View Full Version : Nadigar Thilagam Sivaji Ganesan Part 14
Pages :
1
2
3
4
5
6
7
8
9
10
[
11]
12
13
14
15
16
sivaa
29th October 2014, 08:06 PM
நடிகர் பாக்யராஜ் அவர்களின் திருமணத்தில்
http://i157.photobucket.com/albums/t55/sivaa14/10418504_677221365718136_6582622216657349809_n_zps 5511bf09.jpg (http://s157.photobucket.com/user/sivaa14/media/10418504_677221365718136_6582622216657349809_n_zps 5511bf09.jpg.html)
KCSHEKAR
29th October 2014, 08:49 PM
வாலி பிறந்தநாளையொட்டி வாலி எழுதிய நடிகர்திலகத்தைப் பற்றிய கவிதை மற்றும் பாரத விலாஸ் பாடல் இணைப்பை sivajiperavai முகநூலில் பதிவிட்டிருந்தேன். அதற்கு, பத்திரிகையாளர் திரு.சுதாங்கன் - நடிகர்திலகம் - வாலி காம்பினேஷனில் 15 முத்தான பாடல் இணைப்புகளை அளித்துள்ளார். அதனைக் காண ............ முகநூல் இணைப்பு.........
https://www.facebook.com/sivaji.peravai/posts/543163879148422?comment_id=543211902476953&offset=0&total_comments=16¬if_t=share_comment
RAGHAVENDRA
29th October 2014, 10:13 PM
நெல்லை மாவட்ட சிவாஜி மன்றம் சார்பில் வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு நாள் சமீபத்தில் அனுசரிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் நெல்லை மாவட்ட சிவாஜி மன்ற நிர்வாகி திரு செல்வராஜ் உள்ளிட்ட சிவாஜி ரசிகர்களும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.
https://fbcdn-sphotos-h-a.akamaihd.net/hphotos-ak-xap1/v/t1.0-9/10641258_813492138701460_1881407402503207940_n.jpg ?oh=8f4d4cfc07f9664b427c705927c3f0f3&oe=54DBD065&__gda__=1420576953_8454944b64bdea44f2bff1fb549d513 9
https://scontent-b-sin.xx.fbcdn.net/hphotos-xpa1/v/t1.0-9/1012083_813492142034793_6962621151603230882_n.jpg? oh=b511af208cd84e1053cd6d472316323a&oe=54F5D7A5
https://fbcdn-sphotos-e-a.akamaihd.net/hphotos-ak-xpa1/v/t1.0-9/1904190_813492165368124_8470635972310432566_n.jpg? oh=b8cbbc8f70522c433502d6238a459dc9&oe=54F87F5D&__gda__=1424077408_d674e69ff1e43432c4109338bbb3cb7 7
https://scontent-b-sin.xx.fbcdn.net/hphotos-xpf1/v/t1.0-9/10646618_813492145368126_562576455368136560_n.jpg? oh=ceef26db9b30042afaaf21c04f8258ee&oe=54AC15A9
https://scontent-b-sin.xx.fbcdn.net/hphotos-xap1/v/t1.0-9/10672359_813492148701459_70982973136015062_n.jpg?o h=c91ce36e8e544d70e1192cc93d949622&oe=54E5A270
https://fbcdn-sphotos-c-a.akamaihd.net/hphotos-ak-xap1/v/t1.0-9/1069836_813492188701455_5857282419378189756_n.jpg? oh=574d5667e7006a962dbca575eaf31571&oe=54E363DE&__gda__=1425152407_b29952ad3350cc4fe0e5009f789d81a 6
நிழற்படங்களுக்கு நன்றி திரு செல்வராஜ் அவர்கள், நெல்லை மாவட்ட சிவாஜி மன்றம்.
Gopal.s
30th October 2014, 07:08 AM
இந்த அஹிர் பைரவ் என்ற சக்ரவாகம் பக்தி ,அனுதாபம் மேலும் இரக்கம் போன்ற உணர்வுகளை மனதில் ஏற்படுத்த கூடிய ராகம் . சம்பூர்ண ராகம். 7 ஸ்வரங்களும் இடம் பெற்று இருக்கும் ராகம் .
உள்ளத்தில் நல்ல உள்ளம் ஆஹிர் பைரவ் (அ )சக்ரவாகம் பல்லவி மட்டுமே. சரணம் முழுக்க சரசாங்கி.
ஒரு வரியில் கதையை சொல்லும் கலை கண்ணதாசனுக்கு மட்டுமே சொந்தம்.
உதாரணங்கள்.
1)தாய்க்கு நீ மகனில்லை,தம்பிக்கு அண்ணனில்லை.ஊர்பழி ஏற்றாயடா. செஞ்சோற்று கடன் தீர்க்க சேராத இடம் சேர்ந்து வஞ்சத்தில் வீழ்ந்தாயடா.....
2)சிந்தையிலே நான் வளர்த்த கன்று ,சேர்ந்ததடி உன் வயிற்றில் இன்று.
3)கட்டிலுக்கு கடன் கொடுத்தாள் ,தொட்டிலுக்கு விலை கொடுத்தாள் .
Gopal.s
30th October 2014, 07:13 AM
வாலி பிறந்தநாளையொட்டி வாலி எழுதிய நடிகர்திலகத்தைப் பற்றிய கவிதை மற்றும் பாரத விலாஸ் பாடல் இணைப்பை sivajiperavai முகநூலில் பதிவிட்டிருந்தேன். அதற்கு, பத்திரிகையாளர் திரு.சுதாங்கன் - நடிகர்திலகம் - வாலி காம்பினேஷனில் 15 முத்தான பாடல் இணைப்புகளை அளித்துள்ளார். அதனைக் காண ............ முகநூல் இணைப்பு.........
https://www.facebook.com/sivaji.peravai/posts/543163879148422?comment_id=543211902476953&offset=0&total_comments=16¬if_t=share_comment
நான் மிக மிக மதிக்கும் திரை பாடல் கவிஞர்களில் மூவேந்தர்களில்(வாலி,கண்ணதாசன்,வைரமுத்து ) ,மிக முக்கியமான வாலி ஐயாவின் பிறந்த நாளில் ,உங்கள் அனைவருடனும் அன்னாரின் நினைவை பகிர்கிறேன்.
JamesFague
30th October 2014, 09:45 AM
Courtesy: Mr Harish
இமயம்
AvYj
ஐந்தடி உயரமே உள்ளவர். இந்த உயரக் குறைவை அவரைத் திரையில் கண்ட எவரும் உணரவில்லை. மாறாக ஒவ்வொரு படத்திலும் அவர் விஸ்வரூபம் எடுத்ததைத்தான் பார்த்திருக்கிறார்கள். கப்பலோட்டிய தமிழனில் யாருமே சிவாஜியைக் காணவில்லை; சிதம்பரம் பிள்ளையைத்தான் கண்டார்கள். கட்டபொம்மன் என்கிற குறுநில மன்னன் - வெள்ளையரை எதிர்த்தவன் - விடுதலைச் சரித்திரத்தின் சின்னமாக உருவானது, சிவாஜியால்தான். பாச மலரின் ராஜ சேகரன், அன்றைய முதலாளிகளுக்கு ஆதர்சம். வியட்நாம் வீடு நாடகத்தைப் பார்த்த ஜெமினி வாசன், கதறிக் கதறி அழுதாராம். அவர், இளமையும், அன்னையும், அவர் வாழ்க்கையில் முன்னுக்கு வரபட்ட சிரமங்களும் நாடகத்தின் ஊடே அவர் எண்ணத்திரையில் நிழலாடிக்கொண்டே இருந்திருக்கின்றன.
நாடக உலகின் பிதாமகர் டி.கே.ஷண்முகம், ஒளவையாராக நடித்துப் பெரும் புகழ் பெற்றவர்; கிழவியின் தோற்றம் வேண்டுமென்பதற்காக முன்னிரு பற்களைப் பிடுங்கிக் கொண்டவர் - ஒளவையாராய்க் கூன் போட்டுக் கூன் போட்டு கூன் அவரிடம் நிரந்தரமாகத் தங்கிவிட்டது. அவர் ஒரு நாடகம் பார்த்த பொழுது ராம பிரானின் அன்னையாக நடித்த நடிகையின் உணர்ச்சிகரமான நடிப்பில் மனத்தைப் பறி கொடுத்திருக்கிறார். நாடகம் முடிந்த பின் "யார் அந்த நடிகர்?' என்று கேட்டாராம். ""அவரைத் தெரியாதா? அவர் தான் வி.சி.கணேசன்'' என்று சொன்னார்களாம். அவர் தாம் நம்முடைய நடிகர் திலகம், சிவாஜி கணேசன்.
ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனியிலிருந்து வந்தவர்; சிறுவயதிலிருந்தே நாடகத்தில் பல்வேறு முகங்களையும் துறைகளையும் அநுபவ வாயிலாகக் கண்டவர்; மு.கருணாநிதி என்கிற காட்டாற்று வெள்ளம் வசனம் எழுதிய பராசக்தியின் கதாநாயகனாக அவர் ஆனது, விதி வசத்தால் என்று சொல்வதை விட, தமிழ்நாட்டின் அதிருஷ்டத்தால் என்றுதான் சொல்ல வேண்டும். "தென்றலைத் தீண்டியதில்லை தீயைத் தாண்டியிருக்கிறேன்'; "ஓடினாள் ஓடினாள் வாழ்க்கையின் ஓரத்துக்கே ஓடினாள்'; "அம்பாள் எப்போதடா பேசினாள் அறிவு கெட்டவனே' போன்ற நெருப்புப் பொறிகளைப் பொத்தி வைத்திருந்து கக்கியவர், சிவாஜி கணேசன். தமிழ்த் திரைப்பட உலகில் அன்றிலிருந்து ஒரு புது சகாப்தம் தொடங்கியது. குரலின் ஏற்ற இறக்கங்கள், உணர்ச்சியின் பாவத்தைப் பாதிக்காது இருக்க முடியும் என்று தமிழ் உலகிற்கு முதலில் மெய்ப்பித்தவர், சிவாஜி.
ஆரம்பத்தில் மிகை தவிர்த்த உணர்ச்சி வெளிப்பாடு அழுத்தமான வசனங்களின் உணர்வுத் ததும்பல்களை அடக்காமல் பார்த்துக்கொண்டது, அவரின் சாமர்த்தியம் என்றுதான் சொல்லவேண்டும்.
அவருடைய நடிப்பின் பிரிணாம வளர்ச்சியை மூன்று பிரிவாக நாம் பார்க்கலாம். முதலில் மிகை தவிர்த்த உணர்ச்சியுடன் கூடிய மிகை வசனங்கள், நடுவில் சற்றேமிகை கூடிய வசனங்கள் குறைந்த உணர்ச்சிகர நடிப்பு, பின்னால் மிகையும் உச்சரிப்பில் ஏற்றத்தாழ்வும் கூடிய உரத்த நடிப்பு. இந்தப் பரிணாம வளர்ச்சியைத் தமிழ்மக்கள் உன்னிப்பாகக் கவனித்து வந்த போதிலும் ஒவ்வொரு கட்டத்திலும் அவரின் ஆளுமைத் திறனை உண்மையாக ரசித்துப் பாராட்டினார்கள்.
இந்த நடிப்பு வளர்ச்சியில் நாம் சிவாஜியின் நடிப்பின் உச்சமாகப் பார்ப்பது நடுவில் வந்த காலக்கட்டத்தைத்தான். அப்போதுதான் சிவாஜி என்கிற குணச்சித்திர நடிகர், படிப்படியாக வளர்ச்சி பெற்று, தனக்கென்று ஓர் ஆளுமையையும் தனித்தன்மையையும் கொண்டு வலம் வரத் தொடங்கினார். கிட்டத்தட்ட ஒரு முரட்டுக் குதிரை போல் இருந்த இவரை ஒரு வட்டம் போட்டு அந்த வட்டத்தை மிகாமல், வெளிவராமல் திறமையை வெளிப்படுத்திய இயக்குநர் ஒருவர் இருந்தார். அவர்தான், பீம்சிங். இவர் கதை சொல்லும் பாணியே தனி. கதாபாத்திரங்களைப் பழங்காலக் கலைப் பொருட்களாக உலா விடுவது இவரின் பிரத்யேக பாணி. இந்தியக் கலாசாரத்தின் மரபு சார்ந்த படிமானங்கள் அழுத்தமாய்ப் படிந்திருந்த பீம்சிங், அதையொட்டியே திரைப்படங்கள் எடுத்தார். பாசமலர், பாகப் பிரிவினை, படித்தால் மட்டும் போதுமா, பார்த்தால் பசி தீரும் போன்ற அழுத்தமான திரைக் கதைகளில் இயல்பாக ஒன்றிப் பொருந்தினார், சிவாஜி கணேசன்.
ஒவ்வொரு படத்திலும் ஒவ்வொரு விதமான கதாபாத்திரம் - எல்லாமே சிவாஜிக்கு வடிவமைக்கப்பட்டது மாதிரி. படிக்காத மேதையில் விசுவாசமான வேலைக்காரன்; எஸ்.வி.ரங்காராவின் குணச்சித்திர மிகை தவிர்த்த நடிப்புக்கு ஈடு கொடுத்து நடித்திருந்தார் சிவாஜிகணேசன். அவரின் உணர்ச்சி பூர்மான நடிப்பில் மிகை இழையைச் சற்றும் வெளிக்காட்டாத சாதுர்யமான திரைக்கதை அமைப்பின் சாமர்த்தியம், பீம்சிங்கிற்கு உரியது. இசை சேகரத்தின் அந்நாள் மன்னர்கள் விஸ்வநாதன்-ராமமூர்த்தி, தத்துவ தரிசனம் கண்ட பாடலாசிரியர் கண்ணதாசன் போன்றவர்கள் இந்தப் படங்களுக்கு மெருகு கூட்டி, திரைப்படங்களைக் காவிய அந்தஸ்துக்கு உயர்த்தினார்கள்.
பாசமலரில் முரட்டுப் பாசம் காட்டும் அண்ணன் வேடம் சிவாஜிக்கு. அடர்த்தியான புருவங்கள், மெல்லிய மீசை, தங்கச் சங்கிலி கடிகாரம், சூட்டுடன் ராஜநடை நடந்த சிவாஜியின் நடிப்பில் மனத்தைப் பறிகொடுத்தது தமிழ்ச் சமூகம். ராஜா போல் வாழ்ந்த மனிதன், தங்கைக்காகச் சகலத்தையும் தியாகம் செய்துவிட்டுக் கடைசியில் பிச்சைக்காரன் போல் கண்களையும் இழந்து "கை வீசம்மா கைவீசு, கடைக்குப் போகலாம் கை வீசு' என்று அழும்போது பார்த்த மக்கள் அவ்வளவு பேரும் சேர்ந்து அழுதார்கள்.
தூக்குத் தூக்கியிலிருந்தும், கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரியிலிருந்தும் சிவாஜி என்கிற குணச்சித்திர நடிகர் தனித்த ஆளுமையுடன் பரிணமித்தது - பரிமளித்தது இப்படித்தான். கம்பீரமானவன், முரட்டுத் தனமாக அன்பு செலுத்துபவன், பாசத்துக்காக உயிரைத் தியாகம் செய்யும் உன்னத ஆதர்ச மனிதன், தமிழ் மண்ணில் வலம் வந்தது இப்படித்தான். இவனுக்குத் தெரிந்ததெல்லாம் அன்பு செலுத்துவதும் அன்புக்காக ஏங்குவதும். இப்படி ஒரு காலத்தின் பரிசோதனையைக் கடந்த திரைப்பட ஃபார்முலாவை முதன் முதலில் வெற்றிகரமாகப் பரிசோதித்தவர், சிவாஜிகணேசன்.
படித்தால் மட்டும் போதுமா, எதையும் வெளிப்படையாகச் செய்யும் ஓர் ஆளுமை நிறைந்த மனிதனுக்கும் (உஷ்ற்ழ்ர்ஸ்ங்ய்ற்) எல்லாவற்றையும் ரகசியமாகப் பூட்டி வைக்கும் (ஐய்ற்ழ்ர்ஸ்ங்ழ்ற்) மனிதனுக்கும் இடையில் நிகழும் போராட்டத்தைச் சித்திரிக்கும் படம், இது.
பீம்சிங்கின் பா வரிசையை அடுத்து வந்த படங்கள் எல்லாமே சிவாஜியின் ஆளுமை சார்ந்த மிகை நடிப்பை வெளிக்கொணருவதிலேயே குறியாய் இருந்தன.
உடல் பருமன் சற்றிளைத்த சிவாஜி, முரட்டு நல்லவன் இமேஜிலிருந்து நல்லவன் இமேஜிற்கு வளர்ந்திருந்த சமயம். பந்துலுவின் கர்ணனையும் பி.எஸ்.வீரப்பாவின் ஆலய மணியையும் கூட இதில் சேர்க்க முடியாது. கே.எஸ்.கோபாலகிருஷ்ணனின் கை கொடுத்த தெய்வத்தை ஓரளவு சேர்க்கலாம். பின்னர் வந்த ஸ்ரீதரின் படங்கள், எங்க மாமா, தங்கைக்காக போன்ற படங்கள் எல்லாமே சிவாஜியின் நடிப்பை நம்பியல்லாது இமேஜை நம்பி உருவாக்கப்பட்ட படங்கள். இவற்றில் அன்றிருந்த சந்தை எதிர்பார்ப்பிற்கு ஏற்ப நடித்திருந்தார் சிவாஜி என்று சொல்லலாமே ஒழிய அந்தந்தக் கதாபாத்திரங்களில் அவர் முழுமனதோடு ஈடுபாட்டோடு நடித்திருந்தாரா என்பது கேள்விக் குறியே. தெய்வ மகன், ஆஸ்காருக்குச் சென்றது. ஒரே நடிகர் மூன்று வெவ்வேறு பாத்திரங்களில் நடித்திருந்தது குறித்துத்தான் அப்போது பரபரப்பாகப் பேசப் பட்டதேயொழிய நடிப்பு, குறிப்பாக மூத்த மகன் கதாபாத்திரத்தின் நடிப்பு, வெகுவாகச் சிலாகிக்கப்படவில்லை.
இதுதான் சிவாஜியின் தோல்வியின் ஆரம்பம் என்று சொல்லலாம். குணச்சித்திரம் மாறி ஆளுமையும் நடிப்பும் என்று ஆகிக் கடைசியில் ஆளுமை மட்டுமே கோலோச்சியது தான், சிவாஜியின் நடிப்பை விரும்பிப் பார்த்தவர்களை அபிமானத்தால் சகித்துக்கொள்ள வேண்டிய நிலைக்குத் தள்ளியது. இதற்கு ஏற்கெனவே கூறியிருந்தபடி சிவாஜியைச் சுற்றிப் பின்னப்பட்ட மாய இமேஜ் வலைதான் காரணம் என்று நாம் பெருமூச்சு விட வேண்டியிருக்கிறது.
இந்த மிகை ஆளுமையின் நடுவிலும் அவ்வப்போது சில நட்சத்திரச் சிதறல்களை அள்ளி வீசாமல் இல்லை. ராமன் எத்தனை ராமனடியில் வீரசிவாஜியாக வசனம்பேசி விட்டுக் கடைசியில் வாளைக் கையில் ஏந்தி ஒரு நடை நடப்பார். சாம்ராஜ்யக் கனவைக் கண்களில் ஏந்திக் கனவில் மிதப்பது போன்ற நடை. உண்மையில் வீரசிவாஜி அதுபோல்தான் நடந்திருப்பார். வியட்நாம் வீட்டின் பிரஸ்டிஜ் பத்மநாபன் வேடத்திற்காக சிம்ஸன் நாராயண சாமி ஐயரைப்போய் சிவாஜி உன்னிப்பாகக் கவனித்தார் என்று சொல்கிறார்கள். அவர் காட்டிய முகபாவங்களும் நடையுடை பாவனைகளும் பேசிய வசனங்களும் ஓர் உண்மையான பிராமண கனவானைக் கண்களில் கொண்டு நிறுத்தியது. கௌரவத்தின் அநாசார வக்கீல்-சத்தத்தையும் மீறி அவரின் கம்பீர நடிப்பு, நம் உள்ளத்தில் நிற்கிறது. திருநாவுக்கரசராகத் திருவருட்செல்வரில் நாம் கண்டது ஒரு முதிய தவயோகியின் அருள் கனிந்த முகத்தை. தங்கப் பதக்கத்தில் நேர்மையும் கம்பீரமும் கண்டிப்பும் மிக்க போலீஸ் அதிகாரியைக் கண்டோம். அதில் பதக்கம் வாங்கக் கடைசியில் அவர் நடக்கும் நடை, உண்மையான போலீஸ் அதிகாரியைக் கூடப் பொருமைகொள்ளச் செய்யும்.
சிவாஜி மறைந்துவிட்டார். குழந்தை போன்றவர். உண்மையான தேசியவாதி.
படிப்பு அதிகமில்லாத, உருவ லட்சணங் களும் சுமாராக உள்ள ஒரு மனிதர், தம் நடிப்புத் திறமையை மட்டும் வைத்து நம்மையெல்லாம் நாற்பது ஆண்டுகளுக்குக் கட்டிப் போட்டிருந்தார்.
நாடகக் கலை மிகுதியும் வளராத தமிழ்ச் சூழலில் சினிமா, நாடகத்தைக் கபளீகரம் செய்திருந்த நிலையில், ஓர் உண்மையான நாடகக் கலைஞன், ஒப்பாரும் மிக்காரும் இல்லாமல் கோலோச்சியது ஆச்சர்யம் தான்
அவரை அபிமானிகள், "இமயம்' என்கிறார்கள். என்ன தவறு?
JamesFague
30th October 2014, 09:51 AM
from Mr Murali Srinivas Old Post
இன்று அக்டோபர் 30. 31 வருடங்களுக்கு முன்பு [1978] இதே நாளில் பைலட் பிரேம்நாத் வெளியானது. ஒரு அந்நிய நாட்டில் நூறு அல்ல இருநூறு அல்ல ஆயிரம் நாட்கள் ! ஆம் இலங்கையில் 1080 நாட்கள் ஓடிய ஒரே படம் பைலட் பிரேம்நாத்.
இலங்கையில் பைலட் பிரேம்நாத் ஓடிய அரங்குகளும் நாட்களும் பட்டியல்
யாழ்பாணம் - வின்சர் - 222 நாட்கள்
கொழும்பு - கேப்பிட்டல் -189 நாட்கள்
கொழும்பு - ராஜேஸ்வரா - 176 நாட்கள்
கொழும்பு - சவோய் - 189 நாட்கள்
இதற்கு பிறகு ஷிப்டிங் முறையில் பைலட் பிரேம்நாத் ஓடிய நாட்கள் - 1080.
கடல் கடந்து வேறொரு நாட்டிலே முதன் முதலாக திரைப்படங்கள் வெளி வர ஆரம்பித்த நாள் முதலாக இன்று வரை இந்த சாதனையை செய்த ஒரே நடிகன் நடிகர் திலகம் மட்டுமே.
சாதனைகளுக்கென்றே பிறந்த சரித்திர நாயகன் புகழ் வாழ்க.
JamesFague
30th October 2014, 09:59 AM
recap from the old post
சிவாஜி பற்றிய விகடன் கட்டுரையொன்று.....................
உலக அளவில் விருதுகள்!
சின்னராசு
அமெரிக்காவை அடுத்து சிவாஜிக்கு மிகப்பெரிய மரியாதையை தந்த நாடு பிரான்ஸ் என்று கூறலாம். பிரான்ஸ் நாடு சிவாஜிக்கு வழங்கிய ‘செவாலியே விருது’ மதிப்பில் மிக உயர்ந்தது. அதாவது ஆஸ்கர் விருதுக்கு இணையான மதிப்பு கொண்ட விருது. இந்த விருதை இதுவரை உலகில் நான்கு நடிகர்களுக்கே பிரான்ஸ் வழங்கியுள்ளது.
சிவாஜி நடித்த ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’ திரைப்படம் கெய்ரோவில் நடந்த ஆசிய, ஆப்பிரிக்கப் படவிழாவில் கலந்து கொண்டது. அந்த படவிழாவில் பங்கேற்க சிவாஜி, பத்மினி எல்லோரும் போயிருந்தார்கள்.
அந்தப் படவிழாவில் சிவாஜி ஆசிய, ஆப்பிரிக்க அளவில் சிறந்த நடிகராக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆசிய, ஆப்பிரிக்க கண்டங்கள் என எடுத்துக்கொள்ளும்பொழுது உலக மக்கள் தொகையில் முக்கால் பகுதி மக்கள் தொகை இந்த இரு கண்டங்களிலேயே அடங்கும்!
இந்தியாவும், சீனாவும் மட்டுமே பெரும் மக்கள் தொகையைக் கொண்ட நாடுகள், ஜப்பான், ரஷ்யா, ஹாங்காங்... போன்ற ஏராளமான நாடுகளுடன் ஆப்பிரிக்கா கண்டம் முழுவதும் உள்ள ஏராளமான நாடுகளும் இந்தப் படவிழாவில் பங்கு பெற்றவையாகும்.
இவ்வளவு பெரிய படவிழாவில் சிவாஜியை சிறந்த நடிகராக தேர்ந்தெடுத்தப் பின்னும் இந்திய அரசு வழங்கும் சிறந்த நடிகர் விருதை சிவாஜிக்கு தராமலேயே இருந்துவிட்டார்கள். காரணம் இந்திய அரசு சார்பான இந்த விருதில் அவ்வப்போது செல்வாக்கான மனிதர்களின் குறுக்கீடு இருந்து வந்ததேயாகும். ஆசிய, ஆப்பிரிக்க அளவில் சிறந்த நடிகர் விருது பெற்ற ஒருவருக்கு இதற்கு மேலும் நாம் விருது கொடுக்காமல் தாமதித்தால் அதனால் இந்திய விருதின் மரியாதை குறையும் என்பதையும் சம்பந்தப்பட்டவர்கள் யோசிக்கவேயில்லை.
ஆனால், சிவாஜியைப் பொருத்தவரையில் அவர் நடிப்புத் துறையில் நிறைகுடமாக இருந்ததால் விருதுகளைப் பற்றி எப்போதுமே கவலைப்பட்டதில்லை. அத்துடன் தனக்கு விருது தரப்படவில்லை என்பதை மனதில் குறையாக வைத்து பேசுவதுமில்லை. யாராவது வலிய அவரிடம் இது சம்பந்தமாக பேசி ‘‘உங்களுக்கு ஏன் இந்திய அரசின் விருது தராமலே இருந்துவிட்டார்கள்?’’ என கேட்கும்பொழுது அதற்கு சிவாஜி மிகப்பெருந்தன்மையாக பதில் கூறுயிருக்கிறார்.
‘‘விருது தருபவர்கள் அந்த விருதுக்கென்று எதிர்ப்பார்க்கும் தகுதிகள் நம்மிடம் இல்லாது இருக்கலாம்’’ என்றே சிவாஜி பதில் அளித்திருக்கிறார்.
ஆசிய, ஆப்பிரிக்க சிறந்த நடிகர் விருது சிவாஜிக்கு கிடைத்தபின் அமெரிக்க அரசு சிவாஜியை தங்கள் நாட்டிற்கு அழைத்து கவுரவிக்க விரும்பியது. எனவே ‘சிவாஜி தங்கள் நாட்டிற்கு வருகை தர வேண்டும்’ என அமெரிக்க அரசு அழைப்பு விடுத்தது. இதுபோன்ற ஒரு அழைப்பு அதுவரை இந்திய நடிகர்கள் யாருக்கும் கிடைத்ததில்லை.
சிவாஜியும் அந்த அழைப்பை கவுரவித்து அமெரிக்கா புறப்பட்டார். அமெரிக்காவில் அவருக்கு என்னென்ன நிகழ்ச்சிகள் இருக்கும். அங்கே முக்கியமானவர்கள் யார் யாரைச் சந்திக்க வேண்டியதிருக்கும் என்பதையெல்லாம் முன்கூட்டி அவர் தெரிந்து கொண்டதால் அதற்கேற்ப தயாராக அமெரிக்கா புறப்பட்டார்.
அமெரிக்காவில் சந்திக்கும் முக்கிய மனிதர்களுக்கு நமது நாட்டு சார்பாக கொடுக்க வேண்டிய பரிசுப் பொருட்கள் எல்லாம் எடுத்துச் சென்றதுடன் அங்கே குறிப்பிட்ட நிகழ்ச்சிகளில் திரையிட்டுக் காட்டுவதற்காக தான் நடித்த பல படங்களில் இருந்து முக்கியக் காட்சிகளின் தொகுப்பையும் கையில் கொண்டு சென்றார்.
ஆனால் இதற்குக் கூட யாரும் குறுக்கீடாக இருந்தார்களோ என்னவோ? சிவாஜி அமெரிக்கா போய் இறங்கியதும் அங்கே திரையிட கையில் தன்னுடன் எடுத்துவந்த அந்தப் படப்பெட்டி மட்டும் காணாமல் போய்விட்டது. அந்த சமயத்தில் வீடியோ கேசட்டில் பதிவு செய்து எடுத்துச் செல்லும் வசதி வரவில்லை. அல்லது மூன்று நான்கு கேசட்டுகளை தன் கைப்பெட்டியிலேயே எடுத்துச் சென்றிருப்பார்.
சிவாஜி திட்டமிட்டபடி அமெரிக்காவில் முக்கிய பிரமுகர்களுக்கு தான் நடித்தப் படத்திலுள்ள அந்தக் குறிப்பிட்ட காட்சிகளை திரையிட்டுக் காட்டியிருந்திருப்பாரேயானால் அவருக்கு மேலும் வரவேற்பு கிடைத்திருந்திருக்கும். அமெரிக்கா போன்ற மேலை நாட்டினர் ஒருவருடைய திறமையை கண்டறியும்பொழுது, அதை இருட்டடிப்பு செய்ய வேண்டும் என எண்ணமாட்டார்கள். திறமையை மனதார பாராட்டுவதை தங்களுக்கு பெருமை என எண்ணுவார்கள்.
ஆனாலும் சிவாஜியின் நடிப்புத் திறமையை அங்கே உள்ளவர்கள் பார்க்கிற வாய்ப்பு கிடைக்காவிட்டாலும் அவர்கள் கேள்விப்பட்ட செய்திகளை வைத்து சிவாஜியின் மிகப்பெரிய ஆற்றலை நன்றாகவே புரிந்திருந்தார்கள். அதனால் அவர் கலந்துகொண்ட நிகழ்ச்சிகளில் எல்லாம் அவருக்கு சிறப்பான மரியாதை தந்தார்கள். சிவாஜி அமெரிக்கா சென்ற காலகட்டத்தில் அங்கே புகழ்பெற்ற நடிகர்களாக விளங்கிய மார்லன் பிராண்டோ, யூல் பிரின்னர், சார்லஸ் ஹாஸ்டன்... போன்ற பெரிய பெரிய நடிகர்கள் எல்லாம் சிவாஜியை வரவேற்கிற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அவரை கவுரவித்தார்கள்.
அப்போது ஹாலிவுட்டின் மிகப்பெரிய நடிகர்களாக இருந்த ஐந்து நடிகர்கள் சிவாஜியோடு படம் எடுக்க விரும்பி சிவாஜியை நடுவே அமரச்செய்து மற்றவர்கள் அவர் அருகே நின்று கொண்டும் சிவாஜி அமர்ந்திருந்த நாற்காலியில் கைப்பிடிகளில் அமர்ந்து கொண்டும் படம் எடுத்துக் கொண்டார்கள். சிவாஜி சில பெரிய நடிகர்களின் தனிப்பட்ட அழைப்பின் பெயரில் அவர்கள் இல்லங்களுக்கும் சென்றார். அவர்களில் குறிப்பிடத்தக்கவர் சார்லஸ் ஹாஸ்டன். இவர் உலக அளவில் பிரம்மாண்டமாக தயாரிக்கப்பட்ட ‘டென் கமான்மெண்ட்ஸ்’ படத்திலும் ‘பென்ஹர்’ படத்திலும் நடித்து ஆஸ்கர் விருது பெற்றவர்.
இவருடைய இல்லத்திற்கு சிவாஜி சென்றபொழுது சார்லஸ் ஹாஸ்டன் தம்பதிகள் அவரை வரவேற்றார்கள். சிவாஜி அப்போது சார்லஸ் ஹாஸ்டனின் துணைவியாருக்கு தமிழ்நாட்டுப் பட்டுப் புடவையை பரிசாகத் தந்தார். திருமதி சார்லஸ் ஹாஸ்டனுக்கு அந்தப் பரிசைப் பெற்றுக் கொண்டதில் பெரிய மகிழ்ச்சி! எனவே தங்கள் இல்லத்திற்கு வந்த விருந்திருனரான சிவாஜியை கவுரவிக்க அந்தப் பட்டுப் புடவையை அப்போதே உடுத்திக்கொள்ள விரும்பினார்.
ஆனால் அமெரிக்கப் பெண்மணியான அவருக்கு புடவைக் கட்டிய பழக்கமேயில்லை. எனவே இதை எப்படி உடுத்திக் கொள்வது என அவர் கேட்டபொழுது சிவாஜி புடவையின் முனையை இப்படி மடித்து இடுப்பில் சொருகி புடவையை சுற்றிக்கொள்ள வேண்டும் என்பதை நடித்துக் காட்டினார். ஆனால் திருமதி சார்லஸ் ஹாஸ்டனுக்கு அதைப் புரிந்துகொள்ள முடியவில்லை. எனவே சிவாஜியிடம், ‘‘இதை நான் உடுத்திக் கொள்ள எனக்கு உதவி செய்யுங்கள்’’ எனக் கேட்டுக் கொண்டார்.
சிவாஜிக்கு இதைக் கேட்டு சற்று திகைப்பு! ஒரு பெண்மணி புடவையை உடுத்திக் கொள்ள நாம் எப்படி உதவ முடியும்? என்று தாமதித்தார். ஆனால் சார்லஸ் ஹாஸ்ட்அனோ ‘‘என் மனைவிக்கு நீங்கள் உதவ வேண்டும்’’ என வற்புறுத்தி கேட்கலானார். அதன்பிறகு சிவாஜி திருமதி சார்லஸ் ஹாஸ்டன் புடவை அணிந்து கொள்ள உதவினார்.. இந்த நிகழ்ச்சிகள் எல்லாம் சிவாஜி என்ற மாபெரும் கலைஞரிடம் அவர்களுக்கிருந்த மரியாதையை வெளிப்படுத்துவதாக அமைந்தது.
அமெரிக்காவில் கலையுலகம் சம்பந்தப்பட்டவர்கள் மட்டுமல்லாமல் மற்றும் உள்ள முக்கிய மனிதர்களும் சிவாஜியை தங்கள் விருந்தினராக அழைத்துப் பெருமைப்பட்டார்கள். அவர்களில் ஒரு சீமாட்டி சிவாஜிக்கு மிக உயர்ந்த பொருளைத் தரப்போவதாக கூறிக்கொண்டு ஒரு விலையுயர்ந்த சுருட்டை புகைப்பதற்கு தந்தார்.
சிவாஜி அந்த சுருட்டை கையிலே வாங்கிப் பார்த்துவிட்டு அந்தப் பெண்மணியிடம் கூறினார், ‘‘அம்மா இது உங்களுக்கு அபூர்வப் பொருளாக இருக்கலாம். ஆனால் இந்தச் சுருட்டு நான் இருக்கிற நாட்டிலே உற்பத்தியாகிற சுருட்டு, அதுவும் என் சொந்த ஊரான திருச்சி அருகிலுள்ள உறையூரில் தயாராகிற சுருட்டு’’ என விளக்கினார். அதைக்கேட்டு அந்தப் பெண்மணி பெரிதாக நகைத்தார்.
சிவாஜிக்கு அங்கே இன்னொரு மரியாதையும் கிடைத்தது. அமெரிக்காவிலுள்ள ஒரு நகரத்தின் மேயர் சிவாஜியை வரவேற்று ஒருநாள் மேயராக சிவாஜியை கவுரவப் பதவி ஏற்க வைத்தார். அதற்கு அடையாளமாக தங்கச் சாவி ஒன்றை அன்று முழுவதும் சிவாஜி கையிலே வைத்திருக்க வேண்டும் என அவரிடம் ஒப்படைத்தார்.
அமெரிக்காவில் சிவாஜிக்கு மகத்தான வரவேற்பு கிடைத்தது என்ற செய்தி தமிழகத்திற்கு எட்டிய நிலையில் தமிழக கலைஞர்கள் எல்லாம் சிவாஜியை சிறப்பாக வரவேற்க வேண்டும் என புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். தலைமையிலே முடிவு செய்தார்கள். அவ்விதம் சிவாஜிக்கு அவர் சென்னையில் வந்து இறங்கியபொழுது கலைஞர்கள் எம்.ஜி.ஆர். தலைமையில் சிறந்த வரவேற்பை அளித்து கவுரவித்தார்கள்.
சிவாஜி அமெரிக்காவில் இருந்த சமயம் அவ்வை டி.கே.சண்முகம் அவர்கள் சிவாஜிக்கு வாழ்த்துக் கூறி ஒரு கடிதத்துக்கு சிவாஜி உடனே பதில் எழுதி தனது நன்றியை அவ்வை டி.கே.சண்முகத்திற்கு தெரிவித்தார்.
அவ்வை டி.கே.சண்முகம் இந்தப் பதில் கடிதத்தை எதிர்ப்பார்க்காததால் மிக மகிழ்ச்சியோடு அந்தக் கடிதத்தை பத்திரிகையில் வெளியிட்டார்.
அமெரிக்காவை அடுத்து சிவாஜிக்கு மிகப்பெரிய மரியாதையை தந்த நாடு பிரான்ஸ் என்று கூறலாம். பிரான்ஸ் நாடு சிவாஜிக்கு வழங்கிய ‘செவாலியே விருது’ மதிப்பில் மிக உயர்ந்தது. அதாவது ஆஸ்கர் விருதுக்கு இணையான மதிப்பு கொண்ட விருது. இந்ஹ விருதை இதுவரை உலகில் நான்கு நடிகர்களுக்கே பிரான்ஸ் வழங்கியுள்ளது.
கிளிண்ட் ஈஸ்ட் வுட், டஸ்ட் டின் ஹாப்மேன் ஆகிய ஹாலிவுட் நடிகர்களுடன் இன்னொருவருக்கும் பிரான்ஸ் அந்த விருதை வழங்கியிருந்தது. அதற்குமேல் இப்போது சிவாஜிக்கு அந்த விருதை வழங்கி கவுரவப்படுத்தியுள்ளது.
சிவாஜி நடித்த ‘நவராத்திரி’ படத்தைப் பார்த்துவிட்டு சிவாஜிக்கு ‘செவாலிய விருது’ அளிக்க பிரான்ஸ் நாடு முன் வந்தது. அந்தப் படத்தைப் பார்த்து உடனே பிரான்ஸ் தேர்வு கமிட்டி ‘செவாலிய விருது’ கொடுக்க முடிவு செய்துவிட வில்லை.
ஒன்பது வேடங்களில் சிவாஜி வித்தியாசமான ஒன்பது மனிதர்கள்போல் நடித்திருக்கும் அந்த அற்புதமான நடிப்பில் முதலில் அவர்களுக்கு நிறைய சந்தேகம் இருந்தது. இது ஒரே நடிகராக இருக்க முடியுமா? என்ற சந்தேகத்தின் பெயரில் பலவித பரிசோதனைகள் செய்து கடைசியில்தான் அவர் ஒரே நடிகர்தான் என்பதை கண்டுபிடித்தார்கள்.
புகழ்பெற்ற பல இயக்குனர்கள் அமர்ந்து அந்தப் படத்தைப் போட்டுப்பார்த்து செவாலியே விருது வழங்குவது பற்றி முடிவு செய்தார்கள். இந்த விருதை சிவாஜிக்கு அளிப்பதற்கு முன் உலக அளவில் புகழ்பெற்ற நடிகர்கள் பட்டியலை வைத்துக் கொண்டு அவர்கள் நடித்த படங்களையெல்லாம் திரும்பத் திரும்ப போட்டுப் பார்த்தார்கள். அதன் இறுதியிலேதான் சிவாஜி தேர்ந்தெடுக்கப்பட்டார்.
சிவாஜியைப் பற்றி இந்தியாவிலே உள்ள ஒரு கலை மேதையிடம் கருத்தறிய அவர்கள் பிரபல வங்க இயக்குனர் சத்யஜித்ரேயை அணிகினார்கள். அவரோ, ‘சிவாஜி செவாலியே விருதுக்கு மிக தகுதியான கலைஞர்’ எனக் கருத்து தெரிவித்தார்.
சிவாஜியின் நடிப்பைப் பார்த்த ஒரு பிரான்ஸ் இயக்குனர் ‘‘இவருக்கு ஏன் இதுவரை ஆஸ்கர் விருது கொடுக்கப்பட வில்லை?ÔÔ என்ற சந்தேகத்தை கேட்டார்.
அவருக்கு இன்னொரு இயக்குனர் பதில் கூறும்பொழுது, ‘‘ஆஸ்கர் விருது இதுவரை வழங்கப்படாததற்கு சேர்த்துதானே இந்த செவாலியே விருதை வாங்குகிறோம்’’ எனக் கூறினார்.
இந்த ‘நவராத்திரி’ படத்தை அது வெளியான சமயத்தில் தியேட்டரில் பார்த்த தனது அனுபவத்தை நடிகரும், இயக்குனருமான விசு தொலைக்காட்சிப் பேட்டியில் கூறினார்.
விசு வெளிநாட்டினர் சிலருடன் நவராத்திரி படம் பார்க்கச் சென்றிருந்தாராம். இடைவேளை வரை படத்தை அந்த வெளிநாட்டினர் மிக அமைதியாக ரசித்துக் கொண்டிருந்தார்களாம். இடைவேளையின்போது விசு அவர்களைப் பார்த்து, ‘‘இப்போது நான் உங்களுக்கு ஒரு செய்தியை கூறப்போகிறேன். இது மிகவும் ஆச்சரியமாகவும் இருக்கலாம்’’ என்று கூறிவிட்டு அந்தச் செய்தியை கூறியிருக்கிறார்.
‘‘அதாவது இப்போது நாம் பார்த்தப் படத்தில் கிணற்றில் விழப்போகிற கதாநாயகியை காப்பாற்றுகிற பணக்காரரும், அடுத்து வருகிற குடிகார வாலிபனும், மூன்றாவதாக வருகிற டாக்டரும், நான்காவதாக வருகிற பயங்கரவாதியும் நான்கு வெவ்வேறு நடிகர்கள் அல்ல; ஒரே நடிகர்தான் அந்த நான்கு வேடங்களிலும் வருகிறார்’’ என விசு குறிப்பிட்டிருக்கிறார்.
இதைக் கேட்டு அந்த வெளிநாட்டினர் பெரிதும் வியந்து போனார்களாம், ‘‘ஒரே மனிதரா இவ்வளவு வித்தியாசமாக தோன்றி நடிக்கிறார்? இதை முதலிலேயே சொல்லியிருந்தால் ஆரம்பத்திலேயே கூர்ந்து கவனித்திருப்போமே’’ என குறைபட்டுக் கொண்டார்களாம்.
பின்னர் இடைவேளைக்குப் பின்னர் மேலும் ஐந்து வேடங்களில் வரும் சிவாஜியைக் கண்டு பெரிதும் வியந்து பாராட்டினார்கள் என விசு அந்தப் பேட்டியிலே குறிப்பிட்டார்.
KCSHEKAR
30th October 2014, 10:24 AM
-------------------------------------------------------------------------------------------------------------
இன்று (அக்டோபர் 30) பசும்பொன் முத்துராமலிங்க தேவர் பிறந்தநாள்
------------------------------------------------------------------------------------------------------------
நடிகர்திலகம் சிவாஜி பசும்பொன் முத்துராமலிங்க தேவர் மீது மிகுந்த மரியாதை வைத்திருந்தார். அவரை அடிக்கடி சந்தித்துப் பேசுவார். ஒருநாள், தேவர் நடிகர்திலகத்திடம் "அய்யா, நீ வேறொரு கேம்ப்பில் இருக்கிறாய். அடிக்கடி என்னை வந்து பார்த்தால் நமக்குள் ஏதோ ரகசியத் தொடர்பு இருப்பதாக நினைத்து உன்னுடைய சேவையில் களங்கம் கற்பிப்பார்கள். அதனால் என்னை நீ நேரில் சந்திக்காமல் இருப்பது உனக்கு நல்லது" - என்று கூறினாராம்.
இது பசும்பொன் தேவருக்கும், நடிகர்திலகத்திற்கும் உள்ள உள்ளார்ந்த அன்பின் வெளிப்பாட்டைக் காட்டுகிறது.
---------------------------------------------------------------------------------------------------------------------
(ஆதாரம் - மக்கள் தலைவர் சிவாஜி மணிவிழா மலர், அக்டோபர் 1988)
---------------------------------------------------------------------------------------------------------------------
http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/ThevarNadigarthilagam_zpse6f7d51b.jpg (http://s1234.photobucket.com/user/sivajiperavai/media/ThevarNadigarthilagam_zpse6f7d51b.jpg.html)
Russellxss
30th October 2014, 10:55 AM
http://i1369.photobucket.com/albums/ag235/sundarajan/img011_zps16a3599f.jpg
gkrishna
30th October 2014, 11:10 AM
உள்ளத்தில் நல்ல உள்ளம் ஆஹிர் பைரவ் (அ )சக்ரவாகம் பல்லவி மட்டுமே. சரணம் முழுக்க சரசாங்கி.
தர்மவதி
ஆரோகணம்: ஸ ரி2 க2 ம2 ப த2 நி3 ஸ்
அவரோகணம்: ஸ் நி3 த2 ப ம2 க2 ரி2 ஸ
"திசி" என்றழைக்கப் படும் 10வது சக்கரத்தில் 5 வது மேளம்.
23வது மேளமாகிய கௌரிமனோகரியின் நேர் பிரதி மத்திம மேளம் ஆகும்.
மூர்ச்சனாகாரக மேளம். இதன் ரிஷப, பஞ்சம மூர்ச்சனைகள் முறையே சக்ரவாகம் (16), சரசாங்கி (27) ஆகிய மேளங்களைத் தோற்றுவிக்கும்.
மூர்ச்சனாகாரக மேளம் என்பது கருநாடக இசையில் கிரக பேதத்தினால் புதிய இராகங்களை உண்டாக்கக் கூடியது.
உ-ம்: சங்கராபரணத்தின் கிரக பேதத்தின் வழியாக ரிஷபத்தை ஷட்ஜமாக வைத்துக் கொண்டால் கரகரப்பிரியாவை கொடுக்கும். அதே போல க, ம, ப, த ஆகிய சுரங்கள் முறையே ஹனுமத்தோடி, மேசகல்யாணி, ஹரிகாம்போஜி, நடபைரவி ஆகிய மேளங்களைத் தோற்றுவிக்கின்றன.
Gopal.s
30th October 2014, 01:14 PM
தர்மவதி
ஆரோகணம்: ஸ ரி2 க2 ம2 ப த2 நி3 ஸ்
அவரோகணம்: ஸ் நி3 த2 ப ம2 க2 ரி2 ஸ
"திசி" என்றழைக்கப் படும் 10வது சக்கரத்தில் 5 வது மேளம்.
23வது மேளமாகிய கௌரிமனோகரியின் நேர் பிரதி மத்திம மேளம் ஆகும்.
மூர்ச்சனாகாரக மேளம். இதன் ரிஷப, பஞ்சம மூர்ச்சனைகள் முறையே சக்ரவாகம் (16), சரசாங்கி (27) ஆகிய மேளங்களைத் தோற்றுவிக்கும்.
மூர்ச்சனாகாரக மேளம் என்பது கருநாடக இசையில் கிரக பேதத்தினால் புதிய இராகங்களை உண்டாக்கக் கூடியது.
உ-ம்: சங்கராபரணத்தின் கிரக பேதத்தின் வழியாக ரிஷபத்தை ஷட்ஜமாக வைத்துக் கொண்டால் கரகரப்பிரியாவை கொடுக்கும். அதே போல க, ம, ப, த ஆகிய சுரங்கள் முறையே ஹனுமத்தோடி, மேசகல்யாணி, ஹரிகாம்போஜி, நடபைரவி ஆகிய மேளங்களைத் தோற்றுவிக்கின்றன.
OK.Where is the relevance? Pl.Refer my introductions on Raga. My posting simply tells Pallavi is Ahir Bairav,Saranam is Sarasangi. That's it. Different ragams are based on different permutation &Combinations. When they club two Ragas for Conventional Songs,it will be cpmplimentary.
Russellbpw
30th October 2014, 01:29 PM
Courtesy: Mr Harish
இமயம்
படிப்பு அதிகமில்லாத, உருவ லட்சணங் களும் சுமாராக உள்ள ஒரு மனிதர், தம் நடிப்புத் திறமையை மட்டும் வைத்து நம்மையெல்லாம் நாற்பது ஆண்டுகளுக்குக் கட்டிப் போட்டிருந்தார்.
அவரை அபிமானிகள், "இமயம்' என்கிறார்கள். என்ன தவறு?
ஹரிஷ் என்ற நபர் இணையதளத்தில் பதிவிட்டது. இது நல்ல ஒரு முயற்சி. இருப்பினும் அவர் சில இடங்களில் கூறியிருப்பது அவருடைய கருத்தே அல்லாமல் அனைவரின் கருத்தும் அல்ல என்பதை நாம் உணரவேண்டும்.
இதை கூற காரணம் ...அந்த நண்பர் குறிப்பிடுகையில் "உருவ லட்சணங் களும் சுமாராக உள்ள ஒரு மனிதர்" என்று கூரியிர்ப்பது வியக்கவைக்கும் அல்லது அதிர்ச்சியளிக்கும் ஒரு குறிப்பு.
நடிகர் திலகம் அவர்களுடைய சம கால நடிகர் யாரை எடுத்துகொண்டாலும் ..எந்த வகையில் அவர்களை நடிகர் திலகத்துடன் ஒப்பிட்டு பார்த்தாலும் ஒரு சாமுத்ரிகா லட்சணம் கொண்ட முக அமைப்பு மற்று உருவ அமைப்பு கொண்ட ஒரே நடிகர் நடிகர் திலகம் மட்டுமே.
அவருடைய வேடங்களில் எந்த 10 வேடங்களை எடுத்துகொண்டாலும் அந்த வேட பொருத்தம் "உருவ லட்சணங்களும் சுமாராக உள்ள ஒரு மனிதர்" எவருக்காவது பொருந்துமா என்பதை நாம் யோசித்து பார்க்கவேண்டும். உதாரணம் : தங்கபதக்கம் SP சௌதரி, கெளரவம் பாரிஸ்டர் ரஜினிகாந்த், ராஜ ராஜ சோழன் மற்றும் பல கதாபாத்திரங்கள் உதாரணம்.
68 - 70 வயதில் உடல் இளைத்த நிலையில் கூட பசும்பொன் மற்றும் தேவர் மகன், ஒண்சு மோர் திரைப்படங்களில் கூட அந்த கதாபாதிரதிர்க்கு எப்படி முகம் இருக்கவேண்டுமோ அப்படி முகம் மற்றும் உருவ அமைப்பு இருக்கும்.
இரெண்டாவது எல்லா காலத்திலும் நடிப்பை பற்றி ஒரு விஷயமும் தெரியாமல் இயற்க்கை நடிப்பு என்ற போர்வையில் வலம் வருபவர்கள் கூறும் மிகை நடிப்பு பற்றி உரைத்திருப்பது.
இன்றைய காலகட்டத்தில் ஒரு ரவுடி கதாபாத்திரம் ஒரு ஆளை அரிவாளால் வெட்டும்போது அரிவாளால் ஒரு போடு போட்டாலே எதிரில் உள்ளவர் வேட்டுபடுவர். ஆனால் அதற்க்கு மாறாக.....யாஆஆஆஆஆய் ...என்று கேட்பவர் காது செவிடாகும்வரை கத்தியபின் வெட்டுவார்....அதை இப்போதுள்ளவர் பலரும் கை தட்டி விசில் அடித்து பாராட்டுவார்கள். - இது மிகை இல்லையா ?
அதே போல கதாநாயகியை வில்லனோ அவர் ஆட்களோ ஜீப்பில் அல்லது காரில் கடத்துவார்கள். அப்போது நாயகி அல்லது கடத்தப்படும் பெண் கதாபாத்திரம்......ஆஆஆஆஅ....என்ன காபாதுங்காஆஅ என்று கத்துவார். ஜீப் அல்லது கார் குறைந்தது 80 கிலோ மீட்டர் வேகத்தில் போகும்....இது ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள நாயகன் அதுவும் மலை மீது binocular வைத்து பார்த்துகொண்டிருக்கும் நாயகன் பார்வையில் விழும்....மலைக்கு கீழே தயாராக ஒரு குதிரை வண்டி இருக்கும் அல்லது மாட்டு வண்டி இருக்கும்....மலை மீதிலிருந்து கீழே ஓடி கூட வரமாட்டார்...அங்கிருந்து ஒரு DIVE ...நேராக குதிரை அல்லது மாட்டு வண்டியில் சர்ர்ர்ர்ர்....என்று அமர்ந்து 80 கிலோ மீட்டர் ஓடும் கார் அல்லது ஜீப்பின் மிக அருகில் கண்ணிமைக்கும் நேரத்தில் வந்துவிடுவார்......- இது இவர்களுக்கு மிகையில்லை - கேட்டால் தலைவர் சூப்பரா வந்து காபாத்தறார் பார் என்று விசில் அடிப்பார்கள்....
இதே போல இயக்குனர் திலகம் என்றழைக்கப்படும் பாரதிராஜா - இவர் படங்கள் முக்காலும் அபத்தத்தின் உச்சமாக இருக்கும். இவர் எடுத்த மூன்று உருப்படியான படங்கள் - முதல் மரியாதை, கிழக்கு சீமையிலே மற்றும் பசும்பொன் .
சமீபத்தில் ஐவரும் மிகை நடிப்பு உள்ள காலம் என்று உளறியதை நாம் கண்டோம் அதை பார்த்து கண்ணீர் வேறு வடிக்க ஆட்கள் இருக்கிறார்கள்.
நடிப்பை மிகை, குறை என்று அளவெடுக்கும் இவர் படம் எடுக்கும் விதம் மற்றும் நடிப்பு சொல்லி கொடுக்கும் விதம் பற்றி நாம் இங்கு இப்போது பாப்போம்.
சூரியகாந்தி பூ இல்லாத இடத்தில் இவரால் படம் எடுக்கவே முடியாது... !
புதுமுக கதாநாயகன் இவருடைய படங்களில் ஒரு சொன்கியாகவே பார்க்க இருப்பான்..உருப்படியான ஒரு நாயகனை இவர் அறிமுக படுத்தியதே கிடையாது....இவர் படங்களில் நாயகனோ நாயகியோ ஓடி வரும் காட்சியை பார்த்தாலே தெரியும் இவர் சொல்லி கொடுத்த நடிப்பின் தரம் !
பெரும் பாலும் நாயகி ஒரு நிலையை அடைவர் இவர் படத்தில். அதன் காரணம் என்ன என்பது அனைவருக்கும் தெரியும். புதுமை பெண் பட கிளைமாக்ஸ் காட்சி ரேவதி பேசும் வசனகாட்சி இயற்கையாக இருந்ததா...?
http://www.youtube.com/watch?v=hnoMCSQW_dE
இவர் சொல்லிகொடுத்து செயற்கையாக இருந்தத இவர் சொல்லிகொடுத்த நடிப்பின் வெளிப்பாடு என்பதை பார்த்தால் விளங்கும்..!
இதே போல தான் பாலச்சந்தர் மற்றும் ஒரு சிலர்...!
இவர்களை போல் இன்னும் பலர் உள்ளனர்...இவர்கள் சிங்கத்திடம் சண்டையிடுவது இவர்கள் ஜெயிப்பார்கள் என்ற நம்பிக்கையில் அல்ல...சிங்கத்துடன் போரிட்டோம் என்ற விளம்பரம் பெறுவதற்கு மட்டுமே !
நடிகர் திலகம் அவர்களை வைத்து மாதவன், திருலோக், கோபாலகிருஷ்ணன், ராஜேந்திரன், விஎட்னாம் சுந்தரம் போன்றோர் மாபெரும் வெற்றிப்படங்களை கொடுக்க முடிந்தாது...ஆனால் ஒரு இயக்குனர் சிகரம் என்று மானியம் விடும் பாலச்சந்தரால் கொடுக்கமுடியவில்லை. காரணம் ... KB உக்கு நடிகர் திலகம் அவர்களை பயன்படுத்த தெரியவில்லை !
RKS
Russellbpw
30th October 2014, 01:40 PM
OK.Where is the relevance? Pl.Refer my introductions on Raga. My posting simply tells Pallavi is Ahir Bairav,Saranam is Sarasangi. That's it. Different ragams are based on different permutation &Combinations. When they club two Ragas for Conventional Songs,it will be cpmplimentary.
சார் ...நீங்க மொதல்ல இதுக்கு பதில் சொல்லுங்க...
சிந்து பைரவி ராகத்த ..சிவரஞ்சனியோட மிக்ஸ் பண்ணி...
அட்டான ராகத்த ..அவரோகணத்தில புடிச்சு ...
தொடையில தாளம் போட்ட கிடைக்கிற ராகம்,
கல்யாணியா..காம்போதியா ...
கரகரப்ரியாவா..ஷண்முகப்ரியாவா...இல்ல ஸ்ரீப்ரியாவா ?
மொதல்ல இதுக்கு பதில் சொல்லிட்டு அப்புறம் உங்க கேள்வி பதில் தொடருங்க !
:happydance: RKS
Russellbpw
30th October 2014, 01:43 PM
தர்மவதி
ஆரோகணம்: ஸ ரி2 க2 ம2 ப த2 நி3 ஸ்
அவரோகணம்: ஸ் நி3 த2 ப ம2 க2 ரி2 ஸ
"திசி" என்றழைக்கப் படும் 10வது சக்கரத்தில் 5 வது மேளம்.
23வது மேளமாகிய கௌரிமனோகரியின் நேர் பிரதி மத்திம மேளம் ஆகும்.
மூர்ச்சனாகாரக மேளம். இதன் ரிஷப, பஞ்சம மூர்ச்சனைகள் முறையே சக்ரவாகம் (16), சரசாங்கி (27) ஆகிய மேளங்களைத் தோற்றுவிக்கும்.
மூர்ச்சனாகாரக மேளம் என்பது கருநாடக இசையில் கிரக பேதத்தினால் புதிய இராகங்களை உண்டாக்கக் கூடியது.
உ-ம்: சங்கராபரணத்தின் கிரக பேதத்தின் வழியாக ரிஷபத்தை ஷட்ஜமாக வைத்துக் கொண்டால் கரகரப்பிரியாவை கொடுக்கும். அதே போல க, ம, ப, த ஆகிய சுரங்கள் முறையே ஹனுமத்தோடி, மேசகல்யாணி, ஹரிகாம்போஜி, நடபைரவி ஆகிய மேளங்களைத் தோற்றுவிக்கின்றன.
You too . சார் ...நீங்க மொதல்ல இதுக்கு பதில் சொல்லுங்க...
சிந்து பைரவி ராகத்த ..சிவரஞ்சனியோட மிக்ஸ் பண்ணி...
அட்டான ராகத்த ..அவரோகணத்தில புடிச்சு ...
தொடையில தாளம் போட்ட ..கிடைக்கிற ராகம்,
கல்யாணியா..காம்போதியா ...
கரகரப்ரியாவா..ஷண்முகப்ரியாவா...
மதுர மிநிப்ரியாவா ..சினிப்ப்ரியாவா
இல்ல நீயா படத்து ஸ்ரீப்ரியாவா ?
:happydance: RKS
மொதல்ல இதுக்கு பதில் சொல்லிட்டு அப்புறம் உங்க கேள்வி பதில் தொடருங்க !
gkrishna
30th October 2014, 01:54 PM
You too . சார் ...நீங்க மொதல்ல இதுக்கு பதில் சொல்லுங்க...
சிந்து பைரவி ராகத்த ..சிவரஞ்சனியோட மிக்ஸ் பண்ணி...
அட்டான ராகத்த ..அவரோகணத்தில புடிச்சு ...
தொடையில தாளம் போட்ட ..கிடைக்கிற ராகம்,
கல்யாணியா..காம்போதியா ...
கரகரப்ரியாவா..ஷண்முகப்ரியாவா...
மதுர மிநிப்ரியாவா ..சினிப்ப்ரியாவா
இல்ல நீயா படத்து ஸ்ரீப்ரியாவா ?
:happydance: RKS
மொதல்ல இதுக்கு பதில் சொல்லிட்டு அப்புறம் உங்க கேள்வி பதில் தொடருங்க !
சத்யப்ரியாவை விட்டுடேளே :)
JamesFague
30th October 2014, 04:44 PM
a recap from Mr Murali Srinivas old post
முன்பு வெளி வந்துக் கொண்டிருந்த எங்கள் சிவாஜி என்ற இதழின் சில பகுதிகளை காணும் வாய்ப்பு கிடைத்தது [குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால் இந்த இதழை நடத்திய விஜயன் இன்று எம்.ஜி.ஆருக்காக இதயக்கனி என்ற இதழை நடத்திக் கொண்டிருக்கிறார்]. அதில் இலங்கையில் நடிகர் திலகத்தின் படங்கள் நிகழ்த்திய சில சாதனைகள் அதில் வெளியிடப்பட்டிருந்தது. அதிலிருந்து சில துளிகள். முதலில் தலைநகர் கொழும்பு.
கொழும்பில் பொதுவாக ரசிகர்கள் ரீலீசுக்கு முதல் நாள் இரவே தியேட்டரில் கூட்டம் கூட ஆரம்பித்து விடுவார்கள். ஆகவே படம் முதல் நாள் இரவே ஆரம்பித்து விடும். அப்படி கூட்டத்தின் காரணமாக நள்ளிரவு பன்னிரண்டு மணிக்கே ஷோ ஆரம்பித்து சாதனை புரிந்த படம் அன்பைத் தேடி. அரங்கம் நவா. அதற்கு முன் 12.30 மணிக்கு படம் ஆரம்பித்ததே சாதனையாக இருந்தது.
பாட்டும் பரதமும் நகரின் வெளிப்பகுதியில் அமைந்திருந்த பெரிய திரையரங்கமான சமந்தாவில் தொடர்ந்து 39 காட்சிகள் அரங்கு நிறைந்து புதிய சாதனையை ஏற்படுத்தியது. நகரின் மையப்பகுதியில் அமைந்த தியேட்டரிலேயே உலகப் புகழ் பெற்ற படங்கள் எல்லாம் வெறும் 32 காட்சிகள் மட்டும் அரங்கு நிறைந்த போது, நடிகர் திலகத்தின் சாதாரண படம் கூட அதை விட அதிக சாதனை புரிந்திருக்கிறது.
கொழும்பு நகரில் எங்கள் தங்க ராஜா பெற்ற வசூல் - Rs 2,06,204.20 p.
இது அதே வருடம் வெளியான பெரிய வெற்றிப்படத்தின் வசூலை விட ஐம்பதினாயிரம் அதிகம்.
கொழும்பில் மெயின் அரங்கை தவிர இரண்டாவது அரங்கிலும் படம் வெளியிடப்படும். அந்த அரங்குகளில் படங்கள் பெற்ற வசூல் விவரங்கள்.
எங்கள் தங்க ராஜா - பிளாசா - Rs 2,06,204.20 p
சிவகாமியின் செல்வன் - ஈராஸ் - Rs 1,99, 815.35 p
இந்த இரண்டு படங்களுமே மற்ற படங்களின் வசூலை குறைவான நாட்களியே முறியடித்திருக்கிறது.
யாழ் நகர் சாதனைகள்
மன்னவன் வந்தானடி வெலிங்டன் அரங்கில் 25 காட்சிகள் தொடர் ஹவுஸ் புல். வேறு சில படங்கள் மூன்று தியேட்டர்களிலும் சேர்த்தே 19 காட்சிகள் தான் ஹவுஸ் புல்.
வசந்த மாளிகை ஓடி முடிய ஹவுஸ் புல் காட்சிகள் - 218
சிவகாமியின் செல்வன் ஓடி முடிய ஹவுஸ் புல் காட்சிகள் - 89
நடிகர் திலகத்தின் பெரிய வெற்றிப் படம் என்று சொல்ல முடியாத சி.செல்வன் போன்ற படங்களே பெரிய வெற்றிப் படம் என்று சொல்லப்பட்ட படங்களின் ஹவுஸ் புல் காட்சிகளை விட அதிகமாக ஆகியிருக்கிறது.
தங்கப்பதக்கம் 50 நாட்களில் பெற்ற வசூல் ஒரு போட்டி படத்தின் 80 நாட்கள் வசூலை விட அதிகம். அதே போல் எங்கள் தங்க ராஜா 90 நாட்களில் போட்டி படத்தின் 100 நாள் வசூலை விட அதிகம் வசூலித்திருக்கிறது.
தங்கப்பதக்கம் 50 நாள் வசூல் - Rs 3,04,679/- [அரங்கம் ஸ்ரீதர்]
எங்கள் தங்க ராஜா 90 நாள் வசூல் - Rs 3,63,820/- [அரங்கு ராஜா].
அதே போல் வசந்த மாளிகை யாழ் நகரில் ஓடி முடிய பெற்ற வசூல் போட்டி படத்தின் வசூலை விட ரூபாய் ஒரு லட்சத்திற்கும் அதிகம்.
வசந்த மாளிகை ஓடி முடிய வசூல் - Rs 5,54,419.
JamesFague
30th October 2014, 04:45 PM
நேற்று சொன்னது போல் கர்நாடக மாநில தலைநகரான பெங்களூரில் 1976-77 ஆண்டுகளில் நடிகர் திலகம் நிகழ்த்திய சில சாதனைகள் கீழே கொடுத்திருக்கிறோம். இதை குறிப்பாக வெளியிடுவதன் நோக்கம் இந்த ஆண்டுகளில் நடிகர் திலகத்தின் படங்கள் சரியாக போகவில்லை என்பது போன்ற மாயத் தோற்றம் உருவாக்கப்பட்டிருந்தது. அது எந்த அளவிற்கு உண்மைக்கு புறம்பானது என்பதை விளக்கவே இந்த சின்ன சாதனைகளை இங்கே வெளியிடுகிறோம்.
1976 ஆண்டு இறுதியில் வெளியான ரோஜாவின் ராஜா திரைப்படம் பெற்ற வசூல்
லட்சுமி - 28 நாள் - Rs 1,21,135.45
நடராஜ் - 28 நாள் - Rs 1,16,073.05
விநாயகா, நியூசிடி - 21 நாள் - Rs 53,439.65
நலந்தா - 7 நாள் - Rs 35,192.70
பாலாஜி - 7 நாள் - Rs 24,671.45
கந்தா - 7 நாள் - Rs 21,745.15
கபாலி - 7 காட்சி - Rs 20,120.80
சாந்தி - 7 காட்சி - Rs 7,905.10
மொத்தம் - Rs 4,00,283.50
1977 ஆண்டு தொடக்கத்தில் வெளியான தீபம் செய்த சாதனை
சங்கீத் - 29 நாள் - Rs 1,46,883.40
கீனோ - 29 நாள் - Rs 1,19,020.50
நியூசிடி- 29 நாள் - Rs 77,871.10
நலந்தா - 14 நாள் - Rs 46,760.20
கபாலி - 9 காட்சி - Rs 24,992-50
மொத்தம் - Rs 4,15,527.70
1976-ம் ஆண்டு ஜனவரி மாதத்திலிருந்து மேற்சொன்ன இரண்டு படங்களை தவிர வேறு எந்த படமும் நான்கே வாரத்தில் நான்கு லட்ச ரூபாய் வசூல் செய்ததில்லை.
சங்கீத் - இவ்வரங்கில் தீபம் 42 காட்சிகள் ஹவுஸ் புல் ஆனது. மற்ற படங்களெல்லாம் 20 காட்சிகள் கூட அரங்கு நிறையவில்லை.
தீபம் நான்கு வாரத்தில் பெற்ற வசூலை மற்ற படங்கள் ஓடி முடிய கூட பெறவில்லை.
ரோஜாவின் ராஜா 8 அரங்குகளில் முதல் வாரத்தில் பெற்ற வசூல் Rs 2,04,526.40. அந்த காலக்கட்டத்தில் குறிப்பாக அந்த இரண்டு வருடக் காலத்தில் [1976 -77] வேறு எந்த படமும் செய்யாத வசூல் சாதனை அது.
அன்புடன்
PS: இந்த வசூல் விவரங்கள் எல்லாம் விநியோகஸ்தர்களான என்னாம் பிலிம் கார்பரேஷன் மற்றும் ஈஸ்வரி பிக்சர்ஸ் அவர்களிடமிருந்து திரட்டிய தகவல்கள்
Murali Srinivas
30th October 2014, 04:49 PM
சித்தூர் வாசு அவர்களால மீள் பதிவு செய்யப்பட்ட கர்ணன் படப் பாடல்களைப் பற்றிய என்னுடைய முன்னாள் பதிவின் தாக்கம் கொண்டு உள்ளத்திள் நல்ல உள்ளம் பாடலைப் பற்றியும் அதன் காரணமாக அந்த பாடலின் ராகம் பற்றியும் ஒரு சுவையான சர்ச்சை பதிவு செய்யப்பட காரணமாக இருந்ததற்கு நன்றி கிருஷ்ணாஜி.
மௌன வாசிப்பை நிறுத்தி விட்டு (தற்காலிகமெனும் போதிலும்) பங்களிப்பு செய்தமைக்கு நன்றி கோபால்!
உங்கள் இருவரிடையே இது போன்ற ஊடல்கள் தொடரட்டும். காரணம் விஷய ஞானம் உள்ளவர்கள் சர்ச்சை செய்யும்போது எங்களைப் போன்ற ஞான சூன்யங்கள் அறிவு பெறுகிறோம்!
அன்புடன்
Murali Srinivas
30th October 2014, 04:51 PM
இன்றைக்கு வெளியான ஆனந்த விகடன் சினிமா ஸ்பெஷல் ஆக வந்திருக்கிறது. அண்மையில் மறைந்த ஒளிப்பதிவாளர் அசோக் குமார் அவர்களைப் பற்றிய நினைவுகளை பகிர்ந்து கொண்டிருக்கும் இயக்குனர் மகேந்திரன் அந்த பேட்டியில் தன் படங்களைப் பற்றியும் பேசியிருக்கிறார். அந்த பேட்டியில் நமது நண்பர் கோபால் பற்றியும் சொல்லியிருக்கிறார். வியட்நாம் ரசிகர் வியட்நாம் நண்பர் என்று (கோபால் பெயரை குறிப்பிடவில்லையென்றாலும் கூட) அவருடனான தன் உரையாடலை பற்றி சொல்லியிருக்கிறார்.
வாழ்த்துகள் கோபால்!
அன்புடன்
JamesFague
30th October 2014, 06:34 PM
Congratulations Mr Gopal.
If anyone have the facility please upload the article in Ananda Vikatan for the benefit of millions of
NT's Fans.
Regards
joe
30th October 2014, 09:46 PM
Congratulations Mr Gopal.
If anyone have the facility please upload the article in Ananda Vikatan for the benefit of millions of
NT's Fans.
Regards
மெட்டி’ படம் இரு சகோதரிகளின் கதையைப் பேசிய படம். அந்தப் படம் ஸ்வீடன் இயக்குநர் இங்மெர் பெர்க்மென்னின் படங்களைப் போல இருப்பதாக சிலர் பாராட்டினார்கள். அதை அபத்தமான பாராட்டாகவே நான் நினைத்தேன். திரைப்பட ரசனை பற்றிய அறியாமையில் பேசுகிறார்கள் என நினைத்தேன். எனது வியட்நாம் ரசிகர் ஒருவரும் தொலைபேசியில் 'மெட்டி’ படம் இங்மெர் பெர்க்மென்னின் 'க்ரைஸ் அண்டு விஸ்பர்ஸ்’ படத்தின் தரத்தில் இருப்பதாகச் சொன்னார். 'இவர் என்ன இப்படிச் சொல்கிறாரே?’ என அந்தப் படத்தைப் பார்த்தேன். அதுவும் 'மெட்டி’யும் இரு சகோதரிகளின் கதைகளைப் பேசியது என்பதைத் தவிர, ஏணி வைத்தாலும் எட்டாத உயரத்தில் இருந்தது இங்மெர் பெர்க்மென்னின் படம். 'இரண்டு படங்களையும் எப்படி ஒப்பிடலாம்? மோசமான ரசனை கொண்டவர் நீங்கள்...’ என்று நான் வியட்நாம் நண்பரைத் திட்டினேன். ஆனால், பிறகு யோசித்தால், 'க்ரைஸ் அண்டு விஸ்பர்ஸ்’, 'மெட்டி’... இரண்டு படங்களின் ஒளிப்பதிவுத் தரமும் ஒன்றுபோலவே இருந்ததை உணர்ந்தேன். 'க்ரைஸ் அண்டு விஸ்பர்ஸ்’ படத்தின் ஒளிப்பதிவாளர் ஸ்வென் நீக்விஸ்ட் உருவாக்கிய அதே தரத்தை, அபாரமான தொழில்நுட்ப வசதிகள் இல்லாத இந்தியாவில் கொண்டுவந்திருந்தார் அசோக்குமார். அதுதான் அவரது பலம்!''
நன்றி : விகடன்.காம்
RAGHAVENDRA
30th October 2014, 10:07 PM
விகடன் சினிமா ஸ்பெஷலில் இயக்குநர் மகேந்திரனின் பேட்டி இடம் பெற்ற பக்கங்களின் நிழற்படங்கள்
page 1
http://i1146.photobucket.com/albums/o528/imagivity/unspecific/VikatanCSOct201401fw_zpsef37651c.jpg
page 2
http://i1146.photobucket.com/albums/o528/imagivity/unspecific/VikatanCSOct201402fw_zps2fb16ed5.jpg
page 3
http://i1146.photobucket.com/albums/o528/imagivity/unspecific/VikatanCSOct201403fw_zpsb0fdf4e4.jpg
மேற்காணும் கட்டுரையில் கோபால் அவர்களைப் பற்றி பெயர் குறிப்பிடாமல் வியட்நாம் நண்பர் என மகேந்திரன் குறிப்பிட்ட பகுதி..
http://i1146.photobucket.com/albums/o528/imagivity/unspecific/VikatanCSOct201403fwvietnam_zps2c6efa5c.jpg
RAGHAVENDRA
30th October 2014, 10:12 PM
கோபால் சுட்டிக்காட்டிய Cries and Whispers என்ற இங்மர் பெர்கமனின் திரைப்படத்தின் நிழற்படம்
http://graphics8.nytimes.com/images/2011/10/27/arts/27cries/27cries-articleLarge.jpg
Cries and Whispers படத்தின் இயக்குநர் Ingmar Bergman
http://www.tasteofcinema.com/wp-content/uploads/2014/04/greatest-ingmar-bergman-film.jpg
மெட்டி திரைப்படத்தின் நிழற்படம்
http://4.bp.blogspot.com/--oRbLHHhTlw/Tn6rzqGhUJI/AAAAAAAAABs/UZK8GKIf1lM/s1600/snapshot2.jpg
RAGHAVENDRA
31st October 2014, 07:10 AM
http://3.bp.blogspot.com/_flfvbxESWP4/SFU97g5JT9I/AAAAAAAAADE/mjDevTpMYh8/s320/Political%2Bleaders%2Bwith%2Bcine%2Bleader%2BMr.Sh ivaji%2BGanesan.gif
தான் நேசித்த தலைவருனும் தன்னை நேசித்த தலைவியுடனும் நடிகர் திலகம்...
இன்றைக்கு இந்திரா காந்தி நினைவு நாள்.. நடிகர் திலகத்தின் சிறப்பினை உணர்ந்து உரிய மரியாதையும் கௌரவமும் தந்த இந்திரா காந்தியின் நினைவு நாளில் அவர் நினைவைப் போற்றுவோம்.
Gopal.s
31st October 2014, 07:34 AM
நன்றி நண்பர்களே. மகேந்திரன் அவர்களும் ,நானும் உலக படங்களை அலசுவோம்.அவருடைய படங்களை விமரிசிப்பதிலேயே கூட சில சமயங்கள் முரண்கள் இருக்கும்.அப்படி ஒன்றுதான் இந்த உரையாடல்.
ஆஸ்கார் விருது பெற்ற படங்களை விட கான்ஸ் பிலிம் பெஸ்டிவல் பரிசு பெற்றவை தரத்தில் ஓங்கி நிற்கும். அமெரிக்கர் படங்கள் (ஹாலிவுட் )நம்மை போல formula கொண்டு வெகுஜன ஈர்ப்புக்காக சமரசம் செய்து கொள்பவை. ஆனால் ஐரோப்பிய படங்கள் ஒரு இயக்குனரின் private internalization வகை. தனது பிரத்யேக ரசனை துய்ப்புக்காக ஒரு இயக்குனர் ,எந்த சமரசமும் இன்றி படமெடுப்பார். Fellini ,Godart ,Bergmen போன்றவர்கள் இந்த ரகம்.
அந்த வகையில் மெட்டி படம் அமைந்தது. இதில் பாத்திர வார்ப்பு (கொஞ்சம் இளையராஜா பாடல் அபத்தங்கள் கலந்தாலும்),படமாக்கம் ,internalization என்ற வகையில் ஐரோப்பிய ,குறிப்பாக Bergmen படங்களின் பாதிப்பு இருந்ததாக குறிப்பிட்டு ,அவரை அந்த படம் பார்க்க தூண்டினேன்.
மகேந்திரன் இயக்கத்தில் எனது பிடித்தம் பூட்டாத பூட்டுக்கள்.
RAGHAVENDRA
31st October 2014, 08:28 AM
ஆஸ்கார் விருது பெற்ற படங்களை விட கான்ஸ் பிலிம் பெஸ்டிவல் பரிசு பெற்றவை தரத்தில் ஓங்கி நிற்கும். அமெரிக்கர் படங்கள் (ஹாலிவுட் )நம்மை போல formula கொண்டு வெகுஜன ஈர்ப்புக்காக சமரசம் செய்து கொள்பவை. ஆனால் ஐரோப்பிய படங்கள் ஒரு இயக்குனரின் private internalization வகை. தனது பிரத்யேக ரசனை துய்ப்புக்காக ஒரு இயக்குனர் ,எந்த சமரசமும் இன்றி படமெடுப்பார். Fellini ,Godart ,Bergmen போன்றவர்கள் இந்த ரகம்.
....
மகேந்திரன் இயக்கத்தில் எனது பிடித்தம் பூட்டாத பூட்டுக்கள்.
Well said Gopal..
சரியாகச் சொன்னீர்கள்... ஒரு முறை சென்னை தேவி திரையரங்கில் ஃபிரெஞ்சு திரைப்பட விழாவின் போது பிரபல ஃப்ரெஞ்சு இயக்குநர் Claude Lelach அவர்களை சந்திக்க வாய்ப்புக் கிடைத்து உரையாடிய போது அவர் சொன்ன அதே விஷயத்தைத் தான் தாங்கள் சொல்லியுள்ளீர்கள்.
ஃபிரெஞ்சு திரைப்படங்களைப் பொறுத்த மட்டில் எவ்வித குறுக்கீடுமின்றி படைப்புகளை அவர்களால் தரமுடிகிறதாகவும் அதனால் எந்த விதத்திலும் சமரசத்திற்கு இடம் கொடாமல் அவர்களால் படங்களைத் தர முடிகிறதாகவும் அப்போது என்னிடம் அவர் கூறினார். அவருடைய ஆங்கில உச்சரிப்பு சற்று சிரமமாக இருந்தது, சரளமாக இல்லாமல் சற்றே தடுமாறினார் என்றாலும் புரிந்து கொள்ளும் அளவிற்கு இருந்தது.
JamesFague
31st October 2014, 09:45 AM
The greatness of NT - from the old post of Saradha Madam
எம்.ஜி.ஆர், தனிக்கட்சி ஆரம்பித்தபின். முதல் படமாக வந்தது 'உலகம் சுற்றும் வாலிபன்'. அப்படத்தை வெளிவராமல் தடுக்க அப்போதிருந்த கலைஞர் அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டது. அவற்றில் ஒன்று, சுவரொட்டிகளுக்கான வரியை சென்னை மநகராட்சி மூன்று பங்காக உயர்த்தியது. அதனால் அப்படத்துக்கு சென்னையில் ஒரு போஸ்ட்டர் கூட ஒட்டப்படவில்லை. செய்தித்தாள் விளம்பரங்களும், ஸ்டிக்கர் விளம்பரங்களும்தான். (பாவம், அந்த வரி உயர்வினால் மற்ற படங்கள்தான் வெகுவாக பாதிக்கப்பட்டன).
அடுத்த தடங்கலாக, 'உ.சு.வாலிபன் படத்துக்கு யாரும் தியேட்டர் தரக்கூடாது' என தியேட்டர் உரிமையாளர்கள் அரசினால் மிரட்டப்பட்டனர். அரசைப் பகைத்துக்கொள்ள விரும்பாத தியேட்டர் உரிமையாளர்கள் உ.சு.வாலிபன் படத்தைத் திரையிடத்தயங்கினர். அப்போது ஒரு கலைஞனுக்கு ஏற்பட்ட பிரச்சினை தனக்கும்தான் என்பதை உணர்ந்த நடிகர் திலகம், 'அப்படி யாரும் தியேட்டர் தரவில்லையென்றால், சிவாஜி புரொடக்ஷன்ஸ் ஒப்பந்தத்தில் இருக்கும் சாந்தி, கிரௌன், புவனேஸ்வரி தியேட்டர்களில் அண்ணனின் படம் வெளியாகட்டும். நாங்கள் தியேட்டர் தருகிறோம்' என்றார். அப்போது நடந்த 'மேக்கப்-மென் சங்கக்'கூட்டத்தில் மக்கள் திலகம், நடிகர்திலகம் இருவரும் கலந்துகொண்டனர். அப்போது அந்த மேடையில் மைக்கில் பகிரங்கமாகவே நடிகர்திலகம் இதை அறிவித்தார்.
மாநில அரசு இடைஞ்சல் செய்தபோதும், மத்தியில் இருந்த இந்திரா அரசுடன் எம்.ஜி.ஆருக்கு சுமுகமான உறவு இருந்ததால், அவர்கள் தலையீட்டில் தியேட்டர் பிரச்சினை தீர்க்கப்பட்டு, சென்னையில் தேவி பாரடைஸ், அகஸ்தியா, உமா, சீனிவாசா ஆகிய தியேட்டர்கள் புக் ஆகின. பின்னர் சீனிவாசா தியேட்டர் கைவிடப்பட்டது. மற்ற மூன்றிலும் உலகம் சுற்றும் வாலிபன் வெளியானது.
JamesFague
31st October 2014, 09:53 AM
from Mr Murali Srinivas old post
சினிமா எக்ஸ்பிரஸ் இணையதளத்தில் வெளியாகியிருக்கும் ஒரு கட்டுரை.
இதை எழுதியிருப்பவர் சித்ரா லட்சுமணன்
உள்ளதைச் சொல்கிறேன்: ஆற்றல் மிக்க விழிகள்!
""சிவாஜியின் மிகப்பெரிய சொத்து அவருடைய ஒளிமிக்க, உயிர்ப்புள்ள கண்கள்தான். அந்த கண்களை வைத்துத்தான் பரிவை, பாசத்தை, பயத்தை, கோபத்தை, அழுகையை, ஆச்சர்யத்தை, அப்பாவித்தனத்தை, ஏக்கத்தை, ஏமாற்றத்தை, வீரத்தை, விவேகத்தை அவர் அதிகமாக வெளிப்படுத்தினார். "பாசமலர்' படத்தில் "மலர்களைப் போல் தங்கை உறங்குகிறாள்...' பாடல் வரிகள் துவங்குவதற்கு முன் பால் தம்ளர் கையில் ஏந்தி வந்தவர், கண்ணுறங்கும் தங்கையைப் பார்த்து, வட்டக் கருவிழியின் அடியில் இலேசாக நீர் தேக்கி, பாசத்தை வெளிப்படுத்துவார்.
"பாவமன்னிப்பு' படத்தில் எம்.வி.ராதம்மாதான் தன்னைப் பெற்ற அன்னை என்று அரியாத சிவாஜி, ஒரு காட்சியில் நன்றிப் பெருக்கால் "அம்மா, அம்மா, அம்மா' என்று பாசத்தை, நன்றியை கண்களில் தேக்கி அழுது கொண்டே சிரிப்பார். புத்தரின் சாந்தத்தையும் அந்தக் கண்கள் வெளிப்படுத்தும். போதையுடன் தள்ளாடும் குடிகாரனையும் அந்தக் கண்கள் வெளிப்படுத்தும். அப்படி ஒரு ஆற்றல் மிக்க விழிகள் அவை. அழகான சிறிய உதடுகள் அவருக்கு. சிரித்தால் கன்னங்களில் எலுமிச்சம் பழம் போல கன்னச் கதுப்புகள், சிரிப்புக்கு அழகூட்டும். இடது பக்கமுள்ள சிங்கப்பல், கவர்ச்சியைக் கூட்டும்.
தமிழை அவர்போல் உச்சரித்த நடிகர்கள் இதுவரை பிறக்கவில்லை. தமிழ் மொழியில் அவரளவுக்கு அதிகப்படியான எண்ணிக்கையில் தமிழ் வார்த்தைகளைப் பேசி நடித்த நடிகர் வேறு யாருமே இருக்க முடியாது. ஒரு நடிகன் வேஷம் கட்டுவதிலேயே 50 சதவிகித மார்க் வாங்கிவிட வேண்டும் என்று சொல்வார். விதவிதமான வேடம் அணிந்து பார்ப்பதில் அவருக்கு அடங்காத வெறி உண்டு. சரித்திர நாயகர்களாக இருந்தாலும் சரி, புராண வேடங்களாக இருந்தாலும் சரி, சமூகத்தில் காணும் வித்தியாசமான மனிதரின் வேடமாக இருந்தாலும் சரி அவற்றை ஆதாரபூர்வமாகச் செய்து பார்க்க பெரிதும் முயற்சி எடுத்துக் கொள்வார் சிவாஜி.
"கட்டபொம்மன்', "கர்ணன்', "ராஜ ராஜ சோழன்', "அரிச்சந்திரன்', "ஜஹாங்கீர்' என ராஜா வேடம் போடும்போது உடைகள், கீரிடம், முகத்தின் தோற்றம், தாடி, மீசை, புருவம் இவற்றிலும், தலை முடியிலும் மாற்றங்களைத் தெளிவாகக் செய்வார். அதேபோல் ராமன், இராவணன், கிருஷ்ணன், நாரதர் என்று புராண வேடங்களை ஏற்கும்போதும் தேர்ந்த நாடகத்துறை உடையலங்கார நிபுணர்களை வைத்துக்கொண்டு காதில் அணியும் தோடு, ராமர், பரசுராமர், அர்ஜுனன் கையில் உள்ள ஆயுதங்களை எல்லாம சரி பார்ப்பார்.
"பாடி லாங்குவேஜ்' என்று சொல்கிற உடல்மொழி அவருக்கு முதல் படத்திலேயே வந்து விட்டதை "கல்லைத்தான், மண்ணைத்தான், காய்ச்சித்தான், குடிக்கத்தான், கற்பித்தானா' என்று நடிக்கும் ஒரே காட்சியை "பராசக்தி' படத்தில் பார்த்தாலே புரிந்துவிடும்.
சிவாஜி வேடத்தில் அவர் நடித்ததை நாம் பார்த்திருக்கிறோம். அந்த தலைப்பாகை, தாடையிலிருந்து நீண்ட தாடி, சிக்கென்ற ராஜ உடை, நீண்ட வாள் இவற்றுடன் நீண்ட வசனத்தை, அங்க அசைவுகளுடன் பேசி, சிங்க நடையோடு அவர் நடித்ததை இன்னொருவர் முயன்று பார்க்கட்டும். சங்கிலியால் கட்டிச் சபையில் இழுத்துவர புலி போல் ஒரு நடை நடந்து வருவார் "மனோகரா' படத்தில்! மரமேறும் சாமுண்டி கிராமணியாய் "காவல் தெய்வத்தில்' கைத்தட்டல் பெறவே ஒரு நடை நடப்பார். "போனால் போகட்டும் போடா' பாடலில் இசைக்கேற்ப, தாளத்துக்கேற்ப ஒரு நடை நடப்பார். "சட்டி சுட்டதடா, கை விட்டதடா' பாடலுக்கு ஒரு வித்தியாசமான "வாக்கிங் ஸ்டிக்' ஊன்றிய நடை. அப்பர் சுவாமிகளாக "திருவருட் செல்வரில்' முதிர்ந்த பெரியவர் நடை.
"வெற்றிவேல், வீரவேல், சுற்றி வந்த பகைவர் தம்மை தோள் நடுங்க வைத்த எங்கள் சக்திவேல்' என்ற "கந்தன் கருணை' பாடலில் முழங்கும் போர் முரசுக்கு இசைவாக ஒரு கம்பீர நடை. அவருடைய நினைவாற்றல், கிரஹிக்கும் சக்தி அபாரமானது. காட்சிக்கான வசனங்களை மற்றவர்களைப் படிக்கச் சொல்லி கேட்டு மனப்பாடம் செய்து கொண்டு நடிப்பதில் அவரைவிட வேறு யார் செய்ய முடியும்? நடிக்கின்ற எந்தக் காட்சியிலும் உணர்ச்சியின் உச்சத்தைத் தொடும் சிவாஜி அடிக்கிற காட்சிகளில் பாசாங்கு செய்ய மாட்டார், பட்டையைக் கழற்றி விடுவார்.
"உயர்ந்த மனிதன்' உச்சகட்ட காட்சியில் திருட்டுப் பழி சுமத்தப்பட்ட தன்னை பிரம்பால் அடிக்கும் காட்சியில் பிரம்பு நாலாய் தெரிக்கும் அளவிற்கு விளாசித் தள்ளி விட்டார். அவரைக் கட்டுப்படுத்த செüகார் ஜானகியும், பாரதியும் எவ்வளவோ முயன்று சட்டையை எல்லாம் கிழித்துக் கூச்சல் போட்டனர். இன்றும் அந்தக் காட்சியைப் பார்த்து கலங்காதவர் இருக்க முடியாது. ஜெமினியின் "விளையாட்டுப் பிள்ளை' படத்தில் ஒரு காட்சியில் பத்மினியின் கன்னத்தில் ஒரு அறை விட்டார். காது தோடு கழன்று ஓடி அடுத்த படப்பிடிப்புத் தளத்தில் விழுந்து விட்டது. ஷாட் முடிந்ததும் பத்மினி ஐந்து நிமிடம் அனுமதி பெற்று வெளியே போனார். போனவர் சிறிது நேரம் உள்ளே வரவில்லை. என்ன நடந்தது என்று பார்க்க உதவி இயக்குனர் சென்றார். நாற்காலியில் உட்கார்ந்து, முகம் சிவக்க, உதடுகள் துடிக்க, கண்களில் நீர் பெருக்கியவாறு இருந்தவரைப் பார்த்து பதறிப்போய், ""என்னம்மா'' என்று கேட்க, ""ஒன்றுமில்லை வலி தாங்க முடியவில்லை, முழுசா அழுதிட்டு வந்திடறேன், ஐந்து நிமிடம் பொறுத்துக்கங்க'' என்றாராம் பத்மினி.
உலகின் எந்த ஒரு நடிகனும் ஒரே நாளில் மூன்று வித வேடங்கள் ஏற்று நடித்ததில்லை. "டென் கமாண்ட்மெண்ட்ஸ்', "பென்ஹர்', "லாரன்ஸ் ஆஃப் அரேபியா', "ஓமர் முக்தார்', "சாந்தி' போன்ற எந்தப் படத்து ஹீரோவும் மூன்று ஆண்டுகள், ஐந்து ஆண்டுகள் என்று ஒப்பந்த அடிப்படையில் ஒரு படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டு அந்தப் படம் முடிந்த பின்னரே அடுத்த படம், வேடம் பற்றி சிந்திப்பார்கள். ஆனால் சிவாஜி காலையில் ரிக்ஷாக்காரன் வேடம் போட்டு நரைத்த தாடியும், பரட்டைத் தலையும் கிழிந்த கோட்டுமாய் கைரிக்ஷா இழுத்து நடிப்பார். பிற்பகல் மகாவிஷ்ணு வேடம் போட்டு, பாடல் காட்சியில் நடிப்பார். இரவு அந்த வேடத்தைக் கலைத்துவிட்டு பள பளப்பாக மின்னும் கோட்டும் சூட்டுமாக "சொர்க்கம்' படத்தில் நடிப்பார். ஹாலிவுட்டில் எந்த நடிகரும் இப்படி செய்திருக்க வாய்ப்பில்லை.
""அடுத்த தலைமுறைகளுக்குக் குறிப்பிட்டுச் சொல்ல எந்த வேடத்தையும் அவர் விட்டு வைக்கவில்லை. நாங்கள் எந்த வேடம் போட்டு நடித்தாலும், அவர் நடித்த, அந்த வேடங்களைத் தாங்கிய படங்களை முன்மாதிரியாக ஒரு முறை பார்த்துக் கொள்கிறோம். அந்த யுகக் கலைஞன் ஹாலிவுட்டில் பிறக்காதது அவரது துரதிருஷ்டம். தமிழ் நாட்டில் பிறந்தது நம் அதிர்ஷடம்'' என்று "இது ராஜபாட்டை அல்ல' என்ற தனது நூலில் சிவாஜிக்கு புகழாராம் சூட்டியுள்ள சிவகுமார். சிவாஜியோடு இணைந்து நடித்த "ராஜராஜ சோழன்' 1973-ல் வெளியானது.
தமிழில் தயாரிக்கப்பட்ட முதல் சினிமாஸ்கோப் சித்திரமான "ராஜ ராஜ சோழன்' படத்தில் நடித்த அனுபவத்தை கீழ்க்கண்டவாறு விவரிக்கிறார் சிவாஜி.
""நான் ஒரு சோழன். தஞ்சாவூர்க்காரன். ஆகையால் நான் ராஜ ராஜ சோழனாக நடித்தது எனக்கு மிகப்பெருமை. ஏனென்றால் என்னுடைய தாத்தா பாட்டன் ரோலை நானே நடித்தேன். அந்தப் படத்தை ஆனந்த் தியேட்டர் உரிமையாளர் திரு. உமாபதி எடுத்தார். அந்தப் படத்தை ஏ.பி. நாகராஜன் இயக்கினார். சரித்திர நாடகம், சரித்திரக் கதைகள் எடுக்கும்போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். அதிகம் செலவு செய்து எடுக்க வேண்டும். பிரம்மாண்டமான யுத்தக் காட்சிகளெல்லாம் காண்பிக்க வேண்டும். இப்படியெல்லாம் காண்பித்தால்தான் "ராஜ ராஜ சோழன்' நன்றாக இருக்கும்.
ஒரு சின்ன பாளையரக்காரனான கட்டபொம்மனையே பெரிய சக்ரவர்த்திபோல் காண்பித்தோம் அல்லவா? அப்படியிருக்க சக்ரவர்த்தி ராஜ ராஜ சோழனை எவ்வளவு சிறப்பாக காண்பிக்க வேண்டும்? அதையெல்லாம் அந்தப் படத்தில் சரியாகக் காண்பிக்கவில்லை. "ராஜ ராஜ சோழன்' படத்தை ஒரு குடும்ப நாடகம் போலதான் எடுத்திருந்தார்கள். நாடகம் போடும்போது அது சரியாக இருந்திருக்கலாம். ஆனால் திரைப்படத்திற்கு இந்த பாணி ஒத்து வருமா? இந்தப் பக்கம் மகன், அந்தப் பக்கம் அக்கா, இன்னொரு பக்கம் மனைவி, மற்றொரு பக்கம் மருமகள் என்று குண்டு சட்டிக்குள் குதிரை ஓட்டியதால் படம் அவ்வளவு சிறப்பாக ஓடவில்லை'' என்று "ராஜ ராஜ சோழன்' படம் குறித்து விமர்சித்துள்ளார் சிவாஜி.
இதுதான் அவரது தனி குணம். தான் நடித்து விட்டோம் என்பதற்காக தனது படங்களைப் பற்றி உயர்வாகப் பேசுகின்ற போக்கை சிவாஜி என்றுமே கடைப் பிடித்ததில்லை.
மற்றவர்கள் விமர்சிப்பதற்கு முன்னால் தனது படங்கள் பற்றி அவரே விமர்சித்து விடுவார். தனது பலம் என்ன பலவீனம் என்ன என்பதை பரிபூரணமாக உணர்ந்திருந்ததால்தான் தனது திரையுலகப் பயணத்தில் எந்தத் தடுமாற்றமும் இன்றி அவரால் வெற்றி நடை போட முடிந்தது.
அன்புடன்
PS: இதை "சுட்டிக்" காட்டிய மணிசேகரன் சார் அவர்களுக்கு மனங்கனிந்த நன்றி.
JamesFague
31st October 2014, 09:56 AM
The involvement of NT - from old post of Saradha Madam
பிரபல நாடக / திரைப்பட நடிகர் ஏ.ஆர்.எஸ். இந்தவாரம் ஜெயா தொலைக்காட்சியின் 'திரும்பிப்பார்க்கிறேன்' நிகழ்ச்சியில் பங்கேற்று தன் அனுபவங்களை நேயர்களுடன் பகிர்ந்து வருகிறார். அப்போது நடிகர் திலகத்தைப்பற்றி பல விஷயங்களைச்சொன்னார். அதில் ஒன்று.....
"ஒருமுறை ஒரு படப்பிடிப்பின் சாப்பாட்டு நேரம். சிவாஜியுடன் நானும் அமர்ந்து சாப்பிட்டுக்கொண்டிருந்தேன். பரிமாறியவர் வெங்காயம் போட வந்தபோது வேண்டாம் என்று மறுத்துவிட்டார். 'ஏன் வெங்காயம் சாப்பிட மாட்டீங்களா'ன்னு கேட்டேன். 'சாப்பிடுவேன், ஆனா இப்போ வேண்டாம். காரணம் அப்புறம் சொல்றேன்' என்றார்.
சாப்பாட்டுக்குப்பின் படமாக்கப்பட்ட காட்சியில், சவுகார் இறந்ததுபோய்க்கிடக்க அவரருகில் நடிகர்திலகம் அமர்ந்து குளோசப்பில் வசனம் பேசும் காட்சி. நடித்து முடித்துவிட்டு வந்து அமர்ந்தவர் 'ஏன் வெங்காயம் வேண்டாம்னு சொன்னீங்க'ன்னு கேட்டீல்ல. இப்போ ஷூட் பண்ணின சீன் பார்த்தியா. சௌகார் மூச்சைப்பிடித்துக்கொண்டு படுத்திருக்க, அவங்க முகத்தருகே நான் வசனம் பேசும் காட்சி. நான் வெங்காயம் சாப்பிட்டு அந்த வாடையோடு பேசினால், அவங்களாலே மூச்சடக்கிக்கொண்டு படுத்திருக்க முடியுமா?' என்று கேட்டார். நான் ஆச்சரியப்பட்டேன்.
ஏதோ வருவதும் வசனம் பேசுவதும் போவதும்தான் நடிப்புன்னு நினைச்சிக்கிட்டிருந்த எனக்கு, அவர் சிரத்தையோடு அடுத்து வரப்போகும் காட்சி, அதில் தன்னுடன் நடிப்பவருக்கான சிரமம் என்று அவர் ஒவ்வொரு விஷயத்துலயும் எவ்வளவு கவனம் செலுத்துகிறார் என்று ஆச்சரியப்பட்ட நான், இவரிடம் கற்றுக்கொள்ள இன்னும் எவ்வளவு நுணுக்கங்கள் இருக்கோ என்று அதிசயித்தேன்".
JamesFague
31st October 2014, 10:02 AM
a recap of Mr Murali Srinivas old post
ங்கை - Part I
தயாரிப்பு: சுஜாதா சினி ஆர்ட்ஸ்
இயக்கம்: A.C. திருலோகச்சந்தர்
வெளியான நாள்: 19.05.1967
மதன் என்ற பள்ளி சிறுவன் தன் வயதையொத்த நண்பர்கள் சூதாட்டம் விளையாடிக் கொண்டிருக்கும் ஒரு மண்டபத்தின் முன் அமர்ந்து தன் பள்ளிப் பாடங்களை படித்துக் கொண்டிருக்கிறான். நண்பர்கள் வற்புறுத்தியும் படிப்பிலே கவனமாக இருக்கும் அவனின் புத்தக பையை பறித்துக் கொண்டு ஓடும் அந்த சூதாட்ட கும்பல் ஒரு திருட்டில் ஈடுபடுகிறது, போலீஸ் வரும் போது அனைவரும் தப்பித்து ஓடி விட மதன் மாட்டிக் கொள்கிறான். அவனை சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பி விடுகிறார்கள். அவனின் விதவை தாயும் தங்கையும் செய்வதறியாது கலங்கி நிற்கிறார்கள்.
காலம் ஓடுகிறது. வாலிபனாக திரும்பி வரும் மதன் தன் தாயையும் தங்கையும் தேடுகிறான். தாய் இறந்த செய்தியும் தங்கை வடிவு ஒரு பிச்சைக்காரியைப் போல் சாப்பாட்டுக்கு அலையும் அவலத்தையும் தெரிந்து கொள்கிறான். தன் தங்கையை தன்னுடன் அழைத்து சென்று தங்க வைக்கிறான்.ஆனால் ஜெயிலுக்கு போய் வந்தவன் என்பதால் அவனுக்கு எந்த வேலையும் கிடைக்காமல் போகவே பிழைக்க வழி இல்லாமல் சூதாட தொடங்குகிறான். ஆனால் அதிலும் தன் தேவைக்கு பணம் கிடைக்கும் வரை மட்டுமே விளையாடுவது என்ற கொள்கையில்(!) உறுதியாக இருக்கிறான். இவனின் சூதாடும் திறமை அறிந்து ஒரு பெரிய சூதாட்ட கிளப்பின் ஏஜென்ட் ஒருவன் மதனை அங்கே அழைத்து செல்கிறான். அங்கே அந்த கிளப்-ன் தலைவனே [அறுபதுகளுக்கே உரிய முகம் மட்டும் இருளில் இருக்க குரல் மட்டும் கேட்கும் பாஸ்] எவ்வளவோ முயற்சித்தும் பணத்தாசைக்கு மயங்காமல் மதன் வர மறுக்கிறான்.
மதனின் தங்கைக்கு அடிக்கடி உடல் நலம் பாதிக்கப்படுகிறது. அந்த சேரி பிரதேசத்தில் சேவை மனப்பான்மையோடு ஒரு மருத்துவமனை நடத்தும் லீலா என்ற டாக்டர் அவளை பரிசோதித்து அவளுக்கு காச நோய் அறிகுறி இருப்பதாக சொல்கிறாள். அவளை அதற்கென இருக்கும் மருத்துவமனையில் சேர்க்க ஏற்பாடு செய்கிறாள். ஆனால் அதற்கு பணம் தேவைப்படுகிறது. வேறு வழியில்லாமல் மதன் அந்த சூதாட்ட கிளப்-ல் இணைகிறான். இதற்கு முன் லீலாவின் பிறந்த நாள் விழாவிற்கு செல்லும் மதனை போலீஸ் இன்ஸ்பெக்டரான தன் அத்தை பையன் ஸ்ரீதருக்கு அறிமுகம் செய்து வைக்கிறாள் லீலா. அவளின் தந்தையார் உலகநாதன் என்ற பெரும் தொழிலதிபர் என்பதை தெரிந்து கொள்ளும் மதனால் அவரை அப்போது சந்திக்க முடியாமல் போகிறது.
கிளப்-ல் சேரும் மதன் தன் திறமையினால் எல்லா சூதாட்டங்களிலும் வெற்றி பெறுகிறான். சட்ட விரோதமாக நடைபெறும் இந்த சூதாட்டங்களை தடை செய்து குற்றவாளிகளை பிடிக்கும் பொறுப்பு ஸ்ரீதர் கையில் கொடுக்கப்படுகிறது. பல விதங்களிலும் முயற்சி செய்யும் ஸ்ரீதருக்கு தோல்வியே கிடைக்கிறது.
கிளப்-ல் நடனமாடும் லலிதா மதனை ஒரு தலையாக காதலிக்கிறாள். அவள் மேல் மதனுக்கு அன்பிருந்தாலும் காதல் இல்லை.
மதனை காதலிக்கும் லீலாவை அவரது தந்தை கண்டிக்கிறார். ஸ்ரீதரை கல்யாணம் செய்துக் கொள்ள சொல்கிறார். ஆனால் லீலா கேட்பதாக இல்லை. லீலாவின் தந்தை தொழிலதிபர் மட்டுமல்லாமல் பல நல்ல காரியங்களுக்கு குறிப்பாக மருத்துவமனைகளுக்கு உதவி செய்யும் வள்ளலாகவும் விளங்குகிறார். அவரின் நிதி உதவியில் நடைபெறும் மருத்துவமனையில் தான் தங்கைக்கு சிகிச்சை
அளிக்கப்படுகிறது. அங்கே லீலாவுடன் வரும் அவர் மதனிடம் தன் பெண்ணை விட்டு விலகும்படி எச்சரிக்கிறார். அவரது குரல் மதனுக்கு பரிச்சயமுள்ளது போல் தோன்றுகிறது.
சிகிச்சை பெறும் தங்கை வடிவுக்கோ தன் அண்ணன் தன்னை விட்டு விட்டு எப்போதும் வெளியே போவது மிகுந்த வருத்தத்தை கொடுக்கிறது. அது போல் லீலாவிற்கும் மதனின் திடீர் மாற்றமும் பணமும் சந்தேகத்தையும் கோபத்தையும் கொடுக்கிறது.
இதற்கிடையே கிளப்பிற்கு மாறு வேடத்தில் வரும் ஸ்ரீதரை அடையாளம் கண்டு கொண்டு மதன் திருப்பி அனுப்பி விடுகிறான். போலீஸ் ஸ்டேஷன்-ல் சென்று சந்திக்கும் மதனை, ஸ்ரீதர் சூதாட்ட கும்பலை பிடிக்க உதவி செய்யுமாறு வேண்ட, மதன் மறுத்து விடுகிறான். இதற்கிடையே கிளப்-ல் தன்னுடன் சூதாடிய ஒரு வங்கி அதிகாரி,மகளின் திருமணத்திற்கு அதிக பணம் வேண்டுமே என்பதற்காக அலுவலக பணத்தை வைத்து சூதாடியதையும் தோற்றவுடன் தற்கொலை செய்து கொள்வதையும் பார்க்கும் மதன் அன்று முதல் சூதாடுவதில்லை என்ற முடிவெடுக்கிறான். அது மட்டுமல்லாமல் மதன் பாஸ்-ன் அறைக்கு சென்று அவர் வேறு யாருமல்ல லீலாவின் தகப்பனார் உலகநாதன்தான் என்பதை தான் தெரிந்து கொண்டு விட்டதை வெளிப்படுத்துகிறான். ஆனால் அவரை காட்டிக் கொடுக்க மாட்டேன் என்று சொல்லி விட்டு வெளியேறும் மதனை தீர்த்துக் கட்ட முடிவெடுக்கிறார் உலகநாதன். அவன் தங்கையையும் கடத்தி அவனையும் கொல்வது என்பது திட்டம். கிளப்-ல் நடனமாடும் லலிதாவை மிரட்டி மதனை போன்-ல் பேசி வரவழைக்கும்படி செய்கிறார்கள். கிளப்பிற்கு வரும் மதனை துப்பாக்கியால் சுட நடக்கும் முயற்சியில் லலிதா தன்னை பலியிட்டுக் கொள்கிறாள். கொலைப் பழியை மதன் மேல் போட, தப்பித்து செல்லும் மதனை போலீஸ் துரத்துகிறது. ஸ்ரீதர் மதனை துப்பாக்கியில் சுடுகிறான்.
வீட்டிற்கு வரும் ஸ்ரீதர் தன் தாய் மாமனான உலகநாதனிடம் மதனை சுட்டுக் கொன்று விட்டதாக சொல்லி பல உண்மைகளை வாக்கு மூலமாக வாங்க, மற்றொரு வாசல் வழியாக போலீஸ் பாதுகாப்புடன் நுழையும் மதனைப் பார்த்து அதிர்ச்சி அடைகிறார் உலகநாதன். தன்னைப் பிடிக்க போடப்பட்ட திட்டங்கள் இவை என்று அறிந்தவுடன் தன் முடிவை தானே தேடிக் கொள்ள, மருத்துவமனையிலிருந்து தங்கை வடிவு குணமாகி வெளி வர, மதனும் லீலாவும் இணைய அனைத்தும் நலம்.
JamesFague
31st October 2014, 10:04 AM
a recap of Mr Murali Srinivas old post
ங்கை - Part I
தயாரிப்பு: சுஜாதா சினி ஆர்ட்ஸ்
இயக்கம்: A.C. திருலோகச்சந்தர்
வெளியான நாள்: 19.05.1967
மதன் என்ற பள்ளி சிறுவன் தன் வயதையொத்த நண்பர்கள் சூதாட்டம் விளையாடிக் கொண்டிருக்கும் ஒரு மண்டபத்தின் முன் அமர்ந்து தன் பள்ளிப் பாடங்களை படித்துக் கொண்டிருக்கிறான். நண்பர்கள் வற்புறுத்தியும் படிப்பிலே கவனமாக இருக்கும் அவனின் புத்தக பையை பறித்துக் கொண்டு ஓடும் அந்த சூதாட்ட கும்பல் ஒரு திருட்டில் ஈடுபடுகிறது, போலீஸ் வரும் போது அனைவரும் தப்பித்து ஓடி விட மதன் மாட்டிக் கொள்கிறான். அவனை சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பி விடுகிறார்கள். அவனின் விதவை தாயும் தங்கையும் செய்வதறியாது கலங்கி நிற்கிறார்கள்.
காலம் ஓடுகிறது. வாலிபனாக திரும்பி வரும் மதன் தன் தாயையும் தங்கையும் தேடுகிறான். தாய் இறந்த செய்தியும் தங்கை வடிவு ஒரு பிச்சைக்காரியைப் போல் சாப்பாட்டுக்கு அலையும் அவலத்தையும் தெரிந்து கொள்கிறான். தன் தங்கையை தன்னுடன் அழைத்து சென்று தங்க வைக்கிறான்.ஆனால் ஜெயிலுக்கு போய் வந்தவன் என்பதால் அவனுக்கு எந்த வேலையும் கிடைக்காமல் போகவே பிழைக்க வழி இல்லாமல் சூதாட தொடங்குகிறான். ஆனால் அதிலும் தன் தேவைக்கு பணம் கிடைக்கும் வரை மட்டுமே விளையாடுவது என்ற கொள்கையில்(!) உறுதியாக இருக்கிறான். இவனின் சூதாடும் திறமை அறிந்து ஒரு பெரிய சூதாட்ட கிளப்பின் ஏஜென்ட் ஒருவன் மதனை அங்கே அழைத்து செல்கிறான். அங்கே அந்த கிளப்-ன் தலைவனே [அறுபதுகளுக்கே உரிய முகம் மட்டும் இருளில் இருக்க குரல் மட்டும் கேட்கும் பாஸ்] எவ்வளவோ முயற்சித்தும் பணத்தாசைக்கு மயங்காமல் மதன் வர மறுக்கிறான்.
மதனின் தங்கைக்கு அடிக்கடி உடல் நலம் பாதிக்கப்படுகிறது. அந்த சேரி பிரதேசத்தில் சேவை மனப்பான்மையோடு ஒரு மருத்துவமனை நடத்தும் லீலா என்ற டாக்டர் அவளை பரிசோதித்து அவளுக்கு காச நோய் அறிகுறி இருப்பதாக சொல்கிறாள். அவளை அதற்கென இருக்கும் மருத்துவமனையில் சேர்க்க ஏற்பாடு செய்கிறாள். ஆனால் அதற்கு பணம் தேவைப்படுகிறது. வேறு வழியில்லாமல் மதன் அந்த சூதாட்ட கிளப்-ல் இணைகிறான். இதற்கு முன் லீலாவின் பிறந்த நாள் விழாவிற்கு செல்லும் மதனை போலீஸ் இன்ஸ்பெக்டரான தன் அத்தை பையன் ஸ்ரீதருக்கு அறிமுகம் செய்து வைக்கிறாள் லீலா. அவளின் தந்தையார் உலகநாதன் என்ற பெரும் தொழிலதிபர் என்பதை தெரிந்து கொள்ளும் மதனால் அவரை அப்போது சந்திக்க முடியாமல் போகிறது.
கிளப்-ல் சேரும் மதன் தன் திறமையினால் எல்லா சூதாட்டங்களிலும் வெற்றி பெறுகிறான். சட்ட விரோதமாக நடைபெறும் இந்த சூதாட்டங்களை தடை செய்து குற்றவாளிகளை பிடிக்கும் பொறுப்பு ஸ்ரீதர் கையில் கொடுக்கப்படுகிறது. பல விதங்களிலும் முயற்சி செய்யும் ஸ்ரீதருக்கு தோல்வியே கிடைக்கிறது.
கிளப்-ல் நடனமாடும் லலிதா மதனை ஒரு தலையாக காதலிக்கிறாள். அவள் மேல் மதனுக்கு அன்பிருந்தாலும் காதல் இல்லை.
மதனை காதலிக்கும் லீலாவை அவரது தந்தை கண்டிக்கிறார். ஸ்ரீதரை கல்யாணம் செய்துக் கொள்ள சொல்கிறார். ஆனால் லீலா கேட்பதாக இல்லை. லீலாவின் தந்தை தொழிலதிபர் மட்டுமல்லாமல் பல நல்ல காரியங்களுக்கு குறிப்பாக மருத்துவமனைகளுக்கு உதவி செய்யும் வள்ளலாகவும் விளங்குகிறார். அவரின் நிதி உதவியில் நடைபெறும் மருத்துவமனையில் தான் தங்கைக்கு சிகிச்சை
அளிக்கப்படுகிறது. அங்கே லீலாவுடன் வரும் அவர் மதனிடம் தன் பெண்ணை விட்டு விலகும்படி எச்சரிக்கிறார். அவரது குரல் மதனுக்கு பரிச்சயமுள்ளது போல் தோன்றுகிறது.
சிகிச்சை பெறும் தங்கை வடிவுக்கோ தன் அண்ணன் தன்னை விட்டு விட்டு எப்போதும் வெளியே போவது மிகுந்த வருத்தத்தை கொடுக்கிறது. அது போல் லீலாவிற்கும் மதனின் திடீர் மாற்றமும் பணமும் சந்தேகத்தையும் கோபத்தையும் கொடுக்கிறது.
இதற்கிடையே கிளப்பிற்கு மாறு வேடத்தில் வரும் ஸ்ரீதரை அடையாளம் கண்டு கொண்டு மதன் திருப்பி அனுப்பி விடுகிறான். போலீஸ் ஸ்டேஷன்-ல் சென்று சந்திக்கும் மதனை, ஸ்ரீதர் சூதாட்ட கும்பலை பிடிக்க உதவி செய்யுமாறு வேண்ட, மதன் மறுத்து விடுகிறான். இதற்கிடையே கிளப்-ல் தன்னுடன் சூதாடிய ஒரு வங்கி அதிகாரி,மகளின் திருமணத்திற்கு அதிக பணம் வேண்டுமே என்பதற்காக அலுவலக பணத்தை வைத்து சூதாடியதையும் தோற்றவுடன் தற்கொலை செய்து கொள்வதையும் பார்க்கும் மதன் அன்று முதல் சூதாடுவதில்லை என்ற முடிவெடுக்கிறான். அது மட்டுமல்லாமல் மதன் பாஸ்-ன் அறைக்கு சென்று அவர் வேறு யாருமல்ல லீலாவின் தகப்பனார் உலகநாதன்தான் என்பதை தான் தெரிந்து கொண்டு விட்டதை வெளிப்படுத்துகிறான். ஆனால் அவரை காட்டிக் கொடுக்க மாட்டேன் என்று சொல்லி விட்டு வெளியேறும் மதனை தீர்த்துக் கட்ட முடிவெடுக்கிறார் உலகநாதன். அவன் தங்கையையும் கடத்தி அவனையும் கொல்வது என்பது திட்டம். கிளப்-ல் நடனமாடும் லலிதாவை மிரட்டி மதனை போன்-ல் பேசி வரவழைக்கும்படி செய்கிறார்கள். கிளப்பிற்கு வரும் மதனை துப்பாக்கியால் சுட நடக்கும் முயற்சியில் லலிதா தன்னை பலியிட்டுக் கொள்கிறாள். கொலைப் பழியை மதன் மேல் போட, தப்பித்து செல்லும் மதனை போலீஸ் துரத்துகிறது. ஸ்ரீதர் மதனை துப்பாக்கியில் சுடுகிறான்.
வீட்டிற்கு வரும் ஸ்ரீதர் தன் தாய் மாமனான உலகநாதனிடம் மதனை சுட்டுக் கொன்று விட்டதாக சொல்லி பல உண்மைகளை வாக்கு மூலமாக வாங்க, மற்றொரு வாசல் வழியாக போலீஸ் பாதுகாப்புடன் நுழையும் மதனைப் பார்த்து அதிர்ச்சி அடைகிறார் உலகநாதன். தன்னைப் பிடிக்க போடப்பட்ட திட்டங்கள் இவை என்று அறிந்தவுடன் தன் முடிவை தானே தேடிக் கொள்ள, மருத்துவமனையிலிருந்து தங்கை வடிவு குணமாகி வெளி வர, மதனும் லீலாவும் இணைய அனைத்தும் நலம்.
JamesFague
31st October 2014, 10:04 AM
ங்கை - Part II
தங்கை - இந்த படத்தைப் பொறுத்தவரை நடிகர் திலகத்தின் மிக சிறப்பான நடிப்பில் வெளியான படம் என்றோ மிக பெரிய வெற்றிப் படம் என்றோ அதிகம் விமர்சிக்கப்படாத படம் என்றோ சொல்ல முடியாது. ஆனாலும் இந்த படத்தை நாம் அலசலுக்கு எடுத்துக் கொண்டதற்கு ஒரு முக்கிய காரணம் நடிகர் திலகத்தின் திரைப்பட வாழ்க்கையில் ஒரு மாறுதலை கொண்டு வந்த படம் என்ற முறையில் இதை எடுத்துக் கொள்வோம்.
அதுவரை [1967] கிட்டத்தட்ட பதினைந்து வருடங்கள் வரை நடிகர் திலகம் பலதரப்பட்ட வேடங்கள் செய்திருந்தாலும் action வேடங்கள் என்று சொல்லப்படும் சண்டைக்காட்சிகள் இடம் பெறும் படங்களை அவர் செய்யவில்லை. அது தேவை என்று அவர் நினைக்கவுமில்லை. எம்.ஜி.ஆர். படங்களில் அதுவே முக்கிய கவர்ச்சியாக இருந்த போதும் அது இங்கே இடம் பெறவில்லை. 1964- 65 காலக்கட்டத்தில் ஜெய்சங்கர், ரவிச்சந்திரன் அறிமுகமான பிறகு அவர்களது படங்களிலும் சண்டைக் காட்சிகள் இடம் பெற துவங்கின. அது மட்டுமல்ல சின்ன சின்ன நடன அசைவுகளும் [குறிப்பாக ட்விஸ்ட் டான்ஸ்] பாடல் காட்சிகளில் இடம் பெற ஆரம்பித்தன. இள வயது நடிகர் திலகத்தின் ரசிகர்களுக்கு மனதளவில் இந்த விஷயம் ஒரு சின்ன ஏக்கமாக வளர ஆரம்பித்தது.
இந்த நேரத்தில் தான் பாலாஜி நடிகரிலிருந்து தயாரிப்பாளர் என்ற நிலைக்கு உயர்ந்தார். ஆனால் அவரது முதல் படமான அண்ணாவின் ஆசை தோல்வியை தழுவியது. உடனே அவர் சென்ற இடம் அன்னை இல்லம். நடிகர் திலகமும் உடனே ஒத்துக் கொண்டார். முதன் முதலாக நடிகர் திலகத்தின் படத்திற்கு திருலோகச்சந்தர் இயக்குனர் பொறுப்பை ஏற்றார். ஒரு தெலுங்கு படத்தின் ரீமேக் தான் தங்கை. கதையை கேட்டதும் நடிகர் திலகம் சிறிது தயங்கினார். வேறு கதை பார்க்கலாமா என்று கூட கேட்டிருக்கிறார். ஏ.சி.டி. ஒரு முறை சொன்னார் "சிவாஜி நாடகத்தில் நடிக்கும் காலத்திலேயே நாட்டியம் ஆட பழகியவர். தூக்கு தூக்கி படத்தில், காவேரி படத்தில் எல்லாம் சிறப்பாகவே நடனம் ஆடியிருக்கிறார். அதன் பிறகு அவர் அதை முயற்சி செய்யவில்லை. அவ்வளவுதான். அது போல் சண்டைக் காட்சிகள் என்பது ஒன்றும் பெரிய விஷயமில்லை. உங்களால் செய்ய முடியும் என்று சொன்னேன். அதன் பிறகுதான் ஒத்துக் கொண்டார்."
இப்படி சொல்லும் போது படத்தில் முழுக்க முழுக்க சண்டைக் காட்சிகள் என்றோ நடனக் காட்சிகள் என்றோ நினைத்தால் ஏமாந்து போவோம். முதல் அரை மணி நேரத்தில் ஒரு சண்டைக் காட்சி. அதன் பிறகு கிளைமாக்ஸ்-ல் தான் சண்டை. அது போல ஒரு பாடல் காட்சியில் மட்டுமே ட்விஸ்ட் ஆடுவார். ஆனால் இந்த சின்ன மாற்றம் பிற்காலத்தில் அவர் action படங்களை தயக்கமில்லாமல் செய்ய உதவியது. பொதுமக்களும் தங்கையை ஏற்றுக் கொண்டார்கள் என்பதும் அவர் பிற்காலத்தில் செய்த படங்களுக்கு ஒரு தூண்டுதலாக அமைந்தது என்றும் சொல்லலாம்.
அது மட்டுமல்ல பாலாஜி என்ற Top notch தயாரிப்பாளர் உருவாவதற்கும், நடிகர் திலகத்தை வைத்து மிக அதிகமான படங்களை தயாரித்தவர் என்ற பெருமையை அடைவதற்கும், சிவாஜி ரசிகர்களின் மனத்துடிப்பை மிக சரியாக உணர்ந்தவர் என்ற பெயர் எடுப்பதற்கும் பாலாஜிக்கு இந்த தங்கை பெரிதும் உதவி புரிந்தாள். அது போல் சிவாஜியை வைத்து மிக அதிகமான படங்கள் [20] வரை இயக்குவதற்கும், நடிகர் திலகத்தோடு ஒரு நல்ல புரிதல் உண்டாவதற்கும் ஏ.சி.டி. அவர்களுக்கு இந்த தங்கை பயன்பட்டாள்.
பெற்றால்தான் பிள்ளையா பட விஷயத்தில் வசனகர்த்தா ஆரூர்தாஸ் மீது கோபம் இருந்தும் கூட பாலாஜியும் ஏ.சி.டி.யும் ஆரூர்தாஸ் வேண்டும் என்று சொன்னபோது எந்த வித மறுப்பும் சொல்லாமல் நடிகர் திலகம் ஏற்றுக் கொண்டதின் விளைவு ஆரூர்தாஸ் என்ற திறமையான வசனகர்த்தா தொடர்ந்து நடிகர் திலகத்தின் படங்களுக்கு பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது. இதற்கும் தங்கை திரைப்படம் ஒரு காரணமாக இருந்தது என்று சொன்னால் மிகையில்லை.
விமர்சனத்திற்கு செல்வோம்.
JamesFague
31st October 2014, 10:05 AM
தங்கை - Part III
நடிகர் திலகம் ப்பூ என்று ஊதி தள்ளிய வேடங்களில் ஒன்று இந்த மதனகோபால் என்ற மதன். அவரது Light Hearted கேரக்டர்களில் ஒன்று இந்த படம். Style quotient என்று சொல்வார்களே அது தூக்கலாக வெளிப்பட்ட படம். தங்கையின் மேல் உயிரையே வைத்திருக்கும் அண்ணனாக அவர் பல படங்களில் நடித்துள்ளார், ஆனாலும் இந்த படத்தில் எந்தளவிற்கு இருக்க வேண்டுமோ அதை மட்டுமே செய்திருப்பார். ஐந்து ரூபாய்க்கு மேல் விளையாட மாட்டேன் என்று எழுந்து போகும் இவரை ஒரு ரவுடி முகத்தில் குத்து விட கீழே விழுந்து மீண்டும் எழுந்து ஒரு சின்ன சிரிப்போடு வருவார்.[இந்த விஷயத்திலும் இன்றைய ஹீரோ-கள் புதுமை என்று பிற்காலத்தில் பண்ணியதை அன்றே செய்திருப்பார்]. பக்கத்தில் வந்து இரண்டு கைகளையும் ரவுடியின் முகத்திற்கு நேரே நீட்டி, கை தட்டி விட்டு ஒரு நாலு பஞ்ச் கொடுப்பார். ஓபனிங் ஷோ-வில் முதன் முதலாக அதை பார்த்த போது ரசிகர்கள் தியேட்டரில் செய்த ஆரவாரம், விசில் பற்றி பலர் சொல்ல கேட்டிருக்கிறேன். அது போல் கிளப்பிற்கு முதன் முதலில் வரும் போது டான்ஸ் பார்த்து விட்டு, தன்னை மறந்து எழுந்து ஒரு சின்ன ஸ்டெப் போட்டு விட்டு எல்லோரும் பார்ப்பதை பார்த்தவுடன் வெட்கப்பட்டு நெளிவது ரசிக்கும்படி செய்திருப்பார். காஞ்சனாவை சிகரெட்டால் சுடும் ராமதாசை எதிர்பாராத நேரத்தில் குத்துவது, ஆஸ்பத்திரி வாசலில் கூடியிருக்கும் கூட்டத்தை விரட்டுகிறேன் என்று கே.ஆர்.விஜயாவையும் டாக்டர் என்று தெரியாமல் மிரட்டுவது, அவருடன் காரில் போகும் போது தன் நிலை பற்றி காஷுவலாக பேசுவது, பிறந்த நாள் விழாவில் இன்ஸ்பெக்டர் சொந்தக்காரன் என்று விஜயா சொன்னவுடன் எனக்கும் அவங்களுக்கும் சரிப்பட்டு வராது என்று கமன்ட் அடிப்பது, பாட வேண்டும் என்று சொன்னவுடன் சின்ன ட்விஸ்ட் ஸ்டெப்ஸ் வைத்து ஆடும் அழகு, கிளப்-லும் போலீஸ் ஸ்டேஷன்-லும் பாலாஜியோடு பேசும் கிண்டல் கலந்த ஸ்டைல், பாலாஜி ஒரு கையால் மறு கையில் தட்டுவதை அவருக்கே செய்து காண்பிப்பது, காரில் வைத்து தன் மகளை காதலிக்க கூடாது என்று சொல்லும் மேஜரிடம் பதில் சொல்லாமல் சிரிப்பது, அவர்தான் தன் பாஸ் என்று தெரிந்துக் கொண்டேன் என்று அவரிடமே போய் சொல்வது, தங்கை தான் வாங்கி கொண்டு வந்த சாப்பாட்டை அவசரமாக பிடுங்கி சாப்பிடுவதை பார்த்து விட்டு வருத்தப்படுவது, தன்னால் ஒருவன் தற்கொலை செய்துக் கொண்டான் என்று தெரிந்ததும் வந்து கையை பொசுக்கி கொள்வது, தன்னை சந்தேகப்படும் விஜயாவை அடித்து விட்டு கொஞ்சம் கொஞ்சமாக அவர் முகம் மாறுவது - அவருக்கென்ன எந்த ரோலாக இருந்தாலும் எனக்கு ஒன்று தான் என்பதை உணர்த்தியிருப்பார்.
மற்ற கதாபாத்திரங்களை பொறுத்த வரை, இன்ஸ்பெக்டராக வரும் பாலாஜி நீட்டாக செய்திருப்பார். வெளியில் தொழிலதிபர் உள்ளே சூதாட்ட கிளப்-ன் பாஸ் என்ற வழக்கமான ரோல் மேஜருக்கு. அவரும் வழக்கம் போல். நாயகி விஜயா. டாக்டர் ரோல்.ஆனால் அவரை விட கிளப் டான்சராக வரும் காஞ்சனாவிற்கு நல்ல ஸ்கோப். அவரும் அதை குறையில்லாமல் [அந்த காலக்கட்டத்தில் நாயகியின் பாத்திரப்படைப்பில் இயல்பாகவே அமையும் அபத்தங்களை தவிர்த்து பார்த்தால்] செய்திருப்பார். நாகேஷ் தான் ஏஜன்ட். ஆனால் நகைச்சுவை பஞ்சம். தங்கை வடிவாக வரும் பேபி கௌசல்யா முதல் இரண்டு மூன்று காட்சிகளுக்கு பிறகு முழுக்க பெட் Ridden.
ஆரூர்தாஸின் வசனங்கள் முதல் பதினைந்து நிமிடங்களை தவிர்த்து விட்டு பார்த்தால் இயல்பாக எழுதியிருப்பார். எந்த திரைப்படமும் அது வெளியாகும் காலக்கட்டத்தை தெரிந்தோ தெரியாமலோ பிரதிபலிப்பது உண்டு. இதிலும் காரில் செல்லும் போது மேஜர் சிவாஜியை கேள்வி கேட்க அதை தடுக்க நினைக்கும் விஜயா ரேடியோவை வைக்க அதில் மளிகை சாமான்கள் விலை சொல்லுவார்கள். [அப்படி கூட ஒரு நிகழ்ச்சி வானொலியில் இருந்ததா என்ன?] அதில் துவரம் பருப்பின் விலை ஒரு கிலோ ஒரு ரூபாய் எழுபத்திரண்டு பைசா என்று வரும். [இன்றைக்கு கிலோ ருபாய் எண்பதெட்டு என்று நினைக்கும் போது -ம்ம்].
திருலோகச்சந்தரை பொறுத்த வரை ஏற்கனவே எடுக்கப்பட்ட கதை, நடிகர் திலகம் மாதிரி ஒரு ஹீரோ. எனவே அவர் வேலை ஈசியாக முடிந்தது.
இனி பாடல்களுக்கு வருவோம். கண்ணதாசன் - எம்.எஸ்.வி. கூட்டணி.
1. தத்தி தத்தி தள்ளாட- எல்.ஆர். ஈஸ்வரி - கிளப் டான்ஸ் - காஞ்சனாவின் அறிமுக பாடல். நாகேஷின் சில நல்ல ஸ்டெப்ஸ்-ஐ பார்க்கலாம்.
2. கேட்டவரெல்லாம் பாடலாம் - படத்தில் அதிக பாப்புலர் ஆன பாடல். இந்த பாடலின் ட்யுன் போடும்போது தான் நான்கு ட்யுன்களில் எதை செலக்ட் செய்வது என தெரியாமல் இறுதியில் சுஜாதா சினி ஆர்ட்ஸ் ஆபிசிற்கு வந்த போஸ்ட்மானை தேர்ந்தெடுக்க சொன்னதாக சொல்வார்கள். சாரதா இதைப் பற்றி ஏற்கனவே எழுதியிருக்கிறார். நடிகர் திலகத்தின் ட்விஸ்ட் மற்றும் ஸ்டையிலான கைதட்டல் ஆகியவை இடம் பெறும். இதையே சிறிது நீட்டி ஊட்டி வரை உறவு படத்தில் ஹாப்பி இன்று முதல் ஹாப்பி பாட்டில் செய்வார். இந்த பாட்டின் ஆரம்பத்தில் நடிகர் திலகத்தின் சில க்ளோஸ் அப் ஷாட்-களை பாஸ்ட் மெர்ஜிங் என்ற முறையில் சட்டென்று என்று மாறி மாறிக் காட்டுவார்கள். கவனித்து பார்த்தால் தெரியும். அது மட்டுமல்ல 1967-யிலேயே இதை முயற்சித்திருப்பது ஆச்சர்யம்.
3. தண்ணீரிலே தாமரை பூ - படத்தின் இன்னொரு அருமையான பாடல். நடிகர் திலகத்தின் குணசித்திர நடிப்பை காண வந்த ரசிகர்களுக்கு விருந்து. பெண்களுக்கு மிகவும் பிடித்த பாடல். குறிப்பாக கடைசி சரணத்தில்
எனக்கென இருப்பது ஒரு விளக்கு
இதனுடன் தானா உன் வழக்கு
என்ற வரிகளின் போது ரசிகர்கள் கைதட்ட பெண்கள் கண்ணீரை துடைத்துக் கொள்வார்கள். படத்தில் மீண்டும் ஒரு முறை பின்னணி இசை இல்லாமலும் இந்த பாடல் ஒலிக்கும்.
4. சுகம் சுகம் அது துன்பமான இன்பமானது - விஜயாவிற்கு ஒரே பாடல். கோபத்தில் இருக்கும் சிவாஜி மெது மெதுவாக இயல்பு நிலைக்கு வருவதை இதில் காணலாம்.
5. இனியது இனியது உலகம் - காரிலிருந்து இறக்கி விடப்படும் நடிகர் திலகம் ரோட்டில் பாடிக் கொண்டே வரும் காட்சி. இன்றைய OMR ரோடு என்று சொல்லுவார்கள். இதிலும் ஸ்டைல்தான் பிரதானம். பாடலின் முடிவில் அந்த வழியாக வரும் லாரியை கை காட்டி நிறுத்த முயற்சிக்க, காமிராவிற்கும் சிவாஜிக்கும் நடுவில் வரும் லாரி நிற்காமல் போக அடுத்த ஷாட்-ல் நடிகர் திலகம் தொங்கிக் கொண்டே போவது போல் வரும். தியேட்டரில் விசில் பறக்கும்.
6. நினைத்தேன் என்னை அழைத்தேன் உன்னை - கிளைமாக்ஸ் லீட் சீன், காஞ்சனா ஆடிப் படும் காட்சி. சரணத்தில் ஈஸ்வரி பிரமாதப்படுத்தியிருப்பார்.
இந்த படம் வெளி வருவதற்கு முன் வழக்கம் போல் கிண்டல் கேலி எல்லாம் இருந்தது. கணேசன் சண்டை காட்சியில் நடித்தால் யார் பார்ப்பது போன்ற கமன்ட்கள் அடிக்கப்பட்டன. இந்த படம் வெளியான போது இதற்கு போட்டியாக ஒரு படமும் வந்தது. எல்லா கிண்டல்களையும் புறந்தள்ளி மக்கள் தங்கையை வரவேற்றார்கள். சென்னையில் திரையிடப்பட்ட நான்கு அரங்குகளிலும் 50 நாட்களை கடந்தது படம். அவை
சித்ரா - 70 நாட்கள்
கிரவுன் - 70 நாட்கள்
உமா - 50 நாட்கள்
ஜெயராஜ் - 50 நாட்கள்.
மதுரையிலும் திருச்சியிலும் சேலத்திலும் 8 வாரங்களை கடந்த இந்த படம் கோவை - இருதயாவில் அதிகபட்சமாக 77 நாட்கள் ஓடியது. திருவருட்செல்வர் வெளியானதால் சென்னை- கிரவுன் போன்ற இடங்களில் 100 நாட்கள் ஓடும் வாய்ப்பை இழந்தது.
கொசுறு தகவல்- போட்டியாக வெளியான படத்தைப் பொறுத்தவரை ஆட்சி மாற்றத்திற்கு பிறகு வந்த முதல் படம், தமிழக ஆட்சி மாற்றத்திற்கு ஒரு முக்கிய காரணமாக இருந்த ஜனவரி 12- ல் நடந்த சம்பவத்திற்கு பிறகு வெளியான முதல் படம், சொந்த சகோதரரே இயக்கிய படம். இவை அனைத்தும் இருந்தும் எந்த அரங்கிலும் 50 நாட்களை கூட எட்டிப் பிடிக்க முடியவில்லை. எப்போதும் போல் பாக்ஸ் ஆபிஸ் கிங் தான் மட்டும்தான் என்பதை நடிகர் திலகம் மீண்டும் நிரூபித்தார்.
மொத்தத்தில் நடிகர் திலகத்தின் entertainer படங்களின் ஆரம்பம். ரசிக்கும்படியாகவே இருந்தது.
அன்புடன்
PS: 1.எங்கேயும் [மலேஷியா, சிங்கப்பூர் போன்ற இடங்களில் கூட] இப்போது கிடைக்காத இந்த தங்கை திரைப்படத்தின் சிடியை ஒரு பிரதி எடுத்து எனக்கு கொடுத்ததற்கும்
2. சென்னை கோவை நகரங்களில் இந்த படம் ஓடிய சரியான நாட்களை உறுதிப்படுத்தியதற்கும் நண்பர் சுவாமிக்கு என் நெஞ்சார்ந்த நன்றி.
ScottAlise
31st October 2014, 02:55 PM
பார்த்ததில் பிடித்தது -45
ராஜரிஷி :
முதல் மரியாதை என்ற மாபெரும் வெற்றிக்கு பிறகு வந்த படம் தான் இந்த ராஜரிஷி .இந்த படத்தின் கதை பல நபர்களுக்கு தெரிந்து இருக்கும் ,குறிப்பாக புராண கதைகளில் ஆர்வம் இருக்கும் அனைவருக்கும் , இந்த படத்தில் கூறப்பட்டு உள்ள சம்பவங்களை தாண்டி அதிகமாக தெரிந்து இருக்கும் , படத்தின் கதை -கௌசிகன் என்ற அரசன் மிக கடுமையாக தவம் செய்து பிரமரிஷி பட்டதை அடைய முயற்சிக்கிறார் , அவர் சந்திக்கும் இன்னல்கள் தான் கதை , முடிவில் அவர் பிரமரிஷி என்ற மிக உயர்ந்த பட்டதை அடைந்தாரா என்பதே கதை
படம் frame to frame சிவாஜி சாரின் படம் தான் , Complete one man show . முதல் காட்சியில் யுத்தத்தில் வெற்றி பெற்ற மன்னனாக வரும் பொது கம்பீரமாக வந்து அமருவதும் அதை தொடர்ந்து வரும் நடன காட்சியை காணும் போதும் அதே கம்பீரத்துடன் இருப்பதும் , ஆனால் தன் நாட்டு மக்கள் பசி பட்டினியால் வாடுவதை கண்டு மனம் வேம்புவதும் அதை வெறும் கண்ணீர் மூலம் வெளிபடுதாமல் , தொண்டை கட்டியதை போல் ஒரு வித வருத்ததுடன் அவர் பேசும் வசனம் MAKES HIM STAND APART
வசிஷ்டர் உணவை கொடுத்து அனுப்பிய உடன் , அவரை சந்தித்து அவரிடம் உதவி கேட்கும் இடத்தில ராஜா என்ற தோரணையில் பேசுவதும் , வசிஷ்டர் மறுத்த உடன் தன் படைகளை விட்டு காமதேனுவை கை பற்ற அனுப்புவதும் , அது தோல்வியில் முடிந்த உடன் வசிஷ்டரின் தவ வலிமையை அறிந்து , தானும் , அதை போன்ற நிலையை அடைய நினைத்து தவம் செய்ய புறப்படும் பொது
வசிஷ்டர் தடுக்கும் பொது மூஞ்சியில் வெறுப்பை காடும் விதம் , கூடவே தன்னால் சாதிக்க முடியும் என்று சவால் விடுவதும் ஒரே நேரத்தில் இரு வித உணர்சிகளை பிரதிபலிக்க நம்மவரால் மட்டும் முடியும்
தன் தவத்தை கலைக்க தேவர்கள் முயற்சிக்கும் பொது , அதை சாதூர்யமாக கையாளுவதும் உதரணத்துக்கு ராதிகாவை குழந்தையாக மாற்றி முத்தம் கொடுக்கும் பொது அவர் முகத்தில் தெரியும் மகிழ்ச்சி, தடைகளை வென்று விட்ட பிரதிபலிப்பு , ஏகாம்பரேஸ்வர் கோவிலில் இவர் பாடும் பாடலும் , அதற்க்கு கொடுக்கும் reaction அந்த பாட்டை வேறு ஒரு தளத்துக்கு அழைத்து செல்லுகிறது , அதுவும் ராஜரிஷி பட்டம் கிடைத்த உடன் இவர் முகத்தில் தெரியும் திருப்தி கலந்த பெருமிதம் நம்மளையும் தொற்றி கொள்ளுகிறது
உணர்ச்சிவசப்பட்டு தன் தவவலிமையை இழந்து விடுவதும் , மீண்டும் முயற்சி செய்வதும் , ராமர் வில்லை முறிக்கும் பொது இவர் தன் மாணவர் தான் அவர் என்று பூரிப்பு அடையும் காட்சி , ராமர் தன் தந்தை சொல்ல்மிக்க மந்திரம் இல்லை என்று இவர் கெஞ்சி கேட்டும் கூட மறுத்து உடன் இவர் வெடித்து அழுவதும் , தொண்டர்ந்து தன் நிலையை நினைத்து கடவுளை நினைத்து பாடும் காட்சி, தன் மகள் தான் சகுந்தலை என்று தெரிந்து தன் மகளுக்கு அநீதி நடந்து இருப்பதை போருக்க முடியாமல் துஷ்யந்தன் சபையில் வந்து போராடுவதும் , தன் விரோதி என்று நினைத்து கொண்டு இருந்த வசிஷ்டர் வசமே கெஞ்சுவதும் நெஞ்சை பிழியும் காட்சி . கடைசியில் அந்த வசிஷ்டர் வசமே பிரம்மரிஷி என்ற பட்டம் கிடைத்த உடன் அவர் நெஞ்சில் கை வைத்து பெருமிதத்துடன் அனந்த கண்ணீர் வடிக்கிறார் , அவர் மட்டுமா நாமும் தான் இந்த நடிப்பை பார்த்து
ScottAlise
31st October 2014, 02:56 PM
படத்தில் நடித்த சிவாஜி என்ற சிகரத்தின் நடிப்பை பற்றி எழுதி விட்டேன் இனி படத்தை பற்றி சில வரிகள்
ராஜரிஷி என்ற பட்டம் சுலபமாக வந்து விடாது , ஈசன் அதை தந்தாலும் , அதை கையாளும் பக்குவம் விஸ்வமித்ரருக்கு வரவில்லை என்பது திரிசங்குக்கு உணர்ச்சிவசப்பட்டு உதவும் காட்சியும் , ஒரு நிமிட சபலம் நம் வாழ்கையை புரட்டி போட்டு விடும் என்பது மேனகா பாத்திரத்திலும் , பாசம் , பந்தம் இருந்தால் முக்தி அடைய முடியாது , ரிஷியாக முடியாது என்பது சகுந்தலை பாத்திரம் மூலம் மிக எளிமையாக எடுத்து காட்டிய இயக்குனர் அவர்களை பாராட்டலாம்
இந்த படத்தை தயாரித்தவர் கலைஞானம் இவரை பற்றி நான் சொல்லி தெரியவேண்டியது இல்லை , தேவர் films கதை இலாகாவில் நிரந்திர இடம் இவருக்கு உண்டு , பைரவி படத்தின் தயாரிப்பாளர் , அதனால் தான் இந்த பட கம்பெனி பெயர் கூட பைரவி films என்ற பெயரிட பட்டு உள்ளது , இயக்குனர் ஷங்கர் MGR , சிவாஜி இருவரையும் வைத்து பல படங்களை எடுத்து உள்ளார் , கதை வசனம் prof AS பிரகாசம் , இமயம் , சாதனை என்று நடிகர் திலகத்துடன் வெற்றி பவனி வந்தவர்
பெரிய ஜாம்பவான்கள் சேர்ந்தால் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய படம், படம் தொடர்பாக பத்தரிகையில் வந்த செய்தி எதிர்பார்ப்பை அதிக படுத்தியது , இயக்குனர் சங்கர் வேறு பல பக்தி படங்களை எடுத்து இறையருள் சங்கர் என்று பெயர் எடுத்தவர்
ஆனால் படத்தில் ஒரு வித நாடகத்தன்மை அதிகம் காணபடுவதை மறுக்க முடியவில்லை , VKR , மூர்த்தி , வனிதாவின் உப்பு சப்பு இல்லாத நகைச்சுவை வேறு படத்துக்கு வேக தடை , அந்த காட்சிகளை நீக்கி விட்டு , படத்தில் இன்னும் சில சம்பவங்களை சேர்த்து இருக்கலாம் .
இந்த படத்தில் தந்திர காட்சிகளை படம் பிடித்தவர் ரவிகாந்த் , திரிசங்கு சொர்க்கம் காட்சி , கறவை மாடு நந்தினி இடம் பெரும் காட்சிகள் இவர் கைவண்ணம் , பட்டணத்தில் பூதம் , ஒளிவிலகில் ஒரே காட்சியில் பல MGR தோன்றுவது இவர் கைவண்ணம் தான் ,
இதே படத்தை NTR பிரமரிஷி விஸ்வமித்ரா என்ற பெயரில் ரீமேக் செய்தார்
eehaiupehazij
31st October 2014, 09:32 PM
வசிஷ்டர்களான ரசிகர்களின் வாயால் திரையுலக ராஜரிஷி பட்டம்!
திரையுலகம் என்ற அண்டவெளியில் கோடானுகோடி தாரகைகள் மின்னலாம். ஆனால் ஒரேஒரு தாரகைதான் தனது இடத்தில் மாறாது நிலைத்து நின்று ஒரு துருவநக்ஷத்திரமாக நடிகர்திலகம் போல ஒரு ஒப்பற்ற வழிகாட்டியாக மின்னிக்கொண்டே இருக்க முடியும். அதுபோலவே எத்தனையோ பேர் தம்மை திரையுலக ராஜாக்கள் என்று நிலைநிறுத்த சுயதம்பட்டங்கள் அடித்துக்கொண்டாலும் வசிஷ்டர்களான ரசிகர்களின் வாயால் திரையுலக ராஜரிஷி பட்டம் பெற்றவர் நடிகர்திலகமே!
In appreciation to our young Turk Ragulram's contribution on NT's version of Rajarishi...my way of a humble thanksgiving! Continue your good work on NT's neglected gems of movies!
https://www.youtube.com/watch?v=TFh19g98wPQ
https://www.youtube.com/watch?v=KfKYqIS3qI8
thrisangu sorkkam!
https://www.youtube.com/watch?v=z6qwNsmRaB0
https://www.youtube.com/watch?v=VVnyE-j6PpA
Murali Srinivas
31st October 2014, 11:38 PM
http://i1373.photobucket.com/albums/ag399/namburajan/fb_zps9d9aa2e6.jpg
நெல்லை மாநகரில் சென்ட்ரல் திரையரங்கில் தீபாவளியன்று வெளியான நடிகர் திலகத்தின் நீதி திரைப்படம் ஒரு வாரத்தையும் தாண்டி 9 நாட்கள் ஓடியிருக்கிறது. வெகு நாட்களுக்கு பின் அந்த திரையரங்கில் ஒரு படம் ஒரு வாரத்தை தாண்டி ஓடியிருப்பதாக அந்த ஊர் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. திருநெல்வேலி கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு நீதி திரைப்படத்தின் விநியோக உரிமையை அண்மையில்தான் அந்த விநியோகஸ்தர் வாங்கினார். வாங்கிய உடனே படம் வெளியிட வாய்ப்பு கிடைத்ததோடு மட்டுமல்லாமல் அது நல்ல முறையில் ஓடியிருப்பது தியேட்டர் மற்றும் விநியோகஸ்தர் இருவருக்கும் மகிழ்ச்சியை கொடுத்திருக்கிறது. மேலும் அந்த அரங்கில் விரைவில் வெள்ளை ரோஜா, சந்திப்பு வைர நெஞ்சம் ஊட்டி வரை உறவு மற்றும் அண்ணன் ஒரு கோவில் ஆகியவை வெளியாக இருக்கிறது. அங்கு மட்டுமல்ல நெல்லை மாவட்டத்தில் அனைத்து இடங்களிலும் மேற்சொன்ன படங்களெல்லாம் வலம் வர இருக்கின்றன என்ற இனிப்பான செய்தியையும் நெல்லை வாழ் ரசிகர்களுக்கு சமர்ப்பிக்கிறோம்.
அதே போன்று சென்னை வாழ் ரசிகர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி. சென்னை மினர்வா திரையரங்கில் நடிகர் திலகத்தின் சொர்க்கம் திரைப்படம் இன்று முதல் 3 காட்சிகளாக திரையிடப்பட்டிருக்கிறது. ரசிகர்கள் கண்டு களிக்க ஒரு அருமையான சந்தர்ப்பம்.
அன்புடன்
Russellmai
1st November 2014, 07:31 AM
நடிகர் திலகத்தின் புதிய பறவை திரைக்காவியமும் விரைவில் நெல்லையில்
திரையிடப்பட உள்ளது.
JamesFague
1st November 2014, 07:45 PM
Style King in Uthama Puthiran now showing in Murasu. Enjoy
JamesFague
1st November 2014, 07:47 PM
வியட்நாம் வீடு -விகடன் விமரிசனம்
புகழ்பெற்ற நாடகம் ஒன்று திரைப்படமாகும்போதெல்லாம், ஒரு கேள்வி எழுந்துதான் தீரும்: 'நாடகம் மாதிரி படம் இருக்கிறதா?'
'வியட்நாம் வீடு' திரைப்படம், நாடகம் மாதிரி இல்லை. நாடகத்தில் புலனாகாத சில விஷயங்கள் படத்தில் ஜொலிக்கின்றன. ஒன்றிரண்டு அம்சங்கள் சோபிக்கத் தவறியுமிருக்கின்றன.
நெருக்கக் காட்சிகளில் காணக் கிடைத்த 'பிரெஸ்டீஜ்' கணேசனின் முக பாவங்கள், திரையில் கிடைத்த அபூர்வ விருந்து. ஆடி ஓய்ந்து முதுமை எய்திவிட்ட தம்பதியரின் பிணைப் பையும் இழைவையும் பத்மனாபன் தம்பதியர் (சிவாஜி-பத்மினி) சித் திரித்திருக்கும் நேர்த்தி, திரையுல கிலேயே ஒரு புதிய சாதனை.
''சாமி பேரை ஏம்பா வச்சுக்கிறீங்க! வையக் கூட முடியலை!'' என்று வேலைக்காரனிடம் அலுத்துக் கொள்ளும் இடத்திலும் சரி, 'வெற்று மிஷினில் டைப் அடிக்கக் கூடாது!' என்று டைப்பிஸ்டை நாசூக்காகக் குத்திக் காட்டும் காட்சியிலும் சரி, 'நீ முந்தினால் உனக்கு, நான் முந்தினால் எனக்கு' என்று அத்தையிடம் விடைபெறும் காட்சியிலும் சரி... சிவாஜியின் நடிப்பில் நயம், முதிர்ச்சி, முழுமை அத்தனையும் பொலிகின்றன.
முழுக்க முழுக்க ஒரு வயோதிகரைக் கதாநாயகனாகக் கொண்டே, துளியும் சுவை குன்றாமல் குடும்ப மணம் கமழ ஒரு திரைப்படத்தைத் தயாரித்த சாமர்த்தியத்தை எவ்வளவு வேண்டுமானாலும் பாராட்டலாம்.
பிரெஸ்டீஜ் தம்பதியருக்கு இரண்டு டூயட்! முதலிரவு காட்சியில் (பிளாஷ்பேக்) பாடலைவிட சிவாஜி-பத்மினி அபிநயம் பிரமாதம்.
'உன் கண்ணில் நீர் வழிந் தால்...' பாடல் இசையமைப்பாலும், படமாக்கியிருக்கும் விதத்தாலும் நன்கு சோபிக்கிறது.
பத்மினியின் தோற்றத்துக்கு முதுமையின் கம்பீரமும், அமைதியும் அவ்வளவாகப் பொருந்தவில்லை. இருந்தாலும் தாம்பத்திய இனிமை இழையோடும் பகுதிகளில் அவர் மின்னுகிறார்.
ஹிப்பியாக அறிமுகமாகும் நாகேஷ், நிறைய எதிர்பார்க்க வைத்து ஏமாற்றிவிடுகிறார். காந்த் அழகாக மனைவிக்குப் பயப்படுகிறார்.
ரமாபிரபாவுக்கு இப்படி மிரட்டி உருட்டவும் தெரியுமா என்று வியக்கிறோம். 'வில்லி' பாத்திரத்தைச் சாமர்த்தியமாகச் செய்கிறார்.
ரிட்டயராகக் கூடிய காலத்தை ஒரு ஜெனரல் மானேஜர் தெரிந்து கொள்ளாமல் இருப்பது ஆச்சர்யம் தான். அதைப் போலவே, வசதியான ஒரு பதவியிலிருந்து ரிட்டயராகும் அதிகாரி, அளவுக்கு அதிகமாக அலட்டிக்கொள்வது அந்தப் பாத்திரத்தின் 'பிரெஸ்டீஜு'க்குப் பொருத்தமாக இல்லை. மூலக் கதையிலுள்ள இந்த பலவீனமான அம்சம் திரையில் பெரிதாகத் தெரிகிறது.
படத்துக்கு 'பிரெஸ் டீஜ்' (கௌரவம்) சிவாஜி யின் நடிப்பு; அவருடைய நடிப்பின் பிரெஸ்டீஜ்... அப்பப்பா!
JamesFague
1st November 2014, 07:50 PM
Courtesy: Mr Joe
முதல் மரியாதை - விகடன் விமரிசனம்
எஸ்.ராமானுஜம், கோவை-2
'சிவாஜியின் சகாப்தம் முடிந்துவிட்டது' என்று சிலர் நினைத்துக்கொண்டிருக்க, சிவாஜிக்கேற்ற அழுத்தமான கதாபாத்திரத்தைக் கொடுத்து அவருடைய சகாப்தம் முடிய வில்லை என்று நிரூபித்திருக் கிறார் அல்லவா பாரதிராஜா?
நடிப்பில் சிவாஜி இமயம் என்பது உலகறிந்த விஷயம். அவர் ஏற்காத பாத்தி ரங்கள் இல்லை. வெளிப்படுத்தாத உணர்ச்சி கள் இல்லை. இதுவரையில் அவருடைய அற்புதமான நடிப்பாற்றலைப் பாராட்டி எழுதப்பட்ட வர்ணனைகளுக்கும், புகழ்ந்து எழுதப்பட்ட வார்த்தைகளுக்கும் மீறிய திறமை அவரிடம் இருப்பதால், இனி அவர் நடிப்பைப் பற்றிப் பாராட்டுவதில் அர்த்த மில்லை.
கற்பனையில் டைரக்டர் காண்பதை காமிராவுக்கு முன் வெளிப்படுத்துவதுதான் நடிப்பு. அந்த இலக்கணம் சிவாஜியிடம் பிசகியதே இல்லை. ராஜா சாண்டோ காலத்தில் நடித்திருந்தால், அவர் கேட்டதையும் கொடுத்திருப்பார். இன்று பாரதிராஜா கேட் பதையும் கொடுக்கிறார். அந்த அளவுக்கு தேவைக்கேற்பவும் காலத்துக்கேற்பவும் தன்னை மாற்றிக் கொள்ளக்கூடியவரைச் சரியாகப் பயன்படுத்திக்கொண்டு வெற்றி காண்பது டைரக்டர்களின் கையில்தான் உள்ளது!
இந்தக் கதையில், பஞ்சத்தால் அடி பட்டு அடைக்கலம் தேடி வரும் ராதா விடம் தூய்மையான உள்ளத்தோடு பழகுவ தாகட்டும், தாய்மாமனுக்குக் கொடுக்கப் பட்ட வாக்கு காப்பாற்றப்பட வேண்டும் என்கிற நிர்பந்தத்தின் காரணமாய், மனைவி வடிவுக்கரசியின் ஏச்சுக்கும் பேச்சுக் கும் கட்டுப்பட்டுப் பெட்டிப்பாம்பாக அடங்கிப்போவதாகட்டும், மனைவி யைச் சார்ந்தவர்கள் ராதாவோடு தன்னைச் சம்பந்தப்படுத்தி எள்ளி நகையாடும்போது சீறி எழுவதாகட் டும்... எந்த இடத்திலும் அளவுக்கதிக மாக உணர்ச்சிவசப்படாமல் சிவாஜி அடக்கமாக நடித்ததிலும், அவரை பாரதிராஜா அப்படி நடிக்க வைத்ததி லும் இருவருமே சம அளவில் வெற்றி பெற்றிருக்கிறார்கள்.
கே.எம்.இளங்கோ, கு.பாளையம்.
பாரதிராஜா எந்தெந்தக் காட்சிகளின்போது நமக்குத் தெரிகிறார்?
எந்தக் காட்சியின்போது தெரிய வில்லை என்று கேட்பதே பொருத்தம்.கலப்படம் செய்யாமல் கிராமத்து மண் வாசனையைப் படம் நெடுக நறுமணக் கச் செய்திருக்கிறார் பாரதிராஜா.
கதாநாயகிக்கு வெள்ளை ஆடை உடுத்தி ஸ்லோமோஷனில் காற்றில் நீச்சலடிக்க வைப்பது, திருவிழாக் காட்சியை வலுக்கட்டாயமாகப் புகுத்தி வண்ண வண்ணத் துணிக ளைச் சலசலக்க வைப்பது, கையில் தீப்பந்தத்தோடு கிராமத்து மொத்த ஜனங்களும் ஒருவித ஆக்ரோஷமான வெறியில் ஓடிவருவது போன்ற தன் பலவீனங்களைத் தவிர்த்து, கொஞ்ச மும் குழப்பமில்லாமல் திரைக்கதை அமைக்கும் தன் பலத்தை மட்டுமே இம்முறை பயன்படுத்தியிருக்கிறார்!
படத்தில் டைரக்டருக்கு வலக்கரம் ஒளிப்பதிவாளர் கண்ணன். 'நான் படப்பிடிப்புக்குச் செல்லும்போது காமிராவை எடுத்துச் செல்வதில்லை.என் கண்ணனின் இரண்டு கண்களைக் கொண்டு செல்கிறேன். அந்தக் கண்க ளுக்கு மட்டும்தான் ஆகாயத்தின் மறு பக்கத்தையும் பார்க்கத் தெரியும்' என்ற பாரதிராஜாவின் பாராட்டுக்குத் தன்னை உரியவராக் கிக்கொண்டுவிட்டார் கண்ணன்.
ஜி.ஜோதிமணி, கோவை-1.
நீண்ட நாட்களுக்குப் பிறகு ராதாவின் அபார நடிப்பு அசத்திவிட்டதே?
'வெறும் ஷோ கேஸ் பொம் மையாக வந்து போகிறார்' என்று ராதா மீது எல்லோராலும் (எங்களையும் சேர்த்து) ஏகமனதாகச் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு இந்தப் படத்தில் தவிடுபொடியாகிவிட்டது. மலையோடு மோதியிருந்தாலும், நடிப்பில் மலைக்க வைத்துவிட்டார்!
ஜி.ராஜகோபாலன், சென்னை -24
அறிமுகமாகியுள்ள இளஞ்ஜோடி தீபன் - ரஞ்சனியைப் பற்றி...
பாரதிராஜாவால் அறிமுகப்படுத்தப்பட்டுச் சோடை போன முதல் ஜோடி என்ற பெருமை(?) இவர்களைச் சாரும்!
- விகடன் விமர்சனக் குழு
பெரும்பான்மையான வாசகர்களுக்குப் பிடித்த அம்சம்:
சிவாஜி, ராதா நடிப்பு; பாரதிராஜாவின் இயக்கம்.
பிடிக்காத அம்சம்:
ஜனகராஜின் பாத்திரம்.
Today Mudal Mariyadhai shown in Jaya TV.
JamesFague
1st November 2014, 07:54 PM
Courtesy: Mr Murali Srinivas old post
இந்த வார ஆனந்த விகடன் இதழில் (22.07.2009) பொக்கிஷம் பகுதியில் [பழைய ஆ.வி. இதழ்களிலிருந்து மறு பிரசுரம் செய்யும் பகுதி] கீழ்க்கண்ட செய்திகள் வந்திருக்கின்றன.
நான் சிவாஜி ரசிகன் -பிரித்வி ராஜ்கபூர்
நானும் நண்பர்களும் பம்பாய் சென்றிருந்தபோது, பிருதிவி ராஜ் கபூரைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அவரோடு உரையாடும்போது 'நடிப்புத் திறமை' பற்றிப் பேச்சு வந்தது. அப்போது அவர் கூறினார்...
''சினிமாவைப் பொறுத்தவரை சிறந்த நடிகனாவது சுலபம். நடை, உடை, பாவனைகளை மாற்றிக்கொள்ள வேண்டும் என்ற அவசியம் இல்லை. ஏற்ற பாத்திரத்தின் உணர்ச்சிகளை முகபாவத்தில் காட்டி, அலட்டிக் கொள்ளாமல் அநாயாசமாக நடித்துப் பெயர் வாங்கிவிடலாம். மேலை நாட்டு நடிகர்களும் இப்படித்தான் செய்கிறார்கள். நடை, உடை, பேச்சு முதலியன நிஜ வாழ்வில் எப்படியோ அப்படியேதான் இருக்கும். முகபாவம் மட்டும் பாத்திரத்தின் தன்மையைக் காட்டும். ஆனால், நமது சிவாஜி இருக்கிறாரே, அவர் தனது ஒவ்வொரு அங்க அசைவிலும் பாத்திரத்தின் தன்மையைக் காட்டிவிட வேண்டும் என்று பாடுபட்டு நடிக்கிறார். அந்த முயற்சியில் வெற்றியும் பெறுகிறார். அவரைப் பெற்ற நாம் பாக்கியசாலிகள்! மற்ற நடிகர்கள் அவரிடமிருந்து கற்க வேண்டிய நுணுக்கங்கள் பல உள்ளன. எந்த நாட்டில் பிறந்திருந்தாலும், 'சிறந்த நடிகர்' என்ற பாராட்டைப் பெறக்கூடிய திறமை அவரிடம் உள்ளது. பம்பாயில் இவரது நாடகங்கள் நடந்தால், உடல்நலத்தைக் கூடப் பொருட்படுத்தாமல் போய்ப் பார்த்துவிடுவேன். நான் ஒரு சிவாஜி ரசிகன்.''
வட இந்திய திரையுலகத் தந்தை எனப் போற்றப்படும் பிருத்விராஜ் கபூரைப் பற்றி சிவாஜி முன்பொருதரம் கூறியதென்ன தெரியுமா?
''அவரா? அவர் எங்களுக்கெல்லாம் வழிகாட்டியாயிற்றே! இந்தியாவில் சிறந்த நடிகர்கள் மட்டுமல்ல, மேல் நாட்டு நடிகர்களுக்கும் ஈடு கொடுக்கும் நடிகர்கள்கூட இங்கு இருக்கிறார்கள் என்பதை நிரூபித்தவராயிற்றே!அவரிடமிருந்து கற்க வேண்டியது எவ்வளவோ! அதற்கு நீண்ட ஆயுள் வேண்டும். அவர் ஒரு நடிப்புக் கடல். அவர் காலில் விழுந்து கும்பிட்டதன் பலன்தான் இன்று நான் உயர்ந்த நிலையில் இருக்கிறேன்! இந்திய நடிகர்களின் தந்தை அவர்!''
- பி.ஆர்.விசுவநாதன்.
மேற்சொன்ன செய்தி 31.10.1965 ஆ.வி. இதழில் வெளியானது.
பண்டைத் தமிழ்நாட்டிலே அரசர்களும், பிரபுக்களும் கலைஞர்களுக்கு வாரி வழங்கு வதுதான் வழக்கமாக இருந்தது. இப்போது காலம் மாறிவிட்டது. மக்கள் மன்னர்களாக மாறிவிட்டனர்! அதனால், கலைஞர்கள் வள்ளல்களாக மாற முடிந்திருக்கிறது.
சென்ற வாரம் நடிகர் திலகம் சிவாஜி கணேசன், நகரத்தில் ஏழைப் பள்ளி மாணவர்களுக்கு இலவச உணவளிக்கும் திட்டத் துக்கு இதுவரை யாருமே கொடுத்தறியாத பெருந் தொகையாக ஒரு லட்சம் ரூபாய் கொடுக்க முன் வந்துள்ளார். கட்டபொம்மன் நாடகத்தின் நூறாவது தின விழாக் கொண் டாட்டத்தை ஒட்டி, இந்த நூறாயிரம் ரூபாய் இப் பெரும் பணிக்கு அளிக்கப்பட்டுள்ளது. இந்த அரிய செயலைக் கண்டு வீரபாண்டிய கட்டபொம்மனின் ஆன்மா ஆனந்தமடைகிறது.
தமிழ்நாட்டில் இத்தகைய ஈகையுள்ளம் படைத்த கலைஞர்கள் இருக்கிறார்கள் என்பது நமது பாரதப் பிரதமருக்குத் தெரிய வேண்டும் என்ற நோக்கத்தோடு, நமது முதன்மந்திரி, சமீபத்தில் சென்னைக்கு விஜயம் செய்யவிருக்கும் பிரதம மந்திரி நேருஜி கையாலேயே அதை நகரசபைக்கு அளிக்கவேண்டும் என்று யோசனை கூறினார்.
நல்ல காரியங்களுக்கு உதவி புரிவதில் எப்போதுமே முன்னணியில் நின்று வருகிறார்கள் நம் தமிழ்நாட்டு நட்சத்திரங்கள். புயலடித்தாலும், வெள்ளம் வந்தாலும் அவர்கள் நெஞ்சம் நெகிழ்ந்துவிடும். ஏழை மாணவர்களுக்கு இலவச உணவு அளிக்கும் அரிய லட்சியத்துக்கு லட்சம் ரூபாய் கொடுத்த சிவாஜி கணேசன் அவர்களைக் குழந்தைகள் கொண்டாடும்; தெய்வம் வாழ்த்தும்; தமிழ்த் தாய் பெருமைப் படுவாள்!
மேற்சொன்ன செய்தி 12.04.1959 ஆ.வி. இதழில் வெளியானது.
இது தவிர 27.02.1966 தேதியிட்ட இதழில் வெளியான நடிகர் திலகம் சம்பந்தப்பட்ட ஒரு செய்தியையும் மறு பிரசுரம் செய்திருக்கிறார்கள். 1966 வருடம் ஜனவரி மாதம் குடியரசு தினத்தன்று நடிகர் திலகம் பத்மஸ்ரீ பட்டம் பெற்ற போது பானுமதி அவர்களுக்கும் பத்மஸ்ரீ கிடைத்தது. இதற்காக பிலிம் வர்த்தக சபை நடத்திய பாராட்டு விழாவில் நன்றி தெரிவித்து இருவரும் ஒரே நேரத்தில் மேடையில் பேசியிருக்கிறார்கள். நடிகர் திலகம் தமிழில் என்ன சொன்னாரோ அதையே அப்படியே தெலுங்கில் பானுமதி பேசியிருக்கிறார். தமிழிலும் தெலுங்கிலும் மாறி மாறி வந்த நன்றியை கேட்டு கூட்டத்தினர் அனைவரும் சிரித்து மகிழ்ந்தனர் என்று குறிப்பிட்டுளார்கள்.
இதோடு சேர்ந்து நடிகர் திலகம் வொயிட் & வொயிட்டில் பாடம் செய்த புலியின் மீது கை வைத்து நிற்கும் அமர்க்களமான போஃஸ் முழுப்பக்கத்தில் வந்திருக்கிறது.
அன்புடன்
JamesFague
1st November 2014, 08:00 PM
Courtesy: Saradha Madam old post
வசந்த் டி.வி.யில் ஒளிபரப்பாகி வரும் 'சிங்கத்தமிழன் சிவாஜி' தொடரில், நேற்றைய எபிசோட்டில் திரு. ராம்குமார் சொன்ன தகவல்கள் ரொம்ப 'டச்சிங்'காகவும், மனதை நெகிழச்செய்வதாகவும் இருந்தன. முதலில், உலகநாயகன், கலைஞானி டாக்டர் கமல், தனது திரையுலக பாதையில் ஐம்பது வருடங்களைத் தொட்டதற்கு வாழ்த்துச்சொன்னவர், கமலுக்கும் சிவாஜிக்கும் இடையேயான பரஸ்பர உறவு பற்றியும் விவரித்துச்சொன்னார். களத்தூர் கண்ணம்மாவைத்தொடர்ந்து, பார்த்தால் பசிதீரும் படத்தில் சிவாஜியுடன் நடித்த அனுபவத்தைச் சொல்லும்போது, அதில் சிவாஜியின் பெர்ஃபாமென்ஸ் பற்றியும் சொன்னார். முன்னாள் ராணுவ வீரரான இவர் ஒருகால் ஊனமுற்ற நிலையில் 'காலை நொண்டிக்கொண்டே டூயட் பாடியவர் இவர் ஒருவராகத்தான் இருக்கும்' என்றுபெருமையுடன் குறிப்பிட்டார். (அதே மாதிரி கமல் நடந்து காட்டுவாராம்). கூடவே தேவர் மகன் கதை டிஸ்கஷன் பற்றிக்குறிப்பிட்ட ராம்குமார், பாதிக்கதையை மட்டும் எழுதிய நிலையில், நடிகர்திலகத்திடம் கதை சொன்ன கமல், நீங்கள் நடிப்பதாக இருந்தால் மீதிக்கதையையும் எழுதுகிறேன் என்று சொன்னாராம். முதலில் மறுத்த நடிகர்திலகம், பின்னர் சிறிதுநேரம் கழித்து கன்வின்ஸ் ஆகி, 'சரி நடிக்கிறேன், போய் மீதிக்கதையை ரெடி பண்ணு' என்றாராம்.
தேவர் மகனுக்காக 'சிறந்த நடிகர்' என்ற தேசிய விருது வழங்கப்பட்டபோது, நடிகர்திலகம் அதைப்பெற்றுக்கொள்ள டெல்லிக்கு செல்ல மறுத்துவிட்டார் என்றும், நடிகர்திலகம் மறுத்ததால், சிறந்த படத்துக்காக தேவர்மகனுக்கு வழங்கப்பட்ட விருதைப்பெற கமலும் டெல்லி செல்லவில்லை என்றும் சொன்னார். (மத்தியில் இருப்பவர்களுக்கு இது உறைத்ததால்தான், 'தாதாசாகேப் பால்கே' விருது நடிகர்திலகத்தைத் தேடி வந்தது போலும்).
பின்னர், எகிப்து அதிபர் கமால் அப்துல் நாஸர், இந்தியா வந்திருந்தபோது நடிகர்திலகம் அளித்த விருந்தில் கலந்துகொண்டு பெருமைப்படுத்தியதையும், அப்போது நடிகர்திலகம் நினைவுப்பரிசாக வழங்கிய பெரிய தஞ்சாவூர் தட்டை மகிழ்ச்சியுடன் நாஸர் ஏற்றுக்கொண்டதையும் நினைவுகூர்ந்தார். (தமிழனுக்கும் தமிழ்நாட்டுக்கும் நடிகர்திலகம் பெருமை சேர்த்த தருணங்கள்).
இந்தியாவின் இசைக்குயில் லதா மங்கேஷ்கரும் அவரது குடும்பத்தினரும், தங்கள் குடும்ப நண்பர்களாக ஆன நிகழ்ச்சியையும் ராம்குமார் சொன்னார். பம்பாயில் 'பாவமன்னிப்பு' படம் பார்த்த லதாவும் அவரது குடும்பத்தாரும், நடிகர்திலகத்தைப் பார்த்தபோது, தங்களின் தந்தை நினைவு வந்ததாகவும், உடனே விமானத்தைப்பிடித்து சென்னை வந்து நேராக நடிகர்திலகத்தின் வீட்டுக்கு வந்தவர்கள் அவர் காலில் விழுந்து ஆசிபெற்று, அவர் கையில் ராக்கியைக் கட்டி தங்களின் அண்ணனாக ஏற்றுக்கொண்டார்களாம். முன் அறிமுகம் இல்லாத இசைக்குயில் லதா மங்கேஷ்கரின் இந்த அன்பில் நடிகர்திலகம் திகைத்துப்போனாராம். அன்றிலிருந்து இன்று வரை தங்கள் குடும்ப நிகழ்ச்சிகள் எதுவும் லதா மங்கேஷ்கர் இல்லாமல் நடந்ததில்லையென்றும், அதுபோலவே லதாவின் குடும்ப நிகழ்வுகளும் நடிகர்திலகம் மறையும் வரை அவரில்லாமல் நடந்ததில்லை என்று நெகிழ்வுடன் குறிப்பிட்டார். (லதா மங்கேஷ்கர் ராக்கி கட்டிய அந்தக்கைகளில் நானும் ராக்கி கட்டியிருக்கிறேன் (இதை முன்பே நான் குறிப்பிட்டுள்ளேன்) என்பதை நினைத்தபோது என் கண்கள் பனித்தன
'வசந்தகாலக்கோலங்கள், வானில் விழுந்த கோடுகள்
கலைந்திடும் கனவுகள், கண்ணீர் சிந்தும் நினைவுகள்').
ஒவ்வொரு ஆண்டும், நடிகர்திலகம் பிறந்த நாளான அக்டோபர் 1-ம்தேதி, நடிகர்திலகத்துடன் பணியாற்றிய கலைஞர்களில் நான்கு அல்லது ஐந்து பேருக்கு ஆண்டுதோறும் தலா ஐம்பதாயிரம் செக்கும், சிவாஜி விருதும் வழங்கும் திட்டம், லதா மங்கேஷ்கர் சொன்ன யோசனைதான் என்றும், அதன்படி கடந்த ஏழு ஆண்டுகளாக தானும் பிரபுவும் அதைத் தொடர்ந்து செய்து வருவதாகவும் இவ்வருடமும் வரும் அக்டோபர் 1 அன்று செய்ய இருப்பதாகவும் குறிப்பிட்டார்,
ஆரம்பத்தில் குடும்பத்திற்காக நேரம் செலவிடாமல், படப்பிடிப்புகளிலேயே இருந்த நடிகர்திலகம், 1970-க்குப்பின்னர், குடும்பத்துக்காக ஞாயிற்றுக்கிழமைகளில் கட்டாய ஓய்வெடுத்துக்கொள்வாராம். 'அதன்பின்னர்தான் நாங்களெல்லாம் அப்பாவுடன் அதிக நேரம் இருக்க முடிந்தது' என்ற ராம்குமார் ஒரு மகனாக தன் ஆதங்கத்தை வெளியிட்டபோது நம் கண்களில் நீர் கட்டியது. 'அப்பா தன் வாழ்நாளில் ஒருமுறைகூட தன்னையோ பிரபுவையோ கட்டியணைத்துக் கொண்டதில்லை, சித்தப்பா பசங்களையெல்லாம் அணைத்துக்கொள்வார். கேட்டால் அவங்க முன்னால் உங்களை அணைத்துக்கொண்டால் பெரியப்பா தன் பிள்ளைகளை மட்டும் அணைத்துக்கொள்கிறார் என்று நினைப்பார்கள் என்ற எண்ணத்தினால் விலகியே இருப்பாராம். (அதனால்தான் கூட்டுக்குடும்ப வாழ்க்கைக்கு தமிழ்நாட்டிலேயே ஒரு எடுத்துக்காட்டாக விளங்கும் குடும்பமாக திகழ்கிறது). அவர் மறைந்த பிறகு, அவர் உடலைக்கட்டிக்கொண்டு அழும் பாக்கியம்தான் தனக்கு கிடைத்தது என்று அவர் சொன்னபோது, பாசத்துக்கு ஏங்கிய அந்த முகத்தைப்பார்த்து நம் கண்ணீரைக் கட்டுப்படுத்த முடியவில்லை. ஆனால் அவர் மனம் உடைந்துவிடாமல் பேசினார். ராம்குமார் கூலிங்கிளாஸ் அணிந்திருந்ததால், அவர் கண்கலங்கியதை நாம் பார்க்க முடியவில்லை.
JamesFague
1st November 2014, 08:06 PM
Courtesy: Mr joe
சினிமா விமர்சனம்: தங்கப் பதக்கம் -விகடன்
'தங்கம் என்றால் இதுதான் மாற்றுக் குறையாத தங்கம்' என்று கையில் எடுத்துக்காட்டுவது போல, போலீஸ் அதிகாரி என்றால் தன்னைப் போல்தான் இருக்கவேண்டும் என்று சொல்லாமல் சொல்லும் சிவாஜி கணேசனின் நடிப்பும் தோற்றமும் தங்கமா, வைரமா என்று வியக்கிறோம்!
காட்சிக்குக் காட்சி சிவாஜியின் கம்பீரத்தையும், கண்டிப்பையும், கடமை உணர்ச்சியையும், கனிவையும் பார்க்கும்போது எந்த இடத்தில் உயர்ந்து நிற்கிறார் என்று இனம் கண்டு கொள்ளப்பார்க்கிறோம். முடியவில்லை.
கடமையே உருவமான போலீஸ் அதிகாரிக்கு 'என் னைப் போல் கண்ணியமான ஒரு பெண்தான் மனைவியாக இருக்கமுடியும்' என்று சொல் வதுபோல் லட்சிய மனைவியாக நடித்திருக்கும் கே.ஆர்.விஜயா வின் நிறைவை எப்படிச் சொல் வது? தங்கப் பதக்கத்தைத் தட்டிக் கொள்கிறார்!
ஸ்ரீகாந்திடம் நல்ல முன்னேற்றம். அப்பாவின் கண்டிப்பைத் தவறாகப் புரிந்துகொண்டு அவரை அவமானப்படுத்தும் சந்தர்ப்பங்களைச் சாமர்த்திய மாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்.
சோவுக்குக் கான்ஸ்டபிள் பாத்திரம் ஒன்று போதாதா? கவுன்சிலர் களேபரம் கதைக் குத் தேவையில்லாத கூத்து!
மைனர் மனோகரை அங்கவஸ்திரத்தால் கட்டி இழுத்துப்போகும் போலீஸ் அதிகாரி, வழியில் மடக்குகிற அத்தனை பேரையும் கைத்தடியாலேயே அடித்து நொறுக்குவது இயற்கையாக இல்லை.
மகன் மீது போலீஸ் அதிகாரி காட்டும் கண்டிப்புக்குக் கதையில் கொடுக்கப்பட்டுள்ள அழுத் தம், அவன் தந்தையைப் பழி வாங்கத் துடிக்கும் அளவுக்கு எதிரியாக மாறுவதற்கும், தேசத் துரோகியாகக்கூடிய அளவுக்கு மாறுவதற்கும் கனம் சேர்ப்ப தாக இல்லை.
ஜீப் வேகத்தில் ஓடிக்கொண்டிருந்த கதை, யுத்தம்-ராணுவ ரகசியம் என்று வரும்போது தடுமாறுகிறது.
இத்தனை இருந்தும், எதையும் கண்டுகொள்ளவிடாதபடி திசை திருப்பிவிடுகிறார் சிவாஜி.
தங்கப்பதக்கம்... சிவாஜி கணேசனின் நடிப்புக்கு ஒரு தங்கப்பதக்கம்.
Thanks : Vikatan.com
JamesFague
1st November 2014, 08:12 PM
Courtesy: Mr Joe
'பராசக்தி' முதல் 'உயர்ந்த மனிதன்' வரை..! - பஞ்சு
பதினாறு ஆண்டுகளுக்கு முன், முதன்முதலாக 'பராசக்தி' படத்தில் நடித்த நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 125-வது படமாக 'உயர்ந்த மனிதன்' வெளிவருகிறது. 'பராசக்தி' பட மாக்கப்பட்ட ஏவி.எம். ஸ்டுடி யோவில்தான் 'உயர்ந்த மனித னும்' உருவாகி இருக்கிறது. பராசக்தியை டைரக்ட் செய்த இரட்டையர்கள் கிருஷ்ணன் - பஞ்சுதான் இந்தப் படத்தையும் டைரக்ட் செய்திருக்கிறார்கள். திரு.பஞ்சு, சிவாஜி கணேசனைப் பற்றி இங்கே சொல்கிறார்:
''முதன்முதலாக நாங்கள் சிவாஜி கணேசனைப் பார்த்தது 1948-ம் வருஷத்தில். அதற்கு முன்பே 'சிவாஜி'யாக நடித்து விட்டபோதிலும், அப்போது அவர் வெறும் வி.சி. கணேசன் தான். என்.எஸ்.கே. நாடக சபா வில் மனோகரா நாடகத்தில் 'விஜயாள்' வேஷம் போடுவார். அந்த நாடகத்தில்தான் அவரைப் பார்த்தோம். அவரது நடிப்பில் அப்போதே ஓர் அலாதித் தன்மை பளிச்சிட்டது. பிற்கா லத்தில் அவர் திரை உலகில் ஒரு சிறந்த நடிகராக வருவார் என்ற எண்ணம் ஏற்பட்டது. அதற்கான அறிகுறிகள் அவரது நடிப்பில் இருந்தன. அப்போதே அவரைச் சினிமா உலகுக்குக் கொண்டுவர விரும்பினோம். ஆனால், அதற்குச் சந்தர்ப்பம் சரியாக இல்லை. 1950-ல்தான் எங்களுக்கு அந்தச் சந்தர்ப்பம் கிடைத்தது - பராசக்தி படம் மூலமாக.
'பாவலர்' பாலசுந்தரம் எழுதி, நாடகமாக நடிக்கப்பட்டு வந்த பராசக்தியைத் திரைப் படமாக்க நினைத்தபோது, யாரைக் கதா நாயகனாகப் போடுவது என்ற பிரச்னை எழுந்தது. எங்களுக்கு கணேசனைப் போட வேண்டும் என்ற எண்ணம். தயாரிப்பாளர் களுக்கும் அப்படித்தான். ஆனால், ஒரு சிலர் வேறு நடிகர்களைப் பற்றிச் சொன்னார்கள். கே.ஆர்.ராமசாமியின் பெயரும் அடிபட்டது. கடைசியில் 'அண்ணா'விடம் போய், அவரு டைய யோசனையைக் கேட்டோம். 'உங்கள் எண்ணம்தான் சரி! கணேசனையே போடுங் கள். அவர் நன்றாக நடிப்பார். தமிழ் சினிமா உலகுக்கு ஒரு புதிய நடிகர் கிடைத்த மாதிரியும் இருக்கும்' என்றார் அண்ணா.
அப்போது கணேசன் பெரிய குளத்தில் 'சக்தி நாடக சபா' நாடகங்களில் நடித்துக்கொண்டு இருந்தார். தினசரி நாடகம். 'டெஸ்ட்'டுக்கு ரயிலில் வந்து போவதென்றால் நாடகங்கள் பாதிக்கப்படும். எனவே, பெரிய குளத்திலிருந்து திருச்சி வரை காரிலும், அங்கிருந்து சென் னைக்கு விமானத்திலும் அழைத்து வந்து, மறுபடியும் விமானத்திலேயே அனுப்பி வைத்தோம். உயரப் பறந்து வந்து, சினிமா உலகுக்குள் நுழைந்து, உயர்ந்த இடத்தைப் பிடித்துவிட்ட நடிகர் அவர்'' என்றார் பஞ்சு.
சிவாஜியின் நடிப்பு, கிருஷ் ணன்-பஞ்சுவின் டைரக்ஷன், கலைஞர் கருணாநிதியின் அரு மையான வசனங்கள் எல்லாம் சேர்ந்ததால், பராசக்தி படம் 'ஓஹோ'வென்று ஓடியது. சினிமாவில் வரும் பண்டரிபாய் வேஷம் நாடகத்தில் இல்லை. கருணாநிதியின் புதிய படைப்பு அது. நாடகத்தின் கதைப் போக்கில் இருந்த குறைகளைச் சரி செய்வதற்காக, மற்றவர்க ளின் சந்தேகங்களுக்கு விளக்கம் சொல்வதற்காக, கருணாநிதி அந்தப் பாத்திரத்தைச் சிருஷ் டித்தாராம்.
''இப்போது சிவாஜி நடிப்பில் அலாதியான மெருகு ஏற்பட் டிருக்கிறது. ஒன்றைக் கவனிக்க வேண்டும். பராசக்தியைப் போல் 'டயலாக்' படங்களுக்கு அப்பொழுதும் சரி, இப்பொழு தும் சரி, அப்படித்தான் நடிக்க வேண்டும். இப்போது 'டயலாக்' பாணிதான் மாறிவிட்டதே! ஆனால், இந்தப் பாணியில் கூட சிவாஜிக்குத்தான் வெற்றி. ஏனெனில் எந்தெந்த வசனத்தை எப்படியெப்படி பேசவேண்டும் என்று அவருக்கு நன்றாகத் தெரியும். உலகில் எந்த நடிகரை எடுத்துக்கொண்டாலும், சிவா ஜியைப் போல் யாரும் இவ்வ ளவு 'வெரைட்டி'கள் செய்த தில்லை. 'வெரைட்டி' மட்டு மல்ல, ஒரே வேஷத்தைப் பல கோணங்களில், பலவிதமாகச் செய்யக்கூடியவர் சிவாஜி. உயர்ந்த மனிதன் படத்தில் இளைஞராகவும், அப்பாவாக வும் வருகிறார் கணேசன். அப்பா வேஷம் அவருக்குப் புதிதல்ல. மோட்டார் சுந்தரம் பிள்ளை, எங்க ஊர் ராஜா ஆகிய படங்களிலும் அப்பா வேஷம் போட்டிருக்கிறார். ஆனால், இந்த மூன்று அப்பா வேஷங்களிலும் மூன்று வித மான 'அப்பா'க்களைக் காட்டி யிருக்கிறார். சிவாஜியைத் தவிர வேறு யாராலும் அதைச் செய் திருக்கமுடியாது.
உயர்ந்த மனிதனில் தீப் பிடித்து எரிகிற ஒரு வீட்டுக்குள் போக வேண்டும். தயங்காமல் போயே விட்டார். கை கால்களி லிருந்த ரோமங்கள் எல்லாம் அனலில் கருகிவிட்டன. 'இந்த இடத்தில் உங்கள் முகத்தில் கொஞ்சம் கரி இருக்கவேண் டும்' என்றால், 'அவ்வளவு தானே!' என்று, அணைந்தும் அணையாமலும் இருக்கும் ஒரு கொள்ளியிலிருந்து கரியை எடுத்துப் பூசிக் கொள்வார். வேஷத்தில் அவருக்கு அவ்வ ளவு ஈடுபாடு!'' என்றார் பஞ்சு.
நன்றி : விகடன்
JamesFague
1st November 2014, 08:29 PM
a recap of Mr Murali Srinivas old post
கோடீஸ்வரன் - Part I
தயாரிப்பு: கணேஷ் மூவி டோன்
இயக்கம்: சுந்தர்ராவ் நட்கர்னி
வெளியான நாள்: 13.11.1955
ஊரில் பெரிய மனிதர் ராவ் பகதூர் ராமசாமி. அவருக்கு ஒரு மகன் கண்ணன். ஒரு மகள் நீலா. கண்ணன் சென்னையில் எம்.ஏ. படித்துவிட்டு ஊருக்கு வருகிறான். மகள் நீலா வீட்டில் இருக்கிறாள். பணத்தாசை பிடித்த ராமசாமி தன் மகனுக்கு பெரிய அளவிலான வரதட்சணை எதிர்பார்க்கிறார்.
பக்கத்து வீட்டில் வசிப்பவர் சிதம்பரம். வசதிக் குறைவானவர். அவர் மகள் கமலா கல்யாணத்திற்காக காத்திருக்கிறாள். ஆனால் வரும் மாப்பிள்ளைகள் எல்லோரும் வரதட்சணை அதிகமாக கேட்க அவளின் கல்யாணம் தள்ளிப் போகிறது. ஒரு டாக்டர் அவளை பெண் பார்க்க வந்து விட்டு ஏராளமான கேள்விகள் கேட்டு ஏராளமான வரதட்சணையும் கேட்க அந்த வரனும் தட்டிப் போகிறது. கமலாவும் கண்ணனும் ஒருவரை ஒருவர் விரும்புகின்றனர்.
சிதம்பரத்தின் அண்ணன் மகன் சந்தர். சென்னையில் மருத்துவப் படிப்பு படித்து கொண்டிருக்கும் சந்தர் கண்ணனோடு ஊருக்கு வருகிறான். அது மட்டுமல்ல, ஆனந்தன் என்ற புனைப் பெயரில் கவிதை எழுதுபவன். ஊருக்கு வரும் சந்தர் பரமசிவத்தின் பண மோகத்தையும் கண்ணனும் கமலாவும் ஒருவரை ஒருவர்
விரும்புவதையும் தெரிந்துக் கொள்கிறான். கல்யாணமே வேண்டாம் என்று சொல்லிக் கொண்டிருக்கும் கண்ணனின் தங்கை நீலாவிற்கு சந்தர் மேல் ஒரு ஈர்ப்பு உருவாகுகிறது.
ஏற்கனவே பெண் பார்க்க வந்து வரதட்சனை கேட்டு தங்களை அவமானப்படுத்திய டாக்டர் பசுபதியை பழி வாங்க அவரை மீண்டும் வரவழைக்கிறார்கள் சந்தரும் நீலாவும். இப்போது கல்யாண பெண் இடத்தில் நீலா இருந்து டாக்டரை பாட தெரியுமா, ஆடத் தெரியுமா என்றெல்லாம் கேள்வி கேட்டு அவமானப்படுத்த, டாக்டர் அவர்கள் மேல் வன்மம் கொள்கிறார்.
கண்ணன் கல்யாணம் நடைபெற சந்தர் ஒரு யுக்தி செய்கிறான். முதலில் தயங்கினாலும் கண்ணன் ஒத்துக் கொள்கிறான். இதற்கு நீலாவின் ஆதரவும் இருக்கிறது. அதன்படி கண்ணன் வீட்டிற்கு பெண் கேட்க செல்லும் சிதம்பரத்துடன் உடன் செல்லும் சந்தர் தன் பணக்கார மாமா ஒருவர் இறந்து விட்டதாகவும் வாரிசில்லாத அவரது உயில்படி சொத்தெல்லாம் தன் பெயருக்கு வருவதாகவும் அதனால் தான் ஒரு கோடீஸ்வரன் என்றும் சொல்கிறான். அண்ணன் என்ற முறையில் தங்கை கல்யாணத்தை நடத்தி வைப்பதாக கூறும் சந்தர் வரதட்சனை பணத்தையும் சேர்த்து முப்பதாயிரம் ரூபாய் தருவதாக சொல்கிறான்.
இந்த பணத்தை கொடுப்பதற்காக ஒரு தந்திரம் செய்யும் சந்தர் கண்ணனிடம் அவனது தந்தையின் இரும்புப் பெட்டியில் இருக்கும் பணத்தை அவருக்கு தெரியாமல் எடுத்து வந்து கொடுக்கும்படி சொல்கிறான். நீலாவிடமும் இந்த திட்டத்தை சந்தர் ரகசியமாக சொல்வதை தங்கையான சிறுமியும் கேட்டு விடுகிறாள்.
தந்தையின் படுக்கைக்கு அடியில் இருக்கும் இரும்பு பெட்டி சாவியை எடுத்து பணத்தை எடுக்க சிரமப்படும் கண்ணனுக்கு நீலாவும் உதவுகிறாள். கல்யாணம் நல்லப்படியாக நடந்து முடிகிறது. தன் மகள் நீலாவை சந்தர் கல்யாணம் செய்துக் கொள்ள வேண்டும் என்று ராவ் பகதூர் கேட்க நீலா இப்போது வேண்டாம் என்று மறுத்து விடுகிறாள்.
இந்த நிலையில் சந்தருக்கு பணம் எப்படி கிடைத்தது என்பது பற்றி சிதம்பரம் தன் மனைவியுடன் பேசிக் கொண்டிருக்க சந்தரின் தங்கை தன் வயதையொத்த தன் கஸினிடம் கோவிலில் வைத்து [அவள் ஏற்கனவே சந்தர் நீலாவிடம் ரகசியமாக சொன்னதை கேட்டிருந்ததால்] உண்மையை சொல்கிறாள். இதை கோவிலுக்கு வந்திருக்கும் டாக்டர் பசுபதி தற்செயலாய் கேட்டு விட, அப்போதே ராவ் பகதூர் வீட்டிற்கு சென்று அவரிடம் சொல்லி விடுகிறார்.
தன்னிடம் வரும் நோட்டுக் கட்டுகளின் எங்களை எழுதி வைக்கும் வழக்கமுடைய ராவ் பகதூர் தன்னிடமிருந்த நோட்டுகளின் எண்களையும் சந்தர் கொடுத்த நோட்டுகளின் எண்களையும் ஒப்பிட்டு பார்க்க, குட்டு வெளிப்படுகிறது. கோவமுறும் ராவ் பகதூர் கண்ணனையும் கமலாவையும் வீட்டை விட்டு வெளியேற்றுகிறார். சந்தரையும் சிதம்பரத்தையும் கேவலமாகவும் பேசி விடுகிறார். தன் சொத்தையெல்லாம் விற்று பணமாக்கி ஒரு வங்கியில் வைப்பு நிதியாக வைத்து விடுகிறார்.
நடந்த தவறுகளுகெல்லாம் பொறுப்பேற்று கொள்ளும் சந்தர் மீண்டும் கண்ணனையும் அவனது தந்தையுடன் சேர்த்து வைக்க சபதம் எடுக்கிறான். ஆனால் இப்போதும் சந்தரை ராவ் பகதூர் ஒரு கோடிஸ்வரனாக நினைத்துக் கொண்டிருக்கிறார். தன் மகளுக்கு மாப்பிள்ளை பார்க்க முயற்சி எடுக்க, அவர் மகள் நீலாவோ தன் தந்தை வற்புறுத்தியதால் தன் மனம் சந்தரை நாட தொடங்கி விட்டது என கூறுகிறாள்.
இந்நிலையில் டாக்டர் பசுபதி நீலாவை மணந்து கொள்வதாக மீண்டும் வருகிறார். ராவ் பகதூர் வீட்டிற்கு வரும் சந்தர் தான் நீலாவை திருமணம் செய்துக் கொள்ள தயார் என்றும் ஆனால் அதற்கு ஒரு லட்சத்து ஐம்பதினாயிரம் ருபாய் செலவு செய்ய வேண்டுமென்று நிபந்தனை விதிக்கிறான். அதை கேட்டு விக்கித்துப் போகும் ராவ் பகதூருக்கு அடுத்த அடியாக ஒரு தந்தி வருகிறது. அவர் பணம் முதலீடு செய்திருந்த வங்கி திவாலாகி விட்டது என்பதே அந்த செய்தி. இதை கேட்டவுடன் டாக்டர் பசுபதி கல்யாணம் வேண்டாம் என்று ஓடி விட ராவ் பகதூர் கதறி அழுகிறார்.
தன் சம்பந்தி, மகன், மருமகளை எல்லாம் அழைத்து மன்னிப்பு கேட்கும் அவரிடம் வங்கி திவாலாகவில்லை என்றும் அவரது குணத்தை திருத்தவே இப்படி ஒரு நாடகமாடியதாக சந்தர் உண்மையை வெளிப்படுத்துகிறான். தான் கோடீஸ்வரன் அல்ல என்ற உண்மையையும் வெளிப்படுத்துகிறான்.
ராமசாமி மனம் மாறி அனைவரையும் ஏற்றுக் கொள்ள சந்தர் நீலா இணைகிறார்கள்.
JamesFague
1st November 2014, 08:29 PM
கோடீஸ்வரன் - Part II
ஒரு மராத்தி நாடகத்தை தழுவி எடுக்கப்பட்ட படமே கோடிஸ்வரன். வரதட்சனைக்கு எதிரான ஒரு கதை களத்தை எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தோடு எடுக்கப்பட்ட படம் என்றே தோன்றுகிறது. நம்முடைய விமர்சனங்களில் 50- களில் அதிலும் குறிப்பாக நடிகர் திலகத்தின் முதல் 25 படங்களில் இங்கே எழுதப்பட்டவை ஒரு சில மட்டுமே. என் சிறு வயதில் நான் நடிகர் திலகத்தின் ரசிகனாக மாற ஆரம்பித்த நேரத்தில் இந்த படம்தான் அவரின் 25-வது படமாக எனக்கு சொல்லப்பட்டது. பின்னாளில் கள்வனின் காதலி 25-வது படம் என்று சொன்னார்கள். குழப்பத்திற்கு காரணம் இவை இரண்டுமே ஒரே நாளில் 13.11.1955 தீபாவளியன்று வெளியானது.
50- களில் வெளியான படம் என்றாலே இரண்டு விஷயங்கள் நம்மை சிறிது தயங்க வைக்கும். ஒன்று தூய தமிழ். ஆனால் படத்தின் முதல் காட்சியிலே பேச்சு தமிழ் இடம் பெற மனதில் ஒரு மகிழ்ச்சி. ஒரு சில இடங்களை தவிர படம் முழுக்க பேச்சு தமிழே இடம் பெறுவது குறிப்பிட வேண்டிய விஷயம்.
இரண்டாவது அந்த காலப்படங்களில் நொடிக்கொரு முறை இடம் பெறும் பாடல்கள். இந்த விஷயத்திலும் கோடிஸ்வரன் நமது பொறுமையை சோதிக்காமல் குறைந்த பாடல்களுடன் இருப்பது இன்னொரு சந்தோஷம்.
நடிப்பை பற்றி சொல்வதென்றால் நடிகர் திலகம் எவ்வளவு இயல்பாக பண்ணக் கூடியவர் என்பதற்கு இந்த படம் மேலும் ஒரு உதாரணம். அந்த டாக்டர் சந்தர் ரோல் அவருக்கு அல்வா சாப்பிடுவது போல். ஊதி தள்ளி விடுகிறார். ராவ் பகதூரின் காரியதரசியிடம் நக்கலாக பதில் கொடுப்பது முதல் பெண் பார்க்க வந்து பந்தா காட்டும் டாக்டர் பசுபதியை வஞ்ச புகழ்ச்சி செய்வது, கல்யாணத்திற்கு அதை செய்ய வேண்டும் இதை செய்ய வேண்டும் என்று பட்டியலிட்டு விட்டு ஒவ்வொன்றும் இறந்து போன தன் மனைவியின் ஆசை என்று அள்ளி விடும் ராவ் பகதூரை கிண்டல் செய்வது, பத்மினியுடனான கவிதை பற்றிய காதல் பேச்சு, கல்யாணத்தை நடத்த திட்டம் போடும் போது ஒரே வாசகத்தை [அப்படின்னு நான் நினைக்கிறேன்] மாறி மாறி பேசுவது, கோடிஸ்வரனாக வந்து ராவ் பகதூர் முன்பு பேசியது போல அவர் மகளை மணக்க ஒவ்வொரு செலவாக சொல்லி விட்டு இதெல்லாம் என் மாமாவின் ஆசை என்று திருப்புவது இப்படி சர்வ அலட்சியமாக செய்திருப்பார்.
நடிகர் திலகத்தின் தோற்றத்தைப் பொறுத்த வரை மிக இளமையாக இருப்பார். அவர் அணிந்து வரும் சில தொப்பிகள் அழகாக இருக்கும். ஆரம்பத்தில் பீக் cap வைத்து வரும் அவர் வேறு சில காட்சிகளில் ஷெர்வானி குர்தா அணிந்து இஸ்லாமியர் அணியும் தொப்பியை போன்று [பாவ மன்னிப்பு ரஹீம் போன்று] அணிந்து வருவார். கிளைமாக்ஸ்-ல் ஆந்திர பாணி வேட்டி உடுத்தி நெற்றியில் திலகம் இட்டு வருவார். கழுத்தில் தொங்கும் கயிற்றில் கண்ணாடி, அதுவும் சைடு பிரேம் இல்லாமல் மூக்கில் மட்டும் பிடிமானம் உள்ள லென்ஸ் வைத்திருப்பார். ராவ் பகதூர் கண்ணனை வீட்டை விட்டு வெளியேற்றும் போது மட்டுமே அவருக்கு உணர்ச்சி வசப்படும் காட்சி. அதை அமைதியாக செய்திருப்பார்.
பாடல் காட்சிகளில் அவர் ஸ்டைல் ஆரம்பித்தது உத்தம புத்திரனுக்கு பிறகுதான் என்று நினைத்தால் இந்த படத்திலேயே அசத்தியிருப்பார். டூயட் பாடலில் பிரமாதப்படுத்தியிருப்பார். அவர் எழுதிய வசந்த கானம் என்ற கவிதை தொகுப்பை தானே தன் அண்ணனிடம் கொடுப்பதாக வாங்கிக் கொள்ளும் பத்மினி வீட்டு வாசலுக்கு சென்று நின்று சற்றே திரும்பி ஒரு காதல் பார்வை வீசி விட்டு போக இடது கையில் பிடித்திருக்கும் வாக்கிங் ஸ்டிக்கை தூக்கி போட்டு வலது கையில் பிடித்து ஒரு நடை நடப்பார் - சூப்பர் [இந்த ஸ்டைலை கூட அப்போதே செய்து விட்டார்]. அது போல் கல்யாணத்திற்கு பிறகு தங்கையின் வீட்டிற்கு வருபவர் தங்கையும் அவள் கணவனும் பாடி மகிழ்வதைப் பார்த்துவிட்டு கேட் அருகே நின்று ஒரு போஸ், பின் சிறிது வெட்கத்துடன் பக்கவாட்டில் திரும்பி அந்த முகத்தை மட்டும் சிறிது உயர்த்தி ஒரு புன்னகை புரிவார். பிரமாதமாக இருக்கும். இந்த படத்தில் கிட்டத்தட்ட செயின் ஸ்மோக்கர் மாதிரி. பார்க்கில் நண்பனோடு பேசும் போது பத்மினி வந்து விட அப்போது அந்த சிகரட்டோடு காட்டும் ஸ்டைல், பத்மினியை பெண் பார்க்க வந்து எஸ்.பாலச்சந்தர் டான்ஸ் ஆடுவதை வாயில் புகையும் சிகரெட்டோடு சேரில் கம்பீரமாக அமர்ந்து பார்ப்பது - பெரிய கோடிஸ்வரன் என்று சொன்னதற்கேற்ப ஒயிட் கோட் சூட் போட்டு கூலிங் கிளாசோடு வாக்கிங் ஸ்டிக்கோடு சிகரட்டோடு தங்கவேலு வீட்டிற்கு வந்து நிற்பது -எப்பவுமே தான் ஸ்டைல் சக்கரவர்த்தி என்பதை நிரூபிப்பார்.
டாக்டர் பசுபதியாக வரும் வீணை எஸ்.பாலச்சந்தர் கலக்கியிருப்பார். ஒரு செமி லூஸ் செமி வில்லன் ரோலை நேர்த்தியாக பண்ணியிருப்பார். கட்டிக்கோ தாலி கட்டிக்கோ பாடலில் இங்கிலீஷ்,இந்தி, தமிழ்,தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் மொழிகளில் வரும் வரிகளுக்கேற்ப அவர் நடனம் ஆடுவார். பாராட்டப்படவேண்டிய முயற்சி.
ராவ் பகதூர் ராமசாமியாக தங்கவேலு. சரளமாக வசனம் பேசும் முறை அவரது பிளஸ் பாய்ன்ட். இந்த படத்தின் வசனங்கள் பேச்சு தமிழில் அமைந்திருப்பது அதற்கு பெரிதும் உதவி செய்கிறது. எதுக்கும் இது வேணும் என்று அடிக்கடி மூளையை தொட்டுக் காட்டி பேசுவது அவரது ட்ரேட் மார்க் என்றால் பண விஷயத்தில் அவர் ஏமாந்ததை அதே வசனத்தின் மூலமாக அவரது உதவியாளார் சட்டாம்பிள்ளை வெங்கட்ராமன் சுட்டிக்காட்டுவது ரசிக்கும்படியாக இருக்கும்.
கண்ணனாக வரும் ஸ்ரீராமுக்கு நடிப்பில் பெரிய வேலை ஒன்றுமில்லை. இரண்டு டான்சை தவிர்த்து விட்டு பார்த்தால் பத்மினி ராகினியும் அதே ரகத்தில் சேர்த்து விடலாம். நடிகர் திலகத்தின் தங்கையாக வரும் பேபி சச்சு துரு துறுவென்று இருப்பார்.
தஞ்சை ராமையாதாஸ், காங்கேயன் வசனங்கள் வெகு இயல்பு. இன்றைக்கும் பயன்படுத்தப்படும் சில வசனங்கள் [சம்மன் இல்லாமலே ஏன் ஆஜர் ஆகுறீங்க] அன்றைக்கே படத்தில் இருப்பது ஆச்சரியம். ராகினி கொடுக்கும் டீயை குடித்துவிட்டு அடிக்கும் கமென்ட் [குட்டி - சாரி good டி] இவை எல்லாம் ரசிக்கும்படி இருக்கும் [1955 என்று நினைக்கும் போது].
இசை - S V வெங்கட்ராமன்.
எனது உடலும் உள்ள காதலும்- கர்னாடிக் ராக பின்னணியில் எம்.எல்.வி பாடியிருப்பார். எஸ்.பாலச்சந்தர் பெண் பார்க்க வரும் போது ராகினி ஆடும் பாடல்.
கானத்தாலே காதலாகி போனேன் - பத்மினியை எஸ்.பாலச்சந்தர் பெண் பார்க்க வரும்போது பத்மினி பாடும் பாடல். ஜிக்கி என்று தோன்றுகிறது.
கட்டிக்கோ தாலி கட்டிக்கோ - அன்றைய காலக்கட்டத்தின் வழக்கத்திலிருந்து மாறி பேச்சு தமிழில் மட்டுமல்ல ஏற்கனவே சொன்னது மாதிரி அனைத்து தென்னிந்திய மொழிகளிலும் ஆங்கிலத்திலும் இந்தியிலும் வரும் இந்த பாடலை இசையமைப்பாளார் S V வெங்கட்ராமனே பாடியிருப்பார். நன்றாக பண்ணியிருப்பார்.
உலாவும் தென்றல் நிலாவைக் கண்டு - நடிகர் திலகத்திற்கு படத்தில் இந்த ஒரே பாடல்தான். அது மட்டுமல்ல ஏ எம் ராஜா பாடியிருப்பார். பத்மினிக்கு சுசீலா. நடிகர் திலகம் நாட்டியப் பேரொளி கெமிஸ்ட்ரி பிரமாதமாக இருக்கும். கொஞ்சம், கனவின் மாயலோகத்திலே பாடல் காட்சியை நினைவுப்படுத்தினாலும் [ஆனால் அன்னையின் ஆணை இந்த படத்திற்கு பின்தான் வெளியானது] அந்த ஸ்டைல் போஸ் அண்ட் நடைக்கே பார்க்கலாம்.
யாழும் குழலும் உன்னுடன் தானோ - ஸ்ரீராம் ராகினி டூயட் - ராஜா சுசீலா பாடியிருப்பார்கள்.
பகவானே கேளய்யா பச்சோந்தி உலகிலே - தன் தந்தை தங்கவேலுவின் பணத்தாசையை கிண்டல் செய்து பத்மினி பாடும் பாடல்.
சுந்தர்ராவ் நட்கர்னி இயக்கம். கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி படமும் அதன் வெற்றியும் இயக்குனரை நடிகர் திலகத்தை வைத்து இந்த படத்தை எடுக்க தூண்டியிருக்கக் கூடும். குறை சொல்ல முடியாதபடி போரடிக்காமல் படத்தை கொண்டு போன முறைக்கு இயக்குனர் பாராட்டப்பட வேண்டியவரே.
நடிகர் திலகத்தின் சீரியஸ் படங்களுக்கு கிடைத்த மாபெரும் வரவேற்பு இந்த படத்திற்கு கிடைக்கவில்லை. ஒரு ஆவரேஜ் வெற்றியை மட்டுமே இந்த படம் பெற முடிந்தது. சரியான முறையில் மறு வெளியீடு செய்யப்பட்டிருந்தால் படம் நிச்சயமாக ரசிக்கப்பட்டிருக்கும். ஆனால் நடிகர் திலகத்தின் சாதனை படங்களுக்கு நடுவே மாட்டிக் கொண்டதால் அந்த வாய்ப்பும் அமையவில்லை.
அன்புடன்
JamesFague
1st November 2014, 08:34 PM
Courtesy: Mr Pammal Swaminathan
நடிகர் திலகமும் பாகவதரும்
தமிழ்த் திரையுலகின் முதல் சூப்பர் ஸ்டாராகத் திகழும் திரு.எம்.கே.தியாகராஜ பாகவதர் அவர்களின் நூற்றாண்டு, சமீபத்தில் 1.3.2010 அன்று நிறைவடைந்துள்ளது. தமது ஈடு, இணையற்ற கந்தர்வக் குரலாலும், வசீகரிக்கும் தோற்றப் பொலிவாலும், மக்கள் மனங்களில் நிரந்தர இடம் பிடித்தவர் பாகவதர் என்றால் அது மிகையன்று. எத்தனையோ பாகவதர்கள், "பாகவதர்" என்ற அடைமொழியுடன் இருந்தாலும், பாகவதர் என்று சொன்னால் அது திருவாளர் மாயவரம் கிருஷ்ணமூர்த்தி தியாகராஜ பாகவதரையே குறிக்கும். பாகவதர் 14 படங்களே நடித்தார். ஆனால், 100 படங்களில் நடித்த புகழைப் பெற்றார். வெள்ளித்திரையில் அவரது முதல் இன்னிங்ஸ்(1934-1944) சாதனைகளின் சிகரம். இரண்டாவது இன்னிங்ஸ்(1948-1959) சோதனைகளின் உச்சம். திரையிசையில் அமரத்துவ படைப்புகளை அளித்த பாகவதர் 1.11.1959 அன்று அமரத்துவம் அடைந்தார்.
இனி தலைப்பிற்கேற்ற தகவல்களைக் காண்போம்.
பாகவதரின் இரண்டாவது திரைப்படமான நவீன சாரங்கதரா(1936)வும், நடிகர் திலகத்தின் 50வது திரைப்படமான சாரங்கதரா(1958) திரைப்படமும் ஒரே கதைக்களங்களைக் கொண்டவை. சிந்தாமணி(1937) திரைப்படத்தில், பாபநாசம் சிவன் இயற்றி, அவரே செஞ்சுருட்டி ராகத்தில் இசையமைத்து உருவாக்கிய 'ராதே உனக்கு கோபம் ஆகாதடி' என்கின்ற பாடல் பாகவதரின் பிரசித்தி பெற்ற பாடல்களில் ஒன்று. இதையே நடிகர் திலகத்தின் குலமகள் ராதை(1963) திரைப்படத்தில், திரை இசைத் திலகம் கே.வி. மகாதேவன் அவர்கள் மிக அழகாக, மிகுந்த நேர்த்தியோடு, ஒரிஜினலையே மிஞ்சும் வண்ணம் ரீ-மிக்ஸ் செய்திருப்பார். கதைக்கும், காலத்துக்கும் ஏற்றாற் போல, கவிஞர் அ. மருதகாசி அவர்கள் பாடல் வரிகளை பாங்குற மாற்றியமைத்திருப்பார். பாகவதரின் பிம்பமான பாடகர் திலகம் டி.எம்.எஸ். பாட, நடிகர் திலகம் தமது நடையழகாலும், ரொமான்ஸாலும் பாடலை எங்கோ கொண்டு சென்று விடுவார். சரோஜாதேவியின் ரியாக்ஷ்ன்களும் இப்பாடலில் நன்றாகவே இருக்கும். பாடல் முடிந்ததும் சரோஜாதேவி நடிகர் திலகத்திடம், "முடிஞ்சுதா?" என்பார். "பெரிய பாகவதரோட பாட்ட இத்தன நேரமா மூச்ச புடிச்சுகிட்டு பாடிருக்கேன். இப்படிக் கேக்குறையே?" என்பார் நடிகர் திலகம். ரசிக்கத்தக்க அம்சங்கள். பாகவதருக்கு வான்புகழை அளித்த ஹரிதாஸ்(1944) திரைப்படத்தில் இடம்பெற்ற சூப்பர்ஹிட் பாடல், 'மன்மத லீலையை வென்றார் உண்டோ'. பாபநாசம் சிவனின் வைர வரிகளுக்கு, சாருகேசியை பழச்சாறாக பிழிந்து கொடுத்திருப்பார் திரை இசை மாமேதை ஜி.ராமநாதன். பாகவதர் குரலில் இப்பாடல், தமிழ்த் திரைப்பாட்டின் உச்சம். இதே 'மன்மத லீலையை' வார்த்தெடுத்தது போல், இதே சாருகேசி ராகத்தில், ஜி. ராமநாதன் அவர்கள் இசைமணம் பரப்பிய பாடல் தான், 'வசந்த முல்லை போலே வந்து'. சாரங்கதரா(1958)வில் இடம்பெற்ற இப்பாடலை இயற்றியவர் கவிஞர் அ.மருதகாசி. பாடலைப் பாடிய டி.எம்.எஸ்சை சௌந்தரராஜ பாகவதர் என்றே சொல்ல வேணடும். அந்த அளவுக்கு பாகவதரின் குரலை குளோனிங் எடுத்திருப்பார். தமது சிருங்கார காதல் நடிப்பால், இவையனைத்தையும் வென்று, முதலாவதாக நிற்பார் ஒருவர். அவர் தான் நடிகர் திலகம்.
1954-ல் திருச்சி சங்கிலியாண்டபுரத்தில் சீரும், சிறப்புமாக நடைபெற்ற நடிகர் திலகத்தின் ஒரே தங்கை பத்மாவதி அவர்களின் திருமண (பத்மாவதி-வேணுகோபால் திருமணம் தான்) வைபவத்திற்கு வந்தவர்களை வரவேற்று உபசரித்தவர் எம்.கே.டி.பாகவதர்.
1954-ல் வெளிவந்த மனோகரா திரைப்படத்தைக் திரையரங்கில் கண்டு களித்த பாகவதர், நடிகர் திலகத்தின் நடிப்பை இப்படிப் புகழ்ந்தார். "அம்மா என்ற ஒரு வார்த்தையை உணர்ச்சிப்பிழம்பாகச் சொல்லி கைத்தட்டல் பெற்ற ஒரே நடிகர் சிவாஜி தான்." நடிகர் திலகத்தின் நடிப்பில் மயங்கிய பாகவதருக்கு, நடிகர் திலகத்துடன் சேர்ந்து நடிக்கும் வாய்ப்பும் வந்தது. 1937-ல் சேலம் சங்கர் பிலிம்ஸ் தயாரிப்பில், அமெரிக்கர் எல்லிஸ்.ஆர்.டங்கன் அவர்களின் டைரக்ஷ்னில் வெளிவந்த அம்பிகாபதி திரைப்படத்தில் கதாநாயகன் அம்பிகாபதியாக பாடி நடித்தார் பாகவதர். படம் பொன்விழாக் கண்டது. 1957-ல் இதே அம்பிகாபதிக் கதையை ஏ.எல்.எஸ் புரொடக்ஷ்ன்ஸ் தயாரிக்க, ப.நீலகண்டன் இயக்கினார். கதாநாயகன் அம்பிகாபதியாக நடிகர் திலகம் நடித்தார். அம்பிகாபதியின் தந்தை கவிச்சக்கரவர்த்தி கம்பராக யாரை நடிக்க வைக்கலாம் என படக்குழுவினர் யோசித்த பொழுது, பாகவதரே பளிச்சிட்டார். அவரை படக்குழுவினர் அணுகிய போது 'கம்பராக நான் நடித்தால் சரி வராது' எனக் கூறி விட்டார். பின்னர் கம்பர் கதாபாத்திரத்தில் எம்.கே.ராதா நடித்தார். சிவாஜியுடன் நடிக்க பாகவதர் மறுத்து விட்டார் என சினிமாவுலகில் சிற்சில சர்ச்சைகள் கிளம்பின. அவைகளை பாகவதர், தமது சொல்லாலும், செயலாலும் ஒரு முடிவுக்குக் கொண்டு வந்தார். "சிவாஜியுடன் நடிக்க எல்லோரையும் போல் எனக்கும் விருப்பமே. ஆனால் அம்பிகாபதியின் தந்தை கம்பராக நடிக்க நான் விரும்பவில்லை. ஏனென்றால், ஏற்கனவே நான் அம்பிகாபதியாகவே நடித்திருக்கிறேன். அதனால் கம்பராக நடிக்க மனமில்லை." என அறிவித்தார். இதோடு நில்லாமல், தனது சொந்தத் தயாரிப்பில், நடிகர் திலகத்தைக் கதாநாயகனாகக் கொண்டு, தானும் நடிகர் திலகத்துக்கு தந்தையாக நடிக்க முடிவு செய்து ஒரு படத்தைத் துவக்கினார் பாகவதர். அந்தப் படத்தின் பெயர் "பாக்கிய சக்கரம்". இது நிகழ்ந்த ஆண்டு 1958. இந்த சமயத்தில், பாகவதரின் உடல்நிலை மோசமடைய, பாக்கிய சக்கரத்தின் படப்பிடிப்பு நடத்த முடியாமலே நின்று போனது. பின்னர் 1959-ல் பாகவதர் இயற்கை எய்தினார். "திரை, இசை உலகின் இமயம் வீழ்ந்தது" என நடிகர் திலகம் இரங்கல் விடுத்தார்.
சமீபத்தில், சிவாஜி-பிரபு அறக்கட்டளையின் பெருமுயற்சியில், திரையுலக முன்னோடிகளை கௌரவிக்கும் விதமாக, நடிகர் திலகத்தின் இரண்டாம் ஆண்டு நினைவு தினத்தன்று(21.7.2003), சென்னையில் நடந்த நிகழ்ச்சியில், தபால் துறை, பாகவதருக்கு சிறப்பு தபால் உறை வெளியிட்டு கௌரவித்தது. (இதே நிகழ்ச்சியில், நடிகர் பி.யூ.சின்னப்பா அவர்களுக்கும், கலைவாணர் என்.எஸ்.கே. அவர்களுக்கும் சிறப்பு தபால் உறை, அவர்களை கௌரவிக்கும் விதமாக வெளியிடப்பட்டதும் இங்கே குறிப்பிடப்பட வேண்டிய ஒன்று.)
அன்புடன்,
பம்மலார்.
JamesFague
1st November 2014, 08:37 PM
Courtesy: Saradha Madam old post
வசந்த் தொலைக்காட்சியில் புதன் தோறும் ஒளிபரப்பாகும் 'சிங்கத்தமிழன் சிவாஜி' தொடர் நிகழ்ச்சியின் நேற்றைய (23.03.2010) எபிசோட்டில் கலந்துகொண்டு நடிகர்திலகத்தைப்பற்றிய அரிய பல விஷயங்களை வழங்கியவர், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரும் முன்னாள் பாராளுமன்ற் உறுப்பினருமான திரு இரா. அன்பரசு அவர்கள். காங்கிரஸ் தலைவராதலால், அவருடைய உரை நடிகர்திலகத்தின் திரைப்படங்களைபற்றியல்லாது, காங்கிரஸ் பேரியக்கத்தில் அவருடைய பங்களிப்பின் அரிய தொகுப்பாக அமைந்தது. அவருடைய உரையிலிருந்து சில துளிகள்.....
"நடிகர்திலகத்தின் ஒவ்வொரு பிறந்தநாளின்போதும் ஆயிரக்கணக்கில் தொண்டர்களும் ரசிகர்களும் அன்னை இல்லத்தில் காலைமுதல் இரவு வரை அவருக்கு வாழ்த்துச்சொல்லிச் சென்றவண்னம் இருப்பார்கள். அனைவரும் சென்ற பின்னர் அவர்கள் விட்டுச்சென்ற செருப்புக்கள் இரவில் ஒரு லாரியில் ஏற்றி வெளியேற்றப்படும். ஒவ்வொரு பிறந்த நாளின்போதும் அவர் இல்லத்தில் விருந்துக்கழக்கப்படுவோரில் நானும் கண்டிப்பாக இருப்பேன். பிறந்தநாளின்போது அவருக்கு அளிக்கப்படும் பல்வேறு பரிசுப்பொருட்களை அவர் தனக்கென்று வைத்துக்கொள்ளமாட்டார். அங்கு வந்திருக்கும் ரசிகர்களுக்கு அளித்துவிடுவார்.
எப்போதுமே மிகவும் வெளிப்படையாக மனதில் இருப்பதை அப்படியே பேசும் வழக்கமுள்ளவராக இருந்தார். மனதில் ஒன்றை மறைத்துக்கொண்டு வெளியில் வேறொன்றைப்பேசி நிஜவாழ்க்கையில் நடிக்கத்தெரியாதவராக இருந்தார். அதனாலேயே அரசியலில் பலரால் ஏமாற்றத்துக்குள்ளானார்.
ஒவ்வொரு தேர்தலின்போதும் அவருக்கான சுற்றுப்பயணம் தனியாக தயாரிக்கப்படும். சிவாஜி அவர்கள் இருந்தவரையில் அவர் எந்த தேர்தல் பிரச்சாரத்திலும் பங்கேற்காமல் இருந்ததில்லை. அதிலும் குறிப்பாக அப்போது காங்கிரஸ் பேரியக்கத்துக்கு பெரிய தொண்டர் பாசறையாக செயல்பட்டதே அவரது ரசிகர் மன்றங்கள்தான். (இதை மிகவும் பெருமிதத்துடன் குறிப்பிட்டார்). ஒவ்வொரு தேர்தலின்போதும் சிவாஜி ரசிகர்களின் உழைப்பு, காங்கிரஸுக்கு பெரிய பலமாக அமைந்தது.
சிவாஜி அவர்களை தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக நியமிக்க வேண்டும் என இந்திராகாந்தியிடம் அப்போது ராணுவ அமைச்சராக இருந்த ஆர்.வெங்கட்ராமன் தெரிவித்திருந்தார். அதை ஏற்று அது தொடர்பாக நேர்முக பேட்டிக்கு வருமாறு டெல்லிக்கு இந்திகாந்தி அம்மையார் அழைத்தார். சிவாஜி அவர்களுடன் நானும் டெல்லி சென்றிருந்தேன். வழக்கமாக இந்திரா அம்மையாரை சந்திக்க யார் சென்றாலும் அவர் அலுவலக அறையில் இருப்பார், போகின்றவர்கள்தான் வணக்கம் செய்துவிட்டு உள்ளே செல்வார்கள். ஆனால் சிவாஜி அவர்கள் சென்றபோது, இந்திரா அம்மையார் வாசல் வரை எழுந்துவந்து வரவேற்று அழைத்துச்சென்றார். கிட்டத்தட்ட அப்போது அவரையே தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக நியமிக்க முடிவு செய்தபோதிலும் அது நடைபெறவில்லை. அதற்கு கட்சியில் நிலவிய உட்கட்சிப்பூசல்தான் காரணம் என்று நான் அடித்துச்சொல்வேன். அப்போதுமட்டும் அவர் தலைவராகியிருந்தால், அப்போதே தமிழ்நாட்டில், இப்போது நாம் சொல்லிவரும் 'காமராஜ் ஆட்சி' ஏற்பட்டிருக்கும். அப்படி நடக்காமல் போனதால்தான் இன்னும் நாம் மாநிலக்கட்சிகளுக்கு மாறி மாறி பல்லக்குத் தூக்கிக்கொண்டிருக்கிறோம். (நெத்தியடி)
அவரது திரைப்படங்களில் எப்போதும் தேசியம் இடம்பெற்றிருக்கும். அவர் பங்குபெறும் காட்சிகளில் பின்னணியில் பெருந்தலைவர் காமராஜ் அவர்களின் படம் இருக்கும்படி பார்த்துக்கொள்வார். அதுபோல அவரது படங்களின் பாடல்களில் பெருந்தலைவர் அவர்களைப்பற்றி புகழ்ந்து பாடும் வரிகளை சேர்க்கச்சொல்வார். தேசியம் அவரது ரத்தத்தில் ஊறியிருந்ததால்தான் யாருமே ஏற்றிராத பல்வேறு தேசியத்தலைவர்களின் பாத்திரமேற்று நடித்து மக்கள் மத்தியில் எழுச்சியை உண்டாக்கினார். (இந்த இடத்தில் பகவத்சிங், திருப்பூர் குமரன் கிளிப்பிங்குகள் காண்பிக்கப்பட்டன).
தமிழ்நாட்டில் அதிகமான இடங்களில் பெருந்தலைவர் காமராஜ் அவர்களின் சிலை இடம்பெற்றுள்ள்தென்றால் அதற்கு முழுமுதற்காரணம் அண்ணன் சிவாஜி அவர்கள்தான். அதிகமான காமராஜ் சிலைகளின் பீடத்திலுள்ள கல்வெட்டைக் கவனித்தோமானால், அவற்றைத்திறந்து வைத்தவர் அண்னன் சிவாஜி அவர்கள்தான். தன்னை தங்கள் ஊருக்கு வரும்படி அழைக்க வரும் தொண்டர்கள்/ரசிகர்களிடம் 'உங்கள் ஊரில் பெருந்தலைவர் சிலையை நிறுவ ஏற்பாடு செய்யுங்கள், நான் வந்து திறந்து வைக்கிறேன்' என்று சொல்லியே ஊருக்கு ஊர் தலைவர் சிலை ஏற்படக் காரணமாயிருந்தவர் அண்னன் சிவாஜி அவர்கள். (அடுத்து அன்பரசு அவர்கள் சொன்ன விஷயம் சிலிர்க்க வைத்தது).
பெருந்தலைவர் ஆணைப்படி தமிழ்நாட்டில் விலைவாசி உயர்வுப்போராட்டத்தை முன்னின்று நடத்திய அண்னன் சிவாஜி அவர்கள், அந்தப்போராட்டத்தில் கலந்துகொள்வோர் பட்டியலை, தொண்டர்களின் முகவரிகளோடு சேகரிக்க அந்தந்த பகுதி மன்ற பொறுப்பாளர்களுக்கு உத்தரவிட்டார். முகவரி எதற்கென்றால், தொண்டர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்க நேர்ந்தபோது அவர்களின் குடும்பங்களுக்கு பண உதவி செய்தார். தமிழ்நாட்டில் எந்த கட்சித்தலைவரும் செய்யாத அரிய செயல் இது.
அதுபோல கன்னியாகுமரி மாவட்டத்தில் பெரிய வெள்ளம் வந்தபோது, 16 பேரைக்காப்பாற்றிய சிவாஜி ரசிகருக்கு, அப்போதைய அரசு 'வீர இளைஞர்' பட்டம் வழங்கியது. 'நீங்கள் என்ன பட்டம் வழங்குவது?. நான் வழங்குகிறேன்' என்று அவ்விளைஞருக்கு சென்னையில் பாராட்டுவிழா நடத்தி 'வீர இளைஞர்' பட்டம் அளித்ததோடு நில்லாமல் பணமுடிப்பும் வழங்கி கௌரவித்தவர் அண்ணன் சிவாஜி அவர்கள்.
1975 அக்டோபர் முதல்தேதி அவரது பிறந்தநாள்விழாவுக்கு வழக்கம்போல் ஏராளமான ரசிகர்களும், தொண்டர்களும் , திரைப்பட நடிகர்களும் வந்து வாழ்த்துச்சொல்லி சென்றவண்ணம் இருந்தனர். ஆனாலும் அண்ணன் சிவாஜி அவர்களுக்கு பெருந்தலைவர் அவர்கள் இன்னும் வரவில்லையே என்று மனதில் ஒரு தவிப்பு இருந்தது. அதே நேரம் திருமலைப்பிள்ளை ரோட்டில் தனது இல்லத்தில் உடல்நலமின்றி இருந்த பெருந்தலைவர் அவர்களுக்கு, 'சிவாஜியின் பிறந்தநாளில் அவரை வாழ்த்தப்போக முடியவில்லையே' என்ற துடிப்பு இருந்தது. ஒரே நேரத்தில் இருவருக்கும் ஒரே மாதிரியான தவிப்பு. இறுதியில் அங்கிருந்த குமரி அனந்தன், மணிவர்மா ஆகியோரிடம் 'புறப்படுங்கள், சிவாஜி வீட்டுக்குப்போவோம்' என்று காரில் கிளம்பிவிட்டார். தலைவர் புறப்ப்ட்டு விட்டார் என்ற செய்தி கிடைத்ததுமே அண்ணன் சிவாஜி அவர்கள் வீட்டுக்குவெளியே வந்து தலைவரை எதிர்பார்த்து நின்றவர், அவர் காரிலிருந்து இறங்கியதும் அவரது கைகளிரண்டையும் பிடித்துக் கண்ணில் ஒற்றிக்கொண்டு உணர்ச்சிவசப்பட்டார். எல்லோரையும் வீட்டுக்குள் அழைத்துச்சென்றார். தலைவர் அண்னன் சிவாஜியை வாழ்த்திவிட்டு சிறிதுநேரம் பேசிக்கொண்டிருந்துவிட்டு புறப்பட்டார். பெருந்தலைவர் கலந்துகொண்ட கடைசி நிகழ்ச்சி அண்ணன் சிவாஜி அவர்களின் பிறந்த நாள்தான். மறுநாள் பெருந்தலைவர் மறைந்தார்.
அண்ணன் சிவாஜி அவர்களுடைய கனவெல்லாம் தமிழ்நாட்டில் மீண்டும் 'காமராஜ் ஆட்சி' அமைய வேண்டுமென்பதாகவே இருந்தது. எனவே அவர் கனவு கணடது போல தழகத்தில் 'காமராஜ் ஆட்சி' அமையச்செய்வதே அவருக்கு நாம் செய்யும் பெரிய கைம்மாறு ஆகும் என்று கூறி விடைபெறுகிறேன்".
(காங்கிரஸ் பேரியக்கத்தில் நடிகர்திலகத்தின் பங்களிப்பு பற்றிய அரிய பல தகவல்களைத்தந்த அன்பரசு ஐயா அவர்களுக்கு சிவாஜி ரசிக நெஞ்சங்களின் நன்றிகள்).
JamesFague
1st November 2014, 09:38 PM
Thanks to Mr Parthasarathy
நடிகர் திலகத்தின் நுணுக்கமான நடிப்பாற்றல்:-
நடிகர் திலகத்தின் நடிப்பைப் பற்றி பலர் பலவிதமாக ஆராய்ச்சி செய்து நிறைய விஷயங்களைப் பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள். இந்தத் திரியில், நாமும் பல விஷயங்களைப் பகிர்ந்து கொண்டு வருகிறோம்.
எந்த ஒரு சிறந்த கலைஞனும் ஒரு படைப்பினைத் தரும்போது, முதலில், தன்னை அந்தக் கட்டம் மற்றும் கணத்துக்குள் தன்னுடைய மனதை மட்டும் நுழைத்துக் கொண்டு, அதுவாகவே பாவித்து, தன்னுடைய அனுபவம், அறிவு மற்றும் திறமை மூலம், ஒரு படைப்பினைத் தர முயற்சிக்கிறான். இந்த internalisation பரிபூரணமாக அமையப் பெற்ற உன்னதக் கலைஞன் உலகில் நடிகர் திலகம் ஒருவரே என்பது என்னுடைய தாழ்மையான கருத்து. அவருக்கு நடிப்புக் கலை என்பது கலைமகள் அருளிய வரம். அவரிடம் இருந்த spontaneity இதனை நிரூபிக்கும். இருப்பினும், தன்னுடைய வாழ் நாளில் கடைசி வரை, எப்போதும், தன்னுடைய கலையை அவர் மெருகேற்றிக் கொண்டே வந்திருக்கிறார் - பல வித முறைகள் மூலம். இதில், மிக முக்கியமானது அவரது ஆழ்ந்த, கூர்ந்து நோக்கி அணுகும் திறன். எந்த ஒரு விஷயத்தையும், அவர் மேம்போக்காக அணுகாமல், நூறு சதவிகித பரிபூரணத்துவத்துடன் தான் அணுகிக் கொண்டு வந்திருக்கிறார். இதனால் தான், அநேகமாக அவருடைய எல்லா படங்களும் கனமாகவே இருக்கும். இலேசான படங்கள் (so called light movies) அவரிடமிருந்து மிகவும் குறைவு தான்.
சில நாட்களுக்கு முன்னர், நண்பர் திரு. வாசுதேவன் அவர்கள், "அன்னை இல்லம்" படத்தில் ஒரு (இல்லை இது மூன்று ஒன்றோடொன்று தொடர்புடைய காட்சிகள்) காட்சியைத் தரவேற்றியிருந்தார். இந்தக் காட்சியில், நடிகர் திலகம் முத்துராமன் வீட்டிற்கு வந்து, உண்பதற்கு அமர்ந்து எம்.வி.ராஜம்மா அவர்களைப் பார்த்து (அவருடைய சுமங்கலித் தோற்றத்தைப் பார்த்து), பக்கத்தில், அவருடைய கணவருக்காக வைக்கப் பட்டிருக்கும் இலையையும் பார்த்து, 'அம்மா! உங்களது இந்த சுமங்கலிக் கோலம் சீக்கிரம் போகப் போகிறது' என்று நினைத்து வெதும்பி, எதுவும் சொல்லாமல், வெறும் முக பாவனைகளின் மூலம் அந்த சோகத்தைக் காண்பித்து அங்கிருந்து சென்று விடுவார். (எம்.வி. ராஜம்மா அவருடைய கணவர் எஸ்.வி. ரங்கா ராவ் உயிருடன் தான் இருக்கிறார் என்று வலுவாக நம்பி எப்போதும், அவருக்காக ஒரு இலையைப் போட்டு அதில், உணவு வகைகளை எப்போதும் பரிமாறி வைப்பார், என்றாவது ஒரு நாள் திரும்பி வந்து சேர்ந்து உண்டு மகிழ்வார் என்ற நம்பிக்கையில்!. எம்.வி ராஜம்மாவிற்கு, ரங்காராவ் கூடிய சீக்கிரம் மரண தண்டனை பெற்று இறக்கப் போகிறார் என்று தெரியாது. இது நடிகர் திலகத்துக்கும் தேவிகாவுக்கும் மட்டுமே தெரியும்.). அடுத்து, வழக்கறிஞரை சந்தித்து விட்டு ஏமாற்றத்துடன் திரும்பி, இப்போது, வாய் விட்டுக் கூறிக் கதறுவார், தேவிகாவிடம்! முதல் இரண்டு காட்சிகளில் ஒரு சிகை அலங்காரத்துடன் வரும் நடிகர் திலகம், அடுத்த காட்சியில், வேறொரு சிகை அலங்காரத்துடன் வருவார். அதாவது, முதல் இரண்டு காட்சிகளில் நீளமாக இருக்கும் கிருதா உடனே வரும் அடுத்த காட்சியில், சிறியதாக இருக்கும். ஆக, அடுத்தடுத்து வரும் இந்த மூன்று காட்சிகளில், முதல் இரண்டு காட்சிகளும், மூன்றாவது காட்சியும் வேறு வேறு சந்தர்ப்பங்களில் எடுக்கப்பட்டிருக்கிறது. இருப்பினும், முதல் இரண்டு காட்சிகளுக்கும் அடுத்த காட்சிக்கும் இருக்கும் அந்த உணர்ச்சிமயமான தொடர்பு சிறிதும் குறைந்திருக்காது. சரிய்யா, அவர் நுணுக்கமான நடிகர் என்று இப்போது தானே சொன்னீர், அதனால், அவருக்கு இருக்கும் நுணுக்கமான அறிவினாலும், ஈடுபாட்டினாலும், அவரைப் பொறுத்த வரை இது சுலபம் என்று நீங்கள் சொல்லலாம். ஒத்துக் கொள்கிறேன்.
இப்போது, அதே படத்தில் இடம் பெற்ற வேறொரு காட்சியைப் பார்ப்போம்.
இந்தக் காட்சி, முந்தைய காட்சியைப் போல பெரிய உணர்ச்சிக் குவியலான காட்சியல்ல. முந்தைய காட்சி படத்தின் இறுதிக் கட்டத்தில் வரும். இந்தக் காட்சியோ, படத்தின் நடுவில் வரும்.
நடிகர் திலகமும், முத்துராமனும் அருகருகே அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருப்பார்கள். வழக்கம் போல, பக்கத்தில் ரங்கா ராவுக்காக ஒரு இலை போடப்பட்டு உணவு பரிமாறப் பட்டிருக்கும். அப்போது தான், முதன் முதல், அந்த வீட்டில் நடிகர் திலகம் சாப்பிடுவார். அப்போது தான், அவருக்கு அந்த இலையின் முக்கியத்துவம் தெரியும். எம்.வி. ராஜம்மாவின் பண்பை வியந்து பாராட்டி (எல்லாம் சாப்பிட்டுக் கொண்டே!), அவர்களை தன்னுடைய வீட்டிற்கு விருந்து சாப்பிட வர வேண்டும் என்னும் போது, எம்.வி. ராஜம்மா அவரிடம் "கண்டிப்பாக வருகிறோம். கல்யாண சாப்பாட்டிற்கு, வடை பாயாசத்துடன்" என்பார். அதற்கு, நடிகர் திலகமோ, "வடையாவது பாயாசமாவது, இங்கு உங்கள் வீட்டில், அந்த விருந்து, எனக்கு முன் வரப் போகிறது" என்று சொல்லி, முத்துராமனுடைய காதலைப் பற்றிக் கூறி, அந்தப் பெண் நல்ல நிறம், செக்கச் செவேரென்று இருப்பாள் என்று கூறி, மேலும் சில சம்பாஷணையுடன் அந்தக் காட்சி முடியும். இந்தக் காட்சி இரண்டு நிமிடங்கள் தான் வரும். இந்தக் காட்சியில், துவக்கத்திலிருந்து நீளமான கிருதாவுடன் வரும் நடிகர் திலகம், "அந்தப் பெண் செக்கச் செவேரென்று இருப்பாள்" என்று கூறும் அந்த ஒரு சில நிமிடங்கள் மட்டும், சடாரென்று, சிறிய கிருதாவுடன் காட்சி தருவார்! இது க்ளோசப்பில் எடுக்கப் பட்டிருக்கும். உடனே, மறுபடியும் அந்த சம்பாஷனை தொடரும் போது, பழைய நீள கிருதாவுக்கு மாறி விடுவார்! இத்தனைக்கும், முந்தைய காட்சியைப் போல, வேறு வேறு காட்சிகளல்ல இந்தக் காட்சி. தொடர்ந்து, இரண்டு நிமிடங்களுக்கு, நடிகர் திலகம், முத்துராமன் மற்றும் எம்.வி. ராஜம்மா நடிக்கும் காட்சி. இரண்டு வேறு வேறு காட்சிகள் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் எடுக்கப் படும் போதே (எனக்குத் தெரிந்து குறைந்த பட்சம் இரண்டு நாட்கள் கழித்து தான் எடுக்கப் பட்டிருக்கும்), தொடர்பு காட்டுவதற்கு நிறைய மெனக்கெட வேண்டியிருக்கும். நிலைமை இப்படியிருக்க, ஒரே நேரத்தில் எடுக்கப் பட்ட, நாம் மேலே கூறிய இந்தக் காட்சியில், தொடர்ந்து வரும் இரண்டு நிமிடங்களில், ஒன்றே முக்கால் நிமிடம் ஒரு ஒப்பனை, நடுவில், சில நொடிகள் மட்டும் வேறொரு ஒப்பனை; உடனே, கடைசி சில நொடிகளில் வேறொரு ஒப்பனை! இதுவும், வெவ்வேறு சந்தர்ப்பங்களில் எடுக்கப் பட்ட காட்சிகள். அப்படி என்றால், எந்த அளவிற்கு, நடிகர் திலகம் ஈடுபாடும், அர்ப்பணிப்பும், முனைப்பும், முயற்சியும் செய்திருக்கிறார்!!
இது போல், பல படங்களில் காணலாம். ஆனால், அவை எல்லாம் வேறு வேறு காட்சிகளாய் வரும். உதாரணத்திற்கு, புதிய பறவையில், வரும் "சிட்டுக் குருவி முத்தம் கொடுத்து" பாடலின் முதல் சரணம் பூராவும், படம் தொடங்கும் போதே எடுக்கப் பட்டிருக்கும். வேறொரு நீள கிருதாவுடன் வருவார். பல்லவியிலும், அனு பல்லவியிலும், இரண்டாவது சரணத்திலும், படம் நெடுகிலும் வரும் சிறிய கிருதாவுடன் வருவார். ஆரம்பத்தில், ஊட்டி ரேஸ் கோர்ஸில், சரோஜா தேவியுடன் பேசும் ஒரு காட்சியிலும், அடுத்தடுத்து, இதே போல், வேறு வேறு கிருதாக் கோலங்களில் வருவார்.
நடிகர் திலகம் 1953-லிருந்து, 1987 வரை, தொடர்ந்து, மூன்று ஷிப்டுகளில், நடித்துக் கொண்டே இருந்தார். வருடத்திற்கு ஆறு, ஏழு படங்களில் (சில வருடங்கள் நீங்கலாக - 1965, 1966, 1977, மற்றும் சில வருடங்கள்) நடித்துக் கொண்டு! வேறு வேறு கெட்டப்புகளில், வேறு வேறு பாத்திரங்களில், ஒவ்வொன்றும் வெவ்வேறு சந்தர்ப்பங்களில், காலங்களில்! அப்படி இருந்தும், காட்சித் தொடர்பினைத் (continuity) தொடர்ந்து நூறு சதவிகிதம் கடைப்பிடித்தார். இப்போதெல்லாம், ஒரு நடிகர் ஒரு நேரத்தில், ஒரு படம் மட்டுமே நடிக்கின்றார், நன்றாக concentrate செய்து நடிப்பதற்கு! இன்னும் சொல்லப் போனால், வட நாட்டின் புகழ் பெற்ற நடிகர் திலீப் குமார் அவர்கள், அந்தக் காலத்திலேயே, ஒரு நேரத்தில், ஒரு படம் தான் நடித்தார், மேற்கூறிய காரணத்துக்காக!
வேறு வேறு காட்சிகள் என்றால், ஓரளவு நடித்து விடலாம். ஒரே காட்சியில், இரண்டே நிமிடங்கள் தொடர்ந்து பேசும் வசனக் காட்சியில், இடையில், ஒரு சில நொடிகள் மட்டும் வேறு ஒரு கட்டத்தில் எடுக்கப்படும் போது கூட, எப்படி அவரால் பரிபூரணத்துவத்தைக் காட்ட முடிந்தது? இத்தனைக்கும், அப்போதெல்லாம் நேரடியாக பேசி நடித்தாக வேண்டும். இப்போது போல தனி ட்ராக் எல்லாம் கிடையாது! எல்லாம் அந்தக் கலைக் கடவுளுக்கும், அவரை தமிழ் நாட்டிற்கு ஈந்த அந்தக் கலைமகளுக்கும் தான் வெளிச்சம்!!
நடிகர் திலகத்தின் பாடல் கட்டுரைகளினூடே, இந்த சிறிய பதிவை இட சந்தர்ப்பமளித்த திரு. வாசு மற்றும் திரு. வெங்கிராமுக்கு நன்றிகள்.
இந்தக் காட்சி பற்றி சொல்லி, திரு. ராகவேந்திரன் அவர்களிடம் கேட்டு, மீண்டும் ஒரு முறை அந்தக் காட்சியைப் பார்ப்பதற்கு, அவரிடம் உதவும்படிக் கோரிய போது, அவரும் உடனே, எனக்கு அந்தக் காட்சியை மட்டும், என்னுடைய சொந்த மெய்லுக்கு அனுப்பினார். அவருக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள்.
திரு. ராகவேந்திரன் அவர்களே, எனக்காக ஒரு முறை அந்தக் காட்சியைப் பதிந்து, கோடானு கோடி சிவாஜி ரசிகர்களின் நெஞ்சை நிறையச் செய்யுங்கள்.
அன்புடன்,
இரா. பார்த்தசாரதி
RAGHAVENDRA
2nd November 2014, 08:27 AM
http://www.dinamalar.com/splpart_detail.asp?id=91
தேவையில்லாத விமர்சனம்...
தினமலரின் விஷமத்தனம் மீண்டும் நிரூபணமாகியிருக்கிறது. ஏம்பா.. தமிழனை நீங்கள் பாராட்டா விட்டாலும் பரவாயில்லை.. இப்படியெல்லாம் இன்னுமா புண்படுத்துவீர்கள்.. உங்களுக்கெல்லாம் கொஞ்சம் கூட தமிழுணர்வே இல்லையா...பகுத்தறிவிற்கொப்பாத விஷயத்தையெல்லாம் மீண்டும் மீண்டும் கிளறுகிறீர்கள்... சிவாஜி ரசிகர்கள் இளிச்சவாயர்கள் என எண்ணுகிறீர்களா.. அல்லது அவர்தான் இல்லையே என்ன வேண்டுமென்றாலும் எழுதலாம் என்கின்ற எண்ணமா...
தினமலரின் உள்நோக்கம் புரியவில்லை..
இல்லாத சென்டிமென்டை ஏன் மீண்டும் மீண்டும் எழுதுகிறீர்கள்.. காழ்ப்புணர்ச்சியின் மறுபெயர் தான் தினமலரா...
அல்லது தாங்களே சொல்லிக் கொடுக்கிறீர்களா..
ஒரு பக்கம் அவரைப் பற்றிய அவருடைய கட்டுரையின் பிரசுரம்..
மறு பக்கம் அவரைப் பற்றிய மூடநம்பிக்கையை உருவாக்கும் விமர்சனம்
இந்த இரட்டை வேடம் தினமலருக்குத் தேவையா..
Gopal.s
2nd November 2014, 08:57 AM
எத்தனை பெரியார் வந்தாலும் ,தமிழ் நாட்டில் பகுத்தறிவு மலர செய்வது கடினம் என்பதையே இது உணர்த்துகிறது. அப்படியானால்,சிவாஜி சம்மந்த பட்ட எந்த விஷயம் நுழைந்தாலும் ,அது மெகா ஹிட் ஆகிறதே திரைபடங்களில்?(சந்திரமுகி,சிவாஜி,ஜிகர்தண்டா படங்களின் மெகா வெற்றி).அது எப்படியாம்?
வெற்றியின் பின்னால் மோப்பம் பிடித்து அலைந்து ,மனசாட்சி துறந்து,கொள்கைக்கும் வாழ்வுக்கும் சம்மந்தமற்று பொய் மனிதனாக வாழ்ந்து மடிவதுதான் உன்னத வாழ்க்கையா? அதிர்ஷ்டத்தின் உன்னதமா?இதைத்தானா இந்த சமுகம் எதிர்பார்க்கிறது?
உண்மை மனிதனாக,தன் மனசாட்சி படி தேசிய உணர்வு,இறை நம்பிக்கை,கலாசார குடும்ப வாழ்வு ,என்று வாழ்ந்த சிவாஜி என்ற தமிழன் தந்த அறிவு ,திறமை,நம்பிக்கை,உழைப்பு,உண்மை ,நேர்மை என்ற நல்லாயுதங்கள் போதும் எங்களுக்கு. உலகை வெல்வோம்.
இது தோல்வி என்றால், கம்பனும்,,கட்டபொம்மனும் ,பாரதியும்,பகத்சிங்கும் ,நேதாஜியும்,வ.வு.சியும்,சுப்ரமணிய சிவாவும்,புதுமை பித்தனும்,கலைவாணரும், காமராஜரும்,கண்ணதாசனும் வாழ்க்கையில் தோற்றவர்களே. செண்டிமெண்ட் சரியில்லாதவர்களே.அப்பாடா ,என்ன பகுத்தறிவு? அது சரி ,ஒரு எம்.எல்.ஏ வாக கூட ஆகாதவருக்கு, இவ்வளவு கவனிப்புகளா?
தன் திறமையால் ,உலகத்தையே நம் பக்கம் திருப்பிய ஒரு மாமேதையை,நாம் மதிக்கும் லட்சணம் இது.
தின மலர், தின விஷ விருட்சமாவதை இது உணர்த்துகிறது.
RAGHAVENDRA
2nd November 2014, 08:57 AM
http://i1146.photobucket.com/albums/o528/imagivity/NTSnaps2/manushanennavo_zps43b8bd9d.jpg
Gopal.s
2nd November 2014, 10:31 AM
நவராத்திரி-03/11/1964.
பராசக்தியுடன் வந்து தீபாவளிக்கு உன் ஒலியினால் ஒளியூட்டியவனே,
நவராத்திரிக்கும் ஒரு தீபாவளியிலேயே ஒளி கூட்டினாய் ,
தீபாவளி இறுதி வரை நீ தந்த மரியாதைக்கு பதில் செய்தே வந்தது.
பண்டிகையோ,தெய்வங்களோ,தொழில்களோ,உன்னத மனிதர்களோ ,
நீ நினைவுறுத்திய பின்பு தான் ஒளி வட்டம் பெற்றது,பெற்றனர்,
.
ரசங்களின் உணர்வுகள் உணர்வு பெற்ற நாள் இது
அற்புதம் தன் அற்புதத்தை உணர்ந்தது. பயம் பயந்தது,
சிருங்காரம் நயந்தது ,வீரம் உரம் பெற்றது ,காருண்யம் இன்னொரு பௌத்தம் கண்டது,
காதல் காதலிக்க தொடங்கியது, அருவருப்பு தன்னையே அருவருத்தது,
நகை நகைக்க துவங்கியது, அமைதி பேரமைதி கண்டது,
ரௌத்ரமோ ,ரௌத்ரம் கண்டு , மாண்டே போனது ,
தொட்டு தடவாமல்,காமம் கலக்காமல், நீ தந்த ,பிரிவின் துயர் தீர்ந்த ஆயாச அழைப்பு ,
அவசர அழைப்பு ,காதலியின் கேசத்தை மட்டுமா கோதியது , பல கோடி உள்ளங்களை கொத்தியதே?
நம் மண்ணின் கலைகளை,ஒரே காட்சியில் ,கூத்தாடி ,
பல்லாயிரம் ஆண்டுகளின் கலை சரிதம்,சிலம்பு கூட உரைத் ததில்லையே?
கட கட வேட்டை சிரிப்பு ஒன்றே ,எதனையும் ஓடி விடாமல் வேட்டையாடி விட்டதே ?
தோள் கண்டார் தோளே கண்டார் ,உன் குலுக்கலை கண்டார்?
சும்மா சுட்டதில் விழுந்தவை எத்தனை எத்தனை இதயங்கள் ?
இரவினில் ஆடி வட்டமிடும் விழிகள் கண்டார் ,
உன்னையறிய நீ என்ன ஒரே மனிதனா? வெளி நாட்டான் ஒருவன் ,உன்னை
பலரென்று பகர்ந்ததே சான்று ,அடி-முடி அறிய முடியா ,மண்ணும் விண்ணும் அளந்த
எங்கள் தமிழ் கடவுளே, உனக்கு மட்டுமே பணியும் என் சிரம் .
Russellisf
2nd November 2014, 10:37 AM
today morning 11.00 hrs sunlife channel telecast punniya boomi movie watch and enjoy
http://i1146.photobucket.com/albums/o528/imagivity/ntsnaps2/manushanennavo_zps43b8bd9d.jpg
eehaiupehazij
2nd November 2014, 12:38 PM
புண்ணியபூமி (1978) : நடிக மன்னர் மன்னனே.....யாருக்காக இது யாருக்காக!
இன்றுவரை இந்தியத்திரைவானில் புகழ் மங்காமல் ஜொலித்துக்கொண்டிருக்கும் வட இந்திய நடிகைகள் மதர் இந்தியா நர்கிஸ் மற்றும் அனார்கலி மதுபாலா மட்டுமே. நர்கிசின் விருது வென்ற நடிப்பில் உருவான மதர் இந்தியா (1957) தமிழில் தன்னுடன் பலபடங்களில் நடித்த கதாநாயகி வாணிஸ்ரீக்கு முதன்மை தரவேண்டிய நன்றிக்கடன் வேண்டி நடிகர்திலகம் அவரது கணவராகவும்(ராஜ்குமார் ஏற்ற பாத்திரம்) மகனாகவும் (சுனில்தத் ஏற்ற பாத்திரம்) இரட்டை வேடங்களில் நடித்துச் சிறப்பு சேர்த்த இரண்டாவது படம் (சிவகாமியின் செல்வனை தொடர்ந்து). காலம் கடந்து வெளிவந்து எதிர்பார்த்த வெற்றிவாய்ப்பை ஓரளவு நிறைவு செய்த படம்). நர்கிசின் நடிப்பில் மேன்மை பெற்ற மதர் இந்தியா புண்ணியபூமியாக மெருகேற்றப்பட்டு பெருமை பெற்றது நடிகர்திலகத்தின் ஆளுமை நிறைந்த நடிப்பினால்!Our Tributes to Nargis!!
https://www.youtube.com/watch?v=8GiBCQ9QFjk
https://www.youtube.com/watch?v=Tuc380Ec53s
https://www.youtube.com/watch?v=2SxS4FhL70U
JamesFague
2nd November 2014, 02:07 PM
Watch Anbukkarangal NT's Super Hit Movie in Sun LIfe today at 7.00 pm
JamesFague
2nd November 2014, 03:03 PM
Thanks to Mr Neyveli Vasudevan
அண்ணன் ஒரு கோயிலை தரிசித்த அனுபவம்.
நேற்று 'சிவந்த மண்' நினைவலைகள் என்றால் இன்று நம் அண்ணன் நம்மிடையே ஒரு கோயிலாய் வலம் வந்த நினைவலைகள் நெஞ்சில் நிழலாட ஆரம்பித்து விட்டது. ஆம்... இன்று 'அண்ணன் ஒரு கோயில்' வெளியான நாளல்லவா! 77-ல் வெளியான அவன் ஒரு சரித்திரம், தீபம், இளைய தலைமுறை, நாம் பிறந்த மண் காவியங்களுக்கு அடுத்து 10-11-1977-ல் தித்திக்கும் தீபாவளித் திரை விருந்தாக 'அண்ணன் ஒரு கோயில்' ரிலீஸ். முந்தைய படங்களான இளைய தலைமுறை, நாம் பிறந்த மண் ஆகியவை சுமாராகப் போன நிலையில் சற்று சோர்வடைந்திருந்த நம் ரசிகர்களுக்கு தடபுடலாய் தலைவாழை தீபாவளி விருந்தளித்து அனைவையும் திக்குமுக்காடச் செய்தார் அண்ணன் (ஒரு கோயிலாய்). அண்ணனுக்கு சொந்தப்படம் வேறு. 74-ல் வெளிவந்த தங்கப்பதக்கத்திற்குப் பிறகு 77-ல் கிட்டத்தட்ட மூன்றரை வருடங்களுக்குப் பிறகு சிவாஜி புரடக்ஷன்ஸ் தயாரிப்பில் வெளிவந்த வெற்றிக் காவியம். மிகுந்த எதிர்பார்ப்பு இந்தக் காவியத்திற்கு. கோபால் சார் சொன்னது போல் தீபாவளி நமக்கு ராசியாயிற்றே. அதுவும் நம் சொந்த பேனர் வேறு. அமைதியாய் ஆர்ப்பாட்டமில்லாமல் வெளிவந்து அசுரத்தனமான வசூல் சாதனை புரிந்தது 'அண்ணன் ஒரு கோயில்'.
கடலூரில் நியூசினிமா திரையரங்கில் ரிலீஸ். நாம் பிறந்த மண்ணும் அதே தியேட்டரில்தான் ரிலீஸ். ஆனால் மூன்று வாரங்களே தாக்குப் பிடித்தது. அதற்கு முந்தைய படமான 'இளையதலைமுறை' கடலூர் துறைமுகம் கமர் டாக்கீஸில் ரிலீஸ் ஆகி இரண்டு வாரங்கள் ஓடி பின் நியூசினிமா திரையரங்கில் ஷிப்ட் செய்யப்பட்டது. எனவே மூன்று படங்களுமே தொடர்ந்து நியூசினிமாவில் ரிலீஸ். அதுமட்டுமல்ல. இளையதலைமுறைக்கு முந்தைய படமான தீபமும் இங்குதான் வெளியாகி வெற்றி சுடர் விட்டு பிரகாசித்தது. எனவே நியூசினிமா எங்களுக்கு கோயில் ஆனது. அங்கேயே 'அண்ணன் ஒரு கோயில்' வெளியானதில் எங்களுக்கு மகிழ்ச்சி. நியூசினிமா கடலூர் அண்ணா மேம்பாலத்திற்கு அதாவது பழைய கடிலம் ஆற்றுப் பாலத்தின் கீழ் அமைந்துள்ள தியேட்டர். வழக்கம் போல ஒன்பதாம் தேதியே தியேட்டர் திருவிழாக் கோலம் காண ஆரம்பித்து விட்டது. கொடிகளும் தோரணங்களுமாய் தியேட்டர் முழுக்க ஒரே அலங்கார மயம். அண்ணன் அழகான கண்ணாடி அணிந்து ஒயிட் கோட் சூட்டில் அற்புதமாய் (சுமித்ரா பாடும் "அண்ணன் ஒரு கோயிலென்றால்" பாடலில் அணிந்து வருவாரே... அந்த டிரஸ்.) நிற்கும் கண்கொள்ளா கட்- அவுட். அண்ணனின் முழு உடலையும் கவர் பண்ணும் அலங்கரிக்கப்பட்ட மிகப் பெரிய மாலை. ஜிகினாத் தாள்கள் மின்னும் அண்ணன் படங்கள் ஒட்டிய அழகழகான கண்ணைப் பறிக்கும் ஸ்டார்கள். தியேட்டரின் வாயிலே தெரியாத அளவிற்கு கீழே தூவப்பட்ட தென்னங் குருத்துகள். பழைய கடிலம் பாலம் இருமருங்கிலும் நடப்பட்ட ஆளுயர பச்சைத் தென்னங் கீற்றுகள். தியேட்டரினுள்ளே வைப்பதற்கு ரசிகர் குழாம் செய்து வைத்துள்ள வாழ்த்து மடல்கள் (கண்ணாடி பிரேம் போட்டு அலங்கரிக்கப்பட்ட தலைவர் ஸ்டில்களுடன் கூடிய படங்கள்) என்று அதம் பறந்து கொண்டிருக்கிறது. இரவு ஒருமணி தாண்டியும் அலங்காரங்கள் செய்வது நிற்கவே இல்லை. படம் எப்படி இருக்குமோ.என்று ஒவ்வொருவரும் ஆவல் மேலிடப் பேசிக்கொண்டிருக்கிறோம். படப்பெட்டி இரவே வந்து விட்டதாக வேறு தியேட்டர் சிப்பந்திகள் கூறி விட்டார்கள். அலங்காரங்கள் முடிந்து தியேட்டரை விட்டு போகவே மனமில்லை. ஆனால் மழைக் காலமானதால் மேகமூட்டமாக இருந்தது. மழை வந்து எல்லாவற்றையும் கெடுத்து விடப் போகிறது என்று வேண்டாத தெய்வமில்லை. அலங்காரங்கள் அனைத்தும் ஒரு நொடியில் பாழ்பட்டுப் போகுமே என்று அனைவர் முகங்களிலும் கவலை ரேகை. நல்லவேளையாக வேண்டியது வீண் போகவில்லை. சிறு தூறல்களுடன் வந்த மழை நின்று விட்டது. பெருமூச்சு விட்டுக் கொண்டு அவரவர் வீடுகளுக்குப் பிரிய மனமில்லாமல் பிரிந்தோம். சில தீவிரவாதிகள் வீட்டுக்கே போகவில்லை. செகண்ட் ஷோ முடிந்ததும் சைக்கிள் ஸ்டான்டிலேயே பழைய போஸ்ட்டர்களைத் தரையில் விரித்து அலங்காரங்கள் செய்த அசதியில் படுத்து குறட்டை விட ஆரம்பித்து விட்டனர்.
வீட்டை அடையும்போது சரியாக அதிகாலை இரண்டரை மணி. தூக்கம் வருமா... கண்களிலும், மனம் முழுவதிலும் அண்ணனே நிரம்பி வழிகிறார். சிறிது நேர தூக்கத்திலும் கோவில் கோவிலாக கனவு வருகிறது. அம்மாவிடம் சொல்லி ஐந்து மணிக்கெல்லாம் எழுப்பச் சொல்லிப் படுத்தேன். நான்கு மணிக்கு நான் அம்மாவை எழுப்பிவிட்டேன். "ஏண்டா.. தூங்கினா என்ன" என்று அம்மா செல்லக்கடி கடித்தார்கள். ஆனால் அவர்களுக்கு தெரியும் இது திருந்தாத கேஸ் என்று. விறுவிறுவென சாஸ்திரத்திற்கு தலையில் எண்ணெய் வைத்துக் கொண்டு அது சரியாக தலையில் ஊறக் கூட இல்லை... சுட்டும் சுடாததுமான வெந்நீரில்(!) திருக்கழு(கு)க்குன்றம் கழுகு போல கழுகுக் குளியல் குளித்துவிட்டு, அம்மா போட்டுத் தந்த காபியை (சு)வைத்து விட்டு, ஆறுமணிக்கெல்லாம் கிளம்பி விட்டேன். "ஏண்டா! தீபாவளி அதுவுமா சாப்பிட்டுட்டு போகக் கூடாதா," என்று அம்மா கோபித்துக் கொண்டார்கள். இது இந்த தீபாவளிக்கு மட்டுமில்லை. தலைவர் பட தீபாவளி ரிலீஸ்களின் அத்தனை தீபாவளிக்கும் இதே கூத்துதான். "சாமியாவது கும்பிட்டு விட்டுப் போ"..என்று அவசர அவசரமாக வடை சுட்டு, தீபாவளி பலகாரங்களை இலையில் வைத்து, எனக்காகவே ஒரு அவசர படையலை முன்னாடியே அம்மா போட்டு விடுவார்கள். ஏதோ பேருக்கு சாமி கும்பிட்டு விட்டு சைக்கிளில் ஒரே ஓட்டம். இது என் கதை மட்டுமல்ல. அனைத்து ரசிகர்களுக்கும் இதே கதைதான்.ஆறரை மணிக்கெல்லாம் தியேட்டரில் அனைவரும் ஆஜர். புதுத் துணியெல்லாம் கிடையாது. யார் அதையெல்லாம் பார்த்தார்கள்?... பின் முந்தைய இரவு செய்த அலங்காரங்களையெல்லாம் ஒரு தடவை கரெக்ட் செய்து பின் தலைவரைப் பற்றிய பேச்சும், படத்தின் வெற்றியைப் பற்றிய பேச்சும்தான். தீபாவளி அன்று ஐந்து காட்சிகள். முதல் காட்சி ரசிகர் ஷோ காலை ஒன்பது மணிக்கு. ரசிகர் ஷோ டிக்கெட்டுகள் அப்படியே இருமடங்கு விலை. தலைவர் படம் அச்சடித்த அட்டை ஒன்று கொடுப்பார்கள். ஒவ்வொரு கிளாஸுக்கும் தகுந்தவாறு அட்டையின் நிறம் மாறும். கவுண்ட்டரில் டிக்கெட் கிடையாது. ஒரு வாரம் முன்னமேயே டிக்கெட் காலி. நேரமாக ஆக கூட்டம் திருவிழா போல கூட ஆரம்பித்து விட்டது.
எங்கு நோக்கினும் ரசிகர்கள் தலைகள்தான். பட்டாசுகள் வெடிக்கத் துவங்கியாகி விட்டது. சும்மா ஆட்டம் பாம்களாக வெடித்துத் தள்ளுகிறது. அனைவரும் காதுகளைப் பொத்திய வண்ணமே இருக்கிறார்கள். புஸ்வானம் மத்தாப்புகளாய் சிதறுகிறது. சரவெடிகள் சரமாரியாய் கொளுத்தப்படுகின்றன. எங்கும் தலைவரை வாழ்த்தும் 'வாழ்க' கோஷம் தான்.ஆயிரம்வாலாக்களும், ஐயாயிரம் வாலாக்களும் தியேட்டர் வாசலைக் குப்பையாக்குகின்றன.
அரங்கினுள் நுழைய மணி அடித்தாயிற்று. அனைவரும் 'நான் முந்தி... நீ முந்தி'... என்று கேட்டில் முண்டியடித்துக் கொண்டு டிக்கெட் கிழிப்பவரிடம் அட்டையைக் கொடுத்துவிட்டு ஒரே ஓட்டம். செகண்ட் கிளாஸ் சீட்களின் வரிசையான மூன்று ரோக்களை வெளியிலிருந்து வரும் நண்பர்களுக்காக கயிறு கட்டி மொத்தமாக ஆக்கிரமிப்பு செய்தாகி விட்டது...(அராத்தல் குரூப் என்று எங்கள் குரூப்புக்கு பெயர்) அனைத்து ரசிகர்களும் பலூன்களை பறக்க விட்டுக் கொண்டே உள்ளே நுழைகின்றனர். கிடுகிடுவென தியேட்டர் ரசிகர்கள் தலைகளால் நிரம்பி வழிகிறது. திரையருகே சில வானரங்கள் பட்டாசுகளை சரம் சரமாய் கொளுத்திப் போட தியேட்டர் சிப்பந்திகள் கடுப்பாகி ஓடோடி வந்து பட்டாசுகள் வெடிக்கக் கூடாது என தடுக்கின்றனர். தியேட்டர் முன் மேடை முழுவதும் மெழுகுவர்த்திகள் கொளுத்தி வைக்க ஆரம்பித்து விட்டார்கள். படம் துவங்க பெல் அடித்து விளக்குகள் அணைக்கப்பட்டு முதல் 'நல்வருகை' ஸ்லைடில் என்.எஸ். கிருஷ்ணன் முகமலர்ந்து சிரித்து அனைவரையும் வரவேற்கிறார். பின் தியேட்டரின் 'புகை பிடிக்காதீர்கள்'...'முன் சீட்டின் மீது காலை வைக்காதீர்கள்'... 'தினசரி நான்கு காட்சிகள்'... 'தீபாவளியை முன்னிட்டு ஒருவாரத்திற்கு ஐந்து காட்சிகள்'... என்று சம்பிரதாய ஸ்லைடுகள் போட்டு முடித்த பின்னர் நம் ரசிகர்களின் "இப்படத்தைக் காண வந்த ரசிகர்களுக்கு நன்றி" என்று பல்வேறு ஸ்டைலான போஸ்களில் அண்ணன் நிற்கும் ஸ்லைடுகள் போடப்பட்டவுடன் சும்மா விசில் சப்தம் காது சவ்வுகளைப் பதம் பார்த்து விட்டது. சரியாக முப்பத்தைந்து நன்றி ஸ்லைடுகள். ஸ்லைடுகள் முடிந்ததும் உடனே படத்தைப் போட்டு விட்டார்கள். 'அண்ணன் ஒரு கோயில்' சென்சார் சர்டிபிகேட் போட்டவுடன் சும்மா அதம் பறக்கிறது. பின் 'நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அளிக்கும்' என்று போட்டதுதான் தாமதம்....ரசிகர்கள் இருக்கைகளை விட்டு எழுந்து ஒரே குதிதான். அண்ணன் ஒரு கோயில் என்று நெகடிவில் சிகப்பும் பச்சையுமாய் கோவில் கோபுரம் ஒன்று சுற்றுகையில் தேங்காய்கள் உடைபட்டு நொறுங்கும் சப்தம் முதல் வகுப்பு வரை கேட்கிறது. டைட்டில் வேறு அற்புதமாய் இருந்தது. எல்லோர் முகத்திலும் சந்தோஷத்தின் உச்சம். ('டைட்டில் பார்க்க வேண்டிய ஒன்று' என்று 'ராணி' வார இதழ் கூட விமர்சனத்தில் சிலாகித்து பாராட்டி எழுதியது.) டைட்டிலிலேயே தெரிந்து விட்டது படம் பிய்த்து உதறப் போகிறது என்று. டைட்டில் முடிந்தவுடன் எம்.எஸ்.வி.யின் அற்புதமான ரீ-ரிகார்டிங்கில் காட்டுப்பகுதியில் போலீஸ் வேட்டை நாய்கள் "லொள்..லொள்".. என்று குரைத்து காவலர்களுடன் துரத்த, லாங்க்ஷாட்டில் ஒரு உருவம் பரபரவென ஓடிவர, அனைவரும் இருக்கையை விட்டு தன்னையறியாமல் எழுந்து விட, தொப்பி அணிந்து, கண்ணாடிசகிதம் நம் அண்ணன் முழங்கால் வரையிலான வயலட் கலர் ஓவர்கோட்டுடன் ஓட்ட ஓட்டமாக, வேர்க்க விறுவிறுக்க, திரும்பி திரும்பிப் பார்த்தபடியே கோரைப் புற்களை கைகளால் விலக்கி விலக்கி ஓடி வர... விறு விறுவென அப்படியே நம்மைப் ப(தொ)ற்றிக்கொள்ளும் சீன் முதல் காட்சியிலேயே களைகட்டி விடும். சஸ்பென்ஸ். திரில் என்றால் அப்படி ஒரு திரில். ஒரு த்ரில்லர் மூவிக்குண்டான அத்தனை விஷேச அம்சங்களோடு விறுவிறுப்பு என்றால் முதல் பதின்மூன்று நிமிடங்களுக்கு அப்படி ஒரு விறுவிறுப்பு. படம் பிரமாதப்படுத்தப் போகிறது என நிச்சயமாகி விட்டது. பின் நடந்ததையெல்லாம் சொல்ல திரியின் சில பக்கங்கள் போதாது. தலைவர் ஏன் போலீசிடம் இருந்து ஓடிவருகிறார்?... அடுத்து என்ன? என்று ஆவல் மேலிட ஒரே பரபரப்பாகவே எல்லோரும் காணப்பட்டார்கள். பேய்ப்பட பாடல் போல 'குங்குமக் கோலங்கள் கோவில் கொண்டாட" பாடல் வேறு ஆவலை அதிகப்படுத்துகிறது... நிச்சயமாகவே ஒரு வித்தியாசமான அனுபவமாகவே இருந்தது. பின் தலைவர் சுஜாதாவிடம் சொல்லும் தலைவர் சம்பந்தப்பட்ட பிளாஷ்பேக் காட்சிகள்... தலைவர், சுமித்ராவின் அண்ணன் தங்கை பாசப் பிணைப்பு காட்சிகள்...அருமையான "அண்ணன் ஒரு கோவிலென்றால்", "மல்லிகை முல்லை"பாடல் காட்சிகளில் ரம்மியமாக அருமையான காஸ்ட்யூம்களில் அண்ணன் வந்து அசத்துவதையும், மீண்டும் ஒரு பாசமலரைக் கண்டு கொண்டிருக்கிறோம் என்ற ஆனந்தமும், பூரிப்பும் ஒன்று சேர, அனைவரையும் பாசமெனும் அன்பு நூலால் கட்டி போட்டுவிட்டார்கள் நடிகர் திலகமும், சுமித்ராவும். உயிரான தங்கையை வில்லன் மோகன்பாபு கெடுக்க முயலும்போது பதைபதைத்து படுவேகமாக காரில் வந்து மோகன்பாபுவை அண்ணன் சின்னாபின்னப் படுத்தும் போது தியேட்டர் குலுங்கியது. பின் சஸ்பென்சை மறைத்து மோகன்பாபு சுடப்பட்டு சாயும் போதும், அண்ணனையே தங்கை தன் நிலை மறந்து யாரன்று கேட்க அதைக் கேட்டு அதிர்ந்து அண்ணனின் தலை பல கூறுகளாகப் பிளப்பது போன்ற காட்சிகளிலும் அப்படி ஒரு நிசப்தம். பின் தங்கையை பிரிந்து வாடி சுஜாதாவிடம் கதறும் போதும், ஹாஸ்பிடலில் சிகிச்சை பெற்று வரும் தங்கையைப் பார்த்து ஜெய்கணேஷிடம் அண்ணன் புலம்பும் அந்தக் குறிப்பிட்ட காட்சியில் தியேட்டரில் பூகம்பம் வெடித்தது என்றுதான் சொல்ல வேண்டும்... அப்பப்பா.. என்ன ஒரு ஆரவாரம்!... அந்த ஆரவாரத்தையே தூக்கிச் சாப்பிடும் கடவுளின் நடிப்பு...துடிப்பு...தங்கையின் குணநலன்களை விவரித்து, விவரித்து சிரித்து அழுதபடியே என்ன ஒரு புலம்பல்! ("அப்பப்பப்பா... ஒரு இடத்துல படுத்துக் கெடக்கறவளாஅவ! என்ன ஆட்டம்... என்ன ஓட்டம்... என்ன பாட்டு.... என்ன சிரிப்பு ...என்ன")... என்று வியந்தபடியே அண்ணாந்து அழுகையில் அரங்கு குலுங்கியதே....
அந்தக் காட்சியை ஒன்ஸ்மோர் கேட்டு ஓங்காரக் கூச்சலிட்டனர் ரசிகர்கள். இடைவேளையின் போது எல்லோர் முகத்திலும் வெற்றிப் பெருமிதம்...படம் டாப் என்று எல்லோரும் ஒருமித்த கருத்தையே கூறினர். படம் முழுவதும் நடிகர் திலகத்தின் நடிப்பு பட்டை கிளப்பியது. ரசிகர்கள் தம் பங்கிற்கு செய்த ஆரவாரம் சொல்லி மாளாது. தேங்காய் மனோரமா நகைச்சுவைக் காட்சிகளும் நன்கு ரசிக்க வைத்தன. அதைவிட காட்டில் போலீஸ் வேட்டையின் போது பெரிய மரக்கட்டைகளுக்கு மத்தியில் தலைவரும்,சுஜாதாவும் புரியும் சரச சல்லாப பின்னணிப் பாடலான "நாலு பக்கம் வேடருண்டு"...பாடலின் போது எத்தனை கோபால்கள் எம்பிக் குதித்தனர்! சீரியஸான காட்சிகளுக்கு நடுவே எல்லோரையும் நிமிர வைத்து வசியம் செய்த பாடல். (சற்று ஓவராக இருந்தால் கூட) இப்படியாக படம் முழுதும் ஒரே அட்டகாச அலப்பரைகள் தான். படமும் படு டாப். சஸ்பென்ஸ், திரில், பாசம், காதல், தியாகம் என்று எல்லாக் கலவைகளையும் மிக அளவாக அழகாகக் கலந்து, எல்லாவற்றுக்கும் மேல் வித்தியாசமான நடிகர் திலகத்தை நம்மிடையே உலாவ விட்டு படத்தை அட்டகாசமாய் இயக்கியிருந்த இயக்குனர் விஜயனுக்கு ஜெயமான ஜெயம். இறுதியில் படம் சுபமாய் முடிய அனைவர் முகத்திலும் மகிழ்ச்சித் தாண்டவம். அனைவரும் "அண்ணன் வாழ்க" என்ற விண்ணை முட்டும் கோஷத்துடன், பெருமிதத்துடன், முகத்தில் ஆயிரம் வாட்ஸ் பல்பு பிரகாசத்துடன் வெளியே வந்தோம்.
வெளியே வந்து பார்த்தால் ஐயோ! கூட்டமா அது... புற்றீசல் போல அவ்வளவு கூட்டம்... நீண்ட வரிசையில் கியூ... பழைய ஆற்றுப்பாலத்தில் தியேட்டரிலிருந்து கியூவளைந்து வளைந்து கண்ணுக்கெட்டிய தூரம் வரை கியூ நிற்கிறது. போலீஸ் வேன் வந்து கூட்டத்தை லத்தியால் பிளக்கிறது. கட்டுக்கடங்காத கூட்டம். மழை வேறு வந்து விட்டது... கூட்டம்...ம்ஹூம்... நகரவே இல்லை... அடுத்த ஷோ ஆரம்பித்தாகி விட்டது.... டிக்கெட் கிடைக்காதவர்கள் அப்படியே கியூவில் மனம் தளராமல் மறுபடி அடுத்த ஷோவிற்காக நிற்க ஆரம்பித்தார்கள். நாங்கள் வீட்டிற்கு போகவே இல்லை... அங்கேயே பொறை ரொட்டியை வாங்கிக் கடித்துக் கொண்டு கிடைத்த டீயைக் குடித்துக் கொண்டு (தீபாவளி அதுவும் அருமையான வகைவகையான பலகாரங்களும், அருமையான மட்டன் குழம்பும், சுழியான் உருண்டைகளும், இட்லி, தோசைகளும் வீட்டில் காத்துக் கிடக்க இங்கே நெய் வருக்கியும் டீயும்...தேவையா!) டிக்கெட் கிடைக்குமா என்று அலைஅலையாய் தவிக்கும் மக்கள் வெள்ளம்... படம் அட்டகாசமாய் வெற்றிபெற்றுவிட்டது என்ற சந்தோஷத்தில் தலைகால் எங்களுக்கு புரியவில்லை. பின் அடுத்த ஷோவிற்கு டிக்கெட் எடுக்க ஏற்பாடு செய்து விட்டு மூன்றாவது காட்சியையும் பார்த்து ரசித்தோம். பின் தினமும் தியேட்டரில்தான் குடித்தனமே. நாங்கள் நினைத்தது போலவே அருமையாக ஓடி வெற்றிவாகை சூடியதோடு மட்டுமல்லாமல் நடிகர் திலகத்தின் மீள் தொடர்வெற்றிகளுக்கு அடிகோலிய பெருமையையும் சேர்த்துப் பெற்றது 'அண்ணன் ஒரு கோயில்'.
JamesFague
2nd November 2014, 03:10 PM
Courtesy: Mr Neyveli Vasudevan
பக்த துக்காராம். (1973)
ஒரு அபூர்வ காவியத்தின் அலசல்.
(நம் பகுதி மட்டும்)
பக்த துக்காராமின் (நாகேஸ்வரராவ்) புகழ் பொறுக்காமல் அந்த கிராமத்தின் பெரிய மனிதன் போர்வையில் உலாவும் வஞ்சகன் மும்பாஜி (நாகபூஷணம்) துக்காராமுக்கு பலவகையிலும் தொல்லைகள் அளித்து வருகிறான். தான் வணங்கும் பாண்டுரங்கனின் அருளால் துக்காராமுக்கு வரும் மலை போன்ற சோதனைகள் யாவும் பனி போல விலகி விடுகின்றன. இறுதியில் மும்பாஜி ஒரு சதித்திட்டம் தீட்டி கிராமத்தின் பாண்டுரங்கநாதர் கோவிலில் உள்ள பாண்டுரங்கனின் விக்கிரகத்தை இரவோடு இரவாக திருடி, மறுநாள் துக்காராமரின் போலி பக்தியாலும், பகவானுக்கு துக்காராம் அபச்சாரம் செய்ததாலும்தான் துக்காராம் மேல் உள்ள கோபத்தினால் கடவுள் விக்கிரகம் மறைந்து விட்டது என்று கதை கட்டுகிறான். அதுமட்டுமல்லாமல் ஊர்மக்களை நம்பவைக்க பாண்டுரங்க சுவாமியே துக்காராமின் மீது பழி சொல்வது போல அசரீரி ஒலிக்குமாறு ஏற்பாடு செய்து துக்காராமுக்கு கெட்ட பெயர் உருவாக்குகிறான். துக்காராமை குற்றவாளியாக்கி மராட்டிய மன்னர் 'சத்ரபதி' சிவாஜியிடம் துக்காராமுக்கு தண்டனை அளிக்குமாறு வேறு வேண்டுகோள் விடுக்கிறான் மும்பாஜி. ஆனால் சிவாஜி துக்காராமை நேரடியாகவே விசாரணை செய்வதாகக் கூறி சம்பந்தப்பட்ட கோவிலுக்கு வந்து துக்காராமை விக்கிரகம் காணாமல் போனது பற்றி விசாரணை செய்கிறார். துக்காராம் தான் குற்றத்திற்கு காரணமல்ல என்று சிவாஜியிடம் எடுத்தியம்புகிறார். துக்காராமின் உண்மையான பக்தியும், அவர் நன்னடத்தையும் சிவாஜி அறிந்ததே. இருப்பினும் விக்கிரகம் மறுநாளைக்குள் உரிய இடத்தில் வந்து சேர வேண்டும்... இல்லையென்றால் துக்காராமுக்கு மரண தண்டனை என்று தீர்ப்பளித்து விடுகிறார் சத்ரபதி. துக்காராமனின் மனைவி தன் கணவர் குற்றவாளி அல்ல என்று சிவாஜியிடம் மன்றாடுகிறாள். துக்காராம் சிவாஜி முன்னிலையிலேயே பாண்டுரங்கனை மனதில் நிறுத்தி மனமுருகி பாடி வேண்ட மறைந்து போன விக்கிரகம் தெய்வ அருளாலும், துக்காராமின் உண்மையான பக்தியாலும் உரிய இடத்தில் மீண்டும் பிரதிஷ்டை ஆகிறது. துக்காராமின் உண்மையான பக்தியை சிவாஜியும், ஊர்மக்களும் உணர்கிறார்கள். அவரை மகான் என்று பூஜிக்கிறார்கள். துக்காராம் புனிதமானவர் என்று முன்னமேயே தனக்குத் தெரியும்... என்றாலும் ஊர்மக்கள் அதனை உணர வேண்டும் என்ற நல்லெண்ணத்தில்தான் துக்காராமிடம் சற்று கடுமையாக நடந்து கொண்டதாக சிவாஜி கூறுகிறார்.
இதற்கு நடுவில் மும்பாஜி சிவாஜியின் பரம வைரிகளான முகலாயர்களிடம் சிவாஜி கிராமத்தில் கோவிலில் தனியாக இருப்பதாகவும், சிவாஜியை சிறை பிடிக்க இதுதான் தக்க தருணம் என்றும் சிவாஜி இருக்கும் இடத்தைக் காட்டிக் கொடுத்து விடுகிறான். முகலாயப் படை சிவாஜியை பிடிக்க புறப்பட விஷயம் சிவாஜிக்கு தெரிந்து விடுகிறது. அடுத்த கணமே சிவாஜி போருக்குத் தயாராகக் கிளம்ப, துக்காராம் தம் மன்னரின் நன்மை கருதி சிவாஜியைத் தடுக்கிறார். சிவாஜியோ கோவிலில் போர் நடந்து ரத்தக்கறை படிய வேண்டாம் என்று கிளம்ப எத்தனிக்க, துக்காராமோ பாண்டுரங்கனின் அருளால் அப்படி எதுவும் நிகழாது என்று உறுதியளித்து சிவாஜியை போகவிடாமல் தடுத்து விடுகிறார். பின் சிவாஜிக்கும், நாட்டிற்கும் வரவிருக்கும் பேராபத்தை தடுத்து ஆட்கொள்ளுமாறு மனமுருகி பாண்டுரங்கனிடம் வேண்டிப் பாடுகிறார் துக்காராம். முகலாயர் படை கோவிலில் நுழைந்து சிவாஜியைப் பிடிக்க, பாண்டுரங்கனின் அருளால் முகலாயர்கள் பிடிக்கும் சிவாஜி ஊர்மக்களில் பலபேராக உருமாறி முகலாயர்களைத் திகைக்க வைக்கிறார். அதுமட்டுமல்லாமல் சிவாஜியைப் பிடிக்க வரும் முகலாயர்களின் குதிரைப்படையை பாண்டுரங்கநாதரே சிவாஜி உருவெடுத்து, குதிரையில் சென்று எதிர்கொண்டு, பல எண்ணற்ற சிவாஜிக்களாக பெருகி முகலாயர்களை சின்னாபின்னாப் படுத்துகிறார்.
கோவிலில் இருக்கும் 'சத்ரபதி' சிவாஜிக்கு இவ்விஷயம் தெரியவர, துக்காராமரின் உண்மையான பக்திதான் கடவுள் தன் உருவங்களில் வந்து முகலாயர்களிடம் போரிட்டு தன்னையும், தன் நாட்டையும் காப்பாற்றியதற்கு காரணம் என கண்கூடாக உணர்கிறார். துக்காராமை தன் குருவாக ஏற்றுக் கொண்டு தனக்கு "இந்த நாடு வேண்டாம்...துக்காராமுக்கு தொண்டு செய்து வாழ்வதே இனி தனது விருப்பம்" என்று கூற, துக்காராமோ "மன்னன் தனது கடமையில் இருந்து தவறக் கூடாது... வீரனுக்கு கைவாளே தெய்வமாகும்... நாட்டு மக்களை பாதுகாப்பாதே மன்னனது உண்மையான பணி' என்று சிவாஜிக்கு அறிவுரை கூறி அனுப்புகிறார்.
மராட்டிய மன்னன் 'சத்ரபதி' சிவாஜியாக 'நடிகர் திலகம்' சிவாஜி கணேசன். படம் முடியும் தருவாயில் கடைசி பதினைந்து நிமிடங்களில் 'சிவாஜி'யின் ராஜ்ஜியம் கொடி கட்டிப் பறக்க ஆரம்பிக்கிறது. எந்த வேடத்திற்கும் பொருத்தமான நம் நடிகப் பேரரசருக்கு இந்த 'சத்ரபதி' சிவாஜி வேடம் பொருந்தும் அழகு இருக்கிறதே! அது ஒரு தனி ஸ்பெஷல்தான் போங்கள். சும்மாவா பெயர் வைத்தார் பெரியார் 'சிவாஜி' என்று! அந்த உடையலங்காரமும், கழுத்தை அலங்கரிக்கும் முத்து மாலைகளும், தலையை அலங்கரிக்கும் அந்த 'சிவாஜி' ஸ்பெஷல் தலைப்பாகையும், உடையோடு சேர்ந்த கம்பீர நடையும், முகத்தில் கண நேரங்களில் தோன்றி மறையும் கணக்கில்லா உணர்வு பாவங்களும் சொல்லி மாள முடியாதவை.
மும்பாஜி துக்காராம் பெயரைச் சொல்லி சபையில் குற்றம் சுமத்தும் போது முகத்தைக் கேள்விக்குறியாக்கி, "துக்காராம்?"!!! என்று வினவ ஆரம்பிப்பதில் இருந்தே சிவாஜி சாம்ராஜ்யம் தொடங்கி விடுகிறது. துக்காராமின் மீது பழி கூறும் போது நம்ப முடியாமல் ,"நான் கேட்டது ஒன்று...நீ சொல்வது ஒன்று" என்று மும்பாஜியிடம் திகைக்கும் இடம் அருமையான அற்புதம். மும்பாஜி,"விக்கிரகம் மறைந்து போய் விட்டது," என்று கூறும் போது ,"என்ன விக்கிரகம் மறைந்து போய் விடுமா?!!! என்று ஏக ஆச்சர்யக் குறிகளுடன் பண்டிட்ஜியை 'சிவாஜி' நோக்குவது அம்சம். பின் விசாரணை மேற்கொள்ள கோவிலுக்கு வரும் போது நடந்து வரும் நடை இருக்கிறதே... நயமான நடை... (பக்தியுடன் கோவிலுக்கு வருவதைக் காட்ட வீர நடையை கொஞ்சம் தளர்த்தி சற்றே வீரமும், அமைதியும், பக்தியும் கலந்த நடையை இந்த இடத்தில் மிக வித்தியாசமாகக் காட்டியிருப்பார். கோவிலுக்கு செல்லுமுன் மிக அழகாக காலணிகளைக் கழற்றிவிட்டு செல்வார்.) விக்கிரகம் மறைந்து போனதை துக்காராமிடம் விசாரிக்கும் போது அதில் அதிகார தொனி அதிகமில்லாமலும் பார்த்துக் கொள்வார். எதிரே தாம் விசாரணை செய்வது ஒர் அப்பழுக்கில்லாத இறைவனடியார்... அவரிடம் மேற்கொள்ளக்கூடிய விசாரணை மிக மரியாதையானதாக இருக்க வேண்டும் என்ற ஜாக்கிரதை உணர்வு அதில் மிகச் சரியாகத் தெரியும். துக்காராமை 'சிவாஜி' உற்று நோக்குகையில் அவர் கண்களில் ஒரு தீட்சண்யமான ஒளி குடிகொண்டிருப்பதைக் காண முடியும். கண்களில் அப்படி ஒரு பிரகாசம் தீபமாய் ஜொலிக்கும் .நெற்றியில் இடப்பட்டுள்ள பிறைபொட்டு அவருக்குள்ளிருக்கும் வீரத்தை விவேகமாய் வெளிப்படுத்தியபடியே இருக்கும். துக்காராம் மெய்மறந்து பாண்டுரங்கனை பாடித் தொழுது கடவுளின் சிலை மறுபடி அதே இடத்தில் காணப்பட்டவுடன் 'சிவாஜி' யின் கண்களின் ஒளி மேலும் பிரகாசமாய் தீவிரமடையும். "இந்தப் புனிதமானவன் நிரபராதி என்றும், மகா பக்தர் என்றும் நாமறிவோம்....ஆனால் உலகமறிய வேண்டும்... அது குறித்தே இன்று இந்த கடின பரிட்சையை வைக்க வேண்டி வந்தது" என்று துக்காராமனின் மனைவி அஞ்சலிதேவியிடம் கூறும் போது நீதி நெறி தவறாத மன்னனின் மனநிலைமையை நியாயாதிபதியாய் அற்புதமாய் உணர்த்துவார் நடிகர் திலகம் 'சிவாஜி'
முகலாயர்கள் தன்னை சிறை பிடிக்க வருகிறார்கள் என்று ஒற்றன் மூலமாக செய்தி வந்தவுடன் அதுவரை சாந்தமாய் இருந்தவரிடம் வீரம் கொப்பளித்துக் கிளம்பும். "நாமே சென்று அவர்களை எதிர்ப்போம்... வெற்றியோ அல்லது வீர மரணமோ தெரிந்து கொள்வோம்" என்று முழக்கமிட்டு கிளம்பும் வேகம் இருக்கையை விட்டு நம்மை எழுந்து விடச் சொல்லும். பின் துக்காராம் சாந்தப்படுத்தும் போது,"என்னைத் தடுக்காதீர்கள்... திடீர்ப் போராட்டங்கள் நமக்கும், நம் வாளுக்கும் பழக்கம்தான்...ஜெய் பவானி!" என்று சிங்கமாய் கர்ஜிக்கும்போது 'சத்ரபதி' சிவாஜி மறைந்திருந்து எதிரிகளைத் தாக்கும் கொரில்லாப் போரை அந்த கர்ஜனை ஞாபகப்படுத்தும். அதற்கு துக்காராம் "தங்கள் தெளிவும், துணிவும், வீர பராக்கிரமும் எனக்கும் தெரியும்" என்று இவரிடம் கூறும் போது வீரமும், பெருமிதமும் ஒன்று சேர மீசையை ஒரு முறுக்கு முறுக்குவார் பாருங்கள்...தன் வீரத்தின் மீது தான் கொண்டிருக்கும் தன்னம்பிக்கை முகத்தில் அப்படியே பட்டவர்த்தனமாய் நர்த்தனமாடும்... பின் துக்காராம் சொல்லுக்குக் கட்டுப்பட்டு மீண்டும் அமைதியானவுடன் கடவுள் சிவாஜி அவதாரமெடுத்து குதிரையில் காட்டில் பயணிக்கையில் நடிகர் திலகம் குதிரையேற்றம் செய்தபடி வரும் காட்சிகள் அமர்க்களமோ அமர்க்களம். (இந்த இடத்தில் உடையின் நிறம் ரோஸ் கலருக்கு மாறியிருக்கும்... அவ்வளவு பொருத்தமாக அந்த உடையும், உடையின் நிறமும் நடிகர் திலகத்திற்குப் பொருந்தியிருக்கும்.) பொதுவாகவே நடிகர் திலகத்தின் குதிரையேற்றத்தைக் காணக் கண்கோடி வேண்டும். (உத்தம புத்திரன், மருத நாட்டு வீரன், படித்தால் மட்டும் போதுமா... இப்படிப் பல) அதிலும் இந்தக் குறிப்பிட்ட காட்சியில் ஒரிஜினல் சத்ரபதியே வந்து விட்டாரோ என்று அதிசயிக்கும் அளவிற்கு அற்புதமாக குதிரை சவாரி செய்து அசத்துவார். அதுவும் நெருக்கமான இரண்டு மரங்களுக்கு இடையே குதிரையை வெகு லாவகமாக ஓட்டியபடி வரும் அழகே அழகு. பின்னர் என்ன! ஒரே அதகளம்தான். எதிரிகள் தன்னைச் சுற்றி குதிரைகளில் சூழ்ந்து கொள்ள வாளை உருவியபடி நடுவில் புரவியில் அமர்ந்தபடி வாளால் எதிரிகளை வெட்டி வீழ்த்துவது அதியற்புதம். நடுநடுவில் ஹா ஹா ஹா,..என்று ஓங்காரமிட்டு வெற்றிக்களிப்பில் சிரித்தபடியே முகலாய வீரர்களைப் பந்தாடுவது செம தூள். ஒரு சிவாஜி பல சிவாஜிக்களாய் மாறி (matrix பாணியில்) சண்டையிடும் போது காமெராக் கோணங்கள் அற்புதம். மிக பிரமாதமாய் அமைக்கப்பட்ட சண்டைக்காட்சி. (லொக்கேஷன் வேறு நெஞ்சையள்ளும்) நடிகர் திலகத்தின் கம்பீரத்தாலும், ஈடு சொல்ல முடியாத அவருடைய ஈடுபாட்டாலும் இந்த சண்டைக்காட்சி அவருடைய சண்டைக்காட்சிகளில் ஒரு மணிமகுடம் என்றே சொல்லலாம். ஒவ்வொரு சமயமும் சண்டையிட்டபடியே குதிரையை அவ்வளவு அற்புதமாகத் திருப்புவார். நடிகர் திலகம் குதிரையில் அமர்ந்து அதை நாம் பார்க்கும் சுகமே அலாதி. ஆன்மீகக் கருத்துக்களை வலியுறுத்தும் இந்தப் படம் நடிகர் திலகம் சத்ரபதியாய் நமக்குக் காட்சியளிக்கத் தொடங்கியவுடன் விறுவிறுப்பின் எல்லைகளை நோக்கி வீறுநடை போட ஆரம்பித்து விடுகிறது. ஒரு கால் மணி நேரம்... அதுவும் நன்றிக்கடனுக்காக நடித்துத் தோன்றிய கௌரவத் தோற்றம்தான்.... ஆனால் நடிகர் திலகமாய் நம் கண்களுக்குத் தெரியாமல் முழுக்க முழுக்க மராட்டிய மாமன்னன் 'சத்ரபதி' சிவாஜியாகத்தான் இப்படத்தில் ஆளுமை புரிகிறார் நடிகர் திலகம். அந்த சில நிமிடங்களில் தன் தனிப்பட்ட 'சிவாஜி' முத்திரையால் நம்மை சிலிர்க்க வைத்து விடுகிறார் நடிகர் திலகம். (இப்படம் தமிழிலும் மொழிமாற்றம் செய்து வெளியிடப்பட்டு வெற்றி வாகை சூடியது. தமிழ் டப்பிங்கில் நடிகர் திலகம் தன் சொந்தக் குரலிலேயே டப்பிங் கொடுத்திருந்தார். அதனால் இக்காவியம் இன்னும் உயிரோட்டமாய் இருந்தது)
பக்த துக்காராம் 'சிவாஜி'யால் மாபெரும் வெற்றி க(கொ)ண்டார் என்று சொல்லவும் வேண்டுமோ!
JamesFague
2nd November 2014, 03:14 PM
Courtesy: Mr Neyveli Vasudevan old post
சிவாஜியைப் பார்க்க ஆசைப்பட்ட காஞ்சிப் பெரியவர் — வி.என்.சிதம்பரம்
ரொம்ப வருஷத்துக்கு முன்னாடி காஞ்சிப் பெரியவர் தாம்பரம் தாண்டி நடந்து போயிருக்கார். அப்போது அங்கு ஒட்டப்பட்டிருந்த போஸ்டரை எதேச்சையா பார்த்ததும் பெரியவாளுக்கு பயங்கர கோபம். தன்னோட உதவியாளர்களை கூப்பிட்டு “எனக்கு விளம்பரம் பண்றது பிடிக்காதுன்னு உங்களுக்கு தெரியுமில்லே அப்புறம் எதுக்கு என்னோட படத்தை போட்டு போஸ்டர் ஒட்டியிருக்கேள்…” என்று கடுமையாக திட்டியிருக்கார். அப்போது “அந்த போஸ்டர்ல இருக்கறது நீங்க இல்லை… சினிமா நடிகர் சிவாஜி ‘திருவருட் செல்வர்‘ படத்துல சாட்சாத் உங்களை மாதிரியே மேக்கப் போட்டுண்டு நடிச்சார். அதைத்தான் நீங்க போஸ்டராக பார்த்து இருக்கேள்…” என்று சொல்ல… திகைத்துப்போன பெரியவாள், ‘நேக்கு சிவாஜியை பார்க்கணும்போல் இருக்கறது அவரை மடத்துக்கு அழைச்சுண்டு வாங்கோ…’ என்று தனது விருப்பத்தை தெரிவிச்சார். பெரியவாளை தரிசிக்க எத்தனையோ பேர் காத்துண்டு கிடந்தப்போ சிவாஜியை பார்க்க ஆசைப்பட்டது எவ்ளோ பெரிய புண்ணியம். பெரியவாள் கேட்டுக் கொண்டபடி காஞ்சீபுரம் போய் மடத்துல தங்கி பெரியவாகிட்டே ரொம்பநேரம் மனசுவிட்டு பேசிட்டு வந்தார், சிவாஜி.
– வி.என்.சிதம்பரம் (நன்றி விகடன்)
JamesFague
2nd November 2014, 03:15 PM
Thanks to Mr Neyveli Vasudevan
காஞ்சி பரமாச்சாரியார் பற்றி நடிகர் திலகம்
‘எனக்கு ‘காஞ்சி பரமாச்சாரியாள்‘ மீது மதிப்பும், பக்தியும் உண்டு. அதற்கு ஒரு காரணம் உண்டு. அது ஒரு முக்கியமான சம்பவம். ஒரு நாள், காஞ்சி முனிவர் பரமாச்சாரியாள் அவர்கள் என்னைக் கூப்பிட்டு அனுப்பியதாக, சங்கர மடத்திலிருந்து செய்தி வந்தது. அவர் மயிலாப்பூரில் உள்ள ஒரு மடத்தில் தங்கியிருந்தார். அந்தமடம், கற்பகாம்பாள் கல்யாண மடத்திற்குப் பக்கத்தில்தான் இருக்கிறது என்று நினைக்கிறேன்.
நான், எனது தாயார், எனது தந்தையார், எனது மனைவி நான்கு பேரும் சென்றோம். சென்றவுடன் எங்களை உள்ளே ஒரு அறையில் உட்கார வைத்தார்கள். நாங்கள் ஒரு அரை மணி நேரம் உட்கார்ந்திருந்தோம். காஞ்சி முனிவர் அங்கே மக்களுக்கு உபன்யாசம் செய்து கொண்டிருந்தார். அப்போது திடீரென லைட்டெல்லாம் அணைந்துவிட்டது. அவர் கையில் ஒரு சிறிய குத்து விளக்கை எடுத்துக்கொண்டு, மெதுவாகப் பார்த்துக் கொண்டே வந்தார். மெல்லக் கீழே உட்கார்ந்து, கையைப் புருவத்தின் மேல் வைத்து எங்களைப் பார்த்தார். ‘நீதானே சிவாஜி கணேசன்?‘ என்றார். ‘ஆமாங்கய்யா! நான்தான்‘, என்று காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கினேன். என் மனைவியும், பெற்றோர்களும் அவரை வணங்கினார்கள்.
அப்போது அவர், “உங்களைப் பார்த்ததில் மிகவும் சந்தோஷம். திருப்பதி சென்றிருந்தேன். அங்கு ஒரு யானை எனக்கு மாலை போட்டது. யானை நன்றாக இருக்கிறதே யாருடையது? என்றேன். ‘சிவாஜி கொடுத்தது‘ என்றார்கள். திருச்சி சென்றிருந்தேன். அங்கு திருவானைக்கா கோவிலுக்குப் போனேன். அங்கும் யானை மாலை போட்டது. யானை அழகாக இருக்கிறது. யானை யாருடையது? என்றேன். ‘சிவாஜி கணேசன் கொடுத்தது‘ என்றார்கள். தஞ்சை புன்னை நல்லூர் மாரியம்மன் கோவில் சென்றிருந்தேன். அங்கேயும் யானையை விட்டு மாலை போட்டார்கள். ‘இது யாருடையது ?’ என்றேன். ‘சிவாஜி கணேசன் கொடுத்தது‘ என்றார்கள். நாட்டில் பணக்காரர்கள் பல பேர் இருக்கிறார்கள். அவர்கள் பப்ளிசிடிக்காக சில சமயம் கோயில்களுக்குப் பணம் தான் நன்கொடையாகக் கொடுப்பார்கள்”.
“ஆனால், யானை கொடுப்பதற்குப் பெரிய மனசு வேண்டும். அந்த மனசு உனக்கிருக்கிறது. ஆகையால் உன்னைப் பெற்றவர்கள் பாக்கியசாலிகள். அவர்களுக்காக நான் பகவானைப் பிரார்த்தனை செய்கிறேன்“ என்று கூறி விட்டு எழுந்து சென்று விட்டார். அப்போது என் மனம் எப்படியிருந்திருக்கும் ? எத்தனை அனுக்கிரஹம்! எண்ணிப் பாருங்கள்.”
ஒரு வேளை, இந்தச் சம்பவம் என் மனதில் ஆழமாகப் பதிந்திருக்கலாம். பரமாச்சாரியாளை நான் கூர்ந்து கவனித்திருக்கிறேன். எனவே, அது ‘அப்பராக’ பிரதிபலித்திருக்கலாம் .
JamesFague
2nd November 2014, 08:45 PM
Thanks to Mr Neyveli Vasudevan
என் உயிரில் கலந்த காட்சி.
காவியம்: தெனாலிராமன்.
பாமினி சுல்தானின் கைப்பாவை கிருஷ்ணாவின் (பானுமதி) சூழ்ச்சியான மோக வலையில் சிக்கி நாட்டைக் கவனியாமல் வீழ்ந்து கிடக்கிறார் விஜயநகர சாம்ராஜ்ய சக்கரவர்த்தி கிருஷ்ண தேவராயர் (என்.டி.ராமாராவ்). இதைக் கண்டு வெகுண்டெழுகிறான் ராயரின் அன்புக்கினிய தெனாலிராமன். ராஜாங்க விதூஷகனும் கூட. ராயரின் தவறை சுட்டிக் காட்டுகிறான் அவரிடமே. கிருஷ்ணாவின் மயக்கத்தில் இருக்கும் ராயர் தெனாலி ராமனின் அறிவுரையை அலட்சியப் படுத்துகிறார். அதோடு மட்டுமல்லாமல் ராயர் ராமனுக்கு மரணதண்டனை அளிக்கவும் தயங்கவில்லை.
தேசப்பற்று உடைய ராமன் மந்திரியின் (V.நாகையா) துணை கொண்டு கிருஷ்ணாவை நாட்டை விட்டு துரத்த எண்ணுகிறான். ஆனால் நடுவில் ராயர் இருக்கும் போது? ஒரு அருமையான சந்தர்ப்பம் ராமனுக்குக் கிட்டுகிறது. ராயரின் மனைவி (சந்தியா...சாட்சாத் அம்மாவின் அம்மாதான்) ராயரின் செய்கைகளினால் உடல்நலம் குன்றுகிறாள். இதைக் கேள்விப்பட்ட ராயர் தன் அன்பு மனைவியைக் காண விரைகிறார். இப்போது கிருஷ்ணா ராயரின் அந்தப்புரத்தில் தனியாக. வாட்டமான இந்த சந்தர்ப்பத்தை அழகாகப் பயன்படுத்திக் கொள்கிறான் ராமன்.
நேராக கிருஷ்ணாவிடம் செல்கிறான் ராயர் தன்னைத் தவிர யாரும் அங்கு நுழையக் கூடாது என்ற கண்டிப்பான கட்டளையையும் மீறி. கிருஷ்ணாவை நாட்டை விட்டுப் போய்விடும்படி எச்சரிக்கிறான். கிருஷ்ணா மசிவேனா என்கிறாள். முதலில் பொறுமையைக் கடைப்பிடிக்கும் ராமன் பிறகு கொஞ்சம் கொஞ்சமாக கோபமேறி கிருஷ்ணாவை, அவள் திட்டங்களை தவிடுபொடி ஆக்குகிறான்.
தெனாலிராமன் படத்தில் வரும் ஒரு அற்புதக் காட்சியமைப்பின் கரு இது.
இப்போது நடிகர் திலகத்திடம் வருவோம்.
தெனாலி ராமனாக நடிகர் திலகம். கிருஷ்ணாவான பானுமதியின் அந்தப்புரத்தில் நுழைந்து பானுமதியை படிப்படியாய் எச்சரிக்கும் காட்சி.
என்ன ஒரு அற்புதமான பங்களிப்பு! என்ன ஒரு தெனாவட்டான தொனி! கிருஷ்ணா ராயரில்லாமல் தனியாகத்தான் இருக்கிறாள் என்ற முழு சுதந்திரத்தில் என்ன ஒரு மிரட்டும் தோரணை! அவள் ஆள்மயக்கிதானே என்ற எகத்தாளமான கேலி! நையாண்டியும் கிண்டலும் கொண்ட 'நறுக் நறுக்' வார்த்தைப் பிரயோகம். கிருஷ்ணாவின் கேள்விகளுக்கும், மேனாமினுக்கித்தனத்திற்கும் தரும் பதிலடி. நடுவில் சிறிது கெஞ்சல் (உன் எடைக்கு எடை தங்கம் தருகிறோம்... ராயரை விட்டு விடு) இறுதியில் பலமான எச்சரிக்கை.
அந்தப்புரத்தில் நுழைந்தவுடன் கிருஷ்ணா ராமனிடம் அது முறையற்ற செய்கை என்று கோபப்பட,
அதற்கு இவர் படு நக்கலாக சிரித்துவிட்டு ,"ஏதோ...முறையான செய்கையை உங்களிடமிருந்து கற்றுக் கொள்ளலாமென்றுதான் வந்தேன்... ஒழுங்கான உலகத்திற்கு இலக்கணமே தாங்கள்தானே!"
என்று நையாண்டி தர்பார் நடத்தும் விதம்.
கிருஷ்ணா, "என்ன கேலியாய் செய்கிறாய்?" என்று வினவ,
"சேச்சே! அந்தரி...சுந்தரி...நிரந்தரி என்று அரசர் போற்றிப் புகழும் இந்த அற்புத உருவத்தை நானா கேலி செய்வேன்?" என்று சிரித்தபடியே விடும் நக்கல்.
"உன் புகழ் எனக்குத் தேவையில்லை" என்று பானுமதி கூறும்போது அதை ஏற்றுக் கொள்வது போல "ஆகட்டும்" என்ற தொனியில் ஒரு சிறு தலையாட்டலில் அப்படியே அள்ளிக் கொண்டு போய்விடுவார்.
வாக்குவாதங்கள் தொடரும் போது கிருஷ்ணா தன் அழகில் மன்னர் மயக்கமாய் கிடப்பதற்கு விளக்கமளித்து ராமனிடம்," நீ ஒரு பெண்ணாக இருந்திருந்தால் என்ன செய்திருப்பாய்? என்று கேட்க,
அதற்கு நடிகர் திலகம்,"மயங்கிய மன்னரின் முகத்திலே தண்ணீரைத் தெளித்து "எழுந்திரு மன்னவா! என்ன வேண்டியிருக்கிறது காதல்? (இந்த இடத்தில் அவர் காட்டும் முகபாவத்தை எப்படி எழுதுவது?) சூழ்ந்திருக்கிறார்கள் பகைவர்கள்... தூளாக்கப் புறப்படுங்கள்... என்று வாளைக் கொடுத்து வழியனுப்பி வைத்திருப்பேன்" என்று விவேகத்துடன் வீரமுழக்கமிடுவது அட்டகாசம்.
இறுதியில் "கிருஷ்ணா தேவியாரே! நீங்களாகப் போகிறீர்களா?...அல்லது உங்களைப் போக வைக்க வேண்டுமா?" என்று கைகளைக் கொட்டியபடியே விடும் எச்சரிக்கையில், அந்த சிறிய சிறிய தலைவெட்டுதல்களில் சிகரங்களையெல்லாம் தாண்டி பயணிப்பார். இறுதியில் கைகளால் "எச்சரிக்கை" என்று திரும்பியவாறே வேகமாக நடக்கத் துவங்கும் அழகே அழகு!
என் உயிரில் கலந்த காட்சி இது...
JamesFague
2nd November 2014, 08:45 PM
Thanks to Mr Neyveli Vasudevan
என் உயிரில் கலந்த காட்சி.
காவியம்: தெனாலிராமன்.
பாமினி சுல்தானின் கைப்பாவை கிருஷ்ணாவின் (பானுமதி) சூழ்ச்சியான மோக வலையில் சிக்கி நாட்டைக் கவனியாமல் வீழ்ந்து கிடக்கிறார் விஜயநகர சாம்ராஜ்ய சக்கரவர்த்தி கிருஷ்ண தேவராயர் (என்.டி.ராமாராவ்). இதைக் கண்டு வெகுண்டெழுகிறான் ராயரின் அன்புக்கினிய தெனாலிராமன். ராஜாங்க விதூஷகனும் கூட. ராயரின் தவறை சுட்டிக் காட்டுகிறான் அவரிடமே. கிருஷ்ணாவின் மயக்கத்தில் இருக்கும் ராயர் தெனாலி ராமனின் அறிவுரையை அலட்சியப் படுத்துகிறார். அதோடு மட்டுமல்லாமல் ராயர் ராமனுக்கு மரணதண்டனை அளிக்கவும் தயங்கவில்லை.
தேசப்பற்று உடைய ராமன் மந்திரியின் (V.நாகையா) துணை கொண்டு கிருஷ்ணாவை நாட்டை விட்டு துரத்த எண்ணுகிறான். ஆனால் நடுவில் ராயர் இருக்கும் போது? ஒரு அருமையான சந்தர்ப்பம் ராமனுக்குக் கிட்டுகிறது. ராயரின் மனைவி (சந்தியா...சாட்சாத் அம்மாவின் அம்மாதான்) ராயரின் செய்கைகளினால் உடல்நலம் குன்றுகிறாள். இதைக் கேள்விப்பட்ட ராயர் தன் அன்பு மனைவியைக் காண விரைகிறார். இப்போது கிருஷ்ணா ராயரின் அந்தப்புரத்தில் தனியாக. வாட்டமான இந்த சந்தர்ப்பத்தை அழகாகப் பயன்படுத்திக் கொள்கிறான் ராமன்.
நேராக கிருஷ்ணாவிடம் செல்கிறான் ராயர் தன்னைத் தவிர யாரும் அங்கு நுழையக் கூடாது என்ற கண்டிப்பான கட்டளையையும் மீறி. கிருஷ்ணாவை நாட்டை விட்டுப் போய்விடும்படி எச்சரிக்கிறான். கிருஷ்ணா மசிவேனா என்கிறாள். முதலில் பொறுமையைக் கடைப்பிடிக்கும் ராமன் பிறகு கொஞ்சம் கொஞ்சமாக கோபமேறி கிருஷ்ணாவை, அவள் திட்டங்களை தவிடுபொடி ஆக்குகிறான்.
தெனாலிராமன் படத்தில் வரும் ஒரு அற்புதக் காட்சியமைப்பின் கரு இது.
இப்போது நடிகர் திலகத்திடம் வருவோம்.
தெனாலி ராமனாக நடிகர் திலகம். கிருஷ்ணாவான பானுமதியின் அந்தப்புரத்தில் நுழைந்து பானுமதியை படிப்படியாய் எச்சரிக்கும் காட்சி.
என்ன ஒரு அற்புதமான பங்களிப்பு! என்ன ஒரு தெனாவட்டான தொனி! கிருஷ்ணா ராயரில்லாமல் தனியாகத்தான் இருக்கிறாள் என்ற முழு சுதந்திரத்தில் என்ன ஒரு மிரட்டும் தோரணை! அவள் ஆள்மயக்கிதானே என்ற எகத்தாளமான கேலி! நையாண்டியும் கிண்டலும் கொண்ட 'நறுக் நறுக்' வார்த்தைப் பிரயோகம். கிருஷ்ணாவின் கேள்விகளுக்கும், மேனாமினுக்கித்தனத்திற்கும் தரும் பதிலடி. நடுவில் சிறிது கெஞ்சல் (உன் எடைக்கு எடை தங்கம் தருகிறோம்... ராயரை விட்டு விடு) இறுதியில் பலமான எச்சரிக்கை.
அந்தப்புரத்தில் நுழைந்தவுடன் கிருஷ்ணா ராமனிடம் அது முறையற்ற செய்கை என்று கோபப்பட,
அதற்கு இவர் படு நக்கலாக சிரித்துவிட்டு ,"ஏதோ...முறையான செய்கையை உங்களிடமிருந்து கற்றுக் கொள்ளலாமென்றுதான் வந்தேன்... ஒழுங்கான உலகத்திற்கு இலக்கணமே தாங்கள்தானே!"
என்று நையாண்டி தர்பார் நடத்தும் விதம்.
கிருஷ்ணா, "என்ன கேலியாய் செய்கிறாய்?" என்று வினவ,
"சேச்சே! அந்தரி...சுந்தரி...நிரந்தரி என்று அரசர் போற்றிப் புகழும் இந்த அற்புத உருவத்தை நானா கேலி செய்வேன்?" என்று சிரித்தபடியே விடும் நக்கல்.
"உன் புகழ் எனக்குத் தேவையில்லை" என்று பானுமதி கூறும்போது அதை ஏற்றுக் கொள்வது போல "ஆகட்டும்" என்ற தொனியில் ஒரு சிறு தலையாட்டலில் அப்படியே அள்ளிக் கொண்டு போய்விடுவார்.
வாக்குவாதங்கள் தொடரும் போது கிருஷ்ணா தன் அழகில் மன்னர் மயக்கமாய் கிடப்பதற்கு விளக்கமளித்து ராமனிடம்," நீ ஒரு பெண்ணாக இருந்திருந்தால் என்ன செய்திருப்பாய்? என்று கேட்க,
அதற்கு நடிகர் திலகம்,"மயங்கிய மன்னரின் முகத்திலே தண்ணீரைத் தெளித்து "எழுந்திரு மன்னவா! என்ன வேண்டியிருக்கிறது காதல்? (இந்த இடத்தில் அவர் காட்டும் முகபாவத்தை எப்படி எழுதுவது?) சூழ்ந்திருக்கிறார்கள் பகைவர்கள்... தூளாக்கப் புறப்படுங்கள்... என்று வாளைக் கொடுத்து வழியனுப்பி வைத்திருப்பேன்" என்று விவேகத்துடன் வீரமுழக்கமிடுவது அட்டகாசம்.
இறுதியில் "கிருஷ்ணா தேவியாரே! நீங்களாகப் போகிறீர்களா?...அல்லது உங்களைப் போக வைக்க வேண்டுமா?" என்று கைகளைக் கொட்டியபடியே விடும் எச்சரிக்கையில், அந்த சிறிய சிறிய தலைவெட்டுதல்களில் சிகரங்களையெல்லாம் தாண்டி பயணிப்பார். இறுதியில் கைகளால் "எச்சரிக்கை" என்று திரும்பியவாறே வேகமாக நடக்கத் துவங்கும் அழகே அழகு!
என் உயிரில் கலந்த காட்சி இது...
JamesFague
2nd November 2014, 08:56 PM
Thanks to Mr Neyveli Vasudevan
"மிஸ்டர் மைனர்...ரொம்ப நாழியா நீங்க நிக்கிறீங்களே... உக்காருங்க"... என்று பழிவாங்கும் படலத்தை பக்காவாகத் தொடங்குமிடம்.....
அதே போல நாற்காலியைத் தள்ளி மைனரின் தன்மானத்தைத் தவிடுபொடியாக்குமிடம்....
"மிஸ்டர் மைனர்... என்னைத் தெரியுதா?" (கூலிங் கிளாசை கழற்றிவிட்டு) "தெரியல?" என்றபடி நொடிப்பொழுதில் கோட்டைக் கழற்றி, பின் ஷர்ட்டையும் கழற்றி, முதுகைத் திருப்பி முன் அடிபட்ட தழும்புகளைக் காட்டும் ஆவேசம்....
"தெரியல...தெரியல"...என்று கேட்டபடியே ஷர்ட்டை சடுதி நேரத்தில் போட்டு பட்டன்களைப் போடாமல் அப்படியே பேன்ட்டுக்குள் செருகும் செம ஸ்டைல்...
"சாப்பாட்டு ராமன்" என்றபடி கைகளை தடதடவெனக் கொட்டி "கதவை இழுத்துப் பூட்டு" என்று கட்டளையிட்டு கர்ஜிக்குமிடம்...
"யாராவது இங்கிருந்து அசைஞ்சா சுட்டுப் பொசுக்கிடுவேன்" என்றபடி சென்று பிரம்பை எடுத்து (காமெராவின் லோ ஆங்கிளில்... நம்பியார் கீழே விழுந்தபடி பார்த்தால் எந்த ஆங்கிளில் தெரிவாரோ அந்த ஆங்கிளில்) வளைத்து, நம்பியாரை நோக்கி நான்கு ஸ்டெப்கள் படு ஸ்டைலாக நடந்து வந்து வந்து எட்டி உதைத்து விட்டு,
"அன்னைக்கு சொன்னேனே ஞாபகம் இருக்கா?... ஆனைக்கொரு காலம் வந்தா பூனைக்கும் ஒரு காலம் வரும்"....என்று சவுக்கை ஓங்கும் வேகம்...ஒரு குட்டி பிளாஷ்பேக்கிற்கு பிறகு ஓங்கின பிரம்பை மெதுவாகக் கீழே இறக்கி சடேலேன உதறும் மின்னல் வேகம்....(அடாடடடா! என்ன ஒரு காட்சி! என்ன ஒரு வேகம்! என்ன ஒரு ஸ்டைல்!) அத்தனை மனக்குமுறல்களையும், கோபங்களையும், ஆத்திரங்களையும் அந்த ஒரு உதறலில் தீர்த்துக் கொள்வார்!
"கூப்பிடு உன் தங்கையை" என்று சொல்லி பதிலுக்குக் காத்திராமல் "தேவகி" என்றபடி மாடிப்படிக்கட்டுகளில் ஏறும் அசுர வேகம்... "தேவகி" என்று கூப்பிட்டபடியே தேவகியின் ரூமுக்குள் அவசர ஆனால் ஆழமான
தேடல்.(தேவகியின் பெட் அருகில் ஓடிப் போய் நிற்கும் போது ஸ்பீடைக் குறைக்க கால்களால் ஒரு அழகான பேலன்ஸ் பண்ணுவார்) பின் எதிர் ரூமிலும் தேடிவிட்டு 'சரசர'வென படிக்கட்டுகளில் படுவேகமாக இறங்கிவரும் ஆர்ப்பாட்டம்...(அது என்ன ஸ்பீடா?... ஸ்பீடான்னு கேட்கிறேன். மனுஷன் கண்மூடி கண் திறப்பதகுள் கீழே இறங்கி வந்து விடுவார்)
இன்னும் எப்படித்தான் எழுதுவது? எப்படித்தான் புகழ்வது? ஒன்றுமே தெரியவில்லை. புரியவில்லை. யானைத் தீனிக்கு சோளப்பொறிதான் போட முடிகிறது. தோண்டத் தோண்ட அதுபாட்டுக்கு வந்து கொண்டே இருக்கிறது. நான் என்ன செய்யட்டும்? படைத்த பிரம்மன் என் கடவுளைப் பற்றி எழுத இன்னும் பத்து கைகள் படைத்திருக்கக் கூடாதா?
JamesFague
2nd November 2014, 09:12 PM
Courtesy: Mr Neyveli Vasudevan Old Post
மெனக்கெடல் : பாபு, தெய்வமகன், தங்கமலை ரகசியம், திருவருட்செல்வர் 'அப்பர், (அப்பருக்கு நான்கு மணிநேர ஒப்பனை சற்றும் செயற்கைத்தனங்கள் இல்லாத இயற்கையான வயதான ஒப்பனை) 'பாபு'வில் வயதான வேடத்திற்காக ஒப்பனைக்குப் பட்ட நரகவேதனை.(எந்த வசதிகளும் இல்லாத காலகட்டத்தில். ஸ்பெஷல் டாக்டர்கள் முன்னிலையில் ஊசிகள் மூலமாக முகத்தில் தைத்து ரண வேதனைகளுடன் சுருக்கங்களை வரவைத்ததாக அப்போதைய ஒரு பத்திரிகையில் படித்திருக்கிறேன்) 'சவாலே சமாளி'யில் தந்தையாக நடித்த வி.எஸ்.ராகவனிடம் காட்சியின் தத்ரூபத்திற்காக வேண்டி நிஜமாகவே சாட்டையடிபட்டு ஒருநாள் முழுக்க மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிஜ அர்ப்பணிப்பு...
(வெளிவராத உண்மைகள்) என்று எவ்வளவோ அடுக்கிக்கொண்டே போகலாம்.
தரமான நடிப்பு: இதற்கு விளக்கம். தேவையா?
தொழில்நுட்பத் திறன்: காமெராவைக் கையில் தூக்கிக்கொண்டு, டைரக்டர் விசிலை வாயில் வைத்துக் கொண்டு, 'டிராலி பேக்' என்று கத்திக் கொண்டு முதன் முதல் அந்தக் காமிராவினால் எடுக்கப்பட்டது. இந்தக் காமிராவினால் எடுக்கப்பட்டது... இதுவரையில் வராத புதுமை சவுண்ட் டிராக்.... ஒரிஜினலாக புதுக்கார்கள் ரெண்டை வாங்கி வெடிக்க வைத்து ஆகாயத்தில் தூக்கி வீசப்பட்டது.... என்பதெல்லாம் இல்லாமல் காமெராவுக்கு முன்னால் (எது தேவையோ அது) எப்படி அற்புதமாகச் செயல்படுவது என்பது நடிகர் திலகத்திற்கு தெரிந்த அளவிற்கு வேறு யாருக்காவது தெரிந்திருக்க வாய்ப்பே இல்லை என்று பழுத்துக் கொட்டை போட்ட பல காமெரா மேதைகள் கூறியிருக்கிறார்கள். தான் நடிப்பது மட்டுமல்லாமல் தன்னுடன் நடிக்கும் மற்றவர்களையும் காமிராவுக்கு தக்கபடி வளைத்துக் கொண்டு வந்து நிற்க, குறிப்பாக நடிக்க வைப்பதில் அவர் பலே கில்லாடி! அதே போல நிறைய பிலிம் ரோல்களை விழுங்கியவர் நடிகர் திலகம். என்ன ஆச்சர்யமாக உள்ளதா? மற்றவர்களைப் போல நடிக்கத் தெரியாமல் அல்ல. தன்னுடைய நடிப்பில் மெய்மறந்து காமிராவை நிறுத்தாமல் ஓடவிட்டு தன்னையே, தன் நடிப்பையே வாய்பிளந்து பார்க்கும் காமெராமேனை சத்தம் கொடுத்து, "ஷாட் முடிந்து விட்டது. என்ன தூங்கி விட்டாயா? காமிராவை முதலில் அணை" என்று நடிகர் திலகம் கூக்குரலிட்ட பிறகே பல ஒளிப்பதிவாளர்கள் சுயநினைவுக்கு வந்தது நாடறிந்ததே! உலகில் வேறு யாருக்கும் இந்தப் பெருமை இருந்ததாக இருப்பதாகத் தெரியவில்லை
அதே போல 'புதிய பறவை'யின் "எங்கே நிம்மதி?' பாடலில் அவர் காட்டிய அசாத்திய திறமை. நான் சொல்வது நடிப்பில் அல்ல. தொழில் நுட்பத்தில். காமிராக் கோணங்கள்... லைட்டிங் அரேஞ்ச்மென்ட்ஸ், காட்சிகளின் பின்னணியில் தெரியும் அந்த இலைகளற்ற பட்ட மரங்கள், சப்பாத்தி,கள்ளிச் செடிகள் அனைத்தும் நடிகர் திலகத்தின் கற்பனை வளத்தில் உருவானதுதான். ஆனால் அதை அவர் வெளிக்காட்டிக் கொள்வதில்லை. அதை அவர் விரும்புவதும் இல்லை. ஆனால் பின்னாட்களில் அவருடன் பழகியவர்கள் இந்தக் கருத்துக்களையெல்லாம் தொலைக்காட்சிகளின் வாயிலாகவும் பத்திரிகைகள் வாயிலாகவும் தாங்களே மனமுவந்து மகிழ்ச்சியுடன் கூறியிருக்கிறார்கள்.
பன்மொழி ஆற்றல்: மிக அழகாக ராகவேந்திரன் சார் இதற்கு விளக்கமளித்திருக்கிறார். மனோகரா இந்தியில் 'மனோகர்' என்று நேரிடையாக எடுக்கப்பட்டபோது அவர் இந்தியில் மிக அற்புதமாகப் பேசி ஆச்சர்ய அலைகளை உருவாக்கினார். (இயக்குனர் திரு எல்வி. பிரசாத் இதை ஒருமுறை பத்திரிகை பேட்டி ஒன்றில் சிலாகித்துக் கூறியிருந்தார்) ஆனால் என்ன காரணத்தினாலோ படத்தில் அவருக்கு டப்பிங் வாய்ஸ் கொடுக்கப்பட்டது. 'ஸ்கூல் மாஸ்டர்" கன்னடத்தில் அருமையாக கன்னடம் பேசியும் அசத்தியிருப்பார். அதே படம் இந்தியில் வந்த போது சொந்தக் குரலில் அசத்தியிருப்பார்.
நடிகர் திலகத்தால் முடியாதது என்று எதுவுமே இல்லை. எல்லாவற்றிலும் அவர் ஒரு பிறவி மேதை. நல்லதொரு குடும்பத்திற்குக் கூட அவர் குடும்பத்தைத்தான் அனைவரும் உதாரணமாகக் கூறுவார்கள்.
இறுதியாக ஒன்றை குறிப்பிடுகிறேன்.
உலகத்தின் சிறந்த ஒரு அரசியல்வாதியை விடவும் வேறு ஒருவர் உருவாகி விட முடியும் .
ஒரு கிரிக்கெட் வீரரின் சாதனையை இன்னொரு கிரிக்கெட் வீரர் முறியடித்து விட முடியும்.
ஒரு இலக்கியவாதியை விட வேறொரு இலக்கியவாதி வந்து ஜொலிக்க முடியும்.
ஒரு எழுத்தாளனை பீட் செய்ய பல எழுத்தாளர்கள் வருவார்கள். வந்திருக்கிறார்கள்.
ஒரு விஞ்ஞானியின் சாதனைகளை பின்னுக்குத் தள்ளி அடுத்த விஞ்ஞானி அவதாரம் எடுக்கக் கூடும்.
ஒரு நல்ல தலைவரை விடவும் வேறு சிறந்த தலைவன் உருவாகி உலகை வழிநடத்தவும் முடியும்.
ஒரு இசை மேதையின் புகழை விடவும் வேறொரு இசை மேதை புகழ் பெறக்கூடும்
இவ்வளவு ஏன்?... உலகில் எவரை மாதிரியும், எவரும் உருவாக முடியும். எவரையும் உருவாக்கவும் முடியும்...ஒருவரின் சாதனையை ஒருவர் விஞ்ச முடியும்.... வெல்ல முடியும். ஆனால் ஒரே ஒரு சாதனையாளரைத் தவிர....
'சிவாஜி' என்ற அந்த மகா கலைஞனை கடந்த காலங்களிலும் சரி! அவருடைய சம காலங்களிலும் சரி! நடந்து கொண்டிருக்கும் காலங்களிலும் சரி! நடக்கப் போகும் காலங்களிலும் சரி!
இனி ஒருவர் விஞ்சவோ, மிஞ்சவோ, முந்தவோ முடியாது என்பதுதான் நிதர்சனமான உண்மை.
அந்தப் பெருமை நடிகர் திலகத்துக்கு மட்டுமே!
அதனால் பெருமை சிவாஜி ரசிகனுக்கு மட்டுமே!
கமல் சொன்னது போல அந்த chair இனி நிரந்தரமாக காலி chair தான். அதன் காலடியைத் தொட்டு வணங்கி, அதன் கீழே அமர்ந்து பெருமைப்பட்டுக் கொள்ளலாம் என்பதே மற்ற கலைஞர்களுக்கு என்றும் மாறாத பெருமை.
உலகில் யாருக்குமே வாய்க்காத பெருமையை எங்களுக்கு தேடித்தந்த நடிகர் திலகமே! நல்லவர்க்குத் திலகமே!
உன்னைத் தவிர எங்களுக்கு வேறு கடவுள் உண்டோ!
கோபால் சார் மிக அழகாகக் கூறியிருந்தார்.
"இன்னொரு கடவுளோ, தேவ தூதனோ உலகில் மீண்டும் தோன்ற வாய்ப்புண்டு. இன்னொரு நடிகர்திலகம், தோன்ற வாய்ப்பே இல்லை"
(பொன்னெழுத்துக்களில் பொறித்து ஒவ்வொரு நடிகனும் தங்கள் கழுத்தில் மாட்டிக் கொள்ள வேண்டிய டாலர்)
JamesFague
2nd November 2014, 10:01 PM
Dear Ragulram,
NT's magnus opus Navarathiri on 16.11.14 on behalf of NTFANS at Russian Centre, Kasturi Rangan Road,Chennai. If your are free make it convenient to attend the
screening and enjoy with our starwarts.
This invitation not only to Mr Ragulram but to all our hubbers so that they can plan their travel and watch the movie.
Regards
joe
2nd November 2014, 10:35 PM
நாய்வாலை நிமிர்த்தினால் கூட தினமலர் திருந்தியதாக சொல்லுவதை எப்போதும் நம்ப முடியாது.
Murali Srinivas
3rd November 2014, 01:01 AM
அது வெகு யதார்த்தமாக நிகழ்ந்தது. எவ்வித திட்டமிடலும் இல்லாமல் இது இப்படி வர வேண்டும் என்ற நோக்கில் செயல்படாமல் தானே அமைந்தது.
அது 1964-ம் வருடம் ஜூன் ஜூலை மாதமாக இருக்கலாம். புதிய பறவை படப்பிடிப்பு நடக்கும் ஸ்டுடியோ தளம். நடிகர் திலகத்துடன் விகேஆர் நடித்துக் கொண்டிருக்கிறார் படப்பிடிப்பின் நடு நடுவே ஒரு மனிதர் வந்து போவதை அந்த பிஸியிலும் நடிகர் திலகம் கவனித்து விடுகிறார். கூட நடிக்கும் நண்பரிடம் கேட்கிறார் " என்ன ராமு உன் பழைய பார்ட்னர் எதுக்கு வந்துட்டு வந்துட்டு போகிறான்?". அதற்கு விகேஆர் "என்னை பார்க்க வரலை உங்களைப் பார்க்கத்தான் வந்தாரு" என்று பதில் சொல்கிறார். என்னை பார்க்கவா? எதுக்கு? என்று நடிகர் திலகம் கேட்க உங்களை வைத்து ஒரு படம் செய்ய வேண்டுமென்று ஆசைப்படுகிறார் என்று விகேஆர் சொல்கிறார்.
நடிகர் திலகம் அப்படி கேட்டதற்கு காரணம் இருக்கிறது. படப்பிடிப்பின் இடையே வந்தவர் அருட்செல்வர் ஏ பி நாகராஜன் அவர்கள். நடிகர் திலகத்திற்கும் ஏபிஎன் அவர்களுக்குமான நட்பு என்று சொன்னால் அது நாடக உலகத்திலேயே தொடங்கி விட்டது. நாடகங்களில் நடித்துக் கொண்டிருந்தார் நாகராஜன். நடிகர் திலகத்தைப் போலவே அவரும் ஸ்திரீ பார்ட் வேடங்கள் போட்டவர். அப்போதைய பழக்கம் திரையுலகில் வந்த பிறகும் தொடர்ந்தது. நான் பெற்ற செல்வம் படத்திற்கு கதை வசனம் எழுதிய ஏபிஎன் அந்தப் படத்திலேயே பின்னாட்களில் திருவிளையாடல் படத்தில் வந்து புகழ் பெற்ற தருமி episode-ஐ ஒரு ஓரங்க நாடகமாக புகுத்தியிருப்பார். நக்கீரன் சிவபெருமான் என்ற இரண்டு வேடங்களையும் நடிகர் திலகமே ஏற்றிருப்பார். இயக்குனர் கே.சோமு அவர்களிடம் உதவியாளராக இருந்த ஏபிஎன், கே.சோமு இயக்கத்தில் நடிகர் திலகம் நடித்த மக்களைப் பெற்ற மகராசி மற்றும் சம்பூர்ண ராமாயணம் படங்களுக்கு திரைக்கதை வசனம் எழுதி இணை இயக்குனராகவும் பொறுப்பேற்றார். விகேஆர் அவர்களுடன் பங்குதாரராக இணைந்து லட்சுமி பிக்சர்ஸ் என்ற நிறுவனத்தின் பெயரில் மக்களைப் பெற்ற மகராசி மற்றும் வடிவுக்கு வளைக்காப்பு ஆகிய படங்களையும் தயாரித்தார். அதில் வடிவுக்கு வளைக்காப்பு படம்தான் ஏபிஎன் முதன் முதலாக நடிகர் திலகத்தை வைத்து இயக்கிய படம். அந்தப் படத்திற்கு பின் ஒரு சில கருத்து வேறுபாடுகளினால் விகேஆரும் ஏபிஎன்னும் பிரிந்தனர். அதன் பிறகு ஸ்பைடர் பிலிம்ஸ் சார்பில் குலமகள் ராதை என்ற நடிகர் திலகம் நடித்த படத்தை 1963-ல் இயக்கியிருந்தார்.
விகேஆர் இப்படி சொன்னவுடன் நடிகர் திலகம் ஏபி நாகராஜனை சந்திக்கிறார். தான் புதியதாக ஒரு படத் தயாரிப்பு நிறுவனம் தொடங்க இருப்பதாகவும் அந்த நிறுவனம் சார்பில் தயாரிக்கப் போகும் படத்திற்கு கால்ஷீட் வேண்டும் என்று கேட்கிறார் ஏபிஎன். விகேஆரிடம் "ராமு, நாகராஜனுக்கு கால்ஷீட் கொடுப்பதில் உனக்கு ஏதாவது ஆட்சேபனை இருக்கிறதா" என்று கேட்டு அதற்கு விகேஆர் இல்லை என்று சொன்னவுடன் தன் தம்பி வி சி சண்முகத்தை பார்க்குமாறு அனுப்புகிறார்.
அன்றைய காலம் நடிகர் திலகம் ஏராளமான படங்களில் கமிட் ஆகியிருந்த நேரம். அப்போதுதான் ஏபிஎன் தன் மனதில் நினைத்திருந்த கதையை சொல்கிறார். புதுமையான கதைக்களம். இதுவரை யாரும் முயற்சி செய்யாத ஒன்று. ஆனால் நடிகர் திலகத்தின் கால்ஷீட் சுத்தமாக இல்லை. என்ன செய்யலாம் என்று யோசிக்கும்போது அதற்கு ஏபிஎன் அவர்களே ஒரு யோசனை சொல்கிறார். தான் எடுக்க நினைக்கும் படம் முழுமையாக இரவு நேரங்களில் நடைபெறுவதாக உள்ள கதையமைப்பை கொண்ட படம். ஆகவே night கால்ஷீட் கொடுத்தால் போதும். ஒரு சில நாட்கள் மட்டும் பகல் கால்ஷீட் கொடுத்தால் படத்தை எடுத்து விடலாம் என்ற ஏபிஎன் யோசனை ஏற்றுக் கொள்ளப்பட்டு அதன்படி படப்பிடிப்பு துவங்குகிறது.
எழுத்தாளர் சுஜாதா பாணியில் சொல்லப் போனால் ஒரு ஸ்டாம்ப் பின்னல் எழுதிவிடக் கூடிய கதைதான். தான் காதலிக்கும் நபரைத்தான் தனக்கு மாப்பிளையாக முடிவு செய்திருக்கிறார்கள் என்ற உண்மை தெரியாமல் வீட்டை விட்டு வெளியேறும் நாயகி வெளியில் தங்க நேரும் 8 இரவுகளில் 8 விதமான மனிதர்களை சந்திக்க அதனால் ஏற்படும் பிரச்சனைகளை சொன்ன படம். இறுதியில் 9 வது நாளன்று தன் காதலனோடு சேர்கிறாள்.
நவரசம். அதில் ஒவ்வொன்றையும் நடிகர் திலகம் கையாண்ட முறை இருக்கிறதே, அற்புதம்!.அந்த அற்புதம் காண்பித்த அற்புதராஜ். scene capturing gesture ஆக அந்த தோள் குலுக்கும் ஸ்டைல்-ஐ சொன்னாலும் கூட அந்த பணக்கார கனவான் வேடத்தை கச்சிதமாக செய்திருக்கும் நேர்த்தி. மகள் துள்ளி குதித்து ஓட gently gently என்று விடுக்கும் எச்சரிக்கை கலந்த அக்கறை! முதல் ரோலே மனதில் பதிந்து விடும்.
அடுத்து பயம். அந்த உணர்வை தன் உடல் மொழியிலே காட்டியிருப்பார். மனதில் இருக்கும் பயம் தெரியாமல் இருக்க மனைவியுடன் பேசினதை சத்தம் போட்டு சொல்லிக் காட்டும் நடிகர் திலகம் சைக்காலஜி பற்றிய பாடம் எதுவும் படிக்காமலே அதை காட்டியிருப்பார்.
அடுத்து Dr.கருணாகரன் . இதைப் பற்றியே ஒரு தனி பதிவு எழுதலாம். தாங்கள் தமிழ் பால் பற்று கொண்ட புலவரோ என்பதில் ஆரம்பித்து இறுதியில் மறந்து விட்ட ஸ்டத்தை எடுத்துக் கொண்டு நடக்கும் அந்த நடைக்கே காசு கொடுக்கலாம்.
நான்தான் சுட்டேன் சும்மா சுட்டேன் என்ற கோபக்காரன், சாந்தமே உருவான அப்பாவி கிராமத்து இளைஞன், தான் நடிக்கும் தெருக்கூத்து எப்படி முடக்காமல் நடத்துவது என்பதில் கவனமாக இருக்கும் நாடகக்காரன், தனக்கு வந்திருக்கும் நோயினால் ஒரு தாழ்வு மனப்பான்மைக்கு உள்ளாகி மற்றவர்களிடமிருந்து விலகி நிற்க முயற்சிக்கும் தொழு நோயாளி, மனதில் பட்டதை சத்தமாக வெளிப்படுத்தி வாழ்க்கையை ஒரு வீரமான ஆரவாரத்தோடு மற்றவர்களுக்கு கடத்தும் போலீஸ் ஆபிசர், நடுவில் கை நழுவி போன ஆனந்தத்தை இறுதியில் பெறும் நாயகன் ஆனந்த். இப்படி நவரசங்களையும் தனித்தன்மையோடு கையாண்ட நடிகன் உலகத்தில் வேறு உண்டா? 9 வேடங்களோடு கூத்து மேடையில் நடைபெறும் சத்தியவான் சாவித்திரி ரோலையும் சேர்த்தால் 50 வருடங்களுக்கு முன்பே தசாவதாரம் வந்து விட்டது.
இது படப்பிடிப்பு நடக்கும்போது பிலிம் நியூஸ் ஆனந்தன் 100-வது படத்தைப் பற்றி சொல்லுவது, முரடன் முத்து நவராத்திரி படங்களுக்கு இடையே எது 100-வது படம் என்று நடந்த போட்டி ஆகியவை பற்றி நாம் பல முறை பேசியிருப்பதால் இப்போது இங்கே வேண்டாம்.
தமிழ் சினிமா வரலாற்றிலேயே முதன் முதலாக ஒரு நடிகர் 100 படங்களை நிறைவு செய்கிறார். அதுவும் கதாநாயகனாகவே நடித்து அந்த பெருமைக்குரிய மைல் கல்லை கடக்கிறார். வரலாற்றில் பொன்னெழுத்துக்களினால் பொறிக்கப்பட வேண்டிய நாள் 1964 நவம்பர் 3. அப்படிப்பட்ட பொன்னெழுத்து நாள் இன்றைய தினம் பொன் விழாவை பூர்த்தி செய்கிறது. அந்த பெருமைக்கும் விருதுக்கும் தகுதியான படம் என்பதை மக்கள் மன்றத்தில் நிரூபிக்கிறது. அதை மக்களும் ஏற்றுக் கொண்டு படத்திற்கு மிகப் பெரிய வெற்றியை கொடுத்தனர்.
சென்னையில் வெளியான 4 அரங்குகளிலும் மற்றும் மதுரை திருச்சி நகரங்களிலும் 100 நாட்களை கடந்து ஒரு புதிய சாதனையை ஏற்படுத்தியது. இதன் மூலம் அந்த 1964-ம் ஆண்டு வெளியான நடிகர் திலகத்தின் 7 படங்களில் 5 படங்கள் 100 நாட்களை கடந்து ஓடி தமிழ் சினிமா வரலாற்றிலேயே ஒரு காலண்டர் வருடத்தில் 5 படங்கள் 100 நாட்கள் ஓடிய சாதனையை செய்த ஒரே நடிகன் நடிகர் திலகம் என்ற பெருமையையும் பெற்றார் [பின் அவரே 1972-ல் அந்த காலண்டர் வருடத்தில் 6 படங்கள் 100 நாட்கள் ஓடிய சாதனையையும் புரிந்து தனக்கு இணை தான் மட்டுமே என்று நிறுவினார்] அது மட்டுமா? அந்த 1964-ல் சென்னை மாநகரில் நடிகர் திலகத்தின் 5 படங்கள் [கர்ணன், பச்சை விளக்கு, கை கொடுத்த தெய்வம், புதிய பறவை மற்றும் நவராத்திரி] 15 திரையரங்குகளில் 100 நாட்கள் ஓடிய சாதனையை இன்று வரை [அதாவது இந்த 50 வருடங்களில்] யாராலும் முறியடிக்க முடியவில்லை. அது மட்டுமல்ல அந்த 1964-ம் ஆண்டு நடிகர் திலகத்தின் 7 படங்கள் வெளியாகின. அவை சென்னை மாநகரில் 26 திரையரங்குகளில் வெளியிடப்பட்டது. அவற்றில் 25 திரையரங்குகளிலும் வெளியிடப்பட்ட படங்கள் 50 நாட்களையும் கடந்து ஓடியது. இந்த சாதனையும் முறியடிக்கப்படவில்லை.என்றுமே முறியடிக்க முடியாத சாதனைகளுக்கு சொந்தக்காரர் நடிகர் திலகம்தானே!
மற்றொரு முக்கியமான விஷயத்தையும் இங்கே குறிப்பிட வேண்டும். 1964 பொங்கலுக்கு வந்த நமது கர்ணன் திரைப்படத்தைப் பற்றி வேண்டுமென்றே ஒரு பொய்யான தகவலை சொல்லிக் கொண்டிருப்பார்கள். போட்டியில் தோற்று விட்டது என்றெல்லாம் அள்ளி விடுவார்கள். 4 திரையரங்குகளில் 100 நாட்களை கடந்து பெரு நகரங்களில் 75 நாட்களை கடந்து வெளியான திரையரங்குகளில் எல்லாம் 50 நாட்களை கடந்த கர்ணன் பற்றி தவறான தகவலை வாய் கூசாமல் பேசுவார்கள். ஆனால் அதே 1964 தீபாவளி படங்களைப் பற்றி வாயே திறக்க மாட்டார்கள். காஸ்ட்லி கலர் படங்களையெல்லாம் காணாமல் போக வைத்த கருப்பு வெள்ளை காவியம் நமது நவராத்திரி. இன்னும் சொல்லப் போனால் கோவை போன்ற மாநகரிலே சில படங்கள் 50 நாட்களை கூட எட்டி பிடிக்க முடியாதபோது [நவராத்திரியை விடுங்கள்] முரடன் முத்து ஓடிய நாட்கள் 80.
தமிழ் தாயின் கலைத்தாயின் தலைமகன் நடிகர் திலகம் நடித்த 100-வது படமாம் நவராத்திரி இன்று பொன் விழா காண்கிறது. இந்த இனிய நாளில் அந்தப் படத்தை பற்றியும் அந்த படம் சம்மந்தப்பட்ட விஷயங்களையும் பகிர்ந்துக் கொள்ள முடிந்ததற்கு நன்றியும் மகிழ்ச்சியும்!
அன்புடன்
sivaa
3rd November 2014, 05:54 AM
நடிகர் திலகத்தால் முடியாதது என்று எதுவுமே இல்லை. எல்லாவற்றிலும் அவர் ஒரு பிறவி மேதை. நல்லதொரு குடும்பத்திற்குக் கூட அவர் குடும்பத்தைத்தான் அனைவரும் உதாரணமாகக் கூறுவார்கள்.
இறுதியாக ஒன்றை குறிப்பிடுகிறேன்.
உலகத்தின் சிறந்த ஒரு அரசியல்வாதியை விடவும் வேறு ஒருவர் உருவாகி விட முடியும் .
ஒரு கிரிக்கெட் வீரரின் சாதனையை இன்னொரு கிரிக்கெட் வீரர் முறியடித்து விட முடியும்.
ஒரு இலக்கியவாதியை விட வேறொரு இலக்கியவாதி வந்து ஜொலிக்க முடியும்.
ஒரு எழுத்தாளனை பீட் செய்ய பல எழுத்தாளர்கள் வருவார்கள். வந்திருக்கிறார்கள்.
ஒரு விஞ்ஞானியின் சாதனைகளை பின்னுக்குத் தள்ளி அடுத்த விஞ்ஞானி அவதாரம் எடுக்கக் கூடும்.
ஒரு நல்ல தலைவரை விடவும் வேறு சிறந்த தலைவன் உருவாகி உலகை வழிநடத்தவும் முடியும்.
ஒரு இசை மேதையின் புகழை விடவும் வேறொரு இசை மேதை புகழ் பெறக்கூடும்
இவ்வளவு ஏன்?... உலகில் எவரை மாதிரியும், எவரும் உருவாக முடியும். எவரையும் உருவாக்கவும் முடியும்...ஒருவரின் சாதனையை ஒருவர் விஞ்ச முடியும்.... வெல்ல முடியும். ஆனால் ஒரே ஒரு சாதனையாளரைத் தவிர....
'சிவாஜி' என்ற அந்த மகா கலைஞனை கடந்த காலங்களிலும் சரி! அவருடைய சம காலங்களிலும் சரி! நடந்து கொண்டிருக்கும் காலங்களிலும் சரி! நடக்கப் போகும் காலங்களிலும் சரி!
இனி ஒருவர் விஞ்சவோ, மிஞ்சவோ, முந்தவோ முடியாது என்பதுதான் நிதர்சனமான உண்மை.
அந்தப் பெருமை நடிகர் திலகத்துக்கு மட்டுமே!
அதனால் பெருமை சிவாஜி ரசிகனுக்கு மட்டுமே!
(நெய்வேலி வாசுதேவன்)
sivaa
3rd November 2014, 06:08 AM
சிவாஜி என்ற மாமனிதர்.
ஒரு விஷயத்தில் மட்டும் எனது ஏழு வயதில் இருந்து உறுதியாக இருந்துள்ளேன்.அதை ஈடுபாடு,வழிபாடு,அதீத திறமையால் கட்டுண்டல் எப்படி வேண்டுமானாலும் வைத்து கொள்ளுங்கள். அது நடிகர்திலகத்தின் மீது நான் கொண்ட நாளும் வளரும் பக்தி.எனக்கு அவர் உலகத்திலேயே சிறந்த நடிகர் என்பதே போதுமானதாய் இருந்தது.(இந்த விஷயத்தில் Joe கட்சிதான்).
அந்த கலைஞன் பிறக்கும் போதே ஒளி வட்டத்துடன்,நடிப்பு என்ற கவச குண்டலம் கொண்டு பிறந்ததால் எவராலும் எக்காலத்திலும் வெல்ல முடியாதவராகவே திகழ்ந்தார்,திகழ்கிறார்,திகழ்வார்.அவருடைய கவச குண்டலத்தை ,அனுபவத்தால் பெற்ற ப்ரம்மாஸ்திரங்களை கவர, பல அரசியல் இந்திரர்கள் மாறி மாறி வேடமிட்டு பார்த்தனர்.ஆறு பேர் சேர்ந்து அந்த கர்ணனை அழிக்க முடிந்தது.இந்த நடிப்பு கர்ணனோ ,ஆறு கோடி பேர் மனதில் சிரஞ்சீவியாய் வாழ்வதை கர்ணனே வந்து உலகத்துக்கு நிரூபித்து நிலை நாட்டியாயிற்று.
ஆனாலும் நான் கற்றதும்,பெற்றதும்,உணர்ந்ததும் எனக்கு ஒன்றை ஓங்கி உரைப்பது அவர் ஓர் மாமனிதரும் ஆவார் என்று.
நடிப்பை பற்றித்தான் மாய்ந்து மாய்ந்து எழுதி கொண்டிருக்கிறோமே ? நான் வியக்கும் அவரின் மற்ற குணங்களை ,அம்சங்களை வைத்து பாகம் 11 ஐ தொடங்குவதில் பெருமை கொள்கிறேன்.
இது சத்திய சோதனைக்கு நிகரான உண்மை பதிவுகள் .
செல்வர்க்கழகு செழுங்கிளை தாங்குதல் என்ற சொல்லுக்கேற்ப இந்திய கூட்டு குடும்ப மதிப்பு சார் மாண்பின் உயர் பிரதிநிதி.
அசைக்க முடியா தேசிய உணர்வு,இறை பற்று,மனதுக்கு உண்மையான வாழ்க்கை .
வெகுளித்தனம் கொண்டு இவர் பெரியோர்,இவர் சிறியோர் என்று பாராமல் எல்லோரிடமும் உண்மையாய் பழகி உரிமை எடுத்து மனம் திறப்பார்.
எல்லாவற்றிலும் ஒரு முழுமையான அர்ப்பணிப்பு(Perfection ) காட்டுவதுடன்,பிறரிடமும் எதிர்பார்ப்பார் .
கற்றோரை மிக மதிப்பார்.ஆலோசனை கேட்பார். ஆசிரியர்களை போற்றி மதிப்பார்.
சக கலைஞர்களிடம் மிக மிக பெருந்தன்மை காட்டுவார்.வேண்டியவர் வேண்டாதவர் என்ற பாகுபாடோ, பழியுணர்வோ ,கெடுக்கும் எண்ணமோ அவர் மனதில் துளிர்த்ததே இல்லை.
பொது காரியங்களுக்கு நிறைய நன்கொடைகள் விளம்பரம் இல்லாமல் வழங்கியுள்ளார்.
சினிமா,அரசியல்,பொது நிகழ்ச்சி எல்லாவற்றிலும் நேரம் தவறாமையை கடை பிடித்து,மற்றவர் நேரத்தையும் மதித்தவர்.
நடிப்பை பற்றியே சிந்தனை,காரிய கவனம் கொண்ட தனிமை விரும்பி என்றாலும் ,நகைச்சுவை உணர்வுடன் பிறருடன் எளிமையாக மனம் திறப்பார்.
மனம், உடல் இரண்டையுமே மிக மிக சுத்தமாக பராமரித்தவர்.
கடைசி வரை உலக புகழ் பெற்றும் தன் அடிப்படையை மறக்காத குணம் மாறாதவர்.
தன் படங்களே தனக்கு விளம்பரம் தேடி கொள்ளும் என்ற நம்பிக்கையில் product ,Quality இரண்டையும் மட்டுமே நம்பியவர். collection சாதனை செய்த தன் படத்தை பற்றியே பிறர் சொல்லி தெரிந்து கொண்டவர். தன் தொழில் தவிர பிற விஷயங்களில் ஆலோசனை கூறுவாரே தவிர தலையிட மாட்டார்.
பல தயாரிப்பாளர்களை ,இயக்குனர்களை உருவாக்கி உள்ளார்.இவரை மட்டுமே நம்பிய முக்தா,பாலாஜி போன்றோர் சிறப்பாக வாழ்ந்தனர்.
ஜாதி ஒழிப்பு என்றெல்லாம் பாவ்லா காட்டாமல்,அதை ஒரு நிதர்சன உண்மையாகவே கொண்டு ,வேறுபாடு பாராமல் எல்லா சாதியினரிடமும் சம அன்பு காட்டி ,சமமாகவே உணர்த்துவார்.
இளைய தலைமுறை வளரும் நடிகர்களுக்கு இவரளவு வாய்ப்பளித்து உயர உதவியவர்கள் யாருமில்லை.
தன் சம்பத்த பட்ட படங்களாக இருந்தாலும் மனதில் உள்ளதை உள்ள படி விமர்சிப்பார்.
அறவே ego இன்றி யாராவது ஏதாவது தன் மனம் கோணும் படி உளறினாலும் மன்னிப்பார்.
நண்பர்களை மிக நம்புவார். வாக்கு கொடுத்தால் மாற மாட்டார்.
படங்களின் Quality க்காக அவர் தன்னை வருத்தி கொண்ட அளவு யாரும் செய்ததில்லை.
பிற மாநில, பிற நாட்டு கலைஞர்களிடம் மிக இணக்கம் காட்டி ,அவர்கள் மதிப்பை பெற்றார்.
யாராவது ஏதாவது சிறப்பாக செய்து விட்டால் ,யாரென்று பாராது மிக மனம் திறந்து பாராட்டுவார்.
தன் சுய image building பற்றி கவலையே பட்டதில்லை.
உள்ளொன்று வைத்து புறமொன்று பேசியதே இல்லை.
பொது வாழ்வில் தூய்மை கொண்டவர். தன் நன்மைக்காக ரசிகர்களை பயன் படுத்தவே விரும்ப மாட்டார்.அவரவர் படிப்பை,தொழிலை,குடும்பத்தை கவனிக்கவே சொல்வார்.
நல்ல விஷயங்கள் எந்த மொழியில்,திசையில் இருப்பினும் தேடி கொண்டு வருவார்.
தன் திறமை ஒன்றையே நம்பி,வெளிப்படையாய் வாழ்ந்தவர்.
தன் கடைசி படத்திலும், உடல் நிலையை கூட பொருட்படுத்தாமல் ,அதே அர்பணிப்புடன் வேலை செய்தவர்.
(S.கோபால்)
sivaa
3rd November 2014, 06:25 AM
நண்பர் கோபாலின் முன்னைய பதிவு
தேவை கருதி மீள்பதிவு
எனக்கு ஒன்று புரிவதேயில்லை.புரியவும் இல்லை.
நமக்குள் வரும் கருத்து மோதல்களை விடுங்கள்.தெளிவான ரசிகர்களை கொண்டதால் விளையும் முரண்,அது சார்ந்த கர்வங்கள்,மான பிரச்சினைகள்.இது குடும்பத்துள் அண்ணன் தம்பி பிரச்சினை.இது ஒரு ஆரோக்கியமான சுவாரஸ்யம் நிறைந்த செல்ல மோதல்கள்.
ஆனால் இங்கு நம் திரிக்கு மட்டும் சந்தேகமான நபர்கள் வந்து அதை செய்,இதை செய்யாதே என்று குழப்பம் விளைவிப்பது.பல நகைப்புக்கிடமான விஷயங்கள்,மூட தனங்கள் நிறைந்த இடங்களில் யாரும் சென்று எதையும் சொல்லாத போது நமக்கு மட்டும் என் இந்த கட்டுப்பாடுகள்,சட்ட திட்டங்கள்?பதிவர்களை அவமான படுத்தி திட்டமிட்டு விரட்டுவது போன்ற திரிசம வேலைகள்?
என்னை,ராகவேந்தரை,வாசுவை,முரளியை ,கார்த்திக்கை விடுங்கள்.நாங்கள் போட்டு கொள்ளாத சண்டைகள் இல்லை,விவாதங்கள் உண்டு.ஆனாலும் தெளிவாக சில விஷயங்கள் உண்டு.
1)நாங்கள் அனைவருமே பங்களிப்பாளர்கள்.
2)திரிக்கு சுவை கூட்டி,மெருகேற்றி,பார்வையாளர்களை ஈர்த்து,நடிகர்திலகத்தை பற்றி மேலும் புரிந்து கொள்ள உதவும் குழு.
3)எங்கள் நோக்கம் ஒன்றே ஒன்று.-நடிகர்திலகம் மட்டுமே பிரதானம்.
4)எங்கள் அனைவரிடமே,சொல்ல விஷயங்கள் இன்னும் உண்டு.மெருகேற்றி ,சுவையாக,creative ஆக செய்யும் திறம் உண்டு.
இதில் எங்கே வந்தது ஆக்ரமிப்பு? எங்களுக்கு மட்டும் என் ஆயிரம் கட்டளைகள்,நிர்பந்தங்கள்?
அதுவும் ,பங்களிப்பாளர் அல்லாத மற்றவர்களிடம் இருந்து?
வாசு மற்றும் என் போன்றவர்கள் நொந்து வெளியேறுவதால் திரிக்கு நன்மை உண்டா?வேறு யாரேனும் எங்கள் இடத்தை எடுத்து கொண்டு பணியாற்றினால் மகிழ்ச்சியே.ஆனாலும் அதுவும் நேர்வதாக தெரியவில்லை.
சரி.கொஞ்சம் சுவை கூட்டலாம் என்று பார்த்தால் ஒரு முக்கிய நண்பர் வந்து நாங்கள் ரசிக்கும் மனநிலையில் இல்லை என்கிறார். சிவாஜியை பற்றி சொல்வதற்கும் ,சுவைப்பதற்கும் என்னைய்யா மனநிலை?கோவிலுக்கு செல்லும் மனநிலைதானே?சுகம்,துக்கம் இரண்டிலும் ஆசுவாசம் தர கூடியதுதானே?
மன வருத்தத்துடனே பதிவு செய்கிறேன்.
வாசு,ராகவேந்தர்,கார்த்திக்,முரளி,சாரதி போன்றவர்கள் உடனே வருவது,நாம் கட்டி காத்த கோயில் பாழடையாமல்,திருப்பணி செய்வதற்கு ஒப்பானது.வாருங்கள்.என் அன்பு வேண்டுகோள்
sivaa
3rd November 2014, 06:33 AM
http://i157.photobucket.com/albums/t55/sivaa14/E_1414742500_zps140fa973.jpg (http://s157.photobucket.com/user/sivaa14/media/E_1414742500_zps140fa973.jpg.html)
(மாலைமலர்)
sivaa
3rd November 2014, 06:34 AM
http://i157.photobucket.com/albums/t55/sivaa14/001_zpsb29c02bd.jpg (http://s157.photobucket.com/user/sivaa14/media/001_zpsb29c02bd.jpg.html)
sivaa
3rd November 2014, 06:35 AM
ரசிகர்களின் அன்புச்சிறையில்ரசிகர்களின் அன்புச்சிறையில்http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/2011-01-2710018_zps70dad396.jpg (http://s1234.photobucket.com/user/sivajiperavai/media/2011-01-2710018_zps70dad396.jpg.html)
sivaa
3rd November 2014, 06:53 AM
தமிழ் சினிமா வரலாற்றிலேயே முதன் முதலாக ஒரு நடிகர் 100 படங்களை நிறைவு செய்கிறார். அதுவும் கதாநாயகனாகவே நடித்து அந்த பெருமைக்குரிய மைல் கல்லை கடக்கிறார். வரலாற்றில் பொன்னெழுத்துக்களினால் பொறிக்கப்பட வேண்டிய நாள் 1964 நவம்பர் 3. அப்படிப்பட்ட பொன்னெழுத்து நாள் இன்றைய தினம் பொன் விழாவை பூர்த்தி செய்கிறது. அந்த பெருமைக்கும் விருதுக்கும் தகுதியான படம் என்பதை மக்கள் மன்றத்தில் நிரூபிக்கிறது. அதை மக்களும் ஏற்றுக் கொண்டு படத்திற்கு மிகப் பெரிய வெற்றியை கொடுத்தனர்.
முரளி சிறினிவாசன்
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC4962-1.jpg
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC4963-1.jpg
http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC3907a.jpg
sivaa
3rd November 2014, 07:09 AM
நண்பர் ரவிகிரண்சூரியாவின் முன்னைய பதிவு
தேவை கருதி மீள்பதிவு
(நண்பர் ரவிகிரண்சூரியா இது உங்கள் திரி எங்கே போய்விட்டீர்கள்)
என்ன சார் நடக்குது ?
நடிகர் திலகம் பாகம் -12 திரியை துவக்கி வைத்த திரு பார்த்த சாரதி
திறமையான பதிவாளர்கள்
திரு ராதாகிருஷ்ணன்
திரு ராகுல் ராம்
திரு கண்பத்
திரு சின்னகண்ணன்
திரு ரவி
திரு கோபால் - ஆய்வாளர்
திரிக்கு வருவதே இல்லை . ஏன் இந்த புறக்கணிப்பு ?
ஏற்கனவே நம்முடைய ராகவேந்திரன் சார் - வாசுதேவன் சார் மனதை பன்முக பதிவாளர் ஒருவர் மனதை புண்படுத்தி திரிக்கி வரவிடாமல் செய்து விட்டார் .
சிலை விவகாரத்தை முன்னிட்டு ஆதிராம் [எட்டில் ஒருவர்- எட்டும் அவரே ] உண்டாக்கிய குழப்பம் - உச்ச கட்டம்
எட்டு பேர் புகழ் கார்த்திக் திரிக்கு வந்து பதிவிடவும் . மற்றவர்களும் உண்மையான அடையாளத்துடன் வந்து பதிவிடவும் .
வீறு நடை போட்ட நம் திரி சிலரின் தவறான போக்கினால் திசை மாறி செல்வது வேதனை .
உரிமைக்குரல் ஆசிரியர் b.s. ராஜ் அவர்களை பாருங்கள் !
நம்முடைய கர்ணன் வெற்றியினை உருவாக்கி தந்த திரு சொக்கலிங்கத்தை, அவர் சிவாஜி ரசிகர் - கர்ணன் வெற்றி இல்லை என்று கூப்பாடு போட்டவர் இன்று நம் சிவாஜி படத்திற்கு டிவிடி தயாரித்து அமோக வியாபாரம் செய்கிறார் .
இன்று சொக்கலிங்கத்தின் ஆயிரத்தில் ஒருவன் படத்திற்காக அவருடன் கை கோர்த்து சொக்கலிங்கத்திற்கு ஆதரவு தருகிறார் .
மாற்றுமுகாம் சேர்ந்தவர்கள் இன்று நம்முடைய சிவாஜி புகழ் பாடும்போது இந்த முகாமில் உள்ளவர்கள் மவுனம் காப்பது ஏன் ?
RAGHAVENDRA
3rd November 2014, 07:40 AM
https://fbcdn-sphotos-e-a.akamaihd.net/hphotos-ak-xaf1/v/t1.0-9/10628145_815674465149894_8551250236301172122_n.jpg ?oh=731fd917b395164ba1319e707271aac0&oe=54DBAD9E&__gda__=1425396783_8e85aec09133a15ea5fb4a1f24bd094 5
ScottAlise
3rd November 2014, 10:00 AM
Dear Ragulram,
NT's magnus opus Navarathiri on 16.11.14 on behalf of NTFANS at Russian Centre, Kasturi Rangan Road,Chennai. If your are free make it convenient to attend the
screening and enjoy with our starwarts.
This invitation not only to Mr Ragulram but to all our hubbers so that they can plan their travel and watch the movie.
Regards
Thanks for invitation sir, But I am sorry I will not be able to come this time, I will try to come for next event sir
KCSHEKAR
3rd November 2014, 02:57 PM
தமிழ் தாயின் கலைத்தாயின் தலைமகன் நடிகர் திலகம் நடித்த 100-வது படமாம் நவராத்திரி இன்று பொன் விழா காண்கிறது. இந்த இனிய நாளில் அந்தப் படத்தை பற்றியும் அந்த படம் சம்மந்தப்பட்ட விஷயங்களையும் பகிர்ந்துக் கொள்ள முடிந்ததற்கு நன்றியும் மகிழ்ச்சியும்!
அன்புடன்
டியர் முரளி சார்,
நவராத்திரி - பொன்விழாவையொட்டி தாங்கள் பகிர்ந்துகொண்ட விஷயங்கள் அருமை.
KCSHEKAR
3rd November 2014, 02:58 PM
http://www.dinamalar.com/splpart_detail.asp?id=91
தேவையில்லாத விமர்சனம்... தினமலரின் விஷமத்தனம் மீண்டும் நிரூபணமாகியிருக்கிறது. ஏம்பா.. தமிழனை நீங்கள் பாராட்டா விட்டாலும் பரவாயில்லை.. இப்படியெல்லாம் இன்னுமா புண்படுத்துவீர்கள்..
நடிகர்திலகத்தைப் பற்றி அவதூறு பேசுவது, எழுதுவது என்றால் பலருக்கும் லட்டு சாப்பிடுவது போல இருக்கிறது. அவர் மறைந்து இவ்வளவு ஆண்டுக்குப் பிறகும் அவரது புகழ் ஜொலிப்பதைக் கண்டு பொறுக்காதவர்கள் தொடர்ந்து இதுமாதிரி செய்கிறார்கள்.
தினமலர் நாளிதழுக்கு நான் எழுதிய கடித நகல்:
http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/CopyofLetterDinamalar3Nov2014Pg1_zpsc8e00e09.jpg (http://s1234.photobucket.com/user/sivajiperavai/media/CopyofLetterDinamalar3Nov2014Pg1_zpsc8e00e09.jpg.h tml)
http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/CopyofLetterDinamalar3Nov2014Pg2_zps6310c043.jpg (http://s1234.photobucket.com/user/sivajiperavai/media/CopyofLetterDinamalar3Nov2014Pg2_zps6310c043.jpg.h tml)
JamesFague
3rd November 2014, 04:10 PM
Mr KC Sir,
Any feedback received by you for the letter. If so please post the same. Thanks a lot for the step taken by you so that in future they will not repeat the mistake again.
Regards
parthasarathy
3rd November 2014, 04:33 PM
நடிகர்திலகத்தைப் பற்றி அவதூறு பேசுவது, எழுதுவது என்றால் பலருக்கும் லட்டு சாப்பிடுவது போல இருக்கிறது. அவர் மறைந்து இவ்வளவு ஆண்டுக்குப் பிறகும் அவரது புகழ் ஜொலிப்பதைக் கண்டு பொறுக்காதவர்கள் தொடர்ந்து இதுமாதிரி செய்கிறார்கள்.
தினமலர் நாளிதழுக்கு நான் எழுதிய கடித நகல்:
Dear KCS Sir,
Thank you very much and words fail me in appreciating your efforts.
Great service to the Thespian, Sir.
Regards,
R. Parthasarathy
RAGHAVENDRA
3rd November 2014, 07:33 PM
சந்திரசேகர் சார்
தங்களுடைய கடித்தில் உள்ள கருத்து தான் அனைத்து சிவாஜி ரசிகர்களின் கருத்தும். அனைவருடைய மனத்தாங்கலையும் வெளிப்படுத்தி தினமலருக்கு எழுதியமைக்கு உளமார்ந்த நன்றி.
Russelldwp
3rd November 2014, 07:58 PM
டியர் kc சார்
தங்களுடைய கடிதம் அனைத்து சிவாஜி ரசிகர்களின் உள்ள்க்குமுறலை அழகாக வெளிப்படுத்துகிறது.
பத்திரிகை தர்மம் என்பது துளி கூட இவர்களிடம் கிடையாது. பொய்யை மட்டுமே எழுதும் இவர்களின் போக்கு என்றுதான் மாறுமோ
ifohadroziza
3rd November 2014, 10:14 PM
திரு. சந்திரசேகர் அவர்களுக்கு மிக்க நன்றி.நமது இதய தெய்வம் சிவாஜி அவர்களஉண்மைக்கு புறம்பாக பழித்த யாரும் நல்லநிலையை அடைந்ததாக சரித்திரம் இல்லை.அவரைப்பற்றி நன்றாக எழுதும் போதே சில துஷ்டவார்த்தைககளை ஏன் தான் தினமலர் பயன்படுத்துகிறதோ..சிவாஜிஅவர்களை அரை மனதுடன்விழா கொண்டாட நினைத்தவர்களுக்கு தான் காங்கிரஸ் கட்சி கல்தா கொடித் திருக்கிறது.என்பதை புரிந்தால் சரி.
eehaiupehazij
3rd November 2014, 10:45 PM
கண்ணாடி வீட்டுக்குள் இருந்துகொண்டு கல்லெறியும் நாளிதழ் 'பண்ணாடி'யின்அறியாமை ! 'காகித'மலரில் மணத்தை எதிர்பார்ப்பது மடமை!கண்டிப்பது நம் கடமை!!
நடுநிலை நாளிதழ் என்னும் சுய தம்'பட்ட'த்திற்கு ஏற்ப நடுநிலை வகித்து நடிகர்திலகத்தை ரசிப்பதை விடுத்து ராசி எனும் மூடநம்பிக்கையை விஷவித்தாக மக்கள் மனதில் ஊன்றிவிட தினமலர் நாளிதழ் முனைவது சரியான பத்திரிகை தர்மம் அல்ல! பகுத்தறிவற்ற அதர்மம்!! பாரபட்ச அணுகுமுறைகளை பத்திரிகை விற்பனை உயர்வு வேண்டி அவிழ்த்துவிடுவது மல்லாந்து படுத்துக்கொண்டு துப்புவதற்கு ஒப்பாகும். கண்ணாடி வீட்டுக்குள் இருந்துகொண்டு கல்லெறிய முற்பட வேண்டாம். நடிகர்திலகத்தை இழிவுபடுத்தியவர்கள் கடலில் கரைத்த பெருங்காயமாகவும் காற்றிலே மறைந்த கற்பூரமாகவும் வீணாக காணாமல் போன வரலாறு இவர்களை திருத்தும் பாடமாகிட நடிகர்திலகமே 'நச்'சென்று உரைப்பதை பார்க்கட்டுமே!
https://www.youtube.com/watch?v=ePriq_xpWLo
ScottAlise
4th November 2014, 07:56 AM
Dear KCS Sir,
hats off to your immediate action and reply
JamesFague
4th November 2014, 10:35 AM
a recap of Mr Murali Srinivas old post
எங்க ஊர் ராஜா - Part I
தயாரிப்பு: அருண் பிரசாத் மூவீஸ்
இயக்கம் : பி.மாதவன்
வெளியான நாள் : 21 -10 --1968
சிவலிங்கபுரம் என்ற ஊரில் பெறும் தனவந்தராக வாழ்ந்து வருபவர் விஜயரகுநாத சேதுபதி. ரகுபதி பவனம் என்ற மாளிகைக்கு சொந்தக்காரர். யார் வந்து கேட்டாலும் இல்லை என்று சொல்லாமல் அள்ளிக் கொடுக்கும் வள்ளல். தனக்கு மிஞ்சிதான் தானமும் தர்மமும் என்று குடும்ப நண்பரின் அறிவுரைகளை கூட ஏற்க மறுத்து தன் வழியிலே செல்லும் தயாள மனமுடையவர். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தன் ஊர் ஏழைகளுக்கு தன் சொந்த செலவில் அதுவும் மார்வாடியிடம் ஒரு லட்சம் கடன் வாங்கி வீடுகள் கட்டிக் கொடுக்கும் மனமுடையவர். தன்னை நம்பி வந்தவர்களை காப்பாற்றுவது தன் கடமை என நினைப்பவர். தன் மனைவி, இரண்டு மகன்கள், ஒரு மகளோடு நிறைவான வாழ்க்கை வாழ்பவர். அவருக்கு கல்யாண வயதில் ஒரு தங்கை கௌரி.
சிவலிங்கபுரதிற்கு ஒரு வேலையாக வரும் காளையார்கோவில் ஜமின்தார் ராஜாங்கம் கோவிலில் வைத்து அந்த ஊரில் சேதுபதிக்கு இருக்கும் மதிப்பையும், அவர் பாட்டனார், தந்தையார் அனைவருமே பரம்பரை பரம்பரையாய் அந்த ஊரில் கொடி கட்டி பறந்தவர்கள் என்பதையும், சேதுபதி பெரும் சொத்துக்கு அதிபதி என்பதையும் தெரிந்துக் கொள்கிறார்.
ரகுபதி பவனதிற்கு வரும் ராஜாங்கம் சேதுபதியிடம் தன் மகனுக்கு அவரின் தங்கையை பெண் கேட்க சேதுபதியும் சம்மதிக்கிறார். நிச்சயதார்த்தம் நடக்கும் அன்று மணமகன் வீட்டார் அதிகப்படியாக சீர்வரிசை கேட்க சேதுபதியின் ஊர்கார்கள் சேதுபதியை பேச விடாமல் அவர்களே எல்லாவற்றிக்கும் சம்மதம் சொல்ல வேறு வழியின்றி சேதுபதியும் ஒத்துக் கொள்ள நேர்கிறது. கல்யாணத்தன்று தாலி கட்டி முடிந்ததும் ராஜாங்கத்தை தனியே அழைத்து பேசும் சேதுபதி சீர்வரிசை முழுவதும் செய்து விட்டதாகவும் ஆனால் ரொக்கப் பணம் ரூபாய் ஐம்பதினாயிரம் மட்டும் புரட்ட முடியவில்லை என்றும் அதற்கு பதிலாக தற்காலிகமாக தன் வீட்டு பத்திரத்தை வைத்துக் கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறார். இதை ஏற்றுக் கொள்ளாமல் கோவப்படும் ராஜாங்கம் அவரை அனைவரின் முன்னிலும் அவமானப்படுத்தி விடுகிறார். அது மட்டுமல்ல "கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியாத உனக்கெல்லாம் எதுக்கையா வல்லவட்டி" [தோளில் போடும் பட்டு அங்கவஸ்திதரத்தை கிராமங்களில் இப்படி கூறுவர்] என்று கேட்டு விட நிலை குலைந்து போகிறார் சேதுபதி.
மீண்டும் சேட்டிடமே சென்று மேலும் ஐம்பதினாயிரம் ரூபாய் கடனாக வாங்கி தன் தங்கையை அவள் கணவன் வீட்டிற்கு அழைத்து சென்று பணத்தையும் கொடுத்து அவளையும் ஒப்படைக்கிறார். ஆனால் அப்போதும் ராஜாங்கம் மரியாதை குறைவாக பேசிவிட "உன்னை விட அந்தஸ்த்தில் உயர்ந்து மீண்டும் இழந்த என் செல்வத்தையெல்லாம் மீட்டு உன் முன்னால் வருவேன். அதுவரை இந்த வல்லவட்டியை போட மாட்டேன், அதையும் உன் கையாலே எனக்கு போட வைப்பேன் என்று சபதம் செய்கிறார் சேதுபதி. ஆனால் கொடுத்த ஒன்றரை லட்ச ரூபாய் கடனை கேட்டு சேட் வீட்டிற்கு வர சேதுபதி கோவப்படுகிறார். ஆனால் சேதுபதியின் மனைவி சிவகாமி வீட்டு பத்திரத்தை கொடுத்து விடுவதாக சொல்லி அனுப்புகிறாள். கணவன் மனதளவில் தளர்ந்திருப்பதை பார்த்துக் கொண்டே படி இறங்கும் சிவகாமி தலை சுற்றி விழுந்து விட மரணப் படுக்கையில் கிடக்கும் அவள் குழந்தைகளை சேதுபதியிடம் ஒப்படைத்துவிட்டு இறந்து விடுகிறாள். மனைவி இறந்து விட்டாள் என்ற செய்தியை சொல்லி தங்கையை அழைக்க செல்லும் சேதுபதியிடம் உங்கள் வீட்டிற்கு நான் வர மாட்டேன் என தங்கை சொல்லிவிட மனம் உடைந்த சேதுபதி, மனைவியின் இறுதி சடங்குகளை முடித்து விட்டு குழந்தைகளையும் கூட்டிக் கொண்டு ரயில் ஏறி சென்னை புறப்படுகிறார். சேதுபதி் எப்போது பணத்துடன் வந்தாலும் வீட்டை அவரிடம் ஒப்படைப்பதாக சொல்லி சேட் ரகுபதி பவனத்தை பூட்டி வைக்கிறார்.
சென்னையில் ஒரு அச்சகத்தில் வேலைக்கு சேரும் சேதுபதி தன் இரண்டு மகன்களையும் வேலைக்கு அனுப்பிகிறார். மூத்த மகன் பூபதி ஒரு கட்டுமான நிறுவனத்தில் கூலி தொழிலாளியாக வேலைக்கு சேர்ந்து அங்கே சூபர்வைசர் நிலைக்கு உயருகிறான். இளைய மகன் சக்ரவர்த்தி ரயில் நிலையத்தில் போர்ட்டராக சேர்ந்து Guide ஆக வேலை செய்கிறான். தங்கள் லட்சியத்தில் வெற்றி பெறும் வரை எந்த சுக போகத்திலும் ஈடுபடுவதில்லை என மூவரும் உறுதி எடுத்துக் கொள்கின்றனர்.
பூபதி வேலை பார்க்கும் கட்டுமான நிறுவனத்தின் முதலாளியின் மகள் கீதா. அவளுக்கும் பூபதிக்கும் ஏற்படும் ஈகோ மோதல் பின் காதலில் முடிகிறது. Guide வேலை செய்யும் சக்ரவர்த்தி ரயில் நிலையத்தில் வைத்து சந்தித்த விஜயபுரம் ராணியை லாட்ஜில் தங்க வைத்து பணிவிடை செய்கிறான். அவளிடம் தங்கள் மாளிகையை மீட்க பணம் கேட்க அவளும் தருவதாக சொல்கிறாள்.
இதற்கு நடுவே ஊரில் சேதுபதியின் தங்கையின் கணவர் இறந்து விட தன் மகனுடனும் மாமனார் ராஜங்கத்துடனும் வாழ்ந்து வரும் கௌரி தன் மகனை தன் அண்ணன் மகளுக்கு மனம் முடிக்க வேண்டும் என விரும்புகிறாள். ராஜாங்கம் அதை எதிர்த்தாலும் கூட விடாமல் சேதுபதிக்கு கடிதம் போடுகிறாள்.கடிதம் ஒவ்வொரு முறையும் பூபதி கையில் கிடைக்க தன் தாயின் சாவிற்கு வராத அத்தை மேல் ஆத்திரமாக இருக்கும் பூபதி அதை கிழித்து எறிந்து விடுகிறான். ஒரு முறை அவன் கிழிக்க முற்படும்போது சேதுபதி பார்த்து விட அதை வாங்கி படித்து பார்க்க தன் மகனுக்கு அண்ணன் மகள் விஜயாவை பெண் கேட்டு கௌரி எழுதியிருப்பதை படித்துவிட்டு சிறிது சஞ்சலம் அடைய பூபதியின் கோவம் மற்றும் வற்புறுத்தல் காரணமாக ஏற்கனவே பொருத்தம் பார்த்திருந்த பையன் வீட்டாரை வர சொல்கிறார். இந்த பெண் பார்க்கும் விஷயம் கௌரிக்கு மொட்டை கடுதாசியாக போக அதே நாளில் அவள் சென்னைக்கு கிளம்பி வருகிறாள்.
பெண் பார்க்கும் படலத்திற்கு பூபதி வீட்டிற்கு வரும் கீதா, மணப்பெண் விஜயா தன் அத்தை மகனை மணக்க விரும்புகிறாள் என்பதை தெரிந்துக் கொள்கிறாள். பையன் வீட்டார் வந்து அமர்ந்திருக்க அப்போது அங்கே வரும் கௌரி தன் மகன்தான் முறை மாப்பிளை ஆகவே அவனுக்குத்தான் கல்யாணம் செய்துக் கொடுக்க வேண்டும் என சொல்ல பையன் வீட்டார் வெளியேறுகின்றனர். இதை கண்டு கோபமடையும் பூபதி எங்க அம்மா இறப்பிற்கு வராத நீங்க இப்போ எப்படி சம்பந்தம் பேச வரலாம் என்று கேள்வி கேட்க அன்று நடந்தவற்றை கௌரி வெளியில் சொல்கிறாள். அன்று அண்ணியின் இறப்பிற்கு சென்றால் இனி திரும்பி வரவே வேண்டாம் என்று தன் மாமனார் ராஜாங்கம் மிரட்டியதை சொல்கிறாள். அதனால்தான் அன்று வர மறுத்ததாகவும் கூறுகிறாள். இதை கேட்டு சேதுபதி சமாதானம் அடைந்தாலும் பூபதியால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. சிறிது அவகசாம் வேண்டும் என்றும் அதன் பிறகு இந்த கல்யாணத்தைப் பற்றி பேசலாம் என்று சேதுபதி சொல்லி விடவே கௌரி திரும்பி செல்கிறாள்.
கீதா பூபதியோடு சுற்றுவதை கண்டிக்கிறார் கீதாவின் தந்தை. அவரை எதிர்த்துக் கொண்டு கீதா வீட்டை விட்டு வெளியேறி பூபதியுடன் அவன் வீட்டிற்கு செல்கிறாள். சேதுபதி முதலில் தயங்கினாலும் பின் கீதா தங்குவதற்கு ஒப்புக் கொள்கிறார்.
இந்நிலையில் சேதுபதியின் பழைய வேலையாள் ஒருவன் சேதுபதியை தேடி வர அவனிடம் தன் மகள் என்று கீதாவை சேதுபதி அறிமுகப்படுத்த அவனோ அந்த என்ன எஜமான் உங்க தங்கச்சி மகளை உங்க மகள்னு சொல்றீங்களே என கேட்டு விட அனைவருக்கும் அதிர்ச்சி. அப்போதுதான் தெரிய வருகிறது கீதா சேதுபதியின் தங்கை கௌரி நாச்சியார் மகள் என்பதும் பூபதி வேலை செய்யும் நிறுவனத்தின் முதலாளி கீதாவின் தந்தை அல்ல, பெரிய தந்தை என்பதும் இங்கே நடக்கும் விஷயங்களை எல்லாவற்றையும் கீதா மொட்டை கடுதாசி மூலமாக தன் தாயாருக்கு தெரிவித்திருக்கிறாள் என்பதும் தெரிய வருகிறது. கீதா அந்த வீட்டை விட்டு வெளியேறுகிறாள்.
இதற்கிடையில் விஜயபுரம் ராணி என தான் கூட்டி வந்த பெண் ராணி அல்ல என்று சக்ரவர்த்தி நம்பும் சூழ்நிலை ஏற்படுகிறது. அவன் அவளை ஒரு குடிசையில் தங்க வைக்க அங்கே அவளை தேடி வரும் ஒருவர் சக்ரவர்த்தி மூலமாக அவள் இருக்குமிடத்தை அடைகிறார். அவள் உண்மையிலே விஜயபுரம் ராணி என்பதையும் அவளின் சொத்துகளை வைத்து அனுபவித்துக் கொண்டிருந்த அவள் மாமனுக்கு அந்த சொத்தில் உரிமையில்லை என நீதிமன்ற தீர்ப்பு வந்து விட்டதையும் தெரிவிக்கவே வந்ததாக கூறுகிறார். ரகுபதி பவனத்தை மீட்பதற்கு தேவையான பணத்தை தான் தருவதாக கூறுகிறாள்.
இவை எல்லாம் ஒருபுறம் நடந்துக் கொண்டிருக்க சேதுபதியின் மனமெல்லாம் ரகுபதி பவனத்தை மீட்பதிலேயே இருக்கிறது. பழைய சேட் சேதுபதிக்கு ஒரு கடிதம் அனுப்புகிறான். தன் இத்தனை வருடங்கள் சேதுபதிக்காக காத்திருந்ததாகவும் ஆனால் பல வருடங்கள் ஆகி விட்டபடியால் அந்த மாதம் குறிப்பட்ட தேதி மற்றும் நேரத்துக்குள் பணத்தை கொண்டு காட்ட வேண்டும் என நோட்டீஸ் அனுப்புகிறான். அந்த நேரம் அவர் வேலை செய்யும் அச்சகத்தில் தனது ஊரை சேர்ந்த ஒரு இளைஞனை சந்திக்கிறார். அவன் சொத்தின் பேரில் கடன் வாங்கி தரும் தொழிலை செய்துக் கொண்டிருப்பதை அறிந்த சேதுபதி தனது வீட்டை மீட்பதற்கு அவனிடம் ரூபாய் ஐம்பதினாயிரம் வாங்கி தருமாறும் நம்பிக்கைக்கு தான் சேர்த்து வைத்திருக்கின்ற ஒருள் லட்ச ரூபாயை காண்பிப்பதாகவும் சொல்ல, அந்த நபர் அந்த பணத்தை எடுத்துக் கொண்டு தன் முதலாளியை சந்திக்க ஒரு பங்களாவிற்கு மாலையில் வருமாறு சொல்லி விட்டு சொல்கிறான். அதன்படி அங்கே செல்லும் சேதுபதியை ஒரு முதலாளி சந்திக்கிறார். பணத்தையும் கைமாற்றாக கொடுக்கிறார்.
வீட்டிற்கு சந்தோஷத்துடன் வரும் சேதுபதி மகன்கள் இருவரிடமும் விஷயத்தை சொல்கிறார். பெட்டியை ஆவலுடன் திறந்து பார்த்தால் நோட்டுக் கற்றைகளில் மேலேயும் கிழேயும் மட்டும் பண தாள்கள், மற்றவை அனைத்தும் வெள்ளை தாள்கள். ஏமாந்து விட்டோம் என அறியும் சேதுபதியின் மனம் நொறுங்க அதற்கு மேலும் ஒரு அடியாக இத்தனை நாள் சேமித்த பணம் போய்விட்டதே என்கின்ற கோவத்தில் தந்தையை மகன்கள் இருவரும் கடிந்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறுகின்றனர்.
தன் மகள் மட்டும் போதும் என சொல்லும் சேதுபதி சேட் குறிப்பிட்ட தேதிக்கு முன் சிவலிங்கபுரதிற்கு சென்று சேர வேண்டுமே என்று ஓடோடி செல்கிறார். வழியில் பல தடைகளையும் கடக்கும் அவர் சேட்டிடம் பணத்தை கொடுத்து சாவியை பெற்றுக் கொண்டு ரகுபதி பவனம் செல்கிறார். அங்கே தன் பழைய மாளிகைக்குள் நுழைந்து பழைய கம்பீரத்தோடு வளைய வரும் நேரத்தில் அவரின் மனசாட்சி அவரை குத்துகிறது. நீ ஏமாந்தது போல் சேட்டையும் பணம் என்ற பெயரில் வெள்ளை தாள்களை கொடுத்து ஏமாற்றி விட்டாயே என சத்தம் போடும் மனசாட்சிக்கு பதில் சொல்ல முடியாமல் அவர் தடுமாற அந்த நேரத்தில் அங்கே சேட்டும் வந்து விடுகிறார். சேதுபதி சேட்டிடம் பணம் என்று சொல்லி உன்னை வெள்ளை தாள்கள் கொடுத்து ஏமாற்றி விட்டேன் என்று சொல்ல, சேட்டோ புரியாமல் இல்லையே எல்லாம் உண்மையான நோட்டுகள்தானே இருந்தது என்று பதிலளிக்க சேதுபதி அதிர்ச்சி அடைகிறார். அந்நேரம் அங்கே வரும் அவரின் மூத்த மகன் பூபதி அவரை ஏமாற்றியவனை தான் கண்டு பிடித்ததையும் உண்மையான பணத்தை திருப்பி வாங்கியதையும் அதை தன் தங்கை மூலமாக பெட்டியில் வைத்ததையும் ஆக சேதுபதி கொடுத்த பணம் அவர் பணம்தான் என்ற உண்மையை சொல்ல அது மட்டுமல்ல ஆளை அனுப்பி சேதுபதியை ஏமாற்றியது ராஜாங்கம்தான் என்ற உண்மையையும் வெளிப்படுத்துகிறான்.
அங்கே வரும் ராஜாங்கம் தன் தவறுகளை ஒப்புக் கொண்டு மன்னிப்பு கோர, சேதுபதியிடம் தான் தோற்றதை ஒப்புக் கொண்டு தன் கையாலே வல்லவட்டியை சேதுபதியின் தோளுக்கு சூட எல்லாம் நலமாய் முடிகிறது.
JamesFague
4th November 2014, 10:35 AM
எங்க ஊர் ராஜா - Part II
தமிழ் திரையுலக இயக்குனர்கள் வரிசையில் பி.மாதவனுக்கு ஒரு தனியிடம் உண்டு. இயக்குனர் T.R. ராம்நாத் அவர்களிடமும் பின்பு ஸ்ரீதரிடமும் உதவியாளாராக இருந்து மணி ஓசை மூலம் இயக்குனரானவர் மாதவன். அந்த படம் சரியாக போகவில்லை என்ற நிலையில் சற்று சோர்ந்து போயிருந்த போது அவரை அழைத்து அன்னை இல்லம் படத்தை டைரக்ட் செய்ய சொன்னார் நடிகர் திலகம். அந்த படம் 100 நாட்கள் ஓடி பெரிய வெற்றியைப் பெற்றது. அடுத்த படத்திற்காக மாற்று முகாமிற்கு மாதவன் சென்றாலும் அங்கே உறவு நீடிக்கவில்லை. மீண்டும் நீலவானம் மூலமாக நடிகர் திலகம் காம்பிற்கே திரும்பி வந்தார். அதன் பிறகு ஜெய்சங்கரை வைத்து சில படங்கள் இயக்கினார்.
அந்த நேரத்தில் சொந்தமாக படம் தயாரிக்க வேண்டும் என்று விரும்பி அவர் ஆரம்பித்த நிறுவனம்தான் அருண் பிரசாத் மூவீஸ். நடிகர் திலகத்திடம் கால் ஷீட் வாங்கி தானே தயாரிப்பளார் இயக்குனர் வேலைகளை ஏற்றுக் கொண்டு அவர் செய்த படம்தான் எங்க ஊர் ராஜா. மாதவனின் ஆஸ்தான கதை வசனகர்த்தா பாலமுருகன். நடிகர் திலகம் பி மாதவன் பாலமுருகன் கூட்டணி பல வெற்றிப்படங்களை தந்துள்ளது, அந்த கூட்டணியின் முதல் படம் எங்க ஊர் ராஜா.
நடிகர் திலகத்தைப் பொறுத்தவரை சேதுபதி, பூபதி என்ற இரண்டு வேடங்கள் என்றபோதிலும் சேதுபதிதான் எல்லோர் மனங்களிலும் இடம் பிடிப்பவர். இதில் சேதுபதி ரோலில் இரண்டு கெட் அப். முதலில் நடுத்தர வயதை தொட்டுக் கொண்டிருக்கும் இளமை பின் வயது வந்த மூன்று பிள்ளைகளுக்கு தந்தை என்ற முதுமை.[படம் வெளி வருவதற்கு முன் ஒட்டப்பட்ட போஸ்டர்களில் மூன்று கெட்-அப்களில் நடிகர் திலகத்தை சித்தரிக்கப்பட்டிருந்தார். எனவே படத்தில் நடிகர் திலகம் மூன்று வேடங்களை ஏற்கிறாரோ என்று வரை ஒரு சந்தேகம் ரசிகர்களிடையே இருந்தது].
முதல் காட்சியில் பூஜையறையில் தெய்வத்தை வழிப்படும் சேதுபதி முதல் இறுதிக்காட்சியில் தன் லட்சியத்தில் வெற்றிக் கொண்டு ஆர்ப்பரிக்கும் சேதுபதி வரை நடிகர் திலகம் பிச்சு உதறியிருப்பார். முதலில் அவருக்கே உரித்தான அந்த மிடுக்கு, ஊர் மக்களிடம் காட்டும் அன்பு, கல்யாண நிச்சயத்தின்போது தன் நிலை தெரியாமல் ஊர்காரர்கள் வரதட்சனை வாக்குறுதிகளை அள்ளி வீச அதை தடுக்க முடியாமலும் அதே நேரத்தில் தன் ஜமீனின் அந்தஸ்து மற்றவர்கள் முன்னில் குறைந்து போய் விடக்கூடாது என்ற தவிப்பும் கல்யாணத்தன்று சொன்ன ரொக்க பணம் தரவில்லையென்று தன்னை அவமானப்படுத்தும் நம்பியாரிடம் தன் நிலைமையை சொல்லும் போது கூட ஒரு கட்டத்திற்கு மேல் தன்னை தாழ்த்திக் கொள்ளாமல் பேசும் அந்த தோரணை, ஊர் தெருக்களில் மதிப்போடு சாரட் வண்டியில் வந்த போது தன்னை கைகுவித்து வணங்கிய மக்கள் கல்யாணத்தன்று நடந்த நிகழ்ச்சிக்கு பிறகு அதே தெருவில் தன்னை பரிகாசம் செய்யும் போது மனதுக்குள் மருகும் அந்த பார்வை, அந்த கஷ்டத்தோடு அருமை மனைவி இறந்து போகும் போது காட்டும் அந்த முகபாவம் [அதிகப்படியாக செய்வார் சிவாஜி என்பது எப்படி காலம் காலமாக பரப்பப்பட்டு வந்த அவதூறு என்பது இந்த காட்சியை பார்பவர்களுக்கு புரியும்], தன் மனைவி இறந்ததை தங்கையிடம் சொல்ல போக அவள் உங்கள் வீட்டிற்கு வர மாட்டேன் என சொல்லிவிட அந்த பதிலால் தளர்ந்து போய் திரும்புவது, சென்னைக்கு வந்து அச்சகத்தில் வேலை செய்யும் போது அந்த உடல் மொழியை அப்படியே பவ்யமாக மாற்றுவது, சம்பள பணம் மொத்ததையும் புதிய உடை வாங்குவதற்கு செலவழித்து விட்டான் மகன் என்றதும் வரும் கோபம், அப்பாவின் திட்டை கேட்டு மகன் முகம் வாடி உள்ளே போக தனக்கு தானே பேசிக் கொள்ளும் அந்த உணர்வுகள் [சின்ன பையன், நீ அவனுக்கு டிரஸ் வாங்கி தரணும் ஆன நீ செய்யலை, சரி அவனே வாங்கிகிட்டான்.அதிலே என்ன தப்பு?], தன் பிள்ளைகள் தன் 60 வது பிறந்த நாளை கொண்டாட அதில் மீசையை முறுக்கியபடி அமர்ந்திருக்கும் கம்பீரம், கிழவன் என்று மகன் சொன்னதும் பீறிட்டு வரும் கோபம், பழைய வேலைக்காரன் தன் வெள்ளிப்பூண் கைதடியை கொண்டுவர அதை ஆசையோடு தடவிப் பார்க்கும் அந்த குழந்தைத்தனம், அச்சகத்தில் தன்னை தற்செயலாக பார்க்கும் நம்பியார் தன் சவாலை குறிப்பிட்டு கேலி செய்ய பதில் சொல்லாமல் காறி உமிழும் அந்த உக்கிரம், பணம் கைக்கு வரப்போகிறது என்றதும் வரும் அந்த பரபரப்பு, பணம் தருவதாக சொல்லி தன்னை ஏமாற்றி விட்டார்கள் என்று தெரிந்தவுடன் வரும் அந்த இயலாமை கலந்த கோபம், மகன்கள் தன்னை விட்டுப் போகிறார்கள் என்றதும் வரும் விரக்தி, பணத்தை குறிப்பிட்ட காலத்திற்கு முன் கொண்டு சேர்க்க அவர் காட்டும் அந்த வேகம், சேட்டை ஏமாற்றி விட்டோம் என்ற குற்ற உணர்வு மனதை உறுத்த, சேட்டிடம் தயக்கதோடு பேசும் அந்த முகம், தான் தவறு செய்யவில்லை என்றதும் வரும் அந்த வெற்றிக் களிப்பு, இப்படி காட்சிவாரியாக சொல்லிக் கொண்டே போகலாம்! அப்படி ஒரு பவர்புல் performance படம் முழுக்க பார்க்கலாம் நடிகர் திலகத்திடம்.
படத்தின் முத்தாய்ப்பான காட்சி. மகன்கள் இருவரும் கோபித்துக் கொண்டு சென்று விட இரண்டு கை தட்டினா சத்தம்னு சொன்னேன். ஆனா இப்போ சொல்றேன் ஒரு கை தட்டினாலும் சத்தம் வரும் என்று சொல்லி விட்டு ஒரு கையால் மற்றொரு கையை தட்டுவது, தொடையை தட்டுவது, தோளை தட்டுவது என்று தன் மன உறுதியை வலிமையை வெளிக்காட்டும் அந்த காட்சி, எந்த சூழ்நிலையிலும் தன் லட்சியத்தை அடைய வேறு யார் தயவும் தேவையில்லை என்பதை பொங்கி வரும் வெள்ளமாக யாரை நம்பி நான் பொறந்தேன் போங்கடா போங்க என்று சீறி பாய்வாரே அது படத்திற்கே சிகரமான காட்சி.
இப்படிப்பட்ட சேதுபதி பாத்திரத்திற்கு முன்பு பூபதி எடுபடுவது கடினமான காரியம்தான். ஆனால் அதுவும் நடிகர் திலகம் ஆயிற்றே! விட்டுக் கொடுத்து விடுவாரா என்ன? இளமை ததும்பும் அந்த பாத்திரத்தை நளினமாக கையாண்டிருப்பார். இந்த பாத்திரப் படைப்பு இந்த படம் வெளி வந்த ஒரு வருடத்திற்கு பின் வெளி வந்து சரித்திரம் படைத்த தெய்வ மகன் விஜய் பாத்திரத்திற்கு ஒரு ஒத்திகை என்றே சொல்லலாம். அதிலும் சிவாஜி-ஜெயலலிதா சம்பந்தப்பட்ட காட்சிகள் அந்த எண்ணத்தை வலுப்படுத்தும். இந்த பாத்திரத்தில் அவர் ஸ்கோர் செய்யும் நான்கு காட்சிகளை குறிப்பிட வேண்டும். ஜெஜெ வீட்டில் இருவரும் பேசிக் கொண்டிருக்கும் போது உங்க அப்பா இப்போ வரமாட்டாரே இப்போ வரமாட்டாரே என்று சொல்லிக் கொண்டே நெருங்கி சென்று விட்டு காப்பி கிடைக்குமா என்று வழிவது, கோட் சூட் உடைக்காக சம்பள பணத்தை செலவு செய்ததை தந்தை கண்டித்தவுடன் உடையை கழட்டி கையில் எடுத்துக் கொண்டு திருப்பிக் கொடுத்து விடுகிறேன் என்று மன்னிப்பு கேட்பது, தந்தையின் 60-வது பிறந்த நாளன்று கிராமிய பாணியில் வேட்டி கட்டிக் கொண்டு கழுத்தில் புலி நக செயினை அணிந்துக் கொண்டு ஆடுவது [அந்தக் காட்சியில் அவ்வளவு handsome -ஆக இருப்பார்], தந்தை ஏமாந்து விட்டாரே என்ற கோபத்தில் கிழவன் என்ற வார்த்தையை சொல்லுவது, இவை அந்த பாத்திரத்திற்கு வலு சேர்க்கும். அதை தவிர ராணியின் சொத்து வரப் போகிறது என்று கனவு காணும் நாகேஷிடம் டி.கே.பட்டம்மாள் பாட்டு ஒண்ணு இருக்கு தெரியுமா என்று அவருக்கே உரித்தான subtle நகைச்சுவையை வெளிப்படுத்துவது, கிளைமாக்ஸ்-ல் நம்பியாரிடம் எங்க அப்பா கிட்டே உனக்கெல்லாம் எதுக்கு வல்லவெட்டி-னு கேட்டீங்களாமே என்று சீறுவது, இவற்றையும் சேர்த்துக் கொள்ளலாம்.
படத்தில் ஒரு சிவாஜி இருந்தாலே மற்றவர்கள் பாடு திண்டாட்டம். இங்கே இரண்டு சிவாஜி. அனைவருமே also ran வகைதான். இதில் சற்று வித்தியாசம் காட்டுபவர் நம்பியார் மட்டுமே. சாதாரணமாக வரும் கையை பிசையும் முகத்தை உருட்டும் மானரிசங்கள் இல்லாமல் செய்திருப்பார். சவால் காட்சியில் கூட இயல்பான தன்மை இருக்கும் ["இந்த வீராப்புக்கு ஒண்ணும் குறைச்சலில்லை. வாக்கு மாற மாட்டான் இந்த சேதுபதி-னு சொன்னியேயா"].
அந்தக் காலக் கட்டத்தில் ஜெயலலிதா நடித்த படங்களை பார்த்தோம் என்றால் பெரும்பாலான படங்களில் அவர் பணக்கார வீட்டு பெண்ணாக, திமிர் பிடித்தவராக ஆண்களை மட்டம் தட்டுபவராகவே சித்தரிக்கப்பட்டிருப்பார். ஆரம்பக் கட்டங்களில் இந்த படத்திலும் அப்படித்தான் என்ற போதிலும் சேதுபதியின் தங்கை மகள்தான் அவர் என்ற ட்விஸ்ட் வந்ததும் பாத்திர தன்மை மாறும். ஆனால் அதற்கு பின் படத்தில் அவருக்கு வாய்ப்பு குறைந்து விடும்.
நாகேஷ் மனோரமா காமடி படத்திற்கு எந்த வகையிலும் உதவி செய்யாதது மட்டுமல்ல சில காட்சிகள் படத்திற்கு ஒரு சின்ன தொய்வை ஏற்படுத்தி விடும். ரகுபதி பவனத்தை மீட்க பணம் கேட்கும் நாகேஷிடம் தருகிறேன் என்பதை கை அசைவிலேயே மனோரமா ஒத்துக் கொள்ள பின்னர் அவர் ராணி அல்ல என்று சூழல் வந்தவுடன் நாகேஷ் புலம்பும் ஒரு காட்சி மட்டுமே சற்று ஆறுதல் [பணம் வேணும்னு கேட்டதற்கு எப்படி கையை அசைச்சே? பெரிய சிவாஜி கணேசன்-னு நினைப்பு]. சிறப்பு தோற்றமாக இருந்தாலும் சௌகார் படம் முழுக்க வருவது போல ஒரே பீலிங். காரணம் அவரின் போட்டோ அநேகமாக அனைத்துக் காட்சிகளிலும் பிரேமில் இடம் பெறுவதால் இருக்கலாம். இரவும் பகலும் வசந்தா சேதுபதியின் தங்கை கௌரி நாச்சியாராக மெயின் ரோலில் வருகிறார்.
முதலில் சொன்னது போல் கதை வசனம் பாலமுருகன். கிராமத்து பின்னணியில் திரைக்கதை அமைப்பதில்தான் தன் பலம் அடங்கியிருக்கிறது என்பதை தெரிந்து வைத்திருந்த பாலமுருகன் அந்த பார்முலாவை இங்கே நன்றாக பயன்படுத்தியிருப்பார். அது போல உணர்ச்சிமிக்க கதை சந்தர்ப்பங்களை உருவாக்கி அதை கிளைமாக்ஸ்-ல் உணர்ச்சி குவியலாக முடிப்பதன் மூலமாக மக்களை கவர முடியும் என்பதனை நடிகர் திலகத்தை வைத்து இதற்கு முன்னால் எடுத்த அன்னை இல்லம், நீலவானம் படங்களின் மூலமாக தெரிந்துக் கொண்ட மாதவன் இந்தப்படத்திலும் அதையே கையாண்டிருந்தார். படத்தை நடிகர் திலகம் single handed ஆக முன்னெடுத்து செல்ல மாதவனின் வேலை எளிதானது.
JamesFague
4th November 2014, 10:36 AM
எங்க ஊர் ராஜா - Part III
கண்ணதாசன் விஸ்வநாதன் கூட்டணியில் பாடல்கள் எல்லாம் பிரபலம்.
1. அத்தைக்கு மீசை வச்சு - எல்.ஆர்.ஈஸ்வரி.
ஜெயலலிதா தன் தோழியருடன் சேர்ந்து பாடும் பாடல். இந்தப் பாடலின் முடிவில்தான் நடிகர் திலகத்துடன் ஜெஜெ மோதுவது ஆரம்பிக்கும்.
2. என்னடி பாப்பா சௌக்கியமா - டி.எம்.எஸ்.
தன்னை அவமானப்படுத்திய ஜெஜெவிற்கு ஒரு பாடம் கற்று கொடுப்பதற்காக அவரை ஆசை வார்த்தை பேசி அழைத்து நீச்சல் குளத்தில் நீந்த வைத்து அவர் அணிந்து வந்த உடைகளை எடுத்து வைத்துக் கொண்டு தரமாட்டேன் என பாடும் பாடல். தற்போதைய அரசியல் சூழலை எல்லாம் விட்டு விடுங்கள். அப்போதே [1968-ல்] இந்தப் பாடலில் ஒவ்வொரு சரணத்தின் முடிவிலும் வரும் நீ ஒரு பெண் பிள்ளை நானொரு ஆண் பிள்ளை வென்றவர் யாரடியோ என்ற வரிக்கு தியேட்டரில் கைதட்டல் விசில் பறக்கும்.
3. பரமேஸ்வரி ராஜேஸ்வரி, ஜகதீஸ்வரி -- டி.எம்.எஸ் சுசிலா.
எம்.எஸ்.வி சில நேரங்களில் ஒரே பாடலில் slow beats மற்றும் fast tune களை பயன்படுத்தி இசையமைத்திருப்பார். அந்த வகையை சேர்ந்தது இந்தப் பாடல். சாரதா அடிக்கடி குறிப்பிடுவது போல ஒரு படத்தில் extraordinaryயாக ஒரு பாடல் அமைந்து விட்டால் அதே படத்தில் வேறு சில நல்ல பாடல்கள் கூட பெற வேண்டிய புகழை பெறாமல் போய் விடும். பரமேஸ்வரி பாடலை அந்த வகையிலும் சேர்க்கலாம். ஈஸ்வரியின் ரேஞ்சு பாடலை சுசிலா அனாயசமாக பாடியிருப்பார். பூபதி என்ற பாத்திரத்தின் குழந்தைத்தனமான காதல் தவிப்பை நடிகர் திலகம் அழகாய் வெளிப்படுத்தியிருப்பார். அதிலும் பீச்சிலே போய் பீச்சிலே போய் என்ற வரி பாடும் போது அது தூக்கலாய் தெரிய பதிலுக்கு சுசிலா பாச்சிலர் பாய் பாச்சிலர் பாய் என்று பதிலுக்கு பாடும் போது ரசிக்க முடியும்.
4. ஏழுகடல் சீமை அதை ஆளுகின்ற நேர்மை - டி.எம்.எஸ் - சுசிலா
சேதுபதியின் 60-வது பிறந்த நாளன்று பாடும் பாடல். ஏற்கனவே சொன்னது போல நடிகர் திலகம் இளமையாக சிக்கென்று இருப்பார். இதிலும் சுசிலா பின்னியிருப்பார். அதிலும் ரெண்டு வெள்ளி கொலுசுகள் துள்ளி குதிக்குது பொறந்த நாளையிலே என்ற வரியில் பொறந்த நாளையிலே என்பதை ஒரு folk பாணியில் அவர் உச்சரிக்கும் இடம் பிரமாதமாக இருக்கும். பாடல் முடிவில் விழா நாயகன் சேதுபதியே எழுந்து ஆட ரசிகர்களின் உற்சாகத்திற்கு கேட்க வேண்டுமா!
5. யாரை நம்பி நான் பொறந்தேன் - டி.எம்.எஸ்.
படத்தின் உயிர் நாடியான பாடல். கவியரசர்- மெல்லிசை மன்னர் - டி.எம்.எஸ். நடிகர் திலகம் கூட்டணியில் வெளி வந்த சூப்பர் டூப்பர் ஹிட் பாடல்களில் ஒரு தனியிடம் இந்த பாடலுக்கும் உண்டு. நடிகர் திலகத்தின் பங்களிப்பு பற்றி ஏற்கனவே பார்த்தோம். கண்ணதாசன் அற்புதமாக எழுதியிருப்பார். அதிலும் தேவையான நேரங்களில் உறவுகள் உதவி செய்யாமல் கைவிடுவது பற்றிய சூழல் என்றால் கவியரசரின் பேனா மடை திறந்த வெள்ளம் போல் சீறி பாயும். குறிப்பாக
தென்னையை பெத்தா இளநீரு
பிள்ளையைப் பெத்தா கண்ணீரு
பானையிலே சோறு இருந்தா பூனைகளும் சொந்தமடா
சோதனையை பங்கு வெச்சா சொந்தமில்லே பந்தமில்லே
போன்ற வரிகள் சாகவரம் பெற்றவை. இந்தப்படம் இந்தியில் தில் கா ராஜா என்ற பெயரில் தயாரிக்கப்பட்ட போது மாதவனே இந்தியிலும் இயக்கினார். பாடல் எழுத வந்த ஆனந்த் பக் ஷி தென்னையை பெத்தா இளநீரு வரிகளுக்கு எவ்வளவு முயன்றும் தமிழில் வந்த அந்த உணர்வை கொண்டு வர முடியவில்லை என்பது வரலாறு.
எளிமையான ஆனால் வலிமையான வரிகளுக்கு அதே போல் மெல்லிசை மன்னர் எளிமையாய் போட்டிருந்த ட்யுன் மக்கள் மனதில் நிரந்தர இடம் பிடித்தது. இந்த பாடலின் உள்ளார்ந்த அனைத்து உணர்வுகளையும் தன் வெண்கல குரலின் பாவத்தில் வெளிக் கொணர்ந்து டி.எம்.எஸ். மெருகேற்ற வழக்கம் போல் தன் நடிப்பால் அனைத்து கைதட்டல்களையும் நடிகர் திலகம் அள்ளிக் கொண்டு போனார்.
படம் 1968 அக்டோபர் மாதம் 21-ந் தேதி தீபாவளியன்று வெளியானது. அந்த நேரத்தில் நடிகர் திலகத்தின் படங்களே எப்படி போட்டியாக வந்தது என்பதைப் பற்றி லட்சுமி கல்யாணம் விமர்சனத்தில் சொல்லியிருந்தோம். அதன் சுருக்கம் மீண்டும்.1968-ம் ஆண்டு ஜூலை 27 அன்று வெளியான தில்லானா மிக வெற்றிகரமாக 86 நாட்களை கடக்கும் போது தீபாவளியன்று எங்க ஊர் ராஜா வெளியானது. எங்க ஊர் ராஜா வெளிவந்து 25 நாட்களே ஆகியிருந்த நிலையில் நவம்பர் 15 அன்று லட்சுமி கல்யாணம் வெளியானது. அதற்கு அடுத்த 14 நாட்களில் உயர்ந்த மனிதன் வெளியானது. ஆக ஒரே நேரத்தில் நான்கு சிவாஜி படங்கள் ஓடிக் கொண்டிருக்கின்றன.
மதுரையில் சிந்தாமணியில் தில்லானா, நியூசினிமாவில் எங்க ஊர் ராஜா, ஸ்ரீதேவியில் லட்சுமி கல்யாணம் சென்ட்ரலில் உயர்ந்த மனிதன். அந்த போட்டியிலும் வெற்றிகரமாக ஓடியது எங்க ஊர் ராஜா. சென்னையில் 85 நாட்கள், மதுரை, திருச்சி, சேலம் போன்ற நகரங்களில் 72 நாட்கள் ஓடிய இப்படம் 1969 ஜனவரி 1 அன்று வெளியான நடிகர் திலகத்தின் அன்பளிப்பு படத்திற்காக பல ஊர்களிலும் மாறிக் கொடுக்க வேண்டுய சூழ்நிலை. கோவையில் 9 வாரங்களையும் கடந்தது. சென்னையிலும் மதுரையிலும் ஷிப்டிங்கில் 100 நாட்களை கடந்தது இந்தப் படம்.
படத்தில் சேதுபதி தன் குழந்தைகளை சைக்கிளில் வைத்து ஒட்டி செல்லும் போது வேறொரு சைக்கிள் அவரை முந்த முயற்சிக்க தனி ஆளாக செல்லும் அந்த நபரை குழந்தைகளோடு செல்லும் சேதுபதி முந்தி சென்று வெற்றி கொள்வதாக ஒரு காட்சி வரும். இந்த படம் வெளியான போது சேதுபதி என்ற சைக்கிளை முந்தி செல்ல சிலர் வாகனத்தில் வந்தனர். ஆனால் மக்கள் ஆதரவு என்னும் எரிபொருள் கிடைக்காததால் வாகனம் நின்று போக, மக்கள் ஆதரவு எனும் காற்று அனுகூலமாய் வீச சேதுபதியின் சைக்கிள், வெற்றி எனும் destination -ஐ அடைந்தது.
தமிழ் திரையுலகைப் பொறுத்தவரை நடிப்புக் கலையாகட்டும், வசூல் சாதனையாகட்டும் என்றென்றும் நடிகர் திலகம்தானே எங்க ஊர் ராஜா
அன்புடன்
Tail Piece: 1996-ம் வருடம் மத்தி. இந்தியன் படம் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் நேரம், கமலை நேரில் சந்தித்த ஒரு சின்னத்திரை பெரிய திரை நடிகர் அதைப் பற்றி பாராட்ட, படத்தைப் பற்றி பேசிய கமல், படம் நாம் பிறந்த மண் படத்தின் inspiration -ஆக இருந்தாலும் இந்தியன் தாத்தா பாத்திரம் பற்றி குறிப்பிடுகையில் அதன் inspiration எங்க ஊர் ராஜா விஜய ரகுநாத சேதுபதி என்றாராம்.
JamesFague
4th November 2014, 10:48 AM
a recap of Mr Murali Srinivas old post
1970-களும் நடிகர் திலகமும் - ஆனந்த விகடனும் - Part I
இங்கே ஒரு சில நாட்களுக்கு முன் நடிகர் திலகத்தின் படங்களுக்கு 70-களின் தொடக்கத்திலிருந்து விகடனின் விமர்சனங்கள் எதிர்மறையாக எழுதப்பட்டதை சுட்டிக் காட்டியிருந்தார் சுவாமி. நான் அதை பற்றி எழுதுவேன் என்றும் குறிப்பிட்டிருந்தார். அதை பற்றிய செய்திகளுக்கு செல்லும் முன் அன்றைய காலகட்டத்தில் நடந்த ஒரு சில நிகழ்வுகளை இங்கே நினைவு கூற வேண்டியுள்ளது. இந்த திரிக்கு இது ஒரு Digression என்றாலும் அதை எழுதினாலே இதன் பின்னணியை புரிந்துக் கொள்ள முடியும் என்ற வகையில் இதோ.
நான் எழுதப் போகும் விஷயங்களில் நமது திரியின் நாயகன் நடிகர் திலகம் இடம் பெறப் போவதில்லை. மாறாக இரண்டு நபர்கள் தங்கள் பரஸ்பர தேவைகளுக்காக செயல்பட்டது எப்படி அதில் எந்த பங்கும் இல்லாத நடிகர் திலகத்தின் படங்களை பாதித்தது [அதாவது மக்கள் மத்தியில் படத்தைப் பற்றி ஒரு நெகடிவ் கருத்தை உருவாக்கியது] என்பது பற்றிய பதிவே இது.
ஆனந்த விகடன் அதிபர் எஸ்.எஸ்.வாசன் அவர்கள் ஒரு தேசியவாதி. காங்கிரஸ் பேரியக்கத்தை பெரிதும் ஆதரித்தவர். 1967 தேர்தலின்போது கூட தி.மு.க.கூட்டணியை எதிர்த்து தன் பத்திரிக்கையில் எழுதியவர். அந்த தேர்தலின்போது ஏற்பட்ட ஆட்சி மாற்றத்திற்கு பிறகு 1968-ல் சென்னையில் நடந்த உலகத்தமிழ் மாநாட்டின் சில பணிகளை [அலங்கார ஊர்திகள் முதலியன] அன்றைய அரசாங்கம் அவரிடம் ஒப்படைக்க அதை சிறப்பாக செய்து முடித்தார். விகடன் தவிர அவர் ஜெமினி தயாரிப்பு நிறுவனம் மற்றும் ஜெமினி ஸ்டுடியோஸ் அதிபர் என்பது அனைவரும் அறிந்திருப்பர். இந்த உலகத்தமிழ் மாநாட்டிற்கு முன்னர்தான் முதன் முறையாக தன் ஜெமினி நிறுவனம் சார்பில் எம்,ஜி,ஆரை வைத்து ஒரு படம் தயாரிக்க ஆரம்பித்தார். எம்.ஜி.ஆர். அப்போதுதான் பிற மொழிப் படங்களை தமிழில் ரீமேக் செய்து அதில் நடிக்க ஆரம்பித்திருந்த நேரம். சிட்டிமார்(?) என்ற இந்தி படம் குடியிருந்த கோயிலாக உருவாகி கொண்டிருந்தபோது பூல் அவுர் பத்தர் படத்தை வாங்கி ஒளிவிளக்கு என்ற பெயரில் தயாரிக்க ஆரம்பித்தார் வாசன். இயக்குனர் பொறுப்பை சாணக்கியாவிடம் ஒப்படைத்தார். தயாரிப்பு நிர்வாகத்தை வாசனின் புதல்வர் பாலசுப்ரமணியனும் [எஸ்.எஸ்.பாலன்] அன்றைய விகடன் இதழில் துணை ஆசிரியராக பணியாற்றிக் கொண்டிருந்த மணியனும் பார்த்துக் கொண்டிருந்தனர்.
இந்த இடத்தில் மணியனை பற்றி சொல்ல வேண்டும். 1950-களில் விகடனில் 13-வது உதவி ஆசிரியராக சேர்ந்த மணியன் நாளைடைவில் வளர்ந்து வாசனுக்கு மிகவும் நெருக்கமானார். கதைகள் எழுதிக்கொண்டிருந்தவரை வெளிநாட்டுகளுக்கு அனுப்பி வைத்து இதயம் பேசுகிறது என்ற தலைப்பில் பயணக் கட்டுரைகள் எழுத வைத்தனர் வாசனும் பாலனும். அதன் மூலம் மணியன் அடைந்த வளர்ச்சி அபாரமானது. மீண்டும் விட்ட இடத்திற்கு வருவோம்.
ஒளிவிளக்கு எம்.ஜி.ஆரின் 100-வது படமாக 1968 செப்டம்பர்-ல் வெளியானது. ஏ.வி.எம். போல் ஜெமினியும் அந்த ஒரு எம்.ஜி.ஆர். படத்துடன் நிறுத்திக் கொண்டது. ஆனால் யாரை எப்போது எப்படி தனக்கு உதவிகரமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதில் தேர்ந்தவரான எம்.ஜி.ஆர். மனியனுடனான உறவை தொடர்ந்தார். அது மணியனுக்கும் தேவையாய் இருந்தது. இது எந்தளவிற்கு இருந்தது என்றால் படப்பிடிப்பு இல்லாத நாட்களில் தினசரி மாலை வேலையில் மாம்பலம் ஆற்காடு தெருவில் உள்ள எம்.ஜி.ஆரின் அலுவலகத்திற்கு செல்வதை மணியன் வழக்கமாக்கி கொண்டிருந்தார். [மணியனே எழுதியுள்ளபடி அங்கே அவர் சென்றவுடன் இருவருக்கும் பாசந்தி மற்றும் முந்திரிப்பருப்பு பக்கோடா வருமாம். தினசரி அதை சாப்பிட்டதனால்தான் உங்கள் உடல் மிகவும் பெருத்து விட்டது என்று மணியனின் மனைவி திருமதி லலிதா மணியன் அவரை கிண்டல் செய்வாராம்] இந்த பரஸ்பர புரிதல் காரணமாக அடுத்து வெளிவந்த எம்.ஜி.ஆரின் படங்களான அடிமைப் பெண், நம்நாடு போன்ற படங்களுக்கு விகடனின் விமர்சனம் உறுதுணையாய் இருந்தது.
இப்படி இருந்த நேரத்தில் 1969 ஆகஸ்ட் 26 அன்று எஸ்.எஸ்.வாசன் காலமானார். ஆசிரியர் பொறுப்பு பாலனின் மேல் விழுந்தது. ஆனால் எப்போதும் இது போன்ற பொறுப்புகளை ஏற்பதில் தயக்கம் காட்டிய பாலன் பெயரளவில் தான் ஆசிரியராக இருந்துக் கொண்டு பத்திரிக்கையை நடத்தி செல்லும் முழுப் பொறுப்பையும் மனியனிடம் கொடுத்து விட்டார். மணியன் வைத்ததுதான் சட்டம் என்றாகிப் போனது.
இந்நிலையில் எம்.ஜி.ஆருடனான நட்பை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள நினைத்தார் மணியன். அவரிடம் சென்று விகடனில் ஏதாவது எழுதும்படி கேட்டுக் கொள்ள முதலில் மறுத்த எம்.ஜி.ஆர். பின் அதைப் பற்றி யோசிக்க தொடங்கினார். அன்றைய நாளில் பிரபலமான வார இதழ்கள் என்று எடுத்துக் கொண்டால் அவை குமுதம், விகடன், கல்கி, தினமணி நாளிதழின் ஞாயிறு பதிப்பாக வெளிவந்துக் கொண்டிருந்த தினமணி கதிர், கல்கண்டு மற்றும் ராணி ஆகியவை ஆகும். இவற்றில் எந்த இதழுமே எம்.ஜி.ஆர் ஆதரவு இதழ் கிடையாது. இவற்றில் கல்கண்டு மற்றும் கதிரை ஒதுக்கி விடலாம். கல்கிக்கு குமுதம், விகடன் போல் reach கிடையாது. ராணி தி.மு.க. ஆதரவு இதழாக இருந்தபோதினும் சந்திரோதயம் படத்தின் மூலமாக சி.பா. ஆதித்தனாரோடு ஏற்பட்ட பிணக்கு முற்றிலுமாக தீராத நேரம். மிச்சம் இருப்பது குமுதம் மற்றும் விகடன் மற்றுமே. இதில் குமுதம் நடிகர் திலகத்திற்கு ஆதரவாக இருக்கக் கூடிய இதழ். அது எந்தளவிற்கு என்பதை அரசு எழுதிய ஒரு கேள்வி பதில் மூலமாக தெரிந்துக் கொள்ளலாம்.
கேள்வி இப்படி இருந்தது
ஒரே நேரத்தில் சிவாஜி படத்திற்கும் எம்.ஜி.ஆர். படத்திற்கும் ஓசி பாஸ் கிடைத்தால் நீங்கள் எதற்கு போவீர்கள்?
அதற்கு அரசு அளித்த பதில்
இரண்டையும் கிழித்துப் போட்டுவிட்டு சிவாஜி படத்திற்கு காசு கொடுத்துப் போவேன்.
நான் சொல்லும் இந்த பதில் 1973 - 74 காலக்கட்டத்தில்தான் வந்தது. ஆனால் நாம் பேசிக் கொண்டிருப்பதோ 1970-ன் தொடக்கம். இருந்தாலும் கூட குமுதத்தின் stand எல்லாக் காலங்களிலும் எப்படி இருந்தது என்பதை வாசகர்கள் எளிதில் விளங்கி கொள்ளவே இதை குறிப்பிடுகிறேன்.
எனவே அன்றைய நாளில் பிரபலமாக விளங்கிக் கொண்டிருந்த ஒரு பத்திரிக்கையின் ஆதரவு தேவை என்பதை சிந்தித்துப் பார்த்த எம்.ஜி.ஆர். விகடனில் எழுத ஒப்புக் கொண்டார். அது மணியனின் master stroke -ஆக பத்திரிக்கை உலகில் பார்க்கப்பட்டது. எதைப் பற்றி எழுதுவது என்று ஆலோசித்த எம்.ஜி.ஆர். தன் வாழ்க்கை வரலாற்றையே நான் ஏன் பிறந்தேன் என்ற பெயரில் எழுத தொடங்கினார். 1970-ம் வருடம் ஏப்ரல் மாதம் 10-ந் தேதி வெள்ளிகிழமையன்று தமிழ் புத்தாண்டு சிறப்பிதழாக வெளியான விகடன் இதழில் தொடர் ஆரம்பித்தது. இதற்கிடையில் 70 ஜனவரியில் வெளியான மாட்டுக்கார வேலன் படத்திற்கும் விகடனின் ஷொட்டு கிடைத்தது.
JamesFague
4th November 2014, 10:48 AM
1970-களும் நடிகர் திலகமும் - ஆனந்த விகடனும் - Part II
நான் மேற்குறிப்பிட்டுள்ள தேதியின் அடுத்த நாளன்றுதான் [அதாவது 1970 ஏப்ரல் 11] நடிகர் திலகத்தின் வியட்நாம் வீடு வெளியானது. 1964-ல் வெளியான புதிய பறவை சிவாஜி பிலிம்ஸ் பானரில் தயாரிக்கப்பட்டது. அதற்கு ஆறு வருடங்களுக்கு பிறகு சிவாஜி புரொடக்சன்ஸ் என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனம் ஏற்படுத்தப்பட்டு வியட்நாம் வீடு வெளியானது. படம் பெரிய வெற்றியைப் பெற்றதும் தொடர்ந்து படங்களை தயாரிக்க வேண்டும் என்று விரும்பிய வி.சி.சண்முகம் அதற்கான முயற்சியை ஆரம்பித்தார். சிவந்த மண் ஏற்படுத்திய தாக்கத்தினால் வெளிநாடுகளில் சென்று படமாக்க முடிவு செய்தார். அந்நேரத்தில் அந்த வருடம் ஆகஸ்ட் செப்டம்பர் மாதங்களில் ஜப்பானில் உள்ள ஒசாகா நகரில் எக்ஸ்போ 70 என்ற மாபெரும் கண்காட்சி நடைபெறப் போவதை அறிந்த அவர் அந்த நேரத்தில் அங்கே படப்பிடிப்பை வைத்துக் கொள்ள விரும்பினார். அன்னை இல்லத்தின் குடும்ப நண்பரும் நடிகர் திலகதிற்காக மதி ஒளி என்ற மாதம் இருமுறை பருவ இதழை நடத்திக் கொண்டிருந்த மதி ஒளி சண்முகம்
அவர்களிடம் off the record ஆக இதை விசிஎஸ் சொல்ல , ஆர்வக் கோளாறு என்று சொல்லலாமா இல்லை வேறு ஏதாவது காரணம் இருந்ததா என்று தெரியவில்லை, மதி ஒளி இதழில் இந்த செய்தி வெளியாகி விட்டது. இதை பார்த்த மாற்று முகாமிற்கு ஒரே அதிர்ச்சி.
முதல் வாய்ப்பு போய்விட்டது. இந்தப் படத்தையும் விட்டு விட்டால் அது தமக்கு ஒரு அவமானமாகி விடும் என்பதை உணர்ந்த அவர் உடனே காய்களை நகர்த்த தொடங்கினார். வெளிநாடுகளில் படப்பிடிப்பு வைத்துக் கொள்ள விரும்பிய எம்.ஜி.ஆருக்கு முதலில் நினைவு வந்தது மணியனைதான். காரணம் முன்பே சொன்னது போல் இதயம் பேசிகிறது என்ற தலைப்பில் பல வெளிநாட்டு சுற்றுப் பிரயாணங்களை மேற்கொண்டவர். பத்திரிக்கை உலக தொடர்புகளை அதிகமாக உடையவர் என்பதால். அவரும் அவருடன் சித்ரா கிருஷ்ணசாமியும் சென்றனர்.
உலகம் சுற்றும் வாலிபன் படத்திற்கு முதலில் குன்னக்குடி இசையமைப்பாளராக அறிவிக்கப்பட்ட செய்திகள் எல்லாம் இங்கே பலரும் அறிந்ததே. இந்நிலையில் குன்னகுடியை மாற்றி விட்டு மெல்லிசை மன்னரை இசையமைப்பாளராக அறிவித்தார்கள். எம்.எஸ்.வியே பல பேட்டிகளில் சொன்னது போல 15 நாட்கள் எஸ்.எஸ்.வியை கசக்கி பிழிந்து பாடல்களை வாங்கினார் எம்.ஜி.ஆர். அதற்கு காரணம் வெளிநாட்டு படப்பிடிப்பு தொடங்குவதற்கு அவருக்கு நேரம் குறைவாக இருந்ததனால்தான். வெகு வேகமாக நடிக நடிகையர் ஒப்பந்தம் செய்யப்பட்டனர். மணியனின் கிரீன் சிக்னல் கிடைத்தவுடன் எம்.ஜி.ஆர்.படப்பிடிப்பு குழுவினரோடு கிளம்பினார்.
இதற்கிடையில் எம்.ஜி.ஆர். எக்ஸ்போ 70-ல் படம் எடுக்கிறார் என்று தெரிந்ததும் சிவாஜி புரொடக்சன்ஸ் தங்கள் படத்தை ட்ராப் செய்துவிட்டனர். படப்பிடிப்பு நேரத்தில் குடும்பத்துடன் போவதாக இருந்த நடிகர் திலகம் தன் பயணத்தை ரத்து செய்து விட்டு ராம்குமார் பிரபு, சண்முகத்தின் மகன்கள் ஆகியோரை அனுப்பி வைத்தார்.
வெளிநாட்டு படப்பிடிப்பு என்பது அந்தக் காலத்தில் அவ்வளவு எளிதல்ல. அது மட்டுமல்ல அன்றைய நாட்களில் அந்நிய செலவாணி இன்றைய நாள் போல் அவ்வளவு எளிதாகவோ அல்லது அதிகமாகவோ கிடைக்காது. படப்பிடிப்பு திட்டங்களை முறையாக வகுத்துக் கொண்டு போகும் தயாரிப்பு நிறுவனங்களுக்கே கூட கிடைத்திருக்கும் அந்நிய செலவாணிக்குள் செலவை சுருக்குவதே கடினம் எனும் போது கதையை கூட முடிவு செய்யாமல் படப்பிடிப்பு நடத்தப்பட்டால் செலவு என்னத்துக்கு ஆகும்? படப்பிடிப்புக்கு தேவையான பணத்திற்கு தட்டுப்பாடு ஏற்பட்ட போதெல்லாம் மணியன் தன் வெளிநாட்டு தொடர்புகளை பயன்படுத்தி பணத்திற்கு ஏற்பாடு செய்திருக்கிறார். ஒரு வழியாக படப்பிடிப்பு முடிந்து அக்டோபர் கடைசி வாரத்தில் [அக்டோபர் 25 அன்று] சென்னை திரும்பி வந்தார்கள்.
மணியன் செய்த உதவிகளால் பெரிதும் மனம் மகிழ்ந்த எம்.ஜி.ஆர் அவருக்கு ஏதாவது செய்ய விரும்பினார். ஒரு 40 நாட்களுக்கு பிறகு 1970 டிசம்பர் 7 அல்லது 8 -ந் தேதி இரவு 7 மணிக்கு மேல் நுங்கம்பாக்கத்தில் ஜம்புலிங்கம் தெருவில் அமைந்திருந்த மணியனின் வீட்டிற்கு எம்.ஜி.ஆர். வந்தார். எந்த தகவலும் சொல்லாமல் எம்.ஜி. ஆர் வந்ததும் மணியனுக்கு இன்ப அதிர்ச்சி. எம்.ஜி.ஆர். உலகம் சுற்றும் வாலிபன் படத்தின் படப்பிடிப்புக்கு மணியன் செய்த உதவிகளை பாராட்டி விட்டு தான் ஏதாவது பிரதி உபகாரம் செய்ய விரும்புவதாகவும் சொல்லி விட்டு, நான் கால்ஷீட் தருகிறேன். உடன் ஒரு படத்தை தயாரியுங்கள் என்று சொல்லியிருக்கிறார். இதை சற்றும் எதிர்பார்க்காத மணியன் தான் எம்.ஜி.ஆர். படத்தின் தயாரிப்பாளரா என்று மலைத்து போய் நிற்க எம்.ஜி.ஆரே ஒரு பேப்பர் பேனா எடுத்து உதயம் புரொடக்சன்ஸ் என்ற பெயரையும் தயாரிப்பு நிறுவனத்திற்கு சூட்டியிருக்கிறார். பத்திரிகை அலுவலக பணி சுமையை சுட்டிக் காட்டிய மணியனிடம் வித்வான் வே.லட்சுமணனையும் தயாரிப்பில் சேர்த்துக் கொள்ள செய்திருக்கிறார். கதையை தயார் செய்யும்படியும் உடனே படப்பிடிப்பை தொடங்கலாம் என்றும் எம்.ஜி.ஆர். சொல்லி விட்டு சென்றார்.
உடனே கதை தேடும் படலம் துவங்கியது. மணியனுக்கு தான் விகடனில் எழுதிய ஒரு தொடர்கதையை படமாக்க ஆசை. அப்படி பார்க்கும்போது அவர் எழுதிய இதய வீணை கதை பொருத்தமாய் இருக்கும் என்று தோன்றியது. எம்.ஜி.ஆரிடம் கதை சொல்ல அந்த கதையின் நாயகன் சுந்தரம் பாத்தரத்தை சிறிது மாற்றங்களோடு எம்.ஜி.ஆர். ஓகே செய்தார். ஆனால் அந்த நேரத்தில்தான் 1971 ஜனவரியில் அன்றைய பாரதப் பிரதமர் இந்திரா காந்தி நாடாளுமன்றத்தை கலைத்துவிட்டு தேர்தல் அறிவித்தார். அதை பின்பற்றி இங்கே தமிழகத்திலும் சட்டமன்றத்தின் ஆயுள் ஒரு வருடம் மீதம் இருக்கும்போதே அதை கலைத்துவிட்டு பொது தேர்தல் அறிவிக்கப்பட்டது. எம்,ஜி,ஆர். தேர்தல் பிரசாரத்திற்கு போனதன் காரணமாக இதயவீணை படப்பிடிப்பு தொடங்குவது தள்ளி வைக்கப்பட்டது.
தேர்தல் முடிந்து மீண்டும் தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்றவுடன் 1971 ஜூலை மாதம் பூஜை போட்டு படப்பிடிப்பு ஆனந்தம் இன்று ஆரம்பம் பாடல் படமாக்கத்துடன் தொடங்கியது. அன்றைய முதல்வர் மு.க. கிளாப் அடித்து துவக்கி வைத்தார். படத்தின் படப்பிடிப்பு நடந்தபோது நடந்த சில நிகழ்வுகளை பற்றி மணியன் எழுதியிருக்கிறார். அவை இங்கே தேவையில்லை என்பதால் அதை விட்டு விடுவோம்.
ஒரு பக்கம் ஆசிரியர் பணி, மற்றொரு பக்கம் தயாரிப்பாளார், இத்துடன் வெளிநாட்டு பயணங்கள் என்று மணியனின் பயணம் தொடர அவருக்கும் எம்.ஜி.ஆருக்குமான தொடர்பு மேலும் இறுகியது. நான் ஏன் பிறந்தேன் தொடரும் தொடர்ந்து வந்துக் கொண்டிருந்தது. இதை தவிர தினசரி மாலையில் எம்.ஜி.ஆரை சந்திப்பதும் தொடர்ந்ததோடு மட்டுமல்லாமல் அவர் கலந்து கொள்ளும் அரசியல் பொதுக் கூட்டங்களுக்கும் கூட போக ஆரம்பித்தார் மணியன். ஆனால் அவரே எழுதியுள்ளபடி பொதுக்கூட்ட மேடை வந்ததும் மணியன் காரிலேயே இருந்துக் கொள்வாராம். எம்.ஜி.ஆர். மட்டும் இறங்கி சென்று பேசிவிட்டு கூட்டம் முடிந்ததும் தன் காரிலேயே மணியனை அவர் வீட்டில் விட்டுவிட்டு போவாராம்.
JamesFague
4th November 2014, 10:49 AM
1970-களும் நடிகர் திலகமும் - ஆனந்த விகடனும் - Part III
71-72 காலகட்டங்களில் தி.மு.க.வில் புகைச்சல் தொடங்கி வளர்ந்தது பற்றி நாம் பலமுறை பேசிவிட்டதால் அதை விட்டுவிடலாம். சரியாக எம்.ஜி.ஆர். தி.மு.க.வை விட்டு வெளியேற்றப்பட்டு அ.தி.மு.க.வை தொடங்கும் நேரத்தில் மணியனின் முதல் படமான இதய வீணை, 1972 அக்டோபர் 20-ந் தேதி வெளியானது. படத்தின் ரிசல்ட் average என்ற போதிலும் அன்றைய அரசியல் சூழல் காரணமாக பல திரையரங்குகளில் காட்சிகள் பாதிக்கப்பட்டன. அன்றைய ஆளும் கட்சியினரின் சில அடாவடி செயல்களினால் எம்.ஜி.ஆர். படத்திற்கு முதுகெலும்பான தாய்மார்கள் கூட்டம் குறைந்தது. மணியனுக்கு மீண்டும் ஒரு படம் செய்து தருகிறேன் என்று எம்.ஜி.ஆர். வாக்கு கொடுத்தார்.
மாறி விட்ட சூழலால் சில வாரங்கள் நான் ஏன் பிறந்தேன் தொடர் வெளிவரவில்லை. அதன் பிறகு வந்த இதழில் எம்.ஜி.ஆர். ஒரு அறிவிப்பு செய்கிறார். நாம் என்னுடைய வாழ்க்கை பயணத்தை எழுதிக் கொண்டிருந்தேன். ஆனால் இப்போது மாறி விட்ட அரசியல் சூழலில் அதை தற்காலிகமாக நிறுத்தி வைத்துவிட்டு என்னுடைய அரசியல் பயணத்தை பற்றி எழுதப் போகிறேன். ஆகவே இப்போது முதல் நான் ஏன் பிறந்தேன் என்ற இந்த தொடரின் பெயர் மாற்றப்பட்டு நான் கடந்து வந்த அரசியல் பாதை என்ற தலைப்பில் வெளியாகும் என்று சொல்லியிருந்தார். அந்த பெயரில் ஒரு சில வாரங்கள் மட்டுமே வெளிவந்தது. பின்னர் அதுவும் நின்று போனது. எம்.ஜி.ஆர் பிசியாக இருக்கிறார். விரைவில் மீண்டும் அந்த தொடர் வெளியாகும் என்று விகடனில் அறிவிப்பு வந்தது. ஆனால் தொடர் தொடரவேயில்லை.
ஆனால் அரசியலில் அவர் முழு வீச்சில் ஈடுபட தொடங்கியதால் அவரது அரசியல் வேலைகளுக்கு மணியன் தேவைப்பட்டார். குறிப்பாக டெல்லியில் மணியனுக்கு இருந்த செல்வாக்கு எம்.ஜி.ஆருக்கு தேவைப்பட்டது. அன்றைய பிரதமர் இந்திராவிடம் தனிப்பட்ட செல்வாக்கு படைத்திருந்த மணியன் அவரிடம் பேசி எம்.ஜி.ஆர் இந்திராவை சந்திக்க appointment வாங்கி கொடுத்தார். அவரே எம்.ஜி.ஆருடன் கூட சென்று இந்திராவுடன் நடந்த சந்திப்பின் போது உடனிருந்தார். அதன் தொடர்ச்சியாகதான் எம்.ஜி.ஆரும் அன்றைய நாடாளுமன்ற உறுப்பினரும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான எம். கல்யாணசுந்தரம் அவர்களும் சேர்ந்து அன்றைய குடியரசு தலைவரான வி.வி.கிரி அவர்களை சந்தித்து அன்றைய தி.மு.க. அரசின் மீது குற்றச்சாட்டுகள் பட்டியலை கொடுத்த நிகழ்வும் நடந்தேறியது. [பிற்காலத்தில் அந்த பட்டியலின் அடிப்படையில்தான் சர்க்காரியா கமிஷன் அமைக்கப்பட்டது].
மணியனால் அரசியல் தொடர்புகள் மட்டுமல்ல ஆன்மீக தொடர்புகளும் எம்.ஜி.ஆருக்கு ஏற்பட்டன. ஆம், அன்றைய நாளில் காஞ்சி மகாப்பெரியவரையும் சந்திக்கும் பேறையும் எம்.ஜி.ஆருக்கு மணியன் ஏற்படுத்தி கொடுத்தார். காஞ்சிக்கு அருகிலுள்ள கலவை எனும் கிராமத்தில் மகாப்பெரியவர் வந்து தங்குவது வழக்கம். அப்படி ஒரு சந்தர்ப்பத்தில் அதிகாலையில் பெரியவரை சந்திக்க ஏற்பாடு ஆனது. சென்னையிலிருந்து அதிகாலை இரண்டு மணிக்கு கிளம்பி இருள் பிரியாத விடியற்காலை நான்கு மணிக்கு பெரியவர் குளிக்க வரும் குளக்கரைக்கு அருகே எம்.ஜி.ஆர் வந்து காத்திருக்க பெரியவர் அவரை பார்த்து பேசி ஆசி கூறினார். மணியன் உடன் இருந்தார். ஆக அரசியல் ஆன்மிகம் மற்றும் பத்திரிக்கை தளங்களில் எம்.ஜி.ஆருக்கு மிகவும் வேண்டப்பட்டவராக மாறிப் போனார் மணியன்.
தவப்புதல்வன் விமர்சனம் பற்றி கார்த்திக் இங்கே வருத்தப்படிருந்தார். அது பரவாயில்லை என்று சொல்லும் வண்ணம் அமைந்தது ராஜ ராஜ சோழன் விமர்சனம். அதை கடுமையாக விமர்சித்திருந்தார்கள். இந்த நேரத்தில்தான் 1973 மே மாதம் 11-ந் தேதி உலகம் சுற்றும் வாலிபன் வெளியானது. ஆனந்த விகடன் விமர்சனம் படத்தை தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடியது!
[அதை கூட நமது ஹப்பில் எம்.ஜி.ஆர். திரியில் வெளியிட்டிருந்தனர். அந்த நேரத்தில் அருமை சகோதரர் ராஜாராம் அவர்கள் விமர்சனம் வெளி வந்த காலகட்டத்தில் ஆனந்த விகடன் திரைப்பட விமர்சனத்தில் மார்க் போடும் முறையை அறிமுகப்படுத்தியிருக்கவில்லை. அப்படி இருந்திருந்தால் இந்த படத்திற்கு 90 மார்க் கிடைத்திருக்கும் என்று சொல்ல நமது நண்பர் மகேஷ் அப்படி நடந்திருக்க வாய்ப்பில்லை. காரணம் விகடன் அதிக பட்சமாக அளித்த மார்க் 62 1/2 தான் என்று சுட்டிக் காட்டினார். உடனே நமது மற்றொரு நண்பரும் ரஜினி ரசிகரும் எம்.ஜி.ஆர் அபிமானியுமான bayarea, என் மனதிற்கு இந்த படம் இத்தனை மதிப்பெண்கள் பெற்றிருக்கும் என்று தோன்றுகிறது. அதில் நான் சந்தோஷம் அடைகிறேன், அதை கூடாது என்று சொல்ல நீங்கள் யார் என பதில் கேள்வி எழுப்பினார். படத்தின் தொடக்கத்திலிருந்து இறுதி வரை கூடப் பணியாற்றி, வேண்டிய உதவிகளும் செய்து விட்டு பின் இந்த உ.சு.வா, வெளிவருவதற்கு முன்னரே எம்.ஜி.ஆர். பட தயாரிப்பாளராகவும் மாறி அந்தப் படத்தையும் வெளியிட்டு விட்டு அடுத்த படத்திற்கு அதே கதாநாயகனிடம் கால்ஷீட் எதிர்பார்த்து நிற்கும் ஒருவர் ஒரு பத்திரிக்கையின் ஆசிரியராகவும் இருக்கும் பட்சத்தில் அந்த பத்திரிக்கையின் விமர்சனம் புகழாரங்களின் தொகுப்பாக இல்லாமல் நேர்மையான விமர்சனமாகவா இருக்கும்? இதை அன்றே அந்த திரியில் சொல்ல வேண்டும் என்று நினைத்தேன். ஆனால் ஒரு சில நண்பர்களின் மனது புண்படுவதை நான் விரும்பவில்லை].
அந்த வருடத்தில் எம்.ஜி.ஆர். கால்ஷீட் கிடைக்க தாமதமானதால் கே. பாலச்சந்தர் இயக்கத்தில் தனது இலவு காத்த கிளியை, சொல்லத்தான் நினைக்கிறேன் என்ற பெயரில் தயாரித்து வெளியீட்ட மணியன் 1974 -ம் வருடத்தில் எம்.ஜி.ஆர். கால்ஷீட் வாங்கிவிட்டார். Zanjeer படத்தின் தமிழ் உரிமையை வாங்கி வந்த அவர், அந்த வருட பிப்ரவரி, மார்ச்சில் நடைபெற்ற பாண்டிச்சேரி சட்டமன்ற பொதுத்தேர்தல் மற்றும் கோவை பாராளுமன்ற மற்றும் கோவை கிழக்கு சட்டமன்ற தொகுதிகளின் இடைதேர்தல்களுக்குபின் தொடர்ச்சியாக படப்பிடிப்பை வைத்துக் கொண்டவர் அந்தப் படத்தையும் அதே 1974 வருடம் நவம்பர் 30 அன்று வெளியிடவும் அனுமதி வாங்கி விட்டார்.
இதை சினிமா உலகமே ஆச்சரியத்தோடு பார்த்தது. காரணம் தன்னுடைய எந்த படம் வெளியாகும் போதும் சரி அந்த படத்திற்கு போதிய இடைவெளி விட்ட பிறகே அடுத்தப் படத்தை வெளியிடுவது எம்.ஜி.ஆர். வழக்கம். அப்படி இருக்கையில் 1974 நவம்பர் 7 அன்று உரிமைக்குரல் வெளியாகியிருக்க அதற்கு 23 நாட்கள் இடைவெளியில் எம்,ஜி,ஆரின் அடுத்த படமும் வெளியாக அவர் அனுமதி கொடுக்கிறார் என்றால் மணியன் எந்தளவிற்கு அவருக்கு நெருக்கமாக இருந்தார் என்று தெரிந்துக் கொள்ளலாம்!
அது மட்டுமா? 1975-ம் ஆண்டு பிப்ரவரியில் அடுத்த படத்திற்கான அறிவிப்பும் விளம்பரமும் வருகிறது. அதுவும் எப்படி? பிரபல இயக்குனர் சாந்தாராம் இயக்கிய தோ ஆன்கேன் பாரா ஹாத் திரைப்படம் பல்லாண்டு வாழ்க என்ற பெயரில் தமிழில் தயாரிக்கப்படுவதாகவும் படப்பிடிப்பு தொடங்குகிறது என்ற விளம்பரத்திலேயே அண்ணா பிறந்த நாளான செப்டம்பர் 15 வெளியாகிறது என்று கொடுத்திருந்தார்கள். 1967-க்கு பிறகு பூஜையன்றே ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்ட முதல் எம்.ஜி.ஆர். படம் பல்லாண்டு வாழ்க. 44 வருடங்கள் கூடவே இருந்த வீரப்பனாலும் முடியாத காரியம் மணியனால் முடிந்தது. மார்ச் 1 தொடங்கி ஏப்ரல் முதல் வாரம் வரை தொடர்ந்து படப்பிடிப்பு நடந்து படம் கிட்டத்தட்ட முடிந்து விட்டது. ஆனால் அறிவித்தது போல் செப்டம்பர் 15 அன்று படம் வெளியாகவில்லை. காரணம் சென்சார் பிரச்னை [எமெர்ஜென்சி நேரம்] என்று ஒரு தகவலும், இல்லை ஆகஸ்ட் 22 அன்று வெளியான இதயக்கனிக்கு போதிய இடைவெளி கொடுக்க வேண்டும் என்ற காரணத்தினால் தள்ளிப் போடப்பட்டிருக்கிறது என்று மற்றொரு தகவலும் உலவின. படம் இறுதியில் தீபாவளிக்கு இரண்டு நாட்களுக்கு முன் அக்டோபர் 31 அன்று வெளியானது.
1976 வருடம் மார்ச் மாதம் மீண்டும் அடுத்த படம் அறிவிப்பு வருகிறது. மண்ணில் தெரியுது வானம் என்ற தலைப்பு. ஜோடி ஹேமமாலினி என்று. ஆனால் அந்த காலகட்டத்தில் சென்சார் கெடுபிடிகள் அதிகமானதால் படம் அறிவித்தப்படி தொடங்கவில்லை. அதன் பிறகு உதயம் புரொடக்சன்ஸ் நிறுவனம் எம்.ஜி,.ஆர். படங்களை தயாரிக்கவில்லை என்றாலும் விகடனின் ஆதரவு தொடர்ந்தது. அதே போன்று நடிகர் திலகத்தின் படங்களைப் பற்றிய நெகடிவ் விமர்சனமும் தொடர்ந்தது. [முதலில் சொன்னபடி சிவாஜி நடிப்பை மட்டும் பாராட்டி விடுவார்கள்].
அதற்கு பின்னர் நடந்த 1977 பாராளுமன்ற தேர்தல் சட்டமன்ற தேர்தல்கள் அதன் முடிவுகள், எம்.ஜி.ஆர்.முதல்வராக பதவியேற்றது எல்லாம் எல்லோருக்கும் தெரிந்த விஷயம். தான் ஆதரவு தெரிவித்தவரே முதல்வராக பதவியேற்றவுடன் மணியன் தன் நெடுநாள் கனவை நிறைவேற்ற முயன்றார். ஆம், சொந்தமாக ஒரு வார இதழ் தொடங்கும் ஆசையைத்தான் சொல்கிறேன். அதுவும் நிறைவேறியது. 1978 ஜனவரி 1 அன்று இதயம் பேசுகிறது இதழ் வெளியானது.
வாடகை வீட்டில் இருக்கும்போதே அவ்வளவு செய்தவர்கள் சொந்த வீடு வந்தவுடன் இன்னும் எவ்வளவு செய்வார்கள். அதையும் செய்தார்கள். இம்முறை நேரிடையாகவே. மணியனுடன் விகடனை விட்டு வெளியேறிய தாமரை மணாளன் இதயம் பேசுகிறது இதழில் பல புனை பெயர்களில் எழுதினார். அதில் ஒன்றுதான் நக்கீரன்! அப்படி அவரால் எழுதப்பட்ட கட்டுரைதான் நடிகர் திலகம் நடிப்பதை நிறுத்த வேண்டும் என்று சொன்ன பூனைக்கு யார் மணி கட்டுவது என்ற கட்டுரை. அதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்திய ரசிகர்களையும் கொச்சைப்படுத்தினார்கள். அதாவது இருபது பேர் மட்டுமே இருந்தார்கள் என்று கூசாமல் பொய் எழுதினார்கள். தியாகம் படத்தின் விமர்சனமும் இதே பாணியில் அமைய பாலாஜி கோவப்பட்டு விளம்பரம் கொடுத்ததெல்லாம் எல்லோரும் அறிந்த கதை. இப்படிப்பட்ட தாக்குதல்கள் கிட்டத்தட்ட 1981 மே மாதம் வெளியான கல்தூண் வரை நீடித்தது.
பொதுவாக தன் மேல் செலுத்தப்படும் எந்த எதிர்ப்புக் கணைகளையும் பொருட்படுத்தாத நடிகர் திலகமே இவையெல்லாம் நடந்து கிட்டத்தட்ட 20 வருடங்களுக்கு பிறகும் கூட அதை மறக்க முடியாமல் 1997-ல் தினமணிக்கு அளித்த பேட்டியில் மணியனின் பெயரை குறிப்பிட்டு சொல்கிறார் என்றால் அந்த வேதனை எப்படிப்பட்டது என்பதை நம்மால் உணர முடியும்.
இவ்வளவு ஏன்? விகடன்-மணியனின் இந்தப் போக்கு அவரை அப்போதே மன வருத்தத்தில் ஆழ்த்தியது என்பதற்கு வேறு ஒரு சம்பவமும் சாட்சி. நடிகர் திலகமும் மணியனும் ஒரே லயன்ஸ் கிளப்-ல் உறுப்பினர்கள். ஆனால் இருவருமே அபூர்வமாகவே அரிமா சங்க கூட்டத்திற்கு செல்பவர்கள். ஒரு முறை ஒரு முக்கியமான கூட்டத்திற்கு இருவரும் சென்றிருக்கிறார்கள். இந்த கூட்டம் நடைபெற்றது 1972 இறுதி அல்லது 1973 ஆரம்பம் என்று நினைக்கிறேன். வெகு நாட்களுக்கு பின் நடிகர் திலகத்தை சந்தித்த மணியன் அந்த காலகட்டத்தில் அவர் படங்கள் தொடர் வெற்றி பெற்றதற்கு பாராட்டி விட்டு குறிப்பாக பட்டிக்காடா பட்டணமா மற்றும் வசந்த மாளிகை இவற்றின் இமாலய வெற்றியை குறிப்பிட்டு பெரிய இடத்திற்கு போய்டீங்க என்று சொன்னாராம். அதற்கு உடனே நடிகர் திலகம் ஆமாம், ஆனால் நீங்கதான் நம்மளை விட்டு வேற எங்கேயோ போய்டீங்க என்று பதில் சொன்னாராம். இதை சற்றும் எதிர்பார்க்காத மணியன் ஒரு நிமிடம் திகைத்து பின் சிரித்து சமாளித்தாராம். இதை மணியனே எழுதியிருந்தார்.
சுருக்கமாக சொன்னால் ஒரு நாள் இரு நாள் அல்ல பல வருடங்கள் நடந்த பல சம்பவங்களை இங்கே எழுதுவதற்கு காரணமே, எந்த நியாயமும் இல்லாமல் நடிகர் திலகம் குறி வைக்கப்பட்டார் என்பதை சுட்டி காட்டவே. அதிலும் ஒரு பழம் பெரும் பத்திரிக்கை இப்படி நடந்துக் கொண்டது பலரையும் காயப்படுத்தியது.
இங்கே எழுதியிருப்பது அனைத்தும் பல நேரங்களில் வெளிவந்த மணியனின் வாக்குமூலங்களை அடிப்படையாக கொண்டு எழுதப்பட்டது. ஆகவே இதில் உண்மையை தவிர வேறொன்றுமில்லை.
அன்புடன்
sss
4th November 2014, 03:18 PM
NT, SSR and Kalaingar
sss
4th November 2014, 03:51 PM
https://33.media.tumblr.com/8e755c1fa4c64621f0daba508d9f09c6/tumblr_mlplq8EpsR1r9ptv4o4_r4_250.gif
JamesFague
4th November 2014, 06:23 PM
Thanks to Mr Neyveli Vasudevan
Nadigarthilagamum Vettiyum
இல்லறஜோதியில் இனிதான வேட்டி
முதல் தேதியில் முத்தான வேட்டி
மங்கையர் திலகத்தில் மணியான வேட்டி
வாழ்விலே ஒரு நாளில் வளமில்லா வேட்டி
மக்களை பெற்ற மகராசியில் மண் மணக்கும் வேட்டி
நா(ம்)ன் பெற்ற செல்வத்தின் நலுங்காத வேட்டி
பாகப் பிரிவினையில் பட்டிக்காட்டான் வேட்டி
நிச்சயத் தாம்பூலத்தில் நிலா வேட்டி
தெய்வப் பிறவியில் தெய்வாம்ச வேட்டி
படிக்காத ரங்கனின் பகட்டில்லா வேட்டி
பாசமலரில் பாங்கான வேட்டி
அறிவாளியில் அழகு வேட்டி
பந்த பாசத்தில் பணிவான வேட்டி
குலமகள் ராதையில் குணமான வேட்டி
கல்யாணியின் கணவனில் கண்ணியமான வேட்டி
கை கொடுத்த தெய்வத்தின் கை தூக்கும் வேட்டி
முரடன் முத்துவின் முரட்டு வேட்டி
பழனியின் பாவமான வேட்டி
நவராத்திரியில் நாட்டுப்புறத்தான் வேட்டி
நீலவானத்தில் நீட்டான வேட்டி
செல்வத்தின் செல்வாக்கான வேட்டி
ஊட்டி வரை உறவின் ஒய்யார வேட்டி
லட்சுமி கல்யாணத்தில் லட்சணமான வேட்டி
உயர்ந்த மனிதனின் உன்னத வேட்டி
அன்பளிப்பில் அலுங்காத வேட்டி
சிக்கலாரின் சிலுசிலு வேட்டி
எங்க ஊர் ராஜாவின் எகத்தாள வேட்டி
விளையாட்டுப் பிள்ளையின் விறுவிறு வேட்டி
வியட்நாம் வீட்டின் பிராமண வேட்டி
எதிரொலியில் எடுப்பான வேட்டி
சொர்க்கத்தில் சொகுசான வேட்டி
குலமா குனமாவில் குணமான வேட்டி
சுமதி என் சுந்தரியில் சுடர் விடும் வேட்டி
சவாலே சமாளியில் சவால் விடும் வேட்டி
தேனும் பாலும் படத்தில் தேனான வேட்டி
பட்டிக்காடா பட்டணமாவில் பண்பாட்டு வேட்டி
பாரத விலாசில் பரபரக்கும் வேட்டி
பொன்னூஞ்சலில் பொன்னான வேட்டி
கௌரவத்தில் கனிவான வேட்டி
ராஜபார்ட்டில் ரம்மியமான வேட்டி
தாயில் தன்மான வேட்டி
சௌத்திரியின் தீபாவளி வேட்டி
அன்பைத்தேடியில் அழகான வேட்டி
சத்தியத்தில் சாந்தமான வேட்டி
கிரஹப் பிரவேசத்தில் கிளாஸ் வேட்டி
அண்ணன் ஒரு கோயிலில் ஆர்ப்பாட்ட வேட்டி
திரிசூலத்தில் மங்கள வேட்டி
முதல் மரியாதையில் மரியாதை வேட்டி
என்று இன்னும் இன்னும் நிறைய வேட்டிகள் நடிகர் திலகத்தோடு சேர்ந்து நடித்துள்ளன.
Gopal.s
5th November 2014, 07:48 AM
நடிப்பு என்பது, பாத்திரமாக மாறி ,அதன் உள்ளுணர்வை,பிரதிபலிக்கும் ஆழம் கொண்டதாக இருக்க வேண்டும். பலதரப்பட்ட கதாபாத்திரங்களை ஏற்று ,அந்த கதாபாத்திரத்துடன் ஒன்றி விடும் திறன் கொண்டவராக நடிகர் விளங்க வேண்டும்.
ஒரே காலகட்டங்களில், துள்ளல் நிறை வாலிபனாக தெய்வ மகன்,80 வயது முதியவராக திருவருட்செல்வர்,ஒரு நடுத்தர குடும்ப 58 வயது தலைவனாக வியட்நாம் வீடு,ஒரு புரட்சி எண்ணம் கொண்ட வீர இளைஞனாக சிவந்த மண்,நாதஸ்வர கலைஞனாக தில்லானா மோகனாம்பாள்,jamesbond பாத்திரத்தில் தங்க சுரங்கம் ,ரௌத்ரம் கொண்ட பனையேரியாக
காவல்தெய்வம் என்று எல்லாவற்றிலும் பல ரக நடிப்பில் ஒன்றுக்கொன்று தொடர்பேயில்லாத பாத்திரங்களில் ,ஒரே காலகட்டத்தில் பரிமளிப்பதுதான் நடிப்பு.
பொத்தாம் பொதுவாக ,தன்னை பற்றி ஒரு இமேஜ் வளயத்தை ,கட்சி,பத்திரிகை என்று திட்டமிட்டு ஏற்படுத்தி, எல்லா படத்திலும் ஒரே மாதிரி வந்து கை கால்களை சுழற்றி கொண்டிருப்பது நடிப்பே அல்ல. இளைஞர் என்று எண்ணி கொண்டு ,வயோதிகர்கள் நடித்தாலும்,சாதாரண பொது மக்களாக அதை பார்க்கும் போது ,சங்கடமான நகைப்புக்கே இடமளிக்கும்.
ஒரு சாதாரண பொழுது போக்கு படங்களில் நடிப்பது எந்த சிரமும் அல்ல என்று நடிகர்திலகம் நமக்கு காட்டி சென்றாரே தங்கை,திருடன்,ராஜா,எங்கள் தங்க ராஜா,உன்னை போல் ஒருவன் என்று.
அதிலும் வாமனன் சொல் படி கண்ணுக்கும்,காதுக்கும்,மனதுக்கும் சிரமம் தராமல்.
Richardsof
5th November 2014, 08:24 AM
''பொதுவாக ,தன்னை பற்றி ஒரு இமேஜ் வளயத்தை ,கட்சி,பத்திரிகை என்று திட்டமிட்டு ஏற்படுத்தி, எல்லா படத்திலும் ஒரே மாதிரி வந்து கை கால்களை சுழற்றி கொண்டிருப்பது நடிப்பே அல்ல. இளைஞர் என்று எண்ணி கொண்டு ,வயோதிகர்கள் நடித்தாலும்,சாதாரண பொது மக்களாக அதை பார்க்கும் போது ,சங்கடமான நகைப்புக்கே இடமளிக்கும்.'' -திரு கோபால்
டியர் கோபால்
கண்ணுக்கும்,காதுக்கும்,மனதுக்கும் சிரமம் தராமல்.
அது தனிப்பட்ட உங்கள் கருத்து கோபால் . மனதில் தனிப்பட்ட குரோத வார்த்தைகளே வெளிபடுத்தியுள்ளது . இமேஜ் - கட்சி , பத்திரிகை , திட்டமிடுதல் ,இயற்கையான நடிப்பு , வயதானாலும் இளமை தோற்றத்துடன் , உலக பேரழகனாக திகழ்ந்தவர் , இன்றும் கோடிகணக்கான
உள்ளங்களில் சங்கடமில்லாமல் , நகைப்பு இல்லாமல் மக்கள் அவரின் பண்பட்ட நடிப்பை மகிழ்ந்தார்கள் .ரசித்தார்கள் -
கண்ணுக்கும்,காதுக்கும்,மனதுக்கும் சிரமம் தந்து நடித்தவரையும் உங்களை போன்றவர்கள்
ரசித்தார்கள் . அதுதான் திரை உலகம் . அவரவர் பாணி . எனவே இனிமேலாவது கிண்டல்
பதிவுகள் வேண்டாம் கோபால் .
Gopal.s
5th November 2014, 08:49 AM
உங்கள் பக்கத்தில் வந்த அபத்த பதிவுகளுக்கு எதிர் வினையே. நீங்கள் என்ன பதிவு வேண்டுமானாலும் போடலாம் ,நாங்கள் பார்த்து கொண்டு போக வேண்டுமா?
உங்கள் பதிவில் உள்ள அபத்தம்.
1)யாரும் இங்கே முதியவராக மட்டுமே நடித்து கொண்டிருக்கவில்லை.
2) நடிப்பு என்ற சம்மந்தமில்லாத வார்த்தைகள் இஷ்டத்துக்கு துள்ளி விளையாடுகின்றன,சம்மந்தமேயில்லாத திரிகளில்.
Richardsof
5th November 2014, 09:03 AM
எங்கள் பக்கத்தில் யாரையும் குறை கூறாத பட்சத்தில் எங்கிருந்து வந்தது இந்த ஒப்பீடு ?
நடிப்பு - துள்ளல் ஒருவருக்கே சொந்தமில்லை .
Gopal.s
5th November 2014, 09:06 AM
பாரத் பட்டம் பற்றி.....
1972 இல் மிக மிக பிரச்சினைக்குள்ளாக்க பட்டது . பல அங்கத்தினர்கள் தங்களுக்கு தெரியவே தெரியாது ,சம்மந்த படவில்லை என்று கழன்று கொண்டனர். எல்லோராலும் ,சிறிது ஆச்சர்யத்துடனே அணுக பட்டது.(சம்மந்த பட்ட நடிகரின் ரசிகர்களே இதை 1972 இல் என்னிடம் தெரிவித்தனர்.)
யாருக்கு கொடுக்க பட்டிருக்க வேண்டும் என்று ஏக பட்ட பேச்சுக்கள்.
இந்திய அளவில், மிக மிக அதிசயமாகவே பார்க்க பட்டது.
ஆனாலும் கலைஞர் ஒரு மேடையில் எங்களால் கிடைத்தது என்று போட்டு உடைக்க, எம்.ஜி.ஆர் அதை நியாயமாக திருப்பி கொடுக்க,மத்திய அரசு ,அந்த விருதின் காலம் காலாவதியாகி விட்டதால் திரும்பி வாங்க இயலாது,அவசியமில்லை என்று திருப்பி அனுப்பியது.
இவை எனக்கு தெரிந்தவை.
Richardsof
5th November 2014, 09:16 AM
கோபால்
நீங்கள் தனி ப்ளாக் துவங்குவதாக சொன்னீர்கள் . முதலில் அதை செய்யுங்கள் .அங்கே உங்களுக்கு தெரிந்ததை பதிவிடுங்கள் எனக்கு தெரிந்ததை நானும் பதிவிடுகிறேன் . அங்கு சந்திக்கலாம் .
நீங்கள் இங்கு தேவை இல்லாத தகவலை பதிவிடுவது நல்லதல்ல .
Gopal.s
5th November 2014, 09:22 AM
எஸ் வீ,
நான் திரியில் இருந்து ஒதுங்கவே நினைக்கிறேன். யாரையும் பற்றி எந்த பதிவுகளும் வேண்டாம் என்று இருந்தாலும், சீண்டும் போக்கு, indirect digs உங்கள் பக்கம் தொடர்கிறது. நான் நியாயத்தின் பக்கம் நிற்பதால் நேரிடையாகவே பேசுவேன்.
சாதி பெயரை சொல்லி விளிப்பதில் என்ன தவறு? சாதியை மறந்தா உலகம் இயங்குகிறது இன்று? எல்லோரையும் ஒரே மாதிரி எண்ணி, சாதிகளை அங்கீகரித்து விட்டு சம வாழ்வு வாழ்வதுதான் நிதர்சனம். இல்லையென்பது ,நம்மை நாமே ஏமாற்றி கொள்வது.
அதே போல எல்லா பதிவுகளிலும், indirect digs . இந்த நிலை தொடராமல் இருந்தால், நானும் வர வேண்டிய அவசியமே இருக்காது.
இந்த பக்கம் வருமுன், உங்கள் பக்கத்தையும் சரி பாருங்கள்.
Richardsof
5th November 2014, 09:36 AM
உண்மையிலேயே உங்களை பாராட்டுகிறேன் கோபால் .
மக்கள் திலகம் எம்ஜிஆர் திரியை நீங்கள் படிப்பது மிக்க மகிழ்ச்சி
தாராளமாக அந்த திரிக்கே வந்து உங்கள் சந்தேகங்களை கேட்டு
கொள்ளவும் .
Gopal.s
5th November 2014, 09:45 AM
உண்மையிலேயே உங்களை பாராட்டுகிறேன் கோபால் .
மக்கள் திலகம் எம்ஜிஆர் திரியை நீங்கள் படிப்பது மிக்க மகிழ்ச்சி
தாராளமாக அந்த திரிக்கே வந்து உங்கள் சந்தேகங்களை கேட்டு
கொள்ளவும் .
எனக்கு எந்த திரி என்பது முக்கியமல்ல. எப்படி பட்ட கருத்து?அது எப்படி வெளிப் படுத்த படுகிறது என்பதே முக்கியம்.
எஸ்வி, உங்களின் ஈடுபாடு,அனைவரையும் அனைத்து செல்லும் போக்கு எனக்கு பிடித்தே உள்ளது.
கலைவேந்தன் நன்கு பங்களிக்கிறார்.
எதையும் படிப்பதிலோ,பார்ப்பதிலோ எனக்கு தடையில்லை. பார்க்காமல் விமரிசிப்பது எனக்கு உடன்பாடுடையது அல்ல. உங்கள் படங்களையே எடுத்தாலும், எனக்கு உங்கள் அங்கத்தினர்களை விட அதிகம் தெரியும்.
ரசிப்பது என்பது என் பிரத்யேக தேர்வு.உரிமை.
Richardsof
5th November 2014, 09:48 AM
நல்ல ரசிகர் - நல்ல விமர்சகர் என்ற முறையில் உங்கள் ''மாட்டுக்கார வேலன் '' பதிவை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன் கோபால் .
Gopal.s
5th November 2014, 10:08 AM
நல்ல ரசிகர் - நல்ல விமர்சகர் என்ற முறையில் உங்கள் ''மாட்டுக்கார வேலன் '' பதிவை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன் கோபால் .
எனக்கு ஒன்றும் தடையில்லை எஸ்.வீ.
எனக்கு பிடித்த எம்.ஜி.ஆர் படங்கள். சர்வாதிகாரி,மலைக்கள்ளன்,நாடோடி மன்னன்,பாசம்,கலையரசி,பெரிய இடத்து பெண் படகோட்டி,எங்க வீட்டு பிள்ளை,ஆசை முகம்,ஆயிரத்தில் ஒருவன்,அன்பே வா,பறக்கும் பாவை,குடியிருந்த கோயில் ,அடிமை பெண்,மாட்டுகார வேலன்,தேடி வந்த மாப்பிள்ளை..
70 களில் ஒரு படம் கூட கவரவில்லை உ .சு.வா உட்பட.
அவர் நடிப்பில் என்னை கவர்ந்தவை. மலை கள்ளன்,கொடுத்து வைத்தவள்,எங்க வீட்டு பிள்ளை,அன்பே வா,பெற்றால்தான் பிள்ளையா,குடியிருந்த கோயில்,நீரும் நெருப்பும்.
ஆனால் இதே போல பல நடிகர்களின் படங்கள் (ஜெய்சங்கர் உட்பட) என்னை கவர்ந்தவை உண்டு. நீங்கள் என்னுடைய 50 முதல் 2010 வரையிலான ,பத்தாண்டு பட வரிசை தேர்வில் நான் பாரபட்சம் காட்டவே இல்லையே.
பொதுவாக, நான் நடிகர்திலகத்தின் படங்களையே பொது ரசிகனாக மட்டுமே அணுகுவேன்.
ஆனால் அவரது(சிவாஜி), உயரிய திறமையால் கவர பட்டு நாளும் வளரும் ரசனை திறனுடன்,அவர் மீது மதிப்பீடு வளர்ந்து கொண்டே செல்வதால், அவர் பக்தனாகி தொடர்கிறேன்.
Richardsof
5th November 2014, 12:49 PM
இன்னும் 36 மணி நேரத்தில் இனிய பிறந்த நாள் கொண்டாட உள்ள நண்பர் திரு கோபால்
அவர்களுக்கு இனிய நல் பிறந்த நாள் வாழ்த்துக்கள் . 7ந் தேதி பிறந்த நீங்கள் பல பெருமைகளுக்குசொந்தக்காரர் . எல்லா வளமும் பெற்று பல்லாண்டு வாழ்க என்றும் இன்று போல் என்றும் வாழ்க என்றும் உங்களை வாழ்த்துகிறேன் .
Richardsof
5th November 2014, 12:52 PM
எனக்கு பிடித்த எம்.ஜி.ஆர் படங்கள். சர்வாதிகாரி,மலைக்கள்ளன்,நாடோடி மன்னன்,பாசம்,கலையரசி,பெரிய இடத்து பெண் படகோட்டி,எங்க வீட்டு பிள்ளை,ஆசை முகம்,ஆயிரத்தில் ஒருவன்,அன்பே வா,பறக்கும் பாவை,குடியிருந்த கோயில் ,அடிமை பெண்,மாட்டுகார வேலன்,தேடி வந்த மாப்பிள்ளை..
அவர் நடிப்பில் என்னை கவர்ந்தவை. மலை கள்ளன்,கொடுத்து வைத்தவள்,எங்க வீட்டு பிள்ளை,அன்பே வா,பெற்றால்தான் பிள்ளையா,குடியிருந்த கோயில்,நீரும் நெருப்பும்.
Thanks Gopal
Irene Hastings
5th November 2014, 12:56 PM
இன்னும் 36 மணி நேரத்தில் இனிய பிறந்த நாள் கொண்டாட உள்ள நண்பர் திரு கோபால்
அவர்களுக்கு இனிய நல் பிறந்த நாள் வாழ்த்துக்கள் . 7ந் தேதி பிறந்த நீங்கள் பல பெருமைகளுக்குசொந்தக்காரர் . எல்லா வளமும் பெற்று பல்லாண்டு வாழ்க என்றும் இன்று போல் என்றும் வாழ்க என்றும் உங்களை வாழ்த்துகிறேன் .
Advance birthday wishes Gopal Sir. I log in only to view your posts. In my opinion, you are the ultimate amongst the NT fans in terms of quality of analysis and indepth knowledge and understanding of the great. Best wishes Sir. Pls continue to contribute. Pls explore new territories of our idol . May be something on Deiva Magan or Navarathiri . Special request .
eehaiupehazij
5th November 2014, 02:05 PM
Best wishes for a happy birth day Mr. Gopal. May His Almighty continue to shower all his blessings for your sustained happiness.
regards, senthil
:-D
https://www.youtube.com/watch?v=dmVJafjGTjU
Murali Srinivas
5th November 2014, 03:12 PM
சந்திரசேகர் சார்,
நீங்கள் தினமலர் நாளிதழுக்கு எழுதிய கடிதம் மிக சரியான முறையில் எழுதப்பட்ட ஒன்று. ஆனால் அவர்கள் அதை பிரசுரிப்பார்களா என்பது சந்தேகமே! இதுவரை நம்முடைய அனுபவத்தின் வாயிலாக நாம் பார்த்த வரையில் அது ஆனந்த விகடன் ஆகட்டும், குமுதம் ஆகட்டும் தினமலர் ஆகட்டும் இல்லை oneindia போன்ற இணையதளங்கள் ஆகட்டும் அவர்களின் தவறுகளை அவர்கள் ஒப்புக் கொள்ளவே மாட்டார்கள். அதுவும் தவிர இது போன்ற நிறுவனங்களில் பணியாற்றும் "சிவாஜி விரோத" மனோநிலை கொண்டவர்கள் இந்த நிறுவனங்களின் பின்புலத்தை பயன்படுத்தி தாங்கள் விரும்பும் வண்ணம் செய்திகளை திரிப்பதிலும் வல்லவர்கள்.
எது எப்படியிருப்பினும் அவர்கள் பிரசுரிக்கிறார்களோ இல்லையோ தவறான தகவல் வரும்போது அதை சுட்டிக்காட்டி உங்கள் எதிர்ப்பை பதிவு செய்வது பாராட்டுக்குரியது. ஒரு நாள் நீதி கிடைக்கும். அந்த நம்பிக்கையில் தொடருவோம்!
அன்புடன்
Murali Srinivas
5th November 2014, 03:16 PM
அருமை நண்பர் சித்தூர் வாசு அவர்களுக்கு ஒரு சிறிய வேண்டுகோள்.
உங்கள் மனோநிலை, நமது திரியின் பழைய பதிவுகளை படிப்பதனாலும் அதை மீள் பதிவு செய்வதனாலும் உங்களுக்கு கிடைக்கும் மகிழ்ச்சி, திருப்தி ஆகியவற்றை நான் முழுமையாக புரிந்துக் கொள்கிறேன். அதை குறை சொல்லவும் விரும்பவில்லை. ஆனால் அதே நேரத்தில் இருக்கும் பழைய பதிவுகளை எல்லாம் மீள் பதிவு செய்தால் இந்த திரியை பார்வையிடும் படிக்கும் ஏராளமான வாசகர்களுக்கு அது ஒரு ஏமாற்றமான அனுபவத்தைத்தான் கொடுக்கும். எழுதியதையே மீண்டும் மீண்டும் மீள்பதிவு செய்கிறார்களே இவர்களுக்கு எழுதுவதற்கு வேறு விஷயம் இல்லை போலிருக்கிறது என்ற தவறான முடிவிற்கும் அவர்கள் வந்து விடும் அபாயமும் இருக்கிறது.
நமது ஹப்பில் ஏன் இணையதள உலகத்திலேயே அதிகமாக வாசிக்கப்படும் நேசிக்கப்படும் திரிகள்/வலைப்பூக்களில் நமது நடிகர் திலகம் திரி முதன்மையான இடங்களில் இருக்கிறது என்பதை நான் இங்கே பலமுறை பதிவு செய்திருக்கிறேன். ரசிகர்களை தவிர்த்து பொதுவான பலரும் அதை அறிவார்கள், உடன்படுவார்கள். எனவேதான் நமக்கு பொறுப்பு கூடுதல். எண்ணிக்கை குறைந்தாலும் தரம் குறையாமல் பார்க்க வேண்டிய பொறுப்பு நமக்கு இருக்கிறது. Quality matters more than quantity. அதனால்தான் அதிகமான வீடியோ பதிவுகள், மீள் பதிவுகள் போன்றவற்றை தவிர்க்க சொல்கிறேன்.
மீள் பதிவுகளே கூடாது என்று சொல்லவில்லை. அது தேவைப்படும் இடத்தில உதாரணமாக Filmography திரியில் ஒவ்வொரு படத்தைப் பற்றிய செய்திகள் பதிவிடும்போது அதற்கு பொருத்தமாக முன்னர் சுவாமி பதிவிட்ட விளம்பரங்கள், பத்திரிக்கை செய்திகள் தேவையான இடங்களில் விமர்சனங்கள் ஆகியவற்றை ராகவேந்தர் சார் பதிவிடுகிறார். இங்கும் அது போல் உதாரணமாக இப்போது திரிக்கு வராமல் இருக்கும் சாரதா போன்றவர்களின் பதிவுகளை இடலாம். புதிய வாசகர்களுக்கு அது சுவையாக இருக்கும். இப்போதும் பங்களிப்பு செய்துக் கொண்டிருக்கும் என்னைப் போன்றோரின் பதிவுகள் மீள் பதிவு செய்யப்படும்போது புதியது எது பழையது எது என்ற குழப்பங்கள் ஏற்படுவதற்கும் காரணமாகி விடுகிறது.
நான் சொல்வதை சரியான முறையில் புரிந்து கொள்வீர்கள் என நம்புகிறேன்.
இதையெல்லாம் மனதில் நிறுத்தி நாம் பதிவுகளை இட வேண்டும் என்று வாசுவை மட்டுமல்ல அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன்.
அன்புடன்
Gopal.s
5th November 2014, 03:18 PM
தற்காப்புக் கலையை மையமாக வைத்து ஒரு படம் உருவாகி வருகிறது. இந்தப் படத்துக்கு கலை வேந்தன் என்று தலைப்பிட்டுள்ளனர்.
Read more at: http://tamil.filmibeat.com/news/kalaivendan-based-on-vovinam-self-defence-art-031643.html
sivaa
5th November 2014, 08:27 PM
துள்ளின இடத்தில துள்ளாமல்
இங்கவந்து ஏன் இந்தத்துள்ளல்?
ScottAlise
5th November 2014, 08:32 PM
பார்த்ததில் பிடித்தது - 46
அன்பை தேடி
முக்தா ஸ்ரீனிவாசன் , சிவாஜி , ஜெயலலிதா என்ற புது combination சேர்ந்து பணிபுரிந்த படம்
முக்தா ஸ்ரீனிவாசன் படத்தில் நாயகன் பாத்திரத்தை சித்தரிக்கும் பொது அவர் ஒரு வித நோயினால் பாதிக்கப்பட்டவர் போல் சித்தரிக்க படுவார்
பிறகு மெல்ல அதில் இருந்து மீண்டு தனக்கு உள்ள பலவீனங்கள் அனைத்தையும் தாண்டி வெற்றி அடைவது போலே கதை அமைக்க படும். இது தான் முக்தா ஸ்ரீனிவாசன் அவர்கள் இயக்கம் படத்தில் உள்ள basic plot . உளவியல் ரீதியாக இது போன்ற கதைகள் வெற்றி பெற சாத்தியகூறுகள் அதிகம் , காரணம் , படத்தை பார்க்கும் பார்வையாளர்கள் அனைவருக்கும் எதோ ஒரு வகையில் ஒரு shortcoming அதாவது ஒரு குறை இருக்கும் , படத்தின் நாயகன் வெற்றி பெறுவதை போல் காட்சிகள் இருந்தால் தாங்களே வெற்றி பெற்றுவிட்டதை போல் எண்ணி ஆனந்தம் அடைவார்கள் .
இந்த படத்தில் நாயகன் கனவு காணும் வியாதியால் அவஸ்தை படுகிறார் , தன் வேலைக்காரன் மற்றும் உறவினர்கள் அனைவராலும் உதாசீன படுத்த படுகிறார் . அவருக்கு அதரவு அவர் அக்கா மற்றும் அக்கா குழந்தை இந்திரா . குழந்தை இந்திரா உடன் கடைக்கு செல்லும் பொது குழந்தையை தொலைத்து விடுகிறார் , மறுநாள் குழந்தை இறந்து விட்டதாக செய்தி வர , அக்காவும் , அக்காவின் கணவரும் இருவரும் நாயகன் ராமுடன் இருக்க பிடிக்காமல் வெளியே சென்று விடுகிறார்கள்
தன் அக்கா , மாமா இருவரும் அனுபவிக்கும் வேதனையை தானும் அனுபவிக்க வேண்டும் அது தான் நீதி என்று ராமு நினைத்து , தனக்கு பிறக்க போகும் குழந்தையை தன் அக்கா மாமா இருவருக்கும் கொடுத்து விட நினைக்கிறார் , ராமு சொன்ன படி செய்தாரா , குழந்தையை கொன்றது யார் , பிரிந்து போன குடும்பம் ஒன்று சேர்ந்ததா என்பதே மீதி கதை
சிவாஜி அவர்கள் இந்த படத்தில் எடுத்து கொண்டு இருக்கும் பாத்திரம் சற்று வித்யாசமான பாத்திரம் , எதை பற்றியாவது நினைத்து கொண்டு தான் அதுவாகவே மாறி விட்டதாக கற்பனை செய்து கொள்ளும் பாத்திரம் , முதலாளி என்ற தோரணை இல்லாமல் , தன்னிடம் வேலை பார்க்கும் நபர்கள் செய்யும் திருட்டு வேலைக்கு வேறு வழி இல்லாமல் துணை போகும் பாத்திரம் , பொதுவாகவே ஒரு நபரை திட்டி , அவமானம் செய்யும் பொது அவர் confidence level கம்மி ஆகி விடும் , நாட்கள் செல்ல செல்ல தன்னம்பிக்கை குறைந்து அவநம்பிக்கை , பயம் வந்து விடும் , இதை தன் கண்களால் அற்புதமாக பிரதிபலிக்கிறார் நடிகர் திலகம் ,ஒவ்வொரு முறையும் தன்னை அவமானம் படுத்தும் நபர்களை அவர் கடந்து செல்லும் பொது நம் மனது வலிக்கிறது
கனவு கான்பாது என்பது நாயகனின் குறை , ஆனால் அதை லாவகமாக பயன்படுத்தி , ஒரு சில காட்சிகள் என்றாலும் அதை நன்றாக செதுக்கி இருப்பார் இயக்குனர் ஸ்ரீநிவாசன்
cricket bowler , புத்தர் , இளவரசன் என்று ஒரு சில நிமிடங்களே வந்தாலும் நம் மனதில் பதிந்து விடுகிறது , குறிப்பாக அந்த புத்தர் பாத்திரத்தில் நமாவர் கண்ணில் தெரிந்த கனிவு , பின்னாடி தெரியும் ஒலி , சலனம் இல்லாத முகம் simply outstanding
தன் அக்கா குழந்தையின் சாவுக்கு காரணம் தான் தான் என்று மருகுவதும் , தன் தாய் தந்தை போல் இருந்த அக்கா மாமா வெளியே போகும் பொது வெடித்து அழுவும் காட்சிகள் நடிகர் திலகத்தின் acting stamp
முதல் பாதியில் அடி வாங்கும் சிவாஜி பிற்பாதியில் அடி கொடுக்கும் பொது நம் கை தட்டாமல் இருக்க முடியவில்லை
அதும் ஒரு மனிதர் கோழையாக இருந்து விட்டு வீரனாக மாறும் பொது அடிக்க தெரியமால் ஆனால் ஒரு வித வெறி உடன் அடிப்பான் , அதை அழகாக பிரதிபலித்து இருப்பார் நடிகர் திலகம்
கடைசி காட்சியில் சோ அவர்கள் வீரபாண்டிய கட்டபொம்மன் வசனம் பேசி காண்பிக்கும் பொது ஒரு வித dumb expression மட்டும் கொடுத்து விட்டு நிற்கும் இடத்தில சிரிப்பை வர வைக்கிறார்
ScottAlise
5th November 2014, 08:34 PM
ஜெயலலிதா இந்த படத்தில் சற்று வயதானவராக தெரிகிறார் , அறிமுக காட்சியில் தன்னை வம்பு இழுத்து கேலி செய்யும் நபரிடம் அவர் துடுக்குத்தனமாக சண்டை போடுவதும் , சிவாஜியிடமும் அதே போன்று நடந்து கொண்டு பின்பு சிவாஜியின் குணம் புரிந்து அவரை காதலித்து திருமணம் செய்து கொள்ளுகிறார் , சிவாஜியின் பயத்தை போக்க , அவர் கையாளும் உக்தி , முதலில் குழந்தையை பிரிய சம்மதித்து விட்டு , பிறகு தாய்பாசம் காரணமாக குழந்தையை பிரிய மறுக்க , மீண்டும் சொன்ன சொல் தவறமால் இருக்க உயிரை கூட துச்சமாக நினைத்து உயிர் விட நினைக்கும் பொது , நம் மனதில் நின்று விடுகிறார்
சோ
வழக்கம் போல் அரசியல் நையாண்டி செய்கிறார் , அதிலும் இந்திரா என்ற குழந்தையின் பெயரை வைத்து இவர் அடிக்கும் லூட்டி , அரசியல் எனக்கு பொழுதுபோக்கு , கட்சி விட்டு கட்சி மாற இவனால் முடியாது என்று நகைச்சுவை தோரணம் காட்டுகிறார் , சில காட்சிகளில் குணசித்திர பாத்திரமாகவும் முத்திரை பதிகிறார்
மேஜர் சுந்தராஜன் :
நடிகர் திலகத்தின் பெரும்பாலான படங்களில் நடித்து இருக்கிறார் , பல படங்களில் நல்ல substance உள்ள author backed ரோல் ல் நடித்து கலக்கி இருப்பார் , இந்த படத்தில் நடிகர் திலகத்தின் மாமாவாக நடித்து இருக்கிறார் , பொதுவாக அவரை திட்டுவதும் , ஆனால் அந்த கண்டிப்புக்கு பின்னல் அவர் நல்ல வரவேண்டும் என்ற அக்கறையும் வெளிப்படும் , தன் மகள் சாவுக்கு காரணமாக இருக்கும் சிவாஜியின் மேல் ஆத்திரம் அடையாமல் வீட்டை அவர் பொறுப்பில் விட்டு செல்லுவதும் , தான் வளர்த்த பையன் தன்னை எடுத்து எரிந்து பேசிய உடன் அப்படியே stun ஆகி நிற்கும் காட்சியிலும் , கடைசியில் சிவாஜியின் மனதை அறிந்து கண்ணீர் வடிக்கும் காட்சியிலும் , மகளை பிரிந்து சோகத்தால் வாடும் காட்சியிலும் நிறைவாக நடித்து இருக்கிறார்
சிவாஜி தன் மாமாவின் அறையில் அவர் இருப்பதாக கற்பனை செய்து கொண்டு தனக்கு தானே பேசுவதை அவர் பார்த்து ரியாக்ட் பண்ணும் காட்சி அருமை
விஜயகுமாரி :
தன் தம்பிக்காக வருத்த படும் அக்காவாக அருமையாக பொருந்தி இருக்கிறார் , முதல் பாதியில் தம்பிக்காக வாதாடும் அவர் , பிற்பாதியில் தன் கணவரை தம்பி எடுத்து எரிந்து பேசியுடன் , இவர் கோப படும் காட்சி , அதற்கு சிவாஜி கொடுக்கும் பதிலும் அருமை
சுபா :
சிவாஜியின் தலையில் தீப்பட்டி வைத்து விட்டு , அதை வைத்து அவரை அவமானம் படுதும் காட்சியிலும் , அதே போல் தானும் சிவாஜியிடம் tit for tat வாங்கும் இடத்தில நன்றாக ஸ்கோர் செய்து இருக்கிறார்
மனோரமா :
முதலில் திருட்டு பொருள் விக்கும் பொது நகைச்சுவைக்கு உதவுகிறார் , அதுவும் சோவின் மூக்கு போடி டப்பாவை மனோரமா திருடி அதை அவரிடமே விற்கும் காட்சி நல்ல தமாஷ்
பிற்பாதியில் குணசித்திர பாத்திரத்துக்கு மாறி அதிலும் நன்றாக ஸ்கோர் செய்து விடுகிறார்
பாடல்கள் – MSV
புத்தி கேட்ட பொண்ணு ஒன்னு பாடலில் நடிகர் திலகத்தின் நடனமும் , கலைச்செல்வியின் நடனமும் மாஸ் steps , பாடலும் தாளம் போட வைக்கும் .
சித்திர மண்டபத்தில் பாடல் கிளாஸ் நடிகர் திலகம் யுவராஜாவாக , ஜெயலலிதா மிஸ் மெட்ராஸ் என்ற பாத்திரத்தில் அற்புதமாக பொருந்தி இருப்பார்கள் பாடல் வரிகளும் , பாடல் எடுத்த விதமும் அற்புதமாக பொருந்தி இருக்கும் , அவர்கள் உடை perfect
அம்மாவும் அப்பாவும் வெள்ளை பூனைகள் பாடலில் நடிகர் திலகத்தின் அப்பாவி முகபாவனைகளை காணலாம்
sivaa
5th November 2014, 08:55 PM
[quote=kcshekar;1178951]நடிகர்திலகத்தைப் பற்றி அவதூறு பேசுவது, எழுதுவது என்றால் பலருக்கும் லட்டு சாப்பிடுவது போல இருக்கிறது. அவர் மறைந்து இவ்வளவு ஆண்டுக்குப் பிறகும் அவரது புகழ் ஜொலிப்பதைக் கண்டு பொறுக்காதவர்கள் தொடர்ந்து இதுமாதிரி செய்கிறார்கள்.
தினமலர் நாளிதழுக்கு நான் எழுதிய கடித நகல்:
quote]
சந்திரசேகர் சார் தங்கள் முயற்ச்சிக்கு
எனது மனமார்ந்த நன்றி
கடிதம் அனுப்பியதுடன் அல்லாமல்
நேரே சென்று நம்முடைய ஆட்சேபனையை தெரிவிப்பது
கூடுதல் பயன் அளிக்குமென நினைக்கின்றேன்
ஏனைய நண்பர்களுடன் கலந்தாலோசித்து
முயற்ச்சி செய்யுங்கள் நன்றி.
Gopal.s
6th November 2014, 06:01 AM
கலைவேந்தன்,
உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி.
சில விஷயங்களை மட்டுமே தொட்டு விட்டு செல்வேன்.
1)நடிகர்திலகத்திற்கு தொழிலில் போட்டி இருந்ததே இல்லை. அவர் முடி சூட்ட பட்ட வெள்ளித்திரை மன்னன்.இது இறுதி வரை தொடர்ந்தது.தொடரும்.
2)அவருக்கு திறமையில் போட்டி என்றாலும் உலகளாகிய அளவில் மார்லோன் பிராண்டோ போன்ற ஒரு சிலருடன் மட்டுமே.அவர்கள் கூட ,சிவாஜி கிட்டே நெருங்க முடிந்த காரணம் ,சரியான இடத்தில் பிறந்ததால் மட்டுமே.
3)அவருக்கு போட்டியாளராக தன்னை காட்டி கொள்ள விரும்பியவர்கள்,சில கீழ் மட்ட அரசியல் செய்து ,சிறு தொல்லைகள் மட்டுமே கொடுக்க முடிந்தது.(இது ராம.அரங்கண்ணல் விவரிப்பில் எப்படி திட்டமிடப்பட்டது அன்று ஆதார பூர்வமாக புத்தகங்களில் வெளியான ஆவணம்)
4)எந்த ஒரு திறமையாளரும்,அரசியலில் எப்படியாவது வெற்றி கண்டால் மட்டுமே அங்கீகரிக்க பட வேண்டும் என்ற ஒரு தவறான முன்னுதாரணம் தமிழ் நாட்டில் ஏற்பட்டு ,நடிக்க வந்தோர் அரசியல் செய்வதும்,அரசியல்வாதிகள் நடிப்பதும் வாடிக்கையாகி விட்டது.எது ஒன்றும் நடந்து முடிந்து விட்டதால் அங்கீகரிக்க பட்ட நற் சரித்திரம் ஆகி விட முடியாது.
5)நாமெல்லோரும் பெருமை கொண்டு ,ஒன்று பட்டால் மட்டுமே,தமிழினம் உலகளவில் மதிக்க படும்.நம் மொழி அதற்குரிய உயர்வை அடையும்.நம் திறமைகளில் நாம் பெருமை காணுவதை விடுத்து,நம் உன்னத கலைஞர்களை நாமே புறம் தள்ள கூடாது.
6)சிவாஜி , ஒரு தாகூர் ,சத்யஜித்ரே வங்காளத்தால் போற்ற படும் அளவு,அனைத்து தமிழர்களாலும் போற்ற பட வேண்டிய உன்னத தமிழ் .கலைஞர் .
7)தற்போது அனைவரும் கல்வி பெற்று முன்னேறிய அறிவு சூழலில்,சிறு வயதில் அறியாமை சூழலில் ஏற்பட்ட தடுமாற்றங்கள் மறு பரிசீலனை செய்ய பட்டு , பொய்மை விட்டு, திறமையின் பின்னே அணிவகுக்க நாம் அனைவரும் கற்க வேண்டும்.
8)எனக்கு மற்றோர் நல்ல படங்களை அங்கீகரிப்பதால், என் நடிப்பு தெய்வத்தின் மீது என்னுடைய பற்றுதல் கேள்விக்குரியதாகி விடுமென்றோ,என் தெய்வத்தின் படங்களையே நான் விமரிசிப்பதால் அவர் மீது உள்ள பக்தியில் களங்கம் விளையுமென்றோ ,மூட நம்பிக்கையில் திளைத்து , சுலோகங்கள் பாடி கொண்டிருக்கும் மனநிலை என்றுமே வராது. ஏனென்றால் நான் பெரியாரின் அறிவு பாசறையில் வெளி வந்த பகுத்தறிவாளன்.
Russellisf
6th November 2014, 06:58 AM
இனிய நண்பர் திரு கோபால் அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் இன்னும் ஒரு நூறாண்டு காலம் வாழ்ந்து உங்கள் அபிமான நடிகரின் புகழ் பாடுங்கள்
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/a_zps2b9944fa.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/a_zps2b9944fa.jpg.html)
JamesFague
6th November 2014, 09:15 AM
Wish you many more happy returns of the day (07.11.14) Mr Gopal.
Regards
parthasarathy
6th November 2014, 09:18 AM
Dear Mr. Gopal,
Wishing you in advance many more happy returns of the day.
Regards,
R. Parthasarathy
Russellxss
6th November 2014, 12:24 PM
நவம்பர் 7 60வது பிறந்தநாள் காணும் மக்கள்தலைவர் சிவாஜி அவர்களின் அன்பைப் பெற்ற
திரு.கமல்ஹாசன் நீடுழி வாழ எங்கள் இறைவன் சிவாஜி கணேசன் ஐ வேண்டுகிறோம்.
http://oi59.tinypic.com/2dt7w5.jpg
இருக்கும் வரை உத்தமன் சிவனை புகழ் காப்போம்.
eehaiupehazij
6th November 2014, 12:51 PM
NT's acting edge over the Oscarites!-1
Marlon Brando and Sivaji Ganesan : The incomparable and mutually exclusive performers of our time! We prefer to brand Marlon Brando as the Hollywood's 'Sivaji Ganesan' replica!!
மார்லன் பிராண்டோ ஒரு உயர் ரக நடிகர் என்பதில் ஐயமில்லை ஆனாலும் அவரின் நடிப்புத்திறமையும் tip of the iceberg வகையே அவருடன் திரையுலக நடிப்புப்பங்களிப்பை ஒப்பிடும்போது நடிகர்திலகம் wholesome iceberg என்பது உள்ளங்கை நெல்லிக்கனி
Marlon Brando (April 3, 1924 – July 1, 2004), construed as the Hollywood’s Sivaji Ganesan, was an American actor who is hailed for bringing a gripping realism to film acting, and is widely considered to be one of the greatest and most influential actors of all time. Brando is most famous for his Oscar-winning performances as Terry Malloy in On the Waterfront (1954) and Vito Corleone in The Godfather (1972), as well as influential performances in A Streetcar Named Desire (1951), Viva Zapata! (1952), Julius Caesar(1953), The Wild One (1953), Reflections in a Golden Eye (1967), Last Tango in Paris (1972) and Apocalypse Now (1979).
He won his second Academy Award for playing Vito Corleone in Francis Ford Coppola's The Godfather, a role critics consider among his greatest. This was one of the most commercially successful films of all time when it was released. Together with his Oscar-nominated performance as Paul in Last Tango in Paris, Brando became re-established in the ranks of top box-office stars, placing him at number 6 and number 10 in Top 10 Money Making Stars poll in 1972 and 1973, respectively.
Brando took a long hiatus before appearing in The Missouri Breaks (1976). After this, he was content to be a highly paid character actor in parts that were glorified cameos, such as in Superman (1978) and The Formula (1980), before taking a nine-year break from motion pictures. According to the Guinness Book of World Records, Brando was paid a record $3.7 million ($14 million in inflation-adjusted dollars) and 11.75% of the gross profits for 13 days work playing Jor-El in Superman, further adding to his mystique
Brando was ranked by the American Film Institute as the 4th greatest screen legend among male movie stars whose screen debuts occurred in or before 1950. Considered to be one of the most important actors of American cinema, Brando was one of only three professional actors, along with Sir Charlie Chaplin and Marilyn Monroe, named in 1999 by Time magazine as one of its 100 Persons of the Century.
He died on July 1, 2004 of respiratory failure at 80.
For us, he had always been the standard for comparison on par with NT, as far acting talents are concerned.
Website
www.marlonbrando.com/ courtesy : Wikipedia and You Tube
On the Waterfront
In 1954, Brando starred in On the Waterfront, a crime drama film about union violence and corruption among longshoremen. The film was directed by Elia Kazan and written byBudd Schulberg; it also stars Karl Malden, Lee J. Cobb, Rod Steiger and, in her film debut, Eva Marie Saint. When initially offered the role, Brando – still stung by Kazan's testimony at the HUAC – demurred and the part of Terry Malloy nearly went to Frank Sinatra. According to biographer Stefan Kanfer, the director believed that Sinatra, who grew up in Hoboken, would work as Malloy, but eventually producer Sam Spiegel wooed Brando to the part, signing him for $100,000. "Kazan made no protest because, he subsequently confessed, 'I always preferred Brando to anybody.
Brando won the Oscar for his role as Terry Malloy in On the Waterfront. His performance, spurred on by his rapport with Eva Marie Saint and Kazan's direction, is universally praised as a tour de force. For the famous I coulda' been a contender scene, he convinced Kazan that the scripted scene was unrealistic. Schulberg's script had Brando acting the entire scene with his character being held at gunpoint by his brother Charlie, played by Rod Steiger. Brando insisted on gently pushing away the gun, saying that Terry would never believe that his brother would pull the trigger and doubting that he could continue his speech while fearing a gun on him.
Marlon Brando with Eva Marie Saintin the trailer for On the Waterfront(1954)
https://www.youtube.com/watch?v=QOLHbQjtSFs
Marlon Brando's best scenes claim! (won Oscar!)
https://www.youtube.com/watch?v=4LtHot2GQTc
https://www.youtube.com/watch?v=FaUq4h818E8
Nadigar Thilagaththin best scene claim!! (entered Oscar..but)! We wished NT born on the waterfront elsewhere in America
https://www.youtube.com/watch?v=yb2gzvrNhXs
KCSHEKAR
6th November 2014, 01:30 PM
இனிய நண்பர் திரு.கோபால் அவர்களுக்கு பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.
KCSHEKAR
6th November 2014, 01:43 PM
சந்திரசேகர் சார் தங்கள் முயற்ச்சிக்கு
எனது மனமார்ந்த நன்றி
கடிதம் அனுப்பியதுடன் அல்லாமல்
நேரே சென்று நம்முடைய ஆட்சேபனையை தெரிவிப்பது கூடுதல் பயன் அளிக்குமென நினைக்கின்றேன்ஏனைய நண்பர்களுடன் கலந்தாலோசித்து முயற்ச்சி செய்யுங்கள் நன்றி.
திரு.முரளி சீனிவாஸ் அவர்கள்
குறிப்பிட்டமாதிரி ஒவ்வொரு பத்திரிகையிலும் இருக்கும் நடிகர்திலகத்தைப் பிடிக்காத ஓரிருவர் (மிகச் சிலர்) தங்களது மனதிலிருக்கும் குரோதத்தை இதுமாதிரி செய்திகளை வெளியிட்டு தணித்துக்கொள்கிறார்கள். நாம் சுட்டிக்காட்டினால் அவர்கள் தவறை ஒப்புக்கொள்வதுமில்லை, நம் கடிதத்தைப் பிரசுரிப்பதும் இல்லை. ஆனால், நம் எதிர்ப்பைத் தெரிவிப்பது அடுத்தடுத்து இத்தகைய செய்திகளை எழுத யோசிக்கவைக்கட்டும் என்பதே நமது நோக்கம்.
திரு.சிவா,
தாங்கள் குறிப்பிட்டுள்ளபடி நான் இக்கடிதத்தை தினமலர் அலுவலகத்தில் நேரடியாகக் கொண்டு சென்று தலைமை செய்தியாளரை சந்தித்துதான் அளித்தேன். அவரும், நான் கூறிய கருத்துக்களை, வாதத்தை ஏற்றுக்கொண்டார். எனக்கும் தங்கள் கருத்தில் உடன்பாடுதான், ஆனாலும், என்ன செய்வது சில சமயங்களில் இத்தகைய செய்திகள் இடம்பெற்றுவிடுகின்றன என்று வருத்தப்பட்டார். பார்ப்போம், காலம் இத்தகையவர்களுக்கு பதில் சொல்லும்.
ScottAlise
6th November 2014, 02:39 PM
Dear Gopal Sir,
Wish you many more happy returns of the day (7.11.2014)
Russelldwp
6th November 2014, 03:15 PM
Dear Gopal Sir
My Heartiest Birthday Wishes to You and i pray to god for your good health
C. Ramachandran
kalnayak
6th November 2014, 05:36 PM
Dear Gopal,
I wish you many more happy birthdays!!!
eehaiupehazij
6th November 2014, 06:25 PM
NT's acting edge over the Oscarites!-2
After Marlon Brando, the actor coming closer to NT is Charlton Heston, with his award winning performances in epics like Ben Hur and Ten Commandments comparable to NT's Afro-Asian award winning performance in VPKB and global heart winning performance in Karnan!
சார்ல்டன் ஹெஸ்டன் அவர்களும் நம் மனதை ஈர்க்கும் நடிப்பாற்றல் மிக்கவர்தான் எனினும் பைபிள் பாத்திரங்களைத்தவிர அவரால் சமூக பாத்திரங்களில் ஒன்றி நடிகர்திலகம் போல் நம்மை உணர்ச்சியலைகளில் தாலாட்டி நெக்குருக வைக்க இயலவில்லையே! ஒரு கர்ணன் நடிப்பும் இறுதி துடிப்பும் பத்து பென்ஹருக்கு சமம்! ஹெஸ்டனுக்கு அவரது அசாத்தியமான உடற்கட்டும் உயரமும் (ஆர்னால்டுக்கு அப்பாவாக நடிக்கப் பொருத்தமான பாறை முகமும்) பக்கபலம்! ஆனாலும் சிவாஜிகணேசனின் நடிப்பின் உயரம் எட்ட முடியுமா? ஆஸ்கார் நடிகர்திலகத்திற்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்குவதன் மூலம் பெருமை தேடிக்கொள்ளுமா?
Charlton Heston (born John Charles Carter; October 4, 1923 – April 5, 2008) was an American actor best known for his roles in The Ten Commandments (1956); Ben-Hur, for which he won the Academy Award for Best Actor (1959), El Cid (1961), and Planet of the Apes (1968). He also is well known for his roles in the films The Greatest Show on Earth (1952), Touch of Evil (1958), and The Agony and the Ecstasy (1965).
Heston's first professional movie appearance was in Dark City, a 1950 film noir. His breakthrough came when Cecil B. DeMille cast him as a circus manager in The Greatest Show on Earth, which was named by the Motion Picture Academy as the best picture of 1952. In 1953, Heston was Billy Wilder's first choice to play Sefton in Stalag 17. However, the role was given to William Holden, who won an Oscar for it. Heston became an icon for portraying Moses in the hugely successful film The Ten Commandments (1956), reportedly being chosen by director Cecil B. DeMille because he thought the muscular, 6 ft 3 in, square-jawed Heston bore an uncanny resemblance to Michelangelo's statue of Moses.
After Marlon Brando, Burt Lancaster, and Rock Hudson turned down the title role in Ben-Hur (1959), Heston accepted the role, winning the Academy Award for Best Actor, one of the unprecedented eleven Oscars the film earned. After Moses and Ben-Hur, Heston became more identified with Biblical epics than any other actor. He voiced the role of Ben-Hur in a cartoon version of the Lew Wallace novel in 2003.
Heston played leading roles in a number of fictional and historical epics: El Cid (1961), 55 Days at Peking (1963), as Michelangelo in The Agony and the Ecstasy (1965), and Khartoum (1966). Heston also played the eponymous role in the western movie Will Penny (1968).
Oscar winner's portrayals:
https://www.youtube.com/watch?v=8UXURgc-VyQ
https://www.youtube.com/watch?v=tVlf7OiiTJE
Award winning NT portrayals:
https://www.youtube.com/watch?v=LZhpfHiumGw
https://www.youtube.com/watch?v=6K9UgFkelyA
சார்ல்டன் ஹெஸ்டனுக்கு சளைத்தவரா NT?
siqutacelufuw
6th November 2014, 06:36 PM
MY DEAR Mr. GOPAL
MY ADVANCED WISHES ON YOUR BIRTH DAY. UNDER YOUR DYNAMIC AND ABLE GUIDANCE, LET YOUR FAMILY MEMBERS GROW ALONG WTIH YOU AND ENJOY HAPPINESS FOR EVER AND LONG LIVE WITH ROBUST HEALTH
Affectionately Yours
S. Selvakumar
sss
6th November 2014, 06:46 PM
Dear Gopal Sir,
Wish you many more happy returns of the day, God bless!
Russellpei
6th November 2014, 06:58 PM
நவம்பர் 7 60வது பிறந்தநாள் காணும் மக்கள்தலைவர் சிவாஜி அவர்களின் அன்பைப் பெற்ற
திரு.கமல்ஹாசன் நீடுழி வாழ எங்கள் இறைவன் சிவாஜி கணேசன் ஐ வேண்டுகிறோம்.
http://oi59.tinypic.com/2dt7w5.jpg
இருக்கும் வரை உத்தமன் சிவனை புகழ் காப்போம்.
A touching birthday wishes for Kamal..
eehaiupehazij
6th November 2014, 08:58 PM
NT's acting edge over the Oscarites!-3 : Sean Connery in the shades of Sivaji Ganesan!
NT's stature in coat/suit is as magnificent as Sean Connery's (the original James Bond till this world exists!) tuxedo. But Connery often feels fish out of water when he opts for roles other than OO7! However, he was able to come out of his 'licensed to kill' shadow and gave this world some superb performances as in 'the Man who would be King', 'The great Train Robbery', 'Indiana Jones and Last Crusade', 'The Rock' and the most significant achievement for him as the best supporting actor at Oscar in 'the Untouchables'!! His was also a long wait in as much as the Oscar award could have been given to him for immortalizing a fiction hero James Bond OO7 in DrNo and subsequently 6 more Bondflicks, till this world revolves and exists!
However, Connery too could not provoke emotions like NT (in Deivamagan father NT resembles shades of Connery features)!
In what way Connery hits the bull's eye in roles other than OO7, compared to NT?!
https://www.youtube.com/watch?v=qcsp_J6s2ZA
https://www.youtube.com/watch?v=xPZ6eaL3S2E
https://www.youtube.com/watch?v=_d5jXDvrOu4
https://www.youtube.com/watch?v=rUHZZwuybiY
https://www.youtube.com/watch?v=B-LrMj2glOA
sivaa
6th November 2014, 09:00 PM
இனிய நண்பர் திரு.கோபால் அவர்களுக்கு
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.
joe
6th November 2014, 10:05 PM
பிறந்தநாள் காணும் நடிகர் திலகத்தின் ரசிகர்கள் .. தல கமல்ஹாசன் மற்றும் அண்ணன் கோபால் ..வாழ்க பல்லாண்டு !
eehaiupehazij
6th November 2014, 10:46 PM
NT's acting edge over the Oscarites!-4 : Gregory Peck too had rich stage experience like NT!
....but his acting style resembles GG's subtle mode rather than NT's explosive performances!!
Gregory Peck (April 5, 1916 – June 12, 2003) was one of the world's most popular film stars from the 1940s to the 1960s, Peck continued to play major film roles until the late 1970s. His performance as Atticus Finch in the 1962 filmTo Kill a Mockingbird earned him the Academy Award for Best Actor. He had also been nominated for an Oscar for the same category for The Keys of the Kingdom (1944), The Yearling (1946), Gentleman's Agreement (1947) and Twelve O'Clock High(1949).
Other notable films he appeared in include Spellbound (1945), The Paradine Case (1947), Roman Holiday (1953), Moby Dick (1956) (and its 1998 miniseries of the same name), The Guns of Navarone (1961), Cape Fear (1962) (and its 1991 remake of the same name), How the West Was Won (1962), The Omen (1976) and The Boys from Brazil (1978).
He is best remembered, however, as the Sheriff in the evergreen cowboy genre movie ‘McKenna’s Gold’”one of the highest grosser of all time in Indian screens too!
President Lyndon Johnson honored Peck with the Presidential Medal of Freedom in 1969 for his lifetime humanitarian efforts. In 1999, the American Film Institute named Peck among the Greatest Male Stars of All Time, ranking at No. 12. He was named to theInternational Best Dressed List Hall of Fame in 1983.
Peck also received many Golden Globe awards. He won in 1947 for The Yearling, in 1963 for To Kill a Mockingbird, and in 1999 for the TV mini series Moby Dick. He was nominated in 1978 for The Boys from Brazil. He received the Cecil B. DeMille Award in 1969, and was given the Henrietta Award in 1951 and 1955 for World Film Favorite
Gregory Peck's soft touch!
https://www.youtube.com/watch?v=8MmtVx1A8BA
https://www.youtube.com/watch?v=k8TgqenWW0I
https://www.youtube.com/watch?v=S2L0WQu2fEI
NT's volcanic eruptions!நடிகர்திலகத்துக்கு நியாயமாக வழங்கப்படவேண்டிய பாரத ரத்னா விருது கனிந்திட அந்த விருதுக்கே கவுரவம் சேர்ந்திட பராசக்தி துணை நிற்கட்டும்!
https://www.youtube.com/watch?v=q7k8dt6FykI
https://www.youtube.com/watch?v=rl4CHEREx3s
courtesy: Wikipedia and You Tube
ifohadroziza
6th November 2014, 10:55 PM
Dear gopal sir
many more happy returns of the day
Harrietlgy
6th November 2014, 11:48 PM
Dear Gopal sir,
Wish you Happy Birth day.
Barani
Murali Srinivas
7th November 2014, 12:49 AM
உனக்கு பன்முகங்கள்.
பல்வேறு தளங்களில் வெற்றி தடம் பதித்தவன் நீ!
படிப்பில் நிபுணன்! முதுகலை பொறியாளன்!
வணிகத்தில் வித்தகன்!
அறுபது நாடுகளின் அத்தாட்சி பத்திரம் பெற்றவன்!
அந்நிய மண்ணில் கோலோச்சுபவன்!
பாரம்பரிய பத்திரிக்கை குடும்ப உறுப்பினன்!
இலக்கிய பித்தன்!
மணிக்கொடி காலமும் தெரியும்! இன்றைய மங்கிய காலமும் தெரியும்
கணையாழி முதல் கசடதபற வரை வாசிப்பவன்!
யதார்த்த நாடக கலைஞன்! உலக சினிமா ரசிகன்!
நல்ல சினிமாவை நேசிப்பவன்! நல்ல சினிமாவை சுவாசிப்பவன்!
சூரியனுக்கு கீழே உள்ள எதைப் பற்றியும் விவாதிக்கும் திறன் கொண்டவன்!
ஆனால் இவை எல்லாவற்றையும் விட சிவாஜி ரசிகன் என்பதே எனது தலையாய பெருமை என்று உவகை கொண்டு எந்த சபையாய் இருப்பினும் அதை முன் வைக்கிறாயே அந்த அர்ப்பணிப்புக்கு என் தலை சாய்ந்த வணக்கங்கள்!
விஜய விக்ரம கோபால காத்தவராயரே!
இன்னுமொரு நூற்றாண்டு இரும்!
அன்புடன்
RAGHAVENDRA
7th November 2014, 07:03 AM
http://i1146.photobucket.com/albums/o528/imagivity/unspecific/gopalbdgrtgs_zpsdbd722ad.jpg
Russellpei
7th November 2014, 07:11 AM
பிறந்தநாள் காணும் நடிகர் திலகத்தின் ரசிகர்கள் .. தல கமல்ஹாசன் மற்றும் அண்ணன் கோபால் ..வாழ்க பல்லாண்டு !
திரு கோபால் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
Gopal.s
7th November 2014, 09:05 AM
எவற்றின் நடமாடும் நிழல் நான்? என்னை பார்க்கவே கண்ணாடி தேவை பட்ட, என்னை புரியவே உறவுகள் தேவை பட்ட பலவீனன் நான்.என்னுடைய ஆடைகள்,உண்ணும் உணவு,இருப்பிடம் போன்ற அடிப்படை தேவைகளே மற்றவர்களின் கருணையாலேயே கிடைத்தது.யாரோ ஒரு முகம் தெரியா விவசாயி,நெசவாளர்,கட்டிட உழைப்பாளி என்று பலர் என் வாழ்கை தரத்தை மேம்படுத்தி ,தியாகம் செய்துள்ளனர். நமக்காகவே பிறந்தது போல பல உயிரினங்கள் நமக்காக எத்தனை தியாகங்கள் புரிந்துள்ளன?இவற்றுக்கு,இவர்களுக்கு மேலானவன் எனும் நினைவை தகர்க்க போராடுவதே ,என் அய்யன் பெரியார் எனக்களித்த பால பாடம்.
வெற்றி பெற்ற மனிதனா? கேள்வி தொடர்கிறது. லட்சிய வேலி ,என் வாழ்க்கையை ,நான் தொடங்கியிருக்க வேண்டிய இடத்தில், இவ்வளவு கடின உழைப்புக்கு அப்புறமே நிறுத்தியுள்ளது.
என்னை அறிந்து, மற்றவர்களை பயன் படுத்தி என்னை வளர்த்து கொண்டு,என் புகழை உயர்த்தி கொண்டேனா?பண பலம் பெருக்கி கொண்டேனா? இல்லை. எனக்கு கிடைத்தது போல பல மடங்கு ,என்னை சார்ந்தவர்களுக்கு கொடுத்தே வந்துள்ளேன். எனக்கு சேர வேண்டியதை விட்டதுமில்லை. அல்லாததை தொட்டதும் இல்லை.
என் கொடுப்பினை----பெருமையாய் சொல்லி கொள்ளும் விதத்தில் ,தாய்-தகப்பன் ,சகோதர-சகோதரிகள் ,நண்பர்களை வழங்கி என் வாழ்க்கையின் ஆரம்ப நாட்களை விதி வள படுத்தியது.இதில் எனக்கு திருப்தியே.
அருமையான தேர்வு எனக்கு மிக மிக சிறந்த வாழ்வின் இணையை அளித்தது. என்னை புரிந்த வியாபார வட்டங்கள்,நட்பு வட்டங்கள் என் தேர்வின் படி,எனக்கு நிறைவை அளித்தன. அற்புதமான குழந்தைகள் என் ஜனநாயக முறை வளர்ப்பினால் ,என்னை தாண்டி சென்று என்னை குளிர்விக்கின்றனர்.இதில் எனக்கு வெற்றியே.
என்னை சேர்ந்தோருக்கு, என்னால் வாழ்வில் ஏதோ ஒன்று வழங்க பட்டே வந்தது. என் பழக்க வழக்கங்கள் ,சூழ்நிலையை,சகமனிதர்களை ,சக ஜீவிகளை காக்கும் பொருட்டே அமைந்தன.இதில் எனக்கு வெற்றியே.
என் சுயம் , உறவு முறை பழகியவர்களை சக மாணவன்,உடன் வேலை பார்த்தவன். தலைமை நிர்வாகி என்ற மாறும் நிலையில் நினைவுருத்தாமல் ,கோபால் என்ற மனிதனாக நினைக்க செய்து ,இனிக்க செய்தது.இதில் எனக்கு வெற்றியே.
உலகத்தில் உள்ள அத்தனை விஷயங்களையும் அறியும் துடிப்பு இருந்தாலும், சிலவற்றை நன்கு அறிந்து துய்த்தேன் .இதில் எனக்கு கரை கண்ட பெருமிதமே.
காணும் உலகம் கையில் வந்த வாலிபம். நான் சுவைக்காதவை பூவுலகில் இல்லாதவையே என்ற விதத்தில் அத்தனையையும் ருசித்தேன் ,சுவைத்தேன்.(கண்ணதாசன் ,ஓமர் கய்யாம் எல்லாம் எனக்கு கீழேதான்). இதில் திருப்தி இல்லா விட்டாலும், ஓரளவு நிறைவே.(இன்னும் இருக்கிறது பாக்கி. முக நூலில் தெரியும்)
இதை மீறி ,குறைகளும் உண்டு. இயற்கை எனக்களித்த சிறப்புகளை, இன்னும் மனிதம் வளப் பட ,மகிழ்வுற பயன்படுத்தி ,நாம் வளர்ந்திருக்கலாமே என்பதே.
குறை,நிறை அனைத்தையும் மீறிய சில நெறிகளில் நான் கர்வ படுவதுண்டு.
கடவுள் என்ற ஒருவன் இருந்தால், என்னை தமிழனாக படைக்க தேர்வு செய்தமைக்காக. உலகில் சிலருக்கே அமைந்த பாக்கியம்.
என்னை தமிழில் தோய்ந்து, சுவைக்க வைத்து, உண்மை தமிழனாய் வாழ வைத்தமைக்காக.
சக மனிதர்களை,அவர்கள் புகழின் அளவு கொண்டு பூசிக்காமல்,தலை வணங்காமல், திறமையின்,உண்மையின், அளவு கண்டே என் விருப்பங்கள் தேர்வு கண்டன. எனக்கும் ,உலகுக்கும் ஒவ்வாதவை புறம் கண்டே உள்ளன என் தேர்வில்.
எனக்கு மிக சிறந்த நட்பு வட்டத்தை மிக குறுகிய நாட்களில் அளித்த மையம் திரிக்கு நன்றி.
என் வாழ்வின் அழகியல் தேர்ந்தெடுப்பை அர்த்தமுள்ளதாக்கி,என்னை தொடர்ந்து காத்து வரும் கலைதெய்வம் சின்னைய்யா கணேச மூர்த்திக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.
Gopal.s
7th November 2014, 09:25 AM
என் சிறு வயது கனவுகளாய், நான் சாதிக்க எண்ணி, வாழ்க்கையில் எதிர் நீச்சலிடும் துணிவின்றி வாழ்க்கை வியாபாரியாய் சுருங்கி விட்டாலும், என் விட்ட குறை ,தொட்ட குறையை ஓரளவு நீக்கி என்னை ஆசுவாச படுத்தி வரும் ,பிறந்த நாள் சகோதரன்
கமலஹாசனுக்கு ,என் வாழ்த்துக்கள். உன்னுடைய மருத நாயக கனவு ,நனவாகி நம் சாதனைகள் விரிந்து ,தமிழினைத்தை பெருமை படுத்தட்டும்.
eweaxagayx
7th November 2014, 09:35 AM
Best wishes and many more happy returns of the day Sri.Gopal Sir. ஸ்ரீ பார்த்தசாரதி ஸ்வாமி, ஸ்ரீ நரசிம்ம ஸ்வாமி அனுக்ரஹத்துடன் பல்லாண்டு வாழ
அவ் வெம்பெருமான்களைப் ப்ரார்த்திக்கிறேன். - என்.வி.ராகவன்
Gopal.s
7th November 2014, 09:48 AM
வாழ்த்துகளுக்கு நன்றி என்ற மரபின் பாற்பட்டாலும், என்னை இன்று குளிர்வித்த அன்பு நெஞ்சங்களுக்கு நிஜமாகவே கடன் பட்டுள்ளேன். குறுகிய கால நட்பு வட்டம், இறுகியதாக தொடர பிரார்த்திக்கிறேன்.
நன்றி.நன்றி ,நன்றி .
எஸ்வி
Irene hastings
சிவாஜி செந்தில்.
யுகேஷ் பாபு.
கலைவேந்தன்.
KC சேகர்.
சௌத்ரி ராம்.
ராகுல் ராம்.
கல்நாயக்.
prof .செல்வகுமார்.
SSS
Joe .
சிவா.
VCS .
பரணி.
முரளி.
ராகவேந்தர்.
ரவி ரவி.
வாசு தேவன் (நெய்வேலி)
சின்னகண்ணன்.
ராஜேஷ் .
parthasarathy.
N.V.Ragavan.
வாசு தேவன்(chithoor)
KCSHEKAR
7th November 2014, 10:55 AM
இன்று 60-வது பிறந்தநாள் காணும் திரு.கமல்ஹாசன் அவர்களுக்கு, நடிகர்திலகம் ரசிகர்கள் சார்பில் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.
நடிகர்திலகத்தைப் பற்றி கமல்
http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/Kamal001_zpsc4cdfaa6.jpg (http://s1234.photobucket.com/user/sivajiperavai/media/Kamal001_zpsc4cdfaa6.jpg.html)
http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/Kamal002_zpsfa06aaf7.jpg (http://s1234.photobucket.com/user/sivajiperavai/media/Kamal002_zpsfa06aaf7.jpg.html)
http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/Kamal003_zps515b5978.jpg (http://s1234.photobucket.com/user/sivajiperavai/media/Kamal003_zps515b5978.jpg.html)
கமல் பற்றி நடிகர்திலகம்
http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/NTaboutKamal004_zps003c04ca.jpg (http://s1234.photobucket.com/user/sivajiperavai/media/NTaboutKamal004_zps003c04ca.jpg.html)
http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/NTaboutKamal005_zpsba0e88e6.jpg (http://s1234.photobucket.com/user/sivajiperavai/media/NTaboutKamal005_zpsba0e88e6.jpg.html)
Russellbpw
7th November 2014, 11:15 AM
GOPAL SIR ,
MANY MORE HAPPY RETURNS OF THE DAY. THE MOST POPULAR BIRTHDAY SONG ACROSS ULAGA THAMIZHARGAL DEDICATED FOR YOU ON THIS GREAT DAY
http://www.youtube.com/watch?v=i-jlk4dEFLY
sss
7th November 2014, 11:23 AM
நான் படித்து ரசித்தது :
"பாசமலர்" படத்தில் இடம்பெற்ற "வாராய் என் தோழி வாராயோ..."என்ற பாடலை விஸ்வநாதன் - ராமமூர்த்தி பதிவு செய்து, பின்னர் படமும் ஆக்கப்பட்டது.படம் முழுமையாக முடிந்த பின்பு தணிக்கைக் குழுவுக்கு போட்டுக் காட்டப்பட்டது..
அவர்கள் இந்தப்பாடலில்,முக்கியமாக ஒரு சில வரிகளை ஆட்சேபித்தார்கள்..அது,"மலராத பெண்மை மலரும்..முன்பு தெரியாத உண்மை தெரியும்.."ஆனால் அவர்களே நீண்ட நேரம் விவாதித்த பின்னர் "கவியரசு" கண்ணதாசன் அவர்களின் கவிநயத்திற்க்காக பாடலை அப்படியே விட்டுவிடுவதா அல்லது தங்களுடைய தொழில் தர்மத்திற்கு கட்டுப்பட்டு நடப்பதா என்ற பெரும் குழப்பம்..
பிறகு,இரண்டு மூன்று நாட்கள் கழிந்த பின்னர்,குழப்பம் எல்லாம் நீங்கிய பின்,கண்ணதாசனின் தவிர்க்க முடியாத நடைமுறை தாங்கிய கன்னித்தமிழ் கற்பனையே மணிமகுடம் சூட்டிக்கொண்டது.
தணிக்கைக் குழுவினர்,"நாங்களும் எவ்வளவோ முயற்சி செய்தோம்..உங்களின் இந்த பிரச்னைக்குரிய இந்த வரிகளை நீக்குவதற்கு..ஆனால் அடிப்படையில் நாங்களும் ரசனையாளர்களாக இருந்ததால் உங்களை எங்களால் ஜெயிக்கமுடியவில்லை..அந்த வரிகளை அப்படியே விட்டுவிடுகிறோம்"
உலகிலேயே, தணிக்கைக் குழுவிற்கு தணிக்கை செய்ய அதிகாரம் இருந்தும் கவிநயத்திற்கு
மயங்கி, தன்நிலை மறக்க வைத்த பாடல் உண்டென்றால் அது "பாசமலரின்" "வாராய் என் தோழி" மட்டுமே..
Russellbpw
7th November 2014, 11:25 AM
எவற்றின் நடமாடும் நிழல் நான்? என்னை பார்க்கவே கண்ணாடி தேவை பட்ட, என்னை புரியவே உறவுகள் தேவை பட்ட பலவீனன் நான்.என்னுடைய ஆடைகள்,உண்ணும் உணவு,இருப்பிடம் போன்ற அடிப்படை தேவைகளே மற்றவர்களின் கருணையாலேயே கிடைத்தது.யாரோ ஒரு முகம் தெரியா விவசாயி,நெசவாளர்,கட்டிட உழைப்பாளி என்று பலர் என் வாழ்கை தரத்தை மேம்படுத்தி ,தியாகம் செய்துள்ளனர். நமக்காகவே பிறந்தது போல பல உயிரினங்கள் நமக்காக எத்தனை தியாகங்கள் புரிந்துள்ளன?இவற்றுக்கு,இவர்களுக்கு மேலானவன் எனும் நினைவை தகர்க்க போராடுவதே ,என் அய்யன் பெரியார் எனக்களித்த பால பாடம்.
வெற்றி பெற்ற மனிதனா? கேள்வி தொடர்கிறது. லட்சிய வேலி ,என் வாழ்க்கையை ,நான் தொடங்கியிருக்க வேண்டிய இடத்தில், இவ்வளவு கடின உழைப்புக்கு அப்புறமே நிறுத்தியுள்ளது.
என்னை அறிந்து, மற்றவர்களை பயன் படுத்தி என்னை வளர்த்து கொண்டு,என் புகழை உயர்த்தி கொண்டேனா?பண பலம் பெருக்கி கொண்டேனா? இல்லை. எனக்கு கிடைத்தது போல பல மடங்கு ,என்னை சார்ந்தவர்களுக்கு கொடுத்தே வந்துள்ளேன். எனக்கு சேர வேண்டியதை விட்டதுமில்லை. அல்லாததை தொட்டதும் இல்லை.
என் கொடுப்பினை----பெருமையாய் சொல்லி கொள்ளும் விதத்தில் ,தாய்-தகப்பன் ,சகோதர-சகோதரிகள் ,நண்பர்களை வழங்கி என் வாழ்க்கையின் ஆரம்ப நாட்களை விதி வள படுத்தியது.இதில் எனக்கு திருப்தியே.
அருமையான தேர்வு எனக்கு மிக மிக சிறந்த வாழ்வின் இணையை அளித்தது. என்னை புரிந்த வியாபார வட்டங்கள்,நட்பு வட்டங்கள் என் தேர்வின் படி,எனக்கு நிறைவை அளித்தன. அற்புதமான குழந்தைகள் என் ஜனநாயக முறை வளர்ப்பினால் ,என்னை தாண்டி சென்று என்னை குளிர்விக்கின்றனர்.இதில் எனக்கு வெற்றியே.
என்னை சேர்ந்தோருக்கு, என்னால் வாழ்வில் ஏதோ ஒன்று வழங்க பட்டே வந்தது. என் பழக்க வழக்கங்கள் ,சூழ்நிலையை,சகமனிதர்களை ,சக ஜீவிகளை காக்கும் பொருட்டே அமைந்தன.இதில் எனக்கு வெற்றியே.
என் சுயம் , உறவு முறை பழகியவர்களை சக மாணவன்,உடன் வேலை பார்த்தவன். தலைமை நிர்வாகி என்ற மாறும் நிலையில் நினைவுருத்தாமல் ,கோபால் என்ற மனிதனாக நினைக்க செய்து ,இனிக்க செய்தது.இதில் எனக்கு வெற்றியே.
உலகத்தில் உள்ள அத்தனை விஷயங்களையும் அறியும் துடிப்பு இருந்தாலும், சிலவற்றை நன்கு அறிந்து துய்த்தேன் .இதில் எனக்கு கரை கண்ட பெருமிதமே.
காணும் உலகம் கையில் வந்த வாலிபம். நான் சுவைக்காதவை பூவுலகில் இல்லாதவையே என்ற விதத்தில் அத்தனையையும் ருசித்தேன் ,சுவைத்தேன்.(கண்ணதாசன் ,ஓமர் கய்யாம் எல்லாம் எனக்கு கீழேதான்). இதில் திருப்தி இல்லா விட்டாலும், ஓரளவு நிறைவே.(இன்னும் இருக்கிறது பாக்கி. முக நூலில் தெரியும்)
இதை மீறி ,குறைகளும் உண்டு. இயற்கை எனக்களித்த சிறப்புகளை, இன்னும் மனிதம் வளப் பட ,மகிழ்வுற பயன்படுத்தி ,நாம் வளர்ந்திருக்கலாமே என்பதே.
குறை,நிறை அனைத்தையும் மீறிய சில நெறிகளில் நான் கர்வ படுவதுண்டு.
கடவுள் என்ற ஒருவன் இருந்தால், என்னை தமிழனாக படைக்க தேர்வு செய்தமைக்காக. உலகில் சிலருக்கே அமைந்த பாக்கியம்.
என்னை தமிழில் தோய்ந்து, சுவைக்க வைத்து, உண்மை தமிழனாய் வாழ வைத்தமைக்காக.
சக மனிதர்களை,அவர்கள் புகழின் அளவு கொண்டு பூசிக்காமல்,தலை வணங்காமல், திறமையின்,உண்மையின், அளவு கண்டே என் விருப்பங்கள் தேர்வு கண்டன. எனக்கும் ,உலகுக்கும் ஒவ்வாதவை புறம் கண்டே உள்ளன என் தேர்வில்.
எனக்கு மிக சிறந்த நட்பு வட்டத்தை மிக குறுகிய நாட்களில் அளித்த மையம் திரிக்கு நன்றி.
என் வாழ்வின் அழகியல் தேர்ந்தெடுப்பை அர்த்தமுள்ளதாக்கி,என்னை தொடர்ந்து காத்து வரும் கலைதெய்வம் சின்னைய்யா கணேச மூர்த்திக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.
உங்களுடைய பதிவை படித்தபோது எனக்கு ஞாபகம் வந்தது...இது ---> நீதிமன்றம் விசித்திரம் நிறைந்த பல வழக்குகளை கண்டிருக்கிறது ..பல விந்தையான மனிதர்களை சந்தித்திருக்கிறது.
இந்த வழக்கு விசித்திரமும் அல்ல...வழக்காட வந்திருக்கும் நான் விந்தையான மனிதனும் அல்ல..வாழ்கை பாதையிலே சர்வ சாதாரணமாக தென்படகூடிய ஜீவன் தான் நான்.
கோவிலிலே குழப்பம் விளைவித்தேன்...கோவில் கூடதேன்பதர்க்காக அல்ல ! கோயில் கொடியவரின் கூடாரமாக இருக்ககூடாதேன்பதர்க்காக.
பூசாரியை தாக்கினேன்...அவன் பக்தன் என்பதற்காக அல்ல..! பக்தி பகல் வேஷம் ஆகிவிட்டதை கண்டிப்பதற்காக !
உனக்கேன் அக்கறை ...உலகத்தில் எவருக்கும் இல்லாத அக்கறை என்று கேட்பீர்கள்...நானே பாதிக்கப்பட்டேன் ....நேரிடையாக பாதிக்கப்பட்டேன்...!
சுயநலம் என்பீர்கள்..!
ஆம்...இதுவும் ஒருவகை சுயநலம்தான்..! ஆகரத்திர்க்காக அழுக்கை சாப்பிட்டு தடாகத்தை சுத்தபடுத்துகிறதே...மீன் ! அதை போல !
என்னை குற்றவாளி என்கிறார்களே...இந்த குற்றவாளியின் பாதையை சிறிது பின்னோக்கி பார்த்திருந்தால்...இவன் கடந்துவந்துள்ள காட்டாறுகள் எத்துனை என்பதை கணக்கு பார்த்திருக்க முடியும்...!
பாட்டுக்கும் குயில்கள் இல்லை என் பாதையில்...படமெடுக்கும் பாம்புகள் நெளிந்திருக்கின்றன...
தென்றலை தீண்டியதில்லை நான்...! தீயை தாண்டியிருக்கிறேன்.....!
கேளுங்கள் ..தீர்ப்பு எழுதும் முன் கேளுங்கள் என் கதையை ....
சார் இந்த நடை ஞாபகம் வந்தது.....! :-)
rks
sss
7th November 2014, 12:27 PM
நன்றி எம்கேஆர்சாந்தாராம் :
" பாவ மன்னிப்பு " - பெரிய பெரிய ஜாம்பவான்களின் கூட்டணியின்
சங்கமம் ! சிவாஜி கனேசன், ஏ.வி.எம், விஸ்வனாதன் - ராமமூர்தி,
ஜெமினி கனேசன், எம்.ஆர்.ராதா, டி.ஸ்.பாலையா, எஸ்.வி. சுப்பையா,
கண்ணதாசன், டி.எம்.எஸ், பி.சுசீலா, பி. பி. சீனிவாசன் ,தேவிகா, சாவித்திரி, ஏ.பீம்சிங்,
ஜி.விட்டல் ராவ், ஜி.கே.வெங்கடேஷ் போன்ற ஜாம்பவான்களின்
படைப்பு ! இந்து, முஸ்லிம், கிருஸ்தவம் ஆகிய மதங்களின்
ஒற்றுமையை அருமையாக கவிதையாகப் படைத்த படம் !
விஸ்வநாதன் - ராமமுர்த்தி யின் மைல் கல் !
பி.பி. எஸ் வாழ்க்கையில் ஒரு திருப்பு முனை !
இவ்வளுவு இருந்தும் நம் அரசு என்ன அவார்ட் அல்லது
ரிவார்ட் கொடுத்தது ? மத்திய அரசு, மத நல்லினக்கணத்தை
அருமையக காட்டும் "பாவ மன்னிப்பை " , அதன் பாடல்கள்
இரண்டை கத்திரி கொண்டு வெட்டியது !
அந்த பாடல்கள் எவை ?
பாட்டு 1
" பாலிருக்கும் பழமிருக்கும், பசி இருக்காது "
பி.சுசீலா அவர்கல் மெல்லிசை மன்னரின் வுடன் பாடிய பாட்டு.
பிறப்பால் இந்துவாகவும், வளர்ப்பால் முஸ்லிம் ஆகும் ஓர்
வாலிபனை, கிருஸ்தவப் பெண் காதல் கொண்டு பாடுவது
போல் அமைந்த பாட்டு !
அதன் இறுதி பாராவில் உள்ள வரிகளைப் படியுங்கள் :
" காதலுக்கு ஜாதி இல்லை, மதமும் இல்லையே,
கண்கள் பேசும் பாஷையிலே பேதம் இல்லையே,
வேதம் எல்லாம் காதலையே மறுப்பதில்லையே,
அது வேதம் செய்த குருவைக் கூட விடுவதில்லையே "
காதல் என்பது எல்லோருக்கும் வரும், அவர் யாராக
இருந்தாலும் காதல் வரும் ! இதைத்தான் கண்ணதாசன்
அழுத்தம் திருத்தமாகச் சொல்கின்றார் !
ஆனால், தன்னிச்சை - மன்னிக்கவும் - தணிக்கையாளரள்
அதை ஒத்துக் கொள்ளவில்லை !
அவர்கள் " வாதம் " :
" இந்த வரிகள் குறிப்பட்ட சில மதத்தினரை புண் படுத்தும்,
எனவே மதக் கலவரம் மூளும், ஆகையால் இதை மாற்ற
வேண்டும் என்று கூறிவிட்டனர் !
கண்ணதாசன் எவ்வளுவு சமாதானம் சொல்லியும் அவர்கள்
செவி சாய்க்கவில்லை 1
என்ன செய்தார் கவிஞர் ?
கடுங்கோபத்துடன் எழுதினார், ஆனால் அந்தக்
கோபத்திலும் மாற்றி எழுதும்போது கவிதைத்துவம் ச்றிதும்
குறையாமல் எழுதினார் !
என்ன எழுதினார் ?
" காதலுக்கு ஜாதி இல்லை, மதமும் இல்லையே,
கண்கள் பேசும் பாஷையிலே பேதம் இல்லையே,
வேதம் எல்லாம் காதலையே மறுப்பதில்லையே,
அது மேகம் செய்த உருவம் போல மறைவதில்லையே "
என்று மாற்றி எழுதினார் !
இப்போது கூட இசைத்தட்டிலும், இலங்கை வானொலியிலும்
" குரு வை " விடுவதில்லை !
வெள்ளித்திரையில் மட்டும் தான் " மேகம் " வந்து மறைகிறது !
பாடல் : " வந்த நாள் முதல் "
இந்த பாடலை அறியாத தமிழனே கிடையாது !
மிகவும் புகழ் பெற்ற பாடல் !
முதலில் இந்த பாடலை யாரை வைத்துப் பாடுவது என்ற குழப்பம் வந்தது.
முதலில் டி. ஏ. மோதி அவர்களைப் பாட வைத்தார்கள், உம்,,,... உம்,,,
சுகமில்லை! பின்னர் மெல்லிசை மன்னர்களின் உதவியாளராக இருந்த
ஜி.கே. வெங்கடேஷ் அவர்களைப் பாடவைத்தார்கள்.,,,ம்ம்,, ம்ம் ,, ,ம்
ஓ.கே, - இருந்தும் முழுமையான திருப்தி இல்லை ! என்னினும் வெங்கடேஷ்
அவர்களின் பாடலை சோகமான சூழ்னிலைப் பாடலுக்கு பயன் படுத்திக்
கொண்டார்கள்.
இருந்தாலும் வேலை இன்னும் முடிய வில்லை.
இதை எல்லாம் வேடிக்கை பார்த்துகொண்டிருந்த டி.எம்.எஸ்
அவர்கள் மெல்லிசை மன்னரிடம் கூறினார் :
" அண்ணே நீங்கள் யார் யாரையோ கூப்பிட்டு பாட வைத்துள்ளீர்கள்,
என்னை நீங்கள் பாட வைத்தால் அந்த பாடலை நான் " ஊதித் "
தள்ளிடுவேன் "
என்று சொன்னாராம். கிராமிய மணம் கமழும் பாடலை பாடிப்
பழக்கப்பட்ட உங்களுக்கு இந்த பாடலை எப்படி பாடுவீர்கள் என்று
எம்.எஸ்.வி கேட்டாராம்.எனினும் பின்னர் டி.எம்.எஸ் பாடா சந்தர்ப்பம்
கொடுக்கப்பட்டு, பின்னர் அந்தப் பாடல் டி.எம். எஸ் - ஆல் மேலும்
மெருகேறியது அனைவரும் அறிந்ததே !
அனால் தணிக்கையாளர்கள் இந்த அழகான பாடலையும் " வெட்டு- குத்து "
செய்தனர் !
அந்தப் பாடலில் நடுவில் வரும் " பாரா " வைப் படியுங்கள் :
" பறவையை கண்டான் - விமானம் படைத்தான்,
பாயும் மீன்லளில் படையினைக் கண்டான்,
எதிரொலி கேட்டான் -- வானொலி படைத்தான்,
எதனை கண்டான் மதங்களை படைத்தான் ? "
இந்த மதம் என்ற சொல்லைக் கேட்டதும் அவர்களுக்கு " மதம் "
பிடித்துவிட்டது ! இந்த மதம் என்ற சொல்லால் பிரச்சனை
என்பது அவர்கள் கூற்று ! என்ன கூத்து இது !
" ஒரு நாள் மட்டும் " கேர்ல் பிரண்ட் " ஆக வர்ரியா " என்ற
பாடல் வரிகளில் பிரச்சனை இல்லை போலும் !- இப்போது !
அது கிடக்கட்டும்,,,,,.
"வந்த நாள் முதல் " பாடலில் " மதம் " என்ற் சொல்லை
மாற்றச் சொன்னார்கள். கண்ணதாசனும் மாற்றினார் !
எப்படி ?
" பறவயைக் கண்டான் - விமானம் படைத்தான்,
பாயும் மீன்களில் படையினைக் கண்டான்,
எதிரொலி கேட்டான் வானொலி படைத்தான்,
எதனைக் கண்டான் பணம் தன்னை படைத்தான் ? "
திரையில் " பணம் " என்று வரும்,
ஆனால் இசைத்தட்டில் " மதம் " என்று வரும் !
ஆனால் என்னிடம் " பணம் " மட்டும்தான் உள்ளது !
அதாவது " பணம் " என்று வரும் பாடல் மட்டும் உள்ளது !
" மதம் " என்னிடத்தில் இல்லை !
ஆனால் " பணம் " பாட்டில் அதிகப்படியான ஒரு " பாரா "
வரும் !
sss
7th November 2014, 12:39 PM
படம் : " வளர் பிறை " ( 1962 )
நடிகர், நடிகையர்கள் :
சிவாஜி கணேசன், சரோஜா தேவி, டி.எஸ். பாலய்யா,
எம்.வி. ராஜம்மா, எம்.ஆர். ராதா, கே.ஏ. தங்கவேலு, எம்.சரோஜா,
நாகய்யா, லீலாவதி, சி.கே.சரஸ்வதி, நாகேஷ்.
கதை வசனம் - ஜாவர் சீத்தாராமன்,
பாடல்கள் : கண்ணதாசன்.
இசை : கே.வி. மகாதேவன்
இயக்கம் : D. யோகானந்த்.
கதை சுருக்கம் :
( எனக்குத் தெரிந்தவரை ! )
கிருஷ்ணாபுரம் !
இங்கேதான் இந்த கதை நடக்கின்றது !
தர்மலிங்கம் பிள்ளை ( டி.எஸ். பாலய்யா ) ) கிருஷ்ணாபுரத்தில் ஒரு
பெரிய மிராசுதார் ! அவரது தந்தை ( நாகய்யா ) , தர்மலிங்கத்திற்கு:
30 வேலி நிலமும், மூன்று தோப்புக்களும் எழுதி வைத்து காலமானார்.
அத்தோடு அவர் போய்விடவில்லை !
தர்மலிங்கத்தின் தந்தை , அவருக்கு :
3 வாக்கியங்களையும் தன் சொத்துக்களாக மதிக்கும்படி எழுதி
வைத்துச் சென்றார் !
அந்த 3 வாக்கியங்களும் என்ன ?
1. " எண்ணும் எழுத்தும் கண்னெனத் தகும் "
2. " ஒன்று பட்டால் உண்டு வாழ்வு "
3 . " தீயாரைக் காண்பதும் தீதே "
என்பதே அந்த வாக்கியங்கள் ! அந்த வாக்கியங்களை அவர்கள்
வாழ்க்கையில் பின்பற்றினால் அவர்களுக்கு நல்ல முன்னேற்றம்
ஏற்படும் என்றும் சொல்லிவிட்டு மறைந்தார் !
தர்மலிங்கம் பிள்ளைக்கு :
கனகு ( சிவாஜி கணேசன் ) என்கிற மகனும், சுந்தரி ( லீலாவதி )
என்கிற மகளும், நல்லம்மை ( எம்.வி. ராஜம்மா ) என்கிற நல்ல
மனைவியும் வாய்த்தனர் !
சிறு வயதிலிருந்தே பார்வை இழந்திருந்த கனகு சரியாக பள்ளிக்குப்
போகமுடியவில்லை. பின்பு பார்வை திரும்பப் பெற்ற பின் படிப்பில்
கவனம் செலுத்த முடியாமல் " வாளா " இருந்து விடுகிறான் !
" எண்ணும் எழுத்தும் கண்னெனத் தகும் " என்கிற வாக்கியத்தை
மறந்துவிடுகிறான் !
ஜோதிடத்தில் அதிக நம்பிக்கை கொண்ட தர்மலிஙம் பிள்ளை வேறு
ஓர் ஊரில் உள்ள ஜோசியரைப் பார்த்துவிட்டு இரயிலில் ஊருக்குத்
திரும்பும்போது ரயிலில் தனது பணப்பையை தவற விடுகிறார் . அந்த
பணப்பையைக் கண்ட பிக்பாக்கட் மணி (எம்.ஆர். ராதா ) அந்த
பணப்பையை தர்மலிஙம் கையில் கொடுக்காமல் தானே வைத்துக்
கொள்கிறான் ! அது மட்டுமா ! இரயிலில் பணமில்லாமல் தவிக்கும்
தர்மலிங்கம் பிள்ளைக்கு , நல்லவர் போல் நடித்து , அவர் பணத்தையே
அவருக்கு உதவி செய்வது மாதிரி கொடுத்து நல்லவன் போல் நடிக்கிறான் ,
மணி !
" தீயாரைக் காண்பதும் தீதே "
இதை அப்போது தர்மலிஙம் பிள்ளை அறியவில்லை !
இப்படியாக பிக் பாக்கட் மணி, தர்மலிங்கம் அன்புக்கு பாத்திரம் ஆகிறான் !
அது மட்டுமா ! தர்மலிங்கம் பிள்ளை வீட்டிற்கு அடிக்கடி வந்து போக
ஆரம்பிக்கிறான் !
அது மட்டுமா ?
தர்மலிங்கம் பிள்ளையின் கல்யாண ஆகாத இளம் பெண் ஆனான
சுந்தரியை " ஒரு தலையாக காதல் " கொண்டு அவளை மணக்கத்
துடிக்கிறான் ! இந்த சமாச்சாரத்தை அறிந்த கனகு அதற்கு தடையாக
இருந்து மணியை எச்சரிக்கிறான் ! சுந்தரியை மணந்து அதனால் தர்மலிங்கம்
சொத்தையும் அபகரிக்க சூழ்ச்சி போடும் மணி , தர்மலிங்கம் பிள்ளையின்
அதிகமான ஜோசியப் பித்தை அறிந்து ஜோசியம் மூலம் கனகுவை பழி
வாங்க திட்டம் தீட்டுகின்றான் ! இந்த சமயத்தில் வேறு ஓர் ஊரிலிருந்து
கனகு, அனாதைப் பெண் ஆன சிவகானியை ( சரோஜா தேவி ) யை
தன் வீட்டிற்கு அழைத்து வருகிறான். இது தர்மலிங்கத்திற்குப் பிடிக்கவில்லை !
ஆனால் நல்லம்மை , சிவகாமியை ஆதரிக்கின்றாள். காலம் போகப் போக ,
கனகுக்கும் , சிவகாமிக்கும் காதல் வருகின்றது ! ஆனால் தர்மலிங்கம் பிள்ளை
( வழ்க்கம் போல ) காதலுக்கு குறுக்கே நிற்கின்றார் !
இதனால் மணம் உடைந்த சிவகாமி தற்கொலைக்கு முயல, கனகு அவளைத்
தடுக்க, பின்னர் இருவரும் தற்கொலைக்கு ( " புன்னகை மன்னன் " பாணியில் ! )
முயல, தக்க சமயத்தில் ( ! ) நல்லம்மை வந்து அவர்களைக் காப்பாற்ற-
கனகுக்கும் சிவகாமிக்கும் " டும் டும் டும் ! " வழ்க்கம் போல இந்த " டும் டும் "
( கல்யாணம் ) தர்மலிஙம் பிள்ளைகுப் பிடிக்கவில்லை ! கனகு, சிவகாமியைத்
திருமணம் செய்துகொண்டதை ஊர் அறிந்தால் , தன் மகளுடைய திருமணம்
பாதிக்கும் என்று கருதி, தன் மகள் சுந்தரியின் திருமணத்திற்கு ஏற்பாடு செய்கிறார்!
பெண் பார்க்கும் படலம் நடக்கின்றது ! பெண் பார்க்க வந்தவர்கள் ,
சிவகாமியைப் பார்த்து :
" தர்மலிங்கம் பிள்ளை ! யார் அந்தப் பெண் ? " என்று கேட்க ,
தர்மலிஙம் பிள்ளை : " ஐயா, அவள் எங்கள் வீட்டு வேலைக்காரி !"
என்று சொல்ல,
கனகுவோ : " இல்லை ஐயா, அவள் என் மனைவி ! "
என்கிற உண்மையை சொல்ல..........
பெண் பார்க்க வந்தவர்கள் , " என்ன இந்த குழப்பம் ? "
என்று குழம்ப.......
அதனால்...
சுந்தரியின் கல்யாணம் நின்று விடுகிறது !
ஆத்திரம் அடைந்த தர்மலிஙம் பிள்ளை , கனகுவைப் போட்டு
" சாத்து " , " சாத்து " , " அடி " , " அடி " - என்று அடித்து விட்டு அவனை
வீட்டை விட்டு துரத்தி விடுகிறார் ! தன் தந்தை சொன்ன அடுத்த வக்கியமான :
" ஒன்று பட்டால் உண்டு வாழ்வு"
என்பதை மறந்து விடுகிறார் !
"தன்னால்தான் இந்த குடும்பத்தில் இந்த கதி ! "- என்று கருதி சிவகாமி வீட்டை
விட்டு வெளியேறி விடுகிறாள் !
இதற்கிடையில் வீட்டை விட்டு வெளியேறின கனகு தன் தந்தையின் நெல்
கிடங்கில் தங்குகிறான் ! அப்போது பிக் பாக்கட் மணி இதுதான் நல்ல சமயம்
என்று எண்ணி அந்த கிடங்கில் உள்ள நெல்லை விற்று பணமாக்கி, தர்மலிஙத்திடம்
" கிடங்கு தீப்பற்றி எரிந்து நெல் எல்லாம் சாம்பல் ஆகிவிட்டது " என்று புளுகி ,
உண்மையிலே நெல்கிடங்குக்கு தீ வைக்கிறான் ! நெல் கிடங்கில் தீப் பிடித்து
எரிவதைப் பார்த்த கனகு அதிர்ச்சியில் ஊமை ஆகி
விடுகிறான் !
பின் கனகுக்கு பேச்சு வந்ததா ?
சிவகாமி என்ன ஆனாள் ?
மணியின் சூழ்ச்சி வென்றதா ?
தர்மலிங்கம் பிள்ளை அந்த 3
வாக்கியங்களையும் உணர்ந்தாரா ?
" வெள்ளித்திரையில் " காண்க ! ( எங்கே இருக்கிறது அந்த வெள்ளித் திரை...)இந்த திரை காவியத்தை காண சந்தர்ப்பம் கிடைக்குமா ???
sss
7th November 2014, 12:43 PM
படம் : " தவப் புதல்வன் "
பாட்டு : " கிண்கிணி கிண்கிணி என வரும் மாதாக் கோவில்
மணியோசை "
கிருஸ்மஸ் பண்டிகைக்காக பொருத்தமாக இந்த பாடலை
வழங்குகிறேன். மற்ரபடி இதில் உள்ள ஒரே மாற்றம்
தணிக்கையாளர்கள் வேலையா அல்லது படத்தயாரிபாளர்கள்
வேலையா என்பதை சிவா போன்றவர்கள்தான் சொல்லவேண்டும் !
இந்த படத்தில் வரும் அனைத்துப் பாடல்களும் புகழ் பெற்ரவை !
அதில் இந்த " கின்கிணி " பாட்டு , " மாலைக் கண் " ( இப்பொதெல்
லாம் " மாலக் கண் " நோய் எல்லாம் " கிளினிக் " பாக்க முடிய
லை ! பெண்களை " சைட் " அடிக்கும் " கடைக் கண் " பார்வையை
பார்க்கிறேன் ! ) நோயால் அவதிப்படும் சிவாஜி கணேசன்
இரவில் கண்பார்வை இல்லாமல் கிருஸ்மஸ் தாத்தா வேடம்
அணிந்து குழந்தைகளுக்கு பரிசுகள் வழ்ங்கி விட்டு செல்வார்.
தான் இந்த நோயால் அவதிப் படுவதை தன் அம்மாவுக்குத் தெரி
யாமல் இதை செய்வார் ! காட்சியும் பாடலும் நன்றாக இருக்கும் !
இந்தப் பாடலில் சிவாஜி குழந்தைகளின் பெயர்களைச் சொல்லி
ஒவ்வொரு குழந்தைக்கும் என்னென்ன பரிசு என்பதை குறிப்பிட்டு
சொல்லி பரிசுகளை வழங்குவார் ! எப்படி ?
" ஆடை அழகி மேரி உனக்கு முத்து மாலை பரிசு ! "
மேடைப் பேச்சு மோகன் உனக்கு தங்கப் பேனா பரிசு !
பாட்டு பாடும் பாபு உனக்கு பட்டு சொக்காய் பரிசு !
ஆட்டம் ஆடும் ராஜு உனக்கு டான்ஸ்ஸு பாப்பா பரிசு !
சீருடை தாங்கிய ஷீலா பொண்ணுக்கு " சிக்லெட் " பாக்கெட்
பரிசு "
நூற்று நூறு என மார்க்கு வாங்கிய நூர்ஜகானுக்கு வாழ்த்து !
என்று பாடுவார் !
இதில் " ஷீலாப் பொண்ணுக்கு " அவர் " சிக்லெட் " பாக்கெட்
பரிசு தருவதில் தான் சிக்கல் !
அந்த காலத்தில் " சிக்லெட் " என்பது ஒரு நிறுவனம்
தயாரித்த " சூயிங்கம் " ஆகும் !
குழந்தைகளுக்கு " சூயிங்கம் " பரிசு கொடுப்பது என்பது
குழந்தகளுக்கு " சூயிங்கம் " சாப்பிடசொல்லி ஊக்கப் படுத்துவது
ஆகும் என்று எண்ணியதால் என்னவோ அந்த காலத்தில்
இந்தப் படத்தை திரையில் பாக்கும்போது டி.எம். எஸ்
அவர்கள் " சிக்லெட் பக்கெட் " என்னும் இடத்தில் " சிக்லெட் "
என்ற சொல்லை எடுத்து அதற்கு பதில் ஓர் இசையைப்
புகுத்தி பின்னார் வெறும் " பாக்கெட் பரிசு " என்றே
தியேடரில் வரும் !
ஆனால் இசைத்தட்டில் " சிக்லெட் பாக்கெட் " என்பதே வரும் !
ஆனால் அப்போது திரையில் வெட்டியதை ( சிக்லெட் )
இபோது வரும் வி.சி. டி யில் பார்த்தால் வெட்டியதைக்
காணோம் ! " ச்க்லெட் பாக்கெட் " என்றே வருகிறது !
ஒரு வேளை " சிக்லெட் " கம்பெனி மூடிவியதால் என்னவோ
அல்லது வி.சி.டி க்கு தணிக்கை இல்லாததால் என்னவோ
" சிக்லெட் " வெட்டவில்லை !
sss
7th November 2014, 12:49 PM
படம் : " நெஞ்சிருக்கும் வரை " ( 1967 )
மாபெரும் இயக்குனர் ஸ்ரீதர் அவர்கள் இயக்கிய மறக்கமுடியாத படங்களில் இதுவும் ஒன்று !
முதலில் ஸ்ரீதர் அவர்கள் இந்தப் படத்தை எடுக்கும் எண்ணம் எதுவும் இல்லை. அப்போது இந்தியா - பாகிஸ்தான்ன் போர்
வந்தபோது யுத்தம் உச்சக் கட்ட நிலையில் இருந்த போது , 1963 - ல் நடந்த இந்தியா - சீனா யுத்தத்தின் போது எடுத்த
" இரத்த திலகம் " மாதிரி நாமும் ஒரு படம் எடுக்கலாம் என்று என்ணி சிவாஜி மற்றும் பலரை ராணுவ உடை போட்டு
" நெஞ்சிருக்கும் வரை " என்கிற தலைப்பில் படம் எடுத்தாக எனக்கு நினைவு ! அந்தப் படத்தின் " ஸ்டில்ஸ் " கூட அந்த கால
" பேசும் படம் " பத்திரிக்கையில் நான் பார்த்திருக்கிறேன். ஆனால் அந்தப் படம் சில ஆயிரம் அடிகள் நன்றாக வந்து
வளர்ந்து வரும் நிலையில் திடீரென்று டாஷ்கண்ட் ஒப்பந்தம் நடந்து , பிரதமர் லால் பகதுர் சாஸ்திரிக்கும் - பாகிஸ்தான் பிரதமர்
அயுப்கான் -க்கும் சமாதானம் ஆகி இந்தோ- பாகிஸ்தான் போர் முடிவுக்கு வந்தது ! எல்லாம் நன்மைக்கே !
ஆனால் இயக்குனர் ஸ்ரீதர் தலையில் கை வைத்துக்கொண்டு மறு கையால் நகத்தை கடிக்க ஆரம்பித்தார் ! ( ஸ்ரீதர் அவர்கள்
நகம் கடிக்கிறார் எண்றால் அவர் " டென்ஷன் " உடன் உள்ளார் என்று பொருள் ! ) அந்த சமாதானப் புறா பறக்கும்போது " நெஞ்சிருக்கும்
வரை " எங்கே வெளி விடுவது ? எனவே அந்தப் படத்தை கை விட்டார், நிறைய பணம் செலவாகி விட்டது. எனினும் படத்தில் நடித்தவர்களுக்கு, அவர்களை ஒன்றும்
கொடுக்காமல் திருப்பி அனுப்ப முடியாது. அப்போது ஸ்ரீதருக்குத் தோன்றியதுதான் இப்போதய " நெஞ்சிருக்கும் வரை " ( 1967 )
இந்தப் படத்தை " லோ பட்ஜெட் " - ல் எடுக்க வேண்டிய நிலைமை !
எனவே புதுமை விரும்பி ஸ்ரீதர் அந்த சமயத்திலும் ஒரு புதுமையை செய்தார் ! உங்கள் எல்லோருக்கும் தெரியும் ! சிவாஜி முதற்கொண்டு
படத்தில் நடித்த எல்லோருக்கும் " மேக்- அப் " இல்லை ! மிக சிக்கனமாக படத்தை முடித்தார் !
sss
7th November 2014, 12:57 PM
படம் : " நிச்சய தாம்பூலம் "
பாடல் : " படைத்தானே, படைத்தானே "
சிவாஜி கணேசன், ஜமுனா, நம்பியார் போன்றவர்கள் நடித்து,
விஸ்வநாதன் - ராமமூர்த்தி இசை மழையில் உருவான படம்
தான் " நிச்சய தாமபூலம் "
b.s. ரங்கா என்கிற கன்னடத் தயாரிப்பாளர் எடுத்த படம்.
இவர் " தென்றல் வீசும் " , " பட்டிக்காட்டு பொன்னையா " போன்ற
படங்களையும் எடுத்துள்லார்.
மெல்லிசை மன்னர், ரங்கா அவர்களிடம் அளவு கடந்த பாசம் !
ஊதியத்தை வாரி வழங்குவார், இசை அமைப்பில் தலைஇடமாட்டார்,
எனவே ரங்கா படங்களில் பாடல்கள் " சூபர் ஹிட் " ஆகும் !
" நிச்சய தாம்பூலம் " படத்திலிம் பாடல்களுக்கு பஞ்சமே இல்லை !
அவைகளின் தரத்திற்கும் பஞ்சமே இல்லை !
1. " ஆண்டவன் படச்சான், என் கிட்டே கொடுத்தான் " - டி.எம்.எஸ்
2. " பாவாடை தாவணியில் பார்த்த உருவமா " - டி.எம்.எஸ்
3. " மாலை சூடும் மண நாள் "
4." நெத்தியிலே ஒரு குங்கும பொட்டு " - சுசீலா
5. " இது வேரு உலகம் , தனி உலகம் " - டி.எம்.எஸ்- ஈஸ்வரி
6." படைத்தானே " - டி.எம்.எஸ்
7. " அலங்காரம் . அலங்காரம் " - ஈஸ்வரி, எஸ்.சி. கிருஷ்ணன்
இவைகளைத்தவிர, " பாடினார், கவிஞர் பாடினார் " பாட்டு இந்த
படத்திற்காக பாடப்பட்டு பின்னர் அந்த பாடல் " தென்றல் வீசும் "
படத்தில் சேர்க்கப் பட்டது .
இப்போது நாம் எடுத்துக் கொண்ட பாடல் " படைத்தானே "
பாடல் !
சரி, வழக்கம் போல விஷயத்திற்கு வருவோம் !
நம் தணிக்கையாளர்கள் " படைத்தானே " பாடலை என்னதான்
செய்தார்கள் என்று கேட்கிறீர்கள் !
முதலில் பாடலைப் படியுங்கள் :
" படைத்தானே, படைத்தானே,
மனிதனை ஆண்டவன் படைத்தானே,
வளர்த்தானே, வளர்த்தானே,
மனதனில் கவலைகள் வளர்த்தானே.
கொடுத்தானே, கொடுத்தானே,
பழரசம் ஆண்டவன் கொடுத்தானே,
பிரித்தானே , பிரித்தானே,
மனதையும் கவலையும் பிரித்தானே ! "
இதில் " பழரசம் " என்பது அவர்களுக்கு பிடிக்கவில்லை !
இப்போது என்னென்னெவோ வார்த்தைகள் பாட்டுக்களில்
வருகின்றன, ஆனால் அப்போது " பழரசம் " பிடிக்காமல் போய்விட்டது !
சிறந்த அரங்க அமைப்பு,
சிறந்த ஒலிப்பதிவு,
சிறந்த இசை அமைப்பு,
சிறந்த பிண்னனிக் குரல் ( டிஎம எஸ் )
அதைவிட " படைத்தானே " என்று டி எம் எஸ் சொல்லும்போது
தன் இரண்டு கைகளையும் உயரே தூக்கி " ஸ்டைலாக " நடந்தும்,
பாடிக்கொண்டே வரும் சிவாஜியின் நடிப்பைப் பாராட்டி மக்களின்
கைதட்டல் காதை செவிடாக்கும் !
இந்த அருமையான தருணத்தில் ,,,,,,,,,.........,,,,,,,.............
,,,,,........................,,................... ....................................
நம் தணிக்கையாளர் செய்த வேலை எங்கே அப்போது தெரியும்,
புரியும் ? !
எனவே " பழரசம் " மாற்றப்பட்டது !
எப்படி ?
" படைத்தானே, படைத்தானே,
மனிதனை ஆண்டவன் படைத்தானே,
வளர்த்தானே, வளர்த்தானே,
மனதனில் கவலைகள் வளர்த்தானே.
கொடுத்தானே, கொடுத்தானே,
மறதியை ஆண்டவன் கொடுத்தானே "
ஆமாம் " பழரசம் " என்பதற்குப் பதிலாக " மறதி " யைப் போட்டார்கள் !
"என்னப்பா இது சின்ன சொல்தானே , இதை ஏன் பெரிசு படுத்து
கிறாய் "
என்று நீங்கள் என்னைக்கேட்கலாம் !
" மூர்த்தி சிறியது என்றாலும் கீர்த்தி பெரிதல்லவா ? "
கண்னதாசனின் இந்த அருமையான வரிகளை அவர்கள் எப்படி
கை வைக்கலாம் ? என்பதே என் கேள்வி !
sss
7th November 2014, 12:57 PM
" நாளை முதல் குடிக்க மாட்டேன், சத்தியமடி தங்கம் "- " நீதி "
( முதலில் இந்த பாடல் " இன்று முதல் குடிக்க மாட்டேன் " என்று
எழுதப்பட்டது ! மெல்லிசை மன்னர் அந்த வரிகளை ஆட்சேபித்து
" பொய்யைச் சொன்னாலும் ஒழுங்காகச் சொல்லனும் " என்று
சொல்லி " நாளை முதல் குடிக்க மாட்டேன் " என்று மாற்றினார் ! )
sss
7th November 2014, 01:03 PM
நன்றி எம்கேஆர்சாந்தாராம் வீயார்
" ஞாயிறும் திங்களும் " - சில தகவல்கள் !
1965 -ம் வருடம் " திருவிளையாடல் " படம் வெளிவந்து அந்த படத்தில்
கே.பி. சுந்தரம்பாள் " ரி - என்டரி " ஆனதை அறிந்த " ப " வரிசை படப்
புகழ் ஏ. பீம்சிங் அவர்களின் உதவியாளர் சடகோபன் என்பவர்
தான் தயாரிக்கும் " ஞாயிறும் திங்களும் " படத்திற்கு கே.பி. சுந்தராம்பாள்
அவர்களை நடிக்க வைக்க விரும்பினார் ! இதற்காக அவரும் அந்த
படத்தின் கதை வசனகர்த்தாவான வலம்புரி சோமநாதனும்
கொடுமுடிக்கு பயணம் செய்து " கொடுமுடி கோகிலம் " ( அறிஞர்
அண்ணா , கே.பி.சுந்தராம்பாளை அப்படித்தான் அழைப்பாராம் ! ) விடம்
சென்று தங்கள் படத்தில் நடிக்க மிகவும் வற்புறித்தனர். நீண்ட
விவாதங்களுக்கு பின்னர் கே.பி. எஸ் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார் !
படத்தில் கே.பி. சுந்தராம்பாள் நடிக்க சிவாஜி யை விட அதிக சம்பளம்
அவருக்கு தரப்பட்டதாம் !
( சொன்னவர் : வலம்புரி சோமநாதன் ! )
செளகார் ஜானகி , முத்துராமன் , வி.கே. ராம சாமி, நாகய்யா
ஆகியோர் நடித்தனர்.
கதைச் சுருக்கம் :
சுந்தராம்பாள் ஒரு வசதியான பங்களா வாசி. அவருடைய ஒரே
மகள் : தேவிகா. தேவிகா ஒரு " கிரிக்கெட் " பிரியர் !
( அந்த காலத்திலேயே " கிரிக்கட் " பைத்தியங்கள்
உண்டு போலும் ! )
தேவிகா படிக்கும் கல்லூரியில் சிவாஜி கணேசனும் படிக்கிறார் !
தமிழ் சினிமாவின் எழுதாத சட்டத்தின் படி பணக்கார கதாநாயகி
தேவிகா , ஏழை கதாநாயகன் சிவாஜியை " லவ் " ட்டுகிறார் !
( " பட்டினும் மெல்லிய பூவிது " பாடல் வரும் சமயம் ! )
இந்த சமயத்தில் " கிரிக்கட் பைத்தியம் " தேவிகா , கிரிக்கட் ஆட
ஜப்பானின் தலை நகர் டோக்கியோவுக்கு பயணம் மேற்கொள்கிறார் !
ஏழை சிவாஜி, தேவிகாவின் பிரிவினால் தவிக்கிறார். அவரது " டாடி "
- வி.கே. ராமசாமி ! வழக்கம்போல ஏழை கதாநாயகனுக்கு ஒரு தங்கை !
பெயர் : ( நடிகை ) ஜீவலட்சுமி !
இப்போது " உல்டா " லவ் !
அதாவது ஏழை - சிவாஜியின் தங்கை , பணக்கார முத்துராமனைக்
காதலிக்கிறார் !
இப்படியாக கதை " நகரும்போது " ........ ஒரு நாள் இரவு .....
சரியான பேய் மழை ! வீட்டுக்குத் திரும்பிப் போகும் சிவாஜி கணேசன்
மழையில் " தொப்பலாக " நனைகிறர் ! மழைக்கக ஒரு வீட்டில்
ஒதுங்குகிறார் ! அந்த வீடு யாருடைய வீடு ?
ஊகித்து விட்டீர்களா !
கே.பி. சுந்தராம்பாளின் வீடு !
மழையில் அவதிப்படும் சிவாஜியை , கேபி எஸ் " உள்ளே வாப்பா "
என்று வாஞ்சையுடன்அழைக்கிறார் . உள்ளே வந்த சிவாஜியின்
கள்ளமற்ற நடவடிக்கையை பார்க்கிறார் ! அவரிடம் " பாச மழை "
பொழிகிறார் ! மழையில் நனைந்த சிவாஜி அந்த " பாச மழையிலும் "
நனைகிறர் ! சுந்தராம்பாள் , சிவாஜியின் ஏழ்மை நிலைமையை
உணர்கிறார் ! அவருக்கு உதவ முன் வருகிறர் !
எப்படி ?
சிவாஜியை தன் மகனாக "தத்து " " எடுத்து
அவரை காப்பாற்றும் எல்லைக்கும் போகிறார் ! சுந்தராம்பாளும்
சிவாஜியும் தாய் - மகன் ஆக மாறி விடுகின்றனர் !
" உனக்கு ஒரு அண்ணனைக் காட்டுகிறேன், பார் ! "
டோக்கியோவில் இருந்து திரும்பி வந்த தேவிகாவைப் பார்த்து சுந்தராம்பாள் ,
சிவாஜியை சுட்டிக் காட்டி சொல்லும் வசனம் ! எப்படி இருக்கும் தேவிகாவுக்கு ?
தன் காதலன் , அண்ணனாக மாறியதை எந்தப் பெண்னும் பொறுக்கமாட்டாள் !
தற்கொலை செய்து கொள்ள தேவிகா முயலுகிறார். அவரை சிவாஜி கணேசன்
தடுத்து அவருக்கு ஆறுதலை சொல்கிறார்.
சிவாஜி சொல்லுகிறார் : " நான் அம்மாவுக்கு சில கடமைகளை செய்து
தருவதாக வாக்கு கொடுத்திருக்கிறேன் . நீ இப்படி சோகமான முடிவுக்கு
வந்தால் அந்த கடமைகளை முடிக்க முடியாமல் போய்விடும் ! "
வேறு வழி இன்றி தேவிகா தற்கொலை முடிவை கை விடுகிறார் !
பின்னர் என்ன ஆனது ? ............... !
தேவிகா கன்னியாஸ்திரி ஆகி சிவாஜியை விட்டு பிரிந்து
விடுகிறார் !
" ஞாயிறும் - திங்களும் " எப்போது ஒன்று சேரும் ?
நடக்கிற காரியமா இது !
படத்தின் " டைட்டில " ஐக் கேட்ட கேபிஎஸ் இப்படி சொன்னார் :
" ஞாயிறும் திங்களும் " எப்படி ஒன்று சேரும் ?
அப்படி சேர்ந்தாலும் அது அமாவசை ஆகிவிடுமே ! " என்றாராம் !
படம் சுமார் 7000 அடிகள் வளரும்போது படத் தயாரிப்பாளர் சடகோபன்
அகால மரணம் அடைந்துவிட படம் வளர வில்லை . படம் வெளி
வராதது குறித்து மிகவும் மனம் வருந்தியவர் : மெல்லிசை மன்னர் !
மெல்லிசை மன்னரின் இசையில் ஏறக்குறைய எல்லாப் பாடகர்களும்
பாடிய போது கே பி எஸ் முதன் முதலாக இவர் இசையில் பாடியும்
படம் வெளி வராது போனது குறித்து மிகவும் வருந்தினார் மெல்லிசை
மன்னர் !
" நாம் ஒன்று நினைக்க தெய்வம் ஒன்று நினைக்கும் "
என்பது எவ்வளவு அருமையன வார்த்தை !
படம் கிட்டத் தட்ட முடிவடைந்து, க்ளைமாக்ஸ் மற்றும் ஒரு பாடல் காட்சி மட்டும் படமாக்கப் பட வேண்டிய நிலையில் நின்று விட்டது. இந்தப் படம் முழுதும் முடிவடைந்து வெளிவந்திருந்தால் கீழ்க்கண்ட சிறப்புகள் நிலைத்திருக்கும்
1. முதன் முதலில் டோக்யோவில் எடு்க்கப் பட்ட தமிழ்ப்படமாக இருந்திருக்கும்
2. மெல்லிசை மன்னரின் இசையில் கே.பி.சுந்தராம்பாள் பாடிய பாடல் இடம் பெற்ற தமிழ்ப்படம் என்று விளம்பரப் படுத்த்ப் பட்டிருக்கும்
3. நடிகர் திலகமும் கே.பி.சுந்தராம்பாள் அவர்களும் இணைந்து நடித்த முதல் சமூகப் படமாக இருந்திருக்கும். ( மகாகவிகாளிதாஸ் பழங்கால புலவர்களைப் பற்றிய படம். கே.பி.சுந்தராம்பாள் நடித்த் மற்றொரு சமூகப் படம் உயி்ர் மேல் ஆசை)
இப்படிப் பல சிறப்புகளை உள்ளடக்கிய இப்படம் வெளிவராமல் போனது துரதிருஷ்டமே.
sss
7th November 2014, 01:21 PM
படம் : " திருமால் பெருமை "
சிவாஜி கணேசன் திரை உலகத்திற்கு வந்த புதிதில் திராவிட கட்சிகளடம் சேர்ந்து நாத்திகனாக இருந்தார்.
கடவுளைக் கும்பிடுவதும் கோவிலுக்கும் போவது கிடையாது.
இந்த சமயத்தில் பிரபல " ப " எழுத்து புகழ் இயக்குனர் ஏ. பீம்சிங் சிவாஜி நடித்த " ராஜா ராணி " படத்தை
இயக்கிக் கொண்டிருந்தார். அந்த படத்தில் சிவாஜியும் நடித்திருப்பது நம் எல்லோருக்கும் தெரியும்.
பீம்சிங் அவர்கள் தன் தம்பி ஒருவர் திருப்பதியில் உள்ளதாகவும் அவரைப் பார்ப்பதற்கு திருப்பதிக்கு
போகப் போவதாகவும் சிவாஜியிடம் சொன்னார். இதனைக் கேட்ட சிவாஜி , பீம்சிங் கிடம் :
" பீம் பாய், நானும் திருப்பதிக்கு உங்களோடு வரப்போகிறேன்" என்று சிவாஜி சொன்னதும் பீம்சிங்
திடுக்கிட்டார் ! நாத்திக கொள்கள் உடைய தி.மு.க கட்சிக்காரர் எப்படி திருப்பதிக்கு செல்லமுடியும், அப்படி
திருப்பதி டவுனுக்கு சென்றால் கோவிலுக்கு போகாமல் இருப்பாரா என்று சிவாஜியைப் பற்றி பீம்சிங்
எண்ணத் தொடங்கிவிட்டார் ! எனினும் ஒருவர் " நானும் வருகிறேன் " என்று சொல்லும்போது
" வேண்டாம் " என்று சொல்வது நாகிரீகம் அல்ல என்று கருதி பீம்சிங் " சரி " என்று சொல்லிவிட்டார்.
சிவாஜி அப்போது " காவேரி " படத்தில் நடித்துக்கொண்டிருந்தார். அந்த படத்தின் தயாரிப்பாளரான லேனா
செட்டியாரிடம் ( எம்ஜிஆர் நடித்த " மதுரை வீரன் " படத்தை எடுத்தவர் ) " செவர்லெட் " காரை வாங்கி
அதில் பீம்சிங், சிவாஜி, ஒளிப்பதிவாளர் ஜி.விட்டல் ராவ்ம் மற்றொரு ஒளிப்பதிவாளர் லோகநாதன்
( பின்னாளில் கே.பாலசந்தர் படங்களுக்கு பணியாற்ரியவர் ) ஆக 4 பேர் அந்த காரில் திருப்பதிக்கு
பயணமாயினர். வழியில் சோதனையாக பலத்த மழை, காருக்குள்ளே தண்ணிர் புகுந்துவிட்டது! பலத்த
மழையால் சாலை வழி தெரியவில்லை. பீம்சிங் , " திரும்பி சென்னைக்கு போய் விடலாம் " என்றார்.
ஆனால் சிவாஜியோ கேட்கவில்லை. எப்படியும் திருப்பதி கோவிலுக்கு போய்த்தான் ஆகவேண்டும்
என்று சொல்லிவிட்டார் ! வேறு வழியின்றி லோகநாதனும், பீம்சிங்கும் வண்டி விட்டு இறங்கி " டார்ச் "
விளக்கு ஒளி காட்ட ( அந்த காலத்திலேயே லோகநாதன் " சிறந்த " ஒளிப்பதிவாளர் ஆகிவிட்டார் ! ) அந்த
ஒளி விளக்கில் திருப்பதிக்கு செல்ல 10 மணி நேரம் பிடத்தது ! சென்ற உடனே அவர்கள் கோவிலுக்கு
சென்றனர். திருப்பதி ஏழுமலையான் தரிசனத்தை சிவாஜி கணேசன் கண்டு மனம் மகிழ்ந்தார் ! எப்பேர்ப்பட்ட
மனிதனும் திருப்பதிக்கு சென்று ஏழுமலையானை தரிசித்தால் அவனின் மன நிலை சாந்தமடையும் ! இது
எனது அனுபவத்தில் கண்ட உண்மை ! திருப்பதி கோவிலுக்கு செல்ல நீண்ட வரிசை, பல மணி நேரம்
தரிசனத்திற்காக நிற்க வேண்டும், மலை ஏற வேண்டும் என்று பல்வேறு பிரச்சனைகளால் இனி மேல்
திருப்பதி கோவிலுக்கு போகவே வேண்டாம் என்று முடிவெடுத்தாலும், ஏழு மலையானை தரிசித்துவிட்டு
வீட்டுக்கு வந்தால்....... " மறுபடியும் திருப்பதிக்கு போகலாமா " என்று எண்னத் தோன்றும் ! அதுதான்
ஏழுமலையானின் மகிமை !
சிவாஜி கணேசன் திருப்பதி கோவிலுக்கு போய் வந்தது அறிந்து அவரது கட்சியை சேர்ந்த பலர் சிவாஜியை
விமர்சிக்கத் தொடங்கி விட்டனர் , சிலர் கோபம் கொண்டனர் . !
இதனால் கட்சிக்குள் சிவாஜிக்கு எதிர்ப்பு கிளம்பியது. பார்த்தார் சிவாஜி கணேசன் ! தி.மு.க கட்சியிலிருந்து
விலகிமார் ! " காங்கிரஸ் " கட்சியில் சேர்ந்தார் !
ஆத்திகராய் மாறினவுடன் பக்திப் படங்களில் நடிக்க ஆரம்பித்துவிட்டார் ! ஏ.பி. நாகராஜன் அவர்கள்
துணையோடு முதலில் நடித்த பக்தி படம் " சம்பூர்ண ராமாயணம் " . படம் படு " ஹிட் " ஆனது ! அந்த
படம் வந்த பொழுதில் " ராமாயத்தில் ராமபிரானின் மனைவி பெயர் என்ன ? " என்று பள்ளி மாணவனைக்
கேட்டால் பத்மினி என்று சொல்லும் அளவுக்கு படம் " ஹிட் " ஆனது !
பின்னர் சிவாஜி தொடர்ந்து
" திருவிளையாடல் "
" சரஸ்வதி சபதம் "
" திருவருட்செல்வர் "
"கந்தன் கருணை "
" திருமால் பெருமை "
என்று பக்தி படங்களில் நடித்து பெரும்புகழ் கொண்டார் !
திருமாலாக நடிக்கும் சிவகுமாரின் கட்டை விரலில் உள்ள பொன்நகையை கழட்ட முடியாமல் திருமங்கை
ஆழ்வார் ஆன சிவாஜி, பின்னர் தன் வாயை வைத்து கடித்து நகையை எடுக்கப் போகும் காட்சியில் நடிகர்
சிவகுமார் பதறிவிட்டாராம் ! ஏன் என்றால் வெறும் காலோடு நடிக்கும் சிவகுமாருக்கு அந்த படப்பிடிப்பு
நடந்த இடம் அந்த ஊர் மக்கள் தங்கள் " இயற்கை உபாதை" கழிக்கும் இடம் என்பது தெரியும் ! எனெவே
சிவகுமார் அவர்கள் சிவாஜியிடம் இந்த விஷயத்தை சொல்லியும் சிவாஜி பொருட்படுத்தாமல் அந்த
காட்சியில் நடித்தார் ! நடிப்பில் காட்டும் அக்கறை சிவாஜிக்கு உண்டு என்பது இந்த ஒரு நிகழ்ச்சி போதுமே !
கடைசியில் தொண்டரடிப்பொடியாழ்வார் முன் திருமால் தோன்றி ஆசி வழங்குவதோடு படம் முடிவடைகிறது,
ஆனால் ஒரு பாடலோடு !
" திருமால் பெருமைக்கு நிகரேது "
என்று தொடங்கும் பாடல். இந்த பாடலில் திருமாலின்
10 அவதாரங்களைவிளக்கி டி.எம்.எஸ் பாடும் பாடல் !
1. மச்ச அவதாரம்
2.கூர்ம அவதாரம்
3. வராக அவதாரம்
4. நரசிம்ம அவதாரம்
5. வாமனன் அவதாரம்
6. பரசுராம அவதாரம்
7. ராம அவதாரம்
8. பலராம அவதாரம்
9. கண்ணன் அவதாரம்
" கல்கி அவதாரம் "
பழைய 78 rpm இசைத்தட்டில் இரண்டு பக்க இசைத்தட்டாக வந்த பாடல், எல்லா அவதாரங்களையும்
விளக்கி பாடு பாட்டில் கடைசி அவதாரம் ஆன கல்கி அவதாரத்தை சொல்லும் முன்
" விதி நடந்ததென மதி முடிந்தனெ வினையின் பயனே உருவாக நிலை மறந்தவரும் நெறி இழந்தவரும்
உணரும் வண்னம் தெளிவாக இன்னல் ஒழித்து புவி காக்க நீ எடுக்க வேண்டும் ஒரு அவதாரம்
" கல்கி " அவதாரம். " என்று வரும் !
ஆனால் திரையில் , அதாவது " திருமால் பெருமை " படத்தை முதலில் திரை இட்டபோது அந்த
பாட்டில் கல்கி என்கிற சொல் நீக்கப்பட்டுவிட்டது ! பின்னர் எப்படி பாட்டு இருந்தது ?" - என்று
நீங்கள் கேட்கலாம் . டி.எம்.எஸ் திரையில் பாடுவார் :
" விதி நடந்ததென மதி முடிந்தனெ வினையின் பயனே உருவாக நிலை மறந்தவரும்
நெறி இழந்தவரும் உணரும் வண்னம் தெளிவாக
இன்னல் ஒழித்து புவி காக்க நீ எடுக்க வேண்டும் ஒரு அவதாரம்----
------ அவதாரம் "
" கல்கி " என்று சொல்லாமல் வெறும் அவதாரம் என்றே சொல்லி பாட்டை முடித்துவிடுவார்கள் !
அதாவது பெருமாள் , எதாவது ஓர் அவதாரம் எடுக்கட்டும் , ஆனால் உலகத்தை அழிக்க வரும்
கல்கி அவதாரம் எடுக்க வேண்டாம் என்று நம் தணிக்கையாளர்கள் நினைத்தாகளாம் !
அதனால் கல்கி என்ற சொல் எடுக்கப்பட்டது ! அப்போது இருந்த நிலையில் கல்கி அவதாரம் தேவை
இல்லை !
eehaiupehazij
7th November 2014, 06:40 PM
Sivaji Ganesan's acting edge over Oscarites! 5: Humphrey Boghart slides before NT!
இந்திய நண்டுகளின்,அதிலும் குறிப்பாக நம் தமிழ் நண்டுகள், தனித்தன்மை: ஒரு நண்டு மேலே செல்ல முற்பட்டால் கீழிருக்கும் நண்டு அதன் காலைப் பிடித்து இழுத்து விடும், தனக்கும் அதேநிலைதான் என்பதை மறந்து!
கூரை ஏறி கோழி பிடிக்க (Sivaji Statue and Baratha Rathnaa) முடியாத நாம் வானமேறி வைகுந்தம் (Life time achievement Oscar) போவது எப்போது?
விரக்தியே மேலிடுகிறது , நம் வாழ்நாளில் நாம் ஆராதிக்கும் நமது நடிப்பிலக்கணத்திற்கு உரிய பெருமை வந்தடைவதை கண்டு உவகை கொள்வோமா!?
Humphrey Bogart (December 25, 1899 – January 14, 1957) was an American screen actor who, with performances in films during the 1940s such as The Maltese Falcon, Casablanca, and The Big Sleep, became widely regarded as a cultural icon. In 1999, the American Film Institute ranked Bogart as the greatest male star in the history of American cinema.
Bogart's breakthrough as a leading man came in 1941, with High Sierra and The Maltese Falcon. The next year, his performance inCasablanca raised him to the peak of his profession and, at the same time, cemented his trademark film persona, that of the hard-boiled cynic who ultimately shows his noble side. Other successes followed, including To Have and Have Not (1944); The Big Sleep(1946); Dark Passage (1947) and Key Largo (1948), with his wife Lauren Bacall; and The Treasure of the Sierra Madre (1948); In a Lonely Place (1950); The African Queen (1951), for which he won his only Academy Award; Sabrina (1954); and The Caine Mutiny(1954). His last film was The Harder They Fall (1956). During a film career of almost 30 years, he appeared in 75 feature films.
Casablanca : The all time entertainer with a poignant story line from Boghart! Such a complicated show of expressions to moods could be just pooh-poohed by our NT having an edge over Bogharts portrayals!
https://www.youtube.com/watch?v=w7IWLZcVU64
https://www.youtube.com/watch?v=UgIhUWtItHo
Love failure/family feuds naturally prompts a hero to become a zero resorting to drinks!! NT’s style of succumbing to love failure in a fabulous extension of Boghart’s portrayal! NT, the original by himself, like Boghart!! NT’s close-up expressions are matchless compared to Boghart’s stone faced dialogue deliveries! Still awards elude our icon since he is born in TN where we follow the strategy of Indian Crabs preventing one crab from moving up and getting prevented by another crab from behind as quoted once by our respected Rajiv Gandhi!
https://www.youtube.com/watch?v=go40tKa90yI
https://www.youtube.com/watch?v=GqAtpVEu5q4
Reference courtesy : Wikipedia and You Tube
joe
7th November 2014, 08:22 PM
Sss,
நீங்க இந்த பக்கத்தில் பதிந்திருப்பதெல்லாம் ஒரே மூச்சில் நீங்க எழுதியதா?
joe
7th November 2014, 09:06 PM
https://www.youtube.com/watch?v=MNDmkEXRS7s
J.Radhakrishnan
7th November 2014, 09:16 PM
Happy Birthday wishes to Mr.Gopal sir
eehaiupehazij
7th November 2014, 10:35 PM
Sivaji Ganesan’s acting edge over Oscarites 6 : Jack “Joker” Nicholson of all acting trades shines but like a moon that glitters getting light from the Sun (Sivaji Ganesan)!
Jack Nicholson (born April 22, 1937) is an American actor, who has portrayed unique and challenging roles, many of which include dark portrayals of excitable, neurotic and psychopathic characters. Nicholson's 12 Academy Award nominations make him the most nominated male actor in the academy's history.
Nicholson has won the Academy Award for Best Actor twice, one for One Flew Over the Cuckoo's Nest and the other for As Good as It Gets. He also won the Academy Award for Best Supporting Actor for Terms of Endearment. Nicholson is tied with Walter Brennan and Daniel Day-Lewis as one of three male actors to win three Academy Awards. He is well known for playing Frank Costello in The Departed, Jack Torrance in The Shining and the Joker in 1989's Batman.
Nicholson is one of only two actors to be nominated for an Academy Award for acting in every decade from the 1960s to the 2000s; the other was Michael Caine. He has won six Golden Globe Awards, and received the Kennedy Center Honor in 2001. In 1994, he became one of the youngest actors to be awarded the American Film Institute's Life Achievement Award. Notable films in which he has starred include Easy Rider, Five Easy Pieces, The Last Detail, Chinatown, The Passenger, One Flew Over the Cuckoo's Nest,The Shining, Reds, Wolf, A Few Good Men, The Pledge, About Schmidt, and The Departed. His portrayal as the US President in Tim Burton movie ‘Mars Attacks’ was terrific!
Courtesy : Wikipedia
Oscarite’s Moon cool portrayal of close-up expressions
As Good as It Gets is a 1997 American romantic comedy film directed by James L. Brooks and produced by Laura Ziskin. It starsJack Nicholson as a misanthropic, homophobic, racist, obsessive-compulsive novelist, Helen Hunt as a single mother with anasthmatic son, and Greg Kinnear as a gay artist. The screenplay was written by Mark Andrus and James L. Brooks.
Nicholson and Hunt won the Academy Award for Best Actor and Academy Award for Best Actress, respectively, making As Good As It Gets the most-recent film to win both of the lead acting awards, and the first since 1991's The Silence of the Lambs
https://www.youtube.com/watch?v=3SmiY4XWDR8
As Joker in Batman movies:
https://www.youtube.com/watch?v=63iuB-cSY7Q
As the USPresident in Mars Attacks
https://www.youtube.com/watch?v=MPMmC0UAnj0
NT’s Sun hot portrayal of close-up expressions in thillaana mohanambal naadhaswaram play (Nicholson cannot bring life to such a characterization while his comic expressions are nothing to NT)
https://www.youtube.com/watch?v=cPfu1r_NUjw
Pudhiya Paravai climax : like Nicholson’s negative characters, NT haunted by his past ‘crime’ involving the death of his wife: final revelation, in a ‘no other go’ situation! Nicholson comes close to NT in such facial expressions
https://www.youtube.com/watch?v=s7JJfFY2oUU
NT is really unlucky as his histrionics of expressions could not reach the Hollywood doors to open!
sss
7th November 2014, 10:41 PM
அன்புள்ள ஜோ அவர்களே .....
ஒரு மூச்சில் இப்படி எழுத நான் என்ன நடிகர் திலகமா? ஒரே நாளில் பல்வேறு வேடங்களைத் தரித்து ஒவ்வொன்றிலும் வேற்றுமையை காட்ட ??
இங்கு மறு பதிவு நிறைய வருவதால் ....பல புதிய தகவல்களைத் தரவேண்டும் என எண்ணி நான் பல நாட்கள் தொகுத்து வந்த தகவல்களை இங்கு தந்துள்ளேன்.
இந்த புதிய தகவல் நமது திலகத்துக்கு பெருமை சேர்க்கும் என்பதே என் எண்ணம்...
நன்றி
Murali Srinivas
7th November 2014, 10:42 PM
Vilayattupillai to Storm Theatres Again
NEWS
Remember Vilayattupillai [/B]The evergreen hit of thespian SIvaji Ganesan. Released in 1970, the film featured Sivaji Ganean, Padmini, Kanchana, Sivakumar, T.S.Baliah, Cho, and others. Directed by A.P.Nagarajan, the movie had music by K V Mahadevan.
The movie was a huge hit and was received well run all across tamilnadu. Close on the heels of Karnan’s (re-released after digital restoration), plans are now on by J.R.L. Combines, who created a record collection at Mekala by screening Neelavanam to re-release Vilayattupillai, especially to woo younger generation audience, who are below 40.
The movie to be released in Mahalakshmi Talkies, Otteri, Chennai-12 on 14th November (Friday) 2014 daily TWO shows only at 2:30 p.m. and 6:15 p.m. for one week ending on 20th November 2014. It is nearly after a gap of 40 years this movie is being re-released courtesy J.R.L. Combines, Chennai.
Vilayattupillai has a famous hit song “Eru perusa Intha Ooru prusa” by T M Soundararajan.
Call: JRL Combines 9940342150
Posted by new hubber agra2014 who had started a separate thread for this. Closing that and copying it here.
Regards
RAGHAVENDRA
7th November 2014, 11:24 PM
நண்பர் sss என்ற சுந்தரபாண்டியன் அவர்களின் மீள்பதிவுகள் நண்பர் மருத்துவர் சாந்தாராம் அவர்கள் வேறோர் இணைய தளத்தில் பகிர்ந்து கொண்டுள்ள கருத்துக்கள். மருத்துவர் சாந்தாராம் சென்னையின் மிகச் சிறந்த மருத்துவர்களுள் ஒருவர். அவர் நடிகர் திலகத்தின் நடிப்பின் பால் ஈடுபாடு கொண்டவர், மிகவும் ரசிப்பவர். அடியேனுக்கும் திரு சுந்தர பாண்டியன் அவர்களுக்கும் சிறந்த நண்பர் மருத்துவர் சாந்தாராம் அவர்கள். தமிழ்த்திரையுலகின் பல்வேறு துறைகளில் விற்பன்னர்களைப் பற்றிய ஆய்வுக்கட்டுரைகளை தொகுத்து எழுதி வருபவர். நம்முடைய மற்றோர் ஹப்பரும் யூட்யூப் இணைய தளத்தில் ஏராளமான பழைய பாடல்களின் காணொளிகளைப் பகிர்ந்து கொண்டுள்ளவருமான பேராசிரியர் சேக்கரகுடி கந்தசாமி அவர்களுக்கும் உற்ற நண்பராவார் சாந்தாராம் அவர்கள்.
திரு சாந்தாராம் அவர்களின் எழுத்து நடை படிப்போரை எளிதில் கவரும் தன்மையுடையவை. நடிகர் திலகத்தின் நடிப்பைப் பற்றிய அவருடைய அருமையான தொகுப்புகளை இங்கே பகிர்ந்து கொண்ட திரு சுந்தரபாண்டியன் அவர்களுக்கு என் உளமார்ந்த நன்றியைக் கூறிக் கொள்ளும் இதே நேரத்தில் நம்முடைய மருத்துவர் சாந்தாராம் அவர்களையும் இம்மய்யத்தில் பங்கு கொண்டு பல்வேறு தலைப்புகளில் தமிழ்த்திரையுலகைப் பற்றிய அவருடைய கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ள வேண்டுமாய்க் கேட்டுக் கொள்கிறேன்.
வாருங்கள் மருத்துவர் சார். இம் மய்யத்தில் தங்கள் பங்களிப்பினை வேண்டுகிறேன்.
Russellbpw
7th November 2014, 11:34 PM
https://www.youtube.com/watch?v=MNDmkEXRS7s
திரு பிரபு - நல்ல நடிகர் .
நடிகர் திலகம் ரசிகர்களிடம் இவர் நடிப்பு எப்போதுமே எடுபடாமல் போகிறது பாவம் !
joe
7th November 2014, 11:36 PM
நண்பர் sss என்ற சுந்தரபாண்டியன் அவர்களின் மீள்பதிவுகள் நண்பர் மருத்துவர் சாந்தாராம் அவர்கள் வேறோர் இணைய தளத்தில் பகிர்ந்து கொண்டுள்ள கருத்துக்கள். .
sss,
இவ்வாறு மற்றொருவர் எழுதியதை பதியும் போது அவர் பெயரை குறிப்பிடுங்கள் ..அல்லது சுட்டியை பகிருங்கள் . அது தான் முறை.
Russellbpw
7th November 2014, 11:41 PM
நமது திரியின் speciality என்னவென்றால் ....ஒருவரின் மூக்கை உடைபதற்கு படையெடுத்து எங்கிருந்தோ வருவர் ஒரு சிலர்.
ஆனால் அதே சமயம் இவர்களோ..நமது நடிகர் திலகத்தை எவரேனும் வசைபாடினால்....அந்த திசை பக்கமே வரமாட்டார்கள்...ஆனால் அந்த திசையில் நல்லவன் வேடம் மட்டும் புனைவார்கள்...!
joe
7th November 2014, 11:57 PM
இன்று தன்னுடைய பிறந்தநாள் தொடர்பான நிகழ்வுகளில் , தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் என்றும் போல தன் ஆசான் நடிகர் திலகத்தின் புகழ் பாடிய நடிகர் திலகத்தின் கலை வாரிசு கலைஞானி கமல்ஹாசன் வாழிய பல்லாண்டு !
Russellbpw
8th November 2014, 12:07 AM
நவம்பர் மாதம் நடிகர் திலகம் அவர்கள் நடிப்பில் வெளிவந்த படங்கள் :
05-11-1953 - கண்கள்
13-11-1953 - பெம்புடு கொடுகு (தெலுகு)
13-11-1955 - கோடிஸ்வரன்
01-11-1956 - ரங்கூன் ராதா
07-11-1958 - காத்தவராயன்
07-11-1961 - கப்பல் ஒட்டிய தமிழன்
23-11-1962 - ஆலயமணி
15-11-1963 - அன்னை இல்லம்
03-11-1964 - முரடன் முத்து
03-11-1964 - நவராத்திரி -
திரை உலகில் 1952இல் நாயகனாக நடித்து கொண்டிருந்த நடிகர்களில் அனைவருக்கும் பின்னால் வந்து அனைவரையும் தனது திறமையால் மட்டுமே முந்தி முதல் கதாநாயகனாக 100வது திரைப்படம் 12 வருடங்களில் பல்வேறு கதாபாத்திரங்களில் சர்வ சாதாரணமாக நடித்து முடித்து வருடத்திற்கு சராசரி 8.33 படங்கள் (நாற்பத்தைந்து நாட்களுக்கு ஒரு புதுப்பட ரிலீஸ் ) கொடுத்தது, தமிழ் திரைப்பட வர்த்தகத்தின் மூன்றில் ஒரு பங்கு இவருடைய படம் மட்டுமே என்பது இன்றளவும், என்றும் ஒரு உலக சாதனை.
11/11/1966 - செல்வம்
01/11/1967 - இரு மலர்கள்
01/11/1967 - ஊட்டி வரை உறவு
15/11/1968 - லக்ஷ்மி கல்யாணம்
29/11/1968 - உயர்ந்த மனிதன்
10/11/1969 - சிவந்த மண்
27/11/1970 - பாதுகாப்பு
13/11/1974 - அன்பை தேடி
02/11/1975 - Dr . சிவா
02/11/1975 - வைர நெஞ்சம்
10/11/1977 - அண்ணன் ஒரு கோயில் - 25 வருடங்கள் - 191வது படம்
14/11/1982 - பரீட்சைக்கு நேரமாச்சு
14/11/1982 - ஊரும் உறவும்
04/11/1983 - வெள்ளை ரோஜா
11/11/1985 - படிக்காதவன் - 32 வருடங்களில் - 256வது படம். சராசரி ஒரு வருடத்திற்கு 8 படங்கள் - அதாவது 45 நாட்களுக்கு ஒருமுறை நடிகர் திலகம் அவர்களின் புது படம் ரிலீஸ்.
01/11/1986 - லக்ஷ்மி வந்தாச்சு
20/11/1987 - தாம்பத்தியம் - 273 வது படம் - சராசரி வருடத்திற்கு 8.02 படங்கள் - அதாவது 45 நாட்களுக்கு ஒரு முறை நடிகர் திலகம் அவர்களின் புது பட ரிலீஸ் !
Russellbpw
8th November 2014, 12:32 AM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/Capture_zpsd381734d.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/Capture_zpsd381734d.jpg.html)
Gopal.s
8th November 2014, 04:08 AM
கலைவேந்தன் ,
நீங்கள் நாகரிக மேம்பூச்சு வார்த்தைகளால் விஷ தன்மை காட்டி, சிவாஜியை பற்றி தவறான கருத்துகளை விதைக்க முயலுகிறீர்கள்.
முதலில் புரிந்து கொள்ளுங்கள்.
1)சிவாஜி ஆரம்பத்திலிருந்தே ,தன்னுடைய செல்வாக்கினால் கட்சியை வளர்த்தவரே தவிர,கட்சியினால் வளர்ந்தவர் அல்ல.சில சில்லறை நடிகர்கள்,கட்சியினால் தங்களை வளர்த்து கொண்டது ஊரறிந்த விஷயம்.
2)அவர் தனக்காக எதுவும் கேட்டதில்லை.பதவி சுகம் நாடியதில்லை.தன்னை நம்பியவர்களுக்காகவே போராடினார்,.அதுவும் வெளிப்படையாக.தனக்கு அமைச்சர் பதவி கேட்டு ,கட்சியை உடைத்தவரும் இல்லை.புதியதாய் வந்த ஒரு நடிகனின் ஓரிரு படங்கள் வெற்றி கண்டதும்,raw அமைப்பு புண்ணியத்தில் புது கட்சி கண்டவரும் அல்ல.இந்திரா காந்தி ,காமராஜ் இருந்த போதே சிவாஜிக்காக தூது விட்டு வெற்றி காண முடியாத போது ,இன்னொரு கட்சியை இலகுவாக உடைத்தார்.(வாழ்க பாரத் )
3)தி.மு.கவில் அவர் திருப்பதி போன போது அவ்வளவு கொந்தளிப்பு கண்டது,திட்டமிட்ட சதி. தனி பிறவிகள் முருகனாகி,கொல்லூர் சென்றதில் திராவிட கொள்கைகள் என்னவானது?
4)சிவாஜி புது கட்சி கண்டு தன்னுடைய கைகாசு இழந்தது, மரண தருவாயில் இருந்த ,தான் நண்பனாக கருதியவரின் வேண்டுகோளுக்கு இணங்கியே.
5)அவர் வெளிப் படையானவர். சுயநலத்துக்காக,சுயலாபத்துக்காக,தன்னை முன்னிறுத்தி அரசியல் செய்ததில்லை.
6)ஆரோக்கியமற்ற தமிழ் சூழ்நிலையில் ,அவர் அரசியலில் தொடர்ந்தது ஒரு விபத்து மட்டுமே. அவர் சினிமாவை மட்டுமே நேசித்தார்,சுவாசித்தார்.
7)ராம.அரங்கண்ணல் உடன் ஆன முழு உரையாடல் (அச்சில் வந்தவை) வேண்டுமானால், தங்களுக்கு உவப்பாக இருந்தால் பிரசுரிக்க தயார்.
சில கேள்விகள்.(உங்கள் தலைவரை பற்றி)
1)திரைப்படங்களில் அவர் புகை,மதுவை தவிர்த்ததற்கு பாராட்டுக்கள். ஆனால் பதவி கண்ட பிறகு,அதிலிருந்த தமிழகத்தை மீட்க அவர் பங்களிப்பு என்ன? ஒரு அன்புமணி சாதித்ததை,அத்தனை செல்வாக்குடன் சாதித்திருக்க முடியாதா?நடித்தது,பாடியது என்ன எல்லாம் ,நீ சொன்ன வார்த்தைகள் காற்றோடு போகும் ரகமா?
2)சாதிக்கு அப்பாற்பட்டவர்,அடிமை விலங்கறுக்க குரல் கொடுத்தவர்,தனது விசுவாசிகளை பச்சை குத்தி கொள்ள நிர்பந்தித்தது எந்த வகையில் சேரும்?
3)ஒரு கம்யூனிஸ்ட் தலைவர் அடி பட்டு கிடந்த போது ,அவர் நூறு குடிசைகளாவது இந்நேரம் எரிந்திருக்க வேண்டாமா என்று கேட்டதாக ஒரு செய்தி உலவியது.(சமீப குறிப்பில் ராஜநாயகம் கூட குறித்துள்ளார்.இத்தனைக்கும் சிறு வயது ரசிகர்)இது ஏழைகளின் மீது கொண்ட நேசமா ?
கடைசியாக ஒன்று...
நான் இங்கு அரசியல் பேச விரும்புவதில்லை.அத்துடன் இங்கு தொடரவும் போவதில்லை என்றே முடிவு செய்துள்ளேன்.தங்கள் பதிவுகள் சிவாஜியை குறி வைத்து விஷம் பரப்பினால் ,நான் களத்தில் குதிக்க எந்நாளும் தயங்க மாட்டேன்.எனக்கு தெரிந்தது இவ்வளவே என்று தாங்கள் கருதினால், நான் கற்றது,கேட்டது,உணர்ந்தது என்று கோடி விஷயங்கள் உண்டு.தயவு செய்து,சிவாஜியை பற்றி நேரடியாகவோ,மறைமுகமாகவோ,ஏசுவதை ,பேசுவதை குறையுங்கள்.
Russellisf
8th November 2014, 06:55 AM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/A6_zps6a5423ce.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/A6_zps6a5423ce.jpg.html)
முதலில் சாரி கோபால் சார் ஏன் என்றால் நீங்கள் கலைவேந்தன் அவர்களுக்கு கூறிய பதிலில் நான் நுழைவது கடவுளை பற்றி ஒரு கடவுள் மறுப்பாளர் வைக்கும் அபாண்டங்கள் சொல்லும்பொழுது எந்த வொரு பக்தனுக்கும் கோபம் வருவது நியாயம் தானே
திமுக விற்கு நீங்கள் இந்த கருத்தை எல்லாம் சொல்லினால் நீங்கள் தான் கொ ப செ .
தலைவர் சொல்லியதால் தான் என்னை போல் அவருடைய ரசிக கண்மணிகள் யாரும் எந்த வித தீய பழக்கத்திற்கு ஆளாக்ம்மால் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம் .
கட்சி ஆரம்பித்தவுடன் பச்சை குத்த சொன்னவர் என்று சொல்லுபவரே அதற்கு முன்னாலே எத்தனை லட்சம் பாட்டாளி மக்கள் பெயர் அவர் பெயரை பச்சை குத்தி கொண்ட கணக்கு தெரியுமா அவர்கள் எல்லாம் கழக கொடி தனை பச்சை குத்தி கொள்ளவில்லை அவருடைய தமிழ் வார்த்தை கொண்ட பெயரை விட ஆங்கிலத்தில் உள்ள mgr என்ற பெயரை தான் பச்சை குத்தி கொண்டது உங்களுக்கு தெரியுமா ?
உங்களுக்கு ஒரு விண்ணப்பம் தயவு செய்து அன்புமணி ராமதாஸ் என்ற சாக்கடையோடு எங்கள் புண்ணிய தலைவரை ஒப்பிடாதிர்கள் .
1)சிவாஜி ஆரம்பத்திலிருந்தே ,தன்னுடைய செல்வாக்கினால் கட்சியை வளர்த்தவரே தவிர,கட்சியினால் வளர்ந்தவர் அல்ல.சில சில்லறை நடிகர்கள்,கட்சியினால் தங்களை வளர்த்து கொண்டது ஊரறிந்த விஷயம்.( உங்களை போல் சிலர் அறிந்த விசயம் )
2)அவர் தனக்காக எதுவும் கேட்டதில்லை.பதவி சுகம் நாடியதில்லை.தன்னை நம்பியவர்களுக்காகவே போராடினார்,.அதுவும் வெளிப்படையாக.தனக்கு அமைச்சர் பதவி கேட்டு ,கட்சியை உடைத்தவரும் இல்லை.புதியதாய் வந்த ஒரு நடிகனின் ஓரிரு படங்கள் வெற்றி கண்டதும்,raw அமைப்பு புண்ணியத்தில் புது கட்சி கண்டவரும் அல்ல.இந்திரா காந்தி ,காமராஜ் இருந்த போதே சிவாஜிக்காக தூது விட்டு வெற்றி காண முடியாத போது ,இன்னொரு கட்சியை இலகுவாக உடைத்தார்.(வாழ்க பாரத் ) ( தலைவரின் ஒப்புதலோடு தான் அண்ணாவின் முதல் அமைச்சரவை அமைந்தது உலகம் அறிந்த விசயம் )
3)தி.மு.கவில் அவர் திருப்பதி போன போது அவ்வளவு கொந்தளிப்பு கண்டது,திட்டமிட்ட சதி. தனி பிறவிகள் முருகனாகி,கொல்லூர் சென்றதில் திராவிட கொள்கைகள் என்னவானது? ( தெய்வம் இன்னொரு தெய்வத்தை பார்க்க செல்வதில் தவறு ஒன்றும் இல்லை )
தன் இறுதி காலம் வரை தமிழக மக்களுக்காக வாழ்ந்த ஒரே தலைவர் கோடி கணக்கான மக்கள் நேசித்த நேசிக்க பட்டு கொண்டு இருக்கின்ற ஒரே தலைவர் எங்கள் புரட்சிதலைவர் மட்டுமே உங்களைவிட மோசமாக விமர்சித்தவர்கள் எல்லோரும் இன்று எங்கள் தெய்வத்தின் புகழை பாடி கொண்டு இருக்கிறார்கள் நீங்கள் எம் மாத்திரம் ?
Russellisf
8th November 2014, 07:39 AM
கோபால் அவர்களே இன்றைய தினத்தந்தி பதிவு உங்களுக்காக
Today daily thanthi thalaiyangam
யார் பக்கம் தொண்டர்கள் இருப்பார்கள்?
இந்தியாவில், தேசிய அளவிலும், மாநில அளவிலும் ஏராளமான அரசியல் கட்சிகள் உண்டு. இந்த கட்சிகள் எல்லாமே ஏதாவது சந்தர்ப்பங்களில் பிளவுகளை சந்திப்பது வழக்கம். இவ்வாறு பிளவுபடும்போது, பிரிந்துபோன கட்சிகள் பலநேரங்களில் கரைந்துபோய் காணாமல் போய்விடுவதும் உண்டு. ஒருசில கட்சிகளே நிலைத்து நிற்கும். கம்யூனிஸ்டு கட்சிகளில் ஏற்பட்ட பிளவுகளில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியும், இந்திய கம்யூனிஸ்டு கட்சியுமே நிலைத்து நின்றுள்ளது. 1949–ல் திராவிடர் கழகத்தில் இருந்து, தி.மு.க. என்று தனியாக அண்ணா கட்சி தொடங்கினார். தி.மு.க.வில் இருந்தும் சிலர் தனியாக பிரிந்துபோய் தனிராகம் பாடி புதுகட்சிகள் தொடங்கினாலும், அவையெல்லாம் காற்றிலே கலந்த கீதங்களாகிவிட்டன. ஆனால், 1972–ல் அ.தி.மு.க. என்ற கட்சியை எம்.ஜி.ஆர். தொடங்கி 1977–ல் ஆட்சியை பிடித்து, அவர் உயிரோடு இருக்கும்வரை யாரும் அ.தி.மு.க.வை வெற்றிபெற முடியாது என்ற சாதனையைப்படைத்து மறைந்தார்.
நாடு சுதந்திரம் அடைந்து 3 தேர்தல்களில் வெற்றிபெற்று ஆட்சி அமைத்த காங்கிரஸ் கட்சியை, 1967–ல் தி.மு.க. தோற்கடித்து ஆட்சி அமைத்தது. அதன்பிறகு நடந்த அனைத்து தேர்தல்களிலும் தி.மு.க., அல்லது அ.தி.மு.க.தான் ஆட்சி அமைக்கமுடியும் என்ற அசைக்கமுடியாத நிலையை இன்றளவும் இரு திராவிட கட்சிகளும் உருவாக்கிவிட்டன. வேறு எந்த கட்சியும் வெற்றியின் பக்கத்தில்கூட போகமுடியவில்லை. அ.தி.மு.க.வில் இருந்தும் பல கட்சிகள் பிரிந்துசென்றாலும், தலையெடுக்க முடியாமல் மங்கிபோய்விட்டன. பின்னாளில் தி.மு.க.வில் இருந்து விலகி ம.தி.மு.க.வை வைகோ தொடங்கி அந்த கட்சியை நடத்திவருகிறார்.
காங்கிரஸ் கட்சியும் பிளவுகளைச் சந்தித்துள்ளது. 1949–ல் முதலில் ராஜாஜி விலகி, சுதந்திரா கட்சியை தொடங்கினார். 1969–ல் காங்கிரஸ் மற்றொரு பிளவை சந்தித்தது. காமராஜர் தலைமையில் ஸ்தாபன காங்கிரஸ் என்றும், இந்திரா காந்தி தலைமையில் இந்திரா காங்கிரஸ் என்றும் தனித்தனியாக இயங்கியது. அகில இந்திய அளவில் இந்திரா காங்கிரஸ் வலுவோடு இருந்தாலும், தமிழ்நாட்டில் காமராஜர் உயிரோடு இருந்தவரையில் ஸ்தாபன காங்கிரசுக்குத்தான் பலம் இருந்தது. அவர் மறைவுக்குப்பிறகு ஸ்தாபன காங்கிரஸ், ஜனதா கட்சியோடு இணைந்தது. இந்திரா காங்கிரசே காங்கிரஸ் கட்சியாக வலம் வந்தது. 1979–ல் நெடுமாறனும், 1989–ல் நடிகர் சிவாஜி கணேசனும் காங்கிரசில் இருந்து விலகி தனிக்கட்சிகள் தொடங்கினாலும் நீடிக்க முடியவில்லை. அகில இந்திய அளவில் திவாரி தனியாக கட்சி தொடங்கிப்பார்த்தார், முடியவில்லை. ஆனால், மராட்டியத்தில் தேசியவாத காங்கிரஸ் கட்சியை தொடங்கிய சரத்பவாரும், மேற்குவங்காளத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை தொடங்கிய மம்தாவும் காங்கிரஸ் கட்சிக்கு பெரிய சவாலாகிவிட்டனர். இதுபோல, தமிழ்நாட்டில் 1996–ல் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியை மூப்பனார் தொடங்கி நடத்தியபோது, அவரே காங்கிரஸ் என்ற நிலையை உருவாக்கினார். காங்கிரஸ் கட்சியில் உள்ள பெரும்பாலான தொண்டர்கள் அவர் பக்கமே அணிவகுத்து நின்றனர். அவர் மறைவுக்குப்பிறகு 2001–ல் காங்கிரசோடு அந்த கட்சியை ஜி.கே.வாசன் இணைத்துவிட்டு, இப்போது மீண்டும் விலகி தனிக்கட்சி தொடங்கியிருக்கிறார்.
இப்போதுள்ள நிலையில், ஏற்கனவே ஒருகாலத்தில் தமிழக அரசியலில் மலையாக இருந்த காங்கிரஸ் கரைந்து 4 சதவீதத்துக்கும் சற்றே அதிகமான ஓட்டுகளைப்பெற்றுள்ள நிலையில், யார் எவ்வளவு ஆதரவை தங்கள் வலையில் பெறப்போகிறார்கள்? என்பது தெரியவில்லை. பொதுவாக அனைத்து கட்சிகளுமே பிளவுபடும்போது, கட்சிகளின் மூலக்கொள்கையைவிட்டு பெரும்பாலும் விலகிப்போய்விடுவதில்லை. எந்த தலைமை அந்த கட்சியின் கொள்கைகளை உறுதியாக நிறைவேற்றும் என்று தொண்டர்கள் நம்புகிறார்களோ, அதன் அடிப்படையில்தான் பின்பற்றுகிறார்கள். ஆக, தனிப்பட்ட தலைவர்கள், தலைமையின்கீழ்தான் தொண்டர்களின் ஆதரவும் நிர்ணயிக்கப்படுகிறது. இப்போதும் ஜி.கே.வாசன், காங்கிரசின் கொள்கையில் இருந்து வேறுபட்டு தனிக்கட்சியை தொடங்கியதாக அறிவிக்கவில்லை. கட்சி செயல்படவில்லை என்பதால்தான் புதிய கட்சியை தொடங்குவதாக அறிவித்து இருக்கிறார். இதை எந்த அளவுக்கு தொண்டர்கள் ஏற்றுக்கொண்டு அவர் பக்கம் செல்வார்கள், அல்லது ஏற்றுக்கொள்ளாமல் காங்கிரசிலேயே தங்குவார்கள் என்பதற்கு காலம்தான் பதில் சொல்லவேண்டும்.
Courtesy today daily thanthi
eehaiupehazij
8th November 2014, 08:11 AM
Sivaji Ganesan’s acting edge over Oscarites 7 :
நடிகர்திலகத்தின் பெருமை மேன்மையுற்று அவர்தம் சிலை நிறுவல் பாரதரத்னா விருது மற்றும் உலகின் உயரிய ஆஸ்கார் வாழ்நாள் சாதனையாளர் விருது ...கனவு கனிந்து நனவாகிட ராமரால் முதுகில் கோடுகண்ட அணிலாக இப்பாலம் கட்டுவதில் நம்மால் முடிந்த அளவு கல்லெடுத்து தந்து உதவுவோமே!
Ben Kingsley, the alter ego of the Father of our Nation brought laurels to our country by his down to the earth portrayal of Gandhiji. However, he was almost a one film wonder and could survive his film career for some more unnoticed movies only!
(But, NT had proved his versatility in giving life to various historical patriotic characters like VOC, Bharathiar, …. Warrior Shivaji, Veerapandiya Kattabomman, Raja Raja Chozhan,…including divine characters like Lord Shiva as his alter ego! Even Socrates, Othello, Julius Caesar….
When Ben Kingsley can get his ‘Nobel’ standard Oscar for his debut film why not NT getting his due of a ‘Life-time achievement Oscar’ for having proved his prowess and mettle as the only actor in this world who has shown the highest variety of characterisations, be it a larger than life depiction or a down to the earth portrayal!!)
Sir Ben Kingsley, (born Krishna Pandit Bhanji; 31 December 1943) is an English actor. In a career spanning over 40 years, he has won an Oscar, Grammy, BAFTA, two Golden Globes and Screen Actors Guild awards.
He is known for his starring role as Mohandas Gandhi, the Father of our Nation in the 1982 film Gandhi, for which he won the Academy Award for Best Actor.
Gandhi is a 1982 epic biographical film which dramatises the life of Mohandas Karamchand Gandhi, the leader of India's non-violent, non-cooperative independence movement against the United Kingdom's rule of the country during the 20th century. Gandhi was written by John Briley and produced and directed by Richard Attenborough. It stars Ben Kingsley in the titular role.
The film covers Gandhi's life from a defining moment in 1893, as he is thrown off a South African train for being in a whites-only compartment, and concludes with his assassination and funeral in 1948. Although a practising Hindu, Gandhi's embracing of other faiths, particularly Christianity and Islam, is also depicted.
Gandhi was released in India on 30 November 1982, in the United Kingdom on 3 December, and in the United States on 6 December. It was nominated for Academy Awards in eleven categories, winning eight, including Best Picture. Richard Attenborough won for Best Director, and Ben Kingsley for Best Actor.
He is also known for his noteworthy performances in the films Schindler's List (1993), Sexy Beast (2000), Lucky Number Slevin (2006), Shutter Island (2010), Prince of Persia: The Sands of Time (2010), Hugo (2011), and Iron Man 3 (2013).
In 2013 he received the British Academy of Film and Television Arts Los Angeles 'Albert R. Broccoli Britannia Award for Worldwide Contribution to Filmed Entertainment'.
Kingsley was named a Commander of the Order of the British Empire (CBE) in 2000, and was made a Knight Bachelor by QueenElizabeth II in 2002.
In 2010, Kingsley was awarded a star on the Hollywood Walk of Fame. (This type of recognition needs to be emulated in our country too, starting with our Nadigar Thilagam Sivaji Ganesan, the thesaurus of acting in Indian Cinema)
The one time depiction by Ben Kingsly hitting the bull’s eye to get Oscar! This scene certainly makes a deep impact in our minds, when the Judge and others in the court stand by default upon the entry of Gandhi, making our eyes wet in uncontrollable tears!
https://www.youtube.com/watch?v=rfm2QrCWnDk
However, Kingsley could achieve with a background of rich production base and proper tutelage from the director. But NT the ‘suyambulingam’ of acting..see how he performs a similar patriotic character VOC in a simple production and VPKB in a mega production by the same director!! Also, feel the versatility of NT in other such roles too…proving his success to remain the undisputed King of acting for the whole world!!
The enviable and admirable wide spectrum of NT's versatility compared to any of the Oscar winners hitherto and hereafter!!
https://www.youtube.com/watch?v=hJnX2BQC9To
https://www.youtube.com/watch?v=jKI0IJY5jp8
https://www.youtube.com/watch?v=ibynDVPlkqM
https://www.youtube.com/watch?v=KoNhOSCapqE
https://www.youtube.com/watch?v=pslsqW3vslk
https://www.youtube.com/watch?v=-zyxs-tVB_Q
https://www.youtube.com/watch?v=vAE6xvRMn34
https://www.youtube.com/watch?v=lSAcVpljPE0
https://www.youtube.com/watch?v=sEipFRf3-8s
உலக அரங்கில் எத்தனையோ வைரங்கள் மின்னலாம். நடிகர்திலகமோ வைரச்சுரங்கம்! அவர் நடிப்போ பல பட்டைகள் தீட்டப்பட்ட ராஜவைரம்! சிவாஜிகணேசனை வென்ற நடிகர் எவருமில்லை. அவருடைய நடிப்பின் காந்த ஈர்ப்பு எவரிடமுமில்லை. உலகின் உச்ச விருதுகளே...ஒப்பாரும் மிக்காருமில்லாத எம் நடிக மன்னரின் புகழ் கிரீடத்தில் அமர்ந்து உங்களை பெருமைப் படுத்திக்கொள்ளுங்கள்!
The end of my humble try to project our NT's name and fame across the globe to have a possible click of mind in international readers/netizens...towards the Oscar door.
(References/Courtesy : You Tube and Wikipedia)
Gopal.s
8th November 2014, 08:30 AM
யுகேஷ் பாபு,
தங்கள் பண்பான பதிலுரைக்கு நன்றி. எனக்கு பதிலுரைக்கும் சந்தர்ப்பமே கொடுக்காமல், சால்ஜாப்பும், துதிகளும் நிறைந்த பதிவே.
நான் யாரையும் மோசமாக விமர்சித்ததில்லை. உண்மைகளை மட்டுமே எழுதுவேன்.pti அமைப்பின் உயர் அதிகாரி, பல ஆங்கில தினசரிகளின் மேலாளர்கள்,தமிழ் நாட்டின் மிக பிரபலமான பத்திரிகை எல்லாவற்றிலுமே என் மிக நெருங்கிய உறவுகள் நிறைந்திருந்தன. ஆர்வம் கொண்டவன் என்ற வகையில் ,பல விஷயங்களை துருவி வாங்கியவன்.
வேண்டாமே. ரொம்ப உட் புக வேண்டாம். சிலைகளை உடைக்க சொன்ன பெரியார் எங்கே? தன்னையே சுய விமர்சனத்திற்கு ஆட்படுத்தியவர்கள் பெரியார்,அண்ணா போன்றவர்கள். கடைசியில் வழிதோன்றல்கள் , துதி பாடிகளாய் முடிந்தது துரதிருஷ்டமே.
என்னத்தை சொல்ல?
Gopal.s
8th November 2014, 08:39 AM
எஸ்வி,
யுகேஷ் அவர்களின் பதிவு இரண்டிலும் வெளியான குழப்பத்தில் நேர்ந்த தவறு. தவறு என்பது தவறி செய்வது. தப்பு என்பது தெரிந்து செய்வது. தவறு செய்தவன் திருந்த பார்க்கணும்.(திருத்தி விட்டேன்.சரியான திரியில் போட்டு )
Richardsof
8th November 2014, 08:44 AM
பார்த்தீர்களா கோபால்
நீங்கள் என்னதான் சொன்னாலும் உங்களை இந்த நேரத்தில் காப்பாற்றியவர் நம் மக்கள் திலகத்தின் பாடல் வரிகள்
என்பதை எண்ணி பெருமிதம் கொள்கிறேன் .
Jeev
8th November 2014, 09:26 AM
A song from film Thaai.
http://www.youtube.com/watch?v=f5L1JrDz4lo
joe
8th November 2014, 09:27 AM
நேற்று என் மகன் (9 வயது) பள்ளியிலிருந்து(சிங்கையில்) வந்த பின்னர் நடந்த உரையாடல்..
"அப்பா .. எங்க தமிழ் வகுப்புல இன்னிக்கு மூவி போட்டாங்க ..என்ன மூவி தெரியுமா ?"
"என்ன மூவிப்பா "
"கர்ணன்"
"வாவ் ..முழுப்படமுமா "
"கொஞ்சம் கொஞ்சமா போடுவாங்க .. இன்னிக்கு கிளைமாக்ஸ் ..இன்னிக்கும் நான் அழுதுட்டேன் .தியேட்டர்ல அழுத மாதிரி " (சிரிக்கிறான்)
"ஹா ஹா .. ஏன் கர்ணன் படம் போட்டாங்க ?"
"அதுல தான் அந்த தமிழ் வசனம் மெஜஸ்டிக்கா .. சிவாஜி கணேசன் பேசுறது .. நாங்க கத்துக்கணுமில்ல"
"அதானே "
"அப்பா ..ஏன் கடைசியில (உள்ளத்தில் நல்ல உள்ளம் பாடல் டியூனை சொல்லி) பாட்டுக்கப்புறம் கர்ணன் Blood -ஐ எடுத்து அந்த வயசானவன் கிட்ட கொடுக்குறார்"
அதற்கு நான் நீண்ட விளக்கம் கொடுக்க .. மகாபாரதம் பற்றி சிறிது நேரம் கேள்வி - பதில் விளக்கம் நீடிக்கிறது.
Jeev
8th November 2014, 09:28 AM
One more song from film Thaai
http://www.youtube.com/watch?v=c3H56RHybQM
siqutacelufuw
8th November 2014, 11:24 AM
பார்த்தீர்களா கோபால்
நீங்கள் என்னதான் சொன்னாலும் உங்களை இந்த நேரத்தில் காப்பாற்றியவர் நம் மக்கள் திலகத்தின் பாடல் வரிகள்
என்பதை எண்ணி பெருமிதம் கொள்கிறேன் .
நமது வாழ்க்கையில் நடக்கும் எந்தவொரு நிகழ்வுகளுக்கும் மக்கள் திலகத்தின் காவியப்பாடல்கள் தான் உதாரணமாக காட்ட முடியும் என்பதை, சரியான சந்தர் ப்பத்தில் உணர்வுப்பூர்வமாக உரைத்திட்ட சகோதரரர் திரு. வினோத் அவர்களுக்கு நன்றி ! பாராட்டுக்கள் !
siqutacelufuw
8th November 2014, 11:29 AM
யுகேஷ் பாபு,
தங்கள் பண்பான பதிலுரைக்கு நன்றி. எனக்கு பதிலுரைக்கும் சந்தர்ப்பமே கொடுக்காமல், சால்ஜாப்பும், துதிகளும் நிறைந்த பதிவே.
நான் யாரையும் மோசமாக விமர்சித்ததில்லை. உண்மைகளை மட்டுமே எழுதுவேன்.pti அமைப்பின் உயர் அதிகாரி, பல ஆங்கில தினசரிகளின் மேலாளர்கள்,தமிழ் நாட்டின் மிக பிரபலமான பத்திரிகை எல்லாவற்றிலுமே என் மிக நெருங்கிய உறவுகள் நிறைந்திருந்தன. ஆர்வம் கொண்டவன் என்ற வகையில் ,பல விஷயங்களை துருவி வாங்கியவன்.
வேண்டாமே. ரொம்ப உட் புக வேண்டாம். சிலைகளை உடைக்க சொன்ன பெரியார் எங்கே? தன்னையே சுய விமர்சனத்திற்கு ஆட்படுத்தியவர்கள் பெரியார்,அண்ணா போன்றவர்கள். கடைசியில் வழிதோன்றல்கள் , துதி பாடிகளாய் முடிந்தது துரதிருஷ்டமே.
என்னத்தை சொல்ல?
நீங்கள் ஆர்வம் கொண்டு விஷயங்களை துருவி வாங்கியிருந்தாலும் அதில் உண்மைகள் அல்லவா இருக்க வேண்டும். உங்களுக்கு பொய்யான தகவல்கள் அளிக்கும் அந்த சிலர் மக்கள் திலகத்திடம் எந்தவித ஆதாயமும் கிடைக்காதாதல் தங்களிடம் அவரைபற்றிய எதிர் மறையான கருத்துக்கள் கூறப்பட்டுள்ளன என்றே கருத முடியும்.
sss
8th November 2014, 11:45 AM
sss,
இவ்வாறு மற்றொருவர் எழுதியதை பதியும் போது அவர் பெயரை குறிப்பிடுங்கள் ..அல்லது சுட்டியை பகிருங்கள் . அது தான் முறை.
அன்புள்ள ஜோ அவர்களே
பதிவின் ஆரம்பத்தில் சாந்தாராம் அவர்களுக்கும் , மற்றொன்றில் வீயார் அவர்களுக்கும் நன்றி சொல்லி உள்ளேன்.
மேலும் பல செய்திகளில் இருந்து நடிகர் திலகம் சம்பந்தப்பட்ட தகவல்களை மட்டும் தனியே பிரித்து நான் இங்கு தந்துள்ளேன்.
எனவே சுட்டியை அப்படியே கொடுக்க வில்லை. தங்கள் கருத்துக்கு நன்றி.
sss
8th November 2014, 01:55 PM
வழிதோன்றல்கள் , துதி பாடிகள் தங்களுக்கு ஏதாவது ஒரு வகையில் ஆதாயம் கிடைப்பதாக இருந்தால் மட்டுமே நேர் மறையான கருத்துக்களை சொல்லும் உலகினில் நான் உள்ளோம்...
அப்படி என்றால் நேர் மறையான கருத்துகள் சொல்பவர்கள் ஏதாவது ஆதாயம் கிடைக்கும் என்று எண்ணியே போலியாக நடிக்கிறார்கள். தற்போது சமூகத்தில் நிகழும் நிறைய நிகழ்வுகளில் அதை நாம் கண் கூடாக பார்க்கலாம்.
இப்படி எந்த சுயநல ஆதாயமும் எதிர் பாராமல் இருக்கும் ரசிகர் கூட்டம் ஒன்று உண்டு என்றால் அது நடிகர் திலகத்துக்கு மட்டும் தான்..ஆண்டுகள் பல கடந்தாலும் இன்னமும் நம்மை நடிப்பால் வசம் செய்த அந்த ஒப்பில்லா நடிகனுக்கு விசுவாசிகள் உலகெங்கும் வியாபித்திருப்பது ஆச்சரியம் இல்லையே...
Murali Srinivas
8th November 2014, 04:16 PM
கோபால்,
நான்தான் உங்களிடம் சொன்னேனே, எந்த வாக்குவாதமும் வேண்டாமென்று? நண்பர் RKS அவர்களிடமும் அதைதான் எப்போதும் சொல்கிறேன். காரணம் அதனால் எந்தப் பலனுமில்லை.
நண்பர் கலைவேந்தன் நமது ஹப்பில் உறுப்பினராக நுழைந்ததே ஒரு நோக்கத்தோடுதான். அவருக்கு கொடுக்கப்பட்டிருக்கும் assignment என்பது அனைத்து பதிவுகளிலும் சிவாஜியை அல்லது அவர் ரசிகர்களை தாக்குவது அல்லது கிண்டல் செய்வது. மேலும் சிவாஜியை யாரேனும் [கலை, அரசியல் எந்த தளத்தை சேர்ந்தவராகவும் இருக்கலாம்] பாராட்டினால் பாராட்டியவர் முன்னொரு காலத்தில் அல்லது பிற்காலத்தில் எம்ஜிஆர் ரசிகராக இருந்தார் என்று நிறுவுவது. இதனால் என்ன லாபம் என்று கேட்க கூடாது.
உதாரணமாக உ.சு.வா புத்தர் கோவில் சண்டைக் காட்சி பற்றிய பதிவில் சம்மந்தமில்லாமல் திருச்சி சிவா பற்றி குறிப்பு வரும். திருச்சியில் எம்ஜிஆர் மன்ற தலைவராக இருந்தார், எம்ஜிஆர் மாதிரி இறுக்கமாக ஜிப்பா அணிவார், வலது கையில் வாட்ச் கட்டுவார் என்றெல்லாம் இருக்கும்.. நல்ல வேளை இவரும் எம்ஜிஆர் மாதிரி வலது கையில்தான் சாப்பிடுவார் என்று சொல்லாமல் விட்டாரே என்று சந்தோஷப்பட்டு கொள்ள வேண்டியதுதான். காரணம் என்ன தெரியுமா நீயா நானா நிகழ்ச்சியில் சிவா, நடிகர் திலகத்தைப் பாராட்டி பேசி விட்டார். அதை சிலாகித்து ஜோ போன்றவர்கள் நடிகர் திலகம் திரியில் எழுதியும் விட்டார்கள். எப்படி விட முடியும்?
அது போன்றே சம்மந்தமில்லாமல் பல்லாண்டு வாழ்க பற்றிய பதிவில் சிவாஜி [என்று பெயர் சொல்லாமல்] சாதி பெயரை சொல்லிக் கூப்பிடுவார் என்று எழுதுவார். அதே பதிவில் நீதிக்கு தலை வணங்கு படத்தில் வரும் காட்சி பற்றி குறிப்பிடுவார், தியாகம் படத்தை மறைமுகமாக தாக்குகிறாராம். எஸ்எஸ்ஆர் அவர்கள்தான் தேர்தலில் வெற்றி பெற்ற முதல் நடிகர் என்ற உண்மையை பதிவு செய்தால் பிடிக்காது. எம்ஜிஆர்தான் மேலவை உறுப்பினரான (எம்எல்சி) முதல் நடிகர் என்பார். சிவாஜி மீது காழ்புணர்ச்சி இல்லை என்பார். ஆனால் சிவாஜியை ஒரு x y z நடிகர்களோடு சேர்த்துதான் நல்ல நடிகர் என்பார். ராஜ ராஜ சோழன் சென்னை ராம் தியேட்டரில் வெளியாகி 28 நாட்கள்தான் ஓடியது என்பார். அது அண்டப் புளுகு ஆகாசப் புளுகு என்பதை நாம் ஆணித்தரமாக ஆதாரப்பூர்வமாக நிரூபித்தாலும் தவறான தகவலை தந்து விட்டேன் என்று ஒப்புக் கொள்ளும் அடிப்படை கண்ணியம் கூட இருக்காது. ஆனால் நமக்கு கண்ணியம் பற்றி கிளாஸ் எடுப்பார். இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். So, அவர்கள் agenda-வில் அவர்கள் தெளிவாக இருக்கிறார்கள்.
இதை தவிர அவர்களுக்கு external pressure வேறு. நினைவிருக்கும் என நம்புகிறேன். காதல் வாகனம் படத்திற்கு 5/10 மார்க் போட்டு விட்டு வினோத் பட்ட பாடு!
இது தவிர வேறொரு வித technique-ம் கடைப்பிடிக்கப்படும். குறிப்பிட்ட படம் இவர்கள் குறிப்பிடும் அத்தனை நாட்கள் ஓடவில்லை என்பது அவர்களுக்கே தெரியும். ஆனாலும் அதை தொடர்ந்து எழுதுவார்கள். அலிபாபா சென்னை சித்ரா, பிரபாத் சரஸ்வதி அரங்குகளில் [மதுரை வீரன் அதே அரங்குகளில் வெளியாகி விட்டதால்] 100 நாட்கள் ஓடவில்லை. ஆனாலும் 100 நாட்கள் என்றே எழுதுவார்கள் இதை நான் ஏற்கனவே சுட்டிக் காட்டியுள்ளேன். அது போன்றே மதுரையில் நம் நாடு 21 வாரம் என்றே எழுதுவார்கள். உண்மையில் ஓடிய நாட்கள் 133. அப்படியென்றால் 19 வாரம். இதை பற்றி வேறொரு நண்பரிடம் பேசிக் கொண்டிருந்தேன். அப்போது அவர் ஒன்றை சுட்டிக் காட்டினார். எப்போதும் 21 வாரம் என்றே குறிப்பிடுவார்கள். 147 நாட்கள் என்று எழுத மாட்டார்கள் என்றார். காரணம் நாட்களை சொன்னால் யாரவது கேள்வி கேட்டு விடுவார்கள். ஆகவேதான் வாரம் என்று குறிப்பிடுவார்கள் என்றார். ஓடியிருந்தால் சரி ஆனால் அத்தனை நாட்கள் ஓடவில்லையே என்று நான் கேட்க அத்தனை நாட்கள் ஓடவில்லை என்பது நம்மைப் போன்ற சிலருக்கு மட்டும்தானே தெரியும். என்றார் நண்பர். ஏன் இப்படி என்ற கேள்விக்கு நண்பர் காரணம் சொன்னார். சிவந்த மண் சென்னை குளோப் தியேட்டரில் அதிகபட்சமாக 145 நாட்கள் ஓடியது. அதைவிட இது அதிகம் என்ற பிம்பத்தை உருவாக்க வேண்டும் என்ற நுண்ணரசியல்தான் என்றார். அவர் மேலும் சொன்னார். இதற்கு மேலும் உங்களைப் போன்ற மதுரைக்காரர்கள் அழுத்திக் கேட்டால் அதே மதுரை மீனாட்சியில் ஒளி விளக்கு 147 நாட்கள் ஓடியது [21 வாரம்] அதனால் வந்த confusion என்று சொல்லி விடுவார்கள் என்றார்.
பணக்கார குடும்பம் 100-வது நாள் விளம்பரத்தில் கோவை சேலம் நகரங்களில் ஷிப்டிங் அரங்குகளில் ஓடியதையும் சேர்த்து கொடுத்திருப்பார்கள். அதை வைத்து 7 அரங்குகள் என்பார்கள். ஏன் தெரியுமா 1964-ல் நமது கை கொடுத்த தெய்வமும் நவராத்திரியும் 6 அரங்குகளில் 100 நாட்கள் ஓடின. அதை விட அதிகம் என்று நிறுவ இப்படி பதிவு வரும். விளம்பரத்தை பார்க்கும்போது இது ரிலீஸ் தியேட்டர் இது ஷிப்டிங் தியேட்டர் என்பது எத்தனை பேருக்கு தெரியும்? அதுவும் 50 வருடங்களுக்கு முந்தைய விளம்பரத்தை பார்க்கும்போது? இப்படி ஒவ்வொரு பதிவின் பின்னாலும் உள்ள நுண்ணரசியலை சொல்லிக் கொண்டே போனால் அதற்கே பல பக்கங்கள் ஒதுக்க வேண்டி வரும்.
இதை இப்போது இத்தனை விளக்கமாக சொல்லக் காரணம் இனிமேலாவது நீங்களும் சரி நண்பர் RKS அவர்களும் சரி இதைப் பற்றியெல்லாம் வாதப் பிரதிவாதங்கள் செய்யாமல் விட்டு விடுங்கள் என்று சொல்லத்தான். நீங்கள் இந்த திரியில் தொடரும்வரை நடிகர் திலகம் பற்றி மட்டுமே பதிவிடுமாறு கேட்டுக் கொள்கிறேன். தேவையற்ற விவாதங்களில் ஈடுபட வேண்டாம் என அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன்.
அன்புடன்
Murali Srinivas
8th November 2014, 04:20 PM
செல்வகுமார் சார்,
உங்கள் வருகைக்கும் பதிவிற்கும் நன்றி. இப்போது பதிவிட்டது போல் காலையிலும் நீங்களே பதிவிட்டிருக்கலாம். யுகேஷ் பாபுவின் பெயரில் வந்த பதிவு உங்களுடையது என்பது படிக்கும் போதே புரிகிறது. இளைய சகோதரர் யுகேஷ் எப்படி பதிவிடுவார் நீங்கள் எப்படி பதிவிடுவீர்கள் என்பது ரெகுலராக இரு திரிகளையும் படிப்பவர்களுக்கு தெரியும். சரி பரவாயில்லை.
நண்பர் கோபால் எழுப்பிய கேள்விகள் அவற்றுக்கு உங்கள் பதில்கள் இவற்றுக்குள் நான் நுழைய விரும்பவில்லை. ஒன்றை மட்டும் சொல்ல விரும்புகிறேன். 1970-ல் வெளிநாடுகளில் உலகம் சுற்றும் வாலிபன் படப்பிடிப்பு நடந்தது. அதன் பிறகு அதற்காக செலவழிக்கப்பட்ட அந்நிய செலாவணி குறித்து அமலாக்ப் பிரிவு [enforecement wing] ஒரு விசாரணை நடத்தியதும் அதை அடிப்படையாக வைத்து எப்படி எம்ஜிஆர் அவர்கள் திமுகவிலிருந்து வெளியேற வைக்கப்பட்டார் என்பது பற்றியும் raw அல்லது IB பிரிவில் தலைவராக இருந்தவர் [அவர் பெயர் நினைவில் இல்லை] 1988- 89 காலகட்டத்தில் விகடன் குழுமத்திலிருந்து வெளி வந்துக்கொண்டிருந்த ஜூனியர் போஸ்ட் இதழில் தன அனுபவங்களை தொடராக எழுதும் வேளையில் குறிப்பிட்டிருக்கிறார். நீங்களும் படித்திருக்க கூடும். ஆனால் ஒப்புக் கொள்ள உங்களுக்கு தயக்கம் இருக்கலாம். ஆகவே கோபால் சொன்ன விஷயங்கள் hearsay மட்டுமல்ல, பத்திரிக்கையில் வெளிவந்ததும் கூட.
நீங்கள் அதை பொய் செய்தி என்று சொன்னதனால் இதை குறிப்பிட நேர்ந்தது. மேலும் எம்ஜிஆர் அவர்களின் திரியில் கோபாலின் பதிவிற்கு நீங்கள் பதிலுரைக்கும்போது எச்சரிக்கிறேன் போன்ற வார்த்தைகளையெல்லாம் பயன்படுத்தியிருப்பது சரிதானா? வருங்கால சமுதாயத்திற்கு பாடம் சொல்லி தரும் ஆசிரியராக பணிபுரியும் உங்களைப் போன்றவர்கள் இது போன்ற மிரட்டல் தொனி வார்த்தைகளை பயன்படுத்துவது வருத்தத்துக்குரியது. உங்களுக்கு புரியும் என நினைக்கிறேன்.
அன்புடன்
adiram
8th November 2014, 05:01 PM
நம் நாடு திரைப்படத்தின் வெளியீட்டு நாளான 7-ம் தேதி, மக்கள் திலகம் திரியில் அப்படம் பற்றிய ஆவணங்களை (இன்னும் இரண்டு படங்களுக்கும் சேர்த்து) பதித்திருந்தனர். அனைத்தும் நன்றாக இருந்தன.
அதில் வேலூர் நண்பர் திரு ராமமூர்த்தி அவர்கள் வேலூர் & திருச்சி ரசிகர்மன்ற நோட்டீஸ்கள் இரண்டை பதிவிட்டிருந்தார். முன் ஜாக்கிரதையாக 'பார்வைக்கு மட்டும் விவாதத்துக்கு அல்ல' என்றும் தலைப்பிட்டிருந்தார்.
அவற்றில் வேலூர் ரசிக நண்பர்கள் வெளியிட்டிருந்த நோட்டீஸில் இரண்டு விஷயங்களை குறிப்பிட்டிருந்தனர். நம்நாடு படத்துக்கு முன்வந்த அடிமைப்பெண் சாதனைகளைக் குறிப்பிடும் வண்ணம் இரண்டு விஷயங்களை சொல்லியிருந்தனர். அவை
'சென்னையில் நான்கு தியேட்டர்களில் 100 நாட்கள் ஓடிய ஒரே வண்ணப்படம்'
'தூத்துக்குடியில் 100 நாட்கள் ஓடிய ஒரே படம்'
என்பவையே.
ஆனால் அவ்விரண்டு சாதனைகளையும் அதிக நாட்கள் அவர்களால் தக்கவைத்துக்கொள்ள முடியவில்லை.
அடிமைப்பெண்ணின் பின்னாடியே வந்த 'சிவந்த மண்' இவ்விரண்டு சாதனைகளையுமே முறியடித்தது.
(இந்தப்பதிவும் சும்மா தகவலுக்குத்தான், விவாதத்துக்கு அல்ல)
JamesFague
8th November 2014, 07:33 PM
இந்த பாட்டு ஒன்றே போதும் ஆயிரம் கேள்விகளுக்கு விடை கூற.
http://youtu.be/-oD7J1WRwVU
Gopal.s
8th November 2014, 07:34 PM
நீங்கள் ஆர்வம் கொண்டு விஷயங்களை துருவி வாங்கியிருந்தாலும் அதில் உண்மைகள் அல்லவா இருக்க வேண்டும். உங்களுக்கு பொய்யான தகவல்கள் அளிக்கும் அந்த சிலர் மக்கள் திலகத்திடம் எந்தவித ஆதாயமும் கிடைக்காதாதல் தங்களிடம் அவரைபற்றிய எதிர் மறையான கருத்துக்கள் கூறப்பட்டுள்ளன என்றே கருத முடியும்.
தயவு செய்து எல்லோரையும் ஒரே தராசில் எடை போட வேண்டாம். தமிழ் நாட்டில் அனைவரும் ஒருவர் புண்ணியத்தில் மட்டும் வாழவில்லை. நானோ ,என் உறவினர்களோ, போதும் ,போதும் சொல்லும் அளவு பொருள் ,நியாயமான வழிகளிலே, எங்கள் படிப்பு,அறிவு,திறமையினால் கிடைத்தே வந்தது.
இதையே வேறு விதமாகவும் சொல்லலாமே. ஆதாயம் கிடைத்தவர்கள் மட்டுமே, மிகையாக புகழ்ந்து பயன் பெற்றார்கள் என்று.
JamesFague
8th November 2014, 07:41 PM
நடிக்கும் போது கைதட்டல் வாங்கலாம்.நடையின் போது கைதட்டல் வாங்கலாம். ஒரு போஸ் கொடுத்து கைதட்டல் வாங்கும் ஒரே நடிகன் உலகத்திலே உன்று என்றால் அது கலை கடவுள் நடிகர் திலகம் மட்டும் தான். உதாரணம் புதிய பறவை படத்தில் வரும் சிட்டு குருவி முத்தம் என்ற பாட்டில் ஒரு புல் சூட் கோட் போட்டு கொண்டு
அமர்க்களமாக சிறு குன்றின் மேல் நிற்கும் அந்த
அற்புதமான போஸே தான்.
JamesFague
8th November 2014, 07:48 PM
எந்த கல்நெஞ்சத்தையும் தன்னுடைய நடிப்பால்
கரையவித்த ஒரே உலக நடிகன் நடிகர் திலகம்
மட்டும் தான். உதாரணம் படிக்காத மேதை படத்தில் வரும் அந்த உணர்ச்சிமிகு காட்சியான
கண்ணாம்பாvai விதவை கோலத்தில் பார்க்கும் அந்த கட்சி ஒன்றே போதும் நடிகர் திலகத்தை நாம் ஏன் கலை கடவுள் என்று கூறுகிறோம். இந்த காட்சியை பார்க்கும் அனைவரையும் அழ
வைக்கும் ஒரே உலக நடிகன் நடிகர்திலகம் மட்டும் தான்.
JamesFague
8th November 2014, 08:24 PM
என் உள்ளம் கவர்ந்த கண்ணன்
-------------------------------------------------
இந்த பெயரில் எனக்கு தெரிந்த படத்தில் இருந்து எனக்கு பிடித்த கன்னணனை பற்றி சில
வரிகள் கூற விருப்ப படுகின்றேன்.
தெய்வமகன் கண்ணன்
-------------------------------------
நடிப்பில் நம்மை ஆட்கொண்ட அற்புத கண்ணன்.
கௌரவம் கண்ணன்
---------------------------------
பாரிஸ்terin விஸ்வருபம் முன்பு அடக்கி வாசித்த கண்ணன்.
எனக்கு பிடித்த அழகிய என் தம்பி கண்ணன்
---------------------------------------------------------------------
முதல் காட்சியில் இருந்து தொடங்கி முடிவு வரை தன் அற்புத நடிப்பில், அழகிய வடிவத்தில்
நிஜமாகவே பிரம்ம்ஹா நண்பர் கோபால் கூறுவது போல் ஒரு திராவிட மன்மதன் ஆக
படைத்து சில நாட்கள் அல்லது வருடங்கள் எடுத்து நடிகர் திலகத்தை படைத்தது விட்டார்.
அதுவும் எந்த படத்தில் எல்லா காட்சிகளிலும்
தூள் கிளப்பி விட்டார் நம் நடிகர் திலகம்.
ஒரு நாற்காலியில் அமர்ந்து இருக்கும் ஸ்டைல் போஸே என்ன அந்த வாள் போஸ் enna ஆகா இவரல்லவோ பிறவி நடிகன் மற்றவரெல்லாம் ?
பேபி ரோஜாரமனியிடம் காட்டும் பாசமாகட்டும்
தம்பி விஸ்வதிடம் கட்டும் அதட்டல் கலந்த
நடிப்பாகட்டும் தம்பியிடம் தோற்பது போல் நடித்து பின்பு பாடம் புகட்டும் போதும் ஒரே அதகளம் தான்.
நாகேஷிடம் தெரிய வேண்டிய விஷயங்களை தெரிந்து கொண்டு பின் அந்த வீட்டில் அடி வைக்கும் நடிகர் திலகத்தின் போஸே காண கண் கோடி வேண்டும்.
இந்த ஒரு காட்சிக்காகve எனக்கு இந்த கண்ணனை பிடிக்கும்.
Russelldwp
8th November 2014, 08:38 PM
சில வாக்கு வாதங்களால் தேவையற்ற செய்திகளையும் தேவையற்ற பதிவுகளையும் படிக்க பிடிக்காத விவரங்களையும் படங்களையும் இந்த கண்கள் பார்க்க விரும்பவில்லை. சிவாஜி என்ற அற்புத கலைஞனுக்காக தொடங்கப்பட்ட திரியில் தரம் குறையும் அளவுக்கு
பதிவுகள் வராமல் இருக்க வீண் விவாதம் தவிர்க்கப்பட வேண்டும்.
இல்லையேல் சிவாஜி என்ற உலகப்புகழ் தமிழனின் செய்திகள் மட்டும் வரும் வரை திரியை பார்க்க விரும்பாத என்னைப்போன்ற பல ரசிகர்கள்
Russellbpw
8th November 2014, 08:45 PM
தயவு செய்து எல்லோரையும் ஒரே தராசில் எடை போட வேண்டாம். தமிழ் நாட்டில் அனைவரும் ஒருவர் புண்ணியத்தில் மட்டும் வாழவில்லை.
இதையே வேறு விதமாகவும் சொல்லலாமே. ஆதாயம் கிடைத்தவர்கள் மட்டுமே, மிகையாக புகழ்ந்து பயன் பெற்றார்கள் என்று.
I WAS ABOUT TO SAY THAT !!!! YOU STOLE MY WORDS GOPAL SIR !!
இது சர்வ சாதாரணமாக காலம் காலமாக நடப்பது தான் !
என்ன நடிகர் திலகம் அவர்கள் இதை எல்லாம் ஒரு பொருட்டாக நினைத்து REACT செய்யாமல் தொடர்ந்து தொழிலில் கவனம் செலுத்தியதால்...அடுத்தவர் எத்தனை நூற்றாண்டு ஆனாலும், இவரை பார்த்து இவரது திரை உலக சாதனையை பார்த்து காலம் காலமாக பொருமுகின்ற அளவிற்கு உச்சத்தில் நின்றார், நிற்கிறார், நிர்ப்பார் .
நமக்கு ஆதாரத்துடன் கிடைக்கும் உண்மை நிகழ்வுகள் பதிவிட்டால் எப்போதுமே ஒரு சிலர் பொய் என்று கூறுவார்கள்...ஆனால் அதே ஒரு சிலர்....ஆதாரமே இல்லாமால் வாயால் அவர்கள் கூறினார்கள் ...இவர்கள் கூறினார்கள் ....உலகம் கூறுகிறது.....அப்படி இப்படி என்று கூறுவதை நாம் "ஹரிச்சந்திரன் கூற்று" போல அப்படியே எடுத்துக்கொள்ளவேண்டும் !!!
1967 முன்பு வரை தமிழ்நாட்டில்அனைத்து மக்களும் பிச்சை காரர்களாக இருந்ததும் இல்லை.....
1967 உக்கு பிறகு இன்று வரை யாரும் குபேரர்களாகவும் மாறிவிடவில்லை என்பதை ஒரு சிலர் உணரவேண்டும் !
எதுவாகினும், நான் சில விஷயங்களை படித்து பதில் பதிவிடவேண்டும் என்றிருந்தேன்...நீங்களே அதில் ஒன்றை எழுதிவிடீர்கள்...! Thanks !!!
RKS !!
ScottAlise
8th November 2014, 09:08 PM
பார்த்ததில் பிடித்தது - 47
முக்தா ஸ்ரீனிவாசன் மற்றும் நடிகர் திலகம் combination ல் வந்த வெற்றி படம் .1978 வருடத்தை வெற்றியுடன் தொடங்கினார் என்றே சொல்லலாம் , இன்னும் சொல்லப்போனால் அண்ணன் ஒரு கோவில் என்ற வெற்றி படத்தை தொடர்ந்து வந்த வெற்றி படம் இது . வழக்கமான முக்தா ஸ்ரீநிவாசன் படம் போல் இல்லாமல் , அதாவது கதாநாயகன் அல்லது கதாநாயகிக்கு எந்த வித நோயும் இல்லை , மாறாக ஒரு வித்தியாசமான குடும்ப கதையை கொடுத்து அசத்தி இருக்கிறார்கள்
தன் காதலிக்கு உடம்பு சரி இல்லாமல் போக , மருத்துவரை அழைக்க போகிறார் பிரபு (சிவாஜி ) அவரை அவமான படுத்தி விடுகிறார் மருத்துவர் , கோபத்தில் மருத்துவரை தாக்க , மருத்துவர் இறந்து விட்டதாக நினைத்து சென்னைக்கு தப்பி ஓடி விடுகிறார்
காலம் சுழல மீண்டும் அந்தமானுக்கு வருகிறார் பிரபு , தன் வளர்ப்பு மகள் ஒரு சிற்பியை காதலிக்க , அந்த சிற்பி அவர் மகன் என்று அறிந்து கொள்ளுகிறார் , சிற்பியும் (அவர் மாமாவும்) தன் தந்தையை கண்டுபிடித்து தண்டனை கொடுத்து விட்டு தான் திருமணம் செய்து கொள்வேன் என்று சொல்லுகிறார்
தன் மனைவியும் தேடி கண்டுபிடிக்கிறார் பிரபு , அவரிடம் தன் கணவர் யார் என்று தன் மகனிடம் , தன் அண்ணனிடமும் கூற வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறார் ,மனைவி அதற்கு மறுக்கிறார்
முடிவு என்ன என்பது தான் பரபரப்பான கிளைமாக்ஸ்
இந்த படம் சிவாஜி அவர்களின் மாறுபட்ட நடிப்பை காட்டி உள்ளது என்றே சொல்ல வேண்டும் , படத்தின் flashback காட்சிகளில் இளைஞர் , கதை தற்போது நடக்கும் சுழலில் வயதானவர் , அதே போல் இப்போது தல அஜித் மங்காதாவில் சொல்லுவது போல் money money தான் இவருக்கு பிரதானம்
பணத்தினால் எதையும் விலைக்கு வாங்கி விடுகிறார் , தன்னிடம் வேலை பார்க்கும் நபரின் பிரச்னையை தீர்த்து விடுகிறார் , புது ஜோடிக்கு கல்யாணம் செய்து விட்டு , அவருக்கு அறிவுரை கூறும் காட்சி எல்லோரும் கடைபிடிக்க வேண்டிய ஒன்று
தன்னை அவமான படுத்திய மருத்துவரை பணக்கார பிரபுவாக சந்திக்கும் பொது அவர் முகத்தில் தெரியும் வெறி ,கோபம் நம்மளுக்கும் தொற்றி கொள்ளுகிறது , தவறுக்காக அந்த மருத்துவர் மனிப்பு கேட்ட உடன் மனித்து விடுவது - நிஜ வாழ்வில் சிவாஜி அவர்களின் குணம்
தன் மனைவியை தேடி அலையும் காட்சிகளில் நம்மளையும் அசராடிகிறார். பல வருடங்களாக தன் மனைவியை பிரிந்து , பிறகு அவரை சந்திக்கும் பொது melo dramatic ஆக இல்லாமல் கொஞ்சம் அழுகை , பிறகு பரஸ்பரம் விசாரிப்பு ,பிறகு சிரிப்பு என்று வித்தியாசமாக காட்சி அமைத்து இருக்கிறார்கள் அதில் நம்மவரின் நடிப்பு எதார்த்தம் .
சுஜாதா அந்தமான் தீவின் tribal girl பாத்திரத்தில் நன்றாக இருக்கிறார் , அதை விட வயதான பாத்திரத்தில் மிகவும் பொருந்தி இருக்கிறார் ,
SHE HAS GROWN OLD WITH DIVINE LOOK . அதுவும் காதலர்களாக இருந்த பொது ஏழை வீட்டில் கோழி குழம்பு என்றால் ஒன்னு கோழிக்கு உடம்பு சரி இல்லை என்று அர்த்தம் இல்லை , ஏழைக்கு உடம்பு சரி இல்லை என்று அர்த்தம் . வெகு நாட்களுக்கு பிறகு தன் மனைவி கையால் சாப்பிடும் பாகியம் கிடைத்து தன் முதலாளி விசுவாசம் காரணம் காட்டுவதும் , அதை மனைவி புரிந்து கொள்வதும் கவிதை
தன் மகன் தன் வளர்ப்பு மகளை கல்யாணம் செய்து கொள்ள கேட்கும் சீதனமாக கேட்பது தன் உயிர் என்பதை அறிந்து அவர் காட்டும் புன்முறுவல் priceless , சிவாஜியின் முயற்சிகளை சுஜாதா முறியடிக்கும் காட்சிகள் திரைகதையின் பலம்
தன் மனைவி ஒரு இக்கட்டான சூழ்நிலையில் பணம் கேட்டு வரும் பொது இவர் குஷியாக பணத்தை தருவதும் , பிறகு பணம் காசு முக்கியம் கிடையாது அன்பு பாசம் தான் முக்கியம் என்று புரியவைக்கும் பொது , பணத்தால் இவர் அபிஷேகம் செய்யும் காட்சியும் , அதை தொடர்ந்து வரும் பாடலும் நான் ரசித்த காட்சிகளில் ஒன்று .
படத்தில் நான் ரசித்த இன்னும் சில விஷயங்கள் கேமரா , வெளிப்புற காட்சிகள் , சிவாஜி அவர்களின் எதார்த்தமான make up , ஸ்டைல் , டிரஸ் , இந்த படத்தில் அவர் உடை அவர் வயதை அழகாக compliment செய்தது என்றே சொல்ல வேண்டும்
சந்திரமோகன் , கவிதா நடிப்பு சுமார் . தேங்காய் ஸ்ரீநிவாசன் , மனோரமாவின் நகைச்சுவை படத்துக்கு வேகத்தடை .
பாடல்கள் என்றும் கேட்கலாம்
படத்தை பற்றி மிகவும் சுமாராக தான் எழுதி உள்ளேன் , காரணம் படத்தை மிகவும் ஆர்வத்துடன் பார்த்தேன் , எதை எழுதுவது , எதை விடுவது என்று தெரியவில்லை ,அதனால் அனைத்தையும் விவரிக்கிறேன் பேர்வழி என்று மீண்டும் சொர்க்கம் படத்துக்கு எழுதி சொதப்பியது போல் செய்ய வேண்டாம் என்ற எச்சரிக்கை தான்
Russellbpw
8th November 2014, 09:11 PM
நமது வாழ்க்கையில் நடக்கும் எந்தவொரு நிகழ்வுகளுக்கும் மக்கள் திலகத்தின் காவியப்பாடல்கள் தான் உதாரணமாக காட்ட முடியும் என்பதை, சரியான சந்தர் ப்பத்தில் உணர்வுப்பூர்வமாக உரைத்திட்ட சகோதரரர் திரு. வினோத் அவர்களுக்கு நன்றி ! பாராட்டுக்கள் !
நமது வாழ்கையில் நடக்கும் நிகழ்வுகள் பல...
அதில் கீழே கொடுக்கப்பட்டுள்ளது சில......
சரஸ்வதி பூஜைக்கு
http://www.youtube.com/watch?v=UTBqjfjR7OM
JamesFague
8th November 2014, 09:13 PM
அந்த கால கட்டத்தில் சிவாஜி சுஜாதா நடித்த மூன்று திரைப்படங்கள் மாபெரும் வெற்றி பெற்றது. அதே போல் சிவகுமார் ஸ்ரீதேவி நடித்த மூன்று படங்கள் தோல்வி அடைந்தது.
Russellbpw
8th November 2014, 09:18 PM
தீப ஒளிக்கு
http://www.youtube.com/watch?v=0lFpu5z0oPU
Russellbpw
8th November 2014, 09:20 PM
கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு
http://www.youtube.com/watch?v=CMfbEd5aggI
Russellbpw
8th November 2014, 09:21 PM
ரம்ஜான் பண்டிகைக்கு
http://www.youtube.com/watch?v=ZPLOJS3JP-o
Russellbpw
8th November 2014, 09:23 PM
புது வருட பிறப்பிற்கு
http://www.youtube.com/watch?v=VvffL2njuCc
Russellbpw
8th November 2014, 09:25 PM
கிருஷ்ணா ஜெயந்திக்கு
http://www.youtube.com/watch?v=3eeBmbd36vA
Russellbpw
8th November 2014, 09:26 PM
ஐயப்பன் சீசனுக்கு
http://www.youtube.com/watch?v=Bahd1mbA5SQ
Russellbpw
8th November 2014, 09:27 PM
சிவராத்திரிக்கு
http://www.youtube.com/watch?v=_uAE2d0u3Ko
Russellbpw
8th November 2014, 09:35 PM
கார்த்திகை தீபத்திற்கு
http://www.youtube.com/watch?v=hLU9wbxtbE8
Russellbpw
8th November 2014, 09:36 PM
விடுதலை போராட்டத்திற்கு
http://www.youtube.com/watch?v=GkxRC8ikSc4
JamesFague
8th November 2014, 09:39 PM
தேச ஒற்றுமைகிற்கு போடும் ஒரே பாடல்
http://youtu.be/zKUpbXldBA4
Russellbpw
8th November 2014, 09:39 PM
குழந்தை பிறந்தவுடன்
http://www.youtube.com/watch?v=imwsn-J8NuM
Russellbpw
8th November 2014, 09:41 PM
குழந்தை வளர்ந்தவுடன் தொட்டில் இடும்போது
http://www.youtube.com/watch?v=HtI2WuwCvyI
Russellbpw
8th November 2014, 09:43 PM
குழந்தை வளர்ந்து மானவபருவம் அடையும்போது
http://www.youtube.com/watch?v=YtufCVcIfzI
Russellbpw
8th November 2014, 09:50 PM
நமது வாழ்க்கையில் நடக்கும் எந்தவொரு நிகழ்வுகளுக்கும் மக்கள் திலகத்தின் காவியப்பாடல்கள் தான் உதாரணமாக காட்ட முடியும் என்பதை, சரியான சந்தர் ப்பத்தில் உணர்வுப்பூர்வமாக உரைத்திட்ட சகோதரரர் திரு. வினோத் அவர்களுக்கு நன்றி ! பாராட்டுக்கள் !
அடுத்தவர் புகழை கூட...அடுத்தவர் பெருமையை கூட... தனது மட்டுமே என்று சித்தரிப்பவர்களுக்கு ,பறை சாற்றுபவர்களுக்கு ...!
மனித வாழ்கையில் நடக்கும் எந்த ஒரு சம்பவமாக இருக்கட்டும் ....அதற்க்கு ஏற்ற பாடல் வேறு எவரை காட்டிலும் திரைப்படங்களில் அதிகமாக கொண்டு வந்தது கண் முன் நிறுத்தியது நடிகர் திலகம் என்பதை இங்கு பதிவுகளை படிக்க வரும் பார்வையாளர்கள் உணர மேலே நான் குறிப்பிட்ட சில உதாரண பாடல்கள்....இன்னும் பல நூறு ஆயிரம் சம்பவங்களுக்கும் ஏற்ற பாடல் நடிகர் திலகம் தனது திரைப்படங்கள் மூலம் காட்சிகளாக...பாடல்களாக கொண்டு வந்து கண் முன் நிறுத்தியுள்ளார் மற்ற எவரை காட்டிலும் அதிகமாக...!
JamesFague
8th November 2014, 10:05 PM
இந்த பாட்டுக்கள் போதுமா இன்னும் கொஞ்சம் வேண்டுமா என்று ஓங்கி உரைத்த நண்பர் ரவிகிரன்சுர்யா அவர்களக்கு என் நன்றி.
Russellisf
8th November 2014, 11:58 PM
குழந்தை நட்சத்திரமாக புகழ் பெற்று விளங்கிய குட்டி பத்மினி, எம்.ஜி.ஆருடனும், சிவாஜிகணேசனுடனும் பல படங்களில் நடித்தார்.
சிவாஜியுடன் நடித்த அனுபவங்கள் குறித்து குட்டி பத்மினி கூறியதாவது:-
"நடிப்பில் சிவாஜி சார் இமயம் என்று தெரியும். ஆனால், அப்போது பேபி நட்சத்திரமாக இருந்த எனக்கு, இது தெரிந்திருக்க வாய்ப்பில்லையே.
ஏ.பி.நாகராஜன் அங்கிள் அப்போது எடுத்த "திருவருட்செல்வர்" படத்தில் சிவாஜி சார் நடித்தார். இந்தப் படத்தில் சிவாஜி சாருடன் விவாதம் செய்யும் ஒரு காட்சியில் நடிக்க என்னை 'புக்' செய்தார்கள். புராணப்படம் என்பதால் தூய தமிழில் பேச ஏ.பி.நாகராஜன் அங்கிள் வீட்டில் ஒரு வாரம் எனக்கு 'சுத்தத் தமிழ்' கற்றுத் தந்தார்கள். இந்த ஒரு வாரத்தில் ஏ.பி.என். அங்கிளின் பிள்ளைகளும் எனக்கு 'பிரண்ட்ஸ்' ஆகிவிட்டார்கள்.
சிவாஜி சாருடன் நான் நடிக்க வேண்டிய காட்சி படமாகும் நாளும் வந்தது. அப்போதெல்லாம் எனக்கு 'நடிப்பு' பற்றி பயமே இருந்ததில்லை. படத்தில் திருமலை மன்னராக வரும் சிவாஜி சாருக்கு கடவுள் நம்பிக்கை கிடையாது. அவருக்கு கடவுள் நம்பிக்கை ஏற்படுத்தும் சிறுமியாக நான் வந்தேன். கடவுள் நம்பிக்கை பற்றி நான் அவரிடம் பேசப்போக, அவரோ "கடவுள் இருக்கிறார் என்றால், அவர் இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறார்?" என்று கேட்பார்.
"இந்தக் கேள்விக்கு பதில் சொல்ல வேண்டுமானால் என்னை திருமலை மன்னராக்கி அரியணையில் அமர வைக்கவேண்டும்" என்பேன்.
உடனே திருமலை மன்னர் என்னை அரியணையில் அமர்த்தி மன்னராக மகுடம் சூட்டுவார். அடுத்த கணம் நான், "யாரங்கே! இதுவரை திருமலை மன்னராக இருந்த இவரை பிடித்து சிறையில் அடையுங்கள்" என்பேன். அப்படி உத்தரவிட்டு விட்டு, "கடவுள் இப்போது இதைத்தான் செய்து கொண்டிருக்கிறார்" என்பேன்.
இதன் பிறகு திருமலை மன்னர் கடவுள் நம்பிக்கை உடையவராக திருந்துவதுடன் அந்தக் காட்சி முடியும். இந்தக் காட்சியில் திருமலை மன்னராக நடிக்கும் சிவாஜி சார் உணர்ச்சி வேகத்தில் பேசிவிட்டு, என் காலில் விழுவதாக அந்தக் காட்சி முடியும்.
இந்தக்காட்சி பற்றி சிவாஜி சாரிடம் விளக்கிய உதவி இயக்குனர்கள், கடைசியில் 'கடவுள் ஞானம்' கொடுத்த சிறுமியின் காலில் விழுவதுடன் காட்சி முடியும் என்பதை தயங்கித் தயங்கி சொன்னார்கள். ஆனால் சிவாஜி சார் அதற்கு பதில் எதுவும் சொல்லவில்லை. காட்சியில் உணர்ச்சிகரமாக பேசிக் கொண்டு வந்தவர், "அம்மா நீ சிறு பெண்ணல்ல; என் அறிவுக்கண் திறக்க வந்த தெய்வம்" என்று சொல்லி என் கால் பக்கமாக விழுந்து விட்டார்.
டைரக்டர் ஏ.பி.நாகராஜன் அங்கிள் 'கட்' செய்யவும் மறந்து ஒரு கணம் பிரமித்து நின்று விட்டார். காட்சியின் கனம் கருதி எந்த நடிப்புக்கும் தயாராக இருந்த சிவாஜி சாரை நினைத்தால் இப்போதும் அவர் மீது ஒரு மரியாதை ஏற்படுகிறது. இந்தப்படம் பற்றி அப்போது விமர்சனம் எழுதிய ஒரு பத்திரிகை, இந்தக் காட்சி பற்றி குறிப்பிடும்போது "திமிங்கலத்தை சின்ன மீன் விழுங்கிவிட்டது" என்று வர்ணித்திருந்தது.
அதுமாதிரி, "திருமால் பெருமை" படத்திலும் ஒரு உணர்ச்சிமயமான காட்சி சிவாஜி சாருக்கும் எனக்கும் இருந்தது. படத்தில் குட்டி ஆண்டாளாக வரும் நான் திருமாலுக்கு என் தந்தை (சிவாஜி) சூடிய மாலையை என் கழுத்தில் எடுத்து போட்டுக்கொள்வேன். ஆத்திரமாகும் அப்பா என் மீது கோபப்படுவதாக காட்சி. இந்தக் காட்சியின்போது நான் கொஞ்சமும் எதிர்பாராமல் சிவாஜி சார் என் கன்னத்தில் ஓங்கி விட்டார் ஒரு அறை. அந்த அறையின் வேகத்தில் என் காதில் இருந்த கம்மல் தெறித்து விழுந்தது. பொறி கலங்கிப்போனேன். என்றாலும் நான் தொடர்ந்து பேசவேண்டிய வசனத்தை பேசி முடித்தேன்.
காட்சி முடிந்ததும் சிவாஜி சார் ஓடிவந்து என் கன்னத்தை தடவி விட்டார். பிறகு அம்மாவிடம் அந்தக் காட்சிக்கான விளக்கம் சொன்னார். "இந்தக் காட்சியில் நான் கன்னத்தில் அறைவதை முதலிலேயே சொல்லியிருந்தால் உங்கள் பெண், நான் அடிக்கும்போது கன்னத்தை திருப்பியிருப்பாள். அப்படிச் செய்திருந்தால் அந்தக்காட்சி இயல்பாக அமையாது. அதனால்தான் அடிப்பதை முன்கூட்டியே சொல்லவில்லை. ஆனால் இப்படி சொல்லாமல் கன்னத்தில் அடித்தும், நடிப்பதை நிறுத்தாமல் தொடர்ந்து அழுதுகொண்டே வசனம் பேசி நடித்த உங்கள் பெண் என்னை ரொம்பவே கவர்ந்து விட்டாள்" என்று சொன்னவர், "உங்க கையை நீட்டுங்க" என்றார், அம்மாவிடம்.
அம்மா 'எதற்கு' என்று புரியாமல் பார்த்த நேரத்தில், "எனக்கு சத்தியம் பண்ணிக் கொடுங்க. உங்க பொண்ணு ஹீரோயினா நடிக்கிற கால கட்டத்துல என்கூட தான் முதல்ல நடிக்கணும்" என்றார்.
அம்மா அப்படியே நெகிழ்ந்து போய்விட்டார். பெண்ணின் நடிப்பு மீது அந்த மகா கலைஞர் வைத்த நம்பிக்கையும், சிறு குழந்தை மாதிரி அவர் கேட்ட சத்தியமும் அம்மாவை ஆனந்த அதிர்ச்சிக்குள்ளாக்கிவிட்டது."
இவ்வாறு குட்டி பத்மினி கூறினார்.
JamesFague
9th November 2014, 08:13 AM
தற்போது நடிகர்திலகத்தின் ஆண்டவன் கட்டளை திரைப்படம் ஜெயா மூவீஸ் சேனலில்
ஒளிபரப்பிகொண்டு இருகின்றார்கள். இந்த படத்தை எனது நினைவு தெரிந்த நாள் அன்று சைதை ஜெயராஜ் திரைஅரங்கில் பார்த்த நாள் நினைவிற்க்கு வருகிறது. பின் சென்னை பரகோன், வேளச்சேரி ராஜலக்ஷ்மி மற்றும் பல
திரைஅரங்கு நினைவிற்கு வருகின்றது.
இந்த திரைபடத்தில் பேராசிரியர் ஆக வரும் நடிகர் திலகம் காதல் வயப்பட்டு தனது உடை
சிகை அலங்காரங்களை மாற்றி கல்லூரிக்கு வரும் நடிகர் திலகம் ஒரு அழகிய ராஜா நடை போட்டு வரும் அந்த கட்சி ஒன்றே போதும் உலக பெரு நடிகன் நம் நடிகர் திலகம்.
eehaiupehazij
9th November 2014, 08:35 AM
திருமலை மன்னராக நடிக்கும் சிவாஜி சார் உணர்ச்சி வேகத்தில் பேசிவிட்டு, என் காலில் விழுவதாக அந்தக் காட்சி முடியும்.
இந்தக்காட்சி பற்றி சிவாஜி சாரிடம் விளக்கிய உதவி இயக்குனர்கள், கடைசியில் 'கடவுள் ஞானம்' கொடுத்த சிறுமியின் காலில் விழுவதுடன் காட்சி முடியும் என்பதை தயங்கித் தயங்கி சொன்னார்கள். ஆனால் சிவாஜி சார் அதற்கு பதில் எதுவும் சொல்லவில்லை. காட்சியில் உணர்ச்சிகரமாக பேசிக் கொண்டு வந்தவர், "அம்மா நீ சிறு பெண்ணல்ல; என் அறிவுக்கண் திறக்க வந்த தெய்வம்" என்று சொல்லி என் கால் பக்கமாக விழுந்து விட்டார்.
டைரக்டர் ஏ.பி.நாகராஜன் அங்கிள் 'கட்' செய்யவும் மறந்து ஒரு கணம் பிரமித்து நின்று விட்டார். காட்சியின் கனம் கருதி எந்த நடிப்புக்கும் தயாராக இருந்த சிவாஜி சாரை நினைத்தால் இப்போதும் அவர் மீது ஒரு மரியாதை ஏற்படுகிறது. இந்தப்படம் பற்றி அப்போது விமர்சனம் எழுதிய ஒரு பத்திரிகை, இந்தக் காட்சி பற்றி குறிப்பிடும்போது "திமிங்கலத்தை சின்ன மீன் விழுங்கிவிட்டது" என்று வர்ணித்திருந்தது. by Yukesh Babu
Dear Yukesh Babu
மணம் வீசாத எந்த மலரும் வெறும் அலங்கார மலராகவோ காகித மலராகவோதான் இருக்க முடியும். மல்லிகை எங்கிருந்தாலும் மண(ன)முள்ள மலரே... அது மாற்றார் தோட்டத்தில் மலர்ந்திருந்தாலும்! நடிகர்திலகம் பற்றிய ஆரோக்கியமான தங்களது பதிவு வரவேற்புக்குரியது நண்பரே! நன்றிகள்.
நடிகர்திலகம் என்னும் திமிங்கிலத்தின் முன் மற்றெல்லாம் சிறுகுறுமீன்களே! ஆனாலும் இந்தத்திமிங்கிலம் வித்தியாசமான டால்பின் வகை திமிங்கிலம்.
சிறார்களான சிறு ஜிலேபி மீன்களுக்கும், சுறாக்களான பெரியவர்களுக்கும் கூட நாம் இந்தத்திமிங்கிலத்தையே விழுங்கிவிட்டோம் என்ற மாயத்தோற்றத்தை உருவாக்கி அவர்களையும் தனது தோளில் சுமந்து வளைந்து நெளிந்து 'டைவ்' அடித்து வலம்வந்து மனம் மகிழ வைக்கும் மாயக்கார திமிங்கிலம்!.
திருவிளையாடலின் தருமி வாளைமீன் நாகேஷ் , குருதட்சணையின் வஞ்சிரமீன் பத்மினி, படிக்காத மேதை சுறாமீன் ரங்காராவ், பாவமன்னிப்பு Piranha மீன் ராதா, தூக்குதூக்கியின் பாறைமீன் பாலையா...தெய்வமகன் திருக்கைமீன் நாகையா, காவல் தெய்வம் கட்லா மீன் சுப்பையா ... மனோகராவின் விண்மீன் கண்ணாம்பா, கர்ணனின் தாய்செம்மீன் ராஜம்மா, தில்லானாவின் மின்சார மீன் மனோரமா .. புதிய பறவை கெளுத்திமீன் சவுகார் , பாலும்பழமும் கெண்டைமீன் சரோஜாதேவி, நீலவானம் நெத்திலிமீன் தேவிகா...........பந்தம் படத்தின் குட்டி கடல்குதிரைமீன் ஷாலினி....... பார்த்தால் பசிதீரும் ஆக்டோபஸ் மீன்குடும்பம் ஜெமினி/சாவித்திரி/இரட்டைக் கமல்....வரை அடுக்கிகொண்டே போகலாம்.
நடிப்பின் திமிங்கிலம் நடிகர்திலகமே....ஒப்புக்கொண்டு மகிழ்வான மாற்றங்களையும் முதிர்வானபுரிதல்களையும் திரிகளுக்கு இடையே உருவாக்கிட தூண்டில் போடும் உங்கள் முயற்சிக்கு நன்றிகள் யுகேஷ்!
முயற்சிகள் தவறலாம் ........முயற்சிக்கத் தவறலாமா !
Illusions made by our Magician of Acting with a Midas touch to make the scene a golden product!
Small fish 'engulfing' the Big fish!? illusion thanks to the magnanimity of the Nadippin Thesaurus (NT)!!
https://www.youtube.com/watch?v=hJx2T0lNxHc&list=PLE5C1AE2A472A45C1&index=3
Crouching Tiger and Hidden Dragon?! A hallucination only!!
https://www.youtube.com/watch?v=MOTgW8glTHk
Gripping Octopus 'arresting' the Slipping Dolphin!? Mirage!!
https://www.youtube.com/watch?v=J4QCNQi17a8
eehaiupehazij
9th November 2014, 01:17 PM
நடிப்புத் திமிங்கிலம்(NT) / நடிகர் திலகம் (NT) சுமந்து மகிழ்வித்த சுகமான குட்டிமீன்கள் மற்றும் சுமையான சுறாக்கள் !
PART 1 : இனிமை நிறைந்த குதூகலமான குட்டி ஜிலேபி மீன்கள்
https://www.youtube.com/watch?v=TFu4zYk4Xeg
https://www.youtube.com/watch?v=yglkhIIxBf8
Master Shridhar is fish out of water before our Nadippu Thimingilam
https://www.youtube.com/watch?v=iC6RJSe97S8
https://www.youtube.com/watch?v=LvaoBusG1e4
https://www.youtube.com/watch?v=k3YN6RCZHs0
அன்று ஐந்து வயது குட்டிமீன் இன்று 60 வயது நடிப்புச்சுறா! இன்றும் மகிழ்விக்க திமிங்கிலம் இல்லையே!
https://www.youtube.com/watch?v=4ofp0GGu3AA
JamesFague
9th November 2014, 01:27 PM
eன்னை ஆட்கொண்எட நடிகர்திலகம் :
நான் எப்படி அவருக்கு பக்தன் ஆனேன் :
எனக்கு நினைவு தெரிந்து நான் பார்த்த முதல்
சிவாஜி படம் தில்லான மோகனம்பாள். எனது
தாயாருடன் பார்த்து அந்த படத்தில் மோளம்
அடிப்பது போல் நான் அடித்து காட்டினால் எனக்கு எனது மாமா 5 பைசே கொடுப்பார்.
பிறகு திருவல்லிகேணியில் உள்ள பள்ளியில்
சண்டே அன்று மாதம் ஒரு முறை திரைப்படம்
போடுவார்கள். அப்படி நான் பார்த்த திரைப்படங்கள் அனைத்தும் நடிகர் திலகத்தின்
படம் மட்டும் தான். அது மட்டும் அல்ல திரையிடும் படங்கள் அத்தனையும் நடிகர் திலகத்தின் படம் மட்டுமே.
அங்கு நான் பார்த்த படங்கள்:
கலாட்ட கல்யாணம்
பதிபக்தி
உயர்ந்த மனிதன்
பாசமலர்
இன்னும் ஒரு நான்கு அல்லது ஐந்து படங்கள்
இருக்கும். அது போல் நான் பார்த்த முதல்
இரவுக் காட்சி படம் பரகோன் திரைஅரங்கில் நான் பார்த்த ராஜா.
அது போல சாந்தி திரைஅரங்கில் நான் பார்த்த
படங்கள் மிக அதிகம்.
இப்படி யாக நான் நடிகர் திலகத்தின் படங்கள் மேல் ஒரு மோகம் கொண்டு அவரின் பித்தனானேன்.
Russellzlc
9th November 2014, 02:05 PM
கோபால்,
நான்தான் உங்களிடம் சொன்னேனே, எந்த வாக்குவாதமும் வேண்டாமென்று? நண்பர் RKS அவர்களிடமும் அதைதான் எப்போதும் சொல்கிறேன். காரணம் அதனால் எந்தப் பலனுமில்லை.
நண்பர் கலைவேந்தன் நமது ஹப்பில் உறுப்பினராக நுழைந்ததே ஒரு நோக்கத்தோடுதான். அவருக்கு கொடுக்கப்பட்டிருக்கும் assignment என்பது அனைத்து பதிவுகளிலும் சிவாஜியை அல்லது அவர் ரசிகர்களை தாக்குவது அல்லது கிண்டல் செய்வது. மேலும் சிவாஜியை யாரேனும் [கலை, அரசியல் எந்த தளத்தை சேர்ந்தவராகவும் இருக்கலாம்] பாராட்டினால் பாராட்டியவர் முன்னொரு காலத்தில் அல்லது பிற்காலத்தில் எம்ஜிஆர் ரசிகராக இருந்தார் என்று நிறுவுவது. இதனால் என்ன லாபம் என்று கேட்க கூடாது.
உதாரணமாக உ.சு.வா புத்தர் கோவில் சண்டைக் காட்சி பற்றிய பதிவில் சம்மந்தமில்லாமல் திருச்சி சிவா பற்றி குறிப்பு வரும். திருச்சியில் எம்ஜிஆர் மன்ற தலைவராக இருந்தார், எம்ஜிஆர் மாதிரி இறுக்கமாக ஜிப்பா அணிவார், வலது கையில் வாட்ச் கட்டுவார் என்றெல்லாம் இருக்கும்.. நல்ல வேளை இவரும் எம்ஜிஆர் மாதிரி வலது கையில்தான் சாப்பிடுவார் என்று சொல்லாமல் விட்டாரே என்று சந்தோஷப்பட்டு கொள்ள வேண்டியதுதான். காரணம் என்ன தெரியுமா நீயா நானா நிகழ்ச்சியில் சிவா, நடிகர் திலகத்தைப் பாராட்டி பேசி விட்டார். அதை சிலாகித்து ஜோ போன்றவர்கள் நடிகர் திலகம் திரியில் எழுதியும் விட்டார்கள். எப்படி விட முடியும்?
அது போன்றே சம்மந்தமில்லாமல் பல்லாண்டு வாழ்க பற்றிய பதிவில் சிவாஜி [என்று பெயர் சொல்லாமல்] சாதி பெயரை சொல்லிக் கூப்பிடுவார் என்று எழுதுவார். அதே பதிவில் நீதிக்கு தலை வணங்கு படத்தில் வரும் காட்சி பற்றி குறிப்பிடுவார், தியாகம் படத்தை மறைமுகமாக தாக்குகிறாராம். எஸ்எஸ்ஆர் அவர்கள்தான் தேர்தலில் வெற்றி பெற்ற முதல் நடிகர் என்ற உண்மையை பதிவு செய்தால் பிடிக்காது. எம்ஜிஆர்தான் மேலவை உறுப்பினரான (எம்எல்சி) முதல் நடிகர் என்பார். சிவாஜி மீது காழ்புணர்ச்சி இல்லை என்பார். ஆனால் சிவாஜியை ஒரு x y z நடிகர்களோடு சேர்த்துதான் நல்ல நடிகர் என்பார். ராஜ ராஜ சோழன் சென்னை ராம் தியேட்டரில் வெளியாகி 28 நாட்கள்தான் ஓடியது என்பார். அது அண்டப் புளுகு ஆகாசப் புளுகு என்பதை நாம் ஆணித்தரமாக ஆதாரப்பூர்வமாக நிரூபித்தாலும் தவறான தகவலை தந்து விட்டேன் என்று ஒப்புக் கொள்ளும் அடிப்படை கண்ணியம் கூட இருக்காது. ஆனால் நமக்கு கண்ணியம் பற்றி கிளாஸ் எடுப்பார். இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். So, அவர்கள் agenda-வில் அவர்கள் தெளிவாக இருக்கிறார்கள்.
இதை தவிர அவர்களுக்கு external pressure வேறு. நினைவிருக்கும் என நம்புகிறேன். காதல் வாகனம் படத்திற்கு 5/10 மார்க் போட்டு விட்டு வினோத் பட்ட பாடு!
இது தவிர வேறொரு வித technique-ம் கடைப்பிடிக்கப்படும். குறிப்பிட்ட படம் இவர்கள் குறிப்பிடும் அத்தனை நாட்கள் ஓடவில்லை என்பது அவர்களுக்கே தெரியும். ஆனாலும் அதை தொடர்ந்து எழுதுவார்கள். அலிபாபா சென்னை சித்ரா, பிரபாத் சரஸ்வதி அரங்குகளில் [மதுரை வீரன் அதே அரங்குகளில் வெளியாகி விட்டதால்] 100 நாட்கள் ஓடவில்லை. ஆனாலும் 100 நாட்கள் என்றே எழுதுவார்கள் இதை நான் ஏற்கனவே சுட்டிக் காட்டியுள்ளேன். அது போன்றே மதுரையில் நம் நாடு 21 வாரம் என்றே எழுதுவார்கள். உண்மையில் ஓடிய நாட்கள் 133. அப்படியென்றால் 19 வாரம். இதை பற்றி வேறொரு நண்பரிடம் பேசிக் கொண்டிருந்தேன். அப்போது அவர் ஒன்றை சுட்டிக் காட்டினார். எப்போதும் 21 வாரம் என்றே குறிப்பிடுவார்கள். 147 நாட்கள் என்று எழுத மாட்டார்கள் என்றார். காரணம் நாட்களை சொன்னால் யாரவது கேள்வி கேட்டு விடுவார்கள். ஆகவேதான் வாரம் என்று குறிப்பிடுவார்கள் என்றார். ஓடியிருந்தால் சரி ஆனால் அத்தனை நாட்கள் ஓடவில்லையே என்று நான் கேட்க அத்தனை நாட்கள் ஓடவில்லை என்பது நம்மைப் போன்ற சிலருக்கு மட்டும்தானே தெரியும். என்றார் நண்பர். ஏன் இப்படி என்ற கேள்விக்கு நண்பர் காரணம் சொன்னார். சிவந்த மண் சென்னை குளோப் தியேட்டரில் அதிகபட்சமாக 145 நாட்கள் ஓடியது. அதைவிட இது அதிகம் என்ற பிம்பத்தை உருவாக்க வேண்டும் என்ற நுண்ணரசியல்தான் என்றார். அவர் மேலும் சொன்னார். இதற்கு மேலும் உங்களைப் போன்ற மதுரைக்காரர்கள் அழுத்திக் கேட்டால் அதே மதுரை மீனாட்சியில் ஒளி விளக்கு 147 நாட்கள் ஓடியது [21 வாரம்] அதனால் வந்த confusion என்று சொல்லி விடுவார்கள் என்றார்.
பணக்கார குடும்பம் 100-வது நாள் விளம்பரத்தில் கோவை சேலம் நகரங்களில் ஷிப்டிங் அரங்குகளில் ஓடியதையும் சேர்த்து கொடுத்திருப்பார்கள். அதை வைத்து 7 அரங்குகள் என்பார்கள். ஏன் தெரியுமா 1964-ல் நமது கை கொடுத்த தெய்வமும் நவராத்திரியும் 6 அரங்குகளில் 100 நாட்கள் ஓடின. அதை விட அதிகம் என்று நிறுவ இப்படி பதிவு வரும். விளம்பரத்தை பார்க்கும்போது இது ரிலீஸ் தியேட்டர் இது ஷிப்டிங் தியேட்டர் என்பது எத்தனை பேருக்கு தெரியும்? அதுவும் 50 வருடங்களுக்கு முந்தைய விளம்பரத்தை பார்க்கும்போது? இப்படி ஒவ்வொரு பதிவின் பின்னாலும் உள்ள நுண்ணரசியலை சொல்லிக் கொண்டே போனால் அதற்கே பல பக்கங்கள் ஒதுக்க வேண்டி வரும்.
இதை இப்போது இத்தனை விளக்கமாக சொல்லக் காரணம் இனிமேலாவது நீங்களும் சரி நண்பர் RKS அவர்களும் சரி இதைப் பற்றியெல்லாம் வாதப் பிரதிவாதங்கள் செய்யாமல் விட்டு விடுங்கள் என்று சொல்லத்தான். நீங்கள் இந்த திரியில் தொடரும்வரை நடிகர் திலகம் பற்றி மட்டுமே பதிவிடுமாறு கேட்டுக் கொள்கிறேன். தேவையற்ற விவாதங்களில் ஈடுபட வேண்டாம் என அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன்.
அன்புடன்
நண்பர் திரு.முரளி ஸ்ரீனிவாஸ் அவர்களுக்கு,
என்னைப் பற்றிய உங்கள் அர்த்தமற்ற, உண்மைக்கு மாறான குற்றச்சாட்டுக்களுக்கு பதிலளிக்க விரும்பவில்லை.
‘நான் என்றைக்காவது திரு.எம்.ஜி.ஆரைப் பற்றி தவறாக எழுதியிருக்கிறேனா’ என்று கேட்பீர்கள். ஆனால், ‘யாரை, எப்படி, எப்போது பயன்படுத்திக் கொள்வது என்பதில் தேர்ந்தவரான எம்.ஜி.ஆர் ’என்று விஷத்தை கக்குவீர்கள்.
தகவல்களிலும் கூட உண்மைகள் இல்லை. உங்களது திரியில் 260வது பக்கத்தில் திரு.சிவாஜி கணேசனும் ஆனந்த விகடனும் என்ற கட்டுரையின் ( பழைய பதிவு மீள்பதிவு செய்யப்பட்டுள்ளது) இரண்டாவது பாகத்தில் (part II) மூன்றாவது பத்தியில் கடைசி வரியில் உலகம் சுற்றும் வாலிபன் படப்பிடிப்பு விஷயமாக ‘அவரும் (மணியனைக் குறிப்பிட்டுள்ளீர்கள்) அவருடன் சக்தி கிருஷ்ணசாமியும் சென்றனர்’ என்று குறிப்பிட்டுள்ளீர்கள்.
சக்தி கிருஷ்ணசாமி என்பவர் சக்தி நாடக சபாவில் நாடகங்கள் எழுதியவர். படகோட்டி, பறக்கும் பாவை படங்களுக்கு வசனம் எழுதியவர். அவர் மணியனுடன் செல்லவில்லை. மணியனுடன் சென்றது சித்ரா கிருஷ்ணசாமி என்பவர். அவர் படத் தயாரிப்புக்கான பணிகளில் ஈடுபடுபவர். தலைவருக்கு நெருக்கமானவர். சகோதரர் செல்வகுமார் சமீபத்தில் பதிவிட்ட ஒரு புகைப்படத்தில் தலைவருக்கு இளையராஜா வணக்கம் தெரிவிக்கும் காட்சியில் அவர் அருகே நின்று கொண்டிருப்பவர்தான் சித்ரா கிருஷ்ணசாமி.
சக்தி கிருஷ்ணசாமிக்கும் சித்ரா கிருஷ்ணசாமிக்கும் வித்தியாசம் தெரியாத உங்களை வரலாற்றுச் சுரங்கம் என்று உங்கள் நண்பர்கள் புகழ்ந்துள்ளனர். அதைப்பற்றி எங்களுக்கு கவலை இல்லை. ஆனால், நீங்கள் எழுதும் தகவல்கள் உண்மையானவை என்று அதைப் படிக்கும் மக்கள் நம்பி விடக்கூடாதே. அதற்குத்தான் இதை குறிப்பிடுகிறேன். இனிமேலாவது உண்மையான தகவல்களை எழுதுங்கள்.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
eehaiupehazij
9th November 2014, 02:38 PM
நடிப்புத் திமிங்கிலம்(NT) / நடிகர் திலகம் (NT) சுமந்து மகிழ்வித்த சுகமான குட்டிமீன்கள் மற்றும் சுமையான சுறாக்கள் !
PART 2 : வலிமை மிகுந்த பளுவான நடிப்புச் சுறாக்கள் ! (ஆனாலும் நடிப்புச் சூரியனின் ஒளிக்கடன் மூலமே ஒளிர முடிந்த சந்திரன்கள்!)
1. திருமிகு ரங்காராவ் : நடிகர் திலகத்துடன் நடிக்கும்போது இவரின் நடிப்புக்கூர்மை அதிகமே!
படிக்காத மேதை சிறந்த உதாரணம்! இருவர் உள்ளம், வசந்த மாளிகை, ராஜா.......படுபாந்தமாக நடிகர்திலகத்துக்கு ஈடு கொடுத்தவர். நன்றியுடன் நினைவு கூர்கிறோம்!
https://www.youtube.com/watch?v=YS3Lya0Mf5E
https://www.youtube.com/watch?v=tDU7NB440bs
https://www.youtube.com/watch?v=7tge_YrAZI4
eehaiupehazij
9th November 2014, 03:41 PM
நடிப்புத் திமிங்கிலம்(nt) / நடிகர் திலகம் (nt) சுமந்து மகிழ்வித்த சுகமான குட்டிமீன்கள் மற்றும் சுமையான சுறாக்கள் !
Part 2 : வலிமை மிகுந்த பளுவான நடிப்புச் சுறாக்கள் ! (ஆனாலும் நடிப்புச் சூரியனின் ஒளிக்கடன் மூலமே ஒளிர முடிந்த சந்திரன்கள்!)
2. திருமிகு எம் ஆர் ராதா :
எதிர்மறையான குணாதிசயங்களை சித்தரிப்பதிலும் குலுங்க வைக்கும் அதிரடி நகைச்சுவையிலும் தனது வழி தனி வழி என்று யாரும் தொட(ர) முடியாத முரட்டுப்பாதையில் பயணித்தவர். ப வரிசைப்படங்களில் பலமான பாலமாக மாறி நடிகர்திலகத்தின் வெற்றிப்பாதை இலக்கை அடைய தனது சிறந்த பங்களிப்பின் மூலம் பெருமை சேர்த்த நடிகவேள்! தலை வணங்குகிறோம்!
https://www.youtube.com/watch?v=b3ku7VgUi30
https://www.youtube.com/watch?v=F9UWGWe_IaY
https://www.youtube.com/watch?v=yoxCRn-5mJY
https://www.youtube.com/watch?v=CZrDTL9Qa4o
https://www.youtube.com/watch?v=BL1MrmbfN9k
eehaiupehazij
9th November 2014, 05:13 PM
நடிப்புத் திமிங்கிலம்(NT) / நடிகர் திலகம் (NT) சுமந்து மகிழ்வித்த சுகமான குட்டிமீன்கள் மற்றும் சுமையான சுறாக்கள் !
Part 2 : வலிமை மிகுந்த பளுவான நடிப்புச் சுறாக்கள் !(ஆனாலும் நடிப்புச் சூரியனின் ஒளிக்கடன் மூலமே ஒளிர முடிந்த சந்திரன்கள்!)
3. திருமிகு டி எஸ் பாலையா
TS Palaiya had been a unique personality of actors with his originality and typical rhythmic body language to situations. His indelible performances in NT movies Thookku Thookki, Paava Mannippu, Palum Pazhamum, Ooty Varai Uravu and Thillaana Mohanaambal are unforgettable etching in our memory forever whenever we think of NT's cult classics! Our Royal Salute for his support to glorify NT!
https://www.youtube.com/watch?v=3YmfXL5zIg8
https://www.youtube.com/watch?v=QAv_49h3Xhc
https://www.youtube.com/watch?v=71XaGO54GX8
https://www.youtube.com/watch?v=-faTXQFHPac
https://www.youtube.com/watch?v=mFUs6yPSCzE
sss
9th November 2014, 05:50 PM
அன்புள்ள திரு வீயார் அவர்களே
திரு சாந்தாராம் அவர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினேன், நமது நடிகர் திலகம் தொடர் பற்றியும் , அவரின் செய்திகளை பதிந்ததையும் சொன்னேன், மன மகிழ்ந்தார். நமது அமைப்புக்கு அவரை அழைத்துள்ளேன், உங்கள் பெயரையும் குறிப்பிட்டேன். நீங்கள் முரடன் முத்து படத்துக்கு அழைப்பு அனுப்பியதை சொன்னார்.
அடுத்த வாரம் திரை இட உள்ள நவராத்திரிக்கு வர முயற்சி செய்வதாக சொல்லி உள்ளார். அவரின் பதிவுகள் விரைவில் நமது தொடரில் வரும் என நம்புகிறேன்.
sss
9th November 2014, 06:23 PM
http://www.iqlikmovies.com/modules/articles/dataimages/ANR_Sivaji_Ganesan_2013_10_07_07_35_49.jpg
Despite acting in a Social Drama role for the first time in Samsaram (29th Dec 1950), ANR happened to get more offers in Folklore films. He acted as a Social Hero in Bharani’s Prema (21-3-1952) again. It was Paradesi (14-1-1953) which established ANR as a top hero in Social Drama. This was the first film from Anjali Pictures production house and directed by L.V.Prasad.
Do you know how many interesting facts this film has?
ANR acted for the first time as a youngster in first half and an elderly man in second half. Being quite young then, ANR faced lot of troubles initially to get the elderly man character in good light.
Veteran playback singer Ghantasala has been singing for ANR right from the film Balaraju . But for the first time Pithapuram Nageshwara Rao sang for ANR in this film. The song was ‘Nenendhuku Raavali’.
This film features ANR and Anjali Devi shown as Dushyanta and Shakuntala respectively which was captured in slow motion for the first time in Telugu Cinema. For that purpose, they got the special effect camera from prominent Hindi film director V.V.Shantaram.
One of the great friend duos in South Indian film industry- ANR and Shivaji Ganesan acted together for the first time in this film. It is interesting to see them act as father-son in it!
Being a stage actor in earlier days, Shivaji Ganesan used to deliver dialogues with loud voice and heavy expressions generating melodrama during his scene filming. The director L.V.Prasad used to call him and tell patiently, “Thambi (Brother in Tamil), this is a film, not a stage drama. There is no need of such heavy acting for films. Please maintain limit!”.
The shooting for this film had a break of six months in between. It was when Shivaji Ganesan got married. After coming for the shooting and facing the camera, Shivaji was looking as if he put on some weight. Seeing this, ANR jokingly said,” Our Shivaji seems to have had good food and treat at his in-laws place!”.
When ANR said with lack of close up shots for the old man’s sympathy acting in the film would not give the much needed effect, L.V.Prasad patiently re-shot all those shots again with ANR without taking it to ego or his professional talent.
(http://www.iqlikmovies.com/hiddentreasures/article/2013/10/07/Paradesi-Interesting-facts-featuring-ANR-and-Sivaj/Interesting-Facts/2158)
sss
9th November 2014, 06:30 PM
சிவாஜி கணேசன் தமிழில் நடித்து பின்னர் “டப்”செய்யப்பட்டு
தெலுங்கில் வெளிவந்த படங்களின் விபரம் -
Filmography
Acted (119)
-0001 Iddaru Medhavulu
1953 Paradesi (1953)
1953 Pempudu Koduku (1953)
1954 Manohara (1954)
1954 Raja Guruvu (1954)
1955 Antha Inthe (1955)
1956 Vidhi Vilasamu (1956)
1956 Amarajeevi (1956)
1957 Parasakthi (1957)
1957 Ratnagiri Rahasyam (1957)
1957 Thalavanchani Veerudu (1957)
1958 Bommala Pelli (1958)
1958 Veera Pratap (1958)
1958 Badi Panthulu (1958)
1958 Pathi Bhakthi (1958)
1959 Sampurna Ramayanam (1959)
1959 Antha Peddale (1959)
1959 Goppinti Ammayi (1959)
1959 Veera Pandya Kattabrahmana (1959)
1959 Sabhash Pilla (1959)
1959 Chevilo Rahasyam (1959)
1960 Pillalu Thechina Challani Rajyam (1960)
1961 Thalli Ichina Agnya (1961)
1961 Veeradhi Veerudu (1961)
1961 Anumanam (1961)
1961 Kastasukhalu (1961)
1961 Kanyaka Parameswari Mahathyam (1961)
1961 Jeeva Bhoomi (1961)
1961 Papa Pariharam (1961)
1962 Sthree Jeevitham (1962)
1962 Khadga Veerudu (1962)
1962 Pavitra Prema (1962)
1962 Sri Valli Kalyanam or Subrahmanya Swamy Mahatyam (1962)
1962 Prayaschittam (1962)
1962 Pathi Gowravame Sathikanandam (1962)
1963 Mamakaram (1963)
1963 Kodukulu Kodallu (1963)
1963 Chittooru Rani Padmini (1963)
1964 Raktha Thilakam (1964)
1964 Aadarsha Sodarulu (1964)
1964 Karna (1964)
1964 Dongalu Doralu (1964)
1964 Kavala Pillalu (1964)
1964 Ramadasu (1964)
1965 Mangalyame Maguva Dhanam (1965)
1965 Raja Drohi (1965)
1965 Singapore C I D (1965)
1965 Preminchi Pelli Cheshuko (1965)
1966 Maa Annayya (1966)
1966 Nerasthulu (1966)
1966 Dhaiva Shasanam (1966)
1967 Siva Leelalu (1967)
1967 Saraswathi Sapadam (1967)
1967 Anumanam Penubhutham (1967)
1968 Muddu Papa (1968)
1968 Galata Pellillu (1968)
1969 Aadarsha Pellillu (1969) 1970 Koteswarudu (1970)
1970 Viplavam Vardhillali (1970)
1970 Bayankara Gudachary (1970)
1970 Singapore Hanthakulu (1970)
1971 Manasichi Chudu (1971)
1971 Swargam (1971)
1971 Paga (1971)
1971 Thindipothu Ramudu (1971)
1971 Sri Maha Vishnu Mahima (1971)
1972 Ranganna Sapadham (1972)
1972 Maa Inti Jyothi (1972)
1973 Bangaru Babu (1973)
1973 Bhaktha Thukaram (1973)
1973 Guru Dhakshina (1973)
1974 Gowravamu (1974)
1974 Jalsa Bullodu (1974)
1974 Thirugubatu Veerudu (1974)
1975 Dhunnevanidhe Bhoomi (1975)
1975 Dongallo Monagadu (1975)
1975 Pedda Manishi (1975)
1976 Raja Raja Choludu (1976)
1976 Bangaru Pathakam (1976)
1976 Maa Manchi Thalli (1976)
1976 Thalli Manasu (1976)
1976 Hero 76 (1976)
1976 Brahma Mudi (1976)
1977 Bharath Nivas (1977)
1977 Raja Korina Roja (1977)
1977 Devudichina Bharya (1977)
1977 Jeevana Theeralu (1977)
1977 Chanakya Chandragupta (1977)
1977 Manasunna Manishi (1977)
1977 Chethilo Cheyyesi Cheppu (1977)
1977 Gruha Pravesamu (1977)
1977 Raga Dweshalu (1977)
1977 Ragalu Anuragalu (1977)
1977 Singanna Sapadham (1977)
1978 Prajala Kosam (1978)
1978 General Chowdary (1978)
1979 Sahasavanthuralu (1979)
1980 Pilot Premnath (1980)
1981 Hrudayamunna Manishi (1981)
1981 Siva Bhaktha Vijayamu (1981)
1981 Devudu Em Chestunnadu (1981)
1982 Maro Dharma Raju (1982)
1982 Nivurugappina Nippu (1982)
1982 Viplava Jyothi (1982)
1983 Bejavada Bebbuli (1983)
1983 Doctor Gari Kodalu (1983)
1983 Pidugu Lanti Manishi (1983)
1984 Ammayilu Preminchandi (1984)
1986 Athma Banduvu (1986)
1987 Mugguru Kathanayakulu (1987)
1987 Rajarishi Vishwamitrudu (1987)
1987 Vishwanatha Nayakudu (1987)
1987 Agni Puthrudu (1987)
1989 Yamudiki Yamudu (1989)
1989 Khaidhi No 79 (1989)
1989 Brahmachari (1989)
1993 Kshathriya Puthrudu (1993)
1995 Boxer (1995)
1999 Narasimha (1999)
தகவல் : நன்றி Dr R.K.சேகர்
http://www.sbdbforums.com/post/shivaji-ganeshan-dubbing-movies-6889407?highlight=sivaji+ganesan
JamesFague
9th November 2014, 06:39 PM
கலைகோவிலில் உள்ள கணேசரை களங்க படுத்த வேண்டாம் என்றும் இந்த புனித திரியை
மாசு படுத்த வேண்டாம் என்றும் கேட்டு கொள்கிறேன்.
eehaiupehazij
9th November 2014, 06:41 PM
நடிப்புத் திமிங்கிலம்(NT) / நடிகர் திலகம் (NT) சுமந்து மகிழ்வித்த சுகமான குட்டிமீன்கள் மற்றும் சுமையான சுறாக்கள் !
Part 2 : நடிப்பு வலிமை மிகுந்த தாய்ச் சுறாக்கள் !(ஆனாலும் நடிப்புச் சூரியனின் ஒளிக்கடன் மூலமே ஒளிர முடிந்த சந்திரன்கள்!)
4. திருமதி M.V. ராஜம்மா :
கர்ணனின் தாயாக நடித்து நடிகர்திலகத்திற்கு இறவாப்புகழ் சேர்த்தவர். வணங்குகிறோம்! சிரித்தால் மிக அம்சமாக இருப்பார்கள்.
சிரிக்கவிட்டால்தானே ! அழுகையின் அகராதிப் பெயர் அன்புக்குரிய ராஜம்மா! அழுகையில் NT : Raajammaa ratio 1 : 10 !
https://www.youtube.com/watch?v=pslsqW3vslk
sss
9th November 2014, 06:42 PM
PBSKIDS.ORG Arlington Texas : குழந்தைகள் தொலைக்காட்சியில் நிகழ்ச்சியை பார்த்து ஒரு அன்பர் கொடுத்துள்ள தகவல்:
EE Lines oka Us abhimaani Raasinavi.:
Yesterday i was watching a kids channel affiliated to PBSkids.org where they were showing the history of India. When they were showing Ayodhya and telling about Lord Rama and Sita they showed anna garu's movie to show Lord Rama. That was a feast to all our NTR fans to enjoy as he is recognized internationally to show how Lord Rama looks like. They also showed Tanjore King as Sivaji Ganesan and Asoka as Sharukh Khan.
All of our NTR fans enjoy this news. No one can beat NTR.
The above Lines Shows The Power and action of NTR And Shivajiganeshan
eehaiupehazij
9th November 2014, 07:13 PM
நடிப்புத் திமிங்கிலம்(NT) / நடிகர் திலகம் (NT) சுமந்து மகிழ்வித்த சுகமான குட்டிமீன்கள் மற்றும் சுமையான சுறாக்கள் !
Part 2 : நடிப்பு வலிமை மிகுந்த தாய்ச் சுறாக்கள் !(ஆனாலும் நடிப்புச் சூரியனின் ஒளிக்கடன் மூலமே ஒளிர முடிந்த சந்திரன்கள்!)
5. திருமதி கண்ணாம்பா : மறக்க முடியுமா மனோகரனின் வீரத்தாயாக உதிர்த்த 'பொறுத்தது போதும்....பொங்கியெழு' ! உத்தம புத்திரன் பார்த்திபனுக்கும் உத்தம வில்லன் விக்கிரமனுக்கும் இடையே பாசப் பரிதவிப்பில் பார்ப்போரை பதற வைத்த உத்தமத் தாயை!?
https://www.youtube.com/watch?v=a3IQKvcZEPQ
https://www.youtube.com/watch?v=0Dnjbi2zB2M
https://www.youtube.com/watch?v=dtw4_1JH9fM
eehaiupehazij
9th November 2014, 07:30 PM
நடிப்புத் திமிங்கிலம்(NT) / நடிகர் திலகம் (NT) சுமந்து மகிழ்வித்த சுகமான குட்டிமீன்கள் மற்றும் சுமையான சுறாக்கள் !
Part 2 : நடிப்பு வலிமை மிகுந்த தாய்ச் சுறாக்கள் !(ஆனாலும் நடிப்புச் சூரியனின் ஒளிக்கடன் மூலமே ஒளிர முடிந்த சந்திரன்கள்!)
6. திருமதி பண்டரிபாய் :
பராசக்தி முதல் கவுரவம் வரை நடிகர்திலகம் பண்டரிபாய்க்கு வயதுக்கு ஏற்ற நாயகராக தன்னை உருமாற்றிக்கொண்டே இருந்தார் என்பதே திரையுலகில் சிவாஜிகணேசனின் முதல் கதாநாயகிக்கு கிடைத்த மாபெரும் கவுரவம்! நன்றியுடன் நினைவுகூர்கிறோம்!
https://www.youtube.com/watch?v=PGBryGdL0FQ
https://www.youtube.com/watch?v=JBl4tb0flFI
https://www.youtube.com/watch?v=Rj1O6ki9xeE
Gopal.s
9th November 2014, 08:19 PM
கலை வேந்தன்,
அதற்கு இது பதிலல்லவே என்ற ரீதியிலேயே சால்ஜாப்பு பதில்கள்.
கூட்டி கழித்து சில பொழுது போக்கு அம்சங்களை கழித்தால் ,நீங்கள் பீற்றி கொண்டு அலையும் கவிதை வரிகளை பெரும்பாலும் எழுதி குவித்த கண்ணதாசனும் ,வாலியும் கூட மது,மாதுக்களை தவிர்த்ததில்லை. (ரசிகர்களை விட்டு விடுங்கள்.No comments )நகைச் சுவை உங்கள் பெரும் பலம்.
இரு காங்கிரஸ் இணைந்து புதுவை தேர்தலை சந்தித்த போது காமராஜ்,இந்திராவிற்கு நடுவில் பிரதானமாக நடிகர்திலகம். காமராஜர் ,மறைவுக்கு முன் கடைசியாய் போனது சிவாஜியின் அன்னை இல்லத்திற்கு அவரை வாழ்த்த.
இந்திராவுடன் சிவாஜிக்கு இருந்த செல்வாக்கு ,அவர் கௌரவமாகவே நடத்த பட்டார். ஆனால் அவ்விடம், தஞ்சாவூர் இடைதேர்தல் பிறகு?மணியன்,இந்த சந்திப்பை பற்றி எழுதி குவித்தவை ,உங்கள் தலைவரின் நிலையை தெளிவாக்கும்.
முரளியுடன் நான் இந்த தவறை சொல்லி (சித்ரா கிருஷ்ணசாமி- ஆயிரத்தில் ஒரு புரோக்கர்.) அவரும் தவறி எழுதியதாக ஒப்பு கொண்டார். இது ஒரு சாதாரண எழுத்து பிழை. தகவல் பிழை அல்ல.இது நடந்து பலநாட்கள் ஆனது.
eehaiupehazij
9th November 2014, 08:57 PM
நடிப்புத் திமிங்கிலம்(NT) / நடிகர் திலகம் (NT) சுமந்து மகிழ்வித்த சுகமான குட்டிமீன்கள் மற்றும் சுமையான சுறாக்கள் !
PART 2 : வலிமை மிகுந்த பளுவான நடிப்புச் சுறாக்கள் !(ஆனாலும் நடிப்புச் சூரியனின் ஒளிக்கடன் மூலமே ஒளிர முடிந்த சந்திரன்கள்!)
7. திருமிகு எஸ் வி சுப்பையா :
கப்பலோட்டிய தமிழனுக்கு மகாகவி சுப்பிரமணிய பாரதியாராக கை கொடுத்தவர். காவல்தெய்வம் படம் மூலம் நடிகர்திலகம் தனது நன்றியறிதலை நவின்றார். மூன்று தெய்வங்களிலும்; நடிகர்திலகம் அவருக்கு கவுரவம் சேர்த்தார். வணங்குகிறோம் !
https://www.youtube.com/watch?v=27IdJ4o71KQ
https://www.youtube.com/watch?v=0lFpu5z0oPU
https://www.youtube.com/watch?v=twODofU8gQY
RAGHAVENDRA
9th November 2014, 09:54 PM
டியர் சுந்தரபாண்டியன் சார்
மருத்துவர் சார் இங்கு வரும் நாளை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.
eehaiupehazij
9th November 2014, 09:58 PM
நடிப்புத் திமிங்கிலம்(NT) / நடிகர் திலகம் (NT) சுமந்து மகிழ்வித்த சுகமான குட்டிமீன்கள் மற்றும் சுமையான சுறாக்கள் !
PART 2 : வலிமை மிகுந்த பளுவான நடிப்புச் சுறாக்கள் !(ஆனாலும் நடிப்புச் சூரியனின் ஒளிக்கடன் மூலமே ஒளிர முடிந்த சந்திரன்கள்!)
8. திருமிகு வி நாகையா :
நடிகர்திலகத்தின் மரியாதைக்குரிய மூத்த கலைஞர். தெய்வமகன் திரைக்காவியத்தில் நடிகர்திலகத்தின் மரியாதை வெளிப்பாடு நன்கு தெரியும். நடிகர்திலகத்தின் படங்களில் நிறைகுடமாக மனம் கவர்ந்தவர். சரசுவதி சபதம், மங்கையர் திலகம், எதிர்பாராதது, பாலும் பழமும், பாவமன்னிப்பு.....இதயம் கனிந்த கரங்கள் குவிந்த நன்றியறிதலை உரைக்கிறோம்!
https://www.youtube.com/watch?v=1r4xuC_9hKo
https://www.youtube.com/watch?v=9Y5PPCeNqkg
RAGHAVENDRA
9th November 2014, 09:58 PM
டியர் சிவாஜி செந்தில்..
சுகமான குட்டிச்சுறாக்களும் சுமையான திமிங்கிலங்களும்... நல்ல வித்தியாசமான கோணத்தில் தங்களுடைய பார்வை.. பாராட்டுக்கள்..
இதனுடைய சிறப்பை மேலும் உணர வேண்டும். அதற்கு தங்களுடைய விரிவான அலசல்கள் இடம் பெற வேண்டும். அதைப் படித்து நாங்கள் இன்புற வேண்டும்.
ஒவ்வொரு சுகமான குட்டிச் சுறா அல்லது சுமையான திமிங்கிலம் பற்றி விவாதிக்கும் போதும் ஒரே யொரு காணொளி போதுமல்லவா.. ஒரு பானைக்கு ஒரு சோறு போதுமே... தேர்ந்தெடுக்கும் அந்த ஒரு பாட்டு அல்லது காட்சியில் அந்த குட்டிச் சுறா அல்லது திமிங்கிலத்தின் பங்கு பற்று விரிவாக எழுதலாமே...
அது மட்டுமின்றி இதன் மீதான விவாதங்களும் இடம் பெற்றால் இதனுடைய அருமை இன்னும் ஆழமாக உணரப்படும்.. ஒரு விவாதத்திற்குப் பின்னர் அடுத்த காட்சி அல்லது பாடலைப் பகிர்ந்து கொள்ளலாமே..
RAGHAVENDRA
9th November 2014, 10:07 PM
Dear friends,
Thus far we are not aware of any saturation point with regard to the analyses on NT.. It will be the case in future too.
But we have to preserve it.
This can be achieved by avoiding as far as possible quotes of earlier posts...
நண்பர்களே..
நடிகர் திலகம் என்னும் அதிசயத்தைப் பற்றி அலச நமக்கு என்றுமே அலுப்பும் சலிப்பும் வந்ததில்லை..வரவும் வராது..
ஆனால் அந்த நிலையைத் தொடர நாம் பாடு பட வேண்டும்...
அதற்குகந்த சிறந்த வழி .. மீள் பதிவுகள் தவிர்க்கப் பட வேண்டும்...
பல்லாயிரக் கணக்கில் நூல்கள் எழுதும் அளவிற்கு எழுத்து வல்லமை வாய்ந்தவர்கள் நமது நடிகர் திலகம் திரியில் பங்களித்து வந்துள்ளார்கள். இனிமேலும் வருவார்கள்..நடிகர் திலகம் என்னும் அட்சய பாத்திரம் அள்ள அள்ளக் குறையாத அமுத சுரபியாய் நமக்கு கருத்துக்களை வாரி வழங்குகிறது..
அந்த அட்சய பாத்திரத்தை நாம் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்..
அதற்கு நம் அநைவரின் ஒத்துழைப்பும் முற்றிலும் வேண்டும்.
அதற்காகப் பாடு படுவோம்...
ஒவ்வொருவரின் கருத்திற்கும் முக்கியத்துவம் கொடுத்து வரவேற்போம்..
முடிந்த வரை ஒரு தலைப்பு முடிந்த பின்னரே அடுத்த தலைப்பினை கருத்துப் பரிமாற்றத்திற்கு எடுத்துக் கொள்வோம்.
Murali Srinivas
9th November 2014, 10:23 PM
நண்பர் கலைவேந்தன் அவர்களுக்கு,
தவறை சுட்டிக் காட்டியதற்கு மிக்க நன்றி. நான் வரலாற்று சுரங்கமும் இல்லை. அப்படி நான் என்னை நினைத்துக் கொண்டதுமில்லை. சொல்லிக் கொண்டதுமில்லை. அன்பின்பால் நண்பர்கள் சொல்லியிருந்தால் உடனே அதை என் தலையில் ஏற்றிக் கொண்டதுமில்லை. ஆனால் அப்படி நண்பர்கள் சொன்னது உங்களுக்கு எவ்வளவு பயன்படுகிறது பாருங்கள்! உங்கள் மனதில் என் மேல் உள்ள கோபத்தையெல்லாம் வெளிப்படுத்துவதற்கு ஒரு வாய்ப்பாகவும் அமைந்து விட்டதில் எனக்கு மகிழ்ச்சியே!
இனி பயன்படுத்திக் கொள்வதில் தேர்ந்தவர் என்பது விஷம் கக்கும் வார்த்தைகள் என்பதை நீங்கள் சொல்லித்தான் தெரிந்துக் கொண்டேன். உங்களுக்காக ஒரே ஒரு Flash Back. 1977 ஜூன் மாதம் 29-ந் தேதி என்று நினைவு. மறுநாள் தமிழக முதல்வராக எம்ஜிஆர் அவர்கள் பதவியேற்க போகிறார். ஆளுநரை சந்தித்து மந்திரிசபை பட்டியலை அளிக்கிறார். பட்டியலில் யாரும் எதிர்பார்க்காத ஒரு பெயர் இருக்கிறது. அந்த நபர் திரு. நாராயணசுவாமி முதலியார். சட்டத்துறை அமைச்சராக பதவியேற்றார் என்பது என் நினைவு. எம்ஜிஆர் அவர்களிடம் நிருபர்கள் கேள்வி கேட்கின்றனர். இவர் உங்கள் கட்சியை சேர்ந்தவர் இல்லையே என்று? அதற்கு எம்ஜிஆர் அவர்கள் பதில் சொல்கிறார். ஏன் கட்சி அரசியலை சேர்ந்தவர்கள் மட்டும்தான் மந்திரியாக வேண்டுமா? சட்டத்துறையில் பல வருட அனுபவம் உடையவர் இவர். இவரை போன்ற நபர்களை நான் பயன்படுத்திக் கொள்ள போகிறேன் என்று சொல்கிறார். திரு .நாராயணசுவாமி சட்டமன்ற உறுப்பினராக இல்லாதிருந்த காரணத்தினால் அவர் மேலவை உறுப்பினராக ஆக்கப்பட்டார் அமைச்சராக 1980 பிப் 17 வரை பதவியும் வகித்தார். எம்ஜிஆர் அவர்கள் திரு நாராயணசுவாமி முதலியார் அவர்களை பயன்படுத்திக் கொள்ள போகிறேன் என்பதை என்ன அர்த்தத்தில் சொன்னாரோ அதே அர்த்தத்தில்தான் மணியனை பற்றியும் நான் குறிப்பிட்டேன். இதில் எங்கே தவறு அல்லது விஷம் கக்கும் வார்த்தைகள் இருக்கிறது என்பதை திரியின் வாசகர்களே முடிவு செய்யட்டும்.
உங்களின் பதிலை எம்ஜிஆர் அவர்களின் திரியில் மட்டும் பதிவு செய்தால் எங்கே என்னை வரலாறு அறியாதவன் என்ற "உண்மையை" பெரும்பாலானோர் அறியாமல் போய் விடுவார்களோ என்ற நல்ல எண்ணத்தில் இங்கே நடிகர் திலகம் திரிக்கும் வந்து பதிவிட்ட உங்கள் நல்ல மனதிற்கு மீண்டும் மிக்க நன்றி நண்பரே! அது மட்டுமல்ல உங்கள் பதிவிற்கு like கொடுத்து நன்றியும் தெரிவித்திருக்கும் நண்பர் சைலேஷ் பாசு அவர்களுக்கும் நன்றிகள் பல!
அன்புடன்
eehaiupehazij
9th November 2014, 10:39 PM
நடிப்புத் திமிங்கிலம்(NT) / நடிகர் திலகம் (NT) சுமந்து மகிழ்வித்த சுகமான குட்டிமீன்கள் மற்றும் சுமையான சுறாக்கள் !
PART 2 : வலிமை மிகுந்த பளுவான நடிப்புச் சுறாக்கள் !(ஆனாலும் நடிப்புச் சூரியனின் ஒளிக்கடன் மூலமே ஒளிர முடிந்த சந்திரன்கள்!)
9. திருமிகு.வி கே ராமசாமி : பராசக்தி காலம் தொட்டு நடிகர்திலகத்தின் உற்ற நண்பர். நகைச்சுவையில் நயத்தையும் குணசித்திரத்தில் தரத்தையும் வெளிப்படுத்தி நடிகர்திலகத்தின் VPKB, பார் மகளே பார், எங்க மாமா, திரிசூலம் உள்ளிட்டபல படங்களுக்கு பெருமை சேர்த்தவர். நெகிழ்வுடன் நினைவுகூர்கிறோம்!
https://www.youtube.com/watch?v=LiP820rjIX8
eehaiupehazij
9th November 2014, 11:33 PM
ஒவ்வொரு சுகமான குட்டிச் சுறா அல்லது சுமையான திமிங்கிலம் பற்றி விவாதிக்கும் போதும் ஒரே யொரு காணொளி போதுமல்லவா.. ஒரு பானைக்கு ஒரு சோறு போதுமே... தேர்ந்தெடுக்கும் அந்த ஒரு பாட்டு அல்லது காட்சியில் அந்த குட்டிச் சுறா அல்லது திமிங்கிலத்தின் பங்கு பற்று விரிவாக எழுதலாமே...
by raghavendar sir.
அன்பு நண்பர் திரு.ராகவேந்தர். அள்ளித்தெளித்த கோலமாகி விடக்கூடாது என்ற கோணத்தில் தங்களது கருத்தை உணர்கிறேன். நடிகர்திலகம் என்னும் கடலை அலசுவது குருடன் யானையை புரிந்துகொள்வது போன்றதே. ஊக்கம் தந்தமைக்கு நன்றி. வழிகாட்டுதல்படி அடுத்த அடிகளை வைக்கிறேன். செந்தில்.
sss
9th November 2014, 11:42 PM
''An apostle of art, a paragon of virtue, and a master of craft- all put into one is Dr. Sivaji .'' -
By Dr.Rajkumar ( இந்திய நடிகர்களில் முதன் முறையாக டாக்டர் பட்டம் பெற்ற முதல் நடிகர் ராஜ்குமார் அவர்கள் நமது நடிகர் திலகம் பற்றி கூறியது)
anm
10th November 2014, 01:09 AM
Dear Gopal Sir,
Better late than Never!!! Even though belated, very sincere and warm wishes for your Birth Day on 07 November.
Anand
Gopal.s
10th November 2014, 04:23 AM
கலை வேந்தன்,
சக்கையை சுமந்து சாறை வெளிஏற்றும் கலை எனக்கு தெரியாது.
பெரியாரின் மனித சமத்துவம்,பெண் சமத்துவம் என்ற இரு கொள்கைகள்தான் முக்கியம்.பெரியாரே அவர் சொன்னதை அப்படியே சிந்திக்காமல் செய்வோரை விரும்பியதில்லை.அவர் எல்லாவற்றையும் உரக்க சொன்னது ,அன்றைய நாட்களின் காலத்தின் கட்டாயம்.தேவை.
தினமும் குளித்தாலோ,பெண்கள் கர்ப்ப பை சுமந்தாலோ ,பெரியாரை தொடரவில்லை என்று அர்த்த படுத்தும் போக்கு உமக்குள்ளது.
இன்றைய காலகட்டத்தில் ஜாதி வாரி கணக்கெடுப்பில்,ஜாதிக்கு ஏற்ப ,சமூக உரிமைகள் வழங்குவதை பேசி,எந்த சாதி பிற்படுத்தியதோ,அதே அமைப்பு உரிமையும் வழங்க கேடயமாகும் காலம். இன்றைக்கு சாதி ஒழிப்பை பற்றி பேசாமல், அவற்றை அங்கீகரித்து ,சமத்துவம் பேசுவதே சாத்தியமான ,நியாயமான நிலைப்பாடு. இனியாவது,என் கொள்கைகள் சார் விஷயங்களில் மூக்கை நீட்ட வேண்டாம். வீண் துதி பாடிகளை விட நான் எல்லாவற்றிலும் தெளிவானவன்.
அத்தோடு என்னை கவராத,எனக்கு பிடிக்காத மனிதர்களின் நற்செயல்களை புறம்தள்ளும் வழக்கம் எனக்கு இல்லை.அவசர கோலத்தில் வந்ததெனினும் 68%நற்செயலே. அதை விட நற்செயல் ,அதற்கு முன் க்ரீமி லேயர் ஒதுக்கி,வருமான வரம்பு வைத்து,இட ஒதுக்கீட்டு மாற்றம். வெற்றி பெறாமல் போனாலும் நன் முயற்சி.
ஓரளவு பெரியார்-மார்க்ஸ் இணைப்பு முயற்சி.
உங்களோடு உரையாடுவது சுவாரஸ்யமாக இருந்தாலும்,நீங்கள் தமிழர்கள் பெருமை கொள்ள வேண்டிய நடிகர்திலகத்தின் மீது காட்டும் அனாவசிய காழ்ப்புணர்ச்சி. சிறு வயதில் ,சில mono -theist மதங்கள் ,மற்ற மதத்தினரின் மீது காழ்புணர்ச்சி காட்டியது போல நடந்த மூளை சலவை.சிறு வயதில் கேட்டு வளர்ந்த பொய்கள். நிலைமை மாற்றி ,கண்டு,கேட்டு,உண்டு,உயிர்த்து உங்கள் கலையுணர்வை வளர்க்கவேனும் ,சிறிதே என் எழுத்துக்களுக்கு செவி தாருங்கள்.இதை திறந்த மனதுடன் அணுகுவீர்கள் என்ற நம்பிக்கை உண்டு.பொய்த்தாலும் ,நஷ்டம் எனக்கில்லை.
eehaiupehazij
10th November 2014, 07:09 AM
நடிப்புத் திமிங்கிலம்(NT) / நடிகர் திலகம் (NT) சுமந்து மகிழ்வித்த சுகமான குட்டிமீன்கள் மற்றும் சுமையான சுறாக்கள் !
Part 2 : வலிமை மிகுந்த பளுவான நடிப்புச் சுறாக்கள் !(ஆனாலும் நடிப்புச் சூரியனின் ஒளிக்கடன் மூலமே ஒளிர முடிந்த சந்திரன்கள்!)
10. திருமிகு.டி ஆர் ராமச்சந்திரன் :
நடிகர்திலகத்தின் ஆரம்பகால படங்கள் பலவற்றில் இணைகதாநாயகனாக வலம் வந்தவர். வாழ்க்கை படத்தில் வைஜயந்தி இணை. சபாபதி திரைப்படத்தில் ஹாலிவுட் நடிகர் 'எட்டி கான்டர்' பாணியில் நகைச்சுவை கதாநாயகனாக மிளிர்ந்தவர். நடிகர்திலகத்துடன் கல்யாணம் பண்ணியும் பிரம்மசாரி, விடிவெள்ளி, கள்வனின் காதலி (சதாரம் நாடகமேடை ஆடல் பாடலில் நடிகர்திலகத்துடன் அடிக்கும் கூத்து இன்றும் ரசிக்கப்படுகிறது). தில்லானா மோகனாம்பாள் முக்கிய குணசித்திர வேடத்தில் தன் மதிப்பைக் கூட்டினார். நடிகர்திலகம் புகழேணியில் ஏறிட உடனிருந்தவருக்கு நன்றியும் வணக்கங்களும் !!
Observe NT's tonal adjustments to suit Chandrababu singing for him. Also, the way he lifts 'alek' TRR reminds us the Paarthal Pasi Theerum song " Pillaikku Thanthai Oruvan' wherein he lifts boy Kamal like this only!! Younger days of NT to be cherished in the good company of equal acting weight 'payilvaans' like TRR!
https://www.youtube.com/watch?v=o_J41Er1GjU
நடிப்புத் திமிங்கிலம் ஒரு பாத்திரப் படைப்பை உள்வாங்கி நடிக்கும்போது உடல்மொழியில் கண்கள் புருவங்கள் கன்னங்கள் தாடை முதல் பாதம் வரை காமெராமேனுக்கு சவால் வைப்பார். இம்மாதிரி அதிக அளவு அங்க ஆற்றலை வெளிப்படுத்த வேண்டிய பாடலுக்கேற்ற இசைக்கு இசைந்த ஆடல் அசைவுகளிலுமா ? அப்போதுதான் பிறந்த ஆட்டுக்குட்டி போல குதித்துக்கொண்டே இருக்கும் கால்கள்......இந்தப் புத்துணர்ச்சி அதன்பிறகு அவர் வெளிக்கொணரவேயில்லையே ! இக்காட்சி நடிகர்திலகத்தின் உத்தமபுத்திரன் மிகவேக ஒரிஜினல் குதிரை சவாரிக்கு நிகரான அதிகபட்ச ஆற்றல் வெளியீட்டின் சாட்சி!.ஜாடிக்கு ஏற்ற மூடியாக TRRன் trade mark சேஷ்டைகள்.....though not colorful like the contemporary Hollywood dancing demigods Gene Kelly and Fred Astaire, it is a 'salt and pepper' feast to the eyes!
https://www.youtube.com/watch?v=STeAHQyK1Kw
The End of this part of write-up related to senior artists to NT. These tit-bits type of write-ups are just like a teaser trailer for a movie. Next part I intend to cover up on the contemporaries of NT like SSR, Muthuraaman, Asokan,Nambiar, Nagesh, Chandrababu, Manorama....and all his heroines.....like that. Later, depending on the reception, I may like to present some in depth analysis on all these actors who were part and parcel of NT's career, one by one, as suggested by our respected Raghavendra Sir.
Senthil
RAGHAVENDRA
10th November 2014, 07:23 AM
மிக்க நன்றி சிவாஜி செந்தில் சார்...
இன்னும் தங்கள் தொடரில் இடம் பெற வேண்டியவர்கள் ஏராளம்... தொடருங்கள் தங்கள் ஆய்வை... படிக்கக் காத்திருக்கிறோம்...அவர் ஒவ்வொரு தலைமுறைக் கலைஞர்களுக்குள்ளும் இது போன்ற பல கலைஞர்களை ஊக்குவித்து வந்திருக்கிறார். அதில் நடிகர்கள் மட்டுமின்றி தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், தொழில்நுட்பத் துறையில் ஒளிப்பதிவாளர்கள், படத்தொகுப்பாளர்கள், என ஒவ்வொருவருக்கும் சவால் விடும் வகையில் தங்கள் பங்களிப்பினைத் தந்துள்ளார். அவருடைய காட்சிகளைத் தொகுத்தவர்களும் எதை விடுப்பது, எதை வைத்துக்கொள்வது எனத் திணறியிருக்கிறார்கள். அதே போல ஒளிப்பதிவாளர்களும் படப்பிடிப்பின் போது காமிரா இயக்குவதை கூட மறந்து அவருடைய நடிப்பில் லயித்திருக்கிறார்கள்...
இது போன்ற பல கோணங்களில் தங்களுடைய ஆய்வினைத் தொடர வேண்டுகிறேன்.
eehaiupehazij
10th November 2014, 07:40 AM
மிக்க நன்றி சிவாஜி செந்தில் சார்...
இன்னும் தங்கள் தொடரில் இடம் பெற வேண்டியவர்கள் ஏராளம்... தொடருங்கள் தங்கள் ஆய்வை... படிக்கக் காத்திருக்கிறோம்...அவர் ஒவ்வொரு தலைமுறைக் கலைஞர்களுக்குள்ளும் இது போன்ற பல கலைஞர்களை ஊக்குவித்து வந்திருக்கிறார். அதில் நடிகர்கள் மட்டுமின்றி தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், தொழில்நுட்பத் துறையில் ஒளிப்பதிவாளர்கள், படத்தொகுப்பாளர்கள், என ஒவ்வொருவருக்கும் சவால் விடும் வகையில் தங்கள் பங்களிப்பினைத் தந்துள்ளார். அவருடைய காட்சிகளைத் தொகுத்தவர்களும் எதை விடுப்பது, எதை வைத்துக்கொள்வது எனத் திணறியிருக்கிறார்கள். அதே போல ஒளிப்பதிவாளர்களும் படப்பிடிப்பின் போது காமிரா இயக்குவதை கூட மறந்து அவருடைய நடிப்பில் லயித்திருக்கிறார்கள்...
இது போன்ற பல கோணங்களில் தங்களுடைய ஆய்வினைத் தொடர வேண்டுகிறேன்.
நன்றி நண்பர் ராகவேந்தர் அவர்களே நீங்கள் குறிப்பிட்டது போல நடிகர்திலகம் புகழுக்குப் பின் எத்தனையோ உழைப்பாளிகள் வகைப்படுத்திக்கொண்டு கிரியா ஊக்கியாக தங்களின் மேலான கருத்துப்பகிர்தல்களுடன் ஏனைய அன்பு நண்பர்களின் ஆக்கம் தரும் ஊக்கங்களுடன் தொடர்கிறேன். சுடர் விளக்காயினும் தூண்டுகோல் தேவை. அதே சமயம் இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன் கெடுபபாரில்லானும் தானே கெடும் என்னும் எச்சரிக்கை உணர்வையும் அகத்தே இருத்தி நேர்மறை எண்ணங்களுடன் செயலாற்றவே ஆசைப்படுகிறேன், திரியின் மாண்பு பங்கப்படாத வண்ணம் எனது பங்களிப்புகளுடன்.விழைவதெல்லாம் நடிகர்திலகத்தின் புகழ்பரப்பி நெஞ்சம் நிறைவதே!
Gopal.s
10th November 2014, 09:24 AM
நடிகர்திலகம்- கலை மரபின் நீட்சி -திசை மரபின் எழுச்சி.- பகுதி-1
என் பிறந்த நாள் அன்று,என் பிறப்பிற்கு ஒரு சிறந்த அர்த்தம் அளித்த என் மண்ணின் அசல் வித்து, உலகதிறமைகளின் மொத்த உறைவிடம்,அங்கீகாரம் பெறாத சரஸ்வதி மைந்தன் ,என் கலைஞானத்தை முழுமை பெற செய்த தெய்வ மகன், திறமை தவிர வேறு கண்டிலா உத்தம புத்திரன் பற்றி ஒரு ஆய்வு கட்டுரை தொடங்கும் உத்தேசம் இருந்தது.சரியான பொருட் தேர்வு ஏற்கெனவே செய்து முடித்தது. ஆய்வு தொடங்க இதுவே தருணம். விஷயங்கள் அறிந்திருந்தாலும் , சரி பார்க்க தொகுக்க நேரம் செலவாகும்.(இங்கே உள்ள அங்கத்தினர்களிடம் நான் எதிர்பார்த்த எண்ண எழுச்சி இருக்குமா என்பது சந்தேகம்). ஆனால் ஒரு முரளி,ஒரு ராகவேந்தர்,ஒரு கார்த்திக்,ஒரு வாசு ,ஒரு சாரதி, ஒரு வெங்கி ,ஒரு சி.க,ஒரு கல்நாயக்,ஒரு ஆதிராம்,ஒரு கலைவேந்தன் ,மற்றும் முகம் தெரியா பல அறிவு ஜீவிகள் (PM )இருக்கும் தைரியத்தில் துவங்குகிறேன்.
எந்த ஒரு கலையும் எக்காலத்திலும் முழுமை கண்டதில்லை. நாளும் வளரும், தேயும்,தேய்ந்து வளரும்,மாறும்,புதுப்பிக்கும், எல்லா திசையிலும் உள்ள அம்சங்கள் கவர்ந்து புதுமை காணும்,விஞ்ஞானத்தின் கூறுகளால் அக-புற மாறுதல்கள் எய்தும் ,மனித வாழ்க்கையின் வளர்ச்சிகளால் புற மாறுதல்கள் காணும்,இயல்பு கொண்டது.எந்த புள்ளியிலும் தொடங்கி,எங்கும் முடிவெய்துவதல்ல. அதே போல முழுதும் ஓர் இரவில் மாற்றம் காண்பதல்ல. ஒரு மனிதர்,ஒரு நிகழ்வு,என்று இதனை நிகழ்த்தி விட முடியாது. இது ஒரு பிரத்யேக குழு சார்ந்த எண்ண எழுச்சி,பொழுது போக்கு,கலாச்சாரம்,நுண்ணரசியல்,அயல் நுழைவுகளை அங்கீகரிக்கும் போக்கு இவை சார்ந்து குறுகிய வட்டத்தில் நிகழ்பவை. மொழி சாரா கலைகள் நீட்சி பெரும் கூறுகள் ,அங்கீகாரம் பெரும் சாத்தியங்கள் அதிகம்.(ஓவியம்,சிற்பங்கள் போன்றவை).மொழி சார் கலைகளோ பிரத்யேக குழுவின் அங்கீகாரம் வேண்டுபவை.
இதில் மனிதனின் அறிவின் நீட்சியை,புதுமை வேகத்தை புது திசையில் செலுத்தும் உயர்-ரக கலை முயற்சிகள், மற்ற பொதுமை சார் கற்பனை வளமற்ற கீழ்மை கலைகளால் நசுக்க பட்டு,புரிந்து கொள்ள படாமல் அல்லது வாழும் காலத்தில் அங்கீகாரம் பெறாமல்,காலத்தை மீறி நிற்கும் தன்மை பெறும். இதனை நிகழ்த்தும் அற்புத கலைஞர்கள் மற்றும் கிரியா ஊக்கிகள் , வாழும் காலத்தில் கீழ்நிலை மனிதர்களின் நுண்ணரசியல்,கீழ்தர வியாபார தந்திரம் இவற்றால் பாதிக்க பட்டு துன்புறுதல், காலம் தோறும் நாம் காணும் நிகழ்வுகள்.
இதனால் மொழி-சார் கலைகளில் ,அற்புதம் நிகழ்த்தும் படைப்பாளிகள்,மற்றும் படைப்புகளின் உள்வட்டம் வாழும் காலங்களில் சுருங்கியே நிற்கும்.ஆனால் பிற்காலத்தில் சிலாகிக்க பட்டு அமரத்துவம் பெறும்.
இதனை செலுத்தி,மக்களை ஒரு படி மேற்செலுத்தி செல்லும் கலைஞர்கள்,காலத்தை மீறி நிற்பார்கள்.நினைக்க படுவார்கள்.அறிச்டோபானஸ் ,இப்சென்,லியனார்டோ டா வின்சி ,வாத்ஸ்யாயன் ,மாக்கிய வில் ,ஷேக்ஸ்பியர்,கம்பன்,சாத்தர்,விட்டோரியோ டிசிகா,பிகாசோ,மொசார்ட் ,சிவாஜி கணேசன் போன்ற மேதைகள் ,தான் வாழும் காலத்தை மீறி ,கலைகளை முன்னெடுத்து சென்ற பிறவி மேதைகள்.
கலைகளின் கூறுகள் மாறி கொண்டே இருக்கும். ஓவியர்களின் நிகழ் பட வரைவு(மனிதர்,சுற்று பொருட்கள்),இயற்கை காட்சிகள், புகை பட கலையினால் தேய்வு கண்ட போது ,ஓவியன் தன்னை pointilism ,sur realism ,impressionism ,expressionism ,cubism என்று தன்னை புதுப்பித்து மாற்றம் கண்டு ஜீவித்தது.performing arts என நிகழ் கலைகளோ , கூத்து,பண் ,நாடகம்,திரைப்படம் என வெவ்வேறு வடிவெடுத்து ,அக-புற மாற்றங்கள்,சாத்திய கூறுகள் சார் வடிவ அக-புற மாற்றங்கள்,வியாபார வீச்சுக்கள் சார்ந்த பொருட்புழக்கம்,அந்தந்த கால மக்களின் அறிவு நிலை,எண்ண எழுச்சிகள்,மாற்றம் தேடும் விழைவு, அரசியல்-கலாச்சார நிகழ்வுகள்,வாழ்வு நிலை மாற்றங்கள் இவை சார்ந்து தன்னை இறுக்கி,நெகிழ்த்தி,மாற்றி,நிலையாமையே நிலையாய் கொண்டு மாற்றமே மாற்ற இயலா விழைவாய் கொண்டு , உயிர்பித்து வாழ்வதுமல்லாமல், மற்ற மாற்று கலைகளுடன் போராடி வெல்ல வேண்டிய அவசியமும்,அவசரமும் கொண்டது.
இதனை நிகழ்த்தி காட்டுவோரையே ,சமுகம்,பெருமையுடன் நினைவு கூற கடன் பட்டது. நான் இப்போது, நாடக திரை கலையில் பெரும் மாற்றத்தை நடிப்பு கலையில் நிகழ்த்தி காலத்தை வென்று நிற்கும் சிவாஜி என்ற அற்புத கலைஞன் ,அதனை மரபின் நீட்சியுடன்,திசைகளின் புது வரவின் எழுச்சியை இணைத்து சாதித்த அதிசயத்தை விஸ்தாரமாக எழுத உள்ளேன்.
இது சார்ந்து உங்கள் எண்ணங்களை முன்னோட்டமாக வரவேற்கிறேன்.
(தொடரும்)
JamesFague
10th November 2014, 11:57 AM
நடிகர்திலகத்தை நான் சந்தித்த அனுபவம்:
------------------------------------------------------------------
ஒரு முறை நாங்கள் குடியிருக்கும் வீட்டின் அருகில் உள்ள திருமண
மண்டபத்திற்கு நடிகர்திலகம் வருகை புரிந்தார். அது கவிஞர்
இளந்தேவன் நடத்திய ஒரு இலக்கிய விழா. இந்த விழா சைதை அரசு
குடியிருப்பில் உள்ள மேற் கூறிய ஒரு இடத்தில் நடந்தது. நான்
அங்கு வசித்த காரணத்தால் மிக மகிழ்ச்சி அடைந்தேன். எனது மாலை
வகுப்பு முடித்து கொண்டு ஒரு மாலை வாங்கி கொண்டு அந்த இடத்தை
நோக்கி விரைந்தேன்..
நேராக மேடையில் அமர்ந்திருந்த நடிகர்திலகத்தின் அருகே சென்று
அந்த மாலையை போட்டு அவரது கன்னத்தில் ஒரு முத்தம்
கொடுத்தேன். அவரும் புன்முறுவலுடன் அதை ஏற்று கொண்டு
அமைதியாக அமர்ந்திருந்தார். நானும் எனது நண்பனும் ஒரு
புகைப்படம் எடுக்க ஆசை பட்டு அங்கு உள்ள புகைப்படக்காரர்idam
கூறி அவரும் படம் எடுத்தார். இங்கு தான் விதி விளையாடிவிட்டது.
நானும் எனது நண்பனும் நேராக பார்த்திருக்க நடிகர்திலகம் படம்
எடுத்த நேரத்தில் பக்கவாட்டில் பார்த்திருந்தார்.
இந்த விஷயம் படம் வாங்கும் போது தெரிந்து அதை வாங்க
விருப்பமில்லாமல் அங்கேயே விட்டு விட்டு வந்து விட்டேன்.
அதன்பிறகு அது போன்ற சந்தர்பம் அமையவில்லை.
இதை இபபோது நினைத்தாலும் மனதுக்குள் ஒரு சிறிய வலி இருந்து
கொண்டே இருக்கும்.
Regards
Gopal.s
10th November 2014, 12:11 PM
வாசு,
இப்போது இந்த பதிவுக்கு என்ன தேவை வந்தது? ஒரு பதிவு போட்டு எதிர்-வினை கேட்டிருந்தால், இப்படி ஒரு மக்குத் தனமான பதிவை போட்டால், உழைப்பை கோரும் பதிவுகளை யார் போட விழைவார்கள்?
நீங்கள் ,எந்த பதிவையும் சுவாரஸ்யமாகக இயலாததெனினும், மற்ற பதிவுகளை மதித்து எதிர்-வினை புரியலாமே?
ஏன்தான் இப்படி இருக்கிறீர்களோ?உங்களுடையதை பிறகு போட்டு கொள்ளலாம்.
Powered by vBulletin® Version 4.2.5 Copyright © 2024 vBulletin Solutions, Inc. All rights reserved.