PDA

View Full Version : மனதை மயக்கும் மதுர கானங்கள்



Pages : 1 [2] 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16

vasudevan31355
14th June 2014, 03:33 PM
கர்ணனின் காலம் வெல்லும் படத்திலும் ஜெய் சங்கர் ஜோடி விஜயகுமாரி தானே சார்
"என்னங்க சம்பந்தி எப்போ நம்ம சம்பந்தம "
"புருசன் வீடு போய் புள்ளையை பெத்த பின்னாலே "
tms சுசீலா காம்போ MD ஷங்கர் கணேஷ் என்று நினவு

கிருஷ்ணா சார்!

ராட்சஸியை விட்டுட்டீங்களே!

கண்ணழகி விஜயலலிதாவிற்கு இவர்

'காலம் வெல்லும்' படத்தில்

பாடும்

பெண்ணொரு கண்ணாடி
பார் கொல்லுது முன்னாடி

பாடல் சும்மா கிறங்கடித்து விடும்.

ரம்ரம்மா...
ஜின்ஜின்னா...

சொர்க்கம் பார்க்க ஆசை உண்டா
சொல்லி விடு சொல்லி விடு
தொட்டுப் கொஞ்சம் பேசலாமா
தூது விடு தூது விடு

தியேட்டரே நீங்கள் சொன்னது போல (கடலூர் பாடலியில்) கும்மாளம் போட்டு குஷியடைந்தது.

உள்ளங்கையில் ரேகை என்ன
பார்த்து விடு பார்த்து விடு
ஒன்றுக்கொன்று சொந்தம் உண்டா
சொல்லி விடு சொல்லிவிடு

எனக்கென்ன ராசி
உனக்கென்ன ராசி
இருவரும் கலந்தால் கைராசி

இன்னா குரல்! இன்னா உச்சரிப்பு!

உலகத்திலேயே இப்படி ஒரு பாடகியை யாராவது காட்டட்டும் பார்ப்போம்.


http://www.youtube.com/watch?v=LSNZdo8E1i4&feature=player_detailpage

mr_karthik
14th June 2014, 03:37 PM
கார்த்திக் சார்,

இதிலேயும் கூட ஒத்துப் போகிறோமே!

டியர் வாசு சார்,

இதென்ன பிரமாதம். நான் நடிகர்திலகம் சிகரெட் பிடிக்கும் காட்சியை அவதார் ஆக வைத்திருக்கிறேன் என்பதால் நீங்களும் அதேபோல் காட்சியை வைத்திருக்கிறீர்களே..., அதைச்சொல்லுங்கள்.

gkrishna
14th June 2014, 03:39 PM
பெண் ஒரு கன்னாடி பார் துள்ளுது முன்னாடி
காந்த கண் அழகி விஜயலலிதவின் சூப்பர் டுபேர்
ஈஸ்வரி வாய்ஸ் அப்படியே விஜயலலிதவிற்கு சூட் ஆகும்
ஆனந்த விகடன் பேட்டியில் கவர்ச்சி என்பதற்கு சில பேர் விளக்கம் கொடுத்த நினவு
பாரதி ராஜா "சில்க் ஸ்மிதா"
முத்துராமன் கூறியது "என்னை பொறுத்தவரை ஈஸ்வரியின் வாய்ஸ் என்பதுதான் கவர்ச்சி"

gkrishna
14th June 2014, 03:44 PM
ஆனால் மொட்டை செய்த தவறு ஈஸ்வரியை use பண்ணவே இல்லை
(பாடலுக்கு) எனக்கு தெரிந்து 2 அல்லது 3 பாடல் பாடி இருப்பார்
நம்ம NT இன் "நல்லதொரு குடும்பத்தில்" "சச்சா சச்சா"
ஓடி விளையாடு தாத்தாவில் ஒரு பாடல் நினவு உண்டு

vasudevan31355
14th June 2014, 03:47 PM
டியர் வாசு சார்,

இதென்ன பிரமாதம். நான் நடிகர்திலகம் சிகரெட் பிடிக்கும் காட்சியை அவதார் ஆக வைத்திருக்கிறேன் என்பதால் நீங்களும் அதேபோல் காட்சியை வைத்திருக்கிறீர்களே..., அதைச்சொல்லுங்கள்.

ஆஹா! பிடித்தார் சார் பாய்ன்ட்டை. அப்படிப் போடு அருவாளை.

சார் நிஜத்தை சொல்லட்டுமா?

உங்கள் அவதார் மீது ஆரம்பத்தில் இருந்தே பொறாமை எனக்கு.

பாதிப்பு நீங்கள் ஏற்படுத்தியதுதான்.

அதான்....

குமுதம் அரசு பாணியில் ஹி...ஹி...ஹி...

வழிடா வாசு வழிடா... (வேற வழி ?!)

vasudevan31355
14th June 2014, 03:51 PM
ஆனால் மொட்டை செய்த தவறு ஈஸ்வரியை use பண்ணவே இல்லை
(பாடலுக்கு) எனக்கு தெரிந்து 2 அல்லது 3 பாடல் பாடி இருப்பார்
நம்ம NT இன் "நல்லதொரு குடும்பத்தில்" "சச்சா சச்சா"
ஓடி விளையாடு தாத்தாவில் ஒரு பாடல் நினவு உண்டு


சார்!

அந்தப் பாடல்

'பார்...ஆடை மறைத்தாலும் பார்'

RAGHAVENDRA
14th June 2014, 03:55 PM
வாசு சார், கார்த்திக் சார், கிருஷ்ணாஜீ {ஜீன்னாலும் மரியாதை தானே ஜீ }, வினோத், கோபால் என எல்லோரும் இங்கே என்ன செய்றீங்க.. போய் அவங்கவங்க வீட்டையும் பாத்துக்குங்க.. அட்லீஸ்ட் சாப்பிடவாச்சும் வீட்டுக்கு வாங்க என்று கேப்டன் [வேறெ யாரு மாடரேட்டர் தான்] கூப்பிட்டாக் கூட காதிலே வாங்க மாட்டீங்க போல... ஹ்ம்... நடத்துங்க....

RAGHAVENDRA
14th June 2014, 03:57 PM
விதுபாலாவின் தந்தை

http://1.bp.blogspot.com/-3Ie599wPScw/UDdVA7B8AAI/AAAAAAAACR0/0aeuV5thF64/s400/20120603-Bhagyanath+Picture.jpg

மேஜிக் நிபுணர் கே. பாக்யநாத்

vasudevan31355
14th June 2014, 04:00 PM
அதான் ரசிக வேந்தர் ராகவேந்திரன் சார் என்பது!

vasudevan31355
14th June 2014, 04:04 PM
ராகவேந்திரன் சார்

அது போல 'மேஜிக்' ராதிகா ('சிவந்த மண்', 'சின்னஞ்சிறு உலகம்' புகழ்) கணவர் யாரன்று கூறுங்களேன். ப்ளீஸ்! முடிந்தால் இமேஜ்.

gkrishna
14th June 2014, 04:11 PM
வாசு சார்
வா இந்த பக்கம் மௌலி direction
பிரதாப் உமா ஜோடி
ஷ்யாம் மியூசிக்
கொஞ்சம் மலையாள ஜாடை பாடலாக இருக்கும்
தீபன் சக்கரவர்த்தி ஜானகி என்று நினவு


ஆனந்த தாகம் உன் கூந்தல் பூக்கள் தீர்க்குமே
நாணம் தோற்குமே
அடிகடி மலர்கொடி நேரம் பார்க்குமே
இந்த பாடலில் இறுதியில் "ஆடை கொடு ஆளை விடு "
என்று வரி வரும் போது தியேட்டரில் கரண்ட் கட் ஆகி விட்டது
அப்போது எல்லாம் generator கான்செப்ட் என்று எதுவும் கிடையாது
நெல்லை பார்வதி திரை அரங்கில்
பெஞ்சை போட்டு உடைத்து விட்டார்கள் ரசிகர்கள்

RAGHAVENDRA
14th June 2014, 04:39 PM
ராகவேந்திரன் சார்

அது போல 'மேஜிக்' ராதிகா ('சிவந்த மண்', 'சின்னஞ்சிறு உலகம்' புகழ்) கணவர் யாரன்று கூறுங்களேன். ப்ளீஸ்! முடிந்தால் இமேஜ்.

வாசு சார்
எனக்கு தெரிஞ்ச விஷயமா கேளுங்களேன்...

chinnakkannan
14th June 2014, 07:19 PM
அதுக்குள்ள நெறய பக்கம் ஓடிடுச்சே

வாசு சார்..அ ப கியும் நன்னாத்தான் இருக்கு..ம்ம் :) அதுக்காக இப்படி இந்தக் காலப் படத்தப் போட்டா பயமுறுத்தறது..வி.பாவோட முதல்படம் பொண்ணுக்கு தங்க மனசு..விஜயகுமாரோடதும் தான்..அவருக்கு குரல் கொடுத்தவரோட குரல் இருக்கே..மிக்ஸில பொடிப் பொடி கருங்கல்ல அறைச்சமாதிரி இருக்கும்..

குலவிளக்கிலா பனைமரம் தென்னை மரம் வாழை மரம்.. அது ஒரு படம்..டிவிடி போட்டவுடனே டிவி யே ஈரமாய்டுச்சு..சர்ரோவோட தியாகச் சுடர் நடிப்பால.. ஆனா அதுல பூப்பூவா பூத்திருக்கு தான் கேட்ட நினைவு..

chinnakkannan
14th June 2014, 07:36 PM
டாக்ஸி டிரைவரில் சுகமான சிந்தனையில் இதமான உணர்வோடு சொர்க்கங்கள் வருகின்றன வய்சான ஜெய் ஒல்லி ஸ்ரீதேவி இல்லியோ
ஆட்டோராஜா - தமிழ்ச் சங்கத்தில் காணாத கவிதை அங்கத்தில் யார் தந்தது - அழகிய பாடல் வெகுசுமார் ஹீரோயின் ரெண்டுமெ நல்ல பாட்டு..

vasudevan31355
14th June 2014, 07:46 PM
சின்னக் கண்ணன் சார்,

அருமையான பாடல்களை ஞாபகப்படுத்தி விட்டீர்கள்.

'டாக்சி டிரைவர்' படத்தின் 'சாந்தி... மை ஹோலி ஏஞ்சல்' பாட்டும் அருமை. பாலாவும், வாணியும் கொஞ்சிக் கொள்வார்கள்.

chinnakkannan
14th June 2014, 07:49 PM
நன்றி புகைப்படத்திற்கு வாசு சார்.. படம் நான் பார்த்ததில்லை..தயிர்சாதம் வித் காஃபி மாதிரி என்னவொருகாம்பினேஷனோ :)

vasudevan31355
14th June 2014, 08:04 PM
'ஆட்டோ ராஜா'

தமிழ்ச் சங்கத்தில் காணாத கவிதை அங்கத்தில் யார் தந்தது...

தானா நனனனனன.........

சூப்பர். நீங்கள் குறிப்பிட்டது போல வயது முதிர்ந்த மாதிரி ஒரு ஹீரோயின். (பார்க்க முஸ்லீம் மங்கை போன்ற தோற்றம்)

ஆனால் சாமியார் கலக்கி விடுவார்.

இதைவிட இன்னொரு அருமையான பாடல்.

ராஜீவ் நடித்த 'நாடோடி ராஜா' (1982) வில் அருணாவுடன் ஒரு டூயட்.

பாலா ஜானகியின் இன்னொரு அதிசயம்.

சும்மா சொல்லக் கூடாது. சங்கர் கணேஷ் நம் நெஞ்செல்லாம் நிறைவர்.

சந்தனப் புன்னகை
சிந்திய கன்னிகை
மந்திர மல்லிகைதானே

தேன் மழை பொழியும்
இதழ்களில் வழியும்
விடிந்ததும் காய்ந்து விடும்.

நெஞ்சோரம் இந்நேரம் கள்ளூறும்
இவள் ஒரு தாவணி மேகம்
இதயம் அமுதில் நனையும் தொடுகையில்

பார்வை வேறானது
இங்கு வேர்வை ஆறானது
சேலை தொடு
மாலை இடு
இளமையின் தூது விடு
பாடு

உடனே பாலா சிரித்தபடி 'சந்தனப் புன்னகை' யை சிந்துவார் பாருங்கள். அடடா! சொர்க்கம்... சொர்க்கம்.

எத்தனை முறை கேட்டாலும் அலுக்காத ஒரு பாடல் இது எனக்கு.


http://www.youtube.com/watch?v=X2CFrJExt8M&feature=player_detailpage

JamesFague
14th June 2014, 10:58 PM
Humble request to Neyveliaar to come to Thaliavar Thread which is our
bread and butter. Do consider as Raghavendra Sir posted. Use this thread
as a side dish and not as meals.

Regards

Murali Srinivas
14th June 2014, 11:48 PM
வாசு,

தவிர்க்க முடியாத ஒரு காரணத்தினால் ஒரு சில நாட்கள் ஹப்பிற்கு வர முடியவில்லை. பிறகு கிருஷ்ணாஜி மூலமாக உங்களின் இந்த புதிய திரியைப் பற்றி அறிந்தேன்.

ஒரு பக்கம் மகிழ்ச்சி. மற்றொரு பக்கம் வருத்தம். வருத்தம் என்னவென்றால் நீங்கள் நடிகர் திலகத்தின் திரிக்கு வராமல் இருந்தது. ஆயினும் பரவாயில்லை. கண்டிப்பாக வருவேன் என்று என்னிடம் நீங்கள் சொன்னதை உங்கள் மன சங்கடம் எல்லாம் விலகிய பின் நிறைவேற்றுவீர்கள் என நிச்சயம் நம்புகிறேன்.

மகிழ்ச்சி என்னவென்றால் நான் உங்களிடம் முன்பு கூறியது போல் விழலுக்கு இரைத்த நீராக போய்க் கொண்டிருந்த உங்கள் உழைப்பை மீண்டும் மூன்று போக சாகுபடி கிடைக்கும் மண்ணில் பயிரிட்டிருப்பதை குறிப்பிடுகிறேன்.

உங்கள் பாடல் ஞானமோ அசாத்தியமானது. உங்களுக்கு உறுதுணையாக இசையின் பல்வேறு பரிமாணங்களையும் 50, 60 ஆண்டு கால பாடல்களையும் அறிந்த ராகவேந்தர் சார், கோபால், கிருஷ்ணாஜி, கார்த்திக், சின்னகண்ணன் இவர்களெல்லாம் சேர்ந்து உங்களுக்கு தோள் கொடுக்க திரி உயரத்தில் பறக்கிறது. இனியும் உயரம் தாண்டும். பார்த்தசாரதி வேறு சேர்ந்து கொள்கிறேன் என்று சொல்லியிருக்கிறார். அவருக்கும் ஏகப்பட்ட பாடல்கள் தெரியும். இந்த திரி ஒரு சாதனை படைக்கும் என்பதில் சந்தேகமில்லை. அதற்கு ஒரு சிறு ஆதாரம்தான் இதுவரை என் போன்ற ஒரு சிலருக்கு மட்டுமே தெரிந்த கிருஷ்ணாஜியின் பாடல் புலமை இந்த திரி மூலமாக இப்போது அனைவருக்கும் தெரிய வந்துள்ளது.

இசையின் வடிவங்கள் பற்றியோ இசைக் கருவிகள் பற்றியோ எதுவும் தெரியாத நான் [சொல்லப் போனால் பல முறை நீங்ககளும் கார்த்திக் போன்றவர்களும் ஒரு பாடலை பற்றி அலசும் போது பாடலில் பயன்படுத்தப்பட்டிருக்கும் இசைக் கருவிகளைப் பற்றியெல்லாம் விவரிக்கும் போது பொறாமையே பட்டிருக்கிறேன்] எனக்கு பிடித்த பாடல்கள் இங்கே வரும்போது என் மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்ளலாம் என நினைக்கிறேன்.

என மனங்கனிந்த பாராட்டுகள் மற்றும் வாழ்த்துகள்!

அன்புடன்

Gopal.s
15th June 2014, 04:40 AM
In Indian classical music, 'Sampūrṇa rāgas (संपूर्ण, Sanskrit for 'complete', also spelt as sampoorna) have all seven swaras in their scale. In general, the swaras in the Arohana and Avarohana strictly follow the ascending and descending scale as well. That is, they do not have vakra swara phrases (वक्र, meaning 'crooked').

In Carnatic music, the Melakarta ragas are all sampurna ragas, but the converse is not true, i.e., all sampurna ragas are not Melakarta ragas. An example is Bhairavi raga in Carnatic music (different from the Bhairavi of Hindustani music). Some examples of Melakarta ragas are Mayamalavagowla, Todi, Sankarabharanam and Kharaharapriya.

மாயா மாளவ கௌளை .

நான் ஏற்கெனெவே கூறிய படி இந்த ராகத்தை technical ஆக அலச போவதில்லை.ஒரு ராகம் என்றால் என்னவென்றே தெரியாத பாமரனாக என்னிடம் அது ஏற்படுத்திய கிளர்ச்சிகளை,உணர்வுகளை விவரித்து ,அதற்கு பெயர் எனக்கே பிறகுதான் தெரிந்ததால்,இது ஒரு புது பாதையில் விவரணை. தொடரும் அன்பர்களுக்கு நன்றி.போரடித்தால் சொல்லுங்கள் .நிறுத்தி விட்டு உங்களோடு அரட்டையில் ஜாலியாக பங்கு பெறுகிறேன்.

தமிழில் ஓடி கொண்டேயிருக்கும் பாடல்கள் சொற்பம். அப்படி ஒரு அற்புத பாடல் .இத்தனைக்கும் கதாநாயகர் விபத்தால் ஊனமுற்றிருப்பார்.உட்கார்ந்தே நாயகியின் சித்திரத்தை வரைய தலை படுவார்.அவளை சகுந்தலையாக வரித்து. பின்னழகி சகுந்தலையோ துள்ளி துள்ளி ஓடி நம் மனதை அலை பாய வைப்பார்.

பார்த்த உடனே எனக்குள் அதிர்வை ஏற்படுத்திய ஒரு வித்தியாச படத்தில் இந்த பாடல். கல்லெல்லாம் மாணிக்க கல்லாகுமா?

உங்கள் மனதை மலர்ச்சியாக்கி ஜெட் வேகத்தில் ஓட செய்து இலகுவாக்கி ,காதல் உணர்வை ஊட்டி ,கேள்விகளையும் எழுப்பி பதிலும் தரும் இதத்தை இந்த ராகம் கொடுக்கும். எல்லா நேரமும்,காலமும் எப்போது இந்த ராகத்தை கேட்டாலும் மனம் வானில் பறக்கும்.

மற்றொரு எனக்கு பிடித்த படத்தில் பிடித்த பாடல்.நாயகன் இடம் மாறியிருப்பான்.திடீரென ஸ்பெயின் மாடுபிடி விளையாட்டாய் ஒரு அற்புதமாக கோரியோ க்ராப் செய்யப்பட்ட துள்ளிசை. ராட்சச பாடகிக்கு ,எனக்கு பிடித்த பம்பிளிமாஸ் செக்ஸி பாம் ஒருத்தியின் காளை சண்டை ஆட்டம்.சிறு வயதில் நான் மிக ரசித்த படம்,மற்றும் பாடல்.சரிவிகிதத்தில் அனைத்தும் கொண்ட எங்கள் எம்.எஸ்.வீ சாரின் அழியா உற்சாக பாடல்.

"துள்ளுவதோ இளமை"

இப்படி ஒரு கிளாஸ் மற்றும் மாஸ் பாடலை தர முடிந்த ஒரு அற்புத ராகமே மாயா மாளவ கவுளை.

என்னை கவர்ந்த மற்ற பாடல்கள்.

நிலவே நீ இந்த சேதி சொல்லாயோ- அருண கிரி நாதர்.

மதுர மரி கொழுந்து வாசம்-எங்க ஊரு பாட்டு காரன்.(போச்சு முரளி !!!)

ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும்-முள்ளும் மலரும்.

காதல் கவிதைகள் படித்திடும் நேரம்-கோபுர வாசலிலே.

மாசறு பொன்னே வருக- தேவர் மகன்.

பூவ எடுத்து ஒரு மாலை-அம்மன் கோவில் கிழக்காலே.

பூப்போலே உன் புன்னகையில் -கவரி மான்.

சொல்லாயோ சோலை கிளி - அல்லி அர்ஜுனா .

Gopal.s
15th June 2014, 04:56 AM
எனக்கு பிடித்த பாடல்களில் முத்திரை வரிகள்.

முகத்தில் முகம் பார்க்கலாம்- "இகத்தில் இருக்கும் சுகம் எத்தனை ஆனாலும் இருவர்க்கும் பொதுவாக்கலாம் ,அன்பே ,அதன் எண்ணிக்கை விரிவாக்கலாம்".

நினைப்பதெல்லாம்-" ஆயிரம் வாசல் இதயம்.அதில் ஆயிரம் எண்ணங்கள் உதயம்".

உள்ளத்தில் நல்ல உள்ளம்- "தாய்க்கு நீ மகனில்லை,தம்பிக்கு அண்ணனில்லை,ஊர் பழி ஏற்றாயடா"

மலர்ந்தும் மலராத- "நதியில் விளையாடி கொடியில் தலை சீவி நடந்த இளம் தென்றலே"

கல்லெல்லாம் மாணிக்க -"உண்டென்று சொல்வதுந்தன் கண்ணல்லவா,இல்லையென்று சொல்வதுந்தன் இடையல்லவா"

பூ வரையும் பூங்கொடியே-"கன்னமெனும் கிண்ணத்திலே வண்ணங்களை குழைத்தாயே,பொங்கி வரும் புன் சிரிப்பில் கொஞ்சம் கொஞ்சம் இரைத்தாயே"

தரை மேல் பிறக்க வைத்தான்-"கடல் நீர் நடுவே பயணம் போனால் குடிநீர் தருபவர் யாரோ"

Richardsof
15th June 2014, 05:22 AM
ஹம்மிங்க்ஸ் இனிமைகள் நிறைந்த பாடல்கள் ..இரவின் மடியில் பாடல்கள் சில .....

பவள கொடியிலே முத்துக்கள் ............
கல்லெல்லாம் மாணிக்க கல்லாகுமா .....
பூ மாலையில் ஓர் மல்லிகை ..........
காதல் காதல் என்று சொல்ல கண்ணன் ............
காதலன் வந்தான் ....
பொட்டு வைத்த முகமோ .......
திருவளர் செல்வியோ .. நான் தேடிய .......

Richardsof
15th June 2014, 05:39 AM
மழை பொழிந்து கொண்டே இருக்கும் .....

இசை அரசி சுசீலாவின் தேன் குரலில் நடிகை சரோஜாதேவியின் பாடல் நடிப்பில் அமைந்த இந்த பாடல் .


http://youtu.be/tuVJGAMHGEA

RAGHAVENDRA
15th June 2014, 07:43 AM
1969ல் மெல்லிசை மன்னரும் கே.வி.எம். அவர்களும் கோலோச்சிக் கொண்டிருந்த நேரத்தில் புகழின் உச்சிக்கு மற்றொரு பக்கம் உயர்ந்து கொண்டே இருந்தவர்கள் சங்கர்-கணேஷ் இசையமைப்பாளர்கள். மகராசி படத்திலேயே சூப்பர் ஹிட் பாடல்கள் மூலமாக அறிமுகமாகி புகழ் பெற்றவர்களின் வேகமான வளர்ச்சிக்கு அவர்களுடைய வித்தியாசமான இசை முயற்சி ஒரு முக்கிய காரணம். சங்கர் கணேஷ் இசை எனத் தனியே அடையாளம் காணும் அவர்களுக்கு தங்கள் முத்திரையைப் பதித்தார்கள். அந்தக் காலத்து இளைஞர்களின் மனம் கவர்ந்த இசையமைப்பாளர்களாகவும் உருவெடுத்தார்கள்.

அப்படி அவர்களின் புகழை பரப்பியதில் அக்கா தங்கை படத்தில் இடம் பெற்ற ஆடுவது வெற்றி மயில் பாடலுக்கு மிக மிக முக்கியமான பங்கு உண்டு. பட்டி தொட்டி என்று சொல்வார்களே அது போல எங்கும் எதிலும் ஆடுவது வெற்றி மயில் ஒலித்தது. இப்படம் நூறு நாட்கள் ஓடி மாபெரும் வெற்றி பெற்றதில் சங்கர் கணேஷின் இசைக்கு முக்கிய பங்கு உண்டு. குருவிகளா, குருவிகளா பாடலும் இதே போல் சிறப்பான வரவேற்பைப் பெற்றது. சீர்காழியின் குரலில் பாட்டோடு ராகம் இங்கே மோதுதம்மா பாடலும் நெஞ்சைத் தொட்டுச் செல்லும் பாடல்.

இவையல்லாது ஈஸ்வரியின் வசீகரக் குரலில் இடம் பெற்ற ஒரு பாடல் மாறி வரும் சொஸைட்டி. இதிலும் சங்கர் கணேஷின் திறமை பளிச்சிடும். இன்று பார்க்கும் போதும் கேட்கும் போதும் இப்பாடலில் அவர்களின் இசைக் கருவிகளின் பிரயோகமும் பயன் படுத்தியுள்ள விதமும் பாராட்ட வைக்கிறது.

அபூர்வமான இப்பாடல் ராட்சசியின் ரசிகர்களான வாசுவுக்கும் மற்ற நண்பர்களுக்குமாக இங்கே

http://youtu.be/W5Kgw0ASKiE

இப்பாடலில் முதல் சரணத்திற்கு முன் வரும் பியானோ, கிடார் மற்றும் வாய்ஸ் வாப்ளிங் குறிப்பிடத் தக்கது. ஒரே துடிப்பு ஒரே நடிப்பு இந்த வரிகளின் போது இடையிடையே ட்ரம்பெட் ட்ரம்ஸ் என கலக்கியிருப்பார்கள். இரண்டாம் சரணத்தின் போது அக்கார்டியன் கலக்கல். பாடல் முழுதும் ட்ரம்ஸ் தாளம் போட்டுக் கொண்டே ஆட வைக்கும்.

மொத்தத்தில் வித்தியாசமான இசையமைப்பில் அருமையான பாடல்

vasudevan31355
15th June 2014, 09:34 AM
அன்பு முரளி சார்,

தங்களின் அன்பான, இதயபூர்வமான வாழ்த்துதல்களில் பெருமகிழ்ச்சி கொள்கிறேன். இப்படி ஒரு திரி தொடங்க வேண்டும் என்பது என் நெடுநாள் ஆசை. நமது ஹப்பில் இது போன்ற திரிகள் சிலவற்றைப் பார்த்து நான் மகிழ்ந்ததுண்டு. அதில் வருத்தம் என்னவென்றால் அவையெல்லாம் ஒருசில பக்கங்களோடு நின்று போனதுதான்.

திரை இசை மற்றும் பாடல்களைப் பற்றி அறிந்த பல ஜாம்பவான்கள் நிறைய இங்கு இருக்கிறார்கள். அவர்கள் எல்லோரையும் ஒன்று சேர்த்து திரை இசை பொற்காலப் பாடல்களை அலச ஆவல் கொண்டேன்.

நடிகர் திலகம் பற்றிய கருத்துக்கள், சம்பாஷணைகள் தவிர்த்து நான் எனக்கு நினைவு தெரிந்ததிலிருந்து நண்பர்களிடம் பேசி மகிழ்ந்து, பகிர்ந்து கொள்வது பழைய பாடல்களைப் பற்றிதான். அதிலும் குறிப்பாக
அதிகம் வெளியே தெரியாத அற்புதப் பாடல்கள். எவ்வளவோ திறமையான இசைக் கலைஞர்கள் வெளிச்சத்துக்கு வராமல் போய் இருக்கிறார்கள்.

உதாரணத்திற்கு எடுத்துக் கொண்டோமானால் பாடகி சொர்ணா அவர்கள். இயக்குனர் பாலச்சந்தரின் நாடகப் பட்டறையிலிருந்து வந்த மெல்லிசை மாமணி வி. குமார் அவர்களின் மனைவி. தேனும், பலாச்சுளையும் சேர்ந்தது போன்ற வசீகரக் குரலுக்கு சொந்தக்காரர் அவர்.

அப்போதிலிருந்தே நான் அவருடைய குரலுக்கு அடிமை.(ராட்சஸியை விடுங்கள். அவர் பெரும் புகழ் பெற்றவர்) சொர்ணா பாடிய பாடல்கள் மிகக் குறைவு. விரல் விட்டு எண்ணி விடலாம்.

ஆனால் அவர் பாடிய ஒவ்வொரு பாடலும் நங்கூரம் பாய்ச்சியது போல என் மனதில் பதிந்து விட்டன.

மிகப் பிரபலமாக வந்திருக்க வேண்டிய பாடகி. ஆனால் என்ன காரணமோ! அவர் பிரபலமாகவில்லை.

இப்படி பி.வசந்தா, மாதுரி, எம்.ஆர்.விஜயா, மல்லிகா பாடகர்களில் கோவை சௌந்தரராஜன், பொன்னுசாமி (கமர்ஷியல் பாடல்களில் கில்லாடி) தாராபுரம் சுந்தரராஜன், எம்.எல்.ஸ்ரீகாந்த், தனசேகரன் இசையமைப்பாளர்களில் என் நெஞ்சில் என்றும் நிறைந்திருக்கும் ஷியாம், ராஜன் நாகேந்திரா, சலீல் சௌத்ரி, விஜயபாஸ்கர், ஜி.கே. வெங்கடேஷ், மரகதமணி என்று பட்டியல் நீளும்.

நாம் பொதுவாக மெல்லிசை மன்னர், இளையராஜா, பி.சுசீலா, ஈஸ்வரி, ஜானகி, பழைய சூப்பர் ஹிட் பாடல்கள் என்றே பழக்கப்பட்டு விட்டோம். நான் மேற்குறிப்பிட்ட சந்தையில் அதுவும் தமிழ் சினிமா சந்தையில் அதிகம் பேசப்படாத இசைக்கலைஞர்கள் இந்தத் திரி மூலமாக அனைவரையும் சென்றடைய வேண்டும் என்பதே என் பெரும் விருப்பம்.

இதில் கிருஷ்ணாஜி மிக மிக இவ்விஷயத்தில் உறுதுணையாக இருக்கிறார். அவரின் மெமரி பவரைக் கண்டு நான் அசந்து போய் நிற்கிறேன். மற்றும் என் அருமை நண்பர்கள் ராகவேந்திரன் சார், கார்த்திக் சார், சின்னக் கண்ணன், வினோத் சார், பார்த்தசாரதி சார், கோபு சார், ஸ்டெல்லா மேடம், ராஜேஷ் சார், ரவி சார் (கோபாலை விடுங்கள். மகா மேதைகளைப் பற்றி நான் சொல்லித்தான் தெரிய வேண்டுவதில்லை) உள்ளிட்ட அனைத்து நண்பர்களுக்கும் இதில் இவ்வளவு ஆர்வமா என்று திகைப்பாக இருக்கிறது.

மற்றபடி இந்தத் திரி ஆரம்பிக்க நிச்சயம் வேறு காரணங்கள் எதுவும் இல்லை. நீங்கள் குறிப்பிட்டது போல நடிகர் திலகம் திரியை மறக்க வேண்டுமானால் என் சுவாசத்தைதான் மறக்க வேண்டும். அத்துணை நல்ல இதயங்களும் நடிகர் திலகம் திரிக்கு அழைப்பு விடுக்கும் அளவிற்கு நான் அனைவர் நெஞ்சிலும் இருக்கிறேன் என்பதை விட எனக்கு வேறு மகிழ்ச்சி இருக்க முடியாது. அத்துணை பேருக்கும் என் கோடானு கோடி நன்றிகளை இதயபூர்வமாக தெரிவித்துக் கொள்கிறேன். எல்லாவற்றுக்கும் காலமே சிறந்த தீர்வைக் கொடுக்கும்.

இப்போது உங்களிடம் வருகிறேன்.

இசையை, பாடல்களை ரசிப்பதில் நீங்கள் எந்த அளவிற்கும் அனைவருக்கும் கிஞ்சித்தும் குறைந்தவர் கிடையாது என்பதை நீங்கள் அனுபவித்து ரசித்த 'எல்லாம் அவன் தந்தது' (அப்போதே சொன்னேனே கேட்டியா) பாடல் ஒன்றே சாட்சி ஒருபானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் போல.

பல திரையுலக அதிசயங்களை, ரகசியங்களை, இனிமையாக அம்பலப்படுத்தும் நீங்கள், பொய்கள் தலையெடுக்கும் இடங்களில் உண்மையை உணர வைக்கும் நீங்கள், பாட்டுடைத் தலைவனின் தலையாய ரசிகராய் கொஞ்சமும் சுயநலம் பாராமல் அவருக்காகவே உழைத்து வரும் நீங்கள், அவர்பற்றிய ஜனரஞ்சகமான கட்டுரைகளை அளித்துவரும்

நீங்கள்

இந்தத் திரியில் பங்கு கொண்டால் (தங்களுக்கு நேரம் கிடைக்கும் போது மட்டுமே. தங்களது நேரமின்மையை நன்கு அறிந்தவன் நான்)
எங்களைவிட பாக்கியசாலிகள் எவரும் இருக்க முடியாது.

மீண்டும் தங்களது அன்பு வாழ்த்துகளுக்கு நன்றி!

இப்போது என் இன்னொரு மனம் கவர்ந்த பாடகி சொர்ணா அவர்கள் 'தூண்டில் மீன்' படத்தில் ஜெயச்சந்திரனுடன் இணைந்து பாடிய ஒரு அற்புத பாடலை என்னுடைய சிறு பரிசாக (ஆனால் விலை மதிக்க முடியாத பரிசு என் வரையில்) 'மதுர கானங்கள்' திரியின் சார்பாக மிக்க மகிழ்ச்சியுடன் தங்களுக்கு வழங்குகிறேன்.

இன்னொரு ரகசியம். இந்தப் பாடலை இதுவரைக்கு நான் யாருக்கும் வழங்கியதில்லை. அவ்வளவு ரகசியமாக இப்பாடலை ரசிப்பவன் நான்.
இப்போது எங்கள் முரளி சாருக்காக முதன் முதலாக இத்திரியில் வழங்குகிறேன்.


http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=mMv0BkkCBDU

Gopal.s
15th June 2014, 09:52 AM
சாருகேசி .

சிறிய வயதில், தாத்தா பெரிய கிராமபோன் வைத்து கொண்டு ,family தோசை சைசில் ரெகார்ட் போட்டு கேட்பார்.உச்ச ஸ்தாயியில் அலறும் அந்த குரல் என்னை ஒன்றும் கவரவில்லை.(அந்த கால cult சூப்பர் ஸ்டார் பாகவதர்).இன்று டி.எம்.எஸ் சில பாடல்கள் நீங்கலாக இதே உணர்வைத்தான் கொடுப்பார். கால,ரசனை மாற்றம்.ஆனாலும் ஒரு ஐந்து பாடல்களின் music content என்னை மிக கவரும்.அப்படி என்னை ஈர்த்த ஒன்றுதான் "மன்மத லீலையை வென்றார் உண்டோ?"

என் சிவாஜி மன்ற முதிய நண்பர் (அவருக்கு அப்போது 50 வயது.நான் பதினொன்று),மன்றத்தில் உட்காரும்போதெல்லாம் இரண்டு பாடல்களை பாடுவார்.(மற்றதை இன்னொரு சந்தர்ப்பத்தில்)அதில் ஒன்றை எனது பள்ளி பாட்டு போட்டிக்கு என்னை தேற்றி முதல் பரிசு வாங்க செய்தார். அந்த பாடல் "வசந்த முல்லை போலே வந்து".

நான் ,என் தங்கை உட்கார்ந்து லிஸ்ட் போட்டு பழைய பாடல்களை (பாண்டி பஜார் அருகே ஒரு கடை) டேப் செய்து கேட்போம்.(pre -recorded அலர்ஜி .நிறைய குப்பை சுமந்து வரும்).அப்போது எங்கள் லிஸ்டில் தவறாமல் முதலாக (இன்றும்தான்)இடம் பெரும் உன்னத அழியா இசை அதிசயம் "தூங்காத கண்ணென்று ஒன்று".

இந்த ராகமும் மேளகர்த்தா சம்பூரணம்தான். ஒரு ராகம் மெல்லிய காதல் உணர்வை கிளர்ந்தெழ செய்து ,உங்கள் காதலியிடம் உங்கள் உணர்வை அமைதியாக சொன்ன பிறகு, ஒரு திருப்தியை தருமே ?அதை உணர்ந்திருக்கிறீர்களா? அந்த உணர்வுடன் ,இனிய தாலாட்டை கலந்து கண் மூடினால் வரும் பரம சுகத்தை இந்த ராகம் அனுபவிக்க வைக்கும்.

இந்த ராகத்தில் எனது மற்ற தேர்வுகள்

மலரே குறிஞ்சி மலரே -டாக்டர் சிவா.
தூது செல்வதாரடி- சிங்கார வேலன்.
முத்து குளிக்க- அனுபவி ராஜா அனுபவி.
சின்ன தாயவள் தந்த-தளபதி.
உதயா உதயா - உதயா.
ஊரெங்கும் தேடினேன் - தேன் நிலவு.

vasudevan31355
15th June 2014, 10:04 AM
கோ,

எனக்கு ராகங்கள் புரிகிறதோ இல்லையோ! உங்கள் மாயா மாளவ கௌளை, சாருகேசி இந்தத் திரியப் பார்க்கும் ராகங்கள் பற்றிய அறிவு சார்ந்தவர்களை கொள்ளை அடிக்கும் என்பது மட்டும் நிஜம். எதிலும் தரம் வேண்டும் என்று நினைக்கும் நீங்கள் ராகங்கள் விஷயத்தில் மட்டும் விட்டு விடவா போகிறீர்கள்?

கொஞ்ச கொஞ்சமாக நானும் உங்கள் ராகப் பதிவுகளைப் படித்து அவற்றைப் பற்றி ஓரளவேனும் தெரிந்து கொள்ள முயற்சி செய்கிறேன்.

குருவே துணை.

vasudevan31355
15th June 2014, 10:14 AM
ராகவேந்திரன் சார்,

'அக்கா தங்கை' ஆகா! ஆகா! மாறி வரும் சொஸைட்டியில் மாறாத இனிமை தரும் பாடல். இப்பாடலை ஒரு காலத்தில் கடைகடையாக கேசட்டில் பதிவு செய்ய ஏறி இறங்கியிருக்கிறேன். (கடைக்கார நண்பர் இளக்காரமாய் ஒரு பார்வை வீசுவார் பாருங்கள்... 'வந்துட்டான்யா! இல்லாத பாட்டையெல்லாம் கேட்டு உயிரெடுக்க')

இப்பாடலைத் தாங்கள்

அளித்தது பியூட்டி.

இப்பாடலுடன் நாம்

இணைவது டியூட்டி.

ராட்சஸி ரிவால்வார் ரீட்டா இருவரும் இணைந்தால் இனிய சுகம்தான் என்றும்.

vasudevan31355
15th June 2014, 10:17 AM
வினோத் சார்,

இசை மழை தூறத் துவங்கியிருக்கும் 'மதுரகானம்' திரியில் கண்ணியப் பாடகியின் 'மழை பொழிந்து கொண்டே இருக்கும்' பாடல் தங்கள் ரசனையின் பிரதிபலிப்பு. பாராட்டுகிறேன்.

chinnakkannan
15th June 2014, 10:39 AM
எனக்கு இங்கே வொர்க்கிங்க் டே..அங்கே லீவ் தானே.. கேளுங்கள் இந்த கானங்களை..


முத்தம் போதாதே சத்தம் போடாதே
ரத்தம் சூடானதே நாணமே நாணுதே
முத்தம் போதாதே சத்தம் போடாதே
ரத்தம் சூடானதே நாணமே நாணுதே
இதழ் முத்தம் தரும் அதில் பித்தம் வரும்
இதழ் முத்தம் தரும் அதில் பித்தம் வரும்
என்னையே உன்னிலே தேடினேன் அழகே

அப்புறம்..முத்தமிடும் நேரமெப்போஓ நினைவுக்கு வருதோன்னோ.. :)

vasudevan31355
15th June 2014, 11:43 AM
இன்றைய ஸ்பெஷல் (4)

நேற்று படகோட்டும் போது தன் கண்ணாளனுக்காக நதியை மெதுவாகப் போகச் சொன்னார் 'வடக்கத்திய இசைக்குயில்' லதா.

இன்று நம் 'தென்னகத்து இசைக்குயில்' சுசீலா.

அக்பரின் மகன் சலீமைக் காதலித்த நாட்டிய யௌவன ராணி அனார்கலி இளவரசனைக் காதலித்த பாவக் குற்றத்திற்காக அக்பரால் சிறையடைக்கப்பட்டு சங்கிலிகளால் பிணைக்கப்பட்டு கிடக்கிறாள் அழுக்குத் துணியுடன் அலங்கோலமாக.

தன் காதல் அரும்பு மலராமல் கருகிப் போகிறதே என்று கண்ணீர் வடிக்கிறாள். தான் கனவு கண்டிருந்த காதல்கதை கண்ணீரில் போய் முடிந்ததே என்று ஆற்றொணாத் துயருற்று கண்ணீர் வடிக்கிறாள்.

நிலா ஒளி வீசிக் கொண்டிருந்த வானத்தில் மழை மேகங்கள் சூழ ஆரம்பித்து விட்டதே என்று கதறுகிறாள்.

ஆமாம்!

இந்தியில் வெளிவந்து நம் உள்ளங்களையெல்லாம் கொள்ளையடித்த 'மொகல்-ஏ.அசாம்' திரைப்படம் தமிழில் அக்பர் ஆக 'டப்' ஆனது.

http://1.bp.blogspot.com/-dJSCIAr2CPM/Ta82RtVEk5I/AAAAAAAAKcM/35FohnL1HZ0/s1600/Madhubala+Glamour+Photos+by+James+Burke+1951+%2528 2%2529.jpg

மதுபாலா என்ற மனதை மயக்கும் கட்டழகிதான் அனார்கலியாகி பல இந்திய சலீம்களின் மனதில் காதல் சாம்ராஜ்யக் கோட்டை எழுப்பினார்.

1960-ஆம் ஆண்டு வெளியான இப்படம் பல சிறப்புகளைப் பெற்றது. (அதைப் பற்றி சொல்லி மாளாது)

நடிகர் திலகத்திற்கு மிகவும் பிடித்த பிருத்விராஜ்கபூர் அக்பராகவும், மது அனாராகவும் வாழ்ந்தனர். சலீம் திலீப்.

'அக்பர்' தமிழாகி இந்தியில் லதா பாடிய 'மொஹபத் கி ஜூட்டி கஹானி பெ ரோயே' என்ற உலகை உலுக்கிய பாடல் தமிழில் நம் தென்னகத்து இசைக்குயில் இசைக்க அதே அளவுக்கு புகழ் பெற்றது நௌஷாத்தின் மனம் மயக்கும் இசையிலே!

http://4.bp.blogspot.com/-JsK84wpNpt4/TtlbEZBpE4I/AAAAAAAAGxU/f4dl9Zi60-Q/s1600/Mohabath+ki+jhoothi+kahani+pe+roye.JPG

என்ன பாடல் என்று தெரிகிறதா?

கனவு கண்ட காதல்
கதை கண்ணீராச்சே!
நிலா வீசும் வானில்
மழை சூழலாச்சே!
மழை சூழலாச்சே!

முன்பே எண்ணிப் பாராமல்
நெஞ்சம் ஏங்கிட்டேனே
எந்தன் ஆசையே இன்று
என்னைக் கொல்லலாச்சே!
உந்தன் காதலின்
கனவெல்லாம்
கண்ணீர் ஆச்சே! ஆச்சே!

கனவு கண்ட காதல்
கதை கண்ணீராச்சே!

அகம் வாட்டும் காதல் தீ
யார்க்கும் சொல்லாதே
மறைத்தே நாம் வாழ்கின்றோம்
மார்க்கம் காணாதே
ஜகம் வாழ்கிறேன்
வாழ்க்கையே
கண்ணீர் ஆச்சே!ஆச்சே!

கனவு கண்ட காதல்
கதை கண்ணீராச்சே!
நிலா வீசும் வானில்
மழை சூழலாச்சே!
மழை சூழலாச்சே!

கனவு கண்ட காதல்
கதை கண்ணீராச்சே!

மதுபாலாவின் மனதை வாட்டி எடுக்கும் இரும்பையும் இளக வைக்கும் நடிப்பு. அனார்கலியை நம் கண்முன்னே அவள் காதலின் துடிப்பை அப்படியே நம்முள் கொண்டு வந்து செருகும் உணர்வு பூரவமான நடிப்பு மறக்கவே முடியாத ஒன்று. அதை விட அவர் அழகு. சோகத்தில் கூட.

(பிரபல இந்திப் பின்னணி பாடகர் கிஷோர் குமாரை மது மணம் செய்து கொண்டார். கிஷோர் இந்த விஷயத்தில் நம்மூர் ஜெமினி மாதிரி கில்லாடி. இவர்கள் இணைந்து நடித்த 'சல்திகா நாம் காடி" அங்கு படு சூப்பர் ஹிட்)

நடிப்புக்கு மது உயிர் கொடுத்ததைவிட சுசீலாம்மா இந்தப் பாடலை சிரத்தை எடுத்துப் பாடி அழியாக் காவியமாகி விட்டார். இதுவும் சிலோன் ரேடியோவில் தினமும் ஒளிபரப்பான பாடல்.

'கனவு கண்ட காதல்' இன்றைய ஸ்பெஷலாக


http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=qpQk4puv_fg

mr_karthik
15th June 2014, 12:03 PM
டியர் முரளி சார்,

இத்திரிக்கு தங்கள் வருகையும், வழக்கம்போல தங்கள் கண்ணியமான வார்த்தைகளும் மனதுக்கு தெம்பையும் உற்சாகத்தையும் தருகின்றன. தாங்களும் இத்திரியில் பங்கேற்பதாக சொல்லியிருப்பது உற்சாகத்தைத் தருகிறது. நான் முற்றிலும் காணாமல் போய்விடாமல் இத்திரி போன்ற இடங்களில் உங்களை சந்தித்துக் கொண்டிருப்பதில் மகிழ்ச்சி.

mr_karthik
15th June 2014, 12:16 PM
டியர் வாசுதேவன் சார்,

'கனவு கண்ட காதல்' பாடல் பதிவு அட்டகாசம். மொகலே ஆஸம் படத்தை ஏற்கெனெவே கருப்பு வெள்ளையில் பார்த்திருந்த நான் அதன் டெக்னிக் கலரில் மாற்றப்பட்ட வடிவத்தையும் கண்டு அசந்து போனேன். என்னவொரு நேர்த்தியான மாற்றம். வண்ணத்தில் பிரமாண்டம் இரட்டிப்பானது. (ஆனால் சோகம் என்னவென்றால், மாற்றப்பட்ட வண்ண வடிவம் எதிர்பார்த்த வெற்றியை ஈட்டவில்லை) .

தங்கள் பதிவில் சின்னத்திருத்தம். 'மொகலே ஆஸம்' தமிழ் டப்பிங் வடிவத்தின் பெயர் 'அனார்கலி' அல்ல, 'அக்பர்'.

vasudevan31355
15th June 2014, 12:39 PM
திருத்தி விட்டேன் கார்த்திக் சார்!

திருத்தத்திற்கு நன்றி

காலையிலிருந்து அனார்கலியிலேயே மூழ்கி விட்டதால் அப்படி ஆகி விட்டது.

நீங்கள் இருக்கையில் என்ன கவலை?

mr_karthik
15th June 2014, 12:41 PM
விசு முதலில் இயக்கிய படம் 'மணல் கயிறு'. (இதற்கு முன் அவர் நடித்த அவரது மேடை நாடகமான குடும்பம் ஒரு கதம்பம் படத்தை வேறொருவர் இயக்கியிருந்தார்).

மணல் கயிறு: மெல்லிசை மன்னரின் மனதை அள்ளும் இசையில் எஸ்.வி.சேகர் - சாந்திகிருஷ்ணா ஜோடிக்கு அருமையான டூயட் பாடல். ஆனால் ஜோடிக்குரல் அல்ல. எஸ்.பி.பாலா மட்டுமே பாடியிருந்தார். சாந்திகிருஷ்ணா எந்தப்படத்திலும் ஒரு நடிகையாக செயற்கைத்தோற்றம் தர மாட்டார். நம் பக்கத்துவீட்டு பெண்போல இருப்பார்.

எப்போது கேட்டாலும் சுவை தரும் பாடல்....

மந்திரப்புன்னகை மின்னிடும் மேனகை சந்தனப் பூங்கொடியோ
இந்திரன் மாளிகை சுந்தரத் தேவதை சிந்திடும் பைங்கிளியோ
அவள்தானோ இவள்தானோ இளமானோ இசைத்தேனோ
வண்ணமொழி வார்த்தை திருவாசகம்தானோ

அதிலும் எனக்கு மிகவும் பிடித்த சரணம்.....

மாமதுரை வாழ்ந்திருக்கும் அங்கையற்கண்ணி
தாமரையில் வீற்றிருக்கும் மங்கலச்செல்வி
கையிரண்டில் இசைவீணை வைத்திருக்கும் கலைவாணி
மங்கையிவள் யாரோ அந்த மூவரும்தானோ

vasudevan31355
15th June 2014, 12:59 PM
(சண்டே ஸ்பெஷல்)

டியர் கார்த்திக் சார்

உங்கள் மனம் மகிழ,

அனைத்து பாலாவின் ரசிகர்கள் படித்து மகிழ,

'பொட்டு வைத்த முகமோ...
கட்டி வைத்த குழலோ'..

என்று தன் வசீகரக் குரலால் நம்மைக் கட்டிப் போட்ட

'பாடும் நிலா' பாலாவின் பேட்டி. (08-10-2008 அன்று வெளிவந்த 'ஆனந்த விகடன்' இதழுடன் இணைப்பு)

இப்போது உங்கள் பார்வைக்கு.

http://i812.photobucket.com/albums/zz49/adithya961999/sivaji%201/im_zpscd747c5a.jpg (http://s812.photobucket.com/user/adithya961999/media/sivaji%201/im_zpscd747c5a.jpg.html)

http://i812.photobucket.com/albums/zz49/adithya961999/sivaji%201/7_zps480ba6fe.jpg (http://s812.photobucket.com/user/adithya961999/media/sivaji%201/7_zps480ba6fe.jpg.html)

http://i812.photobucket.com/albums/zz49/adithya961999/sivaji%201/8_zps09c6bae2.jpg (http://s812.photobucket.com/user/adithya961999/media/sivaji%201/8_zps09c6bae2.jpg.html)

http://i812.photobucket.com/albums/zz49/adithya961999/sivaji%201/9_zpse18997e6.jpg (http://s812.photobucket.com/user/adithya961999/media/sivaji%201/9_zpse18997e6.jpg.html)

http://i812.photobucket.com/albums/zz49/adithya961999/sivaji%201/IMG_0002_zps5c99dba3.jpg (http://s812.photobucket.com/user/adithya961999/media/sivaji%201/IMG_0002_zps5c99dba3.jpg.html)

RAGHAVENDRA
15th June 2014, 01:01 PM
தந்தையர் தினம்...

இந்த நாளை ஆண்களை விட பெண்கள் அதிகம் கொண்டாடுவர். மகன் தாயிடமும் மகள் தந்தையிடமும் அளவற்ற பாசம் வைத்திருப்பது இயல்பு, யதார்த்தம், உண்மை. ஆண்களுக்கும் தந்தையிடம் பாசம் இல்லையென்று சொல்ல முடியாது. தாயிடம் எந்த அளவிற்கு பாசம் உண்டோ அதே அளவு தந்தையிடமும் வைத்திருப்பார்கள். ஆனால் தந்தையின் புகழ், கௌரவம், பெருமை போன்ற வற்றைப் பேணிக் காப்பதையே தலையாய கடமையாகக் கொண்டு அதில் ஈடுபடுவார்கள்.

அதே சமயம் பெண் குழந்தை தந்தையிடம் வைத்திருக்கக் கூடிய பாசம் மிக அதிகமாக இருக்கும். அதை வெளிப்படுத்தவும் தயங்க மாட்டார்கள்.

தந்தையர் தினமான இன்று அப்படிப்பட்ட ஒரு பாடலை நாம் பகிர்ந்து கொள்வோமா...

http://youtu.be/yXnbMxFpT7A

தந்தை மகள் இருவருக்கிடையையான தந்தை மகள் பாசப் பிணைப்பினை நடிகர் திலகம் சிவாஜி கணேசன், நதியா இவர்களிருவரும் ஜீவனுடன் சித்தரித்திருப்பார்கள். மறக்க முடியாத திரைக்காவியம் அன்புள்ள அப்பா.

vasudevan31355
15th June 2014, 01:10 PM
மேற்கண்ட எஸ்.பி.பி.அவர்கள் பேட்டியின் தொடர்ச்சியாக...

எஸ்.பி.பி.அவர்கள் பேட்டியில் தான் ஆரம்பத்தில் 'குழந்தை 'உள்ளம்' படத்தில் பாடியதாக கூறியுள்ளார்.

'முத்துச் சிப்பிக்குள்ளே ஒரு பூ வண்டு
குடி கொண்டதே இன்பத் தேனுண்டு'

என்பதுதான் அந்தப் பாடல். உடன் கண்ணியப் பாடகி பாடியிருப்பார். அற்புதமான பாலாவின் இளங்குரல்.

இப்போது அந்தப் பாடலை பேட்டியின் தொடர்ச்சியாகப் பார்க்கலாம்.


http://www.youtube.com/watch?v=bSNc_zIo6jY&feature=player_detailpage

mr_karthik
15th June 2014, 01:24 PM
பொதுவுடைமைக் கொள்கையை வலியுறுத்தும் 'சிவப்பு மல்லி' படத்தில் ஒரு அழகான டூயட். இன்னிசை இரட்டையர் சங்கர்-கணேஷ் இசையில், யேசுதாஸ்-சுசீலா (படத்தில் சந்திரசேகர்-சாந்திகிருஷ்ணா).

1981- ல் மெல்லிசை மன்னருக்கும், இசைஞானிக்கும் இடையில் தங்களை நிலை நிறுத்திக்கொள்ள வேண்டிய கட்டாயத்திலிருந்த இரட்டையர்களிடமிருந்து அருமையான பாடல்கள் வெளிவந்து மனதைக்கவர்ந்தன. அவற்றில் ஒன்று இது....,

ரெண்டுகன்னம் சந்தன கிண்ணம்
தொட்டுக்கொள்ள ஆசைகள் துள்ளும்
பூவை அள்ளி பூவை கையில் கொடுத்தபின்னும்
தொட்டு தந்த கையில் மனம் வீசுது இன்னும்

(கவிஞர் வைரமுத்துவுக்கு சாந்திகிருஷ்ணாவின் கன்னம் சந்தன கிண்ணமா?. அதுசரி, கவிதைக்கு பொய்யழகு. 'அண்ணியின்' உரல் இடையைப்பார்த்து 'இடையா இது இடையா அது இல்லாதது போல் இருக்குது' என்று பாடிய கவிஞரின் வழி வந்தவர்கள்தானே)

சரணங்களில் வைரமுத்துவின் முத்திரை...

இளம்பிறையே இளம்பிறையே வளர்ந்து விடாதே
இருளே இவளின் துணையே...

vasudevan31355
15th June 2014, 01:29 PM
எப்போது கேட்டாலும் சுவை தரும் பாடல்....

மந்திரப்புன்னகை மின்னிடும் மேனகை சந்தனப் பூங்கொடியோ
இந்திரன் மாளிகை சுந்தரத் தேவதை சிந்திடும் பைங்கிளியோ
அவள்தானோ இவள்தானோ இளமானோ இசைத்தேனோ
வண்ணமொழி வார்த்தை திருவாசகம்தானோ

அதிலும் எனக்கு மிகவும் பிடித்த சரணம்.....

மாமதுரை வாழ்ந்திருக்கும் அங்கையற்கண்ணி
தாமரையில் வீற்றிருக்கும் மங்கலச்செல்வி
கையிரண்டில் இசைவீணை வைத்திருக்கும் கலைவாணி
மங்கையிவள் யாரோ அந்த மூவரும்தானோ


http://www.youtube.com/watch?v=u_zAXeM1COU&feature=player_detailpage

vasudevan31355
15th June 2014, 01:32 PM
பொதுவுடைமைக் கொள்கையை வலியுறுத்தும் 'சிவப்பு மல்லி' படத்தில் ஒரு அழகான டூயட். இன்னிசை இரட்டையர் சங்கர்-கணேஷ் இசையில், யேசுதாஸ்-சுசீலா (படத்தில் சந்திரசேகர்-சாந்திகிருஷ்ணா).

1981- ல் மெல்லிசை மன்னருக்கும், இசைஞானிக்கும் இடையில் தங்களை நிலை நிறுத்திக்கொள்ள வேண்டிய கட்டாயத்திலிருந்த இரட்டையர்களிடமிருந்து அருமையான பாடல்கள் வெளிவந்து மனதைக்கவர்ந்தன. அவற்றில் ஒன்று இது....,

ரெண்டுகன்னம் சந்தன கிண்ணம்
தொட்டுக்கொள்ள ஆசைகள் துள்ளும்
பூவை அள்ளி பூவை கையில் கொடுத்தபின்னும்
தொட்டு தந்த கையில் மனம் வீசுது இன்னும்

சரணங்களில் வைரமுத்துவின் முத்திரை...

இளம்பிறையே இளம்பிறையே வளர்ந்து விடாதே
இருளே இவளின் துணையே...


http://www.youtube.com/watch?v=5MksKJmFC2w&feature=player_detailpage

mr_karthik
15th June 2014, 02:41 PM
டியர் வாசு,

எஸ்.பி.பி.யின் பேட்டிப்பக்கங்களையும்,மணல் கயிறு, சிவப்பு மல்லி படப்பாடல்களின் வீடியோக்களையும் பதிவிட்டமைக்கு மிக்க நன்றி. ஆனந்த விகடன் பேட்டியை ஆனந்தமாக படித்து மகிழ்ந்தோம்.

Richardsof
15th June 2014, 02:50 PM
காலத்தால் அழியாத டி.எம்.எஸ். அவர்களின் பாடல்கள் சில இதோ...

01. நான் ஆணையிட்டால்... (எங்க வீட்டு பிள்ளை)

02. ஆண்டவன் படச்சான்... (நிச்சய தாம்பூலம்)

03. ஆறு மனமே ஆறு... (ஆண்டவன் கட்டளை)

04. அச்சம் என்பது மட*மையடா... (மன்னாதி மன்னன்)

05. அதோ அந்த பறவை போல... (ஆயிரத்தில் ஒருவன்)

06. அமைதியான நதியினிலே... (ஆண்டன் கட்டளை)

07. அன்பே வா அன்பே வா... (அன்பே வா)

08. அன்று வந்ததும் இதே நிலா... (பெரிய இடத்து பெண்)

09. அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே... (உயர்ந்த மனிதன்)

10. அழகிய தமிழ் மகள்... (ரிக்ஷாக்காரன்)

11. சின்ன பயளே சின்ன பயளே... (அரசிளங்குமரி)

12. தெய்*வமே தெய்வமே... (தெய்வமகன்)

13. ஏன் பிறந்தாய் மகனே... (பாகப்பிரிவினை)

14. என்னதான் நடக்கும் நடக்கட்டுமே... (பணத்தோட்டம்)

15. எங்கே நிம்மதி... (புதிய பறவை)

16. இந்த புன்னகை என்ன விலை... (தெய்வத்தாய்)

17. இரண்டு மனம் வேண்டும்... (வசந்த மாளிகை)

18. இரவினில் ஆட்டம்... (நவராத்திரி)

19. காது கொடுத்து கேட்டேன்... (காவல்க்காரன்)

20. கடவுள் மனிதனாக பிறக்க வேண்டும்... (வானம்பாடி)

21. கடவுள் ஏன் கல்லானார்... என் அண்ணன்)

22. கண் போன போக்கிலே... (பணம் படைத்தவன்)

23. கண்ணை நம்பாதே... (நினைத்ததை முடிப்பவன்)

24. காகிதத்தில் கப்பல் செய்து... (அன்புக்கரங்கள்)

25. மலர்களை போல் தங்கை... (பாசமலர்)

26. மலர்ந்து மலராத... (பாசமலர்)

27. நாளை நமதே... (நாளை நமதே)

28. நான் பேச நினைப்பதெல்லாம்... (பாலும் பழமும்)

29. நல்லவன் எனக்கு நானே நல்லவன்... (படித்தால் மட்டும் போதுமா)

30. நிலவை பார்த்து வானம் சொன்னது... (சவாலே சமாளி)

31. நிலவு ஒரு (உலகம் சுற்றும் வாலிபன்)

32. ஒளிமயமான எதிர்காலம்... (பச்சை விளக்கு)

33. ஓடும் மேங்களே... (ஆயிரத்தில் ஒருவன்)

34. ஒரு பெண்ணை பார்த்து... (தெய்வத்தாய்)

35. பால் இருக்கு பழம் இருக்கு... (பாவமன்னிப்பு)

36. பாரப்பா பழனியப்பா... (பெரியிடத்து பெண்)

37. பார் மகளே பார்... (பார் மகளே பார்)

38. பட்டிக்காடா பட்டண*மா... (மாட்டுக்கார வேலன்)

39. பேசுவது கிளியா... (பணத்தோட்டம்)

40. பொன் எழில் பூத்தது புது வானில்... (கலங்கரை விளக்கம் }


41. போனால் போகட்டும் போடா... (பாலும் பழமும்)

42. பூ மழை தூவி... (நினைத்ததை முடிப்பவன்)

43. போயும் போயும் மனிதனுக்கு... (தாயை காத்த தனயன்)

44. ராஜாவின் பார்வை... (அன்பே வா)

45. சட்டி சுட்டதாடா... (ஆலயமணி)

46. சிலர் சிரிப்பார்... (பாவ மன்னிப்பு)

47. சொல்லாதே யாரும் கேட்டால்... (சொர்க்கம்)

48. சோதனை மேல் சோதனை... (தங்கப்பதக்கம்)

49. தாய் மேல் ஆணை... (நான் ஆணையிட்டால்)

50. தம்பிக்கு ஒரு பாட்டு... (நான் ஏன் பிறந்தேன்)

51. கரைமேல் பிறக்க வைத்தாய்... (படகோட்டி)

52. தூங்காதே தம்பி தூங்காதே... (நாடோடி மன்னன்)

53. உலகம் பிறந்தது எனக்காக... (பாசம்)

54. உழைக்கும் கைகளே... (தனிப்பிறவி)

55. உன் கண்ணில் நீர் வழிந்தால்... (வியட்நாம் வீடு)

56. உன்னை பார்த்து இந்த உலகம்... (அடிமைப்பெண்)

57. வாழ்ந்து பார்க்க வேண்டும்... (சாந்தி)

58. யாரது யாரது தங்கமா... (என் கடமை)

59. எத்தனை காலம் தான் ஏமாற்றுவார்... (மலைக்கள்ளன்)

60. *ஹலோ ஹலோ சுகமா... (என் கடமை)

61. அவள் பறந்து போனாளே... (பார் மகளே பார்)

62. செல்லக்கிளிகளாம்... (எங்க மாமா)

63. தேவனே என்னை பாருங்கள்... (ஞான ஒளி)

64. ஐம்பதிலும் ஆசை வரும்... (ரிஷிமூலம்)

65. அண்ணன் என்னடா... (பழனி)

66. அவள் பறந்து போனாளே ... (பார் மகளே பார்)

67. ஒரு பக்கம் பாக்குற... (மாட்டுக்கார வேலன்)

68. தர்மம் தலைகாக்கும்... (தர்மம் தலைகாக்கும்)

69. என்னை யாரென்று... (பாலும் பழமும்)

70. இப்படித்தான் இருக்க வேண்டும்.. (விவசாயி)

71. கடலோரம் வாங்கிய காற்று... (ரிக்ஷாக்காரன்)

72. கடவுள் செய்த... (நாடோடி)

73. காதல் ராஜ்ஜியம்... (மன்னவன் வந்தான்டி)

74. கட்டொடு குழலோடு ஆட... (பெரிய இடத்து பெண்)

75. காவேரி கரையிருக்கு... (தாயை காத்த தனயன்)

76. அவளுக்கு என்ன... (சர்வர் சுந்தரம்)

77. கேளம்மா சின்னம்மா... (கன்னித்தாய்)

78. குறுக்கு வழியில்... (மகாதேவி)

79. .மாணிக்க தேரில் . (தேடிவந்த மாப்பிள்ளை)

80. மாதவி பொன்... (இரு மலர்கள்)

81. மன்னிக்க வேண்டுகிறேன்... (இரு மலர்கள்)

82. முத்தை திரு... (அருணகிரிநாதர்)

83. நாளொரு மேடை...ஆசைமுகம்

84. நான் மலரோடு தனியாக... (இரு வல்லவர்கள்)

85. நான் பார்த்ததிலே அவள் ஒருத்தியைத்தான்... (அன்பே வா)

86. நேரமிது நேரமிது... (ரிஷிமூலம்)

87. நிலவை பார்த்து வானம் சொன்னது (சவாலே சமாளி)

88. ஒரே பாடல்... (எங்கிருந்தோ வந்தாள் )

89. ஒரு தாய்... (பணக்கார குடும்பம்)

90. ஒரு தரம்... (சுமதி என் சுந்தரி)

91. பாட்டுக்கு பாட்டெடுத்து... (படகோட்டி)

92. பாட்டும் நானே பாவமும் நானே... (திருவிளையாடல்)

93. படைத்தானே... (நிச்சய தாம்பூலம்)

94. பாலக்காட்டு பக்கத்திலே... (வியட்நாம் வீடு)

95. பொன்னை விரும்பும்... (ஆலயமணி)

96. செந்தமிழ் பாடும்... (வைர நெஞ்சம்)

97. சிவப்புக் கல்... (எல்லோரும் நல்லவர்களே)

98. ஒரு வாலுமில்லே நாலு காலுமில்லே ... (இதய வீணை)

99. திருடாதே பாப்பா திருடாதே...

100. யாருக்காக யாருக்காக... (வசந்தமாளிகை)

Murali Srinivas
15th June 2014, 02:56 PM
வாசு,

என்னை அன்புடன் வரவேற்றதுடன் மட்டுமல்லாமல் ஒரு அருமையான பாடலையும் அதுவும் எனக்கு பிடித்த பாடலை வழங்கியதற்கு மிக்க நன்றி. என் நினைவு சரியாக இருக்குமென்றால் இந்த படம் 1977 ஏப்ரல் இறுதியில் வெளியானது. அதே நேரத்தில்தான் லட்சுமி கதாநாயகியாக நடித்து அவருக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது பெற்று தந்த நமது பீம்பாய் இயக்கிய ஜெயகாந்தனின் சில நேரங்களில் சில மனிதர்களும் வெளியானது. லட்சுமியின் நடிப்பை மிகவும் விரும்பக்கூடிய நானும் என் நண்பனும் முதல் வாரத்திலேயே இரண்டு படங்களையும் பார்த்தோம். பட்டப்படிப்பு சேர்வதற்கு முன் இருந்த இரண்டு மாத இடைவெளி காலம் அது.

இனி தூண்டில் மீன் படத்திற்கு வருகிறேன். லட்சுமியும் மோகனும் (இன்றைய மோகன் சர்மா) இணைந்து நடித்த படம். அவர்கள் வாழ்க்கையிலும் ஒன்று சேர்ந்திருந்த நேரம். பொதுவாகவே thriller, murder,mystery போன்ற துப்பறியும் வகை படங்களை எனக்கு மிகவும் பிடிக்கும். அது போன்ற ஒரு கதையம்சம் கொண்ட தூண்டில் மீன் என்னை மிகவும் கவர்ந்தது. சட்டத்திற்கு புறம்பான ஒரு காரியத்தை செய்து விட்டோம் என்று எண்ணும் நாயகி தன இணையுடன் சேர்ந்து பாடும் போது அந்த சூழல் பாடல் வரிகளில் பிரதிபலிப்பது போல் அமைந்திருக்கும் பாடல் இது.

ஸ்வர்ணா, நீங்கள் குறிப்பிட்டது போல் ஒரு அருமையான பாடகி. ஆனால் ஏனோ கணவர் இசையமைத்த படங்களில் மட்டுமே பாடினார். ஒரு சில நாட்களுக்கு முன் ஜானகி சபதம் படத்தில் அவர் பாடிய பாடல் இங்கே ராகவேந்தர் சார் பதிவிட்ட்ருந்தார். ஸ்வர்ணா பாடிய பாடல்களில் எனக்கு பிடித்த இன்னும் ஒரு சில பாடல்கள். தேன் சிந்துதே வானம் படத்தில் இடம் பெற்ற எழுதாத பாடல் ஒன்று. மற்றொன்று நல்ல பெண்மணி படத்தில் தாஸேட்டனுடன் இணைந்து பாடிய இனங்களிலே என்ன இனம் பெண்ணினம் பாடல். புலமை பித்தனின் அருமையான வரிகள் அடங்கிய இந்தப் பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும். அதிலும்

தாங்காது கண்ணா என்

தளிர் மேனி கோகிலம்

தூங்காத கண்ணில் உன்

துணை தேடும் மீனினம்.

என்ற வரிகளில் அந்த சூழலுக்கே உரிய தாபத்தையும் ஆசையையும் நாம் உணரலாம். என்ன ஒன்று கார்த்திக் மற்றொரு பாடலுக்கு குறிப்பிட்டது போல் கொடியிடை சிறு நூலினம் என்ற வரி ஸ்ரீவித்யாவிற்கு எனும் போது சிரிப்பு வரும். இதே தூண்டில் மீன் படத்தில் எங்கள் இசையரசி எஸ்பிபியுடன் இணைந்து பாடிய வாழ்வில் சௌபாக்கியம் வந்தது என்ற பாடலும் என் மனதை கவர்ந்த பாடல். இதையெல்லாம் நினைவு கூற வாய்ப்பளித்ததற்கு மீண்டும் என் நன்றி.

கார்த்திக் என்னை வரவேற்ற கையோடு சிவப்பு மல்லி பாடலைப் பற்றி குறிப்பிட அதை நீங்கள் உடனே வீடியோ வடிவத்தில் அளித்து விட்டீர்கள். இதுவும் எனக்கு மிக மிக பிடித்த பாடல். 1980 நவம்பரில் திரையுலகில் வைரமுத்து அறிமுகமானார். ஆனால் அதற்கு முன்பே 1980 ஜூன் மாதம் எழுத்தாளர் இந்துமதி அவர்களை ஆசிரியராக கொண்டு அஸ்வினி என்ற மாதமிருமுறை இதழ் ஒன்று வெளி வந்துக் கொண்டிருந்தது. [அதிக காலம் அந்த இதழ் வெளிவரவில்லை. நின்று போய் விட்டது]. அந்த இதழில் மழைக்கால பூக்கள் என்ற தலைப்பில் வைரமுத்து எழுதிய கவிதை ஒன்று வெளிவந்திருந்தது. அதைப் படித்ததிலிருந்து நான் clean bowled. [இந்த கவிதை பின்னாட்களில் வைரமுத்துவின் கவிதை தொகுப்பான இன்னொரு தேசிய கீதம் புத்தகத்தில் இடம் பெற்றது]. அதிலிருந்து வைரமுத்து எழுதிய எந்தப் பாடலையும் அலசி ஆராய்வேன். அதற்கேற்றார் போல் அவரும் தீனீ போட்டிருப்பார். இந்த ரெண்டு கன்னம் சந்தன கிண்ணம் பாடலையே எடுத்துக் கொள்வோமே.

கல் தோன்றி மண் தோன்றா காலத்திலேயே முன் தோன்றிய நமது தமிழ் மொழியில் அந்த காலம் முதல் மாறாமல் சொல்லப்படும் ஒரு உவமை உண்டு. ஆணை வண்டாகவும் பெண்ணை மலராகவும் வர்ணிக்கும் உவமைதான் அது. அதை கூட வித்தியாசமான கண்ணோட்டத்தில் ரசித்திருப்பார் வைரமுத்து. இறுதி சரணத்தில் அவர் சொல்லுவார்

தாகம் எடுக்கையிலே மழை அடிக்காதோ

வானம் இறங்கி வந்து குடை பிடிக்காதோ

நனைந்த மலர்களுக்கு குளிர் எடுக்காதோ

வண்டுகள் பறந்து வந்து தலை துவட்டாதோ!

தேன் மழையில் நனைந்து குளிரில் நடுங்கும் மலர்களுக்கு அந்த குளிர் போக்க வண்டுகள் வந்து தலை துவட்டுகிறதாம்! என்ன கற்பனை! 33 வருடங்களாக ரசித்துக் கொண்டிருக்கும் அந்த வரிகளை மீண்டும் இன்று ரசிக்க வைத்ததற்கு கார்த்திக்கும் உங்களுக்கும் நன்றி

மேலும் எழத ஆசைதான். ஆனால் நானே நிறைய எழுதி இடத்தை அடைத்துக் கொள்ள வேண்டாம் என நினைக்கிறேன். அந்த இடத்தில இரு பாடலை நீங்கள் கொடுக்கலாம். மற்றொன்று இன்று மாலை நமது NT FAnS அமைப்பின் சார்பாக ஆண்டவன் கட்டளை திரையிடப்டுகிறது. அது சம்பந்தமாக ராகவேந்தர் சார் ஒரு சில விஷயங்களை ரெடி செய்ய சொல்லியிருந்தார். இந்த திரியில் உட்கார்ந்ததில் நேரம் போனதே தெரியவில்லை.

மீண்டும் சந்திக்கிறேன்.

அன்புடன்

chinnakkannan
15th June 2014, 03:42 PM
வைரமுத்து ஒரு பேட்டியில் ரெண்டு கன்னம் சந்தனக் கிண்ணம் பாடலுக்கு முன் வேறொரு பாட்டு எழுதியதாக
முன்பு குறிப்பிட்டிருந்தார்..அது பிடிக்கவில்லை என்ப்தால் ரெ க எழுதினாராம்..ஆனால் அதே பாடலை
வேறொரு படத்தில் உபயோகப் படுத்தினாராம்..படம் கருடா செளக்கியமா..பாடல் மொட்டு விட்ட வாசனை மல்லி
வாங்கி் வந்தேன் ஆசையில் அள்ளி..

chinnakkannan
15th June 2014, 03:45 PM
மதுபாலா அந்தக் கால அழகுத் தாமரை..கிஷோர் குமாருக்கு மனைவியானவர்..இவரது சல்திகா நாம்காடி பார்த்திருக்கிறேன்.. சின்ன வயதிலேயே நோய்வாய்ப்பட்டு மரித்தவர்..

RAGHAVENDRA
15th June 2014, 04:21 PM
தமிழ்த்திரையுலக ஆரம்ப கால பாடலாசிரியர்கள்

கம்பதாசன்

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/tfmlyricists/Kambadasanfw_zpsa86f500a.jpg

1916ம் ஆண்டு செப்டம்பர் 15ம் தேதி – ஆம் அறிஞர் அண்ணா பிறந்த அதே செப்டம்பர் 15 தான் கம்பதாசனினி பிறந்த நாளும் கூட. திண்டிவனம் அருகே உலகாபுரத்தில் சுப்பராயர்-பாலம்மாள் தம்பதிக்கு மைந்தனாகப் பிறந்தார்.


“கம்பதாசன் எழுதும் நூல்கள் எனக்கு மகிழ்ச்சியை அளிக்கின்றன. அவை அவராலேயே இயற்றப் பெற்றவை. அவரின் நெஞ்சினின்று தங்கு தடையின்றி எழும் ஊற்று!
அவர் எந்த நூல்களையும் பார்த்து எழுதுவதில்லை. எதையும் மொழி பெயர்த்து புகழுக்கும் பணத்துக்கும் தம் பெயரால் வெளியிடுவதில்லை. தமிழ்நாடு நன்றி செலுத்த வேண்டும்” –

இவருடைய நூலான முதல் முத்தம் (1943) நூலுக்கு அளித்த முன்னுரையில் பாவேந்தர் பாரதிதாசனால் இவ்வாறு பாராட்டப் பெற்றவர் கம்பதாசன் என அறியப்பட்ட ராஜப்பா அவர்கள்.

பொதுவாழ்க்கையில் நாட்டம் கொண்ட கவிஞர் கம்பதாசன் அவர்கள் சோஷலிஸ்ட் இயக்கத்தில் இணைந்து டாக்டர் ராம் மனோகர் லோகியா, மகாகவி ஹரீந்திரநாத் சட்டோபாத்யாயா போன்றோருடன் பணியாற்றியவராவார்.

ஈரல் கோளாறு மற்றும் காசநோய்கள் இவருடைய உயிரை எடுத்துக் கொண்டன. 1973ம் ஆண்டு மே மாதம் 23ம் தேதி இவர் காலமானார்.

கம்பதாசன் மறைந்து 40 ஆண்டுகளானாலும் கூட அவருடைய பாடல்கள் இன்றும் மக்களால் மறக்கப் படாமல் இருப்பதே அவருடைய புலமைக்கும் திறமைக்கும் சான்றாகும்.

அவர் எழுதிய அனைத்துப் பாடல்களின் விவரம் முழுமையாக் கிடைக்கவில்லை என்றாலும் கூட கிடைத்தவரையில் பட்டியல் கீழே தரப்படுகிறது.

மங்கையர்க்கரசி – பார்த்தால் பசி தீரும்
இதயகீதம் – ஆசைக்கிளியை அழைத்து வாராய் தென்றலே
கண்ணின் மணிகள் – கண்டு கொண்டேன் நானே – டி.ஏ.மோதி, ஆர்.பாலசரஸ்வதி – இசை எஸ்.வி.வெங்கட்ராமன்
ஓடி விளையாடு பாப்பா – பாட்டு முன்னே மீட்டிய வீணை – பாடியவர் பி.பி.ஸ்ரீநிவாஸ்
மாமன் மகள் - ஆசை நிலா சென்றதே
பூங்கோதை – நான் ஏன் வரவேண்டும்
நன்நம்பிக்கை – சூரியனும் ஒரு தொழிலாளி – இசையமைத்து பாடியவர் எஸ்.வி.வெங்கட்ராமன்
தந்தை 1944 – நாமே முதலாளி நமக்கினி நாமே தொழிலாளி – இசை திவாகர்
பூம்பாவை – சின்ன வயதிலே கன்னித் தமிழிலே – பாடியவர் கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன்
பிரியசகி – கடவுளே காலம் மாறியதே

இவையன்றி, அவன், அக்பர்., பாட்டாளியின் வெற்றி போன்ற மொழி மாற்றப் படங்களின் பாடல்கள் கம்பதாசன் அவர்களின் எழுத்துக்களால் மிகவும் பிரபலமடைந்தன என்றால் மிகையில்லை.

கவிஞர் கம்பதாசன் அவர்கள் இயற்றிய பாடல்களில் இதயகீதம் திரைப்படத்தில் டி.ஆர்.மகாலிங்கம் பாடிய ஆசைக்கிளியை அழைத்து வாராய் தென்றலே என்ற இனிமையான பாடலைக் கேட்டு மகிழுங்கள்

http://www.inbaminge.com/t/i/Idhaya%20Geetham/

Russellcaj
15th June 2014, 05:18 PM
Mr. Vasudevan,

I appreciate your sincere and dedicated way to run this thread to reach the top. Yours and all hubbers posts about songs of middle 70s are wonderful.

Amazing memory power for you and Mr. Krishna about the songs and its situations in movies. Beautiful.

When you reply to Mr.Murali Srinivas, you have mentioned my name also which gives more happy and joy to me, but my contribution for this thread is nothing, except some enquiries about the songs.

I feel much happy to be a follwer of this thread and lucky to be my name in your good books.
Thank you sir.

stl.

Russellcaj
15th June 2014, 05:23 PM
Mr. Krishna
Mr. Esvee
Mr. Karthik
Mr. Raghavendar
Mr. Gopal

Good going. I am amazing about your knowledge about very rare songs, most of them I never heared. Rock.

stl.

vasudevan31355
15th June 2014, 05:56 PM
வினோத் சார்,

காலத்தால் அழியாத டி.எம்.எஸ். அவர்களின் சாகாவரம் பெற்ற பாடல்களின் லிஸ்ட்டை தங்கள் கடின உழைப்பின் மூலமும், அபார ஞாபக சக்தி மூலமும் தந்துள்ளீர்கள். நன்றி! நாம் இருவரும் அலைபேசியில் நிறைய பாடல்களை அலசியுள்ளோம். ஆனால் ராட்சஸி பற்றி மிக அதிகமாக. ஏனென்றால் தாங்களும் என்னைப் போல ஈஸ்வரி பைத்தியமே!

vasudevan31355
15th June 2014, 06:09 PM
முரளி சார்,

மிக்க நன்றி! எங்களது ஆசையைத் தீர்க்க இவ்வளவு விரைவாக வந்து, நாங்கள் சற்றும் எதிர்பாராவகையில் அபாரமான, தங்களுக்கே உரித்தான, விவரணங்கள் கொண்ட சுவாரஸ்யமான 'தூண்டில் மீன்' படத்தைப் பற்றியும், அதில் ஜொலிக்கும் சொர்ணா பாடலைப் பற்றியும் ஜோராகப் பதிவிட்டுள்ளீர்கள். ஞாயிற்றுக் கிழமைக்கு நன்றி!

நம் ஆண்டவனின் கட்டளையை செவி மடுக்கச் செல்லும் வேளையிலும் இந்தத் திரிக்கு நேரம் ஒதுக்கி நல்லதொரு பதிவைத் தந்து பெருமைப் படுத்தியதற்கு என் மனமார்ந்த நன்றி!

அதே போல ரெண்டு கன்னம் சந்தனக் கிண்ணம் பாடல் பற்றிய விவரமும், வைரமுத்துவை நீங்கள் சிலாகித்ததும் நன்றாக இருந்தது.

நீங்கள் இதுபோல் நிறைய எழுதி பெரும்பான்மையான உங்களின் எழுத்துக்கள் இத்திரியின் இடங்களை அடைக்க வேண்டும் என்பது என் ஆவல் மட்டுமல்ல எல்லோருடைய ஆவலாகவும் இருக்கும்.

பாடல்கள் மட்டும் தராமல் பாடலைப் பற்றியும், அதுசார்ந்த சம்பவக் கோர்வைகள் பற்றியும், தங்கள் தங்கள் நண்பர்களுடன் அதில் லயித்த கதையும் படு சுவாரஸ்யமாய் இருக்கின்றன.

தொடருங்கள் எங்கள் இன்பத்திற்காகவே!

vasudevan31355
15th June 2014, 06:13 PM
Mr. Vasudevan,

I appreciate your sincere and dedicated way to run this thread to reach the top. Yours and all hubbers posts about songs of middle 70s are wonderful.

Amazing memory power for you and Mr. Krishna about the songs and its situations in movies. Beautiful.

When you reply to Mr.Murali Srinivas, you have mentioned my name also which gives more happy and joy to me, but my contribution for this thread is nothing, except some enquiries about the songs.

I feel much happy to be a follwer of this thread and lucky to be my name in your good books.
Thank you sir.

stl.

நன்றி ஸ்டெல்லா அவர்களே!

தாங்கள் திரியில் அதிகம் எழுதாமல் இருக்கலாம். ஆனால் ஆர்வத்துடன் பங்கு கொள்வது, விடாமல் படிப்பது என்று தங்கள் பணியைச் செவ்வனே சிறப்பாகச் செய்து வருகிறீர்கள்.

தொடர்ந்து தங்கள் ஆதரவை நாடும்

அன்புச் சகோதரன்
வாசுதேவன்.

vasudevan31355
15th June 2014, 06:23 PM
ராகவேந்திரன் சார்,

தமிழ்த்திரையுலக ஆரம்ப கால பாடலாசிரியர்கள் பற்றிய தங்கள் தொடர் களை கட்டுகிறது.

ஆரம்பமே சுவையோ சுவை. கிடைத்தற்கரிய தகவல்களைத் தொகுத்துள்ளீர்கள்.

அதுவும் 'பூங்கோதை' திரைப்படத்தில்

http://www.inbaminge.com/t/p/Poongothai/folder.jpg

'நான் ஏன் வர வேண்டும் ஏதுக்காகவோ யாரைக் காண்பதற்கோ'

என்று ஜிக்கியின் குரலில் அட்டகாசமாய் ஒலிக்கும் பாடலை எழுதியது கம்பதாசன் எனும் போது இன்னும் ஆர்வம் மேலிடுகிறது. D.b. .ராமச்சந்திரன் ஜிக்கியுடன் சேர்ந்து பாடியிருப்பார் என்று நினைவு.

'பாட்டாளியின் வெற்றி' பற்றி சொல்லவே வேண்டாம். அதை இன்னொரு சந்தர்ப்பத்தில் அலசலாம்.

chinnakkannan
15th June 2014, 07:01 PM
கம்ப தாசன் பற்றிக் கேள்விப் பட்டதில்லை.. நன்றி ராகவேந்திரர் சார்..

Richardsof
15th June 2014, 07:57 PM
சரவண பொய்கையில் நீராடி
துணை தந்தருள் என்றேன் முருகனிடம்
சரவண பொய்கையில் நீராடி
துணை தந்தருள் என்றேன் முருகனிடம்
இரு கரம் நீட்டி வரம் கேட்டேன்
அந்த மன்னவன் இன்னருள் மலர் தந்தான்
சரவண பொய்கையில் நீராடி
துணை தந்தருள் என்றேன் முருகனிடம்

அவனிடம் சொன்னேன் என் அஞ்சுதலை
அந்த அன்னலே தந்து வைத்தான் ஆறுதலை
இவ்விடம் இவர் தந்த இன்ப நிலை
கண்டு என்னிடம் நான் கண்டேன் மாறுதலை
ஓ.ஓ……..ஓ.ஓ………ஓ.ஓ…

சரவண பொய்கையில் நீராடி
துணை தந்தருள் என்றேன் முருகனிடம்

நல்லவர் என்றும் நல்லவரே
உள்ளம் உள்ளவர் யாவரும் உள்ளவரே
நல்லவர் என்றும் நல்லவரே
உள்ளம் உள்ளவர் யாவரும் உள்ளவரே
நல்ல இடம் நான் தேடி வந்தேன்
அந்த நாயகன் என்னுடன் கூட வந்தான்

சரவண பொய்கையில் நீராடி
துணை தந்தருள் என்றேன் முருகனிடம்
இரு கரம் நீட்டி வரம் கேட்டேன்
அந்த மன்னவன் இன்னருள் மலர் தந்தான்
சரவண பொய்கையில் நீராடி
துணை தந்தருள் என்றேன் முருகனிடம்

Richardsof
15th June 2014, 08:12 PM
வாசு சார்

இசை அரக்கியின் அட்டகாசமான மயக்கும் குரலில் இந்த பாடல் நாம் கேட்காத -பார்க்காத நாளே இல்லை என்று
சொல்லலாம் .அந்த அளவிற்கு பாடலில் ஈஸ்வரியின் குரலும் , மெல்லிசை மன்னரின் பிரமாண்ட இசையும்
விருந்தோ விருந்து .
http://youtu.be/5qTRvFeMqdo

Gopal.s
15th June 2014, 09:12 PM
வினோத் சார்,

காலத்தால் அழியாத டி.எம்.எஸ். அவர்களின் சாகாவரம் பெற்ற பாடல்களின் லிஸ்ட்டை தங்கள் கடின உழைப்பின் மூலமும், அபார ஞாபக சக்தி மூலமும் தந்துள்ளீர்கள். நன்றி! நாம் இருவரும் அலைபேசியில் நிறைய பாடல்களை அலசியுள்ளோம். ஆனால் ராட்சஸி பற்றி மிக அதிகமாக. ஏனென்றால் தாங்களும் என்னைப் போல ஈஸ்வரி பைத்தியமே!
இந்த கிண்டல்தானே வேண்டாங்கிறது?குழந்தை மனம் கொண்ட நண்பர்,குழந்தைகளுக்கும் கூட தெரிந்த பாடல்களை லிஸ்ட் போட்டதால் ,கடின உழைப்பு(ஞாபக சக்தி வேறு ) அது இது என்று.... பாவம் ,அப்பாவி ,வினோத்,இதை நம்பி நண்பர்களுக்கு டின்னெர் கொடுத்து கொண்டாடி களிக்கிறார்.

Richardsof
16th June 2014, 05:44 AM
மகா கவி ''காளி '' ''தாஸ் '' அருள் பெற்ற நண்பர் கோபாலரே

உங்கள் இசை ஞானம் உண்மையிலே பாராட்டுக்குரியது . இதுவரை கேள்வி படாத ராகங்கள் பற்றிய செய்திகள் வியப்பை அளிக்கிறது .நீங்களும் ஒரு விதத்தில் சகல கலா வல்லவர் என்பது புரிகிறது .பல ராகங்கள் பற்றிய பெயர்கள் -வட மொழியில் இருப்பதால் புரிந்து கொள்வதில் சிக்கல் உள்ளது .குழந்தைகளுக்கு புரியாது .
நீங்கள் தரும் குறிப்புகளில் முடிந்த அளவிற்கு எல்லோரும் புரிந்து கொள்ளும் விதத்தில் தமிழில் பதிவிடவும் .

Gopal.s
16th June 2014, 06:01 AM
கவலையே படாதீர்கள். உங்களுக்கு நன்கு புரிந்த,பிடித்த மலையாளத்திலேயே வேண்டுமானாலும் எழுதி விடுகிறேன்.எல்லாம் காளி தாஸ்(ஓய்வு பெற்ற)அருள்!!!

vasudevan31355
16th June 2014, 08:11 AM
இன்றைய ஸ்பெஷல் (5)

மிக மிக அரிய பாடல்

1973 -ல் வெளிவந்த, தாயகம் பிக்சர்ஸ் தயாரித்த 'வள்ளி தெய்வானை' படத்தின் மிக மிக அபூர்வ பாடல். அபூர்வ பாடகர்கள் இப்பாடலைப் பாடியுள்ளார்கள். தனசேகர், மல்லிகா என்ற பாடகர்கள்தான் அவர்கள்.

http://i1.ytimg.com/vi/qQTPVO8N3Bs/hqdefault.jpg

'மலர்களின் ராஜா
அழகிய ரோஜா'

என்று தொடங்கும் மிக அழகிய பாடல்.]

http://i1.ytimg.com/vi/jev64yvxsRA/hqdefault.jpg

மலர்களின் ராஜா
அழகிய ரோஜா
இளமங்கை வாழ்வின்
தங்கராஜா ராஜா ராஜா மகராஜா

காதலின் ராணி
கலைதரும் வாணி
என் இதய வானில்
இன்ப ராணி ராணி ராணி மகராணி

மலர்களின் ராஜா
அழகிய ரோஜா
இளமங்கை வாழ்வின்
தங்கராஜா ராஜா ராஜா மகராஜா

ஊரினில் உறவைத் தேடிடும் நினைவு
பருவத் தேரினில் ஆடும் தெய்வத்தின் கனவு

ஆசையின் பாசம்
பேசிடும் உரிமை
தன்மானத்தில் விளையும்
உலகினில் பெருமை

பூங்கொடி முகத்தில் புன்னகை வெள்ளம்
அமுதத் தமிழிசை பாடும் கவிதைகள் சொல்லும்

தலைமுறை புகழின் குலம் நலம் காப்போம்
ஓராயிரம் காலத்து பயிர்வளம் சேர்ப்போம்.

பாரத வீரர் மார்பினில் இணையும் (தேசிய நடிகர் சசிகுமாருக்கு புகழ்க் கிரீடம்)
பாவையின் மனமே கனி போல் கனியும்
வேதங்கள் ஓதி வளர்த்திடும்
பேதம் அதை வென்றிட வேண்டும் தேசிய கீதம்

மலர்களின் ராஜா
அழகிய ரோஜா

என் இதய வானில்
இன்ப ராணி ராணி ராணி மகராணி

லா ல லா லாலா....லா ல லா லாலா

கேட்க கேட்க அவ்வளவு இனிமை.

மல்லிகாவின் மந்திரக் குரல். (அதுவும் 'பாரத வீரர் மார்பினில் இணையும்' எனும் போது ஒரு ஹை பிட்ச் தூக்குவார் பாருங்கள்! வார்ரே வா!)

சற்றே நடுங்கும் குரலில் எம்.எல்.ஸ்ரீகாந்தை நினைவு படுத்தும் தனசேகரன்.

என்.எஸ்.தியாகாராஜன் என்பவர் இப்படத்தின் இசையமைப்பாளர்.

இப்பாடலை வீடியோவில் அப்லோட் செய்த TFM Lover அவர்களுக்கு மிக்க நன்றி!

இப்பாடலுக்கு youtube ல் comment பட்டியலைப் பார்க்கும் போது ஒரு இன்ப ஆச்சர்யம்.

இப்பாடலுக்கு இசை அமைத்திருந்த என்.எஸ்.தியாகராஜன் அவர்கள் தன் கருத்தை இங்கு பதிவு செய்து TFM Lover அவர்களுக்கு நன்றி தெரிவித்திருந்த போது என் நெஞ்சு நெகிழ்ந்தது உண்மை.

(I am the music director N.STheyagarajan of this song and was looking for it.Thanks a lot for uploading TFML!)

அதுவும் பாடலின் ஆரம்ப இசையும், இடையிசையும் அட்டகாசமான அட்டகாசம். இப்படிப்பட்ட திறமைசாலிகள் எல்லாம் எங்கு போனார்கள்?

அதுவும் மல்லிகா 'மலர்களின் ராஜா' என்று கொஞ்சுவதும் தொடர்ந்து
அழகிலே 'ர்ர்ர்ர்ரோஜா'... என்று ரோஜாவுக்கு அழுத்தம் தந்து பாடுவதும் நம்மை வியக்க வைத்து விடும்.

தேசிய நடிகர் சசிகுமாரும், குமாரி பானுமதியும் பாடும் டூயட் பாடல் இது. நான் கூட இப்பாடலைப் பார்ப்பதற்கு முன் பயந்தேன் அருமையான இப்பாடலை எப்படிப் படமாக்கியிருப்பார்களோ என்று. நல்லவேளையாக பாடலைக் கெடுக்காமல் எடுத்திருப்பார்கள். ]

'அகத்தியர்' திரைப்படத்தில் சிவக்குமாருடன் பானுமதி.

http://www.thehindu.com/multimedia/dynamic/01439/26frBanuma_thi_1_j_1439124g.jpg

எம்.பானுமதி நடிகர் திலகம் நாடகக் குழுவில் பெரும் அங்கம் வகித்தவர். நிறைய படங்களிலும் நடித்துள்ளார். கோபால் உச்சி குளிர்ந்து மகிழ்வாரே 'காதல் ஜோதி' படத்தில் 'ஓம் மேல கொண்ட ஆச' ன்னு. அந்தப் படத்தில் விதவையான இளம்பெண்ணாக (!) பானுமதி நடித்திருப்பார். சற்று முற்றிய முகம் இவருக்கு. இதனால் இளமை மிஸ்ஸிங். 'வியட்நாம் வீடு' படத்தில் நாகேஷுடன் ஜோடியாக 'மை லேடி... கட் பாடி... நீயே எந்தன் ஜோடி' பாடலுக்கு ஆடியிருப்பார். 'நீலகிரி எக்ஸ்பிரஸ்' படத்தில் சூலமங்கலம் சகோதரிகள் பாடும் புகழ் பெற்ற பாடலான 'திருத்தணி முருகா... தென்னவர் தலைவா!' பாடலுக்கு நாட்டியம் சிறப்பாக ஆடியிருப்பார் பானுமதி. நிறைய தொலக்காட்சி நாடகங்களில் நடித்துள்ளார்.

காதலர்கள் டூயட்டிலேயே நமது தேசியக் கொடிக்கு சல்யூட் அடித்து அஞ்சலி செலுத்துவது அற்புதம். இப்போது படங்களில் தேசியக் கொடியை யார் காட்டுகிறார்கள்? டாஸ்மாக் கடைகளைத் தான் காட்டுகிறார்கள். ]

பல பேர் இப்பாடலைக் கேட்டிருக்க வாய்ப்பில்லை. கேட்டிருந்தாலும் மறந்திருக்கக்கூடும். இப்போது கேளுங்கள். ஜென்மத்திற்கும் மறக்க முடியாது.]


http://www.youtube.com/watch?v=qQTPVO8N3Bs&feature=player_detailpage

இப்படத்தில் ரவிச்சந்திரன் பிரமிளா இணை. (பூத்திருந்து காத்திருந்தேன் நிலமகள் போலே) திரைக்கதை இயக்கம் தில்லை ராகவன்.

gkrishna
16th June 2014, 11:36 AM
சனிகிழமை சாயங்காலம் எல்லோர்யம் "வா இந்த பக்கம்" என்று சொல்லிவிட்டு போனேன்
ஒரே நாள் தான் 5 பக்கம் பறந்து விட்டது
ஆனால் அவ்வளுவம் பக்கா இன்போர்மடிவே
நேற்று ஆண்டவன் கட்டளையில் முரளி சார்/ ராகவேந்தர் சார் /பார்த்த சாரதி சார் எல்லோர்யம் பார்த்தேன் நம்ம தலை வாசு பற்றிதான் discussion தலையடைய மண்டையை உருட்டி எடுத்தாச்சு
வாசு சார்
முரளி எழுதிய சொர்ணாவின் தூண்டில் மீன் பாடல் பற்றி படித்த போது 1999 கால கட்டத்தில் அவர் சினிமா எக்ஸ்பிரஸ் மகசின்இல் தன கணவர் குமார் பற்றி பகிர்ந்து கொண்டது நினைவிற்கு வந்தது
இப்போது us இல் இருபபதஆக சொல்லி இருந்தார்
Cinema Express article on V.Kumar – Part 1
Cinema Express article on V.Kumar – Part 2
Cinema Express article on V.Kumar – Part 3
விக்கியில் பதிந்து இருந்தார்கள்
நீங்கள் எல்லோரும் படித்து இருப்பீர்கள் என்று நினிக்கிறேன்

gkrishna
16th June 2014, 11:51 AM
vasu sir
வள்ளி தேவயானை பாடல் சூப்பர்
திருநெல்வேலியில் 1976 கால கட்டத்தில் அரசு பொருட்காட்சியில் திரு தில்லை ராகவன் அவர்கள் குழிவினெர் நாடகம் நடத்தும் போது இந்த பாடல் தான் டைட்டில் மியூசிக் ஆக வரும்
"மலர்களில் ராஜா அழகிய ரோஜா என் இதயவானில் ராஜா ராஜா ராஜா "
தனசேகர் பற்றி சொல்லும் போது M L ஸ்ரீகாந்த் பற்றி சொல்லி இருந்தீர்கள்
அவர் வாணியுடன் இணைந்து பாடிய ஒரு பாடல்
"நினைப்பது நிறேவேறும் நீ இருந்தால் என்னோடு
நடப்பது நலமாகும் நான் இருந்தால் உன்னோடு "
இந்த பாடலுக்கு இசையும் ஸ்ரீகாந்த் தான் என்று நினவு
இந்த ஸ்ரீகாந்த் ஹம்மிங் கொடுத்த பாடல் ஒன்று உத்தரவின்றே உள்ளே வா படத்தில் "காதல் காதல் என்று பேச கண்ணன் வந்தானோ
காலம் பார்த்து ஜாலம் செய்ய மன்னன் வந்தொனோ " சுசீலா உடன் ஒரு மெலடி விச்சு அகதாலம் flute ,தபேல கிடார் என்று கலந்து கட்டி இருப்பார்
அதிலும் "மங்கல் வாத்யம் பொங்கிடும் வேளையில் மன்ன வருக மாலை தருக " என்று சுசில் பாடி முடித்தவுடன் "ஆ ஆ ஆ ஹ " என்று ஸ்ரீகாந்த் முடிப்பார்
கொள்ளை அழுகு ரவி (சைடு கிருத சு எ சு type ஷர்ட் ப்ளாக் சூ )
இரவின் மடியில் கேட்க வேண்டிய ஒரு பாடல்
இந்த பாடல் தர்மவதி மதுவந்தி என்ற ராகத்தின் அடிபடையில் அமைந்த பாடல் என்று கேள்விப்பட்டு இருக்கிறேன்
நம் hubin சுப்புடு தான் கூற வேண்டும்
இதே தர்மவதி மதுவந்தியில் நிறைய பாடல்கள் அமைந்து உள்ளன
ஹலோ மி டியர் ரஆங் நம்பர் (மன்மத லீலை )
என் உள்ளில் எங்கோ எங்கும் ஏக்கம் ரோசாப்பூ ரவிக்கைக்காரி
ததிதோம் தைதகள் சொன்னது தத்தித்தோம் அழகன்
நந்தா நீ என் நிலா daksinamurthyin மாஸ்டர் பீஸ்

vasudevan31355
16th June 2014, 11:55 AM
வாங்க கிருஷ்ணா சார்

சனிக்கிழமை எல்லோரையும் 'வா இந்தப் பக்கம்' சொல்லி விட்டு நீங்கள் ஞாயிறு அன்று எந்தப் பக்கமோ போய் விட்டீர்களே! 'ஆண்டவன் கட்டளை' என்று நினைக்கிறேன்.

நன்றாக என்ஜாய் செய்தீர்களா? ராகவேந்திரன் சாரும், வாசுவும் போன் செய்து படத்தை என்ஜாய் செய்ததாகக் கூறினார்கள்.

gkrishna
16th June 2014, 12:05 PM
வாழ்வில் சௌபாக்கியம் வந்தது
தூண்டில் மீன் பாடல் பற்றி முரளி சார் சொல்லி இருந்தார்
பாலாவின் குழைவு கனிவு எல்லாம் இந்த பாடலில் காணலாம்
முதல் சரணத்தில்
"நான் அறியாத ரகசியம் ஒன்று
நூல் இடை பார்த்தேன்
தெரிந்தது இன்று " என்று பாடும் போது நான் என்ற இடைதில் ஒரு குழைவு
பிறகு சுசில் பாடி முடித்தவுடன் "ஆரிரோ ஆரிரோ " என்று ஒரு தாலாட்டு
அடுத்த சரணத்தில்
"வண்ண கோடி தந்த முல்லை செண்டு
வந்து விளையாடும் பிள்ளை என்று " பாடும் போது ஹை scale இல் எடுப்பார்
உடனே சுசில்
நாணத்துடன் (லக்ஷ்மியின் )
"பூவிதழ் தன்னை பறித்து பூஜையை மெல்ல நடத்து
தொடங்கும் தொடரும் சுகங்களை நினைத்து "
முரளியின் நினவு மீட்டலுக்கு நன்றி
lovely சாங்

gkrishna
16th June 2014, 12:08 PM
vasu sir
நேற்று என் பெரிய daughter entrance எக்ஸாம்
whole டே held up அட் வண்டலூர் பெர்ரி institute
நைட் ஆண்டவன் கட்டளை
ஆனால் இரவில் வந்து எல்லா updates படித்து விட்டேன்

vasudevan31355
16th June 2014, 12:13 PM
கிருஷ்ணா சார்,

எம்.எல்.ஸ்ரீகாந்த் 'தன்வினை தன்னைச் சுடும்' என்ற படத்திற்கும் இசை அமைத்துள்ளார். (அப்படி ஒரு படம் வந்ததா?... கவரைப் பார்த்தால் நல்ல படம் போல் தெரிகிறதே!)

அப்படத்தின் இசைத்தட்டு கவரை' நினைப்பது நிறைவேறும்' இசைத்தட்டு கவருடன் அளிக்கிறேன்.

http://s.ecrater.com/stores/47612/484663dc955eb_47612b.jpghttp://s.ecrater.com/stores/47612/48466407b19e6_47612b.jpg

http://s.ecrater.com/stores/47612/4811ca69c2e20_47612b.jpghttp://s.ecrater.com/stores/47612/4811ca8417592_47612b.jpg

vasudevan31355
16th June 2014, 12:17 PM
கிருஷ்ணா சார்,

தங்கள் பெரிய மகள் entrance exam இல் (பெர்ரி)ய வெற்றி பெற்று எல்லா நலனும், வளமும் பெற்று வாழ இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.

vasudevan31355
16th June 2014, 12:22 PM
என் அங்கமே உன்னிடம் சங்கமம்
என் நெஞ்சிலே மங்கையின் குங்குமம்.

தேவன் கலைக்கோயில் பூந்தேர் ஒன்று
தேவி வடிவாகக் கண்டேன் இன்று

பூவிதழ் தன்னைப் படித்து
பூசையை மெல்ல நடத்து.

என்ன ஒரு பாடல்! வாழ்வில் என்றும் சௌபாக்கியத்தைத் தரும் பாடல். 'ஓடம் கடலோடும்' போல.


http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=YNFckaXXUwE

vasudevan31355
16th June 2014, 12:25 PM
என்றும் நம் நெஞ்சில் நிறைந்த 'மெல்லிசை மாமணி'

http://www.telugump3lyrics.com/uploads/person_images/1298720444V.%20Kumar.jpg

http://www.musicsheettamilsongs.com/yahoo_site_admin/assets/images/VKumarmusic_director.248133131_sq_thumb_m.jpg

gkrishna
16th June 2014, 12:28 PM
டியர் வாசு சார்
டாக்ஸி டிரைவர் 1978 N S மணியம் direction
சாரு சித்ரா combines
இப்ப outdoor சினி சர்வீஸ் செய்து கொண்டு இர்ருக்கிரர்கள் என்று கேள்வி
"சாந்தி மை ஹோலி angel " பாடல் பற்றி சொல்லி இருந்தீர்கள்
ஜெய் ஸ்ரீதேவி கம்போ
விச்சுவின் musical ஹிட்
இந்த படத்தில் CK குறிப்பிட்ட :"சுகமான சிந்தனையில் " ஜேசு ஜானகி மெலடி
இதே போல் இன்னொரு பாடல்
பாலாவின் "இது ராஜா கோபுர தீபம் அகல் விளக்கு அல்ல
மழை மூடும் ஆயப்பசி மேகம் பனி துளி அல்ல " என்று ஜெய் பாடுவார் அந்த கால சிலோன் ரேடியோவில் சூப்பர் ஹிட்
பாட்டின் இடையில் விச்சுவின் குரலில் ஸ்ரீகாந ப்ளூ ஜீன்ஸ் பண்ட ப்ளூ ஓபன் ஜீன்ஸ் ஷர்ட் உள்ளே ஸ்டைல் பனியன் ஷர்ட் போட்டு கொண்டு
ஒரு தொகையறா பாடி கொண்டு வருவர்
"வைரம் அமர்வது தங்கத்தின் மீது
மாதவன் துணை தான் திருமகள் மாது
மங்கையின் அழுகுக்கு இனி ஒன்று எது
மன்மதனே கண்டு மயங்கிடும் போது "

gkrishna
16th June 2014, 12:38 PM
கண்மணி ராஜாவில்
"ஓடம் கடல் ஓரம் அது சொல்லும் கதை என்ன "
பாடல் பற்றி சொல்லி இருந்தர்கள்
அதில் பாலாவின் இன்னொரு பாடல் ஒன்று உண்டு அல்லவே
"காதல் விளையாட கட்டில் இடு கண்ணே துய மகள் ஆகா
தொட்டில் இடு கண்ணே
எண்ணங்களில் இன்ப நடனம் " பாலா வித் சுசில்
beautiful விசில் மற்றும் flute
ஹே ஹே ஹா ஹா ஹம்மிங்

gkrishna
16th June 2014, 12:42 PM
வெற்றிவேல் production 1974
பணத்துக்காக
செந்தில்நாதன் direction
சிவகுமார் ஜெயசித்ரா,கமல்,ஸ்ரீகாந்த்,சசிகுமார்
"யாருமில்லே இங்கே இடம் இடம் இது சுகம் தரும்
ஆசை மனம் அங்கே தரும் தரும் அது தரும் வரை கொஞ்சம் பொரும்"
பாலா வித் சுசில்

gkrishna
16th June 2014, 12:43 PM
I love you I love you

vasudevan31355
16th June 2014, 12:45 PM
நூற்றுக்கு நூறு உண்மை சார்.

சிலோன் வானொலி சிலோன் வானொலிதான். டாக்சி டிரைவரைத் தூக்கி வைத்துக் கொண்டாடியது இலங்கை வானொலி

gkrishna
16th June 2014, 12:51 PM
ஒரே வானம் ஒரே பூமி 1979
1.ஜேசுதாஸ் சோலோ மெலடி
"வளமான பூமியில் சுகமான கலைகள்
அழகான காதல் அது விளையாடும் நிலைகள் "
"அந்நாளில் அவள் ஒரு கார்கால பறவை
இந்நாளில் தந்தாளே எனக்கே தன உறவை
புது மஞ்சள் புது ரோஜா அவள் ஆகினாள்"

2.பாலா வித் சுசீல்
"சொர்கத்திலே நாம் அடி எடுத்தோம் வெகு சுகமோ சுகமாக "

3. tms
ஒரே வானம் ஒரே பூமி
ஒரே ஜாதி ஒரே நீதி
விச்சுவின் favourite சாக்ஸ் பீஸ்

vasudevan31355
16th June 2014, 12:54 PM
கிருஷ்ணா சார்

http://i1.ytimg.com/vi/QTOef3erYQ4/mqdefault.jpg

"யாருமில்லே இங்கே
இடம் இடம் இது சுகம் சுகம்
தினம் தரும் தரும்"

அடடா! என்னுடைய நெஞ்சமெல்லாம் நிறைந்த பாடல்.

'பார்க்கலாம் பேசலாம் ஆடலாம் பாடலாம்' பல்லாண்டு வரிகள் முடிந்தவுடன் 'டங் டங் டங்' என்ற பேசிக் கிடாரின் இன்பத்தை உரைக்க ஏது வார்த்தைகள்? இதே பேசிக் கிடாரின் இன்பத்தை 'அவள்' திரைப்படத்தில் 'கீதா... ஒரு நாள் பழகும் உறவல்ல' பாடலில் 'உனக்காகப் பிறந்தேனே உயிரோடு கலந்தேனே வா' என்னும் வரிகளை சுசீலாம்மா பாடி முடித்தவுடன் இரட்டையர்கள் சாரி கவிஞர் வழங்கிய தேவரின் சங்கர் கணேஷ் அள்ளித் தருவார்கள்.

இப்படத்தில் இன்னொரு விஷேசம் உண்டு. கமலும் ஸ்ரீப்ரியாவும் கடலில் குளிப்பார்கள். அப்போது ஓரிரு நிமிடங்கள் பி.ஜி.எம்மில் பின்னி எடுத்திருப்பார் மன்னர்.

gkrishna
16th June 2014, 01:00 PM
வாசு சார்
நீங்கள் சொல்வது போல் பேஸ் கிடார் விச்சு மற்றும் SG ,வி குமார் எல்லோருமே உபயோகித்து இருப்பார்கள்
ஆனால் சமீப காலத்தில் நெட்இல் நிறைய artcile மொட்டை வந்த பிறகு தான் கிடார் usage தெரிய வந்தது என்பது போல் நிறைய விவாதங்கள் நடை பெற்று வருகின்றன

vasudevan31355
16th June 2014, 01:06 PM
http://www.inbaminge.com/t/o/Ore%20Vanam%20Ore%20Boomi/folder.jpg

'ஒரே வானம் ஓரே பூமி'

ஜெய், புன்னகை அரசி தவிர

ஒரே மலையாள வாடை.

ரவிக்குமார், சீமா, விதுபாலா(கௌரவ வேடமா) என்று நிறைய பேர்.

பூபந்தல் பொன்னான வீடு
புதுவெள்ளம் பெண் மான்களோடு
எல்லார்க்கும் எல்லாம் உண்டு

ஆனந்தம் பனி விளையாட்டு
இது என்ன புது விளையாட்டு
என்னென்ன இன்பம் இன்று

அடடா! இளமை உலகம்
அழகில் இதுதான் சிகரம்

பாடல்களிலும் இது சிகரம்தான்.

மெல்லிசை மன்னர் உயிர் கொடுத்து கரை சேர்ப்பார்.

படம் கொஞ்சம் பொறுமை சோதித்தது உண்மை.

gkrishna
16th June 2014, 01:08 PM
அதே போல் saxophone ரஹ்மான் வந்த பிறகு தான் அதிலும் டூயட் படத்திற்கு பிறகு தான் சினிமாவில் உபயோகிக்க ஆரம்பித்தது போல் சிலர் எழுதி கொண்டு இருக்கின்றனர்
"நினைத்தாலே இனிக்கும் "
"யாதும் ஊரே யாவரும் கேளிர் அன்பே எங்கள் உலக தத்துவம்
நண்பர் உண்டு பகைவர் இல்லை நன்மை உண்டு தீமை இல்லை
இனிகோகோ சந்தா மலேசிய
அரௌண்ட் தி வேர்ல்ட் பிரிஎண்ட்ஷிப் welcomes யு "
பாடலுக்கு முன் வரும் ஸ்டார்டிங் சாக்ஸ் இசைக்கு ஈடு உண்டா சார்

gkrishna
16th June 2014, 01:12 PM
ஒரே வானம் ஒரே பூமி உண்மையில் மலையாள படம் தான்
"ஏழாம் கடலில் அக்கர" என்று மலையாளத்திலும் ஒரே சமயத்தில் எடுத்தது என்று கேள்வி
சசி direction
புன்னைகை அரசிக்கு ஜோடி ஒரு நயாகரா டாக்டர் (வயாகரா)
"லக்ஷ்மி திஸ் இஸ் நயாகரா பால்ல்ஸ் "
ஜாலி இன் "ந ந" "ந ந "

vasudevan31355
16th June 2014, 01:24 PM
சார்,

மலை ராணி முந்தானை சரிய சரிய
மண் மாதா வண்ண மடி விரிய விரிய
இளங்காற்று மார்பகத்தை தழுவ தழுவ
எண்ணுகின்றேன் கவிதை ஒன்று எழுத எழுத...

பாத்துட்டா போச்சு.


https://www.youtube.com/watch?v=TtNF9vvE4ZA&feature=player_detailpage

(நயாகரா என்றாலே நடிகர் திலகம்தான் மேயராக முதலில் நினைவுக்கு வருகிறார்)

vasudevan31355
16th June 2014, 01:29 PM
அதே போல் saxophone ரஹ்மான் வந்த பிறகு தான் அதிலும் டூயட் படத்திற்கு பிறகு தான் சினிமாவில் உபயோகிக்க ஆரம்பித்தது போல் சிலர் எழுதி கொண்டு இருக்கின்றனர்
"நினைத்தாலே இனிக்கும் "
"யாதும் ஊரே யாவரும் கேளிர் அன்பே எங்கள் உலக தத்துவம்
நண்பர் உண்டு பகைவர் இல்லை நன்மை உண்டு தீமை இல்லை
இனிகோகோ சந்தா மலேசிய
அரௌண்ட் தி வேர்ல்ட் பிரிஎண்ட்ஷிப் welcomes யு "
பாடலுக்கு முன் வரும் ஸ்டார்டிங் சாக்ஸ் இசைக்கு ஈடு உண்டா சார்

சார்
அவுங்க கெடக்கறாங்க! 'அம்மம்மா கேளடி தோழி' மட்டும் கேட்க சொல்லுங்க

vasudevan31355
16th June 2014, 01:31 PM
புன்னைகை அரசிக்கு ஜோடி ஒரு நயாகரா டாக்டர் (வயாகரா)



சார்,

குறும்பு கொப்பளிக்குது :)

vasudevan31355
16th June 2014, 01:35 PM
கிருஷ்ணா சார்

இளையராஜாவின் 'ஊருசனம் தூங்கிடிச்சு' பாட்டை இங்க ஒருத்தர் சூப்பாரா வாசிக்கிறார் பாருங்க.


http://www.youtube.com/watch?v=s0ddyV9WLKg&feature=player_detailpage

gkrishna
16th June 2014, 01:42 PM
அடேங்கப்பா அடேங்கப்பா
புரிந்ததா ஆசை இப்போது
இவள் மனம் தெரிந்ததும்
பிறந்ததா காதல் இப்போது
வாணி வித் பாலா காம்போ
இந்த பாட்டு எந்த படம் சார்

vasudevan31355
16th June 2014, 01:47 PM
கிருஷ்ணா சார்,

'மெல்லிசை மாமணி' குமார் பற்றி விக்கிபீடியா அளித்திருந்த சினிமா எக்ஸ்பிரஸ் கட்டுரை

நம் எல்லோருடைய பார்வைக்கும் வேண்டி. (நன்றி விக்கிபீடியா)

http://www.tfmpage.com/my/md/vk1.jpg

http://www.tfmpage.com/my/md/vk2.jpg

http://www.tfmpage.com/my/md/vk3.jpg

(நினைவூட்டிய கிருஷ்ணா சாருக்கும் நன்றி!)

gkrishna
16th June 2014, 01:50 PM
யாரு சார் இது nag iyer
நல்லா இருக்கு

vasudevan31355
16th June 2014, 01:55 PM
விரைவில் 'மெல்லிசை மாமணி' குமார் அவர்கள் இசையமைத்த படங்களில் இருந்து பாடல்கள் தொடராக அலசப்பட இருக்கின்றன என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.

வழக்கம் போல் தங்கள் அன்பான, மேலான ஆதரவை எதிர்நோக்கும்

அன்பன்.
வாசுதேவன்

நன்றி!

vasudevan31355
16th June 2014, 01:55 PM
யாரு சார் இது nag iyer
நல்லா இருக்கு

எனக்கும் தெரியல.. ஆனா ரொம்ப ரசிச்சேன்.

vasudevan31355
16th June 2014, 02:01 PM
அடேங்கப்பா அடேங்கப்பா
புரிந்ததா ஆசை இப்போது
இவள் மனம் தெரிந்ததும்
பிறந்ததா காதல் இப்போது
வாணி வித் பாலா காம்போ
இந்த பாட்டு எந்த படம் சார்

சார்! அந்தப் பாட்டு விஜயபாஸ்கர் கலக்கிய

ஜெய், ஜெயசித்ரா, தேங்காய் நடித்த

'உங்கள் விருப்பம்'

http://www.inbaminge.com/t/u/Ungal%20Viruppam/folder.jpg

படத்தில் ஒலிப்பது. சூப்பர் சாங் சார்.

மௌனமே என்றும் சம்மதம்
மங்கையே இன்று என்னிடம்.

அடேயப்பா அடேயப்பா...

gkrishna
16th June 2014, 02:18 PM
ரவி films
பட்டிகாட்டு ராஜா 1975
கனக சண்முகம் என்று ஒருவர் ராமண்ணாவின் assistant ஆக இருந்தவர்
டைரக்ட் செய்த படம்
சிவகுமார் ஜெயசுத கமல் ஸ்ரீப்ரிய படாபட் அசோகன் தேங்காய் மனோரமா நடித்து வெளி வந்த படம்
ஷங்கர் கணேஷ் மியூசிக்
டிட்டோ ராமண்ணா சாயல்
அசோகன் நான் பட பாணியிலே நடித்து இருப்பார்
"மாற்றன் தோட்டத்து மல்லிகையே வா வா
மன்சூர் கண்டு எடுத்த பெட்டகமே வா வா "
இந்த மன்சூர் ஆக குணாளன் என்பவர் வருவர் என்று நினவு
மாற்றன் தோட்டத்து மல்லிகை ஸ்ரீப்ரிய
கமல் இன் மெல்லிசை பாடல் ஒன்று
பாலாவின் குரலில்
"உன்னை நான் பார்த்தது வெண்ணிலா வேளையில்
ர பர பர பர பர "
அந்நாளைய எல்லா மேடை பாடகர்களுக்கும் அரிச்சுவடி
சுசிலாவின் குரலில்
"கொஞ்சும் கிளி வந்தது" தரரர
"கண்கள் குறி வைத்தது"
"தொட்டால் துவளும் மேனி He He He Heiy
காதல் சாம்ராஜ்ய ராணி
நெருங்கினால் நெருப்பு நான் "
•heiyy Lalalalalala Lalallalala Lalal Alal Laa
முதல் சரணத்தில்
"தொடாதது கை விரல்கள் படாதது
தராதது யாரும் இது பெறாதது
நான் தானே புத்தம் புது தேன் தானே "
(எதை சொல்ல வராங்க தெரியலே)
எச்செள்ளன்ட் ஹம்மிங்
டபுள் பங்கோ அண்ட் chorus

gkrishna
16th June 2014, 02:25 PM
உங்கள் விருப்பம் படத்தில் இன்னொரு பாடல் கூட உண்டு இல்ல சார்
"என்ன மகாராணி அழகு அழகு
இன்னும் சில நேரம் பழகு பழகு பழகு "
பாலா வித் வாணி
அதே போல்
கோவை சௌந்தரராஜன் வித் அஞ்சலி (ஈஸ்வரியின் தங்கை தானே )
"மஞ்சள் பூசி மஞ்சம் கொண்ட ராம ராம
மந்திரத்தை சொல்லி சொல்லி விடு சீத சீத

gkrishna
16th June 2014, 02:33 PM
vasu sir
மெல்லிசை மாமணி குமார் இன் கானங்கள் பற்றிய அலசல்
காத்து இருக்கிறோம் சார்

vasudevan31355
16th June 2014, 02:42 PM
கிருஷ்ணா சார்,

'கொஞ்சும் கிளி வந்தது' கண்ணியப்பாடகி கோரஸுடன் கலக்கு கலக்கு என்று கலக்கி இருப்பார்கள். அ வும் இல்லாமல் ஆ வும் இல்லாமல் இரண்டுக்கும் இடைப்பட்ட, மாத்திரை சற்றே குறைந்த ஆவை ஒரு ஹம்மிங் போட்டு 'கண்கள் குறி வைத்தது'என்பாரே!

ஆஹா! நெடுநாள் வாழட்டும் இந்த இசைக் குயில்.

vasudevan31355
16th June 2014, 02:49 PM
பட்டிக்காட்டு ராஜாவில்

http://tamillyrics.hosuronline.com/pictures/pattikattu%20raja_1.jpg

இன்னொரு சூப்பர் பாடல்

என்னோடு வந்தான்
கண்ணோடு நின்றான்
நெஞ்சோடு கலந்தானே
நேற்றுவரை நானே
நினைத்ததில்லை மானே

பாலாவும், வாணியும்,அட்டகாசம் புரிவார்கள். கேட்டிருக்கிறீர்களா?
நீங்கள் கேட்காத பாட்டு என்று ஒன்றும் இருப்பதாகத் தெரியவில்லை.

vasudevan31355
16th June 2014, 02:55 PM
பட்டிக்காட்டு ராஜாவில்

https://i1.ytimg.com/vi/DlTnHUyHZZs/mqdefault.jpg

இன்னொரு பாட்டும் சூப்பர்.

கண்ணன் யாரடி
கள்வன் யாரடி
பார்த்துச் சொல்லடி
கண்ணே மயங்காதே
நெஞ்சே நெருங்காதே

சுசீலாவின் அற்புதமான பாடல்.

http://i1.ytimg.com/vi/agjyrRCVkUI/hqdefault.jpg

(ஆமாம்! ஸ்ரீபிரியா இந்தப் படத்தில் ரொம்ப.ஓ..ர்)

gkrishna
16th June 2014, 03:28 PM
வாசு சார்
நடுவில் வேறு ஒரு வேலையில் held up ஆகி விட்டேன்
பட்டிகாட்டு ராஜாவில்
"கண்ணன் யாரடி கள்வன் யாரடி
பார்த்து சொல்லடி பெண்ணே மயங்காதே "
பாட்டு interlude மியூசிக் கொஞ்சம் பாஸ்ட் track இல் அடித்து இருப்பார்கள்
இந்த பாட்டை பற்றி யோசித்து கொண்டு இருக்கும் பொது
பாலச்சந்தர் படத்தில் ஒரு பாடல் திடீர்னு நினவு
"உனைத்தான் எண்ணி நினைச்சேன்
அதை தான் எண்ணி சிரிச்சேன்
மேலாடை கொஞ்சம் மெதுவா மெதுவாக "
எங்க ஊர் கண்ணகி - பாலா வித் சுசீல்
விச்சுவின் சூப்பர் மெலடி
சரத்பாபு அண்ட் சீமா ஜோடி
இந்த படத்தை உண்மையில் பாலச்சந்தர் தான் டைரக்ட் செய்தாரா என்று இந்த படம் வெளியான காலத்தில் குமுதம் பத்திரிகையில் வெளி வந்த நினவு

gkrishna
16th June 2014, 03:58 PM
ராணுவ வீரனில் 1981
விச்சுவின் பாலா வித் சுசீல்
1. சொன்னால் தானே தெரியம் என்னை கண்ணால் பாரு புரியும்
அழகி உனக்கு கோவம் எதற்கு ஆசை அதிகம் நெஞ்சில் இருக்கு

கோழியும் இங்கே சேவலும் இங்கே குடும்பத்தை பார் இங்கே
ஜோடியும் இன்றி பறவைகள் கூட வாழ்வது தான் எங்கே
பறவையின் நிலை வேறு மனிதனின் கதை வேறு
மனிதர்கள் இனம் போலே பறவைகள் கடமையை அறியாது

தபேலா ஜாலம் புரியும்
interlude கொஞ்சம் இமயம் "கங்கை யமுனை இங்கு தான் சங்கமம் "
பாடலில் வருவது போல் இருக்கும்
ரஜினி வித் ஸ்ரீதேவி அழகோ அழகு
2. பாலாவின் "வாருங்கள் ஒன்றாய் சேருங்கள் "
இந்த 'ள்' ஒரு அழுத்து அழுத்துவார் பாருங்க

mr_karthik
16th June 2014, 04:36 PM
மு.க.முத்துவின் இரண்டாவது படம் 'பூக்காரி' (1973 தீபாவளி - உடன் வந்த படங்கள் கௌரவம், பாக்தாத் பேரழகி, அலைகள்)

மஞ்சுளாதான் பூக்காரி.
வியாபாரியான ராட்சசியின் குரலில் "முப்பது பைசா மூணு முழம் முல்லை மல்லிகை கனகாம்பரம்" பாடலும் அதற்கு பாவாடை தாவணியில் மஞ்சுவின் துள்ளிக்குதித்த ஆட்டமும் செம பொருத்தம்.

(அதென்ன வியாபாரி ராட்சசி?. 'அரும்பா இருந்தது நேத்து' (ராஜா வீட்டுப்பிள்ளை), எலந்தப்பயம் (பணமா பாசமா), மாம்பழம் வாங்குங்க (உயிரா மானமா), டி... டி...டி சாத்துக்குடி (பட்டிக்காட்டு பொன்னையா), நான் ஏழு வயசுல எளனி வித்தவ (நம்நாடு).... ஈஸ்வரி பார்க்காத வியாபாரம் உண்டா?)

அகலமான கூடைத்தட்டில் பூக்களை வைத்துக்கொண்டு வீடு வீடாக துள்ளித்துள்ளி ஆடிக்கொண்டு போய் பூ விற்கும்போது நம்ம தெருவுக்கும் இந்த மாதிரி ஒரு பூக்காரி வந்தால் எப்படியிருக்கும் என்று தோன்றும்.

முத்துவுக்கும் மஞ்சுளாவுக்கும் பாஸ்ட் டூயட் "முத்துப்பல் சிரிப்பென்னவோ, முல்லைப்பூ விரிப்பல்லவோ" டி.எம்.எஸ்.-சுசீலா. கானமும் காட்சியும் செம ஜோர்.

ஜெய்குமாரிக்கு ஒரு பார்ட்டி டான்ஸ் பாட்டு "புத்தகம் விரிப்பதிங்கே தத்துவம் படிப்பதற்கே" மீண்டும் ராட்சசி. ( ஜெய்குமாரி ஆடு ஆடென்று ஆட, அமிர்தம் கேமராவைப் போட்டு ஆட்டு ஆட்டென்று ஆட்டியிருப்பார்)

ரொம்ப பாப்புலரான பாடல் "காதலின் பொன் வீதியில் காதலன் பண்பாடினான்" இளையராஜா வருவதற்கு முன் அத்தி பூத்தார்போல எழுதிக்கொண்டிருந்த பஞ்சு அருணாச்சலத்தின் பாடல். டி.எம்.எஸ்.ஜானகி. படத்தில் முத்துவுடன் நிர்மலா.

1973 தீபாவளிக்கு வந்த அத்தனை படங்களிலும் மெல்லிசை மன்னர் எவரெஸ்ட்டின் உச்சியில் (மாமா தெலுங்கில் பிஸி).

mr_karthik
16th June 2014, 04:48 PM
டியர் கிருஷ்ணாஜி, ஒரு சின்ன யோசனை (சொல்லலாமா? பயமா இருக்கு)

திரியை நாம் ஒரு பத்து பேர் மட்டும் படிக்கவில்லை, பலர் படிக்கின்றனர். எனவே 'விஜி - பத்து ஜோடி' என்று கோட் வேர்டில் எழுதுவதற்கு பதிலாக மூன்று செகண்ட் கூடுதலாக எடுத்துக்கொண்டு விஜயகுமார் - பத்மப்ரியா என்று முழுசா எழுதலாமே.

gkrishna
16th June 2014, 05:15 PM
கார்த்திக் சார்
என்ன சார் நீங்க போய் பயமா இருக்குன்னு சொல்லலாமா
எவ்வளுவு பெரிய சீனியர்
100 பெர்சென்ட் நீங்கள் சொல்வது சரி
அவசரமாய் எழுதும் போது இது போன்ற தவறுகள் நிகழ்ந்து விடுகின்றன
சில சமயம் நெட் connection கட் ஆகி விடுமோ என்று பயந்து அவசரத்தில் அள்ளி தெளித்து விடுகிறேன்
சில சமயம் பாடல் வரிகளையும் அவசரத்தில் தவறாக எழுதி விடுகிறேன் நினைவில் இருப்பதை வைத்து
நிச்சயமாக உங்கள் அறிவுரை கவனத்தில் கொள்கிறேன்

நிற்க
உங்கள் பூக்காரி மிகவும் இண்டரெஸ்டிங்
அதிலும் எனக்கு மிகவும் பிடித்த காதலின் பொன் வீதியில் (இதை ரொம்ப நாளைக்கு காதலின் பொன் கீதங்கள் என்றே நான் பாடுவேன்)
1972 சூப்பர் ஹிட்
உங்களை மாதிரி/முரளி சார் மாதிரி/வாசு சார் மாதிரி/கோபால் சார் மாதிரி என்னாலே கோர்வையாக எழுத முடியவில்லை என்று எனக்கு ஒரு வருத்தம் மனதளவில் உண்டு .தயவு செய்து இதை தாழ்வு மனப்பான்மை என்று எடுத்து கொண்டு விடாதீர்கள்

gkrishna
16th June 2014, 05:27 PM
கார்த்தி சார்
இந்த முத்து நடிச்ச "எல்லாம் அவளே" என்று படம் 1977 என்று நினவு
ஜெயச்சந்திரன் பாடிய ஒரு பாடல் "எல்லாம் அவளே என் தைவமும் அவளே "
பாலா வித் வாணி combination
"அழைத்தல் வராவிடில் துடிப்பேன் வளைக்கரம் பிடிபேன்
அணைத்தால் தராததை தருவேன் இது முதல் நாள் "
சிலோன் ரேடியோ ஹிட்
விச்சு கலந்து கட்டி தூள் கிளப்பி இருப்பார்
ஒ விடுங்கள் வளைக்கரம் வலிக்கும்
வாணி வாய்ஸ் ஸ்வீட்ஆக இருக்கும்

gkrishna
16th June 2014, 05:36 PM
ஜெயச்சந்திரன் பாடிய பாடலின் முதல் வரி
"நான் வரைந்த ஓவியமே நல்ல தமிழ் காவியமே" என்று வரும்

gkrishna
16th June 2014, 05:42 PM
சார் அப்புறம் இந்த மொட்டை early மியூசிக் இல்
மாரியம்மன் திருவிழா என்று படம் 1978
சிவகுமார் சுஜாதா என்று நினவு
ஒரு tms பாடல் ஒன்று மிக நல்ல tune ஆக இருக்கும்
"சிரித்தாள் சிரித்தேன் அவள் ஒரு ராஜகுமாரி
ஒரு பதுமையை போலே " என்று வரும்
சிலோன் ரேடியோ உபயம்

vasudevan31355
16th June 2014, 05:48 PM
கார்த்திக் சார்!

'பூக்காரி' நினைவுகள் ஜோர்.

எனக்கு 'முத்துப்பல் சிரிப்பென்னவோ' தான் ரொம்பப் பிடிக்கும். (மஞ்சுளா வேற)

vasudevan31355
16th June 2014, 05:53 PM
தங்க குடத்துக்கு பொட்டுமிட்டேன்
தாமரைப் பூவிற்கு மையும் இட்டேன்.
விழி மொட்டுக்களில் ஏனிந்த முத்துக்களோ
அன்னத்தின் பிள்ளை நீயடி கண்ணே

அதே 'மாரியம்மன் திருவிழா' வில் சுசீலாவின் தாலாட்டுப் பாடல்.

vasudevan31355
16th June 2014, 06:06 PM
கிருஷ்ணா சார்

'எல்லாம் அவளே' படத்தில் ரொம்ப அரிய எஸ்.பி.பி மற்றும் ஜானகி இணைந்து பாடிய என்னை வெகுவாகக் கவர்ந்த பாடல்.

http://www.inbaminge.com/t/e/Ellam%20Avale/folder.jpg

நல்ல வாழ்வு வந்தது
செல்வம் வாரித் தந்தது
வண்ணக்கிளி எந்தன் எண்ணப்படி நம்மை வாழச் சொன்னது


ரொம்ப வித்தியாசமான பாடல்.


பள்ளி நாடகத்தின் தொடக்கமே
பருவம் எழுதும் விளக்கமே
என்னிடத்தில் உள்ள வண்ணம் யாவுமே
உந்தன் கைகளில் அடக்கமே

கன்னித் தாமரையும் மலர்ந்தது
கதிரோன் வரவும் கலந்தது

மந்திரமோ என்ன மாயமோ
மன்னன் கைபடக் கனிந்தது.

என்ன ஒரு பாட்டு! இன்று முழுக்க கேட்டாலும் எனக்கு சலிக்காது. குரலை விட்டுவிட்டு பாடகர் திலகமும், ஜானகியும் பின் மீண்டும் எடுப்பது ரொம்ப டாப்.

நல்ல வாழ்வு வந்தது என்று ஆரம்பத்தில் டி.எம்.எஸ். எடுக்கும் போது மெல்லிசை மன்னரின் குரலோ என்று சந்தேகம் எனக்கு வந்து விட்டது.

parthasarathy
16th June 2014, 06:07 PM
கிருஷ்ணா ஜி,

யாரை நீங்கள் "மொட்டை" என்கிறீர்கள்?

நிற்க.

காதல் விளையாட - கண்மணி ராஜா - பாடலில், அன்றைக்கு பாலுவின் குரலில் இளமை இருந்தது சரி. ஆனால், அன்று சீனியர் பாடகியாக இருந்த சுசீலாவின் குரல் மற்றும் இளையவர் பாலுவுக்கு சமமாக ஈடு கொடுத்த விதம்! பாடல் முடியும் போது - எண்ணங்களின் அன்பு நடனம் அங்கங்கள் மீது - என்னும் போது, லட்சுமியின் உடல் மொழிக்காக சுசீலா பாடினாரா, இல்லை சுசீலா பாடுவதற்கேற்ப லட்சுமி நடித்தாரா என்று கண்டு பிடிக்க முடியாது.

இதில் வரும், ஓடம் கடலோடும் பாடலிலும் லட்சுமியின் ஆளுமை இருக்கும் அதற்கேற்ப சுசீலாவும் சமாளிப்பார் கூடப் பாடுபவர் இளையவராயிருந்தாலும்.

இந்தத் திரி ரொம்பவே ரசிக்கும்படி உள்ளது. இளைப்பாரலுக்கு - வேலையின் இடையே மிகவும் உதவியாக இருக்கிறது.

எல்லோருக்கும் என் வந்தனம்!

அன்புடன்,

இரா. பார்த்தசாரதி

vasudevan31355
16th June 2014, 06:11 PM
பூக்காரியில் மஞ்சுளாவும், மு,க,முத்துவும்.

http://www.thehindu.com/multimedia/dynamic/01631/26TH_MUTHU_1631855f.jpg

parthasarathy
16th June 2014, 06:20 PM
வாசு சார்,

வான ரதம் படப் பாடல் மற்றும் அக்பர் படப் பாடல்கள். அற்புதம்!

எனக்கும், முரளி மற்றும் கோபால் மற்றும் உங்கள் எல்லோருடைய ரசிப்புத்தன்மையும் பெரிய அளவில் ஒத்துப் போகின்றன - இசையையும் சேர்த்தே!

அன்புடன்,

இரா. பார்த்தசாரதி

vasudevan31355
16th June 2014, 06:23 PM
வாருங்கள் பார்த்தசாரதி சார்.

மொட்டை என்று கிருஷ்ணாஜி இளையராஜாவை உரிமையில் செல்லமாகச் சொல்லுகிறார்.

நீங்கள் சொன்ன அற்புத 'ஓடம்...கடலோடும்...அது சொல்லும் பொருளென்ன'? பாடலைப் பற்றி என்னவென்று புகழ்வது?

(லட்சுமி அசத்தலோ அசத்தல். நாணத்தை அந்த முகம் எப்படி பிரதிபலிக்கிறது! சிவக்குமாரோ பாவம். இதற்கெல்லாம் அவர் அவ்வளவு சரிப்பட்டு வர மாட்டார்) :)

இரவு எபெக்ட்டில் கடற்கரையில், கடல் அலையில் காலை நனைத்தும் நனைக்காமலும்
காதல் ஜோடிகள் கைகோர்த்தபடி நடக்கும் யதார்த்தம்.

நடுவில் வரும் விசில் சப்தத்தோடு இணைந்து குழையும் சுசீலாவின் சுகமான ஹம்மிங்.

சொர்க்கத்தை 'இந்தா... அனுபவிடா' என்று நமக்கு எடுத்துத் தரும் பாடல்.

இந்த மயக்கும் மாலை வேளையில் அப்படியே பாப்கார்ன் கொறித்துக் கொண்டு இப்பாடலைப் பார்ப்போம்.


http://www.youtube.com/watch?v=VuDf_NPXoFY&feature=player_detailpage

vasudevan31355
16th June 2014, 06:31 PM
வாசு சார்,

எனக்கும், முரளி மற்றும் கோபால் மற்றும் உங்கள் எல்லோருடைய ரசிப்புத்தன்மையும் பெரிய அளவில் ஒத்துப் போகின்றன - இசையையும் சேர்த்தே!

அன்புடன்,

இரா. பார்த்தசாரதி

நன்றி பார்த்தசாரதி சார். நிரம்ப சந்தோஷமாய் இருக்கிறது.

அந்த சந்தோஷத்தை எனக்குப் பிடித்த பாடல் வடிவிலேயே தருகிறேன். ராஜாவின் ராஜாங்கம் இப்பாடலில் கொடி நாட்டும். நிச்சயம் தங்களுக்கும் பிடிக்கும்.


http://www.youtube.com/watch?v=eo6OaXb6fD4&feature=player_detailpage

parthasarathy
16th June 2014, 06:43 PM
நன்றி பார்த்தசாரதி சார். நிரம்ப சந்தோஷமாய் இருக்கிறது.

அந்த சந்தோஷத்தை எனக்குப் பிடித்த பாடல் வடிவிலேயே தருகிறேன். ராஜாவின் ராஜாங்கம் இப்பாடலில் கொடி நாட்டும். நிச்சயம் தங்களுக்கும் பிடிக்கும்.


http://www.youtube.com/watch?v=eo6OaXb6fD4&feature=player_detailpage

வாசு சார்,

எனக்கும் பிடித்த பாடல்.

இந்த சிவகுமார் கூடிய மட்டும் குள்ள நடிகைகளோடு தான் நடிப்பார் - சுமித்ரா, ஜெயசித்ரா, இப்படி. எப்போதாவது அம்பிகா, ராதாவோடு நடிக்கும்போது - அவர் என்றும் இளமையாக இருந்தவர் அல்லவா - சமாளித்து விடுவார் - டூயட் இல்லாத போது மட்டும் - பாவமாக இருக்கும் பெரிய ஸ்டூல் மீது ஏறிக் கொண்டு (ஹை ஹில் ஷூ தான்!) அவர்கள் ஆட்டத்துக்கு ஈடு கொடுக்க முடியாமல் இலேசாக காலை அடி மேல் மடியாக எடுத்து வைப்பாரே பார்க்கலாம் - குறிப்பாக - நான் பாடும் பாடல் - டூயட்டில் - வள்ளுவர் கோட்டத்தில் எடுத்திருப்பார்கள் - மொசைக் தரை வழுக்கும் என்பதால் - மனிதர் கூழ், மீசை இரண்டுக்கும் ஆசைப்பட்டுத் தவிப்பார் - நம்மையும் தவிக்க (சிரிக்க) விடுவார்.

அன்புடன்,

இரா. பார்த்தசாரதி

gkrishna
16th June 2014, 07:15 PM
வாசு சார்
எல்லாம் அவளே (வாசுவே )
இன்னொரு பாட்டு உண்டே உண்டே என்று இவ்வளுவு நேரம்
மண்டையை உடைத்து கொண்டு இருந்தேன்
பிடிச்சிங்க பாருங்க tms வித் ஜானகி
இதுவும் சிலோன் ரேடியோ உபயம் தான்
"நல்ல வாழ்வு வந்தது செல்வம் வாரி தந்தது "
எங்களுக்கும் இந்த திரியினால் வாசுவின் கருணையினால்
நல்ல வாழ்வு வந்தது

பார்த்த சாரதி சார்
சிவா பெருமானை நாராயணனை அன்பு மிகுதியினால் குழந்தையாக நினைத்து கூட பாடுவார்கள் அல்லவே
அது போலவே இசை ஞானியை மொட்டை என்று செல்லமாக விளிக்கிறேன். இசை ஞானி ரசிகர்கள் மன்னிக்கவும்

mr_karthik
16th June 2014, 07:48 PM
கண்மணி ராஜா படம் இலங்கையில் ஓடிக்கொண்டிருந்தபோது, இலங்கை வானொலியில் அந்தப்படத்தின் 'திரை விருந்து' நிகழ்ச்சியில் அப்படத்தை மறைந்த கே.எஸ்.ராஜா வர்ணிக்கும் அழகைக் கேட்க காதுகள் கோடி வேண்டும். உண்மையில் எதையும் ரசனையோடு செய்பவர்கள் அவர்கள்தான். (இத்தனைக்கும் சென்னையில் இலங்கை வானொலி ரொம்ப கஷ்ட்டப்பட்டுத்தான் எடுக்கும். ஆயிரத்தெட்டு குறுக்கீடுகள்).

குறிப்பாக "காதல் விளையாட கட்டிலிடு கண்ணே, தூய மகனாட தொட்டிலிடு கண்ணே" பாடலுக்கும் "ஓடம் கடலோடும் அது சொல்லும் கதையென்ன" பாடலுக்கும் அவர் கொடுத்த விளக்கங்களும், வர்ணனைகளும் இன்றும் காதுகளில் ரீங்கரிக்கின்றது. அவர்களோடு ஒப்பிடுகையில் சென்னை வானொலி படு தண்டம். அப்போது தொலைக்காட்சி சேனல்களும் கிடையாது. இசை விரும்பிகளுக்கு ஒரே புகலிடம் இலங்கை வானொலி, குறிப்பாக தென் தமிழ் மாவட்டங்களுக்கு.

gkrishna
16th June 2014, 08:01 PM
கண்மணி ராஜா படம் இலங்கையில் ஓடிக்கொண்டிருந்தபோது, இலங்கை வானொலியில் அந்தப்படத்தின் 'திரை விருந்து' நிகழ்ச்சியில் அப்படத்தை மறைந்த கே.எஸ்.ராஜா வர்ணிக்கும் அழகைக் கேட்க காதுகள் கோடி வேண்டும். உண்மையில் எதையும் ரசனையோடு செய்பவர்கள் அவர்கள்தான். (இத்தனைக்கும் சென்னையில் இலங்கை வானொலி ரொம்ப கஷ்ட்டப்பட்டுத்தான் எடுக்கும். ஆயிரத்தெட்டு குறுக்கீடுகள்).

குறிப்பாக "காதல் விளையாட கட்டிலிடு கண்ணே, தூய மகனாட தொட்டிலிடு கண்ணே" பாடலுக்கும் "ஓடம் கடலோடும் அது சொல்லும் கதையென்ன" பாடலுக்கும் அவர் கொடுத்த விளக்கங்களும், வர்ணனைகளும் இன்றும் காதுகளில் ரீங்கரிக்கின்றது. அவர்களோடு ஒப்பிடுகையில் சென்னை வானொலி படு தண்டம். அப்போது தொலைக்காட்சி சேனல்களும் கிடையாது. இசை விரும்பிகளுக்கு ஒரே புகலிடம் இலங்கை வானொலி, குறிப்பாக தென் தமிழ் மாவட்டங்களுக்கு.

டியர் கார்த்திக் சார்
சிலோன் ரேடியோ வாஸ் வெரி வெரி innovative
உயிர்கலப்பு என்று ஒரு வார்த்தை அடிகடி சில பெரியவர்கள் கூறுவார்கள்
அதற்கு உண்மையான எடுத்து காட்டு சிலோன் ரேடியோ
"எங்கள் தங்க ராஜ 1973" இலங்கையில் ரிலீஸ் ஆன போது அதன்
திரை விருந்து நிகழ்ச்சியில் கே எஸ் ராஜா அவர்கள் "வீட்டுக்கு வீடு வானொலி பெட்டி அருகில் குழுமி இருக்கும் " என்று ஆரம்பித்து
இறுதியில் திரைபடத்தில் உள்ள நடிகை மஞ்சுளாவின் ஒரு வசனத்தோடு முடிப்பார்
"பெண்களை கண்டால் பிடிக்காத மாதிரி நடிக்கறது அப்புறம் பார்த்தல்
இடிக்கிறது " என்று மஞ்சுளா கூறவும் உடனே ராஜா அவர்கள்
"அம்மா மஞ்சுலம்மா என்னமா சொன்னிங்க" என்று கூறுவர்
உடனே திரைபடத்தில் உள்ள "ஒ i am வெரி சாரி ..ராஜா " என்ற மஞ்சுளாவின் வசனத்தை ஒலிபரப்பிவிட்டு ராஜா அவர்கள்
"என்று கூறி உங்களிடம் இருந்து விடை பெறுவது கே எஸ் ராஜா "
என்று கூறுவர்
கார்த்திக் சார் நினவு அலைகளை மீட்டுகீறீர்கள்

vasudevan31355
16th June 2014, 08:23 PM
கிருஷ்ணா சார்

தங்களுக்கு ஒரு pm அனுப்பியுள்ளேன். பார்க்கவும்.

Gopal.s
16th June 2014, 08:30 PM
நட பைரவி.

ஓங்காரத்துடன் முழக்கம் போல அப்படியே positive energy level கூடிய நிறைய பாடல்கள் வந்து கொண்டிருந்த காலம்.டி.எம்.எஸ். கொடி நாட்டி ,கோலோச்சி கொண்டிருந்த வசந்த காலம்.அப்போது ஒரு நடிகர் கை காலை ஒரே மாதிரி அசைத்து (ஆனால் கொஞ்சம் நடன பாங்கு கெடாமல்),cliched என்றாலும் ,விசையுறு பந்தினை போல அந்த முழக்கத்தின் வீறு கெடாமல்,பாமர மக்களின் நாயகனாக high energy உடன் அந்த பாடல்களுக்கு பரிமாணம் கொடுத்து கொண்டிருந்தார்.எனக்கு பிடித்த பாடல்களேயாயினும் எல்லாம் ஒரே பாணியாக தெரியும்.

பிறகுதான் அதோ அந்த பறவை போல,நான் ஆணையிட்டால், கொடுத்ததெல்லாம் கொடுத்தான் என்று எம்.எஸ்.வீ.,டி.கே.ஆர் இணைவுக்கு தோதாக கை கொடுத்த ராகம் நட பைரவி என்ற மேளகர்த்தா ராகமே என்று புரிந்தது.

open voice இல் பாடும்போது எழுச்சியையும்,ஹஸ்கி குரலில் பாடும் போது காம கிளர்ச்சியையும் மீட்ட கூடிய படு ஜனரஞ்சக ராகம் இது..இப்படி வீர எழுச்சியுடன் கூடிய நம்பிக்கையையும், erotic காதலின் மலர்ச்சியையும் ஒரு ராகம் கொண்டு வர முடியுமானால் தமிழர்களின் காதல்,மானம்,வீரம் என்ற அடிப்படைக்கு தோதான தமிழர்களின் ராகம்தானே?

எனக்கு பிடித்த நட பைரவியின் மற்ற பாடல்கள்.

நான் பார்த்ததிலே அவள் ஒருத்தியைத்தான் -அன்பே வா.
ஒருவர் மீது ஒருவர் சாய்ந்து- நினைத்ததை முடிப்பவன்.
நினைக்க தெரிந்த மனமே- ஆனந்த ஜோதி.
கொடியிலே மல்லிகை பூ - கடலோர கவிதைகள்.
வெண்ணிலாவின் தேரிலேறி - டூயட்.
வசீகரா என் நெஞ்சினிக்க - மின்னலே.
மடை திறந்து ஆடும் நதியலை நான்- நிழல்கள்.
புத்தம் புது காலை - அலைகள் ஓய்வதில்லை.
ஒ பட்டர் பிளை - மீரா.
என் இனிய பொன்னிலாவே -மூடுபனி
கடவுள் அமைத்து வைத்த மேடை -அவள் ஒரு தொடர்கதை.
ஆத்து மேட்டுலே ஒரு பாட்டு -கிராமத்து அத்தியாயம்.

RAGHAVENDRA
16th June 2014, 08:33 PM
நடிகர் திலகம் திரியின் ஜாம்பவான்களான வாசு சார், கோபால் சார், கிருஷ்ணாஜி, பார்த்தசாரதி, முரளி என அனைவரும் இங்கு வந்து தூள் கிளப்புவதைப் பார்த்தால் இந்தத் திரி நடிகர் திலகம் திரியின் அடுத்த பாகமாக அறிவித்து விடலாம் போலுள்ளது. என்ன வேகம்.. என்ன ஞானம்... என்ன நினைவு... என்ன எழுத்தாற்றல்... ஆஹா... சபாஷ் சரியான போட்டி...

இசைக்கு பேதமில்லையே... அனைவரின் திரைப்படங்களும் இடம் பெறவேண்டுமே...

இந்த கடலுக்குள் ஒரு துளியாக அடியேனின் பங்கு..

புகுந்த வீடு திரைப்படத்தில் இசையமைப்பாளர் சங்கர் கணேஷ் குழுவினருடன் ரவி தோன்றி நடிக்கும் மாடி வீட்டுப் பொண்ணு மீனா ... பாடலைப் பார்த்தும் கேட்டும் மகிழுங்கள்

http://youtu.be/3dd9wYhGDUs

vasudevan31355
16th June 2014, 08:51 PM
கார்த்திக் சார், கிருஷ்ணா சார்,

http://photos1.blogger.com/blogger/7261/2274/320/telefunken_radio.jpg

சிலோன் ரேடியோவை யார் மறக்க இயலும்?

http://www.laksara.com/radio-ceylon/radio%20ceylon.jpg

கே.எஸ்.ராஜா
மயில்வாகனம் சர்வானந்தா
ராஜேஸ்வரி சண்முகம்
பி.எச். அப்துல் ஹமீத்

என்று எப்படிப்பட்ட அறிவிப்பாளர்கள்!

பொங்கும் பூம்புனல்,

பிறந்தநாள்,

திரை விருந்து (நடைபெற்றது திரை....விருந்து)

கீதாஞ்சலி, புது வெள்ளம்,

என் விருப்பம்,

நீங்கள் கேட்டவை,

ஒரு படப்பாடல்கள்,

கவி உள்ளம்,

இசையும் கதையும்,

அன்றும் இன்றும்,

நெஞ்சில் நிறைந்தவை

என்று எண்ணிலடங்கா நிகழ்ச்சிகள்..

மதிய வேளைகளில் 'இசையும் கதையும்' என்று ஒரு நிகழ்ச்சி . ஒரு கதையை அப்படியே பாத்திரங்களாகவே மாறி அழகாக அறிவிப்பாளர்கள் பிரசெண்ட் செய்வார்கள். அந்தக் கதையின் சூழலுக்கு ஏற்ற பாட்டை அழகாகப் போடுவார்கள்.

'மனோரமா! பாம்பு எப்படி வரும்?' என்று கே.எஸ்.ராஜா கேட்டுவிட்டு

'தலை முன்னால வரும்... வால் பின்னாலே வரும்' என்று படத்தில் ஆச்சி பேசிய வசனந்த்தைப் போட்டுவிட்டு நிகழ்ச்சியைக் கலகலப்பாக்கும் சாதுர்யமும் சாமர்த்தியமும் படு சுவாரஸ்யம்தானே!

விளம்பரங்களையே கேட்டுக் கொண்டிருக்கலாம். சுத்த தமிழ் விளையாடும்.

'வீட்டுக்கு வீடு வானொலிப் பெட்டியின் அருகே'....

இப்போது நம்முடைய பழைய ஞாபகங்களை நினைவூட்டும் கே.எஸ்.ராஜாவின் குரலைக் கேட்டு மகிழ்வோம்

http://photos1.blogger.com/blogger/7261/2274/1600/raja2.1.jpg

அரிய இந்தப் பதிவை அளித்த நண்பருக்கு நம் நன்றிகள்.

நிஜமாகவே அந்தக் காலத்திற்கு போய்விட்ட உணர்வைத் தருகிறது இந்த சூப்பர் பதிவு.

கார்த்திக் சார்!

இந்தப் பதிவில் நம் தலைவர் படம் 'சங்கிலி' பற்றிய ஒரு விளம்பரம் தங்களை குஷிப்படுத்தும்.


http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=n8YIwIAkTJQ

Russellmai
16th June 2014, 09:45 PM
கே.எஸ்.ராஜாவின் தேன் மதுரக் குரலினை நீண்ட
காலத்திற்குப் பிறகு கேட்டு மகிழ வாய்ப்பளித்த
வாசு சாருக்கு நன்றி
அன்புடன் கோபு

chinnakkannan
16th June 2014, 10:36 PM
ஹையோ ஹையோ ஹாய்.. வாசு சார், கிருஷ்ணா சார், பார்த்தசாரதி சார்,கோபால் சார், ராகவேந்திரா சார்..என எல்லாரும் தூள் பரத்துகிறீர்கள்..ம்ம் எதை ச் சொல்ல எதை விட..

ஓடம் கடலோரம் எனக்குப் பிடிக்கும்..
இந்த சிவகுமார்…உயரம் கம்மி நடிகைகளுடன் நடித்ததை விடுங்கள்..கொஞ்சம் வித்தியாசமான படம் ஒன்று உண்டு..ஆயிரம் முத்தங்கள்..(இந்தப் படத்தில் வில்லனாக முத்துராமன் புக் ஆகி ஊட்டி படப்பிடிப்பில் இருந்த போது ஹார்ட் அட்டாக்கில் மரித்து விட..சென்னைக்கு முத்துராமனைக் கொண்டு வந்தது எல்லாம் சிவகுமார் தான்..உபயம் இது ராஜ பாட்டை அலல)) வில்லனாக வேறு ஒரு நடிகர் மலையாளம் என நினைவு..
*
இந்தப் படத்தில் சிவகுமார் அண்ட் ராதா..இளமை துள்ளும் பாடல்..

சேலை குடைபிடிக்க காத்து சில்லுன்னு வீசுதடி.. ரொம்ப நல்லா இருக்கும்..
அதே படத்தில் யாரோ ரூம் போட்டு யோசித்து சிவகுமாருக்கு டகடக சிகுசிகுவந்தாள் டக டக சிகு சிகு கங்கை.. தேனாற்றிலே நீராடினாள்…
என்று ஒரு நடனப் பாட்டைக் கொடுத்திருப்பார்கள்.. சிவகுமாரும் நன்கு உதறியிருப்பார்…உடலை..

chinnakkannan
16th June 2014, 10:37 PM
கார்த்திக் சார்..பூக்காரியின் காதலின் பொன் மேடையில் ரொம்ப ப் பிடிக்கும் பாட்டு..கேட்க மட்டும்..

chinnakkannan
16th June 2014, 10:43 PM
ஓஹ்.. கே.எஸ். ராஜா கணீர்க் குரல்.. அந்தப் படிப்பினை ஊட்டும் குடும்பச் சித்திரம் ..எப்படி மறக்கும்..வாசு சார் நீங்கள் விட்ட முக்கியமான இரண்டு..
இசைக்களஞ்சியம் – நாலு டு நாலரை என நினைவு
பாட்டும் பதமும்…- ந்ல்லவன் நல்லது செய்தால் நல்லபடி இருக்கும்..என்பது போல ஒரு வாக்கியம் போட்டு ஒரு வார்த்தைக்கு ஒரு பாட்டு
பாட்டும் படமும்.. ஒரு பாடல் அந்தப் பாடல் ஆரம்பத்தில் படத்தின் பெயர் இருக்கும்..(என நினைவு)

Richardsof
17th June 2014, 05:44 AM
கடந்த கால இனிய நினைவுகளில் ஒன்றான இலங்கை வானொலி சேவைகளின் பட்டியல் - படங்கள் - ஆடியோ
என்று அமர்க்களமான பதிவுகளை வழங்கி மலரும் நினைவுகளை புதுப்பித்த இனிய நண்பர்கள் திரு , கார்த்திக் , திரு வாசு அவர்களை எப்படி பாராட்டுவது என்று தெரிய வில்லை .

RAGHAVENDRA
17th June 2014, 07:47 AM
ரவி லதா ஜோடியாக நடித்த வீட்டுக்கு வந்த மருமகள் திரைப்படத்திலிருந்து சங்கர் கணேஷ் இசையில் சூப்பர் ஹிட் பாடல்

பெண்ணுக்கு சுகம் என்பதும்

http://youtu.be/cPFNK0o7qxI

vasudevan31355
17th June 2014, 08:39 AM
நன்றி வினோத் சார், கோபு சார்.

இதில் என் பங்கு எதுவும் இல்லை. அந்த வீடியோவை அப்லோட் செய்த புண்ணியவானுக்கே (விசு கருணாநிதி)எல்லாப் பெருமையும் சாரும். அவருக்கு நம் திரியின் சார்பாக மீண்டும் நன்றி!

vasudevan31355
17th June 2014, 08:39 AM
ராகவேந்திரன் சார்

ரவி, லதா ஜோடி இப்பாடலில் கொள்ளை அழகு. லதா பார்பி கேர்ள். ரவி செம ஸ்டைல். 'சொர்க்கத்தில் திருமணம்' தான் இன்னும் ஆகவில்லை ஸாரி கிடைக்கவில்லை.

காத்திருப்போம்.

vasudevan31355
17th June 2014, 08:53 AM
இப்போது ஒரு சூப்பர் பாடலைப் பாருங்கள்.

இப்பாடலில் இளவயது பால்வடியும் முகம் கொண்ட எஸ்,பி.பி என்ன ஒரு கலக்கு கலக்குகிறார் பாருங்கள்!

முகம்மது பின் துக்ளக்கில் மனோரமாவின் பிறந்த நாள் விழாவின் போது 'வெண்ணிற ஆடை' மூர்த்தி டி எம் எஸ் பின்னணிக் குரலில் பாடுவாரே 'பாவலன் பாடிய புதுமைப் பெண்ணை' என்று.

(ஆச்சி ரோலில் தெலுங்கில் ரமாபிரபா சரத்பாபு)

அதையே தெலுங்கில் கலக்கோ கலக்கு என்று கலக்குவார் எஸ்.பி.பி நடித்தபடியே. அந்த இளம் வயதில் பாலாவைப் பார்க்க என்னமாய் இருக்கிறது! (மியூசிக் அட்டகாசம்)

தமிழ்ப் பாடல்கள் திரியில் தெலுங்கு எதற்கு என்று ஒருசிலர் கேட்கலாம். (அதுவும் ஒருவர் 'கொல்டி வேலையைக் காட்டிட்டான்' என்று கழுத்தைத் திருக வருவார்)

காரணம் இருக்கிறது.

சற்றுப் பொறுங்கள்.

இப்போது காலையில் உற்சாமாக இப்பாடலைப் பார்த்துவிட்டு வேலைக்குக் கிளம்புங்கள்.


http://www.youtube.com/watch?v=vreyTaY9Y1c&feature=player_detailpage

gkrishna
17th June 2014, 09:41 AM
வாசு சார்
இந்த பாட்டை கேட்ட பிறகு எப்படி வேலைக்கு கிளம்பறது
தமிழ் version இல் ஒரு வரி வரும்
"நீ இருக்கும் இடத்தில குடி இருக்கும் .. குடி இருக்கும்
அன்பு குடி இருக்கும் "
சோவின் குசும்பு

gkrishna
17th June 2014, 09:44 AM
வாசு சார்
அப்பறம் அந்த சிலோன் ரேடியோ நிகழ்ச்சியில் பூராவும் பட்டியல் இட்டு விட்டீர்கள்
மதியம் 3 மணிக்கு "பூவும் பொட்டும் மங்கையர் மஞ்சரி " என்று ஒரு நிகழ்ச்சி நாதஸ்வர இசையுடன் வரும் ராஜேஸ்வரி சண்முகம் rj ஆக வருவர் ஆஹா என்ன ஒரு அருமையான நாட்கள்
இப்ப " கடமையும் வந்தது கவலையும் வந்தது "

vasudevan31355
17th June 2014, 10:15 AM
காலை வணக்கம் கிருஷ்ணா சார்.

காலையிலேயே கலக்குகிறீர்கள்.

முகம்மது பின் துக்ளக்கில் முழுக்க முழுக்க இந்திரா காந்தி அம்மையார் அவர்களை அந்தப் பாடலில் சோ அவர்கள் குறி வைத்திருப்பார். செம தில்லு.

அப்போது எனக்கு வயது எட்டு இருக்கும். எங்கள் கடலூரில் மஞ்சை நகர் மைதானத்தில் முகம்மது பின் துக்ளக் நாடகம் நடந்தது. அப்ப்போது இருந்த ஆட்சியாளர்களின் தொண்டர்கள் நாடகத்தை நடத்த விடாமல் கல்லெறிந்து நிறைய தொந்தரவு கொடுத்தனர். பல இடங்களிலும் இதே நிலைமைதான் என்று என் அம்மா சொல்வார்கள். ஆனால் சோ மசியலையே. நாடகத்தை முழுதாக நடத்தி விட்டுத்தான் சென்றார்.

பின் இரவு ஒன்பது மணிக்கு நாடகம் பார்த்து முடித்துவிட்டு கடலூர் துறைமுகம் காமர் டாக்கீஸில் தபால்காரன் தங்கை படம் பார்த்தது நன்றாக நினைவிருக்கிறது.

'தபால்காரன் தங்கை' படத்தை நைசாக சொல்லியாகி விட்டது. அப்படத்தின் முக்கியமான பாடலை விடலாமோ!

http://i1.ytimg.com/vi/9xdy8P6rFjw/sddefault.jpg

'கரிகாலன் கட்டி வைத்தான் கல்லணை'

காவிரி பெருக்கெடுத்தால் கொள்ளுமிடம் கொள்ளிடம் (காரணப்பெயர்!)
காதல் பெருக்கெடுத்தால் புகலிடம் பெண்ணிடம்

பன்னிரண்டு நூற்றாண்டு சென்றது
அணை பழுதில்லாமல் காலங்களை வென்றது
அந்தக் காலப் பெண்மை போன்ற அணை இது
குலம் அழுத்தமாக வாழ வைக்கும் துணை இது


http://www.youtube.com/watch?feature=player_embedded&v=9xdy8P6rFjw

அந்தக் காலக் காதல் பாடல்களில் நம் தமிழ் நாட்டின் சிறப்புகளை பொருத்தமாக அற்புதமாகச் சேர்த்து பெருமை சேர்த்தார்கள். கண்ணியம் காத்தார்கள்.

இன்றோ கோழி ப்ளட்டால 'குமுதா' என்று எழுதுகிறார்கள்

என்னத்த சொல்ல! என்னத்த செய்ய! என்ன நான் சொல்றது?

vasudevan31355
17th June 2014, 10:29 AM
கிருஷ்ணா சார்,

'படிக்காத மேதை' யின் அந்த 'இன்ப மலர்கள் பூத்துக் குலுங்கும் சிங்காரத் தோட்டம்' (டொன் டொன் டொன் டொட்டன்... டொன் டொன் டொன் டொட்டன்) பாடலின் முன்னிசையை ("பூவும் பொட்டும் மங்கையர் மஞ்சரி" யின் போதா?) சிலோன் ரேடியோவில் அளிப்பார்களே! சூப்பரா இருக்கும்.

gkrishna
17th June 2014, 10:33 AM
வாசு சார்
சந்துல சிந்து பாடறது இதுதானா
கரிகாலன் கட்டி வைத்தான் கல்லணை
இது மியூசிக் மாமா தானே
முத்துராமன் வாணிஸ்ரீ pair
வாணியம்மா எல்லோருடய்மே கொஞ்சம் chemistry அதிகம் தான்

gkrishna
17th June 2014, 10:34 AM
அதே அதே சபாபதே

vasudevan31355
17th June 2014, 10:42 AM
அதே அதே சபாபதே

கிருஷ்ணா சார்,

அட கோபாலா! நாராயணா!

போச்சு! வம்பை விலை கொடுத்து வாங்குறீங்க. இன்னைக்கு உங்க ராசி பலன் என்ன?

ஒருத்தரு அதே அதே சபாபதே வுக்கு சொந்தம் கொண்டாடி வரப் போறாரு.

சரி! நானும் உங்களோட சேர்ந்து சொல்லிட்டுப் போறேன்.

அதே அதே சபாபதே

ரெண்டு பெரும் சேர்ந்து திட்டை ஷேர் பண்ணிக்கலாம்.

நம்ம நவ் சார் பாட்டுக்கு பாட்டு திரியில் அன்பாகக் கேட்பார்.

'இன்னைக்கு என்ன டிபன் வாசு?' என்று.

இப்ப நான் உங்களைக் கேக்கிறேன்?

டிபன் ஆச்சா?

கொஞ்ச நேரம் காணோமே!:)

gkrishna
17th June 2014, 10:43 AM
"பொறுத்துக்கோ ஐயா பொறுத்துக்கோ " என்று நம்ம lr பாடல் ஒன்று நினைவிற்கு வருகிறது
அது இந்த தபால் காரன் தங்கை படத்திலா
இது நம்ம ksg படம் தானே ஜெமினி மாமா கூட உண்டு அல்லவோ

vasudevan31355
17th June 2014, 10:44 AM
வாசு சார்
சந்துல சிந்து பாடறது இதுதானா
கரிகாலன் கட்டி வைத்தான் கல்லணை
இது மியூசிக் மாமா தானே
முத்துராமன் வாணிஸ்ரீ pair
வாணியம்மா எல்லோருடய்மே கொஞ்சம் chemistry அதிகம் தான்

மாமாவேதான். கே.எஸ்.ஜி.என்றாலே பெரும்பாலும் மாமாதான்.

vasudevan31355
17th June 2014, 10:46 AM
"பொறுத்துக்கோ ஐயா பொறுத்துக்கோ " என்று நம்ம lr பாடல் ஒன்று நினைவிற்கு வருகிறது
அது இந்த தபால் காரன் தங்கை படத்திலா
இது நம்ம ksg படம் தானே ஜெமினி மாமா கூட உண்டு அல்லவோ

ஆமாம் சார். கரெக்ட். காதல் மன்னனும் உண்டு.

vasudevan31355
17th June 2014, 10:47 AM
பசிக்குது! தோ வந்துடறேன்.

gkrishna
17th June 2014, 10:48 AM
வாசு சார்
உங்கள் நகைச்சுவை அபாரம
சொந்த ஊர் cuddalore தானா அல்லது ஸ்ரீரங்கம்/கும்பகோணம்/மாயவரம்/நக நக நாகப்பட்டினம் எதாவது
எதற்கு கேட்கிறேன்நா எழுத்தில் கொஞ்சம் (கொஞ்சம் என்ன நிறையவே ) சுஜாதா வாடை வெரி வெரி humerous

mr_karthik
17th June 2014, 11:11 AM
நடிகர் திலகம் திரியின் ஜாம்பவான்களான வாசு சார், கோபால் சார், கிருஷ்ணாஜி, பார்த்தசாரதி, முரளி என அனைவரும் இங்கு வந்து தூள் கிளப்புவதைப் பார்த்தால் இந்தத் திரி நடிகர் திலகம் திரியின் அடுத்த பாகமாக அறிவித்து விடலாம் போலுள்ளது.

வேண்டாம் ராகவேந்தர் சார்,

அப்புறம் இங்கேயும் நாட்டாமை செலுத்த சில 'நாட்டு ஆமைகள்' வருவார்கள். 47,000 பதிவுகளுக்கு மேல் பலரால் பல்வேறு சிறப்பான பதிவுகள் பதிவிடப்பட்டு வளர்க்கப்பட்ட திரியை 'சில நூறு' பதிவுகள் மட்டுமே இட்டவர்கள் 'எங்களால்தான் திரியே வளர்ந்தது' என்று கொக்கரிப்பது போல இங்கும் கொக்கரிப்பார்கள். 20-க்கும் குறைவான பதிவிட்ட 'வாத்தியார்கள்' வந்து ஆணைகள் பிறப்பிப்பார்கள். எத்தனையோ பதிவர்கள் திரியை கஷ்ட்டப்பட்டு மெய்வருத்தம் பாராது வளர்த்திருக்க, ஏதோ இரண்டு மூன்று 'ஆர்'களால் திரி உயிரோடு இருப்பதாக சிலர் 'யெஸ் யெஸ்' என்பார்கள். ('ஆர்' என்பது நிச்சயம் உங்களைக் குறிப்பது அல்ல)

அவையெல்லாம் இங்கும் நடக்க வேண்டுமானால் சொல்லுங்கள். இப்போதே நாங்கள் மூட்டைகட்டி விடுகிறோம்.

gkrishna
17th June 2014, 11:13 AM
வாசு சார்
1979 தேவதை என்று ஒரு படம்
ஜெயந்தி heroine ஆக நடித்து வெளி வந்த ஒரு மலையாள dubbing அல்லது ரீமேக் ஆ என்று நினவு இல்லை . பழைய லாவண்யா என்று ஒரு நடிகை இருந்தார்கள் அவர்களும் நடித்து இருப்பார்கள்
ஷ்யாம் மியூசிக்
கலீர் கலீர் என்று காலம் ஜானகியின் ஜாலம்
இங்கே இரு கோடுகள் பாலாவின் சோலோ சோக பாடல்
மாந்தளிர் வணங்குகிறேன் உன்னை மீண்டும் ஜானகி பாடலின் உள்ளே குயில் கிளி என்று கூவும் நல்ல மெலடி அண்ட் வெரி குட் கோரஸ்
பாலமுரளி கிருஷ்ணாவின் சுப்ரபாதம் கூட ஒன்று உண்டு
இது நெல்லை பர்வதியில் பார்த்த நினவு .ஜெயந்திக்கு பரத நாட்டிய டிரஸ் போட்டு ஒரு போஸ்டர் பார்த்த நினவு

vasudevan31355
17th June 2014, 11:15 AM
கிருஷ்ணா சார்,

சுஜாதாவோட அப்சரஸ் என்னோட பேவரேட். அவர் 'படிக்கட்டில் ஏறினான்' என்று எழுதுவது என்பது

ன்
னா
றி


இப்படி அச்சாகி இருக்கும் புக்கில். சூப்பர்

gkrishna
17th June 2014, 11:16 AM
இந்த தேவதை பாடல்களும் சிலோன் ரேடியோ உபயத்தினால் ஹிட்
இன்பாக்ட் இந்த படத்தின் போஸ்டரில் கூட "இலங்கை வானொலியில் கேட்டு மகிழ்ந்த உங்கள் தேவதையின் பாடல்களை காண வாரீர்" என்ற வரிகள் கூட உண்டு

vasudevan31355
17th June 2014, 11:21 AM
வேண்டாம் ராகவேந்தர் சார்,

அப்புறம் இங்கேயும் நாட்டாமை செலுத்த சில 'நாட்டு ஆமைகள்' வருவார்கள். 47,000 பதிவுகளுக்கு மேல் பலரால் பல்வேறு சிறப்பான பதிவுகள் பதிவிடப்பட்டு வளர்க்கப்பட்ட திரியை 'சில நூறு' பதிவுகள் மட்டுமே இட்டவர்கள் 'எங்களால்தான் திரியே வளர்ந்தது' என்று கொக்கரிப்பது போல இங்கும் கொக்கரிப்பார்கள். 20-க்கும் குறைவான பதிவிட்ட 'வாத்தியார்கள்' வந்து ஆணைகள் பிறப்பிப்பார்கள். எத்தனையோ பதிவர்கள் திரியை கஷ்ட்டப்பட்டு மெய்வருத்தம் பாராது வளர்த்திருக்க, ஏதோ இரண்டு மூன்று 'ஆர்'களால் திரி உயிரோடு இருப்பதாக சிலர் 'யெஸ் யெஸ்' என்பார்கள். ('ஆர்' என்பது நிச்சயம் உங்களைக் குறிப்பது அல்ல)

அவையெல்லாம் இங்கும் நடக்க வேண்டுமானால் சொல்லுங்கள். இப்போதே நாங்கள் மூட்டைகட்டி விடுகிறோம்.

கார்த்திக் சார்.

நாட்டாமை... நாட்டு ஆமை.... யம்மாடி! ரகளை சார்.

லிஸ்ட்டில் நான் இருக்கேனா? ( தப்பிச்சுட்டேன்னு நினைக்கிறேன்) நான் ஆர்.வாசுதேவன். அதான் கேட்டேன்.

vasudevan31355
17th June 2014, 11:21 AM
இந்த தேவதை பாடல்களும் சிலோன் ரேடியோ உபயத்தினால் ஹிட்
இன்பாக்ட் இந்த படத்தின் போஸ்டரில் கூட "இலங்கை வானொலியில் கேட்டு மகிழ்ந்த உங்கள் தேவதையின் பாடல்களை காண வாரீர்" என்ற வரிகள் கூட உண்டு

வாவ்!

gkrishna
17th June 2014, 11:22 AM
வாசு சார்
சுஜாதாவின் கதையை குழப்பி எடுத்த "கரை எல்லாம் செண்பக பூ "
பாடல்கள் நினைவிற்கு வருகிறதா
1."ஏற்றம் இறைச்சவரே ஏனையா உங்களுக்கு இந்த பொண்ணு தோது இல்லை " சுசீலாவின் சோக குரல்
2. "காடு எல்லாம் பிட்சி பூ கரை எல்லாம் செண்பக பூவு நாடே மணக்குது
மொட்டை டைட்டில் சாங்
3. "ஏரியிலே இலந்தை மரம் தங்கச்சி வைச்ச மரம் ஒரு கையும் இல்லை பூவும் இல்லை " சேர்ந்திசை பாடல் வரிசை
4. ஹே குக் ராமன் கல்யாண் ராமன் - ஜானகி பாலா
இந்த படத்தில் ஸ்ரீப்ரிய ஜோடி ஆக நடித்த சுந்தர் நு ஒரு actor எங்கே போனார்
கன்னட அர்டிச்டே
தப்புதாளங்கள்,கிராமத்து அத்தியாயம் போன்ற படங்களிலும் வருவர்

vasudevan31355
17th June 2014, 11:33 AM
தேவதை படத்துல சிவக்குமார் தம்பியாகவும், ஜெயந்தி அக்காவாகவும் நடித்திருப்பார்கள் என்று நினைவு. கார்த்திக் சார்! உதவி பண்ணுங்க. please.

mr_karthik
17th June 2014, 11:36 AM
டியர் வாசு சார்,

இனி கேட்கவே முடியாதோ என்று நினைத்திருந்த கே.எஸ்.ராஜாவின் குரலைக் கேட்க வைத்ததற்கு மிக்க நன்றி.

படத்தில் வரும் வசனங்களோடு தன் குரலையும் எடிட் செய்து ஒலிபரப்பி, நிகழ்ச்சிக்கு சுவை சேர்ப்பதில் வல்லவர் ராஜா.

ராஜராஜ சோழன் இலங்கையில் வெளியானபோது, ஏதோ ஏ.பி.என் எதிரில் அமர்ந்து பேட்டிஎடுப்பது போல. "திரு ஏ.பி.நாகராஜன் அவர்களே, நீங்கள் எழுதி இயக்கிய ராஜராஜ சோழன் படத்தைப்பற்றி ரசிகர்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?" என்று கேட்டுவிட்டு உடனே படத்தின் துவக்கத்தில் ஏ.பி.என் பேசும் "பேரன்பு கொண்ட ரசிகர்களுக்கு எங்கள் நன்றி கலந்த வணக்கம்" என்று துவங்கி படத்தைப்பற்றிய அவரது முன்னுரையை ஒலிபரப்புவார். இருவரும் எதிரெதிரே அமர்ந்து பேசுவது போலிருக்கும்.

vasudevan31355
17th June 2014, 11:37 AM
http://upload.wikimedia.org/wikipedia/en/b/b9/KaraiyellamShenbagapoo.jpg

http://image1.frequency.com/uri/w354_h200_ctrim_ll/_/item/1/4/8/8/Tamil_Song_Karaiyellam_Shenbagapoo_Eriyi_148869965 _thumbnail.jpg

பாட்டுக்கள் நன்றாக இருந்தும் மொக்கை போட்ட படம்.

gkrishna
17th June 2014, 11:45 AM
தேவதை படத்துல சிவக்குமார் தம்பியாகவும், ஜெயந்தி அக்காவாகவும் நடித்திருப்பார்கள் என்று நினைவு. கார்த்திக் சார்! உதவி பண்ணுங்க. please.

correct vasu sir
பாயிண்ட்யை பிடிசிட்டுங்க

vasudevan31355
17th June 2014, 11:48 AM
நண்பர்களே! இவர் யாரென்று ஊகிக்க முடிகிறதா?

http://www.lankanewspapers.com/news/members/space/news_images/big/Aani_news_1332653991438.jpg

gkrishna
17th June 2014, 11:49 AM
கே எஸ் ராஜாவை கார்த்திக் சார் நினவு செய்ததற்கு நன்றி
கே.எஸ் ராஜாவின் குரலை கேட்க வைத்ததற்கு வாசு சார் க்கு நன்றி

சவால் படத்தில் கமல் கூட இதை ட்ரை செய்து இருப்பார்
p p ராஜா என்பர் (pp for பிக் பாக்கெட் )

mr_karthik
17th June 2014, 11:54 AM
டியர் வாசு சார்,

தேவதை படம் சிவகுமார், லாவண்யா ஜோடியாக நடித்த படம். ஜெயந்திதான் அக்கா. நெசவுத்தொழில் செய்து குடும்பத்தைக் காப்பாற்றுவார். (தறி நெய்யும்போதுதான் 'கலீர் கலீர்' பாட்டு).

ஜெயந்தி மீது தவறான பழிசுமத்தி, அந்த ஊர் வழக்கப்படி வீட்டு வாசலில் சிவப்பு விளக்கைக் கட்டி விடுவார்கள். வெளியிருந்து திரும்பும் சிவகுமார் தன் வீட்டு வாசலில் கட்டப்பட்ட சிவப்பு விளக்கை உடைத்தெறிந்து தன் அக்காவுக்காக ஊர் மக்களிடம் ஆக்ரோஷமாக வாதாடுவார்.

ஜெயந்தியை ஒருவன் கற்பழிக்கும் (?????) காட்சி கூட உண்டு. ஒரு மாதிரி சவசவ கதை. சென்னை அலங்கார் தியேட்டரில் காலைக்காட்சி பார்த்து தலைவலி வந்தது.

chinnakkannan
17th June 2014, 12:02 PM
மாந்தளிரே மயக்கமென்ன எனக்கு மிகவும் கவர்ந்த பாடல்..ரொம்ப்ப அழகா இருக்கும் அதுவு்ம் இரவில் கேட்டால்...படம் வந்து பலவருடங்களுக்கப்புறம் வீடியோ பார்த்ததில் வாழ்க்கையே வெறுத்து விட்டேன்.. விஷீவல் ரொம்ப்ப்ப சுமா...

chinnakkannan
17th June 2014, 12:06 PM
கரையெல்லாம் செண்பகப்பூ விகடனில் தொடராக வந்த போது..எங்கள் வீட்டிலிருந்து இரட்டைத் தெருவிலிருந்த என் சகோதரி வீட்டிற்குச் சென்று அங்கு அவரது மாமியார் எடுத்து வைத்திருக்கும் விகடனைப் படித்து வருவேன்..அந்தத் தொடர் தான் படிக்க முதலில் கைகள் செல்லும்..

படம் எடுக்கிறார்கள என்றதும் ஆசை ஆசையாய் இருந்தது..ரிலீசானதும் (மதுரை கல்பனா தியேட்டர்) போய்ப் பார்த்தால் ஏமாற்றமே.. ஏன்.. படத்தின் கதைக்குப் பொருத்தமாய் ஸ்ரீப்ரியா பிரதாப் சுமலதா மனோரமா கிராமம் என எல்லாம் இருந்தது..பட் கதையோட்டத்தில் ஊடாடிய கல்யாண ராமன்(ப்ரதாப்) வெள்ளி(ஸ்ரீப்ரியா) காதலை அப்படியே திரைப்படத்தில் எடுத்து விட்டார்கள். அது தான் ஜீவனே..அதை எடுத்ததால் தான் படம் மொக்கை என ஆகி விட்டது..

mr_karthik
17th June 2014, 12:09 PM
இதுவும் அலங்காரில் பார்த்த படம்தான்...., 'இனிக்கும் இளமை' . இயக்குனர் (மறைந்த) எம்.ஏ.காஜாவின் முதல் படம்.

சுதாகர், ராதிகா ஜோடி. ஸ்ரீகாந்துக்கு அருமையான பாத்திரம். பெண்களை விரட்டி, விரட்டி கற்பழித்ததற்கு மாறாக தன்னை விடாமல் துரத்தும் மீராவை விட்டு விலகி விலகி ஓடும் ரோல்.

சுதாகர் ராதிகா வழக்கம்போல மொக்கை.

சங்கர் கணேஷ் இசையில் "இனிக்கும் இளமை என்னிடம் இருக்கு" என்ற பாடல் நினைவில் உள்ளது. படம் சராசரிக்கும் கீழே.

chinnakkannan
17th June 2014, 12:15 PM
கவிதா கவிதா என்றொரு நடிகை ப்ளஸ் முத்துராமன் நடித்த காற்றினிலே வரும் கீதம்..பாடல்லாம் ரொம்ப ரொம்ப அழகு..

கண்டேன் எங்கும் பூமகள் நாட்டியம்
காண்பதெல்லாமே அதிசயம் ஆனந்தம்
காற்றினிலே வரும் கீதம்

ஒரு வான வில் போலே என் வாழ்விலே வந்தாய்

சித்திரச் செவ்வானம் சிரிக்கக் கண்டேன்

க.எ. ந ஆரம்பித்து அந்த நடிகையைப் பற்றி எதுவும் சொல்லவில்லையே என சிலர் வருத்தப்படுவார்கள் எனில்..அவரும் ஒரு டைப் அழகு தான்..இளமைக் காலத்தில் துள்ளிக் குதித்து துறு துறு கண்களுடன் அங்கும் இங்கும் அலைபாய்ந்து ஓடிடும் சின்னஞ்சிறு கன்றுக் குட்டியைப் போல - அவருடைய அழகும் இளமையில் இருந்தது :)

chinnakkannan
17th June 2014, 12:18 PM
//இதுவும் அலங்காரில் பார்த்த படம்தான்...., 'இனிக்கும் இளமை' . இயக்குனர் (மறைந்த) எம்.ஏ.காஜாவின் முதல் படம்//
ரொம்பப் பொறுமை தான் உங்களுக்கு கார்த்திக் சார்.. சுதாகரின் படமென்றாலே காததூரம் ஓடிவிடுவேன்/வோம்..அவரது காலகட்டத்தில் இன்னொரு நபர் விஜயன்..
இவர் நடித்திருக்கிறார் என்றே இந்த ஆயிரம் மலர்களே மலருங்கள் பாடல் இடம்பெற்ற படம்- மறந்து போச் - ரொம்பப் பிடித்திருந்தும் பார்க்காமலேயே விட்டுவிட்டேன்..( ஓ ஞாபக்ம் வந்துடுச்சு நிறம் மாறாத பூக்கள்)..அவரை ஹீரோவாகப் போட்டுப் படம் எடுத்ததால் தான் முத்துராமனுக்கு ஏக நஷ்டம் என க் கேள்வி (பணம் பெண் பாசம்)

chinnakkannan
17th June 2014, 12:22 PM
தப்புத் தாளங்கள் சுந்தர் பற்றி பேச்சு வந்திருந்தது..அவர் காளியிலும் வில்லன்களில் ஒருவராக வருவார்..(ஃபடாபட் பாடும் பாட்டு அழகழகாப் பூத்திருக்கு ஆசை வைக்கத்தெரியலையே நல்ல பாட்டு) பின் கன்னடத்தில் நடிக்கப் போய்விட்டார்.. அவரது மனைவியும் த்மிழ் நடிகைதான்..வைதேகி காத்திருந்தாளில் விஜயகாந்தைக் காதலித்ததால் அல்பாயுசில் இறந்து போகும் ரோலில் நடித்தவர்.. அவரும் கன்னடத்தில் நடிகையாகி செட்டில் ஆகிவிட இருவருக்கும் பிறந்த மேக்னா நாயுடுவோ மேகாவோ - ஒரு பெண் - சில தமிழ்ப் படங்களில் நடித்திருக்கிறார்..

vasudevan31355
17th June 2014, 12:23 PM
டியர் வாசு சார்,

தேவதை படம் சிவகுமார், லாவண்யா ஜோடியாக நடித்த படம். ஜெயந்திதான் அக்கா. நெசவுத்தொழில் செய்து குடும்பத்தைக் காப்பாற்றுவார். (தறி நெய்யும்போதுதான் 'கலீர் கலீர்' பாட்டு).

ஜெயந்தி மீது தவறான பழிசுமத்தி, அந்த ஊர் வழக்கப்படி வீட்டு வாசலில் சிவப்பு விளக்கைக் கட்டி விடுவார்கள். வெளியிருந்து திரும்பும் சிவகுமார் தன் வீட்டு வாசலில் கட்டப்பட்ட சிவப்பு விளக்கை உடைத்தெறிந்து தன் அக்காவுக்காக ஊர் மக்களிடம் ஆக்ரோஷமாக வாதாடுவார்.

ஜெயந்தியை ஒருவன் கற்பழிக்கும் (?????) காட்சி கூட உண்டு. ஒரு மாதிரி சவசவ கதை. சென்னை அலங்கார் தியேட்டரில் காலைக்காட்சி பார்த்து தலைவலி வந்தது.


ஆமாம் சார். நீங்கள் எழுதியதைப் படிக்க படிக்க காட்சிகள் ஒவ்வொன்றாக நினைவுக்கு வருகின்றன. முற்றிப் போன ஜெயந்தி நன்கு நினைவில் இருக்கிறது. ஜெயந்தியிடம் சிவக்குமார் வாதாடும் காட்சிகளும் நினைவுக்கு வருகின்றன. நன்றி சார்!

vasudevan31355
17th June 2014, 12:24 PM
தப்புத் தாளங்கள் சுந்தர் பற்றி பேச்சு வந்திருந்தது..அவர் காளியிலும் வில்லன்களில் ஒருவராக வருவார்..(ஃபடாபட் பாடும் பாட்டு அழகழகாப் பூத்திருக்கு ஆசை வைக்கத்தெரியலையே நல்ல பாட்டு) பின் கன்னடத்தில் நடிக்கப் போய்விட்டார்.. அவரது மனைவியும் த்மிழ் நடிகைதான்..வைதேகி காத்திருந்தாளில் விஜயகாந்தைக் காதலித்ததால் அல்பாயுசில் இறந்து போகும் ரோலில் நடித்தவர்.. அவரும் கன்னடத்தில் நடிகையாகி செட்டில் ஆகிவிட இருவருக்கும் பிறந்த மேக்னா நாயுடுவோ மேகாவோ - ஒரு பெண் - சில தமிழ்ப் படங்களில் நடித்திருக்கிறார்..

தெய்வமே!

mr_karthik
17th June 2014, 12:25 PM
பாபு மகாராஜா இயக்கத்தில், சந்திரபோஸ் இசையில் 1981-ல் வந்த படம் 'தரையில் வாழும் மீன்கள்'

விஜயபாபு-அம்பிகா ஜோடிக்கு இரண்டு டூய்ட்கள்.

'மணிமாளிகை கண்ட மகராணியே' ஜெயச்சந்திரன் சோலோ.

'அன்பே சிந்தாமணி... இன்பத்தேமாங்கனி' மலேசிய வாசுதேவன்-ஜானகி.

ஜானகிக்கு ஒரு தனிப்பாடல் 'அழகான சின்னக்குட்டி ஆட்டம் ஆடுது' . இந்தப்பாடல் படத்தில் உயர்ந்த நடிகை வனிதாவுக்கு.

படம் சுமார், ஓட்டம் சுமாருக்கும் கீழே.

chinnakkannan
17th June 2014, 12:27 PM
//முற்றிப் போன ஜெயந்தி நன்கு நினைவில் இருக்கிறது. ஜெயந்தியிடம் சிவக்குமார் வாதாடும் காட்சிகளும் நினைவுக்கு வருகின்றன. நன்றி சார்// நான் வயதானதையெல்லாம் நினைவில் வைத்திருக்க மாட்டேன்..ஜெயந்தி என நினைத்தால் நீர்க்குமிழி தான் நினைவுக்கு வரும்.. கன்னி நதியோரம் மின்னி விளையாடும்..பெண்ணழகு மேஏஏனி...என்ன கதை கூறும் (ஒரு பெரிய நாவலே கூறும் :) ) வண்ண விழிமேடை வந்த இளம்பேடை சின்ன இடையோ டு டுடு சேர்ந்து கவிபாடும்..டிஎம் எஸ் அனுபவித்துப் பாடியிருப்பார்..

vasudevan31355
17th June 2014, 12:27 PM
http://i1.ytimg.com/vi/v0eZrvTp8Ow/maxresdefault.jpg

சின்னக் கண்ணன் சார்,

குடமில்லாமல் நிற்பவர்தானே நீங்கள் சுந்தரின் மனைவியாகக் குறிப்பிட்டது?

chinnakkannan
17th June 2014, 12:29 PM
பாபு மகாராஜா இயக்கத்தில், சந்திரபோஸ் இசையில் 1981-ல் வந்த படம் 'தரையில் வாழும் மீன்கள்'

விஜயபாபு-அம்பிகா ஜோடிக்கு இரண்டு டூய்ட்கள்.

'மணிமாளிகை கண்ட மகராணியே' ஜெயச்சந்திரன் சோலோ.

'அன்பே சிந்தாமணி... இன்பத்தேமாங்கனி' மலேசிய வாசுதேவன்-ஜானகி.

ஜானகிக்கு ஒரு தனிப்பாடல் 'அழகான சின்னக்குட்டி ஆட்டம் ஆடுது' . இந்தப்பாடல் படத்தில் உயர்ந்த நடிகை வனிதாவுக்கு.

படம் சுமார், ஓட்டம் சுமாருக்கும் கீழே.

இது மீனாட்சி தியேட்டரில் காலைக் காட்சி - காலேஜ் கட் அடித்துப் பார்த்த படம் ..அம்பிகையின் இரண்டாவது படம்... முக்கியமான ஒரு பாட்ட விட்டுப்புட்டீங்களே.... மழைக்கால மேகம் நீர் கொண்டு வந்து மலையின் முடிவில் பொழியும் வழியும் நிலமும் அதனால் குளிராதோ... நல்ல ஸோலோ..

chinnakkannan
17th June 2014, 12:29 PM
கொஞ்சம் தெளிவாகத் தெரியவில்லை..இது வைதேகி காத்திருந்தாள் ஸ்டில் எனில் ஆம்..:)

vasudevan31355
17th June 2014, 12:30 PM
ஒரு பெரிய நாவலே கூறும்

சின்னக் கண்ணன் சார்,

தங்களுக்கு குரும்பூர் குப்புசாமி என்று நீங்கள் அனுமதித்தால் பெயர் வைக்கலாம் போல் இருக்கிறதே!

vasudevan31355
17th June 2014, 12:33 PM
கொஞ்சம் தெளிவாகத் தெரியவில்லை..இது வைதேகி காத்திருந்தாள் ஸ்டில் எனில் ஆம்..:)

ஆம்! அது 'வைதேகி காத்திருந்தாள்' ஸ்டில்தான்.

vasudevan31355
17th June 2014, 12:34 PM
சரி! 'இன்றைய ஸ்பெஷலை' இன்னும் பதிவு செய்யவில்லை. ரெடி பண்ண நேரம் எடுத்து விட்டது. போட்டு விட்டு ஆபீசுக்கு கிளம்புகிறேன்.

vasudevan31355
17th June 2014, 12:35 PM
இன்றைய ஸ்பெஷல்(6)

இன்றைய ஸ்பெஷலாக வருவது ஒரு மிக மிக மிக அபூர்வ பாடல்.

http://4.bp.blogspot.com/-U7SacxKlPPg/TggXeEYlpRI/AAAAAAAAIkw/cX9bRLyKJ80/s320/Magarantham%2B1981.jpeg

1981-இல் வெளிவந்த 'மகரந்தம்' திரைப்படத்தின் மறக்கமுடியாத நம் ஊடகங்களால் மறக்கடிக்கப்பட்ட பாடல். (சிலோனைத் தவிர)

https://i.ytimg.com/vi/vqKNR8kF6qo/mqdefault.jpg

'இயக்குனர் திலகம்' பார்மிலிருந்து முற்றிலுமாக நழுவிய நேரத்தில் இயக்கிய படம் இது.

ராதிகா, அருணா ,மோகன்ராம் ஆகியோர் நடித்திருந்த இப்படத்திற்கு இசை இரட்டையர்கள் சங்கர் கணேஷ்.

சங்கர் கணேஷ் இரட்டையர்களை லேசில் எடை போட்டு விட முடியாது. சமயத்தில் மெல்லிசை மன்னரையே அவர்கள் சமயத்தில் விஞ்ச முயன்று அதில் வெற்றியும் சில சமயம் அவர்கள் கொள்வதுண்டு.

இளையராஜா மண் மணமுள்ள கிராமத்துப் பாடல்களில் அப்போது தூள் கிளப்பிக் கொண்டிருந்தபோது 'கன்னிப்பருவத்திலே' படத்தில் சங்கர் கணேஷ் விஸ்வரூபம் எடுத்தார்கள் மெல்லிசை மன்னர் 'நினைத்தாலே இனிக்கும்' திரைப்படத்தில் எடுத்தது போல.

இரட்டையர்களின் இசையமைப்பில் அவள், வெள்ளிகிழமை விரதம், இதயவீணை, நட்சத்திரம், ஒரு பாடலாக இருந்தாலும் இளையராஜாவிற்கு கொஞ்சமும் குறையாத பாடலை ('நானொரு பொன்னோவியம் கண்டேன்') இவர்கள் கொடுத்த 'கண்ணில் தெரியும் கதைகள்' ('நான் ஒன்ன நெனச்சேன்'...வாலிபக் கவிஞரின் வைர வரிகளுக்கு ) என்று எத்தனையோ படங்களைச் சொல்லலாம். (இதில் இன்னொரு வேதனை. இணையத்தில் இப்பாடலை இளையராஜா இசை அமைத்ததாக சிலர் தவறான தகவல்களைத் தந்து கொண்டிருக்கிறார்கள்)

அதில் குறிப்பிடத்தகுந்தவற்றில் ஒன்று 'மகரந்தம்'.

http://comborice.com/wp-content/uploads/2012/03/play.jpg

நம் பாலாவை வெகு அற்புதமாக இப்படத்தில் இவர்கள் பாட வைத்திருப்பார்கள். இரட்டையர்களுக்கு இன்னொரு விசேஷம் என்னவென்றால் சுசீலாவையும், பாலாவையும் இணைந்து இவர்கள் பாட வைத்தார்கள் என்றால் உற்சாகத் துள்ளல் அற்புதமாக களைகட்டும்.

அப்படி ஒரு பாடல்தான் இது.

நீயின்றி நானோ
நானின்றி நீயோ
நிலவின்றி வானோ
இதை நினைவில் கொள்ளாயோ

ஏனிந்தக் கோபம்
இதிலென்ன லாபம்
ஏனிந்தக் கோபம்
இதிலென்ன லாபம்

என் காதல் கீதம் எந்நாளும் நீயன்றோ

வானவில் ஏழு வண்ணக் காட்சியன்றோ
காதலோ கோடி மலராமன்றோ
காட்சியின் சாட்சி மனம்தான் அன்றோ

வானவில் ஏழு வண்ணக் காட்சியன்றோ

வாடாத மேனி (பாலாவின் கொள்ளை சிரிப்பு)
சூடான ராணி
பாடாத தேனீ
பெண் பாவை நீயன்றோ

பாடாத ராகம்
போடாத தாளம்
பாடாத ராகம்
போடாத தாளம்
ஆடாத தீபம்
என் தெய்வம் நீயன்றோ

வானவில் ஏழு வண்ணக் காட்சியன்றோ
காதலோ கோடி மலராமன்றோ
காட்சியின் சாட்சி மனம்தான் அன்றோ

வானவில் ஏழு வண்ணக் காட்சியன்றோ

விரும்பாத எண்ணம்
திரும்பாத வண்ணம்
விரும்பாத எண்ணம்
திரும்பாத வண்ணம்
அரும்பான முல்லை
குறுநகையும் சிந்தாதோ

அரும்பாக மின்னும்
குறும்பான எண்ணம்
அரும்பாக மின்னும்
குறும்பான எண்ணம்
கரும்பாகும் வண்ணம்
கண் பார்வை சொல்லாதோ

வானவில் ஏழு வண்ணக் காட்சியன்றோ
காதலோ கோடி மலராமன்றோ
காட்சியின் சாட்சி மனம்தான் அன்றோ

வானவில் ஏழு வண்ணக் காட்சியன்றோ
வானவில் ஏழு வண்ணக் காட்சியன்றோ

இந்தப் பாடலை பாலாவும் சுசீலாம்மாவும் உச்சரிக்கும் அழகு இருக்கிறதே! நம் சொத்துக்கள் அத்தனையையும் எழுதிக் கொடுத்து விடலாம். என்ன ஒரு தெளிவு! என்ன ஒரு உச்சரிப்பு!

'பாடாத ராகம்.... போடாத தாளம்'... வரிகளை என்று இரண்டாம் முறை உச்சரிக்கையில் பாலா 'போடாத தா..ஆஆஆ ...ளம்' என்று உச்சரிப்பதை எத்தனை முறை கேட்டேனோ தெரியாது. கண்ணியப் பாடகியும் அப்படியே.

அதே போல இரட்டையர்கள் அற்புதமான பின்னிசை அளித்திருப்பார்கள். பாடலின் வரிகள் தெள்ளத் தெளிவாக காதில் தேனருவியாய் வந்து கொட்டும்.

ஒரு சில பாடல்கள் இப்படி மிக மிக அபூர்வமாய் பாடகர்களுக்கும் இசையமைப்பாளர்களுக்கும் அமைந்து விடும்.

நம் வாழ்நாள் முழுதும் இத்தகைய பாடல்களுக்கு நம்மை அடிமை ஆக்கிவிடும்

எத்தனையோ அற்புத பாடல்கள் நினைவுக்கு வந்தும், வராமலும் இருக்கின்றன.

ஆனால் இந்தப் பாடல் தமிழ்ப்பட பாடல்களின் என்னுடைய டாப் 10 பட்டியலில் எப்போதோ இடம் பிடித்து விட்டது.

ஆனால் யாருடனும் பகிர்ந்து கொள்ள முடியவில்லை. (இப்படத்தில் பாலாவின் இன்னொரு அருமையான பாடல் உள்ளது. அதற்கு அப்புறம் வருகிறேன்)

அன்பு ராகவேந்திரன் சாருடன் நேற்று செல்லில் பேசிய போது நாளை இந்தப் பாடலை 'இன்றைய ஸ்பெஷலா' கப் போடலாமா சார்?' என்றதற்கு (இத்தனைக்கும் படத்தின் பெயரை மாத்திரமே அவரிடம் சொன்னேன். பாடலை சஸ்பென்சாக வைத்தேன்) ஆனால் அவரோ எமகாதகர். (செல்லமாக) அரை நொடியில் பாடலின் வரிகளை கொஞ்சமும் யோசிக்காமல் சொல்லி என்னை மிரள வைத்தார்.

அப்போதுதான் புரிந்தது இப்பாடலை நம்மைப் போலவே ரசிக்க நிறையப் பேர் இருக்கிறார்கள் என்று.

இப்பாடல் வெளிச்சத்திற்கு வந்து அனைவர் உதடுகளும் இப்பாடலை உச்சரிக்க வேண்டும் என்று தணியாத தாகம் எனக்கு.

இந்தப் பாடலைக் கேட்டுவிட்டு நிச்சயம் இந்தப் பாடலின் சிறப்பை நண்பர்கள் அனைவரும் பதிய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

மிகுந்த மன சந்தோஷத்தோடு நான் உணர்வுபூர்வமாய் அளிக்கும், எக்காலத்திலும் அழியாப் புகழ் பெறப் போகும், என் உள்ளமெல்லாம் கொள்ளை கொண்ட 'நீயின்றி நானோ பாடல் இதோ'!


http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=9eUCXCevRNo

chinnakkannan
17th June 2014, 12:51 PM
Nice vasu sir..இன்றைய ஸ்பெஷல்..ஆனால் நான்கேட்டதில்லை..வீடுசென்றுகேட்டுச் சொல்லுகிறேன்..:)

chinnakkannan
17th June 2014, 12:53 PM
அந்த புகைப்படக் காரி யார்.. சுகுமாரியின் சாயல் தெரிகிறது..

gkrishna
17th June 2014, 01:43 PM
தப்புத் தாளங்கள் சுந்தர் பற்றி பேச்சு வந்திருந்தது..அவர் காளியிலும் வில்லன்களில் ஒருவராக வருவார்..(ஃபடாபட் பாடும் பாட்டு அழகழகாப் பூத்திருக்கு ஆசை வைக்கத்தெரியலையே நல்ல பாட்டு) பின் கன்னடத்தில் நடிக்கப் போய்விட்டார்.. அவரது மனைவியும் த்மிழ் நடிகைதான்..வைதேகி காத்திருந்தாளில் விஜயகாந்தைக் காதலித்ததால் அல்பாயுசில் இறந்து போகும் ரோலில் நடித்தவர்.. அவரும் கன்னடத்தில் நடிகையாகி செட்டில் ஆகிவிட இருவருக்கும் பிறந்த மேக்னா நாயுடுவோ மேகாவோ - ஒரு பெண் - சில தமிழ்ப் படங்களில் நடித்திருக்கிறார்..

வைதேகி காத்து இருந்தாள் விஜயகாந்த் மனைவி பிரமிள ஜோஷி என்று நினவு

gkrishna
17th June 2014, 03:04 PM
வாசு சார்
இந்த பாட்டும் சிலோன் ரேடியோவில் பிரபலமான பாடல் நீங்க சொன்ன மாதிரி
ஏன் இந்த கோபம் யாருக்கு லாபம்
சுசீலாவின் உச்சரிப்பை கவனியுங்கள்
கதாநாயகி அருணா தெரிகிறது
நாயகன் மோகன்ராம் இவர் என்ன ஆனார் பிறகு
rare gem of பாலா
நீங்க சொன்ன மற்றும் ஒரு பாலா பாடல்
"கடலில் அலைகள் பொங்கும் ஆனால் கரையை தாண்டுமோ " சரியா

gkrishna
17th June 2014, 03:29 PM
மகரந்தம் பாலாவின் பாடல் கேட்கும் போது ஒரு நினவு
அர்த்தமுள்ள ஆசைகள் என்று ஒரு படம்
இதன் இசை சங்கர் கணேஷ் ஆ அல்லது கங்கை அமரன் ஆ என்று
ஒரு debate எப்போதும் உண்டு

"கடலோடு நதிக்கு என்ன கோபம்
காதல் கவி பாட விழிக்கென்ன நாணம்
இளம் காற்று தீண்டாத சோலை
மண்ணில் எங்கேயும் பார்த்தாயோ என் தோட்ட பூவே "

முதல் சரணம்

நீல வான மேகம் போல் காதல் வேனில் தவழுகிறேன்
நீரிலாடும் பூவை போல ஆசை நெஞ்சம் மயங்குகிறேன்
ஓடை மீனே ஜாடை பேசு
வனிதாமணி வனமோகினி புதுமாங்கனி சுவையே தனி
புதுவெள்ளம் போலே வாராய்
இந்த சரணத்தில் பாலாவின் குரலை கேட்டு பாருங்கள்
அந்த எழுத்து "நீ" அவர் வாயில் சிக்கி கொண்டு சிரித்து கொண்டு இருப்பதை
அதிலும் இறுதியில் வாராய் என்று முடிக்கும்போது
அதே போல் ஆரம்பத்தில் சோலை என்று ஒரு இழு இழு இழுப்பார்

அடுத்த சரணம் கேளுங்கள்
"மோக வீணை என்று உன்னை நானும் மீட்டி பாடிடவா
பாரிஜாத மாலை போல மார்பில் உன்னை சூடிடவா
தோகை நீயே மேடை நானே
மதன் வீசிடும் கணை பாயுது
மலர் மேனியும் கொதிப்பாகுது
குளிர் ஓடை நீயே வா வா "

கடலோடு நதிக்கு என்ன கோபம்
காதல் கவி பாட விழிக்கென்ன நாணம்
இளம் காற்று தீண்டாத சோலை
மண்ணில் எங்கேயும் பார்த்தாயோ என் தோட்ட பூவே

chinnakkannan
17th June 2014, 03:42 PM
//வனிதாமணி வனமோகினி// எனக்கு விக்ரம் தான் நினைவில்.. வனிதாமணி வனமோகினி பண்பாடு..உன்கண்களோ திக்கிதிக்கிப் பேசுதடி என் நெஞ்சிலே தக்க திமி தாளமடி ..பாலாதானில்லை..

கடலோடு நதிக்கென்ன கோபமும் நல்ல பாட்டு..

mr_karthik
17th June 2014, 03:47 PM
டியர் வாசுதேவன் சார்,

மகரந்தம் படத்தில் இடம்பெற்ற 'நீயின்றி நானோ' பாடலை இப்போதுதான் பார்க்கிறேன். இதற்கு முன் கேட்டதில்லை / பார்த்ததில்லை அதற்கு நான் பொறுப்பல்ல. நமது டி.வி.சேனல்கள்தான் பொறுப்பு.

பிறகென்ன?. பொழுதன்னைக்கும் பழைய பாடல்களை ஒளிபரப்புகிறோம் என்று சொல்லிக்கொண்டு ஒரு இருபது, இருபத்தைந்து பாடல்களையே ஒளிபரப்பிக் கொண்டிருந்தால் இது போன்ற காணக்கிடைக்காத அபூர்வங்களை காண்பது / கேட்பது எப்படி?.

இன்றைய ஸ்பெஷல் என்ற தலைப்புக்கேற்ற அருமையான பாடல். காணச்செய்ததற்கு மிக்க நன்றி வாசு சார்....., ஜமாய்ங்க.

gkrishna
17th June 2014, 04:23 PM
கார்த்திக் சார்
தரையில் வாழும் மீன்கள் பாடல் அனைத்துமே ஹிட்
சந்திர போஸ் ஆரம்ப கால பாடல்கள்
இசைஅமைப்பாளர் தேவா ஒரு பேட்டியில் "நானும் சந்திர போஸ்ம் இணைத்து தான் வேலை செய்து கொண்டு இருந்தோம். சந்திர போசெக்கு சான்ஸ் கிடைச்ச உடன் என்னை கழட்டி விட்டு விட்டார் " என்று கூறி இருந்தார்
1980-82 கால கட்டங்களில் முண்டக்கண்ணி அம்மன் கோயில் திருவிழா நாட்களில் தேவா சந்திரபோஸ் மேடை கச்சேரி கேட்ட நினைவு உண்டு
இந்த சந்திர போஸ் தானே விச்சுவின் இசையில் "ஏண்டி முத்தம்மா "
என்று ஆறு புஷ்பங்கள் படத்தில் பாடினார்

gkrishna
17th June 2014, 04:29 PM
கார்த்திக் சார்
நீங்கள் சொன்னது போல் முரசு மற்றும் சன் லைப் இரண்டுமே
4 அல்லது 5 cd களை வைத்து கொண்டு பஜனை செய்து கொண்டு இருக்கிறார்கள் . உண்மையில் பாடல்களில் இண்டரெஸ்ட் உள்ளர்வர்கள் யாரவது விடியோ ஜாக்கி ஆகவோ அல்லது நிகழ்ச்சி தொகுப்பளராகவோ
வந்தால் தான் ரசிக்கும் போல் இருக்கும்

gkrishna
17th June 2014, 04:43 PM
எங்கம்மா மகாராணி என்று ஒரு மொக்கை படம்
டைரக்டர் m a காஜா என்று நினவு
விஜய் பாபு,ரூபா நடித்து இருப்பார்கள்
ஷங்கர் கணேஷ் மியூசிக்
"மாலையில் பூத்த மல்லிகை பூக்களே "
பாலா வாணியின் சந்தோஷ குரலை இந்த பாடலில் காணலாம்
violin இசை interlude ஆக வரும்

chinnakkannan
17th June 2014, 05:30 PM
க்ருஷ்ணா சார்..ஏண்டி முத்தம்மா பாட்டு.. பைரவி தேவிதியேட்டர் பொங்கல் என நினைவு.. அந்தப் பாட்டில் அப்போதுகேட்ட வரி இன்னும் நினைவில்.. சுடச் சுடக் காளைப் பசு மேயலாமா.. ஹையாங்க்..இன்னும் எனக்கு அர்த்தம் புரியலை :)

RAGHAVENDRA
17th June 2014, 06:15 PM
அம்மம்மா ... என்ன வேகம் .... யாருக்கு பதில் சொல்றதுன்னு தெரியலியே..

எல்லோருக்கும் பொதுவாக பாராட்டுக்கள்...

நீங்கள் எல்லோருமே இந்தப் பாட்டைக் கேட்டு விட்டு இந்த பல்லவியைப் பாடுவீர்கள் என்று நிச்சயம் எனக்குத் தெரியும்..

என்னதான் சொல்லுங்கள்.. மெல்லிசை மன்னரின் இசையே தனிதான்...

என்ன நான் சொல்லுறது..

இதைத் தான் ரொம்ப ரசிச்சேன்... எங்க ஊர் கண்ணகி...

http://www.inbaminge.com/t/e/Enga%20Oor%20Kannagi/

RAGHAVENDRA
17th June 2014, 06:24 PM
1970களின் இறுதியில்தொடங்கப் பட்டு 80ல் வெளிவந்த பம்பாய் மெயில் 109 படத்தின் இந்தப் பாடல் காலம் காலமாக என்னைக் கட்டி வைத்த பாடல். சுசீலாவின் குரலில் மெய் மறக்கச் செய்யும் பாடல். முன்னொரு முறை ரவிச்சந்திரனுக்கான திரியில் பகிரந்து கொள்ளப் பட்டுள்ளது. வித்தியாசமான தாளக் கட்டில் பாங்கோஸ் அமர்க்களமாக உடன் வர வயலின் புல்லாங்குழல் என இசைக் கருவிகள் நம்மைக் கட்டிப் போட...

கட்டுவேன் பாட்டில் உன்னை என்று மெல்லிசை மன்னர் சொன்ன பாடல்...

http://youtu.be/QxbFZsh-DrM

mr_karthik
17th June 2014, 07:13 PM
பம்பாய் மெயில் பாடலில் ரவிச்சந்திரன் சங்கீதா ஜோடியைப்பார்த்ததும், ஜெய்சங்கர் சங்கீதா நடித்த 'நெஞ்சுக்கு நீதி' நினைவுக்கு வந்து விட்டது. இதுவும் அலங்காரில் காலைக்காட்சியில்தான். (நண்பகல் காட்சியில் ரஜினியின் பிரியா ஓடிக்கொண்டிருந்தது).

சங்கர் கணேஷின் இசையில் "சோழனின் மகளே வா.. சுந்தரத்தமிழே வா" என்ற பாடலில் ஜெய்யும் சங்கீதாவும் ராஜாராணி உடையில். டி.எம்.எஸ். - வாணிஜெயராம். 'இது நீரிலாடும் மீனும் இல்லையே' வரியில் வாணி கொஞ்சுவார்.

இன்னொன்று கட்சிப்பாட்டு. எல்லோருக்கும் பிடிக்காது.

gkrishna
17th June 2014, 07:37 PM
வேந்தர் சார்
நீங்கள் வந்தால் தான் சபை களை கட்டுகிறது
கார்த்திக் சார் சொன்னது போல் சங்கீதா ஜெய் ஜோடி, சங்கீதா ரவி ஜோடி,
சங்கீதா ரஜினி ஜோடி, சங்கீதா கமல் ஜோடி என்று ஒரு ரவுண்டு சங்கீதா வந்தார்கள் . ஆனால் பிற்காலத்தில் ராஜேந்தர் படத்தில் அவர்களை வில்லியாக பார்க்கும் போது சற்று மனம் கஷ்டப்பட்டது
எங்க ஊர் கண்ணகி பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல் சார்
"இதை இதை தான் எதிர்பார்த்தேன் உங்களிடம் இருந்து "

gkrishna
17th June 2014, 07:51 PM
1979 கால கட்டத்தில் மகாலட்சுமி என்று ஒரு திரைப்படம் நினவு
ஜெய் சங்கீதா ஜோடி பட்டாபிராமன் direction விச்சு மியூசிக்
சுசீலாவின் ஒரு சாங் உண்டு சார்
"ஆகாய குளத்தில் தாமரை மலரும் காலையிலே அதிகாலையிலே"
இந்த படம் ஒரு ஹிட் தெலுகு படத்தின் தமிழ் ரீமேக்
"முத்தியால முக்கு " என்று நினவு

Gopal.s
18th June 2014, 05:26 AM
பாகேஸ்வரி(பாகேஸ்ரீ?)

எனக்கு சிறு வயதில் ஒரு obsession உண்டு.(இன்றும்).நான் விரும்பும் பொருளையோ,ரசிக்கும் விஷயங்களையோ,நண்பிகளையோ இன்னொருவர் விரும்பினாலே பொத்து கொண்டு வரும்.அந்த ஒரு குறிப்பிட்ட பாடலில் எனக்கு அப்படி ஒரு மோகம். அந்த பாடலில் வேறு ஒருவன் துர்பாக்ய நிலையை உணர்த்த அதிகபட்சமாய் நிகழ்ந்திருக்க கூடிய சாத்திய கூறு ஒன்று அழகாக வரைய பட்டிருக்கும்.அந்த வைர வரிகள் "அமைதியில்லாத நேரத்திலே அந்த ஆண்டவன் எனையே படைத்து விட்டான்". இந்த பாடல் என்னவோ எனக்கே சொந்தம் என்று நினைத்து கொண்டாடி கொண்டிருந்தேன், இன்று எந்த டி.வீ யை பார்த்தாலும் தெரிகிறது தமிழ்நாடே இன்றும் கொண்டாடி களிக்கும் பாடல் என்று.

என் மகன் ஒரு பாடலை கேட்டு பாடகருக்கு ரசிகனாகி ,எனக்கு அவரை தெரியும் என்று கண்டு,சென்னை வரும் போது நேரம் ஒதுக்கி என்னை கூட்டி அவரை பார்க்க ,அப்போது இடி படாத உட்லண்ட்ஸ் drive -in சென்றோம். பீ.பீ.எஸ் அவர்களை கண்டு சுமார் இரு மணிநேர அரட்டை.12 வயது பையனிடம் அந்த 80 வயது மனிதர் பேசிய குதூகல பேச்சு. (நிலவே என்னிடம் நெருங்காதே)

பாக்யஸ்ரீ ராகத்தில் அமைந்த இப்பாடல் "ராமு" ராகம் என்றே குறிக்க படுவதாக எம்.எஸ்.வீ என்னிடம் குறிப்பிட்டார்.எல்லாமே சரியாக அமைந்த classic இன்று வரை தமிழறிந்த எந்த குடிமகன் எந்த வயதில் இருந்தாலும் ஈர்ப்பதில் அதிசயம் என்ன? இந்த ராகம் உங்கள் மனதில் உங்களாலேயே அறிய படாத இடத்தை போய் நிரப்பி ,வருடும் சுகத்தை வார்த்தைகளில் வர்ணிக்க இயலுமா?

இந்த ராகத்தில் அமைந்த மற்ற பாடல்கள்.

காணா இன்பம் கனிந்ததேனோ?- சபாஷ் மீனா.

கலையே என் வாழ்க்கையை திசை மாற்றினாய்-மீண்ட சொர்க்கம்.

பொன்னெழில் பூத்தது புது வானில்- கலங்கரை விளக்கம்.

மழை வருது மழை வருது- ராஜா கைய வச்சா

Richardsof
18th June 2014, 06:12 AM
போலீஸ்காரன் மகள் படத்தில் இடம் பெற்ற நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் - இந்த பாடலில் பாடகரின் இனிய குரலும் மெல்லிசைமன்னர்களின் இசையும் பாடலில் நடித்த பாலாஜி - புஷப்லதா நடிப்பும் ரசிகர்களின் உள்ளங்களை
கொள்ளை கொண்ட மதுர கானமாகும் .
http://youtu.be/BBEHY5WAbSc

RAGHAVENDRA
18th June 2014, 07:08 AM
கிருஷ்ணா
பாடியவர் தொடங்கி ஒரு பாடலை எடுத்துக் கொண்டால் அத்தனை பேரையும் உடனே நினைவு கூர்ந்து விஷயங்களைப் பகிர்ந்து கொள்ளும் நீங்கள், வாசு கார்த்திக், கோபால் முரளி சாரி வினோத் என அனைத்து நண்பர்களுக்கு முன்னால் என் பங்கு மிகச் சிறியதே. பகலிலே வேறு அலுவலிருப்பதாலும் மாலை வேளைகளில் இணைய இணைப்பு கிடைக்காத காரணத்தாலும் பெரும்பான்மையான நேரங்களில் என்னால் இங்கு பங்கு கொள்ள இயலவில்லை. ஒரு நாளைக்கு பத்து பக்கம் கூட தாண்டும் அளவிற்கு இங்கே வேகமான பதிவுகள் அதே சமயமே ஏராளமான தகவல்கள் என களை கட்டி விட்டது இத்திரி.

தங்களனைவர்க்கும் பாராட்டுக்கள்.

கீழே இடம் பெறும் பாடலை நாம் அனைவரும் அறிந்திருப்போம். மிகச் சிலரே வெளியான காலத்தில் படத்தைப் பார்த்திருப்போம். ஆரம்ப கால எஸ்பிபியின் மயக்கும் கானங்களில்ல இப்பாடலுக்கு நிச்சயம் இடம் உண்டு. கத்திரி வெயில் முடிந்தும் வெயில் கொளுத்தும் இந்த நேரத்தில் இப்பாடல் பொருத்தமாக இருக்குமோ..

http://youtu.be/O6EDO0BgD9s

gkrishna
18th June 2014, 10:03 AM
டியர் கோபால் சார்

பாகேஸ்வரியில்
குலேபகவலியில் "மயக்கும் மாலை பொழுதே நீ போ "

பெண்புத்தி முன் புத்தி "கொலுசே கொலுசே இசை பாடு கொலுசே "
(ராகவேந்தர் கூட இந்த பாடலை பற்றி எழுதி இருந்தார் என்று நினவு )

சேர்த்து கொள்ளலாமா

நிலவே நீ என்னிடம் நெருங்காதே பாடல் பற்றி ஒரு சிறு சம்பவம் நினைவிற்கு வருகிறது

8 வருடங்களுக்கு முன் திரு பி பி ஸ்ரீநிவாஸ் அவர்களின் மகன் ஒருவர்
திருப்பதி தேவஸ்தானம் financial controller ஆக இருந்தார். அப்போது அடிகடி எங்கள் ஆபீஸ்க்கு விஜயம் செய்யுவர். அவர் ஒரு நாள் திரு
பி பி ஸ்ரீநிவாஸ் அவர்களிடம் எங்களை எல்லாம் அழைத்து சென்று (வூட்லண்ட்ஸ் டிரைவ் இன் மூடபட்டதால் ராயபேட்டை வூட்லண்ட்ஸ் )
அறிமுகம் செய்து வைத்தார் .
அப்போது இந்த "நிலவே என்னிடம் நெருங்காதே " பாடலை பற்றி discussion வந்த போது அதை PBS பாடி காட்டினர்.

அதிலும் இறுதியில் "நிலவே என்னிடம் நெருங்காதே ..." என்று பாடிவிட்டு "நீ" என்று அழுத்தமாக சொல்லி
"இருக்கும் இடத்தில நான் இல்லை " . என்று முடித்தார் .

சம்திங் marvellous

நீங்கள் ரசித்ததை நானும் ரசித்தேன்

பிறகு அவர் தமிழ் மொழியை சிறப்பித்து கூறிய ஒரு தகவல்

சிறிய என்பதற்கு பெரிய ற போடுவதும்
பெரிய என்பதற்கு சிறிய ர போடுவதும்
என்னே தமிழ் அன்னையின் சிறப்பு .
இதை அவர் base வாய்ஸ் இல் கூறியது என்னும் நினைவில் உண்டு

chinnakkannan
18th June 2014, 10:15 AM
இன்றைக்கு நினைத்துக் கொண்ட பாடல்..

பொன் என்பேன் சிறு பூ என்பேன்
காணும் கண் என்பேன் வேறு என் என்பேன்

என் என்பேன் கலை ஏடென்பேன்
கண்கள் நான் என்றால் பார்வை நீ என்பேன்

கொத்து மலரெடுத்து முத்துச் சரம் தொடுத்து
சிட்டு முகம் பார்த்தே சிரித்திருப்பேன்

தொட்டவுடன் நெஞ்சில் துள்ளி வரும் வெள்ளம்
கண்டு கண்டு நானும் களித்திருப்பேன்

உன்னை நானறிவேன் என்னை நீ அறிவாய்
நம்மை நாமறிவோம் வேறுயார் அறிவார்

சின்னச் சின்னப் பறவை அன்னை அவள் மடியில்
தவழ்வது போல் நான் தவழ்ந்திருப்பேன்..

கண்ணை மெல்ல மறைத்து உன்னைக் கையில் கொடுத்து
காலமெல்லாம் நான் அழைத்திருப்பேன்..

உன்னை நினைத்திருப்பேன் என்னை மறந்திருப்பேன்
கண்ணில் கலந்திருப்பேன் நெஞ்சில் நிறைந்திருப்பேன்..

ஜானகியம்மா வின் ஸ்வீட் வாய்ஸ் பிபிஎஸ் ஸின் மென்மைக் குரல்.. எப்போதுமே மெய்மறக்க வைக்கும் கேட்கும் போது..

முதன் முதல் பார்த்தது தேவியில் ரீரன் வந்த போது.. போட்ட ஒருவாரமும் ஹவுஸ் ஃபுல்.. அப்படி என்ன இருக்கிறது என ஒரு செவ்வாய்க் கிழமை போய்ப் பார்த்து பாடல்கள் எஸ்விஎஸ் நடிப்பால் நெகிழ்ந்தது நினைவில்..

chinnakkannan
18th June 2014, 10:17 AM
ஹாய் கிருஷ்ணா சார் .. மார்னிங்க்.. நிலவே என்னிடம் நெருங்காதே யும் என்னைக் கவர்ந்த பாடல்க்ளில் ஒன்று.. பிபிஎஸ் ரொம்ப்பப் பிடிக்கும்.. பாட்டெழுதட்டும் பருவம், எங்கேயோ பார்த்த முகம்...ம்ம்ம்

mr_karthik
18th June 2014, 10:17 AM
டியர் ராகவேந்தர் சார்,

'ராணி யார் குழந்தை' 1972 பொங்கல் ரிலீஸ். இதோடு அந்தப்பொங்கலுக்கு வந்த படங்கள் கங்கா, அகத்தியர், கண்ணா நலமா.

மறுநாள் மாட்டுப்பொங்கலன்று மாலைக்காட்சி பாரத்தில் 'அகத்தியர்'. மறுநாள் காணும் பொங்கலன்று ஸ்ரீகிருஷ்ணாவில் கே.பி.யின் 'கண்ணா நலமா'. இரண்டிலுமே பாடல்கள் அனைத்தும் சூப்பர். (அகஸ்தியா 'ராஜா'வை வரவேற்கத் தயாராகிக் கொண்டிருந்தது).

அகத்தியரில் குன்னக்குடி கலக்கியிருந்தார். அனைத்துப்பாடல்களுமே அட்டகாசம். 'கண்ணா நலமா'வில் மெல்லிசை மன்னர் இசையில் பாடல்கள் அனைத்தும் அருமை.

'நான் கேட்டேன் அவன் தந்தான் தாலாட்டும் தாயானேன்'
'பட்டத்து ராஜாவுக்கு எட்டு வயசு, பக்கத்து மந்திரிக்கோ புத்தி பெருசு'. பாடலும் நன்றாயிருந்த போதிலும் அதிகம் கவர்ந்தது 'பெற்றெடுத்த உள்ளம் என்றும் தெய்வம் தெய்வம் அது பேசுகின்ற வார்த்தை என்றும் மௌனம் மௌனம்' பாடல்தான். கே.பி.யின் முத்திரைப் படங்களில் ஒன்று.

'கங்கா' வில் பாடலை எல்லாம் எதிர்பார்த்துப் போகவில்லை. கர்ணன் வழக்கம்போல ராஜ்கோகிலாவை வெள்ளை உடையில் தண்ணீரில் நனைத்துக் காட்டுவதாகச் சொன்னார்கள். போய்ப்பார்த்தோம், கர்ணன் ஏமாற்றவில்லை...

gkrishna
18th June 2014, 10:19 AM
வாசு சார்

மகரந்தம் 1981

"நீ இன்றி நானோ " பாடலை பற்றி நேற்று இரவு எனது சகோதரர்

(திரு வைத்யநாதன் இப்போது muscat ஓமனில் இருக்கிறார்
சின்னகண்ணன் சார் கூட muscat இல் தான் இருபதாக சொல்லி இருந்தார் )

நிற்க

அவர் இடம் இந்த பாடலை பற்றி பேசி கொண்டு இருந்தேன்

அப்போது அவர் தன்னுடைய மெமரி கார்டு இல் இருந்து எடுத்து விட்டது

என்னை எப்போதும் கிண்டுஸ் என்று செல்லமாக அழைப்பர்

"கிண்டுஸ் மறந்து விட்டாயா இந்த படத்தை

நானும் நீயும் இந்த படத்தை நெல்லை பூர்ணகலவில் பார்த்து விட்டு

இந்த பாட்டுக்கு படத்தில் ஸ்டெப்ஸ்ஊ (கமல் சலங்கை ஒலியில் சொல்வது போல் ) சரி இல்லை

நம்ம டான்ஸ் மாஸ்டர் இருந்தால் எப்படி இருக்கும் தெரியுமா

என்று கூறி விட்டு தோளை குலுக்கி கொண்டு உடம்பை லேசாக குறுக்கி கொண்டு இருவரும் ஆடினோமே "

என்று கூறியவுடன் என் வீட்டில் daughters இருவரும் சிரிப்பு மனைவியோ கேட்க வேண்டுமா

செம டான்ஸ் (உடான்ஸ் இல்லை ) நேற்று இரவில்

ஏனிந்தக் கோபம்
இதிலென்ன லாபம்
(இந்த வார்த்தைகளை கோபகார .....க்கு அர்பணிக்க வேண்டுகிறேன் )

பாடாத ராகம்
போடாத தாளம்

(நம் டீம் எல்லோரும் சேர்ந்து ஒரு கெட் டு கெதர் போட்டு இந்த பாடலில் டான்ஸ் ஆடினால் சூப்பர் ஆக இருக்கும் என்ன நான் சொல்றது )

gkrishna
18th June 2014, 10:28 AM
சின்ன கண்ணன் சார்
போலீஸ் காரன் மகளை நினவு படுத்தி விட்டீர்கள்

"ஆண்டு ஒன்று போனால் வயது ஒன்று போகும் அதற்கு முன்னாலே வா "

"அழகுடன் இளமை தொடர்ந்து வாராது" ஜானகியின் (கோபால் சார் கோபபட போகிறார் ) ஜிலிபி ஜீரா வாய்ஸ்

"நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் " வழகமான ஸ்ரீநிவாஸ்

"கண்ணிலே நீர் எதற்கு " சீர்காழி வித் ஜானகி

"பொறந்தாலும் ஆம்பளைய பொறக கூடாது " சந்திரபாபு வித் ராட்சசி

svs பிழ்ஞ்சு எடுத்து இருப்பாரு

gkrishna
18th June 2014, 10:33 AM
கார்த்திக் சார்
ராணி யார் குழந்தை

on a ஹாட் summer morning எ கேர்ள் வெண்ட் வாக்கிங்

சூப்பர் பாலா நக்கல்

அதிலும் "ஐயையோ வாட் கேன் i டூ shall மீ வாட் டு டூ
i am mad டாக்டர் " என்று எல்லோருக்கும் இங்கிலீஷ் பாடம் நடத்துவரே

gkrishna
18th June 2014, 10:53 AM
கார்த்திக் சார்

பாலாவின் குறும்பு நக்கல் நையாண்டி குசும்பு இத்யாதி இத்யாதி எல்லாம் சேர்ந்து கொப்பளிக்கும்

on எ ஹாட் summer morning

ஆபீஸ் இல இருக்க முடியல

ஐயையோ
what shall I do tell me what to do
அம்மம்மோ
what shall I do I am mad after you
கொகற்கொக்கோ kO kO kO
கொகற்கொக்கோ kO kO kO kO kO

மாடி வீட்டு பொண்ணு ஒரு ஜோடி தேடும் கண்ணு
ஆடி ஆடி நடக்கும் பொது அதிருதடி மண்ணு
மீண்டும்
ஐயையோ
what shall I do tell me what to do
அம்மம்மோ
what shall I do I am mad after you
கொகற்கொக்கோ kO kO kO
கொகற்கொக்கோ kO kO kO kO kO

கோடி வீட்டு பாமா நான் ஒண்டிக்கட்டை தாம்மா
உனக்கும் எனக்கும் பொருத்தம் இருக்கு முடிச்சு போடலாமா

கவிஞர் வழங்கிய தேவரின் இன்னிசை வேந்தர்களின் பொப்பிசை பாடல் இது

"சின்ன மாமியே உன் சின்ன மகள் எங்கே " சிலோன் மனோஹரின் பாடல் போன்றது

gkrishna
18th June 2014, 11:01 AM
கார்த்தி சார்

கண்ணா நலமா 1972 நெல்லை ராயல் pongal ரிலீஸ்

இன்று காலையில் நான் குளிக்கும் போது நினைத்து கொண்ட பாடல் சார்
உண்மை

"சாலமன் வந்தான் இடை வாளை எடுத்தான் வாளை ஓங்கினான்
வாளை ஓங்கினான் " "மன்னா " என்று tms ஒரு ஓங்கார குரல் எழுப்புவாரே

மறக்க முடியுமா

gkrishna
18th June 2014, 11:21 AM
கார்த்தி சார்
நீங்கள் சென்னையில் 1972 பொங்கல் ரிலீஸ் எழுதுகிறீர்கள்

நான் நெல்லையில் பொங்கல் ரிலீஸ் எழுதுகிறேன்

அகத்தியர் நெல்லை சென்ட்ரல் பொங்கல்

"உலகம் சமநிலை பெறவேண்டும் " சீர்காழி

"தாயிர் சிறந்த கோயில் இல்லை " கலா

"நமசிவய என சொல்வோமே நால்வகை துன்பத்தை வெல்வொமெ : சீர்காழி
நாராயண என் சொல்வோமே நன்மைகள் யாவையும் பெறுவோமே "
மகாலிங்கம்

அதிலும் அந்த நாராயண என்று பாடும் போது chozavandan வெற்றிலை வாயன் செக்கே செவேர் என்று

"நடந்தாள் வாழி காவேரி " சீர்காழி
இந்த பாடலில் நடுவில் இரண்டு சேட்டை உண்டு
1. சீர்காழி பாடிக்கொண்டு இருக்கும் போதே திடீர் என்று தொடையில் கிள்ளினால் பாடுவது போல் "நடந்தாள் .... " என்று ஒரு பருகா
2. குன்னக்குடி tune ஐ மாற்றி ஒரு நையாண்டி வசிப்பர்
"நடந்தாள் வாழி காவேரி "

"வென்றிடுவேன் " tms அண்ட் சீர்காழி beautiful ராக மாலிகை

"தலைவா தவப்புதல்வ " m .r . விஜய - தேசிய நடிகர் சசி /cid சகுந்தலா
கண் ஜாடை பாடல் சிர்கழியின் கோபம்

கங்கா நெல்லை ரத்னா பொங்கல் ரிலீஸ்

ராஜ் கோகிலா குளிக்கும் போது ஒரு கவ்பாய் குள்ளன் பாறையை கடிப்பான். சான்ஸ்ஐ இல்லை சார்

இந்த கங்கா படத்தில் ராமகிருஷ்ணன் என்று ஒரு நடிகர் அறிமுகம் ஆகி கங்கா ராமகிருஷ்ணன் என்றே டைட்டில் போட்டு சில படங்கள் நினவு
ஜம்பு,எதற்கும் துணிந்தவன்,சகலகலாவல்லவன்

mr_karthik
18th June 2014, 11:35 AM
சமீப காலமாக முரசு சேனலில் டி.கே.ராமமூர்த்தியின் மாஸ்ட்டர் பீஸ்களில் ஒன்றான 'சங்கமம்' (1970) பாடல்கள் தொடர்ந்து ஒளிபரப்பப்படுவது மனதுக்கு இதமளிக்கிறது. ஒரு காலத்தில் இப்பாடல்களைக்கான ஏங்கினோம். ஜெமினிக்கு டி.எம்.எஸ்.பாடிய அபூர்வப்படங்களில் ஒன்று.

'தன்னந்தனியாக நான் வந்தபோது என்னையறிந்தாளே பூமுக மாது' டி.எம்.எஸ்.-சுசீலா. படம் வந்த காலத்தில் கலக்கிய பாடல். காட்சியமைப்பு, ஒளிப்பதிவு டாப்.

'ஒரு பாட்டுக்கு பலராகம், ஒரு பார்வைக்கு பல பாவம்' உச்ச ஸ்தாயியில் டி.எம்.எஸ். (ஹம்மிங் யார்? அதுக்காகவே இருந்த வசந்தாவா?)

'வண்ண பூ போட்ட சேலை கட்டி புது பொண்ணு பக்கம் வந்தா' சுசீலா கோரஸ். இடையில் ஜெமினிக்காக ஒலிக்கும் குரல் ராமமூர்த்தியுடையது என்பார்கள்.

'கண்ணனிடம் கேட்டிருந்தேன் பிள்ளையொன்று வேண்டும்' சுசீலா சோலோ. கே.ஆர்.விஜயாவுக்காக.

தாதாமிராஸி இயக்கம், பிரசாத் ஒளிப்பதிவு. ஜெமினிக்கு இரட்டை வேடம். விஜயாவுடன் ஜோடி சேர்ந்த ஜெமினி, நிர்மலாவுடன் ஜோடி சேர்ந்த ஜெமினியை பார்த்து நிச்சயம் பொறாமையில் vendhiruppaar.

Richardsof
18th June 2014, 11:44 AM
கார்த்திக் சார்

சென்னை - கிருஷ்ணவேணி திரை அரங்கில் 1970 - மே மாதத்தில் இரவு காட்சி பார்த்தேன் .ஆச்சரியம் என்னவென்றால் அந்த இரவு காட்சிக்கு ஜெமினி கணேசன் வந்திருந்தார் என்பதாகும் .
முதல் முறையாக அவரை நேரில் பார்த்து கை குலுக்கிய இனிய நாள் அது .
http://youtu.be/gxmet3N-7IQ

mr_karthik
18th June 2014, 11:50 AM
டியர் கிருஷ்ணாஜி,

அகத்தியரில் இன்னும் சில பாடல்கள்...

'மலை நின்ற திருக்குமரா மால்மருகா'.... டி.ஆர்.மகாலிங்கம்.

'இன்னிசையாய் செந்தமிழாய் இருப்பவனே' டி.ஆர்.மகாலிங்கம்.-சீர்காழி கிளைமாக்ஸ் பாடல்.

gkrishna
18th June 2014, 12:22 PM
கார்த்தி சார்
அப்ப்றம் அகத்தியரில் இன்னொரு பாடல்
மகாலிங்கத்தின் "ஆண்டவன் தரிசனமே அடியார்க்கு இறங்கும் மனோபாவமே "

அய்யா(இது மரியாதைக்க சொல்லும் வார்த்தை சென்னையில் வந்த புதிதில் இந்த வார்த்தையை சொல்லி நிறைய பேரிடம் மாட்டி கொண்டேன் )
தோண்ட தோண்ட வருதே

mr_karthik
18th June 2014, 12:22 PM
'கண்ணா நலமா' பற்றி பேசும்போதே கே.பி.யின் அதற்கு முந்திய படைப்பு "புன்னகை" நிச்சயம் நினைவுக்கு வரும். கே.பி.யின் சிறந்த பத்து, ஜெமினியின் சிறந்த பத்து, கருப்பு வெள்ளையில் சிறந்த பத்து என்று எப்படி பட்டியலிட்டாலும் இந்தப்படம் இடம்பெறும்.

வெவ்வேறு குணாதிசயங்கள் கொண்ட நான்கு நண்பர்களை மையமாக வைத்து எடுக்கப்பட்ட அருமையான படம். ஜெமினி, முத்துராமன், எம்.ஆர்.ஆர்.வாசு, நாகேஷ் செம கலக்கல். கதாநாயகி ஜெயந்தி, வில்லி சகுந்தலா, வில்லன் ராமதாஸ், குடிகார அப்பன் வி.எஸ்.ராகவன் அனைவருமே சிறப்பாக நடித்த படம்.

மெல்லிசை மன்னர் இசையில் "நாளை நாம் ஒரு ராஜாங்கம் அமைப்போம் ஆண்டு பாருங்கள் தோழர்களே" கல்லூரிப் படிப்பை முடித்த ஐந்து நண்பர்கள் எதிர்காலத்தை எண்ணிப்பாடும் பாடல். பாடல் முடிவிலேயே கார் விபத்தில் ஒரு நண்பன் அவுட். முதலில் சாதாரணமாகத் தோன்றும் இப்பாடல், பின்னர் நண்பர்கள் சந்திக்கும்போதெல்லாம் ஒலிக்கும்போது முக்கியத்துவம் பெறுகிறது.

ஜெயந்தி கற்பழிக்கப்படும் காட்சியில் பாடும் "ஆணையிட்டேன் நெருங்காதே" பாடல் காட்சிக்காக கே.பி. இன்றுவரை விமர்சிக்கப்படுகிறார். அவர் செய்த தவறு, இப்பாடலை அசரீரி பாடலாக ஒலிக்கவிடாமல், கதாநாயகி பாடுவதாக காட்டியது.

நண்பர்களில் ஒருவரான நாகேஷ் ரயிலில் பிச்சைஎடுக்கும்போது பாடும் "நானும் கூட ராஜாதானே நாட்டு மக்களிலே" நல்ல ஜனரஞ்சகமான பாடல்.

கே.பி.யின் புக்ழ்க்கிரீடத்தில் ஒரு வைரம் 'புன்னகை'..

mr_karthik
18th June 2014, 12:34 PM
டியர் வினோத் சார்,

சங்கமம் பாடல் வீடியோவை பதித்தமைக்கும், கிருஷ்ணவேணி தியேட்டர் அனுபவத்துக்கும் நன்றி.

gkrishna
18th June 2014, 12:36 PM
கார்த்தி சார்
இந்த சங்கமம் படம் beautiful ஈஸ்ட்மேன் கலர்

"தன்னந்தனியாக நான் வந்த போது"
கே.ஆர் விஜயாவின் white /சாண்டல் கலர் நைலக்ஸ் சாரீ சமெ ஹிட் சார்
ஜெமினியின் ஆரஞ்சு கலர் striped
நம்ம சு எ சு ஷர்ட் போல் அனால கொஞ்சம் டார்க்

திரை அரங்குகளில் ரசிகர்கள் அடித்த கமெண்ட்
நம்ம சாம்பாருக்கு இது தேவையா
(ஜெமினி ரசிகர்கள் மன்னிக்கவும்)

ஜவுளி கடைகளில் சங்கமம் sarees என்று ஒரு ரவுண்டு வந்தது
(நதியா வளையல், நதியா தோடு,நதியா மூக்குத்தி நடுவில் ஒருவர் சிந்து பாடியது நதியா கூல்ட்ரிங்க்ஸ் எல்லாம் திருநெல்வேலியில் தான் சார் )

chinnakkannan
18th June 2014, 12:39 PM
இந்த மன்றத்தில் ஓடி வரும் இளம் தென்றலைக் கேட்கின்றேன்.. விட்டு விட்டீர்களே கிருஷ்ணா சார்..

ம்ம் குலுங்கும் முந்தானை சிரிக்கும் அத்தானை மிரட்டுவதேனடியோ

ஆயிரம் ஆயிரம் ஆண்களிலே ஐயா உன்னை நினச்சேனே
அர்ச்சுனன் போலே அழகிருக்க அனுமார் ஜாதியப் பிடிச்சேனே

பரம்பரை ஞாபகம் போகலையே.. ம்ம் ஹிஹி பாட்டு

நாகேஷ் தான் குட்டி வில்லத் தனம் பண்ணி கதைக்கு உதவுவார்...:)




சின்ன கண்ணன் சார்
போலீஸ் காரன் மகளை நினவு படுத்தி விட்டீர்கள்

"ஆண்டு ஒன்று போனால் வயது ஒன்று போகும் அதற்கு முன்னாலே வா "

"அழகுடன் இளமை தொடர்ந்து வாராது" ஜானகியின் (கோபால் சார் கோபபட போகிறார் ) ஜிலிபி ஜீரா வாய்ஸ்

"நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் " வழகமான ஸ்ரீநிவாஸ்

"கண்ணிலே நீர் எதற்கு " சீர்காழி வித் ஜானகி

"பொறந்தாலும் ஆம்பளைய பொறக கூடாது " சந்திரபாபு வித் ராட்சசி

svs பிழ்ஞ்சு எடுத்து இருப்பாரு

parthasarathy
18th June 2014, 01:39 PM
[QUOTE=gkrishna;1139860]வாசு சார்

மகரந்தம் 1981

"நீ இன்றி நானோ " பாடலை பற்றி நேற்று இரவு எனது சகோதரர்

Krishna Ji,

In fact, filler music and one of the stanzas (its long run song) is taken from one of the Madan Mohan's compositions - Don't exactly remember the original song.

Those days, we had a transistor, which will predominantly be used only by me. During college days between 1980 and 1983, classes used to come to a close by 11.00 a.m. (Nandanam Arts!) and I make it a point to either go for a 11.30 show (of course mostly NT movies) or Shanti (just to see housefull shows board and to chat with friends). by 3.30 - 4.00 pm, will be back home and start listening only to Radio Ceylon (of course with disturbances).

One of the rare songs - now-a-days - but a hit those days! - "Malligaippoo vaangi vandhaen" from Paal Kudam by SPB and PS. While SPB's version will be energetic, PS totally overshadows SPB when she takes over - with a absolute melody and feel!! Wow what a song.

More will come.

Regards,

R. Parthasarathy

gkrishna
18th June 2014, 02:18 PM
வீட்டுக்கு ஒரு பிள்ளை 1971 தீபாவளி ரிலீஸ் நெல்லை ரத்னா

ராமன் pictures
கனக சண்முகம் டைரக்டர்
ராமண்ணா மேற்பார்வை
விச்சு மியூசிக்

ஜெய்ஷங்கர்,உஷா நந்தினி (அறிமுகம்) ,நாகேஷ்,தேசிய நடிகர் சசிகுமார்,
எம் ஆர் ஆர் வாசு,ஜி வரலக்ஷ்மி,என்னதே கண்ணைய ,சுருளிராஜன்,சுந்தரிபாய் கே விஜயன் ,ஆர்.எஸ். மனோகர் (கௌவர வேடம் ),டைபிஸ்ட் கோபு போன்றோர் (பெரிய நட்சதிர பட்டாளம்) நடித்து வெளி வந்த வெற்றி சித்ரம்

படம் செம ஹிட் சார்

இது ஒரு ஹிந்தி படத்தின் தழுவல் டைட்டில் மறந்து விட்டது
(நாகேஷ் இந்த படத்தின் டைட்டில் மாறு வேஷம் போட்டு உஷா நந்தினியை ஏமாற்றும் போது கூறுவர் )

டைட்டில் மியூசிக் மியூசிக் மட்டும் தான் கிட்டத்தட்ட ராஜா பட டைட்டில் போல இருக்கும். ஆனால் கொஞ்சம் மாறுபட்டு இருக்கும்
விச்சு டீம் chorus (லோலிலோ ,லோலிலோ )
ஜெய்ஷங்கர் fight உடன்
ராஜாவில் (தரதும் தரதும்தும் தரதும் ராஜா ராஜா ராஜா )

வாசு சார்/ராகவேந்தர் சார் இந்த ராஜா டைட்டில் மியூசிக் கிடைக்குமா ?

மன்னிக்கவும் இது பாடல்கள் பற்றிய திரி என்பதை மறந்து விட்டேன்

பாடல்களை மட்டும் ஆராய்வோம்

1.ஜெய்ஷங்கர் வெளிநாட்டிலிருந்து வந்தவுடன் நடக்கும் இரவு டின்னெர் பாடல் .
எம் ஆர் ஆர் வாசு சகுந்தலாவை சீதா என்று அறிமுகம் செய்யாமல் ரீட்ட என்று அறிமுகம் செய்வார்

"நாகரீகம் வருக நவ நாகரீகம் வருக " ஈஸ்வரி குழுவினர்
விச்சுவின் பேஸ் drum மற்றும் கிடார் இரண்டும் பேசும்
அதிலும் ஒரு வரி
"ஆடை கட்டுவதும் கூந்தல் மாற்றுவதும் மேலை நாடுகளின்
நாகரீகம்" என்று ஈஸ்வரி பாடி முடித்ததும் ஒரு பேஸ் drum (டுன்டுன்டுன்) "ஹரே ராம் ராம் கிருஷ்ணா ராம் " என்று chorus
பாதி பாடலின் போதே ஜெய் வெறுத்து போய் வீட்டுக்கு கிளம்பி விடுவார். அப்ப ஜெய் டின்னெர் ஹால்லருந்து வெளி வரும்போது
rerecording சூப்பர் பாடல் மியூசிக் சவுண்ட் குறைந்து ஜெய் பேசுவது ஒலிக்கும்

2.நான் போட்ட புள்ளி ஒரு மாற்றம் இல்லை கல்யானமஆனா கன்னி பொன்னே என்னம்மா - tms டீசிங் பாடல்
ராஜாவின் "கல்யாண பொண்ணு " போல் இருக்கும்
(இந்த ஆற்றங்கரை எங்கு இருக்கு நிறைய படத்தில் வரும் )

3.அன்பு வாசு சார் உங்க ராட்சசியின் பாடல்
"பெண் என்றால் நான் அன்றோ சொல்லுங்கள் தேர் என்றோ
விண்ணும் மண்ணும் .....
காதல் பேசும் கன்னி நான் அல்ல "
இந்த பாட்டில் நிறைய இடங்களில் சகுந்தலாவை ஸ்டில் ஆக நிறுத்தி காட்டுவார்கள்

விச்சுவின் தபேல பின்னி பெடல் எடுக்கும் (டன்ஆ டன்ஆ தனா )

4. ஜானகியின் "ஏன்டா ராஜா என்ன வேண்டும் எதை கேட்டாலும் அதை நான் தருவேன் என்ன (என்னை என்றும் சிலர் பாடுவார்கள்) கண்டு பயந்தாய் சொல்லு ராஜா "
எஸ்வி சார் கூட இந்த பாடல் பற்றி சொல்லி இருந்தார்

பாடலின் இடையில் அடிகடி குழந்தை அழுகுரல் கேட்கும்

பாடல் ஊடே சுருளி சுந்தரிபாய் காமெடி மிக கலக்கல்
சுருளி டீ குடித்து கொண்டே இந்த பாட்டை ரசிப்பார்
சுந்தரி பாய் வாசல் திண்ணையில் உட்கார்ந்து ரசிப்பார்

5."இன்று முதல் சொந்தம் இது என் அழகு தெய்வம் இது வானில் வந்தது .மஞ்சளுடன் சந்தனமும் குங்குமம் காண வந்தது "
பாலாவின் குழைவு பாடல் உடன் வசந்த ஹம்மிங் என்று நினவு
அதுவும் இறுதியில் beautiful பாலா ஹம்மிங் "ஹும் ஹும் ஹும் "
"கைகளால் அத்தான் தன்னை கைது செய் காதல் கண்ணே
முத்து போல் ... சித்ரம் தந்தால் என்ன "
இது ஒரு கனவு பாடல்

6. "ஆட்டை கடிச்சான் மாட்டை கடிச்சான் ஆளை கடிச்சான்"
மீண்டும் ராட்சசி
அதிலும் "கட்டு கை கொள்ளாமல் கட்டு ஒன்ன ரண்ட சொல்லம்மா "
என்று பாடும் போது ஈஸ்வரியின் அந்த பாஸ்ட் முச்சு வெளி வரும்
சுபெர்ப் ஸ்டெப் அண்ட் டான்ஸ் by சுந்தரி பாய்
விச்சுவின் போலக்

7. "கொண்டு வா நீதி கெட்டவனை நேர்மையற்றவனை கடவுள் முன்னே
தண்டனை பாதி இங்கு வரும் மீதி அங்கு வரும் விடுவதல்லை
நினைக்கும் காரியம் அனைத்தும் ஆகுமா "
tms சீர்காழி ஈஸ்வரி இணைந்து கலக்கும் படத்தின் இறுதி பாடல்
"அதிலும் ஐந்தாறு காக்கைகள் ஒன்றஆக சேர்ந்தாலும் "
என்று நாகேஷ் ஒரு ஸ்டெப் போட்டு ஆடுவர்
அலிபாபா 40 திருடர்களும் படத்தில் வருவது போல் ஆயில் பர்ரெல் வைத்து ஒகனேகல் அருவியில் போடுவது போல் வரும்

இந்த படத்திற்காக ரெகார்டிங் செய்து பின்பு குலகொழ்ந்து என்று படத்தில் (ஜெய் ஸ்ரீப்ரிய நடித்து 1980 கால கட்டத்தில் வெளி வந்தது )
"கேள்வி கேட்கும் நேரம் அல்ல இது " பாலா வித் ஜானகி
கண்ணதாசன் வரிகள் சில இந்த பாடலில் மிகவும் நன்றாக இருக்கும்
பாலா குரலில்
"கோபுரம் பார்த்தவன் கோயில் சென்றான்
கோயிலில் பூஜைஏய் தேவியின் சேவை என்றான்
தேவியோ பார்க்கலாம் நாளை என்றாள்"

ஜானகி குரலி
"சொல்லுவாள் ஆயிரம் தொட்டதும் மாறுவாள்"

கொலம்பியா LP ரெகார்ட் இரண்டு பக்கம் நல்ல நினைவு

இதில் என்னதே கண்ணைய வழக்கம் போல்
"கொஞ்சம் மிஸ் ஆயிடுச்சு " repeated டயலாக்
நான் படத்தில் வருவது போல் "என்னதே பார்த்து செய்து "

ஜி வரலக்ஷ்மி,வாசு,என்னேதே கண்ணைய,சசிகுமார் எல்லோரும் வில்லன் கோஷ்டி

ரொம்ப பெரிசா சார் post

gkrishna
18th June 2014, 02:33 PM
பார்த்தசாரதி சார்
transistor பற்றி சொன்னது மிகவும் சரியான ஒன்று
murphy /பிலிப்ஸ் மற்றும் டெல்லி செட் என்று ஒன்று ரொம்ப நாள் ஆக ஓடி கொண்டு இருந்தது

பால்குடம் 1969 என்று நினவு
"மல்லிகை பூ வாங்கி வந்தேன் புன்னகையின் நினைவாக
செண்பக பூ வாங்கி வந்தேன் பொன்மகளின் நினைவாக
உனக்காக அன்பே
நான் உனக்காக "

சுசீலாவின் குரலில் ஒரு சோகம் தெரியும்

பாலாவின் மிகவும் லைட் வாய்ஸ்

அதிலும் அன்பே என்று இழுக்கும் போது ராகவன் ஜாடை வரும்

இந்த பாடலில் நடுவே சிலர் சிரிப்பார்கள் அது எதற்கு என்று தான் தெரியவில்லை .

Richardsof
18th June 2014, 02:42 PM
http://youtu.be/bB80WJmlByA

REMAKE OF SAWAN BADHON.

vasudevan31355
18th June 2014, 02:43 PM
நேற்று மதிய ஷிப்ட் முடித்துவிட்டு நைட் வீட்டுக்கு வந்து திரும்ப உடனே காலை ஷிப்ட் போக வேண்டியதாய் போயிற்று. வந்து நம் திரியை பார்த்தால் அடேங்கப்பா! கிருஷ்ணா சார், கார்த்திக் சார், சின்னக் கண்ணன் சார், ராகவேந்திரன் சார், வினோத் சார் அதகளம் நிகழ்த்திக் கொண்டிருக்கிறார்கள்.

அற்புதமான அலசகள், அரிய தகவல்கள் என்று ஜோரான ஜோராய் இருந்தது.

அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

gkrishna
18th June 2014, 02:45 PM
yes esvee sir
now i remember
navin nicksol and rekha
sonik omi music

vasudevan31355
18th June 2014, 02:46 PM
வணக்கம் கிருஷ்ணா சார்.

சும்மா புகுந்து விளையாடிக் கொண்டிருக்கிறீர்கள். சம்பிரதாய வார்த்தை அல்ல சார். எங்கே இருந்துதான் இவ்வளவு விஷயங்களை வைத்து இருக்கிறீர்களோ! குற்றால அருவியைப் பொழிந்து எல்லோரையும் குளிர்விக்கிறீர்கள்.

gkrishna
18th June 2014, 02:48 PM
வாசு சார்
வணக்கம் பல முறை சொன்னேன் சபையிநேர் முன்னே
தமிழ் மகன்(ள்) வாசு கண்ணே

vasudevan31355
18th June 2014, 02:49 PM
வாசு சார்/ராகவேந்தர் சார் இந்த ராஜா டைட்டில் மியூசிக் கிடைக்குமா ?

நீங்கள் கேட்டு இல்லாததா கிருஷ்ணா சார்? விரைவில் தருகிறேன்.

gkrishna
18th June 2014, 02:50 PM
சாமி மலை ஏற மாட்டேங்குது vasu sir

gkrishna
18th June 2014, 02:51 PM
நமக்குள்ளே உபசாரம் எதற்கு வாசு சார்

vasudevan31355
18th June 2014, 03:12 PM
அன்பு வாசு சார் உங்க ராட்சசியின் பாடல்
"பெண் என்றால் நான் அன்றோ சொல்லுங்கள் தேர் என்றோ
விண்ணும் மண்ணும் .....
காதல் பேசும் கன்னி நான் அல்ல "
இந்த பாட்டில் நிறைய இடங்களில் சகுந்தலாவை ஸ்டில் ஆக நிறுத்தி காட்டுவார்கள்

கிருஷ்ணா சார்,

ஒருமுறை சி.ஐ.டி.சகுந்தலா தொலைக்காட்சிப் பேட்டி ஒன்றில் சொன்னது.

"நான் மிகவும் கடினப்பட்டு அதுவும் வேகமாக ஸ்டெப்ஸ் போட்டு ஆடிய பாடல் காட்சி இதுவாகத்தான் இருக்கும். இந்தக் காலத்தில் யாரையாவது இப்படி ஸ்டெப்ஸ் போட்டு ஆடச் சொல்லுங்கள் பார்க்கலாம்"

ஓரளவிற்கு உண்மையும் கூட. சகுந்தலா பிரமாதமாக ஆடுவது இருக்கட்டும்.

http://image6.buzzintown.com/files/event/upload_80000/upload_original/409307-l-r-eswari-golden-nite.JPG

ஆனால் ராட்சஸி என்ன ஒரு அமர்க்களம்!

விண்ணில் நிலவும்
இந்த மண்ணில் அழகும்
ஒன்றன்றோ ஒ............................ஒ என்று இழுத்து ஒரு தூக்கு தூக்குவார் பாருங்கள். அடப் போங்க சார்! யாராவது ஒரு பாடகியை இப்படிக் காண்பியுங்கள் பார்ப்போம்.

அது யார் நான்றோ
மதுவோ பூச்செண்டோ

காதல் பேசும் கண்ணன் யாருண்டோ?

கடலுக்கு மேலே படுக்கையை போட்டு
கடவுளும் பாடும் காதலின் பாட்டு

பாடலாசிரியர் கண்ணதாசன் சும்மா விளையாடுகிறாரே!

அதுவும் படுதிமிர்வாட்டத்தில் இந்த கிராதகி

'காலம் போனால் காரணம் நாணல்ல்ல்ல'

என்ற 'ல்ல்ல்ல' அழுத்தம் இருக்கிறதே!

தெலுகு டப்பிங் பட பாணியில் சொன்னால் 'யம்மாடியோவ்!'

ஈஸ்வரி எமனே!

பாடகி என்றால் நீயன்றோ
சொல்லுங்கள் வேறுண்டோ

கிருஷ்ணா சார்,

ரொம்ப படுத்தி விட்டீர்கள்.

சென்னையில் நான் உங்களை சந்திக்கிறேன். நாம் இருவரும் அந்த ராட்சசியை சந்திக்கிறோம். பம்மலாரும் பயங்கர ரசிகர். அவரும் வருவார்.

பாருங்கள். இந்த அபூர்வப் பாடகியின் அட்டகாசங்களை.


https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=1gzB-HyUC7o

vasudevan31355
18th June 2014, 03:14 PM
சாமி மலை ஏற மாட்டேங்குது vasu sir

சார்... சிரிச்சு சிரிச்சு...

gkrishna
18th June 2014, 03:15 PM
வாசு சார்
கட்டாயமாக நாம் சந்திக்கிறோம்
பாடலின் நடுவே டைபிஸ்ட் கோபு உட்கார்ந்து கொண்டு ஆப்பிள் கடித்து கொண்டு இருப்பரே அப்போது கேமரா சுழலும் சார்
நடுவில் சசிகுமார் வேறு சேர்ந்து கொள்வர்

சன் லைப் முரசு இதுலே இந்த பாடு போட மாட்டேன்க்ரன் சார்

gkrishna
18th June 2014, 03:17 PM
வாசு சார்
நான் இங்கே ஆபீசில் என் சீட்டில் உட்கார்ந்து கொண்டு உங்கள் அம்மாடியோ வரிகளை படித்துவிட்டு தனியாக சிரிக்கேறேன் சார்

gkrishna
18th June 2014, 03:24 PM
வாசு சார்
எனக்கு ரொம்ப பித்த (பிடித்த) பாடல் சார் இது
விச்சுவோட தபெலே drum எல்லாம் சேர்ந்து பிளுருது சார்

காதல் பேசும் கண்ணன் யாருண்டோ
என்று பாடி விட்டு சொக்க வைக்கும் குரலில் ஆ என்றும் இல்லாமல் எ என்றும் இல்லாமல்
"பெண் என்றால் நான் அன்றோ " எடுப்பதை கேளுங்கள்
இந்த பாட்டு அடிகடி கேட்கற பாடல் சார்

vasudevan31355
18th June 2014, 03:51 PM
கிருஷ்ணா சார்

'நான் போட்ட புள்ளி' கர்ப்பஸ்திரீகளுக்கு புளிமாங்கா எந்த அளவுக்கு பிடிக்குமோ அந்த அளவிற்கு எனக்குப் பிடிக்கும்.

சார்,

இதே போல 'வாயாடி' யில் இதை விட அருமையான பாடல் ஒன்று. நம் பாடகர் திலகம் பாடியது.

http://cdnvod1.bigflix.com/images/vod/movies/200X280/Vayadi_(tam).jpg

பொன்னா.....
இல்லை பூவா....
கண்ணா.....
இல்லை மீனா...

முத்து முத்துப் பல்லழகு
மூடி வச்ச முன்னழகு( !?)
தந்த பசி தீராது சும்மா

செம பாட்டு சார். டி.எம்.எஸ் அப்படியே ஜெய்சங்கர் குரலில் கிளப்புவார்.

மஞ்சளுக்கு வேரேடுத்து வந்த முகம்
மாமலையில் பூவெடுத்து வந்த மணம் இந்த மணம்

இந்தப் பாட்டில் வானொலியில் வராத சரணப் பகுதி ஒன்று உண்டு.
கேட்டிருக்கிறீர்களா?

தோகை ஒன்று வந்ததென்று
மேகமெல்லாம் கூடுதடி
சொப்பனங்கள் கண்டது போல்
தேகமெல்லாம் ஆடுதடி
நீ வெட்டி வெட்டி பேசுவது சொர்க்கமடி
கைதட்டி விட்டு ஓடுவது வெட்கமடி
உன் சின்ன சின்னப் பொன்னிதழில் மச்சமடி
நான் எண்ண எண்ண என்ன மட்டும் மிச்சமடி

அடுத்த சரண முடிவில்

என் உள்ளமெல்லாம் கள்ளத்தனம் பொங்குதடி
அந்த வெள்ளத்திலும் பிள்ளைகுணம் தங்குதடி

முடிந்தவுடன்

மிக அழகாக டி.எம்.எஸ்

'அடி வாயாடி'...

என்பார்.

ரெண்டு காது போதாது சார்..

vasudevan31355
18th June 2014, 04:04 PM
இதே வாயாடியில்

மனோகரை விஜயா அண்ட் கோஷ்டியினர் கிண்டலடித்துப் பாடும் 'எமகாதகி'யின் பாடல்

வாட (அதாவது வாடையாம்) புடிக்கிற வாத்தியாரே
பாவாட புடிக்கிற வாத்தியாரே

வழக்கம் போல அல்லோலகல்லோலம்தான்.

gkrishna
18th June 2014, 04:04 PM
வாசு சார்
இந்த பாடலை பற்றி ஏற்கனவே ஜெய் திரியில் திரு கார்த்திக் அவர்கள் ஒரு பதிவு போட்டது நினைவிற்கு வருகிறது

அந்த சரணம் (பாட்டு புத்தகத்தில் இருந்தா) எங்கீருந்து பிடிகிரீர்கள்
இந்த பாட்டு ஜெய் ஷங்கர் சைக்கிள் மிதித்து கொண்டு வைட் ஓர் சாண்டல் கலர் ஜிப்ப போட்டு கொண்டு வருவர்
black அண்ட் வைட் படம் கலர் சரியாக சொல்ல முடியவில்லை

இந்த படத்திலும் சகுந்தலா வில்லி

இது மதுரை திருமாறன் படம் தானே சார்

சூதாட்டம்,திருடி,தாய் வீட்டு சீதனம் , எல்லாம் இந்த வரிசையில் வந்த படங்கள் தானே சார்

திருடி பட பாடலை பற்றி எழுத வேண்டும் சார்
நீங்கள் எழுதி நாங்கள் படிக்க வேண்டும்

"நிலவு வந்து வானத்தை திருடி கொண்டது " பாலா வித் சுசீலா
கே ஆர் விஜய தலையை கோண வகிடு எடுத்து வாரி இருப்பார்

அதே போல் "கேளுங்கள் அழகிய மங்கையின் குரல் " விச்சு மியூசிக் அபாரமாக இருக்கும்

Richardsof
18th June 2014, 04:05 PM
vasu sir

Ever Green song

http://youtu.be/p5qEfc_gru0

vasudevan31355
18th June 2014, 04:19 PM
வாயாடி

கிருஷ்ணா சார்

'வீட்டுக்கு ஒரு பிள்ளை' படத்திலுள்ளது போலவே அதே சி.ஐ.டி சகுந்தலாவின் இன்னொரு சூப்பர் பாடல் நம் எல்லோருடைய ஈஸ்வரியின் குரலில். வாயாடியில்

மஞ்சளும் குங்குமம் கொண்டதே பெண்மையா
பெண்மையின் மந்திரம் என்னிடம் இல்லையா
பாடு... என்னுடன் ஆடு
காணலாமே கற்பனை அற்புதம்
அத்தனை அத்தனை என்னிடம்

நடுவில் சோகமான விஜாயாவைக் காண்பிப்பார்கள்.

இன்னொரு கேட்கமுடியாத பாடல்

'ஓ..மை பேர் லேடி'
மாலை நேரம்
ஓ... லவ்லி ராஜா
ஆசை உண்டு
வெட்கம் என்ன நெருங்கி வா

உங்கள் பாணியில் எழுதணும்னா ஜூ ஜூ ஜூ ஜுஜுஜுஜூ கோரஸுடன்.

டி.எம்.எஸ், ஈஸ்வரி சும்மா பிரிச்சி மேஞ்சிடுவாங்க

நடுவில் ஈஸ்வரி

எஸ் டார்லிங்
வித் லவ்லி

என்று கொஞ்சி நம்மை சாகடிப்பார்.

கடலோடு நீரோட்டம்
உடலோடு போராட்டம்

இந்த அரக்கி இந்த வரிகளை உச்சரித்து பாடும் போது

சோமபானம், சுராபானம் குடித்தது போல சொக்கும் நமக்கு

சொக்கத்தங்க பாடகியாச்சே!

ஷெனாயும், டிரம்பெட்டும் தூள்பரத்தும்.

vasudevan31355
18th June 2014, 04:28 PM
கார்த்திக் சார்

சொன்னால் நம்ப மாட்டீர்கள். நேற்று இரவு படுக்கப் போவதற்கு முன் இன்றைக்கு நீங்கள் எழுதிய 'கண்ணா நலமா'? படத்தின் 'நான் கேட்டேன்... அவன் (ஜெமினி) தந்தான்' பாடலைப் பார்த்துவிட்டு படுத்தேன்.

இன்று பார்த்தால் நீங்கள் அதுபற்றி பதிவிட்டிருக்கிறீர்கள்.

ம்...என்ன செய்யலாம்?

எல்லாவற்றிலும் இப்படியா ஒத்துப் போக வேண்டும்?

ஒன்று செய்வோமா? நாம் ரெண்டு பெரும் சும்மனாச்சுங்காட்டியும் சண்ட போட்டுக்கலாமா? (இதுக்கு ஒரு பஞ்ச் பதிலை கண்டிப்பாக வைப்பீர்கள் சுவையாக என்று தெரியும்)

இல்லன்னா திருஷ்டி பட்டுடும் சார்.

'சங்கமம்' பதிவு உங்கள் கைவண்ணத்தில் அட்டகாசம்.

நான் சங்கமம் பாடல்களில் சங்கமம் ஆனது என்பது என்றோ நடந்து விட்டது,

சார்! அந்த ஹம்மிங்... அதான் சார் 'ஒரு பாட்டுக்குப் பலராகம்' பாட்டில் பாடகர் திலகத்துடன் சேர்ந்து ஹம்மிங் அளிப்பது (அஹாஹஹா) ராட்சஸி சார் ராட்சஸி.


http://www.youtube.com/watch?v=_qWuFcrpUXM&feature=player_detailpage

vasudevan31355
18th June 2014, 04:33 PM
கார்த்திக் சார்,

'புன்னகை'யின் 'ஆணையிட்டேன் நெருங்காதே!' பாடலைப் பற்றி நானும் கோபால் சாரும் பலமுறை நேரம் போவது தெரியாமல் பேசியிருக்கிறோம்.

கோபால் சார்

ப்ளீஸ்.

இப்பாடலைப் பற்றியும், பாலச்சந்தர் இப்பாடலைப் படமாக்கிய விதம் பற்றியும் இங்கு எங்களுக்காக எழுதி அசத்த வேண்டுகோள் வைக்கிறேன்.

mr_karthik
18th June 2014, 05:29 PM
என்னுடைய இசை நண்பன்

வேறு யார்?. என்னுடைய பிலிப்ஸ் பாக்கெட்சைஸ் டிரான்சிஸ்டர்தான். என்னுடைய பள்ளிப்பருவத்தில் என்னுடைய கனவு நான் விரும்பும் விஷயங்களை (பாடல்கள் / கிரிக்கெட் கமென்ட்ரி) கேட்டு மகிழ எனக்கென்று ஒரு ரேடியோ வேண்டும். இது பள்ளிப்பருவத்தில் அரைக்கால் டிரௌசரோடு அலைந்த காலத்தில் என் கனவு.

எங்கள் வீட்டில் ஒரு பெரிய வால்வு ரேடியோ இருந்தது, ஒரு மேஜை முழுவதையும் அடைத்துக்கொண்டு. வேலைக்குப்போன நேரம் போக மற்ற நேரங்களில் அப்பா அதன் அருகிலேயே அமர்ந்துகொண்டு, “திரைப்பட பாடல்கள் தவிர” மற்ற எல்லா நிகழ்ச்சிகளையும் கேட்டுக்கொண்டிருப்பார். அவர் வேலைக்குப்போகும் நேரமும் நான் பள்ளிக்குப்போகும் நேரமும் ஒன்றாக இருந்ததால், என் வீட்டு ரேடியோ எனக்கு உதவாத அந்நியமாகிப்போனது. (டெலிவிஷன் அப்போது வரவில்லை).

ரேடியோவுக்கே இந்த நிலை. டேப் ரெகார்டரெல்லாம் எங்காவது அதிசயமாகப் பார்ப்பது. பழைய திரைப்படங்களில் கட்டிலுக்குக் கீழே ஒளித்துவைத்து மற்றவர்கள் பேசுவதை ரிக்கார்ட் செய்வதைப் பார்த்திருக்கிறோம். கிராமபோன் பெட்டிபோல பெரிதாக இருக்கும். அதன் மூடியைக் கழற்றினால், இரண்டு பெரிய சக்கரங்கள். டேப் ஒன்றிலிருந்து இழுத்து இன்னொன்றில் மாட்டப்பட்டிருக்கும். அதைக்கையால்தான் மாட்ட வேண்டும். அதைப்பார்ப்பதற்கு ரொம்ப அபூர்வம். பெரிய பணக்கார வீடுகளில் இருக்கும். நாம் பார்க்க ஆசைப்பட்டால் கைக்கெட்டாத தூரத்தில் நின்று அவர்கள் ஒலிக்கவிடுவதைக் கேட்டுவிட்டு வந்துவிட வேண்டும்.

இப்போதுள்ள பிள்ளைகள் அதிர்ஷ்டசாலிகள். பள்ளியில் சேருவதற்கு முன்பே இன்டர்நெட் வசதியுடன் கூடிய ஸ்மார்ட் போன் கையில் வந்துவிடுகிறது. எங்கள் பள்ளிப்பருவத்தில் பாட்டுக்களைக் கேட்க ஆவலாய் அலைவோம். டீக்கடைகளில் வெளியே பாக்ஸ் ஸ்பீக்கர் வைத்து, சென்னை வானொலியில் திரைப்படப் பாடல்கள் ஒலிபரப்பும்போது சென்னை அலைவரிசையிலும், மற்ற நேரங்களில் சிலோன் ரேடியோ அலைவரிசையிலும் மாற்றுவார்கள். சென்னையில் காலை அரைமணி நேரம், மாலை கால்மணி நேரம் அவ்வளவுதான். சிலோன் அலைவரிசை ஏகப்பட்ட குறுக்கிடுகளுடன் அரையும் காலுமாக கேட்கும்.

என்ன இருந்தாலும் நமக்கென்று ஒரு சின்ன ரேடியோ வேண்டும், நம் இஷ்டப்பட்ட நேரத்தில் பாட்டுக்கேட்க வேண்டும், என்ற ஆவலில், பல விஷயங்களை தியாகம் செய்து சிறுகச்சிறுக பணம் சேர்க்கத்துவங்கினேன். எனக்குப்பிடித்த பிலிப்ஸ் பாக்கெட்சைஸ் ரேடியோ (சோப்பு டப்பாவை விட கொஞ்சம் சிறியது) 95 ரூபாய் என்பதையெல்லாம் விசாரித்து வைத்து அதே நோக்கமாக பணம் சேர்த்து, குறைந்த பத்து ரூபாயை அம்மாவிடம் வாங்கிப்போட்டு அந்த ரேடியோவை வாங்கிய அன்று இருந்த சந்தோஷம் அதற்க்கு முன்னும் பின்னும் வரவில்லை. அப்படி ஒரு சந்தோஷம். ரேடியோ வாங்கும்போதே, சிலோன் எடுக்குமா என்று கேட்டு, அங்கேயே சிலோன் அலைவரிசையை வைக்கச்சொல்லி அதைக் கேட்டபிறகுதான் திருப்தியாக வாங்கினேன்.

நான்கு போர்ஷன்கள் இருந்த வீட்டில் பொதுவான மொட்டைமாடி. அங்கே வைத்துதான் 'என்னுடைய' ரேடியோவில் பாட்டுக்கேட்பது வழக்கம். அடேயப்பா அப்போது வந்த பாடல்கள் அனைத்தையும் அதில்தான் கேட்டேன். இன்றைக்கு எல்.சி.டி. டிவியிலும், லாப்டாப்பிலும் பார்த்து மகிழும் பாடல்கள் எல்லாம் அந்தக் காலத்தில் இந்த பாக்கெட் ரேடியோவில் கேட்டு மகிழ்ந்தவைதான். ஏதோ அதிசயப்பொருள் போல வெல்வெட் துணியில் பத்திரமாக சுற்றிவைத்து பாதுகாப்பாக வைத்திருந்தேன். வாங்கி கொஞ்சகாலம் கழித்துதான் அப்பாவுக்கு தெரியும். அவர் தெரிந்ததாகக் காட்டிக்கொள்ளவில்லை, நான் படிப்பில் புலியாக இருந்ததால்.

இரண்டு சந்தோஷமான செய்திகள். ஒன்று, நான் அவ்வளவு பத்திரமாக வைத்திருந்ததால் ஒருமுறைகூட ரிப்பேர் ஆனதில்லை. இன்னொன்று, அந்த பாக்கெட் ரேடியோ இன்னும் நினைவுப்பொருளாக என்னிடம் இருக்கிறது...

vasudevan31355
18th June 2014, 05:38 PM
இன்றைய ஸ்பெஷல் (7)

இன்றைய ஸ்பெஷலாக வருவது 1973-இல் வெளிவந்த 'மணிப்பயல்' படத்திலிருந்து ஒரு அருமையான பாடல்.

http://www.abistv.com/uploads/movies/0beef194e920fe60f5c2593f8844f7bd.jpg

'தங்கச் சிமிழ் போல் இதழோ
அந்த சங்கத் தமிழ் போல் மொழியோ'

ஏ.ஜகந்நாதன் இயக்கிய இப்படத்தில் மாஸ்டர் சேகர் பிரதான பாத்திரம் ஏற்று இருந்தார். அவர்தான் மணிப்பயல். ஆர்.எம்.வீரப்பன் திரைக்கதை அமைத்து தயாரித்த இப்படம் செல்வி எண்டர்பிரைசஸ் தயாரிப்பு என்று வெளிவந்தது.

ஆர்.எம்.வீரப்பன் தயாரிப்பு என்பதால் அண்ணாதுரை, எம்ஜியார், திராவிட முன்னேற்ற கொள்கைகள் என்று படம் அரசியல் நெடி அடிக்கும்.

ஜெயச்சந்திரன் குரலில் இப்பாடல் இனிமையோ இனிமை! ஏ.வி.எம்.ராஜனும் ஜெயந்தியும் காதல் களியாட்டம் புரிவார்கள். ஜெயந்தி படுகிளாமர் இந்தப் பாடலில். (இந்த மாதிரி வேறொரு தமிழ்ப் படத்தில் ஜெயந்தி நடித்ததில்லை என்று நினைக்கிறேன்) விதவிதமான மாடர்ன் டிரெஸ்சில் இன்றைய பெருசுகளின் தூக்கத்தைத் தொலைப்பார். ஏ.வி.எம்.ராஜனோ கேட்கவே வேண்டாம். (கூலிங் கிளாஸ் எல்லாம் வேற) மனசுக்குள் நடிகர் திலகமாகவே தன்னை நினைத்துக் கொள்வார்.

தங்கச் சிமிழ் போல் இதழோ
அந்த சங்கத் தமிழ் போல் மொழியோ
தந்தச் சிலைபோல் உடலோ
அது தலைவனின் இன்பக் கடலோ

தங்கச் சிமிழ் போல் இதழோ
அந்த சங்கத் தமிழ் போல் மொழியோ

லா லா லா லா லால்லா
லா லா லா லா லால்லா

கட்டுக்குழல் தொடும் காற்று
அது காதில் சொல்லும் ஒரு பாட்டு
கன்னம் எனும் மது ஊற்று
அதில் என்னை நிதம் நீராட்டு

தங்கச் சிமிழ் போல் இதழோ
அந்த சங்கத் தமிழ் போல் மொழியோ

கண்ணன் துணை ஒரு ராதை
அந்த ராமன் துணை ஒரு சீதை
மன்னன் துணை இந்தத் தோகை
என்றும் மங்கை இனம் ஒரு போதை

தங்கச் சிமிழ் போல் இதழோ
அந்த சங்கத் தமிழ் போல் மொழியோ

லா லா லா லா லால்லா
லா லா லா லா லால்லா

கட்டில் வரை திரை போட்டு
அதில் காதல் கதை அரங்கேற்று
தொட்டில் என்னும் மடி சேர்த்து
சிறுபிள்ளை எனைத் தாலாட்டு

ராரிரோ ராரிரோ... ராரிரோ ராரிரோ

தங்கச் சிமிழ் போல் இதழோ
அந்த சங்கத் தமிழ் போல் மொழியோ
தந்தச் சிலைபோல் உடலோ
அது தலைவனின் இன்பக் கடலோ

'மெல்லிசை மன்னர்' தான் என்றும் மெல்லிசை மன்னர்தான் என்று ஆணித்தரமாக இப்பாடலில் நிரூபித்திருப்பார்.

இது ஜெயச்சந்திரனின் முதல் பாடல் என்போர் உண்டு. இல்லை இல்லை 'அலைகள்' படத்தின் 'பொன்னென்ன பூவென்ன கண்ணே' பாடல்தான் அவருக்கு முதல் பாடல் என்பார்கள் பலர். இரண்டு படங்களுமே 1973இல் வந்தவை. ஆனால் மணிப்பயல்தானே முதலில் வந்தான்? எந்தப் பாடலுக்கு முதலில் மைக் பிடித்தார் ஜெயச்சந்திரன் என்று தெரிந்தவர்கள் கூறவும். இப்பாடலில் வரும் பெண் பின்னணிக்குரல் லதா என்று எங்கோ படித்த ஞாபகம். இதையும் தெரிந்தவர்கள் கூறவும்.


http://www.youtube.com/watch?v=50F4d6N9CJs&feature=player_detailpage

parthasarathy
18th June 2014, 06:10 PM
[QUOTE=vasudevan31355;1140008]இன்றைய ஸ்பெஷல் (7)

[B][COLOR="blue"][SIZE=3]இன்றைய ஸ்பெஷலாக வருவது 1973-இல் வெளிவந்த 'மணிப்பயல்' படத்திலிருந்து ஒரு அருமையான பாடல். ஏ.வி.எம்.ராஜனோ கேட்கவே வேண்டாம். (கூலிங் கிளாஸ் எல்லாம் வேற) மனசுக்குள் நடிகர் திலகமாகவே தன்னை நினைத்துக் கொள்வார்.

தங்கச் சிமிழ் போல் இதழோ
அந்த சங்கத் தமிழ் போல் மொழியோ

திரு. வாசு,

இந்த ஏ.வி.எம். ராஜன் அவர்களை நாங்கள் ஐயாயிரம் சிவாஜி என்று தான் சொல்வோம். ஷண்முக சுந்தரம், விஜய குமார், ஹெரான் ராமசாமி கணக்கு ஆண்டவன் தன் சொல்லணும்!

அன்புடன்,

இரா. பார்த்தசாரதி

vasudevan31355
18th June 2014, 06:19 PM
ஐயாயிரம் சிவாஜி!?

Gopal.s
18th June 2014, 06:26 PM
கார்த்திக் சார்,

'புன்னகை'யின் 'ஆணையிட்டேன் நெருங்காதே!' பாடலைப் பற்றி நானும் கோபால் சாரும் பலமுறை நேரம் போவது தெரியாமல் பேசியிருக்கிறோம்.

கோபால் சார்

ப்ளீஸ்.

இப்பாடலைப் பற்றியும், பாலச்சந்தர் இப்பாடலைப் படமாக்கிய விதம் பற்றியும் இங்கு எங்களுக்காக எழுதி அசத்த வேண்டுகோள் வைக்கிறேன்.[/COLOR][/SIZE][/B]
ஆஹா, அவசியம் அந்த திருப்பணியை செவ்வனே செய்வேன்.கரும்பு தின்ன கூலியா?(அவசரமாய் ஸ்பெல் திருத்தினேன் .கடைசி வார்த்தை விபரீதமாக type ஆகி தொலைத்திருந்தது.)

mr_karthik
18th June 2014, 06:32 PM
நான் 'புன்னகை', 'கண்ணா நலமா' பற்றி எழுதப்போக நீங்கள் ,'மணிப்பயல்' பற்றி எழுத (அன்றைக்கு 'லட்டு' லதா ஸ்பெஷல் போல) இன்று 'Mega' ஜெயந்தி ஸ்பெஷலா?.

Gopal.s
18th June 2014, 06:34 PM
கார்த்திக் ,

நான் எங்க வீட்டு ரேடியோ,transistor பற்றி ஒரு புராணம் எழுத நினைத்த போது ,உங்களோட அருமையான பதிவு. என்னுடைய ராக ஆலாபனை உங்களை முந்த வைத்தது எனக்கு சந்தோஷமே. கொடுத்து வைத்த ரேடியோ. மிக ரசித்தேன்.

mr_karthik
18th June 2014, 06:38 PM
டியர் வாசுதேவன் சார்,

மணிப்பயல் 1973 பொங்கல் ரிலீஸ். அலைகள் 1973 தீபாவளி ரிலீஸ். அதுமட்டுமல்ல, அலைகள் துவங்கியதே 73 மார்ச்சில்தான். எனவே 'தங்கச்சிமிழ் போல்' பாடல்தான் ஜெயச்சந்திரனின் முதல் பாடல்.

vasudevan31355
18th June 2014, 06:41 PM
(அவசரமாய் ஸ்பெல் திருத்தினேன் .கடைசி வார்த்தை விபரீதமாக type ஆகி தொலைத்திருந்தது.)

யப்பா! நல்ல வேலை பார்த்து தொலச்சியே! இல்லேன்னா திரியை இழுத்து மூடி இருப்பாங்க இந்நேரம்.

Thanks God

நிஜம்மாவே ஆடிப் போயிட்டேன்பா ஒரு செகண்ட்.

vasudevan31355
18th June 2014, 06:43 PM
டியர் வாசுதேவன் சார்,

மணிப்பயல் 1973 பொங்கல் ரிலீஸ். அலைகள் 1973 தீபாவளி ரிலீஸ். அதுமட்டுமல்ல, அலைகள் துவங்கியதே 73 மார்ச்சில்தான். எனவே 'தங்கச்சிமிழ் போல்' பாடல்தான் ஜெயச்சந்திரனின் முதல் பாடல்.


அருமை கார்த்திக் சார்.

நன்றி! இப்போது மிக நன்றாகப் புரிந்து விட்டது நீங்கள் படிப்பில் புலியாகத்தான் இருந்திருக்க வேண்டுமென்று. நல்ல ஞாபக சக்தி!

இறைவா சக்தி கொடு! சக்தி கொடு!

vasudevan31355
18th June 2014, 06:47 PM
நான் 'புன்னகை', 'கண்ணா நலமா' பற்றி எழுதப்போக நீங்கள் ,'மணிப்பயல்' பற்றி எழுத (அன்றைக்கு 'லட்டு' லதா ஸ்பெஷல் போல) இன்று 'Mega' ஜெயந்தி ஸ்பெஷலா?.

கார்த்திக் சார்,

நீங்கள் சொன்னதற்கு அப்புறம்தான் நானே கண்டு பிடித்தேன். மூன்றுமே ஜெயந்தி பற்றியது என்று. எதேச்சையாக நடந்தது. நான் கவனிக்கவே இல்லை. அட! இதிலேயுமா!

vasudevan31355
18th June 2014, 07:04 PM
சரி! ஜெயந்தி ரசிகர்கள் கோபித்துக் கொள்ளப் போகிறார்கள்! 'லதா படத்தைப் போட்டியே... ஜெயந்தி போட்டோ போடலியே' என்று.

அவர்களுக்காக.

http://chitraloka.tatwaa.in/images/gallery/Actress/jayanthi/thumbs/kasturi%20nivasa%20jayanthi_l.jpg

http://www.chitraloka.com/images/gallery/Actress/jayanthi/thumbs/kavaleradu%20kulaondu%20jayanthi1_l.jpg

http://www.chitraloka.com/images/gallery/Actress/jayanthi/thumbs/miss%20leelavathi%20jayanthi_l.jpg

http://www.chitraloka.com/images/gallery/Actress/jayanthi/thumbs/vathsalya%20jayanthi_l.jpg

http://actressin.com/photos/jayanthi-old-actress-photos/jayanthi-old-actress-photos.jpg

http://chitraloka.com/images/gallery/Actress/jayanthi/thumbs/jayanthi%20image1_l.jpg

http://1.bp.blogspot.com/_BbJAArGDIEA/R8Smr_3HRII/AAAAAAAAC7E/yK3eGiFFOx4/s1600/JAYANTHI3.jpg

http://3.bp.blogspot.com/_BbJAArGDIEA/R8SnCf3HRKI/AAAAAAAAC7U/WTvHQkyPTgE/s1600/JAYANTHI90.jpg

http://4.bp.blogspot.com/_BbJAArGDIEA/R8Sm2v3HRJI/AAAAAAAAC7M/5KUtVT-i9fk/s1600/JAYANTHI35.jpg

mr_karthik
18th June 2014, 07:05 PM
மணிப்பயலில் 'நமது' ஆலத்துக்காக எஸ்.ஜானகி பாடிய 'நான் ஆடினால் ஒருவகை போதையில் பலவகை மனிதரும் கூடவே ஆடுவார்' என்ற பாடலும் உண்டு.

கொஞ்சம் கட்சி சாயல் வீசிய படம். தனிக்கட்சி துவங்கிய புதிது.

மாஸ்டர் சேகர் பாடும் 'நான் உள்ளேயிருந்து வெளியே வந்தேன் உலகம் தெரிந்ததடா' நம்ம ராட்சசி பாடியதுதான். பழைய கட்சியிலிருந்து வெளியே வந்த நேரம். தயாரிப்பு ஆ.எம்.வீரப்பன். கேட்கணுமா?.

பேபி இந்திராவின் பள்ளிக்கூட விழாப்பாட்டு ரொம்ப அதிகப் பிரசங்கித்தனமாக தெரிந்தது. டைட் உடையில் ஜெயந்தி கொஞ்சம் ஆறுதல்.

'காஞ்சியிலே ஒரு புத்தன் பிறந்தான்' பக்கா கட்சிப்பிரச்சாரம்.

Gopal.s
18th June 2014, 07:12 PM
வாசு ,

ஆணையிட்டு விட்டீர்கள். இந்த படம் 1971 இல் நெய்வேலி அமராவதியில் பார்த்தது.இந்த படம் பார்த்து விட்டு வரும் போது என் நண்பன் (அவனுக்கு சிறிது உடல் உபாதையில் வாய் கோணலாக இருப்பதால் கோண வாயன் என்று கூப்பிடுவோம்). அப்போதெல்லாம் எல்லோருக்கும் பட்ட பெயர்தான்.(இப்போது அதெல்லாம் வழக்கிலில்லை என்று கேள்வி)
படம் பார்த்து விட்டு நடந்து வரும் போது எங்கள் பள்ளி வழியாக வந்தோம். கழிப்பறைக்கு சென்றால் அங்கு எழுதியிருந்த " புண்" என்று ஆரம்பித்த வார்த்தையை விவரம் தெரியாமல் கோண வாயன் புன்னகை என்று படித்து விட நாங்கள் சிரித்து கலாய்த்து அடித்த லூட்டி.

அப்போதே எனக்கு விமர்சகர்களை கண்டால் கொதிக்கும். எந்த சோதனை முயற்சிகளையும் முளையிலேயே கிள்ளி எரிந்து வெந்நீர் ஊற்றி விடுவார்கள். அப்போதே நான் கொஞ்சம் ரசனையில் வேறு பட்டவன். (ரவி சொல்வது மாதிரி படி படியாக எழுதி பழகி உயரவில்லை. வயதின் முதிர்ச்சிக்கும் அறிவின் எழுச்சிக்கும் தொடர்பேயில்லை) அப்போது எனக்கு neo noir அபத்த படங்களை தெரியாவிட்டாலும் ,சும்மா கற்பழிப்பு என்றால் ஜாக்கெட் கிழிப்பதை காட்டாமல் , சினிமா லைசென்ஸ் உபயோக படுத்தி பாலச்சந்தர் பண்ணிய புதுமை எனக்கு மிக பிடித்தே இருந்தது.(கற்பழிப்பு பற்றியெல்லாம் 8 வயதிலேயே எனக்கு வயதை மீறிய நண்பர்கள் மது,மாணி என்ற சென்னை நண்பர்கள் சுமாராக போதித்து விட்டார்கள்.11 வயதில் map drawing ஆரம்பித்தாகி விட்டது).பாடல்களே ரியலிசம் இல்லாதது என்று வரும் போது ,அதை சுவாரஸ்ய படுத்த எங்கு உபயோகித்தால் என்ன?

காமத்தில் கண்கள் கெட்டால் ,ஞானி யின் பேரும் முட்டாள்.(அம் ஆத்மியில் சேர்ந்து election நின்றாலும்)மோகத்தில் பிறரை தொட்டால் உன் தாயே நேர்மை கெட்டாள் . என்று வரிகளும், பரபரப்பான இசை கோர்ப்பும் அமர்களமான பாலச்சந்தரின் low key mood lighting எல்லாம் காட்சியை தூக்கும்.(என்ன பாலச்சதருக்கு பிரியமான ஜெயந்தியின் மேலானதை இன்னும் கொஞ்சம் கூடுதல் focus பண்ணியிருக்கலாம்).ராமதாசின் கோமாளி minor சுரிதார் (ஜமிந்தார்?),ஜெயந்தியின் கருப்பில் பார்டர் போட்டு நீள செயின் என்று ஞாபகம்.(43 வருஷம் ஆயிடிச்சு பாஸ்).close up சீற்ற கண்கள்,ராமதாசின் வேர்க்கும் மோகம், புலி தலை ,ஒரு மர்ம பட பாணி காட்சியமைப்பு (ராகவன் VAT என்று ஒன்று குடித்து கொண்டிருப்பார்.இதை நான் பார்த்ததே இல்லை.)கொஞ்சமாய் போராட்டம். நிறைய பாட்டு.

பாலச்சந்தரின் துணிச்சல்,புதுமை எண்ணத்தின் எழுச்சிக்கு கோட்டி சலாமுங்கோ.(கோட்டி தண்டாலு )

vasudevan31355
18th June 2014, 07:17 PM
இதனுடைய (மணிப்பயல்') பாதிப்பிலேயே 'தங்கதுரை' அதே 'மாஸ்டர்' சேகர் நடிக்க வெளிவந்தது. ஆனால் அது வண்ணப்படம் என்று நினைக்கிறேன்.

இதிலும் 'வாடா கண்ணே வெள்ளாடு... வாயிருந்தா சொல்லிவிடு (சூப்பர் பாட்டு)

அண்ணா புகழ் பாடும் பாடல் சௌகார் ஜானகி ( சுசீலாவின் குரலில்) பாடுவது போல வரும்

'காலமகள் பாதையிலே போடா கண்ணே போ'

இதில் 'அண்ணா' வைப் புகழ்ந்து இரண்டு வரிகள் வரும்.

அறிவுக் கண்ணைத் திறந்து வைத்தான் அழகு மொழியிலே
அவன் அறிஞனாகி உயர்ந்து நின்றான் இமயம் வரையிலே

ம்ம். எப்படியெல்லாம் கட்சியையும், தலைவர்களையும் வளர்த்தார்கள்?!

mr_karthik
18th June 2014, 07:18 PM
டியர் வாசு சார்,

'மெகா' ஜெயந்தியின் நிழற்பட வரிசை தூள்.

படம் ஒவ்வொன்றிலும்....

தாமரைக்கன்னங்கள்
தேன்மலர்க்கின்னங்கள்..

vasudevan31355
18th June 2014, 07:22 PM
இதனுடைய (மணிப்பயல்') பாதிப்பிலேயே 'தங்கதுரை' அதே 'மாஸ்டர்' சேகர் நடிக்க வெளிவந்தது. ஆனால் அது வண்ணப்படம் என்று நினைக்கிறேன்.

இதிலும் 'வாடா கண்ணே வெள்ளாடு... வாயிருந்தா சொல்லிவிடு (சூப்பர் பாட்டு)

அண்ணா புகழ் பாடும் பாடல் சௌகார் ஜானகி (சுசீலாவின் குரலில்) பாடுவது போல வரும்.

'காலமகள் பாதையிலே போடா கண்ணே போ'

இதில் 'அண்ணா' வைப் புகழ்ந்து இரண்டு வரிகள் வரும்.

அறிவுக் கண்ணைத் திறந்து வைத்தான் அழகு மொழியிலே
அவன் அறிஞனாகி உயர்ந்து நின்றான் இமயம் வரையிலே

ம்ம். எப்படியெல்லாம் கட்சியையும், தலைவர்களையும் வளர்த்தார்கள்?!

vasudevan31355
18th June 2014, 07:27 PM
வாசு ,

ஆணையிட்டு விட்டீர்கள். இந்த படம் 1971 இல் நெய்வேலி அமராவதியில் பார்த்தது.இந்த படம் பார்த்து விட்டு வரும் போது என் நண்பன் (அவனுக்கு சிறிது உடல் உபாதையில் வாய் கோணலாக இருப்பதால் கோண வாயன் என்று கூப்பிடுவோம்). அப்போதெல்லாம் எல்லோருக்கும் பட்ட பெயர்தான்.(இப்போது அதெல்லாம் வழக்கிலில்லை என்று கேள்வி)
படம் பார்த்து விட்டு நடந்து வரும் போது எங்கள் பள்ளி வழியாக வந்தோம். கழிப்பறைக்கு சென்றால் அங்கு எழுதியிருந்த " புண்" என்று ஆரம்பித்த வார்த்தையை விவரம் தெரியாமல் கோண வாயன் புன்னகை என்று படித்து விட நாங்கள் சிரித்து கலாய்த்து அடித்த லூட்டி.

அப்போதே எனக்கு விமர்சகர்களை கண்டால் கொதிக்கும். எந்த சோதனை முயற்சிகளையும் முளையிலேயே கிள்ளி எரிந்து வெந்நீர் ஊற்றி விடுவார்கள். அப்போதே நான் கொஞ்சம் ரசனையில் வேறு பட்டவன். (ரவி சொல்வது மாதிரி படி படியாக எழுதி பழகி உயரவில்லை. வயதின் முதிர்ச்சிக்கும் அறிவின் எழுச்சிக்கும் தொடர்பேயில்லை) அப்போது எனக்கு neo noir அபத்த படங்களை தெரியாவிட்டாலும் ,சும்மா கற்பழிப்பு என்றால் ஜாக்கெட் கிழிப்பதை காட்டாமல் , சினிமா லைசென்ஸ் உபயோக படுத்தி பாலச்சந்தர் பண்ணிய புதுமை எனக்கு மிக பிடித்தே இருந்தது.(கற்பழிப்பு பற்றியெல்லாம் 8 வயதிலேயே எனக்கு வயதை மீறிய நண்பர்கள் மது,மாணி என்ற சென்னை நண்பர்கள் சுமாராக போதித்து விட்டார்கள்.11 வயதில் map drawing ஆரம்பித்தாகி விட்டது).பாடல்களே ரியலிசம் இல்லாதது என்று வரும் போது ,அதை சுவாரஸ்ய படுத்த எங்கு உபயோகித்தால் என்ன?

காமத்தில் கண்கள் கெட்டால் ,ஞானி யின் பேரும் முட்டாள்.(அம் ஆத்மியில் சேர்ந்து election நின்றாலும்)மோகத்தில் பிறரை தொட்டால் உன் தாயே நேர்மை கெட்டாள் . என்று வரிகளும், பரபரப்பான இசை கோர்ப்பும் அமர்களமான பாலச்சந்தரின் low key mood lighting எல்லாம் காட்சியை தூக்கும்.(என்ன பாலச்சதருக்கு பிரியமான ஜெயந்தியின் மேலானதை இன்னும் கொஞ்சம் கூடுதல் focus பண்ணியிருக்கலாம்).ராமதாசின் கோமாளி minor சுரிதார் (ஜமிந்தார்?),ஜெயந்தியின் கருப்பில் பார்டர் போட்டு நீள செயின் என்று ஞாபகம்.(43 வருஷம் ஆயிடிச்சு பாஸ்).close up சீற்ற கண்கள்,ராமதாசின் வேர்க்கும் மோகம், புலி தலை ,ஒரு மர்ம பட பாணி காட்சியமைப்பு (ராகவன் VAT என்று ஒன்று குடித்து கொண்டிருப்பார்.இதை நான் பார்த்ததே இல்லை.)கொஞ்சமாய் போராட்டம். நிறைய பாட்டு.

பாலச்சந்தரின் துணிச்சல்,புதுமை எண்ணத்தின் எழுச்சிக்கு கோட்டி சலாமுங்கோ.(கோட்டி தண்டாலு )

பிள்ளையார் பிடிக்கச் சொன்னால் குரங்காகப் பிடித்து விட்டாயே நண்பா!