PDA

View Full Version : மனதை மயக்கும் மதுர கானங்கள்



Pages : 1 2 3 4 5 6 7 8 9 [10] 11 12 13 14 15 16

chinnakkannan
23rd July 2014, 09:02 PM
அதுக்காக வாசு சார்..எல்.வி யோட லேட்டஸ்ட் பிக்சர் போட்டுடாதீங்க..சின்ன வயது..தாங்காது.:).(அந்தம்மா அமெரிககால ஃபினான்ஸ் மேனேஜரா இருக்கறதா கேள்வி..

ராஜேஷ் சார்,

நீங்களுமா?:)

vasudevan31355
23rd July 2014, 09:04 PM
எப்படி மறந்தேன்..

சி.க.சார்

முன்னம் பக்கம் பாருங்கள். நிறைய கீதாஞ்சலி பற்றி போட்டிருக்கு.

chinnakkannan
23rd July 2014, 09:05 PM
எந்தப் பக்கம்..ம்ம் நாளைக்குத் தான் விட்ட நூறு பக்கம் படிக்கணும்..ம்ம்

vasudevan31355
23rd July 2014, 09:07 PM
/அதுக்காக வாசு சார்..எல்.வி யோட லேட்டஸ்ட் பிக்சர் போட்டுடாதீங்க..சின்ன வயது..தாங்காது..(அந்தம்மா அமெரிககால ஃபினான்ஸ் மேனேஜரா இருக்கறதா கேள்வி../

சி.க.சார்,

விஜி என்றால் அது விஜயலலிதா. 'உனக்கும் எனக்கும்' அவர்தானே பாடுகிறார். விஜயலஷ்மி இல்லையே.

vasudevan31355
23rd July 2014, 09:10 PM
/எல்.வி யோட லேட்டஸ்ட் பிக்சர் போட்டுடாதீங்க/

சி.க.சார்,

o.k?

http://www.thehindu.com/multimedia/dynamic/00113/01KIMP_LAILA_MAJNU__113008f.jpg

vasudevan31355
23rd July 2014, 09:12 PM
http://antrukandamugam.files.wordpress.com/2013/08/l-vijayalakshmi-neethipathi-1955-re.jpg

vasudevan31355
23rd July 2014, 09:14 PM
http://i1.ytimg.com/vi/xX6CiPzFH3I/maxresdefault.jpg

chinnakkannan
23rd July 2014, 09:25 PM
oh anthap paattu video ippO paarkalai.. athaan..but ...thanks for the pictures of L.V..:) பொம்மைல அவங்க கொஞ்சம் இன்னும் உயிரோட்ட்மா இருப்பாங்க..காரணம் இளமை..

vasudevan31355
23rd July 2014, 09:29 PM
ராஜேஷ் சார்,

உங்களுக்காக ஒரு பாட்டு.

சார்லி சாப்ளினின் 'சிட்டி லைட்ஸ்' தழுவி வந்த 'ராஜி என் கண்மணி' படத்தில்

பாலசரஸ்வதி தேவியின் காந்தர்வக் குரலில், பேஸ் வாய்ஸில்,

'மல்லிகைப் பூ ஜாதி ரோஜா
முல்லைப் பூ வேணுமா
தொட்டாலும் கைமணக்கும் பூவோ
பட்டான ரோஜாப் பூவோ கதம்பம் வேணுமா'

'ரோஜா மலர் வேணுமா
நல்ல ஜாதி மலர் வேணுமா'

ஸ்ரீ ரஞ்சனியின் அந்தக் குருட்டுக் கண்கள் (சான்ஸே இல்லை சார்)

ஊன் உயிரை உருக்கும் டி .ஆர். ராமச்சந்திரனின் அந்த பரிதாப இரக்கப் பார்வை.

ராஜேஷ் சார்,

ஏழேழு ஜென்மத்திற்கும் மறக்க இயலாத பாடல். இப்படியெல்லாம் பாடல்கள் போட முடியுமா? இப்படியெல்லாம் பாட முடியுமா? டிவிடியில் கூட வாயசைப்பு பொருந்தவில்லை.


http://www.youtube.com/watch?v=Q7UH0rJu-fQ&feature=player_detailpage

rajeshkrv
23rd July 2014, 09:36 PM
ராஜேஷ் சார்

நேற்று சிரிக்க வைத்துவிட்டு இன்று இசையரசியின் குரலால் அழச் செய்து விட்டீர்களே! balance?
.

ஆம் ஆசை மனதில் கோட்டை கட்டியை போடாததற்கு காரணம் மிகச்சிறந்த பாடல் சோகம் தான் ஆனாலும் மன அழுத்தம்
உனக்கும் எனக்கும் எப்படி பாடியிருக்கிறார்
இதை எப்படி பாடியிருக்கிறார். சத கோடி பிரணாமம் அம்மா உங்களுக்கு.

பாட்டு பாட வாயெடுத்தேன் ஆம் சார். அந்த படத்தின் மிகச்சிறந்த பாடல் இது.

சி.கா
கீதாஞ்சலி மிகச்சிறந்த நடன கலைஞர்
என்.டி.ஆர் தனது முதல் டைரக்*ஷனான “சீதா ராம கல்யாணம்” திரையில் சீதையாக அறிமுகப்படுத்தினார்
ராமர்(ஹரிநாத் - தமிழில் இவர் பெயர் ராஜா அன்னையில் நடித்தாரே அவரே தான்)

நமது இதயகமலத்தின் தெலுங்கு வடிவம் (அது தான் ஒரிஜினல்) “இல்லாளு” வில் நாயகி எல்.வி.பிரசாத் இயக்கம்
பின்னர் பதம்னாபத்துடன் காமெடி செய்தாலும் செய்தார் காமெடி நடிகையாக்கிவிட்டனர்.

தெலுங்கு நடிகர் ராமகிருஷ்ணாவை மணந்து நடிப்பை விட்டார் பின்னர் அவரது மறைவிற்கு பின் மீண்டும் நடிக்க வந்தார்.

இசையரசியின் குரலில்


https://www.youtube.com/watch?v=cgroe1z4cmI

பின்னர் தமிழில் தெய்வத்தின் தெய்வத்தில் அறிமுகமாகி பல படங்களில் நடித்தார்


https://www.youtube.com/watch?v=2nxpUnhv7Bs

rajeshkrv
23rd July 2014, 09:41 PM
ராஜேஷ் சார்,

உங்களுக்காக ஒரு பாட்டு.

சார்லி சாப்ளினின் 'சிட்டி லைட்ஸ்' தழுவி வந்த 'ராஜி என் கண்மணி' படத்தில்

ஆஹா என்ன அருமையான பாடல். ஸ்ரீரஞ்சனி ஜூனியர் இவர். பாவம் அழுவாச்சி வேடங்களே கொடுத்து இவரை காலமெல்லாம் அழ வைத்து விட்டது இந்த சினிமா உலகம்

பாலசரஸ்வதி ஆஹா .. வருடும் குரல் .. மென்மையான தாலாட்டு பாடல்களுக்கே உரிய குரல்.

பாடலுக்கு கோடி நன்றிகள் வாசு சார்.

vasudevan31355
23rd July 2014, 10:01 PM
அரிய தகவல்கள் ராஜேஷ் சார்.

ஹரிநாத் என்ற ராஜா 'எங்கிருந்தோ வந்தாள்' படத்தின் வில்லன்.

கீதாஞ்சலி 'பணம் படைத்தவனி'ல் நாகேஷுடன் ஆட்டம். ('கண் போன போக்கிலே' இடையிசையில்)

என் அண்ணனில் 'சோ' வுக்கு ஜோடி.

இரண்டும் காமெடி.

கீதாஞ்சலி கணவர் நடிகர் ராமகிருஷ்ணா தமிழிலும் ஒரு சில படங்களில் நடித்தார்.

மாடர்ன் தியேட்டர்ஸ் 'வல்லவன் வருகிறான்' ஹீரோ இவர்.

மதர் இந்தியா 'புண்ணியபூமி' யான போது நடிகர் திலகத்தின் அண்ணன் வேடம் இவருக்கு.

'அன்னப் பறவை'.படத்திலும் லதாவுடன் நடித்திருந்தார். ('பொன்னென்பதோ... பூவென்பதோ')

ராஜேஷ் சார்! ஒரு சந்தேகம்.

1976-இல் 'நா பேரே பகவான்' என்ற தெலுங்குப் படத்தில் ராமகிருஷ்ணா நடித்திருந்தார். (தமிழில் அது 'பைட்டர் பகவான்' என்று மொழி மாற்றம் செய்யப்பட்டு வந்தது) அதுதான் இந்தியில் 'தர்மா' என்று ரீமேக் செய்யப்பட்டதா?

rajeshkrv
23rd July 2014, 10:28 PM
ராஜேஷ் சார்! ஒரு சந்தேகம்.

1976-இல் 'நா பேரே பகவான்' என்ற தெலுங்குப் படத்தில் ராமகிருஷ்ணா நடித்திருந்தார். (தமிழில் அது 'பைட்டர் பகவான்' என்று மொழி மாற்றம் செய்யப்பட்டு வந்தது) அதுதான் இந்தியில் 'தர்மா' என்று ரீமேக் செய்யப்பட்டதா?

ஆம் அப்ப்டித்தான் தோன்றுகிறது.

raaz ki baat


https://www.youtube.com/watch?v=UHpIkRhwzgk

medalo cherina chilakkamma


https://www.youtube.com/watch?v=ngWWuFYolwk

Gopal.s
24th July 2014, 02:43 AM
Kalpana, B.S. Ravichandran (later Ravichandran), Nagesh, Manorama, A. Karunanidhi, ‘Pakoda’ Kadhar, V.K. Ramasami, V.S. Raghavan, A. Veerappan, ‘Kalla Part’ Natarajan, K.S. Angamuthu, O.A.K Thevar and Karikol Raju

The Hindu By Randor Guy

‘Road’ movies are popular in the West, but rarely are such films made in India. It is a genre in which the main character or characters leave home to travel from place to place. They usually leave home to escape their current lives and meet with many adventures that have a profound impact not only on their lives but also on those they come across during their travel.

Popular road movies include Easy Rider, which created a sensation in America and elsewhere, especially among the youth of the Beat or Flower Power era, and Bonnie and Clyde, a story of criminals robbing people and having fun in the process. Both these films created history at many levels and also fared well in India. Another such film, If It’s Tuesday It must be Belgium enjoyed a 100-day run in Madras city.

An unusual film in this genre (script: Usilai Somanathan), Madras To Pondicherry was made in Tamil in the Sixties by the successful multilingual filmmaker, producer and studio owner A. Bhim Singh who created many classics in Tamil and Hindi.

This film was his production shot at Venkateswara Cinetone, the name he gave the historic Newtone Studios in Kilpauk, Madras, which he took on lease for a period. Sadly, the historic studio has vanished and the famed Rajaji School run by Bharathiya Vidhya Bhavan functions today on the site.

The film was directed by Thirumalai-Mahalingam, a talented duo brought into the limelight by Bhim Singh. They made quite a few films and this was one of them which proved successful.

In this film, a young woman (top Kannada movie star Kalpana who acted in a few Tamil films) leaves home because of her interest in a movie career which is kindled by a group of crooks. One of them shoots a member of his gang which she witnesses. To escape them, she jumps onto a running bus going from Madras to Pondicherry and then the fun starts.

The gangsters engage a man who boards the bus the young woman is in to eliminate her. However, a young man also gets in (Ravichandran, credited in this film as ‘B.S. Ravichandran’, his original name being B.S. Raman.) During his heyday, Ravichandran was a top star ranking only next to Sivaji Ganesan, MGR and Gemini Ganesan. Handsome, he played the hero in many movies with success and this was one of them.

He too travels on the bus with his pals and realises that the young woman is in trouble. He takes up the task of saving her and in the process falls in love with her. In the end, it turns out that he is her prospective bridegroom to avoid whom she leaves home!

There are many subplots involving interesting characters who travel on the same bus — the wisecracking conductor (Nagesh) and driver (Karunanidhi), a Brahmin couple (Veerappan and Manorama) with a thumb sucking, fat son crazy about ‘pakoda’ (Khader). His role attracted so much attention that he came to be known as ‘Pakoda’ Khader. He went on to act in quite a few films.

The film also had tuneful music (T.K. Ramamurthi), and a song filmed on Ravichandran (sung by T.M. Soundararajan) in the running bus with his friends playing Western instruments became popular (lyrics: Alangudi Somu, Panchu Arunachalam, Thanjai Vaanan and Namakkal Varadarajan).

The film was a success and was remade in Hindi by comedian Mehmood as Bombay To Goa. Mehmood was a great admirer of Nagesh and played many of his roles in the Hindi versions and this is one such. The lead role was performed by Amitabh Bachchan in one of his early roles and it fetched him name and fame.

(Not many are aware that Rajiv Gandhi was offered this role by Mehmood, but for many a reason he turned it down.) Veerappan, who plays the Brahmin, was a popular comedy writer and wrote comedy dialogues for many comedians such as ‘Gounda’ Mani and Senthil. Manorama, as the Brahmin woman, impresses in her inimitable style. Angamuthu also raises laughter…

Nagesh with his brand of comedy impresses a lot and so does the sadly underrated comedian Karunanidhi.

A road movie with a religious theme and background was later made by A.P. Nagarajan as Thirumalai Thenkumari which also fared well.

Remembered for the interesting storyline, subplots that raised laughs, pleasing music and fine portrayals by Nagesh, Manorama, Kalpana, Ravichandran and ‘Pakoda’ Khader.

மெட்ராஸ் டு பாண்டிச்சேரி என்னை ரவியை நோக்கி ஈர்த்த ஆரம்ப கால படங்களில் முக்கியமான ஒன்று.(மற்றொன்று குமரி பெண்)

படு வித்யாசமான ஜாலி படம். ரவி அலம்பல் .இந்த படம் ஹிந்தியில் எனக்கு ஏமாற்றமே.(ஒரு பாடல் தவிர)

இதில் இந்த simple duet song அவ்வளவு பிடிக்கும். டி.கே.ராமமுர்த்தி இசையில். படமாக்கம் நன்றாக இருக்கும். ரவியின் கொள்ளை அழகை விவரிக்க வேண்டாம்.பார்த்தாலே தெரியும்.மிதமான நடனம் ,ஸ்டைல் இல் அசத்துவார்.(சிவாஜி சாயல்) .கல்பனா petite &sleek .அன்றைய கதாயகியர் மாதிரி voluptuous ரகமல்ல. ரவியோடு chemistry பாந்தமாக வந்திருக்கும் . ரவியின் டூயட் பாடல்கள் என்றுமே அழகாக ,முகம் சுளிக்காத படி இருக்கும்.

https://www.youtube.com/watch?v=MCoeS9mQtQU

Gopal.s
24th July 2014, 03:24 AM
1968 இல் ரொம்ப பேச படாத ரவியின் படம் சத்தியம் தவறாதே.
ஆனால் இந்த படத்தில் ரவியின் performance பிரமாதம்.
இந்த படம் பெரிதும் பேச பட்டது இசையமைப்பு. படு வித்யாசமாக சி.என்.பாண்டுரங்கன் இசையமைத்திருந்தார்.முக்கியமான இரண்டு பாடல்கள் எதுடா வாழ்க்கை (பீ.பீ.ஸ்ரீநிவாஸ்), முத்து குளிப்பவரே (டி.எம்.எஸ்,பீ.சுசிலா).

இந்த பாடலை பார்த்து மகிழுங்கள். எவ்வளவு அழாக ரவி-விஜய நிர்மலா ஜோடி. ரவிக்கு எந்த நடிகையுடனும் chemistry பிரமாதமாய் அமையும். பாரதி,காஞ்சனா,கலை செல்வி முதல் இறுதியில் சுகம் சுகம் லதா, நீயா தீபா வரை தொடர்ந்தது.

http://www.youtube.com/watch?v=IKFr30tply4

rajeshkrv
24th July 2014, 03:56 AM
ரவிக்கு எந்த நடிகையுடனும் chemistry பிரமாதமாய் அமையும். பாரதி,காஞ்சனா,கலை செல்வி முதல் இறுதியில் சுகம் சுகம் லதா, நீயா தீபா வரை தொடர்ந்தது.



except Sowkar in kaaviyathalaivi

madhu
24th July 2014, 04:03 AM
தமிழில் மாயமணி என்ற பெயரில் வெளிவந்த Parasmani ஹிந்திப் படத்தின் ஹீரோயின் கீதாஞ்சலிதானே ?

"ஒன்றில் ஒன்று உள்ளம் ஒன்றிய பின் உன் உயிர்க்குயிரானேன்" என்ற பி.பி.எஸ்.,பி.எஸ் பாடலில் ஒரு
முகபாவம் காட்டாத ஹீரோ மகிபாலுடன் ஆடியிருப்பாரே !

http://youtu.be/vCGrObFu9QA

சிக்கா... பத்து நாள் லூட்டி ஆரம்பமா ?

Richardsof
24th July 2014, 05:04 AM
வாசு சார்

எல்.வி நடித்த பாடல் காட்சிகள் பிரமாதம் . ஆடலுடன் பாடலை கேட்டு ...பாடலையும் , பாலாற்றில் ....

பாடலை யும் மறக்க முடியுமா ?

http://youtu.be/VDjawUcFE2Q

rajeshkrv
24th July 2014, 05:14 AM
கோபால் சார், ஆம் மாயமணி கீதாஞ்சலி தான்.

கீதாஞ்சலி ஜெயா டி.வியின் திரும்பி பார்க்கிறேன் பேட்டி யூட்யுபில் காணவில்லை

இதோ அவரது தெலுங்கு பேட்டி.. என்றுமே நகைச்சுவையுடனும் சிரிப்புடனும்


http://www.youtube.com/watch?v=fuQ58jdi7Qs

vasudevan31355
24th July 2014, 06:58 AM
மது சார்,

அரிய 'மாயமணி' திரைப்பாடலுக்கு நன்றி! நன்றி!

இந்தியிலிருந்து இறக்குமதி ஆனாலும் டியூன் இனிமை. கீதாஞ்சலி அதைவிட இனிமை.

rajeshkrv
24th July 2014, 07:13 AM
கோபால் சார்
மெட்ராஸ் டூ பாண்டிச்சேரி பற்றிய அலசல் தூள்

ரவி எனக்கு மிகவும் பிடித்த ஹீரோ .. மெட்ராஸ் டூ பாண்டிச்சேரி, நாலும் தெரிந்தவன்,குமரிப்பெண்,எதிரிகள் ஜாக்கிரதை,அதே கண்கள் என எல்லாமே தூள்
அந்த வசீகர முகம் என்றுமோ பளிச் பளிச்

ரவிக்கு மிகவும் பொருத்தமான ஜோடி பாரதி மற்றும் நிர்மலா

rajeshkrv
24th July 2014, 07:15 AM
இதோ மாயமணியில் இன்னொரு அருமையான பாடல்


http://www.youtube.com/watch?v=_grTzzFwm-4

vasudevan31355
24th July 2014, 07:25 AM
'சத்தியம் தவறாதே' இசையமைப்பாளர் சி.என்.பாண்டுரங்கன் கோபால் சொல்வது போல் வெகுவாக என்னைக் கவர்ந்தவர்.

இவரது பாடல்களில் நல்ல வித்தியாசங்களை உணரலாம்.

இப்படத்தின் பாடல்கள் அருமை.

மாஸ்டர் ஸ்ரீதர் பீச்சில் சுண்டல் விற்றுக் கொண்டே பாடும் ஒரு சோஷலிச பாடல். அருமையான கருத்துக்கள் நிறைந்தது.


சத்தியம் தவறாதே
தாய் நாட்டினை மறவாதே
தட்டிப் பறிக்காதே
தன்மானம் இழக்காதே

கட்டுமரத்தினை நம்பும் மனிதனுக்கு
காற்று வீசினால் வாட்டம்
புயல் காற்று வீசினால் வாட்டம்

சூரியன் ஒளியும் மழையும் காற்றும்
தெய்வம் தந்த சோஷலிசம்
நாட்டை சுரண்டும் கூட்டம்தான்
டோட்டலிசம்



http://www.inbaminge.com/t/s/Sathiyam%20Thavarathe/

RAGHAVENDRA
24th July 2014, 07:34 AM
வாசு சார்,
ராஜேஷ், மது என அனைவரையும் வசீகரிக்கும் திரியாக இதை மாற்றி அமர்க்களமாக்கி விட்டீர்கள். ஒரு நாள் தவறினாலும் ஏராளமான பக்கங்கள்... எந்தப் பதிவிற்கு நன்றி தெரிவிப்பது என்பதே புரியாமல் அனைத்துமே சூப்பராக அனைவருமே கொண்டு செல்கிறீர்கள். பாராட்டுக்கள்.

Gopal.s
24th July 2014, 07:38 AM
Rajesh,

I prefer to cut Sirs in the thread . If I address you by name,it is the best respect shown to individual. Address you by Short name best intimacy and friendship.(Like vasu's Go)
Irrespective of Age,Caste,creed,education,status, let us follow this uniformly. Probably ,I think differently from Indian culture owing to my alternate exposures. This is only my suggestion and request. Atleast I don't need Sir.(probably doesn't deserve it too!!!)Thanks for enriching the thread Sir.(this is honorary)

RAGHAVENDRA
24th July 2014, 07:42 AM
சி.என். பாண்டுரங்கன் ..தமிழ்த் திரையுலகின் சிறந்த இசையமைப்பாளர்களுள் ஒருவர்..

திருவல்லிக்கேணியில் என் நண்பன் ஒருவன் சி.என்.பாண்டுரங்கன் வீட்டின் மாடியில் குடியிருந்தபோது அடிக்கடி பார்க்கவும் ஓரிரு முறை உரையாடவும் வாய்ப்புக் கிடைத்தது. ஒரு சில பாடல்களை நினைவில் வைத்து அவரிடம் சொன்ன போது நன்றி சொன்னார். படிக்க வேண்டும், சினிமாவெல்லாம் அப்புறம்.... அந்தக் காலத்தில் சினிமாக் கலைஞர்களே சமுதாய அக்கறையுடன் மாணவர்களை அறிவுரை சொல்லி வந்ததற்கு இவரும் ஒரு சான்று.

இன்றைக்கு அந்த வாய்ப்பெல்லாம் மனதில் இன்ப நினைவுகளாக நிழலாடுகின்றன

RAGHAVENDRA
24th July 2014, 07:45 AM
உள்ள[த்]தை அள்ளித்தா

மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரித்து 1982ல் வெளிவந்த திரைப்படம் வெற்றி நமதே. ராஜேஷ், வனிதா, பி.எஸ்.வீரப்பா உள்பட பலர் நடித்திருந்த இப்படத்திற்கு இசை சங்கர் கணேஷ். இந்தப் படத்தில் மெலோடி என்ற வகையில் ஒரு பாடலும் இல்லை. இருந்தாலும் இலங்கை பாய்லா மெட்டில் அமைத்திருந்த பாடல் பேபி பேபி, கேட்கலாம். மலேசியா வாசுதேவன் எல்.ஆர். அஞ்சலி ... பாடகர்கள் பெயர் தவறிருந்தால் திருத்தவும்... பாடிய இப்பாடலை நம்முடன் பகிரந்து கொள்கிறேன்.

பேபி பேபி ... வெற்றி நமதே 1982 (https://www.mediafire.com/?y2vkaftdfl1gd4d)

RAGHAVENDRA
24th July 2014, 07:48 AM
Goடா (Goக்கு தமிழ் வார்த்தை 'போடா'மல் இருந்தால் சரி) என்று அழைத்தால் என்னாவது... வாசு சார் ப்ளீஸ்..

RAGHAVENDRA
24th July 2014, 07:49 AM
பி.பி.எஸ்சுக்கு மிகவும் பிடித்த பாடல்களில் ஒன்று சத்தியம் தவறாதே படத்தில் இடம்ப பெற்ற எதுடா வாழ்க்கை...

vasudevan31355
24th July 2014, 07:50 AM
சி.என்.பாண்டுரங்கன் இசையமைப்பில் சோலை மலை ராணி என்று ஒருபடம் வெளிவந்தது.

அதிலிருந்து ஒரு அற்புதமான பாடல்.

'அன்பான மொழி பேசும் வனமோகினி'

'மென்மைப் பாடகர்' ஏ .எம்.ராஜாவும், ராதா ஜெயலஷ்மியும் இணைந்து அளிக்கும் அற்புத பாடல்.

பாடல் காட்சியை பார்க்க முடியாவிட்டாலும் கேட்டு இன்புறலாம்.


http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=6qZqt7bzd9g

RAGHAVENDRA
24th July 2014, 07:55 AM
பொங்கும் பூம்புனல்

அட்டப்பள்ளி ராமராவ் இசையமைத்து சுரபி என்ற ஜே.தங்கவேல் அவர்கள் எழுதி மனம் போல் மாங்கல்யம் திரைப்படத்தில் இடம் பெற்ற மாப்பிள்ளை டோய்.... சூப்பர் டூப்பர் ஹிட் பாடல்... எல்லா காலத்தையும் கடந்து நிற்கும் பாடல்.. அந்தக் காலத்தில் கல்யாண கச்சேரிகளில், குறிப்பாக சென்னை மாப்பிள்ளைகள் வெளியூரில் கல்யாணம் செய்யும் போது தவறாமல் இப்பாட்டை நாதஸ்வர குழுவினர் வாசிப்பார்கள். மெல்லிசை கச்சேரி நடந்தால் மேடையிலும் பாடுவார்கள். துரதிர்ஷ்டவசமாக இப்படத்தின் பிரிண்ட் கிடைக்கவில்லை நெகடிவும் இல்லை என கூறப்படுகிறது. டிவிடியிலும் வருவதற்கான வாய்ப்பு குறைவு.

இப்பாடலுடன் இரு சகோதரிகள் வீடியோவை இணைத்து உரிமைக்குரல் நிறுவனத்தார் ஒரு டிவிடி வெளியிட்டிருந்தார்கள். பல அற்புத கானங்கள் நிறைந்த அந்த டிவிடியில் செந்தாமரை படத்தில் கே.ஆர்.ராமசாமி பாடிய பாட மாட்டேன் பாடலும் இடம் பெற்றுள்ளது.

இப்போது மாப்பிள்ளை டோய் பாடலைக் கேட்கலாம். பார்ப்பதற்கு இரு சகோதரிகள் வீடியோ..

http://youtu.be/9oX5PSgH-cI

Richardsof
24th July 2014, 08:05 AM
ORU THALAI RAGAM - ROOPA
http://i60.tinypic.com/2h2icro.jpg

vasudevan31355
24th July 2014, 08:06 AM
'கலைநிலவு' ரவிச்சந்திரன் அவர்களின்'மதறாஸ் TO பாண்டிச்சேரி' பட ஸ்பெஷல் ஆய்வுக்கட்டுரை.

http://t3.gstatic.com/images?q=tbn:ANd9GcQIxMgjC2yi7Kg7N5QloGowqsO394AG4 fyNZL9_qRUiNrPSSrNxopGHj7mq

http://t2.gstatic.com/images?q=tbn:ANd9GcQHXn_siebsw_-rwi7MZsE54GgPda9DKc6L_C1B2o7Gf0aCG9xKVrWFuEwC

படம் வெளியான ஆண்டு: 16-12-1966.
இசை: T.K.ராமமூர்த்தி.
ஒளிப்பதிவு: G.விட்டல் ராவ்.
சண்டைப் பயிற்சி: K.சேதுமாதவன்.
நடன அமைப்பு: சின்னி-சம்பத்
இயக்கம்: திருமலை-மகாலிங்கம்.
தயாரிப்பு: ஆதிநாராயணன்.
பேனர் : விவிதபாரதி

ரவிச்சந்திரன் அவர்களின் 'காதலிக்க நேரமில்லை' நகைச்சுவைப் பட லிஸ்டில் சேரும் மெகா காமெடி மூவி 'மதறாஸ் TO பாண்டிச்சேரி' பாண்டிச்சேரி. பரவலாக எல்லோருக்குமே நன்றாகத் தெரிந்த படம். இன்னும் சொல்லப் போனால் இன்றைய தலைமுறை கூட பார்த்து வயிறு குலுங்கச் சிரிக்கும் வண்ணம் எடுக்கப்பட்ட எவர்க்ரீன் மூவி என்று கூட இதைச் சொல்வேன்.

கதை என்று பார்த்தால் பெரிதாக ஒன்றுமில்லை. சினிமா நடிகையாக ஆசைப்பட்டு தன் நகைகள் மற்றும் பணத்தோடு கயவன் ஒருவன் பேச்சை நம்பி வீட்டை விட்டு ஓடி வந்து விடுகிறாள் ஒரு பெண். இத்தனைக்கும் வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவள் அவள். வீட்டை விட்டு வெளியேறியதும்தான் புரிகிறது தான் நம்பி வந்த ஆள் ஒரு அயோக்கியன் என்று. எனவே அவனிடமிருந்து தப்பி மெட்ராஸிலிருந்து பாண்டிச்சேரி போகும் ஒரு பஸ்ஸில் ஏறி விடுகிறாள். ஏற்கனவே அறிமுகமான நம் ஹீரோ ரவி பஸ்ஸில் இருக்க பின் அவளுடைய பாதுகாப்புக்குக் கேட்கணுமா?... அவளைக் கொல்ல ஒரு அடியாளை அவள் நம்பி வந்த கயவன் பஸ்ஸில் அனுப்ப அவனிடமிருந்தும், அந்த வில்லனிடமிருந்தும் அவளை ரவி காப்பாற்றி அவளுடைய சினிமா ஆசையினால் வந்த சோதனைகளையும், அதனால் ஏற்பட்ட விளைவுகளையும் அவளுக்கு உணர்த்தி அவளைக் கைப்பிடிப்பதே கதை.

இடையில் பஸ் கண்டக்டராக நாகேஷும், டிரைவராக ஏ.கருணாநிதியும், பயணிகளாக மனோரமா, ஏ.வீரப்பன், கரிக்கோல் ராஜ், நம்பிராஜன், 'பக்கோடா' காதர்' (உலகப் புகழ் பெற்ற இப்பட்டம் காதருக்கு இப்படத்தின் மூலமாகத்தான் வந்தது), பழம்பெரும் நகைச்சுவை நடிகைகள் சி.டி ராஜகாந்தம், அங்கமுத்து போன்ற மாபெரும் நகைச்சுவைப் பட்டாளமும் பஸ்ஸில் செய்யும் அட்டகாசங்கள் படத்தின் பெரும்பான்மையை ஆக்கிரமிப்பு செய்து படம் பார்ப்பவர்களின் வயிற்றை பதம் பார்த்தது. வில்லனாக 'கள்ளபார்ட்' நடராஜனும், சினிமா நடிகை ஆக வேண்டும் என்ற ஆசை கொண்ட ஹீரோயினாக கன்னட நடிகை கல்பனாவும் ('கட்டிலா தொட்டிலா' திரைப்படத்தில் ஜெமினி மற்றும் பானுமதியின் மகளாக நடித்திருப்பார். 'கன்னடத்துப் பைங்கிளி' சரோஜாதேவியை தோற்றத்தில் ஞாபகப்படுத்துவார்) நடித்திருந்தார்கள்.

ஹிந்தியில் வெற்றி பெற்ற 'பாம்பே டு கோவா' என்ற படத்தின் தழுவல் தான் இந்தப் படம் என்ற போதிலும் தழுவல் என்று நம்ப முடியாத வகையில் நகைச்சுவை நடிகர்கள் படத்தைத் தூக்கி நிறுத்தி இருந்தார்கள். ஹிந்தியில் ரவி ரோலை அமிதாப் பச்சனும் (ஆரம்பகால அமிதாப் பச்சன் 'வெட வெட' வென படு ஒல்லியாக ஆனால் உற்சாகமாக நடித்திருப்பார்) கல்பனா ரோலை அருணா ராணியும் செய்திருந்தார்கள்.

படம் ஆரம்பித்து ஒரு முக்கால் மணிநேரம் தவிர மீதி படம் முழுதும் ஓடும் பஸ்சிலேயே முடிந்துவிட (நிச்சயமாக தயாரிப்பாளருக்கும் இயக்குனர்களுக்கும் மகா துணிச்சல் தான்) ஆனால் சலிப்புத்தட்டாமல் பக்கா காமெடியுடன் படம் நகர்வதை பாராட்டத்தான் வேண்டும்.

ஓடும் பஸ்ஸில் பாம்பாட்டி ஒருவனின் கூடையிலிருந்து பாம்பு வெளியேறி விட, பஸ்ஸில் உள்ள அத்தனை பெரும் "குய்யோ முய்யோ" என்று அலற, அதைப் பார்த்து டிரைவர் கருணாநிதி கேலி செய்ய, கடைசியில் பாம்பு டிரைவர் ஓட்டும் ஸ்டியரிங்கின் மேல் சுற்றிக்கொண்டு களிநடம் புரிய, அதுவரை பயணிகளைக் கிண்டல் அடித்துக் கொண்டிருந்த கருணாநிதி பாம்பைப் பார்த்து "பாம்.. பாம்".. என்று வார்த்தை வெளிவராமல் வாயால் ஹாரன் அடிக்க, பாம்பாட்டி "அது ஒண்ணும் செய்யாது சாமி...கொழந்த மாதிரி" என்று பாம்பை லாவகமாகப் பிடித்துக் கொண்டு பாம்பைப் பார்த்து "அய்யாவுக்கு ஒரு முத்தம் கொடுடா" என்று கருணாநிதிக்கு மேலும் கிலி கிளப்ப ஏக களேபரம்தான்.

பஸ் தகர டப்பா மாதிரி ஊர்ந்து கொண்டிருக்க, ரோடு சைடு ஓரத்திலிருந்து நான்கைந்து பேர் ஓடிவர, நாகேஷ் வருவது பயணிகள்தான் என்று வண்டியை விசில் அடித்து நிறுத்த, ஓடிவந்த நபர்கள் பஸ் நகர்ந்ததும் பஸ்ஸில் ஏறாமல் ரோடிற்கு அடுத்த சைடில் வேறு வேலையாய் ஓடும் போது சிரிக்காதவர்களும் இருக்க முடியுமோ?..

பஸ்ஸில் அருகில் இருக்கும் நபர் பக்கோடா பொட்டலம் பிரித்து சாப்பிட, மனோரமாவின் மகன் காதர் அதைப் பார்த்து விட்டு "அம்மா பக்கோடா" என்று இடைவிடாமல் கத்த ஆரம்பிக்க, அவமானம் தாங்காமல் காதரின் வாயை மனோரமா துணியால் அடைக்க, விவரம் தெரியாத நாகேஷ் பரிதாபப் பட்டு துணியை எடுத்துவிட, மறுகணமே காதர் "அம்மா பக்கோடா" என்று ஜெபம் செய்ய ஆரம்பிக்க, மறுபடி நாகேஷே காதர் வாயில் துணியை வைத்து அடைப்பது உம்மணாம் மூஞ்சிகளையும் உற்சாகப் படுத்தி வயிறு வலிக்கச் செய்து விடும். (காதர் 'பக்கோடா' காதர் ஆன வரலாறு இதுதான். நிறைய நடிகர் திலகத்தின் படங்களில் காதர் இருப்பதைக் காணலாம். குறிப்பாக ராமன் எத்தனை ராமனடியும், பட்டிக்காடா பட்டணமாவும்)

இது போன்ற ஏராளமான நகைச்சுவைத் தோரணங்கள் படம் நெடுகிலும் வந்து நம்மை மகிழ்விப்பது நிஜம்.

சரி.. நம் ஹீரோவிடம் வருவோம்.. ரவி தன் ரோலை அழகாகவே செய்திருப்பார். ஓட்டலில் கல்பனாவை வெறுப்பேற்ற ஓட்டலின் மியூசிக் ட்ரூப்பிடம் துண்டுச் சீட்டுக் கொடுத்து அந்தத் தாளத்திற்கு ஏற்றவாறு நடனம் ஆடுவது ஜோர். பஸ்ஸில் கல்பனாவுடன் பழகுவதும், அட்வைஸ் செய்வதும் எதிர்களுக்கு தன் ஸ்டைலில் கும்மாங்குத்து கொடுப்பதும் நம்மை ரசிக்கவே வைத்தன. (அந்த லேசான தொட்டிக்கால் அவருக்கு தனி அழகுதான்).

கல்பனாவும் சினிமா நடிகை ஆக வேண்டும் என்ற வெறித்தனத்தை நன்றாகவே பிரதிபலித்திருப்பார். நாகேஷ், கருணாநிதி கேட்கவே வேண்டாம்...படத்தின் தூண்களே அவர்கள்தாம். (பஸ்ஸில் படிக்கட்டில் நின்றுகொண்டு நடிகை சிவகாமியை 'சைட்' அடித்துக் கொண்டே வரும் நாகேஷ் மெய்மறந்து ஒரு கட்டத்தில் பஸ்ஸிலிருந்து விழுந்து விட, பஸ் டிரைவர் கருணாநிதி அதைக் கவனியாமல் பஸ்ஸை நிறுத்தாமல் ஓட்டிச் செல்ல, சிவகாமி அதிர்ந்து பஸ்ஸை நிறுத்தச் சொல்லிக் குரல் கொடுக்க, கருணாநிதி அதற்கு கொஞ்சமுமும் பதட்டப் படாமல் "ஏம்மா சும்மா கத்தற... பஸ்ஸு இரும்பு மாதிரி...பய காந்தம் மாதிரி...வந்து ஒட்டிக்குவான் பாரு" என்று சொல்வதற்கேற்ப நாகேஷும் ஓடிவந்து பஸ்ஸில் தொற்றிக்கொள்ளும் ஒரு காட்சியே இருவருக்கும் போதும்)

பஸ் பிரேக் டவுன் ஆகி நின்றதும் கொஞ்சமும் பயணிகளைப் பற்றிக் கவலைப்படாமல் ரோடில் அமர்ந்து கொண்டு இருவரும் ஆடு புலி ஆட்டம் ஆடுவது, பஸ்ஸிலிருந்து வெளியே பறந்து சென்றுவிட்ட கோழியைப் பிடிக்க இருவரும் படாத பாடுபடுவது என்று கருணாநிதியும், நாகேஷும் அடிக்கும் கொட்டங்கள் சொல்லி மாளாது.

திரு. V.K.ராமசாமி அவர்கள் கூட தெருவில் மோடிமஸ்தான் வித்தை காட்டுபவராக ஒரு சீனில் வந்து கலக்குவார்.

O.A.K .தேவர் அவர்களும் ஹோட்டல் முதலாளியாக வந்து பிராமண மொழி பேசி அசத்துவார்.

இந்தப் படத்தின் பாடல்களைப் பற்றி அவசியம் கூறித்தான் ஆக வேண்டும். என்ன அற்புதமான பாடல்கள்!. T.K.ராமமூர்த்தி அவர்களின் இசையில் அற்புதமான மனதை மயக்கும் பாடல்கள்.

கல்பனா நடிகைக் கனவு ஆசையில் பாடுவதாக பி.சுசீலாவின் தேன் குரலில் இனிக்கும் "மை பிரெண்ட் நெஞ்சத்தில் என்ன" பாடல் கோடி முறை கேட்டாலும் தெவிட்டாத பாடல்.

பஸ்ஸில் பயணிகளை மனதில் வைத்து ரவி பாடுவதாக வரும் அருமையான டி.எம்.எஸ் குரலில் ஒலிக்கும் "பயணம் எங்கே?... பயணம் எங்கே?" பாடல் வரிகளிலும் அற்புதமான பாடல். பஸ்ஸில் பயணம் போகிறவர்கள் பலவித நோக்குடன் பயணம் செய்வார்கள் என்பதை அழகாக சித்தரிக்கும் பாடல்.

"என்ன வேலை என்ன தேவையோ..
சொந்தம் யாவும் பார்க்கும் ஆசையோ...
பயணம் எங்கே?... பயணம் எங்கே?...
கோயில் பார்க்கவோ...
பாவம் தீர்க்கவோ...
சொத்து சேர்க்கவோ...
சுமையைத் தூக்கவோ"...

என்ற கதையோடு பொருந்தி வரும் ஆலங்குடி சோமுவின் அருமையான வரிகள்.

பின் தன்னையும்,கல்பனாவையும் இணைத்து கிசுகிசு பேசும் பயணிகளின் மூக்குடைக்க ரவியும், கல்பனாவும் பாடுவதாக வரும், காட்சி சூழலுக்கு ஏற்ப நாமக்கல் வரதராசன் அவர்களின் வைர வரிகளில் மின்னும் "எந்த எந்த நெஞ்சுக்குள்ளே என்ன தோனுதோ"...என்ற அருமையான பாடல் கேட்க கேட்க இனிமை.

ஹோட்டலில் கல்பனாவைப் பார்த்து ரவி பாடும் பஞ்சு அருணாசலம் அவர்களின் "மலரைப் போன்ற பருவமே" பாடல் படு சூப்பர். (stop...listen...proceed... என்று பாடல் துவங்கும்) டி.எம்.எஸ் அதியற்புதமாகப் பாடியிருப்பார். இந்தப் பாடலில் ரவியின் சில நடன மூவ்மென்ட்கள் அசாத்திய அற்புதமாய் இருக்கும்.(சற்று அகலக் கால்களுடன் ஒவ்வொரு காலையும் மாற்றி மாற்றி இழுத்து ஒரு மூவ்மென்ட் கொடுப்பார்)

இயக்குனர்கள் திருமலை-மகாலிங்கம் இப்படத்தை ஒரு நல்ல காமெடி கலந்த பொழுதுபோக்குப் படமாக இயக்கியிருந்தனர். குறைந்த பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டு நல்ல வெற்றி அடைந்த படமும் கூட.

'மதறாஸ் TO பாண்டிச்சேரி' சில நிழற்படங்கள்

http://123tamilforum.com/imgcache2/2011/03/MadrasPondi0001-1.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/1-11.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/2-12.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/3-9.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/5-8.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/6-10.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/7-5.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/8-5.jpg


அன்புடன்,
வாசுதேவன்.

Richardsof
24th July 2014, 08:10 AM
மனதை மயக்கும் மதுர கானங்கள்

first posting movie- marupiravi - heroine manjula death anniversary

http://i60.tinypic.com/ixee5w.jpg

RAGHAVENDRA
24th July 2014, 08:11 AM
வாசு சார்
கோபால் சார் சொன்னாலும் சொன்னார் ,, எல்லோரையும் இலவசமாக பாண்டிச்சேரிக்கு அழைத்துச் சென்று விட்டீர்கள்.. தமிழிலிருந்து ஹிந்திக்குப் போனது .... முதலில் மதராஸ் பாம்பேயாகவும் பாண்டி கோவாவாகவும் மாறி விட்டது.

வெறும் காதரை பகோடாவாக்கி விட்ட படம் ....

ஏ.கருணாநிதியை ஓவர்நைட்டில் பாப்புலராக்கிய படம்...

டி.கே.ஆரின் புகழ்க் கிரீடத்தில் மற்றோரு வைரம் ...

இப்படி ஏராளமான சிறப்புக்களை உள்ளடக்கிய இப்படப்பாடல்களைக் கேட்டுக் கொண்டே இருக்கலாம்..

RAGHAVENDRA
24th July 2014, 08:13 AM
எஸ்வீ சார்
ஒரு தலை ராகம் படக்குழுவினர் சமீபத்தில் அனைவரும் ஒன்றாக இணைந்தது மணல் நகரம் படத்துவக்க விழாவில். சங்கர் இப்படத்தை இயக்குகிறார்.. ஆம் ஒரு தலை ராகம் சங்கர் தான்..தும்பு ரூபா டிஆர் என அனைவரும் ஒன்றாக இணைந்த விழாவாக அமைந்தது.

http://www.cinemaspice.in/upload/bbs/bsi35432014071516205.jpg

Richardsof
24th July 2014, 08:16 AM
இனிய நண்பர் திரு வாசு சார்

மெட்ராஸ் டூ பாண்டிச்சேரி படத்தை பற்றிய அலசல் அருமை . முழு படத்தை பார்த்த திருப்தி .
அந்தநாள் கீதாஞ்சலி - விஜயலட்சுமி பாடல்கள் பதிவுகள் இனிமை .

இனிய நண்பர் ராகவேந்திரன் சார்

ஒரு தலை ராகம் -நடிகர்கள் கலந்து கொண்ட நிழற் படம் அருமை .

vasudevan31355
24th July 2014, 08:44 AM
வினோத் சார்,

என்னுடைய மனம் கவர்ந்த நெ.1 நாயகி மஞ்சுளாவின் அழகான படத்தை தரவேற்றி அருமையான அஞ்சலி செலுத்தி விட்டீர்கள். என் உள்ளம் நெகிழ்ந்த நன்றி!

சாவி தந்த 'ரூபா'வும் அருமை.

vasudevan31355
24th July 2014, 08:50 AM
டியர் ராகவேந்திரன் சார்,

நன்றி!

'பொங்கும் பூம்புனல்' தொடரின் ஒவ்வொரு துளியும் அட்டகாசம்.

ஆமாம் ஒரு சந்தேகம்.( 'மாப்பிள்ளை டோய்' பாடல் யாரை குறிவைத்து. வெற்றி நமதே!):)

Gopal.s
24th July 2014, 08:51 AM
பி.பி.எஸ்சுக்கு மிகவும் பிடித்த பாடல்களில் ஒன்று சத்தியம் தவறாதே படத்தில் இடம்ப பெற்ற எதுடா வாழ்க்கை...

உங்கள் பாணியில் "எது சார் வாழ்க்கை".

Gopal.s
24th July 2014, 08:56 AM
Goடா (Goக்கு தமிழ் வார்த்தை 'போடா'மல் இருந்தால் சரி) என்று அழைத்தால் என்னாவது... வாசு சார் ப்ளீஸ்..


சார்,



நண்பர்களால் எப்படி அழைக்க பட்டாலும் சரியே. என் பெயரை விடவா சார்/மோர்/திரு இதெல்லாம் உயர்ந்தது?எனக்கு தர வேண்டிய கவுரவம் உலகத்தால் தர பட்டு விட்டது.



திரி நண்பர்கள் சார் போடுவதில்தான் கெளரவம் உள்ளது என்றால் நான் தாழுணர்ச்சி கொண்டவன் அல்லது உள்ளொன்று வைத்து புறமொன்று பேசும் பொய்யன்.



இந்தியர்களை திருத்துவது கஷ்டம். (உலகமே தலையில் அடித்து கொள்கிறது).உலகத்தோடு ஓட்ட ஒழுகாததினால் எல்லா நாடுகளுமே நம் வரவை தடுக்கவோ அல்லது வந்தவர்களை வெளியேற்றவோ பார்க்கிறது. இது நம் வருங்கால சந்ததிகளை பாதிக்கும் அபாயம் உண்டு.

rajeshkrv
24th July 2014, 08:58 AM
ரூபா தமிழ் அல்லாது கன்னடா, மலையாளம் என எல்லா மொழிகளிலும் முன்னணி நடிகர்களுடன் நடித்தார்.


http://www.youtube.com/watch?v=BJmAKB6-Ozg

தெலுங்கில் 2000’ல் வெளியான படத்தில் செளந்தர்யாவிற்கு அண்ணியாக நடித்திருந்தார்

vasudevan31355
24th July 2014, 08:59 AM
http://memsaabstory.wordpress.com/files/2009/01/as_manjula.jpg

http://img.youtube.com/vi/3RZWfxd7mjg/0.jpg

http://img.youtube.com/vi/mAWwp-HH8MA/0.jpg

http://img.youtube.com/vi/BK3-Z4qDuBQ/0.jpg

http://static.indianexpress.com/m-images/Tue%20Jul%2023%202013,%2013:01%20hrs/M_Id_404197_manjula_.jpg

vasudevan31355
24th July 2014, 09:04 AM
'எச்சில் இரவுகள்' படத்தில் ரூபா பங்கு கொண்ட ஒரு அருமையான பாடல்.

ரூபா என்றில்லை...பாடலும் அருமையான பாடல்.


http://www.youtube.com/watch?v=fWgrPa79Bno&feature=player_detailpage

gkrishna
24th July 2014, 09:12 AM
ORU THALAI RAGAM - ROOPA


ஒரு தலை ராகம் ருபா ஸ்டில் சூப்பர் எஸ்வி (சார் போடகூடாது )
சமீபத்தில் ரூபாவின் பேட்டி ஒன்று படித்தேன் .அவர் குழந்தை குட்டிகளுடன் கர்நாடக மாநிலத்தில் செட்டில் ஆகி விட்டதாக எழுதி இருந்தார் . அவர்க்கும் மலரும் நினைவுகள் வந்து குடும்பதுடன் மயிலாடுதுறை சென்று ஒரு தலை ராகம் ஷூட்டிங் நடந்த இடங்களை எல்லாம் கண்டு களித்தார் என்றும் எழுதி இருந்தார் .
சுந்தர புருஷன் படத்தில் லிவிங்க்ஸ்டன் கிராமத்துக்கு வந்து ஒவ்வொரு இடமாக சென்று பழைய நினைவுகளில் முழ்கி அவரது மாமாவிடம்
"எல்லா இடங்களுக்கும் சென்று காண்பித்தீர்கள் . முதல் முதல் இரண்டு கல் மீது அமர்ந்து 'சி மற்றும் .. ' போன இடத்தை காண்பிக்கவில்லேய "

http://www.5eli.com/Lyrics/wp-content/uploads/2011/09/Vasantha-Azhaippugal1.jpg


http://www.youtube.com/watch?v=XOFQeguvCKk

gkrishna
24th July 2014, 09:19 AM
நடமாடும் சிலைகள்
மல்லீச்வர் இயக்கம்
ஸ்ரீ நித்யோதய பிக்சர்ஸ்
C. H. நாராயண ராவ் , ரூப தேவி நடித்து வெளிவந்த 1982 சித்ரம்

ருபா பின்னாட்களில் ருபா தேவி என்று பெயர் மாற்றியும் நடித்தார்

http://upload.wikimedia.org/wikipedia/en/thumb/7/77/Roopaactress.jpg/220px-Roopaactress.jpg

http://www.youtube.com/watch?v=yfOL0IkgHr4

gkrishna
24th July 2014, 09:25 AM
http://upload.wikimedia.org/wikipedia/en/thumb/4/4c/KanavugalKarpanaigal.jpg/220px-KanavugalKarpanaigal.jpg

ALS kannappan direction

ALS கண்ணப்பன்
(அமலபால் மாமனார் இயக்குனர் விஜய் இன் தந்தை யா ? )

http://www.youtube.com/watch?v=WdreaYDL20I

http://www.inbaminge.com/t/k/Kanavugal%20karpanaigal/

gkrishna
24th July 2014, 09:33 AM
வாசு

(அவர்களே சொல்லலாமா அல்லது

என்ன சொல்ல என்ன சொல்ல
சொல்லி தர வாசு இருக்க :))

'ஹிந்தியில் வெற்றி பெற்ற 'பாம்பே டு கோவா' என்ற படத்தின் தழுவல் தான் இந்தப் படம் என்ற போதிலும்'

தமிழ் இல் இருந்து ஹிந்தியா அல்லது ஹிந்தியில் இருந்து தமிழா

பாம்பே டு கோவா 1972
மெட்ராஸ் டு பண்டிசெர்ரி 1966
Usalai சோமநாதன் கதை

http://upload.wikimedia.org/wikipedia/en/thumb/f/f0/BombaytoGoa.jpg/220px-BombaytoGoa.jpg

சந்தேகம் நிவர்த்தி ஆனால் நல்லது
இல்லேனே என் மண்டை பணால்

rajeshkrv
24th July 2014, 09:42 AM
இதென்ன சந்தேகம், தமிழில் இருந்து ஹிந்தி தான் .. சத்ருகன் சின்ஹா அருமையான நடிப்பு

vasudevan31355
24th July 2014, 09:44 AM
வணக்கம் கிருஷ்ணா சார்!

சந்தேகக் கோடு
அது சந்தோஷக் கேடு

நிச்சயமாக

Tamil to Hindi :)

gkrishna
24th July 2014, 09:45 AM
மனதை மயக்கும் மதுர கானங்கள்

first posting movie- marupiravi - heroine manjula death anniversary



கலை குடும்பத்தின் தலைவி நினைவு நாள்
நினைவு அலைகளை மீடிய எஸ்வி அவர்களுக்கு நன்றி

அவர்களின் (மாணிக்க:)) வாரிசு வனிதா (சந்தனம் அரைத்த ராஜ்கிரண்) நடித்த ஒரு பாடல்
கார்த்திக் ராஜாவின் அருமையான ஒரு ஆரம்ப கால பாடல்


http://www.youtube.com/watch?v=oCa6VTL1JGM

rajeshkrv
24th July 2014, 09:46 AM
another good song of roopadevi(roopa)


http://www.youtube.com/watch?v=o3YEMDJ4lZk

gkrishna
24th July 2014, 09:47 AM
நன்றி வாசு ராஜேஷ் அவர்களே

rajeshkrv
24th July 2014, 09:47 AM
கிருஷ்ணா சார் உங்களுக்காக ஒரு விஜி பாட்டு போட்டேனே பார்த்தேளா .. ??

rajeshkrv
24th July 2014, 09:52 AM
மஞ்சுளாவின் நினைவு நாளில் இதோ அவரது கிளப் டான்ஸ்.. கிளாமராக இருந்தாலும் அளவாக ஆடியிருப்பார்


http://www.youtube.com/watch?v=s89aHtf9SX0

rajeshkrv
24th July 2014, 09:54 AM
கிளப் டான்ஸ் மட்டுமா இதோ நல்ல அருமையான நடனம்
இசையரசியின் குரலில் அருமையான பாடல்


http://www.youtube.com/watch?v=VaM5gQM0o0A

vasudevan31355
24th July 2014, 09:57 AM
ராஜேஷ் சார்,

காலை வணக்கம்.

http://i871.photobucket.com/albums/ab272/1tfml/1960/Thilagam1960.jpg

'திலகம்' படத்தில் R.சுதர்சனம் இசையில்.

மனதை மயக்கும் இசையரசியின் இன்னொரு காந்தப் பாட்டு. ராட்சஸி, ஜமுனா ராணி ரேஞ்சுக்கு. அந்த 'உய்' என்ற இன்ப இழுப்பு ஒன்றே போதும்.

'உய்....
ஆடிவரும் பூங்கொடி அழகினிலே
மனம் மாறுதா தடுமாறுதா

அலைபோலே பின்னாலே
அய்யாவின் மனம் போகுதா
ஆசைவலை பின்னி ஜாடைகளும்
பின்னி ஆடுதா திண்டாடுதா

பாருங்க மைனர் சார் உங்க
வாழ்க்கையே ஜாலிதான்'

சுசீலாம்மாவால் எதையும் சாதிக்க முடியும்... எப்படிப்பட்ட பாடலையும் 'ப்பூ' என்று ஊதித் தள்ள முடியும் என்று நிரூபித்த பாடல்.


http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=hApVd1yuXDc

rajeshkrv
24th July 2014, 10:01 AM
திலகம் அருமையான படம், பாடல் அதை விட அற்புதம். கேட்ட பாடல் தான் இருந்தாலும் கேட்க கேட்க அற்புதம்

நன்றி கிருஷ்ணா அவர்களே

gkrishna
24th July 2014, 10:04 AM
கிருஷ்ணா சார் உங்களுக்காக ஒரு விஜி பாட்டு போட்டேனே பார்த்தேளா .. ??


'பார்த்தேன் அந்த அழகை' ராஜேஷ் சூப்பர்
http://www.photofast.ca/files/products/5906.jpg
நேற்று சன் லைப் ஹோட்டல் சொர்க்கம் படம்
அப்பா ஜெய்சங்கர் அம்மா பண்டரி பாய்
பையன் ஜெய்சங்கர் ஜோடி குமரி பத்மினி(ap நாகராஜன் புகழ் )
மேஜர் கவர்ச்சி வில்லன் கண்ணன்,வாசு (MRR ),isr ,ஐசரி வேலன்
பேபி இந்திரா இவர்களோடு காந்த கண் அழகி விஜி

ஒரு பாட்டு சூப்பர் இது கோவை சௌந்தரராஜன் அல்லது t m s தெரியவில்லை

ஜெய் விஜி சூப்பர் பாட்டு

'அம்மாடி வந்தேனே தேடி இன்பத்தை நாடி '
என்னங்க சொல்லடூம் போங்க
அனிதா அனிதா ஹரே ராம்

பியது அப்து ஆஜா ஹ ஹ ஹ ஹா

இந்த பாட்டின் ஒலி வடிவம் கிடைக்கவில்லை இருந்தால் ஹெல்ப் ப்ளீஸ்

மற்ற பிற பாடல்கள்


http://www.youtube.com/watch?v=p-5ZIY_8B70

http://www.youtube.com/watch?v=6kw5U--6z6M

vasudevan31355
24th July 2014, 10:07 AM
ராஜேஷ் சார்,

'Palletoori Chinnodu' படத்தில் மஞ்சுளாவும், விஜியும் குளத்தில் நீந்திக் குளிக்கும் பாடல்.

'நீலே மன்ட்டுன்னாயே ஓ வதினா'

பிளாக் அண்ட் ஒய்ட்டாக இருந்தாலும் நன்றாக இருக்கும்.

மஞ்சுளா கொள்ளை அழகு.


https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=wcJ-V6fNMlY

rajeshkrv
24th July 2014, 10:10 AM
ஹோட்டல் சொர்க்கம் - குரல் டி.எம்.எஸ் மற்றும் இசையரசி ..
இசை எஸ்.எம்.எஸ்


மஞ்சுளா விஜி டூயட் ஆமாம் சூப்பர். விஜி மட்டும் என்ன அவரும் கொள்ளை அழகு

vasudevan31355
24th July 2014, 10:15 AM
கிருஷ்ணா சார்,

'அம்மாடி வந்தேனே தேடி இன்பத்தை நாடி '

கோவை சௌந்தரராஜன் தான்.

gkrishna
24th July 2014, 10:16 AM
ஹோட்டல் சொர்க்கம் - குரல் டி.எம்.எஸ் மற்றும் இசையரசி ..
இசை எஸ்.எம்.எஸ்


மஞ்சுளா விஜி டூயட் ஆமாம் சூப்பர். விஜி மட்டும் என்ன அவரும் கொள்ளை அழகு

நன்றி ராஜேஷ்


வாசு அவர்களே ராஜேஷ் அவர்களே

மஞ்சுளாவின் ரக்த சம்பந்தலு 1975 மறக்க முடியுமா

'எவரோ நீரு எவரோ நானு ' கிருஷ்ணா மஞ்சுளா சூப்பர் பாட்டு
சத்தியம் இசை

மேலும் இந்த படத்தில் லதுவின் 'ஜஸ்ட் எ minute சின்ன மாத '

யாதோன் கி பாரத் உல்டா

http://www.cineradham.com/newsongs/songsadmin/movies/raktha_sambandhaalu_(1975)-cineradham.jpg

http://www.cineradham.com/newsongs/song.php?movieid=580

rajeshkrv
24th July 2014, 10:17 AM
வாசு அவர்களே .. அது கோவை தானா.. எவ்வள்வு கேட்டாலும் டி.எம்.எஸ் போலவே இருந்தது.. மன்னிக்கவும்

gkrishna
24th July 2014, 10:17 AM
கிருஷ்ணா சார்,

'அம்மாடி வந்தேனே தேடி இன்பத்தை நாடி '

கோவை சௌந்தரராஜன் தான்.

இந்த பாட்டு விடியோ கிடைச்சா போட்டு பாருங்க
விஜி சூப்பர் டான்ஸ்
விஜி யின் கண்ணு (ப:)) இரண்டும் வா வா ங்குது

rajeshkrv
24th July 2014, 10:18 AM
மஞ்சுளா அழகென்றாலும் கொஞ்சம் ஆண்மைத்தனம் உள்ளவர் போல் தோன்றுவார். நான் பெரிய ரசிகர் அல்ல இருந்தாலும் சில படங்களில் ஒ.கே
தெலுங்கு நாட்டில் அந்தமுள்ள அம்மாயி என்ற பெயர் கொண்டவர். ரசிகர்கள் அவர் அழகில் அவ்வளவு மயங்கினார்களாம் .. ஹும் ஹும்

vasudevan31355
24th July 2014, 10:19 AM
இதோ 'காரவன்' படத்தில் ஆர்.டி.பரமன் இசையில் ஆஷா கலக்கி ஹெலன் ஆடி அமர்க்களப்படுத்திய உலகப் புகழ் பெற்ற பாடல்.

இந்திக்கு முன்னால் தமிழ்ப் பாடல் பல்லிளிக்கிறது

Piya Tu Ab To Aaja


http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=DBCZWNfoR3k

gkrishna
24th July 2014, 10:20 AM
இந்திக்கு முன்னால் தமிழ்ப் பாடல் பல்லிளிக்கிறது



நானும் வாசு :)

rajeshkrv
24th July 2014, 10:21 AM
சில பாடலகள் ஒரிஜினல் ஒரிஜினல் தான்.. “மோனிகா மை டார்லிங்”... என்ன பாட்டு ....

rajeshkrv
24th July 2014, 10:25 AM
சில பாடல்கள் ஒரிஜினலும் நன்றாக இருக்கும் மற்ற மொழிகளிலும் நன்றாக இருக்கும்

சோத்வி கா சாந்த் ஹோ தெலுங்கில் ராஜன் நாகேந்திராவின் இசையில் (இசை என்ன அப்படியே காப்பி)
மதன காமராஜு கதா வில் இசையரசியும் பி.பி.ஸ்ரீனிவாஸும் இசைத்த பாடல்


http://www.youtube.com/watch?v=WHlVRPOPf10

தமிழில் மந்திரி குமாரன்
செண்டு மல்லி மாலையோ

தமிழில் ஒகே ரகம், தெலுங்கு சூப்பர்

chendumalli malayo-mandhiri kumaran,rajan nagendra,tms,ps.mp3 (http://www.4shared.com/mp3/pmOU065P/chendumalli_malayo-mandhiri_ku.html)

vasudevan31355
24th July 2014, 10:27 AM
கிருஷ்ணா சார்,

'ஹோட்டல் சொர்க்கம்' திரைப்படத்தில் டைட்டிலில் அப்படத்தின் தொழில் நுட்பக் கலைஞர்களின் போட்டோக்களை ஒருவர் பாக்கியில்லாமல் அந்தந்த டைட்டிலில் போடுவார்கள். சண்டைப் பயிற்சி என்று போட்டால் ஜூடோ ரத்னம் படம் காட்டுவார்கள் உதவியாளர்கள் உட்பட. உடன் ஜெய் இருப்பார்.

gkrishna
24th July 2014, 10:46 AM
கிருஷ்ணா சார்,

'ஹோட்டல் சொர்க்கம்' திரைப்படத்தில் டைட்டிலில் அப்படத்தின் தொழில் நுட்பக் கலைஞர்களின் போட்டோக்களை ஒருவர் பாக்கியில்லாமல் அந்தந்த டைட்டிலில் போடுவார்கள். சண்டைப் பயிற்சி என்று போட்டால் ஜூடோ ரத்னம் படம் காட்டுவார்கள் உதவியாளர்கள் உட்பட. உடன் ஜெய் இருப்பார்.

ஆமாம் வாசு அவர்களே
நேற்று இந்த படம் பார்க்கும் போது படம் பூராவும் நம் திரி நினைவு தான்

vasudevan31355
24th July 2014, 10:46 AM
ராஜேஷ் சார்,

http://psusheela.org/tam/raresongs/raresongs133.html

'அனிதா' பாடலில் கோவை சௌந்தரராஜன் குரல் கண்டுபிடிப்பது கொஞ்சம் சிரமம். இணையத்தில் கூட பல தளங்களில் டி.எம்.எஸ் என்றுதான் போட்டிருப்பார்கள்.

இது போல 'பாலபிஷேகம்' படத்தில் வரும் 'மச்சானே அச்சாரம் போடு' பாடலை வாணியுடன் இணைந்து கிருஷ்ணமூர்த்தி பாடும் போது அப்படியே டி.எம்.எஸ். பாடுவது போல இருக்கும். உற்றுக் கேட்டால்தான் வித்தியாசம் தரும். கண்டுபிடிப்பது ரொம்பக் கஷ்டம் சார்.

கேளுங்களேன்.


http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=_dEaahSSsb8

gkrishna
24th July 2014, 10:48 AM
இன்று காலை சன் லைப் 11 மணிக்கு பாலபிஷிகேம் படம் தான்
இரவு 7 மணி நீலகிரி எக்ஸ்பிரஸ் -
ஜெயின் james bond வாரம்

vasudevan31355
24th July 2014, 10:58 AM
ராஜேஷ் சார்,

'சௌத்வி கா சாந்த் ஹோ'

என்ன மாதிரி ஒரு மெலடி!

ரவியின் மியூஸிக்கில் காலத்தை வென்ற பாடல்.

குருதத்தின் அழகு,

வஹீதா ரஹ்மானின் அமைதி

இரவு 10 மணிக்கு மேல் கேட்டால் பத்து தூக்க மாத்திரை சேர்ந்து போட்ட எபெக்ட்.


http://www.youtube.com/watch?v=5Ud2rsMT5ng&feature=player_detailpage

vasudevan31355
24th July 2014, 10:59 AM
இன்று காலை சன் லைப் 11 மணிக்கு பாலபிஷிகேம் படம் தான்
இரவு 7 மணி நீலகிரி எக்ஸ்பிரஸ் -
ஜெயின் james bond வாரம்

கிருஷ்ணா சார்,

மகிழ்ச்சியான நியூஸ் நமக்கு.

vasudevan31355
24th July 2014, 11:00 AM
ஆமாம் வாசு அவர்களே
நேற்று இந்த படம் பார்க்கும் போது படம் பூராவும் நம் திரி நினைவு தான்

எனக்கு உங்க நினைவுதான். கோ... கோ... வென்றழுதாள் செண்பகம்.:)

gkrishna
24th July 2014, 11:01 AM
http://i1.ytimg.com/vi/c1rtDnT0C78/0.jpg

கதிகி கங்கணம் 1971
காந்த ராவ் ராமகிருஷ்ண விஜயலலித ராஜ்பாபு
பிறகு அனிதா னு ஒரு நடிகை (ஏதாவது details உண்டா )

http://www.youtube.com/watch?v=LqOO3oqEXKE

http://www.dailymotion.com/video/x11yqei_kathiki-kankanam-songs-changuna-dooke-kantha-rao-anitha_music

vasudevan31355
24th July 2014, 11:02 AM
'சன் லைப்' எனக்கு கேபிள்ல தர்றதில கிருஷ்ணா சார்.

vasudevan31355
24th July 2014, 11:04 AM
தெலுங்கு கொஞ்சம் அதிகமா இருக்கறதுக்கு ஒருத்தர் பிரம்பெடுத்துகிட்டு ஓடி வருவார் பாருங்க.

gkrishna
24th July 2014, 11:16 AM
தெலுங்கு கொஞ்சம் அதிகமா இருக்கறதுக்கு ஒருத்தர் பிரம்பெடுத்துகிட்டு ஓடி வருவார் பாருங்க.

பின்னாடி ராஜநள போஸ் பார்த்தீங்களா

gkrishna
24th July 2014, 11:47 AM
பொங்கும் பூம்புனல்

இப்போது மாப்பிள்ளை டோய் பாடலைக் கேட்கலாம். பார்ப்பதற்கு இரு சகோதரிகள் வீடியோ..



சூப்பர் பாடல் வேந்தர் அவர்களே
எல்லாமே அருமையான பாடல்கள்
கோபால் அவர்கள் சொன்ன மாதிரி கொஞ்சம் ஜீரணிக்க டைம் வேணும்
ஏகப்பட்ட information மற்றும் பாடல்கள் வெளியில் வருது

vasudevan31355
24th July 2014, 11:54 AM
ராஜநாளாவுக்கு கீழே பாருங்கள்.:)

vasudevan31355
24th July 2014, 01:14 PM
இதில் அண்ணி கீதாஞ்சலி அண்ணன் முஸ்தபா இல்லையென்றால் இன்னொருவர்.



http://ttsnapshot.biz/out.php/i111966_16.png

http://www.metromatinee.com/gallery/a4320/large/TK%20Balachandran53017.jpg


'தெய்வத்தின் தெய்வம்' திரைப்படத்தில் கீதாஞ்சலியின் கணவராக வந்து இறந்து விடும் நடிகரின் பெயர் டி.கே.பாலச்சந்திரன். மலையாள நடிகர். தமிழில் சில படங்களில் நடித்துள்ளார். அதில் முக்கியமானது அவர் நடிகர் திலகத்தின் தம்பி பட்டாபியாக நடித்த 'அந்த நாள்'.

அது போல 'நீதி' திரைப்படத்தில் ஜெயகௌசல்யாவின் காதலராக வருவார். நடிகர் திலகம் ஊர் மக்களிடம் அடிவாங்கி இவர்களுக்கு கல்யாணம் செய்து வைப்பார்.

பால்ய வயது முதலே நடித்து வருபவர். கவிஞர் மற்றும் எழுத்தாளரும் கூட.

இவரைப் பற்றி மேலும் விவரங்கள் அறிந்து கொள்ள கீழே சொடுக்குங்கள்.

http://www.actortkb.com/life.html

gkrishna
24th July 2014, 01:53 PM
[QUOTE=vasudevan31355;1150293]

great vasu

vasudevan31355
24th July 2014, 02:38 PM
இன்றைய ஸ்பெஷல் (37)

http://i.ytimg.com/vi/ZikNBz_a6dA/hqdefault.jpg

'இன்றைய ஸ்பெஷலில் 'சித்தி' வந்து கலக்குகிறாள்.

படம்: சித்தி

வருடம்; (1966)

பாடல்: கண்ணதாசன்

இசை: மெல்லிசை மன்னர்.

தயாரிப்பு: சித்ரா புரடக்ஷன்ஸ்

கதை வசனம், இயக்கம்: இயக்குனர் திலகம் கே.எஸ். கோபாலகிருஷ்ணன்.

(படத்தில் பெயர் போடாமல் இளமையான கோபாலகிருஷ்ணன் நம் அனைவருக்கும் கையெடுத்து கும்பிடுவது போல் காண்பிப்பார்கள்)

http://i1.ytimg.com/vi/ZikNBz_a6dA/movieposter.jpg

ஜெமினியும், பத்மினியும் குளித்துக் கொண்டே பாடும் ஜிலு ஜிலு பாடல் இது. குளிர்ச்சியான சுகம் தரும் பாடல்.

பத்மினி செகண்ட் ரவுண்ட் குளியல் கவர்ச்சி. ஜெமினியும் வெற்றுடம்போடு குளியல் போடுவார்.

பாடகர் திலகமும், கண்ணியப் பாடகியும் செம ஜாலியாகப் பாடியிருப்பார்கள்.

ஒன்றுமே இல்லையென்றாலும் இந்தப் பாடல் நெஞ்சுக்குள் நுழைவதென்ன?

http://img.youtube.com/vi/YrCM_uP78_M/mqdefault.jpghttps://i1.ytimg.com/vi/EPWTU1WuC10/mqdefault.jpg

தண்ணீர் சுடுவதென்ன
சரஞ்சரமாய்ப் பாய்வதென்ன
பெண்மேனி தழுவுதல் போல்
பேரின்பம் தருவதென்ன ?

தண்ணீர் சுடுவதென்ன
சரஞ்சரமாய்ப் பாய்வதென்ன
பெண்மேனி தழுவுதல் போல்
பேரின்பம் தருவதென்ன

பொன்மேனி பார்ப்பதென்ன
பூவாடை கொள்வதென்ன
பொன்மேனி பார்ப்பதென்ன
பூவாடை கொள்வதென்ன
தன்னைத்தான் மறந்ததிலே
தண்ணீரும் சுடுவதென்ன
பொன்மேனி பார்ப்பதென்ன...

அங்கிருந்து ஆடிவந்து
அலைகள் சொல்லும் சேதி என்ன
அங்கிருந்து ஆடிவந்து
அலைகள் சொல்லும் சேதி என்ன
வெள்ளிக்கெண்டை மீனைப் போலே
துள்ளும் கண்கள் சொல்வதென்ன
துள்ளும் கண்கள் சொல்வதென்ன

சொன்ன பின்னும் கேள்வி என்ன
துருவித் துருவிக் கேட்பதென்ன
சொன்ன பின்னும் கேள்வி என்ன
துருவித் துருவிக் கேட்பதென்ன
முன்னும் பின்னும் பார்ப்பதென்ன
முத்தையா உன் வேகமென்ன
முத்தையா உன் வேகமென்ன

ஓஓஓ..ஓஹ்ஹ்ஹ்ஹ்.. ஓஓஓ..ஓஹ்ஹ்ஹ்ஹ்
ஓஓஓ..ஓஹ்ஹ்ஹ்ஹ்.. ஓஓஓ..ஓஹ்ஹ்ஹ்ஹ்

தண்ணீர் சுடுவதென்ன
சரஞ்சரமாய்ப் பாய்வதென்ன
பெண்மேனி தழுவுதல் போல்
பேரின்பம் தருவதென்ன

மாலை வெயில் வண்ணம் போலே
மஞ்சள் பூசும் கோலம் என்ன
மாலை வெயில் வண்ணம் போலே
மஞ்சள் பூசும் கோலம் என்ன
மஞ்சளோடு சேர்ந்து எந்தன்
நெஞ்சம் போடும் தாளம் என்ன
நெஞ்சம் போடும் தாளம் என்ன

அந்தி சாயும் நேரம் வந்தும்
மிஞ்சி மிஞ்சிப் போவதென்ன
அந்த நாளைக் காணும் முன்னே
அம்மம்மா.. ஏக்கமென்ன
அம்மம்மா ஏக்கமென்ன ?

ஓஓஓ..ஓஹ்ஹ்ஹ்ஹ்..ஓஓஓ..ஓஹ்ஹ்ஹ்ஹ்
ஓஓஓ..ஓஹ்ஹ்ஹ்ஹ்..ஓஓஓ..ஓஹ்ஹ்ஹ்ஹ்

தண்ணீர் சுடுவதென்ன
சரஞ்சரமாய்ப் பாய்வதென்ன
பெண்மேனி தழுவுதல் போல்
பேரின்பம் தருவதென்ன!


https://www.youtube.com/watch?v=YrCM_uP78_M&feature=player_detailpage

'சித்தி' இந்தியில் 'aurat' (1967) ஆனபோது பத்மினியே அதிலும் நடித்திருந்தார். ஜெமினிக்கு பதிலாக 'வட நாட்டு எம்ஜிஆர்' பெரோஸ்கான். அந்தப் பாடலையும் இங்கே தருகிறேன். தமிழைவிட இந்தியில் ஒளிப்பதிவு 'பளிச்'. கவர்ச்சியும் கொஞ்சம் ஜாஸ்தி.


https://www.youtube.com/watch?v=9mQDgBt0bXU&feature=player_detailpage

gkrishna
24th July 2014, 02:43 PM
http://i1.ytimg.com/vi/2faiW_7-gPc/hqdefault.jpghttp://i1.ytimg.com/vi/typgFJQKnH4/hqdefault.jpghttps://encrypted-tbn3.gstatic.com/images?q=tbn:ANd9GcTcXUTMZUUE6m_JVJwwjNDA_B9yS9Tdp cPaKfUlbpb7qXEfa_eehttps://encrypted-tbn1.gstatic.com/images?q=tbn:ANd9GcT9wX_F_t2oZB8tiMHHYOgl1fsorL8Ys jQrhBgCzh2cf_rdC5QPhttps://encrypted-tbn2.gstatic.com/images?q=tbn:ANd9GcRPkrJ-6y3ZmZ9Ph-vqdQRFBaRzVlUwl1sOawq6qaaiOhnS7p7owghttps://encrypted-tbn0.gstatic.com/images?q=tbn:ANd9GcRZwcHal_ZU5yweu_WSx1s2Ns0aXdlo_ 1quyD5-YS4bEAc51gGgzwhttps://i1.ytimg.com/vi/MwUbtmcjpjg/mqdefault.jpghttps://encrypted-tbn0.gstatic.com/images?q=tbn:ANd9GcSszWZMry1OORo5zDwhCAh1Qb0M1xciM fF5H5t_BQoL5bcYWTGxhttps://encrypted-tbn2.gstatic.com/images?q=tbn:ANd9GcQPU91ytYWKnA9NTpHn96UmVxvCHMKww YWEjGAx8flvBWNOq6E2https://encrypted-tbn0.gstatic.com/images?q=tbn:ANd9GcT8FqObcmh5OX6oydiIO3EeBbSDi-4ulNz968fc4D6Xz4HX3_B7

இது குழந்தை பாடும் தாலாட்டு ...
இது இரவு நேர பூபாளம் ...
இது மேற்க்கில் தோன்றும் உதயம் ...
இது நதியில்லாத ஓடம் ... ( இசை )

இது குழந்தை பாடும் தாலாட்டு ...
இது இரவு நேர பூபாளம் ...
இது மேற்க்கில் தோன்றும் உதயம் ...
இது நதியில்லாத ஓடம் ...
இது நதியில்லாத ஓடம் ...

இசை சரணம் -1

நடை மறந்த கால்கள் தன்னின்
தடயத்தை பார்கிறேன்
வடமிழந்த தேரது ஒன்றை
நாள் தோரும் இழுக்கிறேன்
சிறகிழந்த பறவை ஒன்றை
வானத்தில் பார்க்கிறேன்
சிறகிழந்த பறவை ஒன்றை
வானத்தில் பார்க்கிறேன்
உறவுறாத பெண்ணை எண்ணி
நாளெல்லாம் வாழ்கிறேன்

இது குழந்தை பாடும் தாலாட்டு ...
இது இரவு நேர பூபாளம் ...

மியூசிக் சரணம் -2

வெறும் நாரில் கரம் கொண்டு
பூ மாலை தொடுக்கிறேன்
வெறும் காற்றில் உளி கொண்டு
சிலை ஒன்றை வடிக்கிறேன்
விடிந்து விட்ட பொழுதில் கூட
வின் மீனை பார்க்கிறேன்
விடிந்து விட்ட பொழுதில் கூட
வின் மீனை பார்க்கிறேன்
விருப்பமில்லா பெண்ணை எண்ணி
உலகை நான் வெறுக்கிறேன்

இது குழந்தை பாடும் தாலாட்டு ...
இது இரவு நேர பூபாளம் ...


மியூசிக் சரணம் -3

உளம் அறிந்த பின் தானோ
அவளை நான் நினைத்தது
உறவுருவாள் என தானோ
மனதை நான் கொடுத்தது
உயிரிழந்த கருவைக் கொண்டு
கவிதை நான் வடிப்பது
உயிர் இழந்த கருவைக் கொண்டு
கவிதை நான் வடிப்பது
ஒரு தலையாய் காதலிலே
எத்தனை நாள் வாழ்வது

இது குழந்தை பாடும் தாலாட்டு ...
இது இரவு நேர பூபாளம் ...
இது மேற்க்கில் தோன்றும் உதயம் ...
இது நதியில்லாத ஓடம் ...
இது நதியில்லாத ஓடம் ...

http://www.youtube.com/watch?v=ZrYkIrsapwc

கல்லூரி நாட்களிலும் திருமணதிற்கு முன்பும்
ஒரு தலையாய் காதலித்த (..)
ஒரு தலையாய் காதலித்த
மறக்கமுடியாத மறுக்கமுடியாத
அத்துனை பெண்களுக்கும் இந்த பாடல் சமர்ப்பணம்

எத்தனையோ நினைவலைகளை மீட்டி விட்டார் திரு எஸ்வி அவர்கள்
நிறைய எழுத துடிக்கிறது மனம் கனக்கிறது வேண்டாம்

gkrishna
24th July 2014, 03:57 PM
மாணிக்க தொட்டில் 1974
ஜெமினிகணேசன், கே.ஆர்.விஜயா, நாகேஷ், சிவகுமார், சிறீகாந்த், வி.கே.ராமசாமி,subha மற்றும் பலர் நடித்த படம்.
இயக்கம்:பி.மாதவன்.
இசை: மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன்
கதை வசனம் தயாரிப்பு நம்ம பாலமுருகன்

https://encrypted-tbn3.gstatic.com/images?q=tbn:ANd9GcTsTkzFRNx-o5OmuVNNVgcvqarYxTtYHnatXpsEJsutk0dqayArhttp://antrukandamugam.files.wordpress.com/2013/12/manikka-thottil-1974-10.jpg?w=487http://antrukandamugam.files.wordpress.com/2013/12/manikka-thottil-1974-12.jpg?w=487http://i1.ytimg.com/vi/JZTzPAY-K_Y/sddefault.jpg

சுனந்தனி மன்மதலீலை கிளாப இதுல அறிமுகம் னு டைட்டில் கார்ட்
பின்னாட்களில் தற்கொலை செய்து கொண்டதாக கேள்வி
இந்த விஜயகீதா ஒரு ஊதபூ கண் சிமிட்டுகிறது படத்தில் 'முறுக்கு கை முறுக்கு ஏழை எளியவர்கள் ' tk கலா பாடலை பாடி கொண்டு மரினா பீச் இல் முறுக்கு வருபவராக நடித்து இருப்பார் .

விஜயா அம்மா ஒவ்வொரு குழந்தையா பிறக்கும் போது இது ஆண் குழந்தை என்றே நினைத்து ஆனால் ஒவ்வொன்றும் பெண்ணாகவே பிறக்கும் .
இறுதியில் ஜெமினி தலையில் துண்டு

படம் ஓரளவு ஓடியதாக நினைவு - பெண்கள் கூட்டம் - செவ்வாய் வெள்ளி கிழமைகளில் பெண்களுக்கு குங்குமம் மஞ்சள் கொடுத்து
வரவழைத்தார்கள் நெல்லை பார்வதி திரை அரங்கில்

http://www.youtube.com/watch?v=XV9OzWrGrj8

http://www.youtube.com/watch?v=4DT9ASQNouw

Richardsof
24th July 2014, 04:12 PM
கிருஷ்ணா சார் . நான் வெறும் புள்ளி மட்டுமே வைத்தேன் . நீங்கள் அழகான [ரூபா ] கோலமே போட்டு அசத்தி விட்டீர்கள் .பாராட்டுக்கள் .
சித்தி - பாடல் - அலசல்கள் பிரமாதம் வாசு சார் . நன்றி

நாளை நம் வண்ண நாயகன் ரவியின் நினைவு நாள் .
http://i57.tinypic.com/30vbt42.png

mr_karthik
24th July 2014, 05:07 PM
ஒரு யோசனை சொல்லலாமா (சற்று பயத்துடனேயேதான்)

விஜி = விஜயநிர்மலா?, விஜயா(கே.ஆர்)?, விஜயலலிதா?. விஜயசாந்தி? அல்லது 'கோழிகூவுது' விஜி?.

முழுப்பெயரையும் டைப் செய்ய ஒன்னரை செகண்ட்தான் அதிகமாகிறது. ஆனால் பதிவைப்படிக்கும் ஆயிரக்கணக்கானோர் சந்தேகம் தீர்வடைகிறதே.

mr_karthik
24th July 2014, 05:10 PM
டியர் வாசு அவர்களே ('சார்' போடக்கூடாது என்பது மட்டும்தான் 'கோ'வின் கட்டளை).

நேற்று ஒருநாள் கணிணி இணைப்புக் கிடைக்கவில்லைஎன்று இன்றைக்கு வந்து பார்த்தால் ஏகப்பட்ட பக்கங்கள் ஓடி திரி நிரம்பிக்கிடக்கிறது. ராகவேந்தர் அவர்கள் சொன்னது போல எதைப்பாராட்டுவது என்றே தெரியவில்லை. நல்லவேளையாக சில பதிவுகள் தெலுங்கில் ஓடியிருப்பதால், அவ்வளவாக தெலுங்குப்படங்கள் பற்றித் தெரியாது என்றாலும் தெலுங்கு வீடியோக்களைப் பார்ப்பதில் ஒரு தனி இன்ட்ரஸ்ட். ஏனென்றால் ஒரே காட்சிக்கு இங்கே இழுத்துப் போர்த்திக்கொண்டு நடிப்பவர்கள், அங்கே கொஞ்சம் காற்றோட்டமாக திறந்து நடித்திருப்பார்கள்.

நமது திரியில் லதா தினம், ஜெயந்தி தினம், சேகர் தினம், ஆனந்தன் தினம் கொண்டாடப்பட்டது போல விஜயலலிதா தினம்', 'கீதாஞ்சலி தினம்' கொண்டாடப்படுவது மகிழ்ச்சியளிக்கிறது. தமிழ்த்திரையுலகம் சரியாகப் பயன்படுத்திக்கொள்ளாத இன்னொரு நடிகை கீதாஞ்சலி. நன்றாக நடனம் ஆடத்தெரிந்த அவரை காமெடியன்களுக்கு ஜோடியாகப்போட்டே ஒருவழி பண்ணிவிட்டார்கள். சங்கமம் படத்திலும் நாகேஷின் ஜோடி இவர்தானே? ("ஐயோ அவனா? சாவி இல்லாமலே பூட்டைத் திறப்பானே")

'மெட்ராஸ் டூ பாண்டிச்சேரி' ஸ்பெஷல் பதிவின்மூலம் ஒருவர் தலையில் டன் கணக்கில் ஐஸ் வைத்து விட்டீர்கள். இப்படத்தில் ரவிச்சந்திரன் + ராமமூர்த்தி அல்லவா. அவரது கொண்டாட்டத்துக்கு கேட்கணுமா.

தங்களின் லேட்டஸ்ட் இன்றைய ஸ்பெஷலாக வந்த 'சித்தி' படத்தின் 'தண்ணீர் சுடுவதென்ன' பாடல் விவரிப்பு அருமை. இரண்டாவது இன்னிங்க்ஸ் ஆட வந்தபோது கொஞ்சம் கிளுகிளுப்புடனேயே ஆட வந்தார் பத்மினி. ஐந்தாண்டு இடைவெளியில் சற்று முதுமை கூடியிருந்தது நன்றாகவே தெரிந்தது.

1966 பொங்கலன்று 'அன்பே வா' படத்துடன் 'சித்தி' வெளியானது. நமது படம் 'மோட்டார் சுந்தரம்பிள்ளை' ஜனவரி 26 அன்று வெளியானது (நடிகர்திலகத்துக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்ட அதே நாள்) .

சித்தி படத்தில் ஜெமினியும் பத்மினியும் குளிக்கும் இந்தப்பாடல் காட்சி கே.எஸ்.கோபாலகிருஷ்ணனின் மல்லியம் கிராமத்தில் காவேரி ஆற்றில் படமாக்கப்பட்டது (திருச்சியில் கடல்போல காட்சியளிக்கும் காவேரி கல்லணையிலிருந்து பல கிளை நதிகளாக பிரிந்து பிரிந்து மல்லியம், மாயவரம் வரும்போது ஒரு சிற்றாறு போல குறுகிவிடும்). கே.எஸ். ஜி. அப்போதைய தன்னுடைய படங்களில் ஒருசில காட்சிகளியேனும் தன்னுடைய மல்லியம் கிராமத்தில் படமாக்குவதை ஒரு செண்டிமெண்ட் ஆக வைத்திருந்தார். சித்திக்கு முந்தைய அவரது கற்பகம் முழுவதும் மல்லியத்திலேயே படமாக்கப்பட்டது. 'பக்கத்து வீட்டு பருவமச்சான்' பாடலின் இறுதியில் சாவித்திரி பாடும் மொட்டை மாடி வீடுதான் மல்லியம் கிராமத்திலுள்ள கே.எஸ்.ஜி.யின் வீடு.

(இதுபோல நமது சவாலே சமாளி படத்தின் வெளிப்புறக் காட்சிகளனைத்தும் மல்லியத்திலேயே எடுத்திருந்தார் ராஜகோபால். டி.கே.பகவதியும் வி.எஸ்.ராகவனும் நின்று பேசும் மரப்பாலம் மல்லியம் காவிரியாற்றுப் பாலம்தான்).

'சித்தி' படத்தில் பத்மினி குளிக்கும் இந்தக்காட்சிதான் அந்தப்படத்தின் விளம்பரங்கள் அனைத்திலும் இடம்பெற்றது. இப்படத்தின் ஒரிஜினல் ஹீரோ எம்.ஆர்.ராதாதான். ஜெமினியும் முத்துராமனும் துணைப்பாத்திரங்களே.

மெல்லிசை மன்னரின் இசையில் பாடல்கள் அனைத்தும் ஹிட். ரொம்ப ஹிட் என்றால் முத்துராமனும் 'ஞானஒளி' விஜயநிர்மலாவும் பாடும். "சந்திப்போமா இன்று சந்திப்போமா", அடுத்து பெண்களைக் கவர்ந்த "காலமிது காலமிது கண்ணுறங்கு மகளே" நாகேஷின் தத்துவப்பாடல் "இங்கே தெய்வம் பாதி மிருகம் பாதி மனிதன் ஆனதடா" ("கடவுள் பாதி மிருகம் பாதி கலந்து செய்த கலவை நான்", "கொஞ்சம் மிருகம் கொஞ்சம் கடவுள் ஒன்றாய் சேர்த்தால் எந்தன் நெஞ்சம்... சந்திரலேகா") கண்ணதாசன் சொல்லாத எதையும் யாரும் புதிதாக சொல்லிவிடவில்லை. ஜெமினி, முத்துராமன், நாகேஷுக்கு மட்டுமல்ல, குலதெய்வம் ராஜகோபாலுக்கும் பாட்டு "சைக்கிள் வண்டி மேலே" (ராஜகோபாலை யார் பார்த்தது, விஜயநிர்மலா அழகாக சைக்கிள் ஓட்டும்போது)

vasudevan31355
24th July 2014, 06:05 PM
டியர் கார்த்திக் சார்,

இரண்டு நாட்கள் நீங்கள் திரியில் இல்லாமல் என்னவோ போல் சற்று வெறுமை குடி கொண்டிருந்தது நிஜம். வரவேண்டும்.வரவேண்டும்.

'சித்தி' படப் பாடலைப் பார்த்து பாராட்டியதற்கு நன்றி!

'சித்தி' பற்றிய தெரியாத தகவல்களை அழகாக வழங்கியுள்ளீர்கள். (நடுவில் மறக்காமல் நம்மவரைப் பற்றியும்) அப்படியே மல்லியம் பற்றிய பதிவும் சிறப்பு.

நீங்கள் கூறுவது உண்மைதான்.


http://www.youtube.com/watch?v=7pkV6S6WlkE&feature=player_detailpage

'தபால்காரன் தங்கை' படத்தில்

'காவிரி பெருக்கெடுத்தால்
கொள்ளுமிடம் கொள்ளிடம்
காதல் பெருக்கெடுத்தால்?
காதல் பெருக்கெடுத்தால்?
புகலிடம் பெண்ணிடம்'

என்று கல்லணையில் அப்பாடலை படமாக்கியிருப்பார் இயக்குனர் திலகம்.

அதே போல் 'நத்தையில் முத்து' (கே.ஆர்.விஜயாவின் நூறாவது படம் ) படத்தில் முத்துராமனும், விஜயாவும் ஆற்றில் குளிக்கும் காட்சி.

'அம்மம்மா! எனக்கு அதிசய நெனப்பு தோணுது'

என்ற பாடலும் 'சித்தி' போலவே ஆற்றில் படமாக்கப் பட்டிருக்கும். அனேகமாக இதுவும் நீங்கள் குறிப்பிட்டுள்ள காவேரி ஆறுதான் என்று நினைக்கிறேன். கொஞ்சம் சர்ச்சையையும் கிளப்பியது இக்காட்சி. (விஜயா குளித்துக் கொண்டிருக்கும் போதே ஆற்றில் அவர் உடுத்தியிருக்கும் துணி அடித்துக் கொண்டு போய்விட புன்னகை அரசி வெற்றுடம்பாய் நி....ய் ஆற்றில் நிற்பது போல காட்சி)


http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=Fa3lNljUMRA

நீங்கள் சொன்ன செய்திகளை வைத்துப் பார்க்கும் போது இயக்குனர் திலகத்தின் 'சின்னஞ்சிறு உலகம்' படத்திலும் இதே சூழல் கொண்ட காட்சிகள் உண்டு. அண்ணன் தங்கையான ஜெமினியும், கே.ஆர்.விஜயாவும் இணைந்து பாடும்


http://www.youtube.com/watch?v=kzh-0FYIwKk&feature=player_detailpage

'மனசிருக்கணும் மனசிருக்கணும்
பச்சப் புள்ளையாட்டம்
அது வெளுத்திருக்கணும் வெளுத்திருக்கணும்
மல்லியப் பூவாட்டம்'

பாடலும் மல்லியம் கிராமம், அதன் சுற்றுப் பகுதிகளில் படமாகப்பட்டிருக்க வேண்டும். அது மட்டுமல்லாமல் கண் கண்ட தெய்வம், அதன் கார்பன் காப்பி 'படிக்காத பண்ணையார்' இதிலெல்லாம் கூட கோபாலகிருஷ்ணன் தன் சொந்த கிராமத்தில் படப்பிடிப்பு நடத்தியிருப்பார் போல.

இதுவல்லாமல் 'செல்வம்' திரைப்படத்தில் கே.ஆர்.விஜயா ஆற்றில் குடத்தில் தண்ணீர் எடுத்துக் கொண்டு மேலை நாட்டில் படிப்பை முடித்துவிட்டு ஆகாயத்தில் பறந்து வரும் வரும் 'நம் செல்வ'த்திற்காக காத்திருக்கும் இடம், 'அவளா சொன்னாள்' பாடல் காட்சியில் வரும் ஆற்று அணைப்பகுதி (உள்ளத்தில் உள்ளது உதட்டிலே வந்ததா)

அதே போல தன்னுடன் ஒத்துழைக்காததினால் விஜயாவை கோபத்துடன் நடிகர் திலகம் ஆற்றில் பிடித்துத் தள்ளும் காட்சி என்று நினைவலைகளை ஆற்றலைகளுக்கு இழுத்துச் சென்று விட்டீர்கள் கார்த்திக் சார்.


https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=7YPCHYNItqk

ஒன்று புரிகிறது.

ஆறு ,அணை, குளம், குறவர்கள் இல்லாமல் படம் எடுக்க மாட்டார் 'இயக்குனர் திலகம்'.

இதே போல தனது சொந்த மண்ணில் அடிக்கடி படப்பிடிப்பு நடத்தும் இன்னொரு இயக்குனர் தங்கர் பச்சான். பண்ருட்டிக்கு அருகே உள்ள பத்தரக் கோட்டைதான் இவரது ஊர்.

அழகி, ஒன்பது ருபாய் நோட்டு, அம்மாவின் கைபேசி போன்ற படங்களின் ஷூட்டிங்கை இங்கேதான் வைத்துக் கொண்டார் பச்சான்.
எங்கள் நெய்வேலியிலிருந்து ஒரு இருபது கிலோமீட்டர்தான் இருக்கும்.

mr_karthik
24th July 2014, 06:56 PM
டியர் கிருஷ்ணாஜி..! ('ஜி' போடுவதில் ஒரு சௌகரியம், 'சார்' போடவேண்டியதில்லை).

'ஒருதலை ராகம்' படத்திலேயே எனக்கு மிகவும் பிடித்த பாடலான 'இது குழந்தை பாடும் தாலாட்டு' பாடலைப்பதித்து மனத்தைக் கனக்க வைத்து விட்டீர்கள். அந்தப்படத்தில் அனைத்துப்பாடல்களுமே சூப்பர் என்றாலும் இது அனைத்திலும் அருமையானது. ஆனால் படம் வெளியான காலத்தில் 'வாசமில்லா மலரிது' பாடல் அநியாயத்துக்கு ஹிட்டாகித் தொலைத்தது.

உண்மையில் இப்படத்தின் ரயில்நிலையக் காட்சிகள் மட்டுமே மயிலாடுதுறையில் (அன்றைய மாயவரம்) படமாக்கப்பட்டது. மற்ற காட்சிகளனைத்தும் மாயவரம் அருகிலுள்ள மன்னம்பந்தலில் படமாக்கப்பட்டது. அதனால்தான் பார்க்க கிராமம் போல தெரிகிறது, உண்மையில் மாயவரம் பெரிய நகரம். அது படத்தில் காட்டப்படவில்லை. கடற்கரைக் காட்சிகள் மாயவரம் அருகிலுள்ள தரங்கம்பாடியில் எடுக்கப்பட்டதாக சொல்வார்கள். படத்தில் இடம்பெறும் ஏ.வி.சி.கல்லூரியும் கூட மன்னம்பந்தலில்தான் இருக்கிறது.

இந்தப்பாடலில் கடைசி பல்லவியின்போது சங்கர் கைகளைக் கட்டிக்கொண்டு நிற்கும் வீடு வடகரையிலுள்ள ஈ.எம்.இப்ராகீம் அவர்களின் வீடு என்று ஒருமுறை டி.ஆர்.சொல்லியிருந்தார்.

‘இது குழந்தை பாடும் தாலாட்டு’ மூலம் மாணவப் பருவ நினைவுகளை கொண்டுவந்துவிட்டீர்கள். நன்றி.

RAGHAVENDRA
24th July 2014, 07:26 PM
மின்னல் வேகமாய் பறந்தடிக்கும் திரியில் படித்து பதில் பதிவிட நிச்சயம் நமக்கு நேரம் தேவை தான்.

விஜயநிர்மலா மஞ்சுளா என ஆற்றங்கரையில் அளவளாவி பத்மினியில் வந்து நிற்கும் பதிவுகள் நமக்கும் ஆற்றில் நீராடச் செய்யும் உணர்வையல்லவா தருகின்றன.

ஒவ்வொருவரின் எழுத்தும் ஒவ்வொரு மகுடம். தொடருங்கள் அனைவரும்.

சித்தி திரைப்படத்தில் இடம் பெற்ற சந்திப்போமா பாடல் முன்பே கற்பகம் படத்திற்காக உருவாக்கப் பட்ட மெட்டு என ஒரு பேச்சு அக்காலத்தில் வந்ததுண்டு. அதில் முத்துராமனுக்கும் ஷீலாவுக்கும் ஒரு டூயட் வைக்கும் எண்ணமிருந்ததாகவும் கடைசியில் கைவிடப்பட்டதாகவும் அந்த மெட்டையே சைக்கிள் ஓசைகளை இணைத்து சித்தி படத்திற்கு பயன்படுத்தியதாகவும் சொல்வார்கள்.

vasudevan31355
24th July 2014, 07:37 PM
கிருஷ்ணா சார்,

ஒருதலை ராகம். அன்று சோகமாய் ரசித்தது போலவே இன்றும் உங்களாலும், கார்த்திக் சாராலும் அதே சோகத்துடன் ரசிக்க முடிகிறது.
நன்றி!

vasudevan31355
24th July 2014, 07:41 PM
கொடுத்து வைத்த 'குலதெய்வம்'.

ஜாலியான 'சீர்காழி'

அழகான 'ஞான ஒளி' விஜய நிர்மலா.

டீஸிங் சாங்.

மாலையும் ,இரவும் சந்திக்கும் நேரத்தில் கேட்க சுகமாய் இருக்கிறது.


http://www.youtube.com/watch?v=ystoa0-Xt_s&feature=player_detailpage

Russellmai
24th July 2014, 08:55 PM
வாசு சார்,
சித்தி திரைப்படத்தில் இடம் பெற்ற- சைக்கிள் வண்டி
போல-பாடலைக் குறித்து தாங்கள் தெரிவித்துள்ள
கருத்துக்கள் அருமை.கொடுத்து வைத்தது-குலதெய்வம்-
மட்டுமல்ல.நாங்களும் தான்.
அன்பு கோபு

vasudevan31355
24th July 2014, 09:07 PM
ராஜேஷ் சார்,

நைட் ஷிப்ட் போவதற்கு முன்னால் 'ஆசைமகன்' திரைப்படத்திலிருந்து உங்களுக்காக ஒரு பாடல்.

http://4.bp.blogspot.com/-DZrotRpU-OE/UTIHSs1M-XI/AAAAAAAAAL0/CKzoYtIPmsc/s1600/Aasai+Magan++++PAADALGAL.jpg

'ராஜாவே
நல்ல ரோஜாவைப் பார்.
பொன் காலை நேரம்
பூஞ்சோலை ஓரம் பூத்திருக்கு
உனக்கு காத்திருக்கு'


http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=f9a2L9S2i4g

rajeshkrv
24th July 2014, 10:05 PM
ஆசை மகன் பாடலுக்கு நன்றி.

சித்தி எல்லா மொழியிலும் வந்தது. தெலுங்கில் பின்னி, கன்னடத்தில் சிக்கம்மா

இதோ தண்ணீர் சுடுவதென்ன கன்னட வடிவம்

வீடியோவை தரமேற்றியவர் இசையரசி என குறிப்பிட்டுள்ளார் ஆனால் குரல் பி.வசந்தா
இசையரசி பாடியது அந்த காலவிது காலவிது பாடல் மட்டுமே கன்னடத்தில்



http://www.youtube.com/watch?v=Ht_ehBdd6WI

சைக்கிள் வண்டி பாடல்


http://www.youtube.com/watch?v=bIm45dsy20I

rajeshkrv
24th July 2014, 10:20 PM
இதில் விசேஷம் என்னவென்றால் தெலுங்கு பின்னியில் பத்மினியின் வேடம் தேவிகாவிற்கு, விஜய நிர்மலா தனது வேடத்தை தெலுங்கிலும் செய்தார்.

சில ஆண்டுகளுக்கு பின், அதே விஜய நிர்மலா அதே பின்னி படத்தை தானே டைரக்ட் செய்து முக்கிய கதாப்பாத்திரமான பின்னி(சித்தி) வேடத்தில் நடித்தார்.
தன் மகன் நரேஷை அதில் நடிக்க வைத்தார். துளசி (ஒரிஜினல் விஜய நிர்மலா வேடமேற்றார்)

அதிலும் காலமிது காலமிது போல பாடலுண்டு இதோ


http://www.youtube.com/watch?v=_dDanwSQz5w



http://www.youtube.com/watch?v=TE9a2nPYCIY

chinnakkannan
24th July 2014, 10:31 PM
சித்தி பட விவரங்கள் நன்று..தண்ணீர் சுடுவதென்ன நல்ல பாட்டு..ஆனால் இவ்ளோபசங்க பெற்ற எம்.ஆர். ராதா சித்தியாய் பத்மினியைக் கல்யாணம் செய்வது சிறுவயதில் பார்த்த போது கொஞ்சம் கோபம் தான் வந்தது..ஆனால் பத்மினியும் கொஞ்சம் கொழுக் மொழுக்கென்று வயதானவராகத் தான் தென்படுவார்.. நன்றி வாசு ஜி, க்ருஷ்ணா ஜி

ராஜேஷ் .. மனசுல எந்துகோவில் கொஞ்சம் குண்டு தான் மஞ்ச்சு..வாசு கொடுத்த ப்ளாக் அட் வொய்ட்டில் பளிச்..

ரூபா முதல் படத்தில் வேண்டுமானால் கொஞ்சம் சுமார் ஆன அழகு..மற்றபடி..ம்ஹீம்.. நோ..(அதுவும் பசி என ஏ.எஸ்.பிரகாசம் படத்தில் இவரும்ப்ரதாப்பும் பிச்சைக் காரர்களாக..ஸாரி கொஞ்சம் ஓவர்..)

ஆற்றங்கரைப் பாடல் களில் வண்ணப் பாட்டு..
ஆத்துவெள்ளம் காத்திருக்கு அழுக்குத் துணி நெறஞ்சுருக்கு

தான் நினைவில். வந்தது..

ம்ம் இன்னும் நிறைய ஆற்றுப் பாடல் கள் இருக்குமே.. ஆறு என்றால் குளியல் தானே..

பாலாடை மேனி பனிவாடைக் காற்று நீராட வந்தோமடி
சிறு நூலாடும் இடையில்..

பாட்டும் நினைவுக்கு வருதே..(கண்ணா நீ மாறவே மாட்டே!)

chinnakkannan
24th July 2014, 10:36 PM
அது என்னமோங்க சுருக்கமா அழைச்சா நெருக்கம் ஜாஸ்தியா இருக்காற்போல இருக்கு கார்த் ஜி :)_

RAGHAVENDRA
24th July 2014, 10:53 PM
1977ம் ஆண்டு வெளியான திரைப்படம் தேவியின் திருமணம். இந்தப் படத்தின் பெயர் சொன்னால் பலர் மறந்திருக்கலாம். ஆனால் இந்தப் பாட்டைச் சொன்னால் உடனே ஞாபகம் வந்து விடும்.

அம்மாடி கொஞ்ச நேரம் கொஞ்ச வேண்டும் ஓடி வா .. குழந்தையைக் கொஞ்சுவதாக பாடல் வரிகள்... வாணியின் குரலில் இருக்கும் அந்த தனித்தன்மை... நம்மை என்னவோ செய்யும்

கேளுங்கள்

http://www.inbaminge.com/t/List%20Of%20Tamil%20Films%20In%201977.html

RAGHAVENDRA
24th July 2014, 10:59 PM
http://www.inbaminge.com/t/n/Nee%20Vazha%20Vendum/ -

இதுவும் மன்மத ராசா தான்... இந்த மன்மத ராசாவை நீங்கள் நிச்சயம் விரும்புவீர்கள்.. குறிப்பாக இடையிசையில் வரும் புல்லாங்குழல் அப்படியே மெய் மறக்கச் செய்யும்.. ஜெயச்சந்திரன் பி.சுசீலா குரல்களில் சொக்க வைக்கும் பாடல்...

நீ வாழ வேண்டும் திரைப்படத்தில் மெல்லிசை மன்னரின் இசையில் நீ வாழ வேண்டும்...

RAGHAVENDRA
24th July 2014, 11:06 PM
ஒரு நினைவூட்டலுக்காக..

திருக்கோயில் தேடி ரதி தேவி வந்தாள்

http://www.inbaminge.com/t/m/Mittai%20Mummy/

RAGHAVENDRA
24th July 2014, 11:13 PM
வீடு வரை உறவு ....

கூடு வரை இனிமை ....

ஏடு வரை பெருமை...

http://www.inbaminge.com/t/v/Veedu%20Varai%20Uravu/

இசை ஊஞ்சலிலே அசைந்தாடட்டுமா ...

விரல் சேர்த்து தந்தியை மீட்ட்டுமா...

ஆஹா... கேட்டுக் கொண்டே இருப்பதற்காகவே மெல்லிசை மன்னர் படைத்த பாடல்களில் இதுவும் ஒன்று...

அதுவும் எஸ்.பி.பாலா வின் குரலில் பஞ்சணை வந்தவள் பேரைச் சொல்லும் போது....

கேட்டுத் தான் பாருங்களேன்...

RAGHAVENDRA
24th July 2014, 11:16 PM
கர்ணன் பாடலை நினைவூட்டும் மஞ்சள் இட்ட நிலமாக ....

அவள் தந்த உறவு படத்தில் இப்பாடல் மறக்கவே முடியாத பாடல்...

ஆனந்தபைரவி ராகத்தில் கேட்கும் போதெல்லாம் பரவசமூட்டும் பாடல்....

பி.சுசீலா முத்துராமன் குரல்களில்...

http://www.inbaminge.com/t/a/Aval%20Thantha%20Uravu/

rajeshkrv
24th July 2014, 11:41 PM
கர்ணன் பாடலை நினைவூட்டும் மஞ்சள் இட்ட நிலமாக ....

அவள் தந்த உறவு படத்தில் இப்பாடல் மறக்கவே முடியாத பாடல்...

ஆனந்தபைரவி ராகத்தில் கேட்கும் போதெல்லாம் பரவசமூட்டும் பாடல்....

பி.சுசீலா முத்துராமன் குரல்களில்...

http://www.inbaminge.com/t/a/Aval%20Thantha%20Uravu/

manjal ittal nilavaga.. aval thandha uravu
i did post this song recently raghavendra ji.. anyways it's always a pleasure to listen this song

madhu
25th July 2014, 03:57 AM
1977ம் ஆண்டு வெளியான திரைப்படம் தேவியின் திருமணம். இந்தப் படத்தின் பெயர் சொன்னால் பலர் மறந்திருக்கலாம். ஆனால் இந்தப் பாட்டைச் சொன்னால் உடனே ஞாபகம் வந்து விடும்.

அம்மாடி கொஞ்ச நேரம் கொஞ்ச வேண்டும் ஓடி வா .. குழந்தையைக் கொஞ்சுவதாக பாடல் வரிகள்... வாணியின் குரலில் இருக்கும் அந்த தனித்தன்மை... நம்மை என்னவோ செய்யும்

கேளுங்கள்
http://www.inbaminge.com/t/List%20Of%20Tamil%20Films%20In%201977.html

ஆஹா... ராகவ்ஜி.....குழந்தையாவது... பேபியாவது.... பீச் ரோடில் ஓடும் காரில் பத்மப்ரியா முத்துராமன் மேல் விழுந்து விழுந்து பாடும் லவ் சாங் இல்லையோ இது ? இன்னும் பெசண்ட் நகர் அஷ்டலக்ஷ்மி கோயிலில் படமாக்கப்பட்ட "ஸ்ரீதேவி வரம் கேட்கிறாள்" பாட்டும் அந்தக் காலத்தில் ஹிட்டுதான்... கொஞ்சம் கொஞ்சம் "காலங்களில் அவள் வசந்தம்" கதையைப் போல அடித்தளம் அமைந்த கதை. ஆனால் முடிவு கொஞ்சம் சரியில்லாமல் போனதால் அதிகம் பேசப்படாமல் காணாமல் போயிடுச்சு..

Richardsof
25th July 2014, 06:18 AM
நடிகர் ரவியும் ஜெய்யும் பல படங்களில் நடித்திருந்தாலும் நான்கு சுவர்கள் இடம் பெற்ற இந்த பாடல் என்றென்றும்
நினைவில் இருக்கும் . 2001ல் ஜெய் சங்கரும் 2011ல் ரவியும் நம்மை விட்டு பிரிந்தாலும் அவர்கள் இணைந்து
நடித்த இந்த பாடல் இருவரின் நினைவாக .....

http://youtu.be/bXkkNe7Kk8c
http://youtu.be/_Eua4rMaghU

vasudevan31355
25th July 2014, 07:42 AM
வீடு வரை உறவு ....




அதுவும் எஸ்.பி.பாலா வின் குரலில் பஞ்சணை வந்தவள் பேரைச் சொல்லும் போது....




பஞ்சணை வந்தாள் அவள் பேர்

சாந்தி.

வாவ். பாலா தி கிரேட்

vasudevan31355
25th July 2014, 07:45 AM
'மஞ்சள் இட்ட நிலவாக'

அற்புதமான பாடல். சுசீலாவால் மட்டுமே முடிந்த ஒன்று. நன்றி ராகவேந்திரன் சார்.

vasudevan31355
25th July 2014, 07:56 AM
பாட்டும் நினைவுக்கு வருதே..(கண்ணா நீ மாறவே மாட்டே!)

http://i.ytimg.com/vi/hLKb4tChqUU/0.jpg

குத்தால அருவியில் குஜால் பாட்டு

vasudevan31355
25th July 2014, 07:59 AM
வாசு சார்,
சித்தி திரைப்படத்தில் இடம் பெற்ற- சைக்கிள் வண்டி
போல-பாடலைக் குறித்து தாங்கள் தெரிவித்துள்ள
கருத்துக்கள் அருமை.கொடுத்து வைத்தது-குலதெய்வம்-
மட்டுமல்ல.நாங்களும் தான்.

அன்பு கோபு

Thanks Gopu Sir.

vasudevan31355
25th July 2014, 08:08 AM
ராஜேஷ் சார்!

சித்தி, சிக்கம்மா என்று 'பின்னி' எடுக்கிறீர்கள்.

அனைத்தும் அருமை. நீங்கள் திரியின் பெருமை.

rajeshkrv
25th July 2014, 08:10 AM
வாசு சார், ஆம் அந்த நடிகர் டி.கே.பாலசந்தரின் தான்
எனக்கு எப்பவுமே முஸ்தபா மற்றும் இவருக்கு சிறு குழப்பம் உஇண்டு

இவர் எம்.ஜி.ஆருக்கு தம்பியாக ஒரு படத்தில் நடித்திருந்தார்

இதோ இவரும் ஷைலஸ்ரீயும் பாடும் மலையாள டூயட்
மென்குரலோனும், இசையரசியும்


http://www.youtube.com/watch?v=ylWpNW7FfO0

rajeshkrv
25th July 2014, 08:10 AM
ராஜேஷ் சார்!

சித்தி, சிக்கம்மா என்று 'பின்னி' எடுக்கிறீர்கள்.

அனைத்தும் அருமை. நீங்கள் திரியின் பெருமை.

வாசு ஜி.. நன்றி ..

rajeshkrv
25th July 2014, 08:11 AM
'மஞ்சள் இட்ட நிலவாக'

அற்புதமான பாடல். சுசீலாவால் மட்டுமே முடிந்த ஒன்று. நன்றி ராகவேந்திரன் சார்.

ஆம் அருமையாக சொன்னீர்கள்

vasudevan31355
25th July 2014, 08:27 AM
வணக்கம் ராஜேஷ் சார்.

நன்றி!

இதே போல நம் அருமைப் பாடகி 'கஸ்தூரி விஜயம்' திரைப்படத்தில் ஒரு பாடலை பாடி அசத்தோ அசத்து என்று அசத்தியிருப்பார்.

கே.ஆர்.விஜயா பாடுவதாக அமைந்த இப்பாடல் காட்சி நம் தமிழ்நாட்டு திருமணச் சடங்குகளை அழகாக படம் பிடித்துக் காட்டுகிறது.

மங்களகரமாக ஒலிக்கும் இசையரசியின் இந்தப் பாடல் என் மறக்க முடியாத பாடல்களில் ஒன்று.

'பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரம் ஆண்டு
தம்பதிகள் வாழியவே இல்லறம் கண்டு'

'தம்பதிகள்' உச்சரிப்பு அருமை. (மாப்பிள்ளையாக நடிப்பவரை எங்கு பிடித்தார்கள்? அப்படியே 'சோளக் கொல்லை' பொம்மை மாதிரியே இருக்கிறார். ஆனால் உறுத்தவில்லை.)


https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=MuYQxWBEsB4

RAGHAVENDRA
25th July 2014, 08:43 AM
ராஜேஷ் சார்
தங்கள் விளக்கத்திற்கு நன்றி.

RAGHAVENDRA
25th July 2014, 08:44 AM
டி.கே. பாலச்சந்தர், சௌகார் ஜானகியின் ஜோடியாக அவள் யார் படத்தில் நடித்திருந்தார். இவர்கள் இருவருக்கும் உள்ள டூயட் பாடல் தான் ஏ.எம்.ராஜா பாடிய பட்டுப்பூச்சிப் போலும் ராஜா.

RAGHAVENDRA
25th July 2014, 08:45 AM
வாசுதேவன் விஜயம் கஸ்தூரி விஜயத்துடன் மங்கலகரமாக வாழ்த்துக்களுடன் தொடங்கியுள்ளது. சூப்பர்... சார்...

வாசு சார், தங்களை நடிகர் திலகம் திரி ரொம்பவுமே மிஸ் பண்ணுகிறது...

vasudevan31355
25th July 2014, 08:46 AM
ஒன்று கவனித்தீர்களா

புன்னகை அரசிக்கு லேடி எம்ஜிஆர் என்ற நினைப்பு வந்து அக்கிரமங்களைத் தட்டிக் கேட்பது, ஏழைகளுக்காகப் போராடுவது, பெண் உரிமை காப்பது என்று ஹீரோயின் சப்ஜெக்ட்டாக நடித்த படங்கள் நிறைய.

http://www.5eli.com/Lyrics/wp-content/uploads/2011/09/KasthuriVijayam.jpg

திருடி
வாயாடி
மகராசி வாழ்க
கஸ்தூரி விஜயம்
மேயர் மீனாட்சி
ரோஷக்காரி
கியாஸ்லைட் மங்கம்மா
ஆயிரத்தில் ஒருத்தி
என்ன முதலாளி சௌக்கியமா
கண்ணம்மா
நாடகமே உலகம்
நத்தையில் முத்து
சபதம்

இதுவல்லாமல் நிறைய சாமி படங்கள் (நம்ம வீட்டு தெய்வம் மாதிரி)
'
என்று ஹீரோயின் ஓரியண்டெட் சப்ஜெக்டாகவே நடித்தார். கே.எஸ்.கோபாலகிருஷ்ணன், அவினாசி மணி, மதுரை திருமாறன் புண்ணியம் கட்டிக் கொண்டார்கள்.

ஆனால் எல்லாவற்றிலும் பாடல்கள் அருமையாக இருக்கும் என்பது ஒரு சிறப்பு.

Russellisf
25th July 2014, 09:46 AM
கண்ணதாசன் நினைவுகள்-3

கவிஞரின் கதாநாயகர்கள் சிறந்த வர்ணனையாளர்கள். அவன் நாயககிகள் கிட்டத்தட்ட நான்கு குணங்கள் கொண்டவர்கள்தான். அவர்கள் லேசாக எட்டி பார்ப்பது தங்கள் நாயகர்களுடன் சேர்ந்து பாடும்பொழுது மட்டும்தான்.

வாயின் சிவப்பு விழியிலே மலர்கண் வெளுப்பு இதழிலே
என்று அவன் கூறும்பொழுது கொஞ்சம் வெளியில் வந்து
இரவே இரவே விடியாதே இன்பத்தின் கதையை முடிக்காதே
சேவல் குரலே கூவாதே சேர்ந்தவர் உயிரைப் பிரிக்காதே என்பார்கள்.

ஆனால் இவன் நாயகர்கள் என்ன பிரமாதமாக வருணிப்பார்கள் தெரியுமா?

எண்ணிரண்டு பதினாறு வயது அவள் கண்ணிரண்டில்
ஆடுதம்மா காதல் கொண்ட மனது
என்பதோடு நில்லாமல்
முன்னிரண்டு மலர் எடுத்தாள்
என் மீது தொடுத்தாள்
முக்கனியும் சர்க்கரையும்
சேர்த்தெடுத்துக் கொடுத்தாள் என்கிறான் ஒருவன். என்ன ஒரு ரசனை அவனுக்கு.

கம்பன் கண்ட சீதை உந்தன் தாயல்லவோ?
காளிதாசன் சகுந்தலை உன் சேயல்லவோ?
அம்பிகாபதி அணைத்த அமராவதி
சென்றபின்னர் பாவலர்க்கு நீயே கதி
என்று நாயகியை ஒருவன் தலையில் வைத்துக் கொண்டாடுகிறான்.

கட்டி தங்கம் வெட்டி எடுத்து
காதல் என்னும் சாறு பிழிந்து
தட்டி தட்டி சிற்பிகள் செய்த உருவமடா -அவள்
தளதள என்று ததும்பி நிற்கும் பருவமடா
என்று இன்னொருவன் காதல் Phd வாங்கி விடுவான் போல வருணிக்கிறான்.

இடையழகு மயக்கம் தந்தது
இசையழகு மொழியில் வந்தது
நடையழகு நடனம் ஆனது
நாலழகும் என்னை வென்றது. என்று ஒருவன் பட்டியல் போடுகிறான்.

கொடித்தேன் இனிஎங்கள் குடித்தேன்
என் ஒரு படித்தேன் பார்வையில் படித்தேன்
துளித் தேன் சிந்தாமல் களித்தேன்
கைகளில் எடுத்தேன் அழகினை ரசித்தேன்.
என்றும் தனது தேனான வர்ணனையை கொட்டித் தீர்க்கிறான் ஒருவன்.

இந்தப் பாடலும் அதன் சூழ்நிலையும் அதற்குக் கவிஞர் தனது அபாரமான கற்பனைத் திறனையும் புகுத்திய விதம் கூறினால்தான் கண்ணதாசன் ஒரு பிருமாண்டத் கவிஞன் என்பது விளங்கும்

மகாபாரத யுத்தம் முடிந்து அசுவத்தாமன் அத்தனை பாண்டவக் கொழுந்துகளையும் வெட்டி சாய்த்து விடுவான். அபிமன்யு கௌரவர்களின் சூழ்ச்சியால் முதலிலேயே இறந்து விடுவான். உத்தரை வயிற்றில் இருக்கும் பரிட்சித்து மகராஜாவின் உயிரைக் கூட அசுவத்தாமன் ப்ரும்மாஸ்திரம் மூலம் கொல்லப் பார்ப்பான். ஆனால் ஸ்ரீ கிருஷ்ணரால் அந்தக் கரு காப்பாற்றப் படும்.

கொடித்தேன் இனி எங்கள் குடித்தேன் என்ற ஒரே சொல்லான குடித்தேன் என்பதில் மகாபாரதக் கதை முழுவதையும் கவிஞர் சொல்லி முடித்து விடுவார்.
இந்தப் பாடலை கவிஞர் திக் என்று நெஞ்சு துக்கிக்கும் விதமாக முடிப்பார்.

உத்தரை பதிலுக்கு “ இனி தேன் இல்லாதபடி கதை முடித்தேன்” என்று பாடுவாள். மறுநாள் போருக்குப் போகும் அபிமன்யு மீண்டும் திரும்ப மாட்டான் என்பதற்குக் கட்டியங்கூறும் விதமாக அவள் பாடல் அமைந்திருக்கும்.கண்ணதாசன் அபாரமானப் பாடல்களில் இதுவும் ஒன்று.

இன்னொரு நாயகன் உருகும் அழகைப் பாருங்கள்
பால் என்று சொன்னாலும் பழம் என்று சொன்னாலும்
ஏன் என்று தேன் வாடுமே
நூல் கொண்ட இடை இன்னும் நூறாண்டு சென்றாலும்
தேர் கொண்ட ஊர்கோலமே.
வண்ணம் பாட ஒரு வார்த்தை நான் தேடினேன்
எங்கும் தேடி முகம் பார்த்துப் பதம் பாடினேன்.
நிஜமாகவே கண்ணதாசன் வரிகளுக்கு அபிநயம் பிடித்த நாயகர்கள் கொடுத்து வைத்தவர்கள்.

காலங்களில் அவள் வசந்தம் என்று வருணிக்கும் நாயகன் போடும் பட்டியல் மிகப் பெரிது.

கல்யாணப் பந்தலில் ஆடும் தோரணமா?- இல்லை
கச்சேரி ரசிகர்கள் கேட்கும் மோகனமா?
செண்டாடும் சேயிழைதானா? தெய்வீகக் காதலிதானா?
செந்தூரம் கொஞ்சும் முகத்தில் செவ்வாய் மின்னும் தேன்மொழிதானா?
என்ற அவனுடைய வர்ணனைபிரவாகம் மலைக்க வைக்கிறது.

இன்னும் கூறிக் கொணடே போகலாம். இவை ஒரு சில மாதிரிகள்தான். கவிஞரை ரசிக்க அவருடனே பயணித்தால் மட்டுமே முடியும்.

ஆண் மயிலுக்குத் தோகை என்பார்கள். கவிஞரின் நாயகர்களுக்குப் பந்தல் போட்டு படரும் வருணனைதான் தோகை.

இப்படி இணைத்த இருவரின் இல்லற வாழ்வினை கவிஞரின் வரிகள் மூலம் நாளை கூறுகிறேன். அப்பொழுதுதானே காதலைப் போற்றிய கவிஞரின் உண்மையான பிறந்தநாளைக் கொண்டாடியது போலாகும்?

rajeshkrv
25th July 2014, 09:58 AM
முகலே ஆசாம் தமிழில் “அக்பர்”
இந்த பாடல் பதிவிற்கு இசையரசியும், கவிஞர் கம்பதாசனும் மும்பை சென்று அங்கே பாடல்கள் பதிவாயின

என்னை என்றுமே பிரமிக்க வைக்கும் “கனவு கண்ட காதல் கதை கண்ணீராச்சே” பாடல்

ஹிந்தியில் சபையில் இரு பெண்கள் பாடும் பாடலாக ”தேரி மெஹபில் மே” ஷம்ஷத் பேகமும் லதாவும் பாடியது
தமிழில் ஜிக்கியும் இசையரசியும் பாடும் “உந்தன் சபையில் எந்தன் விதியை சோதித்தே ராஜாவே நானும் பார்த்தேனே”

கம்பதாசன் பற்றிய என் கட்டுரை முகனூலில் எழுதியது .. இதோ

பாடலாசிரியரை அறிவோம் 11- கவிஞர் கம்பதாசன்

எனக்கு இவர் பெயரை அறிமுகம் செய்தது இலங்கை வானொலி ஆம் “கனவு கண்ட காதல் கதை கண்ணீராச்சே “ என்ற அக்பர் படப்பாடல் மூலம்.
ஆம் இவரும் 1940லிருந்தே பாடல் எழுதியுள்ளார். கண்ணதாசனுக்கு முன்னால் இருந்தவர்களில் இவர் மிக முக்கியமானவர்.

கம்பதாசன் அவர்கள் 1916’ல் திண்டிவனம் அருகே ஒரு சிறிய கிராமத்தில் பிறந்தார் இயற்பெயர் ராஜப்பா, கம்பன் மீது கொண்ட ஈர்ப்பு/ஆர்வத்தின் காரணமாக
தன் பெயரை கம்பதாசன் என்று வைத்துக்கொண்டார்.
படிப்பை விட நாடகங்களில் நடிப்பது அதில் பாட்டெழுதுவது என அவரது ஆர்வம் வேறு பக்கம் இருந்தது. ஆர்மோனியமும் வாசிப்பாராம்.
அதே சமயம் தொழிலாளர் கொள்கைகளிலும் நாட்டம் உடையவராக இருந்தவர் அதனால் எழுதிய பாடல்களில் முற்போக்கு கொளகைகளில் புகுத்தி எழுதுவார்.

நாடகங்களில் பாட்டு எழுதி வந்த இவரை திரைப்படத்துறையும் இழுத்துக்கொண்டது. ஆம் 1940’ல் வெளிவந்த வாமன அவதாரம் என்ற படத்திற்கு முதலில் பாட்டெழுதினார்.
அதை தொடர்ந்து வேணுகானம், பூம்பாவை படங்களுக்கு எழுதினார்.
வேணுகானம் திரையில் இவர் எழுதிய எப்ப வருவாரோ பாடலை என்.சி.வசந்தகோகிலம் பாடினார்.

1948’ல் வெளிவந்த ஞானசெளந்தரி (ராஜம்மா,மகாலிங்கம் நடித்த படம்)படத்தில் நிறைய பாடல்கள் எழுதினார். இன்றும் நம் மனதில்
இனிமையாக ஒலிக்கும் “ஆதியே இன்ப ஜோதியே” பாடல், ஜென்ம பயன் அடைந்தேனே, ஜீவிய பாக்கியமே, காதலில் காணும் இன்பம்,
குல மாமணி, மன மோகனனே என்ற பாடல்கள் எல்லாமே இனிமையானவை அழகு தமிழில் இவரது பாடல்கள்..

1949’ல் வெளிவந்த பி.யு.சின்னப்பாவின் மங்கையர்க்கரசி படத்தில் இவர் இயற்றிய பாடல்கள் மிகவும் அருமையானவை
“பார்த்தால் பசி தீரும்”,விண்ணில் பறந்து செல்லும் வெண்புறாவே, மிகவும் பிரபலமான “காதல் கனிரசமே” எல்லாமே மறக்க முடியாத பாடல்கள்.

1951’ல் வெளிவந்த வனசுந்தரி படத்தில் இடம்பெற்ற காணாத காதல் பேரின்பம்,கண்ணிலே விளையாடுது போன்ற பாடல்கள் இவரது
தமிழுக்கு எடுத்துக்காட்டு.

50’களில் நிறைய புகழ்பெற்ற ஹிந்தி படங்கள் தமிழ் மொழிமாற்றம் செய்யப்பட்டன் .. ஆம் வானரதம், அவன் போன்றவை
மிகவும் பிரபலம்

அவன் (ஆன் ஹிந்தியில்)1953’ல் வெளிவந்த ப்டத்தில் எல்லா பாடல்களையும் எழுதியது இவரே
“கல்யாண ஊர்வலம் வரும் “ ஜிக்கி குரலில் ஒலித்த பாடல் இன்றும் ஹிந்தி பாடலுக்கு இணையான பாடல்.

1956'ல் வானரதம்(ஹிந்தியில் உதான் கோட்லா), இதில் லதா மங்கேஷ்கர் தமிழில் பாடியிருப்பார்.
எந்தன் கண்ணாளன்,என்னை கண்டே ஏங்குவாய்,என் உள்ளம் விட்டு ஓடாதே, ஆசை தாரை போன்ற பாடல்கள்
இவரைத்தவிர பாலசரஸ்வதி பாடிய சுடர் தாரை சபையில், நெஞ்சின் நிலமை என்ன சொல்வேன்,
டி.ஏ.மோத்தி பாடிய பாடல்கள் என வானரதம் பாடல்கள் அனைத்தும் தமிழ் மக்களின் மனதை மயக்கிய பாடல்கள்
இவை எல்லாவற்றையும் எழுதியது கம்பதாசன் அவர்கள்.

சினிமா பாடல்கள் எழுதிக்கொண்டே கவிதைகளையும், நூல்களையும் எழுதி தள்ளினார்.

1961’ல் ஹிந்தியில் பிரபலமான முகலே ஆசாம் தமிழில் அக்பர் என்று மொழி மாற்றம் செய்யப்பட்டது. இதன் பாட்லகள்
மும்பையில் தமிழுக்காக மீண்டும் ஒலிப்பதிவு செய்யப்பட்டது. மும்பைக்கு கம்பதாசனும்,சுசீலாம்மாவும் சென்றனர்.
அனைத்து பாட்லகளும் அங்கே திரு நெளஷாத் அவர்கள் ஒலிப்பதிவு செய்ததை இசையரசி மனதோடு மனோவில் நினைவு கூர்ந்தார்.

லதாவின் குரலில் ஒலித்த அனைத்து பாடல்களும் இசையரசியின் குரலில் ஒலித்தது.
காதல் கொண்டாலே பயம் என்ன,ஆற்றின் கரைதனிலே கண்ணன் என்னை கேலி செய்தான்,
ஜிக்கியுடன் உந்தன் சபையில் எந்தன் விதியை என்ற பாட்லகள் அருமையாக அமைந்தது,
மைல்க்கல்லாக அமைந்த பாடல் “கனவு கண்ட காதல் கதை கண்ணீராச்சே” பாடலின் வரிகள் ஹிந்தி பாடல் என்ன சூழலில் ஒலித்ததோ
என்ன அர்த்தம் பொதிந்து வந்ததோ அதே பலத்தை தமிழில் அருமையாக கொண்டு வந்திருப்பார் கம்பதாசன்.அதை இசையரசி பாடியிருக்கும் விதம்
வார்த்தைகளில் வர்ணிக்கமுடியாது .. அருமை அருமை.

காச நோயின் காரணமாக 1973’ம் ஆண்டு இந்த தமிழ் கவி இந்த உலகத்தை விட்டு மறைந்தது.

கம்பதாசன் தமிழ் நாட்டின் முதல் தர கவிஞர்கள் வரிசையில் உள்ளவர்... இவரைப்பற்றி இன்று பலருக்கு தெரியாது.
அறிமுகம் செய்வதே இந்த தொகுப்பின் நோக்கம்..



http://www.youtube.com/watch?v=gctkrVBkpKQ

vasudevan31355
25th July 2014, 09:59 AM
அருமை யுகேஷ் சார். நன்றிகள் பல.

vasudevan31355
25th July 2014, 10:12 AM
/கம்பதாசன் பற்றிய என் கட்டுரை முகனூலில் எழுதியது .. இதோ/

அருமையான கட்டுரை. எனக்குப் பிடித்த பல விஷயங்கள் இருக்கின்றன. நடிகர் திலகம் திரியில் கூட சமயம் கிடைக்கும் போதெல்லாம் 'முகலே ஆசாம்' படத்தைப் பற்றி நான் குறிப்பிட மறந்ததே இல்லை. அந்த அளவிற்கு என்னை ஆட்கொண்ட படம்.

நம் திரியில் கூட 'கனவு கண்ட காதல் கதை கண்ணீராச்சே' (அக்பர்), 'எந்தன் கண்ணாளன்' (வானரதம்) பாடல்களை 'இன்றைய ஸ்பெஷலா'க தந்திருக்கிறேன்.

நன்றி ராஜேஷ் சார்.

மதுபாலாவின் மயக்கும் அந்த 'pyar kiya to darna kya' வைப் பற்றி அங்குலம் அங்குலமாக அலச ஆசை. அதை பற்றிய அபூர்வ விஷயங்களைப் பதிவிடவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
அயல்நாடுகளில் இருந்து இப்பாடலுக்காகவே தருவிக்கப்பட்ட வைர வைடூரியங்கள் வரை. ...ஆறுமாத காலம் படமாக்கப்பட்ட விந்தை வரை.

vasudevan31355
25th July 2014, 10:16 AM
'முகலே ஆசாம்' முழுதும் டிஜிட்டல் கலர் செய்யப்பட்ட போது 'அக்பர்' படத்துக்காக தமிழில் மொழி மாற்றம் செய்யப்பட்ட அருமையான பாடல்களை தூக்கிவிட்டு, எக்ஸ்ட்ரா பாடகர்களை வைத்து மீண்டும் பாட வைத்து பாடல்களையே கொலை செய்து விட்டார்கள் ராஜேஷ் சார். சகிக்கவே இல்லை.

கலைஞர் தொலைக்காட்சியில் ஆவலாகப் பார்க்க உட்கார்ந்து நொந்து போனேன்.

rajeshkrv
25th July 2014, 10:19 AM
'முகலே ஆசாம்' முழுதும் டிஜிட்டல் கலர் செய்யப்பட்ட போது 'அக்பர்' படத்துக்காக தமிழில் மொழி மாற்றம் செய்யப்பட்ட அருமையான பாடல்களை தூக்கிவிட்டு, எக்ஸ்ட்ரா பாடகர்களை வைத்து மீண்டும் பாட வைத்து பாடல்களையே கொலை செய்து விட்டார்கள் ராஜேஷ் சார். சகிக்கவே இல்லை.

கலைஞர் தொலைக்காட்சியில் ஆவலாகப் பார்க்க உட்கார்ந்து நொந்து போனேன்.

அய்யோ அதை ஏன் கேட்கிறீர்கள் ... இப்பொழுது பல புதிய பாடகர்களை வைத்து பல பாடல்களை கொலை செய்வதையே தொழிலாக கொண்டுள்ளனர்
என்ன செய்வது. நான் அதையெல்லாம் கேட்பதே இல்லை .. பழையதிலேயே இன்பம் கொள்வதோடு சரி..

Richardsof
25th July 2014, 10:20 AM
வாசு சார்

1984ல் ரேகா நடித்த படம் ''உத்சவ் ''. மிகவும் பிரபலமான படம் .

ரேகாவின் எழிலான தோற்றம் - நகை அலங்காரம் கண்ணுக்கு விருந்து ,



http://youtu.be/c4AXOmUhtUc

gkrishna
25th July 2014, 10:45 AM
http://antrukandamugam.files.wordpress.com/2013/12/neelagiri-express-2.jpg?w=471http://s2.dmcdn.net/CiX1C.jpghttp://i1.ytimg.com/vi/O3HbgyxHcW4/default.jpg
நீலகிரி எக்ஸ்பிரஸ் 1968
இயக்கம் திருமலை மகாலிங்கம்
ALS Production
இசை மெல்லிசை மாமன்னர் ராமமூர்த்தி
ஜெய் சங்கர்,சோ,விஜய நிர்மலா,விஜயலலித,அசோகன்,ராமதாஸ் ,ராகவன் மற்றும் நிறைய சண்டை பயிற்ச்சி நடிகர்கள்

கதை களம் சென்னையில் இருந்து கோயம்புத்தூர் செல்லும் நிலகிரி எக்ஸ்பிரஸ்.பட ஆரம்பத்தில் ராகவன் 50000 பெறுமானமுள்ள நகைகள் உடன் அந்த ரயிலில் பயணம் செய்கிறார் அவருடன் பயணம் செய்யும் சக பயணி சோ ,விஜயலலிதா.விஜயலலிதா சோவை மயக்கி அரக்கோணம் நிலையத்தில் இறக்கி உணவு வாங்க சொல்லி விட்டு காணமல் போய் விடுகிறார் இதற்கு நடுவில் ராகவன் கொலை செய்யபடுகிறார். வழக்கம் போல் CID சங்கர் இதை துப்பு துலக்கி சோ வெகுளி .அவர் கொலை செய்யவில்லை என்று தெரிகிறது
இறுதியில் உண்மை குற்றவாளி யார் என்று கண்டு பிடிக்கிறார்

5 பாடல்கள் படத்தில்

1."வாலிபம் ஒரு வெள்ளி தட்டு ' கல்லூரி மாணவர்கள் பாடும் ரயில் பாடல் (நமது சு எ சு பாடல் போன்று ) - பாடகர் திலகம் மற்றும் ஈஸ்வரி குரல்களில்

2.அருமையான பரத நாட்டிய பாடல் - ஸ்ரீவித்யா பானுமதி நடனம்
'திருத்தணி முருக தென்னவ தலைவா ' சூலமங்கலம் மற்றும் சுசீலா குரல் என்று நினைக்கிறன்

3.'நான் கலைஞனல்ல உன்னை சிலையாகக ' பாடகர் திலகம் உடன் ஈஸ்வரி ஹம்மிங் மட்டும் (ஜெய் டூயட் சாங் )

4.'கல்யாண பெண்ணை கொஞ்சம் முன்னும் பின்னும் பாரு '
சோ பெண் வேடம் அணிந்து நடனம் ஆடுகிறார் - சுசீலா மற்றும் ஈஸ்வரி குரல்களில்

5. இறுதி பாடல் cabarat டான்ஸ் 'கடவுள் மதுவை கண்களில் ஆட வைத்தான் ' ஈஸ்வரி குரல்

சோவின் நகைச்சுவை கொஞ்சம் நன்றாக இருந்தது

இதே படம் ஹிந்தியில் 1970 இல் ராஜேஷ் கண்ணா ஹீரோஆக நடித்து
தி ட்ரைன் என்று வெளியானது
நீலகிரி எக்ஸ்பிரஸ் படமே மலையாள கொச்சின் எக்ஸ்பிரஸ் 1967 (பிரேம் நசிர் ஹீரோ) ரீமேக்

http://www.malayalamcinemahistory.com/sf/CochinExpress.jpghttp://upload.wikimedia.org/wikipedia/en/thumb/4/4a/TheTrain_1970.jpg/220px-TheTrain_1970.jpg
http://www.youtube.com/watch?v=78fMesacCzU
http://www.youtube.com/watch?v=O3HbgyxHcW4

நேற்று சன் லைப் தொலை காட்சி இந்த திரை படத்தை ஒளிபரப்பினார்கள்
நாம் இதன் பாடல்களை அலசவில்லை என்று நினைவு

vasudevan31355
25th July 2014, 10:47 AM
வாசு சார்

1984ல் ரேகா நடித்த படம் ''உத்சவ் ''. மிகவும் பிரபலமான படம் .

ரேகாவின் எழிலான தோற்றம் - நகை அலங்காரம் கண்ணுக்கு விருந்து ,



வினோத் சார்

'உத்சவ்' போல்டர் அப்படியே இருக்கிறது :)

gkrishna
25th July 2014, 10:52 AM
அய்யோ அதை ஏன் கேட்கிறீர்கள் ... இப்பொழுது பல புதிய பாடகர்களை வைத்து பல பாடல்களை கொலை செய்வதையே தொழிலாக கொண்டுள்ளனர்
என்ன செய்வது. நான் அதையெல்லாம் கேட்பதே இல்லை .. பழையதிலேயே இன்பம் கொள்வதோடு சரி..

ராஜேஷ் வாசு அவர்களே

நினைத்தாலே இனிக்கும் ''எங்கேயும் எபோதும் ' பாடலை ரீமிக்ஸ் செய்யும் போது பாடகர் பாலாவின் அங்கலாயிப்பு நினைவிற்கு வருகிறது
அந்த பாடலின் இடையே திரு யோகி என்பவர் என்ன பாடுகிறார் என்பதே புரியாது . இதை பாடகர் பாலா கூட விரும்பவில்லை. இருந்தாலும் காலத்தின் கட்டாயம் என்று பேசாமல் இருந்து விட்டார் என்று ஒரு பேட்டி படித்த நினைவு

vasudevan31355
25th July 2014, 10:55 AM
இன்று 'கலைநிலவு' ரவிச்சந்திரன் அவர்களின் நினைவு தினம்.

பெரியவர், சிறியவர், ஆண்கள், பெண்கள் என்றில்லாமல் அனைவரையும் கவர்ந்த அந்தக் கால ரஜினி.

வண்ணத்திலேயே குழைந்த வடிவழகன்

இளைஞர்களை இன்றுவரை ஈர்ப்பவன்

வெள்ளி முளைக்கும் போதே வெள்ளி விழாக்கள் தந்தவன்

விஸ்வநாதனிடம் வேலை கேட்டு போராடி 'இதயக் கமல'ங்களில் அமர்ந்த 'வாலிப விருந்த'ன்.

ரவி என்ற இரண்டெழுத்து அழகு என்ற 'மூன்றெழுத்'தானது

'சாட்டை கையில் கொண்டு' 'நான் போட்டால் தெரியும் போடு' என்று டிஷ்யூம்களை தங்கத் தமிழால் தந்த 'நாலும் தெரிந்தவன்'.

'மீண்டும் வாழ்வேன்' என்று 'சபதமி'ட்டவன் மீண்டு வராமல் மாண்டு போன நினைவு நாள் இன்று.

அதனால் என்ன?

அன்று உன்னைப் பார்த்த 'அதே கண்களா'ல் என்றும் உன் அழகைப் பருகுவோம்.

இன்று நமது திரியில் இதுவரை இணையத்தில் வெளிவராத ரவிச்சந்திரனின் அழகிய புகைப்படம்

'பேசும் படம்' இதழிலிருந்து.

நீங்கள் அதிகம் கேள்விப் பட்டிராத, வெளிவராத 'மெட்ராஸ் மைனர்' திரைப்படத்திலிருந்து.

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/3801fd85-2c67-49aa-be8e-0fccfd9eb1a2.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/3801fd85-2c67-49aa-be8e-0fccfd9eb1a2.jpg.html)

gkrishna
25th July 2014, 11:03 AM
1980 கால கட்டத்தில் ரவி அனுராதா நாகேஷ் நடித்து ஷீலா தயாரிப்பில் 'காதலிக்க 90 நாள் ' வெளி வந்ததா வாசு அவர்களே

http://s.ecrater.com/stores/47612/4843addb97ba9_47612n.jpg

vasudevan31355
25th July 2014, 11:14 AM
காலையில் 'நீலகிரி எக்ஸ்பிரெஸ்' விட்ட கிருஷ்ணா சார். பதிவும் அதே வேகம். சுகம். 'வாலிபத்து'க்கு நான் அடிமை:)ஐ மீன் வாலிபம் ஒரு வெள்ளித்தட்டு பாட்டிற்கு. படம் அறுவைதான்.

gkrishna
25th July 2014, 11:45 AM
காலையில் 'நீலகிரி எக்ஸ்பிரெஸ்' விட்ட கிருஷ்ணா சார். பதிவும் அதே வேகம். சுகம். 'வாலிபத்து'க்கு நான் அடிமை:)ஐ மீன் வாலிபம் ஒரு வெள்ளித்தட்டு பாட்டிற்கு. படம் அறுவைதான்.

ஒன்னு கவனிச்சு பாருங்க
நேற்று முன் தினம் ஹோட்டல் சொர்க்கம் ஜெய் விஜயலலிதா
நேற்று நீலகிரி எக்ஸ்பிரஸ் ஜெய் விஜயலலிதா

அந்த கண் என்ன பாடு படுத்துது சார் (விஜயலலிதா வின் கண் )

ஊமை விழிகள் படத்தில் இன்றைய நினைவு நட்சத்திர நாயகன்
ரவி சொல்வாரே "கண்கள் கண்கள் ஒ ஆஷா' பின்னாடியே பொந்தெலி சங்கீதா ரெட் கலர் னு நினைவு ஸ்விம்மிங் சூட் ஓடி வருகை

ஊமை விழிகள் படத்தில் ரவி மீள் வருகை வில்லனாக னு நினைவு
செம்பட்டை விக் தாடி கையில் ஸ்டிக் குதிரை வண்டி ஏறும் போது த்ரில்
வில்லன் பாடி language மிக அருமை

gkrishna
25th July 2014, 11:57 AM
http://www.aambal.co.uk/static/uploads/2011/07/ravicha.pnghttp://www.aambal.co.uk/static/uploads/2011/07/Ravichandran.jpghttp://antrukandamugam.files.wordpress.com/2013/09/sheela-ravichandran-manjal-kunkumam-1.jpg?w=593
ரவிச்சந்திரன் – அற்புதமான ஒரு திரைப்படக் கலைஞன்
ரவிச்சந்திரன் திருச்சியில் பிறந்த ஒரு தமிழர்; ஆனால் அவரது இளமைக் காலம் மலேசியாவின் தலைநகரம் கோலாலம்பூரில்தான் கழிந்தது. அவர் 1951ஆம் ஆண்டு தனது சகோதரியின் திருமணத்திற்காக இந்தியா திரும்பினார். அதன்பின் திருச்சியில் பட்டப்படிப்பை செயின்ட் ஜோசப் கல்லூரியில் மேற்கொண்டார்.
1963ல் பிரபல இயக்குநர் ஸ்ரீதரைப் பார்த்தபொழுது அவரது வாழ்க்கையில் மாபெரும் திருப்பம் ஏற்பட்டது. 1964ல் தமிழில் மிகச்சிறந்த படங்களில் ஒன்றான ‘காதலிக்க நேரமில்லை’ வெளிவந்தபொழுது, அதன் நேர்த்தியான கதை அமைப்பு, ஒளிப்பதிவு, இயக்கம் மற்றும் நடிகர்கள் நாகேஷ், பாலையா போன்றோரின் நகைச்சுவை, புதிய பொலிவுடன், துடுக்கான இளைஞனாக கதாநாயகனாக அறிமுகமாகிய ரவிச்சந்திரனை மிகவும் எதிர்பார்ப்புடன் மக்கள் கவனிக்கத் தொடங்கினர்.
தமிழ் திரைப்பட வரலாற்றில் தியாகராஜ பாகவதரா, பி.யூ. சின்னப்பாவா? எம்.ஜி. ராமச்சந்திரனா அல்லது சிவாஜி கணேசனா என்ற ரசிகர்களின் போட்டியின் தொடர்ச்சியாக ரவிச்சந்திரனா, ஜெய்சங்கரா என்ற போட்டியும் விவாதமும் ஆரோக்கியமான வளர்ச்சியாக அமைந்தது.
ரவிச்சந்திரன் தனது ஆளுமையால் 150க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து விட்டார். அதுமட்டுமல்லாமல் திரைப்படங்களின் பல நுணுக்கங்களையும், பெற்றிருந்தார். நடிப்புடன் நில்லாது தயாரிப்பு, இயக்கம், கதை, திரைக்கதை, பாடல்கள், படத்தொகுப்பு என பல்துறைகளிலும் தனது முத்திரையைப் பதித்து வருகிறார். பல குணசித்திர வேடங்களிலும் நடித்தவர் நடிகர் ரவிச்சந்திரன்.

ஒருகாலகட்டத்தில் தமிழ்ப்பட வளர்ச்சியில், திரைப்படக் கல்லூரி மாணவர்கள் ஒரு திருப்பத்தை ஏற்படுத்தினர். அந்த வகையில் திரைப்படக் கல்லூரியில் பயின்ற அரவிந்தராஜ் இயக்கத்தில் வெளிவந்த ‘ஊமை விழிகள்’ படம் இளந்தலைமுறையை ஒரு உசுப்பு உசுப்பியது. அதில் வில்லன் கதாபாத்திரத்தில் தோன்றி தமிழ்த் திரைப்பட ரசிகர்கள் உள்ளத்தில் மாறாத இடத்தை பிடித்தவர் நடிகர் ரவிச்சந்திரன்.
பிரபல மலையாள நடிகை ஷீலாவைத் திருமணம் செய்த இவர், பின்னர் அவரை விட்டு பிரிந்து, மீண்டும் முதல் மனைவியிடம் தஞ்சம் அடைந்தார்
அண்மையில் இவரது மகனான அம்சவிர்தனை வைத்து ‘மந்திரன்’ என்னும் திரைப்படத்தை இயக்கினார்.
நடிகர் ரஜினிகாந் நடித்த ‘அருணாச்சலம்’, கமல்ஹாசனின் ‘பம்மல் கே சம்பந்தம்’ ஆகிய திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் தோன்றிய இவர் அண்மையில் வெளிவந்த ‘ஆடு புலி’ திரைப்படத்திலும் குறிப்பிடத்தக்க வேடத்தில் நடித்திருக்கிறார்.
தமிழ்த் திரைப்படத்தில் ஸ்டைல் நடிப்பை புகுத்திய பெருமைக்கு சொந்தக்காரராக இவர் விளங்குகிறார்.

(நன்றி - ஆம்பல)

அக்கறை பச்சை திரைபடத்தில் பாலா ஈஸ்வரி குரல்களில்
மெல்லிசை மன்னர் இசை

'ஊர்கோலம் போகின்ற கிளி கூட்டங்கள் எல்லாம் ஊரார்க்கு சொல்லுங்கள் இன்று ரவி யின் நினைவு நாள் என்று "

http://www.youtube.com/watch?v=oBoKpG3pFqA

vasudevan31355
25th July 2014, 12:28 PM
கிருஷ்ணா சார்,

ரவியின் மிரட்டும் தோற்றம் 'ஊமை விழிகளி'ல் இருந்து

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/r.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/r.jpg.html)

vasudevan31355
25th July 2014, 01:15 PM
இன்றைய ஸ்பெஷல் (38)

http://img6a.flixcart.com/image/av-media/movies/k/3/r/kumari-penn-400x400-imadgkq3fyhzjfy9.jpeg

ரவிச்சந்திரன் நினைவு தினத்தையொட்டி

ரவிச்சந்திரனின் அட்டகாசமான துள்ளல் பாடல். 'குமரிப் பெண்' திரைப்படத்திலிருந்து.

'தங்கச்சுரங்கம்' தந்த அதே 'ஈ.வி.ஆர்.பிக்சர்ஸ்' தயாரித்தது. ராமண்ணா இயக்கம். ஜெயலலிதா, நாகேஷ், மனோகர், மேஜர் என்று வழக்கம் போல நட்சத்திரப் பட்டாளம்.

பொதுவாக ஹீரோ வில்லனிடம் பாடிக் கேட்டிருப்போம். இந்தப் பாடல் கொஞ்சம் வித்தியாசமான கற்பனை கலந்தது.

ஹீரோ ரவியை அந்த வீட்டில் நுழைய விடாமல் கூர்க்கா தடுக்க, ரவி செம கலாட்டா செய்து அந்த கூர்க்காவிடம் பாடுவார். அதனால் பாடலின் தொடக்கமே இந்தியில் 'ஜாவ்ரே ஜா' என்று. ஜம்மென்று.

கூர்க்காவின் வேலையை ஆரம்ப வரிகளில் கிண்டல் செய்து இந்தப் பாட்டு இருக்கும்.

'நீ இந்த வீட்டின் கேட்டுக்கு ராஜாவாக இருக்கலாம்... ஆனால் நான் இந்த வீட்டுக்கே ராஜா' என்ற பொருள்படப் பாடுவார் ரவி.

கூர்க்கா காவலாளியிடம் செம கலாய்ப்பு.

'டெய்லி ராத்திரியில் காவல் காக்காம தூங்கு திருட்டுப் பசங்க திருடிக்கிட்டுப் போறதுகூட தெரியாம.... அப்புறம் எவன் அகப்படுகிறானோ அவனைப் பிடிச்சி திருடன்னு சொல்லு...இதில ஆர்ப்பாட்டம் வேறயா?' என்ற அர்த்தத்தில் கூர்க்காவிடம் பாடுவது வித்தியாசம்தானே!

அப்புறம் வீட்டுக்குள் சி.கே.சரஸ்வதி, 'என்னத்தே' கன்னையா போன்றோரிடம் படுசுறுசுறுப்பாக ஆட்டமும், பாட்டுமாய் இளங்கன்று போல் துள்ளுமிடங்களில் ரவி அமர்க்களப்படுத்துகிறார். இளமை பொங்கி வழிகிறது. மனிதர் அங்கே ஓடி இங்கே ஓடி, இப்படித் தாவி அப்படித் தாவி ஒரு இடத்தில் நிற்காமல் படுசுட்டித்தனம்.

மென்மையான பாடல்களுக்கு சொந்தக்காரரான பி.பி.ஸ்ரீனிவாஸ் இப்பாடலில் முழுதும் வித்தியாசம் காட்டி இருப்பார். இசை மெல்லிசை மன்னர். பாடல்கள் கவிஞர் கண்ணதாசன். ('நாலு காலுக்கொரு வால் சொந்தமோ' எழுத இவரை விட்டால் வேறு யார்)

http://sim03.in.com/2/1788d20f30bf0c1be33b81ff8b1184f1_ls_t.jpg

'வருஷத்தைப் பாரு' (ராட்சஸி ஒரு முறை... பாடகர் திலகம் மறுமுறை)

'நடந்தது என்னவென்று நீயே சொல்லு' (ரவி, ஜெயா சைக்கிள் குதூகலம்)

'யாரோ ஆடத் தெரிந்தவர் யாரோ'...(எல்.ஆர்.ஈஸ்வரியின் மாஸ்டர் பீஸ்).

'தேனிருக்கும் மலரினிலே நீ இருக்க சம்மதமா' (ஜெயலலிதா கஜல்)

என்று சூப்பர் பாடல்கள்.

http://i1.ytimg.com/vi/QWKGrRiiyKk/sddefault.jpg

சரி! இன்றைய ஸ்பெஷலுக்கு வந்து விடுவோம்.

ஜாவ்ரே ஜா...இந்த கேட்டுக்கு நீ ராஜா
ஜாவ்ரே ஜாஅந்த வீட்டுக்கு நான் ராஜா

ஜாவ்ரே ஜா...இந்த கேட்டுக்கு நீ ராஜா
ஜாவ்ரே ஜா...அந்த வீட்டுக்கு நான் ராஜா

தினம் தினம் இரவினில் தூங்கி விட்டு
திருடரைத் திருடிக் கொண்டோட விட்டு
தினம் தினம் இரவினில் தூங்கி விட்டு
திருடரைத் திருடிக் கொண்டோட விட்டு
அகப்பட்ட மனுஷனைப் பிடிக்கிற வேலை
ஆர்ப்பாட்டம் என்ன ராஜா

ஜாவ்ரே ஜா...இந்த கேட்டுக்கு நீ ராஜா
ஜாவ்ரே ஜா...அந்த வீட்டுக்கு நான் ராஜா

ஹாஹஹஹா ஓஹோஹோஹோ லாலாலல
பம்பம்பம்பம்...

காக்கைக்கும் குருவிக்கும் கடல் சொந்தமோ
கழுதைக்கு சுமக்கிற பொதி சொந்தமோ
காக்கைக்கும் குருவிக்கும் கடல் சொந்தமோ
கழுதைக்கு சுமக்கிற பொதி சொந்தமோ
நாட்டுக்கு ஆயிரம் மொழி சொந்தமோ
நாலு காலுக்கொரு வால் சொந்தமோ

ஜாவ்ரே ஜா...இந்த கேட்டுக்கு நீ ராஜா
ஜாவ்ரே ஜா...அந்த வீட்டுக்கு நான் ராஜா

வருகிற உறவுக்கு மனை சொந்தமோ
மயக்கிற முகத்துக்கு எழில் சொந்தமோ

ஹாஹஹஹா ஹாஹஹா

வருகிற உறவுக்கு மனை சொந்தமோ
மயக்கிற முகத்துக்கு எழில் சொந்தமோ
குவிக்கிற பணத்துக்கு எடம் சொந்தமோ
கூடும் கூட்டத்துக்கு மடம் சொந்தமோ

ஜாவ்ரே ஜா...இந்த கேட்டுக்கு நீ ராஜா
ஜாவ்ரே ஜா...அந்த வீட்டுக்கு நான் ராஜா

தினம் தினம் இரவினில் தூங்கி விட்டு
திருடரைத் திருடிக் கொண்டோட விட்டு
தினம் தினம் இரவினில் தூங்கி விட்டு
திருடரைத் திருடிக் கொண்டோட விட்டு
அகப்பட்ட மனுஷனைப் பிடிக்கிற வேலை
ஆர்ப்பாட்டம் என்ன ராஜா

ஜாவ்ரே ஜா...இந்த கேட்டுக்கு நீ ராஜா
ஜாவ்ரே ஜா...அந்த வீட்டுக்கு நான் ராஜா


http://www.youtube.com/watch?feature...&v=QWKGrRiiyKk

mr_karthik
25th July 2014, 04:09 PM
டியர் வாசு,

கலைநிலா, ஆணழகன் ரவிச்சந்திரனின் நினைவு நாளையொட்டி தங்கள் பதிவுகள் அருமை, எனினும் அனுபவிக்க முடியாத சோகம் தலைநீட்டுகிறது. அவர் நடித்த படங்களின் பெயர்களை வைத்தே நினைவஞ்சலி செலுத்தியிருப்பது சிறப்பாக அமைந்துள்ளது.

'இன்றைய ஸ்பெஷல்' பகுதியில் நீங்கள் வழங்கியுள்ள குமரிப்பெண் படத்தின் 'ஜாவ்ரே ஜாவ்' பாடல் நன்றாக இருந்தபோதிலும் அதைக் கேட்கும்போதெல்லாம் 'இது டி.எம்.எஸ்.பாடியிருக்க வேண்டிய பாடல்' என்ற எண்ணம் மனதில் தோன்றிக்கொண்டே இருக்கும். அதற்குக்காரணம் டீசிங் பாடல்களுக்கு ஏற்றவர் பாடகர் திலகம்தான். மேலும், பேசும்போது ஆண்மை நிறைந்த குரலில் பேசும் ரவிக்கு மென்மையான பி.பி.எஸ். குரல் ஸூட் ஆகவில்லைஎன்பது உண்மையே. மென்குரலுடைய ஜெமினி, முத்துராமன், ராஜன் ஆகியோருக்கு ஒக்கே.

ரவியின் மற்ற டீஸிங் (கலாய்ப்பு) பாடல்களைப்பாருங்கள்.
'ராஜா கண்ணு போகாதடி நீ போனா நெஞ்சுக்கு ஆகாதடி'
'இரவில் வந்த குருவிகளா அடி குட்டிகளா'
'ஆடு பார்க்கலாம் ஆடு'
'பொம்பளை ஒருத்தி இருந்தாளாம்'
இதே படத்தில் வந்த 'வருஷத்தைப்பாரு 66'

'ஜாவ்ரே ஜாவ்' பாடலில் குரல் வித்தியாசம் காட்டினாலும், அதைத்தாண்டி கண்ணதாசனின் வரிகளும், ரவியின் உற்சாக நடிப்பும் அதை ஈடு செய்யும்.

பாடலைப்பற்றிய நல்ல ஆய்வு..., பாராட்டுக்கள்.

mr_karthik
25th July 2014, 04:17 PM
டியர் ராஜேஷ்,

ஒவ்வொரு தமிழ்ப்படத்தையும் பற்றி அலசும்போதும், அது மற்ற மொழிகளில் எந்த வடிவில், யார் யார் நடிப்பில், என்ன பெயரில் மறு அவதாரம் எடுத்துள்ளது என்ற தங்கள் ஆய்வு சூப்பர். இதன்மூலம் மற்ற மொழிப்படங்களின் பாடல்களின் வடிவத்தையும் பார்க்க முடிகிறது.

இதன்மூலம் நமது திரி தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், மற்றும் ஹிந்திப்பாடல்களையும் ஆய்வு செய்வதாக அமைந்துள்ளது.

பாராட்டுக்கள்...

mr_karthik
25th July 2014, 04:41 PM
டியர் கிருஷ்ணா,

நீலகிரி எக்ஸ்பிரஸ் பட மற்றும் பாடல்கள் ஆய்வு நன்றாக உள்ளது. ஜெய்சங்கரின் அப்போதைய சீரியஸ் படங்களுக்கு நடுவே இதுபோன்ற கிச்சுகிச்சு மூட்டும் படங்களிலும் நடித்து வந்தார். இதுபோன்ற இன்னொரு படம் 'புத்திசாலிகள்'.

'நான் கலைஞன் அல்ல உன்னை சிலையாக்க' பாடலில் ஞானஒளி விஜயநிர்மலாவின் நடன அசைவுகள் கொஞ்சம் அமெச்சூர்த்தனமாக இருந்தாலும் ரசிக்க முடிந்தது. (என்ன செய்வது, ஒருவரைப் பிடித்துவிட்டால் அவரது அசட்டுத்தனம் கூட அழகாக் தோன்றுகிறது).

சேனல்களின் தயவால் இப்பாடல்கள் தற்போது நம்வீட்டு வரவேற்பறைக்கு வருகின்றன. எவ்வளவு காலம் இருட்டில் கிடந்துள்ளன...

gkrishna
25th July 2014, 04:43 PM
http://antrukandamugam.files.wordpress.com/2013/07/lr-eswari.jpg
கூட்டத்தோடு கூட்டமாக 'கோரஸ்' பாடத்தொடங்கிய எல்.ஆர்.ஈஸ்வரி வெகு விரைவிலேயே சிறந்த பின்னணி பாடகியாக உயர்ந்தார்.

எல்.ஆர்.ஈஸ்வரியின் குரலில் ஒருவித வசிய சக்தி இருக்கும், பாடும் முறையில் 'கிக்' இருக்கும். எனவே, லட்சக்கணக்கான ரசிகர்களை அவர் பெற்றார்.

'இது எனக்கு இறைவன் கொடுத்த வரம்' என்று கூறிய ஈஸ்வரி, தொடர்ந்து சொன்னார்:

'ஏழ்மையில் பிறந்த நான், இந்த அளவு உயர்ந்திருக்கிறேன் என்றால், அதற்காக நான் பட்ட கஷ்டங்கள் ஏராளம். எனக்குப் பெற்றோர்கள் வைத்த பெயர் டி.எல்.ராஜேஸ்வரி. பரமக்குடிதான் எங்களுடைய பூர்வீகம். ஆனால், நான் பிறந்து வளர்ந்ததெல்லாம் சென்னை புதுப்பேட்டைதான்.

எழும்பூரில் உள்ள அரசு மகப்பேறு மருத்துவமனையில்தான் நான் பிறந்தேன். எனது தந்தை பெயர் அந்தோணி தேவராஜ். தாயார் ரெஜினா மேரி நிர்மலா. எனக்கு அமல்ராஜ் என்ற தம்பியும், எல்.ஆர்.அஞ்சலி என்ற தங்கையும் உண்டு.

எனது தந்தை இளம் வயதிலேயே (36 வயது) இறந்து விட்டார். அப்போது எனக்கு வயது 6. வறுமையின் பிடியில் சிக்கி தவித்த எங்களது குடும்பத்தை எனது தாயார் சினிமாவில் கோரஸ் பாடி, அதில் கிடைத்த மிக சொற்ப வருமானத்தைக் கொண்டு காப்பாற்றி வந்தார்.

எப்படியோ கஷ்டப்பட்டு என் தாயார் என்னைப் பள்ளி இறுதி வகுப்பு வரை படிக்க வைத்தார். அதற்கு மேல் கல்லூரிக்கு என்னை அனுப்பி படிக்க வைக்க முடியாத சூழ்நிலை எனது தாயாருக்கு. ஆகவே, எனது தாயாருக்கு உதவி செய்ய நான் உழைக்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாக்கப்பட்டேன்.

அப்போது எனக்கு வயது 16. என் தாயார் சினிமாவில் கோரஸ் பாடச் செல்லும்போது, அவருடன் செல்வேன். அவர்கள் பாடுவதை கேட்டு அதே மாதிரி நானும் பாடுவேன்.

ஒரு நாள் ஏ.பி.நாகராஜன் தயாரித்த 'வடிவுக்கு வளைகாப்பு' என்ற படத்திற்கு கோரஸ் பாட எனது தாயார் சென்றபோது, நானும் அவருடன் சென்றேன். பாடலின் இடையே 'ஹம்மிங்' கொடுக்க வேண்டிய பெண் அன்று வராததால், தற்செயலாக நான் அந்தப் பாட்டுக்கு 'ஹம்மிங்' கொடுத்தேன். இதுதான் நான் முதன் முதலில் சினிமாவிற்கு கொடுத்த குரல்.

இதைக்கேட்ட அங்கிருந்த ஏ.பி.நாகராஜனும், இசையமைப்பாளர் கே.வி.மகாதேவனும் 'உனக்கு நல்ல குரல் வளம் இருக்கிறது. நீ எதிர்காலத்தில் பெரிய பாடகியாக வருவாய், பார்!' என்று மிகவும் பாராட்டினார்கள்.

இதைக்கேட்டவுடன் அந்த நிமிடமே எங்களது குடும்ப கஷ்டமெல்லாம் பறந்து விட்டதுபோல் உணர்ந்தேன். இது எனக்கு வாழ்க்கையில் பெரிய நம்பிக்கையைக் கொடுத்தது.

'வடிவுக்கு வளைகாப்பு' படத்தை அடுத்து ஏ.பி.நாகராஜனும், வி.கே.ராமசாமியும் சேர்ந்து 'லட்சுமி பிக்சர்ஸ்' என்ற படக்கம்பெனியைத் தொடங்கி, 'நல்ல இடத்து சம்பந்தம்' என்ற படத்தைத் தயாரித்தனர். அதில் கே.வி.மகாதேவன் இசை அமைப்பில் எனக்கு பாட வாய்ப்பு கிடைத்தது.

'புதுப்பெண்ணே புதுப்பெண்ணே நிமிர்ந்து பாரு; உன் பிறந்த இடத்தை மறந்து விடாதே நினைத்துப்பாரு.'

'பொண்ணு மாப்பிள்ளை ஒன்னா போகுது ஜிகு ஜிகு வண்டியிலே.'

'இவரேதான் அவரு அவரேதான் இவரு'

'துக்கத்திலும் சிரிக்கணும்; துணிவுடனே இருக்கணும்' என்ற 4 பாடல்கள் பாடுமë வாய்ப்பை எனக்கு ஏ.பி.நாகராஜன் வழங்கினார்.

எனது பெயர் டி.எல்.ராஜேஸ்வரி என்று இருந்ததை சுருக்கமாக 'எல்.ஆர்.ஈஸ்வரி' என்று மாற்றி வைத்தவரும் ஏ.பி.நாகராஜன்தான்.

அப்போதெல்லாம் ஒரு பாடல் பாடினால் 100 ரூபாய் சம்பளம் கிடைக்கும். அக்காலத்தில் அது பெரிய தொகை. வறுமையில் வாடிக்கொண்டிருந்த என் குடும்பத்தை, வசதியாக வாழ வைக்க முடியும் என்ற நம்பிக்கை ஏற்பட்டது' என்றார் எல்.ஆர்.ஈஸ்வரி.

gkrishna
25th July 2014, 04:48 PM
டியர் கிருஷ்ணா,

நீலகிரி எக்ஸ்பிரஸ் பட மற்றும் பாடல்கள் ஆய்வு நன்றாக உள்ளது. ஜெய்சங்கரின் அப்போதைய சீரியஸ் படங்களுக்கு நடுவே இதுபோன்ற கிச்சுகிச்சு மூட்டும் படங்களிலும் நடித்து வந்தார். இதுபோன்ற இன்னொரு படம் 'புத்திசாலிகள்'.

'நான் கலைஞன் அல்ல உன்னை சிலையாக்க' பாடலில் ஞானஒளி விஜயநிர்மலாவின் நடன அசைவுகள் கொஞ்சம் அமெச்சூர்த்தனமாக இருந்தாலும் ரசிக்க முடிந்தது. (என்ன செய்வது, ஒருவரைப் பிடித்துவிட்டால் அவரது அசட்டுத்தனம் கூட அழகாக் தோன்றுகிறது).

சேனல்களின் தயவால் இப்பாடல்கள் தற்போது நம்வீட்டு வரவேற்பறைக்கு வருகின்றன. எவ்வளவு காலம் இருட்டில் கிடந்துள்ளன...

நன்றி கார்த்திக்

ஆனால் சில சமயங்களில் திருப்பி திருப்பி ஒளிபரப்பிய திரைப்படங்களையே ஒளிபரப்புகிறார்கள்

vasudevan31355
25th July 2014, 06:19 PM
'டெல்லி மாப்பிள்ளை' என்று ஒரு படம். ரவி ஹீரோ. ராஜஸ்ரீ ஹீரோயின்.

இந்தப் படத்தில் பட்டான் என்ற ஈட்டிக்காரன் வேடத்தில் ரவிச்சந்திரன் அவர்கள் சௌந்தரராஜன் குரலில் சக்கை போடு போடும் பாடல் மிக வித்தியாசமான ஒன்று. 'சர்தானா' என்று பாடகர் திலகம் பாடுவது பலே பலே.

ஹரே நம்மிள்கி சொல்றத நிம்பிள்கி கேட்டுக்கோ
தம்பிடிக்கு தம்பிடி வட்டியும் போட்டுக்கோ
சரிதானா அது இல்லாம ஈட்டிக்காரன் தருவானா
யஹூம்..யஹூம்

ஹரே சைத்தான் கி பச்சா... கியாரே

பாடகர் திலகமும், ரவியும் செம கலக்கு.

அதிகம் வெளியே தெரியாத ஒரு பாடல்.

இந்தப் பாடலை யூ டியூப் தளத்தில் அப்லோட்செய்த புண்ணியவானுக்கு ஒரு வேண்டுகோள். பாடல் காட்சி முழவதையும் எழுத்தாலேயே மறைத்து விட்டால் எப்படி அந்தப் பாடலைப் பார்ப்பது?
டி.எம்.எஸ்.மேலே உங்களுக்கு உள்ள பக்தி புரிகிறது. அதற்காக இப்படியா? இதற்கு நீங்க பாடலைப் போடாமலேயே இருக்கலாம்.


http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=cvFyDxUydSY

vasudevan31355
25th July 2014, 06:42 PM
ராட்சஸியின் முதல் பிரவேசம்.

இவரேதான் அவரு
அவரேதான் இவரு

'நல்ல இடத்து சம்பந்தம்' படத்தில். மாமா இசையமைப்பில்.

முதல் பாட்டிலேயே அந்த ராட்சஸத்தனம் தெரிகிறது.


http://www.youtube.com/watch?v=OmH8CjA7uTE&feature=player_detailpage

madhu
25th July 2014, 06:51 PM
'டெல்லி மாப்பிள்ளை' என்று ஒரு படம். ரவி ஹீரோ. ராஜஸ்ரீ ஹீரோயின்.

இந்தப் பாடலை யூ டியூப் தளத்தில் அப்லோட்செய்த புண்ணியவானுக்கு ஒரு வேண்டுகோள். பாடல் காட்சி முழவதையும் எழுத்தாலேயே மறைத்து விட்டால் எப்படி அந்தப் பாடலைப் பார்ப்பது?
டி.எம்.எஸ்.மேலே உங்களுக்கு உள்ள பக்தி புரிகிறது. அதற்காக இப்படியா? இதற்கு நீங்க பாடலைப் போடாமலேயே இருக்கலாம்.


http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=cvFyDxUydSY

வாசு ஜி... இதோ அதே பாட்டு எழுத்துக்கள் மறைக்காமல்...

http://youtu.be/1twsisZDh-A

vasudevan31355
25th July 2014, 07:47 PM
மிக்க நன்றி மது சார். அப்பாடி! இப்போதாவது நிம்மதியாகப் பார்க்கலாம்

JamesFague
25th July 2014, 08:35 PM
Mr Neyveli Vasudevan Sir,

Your presence is required urgently in Our Acting
God Thread. Pls do come and start your posting.
It is not only my humble request but also most of
our hubbers.

Regards

vasudevan31355
25th July 2014, 08:54 PM
ராஜேஷ் சார்,

'முடியாது சொல்ல முடியாது என்று முன்னும் பின்னுமாய்த் தவிக்கிறேன்
அது முடியாவிட்டாலும் படியாவிட்டாலும் முடியும் என்று நான் நினைக்கிறேன்'.

அடேங்கப்பா! குடும்பம் ஒரு கதம்பம் விசு தேவல போல் இருக்கே!

'ராஜசேவை' திரைப்படத்தில் கண்டசாலாவின் கடித்துத் துப்பும் தமிழில்
இனிமையான பாட்டு. ஏனென்றால் கூட குயிலாக இசைப்பது இன்னிசை அரசி அல்லவா.

என்.டி .ராமாராவும், சௌகார் ஜானகியும் அழகோ அழகு என்று நான் நினைக்கிறேன்.

ராஜேஷ் சார்.... நீங்கள்?


http://www.youtube.com/watch?v=A2Ltehubwvc&list=PL6531BF61C8D209F7&feature=player_detailpage

rajeshkrv
25th July 2014, 09:02 PM
டியர் வாசு ஜி, கார்த்திக் ஜி ஆணழகன் ரவி பற்றிய அலசல் அருமை. எனக்கு மிகவும் பிடித்த ஸ்மார்ட் ஹீரோஸ் ரவியும் ஜெய்யும்..

அந்த படான் பாடல் தூள்...

கார்த்திக், முதலில் பிற மொழிகள் பற்றி இங்கு சொல்வதற்கு ஒரு தயக்கம் இருந்தது. வாசு ஜி மற்றும் உங்கள் பாராட்டுக்களுக்கு பின்னர் தைரியம் வருகிறது.

ரவி ஷீலாவுடன் மலையாள படமான ஆரோல்மாஉண்ணியில் உதயகிரி கோட்டையிலே சித்ரலேகே(எண்டே பேவரிட்)
இசையரசியின் குரலில்


https://www.youtube.com/watch?v=oJZMs75a2mI

rajeshkrv
25th July 2014, 09:03 PM
ராஜேஷ் சார்,

'முடியாது சொல்ல முடியாது என்று முன்னும் பின்னுமாய்த் தவிக்கிறேன்
அது முடியாவிட்டாலும் படியாவிட்டாலும் முடியும் என்று நான் நினைக்கிறேன்'.

அடேங்கப்பா! குடும்பம் ஒரு கதம்பம் விசு தேவல போல் இருக்கே!

'ராஜசேவை' திரைப்படத்தில் கண்டசாலாவின் கடித்துத் துப்பும் தமிழில்
இனிமையான பாட்டு. ஏனென்றால் கூட குயிலாக இசைப்பது இன்னிசை அரசி அல்லவா.

என்.டி .ராமாராவும், சௌகார் ஜானகியும் அழகோ அழகு என்று நான் நினைக்கிறேன்.

ராஜேஷ் சார்.... நீங்கள்?



நானும்தான் நினைக்கிறேன்... மிகவும் அருமையான பாடல் எனக்கு பிடித்த பாடல்

vasudevan31355
25th July 2014, 09:11 PM
நன்றி ராஜேஷ் சார்!

பிரிய மனமில்லைதான். ஆனால் இரவுப்பணி அழைக்கிறது. குட் நைட்.

RAGHAVENDRA
26th July 2014, 07:36 AM
இசைக்கு எந்த பேதமும் இல்லை ... மொழி பேதம் ... நிச்சயமாகக் கிடையாது... இனிமையாக காதில் விழும் எந்த இசையும் நெஞ்சில் நின்று விடும்.

ஹிந்தி தமிழ் மட்டுமின்றி கன்னடம், தெலுங்கு, மலையாளம் என ஒவ்வொரு மொழியிலும் உள்ள இனிமையான இசையே மனிதனின் வாழ்வில் பல்வேறு மன உளைச்சல்களுக்கு மருந்தாக திகழ்ந்து வருகின்றது. அந்த வகையில் வாசு சாரின் இந்தத் திரி பலரது உள்ளத்தில் மன நிம்மதியைத் தரும் மருந்தாகவும் திகழும், திகழ்கிறது என்பதும் உண்மை.

1960 மற்றும் 1970களில் தமிழில் டி.எம்.எஸ். போன்று கன்னடத்தில் பி.பி.எஸ். அவர்கள் தனி சாம்ராஜ்ஜியமே நடத்திக் கொண்டிருந்தார். இறுதி வரை அவரது புகழ் நிலைத்து நின்றது மட்டுமின்றி இன்றும் அவரது பாடல்கள் மூலம் வாழந்து கொண்டும் இருக்கிறார்.

அப்படிப்பட்ட பாடல்கள் சிலவற்றை கன்னட மொழித் திரைப்படங்களிலிருந்து நாம் கேட்டு மகிழ்வோம்.. இதில் குறிப்பிடத் தக்க விஷயம், இசையரசியின் பங்கும் அதே போல் குறிப்பிடத் தக்கதாகும். மொழியின் உச்சரிப்பில் சற்றும் சறுக்கலின்றி அவர் பாடிய கன்னடப் பாடல்கள் கேட்பவர் உள்ளங்களைக் குதூகலிக்கச் செய்யும்.

தொடக்கமாக கஸ்தூரி நிவாஸ படத்திலிருந்து ஒரு பாடல் நீ பந்து நிந்தாக என்ற பாடல், ஜி.கே. வெங்கடேஷ் இசையில் ஆர்.என்.ஜெயகோபால் வரிகளில்...

http://www.youtube.com/watch?v=dZjen3-el2s

பல்லவியின் மொழி பெயர்ப்பு ... நீ வந்து நின்ற போது, நின்று நீ புன்னகை புரிந்த போது... எனத் தொடங்கும்..

ராஜ்குமார் அவர்களை புகழின் உச்சியில் கொண்டு சென்ற படம் கஸ்தூரி நிவாஸ.

தற்போது இப்படதத்தை வண்ண மயமாக்குவதாக ஒரு செய்தி நிலவுகிறது. இது உண்மையா தெரியவில்லை.

இந்த கஸ்தூரி நிவாஸ படத்தைப் பார்த்தால் நிச்சயம் நடிகர் திலகம் நினைவுக்கு வருவதைத் தவிர்க்க முடியாது.

ரசிகர்களின் நெஞ்சில் நீங்கா இடத்தைப் பிடித்த அவன் தான் மனிதன் படத்தின் ஒரிஜினல் தான் கஸ்தூரி நிவாஸ.

RAGHAVENDRA
26th July 2014, 07:41 AM
https://encrypted-tbn3.gstatic.com/images?q=tbn:ANd9GcSrJtxG-d434gOP8uogQn4JrhTaPpE27WHlBGacAW2BGi4NMppk

கன்னட திரைப்படப்பாடல் என்றாலே எனக்கு முதலில் நினைவுக்கு வரும், மிக மிக பிடித்த பாடல்... எரடு கனசு - படத்தில் இடம் பெற்ற இப்பாடல் தான். வாணி ஜெயராமின் குரல் நம்மை எங்கும் செல்ல விடாமல் கட்டிப் போட்டு விடும். பி.பி.எஸ்.ஸின் குரல் சொல்லவும் வேண்டுமா...

http://www.youtube.com/watch?v=TwKVyj9hf7k

RAGHAVENDRA
26th July 2014, 07:48 AM
http://www.youtube.com/watch?v=RxF-jon6LNg

தன் குரலாலே நம் உயிருக்குள்ளாகவே ஊடுருவும் குரலுக்கு சொந்தக் காரர் எஸ்.பி.பாலா. அதற்கு ஒரு சான்று பந்துலம்மா படத்தில் இடம் பெற்ற சிரி மல்லி நீவே என்ற இப்பாடல். முதல் முறை கேட்பவர்கள், உடனே மீண்டும் அடுத்த முறை கேட்க விரும்புவார்கள் என்பது திண்ணம். ராஜன் நாகேந்திராவின் இனிமையான மெட்டும் உறுத்தாத பின்னணி இசையும் இப்பாடலுக்கு ஜீவனைத் தருகின்றன.

RAGHAVENDRA
26th July 2014, 07:59 AM
http://www.youtube.com/watch?v=EkQs0NRwgvg

ஜேனு கூடு ... தேன் கூடு என்று தமிழில் பொருள் தரும் பெயர் கொண்ட படத்தில் இடம் பெற்ற இப்பாடல் இனிமையான இசை மனதில் எப்படி ரீங்காரமிடும் என்பதற்கு உதாரணமான பல பாடல்களில் ஒன்று. விஜய கிருஷ்ணமூர்த்தி இசையமைப்பில் பி.பி.எஸ். பி.சுசீலா பாடியுள்ளனர். ஜெயந்தியின் முதல் கன்னடப் படம் இது. உடன் நடித்தவர் சூர்யகுமார்.

vasudevan31355
26th July 2014, 08:18 AM
இன்றைய ஸ்பெஷல் (39)

http://www.inbaminge.com/t/a/Annavin%20Aasai/folder.jpg

இன்று மிக மிக அழகான ஒரு பாடல்.

நம் 'செல்ல' கே.பாலாஜி தயாரித்த முதல் படமான 'அண்ணாவின் ஆசை' திரைப்படத்திலிருந்து.

இப்படத்தைப் பற்றிய விவரங்களை கீழே நான் அளித்திருக்கும் 'பேசும்படம்' ஆவணம் மூலம் தெரிந்து கொள்ளலாம். ('பேசும் படம்' இதழ் Februvary 1966)

http://i812.photobucket.com/albums/zz49/adithya961999/ima4_zpsebd6dd1f.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/IMG-8.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/IMG-8.jpg.html)

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/IMG_0001-6.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/IMG_0001-6.jpg.html)

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/IMG_0002-6.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/IMG_0002-6.jpg.html)

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/IMG_0003-3.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/IMG_0003-3.jpg.html)

http://i812.photobucket.com/albums/zz49/adithya961999/ima4_0001_zpsb16eb261.jpg

http://i812.photobucket.com/albums/zz49/adithya961999/ima4_0002_zpsc639797c.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/IMG_0004-2.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/IMG_0004-2.jpg.html)

ஜெமினி, சாவித்திரி, பாலாஜி, கே.ஆர். விஜயா ஆகியோர் பிரதான பாத்திரங்களில் நடித்தார்கள். இந்தி நடிகர் அசோக் குமார் நடித்த ஒரே தமிழ்ப்படம் இது.

ஒரு அழகான அளவான குடும்பம். அண்ணன் ஜெமினி அண்ணி சாவித்திரி, இவர்கள் பேபி ஷகீலா இவர்களுடன் ஜெமினியின் தம்பி பாலாஜி இவர்கள் சந்தோஷமான பின்னணியில் ஆடிப்பாடும் பாடல்.

தாய்மையின் சிறப்பை அழகாக விளக்கும் பாடல்.

பாடகர் திலகமும், சுசீலாம்மாவும் அழகாக ஜெமினி, சாவித்திரிக்குப் பாடிக் கொண்டே வருவார்கள். முதல் சரணம் முடிந்ததும் பாலாஜிக்காக ஏ.எல்.ராகவன் அழகாக இவர்களுடன் இணைந்து கொள்வார்.

மூவரும் அவரவர்கள் ஸ்டைலில் அருமையாகப் பாடியிருப்பார்கள்.

மாமா மகாதேவன் இசை. வழக்கமான பேஸ் கிடார் இசையை பாடலின் துவக்கத்துக்கு முன்னமேயே அளித்து விடுவார்.

ரொம்ப இனிமையான பாடல்.

https://i.ytimg.com/vi/boKDWHUH-1w/mqdefault.jpg

கோவிலிலே வீடு கட்டி
கோபுரத்தில் கூடு கட்டி
குடியிருக்கும் பறவைகளே
கொஞ்சம் சொல்லுங்கள்

கோவிலிலே வீடு கட்டி
கோபுரத்தில் கூடு கட்டி
குடியிருக்கும் பறவைகளே
கொஞ்சம் சொல்லுங்கள்

பறவை என்றாலும்
உங்கள் பாசம் போகுமா

பழகிய பின்னே
எங்கள் நேசம் போகுமா

பறவை என்றாலும்
உங்கள் பாசம் போகுமா

பழகிய பின்னே
எங்கள் நேசம் போகுமா

சுற்றம் கண்டால் அழைக்கிறோம்
சொந்தம் வந்தால் அணைக்கிறோம்
ஒன்றாய் வாழ்ந்து வருகிறோம்
உங்களைப் போலே

சுற்றம் கண்டால் அழைக்கிறோம்
சொந்தம் வந்தால் அணைக்கிறோம்
ஒன்றாய் வாழ்ந்து வருகிறோம்
உங்களைப் போலே

கோவிலிலே வீடு கட்டி
கோபுரத்தில் கூடு கட்டி
குடியிருக்கும் பறவைகளே
கொஞ்சம் சொல்லுங்கள்

கண்களின் மேலே இமை காவல் அல்லவா
பெண்மை என்றாலே வீட்டின் பெருமை அல்லவா
கண்களின் மேலே இமை காவல் அல்லவா
பெண்மை என்றாலே வீட்டின் பெருமை அல்லவா

குற்றம் கண்டால் உரைப்பதும்
கோபம் கொண்டால் தடுப்பதும்
மற்றோர் முன்னே மறைப்பதும்
தாய்மை அல்லவா

குற்றம் கண்டால் உரைப்பதும்
கோபம் கொண்டால் தடுப்பதும்
மற்றோர் முன்னே மறைப்பதும்
தாய்மை அல்லவா

கோவிலிலே வீடு கட்டி
கோபுரத்தில் கூடு கட்டி
குடியிருக்கும் பறவைகளே
கொஞ்சம் சொல்லுங்கள்

தம்பியுள்ளவன் சேனைத் தளபதி ஆவான்

நம்பி வந்தவள் தெய்வ நாயகி ஆவாள்

தம்பியுள்ளவன் சேனைத் தளபதி ஆவான்

நம்பி வந்தவள் தெய்வ நாயகி ஆவாள்

இல்லை என்னும் வார்த்தையே
இல்லை என்னும் வகையிலே
இல்லம் கண்டு வாழ்வதே என்றும் நிம்மதி

இல்லை என்னும் வார்த்தையே
இல்லை என்னும் வகையிலே
இல்லம் கண்டு வாழ்வதே என்றும் நிம்மதி

கோவிலிலே வீடு கட்டி
கோபுரத்தில் கூடு கட்டி
குடியிருக்கும் பறவைகளே
கொஞ்சம் சொல்லுங்கள்


http://www.youtube.com/watch?v=q06Ypjb3toA&feature=player_detailpage

rajeshkrv
26th July 2014, 08:35 AM
இசைக்கு எந்த பேதமும் இல்லை ... மொழி பேதம் ... நிச்சயமாகக் கிடையாது... இனிமையாக காதில் விழும் எந்த இசையும் நெஞ்சில் நின்று விடும்.

ஹிந்தி தமிழ் மட்டுமின்றி கன்னடம், தெலுங்கு, மலையாளம் என ஒவ்வொரு மொழியிலும் உள்ள இனிமையான இசையே மனிதனின் வாழ்வில் பல்வேறு மன உளைச்சல்களுக்கு மருந்தாக திகழ்ந்து வருகின்றது. அந்த வகையில் வாசு சாரின் இந்தத் திரி பலரது உள்ளத்தில் மன நிம்மதியைத் தரும் மருந்தாகவும் திகழும், திகழ்கிறது என்பதும் உண்மை.

1960 மற்றும் 1970களில் தமிழில் டி.எம்.எஸ். போன்று கன்னடத்தில் பி.பி.எஸ். அவர்கள் தனி சாம்ராஜ்ஜியமே நடத்திக் கொண்டிருந்தார். இறுதி வரை அவரது புகழ் நிலைத்து நின்றது மட்டுமின்றி இன்றும் அவரது பாடல்கள் மூலம் வாழந்து கொண்டும் இருக்கிறார்.

அப்படிப்பட்ட பாடல்கள் சிலவற்றை கன்னட மொழித் திரைப்படங்களிலிருந்து நாம் கேட்டு மகிழ்வோம்.. இதில் குறிப்பிடத் தக்க விஷயம், இசையரசியின் பங்கும் அதே போல் குறிப்பிடத் தக்கதாகும். மொழியின் உச்சரிப்பில் சற்றும் சறுக்கலின்றி அவர் பாடிய கன்னடப் பாடல்கள் கேட்பவர் உள்ளங்களைக் குதூகலிக்கச் செய்யும்.

தொடக்கமாக கஸ்தூரி நிவாஸ படத்திலிருந்து ஒரு பாடல் நீ பந்து நிந்தாக என்ற பாடல், ஜி.கே. வெங்கடேஷ் இசையில் ஆர்.என்.ஜெயகோபால் வரிகளில்...

பல்லவியின் மொழி பெயர்ப்பு ... நீ வந்து நின்ற போது, நின்று நீ புன்னகை புரிந்த போது... எனத் தொடங்கும்..

ராஜ்குமார் அவர்களை புகழின் உச்சியில் கொண்டு சென்ற படம் கஸ்தூரி நிவாஸ.

தற்போது இப்படதத்தை வண்ண மயமாக்குவதாக ஒரு செய்தி நிலவுகிறது. இது உண்மையா தெரியவில்லை.

இந்த கஸ்தூரி நிவாஸ படத்தைப் பார்த்தால் நிச்சயம் நடிகர் திலகம் நினைவுக்கு வருவதைத் தவிர்க்க முடியாது.

ரசிகர்களின் நெஞ்சில் நீங்கா இடத்தைப் பிடித்த அவன் தான் மனிதன் படத்தின் ஒரிஜினல் தான் கஸ்தூரி நிவாஸ.

அட்ரா அட்ரா .. என்ன அருமையான பாட்டு ... என்னுடைய கன்னட பேவரிட் பாடல்
ஆம் அக்*ஷர சுத்தமாகவும் பாவமும் அந்த மொழியின் உச்சரிப்பும் இசையரசியின் தனி ஸ்பெஷாலிடி

இன்னொரு கொசுரு தகவல், கஸ்தூரி நிவாஸா தான் தமிழில் அவன் தான் மனிதன்.

இதில் இன்னொரு அருமையான பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல் இசையரசியின் குரலில்
எல்லே இரு ஏகே இரு எந்தெந்து மனதல்லி நீ தும்பிரு (எங்கே இருந்தாலும் எப்படி இருந்தாலும் என்றென்றும் என் மனதில் நீ இருப்பாய்)

அருமையான வரிகள்
ஆர்.என்.ஜெயகோபால் (மைக்கேல் மதன காமராஜனில் நாசரின் அப்பா) இவர் பழம்பெரும் நடிகர் நாகேந்திர ராவ்(எல்லோரும் இன்னாட்டு மன்னரில் வில்லன் )அவர்களின் மகன் .. சுதர்ஸன் இவரது சகோதரர்.


https://www.youtube.com/watch?v=NiDtzRz0aWk

கே.ஜே.யேசுதாஸின் 50’ம் ஆண்டு நிறைவுக்கு கன்னட இசை உலகம் ஹிருதயராகா என்ற விழா எடுத்தது
அதில் இசையரசி எல்லே இரு பாடலை பாடினார். இதோ


https://www.youtube.com/watch?v=TEggw0oepaY

ராகவ் ஜி. கன்னட பாடலை போட்டு என்னை திக்குமுக்காட செய்து விட்டீர்கள்

பேஷ் பேஷ்

rajeshkrv
26th July 2014, 08:37 AM
தன் குரலாலே நம் உயிருக்குள்ளாகவே ஊடுருவும் குரலுக்கு சொந்தக் காரர் எஸ்.பி.பாலா. அதற்கு ஒரு சான்று பந்துலம்மா படத்தில் இடம் பெற்ற சிரி மல்லி நீவே என்ற இப்பாடல். முதல் முறை கேட்பவர்கள், உடனே மீண்டும் அடுத்த முறை கேட்க விரும்புவார்கள் என்பது திண்ணம். ராஜன் நாகேந்திராவின் இனிமையான மெட்டும் உறுத்தாத பின்னணி இசையும் இப்பாடலுக்கு ஜீவனைத் தருகின்றன.

ராஜன் நாகேந்திராவின் அற்புத இசை. இதே படத்தில் மேடைக்கச்சேரிகளில் பாட மிகவு கஷ்டமான ஒரு பாடல்
பாலுவுடன் இசையரசி .. திரையில் ரங்கநாத் மற்றும் தீபா


https://www.youtube.com/watch?v=l5UDQX7zlS8

rajeshkrv
26th July 2014, 08:39 AM
அதே பந்துலம்மாவில் லக்*ஷ்மிக்கு இசையரசியின் குரலில் மனசெரிகனவாடு மா தேவுடு ஸ்ரீ ராமுடு


https://www.youtube.com/watch?v=lci_RyhU6uw

vasudevan31355
26th July 2014, 08:46 AM
ராஜேஷ் சார்!

கன்னடப் பாடல்களில் எனக்கு அவ்வளவு பரிச்சயமில்லை. நீங்களும், ராகவேந்திரன் சாரும் புகழும் போது கண்டிப்பாக அதில் அற்புத விஷயங்கள் இருக்கும் என்று மட்டும் புரிகிறது. நிச்சயமாக பார்க்கிறேன். கேட்கிறேன். நல்ல பாடல்களை வழங்கியமைக்கு தங்களுக்கும், ராகவேந்திரன் சாருக்கும் நன்றி!

rajeshkrv
26th July 2014, 08:49 AM
அண்ணாவின் ஆசையில் எப்பொழுதும் கேட்டு ரசித்த பாடல் பாட்டெழுதட்டும் பருவம் , வாலி ஐயாவின் வரிகள் .. நீங்கள் அதில் அதிகம் கேட்காத பாடலை தந்ததற்கு நன்றி நன்றி .. கே.ஆர்.வி க்யூட்டாக இருந்த காலங்கள்

vasudevan31355
26th July 2014, 09:01 AM
http://upload.wikimedia.org/wikipedia/en/8/87/Apoorva_Sagodharargal_%281949_film%29.jpg

ராஜேஷ் சார்,

நடிகர் நாகேந்திர ராவ் எம்.கே ராதா, பானுமதி நடித்த பழைய 'அபூர்வ சகோதரர்கள்' படத்தின் 'மார்த்தாண்டன்' என்ற அட்டகாசமான வில்லன். (மேலே உள்ள படத்தில் குளோஸ்-அப் பில் இருப்பவர்) 'அபூர்வ சகோதர்கள்' நீரும் நெருப்பும் ஆகும் போது அசோகன் அதில் வில்லன ஆனார்.

நடிகர் சுதர்சன் (நடிகர் திலகத்தின் சில படங்களில் பிரதான வில்லன்) கன்னட மற்றும் தமிழ் நடிகையான சைலஸ்ரீயை ('அள்ளிப் பந்தல் கால்கலெடுத்து') புகழ் மணந்து கொண்டார். சைலஸ்ரீயின் அப்போதைய பெயர் ஆஷா.

http://cdn3.supergoodmovies.com/FilesThree/b6a1ee93cda741b2bcbee5c660b84317.jpg

http://www.tamilspider.com/attachments/Resources/6800-16658-sumitra.JPG

இன்னொரு தகவலும் உண்டு. நடிகர் சுதர்சனின் சகோதரி நடிகை சுமித்ரா. சரியா?

vasudevan31355
26th July 2014, 09:11 AM
நன்றி ராஜேஷ் சார்.

//கே.ஆர்.வி க்யூட்டாக இருந்த காலங்கள்//

'அண்ணாவின் ஆசை' யில் இன்னொரு நல்ல பாடலும் உண்டு. நமது இசையரசி அழகாகப் பாடியிருப்பார். கே.ஆர்.விஜயா படு ஸ்லிம்மாக பிகினியில் கவர்ச்சியாக வருவார். விஜயா 'பட்டணத்தில் பூதம்' படத்தில் மட்டுமே நீச்சல் உடையில் நடித்திருந்தார் என்று சொல்லுவார்கள். ஆனால் இந்தப் படத்திலும் நீச்சல் உடையில் வருவார்.

கண்ணியப் பாடகியின் குரல் வெகு இனிமை. அருமை. பாடலும் சுகமாகவே இருக்கும்.

'பூப்போல் மலர பொட்டு வைத்தான்
புன்னகையில் தேன் சொட்டு வைத்தான்
பார்வையிலே இளம் சிட்டு வைத்தான்
இதைப் படைத்தவன் தனியே விட்டு வைத்தான்'


http://www.youtube.com/watch?v=JkEOK6HAl9U&feature=player_detailpage

rajeshkrv
26th July 2014, 09:11 AM
ராஜேஷ் சார்,

நடிகர் நாகேந்திர ராவ் எம்.கே ராதா, பானுமதி நடித்த பழைய 'அபூர்வ சகோதரர்கள்' படத்தின் 'மார்த்தாண்டன்' என்ற அட்டகாசமான வில்லன். (மேலே உள்ள படத்தில் குளோஸ்-அப் பில் இருப்பவர்) 'அபூர்வ சகோதர்கள்' நீரும் நெருப்பும் ஆகும் போது அசோகன் அதில் வில்லன ஆனார்.

நடிகர் சுதர்சன் (நடிகர் திலகத்தின் சில படங்களில் பிரதான வில்லன்) கன்னட மற்றும் தமிழ் நடிகையான சைலஸ்ரீயை ('அள்ளிப் பந்தல் கால்கலெடுத்து') புகழ் மணந்து கொண்டார்.


இன்னொரு தகவலும் உண்டு. நடிகர் சுதர்சனின் சகோதரி நடிகை சுமித்ரா. சரியா?
ஆம் பழைய படங்களில் ரஞ்சன் மற்றும் எம்.கே.ராதாவுடன் நடித்திருக்கிறார். மிகச்சிறந்த நடிகர்
ஆம் சுதர்சன் சைலஸ்ரீயை மணந்து கொண்டார்.
சுமித்ராவிற்கும் இவர்களுக்கும் சம்பந்தம் இல்லை ..
3445

rajeshkrv
26th July 2014, 09:13 AM
பூ போல மலர பொட்டு வைத்தான் .. ஆஹா இனிமையான பாடல் . நீண்ட நாட்களுக்கு பின் கேட்கிறேன்
யாரங்கே வாசுஜிக்கு ஆயிரம் பொற்காசுகள் கொண்டு வா..

vasudevan31355
26th July 2014, 09:18 AM
யாரங்கே வாசுஜிக்கு ஆயிரம் பொற்காசுகள் கொண்டு வா..

சொக்கா! அவ்வளவும் எனக்கே எனக்கா?:happydance:

vasudevan31355
26th July 2014, 09:24 AM
ராஜேஷ் சார்,

http://www.aptalkies.com/modules/gallery/galleries/Movies/Adavi%20Raja%20(1970)/posters/Adavi%20Raja%20(1970).jpg

தெலுங்கில் 'அடவி ராஜா' என்று ஒரு படம் வந்தது. அனேகமாக கன்னடத்திலிருந்து மொழி மாற்றப் பட்டிருக்க வேண்டும். இதில் சைலஸ்ரீ சுதர்சனோடு இணைந்து நடித்திருந்தார். சுதர்சன் இப்படத்தின் ஹீரோ. டார்ஜான் சுந்தரி ரேஞ்சுக்குக் கலக்குவார் சைலஸ்ரீ.

இங்கேயும் ஒரு கங்கை தமிழ்ப்படத்தின் நாயகி கன்னட தாரா முகமும், பழைய சைலஸ்ரீ முகமும் அப்படியே அச்சில் வார்த்தது போல் ஒன்றாக இருக்கும்.

rajeshkrv
26th July 2014, 09:33 AM
இது அடவி ராமுடுவிற்கு முன்னாடியே வந்திருக்க கூடும் .. ஏனென்றால் என்.டி.ஆர், ஜெய்பிரதா, ஜெயசுதாவின் அடவி ராமுடு 80’களில் வந்த படம்
ஆம் ஷைலஸ்ரீ ஆஷா என்றும் பின் ஷைலஸ்ரீ என்றும் பல மொழிகளில் நடித்தார்
தமிழில் பல படங்களில் நடித்தார். தமிழிலும் கன்னடத்திலும் சரளம் அதனால் தான் திருமலை தென்குமரியில் கன்னட பாடலுக்கு இவரே வரிகள் எழுதினாராம்.


http://www.youtube.com/watch?v=iXIPtoDESto

rajeshkrv
26th July 2014, 09:39 AM
மன்னிக்கவும் அடவி ராஜா நம்ம யானை வளர்த்த வானம்பாடி மகன் தான்

கன்னடத்தில் வந்திருக்கலாம்

vasudevan31355
26th July 2014, 10:41 AM
சைலஸ்ரீ என்றதும் எனக்கு 'முத்துச்சிப்பி' படம்தான் நினைவுக்கு வரும்.

சைலஸ்ரீ ஒரு நல்ல டான்சர். இந்தப்படத்தில் எஸ்.எம்.சுப்பையா நாயுடு இசையில் நம் எல்லோர் மனதையும் கவர்ந்த ராட்சஸி ஒரு பாடலைப் பாடியிருப்பார். சும்மா அதம் பறக்கும்.

சைலஸ்ரீ டைட்டான ஆடைகள் அணிந்துகொண்டு இந்த கிளப் டான்ஸ் ஆடுவார்.

'ஹோய்..

தட்ட்டட்டும் கைகள் மெல்லத் தாளக் கட்டோடு
பேசட்டும் கண்கள் இந்த பருவச் சிட்டோடு'

அமர்க்களம் சார். பாடகி, நடிகை, இசையமைப்பாளர் மூவரும் இணைந்து பின்னிப் பெடலெடுக்கும் பாடல்.

என்னை மிகவும் கவர்ந்த கிளப் பாடல். பாடல் முடிகையில் come september 61.


http://www.youtube.com/watch?v=N7urLVP2ev4&feature=player_detailpage

gkrishna
26th July 2014, 11:13 AM
அடவி ராமுடு - எங்கள் தலைவன்
http://yuq.me/users/27/781/EjdV3Rc1ha.png
சூப்பர் duper ஹிட் படம் (பாடம் )
http://2.bp.blogspot.com/_hkhUD0LDPho/TGBCX_jIz7I/AAAAAAAABmw/1BLuWdDRm5Y/s1600/adaviramudu1.jpg
ராமராவ் காருவின் பாபி காலர் ஷர்ட் 42 பாட்டம் பெல்லஸ் மறக்க முடியுமா நீஈஈஈஈஈஈஈஈஈ ல மலைகளுக்குள் :)

vasudevan31355
26th July 2014, 11:16 AM
ராஜேஷ் சார்

'அடவி ராஜா' தெலுங்கு படம் கன்னடத்திலிருந்து தெலுங்கிற்கு டப்பிங் ஆனதுதான். 1970 இல் வந்தது. ஆனால் 1969 இலேயே 'காடின ரஹஸ்யா' என்று கன்னடத்தில் வெளியாகி விட்டது. சத்தியம்தான் மியூசிக். இவ்ளோவ் நேரம் மண்டையைப் போட்டு பிச்சிக்கிட்டிருந்தேன்.

கடலூர் கமர் தியேட்டரில் பள்ளிப் பருவத்தில் இப்படத்தை காலை காட்சியாகப் பார்த்தது நினைவிருக்கிறது தமிழில். 'காட்டு ராஜா' என்று டைட்டில்.

கிருஷ்ணா சார் சந்தோஷப் படுவார். சரி! இனிமேல் தமிழை பிரிச்சி மேய்வோம்.

vasudevan31355
26th July 2014, 11:20 AM
வாங்க கிருஷ்ணா சார்! ஏன் லேட்டு. பெஞ்ச்சு மேலே ஏறி நில்லுங்க.:)

இப்பதான் 'கிருஷ்ணா சார் சந்தோஷப் படுவார்' அப்படின்னு டைப் அடிச்சி போஸ்ட் பண்ணா உங்க 'அடவி ராமுடு' நிக்கிறாரு. ம்..வயசு 200. உங்களுக்கு இல்லே. இந்தப் படத்தில் தேவுடுகாருக்கு. படு கிழம்

vasudevan31355
26th July 2014, 11:28 AM
கிருஷ்ணா சார்,

நேற்று நம்ம படமான 'வரவேற்பு' பார்த்து சிலிர்த்தேன்.

http://i.ytimg.com/vi/Rw_TP2EGp7o/hqdefault.jpg

சி.ஐ.டி சகுந்தலா, தேங்காய் காட்சிகள் எப்படி சென்சாரில் தப்பின?

ஜெயகௌசல்யா பால்மணம் மாறாத பச்சைக் குழந்தை. இந்தக் குழந்தையும் இந்தியில் பிரபாத் என்ற ஒரு மாதிரிப் படத்தில் நடித்தது.

மக்கள் கலைஞர் அதே சுறுசுறுப்பு.

மனோகர் பியானோ வாசித்தால் மரணம் நிச்சயம்.

பாடல்களில் ராட்சஸி பாடும் 'வரவேண்டும் மகராஜா'வும், ஜெய் கௌசல்யா டூயட்டன 'பொன்வண்ண மாலையில் நீ தொடும் போது'ம் அட்டகாசம்.

ராதா ராதா ராதா.... டொடக் டொடக் டக்

ராஜா ராஜா ராஜா....

சூப்பர் சார்.


http://www.youtube.com/watch?v=Rw_TP2EGp7o&feature=player_detailpage

gkrishna
26th July 2014, 11:43 AM
வாங்க கிருஷ்ணா சார்! ஏன் லேட்டு. பெஞ்ச்சு மேலே ஏறி நில்லுங்க.:)

இப்பதான் 'கிருஷ்ணா சார் சந்தோஷப் படுவார்' அப்படின்னு டைப் அடிச்சி போஸ்ட் பண்ணா உங்க 'அடவி ராமுடு' நிக்கிறாரு. ம்..வயசு 200. உங்களுக்கு இல்லே. இந்தப் படத்தில் தேவுடுகாருக்கு. படு கிழம்

அண்ணா

அந்த எங்கள் தலைவன் ஸ்டெப்ஸ்ஊ
தமிழ் dabbing பாட்டு - 'அப்பா யானை அம்மா யானை என் யானை உன் யானை எல்லா யானை இங்கு உண்டு '

அந்த 200 வயது தொண்டு கிழம் காலை காலை உதையும்
யாராவது ராமராவ் காரு ரசிகர்கள் நம்மை பின்னிர போறாங்கா அண்ணா

வரவேற்பு எந்த தொலைகாட்சியில்
I N moorthy direction

gkrishna
26th July 2014, 11:46 AM
நேற்று நம்ம படமான 'வரவேற்பு' பார்த்து சிலிர்த்தேன்.




வாசு அண்ணா

கல்கண்டு தமிழ்வாணன் ஒரு தமிழ்படம் ஜெய் வைச்சு எடுத்தார்
ஷப்னம் னு ஒரு நடிகை
அந்த படத்தின் டைட்டில் என்ன அண்ணா

RAGHAVENDRA
26th July 2014, 11:50 AM
கிருஷ்ணா ... காதலிக்க வாங்க..

அய்ய்யோ... வேற மாதிரியெல்லாம் நினைச்சுடப் படாது...

தமிழ்வாணன் தயாரித்த படத்தின் பேரைச் சொன்னேன்...

RAGHAVENDRA
26th July 2014, 12:00 PM
உள்ள(த்)தை அள்ளித்தா

http://sim01.in.com/62/ff8c89be5880be41ab3b153d05d41f5a_pt_xl.jpg

பேருன்னதும் ஞாபகம் வருது..

முத்துராமன் இரு வேடங்களிலும் விஜயகுமாரி, ஸ்ரீகாந்த் மற்றும் பலர் நடித்த படம் பேர் சொல்ல ஒரு பிள்ளை. 1978ம் ஆண்டு வெளிவந்தது. கிருஷ்ணன் பஞ்சு இயக்கிய இப்படத்திற்கு இசை விஜயபாஸ்கர். வாணி ஜெயராமுடைய குரலை தமிழ்த் திரையுலகில் அதிக அளவில் பயன் படுத்திக் கொண்ட இசையமைப்பாளர்கள் விஜயபாஸ்கர் மற்றும் சங்கர் கணேஷ். இதிலும் வாணி ஜெயராமுக்கு இரண்டு சூப்பர் பாடல்கள். அது மட்டுமின்றி இசையரசி சுசீலா அவர்களின் குரலில் இன்னொரு இனிமையான பாடலும் உண்டு.

முத்துராமன் சிறந்த தொழிலாளி, நிர்வாகத் திறமையுள்ளவர். பண வசதியில்லை, குறிப்பாக முதல் பிள்ளை பிறக்கும் போது அவர் சிரமப் படுகிறார். அதன் காரணமாக அவரை தரித்திரம் எனத் திட்டுகிறார். இரண்டாவது பிள்ளை பிறக்கும் சமயத்தில் அவருடைய தொழில் திட்டம் ஒரு பணக்காரரால் ஒப்புக் கொள்ளப் பட்டு பண உதவி செய்கிறார். இதன் காரணமாக இரண்டாம் பிள்ளையை செல்லமாக வளர்க்கிறார். வளர்ந்து பெரியவனாகும் இளைய பிள்ளை ஒழுக்கமில்லா வாழ்க்கை வாழ்கிறார். செலவு நிறைய செய்து விடுகிறார். ஒரு கட்டத்தில் திருடவும் முனைகிறார். அதே நேரத்தில் அவரால் பெண்டாளப்பட்ட பெண்ணுக்கு குழந்தை பிறந்து அந்தக் குழந்தையை அவள் பாட்டுப் பாடி வளர்க்கிறாள். இறுதியில் இளைய பிள்ளை திருந்துகிறாரா, அதில் நல்லவனான மூத்த பிள்ளையின் பங்கு என்ன இவையே கதையின் இறுதிப் பகுதி.

இதில் மூத்த பிள்ளையாகவும் முத்துராமன் நடிக்க, இளைய பிள்ளை நம்ம தென்னாட்டு ஓமர் ஷெரீஃப் ஸ்ரீகாந்த்.

ஸ்ரீகாந்த் திருடனாக உருவெடுக்கும் சமயத்தில் குழந்தையை வைத்து அவருடைய தாலி கட்டாத மனைவி பாடும் பாடலை இசையரசி அருமையாகப் பாடியிருப்பார்.

இந்தப் பாடலைத் தான் இப்போது நீங்கள் தரவிறக்கிக் கேட்க உள்ளீர்கள்.

பாடலாசிரியர் பஞ்சு அருணாசலமா அல்லது கவியரசரா தெரியவில்லை.

முத்து நகை சிந்தி வரும் (http://www.mediafire.com/listen/5i7m7o53i4jy9gn/muthunagaiPOP.mp3)

RAGHAVENDRA
26th July 2014, 12:02 PM
பேர் சொல்ல ஒரு பிள்ளை படத்தில் இடம் பெற்ற வாணி ஜெயராமின் மயக்க வைக்கும் குரலில் அற்புதமான பாடல்

பாடச் சொல்லும் நெஞ்சம் நெஞ்சம் (http://www.mediafire.com/listen/il2x07mk8n2c2yk/PadasollumNenjamPOP.mp3)

gkrishna
26th July 2014, 12:12 PM
உள்ள(த்)தை அள்ளித்தா

per solla oru pillai

இதில் முத்துராமன் ஜோடி யாரு வேந்தர் சார் ஒரு புதுமுகம் னு நினைவு
இந்த படம் நினைவில் உண்டு
1978 ரிலீஸ் னு நினைக்கிறன்

வாணி இன்னொரு பாட்டு ரொம்ப நல்ல இருக்கும் வேந்தர் அண்ணா

கலைமகள் உறவும்
திருமகள் வரவும்
அவரவர் விதிப்படி இறைவனின் பரிசு

gkrishna
26th July 2014, 12:17 PM
அண்ணா

எல்லோரும் இனிமேல் எனக்கு அண்ணா தான்
கூப்பிடலாம் இல்லையோ

கண்ணன் வருவான் னு ஒரு படம் ஜெய் லக்ஷ்மி ஜோடி
பாட்டு எல்லாம் சூப்பர்

https://encrypted-tbn1.gstatic.com/images?q=tbn:ANd9GcRYtb3B4-ZHuwaGWIHFelF5XqBPuEGGmAwfuHnxsdmWa1YigbRr

'பூவினில் மெல்லிய பூங்கொடி பொன்னிறம் காட்டும் பைங்கிளி
அவள் வாழ்க தினம் வாழ்க ' சூப்பர் triumphat சாக்ஸ் 'பபபபா பபபப'

மூன்றாம் பிறையில் பார்த்தது, பூரண நிலவாய் ஆனது, பிள்ளைத் தமிழை கேட்டது,'

'நிலவுக்கு போவோம் மாளிகை அமைப்போம் '
http://www.youtube.com/watch?v=vIFM4-6yWTU
http://www.youtube.com/watch?v=SBA6NCQoCSI
http://www.youtube.com/watch?v=5h7Svn1RRUI

vasudevan31355
26th July 2014, 12:27 PM
கிருஷ்ணா சார்,

கல்கண்டு தமிழ்வாணரின் படம் 'காதலிக்க வாங்க'. மற்றவர்கள் படங்களை எல்லாம் கல்கண்டில் 'கிழி கிழி' என்று விமர்சனத்தில் கிழித்த தமிழ்வாணன் இந்தப் படத்தை எடுத்து எல்லோருக்கும் தீனி போட்டார். தமிழ்வாணனை எல்லாம் கிழித்துவிட்டார்கள். தனக்கு வந்தால்தான் தெரியும் தலைவலியும், திருகு வலியும்.

ஆனால் ஒன்றிரண்டு பாடல்கள் தேவலை ராகம்.

இந்தப் பாட்டைப் பாருங்க.

ஆச்சிக்கு ஜோடி மீசை மாமா மேஜராம். கொடுமைடா சாமி.

ஸ்ரீகாந்த் பரட்டை முடி தாடியுடன் வருவார்.

ஜெயக்கு ஜோடி கவிதாவா? (ஒ.மஞ்சு கவிதா இல்லை)

மூன்று ஜோடிகளும் சேர்ந்து வரும் பாட்டு.

காதல் என்றாலே தேனல்லவா
காணும் பேரின்ப வீடல்லவா


http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=976sCiB5RWE

vasudevan31355
26th July 2014, 12:30 PM
கிருஷ்ணா சார்!

'நிலவுக்குப் போவோம்' இன்றைய ஸ்பெஷலுக்காக வைத்திருந்தேன். நீங்கள் போட்டு விட்டீர்கள். என்னே ஒற்றுமை! என்ன திடீர்னு 'அண்ணா'? ஏதாவது விஷயம் இருக்குமே!

vasudevan31355
26th July 2014, 12:34 PM
ம்..எங்க கோபால் இல்லையென்று தைரியத்தில் ஜெய் பாட்டா போடறீங்க.
ஓஹோ! அவருக்கும் ஒரு அண்ணா போட்டால் சரியாய்ப் போயிற்றா?
நல்ல டெக்னிக்கா இருக்கே. இருங்க நான் கூப்பிட்டுப் பார்த்துக்கிறேன்.

கோபால் அண்ணா! கோபால் அண்ணா!

நல்லாத்தான் போய்க்கிட்டு இருக்கு. ஆமாம்! பேசும்படம் 'அண்ணாவின் ஆசை' பார்த்தாச்சா.

vasudevan31355
26th July 2014, 12:53 PM
கிருஷ்ணா சார்/ ராகவேந்திரன் சார்,

இன்று 'சைலஸ்ரீ' தினம். அதனால் உங்களுக்கெல்லாம் ஒரு ஸ்பெஷல் சைலஸ்ரீ (ஆஷா )படம். இதுவரை வெளிவராதது.

பேசும்படம்.

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/f35dd37a-9df2-4192-8797-237cae90684f.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/f35dd37a-9df2-4192-8797-237cae90684f.jpg.html)

gkrishna
26th July 2014, 01:18 PM
கிருஷ்ணா சார்!

'நிலவுக்குப் போவோம்' இன்றைய ஸ்பெஷலுக்காக வைத்திருந்தேன். நீங்கள் போட்டு விட்டீர்கள். என்னே ஒற்றுமை! என்ன திடீர்னு 'அண்ணா'? ஏதாவது விஷயம் இருக்குமே!

எல்லாம் சும்மா ஒரு இதுக்கு தான் அண்ணா
சார் னு போட்டா கோவுக்கு கொஞ்சம் கஷ்டம்
அதனால அண்ணா ஓகே தானே அண்ணா

இன்றைய ஸ்பெஷல் நிச்சயம் நிலவுக்கு போவோம்
எதிர் பார்த்து கொண்டு இருக்கும்

gkrishna
26th July 2014, 01:20 PM
கிருஷ்ணா சார்,

கல்கண்டு தமிழ்வாணரின் படம் 'காதலிக்க வாங்க'. மற்றவர்கள் படங்களை எல்லாம் கல்கண்டில் 'கிழி கிழி' என்று விமர்சனத்தில் கிழித்த தமிழ்வாணன் இந்தப் படத்தை எடுத்து எல்லோருக்கும் தீனி போட்டார். தமிழ்வாணனை எல்லாம் கிழித்துவிட்டார்கள். தனக்கு வந்தால்தான் தெரியும் தலைவலியும், திருகு வலியும்.

ஆனால் ஒன்றிரண்டு பாடல்கள் தேவலை ராகம்.



இந்த படம் தான் நேற்று சன் லைப் தொலைக்காட்சியில்
தமிழ்வாணன் தயாரிப்பு கிழிச்சு எடுத்துட்டாங்க நீங்க சொன்ன மாதிரி
மேஜர் ஸ்ரீகாந்த் ஒரு சண்டை காட்சி வேற காமெடி தான் போங்க அண்ணா

gkrishna
26th July 2014, 01:21 PM
கிருஷ்ணா சார்/ ராகவேந்திரன் சார்,



super still vasu anna

vasudevan31355
26th July 2014, 01:28 PM
'மோட்டார் சுந்தரம் பிள்ளை' படத்தில் ஜெயலலிதாவுடன் சைலஸ்ரீ

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/sa-3.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/sa-3.jpg.html)

vasudevan31355
26th July 2014, 01:31 PM
'மோட்டார் சுந்தரம் பிள்ளை' படத்தில் ஜெயலலிதா, சச்சு மற்றும் சைலஸ்ரீ பங்கு கொள்ளும் அற்புதமான பாடல்.

இப்பாடலின் முதல் வரியைப் போலவே இப்பாடலும் அட்டகாசம். வாலியின் வளமான வரிகளில்

ராட்சஸி

இசையரசி

சூலமங்கலம்

மூவரும் கலக்கும் பாடல்.


http://www.youtube.com/watch?v=0qH0LQUgU6U&feature=player_detailpage

vasudevan31355
26th July 2014, 01:38 PM
இசையரசியின் சுகமான குரலில் தன் சொந்தக் கணவர் சுதர்சனுடன் (பியானோ வாசிப்பவர்) சைலஸ்ரீ பாடும்

'ஏ சுபதினதே நன்னா'

'Naguva Hoovu' (1971) படத்தில்

அற்புதமான பாடல். இனிமையோ இனிமை. இசை: ஜி.கே.வெங்கடேஷ்


http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=uTkORrPYVQU

gkrishna
26th July 2014, 02:04 PM
ராஜாவுக்கேத ராணி 1978
ஜெய் ஸ்ரீதேவி ஜோடி
விஜயபாஸ்கர் இசை

பாலா வாணி குரல்களில் - சூப்பர் குறும்பு பாலா அதற்கு ஈடு கொடுக்கும் வாணி

பாலா : அம்மாடி பொண்ணு
என்னமா கண்ணு
உடம்பெங்கும் ஏனிந்த ரகசியம்
வாணி : அப்பாவி பொண்ணை
தப்பாக பார்த்த
எப்போதும் அதுதானே அதிசயம்

பாலா : பொன்வண்டு போல்
பெண் வண்டுகள்
எங்கெங்கோ செல்கின்றன
வாணி : சென்றாலென்ன
ஆண் வண்டுகள்
பின்னாலே வருகின்றன
பாலா : தலைவிதிதான் மீனாளாம்
தடத்தைவிட்டு போனாளாம்
வயசு போன மனுஷன்கிட்டே மனச விட்டாளாம்

அம்மாடி பொண்ணு
என்னமா கண்ணு
உடம்பெங்கும் ஏனிந்த ரகசியம்

அப்பாவி பொண்ணை
தப்பாக பார்த்த
எப்போதும் அதுதானே அதிசயம்

வாணி : அங்கே நின்று
கன்னநகள் ரெண்டு
ஆரத்தி எடுபதென்ன

பாலா : அழகென்பது
பெண் மேனியில்
அபிஷேகம் செய்வதென்ன

வாணி : அறிவு சொல்லும் ராஜாவாம்
அழகை கண்டால் கூஜாவாம்
படிபடியா இப்போது வழுக்கிவிட்டாராம்

பாலா : அரே -தளதளகுது தக்காளி
பளபளக்குது பப்பாளி
தனிமையிலே சென்றாலே உலகம் கெட்டதடி

(இந்த வரி பாடும் போது பாலா கலக்கல் )

அடி அம்மாடி பொண்ணு
என்னமா கண்ணு
உடம்பெங்கும் ஏனிந்த ரகசியம்

வாணி : அப்பாவி பொண்ணை
தப்பாக பார்த்த
எப்போதும் அதுதானே அதிசயம்

இந்த பாட்டுக்கு ஒளி வடிவம் கிடைக்குமா (விடியோ)

http://www.saavn.com/p/song/tamil/S.P.-Balasubrahmanyam-Romantic-Duets/Ammadi-Ponnu-Ennamma-Kannu/FRoqXAFFBXc

vasudevan31355
26th July 2014, 02:27 PM
கிருஷ்ணா சார்,

ராஜவுக்கேத்த ராணி. ஸ்ரீதேவிக்கேத்த ஜெய் இல்லை.

ஆனால் பாடல் துள்ளல். நன்றி முழுப் பாட்டிற்கும்.

gkrishna
26th July 2014, 02:36 PM
ஆம் ஷைலஸ்ரீ ஆஷா என்றும் பின் ஷைலஸ்ரீ என்றும் பல மொழிகளில் நடித்தார்
தமிழில் பல படங்களில் நடித்தார். தமிழிலும் கன்னடத்திலும் சரளம் அதனால் தான் திருமலை தென்குமரியில் கன்னட பாடலுக்கு இவரே வரிகள் எழுதினாராம்.


நீங்கள் சொல்வது உண்மை ராஜேஷ் அண்ணா

இந்த பன்மொழி பாடலில்
அமுதே தமிழே நீ வாழ்க - பூவை செங்குட்டவன் எழுதி இருப்பார்
மலையாள வரிகளை - மலையாள கவிஞர் ஜோப் எழுதி இருப்பார்
கன்னட வரிகளை சைலஸ்ரீ அவர்களே எழுதி இருப்பார்
சென்னை தமிழ் வரிகளை குமார் என்பவர் எழுதி இருப்பார்

vasudevan31355
26th July 2014, 02:39 PM
http://www.inbaminge.com/t/d/Deiveega%20Raagangal/folder.jpg

'தெய்வீக ராகங்கள்' என்றொரு படம். 1980-இல் ரிலீஸ். நம் ஸ்ரீகாந்த், கெட்டிக்காரன் லீலா, வடிவுக்கரசி நடித்திருப்பார்கள்.

இசை மெல்லிசை மன்னர்.

ஓடுவது அழகு ரதம்'

என்று ஸ்ரீகாந்தும், வடிவக்கரசியும் ஓடுகிறார்கள் டூயட் படித்தபடியே

http://static.gaana.com/images/albums/86/6786/crop_480x480_6786.jpg


http://www.youtube.com/watch?v=13fyZbSr9tc&feature=player_detailpage

vasudevan31355
26th July 2014, 02:47 PM
கிருஷ்ணா சார்,

சைலஸ்ரீ தானே வரிகளை கன்னடத்தில் எழுதி நடித்த பாடல் காட்சி

'திருமலை தென்குமரி' படத்தில்

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/thi.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/thi.jpg.html)

gkrishna
26th July 2014, 02:48 PM
'மோட்டார் சுந்தரம் பிள்ளை' படத்தில் ஜெயலலிதாவுடன் சைலஸ்ரீ

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/sa-3.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/sa-3.jpg.html)

வாசு அண்ணா
ms பிள்ளை யில்
மூத்த பெண் காஞ்சனா -கணவர் சிவகுமார்
இரண்டாவது பெண் சைலஸ்ரீ - அவர் கணவர் ஸ்ரீராம் தானே
மூன்றாவது பெண் அம்மா - அவர் கணவர் ரவி சரியா

vasudevan31355
26th July 2014, 02:49 PM
'வெண்ணிற ஆடை' திரைப்படத்தில் மூர்த்தியுடன் சைலஸ்ரீ

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/rfgbhn.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/rfgbhn.jpg.html)

vasudevan31355
26th July 2014, 02:51 PM
வாசு அண்ணா

மூன்றாவது பெண் அம்மா - அவர் கணவர் ரவி சரியா

மூன்றாவது பெண் அம்மா -அவர் கணவர் அப்பா:)

just for fun.

mr_karthik
26th July 2014, 02:59 PM
டியர் வாசு சார்,

'அண்ணாவின் ஆசை' படத்திற்கான பேசும்படம் சிறப்பு நிழற்பக்கங்கள் மிகவும் அருமை. பழைய நினைவுகளை மீட்டுகின்றன. உண்மையில் இவையெல்லாம் காணக்கிடைக்காதது. இதுவரை முழுப்படம் பார்த்ததில்லை. கே.ஆர்.விஜயா கியூட்டாக இருப்பார்போல தெரிகிறது. நீங்கள் குறிப்பிட்ட பாடல் அதிகம் கேட்டிராதது. அந்தப்படத்தின் பாடல் என்றால் 'பாட்டெழுதட்டும் பருவம்' தான் முதலில் நினைவுக்கு வரும். அதுகூட வானொலியிலோ, தொலைக்காட்சிகளிலோ பார்த்ததில்லை. 'பி'பி.எஸ்.ஹிட்ஸ்' என்ற ஆடியோ கேசட்டில் (சி.டி.க்கள் வருவதற்கு முந்திய வடிவம்) அடிக்கடி கேட்டிருக்கிறேன்.

அப்போதெல்லாம் சினிமா தலைப்புகளை சம்மந்தப்படுத்தி வார இதழ்களில் அரசியல் கார்ட்டூன்கள் போடுவார்கள். அப்படி ஒருமுறை, இப்படம் வந்த 1966-ம் ஆண்டில் குமுதம் இதழில், 'அண்ணாவின் ஆசை' என்று தலைப்பிட்டு தமிழ்நாடு முதலமைச்சர் நாற்காலியை அண்ணாதுரை ஏக்கத்துடன் பார்த்துக்கொண்டிருப்பது போல கார்ட்டூன் போட்டிருந்ததை, தம்மாத்தூண்டு வயதில் பார்த்த நினைவு இப்போது வருகிறது.

அண்ணாவின் ஆசை சரியாகப் போகாத நிலையில் அடுத்த ஆண்டில் நடிகர்திலகத்தை வைத்து 'தங்கை' படத்தை எடுத்து தலைவர் ஆக்ஷன் ஹீரோவாகவும் பின்னுவார் என்று நிரூபித்தார்...

RAGHAVENDRA
26th July 2014, 02:59 PM
கிருஷ்ணா ஜீ
கண்ணன் வருவான்... ஆஹா... பியானோ வில் கலக்கிய பாடல் பூவினும் மெல்லிய பூங்கொடி... கோரஸ் அற்புதமாக இருக்கும்.
நிலவுக்கு போவோம்...

இந்தப் பாடலைக் கேட்ட மாத்திரத்தி்ல் உடனே நினைவுக்கு வருவது ரவியின் நாலும் தெரிந்தவன் படத்தில் இடம் பெற்ற நிலவுக்கே போகலாம் வான் நிலவுக்கே பாடல் தான். துரதிருஷ்டவசமாக டிவிடியில் இப்பாடல் இடம் பெறவில்லை. இணையத்திலும் தென்படவில்லை.. ரவி காஞ்சனாவின் சூப்பர் பெர்ஃபார்மன்ஸ்

RAGHAVENDRA
26th July 2014, 03:01 PM
வாசு சார்
புதிய பறவையில் தலைவர் சொல்வார்.. காதல் என்ற மந்திரத்தை வைத்தா என்னை வீழ்த்தினாய் என்கிற மாதிரி.

அதே போல் தெய்வீக ராகங்கள் பாட்டைப் போட்டு என்னைக் கவுத்துட்டீங்க சார்... ஆஹா... பாவை நீ மல்லிகை... எத்தனை ஜென்மம் வேண்டுமானாலும் கேட்டுக் கொண்டே இருக்கலாம்.

அது மட்டுமா பச்சை மோகினி பாட்டு கூடத் தான்.

மொத்தத்தில் எம்எஸ்வி ரசிகர்களின் மனம் கவர்ந்த படப் பாடல்களில் தெய்வீக ராகங்களுக்கு நிச்சயம் இடம் உண்டு.

காரணம் அவர் போடும் பாடல் ஒவ்வொன்றுமே தெய்வீக ராகம் தானே...

RAGHAVENDRA
26th July 2014, 03:03 PM
அண்ணாவின் ஆசை பள்ளி மாணவனாக இருந்த போது பாரகனில் பார்த்தது. அப்போதெல்லாம் பாலர் அரங்கில் குழந்தைகள் படம் 6 பைசாவில் பார்த்து விட்டு எதிரே பாரகனில் போஸ்டரைப் பார்த்து நின்று ரசித்து விட்டு வீட்டுக்குப் போவோம். அப்படி பேனர் பார்த்து ரசித்து பார்த்த படம் தான் அண்ணாவின் ஆசை.

இதே போல் பாரகனில் திரையிட்ட படங்களில் நினைவில் நிழலாடும் படங்களில் பாசமும் நேசமும், குழந்தைக்காக, கல்யாண ஊர்வலம் போன்று பல படங்கள்...

vasudevan31355
26th July 2014, 03:08 PM
இரண்டாவது பெண் சைலஸ்ரீ - அவர் கணவர் ஸ்ரீராம் தானே


இல்லை கிருஷ்ணா சார்.

சைலஸ்ரீயுடன் அமர்ந்திருக்கும் அவர் ஜோடியைத்தானே கேட்கிறீர்கள்? அவர் பெயர் சூர்யகுமார்.

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/soo.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/soo.jpg.html)

gkrishna
26th July 2014, 03:17 PM
'தெய்வீக ராகங்கள்' என்றொரு படம். 1980-இல் ரிலீஸ். நம் ஸ்ரீகாந்த், கெட்டிக்காரன் லீலா, வடிவுக்கரசி நடித்திருப்பார்கள்.

இசை மெல்லிசை மன்னர்.

ஓடுவது அழகு ரதம்'

என்று ஸ்ரீகாந்தும், வடிவக்கரசியும் ஓடுகிறார்கள் டூயட் படித்தபடியே



பாவை நீ மல்லிகை
பால் நிலா புன்னகை

கொஞ்சம் தேடினேன் வந்தது ஜாடை

vasudevan31355
26th July 2014, 03:19 PM
https://i1.ytimg.com/vi/MEfFRJut17U/mqdefault.jpg

ஸ்ரீராம் பற்றி ஒரு சிறுகுறிப்பு.

ஸ்ரீராம் 'பழனி'யில் நடிகர் திலகத்தின் சகோதரர்.

'பச்சை விளக்கு' படத்தில் எம்.ஆர். ராதாவுடன் சேர்ந்த வில்லன்.

'மர்ம வீரன்' என்ற படத்தின் ஹீரோ. (நடிகர் திலகம் இதில் கெஸ்ட் ரோல்).

'வாழ்விலே ஒரு நாள்' நடிகர் திலகம் நடித்த படத்தில் நடிகர் திலகத்தின் மகனாக இன்ஸ்பெக்டர் வேடம். நடிகர் திலகம் கூட இப்படத்திற்கு கமெண்ட் கூறும் போது 'என்னை விட வயதானவருக்கு நான் தந்தையாக நடித்த படம் ' என்று குறிப்பிட்டிருப்பார். (உண்மை. நடிகர் திலகத்தை விட ஸ்ரீராம் மூத்தவர்)

'கோடீஸ்வரன்' படத்திலும் நடிகர் திலகத்துடன் காமெடியில் இணைந்திருப்பார்.

http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC5892-1.jpg

நடிகர் திலகம் நடித்து பாதியில் நின்று போன 'ஜீவ பூமி' படத்தின் தயாரிப்பாளர் இவர்தான். மேலே உள்ள படத்தைப் பாருங்கள் 'ஸ்ரீராம் புரொடக்ஷன்ஸ்' என்று போட்டிருக்கும்.

இளமையில் மிக அழகாக இருப்பார்.

அதே இளமையில் இவரைப் பார்த்து விடலாம் ஒரு அற்புத மறக்க முடியாத பாடல் மூலம்.

'சம்சாரம்' படத்தில் மாட்டு வண்டி ஓட்டி கல்லூரி பெண்களைக் கலாய்க்கும் ஸ்ரீராம்.

எனக்கு மிக மிக மிக மிக மிக மிக பிடித்த பாட்டு. (காரில் வரும் துணை நடிகைகளின் முகபாவங்கள் அற்புதம்)


http://www.youtube.com/watch?v=cklW1BKPgeQ&feature=player_detailpage

mr_karthik
26th July 2014, 03:23 PM
டியர் வாசு சார்,

சைலஸ்ரீ தினப்பதிவுகள் அனைத்தும் சூப்பர். இவர்களுக்கென்று தனித்திரி இல்லாதநிலையில் இதுபோன்ற சாமானியர்களை 'தினம்' கொண்டாடி சிறப்பிப்பது நமது திரியின் ஸ்பெஷாலிட்டி.

திருமலை தென்குமரியில் இவர் எழுதிய வரிகள் 'நா பங்காரய்யா நா சிங்காரய்யா' சரியா?. (கர்நாடகாவில் இத்தனை ஆண்டுகள் குப்பை கொட்டியும் இன்னும் கன்னடம் தெரியாது. அலுவலகத்தில் அனைவரும் இங்கிலீஷ். வீட்டுக்கு வந்தால் தமிழ். பர்ச்சேஸ் எல்லாம் அம்மா, 'உங்களுக்கு எதுவும் ஒழுங்கா வாங்கத்தெரியாது' என்ற அடைமொழியுடன்).

'அழகே தமிழே நீ வாழ்க' என்ற அழகான செந்தமிழில் துவங்கும் பாட்டு, பின்னர் மலையாளம் 'கண்ணுகள் பூட்டி ஞான் ஒரு நிமிஷம்'
பின்னர் கன்னடம், பின்னர் தெலுங்கு ரமாபிரபாவின் 'கிருஷ்ணா'
மனோரமாவின் சென்னைத்தமிழில் 'பாடணும்னு மனசுக்குள்ளே ஆச நெறைய மீது' கடைசியில் கடைசி சீட் சிவகுமார், சந்திரன்பாபு, ஏ.பி.என்.பத்மினி ஆகியோரின் 'ஊரெல்லாம் பாரு' என்ற ட்விஸ்ட் பாட்டுடன், அழகான பாட்டை ஒருவழி பண்ணிடுவாங்க...

gkrishna
26th July 2014, 03:24 PM
வாசு அண்ணா
சூப்பர் அண்ணா இன்னிக்கு திரி
வேந்தர் அண்ணா பகலில் விசிட் (அண்ணனுக்கு பிறகு எங்களுக்கு கிடைத்த அண்ணன் )
கூட கார்த்திக் அண்ணா (அண்ணானு சொல்லலாமா .கார்த்திக் அவர்களிடம் பயந்து கேட்கணும்)

கலக்கல் சைலஸ்ரீ பதிவுகள்

gkrishna
26th July 2014, 03:29 PM
https://i1.ytimg.com/vi/MEfFRJut17U/mqdefault.jpg

ஸ்ரீராம் பற்றி ஒரு சிறுகுறிப்பு.

ஸ்ரீராம் 'பழனி'யில் நடிகர் திலகத்தின் சகோதரர்.

'பச்சை விளக்கு' படத்தில் எம்.ஆர். ராதாவுடன் சேர்ந்த வில்லன்.

நடிகர் திலகம் நடித்து பாதியில் நின்று போன 'ஜீவ பூமி' படத்தின் தயாரிப்பாளர் இவர்தான். மேலே உள்ள படத்தைப் பாருங்கள் 'ஸ்ரீராம் புரொடக்ஷன்ஸ்' என்று போட்டிருக்கும்.



ராணிமுத்து நாவல் ஜீவபூமி நம்ம தலைவரை நினைத்து கொண்டே படித்து உள்ளேன்

mr_karthik
26th July 2014, 03:31 PM
தெய்வீக ராகங்கள் பதிவை ஸ்ரீகாந்த் திரியிலும் பதிக்கலாமே.

பிள்ளையாண்டான் திரி ரொம்பநாளா சலனமில்லாமல் கிடக்கிறது...

gkrishna
26th July 2014, 03:32 PM
http://cdn.nammabookscom.netdna-cdn.com/image/cache/data/VanathiPublications/jeevaboomi-500x500_0.jpg

gkrishna
26th July 2014, 03:37 PM
தெய்வீக ராகங்கள் பதிவை ஸ்ரீகாந்த் திரியிலும் பதிக்கலாமே.

பிள்ளையாண்டான் திரி ரொம்பநாளா சலனமில்லாமல் கிடக்கிறது...

கார்த்திக் அண்ணா
சாரதா madem ஸ்ரீகாந்த் திரியின் முதல் பக்கத்தில் இதை பற்றி எழுதி உள்ளார்கள்


'Vennira Aadai' SHREEKANTH
'வெண்ணிற ஆடை' ஸ்ரீகாந்த்

UPDATES.....

முழு ஆய்வுக்கட்டுரைகள் / விமர்சனங்கள் (Analysis / Reviews)

1) வெண்ணிற ஆடை
2) அவள்
3) கோமாதா என் குலமாதா
4) ராஜ நாகம்
5) வியட்நாம் வீடு
6) ராஜபார்ட் ரங்கதுரை
7) சில நேரங்களில் சில மனிதர்கள்
8) தெய்வீக ராகங்கள்
9) இவர்கள் வித்தியாசமானவர்கள்
10) ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்
11) காசி யாத்திரை
12) திருமாங்கல்யம்
13) வெள்ளிக்கிழமை விரதம்

குறு ஆய்வுகள் / தகவல்கள் (Tid-Bits):

1) எதிர் நீச்சல்
2) அவன் ஒரு சரித்திரம்
3) இளைய தலைமுறை
4) வசந்த மாளிகை
5) வாணி ராணி
6) ஞான ஒளி
7) அன்னப்பறவை
8) வெற்றிக்கனி
9) சித்திரச் செவ்வானம்

சிறப்புப் பதிவுகள்:

ஸ்ரீதரின் அறிமுகத்தில் ஸ்ரீகாந்த்
காங்கிரஸ் பேரியக்கத்தில் ஸ்ரீகாந்த்
நடிகர்திலகத்தின் ‘ஸ்ரீகாந்த் பாசம்’
'திரும்பிப்பார்க்கிறேன்' நிகழ்ச்சியில் ஸ்ரீகாந்த்

mr_karthik
26th July 2014, 03:37 PM
கூட கார்த்திக் அண்ணா (அண்ணானு சொல்லலாமா .கார்த்திக் அவர்களிடம் பயந்து கேட்கணும்)

வேண்டாம்.

சும்மா கார்த்திக் என்றே அழையுங்கள். 'அடேய் கார்த்திக்' என்று அழைத்தால் இன்னும் பெட்டர்.

Richardsof
26th July 2014, 03:44 PM
இதுவரை கேட்டிராத பல தமிழ் பாடல்களை பதிவிட்ட நண்பர்களுக்கு நன்றி .

அவன்தான் மனிதன் படத்தின் மூலப்படமான கஸ்தூரி நிவாசா என்ற படம் 1971ல் வந்தது .
கருப்பு வெள்ளை படம் . தற்போது வண்ணத்தில் மாற்றம் செய்து வருகிறார்கள் .
பி.பி ஸ்ரீனிவாஸ் - சுசீலா குரலில் நடிகர் ராஜ்குமார் - ஆரத்தி இணைந்து பாடும் பாடல் மிகவும்
பிரபலம் .

http://youtu.be/_IW35sLC6n0

RAGHAVENDRA
26th July 2014, 03:45 PM
கிருஷ்ணா
ஜீவபூமி தாங்கள் வார இதழில் படித்திருப்பீர்கள்.. ராணி முத்துவில் அது இடம் பெற்றதாகத் தெரியவில்லை...சாண்டில்யனின் தொடராக வந்த போதே ஒவ்வொரு அத்தியாயத்திலும் நடிகர் திலகத்தை நினைத்து நினைத்து அந்த ஓவியங்களைப் பார்த்துக் கொண்டிருப்போம். ஓவியமும் அதே போல் இருக்கும்.

gkrishna
26th July 2014, 03:47 PM
வேண்டாம்.

சும்மா கார்த்திக் என்றே அழையுங்கள். 'அடேய் கார்த்திக்' என்று அழைத்தால் இன்னும் பெட்டர்.

thanks karthik

சாரதா madem பதிந்த பதிவு ஸ்ரீகாந்தின் திரியில்


தெய்வீக ராகங்கள்'

ஸ்ரீகாந்த் கதாநாயகனாக நடித்து 1980-ல் இப்படி ஒரு படம் வந்தது எத்தனை பேருக்குத் தெரியும் என்பது தெரியவில்லை. கதாநாயகனால் வாழ்வு சூறையாடப்பட்டு, உயிரை இழந்த மூன்று பெண்கள் ஆவியாக வந்து (?????) அவரைப் பழிவாங்கும் கதை. நம் திரைப்படங்களுக்கு கதை 'பண்ணுபவர்களும்' கதாநாயகன் ஒரு படத்தில் நடித்ததை மனதில் கொண்டு, அந்த மாதிரியே அவருக்குத் தொடர்ந்து கதை பண்ணுவார்கள் போலும். அல்லது இம்மாதிரி கதை என்றால், அதுக்கு ஸ்ரீகாந்த் தான் என்று ஒதுக்கி வைத்துவிட்டார்கள் போலும். இப்படி குறிப்பிட்ட நடிகருக்கு குறிப்பிட்ட முத்திரை குத்துவதால்தான் அவர்கள் உண்மையான திறமைகள் வெளிவராமல், அல்லது வெளிவர வாய்ப்பளிக்கப்படாமல் போகிறது. ஒரு படத்தில் அவன் பிச்சைக்காரனாக நடித்தால் போச்சு. அப்புறம் பிச்சைக்காரன் ரோலா? கூப்பிடு அவரை என்ற கதைதான். ('ஞான ஒளி'யில் பாதிரியார் ரோலில் மணவாளன் என்கிற கோகுல்நாத் அருமையாக நடித்தார். சரி. உடனே 'பாரதவிலாஸ்' படத்தில் ஒரே ஒரு பாடல் காட்சியில் பாதிரியாராக வந்து 'நிற்பதற்கு' அவரை தேடிப்போய் அழைத்து வந்தார்கள்). சார்லிக்கு 'வெற்றிக்கொடி கட்டு' படத்தில் சேரன் துணிந்து கொடுத்த அற்புதமான ரோலின் மூலம்தானே சார்லியின் பன்முகத்திறமை வெளித்தெரிந்தது?. அப்படியில்லாமல், ‘கற்பழிப்புக்காட்சி கொண்ட பாத்திரமா?. கொண்டா ஸ்ரீகாந்தை’ என்று அப்போதைய இயக்குனர்கள் கடிவாளம் பூட்டிய குதிரைகளாக இருந்தனர், சிலரைத்தவிர. (ஸேஃப்டிக்கு இப்படி ஒரு வார்த்தையை போட்டு வச்சிக்குவோம்).

தன்னிடம் வேலைக்கு வரும் பெண்களை கற்பை சூறையாடி, அவர்களை அருவியில் தள்ளி, தற்கொலை அல்லது விபத்துபோல செட்டப் செய்யும் ஸ்ரீகாந்தை, சட்டமோ, போலீஸோ தண்டிக்க முடியாத காரணத்தால், அவரால் கொல்லப்பட்ட மூன்று பெண்களே பேயாக மாறி, ஆனால் பெண் உருக்கொண்டு அவரைப்பழி வாங்குவதான (??) புதுமையான (??) கதை. அதில் ஒரு பேயாக, அதாவது ஸ்ரீகாந்தினால் ஏமாற்றப்பட்ட பெண்ணாக வடிவுக்கரசி நடித்திருந்தார். மற்ற இருவர் யாரென்பது சட்டென நினைவுக்கு வரவில்லை, எனினும் அப்போதிருந்த இரண்டாம் நிலைக் கதாநாயகிகள்தான்.

ஆரம்பத்தில் ஸ்ரீகாந்தை ஒரு சிதார் இசைக்கலைஞனாக அறிமுகப்படுத்தி, கேட்போர் மனம் உருகும் வண்ணம் சிதார் இசைப்பவராக காண்பித்தபோது, 'பரவாயில்லையே, நல்ல கௌரவமான ரோல் கொடுத்திருக்காங்களே என்று தோன்றும். ஆனால் கொஞ்ச நேரத்திலேயே (அடடே நாம ஸ்ரீகாந்துக்கல்லவா கதை பண்ணுறோம் என்பது கதாசிரியருக்கும் இயக்குனருக்கும் நினைவு வந்திருக்க வேண்டும்) அவரை காம விகாரம் கொண்டவராகக் காண்பித்து, வழக்கமான ட்ராக்கில் திருப்பி அந்தப் பாத்திரத்தின் தன்மையையே குட்டிச்சுவர் பண்ணி, கதையை சொதப்பி விட்டனர்.

படத்தில் பாதிக்கு மேல் பேய்கள் ஸ்ரீகாந்தின் வீட்டில் வந்து டேரா போட்டுக்கொண்டு அவரை பாடாய் படுத்துவது, பார்க்க கொஞ்சம் தமாஷாக இருக்கும். மூன்று பேயகளுக்குள் நல்ல கூட்டணி. அதனால் கொஞ்சம்கூட பிசகாமல் ஸ்ரீகாந்திடமிருந்து அத்தனை தொகுதிகளையும் கைப்பற்றுகின்றன. பேய்களுக்கு கால்கள் இல்லையென்று யார் சொன்னது?. அதில் ஒரு பேய் பரதநாட்டியமே ஆடுகிறது. பேய்களின் அட்டகாசத்திலிருந்து தன்னைக் காப்பாற்றச்சொல்லி ஸ்ரீகாந்த் ஒரு ஏஜென்ஸியை நாடிப்போக, அதிலிருந்து வரும் இரண்டு அதிகாரிகள் சரியான கோமாளிகள். தங்களது அசட்டுத்தனத்தால் நம்மைச் சிரிக்க வைக்கிறார்கள். அதிலும் பேய்களை அண்டாவுக்குள் தேடுவது நல்ல தமாஷ். அவர்களில் ஒருவர் வி.கோபாலகிருஷ்ணன், இன்னொருவர் வெண்ணிற ஆடை மூர்த்தியா? நினைவில்லை.

வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் இன்னொருவர் சுருளிராஜன். பேய்களுக்குப்பயந்து தன்னுடன் இரவில் தங்க ஸ்ரீகாந்த் சுருளியை அழைத்துவர, அவரோ கனவில் பேயைக்கண்டு அலறி ஸ்ரீகாந்தை இன்னும் அச்சமூட்டுகிறார். கனவில் சுடுகாட்டுவழியே செல்லும் சுருளி, அங்கே ஒரு சமாதியின்மேல் அமர்ந்திருக்கும் ஒரு பெரியவரிடம், 'ஏன்யா, எந்த பெரிய மனுஷன் சமாதியோ. அதுல காலையும் மேலே வச்சிக்கிட்டு உட்கார்ந்திருக்கியே' என்று கேட்க அதற்கு அவர் (அது..?) 'நான்தான் தம்பி, உள்ளே புழுக்கம் தாங்கலைன்னு வெளியே வந்து உட்கார்ந்திருக்கேன்' என்றதும் அலறியடித்துக்கொண்டு ஓடும்போது, அங்கே நடந்து போய்க்கொண்டிருக்கும் இன்னொரு பெரியவரிடம் 'ஏங்க இந்த பேய் பிசாசையெல்லாம் நம்புறீங்களா?' என்று கேட்க, அவர் 'எவனாவது உயிரோடு இருப்பன்கிட்டே போய்க்கேளு. நான் செத்து அஞ்சு வருஷமாச்சு' என்று சொன்னதும் அலறிக்கொண்டு எழுவாரே... அந்த இடத்தில் தியேட்டரே சிரிப்பில் அதிரும்.

பேய்களுக்குப்பயந்து வீட்டைவிட்டுத் தப்பிப்போகும் ஸ்ரீகாந்தை ஒவ்வொருமுறையும் பேய்கள் வழியில் மடக்கி வீட்டுக்குக் கொண்டுவந்து சேர்ப்பது சுவையான இடங்கள். அதுபோலவே, தனக்கு நடக்க இருந்த திருமணம் நின்றுபோனதை நியூஸ் பேப்பர் மூலம் படிக்கும் ஸ்ரீகாந்த், அப்படியானால் தான் திருமணம் செய்துகொண்டு அழைத்து வந்த பெண்கூட உண்மையான பெண்ணல்ல அதுவும் கூட ஒரு பேய்தான் என்று அதிர்ச்சியடைவதும் இன்னொரு சுவாரஸ்யமான இடம். பேய்களின் அட்டகாசத்துக்குத் தோதாக ஒரு காட்டு வனாந்திரத்தில் இருக்கும் ஸ்ரீகாந்தின் பங்களா, முடிந்தவரையில் திகிலூட்டுவதற்காக பெரும்பாலான காட்சிகளை இரவு நேரத்திலேயே (தமிழில் சொன்னால் 'நைட் எஃபெக்ட்') எடுத்திருக்கும் புத்திசாலித்தனம் தெரிகிறது.

நடிப்பைப்பொறுத்தவரை ஸ்ரீகாந்த் மிகச்சிறப்பாக நடித்திருந்தார். அவருடைய ரோல் ஒருமாதிரியாக சித்தரிக்கப் பட்டிருந்தபோதிலும், அதிலும் தன் திறமையான நடிப்பால், ஈடுகட்டி பேலன்ஸ் பண்ணியிருந்தார். கதை இவரைச்சுற்றியே அமைந்ததாலும், படத்தில் குறைவான கதாபாத்திரங்களே பயன்படுத்தப்பட்டிருந்ததாலும், படத்தின் அதிகப்படியான காட்சிகளில் இவரே நிறைந்திருந்தார். இவருக்கு அடுத்து மூன்று பேய்களுமே நன்றாக நடித்திருந்தனர். மூவரும் பெண்ணாக வந்ததை விட பேயாக வந்தபோது கச்சிதமாகப்பொருந்தினர். (same side goal).

படத்துக்கு மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைத்திருந்தார். ஆரம்பத்தில் சிதார் இசைக்கலைஞராக ஸ்ரீகாந்தைக் காண்பிக்கும்போது, அழகாக இதமான சிதார் இசையால் வருடியிருப்பார். பின்னர் பேய்கள் அட்டகாசம் துவங்கியதும் அவருக்கே உரிய அதிரடி திகில் பின்னணி இசையால் நம்மை பயமுறுத்துவார். இவரது இசையில் இப்படத்தில் வாணி ஜெயராம் பாடிய இரண்டு பாடல்கள் கேட்கும்படி இருந்தன. ஆனால் முதலடிதான் எவ்வளவு யோசித்தும் நினைவுக்கு எட்ட மறுக்கிறது. படத்தில் கேட்டதோடு சரி. பின்னர் வானொலி/தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பினால் அல்லவா நினைவில் நிற்கும்?. அவர்கள் ஒரு பட்டியல் போட்டு வைத்துக்கொண்டு அவற்றையே திரும்ப... திரும்ப... திரும்ப... திரும்ப... திரும்ப... திரும்ப... திரும்ப... திரும்ப... திரும்ப... திரும்ப... ஒளிபரப்பிக்கொண்டு இருப்பார்கள்.

எல்லாம் சரிம்மா, படம் எப்படி ஓடியதுன்னு கேட்கிறீங்களா?. இயக்குனர் (பாடலாசிரியர்/இசையமைப்பாளர்) கங்கை அமரன் (இப்படத்தின் இயக்குனர் அவர் அல்ல) தான் இயக்கிய சில படங்கள் வெற்றி வாய்ப்பை இழந்த நேரங்களில் ஒரு காரணம் சொல்வார். அதாவது, 'தன்னுடைய படம் வெளியான நேரம், மக்கள் கைகளில் பணப்புழக்கம் இல்லாமல் போனதால், மக்களால் அந்தப்படத்தைப் பார்க்க முடியாமல் போய்விட்டது' என்பார். அதுபோலவே 'தெய்வீக ராகங்கள்' என்ற இந்தப்படம் வெளியான நேரத்திலும் மக்கள் கைகளில் பணப்புழக்கம் இல்லாமல் போய்விட்டது. புரிந்திருக்குமே..!

RAGHAVENDRA
26th July 2014, 03:49 PM
ரவியின் படங்களில் அதிகம் பேசப்படாத படங்களில் செல்வியின் செல்வனும் ஒன்று. சில பல பக்கங்களுக்கு முன் இதைப் பற்றிய குறிப்பும் வந்துள்ளது. புகழேந்தியின் இசையில் நான் உங்களைக் கேட்கின்றேன், கொஞ்சவா கொஞ்ச நேரம் , இந்த இரண்டு பாடல்கள் பிரசித்தம். இசையரசியின் குரலில் இன்னொரு பாடலும் இப்படத்தில் நன்றாக இருக்கும். வந்தால் இந்த நேரம் வா வா வா... இது வரை இப்பாடலைக் கேட்காதவர்களுக்காக..

http://www.inbaminge.com/t/s/Selviyn%20Selvan/

Richardsof
26th July 2014, 03:49 PM
BLACK & WHITE MOVIE -NOW COLOUR MOVIE - TRAILER

http://youtu.be/rCx0zEU9zfE

vasudevan31355
26th July 2014, 03:50 PM
டியர் வாசு சார்,

கடைசியில் கடைசி சீட் சிவகுமார், சந்திரன்பாபு, ஏ.பி.என்.பத்மினி ஆகியோரின் 'ஊரெல்லாம் பாரு' என்ற ட்விஸ்ட் பாட்டுடன், அழகான பாட்டை ஒருவழி பண்ணிடுவாங்க...

நிஜம் கார்த்திக் சார்.

'நா பங்காரய்யா நா சிங்காரய்யா' தெலுங்கு வரிகள். இந்த வரிகளுடன் ரமாபிரபா தன் பாடலைத் தொடங்குவார். ஆனால் சைலஸ்ரீ எழுதியது கன்னட வரிகள்.

எனக்கும் சரியாகத் தெரியவில்லை. தெரிந்தவரை தந்திருக்கிறேன்.

கிருஷ்ணா ராஜ்னா கரையுவே பா
குவரிய மனதள(ந்)த கோபாலனே
கடலின அலைகலல்லி சாந்தியும் இல்லி

என்று வரும். ராகவேந்திரன் சார் சரியாகத் தருவார் என்று நினைக்கிறேன்.

gkrishna
26th July 2014, 03:51 PM
கிருஷ்ணா
ஜீவபூமி தாங்கள் வார இதழில் படித்திருப்பீர்கள்.. ராணி முத்துவில் அது இடம் பெற்றதாகத் தெரியவில்லை...சாண்டில்யனின் தொடராக வந்த போதே ஒவ்வொரு அத்தியாயத்திலும் நடிகர் திலகத்தை நினைத்து நினைத்து அந்த ஓவியங்களைப் பார்த்துக் கொண்டிருப்போம். ஓவியமும் அதே போல் இருக்கும்.

ஒரு ராணி முத்து ஜீவபூமி கதையை சுருக்கி கொடுத்த நினைவு
முன் அட்டை சித்திரம் அப்படியே நடிகர் திலகத்தின் அச்சு அசல்

mr_karthik
26th July 2014, 04:02 PM
நானும் ராணிமுத்துவில்தான் படித்தேன். சுருக்கப்படவெல்லாம் இல்லை. முழு நாவலும் அப்படியே.

ராணிமுத்து 'ஜீவபூமி' அட்டைப்படமே நடிகர்திலகமும் சரோஜாதேவியும் இடம்பெற்ற போஸ்தான். ஏதோ உணர்ச்சி மயமான கட்டம் போலிருக்கும்...

gkrishna
26th July 2014, 04:05 PM
நானும் ராணிமுத்துவில்தான் படித்தேன். சுருக்கப்படவெல்லாம் இல்லை. முழு நாவலும் அப்படியே.

ராணிமுத்து 'ஜீவபூமி' அட்டைப்படமே நடிகர்திலகமும் சரோஜாதேவியும் இடம்பெற்ற போஸ்தான். ஏதோ உணர்ச்சி மயமான கட்டம் போலிருக்கும்...

நன்றி கார்த்திக்

gkrishna
26th July 2014, 04:08 PM
அருமையான தகவலை பதிந்த எஸ்வி அவர்களுக்கு நன்றி

திரி ரொம்ப படுத்துகிறது அடிகடி relogin செய்ய வேண்டி உள்ளது
அல்லது database error என்று வருகிறது

Richardsof
26th July 2014, 04:09 PM
THANKS KRISHNA
http://i61.tinypic.com/2q1ih4i.jpg

gkrishna
26th July 2014, 04:28 PM
vasu அண்ணா

எஸ்வி அண்ணா பெங்களூர் சரக்கை பார்த்தீங்களா

சரக்கு சூப்பர்

gkrishna
26th July 2014, 04:31 PM
வேலைக்காரி 1949
மற்றது எல்லாம் எந்த வருஷத்து release

RAGHAVENDRA
26th July 2014, 04:46 PM
க்ருஷ்ணா.. தாசி நா கரெயுவே பா...
க்ருஷ்ணா........... தாசி நா கரெயுவே பா....
குவரிய மனசளத கோபாலனே..
கொளநிந த்வனி கேளி நா பந்தினே...
க்ருஷ்ணா தாஸி நா கரெயுவே பா.....

கடலின அலேகளல்லி ஷாந்தியு எல்லி..
கரெதித மனசினல்லி நெம்மதி எல்லி
ரவி காணதே தாபரெ அருளுவதெல்லி
ரசிகனே நீ பரதே நன்னந்த எல்லி..

க்ருஷ்ணா தாஸி நா கரெயுவே பா..


.... இந்த வரிகளைப் பாடியவர் எம்.ஆர். விஜயா...

RAGHAVENDRA
26th July 2014, 04:46 PM
ராணி முத்துவில் ஜீவ பூமி வந்த தகவலைத் தந்த கிருஷ்ணா கார்த்திக் தங்களுக்கு என் பாராட்டுக்கள்.. தங்கள் நினைவாற்றல் அபாரம்.

gkrishna
26th July 2014, 04:47 PM
https://encrypted-tbn2.gstatic.com/images?q=tbn:ANd9GcRtFonvKBRWl9I0xaGJ1fmFP6zN5iCJr UAi0DHDtEjzdKsBIKz61w

'பாசமலர்' படத்தில் எல்.ஆர்.ஈஸ்வரி பாடிய 'வாராய் என் தோழி வாராயோ...' என்ற பாடல், அவருக்குப் பெரும் புகழ் தேடித்தந்தது. 1961-ம் ஆண்டு, எல்.ஆர்.ஈஸ்வரி வாழ்க்கையில் முக்கிய திருப்பத்தை ஏற்படுத்திய ஆண்டாகும்.

அந்த ஆண்டு, ஏ.பீம்சிங் டைரக்ஷனில், சிவாஜிகணேசன் -சாவித்திரி நடித்த 'பாசமலர்' படம் வெளிவந்தது. எம்.எஸ்.விஸ்வநாதன் - ராமமூர்த்தி இசை அமைத்தனர்.

மகத்தான வெற்றி பெற்ற அப்படத்தில், 'வாராய் என் தோழி வாராயோ, மணப்பந்தல் காண வாராயோ' என்ற பாடலை எல்.ஆர்.ஈஸ்வரி பாடினார்.

இந்தப்பாடல் பெரிய 'ஹிட்' ஆகி, மூலை முடுக்கெல்லாம் எதிரொலித்தது. குறிப்பாக, அன்று முதல் இன்று வரை திருமண வீடுகளில் பாடப்படும் பாடல் இது.

அதுவரை இளம் நடிகைகளுக்கு பின்னணியில் பாடிவந்த எல்.ஆர்.ஈஸ்வரி, 'பாசமலர்' வெற்றியைத் தொடர்ந்து, கதாநாயகிகளுக்கும் பாடத்தொடங்கினார்.

டைரக்டர் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் தயாரித்த 'பணமா பாசமா' என்ற படமும், சூப்பர் ஹிட் படமாகும்.

அப்படத்தில், `எலந்த பயம்... எலந்த பயம்' என்ற கிராமியப் பாடலை விஜய நிர்மலாவுக்காகப் பாடினார். இந்தப்பாடல் வரும் கட்டத்தில், தியேட்டர்களில் விசில் சத்தம் காதைப் பிளக்கும்.

டைரக்டர் ஸ்ரீதர், 'சிவந்த மண்' படத்தை வெளிநாடுகளுக்குச் சென்று பிரமாண்டமாகப் படமாக்கினார்.

அதில் சிவாஜிகணேசனும், காஞ்சனாவும் எகிப்து உடையில் தோன்றும் ஒரு நடனக் காட்சி.

'பட்டத்து ராணி பார்க்கும் பார்வை, வெற்றிக்குத்தான் என எண்ணவேண்டும்' என்று, காஞ்சனாவுக்காக எல்.ஆர்.ஈஸ்வரி பாடிய பாடல் மிக மிகப் பிரமாதமாக அமைந்தது. இடையிடையே சிவாஜி சவுக்கால் அடிப்பார். அப்போது எல்.ஆர்.ஈஸ்வரி கொடுத்த 'ஹம்மிங்', பாடலுக்கு மேலும் மெருகேற்றியது.

அந்தக் காலக்கட்டத்தில், பின்னணி பாடகிகளில் பி.சுசீலாவும், எஸ்.ஜானகியும் மிகவும் புகழ் பெற்று விளங்கினார்கள். அவர்களுக்கு இணையாக உயர்ந்தார் எல்.ஆர்.ஈஸ்வரி. ஓய்வு இன்றி நிறைய படங்களில் பாடினார்.

அவர் பாடிய மிகப்புகழ் பெற்ற பாடல்களில் சில:

'காதோடுதான் நான் பாடுவேன் மனதோடுதான் நான் பேசுவேன் விழியோடுதான் விளையாடுவேன்.'

'ஆடவரலாம் ஆடவர் எல்லாம் ஆடவரலாம் ஆடவரலாம்.'

'கண்களும் காவடி சிந்தாகட்டும், காளையர் நெஞ்சை பந்தாடட்டும்.'

'அம்மம்மா கேளடி தோழி ஆயிரம் சேதி.'

'துள்ளுவதோ இளமை தேடுவதோ தனிமை.'

'குடிமகனே பெரும் குடிமகனே.'

'பளிங்கினால் ஒரு மாளிகை, பருவத்தால் மணி மண்டபம்.'

- இப்படி எண்ணற்றப் பாடல்கள் எல்.ஆர்.ஈஸ்வரியின் புகழுக்கு புகழ் சேர்த்தன. லட்சக்கணக்கான ரசிகர்களை தேடித்தந்தன.

எல்.ஆஸ்.ஈஸ்வரி தன் திரை உலக அனுபவங்கள் பற்றி கூறியதாவது:-

'கடந்த 40 ஆண்டுகளாக நான் பாடி வருகிறேன். தமிழக அரசு எனக்கு 'கலைமாமணி' விருது கொடுத்து கவுரவித்தது.

ஆந்திரா, கர்நாடகா, கேரளா அரசுகள், 'நந்தி விருது' உள்பட பல விருதுகளை எனக்கு வழங்கியுள்ளன.

முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா கதாநாயகியாக அறிமுகமான முதல் படம் 'வெண்ணிற ஆடை.' அதில் அவர் பாடும் முதல் பாடலான 'நீ என்பதென்ன... நான் என்பதென்ன...' என்ற பாடலை பாடும் வாய்ப்பு எனக்குக் கிடைத்ததை மிகப்பெரும் பெருமையாகக் கருதுகிறேன்.

கேவி.மகாதேவன், எம்.எஸ்.விஸ்வநாதன் - ராமமூர்த்தி, வேதா ஆகியோர் இசையமைப்பில் நான் பாடிய ஆயிரக்கணக்கான பாடல்கள் என்றும் சாகாவரம் பெற்றவை.
எப்படி 1961 எனக்கு திரை உலகில் ஒரு பெரிய உயர்வை கொடுத்ததோ, அதேபோல 1985-ம் ஆண்டையும் சொல்லலாம். இந்த ஆண்டில்தான் நான் அம்மன் மேல் பாடிய பாடல்கள் வரத்தொடங்கின. அதன் பிறகு தமிழ்நாட்டில் பெரும்பாலும் நான் சென்று பாடாத கோவில்களே இருக்க முடியாது என்று சொல்லும் அளவிற்கு ஏராளமான கோவில் கச்சேரிகள் வந்தன.

எம்.ஜி.ஆர். அவர்கள் உடல் நலம் குன்றி மருத்துவமனையில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தபோது, தமிழ்நாட்டில் உள்ள கோவில்களில் எல்லாம் அவர் பூரண குணம் அடைய வேண்டி விசேஷ பிரார்த்தனைகள் நடைபெற்றன. அந்த பிரார்த்தனைகளில் எல்லாம் நான் பாடிய அம்மன் பாடல்களின் கேசட்டுகள் போடப்பட்டன.

இது எனக்கு பெரிய ஆத்ம திருப்தியை கொடுத்தது.'

இவ்வாறு எல்.ஆர்.ஈஸ்வரி கூறினார்.

'உங்கள் வாழ்க்கையில் இவ்வளவு போராடி புகழின் உச்சிக்கு வந்த நீங்கள், அதன் பிறகு உங்களுக்கென்று ஒரு வாழ்க்கைத்துணையைத் தேடிக் கொள்ளாதது ஏன்?' என்ற கேள்விக்கு பதில் அளித்து எல்.ஆர்.ஈஸ்வரி கூறியதாவது:-

'வறுமையின் பிடியில் சிக்கிக் கிடந்த எனது குடும்பத்தை முன்னேறச் செய்யவும், எனது தம்பி, தங்கைக்கு நல்ல வாழ்க்கையை அமைத்துக் கொடுப்பதிலும் எனது கவனம் முழுவதும் இருந்ததால், எனது வாழ்க்கையைப் பற்றி சிந்திக்கவே இல்லை. அதற்காக நான் வருத்தப்படவில்லை.

எனது தம்பியின் மகன், மகள்கள், பேரன் - பேத்திகள் எல்லோரும் என் மீது காட்டும் அளவு கடந்த அன்பினால் நான் மிக்க மகிழ்ச்சியுடன் இருக்கிறேன்' என்று கூறினார், எல்.ஆர்.ஈஸ்வரி.

gkrishna
26th July 2014, 04:49 PM
க்ருஷ்ணா.. தாசி நா கரெயுவே பா...
க்ருஷ்ணா........... தாசி நா கரெயுவே பா....
குவரிய மனசளத கோபாலனே..
கொளநிந த்வனி கேளி நா பந்தினே...
க்ருஷ்ணா தாஸி நா கரெயுவே பா.....

கடலின அலேகளல்லி ஷாந்தியு எல்லி..
கரெதித மனசினல்லி நெம்மதி எல்லி
ரவி காணதே தாபரெ அருளுவதெல்லி
ரசிகனே நீ பரதே நன்னந்த எல்லி..

க்ருஷ்ணா தாஸி நா கரெயுவே பா..


.... இந்த வரிகளைப் பாடியவர் எம்.ஆர். விஜயா...

really super vender
முதல் வரியே கிருஷ்ணா ஆ ஆ ஆ ஆ

RAGHAVENDRA
26th July 2014, 04:52 PM
ஒரே பாடல் ஒரே சமயத்தில் இரண்டு படங்களில் வெளிவந்த அதிசயம் தமிழ் சினிமாவில் நடைபெற்றுள்ளது. இதற்கு முன் நடந்ததா தெரியவில்லை. ஒரு பாடல் ஒரு படத்தில் இடம் பெற்று சில ஆண்டுகள் கழித்து வேறொரு படத்தில் அதை பயன் படுத்தியது தெரிந்ததே. ஆனால் கன்னிப் பெண்ணைக் கைப் பிடித்து பாடல் ஒரே சமயத்தில் அதுவும் ஒரே ஜோடி நடித்து ஒரே மாதிரி காட்சியமைப்பில் இடம் பெற்றது மிகவும் அபூர்வமானது.

முத்து மண்டபம் திரைப்படத்தில் இந்தப் பாடல் இடம் பெற்றது. எஸ்.எஸ்.ஆர். விஜயகுமாரி திருமண வரவேற்பில் பாடுவது போன்று காட்சியமைப்பு.

http://youtu.be/mioCI7GytAE

இதே போல எஸ்.எஸ்.ஆர். விஜயகுமாரி திருமண வரவேற்பு காட்சி அல்லி திரைப்படத்திலும் இடம் பெற்று, அதிலும் இதே பாடல் பயன் படுத்தப் பட்டிருப்பது அபூர்வமானதாகும்.

காட்சியில் நடன அமைப்பும் கிட்டத் தட்ட ஒரே மாதிரி யிருக்கும்.

இசை திரை இசைத் திலகம் கே.வி. மகாதேவன்.

நீங்கள் மேலே பார்க்கும் காட்சியைப் போலவே அல்லி படத்திலும் இருக்கும். ஆனால் சற்றே வித்தியாசமான கேமிரா கோணங்கள், ஆடும் மங்கையர், ஆடும் மேடை இவற்றால் வேறுபடும்.

Russellmai
26th July 2014, 05:13 PM
இராகவேந்திரர் சார்,
இரு படங்களில் ஒரே பாடல் இடம் பெற்றுள்ள
தகவல் இதுவரை கேள்விப்படாத ஒன்று.இது
போன்ற தகவல்களை அளிக்கும் தங்களது பணி
தொடரட்டும்.
அன்பு கோபு

mr_karthik
26th July 2014, 05:36 PM
// ஒரு பாடல் ஒரு படத்தில் இடம் பெற்று சில ஆண்டுகள் கழித்து வேறொரு படத்தில் அதை பயன் படுத்தியது தெரிந்ததே //

உண்மை... ராகவேந்தர் சார்,

நமது 'செல்வம்' (1966) படத்தில் இடம்பெற்ற 'எனக்காகவா நான் உனக்காகவா' பாடல் அப்படியே 'வாழையடி வாழை' (1973) படத்தில் பயன்படுத்தப்பட்டிருந்தது.

பாடகர்கள் கூட மாறவில்லை. தாராபுரம் சுந்தர்ராஜன் - ஜமுனாராணி பாடிய அதே வெர்ஷன். இரண்டுக்கும் ஒரே இயக்குனர் கே.எஸ்.ஜி...

Russellmai
26th July 2014, 06:33 PM
கார்த்திக் சார்,
செல்வம் திரைப்படத்தில் இடம் பெற்ற-எனக்காகவா
நான் உனக்காகவா-பாடல் காட்சி வாழையடி வாழை
திரைப்படத்தில் முத்துராமனும் பிரமீளாவும் காண்பது
போல் அமைந்துள்ளது.
அன்பு கோபு

madhu
26th July 2014, 06:54 PM
ரவியின் படங்களில் அதிகம் பேசப்படாத படங்களில் செல்வியின் செல்வனும் ஒன்று. சில பல பக்கங்களுக்கு முன் இதைப் பற்றிய குறிப்பும் வந்துள்ளது. புகழேந்தியின் இசையில் நான் உங்களைக் கேட்கின்றேன், கொஞ்சவா கொஞ்ச நேரம் , இந்த இரண்டு பாடல்கள் பிரசித்தம். இசையரசியின் குரலில் இன்னொரு பாடலும் இப்படத்தில் நன்றாக இருக்கும். வந்தால் இந்த நேரம் வா வா வா... இது வரை இப்பாடலைக் கேட்காதவர்களுக்காக..

http://www.inbaminge.com/t/s/Selviyn%20Selvan/

raghavendra ji.. பி.சுசீலாவும் இன்னொரு பெண் குரல் ( சரளாவோ ) பாடும் "பெண்ணுக்கு பெண்ணு என்னடி.. நீ ஒண்ணும் மறைக்காம சொல்லடி" என்ற பாடல் இந்தப் படம்தானே ?

gkrishna
26th July 2014, 07:23 PM
ஒரே பாடல் ஒரே சமயத்தில் இரண்டு படங்களில் வெளிவந்த அதிசயம் தமிழ் சினிமாவில் நடைபெற்றுள்ளது. இதற்கு முன் நடந்ததா தெரியவில்லை. ஒரு பாடல் ஒரு படத்தில் இடம் பெற்று சில ஆண்டுகள் கழித்து வேறொரு படத்தில் அதை பயன் படுத்தியது தெரிந்ததே. .

vender unmaiyil neengal vender

vasudevan31355
26th July 2014, 08:27 PM
ராகவேந்திரன் சார் குறிப்பிட்ட 'கன்னிப் பெண்ணைக் கைபிடித்து' பாடல் அல்லி படத்தில் ஆடியோ வடிவில்

http://www.inbaminge.com/t/a/Alli/

RAGHAVENDRA
26th July 2014, 09:29 PM
மது,
பெண்ணுக்கு பெண்ணு என்னடி எனக்கு ஞாபகம் இருந்த வரை செல்வியின் செல்வன் இல்லை என நினைக்கிறேன்.

vasudevan31355
26th July 2014, 10:09 PM
'மகுடம் காத்த மங்கை' படத்தில் ஜிக்கி, டி.ஏ மோத்தியின் அருமையான குரல்களில்

'ஆஹா என்னைப் பார் மன்னா
அருகில் வா கண்ணா'

பாடல்.

ஹெலன் அழகாக இருப்பார்.


http://www.youtube.com/watch?v=czIe3-xYbos&feature=player_detailpage

vasudevan31355
26th July 2014, 10:30 PM
ராகவேந்திரன் சார்,

'Nee Bandu Ninthaga' 'கஸ்தூரி நிவாஸ்' பாடல் அற்புதம்.

இதே மெட்டில் சுசீலா அவர்கள் தமிழிலும் பாடி நான் கேட்ட ஞாபகம். மனதில் இருக்கிறது. வருவேனா என்கிறது. லீலா வினோதம் என்று இரண்டாவது வரி வரும் என்று நினைக்கிறேன்.

தங்களுக்குத் தெரியுமா?

rajeshkrv
27th July 2014, 08:27 AM
வாசு ஜி, ராகவேந்திரா ஜி பாடல்களின் அணிவகுப்பு அருமை.

பூவினும் மெல்லிய பூங்கொடி பாடல் பதிவின் போது இசையரசி கர்ப்பமாக இருந்தாராம். சங்கர் கணேஷ் அடிக்கடி சொல்வார். இந்த பாடலை பதிவு செய்துவிட்டு பின்னர் நேரே மருத்துவமனை சென்றாராம்.


================

ரங்காராவ் என்ற ஒரு வயலின் கலைஞர் முதன் முதலாக கன்னட படத்திற்கு இசையமைப்பாளரானார்
ஆம் எம்.ரங்காராவ் .
படம்: நக்கரே அதே ஸ்வர்கா என்ற படத்தின் மூலம் அறிமுகமானர், அவர் தான் பாலாவை கன்னடத்தில் இசையரசியுடன் ஒரு டூயட் பாட வைத்தார்
அது கனசிதோ நனசிதோ என்ற பாடல் (பாலாவின் குரல் கண்டசாலாவை ஞாபகப்படுத்தும்)

புட்டண்ணாவின் மிகப்பெரிய வெற்றிப்படமான “சாக்*ஷாத்காரா”
ராஜ்குமார், ஃப்ரித்விராஜ்கபூர்(ஹிந்தி),ஜமுனா, நாகேந்திர ராவ் என பலர் நடித்த இந்த படத்தில் பாடல்கள் அபாரம்
அதிலும் ஒலவே ஜீவன சாக்*ஷாத்காரா பாடல் இனிமையிலும் இனிமை(வாசுஜி கட்டாயம் கேட்டு பார்க்கவும்)

இதோ அந்த பாடல்

சோலோ இசையரசியின் குரலில் (என்ன இனிமை என்ன தெளிவு)


http://www.youtube.com/watch?v=TMsasOay9ng

டூயடோ(சோகம்)

http://www.youtube.com/watch?v=TlOBlOAsjws

rajeshkrv
27th July 2014, 08:34 AM
எத்தனையோ பெண் டூயட்கள் இருந்தாலும் இசையரசியும் ஈஸ்வரியும் இசைத்தது போல் எதுவுமே இல்லை
தமிழில், தெலுங்கில் என பல உண்டு

இதோ கன்னடத்திலும் ஒன்று . அருமையான பாடல் .. இது தமிழ் குங்கும பொட்டு குலுங்குதடி போல உள்ள பாடல்


http://www.youtube.com/watch?v=tHCg2By7RKI

madhu
27th July 2014, 08:41 AM
மது,
பெண்ணுக்கு பெண்ணு என்னடி எனக்கு ஞாபகம் இருந்த வரை செல்வியின் செல்வன் இல்லை என நினைக்கிறேன்.

psusheela இணையதளத்தில் இது தட்டுங்கள் திறக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது. ஆனால் நிச்சயமாக அந்தப் படம் இல்லை.

முன்பெல்லாம் தினமணி பேப்பருடன் ஞாயிறன்று தினமணி சுடர் என்று ஒரு இணைப்பு வரும். அதில் ஒரு பக்கத்தில் சினிமா செய்திகள
இருக்கும். அதிலே செல்வியின் செல்வன் படத்தில் .. விஜ்யகுமாரியும் இன்னொரு பெண்ணுமாக ஏதோ தண்ணீர்த் துறையில் நிற்பது
போல படம் போட்டு இந்தப் பாட்லைப் பற்றி எழுதி இருந்ததாக நினைவு...

இது எந்தப் படம் என்று நண்பர்கள் கண்டு பிடித்து சொல்லுங்களேன் ப்ளீஸ்...

vasudevan31355
27th July 2014, 08:59 AM
இன்றைய ஸ்பெஷல் (40)

http://www.oursongspk.com/movieimages/Thirumagal%201971.jpg

'திருமகள்'

இந்தப் படத்தின் உலக உரிமை ஓரியண்டல் பிக்சர்ஸ் என்று போடுவார்கள். பின்னால் இதே ஓரியண்டல் நிறுவனம் எம்ஜிஆர் அவர்களை வைத்து அதிக பொருட்செலவில் 'நினைத்ததை முடிப்பவன்' படத்தை வழங்கியது.

கோவிந்தராஜ் பிலிம்ஸ் 'திருமகள்' படத்தில் ஏ.வி.எம் ராஜன், ஜெமினி, சிவக்குமார், பத்மினி, லஷ்மி என்று நிறைய நட்சத்திரக் கூட்டம். பாடல்களை கண்ணதாசன் எழுத கே.வி.மகாதேவன் இசை அமைத்திருந்தார். இப்படத்தின் ஒளிப்பதிவு 'காமிரா மேதை' கர்ணன். இயக்கம் ஏ.எஸ்.ஏ.சாமி

https://i.ytimg.com/vi/E85hQ10aDGU/mqdefault.jpg

இப்படத்தில் ஏ.வி.எம் ராஜனுக்கும், லஷ்மிக்கும் ஒரு அருமையான டூயட் பாடல். அப்போது சிலோன் ரேடியோவில் ஏக பிரபலம்.

டி.எம்.எஸ்,சுசீலா இருவரும் மிக அழகாகப் பாடிய ஒரு பாடல்.

'காலாலே' என்று டி.எம்.எஸ், சுசீலா இருவரும் தனித்தனியே நிறுத்தித் தொடர்வதை கேட்டுக் கொண்டே இருக்கலாம்.

காலாலே நிலம் அளந்து
கண்ணாலே முகம் அளந்து
நூல் போலே இடை அசைத்து
நூறுமுறை ஜாடை செய்வேன்

காலாலே நிலம் அளந்து
கண்ணாலே முகம் அளந்து
நூல் போலே இடை அசைத்து
நூறுமுறை ஜாடை செய்வேன்

காதோரம் கூந்தல் இறங்க
கட்டழகு மேனி மயங்க
கையேடு வளையல் குலுங்க
கட்டிக் கொள்வேன் காதல் விளங்க

காலாலே நிலம் அளந்து
கண்ணாலே முகம் அளந்து
நூல் போலே இடை அசைத்து
நூறுமுறை ஜாடை செய்வேன்

குறிஞ்சிப் பூவைப் போல் மணக்கும்
உன் குறுநகை என்னை இழுக்கும்
குறிஞ்சிப் பூவைப் போல் மணக்கும்
உன் குறுநகை என்னை இழுக்கும்

கோவைச் செங்கனி இனிக்கும்
அதைக் கொடுக்க ஆசைதான் எனக்கும்.

கொத்துங்கிளி என்ன அதில் முத்தமிட்டு
முத்தமிட்டு சித்திரங்கள் இட்டு விடவோ

ஆ ஆ

கொண்டு வந்த தேன் குடத்தை
வண்டு வந்து பார்த்த பின்பு
உண்டு விடக் கேள்வி என்னவோ

ஓஹ்ஹோ

கொத்துங்கிளி என்ன அதில் முத்தமிட்டு
முத்தமிட்டு சித்திரங்கள் இட்டு விடவோ

கொண்டு வந்த தேன் குடத்தை
வண்டு வந்து பார்த்த பின்பு
உண்டு விடக் கேள்வி என்னவோ

காலாலே நிலம் அளந்து
கண்ணாலே முகம் அளந்து
நூல் போலே இடை அசைத்து
நூறுமுறை ஜாடை செய்வாய்.

பவளப் பூவைப் போல் இருக்கும்
உன் பருவம் கையிலே மிதக்கும்
பவளப் பூவைப் போல் இருக்கும்
உன் பருவம் கையிலே மிதக்கும்

தவழும் பிள்ளை போல் துடிக்கும்
இந்த சரசம் வேறெதில் கிடைக்கும்

அத்தைமகள் முத்துநகை ரத்தினத்தை
மெத்தையிட்டு மற்ற கதை சொல்லித் தரவோ

ஆஹா

விட்டகுறை தொட்டகுறை
மிச்சமில்லை என்றபடி
அத்தனையும் அள்ளித் தரவோ

அத்தைமகள் முத்துநகை ரத்தினத்தை
மெத்தையிட்டு மற்ற கதை சொல்லித் தரவோ

விட்டகுறை தொட்டகுறை
மிச்சமில்லை என்றபடி
அத்தனையும் அள்ளித் தரவோ

காலாலே நிலம் அளந்து
கண்ணாலே முகம் அளந்து
நூல் போலே இடை அசைத்து
நூறுமுறை ஜாடை செய்வேன்

ஆஹஹஹாஹாஹஹாஹா
ம் ஹுஹுஹும் ம் ம்ம் ஹும்


http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=MaFPEesEkjA

vasudevan31355
27th July 2014, 09:04 AM
psusheela இணையதளத்தில் இது தட்டுங்கள் திறக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது. ஆனால் நிச்சயமாக அந்தப் படம் இல்லை.

முன்பெல்லாம் தினமணி பேப்பருடன் ஞாயிறன்று தினமணி சுடர் என்று ஒரு இணைப்பு வரும். அதில் ஒரு பக்கத்தில் சினிமா செய்திகள
இருக்கும். அதிலே செல்வியின் செல்வன் படத்தில் .. விஜ்யகுமாரியும் இன்னொரு பெண்ணுமாக ஏதோ தண்ணீர்த் துறையில் நிற்பது
போல படம் போட்டு இந்தப் பாட்லைப் பற்றி எழுதி இருந்ததாக நினைவு...

இது எந்தப் படம் என்று நண்பர்கள் கண்டு பிடித்து சொல்லுங்களேன் ப்ளீஸ்...

ஆமாம் மது சார். நான் கூடப் பார்த்தேன். 'தட்டுங்கள் திறக்கப்படும்' என்றுதான் போட்டுள்ளது. ஆனால் இல்லை. கண்டுபிடிப்போம்.

vasudevan31355
27th July 2014, 09:18 AM
ராஜேஷ் சார்

ஒரு நிழற்படம். நாம் நேற்று பேசியது தொடர்பாக.

தந்தையும், மகனும்

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/suthar1.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/suthar1.jpg.html)

vasudevan31355
27th July 2014, 09:28 AM
பேசும்பட' பொற்சித்திரம். (1)

'தெய்வத்தின் தெய்வம்' படத்தில் அழகான கீதாஞ்சலி. என்ன ஒரு போட்டோகிராபி! அப்போது மணி என்ற பெயரில் இருந்தார்.

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/98e0c027-55ef-4f8d-8063-c675abfc36a9.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/98e0c027-55ef-4f8d-8063-c675abfc36a9.jpg.html)