PDA

View Full Version : மனதை மயக்கும் மதுர கானங்கள்



Pages : 1 2 3 4 5 6 7 8 [9] 10 11 12 13 14 15 16

gkrishna
18th July 2014, 02:00 PM
ஸாரி, கோபால் சார்,

தங்களின் பஞ்சாமிர்தம் கதையைப் படித்தபின்தான் தோன்றுகிறது, ஜெய்குமாரியின் சோகக்கதையை பதித்து, பலரது கனவைக் கலைத்திருக்க வேண்டாமோ என்று.

இப்போது முடிவெடுத்து விட்டேன். இனி யாருடைய தற்கால நிலையையும் சொல்லி யாருடைய கனவையும் கலைக்கக்கூடாது என்று.

கார்த்திக் சார்

வீழ்ந்தவர்கள் வாழ்ந்தால் சந்தோசம்
வாழ்ந்தவர்கள் வீழ்ந்தால் துக்கம்

சாவித்திரி அம்மா,சந்திரபாபு,அசோகன் போன்றோர் இறுதி காலத்தில் பட்ட கஷ்டம் மறக்கமுடியுமா .அசோகன் மரணத்திற்கு பின் அசோகனின் பூத உடலை அடக்கம் செய்வதற்கு ஜெய் அவர்கள் தான் எல்லா உதவியும் செய்தார்கள் என்று கேள்விபட்டேன்

vasudevan31355
18th July 2014, 02:00 PM
அன்பு கார்த்திக் சாரை அப்படியே வழிமொழிகிறேன்.

அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகளை உரித்தாக்குகிறேன்.

கார்த்திக் சார், கிருஷ்ணா சார், ராகவேந்திரன் சார், கோபால் சார் , முரளி சார், வினோத் சார், ராஜேஷ் சார், மது சார், வெங்கிராம் சார், பார்த்தசாரதி சார், சின்னக்கண்ணன் சார், பாலா சார், ராஜ்ராஜ் சார், யுகேஷ் பாபு சார், கோபு சார் (இன்னும் பெயர் விட்டுப் போன நண்பர்கள் மன்னிக்க.) மற்றும் வெளிப் பார்வையாளர்கள் அனைவருக்கும் நம் திரியின் சார்பாக உளம் கனிந்த நன்றியாகலித் தெரிவித்துக் கொள்கிறேன்.

அது மட்டுமல்ல. வெறும் பாடல்களின் தளமாக மட்டும் விளங்காமல் பல அரிய தகவல்களைப் பகிரும் அற்புத பொக்கிஷத் தளமாகவும் இத்திரி நடை போடுவது அத்துணை பேருடைய சிரத்தையான உழைப்பினால்தான்.

நன்றி! நன்றி! நன்றி!

mr_karthik
18th July 2014, 02:04 PM
டியர் வாசு சார்,

அண்ணியாரின் அருமையான பாடலான 'அன்புக்கரங்கள்' படத்தின் 'அழகென்ன அறிவென்ன' பாடலைப்பதித்து இன்றைய நாளை மகிழ்ச்சியுடன் துவங்க வைத்துவிட்டீர்கள். தலைவர் விறைப்பாக நடந்துபோக அவர் கவனத்தை தன்பக்கம் திருப்ப அண்ணி செய்யும் அலம்பல்கள் அப்பப்பா. (பேராசிரியரின் கவனத்தை திருப்ப 'அலையே வா' பாடுவது வேறொரு ரகம். அது மென்மைக்காதல், இதுவோ முரட்டுக்காதல்).

(நேற்றிரவு ஒரு கூத்து. முரசு தொலைக்காட்சியில் 'அலையே வா' பாடலை ஒளிபரப்பி, கீழே 'படம்: அந்தமான் காதலி, இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்' என்று போட்டார்கள். அங்கு பணிபுரிபவர்கள் அரைவேக்காடுகள் அல்ல. அரைக்கால் வேக்காடுகள்)

'உங்கள் அழகென்ன' பாடலில் வி-கட் தாவணியுடன் அண்ணி ரொம்பவே அழகு ('தாமரைப்பூ கொளத்திலே' பாடலில் வருவது போல).

ஒரே ஒரு திருஷ்டி சுதர்சனத்தின் இடையிசை (இண்ட்டர்லூட்). அதிலும் மூன்றாவது சரணத்துக்கு முன் வரும் இடையிசை ரொம்ப கொடுமை.

திடீர் திடீரென அதிசயங்களை கொட்டும் தங்களுக்குப் பாராட்டுக்கள்...

vasudevan31355
18th July 2014, 02:05 PM
வாசு சார்


நீங்கள் மென்மேலும் சாதனை புரிய எல்லாம் வல்ல அந்த 'சிவா'
பெருமானை வேண்டுகிறேன்

வாழ்க வளர்க


நன்றி கிருஷ்ணா சார். இதில் பெரும்பங்கு உங்களுக்கு உண்டு என்பதனை அனைவரும் அறிவார்கள். உங்களுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

நீங்கள் 'ஜி' யைப் போடாமல் விட்டாலும் அந்த 'ஜி' தான் 'நான் வணங்கும் தெய்வம்'.என் உடல், பொருள் , ஆவி, ஆன்மா இன்னும் என்னென்ன உண்டோ அத்தனையும் அந்த அற்புத பிறவிக்கே!

vasudevan31355
18th July 2014, 02:09 PM
டியர் வாசு சார்,

திடீர் திடீரென அதிசயங்களை கொட்டும் தங்களுக்குப் பாராட்டுக்கள்...

கார்த்திக் சார்!

நன்றி! இன்னொரு சிறிய பரிசு உங்களுக்காகவே. ஆவண வடிவில். அண்ணியார் மட்டும்.

பேசும்படம். (1966 பிப்ரவரி)

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/vasudevan31355006/5ef1fc0f-b3e6-4c16-9ed0-57e59e0604c3.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/vasudevan31355006/5ef1fc0f-b3e6-4c16-9ed0-57e59e0604c3.jpg.html)

mr_karthik
18th July 2014, 02:23 PM
டியர் கோபால் சார்,

ஜமுனாராணியை பற்றிய தங்கள் பதிவு அருமை. ஈஸ்வரியின் குரலில் இருப்பது 'துள்ளல்' என்றால் ஜமுனாவின் குரலில் இருப்பது 'கிக்'.

அவரது பாடல் வரிசையில் 'காலம் சிறிது கனவுகள் பெரிது கவலைப்படுவதேன் மனது' (தைபிறந்தால் வழிபிறக்கும்) பாடலையும் சேர்த்துக்கொள்ளுங்கள்.

சரியான நேரத்தில் வித்தியாசமான குரல்களை நினைவூட்டி வருகிறீர்கள். நன்றி...

mr_karthik
18th July 2014, 02:31 PM
டியர் வாசு சார்,

தங்கள் அன்பான பரிசுக்கு நன்றி.

தங்கள் பரிசு அண்ணியின் தனி போல்டரில் இடம்பெற்றுவிட்டது...

mr_karthik
18th July 2014, 02:40 PM
டியர் ராஜேஷ் சார்,

எனக்கு பிடித்த பாடலான 'கட்டித்தங்க ராஜாவுக்கு காலை நேரம் கல்யாணம்' (மணி ஓசை) பாடலை பதித்ததற்கு நன்றி.

நான் எப்போது இந்தப்பாடலைப் பார்த்தாலும் ஜமுனாராணியின் 'அச்சம்.... நாணம்... படம் பயிர்ப்பு, அச்சம் நாணம் மேடம் பயிர்ப்பு அழகாய் வேணும் பெண்ணுக்கு' என்ற வரிகளில் அவரது கொஞ்சலுக்காகவும், புஷ்பலதா இருமுறை வாயை சுழித்து அழகு காட்டும் காட்சிக்காகவும் காத்திருப்பேன்.

தமிழில் சரியான முறையில் கொண்டாடப்படாத நடிகை புஷ்பலதா. வயதான பின்னும் அழகாயிருந்த வெகு சில நடிகையரில் ஒருவர்...

gkrishna
18th July 2014, 02:49 PM
http://i1.ytimg.com/vi/l2ctrIB64yA/movieposter.jpg?v=503f0dbdhttps://encrypted-tbn2.gstatic.com/images?q=tbn:ANd9GcQ9Wl7Vuo0BIes_uqGYfWMXIsf7HCKeS Pdf3t7QAC0H0njCy73z

பிள்ளை செல்வம் 1973
புரட்சிதாசன் தயாரிப்பு

S.V. ரங்கராவ் தேவிகா (கார்த்திக் சார் அண்ணி ) ஜெய்ஷங்கர் குமரி பத்மினி நாகேஷ் சோ சந்திரபாபு தங்கவேலு மனோகர் அசோகன் சுகுமாரி சுந்தரிபாய் பெருங்கூட்டம்

தேவிகா ரங்கராவ் தம்பதியர்க்கு நீண்ட நாள் கழித்து பிறக்கும் குழந்தை கோபி சிறு வயதிலேயே TB நோயால் பாதிக்கப்பட்டு சுவிட்சர்லாந்த்க்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லபடுகிரான். செல்லும் வழியில் மனோகர் சதியால் பைலட் நாகேஷ் மரணமடைகிறார் .விமானமும் பாதிப்புக்கு
உள்ளாகி யாரும் இல்லாத காட்டுக்குள் அந்த சிறுவன் கோபி படும் துன்பம் இறுதியில் குடும்பத்துடன் வந்து சேர்ந்தானா

விடை dvd பார்த்தல் தெரியும்

சக்திவேல் னு ஒரு புது மியூசிக் டைரக்டர்
டைட்டில் அறிமுகம் என்று காண்பிக்கபடுகிறது
ஒரு வித்யாசமான முயற்ச்சி

பாடகர் திலகம் சுசீலா குரல்களில்

'பாபு மணி பாபு என் தெய்வம் தந்த பிள்ளை செல்வமே '
கார்த்திக் சார் க்கு பிடித்த தேவிகா அண்ணியார் பாடும் பாடல்

http://www.youtube.com/watch?v=xGkfHn5_OCk

https://www.youtube.com/watch?v=W_jHqnadj0k

gkrishna
18th July 2014, 02:51 PM
கார்த்திக் சார்!

நன்றி! இன்னொரு சிறிய பரிசு உங்களுக்காகவே. ஆவண வடிவில். அண்ணியார் மட்டும்.
பேசும்படம். (1966 பிப்ரவரி)


வாவ பியுட்டி

gkrishna
18th July 2014, 03:03 PM
தமிழில் சரியான முறையில் கொண்டாடப்படாத நடிகை புஷ்பலதா. வயதான பின்னும் அழகாயிருந்த வெகு சில நடிகையரில் ஒருவர்...

திரிசூலம் டாக்டர் ஐ மறக்க முடியுமா

http://antrukandamugam.files.wordpress.com/2013/10/pushpalatha-ts-muthaiah-yaarukku-sontham-19631.jpg?w=593

நடிகர் முத்தையா (தங்கசுரங்கம் பாரதியின் தந்தை ) பற்றி கொஞ்சம் ரின் சோப்பு போட்டு :) அலசுங்க

கர்ணன் சகுனி இவர் தானே
http://antrukandamugam.files.wordpress.com/2013/07/muthaiah-film-vivahitha-re.jpg?w=468

Richardsof
18th July 2014, 04:08 PM
இனிய நண்பர் வாசு சார்

குறுகிய நாட்களில் 2000 பதிவுகளை கடந்து மனதை மயக்கும் மதுர கானங்கள்

திரி மிகவும் சிறப்பாக செல்வது மகிழ்ச்சி .

mr_karthik
18th July 2014, 04:45 PM
வா ராஜா வா (1969)

ஏ.பி.நாகராஜன் பெரிய பட்ஜெட் படங்களுக்கு ஒய்வு கொடுத்துவிட்டு சிறிய பட்ஜெட் படங்களாக எடுக்கத்துவங்கிய முதல் படம் 'வா ராஜா வா', இது பின்னர் 'திருமலை தென்குமரி', 'கண்காட்சி' என்று தொடர்ந்தது. தில்லானா மோகனாம்பாள் மெகா வெற்றிக்குப்பின் சிம்பிளாக குருதட்சணையை கருப்பு வெள்ளையில் எடுத்தார். இசைக்குக் கூட மாமாவின் நிழலான புகழேந்தி. அதையடுத்து சின்னஞ்சிறார்களையும், துணை நடிகர்களையும் வைத்து அவர் எடுத்த படம் வா ராஜா வா. சிறுவன் பிரபாகரனையும் அவன் தங்கை சுமதியையும் மைய பாத்திரங்களாக வைத்து எடுத்தார். ஸ்டூடியோ செட் எல்லாம் கிடையாது. மொத்த கதைக்களமும் சென்னையை அடுத்த மாமல்லபுரம் என்ற மகாபலிபுரம்தான்.

மாமல்லபுரத்தை அழகான வண்ணத்தில் முழுக்க முழுக்க கவர் பண்ணிய ஒரே தமிழ்ப்படம் இதுவே. இப்படத்தைப்பார்க்கும் ஒவ்வொருவருக்கும் ஒருமுறையாவது மாமல்லபுரம் சென்றுவர வேண்டும் என்று ஆவலைத்தூண்டும் வகையில் அமைந்திருந்தது.

இசைக்கு குன்னக்குடியை அறிமுகப்படுத்தினார். அவர் முழுசாக இசையமைத்த முதல் படம். இதற்கு முன் கந்தன் கருணையில் 'திருப்பரங்குற்றத்தில் நீ சிரித்தால்' என்ற ஒரு பாடலுக்கு மட்டும் இசையமைத்திருந்தார்.

இப்படத்தின் அனைத்துப்பாடல்களையும் பூவை செங்குட்டுவனும், நெல்லை அருள்மணியும் எழுதியிருந்தனர். சீர்காழி பாடியதோடு நடித்தும் இருந்தார். மற்ற பாடல்களை ராட்சசி, சின்ன ராட்சசி (எல்.ஆர்.அஞ்சலி) மற்றும் குழுவினர் பாடியிருந்தனர்.

முதல் பாடல் பிரபாகரனுக்காக ராட்சசி. (வி.எஸ்.ராகவன், ருக்மணி தம்பதிக்கு மாமல்லபுரத்தை சுற்றிக்காட்டி பாடுவது)

கல்லெல்லாம் சிலை செஞ்சான் பல்லவ ராஜா - அந்த
கதை சொல்ல வந்தேனே சின்ன ராஜா

ஒட்டுக்கல்லை சேர்க்காமல் ஒரே கல்லை குடைஞ்செடுத்து
கட்டிவச்சான் மண்டபத்தை பல்லவ ராஜா - அதை
கச்சிதமாய் சொல்லவந்தேன் சின்ன ராஜா

கடலோரம் கோபுரம் மலைமேலே மண்டபம்
எப்படித்தான் செஞ்சானோ பல்லவ ராஜா - அதை
அப்படியே சொல்லவந்தேன் சின்ன ராஜா

சிற்பியரை கூட்டிவந்து சிற்பங்களை செய்யவைத்து
கற்பனையைக் காட்டிவிட்டான் பல்லவ ராஜா - அந்த
அற்புதத்தை சொல்ல வந்தேன் சின்ன ராஜா

இரண்டாவது பாடல் மாமல்லபுரத்துக்கு வரும் நகரத்து நாகரீக மங்கையரோடு சேர்ந்து பாடும் பாடல்....

ஆடிப்பாடி சிரிக்க வைப்பது எங்க ஊருங்க இங்கே
ஆனை சிங்கம் அஞ்சு ரதங்கள் அழகைப்பாருங்க

ஊரின் பேரோ மாமல்லை உல்லாசம்தான் இதன் எல்லை
ஈடில்லை இணையில்லை இதுபோலின்பம் வேறில்லை

உயர்ந்து நிற்கும் விஞ்ஞானத்தின் புதுமைக்காலமடி - ஆனால்
ஒவ்வொரு இடமும் இங்கே பழமை பேசுதடி
பழசுக்குள்ள மதிப்பு எல்லாம் புதுசுக்கேதுங்க
பழகிப்போனா புதுசுகூட பழசா போகுங்க

மூன்ற்வது பாடல் ராட்சசியின் தனிப்பாடல்...

உண்மையெது பொய்யெதுன்னு ஒன்னும் புரியலே
நம்ம கண்ணை நம்மாலே நம்ப முடியலே

(பெரிய இலக்கிய வரிகள் எல்லாம் கிடையாது எல்லாமே சிம்பிளான பாடல்கள். பின்னே, படிப்பறிவு இல்லாத சின்னப்பையன் பாடுவதாக எல்லோரும் நம்பணுமில்லே)

நான்காவது பாடல் சீர்காழியே பாடி நடித்தது...

'இறைவன் படைத்த உலகையெல்லாம் மனிதன் ஆளுகிறான்'

கடைசிப்பாடலும் அவருக்கே...

சிறுகுழந்தை வடிவினிலே தெய்வம் வந்து பேசுதம்மா
சின்னச்சின்ன விழிகளிலே தீப ஒளி வீசுதம்மா

வா ராஜா வா 1969 தீபாவளி ரிலீசுக்காக தயாரானது ஆனால் சிவந்த மண், நம் நாடு படங்களுக்கிடையே சிக்கி நசுங்கிவிடக்கூடாது என்று (புத்திசாலித்தனமாக) ஒரு மாதம் தாமதித்து டிசம்பரில் வெளியிட்டார். படம் மிகப்பெரிய வெற்றி. சென்னையில் நான்கு தியேட்டரில் வெளியிடப்பட்டு பாரத், மகாலட்சுமி, ராம் தியேட்டர்களில் 100 நாட்களைக் கடந்தது (வெலிங்டனில் மட்டும் 'எங்க மாமா'வுக்காக 40 நாட்களில் கபாலி தியேட்டருக்கு மாற்றப்பட்டது)...

Richardsof
18th July 2014, 06:41 PM
தாழம்பூ படத்தில் இடம் பெற்ற இந்த பாடல் .


ஏரிக்கரை ஓரத்திலேஎட்டு வேலி நிலமிருக்கு
எட்டு வேலி நிலத்திலேயும்என்ன வைத்தால் தோப்பாகும்
வாழை வைத்தால் தோப்பாகும்
மஞ்சள் வைத்தால் பிஞ்சு விடும்
ஆழமாக உழுது வைத்தால்
அத்தனையும் பொன்னாகும்


தென்புறத்துச் சீமையிலேதென் குமரிக் கடல் இருக்கு
குமரிக் கடல் மூழ்கி வந்தால்
கோடையிலே என்ன வரும்
சரம் சரமாய் முத்து வரும்
தனிப்பவளம் சேர்ந்து வரும்
குமரியுடன் கலந்து விட்டால்
குடும்பத்திலும் ஆசை வரும்


காலம் இன்று கனியும் என்றுகனவு கண்டு வந்து விட்டேன்
கண்ட கனா பலிக்காதோ
கதவு இன்று திறக்காதோ
நினைத்து விட்டால் நடக்காதோ
நெருங்கி விட்டால் பிறக்காதோ
மனத்தினிலே முடித்து விட்டால்
வழிக்கதவும் திறக்காதோ

பாடகர் திலகமும் - இசை அரசியும் கலக்கியிருக்கும் பாடல் . மக்கள் திலகம் - கே.ஆர்.விஜயா இருவரின் நடிப்பும்
முக பாவமும் பிரமாதம் . மனதை மயக்கும் மதுர கீதம் .
http://youtu.be/vSUMbRyudnY

Gopal.s
18th July 2014, 06:51 PM
Vali.

எங்களுக்கு மீளா வலி தந்து எங்களை விட்டு மறைந்த கவிஞர் வாலி அவர்களின் நினைவலைகள்.அவரை ஒரு தமிழ் மன்ற நிகழ்ச்சிக்கு ஜகார்த்தா அழைக்க சென்ற போது வர மறுத்தவர், பாஸ்போர்ட் எடுக்கலை என்றார். அவரிடம் சற்று உரையாடிய போது ,நடிகர்திலகத்தை அறிந்திருக்க மாட்டீர்கள் என்று சில குறிப்புகளை தந்த போது சீறி எழுந்து , பொழப்பு வேறே ,ரசனை வேறப்பா.உன்னை விட நான் பெரிய ரசிகனாக்கும் என்ற படி ,சிவாஜியின் சிறப்புகளை பற்றி விடாமல் 20 நிமிடம் பேசினார்.அசந்து நின்றேன் .

எங்கிருந்தாலும் இளமையோடு வாழுங்கள் கவிஞரே .

நானும் கண்ணதாசன், வைரமுத்து ஆகியவர்களின் ரசிகன் என்றாலும் வாலி அவர்களில் இருந்து வேறு பட்டவர் , சமமமாக மதிக்க பட வேண்டியவர் என்பதை வலியுறுத்த விரும்புகிறேன் .(வாலி யுருத்த?.)

1)வாலி அளவு சங்கீத அறிவு கொண்ட பாடலாசிரியர்கள் இந்திய அளவு கிடையாது. இதை விஸ்வநாதன்-ராமமூர்த்தி ,இளைய ராஜா முதல் இளம் இசையமைப்பாளர்கள் வரை சுட்டி காட்டியுள்ளனர்.

2)வாலி இலக்கியங்கள் அளவு புராண,இதிகாச,வேத அறிவுகளும் கொண்டிருந்ததால் வசீகர ,அபூர்வ கருத்துக்களை பாடல்களில் தர முடிந்தது. (சாண்டில்யன் கதைகள் போல)

3)வாலி down to earth .அணுக சுலபமானவர். அழிவு தரும் அகந்தையோ, தீய பழக்கங்களில் மூழ்கியோ போகாமல் உலகத்தோடு ஒட்டினார்.

4) 1959 முதல்- 2013 வரையான longevity with glory என்பது டெண்டுல்கர் சாதனைக்கு ஒப்பானது.

5)வாலி கொடுத்த range எந்த பாடலாசிரியரும் தொட முடியாதது.

வாலி ஒரு விதத்தில் துரதிர்ஷ்டசாலி. கண்ணதாசன் திறமைக்கு மீறி புகழடைந்தார். வாலி திறமை இருந்த அளவு போற்றப்படவில்லை.கீழ்கண்ட உதாரணங்களே போதும்.

ஒரு முறை ஜீவி(மணி ரத்தினம் அண்ணன்) ஒரு மேடையில் பேசும் போது , மூன்று பாடல்களை குறிப்பிட்டு , கண்ணதாசன் எழுதிய இது போன்ற பாடல்களை நீங்கள் எழுதவில்லை என்றார். வாலியோ ,அடபாவி,நீ குறிப்பிட்ட மூன்று பாடல்களுமே நான் எழுதியவை என்றாராம்.

M .S .V கண்போன போக்கிலே,அந்த நாள் ஞாபகம் பாடல்களை கண்ணதாசன் எழுதியதாகவே குறிப்பிட்டு வந்தார்.(ஒரு தொடரிலும்!!)

இப்படியாக கண்ணதாசனுக்கு வேண்டாத புகழ்களும் சேர்ந்தன. ஆனால் கண்ணதாசன் எழுதிய பாடல்கள் ,வாலி எழுதியதாக குறிப்பிடபட்டதேயில்லை.

வாலி தன்னை ஒரு குறிப்பிட்ட நடிகருடன் ,முக்கிய காலகட்டங்களில் Brand பண்ணி கொண்டது, வாலியின் தவறாகும். இது அவர் திறமையை மற்றவர் குறைத்து எடை போட காரணமானது.கண்ணதாசன்,வைரமுத்து அந்த பொறியில் சிக்கவில்லை .

vasudevan31355
18th July 2014, 06:56 PM
டியர் கார்த்திக் சார்!

நம்மைப் போன்ற ரசிகர்கள் நெஞ்சில் வா ராஜா வா வுக்கு எப்போதுமே இடம் உண்டு. அப்படியே என் நெஞ்சில் அந்தப் படத்தின் பாடல்களின் எண்ணங்கள் எப்படி ஓடுகின்றதோ அதை அப்படியே நீங்கள் பதித்து விட்டீர்கள். ஆறிலிருந்து அறுபது வரை அனைவரையும் கவர்ந்த படமல்லவா!

கள்ளமில்லாப் பிள்ளையிடம்
கடவுளைக் கண்டேன்
அதன் காலடிகள் பட்ட இடம்
கோயிலைக் கண்டேன்
உள்ளமில்லாப் பொய்யர்களை
ஊரினில் கண்டேன்
இந்த ஓலைக் குடிசையிலே
உண்மையைக் கண்டேன்.

என்று தொடங்கி பின் சீர்காழியார் 'சிறு குழந்தை வடிவினிலே தெய்வம் வந்து பேசுதம்மா' என்று பாடத் துவங்கும் போது நமக்குள் உணர்ச்சிப் பெருக்கு ஏற்படுவதை மறுக்க முடியாது.

பிரபாகர் கையை அழகாகக் கைகளைக் கட்டிக் கொண்டு நிற்கும் போஸ்டர்கள் இன்னும் மனதில் பசுமையாய் நிழலாடுகின்றன.

ஏ.பி.என்னிடம் எனக்குப் பிடித்த விஷயம் நமது கலாச்சாரம், பண்பாடு போன்ற விஷயங்களை கொஞ்சமும் விட்டுத் தராமல், அம்சமான கருத்துக்களை போரடிக்காமல், அதே சமயம் இனிப்பாக தேன் குழைத்துத் தருவதுதான்.

நமது கலாச்சார விஷயங்களை ஆடல், பாடல், போட்டிப் பாடல்கள் என்று பொழுது போக்கு அம்சங்களை புத்திசாலித்தனமாகக் கலப்பார். பாடல் காட்சிகளுக்கு மெனக்கெட்டு நிறைய செலவும் செய்வார். அப்போது நாகராஜன். அதன் பின்னர் ராஜேந்தர்.

இந்தப் படத்திலும் கே.டி.சந்தானம் சிற்பியாக வருவார். இதே கேரக்டரை 'ராஜ ராஜ சோழன்' படத்தில் தலைமை சிற்பியாகச் செய்திருப்பார்.

பின்னாளில் வந்த நாகராஜன் படங்களில் பெரும்பாலும் சிவக்குமார், 'குமாரி' பத்மினி, 'கள்ளபார்ட்' நடராஜன், சுருளிராஜன், மனோரமா, சைலஸ்ரீ, டி.என்.சிவதாணு, என்று நிலையான ஒரு பட்டியல் இருக்கும்.

1974 இல் பிளாக் அண்ட் ஒயிட்டில் 'குமாஸ்தாவின் மகள்' என்ற படம் ஒன்றை தந்தார் நாகராஜன். சிவக்குமார் ஹீரோ. கமல் வில்லன். கன்னடத்து ஆர்த்தி நாயகி. உஷா என்ற புதுமுகம் அறிமுகம். இசை குன்னக்குடி.

1975-இல் அழகான 'மேல் நாட்டு மருமகள்' என்ற படத்தை வண்ணத்தில் தந்தார் ஏ.பி.நாகராஜன். குமாரி லாரன்ஸ் என்ற மேல்நாட்டு நடிகையை சுத்தமான தமிழ்ப் பாரம்பரியத்தைக் கடைபிடிக்கும் மேல் நாட்டு மருமகளாகக் காட்டி இருந்தார் நாகராஜன். கமல், வாணி கணபதி, சிவக்குமார், ஜெயசுதா என்று நட்சத்திரப் பட்டாளம். ஆஸ்தான குன்னக்குடியே இதிலும் ம்யூசிக்.

நினைவலைகளை எங்கெங்கோ பறக்க வைத்து விட்டீர்கள். சரி! தொடங்கிய இடத்திற்கே வந்து விடுகிறேன். நீங்கள் அருமையாக வடித்துள்ள வா ராஜா வாவுக்கு ஒரு 'வார்ரே ராஜா வா' போட்டுவிட்டு 'இறைவன் படைத்த உலகை' அளிக்கிறேன்.

இறைவன் படைத்த உலகையெல்லாம்


https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=M2vE0KQ4MMU

Gopal.s
18th July 2014, 07:01 PM
ESvee- It is indeed a good song by K.V.M.Thanks.

Gopal.s
18th July 2014, 07:44 PM
வாலிப கவிஞர் வாலிபத்தை உலுக்கும் ,எனது வசந்த வாலிபத்தின் .இசைந்த பாடல்.எனது பிரிய ஜோடியின் வாலிப விருந்தாக. ...


http://www.youtube.com/watch?v=O7Rm0aTooMc

rajeshkrv
18th July 2014, 08:20 PM
Vali.

எங்களுக்கு மீளா வலி தந்து எங்களை விட்டு மறைந்த கவிஞர் வாலி அவர்களின் நினைவலைகள்.அவரை ஒரு தமிழ் மன்ற நிகழ்ச்சிக்கு ஜகார்த்தா அழைக்க சென்ற போது வர மறுத்தவர், பாஸ்போர்ட் எடுக்கலை என்றார். அவரிடம் சற்று உரையாடிய போது ,நடிகர்திலகத்தை அறிந்திருக்க மாட்டீர்கள் என்று சில குறிப்புகளை தந்த போது சீறி எழுந்து , பொழப்பு வேறே ,ரசனை வேறப்பா.உன்னை விட நான் பெரிய ரசிகனாக்கும் என்ற படி ,சிவாஜியின் சிறப்புகளை பற்றி விடாமல் 20 நிமிடம் பேசினார்.அசந்து நின்றேன் .

எங்கிருந்தாலும் இளமையோடு வாழுங்கள் கவிஞரே .

நானும் கண்ணதாசன், வைரமுத்து ஆகியவர்களின் ரசிகன் என்றாலும் வாலி அவர்களில் இருந்து வேறு பட்டவர் , சமமமாக மதிக்க பட வேண்டியவர் என்பதை வலியுறுத்த விரும்புகிறேன் .(வாலி யுருத்த?.)

1)வாலி அளவு சங்கீத அறிவு கொண்ட பாடலாசிரியர்கள் இந்திய அளவு கிடையாது. இதை விஸ்வநாதன்-ராமமூர்த்தி ,இளைய ராஜா முதல் இளம் இசையமைப்பாளர்கள் வரை சுட்டி காட்டியுள்ளனர்.

2)வாலி இலக்கியங்கள் அளவு புராண,இதிகாச,வேத அறிவுகளும் கொண்டிருந்ததால் வசீகர ,அபூர்வ கருத்துக்களை பாடல்களில் தர முடிந்தது. (சாண்டில்யன் கதைகள் போல)

3)வாலி down to earth .அணுக சுலபமானவர். அழிவு தரும் அகந்தையோ, தீய பழக்கங்களில் மூழ்கியோ போகாமல் உலகத்தோடு ஒட்டினார்.

4) 1959 முதல்- 2013 வரையான longevity with glory என்பது டெண்டுல்கர் சாதனைக்கு ஒப்பானது.

5)வாலி கொடுத்த range எந்த பாடலாசிரியரும் தொட முடியாதது.

வாலி ஒரு விதத்தில் துரதிர்ஷ்டசாலி. கண்ணதாசன் திறமைக்கு மீறி புகழடைந்தார். வாலி திறமை இருந்த அளவு போற்றப்படவில்லை.கீழ்கண்ட உதாரணங்களே போதும்.

ஒரு முறை ஜீவி(மணி ரத்தினம் அண்ணன்) ஒரு மேடையில் பேசும் போது , மூன்று பாடல்களை குறிப்பிட்டு , கண்ணதாசன் எழுதிய இது போன்ற பாடல்களை நீங்கள் எழுதவில்லை என்றார். வாலியோ ,அடபாவி,நீ குறிப்பிட்ட மூன்று பாடல்களுமே நான் எழுதியவை என்றாராம்.

M .S .V கண்போன போக்கிலே,அந்த நாள் ஞாபகம் பாடல்களை கண்ணதாசன் எழுதியதாகவே குறிப்பிட்டு வந்தார்.(ஒரு தொடரிலும்!!)

இப்படியாக கண்ணதாசனுக்கு வேண்டாத புகழ்களும் சேர்ந்தன. ஆனால் கண்ணதாசன் எழுதிய பாடல்கள் ,வாலி எழுதியதாக குறிப்பிடபட்டதேயில்லை.

வாலி தன்னை ஒரு குறிப்பிட்ட நடிகருடன் ,முக்கிய காலகட்டங்களில் Brand பண்ணி கொண்டது, வாலியின் தவறாகும். இது அவர் திறமையை மற்றவர் குறைத்து எடை போட காரணமானது.கண்ணதாசன்,வைரமுத்து அந்த பொறியில் சிக்கவில்லை .

அருமை கோபால் சார். உங்கள் கருத்தை வழி மொழிகிறேன் ... என் தமிழ் ஆசான் ஐயா வாலி பற்றிய கருத்துக்கள் 100% உண்மை

rajeshkrv
18th July 2014, 08:22 PM
திரிசூலம் டாக்டர் ஐ மறக்க முடியுமா

நடிகர் முத்தையா (தங்கசுரங்கம் பாரதியின் தந்தை ) பற்றி கொஞ்சம் ரின் சோப்பு போட்டு :) அலசுங்க

கர்ணன் சகுனி இவர் தானே


அவரே தான் இவரு இவரே தான் அவரு. இவர் பல நல்ல கதாப்பாத்திரங்களை செய்தவர். வித்தியாசமான குரல் வளமுடையவர்

மலையாளம் பூர்விகம் இவருக்கு. நிறைய மலையாள படங்களிலும் நல்ல கதாப்பாத்திரங்கள் செய்தவர்

rajeshkrv
18th July 2014, 08:26 PM
புஷ்பலதா பற்றி கார்த்திக் சார் சொன்னவுடன் நான் எப்பொழுதுமே நினைப்பதும் அது தான். நிறைய புகழ் பெற்றிருக்கவேண்டிய நடிகை

குறிப்பாக கை கொடுத்த தெய்வம் என்று சொன்னால் நாமெல்லாம் நடிகர் திலகத்தையும் நடிகையர் திலகத்தையும் அதிகம் போனால் ரங்காராவையும் பாராட்டுவோம் ஆனால் அதில் மிகச்சிறப்பாக செய்தவர் புஷ்பலதா . அக்காவை கோபித்து கொள்வதாகட்டும் அதே சமயம் தாய் போல் பாசம் காட்டுவதாகட்டும், தந்தையை சமாளிப்பதாகட்டும் , அண்ணனின் செய்லகளை கண்டு குமுறுவதாகட்டும் நடிகர் திலகத்துடன் வாக்குவாதம் செய்வதாகட்டும் மிகவும் கடினமான ஒரு பாத்திர படைப்பு எவ்வளவு அழகாக செய்துள்ளார். இரண்டாம் தர நடிகையரில் எனக்கு மிகவும் பிடித்த நடிகை புஷ்பலதா .. சில படங்களில் சிவாஜிக்கு அம்மாவாக ( நினைத்து பார்க்க முடியவில்லை ஆனால் சினிமா உலகம் செய்யும் கொடுமைகளில் இதுவும் ஒன்று)

Russellmai
18th July 2014, 09:10 PM
அன்பு வாசு சார்,
தங்களால் துவங்கப்பட்டு,இத்திரியில் பதிவுகள் இடும்
அனைவரது ஒத்துழைப்புடன் இத்திரி விரைவில் 1000
பக்கங்களை எட்ட எனது வாழ்த்துக்கள்.
அன்பு கோபு

vasudevan31355
18th July 2014, 09:53 PM
நன்றி வினோத் சார்.

'ஏரிக்கரை ஓரத்திலே' நிதானமாகப் போகும் ஒரு சாங். எனக்குப் பிடித்த பாடலும் கூட.

vasudevan31355
18th July 2014, 10:01 PM
புஷ்பலதா பற்றி கார்த்திக் சார் சொன்னவுடன் நான் எப்பொழுதுமே நினைப்பதும் அது தான். நிறைய புகழ் பெற்றிருக்கவேண்டிய நடிகை

குறிப்பாக கை கொடுத்த தெய்வம் என்று சொன்னால் நாமெல்லாம் நடிகர் திலகத்தையும் நடிகையர் திலகத்தையும் அதிகம் போனால் ரங்காராவையும் பாராட்டுவோம் ஆனால் அதில் மிகச்சிறப்பாக செய்தவர் புஷ்பலதா . அக்காவை கோபித்து கொள்வதாகட்டும் அதே சமயம் தாய் போல் பாசம் காட்டுவதாகட்டும், தந்தையை சமாளிப்பதாகட்டும் , அண்ணனின் செய்லகளை கண்டு குமுறுவதாகட்டும் நடிகர் திலகத்துடன் வாக்குவாதம் செய்வதாகட்டும் மிகவும் கடினமான ஒரு பாத்திர படைப்பு எவ்வளவு அழகாக செய்துள்ளார். இரண்டாம் தர நடிகையரில் எனக்கு மிகவும் பிடித்த நடிகை புஷ்பலதா .. சில படங்களில் சிவாஜிக்கு அம்மாவாக ( நினைத்து பார்க்க முடியவில்லை ஆனால் சினிமா உலகம் செய்யும் கொடுமைகளில் இதுவும் ஒன்று)

உணரப்படாத உண்மை!

அதே தர்மசங்கடத்துடன் 'பார் மகளே பார்' படத்தில் பிற்பகுதியில் புஷ்பலதா நடிகர் திலகத்திடமும், சௌகாரிடமும் அழகாக பேலன்ஸ் செய்வார் பாத்திரத்திலும் சரி! நடிப்பிலும் சரி!

மங்களகரமான முகம் கொண்டவர்.

உறுத்தாத, அலட்டாத, முகம் சுளிக்க முடியாத நடிப்பைத் தந்தவர்.

நம் நெஞ்சினிலே நினைவு முகம்.

பின்னாட்களில் ஒரு படத்தில் மட்டமான பாத்திரம் ஏற்று காமெடி என்ற போர்வையில் சித்திரவதையும் செய்தார்.

vasudevan31355
18th July 2014, 10:02 PM
கோபு சார்!

உங்கள் வாழ்த்திற்கு என் அன்பு நன்றிகள்.

Gopal.s
18th July 2014, 11:14 PM
பால் குடம் என்ற படம் ஏ.வீ.எம்.ராஜன்-புஷ்பலதா இவர்களின் அருமையான நடிப்பை வெளி கொணர்ந்த படங்களில் ஒன்று.
இதில் துணிந்து நில்,முழு நிலவின் திருமுகத்தில்,மல்லிகை பூ வாங்கி வந்தேன் போன்ற சுவையான பாடல்களும் உண்டு.

Richardsof
19th July 2014, 04:45 AM
கவியரசர் கண்ணதாசனின் பாடல் ..பாடகர் திலகம் - எல்.ஆர். ஈஸ்வரி

படம் - பணத்தோட்டம் -1963

இசை - மெல்லிசை மன்னர்கள்

ஒருவர் ஒருவராய் பிறந்தோம்
இருவர் இருவராய் இணைந்தோம்
உறவு மழையிலே நனைந்தோம்
உலக சுகத்திலே மிதந்தோம்

பெருகி பெருகி வெள்ளம் ஓடும்
உயிர் பிழிந்து பிழிந்து சுவை தேடும்(2)
உருகி உருகி உள்ளம் கூடும்
உலகத் தோற்றமே மாறும்

இறைவன் போட்டததிந்த தோட்டம்
அதில் இனிமை ஒன்று தான் நாட்டம்
நாளை என்றேதுவும் இல்லை
நடக்கும் வாழ்க்கை தான் எல்லை

மேல் நாட்டு பாணியில் நடனத்துடன் மெல்லிசை மன்னர்களின் அருமையான இசையில் மக்கள் திலகத்தின் நடனம்
காண்போர் மனதை மயக்கும் ரம்மியமான பாடல் .

http://youtu.be/Zt2DYiAkgWc

Gopal.s
19th July 2014, 07:34 AM
என்னை பாடகர்களை வரிசை படுத்த சொன்னால்,காரணங்களையும் சொல்ல சொன்னால் ,கீழ்கண்டவாறே இருக்கும்.(நகல்களை தவிர்த்து விட்டேன்)

1)டி.எம்.-சௌந்தரராஜன் -பிரத்யேக குரல்,தமிழின் உக்கிர அடையாளம்,கார்வை குரல்,ஆண்மை,பாவம்,உணர்வு,தன்னம்பிக்கை.

2)எஸ்.பீ.பாலசுப்ரமணியம்- விளிம்பு குரல் இனிமை,பன்மொழி உச்சரிப்பு திறன்,தொட்ட வேறுபட்ட பாடல் ரகங்கள் .

3)பீ.பீ.ஸ்ரீனிவாஸ்- வெல்வெட் ஒத்த இலவம் பஞ்சு குரல் ,மென்மையான ஆண்மை,வசீகரமான மென்சோகம்,மெலடி.

4)யேசுதாஸ்- bass குரல்,சுருதி சுத்தம்,பாடல்கள் எல்லா குரல்களுடனும் அற்புதமான இழைவு ,இசை தன்மை கெடாத பாடு முறை.

5)கார்த்திக்- எஸ்.பீ.பியின் இளைய வழி தோன்றல்,அடிநாதத்தை அறியும் தேர்ச்சி,பல் வேறு வகை பாடல்கள் பாடும் தேர்ச்சி.

6)ஹரிஹரன்- அப்பப்பா என்ன voice culture ,அப்படியே தண்டவாளத்தில் செல்லும் ரயில் போன்று சங்கதிகளை குரலில் அழைத்து செல்லும் நேர்த்தி.

7)சங்கர் மகாதேவன்- உற்சாகமான spirited performer .இளைய தலைமுறையின் ஆண்மை பாடகர்.

8)ஏ.எம்.ராஜா- எல்லா விதமான பாணிக்கும் பொருந்தும் இதமான குரல்.பாவங்களையும் காட்டும் மென்மை.

9)சீர்காழி கோவிந்த ராஜன்- தமிழிசைக்கே பிறந்து அதை வள படுத்திய நாத குரல்.அப்படியே ரசங்களை கொடுக்கும் இதயம் தொடும் நாதம்.

10)ஏ.எல்.ராகவன்- யார்ட்லிங் முதல் வெஸ்டெர்ன் ,நகைச்சுவை,மெலடி,supporting gimmicks என்று தொட்ட எல்லைகள் நிறைய.

RAGHAVENDRA
19th July 2014, 07:44 AM
ராஜேஷ், மது, வாசு, கார்த்திக், கோபால்,வினோத், கிருஷ்ணா மற்றும் ஒவ்வொரு நண்பரின் பங்களிப்பும் பிரமி்க்க வைப்பது மட்டுமின்றி இவ்வளவு விரைவில் 200 பக்கங்களைத் தாண்டி வேகமாக செல்வது பாராட்ட வைக்கிறது. பாடல்கள் நம் மக்கள் மனதில் எந்த அளவிற்கு ஆழமாய் ஊடுருவியுள்ளன என்பதற்கான சான்றே இந்த வேகமும் உற்சாகமும் ஈடுபாடும்.

தொடருங்கள்.

200 பக்கங்கள் 2000 பக்கங்களாகட்டும் மென்மேலும் பெருகட்டும்

RAGHAVENDRA
19th July 2014, 07:49 AM
உள்ள(த்)தை அள்ளித்தா

இத்தொடரில் அடுத்து நான் பகிர்ந்து கொள்ள இருப்பது...

இணையத்திலேயே முதன்முறையாக எனலாம்...

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/pbsingers/kjy_zps93ef50c0.jpg

கே.ஜே. யேசுதாஸுடன்

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/pbsingers/singerswarna_zps03a28eb5.jpg

வசீகரக் குரலுக்கு சொந்தக்காரர் ஸ்வர்ணா இணைந்து பாடி நடித்த

ஜாய் திஸ் இயர் பாய் நெக்ஸ்ட் இயர்

என்கின்ற பாடல்.

வாலி அவர்களின் நினைவாக என இதை வைத்துக் கொள்ளலாம்.

வாலி அவர்கள் கதை வசனம் பாடல்கள் எழுதிய அதிர்ஷ்டம் அழைக்கிறது திரைப்படத்தில் எல்லோரும் அறிந்த பாடல்கள், என்ன தவம் செய்தேன் மற்றும் அர்த்தமுள்ள இந்து மதம் என்ன சொன்னது.

கல்யாண வரவேற்பில் பாடப்படும் பாடல் தான் ஜாய் திஸ் இயர் பாய் நெக்ஸ்ட் இயர். மெல்லிசை மாமணி வி.குமார் இசையில் மறக்கவொண்ணா பாடல் இது.

பாடலுக்கான இணைப்பு

https://www.mediafire.com/?jt69ughn9g02f7n

தங்கள் கருத்தைக் கூறுங்கள்.

RAGHAVENDRA
19th July 2014, 07:53 AM
1969 பொங்கலன்று வெளிவந்த பால் குடம் திரைப்படத்தில் இடம் பெற்ற மல்லிகைப்பூ வாங்கி வந்தேன் பாடலைத் தான் எஸ்.பி.பாலா பாடி திரைப்படத்தில் இடம்பெற்ற முதல் தமிழ்த்திரைப்படப் பாடல் எனக் கொள்ள வேண்டும்.

RAGHAVENDRA
19th July 2014, 07:54 AM
வாசு சார்
உங்கள் அழகென்ன, அறிவென்ன, மனமென்ன, குணமென்ன .... எப்படிப் பாராட்டுவது.... தெரியவில்லை..
அதையும் நீங்களே கண்டுபிடித்துச் சொன்னால் தான் உண்டு.

RAGHAVENDRA
19th July 2014, 07:55 AM
வினோத் சார்
அபூர்வமான பேப்பர் கட்டிங் தங்கள் ஸ்பெஷாலிட்டி.. பாராட்டுக்கள்...

RAGHAVENDRA
19th July 2014, 08:00 AM
உள்ள-த்-தை அள்ளித்தா தொடரில் அடுத்து இடம் பெறப்போவது

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/OldTamilFilmStills5/sendoff_zps32151c05.jpg

இத்திரைப்படத்திலிருந்து இது வரை வெளிவராத அபூர்வ பாடல்

Gopal.s
19th July 2014, 08:01 AM
என்னை பாடகிகளை வரிசை படுத்த சொன்னால்,காரணங்களையும் சொல்ல சொன்னால் ,கீழ்கண்டவாறே இருக்கும்.(நகல்களை தவிர்த்து விட்டேன்)

1)சுசிலா-சுசிலா -சுசிலா-சுசிலா-சுசிலா - தெய்வம் நமக்களித்த பரிசு இந்த தேன் இனிமை குயில் குரல்,Octave &Pitch Range ,எல்லா ரக பாடல்களையும் பாடி வெற்றியும் கொண்ட குரல்,உணர்வுகளின் ரசவாதம்.

2)எல்.ஆர்.ஈஸ்வரி-sexy ,style ,nuances ,Enthusiasm .

3)சுஜாதா- வசீகர இனிமை,பாடு முறை,எல்லா வகைகளுக்கும் குரல் பொருத்தம்.

4)சித்ரா- 75% சுசீலா,25% ஜானகி கலந்த குரல்.mid -pitch பாடல்களில் படு நேர்த்தி.

5)ஸ்ரேயா- இவர் குரல் கேட்டு உருவத்தை கற்பனையில் காணலாம்.குரலின் அழகு நேரிலும்.

6)ஜமுனா ராணி- என் சிறு வயது பாடக கனவு ராணி.குழைவு,கொஞ்சல்,கெஞ்சல் ,இழைவு ,இழுத்து பாடும் பாணி.

7)அனுராதா ஸ்ரீராம்- இள வயது ஈஸ்வரி.versatile .

8)கே.பீ.சுந்தராம்பாள் - அப்படி ஒரு தெய்வீக கம்பீர உருக்கம். ஒவ்வையாரின் நடமாடும் வடிவம்.

9) லீலா- மயக்கும் நளின குரல்.ஒரு innocense தெரியும்,.

10)வாணி ஜெயராம்- கர்நாடக,வடக்கத்திய,gazhal முறை தேர்ச்சியால் தமிழில் புது வாசல்களை திறந்த பாடகி.

Gopal.s
19th July 2014, 08:18 AM
கே.வீ.மகாதேவனின் கீழ்கண்ட பாடல்களில் cuteness இருக்கும்.பிடிக்காதவர்கள் என்பதே இல்லாத பாடல்கள்.

என்ன கொடுப்பாய் என்ன கொடுப்பாய் அன்பை கொடுப்பேன்

காதல் எந்தன் மீதில் என்றால் காதில் இனிக்கிறது

கன்னத்தில் என்னடி காயம்

Richardsof
19th July 2014, 10:38 AM
Courtesy - the hindu
உலகமெங்கும் வாழும் தமிழர்களிடமிருந்தும், தமிழ் அமைப்புகளிடமிருந்தும் அழைப்புகள் வந்து கொண்டே இருந்தன அவருக்கு. கடைசிவரையிலும் பாஸ்போர்ட்டே எடுக்கவில்லை அவர். நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளப் பெரும் தொகையைத் தர தயாராயிருந்தனர் பலர்.

முடிந்தவரை மேடை நிகழ்ச்சிகளைத் தவிர்த்தது மட்டுமல்ல, பங்கு கொண்ட நிகழ்ச்சிகளுக்கும் பணம் வாங்க நினைத்ததே இல்லை அவர். தமிழ் சினிமாவில் அதிகச் சம்பளம் வாங்கிய பாடலாசிரியர் அவர்தான். குடியிருந்த வீட்டைத் தவிர எந்தச் சொத்தையும் வாங்க எண்ணியதே இல்லை அவர்.

இரண்டு முதலமைச்சர்களுடன் தொலைபேசியிலேயே பேசுமளவுக்கு அவருக்கு நெருக்கம் இருந்தது. அனேகமாக எந்த உதவியையும் கேட்டு இருவரையும் தொந்தரவு செய்ததே இல்லை அவர்.

அடிப்படைக் காரணம்

இதற்கெல்லாம் அடிப்படைக் காரணம் ஒன்றுதான். வாசிப்பதையும் எழுதுவதையும் தவிர யாரோடும், எதன் பொருட்டும் தன் நேரத்தைப் பங்கு போடத் தயாராக இருந்ததில்லை அவர். பொருளாதாரத்தைப் பெருக்கவும் அல்லது வேறு வகையில் பொழுதுகளைச் செலவழிக்கவும் விரும்பாமல் பாட்டு... பாட்டு... பாட்டு… என்று இரவும் பகலும் இசைப்பாடல்களோடு இரண்டறக் கலந்திருந்தார்.

அதனால்தான் இந்தியாவிலேயே அதிகமான திரைப்படப் பாடல்களை எழுதிக் குவித்தவர் என்ற பெருமையும் 1958-ல் தொடங்கி, மருத்துவமனைக்குச் சென்ற கடைசி நாள்வரை (8.6.2013), ஏறத்தாழ 56 ஆண்டுகள் நான்கு தலைமுறை நடிகர்களுக்குப் பாடல் எழுதித் தொய்வில்லாமல் தொழிலில் ஜெயித்த ஒரே பாடலாசிரியர் என்ற பெருமையும் அவருக்கு மட்டுமே அமைந்துவிட்டன.

கையிலிருக்கும் சின்ன அங்குசத்தால் கம்பீரமான யானையையும் கட்டுக்குள் வைத்திருக்கும் பாகன் மாதிரி, இசையமைப்பாளர்களின் மெட்டுகளைப் பொருத்தமான வார்த்தைகளால் பூட்டும் பாட்டு மொழியைத் தன் சின்ன விரல்களுக்குள் சேமித்து வைத்திருந்தவர் அவர். தமிழ்த் திரைப்பாடல்களில் தனக்கென்று சில உத்திகளை ஆரம்பம் முதலே கையாண்டார்.

“என்னதான் நடக்கும் நடக்கட்டுமே...”

“உலகம் பிறந்தது எனக்காக...”

“உன்னை அறிந்தால், நீ உன்னை அறிந்தால்...”

என்று எம்.ஜி.ஆருக்காகக் கண்ணதாசன் எழுதிய ஒரு சில பாடல்களை சிவாஜியும் பாடலாம். ஆனால், எம்.ஜி.ஆருக்கு நானெழுதிய...

“மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்...”

“நான் ஆணையிட்டால்...”

“நான் செத்து பொழச்சவண்டா...”

“வாங்கய்யா வாத்யாரய்யா...”

போன்ற பாடல்களை எம்.ஜி.ஆர். மட்டுமே பாட முடியும். கண்ணதாசனிலிருந்து வித்தியாசப்பட நான் கையாண்ட பாணி இது’ என்று அவரே ஒருமுறை சொல்லி இருக்கிறார். இலக்கிய நயத்தோடு இருப்பதைவிட எல்லோருக்கும் புரியும்படி எளிமையான வார்த்தைகளில் இருக்க வேண்டும் என்பதுதான் சினிமா பாடல்களுக்கு வாலி வகுத்து வைத்திருந்த விதி.

“இந்தக் கவிஞன் நெருக்கமானவன், படித்திருந்தாலும் இவன் நம்மிடமிருந்து அந்நியப்பட்டுப் போகவில்லை, அவனுடைய வார்த்தைகள் நமக்கு அருகில் நிற்பவை என்கிற முடிவுதான் வாலியின் பாட்டைக் கேட்டதும் நம் மனதில் ஏற்படும்” என்று முக்தா சீனிவாசன் சொல்வது முற்றிலும் சரியானது.

போராடிப் பெற்ற வெற்றி

பாட்டுலகில் எளிதாக வெற்றிகளை ஈட்டிவிடவில்லை அவர்.‘‘நான் கவிதை எழுதிக் கிழித்து வீசி எறிந்த குப்பைக் காகிதங்களில் பாடம் படித்தவர் வாலி’’ என்று கோபத்தில் கண்ணதாசன் வசை பொழிந்தாலும், பிறகு ‘‘திரை உலகில் என்னுடைய வாரிசாக நான் யாரையேனும் அங்கீகரிக்கப் போகிறேன் என்றால் அது வாலியாகத்தான் இருக்கும்’’ என்று அவரே சொல்ல நேர்ந்தது.

வாலியோடு கருத்து வேறுபாடு ஏற்பட்ட சில நேரங்களிலும், வாலியின் பாடல் தனது படத்திற்கு அவசியம் என்று விநியோகஸ்தர்கள் சொன்னதால் வாலியை எம்.ஜி.ஆர். அழைக்க நேர்ந்தது.

வைரமுத்துவோடு மனத்தாங்கல் ஏற்பட்டபோது எத்தனையோ பாடலாசிரியர்கள் இருந்தாலும் கவிஞர் வாலியோடுதான் கைகோக்க வேண்டுமென்று இளையராஜா விரும்பினார். “சில காட்சிகளுக்கு வாலியைத் தவிர யாருடைய பாடலும் எடுபடாது என்பது ஏ.ஆர். ரஹ்மானின் முடிவென்று இயக்குநர் ஷங்கர் கூறியிருக்கிறார். ‘மன்மத அம்பு’ படத்திற்குத் தானெழுதிய பாடல்களை வாலியிடம் காண்பித்து கமல் ஹாசன் கருத்துக் கேட்டார். இந்தச் சம்பவங்கள் யாவும் வாலியின் பாட்டுத் திறனுக்கான சான்றுகள்.

வாலியால் மட்டும் எப்படி?

‘‘அனிருத்துக்கு வயது 21. எனக்கு 81. 60 வருஷ வித்தியாசம் எங்களுக்கு. இந்த வித்தியாசம் வயசுல இருக்கலாம். ஆனா என் வார்த்தையில இருக்கக் கூடாது’’ எதிர் நீச்சல் படத்திற்காக அனிருத்தோடு பணிபுரிந்த வாலி சொன்ன வார்த்தைகள் இவை.

“என் உடல் முதுமை அடைவதை என்னால் தடுக்க முடியாது. ஆனால் என் உள்ளம் முதுமை அடைவதை என்னால் தடுக்க முடியும்” என்று சொன்ன வாலி, தினம் தினம் புத்தகங்களின் மூலம் தன்னைப் புதுப்பித்துக்கொண்டு பாடல்களோடு மட்டுமே தன்னைப் பதிப்பித்துக்கொண்டார். அதனால்தான் கடைசிவரையிலும் தவிர்க்க முடியாத பாடலாசிரியராகத் தமிழ் சினிமா, வாலியை வலம் வந்தது.

கண்ணதாசனை விடவும், இயக்குநர் ஏ.சி. திருலோகசந்தரை ஈர்த்தவர் வாலி. ஆனால் திருலோகசந்தருக்கு வாலி எழுதிய பாடல்கள் மட்டும் கண்ணதாசன் பாணியிலேயே இருக்கும். ‘மலரே... குறிஞ்சி மலரே... (டாக்டர் சிவா), மல்லிகை என் மன்னன்... (தீர்க்கசுமங்கலி), இதோ எந்தன் தெய்வம்... (பாபு), கண்ணன் ஒரு கைக்குழந்தை... (பத்ரகாளி)’ இப்படி ஏராளமான உதாரணங்கள்.

எத்தனையோ விமர்சனங்களை எதிர் கொண்டவர் வாலி. ஆனால், இயக்குநரும் இசையமைப்பாளரும் எதிர்பார்ப்பதைக் கொடுப்பதுதான் தன்னுடைய பிரதானமான வேலை என்பதில் தெளிவாக இருந்தவர் அவர். அதனால்தான் தனக்கென்று ஒரு பாணியை வைத்துக்கொள்ளாமல் இயக்குநர்களின் எண்ணங்களுக்கு ஏற்பத் தன் பாட்டு மொழியின் வண்ணங்களை மாற்றிக்கொண்டார். இந்த அணுகுமுறைதான் அவர் வீட்டு வரவேற்பறையில் இளம் இயக்குநர்களை அழைத்துவந்து அமர்த்தியது.

இயக்குநர் கேட்பதைக் கொடுப்பதே தன் வேலை என்ற கொள்கையால் அவர் சில சமயம் தரக்குறைவான வரிகளை எழுத நேரிட்டது. அதற்காக வசைகளையும் வாங்கிக்கட்டிக்கொள்ள நேரிட்டது. ஆனால்,

- உனது விழியில் எனது பார்வை உலகைக் காண்பது

- என் மனமென்னும் கடலுக்குக் கரை கண்ட மான்

- மண் குடிசை வாசலென்றால் தென்றல் வர வெறுத்திடுமா

மாலைநிலா ஏழையென்றால் வெளிச்சம் தர மறுத்திடுமா

- யமுனை ஆற்றிலே ஈரக் காற்றிலே கண்ணனோடுதான் ஆட

என்பன போன்ற ஆயிரக்கணக்கான வரிகளையும் அவர்தான் எழுதினார்.

படைப்பாளுமை உள்ள இயக்குநர்களின் படங்களுக்கான பாடல்களுக்கும், சராசரியான வணிகப் படங்களில் எழுதுகிற பாடல்களுக்கும் தனித்தனிப் பாட்டு மொழியை வாலி கையாண்டார். தேவைக்கு ஏற்ற படைப்பு என்பதே வாலியின் மந்திரம் என்பதை இதிலிருந்து உணர்ந்துகொள்ளலாம்.

தமிழ் சினிமாவில் தலைமுறை களைத் தாண்டி ஜெயித்த ஒரே பாடலாசிரியரான வாலி, எல்லோருக்கு மான, எல்லாக் காலத்துக்குமான பாடலாசிரியராகத் திகழ்ந்தார் என்பதை யாராலும் மறுக்க முடியாது.

gkrishna
19th July 2014, 11:10 AM
உள்ள-த்-தை அள்ளித்தா தொடரில் அடுத்து இடம் பெறப்போவது

இத்திரைப்படத்திலிருந்து இது வரை வெளிவராத அபூர்வ பாடல்

vender sir

'ராஜா பாருங்க ராஜாவை பாருங்க
பிரியா விடை பாடல தானா அது சார்
முத்துராமன் பிரமீளா '
G கே வெங்கடேஷ் இசை
வாலி பாடல்
கிடாரிஸ்ட் ராசா என்ற இளையராஜா

gkrishna
19th July 2014, 11:25 AM
தாழம்பூ படத்தில் இடம் பெற்ற இந்த பாடல் .


ஏரிக்கரை ஓரத்திலேஎட்டு வேலி நிலமிருக்கு
[/URL]

இது வரை கேட்டு அனுபவித்துராத பாடல்
நன்றி எஸ்வி சார்

gkrishna
19th July 2014, 11:36 AM
தனிப்பிறவி படத்தில்
'வானம் பார்த்த பூமியின் மீது மழை என பொழிந்தாயே
நீலம் பூத்த விழிகளினாலே நீ எனை அழைத்தாயே
வசந்த கால பூக்களின் மீது வண்டெனெ அமர்ந்தாயே
அமர்ந்த வண்டு பறந்து விடாமல் ஆசையில் அணைத்தாயே '

மிகவும் ரசித்த பாடல். பாடல் வரிகள் கண்ணதாசன என்று நினைவு
மாமா இசை . circus மியூசிக் எல்லாம் அடித்து இருப்பார்
அடிக்கிற அடில drum கிழிந்து இருக்கும்
டண்டன டண்டன
http://www.youtube.com/watch?v=VwCdcbeMkgA

Gopal.s
19th July 2014, 11:48 AM
எஸ்வி,


வாலியை பற்றிய பதிவுக்கு உங்களுக்கும் ,நெட்டுக்கும் நன்றி.

இந்த பதிவில் கூறியுள்ளது போலவே ஒருவருக்கு எழுத பட்ட பிரத்யேக வரிகளை இன்னொரு நடிகருக்கு உபயோகிக்க முடியாது.

நடிகர்திலகத்திற்கு இது போன்ற வரிகளை கண்ணதாசன் எழுதியுள்ளார். நடிகர்திலகத்திற்கு மட்டுமே பொருந்தும் வரிகள் .

வியட்நாம் வீட்டில் , உலகத்திலே ஒருவனென உயர்ந்து நிற்கும் திலகமே. வருடம் போனால் என்ன ,வயசும் ஆனால் என்ன,உருவத்தை பாரடி மெல்ல ,முகம் இருபதை தாண்டியதல்ல.

நீதியில் எங்களது பூமி காக்க வந்த சாமி,எந்நாளும் பக்கம் நின்னு நல்ல வழி காமி

முத்தமிழின் செல்வன் வாழ்க ,முக்குலத்தின் கண்மணி வாழ்க ,எக்குலமும் போற்றிட வாழ்க,எங்களது செல்வன் வாழ்க

எங்க மாமா படத்தில் பூப்போன்ற என்னுள்ளம் யார் கண்டது ,பொல்லாத மனமென்ற பேர் வந்தது

ஏன் வாலியே எழுதியுள்ளார்.

வாசு பதித்த ,அன்பு கரங்கள் படத்தில், உங்கள் "அழகென்ன,அறிவென்ன,குணமென்ன ,மனமென்ன" .

vasudevan31355
19th July 2014, 12:13 PM
இன்றைய ஸ்பெஷல் (32)

http://www.inbaminge.com/t/n/Navagraham/folder.jpg

பாடலைப் பாடும் நாகேஷ் (ஏ .எல்.ராகவன்) தவிர ஒரு பாட்டையே அதில் நடித்த நடிகர்களின் சொந்தக் குரலைக் கொண்டு பாட வைத்த அல்லது பேச வைத்த பெருமை 'மெல்லிசை
மாமணி' குமார் அவர்களையே சாரும்.

வி.குமார் அவர்களின் மிக வித்தியாசமான பாடல் இது. நடிக நடிகையர்கள் வசன நடையில் பாடும் மிகப் புதியதொரு முயற்சி. பாலச்சந்தரின் துணையோடு. வாலியின் அருமையான வரிகள்.

இன்றுவரை நான் வியந்து ரசிக்கும் பாடல்களில் இதுவும் ஒன்று.

''நவக்கிரகம்' படத்தில் வரும்

'நவக்கிரகம்,
நீங்க நவக்கிரகம்'

பாடல்தான் அது.

ஒரு வேளை சோற்றுக்காக பொய் சொல்லி ஒரு குடும்பத்தில் சம்பந்தமில்லாது நுழையும் நாகேஷ், அந்தக் குடும்பத்தில் கொஞ்சம் கொஞ்சமாக ஐக்கியமாகி அங்கு நடக்கும் அலங்கோலங்களை ஒவ்வொன்றாக சரி செய்து கொண்டு வருவார்.

குடும்பத்துக்குப் பெரியவர் மேஜர். பிரம்மச்சாரி. திக்குவாய்.

https://i.ytimg.com/vi/N3w30r4g3LY/mqdefault.jpg

அவருக்கு இரண்டு தம்பிகள். ஒன்று முத்துராமன். இன்னொன்று வி.கோபாலகிருஷ்ணன்.

மேஜருக்கு தங்கை இருவர் உண்டு மூத்தவள் ராகினி. ராகினியின் கணவர் ஸ்ரீகாந்த். இவர்கள் மகன் ஓய்.ஜி.மகேந்திரன்.(அறிமுகம்)

இளைய தங்கை லஷ்மி. கல்யாணத்தை எதிர் நோக்கி இருப்பவள். காதலன் சிவக்குமார்.

http://i.ytimg.com/vi/zBj3r9Xweds/hqdefault.jpg

முத்துராமனுக்கு இரண்டு மனைவிகள். மூத்த மனைவி ஜி.சகுந்தலா. இளை மனைவி ரமாபிரபா.

இந்தக் குடும்பத்தில் ஏகப்பட்ட குழப்பம். இதில் அந்த வீட்டின் கடைக்குட்டியான லஷ்மியின் திருமணத்தைப் பற்றி யாருக்கும் அக்கறை இல்லை.

நாகேஷ் லஷ்மியின் திருமணத்தைப் பற்றி பேசி முடிவெடுக்க அக்குடும்பத்தின் உறுப்பினர்களை ஒன்று சேர்த்து திருமணம் பற்றிக் கேட்கிறார்.

http://i.igcinema.com/MovieImages/04838e32-cddf-4943-9eee-7aafcfe0e2d6.jpg

ஆனால் அதுபற்றி யாரும் பேசாமல் தங்களுக்குள்ளேயே சண்டையான சண்டை போட்டு ஆளுக்கொரு திசை பார்த்து ஓடி விடுகின்றனர்.

இந்தக் காட்சியமைப்பிற்கு ஏற்ற அருமையான பாடல். ஒவ்வொரு உறுப்பினராக நாகேஷ் லஷ்மி கல்யாணம் பற்றிக் கேட்க அவரவர்களும் சண்டை போட்டு சாக்கு போக்கு சொல்லி தப்பித்துக் கொள்கின்றனர்.

இறுதியில் அந்த இடத்தில் நாகேஷும், லஷ்மியுமே மிஞ்சுகின்றனர்.

பாடலில் பங்கு பெரும் அத்தனை கதாபாத்திரங்களும் பேசிப் பாடும் பாடல் இது. மிக வித்தியாசமான பாணியில் அமைந்தது.

நாகேஷ் ஆரம்பிப்பார். அவரும் திக்குவாய்தான். அத்தனை பேரும் நவக்கிரகங்கள் போல ஒருவர் முகம் ஒருவர் பாராமல் ஆளுக்கொரு திசையில் கடமைக்கு நின்று கொண்டிருப்பார்கள் பொறுப்பே இல்லாமல்.

நாகேஷ் முத்துராமனிடம்.

'பேசுங்க சார் பே .... ஏ சுங்க' (திக்கியபடியே)

முத்துராமன்: 'ம்ம்ஹூம் ஹூம்'

சகுந்தாலாவிடம் நாகேஷ் போவார்.

சகுந்தாலா: 'நானா?'

ரமாபிரபா: 'ஏன்?'

ராகினி: 'எதுக்கு?'

ஓய்.ஜி.: 'மாட்டேன்'

முத்துராமன்: 'முடியா...து'.

வி.கோபாலகிருஷ்ணன்: 'தெரியாதுய்யா'

ஸ்ரீகாந்திடம் நாகேஷ் வந்து மண்டியிடுவார்.

ஸ்ரீகாந்த்: 'இங்க சுத்தற அங்க சுத்தற ஏண்டா சுத்தற? எதுக்குடா சுத்தற?'

நாகேஷ் பாடுவார்.

'நவக்கிரகம்,
நீங்க நவக்கிரகம்
ஒன்னு ஒன்னு பேசாது
ஒன்னுக்கொன்னு சேராது
ஒன்னையொன்னு பார்க்காது
ஒன்பது ரகம்.

நவக்கிரகம்,
நீங்க நவக்கிரகம்'

ராகினி: 'நில்லு நில்லு சுத்தாம நில்லு
சொல்லு சொல்லு சொல்றத சொல்லு'

லஷ்மியை இழுத்துக் கொண்டு நாகேஷ் அனைவரிடமும் போவார்.

'வத்சலா கல்யாணம் என்ன ஆச்சு
வரவர அவளுக்கும் வயசாச்சு
வரவர அவளுக்கும் வயசாச்சு'

சகுந்தாலா: அதப் பத்தி எனக்கென்ன கவலை

ரமாபிரபா: 'அவளாச்சு எனக்குண்டு எத்தனையோ வேலை'

நாகேஷ் பரிதாபமாக லஷ்மியைப் பார்த்து முத்துராமனிடம் போவார்,

'ஆளான பொண்ணு மேலே அக்கறை இல்லே
அவ அண்ணனான உங்களுக்கு வெக்கமும் இல்லே'

முத்துராமன் கடுப்பாக ரெண்டு பெண்டாட்டிகளுக்கு மத்தியில்

'ரெண்டு சனியன்
எனக்கு ரெண்டு சனியன்
ரெண்டு ரெண்டு பெண்டாட்டி
யாரு பேச்சக் கேட்டு
பக்க தாளம் போட்டு
சம்பந்தம் பண்ணுவேன் நான்
எம் முகத்தைக் காட்டி'

சகுந்தாலா: 'யார் சனியன்'?

ரமாபிரபா: 'அவளா? நானா'?

சகுந்தாலா: 'நானா?அவளா'?

ரமாபிரபா:அவளா? நானா?

சகுந்தாலா: 'நானா?அவளா'?

சகுந்தாலா: 'நீதான்'

ரமாபிரபா: 'இல்ல நீதான்'

(மேஜர் நக்கல் பார்வை)

ரமாபிரபா: 'வாய மூடு'

சகுந்தாலா: 'நீ வாய மூடு'

(இருவரும் 'நீ மூடு... நீ மூடு... மூடு.. மூடு'... மாறி மாறி கூச்சல்)

நாகேஷ் காதைப் பொத்தித் தாங்க மாட்டாமல்.

'அடடாடடடடா.....

நவக்கிரகம்
நீங்க நவக்கிரகம்
ஒன்னு ஒன்னு பேசாது
ஒன்னுக்கொன்னு சேராது
ஒன்னையொன்னு பார்க்காது
ஒன்பது ரகம்.
நவக்கிரகம்,
நீங்க நவக்கிரகம்'

நாகேஷ் ஸ்ரீகாந்திடம் வந்து

'வீட்டுக்கு மாப்பிள்ள நீங்க
இந்த விஷயத்தில் முடிவுக்கு வாங்க
உங்க மச்சினன் போல நீங்க
வாய் மூடிக் கிடப்பது ஏங்க'

ஸ்ரீகாந்த் கடுப்பாக முத்துராமன பக்கம் கைகாட்டி

'மச்சினனா அவன்? ராட்சஷன்'

முத்துராமன் பதிலுக்கு

'நீ! காதகன்'

ஸ்ரீகாந்த்: 'நீ! கிராதகன்'

முத்து: 'நீ! யமகாதகன்'

ஸ்ரீகாந்த்: 'திட்றான், திட்றான் மறுபடியும் திட்றான். எல்லாரும் சாட்சி'

(ஆவூன்னா முத்துராமனும், ஸ்ரீகாந்தும் ஒருவர் மேல் ஒருவர் கோர்ட்டில் வழக்கு போட்டுக் கொள்வார்கள்)

முத்து: 'போடா! சீச்சீ'!

ஸ்ரீகாந்த்: 'போறேன்பா! நான் போறேன்பா'

நாகேஷ் (கெஞ்சி) 'சார்'!

ஸ்ரீகாந்த்: 'எனக்கேன்பா... உனக்கேன்பா'...

முத்துராமன் : (நக்கல் நையாண்டி சிரிப்பெடுத்து) 'ஓடறான் ஓடறான் ஒதவாக்கரை ஓடறான்'

உடனே ராகினி (புருஷனுக்கு நேர்ந்த அவமரியாதை தாங்க மாட்டங்களாம்)

'கட்டிய கணவனுக்கு மட்டு மரியாதை
கெட்டுப் போச்சு விட்டுப் போச்சு
எனக்கென்ன வேலை'

பையன் அனுமந்துவின் கையைப் பிடித்து,

'அனுமந்து! வாடா போலாம்'

ஒய்.ஜி. (சிணுங்கிக் கொண்டே)

'வத்சலாவுக்கு மட்டுமா வயசாச்சு
இந்த அனுமந்து கல்யாணம் என்ன ஆச்சு?
இந்த அனுமந்து கல்யாணம் என்ன ஆச்சு'?

(எவ்வளவு விவரமா கேக்கறது?.அரை டவுசர் போட்ட குழந்தே)

ராகினி: 'சரிதான் வாடா'!

நாகேஷ்: (பின் தொடர்ந்த படி) 'அக்கா கூட இப்படிப் போனா'?

ராகினி: 'ஆரத்தி எடுக்க வருவா தானா'!

நாகேஷ்: அக்கா! அக்கா! அக்கா!

(நாகேஷைப் பார்த்து லஷ்மி வேதனை)

நாகேஷ் சோகமாக படிக்கட்டுகளில் இறங்கி,

மேஜரைப் பார்த்து,

'எல்லோருக்கும் மூத்தவர் நீங்க பிரம்மச்சாரி
இப்படி பட்டும் படாம நின்னுகிட்டிருந்தா ஐயாம் சாரி'

மேஜர் பதில் விறுவிறுவென்று,

https://i.ytimg.com/vi/Wy_G1Xfgnxk/mqdefault.jpg

"அப்பா பாலு! இது ஆட்டு மந்த! மாட்டுச் சந்த! ஆட்டத் தூக்கி மாட்டுல போடும்...; மாட்டத் தூக்கி ஆட்டுல போடும். நாக்குல ஒன்னு நெஞ்சுல ஒன்னு. முன்ன வச்சுப் பின்ன பேசும். பின்ன விட்டு முன்னப் பேசும்.
இதுக்கு நடுவுல நம்ம பேச்சா எடுபடும்?"

முத்துராமன் கோபமாக அண்ணன் மேஜரைப் பார்த்து,

'ஆடா மாடா யாரைச் சொன்னாரு'?

மேஜர்: 'அறிவு கெட்டவன் வேற யாரு'?

சகுந்தலா: 'ஐயோ! அத்தனையும் கேக்கணுமா! திங்கலையா சோறு'!

ரமாபிரபா: 'ஆஹா! மீச மட்டும் இருக்கே! ரோஷமில்ல பாரேன்'!

முத்துராமன்: 'என்னை எல்லோரும் திட்டவா இந்தக் கூட்டம் கூட்டுனே! இத்தன பேர் மத்தியில நிக்க வச்சு மாட்டுன'?

மேஜர்: 'தலை ரெண்டும் போயாச்சு ஆளுக்கொரு மூலை. இப்ப வா ஆ லு (திக்கல்) மட்டும் நிக்குதே! இதுக்கென்ன வேலை'?

முத்துராமன்: 'போறேன்பா! போறேன்பா! நானும் போறேன்பா'!

நாகேஷ்: 'அப்பா கல்யாணப் பேச்சு'?!

முத்துராமன்: 'அது காத்தோட போச்சு'

நாகேஷ் கோபியிடம்,

'அவுங்கதான் அப்படி! மாலு! நீ எப்படி'?

கோபி: 'இது கொலைகாரக் குடும்பம். நீ சொல்லியா திருந்தும்'?..

நாகேஷ்: (நொந்து போய்)

'நாலு பேர சேர்த்து வைக்க
நல்லதுக்கு பேச்செடுத்தேன்
நாய் வாலை நிமித்தி வைக்க
ஆன மட்டும் பா ஆ டு பட்டேன்

அட பந்தம் இல்லே பாசம் இல்லே
கொஞ்சம் கூட ரோஷமில்லே
ஆம்பிள்ளைக்கு அறிவில்லே
பொம்பளைக்கு பொறுப்பில்லே
நல்லதுக்கும் சேர்றதில்லே
கெட்டதுக்கும் கூட்றதில்லே
சத்திரமா சாவடியா?
சோத்துக்கறி சந்தடியா?

நாய் வாலை நிமித்தி வைக்க ஆன மட்டும் பா ஆ டுபட்டேன்"


https://www.youtube.com/watch?v=6dN3SDAfx0U&feature=player_detailpage

gkrishna
19th July 2014, 12:56 PM
[QUOTE=vasudevan31355;1148941]இன்றைய ஸ்பெஷல் (32)

http://sim05.in.com/62/fa0f36ae1c96dae3a2b2f15935a4c3dd_pt_xl.jpghttp://i1146.photobucket.com/albums/o528/imagivity/mgr%20images/NamnaduBNRatMtRoadinNavagraham_zpsae3ecdaa.jpg

வாசு சார்
மிக அருமையான ஆய்வு ஒரு வரி கூட நீங்க விடலை ரசித்தேன் இந்த விடலை :)
வசன நடை பாடல்கள் என்று ஒரு ஆய்வு நீங்கள் எழுதினால் நிறைய பாடல்கள் கிடைக்கும்
'அந்த நாள் ..நெஞ்சிலே '
'தேவனே '
'கண்ணன் அவன் சொன்னானே கடமையினை செய்து விடு தலை முதல் கால் வரை சோகம் '

ராகினியின் கடைசி படம் இதுதானா வாசு சார்

gkrishna
19th July 2014, 01:09 PM
http://antrukandamugam.files.wordpress.com/2013/11/ragini-padmini-kodeeswaran.jpg?w=487http://antrukandamugam.files.wordpress.com/2013/11/ragini-veerapandiya-kattabomman-1959-1.jpg?w=593
ராகினி- (பிறப்பு-1937-இறப்பு-30.12.1976) பழம்பெரும் தமிழ், மலையாளம், தெலுங்கு மற்றும் இந்தியில் பிரபல நடிகை. திருவிதாங்கூர் சகோதரிகள் என்றழைக்கப்படும் லலிதா, பத்மினி, ராகினி சகோதரிகளில் மூவரில் இளையவர். பத்மினி அளவுக்கு இவர் சோபிக்க முடியவில்லை என்றாலும் பல படங்களில் கதாநாயகியாகவும் பல படங்களில் ஜே.பி.சந்திரபாபு, கே.ஏ.தங்கவேலு போன்ற பல பிரபல நகைச்சுவை நடிகர்களுடன் இணைந்து நகைச்சுவை நடிப்பில் கொடிகட்டிப் பறந்தார். இவர் தனது 36-ஆவது வயதில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு 30.12.1976-ஆம் ஆண்டு இறந்தார்.இவரது கணவர் பெயர் மாதவன் தம்பி. லக்ஷ்மி, பிரியா என இரு மகள்கள்.

100-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். வீரபாண்டிய கட்டபொம்மன், தூக்குத் தூக்கி, மாங்கல்ய பாக்கியம், காவேரி, சிங்காரி, மந்திரி குமாரி, பரிசு, கோடீஸ்வரன், ஏழைப்பங்காளன், கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி போன்ற படங்கள் இவர் நடித்து வெளிவந்தவற்றில் சில.


உத்தமபுத்திரன் திரைபடத்தில் ராகினியின் காமெடி நடிப்பு மிகவும் அருமையாக இருக்கும்

gkrishna
19th July 2014, 02:30 PM
மக்கள் கலைஞர் ஜெய்சங்கர், ராமனாதன், லட்சுமி, மனோரமா, ஜெய்குமாரி, வெண்ணிற ஆடை மூர்த்தி, தேங்காய் சீனிவாசன் மற்றும் பலர் நடித்த
மாடர்ன் திடேர்ஸ்
G .OR நாதன் இயக்கம்
http://antrukandamugam.files.wordpress.com/2013/11/thedi-vantha-lakshmi-1973.jpg?w=487http://antrukandamugam.files.wordpress.com/2013/11/thedi-vantha-lakshmi-1973-2.jpg?w=487http://antrukandamugam.files.wordpress.com/2013/11/thedi-vantha-lakshmi-1973-3.jpg?w=487http://antrukandamugam.files.wordpress.com/2013/11/thedi-vantha-lakshmi-1973-15.jpg?w=487

இந்த படத்திற்கு வசனம் எழுதிய s .v .ஜெகதீசன் என்பவரும் திசை மாறிய பறவைகள்,மேகத்துக்கும் தாகம் உண்டு,மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி இயக்குனர் s.ஜெகதீசன் என்பவரும் ஒருவரா இதன் இசை அமைப்பாளர் சஞ்சய் என்ன ஆனார் தெரியவில்லை ? அதே மாதிரி ராமநாதன் என்று ஒருவர் நடித்து உள்ளதாக டைட்டில் இருக்கிறது . யார் இந்த ராமநாதன் (மனோரமா கணவர் பெயர் ராமநாதன் அவரா)

ஏகப்பட்ட கேள்வி

பாடகர் திலகம் சுசீலா குரல்களில்

'அச்சம் நாணம் வெட்கம் என் கண்ணோடு சொல்லாமல் சொல்லும் ' typical jaisankar song

ஈஸ்வரி குரலில் 'ஜிம்க்கானா ஜிம்க்கானா' (சொல்லாதே சொல்லாதே ஊரர்க்கு சொல்லாதே பாடல் போன்று உள்ளது )

பாடகர் திலகம் குரல் ''நெஞ்சம் நிறைய வரவேற்க வேண்டும்' (பட்டதல்லாம் போதுமா பட்டினதரே பாடல் போன்று உள்ளது )

பாடகர் திலகம், ஈஸ்வரி குரல்களில் 'தொட்டாக்க வெக்கம் வரும் '

டைட்டில் பாடியவர்கள் பகுதியில் சாய்பாபா மற்றும் மனோரமா உள்ளது . இவர்கள் என்ன பாட்டு பாடியுள்ளார்கள் என்று தெரியவில்லை

http://www.inbaminge.com/t/t/Thedi%20Vandha%20Lakshmi/

http://www.youtube.com/watch?v=pX4Wg0EnWX8

RAGHAVENDRA
19th July 2014, 02:47 PM
கிருஷ்ணா சார்
எஸ்.வி.ஜெகதீசன் வேறு, எஸ்.ஜெகதீசன் வேறு.
மனோரமா பாடல் டிவிடியி்ல் இடம் பெறவில்லை.
ராமநாதன்...don't know

RAGHAVENDRA
19th July 2014, 02:52 PM
உள்ள(த்)தை அள்ளித்தா

இத்தொகுப்பில் அடுத்து நாம் பகிர்ந்து கொள்ள இருப்பது...

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/OldTamilFilmStills5/sendoff_zps32151c05.jpg

ஆம் பிரியாவிடை படப்பாடல் தான்..

டைட்டில் பாடலைப் பாடியிருக்கும் கண்ணியப்பாடகியின் குரலில் உருகாதவர் மனித இனமாயிருக்க முடியாது எனத் தீர்மானிக்கும் அளவிற்கு மெய்மறந்து கேட்க வைக்கும் பாடல். ஜி.கே.வெங்கடேஷின் இசையில் இப்பாடலைக் கேட்டுக் கொண்டே இருக்கலாம்.

கிருஷ்ணா இதோ தங்கள் கூறியது இதைத்தானே

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/OldTamilFilmStills5/sendoffrajatitlecard_zpsf83b3396.jpg

இப்போது இந்தப் பாடலைத் தரவிறக்கம் செய்து கேட்டு உணருங்கள்

https://www.mediafire.com/?3c1uc1cd9d6x3j3

mr_karthik
19th July 2014, 02:58 PM
டியர் கோபால் சார்,

காவியக்கவிஞர் வாலி அவர்களைப்பற்றிய கட்டுரை அருமை. ஒருமுறை கவியரங்கத்தில் அவரை நேரில் பார்த்திருக்கிறேன். 2007-ம் ஆண்டில் சென்னை காமராஜர் அரங்கில் நாகேஷுக்கு நடந்த பாராட்டு விழாவிலும் பார்த்திருக்கிறேன். (இரண்டிலும் சற்று தூரத்தில்தான்). மற்றபடி அவரைப்பார்த்தது பத்திரிகைகளிலும் தொலைக்காட்சியிலும்தான்.

பொதிகைத் தொலைக்காட்சி ஒளிபரப்பிய 'வாலிப வாலி' தொடர் நிகழ்ச்சி மூலமாக அவரைப்பற்றி அரிய பல விவரங்களை அவர் வாயிலாகவே அறிய முடிந்தது. ஒரே வருத்தம் அவ்வளவு நெடிய தொடரிலும்கூட நடிகர்திலகத்தை பற்றி கொஞ்சமே கொஞ்சமாக பேசினார். பெரும்பாலான நேரங்களை எம்.எஸ்.வி போலவே 'மூன்றெழுத்து இனிஷியல்காரரை' புகழவே செலவழித்தார். 'ஆலங்குடி சோமு சிவாஜி படங்களுக்கு பாட்டெழுதியதில்லை' என்ற தவறான தகவலைச்சொன்னார். (பேட்டியெடுத்த கவிஞர் நெல்லை ஜெயந்தா 'ஆலங்குடி சோமு சிவாஜி படத்துக்கு பொன்மகள் வந்தாள் போன்ற சில பாடல்களை எழுதியுள்ளார்' என்று எடுத்துக்கூறினார்).

நாகேஷுக்கான பாராட்டு விழாவில் வாலி சொன்னது "நல்லவன் வாழ்வான் படத்துக்கு பாட்டெழுத அரசு பிக்சர்ஸ் அலுவலகத்துக்கு இயக்குனர் ப.நீலகண்டனைப் பார்க்கச் சென்றபோது என்னுடன் நாகேஷும் வந்திருந்தார். நீலகண்டன் எங்களைப்பார்த்து இருவரில் யார் வாலி? என்று கேட்க, நான்தான் என்றேன். உடனே அவர் நாகேஷைப்பார்த்து நீங்கள் வெளியே போங்கள் என்று வெளியேற்றினார். கோபப்பட்டு நானும் வெளியேற எழுந்தபோது, நாகேஷ் என்னைப்பார்த்து உன் முன்கோபத்தினால் பாட்டெழுதும் வாய்ப்பைக் கெடுத்துக்கொள்ளாதே என்று சொல்லிவிட்டு வெளியே சென்றார். அன்றைக்கு நாகேஷை வெளியேற்றிய நீலகண்டன் அதே நாகேஷின் கால்ஷீடுக்காக பல நாட்கள், பல வாரங்கள், பல மாதங்கள் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது" என்று கூறினார்...

mr_karthik
19th July 2014, 03:14 PM
டியர் கோபால் சார்,

தங்கள் பதிவுகளில் இடையிடையே மண்டை சைஸ் எழுத்துக்கள் எதற்க்காக?. இங்கு யாருக்கு வெள்ளெழுத்து?.

வேண்டாம் சார், மண்டை சைஸ் எழுத்துக்களை "வேறுதிரி நண்பர்களுக்கு" விட்டு விடுங்கள். நமக்கு வேண்டாம். கருத்துக்களில் வலுவிருந்தால் எவ்வளவு சின்ன எழுத்துக்களிலும் மக்களை சென்றடையும்...

gkrishna
19th July 2014, 03:23 PM
கிருஷ்ணா சார்
எஸ்.வி.ஜெகதீசன் வேறு, எஸ்.ஜெகதீசன் வேறு.
மனோரமா பாடல் டிவிடியி்ல் இடம் பெறவில்லை.
ராமநாதன்...don't know

நன்றி வேந்தர் சார் .

பிரியாவிடை பட பாடல் நான் ரசித்த பாடல்களில் ஒன்று

Richardsof
19th July 2014, 03:25 PM
நவக்கிரகம் - நாகேஷ் பாடல் பற்றிய விரிவான பதிவு . மிகவும் அருமை .நன்றி திரு வாசு சார் .

தேடி வந்த லக்ஷ்மி - பாடல் அருமை . நன்றி திரு கிருஷ்ணா சார்

பிரியா விடை படத்தில் இடம் பெற்ற பாடல் - நீண்ட நாட்களுக்கு பிறகு காணும் வாய்ப்பை தந்த
ராகவேந்திரன் சார் . நன்றி .

mr_karthik
19th July 2014, 03:50 PM
டியர் வாசு சார்,

இன்றைய ஸ்பெஷல் வரிசையில் 'நவக்கிரகம் நீங்க நவக்கிரகம்' பாடல் ஆய்வு படித்தேன். வழக்கம்போல சிரத்தையெடுத்து ஆய்வு செய்திருக்கிறீர்கள். உங்களுக்கு மிகவும் பிடித்த பாடல்களில் ஒன்று என்று குறிப்பிட்டுள்ளீர்கள்.

அப்பாடா, எல்லாவற்றிலும் ஒத்துப்போன நம் இருவர் ரசனையில் முதல் தடவையாக வேறுபாடு ஏற்பட்டுள்ளது. ஆம். எனக்குப்பிடிக்காத பாடல் லிஸ்ட்டில் இப்பாடலுக்கு நிச்சயம் இடம் உண்டு. அதிலும் பத்துக்குள்ளாக.

பொதுவாக பாடல்களின் இடையே வசனங்கள் வரும் பாடல்கள் என் நெஞ்சை அவ்வளவாக கவருவதில்லை. அந்த நாள் ஞாபகம், தெய்வமே தெய்வமே, சக்கைபோடு போடு ராஜா, தேவனே என்னைப்பாருங்கள் போன்ற பாடல்கள் பிடிக்கக் காரணம் அவற்றில் நடித்தவரின் அபார திறமையால்.

'நவக்கிரகம், 'நான்கு சுவர்கள்' இரண்டையும் ஒரே நேரத்தில் இயக்கி வந்தார் கே.பாலச்சந்தர். இதைப்பற்றி குமுதம் பத்திரிகையில் 'படமெடுத்துப்பார்' என்ற தலைப்பில் வாராவாரம் கட்டுரை எழுதிவந்தார். அதைப்படித்தபோதே இந்த இரண்டு படங்களுமே தேறாது என்று தோன்றியது. அதுபோலவே இரண்டு படங்களுமே தேறவில்லை. (ஆனால் 'நான்கு சுவர்களில்' பாடல்கள் அருமை). நவக்கிரகத்திலும் 'உன்னைத்தொட்ட காற்று வந்து என்னைத் தொட்டது' பாடல் நன்றாக இருந்தது. ஆனால் 'நவக்கிரகம் நீங்க நவக்கிரகம்' பாடலைப்பார்க்கும்போது ஏதோ மேடை நாடகத்தைப் படமாக்கியது போலிருக்கும்.

உங்களுக்கு மனதுக்குப் பிடித்த பாடலாதலால் ரொம்ப அருமையாக பதிவிட்டிருக்கீறீர்கள். வாழ்த்துக்கள்...

mr_karthik
19th July 2014, 04:02 PM
//இந்த படத்திற்கு வசனம் எழுதிய s .v .ஜெகதீசன் என்பவரும் திசை மாறிய பறவைகள்,மேகத்துக்கும் தாகம் உண்டு,மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி இயக்குனர் s.ஜெகதீசன் என்பவரும் ஒருவரா? //

டியர் கிருஷ்ணாஜி,

இருவரும் வேறு வேறு.

இருந்தாலும் உங்களுக்கு இந்த சந்தேகம் வந்ததில் தவறில்லை. சிலர் இடையில் இனிஷியலை மாற்றிக்கொள்வது / சேர்த்துக்கொள்வது உண்டு. உதாரணமாக பழைய படங்களில் C. குகநாதன் என்று போட்டுக்கொண்டிருந்தவர் பிற்காலத்தில் V.C. குகநாதன் என்று போட்டுக்கொள்ளத் துவங்கினார்...

mr_karthik
19th July 2014, 04:05 PM
'பிரியாவிடை' படத்தில் அப்படியே ஒரு பிரபலமான இந்திப்பட பாடலைக் காப்பியடித்து 'மாப்பிள்ளைக்கொரு மயக்கம் வந்தது' என்ற பாடலைப் போட்டிருந்தார் ஜி.கே.வெங்கடேஷ்.

gkrishna
19th July 2014, 05:37 PM
//இந்த படத்திற்கு வசனம் எழுதிய s .v .ஜெகதீசன் என்பவரும் திசை மாறிய பறவைகள்,மேகத்துக்கும் தாகம் உண்டு,மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி இயக்குனர் s.ஜெகதீசன் என்பவரும் ஒருவரா? //

டியர் கிருஷ்ணாஜி,

இருவரும் வேறு வேறு.

இருந்தாலும் உங்களுக்கு இந்த சந்தேகம் வந்ததில் தவறில்லை. சிலர் இடையில் இனிஷியலை மாற்றிக்கொள்வது / சேர்த்துக்கொள்வது உண்டு. உதாரணமாக பழைய படங்களில் C. குகநாதன் என்று போட்டுக்கொண்டிருந்தவர் பிற்காலத்தில் V.C. குகநாதன் என்று போட்டுக்கொள்ளத் துவங்கினார்...

நன்றி கார்த்திக் சார்

இதே மாதிரி இன்னொரு சந்தேகம் உண்டு சார்
மாஸ்டர் தசரதன் என்று ஒருவர நம்ம தெய்வமகன்,ராமன் எதனை ராமனடி,திருமலை தென்குமரி போன்ற நிறைய படங்களில் வருவார் .
பின்னாளில் S R தசரதன் என்று ஒருவர் சரணம் ஐயப்பா என்ற படம் ஒன்று எடுத்தார் .ஜேசுதாஸ் இன் அருமையான பாடல்
'பொய்யின்றி மெய்யோடு நைய் கொண்டு போனால் ஐயனை நீ காணலாம்' என்ற பாடல் இடம் பெற்றது .
மாஸ்டர் தசரதனும் SR தசரதனும் ஒருவரா
http://antrukandamugam.files.wordpress.com/2013/11/master-dhasaradhan-ponnu-maappillai.jpg?w=487

vasudevan31355
19th July 2014, 10:52 PM
கிருஷ்ணா சார்!

நன்றி!

தேடி வந்த லஷ்மி. அப்போது பரபரப்பாக பேசப்பட்ட படம். சஸ்பென்ஸ், திகில் கலந்த விறுவிறு படம். அந்தப் படத்தின் பாடல்களைப் பற்றி குறிப்பிட்டு, ஸ்டில்களையும் ஆதாரபூர்வமாக இணைத்ததற்கு நன்றி.

'நெஞ்சம் நிறைய வரவேற்றான்' பாடல் 'தேடி வந்த லஷ்மி' படத்தில் அல்ல. அது ஜெய்சங்கர் நடித்த 'ஆசீர்வாதம்' திரைப்படத்தில் வரும் பாடல்.

இன்பமிங்கே வெப் சைட்டில் தவறான தகவல் தந்துள்ளார்கள். இது மாதிரி வெவேறு படங்களின் பாடல்களை அந்த வெப் சைட்டில் சரி பார்க்காமல் கலந்து தந்து விடுவார்கள்.

vasudevan31355
19th July 2014, 11:02 PM
நன்றி ராகவேந்திரன் சார்!

தங்களால் இந்தத் திரி கிடைக்கவே அரிதான பாடல்களையெல்லாம் பெற்று அனைவருக்கும் பரவசம் அளிக்கிறது.

'பிரியாவிடை' படப் பாடல் அருமை.

'ராஜா பாருங்க... ராஜாவைப் பாருங்க' என்ற பாடல் அப்போது சூப்பர் ஹிட்.

'என்னுயிரே! பொன்னொளியே! என் காதல் மன்னா'! ஜானகியின் பாடல். சுகமோ சுகம். (இது 'பிரியா விடை'யில்தானே?)

நீங்கள் அளித்துள்ள ஸ்டில்லில் இருப்பது நடிகை சாந்தகுமாரிதானே! காந்திமதி சாயல் போலவே தெரிகிறது.

'ராஜா பாருங்க... ராஜாவைப் பாருங்க'


http://www.youtube.com/watch?v=4DOPQmYvzDg&feature=player_detailpage

vasudevan31355
19th July 2014, 11:36 PM
கிருஷ்ணா சார்,

அதே தசரதன்தான். பல படங்களில் உதவி இயக்குனராகப் பணியாற்றியவர். மாஸ்டர் தசரதனும் SR தசரதனும் ஒருவரே! தசரதன் நாகேஷுடன் சேர்ந்து ஆடும் 'கல்யாண சாப்பாடு போடவா' (மேஜர் சந்திரகாந்த்) பாடலை மறக்கவே முடியாது. தசரதன் அந்தப் பாட்டில் கலக்கியிருப்பார்.

இன்னும் ஒரு விஷயம்.

இதே தசரதன் பாலு மகேந்திராவின் படைப்பான 'ராமன் அப்துல்லா' படத்தின் டைட்டில் சாங்கான

'உன் மதமா என் மதமா ஆண்டவன் எந்த மதம்?'

என்ற பாடலுக்கு பரதேசியாய் காவி கட்டி, வெற்றுடம்புடன் தலையில் முஸ்லீம் குல்லா அணிந்து, நெற்றியில் நீறு குங்குமம் இட்டு. கழுத்தில் சிலுவை அணிந்து அருமையாக ஆடி நடித்திருப்பார்.

இப்பாடலைப் பாடியவர் நாகூர் ஹனிபா அவர்கள். இசை இளையராஜா.

உங்களால் ஒரு நல்ல மதசார்பற்ற கருத்தை வலியுறுத்தும் பாடலை ஆராய நேரிட்டது.

நன்றி!

இப்போது வித்தியாசமான தசரதனை ரசியுங்கள்.

http://www.youtube.com/watch?v=3L1GKrTCk5o&feature=player_detailpage

Richardsof
20th July 2014, 06:06 AM
வாசு சார் . புது முயற்சியாக ..முதல்முறையாக .....

தென்றல் வீசும் ரம்மியமான இரவு நேரம் . அழகிய சிறு நீரோடை .சுற்றிலும் பசுமையான செடிகள் . மலர்கள் .
முழு நிலவு மேகத்தில் ஜொலிக்கிறது .. தென்றல் காற்றும் மலர்களின் நறுமணம் இரண்டும் இணைந்திட
அந்த பகுதி நந்தவனமாக காட்சியளித்தது . ஒரு அழகு தேவதை .அவள் .பக்கதில் ஒரு மன்மத ராஜகுமாரன் .
அந்த தேவதை பெயர் ராதா . மன்மதன் வேறு யாருமில்லை கண்ணன் . காதலர்கள் நெஞ்சங்கள் மதுர கானத்தில்
மிதக்க துவங்கினார்கள் .

கண்ணில் ஆடும் மாயவன் என்று ராதையும் நீல வண்ண பூங்குழல் என்று கண்ணனும் ஆராதனை செய்யும் அழகே அழகு .காதலர்களின் உவமைகள் - தமிழ் வார்த்தைகள் நம்மை அந்த சொர்க்கத்திற்கே அழைத்து செல்கிறது .
பாடகர் திலகம் - இசை அரசி இருவரின் குரலில் மெல்லிசை மன்னரின் இனிய இசையில் இந்த பாடல் காட்சியில்
நம் கண்களும் செவிகளும் அந்த தோட்டத்திற்கே நம்மை அழைத்து செல்கிறது .

மக்கள் திலகம் - ஜெயா இருவரும் இந்த பாடல் காட்சியில் மிகவும் மென்மையாக இளம் காதலர்களாக தோன்றி பாடலுக்கு உயிர் கொடுத்திருந்தார்கள் .இந்த காதல் கீதத்தை நீங்களும் ரசித்து பாருங்களேன் .

http://youtu.be/2qAI__2gIc4

RAGHAVENDRA
20th July 2014, 10:04 AM
உள்ள(த்)தை அள்ளித்தா

http://3.bp.blogspot.com/-QqLQqReG-bA/TbWN-yxYO1I/AAAAAAAABU4/z7ekwDFqUuE/s1600/msv.jpg

http://www.melodybuzz.com/wp-content/uploads/2014/06/Vani_Jayaram1.jpg

மெல்லிசை மன்னர் வாணி ஜெயராம் கூட்டுப் படைப்புகள் காலத்தால் அழிக்க முடியாதவை, தனிச் சிறப்பு பெற்றவை. எம்.எஸ்.வியே சொல்லுவார், நீ இன்னும் முன்னாடியே எங்கள் இசைக்குழுவில் வந்திருக்கக் கூடாதா என்று. அப்படிப்பட்ட சிறப்பான குரலினிமையும் வளமும் பெற்ற பாடகி வாணி ஜெயராம். மெல்லிசை மன்னரின் படைப்புகளில் வாணி ஜெயராம் பாடிய பாடல்களில் பல நுணுக்கமான சங்கதிகள் காணப்படும்.

வைர நெஞ்சம் படத்தில் நீராட நேரம் நல்ல நேரம் பாடல் எவ்வளவு சிறப்பு வாய்ந்ததோ அதற்கு சற்றும் குறையாத சிறப்புடன் அமைந்த பாடல் ஸ்ரீராம ஜெயம் திரைப்படத்தில் இடம் பெற்ற பதினாறு வயதினிலே. தேங்காய் சீனிவாசன் கதாநாயகனாக நடித்த இப்படத்தில் மிகவும் பிரபலமான பாடல்கள் வெள்ளிச் சலங்கை மற்றும் எந்தன் கற்பனைத் தேரில், பிறகு மனோரமா பாடிய சோசியம் பாக்கலியோ பாடல்.

ஆனால் இவை அனைத்தையும் தூக்கிச் சாப்பிட்டு எட்டாத உயரத்தில் அமர்ந்திருப்பது இன்று நாம் பகிர்ந்து கொள்ள இருக்கும் இப்பாடல். படம் பார்த்தவர்களுக்கு மட்டுமே இப்பாடல் ஓரளவு ஞாபகம் இருக்கும். வானொலியிலோ தொலைக்காட்சியிலோ இப்பாடல் அதிகம் ஒலி அல்லது ஒளிபரப்பப் பட்ட நினைவில்லை.

மிருதங்கம், குழு தபேலா என தாள வாத்தியங்கள் பயன் பாடு மிகவும் மெலோடியாக அமைத்திருப்பது இப்பாடலின் சிறப்பு. முதன் முறை கேட்பவர்கள் நிச்சயம் மெய் மறந்து போவார்கள் என்பது திண்ணம். அதே போல் கேட்டவர்கள் மீண்டும் மீண்டும் கேட்பார்கள் என்பது அதை விட உறுதி.

பாடலுக்கான இணைப்பு கீழே தரப்பட்டுள்ளது. தரவிறக்கிக் கேளுங்கள்

ஸ்ரீராம ஜெயம் - பதினாறு வயதினிலே - எம்எஸ்வி - வாணி (https://www.mediafire.com/?fas3mhcw81c48wt)

பாடலாசிரியர் கவியரசரா அல்லது நேதாஜியா எனத் தெரியவில்லை. தெரிந்தவர்கள் சொல்லலாம்.

Gopal.s
20th July 2014, 01:52 PM
நாளை நான் மறக்கவே முயலும் (21 ஜூலை) நினைவு நாள் காணும் எங்கள் தென்னவர் திலகமே,திராவிட ஆண்மையின் மன்மத திலகமே ,நடிகர் திலகமே , இந்த தூசு கவி உனக்களிக்கும் மாசு காணா ஆசை கவி மழை. உன் ஆசிகளின் துளியை எனக்களி பிரதியாய் .

அன்னை தமிழின் அருந்தவ புதல்வனே நல்லூழ் கண்டோர் நாங்கள்
உன்னை தொழுதே அளப்பரிய களிப்புடன் அடிதன்னில் வீழ்வோம்

போற்றி உன்னை எனை மறந்து புகழ்ந்தே கவிபாடும் திறன்
ஆற்றல் எமக்கே அளித்தோனே ஆக்கமுடன் மருளாது

ஏற்றமிகு வாணியின் பிணக்கா செல்வம் கணக்கிலா இணக்கமுற
பெற்ற நீ இம்மண்ணுதித்ததோ ஆயிரத்தொன் இருபத்து எட்டில்

தோப்புகரண துதி செய்து தெளிதேனுடன் இடுவேன் இந்நினைவுநாள்
காப்பு நீயென வேண்டி தொழுவேன் எங்கள் கணேசமூர்த்தியே

தேவ பெற்றோருக்கு தேவமைந்தனாய் வந்துதித்த தேவனே
நாவன்மை பேறு நான் பெற காவன்மை குவித்த காருண்யனே

காரிருள் களைந்து களைத்துநின்ற தமிழுக்கு பேரொளி தந்தாய்
சூரிய செம்மை நிகர் ஒப்பரிய காரிய செம்மை வீரியம் கண்டோய்

கொஞ்சும் தமிழால் அஞ்சுக செல்வன் அருந்தமிழை விருந்தமைவாய்
தஞ்சையின் தங்கமே நல்லோதோர் வீணையாய் விந்தையுறு விசையுறு

வேகமொடு வேந்துவின் வீச்சோடு வற்றியிருந்த மண்ணுக்கு வெற்றிவாகை
தாகமொடு தாங்கொணா தகிப்புடன் தவித்த தத்தைகளுக்கு தமிழமுத தாயமுது

தரணியே இருள் இற்று அடைநதது அளப்பெரும் பேறு அருந்தவன் பேரு
முரணியே தேங்கிடா காட்டாற்று வெள்ளம் கலையின் தலைமகன் கொடைநூறு

கண்டோர் கேட்டோர் களித்து கடைந்தெடுத்த பார்க்கடலமுதாய் நடிப்பமுது
வேண்டார் வேண்டார் நல்லோர் அல்லார் சிந்தையில் கண்டார் சிவாஜி வென்றதை

வசதி வேண்டி மெய்வருத்தம் காணா தடை தகர்த்து படைபுடை கண்டு
அசதி இன்றி ஈந்தாயே இன்னுயிர் இன்னுடல் கலைபணிக்கே

சந்தையில் நிலை உயர நேசம் மறவா நன்நெஞ்ச நற்றமிழர் நயந்தே
சிந்துபாடி சிறப்புற ஊக்கம் உகந்தனர் உணர்ந்தே உகந்தே

அந்தவரை தன்னை அணுவும் மறக்காமல் ,நிலை துறக்காமல்
தந்தவரை தலையில் தூக்கி போற்றினான் தன்னுள் பின்னாள் வரை

விந்தையுற தந்தான் உடன் உடன்பிறந்த கற்ற பெற்ற வித்தைகளை
தங்கு தடையின்றி ஓங்கு புகழ் சேர்த்தான் தன் பால் தமிழ்மண்ணுக்குமாய்

காசினியில் கண்டோர் விண்டொரெல்லாம் பூசித்து போற்றும்
மாசிலா புகழை எகிப்து ஆசிய ஆப்பிரிக்க பட விழாவில்

நேசித்து ஈந்தனர் உலகின் சிறந்த கலைஞர் உயர்ந்த சிறப்பை
யோசித்த நாசரோ நம் நடிகரல்ல உலக தலைவர் நேருவினும் நேரானவர்.

நாணிய அமெரிக்கனோ வா வா எனவே சிவப்பு கம்பளம் விரிக்க
வாணியின் வையக மைந்தனை சிறப்பு மேயராக்கி சிறக்க வைத்தான்

நெப்போலிய பூமிக்கோ அளப்பிலா அசூயை கலையின் ஊற்றிடம் அன்றோ
இப்புவியின் ஒப்பிலா வீரன் துவக்கிய அசுத்தம் கலக்கா புனித விருதை

எப்புவிக்கும் ஒப்புவிக்கும் ஒப்ப வைக்கும் ஓய்வு காணா கலை விந்தைக்கு
ஒப்புவித்தே தப்புவித்தது தன் கலை புகழை தன் தேச தகைமையை

நடிப்பு வீரம் போற்றி துடிப்பு மிகு விழா கண்டு பெருமை மீட்டது ஓங்கியும்
இடித்தே இகழ்ந்தது இந்திய துணை கண்டத்தின் இழிவு நிலை அரசு அரசியலை

வேகமற்ற இந்திய அரசோ அரசை கலையாக்க கலையை அரசியலாக்க
விவேகமுற்ற வேகத்தில் விருது ஒன்றிற்கு பெருமை தந்து தாதாவை காத்தது

உலக வல்லரசே உன் முறை மீண்டும் இம்முறை தங்க சாவியல்ல
கலகம் கண்டே கலக்கமின்றி உரைப்போம்,வாழ்நாள் ஆஸ்கார் பூட்டு

ஓர்ந்து பதில் சொல் விருதுகளுக்கு கேள்விகளும் கேலிகளும் கூடுமுன்
தேர்ந்தெடுப்பாய் தெளிவாக உலக உன்னத உயரத்தை பதிலாக

தூயவனே தேட படுகிறாய் உலக மனிதம் காக்கும் காவலர்களால்
மாயவனே மனித அடிமை விலங்கொழித்து துடைத்தெறிந்த வழக்கை

ஓயாமல் காத்துள்ளாயாமே பெரும் வாழ்நாள் அடிமை கூட்டம் சுமந்து
மாயாமல் மாய்ந்ததாய் கதைத்து விடுவிக்கும் மனமும் அற்று சோதிக்கிராயாமே

தேயாமல் புகழ் தாங்கும் கூட்டமோ நிலை பெற்ற விலையிலா பிடிப்புடன்
காயாமல் காக்கும் கதிர்களாய் கர்ணன் கண்ட புத்திளம் புது கூட்டம் கூடுதல்

வித்தகம் உன் நினைவை விழைவுடன் மனமேந்தி மெய்யுணர்வு தூண்ட பகிர்ந்து
இத்துடன் முடிக்கின்றேன் கவிதையை மட்டும் சித்தமதில் உணர்வை என் முடிவில் .

chinnakkannan
20th July 2014, 02:12 PM
ஆடி வெள்ளிக்கிழமை என்று நினைத்ததாலோ என்னவோ ஓமான் ஏர் விமானத்தில் மதிய உணவாக தேங்காய்ச் சாதம், சென்னா, பீன்ஸ் கறி என மங்களகரமாகக் கொடுக்க உண்டு உறங்கி வெள்ளி இரவு இங்கு வந்து நேற்று முழுவதும் லீவில் இருந்த அயர்ச்சியைப்போக்கி விட்டு இன்று வெற்றிகரமாக இங்கே... வந்துட்டேன் ஐயா..:)

வந்தால் இங்கிட்டு நூறு பக்கம் ந.தியில் புதிய இழை தொடக்கம் என ஓடியிருக்கிறது.. நிதானமாக ப் படிக்க வேண்டும்..கொஞ்சம் ஒரு புரட் புரட்டியதில்ல்...ராகினி கண்ணில் தென்பட்டார்.. ம்ம் கூடவே லலிதா நினைவு..உன்னைக் கண் தேடுதே..விக் விக்.. அதே படத்தில் வெண்ணிற ரஸமலாயாக அவர் பாடும் இன்னொரு பாடல் நினைவுக்கு வரமாட்டேங்கறது..

புஷ்பலதாவா..ம்ம் இளமைக் காலத்தில் நம் கண்களுக்கு கறுப்புவெள்ளையில் தோற்றமளித்துப் பின்காணாமல் போய் ஈஸ்ட் மென் கலரில் குண்டாக வந்து பயமுறுத்தியவர்.. கண்ணிரண்டும் மின்ன மின்ன காலிரண்டும் பின்னப் பின்ன பாட்டு தான்சட்டென நினைவுக்கு வருகிறது..

கோபால் ந.தி கவிதை அருமை..

ம்ம் மீண்டும் வருவேன் உஷார் :) :)

vasudevan31355
20th July 2014, 03:44 PM
இன்றைய ஸ்பெஷல் (33)

http://i1.ytimg.com/vi/Lw5ES4nTNjI/hqdefault.jpg

படம்: அன்று கண்ட முகம் (1968)

நடிப்பு: ரவிச்சந்திரன், ஜெயலலிதா, அசோகன், நாகேஷ், மனோரமா, மேஜர், வி.கே.ராமசாமி

வசனம்: மா.ரா.

காமெரா: கர்ணன்

பாடல்கள்: கவிஞர் கண்ணதாசன்

இசை: 'திரை இசைத் திலகம்'

கதை, தயாரிப்பு, டைரக்ஷன்: ஜி.ராமகிருஷ்ணன்

ஆத்மநாபன் (அசோகன்) என்ற பாரிஸ்டரிடம் அவருடைய நண்பர் கல்லூரி பிரின்சிபால் லா பிராக்டிஸ் செய்ய ஒருவரை சிபாரிசு செய்து அனுப்புகிறார். ஆத்மநாபன் ஆண் ஒருவரைத்தான் பிரின்சிபால் வக்கீலாக பிராக்டிஸ் செய்ய அனுப்புவார் என்று பார்த்தால் வந்து நிற்பது ஒரு அழகு தேவதை. பெண்கள் என்றால் பத்தடி தூரம் விலகி நிற்கும் ஆத்மநாபன் அந்த சுந்தரியிடம் வேறு எங்காவது பிராக்டிஸ் செய்து கொள்ளுமாறு அறிவுறுத்துகிறார். ஆனால் அந்த இளம் பெண் வக்கிலோ அவரிடம்தான் பிராக்டிஸ் செய்வேன் என்று பிடிவாதமாக கெஞ்ச இறுதியில் ஆதம்னாபன் சம்மதிக்கிறார்.

அந்த இரவு தான் சந்தித்த அந்த தேவதையின் அழகை நினைத்து அவர் மனம் தடுமாறுகிறது. அப்படியே அந்த தேவதை அவர் கனவில் வந்து....

என்ன அழகான அருமையான பாடல்! ஆனால் பாப்புலர் ஆகாத பாடல். கடுப்பு.

கண்ணியப் பாடகியின் கல்கண்டு குரலில் கேட்க, கேட்க அப்படி ஒரு சுகம். அதுவும் 'கண்ணெதிரே.......ஏ' என்று அவர் இழுத்து பாடும் போது மயங்காதவர்களே இருக்க முடியாது.

இப்பாடலின் ஆரம்ப இசை அமர்க்களம். பேங்கோஸ், ஆர்மோனியம், கிடார் என்று கலக்கல் உபகரணங்களை அம்சமாகக் கலந்து திரை இசைத் திலகம் அமர்க்களமான அமர்க்களப்படுத்தி விட்டார்.

http://i1.ytimg.com/vi/6DatFkAOWJ8/hqdefault.jpg

ஜெயா செம கியூட். இப்பாடலில் 'மணி' மேகலையாய்க் (இடையணி வேறு.) காட்சி அளிக்கிறார். கொள்ளை கொள்ளும் அழகு. அதே போல டான்ஸ் மூவ்ஸ் செக்ஸியான அற்புதம். ஆடைகளுக்கு மேல் டிரான்ஸ்பரென்ட் அங்கி போல வேறு அணிந்து படுகவர்ச்சியாக வேறு பரிமளிப்பார்.

ஆண்குரல் இல்லையென்றாலும் அசோகனுக்கும், ஜெயாவுக்கும் டூயட் போலவே தெரியும் பாடல் இது. இதுவும் ஒரு வித்தியாசம்.

'காட்டுக்கு ஓடிய முனிவர்களும், வீட்டுக்குத் திரும்பிய விஷயம் இது' என்று காதலை காமத்துடன் இணைத்துப் பெருமைப்படுத்தும் நம் கவிஞன். வரிகள் எளிமையான அமர்க்களம்.

அதிகம் வெளியே தெரியாத அற்புத பாடல். அனுபவித்துக் கேளுங்கள். ஆழ்ந்த சுகத்தை உணர்வீர்கள். முடிவு உங்கள் கையில்

இதயம் பொல்லாதது
இதயம் பொல்லாதது
கண்ணெதிரே பெண்ணழகைக் கண்ட பின்னே
இளமை வேகம் கொல்லாமல் நில்லாதது

இதயம் பொல்லாதது
கண்ணெதிரே பெண்ணழகைக் கண்ட பின்னே
இளமை வேகம் கொல்லாமல் நில்லாதது

காட்டுக்கு ஓடிய முனிவர்களும்
வீட்டுக்குத் திரும்பிய விஷயமிது
காட்டுக்கு ஓடிய முனிவர்களும்
வீட்டுக்குத் திரும்பிய விஷயமிது

காவலை மீறிய போதையிது
காவலை மீறிய போதையிது
கண்மூடி நடக்கின்ற பாதை இது

ஆஹா ஓஹோ ம்ஹூம்

(இடையிசை இடையசைவிற்குத் தகுந்தமாதிரி பிரம்மாண்டம்)

இதயம் பொல்லாதது
கண்ணெதிரே பெண்ணழகைக் கண்ட பின்னே
இளமை வேகம் கொல்லாமல் நில்லாதது

சட்டமும் இதனை மறுத்ததில்லை
தருமமும் இதனை வெறுத்ததில்லை
பட்டங்கள் வாங்கிப் பயனுமில்லை
பயிர் செய்யாவிடில் நிலமுமில்லை

சட்டமும் இதனை மறுத்ததில்லை
தருமமும் இதனை வெறுத்ததில்லை
பட்டங்கள் வாங்கிப் பயனுமில்லை
பயிர் செய்யாவிடில் நிலமுமில்லை

கண்ணெதிரே பெண்ணழகைக் கண்ட பின்னே
இளமை வேகம் கொல்லாமல் நில்லாதது

இதயம் பொல்லாதது
கண்ணெதிரே பெண்ணழகைக் கண்ட பின்னே
இளமை வேகம் கொல்லாமல் நில்லாதது

ஆசையில் இதயம் கனிந்திருக்கும்
சந்தோஷம் கண்ணில் மலர்ந்திருக்கும்
ஆசையில் இதயம் கனிந்திருக்கும்
சந்தோஷம் கண்ணில் மலர்ந்திருக்கும்
நினைவுக்குள் நினைவு வளர்ந்திருக்கும்
நினைவுக்குள் நினைவு வளர்ந்திருக்கும்
இல்லையென்றால் எது பிறந்திருக்கும்

இதயம் பொல்லாதது
கண்ணெதிரே பெண்ணழகைக் கண்ட பின்னே
இளமை வேகம் கொல்லாமல் நில்லாதது


http://www.youtube.com/watch?v=ia7u0kQfH44&feature=player_detailpage

mr_karthik
20th July 2014, 04:45 PM
டியர் வாசு சார்,

அன்று கண்ட முகம் படத்தின் அருமையான பாடலான 'இதயம் பொல்லாதது' பாடலை இன்றைய ஸ்பெஷலாக தந்து உண்மையிலேயே அசத்தி விட்டீர்கள். எங்கிருந்து தேடிக்கொண்டு வருகிறீர்கள் இத்தகைய அற்புதங்களை. நானே பார்த்து / கேட்டு பல ஆண்டுகள் ஆகிவிட்டன. சுசீலாவின் கண்டுகொள்ளப்படாத நல்ல பாடல்களில் இதுவும் ஒன்று. எவ்வளவு அருமையாக பாடியிருப்பார். வானொலிகளும் தொலைக்காட்சிகளும் இம்மாதிரி பாடல்களை ரொம்பவே இருட்டடிப்பு செய்து விட்டனர். ஓரளவுக்காவது இவை வெளிச்சத்துக்கு வந்தன என்றால், அது இலங்கை வானொலியால்தான். நமது ஊடகங்கள் கடிவாளம் கட்டிய குதிரைகள்.

'மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா' அவர்கள் இந்தப்பாடலில் செம க்யூட்டாக இருப்பார். அவர் இப்பாடலில் அணிந்துவரும் 'ஸீ-த்ரூ' ஆடை அப்போது பரபரப்பாக பேசப்பட்டது. 'அன்று கண்ட முகம்' பட விளம்பரம் என்றாலே இந்த பாடலில் 'மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா' அவர்களின் போஸ்தான் பிரதானமாக இடம்பெற்றது. ரசிகர்களை 'சுண்டி' இழுப்பதற்காம்.

இதுபோன்ற கண்டுகொள்ளப்படாத பாடல்களைக் கொண்டு வருவதன்மூலம் வாசு சாரின் 'இன்றைய ஸ்பெஷல்' என்னவாக இருக்கும் என்று எதிர்பார்க்க வைக்கிறீர்கள்.

பாராட்டுக்கள்..., வாழ்த்துக்கள்.....

vasudevan31355
20th July 2014, 06:13 PM
டியர் கார்த்திக் சார்,

தங்களுக்குப் பிடிக்காவிடினும் 'நவக்கிரகம்' பாடல் பதிவை வாசித்து, உள்ளதை உள்ளபடிக் கூறி, அதே சமயம் சிரத்தை எடுத்துப் பதிவு போட்டதற்கும் நன்றி கூறிய தங்கள் மேலான பெருந்தன்மையான குணத்திற்கு என் தலை வணங்கிய நன்றி!

'இதயம் பொல்லாதது' பாடலை ரசித்ததில் இருந்தே தங்களின் உயரிய வித்தியாச ரசனை இன்னும் தெளிவாகத் தெரிகிறது. அந்தப் பாடலைப் பற்றிய தங்களது பாராட்டிற்கும் நன்றி.

vasudevan31355
20th July 2014, 06:20 PM
டியர் வினோத் சார்!

எனக்கு நிரம்பப் பிடித்த பாடலான கண்ணன் எந்தன் காதலன் பாடலை தங்களின் முதல் முயற்சியாக நன்கு பதிவிட்டுள்ளீர்கள். வாழ்த்துக்கள்.

vasudevan31355
20th July 2014, 06:46 PM
சற்று நீள் இடைவெளிக்குப் பின் வந்திருக்கும் சின்னக் கண்ணனாரே!

வருக.

mr_karthik
20th July 2014, 07:38 PM
வருக சின்னக்கண்ணன் அவர்களே

கூடவே லலிதா நினைவு..உன்னைக் கண் தேடுதே..விக் விக்.. அதே படத்தில் வெண்ணிற ரஸமலாயாக அவர் பாடும் இன்னொரு பாடல் நினைவுக்கு வரமாட்டேங்கறது..

எந்தன் உள்ளம் துள்ளி விளையாடுவதும் ஏனோ
கண்ணும் கண்ணும் ஒன்றாய்க் கூடி பேசும் விந்தைதானோ

(அது சரி, செட்டுக்குள் ஏன் அத்தனை பாம்பு சிலைகள்?)


புஷ்பலதாவா..ம்ம் இளமைக் காலத்தில் நம் கண்களுக்கு கறுப்புவெள்ளையில் தோற்றமளித்துப் பின்காணாமல் போய் ஈஸ்ட் மென் கலரில் குண்டாக வந்து பயமுறுத்தியவர்..

என்னது பயமுறுத்தினாரா? குண்டாக வந்து மயக்கினார். நாங்கள் கே.ஆர்.விஜயாவையெல்லாம் பார்த்தே பயப்படவில்லை. பாவம் இது குழந்தை...

vasudevan31355
20th July 2014, 08:57 PM
புஷ்பலதா

http://2.bp.blogspot.com/-K2W562tzTuQ/Tn9a79qyCBI/AAAAAAAAAJ0/TX9xe6Tkt-c/s1600/pushpalatha-2.JPG

vasudevan31355
20th July 2014, 08:58 PM
http://thumbnails102.imagebam.com/26355/233dbd263543719.jpghttp://thumbnails108.imagebam.com/26355/20c1e7263543720.jpghttp://thumbnails103.imagebam.com/26355/3217d6263543716.jpg
http://thumbnails103.imagebam.com/26355/6549ee263544011.jpghttp://thumbnails108.imagebam.com/26355/0ff0eb263544016.jpghttp://thumbnails108.imagebam.com/26355/f57b23263544018.jpg

vasudevan31355
20th July 2014, 09:05 PM
http://i1.ytimg.com/i/I-59-Ya8rnRNVcrw6hl8vA/mq1.jpg

http://i1.ytimg.com/vi/UxfLXO1CwKg/0.jpghttp://i1.ytimg.com/vi/6YWrochoxUA/0.jpg
http://i.ytimg.com/vi/EgKRiUkEE-4/0.jpghttp://i1.ytimg.com/vi/U35FjUKwzXE/hqdefault.jpg

vasudevan31355
20th July 2014, 09:09 PM
http://i1.ytimg.com/vi/gxMEgU8vHeU/hqdefault.jpghttp://i1.ytimg.com/vi/CWv5540ueCg/hqdefault.jpg
http://i1.ytimg.com/vi/Ez_Mu7Dbb2A/hqdefault.jpghttp://i1.ytimg.com/vi/opVwR55Lb_c/hqdefault.jpg

Gopal.s
20th July 2014, 09:15 PM
வாசு,

நாம் ஏற்கெனவே ரவி திரியில் பிய்த்து மேய்ந்த அன்று கண்ட முகத்தை மதுர கானங்களில் போட்டு அழகு படுத்தியதற்கு நன்றி.
இதயம் பொல்லாதது எனக்கு பிடித்த மாமா பாடல்.

சின்னகண்ணனார் மீள் வருகைக்கு நன்றி.தாரை தப்பட்டைகள் முழங்கட்டும்.

எஸ்வி-1971 ஆம் வருட பாடல்களில் எனக்கு பிடித்ததில் ஒன்று கண்ணன் எந்தன் காதலன்.நன்றி.

கார்த்திக் சாரின் உற்சாக ஊக்குவிப்பு நமக்கு உத்வேகம் உத்வேகம் .

vasudevan31355
20th July 2014, 09:18 PM
http://img641.imageshack.us/img641/9490/kaikodutha00035.png

vasudevan31355
20th July 2014, 09:22 PM
http://i1.ytimg.com/vi/zmqwLbZzmCg/hqdefault.jpghttp://i1.ytimg.com/vi/KtHExs580gQ/0.jpghttp://i.ytimg.com/vi/Pvy0NTOZAFI/0.jpg

vasudevan31355
20th July 2014, 09:27 PM
http://i1.ytimg.com/vi/ewq0TSCSZxM/sddefault.jpg

Russellisf
20th July 2014, 11:00 PM
my all time favourite song of ssr lyric by kannadasan

எந்த ஊர் என்றவனே இருந்த ஊரைச் சொல்லவா?
அந்த ஊர் நீயும்கூட அறிந்த ஊர் அல்லவா!
எந்த ஊர் என்றவனே இருந்த ஊரைச் சொல்லவா?
அந்த ஊர் நீயும்கூட அறிந்த ஊர் அல்லவா!

உடலூரில் வாழ்ந்திருந்தேன் உறவூரில் மிதந்திருந்தேன்
உடலூரில் வாழ்ந்திருந்தேன் உறவூரில் மிதந்திருந்தேன்
கருவூரில் குடி புகுந்தேன் மண்ணூரில் விழுந்து விட்டேன்!
கருவூரில் குடி புகுந்தேன் மண்ணூரில் விழுந்து விட்டேன்!
கண்ணூரில் தவழ்ந்திருந்தேன் கையூரில் வளர்ந்திருந்தேன்
காலூரில் நடந்து வந்தேன் காளையூர் வந்துவிட்டேன்!

வேலூரைப் பார்த்து விட்டேன் விழியூரில் கலந்து விட்டேன்
பாலூறும் பருவம் என்னும் பட்டினத்தில் குடிபுகுந்தேன்!

எந்த ஊர் என்றவனே இருந்த ஊரைச் சொல்லவா?
அந்த ஊர் நீயும்கூட அறிந்த ஊர் அல்லவா!

காதலூர் காட்டியவள் காட்டூரில் விட்டுவிட்டாள்
காதலூர் காட்டியவள் காட்டூரில் விட்டுவிட்டாள்
கன்னியூர் மறந்தவுடன் கடலூரில் விழுந்துவிட்டேன்!
கன்னியூர் மறந்தவுடன் கடலூரில் விழுந்துவிட்டேன்!

பள்ளத்தூர் தன்னில் என்னை பரிதவிக்க விட்டு விட்டு
மேட்டூரில் அந்த மங்கை மேலேறி நின்று கொண்டாள்!

கீழுரில் வாழ்வதற்கும் கிளிமொழியாள் இல்லையடா
மேலூரு போவதற்கும் வேளை வரவில்லையடா!

Russellisf
20th July 2014, 11:50 PM
நாளை உலகை ஆள வேண்டும் உழைக்கும் கரங்களே - இந்த
நாடு முழுதும் மலர வேண்டும் புரட்சி மலர்களே !
கடமை செய்வோம் கலங்காமலே உரிமை கேட்போம் தயங்காமலே
வாருங்கள் தோழர்களே ஒன்றாய் வாருங்கள் தோழர்களே !

ஏர் பூட்டித் தோளில் வைத்து இல்லாமை வீட்டில் வைத்து
போராடும் காலம் எல்லாம் போனதம்மா !
எல்லோர்க்கும் யாவும் உண்டு என்றாகும் காலம் இன்று
நேராகக் கண்ணில் வந்து தோன்றுதம்மா !
விடியும் வேளை வரப்போகுது தருமம் தீர்ப்பைத் தரப்போகுது
ஞாயங்கள் சாவதில்லை என்றும் ஞாயங்கள் சாவதில்லை !

கல்விக்குச் சாலை உண்டு நூலுக்கு ஆலை உண்டு
நாட்டுக்குத் தேவையெல்லாம் நாம் தேடலாம் !
தோளுக்கு வீரம் உண்டு தோற்காத ஞானம் உண்டு
நீதிக்கு நெஞ்சம் உண்டு நாம் வாழலாம் !

சிரிக்கும் ஏழை முகம் பார்க்கலாம்
சிந்தும் கண்ணீர் தனை மாற்றலாம்
வாருங்கள் தோழர்களே ஒன்றாய்
சேருங்கள் தோழர்களே !

rajeshkrv
21st July 2014, 12:00 AM
ஒரு நாள் பார்க்கவில்லை எவ்வளவு பதிவுகள் . அருமை
நவக்கிரகம் எனக்கு பிடித்த படம். கொஞம் பாலச்சந்தர் எதிர் நீச்சல் பாமா விஜயம் போல திரைக்கதை எழுதியிருந்தால் இன்னும் அருமையாக வந்திருக்க வேண்டிய படம் இருந்தாலும் பரவாயில்லை

ஸ்ரீகாந்த் நாகேஷிடம் ... அவ்ளோ பெரிய வேட்டியில் ஓரத்துல கோடு போட்ட மாதிரி ஜரிகை

நாகேஷ் .. ஓரத்துல இருந்தாதான் அது வேஷ்டி இல்லெனா புடவை ....



தூய உள்ளம் திரையில் ஒலித்த அழகான பாடல்(வெலுகு நீடலு என்ற தெலுங்கு படத்தின் தமிழ் வடிவம்)

இன்ப லோக ஜோதி ரூபம் போலே
டி.எம்.எஸ் மற்றும் இசையரசியின் குரலில்

திரையில் நாகேஸ்வரராவ் மற்றும் கிரிஜா


https://www.youtube.com/watch?v=usgUR94gVko


தெலுங்கு வடிவம்.


https://www.youtube.com/watch?v=iSH7PjF53m4

vasudevan31355
21st July 2014, 05:00 AM
நடிப்பின் நாயகனுக்கு 13-வது நினைவுநாள்

http://maronites.files.wordpress.com/2012/01/candle-animated.gif

http://i812.photobucket.com/albums/zz49/adithya961999/sivaji%201/th_zpsf612d3ba.jpg

இறைவா! இறைவா! இறைவா!

கோடியில் ஒருவன் பிறந்து வந்தான்
பல குடும்பங்கள் காக்க வாழ்ந்து வந்தான்.
எங்கள் தங்க ராஜா அவன்
என்றும் மணக்கும் ரோஜா

கோடியில் ஒருவன் பிறந்து வந்தான்
பல குடும்பங்கள் காக்க வாழ்ந்து வந்தான்.
எங்கள் தங்க ராஜா அவன்
என்றும் மணக்கும் ரோஜா

கடவுளை அடைந்தது ஒரு விளக்கு
எங்கள் கண்களில் எரிந்த மணிவிளக்கு
கடவுளை அடைந்தது ஒரு விளக்கு
எங்கள் கண்களில் எரிந்த மணிவிளக்கு
தன்னலம் கருதா தனி விளக்கு
நெஞ்சில் தாய்மை நிறைந்த அருள் விளக்கு

இறைவா! இறைவா! இறைவா!

கோடியில் ஒருவன் பிறந்து வந்தான்
பல குடும்பங்கள் காக்க வாழ்ந்து வந்தான்.
எங்கள் தங்க ராஜா அவன்
என்றும் மணக்கும் ரோஜா

ஜாதி சமயங்கள் ஒன்றென்பான்
ஒரு சகோதரர்கள் நாமென்பான்
ஆதி புத்தனின் வழி நின்றான்
அவன் ஆத்ம சாந்தி அடைந்து விட்டான்

நல்லவர்க்கெல்லாம் பகைவர் உண்டு
இங்கு நன்றியில்லாதவர் சிலருண்டு (சிலர் இல்லை பலர்)
கல்லினும் கொடிய மனம் உண்டு
இதில் கருணைக்கு எங்கே இடமுண்டு

கோடியில் ஒருவன் பிறந்து வந்தான்
பல குடும்பங்கள் காக்க வாழ்ந்து வந்தான்.
எங்கள் தங்க ராஜா அவன்
என்றும் மணக்கும் ரோஜா

vasudevan31355
21st July 2014, 05:08 AM
http://i286.photobucket.com/albums/ll91/olak_photo/burningcandle2.gif (http://media.photobucket.com/user/olak_photo/media/burningcandle2.gif.html)

http://i1.ytimg.com/vi/Wr3qzmANTew/maxresdefault.jpg
பாடல்களில் பாசத்தை ஊட்டி
நடிப்பில் நவரசங்களைக் காட்டி
சிந்தை கவர்ந்த எங்கள் செல்வமே!

அன்பின் ஊற்றாய் அவதரித்து
பண்பின் உறைவிடமாய் பரிமளித்து
பார் போற்ற வாழ்ந்த பாரத மகனே!

முத்திரைச் சிரிப்போடு என்றும்
என் மலர் மாலையை
முதல் மாலையாய்
ஏற்றுக் கொண்ட முத்தமிழ்
வித்தக நடிகனே!

அருகில் நாற்காலியில் உனக்குச் சமமாய்
எனக்கு சரியாசனம் தந்து
யாருக்கும் கிடைக்காத பாக்கியமாய்
உன்னருகில் என்னை அமரச் செய்து
அழகு பார்த்த அன்புத் தெய்வமே!

சினிமா கதை அவரிடம் பேசாதே
என்று என்னிடம் உன் பாதுகாவலர்கள்
எச்சரித்து உன்னிடம் அனுப்பி வைத்தாலும்
அரைமணி நேரம் என்னுடன் அதே கதை பேசி
வம்பளந்து என் வயிறை நோக வைத்த விஷமக்காரனே!

என் ஊர்க் கோவிலின் திருநீரை
என்றும் மறக்காமல் நான் கொடுக்க
பயபக்தியுடன் நெற்றியில் இட்டு என்னை
அருள் பார்வை பார்த்த ஆண்டவனே!

விடை பெற்றுப் புறப்படும் போதெல்லாம்
மறக்காமல் 'பேருந்து வழி செலவுக்கு இந்தா பணம்'
என்று சட்டை பாக்கெட்டில் கைவைத்து அள்ளி எடுத்து
தந்த அருள் வள்ளலே!

என்னை பெற்ற தாயிடம்
'இவனுக்கு சோறு போட மாட்டீர்களா அம்மா ?
என்று பொய்க் கேலி பேசி அப்போதைய
என் ஒல்லி உடம்புக்கு பரிதாபப்ப்பட்ட
பத்தரை மாற்றுத் தங்கமே!

நீ இறந்து விட்டாயாமே! உன் நினைவு நாளாமே! ஊர் பிதற்றுகிறது.

நீ எங்கே இறந்தாய்!

என் உயிரில் வாழ்கிறாயே!

உயிரணுக்களில் ஊர்கிறாயே!

எப்படி நான் நம்புவேன்?

ஆனால் அதையும் மீறி

http://1.bp.blogspot.com/_tUtkw_1iRj8/S54LFeLLBuI/AAAAAAAAHLg/_WQpBcAOflA/s1600/teardrop.jpg

நான் அழுகிறேனே இன்று.

ஏன் என்று காரணம் சொல்

RAGHAVENDRA
21st July 2014, 07:33 AM
தினமும் மனதை மயக்கும் கானங்களை அளிக்கும் வாசு சார்..
இன்று
மனதை உருக்கும் கானமாக தந்து விட்டார்...

உயர்ந்த மனிதனும் நீயே
தெய்வப் பிறவியும் நீயே
தவப்புதல்வனும் நீயே
உத்தம புத்திரனும் நீயே..

நீயே உனக்கு என்றும் நிகரானவன்...

நீ மறையவுமில்லை..
நாங்கள் மறக்வுமில்லை

எங்கள் இதயம் எப்பொதுமே பிரகாசமாயிருக்கும்
அங்கே
உன் ஞான ஒளி வீசிக் கொண்டிருக்குமே...

Richardsof
21st July 2014, 08:31 AM
http://i58.tinypic.com/sfdjqh.jpg
http://i61.tinypic.com/11rb3i9.jpg
http://i57.tinypic.com/ftnbl2.jpg

gkrishna
21st July 2014, 09:42 AM
கிருஷ்ணா சார்!

நன்றி!

தேடி வந்த லஷ்மி. அப்போது பரபரப்பாக பேசப்பட்ட படம். சஸ்பென்ஸ், திகில் கலந்த விறுவிறு படம். அந்தப் படத்தின் பாடல்களைப் பற்றி குறிப்பிட்டு, ஸ்டில்களையும் ஆதாரபூர்வமாக இணைத்ததற்கு நன்றி.

'நெஞ்சம் நிறைய வரவேற்றான்' பாடல் 'தேடி வந்த லஷ்மி' படத்தில் அல்ல. அது ஜெய்சங்கர் நடித்த 'ஆசீர்வாதம்' திரைப்படத்தில் வரும் பாடல்.

இன்பமிங்கே வெப் சைட்டில் தவறான தகவல் தந்துள்ளார்கள். இது மாதிரி வெவேறு படங்களின் பாடல்களை அந்த வெப் சைட்டில் சரி பார்க்காமல் கலந்து தந்து விடுவார்கள்.


நன்றி வாசு சார்

காலை வணக்கம்
உங்கள் தகவல்களால் நிறைய தவறுகள் திருத்தபடுகின்றன
புஷ்பலதா படங்கள் அருமை.
அன்று கண்ட முகம் வெளியில் வராத நல்ல பாடலை அறிமுகம் செய்து உள்ளீர்கள்
தசரதன் பற்றிய விளக்கமும் அருமை

நேற்று மாலை தூக்கு தூக்கி திரைப்படம் நமது நட்பா (NTFA ) அமைப்பு மூலமாக திரை இடப்பட்டது .

நடிகர்திலகம் அவர்களின் 17 அல்லது 18வது படம் (கூண்டுக்கிளி ,தூக்கு தூக்கி இரண்டும் ஒரே நாள் வெளியீடு 26/8/54 ) முரளி சார் தந்த தகவல்

தூக்கு தூக்கி மூலமாக தான் NT ,TMS இருவரும் இணைந்தார்கள்
கூண்டுக்கிளிக்கு பிறகு NTyum MTyum வேறு எந்த படத்திலும் இணையவில்லை
பாடல்கள் அனைத்தும் மிக அருமை .அதை விட அருமை அருமையான திரை கதை ஸ்கிரிப்ட் . எல்லாவற்றிகும் சிகரம் NT இன் சூப்பர் performance மற்றும் கலக்கல் டான்ஸ்

http://www.thehindu.com/multimedia/dynamic/00221/19cp_thooku_thukhi3_221180f.jpg

gkrishna
21st July 2014, 09:53 AM
http://www.aptalkies.com//modules/movies/dataimages/jquery/Antha_Inthe_1955_2.jpghttp://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC4418a-1.jpg
Antha Inthe (1955) telugu dubbing from thookku thokki

1. இன்ப நிலை காண – மருதகாசி – எம்.எஸ்.ராஜேஸ்வரி
2. கண் வழி புகுந்து – மருதகாசி – டி.எம்.சௌந்தர்ராஜன், எம்.எஸ்.ராஜேஸ்வரி
3. ப்யாரி நம்மள்கு நிம்மள் மேலே மஜா – உடுமலை நாராயண கவி -செல்லமுத்து, எம்.எஸ்.ராஜேஸ்வரி
4. ஆணும் பெண்ணும் அழகு சொல்வது ஆடை – உடுமலை நாராயண கவி – சௌந்தர்ராஜன்
5. பெண்களை நம்பாதே – உடுமலை நாராயண கவி – டி.எம்.சௌந்தர்ராஜன்
6. சுந்தரி சௌந்தரி – மருதகாசி – டி.எம்.சௌந்தர்ராஜன், பி.லீலா, ஏ.பி.கோமளா
7. குரங்கிலிருந்து பிறந்தவன் – உடுமலை நாராயண கவி – டி.எம்.சௌந்தர்ராஜன், வி.என்.சுந்தரம், பி.லீலா, ஏ.பி.கோமளா
8. வாரணமாயிரம் – திருப்பாவை – எம்.எல்.வசந்தகுமாரி, பி.லீலா
9. அபாய அறிவிப்பு – தஞ்சை ராமய்யதாஸ் – டி.எம்.சௌந்தர்ராஜன்
10. ஏறாத மலைதனிலே – தஞ்சை ராமய்யதாஸ் – டி.எம்.சௌந்தர்ராஜன்
11. சட்டாம்பிள்ளையை ஜாடை காட்டி – தஞ்சை ராமய்ய தாஸ் – டி.எம்.சௌந்தர்ராஜன்

mr_karthik
21st July 2014, 10:04 AM
ஆருயிர் அண்ணனே...!!!!!

இன்று உன் நினைவு நாளாம், எல்லோரும் சொல்கிறார்கள்.

இன்று மட்டும் உன்னை நினைப்பவர்களுக்கு இன்று உன் நினைவு நாள். என்றென்றைக்கும் உன்னை மனதில் தாங்கியிருக்கும் எங்களுக்கு எந்நாளும் நினைவு நாளே.

'அங்கே' இருந்தால் மட்டும்தான் உன்னைப்பற்றிய எண்ணம் என்றில்லை. எங்கேயிருந்தாலும் உன் நினைவுதான் கனவிலும் நனவிலும், பேச்சிலும், மூச்சிலும்...

gkrishna
21st July 2014, 10:32 AM
ஒரு நாள் பார்க்கவில்லை எவ்வளவு பதிவுகள் . அருமை
நவக்கிரகம் எனக்கு பிடித்த படம். கொஞம் பாலச்சந்தர் எதிர் நீச்சல் பாமா விஜயம் போல திரைக்கதை எழுதியிருந்தால் இன்னும் அருமையாக வந்திருக்க வேண்டிய படம் இருந்தாலும் பரவாயில்லை

ஸ்ரீகாந்த் நாகேஷிடம் ... அவ்ளோ பெரிய வேட்டியில் ஓரத்துல கோடு போட்ட மாதிரி ஜரிகை
நாகேஷ் .. ஓரத்துல இருந்தாதான் அது வேஷ்டி இல்லெனா புடவை ....


திரு ராஜேஷ் சார்
நாகேஷ் காமெடி பற்றி

உத்தமன் திரை படத்தில் காதலியிடம் தான் பார்க்கும் வேலை பற்றி விளக்கும் போது (நாகேஷ் scatting மாஸ்டர் சிவாஜியின் உதவியாளர் )
'கால்தான் சக்ரம் கையிலே சக்ரம் இருந்தால் அது நான் இல்ல மஹா விஷ்ணு பின்னாடி மண்டை மஞ்சளா இருக்கும்'

chinnakkannan
21st July 2014, 11:52 AM
ஹாய்.. வரவேற்ற கிருஷ்ணா சார், வாசு தேவன் சார், கோபால் சார் கார்த்திக் சார்அனைவருக்கும் நன்றி + ஆளுக்கு ஒரு க்ளாஸ் பொவொண்டோ..:)

புஷ் புஷ் புஷ்பலதா படங்கள் + தகவல்கள் வழங்கிய வாசு சார் க்ருஷ்ணா சார் அவர்களுக்கு மறுபடியும் நன்றி..ஆனால் அவரை விட அவர் மகள் ஒரு குட்லுக்கிங்க் லேடி எனப் புகையாக நினைவு..(ஸ்ரீ எனப் பெயர்.. அது சரி அவருடைய ஒரு பாட் போடமாட்டாங்களா என்ன..

chinnakkannan
21st July 2014, 11:55 AM
வாசு சார்.. ந.திக்கு..மனதை உருக்கும் கவிதாஞ்சலி.. நன்றி.. ராகவேந்திரர் சார், கார்த்திக் சார் -- நன்றி..

தூக்குத் தூக்கியில் ராக்ஸ் அண்ட் பப்பிஸ் டான்ஸ் ந.தியுடன்..குரங்கிலிருந்த் பிறந்தவன் மனிதன்+ சுந்தரி செளந்தரி அண்ட் அபாய அறிவிப்பு பிக்சரைசேஷன் அண்ட் ந.தியின் பாவங்கள்... என்றும் நெஞ்சில் பதிந்திருப்பவை..க்ருஷ்ணா சார்..

chinnakkannan
21st July 2014, 11:59 AM
புஷ்.. நடித்த பாடற்காட்சிகளில் பிடித்தது... வாடைக்காற்றம்மா வாடைக்காற்றம்மா வாலிப மனதை நாளுக்கு நாளாய் வாட்டுவதேனம்மா...ஆஹா..வெகு நன்றாக வாலிப வயதில் பார்த்ததால் பதிந்த பாடலாக்கும்..

gkrishna
21st July 2014, 12:59 PM
ஹாய்.. வரவேற்ற கிருஷ்ணா சார், வாசு தேவன் சார், கோபால் சார் கார்த்திக் சார்அனைவருக்கும் நன்றி + ஆளுக்கு ஒரு க்ளாஸ் பொவொண்டோ..:)

புஷ் புஷ் புஷ்பலதா படங்கள் + தகவல்கள் வழங்கிய வாசு சார் க்ருஷ்ணா சார் அவர்களுக்கு மறுபடியும் நன்றி..ஆனால் அவரை விட அவர் மகள் ஒரு குட்லுக்கிங்க் லேடி எனப் புகையாக நினைவு..(ஸ்ரீ எனப் பெயர்.. அது சரி அவருடைய ஒரு பாட் போடமாட்டாங்களா என்ன..

https://encrypted-tbn0.gstatic.com/images?q=tbn:ANd9GcSbt1zx-8RdgnLSyjBiSdZbUrp1tKbIwCO0RfeqR7v3t7fFkL2Khttp://i1.ytimg.com/vi/JDH8BJGa_YU/hqdefault.jpghttps://encrypted-tbn3.gstatic.com/images?q=tbn:ANd9GcRz30TTrWKCSSjxeHPzbhbiCzfE17TI--jLh_gQA57lqSuvWKejIQhttp://shopping.chitraloka.com/images/gallery/Actress/thumbs/mahalakshmi_l/thumbs/mahalakshmi_l.jpg

ராணி தேனி 1982
ஜி என் ரங்கராஜன் இயக்கம்
தீபன் சக்கரவர்த்தி,ஸ்ரீ என்ற மகாலட்சுமி ,கமலஹாசன் கௌரவ தோற்றம் ,சிவச்சந்திரன் வில்லன்
ஸ்ரீ யின் முதல் படம் என நினைவு
இசைஞானி இசை
கமல் காமெடிக்கும் படத்துக்கும் எதாவது சம்பந்தம் உண்டா
தெரியாது

ஆனால் கண்ணிய பாடகி குரலில்
'என்ன சொல்லி நான் எழுத என் மன்னவனின் மனம் மயங்க '

http://www.youtube.com/watch?v=keS3RIYZP1Y

mr_karthik
21st July 2014, 01:29 PM
டியர் வாசு சார், சார்

புஷ்பலதாவின் (இயற்பெயர் : பிலோமினா) ஆல்பம் மிக அருமை. பல்வேறு இடங்களிலிருந்து திரட்டியிருக்கிறீர்கள். எது ஒன்றையும் சிரத்தையெடுத்து செய்வதில் உங்களுக்கு நிகர் நீங்களே. இப்போதுதான் அவர் நடித்த 'நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்' பாடலைப் பார்த்து முடித்தேன்.

அவரது செகண்ட் இன்னிங்க்ஸில் சிட்டுக்குருவி, சிம்லா ஸ்பெஷல், ரத்தபாசம், டௌரி கல்யாணம், சகலகலா வல்லவன் போன்ற படங்களில் ரொம்பவே அழகாக இருந்தார்.

என்ன, பெர்சனல் வாழ்க்கையில் புஷ்பா கொஞ்சம் அடாவடி, கொஞ்சம் ரௌடித்தனம், வரிந்து கட்டிக்கொண்டு மல்லுக்கு நிற்பார். ராஜன் இவரிடம் அடியெல்லாம் கூட வாங்கியிருப்பதாக கேள்வி. படத்தயாரிப்பு முழுவதையும் புஷ்பாதான் பார்ப்பார், ராஜன் சும்மா பெயருக்கு...

chinnakkannan
21st July 2014, 01:41 PM
//ராஜன் இவரிடம் அடியெல்லாம் கூட வாங்கியிருப்பதாக கேள்வி. // ம்ம் புஷ்பலதா கொடுத்து வைத்தவர்..:)

ஸ்ரீ - தகவல்கள் படங்கள் நன்று.. நன்றி க்ருஷ்ணா சார்.. அந்த என்ன சொல்லி நானெழுத என் மன்னவனின் மனம் குளிர..
நல்ல பாட்டு..

மேலாடைக்குள் நான் போராடினேன் போரடையில் ஒரு நூலாகினேன்.. வெட்கம் விடுமோ..எனத் தொடரும் பாடல் அது..வாலியாக இருக்கும் என நினைக்கிறேன்

Gopal.s
21st July 2014, 01:43 PM
டியர் வாசு சார், சார்

புஷ்பலதாவின் (இயற்பெயர் : பிலோமினா)

என்ன, ராஜன் இவரிடம் அடியெல்லாம் கூட வாங்கியிருப்பதாக கேள்வி.முழுவதையும் புஷ்பாதான் பார்ப்பார், ராஜன் சும்மா பெயருக்கு...
பெண்களை (அதுவும் நடிகைகளை ) "அடிப்பதும் ", சில சமயம் அவர்களை "அடிக்க"விடுவதும் சுகம்தான். அதுவும் பிலோ ரசிகர்களான உங்களுக்கு....(நானில்லையப்பா,ஆளை விடுங்கள். விஜயகுமாரி,புஷ்பலதா பக்கமே போக மாட்டேன்)

(கார்த்திக்,தங்கள் ஆலோசனை படி "கொட்டை " எழுத்துக்களை தவிர்க்கிறேன். என்ன ஒன்னு இந்த "inverted cumma " புது பழக்கமாகி விட்டது.)

gkrishna
21st July 2014, 02:11 PM
டியர் வாசு சார், சார்

புஷ்பலதாவின் (இயற்பெயர் : பிலோமினா) ஆல்பம் மிக அருமை. பல்வேறு இடங்களிலிருந்து திரட்டியிருக்கிறீர்கள். எது ஒன்றையும் சிரத்தையெடுத்து செய்வதில் உங்களுக்கு நிகர் நீங்களே. இப்போதுதான் அவர் நடித்த 'நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்' பாடலைப் பார்த்து முடித்தேன்.

அவரது செகண்ட் இன்னிங்க்ஸில் சிட்டுக்குருவி, சிம்லா ஸ்பெஷல், ரத்தபாசம், டௌரி கல்யாணம், சகலகலா வல்லவன் போன்ற படங்களில் ரொம்பவே அழகாக இருந்தார்.

என்ன, பெர்சனல் வாழ்க்கையில் புஷ்பா கொஞ்சம் அடாவடி, கொஞ்சம் ரௌடித்தனம், வரிந்து கட்டிக்கொண்டு மல்லுக்கு நிற்பார். ராஜன் இவரிடம் அடியெல்லாம் கூட வாங்கியிருப்பதாக கேள்வி. படத்தயாரிப்பு முழுவதையும் புஷ்பாதான் பார்ப்பார், ராஜன் சும்மா பெயருக்கு...

karthik sir

ஒரு தலை ராகம் படத்தில் ஒரு பொண்ணு வரும் கதாநாயகி கூட.புதிய வார்ப்புகள் படத்தில் ஆரம்ப சுகாதார மையத்தின் ஆயாவாக வரும் .பின்னாட்களில் 'நீலாம்பரி ராகம் உனக்காக ' என்று ஒரு தலை ராகம் பாடிய மன்மதனுடன் காதல்,கூடல்,ஊடல் .இறுதியில் தற்கொலைக்கு முயற்ச்சி செய்த போது அந்த தாடிக்கார டைரக்டர் தன கை கொடுத்து 'உயிர் உள்ளவரை' மனைவி ஆனார் .
அந்தம்மா வாயை திறந்தா கோட்டூர் புரம் கூவம் மணக்கும்
https://encrypted-tbn2.gstatic.com/images?q=tbn:ANd9GcSbmcZerw-K4-vwdzjusvMK_RDd5QHJu7dnajoTXia0Qkyu2Io2Zw

பாலாவின் இந்த வாய் நளினத்தை கேட்டு பாருங்களேன்

http://www.youtube.com/watch?v=YaYgJcNDk2s

gkrishna
21st July 2014, 02:32 PM
//ராஜன் இவரிடம் அடியெல்லாம் கூட வாங்கியிருப்பதாக கேள்வி. // ம்ம் புஷ்பலதா கொடுத்து வைத்தவர்..:)


சின்ன கண்ணன் சார்

கொடுத்து வைச்சது ராஜன் தான்
அடி வாங்கினா எவ்வளுவு சுகம்

'சுகம் சுகமே தொட தொட தானே
சொந்தம் வரும் பின்னே . வரும் முன்னே
சுகம் கண்ணே . நெஞ்சில் வெட்கமா கொஞ்ச வேண்டுமா ஞாயமா .

ரஜினி ரீன நான் போட்ட சவால் படத்தின் பாட்டை சொன்னேன்

http://4.bp.blogspot.com/_jo1xsRVxX7o/SpX5IWrXfvI/AAAAAAAACP8/A2EHhcuHqB4/s400/Naan-Potta-Saval.jpghttp://www.rajinifans.com/gallery/images/Naan%20Potta%20Saval/naan-potta%20(5).jpg
http://www.youtube.com/watch?v=jqXL-52IEqc

chinnakkannan
21st July 2014, 02:54 PM
//சுகம் சுகமே தொட தொட தானே
சொந்தம் வரும் பின்னே . வரும் முன்னே
சுகம் கண்ணே . நெஞ்சில் வெட்கமா கொஞ்ச வேண்டுமா ஞாயமா .// கலக்குறீங்க க்ருஷ்ணா சார்.. இந்தப் பாட்டு எனக்குக் கொஞ்சம் பிடிக்கும்..இள வயதில் :)

அதுஸ்ஸரி....உஷ் என அழைக்கப் படும் உஷா - ஒரு தலை ராகத்திலேயே கொஞ்சம் வித்யாசமான அழகுடன் இருந்தவர்.. சில அப்போதைய இளமனங்களை (ம்க்கும்)ச் சற்றே கவர்ந்தவர்..ரூபாவை விட உஷாவைப் போட்டிருக்கலாம் என நான் படம் பார்த்த புதிதில் நினைத்திருக்கிறேன் இன் ஒருதலை ராகம்..ரவீந்தருடன் காதல் பின் டி.ஆருடன் கல்யாணம் என வாழ்க்கை..

சுற்றிச் சுற்றிச் சதுரம் போட்டால்(பின்ன ஃப்ளாஷ் பேக்கிற்கு எத்தனை நாள் வட்டம் போடறது) அவர் நடித்த ஒரு படம்..ஆகாய கங்கை.. பாவாடை சட்டை தாவணியில் நாட் ஸோ இம்ப்ரஸ்ஸிவ்..ஆனால் படத்தில் ஒரு அழகிய பாட்டு உண்டாக்கும்.. எனக்கு மிகவும் பிடித்த பாட்டு

தீம்..
ம்..
திர நன
ம்...ம் ம் ம்
தீம் திர நன திர ந தீர நன

தேன் அருவியில் நனைந்திடும் மலரோ...
திர நா...திர நா..
தொடரும்... கதையோ
திர நா...திர நா..
எது தான்... விடையோ...
மன வீணை... நான் இசைத்திட...
தேன் அருவியில் நனைந்திடும் மலரோ..

முக வாசல் மீது தீபம்
இரு கண்கள் ஆனதோ..
ம்..ம்..ம்.. ம் ம் ஆ...ஆ...ஆ..
முக வாசல் மீது தீபம்..
இரு கண்கள் ஆனதோ..
மண வாசல் கோலமே தினம் போடுதோ...
ஆ....ஆ...
துணையாகும் தேவியை கொடி தேடுதோ...
ஆ.....ஆ
புன்னகையோ... பூ மழையோ...
பொன் நடையோ.. தேர் படையோ
வரமோ... வருமோ
நான் வளம் பெற

தீம் திர நன திர நன தீம் திர நா
தேன் அருவியில் நனைந்திடும் மலரோ...


நாளும் ஒவ்வொரு நாடகமோ
எது மேடையோ
ஆ ஆ..ஆ ஆ...ஆ ஆ..ஆ
நாளும் ஒவ்வொரு நாடகமோ
எது மேடையோ
இனி மை விழி நாட்டியமோ
எனை வாட்டுமோ...
ஏன் தொலைவோ...நீ நிலவோ.
ஆ ஆ.ஆ.....ஆ...ஆ...
தனிமை கொடுமை எனதுயிர் அழைத்திட

தீம் திர நன... திர நன
தேன் அருவியில் நனைந்திடும் மலரோ...
தொடரும்... கதையோ
எது தான்... விடையோ...
மன வீணை... நான் இசைத்திட..
தேன் அருவியில் நனைந்திடும் மலரோ...

**

ம்ம் எழுதியவரும் எனக்குப் பிடித்த கவிஞர்.. மு. மேத்தா..

ஆனால் பாட்டுக்கு ஆடுவது கார்த்திக் சுஹாசினி..(பாவம்.. முகத்தில் அவ்வளவாக பாவம் காட்டியிருக்க மாட்டார் சுஹா என நினைவு)

எஸ்.பி.பி அண்ட் ஜானகியம்மா ப்ள்ஸ் இளைய ராஜா.. அசத்தலாக இருக்கும்

vasudevan31355
21st July 2014, 03:01 PM
டியர் கார்த்திக் சார்,

நன்றி!

புஷ்பலதா 'அடாவடி' பற்றி நீங்கள் எழுதியதை ஷிப்ட்டில் இருந்தபடியே படித்தேன். அப்படியே 'பகீர்' என்றது.

ஒரு சம்பவம் வேறு ஞாபகத்திற்கு வந்தது.

ஒரு பதினைந்து அல்லது பதினெட்டு வருடங்கள் இருக்கும் என்று நினைக்கிறேன். நாங்கள் குடும்பத்துடன் ஊட்டி சுற்றுலா சென்றோம். அங்கே பொடானிகல் கார்டனில் சுற்றும் போது அருகே கடந்து சென்றவரைப் பார்த்தால் ரொம்ப பரிச்சயமாய்த் தோன்றியது. பின் உற்று நோக்கியதில் அது புஷ்பலதா. 'திரிசூலம்' படத்தில் தோன்றியது போலவே அப்படியே இருந்தார். கையில் ஒரு சிறுமியையும், ஒரு சிறுவனையும் பிடித்திருந்தார்.(பேரக் குழந்தைகள் என்று நினைக்கிறேன்)

நான் அருகில் சென்று என்னை அறிமுகப்படுத்திக் கொண்டு 'நீங்கள் புஷ்பலதாதானே?' என்றேன். 'ஆமாம்' என்று சிரித்தார்கள். பின் ஒரு சில நிமிடங்கள் அவருடன் உரையாடினேன். கிடைத்த நிமிடங்களுக்குள் தலைவருடன் அவர் நடித்த படங்களைக் குறிப்பிட்டு அவருடைய நடிப்பையும் பாராட்டினேன். புன்னகைத்தபடியே பதில் அளித்துவிட்டு சிறுவர்களை விளையாட அழைத்துக் கொண்டு போய் விட்டார்கள்.

தூரத்தில் ஒருவர் பார்க்கில் உள்ள பெஞ்ச்சில் குத்துக் காலிட்டு அமர்ந்து கொண்டிருந்தார். புஷ்பலதா நேராக அந்த நபரிடம் போய் ஏதோ சொல்லிவிட்டு மீண்டும் சிறார்களை விளையாட அழைத்துச் சென்று விட்டார்.

https://i1.ytimg.com/vi/cVWQLRBcEl8/mqdefault.jpg

'சரி! யார்தான் அது போய்ப் பார்ப்போமே' என்று அருகில் சென்று பார்த்தால் ஏ.விம்.ராஜன் பரிதாபமாய் எங்கோ வெறித்துப் பார்த்தபடி அமர்ந்திருந்தார். அவரிடமும் போய் பேச்சுக் கொடுத்தேன். கற்பூரம், தரிசனம் பற்றி பேச ஆரம்பித்தேன். ஆனால் அந்தக் கல்லுளிமங்கன் நான் சொன்னதையும் காது கொடுத்துக் கேட்கவில்லை. எந்த பதிலும் சொல்லவில்லை. எனக்கு ஒருமாதிரி அசிங்கமாய் போய் விட்டது.

'அடப் போய்யா! எங்கள் நடிகர் திலகத்தையே தன்னந்தனியே எத்தனை முறை பார்த்து அவருடன் பேசி இருக்கிறேன்....அவர் எவ்வளவு ஜாலியாக எங்களிடமெல்லாம் உரையாடி இருக்கிறார்.... நீ என்ன பிசாத்து' என்று நினைத்தபடி திரும்பி வந்து விட்டேன். அதிலிருந்து சுத்தமாக அந்த ஆளை எனக்குப் பிடிக்காது.

கொஞ்சமான திமிர் இல்லை. இத்தனைக்கும் மார்க்கெட் இல்லாமல் சும்மா கிடந்த நேரம் வேறு அது. இதுக்கே இப்படி.

இப்போது உங்கள் பதிவைப் படித்ததும் மேற்சொன்ன சம்பவம் ஞாபகத்திற்கு வந்துவிட்டது.

இப்போதுதான் புரிகிறது.

மனுஷன் புஷ்பலாதாவிடம் நீங்கள் சொன்னபடி 'வாங்கி' வந்திருப்பாரோ!?:) அப்படி என்றால் அவர் மீது தவறில்லை. மன்னித்து விடுவோம்.

mr_karthik
21st July 2014, 03:07 PM
பெண்களை (அதுவும் நடிகைகளை ) "அடிப்பதும் ", சில சமயம் அவர்களை "அடிக்க"விடுவதும் சுகம்தான். அதுவும் பிலோ ரசிகர்களான உங்களுக்கு

டியர் கோபால் சார்,

நீங்க பேசுறது "சாதாரண" ரகமாக தெரியலையே. "சந்தான" ரகமாக அல்லவா தொனிக்கிறது.

சந்தேகம் வரக்காரணம் சொல்லியிருப்பது நீங்களாச்சே...

gkrishna
21st July 2014, 03:30 PM
https://i1.ytimg.com/vi/cVWQLRBcEl8/mqdefault.jpg



நடிப்பு சுடர் கையில் இருப்பது என்ன கம்பா பெரிய வம்பாக இருக்கும் போல் இருக்கிறதே

gkrishna
21st July 2014, 03:41 PM
//
எஸ்.பி.பி அண்ட் ஜானகியம்மா ப்ள்ஸ் இளைய ராஜா.. அசத்தலாக இருக்கும்



https://encrypted-tbn2.gstatic.com/images?q=tbn:ANd9GcS8Th2vn7QNMwHhYRjXOkhI4s36EQIYx SQ5GxKl-ZLHYXSaQ80YoQ
ஜானகி கங்கை அமரன் குழுவினரின் இந்த பாட்டு கேட்டு இருப்பீர்கள்
'பொங்கும் ஆகாய கங்கை ' - வைரமுத்துவின் வைர வரிகள்
கிடார் flute violin மிருதங்கம் எல்லாம் கலந்து கட்டி அதோடு chorus வேற

மனோபாலாவின் முதல் படம் னு நினைவு

மிகவும் எதிர்பார்கபட்டு ஏமாற்றிய படம்



http://www.youtube.com/watch?v=6E-PvGfC_Tg

gkrishna
21st July 2014, 03:53 PM
மேலும் புஷ் இன் ஒரு புஷ்

http://www.5eli.com/Lyrics/wp-content/uploads/2011/09/26660593018048916748-300x245.png

chinnakkannan
21st July 2014, 04:00 PM
ஹை...லத்து அண்ட் புஷ்..ம்ம்

அது என்ன பாட்டு..இப்ப கேக்க முடியாது..வீட்போய்க் கேக்கறேன்

gkrishna
21st July 2014, 04:25 PM
ஏவிஎம் இன் அன்னையும் பிதாவும்
https://encrypted-tbn1.gstatic.com/images?q=tbn:ANd9GcTmCNrgXY95XmzRnZu-VSjw4af9MUSbrdMtGAKWkf426EgFF9dW
பொறுப்பு உள்ள அண்ணன் நடிப்பு சுடர் ,அவர் பொறுப்பு இல்லாத
அண்ணனாக டவுன் கோபி ,அவர் ஆத்துகாரியாக சகுந்தலா ஜி,அவர் தம்பியாக சோ ,அப்பாவாக நாகையா ,அம்மாவாக எஸ் என் லக்ஷ்மி
நடிப்பு சுடரின் கால் ஊன தங்கை லக்ஷ்மி அவரை காதலிக்கும் ,சிவகுமார் ,
இறுதியாக நடிப்பு சுடரின் காதலி வாணி

சூப்பர் family டிராமா

கண்ணிய பாடகி சுசீலாவின் குரல் அலைவரிசை

மலரும் மங்கையும் ஒரு ஜாதி - தன்
மனதை மறைப்பதில் சரி பாதி
தன் ஆசையின் கோலத்தை
வண்ணப்பூக்கள் யாரிடம் சொல்லும்.. ஒ...
கன்னிப் பெண்மை யாரிடம் சொல்லும்

மலரும் மங்கையும் ஒரு ஜாதி - தன்
மனதை மறைப்பதில் சரி பாதி
தன் ஆசையின் கோலத்தை
வண்ணப்பூக்கள் யாரிடம் சொல்லும்.. ஒ...
கன்னிப் பெண்மை யாரிடம் சொல்லும்

நீராடும் கண்கள் ஆகாய கங்கை
போராடும் உள்ளம் பாதாள கங்கை
சிறகுகள் இல்லை நான் அங்கு செல்ல
சிறகுகள் இல்லை நான் அங்கு செல்ல
வார்த்தைகள் இல்லை எண்ணங்கள் சொல்ல
வண்ணப்பூக்கள் யாரிடம் சொல்லும்.. ஒ...
கன்னிப் பெண்மை யாரிடம் சொல்லும்

மலரும் மங்கையும் ஒரு ஜாதி - தன்
மனதை மறைப்பதில் சரி பாதி
தன் ஆசையின் கோலத்தை
வண்ணப்பூக்கள் யாரிடம் சொல்லும்.. ஒ...
கன்னிப் பெண்மை யாரிடம் சொல்லும்

கண்ணாடி பார்த்தேன் பெண் என்று கண்டேன்
நான் கண்ட பெண்ணை நீ காணவில்லை
கண்ணாடி பார்த்தேன் பெண் என்று கண்டேன்
நான் கண்ட பெண்ணை நீ காணவில்லை
நீ வரவேண்டும் ஏன் வரவில்லை ?
நீ வரவேண்டும் ஏன் வரவில்லை ?

நான் வரலாமா ஒருக்காலுமில்லை
ஒருக்காலும் இல்லை ... ஒருக்காலுமில்லை இல்லை

மலரும் மங்கையும் ஒரு ஜாதி - தன்
மனதை மறைப்பதில் சரி பாதி
தன் ஆசையின் கோலத்தை
வண்ணப்பூக்கள் யாரிடம் சொல்லும்.. ஒ...
கன்னிப் பெண்மை யாரிடம் சொல்லும்

http://www.youtube.com/watch?v=Zutwx7oWk9E

இந்த படத்தில் நிறைய பாடல் உண்டு
வாசு சார்/கார்த்திக் சார் ப்ளீஸ்

Gopal.s
21st July 2014, 05:10 PM
Thanks Krishnaji.

Gopal.s
21st July 2014, 05:11 PM
அன்னையும் பிதாவும் படத்தில் அசத்தல் பாடல் பழைய ஜானகியின் "மோதிரம் போட்டது போன்றொரு" இல்லையா?

"மலரும் மங்கையும்" நல்ல உருக்கமான இனிய பாடல்.

chinnakkannan
21st July 2014, 05:27 PM
//நீ வரவேண்டும் ஏன் வரவில்லை ?

நான் வரலாமா ஒருக்காலுமில்லை
ஒருக்காலும் இல்லை ... ஒரு காலுமில்லை இல்லை// கண்ணதாசன் என நினைக்கிறேன்..
இந்தப் பாட்டு எப்போதும் அதன் உருக்கம் மனதைக் கொத்திச் செல்லும்..

chinnakkannan
21st July 2014, 05:31 PM
திடீர்னு சோகத்திலருந்து சந்தோஷத்துக்குத் தாவிச்சு மனசு..ஒரு ஃபோன் காலால..(யார்னு சொல்ல மாட்டேன்..ஆனால் பெண்பால்)..உடனே உடனே மனசுல ஒலிச்ச பாட்டு..

தேனடி மீனடி மானடி செவ்வாய் மின்னும் சித்திரக் கன்னம் வா வா
அட பூவொரு பொட்டும்...

கல்யாண் குமார் தேவிகா நெஞ்சம் மறப்பதிலலை படம்..ஆனா ஆனா..(ஏவிஎம் ராஜனுக்கு..சரி ஈ..நடிப்புச் சுடருக்கு அடைப்பது போல்) பாட் மறந்து போச்சே :)

Gopal.s
21st July 2014, 05:33 PM
பவானி என்றொரு படம் 1967 இல் கே.எஸ்.ஜி கதை ,வசனம் ,ராமண்ணா இயக்கத்தில் எம்.எஸ்.வீ இசையமைப்பில் தூள் கிளப்பிய பாடல்கள் கொண்ட படம். அது மட்டுமே. மற்றது எதுவும் பார்க்க சகிக்காது.

வீடியோ மசமசவென்று உள்ளதால் பாடல்களை கேட்டு மகிழவும்.எல்லாமே கிளாஸ் ரக அசத்தல் பாடல்கள்.

http://www.youtube.com/watch?v=scSuaQ8EVuk

http://www.youtube.com/watch?v=s_HQrMSPBLE

மல்லிகை பாடலின் உச்சம் ராட்சசியின் ஹோய், ஹோஹோய் ,நடுவில் ஒரு எள்ளல் சிரிப்பு.,மெல்லிசை மன்னரின் அருமையான பியானோ.அப்பப்பா. (மருந்தை குடிக்கும் போது குரங்கை நினைக்க வேண்டாம் என்பது போல பாடலை கேட்கும் போது அசோகனை நினைக்காமல் இருப்பது நன்று. ஆனால் எத்தனை நல்ல பாடல்களில் தலை காட்டி .....)

http://www.youtube.com/watch?v=strybddJn-8

Gopal.s
21st July 2014, 05:46 PM
Ala thottu thola thottu- vasu special (Playback A.L.Ragavan-L.R.Eswari with Actors Nagesh,L.Kanchana)
Movie-mappillai azhaippu. Lyrics-Vali.Music-mellisai maamani V.Kumar.(karthik's darling Vijayalalitha as full-fledged Heroine)

http://www.youtube.com/watch?v=AzIN-OCRrxM

gkrishna
21st July 2014, 05:55 PM
அன்னையும் பிதாவும் படத்தில் அசத்தல் பாடல் பழைய ஜானகியின் "மோதிரம் போட்டது போன்றொரு" இல்லையா?

"மலரும் மங்கையும்" நல்ல உருக்கமான இனிய பாடல்.

கோபால் சார்

அன்னையும் பிதாவும் மற்ற பாடல்களின் ஒளி காட்சி
எனக்கு கிடைக்கவில்லை .
ஆனால் எல்லா பாடல்களுமே நல்ல இருக்கும்
நீங்கள் சொன்ன 'மோதிரம் போட்டது ' ஜானகி எக்ஸ்செல்லன்ட்.
அதே போன்று 'இறைவா உனக்கொரு கேள்வி எங்கே நீ ' சிசீலவின் குரல்
'சத்தியமா நான் சொல்வது தத்துவம் ' பாடகர் திலகம் குரல்
'பொன்னாலே வாழ்வு ' ஈஸ்வரியின் குரல் பங்கோ பின்னி இருக்கும்

http://www.inbaminge.com/t/a/Annaiyum%20Pithavum/

chinnakkannan
21st July 2014, 06:05 PM
இந்த நிலவை நான் பார்த்தால் - அழகிய பாடல்.. நன்றி கோபால் சார்..

ஒரு காலுமில்லை... பாடலைத் தொடர்ந்து சிந்தையுள் நுழைபவை...

கண்ணழகு பார்த்தால் பொன்னெதற்கு
கையழகு பார்த்தால் பூவெதற்கு
காலழகு பார்த்தால் .. காலழகு பார்த்தால் தெய்வத்திற்கு
கருணை என்றொரு பேரெதற்கு...

ந.தி. ரோ.ர என நினைக்கிறேன்..உணர்ச்சிப் பிரவாகம்..

அடுத்து

மலரும் கொடியும் பெண் என்பார்
மதியும் நதியும் பெண் என்பார்

மலரும் கொடியும் நடப்பதில்லை
அவை மணம்தர என்றும் மறுப்பதில்லை..

அகெய்ன் ந.தி..சாவித்திரி..படம் நினைவிலில்லை..

gkrishna
21st July 2014, 06:14 PM
உண்மை கோபால் சார்
பவானி படம் பாடல்கள் மட்டுமே
படம் உட்கார முடியாது

http://s1.dmcdn.net/x8Uy.jpg

அதே மாதிரி 5 லட்சம்னு ஒரு படம் 1969
'அன்று கண்ட முகம்' ராமகிருஷ்ணன் இயக்கம் னு நினைவு
sms இசை
'படைத்தான் பூமியை இறைவன் அதில் பொங்கி வழிந்தது அழகு '
'ஆணும் பெண்ணும் ஒன்றாய் சேர்ந்து ஆனது தானே உலகம்
அதனால் தானே உலகம் எங்கும் மூன்றெழுத்து கழகம் (or ) கலகம்
பாடகர் திலகம் குரலில்

http://www.youtube.com/watch?v=FsgHe1PNPsI

'ஆசைப்பட்டது நான் அல்ல ' பாடல்
http://www.youtube.com/watch?v=AplHe2GP8Jc

gkrishna
21st July 2014, 06:22 PM
1968,1969 கால கட்டத்தில்
பவானி,மாலதி,சிநேகிதி இந்த மாதிரி சில படங்கள் உண்டு

மாலதி 1970

'சிடு சிடு எங்கும் போவோம் ஜிகு ஜிகு எங்கும் போவோம் '
பாலா சுசீலா குரல் ஜெமினி சரோஜாதேவி ஸ்கூட்டர் சாங் ஸ்டுடியோவில் எடுக்கப்பட்டு ஒரே சிரிப்பா சிரிச்ச பாடல்

'கற்பனையோ கை வந்ததோ சொர்க்கத்தில் காணாத சுகமோ சுகம் '
பாலா சுசீலா

ரவி தண்ணி வண்டி ஜெமினி காதல் தியாகி

http://www.youtube.com/watch?v=f2hoKR5rdfE

chinnakkannan
21st July 2014, 06:43 PM
படைத்தான் பூமியை இறைவன்

கற்பனையோ கைவந்ததோ..ஓ.. அழகான பாடல்கள்.. நன்றி க்ருஷ்ணா சார்..

vasudevan31355
21st July 2014, 07:51 PM
கிருஷ்ணா சார்,

படைத்தானை இங்கு படைத்ததற்கு நன்றி! சும்மா நச் பாட்டு. மாலதி, ஐந்து லட்சம், அன்னையும் பிதாவும் எல்லா செலக்ஷனும் ஏ.ஓன்.
அருமையான ரசனை.

இந்த படங்களெல்லாம் பிளட் வரவழைக்கும் செம பிளேடுகள். ஆனால் பாடல்கள் அற்புதமோ அற்புதம்.

படைத்தான் பூமியை இறைவன் பாடகர் திலகம் முடித்ததும் கண்ணியப் பாடகியின் வரிகள்.

'அதில் பொங்கி வழிந்தது அழகு'

சும்மா உற்சாகம் புரளும் சார் அந்த மந்திரக் குரலில்.

சின்னக் கண்ணன் சார் எனக்கு சிரமம் வைக்கவில்லை. அந்த 'ஒருக்காலும் இல்லை ஒரு காலும் இல்லை' யைத்தான் சொல்கிறேன். அப்படியே என்னுள் இருப்பதை அவர் உரைத்து விட்டார்.

இந்தப் பாடலில் கள்ளமில்லாத (படத்தில் மட்டும்) லஷ்மியின் முகம் அப்படியே பிரஷ் போட்டு துடித்தது போல அவ்வளவு பளிச். ஒளிப்பதிவு அற்புதமாக இருக்கும்.

'அன்னையும் பிதாவும்' படத்தில் கிளைமாக்ஸில் ஒரு மோட்டார் பைக் ரேஸ் ஒன்றும் அருமையாகப் படமாக்கப் பட்டிருக்கும் கர்ணன் பட ரேஞ்சில்.

vasudevan31355
21st July 2014, 08:06 PM
கோ,

தேங்க்ஸ். நம்முடைய ஒற்றுமைப் பாடலான 'மோதிரம் போட்டது போலொரு நாடகம்' பாட்டிற்கு மோதிரம் போடாமல் சப்பென்று வெறும் வீடியோ போட்டு முடிக்கலாமா? தப்பில்லே?

பிரிச்சி மேயலாம். 'இன்றைய ஸ்பெஷலி'ல் போட வைத்திருக்கிறேன். அதற்குள் என்னய்யா அவசரம்?

ஆனா இந்த அசோகன் விஷயத்திலும் நமக்குள் பிரிவில்லாத ஒற்றுமைதான். என்ன மாதிரி பாடல்களிலெல்லாம் தலை காட்டி எப்படி கெடுக்க முடியுமோ அப்படிக் கெடுத்து.

மயக்கும் மோகினியின் 'மல்லிகை ஹோய்' ஈஸ்வரியின் டாப் டென்னில் ஒன்று. இந்த ஆளுக்கு வாணிஸ்ரீ ஜோடி. எங்கே போய் முட்டிக் கொள்ள? என்ன ஜோடி சேர்க்கும் ரசனையோ!

இந்தப் பாடலும் ஸ்பெஷலில்தான் வரும்.

'ஆளத் தொட்டு தோளைத் தொட்டு' எல்.காஞ்சனா தூள். டிரெஸ் கலக்கல்.'வா. வா. வா. வா'. ரேர் சாங். தேங்க்ஸ் கோ.

'ஆயிரம் பேர் பாத்திருக்கேன்
ஈஸ்வரி போல் இல்லே'

ன்னுதான் சொல்லணும்.

vasudevan31355
21st July 2014, 08:13 PM
சின்னக் கண்ணன் சார்.

அடைக்கெல்லாம் படப் படாது.

அழகு அண்ணியாருக்கு கல்யாண்குமார் ஜோடி. மனுஷர் தேவிகா ஜோடி என்ற சந்தோஷத்தில் ஓவர் உற்சாகமாய் இருப்பது அவருடைய குத்திலேயே தெரியும். நமக்கு குத்தலாம் போல இருக்கும். ஆனால் ரகளை பாட்டு.


http://www.youtube.com/watch?v=JaYaQ5uKzVU&feature=player_detailpage

vasudevan31355
21st July 2014, 08:59 PM
ராஜேஷ் சார்,

ஸாரி. முக்கியமான ஒன்றை மறந்து விட்டேன். சொர்க்கத்தை ஒரே பாட்டில் பேக் பண்ணி என்னை பேஜார் படுத்தி விட்டீர்கள். இன்பமான இன்பத்தை அள்ளித் தந்த பாடலை, இன்னும் அள்ளித் தரும் பாடலை
எதிர்பாராமல் தந்து திக்கு முக்காடச் செய்து விடீர்கள். ('இன்ப சந்திரிகா' வைத்தான் சொல்கிறேன்).

சில சமயம் டூ வீலரில் நெடுந்தூரப் பயணம் செய்யும் போது சில பாடல்களை நாம் நினைவுக்குக் கொண்டு வராமலேயே நம் வாய் அந்தப் பாடலை பயணம் நெடுக முணுமுணுத்துக் கொண்டே இருக்கும். அப்படிப்பட்ட பாடல்தான் எனக்கு

'இன்ப லோக ஜோதி ரூபம் போல'

எப்போதுமே என் வாயின் நுனியில் இருக்கும் பாடல். ஒருநாள் கூட இப்பாடலை நான் மறந்ததில்லை. அப்பேற்பட்ட பாடலை அளித்து கலக்கி விட்டீர்கள்.

ஆயிரமாயிரம் நன்றிகள் இப்பாடலை நீங்கள் தந்ததற்கு.

இன்னொரு சந்தேகம் சார். 'தூய உள்ளம்' தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டது தானே! அல்லது நேரிடையாக ஒரே சமயத்தில் இரு மொழிகளிலும் தயாரானதா? ஏனென்றால் 'இன்ப லோக ஜோதி' பாடலில் வாயசைப்பு பொருந்தவில்லை.

('மனோகரா'வில் அழகுப் பதுமையாய் ஜொலித்த கிரிஜா இப்பாடலில் எவ்ளோ குண்டடித்து தெரிகிறார். லாங் ஷாட்களில் சந்திரகாந்தா போலவும் இருக்கிறார்)

vasudevan31355
21st July 2014, 09:08 PM
வினோத் சார்,

நடிகர் திலகத்தின் நினைவு நாளுக்கு அருமையான புகைப்பட ஆவணங்கள் தந்து நினைவு கூர்ந்தமைக்கு நன்றி!

vasudevan31355
21st July 2014, 09:13 PM
'மாலதி' (1970) ஒரு சிறப்பு பிளாஷ்பேக்

http://74.208.147.65/ahtees/admin/movies/content/5681_17_Malathi.jpg

நடிகர்கள்: ஜெமினி கணேசன், 'கலை நிலவு' ரவிச்சந்திரன், சரோஜாதேவி, வரலக்ஷ்மி, நாகேஷ், சுந்தரராஜன், 'தேங்காய்' சீனிவாசன்

படம் வெளி வந்த ஆண்டு: 29-10-1970

தயாரிப்பு:-சித்ரா புரொடக்ஷ்ன்ஸ்

பாடல்கள்:-"கவியரசு"கண்ணதாசன்

மூலக்கதை:-கோமதி சுப்ரமணியம்

இசை: "மெல்லிசைமன்னர்" எம்.எஸ்.விஸ்வநாதன்.

திரைக்கதை,வசனம், இயக்கம்: கே.எஸ்.கோபாலகிருஷ்ணன்.

'இயக்குநர் திலகம்' கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் அவர்கள் இயக்கத்தில் வெளி வந்த படம். காதல் மன்னனும், கலைநிலாவும் இணைந்து நடித்த குடும்பச் சித்திரம்.

'கதை:

ஜெமினியும் சரோஜாதேவியும் காதலர்கள். சந்தர்ப்பவசத்தால் சரோஜாதேவி ரவியைத் திருமணம் செய்ய நேரிடுகிறது. ரவி குடிகாரனாகவும்,பெண் பித்தனாகவும் அலைய சரோஜாதேவி பொறுமை காத்து பழைய காதலனையும் ஆறுதல்படுத்தி, தன் குடிகாரக் கணவரைத் திருத்த சபதமெடுத்து, அவனால் பற்பல இன்னல்களை அனுபவித்து இறுதியில் அவனைத் திருத்தி வெற்றிவாகை சூடுவதே கதை.

இயக்குனர் திலகத்தின் குடும்ப செண்டிமெண்ட் வசனங்கள் ஆழாமாயும், கருத்துள்ளதாகவும் இருந்தது.

ரவியும் குடிகாரனாகவும் பெண் பித்தனாகவும் நன்றாகச் செய்திருப்பார். தான் செய்பவை தவறுகள் என மனைவி உணர்த்தியபின் உணர்ந்து மீண்டும் பழக்க வழக்கங்களில் இருந்து விடுபடமுடியாமல் தவிப்பதும், தன் தவறுகளைத் திருத்திக் கொள்ள முடியாமல் மனைவியிடம் புலம்புவதும் ரவிக்கு நடிக்க சந்தர்ப்பம் வாய்த்த இடங்கள். அதை அவரும் நன்றாகப் புரிந்து பயன்படுத்திக் கொண்டிருப்பார். ஜெமினி ஆரம்ப கால சரோஜாதேவியின் காதலனாக வந்து காதல் லீலைகளில் ஈடுபடுவது வழக்கம் போல. 'சிவந்தமண்' மேஜிக் ராதிகாவும் உண்டு. இவரும் K.S.G.யின் நிறையப் படங்களில் நடித்துள்ளார். (சின்னஞ்சிறு உலகம்' படத்தில் கே. ஆர் விஜயாவுக்கு அடுத்தபடியான ஹீரோயினாக வருவார். புதுமைப் பெண்களடி... பூமிக்குக் கண்களடி...என்ற பாடல் கூட அவருக்கு கோஷ்டியுடன் உண்டு).

ஹீரோயின் சப்ஜெக்ட் என்பதால் அபிநயசரஸ்வதிக்கு படம் நெடுக சுமைதாங்கியாய் வேலை. சற்று வயது முதிர்ந்த இரண்டாவது ரவுண்ட் வந்த சரோஜாதேவியை இதில் காணலாம். எனவே டூயட் சீன்கள் கொஞ்சம் நெருடல். இருந்தாலும் இந்தக் கால ஹீரோயின்களை விட நன்றாகவே சோபிப்பார். (இந்தக் கால இளசுகளின் சுடிதாரை அப்போதே அணிந்து அசத்தியிருப்பார்) தேங்காய் ரவியின் நண்பனாக வந்து சகல பழக்கங்களையும் ரவிக்கு கற்றுத் தருகிறார். அவருக்கு அது ச்சும்மா..என்பது போல.

K.S.G.யின் ஆஸ்தான நடிகை வரலக்ஷ்மி இல்லாமலா?... நாகேஷ் கிச்சு கிச்சு மூட்டுகிறார். மேஜரும் தன் பங்குக்கு குறை வைக்கவில்லை.

பாடல்கள்:

"கற்பனையோ கைவந்ததோ" என்ற பி.சுசீலாவுடன் இணைந்து இளம் S.P.B. யின் குழையும் காந்தக் குரலில் ஒலிக்கும் எத்தனை ஜென்மம் எடுத்தாலும் மறக்க முடியாத பாடல்

"சிடு சிடு சிடு சிடுவென...என்ற S.P.B., பி.சுசீலாவின் குரல்களில் ஒலிக்கும் உற்சாகப் பாடல்.

"எங்கே என் கிண்ணங்கள்" என்ற T.M.S இன் ஜாலி பாடல் (ராதிகா...தேவிகா...ஓடிவா... என்று வரிசையாக பெண்களின் பெயரை உச்சரிப்பது அழகு. இந்த டைப் பாடல்கள் ரவிக்கு எவ்வளவு பொருத்தமாய் இருக்கின்றன!)

http://www.buycinemovies.com/images/detailed/0289-vcd-37.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/2-25.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/9-6.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/1-24.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/4-13.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/5-13.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/3-19.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/6-12.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/7-7.jpg


அன்புடன்,
வாசுதேவன்.

rajeshkrv
21st July 2014, 09:13 PM
அன்னையும் பிதாவும் திரையில் ஒலித்த

இறைவா உனக்கொரு கேள்வி இதோ


http://www.youtube.com/watch?v=kPnjAojqStM


நடிகர் திலகம் நினைவாஞ்சலி அருமை. பாராட்டுக்கள் கிருஷ்ணா மற்றும் வாசு சார்

vasudevan31355
21st July 2014, 09:14 PM
'மாலதி' நிழற்படங்கள் தொடர்கின்றன.

http://www.inbaminge.com/t/m/Malathi/folder.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/1-26.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/5-14.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/3-20.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/4-14.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/6-13.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/7-8.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/8-7.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/9-7.jpg


அன்புடன்,
வாசுதேவன்.

vasudevan31355
21st July 2014, 09:20 PM
மலரும் கொடியும் பெண் என்பார்
மதியும் நதியும் பெண் என்பார்

மலரும் கொடியும் நடப்பதில்லை
அவை மணம்தர என்றும் மறுப்பதில்லை..

அகெய்ன் ந.தி..சாவித்திரி..படம் நினைவிலில்லை..

சார்,

அது பாச மலருக்கு அடுத்த 'எல்லாம் உனக்காக' வின் இன்ப நாதம்.

vasudevan31355
21st July 2014, 09:27 PM
கிருஷ்ணா சார்,

'ஐந்து லட்சம்' படத்தில் சரோஜாதேவி சச்சுவிடமும், ஜெமினி 'தேங்காய்' சீனிவாசனிடமும் கூத்தடிக்கும் பாடல்

'எப்படி இருக்கும்'?

நீங்களே பார்த்துக்கோங்க. உங்களுக்கு ஒரு சின்ன டெஸ்ட்.

இந்தப் பாடலின் ஆண்குரல் யாரென்று தெரிகிறதா?


http://www.youtube.com/watch?v=9zNGqZethIc&feature=player_detailpage

Russellbpw
21st July 2014, 09:30 PM
ராஜேஷ் சார்,

ஸாரி. முக்கியமான ஒன்றை மறந்து விட்டேன். சொர்க்கத்தை ஒரே பாட்டில் பேக் பண்ணி என்னை பேஜார் படுத்தி விட்டீர்கள். இன்பமான இன்பத்தை அள்ளித் தந்த பாடலை, இன்னும் அள்ளித் தரும் பாடலை
எதிர்பாராமல் தந்து திக்கு முக்காடச் செய்து விடீர்கள். ('இன்ப சந்திரிகா' வைத்தான் சொல்கிறேன்).

சில சமயம் டூ வீலரில் நெடுந்தூரப் பயணம் செய்யும் போது சில பாடல்களை நாம் நினைவுக்குக் கொண்டு வராமலேயே நம் வாய் அந்தப் பாடலை பயணம் நெடுக முணுமுணுத்துக் கொண்டே இருக்கும். அப்படிப்பட்ட பாடல்தான் எனக்கு

'இன்ப லோக ஜோதி ரூபம் போல'

எப்போதுமே என் வாயின் நுனியில் இருக்கும் பாடல். ஒருநாள் கூட இப்பாடலை நான் மறந்ததில்லை. அப்பேற்பட்ட பாடலை அளித்து கலக்கி விட்டீர்கள்.

ஆயிரமாயிரம் நன்றிகள் இப்பாடலை நீங்கள் தந்ததற்கு.

இன்னொரு சந்தேகம் சார். 'தூய உள்ளம்' தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டது தானே! அல்லது நேரிடையாக ஒரே சமயத்தில் இரு மொழிகளிலும் தயாரானதா? ஏனென்றால் 'இன்ப லோக ஜோதி' பாடலில் வாயசைப்பு பொருந்தவில்லை.

('மனோகரா'வில் அழகுப் பதுமையாய் ஜொலித்த கிரிஜா இப்பாடலில் எவ்ளோ குண்டடித்து தெரிகிறார். லாங் ஷாட்களில் சந்திரகாந்தா போலவும் இருக்கிறார்)


பின்றீங்க பாஸ் !

எப்புடி உங்களால மட்டும் இது முடியுது ?

முடிஞ்சா போன் பண்ணி சொல்லுங்களேன் ப்ளீஸ் !

Rks

Russellbpw
21st July 2014, 09:37 PM
அதேபோல என்னை கவர்ந்த பாடல் ...ஆங்கில மற்றும் தமிழ் பாடல் கலந்த POP ரகம்.

திரு அஜீத் மற்றும் L R ஈஸ்வரி இனைந்து பாடிய "LOVE IS FINE DARLING WHEN YOU ARE MINE ! "

நடிகர் திலகம் அவர்களுடைய இன்னொரு திறமை இந்த பாடலில் பளிச்சிடும் ! ஆங்கில பாடலுக்கு வாயசைப்பது மட்டுமல்ல ..இந்த பாடல் இடையே வரும் " HEY FOLKS ...TIMES ARE CHANGING ....என்ற ஒரு சில வரிகள் ! அதில் கிண்டல் கலந்த வரி வரும்போது நாக்கை கடித்து , கையை அசைத்து நகைக்கும் நகைப்பு இருக்கிறதே....! இனி ஒரு கலைஞன் பிறந்து தான் வரவேண்டும் ..!

அனைவரின் பார்வைக்கும் !

http://www.youtube.com/watch?v=ORqLDJZ6WJk

Russellbpw
21st July 2014, 09:42 PM
அதே போல பாட்டும் பாரதமும் திரைப்படத்தில் வரும் " my song is for you " என்ற pop ரகம் பாடல்.

இந்த முறை SPB SOLO ...இதில் ஒரு கட்டத்தில் ஸ்ரீப்ரியா கிளப் உள்ளே வர...நடிகர் திலகம் அவரை "MIND A DANCE WITH ME BABY " என்று நடனமாட அழைக்க ...ஸ்ரீப்ரியா தயங்க...நடிகர் திலகம் உடனே "OH COME ON ...! " என்றழைக்கும் அந்த ஸ்டைல், அந்த COMMAND OVER THE LANGUAGE !!.. அழைத்து அவருக்கு சொல்லிகொடுத்தபடியே போடும் ஸ்டெப் ....!

ஒரு தேர்ந்த POP பாடகன் எப்படி செய்வாரோ அதைப்போலவே ஒரு PERFECTION !!

கண்டு மகிழுங்கள் ! கருத்தை பகிருங்கள் !


http://www.youtube.com/watch?v=tC_Z5_FX3SI

rajeshkrv
21st July 2014, 09:58 PM
ராஜேஷ் சார்,

ஸாரி. முக்கியமான ஒன்றை மறந்து விட்டேன். சொர்க்கத்தை ஒரே பாட்டில் பேக் பண்ணி என்னை பேஜார் படுத்தி விட்டீர்கள். இன்பமான இன்பத்தை அள்ளித் தந்த பாடலை, இன்னும் அள்ளித் தரும் பாடலை
எதிர்பாராமல் தந்து திக்கு முக்காடச் செய்து விடீர்கள். ('இன்ப சந்திரிகா' வைத்தான் சொல்கிறேன்).

சில சமயம் டூ வீலரில் நெடுந்தூரப் பயணம் செய்யும் போது சில பாடல்களை நாம் நினைவுக்குக் கொண்டு வராமலேயே நம் வாய் அந்தப் பாடலை பயணம் நெடுக முணுமுணுத்துக் கொண்டே இருக்கும். அப்படிப்பட்ட பாடல்தான் எனக்கு

'இன்ப லோக ஜோதி ரூபம் போல'

எப்போதுமே என் வாயின் நுனியில் இருக்கும் பாடல். ஒருநாள் கூட இப்பாடலை நான் மறந்ததில்லை. அப்பேற்பட்ட பாடலை அளித்து கலக்கி விட்டீர்கள்.

ஆயிரமாயிரம் நன்றிகள் இப்பாடலை நீங்கள் தந்ததற்கு.

இன்னொரு சந்தேகம் சார். 'தூய உள்ளம்' தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டது தானே! அல்லது நேரிடையாக ஒரே சமயத்தில் இரு மொழிகளிலும் தயாரானதா? ஏனென்றால் 'இன்ப லோக ஜோதி' பாடலில் வாயசைப்பு பொருந்தவில்லை.

('மனோகரா'வில் அழகுப் பதுமையாய் ஜொலித்த கிரிஜா இப்பாடலில் எவ்ளோ குண்டடித்து தெரிகிறார். லாங் ஷாட்களில் சந்திரகாந்தா போலவும் இருக்கிறார்)

தூய உள்ளம் டப்பிங் படம் அதனால் தான் வாயசைப்பு பொருந்த வில்லை.

இன்ப லோக ஜோதி பாடலை ரசித்ததற்கு நன்றி (உங்களைப்போலவே எனக்கும் எப்பொழுதுமே நினைவில் உள்ள பாடல் )

vasudevan31355
21st July 2014, 10:20 PM
வருக வருக நடிகர் திலகம் புகழ் பாடும் என் உயிர் நண்பர் ரவிகிரண் சார்.

Love is fine darling when u mine
no sun no shine like summer rain
with out dear life is pain
when u mine darling always fine
its always dream as the dream
see the scream Oh my queen
raa rarara rarara rarara rarara raa raa ra raraa

சரிதானா? (ராஜேஷ் சார். ஹெல்ப் ப்ளீஸ் )

இந்தப் பாடலின் வரிகள் உங்களுக்கும் பொருந்துமே

'ஊருக்கு ஊர் செல்லும் உல்லாசி

யாருக்கு நான் சொந்தம் நீ யோசி'

இரண்டு பாடல்களும் முத்திரை பதித்தவை. உங்களின் நாக்குக் கடிப்பு வர்ணனை ஜோர். இரவு நேரத்தில் இனிமையான பாடல்களை அதுவும் நடிகர் திலகத்தின் நினைவு நாள் அன்று தந்ததற்கு நன்றி!

rajeshkrv
21st July 2014, 10:23 PM
3424

வாசு சார்,

கிரிஜா ராணி மாதிரி வாழ்ந்து பின் எல்லாவற்றையும் இழந்து துண்டு துக்கடா வேஷங்கள் செய்து காலத்தை கழித்தார்
இதோ அவர் கடைசி காலத்தில் நடித்தபோது இருந்த தோற்றம்

vasudevan31355
21st July 2014, 10:30 PM
3424

வாசு சார்,

கிரிஜா ராணி மாதிரி வாழ்ந்து பின் எல்லாவற்றையும் இழந்து துண்டு துக்கடா வேஷங்கள் செய்து காலத்தை கழித்தார்
இதோ அவர் கடைசி காலத்தில் நடித்தபோது இருந்த தோற்றம்

ஐயோ பாவம் சார்.

vasudevan31355
21st July 2014, 10:36 PM
தெலுங்கில் புகழ் பெற்ற காமெடி ஜோடி ரேலங்கி, கிரிஜா

http://img.youtube.com/vi/ffbZNS5Djy0/0.jpg

vasudevan31355
21st July 2014, 10:37 PM
கிரிஜா

http://2.bp.blogspot.com/-BPRfS-6evBI/UN0G6FnM7II/AAAAAAAACzo/JqOP56TLOxo/s1600/girija1+copy.jpg

rajeshkrv
21st July 2014, 10:46 PM
அழகான் தோற்றம், நாயகியாக வந்து பின் ரேலங்கியுடன் பல படங்களில் நகைச்சுவை வேடங்கள் செய்து பின் காணாமல் போனவர்.

vasudevan31355
21st July 2014, 10:51 PM
ராஜேஷ் சார்!

இன்னொரு சந்தேகம் நீண்ட நாட்களாக. 'பாதாள பைரவி' படத்தின் ஹீரோயின் மாலதி அவர்களின் மகளா கிரிஜா?

http://dustedoff.files.wordpress.com/2013/04/pic182.png

இதே 'பாதாள பைரவி' படத்தில் பாதாள பைரவியாக கிரிஜா வருவார் என்று நினைக்கிறேன்.

அப்படி இருந்தால் அம்மாவும், பெண்ணும் ஒரே படத்தில் அதுவும் அம்மா ஹீரோயினாகவும், மகள் சிறு வேடத்திலும் நடிக்க இயலுமா? குழப்பமாக உள்ளது.

rajeshkrv
21st July 2014, 11:03 PM
மாலதியும் கிரிஜா கொஞ்சம் சமகாலத்தவர்கள் .. தாய் மகள் அல்ல..

rajeshkrv
21st July 2014, 11:06 PM
கிரிஜாவிற்கு ஒரு மகள் சலீமா தமிழில் லேடீஸ் ஹாஸ்டல் போன்ற தொடர்களில் 90’களில் நடித்தார்

http://malayalam.oneindia.in/img/2011/11/09-saleema1.jpg

vasudevan31355
21st July 2014, 11:17 PM
கிரிஜாவிற்கு ஒரு மகள் சலீமா தமிழில் லேடீஸ் ஹாஸ்டல் போன்ற தொடர்களில் 90’களில் நடித்தார்



கிரேட்! நன்றி ராஜேஷ் சார். நிறைய அபூர்வ தகவல்களை விரல் நுனியில் வைத்திருக்கிறீர்கள். சபாஷ்!

சலீமா... பார்த்திருக்கிறேன்.

vasudevan31355
21st July 2014, 11:21 PM
ராஜேஷ் சார்,

இந்தப் பெண்தானே! மலையாளத்தில் கூட நடித்துப் பார்த்ததாக நினைவு. (சைட் போஸில் லேசான மாதவி ஜாடை)

http://oldmalayalamcinema.files.wordpress.com/2011/09/saleema-in-nakhakshathangal.jpg?w=665http://oldmalayalamcinema.files.wordpress.com/2011/09/saleema-malayalam-actor.jpg?w=665

vasudevan31355
21st July 2014, 11:24 PM
மாலதியும் கிரிஜா கொஞ்சம் சமகாலத்தவர்கள் .. தாய் மகள் அல்ல..

அப்பாடா! சந்தேகம் தீர்ந்தது.

vasudevan31355
21st July 2014, 11:27 PM
Salima in Nakhakshathangal (1986) (malayalam)


http://www.youtube.com/watch?v=YUikoSNEphI&feature=player_detailpage

vasudevan31355
21st July 2014, 11:30 PM
G.N Rajesh sir.

rajeshkrv
22nd July 2014, 01:20 AM
G.N Rajesh sir.

குட் நைட்

ஆம் மலையாளத்தில் சில படங்களில் நடித்தார் சலீமா

rajeshkrv
22nd July 2014, 04:01 AM
ஆயிரம் ரூபாய்

கே.எஸ்.ஜியின் இயக்கத்தில் ஜெமினி, சாவித்திரி மற்றும் ராகினி நடித்த படம்
இசை மகாதேவன்

இதில் பிரசித்தி பெற்ற பாடல்கள் ஆனாக்க அந்த மடம், நிலவுக்கும் நிழலுண்டு, பார்த்தாலும் பார்த்தேன்

இதில் அதிகம் கேட்டிராத பாடல் .. ஆனாலும் மனதை கவரக்கூடிய பாடல்

பல் பொடி வியாபாரம் தூள் .. செய்பவர்கள் பி.பீ.ஸ்ரீனிவாஸ் மற்றும் இசையரசி

palpodikalnar pbs ps-aayiram roobai .mp3 (http://www.4shared.com/mp3/xiBCMsQG/palpodikalnar__pbs_ps-aayiram_.html)

rajeshkrv
22nd July 2014, 04:10 AM
இதுவும் மிக அருமையான பாடல்
இசையரசி மற்றும் ஈஸ்வரியின் குரலில் நீங்காத நினைவு


https://www.youtube.com/watch?v=Dlgqf15FVvI

vasudevan31355
22nd July 2014, 08:02 AM
இதுவும் மிக அருமையான பாடல்
இசையரசி மற்றும் ஈஸ்வரியின் குரலில் நீங்காத நினைவு


இந்தி ஒரிஜினல் இன்னும் மனதை அள்ளிக் கொண்டு போகும்.

'ஓஓஓஓ... பச்பன் கே தின் புலான தேனா' ('Bachpan Ke Din Bhula Na Dena')

'Deedar' இந்திப் படத்தில் என்னுடைய மனம் கவர்ந்த பாடகி ஷம்ஷட் பேகம் அவர்களும், இசைக்குயில் லதாவும் இணைந்து பாடிய பாடல்.
நௌஷாத்தின் மனதை வருடும் இசையில். அஷோக்குமார், திலீப் குமார், நர்கீஸ் நடித்தது.


http://www.youtube.com/watch?v=2okBwE8jjys&feature=player_detailpage

vasudevan31355
22nd July 2014, 08:06 AM
ஆயிரம் ரூபாய்


பல் பொடி வியாபாரம் தூள் .. செய்பவர்கள் பி.பீ.ஸ்ரீனிவாஸ் மற்றும் இசையரசி

palpodikalnar pbs ps-aayiram roobai .mp3 (http://www.4shared.com/mp3/xiBCMsQG/palpodikalnar__pbs_ps-aayiram_.html)


பி.பி.ஸ்ரீனிவாஸ் பற்பொடி விற்பதைப் பாடும் போது பர்பொடி என்று மெல்லின 'ர்' போட்டு பாடுவதும் இனிமையாகத்தான் இருக்கும்.:) அடிக்கடி முன்பு ரசித்த பாடல்.

'பற்பொடி... கல்நார் பற்பொடி... பேக்கட் ஓரணா பற்பொடி'

'மக்குடியம்மா மக்குடி'

Richardsof
22nd July 2014, 08:29 AM
http://youtu.be/jn55ZNgjzGE

Richardsof
22nd July 2014, 08:39 AM
http://i58.tinypic.com/oa7s5i.jpg

rajeshkrv
22nd July 2014, 09:29 AM
இந்தி ஒரிஜினல் இன்னும் மனதை அள்ளிக் கொண்டு போகும்.

'ஓஓஓஓ... பச்பன் கே தின் புலான தேனா' ('Bachpan Ke Din Bhula Na Dena')

'Deedar' இந்திப் படத்தில் என்னுடைய மனம் கவர்ந்த பாடகி ஷம்ஷட் பேகம் அவர்களும், இசைக்குயில் லதாவும் இணைந்து பாடிய பாடல்.
நௌஷாத்தின் மனதை வருடும் இசையில். அஷோக்குமார், திலீப் குமார், நர்கீஸ் நடித்தது.


http://www.youtube.com/watch?v=2okBwE8jjys&feature=player_detailpage

ஆம் இந்தி ஒரிஜனல் பிரமாதம் .. பாடலுக்கு நன்றி..

கண்ணாடி மாளிகை என்றொரு படம் .. அசோகன் நாயகனாக நடித்த படங்களில் இதுவும் ஒன்று..

இதோ டி.டி.பத்மன் அவர்களின் இசையில் இசையரசியின் குரலில் அழகான பாடல்


http://www.youtube.com/watch?v=Gf4dvITpxeQ

gkrishna
22nd July 2014, 09:36 AM
அன்னையும் பிதாவும் திரையில் ஒலித்த

இறைவா உனக்கொரு கேள்வி இதோ



நன்றி ராஜேஷ் சார்

15 தினங்களுக்கு முன் இந்த அன்னையும் பிதாவும் படம் லைப் சேனல் இல் பார்த்தேன் . படம் கோர்வை இல்லாமல் வந்தது .

மாலதி கிரிஜா சல்மா ஒரே பொம்பனாட்டி பேர் போங்கோ
சுஜாதா ஒரு புக் நினைவில் உண்டு 'காசளவில் உலகம்'
அதே போன்று ராஜேஷ் சார் 'விரல் நுனியில் ...'
வாசு சார் ப்ளீஸ் பில் up தி blanks
ரவி கிரண் சாய்ஸ் சூப்பர்
மை சாங் இஸ் போர் யு .... that 's true
பாட்டும் பரதமும் அருண் ஸ்ரீப்ரிய மேல் சாய்ந்து ஒரு போஸ் ஒன்னு உண்டு சார் நெல்லை பார்வதியில் பெரிய கட் அவுட்
டெய்லி எவனிங் அந்த பாட்டை கேட்டு விட்டு ஆத்துக்கு ஓடி வருவோம் . காசு இருந்தால் உள்ளே இல்லன வெளியே நின்னு .பக்கத்தில் மணி ரைஸ் மில். நாங்க சில பேர் வெளியே நின்னு பாட்டு கேட்கிறதை பார்த்து வேணும்னே ரைஸ் மில் machine சவுண்ட் கூடும்
எட்டி பார்த்தால் ஆளே இல்லாத டீ கடை.கடமை உணர்ச்சிக்கு அளவே இல்லை
75-76 கால கட்டம் ஸ்கூல் final இயர் பின்ன்ருவாங்க அடி
பாட்டு வேற படத்தில் இறுதியில் தான் வரும் .
ரேடியோவில் அந்த பாட்டு வேறு அடிகடி வராது சார்.

ரொம்ப ரசித்த பாடல்
thank யு ரவி சார்

vasudevan31355
22nd July 2014, 09:37 AM
இன்றைய ஸ்பெஷல் (35)

மிக மிக அழகான, ரம்மியமான ஒரு பாடல். 'மயிலாடும் பாறை மர்மம்' அல்லது 'இரவு 12 மணி'. ஒரு திகில் சித்திரம். இந்தப் படமும் டைட்டிலைப் போலவே மர்மமான ஒரு படம்தான். ரவிச்சந்திரனும், ராஜஸ்ரீயும் ஜோடி என்று நினைவு. பி.எஸ்.ராஜ் தயாரிப்பில் எஸ்.ராஜேந்திரன் இயக்கியது. ஒரு சில நாட்களே ஓடியது என்று ராகவேந்திரன் சார் சொல்வார். (கார்த்திக் சார் மேலதிக விவரங்களை அளிப்பார் கண்டிப்பாக என்று நினைக்கிறேன்). நான் பார்த்ததில்லை. சங்கர் கணேஷ் மியூசிக் போட்ட பாடல்களில் இந்தப் பாடல் தனி ரகம்.

மிக வித்தியாசமான டியூனில் அமைந்த பாடல். பாடகர் திலகமும், கண்ணியப் பாடகியும் இணைந்து இழைந்து நமக்குத் தந்த தென் விருந்து. அருமையான புல்லாங்குழல் இசையுடன் நம் மனதை மயக்கப் புறப்பட்ட பாடல்

'என்னுயிரே' என்று பாடகர் திலகம் உச்சரிக்கையில் என்ன ஒரு ஆணித்தரமான தெளிவு.

சுசீலா.... கேட்கலாமா... பதினாறு வயது பருவப் பெண் போல குரலை படுஇளமையாக்கி அவர் பாடும் போது மனது சொக்கிப் போகிறது.

மனதை அப்படியே சுண்டி இழுக்கிறது இந்தப் பாடல்.

இப்படத்தின் டிவிடி கிடைக்கவில்லை. இணையத்திலும் தகவல்கள் இல்லை. எனவே பாடலைக் கேளுங்கள். கிடைத்ததும் நிச்சயம் காணொளியாகப் பதிவிடுகிறேன்.

ஓ....ஹோ மயிலாடும் பாறையில் தேனோட
ஓ....ஹோ மலராடும் பார்வையில் மீனாட

பெண்ணழகின் சன்னதியில்
பூமழை பொழிந்திட வா

என்னுயிரே உன் மேனியில்
இளமை எனும் பண் பாட வா வா

கூரான தூண்டியிலே விழுந்து
கூத்தாட மீன் வருமோ
போராடும் நேரத்திலே பருவத்தை
பந்தாடத்தான் வேண்டுமோ

ஆஹா என்னைப் பாரு கண்ணைப் பாரு
தண்ணிக்குள்ளே எண்ணம் பாரு
கடமை என்றும் மறந்திடுமோ
தங்கமுகம் நெஞ்சில்வர
தாமதம் ஏனடியோ

ஓ....ஹோய் மயிலாடும் பாறையில் தேனோட
ஓ....ஹோய் மலராடும் பார்வையில் மீனாட

ஆறோடும் பாதையிலே தங்கமே
ஆராய்ச்சி ஏனடியோ
யாரோடு பேசுகின்றாய்
அறிந்தால் பாராட்ட நானில்லையோ

ஆறோடும் பாதையிலே தங்கமே
ஆராய்ச்சி ஏனடியோ
யாரோடு பேசுகின்றாய்
அறிந்தால் பாராட்ட நானில்லையோ

ஆஹா கன்னிச்சிட்டு என்னைத் தொட்டு
கன்னமிட்ட கள்வனுக்கு
கதையே இன்னும் புரியலையோ
கை இறுக மெய் தழுவி
காரணம் கூறிடவோ

ஓ....ஹோய் மயிலாடும் பாறையில் தேனோட
ஓ....ஹோய் மலராடும் பார்வையில் மீனாட


http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=YODjF9TZYSM

gkrishna
22nd July 2014, 09:41 AM
super still esvee sir

ரொம்ப நாளா அபர்ணா சவுண்ட் இல்லே எங்கே இருக்காங்க
பவானி கவிதா அப்பப்ப ஏதாவது நியூஸ் வரும்

வாசு சார் அபர்ணா ஒரு பாட்டு சில
'அடியே நீ சமர்தொன்னோ உங்க ஆத்துகாரர் அசடோன்னோ '
justice கோபிநாத் தேங்காய்
ஆளுக்கொரு ஆசை 'மஞ்சள் அரைக்கும் போது மதில் ஏறி பார்த்த மட்ச்சான்'
கராத்தே கமலா 'தேனருவி அதில் ஒரு பூங்குருவி'
நான் வாழ வைப்பேன் ' ஆகாயம் மேல '

கொஞ்ச நாள் நம்ம டைரக்டர் யோகானந்த் அண்ணா (அப) ஸ்வரம் பாடியதாக கேள்வி

gkrishna
22nd July 2014, 09:44 AM
இன்றைய ஸ்பெஷல் (35)

'மயிலாடும் பாறை மர்மம்' அல்லது 'இரவு 12 மணி'. ஒரு திகில் சித்திரம். இந்தப் படமும் டைட்டிலைப் போலவே மர்மமான ஒரு படம்தான். ரவிச்சந்திரனும், ராஜஸ்ரீயும் ஜோடி என்று நினைவு.

கருப்பு வெள்ளை
நெல்லை சிவசக்தி ரிலீஸ் 3 தினங்கள் மட்டும் ஓடிய நினைவு
நீண்ட நாள் தயாரிப்பில் இருந்த படம்

ஆனால் இந்த பாட்டு ரொம்ப நல்லா இருக்கும்
ராஜஸ்ரீ ஒரு டைட் pant போட்டு ஒரு சீன் நல்ல நினைவு

இதே போன்று ராஜஸ்ரீ நடித்த 'உலகம் இவ்வளுவு தான் '
நாகேஷ் ஹீரோ மேஜர் அப்பா .
ஈஸ்வரி குரலில் 'இவ்வளவு தான் உலகம் இவ்வளவு தான் ' பாடல் சூப்பர்
திருநெல்வேலி ரயில்வே ஸ்டேஷன் எல்லாம் படத்தில் வரும்
நாகேஷ் வீட்டை விட்டு வந்து வெளியில் எல்லாம் திரிந்து ஏகப்பட்ட அனுபவங்களை சந்திப்பார்

vasudevan31355
22nd July 2014, 09:47 AM
வணக்கம் கிருஷ்ணா சார்.

http://i1.ytimg.com/vi/PbTe22p2f6M/hqdefault.jpg

நடிகர் திலகத்தின் கிடார் வாசிப்பும், துடிப்பு நடனமும் சும்மா கில்லி சார் கில்லி

gkrishna
22nd July 2014, 09:53 AM
அருண் வரும் போது எல்லாம் இந்த பாட்டு background ல ஒலிக்கும் சார்

அந்த ஸ்ரீப்ரிய மேல சாய்ந்து ஒரு ஸ்டில் ஒன்னு உண்டு சார்
இருந்தால் போட்டு விடுங்க ரொம்ப நாள் ஆச்சு சஸ் sir பார்த்து

vasudevan31355
22nd July 2014, 09:58 AM
கிருஷ்ணா சார்

இன்னொரு அம்சமான அபர்ணா பாட்டையும் சேர்த்துக்கோங்க விஜயபாஸ்கரின் கலக்கல் இசையில் மறக்க முடியாத பாட்டு. வாணியின் குரலில் வெறுப்பு, சலிப்பு, மெல்லிய சோகம் அத்தனையும் இழையோடுவதைக் காணலாம். ரஜினி கிடார் சவுண்டுக்கு ஏற்ற மாதிரி சிகரெட்டை வாயில் வைத்து ஆட்டுவார்.

'ஆடு புலி ஆட்டம்' படத்தில்.

அபர்ணா அருமையாக எக்ஸ்பிரஷன்ஸ் ததிருப்பார். பார்க்க சைனா பொம்மை மாதிரி அழகோ அழகு.

மனமே சோலையாம்
நினைவுகள் மலர்களாம்
கோயிலில் சேருவோம்
தெருவிலே போகுவோம்

பூத்த மலர்களெல்லாம் காய்க்குமா
காய்த்த காய்களெல்லாம் கனியுமா
இனிக்குமா புளிக்குமா
உனக்கது தெரியுமா புரியுமா

செம தூள்


http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=7MnKPiP1A5c

gkrishna
22nd July 2014, 10:04 AM
கிருஷ்ணா சார்

இன்னொரு அம்சமான அபர்ணா பாட்டையும் சேர்த்துக்கோங்க விஜயபாஸ்கரின் கலக்கல் இசையில் மறக்க முடியாத பாட்டு. வாணியின் குரலில் வெறுப்பு, சலிப்பு, மெல்லிய சோகம் அத்தனையும் இழையோடுவதைக் காணலாம். ரஜினி கிடார் சவுண்டுக்கு ஏற்ற மாதிரி சிகரெட்டை வாயில் வைத்து ஆட்டுவார்.

'ஆடு புலி ஆட்டம்' படத்தில்.

அபர்ணா அருமையாக எக்ஸ்பிரஷன்ஸ் ததிருப்பார். பார்க்க சைனா பொம்மை மாதிரி அழகோ அழகு.

மனமே சோலையாம்
நினைவுகள் மலர்களாம்
கோயிலில் சேருவோம்
தெருவிலே போகுவோம்

பூத்த மலர்களெல்லாம் காய்க்குமா
காய்த்த கைகளெல்லாம் கனியுமா
இனிக்குமா புளிக்குமா
உனக்கது தெரியுமா புரியுமா

செம தூள்



இதை இதை தான் எதிர்பார்த்தேன் vasu sir

chinnakkannan
22nd July 2014, 10:05 AM
வாசு சார்... தேனடி மீனடி மானடி..கொஞ்சம் சடாலென வரும் துள்ளல் பாட்டு.. கொடுத்தமைக்கு நன்றி..அதே படத்தில் வரும் முந்தானை பந்தாட அம்மானை ஆடுங்கடி... யும் நன்னாயிட்டு இருக்கும்.. அப்புறம்..எல்லாம் உனக்காக..எப்படி மறந்தேன்.. நன்றி..

அது சரி..கிரிஜா சலீமா..கிடார் என நிறைய பக்கங்கள்..மயிலாடும் பாறை மர்மம்..கேள்விப்பட்டது புகையாக இருக்கிறது.. நன்ற்றி..

ம்ம்
இப்போ என்ன பாட்டு மனசுல ஓடுது கண்ணா..

கொஞ்சம் காதல் கொஞ்சம் வேண்டுதல் (?!)..எனத் தெரியாத மாதிரி ஒரு பாட்..என்னவாக்கும் அது..

அன்பு மனம் கனிந்த பின்னே அச்சம் தேவையா
அன்னமே நீ இன்னும் அறியாத பாவையா...

இதைப் பற்றி டீடெய்ல் தான் தராமலா இருக்கப் போகிறீர்கள் :)

vasudevan31355
22nd July 2014, 10:07 AM
கிருஷ்ணா சார்,

அள்ளுங்க.

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/AVSEQ03DAT_002927840.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/AVSEQ03DAT_002927840.jpg.html)

vasudevan31355
22nd July 2014, 10:10 AM
இதைப் பற்றி டீடெய்ல் தான் தராமலா இருக்கப் போகிறீர்கள் :)

பேசிப் பேசியே இப்படிப் பேசியே.... :):):)

ஒண்ணுமில்லே சார். 'மகராசி' படப் பாடலின் வரிகளைக் கொடுத்தேன்.:):):)

vasudevan31355
22nd July 2014, 10:15 AM
இன்னொன்று.

அபர்ணாவின் 'வெட்கத்தை விட்டோடி'

கல்லில் பூவெடுப்போம்
காற்றில் நாரெடுப்போம்


http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=5C4KgYWwyjI

gkrishna
22nd July 2014, 10:16 AM
கிருஷ்ணா சார்,

அள்ளுங்க.

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/AVSEQ03DAT_002927840.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/AVSEQ03DAT_002927840.jpg.html)

வாசு சார்

ஆசையை நிறைவேற்றி விட்டீர்கள் .
நீண்ட நாள் கனவு தனி போட்டோ ஆக

கிருஷ்ணா - 'ஆகா என் ஆசை நிறைவேறுமா
வாசு சார் பாடுவது-'கிருஷ்ணா சந்தேகம் கொள்ளலாகுமா ' காதில் கேட்கிறது

thats true

அழகு கூந்தல் கொண்டாள் அவள் ஒரு sixteen
ஆனாலும் எந்தன் கண்ணில் செக்ஸ் டீன்

gkrishna
22nd July 2014, 10:22 AM
பாட்டும் பரதமும் ஸ்ரீப்ரியா
மயிலாப்பூர் தண்ணி துறை மார்கெட் பிஞ்சு வெண்டை சார்

தீடீர்னு குண்டாகி
அப்பறும் ஒல்லியாகி (தீ,சவால்,ராம்லக்ஷ்மன் கால கட்டத்தில் )
மீண்டும் குண்டாகி

பெண்ணே என்னே உன் பரிணாம வளர்ச்சி

vasudevan31355
22nd July 2014, 10:23 AM
கிருஷ்ணா சார் ஹாங்காங், பாங்காக் போலாமா!:)


குறும்பு. கிருஷ்ணரின் அதே குறும்பு.:)

vasudevan31355
22nd July 2014, 10:32 AM
அய்யாவுக்கு மனசிருக்கு
அம்மாவுக்கு வயசிருக்கு
ஆரம்பமாகின்றது

இஷ்க் இஷ்க் இஷ்க் இஷ்க் ...ஸ்ரீபிரியா கொடுமை.


http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=l8y27jPUEBA

gkrishna
22nd July 2014, 10:34 AM
கிருஷ்ணா சார் ஹாங்காங், பாங்காக் போலாமா!:)

தர்மராஜா படம் பார்க்க தானே :)


சவால்
'நாடினேன் ... '' விச்சுவின் பங்கோ
"நம்பினேன் "
காதலுக்கு நியாமில்லை என்றுமே உன்னிடம்
காதலர்கள் நூறு கண்டேன் ரசிகின்றார் என்னிடம்
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
https://encrypted-tbn0.gstatic.com/images?q=tbn:ANd9GcQAVX9558ztJ0ovV4rZSpYcDXBszHG7N fuLQG_rSbASk_RLlh3Bhttp://i1.ytimg.com/vi/Fow6bWpERxw/hqdefault.jpg

வாணியின் சூப்பர் பாட்டு
மெலிந்த ஸ்ரீப்ரியா

vasudevan31355
22nd July 2014, 11:17 AM
ராஜா வந்தார் ரோட்டோரமா
ராஜாத்தி வந்தாளே ஊர்கோலமா
ஊரும் ரோடும் உன் சொந்தமா
உன் வேகம் என்னிடம் செல்லாதம்மா.

முத்துராமன் 'அம்மா' வை எப்படி கலாய்க்கிறார் பாருங்கள். 'கணவன் மனைவி' திரைப்படத்தில் சீதா, ராதாவையெல்லாம் கூப்பிட்டு.


http://www.youtube.com/watch?v=3j05QbM6mtk&feature=player_detailpage

chinnakkannan
22nd July 2014, 11:20 AM
அது சரி.. பிஞ்சு வெண்டையா.. ஹே ராசாத்தி ஹோ ரோசாப்பூ மெத்தையிட்ட தத்தையல்லவா தான் நினைவுக்கு வருது.. :) சட்டம் என் கையிலில்..ஒரே இடம் நிரந்தரம்.. ம்ம் நீயாவெல்லாம் சொல்லப் படாது..(அதுல வேற பாட் பிடிக்கும்..அம்மாடி உன் ஆசை பொல்லாத பேராசை)

vasudevan31355
22nd July 2014, 11:38 AM
'தேங்காய்' சீனிவாசன், சுஜாதா, அபர்ணா, ஸ்ரீகாந்த் நடித்த 'ஸ்ரீ ராம ஜெயம்' படத்தில் இருந்து ஒரு பாடல். டி.எம்.எஸ், சுசீலா டூயட். மெல்லிசை மன்னரின் இசையமைப்பில்.

நல்ல பாடல்.

வெள்ளி சலங்கை துள்ளிக் குலுங்க
கள்ளச் சிரிப்பு பின்னி இழுக்க
சொல்லுங்கள் சுவை காவியம்
சூட்டுங்கள் தமிழ் ஓவியம்

வெள்ளி சலங்கை துள்ளிக் குலுங்க
கள்ளச் சிரிப்பு பின்னி இழுக்க
சொல்லுங்கள் சுவை காவியம்
சூட்டுங்கள் தமிழ் ஓவியம்

மஞ்சள் முகத்தை நெஞ்சில் நினைத்தால்
கொஞ்சத் துடிக்கும் எந்தன் நினைவு
மஞ்சள் முகத்தை நெஞ்சில் நினைத்தால்
கொஞ்சத் துடிக்கும் எந்தன் நினைவு

இலை பூவாகி காயாகி கனியானது
இதழ் பாலாகி தேனாகி பதமானது
இலை பூவாகி காயாகி கனியானது
இதழ் பாலாகி தேனாகி பதமானது

பூச்சூடி சூடி கொடி போல ஆடி
பொன்னாக வந்த வெண்ணிலா
காற்றாட ஆட கண்ஜாடை பேசும்
கண்ணான கண்ணன் திருவிழா
கண்ணான கண்ணன் திருவிழா
திருவிழா !

வெள்ளி சலங்கை துள்ளிக் குலுங்க
கள்ளச் சிரிப்பு பின்னி இழுக்க
சொல்லுங்கள் சுவை காவியம்
சூட்டுங்கள் தமிழ் ஓவியம்

கம்பன் எழுத்தில் பொங்கும் கருத்தை
கொஞ்சம் நினைத்து என்னை அணைத்து
கம்பன் எழுத்தில் பொங்கும் கருத்தை
கொஞ்சம் நினைத்து என்னை அணைத்து

இனி நாள்தோறும் விளையாட துணை வந்தது
அதில் நானூறு விதமான கலை வந்தது
இனி நாள்தோறும் விளையாட துணை வந்தது
அதில் நானூறு விதமான கலை வந்தது

நாள் பார்த்து பார்த்து நீ வந்ததென்ன
என் ராசி நல்ல ராசிதான்
கண்ணான ஜோடி பொன்னான வாழ்வு
கல்யாணம் தந்த ராசிதான் கல்யாணம் தந்த ராசிதான்
ராசிதான்!

வெள்ளி சலங்கை துள்ளிக் குலுங்க
கள்ளச் சிரிப்பு பின்னி இழுக்க
சொல்லுங்கள் சுவை காவியம்
சூட்டுங்கள் தமிழ் ஓவியம் !

http://www.inbaminge.com/t/s/Sri%20Rama%20Jayam/

gkrishna
22nd July 2014, 11:48 AM
ஆகாயத்தில் தொட்டில் கட்டிய
(அப)ர்ணாவின் ஸ்வரம் பாடிய வசுதேவரே

நீவிர் வாழ்க

இந்த ஸ்ரீராமஜெயம் படத்தில்
ஸ்ரீகாந்த்க்கும் வடைமாலை சரோஜா னு ஒரு நடிகை அவங்களுக்கும்
ஒரு டூயட் உண்டே சார்
"எந்தன் கற்பனை தேரில் உள்ள கற்பனை பூவே ' சூப்பர் சாங்
t l மகாராஜன் சசிரேகா ஜோடி குரல்

gkrishna
22nd July 2014, 11:54 AM
வடைமாலை சரோஜா பற்றிய ஒரு சிறு குறிப்பு

`Marupadiyum Oru Kaadhal' will have Jyotsna and Anirudh in lead roles.
Anirudh has done half dozen films in Malayalam, while heroine Jyotsna is from London.
Jyotsna's Tamil cinema connection dates back to films such as `Vadamaalai,'`Sri Rama Jayam' and `Bhagavathipuram Railway Gate' - her mother Saroja was the heroine of these yesteryear films. Saroja is now one of the producers of `Marupadiyum .'

jyothsana photo

http://entertainment.oneindia.in/popcorn/profile_photos/jyothsna-12169.jpg

gkrishna
22nd July 2014, 12:00 PM
வடைமாலை 1982
வாலி கதை வசனம்
மாருதி ராவ் இயக்கம் னு நினைவு
ஸ்ரீகாந்த் ஹீரோ
ஜெயமாருதி production
அண்ணா மெல்லிசை மன்னர் இசை
எல்லாம் ஒரே மாருதி மயம்

http://3.bp.blogspot.com/-WD7tgG9VDas/T2r8mfxhb4I/AAAAAAAAD7c/6TQRpzLfHJ4/s400/HANUMAN%2BKARUMBBU%2BCBE7.jpghttps://encrypted-tbn2.gstatic.com/images?q=tbn:ANd9GcRtg8_UMR6xMsx__IbSWNlL189r1BY9Z 2vjWBkuplEGaRMnY8Wy6Q

http://www.inbaminge.com/t/v/Vadai%20Malai/

chinnakkannan
22nd July 2014, 12:52 PM
கோ..கோ..கோரஸ் பாட்டுக்கள் கிண்டல் கலந்தவை -கொஞ்சம் யோசித்ததில்...

குருவிகளா குருவிகளா காலேஜ் குருவிகளா..

அப்றம்..

கல்லூரி ராணிகாள் உல்லாசத் தேனிகாள்..(பாக்ய லஷ்மி)
பறக்குது பறக்குது பின்னாலே
பச்சைப் புடவை தன்னாலே
இழுக்குது எங்களை ஓரத்திலே
ஏறி வரட்டுமா ஓடத்திலே ( காதலெனும் ஆற்றினிலே - கைராசி)

மீட்மி டுநைட் இன் தெ மூன்லைட் (வி.வீ)

என்ன வேணும் நில்லு பாமா ( கு.தெ)

ஒன் ஹாட் சம்மரு மார்னிங்க்
எ கேர்ள் வெண்டு வாக்கிங்க்..(இன்னா படம்)

காளையிருக்கு செவலையிருக்கு
கன்னுக்குடடி எங்கய்யா
அந்தக் கன்னுக்குட்டிய விட்டுப் பாரு
கட்டி ப்பிடிப்பேன் நானய்யா (பழனி)

பைத்தியமே கொஞ்சம் நில்லு
வைத்தியரிடம் போய்ச் சொல்லு (வ வ)

ம்ம் இவை எல்லாம் பிடித்தவை தான் என்றாலும்..கபக்கென்று கலர் கலர் உடைகளில்
தபக் தபக் எனக் குதித்து நடனமிடும் மாதுவும் பாட்டும்.. என்னவாக்கும் அது..

தாளம் தீம்த தீம்த நேரம் தீம்த தீம்
ராகம் தாளம் மோகனம்... (ப்கலில் ஒரு இரவு..:) )

gkrishna
22nd July 2014, 03:25 PM
ஒளிமயமான எதிர்காலம் 1977
சித்ரமஹால் கிருஷ்ணமுர்த்தி இயக்கம்
விஜயபாஸ்கர் இசை
விஜயகுமார் ஸ்ரீப்ரிய நடித்து வெளிவந்த கருப்பு வெள்ளை

படம் பெரிசா எதுவும் கிடையாது.ஆனால் விஜயகுமார் இடுப்பில் துண்டு கட்டி கொண்டு உட்கார்ந்து இருப்பதும் ஸ்ரீப்ரிய அவருக்கு முதுகு தேய்த்து விடுவது போல் ஒரு போஸ்டர் நல்ல நினைவு -குலவிளக்கு-

ஆனால் விஜயபாஸ்கர் இசையில் பாடல்கள் மிகவும் அருமை

1.பாலா வாணி குரல்களில் ஒரு சூப்பர் மெலடி சார்

'மாமதுரை நாட்டினில் வைகை கரை காற்றினில்
காதல் பட்டொன்று கேட்டேன்
கண்கள் கூடுவதை பார்த்தேன் , ஆஹ்
கண்கள் கூடுவதை பார்த்தேன்

வாணி:தோற்றம் -பொன்னூஞ்சலாட்டம்
தோகை கொண்டாடும் தோட்டம்
ஆடை - மேல் நாட்டு ஜாடை
ஆசை -தீராத போதை
பாலா : மாந்தளிர் மஞ்சள் பல்லாக்கு
மயங்கிது நெஞ்சில் என்னோடு
மை விழி தான் சொல்லும் தூது - ஆஹ் ஆஹ்
மை விழி தான் சொல்லும் தூது

(இந்த 'மைவிழி' தான் பாலா வாயில் என்னமா கரையுது)

பாலா : கோவில் சிற்ப்பங்கள் எல்லாம்
நேரில் நின்றாட கண்டேன்
ஆடும் பண்பாடு கண்டேன்
நானும் பண் பாடுகின்றேன்

(இந்த 'பண்' ல ஒரு அழுத்தம் )

வாணி : பொன்னியின் வெள்ளம் கண்டாயோ
பூவையின் உள்ளம் கண்டாயோ
யாருக்கு யார் சொல்ல வேண்டும்
யாருக்கு யார் சொல்ல வேண்டும்

(இதில் வாணி வேண்டும் என்ற வார்த்தையை இரண்டாவது தடைவை
சொல்லும்போது ஒரு 'ஹும்' என்ற அனாயாச உச்சரிப்பு)

பாலா : ஏதோ நான் சொல்ல வந்தேன்
எண்ணம் முள்ளாக நின்றேன்
வாணி : நானும் ஓடோடி வந்தேன்
நாணம் தள்ளாட நின்றேன்
பாலா : அச்சத்தில் வார்த்தை வராது
வாணி : ஆயினும் ஆசை விடாது
இருவரும் இணைந்து : நாம் இனி நமக்காக வாழ்வோம்
வாணி : நாம் இனி நமக்காக வாழ்வோம்

பாலா வாணி இருவரும் இளமையின் உற்சாகத்தை கொண்டு தரும் இனிய பாடல் .அதிலும் இரண்டாவது சரணம் கர்நாடக இசை போன்று புல்லாங்குழல் மிருதங்கம் ஜால்ரை கலந்து பரத நாட்டிய effect கொடுக்கும்

2.வாணியின் சோலோ பாடல்

குடும்பத்தின் தலைவி குலவிளக்கு
கொண்டவன் மனதில் சரவிளக்கு
ஒளிமயமானது இல்லறமே

காலையில் எழுந்ததும் மஞ்சளில் குளித்து
கணவனின் நலன்களை பணிவுடன் முடித்து
நல்ல பெண்மணியாக
குடும்பம் நடத்திட வேண்டும்
உயர்ந்த பண்புகளை என்றும் மதித்து வரும் சிறந்த பெண்களிடம் தெய்வம் வாழாதோ

குழந்தைகள் பெறுவதும் மாண்புடன் வளர்ப்பதும்
கோதையின் குலத்துக்கு கடவுளின் பரிசு
தாய்மை கருணையின் வடிவம்
உலகம் முழுவதும் வணங்கும்
கள்ளங்கபடமின்றி பிள்ளை செல்வங்களை கொஞ்சி வளர்த்துவிடு , தெய்வம் பாராட்டும் !

3.வைஷ்ணவோ ஜனதோ -காந்தி பெருமான் முழு பாடல்
விஜய பாஸ்கர் அடக்கி வாசித்து பாடல் வரிகளுக்கு முக்கியத்துவம்
கொடுத்து

http://www.inbaminge.com/t/o/Oli%20Mayamana%20Ethirkalam/

chinnakkannan
22nd July 2014, 04:06 PM
//ஒரு போஸ்டர் நல்ல நினைவு -குலவிளக்கு-// :) ம்ம்

வைஷ்ணவ ஜனதோ மட்டும் கேட்டதாக நினைவு..மற்ற பாடல்கள் கேட்ட்தில்லை..எங்கே இருந்து பிடிக்கிறீர்கள் க்ருஷ்ணா ஜி..

chinnakkannan
22nd July 2014, 04:22 PM
சின்ன வயசில் மணல் வீடு கட்டாத சிறுவர்கள் உண்டா என்ன.. இந்தக் காலச் சிறுவர்களுக்கு வேண்டுமானால் தெரியாதிருக்கலாம்..அப்போ..அந்தக் காலத்தில்.. ம்ம் அந்த வெள்ளை மனச் சூழ் நிலையில் விளையாடிய விளையாட்டுக்கள்..ம்ம் எண்ண எண்ண இனிக்கத் தான் செய்யும்..அதுவே வளர்ந்த பின் காதலாய் மாறினால்..ம்ம் அழகாய்த் தானிருக்கும்..

அதே போல இந்தப் பாடலும்..சோதனைக்கென்றுஎன்னிடம் சோகப் பாடல் தான் இருக்கின்றது..

படம்..வாழ்க்கை வாழ்வதற்கே
பிபிஎஸ் பிஎஸ்..

ஆத்தோரம் மணலெடுத்து அழகழகாய் வீடு கட்டி...
தோட்டமிட்டு செடி வளர்த்து ஜோராக குடியிருப்போம்...


வெய்யிலிலே குளிர்ந்திருக்கும் வேணியிலே கொதியிருக்கும்...
கையகலம் கதவிருக்கும் காற்றுவர வழியிருக்கும்...

வழி மேலே விழியிருக்கும் வந்தவர்க்கெல்லாம் இடமிருக்கும்...
ஆத்தோரம் மணலெடுத்து அழகழகாய் வீடு கட்டி...
தோட்டமிட்டு செடி வளர்த்து ஜோராக குடியிருப்போம்...
மணிக் கதவை திறந்து வைப்போம் மாமனுக்கு விருந்து வைப்போம்...
அணி மணியாய் எடுத்து வைப்போம் கை நிறையா தேன் கொடுப்போம்...
நிலவு வரும் நேரத்திலே நிம்மதியாக தூங்க வைப்போம்...

ஆத்தோரம் மணலெடுத்து அழகழகாய் வீடு கட்டி...
தோட்டமிட்டு செடி வளர்த்து ஜோராக குடியிருப்போம்...
பத்து விரல் மோதிரமாம் பவள மணி மாலைகளாம்...
முத்து வடம் பூச்சரம்மாம் மூக்குத்தியாம் தோடுகளாம்...

அத்தை அவள் சீதனமாம் அத்தனையும் வீடு வரும்...
கல்யாணம் ஊர்வலமாம் கச்சேரி விருந்துகளாம்...

மாப்பிள்ளையின் அம்மாவும் மனம் குளிர வருவாராம்..
அம்மாவின் கால்களிலே அன்புடனே வணங்கிடுவோம்...

ஆத்தோரம் மணலெடுத்து அழகழகாய் வீடு கட்டி...
தோட்டமிட்டு செடி வளர்த்து ஜோராக குடியிருப்போம்...

படத்தைப் பற்றி எனக்குத் தெரியாதே..

gkrishna
22nd July 2014, 05:07 PM
//ஒரு போஸ்டர் நல்ல நினைவு -குலவிளக்கு-// :) ம்ம்

வைஷ்ணவ ஜனதோ மட்டும் கேட்டதாக நினைவு..மற்ற பாடல்கள் கேட்ட்தில்லை..

சின்ன கண்ணன் சார்

இந்த 'மாமதுரை நாட்டினில்' பாடல் சிலோன் ரேடியோ ஹிட் சார்
இதற்கு ஒளி வடிவம் கிடைக்கவில்லை .

இந்த பாட்டு எனக்கு கொஞ்சம் பிடித்த பாடல்களில் ஒன்று
காரணம்
பாலா வாணி combination .
romance கொஞ்சம் ஜாஸ்தி
இதே மாதிரி இன்னும் ஒன்னு 'அன்பு மேகமே '
பொதுவாகவே விஜய பாஸ்கர் இசை பார்த்தீர்கள் என்றால் இடை இசை (interlude ) நன்றாக இருக்கும். இதில் western ஆரம்பித்து பரத நாடிய classical கொண்டு சென்று இருப்பார் .
இரண்டாவது வாணியின் ஒரு வித சோகம் கலந்த இளமை குரல்
பிறகு 80க்கு முந்திய ஸ்ரீப்ரிய கொஞ்சம் வெகுளி கலந்த ரோஷகாரி அலமேலு

Richardsof
22nd July 2014, 05:26 PM
21-10-1968

CHENNAI - THEATRES- AND MOVIES

JUST RECOLLECT OLDEN DAYS.

http://i58.tinypic.com/25jyxvt.jpg

gkrishna
22nd July 2014, 05:44 PM
super esvee sir

now how many theaters are left at chennai sir

Richardsof
22nd July 2014, 05:44 PM
http://i60.tinypic.com/2cqcjg2.jpg

Richardsof
22nd July 2014, 05:47 PM
http://i59.tinypic.com/2h7l1r8.jpg

gkrishna
22nd July 2014, 05:47 PM
ரொம்ப டெம்ப்ட் பண்ணுறீங்க எஸ்வி சார்
பிட் பிட் அ போடுறீங்க
ஆனால் எல்லாமே சூப்பர் ப்ளீஸ்

Richardsof
22nd July 2014, 05:58 PM
இனிய நண்பர் திரு கிருஷ்ணா சார்

உங்களின் பாராட்டுக்கு நன்றி . எனக்கு கிடைத்த சில பழைய சினிமா இதழ்கள் , பழைய பேப்பர் விளம்பரங்கள்
பதிவிட்டு வருகிறேன் . இன்னும் முயற்சி செய்கிறேன் கிடைத்தவுடன் பதிவிடுகிறேன் .
சென்னை நகரில் தற்போது மஹாலக்ஷ்மி - பிராட்வே - சரவணா - அகஸ்தியா - நூர்ஜெஹான் - ஸ்ரீனிவாசா -சாந்தி
காசினோ மட்டும் உள்ளது .

madhu
22nd July 2014, 06:06 PM
esvee sir.. கிருஷ்ணவேணி தியேட்டர் கூட இன்னும் இருக்கிறது.

Richardsof
22nd July 2014, 06:07 PM
THANKS MADHU SIR
http://i60.tinypic.com/2v8iiwh.jpg

gkrishna
22nd July 2014, 07:31 PM
thanks esvee sir and madhu sir

rajeshkrv
22nd July 2014, 08:29 PM
சத்யன் மிகச்சிறந்த நடிகர்

தமிழில் எல்.விஜயலெக்*ஷ்மியின் முதல் பட ஹீரோ அவர் தான்

இதோ அன்பு மனம் கனிந்த பின்னே


http://www.youtube.com/watch?v=BAWmheI4YhU

பல நல்ல மலையாள படங்கள் இவர் நடிப்பில் உண்டு

எனக்கு பிடித்த ஒரு பாட்டு இவரும் ராகினியும் நடித்தது
ஏ.எம்.ராஜாவுடன் இசையரசி .. தேவராஜன் மாஸ்டரின் இசை,வயலார் ராமவர்மாவின் வரிகள் .. என்ன அருமையான கூட்டணி


http://www.youtube.com/watch?v=HpuhRjdBNbo

rajeshkrv
22nd July 2014, 08:31 PM
வாசு சார் ஸ்ரீராம ஜெயம் பாடலுக்கு நன்றி. அருமையான பாடல்

வடைமாலை வாலி ஐயாவின் அற்புத படைப்பு. பூர்ணம் விஸ்வ நாதன் அவர்கள் வடைமாலை பற்றியும் அதில் வாலி அவருக்கு ஏற்படுத்திய பாத்திர படைப்பை பற்றியும் சிலாகித்து கூறுவார்.


http://www.youtube.com/watch?v=qlov6T68ytk

vasudevan31355
22nd July 2014, 10:38 PM
ஆத்தோரம் மணலெடுத்து அழகழகாய் வீடு கட்டி...
தோட்டமிட்டு செடி வளர்த்து ஜோராக குடியிருப்போம்...

படத்தைப் பற்றி எனக்குத் தெரியாதே..

சின்னக் கண்ணன் சார்,

ஆத்தோரம் மணலெடுத்து அழகழகா வீடு கட்டி விட்டீர்கள். சூப்பர்.

படம் வாழ்க்கை வாழ்வதற்கே. இசை மெல்லிசை மாமன்னர்கள்.

நீங்கள் கொடுத்திருந்தது ஜெமினி, சரோஜாதேவியின் சோகம். ஆனால் வரிகள் வேறு.


https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=l0zQBYfbyp8

இதுவே இவர்கள் சிறுவர்களாய் இருக்கும் போது பாடும் பாடல் இன்னும் சூப்பர். சிறுவர்களுக்கு குரல் பின்னணி லதா, ரமாமணி

குட்டி பத்மினிக் குழந்தையின் கொள்ளை அழகும், அற்புதமான முக பாவங்களும் அருமை. அதுவும் மும்தாஜ் பேகமாக அட்டகாசம்.


https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=Ik38lU80tMg

vasudevan31355
22nd July 2014, 11:01 PM
சின்னக்கண்ணன் சார்!

நீங்கள் 'ஆத்தோரம் மணலெடுத்து' வீடு கட்டினீர்கள்.

நான் இப்போது 'சின்ன சின்ன வீடு' கட்டப் போகிறேன்.

உங்கள் பாட்டுக்கு முன்னோடி இந்த 'மருமகள்' படப் பாட்டு. (1953) இசை சி.ஆர்.சுப்பாராமன், ஜி.ராமநாதன். அண்ட் விஸ்வநாதன் பார்ட்டி.

http://www.thehindu.com/multimedia/dynamic/01307/23cp_Marumagal_jpg_1307346f.jpg

'சின்ன சின்ன வீடு கட்டி
சிங்கார வீடு கட்டி
ஒன்னாக ஆடினோம் முன்னாலே
நமது சொந்தம் என்னாலே
போவதோ பொன்னாலே'

பத்மினியும் என்.டி .ராமாராவும் பிரிவில் ஏங்கித் தவித்து பாடும் பாடல்.
(வரதட்சணைப் பிரச்னை!)

பத்மினி சோகம் நம் கண்களில் கண்ணீரை வரவழைத்து விடும் சார். மனம் இப்பாடலைக் கேட்டு பாரமாகி விடும்.


https://www.youtube.com/watch?v=1YaQq1s8i5Q&feature=player_detailpage

குழந்தைகளாக இருக்கும் போது சந்தோஷமாக அதே பாடலை குதூகலத்துடன் பாடிக் களிப்பதையும் பாருங்கள்.

உங்க வீட்டுக் குழந்தை 'குட்டி' பத்மினி என்றால் என் வீட்டுக் குழந்தை சச்சு. (அப்போது 'பேபி' சரஸ்வதி)

ஆனால் பாடல் நான்கும் நம்முடையவை.


https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=ELY8drmBaQY

vasudevan31355
22nd July 2014, 11:07 PM
கிருஷ்ணா சார்,

சூப்பர் ஹிட் பாடலை சூப்பராக அளித்ததற்கு நன்றி.

'மாமதுரை நாட்டினில் வைகை கரை காற்றினில்
காதல் பட்டொன்று கேட்டேன்
கண்கள் கூடுவதை பார்த்தேன் , ஆஹ்
கண்கள் கூடுவதை பார்த்தேன்


https://www.youtube.com/watch?v=kq1_q0j9z4k&feature=player_detailpage

vasudevan31355
22nd July 2014, 11:14 PM
ஆவண வள்ளல் வினோத் சார்

அகம் குளிர்ந்தது.

21-10-1968

chennai - theatres- and movies

ஆவணம் அருமை. அதே போல பேசும் படமும். நான் பிறந்த வருடத்தின் இதழ். எனவே மறக்க இயலாது. நன்றிகள் பல.
ஜெயாவின் லக்ஸ் விளம்பரம் ஷீலா சத்யனைப் பற்றி சொன்னதை படிக்க விடாமல் செய்கிறது. நான் பொறுப்பல்ல.:-)

vasudevan31355
22nd July 2014, 11:19 PM
ராஜேஷ் சார்,

நன்றி!

'அன்பு மனம் கனிந்த பின்னே' அசத்தல். இதுவும் என் டெஸ்க்டாப்பில் இருக்கும் பாடல்.

மலையாள 'பாரியா'வை இன்னும் பார்க்கவிலை. பார்த்து ரசித்து விட்டு எழுதுகிறேன்.

chinnakkannan
22nd July 2014, 11:45 PM
வாசு சார்.. மிக்க நன்றி..யா.. அந்த சோகப் பாட்டு வீட்டில் சி.டியில் தான் இருந்தது.. சந்தோஷ வரிகள் கிடைக்கவே போட்டு விட்டேன்..
அதே சமயம்..ஒற்றுமை என்னவெனில் சின்னச் சின்ன வீடு கட்டிப் பாட்டு மனசுல ஒலிக்க.. வரி மட்டும் வராமல் - படம் படத்தில் நடித்தவர்களும் நினைவுக்கு வராமல் சற்றே குழம்பியிருக்குங்கால் (எவ்ளோ தமிழ்) தாங்கள் டபக்கென்றுஇட்டதை ப் பார்த்த சந்தோஷத்தை என்னென்று சொல்ல(ஹப்பாடி வாக்கியத்தை முடிச்சாச்சு :) )

chinnakkannan
22nd July 2014, 11:57 PM
ஹூம்.. சே.. நாம கொஞ்சம் கமர்ஷியலா இருக்கோமே...அந்தக் கால லலிதாவில் இருந்து இந்தக் கால அம்லா பால் ம்ஹீம்..லேட்டஸ்டா அழகு சுரபி வரை நினச்சுண்டு இருக்கோமே..மக்கள்ஸ்லாம் தெரியாத அழகுப் பாட்டா எடுத்து விட்டுக்கொண்டு இருக்கிறார்களே என நினைத்து யூட்யூபில் ஓல்ட் டமில் மூவீஸ் என சர்ச் செய்து வந்த விடைகளில் கண்ணோட்டினால்..இது என்ன..பார்க்காத படம்..கேட்ட பெயர்..ஒரு நல்ல பாட்டு இருக்குமே எனப் படத்தைப் போட்டால்...

ஒல்லி ஒல்லி பாலாஜி அவருக்கு ஒரு வைஃப்.. ஒரு பெண்குழந்தை என ஆரம்பிக்கும் கதை ஆரம்பத்திலேயே தீ விபத்தில் மனைவி இறக்க குழந்தையை விட்டு நான்கு வருடங்கள் வெளியூரில் வேலை பார்க்கும் பாலாஜியின் கண்களில் தட்டுப் படும் இளமைக் கனல் கொண்ட காரிகை..வேறு யார் பெங்களூர் பேரட் சர்ரோ தான்..பின் திருமணம் செய்து கொண்டு இருவரும் ஏதோ சண்டையிட்டு.(கொஞ்சம் ஓட்டி ஓட்டிப் பார்த்தேன்) பிரிந்து - கடோசியில் குழந்தையைக் காப்பாற்றி வாழ்க்கையில் இணைகிறார்கள்..

பாலாஜியின் நடனத்துடன் சீர்காழியின் குரலில் -சிலோனில் கேட்டபாட்டு-

இன்பமெங்கே இன்பமெங்கே என்று தேடு
அது எங்கிருந்த போதும் அதை நாடி ஓடு.

துள்ளல் பாட்டு தானே.

chinnakkannan
22nd July 2014, 11:59 PM
அச்சோ..படத்தோட பேரிலேயே கதையும் இருக்கே..படம் மனமுள்ள மறுதாரம் :)

ராஜேஷ் அன்பு மனம் கனிந்த பின்னேக்கு மிக்க நன்றி :)

Gopal.s
23rd July 2014, 04:29 AM
power packed ஹம்சாநந்தி ராகத்தில் என் பிரிய பாடல். ஆரம்பமே களை கட்டி ,சங்கதிகள் பாடலை தூக்கி விடும்.(நினைத்தால் போதும் இதே ராகம்)மணாளனே மங்கையின் பாக்கியம்.அப்போது தெலுங்கு தமிழ் ஐக்கியம்.மதராஸ் ஸ்டேட் .அதி மதுரா அனுராதா ஜீவிதமே சுக போகம் என்று தமிழ்,தெலுங்கு,ஹிந்தி எல்லாவற்றுக்கும் ஒரே பாடலையே உபயோகிக்கலாம் போல. தேசுலாவுதே என்றால் என்ன ராகவேந்தர் சார்,சாரி நாயுடு காரு விளக்கவும்.

https://www.youtube.com/watch?v=zTXvHuwu6g4

Gopal.s
23rd July 2014, 04:55 AM
வினோத் சார் ,

பழைய தியேட்டர் லிஸ்ட் அருமை. கிட்டத்தட்ட சென்னையின் அத்தனை திரையரங்குகளிலும் படம் பார்த்திருக்கிறேன் 1975 முதல் 1992 முடிய.hostel(A .C .College of Technology ) இல் இருந்த போது தினம் ஒரு படம். சிவாஜி செட் ஒன்று,அப்போதைய புது பட ரசிகர் செட் ஒன்று,ஹிந்தி கும்பல் ஒன்று என்று மூன்று வித செட்களிலும் நான் மெம்பர்.

இதை தவிர குளு குளு காளையர் சங்க தலைவர்,செயலாளர் ,பொருளாளர்.(A C Youngsters ' club ).சந்தா சேகரித்து பர்மா பஜார் சென்று எழுத்தின் வாசனையே படாத கலர் படம் போட்ட அந்நிய புத்தகங்கள் வாங்கும்(circulation&storage custody) பொறுப்பு. வாங்கி வந்தவுடன் கதவை தாள் போட்டு (லேப் கட் அடித்து)மற்றோர் கை படு முன் அந்த புத்தகங்களை மேய்ந்து விடுவேன்.மோப்பம் பிடித்து வரும் நண்பர்கள் கதவை உடைப்பது போல தட்டி டேய் புஸ்தகத்தை வெறியில் கிழிச்சிடாதே என்று கத்தி செல்வார்கள்.(ஒரு நண்பர் "கைலிக்குள் ஈரம்" என்று கதவில் சாக்பீசால் எழுதி சென்றது நினைவில்).

இந்த சங்கத்தின் முக்கிய பணிகள் .1) புத்தகங்கள் மாதம் ஒரு முறை.(2)சென்னையின் முக்கிய திரையரங்குகளில் பிட் படம் விவரம் சேகரித்து ,தலைமையேற்று தியேட்டர் விஜயம்.(once more கேட்டு operator களை அதிரடித்துள்ளோம்).(3) அது தவிர அவளோட ராவுகள் ,ஜம்பு (பரங்கி மலை ஜோதி) போன்ற படங்களின் தகவல் சேகரித்து முதல் ஷோ பார்த்து விடுவது .("முக்கிய " காட்சிகள் கட் ஆகு முன்பு)இளைய தலைமுறை தியாகராஜ தியேட்டரில் காட்சிகள் கட் ஆகு முன்பே பார்த்தோம்.

இப்போது மாதிரி பள்ளியிலேயே லேப் டாப் வசதிகள் இருந்திருந்தால், இவ்வளவு துன்பங்கள், தொல்லைகள் ,பொறுப்புகளுடன், ஒரு மாபெரும் இயக்கத்தை தலைமை தாங்கி வழி நடத்தி செல்லும் அவசியம் நேர்ந்திருக்காது. பள்ளியிலேயே உட்கார்ந்த இடத்தில் பிரியா அஞ்சலி ராய். ஹ்ஹூம் ..... இன்னும் இருபத்தைந்து வருடம் தள்ளி பிறந்து தொலைச்சிருக்கலாம்.

Gopal.s
23rd July 2014, 05:05 AM
சுசிலா மேடம் பாடிய எனது ஐம்பதுகளின் விருப்ப பாடல்.ஆதி நாராயண ராவ் ஒரு அற்புதமான classical composer .(அடுத்த வீட்டு பெண் புகழ்)
மணாளனே மங்கையின் பாக்கியம்.

https://www.youtube.com/watch?v=8a91oS0B_B4

Gopal.s
23rd July 2014, 05:43 AM
72 இல் வந்த மாப்பிள்ளை அழைப்பு என்ற படத்தின் விசேஷங்கள்.

மருத நாட்டு வீரன் இயக்குனர் டி.ஆர்.ரகுநாத் (கார்த்திக் ரகுநாத் அப்பா) பாதை மாறி பயணம் செய்தார்.

படம் வெற்றி பெறா விட்டாலும் (1972),மெல்லிசை மாமணி குமாரின் பாடல்கள் படு ஹிட்.

விஜயலலிதா முழு கதாநாயகி வேஷம்.

இந்த படத்தில் ஆள தொட்டு தோள தொட்டு என்ற என் favourite பாடலை போட்டாயிற்று.

இப்போது கார்த்திக் சாரின் நட்புக்காக ,ஒரு விருப்பமில்லா காரியம் செய்கிறேன்.(தியாகம்!!!!)


https://www.youtube.com/watch?v=b0uYnVjZ498

Richardsof
23rd July 2014, 05:59 AM
டியர் கோபால்

உங்கள் தியாக உணர்வை பாராட்டி உங்கள் தலைவியின் பாடலை பரிசாக தருகிறேன் . ஏற்று கொள்ளவும் .

http://youtu.be/G9g29W9VYBk

RAGHAVENDRA
23rd July 2014, 06:50 AM
மணலெடுத்து வீடு கட்டிய பட்டியலில் நம்ம தலைவர் படமும் உண்டே..

நல்ல வீடு திரைப்படத்தில் பால சிவாஜி பாடும் பாட்டு நல்ல நல்ல வீடு கட்டி நாம் மகிழ்வோமே... இந்தப் பாடல் எங்கும் கிடைக்கவில்லை.. ஏ.எம்.ராஜா பாடியது.

அது வரை நல்ல வீடு படத்தில் வேறொரு இனிமையான பாடல் ஏ.பி.கோமளா பாடிய கோவிந்தன் குழலோசை கேட்டு பாடலைக் கேட்டு இன்புறுவோம்.

http://www.inbaminge.com/t/n/Nalla%20Veedu/

RAGHAVENDRA
23rd July 2014, 06:52 AM
பொங்கும் பூம்புனல்

இன்று நாம் காணவிருக்கும் பாடல் சிங்காரி படத்தில் இடம் பெற்ற ஒரு சாண் வயிறே இல்லாட்டா இந்த உலகத்தில் ஏது கலாட்டா.. பாட்டின் பல்லவியே சொல்லி விடும் பாடலைப் பற்றி..

அர்த்தமுள்ள வரிகள் எந்தக் காலத்திற்கும் பொருந்தும் பாடல்

http://www.youtube.com/watch?v=5k9AbTRHmmc

RAGHAVENDRA
23rd July 2014, 06:59 AM
தேர்ந்த நடனக்கலைஞர் நடிகர் திலகம் என்பதற்கு அத்தாட்சியான பல பாடல் காட்சிகளில் இது குறிப்பிடத் தக்கதாகும். தூக்குத் தூக்கி திரைப்படத்தில் இடம் பெற்ற குரங்கிலிருந்து பிறந்தவன் பாட்டு, படம் வெளியான காலகட்டத்திலேயே பட்டி தொட்டியெங்கும் பேசப்பட்டது. பாடலின் பல கட்டங்களில் நடிகர் திலகம் நீண்ட நடனப் பகுதிகளை ஒரே ஷாட்டில் ஆடி நடித்திருப்பது பிரமிக்கத் தக்கதாகும். ஒரு திரைப்படத்தின் அனைத்து அம்சங்களையும் தெரிந்து வைத்துக் கொண்டும் அடக்கமாக வாழ்ந்தவர். பாருங்கள். கேளுங்கள்.

http://youtu.be/dUkEdNdxvoU

RAGHAVENDRA
23rd July 2014, 07:04 AM
பொங்கும் பூம்புனல்

நாஸ்திகன் திரைப்படத்தில் திருச்சி லோகநாதன் பாடிய பாடல் மாநில மேல் சில மனிதர்கள் மாறுவதேனையா.... கு.மா.பா இயற்றி சி.ராமச்சந்திரா இசையமைத்த பாடல். இது ஒரு மொழிமாற்றப் படம்.

http://www.youtube.com/watch?v=vAuyp_bEwyk

RAGHAVENDRA
23rd July 2014, 07:08 AM
பொங்கும் பூம்புனல்

நாட்டிய தாரா தெலுங்குத் திரைப்படத்தின் தமிழாக்கமும் அதே பெயரில் வெளிவந்தது. கண்டசாலா பாடிய துள்ளித் துள்ளி எங்கே போறாய் பாட்டு சிலோன் ரேடியோவில் மதிய வேளைகளில் 3 மணி வாக்கில் ஒலிபரப்புவார்கள். இன்றும் இனிக்கும் பாடல்.

http://www.youtube.com/watch?v=BOjYVutwaoQ

தெலுங்கு வீடியோவில் தமிழ் பாடலை இணைத்து தந்துள்ளார் நண்பர். அவருக்கு நமது பாராட்டுக்கள்.

rajeshkrv
23rd July 2014, 09:19 AM
அருமையான பாடல்கள் வாசு சார், கோபால் சார், ராகவேந்திரா சார்.

தேசுலாவுதே - தேஜஸ் அல்லது நல்லது என்று பொருள் என நினைக்கிறேன்

சரி ஒரு அருமையான நகைச்சுவை பாடலை கேட்டு கண்டு மகிழ்வோம்

ஆரவல்லி திரையில் ஜி.ராமனாதனின் இசையில் சீர்காழியாரும் திருச்சி லோகனாதனும் இசைத்த அழகான பாடல்
திரைல் கா கா செளந்தர், சட்டாம்பிள்ளை வெங்கட்ராமன், சி.எல்.ஆனந்தன்

பழக்கமில்லாத கழுதைகிட்ட கொஞ்சம் பார்த்து கறக்கனும் பால


http://www.youtube.com/watch?v=gSuPhqedWvU

gkrishna
23rd July 2014, 09:33 AM
அருமையான பாடல்கள் வாசு சார், கோபால் சார், ராகவேந்திரா சார்.

தேசுலாவுதே - தேஜஸ் அல்லது நல்லது என்று பொருள் என நினைக்கிறேன்

சரி ஒரு அருமையான நகைச்சுவை பாடலை கேட்டு கண்டு மகிழ்வோம்

பழக்கமில்லாத கழுதைகிட்ட கொஞ்சம் பார்த்து கறக்கனும் பால

super rajesh sir

vasudevan31355
23rd July 2014, 10:09 AM
இன்றைய ஸ்பெஷல் (3)

'அமர்ஜோதி' மூவிஸ் அளித்த 'உயிரா மானமா' என்ற படத்தின் ஒப்புயர்வில்லாத பாடல். டி.எம்.சௌந்தரராஜன் மற்றும் சுசீலாவின் இணைவில் வந்த மிகச் சிறந்த பாடல் வரிசைகளில் இப்பாடலும் ஒன்று.

http://rymimg.com/lk/f/l/d9ea44bd40617517761d35d524269b9a/4430891.jpg

நடிக, நடிகையர்கள்: ஜெய்சங்கர், முத்துராமன், நம்பியார், நாகேஷ், 'ஞானஒளி' விஜயநிர்மலா, கிருஷ்ணகுமாரி, டி.கே.பகவதி. எஸ்.வரலஷ்மி

பாடல்கள்: கண்ணதாசன்

இசை: மெல்லிசை மன்னர். உதவி: கோவர்த்தனம்

கதை, வசனம், டைரக்ஷன்: 'இயக்குனர் திலகம்' கே.எஸ். கோபாலகிருஷ்ணன்.

ஊட்டி மலை ஹேர்பின் வளைவுகளில் மோட்டார் பைக்கில் ஜெய்சங்கரும், அவருடன் அவர் தங்கை மல்லிகாவும் பாடி வரும் பாடல். (இப்படத்தில் ஜெய்க்கு 'பொசுக் பொசுக்' என்று கோபம் வந்து எல்லோரையும் 'பொட் பொட்'டென்று அடித்து விடுவார்) மல்லிகா அதிகம் தெரியாத நடிகை. ஆனால் நன்றாக முகபாவங்கள் காட்டுவர்.

படம் டைட்டில் முடிந்தவுடனேயே இப்பாடல் தொடங்கும். படம் பார்க்கும் நமக்கு ஜெய்யும், மல்லிகாவும் ஜோடியோ என்று தோன்றும். படத்தில் இந்த ஜோடியைப் பார்க்கும் 'லூஸ்' மோகன் கோஷ்டியும் அப்படி தப்பாக நினைத்து ஜெய்யிடம் சொல்லப் போக கோபத்தில் ஜெய் நாங்க 'அண்ணன் தங்கைடா' என்று சொல்லி அடிக்கும் போதுதான் நமக்கே இவர்கள் அண்ணன் தங்கை என்று தெரியும். (கொஞ்சம் நெருக்கத்தைக் குறைத்திருந்தால் இந்த சந்தேகம் எழுந்திருக்க வாய்ப்பில்லை)

அண்ணன் தங்கை டூயட் என்று கார்த்திக் எழுதுவாரே! அம்மாதிரி ஒரு அருமையான பாடல். இயற்கை அழகை ரசித்து, அம்மா போல தங்களை வளர்க்கும் அண்ணி எஸ்.வரலஷ்மியை நினைத்துருகிப் பாடி வரும் பாடல்.

இப்பாடலின் உண்மையான நாயகன் யார் தெரியுமா?

http://www.tmsounderarajan.org/Images/TMS87.jpg

பாடகர் திலகம் தான். அடடா! என்ன ஒரு வாய்ஸ். என்ன ஒரு வெளிப்படுத்தும் திறமை! அத்தோடு சேர்ந்த அந்த இனிமையான ஆண்மகனுக்கென்றே முழுமை பெற்ற குரல்வளம். பாடும் தொனி,
பாடலைப் புரிந்து அவர் நன்கு அதை உள்வாங்கி பின் நூறு சதம் அதை அருமையாக பிரசெண்ட் பண்ணும் விதம், ஏற்ற இறக்கங்கள், ஜால வித்தைகள் என்று பாடல் முழுதையும் ஆக்கிரமித்து விட்டார். சுசீலா அருமை என்றாலும் சௌந்தரராஜன் வெகு ஈசியாக அவரை ஓவர் டேக் செய்து விடுகிறார்.

'பறவைகளே! பறவைகளே!'

என்று அவர் குரலை சற்றே உள்வாங்கி பின் வெளிவிடுவது அருமையிலும் அருமை.

உச்ச்கட்டம் எது தெரியுமா?

'அம்மா என்னும் தெய்வம் எம்மை' வரிகளில் அவர் 'அம்மா' என்று பாடும் போது அதில் அவர் காட்டும் அன்பு, பாசம், நேசம், பக்தி, நேர்த்தியை எப்படிப் புகழ்வது? கண்களைக் குளமாக்கும் குரல் பாவம்.

இப்பாடல் நமது நடிகர் திலகத்திற்கு அமைந்திருந்தால் எப்படியெல்லாம் இருந்திருக்கும் என்று கற்பனையில் நான் அடிக்கடி நினைத்துக் கொள்வதுண்டு.

கார்த்திக் சார் மற்று வினோத் சாரின் நட்புக்காக இப்பாடலை முழு விருப்பத்துடன் அளிக்கிறேன்.

http://i1.ytimg.com/vi/sltxkZQvcfU/maxresdefault.jpg

கொடியில் இரண்டு மலருண்டு
மலரில் பனியின் துளி உண்டு
பனியில் கதிரவன் ஒளியுண்டு
எதிலும் புதுமை மணம் உண்டு

அஹஹாஹஹாஹஹஹா
அஹஹாஹஹாஹஹஹா

கொடியில் இரண்டு மலருண்டு
மலரில் பனியின் துளி உண்டு
பனியில் கதிரவன் ஒளியுண்டு
எதிலும் புதுமை மணம் உண்டு

கோடை வரும் வெய்யில் வரும்
கோடைக்குப் பின்னே மழையும் வரும்
கோபம் வரும் வேகம் வரும்
கோபத்தின் பின்னே குணமும் வரும்

மேகங்களே மேகங்களே வான்மீதிலே
உங்கள் தேரோட்டமா
வானமென்னும் அன்னை தந்த
பாசத்தினால் வந்த நீரோட்டமா

கொடியில் இரண்டு மலருண்டு
மலரில் பனியின் துளி உண்டு
பனியில் கதிரவன் ஒளியுண்டு
எதிலும் புதுமை மணம் உண்டு

பன்னீரிலே தாலாட்டவும்
கல்யாணப் பெண்ணாக சீராட்டவும்
அண்ணன் உண்டோ தங்கை உண்டோ
எங்கள் அண்ணி என்னும்
அன்னை அங்கே உண்டோ

பறவைகளே பறவைகளே
பாசத்தை என் வீட்டில் பாருங்களேன்
அம்மா என்னும் தெய்வம் எம்மை
அரசாளும் கோலத்தை காணுங்களேன்

கொடியில் இரண்டு மலருண்டு
மலரில் பனியின் துளி உண்டு
பனியில் கதிரவன் ஒளியுண்டு
எதிலும் புதுமை மணம் உண்டு

அஹஹாஹஹாஹஹஹா
அஹஹாஹஹாஹஹஹா


http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=sltxkZQvcfU

chinnakkannan
23rd July 2014, 10:16 AM
வாவ் நல்ல பாடல்கள் நன்றி ராஜேஷ், கோபால் சார், ராகவேந்திர சார், வாசு சார்..வினோத் சார்..

தேசுலாவுதே - சன் சிங்கர் இறுதிப் போட்டியில் நாக்பூர் ஐஸ்வர்யா என்னும் சிறுமி பாடி இரண்டாவது இடத்தைப் பிடித்தார்..

கொடியில் இரண்டு மலருண்டு நல்ல பாட்டு எனக்குப் பிடிக்கும்..

பொங்கும் பூம்புனல் அசத்தல்.. நன்றி.

ம்ம் எண்ணம் போல கண்ணன் வந்தான்.. நல்ல பாட்..ஜோ.ல தான்கொஞ்சம் இடிக்குது :)

gkrishna
23rd July 2014, 10:27 AM
https://encrypted-tbn0.gstatic.com/images?q=tbn:ANd9GcSDBxyU6qx1rj-Fw1JuzMcAA9_a5LPLNRTsrdhW_xgaGAZ_EgUbRs-C9_Q

டியர் வாசு சார்
நல்லதொரு அண்ணன் தங்கை டூயட் பாடலை பதிவு செய்து உள்ளீர்கள்

இந்த படத்தின் இறுதி கோர்ட் சீன் நல்ல நினைவு .உண்டு t கே.பகவதி மற்றும் oak தேவர் .

இந்த படத்தில் தானே 'சவாலே சமாளி ' பாடகர் திலகம்,ராட்சசி குரல்களில்

பூவா தலையா,உயிரா மானமா,குலமா குணமா,கட்டிலா தொட்டிலா ,தாலியா சலங்கையா,பணமா பாசமா இப்படி இந்த டைட்டில் க்கு பிள்ளையார் சுழி போட்ட முதல் படம் இது னு நினைக்கிறன்
உறுதி செய்யவும்

vasudevan31355
23rd July 2014, 10:36 AM
https://encrypted-tbn0.gstatic.com/images?q=tbn:ANd9GcSDBxyU6qx1rj-Fw1JuzMcAA9_a5LPLNRTsrdhW_xgaGAZ_EgUbRs-C9_Q

டியர் வாசு சார்
நல்லதொரு அண்ணன் தங்கை டூயட் பாடலை பதிவு செய்து உள்ளீர்கள்

இந்த படத்தின் இறுதி கோர்ட் சீன் நல்ல நினைவு .உண்டு t கே.பகவதி மற்றும் oak தேவர் .

இந்த படத்தில் தானே 'சவாலே சமாளி ' பாடகர் திலகம்,ராட்சசி குரல்களில்

பூவா தலையா,உயிரா மானமா,குலமா குணமா,கட்டிலா தொட்டிலா ,தாலியா சலங்கையா,பணமா பாசமா இப்படி இந்த டைட்டில் க்கு பிள்ளையார் சுழி போட்ட முதல் படம் இது னு நினைக்கிறன்
உறுதி செய்யவும்

கிருஷ்ணா சார்,

வணக்கம், நன்றி!

'உயிரா மானமா'வுக்கு முன்னாடியே 'பணமா பாசமா' வந்துடுச்சின்னு நினைவு.

vasudevan31355
23rd July 2014, 10:37 AM
நல்ல பாட்..ஜோ.ல தான்கொஞ்சம் இடிக்குது :)

http://i1.ytimg.com/vi/G9g29W9VYBk/hqdefault.jpg

பயங்கரமாக ஆட்சேபிக்கிறேன் யுவர் ஆனர் :)

vasudevan31355
23rd July 2014, 10:41 AM
கிருஷ்ணா சார்/ சி.க சார்,

'நீங்கள் எமக்களித்த

நெய்வேலி

பெருமை கண்டு

எங்கள் ஊர் புகழ் பாடிய படம் சார் 'உயிரா மானமா'.

எனவே மறக்க முடியாது

gkrishna
23rd July 2014, 10:56 AM
கிருஷ்ணா சார்/ சி.க சார்,

'நீங்கள் எமக்களித்த நெய்வேலி பெருமை கண்டு

எங்கள் ஊர் புகழ் பாடிய படம் சார் 'உயிரா மானமா'.

எனவே மறக்க முடியாது

சீர்காழி ஈஸ்வரி குரல்களில்

வற்றாத பேரழகே நீராடு
eswari humming
லல்லி லல்லி ஈஈ அல்லது பல்லி யா

gkrishna
23rd July 2014, 11:13 AM
தெய்வீக உறவு 1968
இயக்குனர் சத்யம்
தயாரிப்பாளர் பி. ராமசாமி
திருமுருகன் பிக்சர்ஸ் ...
திரை இசை திலகம் மாமா இசை
http://i1.ytimg.com/vi/Ka8qd7BgYEs/movieposter.jpg

திரை இசை திலகம் மாமா இசை
ஜெய்ஷங்கர் தேவிகா நாகேஷ்

'முத்து நகை பெட்டகமோ' -tms
'அழகிய தென்னம்சோலை' - tms
'மரம் பழுத்தால் பறவை' - suseela

இந்த பாடல்களை பற்றி நாம் பேசியுள்ளோமோ

vasudevan31355
23rd July 2014, 11:13 AM
ராகவேந்திரன் சார்,

அபூர்வ பாடல்களை அள்ளித்தரும் அபூர்வ சித்தர் நீங்கள் எங்களுக்கு.

'தேக் தேரே சன்ஸார் கி ஹாலத்(து) கியா ஹோகய் பஹ்வான்
கித்னா பதல்கயா இன்சான்'

'நாஸ்திக்' (1954)இந்திப் படத்தில் பிரதீப்ஜியின் (இவர் கவி மற்றும் பாடலாசிரியரும் கூட) அருமையான குரலில் ஒலிக்கும் அற்புத பாடல்.

என்ன பாட்டு சார் அது? அப்படியே மனிதனை உலுக்கு உலுக்கு என்று உலுக்கி சொல்லமுடியாத உணர்வுக் குவியல்களை இப்பாடல் நம்முள் உண்டாக்குகிறதே!

இப்படத்தை தமிழில் 'நாஸ்திகனா'க்கி மேற்சொன்ன பாடலை பிரதீப்ஜியின் குரலை ஓரளவிற்கு ஒத்த திருச்சி லோகநாதன் அவர்களைப் பாட வைத்து 'மாநிலமே! சில மானிடரால் என்ன மாறுதல் பாரய்யா! மனிதன் மாறியதேனய்யா' தந்தார்கள்.

ஆனால் இந்திப் பாடல்தான் முதன்மை பெறுகிறது. திருச்சியாரும் குறை வைக்கவில்லை. ஆனால் இரண்டாம் இடம்தான்.

அஜித், நளினி ஜெய்வந்த் பிரதான வேடங்களில் நடித்திருந்தார். நளினி கிட்டத்தட்ட நர்கீஸை தோற்றத்தில் நினைவுபடுத்துவார்.


http://www.youtube.com/watch?v=JnrDagjqvVU&feature=player_detailpage

vasudevan31355
23rd July 2014, 11:24 AM
கிருஷ்ணா சார்,

சற்றே வயது முதிர்ந்த, குதிரைவால் கொண்டையுடன் பேண்ட், பிளாக் ஷர்ட்டில் அண்ணியார் தேவிகா. அப்புறம் சேலை.

அழகான மெலடி

நன்றி கிருஷ்ணா சார்.


அழகிய தென்னஞ்சோலை
அமைதி உலாவும் மாலை
இளையவன் ஒருவன் வந்தான்

அங்கு இயற்கையில் எதையோ கண்டான்

தொடரும் தொடரும்
இது தொடர்கதை
போலத் தொடரும்


http://www.youtube.com/watch?v=6NLstwgrHq0&feature=player_detailpage

vasudevan31355
23rd July 2014, 11:32 AM
தெய்வீக உறவு. பூவை கிருஷ்ணன் கதை வசனம். சத்யம் இயக்கம்.

'சிந்தாமல் சிரிப்பா சிங்காரப் பாப்பா' எம்.எஸ். ராஜேஸ்வரியின் குரலில்

'நான் வாழ வைப்பேன்' ராஜி குட்டிப் பெண்ணாக அண்ணியாருடன்.


http://www.youtube.com/watch?v=dUg6COlDGAs&feature=player_detailpage

vasudevan31355
23rd July 2014, 11:35 AM
'முத்து நடைப் பெட்டகமோ'

கூலிங் கிளாஸில் கார் ஓட்டியபடி சுடிதார் சகிதம் அண்ணி ஜோர். டிபிகல் ஜெய் சாங்.கிடார் ஜோர்.


http://www.youtube.com/watch?v=njBO49jSJsY&feature=player_detailpage

parthasarathy
23rd July 2014, 12:11 PM
இன்றைய ஸ்பெஷல் (3)

[size=2][b][color="blue"]'அமர்ஜோதி' மூவிஸ் அளித்த 'உயிரா மானமா' என்ற படத்தின் ஒப்புயர்வில்லாத பாடல். டி.எம்.சௌந்தரராஜன் மற்றும் சுசீலாவின் இணைவில் வந்த மிகச் சிறந்த பாடல் வரிசைகளில் இப்பாடலும் ஒன்று.

கொடியில் இரண்டு மலருண்டு
மலரில் பனியின் துளி உண்டு
பனியில் கதிரவன் ஒளியுண்டு
எதிலும் புதுமை மணம் உண்டு



வாசு சார்,

அதெப்படி எனக்கு ரொம்பவே பிடித்த பல பாடல்கள் உங்களுக்கும் பிடிக்கிறது. (இன்னும் நிறைய பேர் இந்த லிஸ்டில் உண்டு - முரளி, கோபால், கார்த்திக் இப்படி நிறைய). அதுவும் நான் எழுத வேண்டும் என்று நினைப்பதற்குள் இப்படி நீங்கள் எல்லோரும் முந்திக் கொண்டு விடுகிறீர்கள். குறிப்பாக, சில சின்னச் சின்ன விஷயங்கள், நுணுக்கங்கள், etc.

உயிரா மானமா - "கொடியில் இரண்டு மலருண்டு" எனக்கு மிகவும் பிடித்த பாடல். அதிலும், இரண்டு சரணங்கள் - TMS-இன் பாவங்கள் - மேகங்களே மேகங்களே - பறவைகளே பறவைகளே - அற்புதம். TMS ஜெய்க்கு பாடுவதற்கென்றே பிரத்தியேகக் குரல் வைத்திருப்பார் போலும் - அதுவும் இந்தப் பாடலைக் கண்ணை மூடிக் கேட்டால், ஜெய் நம் கண் முன் வருவார்!

ஜெய் சங்கர் பைக் ஓட்டிக்கொண்டே - டூப் இல்லாமல் - அற்புதம். இதே போல், அக்கா தங்கை படத்திலும் - அவருடைய அறிமுகக் காட்சியில் - பாடல் இல்லாவிட்டாலும் - பைக் ஒட்டிக் கொண்டு அதகளமாக வருவார் - தியேட்டரில் விசில் பறக்கும்!

அன்புடன்,

இரா. பார்த்தசாரதி

chinnakkannan
23rd July 2014, 12:53 PM
//அதெப்படி எனக்கு ரொம்பவே பிடித்த பல பாடல்கள் உங்களுக்கும் பிடிக்கிறது. (இன்னும் நிறைய பேர் இந்த லிஸ்டில் உண்டு - முரளி, கோபால், கார்த்திக் இப்படி நிறைய).// ஏன் நானில்லையா..எனக்கும் பிடிக்க்குமே பார்த்த சாரதி சார்.. :)

gkrishna
23rd July 2014, 01:01 PM
'முத்து நடைப் பெட்டகமோ'

கூலிங் கிளாஸில் கார் ஓட்டியபடி சுடிதார் சகிதம் அண்ணி ஜோர். டிபிகல் ஜெய் சாங்.கிடார் ஜோர்.



நன்றி வாசு சார்

ஜெய் இன் நல்ல சில பாடல்களில் ஒன்று
'முத்து நகை பெட்டகமோ '

vasudevan31355
23rd July 2014, 01:02 PM
//அதெப்படி எனக்கு ரொம்பவே பிடித்த பல பாடல்கள் உங்களுக்கும் பிடிக்கிறது. (இன்னும் நிறைய பேர் இந்த லிஸ்டில் உண்டு - முரளி, கோபால், கார்த்திக் இப்படி நிறைய).// ஏன் நானில்லையா..எனக்கும் பிடிக்க்குமே பார்த்த சாரதி சார்.. :)

அடுத்தது கிருஷ்ணா சாரா?:)

Gopal.s
23rd July 2014, 01:21 PM
வாசு சார்,

அதெப்படி எனக்கு ரொம்பவே பிடித்த பல பாடல்கள் உங்களுக்கும் பிடிக்கிறது. (இன்னும் நிறைய பேர் இந்த லிஸ்டில் உண்டு - முரளி, கோபால், கார்த்திக் இப்படி நிறைய). அதுவும் நான் எழுத வேண்டும் என்று நினைப்பதற்குள் இப்படி நீங்கள் எல்லோரும் முந்திக் கொண்டு விடுகிறீர்கள். குறிப்பாக, சில சின்னச் சின்ன விஷயங்கள், நுணுக்கங்கள், etc.

உயிரா மானமா - "கொடியில் இரண்டு மலருண்டு" எனக்கு மிகவும் பிடித்த பாடல். அதிலும், இரண்டு சரணங்கள் - TMS-இன் பாவங்கள் - மேகங்களே மேகங்களே - பறவைகளே பறவைகளே - அற்புதம். TMS ஜெய்க்கு பாடுவதற்கென்றே பிரத்தியேகக் குரல் வைத்திருப்பார் போலும் - அதுவும் இந்தப் பாடலைக் கண்ணை மூடிக் கேட்டால், ஜெய் நம் கண் முன் வருவார்!

ஜெய் சங்கர் பைக் ஓட்டிக்கொண்டே - டூப் இல்லாமல் - அற்புதம். இதே போல், அக்கா தங்கை படத்திலும் - அவருடைய அறிமுகக் காட்சியில் - பாடல் இல்லாவிட்டாலும் - பைக் ஒட்டிக் கொண்டு அதகளமாக வருவார் - தியேட்டரில் விசில் பறக்கும்!

அன்புடன்,

இரா. பார்த்தசாரதி
:banghead:

vasudevan31355
23rd July 2014, 01:43 PM
:banghead:

:shhh: :shhh: :shhh: :shhh: :shhh::


:notthatway::notthatway::notthatway::notthatway:

parthasarathy
23rd July 2014, 01:44 PM
அடுத்தது கிருஷ்ணா சாரா?:)

Idhu pol innum niraiya paer ullanar. Sorry for missing others.

Gopal saarae,

Idhukku edhukku muttikkireenga. I know... Will quickly post one of the Ravi's songs.

Regards,

R. Parthasarathy

vasudevan31355
23rd July 2014, 01:48 PM
Idhu pol innum niraiya paer ullanar. Sorry for missing others.

Gopal saarae,

Idhukku edhukku muttikkireenga.
Regards,

R. Parthasarathy

Parthasarathy sir?

Which is the best ...tal hospital in vietnam?:)

Richardsof
23rd July 2014, 02:03 PM
http://i59.tinypic.com/4lftix.jpg
என் .டி . ராமாராவிடம் நடிகர் திலகம் கோபாலை பற்றி என்ன சொல்லி சிரிக்கிறார் ?

ஜெய் சங்கர் என்றாலே கொதிக்கிறான் இந்த கோபால் . பாவம் . சற்றும் முன் மண்டையை உடைத்து கொண்டதாக தகவல் . அவனை கவனிக்கிறேன் .

chinnakkannan
23rd July 2014, 02:16 PM
அன்பான அண்ணன்..அழ்கான அண்ணி.. அந்த யுவதிக்கு வாழ்க்கை நன்றாகத் தான் இருந்தது..பட் வாழ்க்கை நன்றாக ஓடிக் கொண்டிருந்தால் யாருக்குப் பிடிக்குமோ என்னவோ விதிக்குப் பிடிக்காது..

விதியின் காதில் யாரோ ஒரு மிகச் சிறந்த ஜோக்கைச் சொல்லிவிட்டார்களோ என்னவோ..ஹஹ்ஹா எனச் சிரிக்க..அன்பான அண்ணன் ஒரு விபத்தில் மரணிக்க..அண்ணியின் விதவைக்கோலம் அந்த யுவதியின் மனதை ஏதோ ஏதோ செய்து மனதைப் பிசைய..காலத்தின் சூழ் நிலையில் அவளுக்கும் மணமாக..மணவாழ்க்கையோ அவளுக்கு ருசிக்கவில்லை..பாவம் அவளை மணந்தவன்.. அவனது சாதாரண முழியே பேந்தப் பேந்த விழிப்பது போலிருக்கும்..இப்போது இந்த அழகியின் மனதில் என்ன நினைவுகளோ..என க் குழம்பித் தவிக்கிறான்..

இந்தச் சூழலில் அந்தப் பெண்ணும் பாடுகிறாள்.. ஒரு பாட்டு.. அவனது சந்தேகத்தைக் கிளறிவிடுவது போல இருக்கிறது..அவளுக்கு ஒரு காதலன் இருக்கிறான் போல எனச் சந்தேகத்தைத் தூண்டுகிறது அதன் வரிகள்

கட்டக் கடைசியில் அண்ணிக்கு இன்னொரு கல்யாணம் செய்வித்து..பின் கணவனிடம் கூறுகிறாள்..அவள் பாடிய பாட்டு அவள் அண்ணனைப் பற்றி என்று..பின் என்ன சுபம் தான்..

*

இதுவரை நீங்கள் கேட்டது தெய்வத்தின் தெய்வம் படத்தின் சுருங்கிய கதைச்சுருக்க்க்கம்..விஜயகுமாரி, எஸ்.எஸ்.ஆர் மட்டும் நினைவில்..அல்பாயுசு அண்ணனோ..அல்லது படத்தின் ஆரம்பத்தில் கண்ணன் மன நிலையைத் தங்கமே தங்கம் (அழகான பாடல்) பாடும் அண்ணியோ நினைவில் இல்லை..

அண்ணன் தங்கைப் பாடல் என வந்ததால் இந்தப் பாட்டு நினைவுக்கு வந்தது..இதோ அந்தப் பாட்டு..

*

நீ இல்லாத உலகத்திலே நிம்மதி இல்லை உன்
நினைவில்லாத இதயத்திலே சிந்தனையில்லை சிந்தனையில்லை

காயும் நிலா வானில் வந்தால் கண்ணுறங்கவில்லை உன்னைக்
கண்டு கொண்ட நாள் முதலாய் பெண்ணுறங்கவில்லை பெண்ணுறங்கவில்லை

உன் முகத்தைப் பார்ப்பதற்கே கண்கள் வந்தது
உன் மார்பில் சாய்வதற்கே உடல் வளர்ந்தது

கன்னி மனம் உனக்கெனவே காத்திருக்குது - இந்தக்
காவல் தாண்டி ஆவல் உன்னைத் தேடி ஓடுது தேடி ஓடுது

பொன் விலங்கை வேண்டுமென்றே பூட்டிக் கொண்டேனே - உன்னைப்
புரிந்த போது சிறையில் வந்து மாட்டிக் கொண்டேனே

இன்று நாளை என்று நாளை என்று நாளை எண்ணுகின்றேனே - நான்
என்றும் உந்தன் எல்லையிலே வந்திடுவேனே வந்திடுவேனே

*

காதல் பாட்டு போலத் தான் தெரியும் பாடுகையில்..because of

கன்னி மனம் உனக்கெனவே காத்திருக்குது - இந்தக்
காவல் தாண்டி ஆவல் உன்னைத் தேடி ஓடுது தேடி ஓடுது - இந்த வரிகள்..

ம்ம் என்னவோ படத்தில் அண்ணனை நினைத்துத் தான் பாடினேன் என்று விஜயகுமாரி சொல்வதாக நினைவு..

நல்ல பாட்டு தான் இல்லை? :)

parthasarathy
23rd July 2014, 02:45 PM
அன்பான அண்ணன்..அழ்கான அண்ணி.. அந்த யுவதிக்கு வாழ்க்கை நன்றாகத் தான் இருந்தது..பட் வாழ்க்கை நன்றாக ஓடிக் கொண்டிருந்தால் யாருக்குப் பிடிக்குமோ என்னவோ விதிக்குப் பிடிக்காது..

விதியின் காதில் யாரோ ஒரு மிகச் சிறந்த ஜோக்கைச் சொல்லிவிட்டார்களோ என்னவோ..ஹஹ்ஹா எனச் சிரிக்க..அன்பான அண்ணன் ஒரு விபத்தில் மரணிக்க..அண்ணியின் விதவைக்கோலம் அந்த யுவதியின் மனதை ஏதோ ஏதோ செய்து மனதைப் பிசைய..காலத்தின் சூழ் நிலையில் அவளுக்கும் மணமாக..மணவாழ்க்கையோ அவளுக்கு ருசிக்கவில்லை..பாவம் அவளை மணந்தவன்.. அவனது சாதாரண முழியே பேந்தப் பேந்த விழிப்பது போலிருக்கும்..இப்போது இந்த அழகியின் மனதில் என்ன நினைவுகளோ..என க் குழம்பித் தவிக்கிறான்..

இந்தச் சூழலில் அந்தப் பெண்ணும் பாடுகிறாள்.. ஒரு பாட்டு.. அவனது சந்தேகத்தைக் கிளறிவிடுவது போல இருக்கிறது..அவளுக்கு ஒரு காதலன் இருக்கிறான் போல எனச் சந்தேகத்தைத் தூண்டுகிறது அதன் வரிகள்

கட்டக் கடைசியில் அண்ணிக்கு இன்னொரு கல்யாணம் செய்வித்து..பின் கணவனிடம் கூறுகிறாள்..அவள் பாடிய பாட்டு அவள் அண்ணனைப் பற்றி என்று..பின் என்ன சுபம் தான்..


அண்ணன் தங்கைப் பாடல் என வந்ததால் இந்தப் பாட்டு நினைவுக்கு வந்தது..இதோ அந்தப் பாட்டு..

*

நீ இல்லாத உலகத்திலே நிம்மதி இல்லை உன்
நினைவில்லாத இதயத்திலே சிந்தனையில்லை சிந்தனையில்லை

நல்ல பாட்டு தான் இல்லை? :)

CK சார்,

அற்புதமான பாடல். சூழ்நிலை தான் நெருடும். ஜி. இராமநாதன் அவர்கள் ஒரு சிறிய இடைவெளிக்குப் பின்னர் இசையமைத்த படம் தெய்வத்தின் தெய்வம். உண்மையில் சொற்பமான படங்களுக்குத் தான் அவர் 1961-க்கு மேல் இசையமைத்தார். திரையிசைப்பாடல்களின் பாணி பாவ மன்னிப்பு படத்திற்குப் பின்னர் மாறிப்போனது. பாவ மன்னிப்பு தான் நிஜத்தில் மெல்லிசை மன்னர்களுக்கு திருப்பு முனை - மெல்லிசை பாடல்கள் - கர்நாடகமும் இல்லாமல், கிராமிய இசையும் இல்லாமல் - ஒரு புது இசை - கொஞ்சம் மேற்கத்திய பாணி, கொஞ்சம் கர்னாடக இசை பேஸ். இதில் தாக்குப் பிடித்தவர் கே.வி.மகாதேவன் மட்டுமே. ஜி. இராமநாதன் சமாதானம் செய்து கொள்ளாத மேதை - சூழலைப் புரிந்து மெல்ல ஒதுங்கிக் கொண்டார். (கோபால் அவர்கள் பிழை இருந்தால் திருத்தலாம்.)

இன்னொரு விஷயம். இந்தப் பாடல், மற்றும் சில முக்கியமான பாடல்கள் - வாராதிருப்பானோ, ஞாயிறு என்பது கண்ணாக, etc. - பாடல்கள் படங்கள் வரும் முன்னரே வந்து - நிறைய பேர் - யாருக்கோ என்று அந்தப் பாடல்களுக்கு கற்பனை செய்து... செய்து...செய்து...

அன்புடன்,

இரா. பார்த்தசாரதி

gkrishna
23rd July 2014, 02:55 PM
https://encrypted-tbn1.gstatic.com/images?q=tbn:ANd9GcR9odmzjXMUoj882ioRjprJTh9wGNBmM dJOqhtnxW2kfeCvfwts
வாக்குறுதி (1973)
கதிர்வேல் முருகன் films எம். கே. துரை எச். பி. மணி தயாரிப்பு
ஜெய்ஷங்கர் நிர்மலா
மோகன் காந்திராமன் இயக்கம்
இன்னிசை வேந்தர்கள் சங்கர் கணேஷ் இசை
செப்டம்பர் 7 1973 வெளியீடு

இரண்டு டூயட்

'கண்ணே தேடி வந்தது யோகம் ' பாடகர் திலகம் கண்ணிய பாடகி
'பாடங்களை சொல்லிட வா பார்வையிலே '

'நல்லவர் வாக்கு நல்வாக்கு ' பாடகர் திலகம் சோலோ

http://www.inbaminge.com/t/v/Vakkuruthi/

http://www.videomix.cz/video/HS76I7cG8O0/

parthasarathy
23rd July 2014, 03:03 PM
நேற்று இரவு சென்னை மெரீனா கடற்கரைக்கு குடும்பத்துடன் சென்றிருந்தேன். மகாத்மா காந்திஜியின் சிலையருகே வந்து மேற்கு நோக்கி நடிகர் திலகத்தின் சிலையையும் பார்த்து - உடனே என் நினைவுக்கு வந்த பாடல் - இந்தப் பாடலின் விமர்சனத்தை இங்கே தரவில்லை. ஏற்கனவே எழுதியது தான் - நடிகர் திலகத்தின் திரியில் மீள் பதிவு செய்கிறேன்.

கடற்கரை சாலை என்றவுடன் நினைவுக்கு வரும் முதல் பாடல் இது தானே!

"நெஞ்சிருக்கும் எங்களுக்கு நாளை என்ற நாளிருக்கு வாழ்ந்தே தீருவோம்."

அன்புடன்,

இரா. பார்த்தசாரதி

chinnakkannan
23rd July 2014, 03:15 PM
//இன்னொரு விஷயம். இந்தப் பாடல், மற்றும் சில முக்கியமான பாடல்கள் - வாராதிருப்பானோ, ஞாயிறு என்பது கண்ணாக, etc. - பாடல்கள் படங்கள் வரும் முன்னரே வந்து - நிறைய பேர் - யாருக்கோ என்று அந்தப் பாடல்களுக்கு கற்பனை செய்து... செய்து...செய்து...// பார்த்த சாரதி சார்.. விஷீவலில் நன்றாக இருக்கும், இருக்க வேண்டும், இப்படி இருக்கலாம் என எதிர்பார்த்து ஏமாற்றமடையச் செய்தபாடல்கள் பலப்பல உண்டு.. நீங்கள் சொன்ன இரண்டும் சூப்பர் பாட்டு..விஷீவலில் ஏ ஏ மாற்றமே..

chinnakkannan
23rd July 2014, 03:35 PM
கண்ணா பத்தி நிறைய்ய்ய்ய பாட்டு இருக்கு..ஆனா இப்போ மனசுல ஓடிக்கிட்டிருக்கறபாட்டுஎன்னன்னா..

கண்ணனை நினைக்காத நாளில்லையே
காதலில் துடிக்காத நாளில்லையே
உண்ணும் போதும் உறங்கும் போதும்
எண்ணம் முழுதும் கண்ணன் தானே..

ம்ம்..கோடு கொடுத்தாச்சு...ரோடு க்ருஷ்ணா கோபாலா வாசுதேவா பார்த்தான்னு விட்டுடலாம்..:)

chinnakkannan
23rd July 2014, 06:24 PM
ஆதெளகீர்த்தனாரம்பத்திலே..

என்னன்னு கேட்டேள்னா நம்ம மொழி இருக்கே..அதுலயும் பேச்சு வழக்கு இருக்கே.. அதுலயும் இந்த பெண்கள் பேசும் வழக்கம் இருக்கே..ம்ம்

என்னன்னாக்க..ஹஸ்பெண்ட் டையும் அத்தான் தான் கூப்பிடுவாங்க..சில வீடுகள்ள அக்கா கணவரையும் அத்தான்னு தான் கூப்புடுதாக (மோஸ்ட்லி தின்னவேலி ?)

அப்படி அத்தான் பாட்டெல்லாம் கொஞ்சம் யோசிச்சாக்க..

பொசுக்குன்னு வருவது..

அத்தான் என்னத்தான் அவர் என்னைத்தான்
எப்படிச் சொல்வேனடி அவர் என்னைத்தான்
தொட்டு மெல்லத்தான் வந்து ... எப்படிச் சொல்வேனடி

என அழகுத் தோழியிடம் (பின்ன) சாவித்திரி உருகும் பாடல் தான்..

அப்புறம் என்ன..
வியாபாரம் தான்..என்னல்லாம் சொல்ல வேண்டியிருக்கு.. டபக்குன்னு கண்ணாடிக் கூழை ஊற்றி
கலர் கலரா சேர்த்து மோல்ட் பண்ணி செய்யற வட்ட வட்ட வளையலுக்கு..

அத்தானின் காதல் முத்தாமல் இருந்தால் பித்தாக செய்யும் வளையல் - சில
சித்தானை உடம்பு வத்தாமல் இருந்தால் ஒத்தாசை செய்யும் வளையல்
அன்ன நடை பின்னி வர சின்ன இடை மின்னி வர முன்னாடி வரும் வளையல் - இது
அத்தை மகள் ரத்தினத்தின் அச்சடித்த சித்திரத்தின் கையோடு வரும் வளையல்

அந்தப் பொண்ணு டபக் டபக்குன்னு நடந்தா வளையல் அவள் சிரிக்காமலேயே சிரிப்பது போல ஒலி எழுப்பி வருமாம்..அதக் கேட்டு அத்தானுக்குப் பித்துப் பிடிக்குமாம்..ம்ம் வளையலொலில்லயா பித்துப் பிடிக்குது..நெற்றியிலிருந்து ஒரு ஒற்றை முடி கொஞ்சம் பொட்டை உரசி வளைய, கொஞ்சம் ஓரவிழிப் பார்வைபார்த்து கபக்குன்னு பூவைப்பூ மாதிரி கொஞ்சம் ஒற்றை இழையாய்க் குட்டி முறுவல் கொடுத்தா போதாதோ..

பாவம்...இந்தப் பொண்ணுக்கு வேற மயக்கம்...

மயங்குகிறாள் ஒரு மாது…
தன் மனதுக்கும் செயலுக்கும் உறவு இல்லாது
மயங்குகிறாள் ஒரு மாது
திருவாய் மொழியாலே……
திருவாய் மொழியாலே அத்தான் அத்தான்
என்றால் நெஞ்சம் உருகாதா

உருகத் தான் செய்யும்..அதே இது.. இருபது வருஷத்துக்கு அப்புறம் இருக்குமான்னு பாக்கணும்..

இந்தப் பொண்ணு என்ன சொல்லுது..

அத்தான் நிறம் சிவப்பு அந்த
ஆங்கிலேயர் போல் உடுப்பு
கூந்தல் கொஞ்சம் வெளுப்பு அவர்
கூலிங்க் க்ளாஸ் தான் கருப்பு..

சரி சரி..இப்படிச் சொல்ற அவளே ஊடல் கொண்டா அத்தான் என்ன செய்வார்..கெஞ்சத்தான் செய்வார்..

குலுங்கும் முந்தானை சிரிக்கும் அத்தானை
மிரட்டுவதேனடியோ
உந்தன் துடியிடை இன்று படை கொண்டு வந்து
கொல்வதும் ஏனடியோ

சமாதனமும் சொல்லணும்ல

திருமண நாளின் மணவறை மீது
இருப்பவன் நான் தானே
எனை ஒருமுறைபார்த்து ஓரக்கண்ணாலே சிரிப்பவள் நீதானே

*
அவளுக்கோ ஒரே மையல் அவன் மேல அதாவது அத்தான் மேலே

அன்புள்ள அத்தான் வணக்கம்
உங்கள் ஆயிழை கொண்டாள் மயக்கம்
தென்னவர் கையிருக்கும் திருவாளைப் போலிருக்கும்
கண்ணிருந்தும் இல்லை உறக்கம்

அப்படியும் கண்டுக்காம அவளை விட்டுட்டு அத்தான் ஈவ்னிங்க் ஷோ புதுப்படத்துக்குப் போறார்னுவச்சுக்கோங்கோ
என்ன சொல்வா

மாலைபொழுது வந்து படைபோல் கொல்லும்
வருவார் வருவார் என்ற சேதியை சொல்லும்
ஆலிலை போன்ற உடல் ஆசையில் துள்ளும்
அந்தியிலே இயற்கை என்னையும் வெல்லும்

இதுக்கும் மேல என்னடி சொல்லப் போறேன்னு அத்தான் கேட்டார்னா..

பருவம் நிறைந்திருந்தும் எனக்கென்ன சுகமே
பருகும் இதழிரண்டும் இருந்தென்ன பயனே
கரங்கள் இரண்டிருந்தும் அணைப்பதற்கில்லை
கண்ணா இனி நான் பொறுப்பதற்கில்லை

சரி..ஒரே தொல்லையாப் போச்சு ஒன்மேல நா யு எஸ் போய் சம்பாதிச்சுட்டு வர்றேனே..நீ வெய்ட் பண்ணும்மா..என்றால் நோன்னு சொல்லி என்ன சொல்றா..

பொன் மணிமேகலை பூமியில் விழும்
புலம்பும் சிலம்பிரண்டும் என்னை விட்டு ஓடும்
கைவளை சேர்ந்து விழும் கண்களும் மூடும்
காண்பவர் உங்களைத்தான் பழி சொல்ல நேரும்

இந்தப் பாட்ட கன்னடப் பைங்கிளி நன்னாவே பண்ணியிருப்பாங்களாக்கும்

*
சரின்னு பார்க்கறார் அத்தான்..பச்சக்குன்னு போஸ்ட் ஆபீஸ்ல ஸ்டாம்ப்புக்கு முத்திரை குத்தறா மாதிரி இல்லாம கன்னியை மென்மையாய் இழுக்க.. அவளோட கண்களோ ஹார்ட் பீட் மாதிரி படபடன்னு அடிச்சுக்க இதயமோ ஆன்னுவல் ரிடர்ன் இன்கம்டாக்ஸீக்கு சப்மிட் பண்ற பிஸினஸ் மேனாட்டமா துடிதுடிச்சுக்கிட்டு இருக்க டபக்குன்னு மெல்லியளாள் மெல்லிதழில் மென் முத்தம் ஒன்றுக்கு மூன்றாய் போனஸ் கலந்து கொடுத்தா எனன் செய்வா..பாட்டுத் தான் பாடறா ஓய்..

அத்தானின் முத்தங்கள் அத்தனையும் முத்துக்கள்
அழ்கானக் கன்னத்தின் அடையாளச் சின்னங்கள்..

*
அப்புறம் தனக்குத் தானே சொல்லிக்கவும் செஞ்சுக்கறா..

அத்தைமகள் ரத்தினத்தை அத்தான் மறக்கவில்லை
அன்ன நடை சின்னை இடை எதையும் மறக்கவில்லை

*

இன்னொரு பொண்ணு..வித்தாரக் கள்ளி.. எப்படி வரா..அழகா கண்ட் ராங்கி ச் சேலை கட்டிக்கிட்டு சமத்தா பொட்டு வச்சு பவுடர் பூசி மல்லிப்பூல்லம் வெச்சுக்கிட்டு வர்றவ என்ன ஆனா..

சித்தாடை கட்டிகிட்டு சிங்காரம் பண்ணிகிட்டு
மத்தாப்பு சுந்தரி ஒருத்தி மயிலாக வந்தாளாம்
அத்தானை பாத்து அசந்து போய் நின்னாளாம்

பாவம் நிக்காம..அவன் என்ன சொல்லுதான் வேற பாட்டில..

அலைகள் நீரோட்டம் அம்மன் தேரோட்டம்
பருவ பெண்ணாட்டமோ
பனி மலைகள் தாலாட்டும் மலர்கள் பாராட்டும்
கலைகள் வெள்ளோட்டமோ

அவ ஷ்ரூடாக்கும் ஓய்..

இது அத்தானின் முத்தாரமோ – இந்த
அத்தானின் அச்சாரமோ

ன்னு சொல்லிட்டுப் போய்டறா..

*
அதனால சொல்ல வந்தது என்னன்னா நிறைய புது (பாட்டு) அத்தான் இருந்தாலும் கொஞ்சம் பழைய அத்தான் பாட்டுக்களைத் தான் பாத்துருக்கோம்.. பிடிச்சுருக்குதோன்னோ

உருவாய் அருவாய் உளதாய் இலதா
..
அருள்வாய் குகனே..

மங்களம் :)

rajraj
23rd July 2014, 07:46 PM
chinnakkaNNan: Now I know where you are hiding! :lol:

What next? machchaan? maaman? :)

madhu
23rd July 2014, 08:13 PM
அக்காவுக்கு வளைகாப்பு.. அத்தான் முகத்திலே புன்சிரிப்பு
அவசரமா.. அவசரமா.. ஆசை அத்தான் அவசரமா
இந்த அத்தானைப் பார்த்து மா.மா.. என்றாலும் துடிப்பேனே..

இப்படி எல்லாம் பாட்டுக்கள் இருந்தாலும்....

தங்கப்பதுமையில் கண்ணிழந்த சிவாஜியிடம் பத்மினி
"அத்தான் அத்தான்
உங்கள் மீது கொடும்பழி வந்திருக்கிறதே அத்தான்
என்மீது உண்மையாக அன்பிருந்தால்
அஞ்சாமல் உண்மையை சொல்லுங்கள்
யாருக்கும் அஞ்சாமல் சொல்லுங்கள் அத்தான்"

என்று கதறும் காட்சி இருந்தாலும்.....

எனக்கு இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபன தமிழ்ச்சேவையில் கேட்ட பழைய விளம்பரம்தான் நினைவுக்கு வருது...

அத்தானே.. அத்தானே.. எந்தன் ஆசை அத்தானே
கேள்வி ஒன்று கேட்கலாமா .. உனைத்தானே ..

தோழன் ஒருவன் தோள் தருவான்.. துணை புரிவான் கண்ணே..

அப்படின்னு சொல்லி.. கடேசில... "மக்கள் வங்கியே நம் தோழன்" அப்படின்னு பாடுவாங்க...

சிக்கா... நீங்க ஊருக்கு வந்துட்டு போனதிலே இருந்து ஒரு மாதிரிதான் இருக்கீங்க..

வாத்தியாரையா சொன்னபடி அடுத்தது... "மாமேன் மச்சான்.. ஏய் நீதானா.. ஆசை வச்சா ..ஏன் ஆகாதா" அப்டீன்னு ஆரம்பமா ?

rajeshkrv
23rd July 2014, 08:28 PM
CK சார்,

இதுவரை நீங்கள் கேட்டது தெய்வத்தின் தெய்வம் படத்தின் சுருங்கிய கதைச்சுருக்க்க்கம்..விஜயகுமாரி, எஸ்.எஸ்.ஆர் மட்டும் நினைவில்..அல்பாயுசு அண்ணனோ..அல்லது படத்தின் ஆரம்பத்தில் கண்ணன் மன நிலையைத் தங்கமே தங்கம் (அழகான பாடல்) பாடும் அண்ணியோ நினைவில் இல்லை..

சி.கா
இதில் அண்ணி கீதாஞ்சலி அண்ணன் முஸ்தபா இல்லையென்றால் இன்னொருவர்.

நீ இல்லாத உலகத்திலே நிம்மதி இல்லை ... என்ன அருமையான பாடல் ....

இந்த படத்தில் அதிகம் கேட்டிராத ஒரு அற்புத பாடல் உண்டு
இசையரசியில் குரலில்

வாழ்கையை துவங்கும் முன்னே வாழ்வு முடிந்துவிடும் கீதாஞ்சலிக்கு ,

பாட்டு பாட வாயெடுத்தேன் ஏலேலோ அது பாதியிலே நின்னுபோச்சே ஏலேலோ.... இசையரசி என்னமாய் பாடுகிறார்.
கீதாஞ்சலிக்கு தமிழில் முதல் படம் .. அவரும் நிறைவாக நடித்திருக்கிறார்


https://www.youtube.com/watch?v=ra34SIKJ7rc

vasudevan31355
23rd July 2014, 08:35 PM
ராஜேஷ் சார்,

பொதுவாகவே நகைச்சுவைப் பாடலகள் என்றால் பார்க்கும் போது எனக்கு அவ்வளவாக சிரிப்பு வராது. நகைச்சுவை நடிகர்களின் கொனஷ்டை கூத்துக்கள், கிச்சு கிச்சுக்கள், தாவுவது, குதிப்பது, விழுவது என்று ஆக்ஷனில் செய்யும் காமெடி எனக்கு அவ்வளவாகப் பிடிப்பதில்லை. சிரிப்பே வராது. நகைச்சுவை நையாண்டி வசனங்களில் கொஞ்சம் பிரியம் அதிகம்.

எத்தனையோ நகைச்சுவைப் பாடல்கள். நாகேஷ், சந்திரபாபு, கருணாநிதி, மனோரமா, முத்துலஷ்மி நடித்தவை என்று. ஓஹோ காமெடி மூவீஸ் என்று புகழடைந்த தேன் கிண்ணம், தேன் மழை, நினைவில் நின்றவள் என்று பல படங்களில் நகைச்சுவை பாடல்கள் வந்தாலும் ரசிப்பேனே ஒழிய வாய்விட்டு சிரித்ததில்லை.

நேற்று மதியப் பணி முடித்து விட்டு இரவு வீட்டிற்கு வந்ததும் நீங்கள் பதித்திருந்த

'பழக்கமில்லாத கழுதைகிட்ட கொஞ்சம் பார்த்து கறக்கனும் பால'

'ஆரவல்லி' படப் பாடலைப் பார்த்தேன். நான் டிவியில் சில சமயங்களில் பார்த்திருக்கிறேன். ஆனால் அவ்வளவு டீப்பாக பார்த்ததில்லை.

'சரி ராஜேஷ் தினம் அருமையான பாடல்களைத் தருவாரே! என்ன இன்றைக்கு இந்தப் பாடலைப் போய்த் தந்திருக்கிறாரே' என்று ஒரு கணம் நினைத்தேன்.

சரியென்று காபி சாப்பிட்டுக் கொண்டே பாடலைப் பார்க்க ஆரம்பித்தேன்.

சார்! ஏற்கனவே பார்த்திருந்தாலும் நிஜமாகவே சொல்கிறேன் இந்தப் பாடல் என் வயிற்றைப் பதம் பார்த்து விட்டது சார். குடித்த காபியெல்லாம் புரையேறி வெளியே வந்து விட்டது. சிரித்து சிரித்து வயிறு புண்ணாகி விட்டது சார்.

என்ன ஒரு காமெடி! ஆனந்தன், பக்கிரிசாமி, சட்டாம்பிள்ளை, சிவசூரியன், கே.கே.சௌந்தர் என்று!

பக்கிரிசாமியிடமெல்லாம் அசாத்திய திறமைகள். உள்ளுக்குள் உதைபடுவோம் என்ற உதறலோடு அக்கம் பக்கம் பார்த்து பார்த்து பாடுவார். ஆனால் இவரெல்லாம் ஏன் ஜொலிக்காமல் போனார்? நடிகர் திலகம் இவருக்கு நிறைய சான்ஸ் கொடுப்பார்.

ஆரவல்லி ஆட்சியின் ஆண்களின் மீதான பெண்களின் அடக்குமுறையை எவ்வளவு கேலியாக ஜாடை, மாடை இரட்டை அர்த்த வரிகளில் இப்பாடல் சித்தரிக்கிறது! கழுதையை திட்டுவது போல பெண் வீரிகளை (!) இடித்துரைக்கும் பாடல் படு ஜாலியாக.

அதுவும் நடித்த நடிகர்கள், எவரும் பிரமாதமான கொடி நாட்டிய நடிகர்கள் எல்லாம் இல்லை. சாதாரண நகைச்சுவை நடிகர்கள்தாம். ஆனால் முக பாவனைகள் அனைவரிடத்திலும் 'பட்பட்' சட்சட்டென்று மாறி மாறி விழுந்து நகைச்சுவைக் கொப்பளிக்கிறது. அங்கும் இங்கும் வலதும் இடதுமாகப் பார்த்து பயந்தபடியே கழுதையை விமர்சிப்பது போல 'ஆரவல்லி' அரக்கிகளை விமர்சிக்கும் புத்திசாலித்தனமான நிஜ நகைச்சுவை கேலிப்பாட்டு

கண்களில் தண்ணீரே வந்து விட்டது சார்.

'பாக்க இந்தக் கழுத பகட்டா தெரியுது பாலு மட்டும் இருக்காது'

என்று கழுதையிடம் பால் கறக்கும் போது கிராஸ் செய்யும் பெண்ணை நைசாக நக்கலடிக்கும் ஆனந்தன், பக்கிரிசாமி.

பக்கிரிசாமி பால் கறக்கும் போது ஒரு பெரிய குண்டம்மா சாட்டையால் அவரை அடிக்க

'ஏழெட்டு குட்டிகள போட்ட பிறகும் ஒரு எல்லையில நிக்காது இந்தக் கழுத'

இன்னா ஒரு நக்கல் நையாண்டி!அந்த குண்டம்மா ஏழெட்டுக் குழந்தைகள் பெற்றது போல இருப்பதை கழுதையை சொல்வது போல பக்கிரி கேலியாக கலாய்க்கும் போது என்னால் சிரிப்பை அடக்க முடியலை ராஜேஷ் சார்.

அப்புறம் அந்தப் பெண்மணி போனதுக்கப்புறம்

'இது எந்தப் பக்கம் இருந்தோ வந்த கழுத'

என்று போடும் போடை என்ன சொல்லி சிரிப்பது?

அதுவும் பாடிய பாடகர்கள் வேறு தனியாகக் கொடி நாட்டுகிறார்கள்.

பிறகுதான் புரிந்தது ராஜேஷ் ஏன் இந்தப் பாடலைப் போட்டிருக்கிறார் என்று.

ரசித்து ரசித்து சிரித்து சிரித்து அனுபவித்தேன் சார்.

உங்களுக்கும், உங்கள் ரசனைக்கும் மிக்க நன்றி ராஜேஷ் சார்.

இது போல உங்களிடம் தினம் தினம் எதிர்பார்க்கிறேன்.

என்னையே சிரிக்க வைத்து விட்டீ(டா) ர்களே!

rajeshkrv
23rd July 2014, 08:37 PM
தெய்வத்தின் தெய்வம் என்றவுடன் “ நம்ம வீட்டு தெய்வமும்” நினைவுக்கு வ ந்தது.

கிருஷ்ணா சார் .. நம்ம விஜி நடித்த இந்த அற்புத நடனம் உங்களுக்காக (இசையரசியின் குரலில் குன்னக்குடியின் இசையில்)


https://www.youtube.com/watch?v=m0urUMBv_ZA

rajeshkrv
23rd July 2014, 08:41 PM
ராஜேஷ் சார்,

பொதுவாகவே நகைச்சுவைப் பாடலகள் என்றால் பார்க்கும் போது எனக்கு அவ்வளவாக சிரிப்பு வராது. நகைச்சுவை நடிகர்களின் கொனஷ்டை கூத்துக்கள், கிச்சு கிச்சுக்கள், தாவுவது, குதிப்பது, விழுவது என்று ஆக்ஷனில் செய்யும் காமெடி எனக்கு அவ்வளவாகப் பிடிப்பதில்லை. சிரிப்பே வராது. நகைச்சுவை நையாண்டி வசனங்களில் கொஞ்சம் பிரியம் அதிகம்.

எத்தனையோ நகைச்சுவைப் பாடல்கள். நாகேஷ், சந்திரபாபு, கருணாநிதி, மனோரமா, முத்துலஷ்மி நடித்தவை என்று. ஓஹோ காமெடி மூவீஸ் என்று புகழடைந்த தேன் கிண்ணம், தேன் மழை, நினைவில் நின்றவள் என்று பல படங்களில் நகைச்சுவை பாடல்கள் வந்தாலும் ரசிப்பேனே ஒழிய வாய்விட்டு சிரித்ததில்லை.

நேற்று மதியப் பணி முடித்து விட்டு இரவு வீட்டிற்கு வந்ததும் நீங்கள் பதித்திருந்த

'பழக்கமில்லாத கழுதைகிட்ட கொஞ்சம் பார்த்து கறக்கனும் பால'

'ஆரவல்லி' படப் பாடலைப் பார்த்தேன். நான் டிவியில் சில சமயங்களில் பார்த்திருக்கிறேன். ஆனால் அவ்வளவு டீப்பாக பார்த்ததில்லை.

'சரி ராஜேஷ் தினம் அருமையான பாடல்களைத் தருவாரே! என்ன இன்றைக்கு இந்தப் பாடலைப் போய்த் தந்திருக்கிறாரே' என்று ஒரு கணம் நினைத்தேன்.

சரியென்று காபி சாப்பிட்டுக் கொண்டே பாடலைப் பார்க்க ஆரம்பித்தேன்.

சார்! ஏற்கனவே பார்த்திருந்தாலும் நிஜமாகவே சொல்கிறேன் இந்தப் பாடல் என் வயிற்றைப் பதம் பார்த்து விட்டது சார். குடித்த காபியெல்லாம் புரையேறி வெளியே வந்து விட்டது. சிரித்து சிரித்து வயிறு புண்ணாகி விட்டது சார்.

என்ன ஒரு காமெடி! ஆனந்தன், பக்கிரிசாமி, சட்டாம்பிள்ளை, சிவசூரியன், கே.கே.சௌந்தர் என்று!

பக்கிரிசாமியிடமெல்லாம் அசாத்திய திறமைகள். உள்ளுக்குள் உதைபடுவோம் என்ற உதறலோடு அக்கம் பக்கம் பார்த்து பார்த்து பாடுவார். ஆனால் இவரெல்லாம் ஏன் ஜொலிக்காமல் போனார்? நடிகர் திலகம் இவருக்கு நிறைய சான்ஸ் கொடுப்பார்.

ஆரவல்லி ஆட்சியின் ஆண்களின் மீதான பெண்களின் அடக்குமுறையை எவ்வளவு கேலியாக ஜாடை, மாடை இரட்டை அர்த்த வரிகளில் இப்பாடல் சித்தரிக்கிறது! கழுதையை திட்டுவது போல பெண் வீரிகளை (!) இடித்துரைக்கும் பாடல் படு ஜாலியாக.

அதுவும் நடித்த நடிகர்கள், எவரும் பிரமாதமான கொடி நாட்டிய நடிகர்கள் எல்லாம் இல்லை. சாதாரண நகைச்சுவை நடிகர்கள்தாம். ஆனால் முக பாவனைகள் அனைவரிடத்திலும் 'பட்பட்' சட்சட்டென்று மாறி மாறி விழுந்து நகைச்சுவைக் கொப்பளிக்கிறது. அங்கும் இங்கும் வலதும் இடதுமாகப் பார்த்து பயந்தபடியே கழுதையை விமர்சிப்பது போல 'ஆரவல்லி' அரக்கிகளை விமர்சிக்கும் புத்திசாலித்தனமான நிஜ நகைச்சுவை கேலிப்பாட்டு

கண்களில் தண்ணீரே வந்து விட்டது சார்.

'பாக்க இந்தக் கழுத பகட்டா தெரியுது பாலு மட்டும் இருக்காது'

என்று கழுதையிடம் பால் கறக்கும் போது கிராஸ் செய்யும் பெண்ணை நைசாக நக்கலடிக்கும் ஆனந்தன், பக்கிரிசாமி.

பக்கிரிசாமி பால் கறக்கும் போது ஒரு பெரிய குண்டம்மா சாட்டையால் அவரை அடிக்க

'ஏழெட்டு குட்டிகள போட்ட பிறகும் ஒரு எல்லையில நிக்காது இந்தக் கழுத'

இன்னா ஒரு நக்கல் நையாண்டி!அந்த குண்டம்மா ஏழெட்டுக் குழந்தைகள் பெற்றது போல இருப்பதை கழுதையை சொல்வது போல பக்கிரி கேலியாக கலாய்க்கும் போது என்னால் சிரிப்பை அடக்க முடியலை ராஜேஷ் சார்.

அப்புறம் அந்தப் பெண்மணி போனதுக்கப்புறம்

'இது எந்தப் பக்கம் இருந்தோ வந்த கழுத'

என்று போடும் போடை என்ன சொல்லி சிரிப்பது?

அதுவும் பாடிய பாடகர்கள் வேறு தனியாகக் கொடி நாட்டுகிறார்கள்.

பிறகுதான் புரிந்தது ராஜேஷ் ஏன் இந்தப் பாடலைப் போட்டிருக்கிறார் என்று.

ரசித்து ரசித்து சிரித்து சிரித்து அனுபவித்தேன் சார்.

உங்களுக்கும், உங்கள் ரசனைக்கும் மிக்க நன்றி ராஜேஷ் சார்.

இது போல உங்களிடம் தினம் தினம் எதிர்பார்க்கிறேன்.

என்னையே சிரிக்க வைத்து விட்டீ(டா) ர்களே!

வாசு சார், பாராட்டுக்கு நன்றி. ஆம் நக்கல் நையாண்டி என தூள் கிளப்பும் பாடல் இது.
ஜி.ராமனாதன் என்ற மாமேதை கர்னாடக பாணியில் மட்டுமே இசையமைப்பார் என்பதை உடைத்தெரிந்த பாடல்
நகைச்சுவை பாடல்களில் கருத்துக்களும் இருக்கும் என்றும் அதே சமயம் அழகாக நகைச்சுவை செய்யமுடியும் என்றும் நிரூபித்த பாடல்
“பல்லு போகுதோ “ என்று சொல்லும் போதே சிரிப்பு வந்துவிடும்... அங்கே அல்லி தர்பார் செய்யும் பெண்களையும் ஊடே ஊடே நக்கல் செய்யும் விதம் .. அபாரம்.. பாடலை கேட்டு நீங்களும் சிரித்ததில் எனக்கு பெரும் மகிழ்ச்சி .... ஏதோ என்னால் உங்களை சிரிக்க வைக்க ஒரு பாடல் போட முடிந்ததே

vasudevan31355
23rd July 2014, 08:49 PM
ராஜேஷ் சார்,

இதே ந.வீ.தெய்வத்தில் 'கண்ணியப் பாடகி' சுசீலாம்மா பாடும் 'ஆசை மனதில் கோட்டை கட்டி' ரொம்ப பிடித்த பாடல் சார். அருமையாய் அமைதியாய் போகும்.

'நான் வாழ வேண்டும் என்று நாளெல்லாம் தவமிருந்தாள்
தான் இருக்கும் இடத்தினிலே நான் இருக்க நினைத்து விட்டாள்'

என்று சகோதரியை (ஜெயபாரதி?) மனதில் வைத்து புன்னகை அரசி பாடியதாய் நினைவு. சரிதானா ராஜேஷ் சார்?


http://www.youtube.com/watch?v=EBi9j2Gff-o&feature=player_detailpage

vasudevan31355
23rd July 2014, 08:54 PM
கிருஷ்ணா சார் .. நம்ம விஜி நடித்த



ராஜேஷ் சார்,

நீங்களுமா?:)

vasudevan31355
23rd July 2014, 08:57 PM
/பாட்டு பாட வாயெடுத்தேன் ஏலேலோ அது பாதியிலே நின்னுபோச்சே ஏலேலோ/

one of the best.

vasudevan31355
23rd July 2014, 08:59 PM
கீதாஞ்சலி போன்ற மறக்கப்பட்ட நடிகைகளை மீஎண்டும் நினைவுக்குக் கொண்டு வருவது நமது திரி எனும் போது பெருமை.

chinnakkannan
23rd July 2014, 09:00 PM
எனக்கென்னமோ ந.வீ தெய்வம் நாலே சூரிய சந்திர ஜோதியும் நான்..பாட்டு தான் நினைவு;... விஜயலட்சுமி உனக்கும் எனக்கும் இசைந்த பொருத்தம் என்ன பொருத்தமோ.. வாவ் நல்ல பாட்டு..ஆசைமனதில் கோட்டைகட்டியும் நல்ல பாட்டு நன்றி ராஜேஷ், வாசு சார்..

ராஜ் ராஜ் சார்..மாமன் மச்சான்..அதுக்கு ஒரு மூட் வரவேணும்..) எனக்கு எல்லா இழையிலும் என்னைப் பொறுத்துக்கொள்ளும் நண்பர்கள் இருப்பது நான் செய்த புண்ணியம்

மதுண்ணா.. அத்தான்ல இவ்ளோ மிஸ்பண்ணிட்டேனா.. ஊருக்குப் போய் வந்துட்டு கொஞ்சம் சோகமா இருக்கலாம்னு பார்த்தா இங்க இன்று முதல் பத்து நாள் ஈத் ஹாலிடேஸ்..

ராஜேஷ்..கீதாஞ்ச்சலி..கொஞ்சம் வித்யாச அழகு.. இன்னும் டீடெய்ல் வேணுமே.. :) எப்படி மறந்தேன்..

vasudevan31355
23rd July 2014, 09:02 PM
ராஜேஷ் சார்

நேற்று சிரிக்க வைத்துவிட்டு இன்று இசையரசியின் குரலால் அழச் செய்து விட்டீர்களே! balance?
.