PDA

View Full Version : மனதை கவரும் மதுர கானங்கள் இரண்டாவது பாகம



Pages : 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 [13] 14 15 16 17

chinnakkannan
24th September 2014, 02:51 PM
பத்மினி பற்றிய பல விவரங்களை வழங்கிய கிருஷ்ணாஜிக்கு, புகைப்படங்கள் வழங்கிய வாசு சாருக்கு நன்றி.

கிருஷ்ணா ஜி.. விகடன் பேட்டியில் நானோஅய்யர் அவரோ கள்ளர் நடக்கிற காரியமா என வந்திருந்ததாக நினைவு..இதையே என் ஒரு கதையில் (2003 இல் ) உபயோகப் படுத்தியிருந்தேன்..

chinnakkannan
24th September 2014, 03:15 PM
மதுண்ணா..இது பரவால்லியா -முன்பு எழுதிப் பார்த்த நவராத்திரிக்கவிதை..பழசு :)

கொலுவிருக்கும் கடைசிப் படிக்க்ட்டுச்
செட்டியார் கேட்டார்
’ஏன் இந்த தடவை அஞ்சு படி தான்
வெச்சுருக்கா மாமி?

கல்யாண கோஷ்டி நாதஸ்வர வித்வான்
‘தெரியலை ஓய்.. அது சரி
அந்த வைர மூக்குத்தி மாமி பார்த்தீரா’

‘அதுவா இந்த மாமியோட தூரத்து உறவாம்...
போன தடவைக்கு முந்தின தடவை வந்தா..
அவ பட்டுப் புடவை க்ரே வித் ரெட் பார்டர்
சும்மா ஜிலுஜிலுன்னு...
நன்னா இருக்கோன்னோ..’

இரண்டாம்படிக்கட்டில் இருந்த ராதா
‘ஏங்க.. கல்யாணத்துக்கும்
கூட்டிட்டுப் போமாட்டேங்க்றீங்க..
கீழே கிரிக்கெட் மாட்ச் வச்சுருக்கா..
அதுக்கும் மாட்டேங்கறீங்க..
பக்கத்துல மஹாபலிபுரம் பீச் செட்
அங்கயாவது போலாமே..’

கிருஷ்ணன் புன்னகைத்து..
‘நானா மாட்டேங்கறேன்..
கீழே பார்.. மூணாம் படிக்கட்டில
எல்லாஅவதாரமும் நின்னுண்டிருக்கு..!
அது சரி
யாரந்தக் குழந்தை..
சிகப்பு தாவணி பட்டுப் பாவடை
போட்டுண்டு
ஏதோ எட்டு ஸ்வரத்துல பாடுது..
நம்ம ஊர் கோபிகையோட சாயல் தெரியுது..’
ராதா முறைத்துக் கிள்ள

கீழே இருந்த பலராமர்
‘ஏய் எங்களை கிண்டல் ஏதும் பண்ணலையே..’

நாலாம் படிக்கட்டில் இருந்த
கன்னுக்குட்டி அம்மாவிடம்
‘இன்னிக்கும் கொண்டக்கடலை சுண்டல் தானாம்..
அம்மா போரடிக்குது
பேசாம வேற கொலுக்குப் போலாமா.
இந்த பாரேன் அந்தச் சின்னப் பையன்
என்னைத் தொட வர்றான்...’

கவலைப்படாதே யானை மாமாக்கிட்ட
சொல்றேன்..
ஓய் என் புள்ள பயப்படுது..”

“ஒண்ணும் ஆவாது..
பேசாம பசுவா லட்சணமாத்
தலை குனிஞ்சு இரு..
இந்தப் பக்கம்
அஷ்ட் லஷ்மி வேறு இருக்காங்க்..
எதிர்ல பார்த்தியா
சில மாமாக்கள்
சீரியஸா கோல்ட் ரேட்,ஷேர்ஸ்னு
பேசிக்கிட்டிருக்காங்க ..
நல்லா இருக்கு...
கேக்க விடாம இந்தப் பாட்டுதான் தடுக்குது..
அட் ஒருவ்ழியா பாட்டு முடிஞ்சா
ம்ம் இன்னொரு மாமி பாடறாளே..
என்ன தவம் செய்தனை...
புதுசாபாடலாமில்ல.. ..

அருகிலிருந்த மயில்
ரொம்பத் தான் சினிமா பார்க்கறே..
என்னையும் கூட்டிட்டுப் போயிருக்கலாமில்ல..’

ஷ்.. சத்தம்போடாமச் சமர்த்தா
வந்தவாளைப் பார்த்துண்டு
சும்மா இருங்கோ..
என்றார் முதற்படிக்கட்டுப் பிள்ளையர்ர்..

‘எனக்குப் பொண் பார்த்திண்டிருக்கேன்..
உங்க பேச்சு எனக்குத்
தொந்தரவா இருக்கு...!”

*

madhu
24th September 2014, 03:22 PM
"எனக்குப் பொண் பார்த்திண்டிருக்கேன்..
உங்க பேச்சு எனக்குத்
தொந்தரவா இருக்கு...!”

நீங்க இப்படிசொல்லிட்டதால் நாங்க ஒன்றும் பேச முடியவில்லை சிக்கா..

sss
24th September 2014, 03:30 PM
அன்புள்ள மது சார்,
உங்கள் சந்தோசம் என் பாக்கியம்.

உங்கள் மற்ற வேண்டுகோள் பாடல்கள் என்ன, ஏதோ இரண்டு பாக்கி என்று சொன்ன ஞாபகம்,. என்னிடம் இருக்கிறதா பார்க்கிறேன்...

gkrishna
24th September 2014, 03:51 PM
ஒரு கவிஞனின் கடமை அன்றைய தினத்திற்கான தேவைகளைப் பூர்த்தி செய்வது மட்டுமல்ல.. சமுதாயத்தின் நாளைய தேவைகளையும் கணக்கில் கொண்டுதான் படைப்பியலில் ஈடுபடவேண்டும். முண்டாசுக்கவிஞன் பாரதியின் கவிதைகள் வேள்வித்தீயை மனதில் வளர்த்து விடுதலை தாகத்தை மேலும் தூண்டியது.. சுதந்திரம் பெறுவதற்கு முன்னரே ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்டோம் என்று ஆனந்தப்பள்ளு பாடியவன் அவனன்றோ? மொழியின்மீதுள்ள பற்றால், இனத்தின்மீதுள்ள பாசத்தால்.. பாரதி வழிவந்த பாவலன் பாரதிதாசன் புரட்சிக்கவிஞர் என்னும் அடைமொழி அடைந்ததும் அவர்தம் எண்ணப்பயிரில் ஊடுருவிக்கிடந்த உயிரோட்டம் எல்லாம் இனமொழி உணர்வை மக்கள் மனதில் அதீதமாய் வளர்த்ததன்றோ?

வழிவழி வந்த கவிஞர் பரம்பரையில் கண்ணதாசன் என்னும் கவிமன்னவன் தன் கருத்துக்களை முத்துக்களாய் பதித்ததெல்லாம் திரைப்பாடல்கள் முதலான தன் களங்கள் எல்லாவற்றிலும்தான்! பச்சை விளக்கு திரைப்படத்தில்.. அவர் பாடல் எழுதிய போது.. கேள்வி பிறந்தது அன்று.. என்கிற பாடல் எண்ணத்தில் மலர்ந்திருக்கும் அழகினைப் பாருங்கள். எத்தனை எத்தனை சிந்தனைச் சிறகுகள் கவிதை வானத்தில் வலம்வருகின்றன.. காணுங்கள்..

ஒரு சராசரி திரைப்படப்பாடலாசிரியரால் இத்தனை வளமான கருத்துக்களை கோர்த்தெடுக்க முடியாது.

தீண்டாமைச் சட்டம் வந்ததனை பாட்டுவரிகளால் பதித்து வைத்திடும் சாதுர்யம் அவருக்கல்லவா கைவந்தது?

அறிவியல் உலகின் கண்டுபிடிப்புகள்.. கவிஞரின் கையில் வார்த்தெடுக்கப்பட்ட வரிகளாய் மாறும்போது அதில் மலர்ந்திடும் உண்மைகள் எத்தனை எத்தனை?

தனியுடைமைக்கும் பொதுவுடைமைக்கும் விளக்கங்கள் திரைப்பாடலிலும் தரமுடியும் என்று நிறுவ வருகிறார்.. கண்ணதாசன்!

ஆம்.. கேள்வி பிறந்தது அன்று.. அதற்கான பதில்கள் கிடைத்தன இன்று!!

பாடல்: கேள்வி பிறந்தது அன்று
திரைப்படம்: பச்சை விளக்கு
பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன்
இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி
ஆண்டு: 1964
கேள்வி பிறந்தது அன்று நல்ல
பதில் கிடைத்தது இன்று
ஆசை பிறந்தது அன்று
யாவும் நடந்தது இன்று


ஆண்டான் அடிமை மேலோர் கீழோர் என்பது மாறாதோ? ஓ
ஆண்டான் அடிமை மேலோர் கீழோர் என்பது மாறாதோ? ஓ
அரசன் இல்லாமல் ஜனங்கள் ஆளும் காலமும் வாராதோ?
என்றொரு காலம் ஏங்கியதுண்டு
இன்று கிடைதது பதில் ஒன்று
இன்று எவனும் பேதம் சொன்னால்
இரண்டு வருடம் ஜெயில் உண்டு.

கேள்வி பிறந்தது அன்று நல்ல
பதில் கிடைத்தது இன்று
ஆசை பிறந்தது அன்று
யாவும் நடந்தது இன்று

வானத்தில் ஏறி சந்திரமண்டல வாசலைத் தொடலாமா? ஆ
வானத்தில் ஏறி சந்திரமண்டல வாசலைத் தொடலாமா? ஆ
மாண்டு கிடக்கும் மனிதனின் மேனி மறுபடி எழலாமா?
என்றொரு காலம் ஏங்கியதுண்டு
இன்று கிடைத்தது பதில் ஒன்று
ஞானம் பிறந்து வானில் பறந்து
மீண்டு வந்தான் உயிர் கொண்டு

கேள்வி பிறந்தது அன்று நல்ல
பதில் கிடைத்தது இன்று
ஆசை பிறந்தது அன்று
யாவும் நடந்தது இன்று

குலமகள் வாழும் இனிய குடும்பம் கோவிலுக்கிணையாகும் ம்
குலமகள் வாழும் இனிய குடும்பம் கோவிலுக்கிணையாகும் ம்
குறை தெரியாமல் உறவு கொண்டாலே வாழ்வும் சுவையாகும்
படித்த மாந்தர் நிறைந்த நாட்டில் பார்க்கும் யாவும் பொதுவுடமை
நல்ல மனமும் பிள்ளை குணமும் நமது விட்டின் தனி உடைமை

கேள்வி பிறந்தது அன்று நல்ல
பதில் கிடைத்தது இன்று
ஆசை பிறந்தது அன்று
யாவும் நடந்தது இன்று

https://mail.google.com/mail/u/0/?ui=2&ik=d53820920c&view=att&th=148a5a88b843a904&attid=0.3&disp=safe&realattid=f_i0f9lf623&zw
https://mail.google.com/mail/u/0/?ui=2&ik=d53820920c&view=att&th=148a5a88b843a904&attid=0.1&disp=safe&realattid=f_i0f9kq401&zw
http://www.youtube.com/watch?v=qEYUPGfhjJo&authuser=0

gkrishna
24th September 2014, 03:54 PM
முத்தழகு பாடலை இப்போது தான் கேட்டேன்
அருமை மது சார் /sss சார்

நன்றி

gkrishna
24th September 2014, 04:14 PM
பத்மினி பற்றிய பல விவரங்களை வழங்கிய கிருஷ்ணாஜிக்கு, புகைப்படங்கள் வழங்கிய வாசு சாருக்கு நன்றி.

கிருஷ்ணா ஜி.. விகடன் பேட்டியில் நானோஅய்யர் அவரோ கள்ளர் நடக்கிற காரியமா என வந்திருந்ததாக நினைவு..இதையே என் ஒரு கதையில் (2003 இல் ) உபயோகப் படுத்தியிருந்தேன்..

பத்மினி நாயர் வகுப்பை சேர்ந்தவர் என்று தான் நினைவு சி கே சார்

gkrishna
24th September 2014, 04:41 PM
'என் இனிய பொன் நிலாவே...'

'ராஜ ராஜ சோழன் நான்...'

'நலம் வாழ எந்நாளும் என் வாழ்த்துக்கள்..'

'பூங்காற்று .. புதிதானது..'

'கண்ணன் வந்து பாடுகின்றான் காலமெல்லாம்..'

'வானெங்கும் தங்க விண்மீன்கள் விழியிமை மூட..'

'அந்த நாள் ஞாபகம்..'

'எனக்குப் பிடித்த பாடல் அது உனக்கும் பிடிக்குமே..'

'கண்ணம்மா.. காதலெனும் கவிதை சொல்லடி..'


- இப்படி எத்தனையோ இனிமையான மேற்கத்தேய இசையின் ஆளுமையுடன் கூடிய பின்னணி இசையுடன் பாலு மகேந்திராவுக்காக இசைஞானி அற்புதமாக அமைத்த பாடல்களில் இடம்பெற்ற கிட்டாரில் தனது கைவண்ணத்தைக் காட்டியது. இந்தப்படத்தில் அவருக்கு அருகில் தோழமையுடன் நிற்கும் இசைஞானியின் இசைத்தளபதிகளில் ஒருவரும் அவரின் ஆஸ்தான கிட்டார் கலைஞருமான மதிப்புக்குரிய சதாசுதர்சனம் சதா.

http://metronews.lk/uploads/others/18sada-balu600.jpg

நடிகர் திலகத்தின் முதல் படமான பராசக்தியின் இசையமைப்பாளரான காலம் சென்ற சுதர்சனத்தின் புதல்வரான இவரின் இசைஞானியுடனான பயணமானது அப்பழுக்கில்லாதது.

ஒரு தோழனாக, இசைத்தளபதியாக, சகோதரனாக. உறவினனாக . ரசிகனாக, மொத்தத்தில் அவரை நன்றாகப் புரிந்து கொண்ட ஒருவனாக அவருடன் தோளோடு தோளாக நிற்கும் கலைஞன். தன்னிடம் பயிலும் மாணவர்களையே 'சார்' என்று அழைக்கும் இந்தப் பெரிய மனிதர் மிகச் சிறந்த மனிதர். என்று அவருடன் பழகிய ஒருவரல்ல இருவரல்ல பலர் சொல்வதுண்டு


இசைஞானி மேற்கத்தேய இசையையும் கிட்டாரையும் பயின்ற தன்ராஜ் மாஸ்டரிடம் அவர் கூடவே பயிலச் சென்றவர் இந்தக் கலைஞர்.

http://metronews.lk/uploads/others/18Sadasudarsanam-Sada600.jpg


இசைஞானி படங்களுக்கு அமைத்த பின்னணியிசைகளில் உள்ளத்தை வருடும் உணர்ச்சிக் கொந்தளிப்பை தனது கிட்டார் மூலம் கொட்டிய மேதை.

மௌனராகத்தில் இவர் வாசித்த பின்னணியிசை இன்றுவரை மூளைக்குள் புகுந்து குத்துக்கல்லாட்டம் அமர்ந்திருக்கிறது. அசைக்கவே முடியவில்லை.

பாலு மகேந்திரா என்ற இசை ரசிகன் மறைந்து போன இந்த வேளையில் அவருக்காக, அவரின் கற்பனையை புரிந்து கொண்டு இயற்கையை இன்னும் இன்னும் தனது கிட்டாரால் அழகாக்கிய சதா. அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள். தங்களைப் போன்றோருக்கு நம்மை போன்ற கடைகோடி ரசிகர்களால் நன்றி என்ற சொல்லைத்தவிர, வேறு என்னத்தைத்தான் தர முடியும்?

gkrishna
24th September 2014, 05:46 PM
thanks to Ravi Auditya

சினிமா ஹம்மிங தேவதைகள்

தமிழ் சினிமாவில் ”ஹம்மிங்”(வாயசைப்பு இசை?) என்பது பாடலின் தவிர்க்க இயலாத ஒரு அங்கம் ஆகிவிட்டது.அதுவும் ஒரு இசைக்கருவியாய் பாடலுக்கு அழகைக்கூட்டுகிறது.படங்களின் பின்னணிக்கும் பல வித ஹம்மிங் கொடுக்கப்படுகிறது.

http://3.bp.blogspot.com/_kRKT9yRa-tQ/S_KEajdMJaI/AAAAAAAAAu8/I_K8J-trcWU/s320/humming.jpg

பழைய காலத்துப் பாடல்களில் ”ஹம்மிங்” கம்மி. ஆனால் ஆலாபணை (ராகத்தை மேல்/கிழ் இழுத்துப் பாடுதல்) என்பது ஹம்மிங் மாதிரிதான்.காரணம் கர்நாடக இசையை அடிப்படையாகக் கொண்டு இசைக்கப்பட்டது.

அடுத்து பாடும் இடத்திலேயே மைக் பிடித்து ரிகார்ட் செய்தார்கள்.பின்னணி இசைப்பவர்கள் பாடுபவர்கள் பின்னலேயே ஓட வேண்டும்.பின்னாளில்தான் தியேட்டர் ரிகார்டிங் வந்தது.

மெல்லிசை திரைக்கு வந்த பிறகு .ரவுண்டு கட்டி ஹம்மினார்கள்.எம்.எஸ்.விஸ்வநாதன் காலத்தில் அதிகம் என்று சொல்லலாம்.

இது சோகம்/காதல்/வீரம்/மகிழ்ச்சி/விரகதாபம்/காமம்/மழலை போன்ற முக்கியமான உணர்ச்சிகளைப் பிரதிபலிக்க பெரும்பாலும் படங்களில் பயன்படுத்தப்படுகிறது.

பெணகள்/ஆண்கள் குழுக்களாக பாட்டில் தோன்றும்போது கோரஸ் கொடுக்கிறார்கள்.இதைத் தவிர்த்து பேய்/சுடுகாடு/நடுகாடு/நடுஇரவு/ என்று விதவித ஹம்மிங்.

தமிழ்ப் படங்களில் ”வெள்ளை உடை ஆவி ஹம்மிங்” ரொம்ப விசேஷமானது.(நெஞ்சம் மறப்பதில்லை,துணிவே துணை/யார் நீ,அதே கண்கள்)

பயங்கரத்திற்கும் (horror) (குரல்?) கொடுப்பதுண்டு.சிவப்பு ரோஜாக்கள் படத்தில் தோட்டத்தில் இருந்து ஒரு பிணத்தின் கை எழும்போது வரும் ஆணின் முரட்டு ஹம்மிங் பயமுறுத்தும்.

இந்த ஹம்மிங் 95% சதவீதம் பெண் குரல்கள்தான்.காரணம்? மனதை கொள்ளைக்கொள்ளும் உணர்ச்சி பொங்கி வழிவதுதான். காதல்/ஒரு வித உருக்கம்/சோகம் போன்ற பல ரசங்களும் தெறிக்கும்.தேவதைகளின் மொழி இந்த ஹம்மிங்.

நிறைய ஆங்கில படங்களிலும் இது உண்டு.அது ஒரு மாதிரி வெள்ளைக்காரி ஹம்மிங்.டைட்டானிக் படத்தில் கூட நம்ம மேஸ்ட்ரோவின் சாயலுடன் பின்னணியில் தேவதைகளின் ஹம்மிங் .காதல் உணர்வுகள்?

காட்சியில் வீசும் காற்றின் ஒலியே மனதில் அதிர்வுகளை ஏற்படுத்து.”Hello..Jack !". பிறகு ஆரம்பிக்கும் soul strirring ஹம்மிங்!

எல்.ஆர்.ஈஸ்வரி ஹம்மிங்கிற்கே அவதாரம் எடுத்தவர்.இவர் குரல் அப்படி வசீகரிக்கிறது.அடுத்து ஜானகி? இவர்களின் பழைய பாடல்களின் ஹம்மிங் மனதை வருடுகிறது.

சில பாடல்களில் கொஞ்சம்தான் ”ஹம்”மும்.பழைய பாடல்களில் இருக்கும் “பழசு” மற்றும் " வெகுளித்தனம் " மனதை கொள்ளையடிக்கிறது.

'பவளக்கொடியிலே முத்துகள் பூத்தால் '
கல் எல்லாம் மாணிக்க கல் ஆகுமா
நாம் ஒருவரை ஒருவர்
அம்ம்மம்மா கேளடி தோழி
காற்றுகென்ன வேலி

மேல் சொன்ன பாடல்கள் எல்லாம் சில சாம்பிள் மட்டுமே

நண்பர்கள் தொடரலாம்

madhu
24th September 2014, 07:15 PM
டி.எம்.எஸ்ஸுக்கு சுசீலா ஹம்மிங் கொடுத்த "வெள்ளிக்கிண்ணம்தான்" பாடலும் சுசீலாவுக்கு டி.எம்.எஸ் ஹம்மிங் கொடுத்த "கண்களினால் காண்பதெல்லாம்" பாடலும் நினைவுக்கு வருகின்றன. ஒன்று நடிகர் திலகத்துக்கு... இன்னொன்று மக்கள் திலகத்துக்கு... ஒன்று படத்தில் இடம் பெற்றது. இன்னொன்று படத்தில் இடம் பெறவில்லை. ஒன்று "உயர்ந்த மனிதன்" .. இன்னொன்று "நாடோடி".

vasudevan31355
24th September 2014, 08:44 PM
'மூன்றெழுத்து' படத்தில் 'காதலன் வந்தான்' பாடலில் எஸ்.வி. பொன்னுசாமியின் 'ம்ஹூம் ம்ஹூம்' ஹம்மிங் என்னை ரொம்பக் கவர்ந்தது.

'பாவ மன்னிப்பு' படத்தின் 'பாலிருக்கும் பழமிருக்கும்' பாடலில் வரும் ம்ஹூம் ஹம்மிங் சூப்பர்.

பாலும் பழமும் படத்தின் 'நான் பேச நினைப்பதெல்லாம்' பாடலின் ஹம்மிங்கை சொல்லவே வேண்டியதில்லை.

'நினைப்பது நிறைவேறும்' எம்.எல்.ஸ்ரீகாந்தின் ஹம்மிங்

'சிவகாமியின் செல்வன்' படம் முழுக்க ஒலிக்கும் அந்த ஹே ஹே ஹம்மிங்

'அங்கம் புதுவிதம்' (வீட்டுக்கு வீடு) பாடலில் வரும் ஆரம்ப பாலா ஈஸ்வரியின் ஹம்மிங். 'லா லா லா லா லா லால்லா' என்று ஈஸ்வரி இழுக்க பாலா நடுங்கிக் கொண்டே 'ம்ம்ம்ஹூம் ம்ம்ம்ஹூம்' என்று பதில் பயந்து கொடுப்பாரே. கிரேட்.

'காதல் விளையாட கட்டிலிடு கண்ணே' (கண்மணி ராஜா) பாடலின் இடையே வரும் 'ஹஹாஹா ஹஹாஹா ஹேஹேஹே ஹேஹேஹே' சுசீலா ஹம்மிங்.

எவ்வளவோ இருக்கு சாமி. என்னத்த எழுத?

chinnakkannan
24th September 2014, 10:05 PM
ஆமாம்.. ஆ..ஊன்னா கண்ணனை விட்டுடுவீங்களே :sad:

காதல் காதல் என்று பேசக் கண்ணன் வந்தானோ – ஆ…ஆ..ஸ்ரீகாந்த் ஹம்மிக்க் :)

பறக்கும் பறவையும் நீயே – அஹ்ஹ்ஹஹ்ஹா அஹ்ஹ்ஹஹ்ஹ அஹ்ஹ அஹ்ஹ அஹ்ஹக்ஹக்கா.. எல்.ஆர் ஈஸ்வரி

ஏட்டில் எழுதிவைத்தேன் எழுதியதைச் சொல்லி வைத்தேன் – ஒஹோஹோஒ ஓஓஓ -எஸ் எஸ் ஆர்..அப்புறம் அந்த ஒயிட் டிரஸ் பொண்ணு யாராக்கும் டிஸ்கஸ் பண்ணோமா.. வானம்பாடி

நெஞ்சத்திலே நீ நேற்று வந்தாய் – விஸில்லாம் ஹம்மிங்க்ல சேர்க்கலாமா

பாட்டுமுழுக்க ஹம்மிங்க் அண்ட் லைன்ஸ்.. பனியிலாடும் அழகினாடும்கண்கள் சப்பாஷ்..கவிதை கொஞ்சும் உன்னைக் கண்டால் கவிஞர் இதயம் கொஞ்சும் கெக்கெக்கெக் எனக் குட்டிப்புறாவாய்ச் சிரிக்கும் ஸ்ரீதேவி..

இப்போதைக்கு இவ்ளோ தான் நினைவு..

rajraj
24th September 2014, 10:15 PM
chinnakkaNNan: enga music party-kku vareengaLaa? madhu-vaiyum koottikittu vaanga! :)

chinnakkannan
24th September 2014, 10:19 PM
கண்டிப்பா ராஜ்ராஜ் சார்.. ஆனா எனக்கு ப் பாடத் தெரியாதே..:)

rajraj
24th September 2014, 10:33 PM
கண்டிப்பா ராஜ்ராஜ் சார்.. ஆனா எனக்கு ப் பாடத் தெரியாதே..:)

adhunaale enna? naan oru marathi abhang paaduren--baaje mridunga thaaLa vinaa-nnu. adhule 'ganapathi bappaa moriya mangaLa murthi moriya' nnnu oru vari varum. ellorum paaduvaanga. nengaLum paadalaam ! :lol:

rajeshkrv
25th September 2014, 03:19 AM
adhunaale enna? naan oru marathi abhang paaduren--baaje mridunga thaaLa vinaa-nnu. adhule 'ganapathi bappaa moriya mangaLa murthi moriya' nnnu oru vari varum. ellorum paaduvaanga. nengaLum paadalaam ! :lol:

:thumbsup:

rajraj
25th September 2014, 04:41 AM
பொங்கும் பூம்புனல்

டி.ஆர்.மகாலிங்கத்துடன் இப்பாடலை இணைந்து பாடியவர் யாரெனத் தெரியவில்லை.

T.V.Rathinam, a popular singer in the 50s. I will post one of her song later. I think I posted her song about 'Radio petti' in some thread! :) Those days radio was a luxury item! :lol:
-------------------------------------

Travancore sisters : Lalitha,Padmini and Ragini ! They used to dance in weddings and other functions like Vaijayantimala and Kumari Kamala ! :)

RAGHAVENDRA
25th September 2014, 06:31 AM
பொங்கும் பூம்புனல்

உங்கள் நெஞ்சினிலே அஞ்செழுத்து வாழ வேண்டும்..

அது என்ன அந்த அஞ்செழுத்து..

உங்கள் கண்ணிரண்டும் எதைக் காண வேண்டும்...

மாதா ஜெகன்மாதா வின் அருளில் இதற்கான விடையை இப்பாடல் கூறும் இசையரசியின் குரலில்..

படம் அன்னை அபிராமி

http://www.inbaminge.com/t/a/Annai%20Abhirami/

RAGHAVENDRA
25th September 2014, 06:36 AM
பொங்கும் பூம்புனல்

இங்கு இந்த நாயகி அச்சம் விட்டு நாணம் விட்டு என்ன கேட்கிறார்...

நாயகனிடம் என்ன தான் எதிர்பார்க்கிறார்..

பாடலில் உள்ளது விடை...

திரை இசைத் திலகம் இசையில் தெய்வ சங்கல்பம் படத்திற்காக ஒலிக்கும் பாடல்..

http://www.inbaminge.com/t/d/Deiva%20Sangalpam/

அது என்ன மாயமோ தெரியவில்லை.. இசையரசியும் இசைத் திலகமும் இணைந்தாலே ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான்... இது மட்டும் விதிவிலக்கா என்ன...

கேளுங்கள் அருமையான பாடலை

RAGHAVENDRA
25th September 2014, 06:40 AM
பொங்கும் பூம்புனல்

இதுவும் கேள்வி கேட்கிற பாடல்.. விடை ... யார் தருவார்...

ஹலோ பார்ட்னர் திரைப்படத்தில் தாராபுரம் சுந்தரராஜன் இசையில் இசையரசியின் குரலில் ...

கன்னங்கள் சிவப்பது எதனாலே..

http://www.inbaminge.com/t/h/Hello%20Partner/

RAGHAVENDRA
25th September 2014, 06:44 AM
பொங்கும் பூம்புனல்

என்ன தீர்க்கதரிசனமான வரிகள்.. இன்றைய காலகட்டத்தில் பலித்தே விட்டது..

நல்லவன் கையில் நாணயம் இருந்தால் நாலு பேருக்கு (ஷாதகம்...மன்னிக்கவும்...) சாதகம்... அது

பொல்லாதவன் கையில் இருந்தால் எல்லார் உயிருக்கும் பாதகம்...

பாடலின் ஒவ்வொரு வரியும் ஒவ்வொருவர் வாழ்விற்கும் இன்று பொருந்தும் வரிகள்..

யார் ஜம்புலிங்கம் படத்தில் சி.என்.பாண்டுரங்கன் இசையில் சி.எஸ்.ஜெயராமன் குரலில்..

http://www.inbaminge.com/t/List%20Of%20Tamil%20Films%20In%201972.html

RAGHAVENDRA
25th September 2014, 06:49 AM
பொங்கும் பூம்புனல்

யாரோ ரசிகன் பார்த்தான் சிரித்தான் கேட்டான் ஒரு கேள்வி...

அது யாரது.. அது என்ன கேள்வி.. எதைப் பார்த்தான்... ஏன் சிரித்தான்...

இவையனைத்திற்கும் விடையளிக்கிறார் ராட்சஷி...

சரணத்தின் மெட்டு... ஆஹா...சூப்பர்.. என்று கேட்கும் ஒவ்வொருவரும் சொல்லக் கூடும்...

பொன்மகள் வந்தாள் திரைப்படத்தில் சங்கர் கணேஷ் இசையில் சூப்பர் டூப்பர் பாட்டு....

வாசு சார்... இது உங்களுக்காக...இனிமேல் உங்கள் பிளேயரில் தினமும் ஒலிக்கப் போகிற பாடல்

http://www.inbaminge.com/t/p/Ponmagal%20Vandhal/

RAGHAVENDRA
25th September 2014, 06:54 AM
பொங்கும் பூம்புனல்

மச்சான் ஏன் மாலை நேரம் மட்டும் பார்த்து பார்த்து வருகிறார்.. அவருடைய ஆசை என்ன...

சூப்பர் டூப்பர் மெட்டோடு ஈஸ்வரி கேள்வி கேட்கிறார்..யாராவது விடை தாருங்களேன்...

http://www.inbaminge.com/t/p/Ponmagal%20Vandhal/

வாசு சார்... சங்கர் கணேஷ் ஈஸ்வரி காம்பினேஷன் பற்றி தனியாக ஒரு பத்து பக்கத்திற்காவது விவாதிக்க வேண்டும்.. அவ்வளவு நுணுக்கமான சங்கதிகள் இந்த படைப்புக்களில் உள்ளன.

இதுவும் வாசு சார் பிளேயரில் அன்றாடம் ஒலிக்கப் போகும் பாடலானால் வியப்பில்லை.. இதுவும் பொன்மகள் வந்தாள் படத்தில் தான்.

RAGHAVENDRA
25th September 2014, 07:01 AM
பொங்கும் பூம்புனல்

யாரப்பா இது காலையில் ஒரு மாதிரியான பாட்டாகப் போட்டு கடுப்பேத்துவது என்று யாரோ மனதுக்குள் திட்டுவது தெரிகிறது.. திட்டிக் கொண்டே இந்தப் பாடலைக் கேளுங்கள்... இசையரசியின் சூப்பர் குரலில் அட்டகாசமான பாடல்.. நடுவில் அவரது சிணுங்கலான சிரிப்பும் உங்களை வசீகரிக்கும்..

ராணி யார் குழந்தை படத்தில் டி.வி.ராஜு இசையில் ராஜா என் மோகத்தைத் தூண்டாதே... அருமையான பாடல்... பாடலில் கிடாரின் இசை நம்மை வசப்படுத்தி விடும்..

http://www.inbaminge.com/t/r/Rani%20Yaar%20Kuzhandhai/

RAGHAVENDRA
25th September 2014, 07:05 AM
பொங்கும் பூம்புனல்

நானென்னும் அகந்தை கொண்ட ஆண்கள் முன்னே தாழ்ந்தவரல்ல. பெண்கள் தாழ்ந்தவரல்ல...

மிக மிக அபூர்வமான பாடல்... ஒவ்வொரு வரியும் கருத்துள்ள பாடல்... இப்பாடலுக்கு நன்றி நமது tfmlover அவர்களுக்கு..

உனக்கும் எனக்கும் திரைப்படத்தில் மெல்லிசை மாமணி இசையில் இசையரசியின் குரலில்..

http://www.inbaminge.com/t/u/Unakkum%20Enakkum/

Richardsof
25th September 2014, 08:25 AM
[QUOTE=rajraj;1167325]T.V.Rathinam, a popular singer in the 50s. I will post one of her song later. I think I posted her song about 'Radio petti' in some thread! :) Those days radio was a luxury item! :lol:
-------------------------------------

TV RATHNAM- SINGER

http://i60.tinypic.com/2cibfvq.jpghttp://i58.tinypic.com/vpw1sh.jpg

Richardsof
25th September 2014, 08:26 AM
http://i61.tinypic.com/2j491mf.jpghttp://i59.tinypic.com/5minx2.jpg

rajeshkrv
25th September 2014, 09:05 AM
காலை வணக்கம் நண்பர்களே

vasudevan31355
25th September 2014, 09:07 AM
டி..வி.ரத்னம் அருமையான குரல்வளம் கொண்ட பாடகி. நடிகர் திலகம் நடித்து வெளியான 'முதல் தேதி' திரைப்படம் கன்னடத்தில் தயாரானது. நடிகர் திலகத்தின் பாத்திரத்தை பி.ஆர்.பந்துலுவும், அஞ்சலிதேவி கதாபாத்திரத்தை பந்துலுவின் மனைவி எம்.வி.ராஜம்மாவும் ஏற்று நடித்தனர்.

அதிலிருந்து முதல் தேதி என்ற பாடலை ரத்னம் அட்டகாசமாகப் பாடியிருப்பார்.


http://www.youtube.com/watch?v=kWVY01tlNfo&feature=player_detailpage

vasudevan31355
25th September 2014, 09:07 AM
வணக்கம் ராஜேஷ்ஜி!

rajeshkrv
25th September 2014, 09:27 AM
டி.வி.ரத்னம் தானே அரங்கேற்றம் திரையில் ஸ்லோகங்கள் பாடினார்.

வாசு ஜி, நேற்று இருளும் ஒளியும் பாடலும் அதன் கன்னட வடிவமும் தந்திருந்தேனே பார்த்தீரா...

rajeshkrv
25th September 2014, 09:34 AM
எதிர்பாராத அடி - நடிகை பத்மினியுடன் ஒரு சந்திப்பு
https://encrypted-tbn2.gstatic.com/images?q=tbn:ANd9GcSY95tnqq76KSIDp50BI9Hc4CCtCGgm_ n5HlxcMWPOk8Omo8Ijl
அ.முத்துலிங்கம்

நான் எங்கு போவதானாலும் குறித்த நேரத்துக்கு போய்விடுவேன். எனக்கு ஒருவரையும் காக்க வைத்து பழக்கமில்லை. ஆனபடியால் கனடா விமான நிலையத்துக்கு நான் ஐந்து நிமிடம் முன்பாகவே சென்றுவிட்டேன். ஆனால் அன்று பார்த்து விமானம் 25 நிமிடங்கள் முன்னதாக வந்து என்னை லேட்டாக்கிவிட்டது. பார்த்தால் அங்கே ஏற்கனவே பெரும்கூட்டம் திரண்டிருந்தது.

நான் நடிகை பத்மினியை நேரே கண்டவன் அல்ல; சினிமாவில் பார்த்ததுதான். ஆகையால் அடையாளம் கண்டுபிடிக்க முடியுமா என்ற ஐயம் இருந்தது. மிகச் சாதாரண உடையில் மேக்கப் கூட இல்லாமல் இருந்தார். வரவேற்க வந்தவர்களும், இன்னும் ஏர்போட்டில் கண்டவர்களுமாக அவரை சூழ்ந்துவிட்டார்கள். அவருக்கு எழுபது பிராயம் என்று நம்பமுடிகிறதா. ஆனாலும் அவரைச் சுற்றி ஓர் ஒளி வீசியது. அவருக்கு கிடைத்த 'உலக நாட்டியப் பேரொளி ' பட்டம் சரியானதுதான் என்று அந்தக் கணத்தில் எனக்கு உறுதியானது.



என் நண்பர் ஒருவர் பத்மினிக்கு மிகவும் வேண்டப்பட்டவர். அவருடைய தயவில் கனடாவில் ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு நாட்டிய நிகழ்ச்சிக்கு தலைமை தாங்க பத்மினி வருகிறார். இந்தச் சமயம் மூன்று நாட்கள் பத்மினி என் வீட்டில் தங்குவதாக ஏற்பாடு.

பத்மினி வந்து கனடா மண்ணில் இறங்கி சரியாக அரை மணி நேரத்துக்குள் அவரிடம் ஒரு கேள்வி கேட்கப்படுகிறது. உலகத்திலேயே அகலமான 401 அதிவேக சாலையில், ஏர்போர்ட்டில் இருந்து இருபது மைல் தூரத்திலும், என் வீட்டில் இருந்து ஐம்பது மைல் துரத்திலும் கார் பயணிக்கும்போது அந்தக் கேள்வி கேட்கப்படுகிறது. வெளியே பனி கொட்டுகிறது. அந்தப் பனிப் புதையலில் கார் சறுக்கியபடி அப்பவும் வேகம் குறையாமல் நகர்கிறது.

பத்மினியை சந்திக்க வந்த பெண்மணியின் மனதில் இந்தக் கேள்வி முப்பத்தைந்து வருடங்களாக இருந்ததாம். இப்பொழுது வட்டியும் குட்டியும் போட்டு மிகவும் கனத்தோடு அது வெளியே வருகிறது. 'நீங்கள் ஏன் சிவாஜியை கல்யாணம் செய்துகொள்ளவில்லை ? '

இதுதான் கேள்வி. மூடத்தனத்துக்கு சமமான பிடிவாதத்துடனும், பிடிவாதத்துக்கு சற்று கூடிய வெகுளித்தனத்துடனும் ஓர் ஐம்பது வயது அம்மையார் இந்தக் கேள்வியைக் கேட்டார். பத்மினி என்னைப் பார்க்கிறார். பிறகு கேள்வி கேட்டவரைப் பார்க்கிறார். பதில் பேசவில்லை. அந்தக் கேள்வியும் நாலு பக்கமும் கண்ணாடி ஏற்றிய காருக்குள் ஒரு வட்டம் சுற்றிவிட்டு கீழே விழுந்துவிடுகிறது. பத்மினி தங்கியிருந்த மூன்று தினங்களிலும் இதே கேள்வியை அவரிடம் வெவ்வேறு நபர்கள் இருபது தடவைகளாவது கேட்கிறார்கள்.

இவர்களுக்கு வேறு கேள்விகளே இல்லையா ? ஆனால் நான் அதிசயப்பட்ட அளவுக்கு பத்மினி ஆச்சரியம் காட்டவில்லை. இந்தக் கேள்விக்கு மிகவும் பழகிப் போனவர்போல காணப்பட்டார்.

சிவாஜியை பற்றி பேச்சு வரும் போதெல்லாம் அவர் கண்களில் ஒரு சிறு மின்னல் புகுந்துவிடுவதை நான் கவனித்திருந்தேன். நீங்கள் சிவாஜியை முதன்முதல் சந்தித்தது ஞாபகத்தில் இருக்கிறதா என்றார் ஒருவர்.

சிவாஜி இன்னும் சினிமாவுக்கு வரவில்லை. நான் ஏற்கனவே சினிமாவில் நடித்து புகழ் பெற்றிருந்தேன். அப்போது ரத்தக்கண்ணீர் நாடகம் பார்க்கப் போயிருந்தேன். எம்.ஆர்.ராதாவின் நாடகம். அதில் சிவாஜிக்கு பார்ட்டே இல்லை. ஆனால் மேடையில் பின்னால் நின்று உதவிசெய்து கொண்டிருந்தார். என்னைக் கண்டதும் தன் வாழ்க்கையில் ஒருமுறையாவது என்னுடன் நடிக்கவேண்டும் என்ற தன் ஆசையை ஓப்பனாக சொன்னார். அப்பொழுது எனக்கு தெரியாது. அவருக்கும் தெரியாது. நாங்கள் 60 படங்கள் தொடர்ந்து செய்யப்போகிறோம் என்பது.

அவருடன் நடித்த நாட்கள் மறக்க முடியாதவை. எட்டு மணிக்கு ஷூட்டிங் என்றால் 7.55க்கே வந்து உட்கார்ந்துவிடுவார். நாங்கள் வழக்கம்போல மேக்கப் எல்லாம் போட்டு வரும்போது நேரம் எப்படியும் ஒன்பது ஆகிவிடும். பொறுமையாக 'என்ன பாப்ஸ், லன்ச் எல்லாம் ஆச்சா ? ' என்பார்.

ஏதாவது பேசி சிரிப்பு மூட்டுவதுதான் அவர் வேலை. சேலைத் தலைப்பை தூக்கிப் பிடித்துக்கொண்டு அந்தக் காலத்து கதாநாயகி லட்சணமாக நான் ஒயிலாக அசைந்துவரும்போது 'என்னம்மா, துணி காயவைக்கிறாயா ? ' என்று கிண்டலடித்து அந்த shot ஐ திருப்பி திருப்பி எடுக்க வைத்துவிடுவார். காதல் பாடல் வேளையின்போது இரண்டு பக்கமும் குரூப் நடனக்காரர்களை திரும்பி திரும்பி தேடுவார். 'என்ன பாப்ஸ், ஆரவாரப் பேய்களைக் காணவில்லை ' என்பார். இன்னும் போரடிக்கும் நேரங்களில் 'யாரப்பா, ரொம்ப நாழியாச்சு இருமி. ஒரு சிகரட் இருந்தாக் குடு ' என்பார். இப்படி சிரிக்க வைத்தபடியே இருப்பார். அடுத்ததாக அழுகை சீன் இருந்தால் வெகு கஷ்டம்தான்.

பத்மினியுடைய முதல் படம் மணமகள். என்.எஸ்.கிருஷ்ணன் எடுத்தது. அதில் மூன்று சகோதரிகளும் நடித்திருந்தார்கள். நான் அப்பொழுது போர்டிங்கில் இருந்து படித்துக் கொண்டிருந்தேன். என்னுடன் படித்தவர்கள் எல்லாம் இந்தப் படத்தை பார்த்துவிட்டு புகழ்ந்து தள்ளினார்கள். எப்படியும் பத்மினியை பார்த்துவிடவேண்டும் என்ற வெறி பிறந்தது. என்னுடன் படித்த 'சண் ' என்ற சண்முகரத்தினம் இந்த சதிக்கு உடன்படுவதாக கூறினான்.

சண் மெலிந்துபோய், முதுகு தோள் எலும்புகள் பின்னுக்கு தள்ள, நெடுப்பாக இருப்பான். திங்கள் காலை போட்ட உடுப்பை வெள்ளி இரவுதான் கழற்றுவான். ஒருநாள் இரவு களவாக செக்கண்ட் ஷோ பார்க்கும் ஆர்வத்தில் கேட் ஏறிப் பாய்ந்து அவனுடன் புறப்பட்டேன். அந்தப் படத்தில் பத்மினியின் அழகும், ஆட்டமும் நெருக்கமானது. ஓர் இடத்தில் கூந்தல் வழியாக என்னை மாத்திரம் பார்த்து சிரிப்பார். அதற்கு பின்னர் எங்களுக்கு தமிழ் படிப்பித்த ஆசிரியர் 'செறி எயிற்று அரிவை ' என்று சொல்லும் போதெல்லாம் பத்மினியின் நெருங்கிய பற்கள் என் கண்முன்னே தோன்றி இடர் செய்யும்.

திரும்பும்போது பஸ் தவறிவிட்டது. 12 மைல் தூரத்தையும் நடந்தே கடந்தோம். மரவள்ளிக் கிழங்கு தோட்டங்களை குறுக்கறுத்து, நட்சந்திரங்கள் வழிகாட்ட சண் முன்னே நடந்தான். அங்குசக்காரன்போல நான் பின்னே தொடர்ந்தேன். வானத்திலே நட்சத்திரங்கள் இவ்வளவு கூட்டமாக இருக்கும்போது உற்சாகத்துக்கு குறைவேது. 'தெருவில் வாரானோ, என்னைச் சற்றே திரும்பிப் பாரானோ ' என்று சண் பெருங்குரல் எடுத்துப் பாடினான். சில தெரு நாய்கள் எங்களைத் திரும்பிப் பார்த்ததுமல்லாமல் எங்கள் பயணத்தை இன்னும் துரிதப்படுத்தின.

திரும்பி வந்தபோதும் கேட் பூட்டியபடியே கிடந்தது. அதை வார்டனோ, காவல்காரனோ, வேறு யாரோ ஞாபகமறதியாக எங்களுக்காக திறந்து வைத்திருக்கவில்லை. கேரளாவில் இருந்து வந்து எங்களுக்கு பெளதிகம் படிப்பித்த ஜோஸப் மாஸ்டர்தான் வார்டன். பெருவிரல்கள் மாத்திரம் தெரியும் பாதி சப்பாத்து அணிந்திருப்பார். மிகவும் கண்டிப்பானவர். கேட் ஏறி இருவரும் 'தொம் தொம் ' என்று குதித்தோம். அன்று வார்டனிடம் பிடிபட்டிருந்தால் இன்று இந்தக் கட்டுரையை எழுதிக் கொண்டிருந்திருக்க மாட்டேன். சண்ணும் ஆழநீர் பாதைகள் பற்றி விரிவுரைகள் செய்துகொண்டிருக்க மாட்டான்.

இந்தக் கதையை கேட்டுவிட்டு பத்மினி கலகலவென்று சிரித்தார். இதுபோல இன்னும் எத்தனை கதைகளை அவர் கேட்டிருப்பாரோ!

முன்னூறு வருடங்களுக்கு முன் மாரிமுத்தாப்பிள்ளை யாழ்ப்பாணத்தில் 'காலைத்தூக்கியவர் ' அதற்கு பிறகு அதை கீழே இறக்கவே இல்லை. அங்கே பரதநாட்டியம் படித்த பெண்களின் எல்லை 'காலைத்தூக்கி ' ஆடும் நடனம்தான். அது 1959ம் ஆண்டு பத்மினி 'ராணி எலிஸபெத் ' கப்பலில் சிலோனுக்கு வந்து ஒரு நாட்டியக் கச்சேரி செய்தபோது மாறியது என்று சொல்லலாம். பரதநாட்டியம் கற்பதில் ஓர் ஆசையும், புது உத்வேகமும் அப்போது எங்கள் பெண்களிடம் பிறந்தது. மற்றவர்கள் விஷயம் எப்படியோ என்னுடைய தங்கை நடனம் கற்பதற்கு காரணமான குற்றவாளி அவர்தான் என்று சொன்னேன். நாற்பது வருடம் லேட்டாக அவர் மன்னிப்பு கேட்டுக்கொண்டார்.

பத்மினியின் காலத்துக்கு முன்பெல்லாம் தமிழ் சினிமாவில் கதாநாயகன், காதலியை கட்டிப் பிடிக்கும்போது, காதலி தன் இரண்டு கைகளையும் முன்னே மடித்து கேடயமாக்கி தன் மார்புகளை ஒரு கோட்டையைப்போல காப்பாற்றிவிடுவாள். பத்மினி நடிக்க வந்த சமயம் இந்த சம்பிரதாயம் உடைந்து போனது. வஞ்சிக்கோட்டை வாலிபனில் 'கோட்டை கொத்தளத்தோடு ' பத்மினியை கட்டிப்பிடித்து ஜெமினி தன் ஆசையையும், ரசிகர்களின் ஆவலையும் தீர்த்து வைப்பார்.

பத்மினியை அழவைத்த சம்பவம் ஒன்றும் இந்தப் படப் பிடிப்பில்தான் நேர்ந்தது. இத்தனை வருடமாகியும் அதைச் சொல்லும்போது பத்மினியின் கண்கள் கலங்குகின்றன. வழக்கம்போல வாசன் இந்தப் படத்தை பிரம்மாண்டமாக எடுக்க தீர்மானித்தார். அப்போது பத்மினி தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரம். அதே சமயம் இந்தி சினிமாவில் கொடிகட்டிப் பறந்தவர் வைஜயந்திமாலா.

தேவதாஸ் படத்தில் ஐஸ்வர்யாராயுக்கும், மாதுரி தீட்சித்துக்கும் இடையில் ஒரு போட்டி நடனம் இருக்கிறது அல்லவா ? அதுபோல வஞ்சிக்கோட்டை வாலிபனிலும் மிகவும் பிரபலமான ஒரு போட்டி நடனம் வரும். ஹீராலால் என்ற டான்ஸ் மாஸ்டர் இரு நாட்டிய தாரகைகளுக்கும் நடன அசைவுகள் சொல்லித்தந்தார். இதிலே ஒரு பிரச்சினை. வாசனிடம் ஒரு கொள்கை இருந்தது. அவரிடம் வேலை செய்தவர்கள் எல்லாம் எழுபது வயதை தாண்டி இருக்கவேண்டும். மேக்கப், லைட்போய், காமிராக்காரர், வசனகர்த்தா இப்படி எல்லாரும் வாசனுடைய வயதுக்காரர்களாக இருந்தார்கள். ஒரு லைட்டை தள்ளி வைப்பது என்றால்கூட அரை மணி நேரம் எடுக்கும். அதனால் படப்பிடிப்பு ஆமை வேகத்தில் நகர்ந்தது. பத்மினிக்கு மற்றப் படப்பிடிப்புகள் இருந்தன. வைஜயந்திமாலா வடக்கில் இருந்து இதற்காகவே வந்திருந்தார். பத்மினி இல்லாத சமயங்களில் வைஜயந்திமாலா ஹீராலாலிடம் ரகஸ்யமாக சில அசைவுகளை ஒத்திக்கை பார்த்து வைத்துக்கொள்வார்.

படப்பிடிப்பு சமயம் பத்மினியின் நடனம் அமோகமாக அமைந்தது. வைஜயந்திமாலா புளகாங்கிதம் அடையவில்லை. அவர் 'சாதுர்யம் பேசாதேடி, என் சலங்கைக்கு பதில் சொல்லடி ' என்று தோளிலே சடை துவழ, காலிலே தீப்பொறி பறக்க புயல்போல சுழன்றபடி மேடையிலே தோன்றுவார். ஒருமுறை இருவரும் ஆடும்போது பத்மினியின் நிழல் வைஜயந்திமாலாவில் விழுந்தது. பத்மினி மன்னிப்பாக நடனத்தை நிறுத்தி 'என்னுடைய நிழல் உங்கள்மேலே விழுகிறது ' என்றார். உடனேயே வைஜயந்திமாலா ஆங்கிலத்தில் இரண்டு அர்த்தம் தொனிக்க 'It 's only a passing shadow ' என்றார். தமிழ் நாட்டு முதல் நடிகையை பார்த்து 'நகரும் நிழல் ' என்று சொன்னது பத்மினியை புண்படுத்திவிட்டது. அந்த இரண்டு வார்த்தைகளுக்காக தான் இரண்டு இரவுகள் தொடர்ந்து அழுததாக பத்மினி கூறினார். படம் வெளிவந்தபோது நாட்டிய தாரகை யார் என்பதில் ஒருவருக்கும் சந்தேகம் இருக்கவில்லை.

'எதிர்பாராதது ' படத்தில் சிவாஜி வழக்கம்போல பத்மினியின் காதலனாக வருகிறார். சந்தர்ப்பவசத்தால் சிவாஜியின் தகப்பன் நாகய்யாவுக்கு பத்மினி மனைவியாகிவிடுகிறார். காதலன் இப்போது மகன் முறை. சிவாஜி ஒரு சமயம் பத்மினியை பழைய நினைவில் அணுகியபோது பத்மினி கன்னத்தில் ஒரு அறை கொடுக்கிறார். படம் எடுத்தபோது அந்த நேர உணர்ச்சி வேகத்தில் பத்மினி நிஜமாகவே அறைந்துவிடுகிறார். சிவாஜியுடைய கன்னம் வீங்கிப்போய் மூன்று நாட்களாக அவர் படப்பிடிப்புக்கு வரவில்லை. மூன்றாவது நாள் சிவாஜியை பார்க்க அவர் வீட்டுக்கு பத்மினி வருகிறார். அப்பொழுது ஒரு பியட் கார் சிவாஜிக்கு பரிசு கொடுத்தார். அதுதான் சிவாஜியுடைய முதலாவது கார்.

என் மூளையில் இருக்கிற வெற்று இடங்களில் கொஞ்சம் கொஞ்சமாக இருள் படிய ஆரம்பித்திருக்கிறது. புத்தகத்தின் தலைப்பு தெரிந்தால் எழுதியவர் பெயர் மறந்து விடுகிறது; எழுதியவர் பெயர் ஞாபகத்தில் இருந்தால் புத்தகத்தின் பெயர் மறந்துவிடுகிறது. இரண்டும் ஞாபகத்தில் இருந்தால் அந்த புத்தகத்துக்குள் என்ன இருக்கிறது என்பது மறந்துபோய் விடுகிறது.

ஆனால் பத்மினியின் ஞாபகசக்தி அப்படியல்ல. அசரவைக்கிறது. எந்த ஒரு சம்பவத்தையும் கூறமுன்பு அது நடந்த வருடத்தை கூறியபடிதான் ஆரம்பிக்கிறார். '1944ல் உதயசங்கருடைய கல்பனா படத்தில் டான்ஸ் ஆடினேனா ' என்று தொடங்கி அந்த விவரங்கள் எல்லாவற்றையும் தருவார். சினிமா என்றால் தயாரிப்பாளர் பெயர், டைரக்டர் பெயர், நடிகர்கள் பட்டியல் எல்லாமே நினைவில் வைத்திருக்கிறார். அவர் மூளையில் பெரிய தரவுத்தளம் (database) ஒன்று ஒருவித வைரஸ் பாதிப்பும் இல்லாமல் இயங்குகிறது.

விழாவுக்கு பத்மினியின் அலங்காரம் பிரமாதமாக இருந்தது. இருட்டில் போத்தல் தேனை கவிழ்த்து குடித்ததுபோல இதழ்களில் உருகி வழியும் லிப்ஸ்டிக். அவருடைய எடைக்கு சரிசமமான எடையோடு இருக்கும் சரிகை நிறைந்த சேலை. இரண்டு கைகளிலும் எண்ணிக்கை சரி பார்த்து திருப்பி திருப்பி எண்ணி அணிந்த வளையல்கள். முகத்திலே விழுந்த சிறு சுருக்கத்தை தவிர, ஒரு சிறகு மட்டுமே உதிர்த்த தேவதைபோல, அந்தக் காலத்து ஏ.பி. நாகராஜனுடைய 'விளையாட்டுப்பிள்ளை ' சினிமாவில் வந்த பத்மினியாக காட்சியளித்தார்.

நீண்ட வசனங்களை எல்லாம் பத்மினி மேக்கப் போடும்போதே பாடமாக்கி விடுவார் என்று கேள்விப் பட்டிருக்கிறேன். இந்த நாட்கள்போல இல்லாமல் அந்தக் காலத்தில் நடிகைகள்தான் (கொடுமை) தங்கள் வசனங்களையும் பேசவேண்டும். ஆனால் விழாவில் மேடை ஏறியதும் அவர் புதிய பத்மினியாகிவிட்டார். கைதேர்ந்த பேச்சுக்காரி மாதிரி விழா சம்பந்தப்பட்டவர்கள் பேர்கள் எல்லாவற்றையும் ஞாபகத்தில் வைத்து சுருக்கமாகப் பேசிமுடித்தார். அந்தச் சில நிமிடங்கள் சபையோர்கள் அவருடைய பிரசன்னத்தில் மயங்கி 'நலம்தானா ? நலம்தானா ? ' என்று கூக்குரலிட்டபடியே இருந்தார்கள்.

பத்மினிக்கு அப்பம் என்றால் மிகப் பிரியம். கேரளாவுக்கு போகும்போது அவர் விரும்பி சாப்பிடுவது அப்பம்தான். ரொறொன்ரோவில் முட்டை அப்பம், பால் அப்பம், வெள்ளை அப்பம் எல்லாம் கிடைக்கும், சீனி சம்பலுடன். எல்லாம் அசல் யாழ்ப்பாண முறைப்படி தயாரித்தது. கடைசி நாள் அவரை ஒரு அப்பம் உணவகத்துக்கு நானும் மனைவியும் அழைத்து போனோம்.

அங்கே ஆட்கள் வந்தார்கள்; போனார்கள். சேவகர்கள் உணவு பரிமாறினார்கள். ஆனால் ஒருவருக்கும் பத்மினியை அடையாளம் தெரியவில்லை. தன்னை வெளிப்படுத்த சேவகனுடன் பேச்சுக் கொடுத்துப் பார்த்தார். அவனோ கல்லுளிமங்கனாக இருந்தான். பத்மினியின் முகத்தில் கொஞ்சம் ஏமாற்றம் தெரிந்தது.

முதல் நாள் இரவு ஒரு விருந்துக்கு போயிருந்தோம். அங்கே நாங்கள் போனபோது ஒரு விவாதம் நடந்துகொண்டிருந்தது. No Fly Zone என்றால் 'இலையான்கள் இல்லாத தேசம் ' என்றார் ஒருத்தர். மற்றவர் 'சிப் இழுத்து மூடாத பிரதேசம் ' என்றார். இந்த சமயத்தில் பத்மினி போனதும் அவரை மொய்த்துவிட்டார்கள். தலை மயிர் கூராக்கின இளைஞனில் இருந்து, மேற் சொண்டில் வளையம் குத்திய குமரி வரை பத்மினியிடம் கையெழுத்து கேட்டு இம்சைப் படுத்தினார்கள். 'தப்பினோம், பிழைத்தோம் ' என்று நாங்கள் திரும்பி வரும்போது 'ஐயோ அம்மா, கால் கை எல்லாம் பிச்சு எடுத்திட்டாங்க ' என்று பத்மினி ஓயாது புலம்பியது ஞாபகத்துக்கு வந்தது.

இப்போது பாதி இருள் உணவகத்தில் அதே நாட்டியப் பேரொளிக்கு முகம் வாட்டமுற்றது. உதாசீனமாக உணர்ந்தார் போலும். பொது வாழ்க்கையில் ஈடுபட்டவர்களுக்கு விழும் மிகப் பெரிய அடி 'பாராமுகம் ' என்பது அப்போது எனக்கு மெள்ளப் புரிந்தது.

சிவாஜியை எப்போது கடைசியாக சந்தித்தீர்கள் ?

அவர் இறப்பதற்கு இரண்டு வருடங்கள் முன்பு அவரைப் பார்க்கப் போயிருந்தேன். சிவாஜி மெலிந்து ஆள் மாறிப் போயிருந்தார். தண்ணீர் கூட அவர் விருப்பத்திற்கு குடிக்க முடியாது. ஒரு நாளைக்கு ஒரு கிளாஸ் தண்ணீர்தான். கொஞ்சம் கூடக் குடித்தாலும் உடம்பில் தண்ணீர் கட்டி உப்பிவிடும். மிக ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.

சிவாஜி மாடியிலேயே தங்கியிருந்தார். கீழேயே வருவதில்லை. அவரைப் பார்ப்பவர்கள் மேலே போய் பார்த்துவிட்டு அப்படியே போய்விடுவார்கள். சிவாஜி சாப்பாட்டு பிரியர்; என்னைப் போலவே. அவருக்கு விருப்பமான அத்தனை அயிட்டமும் எனக்கும் பிடிக்கும். அன்று மேசை நிறைய சாப்பாட்டு வகைகள். காடை, கெளதாரி, கோழி, ஆடு, மீன், றால் என்று எனக்கு பிடித்தமான அத்தனை கறி வகைகளும் சமைத்திருந்தார்கள்.

அதில் ஒன்றைக்கூட சிவாஜி உண்ண முடியாது. அப்படியும் என் ஒருத்திக்காக அவ்வளவு சமைத்திருந்தார்கள். சிவாஜியை ஒரு நாற்காலியில் உட்காரவைத்து நாலு பேர் அவரை மாடியில் இருந்து தூக்கி வந்தார்கள். அவர் எனக்குப் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டு 'சாப்பிடம்மா, சாப்பிடு. நல்லா சாப்பிடு ' என்றார். முகம்மது அலி என்ற குத்துச்சண்டை வீரரைப்பற்றி ஒரு காலத்தில் பாடல் இருந்தது. 'வண்ணத்துப் பூச்சிபோல மிதப்பார்; குளவி போல குத்துவார். ' அவருடைய கால்கள் தரையில் பாவாமல் துரிதமாக இயங்குமாம். இன்று அவருக்கு பார்க்கின்ஸன் வியாதி. ஒரு அடி எடுத்து வைக்க ஒரு நிமிடம் எடுக்கிறார். அதுபோல ஒரு கொடுமைதான் இதுவும். உணவின் சுவை அறிந்தவர் அதை ருசிக்க முடியாத கொடுமை. அவருக்கு பிடித்தமான அத்தனை உணவையும், வெறுமனே பார்த்தபடி இருந்தார்.

அதுதான் கடைசி நினைவு. வேறு ஏதாவது நினைவாக இருந்திருக்கலாம் என்று இப்போது தோன்றுகிறது.

சாதி வெறி பற்றி நான் படிக்காத கட்டுரைகள் இல்லை. டானியலின் 'பஞ்சமர் ' நாவலில் தொடங்கி, மாதவய்யாவின் 'கண்ணன் பெரும் தூது ' சிறுகதையில் இருந்து, சமீபத்தில் ஜெயமோகனின் 'கடைசிவரை ' சிறுகதை வரை படித்தவன்தான். ஆனாலும் சில விஷயங்கள் கேட்கும்போது மனதை திடுக்கிட வைத்துவிடுகின்றன.

மாலை ஆறுமணி இருக்கும். பத்மினி மஞ்சள் கரை வைத்த வெள்ளை சுரிதார் அணிந்து காலுக்கு மேல் கால் போட்டு சோபாவில் சாய்ந்து அமைதியாக உட்கார்ந்திருக்கிறார். அவர் தேநீர், கோப்பி போன்ற பானம் ஒன்றும் அருதுவதில்லை. ஒரு கிளாஸில் பழ ரசம் மெல்லிய மிடறுகளில் சுவைத்தபடி இருந்தார். உடம்பும் மனமும் ஒருமித்து மிதக்கும் ஒரு தருணம் அது. அவருடைய சம்பாஷணை எங்கோ தொடங்கி எங்கோ தொட்டு தொட்டு செல்கிறது. திடாரென்று சொன்னார். 'நான் நாயர் பொண்ணு. அவர் கள்ளர் ஜாதி. நடக்கிற காரியமா ? '

நான் திடுக்கிட்டு விட்டேன். கடந்த இரண்டு தினங்களாக இருபது தடவைகளுக்கு மேலாக கேட்கப்பட்ட ஒரு கேள்விக்கு அவர் பதில் கூறுகிறார் என்று எனக்கு அப்போதுதான் புரிந்தது. அவர் கண்கள் பளபளவென்று மின்னிக் காட்டிக்கொடுத்தன.

பத்மினி திரும்பிப் போன அன்று டெலிபோன் மணி ஓசை நின்றது. கதவு மணி ஓய்ந்தது. பத்திரிகை நிருபர்களின் தொல்லை விட்டது. சொல்லியும் சொல்லாமலும் வந்த விருந்தாளிகளின் ஆரவாரம் முடிந்தது. மாடிப்படிகளில் குடுகுடுவென்று ஓடிவரும் ஒலியும், கலகலவென்ற பத்மினியின் ஓயாத பேச்சும் மறைந்துபோனது. திடாரென்று வீட்டில் மறுபடியும் இருள் சூழ்ந்தது போன்ற ஓர் உணர்வு.

ஆனாலும் ஒரு லாபம் இருந்தது. நாட்டியப் பேரொளி போனபோது ஒரு சிறு ஒளியை எனக்காக விட்டுப் போய்விட்டார். ரோட்டிலே நடை செல்லும்போதும், உணவகத்தில் சாப்பிடப் போனபோதும், வீடியோ நிலையத்திலும், சாமான் வாங்கும் கடைகளிலும் என்னைப் பார்த்து இப்போது 'ஹாய் ' என்று சொல்கிறார்கள்.

(ஆனந்த விகடனில் வெளியான சுருக்கப்பட்ட கட்டுரையின் முழு உருவம்)

https://www.youtube.com/watch?v=0hEzjQvF47U&list=UUtKM1DxKSFx_tomwj2Ats5Q

vasudevan31355
25th September 2014, 09:39 AM
டி.வி.ரத்னம் தானே அரங்கேற்றம் திரையில் ஸ்லோகங்கள் பாடினார்.

வாசு ஜி, நேற்று இருளும் ஒளியும் பாடலும் அதன் கன்னட வடிவமும் தந்திருந்தேனே பார்த்தீரா...

பார்த்து ரசித்தேன் ராஜேஷ்ஜி. அருமையிலும் அருமை.

சித்ரா பௌர்ணமி 'காலம் உண்டு' பாடல் பார்த்தீர்களா?

vasudevan31355
25th September 2014, 09:44 AM
துணைவன் படத்தில் அருமையான ஒரு பாடல். பொதுவாக துணைவன் படத்தில் முருகன் புகழ் பாடும் பக்திப் பாடலைத்தான் கேட்டிருப்போம். இந்தப் படத்தில் ஒரு கண்ணியமான காதல் பாடலும் உண்டு.

'நான் யார் என்பதை நீ சொல்ல

நீ யார் என்பதை நான் சொல்ல'

சுசீலாம்மா, பாடகர் திலகம் குரலுக்கு நடிப்பவர்கள் சௌகார் ஜானகியும், நடிப்புச் சுடர் ஏ.வி.எம்.ராஜனும்.


http://www.youtube.com/watch?v=wXxWufhe0qA&feature=player_detailpage

gkrishna
25th September 2014, 10:01 AM
good morning

கண்டசாலா என்று ஒரு தெலுங்கு பாடகர் வெண்கல குரலுக்கு சொந்தக்காரர். கடித்து துப்பிவிடுவார் தமிழ் வார்த்தைகளை. அப்போவும் அவர் பாட்டு இனிமையான குரலுக்காக கேட்போம். என்ன ஒரு கம்பீரம் அந்த குரலில். கதாநாயகி காதலனை சந்திக்க துடிப்பாள். அவளுக்கு தக்க நேரத்தில் ஒரு பரிசு. ஒரு மந்திரக் கண்ணாடிப் பேழை. ''இந்தாம்மா பொண்ணே , இந்த பேழையை திறக்குமுன்பாக நீ யாரையாவது மனதில் நினைத்தால் அவர் நீ இந்த பேழையை திறந்ததும் அதன் கண்ணாடியில் தோன்றுவார்''. கதாநாயகி சாவித்திரி ஓடுவாள். நாமும் ஆர்வமாக அவளை பின் தொடர்வோம். தனியே தனது அறையில் கதவை சார்த்திக்கொண்டு அவள் ஜெமினி கணேசனை (அபிமன்யுவாகத்தான்) நினைத்துக்கொண்டு மெதுவாக பேழையின் மூடியை கொஞ்சம் கொஞ்சமாக திறப்பாள் முழுதும் திறந்து அந்த மூடியின் உள் பக்கமான கண்ணாடியை ஒரு கணம் நோக்குவாள். காதல் மன்னன் கம்பிரமாக தோன்றி சிரிப்பார் பாடுவார்.

''நீ தானா எனை நினைத்தது ''என்று . அந்த சினிமா கொட்டகை பூரா ஆனந்த அலையில் அதிரும். கண்டசாலா அனைவரையும் தனது காந்த சக்தி குரலால் கட்டி போட்டு விடுவார். எத்தனைபேர் இதை அனுபவித்திருக்கிறீர்கள்?. அப்படியானால் நிச்சயம் 60க்கு மேல் உங்கள் வயது. எப்படி என் ஜோசியம்? எனது ஜோசிய உண்மைக்காக நீங்கள் கட்டாயம் ஒரு சினிமா கொட்டகையில் அன்று அமர்ந்திருக்க வேண்டியிருக்குமே.

இந்த கண்டசாலா மற்றொரு படத்தில் ''அமைதியில்லா என் மனமே'' என்று பாடியதையும் அப்படியென்றால் நீங்கள் கேட்டிருக்க நிறைய சான்ஸ் இருக்கிறது.

http://www.youtube.com/watch?v=F_K6wytvQD4

http://www.inbaminge.com/t/p/Pathala%20Bairavi/Amaithiyillathen%20Maname.eng.html

rajeshkrv
25th September 2014, 10:07 AM
பார்த்து ரசித்தேன் ராஜேஷ்ஜி. அருமையிலும் அருமை.

சித்ரா பௌர்ணமி 'காலம் உண்டு' பாடல் பார்த்தீர்களா?

ஆம் பார்த்தேன், பல பதிவுகளை இப்பொழுது படித்துக்கொண்டிருக்கிறேன்

gkrishna
25th September 2014, 10:08 AM
ம்.ஜி.ஆர். நடித்து 1973-ம் ஆண்டு வெளியான சூப்பர் ஹிட் படமான ‘உலகம் சுற்றும் வாலிபன்’ திரைப்படம் அதிநவீன டிஜிட்டல், ஒலி, ஒளி தொழில்நுட்பத்தில் தமிழகம் முழுவதும் விரைவில் வெளியாகிறது.

திண்டுக்கல் சோலைமகால் திரையரங்கு உரிமையாளர் நாகராஜன் இந்தப் படத்தை வெளியிடுகிறார். அதற்கு முன்னோட்டமாக தமிழகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் படத்தின் டிரெய்லர் விரைவில் காண்பிக்கப்படவுள்ளது.

‘பச்சைக்கிளி முத்துச்சரம்...,’ ‘தங்கத் தோணியிலே...’ போன்ற இனிய பாடல்களுடன், ஜப்பான், சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில் படமாக்கிய ‘உலகம் சுற்றும் வாலிபன்’ படத்தை வரவேற்க எம்.ஜி.ஆர். ரசிகர்கள் தயாராகி வருகின்றனர். இதுகுறித்து அனைத்துலக எம்.ஜி.ஆர். பொதுநலச்சங்கத்தின் செயலாளர் பேராசிரியர் செள.செல்வகுமார் கூறுகையில், ‘‘ஆயிரத்தில் ஒருவனின் வெற்றியால் உற்சாகமடைந்துள்ள நாங்கள், ‘உலகம் சுற்றும் வாலிபன்’ படத்தின் வருகையை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்’’ என்றார்.

மய்யம் இணையதளத்தில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். என்ற திரியை (thread) முன்னின்று நடத்தி வரும் எஸ்.வினோத் கூறுகையில், ‘‘இந்த திரைப்படம் வெளியானபோது பார்த்து ரசித்தவர்களுக்கு இப்போது வயதாகியிருக்கலாம். ஆனால், ‘உலகம் சுற்றும் வாலிபன்’ என்றும் வாலிபன்தான்’’ என்றார்.

http://tamil.thehindu.com/multimedia/dynamic/02122/ulagam_2122811f.jpg

all the best vinodh sir

rajeshkrv
25th September 2014, 10:08 AM
கிருஷ்ணா ஜி மாயா பஜார் பாடல் அருமை ... கண்டசாலாவின் குரலில் பல தெலுங்கு பாடல்களுக்கு நான் அடிமை.

gkrishna
25th September 2014, 10:10 AM
good morning rajesh sir

நேற்றைய உங்கள் இருளும் ஒளியும் தமிழ் கன்னட பாடல்கள் மிகவும் ரசித்து கேட்டேன்

rajeshkrv
25th September 2014, 10:14 AM
good morning rajesh sir

நேற்றைய உங்கள் இருளும் ஒளியும் தமிழ் கன்னட பாடல்கள் மிகவும் ரசித்து கேட்டேன்

நன்றி

https://www.youtube.com/watch?v=f_Dbv4guc7c

rajeshkrv
25th September 2014, 10:17 AM
இருவர் பாடிய பாடல்களில் பெரும்பாலும் இசையரசியும் ராட்சசியும் எப்போதுமே கலக்குவார்கள்

அவர்கள் அல்லாது இருவர் பாடிய பாடல்களில் சிலவும் என்னை கவர்ந்துள்ளன
அப்படிப்பட்ட ஒரு பாடல்

சிங்கார புன்னகை கண்ணார கண்டாலே சங்கீத வீணையும் ஏதுக்கம்மா

எம்.எஸ்.ராஜேஸ்வரியும் ராவு பாலசரஸ்வதியும் கலக்கும் பாடல்

https://www.youtube.com/watch?v=FEv2ZWNxCGM

gkrishna
25th September 2014, 10:18 AM
கனிந்த காதல் இன்பம் என்றானே படம் : ராஜாமலையசிம்மன் [1959 ] p.b.ஸ்ரீனிவாஸ் + p.சுசீலா

இந்த பாடல் ஒளி வடிவம் கிட்டுமா ராஜேஷ் சார் மது சார்

gkrishna
25th September 2014, 10:21 AM
rajesh sir


சிங்கார புன்னகை கண்ணார கண்டாலே [ பாடியவர்கள் : எம். எஸ்.ராஜேஸ்வரி + ஆர்.பாலசரஸ்வதிதேவி ]
இந்தப் பாடல் மூலம் தமிழ் திரை இசையில் தாலாட்டு பாடல் அமைப்பில் ஒரு புதிய போக்கு [ new trend ] ஏற்படுத்தியது என்றும் தாலாட்டுப் பாடல் என்றால் அந்த பாடல் அமைக்கப்பட்ட ராகத்தில் [ ஆபேரி ராகம் ] தான் அமைய வேண்டும் என்ற போக்கு பின்னாளில் அதன் விளைவால் ஏற்பட்டது என்பார் ” மெல்லிசை மன்னர் ” திரு.எம்.எஸ்.விஸ்வநாதன்

gkrishna
25th September 2014, 10:28 AM
நேற்று ராகவேந்தர் சார் ராகங்கள் மாறுவதில்லை திரை படத்தில்
'விழிகள் மீனோ ' பாலா பாடிய பாடலை நினைவு கூர்ந்தார் .
நேற்று இரவு விஜய் டிவி சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சியில் spb இந்த பாடலை தான் பாட மிகவும் கஷ்டப்பட்டதாக கூறினார் . ஆனால் நிகழ்ச்சியில் பாட வந்த ஒரு சின்ன பெண் மிகவும் அனாயாசமாக பாடியதாக கூறினார்

rajeshkrv
25th September 2014, 10:32 AM
கனிந்த் காதல் இன்பம் ராஜா மலையசிம்மனில் இல்லை அழகர் மலை கள்ளனில் அல்லவா

rajraj
25th September 2014, 10:32 AM
Here is a Ghantasala song I liked.

Sivasankari Sivanandha Lahari...... in Darbari Kanada

http://www.youtube.com/watch?v=RRZxCNNr-RQ

rajeshkrv
25th September 2014, 10:33 AM
நேற்று ராகவேந்தர் சார் ராகங்கள் மாறுவதில்லை திரை படத்தில்
'விழிகள் மீனோ ' பாலா பாடிய பாடலை நினைவு கூர்ந்தார் .
நேற்று இரவு விஜய் டிவி சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சியில் spb இந்த பாடலை தான் பாட மிகவும் கஷ்டப்பட்டதாக கூறினார் . ஆனால் நிகழ்ச்சியில் பாட வந்த ஒரு சின்ன பெண் மிகவும் அனாயாசமாக பாடியதாக கூறினார்

இது போன்ற நிகழ்ச்சியில் எதை வேண்டுமானாலும் சொல்வார்கள். அப்படியே நம்பி விடக்கூடாது

vasudevan31355
25th September 2014, 10:37 AM
கைத்தொழில் ஒன்றைக் கற்றுக்கொள்
கவலை உனக்கிலை ஒத்துக் கொள்
எத்தொழில் எதுவும் தெரியாமல்
இருப்பது உனக்கே சரியாமோ

'கடவுளின் குழந்தை' திரைப்படத்தில் பி.பி.ஸ்ரீனிவாஸ் கல்யான்குமாருக்காகப் பாடிய தன்னம்பிக்கை ஊட்டும்பாடல்.


http://www.youtube.com/watch?v=Yg9GEarMBAs&feature=player_detailpage

vasudevan31355
25th September 2014, 10:43 AM
'ராஜா மலையசிம்மன்' படத்தில் ஒலிக்கும் தேனினும் இனிய கானம்.

'அழகே
அமுதே
அறிவே
உயிரே
ஆசைக்கனவே
அன்பின் வடிவே'

பின்னால் வரும் ஹம்மிங் சொர்ர்க்கபுரிக்கு நம்மை அழைத்துச் செல்லும்.

P.B. ஸ்ரீநிவாஸ், சுசீலாம்மா பாடும் அற்புத கானம்.

ரஞ்சனும் ராஜசுலோச்சனாவும் ஆனந்தம் கொண்டாடும் பாடல்.

'அஞ்சாநெஞ்சன் என் அழகேசன்
இனி அவனியை ஆளும் மகராஜன்'


http://www.youtube.com/watch?v=Yz0clnDflJM&feature=player_detailpage

vasudevan31355
25th September 2014, 10:47 AM
கனிந்த காதல் இன்பம் என்றானே படம் : ராஜாமலையசிம்மன் [1959 ] p.b.ஸ்ரீனிவாஸ் + p.சுசீலா

இந்த பாடல் ஒளி வடிவம் கிட்டுமா ராஜேஷ் சார் மது சார்

http://www.inbaminge.com/t/a/Azhagar%20Malai%20Kalvan/

gkrishna
25th September 2014, 10:51 AM
ராஜா மலைய சிம்மன் மற்றும் அழகர் மலை கள்ளன் பாடல்களுக்கு நன்றி ராஜேஷ் மற்றும் வாசு சார்

gkrishna
25th September 2014, 10:53 AM
வாசு சார்

ராஜாமலைய சிம்மன் மற்றும் அழகர் மலை கள்ளன் திரை படத்தின் மேலதிக தகவல்கள் கிட்டுமா ?

rajeshkrv
25th September 2014, 10:55 AM
ராஜா மலையசிம்மன் ரஞ்சன் மற்றும் ராஜசுலோச்சனா நடித்தது. செளகார் அவரது தங்கை

அழகர் மலைக்கள்ளன் வெளிவந்ததா என்று தெரியவில்லை. வாலி ஐயா இயற்றிய முதல் பாடல்
இசையரசி பாடிய நிலவும் தாரையும் நீயம்மா , பி.கோபாலம் அவர்களின் இசையில்

rajeshkrv
25th September 2014, 10:56 AM
http://www.youtube.com/watch?v=ZFkXffGfReY

vasudevan31355
25th September 2014, 11:00 AM
1973-இல் வெளியாகி இந்தியாவையே ஒரு உலுக்கு உலுக்கிய ராஜ்கபூரின் 'பாபி' திரைப்படத்தில் இருந்து மிகவும் புகழ் பெற்ற இப்பாடலைப் பார்த்து மகிழ்வோம்.
ரிஷிகபூர், டிம்பிள் கபாடியா இருவரின் இளமைத் துள்ளலில் அப்போதைய இளைஞர்களை பைத்தியம் பிடித்து அலையை வைத்த காதல் காவியம் 'பாபி'. இசை ஓவியம். ராஜ்கபூர் அவர்களின் சொந்தக் காவியம். லஷ்மிகாந்த் பியாரிலால் இசையமைப்பில் ஷைலேந்திர சிங் என்ற பாடகர் பாடிய 'Main Shayar To Nahin ... Magar Ae Haseen' என்ற இந்தப் பாடலைக் கேட்டு ரசிக்காதவர்களே அப்போது இல்லை எனலாம்.


http://www.youtube.com/watch?feature=player_embedded&v=eTPTU8lkNaQ

gkrishna
25th September 2014, 11:00 AM
thanks for the information rajesh sir

அழகர் மலைக்கள்ளன் வாலியின் கட்டுரையில் படித்த நினைவு உண்டு

vasudevan31355
25th September 2014, 11:04 AM
வாசு சார்

ராஜாமலைய சிம்மன் மற்றும் அழகர் மலை கள்ளன் திரை படத்தின் மேலதிக தகவல்கள் கிட்டுமா ?

கிருஷ்ணாஜி,

'ராஜா மலையசிம்மன்' படம் பார்த்திருக்கிறேன். ரஞ்சனின் வீர தீர சாகசங்கள் நிறைந்த ஒரு படம். பிற்கால ரஞ்சன் படம். சண்டைக் காட்சிகள், குதிரைஏற்றம் , வாட்போர் அட்டகாசம். நமது அருமை ராகவேந்திரன் சார்தான் இந்தப் படத்தின் சண்டைக்கட்சிகளைப் பற்றிக் கூறியிருந்தார். என்னிடம் டிவிடியும் உள்ளது.

அழகர் மழைக் கள்வன் பட ஸ்டில்.

http://www.inbaminge.com/t/a/Azhagar%20Malai%20Kalvan/folder.jpg

gkrishna
25th September 2014, 11:06 AM
வாசு சார்

9 வது வகுப்பு படித்து கொண்டு இருந்த போது வந்த பாபி படத்தின் நினைவை கிளப்பி விட்டீர்கள். நெல்லை பூர்ணகலாவில் 70 தினங்கள் ஓடிய நினைவு . படம் பார்த்த சில நண்பர்கள் சொல்ல கேள்விப்பட்டு நல்ல நினைவு உண்டு ஒரு செவ்வாய் கிழமை மதியம் 2 மணி சாப்பாட்டுக்கு பிறகு முதல் வகுப்பு attendance கொடுத்துவிட்டு பார்த்த படம். திரை அரங்கு பள்ளி கூடத்தில் இருந்து கூப்பிடு தூரம் .அந்த வெள்ளை கலர் ரவிக்கையில் கருப்பு கலர் பொடிபொடி வட்டம் போட்ட முடிச்சு போட்ட dimple மேலாடை டிரஸ் கீழே ஒரு டவுசெர்
மறக்க முடியுமா

vasudevan31355
25th September 2014, 11:06 AM
ராஜா மலையசிம்மன் ரஞ்சன் மற்றும் ராஜசுலோச்சனா நடித்தது. செளகார் அவரது தங்கை

அழகர் மலைக்கள்ளன் வெளிவந்ததா என்று தெரியவில்லை. வாலி ஐயா இயற்றிய முதல் பாடல்
இசையரசி பாடிய நிலவும் தாரையும் நீயம்மா , பி.கோபாலம் அவர்களின் இசையில்


http://www.youtube.com/watch?v=hpYqevqf7-I&feature=player_detailpage

gkrishna
25th September 2014, 11:07 AM
https://encrypted-tbn3.gstatic.com/images?q=tbn:ANd9GcS0sbjiBkfzPcutgJsiIoYUjiBa2-hgcWzOALnoZeEffTUlhUKg

vasudevan31355
25th September 2014, 11:08 AM
http://darrelldiaz.com/img/bc/bc3/Bobby_Hum_Tum_Ek_Kamre_Mein_Band_Hon_Shailendra_Si ngh_Lata_Mangeshkar.jpg

gkrishna
25th September 2014, 11:08 AM
https://encrypted-tbn1.gstatic.com/images?q=tbn:ANd9GcQx8O8AFRMDcKehrbUSlXO9sgbj-E_R06O7pTNkcA8SkxUIuFgj

vasudevan31355
25th September 2014, 11:09 AM
http://www.filmfare.com/media/content/2013/Oct/movies_1_1381212868_640x640.jpg

http://l3.yimg.com/bt/api/res/1.2/Ro9YxPh2oyJv_0fnzTG.dg--/YXBwaWQ9eW5ld3M7Zmk9aW5zZXQ7aD0zNzU7cT04NTt3PTU4MA--/http://l.yimg.com/os/285/2013/05/09/Interesting-Facts-About-Bollywood-Dimple-jpg_102344.jpg

vasudevan31355
25th September 2014, 11:10 AM
http://static.ibnlive.com/pix/slideshow/01-2012/mera-naam-joker/rishi-bobby2.jpg

http://i.imgur.com/mEvjs.jpg

vasudevan31355
25th September 2014, 11:11 AM
http://cinegems.in/wp-content/uploads/2014/06/Bobby-dimple-rishi-kapoor.jpg

http://3.bp.blogspot.com/-tZLU1UK6m_A/TtfkvGaLErI/AAAAAAAAA1g/61g0Gl3kRRg/s1600/Bobby.1973.Hindi.DvDRip.XviD.AC3.CD1.MeN.avi_00163 7846.jpg

http://indpaedia.com/ind/images/0/0a/Dimple.jpg

vasudevan31355
25th September 2014, 11:13 AM
http://1.bp.blogspot.com/_Re6aMmhHQQ0/RoVCoJ4VUsI/AAAAAAAAADY/f2hCO04yx7o/s1600/Lp-Bobby%2B(Back).JPG

vasudevan31355
25th September 2014, 11:14 AM
http://1.bp.blogspot.com/-n34llsMYmGk/TemkaQcLhJI/AAAAAAAAIzE/Hku34yFmErw/s1600/Screen+shot+2011-06-03+at+3.07.31+PM.png

gkrishna
25th September 2014, 11:15 AM
மாவாட்டி கொண்டு இருக்கும் போது ரிஷி கதவை தட்டி பெயர் கேட்க
dimple தன பெயரை பிபா என்று மாற்றி சொல்ல மாவை இயற்கையாக மேலே தீட்டி கொள்ள சூப்பர் வாசு சார்

vasudevan31355
25th September 2014, 11:16 AM
http://content8.flixster.com/photo/73/30/81/7330814_gal.jpg

http://bestimagesof.com/wp-content/uploads/2012/11/dimple_kapadia_003.jpg

http://content6.flixster.com/photo/73/30/85/7330856_gal.jpg

vasudevan31355
25th September 2014, 11:17 AM
மாவாட்டி கொண்டு இருக்கும் போது ரிஷி கதவை தட்டி பெயர் கேட்க
dimple தன பெயரை பிபா என்று மாற்றி சொல்ல மாவை இயற்கையாக மேலே தீட்டி கொள்ள சூப்பர் வாசு சார்

ஆமாம் கிருஷ்ணா சார். அது ஒரு இளமை இன்னிசை காவியம். ரவிவர்மா வரைந்த ஓவியம்.

vasudevan31355
25th September 2014, 11:18 AM
http://members.tripod.com/~heroine_ek/bobby_flour.jpghttp://media-cache-ak0.pinimg.com/236x/93/80/c3/9380c3418fa2fdedef0440f678493995.jpghttp://www.pinkvilla.com/files/images/bobby_121411015431.jpg

gkrishna
25th September 2014, 11:19 AM
இன்றைய சினிமாவில் கவர்ச்சி அதிகம் வன்முறை அதிகம் என்றெல்லாம் சமூக நல ஆர்வலர்கள் முதல் சாதாரண மனிதர்கள் வரை புலம்புவதை நாம் பார்த்திருக்கிறோம். முதன் முதலில் நம் நாட்டில் இந்த கவர்ச்சி அல்லது ஆபாசமான உடையனிந்தது யார் தெரியுமா? அது தான் இன்றைய ஹிந்தி திரை உலகின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவரான சாயப் அலி கான் பட்டோடியின் அம்மா சர்மிலா தாகூர்.

போன தலைமுறை மக்களுக்கு மறக்கமுடியாத ஹிந்தி படங்களான பாபி, குருபானி போன்ற பட வரிசைகளில் ஆராதனாவை யாரும் மறந்திருக்கமாட்டார்கள். சென்னையில் உள்ள ஆனந்த் திரை அரங்கில் வெள்ளிவிழா கண்ட படம். ஹிந்தி அதிகம் பரிட்சயம் இல்லாத அந்த காலகட்டத்திலேயே பெரும் வரவேற்ப்பை பெற்ற அந்தபடத்தின் வரவேற்ப்புக்கு படத்தின் பாடல்கள், மற்றும் ராஜேஷ் கண்ணாவின் நடிப்பு அதை விட சர்மிலா தாகூரும் ஒரு முக்கிய காரணம் என்றால் யாரும் மறுக்கமாட்டார்கள். அவர் புகழின் உச்சியில் இருந்த கால கட்டம். இவர் தான் இந்திய நடிகைகளுக்கெல்லாம் கவர்ச்சியில் முன்னோடி. AN EVENING IN PARIS என்ற படத்தின் மூலம் முதன்முதலில் பிக்கினி என்று சொல்லப்படும் நீச்சல் உடையில் திரைப்படத்தில் தோன்றினார். இதனைத் தொடர்ந்து FILMFARE பத்திரிகைக்கு நீச்சல் உடையில் போஸ் கொடுத்தார். படத்தின் கவர்ச்சியைக் காட்டிலும் பத்திரிகையில் வெளியான புகைப்படம் இந்தியா முழுக்க பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. அந்த புகைப்பட ஒளிப்பதிவின் போது, ஒருங்கிணைப்பாளர் சர்மிலா தாகூர் அரங்கில் நுழைந்த போது எங்கே உங்கள் புகைப்படத்திற்க்கான உடை என்று கேட்கும் போது தனது கைப்பையை காண்பித்தாராம்.

பல பேர் தங்களது தலையணைக்கு அடியில் வைத்து கொண்ட 1966ல் வெளியான FILMFARE ஆகஸ்ட் இதழின் அந்த புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு…

https://adhithakarikalan.files.wordpress.com/2010/10/sharmila-tagore_1.jpg?w=614

vasudevan31355
25th September 2014, 11:20 AM
http://1.bp.blogspot.com/-GbQ9z2Kmlqo/UKNrn5iggMI/AAAAAAAAAYU/QIe_P9aD7VY/s1600/bobby+17.bmp.jpg

vasudevan31355
25th September 2014, 11:23 AM
கிருஷ்ணா! நீல வண்ணக் கண்ணனே !

கருப்பு வெள்ளையும் ஓர் அம்சமான அழகு கண்ணா. சின்னக் கண்ணன் வரதுக்குள்ள ஓடிடணும். இன்னைக்கு ஆள் அம்பேல். அம்புடுதேன்.

http://1.bp.blogspot.com/_FuKRBU8kKXU/TJ4qvoitLVI/AAAAAAAACAU/zvofA5hVC7M/s1600/sharmila-tagore-stills02.jpghttp://pics.wikifeet.com/Sharmila-Tagore-Feet-523136.jpghttp://www.nepal24hours.com/en/wp-content/uploads/2014/04/sharmila.jpg

vasudevan31355
25th September 2014, 11:25 AM
இதுதான் ஒரிஜினல் அழகு.

http://www.magnamags.com/upload/articles/BLAST%20FM%20D%20PAST0002504981.jpg

vasudevan31355
25th September 2014, 11:27 AM
http://www.magnamags.com/upload/articles/dimple1223314.jpg

gkrishna
25th September 2014, 11:28 AM
இன்னும் பல படங்கள் உள்ளன .வெளியிடலாம வாசு சார்

gkrishna
25th September 2014, 11:29 AM
இன்னும் பல படங்கள் உள்ளன .வெளியிடலாமா வாசு சார்
https://adhithakarikalan.files.wordpress.com/2010/10/sharmila-tagore_4.jpg?w=614

gkrishna
25th September 2014, 11:32 AM
நடுவில் கோபு சார் அவர்களின் பதிவை கவனித்தீர்களா

vasudevan31355
25th September 2014, 11:34 AM
கிருஷ்ணா சார்,

http://www.thamizhisai.com/album/raja-malaya-simman/9.png

நம் ரஞ்சன் குதிரையில் குலதெய்வம் ராஜகோபால், சாரங்கபாணி சகிதம் பாடும் வீரப் பாடல்.

வாழ்வது என்றும் உண்மையே
வளர்வது என்றும் நன்மையே
தாழ்வது முடிவில் தீமையே
தயக்கம் வேண்டாம் முன்னேறடா


http://www.youtube.com/watch?v=8VYc353edR0&feature=player_detailpage

vasudevan31355
25th September 2014, 11:35 AM
இன்னும் பல படங்கள் உள்ளன .வெளியிடலாம வாசு சார்

போதும் கிருஷ்ணா சார்! இதற்கே பயந்து பயந்துதான் போட்டேன்.:)

gkrishna
25th September 2014, 11:45 AM
புரிந்து கொண்டேன் . ஏற்கனவே மந்திரிக்கணும் அப்படின்னு சொன்னீங்க நடையை மாத்து - இந்த பாட்டு கன்னி பருவத்திலே படத்தில் தானே வாசு சார் மலேசிய வாசு தேவன் பாடல்

vasudevan31355
25th September 2014, 11:45 AM
கிருஷ்ணா சர் நீங்கள் சொன்ன 'பாபி' காட்சி உங்களுக்காகவே

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/w.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/w.jpg.html)

vasudevan31355
25th September 2014, 11:47 AM
புரிந்து கொண்டேன் . ஏற்கனவே மந்திரிக்கணும் அப்படின்னு சொன்னீங்க நடையை மாத்து - இந்த பாட்டு கன்னி பருவத்திலே படத்தில் தானே வாசு சார் மலேசிய வாசு தேவன் பாடல்

அசையுது ஒன்னப் போல நாத்து:)

gkrishna
25th September 2014, 11:47 AM
அருமையான நிழல் படம் பிப்பா . சுவா (வாசு) சார்

vasudevan31355
25th September 2014, 11:48 AM
இன்றைய ஸ்பெஷல் (78)

இன்றைய ஸ்பெஷல் பாடலில் 'புன்னகை பொங்குதே!

பரணி பிக்சர்ஸ் 'இப்படியும் ஒரு பெண்' படத்தின் சூப்பர் ஹிட் பாடல். பாலாவும், வசந்தாவும் புரியும் குரல் ஜாலங்கள். வசந்தாவின் கிறங்கடிக்கும் அந்த வானம்பாடிக் குரல். பானுமதி ராமகிருஷ்ணாவின் இசையில் எப்போதுமே மறக்க முடியாத பாடலாகிவிட்டது.

'சரிகமப பாட்டு பாடுங்க... பாட்டில் உள்ள படங்களையே கேட்டுக் கொள்ளுங்க' என்ற அற்புதமான பானுமதி பாடிய பாடல் ஒன்று உண்டு.

அழகான இளமையான சிவக்குமாருக்கும், குமாரி பத்மினிக்கும் கிடைத்த இனிமையான பாடல். அப்போதெல்லாம் சிவக்குமார் என்றால் அவருக்கு நிறையப் படங்களில் குமாரி பத்மினி ஜோடியாக இருப்பார்.
(ராஜ ராஜ சோழன், கண்காட்சி, திருமலை தென்குமரி என்று நிறைய சொல்லலாம். பெரும்பாலும் ஏ.பி.என்.படங்கள்.) அதே போல நடிகர் திலகத்திற்கு தங்கையா... 'கூப்பிடு குமாரி பத்மினியை' என்பார்கள். (தர்மம் எங்கே, தாய்)

சிவக்குமாருக்கு நல்ல ஜோடிப் பொருத்தம் இவர்.

http://i.ytimg.com/vi/0mJIVjS2n3w/hqdefault.jpg

http://s2.dmcdn.net/Ci6Xe.jpg

http://i.ytimg.com/vi/vSl37yZHYYk/maxresdefault.jpg

இனி பாடலின் வரிகள்.

http://i.ytimg.com/vi/zTkI61JwD08/hqdefault.jpg

ஓஹோ ஓஹோ ஓஹோ
ஆஹா ஆஹா ஆஹா
ஹேஹேஹே ஹேஹேஹே ஹேஹேஹே

பொங்குதே புன்னகை
பொங்குதே புன்னகை
புள்ளி இட்ட கலைமானை
அள்ளி இட்ட விழியோரம்
பொன் மின்னல் வெள்ளம் பொங்குதே

போதுமா புன்னகை
பொட்டு வைத்த முகத்தோடு
கட்டி வைத்த இதழ் மீது
புது வண்ணக் கோலம் போதுமா
போதுமா புன்னகை

(சாக்ஸ் ஜாலம்)

மணமகள் வைதேகி நடை பார்க்கிறேன்

தசரத ரகுராமன் முகம் பார்க்கிறேன்

திருக் கல்யாணமே

சுப வைபோகமே

அது இல்லாவிடில்

கண்கள் மழை மேகமே

இந்த ரகுராமன் மனமெங்கும் ஒரு ராகமே


பொங்குதே புன்னகை

போதுமா புன்னகை


மழைக்காலம் வரும் போது மழை வந்தது

மணக்கோலம் வருமென்று மனம் சொன்னது

அன்பு நிலையானது

நெஞ்சில் சிலையானது

கலையான நம் சொந்தம் கலையாதது


பொங்குதே புன்னகை

போதுமா புன்னகை

புள்ளி இட்ட கலைமானை
அள்ளி இட்ட விழியோரம்
பொன் மின்னல் வெள்ளம் பொங்குதே

பொங்குதே புன்னகை

போதுமா புன்னகை


http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=23NnyOiLyxQ

gkrishna
25th September 2014, 11:51 AM
’ மெயின் சாயர் நஹின்’--பாட்டின் அர்த்தம்

நான் ஒரு கவிஞன் இல்லை ஆனால்
உன்னை எப்போது பார்தேனோ அப்பவே கவிஞன் ஆகிவிட்டேன்.

gkrishna
25th September 2014, 12:09 PM
Bobby படம் தமிழ் நாட்டைப் படுத்திய பாடு

1973-74லில் தமிழ் நாட்டில் காதுகுத்து முதல் கல்யாணம் வரை முதலில் கடவுள் வாழ்த்தாக ”வினாயகனே வினை” (சில சமயம் பாதியிலேயே ரிக்கார்ட்பிளேட்டை புடுங்கி விடுவார்கள்) போட்டுவிட்டு அடுத்து அவசரமாக “பாகர் சே செய்க்கோ அந்தர்..... ஹம் தும் ஏக் கம்ரே மேன் பந்த் ஹோ” இதற்கடுத்து எல்லோரும் ஆவலாக எதிர்பார்க்கும் ”மே ஷாயார் தோ நஹி” ஷ்ஷ்ஷ்ஷ் என்ற சத்தத்துடன் ஆரம்பிக்கும்.

http://3.bp.blogspot.com/_kRKT9yRa-tQ/TH29h9VwN2I/AAAAAAAAA1s/IcmaYaFgbdc/s200/Bobby.jpg

பாட்டைப் போட்டுவிட்டு சவுண்ட் சர்வீஸ்காரர் இடுப்பில் கைவைத்து எல்லோரையும் ஒரு முறைப் பார்த்து புன்னகைப்பார்.ஜனங்கள் பதிலுக்குப் புல்லரிப்பார்கள்.

செந்தமிழ் மாநாடு கொண்டாடிய தமிழ் நாடு புல்லரித்து,புளாங்கிதம் அடைந்து இரும்பூது எய்தது Bobbyயின் பாடல்களைக் கேட்டு.படத்தையும் பார்த்து. இந்தியாவே புரட்டியது?

நானும்பள்ளிமாணவனாக புல்லரித்தேன்.எங்கள் வீட்டு வேலைகாரியும் ஹம் செய்துக்கொண்டே பாத்திரம் தேய்ப்பார்.

பாட்டின் வரிகள்/வசனங்கள் யாருக்காவது புரிந்திருக்குமா?

அட Bobbyகளா..!

http://3.bp.blogspot.com/_kRKT9yRa-tQ/TH3BYW1ewlI/AAAAAAAAA10/FL-T2sVLY8A/s320/Accordion.jpg

Bobby என்ற பெயர் ஜெர்மனி மூலம் என்று யூகிக்கிறேன்.

பாடல்களில் “அக்கார்டியன்”(Accordian) இசைக்கருவி நாதங்கள் நிறைய இருக்கும். (இது நம்மூர் ஹாண்டி digitalized ஹார்மோனியம் தான்) காரணம் படத்தின் நாயகி கோவா ஆங்கிலோ இந்திய பெண்.பெயர் Bobby Braganza.

ஏன் Bobby படுத்தியது?

http://4.bp.blogspot.com/_kRKT9yRa-tQ/TH4OC02cySI/AAAAAAAAA2M/2wFD4wKgCIM/s320/Dimple.jpg

காரணம் பிரஷ்னஸ்.

கே.வி.மகாதேவன்/ விஸ்வனாதன் போன்றவர்களின் தேய்பிறை இசை அலுத்துப்போனவர்களுக்கு இதன் இசை பிடிததுப் போனது. அப்போதே கல்லூரி மாணவர்கள் இந்தி இசையைக் கேட்டு காலரைத் தூக்கி விட்டுகொள்வார்கள். தமிழ்ப் பாடல்கள் கேட்டால்அவமானமாக நினைத்தார்கள்.மன்சாயே கீத்,பினாகா கீத் மாலா, பூல் குலே குல்ஷன்... போன்ற நிகழ்ச்சிகளுக்கு தமிழ் நாட்டில் ரசிகர்கள் அதிகம்.

ஆனால இது...?

இளசு/தளிர் வயசு காதல்.ரிஷிகபூர், டிம்பிள் கபாடியா.இருவரும் பிஞ்சு தக்காளிப் போல இளசுகள்.(ரிஷிகபூரை டிம்பிள் கபாடியா முதன் முதலாக சந்திக்கும் இடம் மனதைக் கவரும் இடம்) சுண்டினால ரத்தச்சிவப்பு பஞ்சாபி வெள்ளைத் தோல் நாயகர்கள்.ரிஷிகபூர் சட்டையை மீறி தெரியும் புசு புசு முடி.கலர் படம்.ரிச் இசை.ரிச்சான கலர்.ரிச் லொகேஷன்ஷேன்.

மிக மிக மிக முக்கியமாக டிம்பிள் சீனுக்கு சீன் அணிந்த கவர்ச்சி உடைகள்.அதற்காகவே அவர் கோவா ஆங்கிலோ இந்தியப் பெண்ணாகப் படத்தில் படைக்கப்பட்டார்.படம் முடிந்ததும் ”அய்யோ அம்மா” என்று பல இளைஞர்கள் அலறிக்கொண்டு வெளியே வந்தார்கள்.


தன் படத்தில் நடிக்கும் நடிகைகளுக்கு எல்லாம் பெரிதாக இருக்க வேண்டும் என்று ராஜ்கபூர் விரும்புவாராம்.ஜீனத் அமனும் (சத்தியம் சிவம் சுந்தரம்) அவர் கண்டுப்பிடிப்பு.

இதன் பின்னணி இசையும் ஒரு காரணம்.ஆட்டுக்கார அலமேலு படத்தில் சங்கர் கணேஷ் சுட்டு அடித்திருப்பார்.Mujhe Kuch Kehna Hai என்ற பாடல் எஸ்.ஏ.ராஜ்குமார் சுட்டு ஒரு படத்தில் போட்டிருப்பார்.ஆனால் இப்போது யோசித்தால் டிபிக்கல் இந்தி இசை.

இசை லஷ்மிகாந்த் பியாரிலால்.ராஜ்கபூரின் பெரிய தயாரிப்பு.இதில் பாடும் ஷைலேந்திரா சிங் புது முகம்.அருமையான குரல்.எனக்குப் பிடித்தப் பாடல்கள் மூன்று.

கதை?

ஒரு சாதாரண காதல் கதை.”முதல் பார்வைக் காதல்” கதை.ஒரு ஏழை பெண்ணுக்கும் பணக்கார இளைஞனுக்கும் மலரும் காதல்.வீட்டில் எதிர்ப்பு.கடைசியில் சேர்வார்கள்.

சென்னை மிட்லெண்ட் தியேட்டரில் ஓடு ஓடு என்று மராத்தான் ஓட்டம் ஓடியது.இத்ன் லாபத்தில்தான் “லியோ” மினி தியேட்டர் கட்டினதாக சொல்வார்கள்.படுத்திய படுத்தலில் குமுதம் இதன் கதையை தொடராக வெளியிட்டது. இதன் பாதிப்பில் லஸ் கார்னரில் ஒரு துணிக் கடையின் பெயர் Bobby.சட்டைக்கு Bobby காலர் (நாய் காது டைப்) அப்போது பேஷன்.ரிஷிகபூரின் ஹேர்ஸ்டைலை முக்கியமாக கிருதாவை வரவழைக்க முயன்று தோல்வி அடைந்தேன்.

சுஜாதா மிஸ் தமிழ் தாயே நமஸ்காரம் புத்தகத்தில் (பின்னாளில் படித்தது) ஒரு கவிதையை சுட்டி இருந்தார்.அது.....

கார்டு கவர்களில்
இந்தி எழுத்தை
நன்றாய் அடித்து
மசியால் மெழுகி
அஞ்சல் செய்யும்
தனித்தமிழ் அன்பர்
”பாபி” பார்த்ததும்
இருடிக் கபூரும்
இடிம்பிள் கபாடியாவும்
(ரகரமும் டகரமும் மொழி
முதல் வாரா)
அருமையாக நடித்தனர்...
என எழுதுகிறராம்

ரிஷிகபூரின் அடுத்தப் படம் “ரபூ சக்கர்”.கதாநாயகி நீட்டு சிங்.ஓடவில்லை.காரணம் பாபியின் ஹேங் ஓவர் தெளியாமல் இருந்ததுதான்.

இதற்கு பிறகும் இந்திப்பட மோகம் மூணு நாலு வருஷம் இருந்தது.

அப்போது மத்தியான வேளைகளில் தமிழ்(மலையாள?) டீக்கடைகளில் ட்ரான்சிஸ்டரில் இரைச்சலுடன் காற்றில் அலைந்துவரும் லதா மங்கேஷ்கரின் பாட்டு காதில் இன்னும் ரீங்காரம் இட்டுக்கொண்டே இருக்கிறது.

gkrishna
25th September 2014, 12:13 PM
1970 - 80 ல் ஹிந்தி பாட்டு கேட்டுகொன்டிருந்த தமிழர்களை தமிழ் பாட்டு கேட்க வைத்தவர் இளையராஜா. 1990ல் இருந்து ஹிந்தி பாட்டு கேட்டுகொன்டிருந்த வட இந்தியர்களை தமிழ் பாட்டு கேட்க வைத்தவர் ஏ ஆர் ரெஹ்மான்

இன்னும் கொஞ்ச நேரத்தில் மேல கூறியது மாதிரி ஒரு பதிவு வரலாம்

chinnakkannan
25th September 2014, 12:19 PM
ஹாய் குட்மார்னிங்க் ஆல்..

என்னது குழந்தைங்கள்ளாம் டிம்பிள் டிம்பிள் லிட்டில்ஸ்டார் பாடிக்கிட்டு இருக்கு :) நா ராத்திரி வந்து ஹோம் ஒர்க் பண்றேன்.. நெறய மீட்டிங்க்ஸ் இருக்கு :sad:

gkrishna
25th September 2014, 12:24 PM
வாங்க வாங்க என்ன ஸ்மால் கண்ணரே சுகமா ? இவ்வளவு நேரம் எங்கே ஏதும் ஸ்மால் வேலையா :)

gkrishna
25th September 2014, 12:30 PM
https://adhithakarikalan.files.wordpress.com/2010/11/tp-rajalakshmi_4.jpg

gkrishna
25th September 2014, 12:38 PM
நன்றி நண்பர் ஆதித்த கரிகாலன் அவர்களுக்கு

திருவையாறு P ராஜலக்ஷ்மி , இவர் தான் தமிழ் திரையுலகின் முதல் பெண் இயக்குனர், தயாரிப்பாளர். தமிழ் திரையுலகில் மட்டுமல்ல இந்திய அளவிலும் இவர் தான் முதல் பெண் இயக்குனர் என்று கூறுகிறார்கள்.

https://adhithakarikalan.files.wordpress.com/2010/11/tp-rajalakshmi_2.jpg?w=614

ராஜலக்ஷ்மி 1911 இல் திருவையாறில் ஒரு பிராமண குடும்பத்தில் பிறந்தவர், இவரது தந்தை ஒரு குருக்கள். இவருக்கு 11 வயது இருக்கும் போது திருமணம் ஆனது, துரதிர்ஷ்டவசமாக இவரது மன வாழ்க்கை ஆரம்பிக்கும் முன்னமே முடிந்து விட்டது. வரதட்சனை கொடுக்க முடியாத காரணத்தினால் இவரது கணவர் இவரை விட்டு பிரிந்தார். இதனால் மனமுடைந்த இவரது தகப்பனார் கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்டார். அதன் பின்பு ராஜலக்ஷ்மி அவரது தாயாருடன் திருவையாறை விட்டு வெளியேறினார். நாடக கம்பெனி ஒன்றில் சேர்ந்து நடிக்க ஆரம்பித்தார்

https://adhithakarikalan.files.wordpress.com/2010/11/tp-rajalakshmi_1.jpg?w=614
https://adhithakarikalan.files.wordpress.com/2010/11/tp-rajalakshmi_3.jpg?w=614
படத்தில் TP ராஜலக்ஷ்மி அவர்களுடன் சிறுவயது TR மகாலிங்கம்

புகழ்பெற்ற சங்கரதாஸ் சுவாமிகள் குழுவில் இனைந்து நாட்டியம், சங்கீதத்தில் நல்ல தேர்ச்சி பெற்றார். 1931 இல் காளிதாஸ் என்ற படத்தில் கதாநாயகியாய் நடித்த பிறகு இவர் புகழின் உச்சிக்கு சென்றார். இந்த திரைப்படம் தமிழின் முதல் பேசும் படம் என்று அறியப்படுகிறது. முன்னதாக இவர் 1929 லேயே திரையுலகில் காலெடுத்து வைத்தவர், கோவலன் என்ற பேசாத படத்தில் நடித்திருக்கிறார். காளிதாஸ் திரைப்படத்திற்கு பிறகு இவர் அந்நாளைய சூப்பர் ஸ்டார்களாகிய கிட்டப்பா, தியாகராஜ பாகவதர் போன்றவர்களுடன் இனைந்து நடிக்கும் அளவிற்கு பெரிய நடிகையானார்.

https://adhithakarikalan.files.wordpress.com/2010/11/tp-rajalakshmi_5.jpg?w=614&h=360

காந்தியவாதியான இவர் இந்தியத் தாய் என்ற ஒரு திரைப்படத்தை தயாரித்தார், அங்கிலேயர் ஆட்சியில் தணிக்கையில் சிக்கிய இத்திரைப்படம் வெளிவராமலே போனதாக தகவல். இருப்பினும் தன்னாலான அளவில் சுதந்திர போராட்டத்தில் இவர் கலந்து கொண்டிருக்கிறார். மிஸ். கமலா என்ற திரைப்படம் மூலம் இவர் 1936 இல் இயக்குனர் ஆனார். 1929 முதல் 1950 வரை இவர் 23 திரைப்படங்களில் நடித்திருக்கிறார், இவற்றில் மிஸ் கமலா, மதுரை வீரன் ஆகிய படங்களில் இவர் நடித்தும் இயக்கியும் இருக்கிறார்

இவர் நடித்த திரைப்படங்கள்:

01 கோவலன் 1929
02 ராஜேஸ்வரி 1930
03 உஷா சுந்தரி 1930
04 காளிதாஸ் 1931
05 சாவித்திரி சத்யவான் 1933
06 பூர்ண சந்திரா 1935
07 லலிதாங்கி 1935
08 பக்த குசேலா 1935
09 குலே பகாவலி 1935
10 பாமா பரிணயம் 1936
11 சீமந்தினி 1936
12 மிஸ் கமலா 1936
13 கவுசல்யா பரிணயம் 1937
14 அனாதை பெண் 1938
15 மதுரை வீரன் 1938
16 நந்தா குமார் 1938
17 தமிழ் தாய் 1939
18 சுகுணா சரஸா 1939
19 பக்த குமரன் 1939
20 உத்தமி 1943
21 பரஞ்சோதி 1945
22 ஜீவஜோதி 1947
23 இதய கீதம் 1950

chinnakkannan
25th September 2014, 12:43 PM
ஆமாங்க க்ருஷ்ணா ஜி.. அப்புறமா வர்றேன்..டி.பி ராஜலஷ்மி ஃபோட்டோல்லாம் வரலை அதனால பார்க்கலை.. டிம்பிள் ஃபோட்டோஸும் நான் பார்க்கலை ! (இதுக்கும் விக்ரம் க்கும் என்னா வித்யாசம்) :)

Russellmai
25th September 2014, 12:51 PM
கிருஷ்ணா சார்,
நெல்லை பூர்ணகலா திரையரங்கில் பாபியும்,ராயல் திரையரங்கில்
யாதோங்கிபாரத்தும் போட்டி போட்டுக் கொண்டு வெற்றிகரமாக ஓடியதாக நினைவு.நெல்லையில் மட்டுமல்ல,தமிழகம் முழுவதும்.
கோபு

gkrishna
25th September 2014, 12:53 PM
நன்றி நண்பர் ஆதித்த கரிகாலன் அவர்களுக்கு

தமிழில் திரைப்படம் தயாரித்த முதல் தமிழர்

150 கோடியில் திரைப்படம் தயாரிக்கும் நிலையில் இருக்கும் இன்றைய தமிழ் திரையுலகம் முதன்முதலில் எங்கு ஆரம்பித்தது, யார் ஆரம்பித்து வைத்தது என்பதைப்பற்றி உங்களுக்கு தெரியுமா? இந்த இடுகை தமிழ் திரையுலகின் முதல் தயாரிப்பாளர் நடராஜ முதலியார் பற்றியது. திரைப்பட நடிகர் மோகன்ராமன் அவர்களின் FACEBOOK ல் இது பற்றிய ஸ்கேன் செய்யப்பட்ட பத்திரிகை செய்தியை சில நாட்களுக்கு முன் பார்த்தேன். பார்த்ததை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.

நடராஜ முதலியார் பற்றிய பேட்டி இயக்குனர் ஸ்ரீதர் நடத்திய சித்ராலயா என்ற இதழில் 1970ம் ஆண்டு வெளியானது. 1936 ம் ஆண்டு நடராஜ முதலியார் பற்றிய ஒரு செய்தி அன்றைய மெயில் பத்திரிகையில் வெளியாகி இருந்ததாம், இந்த பழைய பத்திரிகை செய்தியை ஸ்ரீதர் பார்க்க நேர்ந்து அது பற்றிய செய்தியை சித்ராலயாவில் வெளியிட நடராஜ முதலியாரின் பேட்டி எடுத்து இருக்கிறார்கள்.

https://adhithakarikalan.files.wordpress.com/2010/10/nataraja-mudaliyaar_1.jpg?w=614

இவர் முதன்முதலில் 1916 ம் வருடம் கீசகவதம் என்ற படத்தை 35 நாட்களில் எடுத்திருக்கிறார். திரைப்பட துறைக்கு வருவதற்கு முன் இவர் மவுண்ட்ரோட்டில் மோட்டார் கார் வியாபாரம் செய்து கொண்டிருந்தார், பிறகு இதை சிம்சனிடம் விற்றுவிட்டதாக தகவல். கலையார்வம் மிகுந்த இவர் ஒளிப்பதிவின் மேல் மிகுந்த ஆர்வத்தோடு இருந்தார் அதனால் கர்சன் பிரபுவின் தர்பாரில் படம் பிடிக்கும் ஒளிப்பதிவாளரான ஸ்மித் என்பவறின் அறிமுகம் கிடைக்க அவர் மூலமாகவே கையால் ராட்டை போல சுழற்றி படம் பிடிக்கும் காமிராவை இயக்கக் கற்றார். படமெடுக்க நன்கு கற்ற பிறகு படப்பிடிப்பு சாதனங்களை வாங்கினார், அந்நாளில் பிலிம் லண்டனில் இருந்தே வரும் பம்பாயில் கொடாக் நிறுவனத்தில் ஒரு நல்ல பதவியில் இருந்த கார்பெண்டர் என்பவர் மூலம் நடராஜ முதலியார் தனக்கு வேண்டிய பிலிம் சுருள்களை பெற்றதாக பேட்டியில் தெரிவிக்கிறார்.

https://adhithakarikalan.files.wordpress.com/2010/10/nataraja-mudaliyaar_41.jpg?w=614&h=295

இவர் தயாரித்த படங்களில் இவர் தான் இயக்குனர், ஒளிப்பதிவாளர். பிலிம் கழுவ ஒரு நபரையும், இவருக்கு உதவிக்காக மற்றொருவரையும் வேலையில் அமர்த்திக்கொண்டார். அக்காலத்தில் குளிர்சாதன வசதி இல்லாத காரணத்தினால் லேபராட்ரியை பெங்களூரில் வைத்துகொண்டார். படப்பிடிப்பு சென்னை கீழ்பாக்கத்தில் நடக்குமாம். நாடகங்களில் நடிப்பவர்களை இவர் திரைபடத்திற்கு பயன்படுத்திக் கொண்டார். அப்படியும் நடிப்பதற்கு பெண்கள் வரமாட்டார்களாம், பாலியல் தொழில் செய்யும் பெண்கள் கூட படத்தில் நடிக்க மறுப்பு தெரிவித்த நிலையில் இவருடைய திரௌபதி வஸ்த்ராபுராணம் என்ற படத்தில் நடிக்க ஒரு ஆங்கிலேயப் பெண்ணை திரௌபதியாக நடிக்க வைத்தாராம்.

https://adhithakarikalan.files.wordpress.com/2010/10/nataraja-mudaliyaar_3.jpg?w=614

திரௌபதி வஸ்த்ராபுராணம், கீசகவதம், லவகுசா, ருக்மணி சத்யபாமா, மார்கண்டேயா, காலிங்க மர்த்தனம் ஆகிய ஆறு படங்களை நடராஜ முதலியார் தயாரித்திருக்கிறார். படத்தை இங்கே வெளியிட்டதல்லாமல் வடநாட்டிற்க்கும் விநியோக உரிமை கொடுத்திருக்கிறார்.

பேட்டி எடுக்க சென்ற போது நடராஜ முதலியார் சென்னை அயனாவரத்தில் ஒரு சிறிய இடத்தில் வறுமையில் பிடியில் வாழ்ந்து கொண்டிருந்தார்.

கட்டுரையின் இறுதி வரிகளை படிக்கும் போது மனது கனக்கும் .அருமை நண்பர் முரளி ஸ்ரீநிவாஸ் அவர்கள் சமீபத்தில் மறைந்த பாசமலர் மோகன் அவர்களை பற்றி பேசும் போது பாசமலர் திரைபடத்தை டிஜிட்டல் செய்வது தொடர்பாக திரு மோகன் அவர்களை தேடி போகும் போது அவர் கெல்லீஸ் அருகில் ஒரு ஒண்டு குடித்தனத்தில் வாழ்ந்து கொண்டு இருந்ததாக கூறியது நினைவிற்கு வந்தது

gkrishna
25th September 2014, 12:57 PM
கிருஷ்ணா சார்,
நெல்லை பூர்ணகலா திரையரங்கில் பாபியும்,ராயல் திரையரங்கில்
யாதோங்கிபாரத்தும் போட்டி போட்டுக் கொண்டு வெற்றிகரமாக ஓடியதாக நினைவு.நெல்லையில் மட்டுமல்ல,தமிழகம் முழுவதும்.
கோபு

மிக சரியான தகவல் கோபு சார்

அதே போல் ஷோலே நெல்லை ராயல் திரை அரங்கிலும் ,khel khel main நெல்லை லக்ஷ்மியிலும் வெளி வந்து நிறைய நாட்கள் ஓடியது நினைவில் உண்டு

gkrishna
25th September 2014, 12:59 PM
ஆமாங்க க்ருஷ்ணா ஜி.. அப்புறமா வர்றேன்..டி.பி ராஜலஷ்மி ஃபோட்டோல்லாம் வரலை அதனால பார்க்கலை.. டிம்பிள் ஃபோட்டோஸும் நான் பார்க்கலை ! (இதுக்கும் விக்ரம் க்கும் என்னா வித்யாசம்) :)

பார்த்தீங்களா ஸ்மால் eye :) விக்ரம் எங்கே வந்தார் dimple பதிவில்
அந்த ரகசியத்தை எனக்கு மட்டும் கூறுங்கள்

gkrishna
25th September 2014, 01:38 PM
உடுமலை நாராயணகவி பிறந்த தினம் -நினைவு கூர்ந்த மாலை மலர் நாள் இதழுக்கு நன்றி - 25/09/1899

https://encrypted-tbn0.gstatic.com/images?q=tbn:ANd9GcTf6f7mM3h4i1OSeN-DcuO3nKESn-vcxEKDHVgVQ0uL_wsbJC4V

1899-ஆம் ஆண்டு செப்டம்பர் 25-ம் நாள் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உடுமலைப்பேட்டை வட்டத்தில் உள்ள பூவிளைவாடி என்னும் பூளைவாடிச் சிற்றூரில் 24 மனைத் தெலுங்கு செட்டியார் இனத்தைச் சேர்ந்த கிருஷ்ணசாமி-முத்தம்மாள் ஆகியோருக்கு மகனாகப் பிறந்தார் உடுமலை நாராயணகவி. இவருக்குப் பெற்றோர் இட்ட பெயர் நாராயணசாமி என்பதாகும்.

இளம் வயதிலேயே தம் தாய், தந்தையரை இழந்த நாராயணசாமி வறுமையில் வாடினார். தனது சகோதரர் தனுஷ்கோடியின் ஆதரவில் வாழ்ந்தார். நான்காம் வகுப்போடு தனது பள்ளிப்படிப்பை முடித்துக் கொண்ட நாராயணசாமி, கிராமியக் கலைகளான புரவியாட்டம், சிக்குமேளம், தப்பாட்டம், உடுக்கடிப்பாட்டு, ஒயில்கும்மி போன்ற கொங்கு மண்ணின் கலைகளில் மிகுந்த ஈடுபாடு கொண்டு ஆர்வத்துடன் பங்கேற்றார்.

விடுதலைப் போராட்டத்தின் போது தேசிய உணர்வு மிக்க பாடல்களை எழுதி மேடை தோறும் முழங்கியவர்; முத்துசாமிக்கவிராயரின் மாணவர்; ஆரம்பக் காலத்தில் நாடகங்களுக்கு பாடல் எழுதினார். இவருடைய பாட்டுகள் நாட்டுப்புற இயலின் எளிமையையும், தமிழ் இலக்கியச் செழுமையையும் கொண்டிருந்தன.

1933-ல் திரைப்படங்களுக்கு பாடல் எழுத ஆரம்பித்தவர். நாராயணகவி என்று பெயர் சூட்டிக்கொண்டு கவிஞர் இனமென்று தன்னை அடையாளம் காட்டிக் கொண்டவர்.

ஆரம்பத்தில் ஆன்மீகப் பாடல்களை எழுதிய நாராயணகவி, மகாகவி பாரதியாரின் நட்புக்குப்பின் பாமர மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் சமுதாயப் பாடல்களை எழுதி அதன் மூலம் சீர்திருத்தக் கருத்துக்களைப் பரப்பியவர். கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனுக்கு `கிந்தனார்’ கதாகாலட்சேபம் எழுதியதால் கலைவாணரின் குருவாக விளங்கியவர்.

அண்ணாத்துரை எழுதிய வேலைக்காரி, ஓர் இரவு, நல்லதம்பி போன்ற படங்களுக்கும் மு. கருணாநிதி கதை வசனம் எழுதிய பராசக்தி, மனோகரா திரைப்படங்களுக்கும், பிரபாவதி, காவேரி, சொர்க்கவாசல், தூக்குத்தூக்கி, தெய்வப்பிறவி, மாங்கல்யபாக்கியம், சித்தி, எங்கள் வீட்டு மகாலட்சுமி, ரத்தக் கண்ணீர், ஆதிபராசக்தி, தேவதாஸ் போன்ற படங்களுக்குப் பாடல்கள் எழுதியவர்.

ஏறத்தாழ பத்தாயிரம் பாடல்களை எழுதியுள்ள நாராயணகவி இயல்பாகவே இனிமையான சுபாவம் கொண்டவர். நேர்மையும், சொல்திறமையும் மிக்கவர். எவ்வகையிலும் தலை வணங்காத உறுதி உடையவர். பிறருக்கு உதவுகின்ற மனம் படைத்தவர். திரையுலகில் தமக்கென ஒரு மதிப்பையும் புகழையும் வைத்திருந்தவர்.

gkrishna
25th September 2014, 01:39 PM
http://3.bp.blogspot.com/-kVdMSiKyod8/UMdPNDymOmI/AAAAAAAADSI/DU0QMcmI42Q/s1600/Udumalai+Narayana+Kavi.jpg

gkrishna
25th September 2014, 03:08 PM
Kadalamma (1963)

http://www.thehindu.com/multimedia/dynamic/02106/15KIMP_OLDISGOLD_2106510e.jpg

நடிகை ராஜஸ்ரீ Gracy என்ற பெயரில் நடித்த மலையாள சல சித்ரம்

A M Raja and P.Suseela instant hit devarajan music -vayalar lyrics

http://www.youtube.com/watch?v=jgRz1cQ2Ws8

gkrishna
25th September 2014, 04:30 PM
'என் மானசீக குரு சி.ஆர்.சுப்பராமன்' இளையராஜா புகழாரம் சனிக்கிழமை,

'இளம் வயதிலேயே என் மான சீக குருவாகத் திகழ்ந்தவர் சி.ஆர்.சுப்பராமன்' என்று இளையராஜா கூறினார்.

நாகேஸ்வரராவ்-சாவித்திரி நடித்த 'தேவதாஸ்' படத்துக்கு இசை அமைத்தவர், சி.ஆர்.சுப்பராமன்.

எம்.கே.தியாகராஜ பாகவதர்- பானுமதி நடித்த 'ராஜமுக்தி', என்.எஸ்.கிருஷ்ணன் டைரக்னில் உருவான லலிதா, பத்மினி, பாலையா நடித்த 'மணமகள்', பானுமதி -நாகேஸ்வரராவ் நடித்த 'லைலா மஜ்னு' உள்பட ஏராளமான படங்களுக்கு இசை அமைத்தவர் சி.ஆர்.சுப்பராமன்.

அவர் பற்றி இளையராஜா கூறியதாவது:-

'ஏவி.எம். ஸ்டூடியோவிலும், ஜுபிடர் ஸ்டூடியோவிலும் அவர்களுக்கு என்று இசைக் குழுக்கள் இருந்தன. மற்ற ஸ்டூடியோக்களில் இசைக் கலைஞர்களைத் தனியாக அழைத்துதான் வாசிக்கச் செய்து, பதிவு செய்ய வேண்டும்.

அதெல்லாம் போய் விட்ட காலத்தில் அல்லவா நான் திரை உலகுக்கு வந்தேன்! அந்தக் காலப் பெருமைகளை, அனுபவம் மிக்க பெரியவர்கள் சொல்வது ஒரு பாடமாகவே இருக்கும்.

குறிப்பாக, என் முதல் `மானசீக குருநாதர்' சி.ஆர்.சுப்பராமன் பின்னணி இசை கம்போஸ் செய்வது அற்புதமான காட்சியாக இருக்கும் என்று அறிந்திருக்கிறேன்.

பின்னணி இசை (ரீரிகார்டிங்) அமைப்பதற்கான காட்சியை சுப்பராமனுக்கு திரையிட்டுக் காட்டுவார்கள். 10 நிமிடம் திரையில் ஓடும் படத்தைப் பார்த்து விட்டால், பியானோ முன் வந்து உட்கார்ந்து விடுவாராம். இரண்டு கைகளாலும் அவர் வாசிக்க, அதை `நோட்ஸ்' எடுக்க வலது புறம் விசுவநாதனும் ராமமூர்த்தியும் இடது புறம் கோவர்த்தனும், ஸ்ரீராமுலுவும் அமர்ந்து கொண்டு, சுப்பராமன் வாசிக்க வாசிக்க எழுதிக் கொள்வார்களாம்.

எதை எந்த வாத்தியத்திற்கு கொடுக்க வேண்டும் என்று கேட்டு, பிரித்துக் கொடுத்து ரிகர்சல் பார்க்கும்போது, `ஏய்! இந்த நோட்சை தப்பா கொடுத்தது யாரு? இங்கே வா!' என்று அழைத்து அதை மீண்டும் பியானோவில் வாசித்துக் காட்டி சரி செய்வாராம்.

வாசிப்பதை நோட்ஸ் எழுதுபவர்கள் எல்லோரும் திறமைசாலிகள். அவர்கள் எழுதுவதிலும் தவறு வர, அதை ஞாபகமாய்ச் சரி செய்தார் என்றால், அவருடைய ஞானத்தை என்ன சொல்வது?

முப்பத்தி இரண்டு வயதே வாழ்ந்த அவர், எவருக்கும் இணை இல்லாத மேதை.

ஆனால் ஆர்மோனிய பெட்டி மீது `விஸ்கி' பாட்டிலும், சிகரெட் பாக்கெட்டும் இருக்குமாம்!

அன்றைய காலக்கட்டத்தில் மட்டும் அல்ல, சினிமா கலைஞர்களுக்குப் புகழ் வரவர, குடியும், காமவெறியும்தான் உயர்ந்த சுகபோக நிலையாகவும், அதிலேயே சுகித்திருப்பதே நல் வாழ்க்கையாகவும் இருக்கிறது.

சி.ஆர்.சுப்பராமன் இசை அமைத்த பாடல்கள் மிகவும் `பாப்புலர்' ஆனதால், பொறாமை கொண்டவர்கள் அவரை `டப்பா மியூசிக் டைரக்டர்' என்று கூறி வந்தார்கள். சினிமா இசையை டப்பா இசை என்று சங்கீத வித்வான்கள் கேலியாகக் கூறுவது அக்கால வழக்கம்.

கலைவாணர் என்.எஸ். கே.யும், சி.ஆர்.சுப்பராமனும் நல்ல நண்பர்கள். என்.எஸ்.கே.யிடம் சுப்பராமன் இதுபற்றி கூறி வருத்தப்பட, `கவலைப்படாதே, சுப்பராமா! உன்னுடைய சங்கீத ஞானத்தைக் காட்டுவதற்காகவே ஒரு படம் எடுக்கிறேன்' என்று கூறி, `மணமகள்' என்ற படத்தைத் தயாரித்தார்.

அதில் அத்தனையும் கர்நாடக சங்கீதப் பாடல்கள். அத்தனை பாடல்களையும் வைரமணிகள் போல் ஒளி வீசும் வண்ணம் இசை அமைத்திருந்தார். உடுமலை நாராயண கவி எழுதியிருந்த பாடல்கள் மறக்க முடியாதவை. 'எல்லாம் இன்பமயம்' என்ற பாடலில்,

மலையின் அருவியிலே - வளர்
மழலை மொழிதனிலே
நிலவின் ஒளியாலும்
குழலின் இசையாலும்
நீலக்கடல் வீசும் அலையாலுமே!
கலைஞன் சிலையிலும் கவிதைப் பொருளிலும்
கானமா மயிலின் ஆடல் அறுசுவையில்
காதலோடு மனிதனின் புலன் காண்பதெல்லாம் இன்பமயம்!

- சிம்மேந்திர மத்திம ராகத்தில் அமைந்த இந்தப் பாடலை யாரால் மறக்க இயலும்!

மகாகவி பாரதியாரின் 'சின்னஞ்சிறு கிளியே' பாடலுக்கு அவர் ராகமாலிகையில் இசை அமைத்தார். உயிரையே கொள்ளைகொள்ளும் உன்னதமான பாடல். இத்தனை காலம் கடந்தும், அதற்கு மேல் இதோ ஒரு ராகமாலிகை என்று யாராலும் சுட்டிக் காட்ட முடியாத அளவுக்கு இசையை அறிந்தவர், சுப்பராமன்.

`டப்பா சங்கீதம்' என்று சங்கீத வித்வான்கள் கூறி வந்த சினிமா சங்கீதத்தை உயர்த்தி, அதை அப்படியே திருப்பிப் போட வைத்தது சி.ஆர்.சுப்பராமனின் இசை. சினிமா பாடலை சங்கீத மேடைக்கு கொண்டு போக வைத்த நிலைமை, சி.ஆர்.சுப்பராமன் காலத்தில்தான் ஏற்பட்டது. இன்றைய இளம் வித்வான்களில் யார் 'சின்னஞ்சிறு கிளியே' பாடவில்லை?

சரளமான நடைபோல வந்த பாட்டுக்கு, இத் தனை மகத்துவம்.சி.ஆர்.சுப்பராமனின் 'வர்ணமெட்டால்' வந்தது. அதை யாரும் மறுக்க முடியாது; மறக்கவும் முடியாது.

என் மானசீக குருவே-உம்மை என்றும் வணங்குகிறேன்' இவ்வாறு இளையராஜா குறிப்பிட்டுள்ளார்.

சில மலையாளப் படங்களில் பணியாற்ற இளையராஜாவுக்கு வாய்ப்பு கிடைத்தது. அதுபற்றி அவர் கூறியதாவது:-

'சில மலையாளப் படங்களுக்கு கிட்டார் வாசிக்க சான்ஸ் வந்தது. '12 பி' பஸ்சில் வடபழனிக்குச் சென்று, ஏவி.எம்.மிலோ, பரணியிலோ, ரேவதியிலோ நடக்கும் ரெக்கார்டிங்குக்கு நடந்து போவேன். முடிந்ததும் கடைசி '12 பி' பஸ்சில் திரும்பி வந்து சேருவேன். மலையாள இசை அமைப் பாளர் யாராக இருந்தாலும், பாடல் பதிவின் போது 'கண்டக்ட்' செய்பவர் சேகர் அவர்கள்தான். அவர் தன்ராஜ் மாஸ்டரின் மாணவர். அதை விட ஏ.ஆர்.ரஹ்மானின் தந்தை என்று கூறினால் நன் றாகத் தெரியும்.

எல்லா இசை அமைப்பாளர்களுக்கும் 'பிஜிஎம்' (பேக்ரவுண்ட் மியூசிக்) சேகர் தான் செய்து கொடுப்பார். மாஸ்டர் தேவராஜனிடம் மட்டும் அவர் 'கண்டக்ட்' மட்டும் செய்வார்.

அவர் 'பிஜிஎம்' மட்டும் செய்யும் படங்களில் சில இடங்களை குறிப்பிட்டு, 'நீ இந்த இடத்தில் வாசித்து விடு' என்பார். எனக்காக கம்போஸ் செய்ய மாட்டார்.

மற்ற அனைவருக்கும் நோட்ஸ் கொடுத்து விட்டு, எனக்கு மட்டும் ஒன்றும் சொல்லாமல், 'வாசித்து விடு' என்று சுதந்திரமாக விட்டு விடுகிறாரே, ஏன் என்று யோசிப்பேன். நான் தன்ராஜ் மாஸ்டரின் மாணவன் என்பதால்தான் என்னிடம் இவ்வளவு நம்பிக்கை என்று தெரிந்தது. ஒத்திகையைப் பார்க்கும் யாராவது இசை அமைப்பாளர்கள், கிட்டாரில் ஏதாவது மாற்ற வேண்டும் என்று என்னிடம் வந்தால், அவரை சேகர் கூப்பிட்டு, 'அதெல்லாம் சரியாகத்தான் இருக்கிறது. `டேக்'கின் போது சரியாக -நன்றாகவே வரும்' என்று சொல்லி, என் அருகே யாரையும் நெருங்க விடமாட்டார். அவ்வளவு நம்பிக்கை.

அவர் தனியாக இசை அமைத்த எந்த ஒரு படமும் சரியாக அமையவில்லை. அதுபற்றி அவர் வருந்தியும் நான் பார்த்தது இல்லை. தன் தந்தையின் ஆசியால் ரஹ்மான் பெரும் அளவில் பேரும், புகழும் பெற்றார் என்பதில் எனக்கு முழு நம்பிக்கை.'

இவ்வாறு இளையராஜா கூறியுள்ளார்.
http://mmimages.maalaimalar.com/Articles/2013/Mar/5e451a0b-eb6f-4d80-868d-6d481183b89d_S_secvpf.gif

gkrishna
25th September 2014, 04:40 PM
இது "பணம்" படத்தில் வந்தது.

அண்ணா , என்.எஸ்.கே. போன்றவர்களுக்கு அன்று
ஆஸ்தான கவிபோல் விளங்கிய அருமையான கவிஞர்
உடுமலை நாராயணகவி எழுதியது :

எங்கே தேடுவேன் , பணத்தை எங்கே தேடுவேன்
எங்கே தேடுவேன் , பணத்தை எங்கே தேடுவேன்

உலகம் செழிக்க உதவும் பணத்தை எங்கே தேடுவேன்
அரசன் முதல் ஆண்டியும் ஆசை படும் இந்த பணத்தை
எங்கே தேடுவேன், பணத்தை எங்கே தேடுவேன்
கருப்பு மார்கெட்டில் கலந்து கொண்டாயோ
கஞ்சன் கைகளில் சிக்கிகொண்டாயோ
கிண்டிரேஸில் சிக்கி கிருகிருத்தாயோ
அண்டின பேர்களை ரெண்டும் செய்யும்
பணத்தை பணத்தை எங்கேதேடுவேண்
எங்கே தேடுவேன் , பணத்தை எங்கே தேடுவேன்

பூமிக்குள் புதைந்து புதையலானாயோ......
பொன்நகையாய் பெண்மேல் தொங்குகின்றாயோ
சாமிகள் அடிகளில் சரண்புகுந்தாயோ
சன்யாசி கோலத்தோடு உலவுகின்றாயோ
பணத்தை எங்கே தேடுவேன்
எங்கே தேடுவேன் , பணத்தை எங்கே தேடுவேன்

திருப்பதி உண்டியலில் சேர்ந்துவிட்டாயோ
திருவன்னாமலை குகைபுகுந்தாயோ
இரும்பு பெட்டிகளில் இருக்கின்றாயோ
இரக்கமுள்ளவரிடம் இல்லத பணமே
உன்னை என்கே தேடுவேன்
தேர்சலில் சேர்ந்து தேய்ந்து போனாயோ
தேக சுகத்திற்க்காக ஊட்டி சென்றாயோ

சுவற்றிக்குள் தங்கமாய் பங்க்குவிட்டாயொ

சூடம் சாம்பிரானியாய் கரந்துவிட்டாயோ

உலகம் செழிக்க உதவும் பணமே உன்னை எங்கே தேடுவேன்

எங்கே தேடுவேன் , பணத்தை எங்கே தேடுவேன்
எங்கே தேடுவேன் , பணத்தை எங்கே தேடுவேன்

http://www.youtube.com/watch?v=9cBpl6Adb-w

gkrishna
25th September 2014, 04:50 PM
நவராத்திரி ஸ்பெஷல்

சமயபுரத்து அம்மன் சன்னிதியில், வெள்ளைக்காரத் துரை (மேஜர் சுந்தரராஜன்) அட்டகாசம் செய்யும் போது, அம்மை நோய் தாக்கி அலறுவார்!
அப்போது, மனம் திருந்தி, வேண்டுதல் மேற்கொள்ள, துன்பம் தீருவார்! அந்த நேரத்தில் உதிக்கும் பாட்டு இது! இசையரசி சுசீலாம்மாவின் இன்குரலில்..

படம்: ஆதிபராசக்தி
குரல்: பி.சுசீலா
இசை: கே.வி.மகாதேவன்
வரிகள்: உடுமலை நாராயண கவி

ஆனந்த பைரவி ஒரு சுகமான ராகம்

நானாட்சி செய்து வரும் நான்மாடக் கூடலிலே
மீனாட்சி என்ற பெயர் எனக்கு

கங்கை நீராட்சி செய்து வரும் வடகாசி தன்னில்
விசாலாட்சி என்ற பெயர் வழக்கு
கோனாட்சி பல்லவர் தம் குளிர்சோலை காஞ்சி தன்னில்
காமாட்சி என்ற பெயர் எனக்கு
கொடும் கோலாட்சி தனை எதிர்க்கும் மாரியம்மன் என்ற பெயர்
கொண்டபடி காட்சி தந்தேன் உனக்கு
ஆறென்றும் நதியென்றும் ஓடை என்றாலும் அது
நீரோடும் பாதை தன்னைக் குறிக்கும் - நிற்கும்

ஊர் மாறி, பேர் மாறி, கரு மாறி, உரு மாறி,
ஒன்றே ஓம் சக்தியென உரைக்கும்!
ஒன்றே ஓம் சக்தியென உரைக்கும்!

http://3.bp.blogspot.com/_h7qhuHzSykY/SdJa3tPEzkI/AAAAAAAABrs/I35cQ8ow3ns/s1600/meenakshi1.jpg

mahendra raj
25th September 2014, 05:31 PM
இது "பணம்" படத்தில் வந்தது.

அண்ணா , என்.எஸ்.கே. போன்றவர்களுக்கு அன்று
ஆஸ்தான கவிபோல் விளங்கிய அருமையான கவிஞர்
உடுமலை நாராயணகவி எழுதியது :

எங்கே தேடுவேன் , பணத்தை எங்கே தேடுவேன்
எங்கே தேடுவேன் , பணத்தை எங்கே தேடுவேன்

உலகம் செழிக்க உதவும் பணத்தை எங்கே தேடுவேன்
அரசன் முதல் ஆண்டியும் ஆசை படும் இந்த பணத்தை
எங்கே தேடுவேன், பணத்தை எங்கே தேடுவேன்
கருப்பு மார்கெட்டில் கலந்து கொண்டாயோ
கஞ்சன் கைகளில் சிக்கிகொண்டாயோ
கிண்டிரேஸில் சிக்கி கிருகிருத்தாயோ
அண்டின பேர்களை ரெண்டும் செய்யும்
பணத்தை பணத்தை எங்கேதேடுவேண்
எங்கே தேடுவேன் , பணத்தை எங்கே தேடுவேன்

பூமிக்குள் புதைந்து புதையலானாயோ......
பொன்நகையாய் பெண்மேல் தொங்குகின்றாயோ
சாமிகள் அடிகளில் சரண்புகுந்தாயோ
சன்யாசி கோலத்தோடு உலவுகின்றாயோ
பணத்தை எங்கே தேடுவேன்
எங்கே தேடுவேன் , பணத்தை எங்கே தேடுவேன்

திருப்பதி உண்டியலில் சேர்ந்துவிட்டாயோ
திருவன்னாமலை குகைபுகுந்தாயோ
இரும்பு பெட்டிகளில் இருக்கின்றாயோ
இரக்கமுள்ளவரிடம் இல்லத பணமே
உன்னை என்கே தேடுவேன்
தேர்சலில் சேர்ந்து தேய்ந்து போனாயோ
தேக சுகத்திற்க்காக ஊட்டி சென்றாயோ

சுவற்றிக்குள் தங்கமாய் பங்க்குவிட்டாயொ

சூடம் சாம்பிரானியாய் கரந்துவிட்டாயோ

உலகம் செழிக்க உதவும் பணமே உன்னை எங்கே தேடுவேன்

எங்கே தேடுவேன் , பணத்தை எங்கே தேடுவேன்
எங்கே தேடுவேன் , பணத்தை எங்கே தேடுவேன்

http://www.youtube.com/watch?v=9cBpl6Adb-w


This song was written by Kaviarasu Kannadhasan.

gkrishna
25th September 2014, 05:47 PM
This song was written by Kaviarasu Kannadhasan.

thanks for the information mahendera raj sir

while verifying some of the sites it was informed that this song was written by N.S.Krishnan himself and sung .
some other sites informed it was written by udumalai . like this some sites informed it was written by kannadasan .

in this blog http://athiyamaan.blogspot.in/2008/10/blog-post.html mentioned as udumalai



in G.Ragavan's site it was like this

பணம் என்றே ஒரு திரைப்படம். அதற்கு முன் எம்.எஸ்.விசுவநாதன் தனியாக இசையமைத்திருந்தாலும் மெல்லிசை மன்னர்கள் இருவருமாக இணைந்து இசையமைத்த முதற்படம் பணம். அவர்கள் இசையில் இந்தப் படத்தில் ஒரு பாடல். கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனே எழுதிப் பாடிய பாடலிது.

எங்கே தேடுவேன் எங்கே தேடுவேன்
பணத்தை எங்கே தேடுவேன்
உலகம் செழிக்க உதவும் பணத்தை எங்கே தேடுவேன்
அரசன் முதல் ஆண்டியும் ஆசைப்படும் பணத்தை எங்கே தேடுவேன்
கருப்பு மார்க்கெட்டில் கலங்குகின்றாயோ
கஞ்சன் கையிலே சிக்கிக் கொண்டாயோ
கிண்டி ரேசில் சுத்திக் கிறுகிறுத்தாயோ
திருப்பதி உண்டியலில் சேர்ந்து விட்டாயோ
திருவண்ணாமலை குகை புகுந்தாயோ
தேர்தலில் சேர்ந்து தேய்ந்து போனாயோ
தேக சுகத்துக்காக ஊட்டி சென்றாயோ

நகைச்சுவையாக வரிகள் இருப்பது போலத் தோன்றினாலும் பாடலில் பணம் பதுங்கியிருக்கும் இடங்கள் தெள்ளத் தெளிவாகத் தெரியும். கலைவாணர் என்ற பெயர் பாடலை எழுதியவருக்குப் பொருத்தமே.

in The Hindu Randor Guy's review it was like this

The lyrics for all the songs were written by Srinivasan's brother, ace lyricist Kannadasan, with the exception of one song, which was written by Bharathidasan, the rebel poet of Pondicherry.

hence this confusion .

vasudevan31355
25th September 2014, 07:01 PM
'அம்மாடி.... உழைக்கும் கை ஓங்க வேண்டும். (பெத்த மனம் பித்து)


http://www.youtube.com/watch?v=aNO3bcSzShA&feature=player_detailpage

vasudevan31355
25th September 2014, 07:12 PM
மணி மகுடம் (1966)
டி.எம். சௌந்திரராஜன், பி.சுசீலா
இசை: ஆர்.சுதர்சனம்
பாடல்: கண்ணதாசன்

http://i.ytimg.com/vi/ReyzgE8oAoM/hqdefault.jpg


பாடல்: ஆதவன் உதித்தான் மலை மேலே

டி.எம்.எஸ்: ஆதவன் உதித்தான் மலை மேலே
இந்த அழகு கோபுர சிலை மேலே
அதவன் உதித்தான் மலை மேலே
இந்த அழகு கோபுர சிலை மேலே

சுசீலா: இதில் ஆட நினைக்குது ஆசை மனம்
ஆட நினைக்குது ஆசை மனம்
அது அறியாதோ வரும் அஸ்தமனம்

டி.எம்.எஸ்: ஆதவன் உதித்தான் மலை மேலே

டி.எம்.எஸ்: அழகிய மலர்கள் சிரிக்கின்றன

சுசீலா: அவை அடுத்த உலகை நினைக்கின்றன
டி.எம்.எஸ்: அழகிய மலர்கள் சிரிக்கின்றன

சுசீலா: அவை அடுத்த உலகை நினைக்கின்றன

டி.எம்.எஸ்: பழகிய கிளிகள் துடிக்கின்றன
பழகிய கிளிகள் துடிக்கின்றன

சுசீலா: எங்கோ பறக்க சிறகை விரிக்கின்றன.....(சிரிப்பு)

டி.எம்.எஸ்: ஆதவன் உதித்தான் மலை மேலே

டி.எம்.எஸ்: வானில் பறக்குது வெள்ளைப் புறா.... ஆ......
வானில் பறக்குது வெள்ளைப் புறா

சுசீலா: வேடன் வலையை விரித்தது அறியாமல்

டி.எம்.எஸ்: வானில் பறக்குது வெள்ளைப் புறா

சுசீலா: வேடன் வலையை விரித்தது அறியாமல்

டி.எம்.எஸ்: ஆடிக் களிக்குது தோகை மயில்
ஆடிக் களிக்குது தோகை மயில்

சுசீலா: தன் ஆட்டம் முடிவது தெரியாமல்.....
தன் ஆட்டம் முடிவது தெரியாமல்....

டி.எம்.எஸ்: இதயம் எதையோ நினைக்கின்றது

சுசீலா: அதில் ஏன் இந்த மயக்கம் பிறக்கின்றது?

டி.எம்.எஸ்: இதயம் எதையோ நினைக்கின்றது

சுசீலா: அதில் ஏன் இந்த மயக்கம் பிறக்கின்றது?

டி.எம்.எஸ்: புதிய பாதை தெரிகின்றது...
புதிய பாதை தெரிகின்றது

சுசீலா: அது போகும் பொழுதே முடிகின்றதே

டி.எம்.எஸ்: ஆதவன் உதித்தான் மலை மேலே
இந்த அழகு கோபுர சிலை மேலே

சுசீலா: இதில் ஆட நினைக்குது ஆசை மனம்
அது அறியாதோ வரும் அஸ்தமனம்

டி.எம்.எஸ்: ஆதவன் உதித்தான் மலை மேலே


https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=bpEJNDx5r1U

gkrishna
25th September 2014, 07:15 PM
'அம்மாடி.... உழைக்கும் கை ஓங்க வேண்டும். (பெத்த மனம் பித்து)



வாசு சார்

வாங்க வாங்க வாங்க

இந்த பாட்டை எப்படி பிடிச்சீங்க . பெத்த மனம் பித்து - எல்லோரும் சொல்லும் பாட்டு - 'காலம் நமக்கு தோழன் '

gkrishna
25th September 2014, 07:20 PM
நான் வந்தபாதை மான் வந்தது - manimagudan 1966

http://www.youtube.com/watch?v=DwFlDZvMVQs

vasudevan31355
25th September 2014, 07:29 PM
மாலை மதுரம் 4

'மந்திரிகுமாரன்' தெலுங்கு டப்பிங் படத்தின் அபூர்வ பாடல்.

'செண்டு மல்லி மாலையோ
சிங்கார சோலையோ
தேனுண்ட தாழையோ
மணிகள் கொண்ட பார்வையோ'

சுட்டது.


https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=w_QRnAydf_M

இந்திப் படமான 'Chaudhavin Ka Chand' படத்திலிருந்து படத்தின் தலைப்பில் ஆரம்பிக்கும் மிக அருமையான பாடலை தெலுங்குக்காரர்கள் சுட்டது. ஹிந்தியிலிருந்து தெலுங்குக்கு இறக்குமதியாகி, மீண்டும் தமிழுக்கு இறக்குமதி ஆனது. மனதை வசியப்படுத்தும் அருமையான டியூன் என்பதால் எல்லா மொழியிலும் கேட்க அவ்வளவு இனிமை.

ஒரிஜினல் ('Chaudhavin Ka Chand')


http://www.youtube.com/watch?v=wRbBORKhGYg&feature=player_detailpage

vasudevan31355
25th September 2014, 07:35 PM
கிருஷ்ணா சார்,

மாலை வணக்கம். மேற்கண்ட இரண்டு பாடல்களையும் அவசியம் கண்டு கேட்டு களியுங்கள். அற்புதமான பாடல்கள். மாலை வேளையில் சுக மயக்கம் தரும் தேன்சுவைப் பாடல்கள். குரு தத்தும், வஹிதா ரஹ்மானும் கலக்கல்.

gkrishna
25th September 2014, 07:35 PM
Thanks to Mr.Saravanan

காலத்தால் அழிக்க முடியாத திரைப்படங்களும், அழியாத திரைப்படப் பாடல்களும் என்று ஒரு பட்டியலிட்டால் அதில் முதலிடத்தில் இருப்பது 1944-ம் ஆண்டு வெளிவந்த 'ஹரிதாஸ்' என்னும் திரைப்படத்தைத்தான் சொல்ல வேண்டும்.

1944-ம் ஆண்டு அக்டோபர் 16-ம் தேதி வெளியான இத்திரைப்படம் சென்னையில் பிராட்வே தியேட்டரில் மட்டும் மூன்றாண்டுகள் தொடர்ந்து ஓடி ஒரு உலகச் சாதனையைப் படைத்தது.

http://2.bp.blogspot.com/_Dcezi5xfsqA/TOLJu8_AzdI/AAAAAAAADGg/z1JO6BzbVJ4/s1600/Haridas2.jpg


எவரைக் கேட்டாலும் இந்தப் படத்தைப் பற்றிச் சொல்லும்கையோடு 'மன்மத லீலையை வென்றார் உண்டோ' பாடலையும் சேர்த்துத்தான் சொல்கிறார்கள்.

'மன்மத லீலை' என்கிற வார்த்தையின் மீது மக்களுக்கு அதீதமான பாசம் அந்தக் காலத்தில் இருந்திருக்கலாமோ என்று இதன் வெற்றியைப் பார்த்து யோசிக்க வேண்டியிருக்கிறது. ஆனால் இதன் பின்னான 50 ஆண்டு காலத்தில் இந்த 'மன்மத லீலை' என்கிற வார்த்தை தமிழகத்து சினிமா ரசிகர்களிடையே 'அந்த மாதிரி' என்ற அடைமொழிக்குள் ஒளிந்து கொண்டது ஏன் என்றுதான் புரியவில்லை.

காமனை அடக்க முடியாமல் சிவனே அல்லல்பட்ட கதை பக்தியாளர்கள் அறிந்ததுதான். காமத்தை வெற்றிகரமாக கடப்பவனே நிம்மதியான மனிதனாக இருக்க முடியும் என்பது கல்வியாளர்களின் கருத்தாக இருக்கலாம்.. காமத்தில் கரை கண்டவனாக இருக்கிறான் என்கிற வார்த்தை பொறாமைத் தீயில் வறுத்தெடுத்த வார்த்தைகளாக சிக்கியிருக்கலாம். ஆனாலும் இந்த காமத்துக்கும், மன்மதலீலைக்குமான தொடர்பு நூற்றாண்டும் தொடர்ந்து இணைந்து வருகிறது.

முதல் முறையாக இந்தப் பாடல் காட்சியை சுற்றுமும், நட்பும் படை சூழ ஒரு நல்ல சுபமுகூர்த்த நாளில்தான் பார்த்தேன்.

அவ்வப்போது இடையிடையே கோடுகள் குறுக்கும், நெடுக்குமாக பறந்து படத்தின் பிரதி என்ன லட்சணத்தில் இருக்கிறது என்பதைப் பறை சாற்றிக் கொண்டிருந்த நிலையிலேயே பாடல் காட்சி ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது.

பாடல்கள் தெள்ளத் தெளிவாகக் காதில் விழுந்தபோது உடன் இருந்த அண்ணன்மார்களும், அப்பாமார்களும் தாளம் தட்டி அதனை வரவேற்று ரசித்தபடியிருந்தார்கள். ஜி.ராமநாதனின் இசையில் பாகவதரின் குரலில் இதுவரையிலும் இல்லாத புது மாதிரியாக பாடல் ஒலித்துக் கொண்டிருந்தது..!


http://4.bp.blogspot.com/_Dcezi5xfsqA/TOLJqG96SEI/AAAAAAAADGc/FLZos1bq-1I/s320/haridas-1.jpg

எனக்கும் டி.ஆர்.ராஜகுமாரியை அபிநயத்துடன் பார்த்தபோது மிகவும் பிடித்திருந்தது.. சிரித்த முகத்துடன் முகப் புருவம் முதற்கொண்டு, உடல் முழுவதையும் ஏதோ ஒருவித நடன முறையுடன் ஆடிக் கொண்டிருந்ததை என் கவனத்தை எந்தப் பக்கமும் திருப்ப விடாமல் பார்த்துக் கொண்டது.

பாகவதரின் மிக அருகே வந்து அமர்ந்து அவர் பாடும் வரிகளை தனது அபிநயத்தாலேயே அவர் விளக்குகின்ற காட்சியில் ரசித்திருந்த நான், “உன்னை நினைந்து நான் தேடி ஓர் முத்தம் தந்தால் குறைந்திடுமோ….” என்ற வரிகளைத் தொடர்ந்து ராஜகுமாரி செய்த அந்த 'பிளையிங் கிஸ்' ஆக்ஷனைப் பார்த்தவுடன் என்னுள் ஏதோ திடீரென்று ஏற்பட்ட உணர்ச்சியால் வாவ்.. என்று துள்ளிக் குதித்து கை தட்டினேன்..!

உறவினர்கள் வீடு. என் வயதோ 20. சுற்றிலும் பெண்களும் இருந்தார்கள். அத்தனை பேரும் என்னைப் பார்த்து சிரிக்க.. எனக்கு நிறைய வெட்கமும், தாங்க முடியாத சங்கடமும் இருந்தது. இறுதிவரையில் பார்த்த பின்பு எனக்குள் ஏற்பட்ட பிரமிப்பும், ஆச்சரியமும் கணக்கிலடங்காதது..!

இதற்குப் பின்பு இந்தப் பாடலை எத்தனை முறை நான் பார்த்தேன் என்று எனக்கே தெரியாது.. அத்தனை முறைகள் சலிக்காமல் இன்றுவரையிலும் பார்த்தபடியேதான் இருக்கிறேன்.

ஒரு கவர்ச்சியை, இனக் கவர்ச்சியை, பாலியல் வேட்கையை, சிருங்கார ரசத்தை, காமத்தின் முதல் படியை எவ்வளவு எளிதாக முழுவதும் முற்றும் மூடிய உடையணிந்த நிலையில் நடனத்தாலும், இசையாலும், பாடல் வரிகளாலுமே கிளறிவிட முடியும் என்பதை அந்தக் காலத்திலேயே நிரூபித்திருக்கிறார்களே..! இயக்குநர் சுந்தர்ராவ் நட்கர்னியை எத்தனை பாராட்டினாலும் தகும்..

அந்தக் கால திரை விமர்சனங்களிலும், இத்திரைப்படத்திற்கு இதுநாள் வரையிலும் வந்திருக்கும் அத்தனை விமர்சனங்களிலும் இந்தப் பாடலுக்கு மட்டும் தனியாக சில பக்கங்களை ஒதுக்கித்தான் இருக்கிறார்கள்.

ஜி.ராமநாதன் இந்தப் பாடலை 'சாருகேசி' ராகத்தில் இசைத்திருக்கிறார். இந்தப் பாடல் புகழ் பெற்ற பின்புதான் 'சாருகேசி' ராகமும் புகழ் பெற்றது என்கிறார்கள். இதற்காக செம்மங்குடி சீனிவாச ஐயர், ஜி.ராமநாதனின் வீடு தேடி வந்து அவரை வாழ்த்திவிட்டுப் போனாராம். தொடர்ந்து சீனிவாச ஐயர் ஸ்வாதித் திருநாளுக்காக இயற்றிய "க்ருபையா பாலய" என்ற பாடலும் இதே ராகத்தில் அமைந்து இதன் பின்புதான் கர்நாடக சங்கீதக் கச்சேரிகளிலும் 'சாருகேசி' ராகம் புழங்க ஆரம்பித்தது என்கிறார்கள்.

என்னுடைய இன்னுமொரு ஆச்சரியம் என்னவெனில் அத்தனை கட்டுப்படியான அந்தக் காலக்கட்டத்தில் அப்படியொரு பிளையிங் கிஸ் காட்சிக்கு ராஜகுமாரி எப்படி ஒத்துக் கொண்டிருப்பார்..? பாகவதர் என்ன நினைத்திருப்பார்..? இயக்குநருக்கு இந்தக் கற்பனை எப்படி வந்திருக்கும்..? சென்சார் போர்டில் எப்படி விட்டார்கள்..?

ம்ஹூம்.. இது எல்லாவற்றையும் மறக்கடித்த நிலையில் இன்றுவரையிலும் கிறங்கடிக்கிறது இந்தப் பாடல் காட்சி..! மறுபடியும், மறுபடியும் ராஜகுமாரியின் பிம்பமே என் கண்ணில் வந்து விழுகிறது..!

முதலில் பாடலைப் படியுங்கள்..!

மன்மத லீலையை வென்றார் உண்டோ?
மன்மத லீலையை வென்றார் உண்டோ?

என் மேல் உனக்கேனோ பாராமுகம் ?
மன்மத லீலையை வென்றார் உண்டோ?

என் மேல் உனக்கேனோ பாராமுகம்?
மன்மத லீலையை வென்றார் உண்டோ ?

நின் மதி வதனமும்…
நின் மதி வதனமும் நீள் விழியும் கண்டு...

( ரம்பா….. சுவாமி ..)

நின் மதி வதனமும்…
நின் மதி வதனமும் நீள் விழியும் கண்டு ...
நின் மதி வதனமும்…
நின் மதி வதனமும் நீள் விழியும் கண்டு...

என் மதி மயங்கினேன் … நான்
என் மதி மயங்கினேன்... மூன்று உலகிலும்..
என் மதி மயங்கினேன்... மூன்று உலகிலும்..

மன்மத லீலையை வென்றார் உண்டோ

என்னுடனே நீ பேசினால் வாய்
முத்து சிந்தி விடுமோ?
என்னுடனே நீ பேசினால் வாய்
முத்து சிந்தி விடுமோ?

உன்னை என்னேரமும் நினைந்துருகும் என்னிடம்
வந்தால் மெனக்கெடுமோ…?
உன்னை என்னேரமும் நினைந்துருகும் என்னிடம்
வந்தால் மெனக்கெடுமோ...?

உன்னை நயந்து நான் வேண்டி ஓர் முத்தம்
தந்தால் குறைந்திடுமோ….?
உன்னை நயந்து நான் வேண்டி ஓர் முத்தம்
தந்தால் குறைந்திடுமோ....?

ஒரு பிழை அறியா என் மனம்
மலர்கணை பாய்ந்து அல்லல் படுமோ?
ஒரு பிழை அறியா என் மனம்
மலர்கணை பாய்ந்து அல்லல் படுமோ - மனங்கவர்

மன்மத லீலையை வென்றார் உண்டோ?
என் மேல் உனக்கேனோ பாராமுகம்?

மன்மத லீலையை வென்றார் உண்டோ..???

http://www.youtube.com/watch?v=lg8L6KrAwR0

gkrishna
25th September 2014, 07:41 PM
thanks to Dinamani - மன்மதலீலையை வென்றார் உண்டோ

http://www.dinamani.com/weekly_supplements/sunday_kondattam/article736800.ece/alternates/w460/12kon8.jpg

மன்மதலீலையை வென்றார் உண்டோ...' காற்றில் கசிந்தது, அரை நூற்றாண்டுக்கும் மேலாக தமிழர்களின் செவிகளை வசப்படுத்திய அந்தக் கந்தர்வக் குரல். பாகவதர்தான் மீண்டும் வந்துவிட்டாரோ? என்று எண்ணும் அளவுக்கு ஏழிசை மன்னர் எம்.கே. தியாகராஜ பாகவதரின் அத்தனை பாடல்களையும் அப்படியே பாடி அரங்கில் இருந்த அனைவரது பாராட்டையும் பெற்றார் அந்தப் பாடகர்.

1944 முதல் 1950-ம் ஆண்டுகள் வரை தியாகராஜ பாகவதர் பாடிய பாடல்களை அப்படியே பாட ஒருவர் இருக்கிறாரா? என்று வியக்கும் வேளையில், மேலும் ஒரு வியப்பைக் கொடுத்தார் அந்தப் பாடகர் காஷ்யப் மகேஷ்!

திருச்சியில் அண்மையில் எம்.கே. தியாகராஜ பாகவதரின் நூற்றாண்டு விழாவின் ஒரு பகுதியாக நடைபெற்ற இன்னிசை நிகழ்ச்சியில், ஏறத்தாழ ஒரு மணி நேரம் பாகவதரின் பாடல்களை மட்டுமே பாடி, பார்வையாளர்களின் பாராட்டைப் பெற்ற காஷ்யப் மகேஷ் தன் பெயரில் மட்டுமல்ல... பல்வேறு வித்தியாசமான திறமைகளையும் தன்னகத்தே கொண்டுள்ளார். பாகவதரின் பாடல்கள் மீது வந்த பற்று, பாடல்கள் பாட எடுத்துக் கொண்ட சிரமம், இதர திறமைகள், பெரியோரின் பாராட்டு எனப் பல்வேறு விஷயங்கள் குறித்து நம்மோடு பகிர்ந்து

கொண்டார்...

""காஷ்யபன் என்பது ஒரு முனிவரின் பெயர். எனது தந்தை ரகுநாதன் பட்டயக் கணக்காளர். தாய் ரமா ரகுநாதன். குழந்தைகள் பள்ளித் தாளாளர். சிறுவயதில் இருந்தே பாடுவதில் எனக்கு ஆர்வம்.

மூன்று வயதிலிருந்து பாடத் தொடங்கினேன். 9-வது வயதில் மெல்லிசை மன்னர் எம்.எஸ். விஸ்வநாதனின் "மழலையும், மேதைகளும்' என்ற ஆல்பத்தில் பாட வாய்ப்புக் கிடைத்தது. அதில், மதநல்லிணக்கப் பாடல்களையும், தேசிய ஒருமைப்பாட்டு பாடல்களையும் பாடினேன். தொடர்ந்து கர்நாடக இசையைக் கற்கத் தொடங்கினேன். டி.வி. கோபாலகிருஷ்ணன், காரைக்குடி எம்.எஸ். மணி ஆகியோர் எனது குருநாதர்கள். திருச்சி காமகோடி வித்யாலயா பள்ளி மற்றும் இ.ஆர். மேல்நிலைப் பள்ளி ஆகியவற்றில் படித்தேன். படிக்கும் போதே எனது திறமைகளைக் கண்டு பள்ளி நிர்வாகத்தினர் நல்ல ஒத்துழைப்புக் கொடுத்தனர்.

எம்.கே. தியாகராஜ பாகவதர் மட்டுமன்றி, மக்களை எளிதில் கவரக்கூடிய பாடகரான என்.எஸ். கிருஷ்ணனின் பாடல்களும் எனக்கு நன்றாகப் பாட வரும். அவர்கள் பாடியதைப் போலவே பாடுவதில் சிரமம் இருக்கத்தான் செய்கிறது. ஏனென்றால், இசையை நன்கு அறிந்தவர்கள் முன்னிலையில் பாகவதர் மற்றும் என்.எஸ். கிருஷ்ணன் பாடல்களைப் பாடும்போது சரியான முறையில் பாடவில்லை என்றால் நம்மை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.

10 வயது முதல் தியாகராஜ பாகவதரின் பாடல்களைப் பாடி வருகிறேன். நான் பாகவதரின் தீவிர ரசிகன். அவர் பாடிய அனைத்துப் பாடல்களும் எனக்கு மனப்பாடமாகத் தெரியும். பல சிரமங்களுக்கு இடையே பாகவதரின் பாடல்களை தேடிப் பிடித்து கேட்டுள்ளேன். மேடைக்கு ஏற்பவும், மக்களின் ரசனைக்கு ஏற்பவும் எனது பாடும் விதத்தை மாற்றிக் கொள்வேன். இதுவரை ஏறத்தாழ 1,500 மேடைக் கச்சேரிகளில் பாடியுள்ளேன். தமிழகம் மட்டுமன்றி ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, மலேசியா போன்ற வெளிநாடுகளிலும் பாடிய அனுபவம் உள்ளது.

முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் எழுதிய "வளமான நாடாக்குவோம்' என்ற கவிதைக்கு மெட்டு அமைத்து நானே பாடி அவருக்கு அனுப்பிவைத்தேன்.

கடந்த 2003-ம் ஆண்டு திருச்சிக்கு வந்த அப்துல் கலாம், ஆயிரம் மாணவர்களுக்கு மத்தியில் என்னை மட்டும் அழைத்து பாராட்டுத் தெரிவித்தது எனக்கு மறக்க முடியாத அனுபவம். இதேபோல, கடந்த 2008-ம் ஆண்டு இசைஞானி இளையராஜாவின் வீட்டில் நடைபெற்ற நவராத்திரி விழாவில் கலந்து கொண்டு பாடிய அனுபவத்தையும் என்னால் மறக்க முடியாது.

திரைப்படத்தில் பாட சில வாய்ப்புகள் வந்தன. வயது இருக்கிறது, பிறகு பார்த்துக் கொள்ளலாம் என விட்டுவிட்டேன். இனிமேல், திரைப்படங்களில் பாட வாய்ப்புக் கிடைத்தால் நிச்சயம் பாடுவேன். பாகவதர் பாடல்கள் உள்ளிட்ட பாடல்களைப் பாடுவது மட்டுமல்லாமல் ஓவியமும் வரைவேன். முக்கிய கோயில்களின் கருவறை, அதில் உள்ள தெய்வங்களை வரைவது எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்று. பாடுவதைத் தவிர நேரம் கிடைக்கும் போதெல்லாம் ஓவியம் வரைவேன். கோயில்கள், சுவாமிகள் பற்றியே அதிகம் வரைந்துள்ளேன்.

கடந்த 2006-ம் ஆண்டில் பத்தாம் வகுப்பு படித்தபோது "மைக்ரோசாப்ட்' நிறுவனம் கணினியில் அறிமுகப்படுத்திய "பெயின்டிங்' மென்பொருளைப் பயன்படுத்தி நான் வரைந்த ஓவியங்களைப் பார்த்து பில்கேட்ஸ் பாராட்டுக் கடிதம் அனுப்பினார்.

"மைக்ரோ சாப்ட்' நிறுவனத்தின் பெங்களூர் கிளை அலுவலகத்தின் மூலம் விலை உயர்ந்த மடிக் கணினியை எனக்கு பில் கேட்ஸ் பரிசாக வழங்கியுள்ளார். இதன் மூலம் "சிறந்த இளைஞர்' என்ற பட்டத்துடன், ரூபாய் ஒரு லட்சம் ரொக்கப் பரிசை முதல்வர் கருணாநிதியிடம் இருந்து பெற்றேன்.

இதேபோல, விக்டோரியா மகாராணியின் பிறந்த நாளையொட்டி ஆஸ்திரேலிய அரசு உலகில் திறமை வாய்ந்த 80 பேரைத் தேர்வு செய்து விருது வழங்கி கெüரவித்தது. அந்த விருதைப் பெற்றவர்களில் நானும் ஒருவன்'' என்றார் பெருமிதத்துடன்

vasudevan31355
25th September 2014, 07:41 PM
http://www.thehindu.com/multimedia/dynamic/00694/13july_tyanu01_supp_694259g.jpg

http://i.ytimg.com/vi/-wNS_KtnKew/hqdefault.jpghttp://i.ytimg.com/vi/FCbdQZndiPo/0.jpg

gkrishna
25th September 2014, 07:42 PM
இன்று இரவு நிச்சயம் கேட்கிறேன் வாசு சார்

gkrishna
25th September 2014, 07:47 PM
சாருகேசி- ராமநாதனை வென்றார் உண்டோ?

முன்பெல்லாம் கர்நாடக இசையில் ஒரு ராகத்தை அறிய வேண்டுமென்றால் அந்த ராகத்தின் முன்மாதிரியான பாடல் ஒன்றைப் பயிலவேண்டும்.அது பெரும்பாலும் மிகப் பெரிய சங்கீத மேதையின் கீர்த்தனையாக இருக்கும். உதாரணத்திற்குக் கானடா என்றால் 'அலைபாயுதே',ஸ்ரீ ராகம் என்றால் 'எந்தரோ மஹானுபாவுலு' இது போல். திரைப்பாடல்களும் இந்த கீர்த்தனைகளின் மெட்டிலேயே இருக்கும். உதாரணம் 'நாததனுமனிசம்' என்ற தியாகய்யைர் கீர்த்தனை 'காதல் கனி ரசமே' என்று பி.யு.சின்னப்பாவால் பாடப்படும்.ஆனால் முதல்முறையாக ஒரு திரைப்பாடல் ஒரு ராகத்தின் முன்மாதிரியாக அமைந்தது வரலாறு படைத்த ஒரு படத்தில் அமைந்த பாடல். அந்தப் பாடலைக் கேட்டுவிட்டு சங்கீதப் பிதாமகர் செம்மங்குடி சீனிவாசய்யரே அந்த இசை அமைப்பாளரின் வீடு தேடி வந்து பாராட்டினார். கர்நாடக சங்கீத ராகங்களை எளிமையாகவும் அதே நேரம் அழகாகவும் மெட்டுக்களாக்கிய ஒரு புது பாணி உருவாகிப் பின் கே.வி மகாதேவன்,இளையராஜா என்று தொடர்ந்து வந்தது. அந்த இசையமைப்பாளர் --ஜி.ராமநாதன். பாடல்: மன்மத லீலையை வென்றார் உண்டோ? படம்: ஹரிதாஸ் (1944). ராகம் __சாருகேசி

vasudevan31355
25th September 2014, 07:48 PM
M K Thyagaraja Bhagavathar
Music: G Ramanathan
Lyrics: Papanasam Sivan
Film: Haridas (1944)
Cast: M K Thyagaraja Bhagavathar, TR Rajakumari

http://www.indian-heritage.org/flmmusic/lyrics/mkt/annaiyumthandhaiyum_mkt.gif


http://www.youtube.com/watch?v=VUqslME2x_E&feature=player_detailpage

gkrishna
25th September 2014, 07:50 PM
சாருகேசி ஜி.ராமாநாதனின் பிரியத்துக்குரிய ராகமாகவே இருந்து வந்தது.திருவிளையாடல் என்றால் சிவாஜிதான் நினைவுக்கு வருவார், ஆனால் எம். ஜி. ஆரின் ஒரு பாடலும் திருவிளையாடல்களைப் பற்றி அமைந்து புகழ்பெற்றது. 'மதுரை வீரன்' படத்தில் அமைந்த 'ஆடல் காணீரோ' என்ற பாடல் சாருகேசியில் நாட்டியப் பேரொளியின் நடனத்துடன் அமைந்திருக்கும். பாடலின் தொடக்கத்தைக் கேட்டாலே ஜி.ராமநாதனின் மேதமை நமக்குப் புரியும்.


http://www.youtube.com/watch?v=YXGTFanbED8

gkrishna
25th September 2014, 07:53 PM
M.K.T. song - deena karunakarane

இந்த பாடலின் ராகம் யமுனா கல்யாணி என்கிறார்கள் வித்வான்கள். இன்றைக்கும் ஒரு சினிமா பாடலாக இல்லாமல் பக்தி ரசம் குறையாத, மக்கள் மனதில் முணுமுணுக்க வைக்கும் ஒரு பாடல். ஒரு முறை கேட்டுவிட்டால் நீண்ட நாள் மனதை விட்டு அகலாத பாடல்.
மிகப் பெரிய வெற்றிக் கண்ட படமாம். MKTயின் நடிப்பும் பாடல்களும் இந்த படத்தில் அவ்வளவு பிரசித்தம் என்பார்கள். நாதஸ்வர வித்வான் ராஜரத்தினம் பிள்ளை அவர்கள் இந்த படத்தில் ஓரிரு காட்சியில் தோன்றுகிறார்.
63 நாயனார்களில் ஒருவரான திருநீலகண்ட நாயனார் அவர்களின் வாழ்க்கையை பற்றிய படம்.

திரைப் படம்: திருநீலகண்டர் (1939)
இசை: papanasam sivan
lyrics : papanasam sivan
நடிப்பு: M K தியாகராஜ பாகவதர், திருநெல்வேலி பாப்பா லக்ஷ்மி காந்தம், NSK, T A மதுரம், T S துரைராஜ்.
இயக்கம்: ராஜா சாண்டோ ஜம்புலிங்கம் (சரியா)


http://www.youtube.com/watch?v=6wTGjx4lIQY

தீன கருணாகரனே நடராஜா நீலகண்டனே
தீன கருணாகரனே நடராஜா நீலகண்டனே

நின்னருள் புகழ்ந்து பணியும் என்னையும் இரங்கி அருளும்
நின்னருள் புகழ்ந்து பணியும் என்னையும் இரங்கி அருளும்
மௌன குருவே கரனே எனையாண்ட நீலகண்டனே
மௌன குருவே கரனே எனையாண்ட நீலகண்டனே
தீன கருணாகரனே நடராஜா நீலகண்டனே


மீனலோசனீ மணாளா தாண்டவமாடும் சபாபதே
மீனலோசனீ மணாளா தாண்டவமாடும் சபாபதே
ஞானிகள் மனம் விரும்பும் நீலகண்டனே
ஞானிகள் மனம் விரும்பும் நீலகண்டனே
மௌன குருவே மௌன குருவே மௌன குருவே மௌன குருவே
கரனே எனை ஆண்ட நீலகண்டனே
தீன கருணாகரனே நடராஜா நீலகண்டனே

ஆதி அந்தமில்லா கரனே
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ யே யே யே யே
ஆதி அந்தமில்லா கரனே
அன்பருள்ளம் வாழும் பரனே
ஆதி அந்தமில்லா கரனே
அன்பருள்ளம் வாழும் பரனே
பாதி மதி வேணியனே பரமேசா நீலகண்டனே
பாதி மதி வேணியனே பரமேசா நீலகண்டனே
தீன கருணாகரனே நடராஜா நீலகண்டனே

vasudevan31355
25th September 2014, 07:57 PM
கிருஷ்ணா சார்

'ஆடல் காணீரோ' ஒரிஜினல் வீடியோவை கண்டு இன்புறலாம். அற்புதமான பாடல். பத்மினியைத் தவிர வேறு யாரையும் கற்பனை செய்வது கடினம்.


https://www.youtube.com/watch?v=qxqsFvf8IBg&feature=player_detailpage

gkrishna
25th September 2014, 07:57 PM
ஏச்சுப் பிழைக்கும் தொழிலே சரிதான எண்ணிப் பாருங்க என்ற பாடல் (படம் : மதுரை வீரன் - எம் ஜி ஆர் ) இதே மேட்டில் வரும். இசை அமைத்தவர் g ராமநாதன் - தீன கருணாகரனே நடராஜா நீலகண்டனே மெட்டில்

rajraj
25th September 2014, 07:58 PM
I was in elementary school. I had a habit of singing. II was singing a few lines from 'manmadhan leelaiyai...'. Our next door neighbour who was a singer asked me whether I knew the meaning of the song. I shook my head indicating 'no'. Then he said " idhu veNdaam. vere paattu solli thaaren". He taught me 'Deena Karunakarane Nataraja', which I still sing. :lol:

Contrast this to what six or seven year olds sing in 'Junior Singer' competition! :)

kaalam maari pochchu! :lol:

gkrishna
25th September 2014, 08:01 PM
welcome rajraj sir -

your period songs and related news were posted today. hope you will enjoy

regrds

gkrishna

gkrishna
25th September 2014, 08:02 PM
vaasu sir

நன்றி - ஆடல் காணீரோ - ஒரிஜினல் விடியோ பதிவிட்டதற்கு

gkrishna
25th September 2014, 08:04 PM
one more song in charukesi raaga

பின்னர் 'சாரங்கதாரா;என்ற படத்தில் அமைந்த 'வசந்த முல்லை போலே வந்து" என்ற பாடலும் சாருகேசியின் அழகைக் காட்டிகிறது. முழுத்தொண்டையில் கம்பீரமாகப் பாடும் டி.எம்.எஸ்ஸுக்குப் பல வாய்ப்புகள் அளித்துப் பிரபலப் படுத்தியவர் ராமநாதன்.இந்தப் பாடலைச் சமீபத்தில் ரீமிக்ஸ் என்ற பேரில் சின்னாபின்னமாக்கியுள்ளனர் .

நடிகர்திலகத்தின் இரட்டை புறா நிழல் படம் மிகவும் பிரபலம் அந்த காலத்தில்

https://encrypted-tbn2.gstatic.com/images?q=tbn:ANd9GcRzC0ds31dSEYQbOvBGH88e4kbq2yyH5 GN55ueqF-04wTNJJwPDqA

http://www.youtube.com/watch?v=l589Wg_Ct0w

vasudevan31355
25th September 2014, 08:05 PM
கிருஷ்ணா சார்,

இன்று அற்புதமான பல பதிவுகளைத் தேடித் தேடி அளித்துள்ளீர்கள். நிறைய தகவல்கள். ஒவ்வொன்றாகப் படிக்க வேண்டும். மனம் நிறைந்த பாராட்டுக்கள்.

vasudevan31355
25th September 2014, 08:08 PM
http://blog-assets.spuul.com/wp-content/uploads/2014/01/Sarangadhara.jpg

http://i.ytimg.com/vi/fdmFZho8HUw/maxresdefault.jpg

http://i.ytimg.com/vi/_fIUqvQ8TV8/maxresdefault.jpg

gkrishna
25th September 2014, 08:08 PM
சாருகேசி

நாட்டியம் போன்ற பாடல்களுக்கே பெரும்பாலும் சாருகேசி பயன்படுத்தப்பட்டு வந்தது.இந்த பாணியை மாற்றினார் திரை இசைத்திலகம் கே.வி.மகாதேவன். திருவிளையாடல் முதல் சங்கராபரணம் வரைச் சாதனைகள் பல புரிந்துள்ள அவர் ஒரு மெல்லிய சோகம் கலந்த ஒரு அற்புத இரவுப் பாடலாக அமைத்திருக்கிறார் .டி.எம்.எஸ்ஸும் சுசீலாவும் இணைந்து ஆரவாரமில்லாமல் பாடியுருப்பார்கள். படம் குங்குமம். சில இடங்களில் வயலினிலிருந்து வரும் சாருகேசி நம் வயிற்றையும் என்னவோ செய்யும்.

http://www.youtube.com/watch?v=j7-cDxpGSic

vasudevan31355
25th September 2014, 08:09 PM
http://s1.dmcdn.net/XkPz.jpg

vasudevan31355
25th September 2014, 08:10 PM
http://i.ytimg.com/vi/hzYOqTery-8/maxresdefault.jpg

gkrishna
25th September 2014, 08:10 PM
பின்னர் வெகு காலம் சாருகேசி பயன்படுத்தப் படாமல் இருந்தது. இளையராஜா வந்தபின் மீண்டும் ஒரு சுற்று வரத் தொடங்கியது. பெரும்பாலும் சோகமான சூழலுக்குப் பொருந்துமாறு ராஜா இசை அமைத்திருப்பார். 'அன்னை ஓர் ஆலயம்' படத்தில் டி.எம்.எஸ் பாடிய 'அம்மா ! நீ சுமந்த பிள்ளை" என்ற பாடல் சாருகேசியில் அமைந்தது. வெகுகாலம் இதைச் சிவாஜி கணேசன் படப் பாடல் என்று நிறைய பேர் சொல்ல கேள்வி பட்டது உண்டு
'தூங்காத கண்ணென்று பாடல்' பாணியில் அமைந்த பாடல்

http://www.youtube.com/watch?v=zL3t_lID7Og

vasudevan31355
25th September 2014, 08:10 PM
http://img.youtube.com/vi/St3DuvcF-AM/0.jpg

rajraj
25th September 2014, 08:11 PM
welcome rajraj sir -

your period songs and related news were posted today. hope you will enjoy

regrds

gkrishna

Thanks. I like songs by S.G.Kittappa, P.U.Chinnappa, MKT , T.R. Mahalingam,MMD and NSK from that period. :)

gkrishna
25th September 2014, 08:27 PM
நெருக்கடியான சூழலையும் ரசிக்க வைத்து ஒரு அனுபவமாக்குவதே படைப்பு. சாருகேசி துயரத்தையும் கவிதையாக வெளிப்படுத்தும் ராகம். 'முந்தானை முடிச்சு' படத்தில் வரும் 'சின்னஞ்ச்சிறு கிளியே' பாடல் அந்தவகையைச் சேர்ந்தது. பின் தம்பிக்கு எந்த ஊரு படத்தில் மிகவும் மெல்லிசை பாணியில் 'காதலின் தீபம் ஒன்று' என்ற பாடலை அளித்திருப்பார். எஸ்.பி.பியின் குழைவுடன் சாருகேசிக்கே உரிய பிரிவின் ஏக்கத்தை உணர்த்தும் பாவம் மிக அழகாக வெளிவந்திருக்கும்.

venkkiram
25th September 2014, 08:45 PM
நெருக்கடியான சூழலையும் ரசிக்க வைத்து ஒரு அனுபவமாக்குவதே படைப்பு. சாருகேசி துயரத்தையும் கவிதையாக வெளிப்படுத்தும் ராகம். 'முந்தானை முடிச்சு' படத்தில் வரும் 'சின்னஞ்ச்சிறு கிளியே' பாடல் அந்தவகையைச் சேர்ந்தது. பின் தம்பிக்கு எந்த ஊரு படத்தில் மிகவும் மெல்லிசை பாணியில் 'காதலின் தீபம் ஒன்று' என்ற பாடலை அளித்திருப்பார். எஸ்.பி.பியின் குழைவுடன் சாருகேசிக்கே உரிய பிரிவின் ஏக்கத்தை உணர்த்தும் பாவம் மிக அழகாக வெளிவந்திருக்கும்.

ராகதேவனின் சாருகேசி ஆளுமை:

தூது சொல்வதாரடி - சிங்காரவேலன்
மணமாலையும் மஞ்சளும் சூடி – வாத்தியார் வீட்டுப் பிள்ளை
அரும்பாகி மொட்டாகி – எங்க ஊரு காவல்காரன்
நல்லதோர் வீணை செய்தே – மறுபடியும்
ஆடல் கலையே தேவன் தந்தது – ராகவேந்திரா
சிறிய பறவை சிறகை – அந்த ஒரு நிமிடம்
மயங்கினேன் சொல்ல தயங்கினேன் – நானே ராஜா நானே மந்திரி
உயிரே உயிரின் ஒளியே – என் பொம்முக்குகுட்டி அம்மாவுக்கு
உச்சி வகுந்தெடுத்து – ரோசாப்பூ ரவிக்கைக்காரி
பெத்த மனசு பித்ததிலும் – என்ன பெத்த ராசா
நாடு பார்த்ததுண்டா – காமராஜர்
சக்கரக் கட்டி சக்கரக் கட்டி - உள்ளே வெளியே

madhu
25th September 2014, 09:07 PM
எம்.எஸ்.வியின் சாருகேசிக்கு இசைக்குயில் சுசீலா குரலில் இன்றைய முதலமைச்சரின் நடனத்தைக் கண்டு களியுங்கள் ( ஈஸ்வரியின் குரலில் பாம்பாட்டி நடனம் போனஸ் )

http://youtu.be/e5iLbain8H8

madhu
25th September 2014, 09:08 PM
சிரி சிரி மாமா படத்தில் டி.எம்.சௌந்தரராஜன் பாடிய ஜாலியான சாருகேசி

நான் இசைக்கும் ராகமெல்லாம் அவன் தந்த யோகம்

http://youtu.be/D5nlBtiYK2E

chinnakkannan
25th September 2014, 09:34 PM
ஹப்பாடி..ஆஃபீஸ் விட்டு வந்து சமர்த்தா முகம் கைகால் அலம்பி ஒம்மாச்சி சேவிச்சுட்டு ஹோம் வொர்க் பண்ண வந்தா..எக்கச் சக்கமா இருக்கே

முதலில் வாசு சார் வழங்கியபிபிஎஸ் கல்யாண்குமார் கேட்டேன்

கைத்தொழில் ஒன்றைக் கற்றுக்கொள்
கவலை உனக்கிலை ஒத்துக் கொள்
எத்தொழில் எதுவும் தெரியாமல்
இருப்பது உனக்கே சரியாமோ
இதுவரை கேட்டிராத பாடல் என்று நினைக்கிறேன்.. நல்லாருந்துச்சு தாங்க்ஸ்..கடைசியா வர்ற ஆறு வைகை ஆறு மாதிரி தெரியுது தொலைவில் ஆல்பர்ட் விக்டர் மேம்பாலம்?
'அழகே
அமுதே
அறிவே
உயிரே
ஆசைக்கனவே
அன்பின் வடிவே' வாவ் எனக்கு மிகப் பிடித்த பாடல் எல்லாம் என்றும் நம் எண்ணம் போலே இந்த உலகினில் ஆகும் இனிமேலே..ம்ம் அழகான ஹம்மிங்க்.. பாடல் ஆரம்பித்ததும் தெரியவில்லை முடிந்ததும் தெரியவில்லை..ஒரே ஒரு ஈ மட்டும் திறந்திருந்த வாய்க்குள் சுற்றிவிட்டு வெளியே வந்து கீழே மயங்கி விழுந்தது!
*
வாலி முதல் பாட்டுக்கு தாங்க்ஸ் உலகம் ஒரு நாள் உனதம்மா..

*
பாபி படஸ்டில்கள், அதுபற்றி கருத்த்தாழமிக்க கட்டுரைகள் வழங்கிய புண்ணியாத்மாக்கள் வாசு சார் கிருஷ்ணா சாருக்கு நன்றி.. ஹம்தும் ஏக் கம்ரேமே பந்த் கோனுக்கு அண்ணனோ அக்காவிடமோ அர்த்தம்கேட்டு சும்மாபடத்தப் பாருடா எனத் திட்டு வாங்கியிருக்கிறேன்..புரியவேயில்லைம்ம் என்று கொஞ்சம் முகம் வாடிய என் கையில் பாப்கார்ன் வாங்கிக்கொள்ள காசு வைக்கப் பட்டதாய் நினைவு.. (மதுரை மீனாட்சி தியேட்டர் என நினைவு..) ஆனால் ஹிந்திப் பட பிரம்மாண்டம் கொஞ்சம் நன்றாகவேப் பார்க்க வைத்தது.. அப்பறம் வேலைக்குச் சென்ற பிறகுதான் பார்த்துப் புரிந்தது..

*
ஷல்மிளாதால்கூர் கலுப்பு வெள்ளை மல்ற்றும் கலர்ல்படங்கள் கொஞ்சம் இருங்க முழுங்கிக்கறேன்..ஷர்மிளாதாகூர் கறுப்பு வெள்ளை மற்றும் வண்ணப் படங்களுக்கு அகெய்ன் தாங்க்ஸ்..

*
”பொங்குதே புன்னகை
புள்ளி இட்ட கலைமானை
அள்ளி இட்ட விழியோரம்
பொன் மின்னல் வெள்ளம் பொங்குதே”

இன்றைய ஸ்பெஷல் எனக்குத் தெரிந்த பாட்டு.. ரசித்துக் கேட்டிருக்கிறேன்..இப்பதான் பார்க்கிறேன்.. புள்ளி இட்ட க்லைமானை எனும்போது யானைக்கூட்டம் செல்கிறது! எடிட்டிங்க் மகா சொதப்பல்.. கோராகாகஸ் கா எ மன் மேரா லிக்லியா நாம் உஸ்கோ தேரா பாட்டு போல் எடுக்கவேண்டும் என்று ஆசைமட்டும்பட்டிருக்கிறார்கள்.. நல்ல வேளை பாட்டு மட்டும் நன்றாக இருக்கிறது.. (ஓகே..லொகேஷன் தேக்கடி தான்..கொஞ்சம் கொடைக்கானலும் மிக்ஸ் ஆவது போல் இருக்கிறது.. கறுப்பு வெள்ளை மஞ்சுகள் முகட்டினில் மோதுவது அழகுதான்..) நன்றி வாசு சார்.
*
//நடராஜ முதலியார் பற்றிய பேட்டி இயக்குனர் ஸ்ரீதர் நடத்திய சித்ராலயா என்ற இதழில் 1970ம் ஆண்டு வெளியானது// கேள்விப் படாத தகவல் தாங்க்ஸ் கிருஷ்ணா ஜி..

*
உடுமலை நாராயண கவி தானே குரங்கிலிருந்து பிறந்தவன் மனிதன், தாந்திதிமிக்கி தந்தக் கோனாரே எழுதியது இல்லை தஞ்சை ராமையா தாஸா..

*
விக்ரம் நு சொன்னா ஆக்டர் பத்தி இல்லை கிருஷ்ணா ஜி. விக்ரம் படம்….அதில் கமல் கூட இன்னொரு ஜோடியான சலாமியா இளவரசி டிம்ப்பிள் கபாடியா..வேண்டும் வேண்ட்டும் வா..மீண்டும் மீண்டும் வா எனக் கண்களில் மோகக் கனல் நீட்டி ஒரு காதற்கவிதை பாடிய சற்றே வயதாகியிருந்த பசுங்கிளி.. தேக்குமரத்தில் வார்த்து வைத்த தேஹம் இது தானோ – ம்ம் கொ வை க

*
க்ரேஸியாக்கிய ராஜஸ்ரீ நடித்த மலையாளப்படஸ்டில் அண்ட் பாட்டு..(முழுக்கக் கேக்கலை) நன்று..

*
செண்டு மல்லி மாலையோ
சிங்கார சோலையோ
தேனுண்ட தாழையோ
மணிகள் கொண்ட பார்வையோ நல்ல பாட்டு.. தாங்க்ஸ்.. யாராக்கும் அந்த வைர மூக்குத்திக் கன்னி?! (மூக்குத்தியில்லை..புல்லாக்கு) ஹிந்திப்பாடல் சாந்தினிக்கா சாந்த்ஹோ பலதடவை கேட்டிருக்கிறேன்..இப்பதான் பார்க்கறேன்..

*
அன்னையும் தந்தையும் தானே. தீன கருணாகரனே நடராஜா, மன்மதலீலையை வென்றார் உண்டோ..ம்ம் அப்பனைப் பாடும் வாயால் பழனி ஆண்டி சுப்பனை ப்பாடுவேனோ..என் ஸ்வாமியைப்பாடும வாயால்…, கிருஷ்ணா முகுந்தா முராரே (எம்கேடி தானே) நல்ல பாடல்கள் நினைவூட்டல்கள் அண்ட் பதிவுகள்க்கு ஒரு நன்றி..

*
ஆடல் காணீரோ எவ்வளவு தடவை கேட்டிருப்பேன் எனக்கு மி பிடித்த பாட்டு..பித்தனைப் போலே கைப்பிரம்பாலே பட்ட அடி, நரிதனைப்பரியாக்கி பரிதனை நரியாக்கி…ம்ம் வைரவளை முத்து வளை ரத்னவளை விற்ற விளையாடல் காணீரோ..அழகிய பாடல் ஒல்லி பத்மினி..ஐ திங்க் இப்போ தான் பார்க்கிறேன் என நினைக்கிறேன்..

*.
வசந்த முல்லை , தூங்காத கண்ணின்று ஒன்று (சாருகேசிஎன இப்ப தான் தெரியும்..)என ப் பார்க்கையில் வெங்க்கிராமின் இடுகை..இவ்வளவும் சாருகேசியா..தாங்க்ஸ் வெங்கிராம், கிருஷ்ணாஜி.. பார்த்தால் மதுண்ணா – வரச்சொல்லடி சாருகேசி ம்ம் நன்றி டு ஆல்
*
ஹப்பாடா ஒருவழியா ஹோம்வொர்க் முடிச்சாச்சு :)

madhu
25th September 2014, 10:21 PM
ஜாதகம் பார்த்து காதலிப்பது என்ன வகையோ ? கமல், ஜெயசித்ரா ஜோடிக்கு ராசிப் பொருத்தம் சரிதானா ?
குமாரவிஜயம் படத்தில் ஜேசுதாஸ், சுசீலா குரல்களில்... கன்னி ராசிப் பெண்ணும் காளை ராசிப் பையனும்

http://youtu.be/bnQk_PMEdiQ

rajraj
26th September 2014, 03:54 AM
I read a couple of articles about MS in The Hindu about her 98th birthday. Here is a song from Meera:

enadhu uLLame....

http://www.youtube.com/watch?v=P8eGwrkziak

================================================== ========================

Tidbit:

I also read about India's Mars Orbiter launch. It comes a litle late after the US, the USSR and Europe. Still, it is an achievement to be proud of. That brought back memories of my teaching days. I taught courses that came under ECE and CS. In one of the courses my introductory lecture went like this:

What made computers possible? I listen to the answers and tell them ---"positional number system".
That is something unheard of even though they have been using it. Then I ask:
Who invented the positional number system? I wait and tell them---"Indians". That comes as a surprise.
Then I ask them: Imagine designing a computer with Roman numerals? Impossible! :lol:
There is some claim that Babylonians invented it. But, their base was different, not 10.

That is something to be proud of.

I usually give some history of technology and end the introductory lecture with this statement:

You never had it so easy. :lol:

There is still a little bit of vathiyar in me. If you don't like this tidbit, let me know. I won't do it again! :)

vasudevan31355
26th September 2014, 07:42 AM
சின்னக் கண்ணன் சார்,

தங்கள் ஹோம் ஒர்க் கூட செம இன்ட்ரெஸ்ட். அனைத்துப் பதிவுகளையும் ஒன்று விடாமல் படித்து ரசித்ததற்கு நன்றி!

//கருத்த்தாழமிக்க கட்டுரைகள் வழங்கிய புண்ணியாத்மாக்கள் வாசு சார் கிருஷ்ணா சாருக்கு நன்றி//

வேண்டாம்ணா....ஹி... ஹி. ரொம்பக் கூச்சமா இருக்குண்ணா.:) இது எங்க கடமை இல்லையோ? இந்த புனித சேவையே உங்களுக்கு மட்டுங்க்ணா.:)

நாலு பேர் சந்தோஷப்பட்டா நமக்குப் புண்ணியம்தானே. அது என்ன கருத்துக்கு ரெண்டு 'த்'. ரொம்ப ஸ்ட்ராங்கா பதிவு செஞ்ச மாதிரி தெரியுது.
(நைட்டு பாபி கனவில் வந்தாளா:) .... ஹோம் வொர்க் பண்ணிட்டு அசதியா படுத்துட்டேளா:)?

rajeshkrv
26th September 2014, 08:43 AM
வணக்கம் வாசு ஜி

vasudevan31355
26th September 2014, 08:57 AM
வணக்கம் ராஜேஷ்ஜி. நலம்தானே!

vasudevan31355
26th September 2014, 09:00 AM
ராஜேஷ்ஜி.

நேற்றுகூட தாங்கள் முன்னம் அளித்த 'பாட்டுப் பாட வாயெடுத்தேன்' சுசீலாம்மாவின் பாடலை நேற்று கூட மறுபடி மறுபடி கேட்டு ரசித்தேன். மீண்டும் அந்தப் பாடலுக்காக தங்களுக்கு 'ஜே' ஜி.

vasudevan31355
26th September 2014, 09:00 AM
ராஜேஷ்ஜி.

அருமையான ராட்சசி பாடல் ஒன்று அரிதான பாடலாக வழங்குங்கள்.

chinnakkannan
26th September 2014, 09:07 AM
ஹாய் குட்மார்னிங்க் ஆல்

ராஜ் ராஜ் சார். ப்ளீஸ் தயவு செய்து கண்டின்யூ தொடருங்கள்.. சுவையாக இருக்கிறது உங்கள் அனுபவங்கள்…அந்தக் காலத்துல கோ..எட்..ல படிச்சீங்க்ளா..எப்படி இருந்தது.. நீங்கள் ஆண்டவன் கட்டளை ஆரம்பத்தில் வரும் சிவாஜி மாதிரி சீரியஸ் ப்ரொஃபசர் இல்லை என நினைக்கிறேன்..

வாசு சார்.. தாங்க்ஸ்.:).அந்த த் டைப்போ..திடீர்னு கொடுக்க க் கொடுக்க இன்பம்பிறக்குமேனு பாட்டு மனசுல ஒலிக்குது..

மதுண்ணா.வ்.. ரேடியோவில் மட்டும் கேட்ட பாடல் இது.. இப்போ தான் பார்க்கிறேன்..கன்னி ராசி என் ராசி.. நல்ல பாட்டு. நன்றி..

இந்த கோ.எட் கல்லூரி ப் பாடல்கள் அ.கா.படங்களில் என்னவெல்லாம் வந்திருக்கின்றன..கோரஸ்

ஆஹா காதல் என்பது எதுவரை கல்யாண காலம் வரும் வரை – பாத காணிக்கை

காதலெனும் ஆற்றினிலே கன்னியராம் ஓடத்திலே
காலமெல்லாம் பயணம் போகும் உலகம் அன்றோ – கை ராசி

கல்லூரி ராணிகாள் உல்லாசத் தேனிகாள் – பாக்ய லஷ்மி

மைலேடி கட்பாடி நீயே எந்தன் ஜோடி – மீட் மி டு நைட் இன் த மூன்லைட்.. –கோபால் வீடு

ம்ம் இன்னிக்கு லீவ் என்பதால் எழுதிப் பார்க்க வேண்டும் என நினைத்திருக்கிறேன்.. அப்புறம் வரட்டா..

gkrishna
26th September 2014, 09:13 AM
good morning sirs

நேற்று சாருகேசி ராகத்தின் பல பாடல்களை பார்த்தோம். திரு வென்கிராம் அவர்களும் ,திரு மது அவர்களும் மேலும் பல பாடல்களை பதிவு செய்து உள்ளார்கள். மிக்க மகிழ்ச்சி.

திரு வாசு சார் சி கே சார் அவர்களுக்கு சொன்னது போல் எல்லோரும் படித்து இன்புறவே பதிவு செய்யபடுகிறது

'சாருகேசி' என்றால் அழகிய கூந்தலை உடையவர் என்று பொருள். அழகிய கூந்தலைப் போல இனிமையை அலையலையாகத் தரவல்ல ராகம் இது.

எதிர்பாராமல் ஒரு ராகத்தைச் சிறப்பாகத் திரையில் அவ்வப்போது வழங்குபவர் தேவா. தன் திறமையை அவரே அறியவில்லை என்று தான் சொல்லவேண்டும். சாருகேசியில் இனிமையான இரண்டு பாடல்களைத் தந்திருக்கிறார். 'அவ்வை சண்முகி'யில் (1996 deepavali release) வரும் 'காதலா காதலா' என்ற பாடல் மிகவும் உச்சஸ்தாயியில் சாருகேசியில் புக முடியாத இடங்களுக்கெல்லம் போயிருக்கும் . ஆனால் தேவா இசையமைத்த எல்லாப் பாடல்களிலும் மிகச் சிறந்ததாக பலர் சொல்வது ஒரு சாருகேசிப் பாடல் தான். 'நேருக்கு நேர் ' படத்தில் வரும் 'எங்கெங்கே எங்கெங்கே ' என்ற பாடல் மிகவும் நேர்த்தியாக இசையமைக்கப் பட்டிருக்கும்.

முன்னர் சென்னை விவித்பாரதியில் காலை எட்டு மணிக்கு கோபி, குமார் என இரண்டு நண்பர்கள் ராகங்களையும் ஆரோகண அவரோகணமும் சொல்லி அவற்றின் மீது அமைந்த இரண்டு திரைப்பாடல்களையும் பற்றி சொல்லி அது எவ்வாறு அமைக்கப்பட்டு உள்ளது என்று விவரிப்பார்கள் .இந்த நிகழ்ச்சிக்கு ரஞ்சனி ஸ்ரீ ரஞ்சனி என்று பெயரிட்டு இருந்தார்கள் இப்போது அந்த நிகழ்ச்சி நடைபெறுகிறதா என்று தெரியவில்லை .


http://www.youtube.com/watch?v=kQpL4vUdn-E

gkrishna
26th September 2014, 09:16 AM
வைர முத்து வைர வரிகளில் நேருக்கு நேர் பாடல்
சூர்யா சிம்ரன் ஆரம்ப கால பாடல்
ஓடி கொண்டே இருப்பார்கள்

எங்கெங்கே எங்கெங்கே எங்கே
இன்பம் உள்ளதென்று தேடிக் கொல்லாதே
ஓ தள்ளிப்போ தள்ளிப்போ இந்தப்
பஞ்சு நெஞ்சம் பத்திக்கொள்ளும் வராதே
நான் ஒரு குமிழி நீ ஒரு காற்று
தொடாதே நீ தொடாதே

நீ ஒரு கிளிதான் நான் உந்தன் கிளைதான்
செல்லாதே தள்ளிச் செல்லாதே
என்னம்மா என்னம்மா உந்தன்
நெஞ்சில் உள்ள வலி என்ன என்னம்மா


என் தூக்கத்தில் என் உதடுகள்
உன் பேர் சொல்லிப் புலம்பும் புலம்பும் ஊரே எழும்பும்
என் கால்களில் பொன் கொலுசுகள்
உன் பேர் சொல்லி ஒலிக்கும் ஒலிக்கும் உயிரை எடுக்கும்
பூப்போல இருந்த மனம் இன்று
மூங்கில்போல் வெடிக்குதடி சகியே சகியே சகியே
இதயம் துடிக்கும் உடலின் வெளியே

எங்கெங்கே எங்கெங்கே எங்கே
இன்பம் உள்ளதென்று தேடிக் கொல்லாதே


என் வீதியில் உன் காலடி
என் ராவெல்லாம் ஒலிக்கும் ஒலிக்கும் இதயம் துடிக்கும்
உன் ஆடையின் பொன்னூலிலே
என் ஜீவனும் துடிக்கும் துடிக்கும் உயிரே வலிக்கும்
நான் உன்னை துரத்தியடிப்பதும்
நீ எந்தன் தூக்கம் பறிப்பதும் சரியா சரியா முறையா
காதல் பிறந்தால் இதுதான் கதியா

எங்கெங்கே எங்கெங்கே எங்கே
இன்பம் உள்ளதென்று தேடிக் கொல்லாதே
ஓ தள்ளிப்போ தள்ளிப்போ இந்தப்
பஞ்சு நெஞ்சம் பத்திக்கொள்ளும் வராதே
நான் ஒரு குமிழி நீ ஒரு காற்று
தொடாதே நீ தொடாதே

நீ ஒரு கிளிதான் நான் உந்தன் கிளைதான்
செல்லாதே தள்ளிச் செல்லாதே
என்னம்மா என்னம்மா உந்தன்
நெஞ்சில் உள்ள வலி என்ன என்னம்மா

chinnakkannan
26th September 2014, 09:20 AM
குட் மார்னிங்க்..கிருஷ்ணா ஜி.. ஏன் மீனா தான் பிடிக்குமாக்கும்..எனக்கு எங்கெங்கே சிமி பிடிக்குமாக்கும்..அந்தப் பாட்டில் கல்கத்தா தெருக்களில் எழிலோவியம் உயிர்பெற்றார்ப்போல சிமி ஓட ஓட- கெமிஸ்ட்ரி லாபில் நுழைந்த ஹிஸ்டரி ஸ்டூடண்ட் மாதிரி சூர்யா பேந்தப்பேந்த முழித்துக்கொண்டிருப்பார்..! அந்த அவள் வருவாளா..உடைந்து போன நெஞ்சை ஒட்ட வைக்க அவள் வருவாளா விற்கு முகத்தில் உணர்ச்சிகளே இருக்காது..ம்ம்

சாருகேசின்னு அடிக்கடி வர்றதுனால என் மனசுல இருக்கற மதுரைச் சம்பவம் சொல்லட்டா..அதாவது…சரி சரி..இன்னொருசந்தர்ப்பத்துல பார்த்துக்கலாம்..:
:)

rajeshkrv
26th September 2014, 09:23 AM
இதோ இரண்டு அருமையான ராட்சசி

பக்தி ரசம்

https://www.youtube.com/watch?v=zwZMIPqx7SM

இன்னொரு வகை - ஆம் கிளப் டான்ஸ் (வாசு ஜி உங்கள் ஜெய்குமாரி தான்)

https://www.youtube.com/watch?v=7QVhpLz4Gzg

rajraj
26th September 2014, 09:24 AM
ஹாய் குட்மார்னிங்க் ஆல்

ராஜ் ராஜ் சார். ப்ளீஸ் தயவு செய்து கண்டின்யூ தொடருங்கள்.. சுவையாக இருக்கிறது உங்கள் அனுபவங்கள்…அந்தக் காலத்துல கோ..எட்..ல படிச்சீங்க்ளா..எப்படி இருந்தது.. நீங்கள் ஆண்டவன் கட்டளை ஆரம்பத்தில் வரும் சிவாஜி மாதிரி சீரியஸ் ப்ரொஃபசர் இல்லை என நினைக்கிறேன்..


chinnakkaNNan: My first lecture has always been a motivational lecture to make sure that the students understand the importance of the course ! A few anecdotes and jokes help. Seriousness takes over from the second lecture! :lol:

I had co ed schools from 9th standard ! :)

rajeshkrv
26th September 2014, 09:27 AM
வாசு ஜி , மஹா சதி அனுசூயாவில் ராட்சசி கலக்கும் இன்னொரு பாடல்

https://www.youtube.com/watch?v=XiR15ANPI38

gkrishna
26th September 2014, 09:29 AM
குட் morning ராஜேஷ் சார்

காலையில் பக்திரசம் மற்றும் இளமை ரசம் சொட்டும் ஈஸ்வரியின் பாடல்கள் ஈஸ்வரி என்றவுடன் நினைவுக்கு வருவது
'தாயே கருமாரி நீயே மகமாயி ' நவராத்திரி நேரம் எல்லா அம்மன் கோயில்களிலும் கலக்கும் பாடல்

gkrishna
26th September 2014, 09:29 AM
http://www.youtube.com/watch?v=ViQHuAkaDUc

vasudevan31355
26th September 2014, 09:31 AM
ராஜேஷ்ஜி

மிக மிக அபூர்வமான ஒரு பாடல். ரேடியோ சிலோனில் மாலை 'பொங்கும் பூம்புனலில்' கேட்டு கேட்டு அப்படியே நெஞ்சில் ஊறிவிட்ட பாடல்.

'பெற்ற தாய்' படத்தில் ஒலிக்கும் இந்தப் பாடல் என்னை படாத பாடு படுத்தும். இசையரசியின் இளங்குரல் ஏ.எம்.ராஜாவுடன் இணைந்து.

'ஏதுக்கு?... அழைத்தாய் ஏதுக்கு
ஊதல் ஊதி ஜாடை காட்டி
ஊமை போல வாயை மூடி
ஏதும் அறியாதவர் போல
பாசாங்கு செய்தே நீ
ஏதுக்கு அழைத்தாய் ஏதுக்கு

ஏதுக்கா?... சொல்வேன் கேட்டுக்கோ'

அடடா! இந்தப் பாடலுக்கு வாழ்நாள் அடிமை ஆகி விடலாம்ஜி.

சுசீலா அம்மா

'எங்கே ஒரு விடுகதை சொல்றேன்... சொல்லேன் பாக்கலாம்' எனும் போது

டோட்டல் அவுட்.


http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=qIAdFlHhdMY

Richardsof
26th September 2014, 09:31 AM
பெண்களை கிண்டல் செய்து பல படங்களில் ஆண்கள் படும் அன்றைய பாடல்களில் சில

பட்டுப்பாவாடை எங்கே ..கட்டி வைத்த கூந்தல் ...

பொம்பளை சிரிச்சா போச்சு ...

நேற்று பூத்தாளே ரோஜா மொட்டு ....

என்னம்மா ராணி ...பொன்னான மேனி .....

காதல் மலர் கூட்டம் ஒன்று ..

அடி என்னடி ராக்கம்மா ... பல்லாக்கு ....

http://youtu.be/PZuauTLKPUs

vasudevan31355
26th September 2014, 09:34 AM
பலே பாஸ்கர். பலே ராஜேஷ்ஜி. ஜோராக் கேக்குறேன். கேட்டுட்டு அப்பூறமா சொல்றேன். ஹைய்யா... ஜாலி..ஜாலி

gkrishna
26th September 2014, 09:36 AM
சி கே சார்

நேற்று இரவு ஹோம் work மற்றும் இன்று காலை பதிவுகள்
தொடரவேண்டும்

gkrishna
26th September 2014, 09:38 AM
professor ராஜ்ராஜ் சார்

welcome ஹீரோ ஹாப்பி marriage
காஷ்மீரில் தேன் நிலவு
பள்ளி பாடம் சொல்லி தாரும்
பெண் அல்லவோ பால் நிலவு

rajeshkrv
26th September 2014, 09:39 AM
ராஜேஷ்ஜி

மிக மிக அபூர்வமான ஒரு பாடல். ரேடியோ சிலோனில் மாலை 'பொங்கும் பூம்புனலில்' கேட்டு கேட்டு அப்படியே நெஞ்சில் ஊறிவிட்ட பாடல்.

'பெற்ற தாய்' படத்தில் ஒலிக்கும் இந்தப் பாடல் என்னை படாத பாடு படுத்தும். இசையரசியின் இளங்குரல் ஏ.எம்.ராஜாவுடன் இணைந்து.

'ஏதுக்கு?... அழைத்தாய் ஏதுக்கு
ஊதல் ஊதி ஜடை காட்டி
ஊமை போல வாயை மூடி
ஏதும் அறியாதவர் போல
பாசாங்கு செய்தே நீ
ஏதுக்கு அழைத்தாய் ஏதுக்கு

ஏதுக்கா?... சொல்வேன் கேட்டுக்கோ'

அடடா! இந்தப் பாடலுக்கு வாழ்நாள் அடிமை ஆகி விடலாம்ஜி.

சுசீலா அம்மா

'எங்கே ஒரு விடுகதை சொல்றேன்... சொல்லேன் பாக்கலாம்' எனும் போது

டோட்டல் அவுட்.


http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=qIAdFlHhdMY

அடிமை பட்டியலில் நானும்தான்... ஏதுக்கு அழைத்தாய் என அவர் கேட்கும் போது தமிழை இனிமையாக்கத்தானம்மா அழைத்தோம் என சொல்வது எவ்வளவு பொருத்தமாக இருக்கும்...

gkrishna
26th September 2014, 09:40 AM
எஸ்வி சார்

குட் morning

நேற்று உங்களை பற்றி தமிழ் ஹிந்து உலகம் சுற்றும் வாலிபன் பதிவில் படித்தேன் .நமது திரியிலும் பதிவு செய்யப்பட்டு உள்ளது
வாழ்த்துகள்

ஹீரோ கதாநாயகியை கேலி செய்யும் பாடல்

'ராஜா கண்ணு போதாதடி '

'இரவில் வந்த குருவிகளா '

rajraj
26th September 2014, 09:49 AM
professor ராஜ்ராஜ் சார்

welcome ஹீரோ ஹாப்பி marriage
காஷ்மீரில் தேன் நிலவு
பள்ளி பாடம் சொல்லி தாரும்
பெண் அல்லவோ பால் நிலவு

I went to Kashmir in 1962 long before I got married (1969). Our wedding reception was in Woodlands,Madras. One of the guests asked me where we were going for honeymoon. I said ." New York". :) I was working in New York state at that time! :lol:

vasudevan31355
26th September 2014, 09:53 AM
அடிமை பட்டியலில் நானும்தான்... ஏதுக்கு அழைத்தாய் என அவர் கேட்கும் போது தமிழை இனிமையாக்கத்தானம்மா அழைத்தோம் என சொல்வது எவ்வளவு பொருத்தமாக இருக்கும்...


http://www.youtube.com/watch?v=EaKuWg3FZ4c&feature=player_detailpage

venkkiram
26th September 2014, 10:00 AM
எனக்குத் தெரிந்து.. நான் வளர்ந்த (குக்)கிராமப் பகுதியில் ஒரு படம் அதிகநாட்கள் ஓடியது என்றால் 'செண்பகமே செண்பகமே'. 42 நாட்கள் ஓடியது. அப்படியென்ன இந்தப் படத்தில் விசேஷம் என்றால் ராஜாவின் பாடல்கள், ராமராஜன்-ரேகா-விஸ்வம் நடிப்பில் சலிப்படையாமல் செல்லும் திரைக்கதை, நகைச்சுவை காட்சிகள். குறிப்பாக ராமராஜனின் அப்பாவாக விஸ்வம் தனது இயல்பான நடிப்பினால் ஒரு முற்றிலும் எதிர்பாராத பாத்திரமாக வலம்வருவார். மூன்று கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருந்த அந்தக் கொட்டகைக்கு மாட்டு வண்டியில் குடும்பமாக இரவுக் காட்சிக்கு சென்றுவந்தோம்.

https://www.youtube.com/watch?v=4LzuaKB96cc

'மஞ்சப் போடி தேய்க்கையிலே' - சீம்லஸ் என்பார்களே! அதன் அருஞ்சொற்பொருளாக ராஜா கொடுத்திருக்கும் நூற்றுக்கணக்கான பாடல்களில் இதுவும் ஒன்று. கங்கை அமரன் வரிகளில் எதுகை மோனை ஓசைநயம் இப்பாடலுக்கு அணி சேர்க்கும். கொள்ளை கொள்ளும் ரேகாவின் அழகு. "தேனாறு உன்னுதடு வந்ததென்ன" (@3.06-3.10) என்ற அந்த வரிகளில் திரைமுழுதும் வியாபித்திருக்கும் ரேகாவின் முகத்திற்கு ஈடு எது? கடலோர கவிதையில் என்னுள் மொட்டுவிட்டு மலர ஆரம்பித்த அந்த ரசிப்பூ தொடர்ந்து நான்கைந்து வருடங்களுக்கு மணம் வீசிக் கொண்டெ இருந்தது.

மஞ்சப்பொடி தேய்க்கையில என் நெஞ்ச தொட்டு தேய்ச்ச புள்ள
தண்ணி தொட்ட பாகம் எல்லாம் இந்த கண்ணன் தொடும் காலம் எப்போ
கண்ணுக்கு நல்ல பதில் சொல்லு புள்ள

குத்தால சாரலுக்கு யோகமடி
குண்டுமல்லி பூவுக்கொரு நேரமடி
விட்டாக்கா ஏறுதடி பாரமடி
தொட்டு தொட்டு சேர்ந்த பின்பு தீருமடி
ஒன்னோட கையாக நானும் மாறி
பொன்னோட பூவோட கூடி
கண்ணாடி பாராத காயம் தேடி
கண்ணே நான் தெம்மாங்கு பாடி
ஒன்னாச்சேர வந்தா போதும்
ஏறும் மோகம் தானா தீரும்

மொட்டான மொட்டு ஒன்னு பூத்ததென்ன
பூவுக்குள்ள தேனு வந்து சேர்ந்ததென்ன
தேனாறு உன் உதடு வந்ததென்ன
தேன் எடுத்து நான் அருந்த நேரம் என்ன
ஒன்னோட பூமேனி ஓடும் தேரு
எப்போது ஊர்கோலம் கூறு
பன்னீரு பூவாக தூவும்போது
பஞ்சாங்கம் நாளென்ன கூறு
கையும் கையும் கூடும் நேரம்
காதல் ராகம் காத்தும் பாடும்

நடைக்கு ஓய்வே கிடையாது. தபேலா ஆரம்பிக்கும் போதே அது எங்கிருந்து ஆரம்பித்தது இப்படி பாய்ந்து வருகிறது என்ற கேள்வி எழும். மெலடி நாயகனுக்கு. தபேலா கல்யாணம் செய்தும் அப்பாவினால் கட்டுப்படுத்தப் பட்டிருக்கும் அவனது காதல் பசி.. மறைபொருளாக காமம் இந்த இரண்டையும் இணைக்கும் ஒரு பாஸ் கிடாராக. முதல் இடையிசையில் வயலின் கற்றைகளால் அலங்கரிப்பு அருமை. குடையில்லாமல் திடிரென பெய்யும் மழையில் மாட்டிக்கொண்டு நனைந்துவிடுவோமே..அதுபோன்ற ஒரு பாடல் இது.. மழை வந்ததும் தெரியாது, நின்றதும் தெரியாது..அதுபோல பாடல் ஆரம்பித்ததும் தெரியாது, முடிந்ததும் தெரியாது. மழை உடலை நனைத்துவிடுவதுபோல, நான்கு நிமிடத்தில் நமது மனம் இப்பாடலில் கரைந்துவிடுகிறது.

vasudevan31355
26th September 2014, 10:02 AM
வணக்கம் கிருஷ்ணா சார். உங்களுக்கு ஒரு பாடல் இதோ வரப் போகிறது. ரெடி.

vasudevan31355
26th September 2014, 10:07 AM
நடிகர் திலகம் டீஸிங் பாடல் 1

ஹீரோ கதாநாயகியை கேலி செய்யும் பாடல்

இதோ அகிலம் புகழும் நடிகர் திலகம் அழகின் உச்சமாக படு ஸ்லிம்மாக அழகு சுந்தரி பத்மப்ரியாவை துரத்தி கலாய்க்கும் அற்புத பாடல்.

'வைர நெஞ்சம்' படத்தில்.

'ஹே ஹே மை ஸ்வீட்டி

என் பிரியத்துக்குரியவளே
இளம் பெண்களில் புதியவளே
நல்ல பருவத்தில் இளையவளே
என் பழக்கத்திற்கினியவளே'


http://www.youtube.com/watch?v=eMoGq0RyxWg&feature=player_detailpage

vasudevan31355
26th September 2014, 10:26 AM
நடிகர் திலகம் டீஸிங் பாடல் 2

நடிகர் திலகத்தின் இன்னொரு கேலி கொஞ்சும் பாடல். அண்ணியாருடன். கார்த்திக் சார் இல்லாமல் போய் விட்டாரே.


http://www.youtube.com/watch?v=oSOv4hTHdo0&feature=player_detailpage

vasudevan31355
26th September 2014, 10:33 AM
நடிகர் திலகம் டீஸிங் பாடல் 3

'திருடன்' படத்தில் ஆன் வேடம் போட்ட கே.ஆர்.விஜயாவைப் புரிந்து கொண்டு தலைவர் பாடும் கேலிப் பாடல்

'பழனியப்பன் பழனியம்மாவான்
மாறிப் போனா மை டியர் ஆனான்
பாக்கும் போது ஆம்பிளையனான்
பழகும் போது பொம்பளையானான்'

செம ரகளை.

vasudevan31355
26th September 2014, 10:38 AM
நடிகர் திலகம் டீஸிங் பாடல் 4

'எங்க ஊர் ராஜா' திரைப்படத்தில் நடிகர் திலகம் ஜெயலலிதாவை போட்டுத் தாக்கும் பாடல். நீச்சல் குளத்தில் ஜெயா குளிக்க, அவர் உடைகளை எடுத்துக் கொண்டு கலாட்டா செய்யும் கண்ணனாக.

'என்னடிப் பாப்பா சௌக்கியமா
தண்ணியிலே உள்ள சுகம் என்ன சொல்லடியோ'

'நீ ஒரு பெண் பிள்ளை
நான் ஒரு ஆண் பிள்ளை

வென்றவர் யாரடியோ?'

என்னா ஒரு கெத்து! செம டீஸிங் சாங்.


http://www.youtube.com/watch?v=JuP8eusOzsA&feature=player_detailpage

rajeshkrv
26th September 2014, 10:44 AM
வாசு ஜி

வைர நெஞ்சம் மற்றும் திருடன் பாடல்கள் தூள்

chinnakkannan
26th September 2014, 10:49 AM
வெங்க்கிராம்..
மஞ்சப்பொடி தேய்க்கையில என் நெஞ்ச தொட்டு தேய்ச்ச புள்ள
தண்ணி தொட்ட பாகம் எல்லாம் இந்த கண்ணன் தொடும் காலம் எப்போ
பாடல் முழுக்க்க் கேட்டேன்..பார்த்தேன்..அருமை..அதை விட அதை நீங்கள் ர்சித்த விதம் வெகு அழகு. //அந்த ரசிப்பூ தொடர்ந்து நான்கைந்து வருடங்களுக்கு மணம் வீசிக் கொண்டெ இருந்தது..// ட்ரூ… அந்த ரேகாம்மா முகத்தில் ஒரு வித ரஸ்ட் இருந்தது..கொஞ்சம் வித்யாச அழகு..
//இந்த இரண்டையும் இணைக்கும் ஒரு பாஸ் கிடாராக. முதல் இடையிசையில் வயலின் கற்றைகளால் அலங்கரிப்பு அருமை. குடையில்லாமல் திடீரென பெய்யும் மழையில் மாட்டிக்கொண்டு நனைந்துவிடுவோமே..அதுபோன்ற ஒரு பாடல் இது.. மழை வந்ததும் தெரியாது, நின்றதும் தெரியாது.// ஹையாங்.க்.. வெகு அழகாய் எழுதியிருக்கிறீர்கள்..அருமை..இன்னும் இன்னும் எழுதுங்கள்.. நன்றி..

வாசு சார்..
அது சரி.. வெண்ணுடை பத்துவும் வெண்ணுடை ந.தியும் ஹே ஹேயா.. நல்ல பாட்டு..பாவம் பத்து.. ஷீகர் காரணமாக சிறுவயதிலேயே (மேபி 45க்குள்) போய்விட்டார் அல்லவா..
//ஏதுக்கு?... அழைத்தாய் ஏதுக்கு
ஊதல் ஊதி ஜடை காட்டி
ஊமை போல வாயை மூடி
ஏதும் அறியாதவர் போல
பாசாங்கு செய்தே நீ
ஏதுக்கு அழைத்தாய் ஏதுக்கு// நான் கேட்டிராத பாடல் கேட்டுப்பார்த்து ரசித்தேன் தாங்க்ஸ்.. ஏதுக்கு நன்கு இழைந்து பாடியிருக்கிறார் இசைய்ரசி..

ராஜேஷ் எல்.ஆர்.ஈஸ்வரியின் ஜெய்குமாரி டான்ஸ் கொஞ்சம்பார்த்தேன்..ஸோ..ஸோ தான்..பக்திரசம் இனிமேல் தான் கேக்கணும். தாங்க்ஸ் ( நார்மலா நான் ராத்திரி தான் பக்திமானாக இருப்பேன்..)
எஸ்.வி..சார்.. வாங்க வாங்க.. ராஜா கண்ணு போகாதடிக்கு ஒரு தாங்க்ஸ்..
ராஜ்ராஜ் சார்.. நீங்க இண்ட்ரஸ்டிங்க் ப்ரொபஸர்னு தெரியும்..ச்சும்மா க் கேட்டே.ன்..

எழுதிக்கிட்டே இருக்கற்ச்சே நடையா இது நடையால்லாம்போட்டா நான் என்ன ஆகிறது..வெள்ளிக்கண்ணு மீனா வீதி வழி போனா..ம்ம் அப்புறம் வர்றேன்..

vasudevan31355
26th September 2014, 10:50 AM
நடிகர் திலகம் டீஸிங் பாடல் 5

பணத்திமிர் பிடித்து திரியும் நாயகிக்கு ஏழை நாயகன் தங்கள் கிராமத்து மக்களுடன் சேர்ந்து கொடுக்கும் கேலிச் சூடு. சவால்களை சந்தித்து அவைகளை சமாளித்து சாதனைகளாய் மாற்றிக் காட்டிய மாணிக்கம். கருப்பங் கழிகளுடன் பாடி களிப்பு நடனம் புரிந்தபடியே

'ஆனைக்கொரு காலம் வந்தா
பூனைக்கொரு காலம் வரும்
தெரிஞ்சுக்கோ தெரிஞ்சுக்கோ தெரிஞ்சுக்கோ'


http://www.youtube.com/watch?v=pEMxVVYwc_o&feature=player_detailpage

Richardsof
26th September 2014, 10:52 AM
http://i57.tinypic.com/2nu0xgo.jpg

madhu
26th September 2014, 10:52 AM
'திருடன்' படத்தில் ஆன் வேடம் போட்ட கே.ஆர்.விஜயாவைப் புரிந்து கொண்டு தலைவர் பாடும் கேலிப் பாடல்

'பழனியப்பன் பழனியம்மாவான்
மாறிப் போனா மை டியர் ஆனான்
பாக்கும் போது ஆம்பிளையனான்
பழகும் போது பொம்பளையானான்'

செம ரகளை.

வாசுஜி..

எனக்கும் ரொம்பப் பிடிக்கும்

http://youtu.be/m9wlwwfNZgw?list=UUt7EFLq-vYQWV3ZKF_XSlag

chinnakkannan
26th September 2014, 10:54 AM
மதுரையில் வொர்க்ஷாப் ரோடுக்குக்கு இந்தப்பக்கம் தேவி தியேட்டர் தாண்டி மங்கையர்க்கரசி ஸ்கூலுக்கு வெகு முன்னால் ஒரு வீர காளியம்மன் கோவில் (குட்டிக் கோவில்) இருக்கிறது..அங்கு எந்த ஒரு விழாவிற்கும் போடப்பட்டும்பாடல் இந்த தாயே கருமாரி, அப்புறம் கற்பூர நாயகியே கனகவல்லி.. ம்ம் கறுப்பு நிலாவாட்டம் இருக்கும் பெரிய எல்.பி ரெகார்டரில் நிறைய ஒலிச்சித்திரமும் – பட வசனங்கள்போடுவார்கள்..சரஸ்வதி சபதம், திருவிளையாடல், தில்லானா மோகனாம்பாள் என..ம்ம்.. மதுரை நகரில் கண்ணன் வளர்ந்த அந்த நாளும் வந்திடாதோ… தாங்க்ஸ் கிருஷ்ணா சார்..ஃபார் த ஸாங்க்..

vasudevan31355
26th September 2014, 10:59 AM
நடிகர் திலகம் டீஸிங் பாடல் 6

காதல் மலர்க் கூட்டம் ஒன்று
வீதி வழி போகும் என்று
யாரோ சொன்னார் யாரோ சொன்னார்.

இளம் கன்னி மான்கள் கூட்டத்தில் ஆண் சிங்கக் குட்டி புகுந்து ஒவ்வொரு மானாக 'லபக்'.'லபக்'. ஒரே ஒரு புள்ளி மான் துள்ளியபடி வாலாட்ட அதையும் ஒட்ட நறுக்கும் ஆண்சிங்கம்.

'வக்கீலாத்து வசந்தா
உன் மனதை எந்தன் வசந் தா'

நடையழகு மன்னன் நடிகர் திலகத்தின் நளின நடை. கோபிகைகளின் கண்ணனாக இந்த அழகு மன்மதன் விஜய்.


http://www.youtube.com/watch?v=BMEJ_fdxTU8&feature=player_detailpage

vasudevan31355
26th September 2014, 11:07 AM
மதுஜி!

காலை வணக்கம். நன்றி!

உங்களைத்தான் எதிபார்த்தேன். சில நாட்களுக்கு முன் '4 வேலி நிலம்' படப் பாடல் ஒன்று கேட்டிருந்தீர்கள். எனக்கு ஞாபகம் இல்லை. இப்போது மீண்டும் தாங்கள் ஞாபகப்படுத்த இயலுமா? ப்ளீஸ்.

gkrishna
26th September 2014, 11:10 AM
நடிகர் திலகம் டீஸிங் பாடல் 6

காதல் மலர்க் கூட்டம் ஒன்று
வீதி வழி போகும் என்று
யாரோ சொன்னார் யாரோ சொன்னார்.

இளம் கன்னி மான்கள் கூட்டத்தில் ஆண் சிங்கக் குட்டி புகுந்து ஒவ்வொரு மானாக 'லபக்'.'லபக்'. ஒரே ஒரு புள்ளி மான் துள்ளியபடி வாலாட்ட அதையும் ஒட்ட நறுக்கும் ஆண்சிங்கம்.

வக்கீலாத்து வசந்தா
உன் மனதை எந்தன் வசந் தா

நடையழகு மன்னன் நடிகர் திலகத்தின் நளின நடை. கோபிகைகளின் கண்ணனாக இந்த அழகு மன்மதன் விஜய்.



வந்துட்டேன் இதோ வந்துட்டேன்

nt டீசிங் பாடல்கள் எல்லாம் சூப்பர் வாசு சார்

பாலாவின் 'கடைவீதி கலகலக்கும் எங்க அக்கா மக அவ நடந்து வந்தா '
பாடல் நடுவில் 'யாரோட அக்கா மக டா டேய் ' 'அண்ணனோட '
சூப்பர் வாய்ஸ் .இன்னும் அப்படியே இருக்கு

chinnakkannan
26th September 2014, 11:14 AM
அம்மான் மகன் எங்கே அவன் என்னோடு சேர்ந்தாட – எல்.ஆர் ஈஸ்வரி பத்மப்ரியா ஆடும் வைர நெஞ்சப் பாடல். இப்பத்தான் ஹே ஹே ஸ்வீட்டிக்கு அப்புறம்பார்த்து முடித்தேன்...படத்தில் பார்த்ததாக நினைவில்லையே…சரி சரி ராஜேஷ்க்கு டெடிகேட் பண்ணி விட்டுறலாம்..:)

vasudevan31355
26th September 2014, 11:16 AM
நடிகர் திலகம் டீஸிங் பாடல் 7

அடங்காத குதிரையை அடக்கி புருஷனாக வாடகைக்கு நடிக்க வந்து புருஷனாகவே மாறி,

'காதல் ராணி கட்டிக் கிடக்க
கட்டிலிருக்கு கட்டழகுச் சிலையே வா'

என்று முதல் இரவில் குறும்புப் பாடல் பாடி, ஸ்ரீபியாவை உண்டு இல்லை என்று ஆக்கும் நடிப்பின் 'குரு' சும்மா துறு துறு. 58 வயதில் 18 வயது வாலிபன் போல அவ்வளவு இளமை. சுறுசுறுப்பு.


http://www.youtube.com/watch?v=6mRHjFEjlaw&feature=player_detailpage

vasudevan31355
26th September 2014, 11:17 AM
அம்மான் மகன் எங்கே அவன் என்னோடு சேர்ந்தாட – எல்.ஆர் ஈஸ்வரி பத்மப்ரியா ஆடும் வைர நெஞ்சப் பாடல். இப்பத்தான் ஹே ஹே ஸ்வீட்டிக்கு அப்புறம்பார்த்து முடித்தேன்...படத்தில் பார்த்ததாக நினைவில்லையே…சரி சரி ராஜேஷ்க்கு டெடிகேட் பண்ணி விட்டுறலாம்..:)

உ.பா.இ.ப.நை:)

vasudevan31355
26th September 2014, 11:18 AM
இன்றைய ஸ்பெஷல் (79)

'இன்றைய ஸ்பெஷல்' பாடலை அருமை நண்பரும் திரியின் உறுப்பினரும், பழைய பாடல்களின் தீவிர ரசிகருமான திரு.கோபு அவர்களுக்கு டெடிகேட் செய்கிறேன். இது அவருக்கு மிகவும் பிடித்த பாடலாம்.

இன்றைய ஸ்பெஷலில் 'ஏழைப் பங்காளன்'. எம்.ஜி.ஆர் நடித்த படம் இல்லீங்கோ. நம்ம ஜெமினி நடித்தது. டைட்டில் எம்.ஜி.ஆர் பட டைட்டில் போலவே இருக்கும்.

http://cdn4.static.ovimg.com/m/0zbb1j5/?width=150

படம்: 'ராஜலஷ்மி பிச்சர்ஸ்' ஏழை பங்காளன்.

நடிகர்கள்: ஜெமினி, ராகினி, புஷ்பலதா, அசோகன், நம்பியார், நாகேஷ், மனோரமா.

கதை வசனம்: மா.லட்சமணன்

இசை: 'திரை இசைத் திலகம்' கே.வி.மகாதேவன்

பாடல்கள்: வாலி, கண்ணதாசன், பஞ்சு அருணாச்சலம்

இயக்கம்: கே.சங்கர்

'காதல் மன்னனை' நினைத்து ராகினி கனவு கண்டு உருகிப் பாடும் காதல் பாடல். வட இந்திய பாணியில் காஷ்மீரி போல ராகினி உடை அணிந்திருக்க, ஜெமினி காஷ்மீர் குல்லாவெல்லாம் போட்டுக் கொண்டு அவர் இஷ்டத்திற்கு ஆடுவார். பாடி லாங்வேஜிற்கும், இவருக்கும் கொஞ்சம் தூரம் அதிகம். கோபால் மிக அருமையாக எழுதுவார். இவருக்குக் கையை எப்படி வைத்துக் கொள்வது என்று தெரியாது. ஆவூன்னா இரண்டு கைகளையும் இடுப்பில் வைத்துக் கொள்வார். ஒரு மாதிரி ட்விஸ்ட் பண்ணியவாறு சுழன்று ஓடி வருவார். நமக்கு நம்மையும் மீறி சிரிப்பு வரும். காதல் மயக்க வசனங்களைப் பேசியே ஆளை மயக்கிய வசிய மன்னன். இவரிடம் இன்னொரு குறை. இவர் வசனம் பேசினால் பாதி மட்டுமே நம் காதில் விழும். மீதியை மெதுவாக விழுங்கி விடுவார். மற்றபடி அருமையான ஒரு நடிகர். சோகக் காட்சிகளில் மென்மையாக நம் மனதை உருக்குவார். டைட்டிலில் 'ஜெமினி கணேசன் அளிக்கும்' என்று போடுவார்கள். தயாரிப்பு வயலின் கே.வி.மகாதேவன் என்று போடுவார்கள்.

திருவாங்கூர் சகோதரிகளில் இளையவரான ராகினி மலையாளப் படங்களில் கொடி நாட்டியவர். தமிழில் காமெடிக்கும், நடனக் காட்சிகளுக்கு மட்டுமே பயன்படுத்தப்பட்டார். ஒரு சில படங்கள் விதிவிலக்கு. அதில் 'ஏழைப் பங்காளன்' ஒன்று. இதில் கதாநாயகி அந்தஸ்து. சற்று நீளமுகம் கொண்டவர். நன்றாக இருப்பது போலவும் தோன்றும். இல்லாதது போலவும் தோன்றும்.

ராகினியும் ஜெமினியும் அபூர்வமாய் இணைந்த ஜோடிப் பாடல். பாடகர் திலகம் ஒரு வரியை எடுத்து பாடி முடிக்க, முடித்த வார்த்தையிலிருந்து சுசீலா தொடர்வது அழகு. அதே போல பாடகர் திலகமும். இயற்கை எழில் கொஞ்சும் இடங்களில் நன்றகப் படமாக்கப்பட்ட பாடல். வண்ணமாய் இருந்திருந்தால் அருமையாக இருந்திருக்கும். இதே டைப்பில் 'காலம் மாறிப் போச்சு' என்று ஜெமினி நடித்து ஒரு படம் வந்ததாக ஞாபகம்.


இனி பாடலின் வரிகள்.

http://img.youtube.com/vi/pjsqk0R8YDc/hqdefault.jpg

மனதில் என்ன மயக்கம்
புது மலரே ஏன் இன்னும் தயக்கம்

பகலை முழு இரவாய்
எண்ணிப் பார்ப்பதனாலே வெட்கம்

மனதில் என்ன மயக்கம்
புது மலரே ஏன் இன்னும் தயக்கம்

பகலை முழு இரவாய்
எண்ணிப் பார்ப்பதனாலே வெட்கம்

மனதில் என்ன மயக்கம்
புது மலரே ஏன் இன்னும் தயக்கம்

நீராடும் இன்பம் நிழலாடும்
நிழலாடும் இளமை சதிராடும்
நீராடும் இன்பம் நிழலாடும்
நிழலாடும் இளமை சதிராடும்

சதிராடும் எண்ணம் உறவாடும்
சதிராடும் எண்ணம் உறவாடும்
உறவாடும் கண்கள் உறங்காது
உறங்காது

மனதில் என்ன மயக்கம்
புது மலரே ஏன் இன்னும் தயக்கம்

புனலாடும் மலரில் வண்டாடும்
வண்டாடும் இன்பப் பண்பாடும்
புனலாடும் மலரில் வண்டாடும்
வண்டாடும் இன்பப் பண்பாடும்

பண்பாடும் நெஞ்சில் கனலாடும்
பண்பாடும் நெஞ்சில் கனலாடும்
கனலாடும் கண்கள் உறங்காது.
உறங்காது.

மனதில் என்ன மயக்கம்
புது மலரே ஏன் இன்னும் தயக்கம்

கண்ணோடும் ஆசை முன்னோடும்
முன்னோடும் கால்கள் தள்ளாடும்
கண்ணோடும் ஆசை முன்னோடும்
முன்னோடும் கால்கள் தள்ளாடும்

தள்ளாடும் உள்ளம் துணை நாடும்
தள்ளாடும் உள்ளம் துணை நாடும்
துணை நாடும் கண்கள் உறங்காது.
உறங்காது.

மனதில் என்ன மயக்கம்
புது மலரே ஏன் இன்னும் தயக்கம்

http://www.youtube.com/watch?v=pjsqk0R8YDc&feature=player_detailpage

gkrishna
26th September 2014, 11:21 AM
நேற்று முரசு தொலைகாட்சியில் 'உதயமாகிறது' அப்படின்னு ஒரு படம் கொஞ்சம் பார்த்தேன் . மேல் தகவல் ஏதாவது உண்டா ? படத்தை பற்றி தான் .நம்ம ஒரு தலை ராகம் சங்கர் நடித்து இருந்தார்

படம் செம போர் .முடிந்தவுடன் வட்டியும் முதலுமா தக்காளி ராட்சசி ஈஸ்வரி பாடல் cd போட்டாங்க பாருங்க . முதல் பாட்டு 'துள்ளவதோ இளமை ' அடங்கலை. அந்த பாட்டில் நமது உடுப்பி லக்ஷ்மி நாராயண் (நடன இயக்குனர்) முகம் துண்டாய் தெரிந்தது . இறுதியில் திருமாங்கல்யம் படத்தில் கார்த்திக் சார் வாசு சார் ரசித்த லக்ஷ்மி வைட் அண்ட் வைட் கௌன் உடன் தொப்பி கூலிங் கிளாஸ் சகிதம் நம்ம தேசிய நடிகர் ஸ்ரீகாந்த் (ஜகன் ) . ஈஸ்வரியின் 'ஆனந்தம் பரமானந்தம் "
மெல்லிசை மன்னர் பங்கோ கிடார் விளையாடல் உடன் ஈஸ்வரியின் கருப்பட்டி குரல்
https://i.ytimg.com/vi/mj_Qyjh1L3A/mqdefault.jpg

gkrishna
26th September 2014, 11:26 AM
வாசு சார்

நடிகர் திலகத்தின் கதாநாயகி டீசிங் பாடல்

இளைய தலைமுறை

'சிங்கார தேர் கூட '
படத்தில் இடம் பெறாத 'பொம்பளையா லட்சணமாய் புடவை கட்டு '

gkrishna
26th September 2014, 11:29 AM
வாசு சார்

வைர நெஞ்சம் படத்தின்

''முன்னால் இரண்டு சேனை வைத்து வேதனை ஏன் தந்தாள் '
'ஹே தர தர தம் '
புல் ஹண்ட் ஷர்ட் நடிகர் திலகம் லேசா தொப்பை அது கூட அழகு

https://encrypted-tbn0.gstatic.com/images?q=tbn:ANd9GcTuDD6TXyUIG3usihAqHsbRJ2ncfNJwT sGtvv4R9Lf6Wn_kvQDB

gkrishna
26th September 2014, 11:46 AM
குமுதம் ஜங்ஷன் செப்டம்பர் 2003 இதழில் வெளி வந்த கவிஞர் வாலி அவர்களின் கவிதை

http://madrasyouthchoir.org/wp-content/uploads/2013/03/M-B-Srinivasan.jpg

இவர்கள் இன்னமும் இருக்கின்றார்கள்

சென்ற நூற்றாண்டில் தமிழ் மண் தரணிக்கு வழங்கிய மகத்தானவர்களின் மகோன்னத வரலாறு. மறைந்த இசை அமைப்பாளர் திரு.எம்.பி.சீனிவாசன் அவர்களைப் பற்றிய கவிஞர் வாலியின் அழகிய கவிதை இதோ:

‘திரைத்
துறையில் உள்ள -
இசைக் கலைஞருக்கெல்லாம்
இவர்தான் -
இன்றைக்கும் இதய தெய்வம்; நாங்கள் -
வாழுநாள் வரை – இவரை
வணங்குதல் செய்வம் !’

என்று -

என்னிடம் -

படத்துறையில்
பணிபுரியும் -

அனேக இசைக்கலைஞர்கள்

அந்தரங்க சுத்தியாக -
இவரைப் பற்றி -
இயம்பியது உண்டு;

அன்னணம்
அவர்கள் -
கூறிய
கூற்றை…

வழிமொழிகிறேன் நானும் – அது
வாய்மை என்பதைக் கண்டு!



நெருங்கிய -
நண்பர்களால்…
‘வாசு’ என்று

விளிக்கப் பெற்ற -
எம்.பி.சீனிவாசன
எளியவர்களின் தந்தை;

சிவப்புச்
சிந்தனைகள்
மேலோங்க நின்றது – அந்த
மாமனிதனின் சிந்தை!

நால் வருணத்தில் -
மேல் வருணம் எனப்படும் -
குலத்தில் பிறந்தும் - அவர்
குலம் கோத்திரங்களை -
வெறுத்தவர்; கொள்கை
வாளால் அவற்றை ஒறுத்தவர்!


ஜயகாந்தனின் சிந்தனையில் -
ஜனித்த…
‘தென்னங்கீற்று
ஊஞ்சலிலே…’

என்ற

ஏரார்ந்த பாட்டும்;
பொதுவுடைமைக் கட்சியின் -
புகழ்சால் கவிஞர் -
கண்ணியம் மிகுந்த
கே.சி.எஸ்.அருணாச்சலம்

ஆக்கி

அளித்த…

‘சின்னச்சின்ன
மூக்குத்தியாம்;
சிகப்புக்கல்லு
மூக்குத்தியாம்!’

எனும்

ஏற்றமிகு பாட்டும் ;

‘பாதை தெரியுது பார்’ எனும் -
படத்தில் இடம் பெற்று -
பட்டி தொட்டியெல்லாம்
பரவி நின்றது;

அந்த
அற்புத பாடல்களுக்கு -
இனிய

இசை -
ஏழை பங்காளன்
எம்.பி.சீனிவாசன் தந்தது!



கம்யூனிஸ்ட
கட்சியின் பால் -
எஞ்ஞான்றும் காதல் கொண்ட
எம்.பி.சீனிவாசன்..

இணையற்ற
இசை விற்பன்னரும் கூட;

பல படங்களில் -
அவரது
அளப்பரும் இசைஞானம்…
வெளிப்போந்து
வருடியிருக்கிறது -

நம்
நெஞ்சங்களை -
நாடி
நரம்புகளில் -
உவகைப் பெருக்கொன்று
ஊற்றெடுத்து ஓட!



இன்றும் -
இன்தமிழிலும் மலையாளத்திலும்..
எத்துணையோ படங்கள்
எம்.பி.சீனிவாசனின் -
மெல்லிசை
மேதமையை -
நமக்கு
நினைவூட்டி மகிழ்விக்கும்;
அவரது இசை
ஆர்நெஞ்சையும் நெகிழ்விக்கும்!



படத்துறையில்
பங்குபற்றும் எவரும்..
தனக்கென வாழ்கையில் -
தோழர் சீனிவாசன் மட்டுமே -
ஊர்க்கென
வாழ்ந்தார்;

உதிரத்தில்
ஊறியிருந்த -
பொதுவுடைமைச் சித்தாந்தத்தில்
பொழுதும் ஆழ்ந்தார்!

விரல் வலிக்க -
வயலின் வாசிப்பவர்களுக்கும் ;
குரல்வலிக்க
கானம் இசைப்பவர்களுக்கும்;
உடனுக்குடன்
ஊதியம் வழங்கப்படாத -
அவல நிலையை
அவர்தான் மாற்றினார்;
இருந்த

இசைக் கலைஞர்களையெல்லாம்…
ஒன்று சேர்த்து
ஒரு சங்கம் நிறுவி -
சங்கீத
சிற்பிகளின் -
வாழ்வில் -
விளக்கு ஏற்றினார்!

அதனால் -

அவர் …

பல

படாதிபதிகளின் -
அர்த்தமற்ற கோபத்திற்கு
ஆளானார்; அவருக்கு -
வருகின்ற
வாய்ப்புகள் -அவர்களால்
குறைந்தபோதும் -அதுபற்றிக்
கிஞ்சித்தும் கவலைப்படாது…
வாடிய கலைஞர்களின் -
வறுமையைச் சாய்க்கும் வாளானார்!


எம்.பி.எஸ்.
என்னும்..
மா மனிதன்
மதங்களைக் கடந்தவர்;
ஏற்ற கொள்கைவழி – சிங்க
ஏறென நடந்தவர்!

ஷைபுதீன் கிச்சுலூ – எனும்
சுதந்திர போராட்ட வீரரின்…
மகளை …
மணம் முடித்தார் -
மறையவர் குலத்தில்
முளைத்த சீனிவாசன்;



அவரினும்
ஆர் உளர்
அனைத்து உயிர்க்கும்
அன்பு காட்டும் சிறந்த நேசன்!

எம்.பி.சீனிவாசன்
ஏற்றிவைத்த விளக்காக..

இன்றும்
இசையோடு -
வடபழனியில்
விளங்குகிறது -
வலிவும்
பொலிவும் -
மிக்க
மாபெரும் சங்கமாக…

திரைப்பட -
இசைக்கலைஞர்களின் சங்கம் -
தகத்தகாயமாக; கோடையிலே -
தண்ணிழல் தரும் தருவாக!


அந்தமான் சென்றிருந்தபோது -
அங்கேயே…
எம்.பி.எஸ். உயிரை
எமன் உரித்தான்;

வானுலகுக்கும் அவர் சேவை -
வேண்டுமென வரித்தான்!

gkrishna
26th September 2014, 11:56 AM
கே.விஸ்வநாத் இயக்கத்தில் 1979-ம் ஆண்டு வெளியான ‘சங்கராபரணம்’ திரைப்படம் டிஜிட்டல் தொழில்நுட்பத்தில், அக்டோபர் 2-ம் தேதி மீண்டும் ரிலீஸாகிறது. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ‘சங்கராபரணம்’ படத்தின் இயக்குநர் கே. விஸ்வநாத், தயாரிப்பாளர் ஏடித நாகேஸ்வர ராவ், எஸ்.பி.பாலசுப்ரமணியம் உள்ளிட்ட திரையுலகினர் கலந்துகொண்ட னர்.

இந்நிகழ்ச்சியில் கே.விஸ்வநாத் பேசியதாவது:

35 ஆண்டுகளுக்கு முன்பு எடுத்த ‘சங்கராபரணம்’ படத்தை மீண்டும் நானே எடுக்க நினைத்தாலும் முடியாது. இறைவனின் அருளால் அப்போது இந்தப்படத்தை இயக்கியதாகவே நம்புகிறேன். இனி யாராலும் அந்தப் படத்தை ரீமேக் செய்ய முடியாது. அது ஒரு காவியம்.

இவ்வாறு அவர் பேசினார்.

http://tamil.thehindu.com/multimedia/dynamic/02126/sankaraparanam_2126617f.jpg

gkrishna
26th September 2014, 12:02 PM
சிறந்த பின்னணி பாடகர் என்று, 6 முறை தேசிய விருது பெற்றார், எஸ்.பி.பாலசுப்பிரமணியம். 36 ஆயிரம் பாடல்கள் பாடி உலக சாதனை நிகழ்த்திய பாலசுப்பிரமணியம், தேசிய விருது பெறுவதிலும் சாதனை நிகழ்த்தியுள்ளார்.

“அகில இந்தியாவிலும் சிறந்த பின்னணி பாடகர்” என்ற தேசிய விருதை 6 முறை ஜனாதிபதியிடம் பெற்றுள்ளார்.

அவருக்கு இந்த விருதைப் பெற்றுத்தந்த படங்கள் வருமாறு:-

1. சங்கராபரணம் (1979) தெலுங்கு.
2. ஏக் துஜே கேலியே (1981) இந்தி.
3. சாகரசங்கமம் (1983) தெலுங்கு. இப்படம், தமிழில் வெளிவந்த “சலங்கை ஒலி”யின் தெலுங்குப்பதிப்பு.
4. ருத்ரவீணா (1989) தெலுங்கு.
5. கானசாகரகானயோகி (1995) கன்னடம்.
6. மின்சார கனவு (1996) தமிழ்.

பாலசுப்பிரமணியம் பெற்ற பரிசுகளுக்கும், விருதுகளுக்கும் அளவே இல்லை. தமிழக அரசின் “கலைமாமணி” விருதை 1981-ல் பெற்றார். சிறந்த பாடகர் என்பதற்காக தமிழக அரசின் விருதை 4 முறையும், ஆந்திர அரசின் விருதை 12 முறையும் பெற்றார். சினிமா ரசிகர்கள் சங்கம் 22 முறை விருது அளித்துப் பாராட்டியுள்ளது.

எஸ்.பி.பாலசுப்பிரமணியம் ஒரு பேட்டியில், தன்னைப்பற்றிய பல கேள்விகளுக்கு மனம் திறந்து பதில் அளித்தார்.

கேள்வி:- விஞ்ஞானத்தின் முன்னேற்றத்தால் இசைத்துறையும் மாறி வருகிறது. இதனால் இசைத்துறை எதிர்காலத்தில் மாறும் என்று நினைக்கிறீர்களா?

பதில்:- இந்த மாற்றங்கள் வரவேற்கப்பட வேண்டியவை. ஒவ்வொரு காலகட்டத்திலும் ஏற்படும் மாறுதலுக்கு ஏற்ப நம்மை மாற்றிக் கொள்ளத் தயாராக இருக்க வேண்டும். ஒரு காலத்தில் இசைக்குழுவோடு மட்டும்தான் ஒரு பாடலை பதிவு செய்ய முடியும். அதிகபட்சமாக ஒரு நாளில் இரண்டு அல்லது மூன்று பாடல்களை மட்டுமே பாடமுடியும். இப்பொழுது பின்னணி இசையை தனியாக சேர்த்துக்கொண்டு பாடல்களை தனியாக பதிவு செய்யும் வசதி வந்த பிறகு ஒரே நாளில் பத்து பனிரெண்டு பாடல்களை ஒரு பாடகரால் பாட இயலும். நான் 36 ஆயிரம் எண்ணிக்கையை தொடுவதற்கும் இந்த விஞ்ஞான வளர்ச்சிதான் காரணமாக இருந்தது. இந்த விஞ்ஞான வளர்ச்சியை நான் மனப்பூர்வமாக வரவேற்கிறேன்.

கேள்வி:- திரையுலகில் உங்களுடைய வாரிசு யார்?

பதில்:- நான் என்ன மகாராஜாவா, எனக்கு வாரிசு யார் என்று சொல்ல! எனக்குப் பிறகு, நிறையப் பேர் பாட வந்திருக்கிறார்கள். அதில் யாரை என்னுடைய வாரிசு என்றுக் கூற முடியும்? மனோ நன்றாகப் பாடுகிறார். உன்னிகிருஷ்ணன், ஹரிஹரன் மிகவும் சிறப்பாகப் பாடுகிறார்கள். எல்லோரும் நன்றாக உழைத்துப்பாடி, முன்னுக்கு வரவேண்டும் என்று ஆசைப்படுகிறேன்.

கேள்வி:- உங்களுக்கு பிடித்த பாடல்கள் எவை?

பதில்:- நான் பாடிய பாடல்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். குறிப்பிட்டுக் கூறுவது கடினம். எல்லா பாடல்களுமே மக்களுக்கு போய்ச்சேர வேண்டும். எந்தவித குறையுமின்றிதான் பாடுகிறோம். சில பாடல்கள் மட்டுமே மாபெரும் வெற்றியை அடைந்து விடுகின்றன.

கேள்வி:- தமிழ்ப்பாடகர்களில் உங்களுக்குப் பிடித்தவர் யார்?

பதில்:- கே.ஜே.ஜேசுதாஸ். அற்புதமான குரல் வளம் உள்ளவர். அவர் குரல் எனக்கு மிகவும் பிடிக்கும். மிகவும் கஷ்டப்பட்டு, உழைத்து, திரையுலகில் முன்னேறியவர் கே.ஜே.ஜேசுதாஸ். அவர் திரையுலகில் சேர்ந்த பிறகு கர்நாடக சங்கீதத்தை முறைப்படி கற்றுக்கொண்டு, கர்நாடக சங்கீதம், சினிமா சங்கீதம் இரண்டிலும் முன்னணியில் இருப்பவர்.

கேள்வி:- அரசியலில் இருந்து ஏன் ஒதுங்கி இருக்கிறீர்கள்?

பதில்:- எனக்குப் பிடிக்காதது அரசியல். நான் அதிலிருந்து ஒதுங்கி இருக்கவே ஆசைப்படுகிறேன். அரசியலை, பத்திரிகைகளில் படித்துத் தெரிந்து கொள்வதோடு சரி.

கேள்வி:- உங்களுக்கு எத்தனை இசைக்கருவிகள் வாசிக்கத் தெரியும்?

பதில்:- ஹார்மோனியம், புல்லாங்குழல், பாத்சோ போன்ற இசைக்கருவிகள் வாசிக்கத் தெரியும்.

கேள்வி:- உங்களுக்கு எந்த மாதிரி புத்தகங்கள் படிக்கப் பிடிக்கும்? பிடித்த எழுத்தாளர் யார்?

பதில்:- ஆங்கிலத்தில் கதைப் புத்தகங்கள் பிடிக்கும். கிரைம் கதைகளாக இருக்க வேண்டும். வாழ்க்கை சம்பந்தப்பட்ட பல புத்தகங்களை வாங்கிப் படித்து ரசித்திருக்கிறேன். சுவையாக எழுதும் எல்லா எழுத்தாளர்களையும் எனக்குப் பிடிக்கும்.

கேள்வி:- உங்களுக்குப் பிடித்த தலைவர் யார்?

பதில்:- மகாத்மா காந்தி. அவரைப்பற்றி அதிகம் படித்திருக்கிறேன். காந்தி திரைப்படத்தை 11 முறை பார்த்துப் பார்த்து ரசித்திருக்கிறேன். நாட்டிற்காக காந்தி செய்த தியாகமும், நாட்டின் மீது அவருக்கு இருந்த பற்றையும் கண்டு வியந்திருக்கிறேன். காந்தி திரைப்படம் தெலுங்கில் வெளியானபோது காந்தியின் கதாபாத்திரத்திற்கு குரல் கொடுக்க கிடைத்த அரிய வாய்ப்பை, எனது வாழ்வின் பெரும் பேறாகக் கருதுகிறேன்.

கேள்வி:- ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப் பின்னால் ஒரு பெண் இருப்பாள், உங்கள் வெற்றிக்குப்பின்னால் யார்?

பதில்:- நான் இந்த பழமொழியை நம்புவதில்லை. என்னுடைய வெற்றிக்கு பின்னால் ஒரு பெண்ணும் கிடையாது. என் வெற்றிக்கு பின்னால் நிறைய ஆண்கள் இருக்கிறார்கள். நிறைய ரசிகர்கள் இருக்கிறார்கள்.”

இவ்வாறு பாலசுப்பிரமணியம் கூறினார்

http://tamil.adaderana.lk/palsuvai/wp-content/uploads/2014/09/spb1.jpg

gkrishna
26th September 2014, 12:09 PM
http://media.webdunia.com/_media/ta/img/article/2014-09/26/full/1411711870-8937.jpg
அதிகப் பாடல்களைப் பாடிய எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பொதுவாக அதிகம் பேசாதவர். பேசினால் அதில் உணர்ச்சியின் சதவீதம் அதிகமாக இருக்கும். 35 வருடங்களுக்கு முன் எஸ்.பி.பி. தனது மயக்கும் குரலில் பாடிய சங்கராபரணம் படம் மீண்டும் வெளியாகிறது. இந்தமுறை தமிழில். படம் குறித்த அவரது பேச்சில் உணர்ச்சி துலங்கியது.

கடவுள் கொடுத்த வரம்...

1979 -இல் சங்கராபரணம் பாடல்களை விஜயா கார்டனில் பதிவு செய்த போது என்னுடைய வயது 33. இப்போது வயது 68. கிட்டத்தட்ட 35 வருடங்களுக்குப் பிறகு அதே பாடல்களை தமிழில் பாடியிருக்கிறேன். இந்த வயதிலும் என்னுடைய குரல் அப்படியே இருக்கிறது என்றால் அதை கடவுள் கொடுத்த வரமாக நினைக்கிறேன்.

தற்கொலை செய்திருப்பேன்...

சங்கராபரணத்தை இயக்கிய கே.விஸ்வநாத் என்னுடைய பெரியப்பா மகன்தான். இந்தப் படத்தை எடுப்பது தொடர்பாக அவர் என்னுடைய அப்பாவிடம் பேசியிருக்கிறார். உடனே அவர் என்னை வைத்து பாட வை என்றார். நான் சொன்னால் அவன் கேட்பானா என்று விஸ்வநாத் கேட்டிருக்கிறார். அதற்கு அப்பா, கேட்கவில்லை என்றால் மூஞ்சியில் குத்தி பாட வை. சங்கராபரணம் பாடலை பாட அவன் கொடுத்து வைத்திருக்க வேண்டும் என்றார். கே.வி.மகாதேவனின் உதவியாளர் புகழேந்திதான் எனக்கு பயிற்சி தந்து பாட வைத்தார். பேப்பரில் இருக்கும் வரிகளை எண்ணிப் பாடாமல் ஆழ்மனதிலிருந்து பாடு என்று அவர்தான் எனக்கு அறிவுறுத்தினார். யாராவது சங்கராபரணம் பாடல்கள் சரியில்லை என்று சொல்லியிருந்தால் தற்கொலை செய்திருப்பேன்.

கண் கலங்கிய ரசிகர்கள்...

சங்கராபரணம் வெளிவந்தவுடன் நான் பார்க்கவில்லை. படம் பார்த்த ரசிகர்கள் கிளைமாக்ஸை பார்த்து கண்கலங்கிச் சென்றதை பார்த்திருக்கிறேன். மூன்று நாள்கள் கழித்தே நண்பர்களுடன் சங்கராபரணத்தைப் பார்த்தேன். படம் ஆரம்பித்ததிலிருந்து முடிந்ததுவரை எல்லாமே கடவுளின் அனுக்கிரகம்தான். பாட்டு பாட நான் முறையாக பயிற்சி எடுத்துக் கொண்டதில்லை. கேட்ட ஞானத்தை வைத்தே பாடுகிறேன்.

நான்தான் அறிமுகம் செய்து வைத்தேன்...

இந்தப் படத்தின் ஹீரோ சோமயாஜுலு ஆந்திராவில் ஒரு மாவட்டத்தில் உதவி கலெக்டராக இருந்தார். அவரை நான்தான் இந்தப் படத்தில் அறிமுகப்படுத்தினேன். இந்தப் படத்தைப் பற்றி பேசினால் நிறைய நினைவுகள் வருகிறது. முக்கியமாக இந்தப் படத்தைப் பற்றி கேள்விப்பட்ட லதா மங்கேஷ்கர், உடனே படத்தைப் பார்க்க வேண்டும் என்று சிவாஜிக்கு தகவல் சொல்லி மும்பையிலிருந்து சென்னை வந்து படத்தைப் பார்த்துவிட்டுச் சென்றார்.

நான்கு ஜாம்பவான்கள்....

இந்தப் படத்தில் நான்கு ஜாம்பவான்கள் உள்ளனர். ஒருவர் தயாரிப்பாளர். அடுத்து படத்தை இயக்கிய விஸ்வநாத். ஒளிப்பதிவு செய்த பாலுமகேந்திரா. படத்துக்கு இசையமைத்த கே.வி.மகாதேவன்.

வணக்கம் பாலு...

சங்கராபரணம் எனக்கு மரியாதை பெற்றுத் தந்த படம். அதுவரை பாலு என்று என்னை அழைத்தவர்கள் படம் வெளியான பிறகு வணக்கம் பாலு என்று அழைக்கத் தொடங்கினார்கள். வெட்டு, குத்து எல்லாம் இல்லாத அமைதியான படம் இது. மனதுக்கு அமைதியை தந்த படம்.

Russellmai
26th September 2014, 12:29 PM
டியர் வாசு சார்,
ஏழைப்பங்காளன் திரைப்படத்தில் ஜெமினி கணேசன்,ராகினி ஆகியோர் ஆடிப் பாடி நடித்த,எனக்குப் பிடித்தமான பாடல்களில் ஒன்றான
மனதில் என்ன மயக்கம் பாடலைப் பாடல் வரிகளோடு உங்களுக்கே உரித்தான மொழி நயத்தோடு பதிவிட்டமைக்கு எனது நன்றிகள்.இப்பாடல்
பதிவினைக் கண்ட எனக்கு உண்மையில் ஓர் இன்ப அதிர்ச்சிதான்.
நன்றியுடன் கோபு.

gkrishna
26th September 2014, 12:39 PM
http://lh5.ggpht.com/-oFYsh2LX8fA/VCGxuCqroXI/AAAAAAAANhU/3s1um1ajeiw/w1280/080000.jpg

gkrishna
26th September 2014, 12:40 PM
http://lh4.ggpht.com/-HeZLeQKxNho/VCGxu8-LjOI/AAAAAAAANbg/I33WzAVSZo4/w1280/080001.jpg

gkrishna
26th September 2014, 12:41 PM
http://lh6.ggpht.com/-ElLsfHSJdmE/VCGxvdX_Y8I/AAAAAAAANhU/aAunLUJC8L4/w1280/080002.jpg

gkrishna
26th September 2014, 12:41 PM
http://lh5.ggpht.com/-2vl-TwPv_j4/VCGx4OEvCNI/AAAAAAAANhU/pBmSKRP5PtI/w1280/080003.jpg

Russellmai
26th September 2014, 12:56 PM
டியர் வாசு சார்,
நடிகர் திலகத்தின் கதாநாயகி டீஸிங் பாடல்
ராஜா திரைப்படத்தில் இடம் பெற்ற
இரண்டில் ஒன்று என்னிடம் சொல்லு பாடல்
கோபு.

Richardsof
26th September 2014, 01:03 PM
KRISHNA SIR

http://i58.tinypic.com/23vnh9y.jpg

gkrishna
26th September 2014, 01:24 PM
http://10hot.files.wordpress.com/2009/04/kaatriniley-varum-geetham-movie-reviews-vikadan-films.jpg?w=604&h=1031

gkrishna
26th September 2014, 01:32 PM
சாதாரணமாக உங்கள் கதாநாயகிகளின் பெயர்கள் ராதிகா, ராதா, ரேவதி என்று ‘ஆர்’ எழுத்தில்தான் துவங்கும். ஆனால், சமீபத்திய படத்தில் ‘எஸ்’ (சுகன்யா) ஆக மாறியதன் மர்மம் என்ன?

என்னவோ நான்தான் அவங் களுக்கெல்லாம் பெயர் வெச்ச மாதிரி கேக்கறீங்க! முதல் பட ஹீரோ-யின் ஒருத்தருக்கு ‘ஆர்’ ராசி-யினாலதான் மார்க்கெட் தூக்கிடுச்சுன்னு ஒரு நம்பிக்கை… அடுத்து வந்தவங்களும் ‘ஆர்’லேயே வர்ற-மாதிரி பார்த்துக்கிட்டாங்க! ஆனா, சுகன்யா மட்டும் ‘என் பேரே இருக்கட்டும்’னாங்க. அவ்வளவுதான்! மத்தபடி இதுல மர்மமெல்லாம் ஒண்ணும் கிடை யாது!

ஹாலிவுட் ஸ்டைலைப் பின்பற்றி வரும் பி.சி.ஸ்ரீராமின் லைட்டிங் ட்ரெண்ட், தங்கள் படங்களிலும் இனி வருமா?!

என் படங்களில் பெரும்பாலும் க்ளோஸ்-அப் -காட்சிகள்தான் அதிகம் இருக்கும். அதாவது, உணர்ச்சிகளை முக-பாவங்களி லேயே காட்டி-விடுவது. அப்படிப் பட்ட காட்சிகளில் அம்மாதிரி யான லைட்டிங்கை உபயோகித் தால் உங்களுக்கும் புரியாது; அவ் வளவு கஷ்டப்பட்டு முகபாவனை காட்டும் நடிகருக்கும் பெயரில்லா மல் போய்விடும். ஆனால், இந்த மாதிரி லைட்டிங் தேவைப்படுகிற சப்ஜெக்டாக இருந்தால் நிச்சயம் ஸ்ரீராமைப் பயன்படுத்துவேன்!

உங்கள் படத்தில் மட்டும் காட்சியமைப்பும் இசையும் அட்டகாசமாய் இணைந்து போவது எதனால்? உங்கள் படமென்றால் இளையராஜா ஏதேனும் சிறப்பாக இசை அமைப்பதுண்டா?

நாங்கள் இருவரும் ஒரே மண். எனக்கு ஏற்படுகிற சிந்தனைதான் ராஜாவுக்குள்ளும் ஓடும்! ஒரே மாதிரி, இணையான சிந்தனைகள் இருப்பதால் அந்தளவு ஒத்திசைவு ஏற்படுகிறது. மற்றபடி விசேஷமான இசையெல்லாம் எதுவும் கிடை-யாது.

‘காதல்’ என்பது என்ன?

காதல் என்பது உன்னையறியாமல், உன்னை நேசிப்பவளை அறியாமல் உண்டா கும் ஓர் உணர்வு! உடலில்லாமல் உணர் வில்லை; உணர்வில்லாமல் உடலில்லை. அந்த இரண்டு துருவங்களின் சந்திப்பையும் உணர்ந்தவன்தான் காதலிக்க முடியும்!

முழுக்க முழுக்க மாணவர்களுக்கு என்று ஏதாவது படம் எடுக்கும் திட்டம் உள்-ளதா?

மாணவர்களுக்குன்னா எப்படி? போதிக்கிற மாதிரியா? ‘வீட்டுல-தான் அப்பா போதிக்கிறாரு. வகுப்புல வாத்தியாரு போதிக்கிறாரு. நிம்மதியா இருக் கலாம்னு தியேட்ட ருக்கு வந்தா, இந்த ஆளும் அதையே செய் யறாரே’னு யாரும் வரமாட்டாங்க! அப்படிப் போதிக்கிற மாதிரி ஒரு படம் எடுத்து நான் கையைச் சுட்டுக்கொண்டது போதாதா? ‘என்னு யிர்த் தோழனை’த் தான் சொல்றேன்!

இப்ப நீங்க எடுத் துக்கிட்டு வர்ற ‘நாடோடித் தென்றல்’ சர்வதேச விருது பெறுமா?

பெறாது! அது ஒரு கால கட்டத்தில் நடந்த சாதாரண காதல் கதை. அவ்வளவு-தான்! ஆனால், இனி-மேல் என் படங்களின் எண்ணிக்கையைக் குறைத்துக் கொண்டு மிகச் சிறப்பான படங்களையே உருவாக்குவது என்று முடிவெடுத்துள்ளேன். ஒன்று மட்டும் நிச்சயம்… உலக அளவில் ஒரு பரிசையாவது பெறாமல் ஓய மாட்டான் இந்த பாரதிராஜா!

http://img.freebase.com/api/trans/image_thumb/guid/9202a8c04000641f8000000009995689?pad=1&maxheight=100&mode=fillcropmid&maxwidth=100

01-03-1992 – நேருக்கு நேர் பாரதிராஜா நன்றி – விகடன் பொக்கிஷம்

gkrishna
26th September 2014, 01:34 PM
நன்றி எஸ்வி சார்
அபிநய சரஸ்வதி சரோஜா தேவி ,நாட்டிய பேரொளி பத்மினி,எம் என் ராஜம் சேர்ந்து இருக்கும் அபூர்வ நிழல் படம் அருமை

இது எந்த ஆண்டு எடுக்கபட்டது என்று தகவல் கூற முடியுமா எஸ்வி சார்

Richardsof
26th September 2014, 01:44 PM
நன்றி எஸ்வி சார்
அபிநய சரஸ்வதி சரோஜா தேவி ,நாட்டிய பேரொளி பத்மினி,எம் என் ராஜம் சேர்ந்து இருக்கும் அபூர்வ நிழல் படம் அருமை

இது எந்த ஆண்டு எடுக்கபட்டது என்று தகவல் கூற முடியுமா எஸ்வி சார்

nadodi mannan celebration - chennai - albert- 2006

thanks krishna sir

gkrishna
26th September 2014, 02:16 PM
கிரேசி மோகன் - மலரும் நினைவுகள்

1984 என்று நினைக்கிறேன்….கிரேசி குழுவினருக்கு ‘பாம்பே ஷண்முகானந்தா’ சபையில் நாடகம் போடும் வாய்ப்பு கிட்டியது….அன்நாளில் பாம்பேயில் நாடகம் போடுவதென்றால் மதராஸ் குழுக்களுக்கு அமரிக்காவில் போட அழைப்பு கிடைத்த அளவுக்கு பிரசித்தம்….அவர்கள் மேஜர் சுந்தர்ராஜன் போன்ற மேஜர் குழுக்களைத்தான் கூப்பிடுவார்கள்….மைனர் குழு எங்களுக்கு கிடைத்தது தெய்வாதீனமே….அந்த சமயம் பார்த்து எங்கள் லேடி-ஆர்டிஸ்ட் திருமணம் செய்து கொண்டு விலக, புதிதாக வேறு ஒரு நாயகி….சுந்தரத் தெலுங்கி….பார்க்க சுந்தரம்(அழகு)….பேச்சு அவந்தரம்….அவளுக்கு வீடியோ பிரமாதம்….ஆடியோ அபத்தம்….

நாடகத்திற்கு 2 நாட்கள் முன்பு அவளுக்கு தமிழ் வசனம் ரிகர்சல்….கடைசி வரை மாதுவை தாய் பாஷையில் லேது என்றுதான் கூவிக் கொண்டிருந்தாள்….3000 பேர் அமரும் ஷண்முகானந்தாவில் ஒரு சிறுவன் மட்டும் அமர்ந்து எங்கள் ரிகர்ஸலை ரசித்துக் கொண்டிருந்தான்….குறிப்பாக அவன் குஷியாகி சிரித்தது , அந்த நாயகியின் ‘மாது-லேது’ மாற்றத்திற்குத்தான்….அந்தச் சிறுவனின் தாய் பாஷை தெலுங்காம்…அதனால்தானோ ‘லேது மாது’ பன்னை(PUN) வெகுவாக ரசித்தான்….சாயங்காலம் தினமும் சூறாவளி கச்சேரி செய்து கொண்டிருந்த அந்தச் சிறுவனின் வேண்டுகோளுக்கு இணங்கி, பிரத்யேகமாக(கிருஷ்ணருக்கு கீதை சொல்ல ஒரே ஒரு அர்ச்சுனன் கிடைத்தது போல) மேடை அலங்காரம் செய்து எங்கள் ‘மேரேஜ் மேட் இன் சலூன்’’ நாடகத்தைப் போட்டு அந்தக் குழந்தையை மகிழ்ச்சியில் ஆழ்த்தினோம்….”குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடத்திலே’….ஒருவேளை அந்தக் குழந்தையைக் கொண்டாடி, அதன் ஆசீர்வாதத்தைப் பெற்றதாலோ என்னவோ இன்று எங்கள் குழு தெய்வத்தைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறது (சாக்லேட் கிருஷ்ணா)….அந்த தெய்வக் குழந்தை யார் என்பதை ‘கேசவ்’ சித்திரத்தில் காட்டியுள்ளார்….பார்க்க….கிரேசி மோகன்….

http://www.vallamai.com/wp-content/uploads/2014/09/crazy23.jpg

crazy

‘MANDOLIN கேட்க மகாவிஷ்ணு வுக்காசை
ஆண்டவன் கட்டளை ஆதலால் -மாண்டலின்(அமரராகி)
ஆனாரே, வாசிக்கப் போனாரே வைகுண்டம்,
‘ஈநாடுக்(கு) இங்கே இழப்பு’….கிரேசி மோகன்….

‘மலரும் மாண்டலின் நினைவுகள்’…..

‘வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார் மாண்டலின் ஸ்ரீனிவாசன்’….வைகுந்தத்தில் வாசித்து அவர் ஆத்மாவும் சாந்தி அடையும், அந்தப் பரமாத்மாவும் சாந்தி அடைவார்….

பின்குறிப்பு -எங்கள் ‘ஜுராஸிக் பேபி நாடகத்தில், பிறந்த குழந்தை ‘நர்ஸரி ரைம்’ பாடும்….அப்போது குழந்தையின் தந்தை மாது- என்ன ! அச்சப்பன் குழந்தை பாடறது….!

அச்சப்பன் -அவனுக்கு ‘மாண்டலின்’ கத்துக் கொடுங்கோ….யார் கண்டா பிற்காலத்துல ‘ஸ்ரீனிவாசன்’ மாதிரி ‘பிராடிஜியா’ பிரபலம் ஆகலாம்….(பலத்த கைத்தட்டலோடு நாடகம் நிறைவு பெறும்)…..

gkrishna
26th September 2014, 02:20 PM
கவிஞர் காவிரி மைந்தன்

மக்கள் திலகம் என்னும் அடைமொழி எம்.ஜி.ஆர். அவர்களுக்கு கல்கண்டு தமிழ்வாணன் அவர்களால் வழங்கப்பட்டது. எம்.ஜி.ஆர் அவர்களின் மாபெரும் வெற்றிப்படங்களுக்குப் பாடல்கள் இயற்றிப் பெரும்புகழ் ஈட்டியவர் கவிஞர் வாலி அவர்கள் என்பதை வரலாறு சொல்கிறது.

திரைப்படப் பாடலாசிரியர்கள் பல நூறு பேர்கள் வந்தாலும் தங்கள் தடங்களைப் பதித்துவிட்டுப் போனாலும் விரல்விட்டு எண்ணக்கூடிய ஒரு சிலரை மட்டுமே காலம் இன்று கணக்கில் வைத்திருக்கிறது. ஏன்.. எப்படி.. எண்ணிப்பார்த்தால், திரைப்பாடல்கள் என்கிற வரையறைகளை வகுத்துக்கொள்ளாமல், வாழ்க்கையின் எல்லைகளை.. இன்ப துன்பங்களை பல்வேறு கூறுகளை.. அப்பாடல்களில் இலகுவாக பக்குவமாய் பதித்து வைத்திருப்பதே அடிப்படைக் காரணம் ஆகும் என்பது புலனாகும்.

குறிப்பாக, புரட்சித் நடிகர் பொன்மனச் செம்மல் என்கிற அடைமொழிகளைத் தாங்கிநின்ற சாதனை சரித்திரமம் எம்.ஜி.ஆர். என்கிற கதாநாயகனின் பாத்திரப் படைப்புகள் எல்லாம் மக்கள் மனதில் நிச்சயமாக, சத்தியமாக, பலமாக பெரியதோர் தாக்கத்தை உண்டாக்கும் வல்லமை – வசனங்களைத் தாண்டி.. இது போன்ற பாடல்களின் மூலமே சாத்தியமாகும் என்பதை கவிஞர் வாலி அவர்கள் எம்.ஜி.ஆருக்காக எழுதிய பல்வேறு பாடல்கள் சாட்சியம் கூறும். இதோ இவ்வரிசையில் நாளை நமதே திரைப்படத்திற்காக மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் .. திரையில் இருமுறை மலரும் அன்பு மலர்களே.. நம்பி இருங்களேன். நாளை நமதே..

அன்பு மலர்களே நம்பி இருங்களே
நாளை நமதே இந்த நாளும் நமதே
தர்மம் உலகிலே இருக்கும் வரையிலே
நாளை நமதே எந்த நாளும் நமதே

தாய் வழி வந்த தங்கங்கள் எல்லாம்
ஓர் வழி நின்று நேர் வழி சென்றால்
நாளை நமதே…

காலங்கள் என்னும் சோலைகள் மலர்ந்து காய் கனியாகும்
நமக்கென வளர்ந்து

நாளை நமதே நாளை நமதே நாளை நமதே
நாளை நமதே நாளை நமதே நாளை நமதே நாளை நமதே

பாசம் என்னும் ஊர் வழி வந்து பாசமலர் கூட்டம்
ஆடும் மழையில் அமைவது தானே வாழ்க்கை பூந்தோட்டம்

மூன்று தமிழும் ஓர் இடம் நின்று
பாடவேண்டும் காவியச் சிந்து

அந்த நாள் நினைவுகள் எந்த நாளும் மாறாது
அந்த நாள் நினைவுகள் எந்த நாளும் மாறாது

நாளை நமதே, நாளை நமதே

வீடு என்னும் கோயிலில் வைத்த வெள்ளி தீபங்களே
நல்ல குடும்பம் ஓளிமயமாக வெளிச்சம் தாருங்களே

நாடும் வீடும் உங்களை நம்பி நீஙகள்தானே அண்ணன் தம்பி
எதையுமே தாங்கிடும் இதயம் என்றும் மாறாது

நாளை நமதே நாளை நமதே

தாய் வழி வந்த தங்கங்கள் எல்லாம்
ஓர் வழி நின்று நேர் வழி சென்றால்
நாளை நமதே…

காலங்கள் என்னும் சோலைகள் மலர்ந்து காய் கனியாகும்
நமக்கென வளர்ந்து

நாளை நமதே நாளை நமதே நாளை நமதே

படம் : நாளை நமதே (1974)
இசை : எம்.எஸ்.விஸ்வநாதன்
பாடியவர்: எஸ்.பி. பாலசுப்பிரமணியம், டி.எம். சௌந்தரராஜன்

இத் திரைப்படம் பார்த்தபோது.. குறிப்பாக இந்தப் பாடலில் இந்த வரிகள் தந்த உற்சாகம், வைராக்கியம் ..

திரு. தர்மேந்திரா அவர்கள் இந்தியில் நடித்த யாதோங்கி பாரத் என்னும் இந்திப்படத்தின் தழுவல் இந்தப் படம் எனினும் பாடல்கள் மெல்லிசை மன்னரால் அதீதமானதவையாகவும் அற்புதமாகவும் மலர.. கவிதை இதழ்கள் விரிவது போல் பாடல் வரிகள் அமைத்தவர் கவிஞர் வாலி என்பதில் இருவேறு கருத்தில்லை.

நாளை நமதே இந்த நாளும் நமதே…

gkrishna
26th September 2014, 02:21 PM
http://www.youtube.com/watch?v=pY-kqvZr070

gkrishna
26th September 2014, 02:32 PM
http://antrukandamugam.files.wordpress.com/2014/09/nalina-sasikumar-thirumalai-thenkumari.jpg?w=593&h=451

வாசு சார் /எஸ்வி சார்

மேலே இருக்கும் படத்தில் சசிகுமார் உடன் இருக்கும் நடிகை நளினா நாளை நமதே திரை படத்தில் குழந்தைகளுக்கு ஆயாவாக தோன்றுவார் .. மக்கள் திலகமும் சந்திர மோகனும் பாடல் பாடி முடித்த உடன் இவர் முகத்தை காட்டுவார்கள் . கண்ணாடி போட்டு கொண்டு வயதான தோற்றத்தில் இருப்பார். பிறகு சகோதரர்கள் இணைந்த சந்தோஷத்தில் கண்ணாடியை கழட்டி துடைத்து கொள்வார் . அந்த புகைப்படம் இருந்தால் வெளியிடவும் .

மேலும் தியாகம் படத்தில் ஹரிக்ரிஷ்ணன் மகள் அன்னம்மாவாக வந்து வீ கே ராமசாமியிடம் கற்பை இழந்து பழியை நடிகர் திலகத்தின் மீது போடும் கதா பாத்திரம் இவரா ? ஹரிக்ரிஷ்ணன் அன்னம்மா அன்னம்மா என்று அலறும் நேரத்தில் ஹரி கிருஷ்ணன் ரசிகர்கள் விசில் அடிப்பார்கள் :)

Richardsof
26th September 2014, 02:44 PM
MSV -FILE
http://i57.tinypic.com/152hu2p.jpghttp://i62.tinypic.com/rizu4o.jpghttp://i59.tinypic.com/wsac2g.jpg

gkrishna
26th September 2014, 02:52 PM
சந்தோஷ சாம்ராஜ்ஜியமாய் இல்லம் துலங்கும்போது
இன்ப கீதங்களின் முழக்கம் இப்படித்தான் இருக்குமோ?


நட்சத்திர ஜன்னலில்..........

சூரிய வம்சம் திரைப்படத்திற்காக கவிஞர் மு.மேத்தா வரைந்த கவிதையிது! ஒரு கவிஞனின் ஒளிப்படைப்பு! உள்ளத்தில் தோய்ந்திருக்கும் கவிதை வெள்ளத்தின் உற்சாகப் பாய்ச்சல்!

விண்ணுக்கும் மண்ணுக்கும் இடையே கண்ணில் படுகின்றவற்றையெல்லாம் கட்டி இழுத்து வர கவிஞர்களால்தான் முடியும் என்கிற உண்மையை இப்பாடல் வரிகள் பறைசாற்றுகின்றன!

சந்தோஷ சாம்ராஜ்ஜியமாய் இல்லம் துலங்கும்போது இன்ப கீதங்களின் முழக்கம் இப்படித்தான் இருக்குமோ?

சிந்தனையில் இவர் தொடும் உயரங்களைப் பாருங்கள். இமயத்திற்கு பொன்னாடை போட்டுவிடலாம் என்கிறார். உற்சாகம் இறக்கைக் கட்டியல்லவா பறக்கிறது!

மென்மையான வார்த்தைப் பூக்கள் மலர்வதைப்போல் மலரச் செய்து இசையிலே துள்ளி குதிக்க வைத்திருக்கிறார் இசையமைப்பாளர் எஸ்.ஏ.ராஜ்குமார்.

ஓங்கும் உந்தன் கைகளால் வாழ்க்கையைப் புரட்டிப்போடு! புது வாழ்வாழ்வின் கீதம்பாடு!

நம்பிக்கைக்கான நங்கூரங்களைப் பாடலெங்கும் பரவியிருக்கிற கவிஞரின் சாதுர்யம் இவர் சூர்ய வம்சத்துகாரர் என்கிற ரகசியப் பதிவைத் தந்துவிடுகிறது!

நட்சத்திர ஜன்னலில் வானம் எட்டிப் பார்க்குது
சிறகை விரித்துப் பறப்போம் நம் உறவில் உலகை அளப்போம்
விளையாடலாம் நிலாவிலே நிழல் மூழ்குமோ தண்ணீரிலே
வானைப் புரட்டிப்போடு புது வாழ்வின் கீதம் பாடு
(நட்சத்திர..)

சித்திரங்களைப் பாடச்சொல்லலாம்
தென்றலை அஞ்சல் ஒன்று போடச்சொல்லலாம்
புத்தகங்களில் முத்தெடுக்கலாம்
பொன்னாடை இமயத்துக்குப் போட்டுவிடலாம்
பூமிக்குப் பொட்டு வைத்து பார்க்கலாம் பார்க்கலாம்
பூவுக்கும் ஆடை தைத்துப் போடலாமா
சூரியத் தேரை மண்ணில் ஓட்டலாம் ஓட்டலாம்
சொர்கத்தின் புகைப்படத்தைக் காட்டலாமா
வானம்பாடி வாழ்விலே
வருந்தி அழுவதில்லை வணங்கி விழுவதில்லை
(நட்சத்திர..)

சங்கீதப்புறா நெஞ்சில் பறக்கும்
சந்தோஷ முல்லை இங்கே வீட்டில் முளைக்கும்
சந்தமழை நம்மை நனைக்கும்
பூந்தென்றல் பாதை சொல்ல வந்து அழைக்கும்
சிட்டுக்குச் சிறகடிக்கச் சொல்லித்ததாரடி யாரடி
மீனுக்கு நீச்சல் கற்றுத் தந்ததாரோ
மேகத்தில் மீடு கட்டி வாழலாம் வாழலாம்
மின்னலில் கூரை பின்னிப் போடலாமா
ஓங்கும் உந்தன் கைகளால்
வானைப் புரட்டிப்போடு புது வாழ்வின் கீதம் பாடு
(நட்சத்திர..)

படம்: சூர்யவம்சம்
இசை: SA ராஜ்குமார்
பாடியவர்கள்: மனோ, சுனந்தா
வரிகள்: மு. மேத்தா

http://www.youtube.com/watch?v=YYYtkQV3Ym0

gkrishna
26th September 2014, 03:36 PM
http://www.ithayakkani.com/OpenFile?r1=speeches&r2=/doc_Feb_1_2014_12_16_17_PM2.jpghttp://www.ithayakkani.com/OpenFile?r1=speeches&r2=/doc_Feb_1_2014_12_16_17_PM1.jpg

உலகமெங்கும் நடன நிகழ்ச்சிகள் நடத்தி பெயர் பெற்ற, மும்பையிலிருந்த நடனக் கலைஞர் வாணி கணபதி, கமலுடன் நட்பு ஏற்பட்டு காதல் உண்டாகி இருவரும் 'மேல் நாட்டு மருமகள்' என்ற படத்தில் இணைந்து நடித்தனர். அதற்கு பின் வாணி கணபதி எந்தப் படத்திலும் நடிக்கவில்லை. 1978ல் மும்பையில் இருவருக்கும் திருமணம் நடந்தது. திருமண வரவேற்புக்கு தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர் சென்றிருந்தார். 'பிலிம்ஃபேர்' பத்திரிகை விருதுகள் வழங்கும் விழாவுக்கும் அவர் தான் சிறப்பு விருந்தினர்

திருமணத்திற்கு பின் கமல் நடிக்கும் படங்களில் வாணி கமல் தான் உடையலங்கார நிபுணர். அது கமல்ஹாசனின் பழைய படங்களைப் பார்த்தாலே தெரியும். சரிகா கமலின் வாழ்வில் நுழைந்த பின், வாணி காதல் கணவரிடமிருந்து பிரிய வேண்டியதாயிற்று. கமலும் பெரும்தொகை கொடுத்து விலகினார். பத்திரிகைகளில் கமல்- வாணி மோதல் பெரிதாகி, பின் அடங்கியது

நன்றி இதயக்கனி சினிமா இதழ்

madhu
26th September 2014, 04:04 PM
மதுஜி!

காலை வணக்கம். நன்றி!

உங்களைத்தான் எதிபார்த்தேன். சில நாட்களுக்கு முன் '4 வேலி நிலம்' படப் பாடல் ஒன்று கேட்டிருந்தீர்கள். எனக்கு ஞாபகம் இல்லை. இப்போது மீண்டும் தாங்கள் ஞாபகப்படுத்த இயலுமா? ப்ளீஸ்.

Sorry வாசு ஜி.. அவசர விசிட்..அதனால் உங்கள் பதிவு வருமுன் கிளம்பிவிட்டேன்.

"வானம்பாடிகள் போலே பிரேம கானம் பாடி மகிழ்வோம்" என்று ஏ.எம்.ராஜா, ஆண்டாள் பாடிய பாடல் கேட்டிருந்தேன். ஆனால் அது "நாலு வேலி நிலம்" படப்பாடலா என்பது நிச்சயமாகத் தெரியாது

gkrishna
26th September 2014, 04:07 PM
தற்செயலாக 2 நாட்கள் முன் காலையில் தொ.காயில் ஜெயா பக்கம் போக, யாரது ? வாணி கமல் (??? கணபதி ) மாதிரி இருக்கு என்று நிதானிக்க, வாணியே தான். திரும்பிப் பார்கிறேன் நிகழ்ச்சி. கொஞ்சம் முடிந்து விட்டிருந்தது. 2 episode ல் இது இரெண்டாவது. வேலையை ஓரங்கட்டி விட்டு என்ன சொல்கிறார் என்று கவனித்தேன்.
வரிசையாக கமல் பாடல்கள். ரசித்து சொல்லிக் கொண்டு இருந்தார். எனக்கு ஆச்சர்யம். பேச்சில் எந்த தயக்கமும் இல்லை. அவர் கமலின் மனைவியாக இருந்த காலகட்டத்து படங்கள், அவர் ரசித்த காட்சிகள், கமலின் ரசனை, உழைப்பு, உடை என்று வெகு இயல்பாக இருந்ததது அவர் பேச்சு. எப்படி கமல் பற்றியே தொடர்ந்து பேசுகிறார் என்று நினைக்கும் போதே அவரே அதற்கு காரணமும் சொல்லி விட்டார்.
ஏன் கமல் பற்றியே சொல்லுகிறேன் என்றால், அந்த காலகட்டத்தில் அவரது costumes எல்லாமே நான் தான் வடிவமைத்தேன். அதனால் அந்த நினைவுகளே எனது பசுமையான நினைவுகள் என்று சொன்னார்.

அதனையும் சூப்பர் ஹிட் பாடல்கள். சிகப்பு ரோஜாக்கள் படத்தில் நினைவோ ஒரு பறவை பாடலில் பயன்படுத்திய உடைகள் முக்கியமாக அந்த தொப்பி குறித்துப்பேசினார்.

பல வருடங்கள் கழித்து அந்த படம் ஹிந்தியில் ராஜேஷ் கன்னாவை வைத்து எடுத்த போது அந்த தொப்பிக்கு அலையோ அலைன்னு அலைஞ்சு கிடைக்காமல் கடைசியில் இவரிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்டதை ஒரு மிகவும் இனிமையான நினைவு என்று சந்தோஷமாக சொன்னார்.
சலங்கை ஒலியில் உடைக்கு கோபி கிருஷ்ணாவை வரவழைத்தது, மீசை எடுக்காமல் அந்த நடன getup அமைத்தது, சிப்பி இருக்குது முத்தும் இருக்குது பாடலில் ஸ்ரீதேவி கமலின் பொருத்தம்(chemistry)ஏற்று நிறைய விஷயங்கள் சொன்னார். வாணியின் கண்களை படம் எடுத்து அதை வரைய வைத்து ஒரு முறை கமல் பரிசளித்து இருந்ததையும் அதை வெகு காலம் கழித்து ராஜ பார்வையில் மாதவியுடனான பாடலில் அந்த ஓவியத்தை கமல் கேட்டு வாங்கி பயன் படுத்தியதையும், இப்போதும் அந்த பரிசை தான் பத்திரமாக வைத்திருப்பதையும் அவர் சொன்ன போது ஏனோ எனக்கு சற்று மனம்கசிந்தது.

கமல் 50 விஜய் கொண்டாடியபோது யாரிடம் எல்லாமோ கருத்து கேட்டு ஒளி பரப்பினார்கள். கமலின் காதல் இளவரசு பட்டங்களுக்கு காரணமான பெரும்பான்மையான படங்களில் அவர் பெண்களின் ஆதர்ச நாயகனாக ஆண்களின் ரோல் மாடலாக மன்மதனாக வளைய வந்த படங்களின் costume design செய்த வாணியை எந்த கருத்தும் கேட்க வில்லையோ என்று நினைக்கத் தோன்றியது. ஒரே ஒரு படத்தில் கதாநாயகியாக கூட நடித்த நடிகைகள் கூட மேடையில் அங்கீகாரம் பெற்றிருந்தார்கள்.

thanks to vindya madem-may 2010

http://image6.buzzintown.com/files/event/upload_76000/upload_original/374078-bharatanatyam-recital-by-vani-ganapathy.jpghttp://3.bp.blogspot.com/-DIiKhAMWG3g/UMdidmrALqI/AAAAAAAARYw/WC7Z_urrXG4/s320/Rajini+Kanth+Family.jpg

gkrishna
26th September 2014, 04:27 PM
அழகே அழகு-நன்றி உயிர்மை s .ராமகிருஷ்ணன்

http://www.sramakrishnan.com/wp-content/uploads/2012/07/raja.jpg

சில திரையிசைப் பாடல்கள் கேட்ட முதல்நாளில் இருந்து இன்று வரை அதன் ஈர்ப்பை அப்படியே வைத்திருக்கின்றன, அதில் ஒன்று ராஜபார்வை படத்தில் இடம் பெற்ற ஜேசுதாஸ் பாடியுள்ள அழகே அழகு தேவதை பாடல்

கவியரசர் கண்ணதாசன் எழுதிய இப்பாடல் பாதாதி கேசம் பெண்ணை வர்ணிக்கும் மரபில் உருவானது, பாடலை ரசித்து அழகாக எழுதியிருக்கிறார் கவியரசர், எளிமையும், வியப்பும் ஒருங்கே கொண்ட பாடலது, கண்ணை மூடிக் கொண்டுவிட்டால் மனதில் ஒரு பெண்உருவம் தோன்றி பாடல் கேட்பவரை தன்வசமாக்குகிறது,

ராஜபார்வை தமிழ்சினிமாவில் முக்கியமான ஒரு படம், இந்த படத்தை ஒவ்வொரு முறை பார்க்கும் போது புதிதுபுதிதாக ஆச்சரியங்கள் உருவாகிக் கொண்டேயிருக்கின்றன. இன்று வெளியாகியிருக்க வேண்டிய ஒரு திரைப்படத்தை முப்பது ஆண்டுகளுக்கு முன்னதாக எப்படி உருவாக்கினார் கமல்ஹாசன் என்று வியப்பாகவே உள்ளது

வேறுமாநிலங்களில் இருந்து நடிகைகளை மட்டுமே தமிழ்சினிமாவில் அறிமுகம் செய்து கொண்டிருந்த சூழலில் ராஜபார்வையில் இடம்பெற்ற கலைஞர்களின் பட்டியலைப் பாருங்கள், படத்தின் இயக்குனர் தெலுங்குத் திரையுலகைச் சேர்ந்த சிங்கிதம் சீனிவாசராவ், ஒளிப்பதிவாளர் வங்காளத்தைச் சேர்ந்த பிரபல ஒளிப்பதிவாளர் பரூண் முகர்ஜி, முக்கியக் கதாபாத்திரமொன்றில் நடித்திருப்பவர் தெலுங்கு தமிழ் திரைப்படங்களின் முக்கியத் தயாரிப்பாளரும், நடிகருமான எல்.வி.பிரசாத், இன்னொரு முக்கியக் கதாபாத்திரம் கேரளாவைச் சேர்ந்த K.P.A.C. லலிதா, இவர் இயக்குனர் பரதனின் மனைவி.

மாதவியின் அப்பாவாக நடித்திருப்பவர் ஆங்கில நாடகங்களில் நடித்துப் புகழ்பெற்ற ஏவி.தனுஷ்கோடி, இவர் அமெரிக்கத் தூதரகத்தில் பல ஆண்டுகள் பணியாற்றியவர், சிறந்த ஒவியர், ஜெர்மனியில் இருந்து தமிழிற்கு மொழிபெயர்ப்புகள் செய்திருப்பவர், படத்தின் உயிரோட்டமாக இருந்தவர் இசைஞானி இளையராஜா, இவர்களுடன் கண்ணதாசன், வைரமுத்து இருவரின் அற்புதமான பாடல்கள், இப்படி படத்தின் உருவாக்கத்தில் இந்திய சினிமாவின் முக்கிய ஆளுமைகள் பலரும் ஒன்றிணைந்திருக்கிறார்கள், ஆனால் படம் வணிகரீதியாக பெரிய வெற்றியைப் பெறவில்லை, அதற்கான முக்கிய காரணம் கமல்ஹாசனின் நூறாவது படம் என்பது குறித்து அவரது ரசிகர்கள் மிதமிஞ்சிய எதிர்ப்பார்ப்பைக் கொண்டிருந்தார்கள், அதை நிறைவேற்றி வணிகவெற்றி பெறுவதைவிடவும் தனக்கு விருப்பமான ஒரு கதையை, விருப்பமான தொழில்நுட்பக்குழுவினரைக் கொண்டு உருவாக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் கமல்ஹாசன் இப்படத்தைத் தயாரித்திருந்தார்,

இசையை மையமாகக் கொண்ட படமாக அமைந்ததோடு சம்பிரதாயமான காதல்காட்சிகள், சண்டைகள், திடீர் திருப்பங்கள் எதுவுமில்லாமல் மாறுபட்ட கதைசொல்லும்முறையை கொண்டிருந்ததை அன்றைய ரசிகர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை, அதற்கு காரணம் அன்று தமிழ் சினிமா உருவாக்கி வைத்திருந்த பொது ரசனை,

1981களில் மாறுபட்ட காதல்கதைகளைக் கொண்ட திரைப்படங்கள் வெளியாகியிருந்தன, அதில் பன்னீர்புஷ்பங்க்ள், பாலைவனச்சோலை, இன்று போய் நாளை வா, அலைகள் ஒய்வதில்லை ஆகிய நான்கு படங்களும் நான்குவிதமான காதல்கதைகளை சுவாரஸ்யமாகச் சொல்லி வணிகரீதியாக வெற்றி பெற்றன, இந்த ஆண்டு வெளியான மகேந்திரன் இயக்கிய நண்டு புதிய கதைக்களனோடு வெளியானது, ஆனால் படம் வணிக வெற்றியை பெறவில்லை, அது போன்ற ஒரு சூழலே ராஜபார்வைக்கும் நேர்ந்த்து,

அழகே அழகு தேவதை பாடல் படமாக்கபட்டுள்ள விதம் சிறப்பானது, கேமிரா நகர்வதற்கு போதுமான அளவு கூட இல்லாத ஒரே வீடு, அதற்குள் முழுப்பாடலும் எடுக்கபட்டிருக்கிறது, ஆடம்பரமில்லை, பகட்டான ஆடை அணிகள் இல்லை, மாதவியின் கிளர்ச்சியூட்டும் அழகு தான் பாடலின் மையப்புள்ளி. பாடல் இடம் பெறும் சூழல் கதையின் போக்கில் ஒரு முக்கியத் தருணம். பாடலின் துவக்கமும் முடிவும் அதைக் கதையோடு சேர்ந்த பாடலாகப் பொருந்த வைக்கிறது,

இப்படத்தில் திரைப்படப் பின்னணி இசை சேர்க்கும் குழுவில் உள்ள பார்வையற்ற வயலின் இசைக்கலைஞராக கமல்ஹாசன் நடித்திருக்கிறார், கதை எழுதுவதற்காக அவரைச் சந்திக்கும் மாதவி அவரோடு நெருங்கிப் பழகத் துவங்குகிறார், இவரும் ஒருநாள் சமையல் செய்கிறார்கள், சமையல் புத்தகத்தை பார்த்துச் சமைக்க முற்படும் போது எதிர்பாராத விதமாக சமையல்பொருள்களை மாதவி மீது கொட்டிவிடுகிறார் கமல், அவள் குளித்துவிட்டு ஈரத்தலையில் ஒரு துண்டைக் கட்டிக் கொண்டவராக அமர்ந்திருக்கையில் அவளது அழகை வியந்து பாடுவதாகவே இப்பாடல் இடம் பெற்றுள்ளது

அழகே அழகு, தேவதை என்ற மூன்று வார்த்தைகளில் அவளது அழகின் மீதான லயப்பு முழுமையாக வெளிப்பட்டுவிடுகிறது, அதிலும் அழகு என்று உச்சரிக்கும் போது ஏற்படும் சிலிரிப்பு பின்வரும் தேவதை என்ற சொல்லின் வழியே நிறைவு அடைகிறது,

ராஜபார்வை முழுவதும் இளையராஜாவின் இசை ராஜாங்கம் தான், குறிப்பாக பார்வையற்றோர் பள்ளியில் நடைபெறும் வயலின் இசை நிகழ்வில் அவர் அமைத்துள்ள இசைக்கோர்வை உலகத்தரமானது, இப்பாடலின் துவக்கத்தில் ஜேசுதாஸின் ஹம்மிங் மயக்ககூடியது,

ஒவியத்தின் மீது கமல்ஹாசனுக்கு எப்போதுமே ஆர்வம் அதிகம், அவரது படங்களில் ஒவியர்கள் கதாபாத்திரமாக வருவதுண்டு, அவரே அன்பே சிவத்தில் ஒவியராக நடித்திருக்கிறார், காதலா காதலாவிலும் ஒவியம் வரைபவராக பிரபுதேவா சித்தரிக்கபடுவார், விருமாண்டியிலும் ஒரு ஒவியர் முக்கிய சம்பவங்களின் சாட்சியாக இருப்பார், இப்பாடலில் மாதவி சித்திரம் வரைந்து கொண்டிருக்க அவரது ஒவ்வொரு அங்கமாக தொட்டுணர்ந்து கமல்ஹாசன் பாடுகிறார்,

தனது அழகைப்பற்றி பாடுவதை உள்ளுற ரசித்தபடியே அவரைசீண்டிக் கொண்டிருக்கிறார் மாதவி, குறிப்பாக பட்டன் அணியாத மேல்சட்டையுடன் உள்ள கமலின் உணர்ச்சிபாவங்களும், அவரது தலையில் செல்லமாகத் தட்டி விளையாட்டுகாட்டும் மாதவியின் நளினமும் காதல்வசப்பட்ட அவர்களின் நெருக்கத்தை தெளிவாக காட்சிபடுத்தியிருக்கின்றன

படியில் அமர்ந்திருந்த மாதவியைக் காணவில்லை என்று கமல் தேடும்போது அவரது விரலைப்பற்றி பல்லிடுக்கில் வைத்துக் கடிக்கும் அவரது குறும்புதனமும் விடுபடாத விரலோடு ததும்பும் மனமயக்கத்தில் அந்த இதழ்களை தொட்டு அறிந்து அவர் பாடுகிறார்

சிப்பி போல இதழ்கள் ரெண்டும்

மின்னுகின்றன

சேர்ந்த பல்லின் வரிசையாவும்

முல்லை போன்றன

மூங்கிலே தோள்களோ

தேன்குழல் விரல்களோ

ஒரு அஙகம் கைகள் அறியாதது

அறைக்குள்ளாகவே பாடல் படமாக்கபட்டுள்ளது, ஆனால் மாறுபட்ட கோணங்கள், உணர்ச்சிநிலைகள், ஊடல் என அந்தரங்க நெருக்கத்தை தருகிறது இப்பாடல், அதற்கு முக்கிய காரணம் இளையராஜாவின் நேர்த்தியான இசையும் யேசுதாஸின் மென்மையான குரலும் பருண் முகர்ஜியின் கவித்துவமான ஒளிப்பதிவும், நடனமில்லாமல் இயல்பாக உணர்ச்சிகளை வெளிப்படுத்திய கமல் மற்றும் மாதவியின் நடிப்புமே, இவையே பாடலின் வெற்றிக்கான முதன்மைக் காரணங்கள்

ராஜபார்வை படத்தில் குறிப்பிட்டுள்ள சொல்ல வேண்டிய மூவர், தாத்தாவாக நடித்துள்ள எல்வி பிரசாத், இவர் பிரசாத் ஸ்டுடியோவின் அதிபர், தெலுங்கில் நடிகராக அறிமுமாகி முக்கியத் தமிழ் தெலுங்கு தயாரிப்பாளராக பல புகழ்பெற்ற படங்களை உருவாக்கியவர், படத்தில் அவரது கதாபாத்திரம் வித்தியாசமானது, தனது பேத்தியின் காதலுக்காக அவர் நடந்து கொள்ளும விதம், இரவில் சாலையில் நிற்கும் கமலிடம் பெர்த்டே வாழ்த்து சொல்லும் அன்பு, மாதவியின் காதலைப்பற்றி முன்பே தெரியுமா எனக் கோபத்துடன் கேட்கும் மகனிடம் தடுமாற்றதுடன் சமாளிக்கும் பாங்கு, இறுதிக் காட்சியில் தேவாலயத்தில் இருந்து காதலர்களை சேர்த்து வைக்கும் போது வெளிப்படும் அவரது உறுதியான மனப்போக்கு யாவும் அவரை மறக்கமுடியாத ஒரு நடிகராக மாற்றிவிடுகின்றன,

இது போன்ற பாத்திரப்படைப்புகள் இன்று தமிழ் சினிமாவில் நிறைய வந்துவிட்டன, ஆனால் ராஜபார்வை தான் அதன் முதல்முயற்சி, அதற்கு முந்திய ஆண்டுகளில் வயதானவர்கள் என்றாலே ஒரே மெலோடிராமாவாக இருக்கும், அதைத் தூக்கிப்போட்டுவிட்டு புதியதொரு கதாபாத்திரமாக எல்விபிரசாத்தின் தாத்தா ரோல் உருவாக்கபட்டிருக்கிறது

இது போலவே படத்தில் தனித்து பாராட்ட இன்னொரு கலைஞர் ஏவி தனுஷ்கோடி, ஆங்கிலப்பேராசிரியராக சில ஆண்டுகாலம் பணியாற்றிய இவர் இருபது ஆண்டுகள் அமெரிக்க தூதரகத்தில் பொருளதாரப்பிரிவில் ஆலோசகராக பணியாற்றியவர், ஆங்கில நாடகங்களில் நடித்துப் புகழ் பெற்றவர், தேர்ந்த ஒவியர், மொழிபெயர்ப்பாளர், இவர் மாதவியின் தந்தையாக நடித்திருக்கிறார்,

படபடப்பும், முன்கோபமும் கொண்ட கதாபாத்திரமது, அவரது கார் வி.கே.ராமசாமி காரோடு மோதும் போது ஏற்படும் கோபம், வீட்டிற்கு அழைத்துவரப்பட்ட கமல்ஹாசனிடம் தன்னை அறிமுகம் செய்து கொள்ளும் விதம், மகளிடம் கோபத்தில் கத்தும் போது ஏற்படும் உணர்ச்சிவேகம், பெண்கேட்டு வந்த கமல்ஹாசன் முன்பாக அப்பாவியாக கேட்கும் இயல்பு, இரவில் குடித்துவிட்டு தன்வீட்டின் முன்பு கலாட்டா செய்யும் கமல் கோஷ்டியைக் கண்டு ஏற்படும் ஆத்திரம் என்று தனுஷ்கோடி சிறப்பாக நடித்திருக்கிறார், இவ்வளவு தேர்ந்த நடிகர் ஏன் தமிழ்சினிமாவால் அதிகம் கண்டுகொள்ளப்படாமல் போனார் என்பது ஆதங்கமாகவே உள்ளது,

இது போலவே கமலின் சிற்றன்னையாக வரும் K.P.A.C. லலிதா, அரியதொரு கதாபாத்திரம், வழக்கமான சித்தி போல கொடுமைக்காரியாக அவர் சித்தரிக்கபட்ட போதும் வீடு தேடிவந்து அவர் கமலிடம் பேசும் முறையும், அவருக்காக விகேராமசாமியிடம் பெண் கேட்பதும், போலீஸில் இருந்து மகனை மீட்டுவந்து காட்டும் அக்கறையும், மாதவி வீட்டில் போய் பேசும் கம்பீரமும், தான் விரும்பிய பெண்ணை கமல் ஒத்துக் கொள்ள மறுக்கும் போது காட்டும் ஆதங்கமும் என K.P.A.C. லலிதா தேர்ந்த நடிகை என்பதை நிருபணம் செய்திருக்கிறார், அவருக்கும் கமலிற்குமான உரையாடல்கள் கூர்மையாக எழுதப்பட்டுள்ளன,

எண்பதுகளில் வெளியான மலையாளத்திரைப்படங்களின் அழகியலை ஒத்தே ராஜபார்வை உருவாக்க்பட்டிருக்கிறது, மொத்தபடத்திலும் பத்தே கதாபாத்திரங்கள், அதிலும் நான்கு பேர் தான் முக்கியமானவர்கள், அவர்களை சுற்றியே படம் இயங்குகிறது. சம்பிரதாயமான காட்சிகள் என ஒன்று கூட கிடையாது, கமல் குடியிருக்கும் வீடு, அவரது ஒலிப்பதிவு கூடம், பார்வையற்றோர் பள்ளி யாவும் மிக இயல்பாக, யதார்த்தமான பின்புலமாக உருவாக்கபட்டிருக்கிறது,

1980 ஆண்டு சாய் பரஞ்சிபே ஸ்பார்ஷ் என்றொரு படத்தை இயக்கினார், இதில் நஸ்ருதீன்ஷா பார்வையற்றவராக நடித்திருக்கிறார், இப்படத்திற்கு ராஜபார்வைக்கும் நிறைய ஒற்றுமைகள் இருக்கின்றன, இரண்டிலும் முக்கியக் கதாபாத்திரங்கள் மற்றவர்களிடம் இருந்து உதவியை மட்டுமே எதிர்பார்க்கிறார்கள், blind need help not pity or charity என்பதே இருவரது எண்ணமும்,

இரண்டிலும் பார்வையற்றோர் பள்ளி முக்கியக் களமாக உள்ளது, ஸ்பார்ஷ் படத்தில் ஷபனா ஆஸ்மி கதாநாயகியாக நடித்திருக்கிறார், அவரது தோற்றம் மற்றும் கேசத்தை வாறிவிடும் இயல்பு ஆகியவை போலவே மாதவியின் தோற்றமும் உள்ளது,

ஸ்பார்ஷ் படத்தில் ஒரு நாள் ஷபனா ஆஸ்மியின் பாடலை தற்செயலாக கேட்ட நஸ்ரூதீன் ஷா அவரைத் தனது பள்ளியில் உள்ள மாணவர்களுக்கு பாட்டு கற்றுதரும்படியான சேவைக்கு அழைக்கிறார், விதவையான ஷபனா ஆஸ்மி தயங்கி ஏற்றுக் கொள்கிறார், இருவரும் பேசிப்பழகி ஒருவரையொருவர் அறிந்துகொள்கிறார்கள், ஷபனாவைக் காதலிக்கத் துவங்குகிறார் நஸ்ரூதீன் ஷா, அவர்களது திருமணம் நிச்சயக்கபடுகிறது, ஆனால் கருத்துவேறுபாடால் திருமணம் நின்று போகிறது, ஷபனா முன்பு போலவே பார்வையற்றோர் பள்ளியில் பாடல் சொல்லிக் கொடுத்தபடியே தனது நாட்களை கழிக்கிறார், முடிவில் ஒருவரையொருவர் புரிந்து கொள்கிறார்கள்,

இப்படத்தின் கதையும் ராஜபார்வையின் கதையும் வேறுபட்டவை, ஒருவேளை ஸ்பார்ஷ் படத்திற்கு கிடைத்த வரவேற்பும் அங்கீகாரமும் காரணமாக கமல் ராஜபார்வையை உருவாக்கியிருக்க்கூடும், நஸ்ரூதீன் ஷாவிற்கு இப்படத்திற்காக தேசிய விருது கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது, ஆனால் தமிழ் சினிமாவில் அதன்முன்புவரை இப்படியொரு கதாபாத்திரம் உருவாக்கபடவில்லை,

ஒரு நடிகராக கமலின் இன்னொரு உயரிய பரிமாணம் இப்படத்தில் வெளிப்பட்டுள்ளது, வழக்கமான டுயட்டுகள், சண்டைகாட்சிகள், நகைச்சுவை காட்சிகள் எதுவும் படத்தில் இல்லை, படம் முழுவதும் பார்வையற்றவரின் மொழியாக இசையே உள்ளது, அம்மாவிடம் கமல் வயலினில் பேசும் காட்சியில் மாஸ்ட்ரோ இளையராஜாவின் இசை விளையாடுகிறது, பாடலைக் கேட்கும் ஒவ்வொரு முறையும் மாவிலை பாதமோ என்ற உவமை கண்ணதாசனின் கற்பனையை கொண்டாட வைக்கிறது, அவ்வகையில் இப்பாடல் அழகே அழகு என்று தான் சொல்ல வேண்டும்

••

(உயிர்மையில் வெளியாகி வரும் பறவைக்கோணம் பத்தியில் இடம்பெற்றது)

madhu
26th September 2014, 04:30 PM
http://antrukandamugam.files.wordpress.com/2014/09/nalina-sasikumar-thirumalai-thenkumari.jpg?w=593&h=451

வாசு சார் /எஸ்வி சார்

மேலே இருக்கும் படத்தில் சசிகுமார் உடன் இருக்கும் நடிகை நளினா நாளை நமதே திரை படத்தில் குழந்தைகளுக்கு ஆயாவாக தோன்றுவார் ..

இவர் ஏ.பி.நாகராஜன் படங்களில் வருவாரே அவரா ? ( திருமலை தென் குமரி படத்தில் பல மொழிப் பாடலில் சீர்காழியுடன் பாடுவாரே ? )

http://youtu.be/1suNIBbS3M4

gkrishna
26th September 2014, 04:32 PM
http://www.youtube.com/watch?v=MGb3o4StPVg

gkrishna
26th September 2014, 04:33 PM
இவர் ஏ.பி.நாகராஜன் படங்களில் வருவாரே அவரா ? ( திருமலை தென் குமரி படத்தில் பல மொழிப் பாடலில் சீர்காழியுடன் பாடுவாரே ? )



ஆமாம் மது சார் சரியாக சொன்னீர்கள்

நன்றி பாடல் தரவேற்றியதற்கு

madhu
26th September 2014, 04:36 PM
மீண்டும் ஒரு எல்.ஆர்.ஈஸ்வரியின் மயக்கும் குரலில் டி.எம்.எஸ்ஸுடன்... வைராக்கியம் படத்தில் வெண்ணிற ஆடை நிர்மலாவும் எஸ்.எஸ்.ராஜேந்திரனும் ஆட...

தேருக்கு சேலை கட்டி தெருவில் விட்டா
யாருக்கும் ஆசை வரும் பார்வை பட்டா

http://youtu.be/1-Dq4boQr40

gkrishna
26th September 2014, 04:43 PM
காலமிது காலமிது… கண்ணுறங்கு மகளே… காலமிதைத் தவற விட்டால்… தூக்கமில்லை மகளே… தூக்கமில்லை மகளே…’ என்ற சித்தி திரைப்பாடல் திரையிசைப்பாடல்களில் மிக அபூர்வமான ஒன்று,

இப் பாடலை கேட்டு பலநேரங்களில் எனது சித்தி அழுவதைக் கண்டிருக்கிறேன், பல இரவுகளில் நானே இதை கேட்டு மனம் நழுவிப்போய் கரைந்திருக்கிறேன், ஒரு திரையிசைப்பாடலுக்குள் பெண்ணின் வலியை அத்தனை துல்லியமாகப் பதிவு செய்துவிட முடியும் என்பதற்கு இப்பாடல் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு

சித்தி திரைப்படம் 1966-ல் வெளிவந்த்து, இதில் ஜெமினி கணேசன், பத்மினி, எம்.ஆர். ராதா ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்தை இயக்கியவர் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன்.

சித்தி என்றாலே கொடுமைகள் செய்வாள் என்ற பொய்யான பிம்பத்தை மாற்றியது இப்படம். பத்மினியின் நடிப்பு படத்தின் தனிப்பலம், வை.மு.கோதைநாயகியின் நாவலைப் படமாக்கியிருந்தார்கள்

திரையிசையில் எவ்வளவோ தாலாட்டு பாடல்கள் உள்ளன, ஆனால் இந்த தாலாட்டு உறங்கும் குழந்தைக்கு மட்டுமானதில்லை, அது உலகெங்கும் உள்ள பெண்களின் மனக்குரலாகவே ஒலிக்கிறது. பாடல் இப்படித் துவங்குகிறது

பெண்ணாகப் பிறந்தவர்க்கு
கண்ணுறக்கம் இரண்டு முறை
பிறப்பில் ஒரு தூக்கம்
இறப்பில் ஒரு தூக்கம்
இப்போது விட்டு விட்டால்
எப்போதும் தூக்கம் இல்லை
என்னரிய கண்மணியே
கண்ணுறங்கு கண்ணுறங்கு

ஆரம்ப வரிகளிலே இது எளிமையானதொரு தாலாட்டு இல்லை என்பது புரிந்துவிடுகிறது.பெண்ணாகப் பிறந்தவளுக்கு சிறு வயதில் மட்டுமே. நிம்மதியான தூக்கம் கிடைக்கிறது, வயது. வளர வளர அவளது தூக்கம் தானாக ஓடிப் போய்விடுகிறது என்பதை அடுத்த வரிகள் அடையாளம் காட்டுகின்றன

நாலு வயதான பின்னே
பள்ளி விளையாடல்
நாள் முழுதும் பாடச் சொல்லும்
தெள்ளுதமிழ்ப் பாடல்
எண்ணிரண்டு வயது வந்தால்
கண்ணுறக்கம் இல்லையடி
ஈரேழு மொழிகளுடன்
போராடச் சொல்லுமடி
தீராத தொல்லையடி

என பருவ வயதில் தொலைத்த தூக்கத்தை சொல்லும் இதே பாடல்

மாலையிட்ட தலைவன் வந்து
சேலை தொடும்போது
மங்கையரின் தேன் நிலவில்
கண்ணுறக்கம் ஏது..
கண்ணுறக்கம் ஏது

என இல்லறசுகம் அனுபவிப்பதை சொல்லியும் விளக்குகிறது

ஐயிரண்டு திங்களிலும்
பிள்ளை பெறும்போதும்
அன்னை என்று வந்தபின்னும்
கண்ணுறக்கம் போகும்
கண்ணுறக்கம் போகும்
கை நடுங்கிக் கண் மறைந்து
காலம் வந்து சேரும்
காணாத தூக்கமெல்லாம்
தானாகச் சேரும்
தானாகச் சேரும்

என பெண்ணின் வாழ்க்கை கணவன் பிள்ளை குடும்பம் என மற்றவர்களுக்காக தூக்கம் பறிபோய்விடுவதை வேதனையோடு பதிவு செய்கிறது

கண்ணதாசன் வரிகளும் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில்… பி. சுசீலா பாடும் முறையும் இதை மறக்கமுடியாத பாடலாக்கியிருக்கிறது, சினிமா பாடல்களை வெற்றுவரிகளாக்கி காற்றில் கறைபடிய விடும் பாடல்களுக்கு மத்தியில் இப்பாடல் காலத்தை தாண்டியும் மனதை ஈரமாக்கிக் கொண்டேயிருக்கிறது, அது தான் உண்மையின் வலிமை என்று தோன்றுகிறது,

https://encrypted-tbn2.gstatic.com/images?q=tbn:ANd9GcRqOTU8M-3YdCsMiCODVGiSjjEY9eJqR_vpm3AxIGaPipNoTWdF

gkrishna
26th September 2014, 04:47 PM
http://www.youtube.com/watch?v=4mKDOiLnD-k

gkrishna
26th September 2014, 05:18 PM
செவ்வானத்தில் ஒரு நட்சத்திரம் சிரித்தது எனைப் பார்த்து
என் சிவந்த உடலா இதழா மனமா
சிரித்தது எதைப் பார்த்து

என்ற வேதா இசையில்
சுசிலா, டிஎம்எஸ் பாடிய
ஜெய்,பாரதி நடித்த நான்குகில்லாடிகள் திரை பட பாடல்
கவியரசர் கவித்துவ வரிகள்


ஆடையின் வனப்பை நீ எழுத
ஆசையின் அழகை நான் எழுத
நாடகம் என்றே நான் நினைக்க
நடப்பதை உன்னிடம் ஏன் மறைக்க

உறவுக்கு என்றும் இரண்டு பக்கம், அதை உன்னிடம் சொல்வதில் என்ன வெட்கம்

டாஸ்மாக் monitor சரக்கை விட போதை தரும் பாடல் .இப்ப இந்த monitor brand சரக்கு கிடைக்குதா டாஸ்மாக் கடைகளில் :)


MONITOR BRANDY full 700 ml 280
half 375 ml 140
quarter 180 ml 70


குடியை மறப்பதற்கு சிறந்த மருந்து

இந்த பாடலில் கிடைக்கும் போதை இறங்கவே இறங்காது .ஆகையால் குடி பழக்கம் உள்ள மக்கள் எல்லாம் டாஸ்மாக் ,பார் செல்வதற்கு பதிலாக இந்த பாடலை அடிகடி கேட்டு மகிழவும். எப்போது எல்லாம் குடிக்க வேண்டும் என்ற எண்ணம் வருகிறதோ அப்போது எல்லாம் இந்த பாடலை கேட்டு மகிழவும் . :)

vasudevan31355
26th September 2014, 05:56 PM
மதுஜி!

கரெக்ட். 'திருமலை தென்குமரி' படப் பாடலில் (அழகே தமிழே நீ வாழ்க) சீர்காழி பாடலை ஆரம்பித்தவுடன்

'குழந்தைகள் பேசும் மழலையிலே
கொஞ்சும் அன்னை தாலாட்டிலே'

என்று சசிகுமார் அருகில் இருக்க, பாடும் நடிகைதான் நளினா. பின் சீர்காழியுடன் இணைந்து அழகே தமிழே பாடுவார். கிருஷ்ணா சார் தரவேற்றியிருந்த படமும் திருமலை தென் குமரிதான்.

இவர் கிருஷ்ணா சர் கூறியது போல 'நாளை நமதே' படத்திலும் வருவார். 'குடும்பப் பாட்டு' பாடி அண்ணன் தம்பிகள் இணைந்தவுடன் கூலிங்கிளாஸ் போட்டு சந்தோஷப்படும் நடிகை இவர்தான்.

கிருஷ்ணா சார்,

நீங்க கேட்ட நடிகை நளினா ஸ்டில் 'நாளை நமதே' படத்திலிருந்து.

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/nal.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/nal.jpg.html)

vasudevan31355
26th September 2014, 06:21 PM
மதுஜி/ கிருஷ்ணா சார்,

நடிகை நளினா பற்றி இன்னொரு தகவல். இவர் ஆரம்ப காலம் கொண்டே தமிழ்ப் படங்களில் நடித்து வந்துள்ளார். இவர் சில படங்களில் வில்லியாகவும் நடித்திருப்பது நினைவுக்கு வருகிறது. காலேஜ் பிரின்சிபல், டீச்சர் போன்ற வேடங்களும் பண்ணியவர்.

இவர் ஒரு நடன நடிகையும் கூட. நடிகர் திலகத்தின் அருமையான படமான கே.எஸ்.ஜியின் இயக்கத்தில் வெளிவந்த 'குலமா குணமா' படத்தில் இவருக்கு ஒரு நடனப் பட்டு ஒன்று உண்டு. இவருடன் கே.எஸ். கோபாலகிருஷ்ணன் 'வாழையடி வாழை'யில் அறிமுகப்படுத்திய பி.ஆர்.வரலஷ்மி ஆடுவார். இவருக்குக் குரல் ஜானகி. இருவருமே அழகாக ஆடுவார்கள். உடன் கோஷ்டியினரும் உண்டு. இந்த நடன மாதர் கோஷ்ட்டியில் 'மன்மத லீலை' நடிகை ஹலமும் ஒரு ஓரமாக ஆடுவதை நீங்கள் பார்க்கலாம்.

http://i.ytimg.com/vi/AVjY106yB3w/maxresdefault.jpg

சுசீலாம்மா இவருக்காக குரல் தந்திருப்பார். பாடலும் அருமையான பாடல். ரகளை மியூசிக். இந்தப் பாடலில் இன்னொரு விசேஷம். பாடலுக்கு ஆடும் நளினாவும், பி.ஆர்.வரலஷ்மியும் பாடல் முழுதும் ஒருத்தரையொருத்தர் 'அக்கா' என்றே அழைத்துக் கொள்வார்கள். (வயதில் யார் சின்னவர் என்ற பெண்களுக்கே உரித்தான மானப் போராட்டம்:)) ஆனால் இப்பாடலில் நளினா படுஅக்கா.:) ஆனால் அழகு அக்கா.

'மாத்தூரு ராமக்கா
மாப்பிள்ளை யாரக்கா
ஆத்துக்கு பக்கமா
அலைஞ்சது ஏனக்கா'


http://www.youtube.com/watch?v=AVjY106yB3w&feature=player_detailpage

vasudevan31355
26th September 2014, 06:43 PM
'குலமா குணமா' பட டைட்டிலில் நடனம் ஆடும் நளினா, பி.ஆர்.வரலஷ்மி பெயர்கள் தனித்தனியே.

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/VTS_02_1VOB_000271017.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/VTS_02_1VOB_000271017.jpg.html)

vasudevan31355
26th September 2014, 07:24 PM
மாலை மதுரம் 6

'நாலு வேலி நிலம்' படத்தில் ஒலிக்கும் 'கல்யாணமாம் கல்யாணம்... கமலப் பொண்ணு கல்யாணம்'.


http://www.youtube.com/watch?v=n3NzbSDho7M&feature=player_detailpage

vasudevan31355
26th September 2014, 07:33 PM
அதே படத்தில் 'குளிப்பேன் பன்னீரிலே கோமானைப் போலவே... கொடுப்பேன் அள்ளி அள்ளி எல்லோரும் வாழவே' என்ற எதிர்கால கனவு கண்டபடி குலதெய்வமும், 'பணத்தைக் கண்டால் உங்கள் மனசென்னை விரும்புமா' என்று மைனாவதியும் இணைந்த காமெடி காதல் பாடல். எஸ்.சி.கிருஷ்ணனும், ஜமுனாராணியும் பின்னணி.


http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=R31ZIOanl5w

vasudevan31355
26th September 2014, 07:43 PM
மாலை மதுரம் 7

நம் ராஜ்ராஜ் சாருக்காக

எம்.ஆர்.சந்தான லஷ்மி பாடும் ஓர் அரிய பாடல். 'லஷ்மி விஜயம்' திரைப்படத்திலிருந்து.

'சோதனையோ அறியேனே நானே'


http://www.youtube.com/watch?v=IKsdpco0vkw&feature=player_detailpage

madhu
26th September 2014, 07:48 PM
இதோ இன்னொரு டி.எம்.எஸ்., எல்.ஆர்.ஈஸ்வரி பாடல் ...
அதே வைராக்கியம் படத்தில் இருந்து.. ஜெமினி கணேசன், நிர்மலாவுக்காக

சொல்லத் துடிப்பது என்ன .. மெல்லச் சிரிப்பது என்ன

http://youtu.be/WVi4l_UnGNo

madhu
26th September 2014, 07:52 PM
புதிய வாழ்க்கையில் ஜெயபாரதியை பேசச் சொல்லி வற்புறுத்தும் ஜெய்சங்கர்

இளமையான எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் குரலில் பேசு மனமே பேசு

http://youtu.be/v7Fl8GC3ReI

rajeshkrv
26th September 2014, 08:49 PM
இந்த நளினா பின்னாட்களில் அக்கா அண்ணி வேடங்கள் செய்தவர். அவள் அப்படித்தானில் ஸ்ரீப்பிரியாவின் அக்காவோ அண்ணியோ இவர் தான்..
இருந்தாலும் ஒரு திடுக்கிடும் தகவல் தருகிறேன் .. இந்த நளினா நளினி என்ற பெயரில் Dashing hero ஃபெரோஸ் கானுடன் அஞ்சான் ஹை கோயி ப்டத்தில் ஜோடியாக நடித்தார் என்றால் நம்ப முடிகிறதா

இதோ

https://www.youtube.com/watch?v=g7adxDQ958c


https://www.youtube.com/watch?v=izzjBxeeixU

JamesFague
26th September 2014, 09:26 PM
Sweet Melody song.



http://youtu.be/-HSgSW5XKdM

JamesFague
26th September 2014, 09:30 PM
Firstever male version of Akhiyon ke jharokon se. What a melody. Simply Superb.


http://youtu.be/1kvuU0G3uBU

JamesFague
26th September 2014, 09:34 PM
Enjoy the Zindagi Ek Safar song from Andaz with Rajesh Khanna and Hema.


http://youtu.be/CIj7GoMZP0k

JamesFague
26th September 2014, 09:42 PM
Enjoy the song from Dharmatma starring Feroz Khan & Hema


http://youtu.be/HVaKhdBaIQk

chinnakkannan
26th September 2014, 10:33 PM
ஹாய் க்ருஷ்ணா ஜி, வாசு சார் மதுண்ணாவ், ராஜேஷ்ஜி நன்றி..

கே.பி.ஏ.சி லலிதா தானும் இப்படிப் பேசப் படுவோம் என நினைக்கவே இல்லை என்று சொல்லிக் கொண்டிருந்ததாக எனது மத்தியானத் தூக்கத்தில் கனவில் வந்த என் பாட்டி சொன்னார்!

ம்ம் ராஜ பார்வை படம் வெகு நாள் முன்பு பார்த்தது.. நைஸ் ரைட் அப்..எல்வி.பிரசாத் தானே இதயக் கமலம் தயாரித்தவர்.. அழகே அழகு தேவதை பாடல் சுத்தமாக மறந்து விட்டிருந்தது எனக்கு நாலு வருடங்களுக்கு முன்னால்.. சென்னை சென்றிருந்த போது என் நண்பனின் காரில் கேட்டேன்..என்ன பாட்டுடா ஏதோ ரொம்ப ஸ்லோவா இருக்கறா மாதிரி இருக்கே என முதல் இரண்டு வரிகளில் கேட்க அவன் ஸ்டியரிங்கை விட்டு விட்டு என்னை முறைத்தான்..என்னடா மறந்து போச்சா ராஜபார்வை என பின் நினைவுக்கு வந்தது..

ராஜேஷ்..கேபிஏசி.ல வோட ஹிந்தி தகவலுக்கு தாங்க்ஸ்..

வாணி கணபதி – உன்னை நான்பார்த்தது வெண்ணிலா வேளையில் ஆடுபவர் தானே..ம்ம்

எஸ்.வாசுதேவன் சார்.ஹிந்திப்பாடல்களுக்கு நன்றி.

மதுண்ணா பேசு மனமே பேசு பார்க்கணும்..பாட்டு கேட்டிருக்கிறேன்..பி.பா. ஒரு தாங்க்ஸ்..

எஸ்.வி சார்..உ.சு.வா.. பாட்டை வைத்துகதை பண்ணியிருந்தார்கள் என்று சொல்லப்பட்டாலும் கூட படமாக்கிய விதம் அந்தக் காலத்து ரசிகனை மதித்து அவனுக்கு ஒரு ஃபுல் எண்ட்ர்டெய்ன்மெண்ட் வழங்க வேண்டும் விதம் விதமான நாடுகளைக் காண்பிக்க வேண்டும் என்ற சிந்தனையில் எடுத்து வழங்கிய எம்ஜிஆரின் டைரக்ஷன் பெருந்தன்மை மறக்க இயலாது..உ.சு.வா முழுக்க் முழுக்க எம்.ஜி.ஆர் தான்..பாராட்டெல்லாம் அவருக்குத்தான்..

*

chinnakkannan
26th September 2014, 10:36 PM
*
மத்தியானம் கனவில் வந்த பாட்டியுடனான என் உரையாடல்

“ஹாய் பாட்டி”

“ஹாய்..என்னடா இது..இவ்ளோ குண்டாயிட்ட…ஒன் வயசுல ஒங்கப்பா எப்படி இருந்தான் தெரியுமா..

“சும்மா சொல்லாத பாட்டி.. அவரும் என்னை மாதிரிதான் இருந்திருப்பாரு..ஆமா ஏதோ வராதவ வந்திருக்க..எனக்கு ஒரு விஷ்யம் சொல்லேன்”

“யாரைப் பத்தி..மோனல் கஜ்ஜார் பத்தியா..சரி..இன்னிக்குலீவ் தானே..தலைக்குப் போட்டுக்கலையா..என்னடா அங்கங்க கொஞ்சம் வெள்ளையா இருக்கு..”

“ஷ்..பாட்டி ..நான் தான் கொஞ்சம் வயசான மாதிரி இருந்தா ஒரு கெட் அப்பா இருக்கும்னு கொஞ்சம் ஒய்ட் டை போட்டிருக்கேன்..இந்த எஸ்.ஜி.கிட்டப்பா எப்படி இருப்பார்..”

“ம் அது ஒரு காலம் டா கண்ணா நன்னா இருப்பான்..பார்த்துண்டே இருக்கலாம்..அல்பாயுசு..இங்க தான் சொர்க்கம் ரம்பா காலனில நாப்பதாம் நம்பர் வீட்ல இருக்கான்…வில்கிப்பீடியால பாத்தியோ..அதுஎன்ன சொல்லுதுன்னா..

எஸ். ஜி. கிட்டப்பா (S. G. Kittappa) என்று அழைக்கப்பட்ட செங்கோட்டை கங்காதரன் கிட்டப்பா (ஆகத்து 25, 1906 – டிசம்பர் 2, 1933) சினிமா காலத்துக்கு முன்பே 1920களில் பிரபலமாயிருந்த ஒரு செவ்வியல் பாடகர் மற்றும் நாடகக் கலைஞர். இவர் சினிமா நடிகையும் பாடகியுமான கே. பி. சுந்தராம்பாளின் கணவர்.”

“அதைச் சொல்ற்துக்கு நீ எதுக்கு பாட்டி.. கே.பி.எஸ் பிடிக்குமா..”

“ம்..கொடுத்து வச்சவ.. நல்ல புருஷன்..ஆனா ஆறே வருஷம் தான் வாழ்ந்தா புருஷனோட..ஆனா குரல் இருக்கே வெகு கம்பீரம்..”

“ஆமா பாட்டி பழம் நீயப்பா ல்லாம் பார்த்திருக்கேன்..”

“காரணமில்லாம எலி ரேமண்ட்ஸ் ஸ்யூட்லாம் போடாதே..எதுக்குக் கேக்கறன்னு சொல்லட்டா....

“சொல்லு..”

“கே.பி.எஸ் ஸோட காதல்கதை தான் காவியத் தலைவன்னு தினமலர்லபோட்டிருக்கான்..அதானே..”

“ஆமா பாட்டி..அந்தக்கால லவ்வாச்சே..படம் ஓடுமா என்ன..”

“அதான் அவங்க கதை இல்லைன்னு வசந்த பாலன் சொல்லியிருக்காரே..இன்ஸ்பிரேஷன் மட்டும் தானாம்.. அப்புறம் கண்ணா காதல் எந்தக்கால்த்துலயும் காதல் தான்..இதுல அந்தக்காலம் என்ன இந்தக்காலம் என்ன..இந்த வேதிகாப்பொண்ணு இருக்காளே அவ என்ன ஓ.கேயாத் தானே இருக்கா...”

“போங்க பாட்டி நல்லாத் தான் இருக்கா..இப்படில்லாம் பட்டுனு கேக்காதீங்க..இவ காதுல விழுந்துடப் போவுது..”

“அடப்பாவி.. அவள மாதிரித்தான் நான் சின்ன வயசுல இருந்தேன்னு சொல்ல வந்தேன்..இந்தா கொட்டு வாங்கிக்கோ”

“ஆ” என முழித்து விட்டேன்..!

chinnakkannan
26th September 2014, 11:36 PM
நாலு வேலி நிலம் லஷ்மி விஜயம் பாடல்கள் பார்த்தேன் வாசு சார் .. நான் பார்த்திராத கேட்டிராத பாடல்கள்.. நன்றி
மதுண்ணா சொல்லத்துடிப்பது என்ன நல்ல பாட்டு ஜெம்னி- நிம்மி ஜோடி க்யூட்.. தாங்க்ஸ்

கிருஷ்ணா சார்..ரொம்ப நாளைக்கப்புறம் அழகே அழகு தேவதை பார்த்தேன்.. நைஸ்.. இது மாதிரி இப்ப ஒரு இப்பவே இப்பவே அழகுப் பாட்டு ராமன் தேடிய சீதைல இருக்கு தெரியுமா.. தாங்க்ஸ்

காவிரிமைந்தன் பற்றித் தெரியாது..மு.மேத்தா தெரியும் அவர் சினிமாப்பாட்டுன்ன வுடனே நினைவுக்கு வருவது.. தோட்டத்தில பாத்திகட்டி – வேலைக்காரன் ரஜ்னி-சொ.பு. அப்புறம் தேனருவியில் நனைந்திடும் மலரோ – ஆகாய கங்கை சுஹாஸ்-கார்த்திக்

டிகேஏசி. நளினாவிற்குப் பதில் ல்லிதா என எழுதிவிட்டேன்..அது காட்சிப் பிழை!

rajraj
27th September 2014, 02:12 AM
From Padmini's Hindi movie Kalpana

Bekasi Had se Jab Guzar Jaye........

http://www.youtube.com/watch?v=QKL_GPfsABE

Raga: Desh



I posted this in Hindi songs thread long time back. Hope you don't mind the repetition. :)

Padmini made her debut in another Kalpana released in 1948 produced by Uday Shankar, a famous dancer.

Richardsof
27th September 2014, 06:41 AM
சின்ன கண்ணன் சார்

உலகம் சுற்றும் வாலிபன் - படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு எம்ஜிஆர்தான் முழு காரணம் - உங்கள் கூற்று நூற்றுக்கு நூறு உண்மை ..

vasudevan31355
27th September 2014, 07:49 AM
மதுஜி!

இதோ நீங்கள் கேட்ட பாடல். 'நானும் ஒரு பெண்' திரைப்படத்தில் நம் இசையரசி பாடிய, படத்தில் இடம் பெறாத இன்னமுத கானம்.

'கண்ணழகின் சன்னதியில் காத்திருந்தேன்
உன் கனிமுகத்தின் தரிசனத்தைப் பார்த்திருந்தேன்'

ஆகா! என்ன ஒரு அருமையான பாடல். எப்போதோ கேட்டது. முதல் வரி கேட்டவுடன் டபார்' என்று ஞாபகம் வந்துவிட்டது. பாடல் முடிந்தவுடன் கண்களின் ஓரங்களில் நீர் கசிந்தது தெரிந்தது. அதுவும் 'உன்னைக் கண்ட கண் ஒருநாள் ஓய்ந்து விடும் ....உனக்கு உணவளித்த கை ஒருநாள் சாய்ந்து விடும்' வரிகள் ரொம்பவே கலங்க வைத்து விட்டன. சுசீலாம்மா... என்ன சொல்வது? நா எழ வில்லை.

அருமையான பாடலை நீண்ட நாட்களுக்குப் பிறகு நினைவு கூறச் செய்த உங்களுக்குத்தான் நன்றி கூற வேண்டும்.

இந்தப் பாடலை எனக்காக அளித்த என் அன்பு நண்பர் பலே பலே அவர்களுக்கு என் மகிழ்ச்சியான நன்றியை நமது திரியின் மூலமாகக் கூறிக் கொள்கிறேன்.

இனி பாடலின் முழு வரிகள்.

http://i.ytimg.com/vi/uPYFg_TIqy4/hqdefault.jpg

கண்ணழகின் சன்னதியில் காத்திருந்தேன்
உன் கனிமுகத்தின் தரிசனத்தைப் பார்த்திருந்தேன்
இன்னமுத பேச்சினிலே மயங்க வைத்தாய்
உன் இதயத்திலே எனக்கு ஒரு இடம் கொடுத்தாய்

கண்ணழகின் சன்னதியில் காத்திருந்தேன்

வண்ண மலர் சிரிப்பையெல்லாம் வழங்க வந்தாயே
எண்ணமதில் ஊர்வலமாய் எழுந்து வந்தாயே
வாழ்க்கை எனும் போர்க்களத்தில் எனைப் பிடித்தாயே
இன்ப வரம் கொடுத்து அன்பினிலே மகிழ்ந்திருந்தாயே

கண்ணழகின் சன்னதியில் காத்திருந்தேன்

மண மேடை வாசலிலே வந்து நின்றேனே
மலை போன்ற துயரம் அங்கே கண்டு நின்றேனே
மயங்காதே என்று சொல்லி தேற்ற வந்தாயே
மனைவி என்ற பெருமை தந்து காக்க வந்தாயே

கண்ணழகின் சன்னதியில் காத்திருந்தேன்

உன்னைக் கண்ட கண் ஒருநாள் ஓய்ந்து விடும்
உனக்கு உணவளித்த கை ஒருநாள் சாய்ந்து விடும்
உன்னைக் கண்ட கண் ஒருநாள் ஓய்ந்து விடும்
உனக்கு உணவளித்த கை ஒருநாள் சாய்ந்து விடும்

என் உயிர் பறந்து போனாலும் உறவிருக்கும்
உயிர் பறந்து போனாலும் உறவிருக்கும்
என் உள்ளம் என்றும் உன் மடியில் தவமிருக்கும்

கண்ணழகின் சன்னதியில் காத்திருந்தேன்
உன் கனிமுகத்தின் தரிசனத்தைப் பார்த்திருந்தேன்
இன்னமுத பேச்சினிலே மயங்க வைத்தாய்
உன் இதயத்திலே எனக்கு ஒரு இடம் கொடுத்தாய்

கண்ணழகின் சன்னதியில் காத்திருந்தேன்

http://www.mediafire.com/listen/8ij374u0bfgpz4t/NAANUM+ORU+PENN+-+PS+-+Kannazhagin+sannathiyil+kaathirunthen-+Susila.mp3

rajeshkrv
27th September 2014, 08:37 AM
காலை வணக்கம் வாசு ஜி

vasudevan31355
27th September 2014, 08:56 AM
வணக்கம் ராஜேஷ்ஜி!

இசையரசியின் கண்ணழகின் சன்னதியில்' கேட்டீர்களா?

Richardsof
27th September 2014, 09:11 AM
http://i61.tinypic.com/j9lbo5.jpg

Richardsof
27th September 2014, 09:11 AM
http://i61.tinypic.com/5ple9l.jpg

rajeshkrv
27th September 2014, 09:27 AM
வாமனன் கூட தனக்குத்தான் எல்லாம் தெரியும் என்பது போல் எழுதுவார். பல தகவல்கள் திரட்டியிருந்தாலும் சில தவறுகளும் உண்டு.

Gopal.s
27th September 2014, 09:44 AM
நண்பர்களே,

கிட்டத்தட்ட விட்டு விடலாம் என்றே இருந்தேன். ஏனென்றால் வியாபாரத்தில் எக்கசக்க தொல்லைகள்.இரவில் தூக்கமின்றி கழித்து அவதியுற்று கொண்டிருந்தேன். அப்போது என் மனைவி, ஏன் பிரிய திரிக்கு செல்வதேயில்லை,relaxed ஆக இருப்பீர்களே, என்றதற்கு ,நான் இப்போது உவப்பாக இல்லை. என் இயல்புக்கு ஒத்து வராததால் அங்கேயும் பிரச்சினைதான் என்றேன்.ஆனால் ,அவர்கள் ஒப்பு கொள்ளாமல், நண்பர்களுடன் , உரசல்தானே ,பகைமை இல்லையே ,பிறகு ஏன் இப்படி இருக்கிறீர்கள் என்று என்னை ஊக்குவித்ததால் ஏற்கெனவே ஆரம்பித்து ,சரியாக தொடராததை திருப்புகிறேன்.

அஜித் ஹரி ,என் film society நண்பன்.film institute (புனே)இயக்கம்,எடிட்டிங் இரண்டிலும் பட்டம்.நானும் அவனும் மெட்ராஸ் பிலிம் சொசைட்டி,காம்பஸ் பிலிம் சொசைட்டி,என்று தொடர்பவர்கள்.நான் கிட்டத்தட்ட 28 மொழிகளின் 7500 படங்கள் பார்த்து என் வாழ்நாளில் 33 சதம் படத்தில் ,படிப்பதில் (இலக்கியம் ) செலவழித்தவன்.நானும் ஹரியும் சேர்ந்து உலக படங்களை பட்டியலிட்டு மகிழ்நத ஒரு தருணத்தில் அவன் கேட்ட கேள்வி. கோபால் ,கிட்டத்தட்ட அத்தனை தமிழ் படங்களையும் பார்த்தவன் என்ற முறையில் ,உன்னால் மட்டுமே முடியும் என்ற வகையில் பத்தாண்டுகளாய் பிரித்து பட்டியலிடேன் .இது முந்தையவர்களாலும் முடியாது. இன்றையவர்களாலும் முடியாது. முடிய கூடியவர்களுக்கு , உன் மாதிரி பறந்து பட்ட உலக பரிச்சயம் இருக்காது என்றதால் ,அவனுக்காக இதை 1992 இல் 90 வரை செய்து காட்டி , பிறகு அடுத்தடுத்த பத்துகளையும் சேர்த்தேன். அவன் விருப்ப படியே இங்கு பிரசுரித்தேன். ஹரியிடம் வருந்தினேன். ஒரு சில்லறை நடிகையை பற்றி நூறு பக்கம் விவாதிக்கிறார்கள் ,ஆனால் இதை கவனித்தவர்கள் மூவரே என்றேன்.

அவன் திருப்பி கேட்டது ,உரிய முன்னுரையுடன் செய்தாயா என்று.இல்லை,திடீர் பதிவென்றேன்.அதற்கு ஹரி திருப்பி போடு நம் உரையாடலுடன் ,அவர்களிடமிருந்து தொடர் கவனிப்பு வந்து உனக்கே நீ மிஸ் பண்ணியது,தவறாக சேர்த்தது தெரிய வரலாம் என்றான் நேற்று. இன்று ஹரிக்காக மீண்டும். (வாசு ,முரளி நீங்கள் பார்த்திருப்பீர்கள் அவனை முதல் நிகழ்ச்சியில் )

vasudevan31355
27th September 2014, 09:47 AM
கோபு சார்,

தங்கள் பாராட்டிற்கு நன்றி! எனக்கும் மிகவும் பிடித்த பாடல் ஏழைப் பங்காளன் பாடல்.

Gopal.s
27th September 2014, 09:50 AM
50 களின் சிறந்த படங்கள்.(கோபால் விருப்பம்)

1951- ஓர் இரவு,சம்சாரம்,பாதாள பைரவி,மர்ம யோகி.

1952-பராசக்தி.

1953-ஒவ்வையார்.,தேவதாஸ்,மனம் போல் மாங்கல்யம்.

1954-அந்த நாள்,எதிர்பாராதது,கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி,கூண்டுக்கிளி,தூக்கு தூக்கி,மனோகரா,ரத்த கண்ணீர்,ராஜி என் கண்மணி,மலை கள்ளன்.

1955-மிஸ்ஸியம்மா,முதல் தேதி.

1956-அமர தீபம்,நானே ராஜா,பெண்ணின் பெருமை,ரங்கூன் ராதா,ராஜா ராணி.

1957- புதையல்,மக்களை பெற்ற மகராசி,மாயா பஜார்.

1958-அன்னையின் ஆணை,உத்தம புத்திரன்,சபாஷ் மீனா,வஞ்சி கோட்டை வாலிபன்,நாடோடி மன்னன்.

1959-கல்யாண பரிசு,பாக பிரிவினை,வீர பாண்டிய கட்ட பொம்மன்,சிவகங்கை சீமை.

1960-அடுத்த வீட்டு பெண்,இரும்பு திரை,களத்தூர் கண்ணம்மா,படிக்காத மேதை,தெய்வ பிறவி ,பாதை தெரியுது பார்.

50 களின் மிக சிறந்த பத்து.

1)அந்த நாள்.
2)பராசக்தி.
3)மிஸ்ஸியம்மா.
4)ரங்கூன் ராதா.
5)பாக பிரிவினை.
6)மலை கள்ளன்.
7)தேவதாஸ்.
8)உத்தம புத்திரன்.
9)வீர பாண்டிய கட்ட பொம்மன்.
10)ரத்த கண்ணீர்.

1960 களின் சிறந்த படங்கள்(Gopal Choice).

1961 -பாவ மன்னிப்பு,பாச மலர்,பாலும் பழமும்,கப்பலோட்டிய தமிழன்.

1962- அன்னை,ஆலய மணி,காத்திருந்த கண்கள்,சாரதா,சுமைதாங்கி,நெஞ்சில் ஓர் ஆலயம்,பலே பாண்டியா,படித்தால் மட்டும் போதுமா,பாசம்.

1963-இருவர் உள்ளம்,பார் மகளே பார்,பெரிய இடத்து பெண்,மணியோசை,கற்பகம்.

1964-கர்ணன்,ஆண்டவன் கட்டளை,கை கொடுத்த தெய்வம்,புதிய பறவை,கருப்பு பணம்,சர்வர் சுந்தரம்,பொம்மை,காதலிக்க நேரமில்லை,படகோட்டி.

1965-திருவிளையாடல்,எங்க வீட்டு பிள்ளை,ஆயிரத்தில் ஒருவன்,ஆசை முகம்,என்னதான் முடிவு,குழந்தையும் தெய்வமும்,வாழ்க்கை படகு,வெண்ணிற ஆடை,ஹலோ மிஸ்டர் ஜமிந்தார் ,நாணல்,நீர்க்குமிழி,உன்னை போல் ஒருவன்.இதய கமலம்.

1966- செல்வம்,தாயே உனக்காக,மோட்டார் சுந்தரம் பிள்ளை, ராமு,மெட்ராஸ் டு பாண்டிச்சேரி,மேஜர் சந்திரகாந்த்,யாருக்காக அழுதான்,வல்லவன் ஒருவன்.அன்பே வா.

1967-ஊட்டி வரை உறவு,இரு மலர்கள்,திருவருட்செல்வர்,நான்,பட்டணத்தில் பூதம், பாமா விஜயம்,ஆலயம்,சாது மிரண்டால்,கண் கண்ட தெய்வம்,அதே கண்கள்,மாய மோதிரம்.

1968-தில்லானா மோகனாம்பாள்,உயர்ந்த மனிதன்,கலாட்டா கல்யாணம்,குடியிருந்த கோயில்,எதிர் நீச்சல்,குழந்தைக்காக ,சக்கரம்,பணமா பாசமா,ஜீவநாம்சம்.

1969-தெய்வ மகன்,சிவந்த மண்,காவல் தெய்வம்,அடிமை பெண்,வா ராஜா வா,பூவா தலையா,இரு கோடுகள்,சாந்தி நிலையம்,துலாபாரம்,மன்னிப்பு,

1970-பாதுகாப்பு,வியட்நாம் வீடு,எங்கிருந்தோ வந்தாள் ,காவிய தலைவி,காலம் வெல்லும்,நடு இரவில்,நம்ம குழந்தைகள்,மாட்டுகார வேலன்.

மிக சிறந்த முதல் பத்து.

1)தில்லானா மோகனாம்பாள்
2)புதிய பறவை.
3)திருவிளையாடல்,
4)பாச மலர்.
5)நெஞ்சில் ஓர் ஆலயம்
6)காதலிக்க நேரமில்லை.
7)பாமா விஜயம்.
8)அன்பே வா
9)எங்க வீட்டு பிள்ளை.
10)வியட்நாம் வீடு.

Gopal.s
27th September 2014, 09:55 AM
70 களின் சிறந்த படங்கள்(கோபால் சாய்ஸ் )

1971- சுமதி என் சுந்தரி,சவாலே சமாளி,பாபு,புன்னகை,நூற்றுக்கு நூறு,மீண்டும் வாழ்வேன்,சபதம்,உத்தரவின்றி உள்ளே வா,ஆதிபராசக்தி.

1972-ராஜா,ஞான ஒளி ,பட்டிக்காடா பட்டணமா,வசந்த மாளிகை,நீதி,காசேதான் கடவுளடா,புகுந்த வீடு,மிஸ்டர் சம்பத்,வெள்ளி விழா,

1973-அரங்கேற்றம்,அலைகள்,உலகம் சுற்றும் வாலிபன்,கெளரவம்,சூரியகாந்தி,சொல்லத்தான் நினைக்கிறேன்,பொண்ணுக்கு தங்க மனசு,எங்கள் தங்க ராஜா,ராஜபார்ட் ரங்கதுரை..

1974-அவள் ஒரு தொடர்கதை,தாகம்,திக்கற்ற பார்வதி,நான் அவனில்லை,தங்க பதக்கம்,அக்கரை பச்சை.

1975-அபூர்வ ராகங்கள்,அவன்தான் மனிதன்,இதய கனி,பல்லாண்டு வாழ்க,உறவு சொல்ல ஒருவன்.

1976-அன்ன கிளி,உணர்ச்சிகள்,ஒ மஞ்சு,பத்ரகாளி,மன்மத லீலை,மூன்று முடிச்சு,ரோஜாவின் ராஜா.

1977-அவர்கள்,அவர் எனக்கே சொந்தம்,காயத்ரி,சில நேரங்களில் சில மனிதர்கள்,தீபம்,தூண்டில் மீன்,புவனா ஒரு கேள்வி குறி,16 வயதினிலே..

1978- அவள் அப்படித்தான்,இளமை ஊஞ்சலாடுகிறது,ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்,கிழக்கே போகும் ரயில்,சட்டம் என் கையில்,சிவப்பு ரோஜாக்கள்,நிழல் நிஜமாகிறது,தப்பு தாளங்கள்,முள்ளும் மலரும்,மனிதரில் இத்தனை நிறங்களா,ஜகன் மோகினி.

1979-இரு நிலவுகள்,அக்ரஹாரத்தில் கழுதை,அழியாத கோலங்கள்,உதிரி பூக்கள்,கல்யாண ராமன்,நினைத்தாலே இனிக்கும்,பசி,ரோசாப்பூ ரவிக்கைகாரி.

1980-நெஞ்சத்தை கிள்ளாதே,பூட்டாத பூட்டுக்கள்,கிராமத்து அத்தியாயம்,நிழல்கள்,மூடுபனி,உச்ச கட்டம்,ஒருதலை ராகம்,ஜானி,வறுமையின் நிறம் சிகப்பு.

70 களின் மிக சிறந்த பத்து.

1)அவள் அப்படித்தான்.
2)முள்ளும் மலரும்.
3)ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்.
4)16 வயதினிலே.
5)உதிரி பூக்கள்.
6)அழியாத கோலங்கள்.
7)நூற்றுக்கு நூறு.
8)மன்மத லீலை.
9)நான் அவனில்லை.
10)கெளரவம்.

80களின் சிறந்த படங்கள்(கோபால் சாய்ஸ்)

1981-மௌன கீதங்கள்,அந்த ஏழு நாட்கள்,அலைகள் ஓய்வதில்லை,ஆறிலிருந்து அறுபது வரை,குடும்பம் ஒரு கதம்பம்,டிக் டிக் டிக்,47 நாட்கள்,நெற்றி கண்,தண்ணீர் தண்ணீர்,பன்னீர் புஷ்பங்கள்,பாலைவன சோலை,ராஜ பார்வை,மீண்டும் கோகிலா,தில்லுமுல்லு.

1982-ஏழாவது மனிதன்,எங்கேயோ கேட்ட குரல்,கோழி கூவுது,துணை,பரீட்சைக்கு நேரமாச்சு,பயணங்கள் முடிவதில்லை,மணல் கயிறு,மூன்றாம் பிறை,மூன்று முகம்,மெட்டி.

1983-இன்று நீ நாளை நான்,ஒரு இந்திய கனவு,ஒரு புல்லாங்குழல் அடுப்பு ஊதுகிறது,கண் சிவந்தால் மண் சிவக்கும்,முந்தானை முடிச்சு,மண் வாசனை,சலங்கை ஒலி .

1984-அச்சமில்லை அச்சமில்லை,நூறாவது நாள்,வாழ்க்கை,விதி,வைதேகி காத்திருந்தாள் ,சிறை.

1985-முதல் மரியாதை,ஆண் பாவம்,பூவே பூச்சூடவா,மயூரி,யார்,ஹேமாவின் காதலர்கள்,மீண்டும் ஒரு காதல் கதை,பகல் நிலவு.

1986-ஊமை விழிகள்,சம்சாரம் அது மின்சாரம்,புன்னகை மன்னன்,மௌன ராகம்,விக்ரம்,பாலைவன ரோஜாக்கள்.

1987-கடமை கண்ணியம் கட்டுப்பாடு,நாயகன்,பூவிழி வாசலிலே,பேசும் படம்,ரெட்டை வால் குருவி,வேதம் புதிது.

1988-அக்கினி நட்சத்திரம்,உன்னால் முடியும் தம்பி,கதாநாயகன்,சத்யா,மண மகளே வா,வீடு.

1989-அபூர்வ சகோதரர்கள்,அன்று பெய்த மழையில்,இதுதாண்டா போலிஸ்,கரகாட்டகாரன்,புதிய பாதை,புது புது அர்த்தங்கள்,வருஷம் 16,மாப்பிள்ளை,வெற்றி விழா.

1990-அஞ்சலி,அரங்கேற்ற வேளை ,உச்சி வெய்யில்,கிழக்கு வாசல்,கேளடி கண்மணி,த்யாகு,புரியாத புதிர்,புலன் விசாரணை,ராஜா கைய வச்சா,மைக்கேல் மதன காம ராஜன்.

80 களின் மிக சிறந்த பத்து.

1)முதல் மரியாதை.
2)நாயகன்.
3)ராஜ பார்வை.
4)பேசும் படம்.
5)அபூர்வ சகோதரர்கள்.
6)அக்கினி நட்சத்திரம்.
7)மீண்டும் ஒரு காதல் கதை.
8)தண்ணீர் தண்ணீர்
9)வீடு.
10)அந்த ஏழு நாட்கள்.

Gopal.s
27th September 2014, 09:58 AM
90களின் சிறந்த படங்கள்(கோபால் தேர்வு)

1991- சந்தியா ராகம்,அழகன்,இதயம்,கேப்டன் பிரபாகரன்,தளபதி,கோபுர வாசலிலே,மகாநதி,குணா,சின்ன தம்பி,சிகரம்.

1992-சின்ன கவுண்டர்,தேவர் மகன், நாங்கள்,மன்னன்,ரோஜா,சூரியன்.
1993-உழவன்,கேப்டன் மகள்,சின்ன மாப்பிள்ளை,தசரதன்,திருடா திருடா,கிழக்கு சீமையிலே,ஜென்டில் மேன் ,மறுபடியும்,புதிய முகம்.

1994-பம்பாய்,கருத்தம்மா,காதலன்,ஆனஸ்ட் ராஜ்,டூயட்,
நம்மவர் ,நாட்டாமை,மகாநதி, வியட்நாம் காலனி ,மகளிர் மட்டும்.

1995-ஆசை,இந்திரா,குருதி புனல்,சதி லீலாவதி,பாட்ஷா,மோக முள்,அவதாரம்.

1996-அவ்வை ஷண்முகி,இந்தியன்,உள்ளத்தை அள்ளி தா,காதல் கோட்டை,கோகுலத்தில் சீதை,பூவே உனக்காக,சிறை சாலை.

1997-இருவர்,மின்சார கனவு,காதலுக்கு மரியாதை,பாரதி கண்ணம்மா,சூரிய வம்சம்.

1998-உன்னிடத்தில் என்னை கொடுத்தேன்,காதல் மன்னன்,பூவேலி,ஜீன்ஸ்.

1999-அமர்க்களம்,சேது,படையப்பா,முதல்வன்,வாலி.

2000-அலை பாயுதே,கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன்,கண்ணுக்குள் நிலவு,குஷி,தெனாலி,மல்லி,ரிதம்,வெற்றி கொடி கட்டு,வானத்தை போல.ஹே ராம்.

90 களின் சிறந்த பத்து

1)தேவர் மகன்.
2)மகாநதி.
3)மகளிர் மட்டும்.
4)அவதாரம்.
5)மோக முள்.
6)சேது.
7)மின்சார கனவு.
8)வாலி.
9)ஜென்டில் மேன்
10)ஆசை.

2001-2010 என்னை கவர்ந்த படங்கள்.

ஆளவந்தான், டும் டும் டும், 12 b ,தில்,தினா,பாண்டவர் பூமி,பூவெல்லாம் உன் வாசம்,மின்னலே,மிடில் கிளாஸ் மாதவன்,கன்னத்தில் முத்தமிட்டால் ,சொல்ல மறந்த கதை,பஞ்ச தந்திரம்,பம்மல் கே சம்பந்தம்,ரமணா,இயற்கை,காக்க காக்க,காதல் கொண்டேன்,தூள்,பிதா மகன்,அழகிய தீயே,புது பேட்டை,7 ஜி ரெயின் போ காலனி,ரஜினி,பாரதி,பெரியார்,பாய்ஸ்,அந்நியன்,சி வாஜி, வரலாறு,கில்லி,சுப்ரமணிய புரம்,அறிந்தும் அறியாமலும்,எம்டன் மகன்,கஜினி,இம்சை அரசன் 23 ஆம் புலிகேசி,காதல்,வெய்யில்,பொல்லாதவன்,அன்பே சிவம்,விருமாண்டி,மொழி,ஒன்பது ரூபாய் நோட்டு,பள்ளி கூடம்,அஞ்சாதே,கனா கண்டேன்,பார்த்திபன் கனவு,பிரிவோம் சிந்திப்போம்,ரன்,சண்டை கோழி,உள்ளம் கேட்குமே,சாமி ,வசூல் ராஜா எம்.பீ.பீ.எஸ்.,கண்ட நாள் முதல்,சந்தோஷ் சுப்ரமணியம்,பொம்மலாட்டம்,பொய் சொல்ல போறோம்,அபியும் நானும்,பருத்தி வீரன்,அயன்,ஈ , வாரணம் ஆயிரம்,நாடோடிகள்,திரு திரு துரு துரு,உன்னை போல் ஒருவன்,ஆயிரத்தில் ஓருவன்,பேராண்மை ,பசங்க,வெண்ணிலா கபடி குழு,தமிழ் படம்,இரும்பு கோட்டை முரட்டு சிங்கம்,சென்னை-28,சரோஜா,அங்காடி தெரு,விண்ணை தாண்டி வருவாயா,நான் கடவுள்.

முதல் பத்து (2001-2010)

1)நான் கடவுள்
2)அஞ்சாதே
3)புது பேட்டை.
4)அன்பே சிவம்.
5)பொல்லாதவன்
6)பாய்ஸ்
7)காக்க காக்க
8)மொழி
9)காதல்.
10)வெய்யில்.

rajeshkrv
27th September 2014, 10:03 AM
கோபால் சார். அருமையான தொகுப்பு.
70’களில் நீதிக்கு தலைவணங்கு கூட நல்ல படமே .. நேரமு சிக்*ஷாவின் தமிழ் பதிவாக இருந்தாலும் நல்லாவே இருக்கும்

Gopal.s
27th September 2014, 10:09 AM
கோபால் சார். அருமையான தொகுப்பு.
70’களில் நீதிக்கு தலைவணங்கு கூட நல்ல படமே .. நேரமு சிக்*ஷாவின் தமிழ் பதிவாக இருந்தாலும் நல்லாவே இருக்கும்

Terrible miscasting . It is a complete night mare.

rajeshkrv
27th September 2014, 10:26 AM
Terrible miscasting . It is a complete night mare.

what i meant was story was good.