PDA

View Full Version : Nadigar Thilagam Sivaji Ganesan Part 14Pages : 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 [14] 15 16

RAGHAVENDRA
11th December 2014, 07:50 AM
Sivaji Ganesan - Definition of Style - 3

கடலில் படகு அல்லது கப்பல் கவிழ்ந்து அதிலிருந்து உயிர் பிழைத்து தனியே கரையில் அலைகளால் ஒதுக்கித் தள்ளப்படும் மனிதன் Castaway எனப்படுவான் என அகராதி சொல்கிறது. அவ்வாறு வாழ்க்கை அலைகளால் ஒதுக்கித்தள்ளப்படும் மனிதனின் மனநிலையில் ஒரு Castaway யாக உணர்கிறான். குறிப்பாக இலக்கின்றி சுற்றித் திரிந்தவன் வாழ்க்கையில் திடீரென தென்றலாய் மலர்ந்த ஒரு காதல் உணர்வு அவனுள் ஒரு வாழ்க்கையில் ஒரு பிடிப்பை ஏற்படுத்த அதைப் பற்றிக் கொண்டு கரையேற முயலும் போது அந்தக் காதல் எனும் படகு கவிழ்ந்து அவனை மூழ்கடித்து கரையில் தனியே தள்ளி விடுவதாக உணரும் போது அதைப் பாடல் மூலம் வெளிப்படுத்துகிறான். ஆனால் அந்தப் படகு கவிழவில்லை, அவன் காதலும் தோல்வியடையவில்லை, ஆனால் அவன் ஒதுக்கித் தள்ளப்படுவதற்கு அவனையும் அறியாமல் அவனே காரணமாயிருக்கிறான் என்பதாக அவன் காதலி உணர்ந்து அவனை சற்றே ஒதுக்கி வைக்கிறாள்.

இந்த மாதிரியான சூழலில் வரும் இப்பாடலில் புதுமையான காட்சியமைப்பில் நடிகர் திலகம் மிகவும் அனாயாசமாக நடித்திருப்பது அவருடைய ஆளுமையைக் காட்டுகிறது. பாடலின் துவக்கத்தில் அவர் கைககளைக் கட்டும் போதே அந்தப் பாத்திரத்தின் மனோநிலையை பிரதிபலிக்கும் ஸ்டைல் துவங்குகிறது. தன்மேல் தவறில்லை என ஆணித்தரமாக நம்பும் அந்தக் கதாபாத்திரம் இதனை உறுதிப்படுத்தும் விதமாகத் தன் கருத்துக்களை வெளிப்படுத்தியிருக்கிறது. இந்த வரிகளில் கவியரசரின் புலமையும் பாடகர் திலகத்தின் குரல் வளமையும் இளையராஜாவின் படைப்பில் மிளிர்கின்றன. இவர்கள் கூட்டணியில் மேலும் பல பாடல்கள் வந்திருக்கக் கூடாதா என்கிற ஏக்கத்தையும் ஏற்படுத்துகின்றன.

இவர்கள் அனைவரது கூட்டணியில் உருவான அந்த அற்புதமான படைப்பைத் தூக்கி நிறுத்துவது நடிகர் திலகத்தின் ஸ்டைல், வழக்கம் போல.

இரண்டு கைகளையும் பாக்கெட்டில் வைத்து நடப்பதை முன்பொரு பாட்டில் பார்த்தோம். அதே ஸ்டைல் இப்பாடலில் வேறு விதமாக வெளிப்படுவதைப் பாருங்கள். கைகள் முழுதும் பாக்கெட்டில் நுழையாமல் விளிம்பைப் பிடித்துக் கொண்டு மிக இயல்பாக தன் மனநிலையை வெளிப்படுத்தும் விதமாக நிற்பதைப் பாருங்கள்.

நிற்பதில் கூட ஆயிரம் அர்த்தங்களைத் தரும் உலகப் பெரும் நடிகர், நடிகர் திலகம் மட்டுமே என்பதை நிரூபிக்கும் தோற்றம்

பாடல் முழுதும் நின்று கொண்டே அந்தப் பாத்திரத்தின் உணர்வுகளைப் பிரதிபலித்திருக்கும் விதம் இன்னும் எத்தனை நூற்றாண்டுகளானாலும் இவரை மிஞ்ச யாராலும் முடியாது என்பதற்கு அத்தாட்சி.

இப்பாத்திரத்தின் உடல் மொழியில் குறிப்பிடத்தக்க விஷயம் தோள்களைச் சிலுப்பும் முறையை நடிகர் திலகம் பிரயோகிக்கவில்லை என்பதே. பாத்திரத்தின் தன்மையறியாமல் பணக்காரன் ஏழை என யாராக இருந்தாலும் தோளை சிலுப்பிக் கொள்ளும் நடிகர்கள் இதைப் பார்க்க வேண்டும். இப்பாடலில் பல இடங்களில் இந்த உடல் மொழிக்கு வாய்ப்புள்ளது. வேறு யாராவது நடித்திருந்தால் பாடலில் பல முறை இரு தோள்களையும் சிலுப்பியிருப்பார்கள். ஆனால் ஒரு கடற்கரையோர கிராமத்து இளைஞனின் illiterate தன்மையைக் கருத்தில் கொண்டு இப்பாடலில் நடிகர் திலகம் மிகவும் எச்சரிக்கையாக அவ்வுணர்வைத் தவிர்த்திருப்பார்.

இவையெல்லாம் அவர் ஒருவர் மட்டுமே கொண்டுவரக் கூடிய ஸ்டைல்..

ஸ்டைல் என்கிற வார்த்தைக்கு அர்த்தம் நடிகர் திலகம்..https://www.youtube.com/watch?v=3euUGyKp7_4

RAGHAVENDRA
11th December 2014, 07:51 AM
முரளி, கோபால்
நீலவானம் ... உங்கள் இருவரின் கருத்துரைகளும் அட்டகாசம். .. சூப்பர்... இதெல்லாம் சம்ப்ரதாயமான வார்த்தைகள்..
அதற்கு மேலே ஏதேனும் இருந்தால்.. அது தங்களுக்குடைய எழுத்துக்களுக்குப் பொருந்தும்..

RAGHAVENDRA
11th December 2014, 07:52 AM
செந்தில்
தங்களுடைய தொடர் மிகவும் அருமையாக உள்ளது. ஒவ்வொரு பதிவும் வாசு சாரின் தொடரான நடிகர் திலகத்தின் கதாநாயகியர் தொடரை நினைவூட்டினாலும் தங்கள் பாணியில் அதை அணுகும் முறை பாராட்டத்தக்கது.
ஒரு வேண்டுகோள்... நடிகர் திலகத்துடன் அவர்கள் பங்கேற்றதை மட்டுமே பகிர்ந்து கொள்ள இயலுமா..

Gopal.s
11th December 2014, 09:18 AM
செந்தில்
தங்களுடைய தொடர் மிகவும் அருமையாக உள்ளது. ஒவ்வொரு பதிவும் வாசு சாரின் தொடரான நடிகர் திலகத்தின் கதாநாயகியர் தொடரை நினைவூட்டினாலும் தங்கள் பாணியில் அதை அணுகும் முறை பாராட்டத்தக்கது.
ஒரு வேண்டுகோள்... நடிகர் திலகத்துடன் அவர்கள் பங்கேற்றதை மட்டுமே பகிர்ந்து கொள்ள இயலுமா..
செந்தில்,நானும் அதையே சொல்ல நினைத்தேன். சுவையான விருந்தை சாப்பிடும் போது ஒரு கல் அக படும் உணர்வு ஏற்பாடுகிறது. நீங்கள் நடிகர்திலகம் பதிவுடன் பிற நடிகர்களை இணைத்து பதிவிடும் போது .சமீப காலத்தில், மனதுக்கு பிடித்ததை ,இசைந்ததை இந்த திரியில் பதிவிடுவதை விடுத்து,புகழ்ச்சிக்கு மயங்குதல், வேண்டாத விஷயங்களில் நட்பு என்ற பசப்புரையில் இணைதல் என்ற போக்கு தென் பட ஆரம்பித்துள்ளது.

Gopal.s
11th December 2014, 09:19 AM
கலை வேந்தன்,நீங்கள் எழுதிய பதிவுகளில் ,மற்றோரை புகழும் போது , தொழில் முறை எழுத்தர்களாக இல்லாதவர்களின் எழுதும் திறமையை சிலாகித்துள்ளீர்கள் . மிக்க நன்றி. ஆனால் நீங்கள் அந்த பதிவை எழுதிய விதம்,ஆழ்ந்து படிக்கும் போது ,என் மனதில் ஒரு சந்தேகம் எழுகிறது.நீங்கள் ஒரு பத்திரிகையாளராக இருக்கலாமோ என்று.உங்களின் பழைய எழுதும் முறைக்கும், தற்போதைய எழுத்துக்களுக்கும் நிறைய வித்யாசம் தெரிகிறது.(நீரும் நெருப்பும் அளவு). என்னை பொறுத்த வரை தொழில் தர்மத்தில் நமது தனி பட்ட மன மாச்சர்யங்கள்,விருப்பு-வெறுப்பு தவிர்த்து உண்மைகள் மட்டுமே அணுக பட வேண்டும். இவற்றை தாங்கள் கடை பிடிப்பீர்கள் என்ற நம்பிக்கை எனக்குண்டு.(என் சந்தேகம் உண்மையாக இருக்கும் பட்சம்).மற்ற படி வாசு போல,கிருஷ்ணா போல நீங்கள் நடிகர்திலகம் சம்பத்த பட்ட விஷயங்களையும் ,இங்கும்,மதுர கானத்திலும் அளிக்கலாமே?

eehaiupehazij
11th December 2014, 12:17 PM
nt rises back to view his flamboyant flora !

நடிப்புச் சூரியனின் ஒளியால் வளம் கண்டு பூத்துக் குலுங்கி நடிப்பு நறுமணம் பரப்பிய பசுமைப் பூந்தோட்டங்கள் ! நடிப்புத் தெய்வத்தின் வழிபாட்டுக்கு உகந்த நடிப்பு மலர்கள் !! மலர் மாலைகள்!!!

கதாநாயகரின் கதாநாயகியர்

ஆவாரம்பூ மலர்மாலை 17 மஞ்சுளா

மரத்தில் பூத்துக் குலுங்கும் மயில்கொன்றை போலவே செடியில் மலர்ந்து மனதை ரம்மியமாக்கும் மருத்துவ குணங்கள் நிரம்பப் பெற்ற மஞ்சள் மலரான ஆவாரம்பூவே மஞ்சுளா அவர்கள் சாந்தி நிலையம் திரைக்காவியத்தில் கண்ணாடி அணிந்து சிரித்துக் கொண்டே நடிப்பில் சமாளித்த சிறுமி ரிக்ஷாக்காரனில் கவர்ச்சிப் பதுமையான கதாநாயகியாக ஏற்றமடைந்து நடிகர்திலகத்துடன் நடிக்கத் தொடங்கிய பின்னரே நடிப்பில் மெருகு கூடிவந்தது. டாக்டர் சிவா, மன்னவன் வந்தானடி உத்தமன் அவன்தான் மனிதன் எங்கள் தங்க ராஜா நடிகர்திலகத்திற்கு பெருமை சேர்த்தார். நன்றிகள் !

The debut film song sequence for Manjula from GG starrer Shanthi Nilayam!(Thanks giving song)

https://www.youtube.com/watch?v=TdA-ZCZ1omQ

The Signature song for Manjula from Dr Sivaa!

https://www.youtube.com/watch?v=7lQwHjTgkg0

The Significant song sequences with NT from Engal Thanga Raja!! Fast paced ...

https://www.youtube.com/watch?v=bcFD1p-7hEw

https://www.youtube.com/watch?v=BU-D2Vi2d2M

From Avanthaan Manithan with NT : showing some sort of maturity in her acting and expressions!

https://www.youtube.com/watch?v=I57mtA7KKrg

eehaiupehazij
11th December 2014, 12:52 PM
nt rises back to view his flamboyant flora !

நடிப்புச் சூரியனின் ஒளியால் வளம் கண்டு பூத்துக் குலுங்கி நடிப்பு நறுமணம் பரப்பிய பசுமைப் பூந்தோட்டங்கள் ! நடிப்புத் தெய்வத்தின் வழிபாட்டுக்கு உகந்த நடிப்பு மலர்கள் !! மலர் மாலைகள்!!!

கதாநாயகரின் கதாநாயகியர்

மகிழம்பூ மலர்மாலை 18 ஜி வரலக்ஷ்மி

நான் பெற்ற செல்வம் படத்தில் இளமைத்துடிப்புடன் நடிகர்திலகத்துடன் பூவாமர்மும் பூத்ததே..என்று ஆடிப்பாடி நம் மனங்களில் மகிழ்ச்சி அலைகளைமுகிழ வைத்த மகிழம்பூவே ஜி வரலக்ஷ்மி அவர்கள் பின் ஹரிச்சந்திரா திரைக்காவியத்தில் இதயங்களை பிழிந்த நடிப்பை நடிகர்திலகத்துடன் வழங்கியவருக்கு
வணக்கங்கள் !!

Signature song with NT

https://www.youtube.com/watch?v=q2nxXYj52CM

From Harichandra with NT

https://www.youtube.com/watch?v=6Wc9psmFsGA

https://www.youtube.com/watch?v=YTfVXhlKpE0

sss
11th December 2014, 01:36 PM
http://dc706.4shared.com/download/CpYzcFd0?lgfp=30000

eehaiupehazij
11th December 2014, 02:00 PM
காகா ராதாக்ருஷ்ணன் நடிகர்திலகத்துடன் ! Thanks SSS for this invaluable uploading of an indelible photo !!

eehaiupehazij
11th December 2014, 06:34 PM
nt rises back to view his flamboyant flora !

நடிப்புச் சூரியனின் ஒளியால் வளம் கண்டு பூத்துக் குலுங்கி நடிப்பு நறுமணம் பரப்பிய பசுமைப் பூந்தோட்டங்கள் ! நடிப்புத் தெய்வத்தின் வழிபாட்டுக்கு உகந்த நடிப்பு மலர்கள் !! மலர் மாலைகள்!!!

கதாநாயகரின் கதாநாயகியர்

முல்லைப்பூ மலர்மாலை 19 S. வரலக்ஷ்மி

சிரிக்கும்போது முல்லை மலர்க்கட்டு வரிசையை நினைவு படுத்துபவர் நடிகையும் சிறந்த பாடகியுமான வரலட்சுமி. வீரபாண்டிய கட்டபொம்மன், ராஜராஜசோழன் தங்கசுரங்கம் மற்றும் தாய் திரைப்படங்கள் நடிகர்திலகத்துக்குப் பெருமை சேர்த்திட்ட காவியங்கள். பணமா பாசமா, பூவா தலையா படங்களிலும் தனித் திறமை காட்டினார். வளமான குரலால் நடிகர்திலகம் படங்களில் மறக்க முடியாத பாடல்களையும் தந்திட்ட முல்லைமலர் வரலட்சுமிக்கு நன்றிகள்

Signature song in Kandhan Karunai with NT

https://www.youtube.com/watch?v=mcaNMjgrYSQ

Significant song in Raja Raja Chozhan with NT!

https://www.youtube.com/watch?v=0kFijxungwE

Thanks giving song sequence in VPKB with NT!

https://www.youtube.com/watch?v=p1Vgm2Mbvkw

Russellisf
11th December 2014, 08:32 PM
ONE MORE SONG SS SIR YOUTHFUL MANJULA

https://www.youtube.com/watch?v=xbSZJeC4pAU

கதாநாயகரின் கதாநாயகியர்

ஆவாரம்பூ மலர்மாலை 17 மஞ்சுளா

மரத்தில் பூத்துக் குலுங்கும் மயில்கொன்றை போலவே செடியில் மலர்ந்து மனதை ரம்மியமாக்கும் மருத்துவ குணங்கள் நிரம்பப் பெற்ற மஞ்சள் மலரான ஆவாரம்பூவே மஞ்சுளா அவர்கள் சாந்தி நிலையம் திரைக்காவியத்தில் கண்ணாடி அணிந்து சிரித்துக் கொண்டே நடிப்பில் சமாளித்த சிறுமி ரிக்ஷாக்காரனில் கவர்ச்சிப் பதுமையான கதாநாயகியாக ஏற்றமடைந்து நடிகர்திலகத்துடன் நடிக்கத் தொடங்கிய பின்னரே நடிப்பில் மெருகு கூடிவந்தது. டாக்டர் சிவா, மன்னவன் வந்தானடி உத்தமன் அவன்தான் மனிதன் எங்கள் தங்க ராஜா நடிகர்திலகத்திற்கு பெருமை சேர்த்தார். நன்றிகள் !

The debut film song sequence for Manjula from GG starrer Shanthi Nilayam!(Thanks giving song)

https://www.youtube.com/watch?v=TdA-ZCZ1omQ

The Signature song for Manjula from Dr Sivaa!

https://www.youtube.com/watch?v=7lQwHjTgkg0

The Significant song sequences with NT from Engal Thanga Raja!! Fast paced ...

https://www.youtube.com/watch?v=bcFD1p-7hEw

https://www.youtube.com/watch?v=BU-D2Vi2d2M

From Avanthaan Manithan with NT : showing some sort of maturity in her acting and expressions!

https://www.youtube.com/watch?v=I57mtA7KKrg

Russellisf
11th December 2014, 08:36 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/A_zps36d08c8c.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/A_zps36d08c8c.jpg.html)

Russellisf
11th December 2014, 08:37 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/A_zps0f17bfb0.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/A_zps0f17bfb0.jpg.html)

eehaiupehazij
11th December 2014, 09:43 PM
nt rises back to view his flamboyant flora !

நடிப்புச் சூரியனின் ஒளியால் வளம் கண்டு பூத்துக் குலுங்கி நடிப்பு நறுமணம் பரப்பிய பசுமைப் பூந்தோட்டங்கள் ! நடிப்புத் தெய்வத்தின் வழிபாட்டுக்கு உகந்த நடிப்பு மலர்கள் !! மலர் மாலைகள்!!!

கதாநாயகரின் கதாநாயகியர்

கிளைத்தொடரின் நிறைவாக

உதிரிப்பூ மலர்மாலை 20

உதிரிப்பூக்களும் இறைவழிபாட்டுக்கு உகந்தவையே நடிகர்திலகத்தின் திரைப்பணி நிறைவு நோக்கி செல்லும்போது தியாகம் படத்தில் மனதை வருடும் காதலை தந்த லக்ஷ்மி அந்தமான் காதலியில் அசத்திய சுஜாதா நடிகர்திலகத்தின் முதல்மரியாதையை திரும்பவும் மக்கள் மனங்களில் பதித்த பூங்காற்று ராதா, வாழ்க்கை வாழ்வதற்கே என்று எந்நிலை வரினும் தாழாது உழைப்பால் உயர்ந்திட தளராது தோள் கொடுத்த அம்பிகா, முதிர்ந்த வயது மாமனாராக நடிகர்திலகம் பாசம் செலுத்திய மருமகள்கள் சரிதா மற்றும் ரேவதி, தந்தையைப் பசும்பொன்னாகக் கண்டிட்ட மகளாக ராதிகா......திரிசூலத்தின் இளமைப் பூந்தோட்டம் ஸ்ரீபிரியா....பல்வேறு வயதுகளில் ஸ்ரீதேவி.....அனைவருமே நம் நன்றிக்குரிய நவ புஷ்பங்களான உதிரிப்பூக்களே!

உதிரிப்பூ 1 லக்ஷ்மி

கலைந்திடும் கனவுகள் கண்ணீர் சிந்தும் நினைவுகள்.....வசந்த காலக் கோலமாக லக்ஷ்மி...வானில் மேகமாக நடிகர்திலகம் (தியாகம்)

https://www.youtube.com/watch?v=1bovD8_wWtsஉதிரிப்பூ 2 சுஜாதா

இந்த மானும் அழகே!

https://www.youtube.com/watch?v=l7Zq7XI_1TY

உதிரிப்பூ 3 ராதா

திரும்ப வந்து விரும்ப வைத்த பூங்காற்று !
https://www.youtube.com/watch?v=-qKmi_7y26s

உதிரிப்பூ 4 அம்பிகா

காலம் மாறலாம் காதல் மாறுமோ (வாழ்க்கை)

https://www.youtube.com/watch?v=1V6l1mOP35o

உதிரிப்பூ 5 சரிதா

வளரும் கலைஞர்களுக்கு நடிகர்திலகம் கீழ்வானம் சிவக்கும் கண்கண்ட தெய்வமே !

https://www.youtube.com/watch?v=XKOnw_NwuMs

உதிரிப்பூ 6 ராதிகா

(பசும்)பொன்மனம் பெற்றெடுத்த பூமணம்

https://www.youtube.com/watch?v=qHVOhDm3B00


உதிரிப்பூ 7 ரேவதி

படுத்துக்கொண்டே நம் மனங்களை வென்றவரை அன்னையாக மாறி தாலாட்டும் மருமகள் ரேவதி

https://www.youtube.com/watch?v=bbAy1m4t8M4

உதிரிப்பூ 8 ஸ்ரீபிரியா

காதல் குறும்பு கொப்பளிக்கும் நடிகர்திலகத்தின் not out உற்சாகம்!

https://www.youtube.com/watch?v=UvKXtaN7Fb4

உதிரிப்பூ 9 ஸ்ரீதேவி/B]

பூபோன்ற புன்னகை நடிகர்திலகத்தின் வதனத்தில்!

https://www.youtube.com/watch?v=FscpyQ57YY8


[B]

The End of this mini series on the heroines of NT. But NT comes back soon with the masked musketeers of his golden era Tamil Cinema உன்மத்த முகமூடிக்குப் பின் உத்தம வில்லன்கள்...நடிகர்திலகத்தின் பெருமைப் படிக்கட்டுகளில்!

RAGHAVENDRA
11th December 2014, 10:20 PM
சிவாஜி செந்தில் சார்
அட்டகாசமான தொடர் நிறைவுக்கு வரப் போவதாகத் தங்கள் குறிப்பு கூறுகிறது. இன்னோர் வித்தியாசமான கோணத்தில் தங்களுடைய ஆய்வு துவங்க வேண்டும் என எதிர்பார்க்கிறேன். தொடர்ந்து பல்வேறு கோணங்களில் தங்களுடைய கைவண்ணத்தில் நாயகரின் நவரசங்களை அலச வேண்டும் என விரும்புகிறேன்.
தங்களுக்கு என் உளமார்ந்த பாராட்டுக்கள்.

RAGHAVENDRA
11th December 2014, 10:35 PM
Sivaji Ganesan - Definition of Style 4

முன்னரே நாம் குறிப்பிட்டிருந்தபடி, நம் ரசிகர்களிடையே ஸ்டைல் என்பதன் சரியான விளக்கம் சென்று சேரவில்லை என நான் தனிப்பட்ட முறையில் கருதுகிறேன்.

Mannerism of an actor for a character it seems, is referred to colloquially as 'Style'.

மேனரிஸம் என ஆங்கிலத்தில் கூறப்படும் "செய்கைக்கலை"க்கும் ஸ்டைல் என ஆங்கிலத்தில் கூறப்படும் பாணிக்கும் நாம் இன்னும் வித்தியாசத்தை உணர்ந்ததாகத் தெரியவில்லை.

ஒரே நடிகர், உருவ ஒற்றுமை உள்ள இரு வேறு பாத்திரங்களை ஏற்று நடிக்கும் போது அந்தப் பாத்திரங்களில் ஏதாவது ஒன்றினுக்குள் ஏதாவது ஒரு உடல்மொழியை செய்கைகலையாக அமைத்துக் கொண்டு வேறுபடுத்திக் காண்பிப்பது என்பது ஸ்டைல் என்பதில் அடங்காது. இது செயற்கையாக, பார்க்கும் ரசிகருக்கு வேறுபடுத்திக் காண்பிப்பதற்காக வலுவில் திணிக்கப்படும் மேனரிஸம் எனப்படும் செய்கைக்கலையாக மட்டுமே விளங்கும். இதில் நடிகருக்கு வெற்றி என எண்ண முடியாது.

இரண்டு உருவங்களையும் ஒரு சேரப் பார்த்தாலும், ஒரே மாதிரியான உடையலங்காரம், முடியலங்காரம் போன்று அனைத்தும் ஒன்றாக இருந்தாலும் பார்வையாளன் எந்தக் குழப்பமும் இன்றி எந்த விதமான வலுக்கட்டாயமான செய்கைக்கலையுமின்றி இரு பாத்திரங்களையும் வேறுபடுத்திப் பார்க்க முடிந்தால் அதுவே அந்த நடிகனின் வெற்றியாகும்.

இன்றைய நவீன யுகத்தில் ஒரு நடிகன் நூற்றுக்கணக்கான வேடங்களைக் கூட புனைந்து கணினித்தொழில் நுட்பத்தின் உதவியில் சித்தரிக்கப் படுவது வேறு கதை. இதில் எந்த ஒரு பாத்திரமும் உயிர் பெற்று உலவும் எனக் கூற முடியாது. இது வெறும் மாறுவேடப் போட்டியாகத் தான் காட்சியளிக்கும்.

இவையெல்லாம் இல்லாத அந்தக் காலகட்டங்களில் எந்த விதமான செயற்கை செய்கைக்கலையினையும் பயன்படுத்தாமலேயே உருவ ஒற்றுமை உள்ள இரு கதாபாத்திரங்களை மிக அழகாக சித்தரித்தார் நடிகர் திலகம். இது தான் ஸ்டைல் எனப்படும் பாணி. அந்தந்தப் பாத்திரத்திற்கென தனி உடல் மொழியைப் பயன்படுத்தாமல் கண்களாலேயே வேறுபடுத்திக் காண்பித்திருப்பார்.

இதற்கு மிகச்சிறந்த உதாரணமாய் விளங்குவது உத்தம புத்திரன் திரைக்காவியம். இதைத் தொடர்ந்து இதே போல் மேலும் பல படங்களில் இரண்டிற்கும் மேற்பட்ட வேடங்களை ஏற்று நடித்துள்ளார் நடிகர் திலகம்.
இதில் உருவ ஒற்றுமையோடு விளங்கும் இரு கதாபாத்திரங்களுக்கு இன்னோர் மிகச் சிறந்த உதாரணம் இதோ - என்னைப் போல் ஒருவன் படத்திலிருந்து ஆணாட்டம் பெண்ணாட்டம் பாடல் காட்சி...

https://www.youtube.com/watch?v=b0csx2ikKEQ

Subramaniam Ramajayam
11th December 2014, 10:36 PM
Thanks mr yukesh babu sir for your recenet collections of NT and this creates a brige to lessen the differences between the fans of two THILAGAMS.
good efforts.

eehaiupehazij
11th December 2014, 11:52 PM
சிவாஜி செந்தில் சார்
அட்டகாசமான தொடர் நிறைவுக்கு வரப் போவதாகத் தங்கள் குறிப்பு கூறுகிறது. இன்னோர் வித்தியாசமான கோணத்தில் தங்களுடைய ஆய்வு துவங்க வேண்டும் என எதிர்பார்க்கிறேன். தொடர்ந்து பல்வேறு கோணங்களில் தங்களுடைய கைவண்ணத்தில் நாயகரின் நவரசங்களை அலச வேண்டும் என விரும்புகிறேன்.
தங்களுக்கு என் உளமார்ந்த பாராட்டுக்கள்.

Heartfelt thanks for your encomium and encouragement Ragavendar sir. I am at work on the villain characters that intercepted the orbital pathway of our acting sungod (including his own portrayals of negative characters)..
உன்மத்த முகமூடிக்குப் பின் உத்தம வில்லன்கள்...
நடிகர்திலகத்தின் பெருமைப் படிக்கட்டுகளில்! Like to share in the New year 2015!

regards, senthil

JamesFague
12th December 2014, 07:21 AM
Comments of a viewer in Dina Malar

தமிழன் என்னைக்கும் இருக்கும்போது கண்டுக்க மாட்டான். மார்லன் பிராண்டோ ,ஆல்ப ஸிநோ எல்லோரும் நடிகர்திலகத்தை விட சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியவர்கள் ஒன்றும் அல்ல,,பறந்து விரிந்த ஹாலிவுட்டில் இருந்தததால் உலகம்முழுதும் அறியப்பட்டவர்கள் அவ்வளவே.....

RAGHAVENDRA
12th December 2014, 07:52 AM
http://i1146.photobucket.com/albums/o528/imagivity/SivajiFansEvents/MALAYSIAFUNCTION201402fw_zps9cd7924b.jpg

Gopal.s
12th December 2014, 08:04 AM
பதிவர்களுக்கு ஒரு வேண்டுகோள்.என்னை பொறுத்த வரை , எனக்கு பிடித்ததை புகழ்வேன். பிடிக்காததை இகழ்வேன். ஒவ்வாததை குறிப்பிட்டு மாற்றம் வேண்டுவேன். வெளிப்படையாக. என்னை யாராவது தாக்கி விட்டால் பயந்து ஓடுவதோ, அல்லது மானம் மரியாதையே இதனால் போய் விட்டதாக (ரவிக்குமார் பட கிராமத்து ஹீரோ ரேஞ்சில்)துடித்து கொதிப்பதோ,என்னை பாராட்டி விட்டார் என்பதால் இன்னொருவரை பாராட்டுவதோ , அணைத்தல் என்ற பெயரால் எல்லோரையும் தகுதியை மீறி புகழ்வதோ எனக்கு கை வராத கலை. எனக்கு பிடித்தவற்றை பாராட்டும் போது ,அவரின் எதிர்வினை பற்றி எனக்கு கவலையேயில்லை.அதே போல என்னை ஒருவர் பாராட்டி விட்டால் ,ஒவ்வாத விஷயங்களில் அவரோடு ஒத்து போகும் வழக்கமும் எனக்கில்லை. திரிகளில் வரும் விவாதங்களை வைத்து யாரையும் எதிரியாக பாவிக்கும் எண்ணமும் இல்லை. அதே போல சராசரிகளை மிகையாக புகழ்ந்து ,பிறரை மட்டம் தட்டும் அரசியல் செய்ததும் இல்லை.நம் திரியில், எல்லாவற்றையும் மிகையாக ஆஹோ,ஓஹோ என்று புகழாமல்,சிறிது விமர்சனங்களால் கூட நம் தெய்வத்தின் புகழுக்கு மாசு வரும் என்றோ எண்ணாமல் உண்மை தன்மை கடை பிடிக்க படுவதாலேயே ,பொது மக்களால் நேசிக்க படுகிறது.

அதனால்தான் சும்மா எதையோ மனசில் வைத்து ,போட்டியாக வெற்று பதிவுகளை போட்டு பக்கம் நிரப்புவதிலும் நமக்கு உடன்பாடில்லை.இந்த வித்யாசம் உணர்ந்தோர் இதனை ஆரோக்யமாக அணுக முடியும். சிறிது வாக்குவாதம் வந்தால் "ரவி"க்கை அணிந்து எதிரிகளிடம் சரணாகதி புகுவோர் கற்றவர் என்றே தகுதி பெற முடியாது.சமீப காலங்களில் ,நீ எனக்கு சொரிந்து விடு,நான் உனக்கு சொரிந்து விடுகிறேன் என்ற வகையில் கூத்து நடை பெறுவதால், சிலர் ஊடுருவி புகழ்ச்சி என்ற ஆயுதம் கொண்டு ஆள் பிடிப்பு வேலைக்கு தயாராவது ,அதற்கு சிலர் பலியாவது ,"எல்லாமே ஹிட்டுக்குதாண்டா",பொல்லாத புகழ்சிக்குதாண்டா,நல்லாயிருப்பவன் நாணயம் கெடுவதும்,நாணயம் கெட்டவன் மனசாட்சி விட்டு உளறுவதும் ,எல்லாமே ஹிட்ச்க்கு தாண்டா என்று ஆகி விட்டது.இந்த லட்சணத்தில் ,எனது நடிகதிலக பக்தியை கேள்விக்குறியாக்கி,நான் போட்ட நேரடி பதிவுகளின் உண்மைகளை தாங்க இயலாதவர்களால் குறி வைக்க பட்டேன்.நான் நடிகர்திலகம் தவிர எதையுமே பொருட்டாக கருதாதவன். அதனால் எனக்கு விலை வைக்க முடியாது. சுய நலம்,வெற்று புகழ் தேடி சிலர் உடைப்பு வேலை செய்து குளிர் காய நான் தயாரில்லை.

Gopal.s
12th December 2014, 08:06 AM
Sivaji senthil,

Eagerly awaiting your new serial theme postings. I request you to enhance your descriptions and limit your illustrations to Nadigarthilagam and his contemporary world actors only.

Gopal.s
12th December 2014, 08:27 AM
இன்னொரு வேண்டுகோள். என் எழுத்துக்கள் ஒவ்வவில்லையென்றால் ,கோழை தனமாக p .m அனுப்பி மற்றோரிடம் புலம்ப வேண்டாம். நேரிடையாகவே என்னிடமே புலம்பலாம் ,கொதிக்கலாம். சில நண்பர்கள் அரசல் புரசலாக சொன்னது, சி.க பதிவின் மூலம் ஊர்ஜிதமாகிறது. நேர்மையாளர்கள் எதற்கும் ஒளிந்து ,புறம் பேச மாட்டார்கள்.

RAGHAVENDRA
12th December 2014, 09:18 AM
http://www.thehindu.com/multimedia/dynamic/00655/10bgbhuSowcar_ART_G_655677g.jpg

இன்று 83வது பிறந்த நாள் காணும் சௌகார் ஜானகி அவர்கள் எல்லா வளமும் நலனும் பெற்று நீடூழி வாழ இறைவனை வேண்டுவோம்.

அவரைப் புகழின் உச்சிக்குக் கொண்டு சென்ற பாடல்

https://www.youtube.com/watch?v=xNInBEF8E7M

Irene Hastings
12th December 2014, 09:58 AM
Many thanks Sir.

KCSHEKAR
12th December 2014, 10:49 AM
திரு.கோபால் / திரு.முரளி சார்,

நீலவானம் - அலசல் / ஆய்வு அருமை.

KCSHEKAR
12th December 2014, 10:52 AM
திரு.சிவாஜி செந்தில் சார்,
தங்களின் கதாநாயகரின் கதாநாயகியர் வரிசை தொடர் மிகவும் சிறப்பாக இருந்தது. திரு.ராகவேந்திரன், திரு.கோபால் ஆகியோரின் கருத்துப்படி, இவற்றில் நடிகர்திலகம் சம்பந்தப்பட்ட காட்சிகளை மட்டும் அளித்தால் நன்று.

KCSHEKAR
12th December 2014, 10:56 AM
Sivaji Ganesan - Definition of Style 4
முன்னரே நாம் குறிப்பிட்டிருந்தபடி, நம் ரசிகர்களிடையே ஸ்டைல் என்பதன் சரியான விளக்கம் சென்று சேரவில்லை என நான் தனிப்பட்ட முறையில் கருதுகிறேன்.
திரு.ராகவேந்திரன் சார்,
தங்களுடைய "Definition of ஸ்டைல்" -4 பகுதிகளும் படித்தேன். அருமை.

நடிகர்திலகத்தின் ஸ்டைல் என்பது ஒவ்வொரு ரசிகரின் பார்வையிலும் ஒவ்வொரு விதமாக மாறுபடும்.

மொத்தத்தில் என்னைப் பொருத்தவரை STYLE என்பதன் DEFINITION - நடிகர்திலகம்தான்.

eehaiupehazij
12th December 2014, 01:46 PM
இன்று 83வது பிறந்த நாள் காணும் சௌகார் ஜானகி அவர்கள் எல்லா வளமும் நலனும் பெற்று நீடூழி வாழ இறைவனை வேண்டுவோம்.by Raghavendar sir.

Falling in line with Raghavendhra Sir, we wish Sowcaar Janaki ammaa 'long live' keeping us in the reminiscence of her association with NT during his golden era of super duper hits like Pudhiya Paravai, Paar Magale Paar, Uyarndha Manithan, Motor Sundaram Pillai and Padikkaadha Medhai.

senthil

https://www.youtube.com/watch?v=cepwzi21AkE

https://www.youtube.com/watch?v=Uh3980VY49Y

Gopal.s
12th December 2014, 02:22 PM
சிவாஜியின் ஆத்மார்த்த ரசிகர் ரஜினிக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். கடைசி வரை சிவாஜி ,கமலுடனும் ,ரஜினியுடனும் பாராட்டிய நட்பு, வளரும் கலைஞர்களை ,மேலும் வளர உதவியது.

eehaiupehazij
12th December 2014, 02:50 PM
Falling in line with Gopal Sir. Our hearty birthday wishes to Rajinikaanth, an ardent fan of NT, showing his gratitudes in his song lines glorifying NT in movie Vidudhalai!! (பார்த்ததுண்டா வீர சிவாஜியை நேரிலே ) .... நடிகர்திலகத்தின் பெருந்தன்மை மிக்க Screen presence with Rajini (in his VPKB get up with Vishnuvardhan as Jakkamma!!) as a part of his 'செஞ்சோற்றுக் கடன்' to his most loyal producer and contemporary actor K. Baalaajee!!

https://www.youtube.com/watch?v=8FRCYAOcoYc

Gopal.s
12th December 2014, 03:01 PM
நடிகர்திலகம் நடிப்பை வித விதமாக அலசி ஆகி விட்டது. ஆனாலும் புதிது புதிதாக ஏதாவது தோன்றிய படியே இருக்கும். நண்பர் வாசுதேவனுடன் ,இதை பற்றி அடிக்கடி பேசியிருக்கிறோம்.ஒரு எதிர்பாரா தன்மை ,அல்லது அசைவுகள் அல்லது நடிப்பின் பாணி ,கதாபாத்திரத்தை ஒட்டி அமையும்.சிறு வயதில் தீபாவளிக்கு ராக்கெட் விட்டிருக்கிறீர்களா?

நாங்கள் பால் வாங்கும் கண்ணாடி குடுவையில் வைப்போம். அதில் வித விதமாக ராக்கெட் தன்னை நிறுத்தி கொள்ளும். சில நேரம் பற்ற வைத்த பிறகும். சில நேரம் எதிர்பார்த்தது போல செங்குத்தாக மேலே. சில நேரம் பக்கத்து வீட்டு ஜன்னல். சில நேரம் ,நம் முகத்திற்கு நேரே . என்று .கிட்டத்தட்ட ,நடிகர்திலகம் இதை போல நமக்கு கடைசி நிமிட ஆச்சர்யம் தந்த படங்களுக்கு குறைவேயில்லை.ஆரம்ப உதாரணங்கள்--1)பராசக்தி படத்தில் பாட்டில், கட்டி அழும் போது என்று ஒருவரை கட்டி அழுவது போல பாவித்து, நைஸ் ஆக மூக்கை சிந்தி துடைப்பார்.2)நிறை குடம் படத்தில் கண்ணொரு பக்கம் பாட்டில் ,மேலே நிற்கும் வாணிஸ்ரீயை அணுக ஒரு படிகட்டு வழியாக போவார் என்று நினைக்கும் போது ஸ்டைல் ஆக திரும்பி,இன்னொரு படிகட்டு வழி மேலேருவார்.3)அன்னையின் ஆணை படத்தில் கட்டி போட பட்டிருக்கும் ரங்கா ராவ் ,தன்னை அவிழ்த்து விட சொல்லி ,தனிக்கு தனி மோதலாம் என்று சொல்ல ,கைகளை நெட்டி முறிக்கும் போது ,அதை ஏற்பதாக தோன்ற வைக்கும். ஆனால் அம்புகளை ,வேடம் ஏன் துறக்க வேண்டும் என்று கிண்டலாக முடிப்பார்.4)வசந்த மாளிகை படத்தில் அருகருகே சிவாஜி முன் புறம் திரும்பியிருக்க ,வாணிஸ்ரீ பின் புறம் காட்டி நிற்க ,மயக்கமென்ன பாட்டில் , இடது கையை சிறிதே வளைத்து ,இடையை இழுப்பார்.5)அதே படத்தில் குடிமகனே பாட்டில், கீழே கிடக்கும் சகுந்தலாவை கை கொடுத்து தூக்கு முன் ஒரு செல்ல உதை காலால்.இன்னும் எல்லோரும் தனக்கு தெரிந்ததை எழுதுங்கள்.சுவாரச்யமாக்கும்.

sss
12th December 2014, 05:15 PM
http://archives.deccanchronicle.com/sites/default/files/styles/sliderimage_crop/public/mediaimages/gallery/2012/Dec/24Justice-Gopinath.jpg
('Justice Gopinath' was Rajini’s first film with his most adored actor and the man he calls his 'father in the film industry', Sivaji Ganesan. His proximity to the thespian grew to such an extent that Sivaji began to treat Rajinikanth like one of his sons.)

I & Rajini lied to Sivaji - KS Ravikumar
When he lights his cigarette each time, he remembers the legendary Sivaji Ganesan. KS Ravikumar takes pleasure in remembering those golden days of directing Nadigar Thilagam and Superstar for 'Padayappa'.

Many know that Sivaji Ganesan hated the sheer smell of the cigarette smoke, though he was a chain smoker initially. We have a treasured hush-hush incident that was revealed by KS Ravikumar. Being a devoted actor, Sivaji Ganesan would be on the sets from morning till the pack-up time. As our veteran actor does not like cigarette smoke, it was a tough time to control the craving for many people.

Once it happened that, KS Ravikumar went inside a room where trashes were dumped to take a puff. There he caught another person who came before him, for the same purpose and it was our Superstar. After enjoying the Cigarette both of them came out to resume the shooting; but the whiff of the cigarette did not leave them. Unfortunately Sivaji Ganesan sensed the odour and asked in a rough tone who smoked inside the set. That was enough to make them both feel offensive, but then they instantly turned naughty and blamed the make-up man who stood there. The funniest part here is that the make-up man never smokes.

Well we say, that's not a lie, it's a tactical misrepresentation. What say people?

http://www.indiaglitz.com/i--rajini-lied-to-sivaji--ks-ravikumar-tamil-news-48882

Murali Srinivas
12th December 2014, 05:30 PM
அன்புமிக்க முரளி சார் தங்களின் மேலான பதில் கண்ணுற்றதில் மிக்க மகிழ்ச்சி .
செந்தில்

செந்தில் சார்,

பாரதியின் பிறந்த நாளான நேற்று இளைய சகோதரர் யுகேஷ் பதிவேற்றிய நடிகர் திலகத்தின் புகைப்படம் பற்றி குறிப்பிடும்போது அது நடிகர் திலகம் எட்டயபுரத்தில் நடத்திய பாரதி விழாவாக இருக்கலாம் என்று சொல்லியிருந்தேன். ஆனால் அது எட்டயபுரத்தில் நடைபெற்ற விழாவின் புகைப்படம் அல்லவென்று அந்த விழாக்களில் கலந்துக் கொண்டுள்ள தூத்துக்குடியை சேர்ந்த மூத்த ரசிகர் வழக்கறிஞர் திரு நடராஜன் அவர்கள் [விரைவில் இந்த மன்றத்தில் இணையவிருக்கிறார்] என்னை தொடர்பு கொண்டு சொன்னார். அந்தப் புகைப்படம் சென்னையில் நடைபெற்ற விழாவில் எடுக்கப்பட்டிருக்கலாம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

தெளிவுபடுத்தியதற்கு நன்றி நடராஜன் சார்!

அன்புடன்

Russellisf
12th December 2014, 05:56 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/A_zps9411fa1a.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/A_zps9411fa1a.jpg.html)

Russellisf
12th December 2014, 05:59 PM
கண்ணா நீயும் நானுமா?
வியட்நாம் வீடு சுந்தரத்தின் கெளரவம் படத்தில் மெல்லிசை மன்னரின் இசையில் கண்ணா நீயும் நானுமா என்ற பாடலைப் பாட வந்த போது.
படத்தின் கதை, அந்தப் பாடலைப் பாடப் போகும் கதாபாத்திரத்தின் குண நலன்கள் மற்றும் மனோ பாவம், ஆகியவற்றைப் பற்றி நன்கு கேட்டுத் தெரிந்து கொண்டு அந்தக் கதாபாத்திரமாகவே தம்மையும் மாற்றிக் கொண்டு,இன்னும் சொல்லப் போனால் கூடு விட்டுக் கூடு பாய்வது போல அந்தக் கதாபாத்திரத்தின் உடலில் புகுந்து கொண்டு உணர்வு பூர்வமாகப் பாடிக் கொடுத்தார் டி.எம்.எஸ்.
அந்தப் பாடல் காட்சியில் நடிப்பதற்காக படப் பிடிப்புத் தளத்துக்கு வந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசனிடம் பாடலைப் போட்டுக் காட்டினார்கள்.
இன்னும் ஒரு தடவை போடுங்கள் இன்னும் ஒரு தடவை என்று பல தடவை திரும்பத் திரும்ப அந்தப் பாடலை மிக உன்னிப்பாகக் கேட்டுக் கொண்டே இருந்தார் சிவாஜி.இது அங்கிருந்த பலருக்கும் மிகுந்த ஆச்சரியத்தைக் கொடுத்தது!காரணம், பொதுவாக சிவாஜி ஒரு பாடல் காட்சியில் நடிப்பதற்கு முன்பு ஒரு தடவை அல்லது மிஞ்சிப் போனால் இரண்டு தடவை தான் அந்தப் பாடலின் ஒலி நாடாவை ஒலிக்க விடச் சொல்லிக் கேட்பது வழக்கம்.
ஆனால் இந்தப் பாடலை அவர் பத்துத் தடவைக்கு மேலாக கண்களை முடிக் கொண்டே மறுபடியும் மறுபடியும் கேட்டுக் கொண்டே இருந்தார்.
இதை நீண்ட நேரமாகவே கவனித்துக் கொண்டிருந்த வியட்நாம் வீடு சுந்தரம், நடிகர் திலகத்தின் அருகே சென்று அவரிடம் மிகவும் பணிவான குரலில் தமது சந்தேகத்தை வெளிப்படுத்தினார்.
ஒரு தடவை, அல்லது இரு தடவை பாடலைக் கேட்டு விட்டு உடனே நடிக்க வந்து விடும் நீங்கள் இந்தக் குறிப்பிட்ட பாடலை மட்டும் பத்து தடவைக்கு மேல் திரும்பத் திரும்பக் கேட்பதன் ரகசியம் என்ன?
சுந்தரம்! டி. எம். எஸ். இந்தப் பாடலை, மிகுந்த உணர்ச்சிப் பிரவாகமாகப் பாடி இருக்கின்றார்.
பல்லவியில் ஒரு விதமான பாவம் ஆக்ரோஷம்
அடுத்த சரணத்தில் இன்னொரு விதமான தொனி
மற்ற சரணத்தில் இன்னொரு பரிமாணம் என குரலால் அற்புதமாக நடித்துக் கொடுத்திருக்கிறார் டி.எம்.எஸ்.
ஒரே வரியையே இரண்டு இடத்தில் ரிபீட் பண்ணும் போது இரண்டு விதமான தொனிகளில் பாடுகிறார்.
உதாரணமாக நீயும் நானுமா? என்ற வரியை ஒவ்வொரு முறை உச்சரிக்கும் போதும் ஒவ்வொரு பாவத்தில் அர்த்தத்தில் உச்சரிக்கிறார்.
இப்படியெல்லாம்... அற்புதமாக அவர் பாடிக் கொடுத்த பாட்டை கவனமாக நான் நடித்துக் கொடுக்கா விட்டால் இதைப் பாடிய டி.எம்.எஸ். என்னைப் பற்றி என்ன நினைப்பார்? என்றாராம் சிவாஜி.
நடிகர் திலகத்தின் செய் தொழில் நேர்த்திக்கும், ஆத்மார்த்தமான தொழில் ஈடுபாட்டுக்கும், தன்னடக்கத்திற்கும், சக கலைஞர்களின் திறமைகளைப் பகிரங்கமாக மதிக்கும் பரந்த தன்மைக்கும் இது ஒரு சிலிர்க்க வைக்கும் எடுத்துக்காட்டு.


Courtesy net

Russellisf
12th December 2014, 07:52 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/a_zpscc6c21ac.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/a_zpscc6c21ac.jpg.html)

RAGHAVENDRA
12th December 2014, 09:22 PM
நடிகர்திலகம் நடிப்பை வித விதமாக அலசி ஆகி விட்டது. ஆனாலும் புதிது புதிதாக ஏதாவது தோன்றிய படியே இருக்கும். நண்பர் வாசுதேவனுடன் ,இதை பற்றி அடிக்கடி பேசியிருக்கிறோம்.ஒரு எதிர்பாரா தன்மை ,அல்லது அசைவுகள் அல்லது நடிப்பின் பாணி ,கதாபாத்திரத்தை ஒட்டி அமையும்.சிறு வயதில் தீபாவளிக்கு ராக்கெட் விட்டிருக்கிறீர்களா?

நாங்கள் பால் வாங்கும் கண்ணாடி குடுவையில் வைப்போம். அதில் வித விதமாக ராக்கெட் தன்னை நிறுத்தி கொள்ளும். சில நேரம் பற்ற வைத்த பிறகும். சில நேரம் எதிர்பார்த்தது போல செங்குத்தாக மேலே. சில நேரம் பக்கத்து வீட்டு ஜன்னல். சில நேரம் ,நம் முகத்திற்கு நேரே . என்று .கிட்டத்தட்ட ,நடிகர்திலகம் இதை போல நமக்கு கடைசி நிமிட ஆச்சர்யம் தந்த படங்களுக்கு குறைவேயில்லை.ஆரம்ப உதாரணங்கள்--1)பராசக்தி படத்தில் பாட்டில், கட்டி அழும் போது என்று ஒருவரை கட்டி அழுவது போல பாவித்து, நைஸ் ஆக மூக்கை சிந்தி துடைப்பார்.2)நிறை குடம் படத்தில் கண்ணொரு பக்கம் பாட்டில் ,மேலே நிற்கும் வாணிஸ்ரீயை அணுக ஒரு படிகட்டு வழியாக போவார் என்று நினைக்கும் போது ஸ்டைல் ஆக திரும்பி,இன்னொரு படிகட்டு வழி மேலேருவார்.3)அன்னையின் ஆணை படத்தில் கட்டி போட பட்டிருக்கும் ரங்கா ராவ் ,தன்னை அவிழ்த்து விட சொல்லி ,தனிக்கு தனி மோதலாம் என்று சொல்ல ,கைகளை நெட்டி முறிக்கும் போது ,அதை ஏற்பதாக தோன்ற வைக்கும். ஆனால் அம்புகளை ,வேடம் ஏன் துறக்க வேண்டும் என்று கிண்டலாக முடிப்பார்.4)வசந்த மாளிகை படத்தில் அருகருகே சிவாஜி முன் புறம் திரும்பியிருக்க ,வாணிஸ்ரீ பின் புறம் காட்டி நிற்க ,மயக்கமென்ன பாட்டில் , இடது கையை சிறிதே வளைத்து ,இடையை இழுப்பார்.5)அதே படத்தில் குடிமகனே பாட்டில், கீழே கிடக்கும் சகுந்தலாவை கை கொடுத்து தூக்கு முன் ஒரு செல்ல உதை காலால்.இன்னும் எல்லோரும் தனக்கு தெரிந்ததை எழுதுங்கள்.சுவாரச்யமாக்கும்.

கோபால்
இதெல்லாம் ஒரு வரியில் எழுதக் கூடியதா என்ன.. ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு தனி ஆய்வேடே எழுத வேண்டுமே..

இருந்தாலும் மேலே தாங்கள் குறிப்பிட்ட வகையும் Definition of Style தலைப்பில் கொண்டு வரலாம் என இருக்கிறேன்.

அடுத்த பதிவில் மேலே தாங்கள் குறிப்பிட்டதில் இன்னும் ஒன்று இடம் பெறுகிறது.

RAGHAVENDRA
12th December 2014, 09:37 PM
Sivaji Ganesan - Definition of Style - 5

நண்பர் கோபால் குறிப்பிட்டுள்ளவாறு, திடீரென எதிர்பாராத உடல்மொழியில் நம்மை வியப்பில் ஆழ்த்துவதும் ஒரு தனி ஸ்டைல். இதிலும் கூட மேனரிஸம் சற்றும் இருக்காது. அந்தப் பாத்திரத்தின் இயல்பைத் தன்னுடைய நடிப்பில் வெளிக்கொணர்வதற்கு நடிகர் திலகம் பயன்படுத்தும் உத்தியும் இதில் அடங்கும். இதெல்லாம் மற்றவர்களால் சற்றும் கற்பனை செய்து கூடப் பார்க்க முடியாது. அவருடைய நடிப்பில், பாடல் காட்சியிலோ அல்லது வசனம் பேசும் காட்சியிலோ அல்லது மற்ற காட்சிகளிலோ எதிர்பாராத வகையில் அந்தப் பாத்திரத்தின் குணாதிசயத்தை சித்தரித்து அந்தப் பாத்திரத்தின் வலுவைக் கூட்டுவதும் நடிகர் திலகத்தின் ஸ்டைலாகும்.

நடிகர் திலகத்தின் ஸ்டைல் என்பது அவரால் மட்டுமே முடிந்த ஒன்று. அவரை உள்வாங்கி அவருடைய உடல் மொழியைத் தன்னுள் செலுத்தி தன் நடிப்பில் அதைத் தனக்கே உரிய பாணியில் செயல் படுத்தும் போது அல்லது செயல் படுத்த முடியும் போது நிச்சயம் அந்த நடிகன் வெற்றிக்கு முயற்சி மேற்கொள்ளலாம். ஆனால் இதற்கு மன உறுதி, நடிகர் திலகத்தை நூறு சதவீதம் தனக்குள் உள்வாங்குதல், அதற்கான முயற்சியில் நேர்மை இவையெல்லாம் தேவை.

இந்த அடிப்படையில் பார்த்தால் அவரை முழுதும் உள்வாங்கி தங்களுடைய பாணியில் செயல் படுத்த முயற்சிப்பவர்கள் என திரு ஒய்.ஜி.மகேந்திரா மற்றும் கமலஹாசன் இருவரையும் கூறலாம். மகேந்திரா அவர்களைப் பொறுத்த வரை இந்த உத்தியை நாடகங்களில் பயன்படுத்தி வெற்றியடைகிறார் எனலாம். உதாரணம், வியட்நாம் வீடு மற்றும் பரீட்சைக்கு நேரமாச்சு நாடகங்கள். கமலைப் பொறுத்த வரை இந்த உத்தியைப் பயன்படுத்திய படங்களெல்லாமே அவருக்கு மிகச் சிறந்த புகழை ஈட்டித் தந்துள்ளன. உதாரணங்கள் எண்ணற்றவை. தேவர் மகன், நாயகன், இவையெல்லாம் இந்த உத்தியின் பிரதிபலிப்பே.

இனி நடிகர் திலகத்தின் ஸ்டைல் என்ற பாணிக்கு வருவோம். திடீரென எதிர்பாராமல் அவர் தன் நடிப்பில் கொண்டு வரக்கூடிய நுணுக்கங்கள் அந்தந்த கதாபாத்திரங்களை உச்சாணிக்கொம்பில் கொண்டு நிறுத்துகின்றன. பெரும்பாலானோர் இந்த மாதிரி உதாரணங்களுக்கு வயதான பாத்திரங்களையே உதாரணமாய் சட்டெனச் சொல்லுவர்.

ஆனால் இந்த உத்தியில் அவர் ஒரு காதல் காட்சியில் செய்திருக்கிறார் என்பதும், தனக்குள் இருக்கும் அந்தப் பாத்திரத்தின் தன்மையின் வெளிப்பாட்டைக் கொண்டு வரும் ஆளுமையை வெளிக்காட்ட பயன் படுத்தியிருக்கிறார் என்பதும் வியப்பைத் தருகின்றன.

ஆம். சுமதி என் சுந்தரி பாடலில் வரும் ஒரு தரம் ஒரே தரம் பாடல் காட்சியில் ஒரு குறிப்பிட்ட கட்டத்தில் புதரின் நடுவே வேகமாக நடந்து வரும் அவர் திடீரென நிற்க முற்படுகிறார். நின்று விடுகிறாரா.. இல்லை.. ஒரு காலை சற்றே தரையிலிருந்து மேலே உயர்த்தி கிட்டத்தட்ட இரண்டிலிருந்து மூன்று விநாடிகள் வரை அப்படியே நின்று கொண்டு மெதுவாக நளினமாக கீழே வைக்கிறார்..

This is where the word "style" is defined in perfect manner.

பாடலைப் பாருங்கள். 1.52லிருந்து 2.00 வரை கவனியங்கள் மேலே சொன்னதை.

https://www.youtube.com/watch?v=-d7SkQIqvYs

eehaiupehazij
12th December 2014, 10:04 PM
....பாடல் காட்சியிலோ அல்லது வசனம் பேசும் காட்சியிலோ அல்லது மற்ற காட்சிகளிலோ எதிர்பாராத வகையில் அந்தப் பாத்திரத்தின் குணாதிசயத்தை சித்தரித்து அந்தப் பாத்திரத்தின் வலுவைக் கூட்டுவதும் நடிகர் திலகத்தின் ஸ்டைலாகும்.....
by Raghavendar Sir

அன்புள்ள ராகவேந்தர் சார். உங்களது ஸ்டைல் தொடரில் நடிகர்திலகம் அவர்கள் கௌரவம் திரைக்காவியத்தில் ஜெய்குமாரி ஆடிப்பாடும் அதிசய உலகம் காட்சியில் அரங்கத்தின் உள்ளே நுழைவது முதல் பாடல் முடிவது வரை பாரிஸ்டர் கெத்து மாறாமல் காட்டியிருக்கும் Style and Mannerisms alongside body language பற்றி உங்கள் ஸ்டைலில் விவரிப்பதை எதிர்பார்க்கிறேன்

Murali Srinivas
13th December 2014, 12:58 AM
கோபால்,

இன்றைய தினம் உங்களின் ஒரு சுய விளக்கப் பதிவு வந்திருக்கிறது. ஒரு சில நிகழ்வுகளுக்கு எதிராக அல்லது நீங்கள் சம்மந்தப்பட்ட சில வாக்குவாதங்களுக்கு உங்கள் விளக்கத்தை சொல்லியிருக்கிறீர்கள். அது உங்கள் உரிமை. அதில் தலையிட விரும்பவில்லை. அதே நேரத்தில் உங்கள் பதிவின் இறுதிப் பகுதியில் உங்களைப் பற்றிய ஒரு ஒரு சுய மதிப்பீடு கொடுத்து என் பெயரையும் அதில் சேர்த்திருக்கிறீர்கள்.

நாம் விரும்புகின்ற, ஏற்றுக் கொண்டிருக்கின்ற ஒரு மனிதன். அந்த மனிதன் மேல் நாம் கொண்டிருக்கின்ற அன்பை ஒரு குறிப்பிட்ட மதிப்பீட்டின் அடிப்படையில் நிறுவ முயற்சிக்கும்போது நம்மை தவிர வேறு ஆட்களின் பெயரை சேர்பதிலோ அல்லது நீக்குவதிலோ மிகவும் கவனமாக இருக்க வேண்டும். அதிலும் நீங்கள் குறிப்பிட்டுள்ள மதிப்பீடு மிகவும் சென்சிடிவானது. அதில் ஒரு பெயரை மட்டும் சொல்வது மற்றவர்களை காயப்படுத்தி விடும். ஆகவே உங்கள் தன்னிலை விளக்கத்தில் இடம் பெற்றிருக்கும் என் பெயரை நான் நீக்கி விட்டேன்.

உங்களுக்கு நான் எப்போதும் சொல்வதுதான். எந்த விஷயத்தை வேண்டுமானாலும் சொல்லலாம். சொல்லும் மொழி அதன் தொனி மிகவும் முக்கியம். எல்லோரும் உங்களை போல எளிதாக எடுத்துக் கொள்ளமாட்டார்கள். அதிலும் பல்லாயிரக்கணக்கானவர்கள் படிக்கும் open discussion forum என்று சொல்லும்போது அது பகிரங்கமாக நேர்ந்த அவமானமாகவே மற்றவர்கள் எடுத்துக் கொள்ளும் சாத்தியக்கூறுகள் அதிகம். ஆகவே ஒன்றுக்கு இரண்டு முறை யோசித்து எழுதினால் நல்லது.

அன்புடன்

கோபால்,

நான் மாடரேட்டர் ஆனபிறகு மிக அதிகமாக எடிட் செய்தது உங்கள் பதிவுகளைத்தான். அந்த சாதனையையும் புரிந்தது நீங்களே!

Murali Srinivas
13th December 2014, 01:19 AM
1960-களின் இறுதியில் துவங்கி நடிகர் திலகத்தின் படங்கள் வெளியான கால கட்டத்தைப் பற்றிய எனது நினைவலைகளை தாங்கிய இந்த தொடர் பதிவின் அடுத்த கட்டம். இது புதிய பதிவு.

கடந்த பதிவின் இறுதி பகுதி

எது எப்படியோ, அது போன்ற உணர்ச்சிக் குவியலான ஒரு மக்கள் கூட்டத்தையும் அந்த ஆவேசத்தையும் அதே அளவில் நான் அதற்கு முன்பும் பார்த்ததில்லை. அதற்கு பின்பும் பார்த்ததில்லை. அந்த வகயில் தர்மம் எங்கே என்றுமே ஸ்பெஷல்தான்.

இங்கிருந்து பதிவு தொடர்கிறது.

அந்த நாள் ஞாபகம்

தர்மம் எங்கே இப்படி அலப்பரை கொடுத்துக் கொண்டிருக்க மற்றொரு பக்கம் இதன் பாதிப்பு சிறிது கூட இல்லாமல் பட்டிக்காடா பட்டணமா தன வெற்றிப் பயணத்தை தொடர்ந்து கொண்டேயிருந்தது. அதன் வசூல் சூறாவளியில் சிக்கி முன்னர் நிறுவப்பட்டிருந்த அனைத்து வசூல் மைல் கற்களும் தகர்ந்து வீழ்ந்தன.

இதனிடையில் 1971-ம் ஆண்டு திரைப்பட தேசிய விருதுகள் வழங்கப்பட்டதில் பின்னணியில் நிகழ்ந்த சில நிகழ்வுகளை துக்ளக் இதழ் தொடர்ந்து எழுதியது. அப்போது மாதமிருமுறையாக வெளிவந்துக் கொண்டிருந்த துக்ளக் [1972 ஜூலை 1,15 மற்றும் ஆகஸ்ட் 1 என்று நினைவு] மூன்று இதழ்களில் இது பற்றிய விவாதங்களும் பேட்டிகளும் இடம் பெற்றன. 1972 மே முதல் வாரத்திலேயே விருதுகள் அறிவிக்கப்பட்டுவிட்ட போதிலும் துக்ளக் இந்த விஷயத்தை கையிலெடுத்ததும் ஒரு பரபரப்பு நிலவியது. நடிகர் திலகத்திற்கு சவாலே சமாளி திரைப்படத்தின் மூலமாக கிடைக்க வேண்டிய சிறந்த நடிகர் விருது கிடைக்காமல் போனதில் ரசிகர்களுக்கு மிகுந்த மன வருத்தம் இருந்தாலும் இவற்றையெல்லாம் என்றுமே ஒரு பொருட்டாக கருதாத நடிகர் திலகம் தான் தலைவராக இருந்த தென்னிந்தியா நடிகர் சங்கத்தின் சார்பாக சிறந்த நடிகர் விருது பெற்ற எம்ஜிஆர் அவர்களுக்கு பாராட்டு விழா ஒன்றை நடத்தினார். ஜூலை 30 ஞாயிறன்று மாலை நடிகர் சங்க வளாகத்தில் நடைபெற்ற இந்த பாராட்டு விழாவின் மூலமாக தன் பெருந்தன்மையை நிறுவினார்.

விவசாயிகள் போராட்டம் அதன் காரணமாக நடந்த உயிரிழப்பு போன்றவற்றால் அந்த வருடம் ஜூலை 15 தன் பிறந்த நாளை கொண்டாடுவதில்லை என்று பெருந்தலைவர் முடிவெடுத்தார், வந்தது ஜூலை 23. அதற்கு சரியாக ஒரு வருடம் முன்பு அதே நாளில்தான் [1971 ஜூலை 23] ஒரு வருங்கால தூண் வெட்டி சாய்க்கப்பட்டது. மாணவர் திலகமாக திகழ்ந்த அண்ணாமலை பல்கலைக்கழக மாணவர் தலைவர் உதயகுமார் அரசியல் வன்முறையாளர்களால் தாக்கப்பட்டு உயிரிழந்த நாள். 1971-ல் ரஷ்ய மையால் கிடைத்த வாழ்வை வைத்துக் கொண்டு திராவிட இயக்கத்தினர் மாற்று அரசியல் கட்சியினரை தங்கள் அரசியல் எதிரிகளாக பாவித்து அவர்கள் மேல் வன்முறையை கட்டவிழ்த்து விட்டனர்.

அரசு நிர்வாகத்தை செவ்வனே நடத்துவதை விட தங்களுக்கு தாங்களே பட்டங்கள் கொடுத்துக் கொள்வதிலும் பட்டங்களை தேடி சென்று வாங்குவதிலும் மிகுந்த விருப்பம் கொண்ட அன்றைய ஆளும் கட்சியினர் அன்றைய முதல்வருக்கு டாக்டர் பட்டம் வாங்கி கொடுக்க ஏற்பாடு செய்தனர். அரசின் தயவை வேண்டி நின்ற தனியார் பல்கலைக்கழகமான அண்ணாமலை பல்கலைக்கழகம் அதற்கு இசைவு தந்து பட்டமளிப்பு விழாவிற்கு ஏற்பாடு செய்தது. ஜனநாயக முறைப்படி கறுப்புக் கொடி காட்ட முயற்சித்த உதயகுமார் கொடூரமாக தாக்கப்பட்டு அங்கேயிருந்த குளத்தில் தூக்கி எறியப்பட்டு மறுநாள் காலை பிணமாக மிதந்தார். இறந்து போனது தங்கள் மகன்தான் என்று சொல்லி கதறி அழும் உரிமை கூட அந்த மாணவனின் பெற்றோருக்கு மறுக்கப்பட்டது. இறந்து போனது தங்கள் மகனே அல்ல என்று சொல்ல வைக்கப்பட்டார்கள். இப்படி பிணத்தின் மீது பட்டமளிப்பு விழா நடத்தி முடிந்தபின் மாணவர்கள், ஸ்தாபன காங்கிரஸ் மாணவர் அணி மற்றும் பொதுமக்கள் மற்றும் ஒரு சில நடுநிலை ஏடுகள் இதற்கு எதிராக போராட்டம் நடத்த ஆரம்பிக்க அரசு எந்திரம் பணிந்து ஒரு விசாரணை கமிஷனுக்கு உத்தரவிட்டது.

இந்த விவகாரம் என்றில்லை. தங்களுக்கு எதிராக செயல்படுபவர்கள் அனைவருக்கும் எதிராக வன்முறை அடக்குமுறை கட்டவிழுத்து விடப்பட்டது சேலத்திலே ராமர் முதலான இந்து கடவுள்கள் படங்களுக்கு செருப்பு மாலை போட்டு ஊர்வலம் நடத்திய வீரமணி கூட்டத்தின் மேல் எந்த நடவடிக்கையும் கிடையாது. அந்த ஊர்வலத்தை புகைப்படம் எடுத்து போட்ட துக்ளக் பத்திரிக்கை பறிமுதல் செய்யப்பட்டது. தங்கள் ஆட்சியையும் கட்சியையும் விமர்சிக்கும் படம் என்பதனால் முகமது பின் துக்ளக் படம் வெளிவர எத்தனை தடைகள் உண்டோ அத்தனையும் செய்யப்பட்டது. படத்தை வெளியிடாமல் இருக்க சோ அவர்கள் மீது சாம தான பேத தண்ட முறைகள் பயன்படுத்தப்பட்டது. திரையுலகை சேர்ந்த சிலரே சோவை அழைத்து படத்தை வெளியிடக் கூடாது என்றெல்லாம் சொன்னார்கள். பின்னர் அதே நிலைக்கு தாங்களும் ஆளானார்கள் என்பது வரலாறு.

சிம்சன் தொழிற்சாலையில் தங்கள் கட்சியின் தொழிற்சங்க பிரிவை தொடங்க முடியாமல் போனபோது அங்கே தொழிற்சங்க தலைவராக பணியாற்றிக் கொண்டிருந்த குருமூர்த்தியை நீக்குவதற்கு சதி செய்து தங்களது ஆளான காட்டூர் கோபால் அங்கே திணிக்கப்பட்டு தொழிலாளர்களின் நலனை பாதிக்கும் வண்ணம் ஒப்பந்தங்கள் போடப்பட்டு பிறகு அந்த நிறுவனத்திற்கு எதிராக ஸ்ட்ரைக் வந்தபோது வளாகத்திற்கு உள்ளே கொலைவெறி தாக்குதல் நடத்தி அதன் காரணமாக உயிரிழப்பு ஏற்பட்டு நிறுவனம் லாக் அவுட் செய்ய 450 தொழிலாளிகள் வேலை இழந்த சாதனையை செய்த பெருமை திராவிட இயக்கத்தையே சாரும். இவையெல்லாம் கூட 1972 ஜூன் முதல் ஆகஸ்ட் வரை நடந்த சம்பவங்கள்தான். இந்த பிரச்சனை நீண்ட காலம் தொடர்ந்து 1976 வரை போனது. 1974-ல் தொழிலாளிகளின் ரகசிய வாக்கெடுப்பில் கம்யூனிஸ்ட் இயக்கத்தை சேர்ந்த குசேலர் தலைவரானது அதன் பின் நடந்த பேச்சுவார்த்தை ஒப்பந்தங்கள் எல்லாம் நீண்ட வரலாறு. அதையெல்லாம் விவரிக்க ஆரம்பித்தால் பக்கங்கள் போதாது.

இதையெல்லாம் நடிகர் திலகத்தின் கலைப் பயணத்தில் குறிப்பிட காரணம் எப்படிப்பட்ட எதிர்மறை சூழலில் நடிகர் திலகம் சாதித்தார் என்பதையும் தமிழக அரசியல் களத்தில் ஆளும் கட்சியினரால் உருவாக்கப்பட்ட வன்முறை நெருப்பாற்றில் எப்படி நீந்தி கரையேறினார் நடிகர் திலகம் எனபதையும் வாசகர்கள் உணரவே இந்த விஷயங்களையெல்லாம் கோடிட்டுக் காட்டுகிறேன். நடிகர் திலகம் சம்மந்தப்பட்ட விஷயங்களும் எப்படி பாதிக்கப்பட்டன என்பதற்கு உதாரணம் 1970 அக்டோபர் 25 அன்று சாந்தி தியேட்டர் தாக்கப்பட்டதும் தாக்கியவர்களை விட்டு விட்டு அப்போது தியேட்டர் வளாகத்தில் இருந்தவர்கள் கைது செய்யப்பட்டு அவர்கள் மேல் வழக்கு பதிவு செய்யப்பட்டதையும் கூற வேண்டும்.

ஒரு அரசாங்கத்தை தன் கையில் வைத்திருக்கும் ஆளும் கட்சி அரசு நிர்வாகத்தை எந்தளவிற்கு அதிகார துஷ்பிரயோகம் செய்ய முடியும் என்பதற்கு ஒரு மீகப் பெரிய உதாரணம் மதுரையில் ஆகஸ்ட் 4,5 மற்றும் 6 தேதிகளில் நடைபெற்ற திமுக மாநாடு. அன்றைய மதுரை மேயர் முத்து மாநகராட்சி நிர்வாகத்தையும், மாநகராட்சி ஊழியர்களையும் கட்சி மாநாட்டிற்கு பயன்படுத்தியதை மக்கள் திகைத்துப் போய் பார்த்தனர். அங்கே மாநாட்டிற்காக விளையாடிய பணம் அன்றாடம்காய்ச்சிகளாக இருந்த ஆளும்கட்சியினர் எப்படி கோடிஸ்வரர்களாக மாறி விட்டனர் என்று பெருந்தலைவர் குற்றம் சாட்டுவது முழுக்க முழுக்க உண்மை என்பதையும் மக்கள் புரிந்துக் கொண்டனர்.

இந்த மாநாட்டில் அன்றைய ஆளும் கட்சியில் இருந்த உட்கட்சி பூசலும் பகிரங்கமாக வெளியே தெரிய ஆரம்பித்தது. மாநாட்டு ஊர்வலத்தை முதல் நாள் முக முத்து தொடங்கி வைத்தபோதே ஆரம்பித்த பிரச்சனை ஊர்வலத்தை விளக்குத்தூண் அருகே நின்று பார்வையிட்ட அன்றைய முதல்வர், அவர் நின்றிருந்த மேடைக்கு முன்னால் சென்று நின்றுக் கொண்டு நகராமல் ஒரு குழுவினர் எம்ஜிஆர் அவர்களை வாழ்த்தி கோஷம் போட்டது, முதல் நாள் ஊர்வலத்தை துவக்கி வைக்க வருவதாக இருந்த எம்ஜிஆர் அவர்கள் மூன்றாம் நாள் ஞாயிற்றுக்கிழமையன்று மாலை மட்டும் வந்துவிட்டு மேடையில் பேசி விட்டு புறப்பட்டு போய்விட அவருக்காக வந்த கூட்டம் அவர் சென்றவுடன் மாநாட்டு பந்தலை விட்டு வெளியேறி விட முதல்வர் திமுக தலைவர் மு.க. மேடையில் மயங்கி விழ அரசியல் பார்வையாளர்களுக்கு நடப்பது நன்றாகவே புரிந்தது. ஆனால் ஒன்று சொல்ல வேண்டும். இதற்கு இரண்டு மாதங்களுக்கு பிறகு [அக்டோபர் 72-ல்] திமுகவின் முக்கிய தலைவர்கள் முதல்வர் உட்பட பல அமைச்சர்களும் ஊழல் செய்து விட்டனர் என்று சொல்லி வெளியேறிய அல்லது வெளியேற்றப்பட்ட எம்ஜிஆர் அவர்கள் இந்த மாநாட்டில் பேசும்போது வெளியேறியபோது அவர் யாரையெல்லாம் ஊழல் வாந்திகள் என்று சொன்னாரோ அவர்கள் அனைவரும் மேடையில் வீற்றிருக்க " இவர்கள் அனைவரும் ஊழல் செய்தவர்கள் என்று காமராஜர் கூறுகிறார். நீங்கள் சொல்லுங்கள் இவர்கள் ஊழல் செய்தவர்களா" என்று கூட்டத்தை பார்த்து கேட்க கூட்டம் இல்லையென்று சொல்ல " காமராஜர் வேண்டுமென்றே சொல்கிறார்" என்று ஊழல்வாதிகளுக்கு வக்காலத்து வாங்கியதையும் இங்கே குறிப்பிட வேண்டும். [மாநில சுயாட்சி கிடைக்காவிட்டால் ராணுவத்தை சந்திப்பேன் என்று சொன்னதெல்லாம் தனி கதை].

இப்படியாக நாம் கடந்து வந்துக் கொண்டிருக்கும் 1972 ஜூலை ஆகஸ்ட் காலகட்டம் தமிழக அரசியலிலும் சரி தமிழ் திரையுலகிலும் சரி பல்வேறு பரபரப்புகளை சந்தித்துக் கொண்டிருந்த நேரம்.

(தொடரும்)

அன்புடன்

Gopal.s
13th December 2014, 04:26 AM
என்.பாலகிருஷ்ணன்- சிவந்த மண் என்றாலே நினைவுக்கு வரும் கேமரா மேன் . நேற்று 84 ஆம் வயதில் மரணம் அடைந்த அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திக்கிறோம்.

இவர் என் தூரத்து உரவினர். விசு வின் அரட்டை அரங்கத்தில் என்னை படம் பிடித்தவர்.

சிவாஜியை பற்றி பேசும் போது பரவச பட்டார். அவரை மாதிரி யாருப்பா?எந்த கோணத்தில் படமெடுத்தாலும் ,அவரை மாதிரி முக அமைப்பு கெடாமல் எடுப்பான தோற்றம் யாருக்கு வரும்? அதே போல ,பின்னாட்களில் அவர் இடம் பெற்ற படங்களில் இடம் பெற்ற சிலரையும் குறிப்பிட்டு, சேப்பு தோல் மட்டும்தான். எங்கே கேமரா வச்சாலும் இடைஞ்சல்.ஒரே angle மட்டும்தான் வைக்க முடியும்.அங்கே ,இங்கே என்று பணியாற்றும் சுதந்திரமே இருக்காது.என்று.மனம் திறந்தார். ரொம்ப reserve ஆனவர்.பெரும்பாலும் பேசவே மாட்டார்.

சிவந்த மண்ணில் ,சில இடங்களில் இவர் ஜாக்கிரதையாக கையாண்டிருக்கலாமே என்று தோன்றும். (ஓடம் பொன்னோடம்,வெள்ளிய மேகம் ).அப்படியே ஷ்யாம் சுந்தரும் .

Gopal.s
13th December 2014, 04:39 AM
ராகவேந்தர்,

உங்கள் புதிய ஸ்டைல் அமர்க்களமாக தொடர்கிறது.திரிக்கு நன்கு விறுவிறுப்பான ஊசி ஏற்றி அமர்க்களம் செய்கிறீர்கள். நேற்றுத்தான் இந்த படத்தில் சில காட்சிகளை போட்டு மனைவியுடன் ரசிக்கும் போது ,ஒரு தரம் பாட்டில் காலை நிற்கும்,நடக்கும் இடை நிலையில் சில வினாடிகள் போஸ் பற்றி சிலாகித்து மகிழ்ந்தேன்.தொடருங்கள். அவ்வப்போது வந்து நானும் தொடுவேன்.

முரளி,

உங்கள் பயம் புரிகிறது. உங்கள் பெயரையே நீக்கி கொள்ளும் அளவு நீதிமானாக நீங்கள் விளங்குவது ,எங்களை மயிர் கூச்செறிய வைக்கிறது. அப்படியா,தாங்கள் அதிகம் எடிட் பண்ணி கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற போவது என் பதிவுகளாலா ?

RAGHAVENDRA
13th December 2014, 08:05 AM
Sivaji Ganesan - Definition of Style 6

நன்றி கோபால், தாங்கள் குறிப்பிட்ட அந்த எதிர்பாராத உடல் மொழி வெளிப்பாடு இத்தொடரில் அடிக்கடி இடம் பெறும். சரியான நேரத்தில் தாங்களும் அதனைக் குறிப்பிட்டுள்ளீர்கள். தொடர்ந்து தங்கள் பங்களிப்பை எதிர்பார்க்கிறேன்.

நடிகர் திலகத்தின் ஸ்டைல் .. அதாவது பாணி என்பது யாராலும் பின்பற்ற முடியாது என்பதை மீண்டும் நிரூபிக்கும் மற்றோர் காட்சி.

ஞான ஒளி...

என்னென்று சொல்வது.. நடிப்பின் இலக்கணம் எனச் சொல்லலாம்.. மிகை நடிப்பு கத்தல் என்றெல்லாம் பிதற்றும் கும்பலுக்கு சமட்டியடி கொடுக்கும் திரைப்படம் ... இல்லை இல்லை.. காவியம்..

தன்னைக் கைது செய்யத் துடிக்கும் இன்ஸ்பெக்டர் லாரன்ஸின் மகன் ஜார்ஜைத் தன் மகள் வழி பேத்தி காலிக்கிறாள் என்பதை அறிந்து கொள்ளும் கட்டம்.
சர்ச்சில் ஊழியருக்கு ஆலோசனை கூறிக் கொண்டே நடக்கும் காட்சியிலேயே துவங்கி விடுகிறது அவரது ஆளுமை. தன் பேத்தியைப் பார்த்ததும் ஒரு விநாடி அந்த ஆலோசனையை நிறுத்துவதும், பிறகு அவளோடு பேசுவதற்காக அந்த ஊழியரை அனுப்பும் பாங்கும்... சொல்லவொணா மேதைமையை விளக்குகின்றன. எந்த வார்த்தையில் நிறுத்தினாரோ அதே வார்த்தையை மீண்டும் தொடர்ந்து அந்த ஆலோசனையை முடிக்கும் கடமை உணர்ச்சி...பேத்தியிடம் பேசுவதற்காக அருகில் அமரும் உத்தி, மெல்ல பேசத்தொடங்குபவர், யாரோ ஒருவர் பின்னால் வருவதை அறிந்தவுடன் சட்டென்று பேச்சின் ஒலியளவைக் குறைத்து கம்மிப் பேசுகிறார். அவளுக்கு ஆலோசனை கூறி முடிந்ததும் அவள் சந்தோஷமாக எழுந்து செல்ல, புன்னகைத்த படியே அவளை நோக்கி அவள் செல்லும் பாதையிலேயே முகத்தைத் திருப்பி முகவாயக்கட்டையில் கைவைத்துப் பார்ப்பது.. நிச்சயம் யாராலும் எதிர்பார்த்திருக்க முடியாத அற்புதமான உடல்மொழி...

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/nt%20snaps/stylepose_zps466db0f6.jpg

இவையெல்லாம் அந்த நடிகனுக்குள் அந்த பாத்திரம் ஆட்கொண்டு அவர் மூலம் அந்த பாத்திரம் வெளிப்படும் பாணி... இது நடிகர் திலகத்தால் மட்டுமே சாத்தியம். அவர் செய்தால் மட்டுமே ரசிக்கக் கூடிய ஒன்று..

https://www.youtube.com/watch?v=6I-ECNaot8o

மேலே தரப்பட்டுள்ள காணொளியில் 43.40 லிருந்து பார்க்கவும்.

RAGHAVENDRA
13th December 2014, 08:17 AM
கோபால்
தங்களுடைய சுய விளக்கப் பதிவுகளுக்கு அவசியமே இல்லை. தங்களுடைய நடிகர் திலகம் பக்தியை யாராலும் சந்தேகப்பட முடியாது. இது குடத்திலிட்ட விளக்கல்ல குன்றத்திலிட்ட விளக்கம்.. கலங்கரை விளக்கம்..
எனவே அதைப் பற்றிக் கவலைப்படாமல் தொடருங்கள்.
ஆனால் மற்ற பதிவர்களைப் பற்றிய விமர்சனம் வேண்டவே வேண்டாம். ஒவ்வொருவருக்கும் தனித்தனி பாணி இருக்கும், ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான கருத்திருக்கும். இதனால் இதை மாற்றும் முயற்சியில் நாம் இறங்காமல் நம் பணியை மட்டும் செய்து வருவோம். நடிகர் திலகத்தின் நடிப்பைப் பற்றிய கருத்துக்களை இருகரம் நீட்டி வரவேற்போம். அவர் மறைந்து இவ்வளவு ஆண்டுகளாகியும் இன்னும் பல ஆண்டுகளானாலும் அவர் புகழ் வளருமே தவிர மங்காது.
நடிகர் திலகத்தைப் பாராட்டி எழுதும் ஒவ்வொரு பதிவருக்கும் வரவேற்பளிப்பதை என்னுடைய கடமையாகவே நான் கருதுகிறேன். தங்களையும் அதையே கடைப்பிடிக்க வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறேன்.
நடிகர் திலகத்தின் படங்கள் விமர்சனங்களுக்குள்ளாகலாம். ஆனால் அவருடைய நடிப்பு விமர்சனங்களுக்கப்பாற்பட்டது. யாராலும் ஈடு செய்ய முடியாது. எனவே நெகடிவ் விமர்சனங்களுக்கு சற்றும் இடம் கொடாமல் அவர் நடிப்பில் ஈடுபாடுடன் ஆய்வு செய்து எழுதும் நண்பர்களை ஊக்குவியுங்கள்.
இது என் தனிப்பட்ட வேண்டுகோள்

Gopal.s
13th December 2014, 09:37 AM
கோபால்
தங்களுடைய சுய விளக்கப் பதிவுகளுக்கு அவசியமே இல்லை. தங்களுடைய நடிகர் திலகம் பக்தியை யாராலும் சந்தேகப்பட முடியாது. இது குடத்திலிட்ட விளக்கல்ல குன்றத்திலிட்ட விளக்கம்.. கலங்கரை விளக்கம்..
எனவே அதைப் பற்றிக் கவலைப்படாமல் தொடருங்கள்.
ஆனால் மற்ற பதிவர்களைப் பற்றிய விமர்சனம் வேண்டவே வேண்டாம். ஒவ்வொருவருக்கும் தனித்தனி பாணி இருக்கும், ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான கருத்திருக்கும். இதனால் இதை மாற்றும் முயற்சியில் நாம் இறங்காமல் நம் பணியை மட்டும் செய்து வருவோம். நடிகர் திலகத்தின் நடிப்பைப் பற்றிய கருத்துக்களை இருகரம் நீட்டி வரவேற்போம். அவர் மறைந்து இவ்வளவு ஆண்டுகளாகியும் இன்னும் பல ஆண்டுகளானாலும் அவர் புகழ் வளருமே தவிர மங்காது.
நடிகர் திலகத்தைப் பாராட்டி எழுதும் ஒவ்வொரு பதிவருக்கும் வரவேற்பளிப்பதை என்னுடைய கடமையாகவே நான் கருதுகிறேன். தங்களையும் அதையே கடைப்பிடிக்க வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறேன்.
நடிகர் திலகத்தின் படங்கள் விமர்சனங்களுக்குள்ளாகலாம். ஆனால் அவருடைய நடிப்பு விமர்சனங்களுக்கப்பாற்பட்டது. யாராலும் ஈடு செய்ய முடியாது. எனவே நெகடிவ் விமர்சனங்களுக்கு சற்றும் இடம் கொடாமல் அவர் நடிப்பில் ஈடுபாடுடன் ஆய்வு செய்து எழுதும் நண்பர்களை ஊக்குவியுங்கள்.
இது என் தனிப்பட்ட வேண்டுகோள்

நீங்கள் சொல்வதும் சரிதான் ராகவேந்தர். யார் என்ன எழுதினாலும் வரவேற்க தக்கதே. நமது பிரத்யேக கருத்துக்களை சில நேரம் பொது நன்மை முன்னிட்டு நம்மோடு தேக்கி வைத்து விடலாம் என்பதே எனது எண்ணமும். இனி எந்த பதிவர்களின் எண்ணமும்,எழுத்தும் என்னால் கட்டு படுத்த படவோ,விமர்சிக்கவோ படாது என்ற உறுதியை வழங்குகிறேன்.

வாசு தேவன் (நெய்வேலி), சின்ன கண்ணன்,கிருஷ்ணா, ரவி(ஹைதராபாத்),ராகுல்,கண்பட் போன்றவர்களை இங்கு பங்களிக்க சகோதரன் என்ற உரிமையில் வேண்டுகிறேன். கார்த்திக் வர வேண்டிய நேரத்தில் அவசியம் வந்து விடுவார். நான் இனி ,என்னுடைய பிரத்யேக தளத்தில் கவனம் செலுத்துவேன்.

Gopal.s
13th December 2014, 10:03 AM
நடிகர்திலகத்தின் எதிர் பாரா ஆச்சர்ய அதிசய நடிப்பு முத்துக்கள்.

1)மூர்க்க தனமாக நம்பியாரிடம் ஆணைகள் பிறப்பித்து விட்டு, போக எத்தனிக்கும் போது ,நம்பியார் நாங்களென்ன முட்டாளா என்று கேட்கும் போது ,திரும்பி முகத்தை சிறிதே அருகில் கொண்டு சென்று அவர் சொல்லும் "ஆமாம்".(உத்தம புத்திரன்.)

2)தெய்வ மகனில், பெரிய சண்டையாளி போல பாவித்து வில்லன்களுடன் சண்டையிடும் சிவாஜி (விஜய் ),பின் மண்டையில் தாக்கி விடும்,நம்பியாருடன் ஹெட் லியாடா அடிச்சே என்று பொம்மை போல கேட்டு ,மரம் போல சாயும் அழகு.

3)ஞான ஒளியில் ,மகள் வந்த சந்தோஷத்தில் ,கிடைத்ததையெல்லாம் ப்ரிட்ஜிலிருந்து அள்ளியெடுத்து,இரு கைகையும் நிரப்பி, பிரிட்ஜை காலால் சார்த்தும் gesture .அதே ஞான ஒளியில் ,முணு முணுத்து திட்டி கொண்டே வரும் போது ,எதிரில் வருபவரை பார்த்து சலாம் அடிக்கும் பாங்கு.

4)புதிய பறவையில், இறுதி காட்சியில் , சரோஜாதேவி(லதா) மோசம் செய்ததை குறித்து வினவி கொண்டே ,ஆதரவாக அவர் கழுத்தையும் தடவி,நேசம் உணர்த்தும் பாங்கு.(அதே நேரத்தில் நெரிக்கும் கோபம் கட்டு படுத்த பட்டு தடவலாக மாறுவதான பிரமை)

5)மஞ்சுளாவை தட்ட கூடாத இடத்தில் தட்டி வம்பு பண்ண ,அப்பா மனோகர் ,பிறவா ஏண்டா உனக்கிந்த வெறி என்று கேட்கும் போது ,கட்டிலில் தாவி,தலையணை எடுத்து, இதெல்லாம் உனக்கு தெரியாது,இது ஒரு ஜாலி என்று சொல்லும் எங்கள் தங்க ராஜா.

6)பாடலில் எதிர்பாராமல் ,ஒரு தரம் ,சுமதி என் என் சுந்தரியில் , ஆறு நோக்கிய உல்லாச கல்லெறிதல்.(போலிங் ஆக்க்ஷன் ).

RAGHAVENDRA
13th December 2014, 08:41 PM
நடிகர் திலகத்தின் மலையாளப்படங்களில் ஒன்றான தச்சோளி அம்பு திரைப்படத்தை இதுவரை பார்க்காதவர்களுக்காக..

https://www.youtube.com/watch?v=exWkUFe6--0

RAGHAVENDRA
13th December 2014, 08:59 PM
Sivaji Ganesan - Definition of Style 7

எதிர்பாராத வகை நடிப்பை வழங்குவதில் நடிகர் திலகத்தை மிஞ்ச யாராலும் முடியாது. ஒரு காட்சியில் அவருடைய உடல் மொழி இப்படித்தான் இருக்கும் என்று கணிக்க யாராலும் முடியாது. இதற்கு இன்னொரு உதாரணம், ஜெனரல் சக்கரவர்த்தி திரைப்படத்தில் இடம் பெற்ற நீ என்ன கண்ணனா பாடல் காட்சி.

எந்தெந்த சூழ்நிலைக்கு எப்படிப்பட்ட உடல் மொழி தரவேண்டும் என்கின்ற இலக்கணத்தை வகுத்த நடிப்புத் தொல்காப்பியர் நடிகர் திலகம். இந்த பாடல் காட்சியில் ஒரு ராணுவ அதிகாரியின் குடும்ப சூழ்நிலை சித்தரிக்கப்படுகிறது. தன் மகள், தான் காதலித்து குழந்தை பெற்றதையும் அதைத் தன்னிடமிருந்து தன் மனைவி மறைப்பதையும் தெரிந்து கொண்ட அவர் அந்த உண்மையை வரவழைக்கப் போடும் திட்டமே இப்பாடல் காட்சியின் அடிப்படை. கவியரசரின் அற்புதமான சிலேடை வரிகளில் இந்த சாராம்சம் மிகச் சிறப்பாக எடுத்துரைக்கப்பட்டுள்ளது. ஈடு இணையற்ற மெல்லிசை மன்னர் இப்பாடலில் சிறப்பம்சமாக மிருதங்கத்தை பயன் படுத்தியிருப்பது அந்தத் தாயாரின் இருதலைக் கொள்ளி எறும்பு நிலையை சிம்பாலிக்காக எடுத்துரைக்கிறது. இவர்கள் இருவரும் இணைந்து தன்னிடம் மறைக்கும் உண்மையை அவர்கள் மூலமாகவே வெளிக்கொணரும் ராணுவ அதிகாரியின் மன நிலை மிக மிக அற்புதமாக நடிகர் திலகத்தின் உன்னத நடிப்பில் உடல் மொழியில் சித்தரிக்கப்பட்டிருக்கிறது.

சாதாரணமாக இந்த மாதிரியான பாடலைக் கேட்டவுடன் நடிகர் திலகம் இப்படித்தான் நடித்திருப்பார் என எதிர்பார்த்து வரும் பார்வையாளன் நிச்சயம் ஏமாந்து போவான். பல இடங்களில் கைகளுக்கு வேலை தராமல், அதே சமயம் அந்தக் கைகள் பயன்படுத்தப்படும் போது அதில் ஏராளமான உள்ளர்த்தங்களைப் பொதிய வைத்து, தன் நடையிலும் அந்த பாத்திரத்தின் மனோ நிலையை பிரதிபலித்து .. கண்களில் ஒரே சமயம் தந்திரமும் கோபமும் ஒரு சேர வெளிப்படும் வகையில் இப்பாத்திரத்தை மிக மிகச் சிறப்பாக பார்வையாளரின் நெஞ்சில் சித்தரித்திருக்கும் பாணி..

இப்பாட்டில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய நம் நெஞ்சில் சட்டென்று உடனே தொற்றிக் கொள்ளும் அவர் கர மொழி..

குயில் இட்ட முட்டையென்று காக்கைக்குத் தெரியும். . அது கூவும் போதும் பாடும் போதும் யாருக்கும் புரியும் ..

இந்த வரிகளின் போது தன் விரல்களை அபிநயம் புரிந்து கைகளை மேல் நோக்கிக் காட்டும் போது..

மெய்சிலிர்க்கிறது..

இறைவா.. எங்களை சிவாஜி ரசிகராகப் படைத்ததற்காகவே உன்னைக் கும்பிடலாம்...

"Style.. you are defined... as...Sivaji Ganesan"

https://www.youtube.com/watch?v=RvzIQsSnb-c

eehaiupehazij
13th December 2014, 09:03 PM
முகமூடி/முகத்திரை: உள்ளே சிரிப்பவர் வெளியே அழுவது போல் அகத்தே அழுபவர் புறத்தே சிரிப்பது போல் !

வாழ்க்கையில் எல்லோருமே ஏதோவொரு தருணத்தில் இந்த வகை முகமூடியை /முகத்திரையை போட வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாவது இயல்பே இங்கே நடிகர்திலகம் சிபிஐ ராஜனாக தீயவர் முகத்திரை கிழிப்பதை காண்போமே !

Watch from 2:15 to 2:20 interesting and entertaining sequence with slim NT in his elegant JB/Dean Martin's Silencers get up!
(with Nagesh in his Jerry Lewis get up!!)

https://www.youtube.com/watch?v=IdNB2uvVMU8

https://www.youtube.com/watch?v=AgUzhulHAvk
*courtesy : Vasudevan’s YouTube upload)

sivaa
14th December 2014, 06:31 AM
விரைவில் !!!!

மையத்தில் இன்று வரை வந்த நடிகர் திலகத்தின் திரைப்பட வரிசை மற்றும் ஆவணங்கள் தொகுத்து சுமார் 260உக்கும் மேற்பட்ட திரைப்பட ரிலீஸ், 50, நூறு, வெள்ளிவிழா விளம்பரங்கள் மற்றும் நடிகர் திலகத்தை பற்றிய தகவல்கள், பத்திரிகையில் வந்த பேட்டிகள் இன்னும் பல விஷயங்கள் ஒரு cd அல்லது dvd வடிவில் நம்முடைய ரசிகர்களுக்கு, இந்த அறிய ஆவணங்களை பத்திரபடுத்தி வைக்க நினைக்கும் இளைய தலைமுறையினருக்கு மையம் திரியில் நடிகர் திலகம் அவர்கள் திரியில் பதிவுகளை படிக்க வரும் அனைவருக்கும் புத்தாண்டில் நடிகர் திலகத்தின் புகழ் பரப்பும் ஒரு அரிய செயலாக "இலவசமாக" கொடுக்க நான் தீர்மானம் செய்துள்ளேன்.

இது தவிர என்னிடம் உள்ள நான் தனிப்பட்ட முறையில் சேகரித்துள்ள சுமார் 1000 துக்கும் அதிகமான அரிய புகைப்படங்கள் நடிகர் திலகம் அவர்களின் திரைப்பட காட்சிகள், personal போட்டோ ஆகியவையும் cd மற்றும் dvd வடிவில் நமது ரசிகர் மற்றும் அதனை பொக்கிஷமாக வைத்துகொள்ள விரும்புவோர் இளைய ரசிகர்கள் இவர்களுக்காக வழங்கவுள்ளேன்.

கூடிய விரைவில் அதற்க்கான மின் அஞ்சல் இதே மையம் திரியில் பதிவிடுகிறேன். அந்த மின் அஞ்சல் முகவரிக்கு, உங்களுடைய பெயர், விலாசம், கைபேசி எண் ஆகியவை எழுதி அனுப்பினால். Courier இல் அந்த cd அல்லது dvd அனுப்பிவைக்கப்படும்.

இந்த ஆவணங்கள் பெரும்பான்மையானவை திருச்சி, திண்டுக்கல், மதுரை, நாகை , கோவை மாவட்ட நடிகர் திலகம் ரசிகர் மன்றத்தை சேர்ந்த நண்பர்கள் முக்கால்வாசி பேர் நடிகர் திலகம் புகழ் பரப்பவேண்டும், இக்கால இளைஞர்கள் இளைய தலைமுறையினர் நடிகர் திலகம் சாதனைகள் பற்றி அறியவேண்டும் என்ற உயர்ந்த நோக்கில் எந்த பிரதிபலனும் எதிர்பாராமல் இலவசமாக கொடுத்து உதவி, அது நமது மையம் திரியில் பதிவேற்றப்பட்டவையாகும் !

ஆகையால் இதற்க்கு கட்டணம் எதுவும் கிடையாது...!

rks

நண்பர் ரவிகிரண் சூரியா
தங்களின் முயற்ச்சியை வரவேற்கின்றேன்
கூடிய விரைவில் இதனை செய்யுங்கள்
உங்கள் முயற்ச்சிக்கு எனது ஆதரவு
நிச்சயம் உண்டு

sivaa
14th December 2014, 07:02 AM
சிவாஜி ஒரு கோயில் திருவிழா புகைப்படங்கள்

http://i1369.photobucket.com/albums/ag235/sundarajan/DSC00085_zpsfaa07690.jpg

எவரும் எட்டாத அதிசியம் சிவாஜி புகழ் காப்போம்.

நண்பர் சுந்தரராஜன் நடிகர் திலகத்தின்
மறுவெளியீட்டு பட விபரங்களை
மெயின் திரியில் பதிவிடுவதோடல்லாமல்
மறுவெளியீட்டிலும் மன்னரின் சாதனை
திரியிலும் பதிவிடுங்கள்

தாங்கள் மெயின் திரியில் பதிவிட்டவை
தங்கள் சார்பாக
மறுவெளியீட்டிலும் மன்னரின் சாதனை
திரியில; பதிவிடுகின்றேன்
இனிவரும் நாட்களில்
மறுவெளியீட்டு பதிவுகளை
மறுவெளியீட்டிலும் மன்னரின் சாதனை
திரியிலும் பதிவிடுங்கள்

KCSHEKAR
14th December 2014, 11:08 AM
செலுலாய்ட் சோழன் – 50 !
பத்திரிகையாளர் சுதாங்கன்
(From His FaceBook Post)
1959ம் வருடம் வெளிவந்த படம் `பாகப்பிரிவினை’! அடுத்து 1960ம் வருடம் சிவாஜியின் இரண்டு `பா’ வரிசை படங்கள்!
இந்த `பா’ பட்ங்களைத்தவிர கிருஷ்ணன் பஞ்சு இயக்கத்தில் கே.எஸ். கோபாலகிருஷ்ணன் கதை வசனம் எழுதிய ` தெய்வப் பிறவி’ கருணாநிதி கதை வசனம் எழுதிய ` குறவஞ்சி’ ` ஜெமினியின் ` இரும்புத் திரை’ ஸ்ரீதரின் ` விடிவெள்ளி’ `எல்லாம் உனக்காக’ படங்கள் வந்தது!
இந்த் வருடம் வந்த இரண்டு ` பா’ படங்களில் குறிப்பிடத் தக்கது ! ` படிக்காத மேதை’ `பாவை விளக்கு!
`இதில் `படிக்காத மேதை’ பீம்சிங்! `பாவை விளக்கு’ அகிலனின் நாவல்!
`படிக்காத மேதை’ இந்த படத்தைப் பற்றி சொல்ல வேண்டியதில்லை! ஒன்று தெரியாத அப்பாவி! தன்னை வளர்த்தவர்களின் விசுவாசியாக ரங்கன் கதா பாத்திரம் சிவாஜி கணேசனுக்கு!
இந்த ப்`’ வரிசைப் படங்களைப் பற்றி சிவாஜி அழகாக சொல்வார்!
`பா’ வரிசை படங்கள் வருமென்று பீம்சிங் அவர்களுக்கே தெரியாது. `பா’ என்று முதல் எழுத்தில் ஒரு படம் எடுத்து , அது நன்றாக ஒடியவுடன், செண்டிமெண்டாக `பா’ என்றே படத்தின் முதல் எழுத்தை வைக்கலாம் என்று அவருக்குத் தோன்றியிருக்க வேண்டும். `பா’ வரிசையில் வந்த படங்கள் நன்றாகவே ஒடியது. நான், இயக்குனர் பீம்சிங், கவிஞர் கண்ணதாசன், இசையமைப்பாளர் விஸ்வநாதன் ராமமூர்த்தி ஆகியோரின் கூட்டு முயற்சியால் உருவானவை இந்தப் படங்கள்.
அந்த நாட்களிலிருந்து மிகச் சிறந்த நடிக, நடிகையர்களை, தொழில்நுட்ப கலைஞர்களை வைத்து எல்லோருமாக உழைத்து, இந்த மண்ணின் மகத்துவங்களை, குடும்ப உறவுகளின் மேன்மைகளையும், சிறுமைகளையும் காட்டி நல்ல படங்களாக கொடுத்தோம்.
நாங்கள் நடிக்கும்போது எங்கள் முழு கவனமும் தொழிலின் மேல்தான் இருக்கும். எங்களுக்கு டீம் ஒர்க் முக்கியம.
கதாநாயகன் நன்றாக இருக்கிறானா ? அல்லது கதாநாயகி அழகாக இருக்கிறாளா ? இயக்குனர் நன்றாக இயக்கக் கூடியவரா ? என்கிற சிந்தனைகள் யாருக்கு இருக்காது. ஒரு படம் என்பது எல்லோரும் சேர்ந்து உருவாக்குவது. ஒரு டீமினுடைய வேலைதான் அந்தப் படம். எல்லோரும் சேர்ந்து கைதட்டினால்தானே நன்றாக இருக்கும். அதுபோல்தான் நாங்களும் ஒத்துழைத்து வெற்றிகரமான படங்களைத் தர முடிந்தது.

`பாகப்பிரிவினை’ படத்தில் கை, கால் ஊனமுற்ற ஒரு பட்டிகாட்டான் வேஷம். சரோஜாதேசி, நடிகவேள் எம்.ஆர்.ராதா, பாலையா, சுப்பையா, எம்.என் நம்பியார் என்னோரு நடித்தார்கள். ஊனமுற்றவர்கள் தன்னம்பிக்கையோடு வாழ்ந்தால் எதையும் சாதிக்க முடியும் என்கிற கருத்தையும், `ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு’ என்று உயர்ந்த கருத்தையும் விளக்கிய படம் இது!
அடுத்தது ` பாவமன்னிப்பு’ படத்தில் ஜாதி, மத ஒற்றுமைப் பற்றி பேசினோம். இந்து, கிறித்துவர், இஸ்லாம் என்ற பாகுபாடு இன்றி நாமெல்லாம் சதோதரர்களாக வாழ வேண்டும் என்பதை, கதை மூலமும், என் கதா பாத்திரம் மூலமாக மக்களுக்கு எடுத்துச் சொன்னார்கள்.
இந்தக் கால கட்டத்தில் இயக்குனர், கதாசிரியர், இசையமைப்பாளர்,, முக்கிய நடிகர்கள் எல்லோரு சேர்ந்து உட்கார்ந்து, கதையமைப்பு, கதாபாத்திரங்கள், பாட்டுக்கள் பற்றிப் பேசி, முடிவு செய்வோம்,மக்கள் எதை விரும்புகிறார்களோ அதைப் படத்தில் எப்படி சொல்லலாம் என்பதைப் பற்றி கலந்து பேசுவோம். அதனால் தான் அந்த படங்கள் அப்படி ஒடியது’ என்கிறார் சிவாஜி கணேசன்.
சிவாஜி சொன்னது உண்மைதான்.! `படிக்காத மேதை’ வங்காளத்தில் ஆஷா பூர்ணாதேவி என்பவர் எழுதிய கதை!
அதற்கு வசனம் எழுதியவர் கே.எஸ். கோபாலகிருஷ்ணன்! திரைக்கதை இயக்கம் ஏ. பீம்சிங்!
படத்திற்கு இசை கே.வி. மகாதேவன்! படத்தில் நடித்த அனைத்து நடிகர்களுமே போட்டி போட்டுக் கொண்டு நடித்திருப்பார்கள்!
எஸ்.வி.ரங்காராவ் – கண்ணாம்பா இருவருமே ஆந்திரம் தமிழ் திரையலகிற்கு அளித்த அரிய பொக்கிஷ சீதனங்கள்!
சீர்காழி குரலில் ஒலித்த அந்த அசரீரி பாட்டு `எங்கிருந்தோ வந்தான் ரங்கன்’ பாட்டில் படுக்கையில் படுத்துக் கொண்டே தான் வளர்த்த பிள்ளை பிரிந்து துக்கத்தை ரங்காராவ் வெளிப்படுத்திய விதம், இதயத்தில் மென்மை கொண்ட அனைவரையும் அழ வைக்கும்!

சிவாஜி சொல்கிற அந்த `டீம் ஒர்க்’கின் வெளிப்பாடு என்பது `பாவை விளக்கு’ படத்தின் ஆரம்பத்திலேயே காட்டியிருப்பார்கள்!
எழுத்தாளர் அகிலனின் மிகப் பிரபலமான நாவல் ` பாவை விளக்கு’
திரைக்கதை வசனம் எழுதியவர் ஏ.பி.நாகராஜன்.
படத்திற்கு இசை. கே.வி. மகாதேவன்!
இந்த படத்தின் முதல் காட்சி சிவாஜி கணேசனின் சொந்த வீடான அன்னை இல்லத்திலிருந்து துவங்கும்!
அவர் வீட்டிற்கு முன்னாலிருக்கும் தோட்டத்தில் தரை விரிப்பு போட்டு, அதில் சிவாஜி, வி.கே.ஆர். பாலாஜி, அசோகன், பிரேம் நசீர் எல்லோரும் அமர்ந்திருப்பார்கள்!
பிரேம் நசீர் அப்போது இங்கே கொஞ்சமாகவும், கேரளத்தில் கொடி கட்டியும் பறந்து கொண்டிருந்த நடிகர்! பிரேம் நசீர் சிவாஜியை பார்த்து கேட்பார், ` என்ன சிவாஜி, எங்க எல்லோரையும் எதுக்கு உங்க வீட்டிற்கு கூப்பிட்டிங்க ?’ `இன்னிக்கு ஞாயிற்றுக் கிழமை வேலை இருக்காது! அதனால் உங்க எல்லோருக்கும் அகிலனுடைய ` பாவை விளக்கு’ நாவலை படிச்சுக் காட்டலாம்னு கூப்பிட்டேன்’ என்பார் சிவாஜி! அங்கே அவருடனிருந்தவர்கள், எல்லோருமே அந்த படத்தில் நடித்த கதா பாத்திரங்கள்! சிவாஜி அகிலனின் ` பாவை விளக்கு நாவலை சிவாஜி படிக்க ஆரம்பித்து, சில பக்கங்கள் படித்தவுடன் படம் துவங்கும்!
` பாவை விளக்கு’ படத்தின் அனைத்து பாடல்களையும் எழுதியவர் மருதகாசி! `டீம் ஒர்க்’ என்பதை இந்த படத்தின் ஆரம்பத்தில் சிவாஜி மூலமாக காட்டியிருப்பார்கள். ஆனால் `பாவை விளக்கு படத்தை இயக்கியது ஏ. பீம்சிங் அல்ல! இயக்குனர் கே. சோமு!
இந்த படத்தை விட இந்தப் பாடல்கள் அத்தனையும் கே.வி. மகாதேவன் இசையில் அற்புதமாக வந்து, அன்றை இலங்கை வானொலியினாலேயே இந்த படம் மிகப் பிரபலமானது! இந்தப் படத்தின் கதாநாயகன் ஒரு மிகப் பெரிய எழுத்தாளன் தணிகாசலம்! குமாரி கமலாவுக்காக பி.சுசீலா பாடிய பாடல் அந்த நாளில் ஒரு காதல் தூது பாட்டாகவே அமைந்தது!
`நான் உன்னை நினைக்காத நேரமுண்டோ !
படத்தில் அமைந்த இன்னொரு தாலாட்டு! `நீ சிரித்தால் நான் சிரிப்பேன் சிங்காரக் கண்ணே! நீ அழுதால் நான் அழுவேன் மங்காத பொன்னே!
ஆனால் படத்தில் மிகப் பிரபலமான பாடல் ` காவியமா? நெஞ்சின் ஒவியமா?’ குற்றாலத்தின் அழகை வர்ணித்த ` ஆயிரம் கண் போதாது வண்ணக்கிளியே! குற்றால அழகை நான் காண்பதற்கு வண்ணக்கிளியே! மருதகாசியில் தமிழ் விளையாடியிருக்கும்!
அடுத்த ஆண்டு வந்த பீம்சிங் `பா’ வரிசை படம் இன்று வரையில் தமிழ் சினிமாவின் ஒரு சாதனைக் கல்
அந்தப் படம் ?
(தொடரும்)
http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/10492209_10205064379666428_387009341423514117_n_zp s3ec15554.jpg (http://s1234.photobucket.com/user/sivajiperavai/media/10492209_10205064379666428_387009341423514117_n_zp s3ec15554.jpg.html)

RAGHAVENDRA
14th December 2014, 03:41 PM
Sivaji Ganesan - Definition of Style 8

Surprise package என்று ஆங்கிலத்தில் ஒரு Phrase உண்டு. அது நடிகர் திலகத்தின் நடிப்பிற்கென்றே உருவாக்கப்பட்ட சொற்றொடரோ என ஒரு எண்ணம் எழும். அந்த அளவிற்கு நம்மை வியப்பில் ஆழ்த்தும் உடல் மொழி அவர் நடிப்பில் அவ்வப்போது தென்படும்.

இன்னொரு பரிமாணம், பாடல் காட்சிகளில் அவருடைய உடல்மொழி. நம்மையும் அறியாமல் நாமும் அவருடைய அங்க அசைவிற்கேற்ப ஆட முற்படுவோம். அதில் நாம் ஒன்றி விடுவதோடு மட்டுமின்றி அவர் நமக்குள்ளே ஊறி விட்ட படியால் நமக்கும் அந்த உடல் மொழி சில சமயம் தொற்றிக் கொண்டு விடும். ரசிப்பதற்கென்றே இறைவன் படைத்த அற்புதப் படைப்பு நடிகர் திலகம். அதுவும் தாளம் போட வைக்கும் இசை, அர்த்தமுள்ள வரிகள், சொக்க வைக்கும் குரல், மயக்கும் பின்னணி இசை, இவையோடு சக நடிகர்களின் ஒத்துழைப்போடு ஒரு பாடல் காட்சி அமைந்தால் அது காலங்களைக் கடந்து நிற்கும்.

அதற்கு ஓர் உதாரணம் இந்த பாடல் காட்சி.

விஸ்வரூபம் படத்தில் மெல்லிசை மன்னரின் இசையில் எஸ்.பி.பாலாவின் குரலில் வாலியின் வரிகளில் சிறந்த நடன அமைப்பில் இப்பாடல் ஒரு முறை பார்த்தால் நெஞ்சில் என்றுமே நிரந்தரமாக நிழலாடும்.

இப்பாடல் காட்சியில் நளினம் என்பதற்கான இலக்கணத்தை நடிகர் திலகம் வகுத்திருக்கிறார். ஒரு கட்டத்தில் சொடுக்குப் போட்டவாறே கைகளை மேலே உயர்த்தும் பாணி, பாடலின் தாளத்திற்கேற்ற உடல் மொழி, அதிகம் உடலை வருத்தாமல் மிக மென்மையான நடன அசைவுகள், எப்போது எனத் தெரியாத வகையில் ஸ்ரீதேவியின் கைகளைப் பிடித்து நடன அசைவுகளை இருவரும் வெளிப்படுத்தும் பாங்கு என ஒவ்வொரு ஃப்ரேமிலும் நடிகர் திலகத்தின் தனித்துவமான ஸ்டைல் இப்பாட்டில் கொடி கட்டிப் பறக்கும்.

திரையரங்கமாக இருந்தால் கரவொலி விண்ணை முட்டும்.

Hats off to the choreographer for the super synchronisation of the dance movements with the tune of the song delivered out of the world by NT and ably supported by Sridevi, who deserves equal credit for the stylish and smooth body language.


http://www.dailymotion.com/video/xllyf0_valka-korupudhu-raagam-viswaroopam_fun

eehaiupehazij
14th December 2014, 06:51 PM
Rajkapoor, had been the greatest friend of our NT and one of the 'greatest 'showmen' on the earth' in the Indian Panorama, who had a lot of fanfare in Russia too after his films like Aawaara, Shree420, Sangam and Mera Naam Joker! NT had a great admiration for his father Prithviraj Kapoor!

Today is the 90th birthday of Rajkapoor! Our respectful reminiscence on his movie clips!!

https://www.youtube.com/watch?v=0kY0ffAaCk8

https://www.youtube.com/watch?v=P8gI9hBaJKE

https://www.youtube.com/watch?v=y01uvU0UAoU

JamesFague
14th December 2014, 09:34 PM
Another pleasant evening by watching NT's underrated gem Ellam Unakkaga at Russian Centre. Oh what a movie. It is the first time I am watching

this movie inspite of having a DVD. Most of the fans of NT must see the movie which contains all ingredients of a good cinema. A decent crowd at

the venue and everyone went home happily of watching a good movie.


Regards

Murali Srinivas
15th December 2014, 12:50 AM
முதல் நன்றி ராகவேந்தர் சாருக்கு சொல்ல வேண்டும். அவர்தான் பல நாட்கள் இந்தப் படத்தை பற்றி சொல்லி கொண்டேயிருந்தார். பல முறை நமது NT FAnS அமைப்பால் நடத்தப்படும் மாதந்திர திரையிடலில் இந்தப் படத்தை உட்படுத்த வேண்டும் என்று சொல்லிக் கொண்டேயிருந்தார். இன்றுதான் அதற்கு வேளை வந்தது.

அருமையான படம். ஆற்றொழுக்கு போன்ற கதை திரைக்கதை அமைப்பு. எத்துனை இயல்பான வசனங்கள்! மட்டுமா, 53 வருடங்களுக்கு பிறகு இன்றைய சூழலில் கூட வெகு இலகுவாக பொருந்தும் அற்புதம்! Hats Off to KSG!

நகைச்சுவை கலந்த வில்லத்தனத்தில் பாலையா தூள் கிளப்ப, பாசமுள்ள தந்தையாக அதே நேரத்தில் சிறிது வில்லத்தனம் கலந்த வேடத்தை ரங்காராவ் அழகாக கையாள, அதிகமில்லாவிட்டாலும் கிடைக்கும் ஒரு இரண்டு மூன்று காட்சிகளில் ஸ்கோர் செய்யும் நடிகையர் திலகம் இவர்களுக்கெல்லாம் தன் விழியாலேயே ஈடு கொடுத்து முகபாவத்திலே முந்தி செல்லும் நமது நடிகர் திலகம்!

அந்தக் கால படங்களிருந்து வேறுபட்டு மிக குறைந்த அளவிலேயே பாடல்கள்! ஊரில் புயல் வெள்ளம் வரும்போது மக்கள் பாதிக்கப்படுவதை வெகு இயல்பாக எடுத்திருப்பது! நகராட்சிகளிலே நடைபெறும் ஊழல், சிபாரிசு, வேண்டியவர்களுக்கு contract, ஏழை மக்கள் வியாபாரம் செய்யும் இடத்தை கவுன்சிலர்கள் வளைத்துப் போடுவது என்று படம் நெடுக சுவாரஸ்யத்திற்கு குறைவில்லை.

இந்தப் படத்தைப் பற்றிக் குறிப்பிடும்போது பாச மலர் வெளிவந்த 5 வாரத்துக்குள்ளாகவே இந்தப் படம் வெளியானதால் இதில் நடிகர் திலகமும் நடிகையர் திலகமும் ஜோடியாக நடித்ததனால்தான் மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை என்று ஒரு காரணம் சொல்லப்பட்டு வந்தது. நானும் அப்படியே நினைத்திருந்தேன். ஆனால் இன்று படம் பார்க்கும்போது அப்படி நினைத்தவர்கள் தவறு செய்து விட்டார்கள் என்றே தோன்றுகிறது. இதில் இருவரும் கணவன் மனைவிதான். ஆனால் எந்தக் காட்சியிலும் ஒரு காதல் காட்சிக்குரிய நெருக்கமோ இல்லாத படம். எனக்கு தோன்றுவது என்னவென்றால் எப்போதும் போல் சீரிய இடைவெளி இல்லாமல் வெளியான பல நடிகர் திலகத்தின் படங்களே ஒன்றுக்கு ஒன்று போட்டியாக அமைந்து வெற்றியோட்டதை சுருக்கி விட்டது என்றே தோன்றுகிறது. 1961-ம் ஆண்டில் வெளியான பாவ மன்னிப்பு, புனர் ஜென்மம், பாச மலர் ஆகியவை ஓடிக் கொண்டிருக்கும்போதே 1961 ஜூலை 1-ந் தேதி வெளியான இந்தப் படம் அதே நாளில் வெளியான நடிகர் திலகத்தின் மற்றொரு படமான ஸ்ரீவள்ளியையும் எதிர்கொள்ள வேண்டி வந்தது, அதன் பிறகு இந்தப் படம் ஓடிக் கொண்டிருக்கும்போதே 50 நாட்கள் இடைவெளியில் வெளியான மருத நாட்டு வீரன் அதற்கு அடுத்த 14 நாட்களில் வெளியான பாலும் பழமும் ஆகியவற்றையும் எதிர்கொள்ள வேண்டி வந்ததால்தான் வெற்றி ஓட்டம் தடைப்பட்டிருக்க வேண்டும் என்றே தோன்றுகிறது. இந்த படம் முதல் வெளியீட்டில் அதிகபட்சமாக ஓடிய நாட்களை மதுரையில் பதிவு செய்தது ஒரு சின்ன ஆறுதல்.

நேரம் கிடைக்கும்போது படத்தைப் பற்றி விரிவாக அலசலாம்! சில நேரங்களில் dvd -யின் quality சற்றே குறைந்ததை தள்ளி வைத்துப் பார்த்தால் மிக நிறைவான ஒரு மாலை! படம் முழுக்க பார்க்க முடியாது, ஒரு அவசர வேலை இருக்கிறது அதனால் ஒரு மணி நேரம் மட்டுமே இருக்க இயலும் என்று சொன்ன நமது அருமை நண்பர் சாரதி அவர்கள் படம் முழுக்க இருந்து பார்த்துவிட்டுதான் கிளம்பி போனார் என்ற உண்மையை இங்கே பதிவு செய்யும்போதே படம் எந்தளவிற்கு ஆட்களை கவர்ந்து இழுத்தது என்பது புரிந்து விடும்!

இந்த நல்ல படத்தை என் எதிர்பார்ப்பிற்கும் மேலாக ஏராளமான மக்கள் வந்திருந்து படம் முழுக்க இருந்து விட்டு பாராட்டி சென்றதற்கு உளமார்ந்த முதல் நன்றி என்றால் இந்தப் படத்தை வலுவாக பரிந்துரை செய்த ராகவேந்தர் சாருக்கு உளமார்ந்த இரண்டாம் நன்றி!

எல்லாம் உனக்காக! நடிகர் திலகமே இந்த புகழுரைகள் எல்லாம் உனக்காக!

அன்புடன்

sivaa
15th December 2014, 07:22 AM
இலங்கை சாதனைகள்

2 தியேட்டர்களில் 100 நாட்களுக்குமேல்
ஓடிய வசூல் சக்கரவர்த்தியின் படங்களின்
சாதனை பட்டியல்

சவாலே சமாளி.................கொழும்பு..............சென்ட் ரல்....100..நாட்கள்
சவாலே சமாளி.................யாழ்நகர்...............ராணி. ............100..நாட்கள்

..............
பட்டிக்காடா பட்டணமா?..கொழும்பு.............சென்ட்ரல்.....115.. நாட்கள்
பட்டிக்காடா பட்டணமா?..யாழ்நகர்...............ராணி............. 102..நாட்கள்

..............
பாபு.......................................கொழும்ப ு.............ஸெயின்ஸ்தான்..112..நாட்கள்
பாபு.......................................யாழ்நகர ்...............ராஜா.....................105..நாட் கள்

..............
வசந்த மாளிகை..............கொழும்பு...............கெப்பிட ்டல்...........250..நாட்கள்
வசந்த மாளிகை..............யாழ்நகர்.................வெலிங ்டன்............208..நாட்கள்

..................
எங்கள் தங்க ராஜா........கொழும்பு...............சென்ட்ரல்...... .......100..நாட்கள்
எங்கள் தங்க ராஜா........யாழ்நகர்.................ராஜா......... ............126..நாட்கள்


.......................
தங்கப் பதக்கம்................கொழும்பு..............சென்ட ்ரல்..............121..நாட்கள
;தங்கப் பதக்கம்................யாழ்நகர்.............ஸ்ரீதர ்.........................114..நாட்கள்


......................
உத்தமன்...........................கொழும்பு........ ...................சென்ட்ரல்...203..நாட்கள்
உத்தமன்...........................யாழ்நகர்;;...... .......................ராணி..........179..நாட்கள்
உத்தமன்...........................மட்டுநகர்....... .....................விஜயா.......101..நாட்கள்

...............
பைலட் பிரேம்நாத்.................கொழும்பு..............க ெப்பிட்டல்.....186..நாட்கள்
பைலட் பிரேம்நாத்.................கொழும்பு..............ச வோய்.........106..நாட்கள்
பைலட் பிரேம்நாத்.........................யாழ்நகர்....... .....வின்சர்.......222..நாட்கள்

.............
தீபம்..............கொழும்பு..செல்லமஹால்...145...நா ட்கள்
தீபம்........யாழ்நகர்...........ஸ்ரீதர்...114...நா ட்கள்

.........
அந்தமான் காதலி....கொழும்பு..சமந்தா..101..நாட்கள்
அந்தமான் காதலி....யாழ்நகர்...மனோகரா..105..நாட்கள்

.........
ஜெனரல் சக்கரவர்த்தி.....கொழும்பு..கிங்ஸ்லி....104..நாட்கள ்
ஜெனரல் சக்கரவர்த்தி....யாழ்நகர்..ராஜா..121..நாட்கள்

........................................
பட்டாக்கத்தி பைரவன்...கொழும்பு...ஜெஸிமா....105.நாட்கள்
பட்டாக்கத்தி பைரவன்..யாழ்நகர்..ஸ்ரீதர்..100...நாட்கள்


.................................................. ............
இவை தவிர திரிசூலம் 2 தியேட்டர்களில்
வெள்ளிவிழா ஓடியதாக தகவல் உண்டு

திரிசூலம் ஓடியபொழுது நான் நாட்டில் இருக்கவில்லை
அத்துடன் அதன் விபரம் தெரியாததனால் அதனை குறிப்பிடமுடியவில்லை

பொய் குரல்போல் 5 தியேட்டர்களில் 100 நாட்கள்
6 தியேட்டர்களில் 100 நாட்கள் என்று எனக்கு பொய் ஒலிக்கத் தெரியாது

2 தியேட்டர்களில் 100 நாட்களை தாண்டி ஓடிய பத்துக்கு மேற்பட்ட
படங்களை கொடுத்த ஒரே சாதனை சக்கரவர்த்தி
கொடை சக்கரவர்த்தி வசூல் சக்கரவர்த்தி
அண்ணன் நடிகர் திலகம் சிவாஜி கணேசன்
ஒருவர் மட்டுமே
வேறு எந்த நடிகருக்கும் 10 படங்கள் எட்டவே இல்லை

sivaa
15th December 2014, 08:18 AM
ஏக காலத்தில் ஓடி சாதனை படைத்த வசூல் சக்கரவர்த்தியின்
சாதனை பட்டியல்

பாரீர் பாரீர் பாரீர்

26.10. 1972 பட்டிக்காடா பட்டணமா?..கொழும்பு.............சென்ட்ரல்..... 115.. நாட்கள்
பட்டிக்காடா பட்டணமா?..யாழ்நகர்...............ராணி........ ..... 102..நாட்கள்

..........
3.11.1972..குலமா குணமா?..கொழும்பு..கெப்பிட்டல்...67..நாட்கள்
குலமா குணமா?..யாழ்நகர்..வெலிங்டன்..60..நாட்கள்

..............
16.12.1972..பாபு.................................. .....கொழும்பு.............ஸெயின்ஸ்தான்..112..நாட்க ள்
பாபு.......................................யாழ்நகர ்...............ராஜா.....................105. .நாட் கள்

...........................
11.01.1973வசந்த மாளிகை...கொழும்பு...கெப்பிட்டல்....250..நாட்க ள்
வசந்த மாளிகை....யாழ்நகர்....வெலிங்டன்....208..நாட்க ள்

.......................
பட்டிக்காடா பட்டணமா? திரையிட்ட ஒன்பதாம் நாள் குலமா குணமா?
திரையிடப்பட்டது

பட்டிக்காடா பட்டணமா 52ம் நாள் காட்சியளித்துக்கொண்டிருக்க
குலமா முணமா? 44ம் நாள் காட்ச்சியளித்துக்கொண்டிருக்க
16.12.1972 பாபு திரையிடப்படுகிறது

அடுத்து பட்டிக்காடா பட்டணமா? 78ம் நாள்
பாப 27ம் நாள் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும்பொழுது
குலமா குணமா ஓடிக்கொண்டிருந்த அதே திரைகளில்
11.01.1973 அன்று வசந்த மாளிகை
திரையிடப்படுகிறது


ஒரே நேரத்தில் திரையிடப்பட்டாலும்
அனைத்துமே சாதனை செய்தன


இப்படி ஒரு சாதனை நிலை நாட்ட
வசூல் சக்கரவர்த்தி சிவாஜிகணேசனை தவிர
வேறு எந்த நடிகனாலும் முடியாது

sivaa
15th December 2014, 09:28 AM
ஏக காலத்தில் ஓடி சாதனை படைத்த வசூல் சக்கரவர்த்தியின்
சாதனை பட்டியல்

பாரீர் பாரீர் பாரீர்

5.03.1970..ஹரிச்சந்திரா...கொழும்பு...ஸெயின்ஸ்தான். .67..நாட்கள்
................ஹரிச்சந்திரா...யாழ்நகர்.......ராஜா .................67..நாட்கள்
.......
7..04 ..1970..திருடன்...கொழும்பு..சென்ட்ரல்...98..நாட்கள ்
...........................திருடன்...யாழ்நகர்..ராண ி..........45..நாட்கள்
.....
8.04..1970..தங்கச்சுரங்கம்...கொழும்பு...செல்லமஹால் ...51..நாட்கள்
.................தங்கச்சுரங்கம்..யாழ்நகர்......வின ்சர்..............51..நாட்கள்
..........................
ஹரிச்சந்திரா திரையிடப்பட்ட 34ம்நாள் திருடன் திரையிடப்படுகிறது

மறுநாள் தங்கச்சுரங்கம் திரையிடப்படுகிறது

எனினும் 3படங்களுமே 50 நாட்களை கடந்து சாதனையை நிலை நாட்டின

வேறு எந்த நடிகரது படங்களாலும் நினைத்துப்பார்க்க முடியாத சாதனைகளை ஏற்படுத்தியவர்
வசூல் சக்கரவர்த்தி சிவாஜி கணேசன் ஒருவர் மட்டுமே

sss
15th December 2014, 02:24 PM
அன்புள்ள முரளி மற்றும் நண்பர்களே

நானும் நேற்று தான் முதன் முறையாக எல்லாம் உனக்காக திரைக்காவியத்தை கண்டு களித்தேன்.
நன்றி ராகவேந்தர் சார்...

http://www.thehindu.com/multimedia/dynamic/01997/13cp_Ellam_Unakkag_1997287e.jpg


வேறு ஒரு சந்தர்ப்பத்தில் வெளி வந்திருந்தால் நல்ல வெற்றியை பெற்றிருக்கும் படம் தான் ....

இந்த படத்தை பார்க்காமலே (!!!!) அல்லது மறதியில் ராண்டார் கை விமர்சித்து உள்ளார்... சிவாஜியும் பாலையாவும் இருவரும் நண்பர்களாம்.. ( படத்தில் இவர்கள் இருவரும் மகன் அப்பா மேலும் வெங்கடாசலம் கதாபாத்திரம் ரங்கா ராவ் செய்திருப்பார் அவரின் மகள் தான் சாவித்திரி..) இப்படி சொதப்பலான விமர்சனம்...
http://www.thehindu.com/features/cinema/ellaam-unakkaaga-1961/article6203949.ece

இந்த படத்தின் சிறப்பு அம்சம்... என் பார்வையில் :

நடிகர் திலகம் அடக்கமாக underplay செய்து புதுமையான நடிப்பை வெளிகாட்டி உள்ளார்
கொஞ்சம் mature குணாதிசியம் கொண்டதாக காட்சிகள் அமைக்க பட்டு உள்ளன.
முதல் இரவில் சாவித்திரி திரையால் காட்டும் பட காட்சியில் முக பாவம்...அருமை..

தன் அப்பாவை நகரசபை காண்ட்ராக்ட் விசயத்தில் கடிந்து கொள்வது , அம்மாவின் பேராசையை அடக்குவது, ரங்கா ராவின் அதிகாரத்தை , சூழ்ச்சியை அறிந்த பின் ( தன்னுடைய மாமனாரை ) " என்னையா " என்று சொல்லும் பாங்கு, தன்னுடைய குழந்தை ஊனமானதா என சோதனை செய்த காட்சியில் உணர்ச்சி வெள்ளம் போல் நடிப்பை காட்டியது...

நடிகர் திலகம் கடை பிடித்த அரசியல் நேர்மை க்கு ஏற்ப , மக்கள் பணிக்கு முன்னால் குடும்பம் பெரிதல்ல என்பது போலே காட்சி அமைப்பு உண்மையில் நடிகர் திலகம் அரசியலில் இப்படி தான் இருந்திருப்பார் என நினைக்க தோன்றியது..

அரசியல் வசனங்கள் , ஊழல், நகராட்சி சேர்மன் , கவுன்சிலர் பிரச்னை, பதுக்கல் , என இன்றைய பிரச்சனைகள் அனைத்தும் உள் வாங்கிய சம்பவங்கள்... வசனம்.. அருமை.

இது போலே அரசியல் படங்கள் , கதைகளில் தொடர்ந்து நடித்திருந்தால் நடிகர் திலகம் வேறு ஒரு புதிய வடிவ அரசியல் சாத்தியபட்டிருக்கும் என நினைக்கிறேன்...

சாவித்திரியை அதிகம் தொட்டுப் பேசி நடிக்கவில்லை ஒரே ஒரு டூயட் ( மலரும் கொடியும் பெண் என்பார் - அருமையான் பாடல்),

இரண்டு வருட ஒப்பந்த திருமணம் பற்றி சரியாக சொல்லப்படவில்லை... நிறைய பேருக்கு புரிந்திருக்காது.
நடிகர் திலகத்தின் முறை பெண் ( கே.வீ. சாந்தி ???) ஒருமுறை சொல்லும் போது தனக்கும் அத்தானுக்கும் திருமணம் நடக்க இன்னும் சில தினம் தான் உள்ளது என ஒரு நோட்டை வைத்து சொல்லும் காட்சியில் தான், ஓஹோ ஒரு மறைமுக ஒப்பந்தம் உள்ளதோ என தெரிகிறது... ஆனால் அதுவும் பிடிபட வில்லை..

நிச்சயமாக பாசமலர் இந்த படத்துக்கு ஒரு தடை அல்ல...

முரளி சார் உங்கள் விரிவான விமர்சனத்தை எதிர் பார்க்கிறேன்..


நன்றி

eehaiupehazij
15th December 2014, 03:00 PM
நடிகர்திலகத்தின் நடன நகர்வாற்றல் நளினம் குறுந்தொடர்

Theme : NT's Energy Emission in Song Sequences!

Sivaji Ganesan's Dynamics / Statics / Mechanics / Histrionics of 'dancing to the tune' , 'Lipping to the tone' and 'ribbing or tickling the funny bone'in song sequences :


ஆற்றல் (Energy) என்பது அளவிட முடியாமல் போவது அணுவைப் (atomic) பிளக்கும்போதோ (Fission) அல்லது அணுக்களைக் கோர்க்கும்போதோ (Fusion) ......மேகக்கூட்டங்கள் நகர்ந்து மோதும்போதும் (Thunderball), எரிமலை (volcanic eruption) வெடித்துச் சிதறும்போதும், தென்றல் புயலாக மாறும்போதும் (Twister / Cyclone), நிலத்தடி பாறைப் பரப்புகள் நகர்ந்து இடித்துக் கொள்ளும் போதும் (Continental/Tectonic Plate Collisions) ஆற்றல் இடியுடன் (Thunderbolt) கூடிய மின்னலாகவோ (lightning), தீப்பிழம்புக் குழம்பாகவோ (molten Magma), புயல் மழையாகவோ (incessant torrential rain), ஊழிப் பேரலைகளாகவோ (Tsunaami) உருமாற்றம் கண்டு உறுமுகிறது.... குமுறுகிறது! அவ்வண்ணமே தில்லையம்பல நடராஜரின் தாண்டவங்களும் ஆற்றலின் ஒருவகை வெளிப்பாடே! ஆட்டுக்குட்டி தாயின் வயிற்றிலிருந்து பிரிந்து விழுந்து புரண்டு எழுந்து போடும் ஆட்டமும் ஆற்றலே !

சாது மிரண்டால் ....காடு கொள்ளுமா!....எலி புலியானால் .....வீடு (வளையில்) தங்குமா!! பூனை யானை யானால் நாடு தாங்குமா!!! இதுவே நம்முள் பொதிந்திருக்கும் வாழ்வாதார ஆற்றல் வெளிப்பாட்டின் தத்துவம்!!!!ஆடல்பாடல் காட்சிகளில் நடிகர்திலகம் வெளிப்படுத்தும் நடன நகர்வு / அமர்வு / உறைவு ஆற்றலே இத்தொடரின் மையக் கருத்து !

ஆற்றல் பகிர்வு தரவரிசை 1 : 0.5 HP ( குதிரைச்சக்தி Horse Power)

பொதுவாகவே நாம் ஆற்றலை குதிரைச்சக்தி அளவீட்டிலேயே சொல்லப் பழகி விட்டோம்! மனித ஆற்றல் குதிரையின் ஆற்றல் வெளிப்பாட்டில் பத்தில் ஒரு பங்கே !
நடிகர்திலகத்தின் நடன நகர்வாற்றலோ சராசரி மனிதனைவிட மும்மடங்கு என்று தைரியமாக உரைக்கலாம்!

Concept 1 Dynamics / நகர்வாற்றல்

இளம்புயலின் ஆற்றலுடன் அவர் நுழைந்து நடிப்புத் தாண்டவமாடிய பராசக்தியில் தாண்டவக்கோனாக அவர் போட்ட ஆட்டங்களின் ஆற்றல் வெளிப்பாடு இன்று வரை தரவரிசையில் எண் ஒன்றே.....குதம்பாய்! ! காசை சுண்டிவிட்டு பேண்ட்டை மடித்துவிட்டு தொப்பியை மாட்டிக்கொண்டு கைகளை மேல்நோக்கி கோர்த்துக்கொண்டு கால்களை சேர்த்துக்கொண்டு பார்த்துக் கொண்டிருப்பவர் வேர்த்து விறுவிறுக்க என்னேவொரு அமர்க்களமாக ஆரம்பிக்கிறார் அதகள கிறுக்காட்டத்தை !

https://www.youtube.com/watch?v=eCVQAzG8_14
நீதியுரை : ஆரியக் கூத்தாடினாலும் தாண்டவக்கோனே....காசு காரியத்தில் கண் வையடா தாண்டவக்கோனே !! உள்ளே பகை வையடா தாண்டவக்கோனே அதற்கு உதட்டில் உறவாடடா தாண்டவக்கோனே ! ஆற்றல் மிக்க ஒளிரும் வைர வரிகள்!!(Udumalai Narayana Kavi?)


Concept 2 Statics / அமர்வாற்றல்

ஆடாமலே அமர்ந்து கொண்டு பாடலின் வாயசைப்பு நேர்த்தியிலும் முகத்தின் தசைகளின் நடன பாவனை சிற்றசைவுகளிலும் அவர் காட்டும் அமர்வு ஆற்றல் நளினம் நம்மை எழுந்து நடனமாட தூண்டுகிறதே! என்ன விந்தை மனிதரய்யா மந்தையான திரைச்சந்தையில் நம் சிந்தை நிறைந்திட்ட நடிப்புத்தந்தை !! 1/4HP

https://www.youtube.com/watch?v=H2kPbPF7dIE

Concept 3 Mechanics / உறைவாற்றல்

நாம் ரசிக்கும் கோமான் நடிகர்திலகம் ஆற்றலிழந்து அவஸ்தையுடன் அமர்ந்திருக்கும் போது நடனத்தாரகை குமரி கமலாவின் அதீத நடன ஆற்றல் வெளிப்பாடு கண்களுக்கு கவர்ச்சி விருந்தே! 0.1 HP!

https://www.youtube.com/watch?v=3w4MAmf7Pog

Concept 4 Histrionics உடல்மொழியாற்றல்

இளமனதை தூண்டிவிட்டுப் போறவரின் ஸ்டைலான காதல் கிறங்கல் !
பைஜாமா ஜிப்பாவில் காதல் மன்னராக புதுபெண்ணின் மனதை தொட்டு விடும் ஆற்றலோ !

https://www.youtube.com/watch?v=PGBryGdL0FQThe End of Part 1. But, NT rolls, jumps, somersaults and bounces back in Part 2 for his incomparable emission of radient energy in song sequences of THOOKKU THOOKKI! Get ready to give a standing and dancing ovation to the histrionics of one and only NT!

Russellisf
15th December 2014, 10:16 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/b_zpsd8126677.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/b_zpsd8126677.jpg.html)

Russellisf
15th December 2014, 10:18 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/b_zpsff4a5f73.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/b_zpsff4a5f73.jpg.html)

Russellisf
15th December 2014, 11:12 PM
Murali sir what's ur opinion about this posting?
செந்தில்,நானும் அதையே சொல்ல நினைத்தேன். சுவையான விருந்தை சாப்பிடும் போது ஒரு கல் அக படும் உணர்வு ஏற்பாடுகிறது. நீங்கள் நடிகர்திலகம் பதிவுடன் பிற நடிகர்களை இணைத்து பதிவிடும் போது .சமீப காலத்தில், மனதுக்கு பிடித்ததை ,இசைந்ததை இந்த திரியில் பதிவிடுவதை விடுத்து,புகழ்ச்சிக்கு மயங்குதல், வேண்டாத விஷயங்களில் நட்பு என்ற பசப்புரையில் இணைதல் என்ற போக்கு தென் பட ஆரம்பித்துள்ளது.

Murali Srinivas
16th December 2014, 12:13 AM
இளைய சகோதரர் யுகேஷ் அவர்களே,

நண்பர் சிவாஜி செந்தில் பதிவிடும் வீடியோக்களில் நடிகர் திலகம் படங்களை தவிர்த்து வேறு படங்களை பதிவிட வேண்டாம் என எழுதும் நேரத்தில் கோபால் யாரையும் பெயர் குறிப்பிடாமல் சொன்ன ஒரு உதாரணத்தை நீங்களாகவே ஏதோ கற்பனை செய்துக் கொண்டு குற்றம் சாட்டினால் என்ன சொல்வது?

நான் மேலே குறிப்பிட்டிருப்பது போல் கேட்பது உங்கள் நண்பர்களின் பாணி. ஆனால் நடிகர் திலகம் திரியில் நாங்கள் அப்படி சொல்ல மாட்டோம். நீங்கள் குறிப்பிட்டிருக்கும் வார்த்தை உங்கள் மனதை காயப்படுத்துகிறது என நீங்கள் சொல்வதனால் அந்த வார்த்தையை நீக்கி விட்டேன். கோபால் பதிவிலிருந்தும் சரி, உங்கள் பதிவிலிருந்தும் சரி.

உங்களிடம் ஒரே ஒரு கேள்வி. யாரையும் பெயர் குறிப்பிடாமல் சொன்ன ஒரு வார்த்தைக்கே நீங்கள் உங்கள் அபிமானத்துகுரியவரைத்தான் என நினைத்து மனம் புண்பட்டு என்னை கேள்வி கேட்கிறீர்களே? நேற்று மாலை எம்ஜிஆர் திரியில் நடிகர் திலகத்தை பற்றி மோசமான அடைமொழி கொடுத்து எழுதிவிட்டு சால்ஜாப்பாக இதை கருணாநிதி சொன்னார் என்று உங்கள் நண்பர் எழுதி அற்ப சந்தோஷம் அடைகிறாரே [இது அவர் எழுதுவது இரண்டாவது முறை] அதை கூடாது என்று அவரிடம் சொல்லும் நேர்மை உங்களிடம் இருக்கிறதா யுகேஷ்? இல்லை கோபால் என்ன எழுதினாலும் உடனே எதிர்வினையாக தானே கேள்வி தானே பதில் என்று செயல்படும் வினோத் அவர்களுக்கும் சேர்த்துத்தான் இந்த கேள்வி.

எங்களாலும் உங்கள் அபிமானத்துகுரியவரைப் பற்றி மோசமாக எழுதிவிட்டு கருணாநிதிதான் இப்படி சொன்னார் இல்லை x , y , z சொன்னார் என்று எழுத முடியும் சகோதரரே. ஆனால் நாங்கள் அப்படி செய்ய மாட்டோம்.

உங்கள் சுட்டிக் காட்டுதலுக்கு நன்றி. இதே நேர்மையை எம்ஜிஆர் திரியிலும் காட்டுவீர்கள் என்ற நம்பிக்கையில்

அன்புடன்

Russellisf
16th December 2014, 12:18 AM
Thanks murali sir for your quick response sirஇளைய சகோதரர் யுகேஷ் அவர்களே,

நண்பர் சிவாஜி செந்தில் பதிவிடும் வீடியோக்களில் நடிகர் திலகம் படங்களை தவிர்த்து வேறு படங்களை பதிவிட வேண்டாம் என எழுதும் நேரத்தில் கோபால் யாரையும் பெயர் குறிப்பிடாமல் சொன்ன ஒரு உதாரணத்தை நீங்களாகவே ஏதோ கற்பனை செய்துக் கொண்டு குற்றம் சாட்டினால் என்ன சொல்வது?

நான் மேலே குறிப்பிட்டிருப்பது போல் கேட்பது உங்கள் நண்பர்களின் பாணி. ஆனால் நடிகர் திலகம் திரியில் நாங்கள் அப்படி சொல்ல மாட்டோம். நீங்கள் குறிப்பிட்டிருக்கும் வார்த்தை உங்கள் மனதை காயப்படுத்துகிறது என நீங்கள் சொல்வதனால் அந்த வார்த்தையை நீக்கி விட்டேன். கோபால் பதிவிலிருந்தும் சரி, உங்கள் பதிவிலிருந்தும் சரி.

உங்களிடம் ஒரே ஒரு கேள்வி. யாரையும் பெயர் குறிப்பிடாமல் சொன்ன ஒரு வார்த்தைக்கே நீங்கள் உங்கள் அபிமானத்துகுரியவரைத்தான் என நினைத்து மனம் புண்பட்டு என்னை கேள்வி கேட்கிறீர்களே? நேற்று மாலை எம்ஜிஆர் திரியில் நடிகர் திலகத்தை பற்றி மோசமான அடைமொழி கொடுத்து எழுதிவிட்டு சால்ஜாப்பாக இதை கருணாநிதி சொன்னார் என்று உங்கள் நண்பர் எழுதி அற்ப சந்தோஷம் அடைகிறாரே [இது அவர் எழுதுவது இரண்டாவது முறை] அதை கூடாது என்று அவரிடம் சொல்லும் நேர்மை உங்களிடம் இருக்கிறதா யுகேஷ்? இல்லை கோபால் என்ன எழுதினாலும் உடனே எதிர்வினையாக தானே கேள்வி தானே பதில் என்று செயல்படும் வினோத் அவர்களுக்கும் சேர்த்துத்தான் இந்த கேள்வி.

எங்களாலும் உங்கள் அபிமானத்துகுரியவரைப் பற்றி மோசமாக எழுதிவிட்டு கருணாநிதிதான் இப்படி சொன்னார் இல்லை x , y , z சொன்னார் என்று எழுத முடியும் சகோதரரே. ஆனால் நாங்கள் அப்படி செய்ய மாட்டோம்.

உங்கள் சுட்டிக் காட்டுதலுக்கு நன்றி. இதே நேர்மையை எம்ஜிஆர் திரியிலும் காட்டுவீர்கள் என்ற நம்பிக்கையில்

அன்புடன்

eehaiupehazij
16th December 2014, 03:50 AM
நடிகர்திலகத்தின் நடன நகர்வாற்றல் நளினம் குறுந்தொடர் PART 2

Theme : NT's Energy Emission in Song Sequences!

Sivaji Ganesan's Dynamics / Statics / Mechanics / Histrionics of 'dancing to the tune' , 'Lipping to the tone' and 'ribbing or tickling the funny bone'in song sequences :

ஆடல்பாடல் காட்சிகளில் நடிகர்திலகம் வெளிப்படுத்தும் நடன நகர்வு / அமர்வு / உறைவு ஆற்றலே இத்தொடரின் மையக் கருத்து !

ஆற்றல் பகிர்வு தரவரிசை 2 :

3.5 HP ( குதிரைச்சக்தி Horse Power)
((ஒரு குதிரைச் சக்தி என்பது 75 கிலோ எடையை ஒரு குதிரை ஒரு வினாடியில் ஒரு மீட்டர் தூரம் இழுத்துச் சென்றிட தேவைப்படும் ஆற்றலின் அளவே!))

தூக்கு தூக்கி திரைப்படத்தில் சௌந்தரராஜன் குரல் அப்படியே சிவாஜி குரலாக மாறி அவரது நடன நகர்வுகளின் நளினத்தை தூக்கோதூக்கென்று தூக்கி வைத்தமைக்கு மனதை விட்டு இன்றளவும் அகலாத காட்சிகளே சாட்சி


Concept 1 Dynamics / நகர்வாற்றல் 1HP

படத்தின் உச்சகட்ட காட்சியில் ஆசிரியர் மகன் சட்டாம்பிள்ளை கதாநாயகியர் பத்மினி ராகினியை தனது வலையில் வீழ்த்திட எத்தனிப்பதை அந்த ஆசிரியருக்கு நாசூக்காக ஆடல்பாடல் வழி நடிகர்திலகம் இயம்பும் விதத்தில் அவரது நடன நகர்வாற்றல் எவ்வளவு அருமையாக பாடல்வரிகளுடன் இசையுடன் பொருந்தி நம்மையும் எழுந்து ஆடிடத் தூண்டுவதைக் காண்போமே !

https://www.youtube.com/watch?v=YZx23lhMrF0
https://www.youtube.com/watch?v=0B2wSmSp_Oc

Concept 2 Statics / அமர்வாற்றல் 0.5 HP

கண்வழி புகுந்து கருத்தினில் கலந்திட்ட மனைவியுடன் அவளது ரகசிய நம்பிக்கை துரோகம் புரியாது எதார்த்தமாக பாடி மகிழும் காட்சியில் நடிகர்திலகத்தின்அமைதியான அமர்வாற்றலைக் கண்ணுருவோமே 1/10 HP only!

https://www.youtube.com/watch?v=PefB_A5c6xc


Concept 3 Mechanics / உறைவாற்றல் 0.5 HP

மனைவியின் கொலையும் செய்வாள் பத்தினி என்னும் தத்துவ வாக்கினை உணர்ந்து மனம் மருகி தடுமாறி பேதலித்தாலும் அதைக் கட்டுக்குள் கொண்டுவந்து உறைய வைத்து உள்ளே நிதானத்துடனும் வெளியே புத்தி பேதலித்த நடிப்புடனும் சொன்னதை சொல்லும் கிளிப்பிள்ளை போல திரும்பத் திரும்பப் பேசறே வடிவேலு பாணியை அன்றே முன்னோடியாக மெய்சிலிர்க்கும் வண்ணம் நடித்து அசத்தினார் நடிகமேதை! இந்த உரைவாற்றல் 1/4 HP!

https://www.youtube.com/watch?v=7H4eZNkCWe0

Concept 4 Histrionics உடல்மொழியாற்றல் 1.5 HP

மனைவியின் ரகசிய காதலனிடம் துணி விற்கும் வேலைக்குச் சேர்ந்து துணி ரகங்களை வகைப்படுத்தி விற்கும் பாடல் காட்சியில் நடிகர்திலகத்தின் சுறுசுறு உடல்மொழியுடன் கூடிய விறுவிறு ஆடல்பாடல் காட்சி நம்மைப் பரவசப்படுத்தவே !

https://www.youtube.com/watch?v=1S3JZU2tW7EEnd of Part 2. But NT returns to enthraal us with his dynamic song sequences to this theme from therukkooththu/drama based dance movements : Kalvanin Kaadhali Sadhaaram drama scene / Navaraththiri therukkooththu scene /.....

Gopal.s
16th December 2014, 05:33 AM
அன்பளிப்பு.- 1969.

வரும் புத்தாண்டில் 45 வருட முடிவை எய்த போகும் அன்பளிப்பு ,வந்த நாட்களில் ஒரு தீவிர சமுதாய பிரச்சினையை பொழுது போக்குடன் கலந்து பேசிய படம்.

முதல் பாராட்டு ஏ.சி.திருலோக சந்தர். இவர் ஒரு நவீன ராஜா கால பொழுது போக்கு (வீர திருமகன்), குடும்ப செண்டிமெண்ட் (நானும் ஒரு பெண்)Romantic musical (அன்பே வா),thriller (அதே கண்கள்) ,Anti -hero பொழுதுபோக்கு (தங்கை) என்று வித விதமாக variety கொடுத்து தன்னை சிறை படுத்தி கொள்ளாத executive வகை இயக்குனர்.(திரைக் கதை நுட்பங்களும் அறிந்த படிப்பாளி)இவர் கிராமிய மணத்துடன்,கிராமிய பிரச்சினை என்று சுருக்காமல் மனித இனத்துக்கே அச்சுறுத்தலாக சவால் விட்டு கொண்டிருக்கும் இன்றைய பிரச்சினையை அன்றே சொன்னார்.ஓரளவு nativity கொண்ட நல்ல பொழுது போக்கு படம்.

பசுமை விவசாயம், விவசாய விளை நிலங்கள் பிளாட்டுகளாக,தொழிற்சாலைகளாக(சில நேரம் ஆபத்தான ரசாயன-அணு நிலையங்களாகவும்) மாறி கிராமங்களையும் ,உணவு உற்பத்தியையும் சிதைக்கும் அபாய விளைவுகளை ,முக்கிய கருவாக கொண்ட படம்.

ஒரு பூர்ஷ்வா செல்வ நிலை கொண்ட ஒருவனும், அவன் குடும்பம் சார்ந்து நிற்கும் விவசாய சுயம் கொண்ட ஏழை தொழிலாளி ஒருவனும் சகோதரர் போல மன இணைப்பு கொண்டாலும், அந்த கிராமத்தை தொழில்-சார் நகர முகமாக மாற்ற நினைக்கும் படித்த பணக்காரனுக்கும்,விவசாயம் சார்ந்த மண் பற்று கொண்ட அடிப்படை ஏழை மனிதனுக்கும் நிகழும் போராட்ட நிலையில் தொடரும் பிரச்சினைகள்.இடை-நிலை சுயநலமிகளால் தீ மூட்ட பட்டு ,தீயுடனே முடியும் இறுதி காட்சி.

நடிகர்திலகம் இந்த படத்தில் அற்புதமான உடல் கட்டு (கிருஷ்ணாவின் சொற்களில் தேக்கு மர தேகம் ),திராவிட மன்மத எழில் தோற்றம்,இளமை சுடர் விடும் துறு துறுப்பு கொண்டு அவ்வளவு ,இவ்வளவு என்று சொல்ல முடியாத அளவு handsome உச்சத்தில் இருப்பார்.(அதுவும் தம்பியாக நடிக்கும் ,வயது மிக குறைந்த அன்றைய வளரும் இன்னொரு நடிகரின் அருகில் பாதி வயதாக தெரிவார்)

பிரச்சாரமாக தெரியாமல் தன் தொழில்-சார் மண் நேசத்தை இயல்பாக உணர்த்தும் ,பாத்திரத்தை ஒட்டிய நடிப்பு.ஒரு raw என்ற நிலையில் ஜாலி நடன காட்சிகள், எல்லை மீறா காதல் குறும்புகள்,மிதமான நட்பு-பாச வெளியீடுகள்,விறு விறுப்பான சிலம்ப சண்டை,என்று இயல்பான நகைசுவையும் தெளிப்பார். ரவி சந்திரனை இரண்டாவது நாயகனாக்கியிருக்கலாமோ என்ற ஏக்கம் எனக்கு இன்றும் உண்டு.

விஸ்வநாதன் இசையமைப்பில் தேரு வந்தது , வள்ளி மலை மான்குட்டி பாடல்கள் என்னை இன்று வரை மயக்கும் பாடல்கள்.அது தவிர வேஷ பொருத்தம்,கோபாலன் எங்கே உண்டோ,எனக்கு தெரியும் என்ற நல்ல பாடல்கள்.

படத்திற்கு திருஷ்டி சரோஜா தேவி. சோர்வு தெரியும்,தளர்ச்சி கொண்ட வயதான தோற்றத்தில் சிவாஜிக்கு அம்மா போல தோற்றமளிப்பார்.படத்தில் காதல் காட்சிகள் குட்டிசுவரானது இவரால்தான்.ஒட்டாமல் போகும். அதை விட கொடுமை விஜய நிர்மலா.கதாயகியர் இருவரும் கொடூரம்.(ஆனால் இதற்கு பின் வந்த அஞ்சல் பெட்டியில் சரோஜாதேவி ப்ரெஷ் ஆக இளமையாக இருந்தார்)

எல்லோருடைய நல்ல பங்களிப்பு ,அளவான நல்ல திரைகதை-வசனங்கள், உறுத்தாத இயக்கம், பொழுதுபோக்கு, தீவிர பிரச்சினையின் நுணுக்கமான கையாளல்,நடிகர்களின் நிறைவான பங்களிப்பு இருந்தும் ,எதிர்பார்த்த வெற்றி கோட்டை இந்த படம் தொடாதது இது வரை புதிராகவே உள்ளது.

நடிகர்திலகம் , ஒரு இயக்குனர் தயாரிப்பாளருக்கு பணிவது அவசியம் என்றாலும்,இந்தளவிர்க்கா ?என்று கேட்டிருந்தார். எம்.ஆர்.சந்தானம்-ஏ.சி.திருலோக் சந்தர் எங்கே குறி தவறினர்?

Gopal.s
16th December 2014, 05:40 AM
Thanks to Siva, Sivaji Senthil,Yukesh Babu, Ragavendhar for their interesting informative Contributions.Thread is moving with purposeful meaningful Direction.

Gopal.s
16th December 2014, 06:00 AM
நான் ஏற்கெனெவே குறிப்பிட்டது போல ஒரு கவனம் பெறாத அதிசய படம் எல்லாம் உனக்காக. தொழிலாளர் பிரச்சினை,உரத்த சமுதாய சிந்தனை, சீரழிவு, ஊனமுற்றோர் பிரச்சினை,குடும்ப செண்டிமெண்ட்,என்று எல்லாம் நிறைந்த அற்புத படைப்பு.

கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் வசனங்கள் அவ்வளவு அழகு,இயல்பு. துருத்தாத கதாபாத்திரங்கள். நடிகர்திலகத்தின் 50 களை ஒட்டிய இயல்பான method acting ,சாவித்திரி,ரங்கராவ் நல்ல பங்களிப்பு, மலரும் கொடியும் போல கே.வீ.எம் முத்திரை இருந்தும் ,பல நல்ல படங்களின் நடுவில் மாட்டி போதிய வெற்றி வாய்ப்பை இழந்த சுமார் வெற்றி படங்களில் ஒன்று.

அரைகுறை விமர்சகர்கள் சொல்வது போல சிவாஜி-சாவித்திரி அண்ணன்-தங்கை இமேஜ் இந்த படத்தின் வெற்றிக்கு குறுக்காக நிற்கவில்லை.பொது மக்கள், அவர் பின்னாட்களின் கதாயாகியர் ஜெயலலிதா,காஞ்சனா ஆகியோருக்கு 1966 இல் தந்தையாக நடித்தும்,இவர்களை வெற்றி ஜோடியாகவும் ஏற்றனர். சிவாஜி வேண்டாத இமேஜ் வட்டத்தில் சிக்கியதேயில்லை.

இந்த படம் வித்யாசமான format கொண்டது. எந்த பிரச்சினையையோ,பாத்திரத்தையோ மைய படுத்தாமல், பல் முனை பட்ட தளங்களில் புள்ளிகளில் விரியும். வேறு பட்ட மனநிலை மற்றும் விருப்பு-வெறுப்புகள் கொண்ட பாத்திரங்களை இணைக்கும்,பிணக்கும். இன்றைய படங்களின் போக்கு கொண்ட காலத்தினால் முந்திய படம். ஒரு முனை பட்ட பாத்திரங்களை கொண்டு ,நாயகனை மைய படுத்திய ஒரு முனை பிரச்சினையை எதிர் பார்த்து வந்த அந்த கால அடிப்படை ரசிகர்களுக்கு புதிராக தோன்றியிருக்கும்.(1961 இல்)

இது நாயகனின் கொள்கை சார்ந்தோ, தியாகம் -குடும்ப நிலை சார்ந்தோ, உறவு-கொள்கை போராட்டம் சார்ந்தோ,பாச போராட்டம் ,சந்தேகம் சார்ந்த மன முறிவுகள் சார்ந்தோ ,ஒரு தளத்தில் இயங்காது. இன்னும் சொல்ல போனால், வில்ல தனத்துடன் இயங்கும் தந்தையின் அபார தியாகத்துடன் முடியும். அவர் சார்ந்தே எல்லாம் உனக்காக என்ற பெயரும் பெறும் .

சொல்லுங்கள்,அந்த கால அப்பாவி ரசிகர்கள் இத்தனை சோதனை முயற்சிகளை புரிந்து, எப்படி படத்தில் ஒன்றியிருக்க முடியும்?

Subramaniam Ramajayam
16th December 2014, 06:51 AM
I fully agree with mr gopal's views about Ellam unankkaga review and movie has notbeen accepted nor perhaps the people that time not in a mood of accepting different formula tried here, according to the ladies meeting in our house when a film is seen, we were living in a house where 16 other tenents were living incidently the house no is also 16.

sivaa
16th December 2014, 07:13 AM
இந்திய அரசியல் வானில் அதிசயமான தலைவன்

https://fbcdn-sphotos-e-a.akamaihd.net/hphotos-ak-xpa1/v/t1.0-9/10178060_395902760566037_9182561339873237102_n.jpg ?oh=1c65931fc34d48917d118ee75f35a11c&oe=54FEE657&__gda__=1426597871_c78be1e3eb2236991cbc77767b5db96 0

காசு இல்லாமல் போன காமராஜர்
*************************************************
டெல்லியில் உலகக் கண்காட்சி நடந்த சமயம். அதன் துவக்க விழாவிற்கு நேருவுடன் காமராஜரும் சென்றிருந்தார். தற்போது பேருந்து நிலையங்களிலும், இரயில் நிலையங்களிலும் வெகு சாதாரணமாய் காணப்படுகிற எடை பார்க்கும் எந்திரம் அந்தக் கண்காட்சியில் அறிமுகமாகியிருந்தது.
நேரு எந்திரத்தில் ஏறி நின்று, காசு போட்டு எடை பார்த்தார். மத்திய அமைச்சர்கள் பலரும் அவ்வாறே செய்தனர். காமராஜர் சற்றே ஒதுங்கி நின்றிருந்தார். ...
நேரு அவரையும் எடை பார்க்கும்படி கட்டாயப்படுத்தினார். அவரோ மறுத்துவிட்டார். சுற்றி நின்றவர்களுக்கு திகைப்பு, `பிரதமர் கூறியும் இவர் மறுக்கிறாரே' என்று.
நேரு சொன்னார் `காமராஜர் ஏன் மறுக்கிறார் என்கிற காரணம் எனக்குத் தெரியும். இந்த எந்திரத்தில் ஏறிநின்று போடும் காசுகூட இவரிடம் இப்போது இருக்காது' என்றார். பிறகு காமராஜருக்காகத் தாமே காசு போட்டு எடை பார்த்தார். அவர். கறைபடாத கரம், காசுக்கு ஆசைப்படாத மனம்!https://fbcdn-sphotos-d-a.akamaihd.net/hphotos-ak-xap1/v/t1.0-9/s526x395/10403467_903950879624405_8449651304159271726_n.jpg ?oh=54bfb87bb95d345ade17b38a1ddec002&oe=550AB366&__gda__=1430174520_3530811cee9170c9137b46b806fdce6 a
(https://www.facebook.com/Maalaimalartamil/photos/a.423360101016821.97933.114297551923079/903950879624405/?type=1)

Gopal.s
16th December 2014, 08:49 AM
முரளி,எடிட் செய்தே உங்கள் கைகளை ஓய வைத்து விட்டேன்.நீங்கள் சொல்வது போல ,நீங்களே தவறு என்று நினைக்காத சரிகளை ,politically -correct என்ற ரீதியில் செய்கிறீர்கள் சரி. ஆனால் ,இந்த ஒழுங்கு முறை நம் திரிக்கு மட்டும்தானா என்ற ஆயாசமே எழுகிறது.ஆனால் டிசெம்பருக்கு பிறகு,தங்களுக்கு எந்த பணி சுமையும் என்னால் ஏற்படாது.தற்போது,மதுர கானத்தின் தொடர்பதிவுகளே, என் கடைசி மையம் பதிவுகளாக இருக்கும்.என் எழுத்தாள சகோதரி,என்னை பிற எழுத்துக்களை எழுத பணிக்கிறார். அவர் உச்சம் தொட்டு விருதுகளை குவித்து வரும் போது ,என் எண்ண அலைகளை நான் சுருக்கி கொண்டு,புரிதலின்மை என்ற கூட்டுக்குள் சுருங்குவது அவருக்கு உவப்பாக இல்லை.பலருக்கு ஆதர்ஷமாக இருந்த நான்,இவ்வாறு இருப்பதில் அவருக்கு உடன்பாடில்லை.(நான் வேடிக்கையாக,நான் தன்ராஜ் மாஸ்டர் மாதிரி இருந்திட்டு போறேன் என்பேன்)ஆனால் நடிகர்திலகம் ரசிகர்களே கூட என்னை புரிந்து கொண்டு,என் எழுத்துக்களை தொடர்ந்து,புரிதலை வளர்த்து கொள்ளாமல் போனது போன்ற வெறுமை உணர்வுதான் எனக்கு. இன்னும் அழகாக,ஆழமாக பல விஷயங்களை எழுத நினைத்திருந்தேன் .உங்களுக்கு மட்டுமல்ல ,மாற்றணி நண்பர்கள் கலை வேந்தன்,எஸ்வி,யுகேஷ் மற்றும் என்னிடம் அக்கறை செலுத்திய நண்பர்களுக்கு நன்றி. நடிகர்திலகம் திரியில் என் கடைசி பதிவே எல்லாம் உனக்காக என்று என் நடிப்பு தெய்வத்திற்கும்,அவர் ரசிகர்களுக்கும் சமர்ப்பணம் செய்தது போல முடிந்தது ,கவிதை துவமான முடிவே. என் பங்களிப்பு 21ஜூலை ,1 அக்டோபர் என்று தொடரும்.பார்வையாளனாக கண்டிப்பாக தொடருவேன்.

sivaa
16th December 2014, 10:26 AM
முரளி,ஆனால் நடிகர்திலகம் ரசிகர்களே கூட என்னை புரிந்து கொண்டு,என் எழுத்துக்களை தொடர்ந்து,புரிதலை வளர்த்து கொள்ளாமல் போனது போன்ற வெறுமை உணர்வுதான் எனக்கு. இன்னும் அழகாக,ஆழமாக பல விஷயங்களை எழுத நினைத்திருந்தேன் .


.

கோபால்
மற்றவர்கள் எப்படியோ என்னை பொறுத்தமட்டில் உங்கள எழுத்துக்களை மிகவும் ரசித்தேன்

என்ன ஒன்று அவற்றிற்கு எதிர்வினை ஆற்றத் தெரியவில்லை அல்லது முடியவில்லை என்றுதான் சொல்லவேண்டும்

இதுவரை வேறுவேறு பதிவுகளில்
நடிகர் திலகத்தை பற்றி அவரின் படங்களின் பங்களிப்புகள் பற்றி அணுஅணுவாக ரசித்து எழுதியிருக்கிறீர்கள்

அது தொடர வேண்டும் என்பது என் விருப்பம் மட்டுமல்ல ஏனைய நண்பர்களின் விருப்பமும் அதுவாகத்தான் இருக்கும் என்பது என்எண்ணம்

உங்கள் முடிவு உங்கள் கையில்
அதற்காக இத்திரியில் உங்கள் பங்களிப்பை நிறுத்தநினைப்பதை என்னால் ஏற்கமுடியவில்லை

தயவு செய்துஉங்கள் முடிவை மறுபரிசீலனை செய்யுங்கள் தொடர்ந்து இத்திரியில் வந்து எழுதுங்கள்.

நன்றி.

kalnayak
16th December 2014, 11:31 AM
கோபால்,
என்ன ஆயிற்று உங்களுக்கு? 'எல்லாம் உனக்காக' என்று சொல்லி முடித்துக்கொண்டிருக்கின்றீர்கள். 'இனிமேல் எதுவும் உனக்கில்லை' என்றும் சொல்லிவிட்டீர்கள். 'கடமையை செய், பலனை எதிர்பார்க்காதே' என்று நான் சொல்லி தெரிய வேண்டுமென்பதில்லை. சிந்திப்பீர்

Georgeqlj
16th December 2014, 01:39 PM
https://www.youtube.com/watch?v=rMPdZUqWC_0&feature=youtube_gdata_player

திருப்பூரில் 14.12.2014 அன்று நடைபெற்ற நடிகர்திலத்தின்
பிறந்தநாள் விழா தொகுப்பு

eehaiupehazij
16th December 2014, 03:22 PM
நடிகர்திலகத்தின் நடன நகர்வாற்றல் நளினம் குறுந்தொடர் PART 3

Theme : NT's Energy Emission in Song Sequences!

Sivaji Ganesan's Dynamics / Statics / Mechanics / Histrionics of 'dancing to the tune' , 'Lipping to the tone' and 'ribbing or tickling the funny bone'in song sequences :

ஆடல்பாடல் காட்சிகளில் நடிகர்திலகம் வெளிப்படுத்தும் நடன நகர்வு / அமர்வு / உறைவு ஆற்றலே இத்தொடரின் மையக் கருத்து !

ஆற்றல் பகிர்வு தரவரிசை 3 :
3.6 HP ( குதிரைச்சக்தி Horse Power)

Kalvanin Kaadhali Sadhaaram drama scene / Navaraththiri therukkooththu scene /.....

நடிகர்திலகம் என்றுமே தான் வந்தவழி மறந்திடாத பண்பாளர் தனது நடிப்புத்திறனுக்கு ஆக்கமும் ஊக்கமும் தந்திட்ட தெருக்கூத்துக்கலை மற்றும் நாடகமேடையை
அவர் என்றும் மறந்ததில்லை சினிமாவில் உச்சநட்சத்திரமாக கொடிகட்டிப் பறந்தபோதும் கட்டபொம்மன் வியட்னாம்வீடு தங்கப்பதக்கம் உள்ளிட்ட பல நாடகங்களை நடத்தி நடித்து தனது நன்றியறிதலை வெளிப்படுத்தினார் அந்தக்கால தெருக்கூத்து மற்றும் நாடகமேடை நடிப்பினை ஆடல்பாடலோடு கச்சிதமாக வெளிக்கொணர்வதில் அவருக்கு இணையாக யாருமே இல்லை

Concept 1 Dynamics / நகர்வாற்றல் 1 HP

படத்துக்குப் படம் நடிகர்திலகத்தின் ஆற்றல் நிறைந்த ஆடல்பாடல் திறமைகள் மெருகேறிக்கொண்டே வந்த காலகட்டம். கள்வனின் காதலி சதாரம் தெருக்கூத்து காட்சி அவரது மிகவேகமான நளினமான நடன நகர்வுக்கு என்றும் நிலையான சாட்சி!

https://www.youtube.com/watch?v=STeAHQyK1Kw

Concept 2 Statics / அமர்வாற்றல் 0.5 HP

பலே பாண்டியா படத்தில் ராதாவை திருப்திப்படுத்த பல்வேறு முகபாவனைகளுடன் அவர் படும் பாடு .....நீயே உனக்கு என்றும் நிகரானவன் தலைவா

https://www.youtube.com/watch?v=b3ku7VgUi30

Concept 3 Mechanics / உறைவாற்றல் 0.1 HP

ராஜபார்ட் ரங்கதுரை : வெறும் சப்பளாக்கட்டைகளை வைத்துக்கொண்டு அவர் உறைந்த உணர்வுகளுடன் அமர்ந்து பாவனைகளுடன் பாடும் அம்மம்மா தம்பி என்று ....அம்மம்மா!

https://www.youtube.com/watch?v=XjZP2reKBlU

Concept 4 Histrionics உடல்மொழியாற்றல் 2 HP

நவராத்திரி திரைப்படத்தில் சாவித்திரியுடன் பாடி ஆடும் தெருக்கூத்து அவரது நிகரற்ற உடல்மொழி நடன ஆற்றலுக்கு சிறந்த உதாரணம் (En Thambi too..but not available for uploading)

நவராத்திரி திரைப்படம் நவரச பாவங்களை வெளிப்படுத்தி ஒன்பது வெவ்வேறு குணாதிசயங்கள் கொண்ட மனிதர்களை நம் கண்ணே நாம் நம்பமுடியா வண்ணம்
உருவகப்படுத்தி இதுதான் உலகநடிப்பின் உச்சம் என்பதை மிச்ச சொச்சமில்லாமல் நடிகர்திலகம் நிலைநாட்டிய படம். அதில் ஒரு பாத்திரமாக நாடக தெருக்கூத்து கலைஞராக மீசையில்லாமல் பயந்த சுபாவத்துடன் வரும் அவர் மேடையில் ராஜபார்டாக மாறியதும் உடல்மொழி மாற்றத்தில் காண்பிக்கும் கம்பீர அலட்சியம் மிடுக்கு நடை....நடிகர்திலகத்தின் ஒட்டாத ஒட்டுமீசை (ஒருவேளை நெற்றிக்கண் ரஜினி மீசைக்கு இதுதான் இன்ஸ்பிரேஷனோ!?) ஒட்டுமொத்த சிரிப்பை அள்ளுகிறது! really tickling our funny bone!!..... கூத்தடிக்கும் நடனநகர்வுகள்.....அடங்கா ஆற்றலின் வெளிப்பாட்டைக் காணக் கண் கோடி வேண்டுமே!

https://www.youtube.com/watch?v=DqWKRny75ncThe End of Part 3. But NT comes back with a bang of his famous song/dance sequences in Uththama Puththiran!

eehaiupehazij
16th December 2014, 07:53 PM
நடிகர்திலகத்தின் நடன நகர்வாற்றல் நளினம் குறுந்தொடர் PART 4

Theme : NT's Energy Emission in Song Sequences!

Sivaji Ganesan's Dynamics / Statics / Mechanics / Histrionics of 'dancing to the tune' , 'Lipping to the tone' and 'ribbing or tickling the funny bone'in song sequences :

ஆடல்பாடல் காட்சிகளில் நடிகர்திலகம் வெளிப்படுத்தும் நடன நகர்வு / அமர்வு / உறைவு ஆற்றலே இத்தொடரின் மையக் கருத்து !

ஆற்றல் பகிர்வு தரவரிசை 4 : உத்தம புத்திரன்
5 HP ( குதிரைச்சக்தி Horse Power)


உத்தம புத்திரன் ஊரறிந்த புத்திரன்! நாணயத்தின் இரு பக்கங்கள் போல நற்குணங்கள் நிரம்பிய உத்தமன் பார்த்திபனாகவும் தீய குணங்களுக்கு பலியாக்கப்பட்ட உன்மத்தன் விக்கிரமனாகவும் இரட்டை வேட நடிப்புக்கு நடிகர்திலகம் இலக்கணம் வகுத்த படம். அரண்மனை உல்லாசபுரியில் மதுவில் ஊறி மமதை ஏறி திசை மாறி அந்தப்புரமே கதியென்று மங்கையருடன் சல்லாபத்தில் திளைத்திடும் விக்கிரமனின் உடல்மொழியும் பாவனைகளும் நம்மை ஒருமாதிரியான பரவச நிலைக்கு உட்படுத்தியதே அவர் நடிப்புக்கு கிடைத்த அபார வெற்றி! தோற்ற வித்தியாசம் ஏதுமின்றி நல்லவனாக வளர்க்கப்படும் பார்த்திபனின் மிருதுவான உடல்மொழியும் வீரமும் காதல் நிலைப்பாடுகளும் எவ்வளவு வித்தியாசமாக உருவகப்படுத்தப் பட்டு நடிகர்திலகமாகக் காணாமல் நம்மிடையே கொண்டாடப்படும் நாயகனாகவே அவர்தம் சீர்மிகு நடிப்பாற்றலால் சிறப்புப் பெற்றன!!

இவ்வகை கதையமைப்பில் ஆடல்பாடல் கேளிக்கை கும்மாளங்களுக்குப் பஞ்சமேது .....கண்ணுற்று அனுபவித்து ரசித்து மகிழ்வோமே!

Concept 1 Dynamics/நகர்வாற்றல் 1.5 HP

யாரடி நீ மோகினி இந்த பிரபஞ்சம் இருக்கும்வரை நடிகர்திலகத்தின் உச்சகட்ட ஸ்டைலையும் மிடுக்கையும் நடன நகர்வாற்றலையும் பறை சாற்றிக் கொண்டே இருக்கப்போகும் மனதை அள்ளிய ஆடல்பாடல் காட்சியமைப்பு! ஐக்கியமாவோமே!!

https://www.youtube.com/watch?v=a63IlNFGip8

Concept 2 Statics / அமர்வாற்றல் 1 HP

அமைதியான நதியினிலே ஓடத்திலேறி முல்லைமலர் மேலே மொய்க்கும் வண்டாக பார்த்திப திலகம் பத்மினியுடன் என்னவொரு இதமான மனதை வருடும்
தென்றலான பாடல் காட்சியமைப்பு அழுத்தமான காதல் பதிவு கண்ணுற்று களிப்போமே!

https://www.youtube.com/watch?v=vNLRpeXzb3Y

Concept 3 Mechanics உறைவாற்றல் 1 HP

காத்திருப்பான் கமலக்கண்ணன் என்று பார்த்திபனை நினைத்து ஏந்திழை பாடலுடன் அபிநயிக்க வைத்த கண் வாங்காமல் கரண்ட் அடித்தது போல் உறைந்து போய் அதை ரசித்து மாமாவிடம் குறும்பாக கமெண்ட் அடிக்கும் விக்கிரமன் !

https://www.youtube.com/watch?v=XEmF9jzEwCI

Concept 4 Histrionics / உடல்மொழியாற்றல்1.5 HP

சிந்தை நிலையில்லாத விக்கிரமனை மயக்கி பார்த்திபனின் இரும்பு முகமூடி சாவியை கவர்ந்திட ஆரணங்கு பத்மினி பாடி ஆடும் உன்னழகை கன்னியர்கள் சொன்னதினாலே காட்சியமைப்பில் குடிகார மன்னனின் கால் போகும் போக்கையும் கண் செருகும் நேர்த்தியையும் உடல் சோர்வையும் அசட்டுச் சிரிப்பையும் ஒருவிதமான ஜெர்க்குடன் கூடிய தள்ளாட்டத்தையும் எப்படிக் காண்பித்திருக்கிறார் நடிக மன்னர் !

https://www.youtube.com/watch?v=-luAPt44VL0
The End of Part 4. But NT sure returns to entertain us with his enthralling dance movements in song sequences with hero running after trees with his darling women!! both black/white and in color!!

Russellisf
16th December 2014, 10:18 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/a_zps6e1e9ff8.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/a_zps6e1e9ff8.jpg.html)


கோபால் சார் உங்கள் முடிவினை மாற்றி மீண்டும் உங்கள் பொன்னான பதிவுகளை யார் மனதையும் புண்படாமல் பதிவு செய்யுங்கள்

முரளி,எடிட் செய்தே உங்கள் கைகளை ஓய வைத்து விட்டேன்.நீங்கள் சொல்வது போல ,நீங்களே தவறு என்று நினைக்காத சரிகளை ,politically -correct என்ற ரீதியில் செய்கிறீர்கள் சரி. ஆனால் ,இந்த ஒழுங்கு முறை நம் திரிக்கு மட்டும்தானா என்ற ஆயாசமே எழுகிறது.ஆனால் டிசெம்பருக்கு பிறகு,தங்களுக்கு எந்த பணி சுமையும் என்னால் ஏற்படாது.தற்போது,மதுர கானத்தின் தொடர்பதிவுகளே, என் கடைசி மையம் பதிவுகளாக இருக்கும்.என் எழுத்தாள சகோதரி,என்னை பிற எழுத்துக்களை எழுத பணிக்கிறார். அவர் உச்சம் தொட்டு விருதுகளை குவித்து வரும் போது ,என் எண்ண அலைகளை நான் சுருக்கி கொண்டு,புரிதலின்மை என்ற கூட்டுக்குள் சுருங்குவது அவருக்கு உவப்பாக இல்லை.பலருக்கு ஆதர்ஷமாக இருந்த நான்,இவ்வாறு இருப்பதில் அவருக்கு உடன்பாடில்லை.(நான் வேடிக்கையாக,நான் தன்ராஜ் மாஸ்டர் மாதிரி இருந்திட்டு போறேன் என்பேன்)ஆனால் நடிகர்திலகம் ரசிகர்களே கூட என்னை புரிந்து கொண்டு,என் எழுத்துக்களை தொடர்ந்து,புரிதலை வளர்த்து கொள்ளாமல் போனது போன்ற வெறுமை உணர்வுதான் எனக்கு. இன்னும் அழகாக,ஆழமாக பல விஷயங்களை எழுத நினைத்திருந்தேன் .உங்களுக்கு மட்டுமல்ல ,மாற்றணி நண்பர்கள் கலை வேந்தன்,எஸ்வி,யுகேஷ் மற்றும் என்னிடம் அக்கறை செலுத்திய நண்பர்களுக்கு நன்றி. நடிகர்திலகம் திரியில் என் கடைசி பதிவே எல்லாம் உனக்காக என்று என் நடிப்பு தெய்வத்திற்கும்,அவர் ரசிகர்களுக்கும் சமர்ப்பணம் செய்தது போல முடிந்தது ,கவிதை துவமான முடிவே. என் பங்களிப்பு 21ஜூலை ,1 அக்டோபர் என்று தொடரும்.பார்வையாளனாக கண்டிப்பாக தொடருவேன்.

Russellisf
16th December 2014, 10:20 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/b_zps96cfa420.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/b_zps96cfa420.jpg.html)

vietnaam veedu stage peformance by sivaji ganesan

Russellisf
16th December 2014, 10:21 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/a_zps190a13a6.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/a_zps190a13a6.jpg.html)

eehaiupehazij
17th December 2014, 07:59 AM
நடிகர்திலகத்தின் நடன நகர்வாற்றல் நளினம் குறுந்தொடர் PART 5

Theme : NT's Energy Emission in Song Sequences!

Sivaji Ganesan's Dynamics / Statics / Mechanics / Histrionics of 'dancing to the tune' , 'Lipping to the tone' and 'ribbing or tickling the funny bone'in song sequences :

ஆடல்பாடல் காட்சிகளில் நடிகர்திலகம் வெளிப்படுத்தும் நடன நகர்வு / அமர்வு / உறைவு ஆற்றலே இத்தொடரின் மையக் கருத்து !

ஆற்றல் பகிர்வு தரவரிசை 5 : ஊட்டி வரை உறவு 3 HP!

ஊட்டி வரை உறவு திரைப்படம் ஒரு வித்தியாசமான ஜாலியான மனதுக்கு ரம்மியமான அனுபவம்
தங்கை என்று கதை விட்டுக்கொண்டு பாதுகாப்பான புகலிடமாக பாலையாவை குழப்பி குடும்பத்துள் நுழையும் விஜயாவின் உண்மை நிலை தெரிந்து கலாய்த்துககொன்டிருக்க்கும். நடிகர்திலகத்தின் நகைச்சுவை நடிப்பாற்றலை படம் முழுவதும் ஒன்றி ரசிக்க முடிகிறது.

தேனினும் இனிய பாடல்கள் இப்படத்தின் மிகப்பெரிய பிளஸ் பாய்ண்ட். இப்பாடல் காட்சிகளில் நடிகர்திலகம் வெளிப்படுத்தும் ஆற்றல் வகைகள் இதோ விறுவிறுப்பான காணொளிகள் சாட்சியமாக!

Concept 1 Dynamics / நகர்வாற்றல்1 HP

விஜயாவின் நாடகமறிந்து நடிகர்திலகம் அவரை ஜாலியாக கலாய்க்கும் குறும்பு கொப்பளிக்கும் அற்புதமான நடன நகர்வுகள்

https://www.youtube.com/watch?v=9onlEEX8Qyg

bonus song :

https://www.youtube.com/watch?v=iEzkwgYXYY0

Concept 2 Statics / அமர்வாற்றல் 3/4 HP

பெரிய நடன அசைவுகள் ஏதுமின்றி அமைதியாக இயல்பாக இனிமையாக காதல் உணர்வுகளை வெளிப்படுத்தும் இப்பாடல் இப்படத்தின் மிகச்சிறந்த காட்சியமைப்புக்கும் ஸ்ரீதரின் வித்தியாசமான காமெரா கோணங்களின் ஈடுபாட்டுக்கும் சான்றே !

https://www.youtube.com/watch?v=aHR0BfPNF7U

Concept 3 Mechanics / உறைவாற்றல் 1/2 HP

விஜயாவின் இடதுகைப் பழக்கம் கண்ணுற்று உண்மையுணர்ந்து உறையும் நடிகர்திலகத்தின் நடிப்பாற்றல் இனிமை நிறைந்த விஜயாவின் சிறந்த ஆடல் அசைவுகளை வெளிக் கொணர்ந்த இப்பாடல் காட்சி வழியே நம் விழிகளுக்கு !

https://www.youtube.com/watch?v=9fHV2XL2gFc

Concept 4 Histrionics / உடல்மொழியாற்றல் 0.75 HP

அங்கே மாலை மயக்கம் யாருக்காக நடிகர்திலகத்தின் உடல்மொழியாற்றலில் சொக்கி விக்கித்து நிற்கும் நமக்காக!

https://www.youtube.com/watch?v=Ku1Ek0yaex0The End of Part 5. NT returns on his creamy song and screamy dance duty in a more colorful dreamy way

RAGHAVENDRA
17th December 2014, 08:35 AM
Sivaji Ganesan - Definition of Style 9

தனக்கெனத் தனி பாணி என்பதை விட தான் ஏற்றுக் கொண்ட கதாபாத்திரத்திற்கெனத் தனி பாணியை அந்தக் கதைக்கேற்றவாறு வகுத்து அதனுடைய இயல்பை நூறு சதவீதம் முழுமையாகக் கொண்டு வருவதே நடிகர் திலகத்தின் வெற்றிக்கு அடிப்படை.

ஒரு கிராமத்தான் அந்த ஊர் ஜமீனின் அக்கிரமங்களை சகிக்க முடியாமல் தானே சட்டத்தை எடுத்துக் கொள்கிறான் என்று குற்றம் சாட்டப்பட்டு கூண்டில் நிறுத்த்ப்படுகிறான். இந்த நீதிமன்றக் காட்சி, நடிகர் திலகத்தின் மிகச் சிறந்த திறமைக்கு மற்றுமோர் உதாரணம்.

நீதிமன்றம் என்றால் நெடிய வசனமில்லை. நறுக்குத் தெறித்தாற்போல என்பார்களே, அது போல அளவு குறைவான வசனம், அதில் அந்த பாத்திரத்தின் தன்மை, அந்த பாத்திரத்தின் நிலைமை என அனைத்தையும் தன் நடிப்பில் கொண்டு வந்துள்ளார் நடிகர் திலகம். உள்ளத்தில் உள்ளதை மறைக்கத்தெரியாத கிராமத்து முரடனாக இருதுருவம் படத்தில் ஏற்று நடித்த பாத்திரம் காலத்தைக் கடந்து நிற்பதற்கு அவருடைய புலமையும் திறமையுமே காரணம். படம் முழுவதும் ரசிகர்களுக்கு நடிப்புத் தீனி வழங்கியுள்ளார் நடிகர் திலகம்.

மேலெழுந்த வாரியாகப் பார்த்தால் மிகவும் சாதாரணமாகத் தோன்றும் இந்த நீதிமன்றக் காட்சியில் நடிப்புத் தொல்காப்பியருக்குள் ஒளிந்துள்ள அந்த மேதைமை மிகச் சிறப்பாக ஒளிர்கிறது.

தான் சொல்ல வேண்டியதை மிகவும் சுருக்கமாக உள்ளத்தை அப்படியே கொட்டி விடுவதாக இந்தக் காட்சியில் அவர் நடித்திருக்கிறார். இதே நீதிமன்றக் காட்சிகளில் வெவ்வேறு படங்களில் அவர் வெவ்வேறு விதமாக நடித்திருப்பதே அவருடைய நடிப்பின் பரிமாணத்தைக் காட்டும்.

நீதிமன்றக் காட்சிகளில் குற்றவாளியாகவும் நடித்துள்ளார், குற்றம் சாட்டப்பட்டவராகவும் நடித்துள்ளார், வழக்குரைஞராகவும் நடித்துள்ளார், அனைத்துக்கும் மேல் நீதிபதியாகவும் நடித்துள்ளார்.

அனைத்திலும் பல்வேறு பரிமாணங்களில் அந்தந்தக் கதாபாத்திரங்களுக்கேற்றவாறு தன் நடிப்பை வகுத்துக் கொண்டதே நடிகர் திலகத்தின் வெற்றிக்கு மிகப் பெரிய காரணம்.

இதோ இருதுருவம் படத்தில் நீதிமன்றக் காட்சி..

48.00 நிமிடத்திலிருந்து பாருங்கள்.

https://www.youtube.com/watch?v=JaYGfB9y-5w

sivaa
17th December 2014, 09:32 AM
ஏக காலத்தில் ஓடி சாதனை படைத்த வசூல் சக்கரவர்த்தியின்
சாதனை பட்டியல்

பாரீர் பாரீர் பாரீர்

ஒரே நாளில் திரையிடப்பட்ட வசூல் சக்கரவர்த்தியின் இரண்டு படங்கள்

100 நாட்கள் அதுவும் 2 தியேட்டர்களில் 100 நாட்களுக்குமேல் ஓடி மிகப்பெரிய சாதனை செய்தது

6.10.1979..தீபம்...கொழும்பு...செல்லமஹால்..145..நாட ்கள்
தீபம்..கொழும்பு....சபையர்................75..நாட்க ள்
தீபம்...யாழ்நகா....ஸ்ரீதர்.....................114 ..நாட்கள்

..............................
6.10.1979..அந்தமான் காதலி..கொழும்பு.........சமந்தா..101..நாட்கள்
அந்தமான் காதலி..கொழும்பு..கல்பனா..46..நாட்கள்
அந்தமான் காதலி..யாழ்நகர்..மனோகரா..105..நாட்கள்

..........................................

மேற்கண்ட 2 படங்களும் வெற்றி நடைபோட்டு ஓடிக்கொண்டிக்கும் 77 ம் நாள்
ஜெனரல் சக்கரவர்த்தி திரையிடப்படுகிறது

21.12.1979..ஜெனரல் சக்கரவர்த்தி.....கொழும்பு..கிங்ஸ்லி....104..நாட்கள ்
ஜெனரல் சக்கரவர்த்தி..கொழும்பு...கல்பனா....44..நாட்கள ்
ஜெனரல் சக்கரவர்த்தி..யாழ்நகர்..ராஜா...121..நாட்கள்

மூன்றுபடங்களுமே வெற்றிக்கொடி நாட்டின

இப்படியான வெற்றியை நிலைநாட்ட

கொடை சக்கரவர்த்தி

வசூல் சக்கரவர்த்தி

நடிப்புச்சக்கரவர்த்தி

பொன் மனம் கொண்ட செம்மல்

சிவாஜி கணேசன் தவிர

வேறு எவராலும் முடியாது

eehaiupehazij
17th December 2014, 12:04 PM
நடிகர்திலகத்தின் நடன நகர்வாற்றல் நளினம் குறுந்தொடர் PART 6

Theme : NT's Energy Emission in Song Sequences!

Sivaji Ganesan's Dynamics / Statics / Mechanics / Histrionics of 'dancing to the tune' , 'Lipping to the tone' and 'ribbing or tickling the funny bone'in song sequences :

ஆடல்பாடல் காட்சிகளில் நடிகர்திலகம் வெளிப்படுத்தும் நடன நகர்வு / அமர்வு / உறைவு ஆற்றலே இத்தொடரின் மையக் கருத்து !

ஆற்றல் பகிர்வு தரவரிசை 6 : 9 HP
(sorkkam/paasamalar/pudhiya paravai/rajapart rangadurai)

நிஜத்தில் மனிதனிடமிருந்து பிரிக்க முடியாதது நிழலும் கனவும். திரையுலகம் கனவை நிஜம் போல் நம்பச் செய்யும் நிழல் மாயாலோகமே!! எல்லைகளற்ற
எண்ண அலைகளே. கனவுகள். நடிகர்திலகமும் கனவுப் பாடல் காட்சிகளில் நனவாக வேண்டிய கனவுகளை நம்மை நம்ப வைப்பதில் வெற்றி கண்டிருக்கிறார்.
நடிகர்திலகத்தின் கனவாற்றல் வெளிப்பாடுகளின் தொகுப்பு!

Concept 1 Dynamics / நகர்வாற்றல் 2 HP

கொடுக்கிற தெய்வம் கூரையைப் பிய்த்துக்கொண்டு ஒரு பொன்மகளோடு வைரமும் மணிகளும் பணமும் காசும் வெல்வெட்டு விரிப்பில் வைத்துக் கொட்டினால்
எப்படியிருக்கும்? சுகமான சுகந்தமான சொர்க்கத்தில் நீந்துவோமே!!

https://www.youtube.com/watch?v=3xzlyze2Fuo

Concept 2 Statics / அமர்வாற்றல் 1 HP

மலர்களைப் போல் தங்கை உறங்குவதை அமைதியாக அமர்ந்து வளமான அவள் நல்வாழ்வு பற்றிக் காணும் கனவின் உருவகம் நடிகர்திலகத்தின் எண்ண அலைகளின் எழுச்சியாக !!

https://www.youtube.com/watch?v=9P8Hynotz1M

Concept 3 Mechanics / உறைவாற்றல் 1 HP

நிஜவாழ்வில் குடிசை வீட்டிலே வறுமையின் சிறுமையே கண்டு உறைந்து உடைந்து போன நாடகமேடைக் கலைஞன் கனவில்தானே மதனமாளிகையில் பொறுமையாக குடியேற முடியும்?!

https://www.youtube.com/watch?v=i6UeorX-aVo

Concept 4 Histrionics / உடல்மொழியாற்றல் 5 HP

வாழ்க்கையில் தன்னை சுற்றி நடக்கும் நிகழ்வுகள் மனநிம்மதியைக் குலைத்திடுகையில் புதிய பறவையை வரவிடாமல் பழைய பறவை அதகள அமர்க்களம்
பண்ணும்போது .........இந்தவகை மன அழற்சியை நடிகர்த்திலகத்தை விட யாரால் உருவகப்படுத்தி உயிர் கொடுத்திடஇயலும் ?

கைகளைப் பரப்பி வேதனை பொதிந்த வதனத்தை வானத்தை நோக்கி எங்கே நிம்மதி என்று தேடித் தள்ளாடும் NT's Signature Pose in this Signature song from his Signature Movie of Lifetime!

https://www.youtube.com/watch?v=___CnUWEADkThe End of Part 6. NT returns with his 'solo' songs to rivet our minds and hearts

JamesFague
17th December 2014, 12:35 PM
In Ellam Unakkaga NT's only costume Shirt & Dhoti. This is the uniqueness of

the film and NT saves the expenses meant for costumes. I hope those who have

seen the movie have noticed this aspect.Regards

HARISH2619
17th December 2014, 01:38 PM
Dear senthilvel sivaraj sir,
thankyou very much for uploading the video of tiruppur function.i think this is the first time in this thread we got an opportunity to watch the celebrations of nt birthday from the kongu mandalam.

eehaiupehazij
17th December 2014, 02:18 PM
நடிகர்திலகத்தின் நடன நகர்வாற்றல் நளினம் குறுந்தொடர் PART 7

Theme : NT's Energy Emission in Song Sequences!

Sivaji Ganesan's Dynamics / Statics / Mechanics / Histrionics of 'dancing to the tune' , 'Lipping to the tone' and 'ribbing or tickling the funny bone'in song sequences :

ஆடல்பாடல் காட்சிகளில் நடிகர்திலகம் வெளிப்படுத்தும் நடன நகர்வு / அமர்வு / உறைவு ஆற்றலே இத்தொடரின் மையக் கருத்து !


ஆற்றல் பகிர்வு தரவரிசை 7 : 5 HP

வாழ்க்கையில் பள்ளி கல்லூரிக்குச் சென்று கற்றுக்கொண்ட கல்வி வாயிலாக நாம் பெரும் ஞானத்தை விட நம் வாழ்க்கைச் சூழலில் நமது பெற்றோர் சகோதரசகோதரிகள்
உற்றார் உறவினர் நண்பர்கள் நாம் சந்திக்க நேரும் மனிதர்கள் மூலமாகப் பெரும் அனுபவ ஞானம் போதி மரத்தடி புத்தரின் ஞானம் போல் அதிக மதிப்பானது.

நாம் கடந்து வந்த வாழ்க்கைப் பாதையில் எதிர்பட்ட முட்கள், மலர்கள், பாராட்டுகள், வசவுகள், கேலி,கிண்டல்கள், இழப்புக்கள் நம் மனதைப் பதப்படுத்தி ஒரு முற்றும் துறந்த முனிவனின் மனநிலைக்கு கொண்டு சென்று விடும். தன்னம்பிக்கை இழந்திடாத தைரியசாலிகள் போற்றுதலையும் தூற்றுதலையும் பொருட்படுத்தாது ஏற்றுக்கொண்ட பணியில் மட்டுமே கவனம் செலுத்தி தன்னையும் தன்னை சார்ந்தவர்களையும் மனம் தளராத வெற்றிப்பாதைக்கு இட்டுச்செல்வர். மனச்சோம்பல் கொண்ட கோழைகள் தன்னம்பிக்கையிழந்து மனநிலை பிறழ்ந்து தான் சரிவை சந்திப்பதோடல்லாமல் தன்னை நம்பிப் பின்தொடர்பவரையும் குப்புறத்தள்ளி குழிபறித்து மூடியும் விடுவர். விரக்தி மேலிடும் சூழல்களில் நடிகர்திலகத்தின் தத்துவார்த்த பாடல்களே நமக்கு மருந்தும் விருந்தும் !!இப்பாடல்களை உள்வாங்கி அதை உணர்வுபூர்வ ஆற்றல்களுடன் அவர் தன்னம்பிக்கை மேலிட வெளிப்படுத்தும் விதமே அலாதி!

Concept 1 Dynamics / நகர்வாற்றல் 1.5 HP

தென்னையைப் பெத்தா இளநீரு புள்ளையைப் பெத்தா கண்ணீரு ! ......யாரையும் நம்பி நான் பிறக்கவில்லை...போங்கப்பா போங்க!!

https://www.youtube.com/watch?v=gqIX9OQHxUU

Concept 2 Statics / அமர்வாற்றல் 1 HP

சட்டி சுட்டதடா கை விட்டதடா ....ருசி கண்ட பூனை உறி யை சுற்றிசுற்றி வரும்.... சூடுகண்ட பூனை?

https://www.youtube.com/watch?v=uANHNjdORiE

Concept 3 Mechanics / உறைவாற்றல் 1 HP

உள்ளதைச் சொல்லி நல்லதைச் செய்தால் உலகம் உன்னிடம் மயங்கும் ....ஆறு மனமே ஆறு !!

https://www.youtube.com/watch?v=HGM745ygTCw

Concept 4 Histrionics / உடல்மொழியாற்றல் 1.5 HP

ஆயிரம் இருந்தும் வசதிகள் இருந்தும் ....peace of mind?

https://www.youtube.com/watch?v=wfEPBX1mdVUThe End of Part 7. But, NT comes back ….. with his dream girls with unbelievable energy in going around them!!

JamesFague
17th December 2014, 03:46 PM
Congratulation to Mr ESVEE Sir for reaching another milestone.Regards

eweaxagayx
17th December 2014, 03:59 PM
இன்றைய தினமலரில் நடிகர் திலகத்தின் சிறப்பு மிக்க நடிப்பாற்றலை வெளிப்படுத்திய நவராத்திரி படத்தை பற்றிய ஒரு சிறப்புச் செய்தி : -


http://cinema.dinamalar.com/tamil-news/25094/cinema/Kollywood/Golden-jubilee---Sivajis-Navarathiri-movie.htm

Richardsof
17th December 2014, 07:28 PM
இனிய நண்பர் திரு வாசுதேவன் சார்

உங்களின் அன்பான பாராட்டுகளுக்கு என்னுடைய நன்றியினை தெரிவித்து கொள்கின்றேன் .

eehaiupehazij
17th December 2014, 10:20 PM
நடிகர்திலகத்தின் நடன நகர்வாற்றல் நளினம் குறுந்தொடர் PART 8

Theme : NT's Energy Emission in Song Sequences!

Sivaji Ganesan's Dynamics / Statics / Mechanics / Histrionics of 'dancing to the tune' , 'Lipping to the tone' and 'ribbing or tickling the funny bone'in song sequences :

ஆடல்பாடல் காட்சிகளில் நடிகர்திலகம் வெளிப்படுத்தும் நடன நகர்வு / அமர்வு / உறைவு ஆற்றலே இத்தொடரின் மையக் கருத்து !

ஆற்றல் பகிர்வு தரவரிசை 8 : 5 HP திருவிளையாடல்

நாம் கடவுளைக் கண்டது கிடையாது ஆனால் எங்கும் நிறைந்திருக்கும் பரம்பொருளாக நம் உள்ளுணர்வு வாயிலாக உணர்ந்திருக்கிறோம் கடவுளுக்கும் ஒரு வடிவத்தை நிலைநிறுத்திய நடிப்புக் கடவுளின் திருவிளையாடல் திரைப்படத்தில் அப்படி ஒரு பரவச உணர்வை நம்மை அனுபவிக்க வைத்தார் கடவுள் மனிதரூபத்திலும் இப்புவிக்கு வந்தால் எப்படி இருப்பார் என்னென்ன செய்வார் தனது பக்தர்களின் நலத்தை எப்படிக் காப்பார் என்பதெற்கெல்லாம் ஒரு விடையாக இப்படம் அமைந்து வெள்ளிவிழாக் காணும் வண்ணம் நல்ல பொழுதுபோக்கு அம்சங்களையும் பக்தியுடன் உள்ளடக்கியிருந்தது கடவுளையும் ஆடவிட்டுப் பாடவைத்துப் பார்ப்பதில் நாம் அசகாய சூரர்களே ! அதிலும் வெவ்வேறு வகையான ஆற்றல்களை வாரி வழங்கியிருக்கிறாரே நடிகர்திலகம்

Concept 1 Dynamics / நகர்வாற்றல் 2 HP
மனித உடல் உயிர் நீங்கின் வெறும் கட்டையே என்பதை மட்டையடியாக என்னவொரு ஆட்டபாட்ட அபிநய ஜாலத்துடன் விவரிக்கிறார் சிவபெருமான் !

https://www.youtube.com/watch?v=U0viOT5Gowg

Concept 2 Statics அமர்வாற்றல் 1 HP

பாட்டும் அவரே பாவமும் அவரே ! ஒரு நடிகர்திலகம் ஐந்து நடிகர்திலகங்களாக Cell Division and Multiplication!! ஒவ்வொருவரும் ஒரு திறமையை ஒருசேர
அமர்ந்து வெளிப்படுத்தும் போது நம் கண்கள் இமைக்க மறந்து நமது இயக்கமும் நின்று போகிறதே!!

https://www.youtube.com/watch?v=xg_hBWlR3h0

Concept 3 Mechnics / உறைவாற்றல் 1 HP
நடிகர்திலகம் ஆடும் ருத்ரதாண்டவம் மெய்சிலிர்ர்க்க வைத்து நம்மை உறைய வைத்து விடுகிறதே !!

https://www.youtube.com/watch?v=RJhyuTQb0hY

Concept 4 Histrionics உடல்மொழியாற்றல் 2 HP

ஒன்றானவன் உருவில் இரண்டானவன் பாடலிலும் ஹேமநாத பாலையா பாகவதருடன் பேச்சிலும் என்னவொரு உடல்மொழி வேடிக்கை

https://www.youtube.com/watch?v=kW3hnviVByk

https://www.youtube.com/watch?v=Q-y0r-amJsg

Murali Srinivas
17th December 2014, 11:34 PM
1960-களின் இறுதியில் துவங்கி நடிகர் திலகத்தின் படங்கள் வெளியான கால கட்டத்தைப் பற்றிய எனது நினைவலைகளை தாங்கிய இந்த தொடர் பதிவின் அடுத்த கட்டம்.

கடந்த பதிவின் இறுதி பகுதி

இப்படியாக நாம் கடந்து வந்துக் கொண்டிருக்கும் 1972 ஜூலை ஆகஸ்ட் காலகட்டம் தமிழக அரசியலிலும் சரி தமிழ் திரையுலகிலும் சரி பல்வேறு பரபரப்புகளை சந்தித்துக் கொண்டிருந்த நேரம்.

இங்கிருந்து பதிவு தொடர்கிறது.

அந்த நாள் ஞாபகம்

சென்ற பதிவில் தமிழகத்தின் அரசியல் களத்தில் பரபரப்பான காட்சிகள் அரேங்கேறி கொண்டிருந்த நேரம் என்று குறிப்பிட்டிருந்தேன். மக்கள் மனதில் பெரிய மாற்றங்கள் ஏற்பட்டு பெருந்தலைவரின் வழிகாட்டுதலை அவர் தலைமையை மீண்டும் தமிழகம் ஏற்கப் போகிறது என்பதற்கான அறிகுறிகள் தோன்ற ஆரம்பித்திருந்தன. இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால் இந்த மாற்றம் வருங்கால தூண்களாகிய இளைஞர் சமுதாயத்திடமிருந்து துவங்கியதுதான்.

இப்படி சொல்வதற்கு காரணம் என்னவென்றால் அன்றைய நாள் தமிழகத்தில் [1972] செயல்பட்டுக் கொண்டிருந்த 172 கலை அறிவியல் மற்றும் சட்டக் கல்லூரிகளில் நடந்த மாணவர் பேரவை தேர்தலில் 146 கல்லூரிகளில் ஸ்தாபன காங்கிரஸ் சார்பு மாணவர்கள் தலைவர் பதவியை கைப்பற்றினார்கள். இவர்கள் அனைவரும் நடிகர் திலகத்தின் ரசிகர்கள் என்பதோடு அன்றைய மாணவர் காங்கிரஸ் தலைவராக இருந்த நேதாஜி மற்றும் c. தண்டாயுதபாணி அவர்களின் சீரிய வழிகாட்டலில் பொறுப்பேற்ற நேரம்.

அண்ணாமலை பல்கலைகழக மாணவர் தலைவர் உதயகுமார் வன்முறையாளர்களால் உயரிழந்தது பற்றி பேசினோம். அவர் மரணம் பற்றி விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய ஒரு விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டிருந்ததை குறிப்பிட்டிருந்தேன். 1972 ஆகஸ்ட் 15, இந்தியா சுதந்திரம் அடைந்த வெள்ளி விழா ஆண்டு. அதை கொண்டாடும் வகையில் 1972 ஆகஸ்ட் 14 அன்று நள்ளிரவில் சட்டமன்ற கூட்டத் தொடர் நடைபெற்றது. அதன் பிறகு இரண்டு தினங்கள் கழித்து என்று நினைவு. அந்த விசாரணை கமிஷனின் அறிக்கை சட்டமன்றத்திலே தாக்கல் செய்யப்பட்டது. அனைவரும் எதிர்பார்த்தது போல் யார் மீதும் குற்றமில்லை என்ற வகையில்தான் அறிக்கை அமைந்திருந்தது. ஆனால் அந்த மாணவனின் உயிர் தியாகம் மாணவர்கள் மத்தியில் ஒரு பெரிய எழுச்சியை உருவாக்கியது என்றே சொல்ல வேண்டும். அந்த மாணவர் சக்தி அளவிடப்பட முடியாத சக்தியாக திகழ்ந்தது என்பதும் உண்மை. நேதாஜி, தண்டாயுதபாணி மற்றும் குடந்தை ராமலிங்கம் போன்ற மாணவர் மற்றும் இளைஞர் காங்கிரஸ் தலைவர்கள் மாணவர் மற்றும் இளைஞர்களை வழி நடத்தி சென்ற முறை பாராட்டுக்குரியது. நேதாஜி போன்ற துணிவு மிக்க மாணவர் தலைவர் இருந்ததனால்தான் திருச்சி கிளைவ் ஹாஸ்டல் அராஜக தாக்குதல்களெல்லாம் வெளி வந்தன. அது இப்போது நாம் பேசும் நிகழ்வு நடந்து முடிந்த பிறகே நடந்தது என்பதால் அதை இப்போது விட்டு விடுவோம்.

தமிழகமெங்கும் இப்படி எழுச்சி கோலமாக நமது சக்தி ஆர்ப்பரித்து வரும் நேரம் அந்த மாணவர் சக்தியை ஒருமுகப்படுத்தி மேலும் எழுச்சி பெறும் வண்ணம் மாணவர் காங்கிரஸ் மாநாடு சென்னை தேனாம்பேட்டை காங்கிரஸ் மைதானத்தில் 1972 ஆகஸ்ட் 26,27 சனி மற்றும் ஞாயிறு நாட்களில் நடத்துவது என முடிவு செய்யப்பட்டு இரண்டாம் நாள் மாலை நடிகர் திலகம் உரையாற்றுவார் என்றும் முடிவு செய்யப்பட்டது. இதே காலகட்டத்தில் நடிகர் திலகத்தின் திரைப்பட சாதனை ஒரு இமாலய சாதனையாக மாறிக் கொண்டிருந்த நேரம். அதைப் பற்றிதான் நாம் பேசிக் கொண்டிருக்கிறோம்.

பாபு முதல் பட்டிக்காடா பட்டணமா வரை தொடர்ந்து இமாலய வெற்றிகளை கொடுத்துக் கொண்டிருந்த நடிகர் திலகத்திற்கு கண் பட்டதோ என்று எண்ணும் வண்ணம் ஜூலையில் வெளியான தர்மம் எங்கே எதிர்பார்த்த வெற்றியை அடையவில்லை என்பதை சென்ற பதிவுகளில் பார்த்தோம். அந்தப் படம் வெளிவருவதற்கு முன்பு தவப்புதல்வன் செப்டம்பர் முதல் அல்லது இரண்டாம் வாரம் திரைக்கு கொண்டு வருவதற்கு முக்தா ஸ்ரீநிவாசன் முயற்சி எடுத்துக் கொண்டிருந்தார் என்பதை பற்றியும் வசந்த மாளிகையை பொறுத்தவரை அது நவம்பர் 4 தீபாவளியன்று வெளிவரும் என்றும் சொல்லப்பட்டிருந்தது. ஆனால் யாரும் எதிர்பார்க்காத வகையில் தர்மம் எங்கே அது பெற வேண்டிய வெற்றியை பெறாமல் போனபோது தன்னுடைய படத்தை முன்கூட்டியே வெளியிடுவதற்கு முயற்சி எடுத்த முக்தா. VC சண்முகம் அவர்களிடம் பேசி ஆகஸ்ட் 26 அன்று வெளியிடுவதற்கு சம்மதம் வாங்கி விட்டார்.தர்மம் எங்கே வெளி வந்த ஜூலை 15 தொடங்கி 6 வார இடைவெளியில் தவப்புதல்வன் ஆகஸ்ட் 26 அன்று வெளியாவதாக விளம்பரம் வருகிறது.

படம் வெளியாவதற்கு ஒரு வாரம் முன்னால் நடிகர் திலகத்தை ஈன்றெடுத்த அன்னை ராஜாமணி அம்மையார் உடல்நலம் குன்றுகிறார். அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளிக்கின்றனர். ஆகஸ்ட் மாதம் 24-ந் தேதி வியாழன் மாலை உடல்நிலை கவலைக்கிடமான சூழலுக்கு செல்கிறது. அன்று மாலைதான் சௌகார் ஜானகி அவர்களின் மகளின் திருமண வரவேற்பு [ஆபட்ஸ்பரி அரங்கம் என்று நினைவு] நடைபெறுகிறது. சௌகார் வீட்டு திருமணம் என்பதனாலயே அதை தவிர்க்க முடியாமல் அங்கே சென்று விட்டு சாப்பிட்டு விட்டுதான் போக வேண்டும் என்று சொல்லும் சௌகாரிடம் மட்டும் உண்மை நிலவரத்தை சொல்லிவிட்டு வீட்டிற்கு விரைந்து திரும்பி வருகிறார் நடிகர் திலகம். தாயின் அறையிலேயே அவர் கட்டிலில் அமர்ந்து பார்த்துக் கொண்டிருக்கிறார். அன்றிரவு ராஜாமணி அம்மையாரின் உயிர் பிரிகிறது. நெஞ்சை பிளக்கும் சோகம் நடிகர் திலகத்தை தாக்குகிறது. பல முறை அவர் மூர்ச்சை ஆகி போகிறார்,

இந்த் நிலையில் 26 ந் தேதி சனிக்கிழமையன்று தவப்புதல்வன் வெளியாகிறது. அந்த படத்தின் ரிப்போர்ட் சுட்டிக் காட்டியது என்னவென்றால் தர்மம் எங்கே மூலமாக நடுவில் ஏற்பட்டது ஒரு சின்ன தடங்கலே அது நீக்கப்பட்டு மீண்டும் வெற்றி பாதையை நமக்கு திறந்து வைக்கின்றது. ஆனால் இந்த் வெற்றியை நடிகர் திலகத்தால் முழுமையாக கொண்டாட முடியவில்லை.

தாயார் இறந்து நான்கு நாட்கள் கூட ஆகவில்லை என்பதனால் நடிகர் திலகம் மாநாட்டிற்கு வரமாட்டார் என்றே அனைவரும் நினைத்தனர். அவரிடம் வருகிறீர்களா என்று கேட்க கூட யாருக்கும் தோன்றவில்லை. ஆனால் யாரை உயிருக்கு மேலாக மதித்தாரோ யார் பெயரால் தன் வீட்டிற்கு அன்னை இல்லம் என்று பெயர் வைத்தாரோ அந்த தாயை விட தான் சார்ந்துள்ள இயக்கம், தான் ஏற்றுக் கொண்ட தன்னலமற்ற தலைவன், தன்னை உயிரென நேசிக்கும் மாணவர் மற்றும் இளைஞர்கள் அவர்களுக்கு கொடுத்த வாக்குதான் பெரிது என்று நினைத்த நடிகர் திலகம் 27-ந் தேதி ஞாயிறு மாலை மாநாட்டிற்கு குறிப்பிட்ட நேரத்தில் சென்று கொடுத்த வாக்கை காப்பாற்றியதுடன் மட்டுமல்லாமல் மாணவர்கள் இளைஞர்கள் ஆகியோரின் இலக்கு என்ன எப்படி பணியாற்ற வேண்டும் என்பதை உணர்ச்சிப்பூர்வமாக எடுத்துரைத்தார். வெள்ளமென திரண்டிருந்த வீரர் கூட்டம் அன்றைய துக்க சூழலிலும் தங்களை தேடி வந்த நடிகர் திலகத்தை ஆவேசபூர்வமாக வாழ்த்தி வரவேற்றது. இன்று நினைத்தாலும் உடல் சிலிர்க்கும் நிகழ்வுகள் அவை.

இந்த விழாவின் புகைப்படங்கள் 9 மாதங்களுக்கு முன்பு நமது திரியில் பதிவிறக்கம் செய்யப்பட்டன அந்த படங்களை மீண்டும் நான் இப்போது பதிவு
செய்திருக்கிறேன். இந்த புகைப்படங்களை 9 மாதத்திற்கு முன்பு நடிகர் திலகம் திரியில் பதிவிறக்கம் செய்த வினோத் சாருக்கு நன்றி.

இனி தவப்புதல்வன் பற்றிய என் நினைவலைகளை அடுத்த பதிவில் பகிர்ந்துக் கொள்கிறேன்.

http://i61.tinypic.com/1zlrkpd.jpg

(தொடரும்​)

அன்புடன்

RAGHAVENDRA
17th December 2014, 11:56 PM
மேலே உள்ள படத்தில் பெருந்தலைவருடன் உரையாற்றிக்கொண்டிருப்பவர் குடந்தை ராமலிங்கம், கவனிப்பவர் தண்டாயுதபாணி.

தமிழக ஸ்தாபன காங்கிரஸின் மாபெரும் தூண்கள் நேதாஜி, தண்டாயுதபாணி, குடந்தை ராமலிங்கம்... இவர்களுடன் பணியாற்றிய பெரும் பேறு அடியேனுக்குக் கிடைத்ததற்கு இறைவனுக்கு மிக்க நன்றி.

முரளி சார் குறிப்பிட்ட இந்தக் காலகட்டத்தில் கல்லூரி படிப்பு முடித்து முழுமையாக ஸ்தாபன காங்கிரஸிலும் சிவாஜி ரசிகர் மன்றத்திலும் ஈடுபட்ட அந்நாள் நினைவுகள் வாழ்க்கையில் பசுமையானவை. மறக்க முடியாதவை.

மிக்க நன்றி முரளி சார்.

Russellbpw
18th December 2014, 06:24 AM
டிசெம்பருக்கு பிறகு,தங்களுக்கு எந்த பணி சுமையும் என்னால் ஏற்படாது.

தற்போது,மதுர கானத்தின் தொடர்பதிவுகளே, என் கடைசி மையம் பதிவுகளாக இருக்கும்.

ஆனால் நடிகர்திலகம் ரசிகர்களே கூட என்னை புரிந்து கொண்டு,என் எழுத்துக்களை தொடர்ந்து,புரிதலை வளர்த்து கொள்ளாமல் போனது போன்ற வெறுமை உணர்வுதான் எனக்கு.

நடிகர்திலகம் திரியில் என் கடைசி பதிவே எல்லாம் உனக்காக என்று என் நடிப்பு தெய்வத்திற்கும்,அவர் ரசிகர்களுக்கும் சமர்ப்பணம் செய்தது போல முடிந்தது ,கவிதை துவமான முடிவே.


Gopal Sir.......

:cry2: avuuuu................!

https://www.youtube.com/watch?v=tDU7NB440bs

Russellbpw
18th December 2014, 06:30 AM
THAT's LION !!!!!

http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/nav_zpsfc74a966.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/nav_zpsfc74a966.jpg.html)

eehaiupehazij
18th December 2014, 07:56 AM
நடிகர்திலகத்தின் நடன நகர்வாற்றல் நளினம் குறுந்தொடர் PART 9

Theme : NT's Energy Emission in Song Sequences!

Sivaji Ganesan's Dynamics / Statics / Mechanics / Histrionics of 'dancing to the tune' , 'Lipping to the tone' and 'ribbing or tickling the funny bone'in song sequences :

ஆடல்பாடல் காட்சிகளில் நடிகர்திலகம் வெளிப்படுத்தும் நடன நகர்வு / அமர்வு / உறைவு ஆற்றலே இத்தொடரின் மையக் கருத்து !

ஆற்றல் பகிர்வு தரவரிசை 9 : 4 HP

காதல் என்னும் மாய உணர்வு ஆட்கொள்ளாத மனிதருண்டோ இளம் வயதிலிருந்து முதுமை வரை காதலின் தன்மை அதன் ஆழம் மாறிக்கொண்டே வரும்.

அந்தந்த வயதிலும் நடிகர்திலகம் மட்டுமே காதலுக்குரிய ஆற்றல் வெளிப்பாட்டை அளந்து தந்திருக்கிறார் ரசிக்கும் வண்ணம்!

Concept 1 Dynamics நகர்வாற்றல் 2 HP

இளமை பொங்கி வழியும் பருவத்தில் காதலியின் மனதில் இடம் பிடிக்க எத்தனை பிரயத்தனங்கள்

https://www.youtube.com/watch?v=H_hwsxnPjK0

Concept 2 Statics அமர்வாற்றல் 1 HP

திருமணத்திற்கு பிறகு வாரிசு உருவாகி வரும் வேளை யில் காதல் அன்பான அரவணைப்பாக மாற வேண்டும்

https://www.youtube.com/watch?v=i9cQZwh_0y4

Concept 3 Mechaics உறைவாற்றல்1/2 HP

வாலிபக் காதல் உணர்வுகள் உறையத் தொடங்கினாலும் மனைவியை நேசிப்பதே காதலின் உயர்வு

https://www.youtube.com/watch?v=NY0OaR-wSWM

Concept 4 Histrionics உடல்மொழியாற்றல் 1/2 HP

வயது முதிர்ந்து ஆதரவற்ற நிலைக்குத் தள்ளப்படினும் விழுதுகள் கைவிடினும் மனைவிஎன்னும் வேர் ஆலமரத்தை தாங்கி நிற்குமே

https://www.youtube.com/watch?v=NC3QQL3cMlgThe End of the penultimate Part 9. But, NT returns to the valedictory of this short series parading his energy levels in two of his life time limelight movies Sivandha Mann and Vasantha Maaligai simultaneously

eehaiupehazij
18th December 2014, 12:05 PM
நடிகர்திலகத்தின் நடன நகர்வாற்றல் நளினம் குறுந்தொடர் PART 10

Theme : NT's Energy Emission in Song Sequences!

Sivaji Ganesan's Dynamics / Statics / Mechanics / Histrionics of 'dancing to the tune' , 'Lipping to the tone' and 'ribbing or tickling the funny bone'in song sequences :

ஆடல்பாடல் காட்சிகளில் நடிகர்திலகம் வெளிப்படுத்தும் நடன நகர்வு / அமர்வு / உறைவு ஆற்றலே இத்தொடரின் மையக் கருத்து !ஆற்றல் பகிர்வு தரவரிசை 10 : 15 HP


Concept 1 Dynamics நகர்வாற்றல் 5 HP!

சிறுவயது மனக்கீறல்கள் ஒரு மனிதனின் வாழ்க்கையில் எத்தகைய பக்க விளைவுகளை உண்டு பண்ணி மது போதைக்கும் மங்கையர் போகத்துக்கும் அவனை அடிமைப்படுத்தி வாழ்க்கைப் பாதையையே புரட்டிப் போட்டு விடுகின்றன என்பதைப் பொட்டிலடித்தாற் ப் போல உணர்த்திய காவியம் வசந்த மாளிகை.
ஒரு கிண்ணத்தை ஏந்துகிறேன் ஆடல்பாடலில் நடிகர் திலகத்தின் ஆற்றல் வெளிப்பாடு வியப்புக்குரியது! நடன அசைவுகளில் அவர் வெளிப்படுத்தியிருக்கும் நளினம் வேகநடை உடல் திருப்பங்கள் முகபாவங்கள் அபாரம் !

https://www.youtube.com/watch?v=su0lZwoaUfE

Concept 2 Statics அமர்வாற்றல் 3 HP!

கௌரவம் மிக்க பாரிஸ்டர் ரஜினிகாந்தாக நடிகர்திலகம் அப்பாத்திரத்தின் Turbulent Natureக்கு மாறாக அமைதியான முறையில் அமர்ந்து தனது உணர்வுகளையும்
விருந்து நடனத்தின் ரசிப்பையும் வெளிப்படுத்தியிருக்கும் விதம் வேறு எந்த நடிகராலும் நினைத்துக் கூடப் பார்க்க இயலாது !!

https://www.youtube.com/watch?v=QKkw0-tbqmk

Concept 3 Mechanics 3 HP !

தாய் மறைவின் வேதனையை மறக்க கேளிக்கை விடுதி சென்று மதுவின் மயக்கத்துக்கு உட்படும்போது பாடல் மாது சௌகார் ஜானகியின் ஆடல்பாடல் குரல்
இனிமையில் மனதைப் பறிகொடுத்து உறைந்து அமர்ந்திருக்கும் போது விடுதியின் உல்லாச மயக்க சூழலில் நடிகர்திலகத்தின் பாவனை ஆற்றல் வெளிப்பாடுகள் நமது மனதை அவர்பால் பரிதாபத்தால் ஈர்க்கின்றன !!


https://www.youtube.com/watch?v=xNInBEF8E7M

Concept 4 Histrionics உடல்மொழியாற்றல் 4 HP!

சிவந்தமண் திரைப்படம் நடிகர்திலகத்தின் திரையுலகப் புகழேணி ஏற்றத்தில் ஒரு முக்கியமான படிக்கட்டே ! கொடுமைக்கார திவானை அழித்திட நாடக
ஆடல்பாடல் திட்டத்தில் அரபு உடையணிந்து கையில் சவுக்கை சுழற்றி காஞ்சனாவை சுழன்றாட வைக்கும் காட்சியமைப்பு தமிழ்த் திரையில் மறக்கமுடியாத சிறப்பு நிகழ்வு. Signature song of LR Easwari adds the pep நடிகர்திலகத்தின் கூர்பார்வை சவுக்கை சொடுக்கும் ஸ்டைல்...அபாரமான உடல்மொழியாற்றல்!!

https://www.youtube.com/watch?v=zd0nJnhQMzQTHE END But NT promises to return for his thanks giving to his villains under a new series 'உன்மத்த முகமூடிக்குப் பின் உத்தம வில்லன்கள் ...' from January, 2015!!

abkhlabhi
18th December 2014, 12:14 PM
Is it true, Shanthi theatre going to demolish ?

KCSHEKAR
18th December 2014, 02:11 PM
1960-களின் இறுதியில் துவங்கி நடிகர் திலகத்தின் படங்கள் வெளியான கால கட்டத்தைப் பற்றிய எனது நினைவலைகளை தாங்கிய இந்த தொடர் பதிவின் அடுத்த கட்டம்.[B]அந்த நாள் ஞாபகம்

முரளி சார்,
நடிகர்திலகத்தின் கடமை உணர்வு, சொன்ன வாக்கைக் காப்பாற்றுதல் என்பதுபோன்ற செயல்பாடுகள் வெறும் வாய் வார்த்தைகள் அல்ல என்பதை தங்களின் பதிவு உணர்த்துகிறது. அந்தக்கால் நினைவுகளை அழகாகப் பதிவிட்டமைக்கு நன்றி.

sss
18th December 2014, 02:15 PM
http://tamil.oneindia.com/img/2014/12/18-1418888589-shanthi-theatre-chennai-600.jpg

சென்னை: சென்னையில் உள்ள பழமையான சிவாஜிகணேசனின் சாந்தி தியேட்டர் இடிக்கப்பட்டு வணிகவாளமாக மாற்றப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அண்ணாசாலையில் அமைந்துள்ள சாந்தி தியேட்டர் 53 வருடங்கள் பழமையானது ஆகும். சென்னையின் முதல் ஏசி தியேட்டர் என்ற பெருமையுடையது. முதலில் இந்த தியேட்டர் ஜி.உமாபதியால் கட்டப்பட்டது. இவர் அண்ணாசாலையில் இருந்த இன்னொரு தியேட்டரான ஆனந்த் தியேட்டர் உரிமையாளர் ஆவார்.

அப்போதைய முதல்வராக இருந்த பெருந்தலைவர் காமராஜர் 1961ஆம் ஆண்டு ஜனவரி மாதம் சாந்தி தியேட்டரை திறந்து வைத்தார். இந்த தியேட்டரில் திரையிடப்பட்ட முதல் படம் வெங்கடேஸ்வரா. இதனையடுத்து சிவாஜி கணேசனின் பாவமன்னிப்பு திரைப்படம் முதன்முதலில் திரையிடப்பட்டது. இப்படம் வெள்ளிவிழா கண்டது.

சென்னை: சென்னையில் உள்ள பழமையான சிவாஜிகணேசனின் சாந்தி தியேட்டர் இடிக்கப்பட்டு வணிகவாளமாக மாற்றப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அண்ணாசாலையில் அமைந்துள்ள சாந்தி தியேட்டர் 53 வருடங்கள் பழமையானது ஆகும். சென்னையின் முதல் ஏசி தியேட்டர் என்ற பெருமையுடையது. முதலில் இந்த தியேட்டர் ஜி.உமாபதியால் கட்டப்பட்டது. இவர் அண்ணாசாலையில் இருந்த இன்னொரு தியேட்டரான ஆனந்த் தியேட்டர் உரிமையாளர் ஆவார்.

அப்போதைய முதல்வராக இருந்த பெருந்தலைவர் காமராஜர் 1961ஆம் ஆண்டு ஜனவரி மாதம் சாந்தி தியேட்டரை திறந்து வைத்தார். இந்த தியேட்டரில் திரையிடப்பட்ட முதல் படம் வெங்கடேஸ்வரா. இதனையடுத்து சிவாஜி கணேசனின் பாவமன்னிப்பு திரைப்படம் முதன்முதலில் திரையிடப்பட்டது. இப்படம் வெள்ளிவிழா கண்டது.

சாந்தி தியேட்டர் 1962ஆம் இந்த தியேட்டரை நடிகர் திலகம் சிவாஜி கணேசன் விலைக்கு வாங்கினார். சிவாஜி நடித்த அனைத்து படங்களும் சாந்தி தியேட்டரில்தான் திரையிடப்பட்டன. சிவாஜி ரசிகர்களால் எப்போதும் சாந்தி தியேட்டர் நிரம்பி வழியும். வெள்ளிவிழா படங்கள் சிவாஜியின் திருவிளையாடல், வசந்தமாளிகை, தங்கப்பதக்கம், திரிசூலம், முதல்மரியாதை ஆகிய திரைப்படங்கள் சாந்தி தியேட்டரில் 25 வாரங்கள் ஓடி வெள்ளி விழா கண்டது.

35 படங்கள் 100 நாள்

சிவாஜி கணேசன் நடித்த திரைப்படங்களில் 35 திரைப்படங்கள் சாந்தி தியேட்டரில் 100 நாட்கள் ஓடியது. பழனி, தில்லானா மோகனாம்பாள் திரைப்படங்கள் 132 நாட்கள் திரையிடப்பட்டன. 2005ல் ரஜினி திறப்பு 2005ஆம் ஆண்டில் தியேட்டரை புதுப்பித்தனர். சாந்தி, சாய் சாந்தி என இரண்டு தியேட்டராக மாற்றப்பட்டது. புதுப்பிக்கப்பட்ட தியேட்டரை ரஜினிகாந்த் திறந்துவைத்தார். பிரபுவின் திரைப்படங்கள் பிரபு நடித்த திரைப்படங்கள் இங்கு நூறு நாட்கள் வெற்றிகரமாக ஓடியுள்ளன. பிரபுவின் சின்னத்தம்பி திரைப்படம் வெள்ளிவிழா கண்டது.
சிவாஜி புரடெக்சன் தயாரிப்பான ராஜகுமாரன் சினிமா நூறு நாட்கள் ஓடியது. ரஜினியின் சந்திரமுகி ரஜினியின் சந்திரமுகி படம் இங்கு திரையிடப்பட்டு 888 நாட்கள் ஓடியது.

சிவாஜி நடித்த கர்ணன் படம் டிஜிட்டிலில் புதுப்பிக்கப்பட்டு இங்கு திரையிட்டனர். 50 நாட்கள் அப்படம் ஓடியது. விக்ரம் பிரபு நடிகர் திலகம் சிவாஜிகணேசனின் பேரன் விக்ரம் பிரபு நடித்து வரும் கும்கி,இவன் வேற மாதிரி உள்ளிட்ட திரைப்படங்கள் சாந்தி தியேட்டரில் 100 நாட்கள் ஓடியது.

லிங்கா கடைசி படமா?

தற்போது லிங்கா திரைப்படம் திரையிடப்பட்டுள்ளது. அநேகமாக இதுதான் சாந்தி தியேட்டரில் வெளியாகும் கடைசி படமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இதனையடுத்து தியேட்டர் இடிக்கப்பட உள்ளது.

சென்னையின் முதல் ஏ.சி தியேட்டரான சாந்தி தியேட்டர் இடிக்கப்பட உள்ளதால் ரசிகர்கள் கவலைப்படுகின்றனர். பழமையான தியேட்டர்கள் இடிப்பு சென்னையில் ஏற்கனவே பழமையான பாரகன், சித்ரா, வெலிங்டன், அலங்கார், ஆனந்த், சபையர், புளுடைமன்ட், எமரால்டு, சன்கெயிட்டி, உமா, மேகலா, ராக்கி, புவனேஸ்வரி, வசந்தி, ராஜகுமாரி, நாகேஷ் உள்ளிட்ட பல தியேட்டர்கள் இடிக்கப்பட்டு விட்டன.

மல்ட்டிப்ளக்ஸ் காம்ளக்ஸ் இடிக்கப்பட்ட தியேட்டர்கள் அனைத்தும் திருமண மண்டபங்களாகவும், வணிக வளாகங்களாகவும், அபார்ட்மெண்ட் குடியிருப்புகளாகவும் மாற்றப்பட்டுள்ளன. நான்கு தியேட்டர்கள் இப்போது சாந்தி தியேட்டரும் இடிக்கப்பட்டு மல்ட்டி ப்ளக்ஸ் காம்ளக்ஸ் ஆக மாற்றப்பட உள்ளது. இந்த வணிக வளாகத்தில் நான்கு சிறு திரை அரங்குகளும் கட்டப்படுகின்றன. விரைவில் இதற்கான பணிகள் துவங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/shanti-theatre-goes-the-multiplex-way-too-217285.html

KCSHEKAR
18th December 2014, 02:16 PM
ஆற்றல் பகிர்வு தரவரிசை 10 : 15 HP[/SIZE][/B]
சிவாஜி செந்தில் சார்,
நடிகர்திலகத்தைப் பற்றி அலச இன்னும் எவ்வளவோ இருக்கிறது. அள்ள அள்ளக் குறையாத அமுதசுரபி நமது நடிகர்திலகம் என்பதை தங்களின் "ஆற்றல் வரிசை" பதிவு நிரூபித்திருக்கிறது. தங்களின் முயற்சிக்கு வாழ்த்துக்கள். நன்றி. தொடருங்கள்.........

Harrietlgy
18th December 2014, 03:34 PM
Very very sad news. (Shanthi theater going to demolish).

eweaxagayx
18th December 2014, 04:20 PM
நடிகர்திலகத்தின் சாந்தி திரை அரங்கம் இடிக்கப்படப் போவதாக இணைய தளத்தில் இன்றைய தினமணி மற்றும் தினமலர் செய்திகள். அது பற்றி என் முகநூல் பதிவு கீழே :-


http://www.dinamani.com/latest_news/2014/12/18/நடிகர்-சிவாஜிகணேசனின்-சாந்/article2577523.ece

இந்த செய்தி உண்மையாக இருக்கும் பட்சத்தில், என்னைப் போன்ற பல்லாயிரக்கணக்கான சிவாஜி ரசிகர்களுக்கு இது ஒரு வருத்தமான செய்திதான், என் இளம் வாலிப வயதில் இத்திரையரங்கில் , பால்கனி பகுதியில் அமர்ந்து கொண்டு பார்த்து, ரசித்து ஆனந்தப்பட்ட பல படங்கள் உண்டு. வேறு எந்த திரையரங்கத்தில் சிவாஜியின் படத்தைப் பார்த்தாலும், சாந்தி திரையரங்கில் பார்த்தால்தான் எங்களுக்கெல்லாம் சந்தோஷமாக இருக்கும். கர்ணன், திருவிளையாடல் , ஊட்டி வரை உறவு, சரஸ்வதி சபதம், தில்லானா மோகனாம்பாள், தெய்வமகன், வியட்நாம் வீடு, தீபம், பட்டிக்காடா பட்டணமா, தியாகம், எங்கிருந்தோ வந்தாள், சவாலே சமாளி, அவன் தான் மனிதன், வசந்த மாளிகை, திரிசூலம் இப்படி பல நூறு வெற்றிப் படங்களை இந்தத் திரையரங்கத்தில் கண்டு களித்துள்ளேன்.

eehaiupehazij
18th December 2014, 05:32 PM
கால ஓட்டத்தில் கருத்து மாற்றங்கள் இயல்பே இவ்வளவு வருடங்கள் உழைத்த ரசிகர்களின் சுமைதாங்கியாக வீற்றிருந்த சாந்தி திரைப்பட கட்டமைப்பு இடிக்கப்படுவது
மனவருத்தமே எனினும் காலப்போக்கில் கட்டடத்தின் வலிமை இழப்பு கூட காரணமாக இருக்கலாம். தவிர்க்க முடியாததே! ஒருவேளை புதிய அடுக்கு வணிக வளாகமாக உருவெடுக்கும்போது சிறிய அளவில் மீண்டும் சாந்தி திரைக்கூடங்கள் நிறுவிடும் வாய்ப்பு உள்ளதே! துளிர்க்கும் நம்பிக்கையுடன் மாற்றங்களை நேர்மறையாக அணுகுவோமே! நடிகர்திலகம் பேரவை சார்பில் வேண்டுகோள் விடுக்கலாமே!

Richardsof
18th December 2014, 08:33 PM
இனிய நண்பர் திரு முரளி ஸ்ரீனிவாசன் சார் .

நான் பதிவிட்ட நிழற்படத்திற்கு நன்றியுடன் நினைவு கூர்ந்தமைக்கு நன்றி . நீங்கள் பதிவிட்டு வரும் 1972ஆண்டின் நிகழ்வுகள் நேரத்தில் நடந்த சம்பவங்கள் பற்றிய என் அனுபவத்தின் ஒரு சிறிய பதிவு..

வேலூரில் 1972 ஆகஸ்ட்மாதம்
நான் படித்த கல்லூரியில் ஸ்தாபன காங் சார்பாக தலைவர் பதவிக்கு போட்டியிட்ட திரு மோகன் என்பவரும்
திமுக சார்பாக பொது செயலாளர் பதவிக்கு போட்டியிட்ட திரு ஏ .சி .சண்முகம் இருவரும் வெற்றி பெற்றார்கள் .
அதே ஆண்டு அக்டோபர் மாதம் மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்களை திமுகவிலிருந்து இருந்து நீக்கியதற்கு ஆதரவு
தெரிவித்து தமிழகம் முழுவதும் அனைத்து கல்லூரி மாணவர்களும் ஒட்டு மொத்தமாக எம்ஜிஆருக்கு ஆதரவு
தெரிவித்து போராட்டம் நடத்தி வெற்றி கண்டார்கள் . இந்த ஆதரவு எம்ஜிஆர் நடத்திய போராட்டங்கள் அனைத்திற்கும் தொடர்ந்து ஆதரவு தந்தார்கள் என்பதை நேரில் பார்த்தவன் என்று முறையில் குறிப்பிடுகிறேன் .

eehaiupehazij
19th December 2014, 12:47 PM
அள்ளஅள்ள குறையாத நடிப்பின் அமுதசுரபி (தலைப்புக்கு நன்றி : KCS Sir /வாசு சார்) நடிகர்திலகமே!!சண்டை சாகசக் காட்சிகளில் நடிகர்திலகத்தின் ஒரிஜினாலிட்டி! (No stunt doubles!) Risk and Rusk


Risk and Rusk Part 1 : Fire Play நெருப்பு விளையாட்டு !

திரைப்படங்களில் கதாநாயகனின் புஜபல பராக்கிரமங்களைக் காட்டும் சண்டைக் காட்சிகளும் சாகச நிகழ்வுகளும் ரசிகர்களைத் திருப்திப் படுத்துவது அந்த நடிகர் டூப் பயன்படுத்தாது ஒரிஜினலாக அந்தக் காட்சியில் தோன்றும்போது மட்டுமே ! அந்த வகையில் பெரும்பாலான மேலைநாட்டு நடிகர்கள் பஸ்டர் கீடன், ஜேம்ஸ் பாண்ட் ஷான் கானரி, புருஸ்லீ, ஜாக்கிசான், ஆர்னால்ட் குறிப்பிடத்தக்கவர்கள். என்றாலும் மிகவும் ஆபத்து நிறைந்த சண்டை சாகசக்காட்சிகளில் உயிரைப் பணயம் வைக்க வேண்டிய தருணங்களில் இவர்களும் டூப் நடிகர்களின் திறமைகளைப் பயன்படுத்திக் கொண்டவர்களே!

ஆனாலும்ரசிக்கத்தகுந்த காட்சிகளை நமது படங்களிலும் காண இயலும்

சண்டைக்காட்சிகளில் சாகசங்களில் தானே நடிக்க வேண்டிய சூழலில் பின்வாங்காது முன் நின்று நெருப்போடு விளையாண்டு விலங்குகளை அடக்கி சாகசம் செய்திருக்கிறார் நடிகர்திலகமும் ரிஸ்க் எல்லாம் தனக்கும் ரஸ்க்கே என்று அவர் நிரூபித்த சில சண்டை/சாகச காட்சிகள்


ரிஸ்க் 1 நெருப்பு விளயாட்டு
ரஸ்க் 1 காத்தவராயன்(1958)

காத்தவராயன் திரைப்படத்தில் குறளி வித்தைக்காரராக வரும் பாலையா சிவாஜி மீது மோடி எடுக்க விடாமல் நெருப்பை ஊதி வீசும் காட்சியில் அஞ்சாது தானே முன் நின்று நடித்திருப்பார் நடிகர்திலகம். சந்திரபாபுவுடன் கொட்டமடித்துக் கொண்டு அவர் நடத்தும் நெருப்பு விளையாட்டு!

சுவர் இருந்தால்தானே சித்திரம் அதுபோலவே நடிகனுடைய அடிப்படை சொத்தே முகம்தானே அந்த முகத்துக்கு நேரே ஊதப்படும் நெருப்பை எவ்வளவு தைரியமாக எதிர்கொள்கிறார் நடிகர்திலகம்!!

Enjoy the most hilarious sequence in the history of NT movies where he parades his highest possible energy in fusion with the stalwart comedians Baaliaah and Chandrababu!! You will never ever forget the rhythmic legwork and body language of NT during the dances!! Sure, you may like to watch this sequence again and again!!

https://www.youtube.com/watch?v=Eew6XEZ9s1U

rusk 2 Uyarndha Manithan ரஸ்க் 2 உயர்ந்த மனிதன்

உயர்ந்த மனிதன் திரைப்படத்தின் இறுதியில் நெருப்பிலிருந்து சிவகுமாரைக் காப்பாற்றும் காட்சியிலும் பாவமன்னிப்பு திரைக்காவியத்தில் ராதா வைத்த நெருப்புக்குள் சிக்கித்தவிக்கும் போதும் ஒரிஜினலாக ரிஸ்க் எடுத்து அசத்தியிருக்கிறார் நடிப்புத்தீ!(9:20 onwards enjoy!)

https://www.youtube.com/watch?v=z39LSARvM1g

rusk 3 Pavamannippu ரஸ்க் 3 பாவமன்னிப்பு

https://www.youtube.com/watch?v=ySGev6uOkeA

rusk 4 Ennaipol oruvan

Here in this 1976 movie NT plays with welding fire from Manohar in a stunt scene!! could not upload!!
NT risks to come back for proving his original taming ability on Animals!

JamesFague
19th December 2014, 01:32 PM
This thread is fully under the control of Mr Senthil Sir through his innovative analysis on NT through

various dimesnion. But he can succeed only in part because the acting prowess of NT is like that. ALLA ALLA KURAIYADHA AMUDHAMAM NUM GANESARIN NADIPPU

ATRAL. Kudos to Mr SS sir.


Regards

eehaiupehazij
19th December 2014, 02:01 PM
This thread is fully under the control of Mr Senthil Sir through his innovative analysis on NT through

various dimesnion. But he can succeed only in part because the acting prowess of NT is like that. ALLA ALLA KURAIYADHA AMUDHAMAM NUM GANESARIN NADIPPU

ATRAL. Kudos to Mr SS sir.


Regards


Thanks for your complements and encomium Mr. S. Vasudeven.

I am just one of the many blind men trying to identify who really is this NT elephant? Whatever I do is just a drop in the ocean compared to the ocean...NT himeself ! Still now I am unable to perceive the perfect definition for this Acting God as whatever I have experienced with him is only a tip of the iceberg!!

நடிகர்திலகம் என்னும் மாபெரும் நடிப்பு மதயானையைப் புரிந்து கொள்ளத் துடிக்கும் எத்தனையோ அறிவுக்கண் மூடிய குருடர்களில் நானும் ஒருவனே!
அள்ள அள்ள குறையாத அமுதசுரபியின் கடைமட்ட சேவகன் நான். என்னால் முடிந்ததை என் சிற்றறிவுக்கு எட்டியதை என் வரையறைகளுக்கு உட்பட்டு எனக்குத் தெரிந்த முறைகளில் இந்தத் திரியை இந்த அளவு வளர்த்து விட்ட எழுத்து திமிங்கலங்களின் முன்னே நான் ஒரு சாதாரண மீனாக நடிகர்திலகம் புகழார்வலப் படைப்புக்களை நன்றியுடன் காணிக்கையாக்குகிறேன். அவ்வளவுதான் வாசு சார்!

RAGHAVENDRA
19th December 2014, 07:45 PM
From 26th December 2014 at Chennai Mahalakhsmi Theatre

https://scontent-a-sin.xx.fbcdn.net/hphotos-xfa1/v/t1.0-9/p480x480/1383767_1010304972320440_7566969300142335561_n.jpg ?oh=35ec3d3041d44025ff65e3cda3c0aa91&oe=54FCC545

https://fbcdn-sphotos-d-a.akamaihd.net/hphotos-ak-xap1/v/t1.0-9/s720x720/10168176_1010305348987069_6035264914982460874_n.jp g?oh=9a674bb417c07528b215da12937a2e4e&oe=550A5C1E&__gda__=1430719782_a339476a50bc3e18871cf5104c652fc d

https://scontent-b-sin.xx.fbcdn.net/hphotos-xpa1/v/t1.0-9/s720x720/10378093_1010305182320419_2600265947720082578_n.jp g?oh=35280779a4b6578532e700edea5f8e77&oe=54F90CF5

https://fbcdn-sphotos-h-a.akamaihd.net/hphotos-ak-xap1/v/t1.0-9/s720x720/10406858_1010305512320386_8764136511215469712_n.jp g?oh=9059ccc6df2171c9e4e481eeb1eab303&oe=553A6D35&__gda__=1426662669_00c5696405b87ad55ed0fe3c76995ed 6

https://fbcdn-sphotos-b-a.akamaihd.net/hphotos-ak-xfp1/v/t1.0-9/p180x540/10429225_1010305478987056_2021741537202140784_n.jp g?oh=5285ec6ee28938f977b5f617f7748b6a&oe=5507F7C8&__gda__=1426196249_b717dcd2538e86c63ea6e5ae469c745 7

https://scontent-a-sin.xx.fbcdn.net/hphotos-xaf1/v/t1.0-9/s720x720/10689932_1010305592320378_937407267401295018_n.jpg ?oh=3e0f55b9b07a953fe9edfa11b4a1884e&oe=554657BC

Info and images courtesy: M.L.Khan, Facebook Page

eehaiupehazij
19th December 2014, 08:14 PM
அள்ளஅள்ள குறையாத நடிப்பின் அமுதசுரபி நடிகர்திலகமே!! PART 2
சண்டை சாகசக் காட்சிகளில் நடிகர்திலகத்தின் ஒரிஜினாலிட்டி! (No stunt doubles!) Risk and Rusk


Risk and Rusk Part 2 : Taming Elephants! யானை விளையாட்டு !

என்னதான் விலங்கினம் மனிதனை விட உடலாற்றலில் மிஞ்சியது என்றாலும் அறிவாற்றலில் உயர்ந்த மனிதனால் அவற்றை கட்டுப்படுத்தி அடிமைப்படுத்த
முடிந்திருக்கிறதே ! ஆனாலும் ஜாக்கிரதையாக கையாளாவிட்டால் அது சிங்கத்தின் வாய்க்குள் அகப்படும் ரிஸ்க்கை உண்டுபண்ணிவிடும். மாபெரும்
வடிவமுள்ள யானை சவாரி சுகமானதே குதிரை சவாரி குதூகலாமானதே அவற்றுக்கு மனநிலை பிறழாதவரை !! மதம்கொண்ட யானை சமயத்தில் பாகனையே பந்தாடிவிடும் குதிரையோ குப்புறத் தள்ளி குழி பறித்துவிடும் இந்த ரிஸ்க்கை எல்லாம் தனது பாணியில் வேறு எந்த நடிப்புக் கலைஞரும் நினைத்துக் கூடப் பார்க்க இயலாவண்ணம் நடிகர்திலகம் ரஸ்க்காக்கிய அழகே அழகு !!

விளையாட்டுப்பிள்ளை / சரசுவதி சபதம் படங்களில் அவர் காலைத் தூக்கி தும்பிக்கையை சுழற்றியபடி பிளிறி வரும் கணேசர்களை எப்படி எதிர்கொள்கிறார்?! என்னவொரு மனதைரியம்!! பார்த்துக்கொண்டிருக்கும் நாம்தான் பதைபதைக்கிறோம் !! இதுவே நடிகர்திலகத்தின் வெற்றிநெற்றியில் இடப்பட்ட திலகம் !!!


ரிஸ்க் 2 விலங்கினத்திற்கே அன்பு விலங்கிடல் !

ரஸ்க் 1 விளையாட்டுப் பிள்ளையின் யானை விளையாட்டு!!

https://www.youtube.com/watch?v=uE25fCTYP7g

ரஸ்க் 2 சரசுவதி சபதம் : வசன மழையில் யானையைக் குளிப்பாட்டி திரும்பி பார்க்காமல் ஓடவிட்டது!

https://www.youtube.com/watch?v=YIPFopNqSosThe End of Risk 2. But NT makes his special Horse Ride and stunts in his unique style that is inimitable and enviable for other actors of this whole country!!

Russellisf
19th December 2014, 10:34 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/a_zps8f513ca1.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/a_zps8f513ca1.jpg.html)

Russellisf
19th December 2014, 10:35 PM
மூன்று திலகங்கள்

http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/b_zpse3b56a27.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/b_zpse3b56a27.jpg.html)

Russellisf
19th December 2014, 10:40 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/a_zps6d9bd2b4.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/a_zps6d9bd2b4.jpg.html)

RAGHAVENDRA
20th December 2014, 07:08 AM
http://upload.wikimedia.org/wikipedia/commons/5/5e/Omar_Sharif_-_Zhivago_-_1965.jpg

How does Omar Shariff connect Nadigar Thilagam? Any guess?

RAGHAVENDRA
20th December 2014, 07:18 AM
நண்பர்களே
சாந்தி திரையரங்கம் பற்றிய அதிகார பூர்வமான செய்தி இது வரை வந்ததாகத் தெரியவில்லை. பத்திரிகை செய்திகள் ஊர்ஜிதப் படுத்தப்பட்டால் நம் கருத்துக்களை வெளியிடலாம்.
இது ஒரு புறமிருக்கட்டும்.
அப்படி அது இடிக்கப்படும் என்ற செய்தியே நம் மனதில் ஒரு பாதிப்பை நிச்சயம் ஏற்படுத்தும். நம்மைப் போன்ற சிவாஜி ரசிகர்களுக்கு வாழ்க்கையோடு ஒன்றிப் பிணைந்தது சாந்தி திரையரங்கம். இது ஒரு அஃறிணைப் பொருள் என்ற நிலையைத் தாண்டி உயிர் பெற்று நம்மோடு வாழ்ந்தே வந்துள்ளது. இது நம்மால் என்றுமே தாங்க முடியாத மனவருத்தம் தரக்கூடிய செய்தியாகும்.
ஆனால் நடைமுறை வாழ்க்கையில் உள்ள யதார்த்தம் காலப்போக்கில் ஏற்படக்கூடிய மாற்றங்களைத் தாங்கியே தீரவேண்டும் என்கிற கட்டாயத்தை நமக்குத் திணித்துவிட்டுப் போகிறது.
நவீன மயமாக்கப்பட்டு வரும் பல்வேறு திரையரங்குகள், முப்பரிமாணத்தை நோக்கிப் பயணிக்கும் தொழில்நுட்பம் இவற்றையெல்லாம் எதிர்கொள்ள வேண்டிய நிலைமையும் பழைய திரையரங்குகளுக்கு ஏற்பட்டு வருகின்றன. திரையரங்குகளில் மக்களின் வருகை மிகவும் குறைந்து இரு இலக்க அளவிலேயே தொடர்வது வருத்தம் தரக்கூடிய செய்தி.
இது மட்டுமின்றி சாந்தி திரையரங்கைப் பொறுத்தவரையில் ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக இருந்து வருவதால் முழுமையாக நவீனமயமாக்கப்படவேண்டுமென்றால் இப்போது இருக்கும் அமைப்பில் சாத்தியமில்லை. ஒலி ஒளி அமைப்பினைத் தாண்டி அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்பட வேண்டும். இது மட்டுமின்றி வளர்ந்து வரும் சினிமா தொழில் நுட்பத்தை சந்திக்க வேண்டிய நிலையில் மாற்றி அமைக்கப் படுவதைத் தவிர வேறு வழியில்லை என்ற நிலை ஏற்பட்டால் அதை செய்து தான் ஆக வேண்டும்.
இந்த நிலையில் தான் சாந்தி திரையரங்கு இருப்பதாக நான் உணர்கிறேன்.
வணிக வளாகமாக உருவாவது காலத்தின் கட்டாயம் மட்டுமின்றி திரையரங்கிற்குச் செல்லும் பார்வையாளருக்கும் அது வசதியை ஏற்படுத்தும். இது நடைமுறையில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
எது எப்படி யிருந்தாலும் ஒரு மினி திரையரங்கினையாவது ஒதுக்கி பிரத்தியேகமாக நடிகர் திலகத்தின் படங்கள் தொடர்ந்து திரையிடப்படவேண்டும்.
இதுவே நமது வேண்டுகோள்.

eehaiupehazij
20th December 2014, 08:53 AM
http://upload.wikimedia.org/wikipedia/commons/5/5e/Omar_Sharif_-_Zhivago_-_1965.jpg

How does Omar Shariff connect Nadigar Thilagam? Any guess?

Omar Shariff in Dr Zhivago (1965) like our NT in Dr Siva (1975)?

Doctor Zhivago is a British 1965 epic drama–romance film directed by David Lean, starring Omar Sharif and Julie Christie. It is set in Russia during World War I

Doctor Zhivago is a novel by Boris Pasternak, first published in 1957 in Italy. The novel is named after its protagonist, Yuri Zhivago, a physician and poet

I think such wisdom nerve tickling and knowledge vein filling quiz series are better to evoke interest and involvement among our fellow hubbers in an interactive mode! Kindly continue with such attempts Sir.

Of course, with some prize? Now, I feel like a first bench 'cashew nut' in your class!

regards, senthil

RAGHAVENDRA
20th December 2014, 09:54 AM
Fine Senthil for your interest and active participation.

Well, let's wait for some more responses...

Of course, the answer will be a pleasant surprise...

RAGHAVENDRA
20th December 2014, 10:05 AM
https://scontent-b-sin.xx.fbcdn.net/hphotos-xap1/v/t1.0-9/s720x720/10850086_840782195980572_5540346840346855083_n.jpg ?oh=5bbbcfc5be5cb2222475d23794ebfea6&oe=553A6F50
விகடன் குழும நிறுவனங்களின் சேர்மன் திரு எஸ்.பாலசுப்ரமணியன் (79), 19.12.2014, வெள்ளிக்கிழமை இரவு 7.30 மணிக்கு காலமானார். சிறிதுகாலமாக உடல் நலிவுற்று மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர், மாரடைப்பால் காலமானார் என்பதை மிகவும் வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

தமிழ்த் திரையுலகிலும், பத்திரிகையுலகிலும் முடிசூடா சக்ரவர்த்தியாகத் திகழ்ந்த திரு எஸ்.எஸ். வாசன் அவர்களின் தவப்புதல்வனான திரு எஸ்.பாலசுப்ரமணியன், தந்தையின் மறைவுக்குப் பிறகு, அவர் வகித்து வந்த பொறுப்புகளை ஏற்றுக்கொண்டார்.

ஆனந்த விகடனை தமது சீரிய சிந்தனையாலும் நுட்பமான செயல்திறனாலும் இன்னும் இன்னும் வளர்த்து, மேலே உயரே உயர்த்தி தமிழ்ப் பத்திரிகையுலகில் அதிகம் விற்பனையாகும் பத்திரிகையாக உச்சம் தொடவைத்தவர் ’எம்.டி.’ என்றும் ‘சேர்மன்’ என்றும் அன்புடன் அழைக்கப்படும் திரு எஸ்.பாலசுப்ரமணியன், தன் அப்பாவைப் போன்று சினிமா உலகிலும் நுழைந்து, வெற்றிப் படங்களை இயக்கியவர். பிறகு, இரண்டு குதிரைகளில் சவாரி செய்ய விரும்பாமல், ஆனந்த விகடன் மீது மட்டுமே தன் அத்தனை கவனத்தையும் செலுத்தியவர்.

50 ஆண்டு கால தமிழ் இதழியலின் பிதாமகனாகத் திகழ்ந்த திரு எஸ்.பாலசுப்ரமணியன், தமிழ்ப் பத்திரிகையுலகுக்கு செய்த பங்களிப்புகள் ஈடு இணையற்றவை. புலனாய்வு இதழியலின் முன்னோடியான 'ஜூனியர் விகடன்' பத்திரிகையும், ஊடகத் துறைக்குக் கொடையான மாணவப் பத்திரிகையாளர் திட்டமும் இவர் நனவாக்கிய நல்ல கனவுகள். சமூகநலக் காரியங்களுக்காக லட்சக்கணக்கான வாசகர்களை ஒன்று திரட்டி, நிறைய நல்ல விஷயங்களை நிகழ்த்திக் காட்டிய சமூக நல நிர்வாகி.

பாசத்துக்குரிய பண்பாளரை, மிகச்சிறந்த பத்திரிகையாளரை, எங்களின் வழிகாட்டியை இழந்து தவிக்கிறோம்.

அனைவரின் கவனத்துக்கு...

மருத்துவம் படிக்கும் மாணவர்களின் ஆராய்ச்சிக்காக தன்னுடைய உடலை தானம் தரவேண்டும் என்பதே சேர்மனின் விருப்பம். அதற்கான பணிகள் நடக்கின்றன.

அதனால், வரும் திங்கள் கிழமை 22.12.2014 அன்று காலை 6 மணி முதல் இறுதி அஞ்சலிக்காக அவருடைய உடல் போயஸ் தோட்டத்து இல்லத்தில் வைக்கப்படும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

முகவரி: ஏ1 டிவோலி அப்பார்ட்மென்ட், எண். 11, கஸ்தூரி எஸ்டேட், போயஸ் கார்டன், தேனாம்பேட்டை, சென்னை-18

-விகடன் குழும ஊழியர்கள்Reproduced from Vikatan Facebook Page

காலத்தின் கையிலும் காலனின் கையிலும் உள்ள அதிகாரம் யாராலும் பறிக்க முடியாது. இதிலிருந்து யாராலும் தப்ப முடியாது.

என்றாலும் இயற்கையின் அழைப்பு சில சமயம் நம் மனதில் ஆழமான பாதிப்பை ஏற்படுத்தி விடுவது மறுக்க முடியாத உண்மை.

விகடன் பாலுவின் மரணமும் அவ்வாறே.

அவருக்கு நமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

அவர் முழுதும் ஈடுபட்டு தயாரித்த நடிகர் திலகத்தின் உன்னதத் திரைக்காவியமான விளையாட்டுப் பிள்ளை படத்திலிருந்து இப்பாடலை அவருக்கு அஞ்சலியாக செலுத்துவோம்.

https://www.youtube.com/watch?v=yKrbVSA7VwA

eehaiupehazij
20th December 2014, 11:43 AM
Heartfelt condolences for the sudden demise of Vikatan Balasubramaniam.

eehaiupehazij
20th December 2014, 11:46 AM
Fine Senthil for your interest and active participation.

Well, let's wait for some more responses...

Of course, the answer will be a pleasant surprise...

Dear Raghavendar sir. In starnostar.com a voting for Sivaji Ganesan Vs Omar Shariff appears. I just voted.

I also guess ur answer may be related to the consideration of NT for the Arab King role in David Lean's Lawrence of Arabia alongside Omar Shariff?

Anyway thanks for keeping me thrilled!! Hope we can rope in our fellow hubbers gradually into such thought provoking programmes as part of glorifying NT.

HARISH2619
20th December 2014, 01:48 PM
Dear raghavendra sir,
i think his hairstyle matches with that of nt's in vasanthamaaligai

Murali Srinivas
20th December 2014, 02:38 PM
விகடன் குழும நிர்வாக இயக்குனரும், ஜெமினி ஸ்டுடியோ முன்னாள் அதிபரும், ஆனந்த விகடன் முன்னாள் ஆசிரியரும், திரைப்பட தயாரிப்பாளர் மற்றும் இயக்குனரும் அனைத்திற்கும் மேலாக நமது அருமை நண்பர் கோபால் அவர்களின் நெருங்கிய உறவினருமான [அத்தையின் கணவர்] திரு. எஸ். பாலசுப்ரமணியன் அவர்களின் மறைவிற்கு நமது திரியின் சார்பாக ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்.

Rip

RAGHAVENDRA
20th December 2014, 06:03 PM
Dear Senthil (Harish) and (Sivaji)

Happy that a curiosity has developed and thank you for the interest in the quiz... I am also optimistic that sharing trivia in an interesting format like quiz will evince keen interest amongst us. Already one such has been commenced in the Kannukkulle Unnai Paaru thread as a visual quiz. Here other such trivia can be shared.

Keep guessing please and wait. Hope someone else comes with the answer.

Of course let me reveal it asap.

Gopal.s
20th December 2014, 06:24 PM
உண்மைதான். நேற்று முதல் மனதை ஒரு துயரம் அரிக்கிறது. அவர் என்னுடைய சொந்த அத்தை கணவர் என்ற போதிலும் அவர் பிஸி ஆக இருக்கும் நாட்களில் அவரை ரொம்ப அரிதாகவே சந்தித்துள்ளேன். பிறகு கொஞ்ச காலம் எனது விமரிசனத்திற்கும் ஆளானார்.

ஆனால் அவர் எத்தகைய அற்புத மனிதர் என்பது அவருடன் ஓரளவு நன்கு பழகிய கடந்த இருபது வருடங்களில் அறிய,உணர,அதிசயிக்க,இதம் தரும் இணைப்பானது உணர்த்தியது.

நான் முதல் முதலில் சென்னையில் டி.வீ. வந்த போது (1975) ,சுமார் ஒரு வருடம் அவர் வீட்டிற்கு அடிக்கடி செல்வேன்.ஆனால் ஹாஸ்டல் சேர்ந்த பிறகு 1976 முதல் 1981 வரை மிக அரிதான உபசார நோக்கு வருகை புரிவேன்.ஆனால் அத்தனை புது படங்களும் ரிலீஸ் ஆகு முன்பே ஜெமினி லேப் projection போது பார்த்து விடுவேன்.


என் அப்பா பயங்கர நேர்மை ,சுயம் கொண்டவராதலால் தான் எந்த உதவியும் இந்த உறவில் பெறாததோடு,எங்களையும் அவ்வாறே வளர்த்தார்.அதனால் எங்கள் உறவு சம அந்தஸ்துடன் ஆரோக்யமாகவே திகழ்ந்தது.

வீட்டிற்கு செல்லும் போதெல்லாம் தானே சமையல் செய்து எங்களுக்கு பரிமாறி மகிழ்வார். பிறகு ,பல மணிநேரங்கள் நேரம் போதாமல் பல விஷயங்கள் பேசுவார். ஒரு மேதையின் மகனல்லவா? விவசாயம்(Farming ) பற்றி நிறைய பேசுவார்.பலவித விதவிதமான காய்களை ,பழங்களை தானே உருவாக்கி எங்களுக்கு படப்பையிலிருந்து அடிக்கடி அனுப்புவார். நான் ஒரு விலங்கு நேசம் என்பதால்,என்னை பறவை பண்ணைக்கு அழைத்து சென்று விளக்குவார்.(அவர் ஒரு ornithologist என்பதற்கு மேலே Avi -culturist )எழுத்து,தயாரிப்பு,இயக்கம் என பல்துறை விற்பன்னர். ஆனால் தனது passion என படும் விருப்பங்களை வியாபாரம் சார்ந்து மட்டும் இயக்காமல் பலமுனைகளில் deviant ஆக அவர் இருந்ததால், தந்தை வாசன் விட்டு சென்ற பலவற்றை தொடர முடியாமல் (கால மாற்றமும்) சிறிதே சரிவையும் சந்தித்தார்.

தனது ஊழியர்களால் மிக சிறந்த மனிதாபியாக அறிய பட்டவர். நானே பல முறை கண்டுள்ளேன். பீ.எச்.பாண்டியனால் வானளாவிய அதிகாரம் கொண்டு ,ஒரு கார்டூன் ஒன்றிற்காக (படுதலம் சுகுமாரன்) சிறை சென்ற போது ,அவர் காட்டிய நெஞ்சுரம் சொல்லி மாளாது.(இத்தனைக்கும் தங்க தட்டில் பிறந்தவர்) ஸ்டுடியோ ,லேப் ,தயாரிப்பு என்பதில் கோட்டை விட்டாலும் விகடன் குழுமத்தில் முனைந்து பல புதுமை சாதனைகள் செய்தார். investigative &Watchdog journalism என்பதற்கு இன்றும் முன்னதாரணமான ஜூனியர் விகடன், விகடன் பிரசுரத்தின் வேறு பட்ட வெளியீடுகள் இவர் மூளையிலிருந்து வேர் விட்டு பயிரானவை.

இறந்த பிறகும் ,ஒரு பெரிய பகுத்தறிவு தலைவர்கள் என்று பீற்றி கொள்பவர்கள் கூட செய்ய தயங்கியதை செய்துள்ளார். தன ஈம சடங்குகளை வைதீக முறையில் செய்ய விடாமல் ,உடலை,கண்களை தானமளித்து விட்டார்.

எனது மாமா என்ற ஞான முன்னோடியே, எளிமை கொண்ட மனிதாபிமானியே,பல்துறை விற்பன்னரே,உங்களை இந்த ஆண்டு ,ஒரு முறை கண்டு விட்ட பிறகு இது நேர்ந்திருக்கலாமே? ஏதோ குறை வைத்து வானுலகம் சென்று விட்டீர்களே?

சம்பிரதாயமாக அமரர் ஆனவர்களை ,குறிப்பிடும் வார்த்தையை மனபூர்வமாக சொல்கிறேன். உங்களின் ஆன்மா எங்களை வழி நடத்தட்டும்.

RAGHAVENDRA
20th December 2014, 11:05 PM
Sivaji Ganesan - Definition of Style 10

நடிகர் திலகம் என்னும் அட்சய பாத்திரம் அள்ள அள்ளக் குறையாத அட்சய பாத்திரம் மட்டுமல்ல அந்த உணவு நம் விருப்பத்தையும் நிறைவேற்ற வல்லதாகத் தருவதும் கூட என்ற உண்மையை யார் உணர்ந்திருந்தார்களோ இல்லையோ, அமரர் எஸ்.எஸ்.வாசன் மிக நன்றாக உணர்ந்திருந்தார். பரஸ்பரம் இணக்கமான சூழல் அல்லாதிருந்தாலும் நடிகர் திலகம் அதனைத் தொழிலில் புகுத்தாமல் வேறு படுத்தும் பண்பைக் கொண்டிருந்ததால் மேலும் மேலும் உயரப் பறந்து கொண்டிருந்தார். இப்படிப்பட்ட ஒரு சூழலில் உருவானதே இரும்புத் திரை, திரைக்காவியம்.

ஒவ்வொரு காட்சியிலும் அந்தக் கதாபாத்திரத்தின் இயல்பு கெடாமல் பார்த்துப் பார்த்து செதுக்கியிருப்பார் நடிகர் திலகம். ஒரு படித்த தொழிலாளிக்கும் படிக்காத தொழிலாளிக்கும் வேறுபாட்டைக் காட்ட அவரால் முடிந்தது. இந்த முதலாம் வகைத் தொழிலாளியை இரும்புத் திரை திரைப்படத்தில் மிகச் சிறப்பாக வடித்திருப்பார்.

காதல் காட்சிகளைக் காமமாக சித்தரிக்கும் படங்களிலிருந்து மாறுபட்டு மிக இயல்பான ஒரு காதல் காட்சியை இரும்புத் திரை திரைப்படத்தில் வடித்திருப்பார்கள் நடிகர் திலகம்-வாசன்-வைஜெயந்திமாலா கூட்டணி.

இந்தக் கூட்டணியின் இந்தக் காட்சி இன்றைக்கும் நெஞ்சில் பசுமையாய் நிழலாடுகிறது என்றால் அதற்கு பெரும் பங்கு நடிகர் திலகத்திற்கும், உடன் நடித்த வைஜெந்திமாலா அவர்களுக்கும், மிகச் சிறப்பான பின்னணி இசையை வழங்கிய எஸ்.வி.வெங்கட்ராமன் அவர்களுக்கும் ஒளிப்பதிவாளருக்கும் அனைத்தையும் ஒருங்கிணைத்து ஒரு காவியமாய் நிறைவடையச் செய்த வாசன் அவர்களுக்கும் சாரும்.

இனி காட்சிக்கு வருவோம்.

துவக்கத்தில் வரும் பின்னணி இசையே பாடலின் Moodஐ அருமையாய்க் கொண்டு வரும். ஒரு சிறிய கல் மேல் அமர்ந்தவாறு ஒவ்வொரு கல்லாய் தண்ணீரில் வீசும் போதே, தான் வெகு நேரமாய் காத்திருக்கிறோம் என்பதை விளக்கி விடுகிறார் நடிகர் திலகம். மேற்சட்டையின் கைகளில் பாதிக்கு மடித்து வைத்திருக்கும் போதே அவர் ஒரு தொழிலாளி என்பதை உணர்த்தி விடுகிறார். வைஜெயந்தி வந்தவுடன் பதில் வணக்கம் தரும் போது கைகளைக் கூப்பிச் செலுத்தும் நேர்த்தி கண்களைக் கவர்கிறது, பெண்மைக்குத் தரும் மரியாதையை நிலைநிறுத்துகிறது.

அமர்ந்தவுடன் ஒரு சில விநாடிகள் மௌனம். கதைகளில் கதாசிரியர் மௌனம் என்று சுலபமாக எழுதி விடுவார். அதைத் திரையில் வடிக்கும் போது அதற்கு ஒரு நடிகன் எப்படி உயிர் தரவேண்டும்.

இங்கே மௌனமே மொழி பேசுகிறது..

இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து மெல்ல சிரிப்பது...

பின்னணியில் புல்லாங்குழலை வாசித்தபடி ஒரு மேய்ப்பன் வருகிறான்.

நாயகன் அந்தப் புல்லாங்குழல் வரும் திசையைப் பார்க்க, நாயகியோ அவனைப் பார்க்கிறாள்.

அவன் அந்தப் புல்லாங்குழல் ஓசையை ரசித்துக் கொண்டிருக்க, இவளோ அவனை ரசித்துக் கொண்டிருக்கிறாள்.

அவன் அந்தப் புல்லாங்குழல் ஓசையை சிலாகிக்க, இவளோ எது என வினவுகிறாள் ஒன்றுமே தெரியாதவளைப் போன்ற குறும்புமிக்க புன்னகையுடன்..

அவன் சங்கீதத்தைப் பற்றி அவள் கூற அவனோ ஒன்றுமே தெரியாததைப் போல கூற, ஒரு குறும்பு செய்யவேண்டி அந்தப் புல்லாங்குழலை மேய்ப்பனிடமிருந்து வாங்கி முதலில் வாசிக்கிறான். ஒலி எதுவும் வரவில்லை. காற்று மட்டுமே ...

ஒரு சிறிய குறும்பிற்குப் பின்னர் இனிமையான இசை இவன் வாசிப்பில் அப்புல்லாங்குழலிலிருந்து வெளிப்படுகிறது.

இந்த இடத்தில் "ம்ம்.. ஏதாவது ராகம் " என அவள் சொன்னதை வேண்டுமென்றே குறும்பாக கிண்டல் செய்து இரண்டு முறை சொல்வது ஒரு உரிமை அவர்களுக்குள் இருப்பதை நிலைநாட்டுகிறது.

அந்த ஏதாவது என்ற வார்த்தைக்குள்ளும் இசையைக் கொண்டு வரும் நேர்த்தி..

இந்த இசை முடிந்தவுடனும் அதிலிருந்து அவளால் மீளமுடியவில்லை..

அவளால் மட்டுமா..

நம்மாலும் தான்.

இந்தக் காட்சியில் வெளிப்பட்டிருக்கும் நடிகர் திலகத்தின் நடிப்பு..

வேறு யாராலும் பின்பற்ற முடியாத கனவிலும் நினைத்துப் பார்க்க முடியாத அற்புத ஸ்டைல்...

இது இவரால் மட்டுமே முடிந்த ஒன்றாகும்..

https://www.youtube.com/watch?v=5_lghtjmgzU

இந்தக் காட்சியில் காதல் வசனங்கள் ஏதுமில்லை... ஆனால் அதற்கான Buildup இருக்கிறது. இதுவே இப்படத்திற்கு உயிர்நாடியான காட்சி.

இக்காட்சியைத் தரவேற்றிய நம் அன்புமிக்க வாசு சாருக்கும் யூட்யூப் இணையதளத்திற்கும் உளமார்ந்த நன்றி

ஒரு காதல் பாடல் எப்படிப் படமாக்கப் படவேண்டும், அதில் நாயக நாயகியின் நடிப்பு எப்படி இருக்க வேண்டும்.. இதோ ஓர் இலக்கண நூல்..

ஆஹா.. அந்த மந்தகாசப்புன்னகை வீசும் அந்த திராவிட மன்மதனின் முகம்... பெண்மையின் இலக்கணமாய் ஒளிவீசும் கண்களுடன் வைஜெயந்தி... நாடி நரம்புகளையெல்லாம் மீட்டும் மென்மையான இசை, காதல் உணர்வை அற்புதமாய் சித்தரிக்கும் பாடகர் திலகம் மற்றும் பி.லீலாவின் குரல்கள்...

https://www.youtube.com/watch?v=q48ihhHK5kg

அமரராகி தந்தையுடன் சேர்ந்து விட்ட பாலு சாருக்கு இப்பதிவினை சமர்ப்பணம் செய்கிறேன்.

RAGHAVENDRA
20th December 2014, 11:40 PM
Omar Shariff and NT..

The Egyptian Connection..

At the Afro Asian Film Festival it was Omar Shariff who compered and announced the name of NT as the best actor.

eehaiupehazij
21st December 2014, 07:06 AM
Omar Shariff and NT..

The Egyptian Connection..

At the Afro Asian Film Festival it was Omar Shariff who compered and announced the name of NT as the best actor.


Thanks a lot Raghavendar Sir. Such Titbits or Trivia type of data or information on our beloved NT will always get embedded in the viewer's mind like the two line Thirukkural. Further interactions and deliberations will certainly help create a data base for explorers of NT like me in refining and perfecting contributions to this thread.

Keep up irrigating this thread for creating our own greenery so that our concentrations will always be on imploring the sustained growth of this thread.

regards, senthil

P.S.
kindly peruse starnostar.com for voting Sivaji Ganesan Vs Omarshariff

RAGHAVENDRA
21st December 2014, 09:21 AM
http://www.hinduwikipedia.com/wp-content/uploads/2014/08/Lord-Hanuman4.jpg

இன்று ஹனுமத் ஜெயந்தி அனுசரிக்கப்படுகிறது. நட்சத்திரம் அடிப்படையில் சில கோயில்களில் நாளை அனுசரிக்கப்படுகிறது.

ஆஞ்சநேயர் அருளால் வாழ்வில் அனைவரும் எல்லா வளமும் பெற்று நலமுடன் வாழ வேண்டுவோம்.

இதோ ஆஞ்சநேய பக்தராக நடிகர் திலகம் முரடன் முத்து திரைக்காவியத்தில்.

https://www.youtube.com/watch?v=K-FjcyMiVuw#t=445

07.25லிருந்து பார்க்கவும்

eehaiupehazij
22nd December 2014, 09:20 AM
அள்ளஅள்ள குறையாத நடிப்பின் அமுதசுரபி நடிகர்திலகமே!!புதிய குறுந்தொடர் : படமா? பாடமா?!

மனிதனின் பண்பாடு கலாசார நாகரிக வளர்ச்சியில் திரைப்படங்கள் வானொலி தொலைகாட்சி மற்றும் பத்திரிகைகள் போன்ற ஊடகங்களின் பங்கு பள்ளி கல்லூரிப் படிப்புக்குச் சற்றும் குறையாத பங்கினை வகிக்கின்றன நமது வாழ்க்கை முறையினை அடியொற்றியதே திரைப்படங்கள் என்றாலும் வணிக நோக்கு மிஞ்சி வெறும் ஒற்றைச் சாரளமான பொழுதுபோக்கு அமசங்களையே குறிவைத்து திரைப்படங்கள் நகர்ந்துகொண்டிருந்த சூழலில் நடிப்புப் புயலாக ஊடுருவி உச்சத்தை அடைந்த நடிகர்திலகம் மட்டுமே திரைப்படங்கள் வெறும் காணொளிப் படங்களாக பார்த்தவுடன் மறந்து விடக்கூடிய தன்மையின்றி காலங்கள் மாறினாலும் மக்கள் மனதில் மறக்கவொண்ணாத திரைப்பாடங்களாக நிலைபெற்று மனித வாழ்க்கை நகர்வுக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார்.

பணம் சம்பாதிப்பது மற்றுமே குறிக்கோளாக இல்லாது நடிப்புப் பசி கொண்ட மதயானையாக திரைக்காட்டையே அவர் கலக்கி எடுத்ததால்தான் இன்று அமரகாவியங்களாக அவர் விட்டுச்சென்றிருக்கும் கர்ணன், பாசமலர், தில்லானா மோகனாம்பாள், திருவிளையாடல், நவராத்திரி, தெய்வமகன், கௌரவம் தங்கப்பதக்கம்.....ப வரிசைக்காவியங்கள்....புதிய பறவை, வீரபாண்டிய கட்டபொம்மன்.....கணக்கிலடங்காத காலத்தை வென்ற காவியங்கள் நின்று நிலைத்த திரைவழிப் 'பாடங்களாக' ரசிகர் கூட்டத்தை இன்றும் திரையரங்குகளை நோக்கித் திரளச் செய்கின்றனவே!!நடிகர்திலகத்தின் ஒப்புயர்வற்ற நடிப்புத் திறனால் வெறும் படங்களை அவரால் எப்படி பாடங்களாக மாற்ற முடிந்தது என்பது பற்றிய ஒரு அலசலே இக்குறுந்தொடரின்
சிறப்பு நோக்கம்


படம்1 : கர்ணன்

பாடம்1:

தர்மத்தின் வாழ்வுதன்னை சூது கவ்வும் ஆனால் இறுதியில் தர்மமே வெல்லும்!

தர்மதேவதையின் புதல்வனே ஆனாலும் செஞ்சோற்றுக்கடன் ஆற்றிட தர்மப்பாதையிலிருந்து பிரள நேர்ந்தால் அழிவையே சந்திக்க நேரிடும் என்னும் கருத்தை மக்கள் மனதில் ஆணி அடித்தாற்ப் போல் பதிய வைத்தது கர்ணனாக மனதை கொள்ளைகொண்ட நடிகர்திலகத்தின் நடிப்பாற்றலே!! வசன மழை பொழிந்திடாது மெய்சிலிர்க்க வைக்கும் முகபாவங்களாலேயே அம்புகள் தைக்கப் பட்டு மரணத்தின் விளிம்பிலும் தர்மசிந்தனையை கைவிடாது இறைவனையே ஆட்கொண்ட உச்ச நடிப்பினை வழங்கி இறைவனின் விஸ்வரூப தரிசனத்தின் முன் தனது நடிப்பின் விஸ்வரூபத்தை வெளிப்படுத்திய நடிப்புச் செம்மலே! என் வாழ்வின்அர்த்தம் உனது ரசிகனாக இருந்து உன் திரைப்பாடங்களின் கருத்துக்களை உள்வாங்கி உன்போல் உழைப்பை மட்டுமே மூலதனமாக்கி உயர்வதே !

https://www.youtube.com/watch?v=QroxeC_HQ6k

பாடம் 2 :
பசித்தவனுக்கு மீனைக் கொடுப்பதை விட மீன் பிடிக்க கற்றுக் கொடுப்பதே சாலவும் நன்று : கொடையில் சிறந்தது ஒரு நல்ல மாணவனை உருவாக்கிடும் கல்விக் கொடையே
பாடம் 3

தந்தை சொல் மிக்க மந்திரமில்லை !

என்னதான் தானவீரனாக இருந்தாலும் தன்னுடன் ஒட்டிப்பிறந்த உயிர்காக்கும் கவசகுண்டலங்களையே தானம் செய்யும் அளவுக்கு இந்திரனின் சூதுவலையில் தந்தை சூரியனார் எச்சரித்த பின்னும் தர்மசிந்தனையே என் கர்மபலன் என்று மனோதிடம் மாறாத கர்ணனே! சிந்தை தெளிந்து தந்தை சொல்லை மதித்திருந்தால் துன்பம் கூடாதிருந்திருக்குமே!!

https://www.youtube.com/watch?v=UvmgYkgg3o8

பாடம் 4

பெத்த மனம் பித்து.... பிள்ளை மனம் கல்லு ! தர்மரூபன் கர்ணன் விஷயத்திலோ......பிள்ளை மனம் பித்து...பெத்த மனமோ கல்லாகி மற்ற பிள்ளைகளின் நல்வாழ்வுக்காக ஒதுக்கித் தள்ளிய தெய்வமகனிடமே வரம் கேட்டு இறைஞ்சுமளவுக்கு!!

குந்திதேவியே தனது அன்னை என்றறியாது அவரைப் பார்த்த கணமே உடல் குறுகி மனம் மருகி இனம் புரியாத பாசமும் மரியாதையும் கலந்த உணர்வுத் தேக்கத்துடன்
வணங்கி வரவேற்று நெகிழும் அந்தக் கணமே உலகின் எந்த நடிப்புக் கலைஞரும் காட்ட இயலாத நுட்பமான முகபாவங்களில் எம் மனதை நொறுக்கியவரே !
ரசிப்புத்தன்மை கெட்ட சுருட்டுக் கனவான்களிடம் உன் உலகத்திலேயே உயர்ந்த நடிப்புத் திறமைக்கு உரிய அங்கீகாரத்தை எதிர்பார்ப்பது இருட்டுக்குள் கறுப்புப்
பூனையைத் தேடும் குருடனின் அவல நிலையே !!

https://www.youtube.com/watch?v=pslsqW3vslk

eehaiupehazij
22nd December 2014, 07:49 PM
NT Titbits!

காத்தவராயன் (1958) திரைப்படத்தில் நடிகர்திலகம் வயோதிகர் கெட்டப்பில் பாடி ஆடும் ஆரியமாலா பின்னாளில் NT ராமாராவ் தனது பலே தம்முடு (1965) (remake of Shammi Kapoor's China Town) திரைப் படத்தில்KR விஜயாவுடன் ரயில் பயணத்தின் போது அதே கெட்டப் அங்க அசைவுகளுடன் நடித்திருப்பார்!

https://www.youtube.com/watch?v=3e5kN_aGzww

https://www.youtube.com/watch?v=DExpV1g7nW4

அதே படத்தில் ராமாராவ் கிளப்பில் விஜயாவை கவர ஸ்டெப்புலு டான்ஸ் ஆடிப்பாடும் காட்சியமைப்பில் தெய்வமகன் (1969) திரைப்படத்தில் நடிகர்திலகம் சற்று மாறுபட்டு தனது ஸ்டைலில் அன்புள்ள நண்பரே பாடலில் கதாநாயகி ஜெயலலிதாவை கவர பாடி ஆடி அசத்தியிருப்பார்

https://www.youtube.com/watch?v=-YldXnJOWL8

https://www.youtube.com/watch?v=5WKtmwRtoXY

கர்ணனின் புகழுக்கு பக்கபலமாக இருந்து பெருமை சேர்த்திட்ட N.T. ராமாராவ் அவர்களுக்கு நன்றியறிதல்கள் !

RAGHAVENDRA
22nd December 2014, 09:53 PM
Sivaji Ganesan - Definition of Style 11

New Dimension - ஆம்... தன்னுடைய 54வது வயதில், 222வது படத்தில் தன்னுடைய நடிப்பில் புதிய பரிமாணத்தைக் கொண்டு வந்தவரை என்னவென்று சொல்வது..

ஒரே வார்த்தையில் சொல்வதானால் ... GENIUS...

கருடா சௌக்கியமா

இந்தப் படத்தைப் பற்றி வாசு சார் அக்கு வேறு ஆணி வேறாக அலசி விட்டார். இதில் புதியதாக நான் சொல்ல என்ன இருக்கிறது. எந்த அம்சத்தையும் விட்டு வைக்காமல் அணு அணுவாக ரசித்து எழுதி விட்டார் வாசு சார்.

இருந்தாலும் இப்படத்தில் ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறாக ஒரு காட்சியைப் பற்றி அலச விரும்புகிறேன்.

தீனதயாளு, தான் உயிருக்குயிராக நேசித்த தன் தாய் மேரியம்மாவை ஒரு பணக்காரன் காரை ஏற்றிக் கொன்று விடுகிறான். அதோடு நிற்காமல் தீனதயாளுவைக் கொல்ல ஒரு அடியாளோடு அவர் வீட்டிற்கு வருகிறான். வந்த அடியாள் தீனதயாளுவைப் பார்த்தவுடன் தன் வேலையை விட்டு விட்டு அவருக்கு மரியாதைக்கு வணக்கம் செலுத்தி விட்டுச் சென்று விடுகிறான். இப்போது அந்தப் பணக்காரனுக்கும் தீனதயாளுவிற்கும் இடையே நடக்கும் உரையாடல் தான் இந்த ஸ்டைல் தொடரில் இந்த பாகத்தின் கரு.

காட்சி 1.38.லிருந்து துவங்குகிறது.

சிரித்தவாறே திரும்புகிறார் தீனதயாளு...அந்த சிரிப்பு, கையில் அந்த சிகரெட்டைப் பிடித்திருக்கும் லாவகம், கழுத்தை ஒரு பக்கமாய் சாய்த்து அந்தப் பணக்காரரை (சங்கிலி முருகன்) பார்க்கும் பார்வையில் வெளிப்படும் அந்த மேம்போக்குத்தனம்... இந்த ஒரு விநாடி காட்சியிலேயே ரசிகர்கள் FLAT...என் ஆளையே வைத்து என்னை மடக்கப் பார்க்கிறியா, என்ன புத்திசாலின்னு நெனப்பா.. இந்த வரிகளை அவர் சொல்லும் விதம் ...புதுமையானது.. A different perspective in voice modulation ...தான் யார், தான் செய்த காரியம் என்ன என்பதை ஒவ்வொன்றாக சொல்லிக் கொண்டே அவர் நடந்து வரும் பாணி... மிக மிக வித்தியாசமானது.. இந்த மாதிரி கோணத்தில் அவர் நடிப்பை நாம் பார்த்தது இதுவே முதன் முறை...அதாவது இந்த மாதிரி வில்லத்தனமான வசனங்களை ஒரு இளைஞனாக நடித்த போது அவர் உச்சரித்த விதமே வேறு.. உதாரணம் திரும்பிப் பார், பெண்ணின் பெருமை போன்ற படங்கள்..

ஆனால் இதே வில்லத்தனமான நடிப்பை இந்தப் படத்தில் அந்த வயதான பாத்திரத்தில் அவர் ஏற்று நடித்திருப்பது புதுமையிலும் புதுமை.. உன் பார்ட்னரை உன்னை விட்டு விலகச் சொன்னது நான் தான் என்று சொல்லும் போது ஒரு காலைத் தூக்கி வைக்கும் அகம்பாவம்...உன் மேனேஜரை விட்டே உன்னை இங்கே கூட்டிக்கிட்டு வரச்சொன்னது நான் தான் என்று சொல்லும் போது அந்த சிகரெட்டை வருடும் ஸ்டைலைப் பாருங்கள்..

காரணமும் நானே.. காரியமும் நானே... இதைச் சொல்லும் போது அவருடைய விழிகளைப் பாருங்கள்.. என்னை மீறி உன்னால் ஒன்றும் செய்ய முடியாது எனக் கூறும் அந்தக் கண்களில் தெறிக்கும் கனல்...எப்படி என்னோட கீதோபதேசம் எனச் சொல்லும் போது சிரிக்கும் ஆணவச் சிரிப்பு...

பணக்காரன் காலில் விழும் போது க்ளோஸப்பில் கண்களில் தெறிக்கும் அனல்... சிவனின் நெற்றிக்கண் தோற்றது...

அவன் எழுந்திருக்கும் போது, அவன் சுட்டுக் கொன்றது தன் தாயைத் தான் என அவர் கூறும் போது, அந்தக் கோபத்தைத் தாண்டி சோகமும் குடி கொள்கிறது.. சோகத்திற்குள் பாசம் ஒளிந்திருக்கிறது.. அந்தப் பாசம் கோபத்தை மீண்டும் கிளறி விடுகிறது..

எங்கம்மாவின் உயிரோட விலை பத்தாயிரம் ரூபாய் இல்லை.. எனக் கூறிக் கொண்டே வேட்டியை தூக்கிக் கட்டும் போது அதில் அந்த கோபம் வெளிப்படுவதைப் பாருங்கள்.

என் ஆட்களை அனுப்பிச்சா ஒன்னை ஒரேயடியாக க்ளோஸ் பண்ணிடுவாங்க.. இந்த வரிகளைச் சொல்லும் போது கைகளால் சொடுக்குப் போட்டு அந்த அதிகாரத்தைக் காண்பிக்கும் பாணி..

நீ அப்படி சாகக்கூடாது.. உன் உயிர் இருக்கும் வரை அணு அணுவா சாகணும் எனச் சொல்லும் போது அந்த விரல்களில் அந்த அணு அணுவாக என்ற வார்த்தைக்கு அர்த்தம் தருகிறார் ...

இதையெல்லாம் சொல்லி விட்டு அத்தனை பணக்காரர்களுக்கும் இந்த தீன தயாளு விடும் எச்சரிக்கை டாய்.. என சொல்லி விட்டு

எட்றா துண்டை என்கிறாரே பாருங்கள்... ஆஹா...

அந்த துண்டை எடுத்து அவர் தோளில் சுற்றிப் போடும் ஸ்டைல்... முடிக்கும் போது கைகளின் உதவி இல்லாமலேயே மூக்கை உறிஞ்சும் Finishing Touch...

https://www.youtube.com/watch?v=EIeKaEuk0SQ

A film with a different dimension of Acting by the Genius...

There are umpteen scenes in this film.. which has to be analysed frame by frame about NT' Acting prowess.

குறிப்பாக முத்துகிருஷ்ணா என்ற பெயரை இப்படத்தில் நடிகர் திலகம் உச்சரிக்கும் போதெல்லாம் நம் காதில் ஸ்டைல் மன்னா... என நம் மனசு கூவிக்கொண்டே இருக்கிறது.

Georgeqlj
23rd December 2014, 10:28 AM
Ooty Varai Uravu (Full Movie) - Watch Free Full L: http://youtu.be/xX6CiPzFH3I


கோவை டிலைட்டில்
கிறிஸ்துமஸ் முதல்


தமிழ்நாட்டின் மாமனிதர்
அரசியல் மேதைகளும் அஞ்சிய

நடிகர்திலத்தின்


ஊட்டி வரை உறவு.

eehaiupehazij
23rd December 2014, 01:00 PM
இந்திய திரையுலகின் பின்னணிப் பாடகர்களில் தனித்துவம் பெற்று ஒரு முடிசூடா மன்னராக வலம் வந்தவர் முகமது ரபி அவர்கள் இந்திமுன்னணிக்
கதாநாயகர்கள்...குறிப்பாக ஷம்மிகபூர் அவர்களின் குரலாகவே வாழ்ந்தவர். அவரது 90வது பிறந்ததினத்தில் நினைவு கூர்வோம்.
தமிழில் TM சவுந்திரராஜன் நடிகர்திலகத்தைப் பெருமைப்படுத்திய இரு புகழ் பெற்ற பாடல்களை இந்தியில் பாடியவர்.

எல்லோரும் நலம் வாழ நான் பாடுவேன் எங்க மாமா

https://www.youtube.com/watch?v=vo00ogHbydI

இந்தி பிரம்மச்சாரியில் ......(Starring Shammi Kapoor)

https://www.youtube.com/watch?v=9eeIYoAAxgg


ஆறு மனமே ஆறு .....ஆண்டவன்கட்டளை

https://www.youtube.com/watch?v=G97Q6mVk4yc

இந்தியில் .....Heer Ranjhaa (Starring Raaj Kumar)

https://www.youtube.com/watch?v=SuFIMnqb6H4

sss
23rd December 2014, 01:52 PM
http://www.rediff.com/news/jul/05siv4a.jpg

For millions across the world, conferring of the Dadasaheb Phalke award on thespian Sivaji Ganesan could not have come a day too soon, the award acting as a salve on the collective hurt suffered by Tamilians to see this emotional powerhouse being overlooked for the national acting award time and time again.

In contrast, the present award does not celebrate his performance in just one film -- leave that for the young and restless, or the bold and beautiful, they have miles to go -- but lauds his lifetime contribution to cinema.

And, you can say that again. If there is one actor beyond the Vindhyas who moulded generations of actors with his manner of acting, who inspired the audience to a feeling of pride in their rich heritage simply with his dialogue delivery, who will not say die even when age and ill-health have reduced his strength, well, the selectors have chose right.

Often is the comparison made between the other actor from Bombay, Dilip Kumar, and Sivaji Ganesan. The comparison is not only odious, but also erroneous. Certainly Dilip Kumar is an actor par excellence, but there is a crucial difference. In his heyday, and till today, Dilip Kumar had that something about him that turned women into jelly by just watching him. Sivaji too played romantic roles in his time, and to be honest well beyond it, but he never had that quality about him that made women heady; that honour went to the other Ganesan, Gemini, better known to the world as actress Rekha's father. Sivaji moved women all right; they flocked to the cinema houses to see him, but he brought in the mothers, not the daughters.

Tamil cinema, like its Hindi counterpart, is of vintage quality, and, importantly, it was used to kindle the national spirit and, after freedom, the regional spirit. This is something critical below the Vindhyas and it is also something that those beyond the ranges cannot easily accept. For the latter, speaking as a Tamilian, I suppose it beats comprehension that before they turned this ancient land into a civilised one, there was already a large group flourishing with its own mores, language, customs and traditions, all of which survive till today.

It is not something that the south will forget, their cinema being only one medium to articulate this pride. That the so-called secondary centre, Madras, has beaten the daylight out of the premier, Bombay, can easily be seen from the quality of films being made at the two places, and that no Hindi actor or actress today considers himself or herself as having arrived till they act in one particular Tamil director's films or from the number of Tamil films being dubbed/remade into Hindi but still failing to capture the original flavour.

The last point, in fact, can best be illustrated with the recent Hindi hit, Virasat. The role essayed by Amrish Puri, simply another powerhouse, loses its sheen when compared against the original played by Sivaji Ganesan in Thevar Magan.

The point I am trying to make is this: that Tamil cinema has today reached its pinnacle thanks to the efforts of stalwarts like, and particularly, Sivaji Ganesan, and that is not regional pride alone talking.

Today, the question of a national award still eluding him does not arise; it would amount to honoring the award, and not the other way around. But it does not obliterate the fact that even as he was putting in appearances that would made a lesser actor quail, he was repeatedly overlooked for the same for just one reason: political compulsions.

In the glory days of the Dravida movement, power flowed not from the barrel of a gun but from the playwright's pen and the actor's performance. Inside, by Annadurai, a duo emerged that set Tamil cinema first and the state next afire: M Karunanidhi as the penman and M G Ramachandran as his sword-arm. There was a third force, who stayed out of using films as a political vehicle, but still managed to play roles that roused the audience, Sivaji Ganesan.

Among his early repertoire were films of every hue: mythological, historical and socials, but it was the historicals that still ring in one's ears. His dialogue delivery in the film Veera Pandiya Kattabomman, about a Tamil king who opposed the Brits in vain, must still be played over and over in acting schools in Madras.

Oh, there were many more that moved one so, that very few films do today. Tamil cinema by now had been divided into two separate audiences, rooting for MGR and Sivaji Ganesan, the hero of the masses and the hero of the classes respectively. In the midst of it all was politics.

The Dravidians had come to power, but the tension between the sword and the arm that held it soon erupted. And when MGR broke away from Karunanidhi, the central government -- no prizes for guessing who it was headed by -- conferred the national award on MGR. Have any of you seen MGR act? Oh, he could sway the crowds with his good Samaritan roles, but in the acting stakes my bathroom boiler would probably notch higher.

It was de rigeur those days for actors to belong to political parties, and Sivaji Ganesan was a member of the Congress party, the overseer of things all over. But what must have cost him the important award, which his doorpost rival bagged so effortlessly, was the fact that he never espoused his politics through his films. And that politics, not performance, is what counts needs no illustration than the fact that the same MGR was even conferred that Bharat Ratna posthumously, by the central government headed by the same party.

But none of Sivaji's performances were considered worthy of an award, never mind that he spawned an entire generation of actors or that even the mightily Kamal Hasan could not overhaul him when they finally starred together. Yes, to his critics Sivaji Ganesan will remain a ham, a loudmouth whose idea of emoting is to contort the face, but they are missing the woods for the trees.

Acting, those days, hadn't come across method, and, more importantly, the only way one could come into cinema was through the stage, so an element of theatricality was bound to be there. But why would critics be there if not to criticise? They have not prevented other countries from appreciating Sivaji's contribution to cinema. And like the true artiste he is, he has not let such petty things bother him; he has continued to do what he knows best. And, whenever the history of Tamil cinema is chronicled, it will be Sivaji who will dominate the pages.

- Saisuresh Sivaswamy
http://www.rediff.com/news/jul/07sai.htm

sss
23rd December 2014, 04:32 PM
காதலித்து மணந்த முதல் மனைவியை விபத்தில் பறிகொடுத்து விட்டு (சந்தர்ப்ப சூழ்நிலையால் அவள் இறந்து விட்டதாக நினைத்து) பற்றற்ற வாழ்க்கை வாழும் ஒரு புற்றுநோய் டொக்டர் தன்னை வளர்த்து ஆளாக்கியவர்களுக்கு செலுத்தும் நன்றிக்கடனாக (விருப்பமில்லாமல்) செய்துகொண்ட இரண்டாவது திருமணத்தில் மனம் ஈடுபடாத வாழ்க்கை, அவளோடு ஏற்பட்ட வாக்குவாதத்தால் விபத்து நேர்ந்து கண்களையும் இழந்து தவிக்க, சந்தர்ப்பவசமாக முதல் மனைவியே அவருக்கு நேர்ஸாக வர, இரண்டாவது மனைவியோடு தன் கணவர் விரும்பாத வாழ்க்கை வாழ்வது அறிந்து, அவரை அவள் பால் திருப்ப எடுக்கும் முயற்சியின் ஒரு கட்டமாக, உடல் நலமில்லாத அவரை வோக்கிங் அழைத்துப் போகும் போது, அவர் மனம் மாற்றம் ஏற்பட பாட, அதற்கு மறுப்பு தெரிவித்து கணவர் பாடும் பாடல். இதுதான் சிட்டுவேஷன்.

இதற்கு பாடல் எழுதுங்கள் இயக்குநர் பீம்சிங் ஒரே மூச்சில் சொல்லி முடித்தார். பல்லவிக்காக மெல்லிசை மன்னரும் மூன்று ட்யூன்கள் போட்டு காண்பித்தார். அதில் ஒன்று பிடித்துப் போக, பல்லவிக்காக வரிகளை யோசித்துக் கொண்டிருந்த கண்ணதாசன், தன் உதவியாளர் பஞ்சு அருணாசலத்திடம் டேய் பஞ்சு, காரில் என் ஃபைல் இருக்குல்ல? அதை எடுத்துவிட்டு வா என்றார். பஞ்சுவும் ஃபைலுடன் வந்தார்.

அதைப் புரட்டி, ஒரு தாளை எடுத்த கவிஞர், இந்த வரிகளைப் பாருங்கள், கண்ணனைப் பற்றி நான் எழுதிய பாடல். இதில் அவன் என்பதை அவள் என்று மாற்றிப் பாருங்கள் விசு போட்ட சந்தத்துக்கும் நீங்க சொன்ன சிட்டுவேஷனுக்கும் பொருந்தும் என நினைக்கிறேன் என்றார். பீம்சிங் பாடலை வாங்கிப் பார்த்தார். பாடல் இப்படி இருந்தது. என்னை யாரென்று எண்ணி எண்ணி நீ பார்க்கிறாய் இது யார் பாடும் பாடல் என்று நீ கேட்கிறாய் நான் அவன் பேரை தினம் பாடும் குயிலல்லவா என் பாடல் அவன் தந்த மொழியல்லவா இதில் அவன் என்று வந்த இடங்களை அவள் என்று மாற்றி விஸ்வநாதன், தன் மெட்டோடு பாட, வாவ்! கனகச்சிதமாக பொருந்தியது. எல்லோரும் ஆச்சரியத்தில் உறைந்து போனார்கள்.

மெல்லிசை மன்னர் துள்ளி குதித்தார். எப்படி கவிஞரய்யா இது...? என்று. சொற்களை மாற்றிய பின் பாடலின் தன்மை அப்படியே மாறிப்போனது. கடவுளைப் பற்றி கவிஞர் எழுதிய பாடல், இரண்டாவது மனைவியோடு சேர்ந்து வாழும்படி நேர்சாக வந்த முதல் மனைவி அட்வைஸ் செய்ய, அவர் அதை மறுப்பதாக அமைந்தது. என்னை யாரென்றும் எண்ணி எண்ணி நீ பார்க்கிறாய். இது யார் பாடும் பாடல் என்று நீ கேட்கிறாய் நான் அவள் பேரை தினம் பாடும் குயிலல்லவா என்பாடல் அவள் தந்த மொழியல்லவா

படம் - பாலும் பழமும்

https://www.youtube.com/watch?v=AtrOLDpmaT8

courtesy:http://www.goldentamilcinema.net/index.php/cine-info/136-2012-09-27-20-57-44

Murali Srinivas
23rd December 2014, 08:05 PM
மணிசேகரன் சாருடன் சில மணி நேரங்கள்

மணிசேகரன் - நமது இந்த மன்றத்தில் நெடுநாள் உறுப்பினராக இருப்பவர்கள் அனைவருக்கும் அறிமுகமான பெயர். பழைய படங்கள் மற்றும் பாடல்கள் பற்றிய பல்வேறு தகவல்கள், அன்றைய நாட்களின் முன்னணி நாயகர்கள், நாயகிகள், இசையமைப்பாளர்கள், பாடகர்கள் ஆகியோரை பேட்டிக் கண்டு அதை சுவைபட இங்கே எழுதியவர். 2008-ல் நான் தொடராக எழுதிய பாடல்கள் பலவிதம் பகுதியை முதலில் ஆரம்பித்து எழுதியவர். மலேஷியாவில் பிறந்து வளர்ந்த இவர் இப்போது ஜெனிவாவில் ஐக்கிய நாட்டு சபையின் கீழ் வரும் ஒரு தொண்டு நிறுவனத்தில் பணி புரிகிறார். எப்போது தமிழகத்திற்கு வந்தாலும் தகவல் சொல்லுவார். அவரை நான் சந்திப்பது வழக்கம். சென்ற வாரம் சென்னை வந்திருந்த அவரை சந்தித்தேன்.

எப்போதும் போல் பல்வேறு விஷயங்களை பற்றி பேசிக் கொண்டிருந்தோம். 1970-களிலும் 80-களிலும் நடிகர் திலகத்தின் படங்களை சென்னை திரையரங்குகளில் பார்த்த அனுபவங்களை உணர்ச்சி பொங்க விவரிப்பார். முதன் முறையாக 1977 மே மாதம் கோடம்பாக்கம் லிபர்ட்டி தியேட்டரில் புனர் ஜென்மம் படத்தை பார்த்ததையும் அதில் நடிகர் திலகம் கூலிங் கிளாஸ் அணிந்து நடந்து வரும் ஸ்டைலிற்கே ரசிகர்கள் ஆர்ப்பரித்ததையும் எப்போதும் நினைவு கூறுவார் அதன் பிறகுதான் தமிழகத்திலே ரசிகர்கள் எந்தளவிற்கு நடிகர் திலகத்தின் நடிப்பின் நுணுக்கங்களை ரசிக்கிறார்கள் என்பதை புரிந்துக் கொண்டதாக சொல்வார். அதன் பிறகு ஒவ்வொரு முறை தமிழகம் வரும்போதும் இது போல பழைய படங்கள் ஓடும் திரையரங்குகளுக்கு செல்வதை வழக்கமாக கொண்டிருக்கிறார்.

இப்போது முன் போல் பழைய திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியாவதில்லை என்பதனால் கடந்த சில பல வருடங்களாக அவரால் போக முடியவில்லை. இம்முறை சென்னைக்கு வரப்போகும் தகவலை தெரிவிக்க தொடர்பு கொண்ட அவர் நடிகர் திலகத்தின் படம் ஏதேனும் ஒன்றை திரையரங்கில் பார்க்க முடியுமா என்று ஆவலோடு கேட்டார். அவரிடம் அவர் வரும் நேரமும் நமது NT FAnS அமைப்பின் சார்பில் மாதந்திர படம் திரையிடும் தேதியும் அதே சமயத்தில் அமைந்திருப்பதை தெரிவித்து விட்டு அவரை படம் பார்க்க அழைத்தேன். நடிகர் திலகத்தின் எல்லாம் உனக்காக திரையிடப்படப் போகிறோம் என்று தெரிந்ததும் மிக மிக மகிழ்ச்சியாக வருவதாக சொன்னார்.

படம் திரையிட்ட டிசம்பர் 14 ஞாயிறு அன்று காலை உடல்நலமில்லாமல் இருக்கும் அவரது நீண்டநாள் நண்பர் ஒருவரை காண காஞ்சிபுரம் சென்ற மணி சார் அங்கிருந்த சூழல் காரணமாக உடனே திரும்ப முடியாமல் மாலை 5 மணிக்கு மேல்தான் கிளம்பியிருக்கிறார். டிராபிக் காரணம் இங்கே வந்து சேரும்போது இரவு 7.30 மணி ஆகிவிட்டபடியால அவரால் படத்திற்கு வரமுடியவில்லை. அதற்காக மிகவும் வருத்தப்பட்டார். படத்தின் முக்கிய காட்சியான முதலிரவு காட்சியில் சில நிமிட துளிகளில் நடிகர் திலகத்தின் முகம் எப்படி பல்வேறு முகபாவங்களை பிரதிபலிக்கும் என்பதை விவரித்து அதை காண முடியாமல் போய்விட்டதே என்று வருத்தப்பட்டார்.

இப்படி பல்வேறு விஷயங்களைப் பற்றி பேசிக் கொண்டிருக்கும்போது ஒரு ஆச்சரியமான விஷயத்தை பகிர்ந்துக் கொண்டார். ஐக்கிய நாட்டு சபையின் கீழ் வரும் அலுவலகத்தில் வேலை செய்வதால் அவருடன் பல நாட்டு மனிதர்களும் இணைந்து வேலை செய்கின்றனர். இவரிடம் நட்பாக இருக்கும் பல நாட்டவரும் இவரின் வீட்டில் வந்து இவர்களின் விருந்தோம்பலை ஏற்று போவதுண்டு. அப்படி ஒரு நாள் இவரது வீட்டிற்கு ரஷ்ய பெண்மணி ஒருவர் வருகை தந்திருக்கிறார். அவர் வரும்போது மணி சார் youtube இணையதளத்தில் பந்தா பாசம் படத்தில் வரும் நித்தம் நித்தம் மாறுவது எத்தனையோ பாடலை பார்த்துக் கொண்டிருந்திருக்கிறார். அந்த ரஷ்ய பெண்மணியும் பாடலை பார்க்க உட்கார்ந்தவர் அப்படியே பாடலில் லயித்துப் போயிருக்கிறார். குறிப்பாக நமது நடிகர் திலகத்தின் முகபாவங்களைப் பார்த்துவிட்டு வியப்பு மேலிட அந்தக் காட்சியைப் பற்றியும் படத்தின் கதையைப் பற்றியும் கேட்க மணி சார் அவர்க்கு புரிகிறார் போல் விளக்கியிருக்கிறார். குடும்ப சூழல் காரணமாக மாற்று திறனாளியான ஒரு பெண்ணிற்கு வாழ்வு கொடுக்கும் நாயகன் அந்த கல்யாணம் நடைபெறும்போது நாயகன் காதலித்த பெண்ணே தாலி எடுத்துக் கொடுப்பது அதன் பிறகு வரும் முதலிரவு காட்சி பாடலின் இறுதியில் resigned to the fate என்பது போல் ஒரு சிறு புன்முறுவல் காட்டி திரும்பும் நடிகர் திலகம், மொழியறியாமல் பிரமித்துப் போய் பார்த்துக் கொண்டிருந்த அந்த ரஷ்ய பெண்மணி ஒரு pen drive-ல் அதை copy எடுத்துக் கொண்டு போனாராம்.

ஒரு விதத்தில் பார்த்தால் நடிகர் திலகத்தின் நடிப்பை ரசிக்க மொழியறிவு தேவையில்லையே! ஆசிய ஆப்ரிக்க படவிழா தொடங்கி, மார்லான் பிராண்டோ, டேவிட் லீன் போன்றவர் முன்மொழிந்து பிரெஞ்சு அரசாங்கம் வழிமொழிந்த கல்வெட்டு உண்மை அல்லவா அது!

நன்றி மணி சார்!

அன்புடன்

sivaa
23rd December 2014, 08:49 PM
இயக்குனர் சிகரம் கே.பாலசந்தர் காலமானார்

http://mmimages.maalaimalar.com/Articles/2014/Dec/730e00af-8efd-4f55-b1a2-ffb99d69e69d_S_secvpf.gif
திரைப்படம் http://www.maalaimalar.com/Images/VideoLogo.gif

ரஜினிகாந்த, கமல் ஹாசன், சுஜாதா, சரிதா, உள்ளிட்ட நூற்றுக்கணக்கான தமிழ் நடிகர்-நடிகையரை அறிமுகப்படுத்தியதுடன் சமூக சீர்திருத்த கருத்துகளுடன் கூடிய கதையம்சத்துடன் அமைந்த பல புரட்சிப் படங்களை இயக்கியதன் மூலம் இயக்குனர் சிகரம் என புகழப்பட்ட கே.பாலசந்தர் இன்றிரவு காலமானார்.

தஞ்சை மாவட்டம், நன்னிலம் அருகேயுள்ள நல்லமாங்குடி கிராமத்தில் 9-7-1930 அன்று பிறந்த கே.பாலசந்தர், மேடை நாடகத் துறையில் இருந்து திரைத்துறைக்கு வந்தவர். 1965ம் ஆண்டு வெளியான நீர்க்குமிழி இவரது இயக்கத்தில் வெளிவந்த முதல் திரைப்படமாகும்.

இதில் கதாநாயகனாக நாகேஷ் நடித்திருந்தார். இவருடைய பெரும்பாலான படங்களில், மனித உறவு முறைகளுக்கு இடையிலான சிக்கல்கள், சமூகப் பிரச்சினைகள் ஆகியவையே கருப்பொருளாய் விளங்கின. அபூர்வ ராகங்கள், புன்னகை மன்னன், எதிர் நீச்சல், அரங்கேற்றம், அவள் ஒரு தொடர்கதை, வறுமையின் நிறம் சிகப்பு, உன்னால் முடியும் தம்பி போன்ற படங்கள் இவரது தனி முத்திரையை திரையுலகில் பதிவு செய்த குறிப்பிடத்தக்க படங்களில் முக்கியமானவையாக கருதப்படுகின்றது.

தமிழ்த் திரையுலகின் முக்கிய நடிகர்களான கமல் ஹாசன் மற்றும் ரஜினி காந்தை அறிமுகம் செய்த இவர், 90-களுக்குப் பிறகு கையளவு மனசு போன்ற பெரும் வரவேற்பை பெற்ற தொலைக்காட்சித் தொடர்களையும் இயக்கினார். பாலச்சந்தரின் வெற்றிப்படங்களில் ஒன்றான நூற்றுக்கு நூறு தற்போது மறு தயாரிப்பு செய்யப்பட்டு வருகின்றது.

மேஜர் சந்திரகாந்த், இரு கோடுகள், பூவா தலையா, பாமா விஜயம், தாமரை நெஞ்சம், நான் அவனில்லை, புன்னகை, சிந்து பைரவி, அபூர்வ ராகங்கள், தண்ணீர் தண்ணீர், அச்சமில்லை அச்சமில்லை, அக்னிசாட்சி, புதுப்புது அர்த்தங்கள், வானமே எல்லை, ஜாதிமல்லி, நூற்றுக்கு நூறு, கல்கி போன்ற வெற்றிப் படங்களை தமிழில் இயக்கிய இவர் மரோசரித்ரா உள்ளிட்ட தெலுங்குப் படங்களையும் ஏக் துஜேகேலியே, ஜரா சி ஜிந்தகி, ஏக் நயீ பஹேலி போன்ற இந்திப்படங்களையும் இயக்கியுள்ளார்.

பல்வேறு பிலிம்பேர் விருதுகள், 1987-ல் பத்மஸ்ரீ விருது, 2010-ல் தாதாசாகேப் பால்கே விருது போன்ற சினிமாத்துறை விருதுகளை பெற்றுள்ள பாலசந்தருக்கு அண்மையில் திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டு, அதன் தொடர்ச்சியாக சுவாசக் கோளாறு ஏற்பட்டது.

இதையடுத்து, 84 வயதான அவர் ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் சில தினங்களுக்கு முன்னர் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. எனினும், சிகிச்சை பலனின்றி அவர் இன்றிரவு சுமார் 7 மணியளவில் காலமானார்.

அவரது உடலுக்கு ஏராளமான திரையுலக பிரமுகர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

malaimalar

ஆழ்ந்த இரங்கல்கள்..!

Gopal.s
23rd December 2014, 08:54 PM
பாலசந்தர் மறைவுக்கு இந்த ஏகலைவன் அஞ்சலி.

eehaiupehazij
23rd December 2014, 09:50 PM
heartfelt condolences for the sudden demise of Director K. Balachandar, one of the doyens of Tamil Cinema.

RAGHAVENDRA
23rd December 2014, 10:15 PM
http://www.thehindu.com/multimedia/dynamic/01731/25MP_BALACHANDER_1731046g.jpg

தமிழ் சினிமாவில் ஸ்ரீதருக்குப் பிறகு புதிய டிரெண்டை உருவாக்கியவர் கே.பி. நடிகர் திலகத்துடனான முதல் படத்திலேயே முத்திரை பதித்தவர். எதிரொலியோடு நடிகர் திலகம் கேபி கூட்டணி நின்று போனது தமிழ் சினிமாவிற்கு துரதிருஷ்டம். எதிரொலி மட்டும் வெற்றி பெற்றிருந்தால் அது எந்த அளவிற்கு தமிழ் சினிமாவில் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்திருக்கும் என்பது கணித்திருக்க முடியாததாகும். பல படங்களில் அவருடைய கதாபாத்திரங்கள் அவருக்குள் நடிகர் திலகத்தை உருவகப் படுத்தி அதனை வெளிக்கொண்டு வந்துள்ளதாக நான் பலமுறை உணர்ந்திருக்கிறேன். அதற்கு மிகச் சிறந்த உதாரணம் நான் அவனில்லை. ஜெமினி கணேசன் நடித்திருந்தாலும் கூட கேபியை பொறுத்தவரை அவர் அந்தப்பாத்திரத்திற்குள் நடிகர் திலகத்தை உருவகப்படுத்தியே வடிவமைத்திருந்தார் என நான் பலமுறை நினைத்திருக்கிறேன், இன்றும் நம்புகிறேன். அந்த உருவகத்தை ஜெமினி கணேசன் மூலமாக அவர் வெற்றிகரமாக வெளிக்கொண்டு வந்தார் என்றும் நான் எண்ணியதுண்டு. அவருக்குள் நடிகர் திலகத்தை வைத்து இன்னும் படங்களை இயக்கியிருக்கலாமே என்கின்ற ஏக்கம் நிச்சயம் இருந்ததுண்டு என்றும் அதை சில கதாபாத்திரங்களின் வடிவமைப்பின் மூலம் அவர் தீர்த்திருக்க வாய்ப்புண்டு என்றும் நான் நம்பி வருகிறேன். இதற்கொரு இன்னொரு உதாரணம், நூற்றுக்கு நூறு. இதில் வரும் பேராசிரியர் கதாபாத்திரத்தைப் பொறுத்த மட்டில் TO SIR WITH LOVE மற்றும் ஆண்டவன் கட்டளை இந்த இரண்டு நாயகர்களின் கலவையாக வடித்திருந்தார் என்பதே என் அபிப்ராயம்.

இன்னும் நூறாண்டுகளுக்கு கேபியின் சகாப்தம் நிலைத்திருக்கும். ஸ்ரீதரும் கேபியும், பீம்சிங்கிற்குப் பிறகு தமிழ்த்திரையுலகை வலுவாக தாங்கி நின்ற தூண்கள்.

ஆனால் இந்தத் தூண்கள் சாயவில்லை, சொல்லப்போனால் அந்தத் தூண்களின் வண்ணமாக இவர்கள் கலைந்திருக்கலாம். இவர்கள் வடித்த தூண்களாக மகேந்திரன், பாரதிராஜா, போன்றவர்கள் தாங்கி நிற்பார்கள். அவர்களுக்குப் பின்னும் அவர்களுக்கு அடுத்தடுத்த தலைமுறையினர் அந்தப் பொறுப்பை நிச்சயம் ஏற்பார்கள்.

வருங்காலத்தில் தமிழ் சினிமாவின் பாதை உலக உச்சியை நோக்கிச் செல்லும். அப்போது அவர்களை அங்கே வரவேற்க கே.பி., ஸ்ரீதர், பீம்சிங், போன்றோர் காத்திருப்பர்.

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/KBRECEIVINGSIVAJIGANESANAWARD_zps4f3372b6.jpg

Murali Srinivas
24th December 2014, 12:13 AM
இயக்குனர் சிகரம் பாலச்சந்தர் அவர்களின் மறைவிற்கு ஆழ்ந்த இரங்கல்கள்

sss
24th December 2014, 09:29 AM
http://www.koodal.com/cinema/gallery/events/2011/511/celebrities-wish-k-balachander-stills_19_124518123.jpg

kalnayak
24th December 2014, 10:33 AM
இயக்குனர் சிகரம் பாலச்சந்தர் மறைவிற்கு கண்ணீர் அஞ்சலி

KCSHEKAR
24th December 2014, 10:35 AM
இயக்குனர் சிகரம் பாலச்சந்தர் அவர்களின் மறைவிற்கு இதயப்பூர்வமான அஞ்சலி
http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/KBALACHANDER_zpsa14b8153.jpg (http://s1234.photobucket.com/user/sivajiperavai/media/KBALACHANDER_zpsa14b8153.jpg.html)

JamesFague
24th December 2014, 11:05 AM
Rip kb sir.

Georgeqlj
24th December 2014, 11:39 AM
Sivaji Ganesan - Devanin Kovililae - Vellai Roja : http://youtu.be/CMfbEd5aggI

sss
24th December 2014, 02:59 PM
http://upload.wikimedia.org/wikipedia/en/8/88/Ethiroli.jpeghttp://i.ytimg.com/vi/b6D96viEpZI/hqdefault.jpg

Q: You had directed only one film with Sivaji Ganesan as hero …what was the reason?

REPLY FROM KB:

Before ‘Ethiroli’ was started, it was decided to make a film with Sivaji. The film was to be directed by P. Madhavan and I was given the responsibility of scriptwriting. The producer was Ramakrishnan, Sivaji’s make-up man. Sivaji told me that he would discuss the story at his bungalow at Surakottai. I stayed there with Madhavan and Ramakrishnan for about five days for this purpose. Sivaji liked the story very much and gave his consent to do the film. But as he was very busy, the project was getting delayed. In the meantime, Ramakrishnan died suddenly and the project was shelved once for all.

After many years, producer G. N. Velumani came forward to make the film ‘Ethiroli’ with Sivaji in the lead. Velumani gave me the opportunity to direct the film. I was very nervous to direct Sivaji, a colossus. But the great actor encouraged me a lot and made me feel confident. During the schedule, he suddenly asked me to conceive a scene with scope for displaying his versatile acting. I was bewildered because it was a realistic story about a lawyer and his life. Over-acting wouldn’t suit the story, I told Sivaji. He didn’t argue and immediately understood. The film released on 27-6-1970. But Sivaji’s fans didn’t accept him in that role and the film flopped.

One of my close friends told me that the movie flopped because it was neither a Sivaji film nor a Balachander film!

KCSHEKAR
24th December 2014, 03:25 PM
செலுலாய்ட் சோழன் – 51
(From Mr.Sudhangan's FB Page)

1961ம் வருடம் சிவாஜிக்கு ராஜயோகம் என்றே சொல்லலாம்!
இந்த வருடம் மூன்று `பா’ வரிசைப் படங்கள்!
`பாசமலர்’ `பாலும் பழமும்’ ` பாவ மன்னிப்பு’ மூன்று படங்களுமே போட்டி போட்டுக்கொண்டு ஒடிய படங்கள்!!
ஆனாலும் மக்கள் மனதில் மிகவும் ஆழமாக பதிந்து போன படம் `பாசமலர்’
`பாசமலர்’ வெள்ளி விழா கண்ட படம்!
இந்தப் படம் வந்த போது எனக்கு மூன்று வயது!
ஆனால் எனக்கு பத்து வயதாக இருக்கும் போது, அம்மாவோடு இந்த படத்தை பார்த்தேன்!
படத்தை பார்த்துவிட்டு வெளியே வரும்போது! ஒரு துக்க வீட்டிலிருந்து வருபவர்களை போல மக்கள் அழது கொண்டே வருவார்கள்!
இந்த அழுகையில் `ஆண் பெண்’ பாகுபாடே இருக்காது!
ஆயிரம் படங்களுக்கு மேல் வசனம் எழுதிய ஆரூர்தாஸ் இந்தப் படத்தின் மூலமாகத்தான் சிவாஜியுடன் இணைந்தார்.
அவரை சிவாஜிக்கு அறிமுகம் செய்து வைத்தவர் நடிகர் ஜெமினி கணேசன்!
இதில் சிவாஜி, சாவித்திரி, ஜெமினி மூன்று பேருமே போட்டி போட்டுக்கொண்டு நடித்திருப்பார்கள்!
அண்ணன் – தங்கை பாசத்தை வைத்து படமெடுப்பவர்களுக்கு இந்த படம் தான் ஒரு கையேடு!
தங்கையே தனக்கு உலகம் என்றிருக்கும் அண்ணன்!
அண்ணன் தான் எல்லாம் என்றிருக்கும் தங்கை!
அந்த தங்கையில் கதா பாத்திரத்தில் வெகுளித்தனமும் இருக்கும், குடும்பப் பொறுப்பும் இருக்கும்!
ஒவ்வொரு காட்சியையும் செதுக்கி இருப்பார்கள்!
காரணமில்லாமல் ஒரு காட்சி கூட நகராது!
இதில் அண்ணன் ராஜீ கதாபாத்திரம் சிவாஜிக்கு
தங்கை ராதா சாவித்திரி!
ஆனந்தனாக வரும் ஜெமினி கணேசனும், சிவாஜியும் ஒரே மில்லில் வேலைப் பார்ப்பவர்கள்!
இருவரும் நட்பாவதற்கு முன்பே ஆனந்தனும், ராதாவும் சந்தித்திருப்பார்கள்!
அதன்பிறகு ஆனந்தனும், ராஜீவும் நண்பர்களாவார்கள்.
இப்போது ஆனந்தனுக்கும் ராதா மீது காதல் வரும்!
தன் காதலை ராதாவிடம் தனிமையில் வெளிப்படுத்துவார்!
`காதல்’ ன்னா என்னா ?’
வெகுளித்தனமாக கேட்பார் சாவித்திரி
`அதாவது நான் உன்னை வாழ்க்கைத் துணையாக ஏற்றுக்கொள்வது’
`வாழ்க்கைத் துணைன்னா என்ன ?’
அத்தனை வெகுளித்தனத்தை வெளிப்படுத்தும் அதே கதாபாத்திரத்துக்கு அவள் அண்ணனை தவிர வேறு எதுவுமே தெரியாது!
ஆனால் பொறுப்புள்ள தங்கை என்பதையும் அடுத்த காட்சியிலேயே காட்டியிருப்பார்கள்.!
ஆனந்தன், சொன்னதால் ராஜுவான சிவாஜி அவர்கள் வேலை செய்யும் மில்லின் தொழிற்சங்கத்தைல் சேருவான். இப்போது மில்லை மூடிவிட்டார்கள்.!
தான் சங்கத்தில் சேர்தததால் தான் மில்லை மூடிவிட்டார்கள் என்று நினைத்தபடியே தன் தங்கையிடம் புலம்புவார் சிவாஜி!
ராஜு: நான் அப்பவே நெனைச்சேன். இந்த ஆனந்த பய பேச்சக் கேட்டதுனாலே தான் இவ்வளவும் துன்பமும். அந்த மடப் பய ஆயிரம் சொல்லுவான், இந்த மடப்பயலுக்கு எங்கே போச்சு மூளேங்கிறேன்…?
ராதா: எங்கேயும் போகலை, ஒங்ககிட்டத்தான் இருக்கும்!
ராஜு : சும்மாயிரும்மா, நீ விளையாடாதே நீ. அப்புறம் எனக்குக் கோபம் வரும். இதனால எவ்வளவு துன்பமெல்லாம் வரும் தெரியுமில்ல ?
ராதா: இப்ப என்ன குடி முழுகிப் போச்சு ? ஏண்ணா இப்படி குதிக்கிறீங்க ?’
ராஜீ : வயிறு எரியுது
ராதா: ஏன் அர்த்தமில்லாம எரியுது ?’
ராஜீ: அவன் சொன்னதனாலதானே சங்கத்துல சேர்ந்தேன். சங்கத்துல சேர்ந்ததுனாலதானே ஸ்ட்ரை பண்ணினேன். ஸ்டிரைக் பண்ணினதாலதானே கதவை இழுத்து மூடினான். கதவை இழுத்து மூடினதாலதானே வேலை போச்சு. இப்போ நாளைக்கு அவனா வந்து சோறு போடுவான்?’
ராதா : நிறுத்துங்க! நிறுத்துங்க. இப்படி வந்து உட்காருங்க
ராஜீ : ம்.. எல்லாம் வேதனை மடத்தனமான காரியம் பண்ணிட்டு இப்ப வேதனையா முடிஞ்சுட்டுது
ராதா : நான் கேக்கறதுக்கு பதில் சொல்லுங்க
ராஜு: என்ன ?
ராதா : ஆமா, அவரு பேச்சை கேட்டுத்தானே நீங்க சங்கத்துல சேர்ந்தீங்க ?’
ராஜு : ஆமா
ராதா : நீங்க சங்கத்துல சேர்ந்ததுனாலேதான் ஸ்ட்ரைக் பண்ணினாங்களா ?
ராஜு : ஆமா ?
ராதா : நீங்க ஸ்ட்ரைக் பண்ணினதுனாலதான் கம்பெனியை மூடிட்டாங்களா ?
ராஜு : ஆமா ?
ராதா : அப்ப, நீங்க மட்டும் வேலைக்கு போங்களேன். எங்க அண்ணன் வருவார்ன்னு கேட் திற்ந்து வைக்கிறாங்களான்னு பார்ப்போம். ஐயோ, அண்ணே ! இப்பவாவது புரிஞ்சுக்கிட்டிங்களா ? நீங்க ஸ்ட்ரைக்லே கலந்துக்கலேன்னாலும் ஒங்க வேலை போறது என்னமோ நிச்சயந்தான். அதோட கருங்காலிங்கிற பட்டம் வேற வந்து சேந்துடும். அந்த வேதனையோட வீட்டு மூலையில் வந்து கிடக்காம வீதியிலே வீர நடை போட்டு நடக்கலாமில்லை ?’
ராஜு : ஆமா நீ சொல்றது சரிதான்
ராதா : உ..க்கும்
ராஜு : ஆனா, இப்ப வேலையில்லாம என்னமா செய்யறது. ? தேதி முப்பதைக் காமிச்சவுடனேயே பணம் வேணுமே. அதுக்கு எங்க போறது நானு ?’
ராதா : எங்கேயும் போக வேண்டாம் எல்லாம் இங்கேயே இருக்கும்.
ராஜு : இங்கேயா ?
ராதா : அண்ணே உங்களுக்கும் பணம்தானே வேணும் ? கவலைப்படாதீங்க. எவ்வளவு வேணும்னாலும் நான் தரேன்.
ராஜு : ஒங்கிட்டே எவ்வளவு ? ஓ புதையல் கிதயல் எடுத்தியா ?
ராதா : இல்லேண்ணா, நான் சாம்பாதிச்சிருக்கேன்.
ராஜு : எப்படி ?
ராதா : நம்ம பசுமாட்டு பாலக் கறந்து வித்தேன். விரட்டி, தட்டி, தட்டி வித்தேன். அப்புறம் உங்கள் சம்பளத்தில சிக்கமாச் செலவு செஞ்சு மாசா மாசம் பத்து ரூபாய் மீதம் வெச்சிருக்கேன். அது மட்டுமா ? நம்ம வீட்டு பக்கத்துல இருக்கிற பொம்மை செய்யற கம்பெனி இல்ல. அங்கே போயி பொம்மைகளுக்கு வர்ணம் பூசி அதுல வேற சம்பாதிச்சிருக்கேன்.
ராஜு ; என்னது ? வேலைக்கா போன நீ ? ஒன்ன உக்கார வெச்சு சாப்பாடு போடறதுக்கு உங்க அண்ணன் இருக்கும்போது என்னக் கேக்காம வேலையா செய்தே நீ ?
ராதா : நான் சம்பாதிச்சு வைக்கலேன்னா இப்போ உங்களுக்கு இந்த வேலை போற நேரத்துல எங்கிட்டா முழசா ஆயிரம் ரூபாய் இருந்திருக்குமா ?
இயல்பான இந்த வசனம் காட்சி படத்தின் போக்கையே மாற்றும் . இந்த படம் அண்ணன் – தங்கை பாசத்தை மட்டுமா சொன்னது?
படம் வெள்ளி விழா ஒட காரணம் இதில் ஏராளம் உண்டே ?

(தொடரும்)

J.Radhakrishnan
24th December 2014, 04:30 PM
இயக்குனர் பாலசந்தர் அவர்களின் மறைவிற்கு அஞ்சலி,

அவரின் புதல்வர் கைலாசம் அவர்கள் மறைந்த நான்கு மாதத்தில் மீண்டும் ஒரு சோக நிகழ்வு.

RAGHAVENDRA
24th December 2014, 06:57 PM
Sivaji Ganesan - Definition of Style 12


செல்வம் - அணு அணுவாக ரசிக்க வேண்டிய உன்னதத் திரைக்காவியம்...

இறைவா உனக்கு கோடான கோடி நன்றிகள்... இந்த நூற்றாண்டில் நான் பிறந்ததற்கு, இந்த யுகபுருஷன் காலத்தில் வாழ்ந்ததற்கு, அவருடன் பழகும் வாய்ப்புத் தந்தமைக்கு..


எத்தனை விதமான முகபாவங்கள்.. ஒவ்வொரு ஃப்ரேமிலும் கலக்கும் நடிகர் திலகம்..

முழுப்படத்தையும் முழுதுமாய் விவரிக்க கொள்ளை ஆசை..

பிறிதொரு சந்தர்ப்பத்தில் அதை வைத்துக்கொள்வோம்..

ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறாக இப்போது..(காட்சியைப்பற்றிய வர்ணனையைத் தொடரும் வண்ண எழுத்துக்களில் இடம் பெற்றுள்ள வாக்கியங்களில் நடிகர் திலகத்தின் நடிப்பினைப் பறறிய குறிப்புகள்)

குறிப்பு..
காணொளியில் இக்காட்சி 1.16.20 ல் தொடங்குகிறது.

https://www.youtube.com/watch?v=v0vaEBlJAt8

செல்வம் வள்ளியை விரும்புகிறான்.. அவள் மேல் தீராத மோகமும் காதலும் கொண்டிருக்கிறான். அவன் தாயாரோ முறைப்பெண்ணை அவனுக்குக் கட்டி வைக்க விரும்புகிறாள்.. அவளைப் பார்க்கும் போதெல்லாம் செல்வத்திற்கு வள்ளியின் முகமே நினைவுக்கு வருகிறது.
தன் மனப்போராட்டத்தில் ஜெயிக்க முடியாமல் வள்ளியைப் பார்க்கக் கிளம்பி விடுகிறான்.
வள்ளியின் வீட்டுக்கு வருகிறான்.
பின்பக்கத்தில் துளசி மாடத்தில் வள்ளி பூஜை செய்வதைப் பார்க்கிறான்.
...இந்த இடத்தில் வாயிற்கதவருகில் நின்று நடிகர் திலகம் பார்க்கும் பார்வையை கவனியுங்கள்.. இந்தப் பார்வையில் ஓர் தாபம் தென்படுகிறது.

அந்த சூழ்நிலை அவனுக்குள் ஒரு தாபத்தை ஏற்படுத்துகிறது..
வள்ளியிடம் நெருங்குகிறான்..
சுற்றுமுற்றும் பார்த்தவாறே அப்பா இல்லே எனக் கேட்டு அங்கு யாரும் இல்லை என்பதை உறுதி செய்துகொள்கிறான்..
அப்பா இல்லே என்று கேட்கும் போது வாய்ஸ் மாடுலேஷனைக் கவனியுங்கள் ... அ என்ற எழுத்து ஹ என்று ஒலிக்கும்.. அந்த ஹ விலேயே அந்த விரக தாபம் வெளிப்படுவதை உணரலாம்

வரத்துக்கு ரொம்ப நேரமாகும்னு சொல்லு என்றவாறே அவளைத் தீண்டுகிறான்... இதை எதிர்பாராத வள்ளி சற்றே அச்சமும் நாணமும் மேற்கொண்டு விலகி ஓடுகிறாள்..
அவளைத் தொட முற்படும் போது நடையில் ஒரு வேகத்தைக் கூட்டுவதை கவனியுங்கள்..இதே சமயம் அந்த அச்சமும் நாணமும் கலந்த உணர்வை கே.ஆர்.விஜயா அற்புதமாக வெளிப்படுத்துவதை கவனியுங்கள்.

இனிவரும் விநாடிகளில் மௌனம்.. இருவருமே விரகத்தில் ஏங்கத் துவங்குகின்றனர்.. வள்ளி பெண்மைக்கே உரிய எச்சரிக்கை உணர்வை மேற்கொள்கிறாள்.

இப்போது நடிகர் திலகம், கே.ஆர்.விஜயா இருவருமே போட்டி போட்டுக் கொண்டு தங்கள் நடிப்புத் திறமையை வெளிப்படுத்துகிறார்கள். இவர்கள் இருவரையும் மீறி அங்கே இயக்குநர் திலகம் கே.எஸ்.ஜி.யின் திறமை வெளிப்படுகிறது. கால்களை ஒரு வித்தியாசமான கோணத்தில் வைத்துக் கொண்டு கைகளை பாக்கெட்டின் அருகே கொண்டு சென்று நடிகர் திலகம் அபிநயம் புரியும் ஸ்டைல்.. இதைப் பார்த்து நாணத்தோடு கே.ஆர்.விஜயா சிரிக்கும் போது அவரும் ஸ்கோர் செய்து விடுகிறார்.

செல்வம் உள்ளே நுழையும் போது வேகமாக ஒலிக்கும் பாங்கோஸ் இசை இப்போது மீண்டும் வேகமெடுக்கிறது.
அவள் குடத்தை எடுத்துக் கொண்டு சிரித்துக் கொண்டே அந்த இடத்தை விட்டுச் செல்ல முற்படுகிறாள்.
செல்வம் அவளைக் கேட்கிறான் ஏன் சிரிக்கிறாய் என.
அதற்கு அவள் சொல்கிறாள். உங்களை நான் எத்தனை நாள் பார்த்திருக்கிறேன்.. எத்தனை தடவை பார்த்திருக்கிறேன்.. எனக் கேட்கிறாள்..
இப்போது இந்தக் கட்டத்தில் நடிகர் திலகத்தின் கைகளை கவனியுங்கள்.. கைகளைப் பின்னால் கட்டியவாறே விரல்களால் அபிநயம் புரிகிறார்.

அவள் சிலேடையாக சொல்கிறாள்.. நான் பார்க்காததெல்லாம் உங்கள் முகத்தில் இருக்கு
அதற்கு அவன் கேட்கிறான். என்ன இருக்கு...
அவள் சொல்கிறாள்.. என்னென்னவோ இருக்கு..

இப்போது சிணுங்கிக் கொண்டே நடிகர் திலகம் சொல்வதைக் கேளுங்கள்.. ம்ஹேஹே... அது மனசிலிருக்கு என்று சொல்லும் போது குரலில் ஏற்படும் மாற்றத்தைக் கேளுங்கள்..எவ்வளவோ என்று சொல்லிக்கொண்டு கை விரலை வாயருகில் கொண்டு சென்று சட்டென்று எடுத்து விடுகிறார்..நான் எப்படி என்று வரியை முடிக்காமலே சமாளிக்க முற்படுகிறார்...

தன் மனசில் எத்தனையோ இருக்கிறது என்கிறார்.. அவள் அதை என்னவென்று கேட்கிறாள்...
பாடல் துவங்குகிறது.

இப்போது இந்தப் பின்னணியில் இப்பாடலைப் பாருங்கள்..

தமிழ்த்திரையுலக வரலாற்றில் மோகத்தையும் தாபத்தையும் இவ்வளவு அழகாக கொண்டு வந்த காட்சி வேறு இருப்பதாக எனக்குத் தெரியவில்லை..

Murali Srinivas
24th December 2014, 08:29 PM
ஹாப்பி! நாளை முதல் ஹாப்பி!

நடிகர் திலகத்தின் எவர் கிரீன் வெற்றி சித்திரம் ஊட்டி வரை உறவு கிறிஸ்துமஸ் தினமான நாளை முதல் [25.12.2014] கோவை டிலைட்டில் வெளியாகிறது.

நான் பிறந்த நாட்டிற்கு எந்த நாடு பெரியது?

நடிகர் திலகத்தின் ஜேம்ஸ் பாண்ட் வெற்றி சித்திரம் தங்கச்சுரங்கம் கிறிஸ்துமஸ் தினமான நாளை முதல் [25.12.2014] நெல்லை சென்ட்ரலில் வெளியாகிறது

Choudary will never fail!

நடிகர் திலகம் காவல் துறைக்கு ஈந்த காணிக்கையாம் வித்தகத்திலும் வர்த்தகத்திலும் ஒரே போல் வெற்றி பெற்ற காவியம் தங்கப்பதக்கம் நாளை மறுநாள் முதல் [26.12.2014] சென்னை மகாலட்சுமியில் வெளியாகிறது

சந்தோஷ செய்திகளுடன் மீண்டும் சந்திப்போம்

அன்புடன்

Russellxss
24th December 2014, 10:01 PM
கிருஸ்துமஸ் & புத்தாண்டை முன்னிட்டு மக்கள் தலைவர், வசூல் சக்கரவர்த்தி நடிகர்திலகம் வெற்றிவிஜயம்.

கோவை டீலைட் தியேட்டரில்

http://i1369.photobucket.com/albums/ag235/sundarajan/20x10mayyam_zps2e36f95c.jpg


எவரும் எட்டாத அதிசியம் சிவாஜி புகழ் காப்போம்.

Russellxss
24th December 2014, 10:08 PM
கிருஸ்துமஸ் & புத்தாண்டை முன்னிட்டு மக்கள் தலைவர், வசூல் சக்கரவர்த்தி நடிகர்திலகம் வெற்றிவிஜயம்.

நெல்லை சென்ட்ரல் தியேட்டரில்


http://i1369.photobucket.com/albums/ag235/sundarajan/TC_05_zpsc140d4d2.jpg

எவரும் எட்டாத அதிசியம் சிவாஜி புகழ் காப்போம்.

Gopal.s
25th December 2014, 05:36 AM
எனக்கு சினிமாவை நேசிக்க, சினிமா என்ற 20 ஆம் நூற்றாண்டின் வசீகர பேயை கனவாக,நனவாக ,லட்சியமாக,பொழுது போக்காக,இனிய சுவாசமாக்க ஆரம்பகர்த்தாக்கள் சிவாஜி,பாலசந்தர் என்ற இரு தமிழ் பால்கேக்கள்.பிறகு 6 வயது முதல் ,15 வயது வரை தமிழ்நாட்டில் வசதிகள் நிரம்பிய நகர கிராமமான தொழில் இரண்டுங்கெட்டான் நெய்வேலியில் வளர்ந்த, பொது நூலகத்தை,ஒரே ஒரு சினிமா கொட்டகையை மட்டும் நம்பி வாழ்ந்த ,சிறுவன்,தகப்பன் என்று ஒரு படி தாண்டி குதித்து ,விடலை என்ற அற்ப ,அற்புத சுகம் காணா இந்த தமிழ் மட்டுமே அறிந்த அப்பாவி சிறுவனுக்கு, பேசும் ஊமை படங்களை, அறிந்த மொழி எழுத்துக்களுடன் பார்த்து பெல்லினி,கோடர்ட்,பெர்க்மென் என்ற பெயர்களா தெரிந்திருக்க போகிறது? ஆனால் உண்மை என்னவென்றால் ,இவ்வளவும் தெரிந்த பிறகும், மனதில் இந்த மேதைகள் இன்னும் விஸ்வரூபம் எடுத்து நிற்பதை நன்கு உணர முடிகிறது. அதனால்தான் உலக மேதைகளை பற்றி எழுத லட்சம் மேதைகள், போலி தமிழ் பேதைகள் என போலி அறிவுஜீவி கும்பல்கள் மற்றோர் கருத்தை பிரதியெடுத்து ,பேதி போல எழுத்துக்களை கிருமிகளுடன் கழிந்து தள்ள, நானோ தமிழும் அறிந்து,சினிமாவையையும் அறிந்து,எழுத்துக்களையும் அறிந்து,எண்ணங்களையும் அறிந்து சுத்தமாக வாழ்வதால், இந்த சுற்றி வாழ்ந்த நாம் மட்டுமே நன்கு அறிய வாய்ப்பிருந்த ,அங்கீகாரம் பெறாத உலக மேதைகளை, மற்றவர் பார்க்க தவறிய கோணத்தை காட்டி வெளிச்சம் பரப்புவதை, நன்றி கடனாக, தமிழர்களை தமிழர்க்கு உணர்த்தும் பணியாக செய்தேன்? இதை என்னை தவிர எவனும் செய்திருக்க முடியாது என்ற அகந்தையும் எனக்குண்டு.

பாலசந்தர் என்ன செய்தார்?

தூய கலைக்கும் ,பாமர மனதுக்கும் கலப்பு மணம் புரிந்து இடைநிலை படங்கள் தந்தார்.

அறிவுக்கும், மனதுக்கும் இடைநிலையில் சமத்துவம் கண்டார்.

ஜன்னலை திறந்து உலக வெளிக்காற்றை மட்டுமே அனுபவிக்க செய்து காட்சியை மட்டும் தனதாக்கி போலி செய்தார்.

தொடர்ந்த ஒரு நிலைப்பட்ட கற்பனைகளை மட்டும் வைத்து கதைக்காமல் தன்னை புதிப்பித்து கொண்டே சோதனைக்கு ஆட்படுத்தி,நமக்கு கண்டுபிடிப்பின் பலனை மட்டும் ,அறிவு சார் நிதி கேட்காமல்,இலவசமாக மற்ற சராசரிகளுக்கு கொடுக்கும் விலையிலே தந்தார்.

மந்திர கடவுளாய் மாறி நரிகளை பரியாக்கினார்.புதுமை தந்தார்.மாற்றம் தந்தார். நனவான கனவுகளை,கனவான நனவுகளை
புத்திணைப்பில் தந்தார்.

சினிமா அறியாகுழந்தைகளாய் தா தா தா என்று தேவர் படங்களுடன் தத்தகாரம் பயின்ற அறிவு நோயாளி தமிழ் குழந்தைகளுக்கு தேனை ஊட்டினார்.மருந்தை ஊட்டினார்.தேனுடன் மருந்தும் ஊட்டினார்.முதல் ஊரறிந்த நல்ல சினிமா மருத்துவர் அவரே.

அவர் படங்களில் ஆச்சர்யங்கள் உண்டு.புது உலகங்கள் உண்டு. சுவைகள் உண்டு. களிப்பும் உண்டு. நவரசங்களும் உண்டு. ஆனால் பழக்கமான பதார்த்தங்களோ ,சமையலோ இல்லை.மாற்றம் விரும்பிய நாவுகளுக்கு அரு சுவை விருந்து.

உலகத்தோடு ஓட்ட விரும்பி குதித்து முன்னேற துடித்த உள்ளங்களுக்கு ,பழங்குடிகளின் ,மூட பழக்க வழக்கங்கள்,சடங்குகள் கொண்ட தமிழ் படங்கள் என்ற அறியாமை தீவை தாண்ட, இடை பாலமாகி ,இன்னொரு உலக சினிமா புது உலகுக்கு வேகமாக ஓட வைத்தார்.

புதிர் மனதை ,மேலும் புதிராக்கும் ,கனவு பட்டறையின் மனோதத்துவ மருத்துவராய்,நோய் முதல் நாடி குறை தீர்த்து, ஆரோக்கியம் கண்டார்.

யாரும் போகாத பாதைகளை முதலில் சென்று வென்று, மற்றவர்களும் தெளிவும் திடமும் கண்டு தன்னை தொடர்ந்து வர செய்த முதல் பயணி. தூரத்தில் தெரிந்த நல்ல சினிமா என்ற நிலவில் தமிழ் நாட்டில் இருந்து சென்று கால் வைத்த முதல் ஆம்ஸ்ட்ராங் .

இத்தனையும் மீறி கற்றாரை கற்றார் காமுற வேண்டும் என்ற மன பயிற்சியை கற்றாருக்கு கற்று கொடுத்து,பாரதி ராஜாவை,மகேந்திரனை,பாலு மகேந்திராவை திறந்த மனதுடன் கடிதம் கொடுத்து வரவேற்ற பக்குவ மனிதர்.

தமிழ் சினிமாவுக்கு திருவள்ளுவரை கொடுத்த அகர முதல் எழத்து ஆதி பகவன்.

எங்கெங்கோ சேகரித்து ,முறை படுத்தி சுமந்து,எனக்கு சுவாரஸ்ய புதிர்கனவுகளை விற்ற சுவாரஸ்ய ,நெறி -நிறை வியாபாரி.

சிவாஜி- பாலசந்தர் சொர்க்கத்திலாவது இணைந்து உங்கள் ஒரே படத்தை எதிரொலிக்காமல் ,இணைந்து ஒரு அதிசயத்தை வானுலக அமரர்களுக்கு தாருங்கள். அதை காண நானும் ஒரு நாள் அங்கு வருவேன்.

eehaiupehazij
25th December 2014, 07:14 AM
Happy Christmas to all

From NT's Muththukkal Moondru.....!

https://www.youtube.com/watch?v=qswJnnLBloQ

https://www.youtube.com/watch?v=UY7jHps9PE0

sivaa
25th December 2014, 07:41 AM
எல்லோர் மனங்களிலும் அமைதியும் ,அன்பும் நிலவட்டும் .

இனிய கிறிஸ்மஸ் வாழ்த்துக்கள்

RAGHAVENDRA
25th December 2014, 07:55 AM
உலகமெலாம் பருவமழை ஒத்தபடி பெய்யட்டும்
உழவரெல்லாம் தானியத்தை உவப்புடனே பெருக்கட்டும்
பல தொழில்கள் புரிகின்ற பாட்டாளி உயரட்டும்
நல்வாழ்வை அளிக்கின்ற
மெய்ஞானம் ஒளிவீசட்டும்
நம் கடமை அறவாழ்வில்
நாட்டத்தே சிறக்கட்டும்
வாழ்க வையகம்
வாழ்க வளமுடன்

https://www.youtube.com/watch?v=CMfbEd5aggI

அனைவருக்கும் உளமார்ந்த கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்

RAGHAVENDRA
25th December 2014, 08:02 AM
ஒரு படைப்பாளிக்கு மிகச் சிறந்த பரிசு, ரசிகர்கள் தரும் ஊக்கமே..

என்ற கருத்தை நிரூபிக்கும் வகையில் நம் நண்பர் கோபு சார் (Gopu1954) அவர்கள் நம்மையெல்லாம் ஊக்குவித்து வந்துள்ளார். மிக அதிகபட்சமாக ஊக்கம் தரும் இணைப்பைச் சொடுக்கி ... கிட்டத்தட்ட 3000 ... மிகச் சிறந்த ஊக்குவிப்பாளராகத் திகழும் கோபு எ கோபாலகிருஷ்ணன் அவர்களுக்கு நம் அனைவர் சார்பிலும் உளமார்ந்த நன்றிகள்.

eehaiupehazij
25th December 2014, 08:50 AM
ஒரு படைப்பாளிக்கு மிகச் சிறந்த பரிசு, ரசிகர்கள் தரும் ஊக்கமே..

என்ற கருத்தை நிரூபிக்கும் வகையில் நம் நண்பர் கோபு சார் (Gopu1954) அவர்கள் நம்மையெல்லாம் ஊக்குவித்து வந்துள்ளார். மிக அதிகபட்சமாக ஊக்கம் தரும் இணைப்பைச் சொடுக்கி ... கிட்டத்தட்ட 3000 ... மிகச் சிறந்த ஊக்குவிப்பாளராகத் திகழும் கோபு எ கோபாலகிருஷ்ணன் அவர்களுக்கு நம் அனைவர் சார்பிலும் உளமார்ந்த நன்றிகள்.

சுடர் விளக்காயினும் தூண்டுகோல் தேவையே பின்புலத்தில் ஒரு ஆக்கபூர்வமான ஊக்குவிப்பாளராக இருந்து இத்திரியின் பதிவர்களுக்கு எவ்வித பாரபட்சமுமின்றி
அலைகடலின் தோணி போல் விளங்கும் திருவாளர்கள் கோபு மற்றும் நண்பர் கல்நாயக் நன்றிக்குரியவர்கள். முன்புல பதிவர்களாகவும் நடிகர்திலகத்தின் புகழ் பரப்பிட அன்பு ராகவேந்தர் அவர்களைப் பின்பற்றி வேண்டிக்கொள்கிறேன்.
செந்தில்

RAGHAVENDRA
25th December 2014, 11:11 AM
Paying tributes to the departed soul in person is a mark of respect.
No doubt.
But there is a habit of spreading amongst the community and society to project negative notions on those who could not make it for the reasons best known to them or unavoidable.
This should be stopped. Because a person is not able to make it to visit in person, it should not be deemed that he is not honest.

Let this arrogant approach stop from at least now.

இறைவனடி சேர்ந்தவர்க்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்துவது மனிதாபிமானமும் மரியாதையாகும். இதில் கருத்து வேறுபாடில்லை.
ஆனால் அவ்வாறு நேரில் தவிர்க்க இயலாத காரணங்களால் செல்ல முடியாதவர்களைப் பற்றி கருத்துக்களைக் கூறுவதும் தவறாக சித்தரிப்பதும் கூட மனிதாபிமானதற்றதாகும்.
சமீப காலங்களில் இந்தப் போக்கு நம் மக்களிடையே பரவி வருவது வருத்தத்திற்குரியது. அவரவர் தம் மனதில் தோன்றிய காரணங்களையெல்லாம் கற்பித்துக் கூறுவதும் நடக்கலாம்.
இந்தப் போக்கை மனிதன் கைவிட வேண்டும்.
சில சமயங்களில் சிலர் வராமல் இருந்தால் கூட நல்லது என அந்த வீட்டில் உள்ளவர்கள் நினைக்கும் அளவிற்கும் நிகழ்வுகள் நடைபெற்றுள்ளன.
குறிப்பாக பிரபலங்களின் இறுதி நேரங்களில் மற்ற பிரபலங்கள் வரும் போது அந்த சூழ்நிலயைப் பற்றி கவலைப்படாமல் மக்கள் இவர்களை சூழ்ந்து கொண்டு அன்புத் தொல்லை தருவது முழுதும் மனிதாபிமானமற்ற செயலாகும்.
அப்படிப்பட்ட நேரங்களில் சம்பந்தப்பட்ட பிரபலங்கள் வராமல் இருப்பதே மேல் என அவர்களுக்கும் தோன்றலாம்.
மனிதன் மாற வேண்டும். மரணத்தைப் புனிதமாக்க வேண்டும்.

eehaiupehazij
25th December 2014, 03:58 PM
Part 3 of NT's original stunt scenes!!


அள்ளஅள்ள குறையாத நடிப்பின் அமுதசுரபி நடிகர்திலகமே!!சண்டை சாகசக் காட்சிகளில் நடிகர்திலகத்தின் ஒரிஜினாலிட்டி! (No stunt doubles!) Risk and Rusk


Risk and Rusk Part 3 : Flight/Train Fights and Helicopter Chase !
சண்டைக்காட்சிகளில் சாகசங்களில் தானே நடிக்க வேண்டிய சூழலில் பின்வாங்காது முன் நின்று நடிகர்திலகமும் ரிஸ்க் எல்லாம் தனக்கும் ரஸ்க்கே என்று அவர் நிரூபித்த சில சண்டை/சாகச காட்சிகள்


நடிப்புக்கு இலக்கணம் வகுத்து இக்கணம் வரை யாராலும் ஆட்டவோ அசைக்கவோ முடியாத நடிப்பின் இமயமாக ஓங்கி உயர்ந்து நிற்கும் நடிகர்திலகம் நடிப்பில் தொடாத கோணமோ காட்டாத நுட்பமோ புரட்டாத பக்கமோ எதுவுமில்லை. சண்டைக்காட்சிகளும் நடன நெளிவு சுளிவுகள் சார்ந்த ஒருவகை நடிப்பே (Action Choreography) ஆனாலும் தான் பங்குபெறும் சண்டைக் காட்சிகள் வெறும் உடல்பலத்தையோ கதாநாயகனின் வீரதீர சாகசங்களையோ வெளிப்படுத்தாது புத்திசாலித்தனம் உள்ளடங்கிய நம்பகத்தன்மை மிக்க சுறுசுறுப்பும் விறுவிறுப்பும் குறைந்திடாத வண்ணம் ரசிகர்களுக்கு ரசனைத்தீனி போடும்வண்ணம் அமைய வேண்டும் என்ற கோணத்திலும் சிந்தித்தார் நடிகர்திலகம்

அதன் விளைவே அவரது உடல் எடை குறைந்து எழிலான தோற்றப் பொலிவில் அருமையான சண்டைக்காட்சிகளை தந்திட்ட தங்கசுரங்கம், சொர்க்கம், ராஜா, என்தம்பி,
திருடன், எங்கமாமா மற்றும் சிவந்த மண் திரைப்படங்கள்.

என்னதான் உடல்பலம் மிக்க கதாநாயகன் எனினும் ஒரே சமயத்தில் பத்துபேரை அடிப்பதும் அந்தர்பல்டிகளும் நம்பகத்தன்மை அற்றவையே. நடிகர்திலகமும் சண்டைக்காட்சிகளில் தனது தனித்துவத்தைக் காண்பிக்க முயற்சித்தார்.அந்தவகையில் இயக்குனர் ஸ்ரீதர் ஸ்டண்ட்மாஸ்டர் ஷியாம் சுந்தருடன் இசைந்து அந்தக் காலகட்டத்தில் புகழின் உச்சியில் உலகையே ஆட்கொண்ட ஜேம்ஸ்பாண்ட் நாயகர் ஷான் கானரியின் கோல்டு பிங்கர், ப்ரம் ரஷ்யா வித் லவ் ஆகிய படங்களின் சண்டைக் காட்சியமைப்புக்களை தழுவி சிவந்தமண்ணில் அமைத்த சண்டைக்காட்சிகள் நடிகர்திலகத்தின் எண்ணங்களுக்கும் ஆற்றலுக்கும் பொருத்தமாக அமைந்தன, (க்ளைமேக்ஸ் ராட்சத பலூன் சண்டை சற்று சறுக்கலான சொதப்பலே !!)

சிவந்தமண் ஹெலிகாப்டர் துரத்தல் ரஷ்யா வித் லவ் படத்தையும் விமானத்தில் தேங்காய் சீனிவாசனுடன் போடும் சண்டை கோல்டுபிங்கர் படத்தையும் ஆதாரமாக
கொண்டவையே! அதேபோல் சொர்க்கம் படத்தின் ரயில்பெட்டி சண்டை ரஷ்யா வித் லவ் படத்தில் கானரி ராபர்ட் ஷாவுடன் போடும் சண்டையின் நகலே!!

Risk 3 Rusk 1 : Sivandha mann Vs Goldfinger

Flight fight!!

https://www.youtube.com/watch?v=Qzs_Ea8SBY4

https://www.youtube.com/watch?v=pHXevnoAciY

Risk 3 Rusk 2 Sivandha Mann Vs From Russia With Love

Helicopter chase! Stay thrilled with NT's original participation in the chase scene, comparable to Sean Connery's James Bond action!!

https://www.youtube.com/watch?v=Gew4yzciSc4

https://www.youtube.com/watch?v=6PczlcjdcRo

Sorgam train fight Vs. James Bond fights

https://www.youtube.com/watch?v=3gyphnnOMcs

https://www.youtube.com/watch?v=f-bDoEG8skQThe End of Part 3. But....NT promptly returns his dues with interest to wrestler Dharaasingh's brother Randhaawa in Raja Vs Sean Connery's James Bond fight with a Sumo wrestler in You Only Live Twice!!

eehaiupehazij
26th December 2014, 01:21 PM
Part 4 of NT's original stunt scenes!!


அள்ளஅள்ள குறையாத நடி&#