை விலகி 37 ஆண்டுகள் ஆனாலும் இன்றும் அவருடைய படங்கள் வெள்ளி திரையிலும் சின்ன திரையிலும் கொடிக்கட்டி பவனி வருகிறது .மக்கள் திலகத்தின் ''ஆயிரத்தில் ஒருவன் '' அடுத்த மாதம் அகன்ற படமாக டிஜிட்டல் காவியமாக திரைக்கு வர உள்ளது .

உலகம் சுற்றும் வாலிபன் - படகோட்டி - ரிக்ஷாக்காரன் - மாட்டுக்காரவேலன் போன்ற படங்களும்
புதுப்பிக்கப்பட்டு வரும் ஆண்டுகளில் திரைக்கு வர உள்ளது .

மக்கள் திலகத்தின் மலர் மாலை - 2 சிறப்பான முறையில் தயாராகி வருகிறது .

மனித நேய மாமனிதரின் பிறந்தநாளில் எல்லோரும் எல்லா வளமும் பெற்று
நட்புறவாக வாழ்ந்து பொன்மனசெம்மலின் வழி நடப்போம் .

fidowag
16th January 2014, 09:08 PM
http://i41.tinypic.com/351zg3b.jpg

http://i39.tinypic.com/vhyg4h.jpg

fidowag
16th January 2014, 09:10 PM
http://i40.tinypic.com/2d7a32x.jpg

fidowag
16th January 2014, 09:11 PM
http://i41.tinypic.com/5ppfrd.jpg

Russellail
16th January 2014, 09:14 PM
http://i40.tinypic.com/10oqhxs.jpg



பாட்டுடைத் தலைவன் - எம்.ஜி.ஆர்.

மார்கழி கடந்தது, தைமாதம் பிறந்தது,
வானிலேயொரு பேரொளி வந்தது,
மலர்கள்யாவும் உள்ளம் குளிர்ந்தது
ஆலயம் எங்கிலும் அருள்மணி ஒலித்தது
தர்மத்தின் தேவன் தரணியில் உதித்தனன்.

கண்டிகை பெண்கள் பாராட்ட,
இராமச்சந்திரன் என்றே பெயர்சூட்ட
சேர்த்து அணைத்தால் தெய்வத்தாய்,
சேர்த்து அணைத்தால் தெய்வத்தாய் -
செங்கதிரோன் பொழிந்தான் பொன்னொளிரை -
மருதூர் மேனன் மகிழ்ந்தான் விண்ணாக................

கண்டிகை பெண்கள் பாராட்ட
இராமச்சந்திரன் என்றே பெயர்சூட்ட,
சேர்த்து அணைத்தால் தெய்வத்தாய்,
சேர்த்து அணைத்தால் தெய்வத்தாய் -
செங்கதிரோன் பொழிந்தான் பொன்னொளிரை.-
மருதூர் மேனன் மகிழ்ந்தான் விண்ணாக.................

அண்ணனின் இதயக்கனி ஆனதுவோ
மக்களின் ஆட்சிகாண உழைத்ததுவோ
சோதனை வந்த போதினிலும்
சாதனை படைத்து உயர்ந்ததுவோ.
அதர்மத்தை வென்று, மக்கள்இனம்,
இன்னல் அகற்றிட வந்ததுவோ.

காஞ்சிஅறிஞன் நின்செப்பும் மொழிகளை கேட்டிடுவான்
மந்திரம் என்பது மன்னன் இவன்தானோ - பொன்மன
எங்க வீட்டுப் பிள்ளையின் எழில்தானோ (புகழ்தானோ)
அவன் பொன்மனத்தில் இருப்பது செந்தேனோ.

நின்திரைப்படம் வெளியாகும் நன்னாளில்
மலர்களால் நின்னை வரவேற்போம்.
அதன் வெற்றியை சிறப்புடன் கொண்டாடி-
நாங்கள் - நிதம் பேசிபேசி மகிழ்ந்திருப்போம்.

கண்டிகை பெண்கள் பாராட்ட,
இராமச்சந்திரன் என்றே பெயர்சூட்ட
சேர்த்து அணைத்தால் தெய்வத்தாய்,
சேர்த்து அணைத்தால் தெய்வத்தாய் -
செங்கதிரோன் பொழிந்தான் பொன்னொளிரை -
மருதூர் மேனன் மகிழ்ந்தான் விண்ணாக..............
கண்டிகை பெண்கள் பாராட்ட,
இராமச்சந்திரன் என்றே பெயர்சூட்ட.

பாடல் ஆக்கம் - தியாகராஜன்
பாடல் வரிகள் - தியாகராஜன் (தெனாலிராஜன்)
பாடல் பாடுபவர் - தியாகராஜன்
Inspired by : மக்கள் திலகம்

ujeetotei
16th January 2014, 10:02 PM
2971

மனித நேயத்திற்கு பிறந்த நாள்

புனித தெய்வத்திற்கு பிறந்த நாள்

எட்டாவது வள்ளலுக்கு பிறந்த நாள்

ஏழைகளின் தலைவனுக்கு பிறந்த நாள்

அன்னை சத்யாவின் மைந்தனுக்கு பிறந்த நாள்

அண்ணாவின் இதயக்கனிக்கு பிறந்த நாள்

தர்மத்திருக்கு பிறந்த நாள்

தாய்குலத்தின் தங்கமகனுக்கு பிறந்த நாள்

தங்கத்திற்கு பிறந்த நாள் -கொள்கை

சிங்கத்திற்க்கு பிறந்த நாள்

மொத்தத்தில் கடவுள் கடவுளை படைத்த நாள்

Super Yukesh Sir.

fidowag
16th January 2014, 10:10 PM
http://i40.tinypic.com/289dil5.jpg

fidowag
16th January 2014, 10:13 PM
ஆவடி பேருந்து நிலையம் அருகில்


http://i41.tinypic.com/2rwx5yh.jpg

fidowag
16th January 2014, 10:15 PM
http://i40.tinypic.com/2rclttt.jpg

fidowag
16th January 2014, 10:18 PM
http://i43.tinypic.com/2wn0m0k.jpg

fidowag
16th January 2014, 10:20 PM
http://i40.tinypic.com/o52vqw.jpg

fidowag
16th January 2014, 10:22 PM
http://i40.tinypic.com/n66hk5.jpg

fidowag
16th January 2014, 10:25 PM
http://i40.tinypic.com/2ljtaht.jpg

ujeetotei
16th January 2014, 10:29 PM
Chandranveersamy from facebook

" 1962 மக்கள் சபைக்கான பொதுத்தேர்தலில் அண்ணா ,பெரம்பலூர் நாடாளுமன்றத் தொகுதியில் கழகத்தின் வேட்பாளராக என்னை அறிவித்துவிட்டார். தேர்தலில் - அதுவும் நாடாளுமன்றத்துக்கு - போட்டியிட வேண்டிய அளவுக்கு நான் தயாராக இல்லை. அந்தத் தொகுதியில் எனக்கு அதற்கு முன் எத்தகைய தொடர்பும் பழக்கமும் கிடையாது.

ஆயினும் தேர்தல் துவக்கத்துக்கு இரண்டு வாரங்களுக்கு முன்னதாக, எம்ஜிஆரைச் சந்தித்தபொழுது. அவர் மிக உற்சாகத்துடன் என்னிடம் பேசினார். "உங்கள் தொகுதியில் உள்ள எல்லா சட்டசபைத் தொகுதிகளிலும் ஒவ்வொரு கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யுங்கள். இரண்டு நாள்களில் நான் அங்கு வந்து விடுகிறேன். அப்பொழுது கூட்டங்களை மண்டபங்களில் வைத்து ஒவ்வொருவருக்கும் ரூ. 5 என்று கட்டணம் போட்டு கழகத்துக்கான நிதிகளைச் சேர்ப்போம்' என்றார்.

அந்த வகையில் அவர் வந்ததும் ஒவ்வொரு சட்டசபைத் தொகுதியிலும் ரூ.1,000 அல்லது 1,200 கிடைத்தது. அந்தக் காலத்தில் அது பெரிய தொகை. கிடைத்த பணத்தை அந்தந்த தொகுதி சட்டசபை வேட்பாளரிடம் தந்துவிட்டேன். எம்ஜிஆர் வந்ததால் நல்ல பிரசாரமும் பண உதவியும் கிட்டின. மக்களிடமும் கழகச் செயலாளர்களிடமும் பெருத்த வரவேற்பையும் உற்சாகத்தையும் உண்டாக்கின.

நாடாளுமன்றத் தேர்தலுக்கு கழகத்திலிருந்து எனக்குத் தரப்பட்ட பணம் ரூ.2,500 தான். அது ஒரு வாடகைக் காரை நாளொன்றுக்கு ரூ. 30-க்கு அமர்த்தவும் அதற்கான பெட்ரோல் செலவுக்கும் பயன்பட்டது. மற்ற வகைகளில் கூட்டங்கள் போடுவதையும் சைக்கிள் ஊர்வலம் வைப்பதையும் கழகத்தினரே செய்தனர். காங்கிரஸ் சார்பில், அங்கு இருமுறை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த பழனியாண்டி மீண்டும் போட்டியிட்டார், அதற்கு உட்பட்ட ஐந்து சட்டசபைத் தொகுதிகளிலும் காங்கிரஸ் சட்டசபை உறுப்பினர்கள்தாம் 1957 தேர்தலில் வெற்றி பெற்றிருந்தார்கள். இவை போதாதென்று டால்மியா சிமென்ட் தொழிற்சாலை முதலாளியின் பணமும் செல்வாக்கும் காங்கிரஸ் க்குப் பெரும் உதவியாக இருந்தன.

முதலில் எம்ஜிஆர் எல்லா சட்டசபைத் தொகுதிகளிலும் செய்த பிரசாரமும் பிறகு அண்ணாவின் பிரசாரமும் தொகுதியில் வேகமாகப் பரவின. கழகத் தோழர்களும், பொதுமக்களும், படித்த இளைஞர்களும் மிகவும் உறுதியுடனும் உற்சாகத்துடனும் தொகுதியில் எங்கும் தேர்தல் பணிகளைச் செம்மைப்படச் செய்தார்கள்.
அவர்களின் பிரச்சாரத்தால் பெரும் வாக்குகள் வித்தியாசத்தில் நான் வெற்றி பெற்றேன் .

= இரா.செழியன் . ( தினமணியில் )

ainefal
16th January 2014, 10:43 PM
http://www.youtube.com/watch?v=KoixvrIMVp4

ainefal
16th January 2014, 10:59 PM
http://www.youtube.com/watch?v=7bU-gTAl6-0

ainefal
16th January 2014, 11:09 PM
http://www.youtube.com/watch?v=trbiU5ADkXY
http://www.youtube.com/watch?v=8mGCb1kPrto

fidowag
16th January 2014, 11:22 PM
தமிழ் அறியும் பெருமாள்
அரிச்சந்திரன்,
ஸ்ரீமுருகன்,
அபிமன்யு
ரத்னகுமார்,
ஏழைகள் மனம் கவர்ந்த மலைக்கள்ளன்
மதுரை வீரன்,
ராஜராஜன் ,
மன்னாதி மன்னன் ,
ராஜ தேசிங்கு,
குடும்ப தலைவன்,
தாயை காத்த தனயன்,
விக்கிரமாதித்தன் ,
ஆனந்த ஜோதி,
காஞ்சி தலைவனின் தம்பி ,
நீதிக்கு பின் பாசம் என உணர்த்தியவர்,
தெய்வத்தாய் பெற்ற கலைமகன்,
உழைக்கும் வர்கத்தின் தொழிலாளி ,
எதிரிகளை வீழ்த்தும் வேட்டைக்காரன்,
அனைவரின் ஆசைமுகம் ,
முகராசி கொண்ட கோமான் ,
தோல்வியை எதிரிக்கு பரிசளித்தே பழகிய ஆயிரத்தில் ஒருவன்,
ஏழைகள் போற்றும் எங்க வீட்டு பிள்ளை.
அன்பே வா என அழைக்கும் ஜே.பி.
கலையுலகின் சந்திரோதயம்,
முப்பிறவி கண்ட தனிப்பிறவி ,
கோட்டையில் அமர்ந்து அரச கட்டளை இட்டவர் ,
ஏழை, எளிய சமுதாயத்தின் காவல்காரன்,
கலையுலக தாய்க்கு தலைமகன் ,
விவசாயிகளின் தோழன்,
ஏழைகளின் இதயத்தில் குடியிருந்த கோயில் ,
திரையுலகின் ஒளிவிளக்கு ,
மகேசன் தீர்ப்புக்குள்ளான தலைவன்,
எங்கள் தங்கம்,
சத்துணவு தந்த அன்னமிட்ட கை.
நான் ஏன் பிறந்தேன் என அனைவரையும் சிந்திக்க வைத்தவர் ,
நேற்று இன்று நாளை என்றுமே தமிழ் திரையுலகின் வசூல் சக்கரவர்த்தி .
உரிமைக்குரல் எழுப்பிய சரித்திர நாயகன் ,
சிரித்து வாழ வேண்டும் என அறிவுறுத்தியவர்
நினைத்ததை முடித்த சாதனையாளர்,
நாளை நமதே என முழங்கியவர் ,
பேரறிஞர் அண்ணாவின் இதயக்கனி ,
உழைக்கும் கரங்கள்,
ஊருக்கு உழைப்பவன்,
நவரத்தினம்,
மீனவ நண்பன்
ஆகிய பாத்திரங்கள்/பட்டங்கள் உடைய நமது புரட்சி தலைவர் புகழ்
இன்று போல என்றும் வாழ்க!!!

பல்லாண்டு வாழ்க!!!!!

ஆர். லோகநாதன்.

ujeetotei
16th January 2014, 11:30 PM
Super sir.

ainefal
17th January 2014, 12:00 AM
http://www.youtube.com/watch?v=VpAtzL2znFw

http://www.youtube.com/watch?v=jxajiBcJ7Bs

ainefal
17th January 2014, 12:09 AM
தமிழ் அறியும் பெருமாள்
அரிச்சந்திரன்,
ஸ்ரீமுருகன்,
அபிமன்யு
ரத்னகுமார்,
ஏழைகள் மனம் கவர்ந்த மலைக்கள்ளன்
மதுரை வீரன்,
ராஜராஜன் ,
மன்னாதி மன்னன் ,
ராஜ தேசிங்கு,
குடும்ப தலைவன்,
தாயை காத்த தனயன்,
விக்கிரமாதித்தன் ,
ஆனந்த ஜோதி,
காஞ்சி தலைவனின் தம்பி ,
நீதிக்கு பின் பாசம் என உணர்த்தியவர்,
தெய்வத்தாய் பெற்ற கலைமகன்,
உழைக்கும் வர்கத்தின் தொழிலாளி ,
எதிரிகளை வீழ்த்தும் வேட்டைக்காரன்,
அனைவரின் ஆசைமுகம் ,
முகராசி கொண்ட கோமான் ,
தோல்வியை எதிரிக்கு பரிசளித்தே பழகிய ஆயிரத்தில் ஒருவன்,
ஏழைகள் போற்றும் எங்க வீட்டு பிள்ளை.
அன்பே வா என அழைக்கும் ஜே.பி.
கலையுலகின் சந்திரோதயம்,
முப்பிறவி கண்ட தனிப்பிறவி ,
கோட்டையில் அமர்ந்து அரச கட்டளை இட்டவர் ,
ஏழை, எளிய சமுதாயத்தின் காவல்காரன்,
கலையுலக தாய்க்கு தலைமகன் ,
விவசாயிகளின் தோழன்,
ஏழைகளின் இதயத்தில் குடியிருந்த கோயில் ,
திரையுலகின் ஒளிவிளக்கு ,
மகேசன் தீர்ப்புக்குள்ளான தலைவன்,
எங்கள் தங்கம்,
சத்துணவு தந்த அன்னமிட்ட கை.
நான் ஏன் பிறந்தேன் என அனைவரையும் சிந்திக்க வைத்தவர் ,
நேற்று இன்று நாளை என்றுமே தமிழ் திரையுலகின் வசூல் சக்கரவர்த்தி .
உரிமைக்குரல் எழுப்பிய சரித்திர நாயகன் ,
சிரித்து வாழ வேண்டும் என அறிவுறுத்தியவர்
நினைத்ததை முடித்த சாதனையாளர்,
நாளை நமதே என முழங்கியவர் ,
பேரறிஞர் அண்ணாவின் இதயக்கனி ,
உழைக்கும் கரங்கள்,
ஊருக்கு உழைப்பவன்,
நவரத்தினம்,
மீனவ நண்பன்
ஆகிய பாத்திரங்கள்/பட்டங்கள் உடைய நமது புரட்சி தலைவர் புகழ்
இன்று போல என்றும் வாழ்க!!!

பல்லாண்டு வாழ்க!!!!!

ஆர். லோகநாதன்.

அருமை சார். தெய்வத்தை வாழத முடியாத காரணத்தினால் நான் வணங்குகிறேன்.

ainefal
17th January 2014, 12:39 AM
https://www.youtube.com/watch?v=DNa2UVWXukY

Thanks to Mr. Sathya Veera

ainefal
17th January 2014, 12:46 AM
http://i42.tinypic.com/2lvdzcm.jpg

இன்றைய மலை மலர் நாளிதழ் [16/01/2014] பார்க்கவும். http://epaper.maalaimalar.com/epaperhome.aspx?issue=1612014

Thanks to Mr.Loganathan for the above.

தெய்வத்தின் பிறந்த நாளை கொண்டாடும் அணைத்து ரதத்தின் ரத்தங்களுக்கும், அமைப்புகளுக்கும், பொது மக்களுக்கும் எனது வாழ்த்துகளையும் நன்றியையும் இங்கே பதிவு செய்கிறேன்.

ainefal
17th January 2014, 01:24 AM
http://www.youtube.com/watch?v=3biNVcq7HEY

V.V.IMPORTANT SPEECH BY T.R - He says is the fact about Almighty.

Richardsof
17th January 2014, 04:58 AM
http://i39.tinypic.com/2ch128n.jpg
http://www.youtube.com/watch?v=dryGzA_zOzk&feature=share&list=PLA8D2A8B5C10E240D&index=1

Richardsof
17th January 2014, 05:00 AM
http://i41.tinypic.com/2mrgsq1.jpg

Richardsof
17th January 2014, 05:40 AM
http://i42.tinypic.com/2hn3o6p.jpg

Richardsof
17th January 2014, 05:56 AM
THANKS THIRU KUMAR RAJENDRAN
http://i39.tinypic.com/t5gnsy.jpg

Richardsof
17th January 2014, 06:32 AM
புதுச்சேரி :புதுச்சேரி கடற்கரையில், வரையப்பட்ட, எம்.ஜி.ஆர்., ஓவியம், சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்தது. எம்.ஜி.ஆரின், 97வது பிறந்த நாள் விழா இன்று கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி, புதுச்சேரி, முதலியார்பேட்டையை சேர்ந்த ஓவியர் குமார், புச்சேரி கடற்கரை காந்தி திடலில், 50 அடி நீளம் மற்றும் 16 அடி அகலத்தில், எம்.ஜி.ஆரின் உருவப் படத்தை பிரமாண்டமாக வரைந்துள்ளார்.
ஓவியர் குமார் கூறுகையில், "இந்த ஓவியத்தை வரைய, 23 மணி நேரம் ஆனது. படத்தில், எம்.ஜி.ஆரின் பிரசித்தி பெற்ற வெள்ளை குல்லாவிற்கு, காலி பிளவரையும், கருப்புக் கண்ணாடிக்கு, கருப்புக் கலர் கண்ணாடிக் குண்டுகளையும், கையில் கட்டும் வாட்சிற்கு, சுவர் கடிகாரமும், அவர் அணிந்திருக்கும் வேட்டியின் கட்சி பார்டருக்கு கரும்பு, ஷூவிற்கு கருப்பு திராட்சைகளையும் பயன்படுத்தி உள்ளேன். சட்டை மற்றும் வேஷ்டியை, கல் உப்பை கொண்டு வரைந்துள்ளேன்,'' என்றார். இந்த ஓவியத்தை, காணும் பொங்கலான நேற்று, ஏராளமானோர் கண்டு மகிழ்ந்தனர்.

http://i43.tinypic.com/2hz5zdh.jpg

Richardsof
17th January 2014, 06:38 AM
காலத்தை வென்று காவியமான 'எவர்கிரீன் எம்.ஜி.ஆர்.'
http://i43.tinypic.com/2mmu939.jpg

'வாழ்ந்தவர் கோடி - மறைந்தவர் கோடி - மக்களின் மனதில் நிற்பவர் யார்..?' என்ற அர்த்தமுள்ள, அற்புத பாடல் வரிகளுக்கு ஒப்புவமை இல்லாத புத்தகராதியாக வாழ்ந்து காட்டியவர், பாரத ரத்னா எம்.ஜி.ராமச்சந்திரன்.

தமிழ் திரையுலகின் முடிசூடா மன்னனாகவும், தொடர்ந்து 3 முறை தமிழகத்தின் தலைசிறந்த முதல்வராகவும் திகழ்ந்து, எம்.ஜி.ஆர். என்னும் மூன்றெழுத்து மந்திரத்தின் மூலம் கோடானு கோடி தமிழர்களின் இதய தெய்வமாக போற்றப்படும் அவரது பிறந்த நாளை படித்தவர்கள் முதல் பாமரர் வரை அனைத்து தரப்பினரும் போற்றி, கொண்டாடி மகிழ்கின்றனர்.

அதேபோல், மறைவு தினத்தையும் எம்.ஜி.ஆரின் நினைவுகளோடு லட்சக்கணக்கான ஏழை, எளிய மக்கள் கடைபிடித்து வருகின்றனர்.

'புரட்சித் தலைவர்' என்ற சிறப்பு பட்டத்திற்கேற்ப, சத்துணவு திட்டத்தை செம்மைப்படுத்தி, மகத்தான திட்டமாக அவர் செயல்படுத்தியதால்தான், இன்று 50 வயதுக்குட்பட்ட தமிழக மக்களில் சரிபாதி பேர் ஏதாவது ஒரு பட்டம் பெற்ற பட்டதாரிகளாகவும், கை நிறைய பணம் சம்பாதிக்கும் நடுத்தர வர்க்கத்தினராகவும் உயர்ந்துள்ளனர் என்பது தெள்ளத் தெளிவான உண்மையாக நிரூபணமாகியுள்ளது.

'அரசின் சார்பில் தீட்டப்படும் திட்டங்கள் அடுத்த தலைமுறையினருக்கு நன்மை தருவதாக அமைய வேண்டும்' என்ற குறிக்கோளில் அபார நம்பிக்கை கொண்ட தொலைநோக்கு பார்வையாளரான எம்.ஜி.ஆர்., தனது மனித நேயத்தின் மூலம் ஏழை எளியவர்களுக்கு மக்கள் திலகமாகவும், பொன்மனச் செம்மலாகவும் விளங்கினார்.

ஏழ்மை, பசி, வறுமை ஆகிய சொற்களை வெறும் தமிழ் வார்த்தைகளாக மட்டுமே அறிந்திராமல், அவற்றை நெடுங்காலம் அனுபவித்துணர்ந்து, தனக்கு ஏற்பட்ட அந்த கொடிய நிலைமை வேறு யாருக்கும் இனி நேரக்கூடாது என இளம் வயதிலேயே அவர் சபதமேற்றார். தனது சபதத்தை நிறைவேற்றுவதற்கான தக்க தருணத்தை எதிர்நோக்கி காத்திருந்து-உழைப்பால் அந்த நிலைக்கு தன்னை உயர்த்திக் கொண்ட அசுர ஜாதகத்துக்கு சொந்தக்காரர், எம்.ஜி.ஆர். மட்டுமே என்றால்... அது மிகைப்படுத்தப்பட்ட ஒப்பீடாக இருக்க முடியாது.

இதன் அடிப்படையில் தான், 'நான் ஆணையிட்டால் - அது நடந்து விட்டால் - இங்கு ஏழைகள் வேதனைப்பட மாட்டார்' என்ற பாடலுக்கேற்ப அவரது ஆட்சிக் காலத்தில் ஏழைகளை பாதிக்கும் எந்த சட்டத்தையோ, திட்டத்தையோ எம்.ஜி.ஆர். நினைத்துக் கூட பார்த்ததில்லை.

அதனால் தான், எம்.ஜி.ஆரின் பிறந்த மற்றும் மறைந்த தினங்களில் தமிழகமெங்கும் உள்ள குடிசைப் பகுதிகளில் வாழும் ஏழை - எளிய மக்கள், தங்கள் வீட்டின் வாசலில் அவரது புகைப்படத்தை வைத்து குத்து விளக்கேற்றி, பூ மாலை சூட்டி அலங்கரித்து புளகாங்கிதம் அடைகின்றனர்.

அவரது புகைப்படத்தின் கீழே உடைத்து வைக்கப்படும் தேங்காய் மூடியின் வெள்ளை வெளேர் 'பளிச்' சிரிப்பையும் முறியடிக்கும் வகையில் புகைப்படத்தில் இருந்தவாறு புன்னகைக்கும் அந்த ரோஜா மேனி தலைவரின் எழில் முகம் தமிழர்களின் மனக் கண்களில் சுவர் ஓவியமாக நிலைத்துப் போய் விட்டது.

தோல்வியை தோற்கடித்து... வெற்றி ஒன்றையே தனது வாழ்க்கை வரலாறாக்கிக் கொண்ட இருபதாம் நூற்றாண்டின் தனிப்பெரும் தலைவர், எம்.ஜி.ஆர். ஒருவராக மட்டுமே இருக்க முடியும்.

அவரது 26-வது நினைவு நாளை கடந்து, 97-வது பிறந்த நாளை கொண்டாடும் இந்த இனிய வேளையில், எம்.ஜி.ஆரின் வாழ்வில் நிகழ்ந்த அதிமுக்கிய தருணங்களை காலத்தை வென்று - காவியமான 'எவர்கிரீன் எம்.ஜி.ஆர்.' என்ற தலைப்பில் குறுந்தொடராக வெளியிடுவதில் 'மாலை மலர் டாட் காம்' மட்டற்ற பெருமகிழ்ச்சி கொள்கிறது.

உழைப்பால் உயர்ந்த பொன்மனச் செம்மல் எம்.ஜி.ஆரின் வெற்றி வரலாறு 'மாலை மலர் டாட் காம்'-மில் நாளை முதல் தொடர்கிறது.

உலகம் முழுவதிலும் வாழும் கோடானுக்கோடி எம்.ஜி.ஆர். அபிமானிகளுக்கு இவற்றை பகிர்வது (ஷேர்) உண்மையான எம்.ஜி.ஆர். பக்தர்களின் தலையாய கடமை.

oygateedat
17th January 2014, 07:17 AM
மக்கள் திலகத்தின் பிறந்த நாளான இன்று தொலைக்காட்சிகளில்

அவரின் அற்புத காவியங்கள்.

ஜெயா - மதியம் 1.30 மணி - அடிமைப்பெண்

ராஜ் - மதியம் 1.30 மணி - உலகம் சுற்றும் வாலிபன்

பாலிமர் - மதியம் 2.00 மணி - நவரத்தினம்

Richardsof
17th January 2014, 08:14 AM
TO DAY
DINAMANI
எங்கே தேடுவோம், இனி எங்கே தேடுவோம்?
By முத்துலிங்கம்
First Published : 17 January 2014 12:55 AM IST
சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம், வைத்ததொரு கல்வி மனப்பழக்கம் - நித்தம் நடையும் நடைப்பழக்கம் நட்பும் தயையும் கொடையும் பிறவிக் குணம்' என்பார் ஒளவையார்.

அந்த வகையில் எம்.ஜி.ஆருக்கு கொடைக்குணம் பிறவிக்குணமாக அமைந்திருந்தது. பிறருக்கு உதவுகின்ற இயல்பு அவருக்கு ரத்தத்தோடு கலந்திருந்தது. அவரை நாடி யாரேனும் உதவி கேட்டு வந்தால், இப்படி ஒருவர் வந்திருக்கிறார் என்ற செய்தி அவர் காதுக்குப் போய்விட்டால் போதும், உதவி கேட்டு வந்தவர் நிச்சயம் வெறுங்கையோடு திரும்ப மாட்டார்.

அவர் நாடக நடிகராக இருந்தபோது, பத்து ரூபாய் சம்பளம் கிடைத்தால் அதில் இரண்டு ரூபாய் பணத்தை தருமத்துக்கு ஒதுக்கி வைத்து விடுவாராம்.

சினிமாவில் துணை நடிகராக நடித்தபோது நூறு ரூபாய் சம்பளம் கிடைத்தால் பத்து ரூபாய் தர்மத்திற்கு ஒதுக்கி விடுவாராம். "மந்திரிகுமாரி' படத்தில் நடிக்கும்போது அவருக்கு மாதச் சம்பளம் ஆயிரம் ரூபாய். அதில் தருமத்திற்காக அவர் ஒதுக்கியது நூறு ரூபாய்.

அவர் நடிகராக இருந்தபோது ஒருமுறை அண்ணா சாலையிலே காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது அண்ணாசாலை என்ற பெயர் கிடையாது. மவுண்ட் ரோடு என்றுதான் சொல்வார்கள். அந்த அண்ணா சாலையில் ஒரு கைரிக்ஷா தொழிலாளி மழையிலே நனைந்துகொண்டு ஒருவரை ரிக்ஷாவிலே வைத்து இழுத்துச் சென்று கொண்டிருந்தான். ரிக்ஷாவிலே இருந்தவர் குடைபிடித்துக் கொண்டு மழையில் நனையாமல் இருந்தார். ரிக்ஷா தொழிலாளியோ நனைந்து கொண்டிருந்தான். இதை எம்.ஜி.ஆர். பார்த்தார்.

இவன் தொடர்ந்து மழையிலே இப்படி நனைந்தால் இவனுக்குக் காய்ச்சல் வந்து வீட்டிலே படுத்துவிட்டால் இவன் குடும்பம் உணவுக்கு என்ன செய்யும்? ஆகவே இதற்கு ஏதேனும் செய்தாக வேண்டுமென்று எண்ணியபோதுதான் ரிக்ஷா தொழிலாளிகளுக்கெல்லாம் மழைக்கோட்டு வாங்கிக் கொடுக்க வேண்டும் என்ற சிந்தனை அவருக்குத் தோன்றியது. அதில் முதல் தவணையாக 150 ரிக்ஷா தொழிலாளிகளுக்கு மழைக்கோட்டு வாங்கிக் கொடுத்தார்.

நான் படத்துறைக்கு வருவதற்கு முன்பு பத்திரிகைத் துறையில் பணியாற்றினேன். நான் பணியாற்றிய பத்திரிகை எம்.ஜி.ஆருக்கு எதிர்ப்பான செய்திகளை வெளியிடத் தொடங்கியதால் அந்தப் பத்திரிகையிலிருந்து நான் விலகி விட்டேன். அந்த நேரத்தில் ஒருநாள் அவரைப் பார்க்க தியாகராய நகர் ஆற்காடு சாலையிலுள்ள அவரது அலுவலகத்திற்குச் சென்றேன்.

அங்கு "இன்டர்கா'மில் என்னுடன் பேசினார். "பத்திரிகையில் இருந்து விலகிவிட்டீர்கள் என்பதைக் கேள்விப்பட்டேன். நான் கொஞ்சம் பணம் கொடுக்கிறேன் வாங்கிக் கொள்ளுங்கள்' என்றார். நான் அவரிடம் "எனக்குப் பணம் வேண்டாம் அதற்குப் பதில் வேலை கொடுங்கள் தலைவரே' என்றேன். அதற்கு அவர் "வேலை கொடுக்கும்போது கொடுக்கிறேன். இப்போது பணம் வாங்கிக் கொள்ளுங்கள்' என்றார். அப்போதும் நான் மறுத்துவிட்டேன். உடனே ஒன்றும் சொல்லாமல் போனை வைத்துவிட்டார்.

அதன்பின் நான் பல படங்களுக்குப் பாடல்கள் எழுதி சிறந்த பாடலாசிரியர் விருது, கலைமாமணி விருதெல்லாம் பெற்ற பிறகு பாவேந்தர் பாரதிதாசன் விருது 1981ஆம் ஆண்டு எனக்கு வழங்கப்பட்டது. அதனை எம்.ஜி.ஆர். தான் வழங்கினார்.

நான் அவரிடம் பணம் வேண்டாம் என்று சொன்னது 1974ஆம் ஆண்டு. அது நடந்து முடிந்து ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு அதை நினைவில் வைத்துக்கொண்டு எம்.ஜி.ஆர். அந்த விருது வழங்கும் விழாவில் என்னைப் பற்றிப் பேசியதுதான் என்னால் மறக்க முடியாத ஒன்று. அவர் பேசியது இதுதான்:

"முத்துலிங்கம் படத்துறைக்கு வருவதற்கு முன்பு பத்திரிகைத் துறையில் இருந்தார். பிறகு அதிலிருந்து விலகிவிட்டார். அதனால் சிரமப்படுவார் என்று கருதி கொஞ்சம் பணம் கொடுக்கிறேன் வாங்கிக் கொள்ளுங்கள் என்றேன். மறுத்துவிட்டார். அதற்குப் பதில் வேலை கொடுங்கள் என்றார். திரும்பத்திரும்ப நான் கேட்டபோதும் திரும்பத் திரும்ப அதையே சொன்னார்.

அப்போதுதான் அவரைப் பற்றி நான் புரிந்து கொண்டேன். உழைக்காமல் யாரிடத்திலும் இனாமாக எதையும் வாங்கக் கூடாது என்ற தன்மானம் உள்ள மனிதராக முத்துலிங்கம் இருக்கிறார் என்பதை உணர்ந்து கொண்டேன். அதன் பிறகுதான் என் படங்களில் அவருக்குப் பாடல் எழுத வாய்ப்பளித்தேன்.

பாரதிதாசனும் தன்மானம் மிகுந்த கவிஞர். அப்படித் தன்மானம் மிகுந்த கவிஞர் பெயரில் வழங்கக்கூடிய விருதை தன்மானமுள்ள கவிஞராகவும், மனிதராகவும் உள்ள முத்துலிங்கத்திற்கு வழங்காமல் யாருக்கு வழங்குவது' என்று பேசினார். இது மறுநாள் பத்திரிகைகளில் செய்தியாக வெளிவந்தது. இதைவிடப் பெருமை எனக்கு வேறென்ன

வேண்டும்?

இதை நான் ஏன் குறிப்பிடுகிறேன் என்றால் "நான் பணம் கொடுக்க முன்வந்தபோது வேண்டாமென்று மறுத்த நீ இப்போது பாட்டெழுதுவதற்கு முன்பே பணம் வாங்கலாமா என்று கேட்பது தன்மானத்தைக் காற்றில் பறக்க விடுவதாக அமைந்து விடாதா' என்று சொல்லாமல் சொல்லிக் காட்டினார் என்றுதான் கருதுகிறேன். அதுதான் எம்.ஜி.ஆர்.

எம்.ஜி.ஆர். முதலமைச்சராக இருந்தபோது, மராட்டிய மாநில சட்டமன்ற மேலவைத் தலைவர், புனாவில், பாலகங்காதர திலகர் சிலை வைப்பதற்காக தமிழக அரசின் நிதி உதவியைக் கேட்பதற்கு சென்னை வந்தார். அப்போது தமிழக மேலவைத் தலைவராக இருந்த ம.பொ.சி.யின் அறையில், எம்.ஜி.ஆரைச் சந்தித்து விவரம் கூறினார்.

உடனே எம்.ஜி.ஆர். தன்னுடைய "செக்' புத்தகத்தை எடுத்து வரச் செய்து தன் சொந்தப் பணத்திலிருந்து ஐம்பதாயிரம் ரூபாய்க்கு "செக்' கொடுத்தார். மராட்டிய மேலவைத் தலைவர் ஆச்சரியம் அடைந்து, "தமிழக அரசின் நிதியுதவியை எதிர்பார்த்துத்தான் வந்தேன். அதுவும் இருபதாயிரமோ, இருபத்தைந்தாயிரமோதான் கிடைக்கும் என்று நினைத்திருந்தேன். ஆனால் உங்கள் சொந்தப் பணத்திலிருந்து ஐம்பதாயிரம் ரூபாய் கொடுத்துவிட்டீர்களே. இதை நான் எதிர்பார்க்கவில்லை' என்று நன்றி ததும்பக் கூறினார்.

அதற்கு எம்.ஜி.ஆர். "தமிழக அரசின் சார்பாக நான் கொடுத்திருக்கலாம். அப்படிக் கொடுப்பதாக இருந்தால் நான் கையெழுத்துப் போட்டு பல துறைகளுக்கெல்லாம் சென்று திரும்பி வருவதற்கு மாதக்கணக்கில் ஆகும். அது உங்கள் பணிக்குத் தடையாக இருக்கும். ஆதலால்தான் என் சொந்தப் பணத்தைக் கொடுத்தேன்' என்றார்.

திரைப்பட எழுத்தாளர் சக்தி கிருஷ்ணசாமியை எல்லாரும் அறிவார்கள். சிவாஜி நடித்த வீரபாண்டிய கட்டபொம்மன், எம்.ஜி.ஆர். நடித்த பெரிய இடத்துப் பெண் போன்ற பல படங்களுக்கு வசனம் எழுதியவர். நாடக ஆசிரியராக இருந்து பல நடிகர்களை உருவாக்கியவர். இவர் நாடக மன்றத்திலேதான் சிவாஜி போன்ற பல நடிகர்கள் இருந்தார்கள்.

சக்தி கிருஷ்ணசாமி மகளுக்குத் திருமணம் நடைபெறுவதாக இருந்தது. கையில் பணமில்லை. ஒருநாள் அமைச்சராகவும், பேரவைத் தலைவராகவும் இருந்த ராஜாராமிடம் இதுபற்றி சக்தி கிருஷ்ணசாமி பேசிக் கொண்டிருந்தபோது, "உங்களுக்குத்தான் எம்.ஜி.ஆரைத் தெரியுமே அவர் படங்களுக்கும் வசனம் எழுதியிருக்கிறீர்களே. அவரிடம் உதவி கேட்கலாமே' என்றார் ராஜாராம்.

"நான் தொழில் ரீதியாகத்தான் அவருடன் பழகியிருக்கிறேன். இதுபோல் உதவி கேட்கும் அளவுக்கு நெருங்கிப் பழகியதில்லையே' என்று சக்தி கிருஷ்ணசாமி சொல்லியிருக்கிறார். "அதனால் என்ன, நான் கூட்டிப் போகிறேன் வாருங்கள்' என்று சொல்லிவிட்டு ராஜாராம் அவரை அழைத்துச் சென்று எம்.ஜி.ஆரிடம் விவரம் கூறினார்.

உடனே எம்.ஜி.ஆர். சக்தி கிருஷ்ணசாமியைப் பார்த்து, "எவ்வளவு பணமிருந்தால் திருமணத்தை நன்றாக நடத்துவீர்கள்' என்று கேட்டார். உடனே "இருபதாயிரம் இருந்தால் சிறப்பாகச் செய்துவிடுவேன்' என்று கிருஷ்ணசாமி சொல்ல, உடனே இருபத்தைந்தாயிரம் ரூபாய் கொடுத்து, "திருமணத்தை சிறப்பாக நடத்துங்கள்' என்று சொல்லிவிட்டு பொருளாதார ரீதியில் மேலும் உதவும் வகையில், அப்போது அவர் நடிக்க ஒப்பந்தமாகியிருந்த "எங்கள் வீட்டுப் பிள்ளை' படத்திற்கு வசனம் எழுதவும் வாய்ப்பளித்தார்.

எம்.ஜி.ஆர். போன்ற ஒரு மாமனிதரை இனி நாம் எங்கே தேடுவோம்?

இன்று எம்.ஜி.ஆர். பிறந்த நாள்



கட்டுரையாளர்: கவிஞர்.MUTHULINGAM

Richardsof
17th January 2014, 08:24 AM
http://youtu.be/c29N2CIBHyc

siqutacelufuw
17th January 2014, 08:25 AM
அனைவருக்கும் புரட்சித் தலைவரின் 97வது பிறந்த நாள் வாழ்த்துக்கள். http://i43.tinypic.com/16jk1tz.png

நாணயம், நம்பிக்கை, நற்சிந்தனை, கட்டுப்பாடு, நற்பண்பு ஆகியவற்றின் மொத்த உருவமாக திகழும் நமது மக்கள் திலகம் உலகெங்கிலும் வாழும் டிக்கணக்கான தமிழர் உள்ளங்களில் நீக்கமற நிறைந்துள்ளார் என்பது எவராலும் மறுக்க முடியாத, மறைக்க முடியாத உண்மை.!

மறைந்தும், மறையாத மங்காப் புகழுடன் விளங்கும் நமது மக்கள் திலகத்தின் மகத்தான திரையுலக சாதனைகளை இங்கே பட்டியலிட்டு இத்திரியின் பார்வையாளர்களுக்கு சமர்ப்பிப்பதில் நான் பெருமிதம் கொள்கின்றேன்.

இந்த திரையுலக சாதனைகளில் சில ஏற்கனவே அன்பர்கள் பலரால் அறியப்பட்டிருந்தாலும், இன்றைய இளைய தலைமுறை அறியும் பொருட்டும், முதன் முதலாக இந்த சாதனைகளை கண்ணுறும் பார்வையாளர்களுக்காகவும், அவற்றை இந்த எண்ணிக்கையில் மீண்டும் அடக்கியுள்ளேன்.

மக்கள் திலகத்தின் மகத்தான திரையுலக சாதனைகள்

1. உலக சினிமா நூற்றாண்டு விழா கொண்டாட்டத்தின் போது, இந்திய நாட்டிலிருந்து பரிந்துரைக்கப்பட்ட, தேர்ந்தேடுக்கப்பட்ட ஒரே நடிகர் நமது ஒப்பற்ற ஒரே தெய்வம் எம். ஜி. ஆர். தான். (நடிகை : நர்கீஸ், இயக்குனர் : சத்யஜித்ரே .... ஆதாரம் 1995ல் வெளியான "பொம்மை" மாத இதழ் செய்தி)

2. மறைந்து 26 ஆண்டுகள் ஆகியும்,. இன்றும் தான் நடித்த திரைப்படங்களின் மறு வெளியீட்டு மூலம் சாதனை படைத்து, REPEATED AUDIENCE கொண்டு ஒரு புரட்சியை ஏற்படுத்தி வருபவர் நம் புரட்சித் தலைவர் மட்டுமே. அவரின் இந்த திரைப்படங்கள், மீண்டும் மீண்டும் குறுகிய இடைவெளியில் திரையிடப்பட்டு வசூல் சாதனை புரிந்து வருவது, பொன்னேட்டில் பொறிக்கப்பட வேண்டிய ஒரு உலக சாதனை.

3. 1956ம் ஆண்டிலிருந்து, இன்று வரை "வசூல் சக்கரவர்த்தி" என்ற பட்டத்தை தக்க வைத்துக்கொண்டிருக்கும் ஒரே நடிகர், ஆலயம் கண்ட ஆண்டவன்
நமது எம். ஜி. ஆர். மட்டுமே.

4. முதன் முதலில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு, ஆட்சி பீடம் ஏறி, மற்ற நடிகர்களுக்கு (N.T.R. மற்றும் RONALD REAGAN ஆகியோருக்கு) முன் மாதிரியாக திகழ்ந்தது, மன்னாதி மன்னன் நம் எம். ஜி. ஆர். தான்.

5. ஊடகங்கள் மூலமும், கட்டுரை தலைப்புக்களின் மூலமும், முக்கிய பிரமுகர்கள் பேட்டி மூலமும், செய்திகளில் இடம் பெற்ற ஒரே நடிகர்
மக்களின் மனம் கவர்ந்த மகத்தான எம். ஜி. ஆர். தான்.

6. அதிக எண்ணிக்கையில், கடினமான, இரட்டை வேடங்கள் தாங்கி, தமிழ் திரைப்படங்களில் நடித்த ஒரே நடிகர் கலைத்தாயின் அருந்தவப்புதல்வன் எம்.ஜி. ஆர். .

7. இதர நடிகர்கள் நடித்த திரைப்படங்களில், நமது பொன்மனசெம்மலின் மகத்துவத்தை உணர்த்தி, அவரது நிழற்படங்களை காண்பித்து, அவர் தொடர்பான காட்சிகளை உருவாக்கி, ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பையும், கைதட்டல்களையும் பெற வைத்த பெருமைக்கு சொந்தக்காரர் , உலகத்தமிழர்களின் ஒரே உண்மைத் தலைவர் எம். ஜி. ஆர்.

8. இணையதள வாக்கெடுப்பின் மூலம், (WHO POPULAR.COM) இந்தியாவில் சிறந்த நடிகர், முதன்மை நடிகர் என்கின்ற ஸ்தானத்தை இன்றும் தக்க வைத்துக்கொண்டிருக்கும் ஒரே நடிகர், ஒருமைப்பாட்டை வலியுறுத்தும் ஒப்பற்ற நம் நாயகன் எம். ஜி. ஆர். தான்.

9. பாரதப் பிரதமர் ஒருவரால் திறக்கப்பட்ட ஒரு நடிகரின் ரசிகர் மன்றம் என்ற பெருமையை பெற்றவரும் நமது பாரத் எம். ஜி.ஆர். தான்.
(இடம் : அந்தமான், திறந்து வைத்த பிரதமர் : லால்பகதூர் சாஸ்திரி)

10. வெளிநாடுகளில் தபால் தலை வெளியிட்டு பெருமை சேர்க்கப்பட்ட நடிகரும்,நமது பொன்மனசெம்மலே (நாடுகள் : பிரான்ஸ் மற்றும் மலேசியா)

11. தற்போது வெளியாகும் தமிழ் படங்களில், பழைய படங்களின் பெயர் சூட்டப்பட்டு வருவது வாடிக்கையாகி வருகிறது. அவ்வாறு அதிக எண்ணிக்கையில் சூட்டப்பட்ட படத்தலைப்புக்கள், நம் மக்கள் திலகம் நடித்த படப் பெயர்களே !

12. ஒரு நடிகர், இயக்குனராக புதிய அவதாரம் எடுத்து வெற்றிப்படம் அளித்த பெருமை புரட்சி நடிகரையே சாரும். (படம் : நாடோடி மன்னன்)

13. தமிழ் திரைப்பட உலகில், நுழைவுக்கட்டணம் நயா பைசாக்களில் இருந்த அக்காலக் கட்டத்திலேயே (1956ம் ஆண்டு) ஒரு கோடி ரூபாய் வசூல் சாதனையை தனது "மதுரை வீரன்" படம் மூலம் நிகழ்த்திக் காட்டியவர், நம் நிருத்திய சக்கரவர்த்தி.

14. பூஜை போடப்பட்ட அன்றே, அவரது திரைப்படத்தின் எல்லா மாவட்ட விநியோக உரிமையும் விற்கப்பட்ட அதிசயத்தை நிகழ்த்தியவர் நம் அற்புத தலைவர் எம்.ஜி. ஆர்.

15. தமிழகத்தில் முதன் முறையாக 200 காட்சிகள் கொட்டகை நிறைந்து ஒரு புதிய அத்தியாயத்தையே ஏற்படுத்திய "உலகம் சுற்றும் வாலிபன்" படத்தினை தயாரித்து. இயக்கி அதில் நடித்தும் சாதனை படைத்தார் நம் சாதனைகளின் சிகரம் எம். ஜி. ஆர்.

16. குறைந்த எண்ணிக்கையிலான திரைப்படங்களில், (115 படங்களில்) கதாநாயகனாக நடித்து, அதிக அளவில் வெற்றிப்படங்களை (100 நாட்கள் மற்றும் வெள்ளி விழா படங்கள்) தமிழ் திரையுலகிற்கு அளித்து ஒரு திருப்பு முனையை ஏற்படுத்தியவர் எங்கள் தங்கம் எம். ஜி. ஆர்.

17. 1980ம் ஆண்டு, தான் கதாநாயகனாக நடித்த 115 காவியங்களில், சுமார் 75க்கும் மேற்பட்ட காவியங்கள், தமிழகமெங்கும் 1100 அரங்குகளை
ஆக்கிரமித்துக் கொண்டிருந்த அற்புதத்தை நிகழ்த்தியவர் ஆண்டவன் எம். ஜி.ஆர்.

18. முதல் தமிழ் வண்ணப்பட நாயகன் ("அலிபாபாவும் 40 திருடர்களும்" படத்தில் நடித்ததன் மூலம்) என்கின்ற பெருமையை பெற்றவர் நமது நடிக மன்னன்

19. முதல் PUNCH DIALOGUE (பஞ்ச் டயலாக்) இடம் பெற்ற தென்னிந்திய திரைப்பட நாயகன் நமது நிருத்த்ய சக்கரவர்த்தி ! திரைப்படம் (மர்மயோகி)

20. முதல் SLOW MOTION காட்சி இடம் பெற்ற திரைப்படத்தின் நாயகன் என்ற மற்றொரு பெருமையை, "கலையரசி " காவியத்தில் நடித்ததன் மூலம் பெற்றவர் நமது பாரத ரத்னா.

21.. இந்திய அரசின், திரைப்படத் துறைக்கான உயரிய விருதான " பாரத்" பட்டம், "ரிக்ஷாக்காரன்" மூலம் பெற்ற முதல் தென்னிந்திய நடிகர் நமது மக்கள் திலகம் அவர்கள்.

22.. தமிழ்த்திரைப்பட வரலாற்றில் முதன்முதலில் தொழில் நுட்பக்காட்சிகள் பயன் படுத்தப்பட்ட படத்தின் நாயகனும் நமது மக்கள் திலகமே ! (திரைப்படம் : நாடோடி மன்னன்)

23. பாடத் தெரிந்தவர்கள் மட்டுமே நடிக்க முடியும் என்ற நிலையை, தமிழ்ப்பட உலகில் முதன் முதலில் தகர்த்தெறிந்து, பின்னணி பாடகர்களை பாட வைத்து, சாதனை புரிந்தவர் நமது புன்னகை மன்னன் பொன்மனச்செம்மலே !

24. தமிழகத்தில் ஓடிக்கொண்டிருக்கும் வாகனங்களில் (பல ஆட்டோ ரிக்ஷாக்கள் உட்பட ) ஓட்டப்பட் டிருக்கும் STICKERS பெரும்பாலும் நமது
எழில் வேந்தன் நடித்த திரைப்படக் காட்சிகளே !

http://i40.tinypic.com/9tcu21.png

25. அதிக திரையரங்குகளில் (தமிழகம் - 33) 100 நாட்கள் ஓடிய கருப்பு-வெள்ளை பட (மதுரை வீ ரன்) நாயகன் நமது கலைவேந்தன் எம் ஜி. ஆர்.
இந்த சாதனையை இதுவரை எந்த கருப்பு - வெள்ளை படைமும் இன்னும் முறியடிக்க வில்லை.

26. காதல் பாட்டுக்களிலும் , கருத்துக்கள், போதனைகள், அறிவுரைகள் சொன்ன நாயகன் நமது நடிகப்பேரரசர் தான்.

27. படத்தொகுப்பு நன்கு தெரிந்த முதல் தமிழ்பட நாயகனும் நமது முப்பிறவி கண்டமுத்தமிழ் வேந்தனே

28.. புகைப்படக்கருவியை நன்கு கையாள தெரிந்த தமிழ் பட நாயகன் மட்டுமல்ல, அந்த புகைப்படகருவி கோணங்களை முழுமையாக திரைப்படங்களில் பயன்படுத்தியவரும் நமது தரணி கண்ட தனிப்பிறவியே !

29.. வெளிப்புற படப்பிடிப்பு காட்சிகளுக்கான சிறந்த LOCATION தேர்ந்தேடுப்பதில் வல்லமை படைத்த முதல் திரைப்பட நாயகனும் நமது குணக்குன்று எம். ஜி. ஆர். அவர்களே !

30.. 1978 வைகுண்ட ஏகாதசி :அன்று நள்ளிரவு காட்சியாக சென்னை சத்யம், சுபம் மற்றும் சாந்தம் ஆகிய மூன்று அரங்குகளிலும் திரையிடப்பட்டு, இரண்டு அரங்குகளிலும் மக்கள் வெள்ளம் நிரம்பி வழிந்து அரங்கு நிறைந்து காட்சியாக வரலாறு படைத்திட்டதும் நமது இதய வேந்தன் நடித்த "ஆயிரத்தில் ஒருவன் " திரைப்படமே !

31. அதே 1978ம் ஆண்டு வைகுண்ட ஏகாதசி அன்று, நள்ளிரவுக் காட்சிக்கு TICKET கிடைக்காத மக்கள், "ஓடியன்" திரையரங்கில் விடியற்காலை 4 மணி காட்சியாக திரையிடப்பட்ட "பணம் படைத்தவன்" காவியத்தை கண்டு களித்தனர். அந்த விடியற்காலை காட்சியும் அரங்கு நிறைந்து சாதனை படைத்தது.

32. தமிழக சட்ட மேலவை உறுப்பினராக (M.L.C.) தேர்ந்தேடுக்கப்பட்ட முதல் தமிழ் திரைப்பட நாயகன்.

33. அதிக பட்டங்கள் அளிக்கப்பட்டு பெருமை வாய்ந்த தமிழ் பட நாயகனாக இன்றும் விளங்கி வருபவர் நமது கலியுக கடவுள் எம். ஜி. ஆர். மட்டுமே.

34. தமிழ் திரைப்பட உலகில், அதிக எண்ணிக்கையில், 4 திரைப்படங்கள் தொடர் வெற்றியாக அமையப்பெற்றது நமது வசூல் சக்கரவர்த்தியின் காவியங்களே !

35. தான் பின்பற்றும் கொள்கைக்காக, எதிர்மறையான காட்சிகள் கொண்ட பல திரைப்படங்களில் நடிப்பதை தவிர்த்து, வருமானத்தையும் இழந்த திரைப்பட நாயகன் நமது கொள்கை வேந்தன் எம். ஜி. ஆர். அவர்கள் மட்டுமே !

36.. கூத்தாடிகள் என்ற அவப்பெயருடன் அழைக்கப்பட்ட நடிகர்களுக்கு, திரைப்பட உலகில் மரியாதை .ஏற்படுத்தியவர் நமது மகத்தான மனிதப்புனிதர் எம். ஜி. ஆர். தான்.

37.. தினமும் லட்சக்கணக்கான மக்கள் உச்சரிக்கும் ஒரு வார்த்தை எம். ஜி.ஆர். என்பது பெருமை கொள்ளத்தக்க ஒரு விஷயம். அவரது வாழ்க்கை ஒரு நாடக, திரைப்பட நடிகராக துவங்கியதால், இதுவும் ஒரு திரையுலக சாதனையே !

38. தொழில் நுட்பம் வளர்ச்சி பெற்று வரும் இந்த நவீன கால கட்டத்திலும், கைப்பேசியில் அதிக அளவில் இடம் பெற்றிருக்கும் CALLER TUNES நமது கலியுக கடவுள் எம். ஜி. ஆர். அவர்கள் நடித்த திரைப்படப் பாடல்களே !

39. முதல் வெளியீட்டில் வெற்றி வாய்பினை நூலிழையில் இழந்த திரைப்படங்களும் (புதிய படங்களின் வரவால் அரங்கு அளிக்க வேண்டிய கட்டாயம் மற்றும் வேறு பல காரணங்கள்) மறு வெளியீடுகளில் வசூல் மழை பொழிந்து, விநியோகஸ்தர்களை களிப்புக்கட லில் மூழ்க வைத்ததும், நம் நாடு போற்றும் நாயகன் எம். ஜி. ஆர். நடித்த காவியங்களே.

40. ஒரு திரைப்படத்தின் கதாநாயகன், கதைக்காக மரணம் சம்பவிக்கும் காட்சிகளை கூட ஏற்க மறுத்து, வெற்றி அடையாமல் போன காவியங்களும், காலத்தை வென்ற காவிய நாயகனுக்குரியதே ! (உதாரணம் : பாசம், நீரும் நெருப்பும், ராஜா தேசிங்கு மற்றும் ராணி சம்யுக்தா ... மதுரை வீரன் காவியம் மட்டும் இதில் விதி விலக்கு)

41. தமிழ் திரைப்பட வரலாற்றில், முதன் முதலில் STYLE MANNERISM அறிமுகப்படுத்தி, பின்னாளில் இதர நாயகர்களும் அதனை பின்பற்ற முன்னோடியாக திகழ்ந்தவரும், எந்தக் காலத்திலும் SUPERSTAR ஆக கருதப்படும் நமது மங்காப் புகழ் கொண்ட ஒளி விளக்கே !

42. ஒரே SHOT ல், நீண்ட வசனங்களுடன் கூடிய காட்சியில் முதன் முதலாக நடித்தவரும் நம் மக்கள் திலகமே ! (படம் : நாம்)

43. திரைப்படத்தில் நடித்த ஏனைய கலைஞர்களுக்கு ஊதியம் முழுமையாக SETTLE செய்யப்பட்டதை உறுதி செய்து, பின்பு தன் திரைப்படத்தை வெளியிடும் ஒரே நடிகர் என்ற பெருமையை பெற்றவர் நம் சீர்த்திருத்த செம்மல் எம். ஜி. ஆர். அவர்கள்.

44. தமிழ் திரையுலகில் முதன் முதலில் புதுமையாக விளம்பரம் செய்யப்பட்டு வெளிவந்த முதல் தமிழ் திரைப்பட நாயகனும் நமது கலைச்சுடர் எம். ஜி. ஆர். அவர்களே ! (திரைப்படம் : குலேபகாவலி, விளம்பர காட்சி : புலியுடன் மோதும் நம் புன்னகை மன்னன் எம். ஜி. ஆர்.)

45. தமிழக அரசு அறிவித்த சிறந்த படத்துக்கான முதல் விருதினை பெற்ற பட நாயகனும் சித்திரை திருநாளை சிறப்புடன் கொண்டாடும் நம் மன்னவனே! (காவியம் : காவல்காரன்).

46. சிலம்ப சண்டை, மான் கொம்பு சண்டை, சுருள் பட்டை சண்டை, பட்டாக்கத்தி சண்டை மற்றும் குத்து சண்டை போன்ற அனைத்து சண்டைகளும் தெரிந்த ஒரே நாயகன், ஆசியா கண்டத்திலேயே, ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி.ஆர். ஒருவரே !

47. நாட்டில் அதிக அளவில் ரசிகர் மன்றங்களை (சுமார் 35,000) கொண்டவரும், அதிக எண்ணிக்கையில் (கோடிக்கணக்கில்) ரசிகர்களை கொண்டவரும், நமது மக்கள் தங்கம் எம். ஜி. ஆர். மட்டுமே.!

48. சண்டைக்காட்சிகள் முக்கியத்துவம் பெற்றதும், வரவேற்பு கிடைக்கப்பெற்றதும், ரசிகர்களால் பேசப்பட்டதும், நமது பொன்மனசெம்மல் முழு
ஈடுபாட்டுடன் நடித்த பிரமிக்கவைக்கும் சண்டைக்கட்சிகளுக்குப் பின்புதான்..

http://i40.tinypic.com/2z57ki8.jpg

49. தான் நடிக்கும் காவியங்களில், புதிய கலைஞர்களை அறிமுகப்படுத்தி அவர்களை பிரபலப்படுத்திய பெருமை நம் புரட்சித்தலைவரையே சாரும். (உதாரணம் : பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் போன்றோர். பாடகி : டி.கே. கலா, கவிஞர்கள் : வாலி, பூவை செங்குட்டவன், புலமைப்பித்தன், முத்துலிங்கம், நா. காமராசன், முதலானோர். நகைச்சுவை கலைஞர் : ஐசரிவேலன் நடிகைகள் : அபிநயசரஸ்வதி சரோஜாதேவி மற்றும் கலைச்செல்வி லதா போன்றோர்.)

50. சினிமாவில், தாம் வலியுறுத்திய கொள்கைகள் படி வாழ்ந்த ஒரே நடிகர் வல்லமை படைத்த வாத்தியார் எம். ஜி. ஆர். அவர்களே !

51. பிள்ளைத்தமிழ் பாடப்பெற்ற ஒரே நடிகர் நம் ஒப்பற்ற தெய்வம் எம். ஜி.ஆர். அவர்களே !

52. காதல் பாடல் காட்சிகளிலும், இதர கலைஞர்களுடன் இணைந்து நடிக்கும் காட்சிகளிலும், அனைத்து தரப்பு ரசிகர்களையும் காந்தம் போல் தன் ஒருவன் பால் ஈர்த்து, அவரை மட்டுமே ரசிக்கச்செய்யும் ஒரு புதுமையை ஏற்படுத்தினார், புரட்சித்தலைவர்..

53. திரைப்பட விநியோகஸ்தராக திகழ்ந்த முதல் நடிகரும் நம் முத்தான முதல்வனே !

54. STUDIO OWNER என்ற பெருமையை பெற்ற முதல் நடிகரும் நம் வசூல் பேரரசர் எம். ஜி. ஆர். அவர்களே !

55. அறிவுரைகளையும், தத்துவமொழிகளையும், நேர் மறையான கருத்துக்களையும், தன் படங்களுக்கு தலைப்புக்களாக சூட்டி, திரையுலகை திரும்பிப் பார்க்க வைத்தவர் நம் புரட்சி வேந்தன் எம். ஜி. ஆர்.அவர்கள். (உதாரணம் : திருடாதே, தாய் சொல்லை தட்டாதே, நீதிக்கு தலை வணங்கு, தாய்க்குப்பின் தாரம், நல்லவன் வாழ்வான், நாளை நமதே, தர்மம் தலை காக்கும், நீதிக்குப் பின் பாசம், என் கடமை, ஆயிரத்தில் ஒருவன், தாலி பாக்கியம், பெற்றால்தான் பிள்ளையா, குடியிருந்த கோயில், நம் நாடு, நல்ல நேரம், ஒரு தாய் மக்கள், அன்னமிட்ட கை, சிரித்து வாழ வேண்டும், பல்லாண்டு வாழ்க, இன்று போல் என்றும் வாழ்க என பட்டியல் நீளுகிறது.)

56. பட வெளியீட்டு விழாவில், பிரம்மாண்டமாக, யானை மீது படப்பெட்டி ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு, தனது "ரிக்ஷாக்காரன்" காவியம் மூலம், ஒரு புதிய புரட்சியையும், எழுச்சியையும் தோற்றுவித்தவர் எழுச்சி நாயகன் எம்.ஜி. ஆர்.

57. கூட்டத்தை சமாளிக்க "குதிரைப்படை" முதன் முதலாக பயன்படுத்தப்பட்டு.வியக்கத்தக்க அற்புதத்தையும், தனது "நீரும் நெருப்பும்" காவியம் மூலம் நிகழ்த்திக் காட்டினார்.

58. தனது உதிரத்தை தானமாக அளித்து, தன் அபிமான நடிகரின் திரைப்படங்களை கண்டு களிப்புறும் வெறித்தனமான ரசிகர் பட்டாளம் கொண்ட ஒரே நடிகர் எம்.ஜி. ஆர். மட்டுமே !

59. நடிகராய் இருந்து கட்சி ஆரபித்து, திரை உலகை விட்டு விலகி ஆட்சிப் பொறுப்பேற்ற காலம் வரை (1972-77 கால கட்டத்தில்) நடைபெற்ற எல்லா இடைத் தேர்தல்களிலும், பொது தேர்தல்களிலும் வெற்றி பெற்ற ஒரே திரைப்பட நாயகன் மக்கள் தலைவர் எம். ஜி. ஆர். மட்டுமே !

60. இலங்கை மண்ணில், நூறு நாட்கள் ஓடி சாதனை படைத்த தமிழ் படங்களில், பெரும்பாலானவை பொன்மனச்செம்மல் நடித்த காவியங்களே !

61. விளம்பரம் இன்றி வெற்றி பெற்ற திரைப்பட நாயகன் என்ற பெருமையை பெற்றவரும் எழில் நாயகன் எம். ஜி. ஆர். அவர்களே !
(திரைப்படம் " உலகம் சுற்றும் வாலிபன்).

62. மணிக்கணக்கில் காத்துக் கிடக்கும் கூட்டம் மக்கள் திலகம் எம். ஜி.ஆர். என்ற ஒரே நடிகருக்கே என்ற புகழையும் பெற்றவர்.

63. திரைப்பட சண்டைக்காட்சிகளிலும் நீதியினை போதித்த முதல் நாயகன், இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற வள்ளல் எம். ஜி. ஆர். அவர்கள்.

64. நாட்டின் பாதுகாப்பில் அக்கறை கொண்டு, தேசிய ஒருமைப்பாட்டில் நம்பிக்கை கொண்டு, பாரத தேசத்துக்கு, அதிக அளவில் நிதியுதவி மற்றும் நன்கொடை வழங்கிய நற்பண்பாளர் நமது எம். ஜி. ஆர். அவர்கள்.

65. குண்டடிபட்டு தனது குரல்-வளம் குலைந்து போன நிலையிலும், மக்களால் ஏற்றுக் கொல்லப்பட்டு, தொடர் வெற்றிகளை தமிழ் திரைப்பட உலகில் பெற்ற மகோன்னத நடிகர் எம். ஜி. ஆர். அவர்கள்தான்.

66. ரசிகர்களின் ரசனைக்கேற்ப படங்களில் நடித்து, அப்படங்களை வெற்றிப்படங்களாக்க , அனைத்து துறைகளிலும், முழு ஈடுபாட்டுடன் தன்னை
அர்பணித்துக்கொண்ட ஒரே அற்புத நாயகன் நமது எம். ஜி. ஆர். அவர்கள் மட்டுமே !

67. சாதி - சமய உணர்வுகளுக்கு அப்பாற்பட்டு, எல்லா மதத்தினராலும், ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரே தமிழ் பட நாயகன் எங்கள் இதயம் எம். ஜி. ஆர். அவர்களே !

68. பிரபல இந்திய சினிமா பத்திரிகை பிலிம்பேர் விருதினை பெற்ற முதல் தமிழ் படம் என்ற பெருமையை ஈட்டித் தந்தவர் ஈகை குணம் கொண்ட
பெருந்தகையாளர் நமது எம். ஜி. ஆர். அவர்கள்.

69. இரு வேறு தயாரிப்பாளர்களின் அடுத்தடுத்த படங்களில் நடித்த சாதனையை செய்தவரும் நமது மக்கள் திலகமே. (படங்கள் : இயக்குனர் ராமண்ணாவின் கூண்டுக்கிளி, குலேபகாவலி மற்றும் தேவரின் தாயைக் காத்த தனயன், குடும்பத்தலைவன்)

70. பிரபல நிறுவனங்களின் தயாரிப்பில் உருவான முதல் வண்ணப்பட நாயகன் என்ற பெருமையையும் பெற்றவர் நமது மக்கள் திலகம் அவர்கள் : (மாடர்ன் தியேட்டர்ஸ் - அலிபாபாவும் 40 திருடர்களும், ஏ. வி. எம். - அன்பே வா, ஜெமினி - ஒளிவிளக்கு, விஜயா வாஹினி - எங்க வீட்டு பிள்ளை, சரவணா பிலிம்ஸ் - படகோட்டி, தேவர் பிலிம்ஸ் - நல்ல நேரம், ஆர். ஆர். பிக்சர்ஸ் ராமண்ணா - பறக்கும் பாவை, ஜெயந்தி பிலிம்ஸ் - மாட்டுக்கார வேலன்)

71. சென்னை மாநகரின் பிரதான அண்ணா சாலையில் அமைந்துள்ள 2 திரை அரங்குகளிலும், முதன் முதலாக வெளியிடப்பட்டு, வசூலை அள்ளிக்குவித்த காவியம் பொற்கால ஆட்சி தந்த நமது பொன்மனச்செம்மல் நடித்த ரகசிய போலீஸ் 115. (அரங்குகள் : சென்னை - பிளாசா மற்றும் குளோப்)

72. அதே போன்று, சென்னை மாநகரின் பிரதான அண்ணா சாலையில் உள்ள "தேவிகலா" மற்றும் "ஓடியன்" ஆகிய இரு அரங்குகளிலும்
வெளியிடப்பட்டு வசூலை அள்ளிக் குவித்த மற்றொரு காவியம் "நீதிக்கு தலை வணங்கு"


http://i40.tinypic.com/2wps2ki.jpg


73. ஆங்கிலப்படங்களே திரையிடப்பட்டு வந்த ' சபையர் ' திரை அரங்கில், முதன் முதலாக 6 வாரங்கள் மட்டும் என்ற விளபரத்துடன் வெளியான தமிழ் திரைப்படம், நமது மக்கள் திலகத்தின் "கன்னித்தாய்". முதல் வார வசூல் ரூபாய் 48,760/-.

74. சென்னை சத்யம் அரங்கில் முதன் முதலாக 100 நாட்கள் ஓடி வரலாற்று சாதனை புரிந்த காவியம் "இதயக்கனி"

75. சென்னை சாந்தம் அரங்கில் முதன் முதலாக 4 காட்சிகளுடன் ஓடிய ஒரே தமிழ் திரைப்படம் "உழைக்கும் கரங்கள்"

76. சென்னை "தேவிபாரடைஸ்" அரங்கில், நமது புரட்சித் தலைவரின் "உலகம் சுற்றும் வாலிபன்" காவியம் திரையிடப்பட்டபோது, RESERVATION அன்று திரண்ட மக்கள் கூட்டம், சுமார் அரை மீட்டர் தூரம் உள்ள "பாரகன்" திரை அரங்கம் வரை அலை மோதியது. உலக சினிமா வரலாற்றில் இது ஒரு மகத்தான சாதனை.

77. சென்னை 'குளோப்' அரங்கில் முதன் முறையாக 100 நாட்கள் கடந்த தமிழ் திரைப்படம் "காவல் காரன்"

78. சென்னை 'சரவணா' அரங்கில் முதன் முறையாக 100 நாட்கள் கடந்த தமிழ் திரைப்படம் " நம் நாடு "

79. சென்னை 'அகஸ்தியா' அரங்கில் முதன் முறையாக 100 நாட்கள் கடந்த தமிழ் திரைப்படம் "காவல் காரன்"

80. சென்னை "கிருஷ்ணவேணி" அரங்கில் முதன் முறையாக 100 நாட்கள் கடந்த தமிழ் திரைப்படம் "மாட்டுக்கார வேலன்"

81. ஒரே தயாரிப்பாளரின் 16 தமிழ் திரைப் படங்களில் நடித்த புதுமை மக்கள் திலகத்தையே சாரும். (தயாரிப்பாளர் ... சின்னப்பா தேவர்)

82. குறுகிய காலத்தில் (18 நாட்களுக்குள்) எடுக்கப்பட்டு வெற்றி அடைந்த காவியம் நம் பொன்மன செம்மலின் " முகராசி ".

83. நமது புரட்சித்தலைவர் திரையுலகை விட்டு விலகும் வரை, 7 அரங்குகளில் வெள்ளிவிழா கண்ட "எங்க வீட்டு பிள்ளை" சாதனை முறியடிக்கப்படவில்லை.

84. அதே போன்று, நமது புரட்சித்தலைவர் திரையுலகை விட்டு விலகும் வரை, தமிழகத்தில் 10 அரங்குகளில் 100 நாட்கள் ஓடி வரலாற்று சாதனை படைத்தது மக்கள் திலகத்தின் காவியங்களே ( மதுரை வீரன், நாடோடி மன்னன், எங்க வீட்டு பிள்ளை, குடியிருந்த கோயில், அடிமைப்பெண், மாட்டுக்காரவேலன், ரிக்ஷாக்காரன், உலகம் சுற்றும் வாலிபன், உரிமைக்குரல் மற்றும் இதயக்கனி )

85. தொடர்ந்து 3 வெற்றிப்படங்களை தமிழ் திரையுலகிற்கு அளித்து அனைத்துமே வசூலில் சாதனை படைக்க வைத்தவர் நமது பாரத ரத்னா டாக்டர் புரட்சித்தலைவர் (இதயக்கனி, பல்லாண்டு வாழ்க, நீதிக்கு தலை வணங்கு)

86. சென்னை காசினோ அரங்கில் அதிக நாட்கள் (30 வாரங்கள்) ஒடிய ஒரே தமிழ் படம் 'எங்க வீட் டு பிள்ளை' . மற்றொரு சாதனைக் காவியம் "அன்பே வா" 22 வாரங்கள் ஓடியது.

87. கூடல் மாநகராம், தமிழ் சங்கம் வளர்ந்த மதுரை மாநகரில் 20 வாரங்கள் ஓடி சாதனை படைத்ததும் மக்கள் திலகத்தின் "நம் நாடு" மற்றும் "ஒளி விளக்கு" காவியங்களே !

88. சென்னை மாநகரில், திரையிடப்பட்ட அனைத்து அரங்குகளிலும் தொடர்ந்து 100 காட்சிகள் அரங்கு நிறைந்து மற்றுமோர் புதிய சாதனை படித்ததும் நம் மன்னாதி மன்னன் நடித்த "அடிமைப்பெண்" மற்றும் "மாட்டுக்கார வேலன்" ஒவ்வொரு காவியமும் 400க்கும் மேற்பட்ட காட்சிகளை கொட்டகை நிறைந்த காட்சிகளாக்கியது.

89. 1963 மற்றும் 1966ம் வருடங்களில், வெளியான தமிழ் திரைப்படங்களில் அதிக எண்ணிக்கையில் நடித்த நாயகன் நம் கொடை வள்ளலே.

90. "ஹெலிகாப்டர்" மூலம் துண்டு பிரசுரம் வீசி விளம்பரத்தில் ஒரு புதிய யுக்தியை ஏற்படுத்திய படம் "ரிக்ஷாக்காரன்".

91. வழக்கமாக ஹிந்தி திரைப்படங்களை வெளியிடும் சென்னை "ஸ்டார்" அரங்கில் முதன் முறையாக 100 நாட்கள் ஓடி சாதனை புரிந்த திரைப்படம், நமது தலைவருக்கு பிடித்த "பெற்றால் தான் பிள்ளையா".

92. வழக்கமாக ஆங்கில திரைப்படங்களை வெளியிடும் சென்னை ஓடியன் அரங்கில் முதன் முறையாக 100 நாட்கள் ஓடி சாதனை புரிந்த திரைப்படம், "உரிமைக்குரல்"

93. சென்னை 'மேகலா' அரங்கில் முதன் முறையாக 100 நாட்கள் ஓடி சாதனை புரிந்த திரைப்படம், "வேட்டைக்காரன்"

94. சென்னை "ராம்" அரங்கில் முதன் முறையாக 100 நாட்கள் ஓடி சாதனை புரிந்த திரைப்படம், " நல்ல நேரம் "

95. இந்திய சினிமா வரலாற்றில், புதிதாய் வெளியாகும் ஒரு திரைப்படத்துக்க்கான RESERVATION தினத்தன்று, முன்னாள் நள்ளிரவு முதலே மக்கள் கூட்டம் திரை அரங்குகளை ஆக்கிரமிப்பது நமது புரட்சித் தலைவரின் காவியங்களுக்கு மட்டுமே !

96. RESERVATION மூலமே ரூபாய் 97,000/- வசூல் புரிந்து, ஒரு பிரமிப்பை ஏற்படுத்திய திரைப்படம் நமது இதய தெய்வத்தின் "இதயக்கனி"
http://i41.tinypic.com/256464y.jpg

97. தனது 60 வயதிலும் கதாநாயகனாக நடித்து, புகழ் பெற்று திரையுலகை விட்டு விலகும் பொழுது, தயாரிப்பில் இருந்த, நடிக்க ஒப்புக்கொண்ட, நடிக்கவிருந்த படங்களின் மொத்த எண்ணிக்கை 20க்கும் மேல். இது ஒரு மகத்தான சாதனை

அப்படங்கள் விவரம் வருமாறு :

1. மண்ணில் தெரியுது வானம் (தயாரிப்பு : உதயம் புரொடக்ஷன்ஸ் , இயக்கம் : கே. சங்கர்.)
2. புரட்சிப்பித்தன் (தயாரிப்பு : ரங்கநாயகி பிக்சர்ஸ், இயக்கம்: டி . ஆர். ராமண்ணா)
3. சமூகமே நான் உனக்கே சொந்தம் (தயாரிப்பு : லட்சுமி பிலிம்ஸ், இயக்கம் : கே. ராகவன் - சபாஷ் மாப்பிள்ளே பட இயக்குனர்) 4. நானும் ஒரு தொழிலாளி ((தயாரிப்பு : சித்ராலயா, இயக்கம் : ஸ்ரீதர்.)
5. மர்மப்பெண்களிடம் CID 117 (தயாரிப்பு : தாமஸ் பிக்சர்ஸ், இயக்கம் : தாமஸ் - சிங்கமுத்து)
6. தந்தையும் மகனும் (தயாரிப்பு : தேவர் பிலிம்ஸ், இயக்கம் : எம்.ஏ. திருமுகம்)
7. உன்னைவிட மாட்டேன் ((தயாரிப்பு : ஜி. கே. பிலிம்ஸ்)
8. கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜு (தயாரிப்பு : எம். ஜி. ஆர்.பிக்சர்ஸ், இயக்கம் : எம். ஜி. ஆர்.)
9. மக்கள் என் பக்கம் (தயாரிப்பு எம். எம். மூவிஸ் முசிறிப்புத்தன் - என். எஸ். மணியம், இயக்கம் - என். எஸ். மணியம்)
10. அண்ணா பிறந்த நாடு (தயாரிப்பு : பீதாம்பரம், இயக்கம் : ப. நீலகண்டன்)
11. அமைதி
12. எல்லைக்காவலன்
13. கேப்டன் ராஜு (தயாரிப்பு : C.N.V. மூவிஸ், இயக்கம் : ஏ. பி. நாகராஜன்)
14. தியாகத்தின் வெற்றி
15. இணைந்த கைகள்
16. இதுதான் பதில்
17. வேலுத்தம்பி (தட்டுங்கள் திறக்கப்படும் என்ற பாடல் காட்சி மட்டும் படமாக்கப்பட்டது)

18. ஓரியண்டல் மூவிஸ் (நினைத்ததை முடிப்பவன் படத் தயாரிப்பாளர்கள்) பெயரிடப்படாத திரைப்படம்.
19. வீனஸ் பிக்சர்ஸ் பெயரிடப்படாத படம்.
20. சத்யா மூவிஸ் பெயரிடப்படாத படம்.
21. அரசு பிக்சர்ஸ் சார்பில் V.T. அரசு தயாரிபில் பெயரிடப்படாத படம்.

குறிப்பு : "அண்ணா நீ என் தெய்வம்" பின்னர் "அவசர போலிஸ்" என்ற பெயரில் திரு. பாக்கியராஜ் நடிப்பில் வெளியானது.
"ஏசு நாதர்" மற்றும் வெள்ளிகிழமை திரைப்படங்கள், சில காட்சிகள் எடுக்கப்பட்டு, கைவிடப்பட்டது.
"நல்லதை நாடு கேட்கும்" பின்னர் ஜேப்பியார் நடிப்பில் வெளியானது.


திரை உலக சாதனைகள் தொடரும் ................... நன்றி !

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !

அன்பன் : சௌ. செல்வகுமார்

[B]என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்

fidowag
17th January 2014, 09:24 AM
http://i40.tinypic.com/ra2is0.jpg
http://i42.tinypic.com/29ar1xh.jpg
http://i42.tinypic.com/2vxq82d.jpg
http://i41.tinypic.com/ddz5tu.jpg
http://i43.tinypic.com/21cv0xt.jpg
http://i41.tinypic.com/21eri37.jpg
http://i44.tinypic.com/eta353.jpg
http://i43.tinypic.com/2wh2qkh.jpg
http://i39.tinypic.com/10f3pqg.jpg

http://i43.tinypic.com/25khnd5.jpg

fidowag
17th January 2014, 09:34 AM
http://i40.tinypic.com/sw9vf5.jpg
http://i43.tinypic.com/2z4ih03.jpg
http://i40.tinypic.com/nv8bo1.jpg

நன்றி: நமது எம்.ஜி.ஆர்.

fidowag
17th January 2014, 09:39 AM
http://i40.tinypic.com/33yj2xf.jpg

நன்றி: நமது எம்.ஜி.ஆர்.

fidowag
17th January 2014, 09:41 AM
http://i44.tinypic.com/2rz3sxt.jpg

நன்றி: நமது எம்.ஜி.ஆர்.

fidowag
17th January 2014, 09:50 AM
http://i41.tinypic.com/2hq6ow9.jpg

நன்றி: நமது எம்.ஜி.ஆர்.

fidowag
17th January 2014, 09:51 AM
http://i39.tinypic.com/2drror8.jpg

நன்றி: நமது எம்.ஜி.ஆர்.

fidowag
17th January 2014, 09:58 AM
http://i42.tinypic.com/23hp209.jpg


நன்றி: நமது எம்.ஜி.ஆர்.

oygateedat
17th January 2014, 10:00 AM
எம்.ஜி.ஆர். பிறந்தநாள் சிறப்பு பகிர்வு

சினிமா, அரசியல் தாண்டி ஓர் ஆளுமையாக எம்.ஜி.ஆர். அனைவருக்குமான ரோல்மாடல். இன்னமும் அவரைப் பற்றி சிலாகித்துச் சொல்ல ஆயிரம் சங்கதிகள் இருந்தாலும்... 25 மட்டும் இங்கே!

எம்.ஜி.ஆர். நடித்த மொத்தப் படங்கள் 136. முதல் படம்சதிலீலா வதி(1936). கடைசிப் படம் மது ரையை மீட்ட சுந்தர பாண்டியன் (1977).

பெரும்பாலும் (60 படங்கள்) தெலுங்குப் படங்களைத்தான் ரீ-மேக் செய்வார் எம்.ஜி.ஆர். அத்தனையும் என்.டி.ஆர். நடித்த தாகவே இருக்கும். 'உரிமைக் குரல்' மட்டும் விதிவிலக்கு. அது நாகேஸ்வரராவ் நடித்த தெலுங்குப் படம்!

எம்.ஜி.ஆரின் முதல் மனைவி தங்கமணி. இரண்டாவதாக சதானந்தவதியைத் திருமணம் செய்தார். அவரது மறைவுக்குப் பிறகு வி.என்.ஜானகி!

எம்.ஜி.ஆர். நடித்த 50படங் களுக்குப் பாடல்கள் எழுதியவர் கண்ணதாசன். அவரின் 'அச்சம் என்பது மடமையடா... அஞ்சாமை திராவிட உடைமையடா' பாட்டு எம்.ஜி.ஆரின் காரில் எப்போதும் ஒலிக்கும்!

விடுதலைப் புலிகளின்தலைவர் பிரபாகரனுக்கு 6 கோடியே 37 லட்சம் ரூபாய் பணம் கொடுத்து உதவியவர் எம்.ஜி.ஆர். அவருக்கு ஏ.கே. 47 ரக துப்பாக்கியைப் பரிசாக அளித்தார் பிரபாகரன்!

சிகரெட் பிடிப்பது மாதிரிநடிப்பதைத் தவிர்த்தார். 'நினைத்ததை முடிப்பவன்' படத்தில் சிகரெட்டை வாயில் வைப்பார். இழுக்க மாட்டார். மலைக்கள்ளனில்'ஹ¨க்கா' பிடித்தது மாதிரி வருவார். இந்தக் காட்சியை வைப்பதா, வேண்டாமா என்ற குழப்பத்திலேயே படம் ரிலீஸ் ஆவதில் தாமதம் ஏற்பட்டதாம்!

முதலமைச்சர் பதவியை ஏற்றுக்கொண்டால் ஷூட்டிங் போக முடியாது என்பதால், பதவியேற்பு விழாவையே 10 நாட்கள் தள்ளிப் போட்டு 'மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்' படத்தை முடித்துக் கொடுத் தார்!

'கர்ணன்' படத்தில் சிவாஜிக்கு முன்னதாக எம்.ஜி.ஆரைத்தான் கேட்டார்கள். 'புராணப் படம் பண்ண வேண்டாம்' என்று அண்ணா சொன்னதால் மறுத்துவிட்டார் எம்.ஜி.ஆர்!

நம்பியாரும் அசோகனும்தான் எம்.ஜி.ஆருக்குப் பிடித்த வில்லன்கள். பி.எஸ்.வீரப்பாவும், ஜஸ்டினும் இருந்தால் சண்டைக் காட்சிகளில் குஷியாக நடிப் பார்!

எம்.ஜி.ஆருடன் அதிக படங்களில் ஜோடியாக நடித்தவர் சரோஜா தேவி. அடுத்தது ஜெயலலிதா!

எம்.ஜி.ஆர் - கருணாநிதி இணைந்து வெற்றி பெற்ற படம் 'மலைக்கள்ளன்'. ஜனாதிபதி விருது வாங்கிய முதல் தமிழ் சினிமா. இந்தியாவில் உள்ள பெரும்பாலான மொழிகளில் எடுக்கப்பட்ட படம் இது!

காஞ்சித் தலைவனில் இருந்து தனது கட்டுமஸ் தான உடம்பைக் காண்பித்து நடிக்கத் தொடங்கினார். எண்ணெய் தேய்த்துக் குளிக்கும் 'உரிமைக் குரல்' காட்சி, பெண்களை அவர் பக்கம் ஈர்ப்பதில் பெரும் பங்கு வகித்தது!

நாடோடி மன்னன், உலகம் சுற்றும் வாலிபன், மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் - மூன்றும் எம்.ஜி.ஆர் டைரக்ஷன் செய்த படங்கள்!

சினிமாவில் அதுவரை கட்சிக் கருத்துக்களைப் புகுத்துவார்கள். ஆனால், எம்.ஜி.ஆர் காட்சிகளையே புகுத்தினார். தி.மு.க. கொடி, உதயசூரியன் சின்னம், அண்ணா படம் இல்லாத படமே இல்லை என்ற அளவுக்கு வைத்தார்!

எம்.ஜி.ஆர். எத்தனையோ குழந்தைகளுக்குப் பாதுகாவலராக இருந்து படிக்கவைத்தார். அதில் முக்கியமான இரண்டு பேர், அரசியலைக் கலக்கிய துரைமுருகன். சினிமாவில் வலம் வந்த கோவை சரளா!

தமிழ் சினிமா ரசிகர்கள் பற்றி 1970-ம் ஆண்டு எம்.ஜி.ஆர். அடித்த கமென்ட் இதுதான்... 'அந்தக் காலத்து ரசிகர்கள் மாதிரி இப்ப உள்ளவங்க இல்லை. 10 நிமிஷங்களுக்கு ஒரு க்ளைமாக்ஸ் கேட்குறாங்க. அப்படி வெச்சாத்தான் படம் ஓடும்!'

'பொன்னியின் செல்வன்' கதையைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் எடுக்க நினைத்தார் எம்.ஜி.ஆர். ஆங்கில வசனத்தை அண்ணாவை எழுதவும் கேட்டுக் கொண்டார். ஆனால், ஆசை நிறைவேறவில்லை!

அறிமுகம் இல்லாதவராக இருந்தால், உடனே கை கொடுத்து 'நான் எம்.ஜி.ராமச்சந்திரன் - சினிமா நடிகர்' என்று அறிமுகம் செய்துகொள்வார்!

ராமாவரம் தோட்டத்தில் ஆடு, மாடு, கோழி, நாயுடன் ஒரு கரடியும், சிங்கமும் வளர்த்தார் எம்.ஜி.ஆர். இவற்றைக் கவனிக்க தனி டாக்டர் வைத்திருந்தார்!

ரொம்பவும் நெருக்கமானவர்களை 'ஆண்டவனே!' என்றுதான் அழைப்பார்!

அடிமைப் பெண் பட ஷூட்டிங்குக்காக ஜெய்ப்பூர் போன எம்.ஜி.ஆர். குளிருக்காக வெள்ளைத் தொப்பி வைக்க ஆரம்பித்தார். பிடித்துப்போகவே அதைத் தொடர்ந்து பயன்படுத்த ஆரம்பித்தார்!

எம்.ஜி.ஆர். பகிரங்கமாகக் காலில் விழுந்து வணங்கிய பெருமை இரண்டு பேருக்கு உண்டு. ஒருவர், நடிகர் எம்.கே.ராதா. கத்திச் சண்டை, இரட்டை வேடங்களுக்கு இவர்தான் எம்.ஜி.ஆருக்கு இன்ஸ்பிரேஷன். இரண்டாமவர், ஹிந்தி டைரக்டர் சாந்தாராம். இவரது படங்களைத்தான் நிறையப் பின்பற்றினார் எம்.ஜி.ஆர்!

முழுக்கை சில்க் சட்டை, லுங்கியுடன் தொப்பி, கண்ணாடி இல்லாமல் தன் காரை தானே டிரைவ் செய்து எப்போதாவது சென்னையை வலம் வருவது எம்.ஜி.ஆரின் வழக்கம். 'யாருக்கும் என்னைத் தெரி யலை. தொப்பி, கண்ணாடி இருந்தாதான் கண்டு பிடிப்பாங்க போல' என்பாராம்!

அன்னை சத்யாவை வணங்க ராமாவரம் தோட்டத்துக்குள்ளேயே கோயில் வைத்திருந்தார்!

'நான் ஏன் பிறந்தேன்?' - ஆனந்த விகடனில் எம்.ஜி.ஆர் எழுதிய சுயசரிதைத் தொடர்.

அதை அவர் முழுமையாக எழுதி முடிக்கவில்லை. அடுத்ததாகத் தொடங்கிய 'எனது வாழ்க்கை பாதையிலே' தொடரும் முற்றுப் பெறவில்லை. இன்றும் அவர்வாழ்ந்து கொண்டு இருப்பதாகவே நினைக்கும் ரசிகர்கள் இருக்கிறார்கள். முற்றும் பெறவில்லை அவர் பெருமைகள்!


From Vikadan

fidowag
17th January 2014, 10:03 AM
http://i42.tinypic.com/9se3c6.jpg
http://i39.tinypic.com/6p24a0.jpg


நன்றி: நமது எம்.ஜி.ஆர்.

fidowag
17th January 2014, 10:05 AM
http://i39.tinypic.com/1086wpz.jpg

நன்றி: நமது எம்.ஜி.ஆர்.

fidowag
17th January 2014, 10:20 AM
http://i40.tinypic.com/ci543.jpg

fidowag
17th January 2014, 10:20 AM
http://i44.tinypic.com/29zo7pc.jpg


நன்றி: நமது எம்.ஜி.ஆர்.

fidowag
17th January 2014, 10:21 AM
http://i44.tinypic.com/nohkqb.jpg
http://i44.tinypic.com/v5bewk.jpg


நன்றி: நமது எம்.ஜி.ஆர்.

fidowag
17th January 2014, 10:25 AM
http://i41.tinypic.com/2h4b714.jpg

நன்றி: நமது எம்.ஜி.ஆர்.

ainefal
17th January 2014, 10:26 AM
http://www.youtube.com/watch?v=N0el-hD5xNM

paranitharan
17th January 2014, 10:29 AM
Most popular star ever. HB thaivaa. :(

ainefal
17th January 2014, 10:31 AM
http://www.youtube.com/watch?v=ySyxfkaR4K8

ainefal
17th January 2014, 10:33 AM
http://www.youtube.com/watch?v=Xht4ypM7emQ

ainefal
17th January 2014, 10:36 AM
http://www.youtube.com/watch?v=vWgWLvFlZso

ainefal
17th January 2014, 10:38 AM
http://www.youtube.com/watch?v=_cW2aNdWT4o

ainefal
17th January 2014, 10:40 AM
http://www.youtube.com/watch?v=pprkbDzRbXk

ainefal
17th January 2014, 10:42 AM
http://www.youtube.com/watch?v=1O0mqFukEqg

ainefal
17th January 2014, 10:42 AM
http://www.youtube.com/watch?v=8lMoQGtjafY

ainefal
17th January 2014, 10:45 AM
http://www.youtube.com/watch?v=qt9K-maV-sQ

ainefal
17th January 2014, 10:47 AM
http://www.youtube.com/watch?v=TgFPeJyHGcI

ainefal
17th January 2014, 10:48 AM
http://www.youtube.com/watch?v=h2rVQhluQRY

ainefal
17th January 2014, 10:53 AM
http://www.youtube.com/watch?v=cwhexFJVEyY

ainefal
17th January 2014, 10:59 AM
http://i41.tinypic.com/11r9l53.jpg

Thanks to Mr. Boominathan Andavar, Mumbai.

ainefal
17th January 2014, 11:34 AM
http://www.youtube.com/watch?v=hTXGg36G4E8

ainefal
17th January 2014, 11:42 AM
http://www.youtube.com/watch?v=Y3zbE7eFhxs

ainefal
17th January 2014, 12:26 PM
http://i39.tinypic.com/209mvd1.jpg

Thanks to Mr. Nihar Deen, Abu Dhabi.

Stynagt
17th January 2014, 12:31 PM
இதய தெய்வத்தின் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

http://i44.tinypic.com/w7o8ex.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

ainefal
17th January 2014, 12:36 PM
http://www.youtube.com/watch?v=JMpCmtDOBF0

ainefal
17th January 2014, 01:44 PM
என்றும் ஆயிரத்தில் ஒருவன்

எம்.ஜி.ஆரின் அரசியலோடு எவ்வளவோ முரண்பட்டாயிற்று; ஆனால் மனதில் படிந்த அவரின் திரைப் பிம்பங்களை மட்டும் நீக்கிவிட முடியவில்லை. அவரின் முகம் அவருடைய ரசிகர்களின் மனதில் மட்டும் அல்ல; பிறருடைய ரசிகர்களின் மனங்களிலும் அன்றலர்ந்த ஒரு பூவாக இருப்பது அதிசயமே. இது தமிழகத்துக்கென்று அமைந்துவிட்ட ஒரு பொதுவிதியோ?

அவர் நம்மைவிட்டுப் பிரிந்து கால் நூற்றாண்டு காலமாகிவிட்டது. ஆனால் அவர் சம்பந்தமான ஏதோ ஒன்றை யாரோ ஒருவர் எங்கோ இருந்து தினந்தோறும் பேசிக்கொண்டே இருக்கிறார்; நாம் சலிக்காமல், அந்த இடத்திலிருந்து எழுந்துசெல்லாமல் கேட்டுக்கொண்டே இருக்கிறோம். இது எப்படி சாத்தியமாகும்? இன்று அவர்பற்றி நாம் வியந்து பேசுவதை கேட்க அவர் நம் அருகில் இல்லை; அவர் மனைவியோ குழந்தைகளோகூட இல்லை; அவரைப் பற்றிப் பேசி பணம், பதவி என்ற ஆதாயங்களைப் பெறுவது என்பது தற்போது கனவுக்குள்கூட சாத்தியமில்லாதது. ஒருவேளை அப்படிச் செயல்படுவதாலேயே இருப்பதும் போச்சே என்றாகிவிடலாம்; அவர் ஆரம்பித்த கட்சியே, அவர் கைப்பற்றிய ஆட்சியே இப்போது இருக்கும் இந்தச் சூழ்நிலையிலும். ஆட்சிக்கு ஒன்றாகவும், மக்களின் மனங்களுக்கு வேறொன்றாகவும் என இரண்டு எம்.ஜி.ஆர். நம்மிடையே இருக்கிறார்கள் அந்த ‘எங்க வீட்டுப் பிள்ளை’படக் கதாபாத்திரங்கள்போல!

ஆட்டம்போட வைத்தவர்

அவரைக் கொண்டாட நமக்குக் கிடைத்த அந்த மூல வஸ்து வெறும் சினிமா மாத்திரம்தானா? சிவாஜி கணேசனின் படங்களைவிட எம்.ஜி.ஆரின் படங்கள் தரத்தில் சற்றுக் குறைந்தவை என்று சொல்லப்பட்டாலும், அவையெல்லாம் வசூலை வாரிக்குவித்ததால் அவர் என்றென்றும் தயாரிப்பாளர்களின் விருப்பமாக இருந்தார். அநேகமாக அவர்தான் வெள்ளித்திரையில் ஜொலித்த தங்க நட்சத்திரம்; எம்.ஜி.ஆர். படங்களின் அழகியலோ கலையம்சங்களோ யாராலும் பாராட்டப்பட்டதில்லை.

அவற்றை விவாதப் பொருளாகவும் எவரும் பேசிக்கொள்வதில்லை. அவர் படத்தின் வாள்வீச்சுகள், சண்டைக்காட்சிகள், அழகுப் பதுமைகளாக வந்த நடிகைகளோடு அவர் நடத்திய காதல் விளையாடல்கள் என்பன திரையரங்கினுள் ரசிகனை ஆட்டம்போட வைத்ததென்றால், திரைக்கு வெளியே அவர் பாடல்கள் ஒவ்வொருவரையும் கிறங்கடித்தன. ஆகவே நம் கண்களிலிருந்தும் மனதிலிருந்தும் விலகிச்செல்ல முடியாத ஒரு நெருக்கத்தை அவர் பராமரித்துக்கொண்டார்.

எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகன் நான். அநேகமாக எங்கள் ஜமா-அத் பையன்களும் இளைஞர்களும் அப்படித்தான் இருந்தோம். மற்ற தமிழ் நடிகர்களைக் காட்டிலும் எம்.ஜி.ஆர். முஸ்லிம் கதாபாத்திரம் ஏற்று நடித்த படங்கள் அநேகம். அதிலும் அவருடைய ஆரம்பக் காலப் படங்கள் அவரின் புகழைப் பரப்பிச்செல்ல அவருக்கு ரொம்பவும் கைகொடுத்தன. முதல் வண்ணப்படமான அலிபாபாவும் நாற்பது திருடர்களும், பாக்தாத் திருடன், குலேபகாவலி, ராஜா தேசிங்கு, சிரித்து வாழ வேண்டும் அவற்றுள் முக்கியமானவை. இந்த ஒவ்வொரு படமும் திரும்பத் திரும்பப் பார்க்கத் தூண்டியவை.

முஸ்லிம் ரசிகர்களின் இதயக்கனி

களக்காடு ஆற்றங்கரையோரமாக அமைந்திருந்த லெப்பைநயினார் பள்ளிவாசல் தர்காவில் சந்தனக்கூடு திருவிழா நடக்கும்போது சாதிசமய பேதம் இல்லாமல் ஜனங்கள் திரண்டிருப்பார்கள். திருவிழாவின் முதல் நாள் முக்கூடல் ராமகிருஷ்ணா பீடி கம்பெனிக்காரர்கள் ஒரு அகலமான திரையைக் கட்டுவார்கள்; அதில் குலேபகாவலியைத் திரையிடுவார்கள்; இப்படியாகவே குறைந்தபட்சம் பத்து ஆண்டுகளாவது அதை மட்டுமே படமாகக் காட்டினார்கள்;

அப்படியும் கூட்டம் நெரித்துக்கொண்டுதான் இருக்கும். இதெல்லாம் போக எங்களூர் பாக்கியலெட்சுமி தியேட்டரிலும் ஒன்றரை ஆண்டுகளுக்கு ஒருமுறையாவது அதைத் திரையிடுவார்கள்; காசு கொடுக்காமல் ஓசியில் பார்த்த அதே ரசிக மகாஜனம் தியேட்டரிலும் அடிபிடியான கூட்டத்தை உருவாக்கிக்கொண்டு தள்ளுமுள்ளு செய்தவர்களாக, காசு கொடுத்துப் பார்க்க முனைந்ததும் விந்தையான விந்தைதான். எம்.ஜி.ஆரின் கலைநோக்கை இதைக் கொண்டு ஆராய்வதே சிறப்பானது.

இப்போது இரவு நேரமானால் எஃப்.எம். அலைவரிசைகளில் அவருடைய படப் பாடல்கள் கேட்டுத் தூங்குவது பல்லாயிரக் கணக்கான ரசிகர்களின் வழக்கம். அதில் நானும் ஒருவன். வாழ்வின் துயரங்களையும் கவலைகளையும் உடனடியாக மாற்றிப்போடும் நுட்பங்களைக் கொண்டவை அவருடைய படப் பாடல்கள். எம்.ஜி.ஆரின் ஆளுமை அவருடைய பாடல்கள் சார்ந்தும், இதர பங்கேற்பாளர்களின் தொழில்நுட்ப அறிவை உச்சபட்ச அளவில் வசப்படுத்திப் படங்களில் பயன்படுத்தியதை ஒட்டியும் உருவானவை என்று சொல்லலாம். அதனால்தான் அவர் பலதரப்பட்ட ரசிகர்களையும் கவர முடிந்தது.

எங்கள் கிராமத்துப் பெரியவர்கள் சதா சர்வகாலமும் தொழுகை, நோன்பு, மவ்லூது ஓதுதல் போன்ற இன்னபிற ஆன்மிகக் காரியங்களில் இருந்தாலும் எப்போதாவது தியேட்டரை நோக்கி இரண்டாம் காட்சிக்குப் போகிறார்கள் என்றால் அன்றைக்கு ஒரு எம்.ஜி.ஆர். படம் ஓடுகிறது என்று அர்த்தம். கண்டி, கொழும்பு, சென்னை என்று பாடுபட்டு ஊர் வருபவர்களின் எளிய சினிமா தேர்வாகவும்

எம்.ஜி.ஆரே இருந்தார் என்பதும் கவனத்துக்குரியது. அவர் வெளிப்படையாக பலபேர் முன்னிலையிலும் ‘நடித்துக்கொண்டு இருந்ததாக’ அந்தக் காலத்தில் பலரும் சொல்லிக்கொண்டிருந்தார்கள்; அது ஒருவகையில் உண்மைதானோ என்கிற சந்தேகமும் சிலருக்கு உண்டானது. ஆனால், இன்றும் கரை தாண்டிய வெள்ளம்போல அவர் சம்பந்தமான பல நினைவுகூரல்கள் வந்தபடி இருப்பதை என்னவென்று சொல்ல? நம் காலத்தின் எந்த ஒரு ஆளுமைக்கும் இப்படியான அபூர்வ நினைவூட்டல்கள் இல்லையே!

காயல்பட்டினம் வருகை

எம்.ஜி.ஆர். தி.மு.க-விலிருந்து நீக்கப்பட்டபோது தமிழகத்தின் மூலைமுடுக்குகளில் நிகழ்ந்த விவாதங்கள், சம்பவங்கள் ஆகியன தனித்தன்மை வாய்ந்தவை. அவர் தன் நியாயத்தை வலியுறுத்தியும், கட்சித் தொண்டர்களை உற்சாகப்படுத்தியும் 1972-ம் ஆண்டு திருச்செந்தூர் அருகிலுள்ள காயல்பட்டினம் வருவதாக இருந்தது. தென் மாவட்ட முஸ்லிம்கள் எம்.ஜி.ஆரின் ஆதார பலமாக இருந்ததால் அவர் காயல்பட்டினம் வருவது சரியான அணுகுமுறை எனப் பலரும் கருதினர்.

அங்கு ஒரு வளாகமாகக் கட்டப்பட்ட கால்பந்து மைதானத்தில் அவர் பேசுவதாக ஏற்பாடு. அந்தச் சமயம் முஸ்லிம் லீக் கட்சி தி.மு.க.வின் நட்புக் கட்சியாக இருந்தது. எனவே எம்.ஜி.ஆரின் கூட்டத்துக்கு முஸ்லிம் பெண்கள் திரண்டுவிடக் கூடாது என்பதற்காக ஒரு முயற்சி மேற்கொள்ளப்பட்டது. அதன்படி ஒரு சினிமா நடிகரின் கூட்டத்துக்கு முஸ்லிம் பெண்கள் செல்லக் கூடாது என்று துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டு, பிரச்சாரங்களும் மேற்கொள்ளப்பட்டன.

இந்த மாதிரியான விவகாரங்களில் மதம் கையாளப்படுவது பலன் கொடுக்கும் என்றும் நம்பப்பட்டது. இந்தக் கூட்டத்துக்கு முன்னால் அவர் கோவில்பட்டியில் பேசினார்; அங்கிருந்து அவர் காயல்பட்டினம் வர வேண்டும். அப்படித்தான் வந்தார்; ஆனால் அவர் கூட்ட மைதானத்தில் நுழைய முடியவில்லை; அவ்வளவு மாபெரும் கூட்டம். உள்ளே போய்விடலாம் என்று அவர் மிகவும் எத்தனித்திருக்கிறார்.

தன் கையிலிருந்த ஏதோ ஒரு பொருளால் ( அது ஒரு டார்ச் லைட் என்று பின்னர் சொல்லிக்கொண்டார்கள்) அவரே கூட்டத்தைத் தன் கைகளாலும் விலக்கிப்பார்த்திருக்கிறார். ம்ஹூம், நடக்காத காரியமாகிவிட்டது. புரட்சித் தலைவர் என்றும் அதோ எம்.ஜி.ஆர். என்றும் ஏகப்பட்ட ஆரவாரங்கள்; மகிழ்ச்சிப் பிரளயங்கள். அவர் மேடையில் ஏறப்போகிறார் என்று மையப் பகுதியிலுள்ள கூட்டத்தினர் எதிர்பார்த்துக்கொண்டே இருக்க அவரோ தன் கூட்டத்துக்குத் தானே உள்ளே நுழைய முடியாமல் வந்த வழியே திரும்பிவிட்டார்.

இதனால் கூட்ட ஏற்பாட்டாளர்கள் அதிர்ச்சியடைந்தார்கள்; அதிர்ச்சியில் உறைந்துவிடாமல் உடனடியாகக் குறுக்குவழியில் விரைந்துசென்று எம்.ஜி.ஆரின் காரை வழிமறித்து நயந்துபேசி மீண்டும் அழைத்துவந்தார்கள்; எத்தனையோ திரைப்படங்களில் நேரான பாதையில் சென்ற வில்லனைக் குறுக்குவழியில் சென்று வழிமறித்ததைப் பார்த்த ரசிகர்கள் அவரிடமிருந்தும் கொஞ்சம் கற்றுக்கொண்டிருக்க மாட்டார்களா? கற்றுக்கொண்டதை அவரிடமே பிரயோகித்துவிட்டார்கள்.

வெற்றியும் தோல்வியும் அவர் தன்னைச் சுற்றித்தான் நிகழும்படியாக வைத்துக்கொண்டார் என்றே சொல்லலாம். அவர் கோலோச்சியவரையிலும் தமிழ்த் திரைப்படங்கள் வேறு பாதையை எத்தனிக்க முடியவில்லை. ஆனால், அப்போதே ஓரளவேனும் பேசும்படியாக இருந்த கே. பாலச்சந்தர் எம்.ஜி.ஆர். மூலமாக வந்தவர்; உதிரிப்பூக்கள் மகேந்திரன் அவர் கைபட்டு உள்ளே நுழைந்தவர். ஒருவேளை அடுத்த தலைமுறையின் வெள்ளித்திரையிலும் தன்பெயர் பின்னணியாக இருக்க வேண்டும் என அவர் நினைத்திருந்தால் அதிலும் அவர் ஜெயித்திருக்கிறார்.

தொடர்புக்கு: peermohamed.a@kslmedia.in

http://tamil.thehindu.com/opinion/columns/%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%A E%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%A F%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%A F%8D/article5583927.ece

Richardsof
17th January 2014, 01:50 PM
BANGALORE - MAKKAL THILAGAM M.G.R. BIRTHDAY - BANNERS
http://i39.tinypic.com/s1q0dj.jpg

http://i40.tinypic.com/2nbug3s.jpg

Richardsof
17th January 2014, 01:52 PM
http://i43.tinypic.com/2d0mdqs.jpg

Richardsof
17th January 2014, 01:53 PM
http://i41.tinypic.com/2isux78.jpg

Russellisf
17th January 2014, 02:13 PM
உழைக்கும் கரங்கள் திரைப் படம் , கோவை செழியன் தயாரிப்பாளர் , படபிடிப்பின் பொழுது , சாப்பாட்டு விஷயத்தில் சரியாக கவனிப்பதில்லை என்று சில லைட்பாயிஸ் மக்கள் திலகத்திடம் குறை கூறி விட்டார்கள் ...
அடுத்த நாள் , சாப்பாட்டு நேரத்தின் பொழுது , மக்கள் திலகம் தனது அறையை விட்டு வெளியேறி , லைட்பாயிஸ் இருக்கும் இடத்திற்கு சென்றார் , அவர்களுக்கு போடப் பட்ட இலைகளில் ஒன்றின் முன்னால் அமர்ந்து விட்டார் , அனைவருக்கும் அதிர்ச்சி ..
சார் , உங்களுக்கு உள்ளே இலை போடப் பட்டிருக்கிறது என்று தயங்கியப் படி சொல்ல , மக்கள் திலகமோ " இருக்கட்டும்யா , எல்லாரும் ஒன்னு தானே , இன்னைக்கு இங்கே உக்கார்ந்து சாப்பிடறேன் " என்று கூறிவிட்டார்
சாப்பாடு போட்டு ஒவ்வொரு இலையிலும் ஒரு முட்டையை வைத்தார்கள் , கொஞ்சம் நேரம் கழித்து , " இன்னும் ஏன் அசைவம் வரலை ?" என்று மக்கள் திலகம் கேட்க ....
" இல்லை சார் , உங்களுக்கு உள்ளே தனியா அசைவம் இருக்கு , வேணும்னா அதை இங்கே எடுத்துட்டு வரட்டுமா என்று " அந்த ஊழியர் தயங்கிய படியே சொல்ல ...
கோவத்துடன் மக்கள் திலகம் " ஏன் , சாப்பாட்டுல பாகுபாடு பார்க்குறீங்க ? லைட்மேன் கள் தான் அதிகம் உழைக்கறாங்க , அவங்களுக்கு மட்டும் முட்டை எனக்கு காடை கவுதாரியா ? இனிமே அவங்களுக்கும் அசைவம் கொடுங்க தினமும் , அதை வேணும்னா என் கணக்குல வைச்சுக்கோங்க , நான் சம்பளத்தில் கழிச்சிக்கறேன் " என்றார் ....
சமத்துவம் என்பது மக்கள் திலகத்திற்கு வாய் வார்த்தை மட்டுமே கிடையாது ... அது அவரது வாழ்கை முறை
இன்று மக்கள் திலகத்தின் பிறந்த நாள் - மகிழ்ச்சியான நினைவுகள் courtesy facebook

Russellisf
17th January 2014, 02:15 PM
எங்கள் வீட்டுப் பிள்ளைக்கு வயது 97 "
1977 – ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் 126 இடங்களைக் கைப்பற்றிய புரட்சித்தலைவரின் அ.இ.அ.தி.மு. கழகம் 1980 – ஆம் ஆண்டுத் தேர்தலில் 139 இடங்களைக் கைப்பற்றியது.
எம்.ஜி.ஆர். என்ற மாபெரும் மனிதநேயச் செல்வருக்கு மக்கள் மத்தியில் இருந்த செல்வாக்கைக் கண்டு, எதிர் அணியினர் அதிர்ந்தனர். பத்திரிக்கை உலகமோ பிரமித்தது.
ஆனந்த விகடன் பத்திரிக்கையில், புரட்ச்சிதலைவர் மீது
மக்கள் வைத்திருந்த அன்பையும் ஆதரவையும் பிரதிபலிக்கும்
விதமாக அட்டைப்படத்தில் போடப்பட்ட அற்புதமான கார்டூன் இதுவாகும் .
விகடனின் கார்டூன் வெளியீட்ட கருத்து படத்தில் உள்ளபடி, அன்று முதல் உலகம் உள்ளவரை மக்கள் புரட்ச்சிதலைவர் மீது அன்பையும் ஆதரவையும் பொழிந்துகொண்டே இருப்பார்கள் .
" எங்கள் வீட்டுப் பிள்ளைக்கு வயது 97 "

1977 – ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் 126 இடங்களைக் கைப்பற்றிய புரட்சித்தலைவரின் அ.இ.அ.தி.மு. கழகம் 1980 – ஆம் ஆண்டுத் தேர்தலில் 139 இடங்களைக் கைப்பற்றியது.

எம்.ஜி.ஆர். என்ற மாபெரும் மனிதநேயச் செல்வருக்கு மக்கள் மத்தியில் இருந்த செல்வாக்கைக் கண்டு, எதிர் அணியினர் அதிர்ந்தனர். பத்திரிக்கை உலகமோ பிரமித்தது.

ஆனந்த விகடன் பத்திரிக்கையில், புரட்ச்சிதலைவர் மீது
மக்கள் வைத்திருந்த அன்பையும் ஆதரவையும் பிரதிபலிக்கும்
விதமாக அட்டைப்படத்தில் போடப்பட்ட அற்புதமான கார்டூன் இதுவாகும் .

விகடனின் கார்டூன் வெளியீட்ட கருத்து படத்தில் உள்ளபடி, அன்று முதல் உலகம் உள்ளவரை மக்கள் புரட்ச்சிதலைவர் மீது அன்பையும் ஆதரவையும் பொழிந்துகொண்டே இருப்பார்கள் . Courtesy facebook

Russellisf
17th January 2014, 02:17 PM
சாதி ஒழிப்பில் தொடங்கி விதவைத் திருமணம்வரை பல மாற்றங்களைச் தமிழ் சினிமா முன்னெடுத்திருக்கிறது. வெவ்வேறு துண்டுகளாகச் சிதறியிருந்த மக்களைக் கத்தியின்றி ரத்தமின்றி, கொஞ்சம் முற்போக்காக, கொஞ்சம் சமத்துவ உணர்வு கொண்டவர்களாக, கொஞ்சம் நேர்மை உணர்வை ஏற்பவர்களாக மாற்றியதும் சினிமா என்ற வடிவமே. ஆனால் அனைத்துக் கருத்தியல்களையும் எளிமையான பொழுதுபோக்கு வடிவமாக மட்டுமே நாம் செரித்ததின் எதிர்மறை விளைவுகளும் சமூகத்தில் உள்ளன. எந்த மாற்றமும் ஆழமானதாகவும் நீடித்திருப்பதாகவும் இல்லாமல்போனதற்கு இந்த எளிமைப்படுத்தல்தான் காரணம்.

சினிமா சமூக மாற்றத்தை முன்னெடுத்த காலகட்டத்தில் உருவான நாயகன்தான் எம்.ஜி.ஆர். பணக்காரப் பண்ணையார்களிடமிருந்து ஏழைப் பாட்டாளிகளைக் காப்பாற்றுபவராக, நீதியின் கரங்களை வலுப்படுத்துபவராக அவர் ஏற்ற பாத்திரங்களை மக்கள் ‘நிஜம்’ எனவே நம்பினார்கள். இந்தியச் சுதந்திரம் அவர்கள் எதிர்பார்த்த எந்தப் பெரிய மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை. தங்கள் மீது காலம்காலமாக நடத்தப்படும் ஒடுக்குமுறைகளையும், அடுக்கடுக்காகப் பொழியும் துயரங்களையும் ஒரு வகையில் ‘விதி’ என்று ஏற்றுப் பழகிக்கொண்ட அந்த எளிய மக்கள் எம்.ஜி.ஆரைத் தங்கள் துயரங்களைத் தீர்க்கவரும் கடவுளாகத் திரையில் கண்டனர். திரையரங்குக்கு வெளியிலும் விழித்த நிலையிலேயே அவர்கள் கண்ட கனவுதான், எம்.ஜி.ஆர். என்னும் தனித் திரைப் பிம்பத்தை அரசியல் கட்சித் தலைவராகவும், இதயத் தெய்வமாகவும், தமிழக முதலமைச்சராக வும் மாற்றியது.

எம்ஜிஆர் இறந்து 25 ஆண்டுகள் ஆன பிறகான தமிழக அரசியல் மற்றும் சமூகச் சூழல் மேலும் சிக்கல்களை அடைந்துள்ளன. இளைய தலைமுறை யினரிடம்கூடச் சாதிய உணர்வு மேலோங்கி யுள்ளதைப் பார்க்கிறோம். சாதி தாண்டிய திருமணங்களைச் சகித்துக்கொள்ளாமல் செய்யப்படும் கௌரவக் கொலைகள் அதிகரித்துள்ளன. தமிழகத்தில் முற்போக்குத் தன்மை கொண்ட அரசியல் தலைமைகளைப் பார்ப்பதே அரிதாகிவிட்டது.

இந்தச் சூழலிலும் எம்ஜிஆர் தமிழகமெங்கும் ஆட்டோ நிறுத்தங்களிலும், சாலை முனைகளிலும் டிசம்பர் 24 அன்றும், ஜனவரி 17ஆம் தேதியிலும் நினைவுகூரப்படுகிறார். அவரது ரசிகர்களுக்கு வயதாகிவிட்டதை அவர்களது சுருங்கிய முகங்களும், காய்ப்பேறிய கைகளும் காட்டுகின்றன.

எம்.ஜி.ஆர். பாடல் ஒலிக்கும் தெருவில் எம்ஜிஆரின் அரசாங்கம் நிகழ்வது போன்ற தோற்றத்தை எப்படியோ அந்த இடம் அடைந்துவிடுகிறது. பூ விற்கும் பெண்கள் முதல் வெள்ளை வேட்டியுடன் தொழிலாளர்களைப் பார்த்து அன்று உற்சாகமாகக் கையுயர்த்தி செல்லும் சிறு முதலாளி வரை எல்லாரும் கதாபாத்திரங்கள் ஆகிவிடுகிறார்கள். நல்ல முதலாளி, நல்ல தொழிலாளி என்ற உலகம் அந்தப் பாடல்களின் கீழே ஒவ்வொரு வருடமும் சிருஷ்டிக்கப்பட்டு விடுகிறது. ‘உலகம் பிறந்தது எனக்காக’ பாடலும் ‘உழைக்கும் மக்கள் யாவரும் ஒருவர் பெற்ற மக்களே’ பாடலும் ஒலிக்கும்போது, தமிழகம் முழுவதும் தெருவோரங்களில் இருக்கும் பாட்டாளிகளின் கைகள் ஒரே கையாக அன்று எழும்பும். ‘கண் போன போக்கிலே கால் போகலாமா, கால் போன போக்கிலே மனம் போகலாமா?’ என்ற பாடலின்போது ரசிகர்களின் கண்களில் கண்ணீர் வரும்.

எம்.ஜி.ஆர். உருவாக்கிய கற்பனை அரசாங்கத்தில் நீதி தவறுவது போலத் தோன்றினாலும் கடைசியில் ஜெயிக்கவே செய்யும். நம்பிக்கை சிறகடிக்கும். ‘உள்ளம் என்றொரு கோவிலிலே தெய்வம் வேண்டும் அன்பே வா...கண்கள் என்றொரு சோலையிலே தென்றல் வேண்டும் அன்பே வா...’

எம்ஜிஆரின் பாடல்களுக்குள்ளேயே நாளைக்கான நம்பிக்கையையும், மாற்றத்தையும், புரட்சியையும், நீதியையும் பாவித்து வளர்ந்த தலைமுறையினர் இன்னமும் வாழ்ந்துவருகின்றனர்.

= நன்றி : தி இந்து . — with Suppiah Pancharatnam.

Russellisf
17th January 2014, 02:18 PM
கலியுகத்தில் தெய்வ செயல் அபூர்வம் -ஆனால்.....
கலியுகம் கண்ட இனி காண முடியாத கலியுக புருஷன் நீங்கள்.........
நீங்கள் வாழ்ந்த காலத்தில் நாங்களும் வாழ்ந்தோம் என்ற
பெருமையை சுமந்து வாழும்
உங்களது கோடிக்கணக்கான பக்தர்களில் கடை நிலை
பக்தனாக நான் உங்களை வணங்குகின்றேன் தெய்வமே !!!!

Richardsof
17th January 2014, 02:42 PM
பெங்களுர் -காந்திநகர் சட்ட மன்ற தொகுதியில் இன்று காலை மக்கள் திலகத்தின் பிறந்த நாள் விழா சிறப்பாக நடந்தது . முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் திரு முனியப்பா அவர்கள் தலைமையில் இனிப்பும் ,நல திட்ட உதவிகளும் வழங்கப்பட்டது .
http://i44.tinypic.com/10wrxc0.jpg
தொகுதி முழுவதும் மக்கள் திலகத்தின் பிறந்த நாள் சார்பாக பல இடங்களில் பதாகைகள் -
படங்களுக்கு மாலையிட்டு பாடல்கள் ஒலி பரப்பி மகிழ்ந்தனர் .அன்னதானமும் வழங்கப்பட்டது .

பெங்களுர் , மைசூர் , ஷிமோகா , பத்ராவதி , கோலார் தங்கவயல் , முழுவதும் இன்று மக்கள் திலகத்தின் பிறந்த நாள் சிறப்பாக கொண்டாடப்பட்டது .
http://i39.tinypic.com/ogx7hv.jpg

Richardsof
17th January 2014, 02:48 PM
http://i41.tinypic.com/ae5m47.jpg

Richardsof
17th January 2014, 02:55 PM
பேராசிரியர் செல்வகுமார் அவர்கள் பதிவிட்டுள்ள மக்கள் திலகத்தின் 97 சாதனை துளிகள்

அருமை .

இனிய நண்பர் திரு லோகநாதன் அவர்களின் நிழற் படங்கள் - கட்டுரைகள் அருமை .

இனிய நண்பர் திரு சைலேஷ் அவர்களின் வீடியோ பதிவுகள் அருமை .

Richardsof
17th January 2014, 03:14 PM
எம்.ஜி.ஆர். இறந்து கிட்டத்தட்டக் கால் நூற்றாண்டு ஆகிவிட்டது. இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் அவரைப் பற்றிய செய்திகள் காற்றில் உலவிக்கொண்டேயிருக்கும். திரையுலகத்திலும் அரசியல் உலகத்திலும் எம்.ஜி.ஆரின் நினைவுகள் வற்றாத நதியாக இன்னும் ஓடிக்கொண்டிருப்பதைப்போல மருத்துவ உலகத்திலும் அவரது மாண்பைப் பேசிக்கொண்டேயிருக்கிறார்கள். அவர்களில் ஒருவர்தான் டாக்டர் மனோகரன். எம்.ஜி.ஆரைப் பற்றி உலகமே பேசிக் கொண்டிருக்க, அவர் பேசாத நாட்களில் அவருக்குப் பேச்சுப் பயிற்சி அளித்தவர் இவர். அமெரிக்காவில் சிகிச்சை பெற்றுச் சென்னை திரும்பியதிலிருந்து இறுதிக் காலம்வரை அவரோடு இருந்தவர். எம்.ஜி.ஆர். பற்றிய தன்னுடைய மறக்க முடியாத நினைவுகளை இங்கே பகிர்ந்துகொள்கிறார்.
http://i44.tinypic.com/15ectg4.jpg
நீங்கள் எப்படி எம்.ஜி.ஆருக்கு அறிமுகமானீர்கள்?

எம்.ஜி.ஆர். அமெரிக்காவில் சிகிச்சை பெற்று சென்னை திரும்பிய பிறகும்கூட அவரால் சரியாகப் பேச முடியவில்லை. அவருக்குப் பேச்சு பயிற்சி அளிக்க வேண்டும் என்று மருத்துவர்கள் கூறியிருந்தார்கள். அப்போதிருந்த ஹெல்த் மினிஸ்டர், ஹெல்த் செகரட்டரி, டி.எம்.இ. ஆகியோர், அரசு பொது மருத்துவமனையில் காது மூக்கு தொண்டை பிரிவில் பணியாற்றிக்கொண்டிருந்த என்னைத் தேர்வு செய்தார்கள். எம்.ஜி.ஆருக்குப் பேச்சுப் பயிற்சி அளிக்க வேண்டும் என்று என்னை அவர்கள் அழைத்தபோது நான் தயங்கினேன். ஏனென்றால், என் குடும்பம் பெரியது. நான் ஒருவன்தான் சம்பாதிப்பவன். காலையில் அரசு மருத்துவமனையில் பணியாற்றிவிட்டு மாலையில் தனியாகக் கிளினிக் வைத்திருந்தேன். அந்தத் தொழில் பாதிக்குமே என்பதுதான் என் தயக்கம்.

சரியான ஆள் நீதான் என்று என்னைக் கொண்டுபோய் எம்.ஜி.ஆர். முன் நிறுத்திவிட்டார்கள். ஒருமுறை என்னை அளவெடுப்பது போலப் பார்த்தார். எவ்வளவு வேணும் என்று சைகையிலேயே கேட்டார். நான், ‘ஐயா... நான் அரசு ஊழியன். அங்குக் கொடுக்கிற சம்பளமே போதும்’ என்றேன். தினமும் காலை ஆறு மணிக்கெல்லாம் நான் ராமாவரம் தோட்டத்திற்குப் போய்விட வேண்டும். இரவு பத்து மணிவரை அவரோடு இருக்க வேண்டும். இதுதான் என்னுடைய பணி. காலையில் நாலு மணிக்கே எழுந்து என்னைத் தயார்படுத்திக்கொண்டால்தான் ஆறு மணிக்காவது அங்குப் போக முடியும். எனக்கென ஒரு அரசு காரையும் டிரைவரையும் தனியாகவே தந்துவிட்டார்கள்.

ஆறு மணிக்கெல்லாம் அவரும் தயாராக இருப்பார். ஒன்பது மணி வரையிலும் அவருக்கு ஒவ்வொரு வார்த்தையாகச் சொல்லிக் கொடுப்பேன். பயிற்சியை அசுர வேகத்தில் பழகிக்கொண்டார். சில வார்த்தைகளைச் சொல்ல முடியா மல் கஷ்டப்படும்போதுகூடப் பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்று விட்ட தில்லை. சிரமப்பட்டுப் பேசிவிடுவார். ஒன்பது மணிக்குப் பிறகு அவர் காரிலேயே நானும் கோட்டைக்குச் செல்வேன். முன் சீட்டில் நான் அமர்ந்துகொள்ள அவர் பின் சீட்டில் அமர்வார்.

கோட்டையில் அவரது அறையிலேயே எனக்கும் ஒரு சேர் போடப்பட்டிருக்கும். அவர் அருகிலேயே அமர்ந்திருப்பேன். அவர் பேசுவது புரியாவிட்டால் அதை நான் விளக்க வேண்டியிருந்தது.

அவருடன் இருந்து சேவை செய்த அந்தச் சில வாரங்களில் என்னுடைய செயல்பாடுகள் பற்றியும், நான் எந்த விஷயத்தையும் வெளியில் பகிர்ந்து கொள்வதில்லை என்கிற தகவலும் அவருக்குப் போயிருக்க வேண்டும். என்னை ஒரு மகன் போலப் பார்க்க ஆரம்பித்தார். சில விவாதங்களின்போது நான் சொல்கிற கருத்தை ஏற்றுக்கொள்கிற அளவுக்கு அவருடைய மனதில் எனக்கும் இடம் இருந்தது.

மறக்க முடியாத ஏதேனும் ஒரு சம்பவம்?

ஒருமுறை கோவைக்குச் சென்றிருந் தோம். கிட்டத்தட்ட மூன்று நாட்கள் அங்கு தங்கியிருந்தோம். விமானத்தில்தான் சென்றோம். எனக்கு அது முதல் விமானப் பயணம். சற்றே அச்சத்தோடு ஏறினேன். பெரிய பெரிய அமைச்சர்கள் எல்லாரும் அந்தப் பிளைட்டில் இருக்க, என்னை அவர் அருகில் உட்கார வைத்துக் கொண்டார். சீட் பெல்ட்டை அவரே மாட்டிவிட்டார். ஜூஸ் வந்தது. ஒரு கிளாசை அவரே தன் கையால் எடுத்து என்னிடம் கொடுத்து ‘குடிங்க’ என்றதை என்னால் இப்போதும் மறக்க முடியாது. பக்கத்தில்தான் அவர் பிறந்த ஊரான பாலக்காடும் இருந்தது. மூன்றாவது நாள் அங்குக் கிளம்புகிற நேரம். எனக்குத் திடீரெனக் காய்ச்சல் வந்துவிட்டது. நான் படுத்துவிட்டேன்.

நான் வராததைக் கவனித்த எம்.ஜி.ஆர், ‘மனோகரன் வரலயா?’ என்றாராம். அவர்கள் எனக்கு உடம்பு சரியில்லாத தகவலைச் சொல்லியிருக்கிறார்கள். பாலக்காட்டிலிருந்து திரும்பியதும் என்னைப் பார்க்க வந்துவிட்டார். நான் அவர் வருவது தெரியாமல் படுத்திருந்தேன். திடீரென்று யாரோ பக்கத்தில் நிற்கிற உணர்வு. திரும்பிப் பார்ப்பதற்குள் அவர் என் கன்னத்தில் கை வைத்து, ‘ஆமாம்.. ரொம்ப காய்ச்சலா இருக்கே’ என்று கூறியவர், ‘உடம்ப பார்த்துக்கங்க’ என்று கூறிவிட்டுப் பக்கத்தில் அவருக்காக நியமிக்கப்பட்டிருந்த மருத்துவக் குழுவிடம், ‘மனோகரனை கவனிச்சுக்கங்க’ என்று கூறிவிட்டுக் கிளம்பினார். நான் உருகிப் போனேன்.

அப்போது அவர் பொதுக்கூட்டங்களில் பேசிவந்தாரே?

ஆமாம்... அந்தப் பேச்சை நான்தான் தயார் செய்வேன். எந்தெந்த வார்த்தைகளை எளிதாக அவரால் பேச முடியுமோ, அதை மட்டுமே வைத்துப் பேச்சைத் தயார் செய்வது என் வேலை. அமெரிக்காவிலிருந்து வந்த பின்பு எம்.ஜி.ஆர் கலந்துகொண்ட முதல் மீட்டிங் ஜேப்பியார் அவர்கள் ஏற்பாடு செய்திருந்த மீட்டிங்தான். நான் எழுதி வைத்திருந்த பேச்சை அவர் பலமுறை பயிற்சி எடுத்துக்கொண்டார். மிகச் சிறப்பாகப் பேசியும் முடித்தார். மதுரையில் நடந்த எம்.ஜி.ஆர் மன்ற விழாவிலும் நிறைவாகப் பேசினார். அந்த விழாவில்தான் இப்போதைய முதல்வரம்மாவுக்கு செங்கோல் பரிசளித்து, தனது வாரிசு அவர்தான் என்பதையும் உணர்த்தினார் எம்.ஜி.ஆர்.

அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த செய்தி ஏதாவது?

அதைப்பற்றி நான் அதிகம் சொல்லக்கூடாது. பட்... சில விஷயங்களை பகிர்ந்துக்கலாம். 87ஆம் வருஷம் மீண்டும் நியூயார்க் போயிருந்தார் எம்.ஜி.ஆர். மறு சோதனைக்கான ட்ரிப் அது. வழக்கம்போல நான், ஹெல்த் செகரட்ரின்னு ஒரு மருத்துவக் குழுவே கிளம்பினோம். அங்கிருந்தபடியே இங்குள்ள அரசியல் மற்றும் சட்டம் ஒழுங்கையும் கவனிச்சார் எம்.ஜி.ஆர். அப்போதான் இலங்கை தொடர்பான சில முடிவுகளை அவர் எடுத்திருந்தார். அதுமட்டும் அவர் நினைத்த மாதிரி அமைஞ்சிருந்தா பிரபாகரன் பற்றி நாம் இப்போ கேள்விப்படுகிற விஷயமும், தற்போது நடந்த துயரச் சம்பவங்களும் நடக்காமல் போயிருக்கும். ம்... என்ன செய்வது?

ainefal
17th January 2014, 03:18 PM
http://www.youtube.com/watch?v=j5SWEPKj58o#t=16

Richardsof
17th January 2014, 03:20 PM
http://i41.tinypic.com/14jm53t.jpg

ainefal
17th January 2014, 03:24 PM
http://www.youtube.com/watch?v=YB4CgbROLo4

ainefal
17th January 2014, 03:26 PM
http://www.youtube.com/watch?v=tjxsK1NiyWQ#t=70

ainefal
17th January 2014, 03:27 PM
http://i44.tinypic.com/ifdbgl.jpg

xanorped
17th January 2014, 03:33 PM
M.G.Chakrapani's Son M.G.C.Prabhakar's Interview on Thanthi TV at 4.30pm

Richardsof
17th January 2014, 03:36 PM
http://i1273.photobucket.com/albums/y412/esvee6/cc428fc5-54fb-4e3c-a3f6-9124b932fc17_zpsfde2025a.jpg (http://s1273.photobucket.com/user/esvee6/media/cc428fc5-54fb-4e3c-a3f6-9124b932fc17_zpsfde2025a.jpg.html)

Russellisf
17th January 2014, 04:08 PM
ஒளி விளக்கு படத்தில் வரும் " நாங்க புதுசா கட்டிக்கிட்ட ஜோடி தானுங்க " பாட்டு .... மக்கள் திலகமும் , புரட்சித் தலைவியும் அந்த பாட்டிற்கு ஆடியிருப்பார்கள் , அந்த பாட்டில் வரும் குறவன் குறத்தி வேடத்திற்கு , அந்த இனத்தை சேர்ந்த மக்களின் நடவடிக்கைகள் எப்படியிருக்கும் என்று தெரிந்துக் கொள்வதற்காக , அந்த இனத்தை சேர்ந்த மக்கள் சிலரை அழைத்து வந்து , ராமாவரம் தோட்டத்தில் 15 நாட்கள் தங்க வைத்தார் மக்கள் திலகம் ...
அத்தனை நாட்களும் அவர்களுக்கு விருந்து தான் , அவர்கள் 15 நாட்கள் தங்கிவிட்டு கிளம்பிய பொழுது , அவர்களுக்கு புதிய உடைகளும் , பரிசுப் பொருட்களும் , பணமும் என்று அசத்திவிட்டார் மக்கள் திலகம் ...
இன்று அவரது பிறந்த நாளில் ... அந்த மகிழ்சிகரமான நினைவுகள்- courtesy facebook

Russellisf
17th January 2014, 04:09 PM
மக்கள் திலகமும் வைஜெயந்தி மாலாவும் நடித்த திரைப் படம் பாக்தாத் திருடன் , அதை இயக்கியவர் டி. பி. சுந்தரம் , அந்தப் படத்தை அவரே தயாரிக்கவும் செய்தார் . இவர் பல நடிகர்களை வைத்து பலப் படங்களை இயக்கியவர் ...
பின்னாட்களில் பணக் கஷ்டத்தில் வாடினார் , எனினும் , அவரது மகள் திருமணத்திற்காக ஒவ்வொரு நடிகரிடமும் சென்று கொஞ்சம் கொஞ்சமாக பணம் கேட்டு பெற்று வந்தார் , மக்கள் திலகதிடமும் வந்தார் , அப்பொழுது மக்கள் திலகம் , " நல்ல நேரம் " படப் பிடிப்பில் இருந்தார் ....
படப்பிட்டிப்பு இடைவேளையில் டி .பி . சுந்தரத்தை சந்தித்தார் , மகள் திருமணத்திற்காக எல்லொரிடமும்ச் என்று பணம் பெற்றுக் கொண்டிருப்பதை சொன்னார் சுந்தரம் ...
இதைக் கேட்டதும் , கோவப் பட்ட மக்கள் திலகம் , " எதுக்கு இப்படி ஒவ்வொருத்தரிடமும் சென்று கையேந்தி நிக்கறீங்க ? உங்க மக கல்யாண செலவு மொத்தத்தையும் நானே ஏத்துக்கறேன் " என்று சொன்னார் ...
மேலும் , அத்தோடு நிறுத்திக் கொள்ளாமல் , திருமணத்தையும் தானே முன் நின்று நடத்தியும் வைத்தார் ....
மக்கள் திலகத்தின் பிறந்த நாள் இன்று - மகிழ்ச்சியான நினைவுகள்- courtesy face book

siqutacelufuw
17th January 2014, 04:17 PM
CONGRATULATIONS Mr. SAILESH on your crossing 800 posts on this Auspicious Day (The day of our Thalaivar's Birth Day). Wishing you for many more valuable posts.

http://i43.tinypic.com/2q081t2.jpg

Ever Yours : Selvakumar

Onguga Alayam Kanda Aandavan MGR Pugazh !

Endrum M.G.R.
Engal Iraivan

Richardsof
17th January 2014, 04:26 PM
http://i40.tinypic.com/288p0qw.png

Stynagt
17th January 2014, 04:31 PM
இன்று புரட்சித்தலைவரின் பிறந்த நாள் புதுச்சேரியில் அரசு விழாவாக கொண்டாடப்பட்டது. இதய தெய்வத்தின் திருவுருவ சிலைக்கு மாண்புமிகு முதலமைச்சர் திரு. ந. ரங்கசாமி, சட்டப்பேரவைத்தலைவர் திரு. சபாபதி, அமைச்சர் பெருமக்கள், சட்ட மன்ற உறுப்பினர்கள், பல்வேறு அரசியல் அமைப்புகள் மற்றும் பொதுநல அமைப்புகள் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

http://i39.tinypic.com/i2qdd4.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

siqutacelufuw
17th January 2014, 05:53 PM
புரட்சித் தலைவர் பிறந்த இந்த புனித நாளில் பிறந்த அவரது தீவிர ரசிகரும், அனைத்துலக எம்.ஜி.ஆர். பொது நல சங்க பொருளாளரும், சென்னை அண்ணா சாலை அஞ்சல் அலுவலகத்தில் பணிபுரியும் அன்பு சகோதரர் திரு. கே. பாபு அவர்களை, அனைத்துலக எம். ஜி. ஆர். பொது நல சங்கம் சார்பிலும், இத்திரியின் அன்பர்கள் சார்பிலும் நல்வாழ்த்துக்கள் !

http://i39.tinypic.com/2e4zsy8.jpg

அன்பன் : சௌ.செல்வகுமார்

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன் .

joe
17th January 2014, 06:00 PM
மக்கள் திலகம் பிறந்தநாள் வாழ்த்துகள்

siqutacelufuw
17th January 2014, 06:01 PM
மக்கள் திலகமும் வைஜெயந்தி மாலாவும் நடித்த திரைப் படம் பாக்தாத் திருடன் , அதை இயக்கியவர் டி. பி. சுந்தரம் , அந்தப் படத்தை அவரே தயாரிக்கவும் செய்தார் . இவர் பல நடிகர்களை வைத்து பலப் படங்களை இயக்கியவர் ...
பின்னாட்களில் பணக் கஷ்டத்தில் வாடினார் , எனினும் , அவரது மகள் திருமணத்திற்காக ஒவ்வொரு நடிகரிடமும் சென்று கொஞ்சம் கொஞ்சமாக பணம் கேட்டு பெற்று வந்தார் , மக்கள் திலகதிடமும் வந்தார் , அப்பொழுது மக்கள் திலகம் , " நல்ல நேரம் " படப் பிடிப்பில் இருந்தார் ....
படப்பிட்டிப்பு இடைவேளையில் டி .பி . சுந்தரத்தை சந்தித்தார் , மகள் திருமணத்திற்காக எல்லொரிடமும்ச் என்று பணம் பெற்றுக் கொண்டிருப்பதை சொன்னார் சுந்தரம் ...
இதைக் கேட்டதும் , கோவப் பட்ட மக்கள் திலகம் , " எதுக்கு இப்படி ஒவ்வொருத்தரிடமும் சென்று கையேந்தி நிக்கறீங்க ? உங்க மக கல்யாண செலவு மொத்தத்தையும் நானே ஏத்துக்கறேன் " என்று சொன்னார் ...
மேலும் , அத்தோடு நிறுத்திக் கொள்ளாமல் , திருமணத்தையும் தானே முன் நின்று நடத்தியும் வைத்தார் ....
மக்கள் திலகத்தின் பிறந்த நாள் இன்று - மகிழ்ச்சியான நினைவுகள்- courtesy face book




நெஞ்சை நெகிழ வைக்கும் செய்தியினை பதிவிட்ட அன்பு சகோதரர் திரு. யூகேஷ் பாபு அவர்களுக்கு எனது பணிவான நன்றி !

அன்பன் : சௌ.செல்வகுமார்

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !

என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன் .

Stynagt
17th January 2014, 07:08 PM
விழா மேடையில் இறுதி காட்சி. இத்துடன் "ஆயிரத்தில் ஒருவன்" ட்ரைலர் மற்றும் டிஜிடல் இசைத்தட்டு வெளியீட்டு விழா இனிதே நிறைவுற்றது.

http://i40.tinypic.com/dw5coy.jpg

நம் ஆண்டவன் தோன்றிய ஆயிரத்தில் ஒருவன் டிரைலர் விழாவை கண் முன் நிறுத்திய திரு. லோகநாதன் சார் அவர்களுக்கு கோடி நன்றி. தங்களின் பதிவுகளின் வேகம் எங்களுக்கு உத்வேகத்தையும், திரிக்கு உற்சாகத்தையும் தருகிறது. தங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்.

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்.

Richardsof
17th January 2014, 07:11 PM
இன்று பிறந்த நாள் கொண்டாடும் இனிய நண்பர் திரு பாபு அவர்களுக்கு மக்கள் திலகம் திரியின் சார்பாக வாழ்த்துகிறோம் .

மக்கள் திலகம் அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்த இனிய நண்பர் திரு ஜோ
அவர்களுக்கு நன்றி .

Stynagt
17th January 2014, 07:11 PM
http://i43.tinypic.com/xlw32b.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்.

Stynagt
17th January 2014, 07:18 PM
CONGRATULATIONS Mr. SAILESH on your crossing 800 posts on this Auspicious Day (The day of our Thalaivar's Birth Day). Wishing you for many more valuable posts.

http://i43.tinypic.com/2q081t2.jpg

Ever Yours : Selvakumar

Onguga Alayam Kanda Aandavan MGR Pugazh !

Endrum M.G.R.
Engal Iraivan

அசுர வேகத்தில் 800 முத்தான பதிவுகள் தந்த திரு. சைலேஷ் சார் அவர்களுக்கு தலைவரின் பிறந்த நாளில் என் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

நம் இதய தெய்வத்தின் திரையுலக சாதனைகளை அனைவரும் வியக்கும் வண்ணம் அழகாகவும், கோர்வையாகவும், புள்ளி விவரத்துடனும் பதிவிட்ட பேராசிரியரின் சீரிய பணி எங்களை மெய்சிலிர்க்க வைக்கிறது. அரசியல் சாதனைகளைப் பட்டியலிட்ட தாங்கள், உங்கள் ஒருவரால்தான் இப்பணியை செய்ய முடியும் என்று மீண்டும் மீண்டும் நிரூபிக்கிறீர்கள். தங்களுக்கு எங்களின் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்.

Stynagt
17th January 2014, 07:22 PM
http://i42.tinypic.com/1054bhl.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்.

Richardsof
17th January 2014, 07:22 PM
http://www.thanthitv.com/Video/VideoListing.aspx?channelID=b3a5af7dd24647948fc844 539f3b5d61

thanthi tv- makkal thilagam special -97