PDA

View Full Version : Nadigar Thilagam Sivaji Ganesan Part 14



Pages : 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 [13] 14 15 16

Russellbpw
22nd November 2014, 10:35 PM
https://www.youtube.com/watch?v=Vd_RC89xYeg

Russellbpw
22nd November 2014, 10:36 PM
https://www.youtube.com/watch?v=RuXW83PLumE

eehaiupehazij
22nd November 2014, 10:48 PM
NT's penchant for comedy relief!

மெல்லமெல்ல ஓர் உற்சாகம் நம்மைப் பற்றிக் கொள்வதாக உணருவீர் !!

Enjoy this super comedy scenes in his acting pinnacle Deiva Magan, showing NT's flair for comedy his way!

https://www.youtube.com/watch?v=gltmsQjWz-I

https://www.youtube.com/watch?v=V_Ntwjckp6o

https://www.youtube.com/watch?v=JBl4tb0flFI

இதுபோல் ஒரு திரைப்படம் தரணியில் இவர் போல் ஒரு நடிக மேதையால் செதுக்கப்பட்ட சிற்பமாக இனி வருமா?

Russellbpw
22nd November 2014, 10:59 PM
https://www.youtube.com/watch?v=GQJw_CQm8WY

Russellbpw
22nd November 2014, 11:00 PM
https://www.youtube.com/watch?v=v5MyR7lX30E

Russellbpw
22nd November 2014, 11:01 PM
https://www.youtube.com/watch?v=HtI2WuwCvyI

Russellbpw
22nd November 2014, 11:08 PM
TRIBUTE TO AC THRILOKACHANDER


https://www.youtube.com/watch?v=7_h74wf_UOk

Russellisf
22nd November 2014, 11:31 PM
This song sivaji manerisams copied by rajinikanth and one more song oonjalukku poo sudi song also rajini copied sivaji manerisms

http://www.youtube.com/watch?v=xbSZJeC4pAU




https://www.youtube.com/watch?v=5dB_2CkOki8

Murali Srinivas
23rd November 2014, 12:15 AM
Dear All,

Please refrain from posting so many videos in the main thread. As I have said umpteen times it slows down the thread and people find it very difficult to even open the thread.

Senthil Sir,

You have been doing a great job in making people understand how NT outperforms everybody by posting the comparative videos of NT with that of Hollywood actors. At the same time too much videos will make people skip the post.

Let us also admit another fact. Most of the readers are reading, viewing this thread from their respective offices and at all offices the intranet will definitely firewall the videos. Even if not, we all know that it is impossible to watch videos in office. So the whole purpose of uploading videos is defeated. When such is the scenario, we need to restrict the no of videos.

And to cap it all (and this I am telling it to everyone) please bear it in mind that ours is neither a video thread nor a photo exhibition thread. Let us not rush pages. People are here to read good quality stuff on NT. Don't be concerned about no of pages or related matters.

Just writing this on a elaborate note so that everybody is on the same page.

Thanks for your understanding,

Regards

PS: Today, I have moved some song videos posted in the main thread to Padalgal Palavidham - பாடல்கள் பலவிதம் thread.

Murali Srinivas
23rd November 2014, 01:03 AM
கடந்த வெள்ளிக்கிழமை நவம்பர் 14 முதல் சென்னை மகாலட்சுமியில் திரையிடப்பட்ட நடிகர் திலகம் - ஏ.பி.நாகராஜன் - ஜெமினி வாசன் கூட்டணியில் உருவான விளையாட்டுப் பிள்ளை மிகப் பெரிய வரவேற்பை பெற்றிருக்கிறது. ஒரு வாரத்தை நிறைவு செய்த படம் வினியோகஸ்த நண்பருக்கு மகிழ்ச்சிக்குரிய லாபத்தை பெற்று தந்திருக்கிறது. விஷயத்தை கேள்விப்பட்டு நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ள சீனிவாசா மற்றும் கிருஷ்ணவேணி அரங்குகள் இந்தப் படத்தை அவர்களது அரங்கில் திரையிடுவதற்கு ஆர்வம் காண்பித்திருக்கின்றன. இந்த படமெல்லாம் எங்கே ஓடப் போகிறது என்று வழக்கம் போல் மீரான் சாஹிப் தெருவில் கிண்டலடித்தவர்கள் இப்போது வாய் மூடி மௌனம் காக்கிறார்கள். சென்னையில் விளையாட்டுப் பிள்ளையின் வசூலைப் பார்த்த மற்ற மாவட்ட விநியோகஸ்தர்கள் அவர்கள் ஏரியாக்களில் படத்தை வெளியிட முனைப்பு காட்டுகின்றனர்.

விளையாட்டுப் பிள்ளை படத்தை சென்னையில் திரையிட்ட JRL combines அடுத்தபடியாக நடிகர் திலகத்தின் கருப்பு வெள்ளை காவியமான இரு மலர்கள் படத்தை திரையிடுகின்றனர். அதன் பிறகு நீலவானம் வெளியாகும் என தெரிகிறது.

கோவை மாநகரில் டிலைட் திரையரங்கில் வெள்ளிக்கிழமை நவம்பர் 21 முதல் வெளியாகி இருக்கும் நடிகர் திலகத்தின் அண்ணன் ஒரு கோவில் நல்ல வரவேற்ப்பை பெற்றிருக்கிறது. முதல் இரண்டு நாட்களில் படம் வந்த ஆட்களைப் பார்த்து விட்டு அரங்க உரிமையாளர் ஆச்சரியப்பட்டு போனாராம். படத்திற்கு வந்த High class audience அவரின் ஆச்சரியத்திற்கு ஒரு காரணம் என்றால் தியேட்டருக்கு வந்த கணிசமான பெண்கள் கூட்டம் மற்றொரு காரணம். அதிலும் ஒரு நான்கு பேர் 15 கிலோமீட்டர் தொலைவிலிருக்கும் ஊரிலிருந்து இந்த படம் பார்க்க வேண்டும் என்று வந்திருக்கிறார்கள். மொத்தம் விற்பனையான டிக்கெட்களில் 25 சதவீதம் பெண்கள் என்பது தனிச் சிறப்பு.

சந்தோஷ செய்திகளுடன் மீண்டும் சந்திப்போம்.

அன்புடன்

eehaiupehazij
23rd November 2014, 07:22 AM
This song sivaji manerisams copied by rajinikanth and one more song oonjalukku poo sudi song also rajini copied sivaji manerismsby Thiru. Yukesh Babu.

One more "Pandora's Box" getting opened ?!

Dear Yokesh Babu Sir. Thank you for your good intentions in projecting NT as a role model to Rajini or for that matter any other generations' actors. At the outset it is apparently true that Nadigar Thilagam Sivaji Ganesan, hailed as the 'Suymbulingam' of acting could shape up and refine his acting career by trial and error process without copying any other actor in this world be it his contemporaries like Marlon Brando or Charlton Heston...like that. However, NT had resorted to give life to his characterization by way of getting inspired by some people in real life whom he admired, like the Kaanchi Periyavar for his role in Thiruvarutchelvar, TVS Krishna (?) for his Gowravam Barister Rajinikanth role... like that. In Pudhiya Paravai too NT's Paarththa Gyaapagam illayo intro scene is an inspiration from Bond/Connery's intro DrNo tuxedo get-up and cigarette/drinks handling styles. ...Inspiration is little bit different from xeroxing!

(RKS Sir had already posted in this thread some comparative photograph gallery corroborating NT's inspiration and character polishing approach)

As far Tamil Cinema is concerned, NT has made such a terrible impact as the dictionary of acting for the successive generations of actors to follow his foot prints. That is why any actor when he performs in an exemplary way, it appears to our eyes that this actor tries to copy NT. Kamal Haassan or Rajini Kanth are no exceptions, even though they have reached their present day ultimatum by way of their hard work stemming as inspiration from NT's guidelines.

What you feel may be correct as regards the initial years of Kamal and Rajini's attempts to establish their image in the minds of people. Kamal got inspired both by NT and GG while Rajini totally by NT, but as an inevitable starting trouble for them to anchor their roots in Tamil Cinema.But over years, both of them could come out of the shadows of NT and now they have their own originality to be emulated by their next generation, acting traits by Kamal in the NT pattern and style patents with punch dialogues by Rajini in the mould of sheer MGR pattern entertainment arena!

Let us say, Rajini or Kamal had been impressed by NT's acting school of thought and inspired by his immortal acting presentations, rather than merely 'copying' NT!!! But Mu.Ka. Muthu an ardent follower of MGR at that time simply resorted to copying his icon's mannerisms!!!

But Mu.Ka. Muthu, the then upcoming youngster star also has contributed some pleasing and energetic song sequences, though he failed to anchor his roots in the minds of movie goers!(Stars inspired by NTcould reach their top while a mere copying MGR youngster could not make it!)

https://www.youtube.com/watch?v=_4D6tUVyVc4

https://www.youtube.com/watch?v=xZtTPdMHU2c


Dear Yukesh Babu sir, inspiration is the polished usage of words rather than copying, in my opinion!! Rajini's style base is derived as an inspiration from Uththamapuththiran's Yaaraadi Nee Mohini mannerisms of NT (and to some extent the dancing style movements of Ravichandran too! For cigarette handling style Rajini's inspiration was Shatrughan Sinha who only first introdured that style of spinning cigarette to reach lips!!) and his do-gooder image from MGR formula inspired by Errol Flynn's Robin Hood type roles!!For Kamal, needless to say as all NT movies are inspirational guides to him Legends always live and guide us even as generations are consistently changing.

My humble request Yukesh Bab(y)u sir. Let us not hurt the feelings of our youner generation Rajini and Kamal fans as we already had some surges regarding such 'Pandora's Box opening' issues.

JamesFague
23rd November 2014, 11:05 AM
நடிகர்திலகத்தை சந்தித்த அனுபவம் :

எனது கல்லூரி நாட்களில் சென்னையில் சிவாஜி மன்றம் நடத்திய பிரம்மாண்டமான மாநாடு நடந்தது. அந்த ஊர்வலத்தை மயிலை
நவசக்தி விநாயகர் கோவில் அருகே நடிகர்திலகம் திரு குண்டு ராவ் அவர்களுடன் பார்வையிட்டு கொண்டு இருந்தார்.

அந்த ஊர்வலம் மாநாடு நடந்த இடமான ராஜா அண்ணாமலைபுரம் அடைந்த போதும் அது துவங்கிய இடமான தீவு திடல் அருகே இன்னும் ரசிகர்கள் வந்து கொண்டு இருந்தார்கள்.

நான் மைலாப்பூர் நவசக்தி விநாயகர் கோவிலருகே ஒரு ஓரத்தில் நின்று கொண்டு
நடிகர்திலகத்தை கண்டு கிளம்பி சென்றேன்.

சென்னை மாநகரம் அது போன்று ஒரு ஊர்வலத்தை இன்று வரை கண்டது இல்லை இனிமேலும் காண போவதும் இல்லை.


Regards

eehaiupehazij
23rd November 2014, 11:15 AM
Female singers who helped glorify NT's movies and his stardom!! :

Part 4 : நடிகர்திலகத்தின் புகழ்மகுடத்தில் மின்னும் பாடகியர் ரத்தினம் ! :: திரை கானங்களின் Sparrows and Parrots இசைக்குயில்கள் P. லீலா, ஜமுனாராணி மற்றும் M.S. ராஜேசுவரி


இசைக்குயில்கள் P. லீலா, ஜமுனாராணி மற்றும் M.S. ராஜேசுவரி ஆகியோரும் குறிப்பிடத்தக்க பாடல்கள் பங்களிப்பினை நடிகர்திலகத்தின் சாதனைப் பாதையில்
மலர்படுக்கைப் பூக்களாக சமர்ப்பித்து மணம் பெறச் செய்தவர்களே! (ராஜேசுவரியும் ஜமுனாராணியும் தங்கள் தனித்துவமிக்க 'மழலை' குரலாலும் புகழ் பெற்றவர்கள் !) நம் நன்றிகளுக்கும் வணக்கங்களுக்கும் உரியவர்களே

1. P. லீலா :
நடிகர்திலகத்தின் மிகச்சிறந்த காதல் காட்சியமைப்பினை நல்கிய இரும்புத்திரையில் வைஜயந்தியின் கரும்புக்குரல்...பி லீலா !

https://www.youtube.com/watch?v=q48ihhHK5kg

நடிகர்திலகத்தின் இரட்டை வேட கல்வெட்டான உத்தமபுத்திரனில்.....குரலினிமையின் தேன்சிட்டு....பி லீலா !

https://www.youtube.com/watch?v=XEmF9jzEwCI


2. ஜமுனாராணி

நடிகர்திலகத்தின் பாசமலரின் நறுமணம் நம் மனதை விட்டகலாத ஜமுனாராணியின் பரவசமான பாடல் !

https://www.youtube.com/watch?v=G2B97RTcB3E

3. M.S. ராஜேசுவரி

நடிகர்த்திலகப்புயலின் முதல் பிரவேசத்திலேயே அவரது முதல் நாயகி பண்டரிபாயின் தென்றல் குரல் ராஜேசுவரி !

https://www.youtube.com/watch?v=PGBryGdL0FQ



நாம் ரசிக்கும் சாதனைச் சீமானின் ரசனையை சிலாகித்த குமாரி கமலாவின் சாகச குரல் பனிக்குழைவு ராஜேசுவரி !

https://www.youtube.com/watch?v=3w4MAmf7Pog

தூக்குதூக்கியில் கண்வழி புகுந்து கருத்தினில் கலந்த ராஜேசுவரியின் கானம் !

https://www.youtube.com/watch?v=PefB_A5c6xc


NT comes back for a thanks giving to KBS (கொடுமுடி கோகிலம் K.B. சுந்தராம்பாள் ) for her immortal contributions in Thiruvilayaadal to epitomize NT as Sivaperumaan, the original!

adiram
23rd November 2014, 11:25 AM
சிவாஜி செந்தில் சார்,

நடிகர்திலகத்தின் திரைப்படங்களில் எஸ்.ஜானகி பங்களிப்பு நல்ல தொகுப்பு. இன்னுமொரு சூப்பர் ஹிட் பாடல், எம்.எஸ்.வி. இசையில் நெஞ்சிருக்கும் வரை படத்தில் இடம்பெற்ற

நினைத்தால் போதும் பாடுவேன்
அணைத்தால் கையில் ஆடுவேன்
சலங்கை துள்ளும் ஓசையில்
கலங்கும் கண்ணை மாற்றுவேன்

AREGU
23rd November 2014, 11:50 AM
நடிகர்திலகத்தை சந்தித்த அனுபவம் :


தரிசித்த அனுபவம் என்று குறிப்பிட்டிருந்தால் இன்னும் பொருத்தமாக இருக்குமோ..?

eehaiupehazij
23rd November 2014, 02:22 PM
Female singers who helped glorify NT's movies and his stardom!! :

Part 5 : நடிகர்திலகத்தின் புகழ்மகுடத்தில் மின்னும் பாடகியர் ரத்தினம் ! :: கொடுமுடி கோகிலம் என்று அறியப்பட்ட வெண்கலக்குரல் K.B. சுந்தராம்பாள் !

நடிகர்திலகத்தின் திருவிளையாடல் படத்தின் வெற்றிக்கு ஆணிவேரான பாடல்களை பங்களித்தவர் கந்தன் கருணை மற்றும் மகாகவி காளிதாஸ் படங்களிலிருந்தும் அவரது பங்களிப்பின் ஆழத்தை உணர முடியும். நன்றிக்கடன் பட்டிருக்கிறோம்அம்மையீர் !
அவ்வையார் படத்திற்கு சாதனையாக உயரிய சம்பளத்தைப் பெற்றதோடல்லாமல் வரும் காலங்களிலும் திரையில் அவ்வை முத்திரையைப் பதித்த பெருமாட்டியின் என்றும் வாழும் பாடல்கள் இன்றும் இனியும் நம்நெஞ்சங்களை விட்டு நீங்காது


திருவிளையாடலின் முத்திரைப் பாடல் பழம் நீயப்பா !

https://www.youtube.com/watch?v=KDNSM0RyUa8

ஞானப்பழத்தை பிழிந்து ....

https://www.youtube.com/watch?v=mDxaW8RvbII


காலத்தில் அழியாத நடிகர்திலகத்திற்கு விடையளிக்கிறார் சுந்தராம்பாள்

https://www.youtube.com/watch?v=Oc_uJWPSlaQ

https://www.youtube.com/watch?v=l1kYJFo-uBU



Courtesy Nostalgia on KBS who graced NT's movies :

(FROM THE PAST K. B. Sundarambal, M. K. Radha, L. Narayana Rao, T. V. Kumudhini, M. S. Sundari Bai, Gemini Ganesan, ‘Baby’ Sachhu, Kushalakumari, K. Balaji,

One of the classics the Indian movie mogul S. S. Vasan produced was Avvaiyar (1953). Only a fistful of folks are aware Vasan had this project on his mind even when he established the Gemini Studios way back in 1941...

Vasan decided that the only actor who could portray the role of Avvaiyar with conviction would be the celebrated stage and film actor, Carnatic musician K. B. Sundarambal. It is interesting to note that Sundarambal more or less matched the image of what was in the public eye about the poet! This masterstroke of casting by Vasan helped him and the movie in great measure.) Ref : Wikipedia



NT returns to honor his male playback singers Chidhambram Jayaraman, TMS, Jesudas, SPB, Malaysia Vasudeven....AMRaja and PBS...and Seerkaazhi Govindharajan..!!

JamesFague
23rd November 2014, 05:29 PM
Thanks to Mr Neyveli Vasudevan

மெனக்கெடல் : பாபு, தெய்வமகன், தங்கமலை ரகசியம், திருவருட்செல்வர் 'அப்பர், (அப்பருக்கு நான்கு மணிநேர ஒப்பனை சற்றும் செயற்கைத்தனங்கள் இல்லாத இயற்கையான வயதான ஒப்பனை) 'பாபு'வில் வயதான வேடத்திற்காக ஒப்பனைக்குப் பட்ட நரகவேதனை.(எந்த வசதிகளும் இல்லாத காலகட்டத்தில். ஸ்பெஷல் டாக்டர்கள் முன்னிலையில் ஊசிகள் மூலமாக முகத்தில் தைத்து ரண வேதனைகளுடன் சுருக்கங்களை வரவைத்ததாக அப்போதைய ஒரு பத்திரிகையில் படித்திருக்கிறேன்) 'சவாலே சமாளி'யில் தந்தையாக நடித்த வி.எஸ்.ராகவனிடம் காட்சியின் தத்ரூபத்திற்காக வேண்டி நிஜமாகவே சாட்டையடிபட்டு ஒருநாள் முழுக்க மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிஜ அர்ப்பணிப்பு...
(வெளிவராத உண்மைகள்) என்று எவ்வளவோ அடுக்கிக்கொண்டே போகலாம்.

தரமான நடிப்பு: இதற்கு விளக்கம். தேவையா?

தொழில்நுட்பத் திறன்: காமெராவைக் கையில் தூக்கிக்கொண்டு, டைரக்டர் விசிலை வாயில் வைத்துக் கொண்டு, 'டிராலி பேக்' என்று கத்திக் கொண்டு முதன் முதல் அந்தக் காமிராவினால் எடுக்கப்பட்டது. இந்தக் காமிராவினால் எடுக்கப்பட்டது... இதுவரையில் வராத புதுமை சவுண்ட் டிராக்.... ஒரிஜினலாக புதுக்கார்கள் ரெண்டை வாங்கி வெடிக்க வைத்து ஆகாயத்தில் தூக்கி வீசப்பட்டது.... என்பதெல்லாம் இல்லாமல் காமெராவுக்கு முன்னால் (எது தேவையோ அது) எப்படி அற்புதமாகச் செயல்படுவது என்பது நடிகர் திலகத்திற்கு தெரிந்த அளவிற்கு வேறு யாருக்காவது தெரிந்திருக்க வாய்ப்பே இல்லை என்று பழுத்துக் கொட்டை போட்ட பல காமெரா மேதைகள் கூறியிருக்கிறார்கள். தான் நடிப்பது மட்டுமல்லாமல் தன்னுடன் நடிக்கும் மற்றவர்களையும் காமிராவுக்கு தக்கபடி வளைத்துக் கொண்டு வந்து நிற்க, குறிப்பாக நடிக்க வைப்பதில் அவர் பலே கில்லாடி! அதே போல நிறைய பிலிம் ரோல்களை விழுங்கியவர் நடிகர் திலகம். என்ன ஆச்சர்யமாக உள்ளதா? மற்றவர்களைப் போல நடிக்கத் தெரியாமல் அல்ல. தன்னுடைய நடிப்பில் மெய்மறந்து காமிராவை நிறுத்தாமல் ஓடவிட்டு தன்னையே, தன் நடிப்பையே வாய்பிளந்து பார்க்கும் காமெராமேனை சத்தம் கொடுத்து, "ஷாட் முடிந்து விட்டது. என்ன தூங்கி விட்டாயா? காமிராவை முதலில் அணை" என்று நடிகர் திலகம் கூக்குரலிட்ட பிறகே பல ஒளிப்பதிவாளர்கள் சுயநினைவுக்கு வந்தது நாடறிந்ததே! உலகில் வேறு யாருக்கும் இந்தப் பெருமை இருந்ததாக இருப்பதாகத் தெரியவில்லை

அதே போல 'புதிய பறவை'யின் "எங்கே நிம்மதி?' பாடலில் அவர் காட்டிய அசாத்திய திறமை. நான் சொல்வது நடிப்பில் அல்ல. தொழில் நுட்பத்தில். காமிராக் கோணங்கள்... லைட்டிங் அரேஞ்ச்மென்ட்ஸ், காட்சிகளின் பின்னணியில் தெரியும் அந்த இலைகளற்ற பட்ட மரங்கள், சப்பாத்தி,கள்ளிச் செடிகள் அனைத்தும் நடிகர் திலகத்தின் கற்பனை வளத்தில் உருவானதுதான். ஆனால் அதை அவர் வெளிக்காட்டிக் கொள்வதில்லை. அதை அவர் விரும்புவதும் இல்லை. ஆனால் பின்னாட்களில் அவருடன் பழகியவர்கள் இந்தக் கருத்துக்களையெல்லாம் தொலைக்காட்சிகளின் வாயிலாகவும் பத்திரிகைகள் வாயிலாகவும் தாங்களே மனமுவந்து மகிழ்ச்சியுடன் கூறியிருக்கிறார்கள்.

பன்மொழி ஆற்றல்: மிக அழகாக ராகவேந்திரன் சார் இதற்கு விளக்கமளித்திருக்கிறார். மனோகரா இந்தியில் 'மனோகர்' என்று நேரிடையாக எடுக்கப்பட்டபோது அவர் இந்தியில் மிக அற்புதமாகப் பேசி ஆச்சர்ய அலைகளை உருவாக்கினார். (இயக்குனர் திரு எல்வி. பிரசாத் இதை ஒருமுறை பத்திரிகை பேட்டி ஒன்றில் சிலாகித்துக் கூறியிருந்தார்) ஆனால் என்ன காரணத்தினாலோ படத்தில் அவருக்கு டப்பிங் வாய்ஸ் கொடுக்கப்பட்டது. 'ஸ்கூல் மாஸ்டர்" கன்னடத்தில் அருமையாக கன்னடம் பேசியும் அசத்தியிருப்பார். அதே படம் இந்தியில் வந்த போது சொந்தக் குரலில் அசத்தியிருப்பார்.

நடிகர் திலகத்தால் முடியாதது என்று எதுவுமே இல்லை. எல்லாவற்றிலும் அவர் ஒரு பிறவி மேதை. நல்லதொரு குடும்பத்திற்குக் கூட அவர் குடும்பத்தைத்தான் அனைவரும் உதாரணமாகக் கூறுவார்கள்.

இறுதியாக ஒன்றை குறிப்பிடுகிறேன்.

உலகத்தின் சிறந்த ஒரு அரசியல்வாதியை விடவும் வேறு ஒருவர் உருவாகி விட முடியும் .

ஒரு கிரிக்கெட் வீரரின் சாதனையை இன்னொரு கிரிக்கெட் வீரர் முறியடித்து விட முடியும்.

ஒரு இலக்கியவாதியை விட வேறொரு இலக்கியவாதி வந்து ஜொலிக்க முடியும்.

ஒரு எழுத்தாளனை பீட் செய்ய பல எழுத்தாளர்கள் வருவார்கள். வந்திருக்கிறார்கள்.

ஒரு விஞ்ஞானியின் சாதனைகளை பின்னுக்குத் தள்ளி அடுத்த விஞ்ஞானி அவதாரம் எடுக்கக் கூடும்.

ஒரு நல்ல தலைவரை விடவும் வேறு சிறந்த தலைவன் உருவாகி உலகை வழிநடத்தவும் முடியும்.

ஒரு இசை மேதையின் புகழை விடவும் வேறொரு இசை மேதை புகழ் பெறக்கூடும்

இவ்வளவு ஏன்?... உலகில் எவரை மாதிரியும், எவரும் உருவாக முடியும். எவரையும் உருவாக்கவும் முடியும்...ஒருவரின் சாதனையை ஒருவர் விஞ்ச முடியும்.... வெல்ல முடியும். ஆனால் ஒரே ஒரு சாதனையாளரைத் தவிர....

'சிவாஜி' என்ற அந்த மகா கலைஞனை கடந்த காலங்களிலும் சரி! அவருடைய சம காலங்களிலும் சரி! நடந்து கொண்டிருக்கும் காலங்களிலும் சரி! நடக்கப் போகும் காலங்களிலும் சரி!

இனி ஒருவர் விஞ்சவோ, மிஞ்சவோ, முந்தவோ முடியாது என்பதுதான் நிதர்சனமான உண்மை.

அந்தப் பெருமை நடிகர் திலகத்துக்கு மட்டுமே!

அதனால் பெருமை சிவாஜி ரசிகனுக்கு மட்டுமே!

கமல் சொன்னது போல அந்த chair இனி நிரந்தரமாக காலி chair தான். அதன் காலடியைத் தொட்டு வணங்கி, அதன் கீழே அமர்ந்து பெருமைப்பட்டுக் கொள்ளலாம் என்பதே மற்ற கலைஞர்களுக்கு என்றும் மாறாத பெருமை.

உலகில் யாருக்குமே வாய்க்காத பெருமையை எங்களுக்கு தேடித்தந்த நடிகர் திலகமே! நல்லவர்க்குத் திலகமே!

உன்னைத் தவிர எங்களுக்கு வேறு கடவுள் உண்டோ!

கோபால் சார் மிக அழகாகக் கூறியிருந்தார்.

"இன்னொரு கடவுளோ, தேவ தூதனோ உலகில் மீண்டும் தோன்ற வாய்ப்புண்டு. இன்னொரு நடிகர்திலகம், தோன்ற வாய்ப்பே இல்லை"

(பொன்னெழுத்துக்களில் பொறித்து ஒவ்வொரு நடிகனும் தங்கள் கழுத்தில் மாட்டிக் கொள்ள வேண்டிய டாலர்)

ஒவ்வொரு வினாடியும் உன் திறமையில் பிரமித்துப் போய் நிற்கும் கோடானு கோடி ரசிகர்களில் ஒருவனான

நெய்வேலி வாசுதேவன்.

Murali Srinivas
23rd November 2014, 10:55 PM
கோவை மாநகரில் டிலைட் திரையரங்கில் இன்று அண்ணனுக்கு அமோக வரவேற்பு.

இன்று மாலைக் காட்சி எப்படி களை கட்டப்போகிறது என்பதன் அறிகுறி மதியக் காட்சியிலே தெரிந்து விட்டதாம். மதியக் காட்சிக்கு நல்ல கூட்டம் என்றால் மாலைக் காட்சி அமர்களப்படுத்தி விட்டதாம். பால்கனி ஹவுஸ் புல். இரண்டாம் வகுப்பு டிக்கெட்டுகள் புஃல். முதல் வகுப்பு கிட்டத்தட்ட நிறைந்து விட்டனவாம். டிலைட் அரங்கில் வெகு நாட்களுக்கு பிறகு ஹை கிளாஸ் பால்கனி டிக்கெட்டுகள் முழுமையாக விற்பனையாகி இருக்கிறது. ஒரே காட்சிக்கு பால்கனியும் இரண்டாம் வகுப்பும் நிறைவது வெகு நாட்களுக்கு பிறகு நடக்கிறதாம். இன்றைய மாலைக் காட்சிக்கு மட்டும் 30 சதவீதம் பெண்கள் வந்திருக்கின்றனர். அதில் முக்கால்வாசிப் பேர் family audience. முதல் இரண்டு நாட்களில் மொத்தம் எத்தனை பேர் பார்த்தார்களோ அதையும் தாண்டிய எண்ணிக்கையில் இன்றைய தினம் audience வந்திருக்கிறார்கள்.

மிகவும் சந்தோஷம் அடைந்துள்ள அரங்கத்தை லீசிற்கு எடுத்து நடத்துபவர் இப்போது அனைத்து அரங்க உரிமையாளர்களும் சொல்லும் அதே வார்த்தையான அடுத்த மாதம் இன்னொரு சிவாஜி படத்தை திரையிடுங்கள் என்று படத்தை வெளியிட்டவரிடம் சொல்லியிருக்கிறார்.

சென்னை திருச்சியை தொடர்ந்து இப்போது கோவையிலும் சாதனை படைத்திருக்கிறார் Dr. ரமேஷ். அவரின் திக்விஜயம் மேலும் தொடரும்.

சந்தோஷ செய்திகளுடன் மீண்டும் சந்திப்போம்.

அன்புடன்

இன்று கிடைத்த தகவல்படி வரும் டிசம்பர் 5 வெள்ளி முதல் நெல்லைக்கு சிபிஐ ஆபீசர் ராஜன் விஜயம் செய்கிறார். ஆம், நெல்லை சென்ட்ரலில் தங்கசுரங்கம் வெளியாகிறது.

Russellisf
24th November 2014, 03:08 AM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/a_zps7a4e99ed.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/a_zps7a4e99ed.jpg.html)

JamesFague
24th November 2014, 05:54 PM
Thanks to Mr Neyveli Vasudevan

நம் ராஜா நடித்த 'ராஜா' கடலூர் நியூசினிமாவில் வெளியானது. அண்ணா மேம்பாலத்திற்குக் கீழே அதாவது கடிலம் ஆற்றுப் பாலத்தின் இறககத்தில் அமைந்துள்ள பழமையான அரங்கு நியூசினிமா. இன்றுவரை தொடர்ந்து கொண்டிருக்கிறது. 'ராஜா' ரிலீஸுக்கு முன்னால் வரை நியூசினிமா திரை அரங்கில் தரை மற்றும் பெஞ்ச் டிக்கெட் எடுக்க கவுண்டர்கள் ஓப்பனாக இருக்கும். வெயில்,மழை இவற்றை பொருட்படுத்தாமல் வெட்டவெளியில் மணிக்கணக்கில் கியூவில் நின்றுதான் டிக்கெட் எடுக்க வேண்டும். அரங்கு நிறைந்து விட்டால் அடுத்த ஷோவிற்கு கூட்டம் எங்கும் போகாமல் அப்படியே நின்றவாக்கிலேயே தொடரும். ஒருவரையொருவர் விடாமல் கைகளோடு அணைத்துக் கொண்டு மற்றவர்கள் குறுக்கே நுழைந்துவிடாத வகையில் நிற்பார்கள். தரை டிக்கெட் ஐம்பது காசுகள். பெஞ்ச் டிக்கெட் ரூபாய் 1.10. தியேட்டரின் மெயின் கேட்டிற்கு உள்ள நுழைந்தால் அங்கு first class மற்றும் செகண்ட் கிளாஸ் டிக்கெட் கவுண்ட்டர்கள் இருக்கும். அங்கு நமக்கு வேலையே இல்லை. அதனால் தியேட்டர் நிர்வாகம் தரை பெஞ்ச் டிக்கெட் வாங்குபவர்களுக்காக வேண்டி roof உடன் கூடிய நீண்ட கவுண்டர் சுவர்களை 'ராஜா' படத்திற்காகவே புதிதாக ஸ்பெஷலாகக் கட்டியது. ராஜாவின் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டவுடன் பரபரப்பு மிக அதிகமாக எல்லோரையும் தொற்றிக்கொள்ள அதிகமாக பரபரப்பானது தியேட்டர் நிர்வாகம். கடலூர் முனிசிபாலிட்டி சேர்மன் தங்கராஜ் முதலியார் அவர்களின் கைவசம் தியேட்டர் இருந்தது. ராஜாவிற்காக திரையரங்கு ஓரளவிற்கு புதுப்பிக்கப்பட்டது. அதில் முக்கியமானது நான் மேலே குறிப்பிட்ட தரை டிக்கெட், மற்றும் பெஞ்ச் டிக்கெட் எடுப்பதற்கான புது கவுண்ட்டர்கள் கட்டப்பட்டதுதான். தரை டிக்கெட் கவுண்டர்களை இரண்டு வளைவுகளாகச் சென்று திரும்பி டிக்கெட் எடுக்கும்படி கட்டியிருந்தார்கள். 26.01.1972 அன்று 'ராஜா' ரிலீஸ்.

ஆனால் கடலூர் சில விஷயங்களில் சாதனை படைத்தது. 'ராஜா' தமிழ்நாடெங்கும் 1972 குடியரசு தினத்தன்று ரிலீஸ் என்றால் எங்கள் கடலூரில் 25-1-1972 அன்று அதாவது ஒரு தினம் முன்னதாகவே ரிலீஸ் ஆகி விட்டது. (இது போல எனக்குத் தெரிந்து கௌரவம்,வெள்ளை ரோஜா இரு படங்களும் ரிலீஸுக்கு முந்தின நாளே கடலூரில் வெளியாகி விட்டன. இதில் விசேஷம் என்னவென்றால் நான் குறிப்பிட்ட மூன்று படங்களும் கடலூர் நியூசினிமாவில்தான் ரிலீஸ் ஆயின) 'ராஜா' 25-1-1972 இரவு சிறப்பு ரசிகர் காட்சியாகத் திரையிடப்பட்டு விட்டது. அதனால் ரசிகர் மன்றத்தினர் அனைவரும் முன்தினம் இரவே ராஜாவைக் கண்டு களித்து விட்டனர். படத்தின் ரிசல்ட் 'ஓகோ'வென இருந்தது. ராமாபுரத்தில் இருந்து ரசிகர்கள் பலர் சைக்கிளில் கடலூர் சென்று ரசிகர் ஷோ பார்த்து விட்டு திரும்பி படத்தின் வெற்றியை கொண்டாட ஆரம்பித்து விட்டனர். அடுத்த நாள் (26.01.1972) காலை நான் அம்மாவுடன் பஸ்ஸில் கடலூர் நியூசினிமா சென்று விட்டேன். முதல் நான்கு நாட்களுக்கு ஐந்து காட்சிகள் என்று ஞாபகம். முன்தினம் பார்த்த ரசிகர்கள் அடுத்தநாளும் கடலூர் நோக்கி படையெடுத்தனர். படம் பிரம்மாண்ட வெற்றி என்ற செய்தி வேறு பரவி விட்டது. சென்னை சாந்தி தியேட்டரில் அனைவரையும் வசீகரித்த அதே தலைவரின் ஸ்டைல் கட் அவுட் தியேட்டரின் மெயின் கேட்டிற்கு மேலே ஏற்றப் பட்டிருந்தது. பிரம்மாண்டமான பஞ்சு மாலைகள் தலைவரின் கழுத்தை அலங்கரித்தன. தலைவரின் கழுத்தில் கட்டப்பட்டிருக்கும் அந்த ஸ்கார்ப் அப்படியே தத்ரூபமாக காற்றில் பறப்பது போன்றே இருந்தது. கடலூர் மெயின் சாலையில் தியேட்டர் அமைந்திருந்ததால் அனைவர் கண்களும் ராஜாவின் மீது. கட்டுக்கடங்காத கூட்டம். ஜனம் அலைமோதுகிறது. டிக்கெட் கிடைக்குமா கிடைக்காதா என்ற குரல்கள்தான் எங்கும் எதிரொலிக்கின்றன. அன்று ஐந்து காட்சிகள். அப்போதெல்லாம் காலை ஒன்பது மணி காட்சிக்கு பெண்கள் அதிகமாக வரவே மாட்டார்கள். ஒரு பத்து பதினைந்து பெண்கள்தாம். அதனால் டிக்கெட் கண்டிப்பாகக் கிடைத்துவிடும். பெண்கள் டிக்கெட் ஆண்களுக்கு செல்லாது. சிறுவர்களுக்கு செல்லும். பெண்கள் டிக்கெட் கொடுத்து முடிந்ததும் சிறிது நேரம் வெயிட் செய்து பார்த்து விட்டு பின் மீதி டிக்கெட்களை ஆண்களுக்கு கொடுத்து விடுவார்கள். நான் அம்மாவுடன் பெண்கள் கவுண்ட்டரில் நின்று நடப்பதையெல்லாம் ஒன்றுவிடாமல் கவனித்துக் கொண்டிருந்தேன். அரங்கின் வெளியே முழுக்க கொடிகளும், தோரணங்களுமாகவே தெரிந்தன. போலீஸ்காரர்கள் மூன்று நான்கு பேர் இருக்கும். சமுத்திரம் போன்ற கட்டுக்கடங்காத ரசிகர்களை கட்டுப்படுத்த பிரம்மப்பிரயத்தனம் செய்து கொண்டிருந்தார்கள் அவர்கள். ரசிகர்களின் உற்சாகம் எல்லை மீறத் துவங்கியது. மணி சரியாக எட்டு இருக்கும்.

திடீரென்று ஒரே மேளதாள சப்தம். கூடவே வானவேடிக்கை வேறு. வெடிச் சப்தங்கள் காதைக் கிழிக்க ஒரு இளைஞர் பட்டாளம் தியேட்டரில் புயலெனப் புகுந்தது. ஒரு ஐம்பது பேருக்கு மேல் இருக்கும். ஒரு வண்டியில் மூட்டைகளாக அடுக்கப்பட்டு அதன் பின்னாலே சிலர் வந்தனர், பின் மூட்டைகளை இறக்கி அவிழ்த்தனர். பார்த்தால் அவ்வளவு ஆப்பிள் பழங்கள். வந்த கோஷ்டி சுறுசுறுப்பாக வேலை செய்ய ஆரம்பித்தது. சிலர் கோணி ஊசிகளை எடுத்து ஆப்பிளின் உள்ளே செருக, சிலர் சணல் கொண்டு தைத்து ஆப்பிள்களை மிகப் பெரிய மாலையாக அரைமணி நேரத்தில் தொடுத்து விட்டனர். இப்போது பிரம்மாண்டமான ராட்சஷ ஆப்பிள் மாலை தயார். அதிர்வேட்டுகள் முழங்க தலைவரின் கட்-அவுட்டிற்கு ஆப்பிள் மாலை சாத்தப்பட்டது. அப்போது இந்த அலங்காரமாலை எல்லோருக்கும் ரொம்பப் புதுசு. "ஆப்பிள் மாலை டோய்" என்று பலர் அதிசயத்தில் வாயைப் பிளந்தனர். கொஞ்ச நேரத்தில் அந்த ஆப்பிள் மாலை அனைவரையும் கவர்ந்து விட்டது. தலைவரின் கட்-அவுட் மேலும் அழகுடன் பரிமளித்தது.

முதன் முதலில் ஒரு கட் அவுட்டிற்கு ஆப்பிள் மாலை சாத்தப்பட்ட பெருமையை ராஜா பெற்றார். (இது கடலூர் சினிமா ரசிகர்கள் இன்றளவும் பெருமையாக பேசி மகிழும் விஷயம்) பின் ஒரே கூச்சலும் குழப்புமாகவே இருந்தது. நான் அம்மாவை விட்டு விட்டு வந்து இந்த வேடிக்கை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்தேன். அம்மாவோ என்னை விட வில்லை. கூட்டத்தில் ஏதாவது ஆகிவிடுமோ என்று பயம் அவர்களுக்கு. நான் ஒரு ஓரமாக நின்று பார்த்து விட்டு வருகிறேன் என்று அடம் பிடித்து வந்து ஒரு இடத்தில் safe ஆக நின்று கொண்டேன்.

சரியாக ஒன்பதரை மணிக்கெல்லாம் டிக்கெட் கொடுப்பதற்கான பெல் கொடுத்து விட்டார்கள். அவ்வளவுதான். கூட்டம் நிலைதடுமாற ஆரம்பித்தது. அதுவரை ஓரளவிற்கு கட்டுக்கோப்பாக நின்றிருந்த கியூ கண்மண் தெரியாமல் சிதறியது. ஒருவர் மேல் ஒருவர் ஏறிக் குதித்து டிக்கெட் கவுண்ட்டரை நெருங்க முண்டியடித்தனர். போலீஸ்கார்களால் சமாளிக்க முடியாமல் லத்தியைக் கையில் எடுத்து கண்ட மேனிக்கு சுழற்ற ஆரம்பித்து விட்டனர். ஒரே அடிதடி. துணி அவிழ்ந்தது கூடத் தெரியாமல் டிக்கெட் எடுக்க சில பேர் தாவிக் குதித்தனர். நிற்பவர்கள் தலை மேல் கால்வைத்து பலர் ஓடினர். கீழே இருப்பவர்கள் வலி தாங்காமல் அவர்களைத் திட்டித் தீர்த்தனர்.

அப்போதுதான் கட்டியிருந்த புதிய கவுண்ட்டர் சுவர் சரியாகக் காயாமல் வேறு இருந்ததால் நெரிசலின் காரணமாக அப்படியே பெயர்த்துக் கொண்டு இடிந்து விழுந்தது. சிலருக்கு நல்ல காயம். அதையெல்லாம் பொருட்படுத்தாமல் கூட்டம் நெருக்கித் தள்ளியது. இதையெல்லாம் கண்டு மிரண்டு போன நான் பயந்து போய் அம்மாவிடம் ஓடி வந்து விட்டேன். அம்மா அதற்குள் டிக்கெட் எடுத்து விட்டார்கள். பெண்கள் கவுண்ட்டரை சுற்றி பயங்கரமான ஆண்கள் கூட்டம் டிக்கெட்டுக்காக வெயிட் செய்தது. (கவுண்ட்டர் சுவர் முதன் முதல் கூட்ட நெரிசலால் இடிந்து உடைந்து விழுந்த பெருமையும் ராஜாவிற்கே சொந்தம்)

இதற்குள் டிக்கெட் எடுக்காத ஒரு கூட்டம் மெயின் கேட்டின் மேல் ஏறித் தாவி குதிக்க வேறு ஆரம்பித்து விட்டது. தியேட்டர் ஊழியர்கள் ஆளுக்கொரு கழியை எடுத்துக் கொண்டு இரும்பு கேட்டின் மேல் ஏறிக் குதிப்பவர்களை வாங்கு வாங்குவென்று வாங்கினர். அதில் சிலர் அவர்களிடமிருந்தே கழியைப் பிடுங்கி தியேட்டர் சிப்பந்திகளை பதம் பார்த்தனர். யாரையும் கட்டுப்படுத்த முடியவில்லை. அம்மா மிகவும் மிரண்டு போய் என் கையை பத்திரமாகப் பிடித்துக் கொண்டு பெண்கள் அமரும் இருக்கைக்கு சென்று விட்டார்கள். அதற்குப் பிறகு வெளியே என்ன நடந்தது என்று தெரியாது. டிக்கெட் கிடைத்த சந்தோஷத்தில் கூக்குரலிட்டு விசிலடித்தபடி பலர் தரை டிக்கெட்டுக்கான சாயும் வசதிகள் இல்லாத மூட்டைப் பூச்சிகளின் மூர்க்கத்தனமான கடிகள் கொண்ட மொட்டை பெஞ்ச்களில் தங்கள் நண்பர்களுக்காக துண்டுகளை விரித்து இடம் போட்டனர். வேறு யாராவது வந்து உட்கார்ந்தால் மவன் தொலைந்தான்.

படம் போட்டதும் கடலின் பேரிரைச்சல் போல அப்படி ஒரு இரைச்சல். தலைவரின் அறிமுகக் காட்சியில் ஆர்ப்பாட்டம். ஆரவாரம். கூடை கூடையாய் பூக்களின் உதிரிகள் பறக்கின்றன. விசில் ஒலிகளும், கைத்தட்டல்களும் காதைக் கிழித்தன. தியேட்டர் முழுதும் ஒரே ஜனக்கடலாகக் காட்சியளித்தது. உட்கார்ந்து பார்த்தவர்கள் அளவிற்கு நின்றவாறே பலர் நம் ராஜாவின் ஸ்டைல் ரகளைகளைக் கண்டு மகிழ்ச்சித் தாண்டவம் ஆடிக் கொண்டிருந்தனர். அதிலும் குறிப்பாக ரந்தாவாவுடனான அந்த ஈடுஇணையில்லாத சண்டைக்காட்சியின் போது முன் இருக்கைகளை எட்டி உதைத்து சிதைத்து ரசிகர்கள் காட்டிய உற்சாக மிகுதியின் மகிழ்வான உணர்வுகளின் வெளிப்பாட்டை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது தலைவரின் நடிப்பைப் போல. அதற்குப் பிறகு உள்ளே நடந்த அமர்க்களத்தை சொல்லவும் வேண்டுமா?! படம் பார்த்தவர்களில் பாதி பேருக்கு மேல் ஆளுக்கு ஒரு ஆப்பிள் சாப்பிட வழங்கப்பட்டது. (இதுவும் ஒரு சாதனை) காலை ஒன்பது மணி காட்சி முடிந்து திரும்பும்போது நண்பகல் 12 மணி காட்சிக்கு காலையில் இருந்தது போல இருமடங்கு கூட்டம் அலைமோதிக் கொண்டு நின்றது.

கடலூர் நியூசினிமாவில் ஒரு மாதத்துக்கு ஓடி வசூலில் தன்னிகரில்லா சாதனையைப் படைத்தார் ராஜா. பிறகு மறு வெளியீடுகளிலும் கடலூரில் ராஜாவின் சாதனை எவரும் விஞ்ச முடியாதது.

Murali Srinivas
24th November 2014, 07:02 PM
நமது NT FAnS அமைப்பின் சார்பில் கடந்த வாரம் நடைபெற்ற நவராத்திரி திரையிடலுக்கு ஒரு சிறப்பு விருந்தினர் வருகை புரிந்தார். சரியாக சொல்ல வேண்டுமென்றால் வருகை புரிந்தனர். காரணம் படத்தின் ஒளிப்பதிவாளர் மறைந்த திரு W R சுப்பாராவ் அவர்களின் புதல்வர்களும் புதல்வியரும் வருகை தந்து சிறப்பு செய்தனர்.

வந்தவர்களில் மூத்தவர் திருமதி ரேவதி கிருஷ்ணமூர்த்தி. அவர்தான் அன்று பேசினார். எவரும் எதிர்பார்க்காத வகையில் மிக மிக அழகாக, தெளிவாக அவர் பேசியது அனைவர் கருத்தையும் கவர்ந்தது,

இந்தப் படம் படப்பிடிப்பு நடந்துக் கொண்டிருக்கும்போது அவர் ஒரு மாணவியாக இருந்தது பற்றி குறிப்பிட்ட அவர் படப்பிடிப்பு காண சென்றதை விவரித்தார். அவரின் தந்தையார் சாதாரணமாக படப்பிடிப்புத் தளங்களுக்கு அழைத்து செல்ல மாட்டார் என்றும் அன்றைய தினம் அபூர்வமாகவே தன்னையும் தன மூத்த சகோதரியையும் அழைத்து சென்றதை பற்றி குறிப்பிட்ட அவர் தன தந்தையார் தங்கள் இருவரையும் நடிகர் திலகத்திடம் அறிமுகப்படுத்தி வைத்ததையும் தன் மூத்த சகோதரியை நடிகர் திலகம் கிண்டல் செய்ததையும் பிறகு அவரே மிகுந்த அன்புடன் பேசியதையும் நினைவு கூர்ந்த திருமதி ரேவதி அன்றைய தினம்தான் நடிகர் திலகம் Dr கருணாகரன் வேடத்தில் நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டுக் கொண்டிருந்தன என்ற தகவலையும் சொன்னவர் அதன் பிறகு மற்றொரு விஷயத்தையும் பகிர்ந்துக் கொண்டார்.

தங்களோடு வெகு ஜாலியாக பேசிவிட்டு சென்றவர் கேமரா ஓட ஆரம்பித்தவுடன் அப்படியே மாறிப் போனதை ஒரு மாஜிக் போல உணர்ந்தோம் என்றார். குரலில் நடையில் உடல் மொழியில் அவர் கொண்டு வந்த மாற்றம் அப்படியே கண் முன்னரே நிகழ்ந்ததை இன்று விவரிக்கும்போதும் அன்று இருந்த அதே மாஜிக் இப்போதும் மனதை விட்டு நீங்கவில்லை என்றார்.

படம் வெளிவந்தவுடன் தன் கூட படித்தவர்கள் இறுதிக் காட்சியில் எப்படி ஒரு ஷாட்டில் 4 சிவாஜியையும் அடுத்த ஷாட்டில் 3 சிவாஜியையும் உங்கள் அப்பா காட்டினார் என்று கேட்க கேட்டுச் சொல்கிறேன் என்று வீட்டில் வந்து தந்தையிடம் கேட்டதையும் அவர் மாஸ்க் ஷாட் மூலமாக என்று விளக்கியது அன்றைய வயதில் டெக்னிகலாக புரியாவிட்டாலும் கூட மறுநாள் பள்ளி தோழியரிடம் அது மாஸ்க் ஷாட்டில் எடுத்தார்களாம் என்று பெருமையாக சொல்லிக் கொண்டதை நகைச்சுவையாக பகிர்ந்து கொண்டார் திருமதி ரேவதி.

இந்தப் படம் வெளிவந்த பிறகு ஒரு பத்திரிக்கை நிருபர் தன் தந்தையாரை பேட்டி எடுக்க வந்தபோது இந்த மாஸ்க் ஷாட்டை குறிப்பிட்டு நன்றாக செய்திருப்பதாக பாராட்ட அதற்கு தன் தந்தையார் அந்த மாஸ்க் ஷாட் இந்த அளவிற்கு பேசப்படுகிறது என்றால் அதற்கு நடிகர் திலகம்தான் காரணம் என்றாராம். போலீஸ் ஆபீசர் ரோலில் இருக்கும் சிவாஜியை பார்த்து நாடக நடிகன் சிங்காரம் வணக்கம் சொல்ல அதை முதல் முறை கவனிக்காமல் இரண்டாம் முறை மீண்டும் சிங்காரம் கை கூப்பும்போது கவனித்து தலையை மட்டும் லேசாக அசைத்து அதை acknowledge செய்யும் போலீஸ் ஆபீசர் அந்த டைமிங்கை பாருங்கள். அதுதான் சிவாஜியின் திறமை என்று தன் தந்தை சொன்னதை திருமதி ரேவதி நினைவு கூர்ந்தபோது அரங்கம் கைதட்டல்களால் அதிர்ந்தது.

தமிழ் சினிமாவில் சில முக்கிய மைல்கல்கள் என்று சொல்லபப்டுகின்ற முதல் கேவா கலர் படம் [அலிபாபா] முதல் டெக்னிக் கலர் படம் கட்டபொம்மன் முதல் சினிமாஸ்கோப் படமான ராஜ ராஜ சோழன் ஆகிய அனைத்து படங்களுக்கும் ஒளிப்பதிவாளராக பணிபுரியும் பாக்கியம் பெற்றவர் தங்கள் தந்தையார் என்று சொல்லி மகிழ்ந்த திருமதி ரேவதி இந்த நேரத்தில் தன் தந்தைக்கு ஒளிப்பதிவு தொழிலில் உதவியாளராக இருந்து பணியாற்றிய கர்ணன் அவர்களையும் நினைவு கூர்ந்தார்.

தங்கள் தந்தையார் தங்களை படப்பிடிப்புதளத்திற்கு அழைத்து செல்ல மாட்டார் என்பதனால் படத்தின் இயக்குனர் அருட்செல்வர் ஏ பி நாகராஜன் அவர்களிடம் அனுமதி பெற்று ஷூட்டிங் பார்த்ததையும் நன்றியோடு நினவு கூர்ந்தார்.

படத்தின் ஒளிப்பதிவாளரின் மகள், மகன் என்ற முறையில் படம் பார்க்க வரவில்லையென்றும் சிவாஜி ரசிகர்களாக இந்த படத்தை பார்க்க தங்கள் குடும்பத்தினர் வந்திருப்பதை பெருமையுடன் குறிப்பிட்ட திருமதி ரேவதி தங்களை அழைத்ததற்கும் நினவு பரிசு வழங்கியதற்கும் நன்றி தெரிவித்துக் கொண்டு தன் உரையை நிறைவு செய்தார்.

அனைவரையும் அற்புதப்படுத்திய அவரின் சரளமான உரைக்கு நன்றி தெரிவித்து படத்தை திரையிட்டோம்.

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/REVATHYKRISHNAMURTHY01FW_zps0bda3d45.jpg

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/REVATHYKRISHNAMURTHY02FW_zps0dabf220.jpg

வெளிச்சம் சரியாக இல்லாதிருந்த காரணத்தினால் புகைப்படங்கள் சற்றே மங்கலாக தெரிகின்றது

அன்புடன்

eehaiupehazij
24th November 2014, 08:17 PM
அலைகள் தலை விரித்தாடிய கலைப்பயணத்தில் எந்த வலையிலும் சிக்காமல் நடிகர்திலகத்தின் விலைமதிப்பற்ற குரலாகவே மாறி நம்மை வாயடைத்த சிலைகளாக்கி மலைக்கவைத்த பாடகர் தி(மிங்கி)ல(க)ங்கள்!

திலக குரல்1. இசைச்சித்தர் சிதம்பரம் ஜெயராமனார்
நடிகர்திலகத்தின் முதல் பாடல் குரல் ! அந்தக் கடினமான தடிமனான வெற்றிலை குதப்பிய 'குதம்பாய்' குரலுக்கும் ஏற்றபடி தனது முகபாவங்களையும் உதட்டசைவுகளையும் மாற்றிப் பிரமிக்க வைத்த நடிப்புச்சித்தரின் பெருமைக்கு வித்திட்டவருக்கு எங்கள் முதல் வணக்கம். பராசக்தி பாடல் காட்சிகளில் இன்றும் நம் பிரமிப்பு அலைகள் ஓயவில்லையே !

https://www.youtube.com/watch?v=eCVQAzG8_14

https://www.youtube.com/watch?v=H2kPbPF7dIE

https://www.youtube.com/watch?v=JgUOyi2TWyo

மீன்கள் கடலிலே துள்ளிப் பார்த்திருக்கிறோம் கடற்கரையிலே துள்ளும் காதல் மீன்களையும் பார்த்து ரசிப்போமே ! விண்ணோடும் மண்ணோடும் கலந்துவிட்ட கலைப்புதையல் நடிகர்திலகம் !!

https://www.youtube.com/watch?v=W8YG0Xsrkz8

கொடுத்தவனே பறித்துக்கொண்டாண்டி மானே .... மறக்க முடியாத தங்கப்பதுமை !

https://www.youtube.com/watch?v=F2cIi1Q1CPg

அன்பாலே தேடிய அறிவுச்செல்வமே தெய்வப்பிறவி சிவாஜி கணேசன் !

https://www.youtube.com/watch?v=shPRgjoiJhw



NT returns to thank and honor his alter ego tone TMS!!

Harrietlgy
24th November 2014, 08:50 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/a_zps7a4e99ed.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/a_zps7a4e99ed.jpg.html)

Every after thirty years one star coming from NT's family

RAGHAVENDRA
25th November 2014, 08:14 AM
நூற்றாண்டு கண்ட தமிழ் சினிமா சரித்திரத்தில் ஒரு நடிகரின் நூறாவது படம் மிகப் பெரிய வெற்றி பெற்றுள்ளது என்றால் அந்தப் பெருமை இருவருக்கு மட்டுமே சாரும். நடிகர் திலகத்தின் நவராத்திரியின் மிகப் பிரம்மாண்டமான வெற்றியை குமுதம் பத்திரிகை இருட்டடிப்பு செய்துள்ளது வியப்பாக உள்ளது.
நவராத்திரி திரைக்காவியம் சென்னையில் திரையிடப்பட்ட அனைத்து திரையரங்குகளிலும் நூறு நாட்கள் ஓடி வெற்றி பெற்றுள்ளது.

http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC4962-1.jpg

http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC4963-1.jpg

...

தனது நூறாவது திரைப்படத்தை பிரம்மாண்டமான வெற்றிப் படமாகப் பெற்ற இன்னோர் நடிகர் விஜயகாந்த் அவர்கள்.

கேப்டன் பிரபாகரன் திரைப்படத்தின் வெற்றி அனைவரும் அறிந்ததே..

குமுதம் பத்திரிகைக்கு யாராவது தமிழ்த் திரைப்படத்தின் வரலாற்றைப் புரிய வைத்தால் நல்லது.

... நவராத்திரி நூறாவது நாள் வெற்றி நிழற்படங்களுக்கு நன்றி ஆவணத் திலகம் பம்மலார் அவர்கள்..

நிழற்படங்களின் அருமையைப் புரிய வைத்த பம்மலாரின் பங்களிப்பு நடிகர் திலகம் திரிக்கு உயிர் நாடி என்பதை இப்போதாவது புரிந்து கொள்ளப்படும் என நம்புகிறேன். நம்முடைய திரியில் பதியப்படும் நிழற்படங்கள் பக்கங்களை நிரப்புவதற்காக அல்ல என்பதையும் அவை ஒவ்வொன்றும் கூறும் அர்த்தங்கள் ஆயிரம் என்பதையும் புரிந்து கொள்ள வேண்டிய நமது திரி நண்பர்கள் இனியாவது புரிந்து கொள்வர் என நம்புகிறேன்.

ScottAlise
25th November 2014, 11:12 AM
Dear Raghavendera sir,

I too pointed out the mistake and mentioned it in Facebook of Vijaykanth group , it is really sad that a reputed weekly magazine has forgot to include the records of a doyen nadigar thilagam

AREGU
25th November 2014, 11:46 AM
பாடகர் தி(மிங்கி)ல(க)ங்கள்!


அருமை..!

adiram
25th November 2014, 12:54 PM
குமுதம் பத்திரிகை அந்தக் காலத்திலிருந்தே தப்பும் தவறுமாக செய்திகளைத் தருவதில் பிரசித்தி பெற்றது.

அத்துடன் அங்கு பணிபுரியும் சுனில் ஒரு அரைவேக்காடு.

Georgeqlj
25th November 2014, 01:33 PM
"Mr.Mahendra" | Full Tamil Movie | Jaya Pradha | …: http://youtu.be/6ftl1v1T4PA
மிஸ்டர் மகேந்திரா
தெலுங்கு டப்பிங் படம்

eehaiupehazij
25th November 2014, 08:45 PM
அலைகள் தலை விரித்தாடிய கலைப்பயணத்தில் எந்த வலையிலும் சிக்காமல் நடிகர்திலகத்தின் விலைமதிப்பற்ற குரலாகவே மாறி நம்மை வாயடைத்த சிலைகளாக்கி மலைக்கவைத்த பாடகர் தி(மிங்கி)ல(க)ங்கள்!

திலக குரல் 2 தெய்வத்திருமிகு T.M. சௌந்திரராஜன்

M.K. தியாகராஜ பாகவதரின் எதிரொலியாக ஆரம்பித்த இசைப்பயணம் நடிகர்திலகத்தின் பின்னணி குரலொலியாக நிலைபெற்றது.

நிலத்தியல்பால் நீர் திரிந்தற்றாகும். நடிகர்திலகம் என்னும் கவின்மிகு மழைமேகம் சுமந்து பொழிந்திட்ட தூய்மையான மழைநீரே TMS ! நடிகர்திலகத்தின் குரலாக வாழ்ந்தவர். மழைநீர் தனது தன்மையை நீரின் நிலப்பரப்பு மற்றும் நிலத்தடி ஓட்டங்களில் மண்ணின் தன்மைக்கேற்ப சுவை மாற்றுவது போல பிற நடிகர்களுக்கும் ஏற்ற மாதிரி ஆற்று நீராகவும் ஊற்று நீராகவும் கிணற்று நீராகவும் கடல் நீராகாவும் குரலை மாற்றி பன்முக குரல் மன்னனாக வளர்ந்தவர். நடிகர்திலகத்தின் மறுபக்கமாகவே அவரது நடிப்புச்சூழல், முகபாவனைகளின் எற்ற இறக்கங்கள், உடல் மொழிக்குத் தகுந்தபடி ஒரு திறமையான சர்க்கஸ் சாகசக்காரரைப் போல நடிகர்திலகத்தின் பிரதிபலிப்பாக நம் உள்ளங்களை கொள்ளை கொண்ட பாடகத் திலகத்திற்கு எமது நெஞ்சம் நிறைந்த நினைவாஞ்சலிகள்!
கலகல குளுகுளு சுறுசுறு மொறுமொறு படபட குடுகுடு சலசல விறுவிறு ......இரட்டைக்கிளவி போல நடிகர்திலகமும் பாடகர்திலகமும்!!

My personal Choice of Top 10 TMS voiced NT songs!

1.நடிகர்திலகத்தின் பாடல் குரலாக தூக்கோதூக்கென்று தூக்கி வைத்த தூக்குத்தூக்கி !

https://www.youtube.com/watch?v=0B2wSmSp_Oc


2.இப்புவி சுழலும் வரை நடிகர்திலகத்தின் அடையாள பாடல் the Signature song of NT ! : புதிய பறவை

https://www.youtube.com/watch?v=___CnUWEADk



3. தமிழ் திரையுலகைப் பொறுத்த மட்டில் எம் நடிக வேந்தரின் திருவிளையாடல் நீக்கமற நிறைந்த பாட்டும் நீங்களே பாவமும் நீங்களே
https://www.youtube.com/watch?v=xg_hBWlR3h0

4.பாடல்களில் மாணிக்கக்கல் நீங்களே ஆலயமணியின் ஒப்புதல் ஓசை எம் நடிப்புக் கடவுளின் அசத்தல் வாயசைப்பில் !

https://www.youtube.com/watch?v=RzSTszcoqm0




5. வாழ்க்கை என்பது ஊதி ஊதி பெரிதாக்கப்பட்ட பலூன் அல்லது பஞ்சுமிட்டாய் விருந்தே என்பதை உரைக்கும் உன்னத தத்துவ மருந்து : பாலும் பழமும்

https://www.youtube.com/watch?v=CDjDXY4248Y

6. ஆற்றொணாத் துயர் வரினும் ஆறு மனமே ஆறு அந்த ஆண்டவன் கட்டளையும் ஆறு !

https://www.youtube.com/watch?v=Ohh1B0SquPM

7. நடிகர்திலகத்தின் படப்பாடல்களின் கெளரவம் உங்களாலேயே

https://www.youtube.com/watch?v=HEaY_qGscLo


8. ஆயிரம் இருந்தும் வசதிகள் இருந்தும் No peace of Mind ! ஞான ஒளி படுமா?

https://www.youtube.com/watch?v=wfEPBX1mdVU

9. மரணம் என்னும் தூது மங்கையின் வடிவில்தானா வரவேண்டும் வசந்த மாளிகை வாயிலாய் !

https://www.youtube.com/watch?v=DDP0_Mpqd80

10. நடிகர்திலகத்தின் குரலாய் எவர் வரினும் நீங்களே உங்களுக்கு நிகரானவர் TMS ஐயா !!
https://www.youtube.com/watch?v=b3ku7VgUi30

நடிகர்திலகத்திற்காக TMS பாடிய எல்லாப் பாடல்களுமே எப்பக்கமும் இனிக்கும் வெல்லக்கட்டிகளே ! எதைத்தான் விடுவது.....நேரம் கருதி....




NT returns on his duty to acknowledge the contributions of Bala Murali Krishna, TR Mahalingam , Seergaali Govindharaajan, PBS, SPB, Jesudas ....Mothi, VN Sundaram.... and Tiruchi Loganathan in gracing his movies!

sss
25th November 2014, 11:12 PM
பிரபல இதய மருத்துவர் திரு சொக்கலிங்கம் அவர்களின் வீடியோ .. முகநூலில் (facebook ???) கிடைத்தது ...
உங்கள் பார்வைக்கு...

https://www.youtube.com/watch?v=HXufIj6-yIc

Dr. Chockalingam had retired from service as a cardiologist, Professor& Head of the department of cardiology in the Government General Hospital, Chennai. Chockalingam got the first rank in MBBS graduating from Madras University. When he was doing his MD, he was chosen for government scholarship. He is a many-time gold medalist. Right from the beginning.In an occasion He states some thing Interesting about Nadigar thilagam.....Pl watch Dont Ignore...special share on this great day....

https://www.facebook.com/video.php?v=1538851679682383&set=vb.1439592669608285&type=3&video_source=pages_video_set

JamesFague
26th November 2014, 12:01 PM
Thanks to Mr Neyveli Vasudevan


என் தெய்வம் வழங்கிய

'ஞான ஒளி'



முக்காலமும் உணர்ந்த ஞான நடிகரின் 'ஞான ஒளியை' கதையை மூன்று பகுதிகளாகப் பிரிப்போம். மூன்றும் வெவ்வேறு பரிணாமங்களைக் கொண்டவை. மூன்று பகுதிகளிலும் ஏகபோகச் சக்கரவர்த்தி நம் அன்பு நாயகர்தான். "அவனன்றி ஓர் அணுவும் அசையாது" என்பார்கள். அது உண்மையோ பொய்யோ! ஆனால் ஆண்டனி இன்றி வாசுதேவன் உயிர் அசையாது. அருணின்றி அவன் அக, புற வாழ்க்கை இனிக்காது. இப்போது ஞாலத்துக்கே நடிப்பொளி வழங்கிய நாயகன் வாழ்ந்த 'ஞான ஒளி'யின் கதை. (இணையத்து இளைஞர்களுக்காகவும், என்னுடன் இணைந்திருக்கும் அனைத்து நண்பர்களுக்காகவும்)

முதல் பகுதியாக (அப்பாவி இளைஞன் ஆண்டனி)






ஆண்டனி என்ற அனாதை முரட்டு இளைஞன் "பூண்டி' என்ற கிராமத்து மாதா கோவிலில் மணியடித்து, சவப்பெட்டி செய்தல், கல்லறை வெட்டுதல் போன்ற சிறு தொழில்கள் செய்து, தன்னை எடுத்து வளர்த்த பாதிரியாரின் மேல் கொண்ட கண்மூடித்தனமான அன்பு வெறியை வெளிப்படுத்தி, விளையாட்டுப் பிள்ளையாய் கவலை இன்னதென்று அறியாமல் சிறு சிறு அடிதடி கேஸ்களில் (நியாயமான விஷயங்களுக்காக) சிக்கி, பாதிரியாரால் அடிக்கடி ஜாமீன் எடுக்கப்பட்டு, தன் குணத்தையொத்த ஒரு பெண்ணை அவளை சீண்டியபடியே காதலித்து, பாதிரியாரின் ஆசியால் அவளை மணமும் புரிந்து, இனிமையான இல்லற வாழ்க்கையில் அவளும் கர்ப்பமுற்று, ஒரு அழகான பெண் குழந்தையை இவனுக்குத் தந்து, பிரசவத்தின் போதே அந்தப் பேதை உயிர் துறக்க, அனாதையான ஆண்டனி எப்படி அவளால் சொந்தம் ஏற்பட்டு குடும்பம், சொந்தம் என்று ஆனானோ அவளே போய்விட்ட பிறகு மீண்டும் அனாதையாகி அவள் பெற்றுத் தந்த செல்வத்தைப் பாதுகாக்க தந்தை என்ற ஸ்தானத்திற்கு சொந்தக்காரனாகிறான். இப்போது அவன் அனாதை இல்லை.

இரண்டாவது பகுதியாக (பாசமுள்ள முரட்டுத் தந்தை)





தன்னுடைய கிராமத்தில் பள்ளிக்கூடம், ஆஸ்பத்திரி, அனாதை விடுதி கட்ட வேண்டும் என்ற இயலாமை ஆசையிலே வாழும் பாதிரியார். அதற்காகவே அருமை மகளை அரும்பாடுபட்டு படிக்க வைக்கும் ஆண்டனி. பாதிரியாரால் வளர்க்கப்பட்ட இன்னொரு அனாதை சிறுவன் சிறு வயது ஆண்டனியின் நெருங்கிய நண்பன் லாரன்ஸ்... இப்போது படித்து வளர்ந்து அதே ஊரிலேயே இன்ஸ்பெக்டர். நண்பர்கள் இருவரும் நீள் பிரிவிற்குப் பின் சந்தித்து அடயாளம் கண்டு, பழைய நட்பை நினைவு கூர்ந்து, மீண்டும் நெருங்கிய நட்பு கொள்கிறார்கள்..

படிப்பின் போது கயவன் ஒருவனை காதலித்து லீவில் ஊருக்கு திரும்பும் மகள் மேரி ஒரு இடிமழை இரவில் சொந்த ஊரிலேயே அவனிடம் சோரம் போகிறாள். மகளைக் காட்ட நண்பன் லாரன்ஸை ஆசையுடன் தன் வீட்டுக்கு அழைத்து வரும் ஆண்டனி மகள் நாசமாவதை நேரே கண்டு விடுகிறான். கொதிப்பும், ஆங்காரமும், அதிகோபமும் அடைகிறான். பொங்கு கடலாய்க் கொந்தளிக்கிறான். லாரன்ஸ் நண்பனின் கோபத்தைக் கட்டுப் படுத்தி. மேரிக்கு அங்கேயே அவள் காதலனுடன் மோதிரம் மாற்றி மணமுடித்து வைக்கிறான். தன் வாழ்க்கையையே ஒரு வினாடியில் வெட்டிச் சாய்த்த மகளின் செய்கையில் கொந்தளித்து தன்னுடைய தோட்டத்து வாழைகளை வெட்டி சாய்த்து வெறிதீர்க்க முயன்று தோற்கிறான் ஆண்டனி.



பாதிரிக்கு விஷயம் போக, முறைப்படி இருவருக்கும் கல்யாணம் செய்து வைப்பதுதான் ஒரே வழி என்று சொல்ல, மான, அவமானத்திற்கு பயந்து, மேரி காதலித்த பையனை தேடிச் செல்லும் ஆண்டனி அவன் ஒரு நயவஞ்சகன்... பெண்களை ஏமாற்றும் காமாந்தகன் என்று தெரிந்து கொள்கிறான். இருந்தாலும் அவனைத் தேடிக் கண்டு பிடித்து தன் மகளுக்கு வாழ்வு தரச் சொல்லி மன்றாடுகிறான். அவன் காலைப் பிடித்துக் கதறுகிறான். ஆனால் அந்த நயவஞ்சகனோ கல்யாணத்துக்கு மறுத்துவிடுவதோடு மட்டுமல்லாமல் மேரியைப் பற்றி அவதூறாகவும் பேசிவிடுகிறான்.

அவனால் வெகுவாக அவமானப் படுத்தப்பட்ட போதும், மகளுக்காகப் பொறுத்துப் பொறுத்துப் பார்த்த ஆண்டனி ஒரு கட்டத்தில் கோபம் எல்லை மீற, ஆத்திரத்தில் அவனை முரட்டுத்தனமாக ஒரே ஒரு அடி அடித்து விட, ஆண்டனியின் இரும்புக்கை தாக்குதலில் பந்து போலத் துள்ளி விழுந்து உயிரை விடுகிறான் மேரியின் காதலன். இது அறியாத ஆண்டனி அவனை தூக்கிக் கொண்டு பாதிரியிடம் சேர்க்கிறான். பிறகுதான் தெரிகிறது மாப்பிள்ளையாய் வர இருந்தவன் மாமனாரால் அடித்துக் கொலை செய்யப்பட்ட விவரம்.

போலீஸ் நண்பன் தன் கடமையை செய்கிறான். யாருமே இல்லாமல் கற்பிழந்து ஆதரவற்று அனாதையாக நிற்கிறாள் மேரி. சிறைவாசத்தில் ஆயுள்தண்டனையில் ஆண்டனி. எதுவும் செய்ய முடியாத நிலையில் பாதிரியார். சிறையில் இருக்கும் ஆண்டனிக்கு மேலும் ஒரு அதிர்ச்சி... மகள் தற்கொலை செய்து கொண்டு மாண்டு விட்டாள் என்று. மீண்டும் அனாதையாகிறான் ஆண்டனி.

பாதிரியாருக்கு அதிக வயதாகி விட்டது. மரண வாசலை நெருங்கும் நேரம். தன் அன்பு ஆண்டனியைப் பார்க்க ஆசை. இன்ஸ்பெக்டர் லாரன்ஸிடம் தெரிவிக்கிறார். பாதிரியாரின் இறுதி ஆசை என்பதால் லாரன்ஸும் தன் சொந்தப் பொறுப்பில் சிறையிலிருந்து பரோலில் ஆண்டனியை பாதிரியாரிடம் அழைத்து வருகிறான். இரு தூய்மை உள்ளங்களும் உண்மையான அன்பின் உணர்வுகளின் சங்கமத்தால், உணர்ச்சிப் பெருக்கால் போராடுகின்றன. தன் ஆசைகள் எதுவுமே நிறைவேறாமல் தன் உயிர் பிரியப் போவதை எண்ணி பாதிரியார் கண்ணீர் விட, அதையே தன் மகள் மூலம் நிறைவேற்றுவதாய் வாக்குக் கொடுத்திருந்த ஆண்டனி அது பலிக்காமல் போனதை எண்ணி வேதனையுறுகிறான்.

தான் ஜெபம் செய்யும் புனிதமான மெழுகுவர்த்தியை ஆண்டனியிடம் தந்து ஆண்டனியை லாரன்சிடம் ஒப்படைத்து அவனை மனிதனாக்கும்படி கூறி பாதிரியார் கண் மூடுகிறார். ஊருக்கெல்லாம் சவப்பெட்டி செய்த ஆண்டனி தன் தெய்வத்திற்கான ஈமச் சடங்குகள் செய்ய லாரன்ஸிடம் பெர்மிஷன் கேட்க அவனோ மறுக்கிறான். வழக்கம் போல கோபமுறும் ஆண்டனி லாரன்ஸை அடித்துப் போட்டு விட்டு பாதிரியாரின் கனவுகளை நனவாக்குவதற்காகவே அங்கிருந்து தப்பித்து விடுகிறான்.

இனி மூன்றாவது பகுதி (பரிதாபத்துக்குரிய கில்லாடி மில்லியனர் அருண்)



தப்பித்த ஆண்டனி வெளிநாடு சென்று மிகப் பெரிய பணக்காரனாகி நீண்ட இடைவெளிக்குப் பின் தன் சொந்த கிராமத்துக்கு வருகிறான். இப்போது அவன் ஆண்டனி அல்ல. மில்லியனர் அருண். பாதிரியாரின் கனவுகளை நனவாக்கவே அருண் தன் சொந்த மண்ணுக்கே திரும்புகிறார். ஆனால் அவர்தான் ஆண்டனி என்று ஒரு பயலுக்கும் தெரியாது. அருணுக்கு இன்னொரு இன்ப அதிர்ச்சி. இறந்து விட்டதாக சொல்லப்பட்ட மகள் ஒரு ஏழை ஆசிரியையாக இப்போது அவர் கண் முன்னாலேயே உயிரோடு. தன்னையே நம்ப முடியவில்லை. மகளுக்கே தந்தையை அடையாளம் காண முடியாத அளவுக்கு அருணின் தோற்றம். மாற்றம். மகளிடமே தன்னைத் தெரியப்படுத்திக் கொள்ள முடியாத துர்ப்பாக்கிய சூழ்நிலையில், கண்கொத்திப் பாம்பாக லாரன்ஸ் அலைய, எதையும் வெளிக்காட்டிக் கொள்ளாமலேயே அடிமனதில் அழுகிறான் ஆண்டனி. மகளுக்கே மகள் வேறு. பேத்தி. மறுபடியும் சொந்த பந்தங்கள். தான் கடவுளாக நேசித்த பாதிரியாரின் ஆசைகளை ஒவ்வொன்றாக நிறைவேற்ற ஆரம்பிக்கிறார் அருண். ஊராரின் உன்னத அன்புக்கும் பாத்திரமாகிறார் அவர்களுக்கு தான் பழைய ஆண்டனி என்பது தெரியாமலேயே அல்லது காட்டிக் கொள்ளாமலேயே.

இதன் நடுவில் வஞ்சம் வைத்த புலியாக வாழ்நாள் சபதமெடுக்கிறான் லாரன்ஸ். ஆண்டனியால் தன் பதவிக்கும், தனக்கும் ஏற்பட்ட களங்கத்தை, இழுக்கை சரி செய்யத் துடிக்கிறான். வேண்டுமென்றே நண்பனைத் தப்பிக்க வைத்தவன் என்ற இழிசொல்லை இல்லாமல் செய்ய இரை தேடும் சிங்கமாக மீண்டும் அந்த ஊருக்கே மாற்றலாகி வருகிறான். மீண்டும் நண்பர்கள் சந்திக்கின்றனர். ஆனால் நண்பர்களாக அல்ல. எதிரிகளாக.



அருண்தான் ஆண்டனி என்பதை பல சந்தர்ப்பங்களில் உணர்ந்து, தெரிந்து கொண்ட லாரன்ஸ் அதை நிரூபிக்க ஆதாரம் இல்லாமல் தவிக்கிறான். ஆண்டனியோ வித்தகனுக்கு வித்தகனாக எந்த ஆதாரத்தையும் விட்டு விடாமல், தன் மகள் மீதான அதீத பாசத்தையும் மறைத்துக் கொண்டு, லாரன்ஸ் தரும் சித்திரவதை தொல்லைகளையும் தாங்கிக் கொண்டு, ஒவ்வொரு முறையும் லாரன்ஸ் விரிக்கும் வலைக்குள் சிக்காமல் குள்ள நரியாக அவனிடமிருந்து தப்பித்துக் கொண்டே இருக்கிறான்.

மேரியின் மகள் லாரன்ஸின் மகனைக் காதலிக்க, கல்யாணத்திற்கு இரு வீட்டாரும் சம்மதம் தெரிவித்து திருமணப் பத்திரிக்கையை மேரி அருணிடம் கொடுக்கப் போகும் சந்தர்ப்பத்தில் தன் மகளிடமே பரிதாபமாக தன்னை அவள் தந்தை ஆண்டனிதான் இந்த அருண் என்று அறிமுகப்படுத்திக் கொள்கிறான் ஆண்டனி. ஆடிப் போகிறாள் மகள். இத்தனை நாள் பிரிந்திருந்த மொத்தப் பாசத்தையும் அவள் மீது அந்தக் கண நேரத்தில் கொட்டுகிறான் ஆண்டனி. அப்பாவைப் பார்த்த சந்தோஷத்தை விட அப்பாவின் எதிர்காலம்... அதை நிர்ணயிக்கப் போகும் லாரன்ஸ்... இவைதான் மேரி நெஞ்சில் இப்போது அதிகம் நிழலாடுகின்றன. பேத்தியின் கல்யாணத்தை ஜாம் ஜாமென்று நடத்தப் போவதாகக் மேரியிடம் கூறுகிறார் அருண். ஆனால் மேரி தடுத்து விடுகிறாள். தன் தந்தையை பிடிப்பதையே வாழ்க்கையின் லட்சியமாகக் கொண்டுள்ள தன் வருங்கால சம்பந்தி இன்ஸ்பெக்டர் லாரன்ஸிடம் தன் தந்தை மாட்டாமல் இருக்க வேண்டுமானால் வெளி உலகத்திற்கு தங்களது தந்தை மகள் உறவு தெரியக் கூடாது என்று ஆண்டனியிடம் இறைஞ்சுகிறாள் மேரி. அதுமட்டுமல்ல தந்தையை திரும்ப வெளிநாட்டுக்கே சென்று விடும்படியும் வேண்டுகிறாள். அனலிடை புழுவாக துடிக்கிறார் அருண். மகள், பேத்தி பாசம் ஒருபுறம்.... தன்னை வேட்டையாடவே அவதாரம் எடுத்திருக்கும் லாரன்ஸ் ஒரு புறம்... பாதிரியாரின் கனவுகள் ஒருபுறம்.

சித்ரவதை சிறகுகளுக்குள் சிக்கி, உள்ளுக்குள் உடைந்து, ஊமையாய் அழுது, துன்பங்களில் துவள்கிறார் ஆண்டனி இல்லை இல்லை அருண்.

அருணை ஆண்டனி என்று நிரூபிக்க எந்த வழியிலும் வெற்றி அடைய முடியாத லாரன்ஸ் இறுதியாக ஒரு வழியைத் தேர்ந்தெடுக்கிறான். அதைத் தன் மகனின் (அருணின் பேத்தியின்) கல்யாணத்தின் போது பயன்படுத்திக் கொள்கிறான். கல்யாணத்தை நடத்திக் கொடுக்க வரும் அருண் முன்னாலேயே தன் சம்பந்தியான மேரியின் கடந்தகால வாழ்க்கையைக் கூறி அவள் நடத்தை கெட்டவள் என்று ஊரார் முன் அவளை வேண்டுமென்றே அவமானப் படுத்துகிறான் லாரன்ஸ். (அப்போதுதான் அருண் மகள் மேல் உள்ள பாசத்தால் தன்னை ஆண்டனி என்று நிச்சயம் அடையாளம் காட்டிவிடுவான் என்ற நம்பிக்கை கொண்டு) அவளுடைய கணவன் யார் என்று கேலி பேசுகிறான் தான் அவளுக்கு செய்து வைத்த கல்யாணத்தை மறைத்தே. மேரியின் மகளுக்கான தகப்பன் யார் என்று சொற்சவுக்கால் அடிக்கிறான். உண்மையை மேரி உரைத்தால்தான் இந்தக் கல்யாணம் நடக்கும் என்றும் பயமுறுத்துகிறான்.



தன் அருமை மகள் தன் கண் முன்னாலேயே லாரான்ஸால் ஊரார் முன் அவமானப்படுவதை சகிக்க முடியாத அருண் தன் நிலை இழக்கிறான். வெறி கொண்ட வேங்கையாகிறான். மேரிக்கு லாரன்ஸ்தான் மோதிரம் மூலம் திருமணம் செய்து வைத்தான் என்று தன்னையறியாமல் உண்மையை உடைக்கிறான். பழைய ஆண்டனியின் முரட்டுக் குணத்தைக் காட்டி, உச்ச கோபத்தில் லாரன்ஸை பாதிரியார் தந்த மெழுவர்த்திக் கேண்டிலால் அடிக்கக் கை ஓங்கி தன்னை அடையாளம் காட்டி விடுகிறான். அதைத்தான் லாரன்ஸும் எதிர்பார்த்தான். அவன் நினைத்தபடியே நடந்து விட்டது. பல வழிகளில் முயன்றும் அருணை ஆண்டனி என்று அடையாளம் காட்ட முடியாமல் தோல்வியுற்று துவளும் லாரன்ஸ் பாசம் என்ற தூண்டிலுக்குதான் ஆண்டனி மாட்டுவான் என்பதை வகையாகப் பயன் படுத்திக் கொண்டு அதில் வெற்றியும் அடைகிறான். அருணை அவர் வாயாலேயே ஆண்டனி என்று அனைவர் முனனால் சொல்ல வைக்கிறான்.

அருண் தான் தான் ஆண்டனி என்று அனைவர் முன்னும் ஒத்துக் கொண்ட பிறகு தன் முறையற்ற செயலுக்காக அவனிடம் மன்னிப்பு கோருகிறான் லாரன்ஸ். அவனைப் பிடிக்க வேறு வழி தெரியாததால்தான் தான் மேரியை அவமானப்படுத்த நேர்ந்தது என்றும் வருத்தப்படுகிறான். மேரி நல்லவள்தான் என்று ஊரார் முன் நிஜத்தை எடுத்துரைக்கிறான். தான்தான் மேரிக்கு கல்யாணம் செய்து வைத்தவன் என்ற உண்மையையும் கூறுகிறான். ஆண்டனி சாந்தமடைகிறான்.

தந்தை மாட்டக் கூடாது என்று நினைத்த மகளுக்கு ஏமாற்றமே!

பாதிரியாரின் ஆசைகளை நிறைவேற்றி விட்ட திருப்தி, மகளின் மானம் நண்பனால் சீண்டப்பட்டு பின் அவனாலேயே காக்கப்பட்ட கண்ணியம், பேத்தியின் கல்யாணம் என்ற சந்தோஷங்களில் மனம் லேசாக, முழு திருப்தியோடு தன்னை ஆண்டனி என்ற பழைய கைதியாக லாரன்ஸ் வசம் சந்தோஷமாக ஒப்படைக்கிறான் அருண் சிறைக் கதவுகளை எதிர்நோக்கியபடி.

'ஒளி' உலகுள்ளவரை வீசிக் கொண்டே இருக்கும்.

ஆண்டனி அனைவரையும் ஆட்டுவித்துக் கொண்டே இருப்பான்

அருண் அனுதினமும் அவரை நினைக்கச் செய்து கொண்டு தான் இருப்பார்.

இந்த விதி மாற்ற முடியாதது.

இனி....

'ஞான ஒளி' யில்

'நம் ஆண்டவனின் அரசாட்சி'

விரைவில் தொடரும்.

ஒளித் தாக்குதலில் சிக்குண்டு, சிதறிக் கிடக்கும்

வாசுதேவன்..

JamesFague
26th November 2014, 12:25 PM
Thanks to Mr Neyveli Vasudevan


'சவாலே சமாளி' (கிணற்று சீன்)

'சவாலே சமாளி' யின் அந்த பாப்புலரான கிணற்று சீன் பலநாள் என் தூக்கத்தைக் கெடுத்த பெருமை உடையது. ஜெயலலிதா உயிரை மாய்த்துக் கொள்ளப் போகும் அந்த இடம்தான் படத்தின் உயிர்நாடியே! நடிப்பின் உயிர்நாடியும் கூட. ஜீவனுள்ள இக்காட்சி ஜீவன் உள்ளவரை மறக்காது.

தேர்தல் பந்தயத்தில் பண்ணையாரிடம் ஜெயிக்கும் மாணிக்கம் பந்தய பொருளாக அவர் மகள் சகுந்தலாவை பெற்று ஊரார் முன்னிலையில் தாலி கட்டி விடுகிறான் அவள் விருப்பமில்லாமலேயே. பணக்கார சகுந்தலாவுக்கும், ஏழை விவசாயி மாணிக்கத்திற்கும் பொருத்தமே இல்லாத திருமணம். பணக்காரத் திமிர் கொண்ட மனைவியை ஏழை மாணிக்கம் அடக்கி ஒடுக்க நினைக்கிறான் அவள் தனக்கேற்றவாறு இருக்க வேண்டும் என்று எண்ணி. தன் நிலத்து வேலைகளையும், வீட்டு வேலைகளையும் அவளைச் செய்யச் சொல்லி ஆணையிடுகிறான். முதலிரவில் கூட தொட அனுமதிக்காத சகுந்தலா கணவன் (இல்லை அவளைப் பொருத்தவரை அவன் கயவன்) இடும் பழக்கமில்லாத வேலைகளில் மனம் நொந்து போகிறாள். ஆனால் மாணிக்கத்திற்கோ உள்ளுக்குள் அவள் மீது உயிர். அவன் வெளிக்காட்ட மாட்டான். அவளுக்கோ அவன் ஒரு வஞ்சகன், பழி உணர்ச்சி கொண்டவன். அவனைப் பழிவாங்கவோ அல்லது தன மனதிற்குப் பிடிக்காதவனோடு வாழப் பிடிக்காமலோ அவள் தன் உயிரை தோட்டத்துப் பக்கம் உள்ள கிணற்றில் குதித்து மாய்த்துக் கொள்ள முற்படுகிறாள். மனைவியைப் பற்றி நன்கறிந்த மாணிக்கம் கண்கொத்திப் பாம்பாக அவளைக் கவனித்து அவளை காப்பாற்றுகிறான். தன்னவள் தன்னைப் பற்றி தெரிந்து புரிந்து கொள்ளாமலேயே உயிரை விட எத்தனித்து விட்டாளே... நமக்கு பழிபாவத்தைச் சேர்க்க இருந்தாளே என்று மனம் வெதும்பி அவளுக்குத் தன் நிலையை விளக்குகிறான். மனம் விட்டு தன் உள்ளத்தில் பொங்கும் உணர்ச்சிகளை அருவியாய் வார்த்தைகளில் அவளிடம் கொட்டித் தீர்க்கிறான். தான் குற்றமற்றவன்...அவள் மேல் தீராத அன்பு கொண்டவன் என்பதை அவளுக்குத் தன்னாலான மட்டில் புரிய வைக்க முயல்கிறான்.

இதுதான் சிச்சுவேஷன். மாணிக்கமாக மாசில்லாத நம் நடிப்புலக மாணிக்கம். மனைவி சகுந்தலாவாக ஜெயா மேடம்.

ஆஹா! எப்பேர்பட்ட பங்களிப்பு நடிகர் திலகத்துடையது.! கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொள்ளப் போகும் நேரத்தில் கயிற்றால் ஜெயலலிதாவை பிடித்து இழுத்துக் காப்பாற்றப் போகும் போது நடத்த ஆரம்பிக்கும் நடிப்பு சாம்ராஜ்யம் கொஞ்சம் கொஞ்சமாக விரிவடைந்து எல்லைகளின்றிப் பரவி ஆக்கிரமிக்கும் அதிசயத்தை என்னவென்று சொல்ல!

கயிற்றால் ஜெயலலிதாவை கட்டி இழுத்துக் காப்பாற்றும் போது அவரது கண்களில் தெரியும் ஆழம் அளவுகோல் இல்லாதது. (எனக்குத் தெரியாம நீ எதுவும் செஞ்சுடுவியா...செய்யத்தான் விட்டுடுவேனா? உன் இஷ்டத்திற்கு நீ ஆட்டம் போடுவே! நான் பார்த்துகிட்டு சும்மா இருக்கணும்! ம்.... )

கயிற்றால் ஜெயா இவரை அடிக்க அடிக்க கயிற்றின் ஒவ்வொரு பகுதியாக பிடித்தபடி சிரிக்கும் சிரிப்பு. (பார்த்தியா! இங்கேயும் ஜெயிச்சது நான்தான்)

ஜெயலலிதா இவரை திட்டித் தீர்த்தவுடன் (ஒரு பெண்ணுங்கிற இரக்கம் கூட இல்லாம இப்படி அரக்கத்தனமா நடந்துக்குற நீங்க மனுஷனே இல்ல!) என்று குமுறி அழும் போது

"அழு... நல்லா அழு... வாய்விட்டுக் கதறு.... அப்பத்தான் உன் வெறி அடங்கும்...உன் சந்தோஷத்தையெல்லாம் குழி தோண்டிப் பொதச்சவன் நான். நான் உயிரோட இருக்கிற வரைக்கும் அது உனக்குக் கிடைக்காது... அதுதானே உன் குற்றச்சாட்டு.... சரி! உன் சந்தோஷத்தை யெல்லாம் அழிச்ச நானே அழிஞ்சி போயிட்டா....உனக்கு அது திரும்ப கிடைச்சுடுமில்லையா?" என்றபடி வயிற்றுப் பகுதியில் கைகளைக் கட்டியபடியே சாவின் வாயிலிலும் நிற்கும்போது கூட நிற்கும் அந்த ஆண்மை நிறைந்த கம்பீர போஸ்.

ஒன்று இரண்டு மூன்று எண்ணி பத்தைத் தொடும் போது கைகள் இவரைத் கிணற்றில் தள்ளத் தயார் நிலையில் இருந்தும் மனம் மறுத்த காரணத்தால் ஜெயலலிதா தோற்றுவிட நடிகர் திலகம் கீழே இறங்கி

"உனக்கு அந்த துணிச்சல் இல்ல. உன் மனசுல பலவீனம்தான் மண்டிக் கிடக்குது அதனாலதான் சாகத் துணிஞ்ச"..... என்று பேசிக் கொண்டே வருவார்.

"நீ என்கூட வாழ்ந்துதான் தீரணும்னு உன்னை நிர்ப்பந்தப்படுத்துறது உன் கழுத்துல கிடக்கிற இந்த மஞ்சக் கயிறுதானே! நான்தானே அதை உன் கழுத்தில கட்டினேன். இப்ப ஒரு நிமிஷம்... ஒரு நிமிஷம் உன்னைத் தொடரத்துக்கு அனுமதி கொடுத்தீனா நானே அந்தக் கயித்த அறுத்து எறிஞ்சிட்டுப் போறேன். அதுக்கப்புறம் உன் இஷ்டப்படி எப்பிடி வேணும்னாலும் வாழலாம்...என்று சொல்லி திரும்பவும்

'எப்பிடி வேணும்னாலும்'

என்று இரண்டாம் முறை அழுத்தம் கொடுப்பார். தான் அப்படி வழங்க இருக்கும் அனுமதியை ஆணித்தரமாக கூறுவதாக அர்த்தம் தொனிக்கும்படி வசங்களை டெலிவிரி செய்வார்.

"நீ எனக்கேத்த மனைவியாய் வாழணும்ங்கிற ஆசையினால உனக்குப் பழக்கமிலாத வேலைகளை செய்யச் சொல்லி உன்னைக் கட்டாயாப் படுத்தினேன். அது உனக்குக் கொடுமையாப் பட்டுது. நீ நெஞ்சு வெடிச்சு கதறி அழுகிறத பார்க்கும் போது உன்னைப் போலவே எனக்கும் கதறி அழுகணும் போல தோணுது... என்ன செய்யிறது? நான் ஆம்பிளயாச்சே! அதனாலதான் மனசுல இருக்கிற வேதனைகளையெல்லாம் வெளியே சொல்ல முடியாமே அப்படியே வாய்க்குள்ளேயே போட்டு மென்னு முழுங்கிக்கிறேன்.... முழுங்கிக்கிறேன்" என்று மனக்குமுறல்களைக் கொட்டித் தீர்ப்பார்.

இந்தக் காட்சியில் வசனங்கள் மிகப் பெரிய பலம். வசனங்களைச் சொல்லாமல் இந்தக் காட்சியை விவரிக்க இயலாது.

"உன்னதான் தொட முடியல்ல...உன் மனசையாவது தொடலாம்னு பாக்குறேன்". சொல்லி நிறுத்துவார். முடியல்ல என்பதை கைகளைக் கொட்டி உணர வைப்பார். ஒரு விசும்பு விசும்புவார்.

"நீ உன் மனசுல இருந்ததையெல்லாம் ஒளிவு மறைவு இல்லாம கொட்டித் தீர்த்த மாதிரி நானும் என் மனசுல இருந்ததையெல்லாம் ஒளிவு மறைவு இல்லாம கொட்டித் தீர்த்துட்டேன். ஒருவேளை உன்னை என்னால காப்பாத்த முடியாம போய் இருந்தா நான் உன்னப் பத்தி என் மனசுல நினச்சுக்கிறதெல்லாம் உன்கிட்ட விளங்க வைக்க முடியாமலேயே போயிருக்கும்". (உதடுகளை அவ்வளவு அழகாகக் குவித்து சோகத்தையும், துயரத்தையும் கண்களில் தேக்கிக் காண்பிப்பார்)

ஜெயலலிதாவிடம் முழுவதுமாகத் தன் நிலையை விளக்கிவிட்டு புயல் அடித்து ஓய்ந்து போன சூழ்நிலையைக் காண்பிப்பார். பேசி முடித்த பின் கிணற்றின் மேல் கால்களுக்கிடையில் கைகளை கொடுத்து அப்படியே ஒடுங்கிப் போய் உட்கார்ந்திருப்பார். ("இதுக்கு மேலே உனக்கு விளக்க என்னாலாகாது தாயே! புரிஞ்சா புரிஞ்சுக்கோ! இல்லைன்னா உன் இஷ்டம்" என்பது போல.)

போகும் போது,

" நீ செஞ்ச இந்த பைத்தியக்கரத்தனமான காரியத்தை நான் யாருகிட்டேயும் சொல்லல.... நான் வீட்டுக்குப் போறேன்...நீ வரற்தா இருந்தா வரலாம்" (இடது கை காது மடல்களை பிடித்து திருவியபடி ஒரு அற்புதமான மானரிசத்தைக் காட்டுவார்)

என்று சொல்லி விட்டு விரக்தியுடன் செல்லுவார்.

வாவ். என்ன ஒரு காட்சி. ஜெயலலிதாவிடம் கோபமாக வாதம் தொடக்கி, பின் ஜெயாவை பேச முடியாதபடி வாயடைக்கச் செய்து, கோப வார்த்தைகள் கொஞ்சம் கொஞ்சமாக மாறி. மனைவி மேல் கொண்ட உண்மையான அன்பை கனிவான வார்த்தைகளில் கொட்டி. அவள் புரிந்து கொள்ளாத நிலையை குரல்கள் உடைந்து நா தழுதழுக்க விளக்கி, அதுவரை அழாதவர் அதிகமாக அழுது புரளாமல் தேவையான அழுகையை மட்டுமே சிந்தி, அவ்வளவுதான் நம் விதி என்ற விரக்தியோடு இறுதியான ஒட்டிக் கொண்டிருக்கும் சிறு நம்பிக்கையில் 'அவள் திருந்தி வந்தால் வரட்டும்... இல்லையென்றால் அவள் இஷ்டம்' என்ற வெறுப்பு கலந்த விரக்தி சூழ்நிலையைக் காட்ட நம் நடிக தெய்வத்தைத் தவிர எவரால் முடியும்?

ஒரு நடிகன் என்பவன் நடித்து விட்டு சென்று விடுவான்.. அந்த நேரம் நாம் அவனைப் பார்ப்போம். அத்தோடு மறந்து விடுவோம். ஆனால் இந்த நடிகன் அப்படியா?

பாத்திரத்தை உணர்ந்து நடிப்பவனே மகாநடிகன்.

அந்த பாத்திரத்தின் தன்மையை பார்க்கிறவர்களுக்குப் புரிய வைக்கும் காரியத்தையும் வெற்றிகரமாகச் செய்து முடிக்கிறானே... அவன் உலக மகா நடிகன்.

அது மட்டுமல்ல. அந்த உணர்வை உயிருள்ள வரையில் நம் தசை நாளங்களில் பரவச் செய்து நம்மை உணர்வுகளின் சங்கமம் என்ற கயிற்றில் பின்னிப் பினைக்கிறானே... அவன்... அவனை என்னவென்று சொல்வது?!

அவரைத்தான்

நடிகர் திலகம் என்ற நடிப்பு மகான் என்கிறோம்.

AREGU
26th November 2014, 12:47 PM
காட்சி குறித்த நல்ல கருத்துரை.. பாராட்டுகள்..

காட்சிப்புலத்தில், உரையாடல், ஜெயாவின் ரீ-ஆக்*ஷன் ( நடிகர்திலகத்தின் படங்களில் மட்டும் தன் உச்ச திறமையை வெளிப்படுத்துவது ஜெயாவின் சிறப்பம்சங்களில் ஒன்று ) ஒளிப்பதிவு மற்றும் கவனமாகத் தேர்வுசெய்யப்பட்ட கேமரா கோணங்கள், நெறியாள்கை உள்ளிட்ட பிறவும் நடிகர் திலகத்தின் நடிப்புத்திறனுக்கு ஈடுகொடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

kalnayak
26th November 2014, 01:47 PM
'கல்நாயக்'- பெயருக்கு முன்னாடி ஒரு பட்டமும் வேணாஞ்சாமி!!! வா...வா...ம்பாரு ஒருத்தரு. போனா 'நேருக்கு நேராய் வரட்டும்'-னவரு 'இது எங்க ஏரியா. இன்னாத்துக்கு இங்க வரீக?'-ம்பாரு. அப்புறம் எங்கேயும் கிடைக்காத 'பின்'னை நாமதான் வாங்கிட்டோம். வாங்கிட்டோம்பாங்க. நமக்குத் தேவையா?

eehaiupehazij
26th November 2014, 06:24 PM
Playback Singers who graced NT's movies, though not singing for NT!

திலக குரல்3.

தனது கந்தர்வக்குரலால் நடிகர்திலகத்தின் திரைப்பட பங்களிப்பில் நம்மைக் கட்டிப்போட்ட 'செந்தமிழ் தேன்மொழியாளர்...' T.R. மகாலிங்கம் அவர்கள்.!

Our fond remembrance with gratitude of participatory support in NT's movies!

https://www.youtube.com/watch?v=HdhAu6fbeIA

https://www.youtube.com/watch?v=q09dYjrH2LU

https://www.youtube.com/watch?v=HCm1GVhixQI

eehaiupehazij
26th November 2014, 06:27 PM
Playback Singers who graced NT's movies, though not singing for NT!

திலக குரல் 4. Dr. Balamurali Krishnaa sir.

பாட்டும் நானே (நவரச நடிப்பின்) பாவமும் நானே என்று நடிகர்திலகம் கோலோச்சியதிருவிளையாடலில் பாட்டும் தானே பாவமும் தானே என்று 'மதுரைக்கு வந்த சோதனை'யான அகந்தைப் பாடகரைக் கண்முன்னே நிறுத்திப் பெருமை சேர்த்த பாலையா அவர்களின் பொருத்தமான குரலாய் பெருமை பெற்ற பாடக வால்நட்சத்திரம் பாலமுரளி கிருஷ்ணா அவர்களுக்கு எமது நன்றியும் வணக்கமும் !

Our heartfelt thanks for rocking Thiruvilayadal movie with this inimitable song,

https://www.youtube.com/watch?v=D0wLIArAayY

His best remembered off screen rendition

https://www.youtube.com/watch?v=sYD_Iw77mT4

eehaiupehazij
26th November 2014, 06:38 PM
திலக குரல் 5. A.M.ராஜா

சிம்மக் குரலையும் மென்மைப் படுத்திய மேன்மைப் பாடகர் 'ஜெமினியின் எதிரொலி ' A.M.ராஜா !

இனிய குரலோட்டம்,,,,,,, ஆனால் கணேசன்தான் மாறிவிட்டார் ஜெமினியிலி ருந்து சிவாஜிக்கு !

Evergreen softie A.M. Raja's Gemini voice for NT! NT justified ..but when you hear this song closing your eyes .. GG only pops up!! Our thanks to AMR for his trial to befit NT's voice

https://www.youtube.com/watch?v=7svF84dnMpI

https://www.youtube.com/watch?v=Z8f3IAZ3GY0

திலக குரல் 6. திருச்சி லோகநாதன்

கல்யாண சமையல் சாதம்...காய்கறிகளும் பிரமாதம்.....ஆனால்....நடிகர்திலகம் தான் சாப்பிடாது ரசிகர்களுக்குப் பரிமாறவே முடிந்தது

Trichy Loganathan famous for his 'varai nee vaarai..(Manthiri kumari)' and 'Kalyaana samaiyal saadham (Maaya Bazaar) honoured Karnan to honor himself! Thanks to this soul stirring song voiced by him!

https://www.youtube.com/watch?v=GvTuUhcqEaw

eehaiupehazij
26th November 2014, 06:44 PM
ஈங்கிவரை நடிகர்திலகமாக நாம் பெறவே என்ன தவம் செய்து விட்டோம் என்று தமிழ்த் திரையுலகின் சாதனைக் காவியம் கர்ணனின் உயிரோட்டப் பாடலுக்கு உயிர் கொடுத்த உன்னதமான உயரழுத்த மின்காந்தக் குரல் !

திலக குரல் 7.சீர்காழி கோவிந்தராஜன் அவர்கள்

Our heartfelt thanks to Seergaali Sir for this signature song that got immortalized by the screen presence and the best of NT's absorbing portrayals in his life time with his silent but powerful depictions of death pains before the Lord !

Seergaazhi Govindarajan's Song of this Century that blessed and graced NT's Karnan character to linger!

https://www.youtube.com/watch?v=QroxeC_HQ6k

Seerghazhi Govindharajan also made an impressive value addition to Padikkadha Medhai Sivaji's role by his mind voice song 'Engirundho vandhaan ...' through Rangarao!

https://www.youtube.com/watch?v=rV8yRtU8jmo

https://www.youtube.com/watch?v=vVffTg8AoWY

https://www.youtube.com/watch?v=pbte64aTKPA

Russellxss
26th November 2014, 07:47 PM
http://oi57.tinypic.com/mnez6.jpg

எட்டாவது அதிசியம் அல்ல,
எவரும் எட்டாத அதிசியம் சிவாஜி புகழ் காப்போம்.

eehaiupehazij
26th November 2014, 08:09 PM
திலக குரல் 8. P.B. ஸ்ரீனிவாஸ் :

P.B. Srinivas aka PBS (aka Play Back Singer)!

Another softie whose voice could never match NT's simmakkural! However, in combination with TMS, he could make memorable contributions and value additions to NT movies like Paar Magale Paar, Pandha Paasam, Paavamannippu, Paasamalar....with his co-stars like GG or Muthuraman ....Hats off to PBS for gracing our NT's movies!

https://www.youtube.com/watch?v=UvmgYkgg3o8

https://www.youtube.com/watch?v=P9GHMCQGlV8

https://www.youtube.com/watch?v=JK3XMj44Vv8

https://www.youtube.com/watch?v=hQjCTpgfaqw

eehaiupehazij
26th November 2014, 08:34 PM
நடிகர்திலகத்திற்கு பாடியது ஒரு தரம் ஒரே தரம் ஆனால் தரம் நிரந்தரம் ! V. N. சுந்தரம் / T.A. மோத்தி

Unsung singing heroes who have rendered these unforgettable numbers for NT and our heartfelt thanks to them, though not sustaining their tones in the following years ! One film wonders!!

திலகக் குரல் 9. Thiru V. N. சுந்தரம் (Kaviyin Kanavil... in Kalyaanam Panniyum Brahmachari)

https://www.youtube.com/watch?v=SldcGT-jSjQ

திலகக் குரல்10. Thiru. T.A. மோத்தி (Kaana Inbam kaninthathaeno.. in Sabash Meena)

https://www.youtube.com/watch?v=MewOsMqwg3Y

eehaiupehazij
26th November 2014, 08:50 PM
திறன்மிகு பாடகத் திலகங்கள் ஜேசுதாஸ், பாலசுப்பிரமணியம் மற்றும் மலேசியா வாசுதேவன்

Though they could not hit the bull's eye to become the voice of NT, some unforgettable numbers have been rendered by them with NT changing his facial expressions and lip movements to synchronize with their voice modulations! Kudos to them for honoring NT movies!

திலகக் குரல்11. K.J. ஜேசுதாஸ்

Jesudas's tone could only match NT in his old get-up! Somehow NT managed in Trisoolam to lip his song!

https://www.youtube.com/watch?v=xvFu-gm0UuY

https://www.youtube.com/watch?v=L4PcNDIwf_0

திலகக் குரல்12. S.P. பாலசுப்பிரமணியம்

SPB's voice match to NT somehow got improved with successive films!

https://www.youtube.com/watch?v=NaeKkH0hPus

https://www.youtube.com/watch?v=LEw6U2BhHDI


திலகக் குரல்13. மலேசியா வாசுதேவன்
In the later years of NT , Vasudevan's tone was almost a replacement for TMS!

https://www.youtube.com/watch?v=-9kaLJZhJIE

Watch the titles ! That is the prestigious presence of NT!

https://www.youtube.com/watch?v=-L6M6UkaNlg

uhesliotusus
27th November 2014, 02:54 PM
நடிகர் திலகத்தின் சிறந்த திரைப்படங்களை தேர்வு செய்து, ஆஸ்காருக்கு பரிந்துரை செய்ய நியமிக்கப்பட்டுள்ள டெல்லியில் உள்ள தலைமை கமிட்டிக்கு தமிழகத்திலிருந்து சிவாஜியின் சிறந்த நடிப்பைக் கொண்ட படங்களை தேர்வு செய்து அனுப்பும் தமிழக ஜூரிக்கள் அடங்கிய பெஞ்ச் நீதிமன்றத்தில்

உங்கள் சார்பாக வழக்காடத் தயாராகும்


உங்கள் பட்டாக்கத்தி.



பட்டாக்கத்தி :


நீதிபதிகளே! இதோ என்னுடைய வழக்கின் சாராம்சம். நடிகர் திலகம் நடித்த படங்களில் பல சிறந்தவை. ஆனால் அவர் 200 படத்திற்கு மேல் சிறந்த படங்களைக் கொடுக்கவில்லை... திரிசூலம் படத்திற்குப் பிறகு ஒன்றிரண்டு நல்ல படங்களையே தந்துள்ளார் என்று இங்கு எனது எதிர் கட்சிக்கார் ஜெயபால் மனு தாக்கல் செய்துள்ளதாக அறிந்தேன். அதை நான் எதிர்த்து சிவாஜி அவர்கள் அவருடைய 200 படமான திரிசூலத்திற்கு பிறகு பல நல்ல படங்களைக் கொடுத்திருக்கிறார்... அந்தப் படங்களையும் அவருடைய நல்ல படங்களின் பட்டியலில் ஏற்க வேண்டும் என்றே நான் இங்கே ஜெயபாலுக்கு எதிராக வழக்கு தொடுக்க வந்துள்ளேன். நடிகர் திலகத்தின் சிறந்த படங்களை தேர்வு குழுவான நால்வர் அடங்கிய பெஞ்ச் நீதிமன்றம் என்னுடைய மனுவை ஏற்று நான் குறிப்பிட்டிருக்கும் படங்களையும் நடிகர் திலகத்தின் சிறந்த படங்களின் லிஸ்ட்டில் சேர்க்க வேண்டும் என்று வேண்டிக் கேட்டுக்கொள்கிறேன். நாளை வாழ்நாள் சாதனை ஆஸ்கார் விருது நடிகர் திலகத்திற்கு வழங்க நீங்கள் ஏற்கனவே தேர்ந்தெடுத்து வைத்துள்ள அவருடைய மிகச் சிறந்த படங்களோடு இன்று என்னுடைய வழக்கின் முதலாவதாக நான் தரும் சிவாஜி படம் ஒன்றையும் சேர்த்து டெல்லியில் உள்ள இந்தியா சார்பான தலைமை ஆஸ்கார் கமிட்டி குழுவிற்கு பரிந்துரை செய்ய வேண்டும் என்றும் மேன்மை தங்கிய பெஞ்ச் குழுவை கேட்டுக் கொள்கிறேன்.



தலைமை நீதிபதி:


பட்டாக்கத்தி அவர்களே... சாத்தியமில்லை. ஏற்கனவே உங்கள் எதிர் மனுதாரர் ஜெயபால் சிவாஜியின் சிறந்த படங்களை இங்கு அளித்து விட்டு அதற்கான விளக்கமும் அளித்திருக்கிறார். அவர் பரிந்துரை செய்துள்ள படங்களை மீறி ஒன்றும் செய்வதற்கில்லை. அவற்றை மட்டுமே டெல்லி தலைமைக் குழுவிற்கு அனுப்ப முடியும். மேலும் ஜெயபால் அவர்கள் சிவாஜியின் 200 ஆவது படத்திற்குப் பின் வந்த அனைத்துப் படங்களும் குப்பை என்று ஆணித்தரமாகக் குறிப்பிட்டுள்ளார். ஆகையால் உங்கள் வழக்கை ஏற்க முடியாது. நீங்கள் அளிக்க இருக்கும் படத்தையும் ஏற்றுக்கொள்ள முடியாது.



பட்டாக்கத்தி :


மன்னிக்க வேண்டும் நீதிபதி அவர்களே! என்னுடைய வழக்கை நீங்க ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். அப்போதுதான் புதைந்து கிடக்கும், மறைந்து கிடக்கும் பல சிவாஜியின் பின்னாளைய படங்களும், அதில் அவர் படைத்துள்ள நடிப்புச் சாதனைகளும் வெளிவரும். இல்லையன்றால் ஒருதலைப் பட்சமாக நீங்கள் நடந்ததாக ஆகி விடும்.



தலைமை நீதிபதி:


அப்படியெல்லாம் இல்லை. ஜெயபால் இங்கு அளித்துள்ள சிவாஜியின் படங்களை பார்த்தோம். அதில் அவர் நடிப்பையும் பார்த்தோம். வாய் பிளந்து நிற்கிறோம். ஆனால் ஜெயபால் சிவாஜியின் 150 ஆவது படத்திற்கு மேல் தேர்வுக் கமிட்டி எந்தப் படத்தையும் எடுக்கலாகாது என்று அவருடைய வக்கீல் மூலம் வாதாடி இருக்கிறார். எங்கள் குழுவும் அவர் சொன்னதில் உண்மை இருப்பதாக ஆராய்ந்து கண்டறிந்து இருக்கிறது. எனவே இது வீண் முயற்சி. நீங்கள் போகலாம்.



பட்டாக்கத்தி :


மிலார்ட்...நீங்கள் சிவாஜியின் 200 ஆவது படத்திற்கு மேல் அவர் நடித்தவற்றை பார்த்து இருக்கிறீர்களா?



தலைமை நீதிபதி:


அதை கேட்க நீ யார். அதையெல்லாம் எவன் பார்ப்பான். தேவர் மகன், முதல் மரியாதை ரெண்டும் பார்த்து தேர்வு கமிட்டிக்கு பரிந்துரை செய்ய முடிவு செய்துள்ளோம். மற்றதெல்லாம் எங்களுக்குத் தெரியாது. தெரிய வேண்டிய அவசியமும் இல்லை. ஜெயபால் எங்களுக்கு சரக்கு பார்ட்டி வைத்திருக்கிறார். அதற்கு நாங்கள் போக வேண்டும்.



பட்டாக்கத்தி :


அப்படி இல்லை நீதிபதி அவர்களே! நீங்கள் சிவாஜியின் பிற்காலப் படங்களைப் பார்க்காமலேயே அவருடைய நடிப்பை அந்தப் படங்களில் ருசிக்காமலேயே எப்படி என் மனுவைத் தள்ள முடியும்? நியாயம் வழங்கும் நீங்களே நியாயம் தவறினால்? இது ஒருதலைப் பட்சமான ஏற்பு அல்லவா?



தலைமை நீதிபதி:


எல்லாம் எங்களுக்குத் தெரியும். உங்கள் புத்திமதி தேவை இல்லை. சபை கலையலாம்



பட்டாக்கத்தி :


(உரக்க கோபத்துடன்)

இந்த அநியாயத்தைக் கேட்க யாருமில்லையா? சிவாஜியின் பிற்காலப் படங்கள் என்றால் அவ்வளவு இளக்காரமா? யாராவது ஹெல்ப் செய்யுங்களேன். ப்ளீஸ்.



நால்வர் பெஞ்ச் அடங்கிய தேர்வுக் கமிட்டியில் ஒரு நீதிபதி யாருக்கும் தெரியாமல் பட்டாக்கத்தியிடம் வந்து ரொம்ப மெதுவாக


மிஸ்டர் பட்டாக்கத்தி... நானும் உங்கள் கட்சிதான். என்ன செய்வது? உங்கள் எதிரி ஜெயபால் ஏதோதோ எங்கள் குழுவில் பேசி ஜூரிக்கள் மனத்தைக் கெடுத்து வைத்திருக்கிறார். அந்த ஆள் சொல்வதும் ஒன்றும் யாருக்கும் புரியவில்லை. அவர் சிவாஜியின் முன்னாளய படங்களுக்கு சில ஆதாரங்களை வைத்து வாதாடுகிறார். அவருக்கு இங்கேயே ஒரு சிலர் வக்காலத்தும் வாங்குகிறார்கள். மிகுந்த செல்வாக்கு உள்ள ஆளாக வேறு இருக்கிறார். அவரைக் கண்டால் பல பேருக்கு எரிச்சலாக இருக்கிறது. பலர் அவருக்கு எதிராக வழக்கு தொடுத்து போய் விட்டார்கள். அவருக்கு அரசியல் செல்வாக்கு இங்கு அதிகம். சில ஜூரிக்களும் அவர் பக்கம். நான் சொல்ல வேண்டியதை சொல்லி விட்டேன். அப்புறம் உங்கள் இஷ்டம். ஆனால் நான் உங்களைப் போல சிவாஜியின் பின்னாளைய படங்களுக்கும் ரசிகன். ஆனால் நான் ஒருவன் மட்டும் சொல்லி ஒரு லாபமும் இல்லை. நீங்கள் மோதாமல் போய் விடுங்கள். அதுதான் உங்களுக்கு நல்லது. இந்த விஷயத்தை யாரிடமும் சொல்ல வேண்டாம்.


பட்டாக்கத்தி செய்வதறியாது நிற்கிறார்.


என்ன செய்யப் போகிறார் பட்டாக்கத்தி? ஜெயபால் சொன்னது போல் பாவம் பட்டாக்கத்தி இப்போதைக்கு.


ஆனால் நாளை?


அதுவரை பொறுத்திருங்கள்.

eehaiupehazij
27th November 2014, 06:15 PM
கீழ்வானம் சிவக்கும் (1981): திரிசூலத்திற்குப் பின் நடிகர்திலகத்தின் சிறந்த நடிப்புப் பங்களிப்பின் (மன) சாட்சியம் !

சாட்டையாய் சுழன்று பட்டையைக் கிளப்பும் பட்டாக்கத்தியாரின் பட்டை தீட்டப்பட்ட பதிவு முட்டையை உடைப்பதற்கோ குட்டையைக் குழப்பி மீன் வேட்டை ஆடுவதற்கோ அல்ல ....கட்டையால் அடித்து மட்டையை உரித்து சொட்டையில்லாமல் நார் எடுக்கவே ! அதன் சாராம்சத்தை நொட்டை சொல்லி சட்டை செய்யாமல் செல்வது நமக்கு போடப்படும் மொட்டையே !!


Acting is a simply complicated term to define as it involves the virtual characterization depicted upon inspiration from the observations on real life characters around us. In this context, NT remains unparalleled and unbeaten among all the celluloid stars twinkling at us hitherto! Even when his face is not fully shown in this scene of an eye operation wherein NT 'acts' as an eye surgeon...see his reactions, body language and expressions confined only to his eye zone.....amazing!...Had it been in an Oscar domain, NT would have won an Oscar just for this scene...!

https://www.youtube.com/watch?v=XyTuRGJS1z4

நம் மனத்தைக் கனக்க வைக்கும் .....What a polished acting!

https://www.youtube.com/watch?v=Ji5xpmb05gw

https://www.youtube.com/watch?v=zcoNiSaYF7g

எந்தவொரு ஜோடியும் இல்லாது மிக முதிர்ந்த ஒரு கதாபாத்திரம் முழுப்படத்தையும் தன் தோளில் சுமந்து கரையேற்றி மாபெரும் வெற்றி இலக்கை அடைவது
உலகிலேயே நடிகர்திலகத்துக்கு மட்டுமே சாத்தியமான சத்தியம் !

Russellisf
27th November 2014, 06:18 PM
Sathyaraj copied the sivaji maerisms this song from film of gouravam song paluti valrtha kili

https://www.youtube.com/watch?v=e_M-QLb3300

https://www.youtube.com/watch?v=54HL4BSefHA

Russellisf
27th November 2014, 06:20 PM
jaiganesh copied the sivaji maerisms this song from film of navarathiri song iravinil attam


https://www.youtube.com/watch?v=AGuuEpdDpTY


https://www.youtube.com/watch?v=wGmxDapfl6M

eehaiupehazij
27th November 2014, 08:08 PM
Dear Yukesh Babu. Thanks for your incessant rainy postings in NT's thread! Our mutual thanksgiving!

S.A. Asokan 'copying' your icon!

https://www.youtube.com/watch?v=pLXWZDSy7FY

https://www.youtube.com/watch?v=17pPQil2Jc0

https://www.youtube.com/watch?v=olTtgpu4au4

S.A. Asokan 'inspired' by our icon!

https://www.youtube.com/watch?v=c3S5RtB3uTU

https://www.youtube.com/watch?v=6IJQHVFoiiI

https://www.youtube.com/watch?v=nbJP34YWUeM

sivaa
27th November 2014, 08:34 PM
இது சத்தியம் படத்தில் ஏதோ ஒரு காரணத்தால்
எம் ஜீ ஆர் நடிக்க மறுத்தததால்
சரவணா பிலிம்ஸ் அசோகனை வைத்து
படத்தை எடுத்து முடித்தார்கள்

எம் ஜீ ஆருக்காக எழுதப்பட்ட
கதை பாடல் என்பதால் அந்தத் தாக்கம்
இருந்துள்ளது

eehaiupehazij
27th November 2014, 10:45 PM
நிலைத்து நின்று கதிரொளி பரப்பும் நடிப்புச் சூரியனாரின் நீள்வட்டப்பாதையில் சுற்றிச் சுழன்ற கோள்கள், சந்திரன்கள், துணைக்கோள்கள் மற்றும் வந்து சென்ற வால்நட்சத்திரங்கள் ! ( Planets, Satellites and Comets in the elliptical orbiting path of our acting Sun God NT)

கோள் 1 : Planet Earth சூரியனை சுற்றி வந்து ஒளியும் வாழ்க்கையும் பெற்ற பூமிப்பந்து ! அமரர் திரு நாகேஷ் அவர்கள்

நாகேஷ் வெறும் நகைச்சுவை நடிகர் என்ற எண்ணத்தைத் தகர்த்தெறிந்து நல்ல குணச்சித்திரப் பாத்திரங்களிலும் மிளிர்ந்தவர் காதலிக்க நேரமில்லையில்
நகைச்சுவையில் குலுங்க வைத்தவர் நீர்குமிழியில் இதயங்களை கலங்க வைத்தார். நடிகர்திலகத்தின் சிறப்பம்சமே அவருடன் நடிக்கும் எவரும் பூவுடன் சேர்ந்து மணம் பெற்ற நார் போல நடிப்புச் சூரியனின் ஒளியால் வளம் வாழ்வு பெற்ற பூமிபோல நடிப்பிலும் பிரகாசிப்பதே ! இந்த வகையில் நடிப்பில் நடிகர்திலகத்துடனேயே மல்லுக்கு நின்று அவருக்கு பெருமை சேர்த்திட்ட பெருமையை காதல் மன்னர் ஜெமினிகணேசனுக்கு அடுத்தபடி பெற்று நம் நன்றிகலந்த வணக்கங்களுக்கு உரித்தாகிறார் !

திருவிளையாடல் தருமியும் தில்லானா வைத்தியும்

https://www.youtube.com/watch?v=SYT_cOatNDw

https://www.youtube.com/watch?v=sg_1WpjwCIA



NT returns to thank the Planet Mars : Manorama!

Russellbpw
28th November 2014, 12:24 PM
நடிகர் திலகத்தின் சிறந்த திரைப்படங்களை தேர்வு செய்து, ஆஸ்காருக்கு பரிந்துரை செய்ய நியமிக்கப்பட்டுள்ள டெல்லியில் உள்ள தலைமை கமிட்டிக்கு தமிழகத்திலிருந்து சிவாஜியின் சிறந்த நடிப்பைக் கொண்ட படங்களை தேர்வு செய்து அனுப்பும் தமிழக ஜூரிக்கள் அடங்கிய பெஞ்ச் நீதிமன்றத்தில்

உங்கள் சார்பாக வழக்காடத் தயாராகும்


உங்கள் பட்டாக்கத்தி.



பட்டாக்கத்தி :


நீதிபதிகளே! இதோ என்னுடைய வழக்கின் சாராம்சம். நடிகர் திலகம் நடித்த படங்களில் பல சிறந்தவை. ஆனால் அவர் 200 படத்திற்கு மேல் சிறந்த படங்களைக் கொடுக்கவில்லை... திரிசூலம் படத்திற்குப் பிறகு ஒன்றிரண்டு நல்ல படங்களையே தந்துள்ளார் என்று இங்கு எனது எதிர் கட்சிக்கார் ஜெயபால் மனு தாக்கல் செய்துள்ளதாக அறிந்தேன். அதை நான் எதிர்த்து சிவாஜி அவர்கள் அவருடைய 200 படமான திரிசூலத்திற்கு பிறகு பல நல்ல படங்களைக் கொடுத்திருக்கிறார்... அந்தப் படங்களையும் அவருடைய நல்ல படங்களின் பட்டியலில் ஏற்க வேண்டும் என்றே நான் இங்கே ஜெயபாலுக்கு எதிராக வழக்கு தொடுக்க வந்துள்ளேன். நடிகர் திலகத்தின் சிறந்த படங்களை தேர்வு குழுவான நால்வர் அடங்கிய பெஞ்ச் நீதிமன்றம் என்னுடைய மனுவை ஏற்று நான் குறிப்பிட்டிருக்கும் படங்களையும் நடிகர் திலகத்தின் சிறந்த படங்களின் லிஸ்ட்டில் சேர்க்க வேண்டும் என்று வேண்டிக் கேட்டுக்கொள்கிறேன். நாளை வாழ்நாள் சாதனை ஆஸ்கார் விருது நடிகர் திலகத்திற்கு வழங்க நீங்கள் ஏற்கனவே தேர்ந்தெடுத்து வைத்துள்ள அவருடைய மிகச் சிறந்த படங்களோடு இன்று என்னுடைய வழக்கின் முதலாவதாக நான் தரும் சிவாஜி படம் ஒன்றையும் சேர்த்து டெல்லியில் உள்ள இந்தியா சார்பான தலைமை ஆஸ்கார் கமிட்டி குழுவிற்கு பரிந்துரை செய்ய வேண்டும் என்றும் மேன்மை தங்கிய பெஞ்ச் குழுவை கேட்டுக் கொள்கிறேன்.

பட்டாக்கத்தி :


(உரக்க கோபத்துடன்)

இந்த அநியாயத்தைக் கேட்க யாருமில்லையா? சிவாஜியின் பிற்காலப் படங்கள் என்றால் அவ்வளவு இளக்காரமா? யாராவது ஹெல்ப் செய்யுங்களேன். ப்ளீஸ்.



பட்டாக்கத்தி செய்வதறியாது நிற்கிறார்.


என்ன செய்யப் போகிறார் பட்டாக்கத்தி? ஜெயபால் சொன்னது போல் பாவம் பட்டாக்கத்தி இப்போதைக்கு.


ஆனால் நாளை?


அதுவரை பொறுத்திருங்கள்.


விஷயம் தெரியுமோ உங்களுக்கு ?

By the way, மோகன்தாஸ் வழக்க வாதாட நானே நேர்ல ஆஜராகபோறேன் !

ஜெயபால் நாம் ரெண்டு பெரும் பங்காளிகள் பகையாளிகள் ...கோர்ட்லயே மீட் பன்லாமே !

http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/22fr_gauravam2_jpg_555734g_zpsb5527b25.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/22fr_gauravam2_jpg_555734g_zpsb5527b25.jpg.html)

Gopal.s
28th November 2014, 02:09 PM
Mr.Gopal's (Jaipal) posting on 13th April 2012 in Part-9(page-279 # 2784).



Since hubbers have raised a relevant issue,let us have wide choice of his Films (Ofcourse restricted for obvious reasons indicated)to choose and write appreciation &Critical reviews/Opinions.
1952- Parasakthi
1953-Thirumbi Paar
1954-Manohara,Andha Naal,Kalyam Panniyum Bramhachari,Thuli Visham,koondu Kili,Thooku Thooki,Ethirparadhadhu
1955-Mudhal thedhi,Mangayar Thilagam,Koteeswaran
1956-Naan petra Selvam,Nane raja,Pennin Perumai,Raja Rani,Amara deepam,Rangon radha
1957-Makkalai Petra Maharasi,Pudhayal,Manamagal Thevai
1958-Uthama Puthiran,Annaiyin Aanai,Sabash Meena
1959-Veera Pandiya Kattabomman,Maragatham,Aval yaar,Baga Pirivinai
1960-Irumbu Thirai,Deiva Piravi,Padikkatha Medhai,Pavai Vilakku
1961-Pava Mannippu,Pasa Malar,Ellam Unakkaga,Palum Pazhamum,Kappalottiya Thamizhan
1962-Parthal Pasi theerum,Valarpirai,Padithal mattum Podhuma,Bale Pandiya,Alaya Mani
1963-Arivali,Iruvar Ullam,Kulamagal Radhai,Paar magale paar
1964-Karnan,Pachai Vilakku,Andavan kattalai,Kaikadutha Deivam,Pudhia Paravai,Navarathri
1965-shanthi,Thiruvilayadal,Neelavanam
1966-Motor Sundaram Pillai,Mahakavi Kalidas,Saraswathi Sabatham,Selvam
1967-Kanthan Karunai,Pesum Deivam,Thangai,Paladai,Thiruvarutchelvar,Iru Malargal,Ooty Varai Uravu
1968-Galatta kalyanam,En Thambi,Thillana Mohanambal,Enga Oor Raja,Uyarntha Manidhan
1969-Thanga Churangam,Kaval deivam,Anjal Petti 520,Nirai kudam,Deiva Magan,Sivantha Mann
1970-Virtnam veedu,Ethiroli,Raman Ethanai ramanadi,Engiruntho Vanthal,Padhukappu
1971-Kulama Gunama,Sumathi En sundhari,Savale Samali,Thenum Palum,Babu.
1972-Raja,Gnana Oli,Pattikada pattanama,Vasantha maligai,Needhi
1973-Bharatha Vilas,Engal thanga raja,Gowravam,Rajapart Ranga Durai,Manitharil manickam
1974-Sivagamiyin Selvan,Thanga Padakkam,Anbai Thedi
1975-Avanthan Manithan,Anbe aruyire,Pattum Bharathamum
1976-Uthaman,Rojavin Raja
1977-Deepam,Ilaya Thalaimurai,Annan Oru Koil
1978-Andhaman Kathali,Thyagam,Ennai Pol Oruvan,General chakravarthi,
1979-thirisoolam,Kavarimaan,Naan Vazha vaipen
1980-Rishi Moolam
1981-Kalthoon,Lorry Driver rajakannu,Keez Vanam Sivakkum
1982-Hitler umanath,Vaa Kanna vaa,Thyagi,Thunai,Parikshaikku Neramachu
1983-Miruthanga Chakravarthi,Vellai Roja
1984-Vazhkai,Dhavaki Kanavugal
1985-Mudhal Mariadhai,Rajarishi
1986-Sadhanai,Marumagal,Anandha Kanneer,Viduthalai,Thaikku oru thalattu
1987-Anbulla Appa
1992-Thevar Magan,Chinna Marumagal,Naangal,
1996-Oru Yatra Mozhi
1997-Once more
1998-En Aasai Rasave
1999-Padayappa,Pooparikka Varugirom

May I request Honourable judge to dismiss the petition which is baseless. (Did Mr.Pattakathi provide any ID Proof before filing the petition?)

eehaiupehazij
28th November 2014, 02:48 PM
நிலைத்து நின்று கதிரொளி பரப்பும் நடிப்புச் சூரியனாரின் நீள்வட்டப்பாதையில் சுற்றிச் சுழன்ற கோள்கள்

கோள் 2 : Planet Mars Manorama ! செந்தமிழ்த் திரையின் செவ்வாய்க் கோள் மனோரமா ஆச்சி

பூமிப் பந்துக்கு அடுத்தபடி சூரியனின் நடிப்பொளிக் குடும்பத்தில் வளமும் வாழ்வும் பெற்று ரசிகர்களை மகிழ்ச்சிக்கடலில் ஜில்ஜில்லென்று மூழ்கடித்த ஆல் இன் ஆல் நடிப்பு ரமாமணி ! தில்லானா மோகனாம்பாளில் நடிகர்திலகத்துடன் அவர் வளையவரும் காட்சிகள் அனைத்துமே நடிகர்திலகத்துக்கு பெருமையும் பெருமிதமும் சேர்த்திட்ட வாழ்நாள் சாதனைப் பதிவுகள் ! அப்படத்தை நினைக்கும்போதே சிவாஜி பத்மினியை மீறி மனோரமாவும் மனதில் வருவதே அவர் நடிப்புக்குக் கிடைத்த அங்கீகாரம் ! ஞானப்பறவை திரைப்படம் அவருக்கு நடிகர்திலகத்தின் கதாநாயகி அந்தஸ்தை நிறைவு செய்தது. 'பொம்பளை சிவாஜி' என்ற வர்ணிப்புக்குப் பொருத்தமானவரே !

https://www.youtube.com/watch?v=YDUzDwY2Bs0

https://www.youtube.com/watch?v=glDHl9njdtk

Russellisf
28th November 2014, 02:55 PM
watch the clip from 7.08 sathyaraj play the vasantha maligai song yarukkaga

https://www.youtube.com/watch?v=VuRbIhufjGo

Russellisf
28th November 2014, 05:32 PM
rajini copied sivaji mannerisms in this song

sivaji song is antha naal nabagam

https://www.youtube.com/watch?v=d4B21WonJ6o

https://www.youtube.com/watch?v=QLue_qt8etk

Russellbpw
28th November 2014, 05:37 PM
Dear Yukesh,

It is not antha naal gnyaabagam. It is from the film Imayam. :-)

Regards
RKS


rajini copied sivaji mannerisms in this song

sivaji song is Film : IMAYAM - Sakthi Ennada...Un Buddiyennada...

https://www.youtube.com/watch?v=d4B21WonJ6o


https://www.youtube.com/watch?v=ulNjLsIV3JU


.....

sss
28th November 2014, 06:24 PM
இணையத்தில் இன்று படித்தது ... நன்றி : http://onlysuperstar.com

சிவாஜி கணேசன் அவர்களைப் பற்றி சில தகவல்கள்:

ஒருவர் எத்தனைக் காலம் இந்த பூமியில் வாழ்ந்தார் என்பதைவிட, மறைந்த பிறகு எத்தனை பேர் இதயங்களில் குடியிருக்கிறார் என்பதை வைத்தே ஒருவரது சிறப்பை பற்றிய முடிவுக்கு வந்துவிடலாம். அந்தவகையில், சிவாஜி கணேசன் அவர்கள், இன்னும் பல கோடி இதயங்களில் வாழ்ந்துகொண்டிருக்கிறார்.

அவரை போன்ற தொழில் பக்தி மிக்க நடிகரையும், பல் துறை அறிவைப் பெற்ற நடிகரையும் பார்ப்பது அரிது.

சிவாஜி அவர்களை பற்றிய பல அரிய தகவல்கள் வெளியுலகிற்கு கொண்டு போய் சேர்க்கப்படவில்லே என்பதே என் கருத்து.

சிவாஜி அவர்கள் நடித்த திரைக்காவியங்கள் சாகாவரம் பெற்றவை, வினையற்ற செல்வத்தை தரக்கூடியவை என்பதை ‘கர்ணன்’ திரைப்படத்தின் மாபெரும் வெற்றி இந்த உலகிற்கு உணர்த்தியது.

எல்லாவிதமான உணர்ச்சிகளையும் முகபாவனைகளில் வெளிப்படுத்தும் திறமை ஐயாவிற்கு உண்டு….சமீபத்தில் மெருகூட்டப்பட்டு வெளிவந்த "கர்ணன்" திரைப்படத்தில் சிவாஜி அவர்களின் நடிப்பாற்றலை திரையில் கண்டு பிரமித்துப் போனேன்…! என்ன ஒரு நடிப்பு !! இவருக்கு தேசிய விருது வழங்காததால் "தேசிய விருது" ஒரு மணிமகுடத்தை இழந்துவிட்டது….!


சிவாஜி அவர்களின் மேலும் பல தரமான படைப்புக்கள் இதே போன்று நவீன தொழில்நுட்பத்தில் வெளியாகி இன்றைய தலைமுறையினரை சென்று சேருமானால், அதை விட சிறப்பு எதுவும் இருக்க முடியாது.

சிறு வயதில் தாம் கல்வி கற்க இயலாமல் போனதை நினைவு கூறும் வகையில் இன்றைக்கு போக ரோட்டில் இருக்கும் வீட்டை கட்டும்போது சிறு குழந்தைகள் இருவர் படிப்பது போன்ற சிற்பத்தை வீட்டில் நிர்மாணித்தார் சிவாஜி. இன்றைக்கு கூட அன்னை இல்லத்தை பார்க்கும் வாய்ப்பு கிடைத்தவர்கள் இதை கவனிக்கலாம்.

படப்பிடிப்புக்கு தாமதமாக வருவது சிவாஜி அவர்களுக்கு அறவே பிடிகாத ஒன்றாகும். ஒரு நடிகனுக்கு கரெக்ட் டயத்துக்கு ஷூட்டிங் வர முடியலேன்னு சொன்னா அவன் நடிக்கிரதையே விட்டுடனும் என்ற கொள்கை உடையவர் சிவாஜி. (சூப்பர் ஸ்டாரின் நேரம் தவறாமை இவரிடம் கற்றுக்கொண்ட ஒன்றாகும்).

சூப்பர் ஸ்டாரின் இக்கட்டான காலகட்டங்களில் உடனிருந்து பல ஆலோசனைகளை கூறியிருக்கிறார் திரு.சிவாஜி.

தமக்கும் திரு.சிவாஜி அவர்களுக்கும் இடையே இருந்த பந்தத்தை சூப்பர் ஸ்டார் பல தருணங்களில் கூறியிருக்கிறார். குறிப்பாக சிவாஜி சிலை திறப்பு விழாவிலும், சந்திரமுகி 200 வது நாள் விழாவிலும்.

மேற்படி இரு விழாக்களிலும் சூப்பர் ஸ்டார் ரஜினி சிவாஜி அவர்களைப் பற்றி ஆற்றிய உரை, உள்ளத்தை உருக்குவதாகும்.

பிடிங்க சம்பளம் ஒரு கோடி

தமது சொந்த படமான படையப்பாவில் சிவாஜி அவர்களை தனக்கு தந்தையாக நடிக்க வைக்க ரஜினி முடிவு செய்த பிறகு, அவரை நேரில் சென்று சந்தித்து, அவர் காலில் விழுந்து வணங்கி, “நான் படையப்பா. இந்த படையப்பாவுக்கு நீங்க தான் அப்பா…” என்று ஒரே வரியில் கூறி சிவாஜி அவர்களின் கால்ஷீட்டை பெற்றார் ரஜினி. தவிர, “யாரோ யாரோ இன்னிக்கி இண்டஸ்ட்ரியில கோடி ரூபாய் சம்பளம் வாங்குறாங்க…. ஆனா நடிப்புக்கே இலக்கணம் வகுத்த மேதை நீங்க. பிடிங்க சம்பளம் ஒரு கோடி” என்று படையப்பாவில் நடிக்க ஒப்புக்கொண்ட சிவாஜி அவர்களை கௌரவித்தார் ரஜினி அவர்கள். (படையப்பா படத்தில் சிவாஜி அவர்கள் பெற்ற அந்த ஊதியம் தான் அவர் தம் திரையுலக வாழ்வில் பெற்ற அதிக பட்ச ஊதியமாகும்.)

படையப்பா படத்தின் துவக்க நாள் விளம்பரத்தில் கூட, நடிகர் திலகம் திரு.செவாலியே சிவாஜி அவர்களின் ஆசியுடன் இன்று முதல் படப்பிடிப்பு துவங்குகிறது என்று விளம்பரம் அளிக்கப்பட்டது.

படங்களில் நடிப்பதை தவிர்த்து வந்த சூழலில் கூட படையப்பாவில் நடிக்க சிவாஜி ஒப்புக்கொண்டார் என்றால் அதற்க்கு காரணம் சூப்பர் ஸ்டார் மேல அவர் வைத்திருந்த அன்பு என்றால் மிகையகாகாது. “பிரபு, ராம்குமார் மாதிரி இவனும் என்னோட மகன்தாண்டா” என்று உரிமையோடு அடிக்கடி சொல்வார் செவாலியே.

1999 ஆம் ஆண்டு, தமிழ் புத்தாண்டு தினத்தன்று உற்சாகத்தோடு இருந்தது அன்னை இல்லம். சிம்மக்குரலோனிடம் ஆசி பெற எண்ணற்றோர் வந்த வண்ணமிருந்தனர். தன்னிடம் ஆசி பெற வந்த அகில இந்திய சிவாஜி மன்றத் தலைவரான பூமிநாதனிடம், சிவாஜி, “ரஜினி ரொம்ப நல்லவன். சினிமா உலகில் அவனை மாதிரி நல்லவனை நான் பார்த்ததில்லை. குழந்தை மாதிரி… மனசுக்குள் எதையும் ஒளிச்சு வெச்சுக்கமாட்டான். ‘தப்பு’ன்னு தோணினா மனசுல பட்டதை டப்புன்னு சொல்லிடுவான். அவன் ஒரு வெகுளிடா!’” என் மனம் திறந்து தாய்மை தெறிக்க பேசியுள்ளார் சிவாஜி.


2001 ஆம் ஆண்டு சிவாஜி அவர்கள் காலமான போது, அவரது இறுதி ஊர்வலத்தில் கலந்துகொண்டார் ரஜினி. ரஜினி இதுவரை யார் இறுதி ஊர்வலத்திலும் கலந்துகொண்டதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. (என் தந்தையின் இறுதி ஊர்வலத்தில் கூட நான் கலந்துக்கலை. ஆனால் சிவாஜி சாரின் இறுதி ஊர்வலத்தில் கலந்துக்கிட்டேன் என்று சந்திரமுகி 200 வது நாள் விழாவில் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார் சூப்பர் ஸ்டார்.)

=========================================

எனக்கு தெரிந்த வரையில் கண்ணில் காந்த சக்தி (அதாவது கண்கள் மூலம் சொல்ல வேண்டியதை வசனம் இல்லாமல் கூறும் சக்தி )உடைய நடிகர்களில் முதலில் நிற்பவர் செவாலியே சிவாஜி அவர்கள் .

உதாரணமாக படிக்காதவன் படத்தில் தலைவரை (ரஜினியை) அவர் தம்பி என்று கூப்பிடும் கட்சியில் அவர் கண்கள் சொல்லும் வார்த்தைகள் ஆயிரம் வசனங்களுக்கு சமம் . அந்த கட்சியையும் தோரணையும் வேறு ஒருவராலும் செய்ய முடியாது . அடுத்ததாக அதே சக்தியை நம்ம சிவாஜியிடம் முதலில் பார்க்க முடிந்தது தர்மதுரை படத்தில் . அந்த படத்தில் ஒரு காட்சியில் தனது மனைவி த்ரோகம் செய்த தம்பிகளுக்கு உதவும் படி கேட்பார் . அந்த சீன் ல தலைவரின் கண்கள் மட்டும் புல் பிரேமில் காட்டப்படும் . அப்பா என்ன ஒரு powerful eyes and expression.

எனக்கு தெரிந்து வேறு எந்த ஒரு நடிகருக்கும் இந்த பாக்கியத்தை ஆண்டவன் கொடுக்க வில்லை . இதெல்லாம் கூடவே பொறந்ததுன்னு நெனைக்கிறேன் .

திரை உலகமே அஞ்சலி செலுத்த வேண்டிய சிவாஜி அவர்களின் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன் .

Russellisf
29th November 2014, 03:58 PM
சற்று முன் படித்த ஒரு "நம்ப முடியவில்லை"..
1982 –ல் “கோழி கூவுது” வெளிவந்தபோது ..சிவாஜி ரசிகர்களாகிய நண்பர்கள் நாங்கள் அனைவரும் பூரித்துப் போனோம்...!
எங்க சிவாஜி மகன் பிரபு நடிச்ச படமில்லையா..?
புரசைவாக்கம் டவ்டன் ராக்ஸி தியேட்டரில் , கல்லூரி நண்பர்களோடு , இரவுக் காட்சியாக ...எத்தனை முறை இந்த படத்தைப் பார்த்திருப்போம் என எங்களுக்கே தெரியாது...தினமும் கூட தியேட்டருக்குப் போவோம்..
சிவாஜி மகன் பிரபு நடித்த படம் என்பதால் நானும்... சிலுக்கிற்காக நண்பன் ஆத்மராவும்..
இளையராஜா இசைக்காக என் நண்பர் ஜெயராஜும்... பலமுறை இந்தப் படத்தைப் பார்த்திருப்போம்..!
[ என்ன சாங்க்ஸ் ..?... “பூவே இளைய பூவே”... “ஏதோ மோகம்..ஏதோ தாகம்”..]
..எங்கள் எல்லோருக்குமே இந்தப் பட நாயகி விஜியைப் பிடிக்கும் என்பது வேறு விஷயம்..
ஆனால் ..இன்று சற்று முன் நான் படித்த ஒரு செய்தி என்னை மிகவும் பாதித்தது...
“கோழி கூவுது” படத்தில் குமரி முத்துவோடு இணைந்து , ஒரு உயரமான நடிகர் காமெடி என்ற பெயரில் கோமாளிக் கூத்து செய்திருப்பார்...
”அண்ணே அண்ணே”...பாடலைக் கூட அவர்தான் பாடுவார்..
அவர் ஏதோ ஒரு சாதாரண துணை நடிகர் என்றுதான் இத்தனை நாள் எண்ணி இருந்தேன்...ஆனால் ..இப்போதுதான் தெரிந்தது...அந்த “அண்ணே அண்ணே” வேறு யாருமில்லை..
“வீர பாண்டிய கட்டபொம்மன்”படத்தில் சிவாஜியோடு இணைந்து மிரட்டிய “நீர்தான் வீரபாண்டிய கட்டபொம்மன் என்பவரோ?”....ஜாக்சன் துரைதான் அந்த “கோழி கூவுது” கோமாளி “அண்ணே அண்ணே”வாம்...அவர் பெயர் பார்த்திபனாம்...
இனி .. சென்னை புரசைவாக்கத்தின் இன்றைய சரவணா ஸ்டோர்ஸ்சை கடந்து போகிறபோதெல்லாம் ..கண்டிப்பாக , ஒரு நிமிஷம் மனசு கனத்துப் போகும்...
நாங்கள் தினமும் இரவுக் காட்சி பார்த்து மகிழ்ந்த அன்றைய ராக்ஸி தியேட்டர் ..இன்று இடித்து தரை மட்டமாக்கப்பட்டு காணாமல் போனது ஒரு சோகம்..
அன்று வீரபாண்டியக் கட்டபொம்மனோடு சரிக்கு சரியாக ..சமமாக உறுமி உரையாடிய பார்த்திபன் என்ற ஜாக்சன் துரை கோமாளியாக "கோழி கூவுது"வில் ஆட வைக்கப்பட்ட அவலம் இன்னொரு சோகம்...!
# ஆனாலும் ஒரு ஆறுதல் செய்தி...
திரு பார்த்திபன் அவர்கள் 1/10/2014 அன்று சிவாஜி கணேசன் 86 வது பிறந்த நாளில் நடைபெற்ற சிவாஜி பிரபு சாரிடி டிரஸ்ட் மூலமாக பாராட்டப்பட்டாராம்...வாழ்த்துக்கள் !!
நண்பர் ஒருவரின் பதிவிலிருந்து...
“சினிமா சில பேரை மட்டுமே வெளிச்சம் பாய்ச்சி அடையாளம் காட்டியிருக்கிறது ..
பலரை அது கொன்றிருக்கிறது. காலம் முழுவதும் அங்கீகாரத்திற்கு போராடி வெல்லமுடியாமல் போகும்போது ..அந்த துயரம் ஒரு மனிதனின் மரணத்திற்கு ஒப்பானதாகும்..”

courtesy net

RAGHAVENDRA
29th November 2014, 08:20 PM
யுகேஷ் பாபு சார்
நடிகர் திலகம் தொடர்பான தகவல்கள் / நிழற்படங்கள் பதிவிட்டு வரும் தங்களுக்கு என் உளமார்ந்த பாராட்டுக்கள்.

Murali Srinivas
30th November 2014, 12:22 AM
1960-களின் இறுதியில் துவங்கி நடிகர் திலகத்தின் படங்கள் வெளியான கால கட்டத்தைப் பற்றிய எனது நினைவலைகளை தாங்கிய இந்த தொடர் பதிவின் அடுத்த கட்டம். இது புதிய பதிவு.

தர்மம் எங்கே ரிலீஸ் நேரம் பார்த்த அனுபவம் தொடர்கிறது.

கடந்த பதிவின் இறுதி பகுதி

சண்டையில் தோற்று நம்பியார் ஆற்றில் குதித்து போய்விட கொடுங்கோல் ஆட்சி ஒழிந்து மக்கள் நடிகர் திலகத்தை தோளில் ஏற்றி அரியணையேற்றும் காட்சியோடு இடைவேளை. ஒரு சில இந்தியா பாகிஸ்தான் போட்டிகளின்போது the atmosphere was electric என்று எழுதுவார்கள். அதாவது அந்த இடத்தில வீசும் காற்றை தொட்டால் ஷாக் அடிக்கும் என்ற அர்த்தத்தில். அன்றைய தினம் மதுரை ஸ்ரீதேவி தியேட்டரில் அத்தகைய சுற்றுசூழல்தான் நிலவியது என்பதில் எந்த சந்தேகமுமில்லை.

இங்கிருந்து பதிவு தொடர்கிறது.

அந்த நாள் ஞாபகம்

இடைவேளை நேரத்திலும் ஒரே ஆரவாரம் உற்சாகம் கரை புரண்டு ஓடுகிறது. அதே நேரத்தில் படம் தொடங்கவதற்கு முன்பு நடந்த ஒரு விஷயம் பற்றி குறிப்பிட்டிருந்தேன். படத்திற்கு வந்திருந்த ஒரு ரசிகரின் கைகெடிகாரம் காணாமல் போனது பற்றியும் அதன் காரணமாக அனைவரும் சோதனை செய்யப்பட்டதையும் சொல்லியிருந்தேன். இடைவேளை நேரத்திலும் அது தொடர்ந்தது. இதை பார்த்தவுடன் என் கஸின் நீ தனியாக உட்கார வேண்டாம். எனக்கு பக்கத்தில் வந்து உட்கார்ந்து விடு என்று சொல்லி கூட்டி போய்விட்டான். ஸ்ரீதேவியில் கீழே 90 பைசா டிக்கெட் சேர்கள் அதற்கு முந்தைய வகுப்புகளை விட சற்றே உயரமாக அமைந்திருக்கும். 90 பைசா சேரில் முதல் வரிசையில் அமர்ந்தால் முன்னால் அமரிந்திருப்ப்பவரின் தலை மறைக்கிறது என்ற பிரச்சனைக்கே இடமில்லை. இடைவேளைவரை அப்படி முதல் வரிசையில் அமர்ந்து பார்த்த நான் இடைவேளைக்கு பிறகு பின் வரிசைக்கு சென்று கஷ்டப்பட்டு விட்டேன். 12 வயது சிறுவன் என்கின்றபோது இந்த பிரச்சனை அதிகமாகவே இருந்தது. இனி படத்திற்கு வருவோம்.

நடிகர் திலகம் ஆட்சிப் பொறுப்பை ஏற்றதும் கூடி நிற்கும் போராளிகள் கோஷம் எழுப்புவார்கள். நாட்டை காத்த உத்தமன் வாழ்க! கொடுங்கோல் ஆட்சியை வேரறுத்த தலைவன் வாழ்க என்று வசனங்கள் வரும்போது இடைவேளையில் கிடைத்த நேரத்தில் மீண்டும் எனர்ஜி கிடைத்த மக்கள் இடைவேளைக்கு பிறகு வந்த இந்த முதல் காட்சியிலே மீண்டும் அலப்பரையை ஆரம்பித்து விட்டனர். இந்தக் காட்சி முடிந்தவுடன் ஜெஜெ பாடி ஆடும் நான்கு காலமும் உனதாக பாடல் வந்தது. [இந்தப் பாடல் காட்சி சில நாட்கள் இருக்கும். சில நாட்கள் இருக்காது. ஏன் என்று யாருக்கும் காரணம் தெரியாது] அழகாக படமாக்கப்பட்டிருந்த இந்த பாடல் காட்சியைப் பற்றி எங்களுக்கு ஒரு குறை. இந்த பாடலில் ஜெஜெ மற்றும் ஆண் வேடத்தில் குமாரி பத்மினியும் ஆடுவார்கள். குமாரி பத்மினியை ஆண் வேடத்தில் ஆட வைக்காமல் அந்த பாடல் காட்சியில் நடிகர் திலகம் நடித்திருந்தால் மிகப் பிரமாதமாக அமைத்திருக்கும் என்பது எங்கள் எண்ணம்.

அதன் பிறகு முத்துராமன் தனக்கு பதவி கிடைக்கும் என நினைத்து சபைக்கு வருவது, அங்கே நான்கு திசைகளுக்கும் மார்த்தாண்ட நாயகர்களாக வேறு நபர்களை நடிகர் திலகம் அறிவித்து விட முத்துராமன் கோபமுற்று வெளியேறும் காட்சி. [இந்த காட்சியில் மார்த்தாண்ட நாயகர்களை நியமிக்கும்போது அவர்களை காட்டக் கூட மாட்டார்கள் என்று ஒரு முறை கோபால் எழுதியிருந்தார். ஆனால் அது தவறு. நான்கு பேர்களும் காண்பிக்கப்பட்டு அவர்கள் சுற்றி நிற்பவர்களின் கையொலியை ஏற்றுக் கொள்வதாகவே காண்பிக்கப்படும்]

முத்துராமன் தன கோபத்தை குமாரி பத்மினியிடம் காண்பித்து மெதுவாக நடிகர் திலகத்திற்கு எதிராக மாறும் காட்சிகள். அதற்கு நம்பியாரின் படையில் சிப்பாயாக இருந்த செந்தாமரை அவரிடம் சேர்ந்து அவரை மெதுவாக மாற்றுவது போன்ற காட்சிகள் வரும். இதற்கு நடுவில் நடிகர் திலகம் -ஜெஜெ இடையிலான ரொமான்ஸ் கெமிஸ்ட்ரி நன்றாக workout ஆகியிருக்கும். ஒவ்வொரு முறையும் நடிகர் திலகம் ஜெஜெவிடம் அந்தரங்கமாக ஏதோ சொல்ல விழைய அவரும் என்ன என்று ஒரு ஹஸ்கி குரலில் கேட்பது நன்றாக ரசிக்கும்படியாக இருக்கும். ஒவ்வொரு முறையும் ஏதோ ஒன்று அவர்களை நெருங்க விடாமல் தடுக்க ஜெஜெ ஏமாற்றத்துடன் செல்வது எல்லாம் மக்கள் ரசித்துப் பார்த்தனர்.

குமாரி பத்மினி முத்துராமனை கூட்டிக் கொண்டு மாளிகைக்கு வரும் காட்சி. தங்கையை பார்த்தவுடன் பரவசமடையும் நடிகர் திலகம், முத்துராமன் ஏதோ ஒன்றை பேச விரும்புவதை உணர்ந்து என்ன என்பதை முகபாவத்திலே கேள்வியாக மாற்றும் அந்த லாவகம் படபடவென கைதட்டல்கள் விழுகிறது. முத்துராமன் எதிர்பார்ப்பது பதவி என்று தெரிந்ததும் நடிகர் திலகம் கேமராவைப் பார்த்து ஒரே குடும்பத்தை சேர்ந்தவங்களே பதவியில் இருப்பது நாட்டிற்கு நல்லதில்லே என்பார். கைதட்டல் இடியாய் இறங்கியது. நான் பதவியில் இருந்தாலென்ன நீ இருந்தாலென்ன என்று நடிகர் திலகம் முத்துராமனிடம் சொல்லும்போது அதற்கு முத்துராமன் "சேகர் முன்னாடியெல்லாம் உனக்கு பேசவே தெரியாதுன்னு சொல்வாங்க! இப்போ எவ்வளவு அழகா பேசறே" என்றவுடன் ஒரு சிறு புன்னகையுடன் நடிகர் திலகம் "இப்போலாம் மக்கள் நான் பேசுவதை கவனித்து ஏற்றுக் கொள்கிறார்கள்" என்பார். தியேட்டரே இரண்டுபட்ட கட்டம் அது.

இதற்கு பின் முத்துராமன் மேலும் கொதிப்படைந்து போவது, நம்பியார் படை தலைவனாக இருந்த எஸ்வி ராமதாஸ் மற்றும் செந்தாமரையும் ஒரு கூட்டதை சேர்த்து முத்துராமனை தலைவராக்குவது என்று காட்சிகள் விரிந்தன.

இதன் பின் மக்கள் சிலர் ஒரு குழுவாக வந்து முத்துராமனின் அராஜகம் பற்றி சொல்ல முதலில் அவர்கள் சொல்வதை நம்ப மறுக்கும் நடிகர் திலகம் அவர்களை சத்தம் போட சட்டென்று அவருக்கே முன்னொரு நாளில் இதே போல் தானும் நம்பியாரிடம் மோதியது நினைவிற்கு வர, அவர்களிடம் நடவடிக்கை எடுப்பதாக சொல்லி அனுப்பி விட்டு உள்ளே சென்று துப்பாக்கியை எடுப்பார். தடுக்கும் ஜெஜெவை தள்ளி விட்டு விட்டு போவார். உங்கள் உயிருக்கு ஏதாவது நேர்ந்தால் என்று கேட்கும் ஜெஜெவிடம் தனி மனிதன் போகலாம். ஆனால் என் கொள்கை தொடரும். அதை உயர்த்திப் பிடிக்க மனிதர்கள் வருவார்கள் என்பார் நடிகர் திலகம். மக்களுக்கு வேறொரு தலைவன் கிடைக்கலாம் ஆனால் எனக்கு என்று ஜெஜெ கேட்கும்போது இங்கே ஒரே ஆரவாரம்.

முறை தவறி நடக்கும் முத்துராமனை தட்டிக் கேட்டு [அப்போதும் ஒரு சண்டை உண்டு. நீளமாக இல்லாமல் உடனே முடிந்து விடும். இருந்தாலென்ன நமது ரசிகர்களுக்கு அலப்பரை செய்ய சொல்லியா கொடுக்க வேண்டும்?] அவரை கொல்லாமல் பிழைத்துப் போ என்று பார்வையாலே மிரட்டி விட்டு போவார் நடிகர் திலகம். கேட்கணுமா?

இதற்கு நடுவே நடிகர் திலகம் ஜெஜெவிடம் தன காதலை வெளிப்படுத்தி கல்யாணம் செய்துக் கொள்கிறேன் என்று சொன்னதும் வரும் பள்ளியறைக்குள் வந்த புள்ளி மயிலே பாடல் காட்சி. மீண்டும் தியேட்டர் அதகளமானது. ஒரு காட்சியில் நடிகர் திலகம் ஜெஜெயிடையே நடக்கும் ஒரு உரையாடலின்போது ஜெஜெ நடிகர் திலகத்தைப் பார்த்து பெருந்தலைவரே என்பார். தியேட்டர் மீண்டும் அலறியது.

சூழ்ச்சிகாரர்களின் சதி புரியாமல் நடிகர் திலகத்தை ஊருக்கு வெளியே உள்ள பாழடைந்த கோட்டைக்கு தனியே வர சொல்லும் முத்துராமன், தனியே வரும் நடிகர் திலகத்தை கொல்ல ஆணையிடும் ராமதாஸ், திகைத்து போய் என்ன சொல்கிறாய் என்று முத்துராமன் கேட்க அதுவரை கூட்டத்திலே ஒரு ஆளாக மறைந்து நிற்கும் நம்பியார் தன்னை வெளிபடுத்திக் கொள்ள அந்த சஸ்பென்சை மக்கள் ரசித்தார்கள். துரோகி என்று நம்பியாரை பார்த்து முத்துராமன் சீற " நீதான் துரோகி. நாளை வரலாறு உன்னைத்தான் பழிக்கும்" என்று பதிலடி கொடுக்கும் வசனமெல்லாம் பெரிதும் ரசிக்கப்பட்டது.

இறுதிக் காட்சி. துப்பாக்கிகள் முழங்க கோட்டையின் திறந்த வெளி மைதானத்தில் நடிகர் திலகம் ஓடி தப்பிக்கும் காட்சி [இந்த காட்சியின் படமாக்கம் சற்றே சொதப்பியிருக்கும். சற்று மெனக்கெட்டிருந்தால் பிரமாதமாக வந்திருக்கும்] கோட்டைக்கு உள்ளே ஒரு ஹாலில் தொட்டி போன்ற அமைக்கப்பட்டிருக்கும் இடத்தில விஷப்பாம்புகள் சுற்றிக் கொண்டிருக்க மேலிருந்து ஜெஜெவை தொங்கவிட கயிறு மெதுவாக அறுந்து கீழே வர நடிகர் திலகம் நம்பியாரிடம் சண்டை போடும் காட்சியெல்லாம் த்ரில்லாகவே மக்கள் பார்த்தனர். இறுதியில் நம்பியார் தொட்டிலில் விழுந்து பாம்புக்கடி ஏற்று உயிர் துறப்பார். தர்மம் எங்கேன்னு கேட்டவங்களுக்கெல்லாம் தர்மம் இங்கேன்னு சொல்ல வச்சுட்டே சேகர் என்று முத்துராமன் சொல்ல கரகோஷம்தான்.

படம் முடிந்து வெளியே வருகிறோம். அப்போதும் ஒரே ஆரவாரம்தான். படம் பெரும் வெற்றி பெறும் என்ற கணிப்பே எனக்கு இருந்தது. அதற்கேற்றார்போல முதல் வாரத்தில் தியேட்டர் பக்கமே போக முடியவில்லை, அப்படி கூட்டம் என்று கஸின் வந்து சொல்லிக் கொண்டேயிருந்தான். முதல் பத்து நாளைக்கு அனைத்துக் காட்சிகளும் ஹவுஸ் புல். அதன் பிறகு படத்திற்கு வரவேற்பு குறைய ஆரம்பித்தது என்ற பேச்சு வந்தது. படத்தின் கதை இடைவேளையோடு முடிந்து விட்டது. அதன் பிறகு வந்தவற்றை பொது மக்கள் அவ்வளவாக ரசிக்கவில்லை என்று ஒரு காரணம் சொல்லப்பட்டது. 1972-ஐ பொறுத்தவரை 100 நாட்கள் என்ற வெற்றிக் கோட்டை தொடும் வாய்ப்பை இழந்த ஒரே படம் என்ற பட்டதை தர்மம் எங்கே பெற்றது. 8 வார படமாக ஆனாலும் ரசிகர்கள் மனதில் ஒரு தனி இடம் படம் தர்மம் எங்கே!

படம் வெளிவந்து 36 வருடங்களுக்கு பிறகு இயக்குனர் AC திருலோக்சந்தரிடம் பேசிக் கொண்டிருந்தபோது எங்களைப் போன்ற ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த இந்தப் படம் 100 நாட்கள் ஒடவிலையே என்ற வருத்தத்தை பகிர்ந்துக் கொண்டபோது அவர் ஒரு விஷயம் சொன்னார். ஒரு ஆங்கிலப் படத்தின் inspiration-ஐ வைத்துதான் தர்மம் எங்கே படத்திற்கு திரைக்கதை அமைத்தோம். அதில் இறுதியில் கதாநாயகன் [Lawrence Oliver தான் நாயகன் என்று அவர் சொன்ன ஞாபகம்] துப்பாக்கி குண்டுகளால் சல்லடை கற்களாய் துளைக்கப்பட்டு உயிர் விடுவான். அவனின் நல்ல மனதை புரிந்துக் கொள்ளாமல் அவனை பழி வாங்க துணை போன அவன் மைத்துனன் தன தவறை உணர்ந்து திருந்துவதுதான் கிளைமாக்ஸ். ஆனால் நாங்கள் நாயகனை சாகடிக்க விரும்பவில்லை. அவன் தப்பிப்பதாக மாற்றி அமைத்தோம். ஒரு வேளை சோக முடிவாக அமைத்திருந்தால் வெற்றி பெற்றிருக்குமோ என்னவோ என்றார் ACT.

எது எப்படியோ, அது போன்ற உணர்ச்சிக் குவியலான ஒரு மக்கள் கூட்டத்தையும் அந்த ஆவேசத்தையும் அதே அளவில் நான் அதற்கு முன்பும் பார்த்ததில்லை. அதற்கு பின்பும் பார்த்ததில்லை. அந்த வகயில் தர்மம் எங்கே என்றுமே ஸ்பெஷல்தான்.

(தொடரும்)

அன்புடன்

Murali Srinivas
30th November 2014, 12:34 AM
நடிப்பு சக்ரவர்த்தியின் திக்விஜயம் தமிழகமெங்கும் பல்வேறு இடங்களில் தொடர்கிறது.

நேற்று வெள்ளி முதல் சென்னை ஓட்டேரி சரவணாவில் நடிகர் திலகத்தின் வெற்றிக் காவியம் பார்த்தால் பசி தீரும் தினசரி 3 காட்சிகளாக திரையிடப்பட்டு வருகிறது.

சந்தோஷ செய்திகளுடன் மீண்டும் சந்திப்போம்.

அன்புடன்

Gopal.s
30th November 2014, 08:00 AM
நடிகர்திலகத்தோடு ஜோடியாக (நேரடி) நடித்த கதாநாயகிகள் 59 பேர்.ஜோடியாக நடித்த படங்கள் எண்ணிக்கையில்.

பத்மினி-32 , கே.ஆர்.விஜயா-32,ஜெயலலிதா-18,
சரோஜாதேவி-17,சுஜாதா-16,தேவிகா-12,ஸ்ரீப்ரியா-11,சௌகார்-11,சாவித்திரி-11,வாணிஸ்ரீ-9, மஞ்சுளா-9,பண்டரி பாய்-8,பானுமதி-7,லக்ஷ்மி-7,ஜமுனா-7,எம்.என்.ராஜம்-6,உஷா நந்தினி-5,வடிவுக்கரசி -4,ஸ்ரீவித்யா-3,வைஜயந்தி மாலா-3,ஜி.வரலக்ஷ்மி-3,பாரதி-2,விஜயகுமாரி-2,அம்பிகா-2,ராதா-2,ஸ்ரீதேவி-2,ஸ்ரீரஞ்சனி-2,கிருஷ்ணகுமாரி-2,வசந்தா-2,சாரதா-2,அஞ்சலிதேவி-2,மைனாவதி-2,லலிதா-2,ராஜசுலோச்சனா-2,லதா-1,காஞ்சனா-1,மாலினி-1,வெண்ணிற ஆடை நிர்மலா-1,மணிமாலா-1,விஜயஸ்ரீ-1,விஜய நிர்மலா-1,பத்மப்ரியா-1,எஸ்.வரலக்ஷ்மி-1,மாலினி பொன்சேகா-1,சிலோன் கீதா-1,ரீனா-1,ராதிகா-1,ஜெயசுதா-1,குசலகுமாரி-1,பிரமிளா-1,மாதுரி தேவி-1,சரிதா-1,ராஜஸ்ரீ-1,கமலா-1,ருக்மிணி-1,சந்தியா-1,மனோரமா-1,சுமித்ரா-1,ஜெயபாரதி-1.


நடிகர்திலகம்
மொத்தம் 49 இசையமைப்பாளர்களோடு பணியாற்றியுள்ளார்.

எம்.எஸ்.விஸ்வநாதன்-95,கே.வீ.மகாதேவன்-38,விஸ்வநாதன்-ராமமூர்த்தி-24,இளையராஜா-23,ஜி.ராமநாதன்-18,சங்கர் கணேஷ்-9,டி.ஜி.லிங்கப்பா-6,எஸ்.வீ.வெங்கட்ராமன்-5,கங்கை அமரன்-5,எஸ்.எம்.சுப்பையா நாயுடு-4,டி.ஆர்.பாப்பா-4,சுதர்சன்-3,சந்திர போஸ்-3,சக்கரவர்த்தி-3,சி.என்.பாண்டுரங்கன்-2,எஸ்.தக்ஷிண மூர்த்தி-2,டி.சலபதிராவ்-2,எஸ்.ராஜேஸ்வர் ராவ்-2,குன்னக்குடி -2,மனோஜ் கியான்-2,வித்யா சாகர்-2,தேவா-2,ஆதிநாராயண ராவ்-1,எம்.ஜி.நாய்டு-1,தண்டாயுத பாணி-1,என்.எஸ்.பாலகிருஷ்ணன்-1,கண்டசாலா-1,கிருஷ்ண மூர்த்தி-1,ராம்நாத்-1,பீ.என்.ஆர்-1,கோவிந்த ராஜுலு-1,ஏ.எம்.ராஜா-1,டி.கே.ராமமூர்த்தி-1,ஜி.தேவராஜன்-1,புகழேந்தி-1,கோவர்தனம்-1,வீ.குமார்-1,சங்கர்-ஜெய்கிஷன்-1,கே.ராகவன்-1,எம்.ஏ.ரவீந்தர்-1,தேவேந்திரன்-1,எம்.ரங்கா ராவ்-1,டி.ராஜேந்தர்-1,ஜே.வீ.ராகவலு-1,
அம்சலேகா-1,ஸ்ரீராஜா-1,கீதப்ரியன்-1, ஏ.ஆர்.ரகுமான்-1.


நடிகர்திலகம் 96 இயக்குனர்களோடு பணியாற்றியுள்ளார்.((கௌரவ வேடங்கள் நீங்கலாக)

ஏ.சி.திருலோகச்சந்தர்-20,ஏ.பீம்சிங்-18,பீ.மாதவன்-15,சி.வீ.ராஜேந்திரன்-14,கே.விஜயன்-14,டீ.யோகானந்த்-13,ஏ.பீ.நாகராஜன்-12,வீ.ஸ்ரீனிவாசன்-8,பீ.ஆர்.பந்துலு-7,கிருஷ்ணன்-பஞ்சு-7,ஸ்ரீதர்-7,கே.சங்கர்-7,ஆர்.கிருஷ்ணமூர்த்தி-7,எல்.வீ.பிரசாத்-6,ராமண்ணா-6,கே.எஸ்.கோபாலகிருஷ்ணன்-5,கே.எஸ்.பிரகாஷ் ராவ்-5,கே.சோமு -5,தாதாமிராசி-3,ப.நீலகண்டன்-3,சி.எச்.நாராயண மூர்த்தி-3,வீ.பீ.ராஜேந்திர பிரசாத்-3,ஏ.காசிலிங்கம்-3,எஸ்.பீ.முத்துராமன்-3,கார்த்திக் ரகுநாத்-3,மேஜர் -3,ஏ.எஸ்.ஏ.சாமி-2,வேம்பு-2,ஆர்.எம்.கிருஷ்ண சாமி-2,வீ.எஸ்.ராகவன்-2,பீ.எஸ்.ரங்கா-2,பீ.புல்லையா-2,டி.பிரகாஷ் ராவ்-2,டி.ஆர்.ரகுநாத்-2,எஸ்.எம்.ஸ்ரீராமுலு நாய்டு-2,வீ.சுந்தரம்-2,அமிர்தம்-2,ஏ.ஜகந்நாதன்-2,பாரதி ராஜா-2,ராஜசேகர்-2,,என்.எஸ்.கே-1,டி.ஆர்.சுந்தரம்-1,எம்.நடேசன்-1,எஸ்.டீ.சுந்தரம்-1,ஜி.ஆர்.ராவ்-1,எஸ்.பாலச்சந்தர்-1,எஸ்.ஏ.முருகேஷ்-1,சுந்தர் ராவ் நட்கர்னி-1,ஜே.சிங்கா-1,ஏ.சுப்பா ராவ்-1,ராமகிருஷ்ணா-1,பீ.ஸ்ரீதர் ராவ்-1,கே.ஜே.மகாதேவன்-1,எஸ்.எஸ்.வாசன்-1,எஸ்.எஸ்.பாலன்-1,ஆர்.எஸ்.மணி-1,ஏ.சுப்பா ராவ்-1,ஏ.டி.கிருஷ்ணசாமி-1,பீ.ஆர்.சந்திரன்-1,ஜி.ஆர்.நாதன்-1,டி.என்.பாலு-1,கே.பாலச்சந்தர்-1,எஸ்.ராமநாதன்-1,சாவித்திரி-1,மல்லியம் ராஜகோபால்-1,சாணக்கியா-1,எஸ்.ஏ.கண்ணன்-1,ஏ.வின்சென்ட்-1,அப்பச்சன்-1,எம்.ஏ.திருமுகம்-1,கே.பாப்பையா-1,துரை-1,விஜய நிர்மலா-1,ராஜகணபதி-1,எஸ்.எஸ்.கே-1,கிருஷ்ணா-1,கே.பாக்யராஜ்-1,பாரதி வாசு-1,ஏ.எஸ்.பிரகாசம்-1,பாலச்சந்திர மேனன்-1,மனோஜ் குமார்-1,தாசரி நாராயண ராவ்-1,கே.ராகவேந்திர ராவ்-1,மணிவண்ணன்-1,சந்தான பாரதி-1,சி.குக நாதன்-1,பரதன்-1,மனோபாலா-1,பிரதாப் போதன்-1,எஸ்.ஏ.சந்திர சேகர்-1,ஆர்.வீ.உதயகுமார்-1,ஹாசன்-1,பிரசாந்த் குமார்-1,கே.எஸ்.ரவிக்குமார்-1,ஏ.வெங்கடேஷ்-1.ராம்சந்தர்-1.கஸ்தூரி ராஜா-1.

JamesFague
30th November 2014, 08:51 AM
Thanks to Mr Neyveli Vasudevan

'உத்தமன்' பற்றிய உறங்கா நினைவுகள்.

முதலில் கார்த்திக் சாருக்கு நன்றி!

உத்தமன்' புயலை 'தானே' கிளப்பி விட்டதற்கு. அடுத்து முரளி சாருக்கு நன்றி. ஒரு மறக்கவொண்ணா மரகதப் பதிவை 'உத்தமன்' வாயிலாகப் பதித்ததற்கு. கோபால் சாருக்கு நன்றி! சென்னை 'சாந்தி' உத்தமன் நினைவுகளை ஹிந்திக்கார நண்பருடன் சேர்ந்து பார்த்து முதலில் சோர்ந்து பின் ஷோவை ஷோக்காய் என்ஜாய் செய்து அந்த நினைவுகளை இங்கே பதிவிட்டமைக்கு.

இப்போது என்னுடைய சிறிய பங்கிற்கு.



'உத்தமன்' (26.06.1976) வெளியீட்டு தினத்தன்று ரசிகர் ஷோ செல்ல முடியாத ஒரு சூழ்நிலை. அன்று குடும்பத்துடன் ஈவ்னிங் ஷோதான் செல்ல முடிந்தது. கடலூர் ரமேஷ் திரையரங்கில் ரிலீஸ். அம்மா, சித்தி, அதிசயமாக அப்பா என்று உறவுகளோடு உத்தமனைப் பார்க்க பயணம். ரசிகர் ஷோ செல்ல முடியவில்லையே என்ற குறை மனதை அரித்துக் கொண்டே இருந்தது. மாலை மணி 5.30 க்கெல்லாம் அரங்கிற்கு சென்று விட்டோம். தலைவர் பனிக்கட்டிகளை மஞ்சுளா மீது வீசும் போஸ்டர்கள் என்னை மிகவும் கவர்ந்தன. தியேட்டர்களில் அவ்வளவாக பெரிய அலங்காரங்கள் இல்லை. சில கொடிகளும், மன்ற பேனர்களுமே மட்டும் தென்பட்டன. தலைவரின் கட்-அவுட்டுக்கு ஒரு பஞ்சு மாலை கட்சி சாயம் எதுவும் இல்லாமல் அணிவிக்கப் பட்டிருந்தது. சத்யத்தின் தோல்வி, அதற்கு முந்தய படங்களின் சுமாரான வெற்றிகள், பெருந்தலைவரின் மறைவு, அரசியல் சூழ்நிலைகள் என்று உத்தமன் சிக்கலான சமயத்தில் வெளிவந்ததால் ரசிகர்களின் கரை புரண்டோடும் உற்சாகம் கொஞ்சம் மட்டுப் பட்டிருந்தது. நாங்கள் வெளியூரில் இருந்ததால் படத்தின் ரிசல்ட்டும் சரியாகத் தெரியவில்லை.

ஈவ்னிங் ஷோவிற்கு பிரமாதமான கூட்டம் என்று இல்லை. ஓரளவிற்கு நல்ல கூட்டம். ஆனால் கிளாஸ் வகுப்புக்கள் உடனே நிரம்பியது. இரண்டாம் வகுப்பு டிக்கெட் அப்போது இரண்டு ரூபாய் எழுபத்தைந்து காசுகள் என்று நினைவு எடுத்து சென்று அமர்ந்தோம். come september 1961 இன் அருமையான மியூசிக் காதுகளில் தேனாகப் பாய, திரைச் சீலைகள் மேலே எழும்ப, சும்மா விசிலும் கைத்தட்டலும் பின்னி எடுக்க அதுவரை சற்று டல்லடித்திருந்த நான் நிமிர்ந்து உட்கார்ந்து பூஸ்ட் குடித்த சச்சின் போல் ஆனேன். நல்வருகை ஸ்லைட், புகை பிடிக்காதீர்கள், முன் சீட்டின் மீது கால் வைக்காதீர்கள், தினசரி 3 காட்சிகள் என்ற நான்கே சிலைட்கள். பின் தலைவர் ஸ்டில்களோடு 'இப்படத்தைக் காண வந்த ரசிகப் பெருமக்களுக்கு நன்றி' என்ற இருபதுக்கும் மேற்பட்ட சிலைடுகள் போடப்பட்டன. ஒவ்வொரு சிலைடுகளுக்கும் ஆராவாரம்... ஆர்ப்பரிப்பு... பூமாரி.



சிலைடுகள் முடிந்ததும் படம் போட்டு விட்டார்கள். கார்டூன்கள் டைட்டிலில் கலக்க எனக்கோ 'உத்தமன்' ஒரு நகைச்சுவை நிறைந்த படமோ என்று கூட சந்தேகம் வந்து விட்டது. காட்சி ஆரம்பமானதும் காஷ்மீரின் மலைச்சாரல் பகுதி சாலையில் தலைவரும், நாகேஷும் நடந்து வருவதை காட்டியவுடன் எனக்கோ கடுப்பானது. என்ன திடுமென்று தலைவரை ஒரு சுவாரஸ்யமில்லாமல் அறிமுகப்படுத்துகிறார்களே என்று கோபமாய் வந்தது. ஆனால் ஆர்ப்பாட்டத்துக்குக் குறைவில்லை. பின் தலைவரின் ஸ்டைலிலும், நடிப்பிலும் முற்றிலுமாக மனம் லயிக்க ஆரம்பித்தது. மஞ்சுளாவை வேறு ரொம்பப் பிடிக்குமாதலால் நகத்தைக் கடித்தபடியே அமர்ந்திருந்தேன். "மேரா மூஞ்சு கத்தரிக்கா மூஞ்சி... துமாரா மூஞ்சு முட்டகோஸ் மூஞ்சு" என்று காரில் தோழிகளுடன் வரும் மஞ்சுளாவை தலைவர் வாரும் போதே படம் சூடு பிடிக்கத் தொடங்கியது. தொடர்ந்து வரும் தலைவர், மஞ்சுளா சந்திப்பு 'கலகல' காட்சிகள் நன்றாகவே இருந்தன. "படகு படகு" பாடல் காட்சிகளில் சும்மா அதம் பறந்தது. அப்போது பின்னால் இருக்கும் குண்டுப்பையன் 'இளைய திலகம்' என்றெல்லாம் கவனிக்க நேரமேது? இப்போது அந்தப் பாட்டைப் பார்த்தால் பிரபுவையே கவனிப்பேன். அருமையாக ஸ்கேட்டிங் செய்வார். பாடலில் வரும் 'மரகத டோலி உடலோடு என் மனமென்னும் டோலி உன்னோடு' என்ற சுசீலாவின் குரல் முடிந்தவுடன் டாப் ஆங்கிளில் இருந்து ராட்சஸ மின்விசிறிகளின் காற்றில் மஜ்னுவின் உடைகள் மற்றும் தலைமுடி பறக்க, பரந்த மணற்பரப்பில் மண்டியிட்டு அமர்ந்து 'லைலா' என்று கதறும் போது அரங்கு கைத்தட்டலில் அலுங்கிக் குலுங்கியது. அதே போல சிகப்பு வண்ண ஆடையில் அணிகலன்கள் ஜொலிக்க சலீம் வரும் போது சப்தம் விண்ணைப் பிளந்தது. மெடிக்கல் காலேஜில் ஐஸ் கட்டியின் மீது படுத்துக் கொண்டு மஞ்சுளா கோஷ்டியிடம் தலைவர் பண்ணும் அட்டகாசங்கள், 'ஹரி ஓம் ரங்கஹரி' ஜாலி, மஞ்சுளா குளிரில் உயிருக்குப் போராடுகையில் தலைவர் உடலோடு உடல் சேர்த்து சூடு கொடுக்கும் காட்சி (இந்தக் காட்சியில் மட்டும்தாம்ப்பா சப்தமே இல்லை. ஒரே நிசப்தம். மாமா வேறு சப்தம் கொடுத்து எல்லோரையும் சப்தமில்லாமல் வேறு ஆக்கி விட்டார். அப்போது பார்க்கையில் ஒரு மாதிரி நெளியத்தான் வேண்டி இருந்தது), தொடர்ந்து வரும் "நாளை நாளை என்றிருந்தேன்", (விதவிதமான உடைகளில் நெற்றியில் புரளும் கற்றை முடி அழகனை அள்ளி அள்ளிப் பருகிய ரசிகர்கள். 'உத்தமன்' என்றாலே நினைவுக்கு வருவது அந்த புகழ் பெற்ற 'விக்'அல்லவா!) 'இரவுக்கும் பகலுக்கும்' பாடலை நினைவு படுத்தும் ஜோடி, வேக நடை, கழுத்தில் நீள் மஃப்ளர், பரந்த புல்வெளி என்று அமர்க்களமான அமர்க்களம்.

பின் வி கே ஆரின் சூழ்ச்சிகளால் தலைவருக்கும் மஞ்சுளாவுக்கும் ஏற்படும் பிரிவு, "நான் விரும்புறத உங்களால கொடுக்க முடியாது... நீங்க கொடுக்கறத என்னால வாங்கிக்க முடியாது"... என்று ராமசாமியிடம் சொல்லி விட்டு வேகமெடுக்கும் அந்த 'எங்கள் தங்க ராஜா' "வசந்தி என்னை மறந்திடு" பாணியின் சற்று வேறுபட்ட நடை நடந்து வரும்போதும், (கைத்தட்டல்களில் காது ஜவ்வுகள் கிழிந்தன) பின் குழந்தையை வி,கே.ஆரிடமிருந்து பெற்றுக் கொண்டு 'கேளாய் மகனே' என்று வளர்க்கும் போதும்,('மாஸ்டர் டிட்டோ 'வுடன் அருமையாக, மூக்கின் மேல் விரல் வைக்கும்படி நிஜ, ஸ்கேட்டிங் செய்தபடி வருவார்), மகனுக்கு 'போலியோ அட்டாக்' என்று டாக்டர் சொன்னதும் கதறித் துடிக்கும் போதும், 'தேவன் வந்தான்டி'பாடலின் அமர்க்களமான ஆடைகளுக்கும் ஸ்டைலுக்கும் ஏகப்பட்ட ரெஸ்பான்ஸ். அதே போல அருமையான சஃபாரிகளுடன் வித வித ஆங்கிள்களில் கலர் பு ஃல்லாக சோக வடிவமெடுத்து நன்கு சோபிக்கும் போஸ்களில் ஆரவாரக் கைத்தட்டல்களை காலமெல்லாம் அள்ளிக் கொண்டு போன, போகும் "கனவுகளே கனவுகளே"பாடல். ஹைகிளாஸ் ஆடியன்ஸின் அமோக ஆதரவு. பாடலின் வரிகள் சற்று புலப்பாடா விட்டாலும் தலைவரின் தோற்றத்திலேயே மட்டுமே மயங்கிச் சொக்கிய லோ-கிளாஸ் ரசிகர்கள் என்று ரசனையோடு அனைவரும் நன்கு ரசிப்பது புரிந்தது. படம் நன்றாகவே இருக்கிறது... ஓட்டத்தைப் பற்றி கவலைப்பட வேண்டாம் என்ற தைரியமும் பிறந்தது.

பாலாஜியின் அதிரடி பாத்திரமும் அருமையாகவே கையாளப்பட்டிருந்தது. இருந்தாலும் படம் கிளாஸாக இருக்கிறதே... 'C' சென்டர்களில் எடுபடுமா என்ற பயமும் இருந்தது. அந்தக் கவலையும் ஓரளவிற்கு தணிந்தது கிளைமாக்ஸ் சண்டைக்காட்சி மூலம். திணிக்கப் பட்டிருந்தாலும் விறுவிறுப்பான சண்டைகாட்சி, ஸ்கேட்டிங் துரத்தல்களும், தீப்பிழம்புகளுக்கு நடுவே பைக் துரத்தல்களும்,பேரல்கள் உருட்டலும், பார் விளையாட்டுக்களுமாய் நல்ல ரிச்சாகவே அமைந்து கடைநிலை ரசிகர்களின் பசிக்கு தீனி போட்டது அந்த சண்டைக் காட்சி. பின் தீயில் தலைவர் மாட்டிக் கொண்டு மயக்கமாகும் போது போலியோ கால்களை வைத்துக் கொண்டு மகன் அவரைக் காப்பாற்ற முயலும் போது பரபரப்போடு கூடிய மயான அமைதி. (மாஸ்டர் டிட்டோ தலைவரை வைத்து முடியாமல் இழுக்கும் போது கால்கள் வராமல் ஒத்துழைக்க மறுக்க தலைவர் ஸ்டைலிலேயே தன் கால்களைக் கைகளால் குத்திக் கொள்வது அருமை) பின் மகனுக்குக் கால் வந்து டாக்டர் பாலாஜியின் தயவால் தானும் நலமாகி மகனே தன் தந்தை தாய் இருவரின் திருமணத்தை இனிதே நடத்தி வைக்க முடிவு சுபம். அனைவரும் திருப்தியுடன் படம் முடிந்து வெளியே வந்ததைப் பார்க்க முடிந்தது.

பின் படம் நன்றாக இருப்பதாக செய்திகள் பரவத் தொடங்கியவுடன் நன்றாக பிக்-அப் ஆனது. ஆனாலும் ஹை கிளாஸ் ஆடியன்ஸ் அதிகம் குவிந்தனர். கிட்டத்தட்ட ஒரு மாதங்கள் ஒரே நிலையாக ஓடி நல்ல வெற்றியை கடலூரில் பெற்றார் நம் உத்தமன்.

Gopal.s
30th November 2014, 09:36 AM
எல்லா landmark படங்களுமே முத்திரை படைப்புகளாய் , வெற்றி படங்களாய் அமைந்த ஒரே உலக பாக்ஸ் ஆபீஸ் Emperor நமது நடிகர் திலகம் மட்டுமே.

1 பராசக்தி
25 கள்வளின் காதலி
75 பார்த்தால் பசி தீரும்
100 நவராத்திரி
125 உயர்ந்த மனிதன்
150 சவாலே சமாளி
175 அவன்தான் மனிதன்
200 திரிசூலம்
225 தீர்ப்பு
275 புதிய வானம்

விதி விலக்குகள்- 50 சாரங்கதாரா 250 நாம் இருவர் .

JamesFague
30th November 2014, 10:03 AM
Thanks to Mr Neyveli Vasudevan

இயக்குனர்கள் வரிசை

இயக்குனர் கே.விஜயன்.

நண்பர்களின் வெற்றிக் கூட்டணி ('ரிஷிமூலம்' படத்தில் திலகமும், விஜயனும்)



நடிகர் திலகத்தின் பல படங்களை இயக்கியவர். பி.மாதவன் வரிசையில் இவரும் ஒரு வெற்றி மற்றும் வெள்ளிவிழாப் பட இயக்குனர். நடிகராக அறிமுகமாகி பின் இயக்குனரானவர். 'பாதை தெரியுது பார்' (1960) என்ற அபூர்வமான தமிழ்ப் படத்தில் நாயகனாக அறிமுகம். வடக்கத்திய நந்திதா போஸ் இதில் ஹீரோயின். எம்.பி.ஸ்ரீனிவாசனின் இசையில் பாடல்கள் தேனமுது. ('சின்ன சின்ன மூக்குத்தியாம்', 'தென்னங்கீற்று ஊஞ்சலிலே') பின்னாட்களில் எல்லோரையும் இயக்கிய இயக்குனர் விஜயனை இந்தப் படத்தில் இயக்கியவர் நிமாய் கோஷ்.

'நாணல்' படத்தில் சௌகார் மற்றும் கே.ஆர்.விஜயாவுடன் விஜயன்.



அதன் பிறகு பாலச்சந்தர் இயக்கத்தில் வெளி வந்த 'நாணல்' படம் இவரை நன்கு அடையாளம் காட்டியது. இயக்குனரான பின்னும் இவர் நடிகர் திலகத்துடன் சிவந்தமண், ரிஷிமூலம் போன்ற படங்களிலும் நடித்தார்.

சரி! இவர் இயக்கிய தலைவர் படங்களைப் பற்றி கொஞ்சம் பார்ப்போம்.



நடிகர் சுப்பையா அவர்கள் தயாரித்த 'காவல் தெய்வம்' (1969) படத்தில் சாமுண்டி கிராமணி என்ற அற்புதமான சாணர கதாபாத்திரத்தில் (கௌரவ நடிகராக) நடிகர் திலகத்தை இயக்கியவர் விஜயன். ஜெயகாந்தன் கதை. படம் நல்ல வெற்றி கண்டது. நடிகர் திலகத்தின் ஆக்ரோஷமான நடிப்புக்கு இன்றளவும் பேசப்படும் படமாக இது அமைந்தது, விஜயனுக்கு இப்படத்தின் மூலம் நல்ல பெயர் கிடைத்தது.



பின் 1976 -ல் 'ரோஜாவின் ராஜா' இயக்குனர். கொஞ்சம் சிக்கலான காலகட்டத்தில் இவர் மறுபடி நடிகர் திலகத்தை இயக்கினாலும் படம் கமர்ஷியலாக நல்ல வெற்றி பெற்றது. 'அன்னையின் ஆணை' அசோகனுக்குப் பிறகு சாம்ராட் அசோகனை வேறு ஒரு கோணத்தில் விஜயன் நடிகர் திலகத்தின் மூலம் காட்டினார். அசோகனாக ஸ்லோ மோஷனில் ஆர்ப்பாட்டமாக நடிகர் திலகம் ஓடி வரும் அழகே அழகு! (ஆனால் நெடுந்தகட்டில் அந்த சீன் இல்லையே!) நடிகர் திலகம், வாணிஸ்ரீ கெமிஸ்ட்ரியும் வெற்றிகரமாகத் தொடர்ந்தது. பாடல்கள் பட்டை கிளப்பின.



அடுத்து ஒரு பம்பர். நம் பாலாஜி விஜயனை இயக்க அழைத்தார். நடிகர் திலகம் நடிப்பில் அசத்த அருமையாக உருவானது 'தீபம்'.(1977) அரசியல் சூழ்நிலைகளினால் நடிகர் திலகத்தின் அன்றைய படங்கள் சற்று சுமாராகப் போன நிலையில் 'அவ்வளவுதான்... நடிகர் திலகத்தின் சகாப்தம் முடிந்தது' என்று எக்காளமிட்ட எத்தர்களின் எண்ணத்தை எரிக்க வந்தது சுஜாதாவின் 'தீபம்' படம் பேய் ஹிட். கெட்ட எண்ணம் கொண்டவர்கள் எந்த திசை ஓடினார்கள் என்று தெரியவில்லை. மலையாளக் கரையின் தழுவலாக இருந்தாலும் அற்புதமாக, கனகச்சிதமாக தீபத்தை இயக்கி தன் முத்திரையைப் பதித்தார் விஜயன். தெளிவான டைரக்ஷன். நடிகர் திலகத்தின் நம்பகமான வெற்றி இயக்குனர் ஆனார் விஜயன்.



தீபத்தில் விஜயன் உழைப்பைக் கண்ட நடிகர் திலகம் தனது சொந்த பேனரில் எடுத்த 'அண்ணன் ஒரு கோயில்' படத்தை விஜயனிடமே இயக்கக் கொடுத்தார். விஜயனும் படு சிரத்தையாக உழைத்து இன்னொரு பாசமலர் ரேஞ்சுக்கு அ.ஒரு.கோயிலை உருவாக்கி அந்த வருட (1977) தீபாவளி விருந்தாக மாபெரும் வெற்றியடைய செய்தார். சுஜாதாவை நேரிடையாக நடிகர் திலகத்திற்கு ஜோடி சேர்த்து தீபத்தில் ஏமாந்த ரசிகர்களை நாலு பக்கமும் பரவசப்படுத்தினார் விஜயன். நடிகர் திலகத்தின் தொடர் வெற்றி விஜயன் மூலம் தொடர ஆரம்பித்தது. 'அண்ணன் ஒரு கோயிலி'ன் வெற்றி கேலி பேசிய அத்தனை பேர் வாயையும் பசை போட்டு ஒட்டியது.



இப்போது நடிகர் திலகத்தின் ரசிகர்களின் செல்ல இயக்குனர் விஜயன் என்று ஆன நிலையில் அடுத்து ஒரு வெள்ளிவிழாப் படம். 'தியாகம்' (1978) பாலாஜி தயாரிப்பில் வெளிவந்த 'தியாகத்'தை விஜயன் வெள்ளிவிழாப் படமாக்கி (முரளி சாரின் மதுரை சிந்தாமணியில்) நமக்கு விருந்து வைத்தார். 'தியாகம்' வசூல் மழை பொழிந்தது. (பின்னாலேயே 'என்னைப் போல் ஒருவன்' தொடர்ந்த போதும் கூட) தவறாக விமர்சனம் செய்த விகடர்களுக்கு சரியான சவுக்கடி கொடுத்தது தியாகம். (நடிகர் திலகம் படத்தில் சாட்டை இடம் பெற்றால் சென்டிமென்ட்டாக படம் சூப்பர் ஹிட். உதாரணம் காவேரி, என் தம்பி, சிவந்த மண், தியாகம், திரிசூலம்) சென்டிமென்ட், காதல், ஆக்ஷன் என்ற அழகான கமர்ஷியல் கலவையை கலந்து சூப்பர் ஹிட் ரேஞ்சில் கொண்டுவந்து நிறுத்தினார் 'தியாகம்' படத்தை விஜயன்.



தொட்டதெல்லாம் வெற்றியாயிற்று விஜயனுக்கு. ஆனால் என்ன கண்பட்டதோ! அடுத்து 'மதர் இந்தியா' வைத் தழுவி என்.வி.ஆர் பிக்சர்ஸ் தயாரித்த 'புண்ணிய பூமி' (1978) படத்தை விஜயன் இயக்கினார். ஆனால் படம் ஏமாற்றத்தை அளித்தது. Full scope ம் வாணிஸ்ரீக்குப் போனது, இடைவேளை வரை நடிகர் திலகத்துக்கு சில காட்சிகள், மதர் இந்தியாவின் காட்சிகளை தமிழ்க் கலாச்சாரத்துக்கு மாற்றாமல் உடைகள் முதற்கொண்டு அப்படியே காப்பி அடித்தது, நம்பியாரின் சலிக்க வைத்த மிகை நடிப்பு (குலமா குணமா, லட்சுமி கல்யாணம்) அவ்வளவாக எடுபடாத பாடல்கள், சவ சவ இழுவைக் காட்சிகள், மதர் இந்தியா வந்தபோது இருந்த டிரெண்ட் 'புண்ணியபூமி' வந்த நேரத்தில் இல்லாதது என்று பல காரணங்கள் படத்தின் வெற்றியைப் பாதித்தன. (பவானி, ஒய்.விஜயா போன்ற இளம் நடிகைகள் நடிகர் திலகத்துடன் இணைந்தது சற்று ஆறுதல்) இடைவேளைக்குப் பின் வரும் கொள்ளைக்கார முரட்டு மகன் ரோலில் நடிகர் திலகம் மிகப் பெரிய ஆறுதல் 'இருதுருவத்'தை ஞாபகப் படுத்தினாலும் கூட. விஜயன் இந்தப் படத்தை இன்னதென்று செய்வது அறியாமல் தவிப்பது நன்றாகவே தெரியும். ரீமேக்அதுவும் இந்தியாக இருந்தால் சில இயக்குனர்களுக்கு பெரும் தொல்லைதான்.



அப்புறம் 'நாத்' கள் கொடி நாட்டியவுடன் நடிகர் திலகத்தின் இருநூறாவது படம். சரஸ்வதிக்கு மிகவும் பிடித்த படம். லக்ஷ்மிக்கும் மிகவும் பிடித்தபடம். இதுவரை எந்தப்படமும் வசூலில் கிட்ட நெருங்க முடியாத படம். நடிகர் திலகத்தின் சொந்தப் படம் 'திரிசூலம்' (1979) விஜயன் கைவண்ணத்தில் வசூலில் நிலைத்த, யாவரும் மலைத்த வரலாறு படைத்தது. புண்ணிய பூமியின் தோல்வியையையும் சேர்த்து வைத்து திரிசூலத்தை திரையரங்குகளில் திருவிழாவாக்கினார்கள் நடிகர் திலகமும், விஜயனும். தமிழ்த் திரையுலகமே இதன் வசூலைக் கண்டு மிரண்டது. (ஆறு வாரங்களில் அறுபது லட்ச ரூபாய்... தந்தி விளம்பரம்.) அரசுக்கு வரி வருவாயாகவே திரிசூலம் மூலம் பல லட்சங்கள் கிடைத்தது. இந்தப் படத்தின் சாதனைகளை சொல்லி மாளாது. இப்போதும் கோவையில் சாதனை படைத்து வருகிறது. பலருக்கு இது வேதனைதான். என்ன செய்வது? சூரியனை சுண்டு விரலால் மறைத்து விட முடியுமா?

JamesFague
30th November 2014, 10:04 AM
பின் 'மான்' தாவியதும் பாலாஜி 'நல்லதொரு குடும்பத்'தை (1979) விஜயனை இயக்க வைத்து தந்தார். நடிகர் திலகம், வாணிஸ்ரீ ஜோடி அற்புதம் இதிலும் தொடர்ந்தது. தேங்காய் துருவல் மட்டும் இல்லாமல் இருந்திருந்தால் இந்தப் படத்தின் ரேஞ்சே வேறு. குடும்ப சட்னி கெட்டிருக்காது. இருந்தாலும் படம் அட்டகாச வெற்றி பெற்றது. எங்கள் கடலூரிலேயே நாற்பது நாட்கள் தாண்டி ஓடிய மகத்தான வெற்றிக் குடும்பம். விஜயனின் வெற்றி மீண்டும் நிரூபிக்கப்பட்டது.

'தூரத்து இடிமுழக்கம்' விஜயகாந்த், பூர்ணிமா



'நல்லதொரு குடும்பத்'திற்குப் பிறகு கொஞ்சம் நல்ல காலம் இல்லாமல் போய் விட்டது விஜயனுக்கு. விதி யாரை விட்டது? பல வெற்றிகள் தந்த மிதப்பில் நடிகர் திலகம் அடுத்து இயக்க வாய்ப்பு தந்த சிவாஜி புரடக்ஷன்ஸ் 'ரத்த பாசம்' படத்தை விஜயன் சரிவர இயக்காமல் இழுத்தடித்து டிமிக்கி கொடுத்தார். காரணம் சொந்தப்பட ஆசை. அப்போது அறிமுகமாகி இருந்த விஜயகாந்த், 'சட்டம் ஒரு இருட்டறை' பூர்ணிமா, பீலிசிவம் இவர்களை வைத்து வங்கக் கடலின் ஓரத்தில் அதாவது எங்கள் ஊர் கடலூரில் 'தூரத்து இடி முழக்கம்' என்ற சொந்தப் படத்தில் முழுநேர கவனத்தையும் செலுத்தினார் விஜயன். இதனால் 'ரத்த பாசம்' படப்பிடிப்பு பாதிப்படைந்தது. பொறுத்துப் பார்த்த நடிகர் திலகம் இயக்குனர் இல்லாமலேயே மீதிப் படத்தை முடித்தார். திரையலக வரலாற்றிலேயே இயக்குனர் பெயர் போடாமல் வந்த ஒரே படம் நமது 'ரத்த பாசம்' என்றுதான் நினைக்கிறேன். இயக்குனர் பெயருக்கு பதில் நடிகர் திலகம் என்று வெறுமனே ஸ்டில் கார்ட் மட்டும் போடுவார்கள். (இதை ஏற்கனவே திரியில் பதிந்திருக்கிறேன்) இதிலும் சாதனையா? ரத்தபாசம் (1980) சுமாரான ரிசல்ட் இருந்தும் கலெக்ஷனில் பின்னியது திரிசூலத்தின் பாதிப்பு மக்களிடம் நீங்காததினால்.

'தூரத்து இடிமுழக்கம்' (1980) தூரத்திலேயே கேட்டுவிட்டதால் இடி போன்ற அடி வாங்கினார் விஜயன் சொந்தப்படம் எடுத்து. 'செம்மீன்' புகழ் சலீல் சௌத்திரியின் அருமையான இசை இருந்தும் (உள்ளமெல்லாம் தள்ளாடுதே) படம் அடி வாங்கியது. விஜயனும் தள்ளாடினார். (கடலில் எடுத்த படமாயிற்றே!) சென்டிமெண்டாக எந்தப் படம் கடலூரில் எடுத்தாலும் அந்தப்படம் தோல்விதான் என்ற அவப் பெயரை விஜயனின் சொந்தப்படமான 'தூரத்து இடிமுழக்கம்' மூலம் மீண்டும் தக்க வைத்துக் கொண்டது எங்கள் ஊர். ஆடிக்காற்றில் பாதுகாப்பு, தர்மம் எங்கே அம்மிகளே பறந்த போது தூரத்து இடிமுழக்கம் என்ற இலவம்பஞ்சு எம்மாத்திரம் எங்கள் ஊருக்கு?

இதற்குள் நடிகர் திலகம், பாலாஜி கூட்டணி பில்லா கிருஷ்ணமூர்த்தியை பிடித்துக் கொண்டது. (தீர்ப்பு மற்றும் நீதிபதி) வெற்றி வாகையும் சூடியது.



மனம் திருந்திய மைந்தனாக மீண்டும் விஜயன் நடிகர் திலகத்தை தஞ்சமடைந்தார். கிட்டத்தட்ட 5 வருடங்களுக்குப் பிறகு அதே பாலாஜி, நடிகர் திலகம் கூட்டணி அதே விஜயனுக்கு மறுபடி தங்களுடன் 'பந்தம்' (1985) ஏற்படுத்திக் கொடுத்தது. கிடைத்த சான்ஸை அற்புதமாகப் பயன்படுத்தி 'பந்தம்' படத்தை பக்காவாக ஹிட் பண்ணிக் கொடுத்தார் விஜயன். ஜெனரல் ஆப்ரஹாம் ஜெயித்துக் காட்டினார்.(அஜீத்தின் மனைவி நம்மாளுக்குப் பேத்தி) பழைய பகைமை எதையும் மனதில் வைத்துக் கொள்ளாமல் நடிகர் திலகம் தங்கமான மனதுடன் விஜயனை ஏற்றுக் கொண்டார். (அதனால்தான் கடவுளுக்கு இணையானவர் ஆகிறார்) விஜயனும் நடிகர் திலகம் தன்னை மீண்டும் ஏற்றுக் கொண்ட பெருந்தன்மையைக் கண்டு நெகிழ்ந்து அதையே 'பந்தம்' படத்தில் ஒரு காட்சியாகவும் (நடிகர் திலகம் தவறு செய்த தன் டிரைவரை வேலையை விட்டுத் தூக்கி விடுவார். பின் அதனை மறந்து மன்னித்து மீண்டும் அதே டிரைவரை வேலைக்கு அமர்த்திக் கொள்வார்) வைத்து பரிகாரம் தேடிக் கொண்டார். (அந்தக் காட்சியை விஜயன் நடிகர் திலகத்திடம் விளக்கும் போது நடிகர் திலகம் விஜயனின் மன நிலைமையை அறிந்து விஜயனிடமே அதைப் பற்றிக் கேட்டாராம்). ஆக 'பந்தம்' மூலம் மீண்டும் விஜயனும், திலகமும் இணைந்தனர்.





பின் 1986-இல் அடுத்தடுத்து இரண்டு படங்கள். சொந்த பேனரில் நடிகர் திலகத்தின் 'ஆனந்தக் கண்ணீர்', அடுத்து பாலாஜியின் பிரம்மாண்ட தயாரிப்பான 'விடுதலை'. இரண்டுமே ஹிட் படங்கள். பிரஸ்டிஜ் பத்மனாபனாகக் கொடி நாட்டியவரை 'ஆனந்தக் கண்ணீரி'ல் காம்ப்ரமைஸ் கல்யாணராமனா'கக் காட்டி பரிதாபப்பட வைத்தார் விஜயன்.

'குர்பானி' அம்ஜத்கான் ரோலை தலைவர் விடுதலையில் செய்தார். மெட்ராஸ் தமிழில் காமெடி கலக்கல் ('நென்ச்சேன்') ரஜினி ஒரு ஹீரோ. விஷ்ணுவர்த்தன் ஒரு ஹீரோ. படம் கமர்ஷியல் ஹிட்.

பின் 1987-இல் நடிகர் திலகம் அற்புதமாக நடிக்க 'தாம்பத்யம்' என்ற ஒரு நல்ல படத்தை இயக்கித் தந்தார் விஜயன். ('தாம்பத்யம்' படத்தைப் பற்றி முழு ஆய்வு செய்து நான் பதிவு அளித்துள்ளது நண்பர்களுக்குத் ஞாபகம் இருக்கும் என்று நினைக்கிறேன்)

கமலை வைத்து பாலாஜியின் தயாரிப்பில் 'மங்கம்மா சபதம்' என்ற படத்தையும் விஜயன் இயக்கினார். அது மட்டுமல்லாமல் சில மலையாள, இந்திப் படங்களையும் இயக்கியுள்ளார். தீபம் படம் 'அமர்தீப்' என்ற பெயரில் இந்தியில் தயாரிக்கப்பட்டது. தயாரித்தவர் பாலாஜியேதான். இயக்கியவரும் விஜயன்தான். 1979 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தப் படத்தில் ராஜேஷ் கண்ணா, வினோத் மெஹ்ரா, சபனா ஆஸ்மி ஆகியோர் நடித்தனர். இந்தப் படத்திற்கு லக்ஷ்மிகாந்த் பியாரிலால் இசையமைத்தார். இந்தப் படத்திற்கு டைட்டில் இசை அமைத்தவர் யார் தெரியமா?! சாட்சாத் நம் மெல்லிசை மன்னர்தான். என்ன! குழப்பமாக இருக்கிறதா? 'ராஜா' படத்தின் அற்புதமான டைட்டில் இசையை அப்படியே இந்தப் படத்திற்கு பாலாஜி டைட்டிலுக்குப் பயன்படுத்திக் கொண்டார். அப்படின்னா டைட்டில் இசை விஸ்வநாதன் சார் தானே! அடப் பாவிகளா!

இவரும் எனக்கு மிகப் பிடித்த இயக்குனர். நான் முன்பே சொன்னது போல அனாவசிய வள வள காட்சிகளை வைக்கவே மாட்டார். சொல்ல வேண்டியதை 'நச்'சென்று சொல்வார். தொண்ணூறு சதம் வெற்றி நிச்சயம். காட்சிகள் மிக அழகாகக் கோர்வையாகச் செல்லும். சிக்கலான மூன்று கதாபாத்திரங்களை நடிகர் திலகத்திற்குக் கொடுத்து கொஞ்சமும் குழப்பாமல், குழம்பாமல் பாமர ஜனங்களுக்கு எளிமையாக புரியும்படி ஈடுஇணையில்லா வெற்றி 'திரிசூலம்' வழங்கியவர். சொன்னால் சொன்னபடி நேரத்துக்கு படத்தை முடித்துத் தரக் கூடியவர். ராஜசேகரன், சங்கர், குரு பாத்திரங்களை தனித்தனியே நடிகர் திலகத்தை வைத்து குறுகிய நாட்களில் ஷூட் செய்து சாதனை படைத்தவர்.

'சிவந்த மண்' ணில் நடிகர் திலகத்துடன் விஜயன்.



விஜயன் என்றால் வெற்றி. இது இவருக்கு மிகப் பொருந்தும்.

JamesFague
30th November 2014, 10:22 AM
Thanks to Mr Neyveli Vasudevan

ஹிட்லர் உமாநாத் (26.01.1982) ஒரு முழுமை அலசல் (5 பாகங்கள்)

பாகம் 1



1982-ஆம் வருடம் ஜனவரி 26-ம் தேதி குடியரசு தினத்தன்று வெளி வந்த படம்.!? அதற்கு முந்தைய வருடம்

மோகன புன்னகை
சத்திய சுந்தரம்
அமர காவியம்
கல் தூண்
லாரி டிரைவர் ராஜாக்கண்ணு
மாடி வீட்டு ஏழை
கீழ் வானம் சிவக்கும்

என்று 7 படங்களைத் தந்திருந்தார் நடிகர் திலகம். இதில் டாக்டர் பாலகிருஷ்ணா தயாரித்த 'சத்திய சுந்தரம்', மேஜர் முதலில் இயக்கிய 'கல்தூண்', முக்தாவின் 'கீழ்வானம் சிவக்கும்' மூன்றும் மிகப் பெரிய ஹிட். விஸ்வநாதன் கம்பைன்ஸ் கோபியின் 'அமரகாவியம்', கலைஞரின் 'மாடிவீட்டு ஏழை' இரண்டும் சுமாராகப் போன நிலையில் ஸ்ரீதரின் 'மோகனப் புன்னகை' நம்மை அவ்வளவாக புன்னகைக்க விட வில்லை. புஷ்பாராஜன் (அதான் சார்... நடிகை புஷ்பலதாவும், அவர் கணவர் நடிகர் ஏ.வி.எம்.ராஜனும்) தயாரித்த 'லாரி டிரைவர் ராஜாக்கண்ணு' பி,சி சென்டர்களில் வசூலை வாரிக் குவித்தது.

ஆக நடிகர் திலகத்தின் வெற்றிக்கொடி 1952 இலும் சரி... 1981-இலும் சரி... அதற்குப் பிறகும் சரி... தமிழ்த்திரையுலக வானில் பட்டொளி வீசிப் பறந்து கொண்டே இருந்தது. அவரின் வெற்றியோட்டம் தொடர்ந்து கொண்டே இருந்தது. (அது என்றைக்கு நின்றது?)

இந்த நிலையில் 'ஹிட்லர் உமாநாத்' வெளிவந்தது. 1981 தீபாவளி வெளியீடாக வந்து வசூல் பிரளயம் நடத்திய டாக்டர் துவாரகநாத்தைத் தொடர்ந்து ('கீழ்வானம் சிவக்கும்' 26.10.1981) கிட்டத்தட்ட 3 மாதங்கள் கழித்து ஹிட்லர் வந்தார்.

ஹிட்லர் என்றாலே விசேஷம்தானே! 1976 க்குப் பிறகு, அதாவது 'சித்ரா பவுர்ணமி' இயக்கிய பிறகு 5 வருட இடைவெளிக்குப் மேல் இயக்குனர் மாதவன் இயக்கத்தில் வெளிவந்த விசேஷம், அடுத்தது நமது தலைவர் இதுவரை வைக்காத ஹிட்லர் மீசை வைத்து வித்தியாசமான கெட்-அப்பில் நடித்த விஷேசம், மகேந்திரனின் கதைக்கு மௌலி திரைக்கதை அமைத்து வசனம் எழுதிய விசேஷம், PVT புரடக்ஷன்ஸ் ('துணிவே துணை' புகழ்) தயாரிப்பில் நடிகர் திலகம் நடித்த படம் என்று விசேஷம், சுருளிராஜனின் தலைவர் புகழ் பாடும் வில்லுப்பாட்டு என்று சில விசேஷங்கள்.

சரி! நம் ஹிட்லர் உமாநாத்தின் கதை என்னவென்று பார்க்கலாம்.

ஊட்டியில் வசிக்கும் உமாநாத் (நடிகர் திலகம்) தன் முறைப்பெண் லட்சுமியை (கே.ஆர்.விஜயா) மணந்து வாழ்க்கையை நடத்த கஷ்டப்பட்டு பல வித கூலி வேலைகள் செய்கிறார். உமாநாத் ஒரு அப்பாவி, அதிக படிப்பறிவில்லாதவர் என்று பலரும் அவரை ஏய்க்கிறார்கள். முட்டாள், கோழை என்று கேலி பேசுகிறார்கள். ஆனால் உமாநாத்திற்கு அதைப் பற்றி கவலைப்படக் கூடத் தெரியாது. உமாநாத்தின் சொத்து அவரது அருமை மனைவியும், அவர் மகளும், (பேபி சாரதாப்ரீதா. பின்னாட்களில் சில படங்களில் கதாநாயகியாகத் தலைகாட்டி பின் காணாமல் போனவர்) அவர் ஹிட்லர் மீசையும் மட்டுமே.

லட்சுமி ஓரளவிற்குப் படித்த அறிவாளி. சுய கௌரவம் கொண்ட துணிச்சல்காரியும்கூட. கணவனை கேலி பேசும் கூட்டத்தை அலட்சியப்படுத்தி கணவன் நல்ல நிலைக்கு வரவேண்டும் என்று நினைக்கிறாள். தன் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த தந்தையிடம் சென்று கணவனுக்காக உதவி கேட்கிறாள். 'முட்டாளை என்னை மீறி மணந்து கொண்டாயே' என்று அவள் தந்தை உதவி செய்ய மறுக்கிறார். தன் கணவனை பெரிய ஆளாக்கித் தீருவேன் என்று லட்சுமி சபதமெடுத்து தன்னுடைய பள்ளி வாத்தியார் (வி.எஸ்.ராகவன்) செய்த உதவி மூலம் கணவனை சென்னைக்கு அழைத்து செல்கிறாள். வாத்தியார் சென்னையில் தன் நண்பன் மானேஜராக வேலை செய்யும் கம்பெனி ஒன்றில் உமாநாத்தை சேர்க்க ஒரு சிபாரிசுக் கடிதத்தையும் லட்சுமியிடம் கொடுத்தனுப்புகிறார்.

கம்பெனியின் சேர்மன் ஜாபரி (என்.எஸ். ராம்ஜி) ஒரு ஜென்டில்மேன். வேலை தேடி வரும் உமாநாத்தை காக்க வைத்து, அவர் பொறுமையை டெஸ்ட் செய்து, உமாநாத் அதில் வெற்றி பெற்ற பின் அவரை தினக்கூலியாக பணியில் அமர்த்திக் கொள்கிறார். உமாநாத்தும் தன் வேலைகளைப் பொறுப்பாகப் பார்க்கிறார். தன்னுடைய படிப்பறிவின் மூலமும், திறமை மூலமும் கணவன் செய்யும் வேலைகளுக்கு வழிகாட்டியாக செயல்படுகிறாள் லட்சுமி. தைரியத்தையும் தன்னம்பிக்கையையும் கணவனுக்கு ஊட்டி அவர் நிலையைப் படிப்படியாக உயர வைக்கிறாள் அவள். கம்பெனி பற்றிய விஷயங்களை அக்கறையோடு ஆர்வத்துடன் கற்றுத் தெளிகிறார் உமாநாத்.

லட்சுமியின் துணையோடு தன் நியாயமான உழைப்பையும் கொடுத்து தினக்கூலியில் இருந்து ஆபீஸ் பியூனாக இருந்த உமாநாத் இப்போது ஹெட் பியூனாகிறார். தன் உண்மையான உழைப்பால் சேர்மன் ஜாபாரியின் அன்புக்குப் பாத்திரமாகிறார் உமாநாத். பின் மற்றவர்கள் பொறாமைப்பட அசிஸ்டன்ட் மானேஜராகவும் பிரமோட் செய்யப்படுகிறார். ஒரு கட்டத்தில் தொழிலாளர் சிலரின் பொறுப்பற்ற தன்மையினால் பேக்டரி இழுத்து மூடப்படும் நிலைக்கு நஷ்டத்தில் தள்ளப்பட, லட்சுமியின் சொல்படி கம்பனியை நஷ்டத்திலிருந்து தான் காப்பாற்றுவதாக சேர்மன் ஜாபரியிடம் கூறுகிறார் உமாநாத். கம்பெனியின் நஷ்டத்திற்கு காரணமானவர்களைப் பற்றியும் எடுத்துரைக்கிறார். சொன்னபடி ராப்பகலாக உழைத்து, மற்றவர்களையும் உழைக்க வைத்து கம்பெனியை நஷ்டத்திலிருந்து காப்பாற்றியும் விடுகிறார். இதனால் அவருக்கு ஒர்க் மானேஜராக பதவி உயர்வு கிட்டுகிறது.

சுயநலப் பேய்களான தொழிற்சங்க தலைவர்களின் முகமூடியை தொழிலாளர்களிடம் தோலுரித்துக் காட்டுகிறார் உமாநாத். அது மட்டுமல்லாமல் தொழிலார்களின் குறையை அவர்களுடன் நேரிடையாகவே கலந்து பேசி அவர்களுக்குத் தேவையான போனஸ், மற்றும் அடிப்படை வசதிகளை செய்து தந்து அவர்களின் நன்மதிப்பையும் பெறுகிறார். இப்போது அவர் மேனஜிங் டைரக்டர்.

நடப்பு சேர்மன் ஜாபரி ரிடைர்ட் ஆகும் தருணம் வருகிறது. போர்டு ஆப் டைரக்டர்ஸ் முடிவின் படியும், ஜாபாரியின் ஆதரவுடனும் கம்பெனிக்கு சேர்மனாகவே ஆகி விடுகிறார் உமாநாத்.

இப்போது கம்பெனிதான் உமாநாத். உமாநாத்தான் கம்பெனி. ஒய்வு ஒழிச்சல் இல்லாமல் கம்பெனி, பிசினஸ் என்று அதிலேயே மூழ்கி விடுகிறார் உமாநாத். இப்படியே காலங்கள் உருண்டோட மகள் சியாமளா (புதுமுகம் சரோஜா) வளர்ந்து பெரியவளாகிறாள். குடும்பத்தைக் கூட கவனிக்க நேரமில்லாமல் பிசினஸ், பிசினஸ் என்று ஓடிக்கொண்டே இருப்பதால் மகளை கவனிக்க முடியாமல் மகளின் வெறுப்புக்கு ஆளாகிறார். லட்சுமிக்கும் தன் கணவர் முன்னை மாதிரி இல்லையே என்ற பெரிய மனக்குறை.

ஒய்வு பெற்ற பழைய சேர்மன் ஜாபரி உமாநாத்தைப் பார்க்க ஒருநாள் ஆபீஸ் வருகிறார். தான் சம்பாதித்த பணத்தையெல்லாம் குதிரை ரேஸில் விட்டு விட்டு ஒரு வேளை சாப்பாட்டுக்கு திண்டாடுவதாகக் கூறும் அவர் உமாநாத்திடம் கம்பெனியில் தன் மகன் மதுவிற்கு ('கல்தூண்' சதீஷ்) ஒரு வேலை போட்டுத் தருமாறு கேட்கிறார். பொறுப்பற்றுத் திரியும் அவனை நல்வழிப்படுத்துமாறும் கேட்டுக் கொள்கிறார்.

உமாநாத் அவர் மேல் உள்ள மரியாதையின் காரணமாகவும், தன்னை இந்த நிலைக்கு ஆளாக்கியது ஜாபாரிதான் என்ற நன்றி உணர்ச்சியின் காரணமாகவும் அவர் மகனுக்கு கடைநிலை ஊழியராக வேலை போட்டுத் தருகிறார். (ஏனென்றால் அவன் பொறுப்பானவனாக வரவேண்டும் என்ற காரணத்திற்காக) ஆனால் மதுவோ திமிர் பிடித்தவன். தன் தந்தையால் முன்னுக்கு வந்த உமாநாத்தின் வளர்ச்சி பொறுக்காமல் உமாநாத்தின் பழைய எதிரிகளுடன் (சத்யராஜ்) கைகோர்த்து யூனியன் லீடராகி, அவருக்கு பிரச்சனைகள் தர ஆரம்பிக்கிறான். அதுமட்டுமல்ல. மது உமாநாத்தின் மகள் சியாமளாவை காதலிக்க அவளும் மதுவை விரும்புகிறாள்.

குடும்பத்தை கவனிக்க நேரமில்லாத உமாநாத் ஒருமுறை மகள் சியாமளா காலேஜ் முடிந்து லேட்டாக தன்னுடைய தோழியின் அண்ணனுடன் வீட்டுக்கு காரில் வந்து இறங்குவதைப் பார்த்து கண்டிக்கிறார். அவரை எடுத்தெறிந்து பேசும் மகள் தூக்க மாத்திரைகளை எடுத்து உயிரை மாய்த்துக் கொள்ளப் போகிறாள். அதைத் தடுக்கும் உமாநாத் மகளின் செய்கை கண்டு நிலை குலைந்து போகிறார்.

ஆபீஸ் வேலைகள் ஒருபுறம், கணவனின் அன்புக்காக ஏங்கும் மனைவி லட்சுமி ஒருபுறம், அடங்காத மகளின் திமிர்த்தனம் ஒருபுறம், ஆபீஸ் எதிரிகள் ஒருபுறம், தனக்குத் தொல்லை கொடுக்கும் மது ஒருபுறம், சாஞ்சா சாயுற பக்கமே சாயுற செம்மறி ஆட்டுக் கூட்ட, கேட்பார் பேச்சை கேட்கும் தொழிலாளிகள் ஒருபுறம் என்று பல சிக்கல்களுக்கிடையே மாட்டி நிம்மதி இழந்து தவிக்கிறார் உமாநாத். ஆனால் நம்பிக்கையையும், தைரியத்தையும், தன்னம்பிக்கையையும் மட்டும் அவர் விடவே இல்லை.

இறுதியில் உச்சக்கட்டமான அதிர்ச்சி உமாநாத்துக்கு. மகள் சியாமளா உமாநாத்துக்குத் தெரியாமலேயே மதுவை கோவிலில் வைத்து மணந்து கொள்கிறாள். தாய் லட்சுமியும் இந்தத் திருமணத்தில் கலந்து கொள்கிறாள். உமாநாத்துக்கு எல்லை மீறப் போன இந்த விஷயத்தை தெரியப்படுத்த லட்சுமி எவ்வளவோ போராடுகிறாள். ஆனால் சதா ஆபீஸ் வேலையில் மூழ்கியிருக்கும் உமாநாத் இந்த விஷயத்தைக் கேள்விப்பட முடியாத சூழ்நிலைக்கு தள்ளப்பட்டு விடுகிறார் வேலைப்பளுவின் காரணமாக.

பின்னர் உமாநாத்துக்கு விஷயம் தெரியவர, கல்யாணத்தை தன்னிச்சையாக முன்னின்று நடத்திய தன் மனைவி லட்சுமியை கடுமையாகக் கோபிக்கிறார். விஷயம் விபரீதமாகப் போனது உமாநாத்திற்கு மட்டுமே தெரியும்.(ஒருமுறை மது தன்னை அவமானப் படுத்தும்போது அவனை அடித்துவிடும் உமாநாத் அவனை ஹாஸ்பிட்டலில் கொண்டு சேர்க்க அவன் வயிற்றில் கட்டி வளர்வது அப்போது டாக்டர்கள் மூலமாக அவருக்குத் தெரிய வரும்) ஆமாம். மது வயிற்றில் ஒரு கட்டி வளர்கிறது. அவன் ஒரு கேன்சர் பேஷன்ட். தன் மகள் கூடிய விரைவில் விதவையாகப் போகும் அவலத்தை நினைத்து மனைவியிடம் கூறிக் கதறுகிறார் உமாநாத். அதனால்தான் அந்த திருமணத்திற்கு தான் சம்மதம் தரவில்லையென்றும் எடுத்துரைக்கிறார் அவர்.

லட்சுமி இதைக் கேட்டு துடித்துப் போகிறாள். உமாநாத் எல்லாவற்றையும் மறந்து விட்டு, ஆபீஸ் வேலைகளையும் துறந்து விட்டு, மதுவை ஹாஸ்பிட்டலில் சேர்த்து, வெளிநாட்டில் உள்ள புற்றுநோய் சிகிச்சை நிபுணர்களை வரவழைத்து, இரவு,பகல் அவன் கூடவே இருந்து, மதுவை கவனித்து, அவன் உயிரை காப்பாற்றி, தன் மகளுக்கு மாங்கல்ய பலத்தைத் தருகிறார். மதுவும் தன்னை உயிர் பிழைக்க வைத்த உமாநாத்தின் அன்பால் திருந்துகிறான். மகளும் அப்பாவை புரிந்து கொண்டு அன்பு செலுத்துகிறாள்.

இப்போது இன்னொரு அதிர்ச்சி செய்தி வருகிறது. உமாநாத் கம்பெனிக்காக வாங்கிய புது சரக்குக் கப்பல் சிங்கப்பூரிலிருந்து வரும் போது மூழ்கி விட்டது என்பதுதான் அது.

இப்போதுதான் பெருத்த அடியிலிருந்து மீண்ட உமாநாத்திற்கு அதற்குள் மேலும் ஒரு அடி. உமாநாத் துப்பாக்கியை எடுத்துக் கொண்டு தன் அறைக்குள் சென்று கதவை தாழிட்டுக் கொள்கிறார். அதைப் பார்த்து மனைவி லட்சுமி பதறுகிறாள். உள்ளே துப்பாக்கி வெடிக்கும் சத்தமும் கேட்கிறது. ஆனால் சிறிது நேரத்தில் கதவு திறக்க உமாநாத் ஹிட்லர் போல இறுதி முடிவெடுக்க தான் ஒன்றும் கோழையில்லை என்று சொல்வதைப் போல ஹிட்லரின் புகைப்படத்தை சுட்டுத் தள்ளி விட்டு வெளியே வருகிறார்.

கப்பல் மூழ்கியதால் பெரும் நஷ்டம் ஏற்பட்டு கம்பெனியை இழுத்து மூட வேண்டிய நிலைமை ஏற்பட்டுவிடும் என்று தொழிலாலர்களிடையே செய்தி பரவுகிறது. உமாநாத்துக்கு ஏற்பட்ட இந்தப் பேரிடியை தனக்கு சாதகமாக்கிக் கொண்டு தொழிலாளர்களைத் தூண்டி விடுகின்றனர் உமாநாத்தின் பழைய விரோதிகள். தொழிலாளிகள் உமாநாத்தை தாக்க வீட்டுக்குக் கிளம்ப, உமாநாத் தான் தொழிலாளிகளுக்காக தன் குடும்பத்தையே மறந்து உழைத்ததை அவர்களுக்கு நினைவு படுத்துகிறார். கம்பெனியின் வளர்ச்சிக்காக தான் பட்ட துன்பங்களைக் கூறுகிறார்.

கவிழ்ந்து போன கப்பலை தான் வாங்கவில்லை என்றும், கப்பலை வெள்ளோட்டம் பார்த்த பின்தான் அதை வாங்க ஒப்பந்தம் செய்ய இருந்ததாகவும், அதற்குள் கப்பல் மூழ்கி விட்டதால் ஒரு நஷ்டமும் கம்பெனிக்கு இல்லை என்றும் தொழிலாளிகள் வயிற்றில் பால் வார்க்கிறார். உமாநாத்தின் சாதுர்யமான புத்திசாலித்தனத்தைக் கண்டு அனைவரும் வியக்கின்றனர். தொழிலாளர் கூட்டம் மீண்டும் உமாநாத் புகழ் பாடுகிறது. தொழிலாள விரோதிகளை விரட்டுகிறது.

உமாநாத் ஹிட்லர் போல தைரியமாக தனக்கு வந்த அத்தனை பிரச்சனைகளையும் தன் மனோதிடத்தால் நேர் கொண்டு போராடி அத்தனைகளிலும் வெற்றி வாகை சூடுகிறார். அடால்ப் ஹிட்லர் போல இறுதியில் நம் உமாநாத்திற்குத் தோல்வி இல்லை. ஹிட்லர் போல கொடுங்கோலனும் இல்லை. ஹிட்லர் மீசையை மட்டுமே வைத்த உமாநாத் ஹிட்லரின் குணங்களைக் கொண்டிருக்கவில்லை. ஹிட்லரின் கண்டிப்பு மட்டுமே உமாநாத்திடம் இருந்தது. ஆனால் நல்லது நடக்க மாத்திரமே அது பயன்பட்டது. அதனால் நம் உமாநாத் ஹிட்லரையே வென்றவராகிறார்.

குடும்பத்தை சரிவர கவனிக்காத மன உறுத்தல் இருந்த உமாநாத் இறுதியாக தன் வாழ்நாளை தன் குடும்பத்தினருடன் கழிக்க முடிவெடுத்து கம்பெனியிலிருந்து ஒய்வு பெறுகிறார். இப்போது பழைய ஊட்டி உமாநாத்தாக அவரைப் பார்க்க முடிகிறது. பாசமுள்ள உமாநாத்தாக அவரை பார்க்க முடிகிறது. நிம்மதியான உமாநாத்தாக அவரை பார்க்க முடிகிறது. சந்தோஷமான உமாநாத்தாக திரும்பவும் தன் மனைவியுடன் ஊட்டிக்கே கலகலப்புடன் திரும்புகிறார் அவர்.

முடிவு சுபமே!

இந்த ஹிட்லர் உமாநாத் முன்னேற்றத்திற்கான ஒரு பாடம்.

JamesFague
30th November 2014, 10:24 AM
பாகம் 2

இனி ஹிட்லர் உமாநாத்தாய் கொடி நாட்டியவர் பற்றி



அப்பாவி உமாநாத்தாய் ஹிட்லர் மீசை, கழுத்தில் தொங்கும் மப்ளர், கையில் குடை, ஊட்டி கோட் சகிதம் நடிகர் திலகம் ஓஹோ! வெகு வித்தியாசமான பாத்திரம். உருவ அமைப்பும் கூட. படத் தொடக்கத்திலிருந்து இறுதிக் காட்சி வரை நடிப்பில் செய்யும் சாகசங்கள் வழக்கம் போல ஏன் வழக்கத்தை விடவும் அதிகமாக நம்மை ஆச்சர்யத்தில் மூழ்க வைக்கின்றன.

ஏழை அப்பாவியாய் ஒன்றும் தெரியாமல் அனைவரின் கேலிப் பேச்சுக்கு ஆளாகும் போதும் சரி... மனைவியின் அறிவுரைகளை அடக்கத்துடன் கேட்டு அதன்படி நடக்கும் போதும் சரி... படிப்படியாய் ஆபீஸில் பதவி உயர்வு நிலைகளை சாதுர்யமான புத்திசாலித்தனத்தால் அடையும் போதும் சரி... தன்னை வாழ வைத்த தன் முதலாளியிடம் வைத்திருக்கும் அன்பு கலந்த மரியாதையிலும் சரி... பிரச்னைகளை அழகாக சந்தித்து எதிர் கொள்ளும் போதும் சரி... மகளிடம், மனைவியிடம் கண்டிப்பும், பாசமும் காட்டும் போதும் சரி... தொழிலாளர்களிடையே சுமூகமாக அதே சமயம் கண்டிப்பாக நடந்து கொள்ளும் விதத்திலும் சரி!

அத்தனை பரிமாணங்களிலும் ஒவ்வொரு காட்சியிலும் வைடூரியம் போல் ஜொலிக்கிறார் நடிகர் திலகம்.

ஊட்டியில் அவர் வயிற்றுப் பிழைப்புக்காக கூலி வேலைகள் செய்வதும், அதில் கூட சரியாகக் கூலி கொடுக்கப்படாமல் ஏமாற்றப்பட்டு அவர் புலம்புவதும் பரிதாபம்.

வேலை கேட்டு செல்லும் போது ஆபீஸில் முதலாளி இவரை வேண்டுமென்றே பொறுமைசாலிதானா என்று சோதிக்க வெளியே அமரச் செய்து நாள் முழுக்க காக்க வைக்க, கல்லுளி மங்கன் மாதிரி விடாப்பிடியாக அடுத்தநாள் கூட சேரில் அமர்ந்திருந்து வேலையைப் பெறுவது இந்த ஆள் சாதாரண மனிதர் அல்ல... இவர் உறுதியான தன்னம்பிக்கையால் எதையும் சாதிக்கவல்ல ஹிட்லர் என்பதை ஆரம்பத்திலேயே அழுத்தமாக நமக்கு புரிய வைத்து விடுகிறது.

தினக்கூலியாக, பியூனாக, ஹெட் பியூனாக, அசிஸ்டன்ட் மேனஜராக, ஒர்க் மேனஜராக, மேனஜிங் டைரக்டராக, கம்பெனியின் சேர்மேனாக ஹிட்லர் படிப்படியாக உழைப்பாலும், அறிவாலும், திறமையாலும் முன்னேறுவது நடிகர் திலகத்தின் அனுபவ முத்திரைகள் மூலம் கன்டின்யூட்டி கெடாமல் கலக்கலாக காட்டப்பட்டு இருக்கிறது.



தன் மனைவியை சில காலிப்பயல்கள் வம்புக்கிழுத்து கையைப் பிடித்து இழுக்க, அப்பாவி ஹிட்லராக எதுவும் செய்ய இயலாதவராய் 'வேண்டாண்ணா விட்டுடுங்கண்ணா'... என்று கெஞ்சும் போதும், ரோட்டில் போகும் யாரோ ஒரு நல்லவர் இவர் மனைவியைக் காலிப் பயல்களிடமிருந்து காப்பாற்றி 'மனைவியைக் காப்பாற்ற முடியாத நீயெல்லாம் ஒரு மனுஷனா?' என்று மானத்தை வாங்க, கைகளைப் பிசைந்தபடி ஒன்றும் பேச முடியாதவராய் வெட்கித் தலை குனிவதும், பின் இவருடைய கையாலாகாத தனத்தை எண்ணி வீட்டில் மனம் குமுறி மனைவி கொட்டித் தீர்த்தவுடன் தாங்க மாட்டாமல் தன் இயலாமையை நினைத்து, மண்ணெண்ணையை தன் மேலே ஊற்றி கொள்ளிக் கட்டையால் தன்னை எரித்துக் கொள்ள முற்படும்போதும் பரிதாப அலைகளில் நம்மை மூழ்கடித்து விடுகிறார் இந்த நடிப்புக் கடல்.

அதே சமயம் மனைவியின் அறிவுரையினால் வெகுண்டெழுந்து, அதே காலிகளை மொத்தோ மொத்தென்று மொத்தி துவம்சம் செய்து, மனைவியையும் விளக்குமாறால் விட்டு அவர்களை சாத்தச் சொல்வது வீரமான விவேகம்.

முதலாளியின் மனதை தன் அறிவால் கொஞ்சம் கொஞ்சமாக கவர் செய்து அவர் மனதில் மட்டுமல்ல நம் மனதிலும் சிம்மாசனமிட்டு அமர்ந்து விடுவார். முதலாளியின் உதவியாளர் முதலாளிக்குத் தெரியாமல் வெளியே போய்விட, உள்ளே போர்டு மீட்டிங் நடக்கும் போது சேர்மன் சில பைல்களை மேனேஜரை எடுத்து வரச் சொல்ல, மேனேஜர் இல்லாததால் இவர் மனைவி சொல்லித்தந்தபடி பைல்களை நம்பர் போட்டு மனப்பாடம் செய்து அதன்படி கொண்டு சென்று கொடுப்பது அருமை! பின் மீட்டிங் முடிந்து வரும் முதலாளி மானேஜருக்குப் பதிலாக ஹிட்லர்தான் பைலைக் கொண்டு வந்தார் என்று கண்டு பிடித்துவிட "எல்லாமே என் சம்சாரம் லட்சுமிதாங்க சொல்லிக் கொடுத்துச்சி" என்று முதலாளி திட்டுவாரோ என்னவோ என்று பயந்து அழுகையின் நுனிக்கு வருவது இன்னும் அருமை.

டைம் கிடைக்கும் போதெல்லாம் மனைவி விஜயாவிடம் "நான் free" என்று அசடு வழியச் சொல்லி விட்டு படுக்கையறைக்குள் நுழைவது "இதுவா அப்பாவி.... காரிய அப்பாவி" என்று நம்மை நினைக்க வைக்கும்.

ஹெட் பியூனாக இருந்தவர் திடீரென்று ஒரு நாள் அசிஸ்டன்ட் மேனேஜர் சத்யராஜின் சீட்டில் அமர்ந்து கொள்ள, ஆபீஸ் ஊழியர்கள் அனைவரும் இவரை லூஸ் என்று திட்டி எழுந்திருக்க சொல்ல, ஒரு வார்த்தைக் கூடப் பேசாமல் அமர்ந்திருக்கும் பிடிவாதத்தனம் அமர்க்களம். பின் முதலாளி வந்து 'இனி உமாநாத்தான் அசிஸ்டன்ட் மேனேஜர்' என்று அனைவரிடமும் ஊர்ஜிதப்படுத்தி சென்றவுடன் முதலாளி இவருக்கு தரும் சலுகைகளை பொறுக்கமாட்டாமல் ஆபீஸ் சிப்பந்திகள் 'முதலாளி ஒழிக' என்று கோஷம் போட, அதுவரை பொறுமையாய் இருந்தவர் அவர்களிடம் சீறுவாறே பார்க்கலாம் ஒரு சீறு.

("மரியாதையா எல்லாரும் போய் உங்க சீட்ல உக்காருங்க... சலசலப்பு கேட்டுச்சு அறுத்துருவேன் எல்லாரையும். இது அசிஸ்டன்ட் மேனேஜர் உமாநாத் உத்தரவு. கோ டு யுவர் சீட்")

தன்னை என்னென்னவோ சொல்லி சீண்டும் அந்தக் கூட்டத்தின் மீது அதுவரை கோபப்படாமல் பொறுமையாக இருந்தவர் 'முதலாளி ஒழிக' கோஷம் கேட்டவுடன் சண்டமாருதமாய் பொங்கி எழுவது அவருடைய முதலாளி பக்தியை அழகாக வெளிப்படுத்தும். அதே சமயம் தான் ஒரு அதிகாரி. தனக்குக் கீழ் உள்ளவர்கள் தன் சொல்லுக்குக் கட்டுப்படவேண்டும் என்ற அதிகாரமும் கொடிகட்டும்.

ஒரு சமயம் பைல்களை இவர் அசிஸ்டன்ட் மேனஜராகப் பார்க்கும் போது 'நம்மோடு வேலை செய்த பியூன்தானே' என்று சுருளிராஜன் அலட்சியமாய் பைலை மேசையில் திமிராகப் போட, ஒன்றும் பேசாமல் கைகளை சொடுக்கி, பார்வையாலேயே சுருளியை மிரட்டி, மீண்டும் பைலை எடுக்க வைத்து மரியாதையாக தரச் செய்வது கம்பீரமான மௌன அதிகாரம்.

பின் வயதானவுடன் இன்னும் கம்பீரம் மெருகேறியிருக்கும். சேர்மன் அல்லவா! உடைகள் பிரமாதப் படுத்தும்.

மகளை, மனைவியைக் கவனியாமல் கம்பெனி, ஆபீஸ், வெளிநாடு, மீட்டிங் என்று ஓடிக் கொண்டே இருப்பவர் ஒரு முறை ஜாகிங் செய்தபடி ஓடிக் கொண்டே இருக்க, அவருடைய அசிஸ்டன்ட் அன்றைய புரோக்ராம்களை ஓடியபடியே இவரிடம் சொல்லிக் கொண்டு பின்னாலேயே ஓடி வர, கணவனைக் காண்பதற்குக் கூட பெர்மிஷன் கேட்டு காத்திருக்கும் மனைவி விஜயா தற்செயலாக அங்கு வந்து விட மனைவியிடம், "லட்சுமி! ஓடி ஓடி சம்பாதிக்கணும்னு சொல்லுவியே! இப்ப நான் சம்பாதிச்சிகிட்டே ஓடறேன்." என்று நின்றபடி ஜாகிங்கிலேயே லேசான புன்னகையுடன் சொல்வது கொள்ளை அழகு!

படம் முழுவதும் ஹிட்லராக நடிகர் திலகம் புகுந்து விளையாடி இருந்தாலும்,படத்தின் உயிர்நாடியான, மிக முக்கியமான முத்தாய்ப்பான, மூன்று காட்சிகளில் நம் நாடி நரம்புகளை அவர் தன் துடிப்பான நடிப்பால் துடிக்க வைக்கும் அதிசயங்களைப் பற்றி கூறப் போகிறேன்.

முதலாவது (மகளை கண்டிக்கும் காட்சி)



குடும்பத்தைக் கவனிக்க நேரமில்லாமல் முழுநேர ஆபீஸ் வேலைகளிலேயே மூழ்கியிருப்பவர் ஒரு சமயம் விமானம் மூன்று மணி நேரம் லேட் என்று வீட்டுக்கு வந்து விடுவார். (அதுவரை மனைவியான கே.ஆர்.விஜயா இவர் குடும்பத்தை சரிவர கவனிப்பதில்லை என்று பல தடவை இவரிடம் மனக்குறை பட்டுக் கொண்டிருப்பார்.) இரவு நேரம் ஆகியிருக்கும். மகள் யாரோ ஒருவருடன் காலேஜில் இருந்து லேட்டாக காரில் வந்து இறங்குவதை கவனித்து விடுவார். 'இதையெல்லாம் கண்டிக்கிறதில்லையா?' (அவ்வளவு அழகாக இந்த வார்த்தையை உச்சரிப்பார்) என்று மனைவியைக் கடிந்து கொள்வார். பெண் மாடிக்கு வந்ததும் 'ஏன் லேட்? என்று கண்டிப்புடன் கேட்க, அதற்கு மகள் அலட்சியமாய் பதில் சொல்லி இவரை அவமானப்படுத்திவிட, மகளை கோபத்தில் ஒரு அறை அறைந்தும் விடுவார். அப்பா அடித்ததைத் தாங்க மாட்டாமல் மகள் ரூமிற்கு சென்று தூக்க மாத்திரைகளை விழுங்க முயற்சிக்க, விஜயா ஓடோடி சென்று அதைத் தடுத்து இவருக்குக் குரல் கொடுத்து அலற, அப்படியே நிலை குலைந்து ஒடிந்து போவார் நடிகர் திலகம். படுக்கையில் விழுந்தபடி மகள் அழுது கொண்டிருக்க, அதே படுக்கையில் மண்டியிட்டபடியே மகளிடம் வந்து,"பாப்பா! அப்பா மேலே உனக்கு அவ்வளவு ஆத்திரமா?" என்று வெதும்பியபடியே கேட்பார். உடனே கே.ஆர்.விஜயா 'எனக்குன்னு ஒட்டிகிட்டு இருக்கிறது இது ஒண்ணுதான்... உங்க கோபம் கண்டிப்பு இதையெல்லாம் உங்க பேக்டிரியோட நிறுத்திக்கோங்க... என் மகளைக் கொன்னுடாதீங்க'... என்று கத்துவார்.

உடனே விஜயா அருகில் வந்து அதிர்ந்து "லட்சுமி! நீயுமா? (என்னைப் புரிஞ்சுக்கல?!) என்று மட்டும் உதடுகள் மனசு இரண்டும் துடிக்க கைகளால் நெஞ்சைத் தொட்டு பரிதாபமாகக் கேட்பார். அப்படியே மீண்டும் மகளிடம் வருவார். "பாப்பா! தூக்க மாத்திரையை சாப்பிட்டு அப்பாவை பழி வாங்கப் பார்க்குறியா? நான் என்ன பாப்பா கேட்டுட்டேன்?... பெத்த அப்பன் இல்லையா? ( குரல் அதிகமாக உடைய ஆரம்பிக்கும்) ஒரு வார்த்தை கண்டிக்கக் கூடாதா? ஒரு அடி அடிக்கக் கூடாதா உன்னை" என்று அழுகையும், ஆத்திரமுமாய் பொங்க ஆரம்பிப்பார்.

"நான் என்னவோ நினச்சுகிட்டு ஓடிக்கிட்டே இருக்கேன்...ஓடிக்கிட்டே இருக்கேன்....(இரண்டு முறை சொல்லுவார்) எங்க ரெண்டு பேருக்கும் இருக்கிறது நீ ஒருத்திதானே பாப்பா! நீயும்...( 'போயிட்டீனா' என்பதை சொல்லாமல் கைகளால் அம்சமாகக் காண்பிப்பார். "நான் எதுக்கு இருக்கணும்?"... இதையும் சொல்லாமல் கைகள் மட்டுமே முத்திரைகள் பதிக்கும்.) பாதிப் பாதி வார்த்தைகள் மட்டுமே உச்சரித்து மீதியை சொல்லாமல் கைகளை சைகைகளாலேயே சரித்திரம் படைக்க வைப்பார்.) உடம்பெல்லாம் மகள் எடுத்த தற்கொலை முடிவைக் கண்டு பதறிய நிலையிலேயே இருக்கும்.

மகளிடம் 'இது போல செய்ய மாட்டேன்' என்று சத்தியம் செய்து தருமாறு அழுதபடியே கேட்பார். "பாப்பா! அப்பா பாப்பா! அப்பாடா!"என்று அவர் தன் தந்தை ஸ்தானத்தை, உரிமையை மகளுக்கு அன்பால் உணர்த்தி (அப்பா பாவமில்லையா?) கெஞ்சி அழுவதைப் பார்க்கும் போது நெஞ்சு விம்மி கண்ணீர் விடாதவர்களே இருக்க முடியாது. ரெண்டு படுத்தி விடுவார் இந்தக் காட்சியில். (மகளாக நடிக்கும் சாதனாவும் 'அப்பா வேதனைப்படுகிறார்... தப்பு செய்து விட்டோமே' என்று தவறை உணர்ந்து கவிழ்ந்து படுத்தபடியே நடிகர் திலகத்திடம் சத்தியம் செய்து கொடுத்து பின் 'அப்பா' என்று அழுதபடியே அணைத்துக் கொள்வது நம் நெஞ்சை என்னவோ செய்யும் காட்சி).

ஒரு தந்தையின் கண்டிப்பு, கோபம், மகள் சாகத் துணிந்தவுடன் அப்படியே அந்தக் கோபம் மாறி ஏற்படும் பயம், படபடப்பு, தந்தை என்ற உரிமை கூட தனக்கு இல்லையே என்ற தவிப்பு , 'இனி கண்டிப்பதால் புண்ணியமில்லை... இனி உன்னை ஒன்றும் கேட்க மாட்டேன்... கேட்பதற்கு நான் யார்?' என்ற விரக்தி, வேதனை, இனி தற்கொலைக்கு முயலக் கூடாது என்று மகளிடம் கெஞ்சல், பதற்றம், நான் உனக்கு அப்பா இல்லையா என்ற பந்ததத்தை உணர்த்தும் உரிமை, இருக்கிற ஒரு மகளும் போய் விட்டால் என்ன செய்வது? என்ற பெரும் அச்சம், மனைவி கூட புரிந்து கொள்ளாமல் பேசுகிறாளே என்ற வருத்தம் அத்தனையையும் ஒரே நிமிடத்தில் நம் மனதில் ஆழமாகப் புதைத்து அழ வைக்க இந்த மனிதரை விட்டால் வேறு யாராவது பிறந்திருக்கிறார்களா காட்டி விடுங்கள் பார்ப்போம்.

இரண்டாவது (மகளின் திருமணத்தை எண்ணி மனைவியிடம் குமுறும் காட்சி)



மகள் கோவிலில் தன் இஷ்டத்திற்கு திருமணம் செய்து கொள்ள முடிவெடுக்க, அதைத் தெரிவிக்க விஜயா இவரிடம் பலமுறை முயல, மனைவி செய்யும் போனுக்குக் கூட பதில் சொல்ல முடியாத பிஸியில் கப்பல் வாங்கும் வேலையில் மும்முரமாக இருக்க, இவர் இல்லாத சூழ்நிலையில் கே.ஆர்.விஜயா மகளின் கல்யாணத்தை முடித்து விட, கடைசியாக செய்தி கேள்விப்பட்டு நடிகர் திலகம் கோவிலுக்கு ஓட, அங்கு எல்லாம் முடிந்து போய் யாருமில்லாமல் இருக்க, இடிந்து போய் வீடு வந்து உட்கார்ந்திருப்பார். கே.ஆர்.விஜயா மகளின் கல்யாணம் முடித்து விட்டு வருவார். அப்போது விஜயாவிடம் தன் மனக்குமுறலைக் கொட்டுமிடம் இருக்கிறதே....

நடிகர் திலகம் அமைதியாக ஆரம்பிப்பார். (கல்யாணமெல்லாம் நல்ல படியா முடிஞ்சுதா?)

விஜயா நடுங்கிக் கொண்டே "நீங்க இல்லைங்கிற குறைதான்"...

அதற்கு இவர் "குறையா!? பெருமையா இல்ல! (மகளின் திருமண விஷயத்தில் மகளுடன் சேர்ந்து மனைவி கூடதன்னை ஏமாற்றி விட்டாளே என்ற ஆதங்கம், குறை, அவமானம் அவ்வளவும் முகத்தில் பிடுங்கித் தின்னும்)

"கல்யாணத்துக்கு வந்தவங்களெல்லாம் கேட்டிருப்பாங்களே! இந்தப் பொண்ணோட அப்பன் எங்கேன்னு? நீ என்ன சொன்னே? பொண்ணப் பெத்த அப்பன் செத்துப் போயிட்டான்னு சொன்னியா? இல்ல வீட்டை விட்டே ஓடிட்டான்னு சொன்னியா?" (குரல் கம்மிக்கொண்டே வரும்)

அடுத்த நிமிடமே குரல் அப்படியே கர்ஜனையாய் மாறும்.

"நான் ஏண்டி ஓடறேன்!"?

மறுபடி குரல் பல பாகங்களாக உடைந்து சிதறும்.

"என் பொண்டாட்டி நல்லா இருக்கணும்கிறதுக்காக... என் பொண்ணு நல்லா இருக்கணும்கிறதுக்காக நான் பட்ட கஷ்டம் என் குடும்பம் படக் கூடாதுங்கிறதுக்காக ராத்திரி பகலா ஓட்றேன்... நாய் மாதிரி... நாய் மாதிரி... ராத்திரி பகலா ஓட்றேன்... உனக்கே... உனக்கே தெரியும்''.

(உடலில் எந்த அசைவையும் காட்ட மாட்டார். அழுகை கொப்பளிக்கும். முகத்தில் மட்டுமே வசனங்களுக்கேற்ற பாவங்கள் பாவமாய் பரவும். இதுவரை பட்ட வேதனைகளை நினைவு கூர்ந்து இவர் அழுது கதறும் போது கல் மனங்களெல்லாம் கரையத் துவங்கும். பரிதாபங்களை அப்படியே அள்ளிக் கொள்வார்.)

தொடர்வதைப் பாருங்கள்....

"அது இருக்கட்டும்....பெத்த அப்பன் வர்றதுக்குள்ள அவ கழுத்துல தாலி கட்ட வச்சியே! அவ்வளவு என்னடி அவசரம் உனக்கு? (கொஞ்சம் நிறுத்தி திரும்ப சொல்லுவார்) அவ்வளவு என்னடியம்மா அவசரம்னு கேக்குறேன்?"

அடடா! திலகமே! அந்த கேட்கும் தொனி இருக்கிறதே! இரண்டாவது முறை "அவ்வளவு என்னடியம்மா அவசரம்னு கேக்குறேன்?" என்னும் போது லேசாக வார்த்தைகளை இழுத்தபடி, கை விரல்களை மூடி முன்பின் ஆட்டியவாறு கேள்வி கேட்கும் பாணி, அந்தத் தொனி இருக்கிறதே! விண்ணை எல்லாம் பிளந்த அதிசயம். எவராலும் ஈடு செய்ய முடியாத அதிசயம்.

அழுத ரகளை முடிந்த பின் பாய்வார் பாருங்கள் மனைவி மீது. அழுகை ஆத்திரமாகவும்,கோபமாகவும் சட்டென்று மாறிப் போகும்.

"என்னைவிட நீ பெரிய அறிவாளி! என்னை விட மேதை! (முடிந்தவுடன் 'ஆங்' என்று அற்புதமாக ஒரு நக்கல் ராகம் போடுவார். கை விரல்கள் அப்படியே நர்த்தனம் புரியும்.)

ஆள்காட்டி விரலை நீட்டி ஆட்டியபடி மனைவியிடம் கூறுவார்.

"உனக்கு superiority complex டி...(இவரை விட மனைவி அதிகம் படித்தவளல்லவா!) அதனால்தான் சமயம் கிடைக்கும் போதெல்லாம் என்னை கேவலப்படுத்தினே! (ஆணித்தரமாக திரும்பவும் கூறுவார்). சமயம் கிடைக்கும் போதெல்லாம் நிச்சயமா நிச்சயமா நீ என்னை கேவலப்படுத்தியிருக்கே!"

(குரல் மாடுலேஷனில் ஜெகஜால ஜாலங்கள் அற்புதமாக நடக்கும். குரல் உள்ளே போய் போய் உடைந்து உடைந்து திரும்ப வெளியே வரும். உணர்ச்சிகள் பொங்க உதடுகள் துடிக்கும். கேவலப்பட்டதாக உள்ளம் குமுறும். தெய்வ மகனில் தகப்பனும் மகனும் கையை நீட்டி டாக்டரிடம் ஆட்காட்டி விரலால் மூன்று முறை உதறுவார்களே! அதைப் போல அல்லாமல் வேறு மாதிரி பாணியில் 'நிச்சயமா நிச்சயமா' என்ற வார்த்தைகளின் போது ஆட்காட்டி விரல் அசைவுகளை அற்புதமாகக் காண்பித்து அக்கிரமம் புரிவார்)

"எம் பொண்ணு இன்னும் கொஞ்ச நாள்ல விதவையா வந்து நிக்கப் போறாடி.... அந்தப் பய வயித்துல கட்டிடி" என்று தலையில் இரு கைகளையும் மாறி மாறி வைத்துக் கொண்டும், பின்பு அடித்துக் கொண்டும் அழும் அழுகை வெகு வித்தியாசம்.

மூன்றாவது (தொழிலாளர்களிடம் உரையாடும் இறுதிக் காட்சி)



கிளைமாக்ஸில் தொழிலாளிகள் நடிகர் திலகத்தின் வீட்டை முற்றுகையிட்டு கப்பல் வாங்கி மூழ்கிப் போனதால் கம்பெனி மூடப் போவதாக நம்பி அவரைத் தாக்க வரும் போது அவர்களிடம் உரையாடும் கட்டம்.

இதில் என்ன விசேஷம் என்றால் ஒரிஜினல் ஹிட்லரின் மானரிசங்கள் சிலவற்றை அற்புதமாகப் பிரதிபலிப்பார். நீள் கோட்டுடன் கையை கோட்டின் உள்ளே மார்புப் பகுதியில் விட்டிருப்பது, கையை நீட்டியபடி பேசும் அற்புத ஹிட்லரின் போஸ், (பி.என். சுந்தரம் அனுபவித்து தூள் பரத்தியிருப்பார்) "யாரைக் கேட்டு கப்பல் வாங்கினே?" என்ற ஒரு தொழிலாளியின் கேள்விக்கு "யாரைக் கேட்டு கப்பல் வாங்கணும்?" என்று குதித்து குதித்து நடக்கும் ஹிட்லரின் ஸ்டைல், சமயத்தில் பின் பக்கம் கட்டியபடி கைகளை ஆட்டும் அற்புதம், இரு கைகளை ஒன்றன் மேல் ஒன்று வைத்தபடி வயிற்றுப் பகுதியில் சேர்த்து வைத்திருக்கும் போஸ் என்று ஏக ரகளைகளை படு கம்பீரமாக செய்வார்.

இன்னும் எவ்வளவோ!

இந்தக் கேரக்டரை நடிகர் திலகம் கையாண்டிருக்கும் பாங்கு வியப்புக்குரியது. பொதுவாகவே ஹிட்லர் மீசை என்பது நகைச்சுவைக்காகத்தான் தமிழ் சினிமாவிலும், ஏன் மற்ற மொழிப் படங்களிலும் பயன்படுத்தப் பட்டிருக்கிறது. நாகேஷ், ஏ.வீரப்பன், தேங்காய் சீனிவாசன், விகே.ஆர் போன்ற காமெடி நடிகர்கள் ஹிட்லர் போல மேசை வைத்துக் கொண்டு நகைச்சுவைக் காட்சிகளை செய்வார்கள். பார்த்தவுடன் சிரிப்பைத்தான் வரவழைக்கும் ஹிட்லர் மீசை.

ஆனால் நடிக தெய்வத்திற்கு மட்டும் அந்த மீசை படு கம்பீரமாக அமர்ந்து பொருந்துகிறதே! கொஞ்சம் ஏமாந்தாலும் கேலிக் கூத்தாகிவிடும் மேக்-அப். கொஞ்சம் கூட பயமில்லாமல் உன்னத நடிக மேதை என்ற மமதைகள் சிறிதும் இல்லாமல் அதுவும் ஆரம்பக் காட்சிகளில் அனைவராலும் கேவலமாக இழிவு படுத்தப்படும் பாத்திரமாக இருந்தும் அந்தப் பாத்திரத்தின் தன்மை புரிந்து அதை தன் அற்புதமான பங்களிப்பால் மெருகேற்றி நகைச்சுவை வருவதற்குப் பதிலாக அந்த கேரக்டரின் மேல் ஒரு பரிதாபத்தை ஏற்படுத்தி, பின் ஒரு நன்மதிப்பையும் ஏற்படுத்தி, தகரத் தகட்டை தங்கமாக்கிக் காட்ட உலகிலே இவர் ஒருவர் தானே! ஆரம்பம் முதல் இறுதி வரை இந்த கேரக்டரை அதன் தன்மை சிறிதும் குறையாமல், படிப்படியாக காட்சித் தொடர்பு கொஞ்சமும் கெடாமல் அவ்வளவு அற்புதமாக கையாண்டிருப்பார்.

அடால்ப் ஹிட்லருக்கும் இந்த உமாநாத்துக்கும் கொஞ்சமும் குணத்தில் சம்பந்தமில்லை. அந்த ஹிட்லர் யூதர்களை இரக்கமில்லாமல் கொன்று குவித்தவன். நம் ஹிட்லரோ நாதியற்ற தொழிலாளிகளுக்கு வாழ்வு கொடுப்பவர். அந்த ஹிட்லர் அசகாய வீரனாக உருவெடுத்து கோழையாக தற்கொலை புரிந்து மாண்டான். நம் ஹிட்லரோ கோழையாக வாழ்வைத் துவங்கி வீரனாகவே இறுதி வரை கம்பீரமாக வாழ்ந்தவர். அந்த ஹிட்லர் தோல்வியால் துவண்டு தற்கொலை முடிவை எடுத்த ஒரு கோழை என்று நம் ஹிட்லர் அந்தக் கோழையின் புகைப்படத்தை துப்பாக்கியால் சுட்டுத் தள்ளிவிட்டு வரும்போதே அவனைவிட உமாநாத் எல்லா வகையிலும் உயர்ந்த, பிரச்னைகளை face செய்யக் கூடிய தைரியசாலி என்று புரிந்து விடும்.

இந்த அற்புதமான ரோலில் வேறு எந்த ஒரு பயலையும் கற்பனை செய்து கூடப் பார்க்க முடியாது.

அது நம் நடிப்பின் இறைவனால் மட்டுமே முடிந்த ஒன்று.

JamesFague
30th November 2014, 10:25 AM
பாகம் 3

படத்தின் இதர பங்களிப்பாளர்கள்



மனைவியாக கே.ஆர்.விஜயா வழக்கம் போல பொருத்தமாகவே செய்திருக்கிறார். காலிப் பயல்கள் தன் கையைப் பிடித்து இழுத்து கலாட்டா செய்தும் தன் கணவன் தன்னைக் காப்பாற்ற முயற்சி செய்யவில்லையே என்ற காட்சியில் ஜொலிக்கிறார். கணவன் ஆபீஸ், கம்பெனி என்றே அலையும் போது கணவனின் அன்புக்காக ஏங்குவது யதார்த்தம். உறுத்தாத அளவான நடிப்பு.

மகளாக சரோஜா என்ற புதுமுகம் அறிமுகம். பின்னால் இவர் (சாதனா என்று தன் பெயர் மாற்றிக் கொண்டார்) சிங்கத்துடன் சேர்ந்த சிறு முயல் இவர். தற்கொலைக் காட்சியில் திலகத்திடம் சத்தியம் செய்து கொடுக்கும் காட்சியில் அருமையாக செய்திருப்பார். மருமகன் மற்றும் ஜாபரியின் மகனாக 'கல்தூண் 'சதீஷ். நாடக பாணி மாறவில்லை. சொல்வதற்கு ஒன்றுமில்லை. பின்னாளில் கொடி நாட்டிய சத்யராஜ் ஆரம்ப காலங்களில் துண்டு துக்கடா வேடங்களில் நடித்த போது வந்த படம். அசிஸ்டன்ட் மேனேஜர் என்ற உப்பு சப்பில்லாத வில்லன் பாத்திரம் இவருக்கு. டப்பிங் வாய்ஸ் வேறு. சோபிக்கவில்லை. பார்க்கும் போது பரிதாபமே மிஞ்சுகிறது.

சேர்மேன் ஜாபாரியாக வரும் என்.எஸ். ராம்ஜி அருமையாகப் பண்ணியிருக்கிறார். பாந்தமான பாத்திரம். (இவ்வளவு நல்ல நடிகரை வேறு எங்கும் அதிகமாகப் பார்த்ததில்லையே! 'கீழ்வானம் சிவக்கும்' படத்தில் ஒரு காட்சியில் வருவார். இவருக்கெல்லாம் நல்ல சான்ஸ் கொடுத்திருக்கலாமே!) மற்றும் எஸ்.ராமாராவ்,பீலி சிவம், கௌரவ வேடத்தில் டாக்டராக மேஜர் சுந்தர்ராஜன், வி.எஸ்.ராகவன், 'காத்தாடி' ராமமூர்த்தி ஆகியோரும் உண்டு. (மாதவன் படத்தில் காத்தாடி இல்லாமலா! நண்பேன்டா!)

இசை எம்.எஸ்.விஸ்வநாதன். பார்மிலிருந்து நழுவுக் கொண்டிருக்கும் வேளையில் வந்த படம். சொல்லிக் கொள்ளும்படி ஒன்றுமில்லை. சுசீலாவின் 'நம்பிக்கையே மனிதனது சாதனம் மட்டுமே சற்று நம்பிக்கை. வாணி ஜெயராம் குரலில் ஒலிக்கும் 'சிலை வண்ணம் யாரோ!' சுமார் ராகமே! 'பாரத விலாஸி'ல் வருவது போல மனசாட்சியுடன் நடிகர் திலகம் பாடும் பாடல் (சார்! உங்களைத்தான் சார்!) ஒன்று உண்டு. அது சக்கை போடு போட்ட பாடல். இது?!!!....

ஒளிப்பதிவு மாதவனின் மனம் கவர்ந்த பி.என்.சுந்தரம். அருமை. ஹிட்லராக சில புதிய கோணங்களில் நடிகர் திலகத்தைக் காட்டியிருப்பார்.

கதை 'தங்கப்பதக்கம்'மகேந்திரன். அப்பாவி ஒருவன் தன் கடினமான உழைப்பால் உயர்ந்து வாழ்க்கையில் சாதித்துக் காட்டிய கதை. மௌலி நல்ல வசனங்களைத் தந்து திரைக்கதை அமைத்திருப்பார். ("ஒரு பூனையை பத்தடி துரத்தினா அது திருப்பிகிட்டு துரத்தினவன் மேலே பாயும். கேவலம் ஒரு சிட்டுக் குருவி கூட மனுஷன் கையிலே
பிடி பட்டுட்டா அவன் கையைப் கொத்திட்டு அது பறக்கப் பார்க்கும்") மௌலியின் பங்கு மகத்தானது.

தயாரிப்பு பி.வி.தொளசிராமன். (PVT Productions) சேலத்தை சேர்ந்தவர்.

இயக்கம் என் மனம் கவர்ந்த மாதவன்.நேர்த்தியான இயக்கம். இருந்தாலும் இவருடைய அனுபவத்திற்கு இன்னும் சிரத்தை எடுத்திருக்கலாம். நடிகர் திலகத்தின் பிரமாதமான ஒத்துழைப்பு இருந்தும் சில காட்சிகளில் போதிய அழுத்தம் இல்லை. நடிகர் திலகத்தின் பங்களிப்பு மட்டுமே போதும் என்பது போல அலட்சியம் சில காட்சிகளில் தெரிகிறது. மாதவன் டயர்ட் ஆனதும் தெரிகிறது. ரிடையர்ட் ஆகப் போகும் நிலைமையும் புரிகிறது. ஆனால் குறை சொல்வதற்கு இல்லை. (அனுபவமும் பேசுகிறது) வழக்கம் போல நடிகர் திலகத்தை வாட்டி வதைத்திருப்பார். இன்னும் கொஞ்சம் மனது வைத்திருந்தால் மிக மிக ஆழமாக ஹிட்லரை இவர் நம் நெஞ்சில் புதைத்திருக்க முடியும்.

இன்னொன்று. 80க்கு மேல் வந்த பல நடிகர் திலகத்தின் படங்களில் சிக்கனமே கையாளப்பட்டது. (பாலாஜி போன்ற ஒரு சிலர் தவிர. அவர் கூட செலவை வெகுவாக சுருக்கிக் கொண்டார்). நடிகர் திலகத்துடன் பல இளம்தலைமுறை நடிகர்கள் சேர்ந்து பங்கு பெற்றனர். சந்தோஷமான விஷயம்தான். ஆனால் பாலையா, எம்.ஆர்.ராதா, சுப்பையா, ரங்காராவ், சாவித்திரி, பானுமதி போன்ற ஜாம்பாவன்களுடன் நடிகர் திலகம் போட்டியிட்டு நடித்ததால் பல படங்கள் வெற்றியடைந்தன. நடிகர் திலகத்தின் மாபெரும் திறமையையும் அகிலம் உணர்ந்தது. ஆனால் பின்னாட்களில் அப்படிப்பட்ட ஜாம்பவான்கள் நடிகர் திலகத்துடன் இல்லாதது ஒரு பெரியகுறையே! அதிகம் பரிச்சயம் இல்லாத பெயரே தெரியாத அனுபவம் இல்லாத இளம் நடிக நடிகைகள், முன் மாதிரி மனதில் பதியாத இசை, சிக்கன செலவு, எல்லாவற்றுக்கும் மேல் நடிகர் திலகத்தின் புற்றீசல் போன்ற புதிய படங்களின் வெளியீடுகளால் நம் படங்களே நமக்குப் போட்டியான சோதனை என்று பல வேதனைகள் வாட்டியெடுத்த நிலையில் இது போன்ற நல்ல படங்கள் அடிபட்டுப் போனது துரதிருஷ்டமே!

ரஜினி நடித்து நல்ல வெற்றி பெற்ற 'நல்லவனுக்கு நல்லவன்' (22 October 1984) படம் நமது ஹிட்லர் உமாநாத்தை அப்படியே தழுவி இருக்கும். அதுவும் இடைவேளைக்கு பிறகு அப்படியே அட்டை காப்பி. நல்ல செலவு செய்து, மசாலாவை வெகுவாக தடவி, ஏவி எம் நிறுவனம் இளையராஜாவின் இசையில் (பாடல்கள் சூப்பர் ஹிட்) இப்படத்தைத் தயாரித்து விளம்பரங்களை விவரமாக அளித்து 1984 தீபாவளிக்கு வெளியிட்டு நல்ல காசு பார்த்தது.

JamesFague
30th November 2014, 10:25 AM
பாகம் 4

புகழ் பெற்ற சுருளிராஜன் வில்லுப்பாட்டு



காமெடிக்கு சுருளிராஜன். ('மறைந்த கலைஞர்' என்று டைட்டில் போடுவார்கள்). படம் வரும் போது அவர் உயிருடன் இல்லை. படத்தில் இவர் பாடும் வில்லுப்பாட்டு மிக பிரசித்தம். இன்றளவில் கூட அந்த நடிகர் திலகம் புகழ் பாடும் வில்லுப்பாட்டை பலர் ரசிப்பதை நான் பார்த்திருக்கிறேன். (வில்லுப்பாட்டு எழுதி அமைத்தவர் திரு.சுப்பு ஆறுமுகம் அவர்கள்). மேலும் இலங்கை வானொலியில் அந்த நாட்களில் இந்த வில்லுப்பாட்டை ஒருநாள்கூட ஒளிபரப்பாமல் இருக்கவே மாட்டார்கள். கோவில் விசேஷங்களிலும், கல்யாண வைபவங்கள், இதர விசேஷங்களிலும் நான் இந்த வில்லுப் பாட்டை பலமுறை கேட்டதுண்டு.

வில்லுப்பாட்டு பற்றி சில வரிகள்.

தன் முதலாளி உமாநாத்தைக் காக்கா பிடிக்க சுருளிராஜன் உமாநாத்தின் புகழை வில்லடித்துப் பாடுவது போல காட்சி அமைப்பு. ஆனால் உண்மை அர்த்தம் என்ன தெரியுமா? நடிகர் திலகத்தின் புகழ்தான் இந்த வில்லுப் பாட்டில் பாடப்படும் ஹிட்லர் உமாநாத்தின் பெயரை சாக்காக வைத்துக் கொண்டு.

நம் ரசிகர்கள்கொண்டாடி மகிழும் வில்லுப்பாட்டு இது. நடிகர் திலகம் வாழ்க்கையில் கஷ்டப்பட்டு உயர்ந்ததை ஹிட்லர் உமாநாத் வாழ்க்கையில் கஷ்டப்பட்டு உயர்ந்ததோடு ஒப்பிட்டு இப்பாடலை வடிவமைத்திருப்பார்கள் சுருளியின் இடையிடை காமெடி பஞ்ச்களோடு (அண்ணே! புல்லரிக்குதுண்ணே!... போர்வையிருந்தா போர்த்திக்கோடா... கன்னுக் குட்டி மேஞ்சிடப் போகுது!) சேர்த்து. இதில் சில வரிகளை தருகிறேன். கவனியுங்கள்.

சுருளி கடவுளை வேண்டி துவக்கி வில்லடித்துக் கொண்டே பாடும் ஆரம்ப வரிகள்.



பூப்பறிச்சு மாலை கட்டி... (ஆமடி தங்கம்)
பூசை பண்ணி வந்திருக்கேன்... (ஆமாஞ் சொல்லு)
காப்பாற்ற வரணுமய்யா... (ஆமடி தங்கம்)
கணேசனே சரணமய்யா... (ஆமாஞ் சொல்லு)

இந்த இடத்தில் கணேசன் யாரென்று தெரிகிறதா?

ஒரு டீயை இரண்டாக்கி
உறிஞ்சி நாங்க குடிச்சதிலே
ஒருத்தன் மட்டும் ஒசந்தானே!
இன்னொருத்தன் அசந்தானே!

(இதில் மூன்றாவது வரியையும் நான்காவது வரியையும் நன்றாகப் படித்து புரியும் சக்தி உடையவர்கள் புரிந்து கொள்ளுங்கள்)

ஹிட்லர் மீசையுடன் பிறந்தார் எங்க ஹீரோ
இங்கிலிஷும் பேசிடுவார் ஆரீராரோ
(நடிகர் திலகம் பைல்களைப் பார்த்தவாறு வில்லுப் பாட்டைக் கேட்டுக் கொண்டிருப்பார்)
வாய் தொறந்தா வசனமல்லோ எங்க ஹீரோ
அந்த வசனமே கவிதையல்லோ ஆரீராரோ

என்னைக்கும் வாடாத பாசமலரு
பெத்த அன்னைக்கு உத்தம புத்திரன் இவரு
இந்த ஊரில் இதுதான் ஒசந்த மாளிகை ஆமா(ம்)
ஹிட்லர் மீசை குடியிருக்கும் வசந்த மாளிகை

பட்டிக்காடா பட்டணமா எங்க நாட்டிலே
ஆமா(ம்) சத்தியமா இவருதானே தர்மராஜா
பத்தே அவதாரம் பகவானுக்கு ஆமா(ம்)
பத்துக்கு மேல் அவதாரம் நம்மாளுக்கு (சபாஷ்!)
வேஷம் நம்மாளுக்கு

(அமர்க்களமாக இல்லை!)

பறப்பதுலே பைலட்டு பிரேம்நாத்து
நீதியை நிறுப்பதில ஜஸ்டிஸ் கோபிநாத்து
மேதையிலே இவரு ஒரு சாக்ரடீசு
ஆமா(ம்) மீசையிலே ஹிட்லரு உமாநாத்து

இப்படியாக இப்பாடல் நடிகர் திலகத்தின் புகழ் பாடியே வளரும். பிரபல ராகங்களின் பெயர்களில் நடிகர் திலகத்தின் நடிப்பு வில்லுப்பாட்டின் மூலம் பெருமைப் படுத்தப்படும்.

அழுதிடுவார் அது ஆரபி ராகம்...
கர்ஜனை செய்வார் இது கல்யாணி ராகம்...
சிரிச்சிடுவார் அது செஞ்சுருட்டி
சிணுங்கிடுவார் இது சிந்து பைரவி...
சீட்டியடிப்பார் அது நாட்டைக்குறிஞ்சி
சத்தமிடுவார் அது சங்கராபரணம்

நடையழகு இது ரூபக தாளம்
நாடித்துடிப்பினிலே ஆதிதாளம்
அப்படியே படம் பிடிக்க கேமரா இல்ல
அம்புட்டையும் சொல்ல நானு கம்பனுமில்ல

மகராசன் கோட்டையிலே கோயில் வாசலு (நடிகர் திலகத்தின் 'அன்னை இல்ல' வாசலின் முன் உள்ள விநாயகர் கோயில்!?)

நமக்குப் பெருமை பிடிபடாது.

(இந்த வில்லுப்பாட்டில் திரு.சுப்பு ஆறுமுகம் அவர்களின் வில்லுப்பாட்டுக் குழுவினரும் சுருளிராஜனுடன் இணைந்து நடித்திருப்பார்கள். மலேஷியா வாசுதேவன் சுருளிராஜனின் குரலில் அருமையாக சுருளிராஜனுக்குப் பின்னணி பாடியிருப்பார்).

ஆனால் ஒரு குறை. இன்னும் முழுமையாக கவனம் செலுத்தி இப்பாடலைத் தந்திருந்தால் அற்புதமான தலைவரைப் பற்றிய முழுமையான சாதனை வில்லுப் பாட்டாக இது அமைந்திருக்கும். இடையில் சில சொதப்பல் வரிகள், காமெடி வசனங்கள் என்று இடையிடையே அடிக்கடி ட்ராக் மாறுவதால் நமக்கு இந்த வில்லுப் பாட்டு முழு திருப்தி இல்லாததால் கொஞ்சம் ஏமாற்றமே!

என்றாலும் மறக்க முடியாத ஜனரஞ்சகமான சூப்பர் ஹிட் வில்லுப்பாட்டு. அனைவராலும் விரும்பப்பட்ட ஒன்று.

JamesFague
30th November 2014, 10:27 AM
பாகம் 5



படத்துக்கு ஏற்பட்ட பாதிப்புகள்

இந்தப்படம் 1982 ஆம் ஆண்டு குடியரசு தினத்தன்று அதாவது ஜனவரி 26 அன்று வெளியீடு என்று விளம்பரம் வந்தது. ஆனால் City, NSC ஏரியாக்களில் சொன்னபடி ஏனோ ரிலீஸ் ஆகவில்லை. ஆரம்பமே குழப்பம். பதினேழு நாட்கள் கழித்து பிப்ரவரி 12 ஆம் தேதிதான் இப்படம் சென்னையிலும், மற்ற இடங்களிலும் ரிலீஸ் ஆனது. (தகவலுக்கு நன்றி பம்மலார் சார்) குறிப்பிட்ட தேதிக்கு ரிலீஸ் ஆக முடியாமல் போனதால் அதற்கு முன்னாலேயே

ஊருக்கு ஒரு பிள்ளை (5.02.1982)
வா கண்ணா வா (6.02.1982)

என்று இரு படங்கள் அடுத்தடுத்த நாட்களில் ரிலீஸ் ஆகி வேறு ஓடிக்கொண்டிருக்கின்றன.

ஹிட்லர் உமாநாத்திற்கு நல்ல ரிசல்ட் இருந்தும் மேற்கூறிய படங்கள் ரன்னிங்கில் இருக்கும் போது எப்படி வெற்றி ரிசல்ட்டை எதிர்பார்க்க முடியும்?

ஆனால் ஒரு அதிசயம் பாருங்கள். ஹிட்லர் சொன்னபடி திடீரென்று எங்கள் ஊர் கடலூரில் நியூசினிமாவில் 26.01.1982 அன்றே வருகை புரிந்து விட்டார். ஆக ஹிட்லரை முதலில் தரிசித்தது தென் ஆற்காடைப் பொறுத்தவரை கடலூர்காரர்களே! எவ்வளவு பெருமை தெரியுமா எங்களுக்கு! முதல் காட்சி சும்மா அதம் பறந்தது. ரிலீஸ் ஆன 10 நாட்களுக்குள் பிப்ரவரி 5-ஆம் தேதி கமலம் தியேட்டரில் 'ஊருக்கு ஒரு பிள்ளை' ரிலீஸ் ஆகிறது. அடுத்த நாள் 6 ஆம் தேதி வேறு கமர் தியேட்டரில் 'வா கண்ணா வா' ரிலீஸ் ஆகிறது. இந்த இரண்டு படங்கள் உடனே அடுத்தடுத்து ரிலீஸ் ஆன நிலையில் 'ஹிட்லர் உமாநாத்' நல்ல படம் என்று பெயரெடுத்தும் நம் படங்களின் அணிவகுப்புகளின் போட்டிகளால் சரியான வெற்றியைப் பெறத் தவறியது. (ஒரே ஊரில் ஓரே நேரத்தில் மூன்று நடிகர் திலகத்தின் படங்கள். அதுவும் புத்தம் புது ரிலீஸ் படங்கள். எங்கு போய் முட்டிக் கொள்வது? கார்த்திக் சார்! வாங்க!) கடலூரில் பதினைந்து நாட்களே ஓட வேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டது 'ஹிட்லர் உமாநாத்'

(இந்த லட்சணத்தில் இதே பிப்ரவரி மாதம் 25-ஆம் தேதி என் அற்புதப் படமான 'கருடா சௌக்கியமா' (25.02.1982) வேறு 'வா கண்ணா வா' (6.02.1982) விற்குப் பின் வெளியானது. (சரியாகப் பத்தொன்பது நாள் கழித்து).... ஆக கணக்குப் படி பார்த்தால் ஒரே மாதத்தில் 4 புதுப் படங்கள். அட ராமா! இதையும் சாதனை லிஸ்ட்டில் சேர்த்துக் கொள்ள வேண்டியதுதான்.)

பின் சென்னையில் வெளியாகி கிட்டத்தட்ட ஒரு மாதம் ஓடியது ஹிட்லர் உமாநாத்.

அலசல் முடிவுரை



படம் சுமாராகப் போனால் என்ன? (எவ்வளவோ நல்ல படங்கள் சுமாராகப் போனதுண்டு). இந்த 'ஹிட்லர் உமாநாத்' அருமையான நல்ல படம். நடிகர் திலகத்திடம் அதுவரை காணாத பல புதிய பரிணாமங்களை 'ஹிட்லர் உமாநாத்'என்ற வித்தியாசமான வேடத்தின் மூலம் நாம் காண முடிந்தது. மீண்டும் நடிகர் திலகத்தை வியக்க முடிந்தது. நன்கு ரசிக்க முடிந்தது.

பொத்தம் பொதுவாக நடிகர் திலகத்தின் 200 படங்களுக்கு மேல் எதுவுமே சரியில்லை...நான் பார்ப்பதில்லை...விரும்புவதில்லை என்ற குருட்டுக் கருத்துக்கள் கண்மூடித்தனமாக சில, பலரிடம் பரவிக்கிடக்கின்றன. அவர் பழைய படங்களில் பங்களித்ததைப் போல புது படங்களில் பங்களிக்கவில்லை... பரிமளிக்கவில்லை என்று கூறுவோர் அதை தயவு செய்து தவிர்க்க வேண்டுகிறேன். எனக்கும் சில படங்கள் அறவே பிடிக்காதுதான். ஆனால் எல்லா படங்களும் அப்படி இல்லை. இரண்டாவது ஒரு காரணம் இப்படி சொல்பவர்கள் இந்த மாதிரிப் படங்களை மேற்கூறிய காரணங்களை மனதில் வைத்து இரண்டாவது முறை பார்க்காமலேயே தாங்களாகவே ஒரு முடிவு கட்டி விடுகிறார்கள். எல்லாப் படங்களிலுமே தெய்வ மகன், உயர்ந்த மனிதன், தேவர் மகன், தில்லானா மோகனாம்பாள், முதல் மரியாதை போன்ற விஷயங்களை எதிர்பார்க்க முடியாது. அதில் கூட இல்லாத சில புது விஷயங்களை, தனது 200 ஆவது படங்களுக்கு மேலுள்ள படங்களில் காட்டி, பல சாதனைகளை நடிப்பில் நமக்கு செய்து காட்டி விட்டுத்தான் சென்றிருக்கிறார். அதை வெளிக்கொணரத்தான் கருடா சௌக்கியமா, துணை, தாம்பத்யம், இப்போது ஹிட்லர் உமாநாத் என்று மெனக்கெட்டுக் கொண்டிருக்கிறேன்.

JamesFague
30th November 2014, 12:04 PM
Kungumam article - Interview of Mr Kamal certain part contains about NT

37437509
3750

eehaiupehazij
30th November 2014, 03:29 PM
நிலைத்து நின்று கதிரொளி பரப்பும் நடிப்புச் சூரியனாரின் நீள்வட்டப்பாதையில் சுற்றிச் சுழன்று ஒளிர்ந்து மிளிர்ந்த கோள்கள்

கோள் 3 : புதன் கோள் ‘இலட்சிய நடிகர்’ S.S. ராஜேந்திரன் : Mercurial SSR!

நடிப்புக் கதிரொளியில் ஒளிர்ந்து மிளிர்ந்த புதன் கோள் 'இலட்சிய நடிகர்' என்று அன்புடன் அழைக்கப்பட்ட S.S. ராஜேந்திரன். ஆனாலும் நடிகர்திலகத்துடனான இவருடைய இணைவு உஷ்ணமானியின் பாதரச (Mercury) ஏற்ற இறக்கம் போல, ஒரு சந்திரனைப் போல வளர்பிறை தேய்பிறை கொண்டதாகவே இருந்தது. பராசக்தி மனோகரா துவங்கி வளர்ந்து ஓங்கிய நட்பிசைவு வீரபாண்டிய கட்டபொம்மனில் மங்கிய தேய்பிறையாகி அமாவாசையாக இருண்டு மீண்டும் ஆலயமணி குங்குமம் பச்சைவிளக்கு சாந்தி என்று வளர்பிறையாகி 'எதிரொலி'த்தது! எந்தவொரு வளரும் அல்லது வளர்ந்த நடிகரின் முன்னேற்றத்திற்கும் புகழ் பாதைக்கும் தடைக்கல்லாக இராத முதிர்ந்த மனப்பக்குவம் கொண்டநடிகர்திலகத்தின் ஒரே குறிக்கோளான ஒரே சிந்தையும் செயலுமான நடிப்பிலக்கண சிற்பம் செதுக்குதலில் இது போன்ற ‘சின்னப்புள்ளை'த்தனங்களுக்கு அவரால் நேரம் ஒதுக்க இயலாத காரணத்தால் அவரது பெருந்தன்மை நிறைந்த குணாதிசயத்தால் எந்தவொரு இணைவு நடிகநடிகையரும் பாதிக்கப் படாததால் உண்மையுணர்ந்து மீண்டும் மீண்டும் சிவாஜி பாசறைக்கே திரும்பி அவர் ஒளிபெற்று ஒளிர்ந்த கோள்களாக மிளிர முடிந்தது. Hats off to SSR’s orbital association with our Acting Sun God Nadigar Thilagam Sivaji Ganesan!

https://www.youtube.com/watch?v=ZMhIoZi7fUk

https://www.youtube.com/watch?v=-lSmIxJ15fI


https://www.youtube.com/watch?v=kO4DaXjKJ9I

eehaiupehazij
30th November 2014, 09:33 PM
நிலைத்து நின்று கதிரொளி பரப்பும் நடிப்புச் சூரியனாரின் நீள்வட்டப்பாதையில் சுற்றிச் சுழன்று ஒளிர்ந்து மிளிர்ந்த கோள்கள்

கோள் 4 : 'நவரச திலகம்' R. முத்துராமன்

முத்துராமன் நடிகர்திலகத்தின் சமகாலத்தவரானாலும் நிலையான கதாநாயக அந்தஸ்தை அடைய வெகுகாலம் (12 ஆண்டுகளுக்கு மேல் ) காத்திருக்க நேர்ந்தது சூரியனை வருடத்தில் ஒருமுறை சுற்றிவரும் பூமியைப் போலல்லாது 12 வருடங்கள் தேவைப்பட்ட வியாழன் கோளே நம் 'நவரச திலகம்' என்று அடைமொழி கொண்ட முத்துராமன் அவர்கள் , மாடர்ன் தியேட்டர்ஸ்க்கு மனோகர் எப்படியோ அப்படியே இயக்குனர் ஸ்ரீதரின் செல்லம் முத்துராமன். நடிகர்திலகத்துடன் இணைந்து குணசித்திர வேடங்களில் பலபடங்களில் அமைதியான நடிப்பை நல்கி நடிகர்திலகத்தின் புகழேணியில் ஒரு படியாக தனது பங்களிப்பை நல்கிய முத்துராமன் அவர்களுக்கு எம் நெஞ்சார்ந்த நன்றியறிதல்கள் ! பார் மகளே பார், கர்ணன், சிவந்தமண், நெஞ்சிருக்கும் வரை, ஊட்டி வரை உறவு, திருவிளையாடல்....வாணி ராணி....மறக்க முடியாதவரே!

நவரசமேயாயினும் அவையும் நடிப்புச்சூரியனுடன் இணைந்து நடிக்கும்போது மட்டுமே அவர் ஒளியைப்பெற்றே பிரதிபலித்து ஒளிர முடியும் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி

சிவந்தமண்

https://www.youtube.com/watch?v=St_J9iJN2Bo

Muthuraman Observing and following the 'footsteps' of NT!
நெஞ்சிருக்கும் வரை

https://www.youtube.com/watch?v=NaItT2DZVXU

On par screen space sharing with NT!
பார் மகளே பார்

https://www.youtube.com/watch?v=0jO09MNdSyU

NT never minds to give a complete song to his co-star!
ஊட்டி வரை உறவு

https://www.youtube.com/watch?v=Jb5Gmrrih24

Russellxss
30th November 2014, 10:48 PM
http://i1369.photobucket.com/albums/ag235/sundarajan/photocard6_zpsb120c9fb.jpg

உலகில் எவரும் எட்டாத அதிசியம் சிவாஜி புகழ் காப்போம்.

eehaiupehazij
30th November 2014, 10:49 PM
நிலைத்து நின்று கதிரொளி பரப்பும் நடிப்புச் சூரியனாரின் நீள்வட்டப்பாதையில் சுற்றிச் சுழன்று ஒளிர்ந்து மிளிர்ந்த கோள்கள்


வெள்ளி எனப்படும் சுக்கிரன் (Planet Venus) கோள் 5:மக்கள் கலைஞர் ஜெய்சங்கர்

தென்னகத்து 'ஜேம்ஸ்பாண்ட்' என்ற அழியாப் புகழையும் பெற்ற பிறரறியாக் கொடையுள்ளம் கொண்ட மனிதநேயர்

வெள்ளிக்கிழமை கதாநாயகராக ஏராளமான தயாரிப்பாளர்களின் வாழ்வாதாரமாக நடிகர்திலகத்தின் வழி நடந்தவர். சுக்கிரதசை என்பது இவருக்குப் பொருந்தும் வண்ணம் முதல்படமான இரவும் பகலும் (1965) படத்திலிருந்து இரவுபகலாக ஓய்வு ஒழிச்சலின்றி உழைத்து நடிப்புச்சூரியனின் பாதையிலும் வலம் வந்து
வளமான ஒளிபெற்று மிளிர்ந்தவர் அன்பளிப்பு குலமா குணமா மருமகள் கீழ்வானம் சிவக்கும் முக்கியமான படங்கள்.

https://www.youtube.com/watch?v=vTZvsa0MVuU

மக்கள் கலைஞரின் பிற்காலத் திரைவாழ்வில் விடிவெள்ளி நடிகர்த்திலகமே ஜெய்யின் புதைந்து கிடந்த நடிப்புத்திறமை அவர் நடிகர்திலகத்துடன் இனைந்து நிறைய படங்கள் தொடர்ச்சியாக நடிக்க ஆரம்பித்து தனது இரண்டாவது ரவுண்டை ஆரம்பித்த பிறகே வெளிக்கொணர முடிந்தது! நண்பருக்குத் தனிப்பாடலே ஒதுக்கிய நடிகர்திலகத்தின் உறங்கிடாத உள்ளத்தில் நல்ல உள்ளம்!

https://www.youtube.com/watch?v=H0uJ4W-jfOk

நடிகர்திலகம் படுத்துக்கொண்டே ஜெயிக்க வைத்த மருமகள் படத்தில் ஜெய்யுடன்

https://www.youtube.com/watch?v=JPXCKUTy5Ns

தென்னகத்து ஜேம்ஸ்பாண்டின் பளிங்கு மாளிகை சாகசம்!

https://www.youtube.com/watch?v=5MDOr0gq0-8

Russellxss
30th November 2014, 10:59 PM
போட்டோ கார்டு

http://i1369.photobucket.com/albums/ag235/sundarajan/photocard2_zpsdeb902f2.jpg


உலகில் எவரும் எட்டாத அதிசியம் சிவாஜி புகழ் காப்போம்.

Russellxss
30th November 2014, 11:09 PM
போட்டோ கார்டு

http://i1369.photobucket.com/albums/ag235/sundarajan/photocard3_zps5b7b7ec8.jpg


உலகில் எவரும் எட்டாத அதிசியம் சிவாஜி புகழ் காப்போம்.

eehaiupehazij
1st December 2014, 12:02 AM
6. நிலைத்து நின்று கதிரொளி பரப்பும் நடிப்புச் சூரியனாரின் நீள்வட்டப்பாதையில் சுற்றிச் சுழன்று குளிர்ந்து ஒளிர்ந்து மிளிர்ந்த நடிப்புச்சூரியனின் ஒளிப் பிரதிபலிப்பாகத் தோன்றி நம் மனதை மகிழ்வித்த ரம்மியமான வானவில் AVM ராஜன்

ஜெமினிகணேசனின் எதிரொலியாக திரைவாழ்வைத் துவங்கிய ராஜன் மெல்லமெல்ல அதிலிருந்து விடுபட்டு நடிகர்திலகத்தின் ஒளியை வாங்கிப்பிரதிபலித்த ஒரு ரம்மியமான வானவில்லாக ஒளிரத் துவ்ங்கினார். ஆண்டவன் கட்டளை ,பச்சை விளக்கு , தில்லானா மோகனாம்பாள் கலாட்டா கல்யாணம் மற்றும் மனிதரில் மாணிக்கம் படங்களில் நடிகர்த்திலகத்துக்குப் பெருமை சேர்த்தார். தனிப்பட்டவகையில் சக்கரம் பந்தயம் துணைவன் படங்களில் மெருகேறிய நடிப்பினை வெளிக்கொணர்ந்தார். அவருக்கு எமது உளமார்ந்த நன்றிகள்.

https://www.youtube.com/watch?v=TwRkv0yk_OQ

https://www.youtube.com/watch?v=23vREAmmbgs

https://www.youtube.com/watch?v=XAATvR7kXWk

https://www.youtube.com/watch?v=2gNNDIjDXKE

eehaiupehazij
1st December 2014, 12:32 AM
7. வால் நட்சத்திரங்களின் வருகை அபூர்வமானதே. ஒரு சூரியனின் கதிரொளிப் பாதையில் வந்துசென்ற அபூர்வ வால் நட்சத்திரமான அமரர் மக்கள் திலகம் எம்.ஜி.இராமச்சந்திரன் அவர்களுக்கு என்றும் எங்கள் அன்பும் மரியாதையும் நிறைந்த இதயம் கனிந்த நன்றியும் வணக்கமும்!

https://www.youtube.com/watch?v=qPP_XaBbJz8

https://www.youtube.com/watch?v=qVOKWovBO3o

https://www.youtube.com/watch?v=ru9LoVw5WSg

https://www.youtube.com/watch?v=DWaTHeVJiRw

Richardsof
1st December 2014, 06:29 AM
இனிய நண்பர் திரு சிவாஜி செந்தில்
http://i59.tinypic.com/20uc21k.jpg
தங்களின் 1000 பதிவுகளுக்கு இதயங்கனிந்த நல் வாழ்த்துக்கள் . உங்களின் ஆராய்ச்சி கட்டுரைகள் - எல்லா நடிகர்களின்
நடிப்பை பற்றிய விரிவான பதிவுகள் - ஒன்றோடு ஒன்று பொருந்தியுள்ள வீடியோ காட்சிகள் என்று பதிவிட்ட தங்களின்
உழைப்புக்கு நன்றி . மக்கள் திலகத்தை பற்றிய தங்களின் கட்டுரைக்கு நன்றி .

eehaiupehazij
1st December 2014, 07:00 AM
என்றும் என் மதிப்புக்குரிய திரு எஸ்வீ வினோத் அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள். ஊக்கமும் ஆக்கமும் தரும் நோக்கமே தங்களின் பதிவு என்னிடத்தில் ஏற்படுத்தும் தாக்கம். அலைகடலான தங்களின் ஆர்ப்பரிக்கும் மக்கள்திலகம் புகழார்வலப் பதிவின்முன் சக நடிகர்த்திலகப் புகழார்வலர்களின் சிந்தனை சீற்றங்களின் முன் என் பதிவுகள் அசைந்தாடும் சிறு தோணி அளவே. பதிவுத் திமிங்கிலங்களின் முன் நான் ஒரு சிறு மீனாகவே உணருகிறேன். நன்றிகள்.

வாழ்வின் அடிப்படையை ,வந்தவழி மறவாமல் நன்றியுடைமையை ,சோர்வடையாடது மனம் தெளிந்திடும் நம்பிக்கை துளிர்த்திடும் ஆதார வரிகளை திரையுலக மூவேந்தர்களின் பங்களிப்பில்....

https://www.youtube.com/watch?v=lfSZQns0zgE

https://www.youtube.com/watch?v=DmhN74ky5Vs

https://www.youtube.com/watch?v=wmjEXNFNupM

Gopal.s
1st December 2014, 07:16 AM
Sivaji Senthil,

Congratulations for your completion of 1000 Posts. Keep the spirit up .

eehaiupehazij
1st December 2014, 07:31 AM
Sivaji Senthil,

Congratulations for your completion of 1000 Posts. Keep the spirit up .by one of my role models in this thread, Gopal Sir.

உளமார்ந்த நன்றிகள். நடிகர்திலகத்தின் புகழ் பரப்பும் பதிவுத்திலகங்களின் நடுவே திறனாய்வுத் திலகமாகவும் விளங்கும் கோபால் சார் அவர்களே. ஒரு முன்மாதிரிப் பதிவராக ஊக்கமளிக்கும் ஷொட்டுக்களோடு பதிவுகளின் தரம் உயர்ந்திட அவ்வப்போது நீங்கள் வைக்கும் குட்டுகளுக்கும் நன்றிகள்.

https://www.youtube.com/watch?v=3NmW-RVilzk

Russellmai
1st December 2014, 07:43 AM
சிவாஜிசெந்தில் சார்,
ஆயிரம் பதிவுகளைக் கடந்தமைக்கு எனது உளமார்ந்த
நல்வாழ்த்துகள்.
கோபு.

eehaiupehazij
1st December 2014, 08:21 AM
சிவாஜிசெந்தில் சார்,
ஆயிரம் பதிவுகளைக் கடந்தமைக்கு எனது உளமார்ந்த
நல்வாழ்த்துகள்.
கோபு.

அன்பிற்கினிய நண்பர் கோபுவுக்கு நன்றிகள். என் பதிவுகளை நடிகர்திலகம் திரியிலும் காதல் மன்னரின் திரியிலும் நட்பார்ந்த வகையில் ஊக்கப்படுத்திய முகமறியா கோப்பெரும் சோழனுக்கு இந்த பிசிராந்தையாரின் நட்புபூர்வ நன்றிகள்.
நட்பிலக்கணத்துக்கான நமக்குப் பொருத்தமான பாடல் இதுவே.....குதிரைதான் கிடைக்கவில்லை... மனக்குதிரையில் சவாரி செய்வோமே!

https://www.youtube.com/watch?v=GQvBncn1aq4

RAGHAVENDRA
1st December 2014, 08:43 AM
http://i1146.photobucket.com/albums/o528/imagivity/unspecific/grtgsSivajiSenthil1000_zps7db51475.jpg

kalnayak
1st December 2014, 10:06 AM
Congratulations Sivaji Senthil for Completing 1000 valuable posts. Wish you to complete 1000s of 1000s soon!!!

KCSHEKAR
1st December 2014, 10:41 AM
திரு. சிவாஜி செந்தில் அவர்களே,
1000 பதிவுகளைக் கடந்த, இன்னும் பல்லாயிரம் பதிவுகளைத் தரப்போகிற தங்களுக்கு வாழ்த்துக்கள்.

KCSHEKAR
1st December 2014, 10:55 AM
Kumudham
http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/Kumudham_zpsbc3a4bc3.jpg (http://s1234.photobucket.com/user/sivajiperavai/media/Kumudham_zpsbc3a4bc3.jpg.html)

sss
1st December 2014, 12:11 PM
இந்த குறிப்பில் கொடுத்துள்ள திரை காவியம் புனர் ஜென்மம் என நினைக்கிறேன். நடிகர் திலகம் அம்மாவுக்கு வளையல் வாங்கி தரும் காட்சி அதில் உள்ளது ...

இந்த படத்தில் குடித்து விட்டு ஊரு சுற்றும் ஒரு ஊதாரி , அம்மாவுக்கு மருந்து வாங்க இருந்த பணத்தில் குடிப்பது என எதிர் மறையாக நடித்தாலும் , இந்த குறிப்பில் உள்ள அந்த சிறுவன் மனதில் அதை எல்லாம் விதைக்காமல் அம்மாவுக்கு வளையல் போடும் அந்த நல்ல எண்ணத்தை பதிய வைத்த நடிகர் திலகத்தை என்ன என்று சொல்வது ?

http://i39.photobucket.com/albums/e153/balebale5/2014-10-26151911_zpsac93cec3.jpg

நன்றி : சினேகிதி மாத இதழ் நவம்பர் ஒன்றாம் தேதி 2014 பதிவு

eehaiupehazij
1st December 2014, 12:28 PM
http://i1146.photobucket.com/albums/o528/imagivity/unspecific/grtgsSivajiSenthil1000_zps7db51475.jpg

Respected Raghavendar Sir
Heartfelt thanks to my most respected role model and doyen of this thread. Under your tutelage and guidance I may grow and flourish further. My sincere request is kindly be the candle to kindle thousand more candles to throw light on our beloved NT and be the life saving boat of many novices like me for the betterment of this thread.

https://www.youtube.com/watch?v=4xeW8ITF2y8

with due respects,

senthil

eehaiupehazij
1st December 2014, 12:33 PM
திரு. சிவாஜி செந்தில் அவர்களே,
1000 பதிவுகளைக் கடந்த, இன்னும் பல்லாயிரம் பதிவுகளைத் தரப்போகிற தங்களுக்கு வாழ்த்துக்கள்.


மதிப்புக்குரிய பண்பாளர் KCS

அன்பும் வழிகாட்டுதல்களும் நல்கி திரியை முறைப்படுத்தும் வண்ணம் நம் பதிவுகள் இருந்து நடிகர்திலகத்தின் புகழை மேன்மேலும் உயர்த்திட பாடுபடும் தங்களுக்கு என் நன்றியறிதலுடன் கூடிய வணக்கங்கள்

அன்புடன் செந்தில்

https://www.youtube.com/watch?v=i4sz-wjPD1I

eehaiupehazij
1st December 2014, 12:35 PM
Congratulations Sivaji Senthil for Completing 1000 valuable posts. Wish you to complete 1000s of 1000s soon!!!

Heartfelt thanks and gratitude for your sustained supports and criticism Kalnaayak sir.
Furthering my contributions under your well wishes.

with respect,senthil

https://www.youtube.com/watch?v=zHJdgYyvGWA

HARISH2619
1st December 2014, 01:27 PM
Dear sivajisenthil sir,
congratulations for successfully crossing 1000 posts,please continue enthralling us.

ScottAlise
1st December 2014, 01:58 PM
Dear Sivaji Senthil sir,

Heartiest Congratulations on your completion of 1000 posts

Harrietlgy
1st December 2014, 05:49 PM
Dear Sivaji Senthil
Congratulations for your 1000 post.

eehaiupehazij
1st December 2014, 06:01 PM
Dear Sivaji Senthil sir,

Heartiest Congratulations on your completion of 1000 posts

Dearest Ragul,

Heartfelt gratitude for remembrance and your wishes. Like the Spring season your come back works very well and keep up towards our single most objective of implantng NT's name and fame in the hearts and minds of generations to come.

regards, senthil

https://www.youtube.com/watch?v=TojrKH2x7lo

eehaiupehazij
1st December 2014, 06:03 PM
Dear Sivaji Senthil
Congratulations for your 1000 post.

Dear Barani

Thanks have no bounds in my heart to hear the wishes from eminent hubbers like you. Hope I have to try hard to live up to your expectations for the sheer cause of NT in the days to come.

regards,senthil

https://www.youtube.com/watch?v=zjAOJ9xOP-w

eehaiupehazij
1st December 2014, 06:04 PM
Dear sivajisenthil sir,
congratulations for successfully crossing 1000 posts,please continue enthralling us.

Dear Harish. Thank you for your wishes and encouragement that give me the pep for writing. Hope I can measure my steps carefully and continue my humble services for the cause of NT
regards, senthil

https://www.youtube.com/watch?v=0wBsn4F__A4

JamesFague
1st December 2014, 06:39 PM
அன்பு நண்பர் செந்தில் அவர்களுக்கு

உங்களது புதிய கோணத்தில் நடிகர்திலகத்தை அலசும் தொடருக்கும் மற்றும் உங்களது ஆயிரம் பதிவுகளுக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கின்றேன்.


Regards

S Vasudevan

JamesFague
1st December 2014, 07:24 PM
திரை அரங்கில் பார்த்த நடிகர்திலகம் படங்கள்:

1. பூப்பறிக வருகிறோம் - இந்த படத்தை திரை அரங்கில் பார்க்க சந்தர்பம் அமையாததால் முதன் முதலில் பார்த்தது குறுந்தகடு மூலமாக.

2. படையப்பா - இந்த படத்தை பெங்களுருவில் உள்ள அவலஹல்லி வெங்கடேஸ்வர திரைஅரங்கில் பார்த்த அனுபவம் மறக்க முடியாதது.

எனது அனுபவம் தொடரும்

eehaiupehazij
1st December 2014, 07:37 PM
அன்பு நண்பர் செந்தில் அவர்களுக்கு

உங்களது புதிய கோணத்தில் நடிகர்திலகத்தை அலசும் தொடருக்கும் மற்றும் உங்களது ஆயிரம் பதிவுகளுக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கின்றேன்.


Regards

S Vasudevan

அன்பு நண்பர் வாசுதேவன் நடிகர்திலகம் புகழ் பரப்புவதே நமது குறிக்கோள் இலக்கை மட்டுமே நோக்குவோம் பதிவின் இலக்கங்கள் வெறும் படிக்கட்டுகளே!
அதிகம் பேசப்படாத நடிகர்திலகத்தின் ஒதுக்கப்பட்ட மாணிக்கக்கற்களின் மதிப்பை உலகறிய வெளிக்கொணர்வதில் நான் மிகவும் மதிக்கும் முன்மாதிரி பதிவர் நெய்வேலி வாசுதேவன் அவர்கள் மற்றும் உங்களோடு நானும் பங்கு கொள்ளும் பெருமையைத் தாருங்கள். வாழ்த்துக்களுக்கு இதயம் கனிந்த நன்றிகள்

நல்ல பதிவுகள் நல்ல கட்டடங்களுக்கு சமம்.. இடப்பொருத்தம் மனப்பொருத்தம் காலப்பொருத்தம்......நாமும் கட்டுவோமே நடிகர்திலகத்தின் நடிப்பிலக்கணக்
கட்டடத்தை செங்கல் செங்கல்லாய் தேர்ந்தெடுத்து.....!

நம்பிக்கையான தும்பிக்கையாக நல்ல மேஸ்திரி நடிகர்திலகமும் நாட்டியப்பேரொளியும் இருக்கும்போது ஏன் அவநம்பிக்கை?

https://www.youtube.com/watch?v=wxt4iEdakxA

Russellbpw
1st December 2014, 08:10 PM
Dear senthil sir !!!

Congratulations on your milestone !!!!

Unable to participate in thread continously due to my very tight schedule & continuous travel. Last month of the year end. Running behind targets.

Excellent work and dedication. You are really carrying this thread on your shoulder in a well balanced & highly professional way.

Shall join you soon.

Regards
rks

eehaiupehazij
1st December 2014, 08:22 PM
The Masked Musketeers of Kollywood during NT's Saga!

We all wear virtual masks...to cheat others or ourselves! Burying our sorrows we smile!! keeping a hearty smile we pretend worried outside!!

Nambiar, Asokan, Veerappa, Manohar,.....epitomized reel life villainy in Kolliwood at their face as the interface but by heart they are all softies and saadhus in real life!! NT's invincible villainy too, in his anti-hero roles!!

உன்மத்த முகமூடிக்குப் பின் மறைந்த உத்தமர்கள் (உத்தம வில்லன்கள்) This is my next theme for a conceptual presentation on how the real life characters of our renowned reel life villains protracted diagonally opposite to their 'evil' images cinema has implanted in us since our childhood!!

முகமூடி1 : The most revered Guruswamy off screen M.N. Nambiar aka Thikambara Saamiyaar or Uththama Puththiran's evil Rajaguru or Sivandha Mann's devilish Diwaan on screen......

work is on the anvil....

regards, senthil

As a prelude, enjoy how the traits of an innocent man get changed terrific upon wearing an evil mask...from the hyperactive Jim Carey's Mask (1994)!

https://www.youtube.com/watch?v=eEQomU6iFtw

eehaiupehazij
1st December 2014, 08:55 PM
Dear senthil sir !!!

Congratulations on your milestone !!!!

Unable to participate in thread continously due to my very tight schedule & continuous travel. Last month of the year end. Running behind targets.

Excellent work and dedication. You are really carrying this thread on your shoulder in a well balanced & highly professional way.

Shall join you soon.

Regards
rks

Dear RKS Sir. You are the Prime Mover of this thread with your dash and verve dominated write-ups that keep this thread treading on the right track. Like the Sun God's cosmic rays (Ravi Kiran Surya as the name implies) you remain one of my mentors encouraging me during my sagging stages. My heart felt thanks and gratitude for all your good words, which only imbibe a sort of fear in me to put my next steps cautiously, auditing myself and hearing from our thread friends for healthy criticisms towards the end of glorifying our icon NT.

with respectful regards,
senthil

RKS cosmology on NT energizing this thread...!

https://www.youtube.com/watch?v=xsCtzX-9TiU

Russelldwp
1st December 2014, 09:42 PM
மதிப்பிற்குரிய அன்பு நண்பர் சிவாஜி செந்தில் சார் அவர்களே

தங்களுடைய முத்தான ஆயிரம் பதிவுகளுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

ஆண்டவன் அருளாலும் தலைவர் சிவாஜி ஆசியாலும் தங்களுடைய கற்பனை ஊற்று பெருமை கொள்ளும் அளவில் நடிகர்திலகத்தின்
காவியங்களை வித விதமாக அலசி ஆராய்ந்து திரியின் பெருமை காத்துக் கொண்டிருக்கிறீர்கள். தங்களுடைய வித்தியாசமான விசித்திரமான பதிவுகளை
என் நண்பர்களும் மனமுவந்து பாரட்டுகிறார்கள்.

வற்றாத ஜீவநதியாய் உங்கள் பதிவுகள் நாள் தவறாமல் இத்திரியில் இடம்பெற என்னைப்போன்ற எண்ணற்ற ரசிகர்களின் வாழ்த்துக்களுடன்
உங்களை வரவேற்பதில் பெருமை கொள்கிறேன்.

eehaiupehazij
1st December 2014, 09:59 PM
வற்றாத ஜீவநதியாய் உங்கள் பதிவுகள் நாள் தவறாமல் இத்திரியில் இடம்பெற என்னைப்போன்ற எண்ணற்ற ரசிகர்களின் வாழ்த்துக்களுடன்
உங்களை வரவேற்பதில் பெருமை கொள்கிறேன்.by SPC

Dear Ramachandran. Thank you for the optimistic way of encouraging novice writers like me trying to serve the old wine in a new bottle. Thanks to your constant and consistent comments and criticisms I could now cross this 1K milestone only and it is a long long distance to go and explore NT by way of imploring our inner faith and love on him. Joining you with all your endeavours in glorifying NT.

Meet you 7th Dec. at Trichy. If possible AREGU too.

regards, senthil

வற்றாத ஜீவநதிப் படுகையில் enjoy the exuberance of our NT on horse!

https://www.youtube.com/watch?v=uckFlXsmneU

Russellisf
1st December 2014, 10:06 PM
My Dear Sivaji Senthil Sir

Congratulations for your 1000 post.


https://www.youtube.com/watch?v=j7_xxfl2PT8

eehaiupehazij
1st December 2014, 10:22 PM
My Dear Sivaji Senthil Sir

Congratulations for your 1000 post.
by beloved Yukesh Babu

Dear Yukesh Babu. Immense thanks for your wishes and I do hope to maintain a cordial understanding between our threads under the moderating guidance of Murali Sir and Kalaivendhan Sir.I profusely thank you for unearthing and pouring in rarest of the rare data, information and video supports on the legacy of NT under the aegis of MT's legendary charm and charisma.

Thank you for all you have been doing in the right direction.

regards, senthil

allow me to share the most enjoyable duel role performance of MT cherished in my memory since my childhood!

https://www.youtube.com/watch?v=A7tBBUwZ5Ss

NT does it his way!

https://www.youtube.com/watch?v=b0csx2ikKEQ

sivaa
1st December 2014, 11:14 PM
1000 முத்ததான பதிவுகள்
வாழ்த்துக்கள் சிவாஜி செந்தில்
பல முத்தான பதிவுகளுடன் மேலும் பல ஆயிரங்கள் (1000) உயரட்டும்

Russellisf
2nd December 2014, 12:24 AM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/a_zps0b061c24.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/a_zps0b061c24.jpg.html)



அமெரிக்க ஜனாதிபதியாக கென்னடி இருந்தபோது (1962_ல்) அமெரிக்கக் குழந்தைகளுக்கு யானைக்குட்டி ஒன்றை சிவாஜி கணேசன் பரிசாக வழங்கினார். அமெரிக்காவில், இந்தியானா பொலிஸ் என்ற இடத்தில் உள்ள பூங்காவுக்கு அந்த யானைக்குட்டி அனுப்பப்பட்டது.

இதுபற்றி தகவல் தெரிந்ததும், சிவாஜிகணேசன் பற்றிய விவரங்களை கென்னடி விசாரித்தார். சென்னையில் உள்ள அமெரிக்கத் தூதரகம், சிவாஜி பற்றிய முழு விவரங்களையும் அமெரிக்காவுக்கு அனுப்பி வைத்தது. அவற்றைப் படித்துப் பார்த்த கென்னடி, கலாசார பரிமாற்ற திட்டத்தின் கீழ், சிவாஜிகணேசனை அமெரிக்க அரசின் விருந்தினராக அமெரிக்காவில் சுற்றுப்பயணம் செய்வதற்கு அழைக்குமாறு அதிகாரிகளுக்கு கட்டளையிட்டார். அதன்படி சிவாஜிக்கு அழைப்பு வந்தது.

இந்தியாவில் இருந்து நடிகர் ஒருவர் அமெரிக்காவுக்கு அழைக்கப்பட்டது அதுவே முதல் தடவை. அப்போது "உலகின் தலைசிறந்த நடிகர்" என்று அழைக்கப்பட்ட மார்லன் பிராண்டோவுக்கும் , நடிகர் திலகத்துக்கும் இடையேயான சந்திப்பு நிகழ்ந்தது.

அமெரிக்க சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு சென்னை திரும்பிய சிவாஜி கணேசனை எம்.ஜி.ஆர். மாலை அணிவித்து வரவேற்றார். விமான நிலையத்தில் இருந்து சிவாஜியை நடிகர்_நடிகைகள் ஊர்வலமாக அழைத்துச்சென்றனர்.


நடிகர் திலகத்தை, மக்கள் திலகம் வரவேற்ற அந்த அறிய புகைப்படம் உங்களுக்காக

eehaiupehazij
2nd December 2014, 07:59 AM
1000 முத்ததான பதிவுகள்
வாழ்த்துக்கள் சிவாஜி செந்தில்
பல முத்தான பதிவுகளுடன் மேலும் பல ஆயிரங்கள் (1000) உயரட்டும்

இனிய நண்பர் சிவா
அன்பிற்கினிய நண்பரும் புள்ளிவிவரங்களை நடிகர்திலகம் திரைப்பட சாதனைகளின் ஆதாரங்களை அள்ளித்தருவதில் இத்திரியின் பெரும்புள்ளியுமான தங்களின் வாழ்த்துக்கள் என்னை துள்ளி எழச்செய்து மகிழ்விக்கிறது. உளமார்ந்த நன்றிகள்.. நீங்கள் உட்பட இத்திரியின் ஜாம்பவான்களும் எழுத்து மாயக்கலை இந்திரஜித்துக்களும் தங்களின் தன்னலமில்லாத உழைப்பின் மூலம் போட்டுத்தந்த நடிகர்திலகத்தின் உறுதியான புகழ் பாதையில் அவரது ஈடு இணையில்லாத பெருமைகளை என் சக்திக்கு முடிந்தவரை பறைசாற்றியபடியே நடந்து கடந்திட உங்கள் வாழ்த்துக்கள் ஊக்கமளிக்கின் றன. நன்றிகள்.

https://www.youtube.com/watch?v=3x79T3gesAk

eehaiupehazij
2nd December 2014, 08:19 AM
நிலைத்து நின்று கதிரொளி பரப்பும் நடிப்புச் சூரியனாரின் நீள்வட்டப்பாதையில் சுற்றிச் சுழன்று ஒளிர்ந்து மிளிர்ந்த கோள்கள்/சந்திரன்கள்

தண்ணொளி நிலவுக் கோள் 8கலைநிலவு ரவிச்சந்திரன்


கலைநிலவு ரவிச்சந்திரன் அவர்கள் நடிகர்திலகம் போலவே தனது காதலிக்க நேரமில்லை முதல் படத்திலேயே Stardom Overnight புகழடைந்தவர். அடுத்தடுத்து வெள்ளிவிழா படங்கள் கொடுத்து 'வெள்ளிவிழா' நாயகராக வளர்ந்தவர். 'சின்ன வாத்தியார்' என்று மக்கள் திலகம் எம் ஜி ஆர் அவர்கள் பாணியில் சண்டைக்காட்சிகளில் பொழுது போக்கு அம்சங்களில் கலக்கினாலும் நடை உடை ஒப்பனைகளில் நடிகர்திலகத்தின் ஸ்டைலையே கடைப்பிடித்து நடிப்புச்சூரியனின் ஒளிபெற்ற சந்திரனாக வலம் வந்தார். நடிகர்த்திலகத்துடன் இரண்டே படங்கள்தான்(மோட்டார் சுந்தரம் பிள்ளை மற்றும் கவரிமான்) இணைந்தார். தனிப்பட்ட வகையில் நான், மூன்றெழுத்து அதே கண்கள் இதயக்கமலம் குமரிப்பெண்.....பின்னாளில் ஊமைவிழிகள் இவருக்குப் புகழ் சேர்த்த படங்கள். இருப்பினும் ஒரு சூரியனாக பிரகாசிக்க முடியாமல் சந்திரனாகவே தேய்பிறை கண்டது சிறிது வருந்தத்தக்கதே. நளினமான நடன அசைவுகளில் முத்திரை பதித்து இன்றும் சின்னத்திரையில் தொடர்ந்து ஒளிபரப்பாகும் ரசிக்கத்தகுந்த இனிய பாடல் காட்சிகளில் வாழ்ந்துகொண்டிருக்கிறார்! நடிகர்திலகத்துடன் இணைந்து நடித்து பெருமை தேடிக்கொண்டவருக்கு எமது நன்றிகள்

இயல்பான நடிப்பில் காதல்மன்னர் ஜெமினிகணேசன் கோடு போட்டபோது அதில் ரோடு போட்டு அசத்தினார் நடிகர்திலகம்.

மோட்டார் சுந்தரம்பிள்ளை:
இன்றளவும் இயல்பு நடிப்பின் இலக்கணமாகத் திகழும் நடிகர்திலகத்தின் பெருமைமிகு இலக்கியக் காவியம். தனக்கென்று எந்தப் பாடல்காட்சிகளும் இல்லாது வளர்ந்துவரும் இளம் கலைநிலவுக்காக இரண்டு பாடல் காட்சிகளை பெருந்தன்மையுடன் விட்டுக்கொடுத்து தனது எதிர்கால ஜோடிகள் ஜெயலலிதா, காஞ்சனா ஆகியோருக்கு தந்தையாக நடித்து பாத்திரப் படைப்பின் நடிப்பை முழுமை பெறச்செய்வதில் இப்புவியிலேயே ஒப்பாரும் மிக்காரும் இல்லாத கலைவேந்தன் தான் ஒருவரே என்பதை நடிகமேதை அய்யமற ஆணித்தரமாக நிரூபித்த உணர்ச்சிக்காவியம்

https://www.youtube.com/watch?v=oRS_BNiuWcA

சின்ன வாத்தியார்?!
https://www.youtube.com/watch?v=nIS5yGWR6KY

Watch the impeccable original dancing style of Ravi!

https://www.youtube.com/watch?v=oscylVvZ-w8

eehaiupehazij
2nd December 2014, 12:31 PM
9. நிலைத்து நின்று கதிரொளி பரப்பும் நடிப்புச் சூரியனாரின் கிரண வெப்பத்தில் பூமியின் நீர்ப் பரப்பிலிருந்து உருவான மழை மேகம் சி(வாஜி) குமாரர் என்றழைக்கப்பட்ட சிவகுமார்



சூரியன் இவ்வுலகிற்கு பயன்தர உருவாக்கிய இன்றியமையாத வாழ்வாதாரம் நீர் தரும் மழை மேகங்களே! நடிப்புக் கதிரவனால் உருவான மழைமேகமே சி(வாஜி) குமாரர் என்றறியப்பட்ட சிவகுமார் !

நடிகர்திலகத்தின் எதிரொலியாக வளர்ந்து அவர் மறைவிற்குப் பின்னரும் அவரை நினைவுகூறும் வண்ணம் தான் என்றுமே நடிகர்திலகம் சிவாஜிகணேசன் நடிப்புப் பள்ளியின் மாணவரே என்று நடிப்புமழை பொழிந்து பறைசாற்றியவர் சிவகுமார். கந்தன் கருணையில் பால்வடிமுக முருகப்பெருமானாக நடிகர்திலக வீரபாகுவையே ஆட்கொண்டவர்.....உயர்ந்த மனிதன் விளையாட்டுப்பிள்ளை படங்களில் மகனாக வளர்ந்தவர்.........மோட்டார் சுந்தரம் பிள்ளையில் ..........பசும்பொன்னில் மானம் காத்த மருமகன்.....நடிப்புச்சூரியன் வலம் வந்துகொண்டிருக்கும் வரை வான்மேகமும் மழை தந்துகொண்டே இருக்கும்! சிவகுமார் அவர்கள் நடிகர்திலகத்தின் பிரதிபலிப்பாக பெருமை சேர்த்துப் பெருமை பெற்றமைக்கு நன்றிகள்!

தனது TMS குரலை தந்து இளம்நடிகரை உயர்த்திய உயர்ந்த மனிதர் நடிகர்திலகமே

https://www.youtube.com/watch?v=6xgzRMWtw08

https://www.youtube.com/watch?v=yLU__sQaDrg

தென்னாட்டு சிங்கமே ! நெஞ்சம் கலங்கி கண்கள் பனிக்கின்றனவே !
https://www.youtube.com/watch?v=nokNc_VhVJk

https://www.youtube.com/watch?v=GVjAuUxpb0Q



But....NT always comes back! This time besides the planets of his orbital pathway ...NT Sooriyan wants to see the plants (flora and fauna) on earth flourished green and lush because of his acting sunlight through camera-photosynthesis!! What are these plants....wait and watch!!

Gopal.s
2nd December 2014, 03:21 PM
சிவாஜி-வாணிஸ்ரீ- The Ultimate Pair in Tamil Screen .

நடிகர்திலகத்தின் காதல் காட்சிகள் , Duets என்று எல்லாவற்றையும் அலசி விட்டேன்.

1952 முதல் 1960 வரை அவர் பலதரப்பட்ட கதைகள் , படங்கள், பாத்திரங்கள், நடிப்பு முறைகள் என்று அவர் focus சென்று விட்டதால் ,இந்த கால கட்டத்தில் பத்மினியோடு அவர் நடித்த ராஜாராணி,புதையல்,உத்தம புத்திரன்,தெய்வ பிறவி காதல் காட்சிகள் சிறந்தவையாகின்றன. ஆனால் இந்த கால கட்டத்தில் romance ,intimacy ,chemistry (தெய்வ பிறவியில் ஒரு காட்சியில் கழுத்தில் சொறிந்து கொள்ளும் சிவாஜியின் குறிப்பறிந்து பத்மினி சொறிந்தே விடுவார்.) இருக்குமே அன்றி erotism அன்றைய காலகட்டங்களில் யார் படத்திலும் இல்லை.ஜமுனா, மாலினி,வைஜயந்தி, சாவித்திரி ,கிரிஜா போன்றோருடன் ஒன்றிரண்டு காதல் காட்சிகள்,காதல் பாடல்கள் மிக நன்றாக இருக்கும்.

1961-1965- அவர் உடல் அமைப்பு ஒத்து வராததால் காதல் காட்சிகள் மிக அபூர்வம். அப்படி வந்தவை தேவிகா,சரோஜாதேவி, ஜமுனா சம்பத்த பட்ட நிச்சய தாம்பூலம், பலே பாண்டியா, இருவர் உள்ளம்,கல்யாணியின் கணவன்,அன்னை இல்லம்,ஆண்டவன் கட்டளை,புதிய பறவை,நவராத்திரி,சாந்தி,நீலவானம் படங்களில் இடம் பெற்றவை.

அதற்கு அடுத்த காலகட்டமான இளைத்து இளமை மீண்ட திராவிட மன்மதனின் இளமை திருவிழா காலமான 1966-1974. இந்த கால கட்டத்தில் அவரின் குறிப்படும் இளம் ஜோடிகளாக (அப்போதும் அவர் எங்கே பத்மினியையும்,சரோஜாதேவியையும் விட்டார்?)கே.ஆர்.விஜயா, ஜெயலலிதா,வாணிஸ்ரீ, பாரதி,காஞ்சனா,உஷா நந்தினி,மஞ்சுளா போன்றோரை குறிப்பிடலாம். உங்களுக்கே தெரியும் பாரதி,காஞ்சனா ஆகியோர் one movie wonders .கே.ஆர்.விஜயா, ஜெயலலிதா நடித்த பெரும்பாலானவை performance oriented not romance centric . ஆனாலும் கே.ஆர்.வியின் செல்வம்,ஊட்டி வரை உறவு, ஜெயலலிதாவின் கலாட்டா கல்யாணம், தெய்வ மகன், எங்க மாமா ,சுமதி என் சுந்தரி , ராஜா போன்ற படங்களில் romance பாடல்கள்,காட்சிகள் நன்கு வந்திரூக்கும். உஷாவின் பொன்னூஞ்சல் படத்தை பாடல்கள், காதல் காட்சிகளுக்காக பல முறை பார்த்திருக்கிறேன். அந்த காலகட்டத்தில் மஞ்சுளாவுடன் இரண்டே படங்கள் எங்கள் தங்க ராஜா,என் மகன் என்ற இரண்டு. எங்கள் தங்க ராஜாவின் கல்யாண ஆசை, இரவுக்கும் cute duets என்ற அளவில் சரி.

இங்கேதான் நம் வாணி வருகிறார். இணைகிறார்.இசைகிறார்.பிணைகிறார், பின்னுகிறார்,என் தூக்கத்தை கெடுத்த அத்தனை பட காட்சிகளின் ஜோடி.
1968- 1974 -உயர்ந்த மனிதன்,நிறை குடம், வசந்த மாளிகை, சிவகாமியின் செல்வன்,வாணி ராணி .
பின்னால் 1975-1979- ரோஜாவின் ராஜா, இளைய தலைமுறை ,நல்லதொரு குடும்பம்.(பாவ பூமியை மறப்போம்,மன்னிப்போம்) என்று அப்பப்பா!!!
என்னை ஏன் இந்த ஜோடி இத்தனை ஆட்கொண்டது?

1)Best physical compatibility in features (மூக்கு ),உடலமைப்பு,நிறம்,உயரம் என்று பிரம்மா சிவாஜிக்காக தயார் பண்ணிய pair .
2) நடிப்பிலும் ,ஓரளவு குறை சொல்ல முடியாமல் ஈடு கொடுத்தவர்.
3) நடித்த அத்தனையிலும் romance,erotism முன்னிலை படுத்த பட்டு, ultimate romantic sivaji classic வசந்த மாளிகை ஜோடி.
4)பாடல்கள் (வெள்ளி கிண்ணந்தான்,கண்ணொரு பக்கம்,மயக்கமென்ன ,இனியவளே,மேளதாளம்,எத்தனை அழகு,அலங்காரம்,ரோஜாவின் ராஜா, சிந்து நதிக்கரை )மட்டுமின்றி ,காட்சிகள் உயர்ந்த மனிதன் மர காட்சி,நிறைகுடம் வர்ணனை காட்சி,வசந்த மாளிகை plum காட்சி, வாணி ராணி உருளல், ரோஜாவின் ராஜா தியேட்டர் காட்சி, இளைய தலைமுறை பத்து நிமிட முத்த காட்சி, நல்லொதொரு குடும்பம் படுக்கை காட்சி என காட்சிகளுக்கும் குறைவே வைக்காத காதல்.
5) வாணிஸ்ரீ ,நடிகர்திலகத்திடம் தன்னை ஒப்படைத்து மெய் மறப்பார்.
6)அவர் அடுத்து என்ன பண்ணுவார் என அறிந்து தயாராய் reaction காட்டுவார். நல்லதொரு குடும்பத்தில் உதடு துடிப்பும், சிவகாமியின் செல்வனின் காது கடியும், உதாரணங்கள் .
7)நடிகர்திலகமும் 100% involvement ,interest எடுத்து காதல் காட்சிகளில் நடித்தவை வாணிஸ்ரீ சம்பத்த பட்ட படங்களிலேயே. (மன்னிக்க வேண்டுகிறேன்,மடி மீது, நெஞ்சத்திலே,பத்து பதினாறு முத்தம் முத்தம் -OK ,ஆனால் வாணியுடன் special )
8)இருவருமே காமெராவை மறந்து ஒருவருக்கொருவர் வாழ்வது போல ரசிகர்களின் (அனைத்து வயதினரும்)உணர் நிலை.
9)நடிகர்திலகத்தின் மிக சிறந்த இளமை நாட்களில் அமைந்த மிக சிறந்த ஜோடி.
10)வாணிஸ்ரீ ,சிவாஜியின் best admirer ,ரசிகை என்பதால் அவருடன் நடிப்பதை பெருமையாக உணர்ந்து அவருக்கு அனைத்திலும் ஈடு கொடுத்தவர்(சிவாஜிக்கும் ,வாணிஸ்ரீயின் grace &elegant poise,dressing sense பிடிக்கும்.).

என் உணர்வில் கலந்த அற்புதமான ஜோடி.

Gopal.s
2nd December 2014, 03:32 PM
முதல் படத்திலிருந்தே தமிழர்களின் ஒரே ஒப்பற்ற முன்னோடி சிவாஜி ,

கதை போக்கிற்கு இசைவாக பல positive energy உள்ள பாடல்களை பாத்திரங்களின் தன்மையை ஒட்டி ,பிரசார வாடை இல்லாமல் கொடுத்துள்ளார். சும்மா சில உதாரணங்கள்.....(samples )

தேச ஞானம் கல்வி , கா கா கா ,நாணயம் மனுஷனுக்கு அவசியம்,மணப்பாறை மாடு கட்டி,நான் பெற்ற செல்வம், இந்த திண்ணை பேச்சு வீரரிடம், வீடு நோக்கி ஓடி வந்த நம்மையே, உள்ளதை சொல்வேன், எல்லோரும் கொண்டாடுவோம்,வந்த நாள் முதல்,எங்களுக்கும் காலம் வரும், சமாதானமே தேவை, ஓஹோஹோ மனிதர்களே ,ஆண்டவன் படைச்சான், கவலைகள் கிடக்கட்டும், பூஜ்யத்துக்குள்ளே ஒரு ராஜ்யத்தை ,வாழ நினைத்தால் வாழலாம்,யாரை எங்கே வைப்பது என்றே,புத்தன் வந்த திசையிலே போர்,கையிருக்குது காலிருக்குது முத்தையா, உலகம் இதிலே அடங்குது ,அறிவுக்கு விருந்தாகும் ,ஆடுற மாட்டை ஆடி கறக்கணும்,ஒளி மயமான எதிர்காலம்,கேள்வி பிறந்தது அன்று, போட்டது முளைச்சுதடி கண்ணம்மா,ஆறு மனமே ஆறு,ஆறோடும் மண்ணில் எங்கும் நீரோடும்,ஒண்ணாயிருக்க கத்துக்கணும் ,வாழ்ந்து பார்க்க வேண்டும்,பார்த்தா பசுமரம், கல்லாய் வந்தவன் கடவுளம்மா, கல்வியா செல்வமா,தெய்வம் இருப்பது எங்கே,நெஞ்சிருக்கும் எங்களுக்கு நாளை என்ற நாளிருக்கு,இனியது இனியது உலகம்,நான் பிறந்த நாட்டுக்கெந்த நாடு, ஒரு நாள் நினைத்த காரியம், நான் தன்னம் தனிக்காட்டு ராஜா,ஏரு பெரிசா இந்த ஊரு பெரிசா,ஆனைக்கொரு காலம் வந்தா,இதோ எந்தன் தெய்வம்,அம்பிகையே ஈஸ்வரியே,சுதந்திர பூமியில் பலவகை,நீங்கள் அத்தனை பேரும்,நான் நாட்டை திருத்த போறேன்,நல்லவர் குரலுக்கு,நாளை என்ன நாளை,உலகம் வெறும் இருட்டு,தங்கங்களே நாளை தலைவர்களே,இரண்டு கைகள் நன்கானால்,என்னை யாருன்னு நெனச்சே.

போதுமா, இன்னும் வேணுமா, நம் தலைவர் சொல்லாததா, செய்யாததா?

Gopal.s
2nd December 2014, 04:07 PM
எல்லோரையும் மயக்கிய மங்கை என்று நடிகர்திலகத்தால் புகழ பட்ட தங்கை

என்ற pathbreaking சிவாஜி anti -sentiment படத்தை 1967 (கடலூர்),1971(சொரத்தூர் ஜோதி) யில் பார்த்த பிறகு மறுமுறை நேற்று பார்த்தேன்.

என்னை ஆச்சர்ய படுத்தியது .Hats off sivaji &Thirulokchandar . formatting &execution அருமை.

ஆனால் u tube இல் மசமசவென்று உள்ளது. நல்ல DVD எங்கும் பார்த்த ஞாபகம் இல்லை.பழைய இருவர் உள்ளம் நிலையிலே இன்று இப்படம்.

இப்படம் ஒரு மூன்று வெவ்வேறு புள்ளிகளில் நகரும். ஆனால் இணைப்பிலே ஒரு logic ,nerrative surprise என்ற ஒரு professional perfection கொண்ட திரைக்கதை.

சிவாஜி- அவர் துயர் மிகுந்த இளமை பருவம் -தங்கை- அவர் பிரச்சினை.

அழகான முக்கோண குறுக்கீடுகளாய் நல்லெண்ணம் கொண்ட குடும்ப காப்பாள டாக்டரம்மா கே.ஆர்.விஜயா ,தோழமையுடன் கூடிய சம நிலை well wisher காஞ்சனா, ஊசலாடும் சிவாஜி அருமையாய் வந்திருக்கும்.

சூதாட்டம், அது சார்ந்த சில குழப்பங்கள் ,திருப்பங்கள், நல்லெண்ண போலீஸ் பாலாஜி என்ற action ,பொழுதுபோக்கு சார்ந்த இன்னொரு track .

ஆனால் அனைத்தையும் வழி நடத்துவது protogonist சிவாஜியின் எண்ணங்கள்,தேவைகள், குழப்பமான ethics ஆகியவை.

நடிகர் திலகம் இந்த படத்தில் பாத்திரம் உணர்ந்து நடித்த வசீகர பாங்கு சொல்லி மாளாது.

restraint மிகுந்த extravert பாத்திரம்.

மிக துயரங்களுக்கு ஆட்பட்ட, சிறையில் ஆங்கிலம் உட்பட எல்லா அறிவும் பெற்றும், சமூக அங்கீகாரம் இன்றி வறுமையில் உழன்று சூதாடினாலும் போதுமென்ற மனமும், தேவைகளின் பாற்பட்டு சூதாட்ட பிடியில் சிக்கி அதுவே தொழில்,ஆசை, பொழுது போக்கு என்ற addiction நிலைக்கு தள்ள படுவது , எந்த வித inhibition இல்லாத தன் நிலையை புரிந்த, தாழ்வு மனப்பான்மை இல்லாத extravert .

என்ன ஒரு execution ,style ,perfection . திரைக் கதையின் மூன்று புள்ளிகளிலும் பாத்திரத்தை நூல் கோர்க்கும் துல்லியத்துடன் கையாண்டிருப்பார்.

கே.ஆர்.விஜயா, காஞ்சனா ,பாலாஜி,மேஜர் அனைவருமே நல்ல துணை பாத்திரங்கள்.

எம்.எஸ்.வீ. இசை முதல் பாடல் தவிர மற்ற ஐந்தும் அருமை.(கேட்டவரெல்லாம் , தண்ணீரிலே,சுகம், இனியது, நினைத்தேன் உன்னை) பாடல்களின் lead scenes (ஏற்கெனெவே எழுதி விட்டேன்) .

எனக்கு மிக மிக பிடித்த காட்சிகள் .

மேஜர்-கே.ஆர்.விஜயாவுடன் காரில் பயணிக்கும் ,இனியது பாட்டுக்கு முந்திய காட்சி.

மழையில் நனைந்து காஞ்சனா வீட்டிற்கு செல்லும் காட்சி.

பிரிண்ட் மச மச வென்று இருந்ததால் கேமரா ,எடிட்டிங் பற்றி விமரிசிப்பது கஷ்டம்.

சிவாஜியின் குறிப்பிட வேண்டிய படங்களில் ஒன்று தங்கை. என் பாலாஜி வரிசை- ராஜா,தீபம்,தங்கை, தியாகம், நீதி.

sss
2nd December 2014, 05:34 PM
http://3.bp.blogspot.com/_hwdv3bttE4I/Sgqxbr2MENI/AAAAAAAAAtI/Sawv6s_hbNM/s1600/scan0048.jpg

eehaiupehazij
2nd December 2014, 08:00 PM
10. நிலைத்து நின்று கதிரொளி பரப்பும் நடிப்புச் சூரியனாரின் கிரண வெப்பத்தில் உருவான மழை மேகம் பொழிந்த நீர் ஓடைகளாக வழிந்து ஆறுகளாக ஓடிக் கலந்த கடல்பரப்பே நடிகர்திலகத்தால் தீபம், தீர்ப்பு படங்கள் வாயிலாக மறுவாழ்வு பெற்று அவர் நடிப்பின் நிழலிலேயே நாட்டாமையாக உயர்ந்த விஜயகுமார் அவர்கள்.

நடிகர்திலகத்துக்கு தம்பியாக நடிக்க உகந்த முகவெட்டு கொண்டவர். மாங்குடி மசாலா மைனராக முடிந்திருக்க வேண்டியவர் திரைவாழ்வில் தீபம் ஏற்றி உயர்வடைய வைத்தார் நடிகர்திலகம். குணச்சித்திரப் பாதையில் நடிகர்திலகத்தின் நடிப்புப் பள்ளியின் இன்னொரு மாணவராக சேரன் பாண்டியன் நாட்டாமை படங்களின் மூலம் நடிப்புத் திறனை உயர்த்தி நடிகர்திலகத்திற்கு பெருமை சேர்த்திட்டவருக்கு எமது நன்றிகள்

https://www.youtube.com/watch?v=WAAjt_v8bXg

https://www.youtube.com/watch?v=wEYjsqlhoK0

Russellisf
2nd December 2014, 11:47 PM
சிவாஜிகணேசன் நடித்த "ஜல்லிக்கட்டு'' படத்தில் இன்னொரு ஹீரோவாக சத்யராஜ் நடித்தார். இந்தப்படமும் வெற்றி பெற்றது.

சிவாஜியுடன் "ஜல்லிக்கட்டு'' படத்தில் நடித்த சத்யராஜ-க்கு, படத்தில் முக்கியமான கேரக்டர். நீதிபதி ஒருவர் தனக்கு ஏற்பட்ட பாதிப்பை ஒரு அதிரடி இளைஞன் மூலம் சரி செய்து கொள்ளும் கதை. இதில் பாதிக்கப்பட்ட நீதிபதியாக சிவாஜியும், அவருக்கு உதவும் இளைஞராக சத்யராஜ-ம் நடித்தார்கள். வித்தியாசமான கதைக்கருவைக் கொண்ட இந்தப்படமும் பெரிய அளவில் வெற்றி பெற்றது.

இந்தப் படத்தின் வெற்றி விழாவில், அன்றைய முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆர். கலந்து கொண்டு சிவாஜி உள்ளிட்ட கலைஞர்களை வாழ்த்தினார்.

எம்.ஜி.ஆர். கலந்து கொண்ட கடைசி சினிமா விழா இதுதான்.

சிவாஜியுடன் நடித்த "ஜல்லிக்கட்டு'' அனுபவம் குறித்து சத்யராஜ் கூறியதாவது:-

"ஜல்லிக்கட்டு படத்தை நண்பர் மணிவண்ணன்தான் இயக்கினார். சித்ரா லட்சுமணன் தயாரித்தார்.

கதையைக் கேட்கும்போதே இது நன்றாக ஓடும் என்று தோன்றியது. சில கதைகளை கேட்டதுமே, அது வெற்றி பெறும் என்று சொல்லிவிட முடியும். ஜல்லிக்கட்டு அப்படியொரு கதை.

அப்போதெல்லாம் நானும் மணிவண்ணனும் செட்டிலே ஒருவரை ஒருவர் `தலைவா!' என்று கூப்பிட்டுக் கொள்வோம். இந்த `தலைவா' பழக்கம் செட்டில் இருந்த மற்ற டெக்னீஷியன்களையும் தொற்றிக் கொண்டது.

இது எதில் போய் முடிந்தது தெரியுமா? செட்டில் சிவாஜி சாரிடம் போன டான்ஸ் மாஸ்டர் பாபு அவரிடம், "தலைவா! ஷாட் ரெடி'' என்று சொல்லப்போக, பதிலுக்கு சிவாஜி சார் அவரை கேலி செய்யும் அளவுக்குப் போய்விட்டது. "ஏண்டா! உங்க `தலைவா' என் வரைக்கும் வந்தாச்சா?'' என்று கேட்க, மாஸ்டர் அவசரமாய் `எஸ்கேப்' ஆகியிருக்கிறார்.

நானும் பிரபுவும் `தலைவரே' என்று அழைத்துக் கொள்வதும் சிவாஜி சாருக்கு தெரிந்திருக்கிறது. இப்போது அவரே செட்டில் "தலைவா'' என்று அழைக்கப்பட்டு விட்டதால், அன்று படப்பிடிப்பு முடிந்து வீட்டுக்குப் போனவர், பிரபு வரும் வரை காத்திருந்திருக்கிறார். பிரபு வீட்டுக்குப் போனதும் "வாங்க தலைவரே!'' என்று அழைத்து அவரை வெலவெலக்க வைத்திருக்கிறார்.

மறுநாள் இதுபற்றி பிரபு என்னிடம் சொன்னபோது, எங்களுக்கெல்லாம் அடக்கமுடியாத சிரிப்பு.

நேரத்துக்கு மதிப்பு கொடுப்பதில் சிவாஜி சாருக்கு நிகர் அவரேதான். காலை 7 மணிக்கு படப்பிடிப்பு என்றால் நான் 7 மணிக்கு செட்டில் இருப்பேன். ஆனால் அதற்கு முன்பே சிவாஜி சார் செட்டில் இருப்பார்.

ஒருநாளாவது அவரை முந்திவிடவேண்டும் என்று இன்னும் சீக்கிரம் வரத்தொடங்கினேன். அப்போதும் சிவாஜி சார் எனக்கு முந்தி வந்திருந்தார். நடிப்பில் மட்டுமின்றி, `பங்ச்சுவாலிட்டி'யிலும் சிவாஜி சாருக்கு இணையாக யாருமில்லை என்பதை நானும் இந்த நாட்களில் கண்கூடாக உணர்ந்தேன்.

"ஜல்லிக்கட்டு'' படப்பிடிப்புக்காக பெங்களூரில் இருந்து மங்களூருக்கு விமானத்தில் போனோம். நான், மணிவண்ணன், கேமராமேன் சபாபதி, சித்ரா லட்சுமணன் எல்லோரும் ஒரே ரூமில் தங்கினோம். சிவாஜி சார் பக்கத்து ரூமில் தங்கினார்.

படப்பிடிப்பு முடிந்து ஊருக்கு கிளம்ப வேண்டிய நாள். காலை 6 மணிக்கு விமானம் ஏறவேண்டும். சிவாஜி சார் அதிகாலை 4 மணிக்கு விழித்தவர் எங்கள் அறைக்கு வந்திருக்கிறார். நாங்கள் முந்தின நாள் இரவு சிக்கன் பிரியாணி சாப்பிட்டு விட்டு அப்படியே தூங்கியிருக்கிறோம். அதிகாலையில் எங்களை வந்து பார்த்தவர், நாங்கள் படுத்திருந்த இடத்துக்கு அருகில் சிக்கன் எலும்புகள் கிடந்ததை பார்த்திருக்கிறார். அப்போதைக்கு ஒன்றும் சொல்லாமல் போனவர், நாங்கள் புறப்பட்டு தயாராகி வந்தபோது பிடித்துக்கொண்டார். "ஏண்டா! காலையிலேயே எழுப்பலாம்னு வந்தால் செத்துப்போன கோழியோட ஒண்ணா படுத்திருக்கீங்களே'' என்று கிண்டல் செய்தார். அந்த கிண்டலில் ஒரு தந்தைக்கே உரிய அக்கறை இருந்தது.

விமான நிலையத்துக்கு புறப்பட சிவாஜி சார் அவசரப்படுத்தினதால், ஆளாளுக்கு சீக்கிரமே கிளம்பி விட்டோம். கமலா அம்மாளும் சிவாஜி சாருடன் வந்திருந்தார்கள். "மாமா இப்படித்தான் அவசரப்படுத்துவாங்க. நாமபோறப்போ விமான நிலைய கேட்டை திறந்திருக்க மாட்டாங்க'' என்றார்.

கமலா அம்மாள் சொன்னதுபோலவே ஆயிற்று. நாங்கள் போய்ச் சேர்ந்த பிறகுதான் விமான நிலைய பயணிகள் கேட்டையே திறந்தார்கள்! அப்போது மங்களூரில் இருந்து பெங்களூருக்கு தினமும் ஒரு விமானம்தான். எனவே விமானத்தை தவறவிட்டால் தேவையில்லாமல் ஒருநாள் காத்திருக்க வேண்டியிருக்கும். இந்த வகையில் சிவாஜி சாரின் `அவசரம்' நியாயமானதுதான்.

பார்த்ததுமே "வாங்க கவுண்டரே!'' என்பார். படப்பிடிப்பின்போது கிடைக்கிற இடைவெளி நேரத்தில் குடும்ப விஷயங்கள் பற்றி பேசுவார். எங்கள் சித்தப்பா அவரது நண்பர் என்ற முறையில் எங்கள் குடும்பம் பற்றி ஆர்வமாய் விசாரிப்பார். என் சிறுவயதிலேயே விவசாய நிலங்கள் விற்கப்பட்டதை தெரிந்து கொண்டவர், "நீ சம்பாதிச்சு சொந்த ஊர்லயே நிறைய தென்னந்தோப்பு வாங்கணும்'' என்று சொன்னார். அவர் சொன்னதுபோலவே பொள்ளாச்சி பகுதியில் வாழவாடி ஊரில் 95 ஏக்கர் தென்னந்தோப்பு வாங்கியிருக்கிறேன்.

"ஜல்லிக்கட்டு'' படம் எதிர்பார்த்த மாதிரியே நன்றாக ஓடி, வெற்றி பெற்றது. இந்தப் படத்துக்குப் பிறகே பாரதிராஜாவுடன் "வேதம் புதிது'' படத்தில் நடிக்கும் வாய்ப்பு வந்தது.''

இவ்வாறு சத்யராஜ் கூறினார்.

Murali Srinivas
3rd December 2014, 12:14 AM
மதுரையில் வரும் வெள்ளி முதல் [டிசம்பர் 5,2014] சென்ட்ரல் திரையரங்கில் அண்ணன் ஒரு கோவில் திரையிடப்படும் விவரத்தை இங்கே பதிவு செய்திருந்தோம். படத்தின் வெளியீட்டை முன்னிட்டு திரையரங்கில் அமைக்கப்பட்டிருக்கும் பானர் மற்றும் வரவேற்பு வளைவு [Welcome Arch]

பானர்

https://mail.google.com/mail/u/0/?ui=2&ik=ddb7951de6&view=fimg&th=14a0a06f805b4fd4&attid=0.1&disp=inline&safe=1&attbid=ANGjdJ8pgCcEtUvShz5VImEjMTUmctsV7JdsthRmqF_ vXuNO8xfxXfUspQXAUAIwU065TfJKTyw6aOZFxm2wpBhhbHeW6 E7Ac9gRH_CWoFqIjeGGZK8BR-PTio2RN_U&ats=1417544746339&rm=14a0a06f805b4fd4&zw&sz=w996-h544

வரவேற்பு வளைவு

https://mail.google.com/mail/u/0/?ui=2&ik=ddb7951de6&view=fimg&th=14a0b6b3173f43e6&attid=0.1&disp=inline&safe=1&attbid=ANGjdJ8vcb9-AglSgP4vNDyv8AHlWV11FboVocjxWcHekMuQoWgft29m8UmqFx UMdwi9F2XMQnKcKswLX0qJAgde1yJHmdsRSBjrO2PQwNgkaPzs CKYmn3QH-K_bPBw&ats=1417544741528&rm=14a0b6b3173f43e6&zw&sz=w996-h544

சந்தோஷ செய்திகளுடன் மீண்டும் சந்திப்போம்.

அன்புடன்

Russellisf
3rd December 2014, 07:34 AM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/a_zps136f079c.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/a_zps136f079c.jpg.html)

courtesy net

RAGHAVENDRA
3rd December 2014, 07:44 AM
http://i1146.photobucket.com/albums/o528/imagivity/NTFilmsRelease2014/AOKbnrMaduraiFW_zps03daca30.jpg

One of the banners Murali Sir mentioned

Gopal.s
3rd December 2014, 09:20 AM
(04/07/1958 இல் வெளியாகி 55 ஆண்டுகள் கடந்து விட்ட என்னை மிக கவர்ந்த நடிகர் திலகத்தின் காவியம்)
அன்னையின் ஆணை.

எனக்கு மிக பிடித்த ,என்றுமே என்னை அதிசயிக்க வைக்கும் நடிகர்திலகத்தின் படங்களில் ஒன்று அன்னையின் ஆணை. நடிகர்திலகத்தின் தீவிர ரசிகரும் ,மறைந்த எழுத்தாளரும் ஆன சுஜாதா ,ஒரு திருமணத்தில் நடிகர்திலகத்தை பார்த்த போது தனக்கு பிடித்த படமாக இதை குறிப்பிட்டதை நினைவு கூர்ந்துள்ளார். ஒரு unique &surprise package .நடிகர்திலகம் தன் நடிப்பின் பாணியை சற்றே மேற்கு நோக்கி மாற்ற ஆரம்பித்த படம்.

கச்சிதமான திரைக்கதை ,கூர்மையான இயக்கம் (C .H .நாராயண மூர்த்தி),முரசொலி மாறனின் அளவான, sophistication மிகுந்த (அன்றைய trend லி ருந்து விலகாத)வசனங்கள் என்று அருமையான கூட்டு முயற்சி.

எனக்கு தெரிந்து ஒரு சண்டை காட்சி கூட வைக்காமல் குரூரமான வில்லனை மேலும் குரூரமாக பழி வாங்குதல்,தியாகம் என்ற கூட்டுக்குள் அடையாமல் பழி வாங்கவே மகனை பாடு பட்டு வளர்க்கும் அன்னை, மனசாட்சியை அழுத்தி அன்னையின் ஆணையை சிரமேற்கொண்டு சிறிது கொடூரம் காட்டும் நாயகன் என்று தமிழ் பட cliche க்களை உடைத்தது. இது அந்த பதிபக்தி காலங்களில் பெரிய சாதனை.உள்ளத்தை தொடும் காட்சிகள் உண்டு.ஆனால் அனாவசிய sentiment கிடையாது.

சாம்ராட் அசோகன் நாடகம் எல்லோரும் அறிந்தது. ஆனால் அது ஒன்று மட்டுமே படத்தில் இயக்குனரின் compromise .மற்ற படி எடுத்து கொண்ட subject இல் rocket வேக laser பயணம்.comedy உறுத்தல் கிடையாது. ஒரு Holly wood படத்துக்கு நிகராக தயாரானது.தமிழ் பட ரசிகர்களின் ரசனை அடி மட்டத்தில் இருந்த காலத்தில் ஒரு அந்த நாள்,ஒரு அன்னையின் ஆணை, ஒரு புதிய பறவை, ஒரு தில்லானா மோகனாம்பாள் கொடுக்கும் துணிவு நடிகர்திலகத்தை தவிர யாருக்கும் வராது. படித்த தமிழர்களில் இவ்வளவு கணிப்பொறி மூடர்கள் நிறைந்திருக்கும் இக்காலத்தில்,படிக்காத தமிழ் நாட்டில் 1958 இல் நடிகர்திலகத்தின் guts பற்றி என்ன சொல்ல?

ஆரம்ப கால சிவாஜி-சாவித்திரி ஜோடி (வணங்காமுடி,அன்னையின் ஆணை,காத்தவராயன்) எனக்கு மிக பிடிக்கும்.(1961 க்கு பிறகுதான் தங்கையாகி விட்டாரே!!!)கனவின் மாயா லோகத்திலே எனக்கு மிக பிடித்த duet .மேதை நடனத்தில் ஒரு cue தவறி விட்டு ,அதை re -take வாங்காமல் நடனத்தின் பகுதி போலவே மாற்றி சமாளிப்பார்.பத்து மாதம் சுமந்திருந்து பாடல் படமாக்க பட்ட விதம் ,நடிகர்திலகத்தின் ஆழமான சோகம்!!!அப்பப்பா!!!

இதில் Y .G .M முதல் அனைவராலும் பேச பட்ட அற்புத காட்சியொன்று.(ஒரு ஆங்கில பட inspiration ).தன தந்தையை கணேஷ் தான் (படத்திலும்) ஏதோ செய்து விட்டார் என சந்தேகிக்கும் பிரேமா கோப பட்டு கீறி பனியனை கிழித்து விட, நிதானமாய் wash basin சென்று ரத்த காயங்களை towel ஆல் துடைத்து ,திரும்பி வந்து அந்த towel ஆலேயே சாவித்திரியை அடித்து தன் ஆத்திரத்தை நடிகர்திலகம் வெளிக்காட்டும் விதம்.

பார்த்து முப்பது வருடம் ஆயிற்று. ஆனாலும் பசுமையாக உள்ளத்தில் என்றென்றும்.

eehaiupehazij
3rd December 2014, 11:55 AM
NT rises back to see his flora !

நடிப்புச் சூரியனின் ஒளியால் வளம் கண்டு பூத்துக் குலுங்கி நடிப்பு நறுமணம் பரப்பிய பசுமைப் பூந்தோட்டங்கள் ! நடிப்புத் தெய்வத்தின் வழிபாட்டுக்கு உகந்த நடிப்பு மலர்கள் !! மலர் மாலைகள்!!!

கதாநாயகரின் கதாநாயகியர்

(ரோஜா) மலர் மாலை 1 நாட்டியப் பேரொளி பத்மினி

நடிகர்திலகத்தின் தலைமை கதாநாயகி நாட்டியப்பேரொளி 'பப்பிம்மா' பத்மினி. மாசுமருவற்ற வதனத்திற்கு சொந்தக்காரர். நடனத்திற்கு புகழ்பெற்ற திருவிதாங்கூர் சகோதரிகளில் நடுவலர். நடிகர்திலகத்தின் புயல் போன்ற ஆரம்ப காலம் தொட்டு இறுதிவரை அதிக படங்களில் ஜோடிசேர்ந்து (30க்கும் மேல்) இணைவான இசைவான நடிப்பின் மூலம் அவருக்குப் பெருமை சேர்த்தவர். உத்தம புத்திரன், புதையல், தூக்குதூக்கி, தில்லானா மோகனாம்பாள், வியட்நாம் வீடு, இருமலர்கள் நடிகர்திலகத்துடன் ஈடுகொடுத்து நடிப்பால் பெருமை சேர்த்திட்ட வெற்றிப்படங்கள். தனிப்பட்டமுறையில் மங்கையர் திலகம், வஞ்சிக்கோட்டை வாலிபன், சித்தி, பூவே பூச்சூட வா.....பெயர் சொல்லும் படங்கள். நடிகர்திலகத்தைப் பெருமைப் படுத்தியவருக்கு எமது வந்தனம்! நன்றிகள்!

வயது முதிர்ந்த தம்பதியர் பிள்ளைகளால் ஒதுக்கப்படும்போது ஆதரவற்ற நிலையில் படும் வேதனைகளை நடிப்புச்சூரியனுடன் இசைந்து நாட்டியப்பேரொளி வெளிப்படுத்தும் விதம்.....படமல்ல....பாடம்!

https://www.youtube.com/watch?v=3H8cGM7n0V0

நடிகர்திலகத்துடன் இணைந்த இசை நாட்டிய முத்திரைப் படம் என்றும் நம் சிந்தனையை விட்டு நீங்கிடாத தில்லானா மோகனாம்பாள் !

https://www.youtube.com/watch?v=-Jgsxds78qQ

இரு மலர்கள் (ரோஜா மலர் பத்மினி மல்லிகை மலர் (சூடியிருக்கும்) விஜயா) பூஜித்த நடிப்புத் தெய்வம்

https://www.youtube.com/watch?v=AW8Y-IsPWBs

More about Padmini....

Padmini (12 June 1932 – 24 September 2006) was an Indian actress and trained Bharathanatyam dancer who acted in over 250 Indian films. She acted in the Tamil, Telugu, Malayalam and Hindi language films. Padmini, with her elder sister Lalitha and her younger sister Ragini, were called the "Travancore sisters”

At the age of 14, Padmini was cast as the dancer in the Hindi film Kalpana (1948), launching her career. Ezhai Padum Padu released in 1950 was her first film in Tamil

Padmini starred with several of the most well-known actors in Indian film, including Sivaji Ganesan, Gemini Ganesan, N. T. Rama Rao, Raj Kapoor, Shammi Kapoor, Sathyan, Prem Nazir, Rajkumar, S. S. Rajendran and M. G. Ramachandran.

She appeared with Sivaji Ganesan in more than 30 films. Her association with Sivaji Ganesan started with Panam in 1952. Some of her noted Tamil films include Thanga Padhumai, Anbu, Kaattu Roja, Thillana Mohanambal, Vietnam Veedu, Edhir Paradhathu, Mangayar Thilakam and Poove Poochudava.

Her most famous was Thillana Mohanambal, a Tamil film, where she plays a dancer competing against a musician(Sivaji Ganesan ) to see whose skills are better.

Padmini was well known for her professional rivalry with actress Vyjayanthimala, the successful dancer-actress. They performed a dance number in the Tamil film Vanjikottai Valiban starring Gemini Ganesan; the well known song was "Kannum Kannum Kalanthu" which was sung by P. Leela and Jikki. In the song they were pitted against each other. Due to their professional rivalry the song has a cult following since the film was released; the popularity of the song surpassed the popularity of the film

Padmini died of a heart attack at the Chennai Apollo Hospital on 24 September 2006.

(Courtesy : Wikipedia and You Tube.)

Ending with the 'Signature' song sequence for Padmini (as well as Vaijayanthimaala !)

https://www.youtube.com/watch?v=AMotc9NQ9B8



NT returns to get adorned by the Jasmine Garland (மன்னனே மயங்கும் பொன்னான மல்லிகை மலர்) K.R. Vijaya!

Russellxss
3rd December 2014, 04:28 PM
அண்ணன் சிவாஜி ஒரு கோயில் திரைப்படத்திற்கு சிவாஜி பக்தர்கள் வைக்கும் பேனர்கள்.

http://i1369.photobucket.com/albums/ag235/sundarajan/kannan10x6mayyam_zps1ff5874e.jpg


எவரும் எட்டாத அதிசியம் சிவாஜி புகழ் காப்போம்.

sss
3rd December 2014, 06:39 PM
http://i43.tinypic.com/21cfsyr.jpg

Article from indya.com written by s.shiva kumar

There is a lump in your throat as you watch him lying in state, cocooned by a transparent coffin. He looks like he is taking a nap between shots. There is the same calm on his visage that he had before the director shouted "action"!
V C Ganesan, rechristened Sivaji Ganesan by his ideological idol, Periyar, was the best actor I have had the pleasure of watching on celluloid. That is thanks to his biggest fan, Kamal Hassan.

I discovered Sivaji because I had the temerity to suggest that Sivaji overdid everything. Kamal suggested that I watch Sivaji's earlier films and then talk to him. I reluctantly did. "How do you define overacting?" thundered Kamal. "If there is a death in the family, several people react in various ways."

So I bought a VCR and borrowed scratchy prints of Sivaji starrers from a library whose owner was a diehard fan himself. Being a Kamal admirer, I had preconceived notions. It took some time and films like Utthama Puthran, Deiva Magan and Shabash Meena, not to mention the innumerable mythological and historical costume dramas for me to agree with his understudy. I also realised how many nuances Kamal had imbibed from the great actor. "If any South Indian actor denies he has not been influenced by Sivaji he's a damn liar," Kamal had said.

Shivaji was the most well equipped actor of his generation. Not in the contemporary sense, which would mean bulging biceps, learning karate and dance. There was a commitment that was reflected in his performances. He had an inexhaustible repertoire. He could play a bumbling village idiot with as much aplomb as an aristocrat or a king in a historical. "There was something about his performances that reminded me of Russian ballet," says Kamal.

Kamal was confounded by another aspect. "Actors of my generation have Sivaji and Brando to look upto for inspiration but I wonder who inspired this man." When Kamal asked Sivaji this question, the thespian did not have an answer.

Sivaji is quoted as saying that had he been in Hindi cinema, he would have won the National award. That is a bitter actor speaking, incredulous at the fact that none of his innumerable performances have fetched him National recognition. The fact is that if he had migrated, he would not have got the meaty roles befitting his talent. The National Awards lost its sanctity the day it was awarded to MGR. Anyway, Sivaji was always a better actor than a politician.

It was in the seventies that Sivaji's performances started deteriorating. Fighting a losing battle with obesity but still insisting on playing college student, Sivaji resorted to donning weird wigs and wearing multi-hued costumes. The subtlety was disappearing, replaced by unnecessary facial contortions. It took a director of Bharathiraja's calibre to bring back the actor's natural abilities in Muthal Maryadhai.

The thespian's last great performance was in his disciple, Kamal's Thevar Magan. Kamal did not direct the film, but wrote one of the finest screenplays ever. If you have watched the film, you will notice that till the great actor dies on screen, Kamal stays in the shadows. The few scenes where the two greats interact are a treat and a lesson in timing. The thespian did get a special mention from the jury deciding the National awards for his performance, but it was more like adding insult to injury.

Sivaji was considered a faultless actor because he was never at a loss of expression. He could play an emotional scene with as much ease as a comic one. His sense of timing and elucidation of the spoken word was a treat and he never had to shove his hands into his pocket not knowing what to do with them.

http://thiruttudvd.net/wp-content/uploads/2014/07/Bandham000000010.jpg

My only tryst with the actor was when Kokila Mohan introduced us on the sets of Garuda Sowkyama, a remake of Godfather. I was surprised when he mentioned that he had read my interview with Kamal in Frontline. Just as we were getting to know each other, Baby Shalini (now actor Ajith's wife) jumped on his lap tried to tickle him, but never found his ribs. The great actor was flabbergasted when he asked Shalini why she didn't smile and the kid, with a poker face asked, "Do you want a natural smile or a filmi one?" Sivaji raised his eyebrows, looked at me and nodded as if to say, "You better watch out for her."

The actor is dead with his wish to play Periyar unfulfilled, but his outstanding performances will have to be shown to aspiring actors in film institutes. His name will be used as a synonym for acting in the thesaurus of world cinema.

Georgeqlj
3rd December 2014, 08:08 PM
View Album, http://s1055.photobucket.com/user/senthilvel45/library/

Russellxss
3rd December 2014, 08:46 PM
அண்ணன் சிவாஜி ஒரு கோயில் திரைப்படத்திற்கு சிவாஜி பக்தர்கள் வைக்கும் பேனர்கள்.http://i1369.photobucket.com/albums/ag235/sundarajan/mayyam3_zps65636a54.jpg

எவரும் எட்டாத அதிசியம் சிவாஜி புகழ் காப்போம்.

Russellxss
3rd December 2014, 08:47 PM
அண்ணன் சிவாஜி ஒரு கோயில் திரைப்படத்திற்கு சிவாஜி பக்தர்கள் வைக்கும் பேனர்கள்.

http://i1369.photobucket.com/albums/ag235/sundarajan/mayyam2_zps992c18d6.jpg

எவரும் எட்டாத அதிசியம் சிவாஜி புகழ் காப்போம்.

eehaiupehazij
3rd December 2014, 08:48 PM
NT rises back to see his flora !

நடிப்புச் சூரியனின் ஒளியால் வளம் கண்டு பூத்துக் குலுங்கி நடிப்பு நறுமணம் பரப்பிய பசுமைப் பூந்தோட்டங்கள் ! நடிப்புத் தெய்வத்தின் வழிபாட்டுக்கு உகந்த நடிப்பு மலர்கள் !! மலர் மாலைகள்!!!

கதாநாயகரின் கதாநாயகியர் Part 2

( மல்லிகை) மலர் மாலை 2 புன்னகை அரசி K.R.விஜயா

K.R.விஜயா கற்பகம் படத்தில் கொடி இடையாளாக அறிமுகமாகி ஊட்டி வரை உறவில் பிடி இடையாளாக அசத்தி பின்னாளில் கொஞ்சம் தடி இடையாளாக (நடிகர்திலகத்தின் 'அம்மா'வாக திரிசூலத்தில் ராஜம்மா ரேஞ்சில் ....!) மாற்றம் கண்ட மணம் நிறைந்த மன்னரும் மனம் மயங்கும் மல்லிகை மலர் ! தனது மங்களகரமான வதனத்தில் மல்லிகைமுல்லை அரிசிப் பல் வரிசையால் புன்னகை அரசியாக வலம் வந்து ரசிகர்களை வசீகரித்து கிறங்கடித்தவர். நடிப்புப் பந்தயத்தில் பத்மினியையும் சரோஜாதேவியையும் தேவிகாவையும் பின்னுக்குத் தள்ளிவிட்டு தனது இடத்தில் நின்று நிலைத்து நடிகர்திலகம் பெருமிதம் கொள்ளும் வண்ணம் பல வெற்றிப்படங்களை வழங்கியவர். மறக்க முடியாத ஊட்டிவரை உறவு, ராணி மகா ராணி என்று நடிகர்திலகம் கலாய்த்த சரசுவதி சபதம், நடிகர்திலகமும் புன்னகை அரசியும் ஒப்பனையின்றி நடித்திட்ட நெஞ்சிருக்கும் வரை, திக்கெங்கும் திகைக்க வைத்த திரிசூலம், ரம்மியமான சொர்க்கம், தமிழக காவல்துறை அதிகாரிகளே முன்மாதிரியாக வ(சீக)ரித்த தங்கப்பதக்கம், ...... நடிகர்திலகத்தின் வெற்றிநெற்றியில் திலகமாக அமர்ந்து பெருமை சேர்த்த விஜயா அவர்களுக்கு நன்றி

தனிப்பட்ட முறையில் காதல் மன்னருடன் இணைந்து நடித்த கற்பகம், ராமு, குறத்திமகன், சங்கமம் மற்றும் மக்கள் திலகம் இணைவில் நான் ஏன் பிறந்தேன், விவசாயி, நல்லநேரம், மக்கள் கலைஞருடன் பட்டணத்தில் பூதம், மேயர் மீனாக்ஷி கலைநிலவுடன் இதயக்கமலம், சபதம், முத்துராமனுடன் சர்வர் சுந்தரம், தீர்க்க சுமங்கலி மறக்க முடியாத திரைக்காவியங்கள்.


பூமாலையில் ஒரு மல்லிகை என்று நடிகர்திலகத்தின் ஒப்புதல் பெருமையே!

https://www.youtube.com/watch?v=aHR0BfPNF7U

Action and Reaction ‘damakkaa’ in Sorkkam!தலைநிறைய மல்லிகைப்பூ புன்னகை அரசியின் பிம்ப அடையாளம்!

https://www.youtube.com/watch?v=9sTnkdMMYWA

More about K.R. Vijaya…

Vijaya played the title character, a heroine, in her 1963 debut film Karpagam, directed by K. S. Gopalakrishnan. Gopalakrishnan also directed her 100th film Naththaiyil Muthu, but, Kuraththi Magan alongside GG the alter ego Kuravar, stands a monument for KR Vijayaa's matured acting prowess that had grown up with her age and experience!This movie ushered some sort of a revolution!

Watch the pain on her face and her anguish over her son who also resorts to kuravar dance like the unusually rough GG!

https://www.youtube.com/watch?v=l7q1_E3HsvI

Vijaya has starred in almost 400 films in all the South Indian languages, including 100 films each in Malayalam and Telugu, half-a-dozen in Kannada, and one in Hindi titled Oonche Log (1965)..

Some of her critically acclaimed films: Karpagam, Selvam, Anarkali, Saraswathi Sabadham, Nenchirukkum Varai, Kurththi Magan, Namma Veetu Theivam (the movie in which she first started depicting deities), Dheergasumangali (she first started playing a mother in this film), Idhayakamalam, Thangappathakkam,Panchavarna Kili and Thirusoolam.

With NT of course, with more than 30 films, she must have balanced the score with Padmini!

Courtesy : Wikipedia and You Tube

Ending with the 'Signature' song of KR Vijayaa!!

மல்லிகை என் மன்னன் மயங்கும் பொன்னான மலரல்லவோ .........வாணிஜெயராம் அவர்களுக்கும் இதுவே முத்திரைப்பாடல்

https://www.youtube.com/watch?v=OXb-MnTstR0



NT returns to get worshipped with நடிப்புசூரியக்கதிர் பட்டுச் சிவந்த செவ்வந்திப்பூ அபிநய சரசுவதி சரோஜாதேவி அவர்கள்

Russellxss
3rd December 2014, 08:49 PM
அண்ணன் சிவாஜி ஒரு கோயில் திரைப்படத்திற்கு சிவாஜி பக்தர்கள் வைக்கும் பேனர்கள்.

http://i1369.photobucket.com/albums/ag235/sundarajan/mayyam1_zps23d569eb.jpg

எவரும் எட்டாத அதிசியம் சிவாஜி புகழ் காப்போம்.

Russellxss
3rd December 2014, 08:59 PM
மதுரை சென்ட்ரல் தியேட்டரில் 5.12.2014 வெள்ளி முதல்
அண்ணன் ஒரு கோயில் .
http://i1369.photobucket.com/albums/ag235/sundarajan/mayyam4_zps635e736b.jpg

எவரும் எட்டாத அதிசியம் சிவாஜி புகழ் காப்போம்.

Russellxss
3rd December 2014, 09:01 PM
மதுரை சென்ட்ரல் தியேட்டரில் 5.12.2014 வெள்ளி முதல்
அண்ணன் ஒரு கோயில் .

http://i1369.photobucket.com/albums/ag235/sundarajan/mayyam5_zps55c22aee.jpg

எவரும் எட்டாத அதிசியம் சிவாஜி புகழ் காப்போம்.

sivaa
3rd December 2014, 10:44 PM
மதுரை சென்ட்ரல் தியேட்டரில் 5.12.2014 வெள்ளி முதல்
அண்ணன் ஒரு கோயில் .

http://i1369.photobucket.com/albums/ag235/sundarajan/mayyam5_zps55c22aee.jpg

எவரும் எட்டாத அதிசியம் சிவாஜி புகழ் காப்போம்.

சுந்தரராஜன் சார் வணக்கம்

தங்கள் பதிவுகள் மிகவும் பிரமாதம்

தாங்கள் பதிவிடும் பானர் விளம்பரங்கள்
என்பன மறுவெளியீடாக வெளியிடப்படும் படங்களின்
பானர்கள் என்பதனால்

அவற்றை மெயின் திரியில்
பதிவிடுவதோடு மட்டுமல்லாமல்

மறு வெளியீட்டிலும் மன்னரின் சாதனை திரியிலும்
பதிவிடுங்கள் நன்றி

RAGHAVENDRA
4th December 2014, 07:01 AM
http://i1146.photobucket.com/albums/o528/imagivity/ntfans%20programmes/EUinvitefw_zpsf135d111.jpg

eehaiupehazij
4th December 2014, 09:58 AM
NT rises back to see his flora !

நடிப்புச் சூரியனின் ஒளியால் வளம் கண்டு பூத்துக் குலுங்கி நடிப்பு நறுமணம் பரப்பிய பசுமைப் பூந்தோட்டங்கள் ! நடிப்புத் தெய்வத்தின் வழிபாட்டுக்கு உகந்த நடிப்பு மலர்கள் !! மலர் மாலைகள்!!!

கதாநாயகரின் கதாநாயகியர்

( செவ்வந்திப்பூ) மலர் மாலை 3 அபிநய சரஸ்வதி கன்னடத்துப் பைங்கிளி B. சரோஜாதேவி அவர்கள்

நடிப்புச்சூரியனின் செங்கதிர் பட்டு சிவந்திட்ட செவ்வந்திப்பூவே அபிநய சரஸ்வதி கொஞ்சிப் பேசும் கன்னடத்துப் பைங்கிளி B. சரோஜாதேவி அவர்கள். ஒருவகையில் பன்முகப் பாடகர் திலகம் T.M. சௌந்தரராஜன் போன்று உடன் நடிக்கும் நடிகருக்குத் தக்கவாறு நடிப்பில் 'ஜிம்பர ஜிம்போ ஜிம்போ' மாயாஜாலம் காட்டியவர் ! மக்கள் திலகத்தின் ஆஸ்தான கதாநாயகியாக எங்கவீட்டுப் பிள்ளை, அன்பே வா.....வெறும் அழகு பொம்மையாக relaxed ஆக (பாசம் விதிவிலக்கு) வலம் வந்தவரின் நடிப்பில் வளம் கூடியது நடிகர் திலகம்/காதல் மன்னர் இணைவில் வெளிவந்த ஆலயமணி, கல்யாணப் பரிசு, பாலும் பழமும், இருவர் உள்ளம், பாகப்பிரிவினை, புதிய பறவை, தாமரை நெஞ்சம், பணமா பாசமா போன்ற திரைக்காவியங்கள் மூலமே! ஒரு மலர்மாலையில் எத்தனைவகைப் பூக்கள் கோர்க்கப் பட்டிருந்தாலும் தனித்துவத்துடன் மனம் கொள்ளைகொள்ளும் பரவசத்தைத் தருவது செவ்வந்திப்பூவே! கண்களுக்கு மட்டுமன்றி நாசிக்கும் சுகந்தமணம் பரப்பும் குணத்தை கண்டறிந்து தனது காவியங்களின் மூலம் அவரது நறுமண நடிப்புத் திறமையை உலகுக்கு பறைசாற்றிய நடிகர்திலகத்தின்/காதல்மன்னரின் பூஜைக்கு வந்த மலரான செவ்வந்திப்பூ சரோஜாதேவி அவர்களுக்கு சிரம் தாழ்ந்த நன்றி வணக்கங்கள்!

The ever green song sequence of Saroja Devi with NT, etching in our memory!

நடிகர்திலகம் (நடிப்பு பற்றிப்) பேச நினைத்ததையெல்லாம் சரோஜாதேவி தனது அபிநயங்களிலேயே பேசிக்காட்டினார்

https://www.youtube.com/watch?v=lWDg8dheihg

The 'Signature Movie' of NT 'Pudhiya Paravai' entertained the viewers with this 'sweeter than honey' visual feast pleasing our eyes, ears, hearts and minds alike!

(பழைய பறவை) பறந்து செல்ல மனமிருந்தும் (புதிய) பறவை துணையில்லையே

https://www.youtube.com/watch?v=wIfV3DtahmE

GG starrers too provided wide scope for Sarojadevi to parade her inimitable acting skills!!(சரோஜாதேவியின் கையிலே செவ்வந்தி) மலரிருந்தால் மணமிருக்கும் தனிமையிலே ...

https://www.youtube.com/watch?v=aBgwFy4ejd8

More about Sarojadevi,,,,

B. Saroja Devi (born 7 January 1938) has acted in Kannada, Tamil, Telugu and Hindi movies. She is referred to as "Kannadathu Paingili" (meaning Kannada's Parrot) by Tamil film industry and as "Abinaya Saraswathi" by Kannada Film Industry. She has acted in nearly 190 films in a period of 6 decades. Saroja Devi is one of the most successful female film stars in the history of Indian cinema and she was at her peak as the main female lead heroine in films in the period 1958-85. Saroja Devi received the Padma Sri, the fourth-highest civilian honour, in 1969 and Padma Bhushan, third highest civilian award, in 1992 from the Government of India. She holds the world record for being the actress with most number of consecutive films as the lead heroine -161 films from 1955-1984, without playing supporting roles. She is the Indian film heroine with the longest career as the main lead female heroine in Indian films - 29 years from 1955-1984.

People doubted her ability to speak Tamil, but MGR had faith in her and encouraged her to learn and speak Tamil and cast her in his home production Nadodi Mannan in 1958 as well.It was the Tamil film Nadodi Mannan opposite MGR in 1958 that catapulted Saroja Devi to superstar status in Tamil Film industry. In an interview she said ’Thirudathe’ was my first film with MGR. As the shooting got delayed, he introduced me in Naadodi Mannan, which was released before ‘Thirudathe’. After this she immediately received offer to make her Hindi debut opposite Dilip Kumar in Paigam(1959). She never allowed any one to dub for her and insisted that she would speak by herself as a result none of her Tamil movies her voice was dubbed by any other artiste since the beginning of her career.Then she gave hits opposite Gemini Ganesan in Thamarai Nenjam, Kalyana Parisu, Panama Pasama, Adipperukku, Kairasi and opposite Sivaji Ganeshan in Aalayamani, Baga Pirivinai,Vidi Velli,Palum Pazhamum, Pudhiya Paravai, Iruvar Ullam(1958 till 1960), reinforcing her acting forte.
Courtesy : Wikipedia and You Tube

Ending with the 'Signature' song sequence of 'Abinaya Saraswathi' with NT in her prestigious Alayamani!

(நடிப்பறியாக்) கல்லையும் (நடிப்பு முக்)கனியாக்குமே நடிகர்திலகத்தின் ஒரு வாசகம் திருவாசகமாய் !

https://www.youtube.com/watch?v=RzSTszcoqm0



NT will be back to say a 'hello' to his 'ஜாடிக்கேற்ற மூடி' ஜோடியான (கரகாட்டக்) கனகா(வின் அம்மா)ம்பர மலர்மாலை தேவிகா அவர்கள் !

Russellisf
4th December 2014, 10:34 AM
MY FAVOURITE SONGS NT WITH SAROJADEVI

https://www.youtube.com/watch?v=pKfU43Jmr1Q

https://www.youtube.com/watch?v=a3SvjgZmyv0

https://www.youtube.com/watch?v=PkWkcpsGYRQ






கதாநாயகரின் கதாநாயகியர்

( செவ்வந்திப்பூ) மலர் மாலை 3 அபிநய சரஸ்வதி கன்னடத்துப் பைங்கிளி B. சரோஜாதேவி அவர்கள்

நடிப்புச்சூரியனின் செங்கதிர் பட்டு சிவந்திட்ட செவ்வந்திப்பூவே அபிநய சரஸ்வதி கொஞ்சிப் பேசும் கன்னடத்துப் பைங்கிளி B. சரோஜாதேவி அவர்கள். ஒருவகையில் பன்முகப் பாடகர் திலகம் T.M. சௌந்தரராஜன் போன்று உடன் நடிக்கும் நடிகருக்குத் தக்கவாறு நடிப்பில் 'ஜிம்பர ஜிம்போ ஜிம்போ' மாயாஜாலம் காட்டியவர் ! மக்கள் திலகத்தின் ஆஸ்தான கதாநாயகியாக எங்கவீட்டுப் பிள்ளை, அன்பே வா.....வெறும் அழகு பொம்மையாக relaxed ஆக (பாசம் விதிவிலக்கு) வலம் வந்தவரின் நடிப்பில் வளம் கூடியது நடிகர் திலகம்/காதல் மன்னர் இணைவில் வெளிவந்த ஆலயமணி, கல்யாணப் பரிசு, பாலும் பழமும், இருவர் உள்ளம், பாகப்பிரிவினை, புதிய பறவை, தாமரை நெஞ்சம், பணமா பாசமா போன்ற திரைக்காவியங்கள் மூலமே! ஒரு மலர்மாலையில் எத்தனைவகைப் பூக்கள் கோர்க்கப் பட்டிருந்தாலும் தனித்துவத்துடன் மனம் கொள்ளைகொள்ளும் பரவசத்தைத் தருவது செவ்வந்திப்பூவே! கண்களுக்கு மட்டுமன்றி நாசிக்கும் சுகந்தமணம் பரப்பும் குணத்தை கண்டறிந்து தனது காவியங்களின் மூலம் அவரது நறுமண நடிப்புத் திறமையை உலகுக்கு பறைசாற்றிய நடிகர்திலகத்தின்/காதல்மன்னரின் பூஜைக்கு வந்த மலரான செவ்வந்திப்பூ சரோஜாதேவி அவர்களுக்கு சிரம் தாழ்ந்த நன்றி வணக்கங்கள்!

The ever green song sequence of Saroja Devi with NT, etching in our memory!

https://www.youtube.com/watch?v=lWDg8dheihg

The 'Signature Movie' of NT 'Pudhiya Paravai' entertained the viewers with this 'sweeter than honey' song pleasing our eyes, ears and minds alike!

https://www.youtube.com/watch?v=wIfV3DtahmE

GG starrers too provided wide scope for Sarojadevi to parade her inimitable acting skills!!

https://www.youtube.com/watch?v=aBgwFy4ejd8

More about Sarojadevi,,,,

B. Saroja Devi (born 7 January 1938) has acted in Kannada, Tamil, Telugu and Hindi movies. She is referred to as "Kannadathu Paingili" (meaning Kannada's Parrot) by Tamil film industry and as "Abinaya Saraswathi" by Kannada Film Industry. She has acted in nearly 190 films in a period of 6 decades. Saroja Devi is one of the most successful female film stars in the history of Indian cinema and she was at her peak as the main female lead heroine in films in the period 1958-85. Saroja Devi received the Padma Sri, the fourth-highest civilian honour, in 1969 and Padma Bhushan, third highest civilian award, in 1992 from the Government of India. She holds the world record for being the actress with most number of consecutive films as the lead heroine -161 films from 1955-1984, without playing supporting roles. She is the Indian film heroine with the longest career as the main lead female heroine in Indian films - 29 years from 1955-1984.


Ending with the 'Signature' song sequence of 'Abinaya Saraswathi' with NT in her prestigious Alayamani!

https://www.youtube.com/watch?v=RzSTszcoqm0

eehaiupehazij
4th December 2014, 11:03 AM
Thanks Yukesh. But my favourite MGR-Sarojadevi combo song sequences are from Paasam, Anbe Vaa and Enga Veettup pillai:

எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத மனதை வருடும் இதமான ஜெமினி டைப் பாடல் மக்கள்திலகத்திற்காக !
https://www.youtube.com/watch?v=cy58kizXUSY

காலங்கள் மாறினாலும் மனதில் காட்சி மாறாத Come September type பசுமைப் பாடல்!

https://www.youtube.com/watch?v=dBuAD62LTxA

From எம் ஜி ஆரின் Signature movie Enga Veettu Pillai!

https://www.youtube.com/watch?v=nAraoNbwb9g

sss
4th December 2014, 01:19 PM
நடிகர் திலகமே ...

உன்னை உலக கலைஞர்கள் முதல் உள்ளூர் அறிஞர்கள் வரை எல்லோரும் பாராட்டும் அந்த தன்மையை எங்கிருந்து பெற்றாய் ???
கர்னாடக இசை மேதை செம்பை வைத்திய நாத பாகவதர் மற்றும் நடிகர் திலகம் உள்ள ஒரு மிக அபூர்வ படம் :

http://2.bp.blogspot.com/-uOjNs72LBf8/U6A_f3nHEmI/AAAAAAAADP8/NOoa-pLlHHc/s1600/GreatShivajiGanesanGreetedByLegendaryChembai.jpg

'King Of Acting', Shivaji Ganesan Greeted By 'Emperor Of Music', Chembai Vaidyanatha Bhagavathar.
Photo Took On Shivaji Ganesan 's Residence in Chennai.

eehaiupehazij
4th December 2014, 06:47 PM
NT rises back to see his flora !

நடிப்புச் சூரியனின் ஒளியால் வளம் கண்டு பூத்துக் குலுங்கி நடிப்பு நறுமணம் பரப்பிய பசுமைப் பூந்தோட்டங்கள் ! நடிப்புத் தெய்வத்தின் வழிபாட்டுக்கு உகந்த நடிப்பு மலர்கள் !! மலர் மாலைகள்!!!

கதாநாயகரின் கதாநாயகியர்

கனகாம்பர மலர் மாலை 4 தேவிகா

நடிகர்திலகத்தின் புகழ் மகுடத்தில் மாணிக்கமாய் ஒளிர்ந்து அவருக்கு மிகவும் பொருத்தமான கதாநாயகி என்று ஒப்புக்கொள்ளப்பட்டவர். 'ஜாடிக்கேற்ற மூடி' ஜோடியான (கரகாட்டக்) கனகா(வின் அம்மா)ம்பர மலர்மாலையாக இன்று வழிபாட்டுக்கு வந்திருக்கும் தேவிகா அவர்கள். நடிகர்திலகத்தின் திரைவாழ்வின் உச்சமான கர்ணன் கதாநாயகி, பலே பாண்டியா, நீலவானம்,அன்புக்கரங்கள், முரடன் முத்து திரைப்படங்களில் நடிகர்திலகத்திற்கு ஈடுகொடுத்து பெருமை சேர்த்தவர், ஆண்டவன் கட்டளை இவர் திரைப்பயணத்தில் ஒரு மைல்கல். தனிப்பட்டமுறையில் நெஞ்சம் மறப்பதில்லை நெஞ்சில் ஓர் ஆலயம் வானம்பாடி மறக்க முடியாதவை
கிளாமரைஅடக்கமானஆடை அலங்காரத்திலேயே அம்சமாக வெளிக்கொணர்ந்தவர். இன்றும் நடிகர்திலகத்துடன் அவர் தோன்றும் திரைப்பாடல் காட்சிகள் ரம்மியமானவையே ! எமது வணக்கங்கள் !

காலத்தால் அழியாத கல்வெட்டு காவியம் கர்ணனில் அலங்காரக் கோலமான பாடல்!
https://www.youtube.com/watch?v=96WAGOzyBTs

நடிகர்திலகம் அமைதியான நதியாய் வழிந்தோடும்போது அலைகளைக் கண்டிராத ஓடம் தேவிகா !

https://www.youtube.com/watch?v=zjAOJ9xOP-w


More on Devika :

Devika or Prameela Devi (25 April 1943 – 25 April 2002) was a Tamil and Telugu actress. She is regarded as a versatile and graceful heroine of her era. She was known for her natural beauty which was the key in her casting in mythological films like Karnan, thiruvilaiyadal. Her notable films are Sumaithangi, Nenjil oru Aalayam and Marakka Mudiyuma. She started acting at the age of 12. Her spectacular performances made a heart throbe of many people in those days as expressed by Tamil writer Sujatha in one of his old essays.

Neela vanam was one of the best movies for her excellent performance. This movie is always memorable and enjoyable her role with Nadigar Thilakam. Devika also made an indelible mark in family drama, the genre that easily wins the hearts of the audience, both urban and rural. With producers churning out such films, some tear-jerkers and others light, and no dearth of heroines, it was due to her talent and charm that Devika got the opportunity to play memorable roles in films like Vanambadi, Vazhkai Padagu and Nenjam Marappadhillai. If the song Sonnathu needhana... in C.V.Sridhar\'s Nenjil Or Aalayam attained immortality the credit for making it visually poignant goes to Devika, who rendered it in the landmark film. She had carved a niche for herself with her grace and beauty at a time when other heroines vied for the top slot. She did total justice to whatever character she portrayed never failing to give a wholesome performance. She was a blend of grace and charm, a versatile actress Devika acted in about 150 films in Tamil, Telugu and Malayalam.

. Sivaji and Devika figured in some memorable movies like Karnan, that powerful mythological, and the hilarious Bale Pandiya and Kulamagal Radhai, Neelavanam, annai Illam, Pavamanippu among the best

courtesy : wiki and You Tube

But, Devika's signature song :

நெஞ்சம் மறக்கவொன்னாத சுசீலாம்மாவின் தேனிசைக் குரல் குழைவில் தேவிகாவின் சிறப்பான நடிப்பில்..

https://www.youtube.com/watch?v=NdnCxcEderU



NT returns for his reminiscence with Sowkaar Jaanaki, the Lotus flower that emerged elegantly from the pool to worship our Acting Sooriyan!

ScottAlise
4th December 2014, 07:59 PM
NIce videos Senthil sir ,

sss
4th December 2014, 08:01 PM
இணைய நண்பர் திரு சிவாஜி ரசிகன் என்னும் திரு ராஜ்குமார் (சேலம்) அவர்களின் கருத்து :

ஒரு கலை ரசிகனின் காத்திருப்பு


நட்சத்திரங்கள் இடையே
அபூர்வமாக தோன்றிய
துருவ நட்சத்திரம் நீ...

அரிதாரம் பூசவே
அவதாரம் எடுத்தாயோ நீ ?

உண்மை.... உண்மை....
அவதாரங்கள்
அரிதாய் தான் நிகழ்கின்றன !

அரிதாய் நிகழ்ந்த இந்த அவதாரம் எடுக்க
எத்துனை நாட்கள் தவம இருந்தாய் ?
யாரிடம் பெற்று வந்தாய் இந்த வரத்தை ?

நடிகனாய் நீ அவதரித்ததால்
பல அவதாரங்கள் மீண்டும் அவதரித்தன -
வெண் திரையில்....

பட்டியல் இட்டால் பக்கம் போதாது..

கதாபாத்திரங்களின் தன்மையை
உன் நடையிலேயே காட்டியவன் அல்லவா நீ ?
நடிப்பால் நவரசங்களை காட்டியவனே...
துடிக்கும் உன் கண்னசைவும்
எங்களுக்கு
ஓராயிரம் கதை சொல்லுமே ...

எங்கே சென்றன அந்த கண்கள் இன்று ?

இன்னும் ஓராயிரம் அவதாரங்களை
உன் மூலம் தரிசிக்க காத்திருந்தோமே ...
அதற்குள் ஏன் சிறகுகள் விரித்துப் பறந்தாய் ?

சூரக்கோட்டை சிங்கமே !
உன்
நடிப்பு பசிக்கு தீனி போட
இளம் இயக்குனர்கள் பலர்
இங்கு
விருந்தோடு காத்திருக்கிறார்கள்...
நீ
எப்போது வரப்போகிறாய் ?
எப்படி அவதரிக்க போகிறாய் ?

திலகம் இழந்த வெள்ளித்திரை
இன்னும் அப்படியே தான்
இருக்கிறது...

நீ விட்டு சென்ற
சிம்மாசனம் இன்னும்
காலியாகத்தான் இருக்கிறது...
நீ
எப்போது வரப்போகிறாய் ?
எப்படி அவதரிக்க போகிறாய் ?

காத்திருக்கிறேன்...


- சிவாஜி ரசிகன் என்னும் ராஜ்குமார்


அன்பு சிவாஜி நெஞ்சங்களே, ரத்த சம்பந்தமில்லாத எண்ணிவிடக்கூடிய இழப்புகளில் மிகவும் வருத்தப்பட வைத்த இழப்பு இவருடையது. அவர் இறந்தபோது ஒரு வாரம் 'சன்' டிவியில் அவரின் படங்களை கொத்தாக தினமும் போட்டபோது, ஒரு வாரம் வேலைபோனாலும் பரவாயில்லை என்று கருதி விடுப்பு எடுத்து பார்த்தது நினைவுக்கு வருகிறது. சிறுவயதில் எம்.ஜி.ஆரின் ரசிகனாக இருந்து இவரின் நடிப்பால், என் உறவினர் ஒருவரால் மாற்றப்பட்டேன். நான் மிக அதிகமாக ரசித்துப்பார்த்த படம் "உத்தமபுத்திரன்" - எத்தனை முறை பார்த்தேன் என்று நினைவில் இல்லை. எனக்குத் தெரிந்து இவர் ஒருவர்தான் இரு வேடங்களில் தனித்தனியான தன்மை கொண்டு இரு பரிமாணங்களை கொடுத்தவர். இப்போது இரு வேடங்களில் நடிப்போர் ஒருவர் பேண்டும், வேட்டியும் கட்டி வித்தியாசப்படுத்துகிறார்கள்.

ஏற்கனவே பல இழைகளில் கொடுத்திருந்தாலும், பார்க்க பார்க சலிக்காத அவரின் நடிப்பாற்றலால் வெளிவந்த ராஜா ராணி திரைப்படத்தை மீண்டும் உங்களுக்கு இதோ, ஒரே நேர்கோட்டில் புகைப்படக்கருவி மாறாத காட்சியை பாருங்கள், :

http://www.youtube.com/watch?v=vAE6xvRMn34


அவர் இலங்கை வானொலிக்கு அளித்த பேட்டி (ஏற்கனவே கொடுத்ததுதான்)


http://www.youtube.com/watch?v=Xi-dILr69Ww&feature=related


யார் இப்பொழுது தமிழை இவர்போல் துல்லியமாக உச்சரிக்கிறார்கள்? அவர் காலத்திலேயே வாழ்ந்து, ரசிக்கவைத்த ஆண்டவனுக்கு நன்றி.

ScottAlise
4th December 2014, 08:03 PM
பார்த்ததில் பிடித்தது -49

வெகு நாட்களுக்கு எழுதுவதில் மகிழ்ச்சி . பார்த்த படங்களை அதாவது அதிகம் தெரிந்த படங்களை பற்றி எழுதாமல் , அதிகம் அறிய படாத படங்களை பற்றி எழுதுவதில் ஒரு வித ஈடுபாடு , சில நடிகர் திலகத்தின் படங்களின் பெயர்களை மட்டுமே கேட்டு உள்ளேன் , படத்தை dvd அல்லது தொலைகாட்சியில் பார்த்தது இல்லை , அப்படி பட்ட படங்களை பற்றி தான் இனிமேல் வர போகும் சில பதிவுகள்

அந்த வரிசையில் முதல் படமாக நான் எழுத இருப்பது தாம்பத்யம்

இப்படி ஒரு படம் வந்தது பல நண்பர்களுக்கு தெரிந்து இருக்காது , எனக்கும் தெரியாமல் இருந்தது , ஆனால் திரு வாசுதேவன் சார் இந்த படத்தை பற்றி அழகாக எழுதி இருந்தார் அதை படித்ததில் இருந்து படத்தை பார்க்க வேண்டும் என்று ஒரே ஆசை , தேடுதல் அதிகமாக படத்தை பார்க்க வாய்ப்பு கிடைத்தது ,கூடவே இன்னும் ஒரு ஆச்சர்யம் அது இந்த பதிவின் கடைசியில் சொல்லி விடுகிறேன்

முதலில் படத்தை பற்றி :
1980 க்கு பிறகு நடிகர் திலகத்தின் படங்களை பற்றி காரசாரமான விவாதங்களை இன்றும் பலர் சொல்லி கேட்டு இருக்கிறோம் , 1980க்கு பிறகும் நிறைய நல்ல படங்களை கொடுத்து இருக்கிறார் , துணை , அனந்த கண்ணீர் , வா கண்ணா வா என்று பல படங்கள்

சில படங்கள் கவனிக்க படாமல் போவது உண்டு , அதில் சில மிகவும் அருமையாக இருக்க 50 % வாய்ப்பு இருக்கும் , அப்படி பட்ட ரத்தினம் தான் இந்த தாம்பத்யம் .

ScottAlise
4th December 2014, 08:03 PM
படத்தின் கதை விரிவாக :

பிரபல இருதய அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் சத்தியமூர்த்தி (சிவாஜி) தன் மனைவி (அம்பிகா) மற்றும் தன்னுடைய மகள்கள் (நல்லவனுக்கு நல்லவன் துளசி, கலைச்செல்வி), மாமனார் VKR இவர்களுடன் மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ்ந்து வருகிறார்.

மனைவி மேல் உயிரை வைத்து இருக்கும் சத்தியமூர்த்தி தன் மனைவியின் முன்கோப குணத்தை பொருது கொண்டு , அதே சமயம் அதை ஒரு குறையாக சுட்டி காட்டமல் அழகாக குடும்பத்தை அனுசரித்து சந்தோசமாக வாழுகிறார்

துடுகுதனமான தன் மகள் துளசி , ஒரு போலீஸ் அதிகாரியை காதலிக்க , கலைச்செல்வி ஒரு வக்கீலையும் காதலிக்க , காதலுக்கு பச்சை கோடி காட்ட , நிச்சியதார்த்தம் நடக்கும் என்று எதிர்பார்க்க , படத்தில் மிக பெரிய திருப்பம் வருகிறது

தன் அக்கா டாக்டர் லதாவை (ராதா) கொலை செய்தவனை கண்டு பிடித்து தண்டிப்பதை லட்சியமாக வைத்து இருக்கிறார் , இன்ஸ்பெக்டர்

திருமணத்துக்கு துணி எடுக்க போகும் பொது ஒரு தாடிக்காரன் , சத்தியமூர்த்தியை blackmail செய்கிறான் , சத்தியமூர்த்தி அவனுக்கு பணம் தந்து கொண்டே இருக்கிறார் , இதை அறிந்து கொள்ளும் துளசி தன் வருங்கால கணவரிடம் இதை சொல்ல , அவர் புலனாய்வு செய்து அந்த போட்டோவை வைத்து சத்தியமூர்த்தி கொலை செய்து விட்டதாக குற்றம் சாடுகிறார் இன்ஸ்பெக்டர் , சத்தியமூர்த்தி அதை மறுக்காமல் குற்றத்தை ஏற்று கொண்டு சிறைக்கு செல்லுகிறார் , கல்யாணம் நின்று விடுகிறது

ஜானகி ஜெயிலுக்கு சென்று கணவனிடம் நடந்ததை சொல்லுமாறு வற்புறுத்துகிறாள். சூழ்நிலை காரணமாகத்தான் அந்தக் கொலையை செய்ததாக கூறுகிறார் சத்தியமூர்த்தி.இதை கேட்டு ஜானகியின் இதயம் பலவீனம் அடைய , ஜானகியின் தந்தை சிறைக்கு வந்து , ஜானகியின் உடல் நலம் பற்றி குறிபிடுகிறார் , அதை அறிந்து ஜானகிக்கு அறுவை சிகிச்சை செய்ய சிறையில் இருந்து தப்பி விடுகிறார் ,

தந்தையை கண்டதும் அவரை கடுமையான வார்த்தைகளால் தாகுகிறார் அருணா (துளசி ), அதை பொறுக்க முடியாமல் நடந்த உண்மையை சொல்ல துவங்குகிறார் சத்தியமூர்த்தி.

ScottAlise
4th December 2014, 08:14 PM
மருத்துவ கல்லூரியில் research scholar ஆக வேலை செய்கிறார் சத்தியமூர்த்தி., அதே கல்லூரியில் பணிபுரியும் லதா அவரை ஒருதலையாக காதலிக்கிறார் ஆனால் சத்தியமூர்த்தி.அவரிடம் ஆழமான நட்பை மட்டும் வெளிபடுத்துகிறார் , ஹவுஸ் owner மகள் ஜானகி இவரை விரட்டி விரட்டி காதலிக்கிறார் , ஒரு கட்டத்தில் சத்தியமூர்த்தி அந்த காதலை ஏற்று கொள்ளுகிறார் , இந்த நேரத்தில் VKR யின் நண்பரின் மகன் (இப்போது தாடிக்காரன் black மெயில் செய்த நபர் )


VKR தன் மகளின் காதலை ஏற்று சத்தியமூர்த்தி ஜானகி திருமணத்தை நடத்தி வைக்கிறார் , இது தெரியாமல் மீண்டும் ஜானகியை பெண் கேட்டு வந்து ஜானகிக்கு கல்யாணம் நடந்த விஷயம் அறிந்து அவரை பழி தீர்க்க எண்ணுகிறார்

சத்தியமூர்த்தி ஜானகி வாழ்கை இனிமையாக செல்ல சில வருடங்கள் கழித்து குழந்தை பிறக்கிறது , ஒரு நாள் எதிர்பாராமல் ஜானகி விபத்தில் சிக்கி சுய நினைவை இழக்கிறார் . அவரை வீட்டில் வைத்து குண படுத்த நினைக்கும் சத்தியமூர்த்தி மருத்துவரை தேட அவருடன் படித்த , நன்கு பரிச்சயமான லதாவை தன் மனைவியின் சிகிச்சைக்காக அணுகுகிறார்

லதா சிசைகை அளிக்க தொடங்குகிறார் , ஜானகி குழந்தையை வைத்து விளையாடு கொண்டு இருக்க , லதா அதை தடுக்கிறார் , ஆத்திரம் அடையும் ஜானகி கையில் கிடைத்ததை எடுத்து வீசும் பொது , கத்தியையும் வீச லதாவின் வயிற்றில் கத்திக்குத்து பட்டு லதா உயிருக்குப் போராடுகிறாள். அந்த சம்பவத்தைப் பார்க்கும் ஜானகி அதிர்ச்சியில் மயக்கமாகிறாள். வயிற்றில் கத்தி செருகப்பட்டிருக்கும் நிலையில் துடிக்கும் லதாவைக் காப்பாற்ற அவள் வயிற்றிலிருந்து கத்தியை சத்தியமூர்த்தி எடுக்கப் போக, சரியான சந்தர்ப்பம் பார்த்துக் கொண்டிருந்த ஜக்கு அதைப் படம் பிடித்து விட்டு ஓடி விடுகிறான்.(ஜக்கு என்பவர் தான் black மெயில் ஆசாமி , பல மலையாள படத்தில் சிறந்த குணசித்திர , வில்லன் வேடங்களில் நடித்தவர் ) லதா உயிரை விடப் போகும் நிலையில் தனக்கிருந்த சத்தியமூர்த்தி மீதான காதலை அவரிடம் சொல்கிறாள். லதா ஜானகி தன் மீது கத்தி வீசியதைப் பார்த்து அதிர்ச்சியில் மயக்கமுற்றதால் அந்த அதிர்ச்சியே அவளை பழைய நிலைக்குத் திரும்ப குணப்படுத்தி இருக்கக் கூடும் என்றும், அப்படி பழைய மாதிரி அவளுக்கு நினைவு திரும்பியிருந்தால் தற்போது நடந்த எந்த நிகழ்வையும் அவளிடத்தில் சொல்லக் கூடாது... அப்படிச் சொன்னால் தான் ஒரு கொலைகாரி என்ற குற்ற உணர்வே அவளைக் கொன்று விடும் என்று கூறி அதைக் கூறாமல் ஜானகியைப் பார்த்துக் கொள்ளும்படி கூறி இறந்துவிடுகிறார்

உண்மையை அறியும் அருணா தன் தங்கை , தாத்தா(VKR )அனைவரிடம் சொல்ல அனைவரும் ஜானகிக்கு அறுவை சிகிச்சை செய்ய ஏற்பாடு + ஒத்துழைப்பு செய்கிறார்கள் , மகள்கள் இருவரும் போலீஸ் கெடுபிடிகளை சமாளிக்க ,அறுவைசிகிச்சையை வெற்றிகரமாக முடித்து போலீசில் surrender ஆகிறார் சத்தியமூர்த்தி

கோர்ட் அவருக்கு மாதம் 2 நாட்கள் ஜெயிலுக்கு வந்து கைதிகளுக்கு மருத்துவ உதவி செய்ய வேண்டும் என்று தண்டனை வழங்குகிறது

தடைபட்ட திருமணம் நடக்க , தன்னை ஒரு தலையாக காதலித்து ,தன் மனைவிக்காக உயிரை விட்ட லதாவின் தம்பியை மருமகனாக அடைந்து , சத்தியமூர்த்தி நிம்மதியாக , அதே சமயம் மனைவி , மக்களுடன் சந்தோசமாக வாழுகிறார் .

ScottAlise
4th December 2014, 08:14 PM
நடிகர்களின் பங்களிப்பு :

நடிகர் திலகத்தின் பாத்திரம் பற்றி சற்று விரிவாக எழுத இருப்பதால் அதை கடைசியாக எழுதி உள்ளேன்

அம்பிகா :

ரஜினி , கமல் உடன் 80 ல் ஜோடி போட்டு நடித்து இருக்கிறார் , வாழ்கை படத்தில் நடிகர் திலகம் படம் முழுவதும் வயசான getup ல் வரும் பொது இவரும் old மேக் up ல் graceful தோற்றதில் இருப்பார் , இந்த படத்திலும் வயசான தோற்றம் தான் , கொஞ்சம் dominant கேரக்டர் , தான் சொல்வது தான் சரி என்று நினைப்பவள் , முன்கோபம் ஜாஸ்தி , ஆனால் கணவனே கண் கண்ட தெய்வம் , தன் கணவர் கொலை செய்தது போல் இருக்கும் படத்தை பார்த்த பிறகும் கூட ஒரு துளி சந்தேகம் இல்லாமல் தன் மகளிடம் வாகளது வாங்கும் காட்சியில் அவருக்கு ஒரு சபாஷ் .

தான் ஏமாற்ற பட்டு விட்டதாக நினைத்து மருகும் காட்சியும் , அதை exhibit செய்யும் காட்சியும் அருமை ,அதே போல் flash back காட்சிகளில் நடிகர் திலகத்தை விரட்டி , விரட்டி காதலிக்கும் காட்சிகள் light hearted moments . அதுவும் பெண் பார்க்க ஜக்கு வரும் பொது , அம்பிகா , சிவாஜி சார் பேசும் வசனங்கள் , பரிமாறி கொள்ளும் முக பாவங்கள் , signs சிரிப்பை வரவவைபவை .
கண்ணனே! மன்னனே பாடலில் அவர் steps , expressions டாப்.



ராதா :

இந்த படத்தில் கௌரவ வேடம் ஏற்று 20 நிமிடங்கள் மட்டுமே வந்தாலும் மனதில் இடம் பிடித்து விடுகிறார் . இவருக்கு இன்னும் சில காட்சிகள் கொடுத்து இவரின் நடிப்பை இன்னும் உபயோக படுத்தி இருக்கலாம் , காரணம் இவர் சிவாஜி சாரை என் காதலிக்கிறார் என்பது அழுத்தமாக சொல்லும் காட்சிகள் இல்லை என்பது படத்தின் பெரிய குறை , ஆனால் glamour heroine என்று அறிய பட்ட ராதா குணசித்திர நடிப்பிலும் தன்னை நிருபித்து விட்டார் .

VKR , மூர்த்தி :

படத்தில் சில காட்சிகளே வந்தாலும் இவர்கள் சிரிக்க வைக்க முயற்சிகிறார்கள் , VKR க்கு இந்த படத்தில் வேலை கொஞ்சம் அதிகம் , தன் மருமகனை மகனாக நினைக்கும் பாத்திரம் , தன் மகள் ஏமாற்று பட்டு விட்டால் என்று நினைத்து இவர் கலங்கும் காட்சியும் , உண்மை தெரிந்து மருமகனிடம் மனிப்பு கேட்கும் காட்சியும் நெகிழ்ச்சி

பாண்டியன் , துளசி , மற்றும் சிலர் , கட்சிதமாக பாத்திரத்தில் பொருந்தி உள்ளார்கள்
இன்ஸ்பெக்டர் வேடத்தில் நடித்தவர் குரலில் ஹிந்தி வாடை .

ScottAlise
4th December 2014, 08:15 PM
சிவாஜி :

இந்த படத்திலும் இவர் தான் தூண் , 1987 ல் அதாவது நடிக்க வந்து 30 வருடங்கள் கடந்தும் இந்த படத்திலும் நம்மை நடிப்பால் அசரவைக்கிறார் , இந்த மாதிரி கதை உள்ள பல படங்களில் அதாவது குடும்பத்துக்காக தியாகம் பண்ணும் பாத்திரத்தில் நடித்து இருக்கிறார் , ஆனால் ஒரு படத்தில் கூட பழைய படத்தின் பாத்திரத்தை மீண்டும் நடித்து இல்லை (CLICHE statement தான் ஆனால் இதை எழுதி தான் வேண்டும் )
இந்த படத்தில் அவர் சற்று வயதான பாத்திரம் , மனதில் என்றும் 16 தான் , இதை முதல் காட்சியிலே அழகாக காட்சிபடுத்தி இருப்பார் , முதல் காட்சியில் அவர் சூட்கேஸுடன் நடந்து வரும் போதும் , Flower vase ல் ரோஜா பூ வைக்க அவர் சொல்லும் வசனம் Rose - ரொமாண்டிக் பிலோவேர்-செம்பருத்தி சாமிக்குப் போடுற பூ, கிழவிகளுக்குதான் பிடிக்கும்
அதே மாதிரி நம் நடிகர் திலகத்துக்கு இயல்பிலே இருக்கும் நகைச்சுவை உணர்வை அழகாக இந்த படத்தில் காண்பித்து இருப்பார்கள் , VK ராமசாமியிடம் கல்யாணியைப் பிடிக்கலன்னா பண்டரிபாய்கிட்ட சொல்லுங்க... இல்ல மைனாவதிகிட்ட சொல்லி பாட வைங்க", என்று நன்றாக அவருக்கே உரித்தான பாணியில் கூறும் பொது சிரிக்காமல் இருக்க முடியாது , மனைவியின் சுபாவம் அறிந்து அவரை சீண்டி வேடிக்கை பார்த்து ரசிக்கும் காட்சி , அவள் போக்கில் போய் அவருக்கு வேண்டிய முடிவை எடுக்கும் சாதுர்யம் நாம் கற்று கொள்ள வேண்டியது

குடிக்காமல் இருந்தவர் தனக்கு நடந்த பாராட்டு விழாவில் சுற்றி இருந்தவர் கேலி செய்யவே குடித்து விட்டு பண்ணும் கலாட்டா குபீர் சிரிப்பு ரகம். வீட்டுக்கு வந்த உடன் மப்பில் ஒன்றும் புரியாமல் முழிப்பதும் , பிறகு கொஞ்சம் சுதாரித்து , நடக்கும் பொது , கால் அவரை வேறு பக்கமாக அழைத்து செல்வதும் , இவர் வீடு ஆடுது என்று உளறுவதும் , அம்பிகா வர , , அது வரை hen pecked husband என்று அறிய பட்ட நபர் மனைவியைஅவரை கழுதை என்று திட்டுவதும் வீரமாக நான் குடிச்சேன் , குடித்து கொண்டே இருப்பேன் என்று கத்துவதும் அடி குரலில் ஹிந்தி பாடல் பாடுவதும் , சிகரெட்டே பற்ற வைப்பதும் , போதையை தெளியவைக்க மோர் குடியிங்க என்று சொல்ல NO MORE என்று பேசும் நச் வசனம் மேலும்

மாமனார் VKR இங்கே வாட சின்ன பயலே என்று அழைப்பதும் ரணகளம் . அடுத்த நாள் இவர் படும் பாடு !

இந்த காட்சி சிரிப்பு என்றால் , தன்னை blackmail செய்த உடன் இவர் முகம் சுருங்கி போவதும் மனைவியை திட்ட அவர் யோசிக்காமல் திட்டுவதும் , அவர் மனைவி அவரை பாவமாக பார்க்கும் போதும் அவர் முகத்தில் ஒரு cold reaction காட்டி விட்டு சிகரெட்டே பிடிப்பதும் , அழகு , அதே காட்சியில் அவர் கோபத்துடன் பார்க்கும் பார்வை , உட்காரும் posture அனைத்தும் டாப்

இது வீட்டில் இருக்கும் சத்தியமூர்த்தி

வீட்டில் சாதுவாக இருக்கும் மணித்தார் , வெளியே விஷயங்களை handle பண்ணும் பாணி அலாதி , மகளை போலீஸ் ஸ்டேஷன் ல் இருப்பதாக சொல்லும் பொது அவர் அதை எடுத்து கொள்ளும் விதம் பொறுமையின் சிகரம் , மனைவி ஆஸ்பத்திரியில் வந்து நோயாளியிடம் கோப படும் பொது , இவர் கத்தி சீன் create பண்ணாமல் , அழகாக தன் மனைவியை handle பண்ணும் பாங்கு கிளாஸ்

அதே போல் போலீஸ் இன்ஸ்பெக்டர் உண்மை , நேர்மை என்று பேசும் பொது அவரை தட்டி கொடுத்து , பாராட்டி , heated situation என்ற சூழ்நிலையை அழகாக சமாளித்து விடுகிறார்

அதே போல் தன் மகள்கள் இருவரும் காதளிகிரர்கள் என்பதை இந்த அளவிற்கு சாதரணமாக எடுத்து கொண்டு , தீர விசாரித்து காதலுக்கு பச்சை கோடி காட்டும் காட்சி எனக்கு மிகவும் பிடித்தது



flashback காட்சிகளில் நம்மவர் research scholar பாத்திரத்தில் சில காட்சிகளில் பொருந்தி உள்ளார் , சில காட்சிகளில் continuity தவறி இருக்கிறது , காலேஜ் ல் இருக்கும் professor வேடத்தில் இவர் அணியும் உடைகள் கண்களை உறுத்தாமல் , அழகாக பொருந்துகிறது .

இயக்கம் விஜயன் , இசை மனோஜ் கியான் பாடல்கள் இனிமை . இந்த படம் பெரிய திருப்புபங்கள் நிறைந்த படம் அல்ல , மனதை வருடும் மயில் இறகு , படம் வெற்றியடையாமல் போன காரணத்துக்கு , வழக்கம் போல் விடை தெரியாமல் இருக்கிறேன்

சரி படத்தை பற்றி எழுதி விட்டேன் , அந்த suspense விஷயத்தை சொல்லி விடுகிறேன்

வம்சவிலக்கு தான் நான் அடுத்து எழுத போகும் படம்

eehaiupehazij
4th December 2014, 11:11 PM
NT rises back to see his flora !

நடிப்புச் சூரியனின் ஒளியால் வளம் கண்டு பூத்துக் குலுங்கி நடிப்பு நறுமணம் பரப்பிய பசுமைப் பூந்தோட்டங்கள் ! நடிப்புத் தெய்வத்தின் வழிபாட்டுக்கு உகந்த நடிப்பு மலர்கள் !! மலர் மாலைகள்!!!

கதாநாயகரின் கதாநாயகியர்

செந்தாமரை மலர் 5 சௌகார் ஜானகி

சௌகார் ஜானகியின் வளர்ச்சியில் திருப்பம் ஏற்பட்டது நடிகர்திலகத்தின் வாழ்நாள் உச்சகட்ட நடிப்பின் சாதனைப் படமான புதிய பறவை மூலமே அதுவரை ராஜம்மாவின் நேரடி வாரிசாக படிக்காத மேதை பாக்கியலட்சுமி பார்த்தால் பசிதீரும் …………என்று அழுதுகொண்டும் மயங்கிவிழுந்து கொண்டும் நம்மை ஒருவிதமான டென்ஷனிலேயே வதைத்துக் கொண்டிருந்தவர் சூரியனைக் கண்டதும் நீர்ப்பரப்புக்கு மேலே தலை உயர்த்தி மலரும் செந்தாமரை போல புத்துணர்வுடன் கவர்ச்சி அவதாரம் எடுத்து ரசிகர்களை பிரமிக்க வைத்தார். நடிகர்திலகத்தின் யானைப்பசிக்கு ஒரு கரும்புக்காட்டையே நடிப்புத்தீனியாகப் போட புதியபறவையில் அவரது ஆழமான சரோஜாதேவியையும் மிஞ்சிய ஆளுமை மிக்க நடிப்பும் ஒரு காரணம். உயர்ந்தமனிதனில் நடிகர்திலகத்தையே தன் மிடுக்கான நடிப்பால் கட்டிப்போட்டார். பார் மகளே பார் மற்றும் மோட்டார் சுந்தரம் பிள்ளை இவரது நடிப்பின் மேன்மையை உறுதிபடுத்தியவை. தனிப்பட்ட முறையில் பாக்கியலட்சுமி, இரு கோடுகள், காவியத்தலைவி, ஒளிவிளக்கு, நீதி, பாபு திரைப்படங்கள் அவர் திறமையை வலுப்படுத்தின.

பார் மகளே பார் நடிப்புப் பகலவனுக்கு சற்றே எதிர்மறை குணம் கொண்ட நாயகன் பாத்திரம் பணக்கார மமதை தூக்கிஎறிந்து பேசும் அலட்சியப் போக்கு .....ஆனாலும் தனது உண்மையான மகள் யார் வளர்ப்புமகள் யார் என்ற குழப்பத்தில் அவரது சீற்றங்கள் சௌகார் ஜானகிக்கு அடிக்கடி அழுது மயங்கிவிழும்
'முத்திரை' நடிப்புக்கு பஞ்சம் வைக்காத படம். கோபச்சிங்கம் இந்தப் பாடல் காட்சியில் மட்டுமே விசிலெல்லாம் ஹம்மிங் பண்ணி சாந்தசிங்கமாக இருக்கும்! அப்புறம் படம் முடியும்வரை MGM கர்ஜனைதான்!! அல்லாடும் ஜானகிதான் மருண்டு நிற்கும் மான்!!!

https://www.youtube.com/watch?v=0Ded74fqkOA

படிக்காத மேதை ரங்கனுக்கு பதமான பாடல் வரிகளால் நம்பிக்கையும் புத்துணர்வும் ஊட்டும் தாமரை மலர்முகமாக சௌகார்! படிக்காத மேதையாக நடிப்பின்
இலக்கணத்தை உலகுக்கே வரையறுத்த நடிகமேதையுடன் நடிப்பில் மிளிர்கிறார் மயக்க மேதை சௌகார்!!

https://www.youtube.com/watch?v=YD5JQ49vN4M

மாலை பொழுதின் மயக்கத்தில் மயங்கி விழாமல் காதல் மன்னரின் மனதை மயக்கி அமர வைத்த காலத்தை வென்ற கானம் சௌகாரின் மனதை ஈர்க்கும் பாக்கியலட்சுமி நடிப்பில் !

https://www.youtube.com/watch?v=fcSLkVjupCQ

More about Sowkaar ....

Sankaramanchi Janaki (born December 12, 1931), popularly known as Sowcar Janaki, is a south-Indian actress who has acted in over 385 Tamil, Telugu, Kannada, Hindi and Malayalam films. She also performed on stage in over 300 shows and was a radio artist during her earlier years. She became a popular actress with hits such as Sowcar (Telugu), Pudhiya Paravai (Tamil) and Iru Kodugal (Tamil). She worked with famous directors such as Dada Mirasee and K Balachandar

Ref : wiki and You Tube

Signature song of Sowkaar Jaanaki

இந்தமுறை கவர்ச்சி டோஸ் தாங்காமல் மயங்கி விழுந்தது ரசிகர்களாகிய நாமே! நடிகர்திலகமே ஞாபகம் இழந்து கிறங்கிப்போன சௌகாரின் அதிரடி!புதியபறவை

https://www.youtube.com/watch?v=xNInBEF8E7M



NT comes back to get an orderly glimpse of the Semparuthi malar Vaanishree, Saamanthippoo Usha Nandhini, Sun Flower Jayalalitha, Dream flower Kalar Kaanchanaa, Shenbagam Vaijayanthi, Kurinji malar Bhanumathi and the Manoranjitham flower Saaviththiri!!

Russellisf
5th December 2014, 10:46 AM
சிவாஜியை ” யானைத் தமிழன் “ என அழைப்பது பொருத்தம்தானோ என இப்போது..இந்தச் செய்தியைப் படிக்கும்போது தோன்றுகிறது...
எத்தனை கோவில்கள்..எத்தனை யானைகள்...!!!
இதோ..அந்த மஹா பெரிய ..பழைய செய்தி...
‘நீதானே சிவாஜி கணேசன்?‘..-இப்படிக் கேட்டது காஞ்சிப் பெரியவர்...
‘ஆமாங்கய்யா! நான்தான்‘, என்று காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கினாராம் சிவாஜி...!!!
காஞ்சிப்பெரியவர் – சிவாஜி சந்திப்பில் ...அப்புறம் நடந்ததை சிவாஜியே சொல்கிறார்...
காஞ்சிப் பெரியவர் சொன்னாராம்... , “உங்களைப் பார்த்ததில் மிகவும் சந்தோஷம். திருப்பதி சென்றிருந்தேன். அங்கு ஒரு யானை எனக்கு மாலை போட்டது. யானை நன்றாக இருக்கிறதே யாருடையது? என்றேன். ‘சிவாஜி கொடுத்தது‘ என்றார்கள். திருச்சி சென்றிருந்தேன். அங்கு திருவானைக்கா கோவிலுக்குப் போனேன். அங்கும் யானை மாலை போட்டது. யானை அழகாக இருக்கிறது. யானை யாருடையது? என்றேன். ‘சிவாஜி கணேசன் கொடுத்தது‘ என்றார்கள்.
தஞ்சை புன்னை நல்லூர் மாரியம்மன் கோவில் சென்றிருந்தேன். அங்கேயும் யானையை விட்டு மாலை போட்டார்கள். ‘இது யாருடையது ?’ என்றேன். ‘சிவாஜி கணேசன் கொடுத்தது‘ என்றார்கள். ..யானை கொடுப்பதற்குப் பெரிய மனசு வேண்டும். அந்த மனசு உனக்கிருக்கிறது. ஆகையால் உன்னைப் பெற்றவர்கள் பாக்கியசாலிகள். அவர்களுக்காக நான் பகவானைப் பிரார்த்தனை செய்கிறேன்” என்று கூறி விட்டு எழுந்து சென்று விட்டார். அப்போது என் மனம் எப்படியிருந்திருக்கும் ? எத்தனை அனுக்கிரஹம்! எண்ணிப் பாருங்கள்.”-
-இப்படி பக்திப் பரவசத்தோடு சொல்லியிருக்கிறார் சிவாஜி..!
# ஆம்...எண்ணிப் பார்க்கிறேன்.....
சிவாஜி......தமிழ் சினிமாவுக்கு எத்தனை பெரிய அனுக்கிரஹம்!


courtesy net

sss
5th December 2014, 01:11 PM
Reproduced from an article of Ramchandra :

http://www.fotothing.com/photos/42b/42bed93fee9195e319e866edaa03e094.jpg

It is important to know that Sivaji in his prime time did not have the liberty of exposure to media that is available to the actors today, to

benchmark performances, as he spent time from dawn to dusk facing the arc lights churning out volumes that was needed to establish him as a

matinee idol of Tamil Cinema. What he did use was his intelligence, imagination and creativity - traits that formed the hallmark of his entire

career.

http://www.fotothing.com/photos/7d9/7d958efcc297e7975f645eb67666520b.jpg

If there was a matinee idol in the realms of Indian cinematic history who received as much accolades and an equally strong bout of criticism for his histrionic abilities, it was Chevalier Sivaji Ganesan. Given that he never achieved the national status that he deserved perhaps is a reflection of the complexities of the language of his mother tongue that required strong grammar, poetic undertones and louder decibels for dialogue delivery.

Film critics and audience forming the majority in the North of the Vindayas who were used to the much softer, subtle shayaari and ghazals perhaps found it difficult to applaud Sivaji’s daredevilry in characterization of roles he depicted in his film career.


Perhaps if he were to be born out of the Dravidian State and culture, there would have been a national consensus that he was the greatest actor Indian cinema ever produced. It is indeed a misfortune to know that Mr. Nehru pleaded ignorance of the actor when President Nasser of Egypt enquired dearly about him after seeing his stellar performance in “Veerapandia Kattabomman” in the Cairo Film Festival. Nehru did make amends when he made Sivaji the main host when Nasser visited India subsequently!

Russellisf
5th December 2014, 02:27 PM
300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கும் சிவாஜி கணேசன் தான் சினிமாவில் நடித்துக் கொண்டிருந்த காலகட்டம் வரை 1952 முதல் 2000 வரை, அந்தந்த கால கட்ட நடிகர்கள் வரை இமேஜ், ஈகோ பார்க்காமல் இணைந்து நடித்துள்ளார். இதில் அஜீத் மட்டுமே விடுபட்டுள்ளார். என்றாலும் அஜீத்தின் மனைவி ஷாலினி 'பந்தம்' படத்தில் சிவாஜியின் பேத்தியாக நடித்திருக்கிறார். அந்த காரணத்தாலேயே அஜீத்-ஷாலினி திருமண வரவேற்பில் சிவாஜி பங்கேற்று மணமக்களை வாழ்த்தியிருக்கிறார்.





"ஷாலினி, அவரது தந்தையுடன் ஒரு சமயம் நான் சிவாஜி பற்றி பேசிக் கொண்டிருந்தபோது அவர்கள் சொன்ன ஒரு விஷயத்தை இங்கே நினைவு கூற வேண்டும்." என்ற இதயக்கனி ஆசிரியர் விஜயன் அனுபவத்திலிருந்து,

"பொதுவாக எந்த ஒரு கலைஞரும் அழுது நடிக்கும் காட்சியில், கண்ணீர் வர வேண்டு மென்பதற்காக கண்களில் கிளிசரின் விட்டுக் கொண்டு நடிப்பார்கள். எப்போது கண்களில் நீர் வரவேண்டுமோ, அந்த ஷாட்டுக்கு முன்னதாக கிளிசரின் விட்டுக் கொண்டு கேமரா முன் வந்து நின்றதும், கண்களிலிருந்து நீர் வடியத் தொடங்கும். கிளிசரினால் ஏற்படும் எரிச்சல் நீரை வரவழைத்துவிடும்.
ஆனால் சிவாஜியிடமுள்ள ஒரு சிறப்பு, அவர் அழுது நடிக்கும் காட்சி நீளமாக இருந்தாலும், கிளிசரின் விடுவதற்காக தனியாக ஷாட் பிரிக்க மாட்டார்கள். காட்சி தொடங்கும் போதே கண்களில் கிளிசரின் விட்டுக் கொள்வார். காட்சி முடியும் போது எந்த இடத்தில் தேவையோ, அந்த இடத்தில் மட்டும் கண்களில் நீர் வருமாறு தன்னை கட்டுப்படுத்திக்கொள்ளும் அபூர்வ சக்தி அவரிடம் இருந்தது."

sss
5th December 2014, 03:16 PM
300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கும் சிவாஜி கணேசன் தான் சினிமாவில் நடித்துக் கொண்டிருந்த காலகட்டம் வரை 1952 முதல் 2000 வரை, அந்தந்த கால கட்ட நடிகர்கள் வரை இமேஜ், ஈகோ பார்க்காமல் இணைந்து நடித்துள்ளார். இதில் அஜீத் மட்டுமே விடுபட்டுள்ளார். என்றாலும் அஜீத்தின் மனைவி ஷாலினி 'பந்தம்' படத்தில் சிவாஜியின் பேத்தியாக நடித்திருக்கிறார். அந்த காரணத்தாலேயே அஜீத்-ஷாலினி திருமண வரவேற்பில் சிவாஜி பங்கேற்று மணமக்களை வாழ்த்தியிருக்கிறார்.

http://www.rediff.com/movies/2000/apr/28slide5.jpg

eehaiupehazij
5th December 2014, 06:18 PM
NT rises back to see his flora !

நடிப்புச் சூரியனின் ஒளியால் வளம் கண்டு பூத்துக் குலுங்கி நடிப்பு நறுமணம் பரப்பிய பசுமைப் பூந்தோட்டங்கள் ! நடிப்புத் தெய்வத்தின் வழிபாட்டுக்கு உகந்த நடிப்பு மலர்கள் !! மலர் மாலைகள்!!!

கதாநாயகரின் கதாநாயகியர்

செம்பருத்தி மலர் 6 வசந்த மாளிகையின் மகாராணி வாணிஸ்ரீ


'சிக்'கென்ற தோற்றத்தால்ஜவுளிக்கடை பொம்மைகளின் ரோல் (role/doll Model) மாடலான வாணிஸ்ரீ நடிகர்திலகத்தின் கதாநாயகியரில் மலர்களிலே வித்தியாசமான (நடிப்புத்) தேன் நிறைந்த செம்பருத்திப்பூ போல மிகச்சிறப்பான தனியிடம் பெற்றவர். வசந்த மாளிகை நடிகர்திலகத்திற்கு அவர் சமர்ப்பித்த சாதனைக் கோட்டை. தென்றலாக உயர்ந்தமனிதனில் வருடிச்சென்றவர் வசந்தமாளிகையில் புயல் கிளப்பினார். வாணிஸ்ரீயிடம் மிகுந்த மதிப்பு வைத்திருந்த நடிகர்திலகம் சிவகாமியின் செல்வன், வாணி ராணி, புண்ணியபூமி போன்ற கதாநாயகியை முன்னிலைப்படுத்திய படங்களில் ஈகோ பார்க்காமல் நடித்து தனது நன்றியறிதலை வெளிப்படுத்தினார். நிறைகுடம் நிறைவைத் தந்த படம். வசந்த மாளிகையின் மகாராணிக்கு மனம் நிறைந்த நன்றிகள்.

இன்று எந்தன் தலைவன் இல்லை.....சென்று வா நிலா! உயர்ந்த மனிதனுக்கான உயர்வு வரிகள் சுசீலாம்மாவின் பனிக்குழைவுக் குரலில் உயிர்ப்பிக்கப்பட்டு தேசிய விருது பெற்றுத் தந்த பாடல்!!

https://www.youtube.com/watch?v=THjf7x-Xeoo

தளும்பாத நிறைகுடம் நடிகர்திலகம்!

https://www.youtube.com/watch?v=KcZwnJnkLak

more on Vanisree...

Vanisri had several super hit and silver jubilee movies, such as Krishnaveni(Telugu Remake of Kannada Movie Sharapanjara), Prem Nagar, Dasara Bullodu, Aradhana, Jeevitha Chakram, Rangula Ratnam, Sri Krishna Tulabharam, Bhakta Kannappa, and Bobbili Raja, etc. She played dual roles in Iddaru Ammayilu (1972)[Telugu Remake of 1969 release Kannada film Kappu Bilupu), Ganga Manga (1973 remake of the Hindi film Seeta Aur Geeta), Jeevana Jyothi (1975), and Chilipi Krishnudu (1978). She financed and starred in Shyam Benegal's only Telugu film Anugraham (1977), co-starring Smita Patil. She acted with Sivaji Ganesan in a number of films such as Uyarntha Manithan (1968), Nirai Kudam (1969), Vasantha Maligai (1972), Sivakamiyin Selvan (1974), Vani Rani (Tamil remake of the Hindi film Seeta Aur Geeta) (1974) and Nallathoru Kudumbam (1979).

courtesy : Wiki and YouTube

The signature song of Vaanisree!

கலைத்தாயின் முதல் புதல்வர் நடிகர்திலகம்! கலைமகளின் விரல்மீட்டும் வீணையே வாணிஸ்ரீ !!

https://www.youtube.com/watch?v=hx8VqmStqaE

AREGU
5th December 2014, 08:03 PM
திரிக்கு தொடர்பில்லாத ஒன்றுதான்.. எனினும் எனக்கு வேறு வழி தெரியவில்லை..

கணபதி பட் என்னும் நடிகர் குறித்து நான் ஒரு முக்கிய செய்தி கேள்விப்பட்டிருக்கிறேன். அவர் யார் என்று அறிய ஆவலாக உள்ளது.

அவரது புகைப்படம் கிடைக்குமா..?

eehaiupehazij
5th December 2014, 09:05 PM
கார்த்திகை தீபங்களின் ஜொலிக்கும் ஒளியில் நம் நடிப்பு ஜோதியை நினைவு கூர்வோம்

https://www.youtube.com/watch?v=bfcbA6-_JYo

https://www.youtube.com/watch?v=Qf3lMAinMxU

https://www.youtube.com/watch?v=fot8XXvga7g

eehaiupehazij
5th December 2014, 10:40 PM
NT rises back to see his flora !

நடிப்புச் சூரியனின் ஒளியால் வளம் கண்டு பூத்துக் குலுங்கி நடிப்பு நறுமணம் பரப்பிய பசுமைப் பூந்தோட்டங்கள் ! நடிப்புத் தெய்வத்தின் வழிபாட்டுக்கு உகந்த நடிப்பு மலர்கள் !! மலர் மாலைகள்!!!

கதாநாயகரின் கதாநாயகியர்

சாமந்திப்பூ 7 உஷாநந்தினி

நடிகர்திலகத்துடன் சொற்பமான படங்களேயாயினும் முக்கியமான திருப்புமுனைப் படங்கள் என்பது சாமந்திப்பூவாக வந்துசென்ற உஷாநந்தினி செய்த பாக்கியமே கௌரவம் ராஜபார்ட் ரங்கதுரை பொன்னூஞ்சல் என்னைப்போல் ஒருவன்......மனிதனும் தெய்வமாகலாம் என்று நடிப்புத் தெய்வத்தை அலங்கரித்தவருக்கு நன்றிகள்!

கௌரவமான காதலர்

https://www.youtube.com/watch?v=eNT6UzC2ehI

ராஜபார்ட்டுடன் ராணிபார்ட் !

https://www.youtube.com/watch?v=i6UeorX-aVo

Signature song of Ushanandhini :

ஆகாயக் கோட்டைகள் ஆனால்... ஊர்கோலம் போகும் பொன்னூஞ்சல்கள்!

https://www.youtube.com/watch?v=JW0fWIFskG8

Murali Srinivas
6th December 2014, 12:25 AM
மதுரையில் இன்று முதல் [டிசம்பர் 5,2014 வெள்ளி] சென்ட்ரல் திரையரங்கில் அண்ணன் ஒரு கோவில் திரையிடப்படும் விவரத்தை இங்கே பதிவு செய்திருந்தோம்.

கார்த்திகை மாதமடி கல்யாண சீசனடி என்பது வழிமுறை நிகழ்வு.

கார்த்திகை மாதம் மணிகண்ட சுவாமியின் மாதம் என்பதும் நடைமுறை நிகழ்வு.

கார்த்திகை தீபம் என்றால் வீட்டிலே தீபம், ஆலயத்திலே தீபம் என்பதும் நிகழ்முறையே!

இருந்தால் என்ன நடிகர் திலகத்தை காண வேண்டும் என்று நினைத்து விட்டால் இயல்பாகவே மக்கள் வந்து விடமாட்டார்களா என்ன?

கார்த்திகை தீபத்தன்று அண்ணன் தங்கை(களு)க்கு கார்த்திகை சீர் (பணம்) கொடுப்பது வழக்கம்!

மதுரை சென்ட்ரலிலோ தங்கைகள் அண்ணனை காண சீர் கொடுத்திருக்கின்றனர்!

ஆம்! கணிசமான மக்கள் அதிலும் குறிப்பாக பெண்கள் இன்று சென்ட்ரல் திரையரங்கிற்கு வந்து Dr. ரமேஷ் அவர்களை கண்டு மகிழ்ந்திருக்கின்றனர்!
இது போன்ற பண்டிகை நாட்களில் கூட பொது மக்கள் தியேட்டருக்கு வருகிறார்கள் என்று சொன்னால் அது நம் நடிகர் திலகத்திற்கு மட்டும்தானே!

படத்தின் வெளியீட்டை முன்னிட்டு மதுரை சென்ட்ரல் திரையரங்கில் அமைக்கப்பட்டிருக்கும் பானர் மற்றும் வரவேற்பு போஸ்டர்கள்.

http://www.thalaivansivaji.com/wp-content/uploads/2014/01/DSC00041.jpg

http://www.thalaivansivaji.com/wp-content/uploads/2014/01/DSC00050.jpg

சந்தோஷ செய்திகளுடன் மீண்டும் சந்திப்போம்.

அன்புடன்

Murali Srinivas
6th December 2014, 12:44 AM
அண்ணன் ஒரு கோவில் படத்தின் வெளியீட்டை முன்னிட்டு மதுரை சென்ட்ரல் திரையரங்கில் அமைக்கப்பட்டிருக்கும் மேலும் சில பானர் மற்றும் வரவேற்பு போஸ்டர்கள்.

http://www.thalaivansivaji.com/wp-content/uploads/2014/01/DSC00044.jpg

http://www.thalaivansivaji.com/wp-content/uploads/2014/01/DSC00039.jpg

http://www.thalaivansivaji.com/wp-content/uploads/2014/01/DSC00035.jpg

அன்புடன்

eehaiupehazij
6th December 2014, 07:43 AM
NT rises back to see his flora !

நடிப்புச் சூரியனின் ஒளியால் வளம் கண்டு பூத்துக் குலுங்கி நடிப்பு நறுமணம் பரப்பிய பசுமைப் பூந்தோட்டங்கள் ! நடிப்புத் தெய்வத்தின் வழிபாட்டுக்கு உகந்த நடிப்பு மலர்கள் !! மலர் மாலைகள்!!!

கதாநாயகரின் கதாநாயகியர்

மரிக்கொழுந்துகள் மலர் மாலை 8
பாரதி, பத்மப்ரியா வெண்ணிற ஆடை நிர்மலா,


பாரதி பத்மப்ரியா வெண்ணிற ஆடை நிர்மலா போன்றோர் திறமையும் அழகும் நிரம்பப் பெற்றிருந்தும் நடிகர்திலகம் படங்களில் வெகு அபூர்வமாகவே வந்து மின்னி மணம்பரப்பிச் சென்ற மரிக்கொழுந்துகள். நடிகர்திலகத்தை சிறப்பித்து சிறப்படைந்தமைக்கு நன்றிகள் !


பாரதி (உயர்ந்த மனிதன் /தங்கசுரங்கம்)

உயர்ந்த மனிதன் நடிகர்திலகத்திற்கான பாடல் சிவ(வாஜி)குமா(ர)ருக்கு! பாரதியின் இளமைத் துள்ளல் !! அந்தக்கால சூர்யாவின் அநியாய வெட்க ஒதுங்கல் !
https://www.youtube.com/watch?v=S--5mg_vDT0

தமிழ்நாட்டின் CBI Rajan டீன் மார்டின் / Matt Helm (The Silencers) 'ஜேம்ஸ்பாண்ட்' பாணியில் பாரதியுடன் நிலத்தடி நீர் ஆராய்ச்சியில் மும்முரம்!
https://www.youtube.com/watch?v=lnObODMJnHY

Signature song from GG starrer Avalukkendru Oru Manam

எத்தனை யுகங்களானாலும் காதலனுக்கு மனதை அர்ப்பணித்திட்ட காதலியின் தேசியகீதம் இப்பாடலே! காதல் மன்னருடன் பாரதி மனதில் ரம்மியமாகப் பதிந்த
பாடல் வரிகளுக்கு உயிரூட்டல் !

https://www.youtube.com/watch?v=vHVwDiEr64Q


பத்மப்ரியா(வைரநெஞ்சம்)

கனவுக்கன்னி ஹேமமாலினியின் எதிரொலியாக பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்டவர். நடிகர் திலகத்துடன் One Film Wonder!

https://www.youtube.com/watch?v=WiQsVl5KkEc

Signature song!

https://www.youtube.com/watch?v=fY_wFsW-e4c

வெண்ணிற ஆடை நிர்மலா
(லட்சுமி கல்யாணம்/ எங்க மாமா / தங்கைக்காக )

இந்தி நடிகை மும்தாஜ் போல வளர்ந்திருக்க வேண்டியவர் சிறந்த நடனப் பெண்மணி லட்சுமி கல்யாணம் திரைப்படத்தில் நடிகர்திலகத்தின் பெருமை பறைசாற்றும் கோணத்தில் பார்க்கப்பட்ட 'ராமன் எத்தனை ராமனடி' பாடல் காட்சியில் நெஞ்சங்களை அள்ளியவர்!

https://www.youtube.com/watch?v=j7L6kPHm40U

Signature song :நிர்மலாவின் வாழ்நாள் சாதனை நடிப்பு நடிகர்திலகத்தின் முகத்தில் மின்னலென தோன்றி மறையும் சந்தோஷக் கீற்று!!

https://www.youtube.com/watch?v=87V-TvibPfI

(

NT returns to duty with his dream flower 'Color' Kaanchana to make her dance to the tune of his whip wieldings alongside count downs...in NT's exclusive magnum opus Sivandha Mann)

Gopal.s
6th December 2014, 08:07 AM
நடிகர் திலகம் உடல் மொழி.

பாசமலரில், தன் மனைவியுடன் முதலிரவின் போது ,தங்கை மற்றும் அவள் கணவன் கொண்ட புகைப்படத்தை திருப்பி வைக்கும் ,நாணம் கலந்த பாச பண்பு.

கௌரவத்தில், மன அமைதியிழந்து தவிக்கும் தந்தை, இரவில் சரியாக தூக்கம் இல்லாத போது , ARTIFACT யானை மரமிழுக்கும் பொம்மையிலுள்ள அறுந்து போன CHAINLINK ஒன்றை சீர் செய்ய முயலும் காட்சி.

தங்க சுரங்கத்தில், சந்தன குடத்துக்குள்ளே, கிணற்று காட்சியில், SWING ஆகி ,திரும்பி வரும் , BUCKET ஐ ,ஸ்டைல் ஆக காலால் நிறுத்தும் அழகு.

எங்க மாமாவில், நான் தன்னந்தனிக்காட்டு ராஜா பாடலில், குழந்தைகள் ஊதல்,horn ஊதி லூட்டி அடிக்கும் போது ,அடைத்து கொள்ளும் காதை ,விரலால் CLEAR செய்யும் 10 வினாடி GESTURE .

சுமதி என் சுந்தரி, ஒரு தரம் பாட்டில், இளமை குறும்புடன், குளத்தில் கல் வீசும் bowling action .

தெய்வ மகனில், வீட்டில் திருடன் புகுந்து விட்டான் என்றெண்ணி, இளைய மகன் hocky மட்டையை எடுத்து, anxiety , சிறிது அச்சம் கலந்த, தைரியத்துடன் ,முகம் தெரியாத திருடனை எதிர்கொள்ளும் அழகு.

உத்தம புத்திரனில், பாதி ஆட்டம் பாட்டத்தில், அம்மா அட்வைஸ் பண்ண வரும் இடைஞ்சலை, ஒரு குழந்தையின் பிடிவாத மன நிலையில், காலை உதைத்து வெளியிடும் விக்ரமன்.

அதே காட்சியில், no love ,no hate ,மனநிலையில், அம்மாவிடம் உணர்ச்சி பூர்வமான ஈடு பாடு இன்றி, மறுத்தும் பேச இயலாமல், ஊஞ்சலில் casual ஆக ஆடி கொண்டு, ஓர கண்ணால் அன்னையை பார்த்து, அவர் அறிவுரைகளை ,காதில் வாங்காத பாங்கு.

அன்னையின் ஆணையில், உணர்ச்சி வச பட்டு, முரண்டி பனியனை கிழித்து, கீறி விடும் சாவித்திரியிடம் உடனே பதிலுக்கு வன்முறை பிரயோகிக்காமல்,washbasin போய் ,clean செய்து கொள்ளும், காட்சி.

abkhlabhi
6th December 2014, 10:46 AM
http://ramaniecuvellore.blogspot.in/2014/12/blog-post_5.html

Russellxss
6th December 2014, 10:56 AM
https://www.youtube.com/watch?v=U7LFlk8skas#t=187

KCSHEKAR
6th December 2014, 11:01 AM
நடிகர் திலகம் உடல் மொழி.[/SIZE]
கோபால் சார்,
நடிகர்திலகத்தின் உடல்மொழி உலகில் எந்த நடிகரிடத்திலும் காணமுடியாத அற்புதம் என்றே கூறலாம். தாங்கள் குறிப்பிட்டிருக்கும் சில சாம்பிள்களே இதற்கு கட்டியம் கூறும்.

இன்னும் சில............

முதல் படம் பராசக்தியில் - தன்னுடைய தங்கை கல்யாணியை பல இடங்களில் தேடி, பின்னர் கண்டுபிடித்துவிட்ட போதிலும், தான்தான் உன் அண்ணன் என்று சொல்லமுடியாமல், பைத்தியமாக வேஷம் போட்டு சமாளித்து, வெதும்பும் காட்சி..........

தில்லானா மோகனாம்பாளில் - ரயிலில் தன்னுடைய காதலியின் அருகில் அமரவேண்டும் என்று சைகையாலாலேயே பாலையாவை நகரச்சொல்லிவிட்டு கண் ஜாடையால் தன காதல் மொழியை வெளிப்படுத்தும் காட்சி..................

தங்கப்பதக்கத்தில் - இறந்த மனைவியைப் பார்த்து வெளிப்படையாக அழவும் முடியாமல், தன்னுடைய துக்கத்தை அடக்கவும் முடியாமல் குமுறும் காட்சி...........

ஞான ஒளியில் - நீண்ட நாட்களுக்குப் பிறகு தன தங்கையைக் காணும் வேளையில், குறுக்கே இன்ஸ்பெக்டர் லாரன்ஸ் வந்ததால், பேசமுடியாத சூழ்நிலையில், தான் யார் என்பதைக் காட்டுவதற்காக, தோளைத் தட்டும் காட்சி..............

எதிரொலியில் - ஒவ்வொரு முறை டாக்சி டிரைவர் வந்து காலிங் பெல் அடிக்கும்போதும், அதனை அடுத்து மனைவி தன்னை குற்ற உணர்வோடு பார்க்கும்போதும், நடிகர்திலகம் காட்டும் Re-action ....

இப்படி வந்துகொண்டே இருக்கும்........

Russellxss
6th December 2014, 11:02 AM
https://www.youtube.com/watch?v=27nZJEdKEvw

எவரும் எட்டாத அதிசியம் சிவாஜி புகழ் காப்போம்.

Russellxss
6th December 2014, 11:05 AM
https://www.youtube.com/watch?v=27nZJEdKEvw

எவரும் எட்டாத அதிசியம் சிவாஜி புகழ் காப்போம்.

Russellxss
6th December 2014, 11:06 AM
https://www.youtube.com/watch?v=LEMKOwVxxUA#t=32

எவரும் எட்டாத அதிசியம் சிவாஜி புகழ் காப்போம்.

Russellxss
6th December 2014, 11:09 AM
https://www.youtube.com/watch?v=LEMKOwVxxUA#t=32

எவரும் எட்டாத அதிசியம் சிவாஜி புகழ் காப்போம்.

Russellxss
6th December 2014, 11:10 AM
https://www.youtube.com/watch?v=htHSWsvwqxI#t=39


எவரும் எட்டாத அதிசியம் சிவாஜி புகழ் காப்போம்.

Russellxss
6th December 2014, 11:22 AM
சமீபத்தில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நாய்கள் ஜாக்கிரதை திரைப்படம் பார்த்தேன் அதில், நமது தலைவர் நடித்த வசந்தமாளிகை திரைப்படத்தில் வரும் குடிமகனே பாடல் டிவியில் ஓடும். இதில் அதிசியம் என்னவென்றால் இந்த படத்தின் தயாரிப்பாளர் திரு.சத்யராஜ் என்பது தான்.
ஏற்கனவே தமது மார்க்கெட்டை இழந்த நேரத்தில் தனது சொந்த தயாரிப்பான பாண்டியநாடு படத்தில் வசந்தமாளிகை திரைபடத்தின் போஸ்டர் காண்பிக்கப்பட்டு, அந்த படத்தின் வெற்றி மூலம் இன்று வரை தொடர்ந்து வெற்றியை பெற்றுக்கொண்டிரிக்கிறார் திரு.விஷால் அவர்கள்.
அதை தொடர்ந்து திரு.சிபிராஜ் அவர்களும் வெற்றி பெற நமது சின்ன ஜமீன், கலைதெய்வம் சிவாஜி அவர்கள் ஆசிர்வதிக்கட்டும்.


எவரும் எட்டாத அதிசியம் சிவாஜி புகழ் காப்போம்.

Russellxss
6th December 2014, 11:33 AM
http://i1369.photobucket.com/albums/ag235/sundarajan/8x4mail_zps46c26b64.jpg

எவரும் எட்டாத அதிசியம் சிவாஜி புகழ் காப்போம்.

sss
6th December 2014, 04:09 PM
http://rajareviews.com/wp-content/uploads/2014/09/ssvasan-672x372.png

http://rajareviews.com/tag/sivaji-ganesan/

One day at the Gemini Studios, Madras during mid-1940’s. The Gemini magnum opus Chandralekha (1948) was under production stretching over five years. A stage artist was ushered into the presence of the boss, Vasan.

The interesting trivia is when they were scouting for an actor for the role of the bodyguard of the hero, a struggling stage artist Villupuram Chinniah Pillai Ganeshamurthy wanted to do the role. He also grew long hair for the role.

The young actor was trying hard to get a break into movies and was introduced to Vasan for being considered for a minor supporting role in the mega buck movie. Vasan observed him lingeringly and shocked the aspiring actor and the studio writer by telling him that he would never make it in movies, and advised him to stick to theater!

S.S Vasan rejected him and said he is unsuited for films and asked him to find a different profession.S.S Vasan had cast Seetharaman who was later known as Jawar Seetharaman for the character.


The shocked young man was Villupuram Chinnaiah Pillai Ganesamurthy who later set the Bay of Bengal on fire and emerged as an icon of the Indian Cinema under the name Sivaji Ganesan!

Surprising?

Gopal.s
6th December 2014, 06:28 PM
நடிகர் திலகம் உடல் மொழி.


ரோஜாவின் ராஜாவில் ,மன நோயின் ஆரம்ப அறிகுறிகளை காட்டும், யாரோ அருகில் தன்னோடு பேசுவதான பாவம்,

எங்கிருந்தோ வந்தாள் ,இறுதி காட்சியில், ஏதோ சொல்ல வரும் ஜெயலலிதாவின் பால் பரிவு,அதே நேரம் ஒன்றுமே நினைவில்லாத நிலை, ஒரு மைய்யமான blank expressions கொடுத்து ,ஜெயலலிதா தவறாக நினைக்காமல் இருக்க ஒரு ஆறுதல் பார்வை,ஆறுதல் சிரிப்பு.

அமர தீபம் படத்தில், amnesia நோயின் அறிகுறியை காட்டும், வெறித்த,சூன்ய பார்வை.

ராஜாவில் ,ஜெயலிலதா மற்றும் ,அவர் தாயுடன் பொய் பேசும் போது , வாயை மறைத்து பேசுவது.

அதே ராஜாவில், ஜெயலலிதா,பாலாஜி follow செய்வதை சொல்லும் போது ,சிறிதே திரும்பி, பிறகு பாலாஜிக்கு சந்தேகம் வராத படி, romance செய்ய குனிவது போன்ற பாவனை.

விண்ணோடும் முகிலோடும் பாடலில்(புதையல்) ,காதலின் இன்ப லாகிரியை உணர்த்தும் குட்டி கரணம்.

பேசும் தெய்வத்தில், பத்மினி பிள்ளையை அழைத்து போகும் போது ,மாத்தி மாத்தி instructions மேல் instructions கொடுக்கும் போது ,தலைவரின் reaction. .

நீலவானத்தில், ஓடும் மேகங்களே பாட்டில், வருடம் தோறும் வசந்தம் தேடி வருவோம் இங்கே என்ற வரிகள் இரண்டாம் முறை உச்சரிக்க படும் போது ,தலைவரின் reaction .

நான் வாழ வைப்பேன் படத்தில், போலீஸ் கேள்வி மேல் கேள்வி கேட்டு குடையும் போது , நினைவு படுத்தி கொள்ள முயலும் தலைவரின் action .

eehaiupehazij
6th December 2014, 06:52 PM
NT rises back to see his flora !

நடிப்புச் சூரியனின் ஒளியால் வளம் கண்டு பூத்துக் குலுங்கி நடிப்பு நறுமணம் பரப்பிய பசுமைப் பூந்தோட்டங்கள் ! நடிப்புத் தெய்வத்தின் வழிபாட்டுக்கு உகந்த நடிப்பு மலர்கள் !! மலர் மாலைகள்!!!

கதாநாயகரின் கதாநாயகியர்

Dream Floewer தாழம்பூமலர் மாலை 9
மங்கையரில் மகாராணி மாங்கனி போல் பொன்மேனி இயற்கையின் இளைய கன்னி 'கலர்' காஞ்சனா


தாழம்பூவின் தனித்தன்மையான நிறம் மணம் போன்று தனது தனித்துவமான நடிப்புப் பங்களிப்பினை நல்கி நடிகர்திலகத்தின் பிரம்மாண்ட திரைக்காவியம்
சிவந்தமண்ணின் மாபெரும் வெற்றிக்கு உறுதுணையானவர் 'கலர்' காஞ்சனா என்றே முத்திரை குத்தப் பட்ட பிரம்மனின் எழில் படைப்பான காஞ்சனா !
மோட்டார் சுந்தரம் பிள்ளையின் மூத்த மகளாக அறிமுகம் விளையாட்டுப்பிள்ளை சிவந்தமண் என்று அவர் ஒரு சரித்திரமானவருடன் கதாநாயகியாக
பிரம்மாண்டமான வளர்ச்சி சிவந்தமண் பாடல்களும் காட்சியமைப்புக்களும் காஞ்சனாவின் தோற்றபபோலிவினால் நடிப்புதெய்வத்தின் இணைவில் மெருகேற்றப்பட்ட நடிப்பால் ஸ்ரீதரின் புதுமை கோணங்கள் நிறைந்த இயக்கத்தால் மெல்லிசை மன்னரின் வாழ்நாள் சாதனைப் பாடல்களால் சுந்தரத்தின் வண்ணத்தெளிவில் என்றென்றும் அழியாத அமரத்துவம் பெற்றுள்ளன. காதல் மன்னருடனும் சாந்தி நிலையம் திரைப்படத்தின் பாடல் காட்சிகளில் கிறங்கடித்தார். கலைநிலவுடன் காதலிக்க நேரமில்லை, அதே கண்கள், உத்தரவின்றி உள்ளே வா.....அந்தக் காலகட்டத்தின் கலர் கலக்கல்கள்! சிவந்தமண்ணின் பட்டத்து ராணியாக அவரிடத்தில் யாரையும் ஒப்பிட இயலவில்லை என்பதே அவர் நடிகர்திலகத்துக்கு சேர்த்திட்ட திலக நெற்றிப் பொட்டு சிவந்த குங்குமப் பெருமை!




Signature Song :

நடிகர்திலகம் அரபு கெட்டப்பில் சவுக்கைச் சுழற்றும் லாவகம் அவர் கண்களில் மின்னிடும் தீட்சண்யம் கவனமுடன் அவர் எடுத்து வைக்கும் அடிகள் காஞ்சனாவுக்கு விழும் சவுக்கடிகள் காஞ்சனாவின் மறக்க முடியாத உடல்மொழி முகபாவனை வேதனைகள் சுழன்றாடும் நாட்டியத் திறமை நம்பியாரின் வியர்வை .....
எல்லாவற்றுக்கும் மேலாக எல் ஆர் ஈசுவரியின் உச்சகட்ட சாதனைப் பாடுதலில்...... தமிழ்த் திரையுலகின் பிரம்மாண்ட மிரட்டலான பாடல் காட்சியமைப்புக்கு இப்பாடலே சாட்சியம்!

https://www.youtube.com/watch?v=zd0nJnhQMzQ

Other visual feasts from Kaanchanaa with NT/GG and Ravichandran starrers!

நடிகர்திலகத்துடன் சிவந்தமண்ணில் மறக்க முடியாத ராணி ராஜாவுடன் !

https://www.youtube.com/watch?v=ZlQTqGECxbQ

இயற்கையின் இளைய கன்னி காஞ்சனாவே என்று காதல் மன்னரின் ஒப்புதல்

https://www.youtube.com/watch?v=GjJ5U5m3rQo

கண்ணுக்குத் தெரியாதா காஞ்சனப் பொண்ணுக்குத் தெரியாத காதல் நிலவு ரவிதான் என்று

https://www.youtube.com/watch?v=DOTiyjWxuYk

Gopal.s
6th December 2014, 07:11 PM
நடிகர்திலகத்தின் சாதனை வருடங்கள் பல 1952 இல் தொடங்கி 2000 வரை அவர் வருடங்களே. அதில் மறக்க முடியாத வருடமாக நான் நினைக்கும் வருடம் 1969.

இந்த வருடம் அவர் படங்களின் variety சொல்லி மாளாதது.

அன்பளிப்பு,குருதட்சிணை - கிராமிய படங்கள்.

தங்க சுரங்கம்- jamebond படம்.

சிவந்த மண் - Action படம் .

காவல் தெய்வம்- ரியலிச படம்.

தெய்வமகன்- குடும்ப செண்டிமெண்ட் படம்.

திருடன்- ஆக்க்ஷன் -செண்டிமெண்ட் கலந்த Anti -hero படம்.

நிறைகுடம்- காமெடி கலந்த செண்டிமெண்ட் .

அஞ்சல் பெட்டி 520- முழு நீள காமெடி.

கிட்டத்தட்ட 9 கதாநாயகிகளுடன் நடித்தார்.

அன்பளிப்பு, அஞ்சல் பெட்டி 520 - சரோஜாதேவி.

தங்கசுரங்கம்- பாரதி, வெண்ணிற ஆடை நிர்மலா.

குருதட்சிணை - பத்மினி,ஜெயலலிதா.

தெய்வ மகன்- பண்டரி பாய்,ஜெயலலிதா.

திருடன்- கே.ஆர்.விஜயா.

நிறைகுடம்- வாணிஸ்ரீ.

சிவந்த மண் -காஞ்சனா.

7 இயக்குனர்களுடன் பணியாற்றினார்.

ஏ.சி.திருலோக சந்தர்- அன்பளிப்பு,தெய்வ மகன்,திருடன்.

ராமண்ணா- தங்க சுரங்கம்.

ஏ.பீ.நாகராஜன்- குருதட்சினை.

டி.என்.பாலு -அஞ்சல் பெட்டி 520 (அறிமுகம்)

முக்தா ஸ்ரீனிவாசன்- நிறை குடம் (முதல் படம் நடிகர்திலகத்துடன்)

கே. விஜயன் - காவல் தெய்வம்( முதல் படம் நடிகர்திலகத்துடன்)

ஸ்ரீதர் - சிவந்த மண் .

6 இசையமைப்பாளர்களுடன் பணியாற்றினார்.

அன்பளிப்பு,தெய்வ மகன்,திருடன்,சிவந்த மண் - எம்.எஸ்.விஸ்வநாதன்.

தங்க சுரங்கம்- டி.கே.ராமமூர்த்தி (ஒரே படம்)

குருதட்சினை- புகழேந்தி(ஒரே படம்)

காவல் தெய்வம்- தேவ ராஜன் (ஒரே படம்)

அஞ்சல் பெட்டி 520 - கோவர்தன் (ஒரே படம்)

நிறை குடம்- வீ.குமார் (ஒரே படம்)

Russellbpw
6th December 2014, 07:23 PM
http://rajareviews.com/wp-content/uploads/2014/09/ssvasan-672x372.png

http://rajareviews.com/tag/sivaji-ganesan/

One day at the Gemini Studios, Madras during mid-1940’s. The Gemini magnum opus Chandralekha (1948) was under production stretching over five years. A stage artist was ushered into the presence of the boss, Vasan.

The interesting trivia is when they were scouting for an actor for the role of the bodyguard of the hero, a struggling stage artist Villupuram Chinniah Pillai Ganeshamurthy wanted to do the role. He also grew long hair for the role.

The young actor was trying hard to get a break into movies and was introduced to Vasan for being considered for a minor supporting role in the mega buck movie. Vasan observed him lingeringly and shocked the aspiring actor and the studio writer by telling him that he would never make it in movies, and advised him to stick to theater!

S.S Vasan rejected him and said he is unsuited for films and asked him to find a different profession.S.S Vasan had cast Seetharaman who was later known as Jawar Seetharaman for the character.


The shocked young man was Villupuram Chinnaiah Pillai Ganesamurthy who later set the Bay of Bengal on fire and emerged as an icon of the Indian Cinema under the name Sivaji Ganesan!

Surprising?

HI FRIENDS,

AM BACK !!!


THE SO CALLED TWO BIGGEST GIANTS OF THE INDUSTRY WERE WRONG IN THEIR JUDGEMENT ABOUT NADIGAR THILAGAM.....!!

ONE GIANT IS AVM's MEIYAPPA CHETTIAR & THE OTHER ONE GEMINI SS VASAN.

THEIR JUDGEMENT CAPABILITY ITSELF HAS BECOME A BIG QUESTION MARK WHEN VIEWERS READ THIS.

THIS IS A CLEAR EVIDENCE OF THOSE GENTLEMEN WHO NEVER POSSESSED ANY CAPABILITY EITHER TO JUDGE A PERSON (or) A FILM's SUCCESS BUT BECAUSE OF THEIR SOCIAL STATUS THEY WERE PROJECTED AS IF THEY WERE INTELLECTUALS..!!!!

MR.VASAN & MR. MEIYAPPA CHETTIAR .....YOU FAILED MISERABLY INFRONT OF THE TALENT OF NADIGAR THILAGAM !!!

REGARDS
RKS

eehaiupehazij
6th December 2014, 07:38 PM
Dear RKS.

நடிகர்திலகம் பாறையையும் கல்லையும் மண்ணையும் கீறிக்கொண்டு சீறி எழுந்த சுயம்புலிங்கமானஆலமரம் திரையுலகில் எவர் வரினும் யாவரும் அவரைத் தொழுது கீழிறங்கும் விழுதுகளே!

Gemini Vaasan Sir and AVM Sir too realized this and later they hailed NT as the incomparable actor of this world, in several occasions!!

One way the act of Gemini Vaasan Sir might be on a prediction of NT emerging as the one and only superb Star of this globe in his unbreakable global record of Silver Jubilee maiden venture Paraasakthi overnight!

Russellbpw
6th December 2014, 08:02 PM
நல்ல திரைப்படம் காணவேண்டும் என்ற ஆதங்கம் உடைய நல்ல இதயங்களுக்கும், நடிகர் திலகம் அவர்களின் ஆராதகர்களுக்கும், ரசிக கண்மணிகளுக்கு, இதயங்களுக்கும், மற்றும் இனிய நண்பர்களுக்கும் ஒரு நற்செய்தி.

சென்னை ஓட்டேரி மகாலட்சுமி திரை அரங்கில் இந்த மாதம், அதாவது டிசம்பர் 26 முதல்

நம்முடைய திராவிட மன்மதன் (உபயம் திரு.கோபால்) நடிகர் திலகம் அவர்களுடைய மதோன்னத நடிப்பில்

14-4-1971இல் வெளிவந்து,

03-07-1971இல் வெளிவந்த சவாலே சமாளி திரைபடத்திர்காக வழிவிட்டதால், 100 நாட்கள் எட்டவில்லை என்றாலும் ஓடிய நாட்களில் மிக பெரிய வெற்றி படம் பெரும் வசூலை பெற்ற படம் சுமதி என் சுந்தரி, சிறிது இடைவெளிக்கு பிறகு மீண்டும் வெளியாகிறது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துகொள்கிறேன் !!

காண தவறாதீர்கள் !

http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/sesundari_zpsc2b38126.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/sesundari_zpsc2b38126.jpg.html)

Russellbpw
6th December 2014, 08:35 PM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/mirudhanga_zps2e7c9662.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/mirudhanga_zps2e7c9662.jpg.html)

COURTESY : Mr.LOGANATHAN, MT THREAD

THANKS Mr.LOGANATHAN..!

Russellbpw
6th December 2014, 08:36 PM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/miru2_zpsf166c774.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/miru2_zpsf166c774.jpg.html)

COUTESY : Mr. LOGANATHAN, MT THREAD

THANKS Mr.LOGANATHAN !

Russellbpw
6th December 2014, 08:37 PM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/miru3_zpsa7e9a0d7.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/miru3_zpsa7e9a0d7.jpg.html)

COURTESY : Mr. LOGANATHAN, MT THREAD

THANKS Mr. LOGANATHAN !

eehaiupehazij
6th December 2014, 08:51 PM
மங்கையரில் மகாராணி மாங்கனி போல் பொன்மேனி இயற்கையின் இளைய கன்னி 'கலர்' காஞ்சனா contd.

Dream Flower Kanchana's some more memorable screen sharing with NT/GG/MGR/Ravi/AVMR

One episode is just not enough to present the irresistible contributions of Color Kanchana as most of her song sequences and acting performances are impressive even today!


நடிகர்திலகத்தின் மாறுகின்ற முகபாவங்கள் காட்சிகளுக்கு சுவை கூட்டுகின்றன காஞ்சனாவின் அமைதியான நடிப்பு இனிமை
Kanchana with NT in Vilayaattuppillai (1969)

https://www.youtube.com/watch?v=ZYNefw7g1wI

Kanchana with NT in Avan Oru Sariththiram

https://www.youtube.com/watch?v=hW3ttn2hqfU

Kanchana with GG in Avalukkendru Oor Manam

மங்கையரில் மகாராணி மாங்கனி போல் பொன்மேனி காதல் மன்னரே சொல்லும்போது சரியாகத்தானே இருக்கும்

https://www.youtube.com/watch?v=sV1RWJQYD6U

Kanchana with MGR in Parakkum Paavai ஒரு தேர்ந்த சர்க்கஸ் கலைஞரின் லாவகத்துடன் எம் ஜிஆர் ரிப்பன் சுழற்றும் அழகையும் ரசிக்கலாம்

https://www.youtube.com/watch?v=RtgXOOOxw5Q

Kanchana with Ravi in Uththaravindri Ulle Vaa

காதல் நிலவு கலை நிலவுடன்

https://www.youtube.com/watch?v=CLDrhWpj8bw

Kanchana with AVM Rajan in Veera Abimanyu
ஒரு மாற்றத்திற்காக கருப்பு வெள்ளை காஞ்சனா

https://www.youtube.com/watch?v=aXtdRLIq99U

விண்வெளியில் நட்சத்திரங்கள் சூழ விமானத்தில் பறந்து சேவை செய்து கொண்டிருந்தவரை பூமிக்கு கலைச்சேவை செய்ய நட்சத்திரமாகவே குதிக்க வைத்த 'பாராசூட்' ஸ்ரீதருக்கும் நன்றிகள் !!!



NT comes back to review his association of acting with second to none type actresses in his golden era of tamil cinema : Banumathi, Savithri and Jayalalitha! Sreepriya and Sridevi alongside Ambika, Raadhaa, Raadhikaa and Saritha will be given another exclusive coverage!!

Subramaniam Ramajayam
6th December 2014, 09:40 PM
Dear Raghavendhar Sir. I accept your views and wait for my next posting after the deliberations on Mr. Gopal's write-ups. I also wish to take some time to collect relevant reference materials to justify. Thank you.

Hello friends,
it is long time since I met you, due to technical problems my postings were not there thanks to moderators and murali sir for set right the things.
all these days lot of postings by senthil gopal and upcourse mr muali too.
regarding one issiue about SELVAM success rate, that diwali heavy rains and lot of night shows of diwali releses were cancelled in mount road area but selvam was going very strong withHF shows that itself speaks about the success rate as the producers VKR was making a mention that time.

JamesFague
6th December 2014, 10:01 PM
என் ஆசை ராசாவே -

இந்த திரைப்படத்தை என்றும் நடிகர்திலகத்தின் கோட்டையான பெங்களூர் பல்லவி திரைஅரங்கில் வெளியான நேரத்தில் பார்த்தேன். இனிமையான தருணம் அது.

ஒன்ஸ்மோர் -

மீண்டும் பெங்களூரில் உள்ள பூர்ணிமா திரைஅரங்கில் வெளியான தருணத்தில் நண்பருடன் பார்த்த சுகமான அனுபவம்.

மன்னவரு சின்னவரு -

இந்த திரைப்படத்தை திரைஅரங்கில் காண சந்தர்பம் அமையாததால் தொலைகாட்சியில் பார்த்த அனுபவம்.

Murali Srinivas
7th December 2014, 12:46 AM
மதுரை சென்ட்ரலில் காட்சியளித்துக் கொண்டிருக்கும் Dr. ரமேஷ் அவர்களை காண இன்றும் கணிசமான மக்கள் வந்திருந்து சிறப்பு செய்திருக்கின்றனர். class actor மற்றும் மாஸ் ஹீரோ என்ற இரு வேறு கூறுகளையும் ஒரே நேரத்தில் திறம்பட கையாளும் தகுதி படைத்த ஒரே நடிகன் நடிகர் திலகம், அண்ணன் ஒரு கோவில் படம் வெளிவந்து 37 ஆண்டுகள் கழித்தும் அதை செவ்வனே நிரூபித்திருக்கிறார். வரவேற்பு கூடி கூடி வருகிறது என்ற சந்தோஷ செய்தியை நம்முடன் பகிர்ந்துக் கொண்டார் படத்தை வெளியிட்டவர்.

இந்த இனிமையான தொடக்கம் அவர் முயற்சி செய்யும் நடிகர் திலகத்தின் பல்வேறு திரைப்படங்களுக்கும் இதே போல் தொடர்ந்து வரட்டும் என்று வாழ்த்தினோம்

அன்புடன்

sss
7th December 2014, 12:08 PM
Tara Arts has served as a cultural Ambassador of South India in US.

அமெரிக்காவில் கலை நிகழ்ச்சிகள் நடத்தும் தாரா ஆர்ட்ஸ் நிறுவனத்துக்கு நடிகர் திலகம் நியூ ஜெர்சி நகரத்தில் இருந்து அளித்த கடிதம் :
http://www.taraarts.com/images/Article7.gif

sss
7th December 2014, 12:11 PM
அமெரிக்காவில் தாரா ஆர்ட்ஸ் நிறுவனர் விஜயன் குடும்பத்துடன் எடுத்த படங்கள் :

http://www.taraarts.com/images/Radhika1.jpg
காய் கனிகள் வாங்கும் போது தானே ட்ராலி தள்ளும் நடிகர் திலகம்...
http://www.taraarts.com/images/Vijayan1.jpg

http://www.taraarts.com/images/sivaji1.jpg
திரு விஜயம் குடும்பத்துடன்...

http://www.taraarts.com/images/Group.jpg
Mr. Vijayan - Mr. Sivagi Ganesan - B.M.C. Nair - Ram Kumar

JamesFague
7th December 2014, 12:20 PM
நடிகர்திலகத்தை தரிசித்த அனுபவம்
-----------------------------------------------------------

நடிகர்திலகத்தை அவருடைய பிறந்த நாளில் கோடிகணக்கான ரசிகர்களுடன் வரிசையில் நின்று தரிசித்த அனுபவம்

வண்டலூர் ரயில்வே ஸ்டேஷன் அருகே துணை படபிடிப்பின் போது அருகே தரிசித்த அனுபவம்.

RAGHAVENDRA
7th December 2014, 01:23 PM
சுந்தரபாண்டியன் சார்
நடிகர் திலகம் ஷாப்பிங் காம்ப்ளெக்ஸில் டிராலியுடன் இருக்கும் படம்..
ஏராளமான விஷயங்களைத் தெரிவிக்கிறது.
A simple, down to earth leader,
திரைப்படங்களின் நிழற்படங்கள் மட்டுமல்லாமல் தன் நிஜவாழ்விலும் தன் நிழற்படங்கள் மூலம் வாழ்க்கைக்குத் தேவையான ஏராளமான விஷயங்களைத் தெரிவிக்கிறார் நடிகர் திலகம் என்பதற்கு இது மிகச் சிறந்த சான்று.
மிக்க நன்றி

RAGHAVENDRA
7th December 2014, 01:41 PM
காவியத்தலைவலி !

காவியத்தலைவலி தாங்க முடியாமல், முகநூலில் ஆற்றிய எதிர்வினைகள் இதோ

http://2.bp.blogspot.com/-t4Fo_LEhH5A/VILStK7lddI/AAAAAAAABJY/qv_aLfb2ABg/s1600/V_K_Ramasamy.jpg

எ.வி. 1.
கே.பி.சுந்தராம்பாள்,எம்ஜியார்,சிவாஜி கணேசன் போன்றவர்களின் வாழ்க்கை வரலாற்றை படித்து இருக்கிறேன்.
இவர்கள் எல்லோரையும் விட திரு.வி.கே.இராமசாமி அவர்கள், தன்னுடைய வாழ்க்கை வரலாற்றில் முழுக்க முழுக்க நாடக அனுபவங்களையே எழுதி இருந்தார்.
கிட்டத்தட்ட 1000 பக்கங்களுக்கு மேல் அடங்கிய ‘நாடக வரலாற்று’ பொக்கிஷம் அது.
அதிலிருந்து,அற்புதமான வரலாற்று காவியத்தை உருவாக்கலாம்.
இனி எவனுமே அதை செய்ய முடியாதபடி ‘அரைவேக்காடு காவியம்’
உருவாக்கப்பட்டு விட்டது.
வெயில், அங்காடித்தெரு வசந்தபாலன் காலில் விழலாம்..
அரவான், காவியத்தைலைவன் வசந்த பாலனை காறி உமிழலாம்.
தப்பில்லை.
எ.வி. 2.

http://4.bp.blogspot.com/-qP3PUbtCDw8/VILTECaQuqI/AAAAAAAABJg/OsJ4IGFi0B4/s1600/rs-manohar.jpg

சூரபத்மனை கதாநாயகனாக்கி நாடகம் போட்டு ஜெயித்தவர் ஆர்.எஸ்.மனோகர்.
ஆர்.எஸ்,மனோகர் நாடகம் போட்டது எழுபதுகளில்...
வெள்ளைக்காரன் காலத்துல ‘வள்ளித்திருமணம்’ நாடகம் அனைத்து ‘நாடகக்குழுக்களாலும்’ நடத்தப்பட்டது.
ராஜபார்ட் = முருகன்.
கள்ளபார்ட் = சூரபத்மன்.
கள்ளபார்ட் வசனத்தை பேச சொல்லி...ராஜபார்ட்டுக்கு ஆள் எடுக்குறாங்க!
கேட்டா ‘காவியத்தலைவன்னு’ சொல்றாங்க!.
என்னமோ போடா...நாராயணா!.

....

எ.வி.4.

http://1.bp.blogspot.com/-q-6LlMxTjcw/VILSdS4trfI/AAAAAAAABJQ/8Nz5jc2yuJA/s1600/Rajapart-Rangadurai-Movie-Poster.jpg

நாடக வாழ்க்கையை சித்தரித்த திரைப்படங்களில்,
நான் பார்த்ததை...தர வரிசைப்படுத்தி இருக்கிறேன்.
1.காவியத்தலைவன் | சித்தார்த்-வேதிகா | இயக்கம் : வசந்த பாலன்.
2. தாயில்லாமல் நானில்லை | கமல்ஹாசன் - ஸ்ரீதேவி | இயக்கம் : தியாகராஜன் .
3.ராஜபார்ட் ரங்கதுரை | சிவாஜி கணேசன் - உஷாநந்தினி | இயக்கம் : பி.மாதவன்.
1 = படு திராபை = படு மோசம்.
2 = திராபை = மோசம்.
3 = மூன்றையும் ஒப்பிடும் போது இப்படம் ‘காவியம்’.
எ.வி.5.
ராஜபார்ட் ரங்கதுரையை நேற்று மீண்டும் பார்த்தேன்.
காவியத்தலைவன் ஏற்படுத்திய விளைவு,
இப்போது, ராஜபார்ட் ரங்கதுரையை ‘காவியம்’ என கொண்டாடத்தோன்றுகிறது.
சிவாஜி கணேசன் நாடகத்துறையிலிருந்து வந்தவர் என்பதால்,
அந்த அனுபவங்கள் அவரது அசைவில் அணுஅணுவாக வெளிப்படுகிறது.
‘அல்லி அர்ஜூனன்’ நாடகத்தில் அவர் காட்டும் ‘உடல் மொழி’ ஆஹா...ஆஹா...அற்புதம்.
ஒரு நாடக நடிகன், சமூகத்தில் உள்ள பெரிய மனிதர்களை எவ்வாறு எதிர் கொள்வான் என்பதை அவர் நடிப்பில் தரிசித்தேன்.
வாத்தியாராக நடித்த வி.கே.ராமசாமிக்கும்...நாசருக்கும் உள்ள வித்தியாசத்தை படம் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.
குறிப்பாக, ‘ஆச்சி’ மனோரமாவின் அட்ராசிட்டி அபாரம்.
சிவாஜி பிரேமில் இருக்கும் போது, அவரை தூக்கி அசால்டா முழுங்கி ஒரு ரியாக்*ஷன் குடுக்குறாங்க..பாருங்க!.
எப்பேர்ப்பட்ட மாமேதைகளின் நடிப்பை பார்த்து வளர்ந்திருக்கிறேன் நான் !.
சிறு வயது சிவாஜியாக நடித்த பையன், சிவாஜியின் உடல் மொழி,பாடல் காட்சியில் அவர் வெளிப்படுத்தும் முக பாவங்களை அட்டகாசமாக வெளிப்படுத்தி இருக்கிறான்.
அட...சின்ன வயசு ‘ஸ்ரீதேவி’ ...என்னா போடு போட்டு இருக்கு!.
அடிச்சு சொல்றேன்...
பக்கோடாக்காதர் நடிப்புக்கு பதில் இருக்காடா...
உங்க ‘காவியத்தலைவலியில’.
ராஜபார்ட் ரங்கதுரையை ‘சுமார்’ என மதிப்பிட்டதற்கு..
மன்னிக்க வேண்டுகிறேன்.
முந்தைய பதிவிலும் திருத்தி விடுகிறேன்.
காவியத்தலைவன், தாயில்லாமல் நானில்லை படங்களோடு ஒப்பிடும் போது ‘ராஜபார்ட் ரங்கதுரை’ காவியம்.
எ.வி.6.
நேற்று ‘தாயில்லாமல் நானில்லை’ என்ற குப்பை படத்தை மீண்டும் பார்க்க முயற்சித்தேன்.
முடியல.
பாத்த வரைக்கும் சொல்றேன்.
இந்த குப்பை படத்திலிருந்து காட்சிகளை அப்படியே காப்பியடிச்சு படம் பண்ணி இருக்கானுங்க!.
அடப்பாவிங்களா...
முழு படத்தையும் பாக்க எனக்கு, திராணி இல்லை.
யாராவது முழுசா பாத்து...பட்டியல் போடுங்க!.
எ.வி. இனியும் தொடரலாம் !.


Reproduced from and courtesy: http://worldcinemafan.blogspot.in/2014/12/blog-post_6.html

Gopal.s
7th December 2014, 05:04 PM
நடிகர்திலகத்தின் உடல்மொழி.

சிவந்த மண் படத்தில் ,ஒரு நாளிலே பாடல் காட்சியில் ,முதல் சரணம் முடிவில் வரும் ,வரும் நாளெல்லாம் இது போதுமே என்ற இடத்தில் ஒரு திருப்தி கலந்த கிறக்க காமத்தில் கண் மூடுவார் பாருங்கள். நான்கு வினாடி கவிதை.

சுமதி என் சுந்தரி படத்தில் திடீரென்று தடுப்பின் அந்த பக்கம் ஜெயலலிதா அழ ,கீழே மேலே என்று எதேச்சையாய் சுழன்று ,ஜெயலலிதா பக்கம் திரும்பும் அப்பாவி நகைச்சுவை.

அதே படத்தில் முதலிரவுக்காக திட்டமிடும் தங்கவேலு ,டவல் உடன் திருப்பும் ஒவ்வொரு முறையும் திரும்ப வைத்து ஏதோ சொல்ல ,நாலாவது முறை சொல்லாமலே திரும்பும் spontaneity .

துணை படத்தில் விரக்தியுடன் பிரமை பிடித்தது போல அலுவலகத்தில் உட்கார்ந்திருக்கும் போது , சுரேஷ் அவர் வலப்புறம் வந்து அப்பா என்று கூப்பிட ,திடீரென்று யாருப்பா என்று குரல் வராத திசைகளை நோக்கி, நிதர்சன உலகிற்கு வரும் இடம்.


பராசக்தி படத்தில் ,ஹோட்டல் ரூமில் நுழைந்து நோட்டம் விட்டு, ரூம் பாய் நோக்கி காசு சுண்டும் இடம்.

பாசமலரில், மலராத பெண்மை மலரும் காட்சியில் , தற்செயலாய் அந்த பக்கமாய் செல்லும் போது ,நாணம், பெருமிதம்,கூச்சம் கலந்த முறுவல்.

யாருக்கு மாப்பிள்ளை பாட்டில் பக்க வாட்டில் கீழே நகரும் காமிராவில், ஸ்டைல் கலந்த ,விந்திய நடையுடன் செல்ல சிரிப்புடன் உல்லாசம்.

வசந்த மாளிகையில் பிளம் கடித்து காமம் இழையோடும் காதல் வேட்கையை சொல்லி, கொள்ளி கட்டையால் சிகரெட் கொளுத்தும் இடம்.

ராஜாவில் , ஓடி போக பார்க்கும் ரந்தாவிடம், ஸ்டைல் கலந்த அலட்சியத்துடன் சிகரட்டை கீழே எறிந்து, ஒரு தீர்மானத்துடன் நசுக்கும் இடம்.

Gopal.s
7th December 2014, 05:06 PM
Annan oru Koil - As usual mega collection. Sivaji is not just a star for his fans. He is a Darling star for all Tamils.

eehaiupehazij
7th December 2014, 07:28 PM
NT rises back to view his flamboyant flora !

நடிப்புச் சூரியனின் ஒளியால் வளம் கண்டு பூத்துக் குலுங்கி நடிப்பு நறுமணம் பரப்பிய பசுமைப் பூந்தோட்டங்கள் ! நடிப்புத் தெய்வத்தின் வழிபாட்டுக்கு உகந்த நடிப்பு மலர்கள் !! மலர் மாலைகள்!!!

கதாநாயகரின் கதாநாயகியர்

செண்பகப்பூ மலர்மாலை 10 வைஜயந்திமாலா பாலி

செண்பகப்பூ நிறத்திலும் மணம் பரப்புவதிலும் தனித்துவம் வாய்ந்த பூ மார்க்கெட்டில் விலை உயர்ந்த மலர் வைஜயந்திமாலா பாலி அவர்களும் அவ்வண்ணமே
வாழ்க்கை திரைப்படத்தில் அகில பாரதப் பெண்ணாக அறிமுகமான கணம் தொட்டு மார்க்கட்டில் உச்சத்திலேயே இருந்த செண்பக மலரே ! நடிகர்திலகத்துடன் இரும்புத்திரை, சித்தூர் ராணி பத்மினி.....காதல் மன்னருடன் பெண், பார்த்திபன் கனவு, தேன் நிலவு, வஞ்சிக்கோட்டை வாலிபன்...டி ஆர் ராமசந்திரனுடன் வாழ்க்கை....ஹிந்தியில் ராஜ்கபூருடன் அசத்திய சங்கம்....குறிப்பிடத்தகுந்த படங்கள். ஒரு தலைசிறந்த பரதநாட்டிய தாரகையாக பத்மினிக்கு இணையாக மின்னியவர்...நடிகர்திலகத்தின் இரும்புத்திரையில் மிகச்சிறந்த காதல் காட்சியினை தனது நடிப்புப் பங்களிப்பால் சிறப்படையச் செய்து நடிகர்திலகத்திற்கு பெருமை சேர்த்தமைக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்!!

The best love song sequence for NT with Vaijayanthi in Irumbuththirai

https://www.youtube.com/watch?v=q48ihhHK5kg

In her debut movie Vaazhkai ! amazing dash and verve!

https://www.youtube.com/watch?v=ZelSkcKSXec

Vaijayanthi made the most beautiful pair with GG thru his evergreen signature song

https://www.youtube.com/watch?v=9Gl2EqJlp6E

but, Vaijayanthi's signature song is in Vanjikkottai Vaaliban alongside Padmini! (already posted in Padmini episode)

The Hindi movie Sangam with Rajkapoor catapulted Vaijayanthi skyrocketing to to cloud 9 fame!

https://www.youtube.com/watch?v=mj7mr6f2xOo

(cannot resist comparing NT's performance with the same musical instrument in Enga Mama 'sorkkam pakkaththil... song ...refer: episode8 on Vennira Aadai Nirmala)

குடத்திலிட்ட குத்துவிளக்காக தமிழ்படங்களில் கவர்ச்சி காட்டாது கவர்ந்த வைஜயந்தி சங்கம் இந்திப்படத்தில் குன்றிலிட்ட விளக்காக எல்லை மீறாத அளவில் கவர்ச்சி காட்டி கிறங்கடித்தார் !!

https://www.youtube.com/watch?v=9a-ONy8iGNQ

வஞ்சிக்கோட்டை வாலிபனில் கவர்ச்சி காட்டுவது வைஜயந்தியா வாலிப ஜெமினியா !!

https://www.youtube.com/watch?v=zkHlWFI8sac

Russellxss
7th December 2014, 10:54 PM
ரசிகர்கள் கூட்டத்தால் திணறிய மதுரை சென்ட்ரல் தியேட்டர் .
சந்தோஷ செய்திகள் மற்றும் புகைப்படங்கள் நாளை.

http://i1369.photobucket.com/albums/ag235/sundarajan/Mayyam_zps50d02b05.jpg

எவரும் எட்டாத அதிசியம் சிவாஜி புகழ் காப்போம்.

Murali Srinivas
8th December 2014, 12:42 AM
இன்றைய தினம் மதுரை மாநகரில் நடிகர் திலகம் சரித்திரம் படைத்தார். ஞாயிறு மாலைக்காட்சிக்கு ரசிகர்களும் பொது மக்களும் அமோக ஆதரவளிக்க ஞாயிறு மாலைக்காட்சி பழைய படங்களின் வசூலில் மிக அதிகமாக வசூல் செய்த படம் என்ற பெருமையை அண்ணன் ஒரு கோவில் பெற்றது. பால்கனி டிக்கெட்டுகள் புல் ஆகி விட கீழேயும் சரியான கூட்டம் வந்திருக்கிறது. இதில் குறிப்பிட்டு சொல்ல வேண்டிய விஷயங்கள் சில இருக்கின்றன.

இது தீபாவளி அல்லது பொங்கல் போன்ற விசேஷ நாட்களில் வெளியாகவில்லை. அது போன்ற விடுமுறை நாட்கள் படத்திற்கு பலம் சேர்க்கும். அப்படியில்லாமல் சாதாரண நாட்களில் வெளியாகி வசூல் சாதனை புரிவது என்பது சாதாரண விஷயமில்லை. ஆனால் நடிகர் திலகத்தின் படங்களைப் பொறுத்தவரை எந்த நேரத்தில் வெளியிட்டாலும் வசூலிக்கும் என்பதுதானே உண்மை!

இரண்டாவது விஷயம் இந்த படத்தை திரையிடலாம் என்று பேசிக் கொண்டிருக்கும்போது இந்த படமா இது கிளாஸ் படம். மக்கள் வர மாட்டார்கள் வசூலாகாது என்றெல்லாம் அரங்க நிர்வாகத்தினரிடம் சில "நல்ல உள்ளம்" படைத்தோர் சென்று அவர்கள் மனதை குழப்ப, படத்தின் வெளியிட்டாளார் அரங்க நிர்வாகத்தினரிடம் சென்று நடிகர் திலகத்தின் படங்களைப் பொறுத்தவரை கிளாஸ் அல்லது மாஸ் என்ற வித்தியாசமே கிடையாது. தமிழ் சினிமாவின் 83 வருட சரித்திரத்திலேயே Class Actor அதே நேரத்தில் Mass Hero என்ற இரு வேறுபட்ட நிலைகளிலும் ஒரே நேரத்தில் வெற்றிகரமாக பொருந்தக் கூடியவர் நடிகர் திலகம் ஒருவரே என்ற உண்மையை விளக்கியிருக்கிறார். இந்த மூன்று தினங்களில் படத்திற்கு வருகை தந்த audience-ஐயும் படத்திற்கு வசூலான தொகையையும் பார்த்து விட்டு அரங்க நிர்வாகம் தாங்களாகவே முன் வந்து படத்தின் வெளியிட்டாளரிடம் நீங்கள் சொன்னது நூற்றுக்கு நூறு உண்மை என்று சொல்லியிருக்கிறார்கள்.

மாலையில் டவுன் ஹால் ரோட்டில் ஒரே அலப்பரை என்றால் அரங்கதினுள்ளிலும் ரசிகர்கள் ஆரவாரமாக ரசித்திருக்கின்றனர். ரசிகர்களின் வேண்டுகோளுகிணங்க இடைவேளையில் மல்லிகை முல்லை பாடல் காட்சி மீண்டும் போடப்பட்டிருக்கிறது. அதற்கு ஒரே ஆரவார வரவேற்பு என்றால் அதற்கு பின்னால் ஆண்டவன் கட்டளையின் ட்ரைலர் காண்பிக்கப்பட ரசிகர்கள் ஆனந்த கூத்தாடினர் என்று செய்திகள்.

இன்றைய மாலைக்காட்சி முடிவடைந்தவுடன் தியேட்டர் வாசலில் எடுக்கப்பட்ட புகைப்படத்திற்கு நன்றி சுந்தர்!

சந்தோஷ செய்திகளுடன் மீண்டும் சந்திப்போம்.

அன்புடன்

eehaiupehazij
8th December 2014, 05:59 AM
NT rises back to view his flamboyant flora !

நடிப்புச் சூரியனின் ஒளியால் வளம் கண்டு பூத்துக் குலுங்கி நடிப்பு நறுமணம் பரப்பிய பசுமைப் பூந்தோட்டங்கள் ! நடிப்புத் தெய்வத்தின் வழிபாட்டுக்கு உகந்த நடிப்பு மலர்கள் !! மலர் மாலைகள்!!!

கதாநாயகரின் கதாநாயகியர்

குறிஞ்சி மலர்மாலை 11
பானுமதி ராமகிருஷ்ணா


male chavnism (ஆணாதிக்கம்) மேலோங்கிய தமிழ்த் திரையுலகில் கண்டிப்பும் கறாரும் நிறைந்த 'சண்டிராணி'யாக வலம்வந்து 'நடிப்புக்கு இலக்கணம்வகுத்த நடிகை' என்று பேரறிஞர் அண்ணா அவர்களால் சிலாகிக்கப்பட்ட அபூர்வமாக மலரும் குறிஞ்சி மலரே நடிகை இயக்குனர் பாடகி கதாசிரியர் தயாரிப்பாளர் என்று பன்முகம் கொண்ட அஷ்டாவதானி பானுமதி ராமகிருஷ்ணா அவர்கள். நடிகர்திலகம் அவர்களை விட சீனியர் என்ற வகையில் மரியாதைக்குரியதூரத்திலேயே எட்டநின்று நடித்திருப்பார் NT! அலிபாபாவும் 40 திருடர்களும் திரைப்படத்தில் MGR நெருங்கி நின்று தொட்டு நடிப்பதற்கு கூச்சம் காட்டுவது வெளிப்படையாகவே தெரியும் சிவாஜியுடன் அறிவாளி அம்பிகாபதி கள்வனின் காதலி ரங்கோன் ராதா மக்களைப்பெற்ற மகராசி ....ஜெமினியுடன் சதாரம்... MGR உடன் நாடோடி மன்னன் மதுரைவீரன்....தனிப்பட்ட முறையில் அன்னை, பத்துமாத பந்தம்.....மறக்க முடியாத நடிப்புராணி நடிகர்திலகத்துக்குப் பெருமைசேர்த்தமைக்கு நன்றிகள் !!

சண்டிராணிக்கும் சண்டியராக நடிகர்திலகம் அறிவாளிதான்!

https://www.youtube.com/watch?v=ewYgE9_yBP8

அமராவதியின் அம்பிகாபதி
https://www.youtube.com/watch?v=n6Pt-dKwvwQ

கள்வனின் காதலி வெயிலுக்கேற்ற நிழலே
https://www.youtube.com/watch?v=SnOCfi783Aw

அன்னை பானுமதி அமைதியும் அழுத்தமும்

https://www.youtube.com/watch?v=PXLVA5CvTfo

Signature Song of Banumathi
முள் குத்தும் ரோஜாவான அழகான பொண்ணு....
https://www.youtube.com/watch?v=nrdxKy2J0Zw

Gopal.s
8th December 2014, 12:52 PM
ராஜபார்ட் ரங்கதுரை -1973(22 nd Dec 41 Years Completed).


ராஜபார்ட் ரங்கதுரை பற்றி நிறைய முறை எழுத நினைத்து தள்ளி சென்று கொண்டிருந்தது. இப்போது வலை பூ மற்றும் ராகவேந்தர் தயவில் ஊக்கம் கிடைத்து விட்டது.


முதலில் கதை பயணிக்கும் திசைகள்......


ரங்கதுரை இளமை பருவம் ,ஆதரவற்ற நிலை (தம்பி,தங்கை),நாடக ஆசிரியர் ஆதரவு.


ரங்கதுரை நாடக நடிகன் ஆவது, சில பல நாடக காட்சி பதிவுகள்.


ரங்கதுரை திருமண பிரச்சினை ,அதை மீறி நடக்கும் திருமணம், தங்கையின் வாழ்க்கை (திருமண) அது சார்ந்த போராட்டங்கள். தம்பியின் தகுதி மீறிய ஆசை,அது சார்ந்த பொய்மை நிறைந்த பிரச்சினைகள் (நன்றி மறத்தல்).


ரங்கதுரை எதிர்கொள்ளும் எதிர்ப்புக்கள், சில பல வில்லன்கள் (கொலை வரை செல்வது)


இதில் முன் நிற்பது நடிகர்திலகம்.

அவருடைய அமெரிக்கையான நடிப்பு முறை. தொழில் சார்ந்த நடிகர்கள் யாரையும் பகைக்கவோ, யாரிடமும் குரல் உயர்த்தவோ இயலாது. அதனால் ஆதரவு வேண்டும் குரலிலேயே அவர் பாத்திர படைப்பு கையாள படும். ஒரு இறைஞ்சும் மெல்லிய குரலில். நடையிலும் ஒரு மென்மையான பெண்மை கலந்த அமெரிக்கை வெளிப்படும். அவரே பாய்ஸ் கம்பெனி நடிகர் என்பதால் இதில் போய் நடிக்கவா வேண்டும்? வாழ்ந்திருப்பார்.


ஒரு அற்புத விந்தை, அவர் எந்த இடத்திலும் உணர்ச்சிகளை ஓங்கியே வெளிபடுத்த மாட்டார். தனக்கு வசனங்கள் தேவையேயில்லை என்று பல காட்சிகளில் உணர்த்தி அதிசயம் படைப்பார். சுருங்க சொல்ல வேண்டுமென்றால் ,தன் தங்கையின் கணவன் ,இரண்டாம் திருமண காட்சி. சுமார் நான்கு நிமிடங்கள் எந்த வசன துணையுமின்றி ,அவர் பார்க்கும் பார்வை.ஒவ்வொரு பார்வையாளருக்கும் ஒவ்வொரு அர்த்தம் கொடுக்கும். அதில் தெரிவது விரக்தியா,இறைஞ்சலா,எதிர்பார்ப்பா,மிரட்டலா,கொந்தளிப ்பா, உதாசீனமா,தன்னிரக்கமா,தவிப்பா, ஊமை கதறலா,உண்மை பாசமா,கோழைக்கு விடுக்கும் சவாலா என்று இனம் காண முடியாத ஒரு புதிர்த்தன்மை நிறைந்த நடிப்பின் உச்ச சாதனை. ஒரு எழுத்தாளர் கூட வார்த்தை துணையுடன் ,இந்த உணர்ச்சி கொந்தளிப்பை ,குவியலை கொண்டு வருவது மகா கடினம்.

அதே போல தங்கை இறந்த செய்தி கிடைத்து, அவர் கோமாளி வேடத்தில் நடித்தே ஆக வேண்டிய இடத்தின் சிரித்தே வெளியிடும் ஊமை துயர கதறல்.

தங்கையின் கணவனை (இறந்த பிறகு)பார்த்து நீயெல்லாம் மனுஷனா ரீதியில் உதாசிக்கும் சீ போடா .

தம்பியிடம் உணர்ச்சியை வெளியிட முடியாது,தவிப்புடன் (தகிப்புடன்) பாடும் அம்மம்மா.....


நாடகம் சார்ந்த காட்சிகள் என்றால் நடிகர்திலகத்திற்கு கேட்கவா வேண்டும்? இதில் முக்கியமாக குறிக்க வேண்டியவை பகத் சிங். இதில் கைகள் கட்ட பட்ட நிலையில்,அதன் துணையின்றி நேர்காட்சி,பின் காட்சி,பக்க வாட்டு காட்சிகள் என உடல் மொழி,முகபாவம் ,நடை தாளம்(திமிறி) கொண்டு அவர் வெளியிடும் உசுப்பேற்றும் வீர சுதந்திர உணர்வு. (இதுதான் ஒரிஜினல் action hero .போலி சண்டை காட்சிகள் தேவையில்லை).


அவரின் ஹாம்லெட் நாடக காட்சி ,ஒரு ஷேக்ஸ்பியர் பள்ளிக்கு பாடமாக செல்ல வேண்டிய அதிசயம்.


ஹாம்லெட் ,தன் தந்தையை கொன்று தாயை மணந்த சதிகாரன் சித்தப்பன் கிளாடியஸ் என்பவனை பழிதீர்க்க ,தந்தையின் ஆவியின் வற்புறுத்தலால் மன சாட்சியுடன் உரையாடும் (காதலி ஒபிலியாவிடம் காதலை முறி க்குமுன்பு), காட்சி. வாழ்வதா சாவதா என்ற மன சாட்சி போராட்டம் ,வாழ்வின் அவலங்கள்,சாவுக்கு பின் என்ன எனும் கேள்விகள் என்று மனதத்துவ சிக்கல்கள் நிறைந்த Nunnery Scene என்று connoiseurs குறிக்கும் Act 3 Scene 1.முதல் வியப்பு உலகத்தின் அத்தனை விதமான பாத்திரங்களும் பொருந்தும் முக அமைப்பு.இரண்டாவது வியப்பு ஒதெல்லோ,ஹாம்லெட் பாத்திரங்களுக்கு மற்றவர் குரல் கொடுத்தாலும் அவர் உள்வாங்கி நடித்த சிறப்பு.

ஹாம்லெட் பாத்திர காட்சி சிறிதே சிக்கலான monologue .(இதே மன போராட்ட காட்சி சாந்தி படத்தில் வேறு வடிவில்),வாழ்வதா சாவதா, சாவுக்கு பின் என்ன என்ற மன போராட்டம்.வாழ்க்கை பற்றிய கேள்விகள். Odipus Complex கொண்டு தன் அன்னையிடம் வெறுப்பு கலந்த நேசம் ,இரண்டாம் தந்தையை (சித்தப்பன்)பழிவாங்கும் உணர்வு, தந்தையின் ஆவியால் துன்புற்று, காதலியை துறக்க முயலும் சிக்கல். வெறித்த விழிகளோடு , கத்தியுடன் stylised முறையில் சிந்தனை கலந்த நடையில் அவர் திரும்பும் விதம் இந்த காட்சிக்கு புத்துயிர்ப்பு கொடுக்கும்.இதற்கு குரல் கொடுத்த பேராசிரியர் சுந்தரம் இந்த பாணியில் இந்த காட்சி நடிக்க பட்டதே இல்லையென்றும் ,வசனங்களை காட்சியுடன் இணைக்க மிகவும் பிரயத்தனம் எடுத்ததாகவும் வியந்து பாராட்டி உள்ளார்.


இந்த படத்தின் பலம் சிவாஜி,சிவாஜி,சிவாஜி,சிவாஜி,சிவாஜி(எத்தனை முறை வேண்டுமானாலும் எழுதி கொள்ளுங்கள்).அதனை தவிர இதன் நற்தன்மை,நன்னோக்கம்,கண்ணியமான படமாக்கம். ஒன்றிரண்டு பாடல்கள் அம்மம்மா, மதன மாளிகையில்.


பலவீனம் என்றால்,


அலுப்பு தட்டும் திரைக்கதை , தட்டையான பாத்திர வார்ப்புக்கள்.இதில் வரும் பாத்திரங்கள் நல்லவர்-அல்லாதவர் என்ற பகுப்பு. வாத்தியார் வீ.கே.ஆர் பாத்திரத்தில் சுத்தமாக உண்மை தன்மை இன்றி நல்லவராக மட்டும் glorify பண்ண பட்டுள்ளார்.(சிவாஜியின் கதை படிப்போருக்கு இந்த பாத்திரம் மிக தட்டையான ஒற்றை பரிமாணம்.அந்த கால படங்களின் glorification ).எல்லா பாத்திரங்களுமே உண்மை தன்மை இல்லாதது. Plastic Characters .

இதில் கூத்து கலை பற்றி,அதில் இருக்கும் நடிகர்களின் வாழ்க்கை பற்றி எந்த ஆழமான பதிவுகளும் இல்லை.


குடும்ப பிரச்சினைகளை எடுத்தாலும், ஒரு பீம்சிங் கால படங்களை போல பிரச்சினைகளில் ஒரு புத்திசாலித் தன வித்தியாச பாத்திர சிக்கல்கள் இல்லை. வெளிப்படையான ,சுவாரஸ்யமற்ற சிக்கல்கள். வெறும் உருக்கம் மட்டுமே கொண்டது.


மற்ற பாத்திரங்கள் miscast என படும் தவறான தேர்வு. முக்கியமாக உஷாநந்தினி, ஸ்ரீகாந்த். நவராத்திரி,தில்லானா எடுபட்டதென்றால் ஏ.பீ.என் , அவருடைய troupe ,சாவித்திரி போன்ற சக நடிகர்களின் பங்களிப்பு.இதில் உஷா நந்தினி போன்ற பதுமைகளோ,மாதவன் போன்ற இயக்குனரோ அந்த மாயத்தை சாதிக்க முடியவில்லை. விஸ்வ நாதனிடம் ,கே.வீ.எம் இன் authentic period music கிடைக்கவில்லை. ஆத்மார்த்தமான நிஜமான பங்களிப்பு ஏ.பீ.என்,கே.வீ.எம் கூட்டணிக்கே சாத்தியம்.


நாடக நடிகனை பற்றிய கதை,சுவையற்ற ,ஜீவனற்ற துணுக்கு கூத்துக்களை தொகுத்தளித்தாலும் ,நாடக நடிகனின் வாழ்கை பற்றி பேசவேயில்லை. மாறாக ,இதன் கதாநாயகன் எந்த தொழில் சேர்ந்தவனாக இருந்தாலும் ,இந்த கதை சொல்ல பட்டு விடலாம் என்பது முக்கிய பலவீனம். பாலமுருகன்-மாதவன் கூட்டு ,இந்த கதைக்கு வலு சேர்க்கவே இல்லை.


ராஜபார்ட் ரங்கதுரை சிவாஜியை மட்டுமே நம்பியது. சிவாஜியால் மட்டுமே வெற்றி பெற்றது. இதற்கு உரிய கவனம் கொடுத்து செதுக்க பட்டிருந்தால் ,மகா வெற்றி பெற்றிருக்க கூடிய சாத்தியகூறுகள் கொண்ட கரு.

eehaiupehazij
8th December 2014, 01:56 PM
NT rises back to view his flamboyant flora !

நடிப்புச் சூரியனின் ஒளியால் வளம் கண்டு பூத்துக் குலுங்கி நடிப்பு நறுமணம் பரப்பிய பசுமைப் பூந்தோட்டங்கள் ! நடிப்புத் தெய்வத்தின் வழிபாட்டுக்கு உகந்த நடிப்பு மலர்கள் !! மலர் மாலைகள்!!!

கதாநாயகரின் கதாநாயகியர்

மனோரஞ்சித மலர்மாலை 12
சாவித்திரி
நடிகர்களைப் பொறுத்த மட்டில் அடியும் முடியும் காண இயலாத விசுவரூபம் நடிகர் திலகம். இந்த ஒப்புவமைக்கு ஈடாக உலகில் வேறு எந்த நடிகநடிகையரும் இவ்வளவு வெரைட்டி தந்ததில்லை. நடிகையரில் ஒரு இமயம் என்ற அளவில் சாவித்திரி ஒரு நடிகையர் திலகமாக கருதப்பட்டார். பாசமலருக்குப் பிறகு நடிகதிலகத்துக்கு ஜோடியாக வந்த படங்களில் திருவிளையாடலும் நவராத்திரியும் நன்று. ஜெமினியுடன் மட்டுமே மனோரஞ்சிதமாக ரசிக்கத்தக்க ஜோடி நாயகி.
நடிகர்திலகத்துக்கு நல்ல நடிப்பிணையாக விளங்கிப் பெருமை சேர்த்தவருக்கு நன்றிகள் !

Signature song with NT

https://www.youtube.com/watch?v=R9zT_GGGL7M

Signature songs with GG

https://www.youtube.com/watch?v=AX0o-_EXA1I

https://www.youtube.com/watch?v=oRrnQg4SboQ

All her association with NT movies were commendable as far as acting is concerned but the cult image as the "sister of NT'' prohibits me to proceed further!

Russellxss
8th December 2014, 04:11 PM
மதுரையில் 5.12.14 வெள்ளி அன்று திரையிடப்பட்ட மக்கள்தலைவர் சிவாஜி அவர்களின் அண்ணன் ஒரு கோயில் திரைப்படம் மாபெரும் வரவேற்பை பெற்றது. ஞாயிறு அன்று மாலை 6.30 மணி காட்சிக்கு ரசிகர்கள் 5.00 மணியிலிருந்தே குவிய தொடங்கினர். படத்திற்கு வைத்திருந்த வரவேற்பு வளைவுகள் மற்றும் ரசிகர்களின் வாழ்த்து பேன்னர்கள் ரசிகர்களை மட்டுமல்லாது பொதுமக்கள் மற்றும் அனைவரையும் படத்தை பார்க்குமாறு தூண்டியதால் பெண்கள் மற்றும் பொதுமக்களும் குவிய தொடங்கியதால் தியேட்டரில் கூட்டம் அதிகமாக எப்பொழுதும் டிக்கெட் கொடுக்கும் நேரத்திற்கு அரை மணி நேரத்திற்கு முன்னதாகவே டிக்கெட் கொடுக்கப்பட்டது.
6.30 மணிக்கெல்லாம் ரசிகர்கள் கொண்டாட்டம் அதிகமானது. தலைவர் பேன்னற்கு மாலை அணிவிக்கப்பட்டது. 11 தேங்காயில் சூடம் ஏற்றி சிதறுகாய் உடைக்கப்பட்டது. வரிசையாக வைக்கப்பட்டிருந்த தலைவர் பேன்னருக்கு சிவப்பு வெள்ளை பலூன் கட்டி அலங்கரிக்கப்பட்டது.
மேலும் ரசிகர்கள் வைத்த வெடியின் சத்தம் சுற்று வட்டாரத்தையே அதிர வைத்தது. அவ்வழியே சென்றவர்கள் இது என்ன புது படமா என்று விசாரிக்கும் அளவுக்கு தியேட்டர் அமைந்திருக்கும் ரோடு முழுவதும் ரசிகர்கள் கூட்டம் அனைவரையும் வியக்க வைத்தது.
விநியோகஸ்தர்கள் சிலரும் வந்திருந்தனர். அவர்கள் அனைவரும் கர்ணன் படத்திற்கு பிறகு இவ்வளவு ரசிகர் கூட்டம் இந்த படத்தில் தான் பார்க்கிறோம். வேறு எந்த படத்திற்கும் இவள்ளவு ரசிகர்கள் கூட்டத்தை பார்த்தது கிடையாது என்று கூறியது இன்னும் என் செவியில் ஒலித்துக்கொண்டே இருக்கிறது. மேலும் நமது ரசிகர்கள் பலபேர் நீண்ட இடைவேளைக்கு பிறகு ஒருவரை ஒருவர் சந்தித்து கொண்டது இன்னும் மகிழ்ச்சி தரக்கூடியதாக இருந்தது.
படத்தின் விநியோகஸ்தர் படத்திற்காக நல்ல விளம்பரம் மற்றும் வரவேற்பு வளைவுகள் அமைத்து கொடுப்பதில் தானும் பங்கு எடுத்து கொண்டது நமது படத்தின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தது குறிப்பிடத்தக்கது. அதற்காக நாம் திரு வி.சந்திரசேகர் சார் அவர்களுக்கு நன்றியை தெரிவித்து கொள்வோம். மேலும் திரு.ரமேஷ்பாபு மற்றும் திரு வைகை சுந்தர் அவர்களின் பேன்னர் அனைவரையும் வெகுவாக கவர்ந்தது. சமூகநல பேரவையை சேர்ந்த திரு.பாண்டி அவர்கள் வைத்த பேனர் மற்றும் திரு.ராஜன், குமார் இருவரும் படத்திற்காக அடித்த போஸ்டர் திரு.வெங்கடேஷ் அவர்கள் எடுத்த முயற்சி ஆகிய அனைத்தும் படத்தின் வெற்றிக்கு வித்திட்டன.
படத்திற்காக உழைத்த அனைவர்க்கும் உளமார்ந்த நன்றி.

http://i1369.photobucket.com/albums/ag235/sundarajan/DSC00106_zpsebc3de71.jpg


எவரும் எட்டாத அதிசியம் சிவாஜி புகழ் காப்போம்.

Russellxss
8th December 2014, 04:14 PM
சிவாஜி ஒரு கோயில் திருவிழா புகைப்படங்கள்

http://i1369.photobucket.com/albums/ag235/sundarajan/DSC00057_zpsf2141e66.jpg

எவரும் எட்டாத அதிசியம் சிவாஜி புகழ் காப்போம்.

Russellxss
8th December 2014, 04:16 PM
சிவாஜி ஒரு கோயில் திருவிழா புகைப்படங்கள்

http://i1369.photobucket.com/albums/ag235/sundarajan/DSC00055_zps097cdb32.jpg

எவரும் எட்டாத அதிசியம் சிவாஜி புகழ் காப்போம்.

Russellxss
8th December 2014, 04:18 PM
சிவாஜி ஒரு கோயில் திருவிழா புகைப்படங்கள்

http://i1369.photobucket.com/albums/ag235/sundarajan/DSC00066_zpsf465a1a4.jpg


எவரும் எட்டாத அதிசியம் சிவாஜி புகழ் காப்போம்.

Russellxss
8th December 2014, 04:20 PM
சிவாஜி ஒரு கோயில் திருவிழா புகைப்படங்கள்

http://i1369.photobucket.com/albums/ag235/sundarajan/DSC00069_zpsc9f87b8a.jpg

எவரும் எட்டாத அதிசியம் சிவாஜி புகழ் காப்போம்.

Russellxss
8th December 2014, 04:22 PM
சிவாஜி ஒரு கோயில் திருவிழா புகைப்படங்கள்

http://i1369.photobucket.com/albums/ag235/sundarajan/DSC00071_zps1e3f1537.jpg

எவரும் எட்டாத அதிசியம் சிவாஜி புகழ் காப்போம்.

Russelldwp
8th December 2014, 07:25 PM
http://i1369.photobucket.com/albums/ag235/sundarajan/dsc00106_zpsebc3de71.jpg


எவரும் எட்டாத அதிசியம் சிவாஜி புகழ் காப்போம்.[/quote]

திரு.சுந்தர்ராஜ் அவர்களே

தங்களுடைய பதிவுகளுக்கு மிக்க நன்றி. பழைய படத்திற்கு இவ்வளவு ஆர்ப்பாட்டமா - இவ்வளவு அலங்காரங்களா என அனைவரும் விய்க்கும் வண்ணம் செய்துள்ளீர்கள். மதுரை ரசிகர்கள் ஈடு இணையில்லாதவர்கள் என நிருபித்துள்ளீர்கள். அடுத்த படத்திற்கு திருச்சி ரசிகர்கள் இங்கு பிரபலமான பேப்பர் மாலையுடன் அங்கு வந்து படம் பார்க்க உள்ளோம். மதுரை ரசிகர்களுக்கு மீண்டும் எங்கள் நன்றி

Russellisf
8th December 2014, 07:35 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/b_zps115efa10.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/b_zps115efa10.jpg.html)

Andha Naal was a Tamil crime mystery film produced by AVM in 1954. This was the first Tamil film to be made without songs, dance and stunt scenes. The story is set during the World War II period and is about the murder of a radio Engineer Rajan(Sivaji Ganesan).#AVMproductions

Russellisf
8th December 2014, 07:44 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/a_zps8092aa83.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/a_zps8092aa83.jpg.html)

Russellisf
8th December 2014, 07:45 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/b_zps358571b1.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/b_zps358571b1.jpg.html)

Russellisf
8th December 2014, 07:49 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/a_zpsa92cfac6.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/a_zpsa92cfac6.jpg.html)

Russellisf
8th December 2014, 07:56 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/a_zpse39e5f8d.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/a_zpse39e5f8d.jpg.html)

JamesFague
8th December 2014, 08:16 PM
தற்போது சன் லைப் சேனலில் சாந்தி ஒளிபரப்பி கொண்டு இருக்கிறார்கள். நாளை பகல் 11 மணிக்கு குங்குமம் ஒளி பரப்ப உள்ளார்கள். எங்கும் சிவா ஜி மயம்.

Russellxss
8th December 2014, 08:32 PM
சிவாஜி ஒரு கோயில் திருவிழா புகைப்படங்கள்

http://i1369.photobucket.com/albums/ag235/sundarajan/DSC00085_zpsfaa07690.jpg

எவரும் எட்டாத அதிசியம் சிவாஜி புகழ் காப்போம்.

Russellxss
8th December 2014, 08:33 PM
சிவாஜி ஒரு கோயில் திருவிழா புகைப்படங்கள்

http://i1369.photobucket.com/albums/ag235/sundarajan/DSC00063_zps1c4b837f.jpg

எவரும் எட்டாத அதிசியம் சிவாஜி புகழ் காப்போம்.

Russellxss
8th December 2014, 08:35 PM
சிவாஜி ஒரு கோயில் திருவிழா புகைப்படங்கள்

http://i1369.photobucket.com/albums/ag235/sundarajan/DSC00096_zpsa5e26d09.jpg


எவரும் எட்டாத அதிசியம் சிவாஜி புகழ் காப்போம்.

Russellxss
8th December 2014, 08:38 PM
சிவாஜி ஒரு கோயில் திருவிழா புகைப்படங்கள்

http://i1369.photobucket.com/albums/ag235/sundarajan/DSC00093_zpse70a6630.jpg

எவரும் எட்டாத அதிசியம் சிவாஜி புகழ் காப்போம்.

Russellxss
8th December 2014, 08:41 PM
சிவாஜி ஒரு கோயில் திருவிழா புகைப்படங்கள்

http://i1369.photobucket.com/albums/ag235/sundarajan/DSC00083_zps44dacd13.jpg

எவரும் எட்டாத அதிசியம் சிவாஜி புகழ் காப்போம்.

JamesFague
8th December 2014, 08:44 PM
அன்பு நண்பர் சுந்தர்ராஜன் அவர்களுக்கு

அண்ணனுக்கு அருமையான வரவேற்பை தந்து அசத்தி விட்டிர்கள். மிக்க நன்றி.


Regards

sss
8th December 2014, 11:03 PM
இன்னும் எத்தனை வருடமானாலும் அண்ணனை தரிசிக்க அன்பு ரசிகர் கூட்டம் ஆர்பரித்து வரும் என்பதற்கு மதுரையில் கிடைத்துள்ள வரவேற்பு ஒரு சான்று...
முதல் வெளியீடாக இருந்தாலும் மறு வெளியீடாக இருந்தாலும் தான் ஒரு மகா சக்கரவத்தி என்பதை பறை சாற்றி உள்ளார்...ஒவ்வொரு முறையும்...

அசத்தல் படங்களை வெளியிட்டு எல்லோரும் இன்புற செய்த சகோதரர் சுந்தர்ராஜன் அவர்களுக்கு நன்றி...

sss
8th December 2014, 11:16 PM
http://sridharsubramaniam.org/wp-content/uploads/2012/08/Mudhal_Mariyadhai.jpg

Sivaji had a special walk that he used on screen and it wasn't a conscious thing. The minute he heard the word "action", he would automatically transform his entire body language - instinctively.

During the filming of MUDHAL MARIYAADHAI, Bharathiraja was trying to get him to walk like he did off camera but each time Bharathiraja shouted "Action", Sivaji would do his on-screen walk.
http://sridharsubramaniam.org/wp-content/uploads/2012/08/Bharathiraja.jpg

Bharathiraja then asked him to walk towards Radha and stop until they changed the reflectors and camera positions. When Sivaji reached Radha, Bharathiraja shouted "Cut" and Sivaji immediately relaxed and walked back to his spot, ready for the 2nd take. What Bharathiraja didn't tell him was that he had quietly asked cameraman B.Kannan to keep the camera rolling even after hearing the word "Cut". The result is Sivaji's natural walk captured on film for the first time in this scene in MUDHAL MARIYAADHAI.

When Bharathiraja meekly told Sivaji what he had done, expecting an explosion, Sivaji burst out laughing, calling Bharathiraja "Badavaa" and saying that he had tricked him properly.


Everyone on set could not believe how graciously Sivaji accepted this - One of many, many anecdotes that prove that Sivaji Ganesan was more than an amazing actor, he was an extraordinary human being!

RAGHAVENDRA
8th December 2014, 11:23 PM
http://i1146.photobucket.com/albums/o528/imagivity/unspecific/sundararajangrtgs_zps3f6a6d2c.jpg

Murali Srinivas
9th December 2014, 12:59 AM
மதுரையில் இன்றும் Dr.ரமேஷ் அண்ணனுக்கு வரவேற்பு குறையாமல் தொடர்கிறது என்ற மகிழ்ச்சியான செய்தியை மதுரை நண்பர்கள் பகிர்ந்துக் கொண்டனர். வேலை நாளான போதிலும் மக்கள் இன்றும் சென்ட்ரல் திரையரங்கிற்கு கணிசமான அளவில் வந்திருந்தனர் என்று சொன்னார்கள். இந்த வரவேற்பு இனி வரும் நாட்களிலும் தொடரும் என்ற நம்பிக்கை செய்தியையும் அவர்களிடமிருந்து கிடைத்தது.

சந்தோஷ செய்திகளுடன் மீண்டும் சந்திப்போம்

அன்புடன்

eehaiupehazij
9th December 2014, 01:39 AM
NT rises back to view his flamboyant flora !

நடிப்புச் சூரியனின் ஒளியால் வளம் கண்டு பூத்துக் குலுங்கி நடிப்பு நறுமணம் பரப்பிய பசுமைப் பூந்தோட்டங்கள் ! நடிப்புத் தெய்வத்தின் வழிபாட்டுக்கு உகந்த நடிப்பு மலர்கள் !! மலர் மாலைகள்!!!

கதாநாயகரின் கதாநாயகியர்

சூரியகாந்திப்பூ மலர்மாலை 13 ஜெயலலிதா

நடிப்புப் பகலவனின் கதிரொளியில் மின்னிய நடிகர்திலகத்தால் தங்கச்சிலை என்று வர்ணிக்கப்பட்ட ஜெயலலிதா நடிப்புச்சூரியன் போன திசையிலெல்லாம் வளைந்த, வெளிப்பார்வைக்கு மலரென்றாலும் திறமைவித்துகள் பொதிந்து மறைந்த சூரியகாந்திப்பூவே! சரோஜாதேவி போலவே மக்கள்திலகம் எம்ஜிஆரின் பாசறை ஆஸ்தான நடிகையென்றாலும் நடிப்பு ராமன் (எத்தனை ராமனடி!) பாதம் பட்டு விமோசனம் அடைந்து உயிர்பெற்றெழுந்த அகலிகை போல இவருள் உறங்கிக்கிடந்த நடிப்புத்திறமை விழித்தெழுந்து படிப்படியாக சுகந்தம் பரப்பியது நடிப்புக்கடவுளின் வழிபாட்டுக்குரிய படங்களில் நடிக்கத் தொடங்கிய பின்னரே!!

நடிகமேதையின் வளர்ந்த மகளாக மோட்டார் சுந்தரம் பிள்ளையில் ஆரம்பித்து கலாட்டா கல்யாண கதாநாயகியாக மலர்ந்து எங்கிருந்தோ வந்தாளில் நடிகர்திலகத்திற்கே இணையான முதிர்ந்த நடிப்பினை வெளிப்படுத்தி நடிப்புச்செல்வியாக பரிணாம மாற்றம் பெற்றார். நடிகர்திலகத்தின் இணைவில் எங்க மாமா, சுமதி என் சுந்தரி தெய்வமகன், சவாலே சமாளி, ராஜா, அவன்தான் மனிதன், பாதுகாப்பு மற்றும் பட்டிக்காடா பட்டணமா குறிப்பிடத்தக்கவை. நடிப்புச்சூரியனாரின் காந்த அலைவட்டத்துக்குள் அவர் சென்ற திசையெல்லாம் திரும்பி சிறப்பித்தமைக்கு சிரம் தாழ்ந்த வணக்கங்கள்!

நடிகர்த்திலகத்துடன் ஒரு நல்ல இடம்,,,நீங்கள் வந்த இடம்...மகாராணி!

https://www.youtube.com/watch?v=G9BPzusiYJY

https://www.youtube.com/watch?v=NaeKkH0hPus

நான் உன்னை அழைக்கவில்லை...எங்கிருந்தோ வந்த என் உயிரை அழைக்கிறேன்!

https://www.youtube.com/watch?v=XNOjcAZJoSM

கண்ணீரை நான் எங்கு கடன் வாங்குவேன்.....அது கடலாக வந்தாலும் தடை போடுவேன்...

https://www.youtube.com/watch?v=vo00ogHbydI


கலைநிலவுடன் கலைச்செல்வி நடிகர்திலகத்தின் மகளாக....!

https://www.youtube.com/watch?v=oRS_BNiuWcA

Signature song of Jayalalitha from Aayiraththil Oruvan!

https://www.youtube.com/watch?v=WtlfSOQ4fv0




உதிரிப்பூக்களும் வழிபாட்டுக்கு உகந்தவையே !NT returns for his glimpses with gratitude on Ambila, Raadha, Raadhikaa, Saridhaa and Sreepriyaa

Gopal.s
9th December 2014, 05:09 AM
உயர்ந்த மனிதன்- 1968 தெய்வத்தின் 125 ஆவது சித்திரம்.(29th Nov- 45 Years completed)

சிலருக்கு மட்டும் வாழ்க்கை வச படுவதில்லை. ஆணாக(பணக்கார??) பிறந்தாலும் ,பலன் பூரணமாய் அனுபவிக்க படுவதில்லை.சூழ்நிலை கைதி -அதுவும் ராஜலிங்கம் போல் எல்லோருக்கும் நல்லவனாக வாழ விரும்பும் உயர்ந்த மனிதனுக்கு....

எல்லோருக்கும் எதிர்காலம் குறித்து குழப்பம் உண்டு.நிகழ் காலம் குறித்து அதிருப்தி உண்டு. ஆனால் ராஜுவுக்கோ எதிர்காலம் சூன்யம்.நிகழ்காலம் தண்டனை.கடந்த காலமோ குழப்பம். அவன் அறிவு,விருப்பம் எதுவும் பயன் படாமல் அவன் நாட்கள்.... பாரம்பரியம்,கெளரவம்,மனசாட்சி எல்லாவற்றையும் கேள்வி குறியாக்கி கேலி செய்கிறது.அவன் சுதந்திரம் பெற்ற மனிதனாக வாழவே இல்லை.

பார் மகளே பார் படத்தில் NT கதாபாத்திரம்தான் உயர்ந்த மனிதனில் NT தந்தை பாத்திரம் -சங்கரலிங்கம்.தன் அந்தஸ்துக்கு குறைந்த எதுவுமே துச்சம்.அடுத்தவர் சுதந்திரத்தை பிடுங்கி (மகன் ஆனாலும்) அடிமை படுத்தும் சுயநல மூர்க்கன்.எல்லாவற்றையும் வாய் மூடி மௌனியாய் சகித்து வாழும் ராஜு தான் விரும்பிய ஏழை பெண்ணை மணந்து சில காலம் வாழ்கிறான். ஆனால் கண்ணெதிரே தந்தையால் அவள் எரிக்க பட்டு, ஒரே மாதத்துக்குள் மருமணம் புரிய நிர்பந்திக்க பட்டு, ஒட்டாமல் அமைதி வாழ்க்கை வாழும் அவன் வாழ்க்கையில், சத்யா என்ற அநாதை ஒருவன் வேலையாளாய் நுழைந்து ,அன்பிற்கு பாத்திரமாகி,சோதனை கடந்து ,இறுதியில் சத்யா தன் மகனே என்ற உண்மை தெரிந்து சுபம்.

உருவம்,உள்ளடக்கம் எதிலும் சோதனை முயற்சி செய்யாமல் , சில பாத்திர வார்ப்புகள்,சில பாத்திர திரிபுகள், நேர்மையான ஆற்றோட்டமாய் திரைகதை. அற்புதமான வசனங்கள். மிக மிக நேர்த்தியான நடிப்பு, இவற்றை வைத்து அற்புதமான படத்தை கொடுத்தனர் கிருஷ்ணன்-பஞ்சு,மற்றும் ஏ.வீ.எம்.(உபயம்-உதர் புருஷ்-பெங்காலி)

காட்டாற்று வெள்ளமாய் ஓடிய சிவாஜியின் 68 ஆம் வருடத்திய நடிப்பில் அணை போட்டு வரம்பில் நிறுத்திய இரு படங்கள் தில்லானாவும்,உயர்ந்த மனிதனும்தான். இதில் அவர் பங்கு தில்லானாவை விட காம்ப்ளெக்ஸ் ஆனது. அவர் விரும்பாத பாத்திரம்.(விரும்பியது டாக்டர் பாத்திரம்).வேறு எந்த படத்திலாவது அவர் பாத்திரம் படத்திலேயே இந்த அளவு சுய விமரிசனத்திற்கும் ,பிறர்(முக்கியமாய் நெருங்கிய நண்பன்) விமர்சனத்திற்கும் ஆளாகி இருக்குமா என்பது சந்தேகம்.
கோழை,சில உயர்ந்த மனிதர்கள்,சூன்யமாய் பொய் வாழ்க்கை, சுமைதாங்கி,தியாகி,தனது சுய துக்கம் சுகம் நினையாத பொதிமாடு,என்று சுயமாகவும்,
கோழை,சுயநலக்காரன்,அப்பனை சமாளிக்க முடியாதவன்,தன்னை நம்பியவர்களை காப்பாற்ற முடியாதவன்,என்று டாக்டரும்,
ஜென்டில்மன்,பொய்யன்,காட்டுமிராண்டி என்று மனைவியும்,
உதட்டில் ஒன்று உள்ளத்தில் ஒன்று என்று சுந்தரம் மகள் கவுரியாலும்
விமரிசிக்க படும் இந்த ராஜு யார்?

சுருக்கமாக சொன்னால் ,தன சுயத்தை இழந்து வாழ்பவன். அதனால்,பிறரால்,அவரவர் சௌகரியத்திற்கு விமரிசிக்க படுபவன். இப்போது புரிந்திற்குமே சிங்கத்திற்கு சற்றே தீனி கிடைத்திருக்கும் என்று?

உ.ம வை வித்தியாசமான படமாக்குவது டாக்டர் பாத்திரம். நண்பன் என்றாலே,பின்னால் விரோதியாக போகும் இந்நாள் alter -ego என்ற சம்பிரதாயத்தை முறியடித்து, ஒரு தாட்சண்யம் இல்லாத மனசாட்சி,இங்கிதமற்ற இரக்கமற்ற உறுத்தி கொண்டே இருக்கும் அனுகூல சத்ரு, சங்கீதத்தில் கவுன்ட்டர்-பாயிண்ட் என்று சொல்லும் படியான அபஸ்வர இசைவு . தனக்கு சொந்தமில்லாத பொருளை ,விட்டு கொடுத்து விட்ட பாவனையில்,தானும் அந்த அசம்பாவித சம்பவத்தில் கூட இருந்தும் தன்னாலும் தான் ஆசை பட்டவளை காப்பாற்ற முடியாத உண்மையை வசதியாக மறந்து,கல்யாணமும் செய்து கொள்ளாமல் எல்லா சந்தர்பங்களிலும் ராஜுவை இடித்து கொண்டே இருக்கும் ஒரு பாத்திரம்.ஆனால் மக்களின் மனதில் ராஜுவை விட அதிக இடம் பிடிக்கும் வாய்ப்பு. ராஜு அபார சுய இரக்கம்,சுய வெறுப்புக்கு ஆளாகி ஒருவித துறவு நிலை குற்ற உணர்வுடன் இந்த சித்ரவதை நண்பனை விரும்பி ஏற்கும் மேசொகிஸ்ட்(Masochist) ஆன மனநிலையை வெளிபடுத்துவான் நட்பின் உயர்வை காட்ட ஒரு காட்சியும் வலிந்து இருக்காது.

இதன் protoganist ஆக வந்த நடிப்பு கடவுளின் படம் நெடுக மிளிரும் நடிப்பை விவரிக்க இந்த பகுதி சமர்ப்பணம்.
இந்த படத்தின் அழகே,அவர் வசனம் பேசும் காட்சிகளை விட reaction காட்டும் காட்சிகள் அதிகம். சிவாஜியின் மேதைமை ஜொலிக்கும்.

முதல் காட்சியிலேயே அந்தந்த பத்திர வார்ப்புகள் சித்திரிக்க படும்.நாடகத்தனம் கொஞ்சம் இருந்தாலும் சிவாஜியின் magic அதனை சமன் செய்யும்.

ரொம்ப uneasy restraint என்று சொல்லப்படும் பாணியில் தந்தை எதிரே நடப்பதில் ஒட்டாமல், நடப்பதை மனதளவில் அங்கீகரிக்காமல் ஆனால் எந்த வெளிப்படையான எதிர்ப்பும் காட்டாமல் கடந்து செல்வார். தனது சம நண்பன் கோபாலுடன் சமமில்லாத பால்ய நண்பன் சுந்தரத்திற்கு நேர்ந்த ஒரு அநீதியை கூட ஒட்டாமல் துறவு நிலையாய் விளக்குவார். பிறகு சிறிது குற்ற உணர்வு உறுத்த நான் உன்னை சம நிலையில் அங்கீகரிக்கிறேன் என்ற தேற்றலோடு, சிகரெட் கொடுத்து சமாளிப்பார். அனால் ராஜு ,கோபால்,சுந்தரம் உடன் பழகும் விதம் சமூக நிர்பந்த நியதிற்குட்பட்டே (சமம், சமமின்மை )இருக்கும்.பின்னால் ராஜுவின் எந்த act of commission ,omission எல்லாவற்றுக்கும் இந்த ஒரு காட்சியே நம் மனநிலையை தயார் செய்து விடும்.

கதையின் நாயகி,பார்வதியிடம் பழகும் போது inhibition துறந்து உரக்க பேசுவார்,நையாண்டி செய்வார்,இயல்பை மீறி நடப்பார்.பார்வதி அந்தஸ்தில் குறைந்திருப்பதும்,சுந்தரத்திற்கு கொடுக்க இயலாத முக்கியத்துவத்தை இந்த உறவிற்கு கொடுக்க முடிவதும், ஒரு அசட்டு தைரியத்தையும் அவருக்கு அளிக்கும்.(தந்தையை மீறியும் ,சமாளிக்கலாம் என்று) ஒரு liberated மனநிலையில் இருப்பார். இந்த மனநிலை பின்னால் ஒரே ஒரு காட்சியில் வெளிப்படும்.அதை பிறகு பார்க்கலாம்.
ஆனால் மனைவி எரிபடும் காட்சியில், ஒரு ஊமை புலம்பலோடு,ஒரு குழந்தையின் இயலாமை கதறலோடு முடிப்பார். பிறகு தந்தை தன்னை மறுமணத்திற்கு ,துப்பாக்கியை வைத்து தற்கொலை மிரட்டலோடு ,மன்றாடும் போது, கோபம்,அதிர்ச்சி,இயலாமை,சுய-வெறுப்பு,விரக்தி அத்தனையையும் ஒரு பத்து நொடி close -up ஷாட்டில் காட்டி விடுவார்.(சிவாஜிக்கு இது புதிதல்ல).அரை மனதோடு சம்மதிக்கும் காட்சியில் அடுத்த பத்தொன்பது வருட வாழ்கை சித்திரம் நமக்கு கோடி காட்ட பட்டு விடும்.

வயதான பிறகு,வரும் காட்சிகளின் அழகு மனைவி விமலாவுடன் பாந்தமான ,இதமான ஆனால் ஒட்டாத ஒரு உறவு.(விமலாவின் இயல்பே அதற்கு ஒரு காரணம் என்றாலும்). நண்பன் கோபாலுடன் வரும் அனைத்து காட்சிகளிலும்,இதமோ,இங்கிதமோ இல்லாத கோபாலின் பேச்சுகளுக்கு, ஒரு தந்தை,ஒரு ரெண்டுங்கெட்டான் நண்பன்,குத்தும் தன மனசாட்சி மூன்று நிலையிலும் கோபாலை வரித்து ,மிக அழகாக கையாள்வார்.அவருக்கு ஒருவேளை உறுத்தல் குறைய ,ஈகோவை கோட் ஸ்டாண்டில் மாட்ட,தந்தையின் இழப்பை சரி செய்ய , இந்த நண்பன் அவசிய தேவை போலும்!

கோபாலுடன் நண்பன் என்ற உரிமையில் பேசும் கணங்கள்,கோபாலின் உடல்நிலை சம்பந்தமான இடங்கள்.கோபால் நிதானம் தவறும் இடங்கள்.குழந்தையை போல் நடத்துவார். இந்த இடங்களை கையாள இனி ஒரு நடிகன் பிறப்பது இயலாது.(பாத்திரத்தை அதன் குணாதிசயம்,கதையியல்பு,மனோதத்துவ பின்னணியில் புரிந்து,அதை நேர்த்தியுடன் செயல் படுத்தும் நடிப்பு வெளிப்பாடு.)

சோர்ந்து இருக்கும் போது ,உடல் கோளாறு என்று டாக்டரை கூப்பிடும் இடத்தில், விமலா,கோபால் இருவருக்குமான இடம் ,ராஜுவின் உடல் மொழியில்,பொய் அனுசரணையுடன் பிசைதலுக்கு இசையும் காட்சியில் ஒரு revelation போல பரவச படுத்தும்.

NT யின் நடிப்பு பரிமாணங்களை அலசும் போது ,இந்த படத்தில் மறக்க முடியாத இன்னொரு புது பரிமாணம், சத்யாவுடன் அவருக்கு develop ஆகும் உறவு. பல படங்களில் இந்த மாதிரி உறவுகள் வரும் போது pre -Emptive & Prevailing mood பாணியிலோ அல்லது விரோத அடிப்படையிலோ தான் பிளாட் development premise ஆக இருக்கும். இந்த படத்திலோ முற்றும் புது பரிமாணம். அதை சிவாஜி ஆண்டிருக்கும் விதம் ஒரு தனி சுவை. ஒரு வெகுளி தனமான ,rawness கொண்ட படிப்பறிவில்லா ஒரு பையன் மேல் ஒரு soft -corner என்பதற்கு மேல் செல்ல மாட்டார். முதல் முறை பார்க்கும் போது சாதா அறிமுகம், டாக்டர் சிபாரிசில் வேலை என்பதுடன் , மற்ற படி எந்த ஒரு கவனிப்பும் காட்ட மாட்டார். சத்யன் ஆங்கிலம் தெரியாமல் ,விமலாவுடன் மாட்டி கொண்டு முழிக்கும் காட்சியில் ஆகட்டும், பிறகு சம்பளத்தை கொடுத்து ஆசிர்வாதம் வழங்கும் காட்சியில் ஆகட்டும்(முதலில் அம்மாவிடம் என்பார்) ,ஒரு செல்லமான தோரணையில் ஒரு நல்ல ரெண்டுங்கெட்டான் வேலைகார பையன் என்ற அளவிலேயே நிற்கும். அம்மா படத்திற்கு நேர்ந்த அவமானத்தை சகிக்காமல்,சத்யம் விலக விரும்பும் காட்சியில் கூட டாக்டரிடம் ,முதல்லே அவனுக்கு புத்தி சொல்லு என்று பொறுப்பை டாக்டரிடம் கொடுப்பார். டாக்டர் குடித்து விட்டு நிதானம் இழக்கும் காட்சியிலும் ,வேலையாளாகவே நடத்தி வெளியேற சொல்வார். ஆனால் டாக்டரின் மரணத்திற்கு பிறகான வெற்றிடத்தில்,சத்யனின் பிரத்யேக அக்கறை தன்மையிலும்,retire ஆன மாணிக்கம் என்ற முதிய வேலையாளின் வேண்டுகோள் படியும் துளி அக்கறையும் , நெருக்கமும் கூடும் வெகு இயல்பாக. அந்த சாப்பிடும் காட்சி ஒரு கவிதை. பிறகு கூட மனைவியின் தலையீட்டில் சத்யன் பாதிக்க படும் போது ஓவர்-ரியாக்ட் செய்யாமலே அன்பை விளக்குவார்.

விமலாவுடன் வரும் வெடிக்கும் காட்சியில்(வசனப்படியே கட்டுபடுத்தி வைத்திருந்த எரிமலை) முத்திரைகளுடன் கூடிய சீற்றமாய் வெளிப்படும். நெருப்பில் தன மனைவியை காப்பாற்ற தவறி ,பொய் வாழ்கை வாழும் ஒருவனின் ,inhibition துறந்த சீற்றம்.Incoherent ஆய் துவங்கி,கோபமாய் வெடித்து,நிலை உணர்ந்து படி படியாய் அடங்க வேண்டிய காட்சி. ஆனால் follow thru காட்சியில் நடிப்பு தெய்வம் நிலைமையை சீர் செய்யும். கோபம் சிறிதே அடங்கி,சோபாவில் கால் போட்டிருக்கும் போது ,சமாதானமாய் shoe அவிழ்க்க வரும் வரும் மனைவியிடம் பிணக்கமுற்ற சமாதான கோடி காட்டும் அந்த சிறிய கால் மாற்றும் gesture கோடானு கோடி கதை பேசி விடும்.

விமலாவிடம் வெடித்த பின் ,planter 's conference செல்ல ,புறப்படும் போது, விமலா சத்யனை கூப்பிட்டு போக சொல்லும் போது ,ஒரு அன்னியோன்யமான ,ஆச்சர்யத்தை வார்த்தையின்றி வெளிப்படுத்துவார். அந்த வெடிப்புக்கு பின், விமலாவும் இல்லாமல் இருக்கும் சூழ்நிலையில்,டிரைவர் சுந்தரத்தை பழைய சிறு வயது நண்பராக்கி, பார்வதியுடன் இருந்த போது அடைந்த சுதந்திரத்தை உணர்வார்.

அந்த நாள் ஞாபகம் பாடல்,தமிழ் பட சரித்திரத்தில் மைல் கல். Dancing இல் ஒரு பகுதி usage of property for effective rendering . என்று ஒன்று உண்டு. இந்த பாடலில், வாக்கிங் ஸ்டிக்கை ஒரு துணை பாத்திரம் ஆகவே உபயோக படுத்தி இருப்பார். அவர் சிறு வயது சந்தோஷங்களை விவரிக்கும் போது ,ஒரு விளையாட்டு பொருளாய் கையில் சுழலும். உயர்ந்தவன்,தாழ்ந்தவன் என்ற வரிகளில் அவர் உயர்ந்திருக்கும்.வாக்கிங் ஸ்டிக்கை, கீழே விடும் அழகே தனி.(வீரபாண்டிய கட்டபொம்மனின் வாள் உரையில் போடும் அழகை ஒத்தது ) டென்ஷன் ஆன வரிகளில் வாக்கிங் stick கழுத்திலும், மிக மிக மன அழுத்தத்திற்கு ஆட்படும் வரிகளில் ,நடக்கவே ஒரு சப்போர்ட் போலவும் பயன்படுத்துவார்.நண்பனுடன் சம நிலையில் பழ குவதாய் பாவனை செய்தாலும்,அலட்சியமாய் கழுத்தில் மாட்டி இழுப்பார். ராஜுவின் குணாதிசயம் வன்மைக்கு பணிதல்(தந்தை,விமலா, கோபால்),கீழோரிடம் empathy இருந்தாலும், ஒரு அந்தஸ்து தோரணை ஒட்டி பிறந்த குணம் போலும்!!

அடுத்த காட்சியில் அவர் வாக்கிங்கிற்கு சுந்தரத்தை அழைக்கும் போது தொப்பியை கழற்ற சொல்லும் gesture . கவுரி-சத்யா காதலை உணர்ந்து அவர் அதை அணுகும் பிரச்சனைக்குரிய காட்சி, NT யின் மேதைமைக்கு ஒரு சான்று. conference போய் வந்த தோரணையில் பிரச்சனையை அணுகுவார். தள்ளி நிற்பார், மிரட்டுவார், ஆழம் பார்ப்பார், ஒரு உயர்ந்த ,வறண்ட,flat வாய்ஸ் இல் பேசுவார்.இறுதியாய் உறுதியை உணர்ந்து சிறிதே உணர்ச்சி வச பட்டு ஒபபுவார். எனக்கு தெரிந்து இவ்வளவு காம்ப்ளெக்ஸ் ஆக ஒரு காட்சியை யாரும் அணுகியதில்லை.

கடைசி காட்சி (நாகேஷ் அவர்களை ஒரு விமான பயணத்தில் சந்தித்த போது இக்காட்சியை சிலாகித்தார்).Acting is not about discipline ,Technic , Perfection ,control and execution alone .Some times you loose your control and self to surprise yourself to surprise the audience .இதற்கு நல்ல உதாரணம் அவர் திருட்டு பழி விழுந்து தன நம்பிக்கையை குலைத்த சத்யாவை manhandle செய்யும் விதம்.(தில்லானா காட்சியில் அடிக்காமல் பாய்வார்) தன்னிடம் பேசும் கவுரி
விமலாவிடம் பேசாதே என்ற விஷயத்தை பேச முயலும் போது ,விமலா இருக்கும் போது இந்த விஷயத்தை என் பேசுகிறாய் என்பது போல் உடல் மொழி ,முகபாவத்தில் சொல்லும் அழகில்....

இந்த படத்தின் தனி சிறப்பு ஆற்றோட்டமான திரைகதை. Flashback அது இது என்று போட்டு (நிறைய சந்தர்பங்கள் இருந்தும் ) கதையின் மெல்லிய ஓட்டத்தை சிதைக்காமல், நேரடியாக கொண்டு சென்றிருப்பார்கள். ஜாவர் சீதாராமனின் வசனங்கள் (அந்த நாள்,ஆண்டவன் கட்டளை) தமிழ் பட நியதிகளை மீறாமல் , பாத்திர இயல்புகளை முன்னிறுத்தி ,மிக polish ஆக இருக்கும். கோபால்-ராஜூ உரையாடல்கள்,விமலா-ராஜூ, தொழிலாளி-முதலாளி உறவு சார்ந்தவை,கோபால் மரண காட்சி, கொடைக்கானல் காட்சிகள் குறிப்பிட வேண்டியவை.(ஒருவேளை உதர் புருஷ் வசனங்களை மொழி மாற்று செய்திருப்பார்களோ என்ற அளவு வித்யாசமாக இருக்கும்.) Hats off ஜாவர்.மற்ற படி ரொம்ப Technical விஷயங்கள் தேவை படாத கதை.

கிருஷ்ணன்-பஞ்சு சிவாஜியுடன் பிணங்கி (குங்குமம்)இந்த படத்தில் இணைந்தார். அமைதியான துருத்தாத இயக்கம்.
அடுத்த படி சரியான பாத்திர தேர்வு. சுந்தர் ராஜன் ,டாக்டர் வேஷத்திற்கு தேர்வு செய்ய பட்டிறிந்தாலும் ,அவரால் நேர் அல்லது எதிர் நிலைகளில் இயங்கியிருக்க முடியுமே தவிர நேர்-எதிர்,எதிர்-நேர் என்ற கோபாலின் புதிர் நிலை மனபான்மைகளுக்கு அசோகனின் கோமாளி தனம் கலந்த mystic ஆன நடிப்பு ஒரு புதிர் தன்மையை நிலை நிறுத்துகிறது.(Dark knight Heath Ledger போல்) .அசோகன் நல்ல தேர்வு.

வாணிஸ்ரீ ஒரு அற்புதம்.அறிமுகமாகி இரண்டாம் வருடத்தில் ஒரு rawness , Passion ridden poor teenager , பாத்திரத்துக்கு பொருத்தம். சௌகார், sophisticated ,obsessive -compulsive குணங்கள் நிறைத்த இந்த பாத்திரத்திற்கு இரண்டாவது nomination கூட இருக்க முடியாது. சிவகுமார் இதே குணாதிசயம் கொண்ட மனிதர்.கேட்கவா வேண்டும்?
நாகையா,சுந்தர ராஜன்,ராமதாஸ் அத்தனை பெரும் நல்ல பங்களிப்பை செய்திருப்பார்கள்.

இசை புரட்சி நிகழ்த்தியிருப்பார் விஸ்வநாதன்.(ராமமூர்த்தியை பிரிந்த பின் தனியாய் போட்ட படங்களிலேயே மிக சிறந்த படம்) பால் போலவே,வெள்ளிக்கிண்ணம்தான்,என்-கேள்விக்கென்ன பதில்,அந்த நாள் என்ற பாடல்கள் வாலி கூட்டணியில்.உறுத்தாத பின்னணி இசை.

ஏ.வீ.எம்.செட்டியார் சிவாஜியை உலகத்திலேயே சிறந்த நடிகர் என்று பாராட்டி இந்த படத்தை re-make செய்ய முடியாது என்று சொன்னார்.

கிருஷ்ணன்-பஞ்சு சிவாஜியை best perfectionist என்று பாராட்டினார்கள்.

ரசிகர்களின் பார்வையில் இன்றளவும் மறக்க முடியாத படம்.

Gopal.s
9th December 2014, 10:20 AM
மனிதரில் மாணிக்கம்.(41 ஆம் ஆண்டு நிறைவு)



என்னுடைய அத்தை கணவர் ,கன்னடத்தில் எடுத்த படம் அருணோதயா.(இவர்தான் பெல்லி மோடா படம் மூலம் புட்டண்ணா வை இயக்குனராக அறிமுகம் செய்தவர்)

இதை தழுவி தமிழில் எடுக்க பட்ட படம் மனிதரில் மாணிக்கம்.



படம் என்னவோ சோதனையே. ஆனால் கௌரவ நடிகரான ஜோடியில்லாத சிவாஜியை ,சி.வீ.ராஜேந்திரன் ஒரு surprise package ஆக பயன் படுத்தி படத்திற்கு புதிய ஒளி பாய்ச்சியிருந்தார். காமெடி கலந்த eccentric Doctor பாத்திரத்தில் நடிகர்திலகம் பின்னியிருப்பார்.



இந்த பாத்திரம் நான் நிஜமாகவே வாழ்வில் சந்தித்த மூன்று மருத்துவர்களை நினைவு படுத்தியது.(இதை என்னுடைய பத்து நண்பர்கள் அவர்கள் வாழ்க்கையோடு இணைத்து உறுதி படுத்தினர்).கதையின் இழையோடு பயணிக்கும் இந்த பாத்திரம் ,நடிகர்திலகத்தின் நடை முறை வாழ்க்கையில் வினோத மனிதர்களின் சாயலை சித்திரித்ததுடன். comedy sense &timing பிரமாதமாக கலந்திருக்கும். அவ்வளவு delightful &Enjoyable Character . அப்பப்பா என்ன மகா நடிகனையா !!!எங்கள் தங்கராஜா,கெளரவம்,ராஜபார்ட் ரங்கதுரை ,மனிதரில் மாணிக்கம் என்று ஒன்றுக்கொன்று தொடர்பேயில்லாத வேறு பட்ட பாத்திரங்கள்!!!!உலகில் இனி இப்படி ஒருவர் பிறக்க சாத்தியமேயில்லை.



ஆரம்ப அறிமுகமே ஜோர். கிறுக்கு தனமான ,பேஜார் நகைச்சுவை உணர்வுடன் மனிதாபிமானம் மிக்க டாக்டர்.

ஏழை நோயாளியிடம் காட்டும் எள்ளல் மிகுந்த அனுதாபம், ராஜனுடன் ஆரம்ப காட்சிகள்,பிரமிளாவுடன் (மனோரமா) I will sing for you என்று வித வித நடன கூத்தடிப்பு. (படு ஜாலியான performance .என்றும் ரசிக்கலாம்),கடைசி கடத்தல் காட்சியில் காமெடியன் இல்லாத குறையை போக்கி பின்னி விடுவார்.(இதே பாத்திரம் சற்றே மாற்றத்துடன் அபூர்வ ராகங்களில் நாகேஷ் செய்தார்).



என்ன சொல்ல? சிவாஜி என்ற நடிப்பு தெய்வம், வளர வளர என்னுள் வியாபித்து என்னை ஆச்சர்ய படுத்தி,பக்தியில் மேலும் மேலும் திளைக்கவே வைக்கிறது.

Irene Hastings
9th December 2014, 03:53 PM
உயர்ந்த மனிதன்- 1968 தெய்வத்தின் 125 ஆவது சித்திரம்.(29th Nov- 45 Years completed)

சிலருக்கு மட்டும் வாழ்க்கை வச படுவதில்லை. ஆணாக(பணக்கார??) பிறந்தாலும் ,பலன் பூரணமாய் அனுபவிக்க படுவதில்லை.சூழ்நிலை கைதி -அதுவும் ராஜலிங்கம் போல் எல்லோருக்கும் நல்லவனாக வாழ விரும்பும் உயர்ந்த மனிதனுக்கு....

எல்லோருக்கும் எதிர்காலம் குறித்து குழப்பம் உண்டு.நிகழ் காலம் குறித்து அதிருப்தி உண்டு. ஆனால் ராஜுவுக்கோ எதிர்காலம் சூன்யம்.நிகழ்காலம் தண்டனை.கடந்த காலமோ குழப்பம். அவன் அறிவு,விருப்பம் எதுவும் பயன் படாமல் அவன் நாட்கள்.... பாரம்பரியம்,கெளரவம்,மனசாட்சி எல்லாவற்றையும் கேள்வி குறியாக்கி கேலி செய்கிறது.அவன் சுதந்திரம் பெற்ற மனிதனாக வாழவே இல்லை.

பார் மகளே பார் படத்தில் NT கதாபாத்திரம்தான் உயர்ந்த மனிதனில் NT தந்தை பாத்திரம் -சங்கரலிங்கம்.தன் அந்தஸ்துக்கு குறைந்த எதுவுமே துச்சம்.அடுத்தவர் சுதந்திரத்தை பிடுங்கி (மகன் ஆனாலும்) அடிமை படுத்தும் சுயநல மூர்க்கன்.எல்லாவற்றையும் வாய் மூடி மௌனியாய் சகித்து வாழும் ராஜு தான் விரும்பிய ஏழை பெண்ணை மணந்து சில காலம் வாழ்கிறான். ஆனால் கண்ணெதிரே தந்தையால் அவள் எரிக்க பட்டு, ஒரே மாதத்துக்குள் மருமணம் புரிய நிர்பந்திக்க பட்டு, ஒட்டாமல் அமைதி வாழ்க்கை வாழும் அவன் வாழ்க்கையில், சத்யா என்ற அநாதை ஒருவன் வேலையாளாய் நுழைந்து ,அன்பிற்கு பாத்திரமாகி,சோதனை கடந்து ,இறுதியில் சத்யா தன் மகனே என்ற உண்மை தெரிந்து சுபம்.

உருவம்,உள்ளடக்கம் எதிலும் சோதனை முயற்சி செய்யாமல் , சில பாத்திர வார்ப்புகள்,சில பாத்திர திரிபுகள், நேர்மையான ஆற்றோட்டமாய் திரைகதை. அற்புதமான வசனங்கள். மிக மிக நேர்த்தியான நடிப்பு, இவற்றை வைத்து அற்புதமான படத்தை கொடுத்தனர் கிருஷ்ணன்-பஞ்சு,மற்றும் ஏ.வீ.எம்.(உபயம்-உதர் புருஷ்-பெங்காலி)

காட்டாற்று வெள்ளமாய் ஓடிய சிவாஜியின் 68 ஆம் வருடத்திய நடிப்பில் அணை போட்டு வரம்பில் நிறுத்திய இரு படங்கள் தில்லானாவும்,உயர்ந்த மனிதனும்தான். இதில் அவர் பங்கு தில்லானாவை விட காம்ப்ளெக்ஸ் ஆனது. அவர் விரும்பாத பாத்திரம்.(விரும்பியது டாக்டர் பாத்திரம்).வேறு எந்த படத்திலாவது அவர் பாத்திரம் படத்திலேயே இந்த அளவு சுய விமரிசனத்திற்கும் ,பிறர்(முக்கியமாய் நெருங்கிய நண்பன்) விமர்சனத்திற்கும் ஆளாகி இருக்குமா என்பது சந்தேகம்.
கோழை,சில உயர்ந்த மனிதர்கள்,சூன்யமாய் பொய் வாழ்க்கை, சுமைதாங்கி,தியாகி,தனது சுய துக்கம் சுகம் நினையாத பொதிமாடு,என்று சுயமாகவும்,
கோழை,சுயநலக்காரன்,அப்பனை சமாளிக்க முடியாதவன்,தன்னை நம்பியவர்களை காப்பாற்ற முடியாதவன்,என்று டாக்டரும்,
ஜென்டில்மன்,பொய்யன்,காட்டுமிராண்டி என்று மனைவியும்,
உதட்டில் ஒன்று உள்ளத்தில் ஒன்று என்று சுந்தரம் மகள் கவுரியாலும்
விமரிசிக்க படும் இந்த ராஜு யார்?

சுருக்கமாக சொன்னால் ,தன சுயத்தை இழந்து வாழ்பவன். அதனால்,பிறரால்,அவரவர் சௌகரியத்திற்கு விமரிசிக்க படுபவன். இப்போது புரிந்திற்குமே சிங்கத்திற்கு சற்றே தீனி கிடைத்திருக்கும் என்று?

உ.ம வை வித்தியாசமான படமாக்குவது டாக்டர் பாத்திரம். நண்பன் என்றாலே,பின்னால் விரோதியாக போகும் இந்நாள் alter -ego என்ற சம்பிரதாயத்தை முறியடித்து, ஒரு தாட்சண்யம் இல்லாத மனசாட்சி,இங்கிதமற்ற இரக்கமற்ற உறுத்தி கொண்டே இருக்கும் அனுகூல சத்ரு, சங்கீதத்தில் கவுன்ட்டர்-பாயிண்ட் என்று சொல்லும் படியான அபஸ்வர இசைவு . தனக்கு சொந்தமில்லாத பொருளை ,விட்டு கொடுத்து விட்ட பாவனையில்,தானும் அந்த அசம்பாவித சம்பவத்தில் கூட இருந்தும் தன்னாலும் தான் ஆசை பட்டவளை காப்பாற்ற முடியாத உண்மையை வசதியாக மறந்து,கல்யாணமும் செய்து கொள்ளாமல் எல்லா சந்தர்பங்களிலும் ராஜுவை இடித்து கொண்டே இருக்கும் ஒரு பாத்திரம்.ஆனால் மக்களின் மனதில் ராஜுவை விட அதிக இடம் பிடிக்கும் வாய்ப்பு. ராஜு அபார சுய இரக்கம்,சுய வெறுப்புக்கு ஆளாகி ஒருவித துறவு நிலை குற்ற உணர்வுடன் இந்த சித்ரவதை நண்பனை விரும்பி ஏற்கும் மேசொகிஸ்ட்(Masochist) ஆன மனநிலையை வெளிபடுத்துவான் நட்பின் உயர்வை காட்ட ஒரு காட்சியும் வலிந்து இருக்காது.

இதன் protoganist ஆக வந்த நடிப்பு கடவுளின் படம் நெடுக மிளிரும் நடிப்பை விவரிக்க இந்த பகுதி சமர்ப்பணம்.
இந்த படத்தின் அழகே,அவர் வசனம் பேசும் காட்சிகளை விட reaction காட்டும் காட்சிகள் அதிகம். சிவாஜியின் மேதைமை ஜொலிக்கும்.

முதல் காட்சியிலேயே அந்தந்த பத்திர வார்ப்புகள் சித்திரிக்க படும்.நாடகத்தனம் கொஞ்சம் இருந்தாலும் சிவாஜியின் magic அதனை சமன் செய்யும்.

ரொம்ப uneasy restraint என்று சொல்லப்படும் பாணியில் தந்தை எதிரே நடப்பதில் ஒட்டாமல், நடப்பதை மனதளவில் அங்கீகரிக்காமல் ஆனால் எந்த வெளிப்படையான எதிர்ப்பும் காட்டாமல் கடந்து செல்வார். தனது சம நண்பன் கோபாலுடன் சமமில்லாத பால்ய நண்பன் சுந்தரத்திற்கு நேர்ந்த ஒரு அநீதியை கூட ஒட்டாமல் துறவு நிலையாய் விளக்குவார். பிறகு சிறிது குற்ற உணர்வு உறுத்த நான் உன்னை சம நிலையில் அங்கீகரிக்கிறேன் என்ற தேற்றலோடு, சிகரெட் கொடுத்து சமாளிப்பார். அனால் ராஜு ,கோபால்,சுந்தரம் உடன் பழகும் விதம் சமூக நிர்பந்த நியதிற்குட்பட்டே (சமம், சமமின்மை )இருக்கும்.பின்னால் ராஜுவின் எந்த act of commission ,omission எல்லாவற்றுக்கும் இந்த ஒரு காட்சியே நம் மனநிலையை தயார் செய்து விடும்.

கதையின் நாயகி,பார்வதியிடம் பழகும் போது inhibition துறந்து உரக்க பேசுவார்,நையாண்டி செய்வார்,இயல்பை மீறி நடப்பார்.பார்வதி அந்தஸ்தில் குறைந்திருப்பதும்,சுந்தரத்திற்கு கொடுக்க இயலாத முக்கியத்துவத்தை இந்த உறவிற்கு கொடுக்க முடிவதும், ஒரு அசட்டு தைரியத்தையும் அவருக்கு அளிக்கும்.(தந்தையை மீறியும் ,சமாளிக்கலாம் என்று) ஒரு liberated மனநிலையில் இருப்பார். இந்த மனநிலை பின்னால் ஒரே ஒரு காட்சியில் வெளிப்படும்.அதை பிறகு பார்க்கலாம்.
ஆனால் மனைவி எரிபடும் காட்சியில், ஒரு ஊமை புலம்பலோடு,ஒரு குழந்தையின் இயலாமை கதறலோடு முடிப்பார். பிறகு தந்தை தன்னை மறுமணத்திற்கு ,துப்பாக்கியை வைத்து தற்கொலை மிரட்டலோடு ,மன்றாடும் போது, கோபம்,அதிர்ச்சி,இயலாமை,சுய-வெறுப்பு,விரக்தி அத்தனையையும் ஒரு பத்து நொடி close -up ஷாட்டில் காட்டி விடுவார்.(சிவாஜிக்கு இது புதிதல்ல).அரை மனதோடு சம்மதிக்கும் காட்சியில் அடுத்த பத்தொன்பது வருட வாழ்கை சித்திரம் நமக்கு கோடி காட்ட பட்டு விடும்.

வயதான பிறகு,வரும் காட்சிகளின் அழகு மனைவி விமலாவுடன் பாந்தமான ,இதமான ஆனால் ஒட்டாத ஒரு உறவு.(விமலாவின் இயல்பே அதற்கு ஒரு காரணம் என்றாலும்). நண்பன் கோபாலுடன் வரும் அனைத்து காட்சிகளிலும்,இதமோ,இங்கிதமோ இல்லாத கோபாலின் பேச்சுகளுக்கு, ஒரு தந்தை,ஒரு ரெண்டுங்கெட்டான் நண்பன்,குத்தும் தன மனசாட்சி மூன்று நிலையிலும் கோபாலை வரித்து ,மிக அழகாக கையாள்வார்.அவருக்கு ஒருவேளை உறுத்தல் குறைய ,ஈகோவை கோட் ஸ்டாண்டில் மாட்ட,தந்தையின் இழப்பை சரி செய்ய , இந்த நண்பன் அவசிய தேவை போலும்!

கோபாலுடன் நண்பன் என்ற உரிமையில் பேசும் கணங்கள்,கோபாலின் உடல்நிலை சம்பந்தமான இடங்கள்.கோபால் நிதானம் தவறும் இடங்கள்.குழந்தையை போல் நடத்துவார். இந்த இடங்களை கையாள இனி ஒரு நடிகன் பிறப்பது இயலாது.(பாத்திரத்தை அதன் குணாதிசயம்,கதையியல்பு,மனோதத்துவ பின்னணியில் புரிந்து,அதை நேர்த்தியுடன் செயல் படுத்தும் நடிப்பு வெளிப்பாடு.)

சோர்ந்து இருக்கும் போது ,உடல் கோளாறு என்று டாக்டரை கூப்பிடும் இடத்தில், விமலா,கோபால் இருவருக்குமான இடம் ,ராஜுவின் உடல் மொழியில்,பொய் அனுசரணையுடன் பிசைதலுக்கு இசையும் காட்சியில் ஒரு revelation போல பரவச படுத்தும்.

NT யின் நடிப்பு பரிமாணங்களை அலசும் போது ,இந்த படத்தில் மறக்க முடியாத இன்னொரு புது பரிமாணம், சத்யாவுடன் அவருக்கு develop ஆகும் உறவு. பல படங்களில் இந்த மாதிரி உறவுகள் வரும் போது pre -Emptive & Prevailing mood பாணியிலோ அல்லது விரோத அடிப்படையிலோ தான் பிளாட் development premise ஆக இருக்கும். இந்த படத்திலோ முற்றும் புது பரிமாணம். அதை சிவாஜி ஆண்டிருக்கும் விதம் ஒரு தனி சுவை. ஒரு வெகுளி தனமான ,rawness கொண்ட படிப்பறிவில்லா ஒரு பையன் மேல் ஒரு soft -corner என்பதற்கு மேல் செல்ல மாட்டார். முதல் முறை பார்க்கும் போது சாதா அறிமுகம், டாக்டர் சிபாரிசில் வேலை என்பதுடன் , மற்ற படி எந்த ஒரு கவனிப்பும் காட்ட மாட்டார். சத்யன் ஆங்கிலம் தெரியாமல் ,விமலாவுடன் மாட்டி கொண்டு முழிக்கும் காட்சியில் ஆகட்டும், பிறகு சம்பளத்தை கொடுத்து ஆசிர்வாதம் வழங்கும் காட்சியில் ஆகட்டும்(முதலில் அம்மாவிடம் என்பார்) ,ஒரு செல்லமான தோரணையில் ஒரு நல்ல ரெண்டுங்கெட்டான் வேலைகார பையன் என்ற அளவிலேயே நிற்கும். அம்மா படத்திற்கு நேர்ந்த அவமானத்தை சகிக்காமல்,சத்யம் விலக விரும்பும் காட்சியில் கூட டாக்டரிடம் ,முதல்லே அவனுக்கு புத்தி சொல்லு என்று பொறுப்பை டாக்டரிடம் கொடுப்பார். டாக்டர் குடித்து விட்டு நிதானம் இழக்கும் காட்சியிலும் ,வேலையாளாகவே நடத்தி வெளியேற சொல்வார். ஆனால் டாக்டரின் மரணத்திற்கு பிறகான வெற்றிடத்தில்,சத்யனின் பிரத்யேக அக்கறை தன்மையிலும்,retire ஆன மாணிக்கம் என்ற முதிய வேலையாளின் வேண்டுகோள் படியும் துளி அக்கறையும் , நெருக்கமும் கூடும் வெகு இயல்பாக. அந்த சாப்பிடும் காட்சி ஒரு கவிதை. பிறகு கூட மனைவியின் தலையீட்டில் சத்யன் பாதிக்க படும் போது ஓவர்-ரியாக்ட் செய்யாமலே அன்பை விளக்குவார்.

விமலாவுடன் வரும் வெடிக்கும் காட்சியில்(வசனப்படியே கட்டுபடுத்தி வைத்திருந்த எரிமலை) முத்திரைகளுடன் கூடிய சீற்றமாய் வெளிப்படும். நெருப்பில் தன மனைவியை காப்பாற்ற தவறி ,பொய் வாழ்கை வாழும் ஒருவனின் ,inhibition துறந்த சீற்றம்.Incoherent ஆய் துவங்கி,கோபமாய் வெடித்து,நிலை உணர்ந்து படி படியாய் அடங்க வேண்டிய காட்சி. ஆனால் follow thru காட்சியில் நடிப்பு தெய்வம் நிலைமையை சீர் செய்யும். கோபம் சிறிதே அடங்கி,சோபாவில் கால் போட்டிருக்கும் போது ,சமாதானமாய் shoe அவிழ்க்க வரும் வரும் மனைவியிடம் பிணக்கமுற்ற சமாதான கோடி காட்டும் அந்த சிறிய கால் மாற்றும் gesture கோடானு கோடி கதை பேசி விடும்.

விமலாவிடம் வெடித்த பின் ,planter 's conference செல்ல ,புறப்படும் போது, விமலா சத்யனை கூப்பிட்டு போக சொல்லும் போது ,ஒரு அன்னியோன்யமான ,ஆச்சர்யத்தை வார்த்தையின்றி வெளிப்படுத்துவார். அந்த வெடிப்புக்கு பின், விமலாவும் இல்லாமல் இருக்கும் சூழ்நிலையில்,டிரைவர் சுந்தரத்தை பழைய சிறு வயது நண்பராக்கி, பார்வதியுடன் இருந்த போது அடைந்த சுதந்திரத்தை உணர்வார்.

அந்த நாள் ஞாபகம் பாடல்,தமிழ் பட சரித்திரத்தில் மைல் கல். Dancing இல் ஒரு பகுதி usage of property for effective rendering . என்று ஒன்று உண்டு. இந்த பாடலில், வாக்கிங் ஸ்டிக்கை ஒரு துணை பாத்திரம் ஆகவே உபயோக படுத்தி இருப்பார். அவர் சிறு வயது சந்தோஷங்களை விவரிக்கும் போது ,ஒரு விளையாட்டு பொருளாய் கையில் சுழலும். உயர்ந்தவன்,தாழ்ந்தவன் என்ற வரிகளில் அவர் உயர்ந்திருக்கும்.வாக்கிங் ஸ்டிக்கை, கீழே விடும் அழகே தனி.(வீரபாண்டிய கட்டபொம்மனின் வாள் உரையில் போடும் அழகை ஒத்தது ) டென்ஷன் ஆன வரிகளில் வாக்கிங் stick கழுத்திலும், மிக மிக மன அழுத்தத்திற்கு ஆட்படும் வரிகளில் ,நடக்கவே ஒரு சப்போர்ட் போலவும் பயன்படுத்துவார்.நண்பனுடன் சம நிலையில் பழ குவதாய் பாவனை செய்தாலும்,அலட்சியமாய் கழுத்தில் மாட்டி இழுப்பார். ராஜுவின் குணாதிசயம் வன்மைக்கு பணிதல்(தந்தை,விமலா, கோபால்),கீழோரிடம் empathy இருந்தாலும், ஒரு அந்தஸ்து தோரணை ஒட்டி பிறந்த குணம் போலும்!!

அடுத்த காட்சியில் அவர் வாக்கிங்கிற்கு சுந்தரத்தை அழைக்கும் போது தொப்பியை கழற்ற சொல்லும் gesture . கவுரி-சத்யா காதலை உணர்ந்து அவர் அதை அணுகும் பிரச்சனைக்குரிய காட்சி, NT யின் மேதைமைக்கு ஒரு சான்று. conference போய் வந்த தோரணையில் பிரச்சனையை அணுகுவார். தள்ளி நிற்பார், மிரட்டுவார், ஆழம் பார்ப்பார், ஒரு உயர்ந்த ,வறண்ட,flat வாய்ஸ் இல் பேசுவார்.இறுதியாய் உறுதியை உணர்ந்து சிறிதே உணர்ச்சி வச பட்டு ஒபபுவார். எனக்கு தெரிந்து இவ்வளவு காம்ப்ளெக்ஸ் ஆக ஒரு காட்சியை யாரும் அணுகியதில்லை.

கடைசி காட்சி (நாகேஷ் அவர்களை ஒரு விமான பயணத்தில் சந்தித்த போது இக்காட்சியை சிலாகித்தார்).Acting is not about discipline ,Technic , Perfection ,control and execution alone .Some times you loose your control and self to surprise yourself to surprise the audience .இதற்கு நல்ல உதாரணம் அவர் திருட்டு பழி விழுந்து தன நம்பிக்கையை குலைத்த சத்யாவை manhandle செய்யும் விதம்.(தில்லானா காட்சியில் அடிக்காமல் பாய்வார்) தன்னிடம் பேசும் கவுரி
விமலாவிடம் பேசாதே என்ற விஷயத்தை பேச முயலும் போது ,விமலா இருக்கும் போது இந்த விஷயத்தை என் பேசுகிறாய் என்பது போல் உடல் மொழி ,முகபாவத்தில் சொல்லும் அழகில்....

இந்த படத்தின் தனி சிறப்பு ஆற்றோட்டமான திரைகதை. Flashback அது இது என்று போட்டு (நிறைய சந்தர்பங்கள் இருந்தும் ) கதையின் மெல்லிய ஓட்டத்தை சிதைக்காமல், நேரடியாக கொண்டு சென்றிருப்பார்கள். ஜாவர் சீதாராமனின் வசனங்கள் (அந்த நாள்,ஆண்டவன் கட்டளை) தமிழ் பட நியதிகளை மீறாமல் , பாத்திர இயல்புகளை முன்னிறுத்தி ,மிக polish ஆக இருக்கும். கோபால்-ராஜூ உரையாடல்கள்,விமலா-ராஜூ, தொழிலாளி-முதலாளி உறவு சார்ந்தவை,கோபால் மரண காட்சி, கொடைக்கானல் காட்சிகள் குறிப்பிட வேண்டியவை.(ஒருவேளை உதர் புருஷ் வசனங்களை மொழி மாற்று செய்திருப்பார்களோ என்ற அளவு வித்யாசமாக இருக்கும்.) Hats off ஜாவர்.மற்ற படி ரொம்ப Technical விஷயங்கள் தேவை படாத கதை.

கிருஷ்ணன்-பஞ்சு சிவாஜியுடன் பிணங்கி (குங்குமம்)இந்த படத்தில் இணைந்தார். அமைதியான துருத்தாத இயக்கம்.
அடுத்த படி சரியான பாத்திர தேர்வு. சுந்தர் ராஜன் ,டாக்டர் வேஷத்திற்கு தேர்வு செய்ய பட்டிறிந்தாலும் ,அவரால் நேர் அல்லது எதிர் நிலைகளில் இயங்கியிருக்க முடியுமே தவிர நேர்-எதிர்,எதிர்-நேர் என்ற கோபாலின் புதிர் நிலை மனபான்மைகளுக்கு அசோகனின் கோமாளி தனம் கலந்த mystic ஆன நடிப்பு ஒரு புதிர் தன்மையை நிலை நிறுத்துகிறது.(Dark knight Heath Ledger போல்) .அசோகன் நல்ல தேர்வு.

வாணிஸ்ரீ ஒரு அற்புதம்.அறிமுகமாகி இரண்டாம் வருடத்தில் ஒரு rawness , Passion ridden poor teenager , பாத்திரத்துக்கு பொருத்தம். சௌகார், sophisticated ,obsessive -compulsive குணங்கள் நிறைத்த இந்த பாத்திரத்திற்கு இரண்டாவது nomination கூட இருக்க முடியாது. சிவகுமார் இதே குணாதிசயம் கொண்ட மனிதர்.கேட்கவா வேண்டும்?
நாகையா,சுந்தர ராஜன்,ராமதாஸ் அத்தனை பெரும் நல்ல பங்களிப்பை செய்திருப்பார்கள்.

இசை புரட்சி நிகழ்த்தியிருப்பார் விஸ்வநாதன்.(ராமமூர்த்தியை பிரிந்த பின் தனியாய் போட்ட படங்களிலேயே மிக சிறந்த படம்) பால் போலவே,வெள்ளிக்கிண்ணம்தான்,என்-கேள்விக்கென்ன பதில்,அந்த நாள் என்ற பாடல்கள் வாலி கூட்டணியில்.உறுத்தாத பின்னணி இசை.

ஏ.வீ.எம்.செட்டியார் சிவாஜியை உலகத்திலேயே சிறந்த நடிகர் என்று பாராட்டி இந்த படத்தை re-make செய்ய முடியாது என்று சொன்னார்.

கிருஷ்ணன்-பஞ்சு சிவாஜியை best perfectionist என்று பாராட்டினார்கள்.

ரசிகர்களின் பார்வையில் இன்றளவும் மறக்க முடியாத படம்.

Gopal Sir,

ONLY You can write . This is ultimate ! This shows how far you have admired scene by scene. UM is one of the very best of our Idol Sir. Hats off to you . The standards that you have set is phenomenal . Such posts have to be converted into a book on THilagam .

Irene Hastings
9th December 2014, 04:14 PM
Can someone guide me on how to upload photos . I have some precious one from UM.

Russellisf
9th December 2014, 08:14 PM
MY FAVOURITE NT ACTING PERFORMANCE SCENES

https://www.youtube.com/watch?v=8PljHuFQ6vk

https://www.youtube.com/watch?v=BAQmk-MKt7w

https://www.youtube.com/watch?v=LZhpfHiumGw

https://www.youtube.com/watch?v=SI-oU1FUZuE

eehaiupehazij
9th December 2014, 09:14 PM
(நடிப்பு வெறி கொண்ட) காட்டாற்று வெள்ளத்துக்கு கரை கட்டி நெறிப்படுத்திய பொறியாளர்கள்

நடிகர்திலகத்தின் திரையுலக அறிமுகமே ஒரு பொங்கிப் பாயும் காட்டாற்று வெள்ளமாக சீற்றம் மிகுந்த ஊழிக் கடல் அலையாக குமுறிக் கிளம்பிய எரிமலைக் குழம்பாக இடியென தரையைத் தாக்கிய மேக மின்னலாக கார்மேகம் வெடித்துக் கொட்டிய பருவ மழையாக அமைந்து இந்த வையகத்தில் இன்று வரை எந்தவொரு கலைஞனும் முறியடிக்க முடியாத சாதனைச் சிகரம் !

இவை யாவுமே முறையாக நெறிப்படுத்தப் பட்டு கட்டுக்குள் வைக்கப் பட்டதால் நாம் பெற்ற பலன்கள் கணக்கிலடங்காதவையே. ஒவ்வொரு வகையான நடிகர்திலக ஆற்றல் சீற்றங்களையும் இயக்குனர் நாற்காலியில் அமர்ந்து நெறிப்படுத்திய பொறியாளர்கள் கிருஷ்ணன் பஞ்சு, பந்துலு, A.P. நாகராஜன், K.S. கோபாலகிருஷ்ணன், T. பிரகாஷ் ராவ், ஸ்ரீதர், பீம்சிங், ராமண்ணா,திருலோகச்சந்தர் மாதவன், K. சங்கர், K. விஜயன், D.யோகானந்த் பாரதிராஜா..... அனைவரையும் நினைவு கூர்ந்து நன்றி நவின்றிட வருகிறார் நம் நடிப்பு தெய்வம்!!

Compilation in progress. Possibly in January, the New Year 2015!

sivaa
10th December 2014, 09:08 AM
Can someone guide me on how to upload photos . I have some precious one from UM.




http://www.mayyam.com/talk/images/misc/quote_icon.png Originally Posted by sivaa http://www.mayyam.com/talk/images/buttons/viewpost-right.png (http://www.mayyam.com/talk/showthread.php?p=1117145#post1117145) தற்போழுதுஎன்னால் image பதிவிடமுடிகிறது
ரவி சார் தங்கள்மூலம் என்னுடைய பிரச்சினைக்கு
முடிவு வந்துள்ளது என நினைக்கின்றேன்
உதவிய அனைவருக்கும் நன்றி

டியர் சிவா - நன்றி நெய்வேலி வாசுவிர்க்கே செல்லவேண்டும் - இன்னும் ஒரு short கட் உள்ளது - இந்த பதிவு மூலம் மற்ற இணைய நண்பர்களுக்கு இது உதவியாக இருந்தால் என்னை விட அதிகம் மகிழ்ச்சி அடைபவர் யாரும் இருக்க முடியாது

Steps Involved

1. Visit www .photobucket.com

2. Get yourself registered

3. After registering , you can now upload the images saved on your desktop

4. Now click the image saved in your login page

5. The image will expand

6. On right hand side there is a profile of URLs – select the URL under image

7. Just paste the HTTP stings in the Mayyam page you have opened in the thread for posting

8. Before submitting go to advance view and see the picture – it is relatively bigger

9. Don’t use attachment option in Mayyam for images – you will encounter capacity constraint

You can send me a PM in case you could not succeed in this attempt


முன்னர் நண்பர் ரவி எனக்கு
தந்து உதவிய குறிப்பு

sivaa
10th December 2014, 09:22 AM
நண்பர் செந்தில்வேல் சிவராஜ்
தாங்கள் படங்களை இணைப்பதில்
சிரமப்படுவதை கவனித்துள்ளேன் எனவே
தாங்ளும் மேலுள்ள இந்த குறிப்பை பயன்படுத்தி
படங்களை பதிவிடுங்கள்

Gopal.s
10th December 2014, 09:41 AM
நீல வானம்(10/12/1965)

http://i.ytimg.com/vi/AUJKwygGd3s/maxresdefault.jpg



இன்று 49 வருடங்களை கடந்து 50 வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் நீலவானம் படம், தனிப்பட்ட முறையில் பல சிவாஜி ரசிகர்களின் பிடித்த வரிசையில் இருந்தாலும் சுமாரான வெற்றியையே ஈட்டிய படம். (இந்த மாதிரி வரிசையில் ராஜாராணி,புதையல்,அன்னையின் ஆணை ,செல்வம்,பேசும் தெய்வம்,தேனும் பாலும்,துணை போன்ற படங்களை சேர்க்கலாம்).



இந்த படத்தின் சிறப்புக்கள், கே.பாலசந்தர் -சிவாஜி இணைவு.எம்.எஸ்.வீ இசையமைப்பில் தனி பெயரில் வந்த முதல் சிவாஜி படம்,ராஜஸ்ரீ ஜோடியாக நடித்த முதல் படம்,தேவிகா சிவாஜி இணையாக நடித்த 60களின் கடைசி படம் (70களில் சத்யம்)சாந்தி theatre முக்கிய இடம் பெறும் காட்சிகள் என்று பல.



எனக்கு மிக பிடித்த படங்களின் வரிசையில் ஒன்று. தேவிகா ,கிட்டத்தட்ட கை கொடுத்த தெய்வம் சாவித்திரிக்கு இணையான பாத்திரம். சிவாஜி ,இந்த கதாநாயகி முக்கியத்துவம் கொண்ட கதையில் நடித்தும் ,தனித்து நிற்பார்.தேவிகா ,ராஜஸ்ரீ,சகஸ்ரநாமம் என்று அனைவருமே நன்கு பரிமளிப்பார்கள்.



கிட்டத்தட்ட இரண்டு இணை கோடுகள் கொண்டு நகரும் கதை. சிவாஜியின் வறுமை ,ராஜஸ்ரீ காதல்,காதல் தியாகம்,அது சார்ந்த வெறுப்பு,பழியுணர்வு எதிர்பாரா முடிவு ஒரு track . அப்பாவி தேவிகாவின் கான்சர் , சிவாஜியின் தியாக திருமணம், தேவிகாவிடம் வியாதி சார்ந்த ,தன வாழ்க்கை சார்ந்த விவரணை மறைப்பு, அது வெளியாக நேரும் தருணங்கள், எதிர்பார்த்த முடிவு என்று இன்னொரு track .இரண்டும் இணையும் சமாதானிக்கும்.

முதலில் காதல், நகைச் சுவை என்று பயணிக்கும் கதை, பிறகு தியாகம்,அன்னியோன்யம்,சோகம்,பழி சார்ந்த பரபரப்பு,தேவிகாவிடம் உண்மை வெளியாகாமல் தொடர்ந்த பொய்கள் என்று அல்லல்.

ஒரு நகைச் சுவை (வீ.கே.ஆர்-நாகேஷ்-ISR )track உடன் செல்லும்.

பாலசந்தர் திரைகதை-வசனம் படு இயல்பான புத்திசாலித்தனம் கொண்டது. மாதவன் கூட பாலசந்தர் முகம் வழியாகவே இயக்குனராக அவ்வப்போது வெளிப் படுவார்.



எனக்கு மிக பிடித்த இடங்கள்- தேவிகா வீட்டிற்கு வரும் இடம்,விசேஷம் சென்று சிவாஜி படும் அல்லல், லிட்டில் பிளோவேர் பாடல் காட்சி, சிவாஜி -தேவிகா முதலிரவு காட்சி மற்றும் அன்னியோன்ய காட்சிகள், ஓஹோஹோ ஓடும் எண்ணங்களே, சிவாஜி-தேவிகா குழந்தைக்கு பேர் வைக்கும் காட்சி,உண்மை வெளியாகும் காட்சி,போட்டோ எடுக்க முனையும் காட்சி(சிவாஜி natural -overplay -underplay மூன்றையும் இரண்டே நிமிடத்தில் கலந்து நம்மை அதிசயத்தில் ஆழ்த்துவார்), இறுதி காட்சி என்று அவ்வளவும் பிடிக்கும்.



பாடல்கள் படு பிரமாதம்.

நடிகர்திலகம் ,ஆரம்ப நகைசுவை,காதல்,தேவிகாவிடம் படி படியாக அனுதாபம் பாசமாக மாறும் பரிமாணம்,இறுதி விரக்தி என்று அவ்வளவு பிரமாதமாக நடிப்பார். (ஒரு காட்சியின் குச்சி ஐஸ் சாப்பிட்டு குழந்தை ஒன்றிடம் வழிவது-ஆஹா)

தேவிகாவின் மிக சிறந்த performance என்பதில் சந்தேகமே இல்லை. சிவாஜியிடம் உண்மை மனைவி கூட காட்ட முடியாத அளவு அன்னியோன்யம் காட்டி சிறந்த அண்ணிகளில் ஒருவர் என்று நிரூபித்து விடுவார்.



பார்க்காத ரசிகர்களே ,இந்த மாதிரி under -rate பண்ண பட்ட படங்களையும் முனைந்து பார்த்தால்தான் சிவாஜியின் முழு பரிமாணம் புரியும்.

eehaiupehazij
10th December 2014, 03:03 PM
NT rises back to view his flamboyant flora !

நடிப்புச் சூரியனின் ஒளியால் வளம் கண்டு பூத்துக் குலுங்கி நடிப்பு நறுமணம் பரப்பிய பசுமைப் பூந்தோட்டங்கள் ! நடிப்புத் தெய்வத்தின் வழிபாட்டுக்கு உகந்த நடிப்பு மலர்கள் !! மலர் மாலைகள்!!!

கதாநாயகரின் கதாநாயகியர்

அல்லி மலர்மாலை 14 M.N. ராஜம்

நிலவொளியில் மலரும் அல்லிமலரே ராஜம் என்றாலும் அந்த நிலவும் கதிரோளியைத்தானே கடன்வாங்கி பிரதிபலிக்கிறது ராஜத்தின் முகவெட்டு ஹிட்ச்காக் படங்களில் அழகிய ஒப்பனையில் காட்டப் படும் கதாநாயகியர் போன்று தனித்துவமும் கவர்ச்சியும் நிறைந்த பாவைவிளக்கு. கதாபாத்திரத்தின் குணாதிசயங்களை உள்வாங்கி இயக்குனரின் எதிர்பார்ப்பை நிறைவு செய்யும் அமைதியான நட்சத்திரம் நடிகர்திலகத்துடன் பெருமை அடைந்த படங்கள் பாசமலர் பதிபக்தி மற்றும் பாவைவிளக்கு. தனிப்பட்ட முறையில் புகழ் வெளிச்சம் விழுந்த படங்கள் மக்களைப் பெற்ற மகராசி, மணாளனே மங்கையின் பாக்கியம் .....ரத்தக்கண்ணீர்....the initials made me to think whether M.N. Rajam was a sister to M.N.Nambiar!

The Signature song sequence for MNRajam in Pasamalar!

பாவையின் முகத்தைப் பார்த்துப் பரவசமான நடிகர்திலகத்தின் முகத்தை ராஜம் பார்க்கவில்லையாமே

https://www.youtube.com/watch?v=G2B97RTcB3E

The significant song sequences of MN Rajam!

With NT in Pathibakthi

https://www.youtube.com/watch?v=E18POUkDaIE

With NT in Paavai Vilakku giving life to Shahjahan and Mumtaj!

https://www.youtube.com/watch?v=RuXW83PLumE

In Raththakkanneer with Chandrababu

https://www.youtube.com/watch?v=IuvYXNgXLy8

With Guruswamy Nambiar in Makkalai Petra Maharasi! only in our NT movie Nambiar was given a song sequence!! Another chance was in Mirudhanga Chakkaravarthi!

https://www.youtube.com/watch?v=EgFTJDYI42w

Russellisf
10th December 2014, 03:16 PM
இந்த காலகட்டத்தில், படித்த பெண்கள் சினிமாவுக்கு வர ஆரம்பித்திருந்தார்கள். இந்தப் படத்தில் எனக்கு ஜோடியாக அமைந்த சுகன்யாவும் படித்தவர். வெளிநாடுகளிலும் பரத நாட்டியத்தின் சிறப்பை வெளிப்படுத்தியவர். அதோடு எனக்கு கிடைத்த இன்னொரு உயரமான இந்தப் படத்தின் ஒரு காட்சி ரொம்பவே உருக்கமானது. பார்வையற்ற என் மனைவி, எதிரிகள் சதியால் குழந்தைக்கு விஷம் கலந்த புட்டிப்பாலை கொடுத்து விடுவார். இதனால் குழந்தை இறந்து போகும்.

இந்தக் காட்சியில் நான் மனம் உடைந்து கதறி அழ வேண்டும். டைரக்டர் 'ஸ்டார்ட்' சொன்னதும், கேமரா ஓடத் தொடங்கியது. குழந்தை இறந்தது தெரிந்ததும் சுகன்யா கதற, நான் அழ, கேமரா ஓடிக் கொண்டிருந்தது.

காட்சி முடிந்தும் டைரக்டர் பி.வாசு 'கட்' சொல்லவில்லை. அந்தக் கேரக்டருக்குள் கரைந்து போயிருந்ததால், எனக்கும் தொடர்ந்து கேமரா ஓடிக் கொண்டிருப்பது தெரியவில்லை. திடீரென பி.வாசு என்னைக் கட்டிப் பிடித்துக் கொண்டபோதுதான், காட்சி படமாகி முடிந்து விட்டதை தெரிந்து கொண்டேன். வாசு கண்களிலும் கண்ணீர். இதன் பிறகே அவர் 'கட்' சொல்ல, கேமராமேன் கேமராவின் இயக்கத்தை நிறுத்தினார். கேமராமேன் முகத்தைப் பார்த்தேன். அவர் கண்களிலும் கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது.

சிவாஜி நடிப்பில் இன்றைக்கும் மறக்க முடியாத படம் "பாசமலர்". அந்தப் படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் தங்கை சாவித்திரியை தனது பார்வையற்ற நிலையில் சந்திப்பார். அப்போது சிறுவயதில் தங்கையின் பாசத்துக்குரிய அண்ணனாக பல விஷயங்களை நினைவுபடுத்துபவர், கடைசியில் உள்ளம் உடைந்து "கைவீசம்மா கைவீசு, கடைக்குப் போகலாம் கைவீசு" என்று பாடும்போது டைரக்டர் பீம்சிங் 'கட்' சொல்லவும் மறந்து, அவரும் பிழியப் பிழிய அழுதிருக்கிறார்.

நடிகர் திலகம், நடிகையர் திலகம் இருவரின் ஒப்பற்ற நடிப்புக்கு சான்றான இந்த சம்பவம் பற்றி நானும் கேள்விப்பட்டிருந்தேன். இப்போது இந்த மாதிரி ஒரு சம்பவம், நான் நடித்த படத்திலும் நேர்ந்தபோது, எனக்கு 'பாசமலர்' சம்பவம் தான் நினைவுக்கு வந்தது.


இவ்வாறு சத்யராஜ் கூறினார்.

eehaiupehazij
10th December 2014, 03:44 PM
nt rises back to view his flamboyant flora !

நடிப்புச் சூரியனின் ஒளியால் வளம் கண்டு பூத்துக் குலுங்கி நடிப்பு நறுமணம் பரப்பிய பசுமைப் பூந்தோட்டங்கள் ! நடிப்புத் தெய்வத்தின் வழிபாட்டுக்கு உகந்த நடிப்பு மலர்கள் !! மலர் மாலைகள்!!!

கதாநாயகரின் கதாநாயகியர்

நந்தியாவட்டைமலர்மாலை 15 ராஜசுலோச்சனா

நந்தியாவட்டைமலர் இறைவழிபாட்டில் முக்கியத்துவம் வாய்ந்த மருத்துவ குணங்கள் நிறைந்த மலர். அவ்வண்ணமே ராஜசுலோச்சனாவும் படித்தால் மட்டும் போதுமா திரைப்படத்தில் நந்தியாவட்டை மலராக பளீரென்று ஒளிர்ந்த நடிப்பை வழங்கி சிறப்பித்தமைக்குஇதயபூர்வ நன்றிகள்

Significant songs of Rajasulochchana with NT

தாழ்வு மனப்பான்மையால் ஆட்கொள்ளப்பட்டு கட்டிய மனைவியின் முன் மனம் சுருங்கிடும் கதாநாயகனின் விரக்தி வேதனை இழையோடும் மனக்குமுறல் !

https://www.youtube.com/watch?v=o17JQ6TWP30

கோமாளி கோமாளி பாடல் காட்சியமைப்பு நடிகர்திலகத்தின் பெருந்தன்மைக்கு மற்றுமோர் உரைகல் அதிகம் பிரபலமாகாத முன்னேறி வரும் நகைச்சுவை
துணை நடிகரகளுக்கு முழு கருத்தாழமிக்க பாடலுடன் கூடிய நடனக்காட்சியை ஒதுக்கி மனைவி முன் கூனிக்குறுகி மனவேதனையை விரக்தியான
முகபாவங்கள் மூலம் அவர் வெளிப்படுத்தியிருக்கும் பாங்கு எந்தவொரு மேலைநாட்டு ஆஸ்கார் வென்ற நடிகரும் கூட காண்பித்து இருக்க முடியாத ஓர் அற்புத நிகழ்வு அந்த வேதனை வெளிப்பாட்டை நாமே உணர்வதுதான் நடிகமேதையின் வெற்றி! ராஜசுலோச்சனாவின் வாழ்நாள் நடிப்பு முத்திரை இக்காணொ ளிக் காட்சி சாட்சியாகவே!
https://www.youtube.com/watch?v=Eeod3MiL-YQ

Signature songs of Rajasulochana :

With NT in Saarangathaara

சாரங்கதாரா எதிர்பார்த்த பிரகாசத்தைத் தராது போய்விட்டாலும் இந்தப் பாடல் காட்சி (இந்தப் புறா ஆட வேண்டுமென்றால் இளவரசர் பாடவேண்டும்...!) அமரத்துவம் பெற்றுவிட்டதே! நடிகமேதையின் இணையில்லாதபாடல் உதட்டசைவுக்கும் முகபாவங்களுக்கும் உடல்மொழிக்கும் முன்னால் அசைந்தாடும் பெண்புறா ராஜசுலோச்சனாவின் நடனமொழி வசந்தமுல்லையே!

https://www.youtube.com/watch?v=wKGNgRiL7Ns

In Kaithi Kannaayiram

https://www.youtube.com/watch?v=wjgiT7lfQYI

kalnayak
10th December 2014, 03:57 PM
அன்பு சிவாஜிசெந்தில்,

கதாநாயகரின் கதாநாயகியர் m.n.ராஜம் பாடல்கள் வரிசையில் 'தெய்வப்பிறவி' - 'காளை வயசு கட்டான சைசு'-வையும் சேர்க்கலாம்.

https://www.youtube.com/watch?v=lkDSwYJwj2I

sss
10th December 2014, 05:43 PM
இலங்கை வானொலில் மிகவும் புகழ் பெற்ற பாட்டும் பதமும் வரிசையில் நடிகர் திலகம் புகழ் பாடும் ஒரு பதம்.
வழங்குபவர் : டாக்டர் சாந்தாராம் அவர்கள்...(கூடிய விரைவில் நம் மையம் இணையத்துக்கு வர வேண்டுகோள் விடுத்துள்ளேன்)

பாட்டும் பதமும் - புதிய வடிவில் !

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் படங்களில் வந்த பாடல்களைக்கொண்டு !


முழுக்க முழுக்க சிவாஜி கணேசன் பாடல்களில் !


நான் எடுத்த்க்கொண்ட வாக்கியம் :

" செந்தமிழ் வெள்ளி திரை உலகின் ஈடற்ற ஒளி விளக்கே ,திலகமே, நீயே எங்கள் உள்ளத்தில் என்றும் வாழ வேண்டும் ! "


மேற்கண்ட நீண்ட வாக்கியத்திற்கு ஒவ்வொரு சொல்லுக்கும் நான் கொடுக்கும் நடிகர் திலகத்தின் பாடல்கள் :


பாடல் : " செந்தமிழ் பாடும் சந்தனக் காற்று தேரினில் வந்தது கண்ணே ! "

படம் : " வைர நெஞ்சம் " ( 1975 ) )

பாடியவர்கள் : டி எம் எஸ் - பி.சுசீலா

இசை : மெல்லிசை மன்னர்[/b]





வெள்ளி:


பாடல் : "வெள்ளி மணி ஓசையிலே உள்ளமென்னும் கோயிலிலே "

படம் : " இரு மலர்கள் " ( 1967) )

பாடியவர் : சுசிலா

இசை : மெல்லிசை மன்னர்





திரை :


பாட்டு : திரை போட்டு நாமே மறைத்தாலும் காதலே தெரியாமல் போகுமா "

படம் : " ராஜா ராணி " ( 1956 )

பாடியவர்கள் : ஏ.எம்.ராஜா - ஜிக்கி

இசை : டி. ஆர். பாப்பா





உலகின் :

பாடல் : " உலகின் முதல் இசை தமிழிசையே"

படம் : " தவப் புதல்வன் " ( 1972 )

பாடியவர்கள் : டி எம் எஸ் - பி.பி. எஸ்

இசை : மெல்லிசை மன்னர்




ஈடற்ற :

பாடல் : " ஈடற்ற பத்தினியின் இன்பத்தை கொன்றவன் நான்"

( " ஆரம்பமாவது பெண்ணுக்குள்ளே " )

தொகயறாவிலுருந்தும் சொல்லை எடுக்கலாம் !

படம் : " தங்கப் பதுமை "( 1959 )

பாடியவர் : சி.எஸ்.ஜயராமந் ( பத்மினியில் குரலோடு )

இசை : மெல்லிசை மன்னர்கள்




ஒளி :

பாடல் : " ஒளி மயமான எதிர்காலம் என் உள்ளத்தில் தெரிகிறது "

படம் : " பச்சை விளக்கு " ( 1964 )

பாடியவர் : டி எம் எஸ்

இசை : மெல்லிசை மன்னர்கள்




விளக்கே :

பாடல் : " விளக்கே நீ தந்த ஒளியாலே "

படம் : " நிறை குடம் " ( 1969 )

பாடியவர் : டி எம் எஸ்

இசை : வி.குமார்




திலகமே ! :

பாடல் ள் : " திலகமே, உலகின் திலகமே தமிழ் நாட்டு கலை உலகின் திலகமே "

படம் : " வடிவுக்கு வளை காப்பு " ( 1962 )

பாடியவர் : டி எம் எஸ்

இசை : கே.வி. மகாதேவன்




நீயே

பாடல் : " நீயே உனக்கு என்றும் நிகரானவன்"

படம் : " பலே பாண்டியா " ( 1962 )

பாடியவர் : டி எம் எஸ் & மற்றொருவர்

இசை : மெல்லிசை மன்னர்கள்




எங்கள் :

பாடல் : " எங்கள் கல்யாணம் கலாட்டா கல்யாணம் "

படம் : " கலாட்டா கல்யாணம் " ( 1968 )




உள்ளத்தில் :

பாடல் : " உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது வல்லவன் வகுத்தடா "

படம் : " கர்ணன் " ( 1964 )

பாடியவர் : சீர்காழி

இசை : மெல்லிசை மன்னர்கள்




என்றும்

பாடல் : " என்றும் புதிதாக இளமை குறையாத"

( " உலகத்திலே உருவம் என உயர்ந்து நிற்கும் திலகமே ! "

படம் : " வியட்னாம் வீடு "( 1970 )

பாடியவர்கள் : சுசீலா, ஏ.எல் .ராகவன், சூலமங்கல்

இசை : கே.வி. மகாதேவன்





வாழ:

பாடல் : " வாழ நினைத்தால் வாழலாம் "

படம் : " பலே பாண்டியா " ( 1963 )

பாடியவர்கள் : டி எம் எஸ் - பி.சுசீலா

இசை : மெல்லிசை மன்னர்கள்




வேண்டும் :

பாடல் : " வேண்டும் வேண்டும் உங்கள் உறவு"

படம் : " வசந்ததில் ஒரு நாள் " ( 1982 )

பாடியவர்கள் : டி எம் எஸ் - வாணி ஜெயராம்

இசை : மெல்லிசை மன்னர்.

எப்படி இருந்தது நண்பர்களே...

eehaiupehazij
10th December 2014, 07:19 PM
[QUOTE=kalnayak;1189805]அன்பு சிவாஜிசெந்தில்,

கதாநாயகரின் கதாநாயகியர் m.n.ராஜம் பாடல்கள் வரிசையில் 'தெய்வப்பிறவி' - 'காளை வயசு கட்டான சைசு'-வையும் சேர்க்கலாம்.


Dear Kalnayak sir,

I thought of adding, but the song lines were "too suggestive" (Kattaana sizu) that may sometimes irk the viewers taste among other better songs.Also, I try to add songs mostly with the screen sharing by NT, of course with some exceptions like the Nambiar song 'ondru serndha anbu...' that was inevitable in projecting the traits of these heroines towards glorifying our main deity NT!

thanks for such a positive suggestion

regards, senthil

One more impressive dance performance by MNR is from MGR-Banumathi starrer Alibaabaavum 40 thirudargalum!! enjoy this scintillating music beat of old times!!

https://www.youtube.com/watch?v=dBMoxfdFS-s

But this song adapts its musical rhythm from the incomparable Venus of Indian Screen Madhubala starrer Hindi film Phagan (1958). Enjoy this too!! Amazing dance steps by Madhubala!!(with an enchanting snake-charmer's magudi music!)

https://www.youtube.com/watch?v=c1RyLil-4KY

Russellxss
10th December 2014, 07:26 PM
http://i1369.photobucket.com/albums/ag235/sundarajan/DETrailor_zps6288609f.jpg

எவரும் எட்டாத அதிசியம் சிவாஜி புகழ் காப்போம்.

Russellisf
10th December 2014, 08:21 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/C_zps61857e27.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/C_zps61857e27.jpg.html)

eehaiupehazij
10th December 2014, 08:45 PM
Thanks for uploading this rare photograph of NT, Mr. Yukesh.
Any supporting lines or background information on this occasion....my curiosity rises ..for the benefit of all NT fans.

regards, senthil

Georgeqlj
10th December 2014, 10:49 PM
வெள்ளக்காரதுரை
விக்ரம்பிரபு நடித்திருக்கும் இப்படத்தில்
நடிகர்திலகம் எனத் தொடங்கும் பாடல் ஒன்று இடம் பெற்றுள்ளது.
பாடல் முழுவதும் நடிகர்திலகத்தின் படங்களின் பெயர்கள் இடம் பெற்றுள்ளது
அவருடைய புகழ் பாடும் பாடலாக
அமைந்துள்ளது.வேறு எந்த படங்களிலும் ஒரு நடிகரின் இவ்வளவு படப்பெயர்கள் இடம் பெற்றுள்ளதா என்று தெரியவில்லை

Georgeqlj
10th December 2014, 10:55 PM
நன்றி
திரு.SIVVA
அவர்களுக்குm
போட்டோ அப்லோட செயவது எப்படி
என்று குறிப்புகள் கொடுத்தமைக்கு...

Murali Srinivas
10th December 2014, 11:20 PM
Thanks for uploading this rare photograph of NT, Mr. Yukesh.
Any supporting lines or background information on this occasion....my curiosity rises ..for the benefit of all NT fans.

regards, senthil

செந்தில் சார்,

நடிகர் திலகம் ஒவ்வொரு வருடமும் பாரதி விழாவை எட்டயபுரத்தில் வைத்து சிறப்பாக கொண்டாடுவார். அதற்கு பல கலைஞர்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் அமைச்சர் பெருமக்கள் ஆகியோர் கலந்து கொள்வது வழக்கம்.

இளைய சகோதரர் யுகேஷ் அவர்கள் தரவேற்றியிருக்கும் புகைப்படமும் அப்படி நடத்தப்பட்ட ஒரு விழாவில் எடுத்த படமாக இருப்பதற்கு வாய்ப்புகள் அதிகம். நடிகர் திலகத்துடன் மெல்லிசை மன்னர், டி.எம்.எஸ் மற்றும் சி.சுப்பிரமணியம் ஆகியோர் காட்சியளிக்கும் இந்தப் புகைப்படம் அபூர்வமானதே!

அன்புடன்

eehaiupehazij
11th December 2014, 12:04 AM
செந்தில் சார்,

நடிகர் திலகம் ஒவ்வொரு வருடமும் பாரதி விழாவை எட்டயபுரத்தில் வைத்து சிறப்பாக கொண்டாடுவார். அதற்கு பல கலைஞர்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் அமைச்சர் பெருமக்கள் ஆகியோர் கலந்து கொள்வது வழக்கம்.

இளைய சகோதரர் யுகேஷ் அவர்கள் தரவேற்றியிருக்கும் புகைப்படமும் அப்படி நடத்தப்பட்ட ஒரு விழாவில் எடுத்த படமாக இருப்பதற்கு வாய்ப்புகள் அதிகம். நடிகர் திலகத்துடன் மெல்லிசை மன்னர், டி.எம்.எஸ் மற்றும் சி.சுப்பிரமணியம் ஆகியோர் காட்சியளிக்கும் இந்தப் புகைப்படம் அபூர்வமானதே!

அன்புடன்

அன்புமிக்க முரளி சார் தங்களின் மேலான பதில் கண்ணுற்றதில் மிக்க மகிழ்ச்சி .
செந்தில்

eehaiupehazij
11th December 2014, 12:11 AM
nt rises back to view his flamboyant flora !

நடிப்புச் சூரியனின் ஒளியால் வளம் கண்டு பூத்துக் குலுங்கி நடிப்பு நறுமணம் பரப்பிய பசுமைப் பூந்தோட்டங்கள் ! நடிப்புத் தெய்வத்தின் வழிபாட்டுக்கு உகந்த நடிப்பு மலர்கள் !! மலர் மாலைகள்!!!

கதாநாயகரின் கதாநாயகியர்

மயில்கொன்றை மலர்மாலை 16 மாலினி

நடிகர்திலகத்திற்கு சமர்ப்பிக்கப்பட்ட எல்லா மலர்களும் மணம் வீசும் மலர்களே! எதுவுமே காகிதப் பூக்கள் கிடையாது. அந்த வகையில் தோகை விரித்த மயில் போல ஒயிலாக துள்ளி வரும் ஒருபட ஆச்சர்யமான சபாஷ் மீனா நாயகி மாலினி அவர்கள் மனதை ஈர்க்கும் மயில்கொன்றை மலரே! Our Hearty thanks for this one film wonder adding (peacock) feather to the success cap of NT!

The Signature song for Maalini from Sabaash Meena!

காவியங்கள் படைப்பதில் மட்டுமின்றி ஓவியம் தீட்டுவதிலும் தான் மன்னனே என்று மாலினியின் கண்கள் பேசும் சித்திரத்தில் இரண்டு கோடுகள் மட்டும் ஸ்டைலாக போட்டு நிரூபிக்கிறாரோ நடிக மேதை ! சபாஷ் மன்னா!!

https://www.youtube.com/watch?v=H7sASaWTrac

The Significant song for Maalini from Sabaash Meena!!

மழையில் நனையும் ஆர்வம் நம்மையும் தொற்றிக் கொள்கிறதே...காணா இன்பம் கனியும் போது! நடிகர்திலகத்தின் சற்றே வித்தியாசமான பின்னணிக் குரல் டி ஏ மோதி அவர்கள்

https://www.youtube.com/watch?v=MewOsMqwg3Y

https://www.youtube.com/watch?v=OkD_bFkjB7E

Murali Srinivas
11th December 2014, 01:16 AM
நீல வானம்(10/12/1965)

கோபால்,

இன்றைய தினம் நீலவானம் தினம். பிரபல காவியப் படங்களுக்கு பொன் விழாவை நினைவில் வைத்து கொண்டாட பல பேர் இருப்பார்கள். ஆனால் அற்புதமான இந்தப் படத்தின் பொன் விழாவை நினைவில் வைத்து அதைப் பற்றிய உரையாடலை துவக்க இந்தப் படத்தின் உண்மையான ரசிகர்களால்தான் முடியும்.

நீலவானம் பற்றி அண்மையில் நிறையப் பேசினோம். இரண்டு மாதங்களுக்கு முன்னால் நீங்கள் நீலவானம் பற்றிய என பழைய விமர்சனத்தை மீள் பதிவு செய்து ஒரு பதிவிட்டீர்கள். பின்பு filmography திரியில் ராகவேந்தர் சார் நீலவானம பற்றிய செய்திகளை பகிர்ந்திருந்தார். எத்தனை முறை பார்த்தாலும் பேசினாலும் அலுக்காத படம் நீலவானம். மனதிற்கு மிக நெருக்கமான படங்களில் ஒன்று. ஆண்டவன் கட்டளை, நீலவானம், நெஞ்சிருக்கும் வரை மற்றும் இரு மலர்கள் இவையெல்லாம் அலுத்ததே இல்லை. இதில் இரு மலர்கள் தவிர மற்ற மூன்றும் அந்த நூறு நாட்கள் கோட்டை தொட முடியாமல் போனதில் எனக்கு மிக மிக வருத்தம் உண்டு.

முதல் வெளியீட்டு சமயத்தில் மிகவும் சிறுவன். ஆகவே பார்க்கவில்லை. பின் பலர் சொல்லி சொல்லி அதிலும் குறிப்பாக ஒரு நெருங்கிய நண்பன் படத்தை அவ்வளவு ரசித்து புகழ்வதை கேட்டு மதுரையில் பழங்கால திரையரங்குகளில் ஒன்றான சிட்டி சினிமாவில் ஒரு மதியக் காட்சி பார்த்தேன். அதன் பின் எத்தனை முறை பார்த்தேன் என்று எனக்கே தெரியாது.

என் விமர்சனத்தில் இந்தப் படத்தின் பல்வேறு சிறப்புக் காட்சிகளை அவற்றில் நடிகர் திலகத்தின் நடிப்பை சிலாகித்திருக்கிறேன். இருந்தும் ஒரு சில காட்சிகளை மறக்கவே முடியாது. அதையெல்லாம் நீங்கள் குறிப்பிட்டிருக்கிறீர்கள். நடிகர் திலகத்தின் இயல்பான நகைச்சுவை உணர்வு பல இடங்களில் வெளிப்படுத்தியிருப்பார். பாம்பு வரும் என்று சொன்னவுடன் பயந்து போகும் தேவிகாவிடம் அது பாட்டுக்கு வந்துட்டு போயிடும். ஒண்ணும் செய்யாது என்பது. ஒண்டு குடித்தன அறையில் கூட தங்கியிருக்கும் நண்பன் ISR-யிடம் வேலை கிடைத்து விட்டது மாசம் இவ்வளவு சம்பளம் என்று ஜம்பம் பேசி விட்டு உடைந்த ஈஸிசேரில் மறந்து போய் பந்தாவாக உட்கார்ந்து கிழே விழுவது, நீங்கள் குறிப்பிட்ட குச்சி ஐஸ் கிரீம் காட்சியில் அந்த குழந்தையையிடம் அசடு வழிவது என்று கிளப்பியிருப்பார். முதலிரவு காட்சியில் கூட தேவிகா பிறக்கிற குழந்தைக்கு உங்க அப்பா பெயரை வைக்கணும் அவர் பெயர் என்ன என்று கேட்க பிச்சைக்கண்ணு என்று சொல்லிவிட்டு பெயர் நல்லாயில்லேல? என்று சொல்லும் காட்சி. பின் கிராமத்து பெயர்களாக சொல்லும் அந்த குறும்புத்தனம். பீச்சுக்கு போகணும் சினிமா போகணும் நிறைய கடலை உருண்டை சாப்பிடனும்னு சொன்னவுடன் அந்த முகத்தில் ஒரு reaction காட்டுவார். கிளைமாக்ஸ் காட்சிக்கு முன்பு அதே டயலாக்கை சந்தோஷமாக சொல்ல முயற்சித்து முடியாமல் குமுறுவாரே அந்த கட்டங்களிளெல்லாம் எங்கேயோ போய் விடுவார்.

ஒ லிட்டில் பிளவர் பாடலும் ஓஹோஹோ ஓடும் எண்ணங்களே பாடல் காட்சியும் சரி ஸ்டைல் statements. நமது NT FAnS அமைப்பின் சார்பாக இந்தப் படத்தை திரையிட்டபோது கூட இந்த பாடல் காட்சிகளுக்கு அப்ளாஸ் காதை கிழித்தது.

உணர்வுப்பூர்வமான காட்சிகள் நாம் சொல்லவே வேண்டாம். வேலை கொடுத்த முதலாளி தன்னிடம் கேட்கும் அந்த வரத்தை கொடுக்க முடியாமல் தவிக்கும் அந்த கட்டம், மனசார காதலித்த பெண்ணை விட்டு விட்டு நிர்பந்தத்தின் காரணமாக மனசு மாறும் அந்த கட்டத்தை வெகு இயல்பாக கையாண்டிருப்பார் நடிகர் திலகம். இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் இது போன்ற கட்டங்களில் நாயகனுக்கு ஒரு சூழ்நிலை நிர்பந்தம் இருக்கும். தங்கையின் திருமணம்,தாயாரின் உடல்நிலை தந்தைக்கு ஒரு பிரச்சனை ஆகவே நாயகன் வேறு வழியின்றி இந்த முடிவு எடுக்கிறான் என்று நியாயப்படுத்துவார்கள். ஆனால் இதில் அது போல் இல்லாமல் தங்களின் உண்மை சூழலை கூறி என் பெண்ணை திருமணம் செய்துக் கொள்ளுங்கள் என கேட்கும் தந்தை அதை மறுக்க முடியாமல் ஏற்றுக் கொள்ளும் நாயகன். என்னை நம்பின பெண்ணுக்கு நான் துரோகம் செய்யற மாதிரி ஆயிடும் என்று சொல்லும்போது பாபு துரோகம்கிற வார்த்தையை நீ நினைச்சா தியாகம்ங்கிற வார்த்தைக்கே அர்த்தமில்லாம போயிடும் என்று சகஸ்ரநாமம் பதில் சொல்லும் இடமெல்லாம் அவ்வளவு இயல்போ இயல்பு.இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.

படத்தின் முதல் வெளியீட்டு சமயத்தில் இதற்கு கொடுக்க வேண்டிய உரிய மரியாதையை கொடுக்கவில்லை என்ற குற்ற உணர்வால் தமிழக மக்கள் பின்னாட்களில் இந்தப் படம் எப்போதெல்லாம் மறு வெளியீடுகள் கண்டதோ அப்போதெல்லாம் அமோக வரவேற்பளித்தனர். சென்னை மதுரை கோவை திருச்சி சேலம் நெல்லை என்று அனைத்து ஊர்களிலும் இதே நிலைமைதான். குறிப்பாக சுமார் 20 அல்லது 22 வருடங்களுக்கு முன்பு சென்னை மேகலா திரையரங்கில் நீலவானம் திரையிடப்பட்டபோது 7 நாட்களில் 21 காட்சிகளும் ஹவுஸ் புல். சில வாரங்களுக்கு முன்பு சென்னை மகாலட்சுமியில் விளையாட்டுப் பிள்ளை படத்தை திரையிட்ட JRL movies திரு.ரகுபதி அவர்கள்தான் நீலவானம் படத்தை திரையிட்டார். அனைத்து காட்சிகளும் அரங்கு நிறைந்த அந்த அரிய நிகழ்வை கொண்டாட திருமதி தேவிகா அவர்களை திரையரங்கிற்கு அழைத்து நினைவு பரிசு வழங்கி பெருமைப்படுத்தினார்.

இப்போதும் நீலவானம் படத்தின் சென்னை உரிமையை கையில் வைத்திருக்கும் திரு ரகுபதி மீண்டும் இந்தப் படத்தை அரங்குகளில் திரையிட முயற்சி எடுத்து வருகிறார். அதற்காக ஒரு நல்ல பிரிண்ட்டை வாங்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கும் அவருக்கு வாழ்த்து சொல்லிவிட்டு ஒரு வேண்டுகோளையும் வைத்தேன். நல்ல பிரிண்ட் கிடைத்து மீண்டும் திரையிடும்போது நல்ல ஒரு திரையரங்கில் படத்தை திரையிடுமாறு கேட்டுக் கொண்டிருக்கிறேன். இரு மலர்கள் திரைப்படத்தின் சென்னை உரிமையையும் திரு ரகுபதி அவர்களிடம்தான் இருக்கிறது. என் வேண்டுகோள் இரண்டு படங்களுக்கும் சேர்த்துத்தான் என்பதையும் சொல்லியிருக்கிறேன்.

வேறு ஒரு எழுத்து வேலையில் ஈடுபட்டிருந்த என்னை இழுத்துக் கொண்டு வந்துவிட்டது நீலவானம். அந்த வேலை பாதியில் நின்றாலும் இதை எழுத முடிந்ததில் சந்தோஷமே!

அன்புடன்

கோபால், உங்கள் பதிவிற்கு ஒரு சின்ன அலங்காரம் உங்கள் பதிவிற்குள்ளேயே செய்திருக்கிறேன்.

Gopal.s
11th December 2014, 07:39 AM
Thanks Vasu.

எனக்கு நடிகர் திலகம் நடிக்கும் போது பக்கத்தில் யார் நின்றாலும் கண்களுக்குத் தெரியாது. ஒரு இருபது முப்பது தரம் நடிகர் திலகத்தின் முகபாவங்களையும், உடல் மொழிகளையும் பார்த்த பின் தான் அடுத்தவர்களுக்கு போனால் போகுது என்று சான்ஸ்.

'இரவுக்கு ஆயிரம் கண்கள் பகலுக்கு ஒன்றே ஒன்று'

ஆயிரம் கண்களிலும் சுண்ணாம்பா இல்லை வெண்ணையா? நீரே சொல்லும் துரை.

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/sivaji.jpg


நடிகர் திலகத்தின் கோபக்காட்சிகள் பற்றிய தொகுப்பும், வர்ணனையும் கலக்கல். உமக்கு ஒன்றும் எழுதத் தெரியாது... நீர் சிறுவன்... குட்டியூண்டு ரசிகன்... அதை நாங்கள் நம்ப வேண்டும்.... அப்படித்தானே!

கோபக் காட்சிகள் எழுதும் போதே உமது கோபமும் புரிகிறது.


கிண்டி விட்டு விட்டீர்.

நடிகர் திலகத்தின் கோபம் பிற்காலப் படங்களில் பின்னி எடுக்கும்.

உதாரணத்திற்கு 'நீதிபதி'.

வில்லன்கள் பேச்சை கேட்டு நீதிபதியை பெயர் சொல்லி 'ஜஸ்டிஸ் ராஜா' என்று அழைக்கும் மருமகன் விஜயகுமார். நீதிபதியின் மகளை வாழாவெட்டியாக்கி வீட்டுக்கு கொண்டு வந்து வாய்க்கு வந்தபடி பேசும் மருமகனுக்கு பதிலடி கொடுக்கும் நீதிபதி நடிகர் திலகம். சும்மா தியேட்டரே கிடுகிடுக்கும் அந்த சிம்மக் குரலில்

மருமகன் விஜயகுமார் குற்றவாளி ஜகன்நாத்தை நிரபராதி என்று கூறி கோர்ட்டில் தீர்ப்பு கூற வேண்டும் என்று நடிகர் திலகத்திடம் சொல்ல, 'இல்லைன்னா?' என்று நடிகர் திலகம் திரும்பக் கேட்க, 'உங்கள் மகள் (மேனகா) வாழாவெட்டியாகிவிடுவாள்' என்று விஜி பயமுறுத்த, (அப்போது விஜி டர்ன்)

வருவார் பாருங்கள் கோபத்தோடு. கையில் பைப் வேறு. கேக்கணுமா? மன்னவன் பின்னி விடுவார் பின்னி. (இப்போது சிங்கத்தின் டர்ன்)

நேரே விஜயகுமாரிடம் வந்து,

'எய்தவன் எவனோ?... விஷ அம்பா என் நெஞ்சில குத்தற?'

என்று கர்ஜிக்க ஆரம்பிப்பார். சும்மா வசனம் வீடு கட்டி விளையாடும். கோபமாக பேசிக் கொண்டே வருவார்.

'என்னைப் படைச்ச ஆண்டவணானாலும் சரி! எனக்கு வேலை கொடுத்த அரசாங்கமா இருந்தாலும் சரி! ரெண்டு பெரும் சேர்ந்து கோர்ட்டுக்கு வந்தாலும் நீதிக்குத்தான் மதிப்பு கொடுப்பேனே தவிர வேற எந்த நாய்க்கும் மதிப்பு கொடுக்க மாட்டான் இந்த ஜஸ்டிஸ் ராஜா"



அடுத்து பின்னல் நிற்கும் மருமகன் விஜயகுமாரை அழைப்பதை கவனியுங்கள்.

'ஏய் ரமேஷ்!

பார்க்காமலேயே பின் பக்கம் வலது கையை உயர்த்தி ஆட்காட்டி விரலால் கூப்பிடுவார். இடது கையில் பைப் புகையும்.

'என் மகளுடைய புருஷன் அப்படிங்கிற ஒரே காரணத்துக்காக உன்னை மரியாதையா போகச் சொல்றேன். போடா.. சீ! சீ!... போடா"

என்று முகத்தில் கோபமும், கடுப்பும், ஆத்திரமும், வேதனையும், விரக்தியும், வேதனையும் ஒன்று கலந்து ஒரு சேர அரை நொடியில் காட்டுவாரே.

அடப் போங்கப்பா! தலைவர் கோபத்தைப் பத்தி எழுதி கொலை வெறியை ஏத்தி விடறீங்க.

RAGHAVENDRA
11th December 2014, 07:47 AM
http://i1146.photobucket.com/albums/o528/imagivity/SivajiFansEvents/MALAYSIAFUNCTION2014FW_zpsd776b466.jpg

RAGHAVENDRA
11th December 2014, 07:48 AM
Sivaji Ganesan - Definition of Style - 1

Style என்கிற வார்த்தை இடத்திற்கு இடம் Contextஐப் பொறுத்து பல்வேறு விதமான Interpretationகளில் அர்த்தம் செய்து கொள்ளப்படுகிறது. சரியாக சொன்னோமானால் BAணி என்பதைக் கொள்ளலாம். ஆனால் நடிப்பைப் பொறுத்தவரையில் நடிகர் திலகம் தனக்கென எந்த ஒரு பாணியும் கடைப்பிடிக்கவில்லை. தொலைக்காட்சிகளிலும் மேடை நிகழ்ச்சிகளிலும் செய்யப்படும் மிமிக்ரியில் நடிகர் திலகத்தைப் போல் செய்ய முயன்று தோல்வி கண்டவர்களே அதிகம். வெற்றி பெற்றோர் ஒருவர் கூட இல்லை என்பதே உண்மை. அதிக பட்சம் அவருடைய குரலை வேண்டுமானால் செய்திருக்கலாம்.

இவ்வாறு யாராலும் கடைப்பிடிக்க முடியாத ஸ்டைலை செய்ததினால் தான் இன்று வரை அவர் இமயமாய் உயர்ந்திருக்கிறார்.

அவருடைய உடல் மொழியில் அவர் செய்து காட்டும் ஒய்யாரங்கள் மக்களிடம் மிகப் பெரிய ஈர்ப்பையும் பாதிப்பையும் ஏற்படுத்தியுள்ளன. அவரைப் போல் உடையலங்காரம், நடை, பார்வை கையசைவு போன்றவை அவருடைய ரசிகர்களால் இன்றளவும் பின்பற்றப்படுகின்றன. இதை மிமிக்ரி என கொச்சையாகக் கொள்ள முடியாது. அவருடைய பாதிப்பின் விளைவே இதைப் போன்ற செய்கைகளில் ரசிகர்களின் ஈடுபாடு.

இந்த உடல் மொழியில் அவருடைய ஒய்யாரங்களே மக்களிடம் சிவாஜி ஸ்டைல் என்று மிகப் பரவலாக சென்றடைந்து, கலாச்சாரத்தின் இலக்கணமாகவே மாறியுள்ளன என்றால் மிகையில்லை.

இந்த அளவிற்கு தாக்கம் ஏற்படுத்திய அவரது ஒய்யாரமான உடல் மொழிகளடங்கிய காட்சிகள், குறிப்பாக பாடல் காட்சிகளை இத்தொடரில் நாம் கண்டு மகிழலாம். ரசிக்கலாம்... மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்ளலாம்.

மங்களமான குங்குமத்துடன் துவங்குவோமே...

அந்தக் காலத்திலிருந்து இந்தக் காலம் வரை எந்தக் காலமானாலும் சரி, இரு கைகளையும் பாக்கெட்டுகளில் நுழைத்து வைத்துக் கொண்டு ஒய்யாரமாய் நடந்து வந்தால் பாருய்யா, சிவாஜியாட்டம் ஸ்டைல் காட்டுகிறார் என்று கமெண்ட் வருவது சகஜம். இந்த ஸ்டைலை அவர் தன் முதல் படத்திலேயே காட்டி விட்டார். என்றாலும் இது மிக மிக பிரபலமானது இந்தப் பாடலுக்குப் பிறகு தான்.
பருத்திக் காட்டில் பழம் கிடைக்கும் பசி தீரும் என்று எண்ணி... இந்த வரிகளில் அவர் காட்டும் ஸ்டைல் இருக்கிறதே.. இன்றும் தியேட்டர் இரண்டு படும் அளவிற்கு அளப்பரை எழும். ஸ்டைல் என்றால் சிவாஜி என்பதற்கு இன்னொரு உதாரணமாய்த் திகழும் இப்பாடலை என்றும் ரசிகர்கள் விரும்பிப் பார்ப்பார்கள்..
சூப்பர் ஸ்டைல் மன்னன். நடையைப் பாருங்களேன்.. கண்ணடிப்பதும் தலையை ஒய்யாரமாய் ஆட்டி வருவதும்..
வர்ணித்துக் கொண்டே இருக்கலாம்.. பார்த்து மகிழுங்கள்..

https://www.youtube.com/watch?v=FN-foH6RGOo

RAGHAVENDRA
11th December 2014, 07:49 AM
Sivaji Ganesan - Definition of Style - 2

ஸ்டைல்.. இது உருவத்தில் மட்டுமல்ல... உடல் மொழியில் மட்டுமல்ல. தன் குரலிலும் கூடகொண்டு வர முடியும் என்பதற்கு ஒரு சான்று.. இப்பாடல் காட்சிக்கு முன் வரும் உரையாடலைக் கேளுங்கள். கண்களை மூடிக் கொள்ளுங்கள்.. கேட்கும் போதே மனம் நெகிழும் காதல் உணர்வு... இதுவும் யாராலும் இமிடேட் செய்ய முடியாத அசல் ஸ்டைல்... அந்த முகத்திலுள்ள வசீகரம்... அந்த முகத்திற்கு ஈடு செய்யும் அந்த நாயகியின் Reciprocation...அந்த உடையலங்காரம் அந்த சூழலை மிகவும் தத்ரூபமாக பிரதிபலிப்பதும் ஒரு ஸ்டைல் தான்.. The body language is reflective of the inner self...இரு கைகளையும் இருபுறமும் விரித்து அனாயாசமாக அந்த சூழலை அனுபவித்து ஒரு காதலின் மனோநிலையை அருமையாக பிரதிபலிக்கும் இந்த ஸ்டைல்.. காதலர்களின் அடையாளச் சின்னமாக இப்பாடலை காட்டுகின்றன.

ஆஹா... எங்கள் தேவிகா அண்ணிக்குப் பிறகு ரசிகர்களின் நெஞ்சில் கூடாரம் போட்டு அமர்ந்து மற்றவர்கள் அனைவரையும் துரத்தியடித்து விட்ட நாயகி வாணிஸ்ரீ..

அது என்னமோ சிவாஜி வாணி என்றாலே எனக்கு முதலில் பிடித்தது சிவகாமியின் செல்வன் தான்.. மாளிகை அப்புறம் தான்..

போதும் போதும் என்கிறீர்களா..

பார்த்து மகிழுங்கள் பாடல் முழுதும் ஸ்டைலின் இலக்கணத்தை..

https://www.youtube.com/watch?v=YUxky21-Ybk

முக்கியமான பின்குறிப்பு..

வழக்கமான ஸ்டைலான நடை பற்றி நாம் சிலாகித்து எழுதக் கூடிய பாடல்களுக்கான தொடரல்ல இது ... நடிகர் திலகத்தின் நடிப்பில் அமைந்துள்ள பல்வேறு பாத்திரங்கள் அவற்றின் குணாதிசயங்கள் அவற்றில் அவர் பிரயோகித்துள்ள ஸ்டைலையே இது குறிக்க உள்ளது. எனவே பாப்புலரான பாடல்களை அதிகம் எதிர்பார்க்க வேண்டாம்.