PDA

View Full Version : மனதை மயக்கும் மதுர கானங்கள்



Pages : [1] 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16

vasudevan31355
8th June 2014, 08:21 AM
மனதை மயக்கும் மதுர கானங்கள்

அனைவருக்கும் வணக்கம்.

அதுவும் பழைய பாடல்கள் விரும்பிகளுக்கு என் ஸ்பெஷல் வணக்கங்கள்.

இது ஒரு புது இழை.

'மனதை மயக்கும் மதுர கானங்கள்'

தமிழ்ப் படங்களில் நம் மனதில் என்றும் நீங்கா இடம் பெற்ற மதுர கானங்களைக் கண்டும், கேட்கவும், மகிழவும் இந்த இழை தொடங்கப்பட்டுள்ளது.

நம் மனதில் பல பாடல்கள் எப்போதும் ரீங்காரமிட்டுக் கொண்டே இருக்கின்றன. சில பாடல்களை நம்மை அறியாமல் வாய் முணுமுணுத்துக் கொண்டே இருக்கும். ஆனால் படம் என்னவென்று தெரியாது. படத்தின் பெயர் தெரியும். பாடல் நினைவுக்கு வராது.

இதற்கெல்லாம் இந்த இழை ஒரு தீர்வாக அமையும் என்று நினைக்கிறேன்.

இதில் இன்னொன்று. மிடில் சாங்ஸ் என்று நாம் செல்லமாகப் பெயரிட்டு அழைக்கும் பல பாடல்களை நாம் இங்கே நினைவு கூற இருக்கிறோம். அவ்வளவு அற்புதமான பாடல்கள் இருக்கின்றன. திரையிசைப் பாடல்களைப் பற்றி அறிந்த ஜாம்பவான்கள் பலர் நமது ஹப்பில் இருக்கிறார்கள். நிச்சயம் அவர்கள் இந்த இழையில் பங்கு கொண்டு தங்களுக்குத் தெரிந்த பல அபூர்வ விஷயங்களை நம்முடன் பகிர்ந்து கொள்வார்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன்..

வெறுமனே யூ டியூபிலிருந்து பாடலை இழுத்துப் போட எனக்கு உடன்பாடில்லை. அது போரடிக்கவே செய்யும். அப்பாடல்களைப் பற்றிய சுவையான தொகுப்புகளை நாம் நமக்குத் தெரிந்தவற்றை மற்றவர்களுக்கு தெரிவித்தால் இத்திரியின் சுவாரஸ்யம் வெகுவாகக் கூடும். மேலும் அரிய, மிக அரிய பாடல்களை நாம் இங்கே அலசலாம்.

அனைவரது ஒத்துழைப்பும் இங்கு கிடைக்கும் என்று பரிபூரணமாக நம்புகிறேன்.

முதலில் 'மறுபிறவி' படத்திலிருந்து ஒரு பாடல்.

http://www.inbaminge.com/t/m/Marupiravi/folder.jpg

முதலில் இந்தப் படத்தைப் பற்றிய சிறு குறிப்பு. 1973-இல் வெளியான இத்திரைப்படம் விஜயா சூரி கம்பைன்ஸ் தயாரிப்பு.

முத்துராமன், மஞ்சுளா, அசோகன், தேங்காய் ஸ்ரீனிவாசன் போன்றோர் நடித்திருந்த இத்திரைப்படம் நிஜமாகவே ஒரு புதுமைத் தயாரிப்புதான். டாக்டர் கோவூர் அவர்களும் இப்படத்தில் மனநல மருத்துவராகவே நடித்திருந்தார்.

அப்போதே 'அடல்ட்ஸ் ஒன்லி' அதாவது 'A' செர்டிபிகேட் பெற்ற படம் இது. மலையாளத்தில் வந்து பெரும் வெற்றி பெற்ற 'புனர்ஜென்மம்' என்ற திரைப்படத்தின் தமிழாக்கமே 'மறுபிறவி' ஆகும். மலையாளத்தில் பிரேம்நசீர், ஜெயபாரதி பிரதான பாத்திரங்களில் நடித்திருந்தனர்.

சிக்கலான முள் மேல் நடப்பது போன்ற கதையமைப்பு கொண்ட அருமையான திரைப்படம் இது.

ஒரு வரியில் கதையை சொல்ல வேண்டுமென்றால்

கல்லூரி பேராசிரியர் ஒருவர் அக்கல்லூரி மாணவியை விரும்பியே மணந்து கொள்கிறார். ஆனால் அவளுடன் தாம்பத்ய உறவு கொள்ள மட்டும் அவர் உடலும், மனமும் நடுங்குகின்றது. உடலில் அவருக்குக் குறையில்லை. தனக்கு உடல்சுகம் தேவைப்படும் போது தன் வீட்டு வேலைக்காரியுடன் அவர் உறவு வைத்துக் கொள்கிறார். மனதில்தான் அவருக்குக் குறை. மனைவியோ தன் கணவனின் போக்கை எண்ணி செய்வதறியாது திகைக்கிறாள். கண்ணீர் வடிக்கிறாள்.

இறுதியில் மருத்துவரை நாடும் போது கணவனின் பலவீனத்துக்குக் காரணம் புரிகிறது. கணவனின் தாயின் உருவமும், அவன் தாரத்தின் உருவமும் ஒத்துப் போவதால் அவன் தன் தாரத்தை நெருங்கும் போதெல்லாம் மனைவியின் முகத்தில் தன் அன்னையின் உருவத்தைப் பார்க்கிறான். அதனால் மனைவி உறவு கொள்ள வரும்போதெல்லாம் அவளை விட்டு விலகுகிறான்.

இறுதியில் அருமையான மனநல மருத்துவ சிகிச்சைக்குப் பிறகு நார்மலாகிறான் கணவன்.

அன்றைய காலகட்டத்தில் "அய்யய்யோ! 'மறுபிறவி' மோசமான படமாயிற்றே!" என்று பொய்யாக எல்லோரும் வெறுத்த படம் இது.

ஏனென்றால் படத்தின் கதை அமைப்பிற்குத் தேவையான காட்சி அமைப்புகள். இளமை பொங்கும் மனைவியாக மஞ்சுளா தன் தாம்பத்ய உறவிற்காக கணவன் முத்துராமனிடம் ஏங்கும் காட்சிகள் அப்போது மிகவும் பரபரப்பாகப் பேசப்பட்டன. மஞ்சுளாவும் சற்று தாராளமாக நடித்திருந்தார். முத்துராமனுக்கு முற்றிலும் புதுமையான வேடம். அமிர்தம் அவர்களின் ஒளிப்பதிவு பௌர்ணமி நிலவின் ஒளி போல பளிச்சோ பளிச்.

18 வயதுக்குக் கீழே வரும் சிறுவர், சிறுமிகள், மாணாக்கர்களுக்கு தியேட்டரில் டிக்கெட் தர மாட்டார்கள்.

இந்த லிஸ்டில் சேர்ந்த வேறு இரண்டு படங்கள். ஒன்று 'அவள்'. இன்னொரு படம் பாலச்சந்தரின் 'அரங்கேற்றம்'.

இலங்கையை சார்ந்த 'டாக்டர் கோவூர்' எழுதிய இந்த கதையை அற்புதமாகப் படமாக்கியிருந்தார் இயக்குனர் ராமண்ணா. டி .ஆர் பாப்பா என்ற அற்புத இசையமைப்பாளரின் பங்கை இப்படத்தில் என்னவென்று சொல்ல!

ஒவ்வொரு பாடலும் தேன் சொட்டும் ராகம்.

டி.என்.பாலு வசனம் எழுதிய இப்படத்தை இப்போது பார்க்கும் போது மிகவும் ரசிக்க முடிந்தது. அப்போது ஆபாசம் மட்டுமே தென்பட்டது. இப்போது மனநல ரீதியாக பல விஷயங்கள் இப்படத்தின் மூலம் புரிய வந்தது.

படத்திலிருந்து சில காட்சிகள்.

http://i1098.photobucket.com/albums/g364/albertjraj/Marupiravi0002.jpg

http://i1098.photobucket.com/albums/g364/albertjraj/Marupiravi0004.jpg

http://i1098.photobucket.com/albums/g364/albertjraj/Marupiravi0005.jpg

http://i1098.photobucket.com/albums/g364/albertjraj/Marupiravi0007.jpg

http://i1098.photobucket.com/albums/g364/albertjraj/Marupiravi0009.jpg

இப்போது பாடலுக்கு வருவோம்.

http://i1.ytimg.com/vi/HhastadadV0/maxresdefault.jpg

படத்தின் நாயகன் சிறுவனாக இருக்கும்போது கணவனை இழந்த அவனது தாய் தன் மகனைக் கொஞ்சிப் பாராட்டுவது போல் அமைந்த இந்தப் பாடலில்

விஷேசங்கள் சில உண்டு.

அந்த இளம் வயதிலேயே எந்த ஈகோவும் பார்க்காமல் நெற்றியில் விபூதி அணிந்து விதவைத் தாயாக மஞ்சுளா நடித்திருந்தார். (இப்போதுள்ள ஹீரோயின்கள் அப்படி நடிக்கத் துணிவார்களா!?)

மஞ்சுளாவின் சிறுவயது மகனாக வருபவர் நடிகர் பப்லு. என்ன ஒரு அழகு இந்த சிறுவன்!

இந்தப்பாடலைப் பாடியவர் சூலமங்கலம் ராஜலஷ்மி. ஆஹா! ஒரு தாயின் பரிவையும் பாசத்தையும் இக்குரல் என்னமாய் பிரதிபலிக்கிறது! கேட்க கேட்க அவ்வளவு சுகம். மனதை தாலாட்டும் இப்பாடலைக் கேட்டு மயங்காதவர் இருக்கவே முடியாது.

காவேரி மாந்தோப்புக் கனியோ!
கண்கள்
கல்யாண மண்டபத்து மணியோ!
நல்ல பாவேந்தர் பாராட்டும் மொழியோ!
பண்பாடும் தென்பாங்கு கிளியோ!

நீங்களே பார்த்து உங்கள் கருத்துக்களைப் பதியுங்கள்.


http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=N9xVrdiKAcc

vasudevan.

Richardsof
8th June 2014, 09:50 AM
VASUDEVAN SIR

SUPER ANALYSIS MARU PIRAVI SONG .VERY NICE .

THIS SONG IS MY FAVORITE IN THIS MOVIE.

http://youtu.be/C4oz2EFbrkw

vasudevan31355
8th June 2014, 10:43 AM
நன்றி வினோத் சார்.

அருமையான இன்னொரு பாடல் ஒன்றை மறுபிறவி படத்திலிருந்து அளித்துள்ளீர்கள். அடுத்து அந்த பாடலைத்தான் எடுக்கலாம் என்று இருந்தேன். நீங்கள் முந்தி விட்டர்கள்.

மாணவர் தமிழ் இலக்கிய மன்ற கல்லூரி விழா ஒன்றில் கல்லூரி மாணவியான மஞ்சுளா ஸ்டேஜில் பாடுவது போன்ற சிச்சுவேஷன்.

சிக்கென்ற, கண் திருஷ்டி பட்டு விடும் அளவிற்கு அழகான மஞ்சுளா. எம்.ஆர்.விஜயாவின் மயக்கும் குரல்.

http://i1098.photobucket.com/albums/g364/albertjraj/Marupiravi0003.jpg

http://i1.ytimg.com/vi/C4oz2EFbrkw/hqdefault.jpg

ஏடி பூங்கொடி...
ஏனிந்தப் பார்வை...
கோடி கோடியோ...
நீ கொண்ட ஆசை...
தேடி வந்த தெய்வம் யாரடி?....

கவிஞரின் அருமையான வரிகள். பாடலின் இடையிசையின் போது தொண்டையை அமைதியாகக் கனைத்து சரி செய்து கொண்டு மைக்கையும் சரி செய்து கொள்ளும் மஞ்சுளாவின் சாமர்த்தியம். (நடிகர் திலகத்தின் திருவிளையாடலான 'பாட்டும் நானே பாவமும் நானே' (தொண்டை செருமல்) பார்த்துவிட்டு மஞ்சுளா ஷூட்டிங்கிற்கு வந்திருப்பார் போல)... அமைதியாக மஞ்சுளாவை ரசிக்கும் முத்துராமன்ஜி. மனதைப் பிசையும், மனதை என்னவோ செய்யும் பாப்பாவின் மயக்கும் இசை.

இசையை ரசிக்காதவர்கள் கூட பலமுறை தாளம் போட்டு ரசிக்கும் பாடல்.

இரவு தூங்கப் போகுமுன் கேட்டுப் பாருங்கள். சொர்க்கம் என்பதன் அர்த்தம் புரியும்.

RAGHAVENDRA
8th June 2014, 11:48 AM
ஆஹா... வாசு சார்... நெஞ்சை அள்ளிக் கொண்டு போகும் பாடல்களுக்கென்றே பிரத்யேகமாக மனதை மயக்கும் மதுரத் திரியைத் தொடங்கி விட்டீர்கள். இனி இத்திரி மிக விரைவில் ஐந்து நட்சத்திர அந்தஸ்தை எட்டி விடும் என்பதில் ஐயமில்லை.

அடியேனின் பங்கிற்கு..

மீண்டும் டி.ஆர். பாப்பா இசை..

எஸ்.பி.பாலாவுடன் கலைச்செல்வி ஜெயலலிதா பாடிய அற்புதமான பாடல். இதுவும் மனதை மயக்கும் கானமாகும். வைரம் திரைப்படத்தில் இடம் பெற்ற இரு மாங்கனி போல் இதழோரம், வெளியான கால கட்டத்தில் விவித் பாரதியில் மதிய வேளையில் திரை அமுதம் நிகழ்ச்சியில் அடிக்கடி இடம் பெறும். சில சமயம் மாலை 4.30 மணி மதுர கீதம் நிகழ்ச்சியிலும் ஒலிக்கும். அருமையான பாடல். விக்டோரியா 203 ஹிந்தித் திரைப்படத்தை தமிழில் எடுத்த படமே வைரம். அசோகன் எம்.ஆர்.ஆர். வாசு இருவரின் அற்புதமான நடிப்பு இப்படத்திற்கு பெரிய பலம். பாடல்களும் அவ்வாறே. ஜெய், ஜெயலலிதா இருவருமே மிகவும் ரம்மியமாக காட்சி அளிப்பர்.

இனி பாடலைக் கேளுங்கள்

http://youtu.be/BhBswBAdr5U

uvausan
8th June 2014, 01:02 PM
வாசு - நீங்கள் போகும் இடமில்லாம் நாங்களும் வருவோம் - போ போ போ !!

எங்கிருந்து இப்படியெல்லாம் பிடிக்கிறீர்கள் - மறு பிறவி என்று ஒரு படம் வந்ததே உங்கள் பதிவிலிருந்துதான் தெரிய வந்தது - மறு பிறவியை இந்த பிறவியிலேயே அலசி எங்களை திக்கு முக்காட வைத்து விட்டீர்கள் - இன்னும் 500mt கூட நடந்தால் NT -திரி -12 வந்துவிடுமே - வரும் வாய்ப்பு உள்ளதா இல்லை அதையும் மறு பிறவியில் தான் சந்திக்க வேண்டுமா ??

வாசு NT திரியில் இல்லாதது - அயோத்தியில் ராமர் இல்லாத ஆட்சி போல உள்ளது - 14 ஆண்டுகள் வன வாசம் முடிந்து விட்டதே வாசு !!

கங்கையில் நீர் புரண்டு ஓடும் போது , உங்களை சிற்றோடையில் தானா இப்படி சந்திக்க வேண்டும் ??

இமயமலையில் வசிக்கும் ஒருவரை பறங்கி மலையில் தானா சந்திக்க வேண்டும் ?

ஒரு துளி விஷத்தால் ஏற்பட்ட side effect இப்படியா தொடர வேண்டும் ?

vasudevan31355
8th June 2014, 02:05 PM
ரவி,

நன்றி! தங்கள் பதிவிற்கு தலைவரின் பாடல் வரிகளே பதில்.

மாலையும் மஞ்சளும் மாறியதே ஒரு சோதனை
மஞ்சம் நெஞ்சம் வாடுவதே பெரும் வேதனை
தெய்வமே! யாரிடம் யாரை நீ தந்தாயோ!
உன் கோவில் தீபம் மாறியதை நீ அறிவாயோ!

ரவி,

நான் அங்கு வந்தால் என்னுடைய டாமினேஷன்தான் அதிகம் இருக்கும். என் உள்ளம் பாராட்டையே எதிர்பார்த்துக் காத்துக் கிடக்கும். 'ஹானஸ்ட்' உள்ள அறிவுஜீவி ராஜாக்கள் உரைத்தது. ராமர் புகழ் பாடும் மங்கி (அதாவது ஹனுமானை சொன்னேன்பா) என்னை மிதித்து உரைத்தது. அது பாட்டுக்கும் அது வேலையைச் சரியாகச் செய்து விட்டு ஓடியே விட்டது.

அப்புறமும் எனக்கு புத்தி வரவில்லையென்றால்?....இதற்கு கேட்பாரும் இல்லை. மேய்ப்பாரும் இல்லை. தலைவரின் தீவிர ரசிகன் ஆயிற்றே! சூடு சொரணை அவரிடத்தில் இருந்தது போல கொஞ்சமாவது நமக்கு இருக்காதா?

கங்கை ஆற்று வெள்ளத்தில் நின்று தண்ணீர் குடித்து ஆற்று வெள்ளத்தில் அடித்து நீரில் மூழ்குவதை விட, எட்ட நின்று குடிக்கும் பாதுகாப்பான சுனை நீர் எவ்வளவோ பெட்டெர். முழு ஆத்ம திருப்தியும் கிடைக்கும். பாதுகாப்பும் உண்டு. வசுவுகள் வராது. ஒவ்வொரு பதிவிற்கும் நடுங்க வேண்டி இருக்காது. (நடுங்குவதைப் பற்றி உங்களுக்கு நான் சொல்லியா தெரிய வேண்டும்?):) வழுக்கி விழுந்தால் வாழ்வுண்டு. வழுக்கி, வழுக்கி, வழுக்கி வீழ்ந்தவனுக்கு வாழ்வுண்டோ?

உனக்கும் புரியலையா ராமா?! அட ராமா! ரகுராமா! ராஜாராமா! ஆதிராமா!முரளீதரா! கிருஷ்ணா! அட கோபாலா! செந்தில் குமரா! கார்த்திகேயா! ராமனுக்கு தாசா!

ஒரே ஒரு பிறவி! தெய்வப்பிறவி! மறு பிறவி எடுத்தாலும் அது ஒன்றே தெய்வப்பிறவி. அது நான் அணுஅணுவாக பூஜிக்கும் என் இதய தெய்வம் நடிகர் திலகமே!

Gopal.s
8th June 2014, 03:00 PM
Hi Vasu,

I enjoyed your maru piravi.

Russellcaj
8th June 2014, 03:52 PM
Mr. Vasudevan.

Good write-up on Marupiravi song.

Please write about the song Oh mere dhil rupa sung by JJ mam in suriyagandhi.

stl.

vasudevan31355
9th June 2014, 07:09 AM
ராகவேந்திரன் சார்,

திரி தொடங்கிய உடனேயே வந்து வாழ்த்துக்கள் கூறி தங்கள் பங்கையும் சிறப்பாக அளித்து விட்டீர்கள். நன்றி!

'வைரம்' படத்தில் தாங்கள் அளித்துள்ள 'இரு மாங்கனி போல் இதழோரம்' பாடல் என் மனதை மிக மிக கொள்ளை கொண்ட ஒரு பாடல். எஸ்.பி.பாலாவின் குழையும் குரலுக்கு ஈடுகொடுத்து ஜெயலலிதா அவ்வளவு அற்புதமாக இப்பாடலைப் பாடியிருப்பார். (கிட்டத்தட்ட பி. வசந்தாவின் குரல் போல)

ராமண்ணாதான் இப்படத்தின் இயக்குனர். காதல் காட்சிகளை ரசம் சொட்ட சொட்ட அதுவும் ஹீரோயினை நனையவிட்டு பார்ப்பதில் இவருக்கு இணை இவர்தான்.

'இது காதல் பூஜை என்றால் ஆரத்தி எங்கே?'

இந்த வரிகளை மேடம் பாடும் அழகே அழகு.

தங்களின் பங்களிப்புகள் அவசியம் இத்திரிக்குத் தேவை. ஏனெனில் தமிழ்த் திரைப்படப் பாடல்கள் அனைத்தையும் அறிந்தவர் தாங்கள். அதுமட்டுமல்ல... இசைக்கருவிகளைப் பற்றியும் அற்புதமான தகவல்களைத் தரக்கூடிய விஷயங்கள் அறிந்தவர்.

அரிதான அருமையான பாடல்களை சுவைபடத் தருவீர்கள் என்று நான் சொல்லவும் வேண்டுமோ!

vasudevan31355
9th June 2014, 07:14 AM
கோ,

நன்றி!

நீங்கள் என்ன சாமான்யப்பட்டவரா? எந்தப் பாடலாக இருந்தாலும் நினைத்த நொடியில் நான் கேட்ட மாத்திரத்தில் சொல்லக்கூடிய அசாத்திய திறமை கொண்ட மனிதராயிற்றே!

நாம் அலைபேசியில் எவ்வளவோ பாடல்களைப் பற்றி மணிக்கணக்காக உரையாடியுள்ளோம். அதுதான் இத்திரியை நான் தொடங்க ஒரு காரணமாய் இருந்தது என்றும் கூறலாம்.

நடிகர் திலகத்தின் காவியங்களை ஆழ்ந்து அலசுவது தங்களுக்குக் கைவந்த கலை.

அதே போல இத்திரியில் தங்களது பங்கு இருக்க வேண்டும் என்பது என் ஆசை.

வாருங்கள். அற்புதமான பாடல்களைப் பற்றிய தகவல்களைத் தாருங்கள். இது என் அன்புக் கட்டளை.

RAGHAVENDRA
9th June 2014, 07:24 AM
வாசு சார்
தங்கள் வரவேற்பிற்கும் பாராட்டிற்கும் நன்றி.
அபூர்வமான பல பாடல்களை அவற்றின் சிறப்போடு இங்கே பகிர்ந்து கொள்ளலாம்.

பொதுவாக ஹோட்டல், கிளப் நடனக் காட்சி, பாடல், எல்.ஆர்.ஈஸ்வரியின் குரல் என்றாலே அந்தக் காலத்தில் தியேட்டரில் மக்கள் அமரமாட்டார்கள், இளைஞர்களைத் தவிர. அதுவும் பாடல் ஈர்க்க வேண்டும். ஆனால் மெல்லிசை மன்னருக்கு எந்த சூழ்நிலையானால் என்ன அவருடைய திறமை பளிச்சிட்டு விடும். எம்.எஸ்.வி. இசையமைத்து எல்.ஆர்.ஈஸ்வரி பாடிய பல கிளப் டான்ஸ் பாட்டுக்கள் ஒவ்வொன்றிலும் இசையில் ஏராளமான நுணுக்கங்களைப் புகுத்தியிருப்பார். அப்படி ஒரு பாடலைத் தான் நாம் இங்கே காண உள்ளோம்.

மிஸ்டர் சம்பத் திரைப்படத்தில் எல்லோரும் பொதுவாக அறிந்த பாடல் ஆரம்பம் யாரிடம், அலங்காரம் போதுமடி. அவ்வப்போது எம்எஸ்வி பாடிய ஒரே கேள்வி உனைக் கேட்டேன் பாடல். ஆனால் இவை எல்லாவற்றையும் தூக்கிச் சாப்பிடும் வகையில் அவர் அமைத்த பாடல் அன்பான ரசிகன் என்னோடு இருக்க.. இப்பாடலில் கிடார் மற்றும் அக்கார்டியனுடன் மேற்கத்திய பாணிய்ல தொடங்கும் பாடல் நடுவில் சாஸ்த்ரீய மெட்டில் புகுந்து நாதஸ்வரத்தை வாசிக்க வைத்திருப்பது அவருக்கே உரிய சிறப்புத் திறமையாகும். அதனைத் தொடர்ந்து ட்ரம்பெட் ஒலிக்கும். பாடலின் தாள அமைப்பில் பாங்கோஸ் இசைக் கருவி அற்புதமாக கால்களைத் தாளம் போட வைக்கும்.

என்றென்றும் நான் விரும்பும் எம்எஸ்வியின் பாடல்களில் இது குறிப்பிடத் தக்கதாகும்.

http://youtu.be/6ZFr1rdnKOU

Richardsof
9th June 2014, 08:25 AM
VASU SIR

PLEASE
http://youtu.be/PWpWTVDyM5g

vasudevan31355
9th June 2014, 10:22 AM
நன்றி ஸ்டெல்லா அவர்களே!

இதோ நீங்கள் கேட்ட பாடல்.

'சூர்யகாந்தி' திரைப்படத்திலிருந்து.

ஒ..மேரி தில்ரூபா...
ஏ..மேரா தீவானா...

பாடல்.

http://i1.ytimg.com/vi/fpqvU0Nu2_4/maxresdefault.jpg

வித்யா மூவிஸ் 'சூர்யகாந்தி' 1973-இல் வெளிவந்த ஒரு கருப்பு வெள்ளைப் படம். 100 நாட்கள் ஓடிய வெற்றிச் சித்திரம். இசை 'மெல்லிசை மன்னர்'. பாடல்கள் கவிஞர் கண்ணதாசன். தயாரிப்பு வேணுகோபால். இயக்கம் முக்தா ஸ்ரீனிவாசன்.

கணவன் தன் மனைவி மேல் கொண்ட ஈகோ பிரச்னையை அற்புதமாக இப்படம் அலசுகிறது.

கணவன் தன்னைவிட அதிகம் சம்பாதிக்கும் தன் மனைவிக்கு சமூகத்தில் அவளுக்குக் கிடைக்கும் மதிப்பையும், அங்கீகாரங்களையும் கண்டு அதனை ஏற்றுக் கொள்ள முடியாமல் தவிக்கிறான். தன் தாழ்நிலையை எண்ணி குமுறுகிறான். தன் வீட்டார் கூட தன் மனைவியைத் தலையில் தூக்கிக் கொண்டு ஆடுவதை அவனால் பொறுக்க முடியவில்லை.

இறுதியில் கணவனின் ஈகோ வென்றதா அல்லது மனையாளின் பொறுமை வென்றதா என்ற கருத்தை அழகாக வலியுறுத்திய படம்.

கணவன் மனைவி சரிசம உறவே சாலச் சிறந்தது என்ற கருத்தை போதிக்கும் இப்படத்தில் முத்துராமன், ஜெயலலிதா பிரதான பாத்திரங்களில் நடித்திருந்தனர்.

நீங்கள் குறிப்பிட்டிருந்த பாடல் அக்காலங்களில் பாண்டி வானொலியிலும், இலங்கை வானொலியிலும் அதிகம் ஒலிபரப்பப்பட்ட ஒரு பாடல்.

கால்பந்து வீரர்கள் உடையணிந்து முத்துராமனும், ஜெயலலிதாவும் ஆடிப் பாடும் இந்த டூயட் பாடலை டி.எம்.எஸ்ஸும், ஜெயலலிதாவும் இணைந்து அற்புதமாகப் பாடியிருந்தனர். சற்றே வயது முதிர்ந்திருந்தாலும் கிளாமரில் நான்தான் ராணி என்று ஜெயா இப்பாடலில் மீண்டும் நிரூபித்திருந்தார்.

இப்படத்தின் அபாரமான வெற்றி சரிந்திருந்த ஜெயலலிதாவின் மார்கெட்டை மீண்டும் சரி செய்தது. இதே மாதிரி கதையமைப்பில் சில படங்களை முத்துராமன், ஜெயலலிதா இணைந்து நடிக்க இப்படம் மூல காரணமானது. (கணவன் மனைவி, அன்புத் தங்கை)

1973ஆம் ஆண்டிற்கான சிறந்த தமிழ் நடிகை என்று பிலிம்பேர் பத்திரிகை அவார்ட் தந்து ஜெயா மேடத்தை கௌரவித்தது.

அதுமட்டுமல்லாமல் கவிஞரே ஒரு காட்சியில் தோன்றி நடித்து காலத்தால் அழிக்க முடியாத 'பரமசிவன் கழுத்திலிருந்து பாம்பு கேட்டது' பாடலைத் தந்து இப்படத்திற்கு மேலும் பெருமை சேர்த்தார்.

எஸ்.பி.பி மற்றும் ஜெயலலிதா இருவரும் இணைந்து பாடிய 'நானென்றால் அது அவளும் நானும்' பாடலை யார்தான் மறக்க முடியும்?

இப்படத்தில் 'தெரியாதோ நோக்கு' என்று ஆச்சி பாடிய ஐயராத்து மாமி பாடல் அப்போது மிகவும் பிரசித்தம்.

http://i1.ytimg.com/vi/fZZ9Kd00eFU/maxresdefault.jpg

இப்போது பாடலுக்கு வருவோம்.

முழுப் பாடல் வரிகளும் உங்களுக்காக.

ஒ..மேரி தில்ரூபா...
ஏ..மேரா தீவானா...

உன் ஆசைக்கிளி
மாடர்ன் அனார்கலி
இந்த உடை எப்படி?
வந்த நடை எப்படி?

நாலு பக்கமும் சுவரெழுப்பினால்
நடுவில் உன்னை வைப்பேன்
ஷாஜஹானைப் போல்
காதல் போதையில் கவிதை நூறு சொல்வேன்

என் திராட்சைக் கொடி
காதல் தேமாங்கனி
இந்த உடை எப்படி?
வந்த நடை எப்படி?

ஒ..மேரி தில்ரூபா...
ஏ..மேரா தீவானா...

உன் வீட்டுக்கு ஜன்னல்கள் ஏனோ!
என்னை ஓயாமல் நீ பார்க்கத் தானோ!
உன் பார்வை பட்டதும் பனியைப் போலவே
உருகிப் போனவள் நானோ!

நீ சொர்க்கத்தில் வாழ்ந்தாலும் கூட
உன் பக்கத்து வீடெந்தன் வீடு
நீ ஊரை மாற்றலாம்
வீட்டை மாற்றலாம்
உள்ளம் மாறுமோ கூறு

மனம் முன்னோடு பின்னோடும் போது
இனி நான் வேறு நீ வேறு ஏது?

மனம் முன்னோடு பின்னோடும் போது
இனி நான் வேறு நீ வேறு ஏது?

ஒ..மேரி தில்ரூபா...
ஏ..மேரா தீவானா...

உன் ஆடைகள் மேல்நாட்டுப் பாணி
நீ பாவைகள் சாம்ராஜ்ய ராணி
உன் ஜாடை என்னவோ
ஜாதி முல்லையோ
சிலை கொடுத்ததோ மேனி

என் பொன்னான கன்னத்தைக் கேட்டு
உன் எண்ணத்தின் வண்ணத்தைத் தீட்டு
உன் சொந்தமான பின் எந்தன் மேனியைத்
தொட்டுப் பேசுமோ காற்று

ஒரு முத்தாரம் இட்டாக வேண்டும்
அதில் ஈரேழு லோகங்கள் தோன்றும்

ஒரு முத்தாரம் இட்டாக வேண்டும்
அதில் ஈரேழு லோகங்கள் தோன்றும்

உன் ஆசைக்கிளி
மாடர்ன் அனார்கலி
இந்த உடை எப்படி?
வந்த நடை எப்படி?

என் திராட்சைக் கொடி
காதல் தேமாங்கனி
இந்த உடை எப்படி?
வந்த நடை எப்படி?

ஒ..மேரி தில்ரூபா...
ஏ..மேரா தீவானா...

இப்போது பாடலைப் பார்த்து மகிழுங்கள்.


https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=I37lvjD7FmI

gkrishna
9th June 2014, 11:00 AM
டியர் வாசு சார்
சூரிய காந்தி ஹிந்தி அபிமான் (அமிதாப் அண்ட் ஜெயா பாதுரி) ஜோடி தழுவல் என்று படித்த நினவு
அது சரியா

gkrishna
9th June 2014, 11:07 AM
டியர் வாசு சார்
உங்கள் நகை சுவை அபாரம
மறு பிறவி திரை படத்தில் இன்னொரு பாடல் எனக்கு நினவு உண்டு
"சொந்தம் இனி உன் மடியில் சொர்க்கம் இனி என் அழகில் "
spb என்றும் நினவு
கிருஷ்ணா

vasudevan31355
9th June 2014, 11:19 AM
கிருஷ்ணா சார்!

வருக!

உங்கள் சந்தேகம் எனக்கும் உண்டு. அபிமான் படத்தில் பாடகரான அமிதாப் கிராமத்து பெண்ணான ஜெயாபாதுரியை மணந்து கொள்கிறார். ஆனால் ஜெயாவோ பின்னணிப் பாடகியாகி அமிதாபை விட புகழ் பெறுகிறார். அமிதாப் மனைவியின் முன்னேற்றம் காண சகியாமல் துடிக்கிறார்.

சூரியகாந்தியின் கதை வேறு. ஆனால் ஆனால் இருபடங்களின் கதைக் கரு ஒன்று. மனைவியின் முன்னேற்றம் காணப் பொறுக்காத தாழ்நிலை குணம் கொண்ட கணவர்கள் கதை கொண்டது இரு படங்களும்.

தவிர 'சூர்யகாந்தி' முன்னம் ரிலீஸ் ஆனதா அல்லது அபிமான் (27 July 1973) முன்னமேயே ரிலீஸ் ஆனதா என்றும் தெரியவில்லை. ஆனால் இரண்டுமே 1973-இல்தான் வெளியாகி உள்ளன.

gkrishna
9th June 2014, 11:28 AM
அதே போல் தாய் வீடு சீதனம் என்று ஒரு படம் (ரவி அண்ட் விஜயா ஒரு ஜோடி) (ஜெய் அண்ட் உஷா நந்தினி என்று நினவு) மதுரை திருமாறன் direction
" எனக்கும் உனக்கும் வழக்கு இரண்டும் சுகத்தின் கணக்கு கை இணைத்து தொட்டு அணைத்து நாம் கலந்தால் என்ன "
விச்சு இசை (saxophone இண்டர்லுட பின்னி பிடல் எடுத்து இருப்பார்)

vasudevan31355
9th June 2014, 11:30 AM
கிருஷ்ணா சார்,

"சொந்தம் இனி உன் மடியில் சொர்க்கம் இனி என் அழகில் "

அற்புதமான ஒரு பாடல்.

இப்பாடலைப் பற்றி விரிவாக எழுதினால்?.... எழுத

ஆசை துடிக்கின்றது

இருந்தாலும்

அச்சம் தடுக்கின்றது.

நான் எழுதினால் என்னை அறம் பாடி உண்டு இல்லை என்று பண்ணி விடுவார்கள். இதற்கெல்லாம் கோபால்தான் லாயக்கு.

அவர் எழுதுவார் என்று நினைக்கிறேன்.

ஆனாலும் அற்புதமான பாலாவின் குழையும் குரலில் ஒலிக்கும் பாடல். ராமாண்ணாவுக்கு துணிச்சல் ஜாஸ்தி. அதைவிட மஞ்சுளாவுக்கு. அதை விடவும் நவரசத் திலகத்திற்கு. மனிதர் பூனை மாதிரி இருந்து கொண்டு என்னவெல்லாம் செய்கிறார்?! ஊமைக் குசும்பர்களை நம்பக் கூடாது என்று சும்மாவா சொல்லி வைத்தார்கள்?

விஷுவலாகப் பார்க்கும் போது தனியாக பார்த்தால் கூட நெளியத்தான் வேண்டியிருக்கும்.

இரவு மணி 12 ?

சார்,

நான் ரவிச்சந்திரன் நடித்த மயிலாடும் பாறை மர்மம் படத்தைப் பற்றி சொன்னேனாக்கும்.

நீங்க வேற!

vasudevan31355
9th June 2014, 11:32 AM
அதே போல் தாய் வீடு சீதனம் என்று ஒரு படம் (ரவி அண்ட் விஜயா ஒரு ஜோடி) (ஜெய் அண்ட் உஷா நந்தினி என்று நினவு) மதுரை திருமாறன் direction
" எனக்கும் உனக்கும் வழக்கு இரண்டும் சுகத்தின் கணக்கு கை இணைத்து தொட்டு அணைத்து நாம் கலந்தால் என்ன "
விச்சு இசை (saxophone இண்டர்லுட பின்னி பிடல் எடுத்து இருப்பார்)

யப்பா! பெரிய ஆள் சார் நீங்க.

உங்ககிட்ட ரொம்ப ஜாக்கிரதையாக இருக்கணும் போல இருக்கே!:)

பின்னாடி வரேன்.

gkrishna
9th June 2014, 11:35 AM
டியர் வாசு சார்
உங்கள் பதிலுக்கு நன்றி
அபிமான் 27 July 1973 என்று விக்கியில் பார்த்த நினவு
சூரிய காந்தி 15 aug 1973 என்று நினவு
நிச்சயமாக தழுவல் ஆக இருக்க முடியாது
நீங்கள் சொன்னது போல் இரண்டும் கதை கரு தான் ஒன்று ஆனால் தளம் வேறு

vasudevan31355
9th June 2014, 11:36 AM
கிருஷ்ணா சார்

நமக்குள் வழக்கே வேண்டாம்.

ஜெய்க்கும், உஷா நந்தினிக்கும் மட்டுமே வழக்கு.

இவர்களைப் பார்ப்பது மட்டுமே நமது சுகத்தின் கணக்கு.


http://www.youtube.com/watch?v=lMeIkUGq-YA&feature=player_detailpage

gkrishna
9th June 2014, 11:38 AM
டியர் வாசு சார்
நீங்கள்,முரளி சார்,பம்மலர் சார் இவர்களுடன் பேசும் போது அல்லது தொடர்பு கொள்ளும் போது நிறைய நினைவுகள் அலை மோதுகின்றன
"உள்ளத்தில் நூறு நினைப்பு உன்னிடம் சொல்ல தவிப்பு"

gkrishna
9th June 2014, 11:43 AM
அதே போல் தாய் வீடு சீதனம் படத்தில் இன்னொரு பாடல்
"காலத்தை வெல்லும் இன்ப காதல் வாழ்க" சுசீலா அண்ட் ஜேசுதாஸ்
பாடல் கண்ணதாசன் அல்லது வாலியா என்று தெரியவில்லை
லாஸ்ட் ஸ்டான்சா
"மாங்கனி வேண்டுமே
என்மேல் இல்லையோ
தேன் சுவை வேண்டுமே
என் இதழ் இல்லையோ
இன்று என் மேனி சுகம் கேட்டது
இதில் பஞ்சாங்கம் ஏன் பார்ப்பது "
நீங்கள் கூறுவது போல் midnight மசாலா வரிகள் தான்

gkrishna
9th June 2014, 11:45 AM
வாசு சார்
உங்கள் மறு பிறவி விமர்சனத்தை படித்து சிரித்து வாய் வலித்து விட்டது

gkrishna
9th June 2014, 12:01 PM
தொட்டதெல்லாம் பொன்னாகும் (ஜெய் /ஜெயசித்ரா)
ஆவணி மலரே ஐப்பசி மழையே
கார்த்திகை விளக்கின் தனி ஒளியே
பாலா சுசீலா ஆரம்ப ஹம்மிங்
விஜயபாஸ்கர் மெலடி
இந்த விஜய பாஸ்கர் என்ன ஆனார் வாசு சார்

gkrishna
9th June 2014, 12:08 PM
மன்னிக்க வேண்டும் எல்லா நண்பர்களும்
சற்று எல்லை மீறி விட்டேன்
காலத்தை வெல்லும் இன்ப காதல் வாழ்க பாடல் பற்றி குறிப்படும் போது

vasudevan31355
9th June 2014, 12:11 PM
அதே போல் தாய் வீடு சீதனம் படத்தில் இன்னொரு பாடல்

லாஸ்ட் ஸ்டான்சா

தேன் சுவை வேண்டுமே
என் இதழ் இல்லையோ
இன்று என் மேனி சுகம் கேட்டது
இதில் பஞ்சாங்கம் ஏன் பார்ப்பது "
நீங்கள் கூறுவது போல் midnight மசாலா வரிகள் தான்

:yes::victory::musicsmile::cool2::2thumbsup:

vasudevan31355
9th June 2014, 12:15 PM
மன்னிக்க வேண்டும் எல்லா நண்பர்களும்
சற்று எல்லை மீறி விட்டேன்
காலத்தை வெல்லும் இன்ப காதல் வாழ்க பாடல் பற்றி குறிப்படும் போது

நிஜமாகவே தங்கள் பெருந்தன்மைக்கு தலை வணங்குகிறேன்.

இந்த நாட்டில் நல்லவர்களும் இருக்கிறார்கள்

தங்களைப் போல.

vasudevan31355
9th June 2014, 12:18 PM
பாடல் எழுதியவர் அவர் பாட்டுக்கு எழுதிப் போய் விட்டார்

நடித்தவர்கள் அவர்கள் பாட்டுக்கு (பாட்டுக்கு) நடித்துப் போய் விட்டார்கள் துட்டு வாங்கிக் கொண்டு.

பாடலை அலசுபவர்கள் அவஸ்தைப் பட வேண்டியுள்ளது. நாம் ஏதோ தப்பு செய்தது மாதிரி.

இல்லை கிருஷ்ணா சார்?

gkrishna
9th June 2014, 12:21 PM
யாருக்கு மாப்பிள்ளை யாரு ஜெய்/ஜெயசித்ரா ஜோடி
"முத்துக்கள் சிந்தி தித்திக்கும் மொழியில் கண்ணே விளையாடு
செவ்வந்தி பூவின் கன்னங்கள் மீது சித்திரை கோலமிடு
என்னடி தேவி பெண்மையின் அழகை
மீட்டவா தாகமா
அணைக்கவா ஆசையா
சுவைக்க கூடாதா "
இதுவும் பாலா சுசீலா விஜய பாஸ்கர் பாடல்
இந்த பாடலின் சரணத்தில்
பாலாவின் இளமை கொஞ்சும் வாய்ஸ் மனதை நெருடும்

gkrishna
9th June 2014, 12:24 PM
வாசு சார்
நம்ம திரியில் எழுதும் போது சற்று யோசித்து எழுத வேண்டி இருக்கிறது
நீங்கள் மறு பிறவி பாடலில் சொன்னது போல் கம்பை தூக்கி கொண்டு வந்து விடுவார்கள் எல்லோரும்
நாம் ஏதோ தவறு செய்தது போல
நாம் வெறும் அம்பு தானே

gkrishna
9th June 2014, 12:47 PM
அதே போல் தொட்டதெல்லாம் பொன்னாகும் திரைபடத்தில்
இன்னொரு பாடல் பாலா சுசீலா combination விஜய பாஸ்கர் மியூசிக்
ஜெய் ஜெயசித்ரா ஜோடி
பாடல் தான் யார் என்று தெரியவில்லை
இந்த கால கட்டத்தில் நிறைய பாடல் பஞ்சு அருணாசலம் எழுதினர் என்று கேள்வி
"பனி மழை மேகங்கள் பொழிகின்ற குளிரினால் திருக்குறள் படிக்கட்டுமா கண்ணே புது குரல் or குறள் கொடுக்கட்டுமா "
கிருஷ்ணா ஸ்வீட்ஸ் மைசூர்பா கெட்டது

gkrishna
9th June 2014, 04:10 PM
திரு ராகவேந்தர் சார்
வைரம் படத்தில் உள்ள "இரு மாங்கனி போல் இதழ் ஓரம் ஏங்குது மோஹம்" பாட்டை பற்றி
எழுதி இருந்தீர்கள் . ரொம்ப மகிழ்ச்சி மிக அருமை யான பாடல்
பாடல் இறுதியில் வரும் ஒரு பருகா சான்சே இல்லை
"இது காமன் பூஜை என்றால் ஆரத்தி எங்கே" - ஜெய
"அதை காமன் கேட்டு விட்டான் அவனிடம் தந்தேன்" - பாலா
"எதற்கோ உங்கள் கைகள் இரண்டும் துடிப்பதை கண்டேன்" - ஜெயா
"இங்கே நாள் பார்கவா இல்லை நான் பார்கவா " - பாலா
"ஆ ஆ ஹ " ஹம்மிங்
"அவசரம் என்ன"
கொஞ்சம் கவாலி டைப் கலந்தது

Russellcaj
9th June 2014, 05:21 PM
Mr. Vasudevan,

On my request, you have posted oh mere dhil rupa from the movie suriyagandhi, for that my many many thanks for you.

You posted complete details about the story, song situation, still photos, complete lyric lines and the video, a complete treat from you.

I like your dedication in your passion.

stl.

Gopal.s
10th June 2014, 03:18 AM
வாசு,

நிச்சயம் இங்கு பங்கு பெற்று ,அபூர்வ பாடல்கள் பற்றி அலசுவேன்.நீ குறிப்பிட்டது போல 55 முதல் 80 வரை தமிழ் திரை கண்ட அனைத்து பாடல்களையும் prompt இல்லாமல் முழுக்க என்னால் பாட முடியும்.

ரவி திரியிலும் பங்களிப்பேன்.(ஜெமினி திரியிலும்).

ஆனால் ,இதெல்லாம் வார இறுதி பொழுது போக்கு போன்றது. நம் தாய் வீடு நம் திரிதானே?ஆயிரம் சச்சரவுகள் வந்தாலும் தாய் வீடு தாய் வீடுதான்.உன்னுடைய ஆடை அழகர்,கதாயகியர் வரிசை,சண்டை காட்சி எல்லாம் தொங்கலில் விட்டு,இங்கு வந்து முழு நேரம் இருப்பது.....என்னமோ போ. ரவி சொல்வது போல,துளி விஷம் நீ வெளியேற காரணமாக முடியாது.அதிக பாராட்டு பெற்ற பதிவு அது.கொண்டாட பட்டது.

பாராட்டுதல்களை எதிர்பார்த்திருந்தால் நான் இரண்டாயிரம் பதிவுகளை இட்டே இருக்க முடியாது.என் உழைப்புக்கேற்ற அளவு நான் ஒன்றும் பெரிதாக கொண்டாட பட்டதில்லை.ஆனால் ,நம்மிடையே வாழ்ந்த ,உலகத்திலேயே கண்டிராத,காண முடியாத அபார திறமையுள்ள தமிழ் தெய்வத்தை போற்றும் ,அவர் எனக்களித்த மாலை கொடைகளுக்கு காணிக்கையாக,அந்த தெய்வத்துக்கு நான் பண்ணும் சத்திய பூஜை.

உனக்காக நாங்கள் அங்கு காத்திருக்கிறோம் .வந்து விடு.

RAGHAVENDRA
10th June 2014, 07:36 AM
கிருஷ்ணா
தாங்கள் மிக அருமையாக இரு மாங்கனி பாடலை விவரித்து எழுதியிருப்பது ரசிக்க வைக்கிறது. அது மட்டுமல்லாமல் பழைய பாடல்கள் நம் ஒவ்வொருவருக்குள்ளும் எந்த அளவிற்கு ஆழமாய் ஊடுருவியுள்ளன என்பதற்கு சான்றாகவும் விளங்குகிறது.

வாசு சாரின் பதிவுகளை நடிகர் திலகம் திரி எந்த அளவிற்கு மிஸ் பண்ணுகிறது என்பதற்கு இந்த்த் திரியின் வரவேற்பே கட்டியம் கூறும்.

நம் மனதை மயக்கும் மற்றோர் பாடல், இதுவும் எல்.ஆர்.ஈஸ்வரியின் மயக்கும் கானமே. எதிர்காலம் திரைப்படத்தில் இடம் பெற்ற மௌனம் தான் பேசியதோ.. இப்பாடலை விவித்பாரதியில் தினமும் இரவு 8.30 மணிக்கு விளம்பரம் செய்வார்கள். இரண்டாம் சரணத்தில் இருப்பது ஒரு மனது வரிகளுக்கு முன் ஒரு இசைக் கருவி ஒலிக்கும். அது தான் விளம்பரத்தில் இடம் பெறும். அப்படியே பசுமையாக நினைவில் உள்ளது.

மறக்க முடியாத பாடல், மனதை விட்டு அகலாத பாடல்

http://youtu.be/M14IRPIVUlw

இப்பாடலின் ஆடியோ மட்டும் கேட்க

http://www.inbaminge.com/t/e/Ethirkalam/

RAGHAVENDRA
10th June 2014, 07:47 AM
மாடர்ன் தியேட்டர்ஸ் வேதா இணையில் ஒவ்வொரு படமும் பாடலும் காலத்தை வென்று நிற்பவை. அந்நிய மெட்டை எடுத்தாலும் அதிலும் தன் ஆளுமையைப் புகுத்தி தனித்துவமாக சில சமயம் ஒரிஜினலை விட அருமையாக பாடலை அமைத்து விடுவார் வேதா. என்கிற வேதாச்சலம் அவர்கள். அப்படி ஒரு பாடல் தான் காதலித்தால் போதுமா படத்தில் இடம் பெற்ற கொஞ்சம் நில்லடி பாடல், டி.எம்.எஸ்., பி.சுசீலா இவர்களின் குரலின் சிறப்பை இன்னும் அருமையாக சித்தரிக்கும். இப்பாடலின் சிறப்பை விவரிக்க பல பக்கங்கள் தேவை. இதோ நமக்காக இப்பாடல்

http://youtu.be/GAFot8yisbY

gkrishna
10th June 2014, 10:17 AM
அன்பு ராகவேந்தர் சார்
இனிய காலை வணக்கம்
உங்கள் reply மனதிற்கு மிகவும் மகிழ்ச்சி தந்தது
"மௌனம் தான் பேசியதோ " என்ன படம் என்று தெரியாமல் சென்ற வருடம் சில நாள்கள் தவித்து கொண்டு இருந்தேன் . பிறகு ஒரு நாள் ஈஸ்வரி ஹிட்ஸ் பாடல்களை பற்றி ஒரு ப்ளாக் படித்த போது
எதிர்காலம் என்று அறிந்தேன் இப்போது அதை நினவு படுத்தி விட்டர்கள் . இந்த பாடலில் கூட ஒரு ஹம்மிங் முதல் சரணம் முடிவில் என்று நினவு "ல ல " என்று வரும்
மிக்க நன்றி
இதே போல் "உனக்கும் எனக்கும் உறவு தந்தது யாரோ " என்று ஒரு பாடல் ஜெய் நடித்த காதலிக்க வாங்க என்று நினவு
TMS ஈஸ்வரி combination
இறுதியில் ஒரு சூப்பர் ஹம்மிங் "ஆஹா ஓஹோ

gkrishna
10th June 2014, 10:20 AM
வாசு சார்
நீங்கள் எழுதிய சூரிய காந்தி படம் நேற்று இரவு சன் லைப் தொலை கட்சியில் நீங்கள் எழுதிய படியே வரிக்கு வரி காட்சி அமைப்பு
வாசுவா கொக்கா

ScottAlise
10th June 2014, 10:46 AM
Dear Vasu sir,

Its a pleasure to see you back, thread is too good

mr_karthik
10th June 2014, 02:35 PM
டியர் வாசுதேவன் சார்,

தாங்கள் புதிதாக துவங்கியிருக்கும் பாடல் திரி ஜெட் வேகத்தில் பயணிக்கிறது. சற்றே மறந்திருந்த அருமையான பாடல்களை மீண்டும் நினைவூட்டி புத்துணர்வு பெற வைக்கிறது.

நல்ல துவக்கம். தொடர்ந்து பயணித்து திரி பெரிய வெற்றிகளை ஈட்ட வாழ்த்துக்கள். பாடல் வீடியோவை வெறுமனே தராமல் அழகிய முன்னுரை மற்றும் காட்சியமைப்பு, பாடல் வரிகள் என்று தந்து அசத்துவது தங்களுக்கு கைவந்த கலை. ஒரு சகோதரி கேட்டார் என்பதற்காக சூரியகாந்தி பாடலைப் பற்றி அத்தனை விவரங்களையும் காணொளியோடு தந்து, அவர் பொருட்டு எங்களையும் பார்த்து ரசிக்க வைத்து விட்டீர்கள்.

மீண்டும் வாழ்த்துக்கள், நன்றிகள்.

mr_karthik
10th June 2014, 03:01 PM
அதே போல் தொட்டதெல்லாம் பொன்னாகும் திரைபடத்தில்
இன்னொரு பாடல் பாலா சுசீலா combination விஜய பாஸ்கர் மியூசிக்
ஜெய் ஜெயசித்ரா ஜோடி
பாடல் தான் யார் என்று தெரியவில்லை
இந்த கால கட்டத்தில் நிறைய பாடல் பஞ்சு அருணாசலம் எழுதினர் என்று கேள்வி
"பனி மழை மேகங்கள் பொழிகின்ற குளிரினால் திருக்குறள் படிக்கட்டுமா கண்ணே புது குரல் or குறள் கொடுக்கட்டுமா "
கிருஷ்ணா ஸ்வீட்ஸ் மைசூர்பா கெட்டது

டியர் கிருஷ்ணாஜி,

தேனில் நனைத்த பலாச்சுளை இந்தப்பாடல். என்னவொரு மனதை வருடும் மேலோடி. எப்போது கேட்டாலும் கிறங்கடிக்கும் பாடல். வாலி எழுதினாரென்று நினைக்கிறேன், சரியாக நினைவில்லை.

எம்.எஸ்.வி., கே.வி.எம்., இளையராஜா ஆகிய சுனாமிகளில் சிக்கி சங்கர்-கணேஷ், வி.குமார், விஜயபாஸ்கர் போன்றோரின் நல்ல படைப்புக்கள் காணாமல் போயிருந்தன.

நல்லவேளையாக தொலைக்காட்சிகளில் பழைய பாடல்கள் ஒளிபரப்ப துவங்கியதால் இதுபோன்ற அற்புத படைப்புக்கள் வெளிச்சத்தைக் காண்கின்றன.

எவ்வளவு அருமையான பாடல்களையெல்லாம் நினைவு கூர்ந்து வருகிறீர்கள். பாராட்டுக்கள் கிருஷ்ணாஜி.

vasudevan31355
10th June 2014, 03:15 PM
ராகவேந்திரன் சார்,

நன்றியுரைக்க சற்று தாமதமாகி விட்டது. நான் சற்றும் எதிர்பாராதவகையில் என் அபிமானப் பாடகியின் 'மிஸ்டர் சம்பத்' பாடலான 'அன்பான ரசிகர் என்னோடு இருக்க... எந்நாளும் நான் ஒரு மகராணி' பாடலை அளித்து ஒருவழி பண்ணி விட்டீர்கள். ஆஹா! என்ன ஒரு டேஸ்ட் சார் உங்களுக்கும், கிருஷ்ணா சாருக்கும். இந்த மாதிரிப் பாடல்களையெல்லாம் நான் மட்டுமே ரசிக்க முடியும் என்ற மமதை கூட என்னிடம் குடிகொண்டிருந்தது. அதையெல்லாம் நீங்களும், கிருஷ்ணா சாரும், சுக்ரவதநீ அன்பர்களும் உடைத்து தூள்தூளாக்கி விட்டீர்கள். அதில் எனக்கு மிகப் பெருமையே! என்ன மாதிரி ரசிகர்கள்! எப்படிப்பட்ட ஞாபக சக்தி! என்ன ஒரு ரசனை! நீங்கள், வினோத் சார், கிருஷ்ணா சார், கார்த்திக் சார், ரவி சார், ஸ்டெல்லா அவர்கள் மற்றும் கோபால் சார் அனைவரும் புகுந்து விளையாட திரி களை கட்டி விட்டது. நிஜமாகவே மனதில் சந்தோஷ ஊற்று பெருக்கெடுத்து ஓடுகிறது. கிருஷ்ணா சார் அலைபேசியில் தொடர்பு கொண்டு இத்திரியைப் பற்றி பேசி மகிழ்ந்ததை மறக்க முடியாது. அவருக்கும் என் நன்றி!

அருமை கார்த்திக் சார் வேறு வந்து விட்டார். நீங்களும், கார்த்திக் சாரும் இருக்க இனி கொஞ்ச நஞ்சம் இருந்த பயமும் தீர்ந்து விட்டது. இனி பாடல்கள், படங்கள் சம்பந்தப்பட்ட புள்ளிவிவரங்கள் திரியில் அணிவகுத்து வரப்போகின்றன. மகிழ்ச்சிகரமான துவக்கம்.

கோபால் வேறு அவர் பாணியில் பின்னி எடுப்பதாகக் கூறியிருக்கிறார்.

புதிய அங்கத்தினரான ஸ்டெல்லா அவர்கள் பழைய பாடல்கள், படங்கள் பற்றி தெரிந்து கொள்வதில் வெகு ஆர்வமாய் இருக்கிறார். அவருக்கும் என் நன்றி!

நமது இந்தத் திரி ஜாம்பவான்களின் துணையினால் சரித்திரம் படைக்கப் போவது உறுதி.

சார்,

'மிஸ்டர் சம்பத்' பற்றி, அப்படத்தின் பலாச்சுளை பாடல்கள் பற்றி விரிவாக எழுத ஆசை. அதற்குள் கார்த்திக் சார் முந்திக் கொண்டு விடுவார் என்று நினைக்கிறேன்..... முந்திக் கொள்ள வேண்டும்... அதை விட வேறு என்ன இன்பம் இருக்கப் போகிறது நமக்கு? நேற்று 'கண்ணம்மா' படிக்க வைத்து, பின் படத்தையும் பார்க்க வைத்து தூக்கத்தை தொலைக்க வைத்தவராயிற்றே பல திரையுலக விவரங்களை விரல் நுனியில் வைத்திருக்கும் இந்த அதிசய மனிதர் கார்த்திக்!

vasudevan31355
10th June 2014, 03:39 PM
அருமை நண்பர் கார்த்திக் சார்,

வருக! வருக! என்று தங்களை இதயம் நிறைந்த மனமகிழ்ச்சியுடன் வரவேற்கிறேன். நீங்கள் இத்திரிக்கு வந்து பங்களிப்பது யானை பலம் கிடைத்தது போல எங்களுக்கு.

யானையின் பலம் எதிலே
நம்பிக்கையிலே
திரியோட பலம் எதிலே
(கார்திக்)திறமைசாலிகளிடத்தே

நடிகர் திலகம் மற்றும் அவர் படங்கள் பற்றிய விவரங்களா...
தியேட்டர் அனுபவங்களா..
தியேட்டர்கள் விவரங்களா...
படங்கள் ஓடிய நாட்களின் புள்ளிவிவரங்களா...
நடிகர் நடிகைகளுடனான நேரிடை அனுபவங்களா...
பழையபாடல்களா... அது பற்றிய விவரங்களா...
படங்களின் விமர்சனங்களா...
முத்துராமனா, ஜெய்சங்கரா, ரவிச்சந்திரனா, வேறு நடிகர்களா... அவர்களைப் பற்றிய விவரங்களா...
நடிகைகளைப் பற்றிய பல்வேறு சுவையான விஷயங்களா....

கூப்பிடுங்கள் எங்கள் கார்த்திக்கை.

என்று பெருமைபிடிபட நாங்கள் அழைக்கத் தகுதியானவர் தாங்கள் அல்லவோ!

தாங்கள் இத்திரியில் பங்களிக்க வந்தது எங்கள் பாக்கியமே!

இனி தர வேண்டிய பொறுப்பு தங்களுடையது
அதைப் பெற்று பேரின்பமடைய வேண்டிய வேலை எங்களுடையது.

'கண்ணம்மா'வை படைத்து கன்னம் வைத்த கள்வரே!

இனி உங்கள் பாடு.

கலக்குங்கள்.

நன்றி கலந்த மகிழ்ச்சியுடன்

வாசுதேவன்.

gkrishna
10th June 2014, 03:45 PM
டியர் வாசு சார்
நீங்கள் சொன்னது போல் பெரிய பெரிய திமிங்கலங்கள் முன்னிலையில்
விஜயபாஸ்கர் போன்ற சின்ன மீன்கள் காணமல் தான் போவர்கள்
அதில் சந்தேகமே இல்லை
முரசு sunlife இரண்டும் சில நல்ல நல்ல பாடல்களை ஒளிபரப்பி கொண்டு இருக்கிறார்கள்
சமீபத்தில் "mayor மீனாக்ஷி" படத்தில் இருந்து "கண்டேன் கல்யாண பெண் போன்ற மேகம் (accordinan இசை )
அங்கே உல்லாச ஊர்வல ஓடம்
மணமகள் மணமகன் மணவறை கோலமே " பாட்டை கேட்டேன்
கே.ர.விஜய புடவை கட்டு சூப்பர் அதை விட ஜெயின் ஹேர் ஸ்டைல்
சூப்பர் சூப்பர்
என்ன கொஞ்சம் விஜயா உடம்பு பூசின உடம்பு ஜெயக்கு அக்கா மாதிரி இருக்கிறார்
beautiful மெலடி .அண்ட் யூத்புல் சாங்
அந்த படம் ரொம்ப நாள் ஆக மியூசிக் ஷங்கர் கணேஷ் அல்லது வ.குமார் என்று நினைத்து கொண்டு இருந்தேன் பிறகுதான் தெரிந்தது விச்சு என்று .
பாலா என்ன ஒரு இளமையான் குரல்
"நான் கண்ணாடி பார்த்தால் என்ன "
"அதை கன்னத்தில் பார்த்தால் என்ன"
"நெஞ்சத்தை பார்த்தால் என்ன"
"அதை மஞ்சத்தில் பார்த்தால் என்ன"
பாட்டு பூராவும் அக்கார்டியன் இசை குற்றால சாரல் ஆக தவழும்

gkrishna
10th June 2014, 03:52 PM
டியர் வாசு சார்
நீங்கள் சொன்னது போல் பெரிய பெரிய திமிங்கலங்கள் முன்னிலையில்
விஜயபாஸ்கர் போன்ற சின்ன மீன்கள் காணமல் தான் போவர்கள்
அதில் சந்தேகமே இல்லை
முரசு sunlife இரண்டும் சில நல்ல நல்ல பாடல்களை ஒளிபரப்பி கொண்டு இருக்கிறார்கள்
சமீபத்தில் "mayor மீனாக்ஷி" படத்தில் இருந்து "கண்டேன் கல்யாண பெண் போன்ற மேகம் (accordinan இசை )
அங்கே உல்லாச ஊர்வல ஓடம்
மணமகள் மணமகன் மணவறை கோலமே " பாட்டை கேட்டேன்
கே.ர.விஜய புடவை கட்டு சூப்பர் அதை விட ஜெயின் ஹேர் ஸ்டைல்
சூப்பர் சூப்பர்
என்ன கொஞ்சம் விஜயா உடம்பு பூசின உடம்பு ஜெயக்கு அக்கா மாதிரி இருக்கிறார்
beautiful மெலடி .அண்ட் யூத்புல் சாங்
அந்த படம் ரொம்ப நாள் ஆக மியூசிக் ஷங்கர் கணேஷ் அல்லது வ.குமார் என்று நினைத்து கொண்டு இருந்தேன் பிறகுதான் தெரிந்தது விச்சு என்று .
பாலா என்ன ஒரு இளமையான் குரல்
"நான் கண்ணாடி பார்த்தால் என்ன "
"அதை கன்னத்தில் பார்த்தால் என்ன"
"நெஞ்சத்தை பார்த்தால் என்ன"
"அதை மஞ்சத்தில் பார்த்தால் என்ன"
பாட்டு பூராவும் அக்கார்டியன் இசை குற்றால சாரல் ஆக தவழும்

parthasarathy
10th June 2014, 04:31 PM
In Mr. Sampath, one duet by SPB and S. Janaki - Poonkodiyae Poonkodiyae Poo irundhaal tharuvaayo" is a good duet.

Regards,

R. Parthasarathy

vasudevan31355
10th June 2014, 04:47 PM
In Mr. Sampath, one duet by SPB and S. Janaki - Poonkodiyae Poonkodiyae Poo irundhaal tharuvaayo" is a good duet.

Regards,

R. Parthasarathy

பார்த்தசாரதி சார்

வாருங்கள். நீங்கள் குறிப்பிட்ட 'பூங்கொடியே... பூங்கொடியே' பாடல் 'ஸ்கூல் மாஸ்டர்' படத்தில் ஒலிப்பது. 'மிஸ்டர் சம்பத்தில் 'ஆரம்பம் யாரிடம் உன்னிடம்தான்' பாடல் பாலாவும், சுசீலாவும் தூள் கிளப்புவது.


http://www.dailymotion.com/video/xl656y_poongodiye-poongodiye_animals

vasudevan31355
10th June 2014, 04:55 PM
கிருஷ்ணா சார்,

டக்கர். 'மேயர் மீனாட்சி'யை நினைவுபடுத்தியதற்கு நன்றி!

http://www.inbaminge.com/t/m/Mayor%20Meenakshi/folder.jpg

1976-இல் இந்தப் படம் வரும் போது எனக்கு வயது 15. ஆனால் அப்போது இப்படத்தை பார்க்க முடியவில்லை. ஆனால் 'கண்டேன், கல்யாணப் பெண் போன்ற மேகம்' பாடலென்றால் அப்படி ஒரு பைத்தியம்.

என் வாய் அப்போதும் சரி இப்போதும் சரி இப்பாடலை முணுமுணுத்துக் கொண்டே இருக்கும்.

ஆனால் படத்தில் இந்தப் பாடல் யாருக்கு என்று தெரியாமலேயே இருந்தது. மிக கிளாஸான ஒரு பாடல். பாலா, சுசீலா அம்மா இருவரும் சேர்ந்து கொடுத்த ஹிட்ஸ் எண்ணிலடங்காது. அதில் இப்பாடல் ஒரு மணிமகுடம் என்றே சொல்லுவேன் இல்லை இல்லை சொல்லுவோம்.

இப்பாடலின் இரண்டாவது சரணத்தை பலர் கேட்டோ அறிந்தோ இருக்க அதிகம் வாய்ப்பில்லை. அதை இப்போது தருகிறேன்

இதழின் மீதாக வளையும் வண்ணங்கள் இளமைப் பூப்பந்தலோ
இலையும் மூடாமல் தலையும் வாராமல் அசையும் பொன்பூக்களோ
நடையில் அன்னங்கள் அடையும் இல்லங்கள் இடையில் வைத்தார்களோ
நளினப் பொன்மேனி சுவையைப் பாரென்று உனக்கே தந்தார்களோ

சுகம் ஒன்றாக வைத்தார்களோ
நம்மை ஒன்றாக்க வைத்தார்களோ
கண் பார்க்க வைத்தார்களோ
உன்னை பெண் பார்க்க வைத்தார்களோ

இந்தப் பாடலை படத்தில் இளம் நாயகன் நாயகிக்கு தந்திருப்பார்கள் (அதாவது விஜயகுமாருக்கும், ஸ்ரீபிரியாவிற்கும் அதுவும் விதவிதமான மாடர்ன் டிரெஸ்சில் ) என்று மனதிலேயே ஒரு கற்பனை வளர்த்து வைத்திருந்தேன். நல்ல ஆக்டிவான பாடல் வேறு அல்லவா! ஆனால் அவர்களுக்கு எதிர்பாராத விதமாக 'திருமுருகன் அருகினிலே வள்ளிக் குறத்தி' வாய்த்தது.

படத்தை பார்க்கும் சந்தர்ப்பமும் உடனடியாக ஏற்படவில்லை.

பின்னாட்களில் தொலைக்காட்சியில் இப்பாடலின் காட்சியைக் கண்ட போது எனக்கு ஏமாற்றமாகவே இருந்தது. ஜெய்சங்கரும், கே.ஆர். விஜயாவும் இந்த டூயட்டிற்கு ஆடிப் பாடியபோது என் கற்பனைக் கோட்டை சிதைந்தது.

குப்பத்து விஜயாவும், குடிகாரன் வேடம் ஏற்ற ஜெய்யும் ஏனோதானோவென்று ஆடிப் பாடி நடித்து இப்பாடலை வதம் செய்து விட்டார்கள்.

நீங்கள் சொன்னது போல் வரிசைப் பல்முத்து இருந்தும் பருத்த விஜயா பார்க்க முடியாதபடி இருந்தார். ('நல்ல நேரத்'தில் எத்தனை யானைகள்? என்ற கேள்விதான் நினைவுக்கு வரும்) விஜயா சேலையை வாயில் கடித்து முறுக்கும்போது ஆரம்பிக்கும் அகார்டியன் ஓசை எம்.எஸ்.வியின் ஆத்திரம் தீர்ந்தபின்தான் அடங்கும்.

ரெக்கார்டிங் முழுதும் அகார்டியன்தான் போல. (மனிதர் பின்னியெடுத்து விடுவார்)

(நீங்கள் விஜயாவின் சேலைக்கட்டு பற்றி வேறு கூறி மீண்டும் இப்பாடலைப் பார்க்க வைத்து விட்டீர்கள். ம்ம் பிடியுங்கள் சாபம்) எம்.எஸ். வியின் உழைப்பு அபாரம். குதூகலமான உற்சாகக் குரலில் பாலா என்ற ஆண் குயிலும், சுசீலா என்ற பெண் குயிலும் இனிமையான இப்பாடலைப் பாட, இப்பாடல் ஜென்மத்திற்கும் மறக்க முடியாத பாடலாகிப் போனது உண்மைதான்.

இப்பாடல் மட்டுமா?...

குடிகார ஜெயய்யைத் திருத்த விஜயா அக்கா வாணியின் குரலில் (எல்லாத்துக்கும் இந்த கிருஷ்ணா சார்தான் காரணம்) பாடும் 'இருந்தா நல்லா இரு....('அடச் சீ... கம்முன்னு கெட' என்கிறீர்களா) அட்வைஸ் பாடலில்

ஜெய்க்கு குரல் தரும் விஸ்வரூப விஸ்வநாதன்

நிறைய தண்ணி போட்ட போதும்
நி தானம் மட்டும் மாறாது
நெருப்புப் பெட்டி எங்கே வச்சேன்?
அதுதான் கொஞ்சம் புரியாது

(நிதானம் தவறாத இந்த நல்ல குடிகாரர் பீடிக்கு நெருப்புப் பொட்டியை அணிந்திருக்கும் உடையில் மறந்து வைத்து விட்டுத் தேடுவாராம். என்ன சுவையான கற்பனை!)

என்று பீடி குடிக்க நெருப்புப் பெட்டி தேடியபடி (அதில் இயலாமையை மறைக்கும் சிரிப்பு வேற) கேட்கும் அழகை என்னத்தத் சொல்ல!

'கொடிவிட்ட சிறு முல்லை மலரே'...(!வாவ்! என்னா பாட்டுய்யா அது!வாணி ஜெயராம் அதகளம் நிகழ்த்திய பாட்டு)

'எவளோ ஒரு பெண்ணாம்'...(சுசீலா அற்புதம்)

ஒவ்வொரு பாட்டும் மணி மணி என்று சொல்வார்களே! அது இப்படத்தில் அப்பட்டமான உண்மையாய் இனிக்கிறது.

சாரி! சரி! 'கண்டேன் கல்யாணப் பெண் போன்ற மேகத்'தைக் கண்டு மகிழ்வோம்.


http://www.youtube.com/watch?v=JwmNjFuFsvM&feature=player_detailpage

gkrishna
10th June 2014, 05:13 PM
வாசு சார் உங்களை போல் நானும் இந்த படத்தை முதல் ரிலீஸ் பார்க்காமல் பாட்டை மட்டும் சிலோன் ரேடியோவில் கேட்டு மகிழ்ந்து கொண்டு இருந்தேன் படம் rerelease கூட கிடையாது ஒரு தடவை பொதிகை டிவியில் (அப்போது அதற்கு பெயர் பொதிகை என்று கிடையாது ) ஒலியும் ஒளியில் பார்த்து வெறுத்து விட்டேன் . விஜயகுமார் ஸ்ரீப்ரிய combination "திரு முருகன் அருகினிலே வள்ளி குறத்தி" excellant .
நீங்கள் சொன்ன இரண்டாவது சரணம் கேட்டதே இல்லை. என்கிட்டே இந்த பாட்டுM P 3 downloading செய்ததில் நீங்கள் சொன்ன சரணம் இல்லை
வாசு சார் இந்த நகைச்சுவை எங்கே கற்று கொண்டீர்கள்
உங்கள் ப்ளாக் படிக்க எவ்வளுவு நேரம் வேனும்னாலும் காத்து கிடக்கலாம் சுயம்பு (குசும்பு) யா நீங்கள்

mr_karthik
10th June 2014, 07:37 PM
அவள் ஒரு கோடீஸ்வரனின் ஒரே மகள். ஒரு ஏழை எழுத்தாளனைக் காதலித்து விட்டாள். தந்தையைப் பகைத்துக்கொண்டு அவனையே திருமணம் செய்து அவனுடனேயே போய்விட்டாள். அந்த ஏழை எழுத்தாளனுக்கு தானும் பணக்காரனாக வேண்டுமென்ற நியாயமான ஆசை. ஆனால் அதற்கு நாடுவதோ ஒரு அநியாயக்காரனை. எழுத்தாளன் மனைவியை மனதுக்குள் குறிவைத்து, அவனுக்கு வேண்டிய வசதியெல்லாம் செய்து கொடுப்பதுடன், வேண்டாத வசதியையும் செய்து கொடுக்கிறான். அதுதான் குடிப்பழக்கம். தானும் குடித்து, தன் மனைவியையும் குடிக்க வற்புறுத்த, அவள் மறுக்க, அதனால் காரிலிருந்து வழியிலேயே இறக்கிவிடப்பட்ட அவள், ஒரு இளம்பெண் தனியே இருந்தால் என்னாகும் என்பதை அடுத்த நிமிடமே உணர்ந்து, கணவன் காலடியிலேயே போய் விழுகிறாள். (அப்பன் காலில் போய் விழுந்திருந்தால் அந்த நிமிடமே படம் முடிந்திருக்கும்).

அன்றிலிருந்து அவள் கணவனின் கைபொம்மை. அவனுடைய வற்புறுத்தலில் அவளும் குடிக்கத் துவங்குகிறாள். குடும்பம் குட்டிச்சுவராகிறது. அயோக்கியனோ அவளை சூறையாட தருணம் பார்த்திருக்கிறான். இந்நிலையில்தான் ஒரு ஓட்டலில் அவள் குடித்துவிட்டு கணவனோடும், அவனது அயோக்கிய நண்பனோடும் ஆட்டம் போடும் பாடல்தான் இது. (அட.. படம் பேரைச்சொல்லுய்யா என்கிறீர்களா?. இந்தப்பதிவின் முதல் வார்த்தைதான்).

சங்கர்-கணேஷ் இணை ஹெவியாக மியூசிக் போட்ட பாடல்களில் இதுவும் ஒன்று.

அடிமை நான் ஆணையிடு
ஆடுகிறேன் பாடுகிறேன்
மதுவை நீ ஊற்றிக்கொடு
மயங்குகிறேன் மாறுகிறேன்

பொதுவாக இம்மாதிரிப் பாடல்கள் எங்கள் அருமை ராட்சசிக்குத்தான் போகும். இது ஒரு மாறுதலாக கானக்குயில் சுசீலாவுக்கு கொடுத்திருந்தனர். அவரும் அருமையாகப்பாடி செலக்ஷனை ஜஸ்டிஸ் செய்திருந்தார்.

அட்டகாசமான புல் சூட்டில் எங்கள் தேசியத்திலகம் சசிகுமாரும், முரட்டு ஆணழகன் ஸ்ரீகாந்தும். புடவையில் 'வெண்ணிறக்கொடியிடை' நிர்மலாவும் ஆஹா.. காட்சியே களை காட்டிடுமே. அதற்கேற்ற ரிச்சான செட். (இந்த செட் இதற்கு முன் பல படங்களில் வந்திருக்கிறது. சிவந்த மண்ணில் நடிகர்திலகம் அறிமுகக் காட்சி, ராஜாவில் மேஜிக் ரேடியோவுடன் நடிகர்திலகம் மேஜையின் அருகில் அமர்ந்திருக்க, பிரீப்கேஸுடன் ரந்தாவா மாடிப்படியில் இறங்கிச்செல்லும் காட்சி)

எல்லாம் சரி, வீடியோ எங்கே என்று கேட்காதீர்கள். அதை இங்கே இணைக்கும் வித்தையெல்லாம் எனக்குத்தெரியாது. அருமை நண்பர்கள் வாசுதேவன் அல்லது ராகவேந்தர் அல்லது வினோத் தருவார்கள். (நான் வெறுமனே பார்க்கவும், பார்த்ததை கிறுக்கவும் தெரிந்த ஒரு பாமரன்)

Richardsof
10th June 2014, 07:50 PM
KARTHIK SIR

http://youtu.be/MG86EXPtII8

Gopal.s
10th June 2014, 08:03 PM
இப்போது அந்த கால பாடல்கள் என்றாலே நடிகர்திலகம் மற்றும் அவர் காலத்தில் அவருக்கு அடுத்த இடத்தில் இருந்த நடிகர்கள்,ஸ்ரீதர் படங்கள் என்றே சேனல்கள் பயணிக்கின்றன. நிறைய கவனம் பெறாத பல நல்ல பாடல்களை இந்த திரி கொண்டு வருவது பாராட்டுக்குரியது.இசையப்பாளர்களில் விஸ்வநாதன்-ராமமூர்த்தி,கே.வீ.மகாதேவன் ,ஜி.ராமநாதன் தவிர ஏ.எம்.ராஜா,டி.ஜி.லிங்கப்பா,எஸ்.எம்.எஸ், டி.ஆர்.பாப்பா,சுதர்ஷன்,கோவர்தன்,வீ.குமார்(.ஏ.கே.சே கர் துணை),எஸ்.வீ.வெங்கட்ராமன்,ஜி.கே.வெங்கடேஷ்,விஜ ய் பாஸ்கர்,சங்கர்-கணேஷ்,விஜய் ரமணி,என்று பலர் வள படுத்தி கொண்டிருந்தார்கள் இளைய ராஜா வரும் வரை. அந்த மாதிரி 60 கல்,70களில் என்னை கவர்ந்த அபூர்வங்கள்.(சேனல்களால் வழக்க படாத)
அன்பு மனம் கனிந்த பின்னே- ஆளுக்கொரு வீடு.
யாரடி வந்தார் என்னடி சொன்னார்-வானம்பாடி.
ஆட வரலாம் - கருப்பு பணம்.
அம்மம்மா கேளடி தோழி -கருப்பு பணம்.
கன்னத்தில் சின்ன பொண்ணு- கருப்பு பணம்
வெ த்திலை போட்ட- விஜயபுரி வீரன்.
ஆசை வந்த பின்னே- கொஞ்சும் குமரி
எந்தன் நெஞ்சம் யாரை கண்டு-காதலித்தால் போதுமா.
என்ன என்ன நெஞ்சுக்குள்ளே-மதராஸ் டு பாண்டிச்சேரி
அழகு ஒரு ராகம்-படகோட்டி.
கூத்தாடும் கொண்டையிலே-இரவும் பகலும்.
கன்னி ஒருத்தியிடம் -பால் மனம்.
புன்னகையோ- டெல்லி டு மெட்ராஸ்.
புன்னகையில் ஒரு பொருள் -பவானி.
மல்லிகை மான்விழி -பவானி.
இந்த இரவை நாம் பார்த்தால் -பவானி.
சிரிப்போ இல்லை நடிப்போ- துலாபாரம்.
எங்கெல்லாம் வளையோசை -வெகுளி பெண்.
அன்னை என்பவள் நீதானா- அன்னை.
வண்ண விழி மேடை- நீர்க்குமிழி.
பறவைகள் சிறகினால்-நினைவில் நின்றவள்.
நந்தன் வந்தான்- நினைவில் நின்றவள்.
விழியால் காதல் கடிதம்-தென் மழை.
வசந்த காலம் வருமோ- மறக்க முடியுமா.
மனம் கனிவான அந்த கன்னியை-இது சத்தியம்.
வா அந்த உலகத்தின் ஒரு பக்கம்-ஓடும் நதி
அழகை காண வந்தேன் -பொற்சிலை
விடியும் மட்டும் பேசலாம்-நான் யார் தெரியுமா.
பார்த்ததும் காதலை- நான் யார் தெரியுமா.
கனவில் நடந்ததோ- அனுபவம் புதுமை.
சொந்தம் இனி உன்னழகே- மறு பிறவி .
அலங்காரம் கலையாமல் -நம்ம வீட்டு லட்சுமி.
பூங்கொடியே பூங்கொடியே-ஸ்கூல் மாஸ்டர்.
அம்மம்மா கன்னத்தில்- வல்லவன் ஒருவன்.
பனி மலரோ குளிர் நிலவோ-பொன் வண்டு.
முத்து குளிப்பவரே கொஞ்சம்-சத்தியம் தவறாதே.
திங்களுக்கு என்ன இன்று- பூஜைக்கு வந்த மலர்.
கால்கள் நின்றது நின்றதுதான்-பூஜைக்கு வந்த மலர்.
வெண் பளிங்கு கட்டி- மேடை கட்டி-பூஜைக்கு வந்த மலர்.
ஆஹா சொந்தமும் இல்லே- ஹலோ மிஸ்டர் ஜமிந்தார்.
தென்னம் கீற்று ஊஞ்சலிலே-பாதை தெரியுது பார்.
கொடுக்க கொடுக்க இன்பம் பிறக்குமே- நான் ஆணையிட்டால்.
பெண் பார்த்த மாப்பிள்ளைக்கு -காவிய தலைவி.
கற்பனையோ கை வந்ததோ-மாலதி.
சிச்சிடு சிச்சிடு எங்கே போவோம்-மாலதி,
பொன்னென்றும் பூவென்றும்-நிலவே நீ சாட்சி.
துணிந்து நில் - பால் குடம்.
முழு நிலவின் திரு முகத்தில்- பால் குடம்.
இரவு நடக்கின்றது- பந்தயம்.
பார்த்தால் போதுமா- பந்தயம்.
வண்ண பூப்போட்ட சேலை -சங்கமம்.
அத்தான் என்றேன் முத்து முத்தாக-கல்லும் கனியாகும்.
(தொடரும்)

vasudevan31355
10th June 2014, 08:32 PM
பொதுவாக இம்மாதிரிப் பாடல்கள் எங்கள் அருமை ராட்சசிக்குத்தான் போகும்.

http://www.clipartbest.com/cliparts/ncX/nnG/ncXnnGBBi.gif

http://archives.deccanchronicle.com/sites/default/files/mediaimages/gallery/2013/Jul/LR%20Eswari.jpg

RAGHAVENDRA
10th June 2014, 09:15 PM
கோபால்
தங்களுடைய பட்டியலுக்கே தனி திரி தேவைப்படும் போலுள்ளதே.. ஒவ்வொருவர் நெஞ்சுக்குள்ளும் ஊடுருவித் தோண்டியெடுத்த பட்டியலாகத் தோன்றுகிறதே..
சூப்பர்...
தொடருங்கள்..

RAGHAVENDRA
10th June 2014, 09:16 PM
டியர் கார்த்திக்
தேசிய திலகம் சசிகுமார் நடித்த அருமையான திரைப்படமான அவள் பற்றி அருமையாக எழுதி அசத்தி விட்டீர்கள். அசத்தல் என்பதெல்லாம் சர்வ சாதாரணமான வார்த்தை. எப்படிப் பாராட்டுவது என்று தெரியாமல் போட்ட வார்த்தை.
தொடர்ந்து தங்கள் பங்களிப்பைத் தந்து பல அபூர்வ தகவல்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தங்கள் பாராட்டிற்கு நன்றி

RAGHAVENDRA
10th June 2014, 09:19 PM
மல்லிகை மோகினி 1979ல் வெளிவந்த திரைப்படம். இலங்கை ரேடியோவில் அடிக்கடி ஒலிபரப்பப் படும் பாடல்களில் இப் படத்தில் இடம் பெற்ற ஒரு பாடலை பல ராகத்தில் என்ற பாடலும் உண்டு. என்றாலும் இதில் இன்னொரு இனிமையான பாடல், மிக அபூர்வமாக ஒலிபரப்பட்டது. சிங்கார சங்கீதமே என்ற இந்த பாடலை இன்றைய தலைமுறையினர் கேட்டே இருக்க மாட்டார்கள்.

ஹிந்தி நடிகர் விக்ரம் நடித்த ஓரிரு தமிழ்ப்படங்களில் ஒன்று மல்லிகை மோகினி, இன்னொன்று ஜூலியின் தமிழ் வடிவமான தூண்டில் மீன்.

இந்த மல்லிகை மோகினி திரைப்படத்திலிருந்து இனிமையான பாடல் இதோ நமக்காக

http://youtu.be/zYZvhiDdiVA

RAGHAVENDRA
10th June 2014, 09:27 PM
http://c.saavncdn.com/841/Kannan-Oru-Kai-Kuzhanthai-500x500.jpg

என்னைப் போன்ற மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வி.யின் தீவிர ரசிகர்கள் கூட விரும்பிக் கேட்கும் பாடல்களில் இளையராஜா ஆரம்ப காலத்தில் இசையமைத்த பல பாடல்கள் இடம் பெறும். அதில் ஒன்று கண்ணன் ஒரு கைக்குழந்தை திரைப்படத்தில் இடம் பெற்ற மேகமே தூதாக வா என்ற இப்பாடல். புல்லாங்குழலிசை நம்மை வருடிச் செல்லும். எஸ்.பி.பாலா பி.சுசீலா இணைந்து அளிக்கும் இசை விருந்து நம்மை மெய் மறக்கச் செய்யும்.

நான் என்றென்றும் விரும்பி ரசிக்கும் பாடல்களில் ஒன்றைத் தங்களுடன் பகிரந்து கொள்ள விரும்புகிறேன். தாங்களும் நிச்சயம் விரும்புவீர்கள் என்பது என் எண்ணம்.


http://youtu.be/gd3jDAr6DLY

RAGHAVENDRA
10th June 2014, 09:50 PM
http://archives.deccanchronicle.com/sites/default/files/mediaimages/gallery/2013/Jul/LR%20Eswari.jpg

பாராட்ட வார்த்தைகளின்றி தவிக்க வைக்கும் மெல்லிசை மன்னரின் ஏராளமான பாடல்களில் இதுவும் ஒன்று. ஈஸ்வரியின் ஈடு இணையற்ற குரல் வளத்தில் வேறு யாராலும் கற்பனை கூட செய்ய முடியாத உச்சஸ்தாயியில் மெல்லிசை மன்னர் பாட வைத்துள்ளார். நாகேஷ் ஜெய்குமாரியின் அற்புதமான நடனம் இப்பாடலுக்கு பலம். Very good picturisation, choreography, என பாடல் அமர்க்களமாகச் செல்லும். வாத்தியக் கருவிகள் நம்மை அரேபிய நாட்டிற்குள் இருப்பது போல மூழ்கடிக்கும். பெல்லி நடனத்தை சற்றே வித்தியாசமாக படமாக்கியிருப்பார்கள். எத்தனை முறை கேட்டாலும் அலுக்காத சலிக்காத ஈஸ்வரியின் பாடல்களில் ஈஜிப்டு நாட்டின் இளவரசி பாடலுக்குத் தனியிடம் உண்டு.

http://youtu.be/VzxxXWIgtck

vasudevan31355
10th June 2014, 10:30 PM
ராகவேந்திரன் சார்,

மலையாள 'சட்டக்காரி'

http://i1.ytimg.com/vi/Hawkbk-sOpc/hqdefault.jpg

இந்தியில் 'ஜூலி'யாகி

http://www.jagprem.com/wp-content/uploads/2013/07/julie.jpg

தமிழில் ஊர்வசி நடிக்க 'ஒ மானே! மானே'

http://www.inbaminge.com/t/o/Oh%20Mane%20Mane/folder.jpg

ஆனது என்று நினைக்கிறேன். சரிதானா?

Gopal.s
11th June 2014, 04:02 AM
என்னை கவர்ந்த இன்னும் கொஞ்சம் கானங்கள்.(அவ்வளவாக அறிய படாத(or)படங்களில் உபயோக படுத்தாத சில நல்ல பாடல்கள்)தொடர்ச்சி.


நாணமா மை விழியில் நாணமா-உயிர்.
வெட்கமா வா பக்கமா- உயிர்.
தண்ணீரில் ஏனடி நெருப்பு- உயிர்.
ஒரு ரோசாப்பு சிரிக்கிறது- யாகசாலை.
பேசு மனமே பேசு - புதிய வாழ்க்கை.
ஏழு தினங்கள் ஒரு வாரம்-மன சாட்சி.
வெள்ளி முத்துக்கள் நடனமாடும்-மீண்டும் வாழ்வேன்.
காதலன் வந்தான்- மூன்றெழுத்து.
கள்ள பார்வை கண்ணுக்கு-எங்களுக்கும் காலம் வரும்.
நாள் நல்ல நாள்-பணக்கார பெண்.
கண் படைத்தான் உன்னை காண்பதற்கு-அன்று கண்ட முகம்.
இதயம் பொல்லாதது-அன்று கண்ட முகம்.
பட்டிலும் மெல்லிய பெண் இது- ஞாயிறும் திங்களும்.
அடியம்மா ராசாத்தி சங்கதிஎன்ன-வசந்த மாளிகை.
புத்தம் புது பூ பூத்ததோ-தளபதி.
தென்றல் வரும் தேதி வரும்-பாலும் பழமும்.
திருநாள் வந்தது தேர் வந்தது-காக்கும் கரங்கள்.
சின்ன பெண் ஒருத்தி சிரிக்கிறாள்-அதே கண்கள்.
மும் மும் மும் முத்தங்கள் நூறு-எங்கள் தங்க ராஜா.
என்னை தொட்டு சென்றன கண்கள்- பார் மகளே பார்.
குருவி கார மச்சானே- நவரத்தினம்.
மல்லிகை பூ வாங்கி வந்தேன்-பால் குடம்.
டட டாட்டா டு டு டூட்டு -எதிரொலி.
முந்துங்கள் இடத்துக்கு முந்துங்கள்-இரு கோடுகள்.
எந்நாளும் வாழ்விலே கண்ணான காதலே-விடி வெள்ளி.
காவேரி ஓரம்-ஆடி பெருக்கு.
ஒரு நாள் இரவில் கண் உறக்கம்-பண தோட்டம்.
மலை சாய்ந்து போனால்- கார்த்திகை தீபம்.
எண்ண பறவை சிறகடித்து- கார்த்திகை தீபம்.
இறைவன் இருக்கின்றானா - அவன் பித்தனா.
அவன் காதலித்தான் -வாலிப விருந்து.
எங்கே எங்கே என் மனது- வாலிப விருந்து.
தேடி வரும் தெய்வ சுகம்- நிமிர்ந்து நில்.
ஒத்தையடி பாதையிலே- நிமிர்ந்து நில்.
எண்ணம் போல கண்ணன் வந்தான்-பூவும் போட்டும்.

(தொடரும்)

vasudevan31355
11th June 2014, 06:14 AM
கோபால் சார்

உங்களுடைய லிஸ்ட் பிரமாதம் என்று நான் சர்டிபிகேட் தரப் போவதில்லை. அது வேஸ்ட். தெரிந்த கதை.

ஆனால் அந்த லிஸ்ட்டில் 'நாணமா? மைவிழியில் நாணமா?'வைக் கொடுத்து

என்

'உயிர்'

எடுத்து

'ஒரு ரோசாப்பு சிரிக்கிறது' தந்து

மன

'யாகசாலை'யில்

தீ மூட்டி ராசாவை நினைக்க வைத்து

'முந்துங்கள் இடத்துக்கு முந்துங்கள்'

என்று திரியில் முந்தப் பார்த்து

ஒன்றே ஒன்றைத் தவற விட்டுவிட்டீர்கள்.

கற்பனை வளம் செறிந்த

'பாப்பா பாட்டு பாடிய பாரதி நான்தானே'

(கெடுதலை என்னும் தறுதலைகளுக்கா
விடுதலை வேண்டிப் பாடினேன்
நான் திருடச் சொல்லியா தூண்டினேன்)

('கண்ணன் பாட்டை' காமுகன் பாடி
ஊரைக் கெடுத்தானே
என் பேரைக் கெடுத்தானே)

நிகழ்கால கொடுமைகளைக் கண்ட பாரதியின் புலம்பலில்

தாய் (தை) நாகேஷின் நாசூக்கான நகைச்சுவையில்

கவிஞனின் அபரிமிதமான கற்பனைக் கைவண்ணத்தில்

பாலச்சந்தரின் அசாத்திய அறிவுத் திறமையில்

சௌந்தரனின் சௌந்தர்யக் குரலில்

வி.குமாரின் விவேகமான இசையில்

'இரு கோடுகளி' ல்

இருந்த அபூர்வப் பாடலை

எப்படி மறந்தீர்கள்?


http://www.youtube.com/watch?v=_2rAZ6hoF5w&feature=player_detailpage

ஆனாலும்

(ரசிகன்யா நீ)

vasudevan31355
11th June 2014, 08:26 AM
கோபால்,

'சின்னப் பெண் ஒருத்தி சிரிக்கிறாள்'

'அதே கண்கள்' பாடல் படத்தில் கிடையாது. என்னைப் போலவே நீங்களும் ஏமாந்திருப்பீர்கள். அதுவும் உங்களுக்குப் பிடித்த ரவி, காஞ்சனா வேறு. பிள்ளை ஏமாந்து போய் இருக்கும்.

கொஞ்சம் உங்கள் ஏக்கத்தைத் தணிக்கிறேன்.

இப்போது அந்தப் பாடலை கிருஷ்ணாவும், காஞ்சனாவும் பாடுவார்கள். உதைக்க வராதீர்கள். தமிழிலேயே பாடி உங்கள் நெஞ்சில் தேன் வார்ப்பார்கள்.

என்னை மன்னித்து விடுங்கள் கோபால் என்னை மன்னித்து விடுங்கள்.:hammer::hammer:


http://www.youtube.com/watch?v=11vlthrRpU4&feature=player_detailpage

RAGHAVENDRA
11th June 2014, 08:34 AM
வாசு சார்
சின்னப் பெண்ணொருத்தி சிரிக்கிறாள் பாடலை டப்பிங் முறையில் கொடுத்து கோபால் சாரின் ஏக்கத்தைப் போக்கியிருப்பீர்கள். பாராட்டுக்கள்.
ஜூலி சட்டக்காரி தூண்டில் மீன் மூன்றும் ஒரே கதை தான். தூண்டில் மீன் படத்தில் மோஹன் சர்மா அல்லது விக்ரம் நினைவில் இல்லை.
இதே கதையை சற்றே மாற்றி 80களின் மத்தியில் வெளிவந்த படம் தான் ஓ மானே மானே..

RAGHAVENDRA
11th June 2014, 08:36 AM
வேதா அவர்களின் இசையமைப்பில் வெளிவந்த ஏராளமான சிறந்த பாடல்களில் மற்றொன்று மனசாட்சி திரைப்படத்தில் இடம் பெற்ற ஏழு ஸ்வரங்கள்.. இப்படத்தில் ஜெய் அவர்களின் ஒப்பனை வித்தியாசமாக இருக்கும். டிவிடியில் படத்தில் நாகேஷ் பாடுவதாக வரும் லவ் பண்ணுங்க சார் பாட்டு கட்.

http://youtu.be/219sKF63hMo

Richardsof
11th June 2014, 08:40 AM
ALL TIME LISTENER'S CHOICE & BIRTH DAY SONG.

http://youtu.be/i-jlk4dEFLY

Richardsof
11th June 2014, 08:43 AM
JAI & RAVI SONG FROM NANGU SUVARGAL

http://youtu.be/_Eua4rMaghU

RAGHAVENDRA
11th June 2014, 08:45 AM
ரவிக்கு வாய்த்த ஏராளமான இனிய டூயட் பாடல்களில் ஒன்று ரோஷக்காரி படத்தில் மெல்லிசை மன்னர் இசையில் நம்மை மயக்கும் ஆனந்த மயக்கம் பாடல். எஸ்.பி.பாலா பி.சுசீலா இணையில் இனிமையான மாலைப் பொழுதில் கேட்க வேண்டிய பாடல்.

http://youtu.be/wOpD_s7vwnk

RAGHAVENDRA
11th June 2014, 08:56 AM
அபூர்வமான மற்றோர் பாடல் நல்ல முடிவு திரைப்படத்திலிருந்து

முல்லைப் பூப்போலே உந்தன் மூக்குத்தி மின்னுதடி

http://youtu.be/NtoRorIwQAU

Gopal.s
11th June 2014, 11:28 AM
அட பாவி,

குதிரை குப்புற தள்ளி,குழியும் பறித்ததாம். என் ஆசை காஞ்சனா-ரவி ஜோடியில் வர வேண்டிய பாடலை கொல்டி கும்பலுக்கு குடுத்த உன்னை....
திட்ட பயமாக உள்ளது.யூனியன் தலைவர் ராமதாசு என்ற உண்மையான தமிழ் ஆசிரியர் (ஓய்வு பெற்ற) வந்து விடுவாரே....

mr_karthik
11th June 2014, 03:16 PM
அன்புள்ள வாசுதேவன் சார்,

தங்கள் மகத்தான வரவேற்புக்கு மிக்க நன்றி. நீங்கள் குறிப்பிட்டதுபோல நான் வீறுகொண்டெல்லாம் வரவில்லை. அடிபட்டு நொந்துபோய் நொண்டிக்கொண்டு வந்திருக்கிறேன். அப்படி வந்தவனுக்கு இளைப்பாறக் கிடைத்த திண்ணைகளாக ஜெய், ரவி, முத்து, மற்றும் மதுரகானம் திரிகள் கிடைத்தன. இங்கு இருக்க விட்டார்களென்றால் இருப்பேன். இல்லையென்றால் மீண்டும் நொண்டிக்கொண்டு வீடு நோக்கிப்போய் சேருவேன்.

இதயம் நிறைந்த வார்த்தைகளால் வரவேற்ற தங்களுக்கும், ராகவேந்தர் சாருக்கும், வினோத் சாருக்கும் நன்றி.

mr_karthik
11th June 2014, 03:19 PM
கதாநாயகியரின் போதைப் பாடல்கள் (2)

‘அவளுக்கென்று ஓர் மனம்’ புதுமை இயக்குனர் ஸ்ரீதரின் கைவண்ணத்தில் மலர்ந்த அழகிய வண்ண ஓவியம். ஆனால் ரொம்ப சீரியஸான படம். அதனால்தானோ என்னவோ படத்தில் காமெடி நடிகர்களோ, காமெடி ட்ராக்கோ கிடையாது. சின்ன படங்களில் கதாநாயகன் மற்றும் பெரிய நடிகர்கள் படங்களில் இரண்டாம் கதாநாயகனாக நடித்து வந்த முத்துராமன் அப்போது சில படங்களில் வில்லனாகவும் நடித்தார். அவற்றில் இந்தப்படமும் ஒன்று (மற்றவை பெண்தெய்வம், மாணவன் போன்ற சில).

மெல்லிசை மன்னரின் இசையில் பாடல்கள் அத்தனையும் தேன் சொட்டின. 'ஆயிரம் மனது ஆயிரம் நினவு', 'மங்கையரில் மகராணி' பாடல்களில் பாலா கொஞ்சினார். இதுபோக மூன்று இசையரசிகளுக்கும் வஞ்சனையின்றி மூன்று அருமையான தனிப்பாடல்களைக் கொடுத்து 'நான் எல்லோருக்கும் நல்லவன்' என்று காட்டிக்கொண்டார் மெல்லிசை மன்னர். அதன் விளைவாக நமக்குக் கிடைத்தவை அருமையான பாடல்கள்.

சுசீலாவுக்கு "மலர் எது என் கண்கள்தானென்று சொல்வேனடி"
ஜானகிக்கு "உன்னிடத்தில் என்னைக்கொடுத்தேன்"
ஈஸ்வரிக்கு "எல்லோரும் பார்க்க என் உல்லாச வாழ்க்கை"

தங்கவேலுவுக்கு மட்டுமல்ல நமக்கும் 'ஆஹா.. ஓஹோ... பேஷ் பேஷ்'

காஞ்சனாவின் வாழ்க்கையில் பழைய காதலன் முத்துராமனால் ஏற்படவிருக்கும் பிரச்சினையை தீர்க்க முற்படும் பாரதி அதற்கு விலையாக தன் வாழ்க்கையையே பணயம் வைத்து, முத்துராமனின் கைப்பாவைக்கிறார். அவர் சொன்னபடியெல்லாம் ஆடுகிறார். அந்த பொம்மலாட்டத்தின் ஒரு பகுதிதான் பாரதி கிளப்பில் பாடியாடும் இந்த அருமையான பாடல். ஈஸ்வரி அவருக்கே உரிய பல்வேறு குரல் வித்தைகளுடன் அசத்தினார்.

எல்லோரும் பார்க்க என் உல்லாச வாழ்க்கை
சரிதான் போ போ இனி ஏன் நாணம்
கண்ணீரில் என்னை
ஆடச் சொல்லுங்கள் எல்லோரின் முன்னே

பூச்சுடும் கூந்தல் கண்டேன், பூமாலை மனமும் கண்டேன்
கல்யாணப் பெண்ணைப்போலே கனவொன்று நானும் கண்டேன்
கைதொட்ட துணையைக்கண்டு கண்ணா நீ யாரோ என்றேன்
விதியென்னும் தேவன் விளையாட வந்தேனென்றான்

(இந்த கண்ணதாசனை என்ன செஞ்சால் தகும்?)

நண்பர்களே, வீடியோ ப்ளீஸ்...

chinnakkannan
11th June 2014, 03:24 PM
அன்பு நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம் :)

ஆரம்பத்திலிருந்து ரசித்துக் கொண்டு தான் இருக்கிறேன்..ம்ம் சரி..க ப க இ..(கண்ணில் பட்ட கடைசி இடுகை..)ம்ம் கார்த்திக்.. அமர்க்களம்..எல்லோரும் பார்க்க உல்லாச வாழ்க்கை..(பாரதிக்கு முழுக்கை கொடுக்க வேண்டும் என்று யார் சொல்லியிருப்பார்களோ..ம்ம்) போதையில் இல்லாமலேயே பார்ப்பவரை போதை கொள வைக்கும் இன்னொரு பாட்டு இருக்குங்காணும்..அதே படத்திலே..எப்படி விட்டீர்.. மலர் எது என் கண்கள் தானென்று சொல்வேனடி..

chinnakkannan
11th June 2014, 03:27 PM
முன்பு வேறொரு இழையில் எழுதிப் பார்த்தது..

**

தேவகோட்டையில் என் ஒன்றுவிட்ட அக்காவின் கணவர் இருந்தார்..இப்போது இல்லை. அவர் என்னவேலையெல்லாம் செய்தார் என்றெல்லாம் தெரியாது...அவருக்கு ஐந்து குழந்தைகள்..அத்தனையும் பெண்..

என் சின்ன வயதில் மதுரை ஒருதரம் வந்திருந்த போது நைட் ஷோ போலாம் வா என்று கூட்டிக் கொண்டு போனார்..கருப்பு வெள்ளைப்படம்..

ஹோவென்று ரயில் ஓட டைட்டிலுடன் பாடல்..பயணம்..பயணம்..
அப்போது கேட்டு மனதில் பச்சக் என்று பதிந்த வரிகள்..

புகை வண்டி ஓட்டிட ஒருவன் அதுசெல்லும் வழிசொல்ல ஒருவன்
அந்த இருவரை நம்பிய மனிதன்..
அவர்களை நடத்துபவன் தான் இறைவன்
இறைவனும் மனிதனும் பயணம் செய்தாலே
எவரை எவர் வெல்லுவாரோ...(அஃப்கோர்ஸ் இறைவன் தான்)(எம்.எஸ்.வி யின் கணீர்க் குரல்..)

நிற்க.. எழுதப் போவது இந்தப் பாட்டு அல்ல..இடம் பெற்ற இன்னொரு பாட்டு..அதைப் பற்றிச் சொல்லும் முன்:

பயணம் படத்தின் கதை கொஞ்சம் புகையாகத் தான் நினைவில். ரயிலில் செல்லும் பயணிகள் சிலரின் வாழ்க்கை அனுபவங்கள்..செந்தாமரை, விஜயகுமார், ஜெயச்சித்ரா போன்றோர் மட்டும் நினைவில்..கொஞ்சம் ஓ.க்கேயாகத் தான் இருக்கும்..

ரயில், பயணிகளின் கதை என மாறி மாறி ப் பயணிக்கும் திரைக்கதையில் இடைவேளைக்கு அப்புறம் திடீரென ஜெயச்சித்ராவும் விஜயகுமாரும் (படத்தில் ராணுவ வீரன் என்று சொல்வார்கள்) டூயட் பாடுவார்கள்..அன்யூஸ்வலாக நல்ல மெலடி.
.
வரிகளும் பிற்காலத்தில் கேட்ட போது கொஞ்சம் கவர்ந்தது..

ஒரு ஆண் பெண் காதல் வசப்படுவதற்குக் காரணம் - காரணமே இல்லை என்று சொல்ல முடியாது. இருவருக்குள்ளும் ஒரு common இண்ட்ரெஸ்ட் இருந்திருக்கும் அல்லது காமன் இண்ட்ரெஸ்ட் உருவாகியிருக்கும்...என நினைக்கிறேன் (கண்ணா..நல்லா சிலேடை சொல்ற போ..)

அதை அழகாகப் பாடல் வரியில் பிடித்திருப்பார் கவிஞர் (கண்ணதாசன் என நினைக்கிறேன்..ஐயம் நாட் ஷ்யூர்)

படக்கென்று ஆரம்பித்து அழகாக முடிந்து இன்னும் நீண்டிருக்கலாமோ எனத் தோன்ற வைக்கும்பாடல்..(எவ்வளவு தமிழ்)

இரண்டு வரிகள் ஆண் இரண்டு வரிகள் பெண் என மாறி மாறி வரும் டூயட்..ஜேசுதாஸ் வாணிஜெயராம்..கலக்கியிருப்பார்கள்..

**
ஆரம்பக் காலம் ஒருபக்கத் தாளம்
அதுதான் காதல் பண்பாடு....

ஆனபின்னாலே இருபக்க மேளம்
அதுதான் வாழ்க்கை அன்போடு....

தேவாமிர்தம் தேனிதழ்கள்
தேவர்கள் இல்லை நான் வந்தேன்

மார்பின் அகலம் குன்றங்கள்
மலர்கள் இல்லை நான் வந்தேன்

மஞ்சள் ரோஜா தென்றல் பட்டு
அஞ்சக் கண்டேன் நான் வந்தேன்

மாலைகள் ஏந்து மங்களச் சாந்து
மார்பினில் நீந்து என்னைத் தந்தேன்..

நாடக மேடை திரை இல்லை
நாயகி வந்தாள் கவிபாடி

நாயகியுடனே துணை இல்லை
நாயகன் வந்தான் துணை தேடி

மின்னல் ரோஜா பொன்னில் ஊற்றி
கையில் வந்தது உறவாடி

கண்ணன் ராதா ராமன் சீதா
வந்தார் இங்கே நம்மைத் தேடி

ஆரம்பக் காலம் ஒருபக்கத் தாளம்
அதுதான் காதல் பண்பாடு....

ஆனபின்னாலே இருபக்க மேளம்
அதுதான் வாழ்க்கை அன்போடு....

:)

mr_karthik
11th June 2014, 03:47 PM
கார்த்திக்.. அமர்க்களம்..எல்லோரும் பார்க்க உல்லாச வாழ்க்கை..(பாரதிக்கு முழுக்கை கொடுக்க வேண்டும் என்று யார் சொல்லியிருப்பார்களோ..ம்ம்) போதையில் இல்லாமலேயே பார்ப்பவரை போதை கொள வைக்கும் இன்னொரு பாட்டு இருக்குங்காணும்..அதே படத்திலே..எப்படி விட்டீர்.. மலர் எது என் கண்கள் தானென்று சொல்வேனடி..

அன்புள்ள சின்னக்கண்ணரே,

அந்தப்பாட்டை நான் விடவில்லை. குறிப்பிட்டிருக்கிறேன். கொஞ்சம் பெரிய கண்கொண்டு பாருங்கள்.

பாராட்டுக்கு நன்றி.

Russellmai
11th June 2014, 04:30 PM
அன்புள்ள வாசுதேவன் சார்
மனதை மயக்கும் மதுர கானங்கள் திரிக்கு அடியேனின் வாழ்த்துக்கள்

chinnakkannan
11th June 2014, 04:48 PM
கார்த்திக் ஜி.. ஆமாம்..ம்ம் கொஞ்சம் நழுவி விட்டது மனமும் கண்ணும்..:) மன்னிக்க..

Gopal.s
11th June 2014, 05:46 PM
அன்புள்ள வாசுதேவன் சார்,

அப்படி வந்தவனுக்கு இளைப்பாறக் கிடைத்த திண்ணைகளாக ரவி,ஜெய், முத்து,மதுபானம் திரிகள் கிடைத்தன.

Kaarthik Sir,

ஒன்று அற்புதமான வெளிநாட்டு ஒயின்.(மலேசியா ).ஒன்று கேவலமான கண்ணை குருடாக்கும் மெத்தில் சாராயம். மற்றொன்று எதிலும் சேராத சுவையற்ற எதோ ஒரு பானம்.(அக்காமாலா)

mr_karthik
11th June 2014, 06:10 PM
ஐயா கோபாலரே,

நான் மதுவருந்தும் பழக்கம் இல்லாதவன். அதை அடியோடு வெறுப்பவன். இதனாலேயே வசந்த மாளிகை போன்ற படங்களை என பேவரைட் லிஸ்ட்டில் வைக்காதவன். இதை மஞ்சுளாவின் இரங்கல் பதிவிலேயே சொல்லியிருக்கிறேன். எனவே எனது பதிவை மேற்கோள் காட்டியதில் உள்ள உங்கள் குறும்புத்தனத்தை நீக்கி விடுங்கள். அது 'மதுபானம்' அல்ல 'மதுரகானம்'.

Gopal.s
11th June 2014, 06:52 PM
ஐயா கோபாலரே,

நான் மதுவருந்தும் பழக்கம் இல்லாதவன். குறும்புத்தனத்தை நீக்கி விடுங்கள். அது 'மதுபானம்' அல்ல 'மதுரகானம்'.
நீக்கியாச்சு. மூன்று மதுர கானங்களில் ஒன்று உல்லாச மயக்கும் பாடல்.இன்னொன்று ராப்பிச்சை காரனின் கூக்குரல்.மற்றொன்று சகிக்க முடியாத ஒப்பாரி.

Gopal.s
11th June 2014, 06:57 PM
ஐயா கோபாலரே,

.

கோபாலரே,

எங்கேயோ கேட்ட குரல்.....அதே குரல்.....

mr_karthik
11th June 2014, 07:05 PM
Oh...., again misunderstanding.

What I mentioned as 'Madura Gaanam' is this thread.

NOT Jai, Ravi, Muthuraman threads.

mr_karthik
11th June 2014, 07:09 PM
கோபாலரே,

எங்கேயோ கேட்ட குரல்.....அதே குரல்.....

யெஸ்,

அதை படித்து தொலைத்துவிட்டு உடனே வந்து இங்கு பதிவிட்டதால் வந்த பாதிப்பு.

நல்ல விஷயங்கள்தான் மனதில் தங்கும் என்பதில்லை. இதுபோன்ற வேண்டாதவைகளும்தான்.

Gopal.s
11th June 2014, 07:17 PM
நான் அடுத்து எழுத போவது சற்றே சிக்கலானது.ஒரு ராகம் அடிப்படையில் அமைந்த பல பாடல்கள் நம்மை கவரும் .ஆனால் நம்மை கவர்ந்த அத்தனை பாடல்களும் ஒரு புள்ளியில் தொடங்கியவை என்று பலருக்கு தெரியாது.

உதாரணம் -சிறு வயதில் நான் கேட்ட மாத்திரம் உருகி சொக்கிய மதுர கானங்கள் , நித்தம் நித்தம் மாறுகின்றதெத்தனையோ,(பந்த பாசம்), பெண் பார்த்த மாப்பிள்ளைக்கு (காவியத்தலைவி), உன்மேல கொண்ட ஆசை (காதல் ஜோதி). அவ்வளவு பிடிக்கும். பின் கல்லூரி நாட்களில் சிறிதே தன் முயற்சியில் ,இசையறிவு பெற்றதும் ,மூன்றும் ஒரே ராக அடிப்படை என்று புரிந்தது.

இந்த விஷயத்தை கையிலெடுக்கிறேன்.

அதே போல ஒவ்வொரு பாடலிலும் முத்திரை வரிகள் ஒன்று இருக்கும்.

உதாரணம்- பெண் பார்த்த பாடலில் "கட்டிலுக்கு கடன் கொடுத்தாள் ,தொட்டிலுக்கு விலை கொடுத்தாள் ". நிலவு வந்து பாடுமோ பாடலில் "ஊமை கண்ட கனவையும்,உறவு தந்த நினைவையும்,கருவில் உள்ள மழலையும் உருவம் காட்ட முடியுமோ." ஆடுமடி தொட்டில் பாடலில் "சிந்தையிலே நான் வளர்த்த கன்று சேர்ந்ததடி உன் வயிற்றில் இன்று".

இதையும் கையிலெடுக்கிறேன்.

Gopal.s
11th June 2014, 07:57 PM
தொடரும் மறக்க பட்ட பிடித்தவை.(அவ்வளவாக கண்டு கொள்ள படாத நல்ல பாடல்கள்)

என்னென்னவோ நான் நினைத்தேன்-அதே கண்கள்.
உன் மேல கொண்ட ஆசை- காதல் ஜோதி.
சாட்டை கையில் கொண்டு வாங்க கண்டு-காதல் ஜோதி.
பட்டம் விட்டது போலே பறக்குதம்மா-பணக்கார பிள்ளை
சிங்கபூரு மச்சான் -நாம் மூவர்.
பவுர்ணமி நிலவில்- கன்னி பெண்.
அடி ஏண்டி அசட்டு பெண்ணே-கன்னி பெண்.
சித்திர பூவிழி வாசலிலே-இதயத்தில் நீ.
என்னை முதல் முதலாக-பூம்புகார்.
பொன்னாள் இது போலே -பூம்புகார்.
ஓடையிலே ஒரு தாமரை பூ-தலைவன்.
நாலு பக்கம் சுவரு- தேடி வந்த மாப்பிள்ளை.
ஒரு நாள் கூத்துக்கு-எங்கள் தங்கம்.
தேன் சிந்துதே வானம்-பொண்ணுக்கு தங்க மனசு.
நேரம் இரவு நேரம்- பொண்ணுக்கு தங்க மனசு.
கங்கை நதியோரம்- வர பிரசாதம்.
பட்டு பொண்ணு இவ தொட்டு புட்டா -கரை கடந்த ஒருத்தி.
ஆனந்த தாகம் உன் கூந்தல் பூக்கள் தீர்க்குமே-வா இந்த பக்கம் .
ஒரு வீடு இரு உள்ளம்- அவர் எனக்கே சொந்தம்.
அங்கும் இங்கும் பாதை உண்டு- அவர்கள்.
சுகந்தானா சொல்லு கண்ணே- மன்மத லீலை.
தித்திக்கும் பாலெடுத்து-தாமரை நெஞ்சம்.
காதலின் பொன் வீதியில்-பூக்காரி.
என்னதான் ரகசியமோ -இதய கமலம்.
ஒருவன் காதலன் ஒருத்தி காதலி-வெண்ணிற ஆடை.
ஒரு நாளிலே உறவானதே-சிவந்த மண்.
ஒரு தரம் ஒரே தரம்-சுமதி என் சுந்தரி.
அங்க முத்து தங்க முத்து-தங்கைக்காக.
நினைத்தேன் உன்னை - தங்கை.
காற்றினிலே பெரும் காற்றினிலே-துலாபாரம்.
தாழம் பூவே தங்க நிலாவே -ரத்த திலகம்.
வாடை காற்றம்மா- ரத்த திலகம்.
நினைத்தால் போதும் ஆடுவேன் -நெஞ்சிருக்கும் வரை.
செவ்வானத்தில் ஒரு நட்சத்திரம்-நான்கு கில்லாடிகள்.
பூவிலும் மெல்லிய- கண்ணன் வருவான்.
நிலவுக்கு போவோம்- கண்ணன் வருவான்.
அத்தான் நிறம் சிகப்பு- நிறை குடம்.
கேட்டாயே ஒரு கேள்வி -இளைய தலைமுறை.
அருவி மகள் அலையோசை-ஜீவ நாடி.
கல்லுக்கு நீதி சொல்ல-எதிர்காலம்.
வாழ்ந்து பாப்போம் வா நைனா-எதிர்காலம்.
மௌனம்தான் பேசியதோ- எதிர்காலம்.
மலரும் மங்கையும் ஒரு ஜாதி-அன்னையும் பிதாவும்.
மோதிரம் போட்டது போன்றொரு -அன்னையும் பிதாவும்.
சூரியம் போயி சந்திரன் வந்தா-முகூர்த்த நாள்.
அவன் நினைத்தானா இது நடக்குமென்று-செல்வ மகள்.
வெண்ணிலா முகம்-செல்வ மகள்.
பறந்து செல்லும் சிட்டு குருவி-செல்வ மகள்.
பொன்னா இல்லை பூவா -வாயாடி.
எஜிப்டு நாட்டின் இளவரசி -என்ன முதலாளி சௌக்கியமா.
கனவில் நின்ற திருமுகம்-டீச்சரம்மா
இறைவனுக்கும் பாட்டெ ழுதும் .ஆசை வந்தது-
எனக்குள்ளே நீ இருக்க - ஜீவனாம்சம்.
(தொடரும்)

vasudevan31355
12th June 2014, 08:16 AM
ராகவேந்திரன் சார்,

அற்புத பாடல்களான 'ஆனந்த மயக்கம்', 'முல்லைப் பூப்போலே' பாடல்கள் வழங்கிச் சிறப்பித்துள்ளீர்கள். இரண்டுமே அபூர்வமானவைதான்.

'நல்ல முடிவு' திரைப்படத்தில் 'நீயின்றி நான் இல்லை வாடா ரங்கையா' பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும். சுசீலாவின் இனிமையான குரல் அமைதியாய் ஒலிப்பது தனி சுகம்.

vasudevan31355
12th June 2014, 08:18 AM
கார்த்திக் சார்,

தங்கள் பதிவு என்னை மிகவும் பாதிப்படைய வைத்தது. கவலை வேண்டாம். மதுர கானங்களில் மூழ்கி மனக்கவலைகளை மறப்போம். தாங்கள் மிக அழகாக இங்கு பங்களித்து இத்திரிக்கே பெருமை சேர்த்துக் கொண்டிருக்கிறீர்கள்.

கதாநாயகியரின் போதைப் பாடல்கள் (2) வரிசை சக்கை ரகளை. அருமையான தொடர். அதுவும் என்னை மிகவும் பாதிப்படையச் செய்த நம் 'ராட்சஸி' பாடும் 'எல்லோரும் பார்க்க' பாடலை பற்றி அருமையாக எழுதி எஎல்லோரையும் பார்க்க படிக்க வைத்து விட்டீர்கள்.

பாரதி அருமையாக பரிதாபம் வரும்படி அருமையாகப் பண்ணியிருப்பார்.

இன்னும் என்ன என்ன புதுமைகள் செய்யப் போகிறீர்களோ!

அடுத்த கதாநாயகியரின் போதைப் பாடல்கள் (2) தொடரில் போதைப் பாடல் என்னவாக இருக்கும்? ம்...

என் ஆசையும் நேசமும்?...
எந்தன் உள்ளம் துள்ளி விளையாடுவதும் ஏனோ?...

ஐயோ! மண்டை வெடித்து விடும் போல் இருக்கிறதே!

உடனே போடுங்கள் கார்த்திக். இடைவெளி வேண்டாம். பொறுப்பதற்கில்லை.

கார்த்திக் சார்,

முத்துராமன் நீங்கள் சொன்ன காலகட்டங்களில் அனாதை அனந்தன், பதிலுக்கு பதில் படங்களிலும் வில்லனாகத் தோன்றியுள்ளார். 'என்ன நான் சொல்றது'? (நன்றி சாமிக்கண்ணு)

vasudevan31355
12th June 2014, 08:21 AM
கோ,

உங்கள் லிஸ்ட் அப்படியே என்னுடைய லிஸ்ட். எப்போது காப்பி அடித்தாய் நண்பா! ஒ...நான் போனில் சொல்லும்போது எழுதி வைத்துக் கொண்டாயோ. ரசிகன் மட்டுமல்ல.... திருடன்யா நீ.

பிடித்தாய் பார் பெண் பார்த்த மாப்பிள்ளையை!

இந்தப் பாடலைநிறையப் பேருக்கு தெரியாது கோ.

இந்தப் பாடலை இரவில் கேட்டு பலமுறை கண்ணீர் சிந்தியிருக்கிறேன் ஜோ. இப்பாடலை பாலு படமாக்கியிருக்கும் விதம் மிக மிக அருமை.

தான் வாசுவிடம் மாட்டிக் கொண்ட கஷ்டங்களை பாடலின் வாயிலாக சௌகார் வெளிப்படுத்த, சௌகார் ஒரு விலைமகள் என்று ஜெமினி மகாலிங்கம் ஜெமினியிடம் பற்ற வைத்துவிட, அதை நம்பிய ஜெமினி படுகோபத்துடன் சௌகாரை வசைபாட, இரவு விடுதியில் அந்த பரிதாபமான சௌகார்

கட்டளையில் பிறந்த பிள்ளை
காவல் காண வாழுகிறாள்

என்று தன் மகளின் நிலைமையை தன் நிலைமையோடு சேர்த்து ஜெமினிக்கு உணர்த்துமிடம், இந்தப் பாடலின் அந்த சில நிமிடங்கள்

வார்த்தைகள் இல்லை கோ.

ஜெமினி கண் மண் தெரியாத கோபத்தில் சௌகாரை மாடியிலிருந்து முறைப்பாரே. இதையெல்லாம் ஜெமினி அருமையாகச் செய்வார்.

RAGHAVENDRA
12th June 2014, 08:23 AM
கார்த்திக் சார்
வாசு சார் சொன்னது போல் வித்தியாசமான தலைப்பில் பாடல்களைத் தொகுத்து வழங்க உள்ளது பல புதிய கோணத்தில் பாடல்களைப் பற்றித் தெரிந்து கொள்ள மிகவும் உதவியாயிருக்கும். கதாநாயகியரின் போதைப் பாடல்கள் தலைப்பே வித்தியாசமாக உள்ளது. நம் நாடு படத்தில் குடிகாரன் பேச்சு விடிஞ்சாலே போச்சு பாடலும் இந்த தலைப்பில் வருமா...

RAGHAVENDRA
12th June 2014, 08:24 AM
வாசு சார்
தலைவரின் ராஜா சிகரெட் ஸ்டைலுடனான தங்கள் அவதார் ... சிம்ப்ளி சூபர்ப்....
கலக்குங்கள்...

RAGHAVENDRA
12th June 2014, 08:27 AM
வாசு சார்
காவியத் தலைவி பாடலைப் பற்றிச் சொல்லி விட்டீர்கள்.. அதை மக்கள் பார்த்து தெரிந்து கொள்ள வேண்டாமா...

http://youtu.be/q9E06eEyjQk

பாடலில் ஷெனாய், சந்தூர், சாரங்கி, என பாடற் குழுவின் கருவிகளையே பயன் படுத்தியிருக்கும் மெல்லிசை மன்னரின் உத்தியை என்னென்று சொல்வது. இடையில் வரும் இடையிசைக்கு வயலின் பயன்படுத்தி அந்தக் காட்சியின் சிறப்பை மேலும் அதிகப் படுத்தியிருப்பார் மெல்லிசை மன்னர்.

vasudevan31355
12th June 2014, 08:32 AM
வினோத் சார்,

'பிறந்த நாள்... இன்று பிறந்த நாள்' பாடல் 'நாம் மூவரி' ல் இருந்து தந்தமைக்கு நன்றி! 'மைனா'வுக்கும் சேர்த்துதான். நாம் நிறைய இப்பாடல் பற்றி அலைபேசியில் பேசியிருக்கிறோம்.

இலங்கை வானொலியில் அப்போதெல்லாம் நேயர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் அளிக்கும் போது இந்தப் பாடலின் முதல் நான்கு வரிகள் மட்டுமே ஒலிபரப்பி பின் நேயர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் சொல்வார்கள்.

இப்பாடலை நான்கு வரிகளுக்கு மேல் அப்போதெல்லாம் எனக்குத் தெரியாது. அப்புறமாகத்தான் முழுப் பாடலையும் கேட்டு பல்லவி பாழ்படாத சரணங்களை ரசிக்க முடிந்தது.

இன்னொன்று தெரியுமா? நான் டேப்ரிகார்டர் (1986) வாங்கினவுடன் tdk கேசட்டில் பதிவு செய்த முதல் பாடல் என்ன தெரியுமா?

'உயர்ந்த மனிதன்' படத்தில் நம் உயர்ந்த மனிதர் பாடும் 'வெள்ளிக் கிண்ணந்தான்' பாடல்தான்

அடுத்த பாடலாக

'வெண்ணிற ஆடை'யில் நம் மனதை வாட்டி வதைக்கும் 'நீராடும் கண்கள்' இங்கே பாடலை கடைக்காரரிடம் பதிவு செய்யச் சொன்னேன்.

அடுத்து மூன்றாவதாக பதிவு செய்தது நீங்கள் தந்துள்ள நாம் மூவரின் 'பிறந்தாள் பாடல்' தான். அவ்வளவு பிடிக்கும் இப்பாடல். இப்பாடலுக்கு நாகேஷ், ஜெய், ரவி ஆடிப் பிரமாதப்படுத்துவார்கள். நாகேஷும், ரவியும் சிரமமில்லாமல் உடம்பை வளைத்து (அதுவும் முக்கியமாக கால் ஸ்டெப்புகள் முட்டியை சற்றே மடக்கி வைத்து) அற்புதமாக ஆடுவார்கள். ஆனால் ஜெய்சங்கர் இவர்களுக்கு ஈடுகொடுக்க முடியாமல் சிரமப்படுவார். ஒருவழியாக ஒப்பேற்றி விடுவார்.

இன்றைய ஸ்பெஷல் (1)

அதுமட்டுமல்லாமல் இப்படத்தில் 'சிங்கப்பூரு மச்சான்' என்றொரு அட்டகாசமான குதூகலிக்க வைக்கும் ஒரு பாடலை எஸ்.எம்.எஸ்ஸின் தூள்பறத்தும் இசைக்கருவிகளின் சங்கமத்தில் டி.எம்.எஸ்ஸும், என் ராட்சஸியும் பாடுவார்கள் பாருங்கள்.

ராட்சஸி

ரோஜாச் செண்டு...
நானாகக் கண்டு...
ராஜா வண்டு...
தானாக நின்று...

என்று பாடுகையில் அதுவும் ஒவ்வொரு 'டு' வையும் படு அலட்சியமாக உச்சரிக்கும் போது என்ன மாதிரி ஒரு பாடகியை நாம் பெற்று இருக்கிறோம் என்று நாம் மார் தட்டாமல் இருக்க முடியாது.

ரவியின் நடனம் சாப்ளின் பாணியில் அதுவும் தாடியுடன், கையில் தடியுடன் கலக்கலாக இருக்கும். ரத்னாவும் மிக அருமையாக ஈடு கொடுப்பார் ரவிக்கு. ரவிக்கு ஒரு மிகப் பெரிய பிளஸ் பாய்ண்ட் உண்டு. எந்த ஜோடியைப் போட்டாலும் அது அவருக்கு அவ்வளவு அழகாக பொருந்தும்.

அல்வாத் துண்டு...
ஆடுவதைக் கண்டு...
அன்பே என்று...
பாடுவதைக் கண்டு...

வரிகளின் போது ரவி கால்களை மாற்றி மாற்றி வைத்தவாறு கையில் ஸ்டிக்கை வைத்து ஆடும் அழகு வாவ்... (ரவி போட்டிருக்கும் அந்த ஓவர் கோட்டும் அவருக்கு கனப் பொருத்தம்)

திரும்ப மறுபடி இந்த வரிகள் ஒலிக்கும் போது பின் பக்கமாக நமக்கு முதுகைக் காட்டி, முகத்தை பக்கவாட்டுகளில் திருப்பியபடியே, அவர் முன்னோக்கியபடி வைத்து செல்லும் ஸ்டெப்பும் அவ்வளவு ரம்மியம்.

அதுவும் டி.எம்.எஸ் கொடுக்கும் அந்த 'சொய்ங்ங்ங்ங்ங்......ங் ஆர்ப்பாட்டம் இருக்கிறதே. சோம்பேறியைக் கூட எழுந்து தாளம் போட வைக்கும் சுறுசுறு பாடல். எக்காலமும் என்னால் மறக்க முடியாத பாடல்.

வியட்நாம் அண்ணாச்சி சிங்கப்பூரு மச்சானை சிலிர்த்து ரசிப்பார் என்று இப்போதே கட்டியங் கூறுகிறேன்.

பாடலைக் கேட்டு எழுந்து ஆடத் தயாராகுங்கள்.


https://www.youtube.com/watch?v=9WLCf9ij8jU&feature=player_detailpage

RAGHAVENDRA
12th June 2014, 09:06 AM
வாசு சார்
நாம் மூவர் பாடல் அந்த காலத்தில் பட்டி தொட்டியெங்கும் பிரபலம், குறிப்பாக சிங்கப்பூரு மச்சான் பாடல் தான் தமிழகத்தில் பிரபலமாயிற்று. பிறந்த நாள் பாடல் பிரபலமானதற்கு இலங்கை வானொலி புண்ணியம் கட்டிக் கொண்டது. கல்யாணம் விழாக்களில் சிங்கப்பூரு மச்சான் பாடல் ஒலிக்காத இடமேயில்லை என்ற அளவிற்கு ஹிட்டானது.

நினைவு கூர வாய்ப்பளித்ததற்கு நன்றி

RAGHAVENDRA
12th June 2014, 09:07 AM
எந்தக் காலத்திலும் நடிகர் திலகத்தின் பாதிப்பில்லாத நடிகர்கள் இருக்க மாட்டார்கள் என்பதற்கு மிகச் சிறந்த உதாரணம் கமல் நடித்த இந்தப் பாடல் காட்சி. அந்தரங்கம் திரைப்படத்தில் இடம் பெற்ற குதிரைக் குட்டி ஒரு கோழியைத் தின்றதாம் நம்புங்கள் என்ற இந்த பாடலில் கமலுடைய ஒவ்வொரு அசைவும் நம் கண்முன் நடிகர் திலகத்தைக் கொண்டு வந்து விடும். அருமையான பாடல் வரிகள், பதினாறு வயதினிலே ஆட்டுக்குட்டி பாடலை நினைவூட்டும்.

http://youtu.be/xtrZJEt3ei8

vasudevan31355
12th June 2014, 10:14 AM
நன்றி ராகவேந்திரன் சர்,

எங்கிருந்து பிடிக்கிறீர்கள் இப்படியெல்லாம்? கிரேட் சார்.

எனக்கே இப்பாடல் முற்றிலும் மறந்து போய் விட்டது. உங்கள் வரிகளைப் படிப்பதற்கு முன்னாள் கண்ணை மூடி என்ன பாட்டு என்று யோசித்தேன். பெயில் ஆனேன். பின் குதிரைக் குட்டி என்ற ஆரம்ப வார்த்தையைப் படித்ததும் சட்டென்று ஞாபகம் வந்து விட்டது.

http://archives.deccanchronicle.com/sites/default/files/styles/sliderimage_crop/public/mediaimages/gallery/2013/Feb/scan0027_0.jpg

கமல் நடிகர் திலகத்திடம் அன்னை இல்லத்தில் 'நடிகர் திலகம் ஒரு பல்கலைக் கழகம்' என்று சென்னை தூர்தர்ஷன் தயாரித்த ஒரு தொலைக்காட்சிப் பேட்டியின் போது சொல்லுவார்.

"அண்ணே! நாங்கல்லாம் வளர்ந்துகிட்டு வர்றோம்.

நாங்க எது புதுசா செஞ்சாலும்

'சிவாஜி இதை அப்பவே பண்ணிட்டார்'

'சிவாஜி ஏற்கனவே இதை செஞ்சாச்சு'

என்று

தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள், டான்ஸ் மாஸ்டர்கள் மற்ற எல்லோரும் சொல்லுகிறார்கள்.

http://i812.photobucket.com/albums/zz49/adithya961999/VTS_02_1VOB_001001533_zps044f2174.jpg (http://s812.photobucket.com/user/adithya961999/media/VTS_02_1VOB_001001533_zps044f2174.jpg.html)

நாங்க வேற மாதிரி நடந்து காண்பிச்சா 'சிவாஜி ஏற்கனவே இந்த மாதிரி நடந்துட்டாரே' என்கிறார்கள்.

நாங்க கஷ்டப்பட்டு டான்ஸ் செஞ்சா 'இந்த மூவ்ஸ் எல்லாம் சிவாஜி அந்தக் காலத்திலேயே பண்ணிட்டாரேப்பா' என்கிறார்கள்

நாங்க என்னதான் செய்யிறது தெரியல. எதை புதுசா பண்ணனும்னு நெனச்சாலும் முடியல. எங்கள அறியாம நீங்க எங்களுக்குள்ள நுழைந்சுடுறீங்க. வயெத்தெரிச்சலா இருக்குண்ணே"

என்று செல்லமாக தேவரிடம் சலித்தபடி தேவர் மகன் சிணுங்குவார்

நீங்கள் அளித்துள்ள பாடலை பார்த்ததும், அதில் கமல் நடிப்பைப் பார்த்ததும், கமல் கூறிய அவ்வளவும் அப்பட்டமான உண்மை என்று புரிந்தது மீண்டும்.

நன்றி சார்!

ஆஹா! வாட்டமாக ராகவேந்திரன் சார் ஒரு பதிவு போட்டார். ஆசையைத் தீர்த்துக் கொண்டேன். என் தெய்வத்தின் நிழற்படங்களை இந்தத் திரியில் நீண்ட நாட்களுக்குப் பிறகு அதுவும் காரணத்தோடு போட்டதில் மகிழ்ச்சியில் தலைகால் புரியவில்லை.

gkrishna
12th June 2014, 10:42 AM
வாசு சார்
நாம் மூவர் பாடல் அந்த காலத்தில் பட்டி தொட்டியெங்கும் பிரபலம், குறிப்பாக சிங்கப்பூரு மச்சான் பாடல் தான் தமிழகத்தில் பிரபலமாயிற்று. பிறந்த நாள் பாடல் பிரபலமானதற்கு இலங்கை வானொலி புண்ணியம் கட்டிக் கொண்டது. கல்யாணம் விழாக்களில் சிங்கப்பூரு மச்சான் பாடல் ஒலிக்காத இடமேயில்லை என்ற அளவிற்கு ஹிட்டானது.

நினைவு கூர வாய்ப்பளித்ததற்கு நன்றி

எல்லா ஜாம்பவான்களும் வந்து திரியை கலக்கு கலக்கு என்று கலக்க ஆரம்பித்து விட்டார்கள் .
ஒரு நாள் இந்த சைட் பார்கவில்லை (சைட் விஷயமாக வெளி ஊர் சென்றதால் ) கார்த்திக் சார் சொன்னது போல் ஜெட் வேகத்தில் பரகிறடு
நாம் மூவர் திரை படம் திருநெல்வேலி palace de wallace என்று ஒரு திரை அரங்கம் அரத பழய எப்போதும் தீபாவளி பொங்கல் போன்ற நேரங்களில் கேப் (இரண்டு நாட்கள் மட்டும் மொத்தம் 4 காட்சிகள் தான் )
picture ஆக பயன்படுத்துவார்கள் . நாலு காட்சிகுளும் ஹவுஸ் புல் ஆக ஓடும் .
"சிங்கப்பூர் மாட்சன்" பாடலில்
"தாடி காரன் மச்சன் இவர் நாடி பித்து பாரு " என்று லீலா (தொழிலாளி)
ஒரு ஸ்டெப் போட்டவுடன் ரவி "எட்டடி நீளம் 5 அடி அகலம் ஒட்டகம் என்பது இது தானா " என்றவுடன் விசில் பறக்கும் கொட்டகையில்
வாழ்க ரவியின் நாமம்

gkrishna
12th June 2014, 10:54 AM
கார்த்திக் சார்
போதை பாடலில்
அழகே உன்னை ஆரதிகேறேன் படத்தில் வரும்
லதாவின் இளமையுடன் வாணியின் ஏக்க குரலில் வரும்
"தனிமையில் யார் இவள் "
மற்றும் "நானே நானா யாரோ தானா" பற்றியும் கொஞ்சம் எழுதுங்கள்
அதே போல் காந்த கணஅழகி விஜயலலித டான்ஸ் உடன் வரும்
"பெண் ஒரு கண்ணாடி பார் துள்ளுது முன்னாடி " (காலம் வெல்லும் or கங்கா ) பற்றியும் கொஞ்சம் எழுதுங்கள்
மடை திறந்த உங்கள் எழுத்திற்கு காத்து இருக்கும்

vasudevan31355
12th June 2014, 11:10 AM
கிருஷ்ணா சார்

என்ன ஆச்சு?

அழகே உன்னை ஆராதிக்கிறேன்

வாணியின் ஏக்கக் குரல்

சைட்(டு) விஷயமாக வெளியூர்

லதாவின் இளமை

காந்தக் கண்ணழகி விஜயலலிதா

பெண் ஒரு கண்ணாடி

திரும்பக் கேட்கிறேன்.

எங்கள் ராட்சஸி பாடுவது போல்

வாலிபம் திருபி வந்து விட்டதோ

ஒரே இளமை மயமாக இருக்கிறதே!

(சின்னக் கண்ணன் சார்! ஜாக்கிரதை! உங்களுக்கு சரிநிகர் சமானமாய் போட்டிக்கு ஒரு ஆள் வந்து விட்டார். சமாளிப்பீர்களா?)

Gopal.s
12th June 2014, 11:15 AM
வர வர எங்கள் தலைவர் ஐடம் மற்றும் போதை,ரெகார்ட் டான்ஸ் specialist ஆக மாறி விட்டார். நான் தலைவர் மாதிரி சுத்த பத்தமெல்லாம் இல்லேங்கோ. இடைவேளைக்கு முந்திய வசந்த மாளிகை ஆனந்த் ஆன நான் ,வரவேற்க காத்திருக்கிறேன்.

தலைவா,தூள் கிளப்புங்க.தாரை தம்பட்டை அதிரட்டும்.

gkrishna
12th June 2014, 11:44 AM
வாசு சார்
இழந்த வாலிபத்தை திரும்ப பெற சிட்டு குருவி லேகியம் எல்லாம் வேண்டாம் நமக்கு
ராட்சசி ஈஸ்வரியின் சில பாடல்கள் கேட்டால் போறும்
பிச்சுக்கிட்டு வரும் (சொன்னது வேலை பார்க்க ஆபீஸ்ல வேகத்தை )
"ஆனந்த தானடவமோ வாசு சார் ஆடுகிறார் இப்போது எல்லாம்"

vasudevan31355
12th June 2014, 11:55 AM
இடைவேளைக்கு முந்திய வசந்த மாளிகை ஆனந்த் ஆன நான்



உண்மை! மற்றவர்கள் எல்லாம் இடைவேளைக்குப் பின் வரும் ஆனந்த் ஆகி விட்டார்கள் ஒரு நபரால். ஒரே ஒரு நபரால். ஆனால் ஒரு உபாத்தியாரைத் தவிர. ஜம்பம் பலிக்கிலேயே ஆனந்து பலிக்கிலேயே!

gkrishna
12th June 2014, 11:55 AM
வாசு சார்
ராகவேந்தர் சார் சொன்ன "குதிரை குட்டி கோழியை தின்றதாம் நம்புங்கள் நீங்கள்" பாடல் நிறைய பேர் அறியாத பாடல்
அந்தரங்கம் திரைபடத்தில் வரும் "ஞாயிறு ஒளி மழையே திங்கள் குளிக்க வந்தாள்" பாடலை பற்றி தான் நிறைய பேருக்கு தெரியும்
அதிலும் சிலர் அதை யேசுதாஸ் பாடியது என்று ஒரு ப்ளாக் இல் எழுதி இருந்தார்கள்
"கண்ணு பட போகுதடி கட்டிகடி சேலையை
பொண்ணுக்கே ஆசை வரும் போட்டுகடி ரவிக்கையை "
சொந்தம் பாடல் வரியில் ராட்சசியின்
"என் கண்ணு என் செல்லம்" என்று ராகவேந்தர் சார் ஐ பாராட்ட வார்த்தைகள் இல்லை

gkrishna
12th June 2014, 12:22 PM
வாசு சார்
"வண்டிக்காரன் மகன்" திரை படத்தில் வரும்
பாலாவின் பெப்பி பாடல் "கார்த்திகை மாதம் கார்கால மேகம் .... பள்ளியறை "
விருத்தம் உடன் "படுத்தாள் புரண்டாள் உறக்கம் இல்லை "
பாடலில் வரும் "மடல் கொண்ட வீணை
லேடி ஹம்மிங் வாய்ஸ் யார் சார்

vasudevan31355
12th June 2014, 12:29 PM
சொந்தம் (1973)

http://i1.ytimg.com/vi/f67Hgr_9Ak0/hqdefault.jpg

"கண்ணு படப் போகுது கட்டிக்கடி சேலையை

எட்டுக் கண்ணு விட்டெரிக்கும் உன்னக் கண்டா
உன் கட்டாணி முத்துப் பல்லு எனக்கு உண்டா

வானம் பார்க்காத மஞ்சள் நிலா
வண்டு தட்டாத முல்லை இது
தட்டான் தட்டாத தங்கத்து மேனி
ராஜா இல்லாத ராணி

பச்ச முள்ளு பூவாப் போகும் உன்னக் கண்டா
இது பட்டாளத்துச் சக்கரவர்த்தி பொன்னுக்குண்டா

(சுசீலாம்மாவின் 'ஹஹாஹஹா.... யயாயய்யா'.... ஹம்மிங் ஹம்சமான ஹம்சம்)

தெற்கு திசை பார்த்து நீராடினால்
சேரன் மாப்பிள்ளை வருவானென்பார்

தேடும் மாப்பிள்ளை யாரென்று சொன்னால்
சேர்த்துத் தருவேன்டி கண்ணு

கண்ணதாசா!
மனுஷரா நீர்!

அடடா!

ராட்சஸி மற்றும் கண்ணியப் பாடகியின் காதுகளைக் குளிரவைக்கும் குற்றால சுகப் பாடல்.

ஷிப்ட்டுக்கு புறப்படுமுன் 5 முறை பார்த்து விட்டேன்.

இரவு தூக்கம் தொலைந்தது.

கிருஷ்ணா சார்!

1000 நன்றிகள் உங்களுக்கு.


https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=SOE1yARKmC4

vasudevan31355
12th June 2014, 12:37 PM
வாசு சார்
"வண்டிக்காரன் மகன்" திரை படத்தில் வரும்
பாலாவின் பெப்பி பாடல் "கார்த்திகை மாதம் கார்கால மேகம் .... பள்ளியறை "
விருத்தம் உடன் "படுத்தாள் புரண்டாள் உறக்கம் இல்லை "
பாடலில் வரும் "மடல் கொண்ட வீணை
லேடி ஹம்மிங் வாய்ஸ் யார் சார்

அது ரமோலா என்ற பெண்ணின் கிறங்க வைக்கும் குரல் கிருஷ்ணா சார்.

ஏன் சிரிக்கிறீங்க?! ஏன் சிரிக்கிறீங்க?!

vasudevan31355
12th June 2014, 12:40 PM
கிருஷ்ணா சார்!

நான் இனிமே வரல்ல இந்த ஆட்டத்துக்கு. ஒழுங்கா வேலைக்குக் கெளம்பறேன். இது சரிப்படாது. எனக்கு லீவும் இல்லை.:)

gkrishna
12th June 2014, 12:41 PM
சாரி வாசு சார்
உங்களை disturb செய்ததற்கு
இந்த "சொந்தம்" படம் ஒரு beautiful family டிராமா
எனக்கு ரொம்ப பிடித்த படம்
விச்சுவின் ஆரம்ப வரிகள் "கார்கால மேகம்" பிறகு கண்ணிய பாடகி
"நல்ல தான் யோசெகிறேங்க நமக்கு என்ன குறைஞ்சு போச்சு "
ஜானகியின் "வாழ்ந்தால் உங்களை போல் வாழ வேண்டும்"

vasudevan31355
12th June 2014, 12:52 PM
சாரி வாசு சார்
உங்களை disturb செய்ததற்கு
இந்த "சொந்தம்" படம் ஒரு beautiful family டிராமா
எனக்கு ரொம்ப பிடித்த படம்
விச்சுவின் ஆரம்ப வரிகள் "கார்கால மேகம்" பிறகு கண்ணிய பாடகி
"நல்ல தான் யோசெகிறேங்க நமக்கு என்ன குறைஞ்சு போச்சு "
ஜானகியின் "வாழ்ந்தால் உங்களை போல் வாழ வேண்டும்"

யப்பா! என்னா ஞாபக சக்தி! கிரேட் சார்!

(நோ..நோ...ஸாரியெல்லாம் சொல்லவே கூடாது. சமத்தோன்னோ!)

நாளைக்கு மீட் பண்ணுவோம்.

chinnakkannan
12th June 2014, 12:55 PM
iru peNkaL paadiya paattu endraal... paalaadai mEni pani vaadaik kaatRu thaan ninaivukku varukirathu (sorry my tamil font is not working)

chinnakkannan
12th June 2014, 12:59 PM
//(சின்னக் கண்ணன் சார்! ஜாக்கிரதை! உங்களுக்கு சரிநிகர் சமானமாய் போட்டிக்கு ஒரு ஆள் வந்து விட்டார். சமாளிப்பீர்களா?) // vasu sir.. yErkanavEyE a.o.a paththi ezhuthittEnE..munnaalE.. ippo repost ingu..

*
தபக்கென்று ஜீராவில் விழுந்து நன்றாக நீச்சலடித்து ஊறிய குலோப் ஜாமூன் மாதிரி கன்னம்..க்ருகருவென நிலக்கரி நிறத்தில் மின்னிடும் கண்கள்..ஒரு முறை பார்த்த போதும் மறுபடி திரும்பிப் பார்க்கத் தூண்டும் அழகு..மெழுகு பொம்மை தான் இருந்தாலும் அழகு.. நிற்க நான் சொல்வது ரிச்சா கங்கோபாத்யாவை அல்ல..

ல்தா...எம்ஜிஆரின் ஜோடியாக அறிமுகமாகி சமர்த்தாய் அவருடன் அவளொரு நவரச நாடகத்தில் நீந்தி எப்படியோ தொடர்ந்து கயல்விழியாய் நடித்து அந்தப் பாத்திரத்தையே கெடுத்து இருந்தும் தென்றலில் ஆடும் பூவை என்று பாடப் பெற்று தொடர்ந்த தருணங்களில் சிவாஜி, ரஜினி,விஜயகுமார் என ஜோடி சேர்ந்து தொடர்ந்த வருடங்களில் காலத்தின் கட்டாயத்தால் ஜெய்கணேஷால் ஏமாற்றப் படுபவராக ஜோடியாக பரிதாப நிலைக்குத் தள்ளப் பட்டவர்..அப்பாடா விஷயத்துக்கு வந்தாச்சு..

ஆம் நடித்த படம் அழகே உன்னை ஆராதிக்கிறேன்.. பாடல்கள் அனைத்தும் சுவை.
லதாவைப் பொறுத்தவரி அவரிடம் பகைமை பாராட்டுவது ஒன்றே ஒன்று தான். அது தான் நடிப்பு. கடலில் போட்டாலும் சரி சுட்டாலும் சரி வரவே வராது என்பதை விட முயற்சியே செய்யாமல் இருந்தது தான் அவ்ரின் தனித்தனமை.

இந்தப்படத்திலும் இந்தப் பாடல் தனியாக எப்போது கேட்டாலும் இனிமை,சோகம், வரிகள் எல்லாம் நமை மெய்மறக்க வைக்கும்.. அதில் நடிக்கும் பாக்கியம் பெற்றிருந்தும் வாயசைப்பே போதும் என இருந்திருப்பார்..
எனக்கு மிகவும் பிடித்த பாடலில் ஒன்று இது.

ஏனோ தெரியவில்லை ஒவ்வொரு முறை ஹேர்கட் செய்து முடித்ததும் இந்தப் பாட்டும் நினைவுக்கு வ்ரும்.உண்மை தானே!

***
நானே நானா யாரோ தானா ?
மெல்ல மெல்ல மாறினேனா?
தன்னைத்தானே மறந்தேனே
என்னை நானே கேட்கிறேன் ( நானே நானா)

ஒருவன் நினைவிலே உருகும் இதயமே
இதோ துடிக்க,
உலர்ந்த உதடுகள் தனிமைக் கவிதைகள்
எதோ படிக்க,
மதுவின் மயக்கமே உனது மடிமேல்இனி
இவள் தான் சரணம் சரணம்

பிறையில் வளர்வதும் பிறகு தேய்வதும்
ஒரே நிலவு
உறவில் கலப்பதும் பிரிவில் தவிப்பதும்
ஒரே மனது
பருவ வயதிலே இரவும் பகலும் விரகம்
நரகம் சரணம் சரணம்

**
அதுல பார்த்தேள்னா அந்த அ.உ.ஆ படத்தில இன்னொரு பாட்டும் எனக்குப் பிடிக்குமாக்கும்..குறிஞ்சி மலரில் வழிந்த ரசத்தை உறிஞ்சத் துடிக்கும் உதடு இருக்க.. என ஆரம்பிக்கும்..வழக்கம்போல அதைப் பாடுபவர்கள் தான்(படத்தில்) கொடுத்து வைத்தவர்கள்..லதாவின் உறவு போல..ரெண்டுமே சுமார் பேர்வழிகள் தான்..முதலாமவர் சுபாஷிணி..குண்டுக் கொழுக்கட்டையாய் வந்து (அக்கா ஜெயசுதாவாம்..கொஞ்சமாவது அக்காகிட்ட இருந்து கத்துண்டுருக்கலாமில்லை)
பாடும்..ஆடும்..நடிக்காது..கடைசியாய் முண்டுமாதிரி துண்டும் விளக்கும் வைத்துக்கொண்டு ஆசையைக் காத்துல தூதுவிட்டுட்டுக் காணாமப் போனார்.

இரண்டாமவர் பிரகாஷ் சமர்த்தாய் இதில் மட்டும் நடித்துவிட்டு(?) நடிப்பு வராது எனத் தெரிந்து கோரியாக்ராபி - ஹிந்திக்குப் போய் ஃபேமஸ் ஆனார் பிற்காலத்தில்.
*

gkrishna
12th June 2014, 01:00 PM
சின்ன கண்ணன் சார்
பாலாடை மேனி பனிவாடை காற்று நீராட வந்தோமடி
வாசு சார் சொல்லிய படி
கண்ணியமிக்க பாடகியின் குரலில் "ஓஹோ ராஜி"
குற்றால அருவி இரைச்சல் உடன்
ராட்சசியின் உரைச்சல்
"ஓஹோ நிம்மி " அந்த அருவி தண்ணீர் பட்டதால் நடுங்கும் குளிரில்

chinnakkannan
12th June 2014, 01:02 PM
*
”சரி. அடிக்கறதுன்னு முடிவு பண்ணிட்டீங்க.கொஞ்சம் கலந்து ஒரு முடிவுக்கு வாங்க” என்பார் வடிவேலு ஒரு படத்தில். .

அது போல நானும் ஒரு முடிவெடுத்து முழுப் பாடல்களையும் - அ உ ஆ - வின் கொஞ்சம் பேசலாமா..

என் கல்யாண வைபோகமும் நல்ல பாட்டுத் தான்..எனில் கொஞ்சம் கீச் கீச்சென்று ஆகிவிடும் இல்லையா..


அ.உ.ஆவில் இன்னொரு பாடல்..ஹே மஸ்தானா தனனானா ஹரியானா ந்னு ஆரம்பிக்கும்..ஹாய் ஹாயாஹாய் ஹாயா ஹாயா ஹாயா..சிறுசு சின்னஞ்சிறுசு இள்சு அம்மாடி இளசு..காயிருக்குப் பறிக்கக் காத்திருக்கு என்று தத்துவமாக ஆரம்பிக்கும் நடனப் பாடல்..கேட்க நல்லா இருக்கும்..

ராரா ராரா ராராராராஅ..ஆங் ராராரரா...ஆஆங்
தனிமையில் யார் இவள் நீரோடு நிலவாட நிலவோடு வானுண்டு
என்னோடு உறவாட யாருண்டு ஏன்...என லத்து மயங்கி ம்யங்கி குழறி குழறி ஆடிய படி பாடும் பாடல்..
நல்ல பாட்டு...ithai detaildaa karthik sir alasuvaar..

அப்புறம் காதலன் காதலின்னா பாத்ரூம் விளையாட்டில்லைன்னா எப்படி..இள்மை ஸ்பெஷலிஸ்ட் ஸ்ரீதர் நல்லா யோசிச்சு இளைய ராஜா கிட்ட சொல்லியிருப்ப்பார் போல...”சாரே..அந்த இளைஞன் அந்த இளம்பெண்ண மோகிச்சு. ஒரு நாள் அந்த நங்கை குளிக்கறச்சே போய் குறும்புக் கலாட்டா பண்ணுவான்..அதுக்கேத்த மாதிரி ட்யூன் போடுமே” சரி என்று இளையராஜா ட்யூன் போட பாடலாசிரியர் எழுதிய பாட்டு..

அபிஷேக நேரத்தில் அம்பாளைத் தரிசிக்க் அடியேன் கொடுத்து வச்சேன்.
ஜென்ம்ம் அதற்கே எடுத்து வச்சேன் கண்ணே வா..க்ரையேறி வா” என் எழுத பிரகாஷீம் துண்டுடன் சுபாசினியும்
(கொடுத்து வச்ச டவல்) ஆடும் பாட்டு.பாடல் வரியிலும் படம் பிடித்த விதத்திலும் இள்மை கொப்பளிக்கும்.

அப்புறம் டைட்டில் ஸாங்க்... அழகே உன்னை ஆராதனை செய்கிறேன்...கெமிஸ்ட்ரி லேபில் விட்ட ஹிஸ்டரி ஸ்டூடண்ட் டெஸ்ட் ட்யூபைப் பார்ப்பது போல் லதாவைப் பார்த்த ப்டி பாடும் பாடல்.ஒரு வேளை மன்ம் பாடுமோ.

கதையின் ஒன்லைன்: அக்கா குடும்ப விளக்கு குத்து விளக்கு ல்தாவை டாவடித்து ஏமாற்றி எண்ணம் நிறைவேறிய்தும் விலகி அக்காவை விட வெகு சுமாராய் இருக்கும் சுபாஷிணியை க்ரெக்ட் செய்ய முயலுகையில் அக்கா பொங்கி எழுந்து தங்கையைக் காப்பாற்றுவதற்காக மனம் கவர்ந்த வில்லனை கத்தியால் சப்பக் என்று குத்திதியாகச் சுட்ராய் சிறைக்குச் செல்லும் கதை. விஜயகுமர்ர் பாவம் தூரத்தில் இருந்து ரசித்து அவ்வப்போது பேசிக்கொள்வதோடு சரி என் நினைக்கிறேன்.

chinnakkannan
12th June 2014, 01:04 PM
krishna sir.. vegu nalla paattu..thaiyaagak kEttaalum inimai..thaniyaakap paarththaalum inimai.. (pinna veetila yaar adi vaangarathu :)//



சின்ன கண்ணன் சார்
பாலாடை மேனி பனிவாடை காற்று நீராட வந்தோமடி
வாசு சார் சொல்லிய படி
கண்ணியமிக்க பாடகியின் குரலில் "ஓஹோ ராஜி"
குற்றால அருவி இரைச்சல் உடன்
ராட்சசியின் உரைச்சல்
"ஓஹோ நிம்மி " அந்த அருவி தண்ணீர் பட்டதால் நடுங்கும் குளிரில்

chinnakkannan
12th June 2014, 01:12 PM
ithuvum oru meeL pathivu..:)


அவளோ சின்னஞ்சிறுமி..பருவத்தில் மலர்ந்து பூத்துக்குலுங்குபவள்

(ஹாஆஆவ்...”யார்ப்பா அதுகொட்டாவி விடறது)

சரி..அழகிய இளம் பெண்.. அந்த வனத்தில் டாக் டாக் என்று துள்ளித் திரிவதே அவள் வழக்கம்..அப்பாவி..கவடு,சூது எதுவும் தெரியாது..அவை தெரியாத கள்ளங்கபடற்ற முகம்..

அருவிக் கரையோரம் செல்லும் போது ஒரு நாளில் அவனைப் பார்க்கிறாள்..அவன்..யார் எனத் தெரியாது..ஊர் எது எனத் தெரியாது.. அவனுக்கு எதனாலோ அடிபட்டிருக்கிறது..பரிதாபம் தான் மேலோங்குகிறது அந்தப் பாவைக்கு..

டர்ரென தான் அணிந்திருக்கும் குட்டை உடையையே கிழித்துக் கட்டுப்போடும் நேரம் அந்தக் காளையின் கண்கள் கட்டு மீறி அவள் மேல் மேய..அவனும் உணர்ச்சி வசப்பட...’டேய்..தப்புடா..இது ரொம்பச்சின்னப் பொண்ணுடா’ என அருவி அதன் பாஷையில் அலறிய படி பார்த்துக் கொண்டிருந்தது..

பின்னர் திரும்பச் செல்லும் போதும் அந்தச் சிறுமிக்கு அவனிடம் கேள்விகள் கேட்கவும் தோன்றவில்லை..ஒரு வித மயக்கத்தில் வீடு போய்ச் சேர, யாருக்குமே கவலைப்படாத காலம் விரைய அவளது கோலம் கொஞ்சம் மாற...அன்னைக்கு அதிர்ச்சி..சின்னப் பொண்..தலை நிறைய மலர்களைச் சுமக்க வேண்டிய வேளையில் இப்படி சுமந்திருக்கிறாளே..பட்டிக்காட்டுத் தாய் ஒரு விபரீத முடிவுக்கு வந்து மலை நாட்டு மருத்துவச்சியிடம் சென்று அந்தச் சிறுபுஷ்பத்தில் பூத்திருந்த சிறுபுஷ்பத்தைக் குரூரமான முறையில் கிள்ளி எறிந்து விடுகிறாள்..அம்மா பெருமூச்சு விடுகிறாள்.. அப்பாடா தன் பெண் பிழைத்தாள் என நிம்மதி கொள்ள..இல்லை இல்லை..இனிமேல் தான்
அவளுக்கு நிம்மதி போகிறது..

காலப் போக்கில் ஒரு அழகிய இளைஞன் அந்தப் பெண்ணை அழகில் மயங்கி மணம் புரிய, கனவுகள் பலவற்றுடன்
கன்னியைத்தொட்டால், அந்தப் பெண் மிரள்கிறாள்..அலறுகிறாள்.. பின் பின்...ஒரு வழியாய் உண்மை கண்டுபிடிக்கப் பட கணவனே எல்லாம் மறந்து அந்தப் பெண்ணுக்கு புதிய வாழ்வு கொடுக்கிறான்...

பகலில் ஒரு இரவு படத்தின் மிகச் சுருக்கிய கதை இது..விஜயகுமார், கொள்ளை அழகு ஸ்ரீதேவி, பிற்காலத்தில் வைரமுத்து எழுதிய உதட்டின் மீது படுத்துக்கலாமா என்ற வரிக்கேற்ப உதடு கொண்ட சீமா,புஷ்பலதா.. ரவிக்குமார்.. எனப்பலர்.. எல்லாப்பாட்டும் அழகென்றாலும் கீழே காணும் பாடல் எனக்கு ரொம்ப்ப்ப்பப் பிடிக்கும்...காரணம்.. ஸ்ரீதேவி அண்ட் கண்ணதாசன்..ஒரு வேளை ஸ்ரீதேவி நடிக்கிறார் என்று தெரிந்தே இந்தப் பாட்டை எழுதியிருப்பார் போல..

போனி கபூருக்குக் காலமெல்லாம் தேனிலவு இருந்திருக்குமோ?! சந்தேகம் தான்...!

**



பொன்னாரம் பூவாரம் கண்ணோரம் சிருங்காரம்
பொழுதுகள் கோடி புதுமைகள் தேடி
வா வெண்ணிலா ஒரு தேர் கொண்டுவா
செந்தேன் நிலா புதுச் சீர் கொண்டுவா

மெதுவாகத் தாலாட்டு சொல் தென்றலே சொல் தென்றலே
மேலாடை சதிராட வா தென்றலே வா தென்றலே
சிறிய இடை கொடியளக்க அழகு மயில் நடையளக்க
வா...செந்தூரம் கலையாத தெய்வாம்ச ராணி
காலமெல்லாம் தேனிலவுதான்


சிந்தாத மணிமாலை உன் புன்னகை உன் புன்னகை
செவ்வான விண்மீன்கள் உன் கண்களே உன் கண்களே
அழகு ரதம் அசைகிறது ஊர்வலமாய் வருகிறது
ஆ...பண்பாடு மாறாத தென்பாண்டித் தேனே
காலமெல்லாம் தேனிலவுதான்

gkrishna
12th June 2014, 01:16 PM
சின்ன கண்ணன் சார்
அழகே உன்னை ஆராதிகிறேன் அருமையான டைட்டில்
எல்லா பாடல்களுமே மொட்டையின் ராஜாங்கம்
வாணியின் "என் கல்யாண வைபோகம் உன்னோடு தான்"
பாலாவின் "அபிசேக நேரத்தில் அம்பாள தரிசக்க அடியேன் கொடுத்து வைச்சேன் ஜன்மம் அதற்கே எடுத்தே வைத்தேன் கண்ணே வா கலையே நீ வா அம்மா தாயே புண்ணியம்" பாடலில்
"காண கண் கோடி போதாதடி கன்னி நீராடினால்
ஆடை வேண்டாமோ மறைக்க அதை முழக்க
கேட்டால் தருவேன் நானே " lovely சோலோ டீசிங் பாடல்
ஜெயச்சந்திரனின் மெலடி "அழகே மலரே ஆராதனை செய்கிறேன்"
நீங்கள் கூறிய "குறிஞ்சி மலரில் வழிந்த ரசத்தை"
வாணியின் "தனிமையில் யார் இவள்" இந்த பாடலின் நடுவில் வரும் beautiful கிடார் மற்றும் டபுள் பங்கோ combination
எல்லாமே பரவசம்

chinnakkannan
12th June 2014, 01:24 PM
krishna sir..ellaap paattumE eppak kEttaalum nallaa irukkum..(haai haiyaa.. thavira..aanaa athu avLo mOsamillai..appappa kEtkalaam).. en kalyaana vaibOgam - sadaarnu vaani high peakla eduppaangka.. and thanimaiyil yaar ivaL guitar and double bungo.. romba nalla irukkum..( infact intha p padaththula uLLa paattukku lathaavOda azhagu poruththama irukkum!) thanks.

vasudevan31355
12th June 2014, 01:37 PM
கிருஷ்ணா சாரும், சின்னக் கண்ணன் சாரும் இன்று மிக அழகாக திரியை மிக உயரிய கௌரவத்திற்கு அழைத்துக் கொண்டு செல்கிறீர்கள். அருமையிலும் அருமை. பாடல்களைப் பற்றிய அலசல்கள் அருவி போல் வந்து விழுகின்றன.

அனுபவித்து படித்துக் கொண்டிருக்கிறேன். எவ்வளவு தகவல்கள்!

நிஜமாகவே எப்படி பாராட்டுவது என்று குழம்பி

நானே நானா
யாரோதானா

என்று அசந்து போய் இருக்கிறேன்.

அமர்க்களப் படுத்திக் கொண்டிருக்கிறீர்கள்.

நன்றி!

சின்னக் கண்ணன் சார்

தமிழில் டைப் பண்ண

http://tamil.changathi.com/

முயற்சி செய்து பாருங்கள். நீங்கள் தமிழில் விளாசாமல் என்னவோ போல் உள்ளது.

Gopal.s
12th June 2014, 01:37 PM
உண்மை! மற்றவர்கள் எல்லாம் இடைவேளைக்குப் பின் வரும் ஆனந்த் ஆகி விட்டார்கள் ஒரு நபரால். ஒரே ஒரு நபரால். ஆனால் ஒரு உபாத்தியாரைத் தவிர. ஜம்பம் பலிக்கிலேயே ஆனந்து பலிக்கிலேயே!
நான் தலைவர் என்று குறிப்பிட்டது கார்த்திக்கை. த பார்ரா ஆசைய .....ஓசி காஜில் தலைவனாக பாக்கிறாங்க!!!!

mr_karthik
12th June 2014, 01:47 PM
டியர் சின்னக்கண்ணன் சார்,

அழகே உன்னை ஆராதிக்கிறேன் பாடல்களின் சிலவரி அலசல்கள், மற்றும் நினைவுட்டல்கள் சூப்பர். 'நானே நானா' தினமும் விவித்பாரதியில் கலக்கியெடுத்த பாடல். வாணியின் புகழ்க்கிரீடத்தில் ஒரு வைரம். ஒருமுறை சென்னை லயன்ஸ் கிளப் விருதுகள் வழங்கும் விழாவில் ஜேசுதாஸ் குழுவினர் கச்சேரி நடந்தபோது, கவுன் அணிந்த சின்னஞ்சிறுமியாக இருந்த சுஜாதா இப்பாடலைப்பாடக்கேட்ட வாணிஜெயராம், மேடையேறி சுஜாதாவை வாழ்த்தி "என்னைவிட நன்றாகப் பாடினாள்" என்று பாராட்டினார்.

'தனிமையில் யாரிவள்' பாடலும் வாணிக்கு புகழ் தந்தபோதும், அப்பாடல் காட்சியில் ஸ்கோர் தட்டிச்செல்பவர் ஒளிப்பதிவாளர் திவாரி. ஒவ்வொரு ஆங்கிளுக்கும் கைதட்டலை அள்ளுவார். கோவாகடற்கரையின் அழகை மேலும் அழகாக்கி காட்டியவர். (இதைப்பற்றி நான் எழுதுவேன் என்றுவேறு கோடி காட்டிவிட்டீர்கள்).

இளையராஜா இப்படத்தில் கலக்கியிருப்பார். 'ஹே மஸ்தானா'வெல்லாம் அதுவரை கேட்டிராத மெட்டு. படத்தின் வெற்றியில் முக்கால் பங்கு இவருக்கே.

அருமை...., தொடருங்கள்.

gkrishna
12th June 2014, 02:11 PM
வாசு/ck /கார்த்திக் சார்
லதா உண்மையில் அஉஆ,வட்டத்திற்குள் சதுரம்,மனதார வாழ்த்துங்களேன்,ஆயிரம் ஜன்மங்கள்,நீயா,வயசு பொண்ணு
போன்ற படங்களில் அவர் அழகை ஆராதிக்க தான் வேண்டும்
சின்னி பிரகாஷ் நடித்த "அவள் தந்த உறவு " என்று நினவு
துரை direction
படத்தில்
ஒரு பாடல் சார் "நினைத்து பார்கிறேன் என் நெஞ்சம் இனிக்கின்றது
சிரித்து பார்கிறேன் என் தேகம் துடிகின்றது ஒ ஒ remember ஒ மை டார்லிங் remember " விச்சு இசை சாக்ஸ் பின்னும் அந்த பாடலிலி
"நடன சாலைகளில் நதியின் ஓரங்களில் அழகு கோலங்களில் .."
"கடந்த காலங்களில் நநடந்த உள்ளங்களில்" வரியை பாடும் போது
பாலாவின் கொப்பளிக்கும் இளமை விச்சுவின் குதகலிக்கும் சாக்ஸ் தபெல் combination ஒ remember

chinnakkannan
12th June 2014, 02:41 PM
வாசு சார், கார்த்திக் சார்,, கிருஷ்ணா சார் நன்றி
*
வாசு சார்.. தமிழ் ஃபாண்ட் இப்போ ஒர்க் செய்கிறது..என்று எழுதுகையில் சடாரெனக் கணினி கோபித்து அணைந்து விட்டது..
*
கார்த்திக் சார்.. சொன்னாற் போலவே இளையராஜா பெரும் பலம்..பாடலைப்பாடக் கொடுத்த நபர்களை சரியாக செலக்ட் பண்ணியிருப்பார்..சீக்கிரம் தனிமைப் பாட்டைப் பாடி எங்களைக் கலைங்க..
*
கிருஷ்ணா சார்.. லதா பட லிஸ்ட் பெரிதாய்ப் போட்டுக் கொடுத்து என் நினைவுக் குதிரையைச் சற்றே ஒரு பரவச நிலையில் நொண்டியடித்த படி ஓட விட்டு விட்டீர்கள்.(வயசாய்டுச்சோன்னோ) .அதுவும் ஆயிரம் ஜென்மங்கள்..அதில் உள்ள பாட்டு.. வெண்மேகமே கேளடி என்கதையை..ஓ..அது பத்மப் ப்ரியாவோன்னோ..இன்னொரு - மாலை நேர வெயிலின் நிறம் போல மஞ்சள் நிற மெழுகு பொம்மை.
*
. அப்புறம் அறுபத்து நான்கு கலைகள்..(அவ்வப்போது விஜயகுமாரின் மீது பொ ற் ற் றாமை வருகிறது) இரண்டும் வெகு இனிமையான பாடல்கள்.. வீடியோவிற்கு அறுபத்து ஆறாவது வட்டம் சார்பாக அண்ணன் ராகவேந்திரரை அழைக்கிறேன்! :)

chinnakkannan
12th June 2014, 02:45 PM
"நடன சாலைகளில் நதியின் ஓரங்களில் அழகு கோலங்களில் .."
"கடந்த காலங்களில் நநடந்த உள்ளங்களில்"// வெகு அழகான வரிகள் நானும் ரசித்திருக்கிறேன்

chinnakkannan
12th June 2014, 02:53 PM
சில தினங்கள் முன்பு (பத்து பதினைந்து நாள்) இங்கு(மஸ்கட்) 49 முதல் 52 டிகிரி வெயில் என்று முக நூலில் எழுதியிருந்தேன்.. அது இங்கே:

கண்களும் சூடாகும் காந்தலெனத் தோல்பொசுங்கும்
எண்ணம் மிக மாறி ஏதேதோ தோன்றிவிடும்
கஷ்டம்தான் என்றால் கலக்கிடுதே இன்னுயிரை
மஸ்கட் வெயிலது வாம்..

வெளியில் வெய்யில்..தலை காட்ட முடியவில்லை.உள்ளே என்ன செய்யலாம் என முடிவெடுத்து நேற்றும் இன்றும் (வெள்ளி சனி) விட்டுவிட்டுப் பார்த்தது வஞ்சிக் கோட்டை வாலிபன்..ம்ம்க்கும்..

ஆயிரம் தான் சொல்லுங்கள்.

சித்தம் கலங்கிடும் சிந்தை மயங்கிடும்
பத்மினி தோற்றத்தால் பார்

என சில பல ஆன்றோர்கள் சொல்லியிருந்தாலும் (?!) அதே ஆன்றோர்

செளஜன்யம் கொண்டுவக்கும் சோபையில் பெண்ணழகு
வைஜயந்தி மட்டுமே வா

எனச் சொல்லியிருக்கிறார்கள்..வைஜ் வைஜ் வைஜூ தான் கொஞ்ச நேரம் வந்தாலும் ராஜாமகள் புது ரோஜாமலர் அனாயசமாக சிம்மாசனத்தை இழுத்து நம் மனதில் சரி சரி என் மனதில் அமர்ந்து விட்டார்.. சாதுர்யம் பேசாதடி என் சலங்கைக்குப் பதில் சொல்லடியில் காட்டும் அலட்சியம்.. எவ்வளவு தான் பத்மினி கண்கள் உடல் உதடு என பல பாவங்கள் காட்டினாலும் அவற்றை எல்லாம் பாவமாக்கி விடுகிறது வைஜூவின் அலட்சியம் கலந்த அழகு..

ம்ம் படத்தை.. எத்தனை முறை பார்த்தாலும் சலிக்கவில்லை.. என் இருவிழியோ ஒரு கணமும் அசையவில்லை!!

*

எனில் வைஜூவின் ராஜாமகள் ரோஜா மலரை இங்கு நினைவு கூறுவோமா..

gkrishna
12th June 2014, 03:20 PM
வாசு சார்/ck சார்/கார்த்திக் சார்
ஒரே வானம் ஒரே பூமி - i .v .சசி /ஜெய்ஷங்கர்/ரவிக்குமார்/விதுபால /விஜயா/சீமா மற்றும் விச்சு கூட்டணி
படம் முழுக்க அமெரிக்க
வாணியின் "மலை ராணி முந்தாணி சரியாய் சரியாய் " விச்சுவின் violin
ஜாலி அப்ராஹீம் "ந ந ந "
வாணி "மண்மாதா வண்ண விடி விரிய விரிய"
ஜாலி அப்ராஹீம் "ந ந ந "
வாணி "இளங்காற்று மார்பகத்தை தழுவ தழுவ "
ஜாலி அப்ராஹீம் "ந ந ந "
வாணி "எண்ணுகின்றேன் கவிதை ஒன்று எழுத எழுத "
விஜயா அண்ட் ஹாலிவுட் டாக்டர்
அதிலும் இரண்டாவது சரணத்தில்
வாணியின் "காதல் விட்ட முச்சு இன்று பெருகி பெருகி ஆறாகி"
குரல் முச்சு மட்டும் தனியாக கேட்கும்
இந்த பாட்டு மட்டும் track பிரிச்சு ரெகார்டிங் செய்து இருந்தால் பெஸ்ட் fusion ஆக இருந்து இருக்கும் விச்சு டெக்னாலஜி development இல் concentrate பண்ணாமல் போய் விட்டார்

mr_karthik
12th June 2014, 03:32 PM
டியர் கிருஷ்ணாஜி,

என்ன 'லதா புராணம்' ஓவரா இருக்கு?. பட்டியல் எல்லாம் கரெக்டாக வந்து விழுகிறது. உங்களை சொல்லும் நான் மட்டும் என்ன?. லதாவுக்கு நடிக்கத்தெரியாவிட்டாலும் "மற்ற விஷயங்களுக்காக" லதா படங்களை விடாமல் பார்த்தவன்தான். கொஞ்சம் ஆண்குரல் கலந்த வசீகர குரல், கதாநாயகியாக நடிக்கும்வரை கட்டுக்கோப்பாக வைத்திருந்த உடல்வாகு,

சங்கர் சலீம் சைமன் படப்பிடிப்பின்போது பேசிக்கொண்டிருந்தவரை பந்தா இல்லாத நடிகையாகத்தெரிந்தார்.

ஆஹா.., 'வயசுப்பொண்ணு'வை நினைவூட்டி விட்டீர்கள். முத்துராமனுடன் லதா பாடும் 'அதோ அதோ ஒரு செங்கோட்டை.. இதோ இதோ ஒரு தேன்கோட்டை' நல்ல ஒரு டூயட். (புலமைப்பித்தன் பார்வையின் லதா தேன்கோட்டையாம்)

Richardsof
12th June 2014, 03:48 PM
Karthik Sir
One Of My Favorite song ''atho ....

http://youtu.be/KsAl7ezgb_U

gkrishna
12th June 2014, 04:10 PM
டியர் கிருஷ்ணாஜி,

என்ன 'லதா புராணம்' ஓவரா இருக்கு?. பட்டியல் எல்லாம் கரெக்டாக வந்து விழுகிறது. உங்களை சொல்லும் நான் மட்டும் என்ன?. லதாவுக்கு நடிக்கத்தெரியாவிட்டாலும் "மற்ற விஷயங்களுக்காக" லதா படங்களை விடாமல் பார்த்தவன்தான். கொஞ்சம் ஆண்குரல் கலந்த வசீகர குரல், கதாநாயகியாக நடிக்கும்வரை கட்டுக்கோப்பாக வைத்திருந்த உடல்வாகு,

சங்கர் சலீம் சைமன் படப்பிடிப்பின்போது பேசிக்கொண்டிருந்தவரை பந்தா இல்லாத நடிகையாகத்தெரிந்தார்.

ஆஹா.., 'வயசுப்பொண்ணு'வை நினைவூட்டி விட்டீர்கள். முத்துராமனுடன் லதா பாடும் 'அதோ அதோ ஒரு செங்கோட்டை.. இதோ இதோ ஒரு தேன்கோட்டை' நல்ல ஒரு டூயட். (புலமைப்பித்தன் பார்வையின் லதா தேன்கோட்டையாம்)

கார்த்தி சார்
லதா உடைய performance வட்டத்திற்குள் சதுரம் மற்றும் 1000 ஜன்மங்கள் இரண்டிலும் உண்மையலே மிகவும் நன்றாக இருக்கும்
லதாவின் அழகு தெரிந்த ஒன்று தான்.
நிறைய திரை படங்களில் directors
அவருடைய இளமையை மட்டும் expose செய்து இருந்தனர்
அவர் மட்டும் NT கூட சில படங்கள் செய்து இருந்தால் அவருடைய திறமை பேசப்பட்டு இருக்கும்

chinnakkannan
12th June 2014, 04:21 PM
வினோத் சார்.. அதோ அதோ ஒரு செங்கோட்டை பாடல் வீடியாவிற்கு நன்றி .. முதல்முதல் பார்க்கிறேன் :) முத்து ராமனின் விக் யார் வாங்கிக் கொடுத்திருப்பார்கள்..

கிருஷ்ணா சார்..லதா புராணம் ஜோர்..

இதானா அழகென்று ஏதேதோ கேட்டால்
லதாவே எழிலென்க லாம்..! (ச்சும்மா இப்போது ஓடிக்கொண்டிருக்கும் கரண்ட் பதிவுகளுக்காக..அடுத்த பக்கத்திலேயே வண்ணம் மாறிட எண்ணமும் மாறும் :) )

gkrishna
12th June 2014, 04:21 PM
டியர் சின்ன கண்ணன் சார்
நீங்கள் muscat இல் இருப்பதாக குறிப்பிட்டு உள்ளீர்கள் மிக்க மகிழ்ச்சி
என்னுடைய உடன் பிறந்த தம்பி ஒருவரும் அங்கு தான் உள்ளார்
செம knowledge on சினி industry .
ஜகன் மோகினி ஜெயமாலினி பற்றி பேச சொன்னால் இரவு முழுவதும் பேசுவர் . நான் சொல்வது 1978-79 கால கட்டத்தில்.
இப்போது எப்படியோ தெரியவில்லை.
1000 ஜன்மங்கள் திரைபடத்தில்
ஜெயச்சந்திரன் வாணி கம்போவில் "கண்ணன் முகம் காண காத்து இருந்தாள் ஒரு மாது மன்னன் வந்த பின்னே தன நினவு என்பது ஏது"
விசுவின் தபேல பேசும்

gkrishna
12th June 2014, 04:27 PM
அந்த ஏழு நாட்கள் "கவிதை அரங்கேறும் நேரம் மலர் கணைகள் பரிமாறும் தேகம் "
"கண்ணன் முகம் காண காத்து இருந்தாள் ஒரு மாது "
இரண்டும் ஒரு மெட்டில் அமைந்தது போல் இருக்கும்
எனினும் பிதாமகர் பீஷ்மர் விளக்கம் சொன்னால் நன்றாக இருக்கும்

Gopal.s
12th June 2014, 07:01 PM
பிரபலம் ஆகாத (அவ்வளவாக) நல்ல பாடல்கள்.

மரத்தை வச்சவன் தண்ணிய ஊத்துவான்-எதிரொலி.
உள்ளம் போ என்றது நெருங்கி பார் என்றது -ஞான ஒளி .
யாரோடும் பேச கூடாது ஆகட்டும் -ஊட்டி வரை உறவு.
மாம்பழ தோட்டம் மல்லிகை கூட்டம்-ஒளி விளக்கு.
தட்டு தடுமாறி நெஞ்சம்- சாரதா.
மெல்ல மெல்ல அருகில் வந்து- சாரதா.
ஏனழுதாய் ஏனழுதாய் -இருவர் உள்ளம்.
காதலிக்க எனக்கு- பெண்ணை நம்புங்கள்.
அழகிலே மது ரசம்- பெண்ணை வாழ விடுங்கள்.
ராஜா ராஜா ராஜா ராஜா - ஜகன் மோகினி.
காதல் அலைகள் மேலே- ஜகன் மோகினி.
நான் குளு குளு தாரகை-நைட் கிளப் மோகினி.
இந்தா இந்தா எடுத்துக்கோ- மாய மோதிரம்.
என்ன கொடுப்பாய்- தொழிலாளி.
எவரிடத்தும் தவறும் இல்லை-விவசாயி.
துள்ளியோடும் கால்கள் எங்கே -பெரிய இடத்து பெண்.
பெண் போனால் இந்த பெண் போனால்-எங்க வீட்டு பிள்ளை.
கண்ணெல்லாம் உன் வண்ணம்- தென் சிந்துதே வானம்.
என்னோடு என்னென்னமோ ரகசியம்-தூண்டில் மீன்.
எழுதாத பாடல் ஒன்று - தேன் சிந்துதே வானம்.
லவ் இன் கோவா -கோவாவில் சி.ஐ.டி 999.
சிலர் குடிப்பது போலே நடிப்பார்-சங்கே முழங்கு.
பொன்னென்ன பூவென்ன கண்ணே-அலைகள்.
ஆரம்ப காலத்தில் அது இருக்கும்- அரங்கேற்றம்.
கண்ணு பட போகுது -சொந்தம்.
பாயுது பாயுது கண்ணம்மா- மணியோசை.
சிட்டாக துள்ளி துள்ளி வா-கொடி மலர்.
சிரிப்பேன் சிரிப்பேன் சிரித்து கொண்டிருப்பேன்-சின்னஞ்சிறு உலகம்.
இவ்வளவுதான் உலகம் இவ்வளவுதான்-உலகம் இவ்வளவுதான்.
கள்ள மலர் சிரிப்பிலே- குலமகள் ராதை.
சல சலக்குது காத்து - வளர் பிறை.
மலரும் கொடியும் பெண்ணென்பார்-எல்லாம் உனக்காக.
உள்ளத்துக்குள்ளே ஒளிந்திறுப்பது -பழனி.
இரவு முடிந்து விடும் முடிந்தால்-அன்பு கரங்கள்.
பார்த்தீரா அய்யா பார்த்தீரா- பாக்ய லட்சுமி.
கண்ணுக்கென்ன சும்மா சும்மா- யார் நீ.
உன் வேதனையில் என் கண்ணிரெண்டும் -யார் நீ.
பொன் மேனி தழுவாமல்- யார் நீ.
ராஜா குட்டி நான் எப்படி-நில் கவனி காதலி.
இது நான் அறியாத மயக்கம்- அன்று சிந்திய ரத்தம்.
படைத்தானே பிரம்மதேவன்-எல்லோரும் நல்லவரே.
(தொடரும்)

Richardsof
12th June 2014, 07:13 PM
பாடகர் திலகம் - இசை அரக்கி இருவரின் அட்டகாசமான குரலில் தென்னகத்து ஜேம்ஸ் பாண்டு ஜெய் சங்கரின்
அழகான தோற்றத்தில் மனதை கொள்ளை அடித்த பாடல் '' பார்வை ஒன்றே போதுமே ''

நில் கவனி காதலி படத்தில் மன்மதன் ஜெய் சங்கரின் ''எங்கேயோ பார்த்த முகம் '' '

பொம்மலாட்டம் படத்தில் ''நீ ஆட ஆட அழகு ''

கன்னிப்பெண் படத்தில் இடம்பெற்ற ''ஒளி பிறந்த போது ''- இந்த பாடல்களை
கேட்கும் போதேல்லாம மனதிற்கு கிடைக்கும் மகிழ்சிக்கு அளவே இல்லை . மக்கள் திலகம் - நடிகர் திலகம் - ஜெமினி
பிறகு ஜெய் சங்கர் - ரவிச்சந்திரன் பாடல்கள் எல்லாம் மனதிற்கு மகிழ்வை ,தரும் பாடல்கள் என்றால் அது
மிகைஅல்ல .

mr_karthik
12th June 2014, 07:34 PM
'வயசுப்பொண்ணு' படத்தின் அதோ அதோ ஒரு செங்கோட்டை பாடலின் வீடியோவை உடனே தந்த அன்பு நண்பர் வினோத் அவர்களுக்கு மிக்க நன்றி

1978 தீபாவளியன்று திரைக்கு வந்த, கலைஞர் + மக்கள் கலைஞர் இணைந்தளித்த 'வண்டிக்காரன் மகன்' படத்தில் மிக அருமையான டூயட். கதாநாயகி ஜெயசித்ராவுக்குக் கூட கிடைக்காத இந்தப்பாடல் இரண்டாம் நாயகியான (நமது சாரதா மேடத்தின் பெட்) ரோஜாரமணிக்கு கிடைத்தது. ஜெய்யும் ரமணியும் இணைந்தளித்த இந்தப் பாடல் படத்தில் நமக்குக் கிடைத்த போனஸ் விருந்து எனலாம்.

மெல்லிசை மன்னரின் சிந்தனையில் வீசிய மெல்லிய பூங்காற்று..

மேடையில் ஆடிடும் மெல்லிய பூங்காற்றே - நீ
ஆடையில் ஆடினால் மன்மத விளையாட்டே

எஸ்.பி.பாலாவின் குழைந்த குரலும் வாணியின் கனிந்த குரலும் பாடலை எங்கோ உயரத்துக்கு இட்டுச்சென்றன. முதற்சரணம் பெங்களூர் லலித் மஹால் முன்பும், இரண்டாவது சரணம் ஸ்டுடியோ செட்டிலும் படமாக்கப்பட்டிருந்தது. (முழுப்பாடலையும் வெளிப்புறத்திலேயே எடுத்திருக்கலாம் என்று தோன்றும்).

முக்கியமான இன்னொன்று, பாடலை எழுதியவர் கவிஞர் வாலி. இப்படத்தில் மேலும் இவரது கைவண்ணத்தில் உருவான பாடல்கள்...

'படுத்தாள் புரண்டாள் உறக்கமில்லை' (இன்னொரு ரூப்பு தேரா மஸ்தானா)

'ஒரு பக்கம் நெருப்பு.. மறுபக்கம் நிலவு' (இருபக்கமும் ஜெயமாலினியின் அட்டகாசம்)

'ஒரு நாடகம் நடக்குது நாட்டிலே', 'உழைக்கும் இனமே உடன்பிறப்பே' (இரண்டும் அரசியல் பாடல்கள்)

'நீ என்ன எழுதி என்ன, கூடவே வீடியோவை இணைக்காவிடில் அரைகுறைதான்' என்று நீங்கள் சொல்வது தெரிகிறது. நான் என்ன செய்ய?.

Gopal.s
12th June 2014, 07:36 PM
இங்கேயுமா????:banghead:

Gopal.s
12th June 2014, 07:43 PM
நாகேஷும், ரவியும் சிரமமில்லாமல் உடம்பை வளைத்து (அதுவும் முக்கியமாக கால் ஸ்டெப்புகள் முட்டியை சற்றே மடக்கி வைத்து) அற்புதமாக ஆடுவார்கள். ஆனால் ஜெய்சங்கர் இவர்களுக்கு ஈடுகொடுக்க முடியாமல் சிரமப்படுவார். ஒருவழியாக ஒப்பேற்றி விடுவார்.


அதற்க்கு பெயர் சமாளிப்பா. தத்தக்கா பித்தக்கா...

Richardsof
12th June 2014, 07:47 PM
JAI AND VANISREE

http://youtu.be/HIweA-KNP1U

Richardsof
12th June 2014, 07:49 PM
http://youtu.be/34tHeAS5GSk

gkrishna
12th June 2014, 07:56 PM
மெல்லிசை மன்னரின் சிந்தனையில் வீசிய மெல்லிய பூங்காற்று..

மேடையில் ஆடிடும் மெல்லிய பூங்காற்றே - நீ
ஆடையில் ஆடினால் மன்மத விளையாட்டே

எஸ்.பி.பாலாவின் குழைந்த குரலும் வாணியின் கனிந்த குரலும் பாடலை எங்கோ உயரத்துக்கு இட்டுச்சென்றன. முதற்சரணம் பெங்களூர் லலித் மஹால் முன்பும், இரண்டாவது சரணம் ஸ்டுடியோ செட்டிலும் படமாக்கப்பட்டிருந்தது. (முழுப்பாடலையும் வெளிப்புறத்திலேயே எடுத்திருக்கலாம் என்று தோன்றும்).

கார்த்திக் சார்
மேடையில் ஆடிடும் மெல்லிய பூங்காற்றே - நீ
ஆடையில் ஆடினால் மன்மத விளையாட்டே

இது வெஸ்டேர்ன் கம் போலக் டிபே என்று அடியேனின் கணிப்பு
பேஸ் கிடார் மற்றும் தபேல விச்சுவின் ஸ்பெசல்
வாணியின் குரலில் ஒரு வரி
"பழுக்க பழுக்க ரசம் பிழிய பிழிய பழம் உள்ளூர கள்ளூர தள்ளடுமோ "
பாடும் போது ழ மற்றும் ள உச்சரிக்கும் விதம் சம்திங் marvellous
ஒருவித இளம் குழந்தை குரலில் ஒருவேளை ரோஜா ரமணி voicekku சூட் ஆக வேண்டும் என்ற வித்ததில் பாடியது போல் இருக்கும்
அதே போல் இரண்டாவது சரணத்தில் பாலா
மேடையில் ஆடிடும் மெல்லிய பூங்காற்றே - நீ என்று பாடி விட்டு
நிறுத்தி ஆடையில் ஆடினால் மன்மத விளையாட்டே என்று பாடுவார்

அதே போல் ஜெயமாலினி அசோகன் "ஒரு பக்கம் நெருப்பு " வாசு சார் ராட்சசியின் கனைப்பு

படுத்தாள் புரண்டாள் உறக்கம் இல்லை பாலாவின் ஹஸ்கி வாய்ஸ்
கிட்டத்தட்ட் நம்ம NT இன் "எதனை அழகு கொட்டி கிடக்குது" ஸ்டைல்
கார்த்திகை மாதம் கார்கால மேகம் பள்ளியறை என்று பேஸ் வாய்ஸ் ல சொல்லி உடனே விசுவின் பேஸ் கிடார் 1978 தீவாளி கிரேட்

gkrishna
12th June 2014, 08:09 PM
தென்னகீற்று என்று ஒரு படம்
கோவி மணிசேகரன் இயக்கத்தில் g .கே.வெங்கடேஷ் மியூசிக் என்று
நினவு
கதை சற்று விவகாரமானது
பெண் வயதுக்கு வருவதை பற்றியது
"மாணிக்க மாமணி மாலை மங்கை இவள் தங்க முகம் நான் கண்டது "
என்ற பாடல் பாலா வாணி காம்போ
பேஸ் கிடார் ராசாவின் கை வண்ணம் சில இடங்களில் வீணை சவுண்ட் தனியாக தெரியும்
முதல் சரணத்தில்
தேன் இடையை என்று பாலாவின் இழுப்பு எங்கோ கொண்டு செல்லும்
பாலா தனியாக பாடுவார்
இரண்டாவது சரணத்தில் தான் வாணி வருவர்
அவர் தனியாக பாடுவார்
மூன்றாவது சரணம் இருவரும் சேர்ந்து கலக்குவர்

gkrishna
12th June 2014, 08:20 PM
கோபால் சார்
உங்கள் பிரபலம் ஆகாத நல்ல பாடல்கள் அவ்வளுவும் சூப்பர்
ஜகன்மோகினி படத்தில் இரண்டு பாடல் சொல்லி இருந்தீர்கள்
பாலாவின் குரலில் "அழகே வா அருகே வா ஆட பொழுதுகு பொழுதுண்டு பாட " என்று நரசிம்ஹ ராஜு அண்ட் ஜெயமாலினி டான்ஸ் விஜய கிருஷ்ணமுர்த்தி இசை
அதே போல் ஈஸ்வரி குரலில்
"சவ சவ சவ ஈய் சிலு சிலு சில்ல
பிடிசுகோ கை பிடிசுகோ என்னை கொஞ்சம் பிடிசுகோ
அனைசுகோ கை அனைசுகோ நெஞ்சை கொஞ்சம் அனைசுகோ
பதினாறே என் வசையா ஆஅ " என்று ஒரு பாடல்
ஜெயமாலினி டான்ஸ்
அடுப்பில் பேயை காலை காட்டுவார்கள் உடனடியாக ஜெயமாலினியின்
இடுப்பை காட்டுவார்கள்
"காதல் அலைகள் மேலை உஞ்சல் ஆடும் பெண்மை " beautiful மெலடி
பாலா வித் சுசில
ஒகனேகல் அருவியில் நரசிம்ஹராஜு ஜெயமாலினி பூஉஞ்சலில்
பாடல் ஆரம்பத்தில் மற்றும் முடிவில் ஒரு சுகமான ஹம்மிங் "தன்னானே தன்னானே தன்னானே "
விட்டல் production 1978 சூப்பர் டுபேர் ஹிட்

chinnakkannan
12th June 2014, 09:17 PM
oh மிக்க மகிழ்ச்சி கிருஷ்ணா சார்..இப்போதும் பேசுவாராயிருக்கும்.. :) எந்த இடம்..

ஆயிரம் ஜென்மங்கள் விஜி-லதா டூயட்டா இல்லை விஜி-பத்துவா..


டியர் சின்ன கண்ணன் சார்
நீங்கள் muscat இல் இருப்பதாக குறிப்பிட்டு உள்ளீர்கள் மிக்க மகிழ்ச்சி
என்னுடைய உடன் பிறந்த தம்பி ஒருவரும் அங்கு தான் உள்ளார்
செம knowledge on சினி industry .
ஜகன் மோகினி ஜெயமாலினி பற்றி பேச சொன்னால் இரவு முழுவதும் பேசுவர் . நான் சொல்வது 1978-79 கால கட்டத்தில்.
இப்போது எப்படியோ தெரியவில்லை.
1000 ஜன்மங்கள் திரைபடத்தில்
ஜெயச்சந்திரன் வாணி கம்போவில் "கண்ணன் முகம் காண காத்து இருந்தாள் ஒரு மாது மன்னன் வந்த பின்னே தன நினவு என்பது ஏது"
விசுவின் தபேல பேசும்

Gopal.s
13th June 2014, 03:45 AM
அடடா,ராக்ஷசியின் நான் ரோமாபுரி ராணி,புது ரோஜா மலர் மேனி....

vasudevan31355
13th June 2014, 07:01 AM
நேற்று மதிய ஷிப்ட் முடித்துவிட்டு நைட் வந்து பார்த்தால் 'லட்டு' லதா புராணம் எல்லோராலுமே விரும்பிப் பாடப்பட்டிருந்தது. லதா இப்படி அனைவர் மனதிலும் அமைதியாகக் குடிகொண்டிருப்பது புரிந்தது என்னைப் போலவே. இனி நாம் சும்மா இருக்கலாமோ!

கொஞ்சம் அந்த அழகுப் பெட்டகத்தின் படங்களை ஹாயாகச் சாய்ந்து ரசித்து லட்டுவின் பழைய மற்றைய படங்களைப் பார்ப்போமே!

அழகே உன்னை ஆராதனை செய்கிறேன்

https://konnectplus.tv/includes/posterv2/Azhage_Unnai_Aarathikkiren_85-small.jpg

http://i1.ytimg.com/vi/PnhwFHt8Fdw/hqdefault.jpg

அன்னப் பறவை

http://i.ytimg.com/vi/-GK0NP1w17o/hqdefault.jpg

http://www.onlinenewsvideo.net/uploads/thumbs/03de90ff5-1.jpg

சிவகாமியின் செல்வன்

http://i1098.photobucket.com/albums/g364/albertjraj/SivagamiyinSelvan0010.jpg (http://s1098.photobucket.com/user/albertjraj/media/SivagamiyinSelvan0010.jpg.html)

ஆயிரம் ஜென்மங்கள்

http://i.ytimg.com/vi/KvyS6aMWH-M/0.jpg

சங்கர் சலீம் சைமன்

http://www.rajinifans.com/gallery/images/Shankar%20Salim%20Simon/shankar(1).jpg


கண்ணாமூச்சி

http://www.inbaminge.com/t/k/Kannamoochi/folder.jpg

நீயா

http://i1.ytimg.com/vi/A57E1Lz4ZXA/hqdefault.jpg

வயசுப் பொண்ணு

http://i1.ytimg.com/vi/d2cE9ZsaIMQ/maxresdefault.jpg

vasudevan31355
13th June 2014, 07:08 AM
http://shakthi.fm/album-covers/ta/7fe519d2/cover_m.jpg

அன்பு ரோஜா

http://3.bp.blogspot.com/_Kqm3dfxyOiI/SKQwJGRAYUI/AAAAAAAAGZ0/_8KxGULnJvo/s400/latha_muthuraman_bw.jpg

வீட்டுக்கு வந்த மருமகள்

http://i.ytimg.com/vi/ZZ-AEDj719o/hqdefault.jpg

வட்டத்துக்குள் சதுரம்.

http://i1.ytimg.com/vi/E8iVAP3DEJE/maxresdefault.jpg

vasudevan31355
13th June 2014, 07:34 AM
இன்றைய ஸ்பெஷல் (2)

http://i.ytimg.com/vi/tZ8rcSieNgE/hqdefault.jpg

'கௌரி கல்யாணம்' படத்தில் வரும்"வரணும் வரணும் மகராணி" பாடல்.

11.11.1966- இல் வெளி வந்த சரவணா கம்பைன்ஸ் 'கௌரி கல்யாணம்' திரைப்படத்தில் 'கலைநிலா' ரவிச்சந்திரன் அவர்களும், ஜெயலலிதா அவர்களும் பாடுவதாக வரும் "வரணும் வரணும் மகராணி" என்ற அதியற்புத உற்சாகமான டூயட் பாடல். T.M.S அவர்களின் கம்பீரமான குரலும், 'கண்ணியப் பாடகி' பி.சுசீலா அவர்களின் தேனினும் இனிய குரலும் இந்தப் பாடலை சிகரத்தின் உச்சிக்கே கொண்டு செல்கின்றன. 'கவிஞர்' கண்ணதாசனின் கல்கண்டு வரிகள் இப்பாடலுக்கு மேலும் சுவையூட்டுகின்றன. இசை எம். எஸ். விஸ்வநாதன் அவர்கள். இனிமைக்குக் கேக்கணுமா....கே.சங்கர் அவர்கள் இயக்கிய இப்படத்தில் ஜெய்சங்கர்,ஷீலா மற்றும் பலர் நடித்திருந்தார்கள். ரவியும், ஜெய்யும் சேர்ந்து நடித்த படங்களில் இதுவும் ஒன்று.

இனி பாடல்.

கணீரென்று உற்சாகத் துள்ளலாய் ஆரம்பிக்கும் பல்லவி.

"வரணும் வரணும் மகராணி...
வஞ்சியர் சங்கமம் இதே இடம்...
சரணம் சரணம்...இந்த நேரம்...
சண்டை முடிந்தது சமாதானம்"...

(இந்தப்பாடல் சென்சாருக்கு செல்வதற்கு முன் "வரணும் வரணும் மகராணி...வஞ்சியர் சங்கமம் இதே இடம்.."சரணம் சரணம் சந்நிதானம்... சண்டை முடிந்தது சமாதானம்" என்ற பல்லவியோடு டி..எம்.எஸ் குரலில் தொடங்கி சுசீலாவின் குரலில் முடியும். சென்சாருக்குப் பிறகு "சரணம் சரணம் சந்நிதானம்" என்ற வார்த்தைகள் "சரணம் சரணம் இந்த நேரம்" என்று மாற்றப்பட்டது).

இப்பாடலின் சரணத்திற்கும், பல்லவிக்கும் இடையில்

"தந்தன தந்தன தன்ன... ஹோஹோ...பம்பர பம்பர பப்ப "... ஹோஹோ...

என்ற டி.எம்.எஸ்ஸின் ஆனந்த வெள்ளம் பொங்கும் குரலும் பின் தொடரும் "ஹோஹோ"..என்ற சுசீலாவின் இனிமை குரலும் காலம் முழுதும் நம்மை கட்டிப் போட வைக்கும் சக்தி படைத்தது.

சரணத்தில் வரும்

"பள்ளியில் கோபம் உண்டானது...
பருவத்தினால் அது பெண்ணானது...
கல்லான நெஞ்சம் கனியானது...
கைகளில் ஊற்றிய தேனானது...
தேனானது...
தேனானது...
தேனானது"...

வரிகள் டி..எம்.எஸ் குரலில் காதுகளில் தேன் பாய்ச்ச,

தொடர்ந்து சுசீலாவின் குயில் குரலில் ஒலிக்கும்

"அஞ்சாதது...பெண் என்பது...
ஆண்மையின் முன்னே என்னானது...
பொன்னானது... பூவானது...
போதையில் ஆடும் கண்ணானது...
கண்ணானது...
கண்ணானது...
கண்ணானது"...(வரணும் வரணும்)

என்ற வரிகள் உண்மையிலேயே இசைபோதையை நமக்கு உண்டாக்கி விடுவது நிஜம்.

அதே போல இரண்டாவது சரணம்.

"விழி ஒரு பக்கம் பந்தாடுதே...
இடை ஒரு பக்கம் தள்ளாடுதே...
நடையோடு வாழை தண்டானதே...
நடனம் இதில் தான் உண்டானதே....
உண்டானதே...
உண்டானதே...
உண்டானதே"

என்று ஆண்குரல் முடிக்க...

ஆண்குரல் முடித்த அதே "உண்டானதே"என்ற வார்த்தையிலேயே பெண்குரல் அடுத்த வரியைத் தொடங்குவது அற்புதம்.

"உண்டானதே...
கொண்டாடுதே...
ஓடிய கால்கள் மன்றாடுதே...

"உண்டானதே...
கொண்டாடுதே...
ஓடிய கால்கள் மன்றாடுதே...

(இரண்டாவது முறை வரும் இந்த வரியில் "கொண்டாடுதே" என்ற வார்த்தையை முதல் வரியிலிருந்து மிக வித்தியாசப்படுத்தி மிக அழகாக உச்சரித்து பாடியிருப்பார் சுசீலா).

எல்லாம் இங்கே நீ தந்ததோ...
இதுதான் சொர்க்கம் நான் கண்டதே...
நான் கண்டதே...
நான் கண்டதே...
நான் கண்டதே"

(இந்தப் பாடல் தான் சொர்க்கம் நான் கண்டதே...இது என்னுடைய வரிகள்)

(வரணும் வரணும்)

எனச் சரணம் முடிந்து மறுபடி பல்லவி தொடங்கி பாடல் முடிவடைய, ஏன்தான் பாடல் முடிந்ததோ என்று நினைக்கவைத்து மறுபடி மறுபடி கேட்கத் தூண்டும் பாடலாகி விட்டது இந்தப் பாடல்.

டிரம்பெட்டும், ஷெனாயும் இழையும் இந்தப் பாடல் காலத்திற்கும் மறக்க முடியாத பாடல். மெல்லிசை மன்னர்களின் அற்புதங்களில் ஒன்று இந்தப்பாடல் என்று கூடச் சொல்லலாம்.

இந்தப் பாடலில் ரவி மிக அழகாகக் காட்சி அளிப்பதோடு, டி.எம்.எஸ் குரல் அதியற்புதமாய் தனக்குப் பொருந்த, அழகான நடன நெளிவுகளை class-ஆக செய்திருப்பார். ஜெயலலிதாவும் ரவிக்கு ஈடு கொடுத்திருப்பார். அழகான அவுட்டோரில் பார்க்கில் படமாக்கப் பட்டிருக்கும் விதமும் ரம்மியமாக இருக்கும்.

அந்த அருமையான பாடலை இப்போது கண்டு களிக்கலாம்.


https://www.youtube.com/watch?v=Yaj7m8sz85c&feature=player_detailpage

RAGHAVENDRA
13th June 2014, 07:35 AM
ஆயிரம் ஜென்மங்கள் திரைப்படத்தில் மெல்லிசை மன்னரின் வித்தியாசமான இசையமைப்பில் இப்பாடலைப் பற்றியும் சொல்ல வேண்டும். மந்திரி குமாரியில் வாராய் பாடலை நினைவூட்டும் காட்சியமைப்பு. ஆவி வந்து விஜயகுமாரை சாகடிக்க அழைத்துச் செல்லும் சூழலில் பாடல். வரிகள் அப்படியே பிரதிபலிக்கும். எஸ்.ஜானகியின் குரலில் இப்பாடல் உயிர் பெற்று எழந்து வருவது பாராட்டிற்குரியது.

இப்பாடலை கேட்பதற்கும் பார்ப்பதற்கும் உங்களையெல்லாம்...

http://youtu.be/QUzPm-d7Lhs

vasudevan31355
13th June 2014, 08:19 AM
'யக்ஷ கானம்' மூலம் கொண்டு எங்களை லதா மூலம் அழைத்த ராகவேந்திரன் சாருக்கு என் நன்றி!

http://i1.ytimg.com/vi/4Cf5jtI16a0/hqdefault.jpg

ஷீலாவின் முகத்தையொத்த லதா
நல்ல செலெக்ஷன்

chinnakkannan
13th June 2014, 09:42 AM
வாசு சார்.. வகைவகையாய் இட்டுவிட்ட வஞ்சிலதா தோன்றும்
புகைப்படங்கள் கொள்ளை அழகு..

நன்றி.. :) கெளரி கல்யாணம் பாட்டும்.. இனி தான் பார்க்க வேண்டும்..

ராகவேந்தர்.. நைஸாக நாங்கள் சொல்லாத அழைக்கின்றேன் பாட்டைப் போட்டு அழைத்துச் சென்று விட்டீர்கள் அந்தக் காலத்திற்கு.. நன்றி.. லதாவின் சிரிப்பைப் போலவே அந்தக் கூந்தலில் இருக்கும் பூவும் சிரிப்பதாய் பிரமை.. நன்றி அகெய்ன்..:)

யட்ச கானம்..அதுவும் பார்த்திருக்கிறேன்..என்ன தான் இருந்தாலும் கறுப்பு வெள்ளை என்பதால் கொஞ்சம் கம்மி தான்.. அதுவும் ஆ.ஜெயின் சுவாரஸ்யம் கூட்ட வைத்ததில் வித்யாச ரஜினிக்கும் பங்கு உண்டு..

gkrishna
13th June 2014, 10:00 AM
வேந்தர் சார்
யக்ஷகானம் ஷீலாவின் மாஸ்டர் பீஸ்
சொன்னது போல் ஷீலா மற்றும் லதாவின் face resemblance கவனிக்கப்பட வேண்டிய ஒன்று
1000 ஜன்மங்கள் direction நம்ம மதி ஒளி சண்முகம் சார் தானே
NVR pictures
வாசு சார்
லதாவின் various snap shots சான்சே இல்லை
லாலா கடை லட்டு
ck சார் "கண்ணன் முகம் காண காத்து இருந்தாள் ஒரு மாது" விஜி பத்து டூயட்
லதாவோட டூயட் பாட எல்லோருமே பயந்த நேரம் அது
பெரிய இடத்து விஷயம்

gkrishna
13th June 2014, 10:05 AM
சங்கர் சலீம் சைமன் படத்தில் கோவை சௌந்தரராஜன் குரலில்
"கோபுரத்திலே இரண்டு பச்சை கிளிகள் " ரஜினி லதா டூயட்
அந்த பாடலில் ஒரு வரி வரும்
"அவனுக்கும் ஆசை வந்து அவளுக்கும் காதல் வந்தால் அரசாங்கம் கூட அதை தடுக்க் முடியாது " ரஜினி க்ளோஸ் up சாட் இல் ஒரு மேட்டில் இருந்து பாடுவார்
theatre இல் விசில் பறக்கும்
செத்தது 31 (அப்போ நாங்கள் எல்லாம் தரை டிக்கெட் தான்.)

gkrishna
13th June 2014, 10:12 AM
டியர் வாசு சார்
கௌரி கல்யாணம் பாட்டு சூப்பர்
இது சரவணா films வேலுமணி படமா
இந்த படத்தில் இன்னொரு பாட்டு நினைவிற்கு வருகிறது
"ஒருவர் மனதை ஒருவர் அறிய " tms இன் வெண்கல தொண்டை
ஜெய் சைக்கிள் மிதித்து கொண்டு பாடுவார்
இந்த படத்தில் ஒரு சண்டை காட்சி ரவிக்கும் ஜெய்க்கும் பாத்திர கடை fight
மிகவும் சூப்பர் ஆக இருக்கும்
தீவார் படத்தில் godown fight போல்

vasudevan31355
13th June 2014, 10:39 AM
சங்கர் சலீம் சைமன் படத்தில் கோவை சௌந்தரராஜன் குரலில்
"கோபுரத்திலே இரண்டு பச்சை கிளிகள் " ரஜினி லதா டூயட்
அந்த பாடலில் ஒரு வரி வரும்
"அவனுக்கும் ஆசை வந்து அவளுக்கும் காதல் வந்தால் அரசாங்கம் கூட அதை தடுக்க் முடியாது " ரஜினி க்ளோஸ் up சாட் இல் ஒரு மேட்டில் இருந்து பாடுவார்
theatre இல் விசில் பறக்கும்
செத்தது 31 (அப்போ நாங்கள் எல்லாம் தரை டிக்கெட் தான்.)

நன்றி கிருஷ்ணா சார்.

பறந்து பறந்து வந்த கிழட்டுப் பருந்து ஒன்று
பாயாமே பாஞ்சுது குருவி மேலே

ஜிகுஜிகுச்சான் குருவி ரெண்டு ஜோடியாச்சு
திமிர் பிடிச்ச கூட்டமெல்லாம் ஓடியாச்சு

கோவை சௌந்தரராஜன் ரஜனிக்கு பின்னணி.


http://www.youtube.com/watch?v=8riV859Oz2A&feature=player_detailpage

vasudevan31355
13th June 2014, 10:51 AM
கிருஷ்ணா சார்,

'ஒருவர் மனதை ஒருவர் அறிய' எனக்கு ரொம்ப ரொம்ப......................................ரொ ம்ப பிடித்த அற்புதங்களில் ஒன்று.

விரிவாக எழுத ஆசை. விரைவில் எழுதுகிறேன். ராஜேஷ்கண்ணா சைக்கிளில் வந்து கடிதம் கொடுப்பதையும் சேர்த்து.

தினம் தினம் ஆர்வத்தை அதிகமாகத் தூண்டி விடுகிறீர்கள். சுரங்கத்திலிருந்து புதையல் வருவது போல தங்களிடமிருந்து விஷயங்களும், பாடல்களும் தங்கு தடையின்றி வருகின்றன.
பாராட்டுக்கள்.

gkrishna
13th June 2014, 10:52 AM
vasu sir
சங்கர் சலீம் சைமன்
அருண் பிரசாத் movies நம்ம PM direction
விச்சு மியூசிக்
மற்ற இரண்டு பாடல்கள்
1.இது உந்தன் வீடு கிளி தான் வாணி குரலில் லதா ஹாக்கி stick வைத்து கொண்டு white shorts வித் striped t ஷர்ட் (திலங் ராகம் )
2.வந்தாளே ஒரு மகராசி விஜி வித் மஞ்சுளா பாலா அண்ட் சுசீலா
பாலா அடிக்கடி மூச்சு விட்டு கொண்டே பாடுவார்
ஜெய் கணேஷ் மற்றும் வசந்தி (பஞ்ச கல்யாணி) ஒரு பாட்டு உண்டு
பாடல் அடி மறந்து விட்டது

gkrishna
13th June 2014, 10:56 AM
டியர் வாசு சார்
உங்கள் கூட சில பாடல்கள்ஐ பற்றி பேசும் போது மனது இதமாகிறது
உங்களை தொந்தருவு செய்வதாக தயுவு செய்து நினைத்து விடாதீர்கள்
"தொட வரவோ தொந்தரவோ எனதுளமே சம்மதமோ இடையோ இதுவோ இதழோ மதுவோ கேட்டால் நான் தரவோ "
என்று பாடல்களை மட்டும் தாருங்கள்

vasudevan31355
13th June 2014, 10:57 AM
ஜெய்கணேஷ் மற்றும் வசந்தி (பஞ்ச கல்யாணி) ஒரு பாட்டு உண்டு
பாடல் அடி மறந்து விட்டது

கிருஷ்ணா சார்

அது

ஆமணக்குத் தோட்டத்திலே
பூ மணக்க போற புள்ள.

சரியா சொல்லுங்கள்.

gkrishna
13th June 2014, 10:58 AM
டியர் வாசு சார்
"ஒருவர் மனதை ஒருவர் அறிய " ராஜேஷ் கண்ணா எங்கு வந்தார்
எங்கோயோ பொடி வைட்ச்ட்டேங்கள
தெரிந்து கொள்ள வில்லை என்றால் தூக்கம் வராது

vasudevan31355
13th June 2014, 10:59 AM
டியர் வாசு சார்
உங்களை தொந்தருவு செய்வதாக தயுவு செய்து நினைத்து விடாதீர்கள்
"தொட வரவோ தொந்தரவோ எனதுளமே சம்மதமோ இடையோ இதுவோ இதழோ மதுவோ கேட்டால் நான் தரவோ "
என்று பாடல்களை மட்டும் தாருங்கள்


கிருஷ்ணா சார்

உங்களை தயவு செய்து கேட்கிறேன். தொந்தரவு என்று எழுதாதீர்கள். அது இன்பம்... பேரின்பம். உத்தரவு போடுங்கள்.

gkrishna
13th June 2014, 11:02 AM
ஆமணக்கு தோட்டத்திலே அது பஞ்ச கல்யாணி படத்தில் வரும் பாட்டு
(ஷ்யாம் மியூசிக் )
நான் சொல்ல வந்தது சங்கர் சலீம் சைமன் படத்தில்
ஜானகி பாடுவது
(அனார்கலி அழகை பார்த்து சலீம் சார் காதல் செயதார் என்று பாடலின் ஊடே வரும் விச்சு கோரஸ் )

gkrishna
13th June 2014, 11:04 AM
வாசு சார்
"சிந்து நதி பூவே அடி சின்னசிறு கிளியே "
விச்சு ஜானகி

vasudevan31355
13th June 2014, 11:07 AM
கிருஷ்ணா சார்

நீங்கள் கேட்ட 'தொட வரவோ தொந்தரவோ' ராஜன் நாகேந்திராவின் அற்புதம். பாலா, ஜானகியின் மாயாஜாலம்.

மலரே நீ என்ன
இளமை அரசாள
எதிர் நின்ற யுவராணியோ
மடிமேலே வந்து
விழியால் மதுவாக்க
இதுதான் பொழுதல்லவோ

நான்தானே கள்ளு
அருகே வா அள்ளு
எனை வாங்க
நீ அல்லையோ...

டப்பிங் பாடல் போலவே தெரியாது. கமலும் ஜெயசுதாவும் இப்பாடலைப் பொறுத்த வரையில் இருநிலவுகள்.


https://www.youtube.com/watch?v=Qvz7CapYeV4&feature=player_detailpage

gkrishna
13th June 2014, 11:15 AM
வாசு சார்
இரு நிலவுகள் கிரேட் சார்
மற்ற சில பாடல்கள்
"ஆனந்தம் அது என்னடா அவை காணும் வழி சொல்லடா
பருவங்கள் ஒரு போதையோ அம்மாடி தமாஷா ஆடடா"

"அம்மாடி கண்ணை பாரு " பாலா வித் சுசீலா காம்போ
கமல் வித் ரோஜாரமணி pair

vasudevan31355
13th June 2014, 11:32 AM
அன்புள்ள வாசுதேவன் சார்
மனதை மயக்கும் மதுர கானங்கள் திரிக்கு அடியேனின் வாழ்த்துக்கள்

கோபு சார்.

ஸாரி! வெரி வெரி ஸாரி! தவறாக நினைக்க வேண்டாம்.தாமதமான பதிலுக்கு மன்னிக்கவும்.

தங்கள் நல்வாழ்த்துதல்களுக்கு என் உள்ளம் நிறைந்த நன்றி!

நிறையப் பங்கு கொள்ளுங்கள்.

vasudevan31355
13th June 2014, 11:33 AM
வாசு சார்
இரு நிலவுகள் கிரேட் சார்
மற்ற சில பாடல்கள்
"ஆனந்தம் அது என்னடா அவை காணும் வழி சொல்லடா
பருவங்கள் ஒரு போதையோ அம்மாடி தமாஷா ஆடடா"

"அம்மாடி கண்ணை பாரு " பாலா வித் சுசீலா காம்போ
கமல் வித் ரோஜாரமணி pair

பலே! பலே! வெகு ஜோர்.

vasudevan31355
13th June 2014, 11:41 AM
கிருஷ்ணா சார்,

'இரு நிலவுகளி'ல் இன்னும் இரு பாடல்கள் உண்டு.

1.கமலுக்கும் ரோஜாரமணிக்கும் டூயட்.

அன்புள்ள கண்ணனோ
அணைத்தாள வந்ததோ
உன்னை
வஞ்சி உன்னை
அந்த தெய்வீகக் காதல் கண்ணோடு மின்ன (பாலா,கண்ணியப் பாடகி)


http://www.youtube.com/watch?v=4QNHSjzter0&feature=player_detailpage

2. ஜெயசுதா கமலுடன்

ஒ...மதனராஜா..
பெண்மை அழைக்கவா (வாணி)

இந்தப் பாடல் விட்டாலாச்சார்யா படங்களில் ஜெயமாலினி நரசிம்ம ராஜுவிடம் பாடுவது போல அப்படியே இருக்கும்.


http://www.youtube.com/watch?v=8dk8uf1ysB4&feature=player_detailpage

gkrishna
13th June 2014, 11:45 AM
வாசு சார்
ராஜன் நாகேந்திர இசையில் வெளி வந்த இன்னொர்ரு பாடல்
"வீட்டுக்கு வீடு வாசல் படி " நம்ம ப.மாதவன் direction
ஜானகியின் ஜாலம்
"ஆடல் பாடல் ஊடல் என்பது அப்போது "
ஷோபா வித் சுமன் (குமுதம் விமர்சனம் ஹை கிளாஸ் சுதாகர் )

gkrishna
13th June 2014, 11:49 AM
வாசு சார்
"அது ஆடல் பாடல் காதல் என்பது அப்போது
ஊடல் கொண்டு காதல் செய்வது இப்போது
நாளை வருவது கல்யாணம்
இன்று வெள்ளோட்டம்
இந்த கொண்டாட்டம் எப்போதும் உண்டாகட்டும் "

wonderful மெலடி சார்

வீட்டுக்கு வீடு வாசல்படி
விஜயகுமார்/ரதி/சுமன்/ஷோபா/நாகேஷ்
மாதவன் direction 1979 ரிலீஸ் என்று நினவு

vasudevan31355
13th June 2014, 11:54 AM
கிருஷ்ணா சார்,

அற்புத மெலடிகலைக் கொடுத்த ராஜன் நாகேந்திரா இவர்தான்.
அவரை நினைக்கும் நேரம் இப்போது.

http://www.thehindu.com/multimedia/dynamic/00630/RAJAN_ART_GTD2O0NS9_630531e.jpg

vasudevan31355
13th June 2014, 11:59 AM
வாசு சார்
"அது ஆடல் பாடல் காதல் என்பது அப்போது
ஊடல் கொண்டு காதல் செய்வது இப்போது
நாளை வருவது கல்யாணம்
இன்று வெள்ளோட்டம்
இந்த கொண்டாட்டம் எப்போதும் உண்டாகட்டும் "

wonderful மெலடி சார்

வீட்டுக்கு வீடு வாசல்படி
விஜயகுமார்/ரதி/சுமன்/ஷோபா/நாகேஷ்
மாதவன் direction 1979 ரிலீஸ் என்று நினவு

கங்கையும் யமுனையும் சங்கம்
சரஸ்வதி வருவாள் அங்கும்.
உறவிலே பூங்குழந்தைகள்
ஆணும் பெண்ணும் தங்கம்

அய்யோடா!

என்ன மாதிரிப் பாட்டு சார்! அருமையாக ஞாபகப்படுத்தினீர்கள். மறக்க இயலுமா அப்பாடலை. (ஜானகி பின்னிப் பெடலெடுத்து விடுவார்)

vasudevan31355
13th June 2014, 12:07 PM
கிருஷ்ணா சார்,

பொறுக்க முடியவில்லை. 'ஆடல் பாடல்' பாடலை ஞாபகப்படுத்தி பேஜார் பண்ணி விட்டீர்கள். அந்தப் பாடலே காதில் ரீங்காரமிடுகிறது. இப்படியெல்லாம் மெலடி கொடுக்க முடியுமா?

சுமனும்,ஷோபாவும் இப்பாடலுக்கு நடித்திருப்பார்கள்.

சரி! உங்களுக்கு பரிசாக மிக்க சந்தோஷத்தோடு இப்பாடலின் வீடியோவை சமர்ப்பிக்கிறேன்.


http://www.youtube.com/watch?v=dFEVoOKvPcI&feature=player_detailpage

gkrishna
13th June 2014, 12:12 PM
வாசு சார்
ராஜன் நாகேந்திர போட்டோ போட்டு அசத்தி விட்டீர்கள்
இவர் இசையில் சகோதர சபதம் என்று ஒரு கன்னட dubbing படம்
(சகோதர சவால் என்று கன்னட ஒரிஜினல் )
ரஜினி விஷ்ணு வரதன் கவிதா பவானி (உழைக்கும் கரங்கள்) நடித்து
1978 கால கட்டத்தில் வெளி வந்தது
பாலா வித் ஜானகி ஒரு டூயட் பாடல்
தமிழில் "காதலின் அடி உள்ள கனியே சுவையை தா ஆனந்தம் எங்கோ இழுக்குதே " என்று வரும்
அதன் உடைய கன்னட version
"ஒ நல்லனே சவி மதுண்டா " என்று வரும்
ரஜினி வித் பவானி pair வெரி cute அண்ட் handsome

vasudevan31355
13th June 2014, 12:14 PM
கிருஷ்ணா சார்,

நல்ல கம்பெனி தந்தீர்கள். இன்றைக்கு நாம் அலசிய பாடல்களிலேயே நீங்கள் நினைவூட்டிய

'ஆடல் பாடல்'

பாடல்தான் சிகரம். மணிமகுடம். அதற்காக மீண்டும் என் நன்றிகள். வேலைக்குப் புறப்பட வேண்டும். (2nd shift) நாளை சந்திக்கலாம். கோபால் வேறு நடுவில் போன் செய்திருக்கிறார். எடுக்குமுன் கட்டாகி விட்டது. ம் (நாகையா பெருமூச்சு விட்டு சலித்துக் கொள்வது போல்) என்னென்ன பாட்டு வாங்க வேண்டுமோ! இருந்த வாணிஸ்ரீ படங்களை எல்லாம் வேறு போட்டுத் தொலைத்தாகி விட்டது. சரி! ஆபத்துக்குப் பாவமில்லை. காஞ்சனாவை வைத்து சமாளிப்போம்)

பை சார்.

gkrishna
13th June 2014, 12:17 PM
சார்
உங்களுடன் இந்த திரியில் தொடர்பு கொள்ளும் போது நிறைய நினைவுகள் அலை மோதுகின்றன
இந்த சகோதர சவால் படத்தின் தமிழ் version பாடல் நெட்டில் கிடைக்கவில்லை
கன்னட version யூடுபில் கிடைக்கிறது
சகோதர சவால் என்று டைப் செய்து பாருங்கள்

gkrishna
13th June 2014, 12:18 PM
ok bye vasu sir
meendum santhipom

parthasarathy
13th June 2014, 01:42 PM
Krishna Ji,

"Thoda varavo thondharavo"'s original is a kannada song "Nagu nagu tha nee baruvae" sung by Dr. Rajkumar. Rajkumar's voice is very sweet one. One more song "Cheluvae nota chenna" in Sankar Guru, whose tamil version - of course not the same tune as it is by MS - "Malligai mullai" in Thirisoolam for NT.

Aadal paadal is a beautiful one. Where can I download this song - audio.

Regards,

R. Parthasarathy

parthasarathy
13th June 2014, 01:47 PM
Mr. Vasu,

Thanks for your clarification on "poonkodiyae poonkodiyae" song.

During school days we used to start for school from home by 9.00 a.m. to be at school by 9.30 a.m. by walk (about 2 kms). From 8.15 to 9.00 am me and my cousin used to listen to "Ungal Viruppam" till 9 and then only would leave for school.

Happy memories, right?

I too have lot of songs in memory and can sing about 20000 songs. Ippo engae adharku naeram? Anyway, I still murmur songs, except when I am in meetings, of course.

Regards,

R. Parthasarathy

gkrishna
13th June 2014, 02:04 PM
dear parthasarathy sir
it is available in no1tamilmp3songs.com
try and confirm sir

Gopal.s
13th June 2014, 06:54 PM
சிந்துபைரவி.

சிறு வயதில் ஒரு பாடலை கேட்டால் அப்படியே அசந்து நின்று உருகி ,அழுது கொண்டிருந்தாலும் ,நிறுத்தி கவனிப்பேனாம். நாஸ்திக பேயான நான் ,ஒரு பக்தி பாடலில், பள்ளி நாட்களில் ,ஒரு பாடலில் மெய் மறந்து கடவுளை உணர்வேன்.அனைத்து விழாக்களிலும் நான் பாடும் முதன்மை பாடல் அது.ஒரு கல்யாண விழாவில் ,நாதஸ்வரம் வாசித்தவர் ஒரு திருப்புகழ் வாசிக்க ,பதினான்கு வயது சிறுவனான நான் அம்மாவிடம் ஒரு ஐந்து ரூபாய் கேட்டு வாங்கி அவர் காலடியில் கண்ணீருடன் வைத்தேன். பிறகு ,ஸ்ரீநிவாசன் youth coir நண்பியான சுதா வெங்கட்ராமன் (இப்போது ரகுராமன்) ஒரு முறை ஒரு எம்.எல்.வீ பாடலை பாடும் போது ,என்னை மறந்து சிலையாக சமைந்தேன்.

ஒரு ஆறாண்டுகள் கழித்து ,திருமணாகி ,முதல் மகன் இரண்டு வயதில் இருந்த போது ,கதறி கதறி இரு மணிகள் அழுது கொண்டிருந்த போது ,இசையை ஓரளவு தெரிந்து ,விஷயம் தெரிந்ததால் ஒரு பாடலை ,அவன் காதில் முணுமுணுத்தேன்.அப்படியே அழுகை ,நின்று குழந்தை முகத்தையே வெறித்தான்.

நான் உங்களை மேளகர்த்தா,சம்பூர்ணம்,ஸ்வர பிரவாகம் என்றெல்லாம் technical ஆக சோதிக்க போவதில்லை.(ஏற்கெனெவே ரொம்ப புரியும் படி எழுதுவதாக நல்ல பெயர்).ராகங்கள் என்னளவில் ஏற்படுத்திய இசைவுகள்,அசைவுகள்,அலைவுகள் ,சுவடுகள், இவைதான்.

சிந்து பைரவி ராகம் ஒரு துடிப்புடன், சோக மயமான உயிர்காதலுடன் ,பக்தியை குழைத்து இதயத்தில் வர்ணமாக தேய்த்தால் எப்படி இருக்கும் ? அப்படி பட்ட அற்புத என் ஊன் உயிருடன் கலந்த ,சினிமா இசையமைப்பாளர்களுக்கும் உகந்த ஒன்று.

நான் குறிப்பிட்ட முதல் பாடல், என்னை யாரென்று எண்ணி எண்ணி .(பாலும் பழமும்)

இரண்டாம் பாடல் சித்தமெல்லாம் எனக்கு சிவ மயமே(திருவருட்செல்வர்).

சுதா பாடிய பாடல்- வெங்கடாசல நிலையம்.

நான் என் மகனின் காதில் முணுமுணுத்தது-என்ன சத்தம் இந்த நேரம்(புன்னகை மன்னன்).

என் மனம் கவர்ந்து என்னை கதற வைக்கும் பாடல் அன்னமிட்ட கைகளுக்கு(இரு மலர்கள்)

புரிந்ததா சிந்து பைரவியின் சந்தம் என் சொந்தம் ?.

rajeshkrv
13th June 2014, 09:52 PM
wonderful thread. keep going

RAGHAVENDRA
13th June 2014, 10:49 PM
Welcome Rajesh. We are eager to see your posts here too.

சிந்து பைரவி என்றால் உடனே என் நினைவுக்கு வருகின்ற பாடல்

http://youtu.be/i4DONoxZmcs

vasudevan31355
13th June 2014, 11:07 PM
wonderful thread. keep going

ராஜேஷ் சார்,

வருக!வருக! என தங்களை 'மனதை மயக்கும் மதுரகானங்கள்' திரிக்கு பெருமகிழ்ச்சியுடன் வரவேற்கிறேன்.

தங்களின் சுவைமிகு பதிவுகளை இங்கே இட்டு திரிக்கு பெருமை சேர்ப்பீர்கள் என்று திடமாக நம்புகிறேன்.

அன்பு நன்றிகள்.

vasudevan31355
13th June 2014, 11:09 PM
எல்லோரையும் கவர்ந்த 'உனக்கென்ன மேலே நின்றாய்' பாடலை உறக்கத்தின் தருவாயில் தந்து மகிழச் செய்ததற்கு நன்றி ராகவேந்திரன் சார்.

vasudevan31355
14th June 2014, 07:12 AM
இன்றைய ஸ்பெஷல் (3)

மிக மிக அபூர்வ பாடல்.

1955 -ல் வெளிவந்த இந்திப்படம். 'உரன் கடோலா'.

நௌஷாத் என்ற அற்புத இசையமைப்பாளரின் மிரள வைக்கும் இசை மற்றும் பாடல்கள் இப்படத்தில் ஆட்சி புரிந்தன. இசைக்குயில் லதாவின் (நடிகர் திலகத்தின் உடன்பிறவா சகோதரி) இளங்குருத்துக் குரல் நம்முடைய இரத்த அணுக்களில் அப்படியே ஊடுருவும். ஆனால் வரிகளை புரிந்து கொள்வது சிரமம். எப்படியானால் என்ன! அந்த காந்தக் குரலும், கிறங்கடிக்கும் இசையும் போதுமே! திலீப் இப்படத்தின் நாயகன். நிம்மி நாயகி.

இப்படம் அதற்கடுத்த வருடத்தில் 'வானரதம்' என்ற பெயரில் 'டப்' செய்யப்பட்டு தமிழில் வெளிவந்தது.

இலங்கை வானொலி இப்பாடலை தினமும் அப்போதெல்லாம் ஒலிபரப்பி நம் இதயத்தில் ஆழமாக ஊடுருவியது.

http://i1.ytimg.com/vi/Ufu-xrQ7IOE/hqdefault.jpghttps://i1.ytimg.com/vi/4VJ_4dlZpJo/hqdefault.jpg

இந்தியில் இப்பாடலைப் பாடியிருந்த லதாவே தமிழிலும் இப்பாடலைப் பாடியதுதான் இப்பாடலின் மகத்துவமான மகோன்னதமான விஷேசம். இந்தியைப் போலவே தமிழிலும் மிகவும் பிரபலமடைந்த பாடல். லதா என்ற அந்த இசை சாம்ராஜ்யத்தின் ராணி இந்த ஒரே பாடலின் மூலம் தமிழர்களின் மன சிம்மானங்களில் அமர்ந்து கொண்டார்.

கம்பதாசன் என்ற கொம்பர் தமிழில் டப்பிங் ஆன படங்களுக்கெல்லாம் பாடல்கள் எழுதிக் கொண்டிருந்தார்.

அவர் ஹிந்தி வெர்ஷனுக்கு தகுந்த மாதிரி (More Saiyan Ji Utrenge Paar) தரம் மற்றும் பொருள் குறையாமல் இப்பாடலை அற்புதமாக தமிழில் எழுதி இருந்தார்.

http://i1.ytimg.com/vi/9QPSqN7U02c/hqdefault.jpg

எந்தன் கண்ணாளன்
எந்தன் கண்ணாளன்
கரை நோக்கிப் போகிறான்
நதியே நீ மெல்லப் போ.

நிறைபுனல் நதியே
ஓடமும் பழமை
நீரின் சுழல் உன்னைப் பாடுதே

கண்ணாளன் (திலீப்) கப்பலில் தன் ஜோடியுடன் அமர்ந்திருப்பார். அவரை ஒருதலையாய்க் காதலிக்கும் நிம்மி சோக உள்ளுணர்வு கொண்டு (தலையில் ஆபரேஷன் நடக்குமுன் மொட்டையடித்து கவர் பண்ணுவார்களே! அந்தக் கோலத்தில் பரிதாபமாக இருப்பார்) நதி வேகமானால் காதலன் துன்புறக்கூடும் என்று நதியை மெதுவாகப் போகச் சொல்லி துடுப்புகள் போட்டு, விண்ணப்பம் விடுத்தபடி பாடுவார்.

இந்தப் பாடலின் ஒளிப்பதிவுத் தரம் அப்போது மிகப் பிரபலமாகப் பேசப்பட்டது. ஆண்களும் பெண்களுமாக கப்பலை' ஹையாஹோ ஹைய்யர ஹையா ஹையாஹோ' என்று துடுப்பிட்டபடி ஓட்டுவதும், நிம்மி மெய்மறந்து பாடுவதும் அருமையோ அருமை! (திலீப் வழக்கம் போல முகத்தில் சலனமில்லாமல்)

சாதனை படைத்த கூட்டணி. (நௌஷாத் அலியும், இசைக்குயிலும்)

http://4.bp.blogspot.com/-BTLJxiCJ-LM/UFyR39cRd9I/AAAAAAAAK_M/JaCcFQvnd-A/s1600/Lata+and+Naushad.png

சலீல் சௌத்ரி இசையோ என்று நினைப்பவருக்கு ஏமாற்றம். அவருக்கு இணையாக நௌஷாத் பட்டை கிளப்பி இருப்பார்.

இப்பாடலைக் கேட்கும் போது இனம் புரியா இன்பமும், ஒரு மெல்லிய சோகமும் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்து நம்முள் இழையோடுவதை பரிபூரணமாக உணர முடியும்.

இனி 'இசைக்குயில்' நம்மை 'வானரத'த்தில் தாலாட்டியபடி அழைத்துச் செல்வார்.


http://www.youtube.com/watch?v=JFHMUuw0NRw&feature=player_detailpage

Gopal.s
14th June 2014, 08:51 AM
வாசு,

திரி படு சுவாரஸ்யம். பழைய ஹிந்தி பட டப்பிங் பாடல்கள் படு புதுமையான பதிவு .தெலுங்கிற்கு புரட்சி தாசன் போல் ஹிந்திக்கு கம்ப தாசன்.தொடரு.நான் இந்த திரியின் முழு நேர அங்கத்தினன்.(ஊழியன்)

Gopal.s
14th June 2014, 09:01 AM
சிந்து பைரவி.(என் ஊன் உயிருடன் கலந்த ராகம்)

இன்னும் எனக்கு பிடித்த இந்த ராக பாடல்கள்.

காற்றினிலே வரும் கீதம்- மீரா.
நெஞ்சினிலே நெஞ்சினிலே-தில் சே.
நிலவு பாட்டு நிலவு பாட்டு -கண்ணுக்குள் நிலவு.
வளை யோசை கல கல கலவென -சத்யா.
பேசுவது கிளியா -பணத்தோட்டம்.
துணிந்த பின் மனமே-தேவதாஸ்.
தெய்வம் இருப்பது எங்கே-சரஸ்வதி சபதம்.
வாராயென் தோழி வாராயோ-பாசமலர்.
மணியே மணிக்குயிலே-நாடோடி தென்றல்.
எங்கே எனது கவிதை- கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன்.
எங்கே நீயோ நானும் அங்கே- நெஞ்சிருக்கும் வரை.

Gopal.s
14th June 2014, 09:07 AM
சினிமா காரர்கள் அடித்து துவைத்த ராகங்கள்.(மெல்லிசைக்கு தோது)

கல்யாணி.
மோகனம்.
சண்முக பிரியா.
சங்கராபரணம்.
சிவரஞ்சனி.
சுபபந்துவவராளி.
பேஹாக் .
நட பைரவி.
சாருகேசி.
கானடா.
கீரவாணி.
காப்பி.

அடுத்து சுபபந்துவராளி.

chinnakkannan
14th June 2014, 09:17 AM
வாசு சார்..எந்தன்கண்ணாளன் பாடல் சூப்பர்.. நல்ல தகவல்கள்

சி.பை ராகம் கோபால் சார்..இவ்ளோ பாட்டா..மோஸ்ட் பாடல்கள் எனக்கும் பிடிக்கும்..குறிப்பாய் எங்கே எனது கவிதை..

ராகங்களைப் பற்றிக் கேட்க ஆவலாக உள்ளோம் என்று சம்பூர்ண ராமயணப் பாட்டுப் போல நாங்களும் ஆவலாக உள்ளோம்..தொடருங்கள்

vasudevan31355
14th June 2014, 09:21 AM
கோ,

நன்றி!

ஓஹோ! ஓஹோஹோ!

நாங்கள் ஒரு ட்ராக்கில் போனால் நீங்கள் தங்களுக்கே உரித்தான வேறு பாதையில் பீடுநடை போடுகிறீர்கள். எனக்கு ராகங்களைப் பற்றி சுத்தமாகத் தெரியாது. ஆனால் இசையை பாடல்களை ரசிப்பதில் குறைவில்லை.

என்றாலும் உங்கள் இசையறிவு, ராகங்கள் பற்றிய அறிவு வியப்படையச் செய்கிறது.

நமக்கு வாய்த்திருக்கும் அடிமைகள் மிகவும் திறமைசாலிகள்....ஆனால் வாய்தான்.....:)

vasudevan31355
14th June 2014, 09:27 AM
நன்றி சின்னக் கண்ணன் சார்,

திரியைப் பெருமைபடுத்தும் விதமாக உள்ள தங்கள் பதிவுகள் நகைச்சுவை இழையோட வெகு நளினம்.

அதுவும் உங்கள் சின்ன வயசு அவதார் பட விளக்கம் படித்து இரவு முழுதும் விழுந்து விழுந்து சிரித்தேன். கனவில் நல்ல நேரமாகவே வருகிறது.

vasudevan31355
14th June 2014, 10:00 AM
கார்த்திக் சார் மற்றும் நண்பர்களுக்கு,

இந்தத் திரியை மேலும் மெருகூட்ட இன்னொரு சிறு முயற்சி. இசைத்துறை சம்பந்தப்பட்டவர்களின் பத்திரிகை பேட்டிகள், புகைப்படங்கள், பாடலுக்கு நடித்த நடிக, நடிகையரின் ஆவணத் தொகுப்புகள், அவர்களின் பேட்டிகள், பழைய பத்திரிக்கையின் இசைப் பக்கங்களை இத்திரியில் பகிர்ந்து கொள்ளலாம் என்று இருக்கிறேன்.

கார்த்திக் மிகுந்த சந்தோஷமடைவீர்கள் என்று தெரியும்.

மற்ற நண்பர்களும் கருத்தைக் கூறலாம். பின்னர் முடிவு செய்யலாம்.

RAGHAVENDRA
14th June 2014, 10:13 AM
பாடலாசிரியர் கம்பதாசன் அவர்களின் நினைவலைகளைத் தூண்டிவிட்டு விட்டார் வாசு சார். தமிழகத்தின் மிகச் சிறந்த கவிஞர்களில் ஒருவர் கம்பதாசன். புதுவை அருகில் வில்லியனூர் அவருடைய சொந்த ஊர். இயற்பெயர் ராஜப்பா. 1939ல் வெளிவந்த வாமன அவதாரம் அவருடைய முதற்படம். கம்பதாசனுக்கு மிகப் பெரிய புகழ் ஈட்டிய பாடல், அருள் தாரும் தேவ மாதாவே என்கிற ஞான சௌந்தரி திரைப்படப் பாடல். இதே போல் மங்கையர்க்கரசி திரைப்படத்தில் இடம் பெற்ற பார்த்தால் பசி தீரும் பாடலும் இவரைப் புகழேணியில் ஏற்றி உச்சாணிக் கொம்பில் வைத்ததாகும். கண்கள் திரைப்படத்தில் இடம் பெற்று சந்திரபாபு பாடிய ஆளு கனம் ஆனா மூளை காலி பாடலும் இவருடைய யதார்த்த நடைக்கு பெயர் பெற்றது. எம்.ஜி.ஆர். நடித்த சாலி வாஹனன் திரைப்படத்திற்கு வசனம் பாடல்கள் கம்பதாசன். இவரைப் பற்றியும் இவருடைய பாடல்களைப் பற்றியும் மற்றும் அதிகம் அறியப் படாத கவிஞர்களைப் பற்றியும்

தமிழ்த்திரையுலக ஆரம்ப கால பாடலாசிரியர்கள்

என்கிற தலைப்பில் ஒரு தொடர் எழுதலாம் என எண்ணுகிறேன். தங்களுடைய கருத்துக்களைப் பொறுத்து இதனை செயல் படுத்த உத்தேசம்.

அது வரை

அருள் தாரும் தேவ மாதாவே

http://youtu.be/KRM0zm_aptg

Gopal.s
14th June 2014, 10:26 AM
சுப பந்துவராளி.

மனதிற்குள் ஒரு வெறுமை அல்லது தோல்வி மனப்பான்மை.அதை உணர்ந்து மென்று கொண்டே, சிறிது நம்பிக்கை பெற வேண்டும். பிரிவை உணர்ந்து துக்க பட்டு ,சிறிதே ஆசுவாசமும் அடைய வேண்டும்.

ஒரு மெல்லிய இழையில் ஓடும் மெலடி உன் உள்ளத்தின் நாண்களை வீணை மாதிரி மீட்ட வேண்டுமா?

சிறு வயதில் tape recorder எல்லாம் பார்த்தேயிராத போது ,ஒரு பாடலை கேட்கும் போதெல்லாம் ,இரவு பதினோரு மணிக்கு மேல் ஊரடங்கிய பின் ,இந்த பாடலை கேட்டால் என்று மனம் ஏங்கும் .பின்னாளின் பீ .டெக் படிக்கும் போது ,மூன்றால் வருட ஹாஸ்டல் வாழ்க்கையில் அந்த கனவு நிறைவேறியது.

அந்த பாடல்- உன்னை நான் சந்தித்தேன்.

அப்படியே கண்களில் நீர் துளிர்க்க,அந்த நீரை வெளியே விடவே மனமின்றி கண்களை மூடி ,ட்ரான்ஸ் அனுபவம் பெற்றேன்.இதை மீறியா தியானம் எல்லாம்??

இந்த ராகம் ,உன் உணர்வின் தன்மையை உணர்த்தி,ஆசுவாசமும் தந்து விடும். உண்மை நடப்பையும் மறைத்து மனதுக்கு திரையிடாமல்,அதே நேரம் மனதை அலை பாய செய்யாமல் ,மென்மையாய் திட படுத்தும்.பொய் நம்பிக்கை தராமலே.

கேளுங்கள் இந்த ராகத்தின் கீழ்கண்ட அதிசய பாடல்களை....

ஆட்டுவித்தால் யாரொருவர் ஆடாதாரே-அவன்தான் மனிதன்.
கேளடி கண்மணி பாடகன் சந்ததி-புது புது அர்த்தங்கள்.
ராமன் எத்தனை ராமனடி- லட்சுமி கல்யாணம்.
ஆயிரம் தாமரை மொட்டுக்களே- அலைகள் ஓய்வதில்லை.
விழியோரத்து கனவோ இங்கு -ராஜ பார்வை.
வைகறையில் வைகை கரையில் -பயணங்கள் முடிவதில்லை.

இது ஒரு மேளகர்த்தா, சம்பூர்ண ராகம்.சப்த ஸ்வரங்களுடன்(ஆரோகணம் அவரோகணம்)

குறிப்பாக ஆட்டுவித்தால், உன்னை நான் இரண்டும் இரவில் தனிமையில் கேளுங்கள்.கண்ணீருடன் ,கண் மூடுவீர்கள்.

vasudevan31355
14th June 2014, 10:28 AM
ராகவேந்திரன் சார்,

அருமையான, அரிய, வெளிவராத தகவல்களைத் தெரிந்து கொள்ள எங்களுக்குக் கசக்குமா!

அதுவும் ஆரம்ப கால தமிழ்த்திரையுலக பாடலாசிரியர்களைப் பற்றி எழுத மிகச் சரியானவர் நீங்கள்தான். அவ்வளவு விஷயங்களையும் தாங்கள் விரல்நுனியில் வைத்திருந்தும் தங்கள் தன்னடக்கம் என்றும் எனக்கு ஆச்சரியமான விஷயம். வாழ்த்துக்கள்.

('ஞான சௌந்தரி'யில் நிஜமாகவே குந்திதேவி அம்மா கொள்ளையோ கொள்ளை அழகு சார்)

mr_karthik
14th June 2014, 10:36 AM
கோ,

நன்றி!

ஓஹோ! ஓஹோஹோ!

நாங்கள் ஒரு ட்ராக்கில் போனால் நீங்கள் தங்களுக்கே உரித்தான வேறு பாதையில் பீடுநடை போடுகிறீர்கள். எனக்கு ராகங்களைப் பற்றி சுத்தமாகத் தெரியாது. ஆனால் இசையை பாடல்களை ரசிப்பதில் குறைவில்லை.


எத்தனையோ விஷயங்களில் வாசுதேவன் அவர்களோடு ஒத்துப்போகும் நான், இந்த விஷயத்திலும் ஒத்துப்போகிறேன். எனக்கும் ராகங்களைப் பற்றி ஒன்றும் தெரியாது. ஆனால் பாடல்களை ரசிப்பதில் சமத்து.

mr_karthik
14th June 2014, 10:48 AM
இந்தத் திரியை மேலும் மெருகூட்ட இன்னொரு சிறு முயற்சி. இசைத்துறை சம்பந்தப்பட்டவர்களின் பத்திரிகை பேட்டிகள், புகைப்படங்கள், பாடலுக்கு நடித்த நடிக, நடிகையரின் ஆவணத் தொகுப்புகள், அவர்களின் பேட்டிகள், பழைய பத்திரிக்கையின் இசைப் பக்கங்களை இத்திரியில் பகிர்ந்து கொள்ளலாம் என்று இருக்கிறேன்.

கார்த்திக் மிகுந்த சந்தோஷமடைவீர்கள் என்று தெரியும்.

நிச்சயமாக 100%.

காத்திருக்கிறோம். தூள் பரத்துங்கள்.

mr_karthik
14th June 2014, 11:04 AM
டியர் வாசு,

'வான ரதம்' படப்பாடல் பற்றிய பதிவு ஒரு காணக்கிடைக்காத பொக்கிஷம். தேடிக்கொணர்ந்து அளித்த தங்களுக்கு மிக்க நன்றி. அத்துடன் லதாவின் இளவயது நிழற்படங்களும் அருமை. (நேற்று திரியில் கோலோச்சிய 'லட்டு' லதாவை சொல்லவில்லை. இசைக்குயில் லதாவை சொன்னேன்).

இப்பாடலில் எக்ஸ்பிரஷன் என்னவிலைஎன்று கேட்கும் திலீப் அவர்களைத்தான் வடநாட்டின் நடிகர்திலகமாக ஒப்பிட்டார்கள். (நாமெல்லாம் நடிகர்திலகத்தைப்பற்றிப்பேச அனுமதி உண்டா?)

Richardsof
14th June 2014, 11:14 AM
courtesy - net
ஜல் ஜல் எனும் சலங்கை ஒலி!

எனக்கு மிகவும் பிடித்த பழைய திரைப்படப் பாடல்களிலொன்று 'ஜல் ஜல் ஜல் எனும் சலங்கை ஒலி'. எம்.எஸ்.வி/ டி.கே.ராமமூர்த்தி ஆகியோரின் இசையில் எஸ்.ஜானகியின் நெஞ்சையள்ளும் குரலில் ஒலிக்கும் இந்தப் பாடல் எம்ஜிஆர்/சரோஜாதேவி இணைந்து நடித்த 'பாசம்' திரைப்படத்தில் வருகிறது. டி.ராமண்ணாவின் இயக்கத்தில் வெளியான இப்படத்தில் மேற்படி 'ஜல் ஜல் ஜல் எனும் சலங்கை ஒலி' பாடலை எழுதியிருப்பவர் கவிஞர் மருதகாசி. இந்தத் திரைப்படத்தில் எம்ஜிஆர் திருடனாக நடித்திருப்பார். அத்திருடனைக் காதலிக்கும் நாயகியாக வரும் சரோஜாதேவி மாட்டு வண்டியில் மேற்படி பாடலைப் பாடியபடி வருவார். திருடனைக் காதலிக்கும் நாயகி தன் காதலைப் கூறும் பாங்கு சுவையானது. ஒரு திருடனின் வாழ்வுடன் சம்பந்தப்பட்டிருக்கும் விடயங்களைக் கொண்டே கவிஞர் இப்பாடலை இயற்றியிருப்பார். காட்டில் நாயகியைக் கண்ட திருடனான நாயகன் தன் இயல்பின்படி அவளிடன் உள்ளதைக் கொடு என்று வற்புறுத்தவே நாயகியோ கையில் எதுவும் இல்லாத காரணத்தால் தன் கண்ணில் உள்ளதைக் கொடுத்து விட்டேன் என்று பின்வருமாறு பாடுகின்றாள்எனக்கு மிகவும் பிடித்த பழைய திரைப்படப் பாடல்களிலொன்று 'ஜல் ஜல் ஜல் எனும் சலங்கை ஒலி'. எம்.எஸ்.வி/ டி.கே.ராமமூர்த்தி ஆகியோரின் இசையில் எஸ்.ஜானகியின் நெஞ்சையள்ளும் குரலில் ஒலிக்கும் இந்தப் பாடல் எம்ஜிஆர்/சரோஜாதேவி இணைந்து நடித்த 'பாசம்' திரைப்படத்தில் வருகிறது. டி.ராமண்ணாவின் இயக்கத்தில் வெளியான இப்படத்தில் மேற்படி 'ஜல் ஜல் ஜல் எனும் சலங்கை ஒலி' பாடலை எழுதியிருப்பவர் கவிஞர் இந்தத் திரைப்படத்தில் எம்ஜிஆர் திருடனாக நடித்திருப்பார். அத்திருடனைக் காதலிக்கும் நாயகியாக வரும் சரோஜாதேவி மாட்டு வண்டியில் மேற்படி பாடலைப் பாடியபடி வருவார். திருடனைக் காதலிக்கும் நாயகி தன் காதலைப் கூறும் பாங்கு சுவையானது. ஒரு திருடனின் வாழ்வுடன் சம்பந்தப்பட்டிருக்கும் விடயங்களைக் கொண்டே கவிஞர் இப்பாடலை இயற்றியிருப்பார். காட்டில் நாயகியைக் கண்ட திருடனான நாயகன் தன் இயல்பின்படி அவளிடன் உள்ளதைக் கொடு என்று வற்புறுத்தவே நாயகியோ கையில் எதுவும் இல்லாத காரணத்தால் தன் கண்ணில் உள்ளதைக் கொடுத்து விட்டேன் என்று பின்வருமாறு பாடுகின்றாள்:

காட்டில் ஒருவன் எனைக் கண்டான்
கையில் உள்ளதை கொடு என்றான்
கையில் எதுவும் இல்லை என்றே
கண்ணில் உள்ளதை கொடுத்து விட்டேன்

அது மட்டுமா திருட வந்த அவனைத் தானே திருடி விட்டதாகவும் கூறுகின்றாள். நாயகிக்கோ திருடுவதில் நாயகனைப்போல் பரிட்சயமில்லை. இதுதான் அவளது முதல் திருட்டு. முதல் திருட்டு என்பதால் அவளுக்குப் போதிய அனுபவமில்லை. அதனால் அவனை அவளால் முழுவதுமாகத் திருட முடியாமல் போய் விட்டதாம்.

அவன்தான் திருடன் என்றிருந்தேன்.
அவனை நானும் திருடிவிட்டேன்
முதல் முதல் திருடும் காரணத்தால்
முழுதாய் திருட மறந்துவிட்டேன்

அத்துடன் அவன் மேல் காதல் கொண்ட நாயகி தன் உள்ளத்தைக் கொள்ளை கொண்ட அந்தத் திருடனைக் கைது செய்து தன் உள்ளத்துச் சிறையினில் வைக்கப்போவதாகவும் அதிலிருந்து அவனை என்றுமே விடுதலை செய்யப்போவதில்லையென்றும், இவ்விதம் அவனைக் கைது செய்து ஆயுள் தண்டனைக் கைதியாகச் சிறையினுள் வைப்பதற்குத் தான் ஒருபோதும் விளக்கம் கூறப்போவதில்லையென்றும் கூறுகின்றாள்:

இன்றே அவனை கைது செய்வேன்
என்றும் சிறையில் வைத்திருப்பேன்
விளக்கம் சொல்லவும் முடியாது
விடுதலை என்பதும் கிடையாது

ஒரு திருடனைக் காதலிக்கும் நாயகியென்பதால், திருடனுடன் சம்பந்தப்பட்ட திருட்டு, சிறை, கைதி, விடுதலை போன்ற சொற்களை வைத்தே பாடலை இயற்றிய கவிஞரின் சொல்நயம் என்னைக் கவர்ந்தது. அத்துடன் மெல்லிசை மன்னர்களின் இசையும், எஸ்,ஜானகியின் குரலும் மேற்படி பாடல் என்னைக் கவர்வதற்கு மேலதிகக் காரணங்கள். அத்துடன் கன்னடத்துப் பைங்கிளியின் காதல் ததும்பும் குறும்புடன் கூடிய நடிப்பையும் தவிர்ப்பதற்கில்லை. எத்தனை தடவைகள் கேட்டாலும் ஜானகியின் உள்ளத்தைக் கவரும் அந்தக் குரல் என் உள்ளத்தைத் திருடத் தயங்குவதில்லை. அவ்விதம் என் உள்ளத்தைத் திருடிவிடும் இந்தக் குரலுக்கும் என்றுமே என் உள்ளத்திலிருந்தும் விடுதலை கிடையாது. நீங்களும் ஒருமுறை கேட்டுப்பாருங்கள். உங்கள் உள்ளங்களையும் திருடிவிடுமிந்தப் பாடல். அதன்பின் உங்கள் உள்ளங்களிலிருந்தும் என்றுமே இந்தப் பாடலுக்கு விடுதலை கிடைக்கப்போவதில்லை.

mr_karthik
14th June 2014, 11:14 AM
டியர் கிருஷ்ணாஜி,

இடைக்காலப்பாடல்களை மழையாகப் பொழிந்திருக்கிறீர்கள். தங்கள் நினைவாற்றல் அசரவைக்கிறது. எழுபதுகளின் மத்தியில் எம்.பி.சீனிவாசனின் இசையில் வந்த அந்தரங்கம் போலவே பட்டாம்பூச்சி, புதுவெள்ளம் போன்ற படங்களின் பாடல்களையும் அலசுங்கள். புதுவெள்ளம் படத்தில் வரும் 'துளி துளி துளி இது மழைத்துளி', மற்றும் 'நான் ராஜா வீட்டு கன்னுக்குட்டி' பாடல்கள் மிகவும் பிடிக்கும். கன்னட மஞ்சுளாவுக்கு ஏற்றவாறு பாடியிருப்பார் சுசீலா.

Gopal.s
14th June 2014, 11:18 AM
கோ,

ஓஹோ! ஓஹோஹோ!


நமக்கு வாய்த்திருக்கும் அடிமைகள் மிகவும் திறமைசாலிகள்....ஆனால் வாய்தான்.....:)
வாங்கைய்யா (ஓய்வு பெற்ற) வாத்யாரய்யா, என்னை தொடர்ந்து ஒருவர் அவமான படுத்தி கொண்டுள்ளார்.நானும் பொறுத்து, பயந்து ,பம்மி ,நடுங்கி கொண்டுள்ளேன்.வந்து தட்டி கேளுங்கள் இந்த அநீதியை.

gkrishna
14th June 2014, 11:21 AM
டியர் கிருஷ்ணாஜி,

இடைக்காலப்பாடல்களை மழையாகப் பொழிந்திருக்கிறீர்கள். தங்கள் நினைவாற்றல் அசரவைக்கிறது. எழுபதுகளின் மத்தியில் எம்.பி.சீனிவாசனின் இசையில் வந்த அந்தரங்கம் போலவே பட்டாம்பூச்சி, புதுவெள்ளம் போன்ற படங்களின் பாடல்களையும் அலசுங்கள். புதுவெள்ளம் படத்தில் வரும் 'துளி துளி துளி இது மழைத்துளி', மற்றும் 'நான் ராஜா வீட்டு கன்னுக்குட்டி' பாடல்கள் மிகவும் பிடிக்கும். கன்னட மஞ்சுளாவுக்கு ஏற்றவாறு பாடியிருப்பார் சுசீலா.

இப்போது தான் கம்ப்யூட்டர் ஆன் செய்தேன்
தாய் வீடுக்கு (NT thread) சென்று விட்டு இங்கு வந்தால் சங்கீத வகுப்பே நடந்து கொண்டு இருக்கிறது
கார்த்திக் சார் தங்கள் பாராட்டு அனைத்தும் வாசுவிற்கு (பரந்தாமனுக்கு)


எல்லோர்ருக்கும் காலை வணக்கம்
சிந்து பைரவி பற்றிய தொகுப்பு மிக அருமை
(ஆரோகணம் "ச ரி2 க2 ம1 க2 ப த1 ந2 ச "
அவரோகணம் "ந2 த1 ப ம1 க2 ரி1 ச ந2 ச "
ஜன்ய ராகம் of மேளகர்த ராகம் நாடகப்ரிய
சரியா கோபால் சார் )

தலை வாசு வின் நௌஷத் இசையில் வெளிவந்த பாடல் 1970 கால கட்டத்தில் கேட்டது நினைவை தூண்டி விட்டார்
அப்போது கரவன் பிந்துவின் "பியது அப்து ஆஜா" பாடலை அடிக்கடி முமுணுது கொண்டு இருப்பேன். என் தந்தையார் அவர்கள் இந்த பாடலை பற்றி குறிப்பிட்டு "அதெல்லாம் கிடக்கட்டும். நௌஷத் பாடலை கேள் " என்று எனக்கு நௌஷத் பற்றி ஒரு ஸ்மால் இன்ட்ரோ கொடுத்தார் தந்தை மகனுக்கு ஆற்ரீய கடமை

Gopal.s
14th June 2014, 11:25 AM
டி.கே.ராமமூர்த்தி விஸ்வரூப தரிசனம் தந்த பாடல்கள் ஜல் ஜல் (நினைவு படுத்திய வில்லனுக்கு நன்றி), அழகு ஒரு ராகம்,உள்ளத்தில் நல்ல உள்ளம்,பல்லவன் பல்லவி ஆகியவை அலாதி. டி.கே.ராமமூர்த்தி அவர்களின் வண்டி பாடல்கள் தேர்ச்சியானவை.ஜல் ஜல் ஜல் எனும் சலங்கை ஒலி ,மற்றும் சாட்டை கையில் கொண்டு .(நண்பர்கள் சிலர் இணைவு இசையை ஞாபக படுத்தினால் இவை நான் விச்சு ,ராமு ஆகியோரிடம் அந்தரங்கமாக பழகி பெற்ற செய்தி)

ஜல் ஜல் பாட்டில் முத்திரை வரிகள்- முதல் முதல் திருடும் காரணத்தால் முழுசாய் திருட மறந்து விட்டேன்.

எனக்கு பிடிக்காத கிழட்டு மிமிக்ரி பாடகியின் உருப்படியான பாடல்களில் ஒன்று ஜல் ஜல்.

Richardsof
14th June 2014, 11:33 AM
Nandri ''kumaran '' gopal

courtesy- net
எனக்கு மிகவும் பிடித்த பாடல்களிலொன்று. முக்கிய காரணம் பாடலின் வரிகளில் சில. அடுத்தது எம்ஜிஆரின் துடிப்பான அனைவரையும் கவரும் உற்சாகமூட்டும் நடிப்பு. திரைப்படத்தில் அடிமைகளின் தலைவனாக வரும் எம்ஜிஆர் அனைவருக்கும் விடுதலையில் நம்பிக்கை ஊட்டும் வகையில் பாடுவதாக வரும் வரிகள் கொடிய அடக்கு ஒடுக்குமுறைகளுக்குள் வாழும் மக்களுக்கு எப்பொழுதும் நம்பிக்கையினையும், ஆறுதலையும் தருவன. 'விண்ணில் எவ்வளவு ஆனந்தமாக, சுதந்திரமாகப் பறவை பறக்கிறது. அதனைப் போல் சுதந்திரமாகச் சிறகடித்துப் பறக்குமொரு வாழ்க்கை வேண்டும். கடலின் நீரலைகள்தாம் எவ்வளவு சந்தோசமாக, எந்தவித அச்சமுமற்று ஆடி, ஓடி வருகின்றன. இந்த அலைகளைப் போல் அடிமைத்தளைகளுக்குள் வாழும் நாமும் ஆனந்தமாக ஆடும் வாழ்க்கை வேண்டும்' என்று தன்னை நம்பியிருக்கும் மக்களுக்கு நம்பிக்கையினையும், அடைய வேண்டிய விடுதலை என்னும் இலட்சியத்தையும் எடுத்துரைக்கின்றான் தலைவன். இந்த வானில், இந்த மண்ணில் நாம் பாடுவதும் உரிமைக்கீதமாகவே இருக்கட்டுமென்கின்றான். தலைவனது நம்பிக்கையூட்டும் கூற்றினால் நம்பிக்கைகொண்ட ஏனைய அடிமைகளும் அவனுடன் சேர்ந்து விடுதலைக் கனவுடன் ஆடிப்பாடுகின்றார்கள்.

தலைவன் தொடர்கின்றான். இங்கு வீசும் காற்று நம்மை அடிமை என்று ஒதுக்குவதில்லை. கடல் நீரும் அடிமையென்று எம்மைச் சுடுவதில்லை. நாம் அடிமைகள் என்று காலம் நம்மை விட்டு விலகி நடப்பதில்லை. காதல், பாசம், தாய்மை போன்ற பந்தபாசங்களும் நம்மை மறப்பதில்லை. எம்மை அவை சுதந்திரம் மிக்க மனிதர்களாகவே நடாத்துக்கின்றன. தாயில்லாமல் யாரும் பிறப்பதில்லை. சொல், மொழியில்லாமல் யாரும் பேசுவதில்லை. பசியில்லாமல் யாரும் வாழுவதில்லை. அதுபோல் விடுதலைக்காகப் போராடும் மக்கள் வேறு வேறு பாதைகளில் செல்வதில்லை. இவ்விதமாகத் தொடர்ந்தும் மக்களுக்கு நம்பிக்கையூட்டும் தலைவன் அடிமைச் சூழலில் வாழும் கோடிக்கணக்கான மக்கள் அனைவரும் அச்சமின்றி ஆடிப்பாடிட, சேர்ந்து மகிழ்ச்சியுடன் வாழ்வதற்கு விடுதலை வேண்டும். வானம் ஒன்று. இந்த மண்ணும் ஒன்று. அதுபோல் விடுதலைக்காக நாம் பாடும் கீதமும் ஒன்றாகவேயிருக்கட்டும். அது விடுதலைக்கான உரிமைக் கீதமாகவேயிருக்கட்டும் என்று தொடர்ந்தும் நம்பிக்கையூட்டிப் பாடுகின்றான். தலைவனின் நம்பிக்கையும், உற்சாகமும், ஆட்டமும் அவனைச் சுற்றியிருந்த அனைவரையும் பற்றிக்கொள்கிறது. எல்லோரும் அவனுடன் சேர்ந்து விடுதலைக்கனவுடன், நம்பிக்கையுடன், தம் மண்ணில் வாழும் மக்களின் அடிமை வாழ்வை உடைத்தெறிவதற்காக 'அதோ அந்தப் பறவை போல் வாழ வேண்டும்' என்று உரிமைக் கீதம் இசைக்க ஆரம்பிக்கின்றார்கள்.

எம்ஜிஆரின் உற்சாகமும், மகிழ்ச்சியும் ததும்பும் நடிப்பும் அவரது ஆடை அலங்காரங்களும். இந்தப் பாடலில் எனக்குப் பிடித்த ஏனைய விடயங்கள். சிறுவயதில் நெஞ்சில் வாழ்வின் சுமைகளற்று உல்லாசமாகத் திரிவோம். அந்தச் சமயங்களில் உள்ளங்களின் ஆழங்களில் பதிந்துவிடும் எவையும் பின்னர் அழிவதில்லை. அழியாத கோலங்களாக மானுட வாழ்வுடன் நிலைத்து நின்றுவிடுகின்றன. அவ்விதம் அழியாத கோலங்களாக பதிந்துவிட்ட தருணங்களிலொன்றுதான் இந்தப் பாடலும், திரைப்படமும். எத்தனைதரம் கேட்டாலும் சலிக்காத, மனதுக்கு இன்பமூட்டும் பாடல்களிலொன்று கவிஞர் கண்ணதாசனின் 'அதோ அந்தப் பறவை போல் வாழ வேண்டும்.' 'சிட்டுக்குருவியைப் போல் சிறகடிக்க ஆசைப்பட்டான் மகாகவி பாரதி. கவிஞர் கண்ணதாசனோ 'அடிமைத்தளையறுத்து, அச்சமற்ற ஆடிப்பாடி அதோ அந்தப் பறவைபோல் வாழ வேண்டுமென்று' விடுதலை நாடி உரிமைக்கீதமிசைக்கின்றார். இந்தப் பாடலைக் கேட்கும்போதெல்லாம் எமதுள்ளமும் விண்ணில் பறக்கும் சுதந்திரப்புள்ளாகச் சிறகடிக்க ஆரம்பித்துவிடுகின்றது.

Russellmai
14th June 2014, 11:33 AM
அன்புள்ள வாசுதேவன் சார்
பழைய திரைப்பட பாடல்கள் தொடர்பான தகவல்களை
அளிக்கவிருக்கும் தங்களது முயற்சிக்கு எனது வாழ்த்துக்கள்
அன்பு கோபு

gkrishna
14th June 2014, 11:44 AM
டியர் கார்த்திக் சார்
ஸ்ரீனிவாசன் (MB ) அவர்கள் (வானொலி அண்ணா) மிக சிறந்த இசை அமைப்பாளர்
அவருடைய இசையில் வெளிவந்த எல்லா பாடல்களுமே மிக இனிமை
மதன மாளிகை என்று ஒரு திரைப்படம் நினைவிற்கு வருகிறது
சிவகுமார் அல்கா நம்ம ஸ்ரீகாந்த் சுருளி நடித்து 1976
NVR pictures கே.விஜயன் direction
1. பாலாவின் தேன் குரலில் "ஒரு சின்ன பறவை அன்னையை தேடி வானில் பறக்றது அதன் சிந்தனை எல்லாம் தாய் அவள் அன்பு தேனில் குளிக்கிறது "
அன்னை என்பது மானுடம் அல்ல
அத்துடன் உலகத்தில் தெய்வகம்
அன்றவள் சொன்னது தாலாட்டு அல்ல
ஆன்ம பாடிய சங்கீதம்

வேதம் என்பது வேறு எதும் அல்ல
தாய் அவள் கூறிய உபதேசம்
விண்ணில் இருபது சொர்கமும் அல்ல
அதுதான் அன்னையின் மலர் பாதம்

சிவகுமார் பாடி கொண்டே வருவர்
ல ல லா ஹம்மிங் beautiful

Russellmai
14th June 2014, 11:45 AM
அன்புள்ள இராகவேந்திரா சார்,
தமிழ்த்திரையுலக ஆரம்ப கால பாடலாசிரியர்கள்
தொடர்பான தங்களது தொடரினை ஆவலுடன்
எதிர்பார்க்கிறேன்
அன்பு கோபு

gkrishna
14th June 2014, 11:48 AM
dear எஸ்வி சார்
ஜல் ஜல் சலங்கை ஒலி மற்றும் அந்தோ அந்த பறவை இரண்டுமே
மிக சிறந்த பாடல்
இங்கு கருத்துகள் பரிமாறும் நாம் அனைவருமே மிக சிறந்த இசை பிரியர்கள் அதில் சந்தேகமே இல்லை

gkrishna
14th June 2014, 11:52 AM
மதன மாளிகையில் ஜேசுதாஸ் மற்றும் கண்ணிய பாடகி சுசீலாவின்
"ஏரீயிலே ஒரு காஷ்மீர் ரோஜா ஏனடி நீராடுது" ஜேசுதாஸ்
"மாலையிலே வரும் மன்னவனுக்கே மன்மத ஆராதனை " சுசீலா
கிட்டத்தட்ட "என் உயிர் தோழி கேளடி சேதி இதுதானோ உங்கள் மன்னவன் நீதி" போல் இருக்கும்

gkrishna
14th June 2014, 11:54 AM
மேலும் மதன மாளிகையில் உஷா உதுப் பாடல் ஒன்று
"மல்லிகைபூ
அங்கொரு மங்கோ tree on தி banks of தி காவிரி "

Gopal.s
14th June 2014, 12:00 PM
நன்றி எஸ்.வீ சார். உங்களுக்கு ஒரு வேண்டுகோள். வேறொரு திரியில் பதிவிட வேண்டியவைகளை இங்கு வைக்க வேண்டாம். இது பாடல்கள் பற்றிய திரி. நீங்களோ உள்நோக்கம் வைத்தே செயல் படுபவர். தயவு செய்து இந்த திரியின் போக்கை மாற்றாதீர்கள். வாசு தேவன் போன்றவர்களும் இதில் உடன் படுவார்கள் என்றே எண்ணுகிறேன்.(Pl.register your thoughts about music if you have anything to say. Net search can be done by us as we all have better internet connection and expensive Lap tops)

gkrishna
14th June 2014, 12:09 PM
அடங்க மாட்டேங்கது
மேலும் இன்னொரு பாடல் from மதன மளிகை
சுசீலாவின் போதை குரலில் excellant ஹம்மிங் ஆரம்பத்தில்
"ஆசையோ சுவையானது அதில் ஆடையோ சுமையானது
போதையோ சுகமானது அதில் பூஉடல் தடுமாறுது "
கண்ணதாசன் வரிகள் என்று நினைக்கின்றேன்

Gopal.s
14th June 2014, 12:17 PM
எம்.பீ.ஸ்ரீனிவாசன் இசையமைத்த பாதை தெரியுது பார்,புது வெள்ளம்,மதன மாளிகை எல்லாம் ஒரு freshness தெரியும். துளி துளி துளி மழைத்துளி, ஆசையோ சுவையானது உதாரணங்கள்.

இளமை இணைவு இசையில் (youth Coir ) அவருடைய தலைமை கீழ் இரண்டு வருடம் இருந்துள்ளேன்.(பரீக்ஷா நாடக குழுவில் இருந்த போது ).சுதா வெங்கட்ராமன் கூட இருந்தார்.(என்னால் மறக்க முடியாத நான் பங்கு பெற்ற பாடல் "பாம்பு பிடாரன் குழலூதுகின்றான்)

எம்.பீ.ஸ்ரீனிவாசன் இணைவு இசை(சேர்ந்திசை) பாணியில் ரகுமான் தந்த அற்புதம் "ராசாத்தி என்னுசிரு "(திருடா திருடா).ஷாகுல் ஹமீது பின்னி பெடலெடுத்திருப்பார்.

Richardsof
14th June 2014, 12:31 PM
கோபால் சார்
என்னுடைய பதிவுக்கு எந்த உள் நோக்கமும் இல்லை .படிப்பதற்கு சுவையாக இருந்தது .இசை ரசிகர்களுக்கு இவர் பிடிக்கும் இவர் பிடிக்காது என்ற பேதம் கூடாது .ஜானகியின் தேன் குரல் உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் விட்டு விடுங்கள் .

அழகுக்கு மறு பெயர் கண்ணா .... அன்னமிட்டகை
உலகம் அழகு கலைகளின் சுரங்கம் ..... உ .சு.வாலிபன்
காலத்தை வென்றவன் நீ ------- அடிமைப்பெண்
உன்னிடத்தில் என்னை கொடுத்தேன் ........ அவளுக்கென்று ஓர் மனம் .
ஏண்டா ராஜா என்ன வேண்டும் ........ வீட்டுக்கு ஒரு பிள்ளை

gkrishna
14th June 2014, 12:43 PM
திரு கோபால் சார்
ஸ்ரீனிவாசன் அண்ணா அவர்கள் சில நாட்கள் திருநெல்வேலி வானொலி நிலையத்தில் தங்கி இருந்தார் 1973 அல்லது 1974 என்று நினைவு
அப்போது ஸ்கூல் students 10 பேரை இணைத்து (நானும் அதில் ஒரு அடக்கம்) "ஹம் ஏக் ஹை ஹம் தேக் ஹை தேக் ரகங்கே" என்று ஒரு பாடல் சொல்லி குடுத்து சேர்ந்திசை என்ற பெயரில் ஒரு ப்ரோக்ராம் காலையில் ஓலிபரபினர்கள்

Gopal.s
14th June 2014, 12:44 PM
எனக்கு பிடித்த ஜானகியின் சில.

ஜல் ஜல் ஜல்

சிங்கார வேலனே

தூக்கம் உன் கண்களை

சின்னஞ்சிறிய வண்ண பறவை

காதலின் பொன் வீதியில்.

அம்புடுதேன்.

இளைய ராஜா அவர் முக்கிய பாடல்களை சுசீலாம்மா ,சித்ரா, சுஜாதா விற்கு பகிர்ந்து அளித்திருந்தால் அவரது பாடல்கள் இன்னும் பரிமளித்திருக்கும்.ஜானகி கொலை பண்ணியவை ஒன்றா இரண்டா?

எஸ்.வீ.சார்- நான் சொன்னது முக்கிய நான்கைந்து பேரின் உடன் பட்ட எண்ணம். அவர்கள் உங்களிடம் சொல்ல நாகரிகம் கருதி சங்கட பட்டு தயங்குகிறார்கள். உங்களின் உண்மை நண்பனான எனக்கு, உங்களை எதிர்க்கும் துர்பாக்கியத்தை ,தொடர்ந்து அளிக்காதீர்கள். உள் நோக்கத்தை, உங்கள் வீட்டு கோட் ஸ்டான்ட் இருந்தால், கழட்டி, மாட்டி விட்டு ,இங்கு எங்களுடன் ஒருவராக பங்கு பெறுங்கள்.

gkrishna
14th June 2014, 12:50 PM
ஜானகியின் குரலில் வரும்
"மாதா உன் கோயிலில் மணி ஓசை தீபங்கள்" அச்சாணி சோலோ
"வசந்த கால கோலங்கள் " தியாகம் சோலோ
"வருவான் மோகன ராகம் என காத்து இருந்த " பொனுஞ்சல் சோலோ
"கொஞ்ச நேரம் எனை மறந்தேன் " சிரித்து வாழ வேண்டும் (tms உடன் )
போன்ற பாடல்களையும் சேர்த்து கொள்ளலாம் சார்

gkrishna
14th June 2014, 01:06 PM
ஸ்ரீனிவாசன் (MB ) இசையில் பட்டாம் பூச்சி படத்தில் வரும்
"சக்கரை பந்தலில் தேன் மழை பொழியுது அதன் சாகச கலைகளில் அதிசயம் தெரியுது " tms சுசீலா காம்போ
"எத்தனை மலர்கள் தாவும் பட்டாம் பூச்சி
அது எத்தனையோ தாவுமடி அன்பு மீனாட்சி
ஆடவரில் எத்தனை பேர் பட்டாம்பூச்சி
நான் ஆயிரம் பேர் பார்த்துவிட்டேன் அன்பு மீனாட்சி அன்பு மீனாட்சி "
(tms ஜானகி )
"கனியும கிளியும் சேர்ந்தால் காதல் உருவாகும் " (tms சுசீலா )
A .s பிரகாசம் direction என்று நினவு
கமல் ஜெயசித்ரா pair 1975
பிரகாசம் அடிகடி கமலை நாந்தான் ஹீரோவக்கினேன் என்று தம்பட்டம் அடித்து கொண்ட படம் .
முக்தாவின் அந்தரங்கமும் 1975 ரிலீஸ் தான் (இசை தேவராஜன் or ஸ்ரீனிவாசன் சார் )
எது முதல் என்பதை கமல் தான் கூற வேண்டும்

Richardsof
14th June 2014, 01:07 PM
பாசம் படத்தில் இடம் பெற்ற இந்த பாடல் எனக்கு மிகவும் பிடித்தது . வர்ணிக்க வார்த்தைகள் இல்லை .

http://youtu.be/dT1GM18diKg

gkrishna
14th June 2014, 01:48 PM
கார்த்திக் சார்
NVR pictures எடுப்பார் கை பிள்ளை என்று ஒரு படம் 1975 காலகட்டத்தில் வெளி வந்தது
கே.விஜயன் direction
ஜெய் நிர்மலா ஸ்ரீகாந்த் பானுமதி அம்மா நடித்து இருப்பார்கள்
ஸ்ரீனிவாசன் (MB ) மியூசிக் தான் என்று நினவு
ஜேசு சுசீலா காம்போ "பொன் மயங்கும் பூ மணக்கும் கன்னி பாவை "
சுசீலா ஒரு மாதிரி பேஸ் வாய்ஸ் இல் பாடுவார்
இந்த பாடலில் நிம்மி வெரி cute
பானுமதியின் "பல மாதம் போய் இருந்து திரும்பி வந்தான் என் மகன் மீட் மை சன் " என்று ஒரு பாடல் வரும்
ஜெய்க்கு பதில் ஆக ஸ்ரீகாந்த் மகன் ஆக நடிப்பார்
இந்த படத்தில் ஸ்ரீகாந்த் வெரி handsome (தமிழக ஓமர்ஷேரிப் )
இறுதியில் ஸ்ரீகாந்த் மகன் அல்ல ஜெய் தான் மகன் என்ற
உண்மை வரும்

gkrishna
14th June 2014, 02:01 PM
நீதி தேவன் 1971 ரிலீஸ்
இப்ப தான் ஜெய் திரியில் கார்த்திக் சார் பட ரிலீஸ் advertisement பார்த்தேன்
உடனே பாலா சுசீலா காம்போவில் மாமா இசையில் வந்த
"மாணிக்க பதுமைக்கு கணிகையாக மனதை தரலாமா நான் மடியில்
வரலாமா " பாடல் தான் நினைவிற்கு வந்தது
என்ன ஒரு ஹம்மிங் கடைசியில்

vasudevan31355
14th June 2014, 02:11 PM
டியர் வாசு,

'வான ரதம்' படப்பாடல் பற்றிய பதிவு ஒரு காணக்கிடைக்காத பொக்கிஷம். தேடிக்கொணர்ந்து அளித்த தங்களுக்கு மிக்க நன்றி. அத்துடன் லதாவின் இளவயது நிழற்படங்களும் அருமை. (நேற்று திரியில் கோலோச்சிய 'லட்டு' லதாவை சொல்லவில்லை. இசைக்குயில் லதாவை சொன்னேன்).

கார்த்திக் சார்!

மிக்க நன்றி!


(நாமெல்லாம் நடிகர்திலகத்தைப்பற்றிப்பேச அனுமதி உண்டா?)

http://i1.ytimg.com/vi/UYn7duLaUAw/mqdefault.jpg

கார்த்திக் சார்!

சிரித்துக் கொண்டே அழுகின்றேன் ஸாரி அழுகின்றோம். :):cry2:

பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் சேர்ந்து கொண்டால் 'ஒப்பாரி' ஆகக் கூட ஆகி விடும்.

vasudevan31355
14th June 2014, 02:15 PM
கிருஷ்ணா சார்!

பாப்கார்ன் பொட்ட்டலத்தைப் பிரித்தால் பாப்கார்ன்கள் சிந்தி சிதறுவது போல எங்கிருந்து சார் இப்படி பாடல்களையும், படங்களையும் மனப் பாக்கெட்டிலிருந்து சிதற விடுகிறீர்கள்?

மலைப்பாக இருக்கிறது.

இப்பேற்பட்ட ஜாம்பாவான்களின் தொடர்பு கிடைக்க போன ஜென்மத்தில் மட்டுமல்ல இந்த ஜென்மத்திலும் நிறைய புண்ணியம் செய்திருக்க வேண்டும். :cheer:

vasudevan31355
14th June 2014, 02:25 PM
வாங்கைய்யா (ஓய்வு பெற்ற) வாத்யாரய்யா, என்னை தொடர்ந்து ஒருவர் அவமான படுத்தி கொண்டுள்ளார்.நானும் பொறுத்து, பயந்து ,பம்மி ,நடுங்கி கொண்டுள்ளேன்.வந்து தட்டி கேளுங்கள் இந்த அநீதியை.

ஆ..........ல்.

mr_karthik
14th June 2014, 02:25 PM
கார்த்திக் சார்
NVR pictures எடுப்பார் கை பிள்ளை என்று ஒரு படம் 1975 காலகட்டத்தில் வெளி வந்தது
கே.விஜயன் direction
ஜெய் நிர்மலா ஸ்ரீகாந்த் பானுமதி அம்மா நடித்து இருப்பார்கள்
ஸ்ரீனிவாசன் (MB ) மியூசிக் தான் என்று நினவு
ஜேசு சுசீலா காம்போ "பொன் மயங்கும் பூ மணக்கும் கன்னி பாவை "
சுசீலா ஒரு மாதிரி பேஸ் வாய்ஸ் இல் பாடுவார்
இந்த பாடலில் நிம்மி வெரி cute

டியர் கிருஷ்ணாஜி,

முரசு சேனல் தயவில் இந்தப்பாடல் தற்போது காணக்கிடைக்கிறது 'பொன்னும் மயங்கும் பூவும் மயங்கும்' பாடலில் ஜெய்சங்கர் நிர்மலா ஜோடியைப்பர்த்து பொறாமைப்படும் இன்னொரு நடிகை யார். பார்த்தால் கொஞ்சம் பிரமீளா சாயலில் இருக்கிறார். பேண்ட்-ஷர்ட்டில் ரொம்ப கியூட்டாக இருப்பார். நிர்மலாவும் பிங்க் கலர் ட்ரெஸ்ஸில் அட்டகாசம். ஜெய் புல் சூட்டில், சொந்த முடியில் அழகு. (பாடலை விட்டு விட்டு நடிகர்களை சொல்லிக் கொண்டிருக்கிறேனோ).

chinnakkannan
14th June 2014, 02:25 PM
காலையில் ஷாப்பிங்க்.. வெளியே வெய்யில் காரினுள்..”இளமை நாட்டிய சாலை... அழகான வாணி(?) மெலடி டபக்கென்று டிஎம் எஸ் வைகை நதி பெருகி வர...

அப்புறம் இந்த பனைமரம் தென்னை மரம் வாழை மரம் என்ற பாட்டு மனதில் ரீங்கரித்துக் கொண்டிருக்கிறது..இசைக்களஞ்சியத்தின் போது கேட்ட்து..என்ன படம் பின் விவரம் எதிர்பார்க்காலாமா..

vasudevan31355
14th June 2014, 02:26 PM
முதல் முதல் திருடும் காரணத்தால் முழுசாய் திருட மறந்து விட்டேன்.
.

Excellent! உன்னுள் நான்... என்னுள் நீ

chinnakkannan
14th June 2014, 02:27 PM
கார்த்திக் சார். ஐ திங்க் விதுபாலா? ( நேரம் இரவு நேரம்..கறுப்பு வெள்ளைக் கட்டழகி :) )

chinnakkannan
14th June 2014, 02:29 PM
ஜானிகியில் - நினைத்தால் போதும் பாடுவேன்..ரொம்ப்ப பிடிக்கும்

vasudevan31355
14th June 2014, 02:29 PM
டியர் கிருஷ்ணாஜி,

முரசு சேனல் தயவில் இந்தப்பாடல் தற்போது காணக்கிடைக்கிறது 'பொன்னும் மயங்கும் பூவும் மயங்கும்' பாடலில் ஜெய்சங்கர் நிர்மலா ஜோடியைப்பர்த்து பொறாமைப்படும் இன்னொரு நடிகை யார். பார்த்தால் கொஞ்சம் பிரமீளா சாயலில் இருக்கிறார். பேண்ட்-ஷர்ட்டில் ரொம்ப கியூட்டாக இருப்பார். நிர்மலாவும் பிங்க் கலர் ட்ரெஸ்ஸில் அட்டகாசம். ஜெய் புல் சூட்டில், சொந்த முடியில் அழகு. (பாடலை விட்டு விட்டு நடிகர்களை சொல்லிக் கொண்டிருக்கிறேனோ).

கார்த்திக் சார்!

வடு மாறவில்லை என்று நினைக்கிறேன். கவலை வேண்டாம்! நமக்கு இங்கு முழு சுதந்திரம் உண்டு. நமக்கு நாமே ராஜாக்கள்.

vasudevan31355
14th June 2014, 02:34 PM
டியர் கிருஷ்ணாஜி,

முரசு சேனல் தயவில் இந்தப்பாடல் தற்போது காணக்கிடைக்கிறது 'பொன்னும் மயங்கும் பூவும் மயங்கும்' பாடலில் ஜெய்சங்கர் நிர்மலா ஜோடியைப்பர்த்து பொறாமைப்படும் இன்னொரு நடிகை யார். பார்த்தால் கொஞ்சம் பிரமீளா சாயலில் இருக்கிறார். பேண்ட்-ஷர்ட்டில் ரொம்ப கியூட்டாக இருப்பார். நிர்மலாவும் பிங்க் கலர் ட்ரெஸ்ஸில் அட்டகாசம். ஜெய் புல் சூட்டில், சொந்த முடியில் அழகு. (பாடலை விட்டு விட்டு நடிகர்களை சொல்லிக் கொண்டிருக்கிறேனோ).

கார்த்திக் சார்,

நீங்கள் குறிப்பிட்ட அந்த பொறாமைப் படும் நடிகை 'புது வெள்ளம்' கன்னட மஞ்சுளா.

vasudevan31355
14th June 2014, 02:37 PM
கார்த்திக் சார். ஐ திங்க் விதுபாலா? ( நேரம் இரவு நேரம்..கறுப்பு வெள்ளைக் கட்டழகி :) )

சின்னக் கண்ணன் சார்!

நடிகைகளுக்கு பட்டம் கொடுப்பதில் தங்களை மிஞ்ச எவரும் இல்லை.

Richardsof
14th June 2014, 02:38 PM
KANNADA MANJULA IN PUTHUVELLAM
http://youtu.be/uVYfOScMMSw

gkrishna
14th June 2014, 02:41 PM
இளமை நாட்டிய சாலை
tms ஜானகி காம்போ கல்யாணமாம் கல்யாணம்

Richardsof
14th June 2014, 02:42 PM
VIDHUBALA - TODAY
http://i57.tinypic.com/23rqxah.jpg

vasudevan31355
14th June 2014, 02:44 PM
காலையில் ஷாப்பிங்க்.. வெளியே வெய்யில் காரினுள்..”இளமை நாட்டிய சாலை... அழகான வாணி(?) மெலடி டபக்கென்று டிஎம் எஸ் வைகை நதி பெருகி வர...

அப்புறம் இந்த பனைமரம் தென்னை மரம் வாழை மரம் என்ற பாட்டு மனதில் ரீங்கரித்துக் கொண்டிருக்கிறது..இசைக்களஞ்சியத்தின் போது கேட்ட்து..என்ன படம் பின் விவரம் எதிர்பார்க்காலாமா..

சின்னக் கண்ணன் சார்!

http://sim01.in.com/62/ee3aaf590536ff977b82cbc3dc7f3dff_pt_xl.jpg

1969-இல் வெளிவந்த சரோஜாதேவி நடித்த 'குலவிளக்கு' படத்தில் தான் 'பனைமரம், தென்னை மரம் வாழைமரம்' பாடல். எனக்கும் ரொம்ப விருப்பமான பாடல்.

இயக்கம் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன். மாமா இப்படத்திற்கு இசை. மரங்களை வைத்தே மனிதனின் குணத்தை விவரிக்கும் அற்புத வரிகள். simply superb

mr_karthik
14th June 2014, 02:48 PM
பதிலுக்கு பதில்

1972-ல் வந்த ஒரு கௌபாய் சொதப்பல் வண்ணப்படம். ஏ.வி.எம்.ராஜன் கௌபாய் உடையில். விஜயகுமாரி இப்படத்துக்கு நாயகியாம், முத்துராமன் வில்லனாம். மொத்தத்தில் நட்சத்திர தேர்விலேயே தோல்வி.

இப்படத்தில் ஒரு பாடல். எஸ்.எம்.சுப்பையா நாயுடு இசையில் டி.எம்.எஸ். ஐயா பாடியது. 'ஆராதனா'வுக்கு அப்புறம், சிவகாமியின் செல்வனுக்கு முன் வந்தது. ரயிலில் பயணம் செய்துகொண்டிருக்கும் விஜயகுமாரியைத் தொடர்ந்து ராஜன் குதிரையில் பாடிக்கொண்டு போவார். ஜீப்பில் போனால் ரோட்டில் மட்டுமே போக முடியும். குதிரைதானே. இஷ்டத்துக்கு ரயில் போகும் வழியில் காடுமேடெல்லாம் போகும்.

அவள் ஜாதி பூவென சிரித்தாள்
ஒரு பாதிப்பார்வையில் அழைத்தாள்
அவள் பார்வையில் ஆயிரம் பாடல்
அந்தப்பாடலில் எத்தனை ஊடல்

இது பாலன் பிக்சர்ஸ் படம், எம்.ஆர்.ஆர்.வாசு, கே.கண்ணன் எல்லாம் இருப்பார்கள்.

gkrishna
14th June 2014, 02:51 PM
கார்த்தி சார்
புது வெள்ளம் கன்னட மஞ்சுளா
திருநெல்வேலி பக்கத்தில் அவிச்ச பனகிழங்கு என்று சொல்லுவார்கள்
அது போல் இருப்பார்
1975 கால கட்டத்தில் கர்நாடகாவில் இருந்து பொங்கி வந்த புதுவெள்ளம்
உண்மையில் அவர் "ராஜா வீடு கன்னுகுட்டி" தான்
அப்புறம் "துளி துளி துளி மழைத்துளி" பாடலில் ஒரு வரி வரும்
"என்னை வாட்டுது வாலிப விரசம் அது நீ கை கொண்டு அணைதால் குறையும் " என்று பாடும் போது ஒரு நெளி நெளிவார் பாருங்க

gkrishna
14th June 2014, 02:58 PM
எஸ்வி சார்
இந்த விது பாலா போட்டோ எங்கே பிடிசீ ங்க
சூப்பர்
இவங்க அப்பா ஒரு magicman என்று நினவு
இவங்க நடித்து எங்கம்மா சபதம் என்று ஒரு படம்
விஜய் பாஸ்கர் இசை
முத்துராமன் விது பாலா ஜோடி
சிவகுமார் ஜெயசித்ரா ஜோடி
tms குரலில் "வா இளமை அழைக்கின்றது" ஒரு பாடல் உண்டு
அப்புறம்
"அன்பு மேகமே இங்கு ஓடி வா எந்தன் துணையை அழைத்து வா
அர்த்த ராத்ரி சொன்ன செய்தியை எந்தன் நினைவில் நிறுத்தி வா "
சூப்பர் பாலா வாணி காம்போ
அதிலும் அந்த ராத்ரி என்ற வார்த்தையை பாலா உச்சரிக்கும் போது

vasudevan31355
14th June 2014, 03:00 PM
கிருஷ்ணா சார்,

'கல்யாணமாம் கல்யாண' த்தில் நம் ராட்சசி பாடகர் திலகத்துடன் சேர்ந்து பாடும் 'கவிதை நான் கவிஞன் நீ' ...பாடல். பைத்தியம் சார் இந்தப் பாடலின் மீது எனக்கு.

விஜயபாஸ்கர் அசத்தியிருப்பாரே!

லாலாலலா....லாலாலலா....லாலாலலா

கவிதை நான் கவிஞன் நீ
கலைகள் நான் ரசிகன் நீ
கனிகள் நான் பறவை நீ
கல்யாணம் யாரோடு நடந்தாலென்ன

கேட்டதுண்டு பலவகைக் காதல்
பார்த்ததில்லை ஏழை என் வாழ்வில்

கேட்டதுண்டு பலவகைக் காதல்
பார்த்ததில்லை ஏழை என் வாழ்வில்

என்ன வேண்டும் நான் தருவேனே
என்னை உறவாக நினைந்தால் என்ன

கவிதை நான் கவிஞன் நீ

மஞ்சள் வானம் மங்கள நிலவு
கொஞ்சும் பொழுது ஆயிரம் கனவு

மஞ்சள் வானம் மங்கள நிலவு
கொஞ்சும் பொழுது ஆயிரம் கனவு

மஞ்சம் இங்கே
வஞ்சியும் இங்கே
மஞ்சம் இங்கே
வஞ்சியும் இங்கே
நெஞ்சம் உடலோடு கலந்தாலென்ன

கவிதை நான் கவிஞன் நீ

பச்சைத் தோட்டம் பாவை உன் மேனி
பாடிப் பறக்கும் நான் ஒரு தேனி

அச்சம் மறந்தேன் (அஹ்) (என்ன ஒரு அலட்சிய வெட்டு இந்த ராட்சஸி யிடம் )
நாணமும் மறந்தேன்
அந்த உலகங்கள்
பிறந்தாலென்ன

மறக்க முடியமா என் பாட்டுத் தலைவியை?


http://www.youtube.com/watch?v=qYdgjQMB9k4&feature=player_detailpage

gkrishna
14th June 2014, 03:01 PM
கல்யாண சொர்கத்தின் ரதம் வந்தது
கண்ணீரில் நீ சொன்ன கதை வந்தது
பொன்வண்ண மேகங்கள் பேர் சொன்னதால்
பூமாலை நான் சூடும் நாள் வந்ததா
நான் நீ அன்றோ நீ நான் அன்றோ
எனது மயக்கம் தெளிந்ததஆ

vasudevan31355
14th June 2014, 03:05 PM
சின்னக் கண்ணன் சார் விதுபாலாவைக் கருப்பு வெள்ளை கட்டழகி என்றால் கிருஷ்ணாவோ அவிச்ச பனங்கிழங்கு என்கிறார்.

யாரங்கே! முடியல்ல! பி.எஸ்.வீரப்பவைக் கூப்பிடு.

gkrishna
14th June 2014, 03:06 PM
வாசு சார்
நீங்கள் சொன்ன பாட்டு ரொம்ப நாளாக தேடிட்டு இருந்தேன் சார்
ராட்சசி தான்
கல்யாணமாம் கல்யாணமாம் கொஞ்சம் பட்டிகடா பட்டணம ஜாடை உண்டே இல்லையா சார்
பாலாவின்
"காலம் பொன்னானது
கடமை கண்னானது
வாழ்வு என்னாவது "
என்று கூட ஒரு பாடல் வரும்

vasudevan31355
14th June 2014, 03:06 PM
பதிலுக்கு பதில்

விஜயகுமாரி இப்படத்துக்கு நாயகியாம்.

கார்த்திக் சார்,

இதிலேயும் கூட ஒத்துப் போகிறோமே!

gkrishna
14th June 2014, 03:08 PM
சாரி வாசு சார்
அது ஒரு flowvil வந்த வார்த்தை
மன்னித்து விடுங்கள்

gkrishna
14th June 2014, 03:11 PM
கர்ணனின் காலம் வெல்லும் படத்திலும் ஜெய் சங்கர் ஜோடி விஜயகுமாரி தானே சார்
"என்னங்க சம்பந்தி எப்போ நம்ம சம்பந்தம "
"புருசன் வீடு போய் புள்ளையை பெத்த பின்னாலே "
tms சுசீலா காம்போ MD ஷங்கர் கணேஷ் என்று நினவு

vasudevan31355
14th June 2014, 03:16 PM
கார்த்திக் சார்,

'பதிலுக்கு பதில்' படத்தில்

இந்த லட்சணத்தில் முத்துராமன் வேறு பிளே-பாய் ரோலில் 'ஏழெட்டுப் பெண்கள் எந்தன் பக்கம்' என்று ஆட்டம் வேறு போடுவார்.

இன்னொன்று. இந்தப் படத்தை அப்போது நான் பார்க்கும் போது முத்துராமன் குட்டி பத்மினியை ரேப் செய்வது போன்ற காட்சி (ரொம்ப மோசமாய் இருக்கும்) எப்படியோ சென்சாரில் தப்பித்து காட்சிக்கு வந்து விட்டது.

அப்போது எங்கள் இளைஞர் வட்டத்தில் அதுபற்றித்தான் பரபாரப்பாக பேசிக் கொண்டு இருப்பார்கள்.

ஆனால் இப்போது டிவிடியில் பார்த்த போது அந்தக் காட்சி இல்லையென்று நண்பன் பரிதாபமாகச் சொன்னது பாவமாய் இருந்தது.
நம்புங்கள் கார்த்திக் சார். நண்பன்தான் சொன்னான்.

சரி! முத்துராமனின் கூத்தைப் பார்ப்போம்.


http://www.youtube.com/watch?v=K6BG05uMXHk&feature=player_detailpage

gkrishna
14th June 2014, 03:19 PM
தலை வாசு சார்
1979 தீவாளி ரிலீஸ் என்று நினைவு
"போர்ட்டர் பொன்னுசாமி " என்று ஒரு படம்
மாவீரன் ஜேப்பியார் (இப்ப கல்வி தந்தை) films
தேங்காய் மற்றும் வடிவு ஜோடி என்று நினவு
பாலா வித் ஈஸ்வரி காம்போவில் ஒரு பாட்டு வரும்
"அம்மம்மா இது என்னம்மா ஆரம்பமா
ஆசைக்கும் இதழ் ஓசைக்கும் ஆரம்பமா ஆனந்தமா "
ராட்சசி ஒரு சிரிப்பு சிரிப்பா பாருங்க
நெல்லை ரத்னா theatre ஏ அலறிட்சுக்ங்க

vasudevan31355
14th June 2014, 03:19 PM
சாரி வாசு சார்
அது ஒரு flowvil வந்த வார்த்தை
மன்னித்து விடுங்கள்

சார்!

நேத்துதானே சொன்னேன்! சாரியெல்லாம் சொல்லக் கூடாதுன்னுட்டு. ரொம்ப ரசிச்சேன் சார் ரொம்ப ரசிச்சேன்.

'சபாஷ்! சரியான போட்டி' என்று சொல்ல வீரப்பாவை அழைத்தேன். நீங்க வேற!

ஜாலியாகத் தொடருங்கள்.

mr_karthik
14th June 2014, 03:20 PM
டியர் வினோத் சார்,

'துளி துளி துளி மழைத்துளி' (புதுவெள்ளம்) பாடல் வீடியோவுக்கும், விதுபாலாவின் இன்றைய நிழற்படத்துக்கும் நன்றி.

விதுபாலா ஒரே வானம் ஒரே பூமியில் ரவிக்குமார் ஜோடியாக வருவார். நியூயார்க்கில் ஒரு சூதாட்ட விடுதியில் வேலை செய்வார். ஜெய்சங்கர் ஜோடியாக 'ராசி நல்ல ராசி' படத்தில் நடித்திருப்பார்.

மேடை மேஜிக் ஷோக்களில் தந்தையுடன் பங்குபெற்றுள்ளார். சென்னையில் நானே நேரில் பார்த்திருக்கிறேன். மேடையிலும் பேண்ட் கோட் அணிந்து அழகாக இருப்பார்.

கன்னட மஞ்சுளா ஜெய்யுடன் கலைஞரின் 'காலம் பதில் சொல்லும்' படத்திலும் நடித்திருந்தார்.

gkrishna
14th June 2014, 03:26 PM
பதிலுக்கு பதில்
என்ன கொடுமை வாசு?

gkrishna
14th June 2014, 03:27 PM
நீங்க யோககாரர் வாசு
முத்துராமன் குட்டி பத்மினி பற்றி சொன்னேன்