View Full Version : மனதை கவரும் மதுர கானங்கள் இரண்டாவது பாகம
Pages :
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
[
15]
16
17
chinnakkannan
29th September 2014, 01:09 PM
//புருவத்தை வில்லா வளைக்கும் நடிகர் ஒருவர் உண்டுன்ன அது வேற யாரு நம்ம nt தான்// பின்ன்..படக்குன்னு நினைவுக்கு வருவது கெளரவம் பாரிஸ்டர் ரஜினிகாந்த்..
ஆமாம் கிருஷ்ணா ஜி.. நியூசினிமா தான்..குட்டிக்கண்ணா அக்கா அம்மாவுடன் பார்த்த படம்..:)
கார்த்திகை பெண்களின் அணிவகுப்புக்கு நன்றிங்க்ணா..
Gopal.s
29th September 2014, 01:11 PM
வசந்த மாளிகை 1972 மதுரை நியூ சினிமா வில் தானே ரிலீஸ் சி கே சார் /முரளி சார்
Yes Sir.
Richardsof
29th September 2014, 01:26 PM
அவன் ....அவளின் ரசிகன் ..
அவள் ''ஆனந்தின் '' ரசிகை ...
ஆனந்தை காண அழைக்கிறாள் . இவன் மனமோ போராட்டத்தில் ..
இவன் ''அவரின்'' ரசிகன் . காதலிக்காக தவிக்கிறான்
காதல் வென்றது .மாளிகையில் நுழைந்தார்கள் .
ஆனந்த் - லதா கதாபாத்திரம்
நிஜத்தில் இவன் - ஆனந்த் ..அவள் லதா
பெயர் பொருத்தம் - வெற்றி
காதல் பொருத்தம் - வெற்றி
அவரும் - இவரும் இருதுருவம்
அவளும் -அவனும் இருதுருவம்
காதலில் நின்றார்கள் - வென்றார்கள்
2991972ல் காதலில் இணைந்தார்கள் ....
17.1.1975 ''அவரின் '' பிறந்த நாளில் மண மாலை சூடினார்கள் .
இன்றும் இணை பிரியாத ஜோடிகளாக ...நல்லதொரு குடும்பமாக .....
gkrishna
29th September 2014, 01:42 PM
வசனம்-பாலமுருகன்
ராமதாஸ் உடன் nt சண்டை காட்சி அந்த மோதிரத்தை ஒரு முத்தம் கொடுத்து ஒரு பஞ்ச் , பின் கண்ணாடியை பார்த்து கொண்டு ஹேர் ஸ்டைல் சரி செய்து கொண்டு இன்னொரு பஞ்ச்
பஞ்ச் டயலாக் ”சரின்னா யாரா இருந்தாலும் விடக்கூடாது. வேண்டாம்னா விலைமாதா இருந்தாலும் தொடக்கூடாது!” –
இங்கே பெத்த தாயை மகன் பார்க்கிறதா இருந்தாலும் அனுமதியோடத்தான் பார்க்கணும். அதான் எங்க ஜமீன் கௌரவம்..இல்லை கர்வம்!
நான் காதலிக்கிற பொண்ணு எனக்குத்தேவையில்லை; என்னைக் காதலிக்கிற பொண்ணுதான் எனக்குத்தேவை!
இந்த வசனம் ஏகப்பட்ட படத்தில் பின்னாட்களில் உப்யோகபடுதபட்டது காபி பேஸ்ட்
இதோ உங்க பணம்! இது என் ராஜினாமா,“-லதா
ஒண்ணு என் அதிகாரம். ஒண்ணு உன் அகம்பாவம்” -ஆனந்த்
நீ விஸ்கியைத்தானே குடிக்கக்கூடாதுன்னு சொன்னே...விஷத்தைக் குடிக்கக்கூடாதுன்னு சொல்லலியே
லதா நீ வந்துகிட்டே இருக்கே நான் போய்கிட்டே இருக்கேன்
gkrishna
29th September 2014, 01:52 PM
Yes Sir.
thank you கோபால் சார்
gkrishna
29th September 2014, 01:58 PM
எஸ்வி சார்
70,80 களில் வாணி சில்க்ஸ் என்று பெயரில் ஒரு ஜவுளி கடையின் விளம்பரம் ஒன்று நினைவில் உண்டு .அந்த விளம்பரம் முழுவதுமே வாணிஸ்ரீ தான் இருப்பாங்க . அந்நாட்களில் அது வாணிஸ்ரீயின் கடை என்றே பேச்சு உண்டு .இப்ப அந்த கடை இருக்கிறதா என்று தெரியவில்லை .
gkrishna
29th September 2014, 02:26 PM
திரு கே ஜே யேசுதாஸ் ஒரு நல்ல பாடகர் 30000 பாடல்களுக்கு மேல் பாடி இருக்கிறார் .இன்னமும் பாடி கொண்டு இருக்கிறார் என்று எல்லோருக்கும் தெரியும். அவர் சில திரை படங்களிலும் நடித்து இருக்கிறார் .
காயங்குளம் கொச்சுண்ணி 1967 என்ற திரை படத்தில் வெண்ணிற ஆடை நிர்மலாவுடன் இணைந்து நடித்துள்ளார். படம் முழுக்க இவர் வருவார்.
http://antrukandamugam.files.wordpress.com/2014/09/kj-yesudhas-nirmala-kayamkulam-kochunni-1967.jpg?w=593&h=338
http://antrukandamugam.files.wordpress.com/2014/09/kj-yesudhas-kayamkulam-kochunni-1967-3.jpg?w=593&h=336
gkrishna
29th September 2014, 02:31 PM
Suruma Nalla Suruma from Kayamkulam Kochunni ( 1966 )- கே ஜே யேசுதாஸ் ஆடி பாடும் காட்சி
www.youtube.com/embed/jQEmvZPKZCg?
vasudevan31355
29th September 2014, 02:55 PM
http://chennaionline.com/images/articles/March2013/9565464a-7910-45c7-9a7e-9e84e5054b38OtherImage.jpg
http://4.bp.blogspot.com/_Re6aMmhHQQ0/SsGk-bd7SJI/AAAAAAAAA8o/mWtaI6mFaNM/s1600/vasantha%2Bmaligai1.jpg
http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/a2.png
chinnakkannan
29th September 2014, 02:55 PM
எஸ் வி சார் யாராக்கும் அந்த அவள் அண்ட் அவன்..
அவன் ....அவளின் ரசிகன் ..
அவள் ''ஆனந்தின் '' ரசிகை ...
ஆனந்தை காண அழைக்கிறாள் . இவன் மனமோ போராட்டத்தில் ..
இவன் ''அவரின்'' ரசிகன் . காதலிக்காக தவிக்கிறான்
காதல் வென்றது .மாளிகையில் நுழைந்தார்கள் .
ஆனந்த் - லதா கதாபாத்திரம்
நிஜத்தில் இவன் - ஆனந்த் ..அவள் லதா
பெயர் பொருத்தம் - வெற்றி
காதல் பொருத்தம் - வெற்றி
அவரும் - இவரும் இருதுருவம்
அவளும் -அவனும் இருதுருவம்
காதலில் நின்றார்கள் - வென்றார்கள்
2991972ல் காதலில் இணைந்தார்கள் ....
17.1.1975 ''அவரின் '' பிறந்த நாளில் மண மாலை சூடினார்கள் .
இன்றும் இணை பிரியாத ஜோடிகளாக ...நல்லதொரு குடும்பமாக .....
vasudevan31355
29th September 2014, 02:56 PM
http://cinema.gallery.net.pluzmedia.in/slide/goob_thumbs/index-22802-69046-Vasantha_Maligai_Movie_Stillsed34de82efd07c275a842 3b5460b75fc.jpg
gkrishna
29th September 2014, 02:56 PM
ஒற்றுமைகளும், வேற்றுமைகளும்
கல்யாணசுந்தரம் - கண்ணதாசன்! இருவருக்கும் இடையில் இருந்த ஒற்றுமைகளும், வேற்றுமைகளும்:-
ஒற்றுமைகள்:- இருவருடைய தாயாரின் பெயர்களும் விசாலாட்சி அம்மையார்! இருவரது பெயர்களின் முதல் எழுத்து 'க!' இருவரும் சிற்றூர் மண்ணில் பூத்த செந்தமிழ்ப்பூக்கள்! இருவரும் நல்ல உயரமான தோற்றம் கொண்டவர்கள்! இருவரும் உயர்கல்வி கற்காதவர்கள்! (கண்ணதாசன் எட்டாம் வகுப்பு - கல்யாணசுந்தரம் மூன்றாம் வகுப்பு)
இருவரும் திராவிட உணர்வு உடைய தமிழ் அறிஞர்களை ஆசான்களாகக் கொண்டவர்கள்! (கல்யாணசுந்தரத்திற்கு 'பாவேந்தர்' பாரதிதாசனும், கண்ணதாசனுக்கு 'பன்மொழிப்புலவர்' கா.அப்பாதுரையாரும் ஆசான்களாக அமைந்தனர்!)
இருவரும் தொடக்கக் காலத்தில் பழுத்த நாத்திகர்களாக இருந்தவர்கள்! (கல்யாணசுந்தரம் கம்யூனிஸ்டு கட்சியையும், கண்ணதாசன் தி.க., தி.மு.கழகங்களையும் சார்ந்திருந்தனர்)
இருவரும் தம் வாழ்க்கைக்குத் திரைப்படத்துறையைத் தேர்ந்தெடுத்துக் கொண்டவர்கள்!
இருவருக்கும் முதன் முதலில் புகலிடமாகவும், புகழிடமாகவும் இருந்தது சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ்.
இருவருக்கும் பாட்டு சொல்லத்தான் வரும். பாட்டுப்பாட வராது. தப்பித்தவறிக்கூட பாடமாட்டார்கள். தனிமையில் அவர்கள் முணுமுணுத்துக்கூட நான் கேட்டதே இல்லை.
இருவருக்குமே கர்நாடக சங்கீதம், ராகங்கள், ஆலாபனைகள், ஆரோகணம், அவரோகணம் இந்தச் சங்கதிகள் எல்லாம் எதுவுமே தெரியாது. சுத்தம்!
இருவரும் ஏறிய அகலமான நெற்றியைக் கொண்டவர்கள்! இருவருமே கள்ளம் கபடம் அற்ற புறாவைப்போன்றவர்கள்! இருவருடைய அமைதியான முகங்களிலும் ஒருவிதமான 'வெகுளித்தனம்' விளையாடிக்கொண்டிருக்கும்!
இருவரும் அசைவ உணவுப் பிரியர்கள்! அதிலும் கல்யாணசுந்தரம் ஒரு முழுக்கோழி முட்டையை அப்படியே வாய்க்குள் வைத்து அதவித்தின்று விடுவார்! பொரித்த சிறுசிறு வடிவிலான காடை, கவுதாரி வகையறாக்களையும் அவ்வண்ணமே வாயில் வைத்து மென்று தின்று உள்ளே தள்ளுவார்.
இருவருமே பிறருக்கு உதவவேண்டும் என்ற இரக்க குணம் கொண்டவர்கள். இருவருக்கும் கோபம் வந்து நான் கண்டதே இல்லை. இருவருமே நல்ல நகைச்சுவை ரசனை உடையவர்கள்!
வேற்றுமைகள்:- கண்ணதாசன் கலர் கலராக அரைக்கைச்சட்டை அணிவார். தோளில் துண்டு போடமாட்டார்.
கல்யாணசுந்தரம் எப்பொழுதும் வெள்ளை நிற சட்டை அணிந்து அதன் மீது 'லினன்' துணியினாலான நீளமான கலர்த்துண்டை கழுத்தில் மாலைபோலப் போட்டு மார்புப் புறத்தில் இழுத்துத் தொங்க விட்டுக்கொள்வார்! (தமிழறிஞர் - கவிஞர் மாயூரம் முன்சீப் வேதநாயகம் பிள்ளைபோல)
கல்யாணசுந்தரம் அகலமான கருப்புக்கறை வேட்டியையும் கண்ணதாசன் சற்று மெல்லிய அல்லது கறை இல்லாத வேட்டியையும் விரும்பிக்கட்டுவார்கள்! கண்ணதாசனின் சட்டைப்பையில் பேனா, மணிபர்சு, ஒரே ஒரு ரூபாய் நோட்டுகூட எதுவுமே இருந்து நான் ஒருநாளும் பார்த்தது இல்லை.
கண்ணதாசன் காசைத் தண்ணீராக வாரி இறைப்பார். கல்யாணசுந்தரம் அதைத் தங்கமாக மதித்துப் பத்திரப்படுத்துவார். அவர் பாட்டெழுதத்தொடங்கிய அந்த ஆரம்ப நாட்களிலேயே சிறுகச் சிறுகச் சேர்த்து வைத்திருந்த பணத்தைக்கொண்டு சொந்த சங்கம் படைத்தான் கிராமத்தில் நிலபுலன் மற்றும் தோப்புகளை வாங்கினார். அவை இன்றைக்கும் அவருடைய குடும்பத்தாருக்கு வாழ்வாதாரமாக இருந்து வருகிறது.
கண்ணதாசனுக்கு நிறைய ஆண், பெண் குழந்தைகள் உண்டு. கல்யாணசுந்தரத்திற்கு ஒரே ஒரு மகன் குமரவேல்! பிறந்த ஐந்தாவது மாதத்தில் தந்தையை இழந்த தனயன்! கண்ணதாசன் புகை பிடிப்பார்! கல்யாணசுந்தரம் வெறும் வெற்றிலை சீவல் புகையிலை போடுவதோடு சரி.
கண்ணதாசன் சற்றும் ஓசை இல்லாமல் தனக்குத் தானே மெதுவாகச் சிரித்துக் கொள்வார். கல்யாணசுந்தரம் சத்தம் போட்டுச் சிரிப்பார்!
ஈடு இணையற்ற இவ்விரு 'கவிஞர் பிரான்களும்' நான் கதை வசனம் எழுதிய பல வெற்றிப்படங்களில் பாட்டெழுதி, என்னோடு அவர்களும், அவர்களோடு நானும் இமைகளும், விழிகளும்போல இணைந்து இருந்து பணிபுரிந்தது என் வாழ்வில் நான் பெற்ற பெரும் பேறு ஆகும்!
இன்னும் பல்லாண்டுகள் வாழ்ந்திருந்து, அன்னை தமிழைத் தங்களின் இனிய பாடல்களால் அலங்கரித்திருக்க வேண்டியவர்கள்! அதற்கு இசையும், இலக்கியமும் கொடுத்து வைத்திருக்கவில்லை. அதனால்தான் 'கூற்றுவன்' அவசரப்பட்டு அவர்களைக் கூப்பிட்டுக்கொண்டான்! இருவருமே குறுவைப் பயிர்போல குறைந்த வாழ்நாளில் நிறைந்த சாதனை படைத்து சரித்திரம் கண்டவர்கள்! இருவரும் என் இரு விழிகள்!
http://www.dailythanthi.com/Section/Images/2014/Sep/0D49EA6E-46BB-40E6-90F2-D07254E17F3B_L_styvpf.gif
vasudevan31355
29th September 2014, 03:00 PM
'வசந்த மாளிகை' சிறப்பு நிழற்படங்கள்
http://i37.tinypic.com/2008aq8.jpghttp://i36.tinypic.com/2dlrjwy.jpg
http://i38.tinypic.com/9b8w1h.jpghttp://i36.tinypic.com/qnsdpw.jpg
http://i36.tinypic.com/e5mv6a.jpghttp://i33.tinypic.com/33dzjaa.jpg
http://i38.tinypic.com/2ceet0.jpghttp://i33.tinypic.com/2s0g042.jpg
http://i36.tinypic.com/256fj2f.jpghttp://i33.tinypic.com/2ntusdc.jpg
vasudevan31355
29th September 2014, 03:02 PM
http://i35.tinypic.com/2upefbl.jpghttp://i37.tinypic.com/10cjf9y.jpg
http://i38.tinypic.com/2edmgd0.jpghttp://i34.tinypic.com/2dinfut.jpg
http://i38.tinypic.com/28j8zgy.jpghttp://i34.tinypic.com/uykc6.jpg
http://i34.tinypic.com/kb2911.jpghttp://i35.tinypic.com/vexkoz.jpg
vasudevan31355
29th September 2014, 03:04 PM
http://i38.tinypic.com/2lu2jgi.jpghttp://i35.tinypic.com/sfa0r6.jpg
http://i36.tinypic.com/vqs3o0.jpghttp://i35.tinypic.com/2z553f8.jpg
http://i34.tinypic.com/1zn32mg.jpghttp://i36.tinypic.com/28c1z79.jpg
http://i33.tinypic.com/18d835.jpghttp://i38.tinypic.com/24lk1hk.jpg
gkrishna
29th September 2014, 03:08 PM
https://encrypted-tbn2.gstatic.com/images?q=tbn:ANd9GcS8REExCVBSPwZSKCvBSEOHkeDm7tx9r ADIoZCmk6TKmpaY-mAM
Richardsof
29th September 2014, 03:08 PM
சின்ன கண்ணன் சார்
அவன் - என்னுடைய கல்லூரி நண்பன் .....எம்ஜிஆர் தீவிர ரசிகன் .பெயர் ..ஆனந்த் ..தற்போது சமீபத்தில் ஓய்வு பெற்ற கல்லூரி பேராசிரியர் .
அவள் .. சிவாஜி தீவிர ரசிகை . பெயர் லதா ... தற்போது விரிவுரையாளராக பணி புரிகிறார் .
இன்று அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தேன் .
gkrishna
29th September 2014, 03:09 PM
http://tamil.webdunia.com/ta/articles/1211/26/images/img1121126039_1_3.jpg
vasudevan31355
29th September 2014, 03:11 PM
http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/Old%20Ads/vmshootingspotfw.jpg
vasudevan31355
29th September 2014, 03:11 PM
http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/a45.jpg
vasudevan31355
29th September 2014, 03:13 PM
பெங்களூரு நடராஜ் தியேட்டரில் 'வசந்த மாளிகை' ஒரு பிளாஷ்பேக் (25-03-2012)
http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/102_9202.jpg
vasudevan31355
29th September 2014, 03:14 PM
பெங்களூரு நடராஜ் தியேட்டர் 'வசந்தமாளிகை' கொண்டாட்டங்கள் (மறு பதிவு)
http://www.youtube.com/watch?feature=player_embedded&v=yac3fJ9_iRI
vasudevan31355
29th September 2014, 03:15 PM
http://i.ytimg.com/vi/mqn4NKSRzSo/0.jpg
vasudevan31355
29th September 2014, 03:15 PM
'வசந்த மாளிகை' காவியத்தில் உணர்ச்சிமயமான தலைவரின் கொடி நாட்டும் நடிப்புக் காட்சி
http://www.youtube.com/watch?feature=player_embedded&v=Gj6v7Dsv_aI
vasudevan31355
29th September 2014, 03:18 PM
http://www.thiraivideo.com/video/wp-content/uploads/2012/05/Vasantha-Maligai.jpg
http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/VTS_02_3VOB_001408768.jpg
இறந்த பிறகுதான் சொர்க்கம் என்பார்கள். ஆனால் நடிகர் திலகத்தின் ரசிகப் பிள்ளைகளோ கொடுத்து வைத்தவர்கள். அதனால்தான் தங்கள் வாழ்நாளிலேயே உயிரோடிருக்கும் போதே சொர்க்கத்தை வசந்த மாளிகையில் கண்டு சொக்கிப் போனார்கள். இனி சொர்க்கம் என்று ஒன்று எதற்கு என்று மாளிகையின் மடியிலே கிறங்கிப் போனார்கள். ஜாதி, இனம், மதம், பேதம் அனைத்தையும் கடந்து மக்கள் அனைவரும் ஒருசேர மாளிகையில் சங்கமித்தார்கள். "நான் அவர் ரசிகன், நான் இவர் ரசிகன்" என்றோரெல்லாம் நாங்கள் வசந்தமாளிகையின் ரசிகர்கள் என்று காலரைத் தூக்கி விட்டுக் கொண்டார்கள். கொண்டாடினார்கள். காதலின் உண்மையான மகத்துவத்தை அறிந்தார்கள். உணர்ந்தார்கள். பிரெஞ்சுப் புரட்சி போல திரையுலகில் ஓர் புரட்சி. தமிழ் சினிமாவுக்கோர் மறுமலர்ச்சி. விளைவு? எங்கும் காணாத எழுச்சி. வசந்த மாளிகை கண்ட தியேட்டர்கள் திருவிழாக் கோலம் பூண்டன.
"நீ எத்தனை முறை வசந்த மாளிகை பார்த்தாய்?"
"பத்து முறை"...
"ச்சே! அவ்வளவுதானா? நான் இருபது முறையாக்கும்"
என்று ரசிகரல்லாதோர் கூட பெருமை கூட்டிக் கொண்டார்கள்.
"மாமா! புதுப்படம் போட்டிருக்கான்டா.. வாடா செகண்ட் ஷோ போலாம்" என்பான். "போடா போடா போக்கத்தவனே... வசந்தமாளிகை ஓடுது.. அதுக்குப் போவானா... போறானாம் புதுப்படத்துக்கு... கெளம்புடா! டிக்கட் கெடைக்காம போகப் போவுது"...
என்று கட்டிய லுங்கியுடன் சைக்கிளில் பறந்து சென்று பார்த்த இளைஞர் கூட்டம். ரிக்ஷா வண்டி இழுத்தவன் முதல் மேல் தட்டு மேனஜர்கள் வரை துக்கங்களை தூர எறிந்துவிட்டு, தூக்கத்தை மறந்து ஏக்கங்கள் கொள்ளவைத்த மாளிகை. இரண்டாவது மூன்றாவது ரீ-ரிலீஸ்களின் போது கிடைத்த வரவேற்பு வாய் பிளக்க வைக்கும்.
நூறாவது மறு வெளியீட்டிலும் அது தொடரும்.
யாரை வேண்டுமானாலும் கேள்.. எவரை வேண்டுமானாலும் கேள்... "நல்லாயில்ல"... என்று வேண்டுமென்றே நம்மை வேதனைப்படுத்தக் கூட ஒரு வார்த்தை வராது. "பின்னிட்டாருய்யா உங்க ஆளு... அசல் குடிகாரன் கெட்டான்யா... கணேசன் கணேசன்தான்யா' என்று மகுடம் சூட்டுவான். "இரண்டு மனம் வேண்டும்" என்று கேட்கும் போதே இவன் இருமி வாந்தி எடுக்க முற்படுவான். "யாருக்காக' என்று கூக்குரலிடுகையில் "தலைவா... உனக்காக" என்று ஒருவன் கத்துவான். "எங்களுக்காக" என்று மற்றொருவன் மகிழ்ந்து சொந்தம் கொண்டாடுவான். வசதி படைத்தவன் ஒயின் கிளாஸை போஸ்ட்டரில் பார்த்தது போலப் பிடித்துப் பார்க்க முயன்று 'ஏன்' இந்த வேலை? என்று தோற்றுப் போவான். சால்வைகள் விலை ஏற்றமடைந்தன. தியேட்டர் ஊழியன் பளபளப்பாகத் தெரிவான். இடைவேளைகளில் பல லிட்டர் பால் கேண்டீன்காரன் வாங்கி வைத்தாலும் தியேட்டரில் பாதிப் பேர் 'டீ' இல்லாமல் அலைவான். ரசிகப் பிள்ளைகள் தலைவர் வராத சீன்களில் தியேட்டர் வெளிவராந்தாவில் இறைவன் புகழ் பாடிக்கொண்டிருக்கும்.
''வெறும் சட்டங்கள் தர்மங்கள் ஏதுமில்லை இன்பச் சக்கரம் சுற்றுதடா... அதில் நான் சக்கரவர்த்தியடா'' எனும் போது திருவண்ணாமலை தீபம் தியேட்டரில் தெரியும்.. ஒவ்வொருத்தர் கையிலும் கற்பூரம் எரியும். கிளாசிலிருந்து தரை வரை கைத்தட்டல் உச்சி பிளக்கும். தரை டிக்கெட் எடுத்தவன் துண்டை சுழற்றி மேலே கிடாசுவான். சில்லறைகள் சிதறும். லாட்டரி சீட் கவுண்டர் பைல்கள் திரையை மறைக்கும். 'மயக்கமென்ன' என்றவுடன் இரு கைகளையும் தூக்கிக் கொண்டு திரையை நோக்கி ஓடுவான். ஆடியன்ஸைப் பார்த்து ஆட்டமாடுவான். "உயிரோடு இருக்கும் என் காதலிக்காகக் கட்டப்பட்ட வசந்தமாளிகை" என்று உச்சரிக்கும் போது இதழ் பிரியாமல் கூடவே உச்சரிப்பான். திருக்குறளை மனப்பாடம் செய்தானோ இல்லையோ... வசந்த மாளிகையின் வசனங்களை வசப்படுத்திக் கொண்டான். "அன்புக் காணிக்கைதான் கண்ணே" என்றால் பக்கத்து சீட்டு நண்பன் மார்பில் இவன் முகம் புதைப்பான். "ஆடிவரும் வண்ண நீரோடை உன்னை பாத பூஜை செய்துவர" வரிகளில் இவன் பூக்களை கைகளில் பின்னால் ஒளித்து வைத்து தெய்வப் பாதங்களில் தூவுவான்.
'கடவுளை தண்டிக்க என்ன வழி?' என்று கையை உதறும் போது காதலியை நினைத்து கதறுவான். 'ஆனா அவகிட்டப் பிடிச்சதே அந்த அகம்பாவம்தான்' என்று சொன்னால் 'எனக்கும் அப்படித்தான் தலைவா' என்று தன்னை மறந்து கத்துவான். "குடிமகனே" என்ற குரல் ஒலிக்கும் முன்பே 'ஓ ஹ ஹா ஹா' என்று இவன் முடித்து வைப்பான். தாய்க்குலம் இருக்கைகள் நிரம்பி வழிந்திருக்கும். 'யாருக்காக'வின் போது பாதிதான் இருக்கும்.."நாசமா போறவனுங்களே! படம் பாக்க உடுறீங்களாடா" என்று தாய்க்குலம் வசவு பாடும். இவனுக்கு பாராட்டுப் பத்திரமாய் இனிக்கும். கூடை கூடையாய் மலர்களை அள்ளித் தெளித்துவிட்டு சிந்திய பூக்களை இருட்டில் அள்ளுவான் மறுபடி தூவ. திருப்தியே இருக்காது. வணக்கம் முடிந்தாலும் வாழ்க கோஷம் தொடரும். மனமில்லாமல் பிரிவான். மறுநாள் அதே கூத்து தான்.
அன்புடன்,
வாசுதேவன்.
chinnakkannan
29th September 2014, 03:22 PM
செமை சுவாரஸ்யம் எஸ்வி சார்.. கதை போல வாழ்க்கையிலும் நடப்பதுண்டு என்பது எத்துணை உண்மை (என்னே என் தமிழ்)..:)
அவர்களுக்கு மதுரகானம் திரி நண்பர்களின் வாழ்த்துக்களையும் சொல்லி விடுங்கள்..
சின்ன கண்ணன் சார்
அவன் - என்னுடைய கல்லூரி நண்பன் .....எம்ஜிஆர் தீவிர ரசிகன் .பெயர் ..ஆனந்த் ..தற்போது சமீபத்தில் ஓய்வு பெற்ற கல்லூரி பேராசிரியர் .
அவள் .. சிவாஜி தீவிர ரசிகை . பெயர் லதா ... தற்போது விரிவுரையாளராக பணி புரிகிறார் .
இன்று அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தேன் .
gkrishna
29th September 2014, 03:22 PM
வசந்தமாளிகை படத்தில் வரும் பாடல். யாருக்காக இது யாருக்காக பாடலின்போது டி.எம்.எஸ்ஸின் ஆதிக்கம்தான் அதில் அதிகம் இருந்ததாம். அதாவது அந்தப் பாடலில் பல திருத்தங்களைக் கூறி அதை அமல்படுத்தினாராம் டி.எம்.எஸ்.
காரணம், இந்தப் பாடலில் இந்த திருத்தங்களைச் செய்தால்தான் அது சிவாஜியின் நடிப்புக்கு பொருத்தமாக இருக்கும் என்று கூறினாராம். குறிப்பாக பாடலின் இடையே வரும் எக்கோ ... டி.எம்.எஸ். கொடுத்த ஐடியாவாம்,
முதலில் இதை படத் தயாரிப்பாளர் ஏற்கவில்லையாம். ஆனால் வைத்தால்தான் பாடுவேன் என்று கூறி விட்டாராம் டி.எம்.எஸ். பிறகென்ன பாட்டு சூப்பர் ஹிட்.
நன்றி வளர்நிலா
gkrishna
29th September 2014, 03:31 PM
மரணத்தை வென்ற கண்ணதாசன்
ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த சிறுகூடல்பட்டி என்னும் சிற்றூரில் செந்தமிழ் வளர்த்துப் போற்றும் செட்டியார் குலத்தில், சாத்தப்ப செட்டியார் - விசாலாட்சி அம்மையார் இணையருக்கு 'முத்தையா' எட்டாவது குழந்தையாகப் பிறந்தார். எட்டாவதாகப் பிறந்ததனாலோ என்னவோ, எட்டாவது வகுப்பிற்கு மேல் பள்ளிப்படிப்பு அவருக்கு எட்டவில்லை! ஆயினும் இளமையிலேயே இயற்கையாகக் கவிதை புனையும் ஆற்றல் பெற்றிருந்தார். தந்தை தந்த பாசம், தாய் ஊட்டிய பால் இவற்றுடன் கூட, பொழியும் தமிழ் மொழியும் அவரை வளர்த்தது!
கல்வி என்னும் 'கற்பக விருட்சத்தில்' பள்ளிப்படிப்பு என்னும் பசுமையான கிளை பாதியிலேயே முறிந்துபோன நிலையில், தன்னைப் பற்றிக்கொண்டிருந்த எழுத்தார்வத்தினால் புதுக்கோட்டைக்குப் புறப்பட்டு வந்து, ஓர் இதழுக்கு இளம் ஆசிரியராக அமர்ந்தார்.
அந்நாட்களில், இயற்பெயர் அல்லது இட்டுக்கொண்ட புனைப்பெயருடன் 'தாஸ்', 'தாசன்' என்ற சொல்லை இணைத்துக்கொள்வது எழுத்தாளர்கள், கவிஞர்கள், நாடகத் திரைப்பட ஆசிரியர்கள் சிலருக்கு வழக்கமாக இருந்தது.
எடுத்துக்காட்டாக 'தவத்திரு' சங்கரதாஸ் சுவாமிகள் (நாடக ஆசிரியர்) விசுவநாததாஸ் (நாடக நடிகர் - தேசபக்தர்) கோவை சி.ஏ.லட்சுமணதாஸ் (சினிமா கதை வசனப் பாடலாசிரியர்) 'புதுக்கம்பன்' பூமிபாலகதாஸ் (பாடல் ஆசிரியர்) 'கும்பகோணம்' குருசாமிதாஸ் ('டேப்' பாடகர்) 'தஞ்சை' ராமையாதாஸ் (நாடக - திரைப்படக் கதை வசனப் பாடலாசிரியர்) பாஸ்கரதாஸ் (தென்பாங்குப் பாடலாசிரியர் - பாடகர்) 'புரட்சிக்கவிஞர்' பாரதிதாசன் (சினிமா கதை வசனப் பாடலாசிரியர்) கம்பதாசன் என்னும் ராஜப்பா (சினிமா பாடலாசிரியர்) இவர்களுக்கெல்லாம் 'ஆதி' - மூலக்கவிஞனான 'கவிரத்ன' காளிதாசன் ஆடு மேய்க்கும் அறிவில்லாத மூடனாக இருந்து, அற்புதமான சமஸ்கிருதக் காவியங்களைப் படைத்த - காளி வரம் பெற்ற கவிஞன்! இவன்தான் முதன் முதலில் 'தாசன்' என்று பெயர் வைத்துக்கொண்ட முன்னோடி!
இவர்களைப் பின்பற்றியும் 'மகாகவி' சுப்பிரமணிய பாரதியாரைப் போன்று கண்ணன் மீது கொண்ட காதல் காரணமாகவும், இளைஞர் முத்தையா தன் இயற்பெயரை 'கண்ணதாசன்' என்று மாற்றிக்கொண்டு கதை, கட்டுரை, கவிதைகள் எழுதலானார்.
சிறு வயது முதல் சினிமா மீது கொண்ட மோகத்தினால் அந்தத் துறையில் ஈடுபட ஆவலுற்று சேலம் 'மாடர்ன் தியேட்டர்ஸ்' நிறுவனத்தில் சேர்ந்தார். அதன் அதிபரான டி.ஆர்.சுந்தரம் இவருடைய தமிழார்வத்தையும், பத்திரிகை அனுபவத்தையும் அறிந்து, அப்பொழுது அவர் நடத்தி வந்த 'சண்டமாருதம்' என்ற இதழின் ஆசிரியராக அமர்த்தினார்.
('சண்டமாருதம்' என்னும் சமஸ்கிருதச் சொல்லுக்கு பெருங்காற்று அல்லது சூறைக்காற்று என்று பொருள். பின்நாட்களில் கவிஞர் நடத்தி வந்த இதழுக்கு சண்டமாருதத்தின் எதிர்ப்பதமான 'தென்றல்' எனப் பெயரிட்டார்!)
http://www.dailythanthi.com/Section/Images/2014/Sep/EB5864E6-7D14-4C05-B561-6930EC814028_L_styvpf.gif
'பார் மகளே பார்' படத்தில் சிவாஜிகணேசன், சவுகார் ஜானகி
ஆனால், கண்ணதாசனின் கனவும், கவனமும் 'சினிமா' மீதே படர்ந்திருந்தது. சேலத்தில் தன் கனவு நிறைவேறாத நிலையில் அங்கிருந்து நீங்கி, கோயம்புத்தூர் சென்ட்ரல் ஸ்டூடியோவில் நுழைந்து, அன்றைய புகழ் பெற்ற ஒளிப்பதிவாளரும், இயக்குனருமான கே.ராம்நாத்திடம் அப்பொழுது அவர் இயக்கிக் கொண்டிருந்த 'கன்னியின் காதலி' படத்தில் பாட்டு எழுத தனக்கு ஒரு வாய்ப்பளிக்கும்படி வேண்டினார். அவருடைய ஆர்வத்தையும், ஆவலையும் அறிந்து கொண்ட ராம்நாத் தன் படத்தில் ஒரு சூழலைச் சொல்லி அதற்கேற்றாற்போல் பாடல் எழுதும்படி கூற, சேலத்தில் இருந்து கலங்கிய மனதுடனும், கனவுகளுடனும் கோவை வந்த கண்ணதாசன், கதை நிகழும் சூழலுக்கேற்ற ஒரு பாடல் இயற்றி இயக்குநரிடம் காட்ட அது அவருக்குப் பிடித்துப்போய் ஒலிப்பதிவாகி படத்தில் இணைக்கப்பட்டது. அந்தப்பரிட்சார்த்த முதல் பாடலின் பல்லவி இது:-
"கலங்காதிரு மனமே - உன் கனவெல்லாம்
நனவாகும் ஒரு தினமே."
படத்திற்கு மட்டும் அல்ல. கண்ணதாசனுக்கும் அன்றைய சூழலில் இந்தப் பல்லவி பொருந்தியது எனலாம்.
1945-க்கும், 1950-க்கும் இடைப்பட்ட அந்தக் காலக்கட்டத்தில் கண்ணதாசன் தொடங்கிய எழுத்துப்பணியும், கவிதை பாடுவதுமான அந்த வித்தை 1957-1958 வரையில் நத்தையாகத்தான் நகர்ந்து கொண்டிருந்தது. இதற்கிடையில், 'பன் மொழிப்புலவர்' கா.அப்பாத்துரையாரிடம் தமிழ் இலக்கண இலக்கியங்களைக் கற்றுத் தேர்ந்து தனது புலமையை வளமையாக்கிக் கொண்டார். அத்துடன்கூட, திராவிட முன்னேற்றக் கழகத்தில் அவர் கொண்ட இணைப்பு, ஈடுபாடு மற்றும் 'பேரறிஞர்' அண்ணாவின் மேடைப்பேச்சு, எழுத்து, மேலும் 'புரட்சிக்கவிஞர்' பாரதிதாசனின் கவிதைகள் - இவை எல்லாமாகச் சேர்ந்து கண்ணதாசனின் தமிழுக்கும், அறிவிற்கும் தக்க 'உரம்' போட்டு வளர்த்தன.
பின்நாட்களில் கண்ணதாசன் 'நாத்திகம்' துறந்து 'ஆத்திகம்' வந்து, காஞ்சீபுரத்தில் அண்ணாவின் இல்லத்திலிருந்து நீங்கி, சங்கர மடத்தில் நுழைந்தபோதும், தன்னைத் தழுவிக்கொண்டவர்களும், தட்டிக்கொடுத்தவர்களும் ஒரேயடியாய் உதறி விட்டும்கூட, அவர் பெற்ற தமிழ் மட்டும் அவரைக் கைவிட்டுவிடவில்லை. அது அவரைக் காத்தது!
திரைப்படத்துறைத் தாழ்வாரத்தில் அவர் தவழ்ந்து கொண்டிருந்த அந்தக் காலக்கட்டத்தில் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் பாடல்கள் பலராலும் புகழப்பெற்று, அவரது கொடி பட உலகில் பறந்து கொண்டிருந்தது. ஒருமுறை கண்ணதாசனே கூறினார்:-
http://www.dailythanthi.com/Section/Images/2014/Sep/FCF1CD16-D4C8-4597-A964-2ED355C85616_L_styvpf.gif
'தாயைக்காத்த தனயன்' படத்தில் எம்.ஜி.ஆர். சரோஜாதேவி
"பாடல்கள் எழுதுவதில் எனக்குப் போட்டியாக வேறு யாரையுமே நான் கருதவில்லை. ஒரே ஒருவர் மட்டுமே எனக்குப் போட்டியாக இருக்கிறார். அவர்தான் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்! அவர்தான் என்னை முந்துகிறார்."
1959-ல் 'நடிகர் திலகம்' சிவாஜிகணேசன் நடித்து வெற்றிப்பட இயக்குனர் ஏ.பீம்சிங் இயக்கிய 'பாகப்பிரிவினை' படத்தில் கல்யாணசுந்தரம், கண்ணதாசன் இருவருமே பாடல்கள் புனைந்திருந்தனர். கைவிளங்காத தன் கணவனைக் குறித்து மனைவி பாடுவதாக கண்ணதாசன் இயற்றிய "தங்கத்திலே ஒரு குறையிருந்தாலும் தரத்தினில் குறைவதுண்டோ. உங்கள் அங்கத்திலே ஒரு குறையிருந்தாலும் அன்பு குறைவதுண்டோ."
மற்றும் குழந்தையை தொட்டிலில் போட்டு ஆட்டிக்கொண்டு சிவாஜி பாடிய...
"ஏன் பிறந்தாய் மகனே ஏன் பிறந்தாயோ? - நான் பிறந்த காரணத்தை நானே அறியுமுன்னே நீயும் வந்து ஏன் பிறந்தாய் செல்வ மகனே?" போன்ற காட்சிச் சூழலுக்கேற்றுக் கனிந்த கண்ணதாசனின் பாடல்கள் அவருக்குத் தேவையான புகழைத் திரட்டியும், தேடியும் கொடுத்தன.
பாகப்பிரிவினையைத் தொடர்ந்து சிவாஜி நடித்து வெளிவந்த 'பாசமலர்', 'பாவமன்னிப்பு', 'படிக்காத மேதை', 'பார்த்தால் பசி தீரும்', 'படித்தால் மட்டும் போதுமா', 'பார் மகளே பார்', 'புதிய பறவை', 'தெய்வ மகன்', 'அன்னை இல்லம்', 'அன்பளிப்பு' முதலிய படங்களில் 'மெல்லிசை மன்னர்கள்' விஸ்வநாதன் - ராமமூர்த்தி இசையில் அமைந்த கண்ணதாசனின் பாடல்கள் அனைத்துமே பிரபலமாகி 'அவருக்கு நிகர் அவரே' என்னும் நிரந்தர நிலையை ஏற்படுத்தி அவரை புகழின் சிகரத்தில் கொண்டுபோய் நிறுத்தின.
1960-ல் இருந்து 1980 வரையில் அந்த 20 ஆண்டுகளிலும் திரைப்படப்பாடல் துறையில் கண்ணதாசன் ஈடும் இணையும் இன்றித் தொடர்ந்து ஏறுமுகத்திலேயே இருந்தார்.
எல்லா இசையமைப்பாளர்களுமே தங்களுடைய இசையில் அவருடைய பாடல்கள் அமைவதைப் பெருமையாக எண்ணினர். அதன் காரணமாக அவர் அதிகப் படத்தயாரிப்பு நிறுவனங்களையும், அவை தயாரித்த பல நல்ல நல்ல படங்களையும் ஆக்கிரமித்துத் தனக்கென 'தனி உரிமை' ('மோனோபொலி') ஆக்கிக்கொண்டார்.
'காலம்' கண்ணதாசன் வீட்டுக் கூரையைப் பிய்த்துக்கொண்டு காசுகளைக் கொட்டியது. செந்தமிழைச் சேமித்து வைக்கத் தெரிந்த செட்டுக்கு சிக்கனத்திற்குப் புகழ் பெற்ற செட்டியார் குலத்தில் பிறந்த இந்தச் செல்வப் புதல்வருக்கு பாட்டெழுதி ஈட்டிய பொருளைப் பத்திரமாகப் பாதுகாத்து வைக்கமட்டும் ஏனோ தெரியவில்லை.
"கல்லாகப்படுத்திருந்து களித்தவர் யாருமில்லை. கைகால்கள் சோர்ந்த பின்னே துடிப்பதில் லாபமில்லை. வந்ததை வரவில் வைப்போம் சென்றதைச் செலவில் வைப்போம்" என்று 'பாவமன்னிப்பு' படத்தில் பாட்டெழுதியவர், தனக்கு வந்த பொருளை வரவில் வைக்காமல், படங்கள் தயாரித்தும், அரசியல் சேற்றில் கால் பதித்து அதனால் தேவை இல்லாத பல காரியங்களைச் செய்தும் அவர் தேடிய திரவியத்தை அதன் அருமை தெரியாமல் செலவு செய்தார் - அல்ல செலவழித்தார்.
படங்களுக்குப் பாட்டெழுதும் பணியில், அவரது காலத்திலும், அதற்கு முன்பும் எவருமே பெறாத - பெறமுடியாதப் பெருந்தொகையைப் பெற்றும், அதனை ஆக்கவும், காக்கவும் அறியாது போனார்.
1960-களில் என் கண் எதிரிலேயே தேவரண்ணன் தனது ஒவ்வொரு படத்திற்கும் ஒரே தவணையில் 20, 25 ஆயிரம் ரூபாய் நோட்டுக்கட்டை ஒரு தட்டில் பழங்களுடன் வைத்துக்கொடுப்பார். கவிஞர் அதை அப்படியே கொண்டு போய் மொத்தமாக தன் சொந்த புரொடக்ஷனுக்காகவோ அல்லது அதற்காக வாங்கிய கடனுக்காகவோ கொடுத்து விடுவார். அந்த நாட்களில் இருபத்தைந்தாயிரம் ரூபாய் என்பது ஒரு நல்ல புகழ் பெற்ற நடிகருடைய சம்பளம் ஆகும்.
அந்நாட்களில் எம்.ஜி.ஆர். படமாகட்டும் அல்லது சிவாஜி படமாகட்டும் கவிஞரும் நானும் கண்டிப்பாக இருப்போம். அண்ணன் எம்.எஸ்.விஸ்வநாதன், அண்ணன் கே.வி.மகாதேவன் இருவர் இசை அமைக்கும் பெரும்பாலான படங்களிலும் நாங்கள் எழுதுவோம்.
அவ்வப்போது, அந்தந்த படங்களில் நான் எழுதிய நல்ல வசனங்களை எடுத்துக்காட்டி என்னைப் பாராட்டிப் புகழ்ந்து பேசுவார். நாங்கள் இருவரும் இணைந்து பணிபுரிந்த பல வெற்றிப்படங்களில் ஒன்றான 'இதயக்கமலம்' படத்தின் நூறாவது நாள் விழாவில் என்னைப்பற்றி அவர் குறிப்பிட்டுக் கூறி வாழ்த்தியது:-
'தாமரைபோல இன்னொரு மலர் இல்லை
தாஸ் போல இன்னொரு வசனகர்த்தா இல்லை'.
இந்த அன்பின் ஆதாரத்தில், உறவும் - உரிமையும் கொண்டு கவிஞரிடம் நான் இப்படிக் கூறுவேன்:-
'அண்ணே! படம் எடுக்கிறதையும், அரசியலையும் அடியோடு விட்டுத் தொலைச்சிட்டு, பாட்டெழுதுறதுல மட்டும் கவனம் செலுத்துனீங்கன்னா, நீங்க சம்பாதிக்கிற பணத்தை வச்சு இந்த தியாகராயநகர்ல உங்க ஒவ்வொரு பிள்ளைக்கும் ஒரு வீடு வீதம் பத்துப்பன்னிரெண்டு வீடுகளை வாங்கலாமே'.
இதற்கு அவருடைய பதில் என்ன தெரியுமா?
'தம்பி! நீ கொடுத்து வச்சவன். அதனாலதான் கடவுள் உனக்குக் கெட்டிக்காரத்தனத்தைக் கொடுத்திருக்காரு. ஆனா நான் அப்படி இல்லை. நான் முழுக்க நனைஞ்சவன். இனி எனக்கு முக்காடு எதுக்கு? அவ்வளவுதான், விடு'.
http://www.dailythanthi.com/Section/Images/2014/Sep/42EDE8DF-FB5B-4E5E-B0E6-78452753632B_L_styvpf.gif
பாரதியார்போல, பாட்டு எழுதுவதற்கென இருந்த பழைய முறையை மாற்றி, எளிமையாக்கித் தனித்தனியாக இரண்டு இரண்டு வரிகளில் எதுகை மோனைகளை வைத்துக்கொண்டு பாடல்கள் இயற்றி, ஏனைய இளைய கவிஞர்களும் அதனைப் பின்பற்றும் வண்ணம் செய்தவர் கண்ணதாசன். எடுத்துக்காட்டாக-
"கண் பட்டதால் உந்தன் மேனியிலே
புண் பட்டதோ அதை நானறியேன்
புண் பட்ட செய்தியைக் கேட்டவுடன் - இந்தப்
பெண் பட்ட பாட்டை யாரறிவார்?"
- படம் 'தில்லானா மோகனாம்பாள்.'
கவிதை புனையும் ஆற்றலுடன்கூட, போதிய கதை அறிவும் கண்ணதாசன் பெற்றிருந்த காரணத்தால், காட்சிச் சூழலுக்கேற்ற கருத்துமிக்கப் பாடல்களை நல்ல நயமுடன் அவரால் பாடமுடிந்தது. எடுத்த எடுப்பிலேயே, பல்லவியிலேயே, அப்பாடலைப் பாடும் பாத்திரத்தின் மனோநிலையைக் கதையை ஒட்டிப்பாடும் அனுபவ அறிவாற்றலை அவர் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
எடுத்துக்காட்டாக ஸ்ரீதரின் 'நெஞ்சில் ஓர் ஆலயம்' படத்தில் புற்று நோய் முற்றி மரணத்தை எதிர்பார்த்திருக்கும் கணவன் - அவன் இறந்த பிறகு மறுமணம் புரிந்து கொள்ளும்படி தன் மனைவியிடம் கூற, அந்தத் துன்பச் செய்தி கேட்டுத் துடித்துப்போன அவள் பாடிய சோகப்பாடல் 'மெல்லிசை மன்னர்' விஸ்வநாதனின் மெட்டுக்குப்போட்ட பாடல் இது:-
"சொன்னது நீதானா? சொல் சொல் என்னுயிரே;
இன்னொரு கைகளிலே நான் - நான் நானா?
எனை மறந்தாயோ?
தெய்வத்தின் மார்பில் சூடிய மாலை தெருவினிலே விழலாமா?
தெருவினிலே விழுந்தாலும் வேறோர் கை தொடலாமா?
ஒரு கொடியில் ஒரு முறைதான் மலரும் மலரல்லவா?
ஒரு மனதில் ஒரு முறைதான் வளரும் உறவல்லவா!"
கண்ணதாசன் கவிதைகளையும் கரும்பனைய பாடல்களையும் குயவர் பானையை லாவகமாக வனைவதைப் போல வனைந்தார்! புனைந்தார்! யாத்தார்! கோர்த்தார்!
"கட்டித்தங்கம் வெட்டி எடுத்துக்
காதல் என்னும் சாறு பிழிந்துத்
தட்டித் தட்டி சிற்பிகள் செய்த உருவமடா, அவள்
தளதளவென்று ததும்பி நிற்கும் பருவமடா!"
என்று 1962-ல் நான் கதை வசனம் எழுதி எம்.ஜி.ஆர். நடித்த தேவர் பிலிம்ஸ் "தாயைக்காத்த தனயன்" படத்தில் கவிஞர் பாட்டமைத்தாரே, அதே போல, கையைத் தட்டித்தட்டித் தமிழைக் கூப்பிட்டுக் கூப்பிட்டு அவர் விரும்பிய வண்ணம் பாடிக்கொண்டார்.
ஆம், எனக்குத் தெரிந்து அவர் எழுதுகோல் ஏந்தி எழுதியதே இல்லை. பாடல் புனைவது அவருக்குக் கைவந்த கலை என்பதைவிட 'நாவந்த கலை' என்பேன் நான்!
புலவரும், போர் வீரரும் பயிற்சி அளிக்கப்பட்டு உருவாக்கப்படுகின்றனர். ஆனால் பிறவிக் கவிஞன் என்பவன், அவனுக்கு அவனாகவே உருவாகிக் கொள்கிறான்!
வேதாந்த, ஆன்மிக, சாஸ்திர, சம்பிரதாய, ஆசார, அனுஷ்டங்கள் அனைத்தையுமே நன்கு அறிந்திருந்தும்கூட, ஏற்கனவே அவருக்கென்று விதிக்கப்பட்டிருந்த அந்த விதியின் வலையிலிருந்து அவரால் மீள முடியவில்லை.
ஆம், சொந்தத்தாய் மண்ணை விட்டுக் கடல் கடந்து சென்று எங்கோ இருக்கும் அயல் மண்ணில் 'ஆவி' துறக்க வேண்டும் என்பதுதான் அவருடைய விதி! காலதேவன் தருணம் பார்த்து தன் காரியத்தை முடித்துக்கொண்டான்.
எனக்குத் தெரிந்து உயிரும் உணர்வுமாகக் கடல் கடந்து அயல் நாட்டிற்குச் சென்று, தாய்த்தமிழ் மொழியில் சிறப்புரைச் சொற்பொழிவாற்றி நம் மண்ணுக்குப் பெருமை சேர்த்துத் திரும்பி உயிரற்ற வெறும் உடலாக விமானத்திலிருந்து இங்கு இறக்கப்பட்ட தமிழன்னையின் தவப்புதல்வர்கள் இருவர்.
ஒருவர் திருமுருக கிருபானந்தவாரியார்! மற்றொருவர் 'கவியரசர்' கண்ணதாசன்!
chinnakkannan
29th September 2014, 04:02 PM
ஏதோ இன்னிக்கு வெடி போடற வேலையை எஸ்வி சார் பண்ணிட்டார்..ம்ம் மன்னிச்சு விட்டுறலாம்..:)
நிழற்படங்கள், காட்சிகள் பதிவுகள் இட்ட வாசு சார் கிருஷ்ணா ஜிக்கு ஒரு ஓ..
**
வசந்த மாளிகைன்னு சொன்னா பலப் பலபதிவுகள் எண்ண அலைகள் எல்லாம் சுனாமி உயரத்திற்கு நிறைய பேரிடமிருந்து எழும்பியிருக்கின்றது..எழும்புகின்றது..எழும்பும்..உ ண்மை தான்..அனைவரும் கதை நடிப்பு என்றெல்லாம் சொல்லிவிட்ட போதினில் நா.சொ.ஒன்றுமில்லை என்பதுபோன்ற பிரமை..
மதுர கானங்கள்னு சொல்லி விட்டு படம் மட்டும் பத்தி ப் பேசினால் தவறு தான்..எனில் பாடல்கள்..
காலையில் சூரியன் உதிக்கின்றது அது
மதுவைக் கடலினில் குடிக்கின்றது
மாலை வரைக் குடித்துச் சிவக்கின்றது
என் கண்களும் அது போல் இருக்கின்றது..
குடித்துக் குடித்துப் பழக்கப் பட்ட ஒருவர் பாடுகின்ற பாட்டு..அதைப் பாடும் ந.தியின் ஸ்டைல்..எல்லோரும் சூரிய நமஸ்காரம் பண்ணுங்கோ எனச் சொல்லும் நகைச்சுவை.. வெகு நன்று என்பது கூட ப் பொருத்த்மான வார்த்தை இல்லை..
துரே பிறந்த நாள் துரே..
அப்படியா அப்ப ஈவ்னிங்க் பார்ட்டி தான்...என்று அடுத்த காட்சியில் ஏன் ஏன் ஏன்..
துள்ளித் துள்ளி வரும் ஆலம்..
கட்டழகானதோர் கற்பனை ராஜ்ஜியம் கட்டில் அமைந்ததயா
கட்டிலினில் அமர்ந்ததய்யா
எனப் பாட கம்பீர சிவாஜி.. இந்தக் கொக்குக்குத் தேவை கூரிய தூண்டிலில்
சிக்கிடும் மீன் மட்டுமே.. நம் தேவைகள் வாழட்டுமே.. என முடித்துத் தொடர்ந்து பாடலை முடித்ததும்..
“முதலாளி..அவங்களை என்ன செய்ய” என குடித்து மயங்கி விழுந்திருப்பவர்களை வி.எஸ்.ராகவன் கேட்க..”எல்லாரையும் லாரி புக் பண்ணி ஏத்தி அனுப்பு” என்ச் சொல்லும் அலட்சியம்.. நைஸ்..
கண்ணதாசனின் வார்த்தை விளையாடும் பாடல்..குடிமகனே பெருங்குடிமகனே..
கடலென்ன ஆழமா கருவிழி ஆழமா
இறங்குங்கள் மயங்கி நாம் நீந்தலாம்
ஆயிரம் கண்களில் அடிக்கடி நீந்தினேன்
ஆரம் பம் இன்று தானே காணலாம்..
**
இடை விட்ட பூவினில் கடை வைத்துக் காட்டுவேன் என்ற பெண்ணிற்கு
எதுவரைபோகுமோ அதுவரை போகலாம்
புதுவகை ரசனையோடு பார்க்கலாம்..
என்ற வரிகள் பிற்காலத்தில் தான் எனக்குப் புரிந்தது!
*
சொர்க்கமும் நரகமும் நம் வசமே
நான் சொல்வதை உன் மனம் கேட்கட்டுமே
சத்தியம் த்ர்மங்கள் நிலைக்கட்டுமே என பிசுசீலாவின் தழுதழுக்கும் குரலில் வாணிஸ்ரீ பாடுவதைக்
கண்சிவந்து கேட்டுக் கொண்டிருக்கும் ந.தியின் பாங்கு..
கலைமகள் கைப்பொருளே உனைக் கவனிக்க ஆளில்லையோ அப்படியே உருக்க வைக்கும் குரலில் பாடக்
கொடுத்த வரி கண்ணதாசனுடையது..
*
தேர் போலே ஒரு பொன்னூஞ்சல் அதில் தேவதை போலே நீ ஆட
பூவாடை வரும் வீதியிலே உன் புன்னகை இதழ்கள் விளையாட
கார்காலம் என விரிந்த கூந்தல் கன்னத்தின்மீதே கோலமிட
கைவளையும் மைவிழியும் கட்டியணைத்துக் கவி பாட..
அன்னத்தைத் தொட்ட கைகளினால்
மதுக் கிண்ணத்தை இனி நான் தொட மாட்டேன்
கன்னத்தில் இருக்கும் புன்னகை எடுத்து
மதுவருந்தாமல் விட மாட்டேன் (அந்தக்காலத்தில் கன்னத்தில் இருக்கும் கிண்ணத்தை எடுத்து என்று பாடிக்கொண்டிருப்பேன்)
ரொமான்ஸ் பாட்டிற்கு வெகு பொருத்தமான வரிகள்..வெகு பொருத்தமான ஜோடி..(வாணிஸ்ரீயின் கொண்டை தான் கொஞ்சம் நெருடும்) என்னா பாட்டுங்க இது..
*
இரவும் பகலும் இரண்டானால் இன்பம் துன்பம் இரண்டானால்
உறவும் பிரிவும் இரண்டானால் உள்ளம் ஒன்று போதாதே.. ஹெள ட்ரூ..
கண்களின் தண்டனை காட்சி வழி காட்சியின் தண்டனை காதல் வழி
காதலின் தண்டனை கடவுள் வழி கடவுளைத் தண்டிக்க என்ன வழி? - மனம் நொந்த
காதலனின் உணர்வுகளை சிறப்பாக வரியிலும் சிறப்பாக நடிப்பிலும் வந்த காட்சியன்றோ இது..
*
பிற்காலத்திலோ படம் வெளிவந்த காலத்திலோ .. காதலில் தோல்வியடைந்தவர்கள் கண்டிப்பாக் கீழ்க்கண்ட
வரிகளை உச்சரித்திருப்பார்கள்..
எழுதுங்கள் என் கல்லறையில்
அவள் இரக்கம் இல்லாதவள் என்று
பாடுங்கள் என் கல்லறையில்
இவன் பைத்தியக்காரன் என்று
*
நாற்பத்திரண்டு வருடங்கள் கடந்த பின்னும் கொஞ்சம் உண்மைக்குப் பக்கத்தில் வரும் வரிகள் இவை..
(என்னய்யா எழுதிக்கிட்டிருகக்..
ஒண்ணுமில்லம்மா..கொஞ்சம் வேலை!)
கண்கள் தீண்டும் காதல் என்பது
அது கண்ணில் நீரை வரவழைப்பது
பெண்கள் காட்டும் அன்பு என்பது
நம்மை பித்தனாக்கி அலையவைப்பது
காதலியின் பிரிவு தான் அந்தக் காதலனை இவ்வண்ணம்பாட வைக்கின்றது எனலாம்..
**
ம்ம் நிறைய எழுதலாம்..அப்புறம் ஒங்களுக்கெல்லாம் போரடிச்சுடும்னு சின்ன பயம்..அதான் இத்தோட நிறுத்திக்கறேன் :)
gkrishna
29th September 2014, 04:09 PM
ராணி வார இதழ் தினத்தந்தி ஆரம்பித்த காலம்தொட்டே வருவது நம்மில் பலருக்கும் தெரியும். இதனை "வாராந்தரி ராணி, குடும்ப இதழ்" என்றே அழைப்பார்கள். ஆரம்ப காலங்களில் இதன் எடிட்டிங் மிகவும் திறம்பட செய்யப் பட்டு சிறப்பாக வந்தது - அதாவது, தினத்தந்தி படிப்பவர்களுக்கு மிகவும் பிடிக்கும் வகையில் வந்தது. சிறுவர்களுக்கு என்று ஒரு சிறப்பு பகுதி, ஒவ்வொரு வாரமும் ஒரு தொடர் படக் கதை, சிறுவர் சிறுமியருக்கு போட்டிகள் என்று சிறுவர்கள் படிக்க இரண்டு முதல் மூன்று பக்கங்கள் ஒதுக்கப் பட்டு இருந்தது குறிப்பிடத் தக்கது.
அதில் ஆரம்ப காலத்தில் மிகவும் புகழ் பெற்ற ஒரு காமிக் ஸ்டிரிப் தொடர் குரங்கு குசலா ஆகும். இது ஒரு சிறுவர் பகுதி ஸ்டிரிப் அல்ல. ஏனெனில் இதில் வந்த கருத்துக்கள் எல்லாமே அரசியல் மற்றும் சமூக சிந்தனைகளை மைய்யமாக கொண்டு அந்த சந்தர்ப்பங்களில் நடைபெற்ற நிகழ்வுகளை சார்ந்தே அமைந்து இருக்கும். மேலும் இவர்களின் மூலமாக ராணி நிர்வாகம் தங்களுடைய கருத்துக்களையும் வெளிப்படுத்தினர்
http://lh3.ggpht.com/_sEsdnTYdgAY/SrXlbepYl-I/AAAAAAAAAE4/9A-4yp1XawY/rani%20kurangu%20kusala%201967_thumb.jpg?imgmax=80 0
மேலே உள்ள படத்தில் இருக்கும் சம்பவம் 1967இல நடைபெற்றது. மிகவும் புகழ் பெற்று, பர பரப்பாக பேசப் பட்ட ஒரு சம்பவம் ஆகும். அதனை ஒட்டியே இந்த இதழின் குரங்கு குசலா அமைந்து இருந்தது. இந்த புகழ் பெற்ற காமிக்ஸ் ஸ்டிரிப் தொடரை வரைந்தவர் பெயர் வாலி ஆகும். இதற்கான கருத்தை அனேகமாக ஆசிரியர் நிர்ணயித்து இருக்க வேண்டும். சரியாக தெரியவில்லை.
gkrishna
29th September 2014, 04:14 PM
மேலும் சில குரங்கு குசலா படங்கள்
http://lh5.ggpht.com/_sEsdnTYdgAY/SrXll8MYHxI/AAAAAAAAAFA/X6IGJHcE5zY/rani%20kurangu%20kusala%201969_thumb.jpg?imgmax=80 0
gkrishna
29th September 2014, 04:19 PM
http://lh4.ggpht.com/_sEsdnTYdgAY/SrXlwmnMEiI/AAAAAAAAAFI/wLLo1G8tYvo/rani%20kurangu%20kusala%201974_thumb.jpg?imgmax=80 0
நடுத்தர குடும்பங்களின் இயல்பு வாழ்க்கையை பிரதிபலிக்கும் விதத்தில் அமைந்ததால் குரங்கு குசலா அறுபதுகளில் அனைவரின் விருப்பமான பகுதியாக அமைந்ததில் வியப்பேதுமில்லை. அனைவரும் இந்த பகுதியை தேடித்பிடித்து படிப்பதை முதல் கடமையாக கொண்டு இருந்தனர்.
அதைப்போல பெரும்பாலான இதழ்களில் சிரிப்பு கொத்து என்று ஒரு பகுதி இருந்தது. அந்த பகுதியில் இந்த படத்தில் இருப்பதைப் போலவே ஆறு சிரிப்புகளை கொண்டு ஒரே விதமாக இருந்தது. இந்த பார்மட் கடைசி வரை மாறவே இல்லை. இதில் மற்றுமொரு விஷயம் என்னவென்றால் இந்த சிரிப்புகளை எழுதியவர் யார் என்றோ அல்லது இந்த படங்களை வரைந்தவர் யார் என்றோ விவரங்கள் கொடுக்கப்படவில்லை
http://lh3.ggpht.com/_sEsdnTYdgAY/SrXl_dxEomI/AAAAAAAAAFQ/Pcq42ZSZ72A/rani%20sirippu%20koththu_thumb.jpg?imgmax=800
gkrishna
29th September 2014, 04:26 PM
http://lh6.ggpht.com/_sEsdnTYdgAY/SqxwD8SmYYI/AAAAAAAAAC8/ZOlKN0pnKd0/madathipathi%20magal%20ad_thumb%5B1%5D.jpg?imgmax= 800
இந்த படம் வெளிவந்ததா ? மேல் தகவல் கொடுக்குமாறு தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன்
gkrishna
29th September 2014, 04:28 PM
http://lh4.ggpht.com/_sEsdnTYdgAY/Sqxwhc1W4mI/AAAAAAAAADM/8msHL_w_JvI/edhirigal%20jaakkiradhai%20ad_thumb.jpg?imgmax=800
http://lh4.ggpht.com/_sEsdnTYdgAY/Sqxw0nLZFLI/AAAAAAAAADU/opbXvGeEnj0/edhirigal%20jaakkiradhai%20review_thumb%5B1%5D.jpg ?imgmax=800
gkrishna
29th September 2014, 05:19 PM
http://cache.epapr.in/347318/91bd3e7e-41ca-44e5-bad1-1dcbe7ae0c29/600x936-600x936/1x1.png
gkrishna
29th September 2014, 05:20 PM
http://cache.epapr.in/347318/428cd6c7-f252-427d-b495-c1bb04e2b4ec/600x936-600x936/1x1.png
gkrishna
29th September 2014, 05:20 PM
http://cache.epapr.in/347318/e035829b-a6af-4ee5-8e9e-4bd9fd593e6a/600x936-600x936/1x1.png
Richardsof
29th September 2014, 06:03 PM
TODAY-MALAISUDAR PAPER
http://i59.tinypic.com/11l4shk.png
gkrishna
29th September 2014, 07:31 PM
புகைப்பட கலைஞர் stills ரவி அவர்களின் புகைப்படம்
http://2.bp.blogspot.com/-2M4dCMkbE1s/TpmPGVu9T5I/AAAAAAAAA3s/xj4Ox-VFFLQ/s1600/illayaraja-kamal-hassan-unseen-stills.jpg
கமல் சட்டையை பார்த்தால் இளமை ஊஞ்சல் ஆடுகிறது பாடல் பதிவு போல் தெரிகிறது .இளையராஜா கையில் கோல்ட் ஸ்பாட் பானம்
gkrishna
29th September 2014, 07:33 PM
http://4.bp.blogspot.com/-27-oeU0LmMQ/TpmOwq8-6PI/AAAAAAAAA28/YcbodIHLkE8/s1600/50nslv.jpg
'அரங்கேற்றத்துக்கு' முன் நாட்டிய அரங்கேற்றமா ?
gkrishna
29th September 2014, 07:35 PM
http://3.bp.blogspot.com/-MNQHZO8X-Uw/TpmNLqUVM5I/AAAAAAAAA0U/-cU3NK3hE8A/s640/21.jpg
இளைமையான மனோபாலா
gkrishna
29th September 2014, 07:39 PM
http://3.bp.blogspot.com/-xOHACw-bypA/TqHrwaHWIzI/AAAAAAAAA8A/eQG5LCZTfPo/s640/___20111013_1595595525.jpg
கனகாவுக்கு ஒப்பனை சரி பார்க்கும் அண்ணியார்
RAGHAVENDRA
29th September 2014, 08:44 PM
ஹே...ராம்... நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி மற்றும் இசையில் தொடங்குதம்மா.. இரண்டும் பொதுவாக மக்கள் அறிந்தவை.
என்னுடைய விருப்பம் இந்தப் பாடல்.
அம்ஜத் என்றாலும் அய்யர் என்றாலும் ரெண்டு ப்ளட்டுமே ரெட்டு தானடா சோதரா..
ரெண்டு நண்பர்களே ரெண்டு கண்ணாகிடும்.. ஒன்று புண்ணாகினால் ஒன்று கண்ணீர் விடும்...
ஒவ்வொரு வரியிலும் சமுதாயத்திற்குத் தேவையான கருத்துக்கள் தங்கலீஷ் பாஷையில் சொல்லப்பட்டிருப்பது அந்தக் கால ஆங்கிலேயர்களிடம் இருந்த தமிழ் dictionஐ அப்படியே பிரதிபலிக்கிறது. அந்த டிக்ஷன் நம்மவர்களிடமும் தொற்றிக் கொண்டு அதைப் பாட்டில் பயன்படுத்தியிருப்பது இயக்குநரான கமலின் யுக்தியைக் காட்டுகிறது.
பாடலைப் பாருங்கள்... கேளுங்கள்..
ஹே...ராம்... வழக்கமான தமிழ் சினிமா அல்ல..
http://www.youtube.com/watch?v=rYnHPGHksck
RAGHAVENDRA
29th September 2014, 08:54 PM
மனதை மயக்கும் மதுர கானங்களுக்கு மொழி ஒரு பொருட்டல்லவே...
இதோ.. இசை என்கிற வார்த்தை உள்ளவரை நிலைத்திருக்கும் பெயர்... ஸ்டீவி வொண்டர்... Stevie Wonder...
காலங்கள் பல கடந்தாலும் கேட்கும் போதெல்லாம் மனதை மயக்கும் மதுர கானம்..
I just called to say I Love You...
http://www.youtube.com/watch?v=QwOU3bnuU0k
RAGHAVENDRA
29th September 2014, 08:56 PM
Beegees .... இவர்களுடைய Staying Alive... உலகத்தில் ஒலிக்காத இடமே இல்லை... யார் எப்போது கேட்டாலும் மயங்கும் பாடல்...
http://www.youtube.com/watch?v=Fa9n7GirhsI
RAGHAVENDRA
29th September 2014, 08:59 PM
இதே போல் மனம் கவர்ந்த மற்றோர் சூப்பர் ஹிட் பாடல்... பின்னாளில் பல திரைப்படங்களுக்கு குறிப்பாக பாடல் காட்சிகளுக்கு theme எடுத்துக் கொடுத்தது....
Enigma ... Return to the Innocence..
http://www.youtube.com/watch?v=Rk_sAHh9s08
RAGHAVENDRA
29th September 2014, 09:02 PM
இதோ நம் ஒவ்வொருவரின் நினைவுகளையும் கிளறி விடும் அந்த சூப்பர் டூப்பர் இசை...
ஹடாரி திரைப்படத்திலிருந்து பேபி எலிஃபண்ட் வாக்..
http://www.youtube.com/watch?v=7g68qydugXQ
RAGHAVENDRA
29th September 2014, 09:05 PM
என்றும் சிரஞ்சீவியாய் ஒலிக்கும் Dr. Zhivago theme music
http://www.youtube.com/watch?v=vXtFRl1nSs4
RAGHAVENDRA
29th September 2014, 09:09 PM
Cliff Richard ... one of the greatest and favourite singer...
The Young Ones என்ற படத்தில் இடம் பெற்ற When the Girl in your Arms என்ற இப்பாடல் நம்மை மெய்மறக்கச் செய்யும்..
http://www.youtube.com/watch?v=PgbiazXeqoo
அந்தக் காலத்தில் - ஏன் இன்றும் கூட - மிகவும் விரும்பிக் கேட்கப் பட்ட ஒரு தமிழ்ப் பாடல் நினைவுக்கு வருமே...
RAGHAVENDRA
29th September 2014, 09:15 PM
இந்தியாவில் அந்தக் காலகட்டத்தில் வெளியான கிட்டத்தட்ட அத்தனை மொழிப்படங்களிலுமே இந்த beat பயன்படுத்தப் பட்டிருக்கிறது. தமிழ்ப் படங்கள் விதிவிலக்காகுமா என்ன... ஏராளமான பாடல்களுக்கு இந்த தாளக் கட்டு அடி எடுத்துக் கொடுத்துள்ளது.. இதே தாளக் கட்டில் தமிழ்ப் படங்களில் அதற்கு முன்பே பாடல்கள் வந்துள்ளன இல்லையென்று சொல்ல முடியாது. ஆனால் க்ளிஃப் ரிச்சர்டின் இப்பாடல் ஹிட்டான பிறகு இது பெரும் அளவில் உலகெங்கும் சென்றடைந்து பல இசையமைப்பாளர்களுக்கு தீனி போட்டதென்றால் மிகையில்லை.
Please Don't Tease என்கிற மிகப்பிரபலமான பாடல் இதோ..
http://www.youtube.com/watch?v=KlD4DeUio38
RAGHAVENDRA
29th September 2014, 09:21 PM
உலகப் புகழ் பெற்ற வென்ட்சர்ஸ் குழுவின் வாக் டோண்ட் ரன் ....
http://www.youtube.com/watch?v=owq7hgzna3E
RAGHAVENDRA
29th September 2014, 09:24 PM
The Chordettes குழுவின் உலகப் புகழ் பெற்ற லாலிபாப் பாடல்..
http://www.youtube.com/watch?v=Fty3Nzc-oiY
RAGHAVENDRA
29th September 2014, 09:29 PM
மனதை மயக்கமட்டுமல்ல, உள்ளத்தை உருகவும் வைக்கும் பாடல்... தங்களுடைய ஆசிரியருக்கு பிரியா விடை கொடுக்கும் மாணவர்கள்.. இந்தக் காட்சியில் சிட்னி பாய்டரின் நடிப்பு நம்மை மெய்சிலிர்க்க வைக்கும்.. முன்னமே இதனைப் பற்றி நடிகர் திலகம் திரியில் கூறியிருக்கிறேன். என்றாலும் இதை எத்தனை முறை பார்த்தாலும் கேட்டாலும் அலுக்காது சலிக்காது...
நடிகர் திலகத்தின் உள்ளம் கவர்ந்த நடிகர் சிட்னி பாய்டர் என்றால் அவருக்கு மிகப் பெரிய அங்கீகாரத்தைத் தந்தது To Sir With Love.
பாருங்கள்...கேளுங்கள்...உணருங்கள்...
http://www.youtube.com/watch?v=nXaEf4ktpPA
RAGHAVENDRA
29th September 2014, 10:00 PM
For a Fistful of Dollars .... மறக்க முடியுமா...
http://www.youtube.com/watch?v=fqjcoTzhaIk
RAGHAVENDRA
29th September 2014, 10:01 PM
The greatest remembrance of our adolescent period relected...
For a Few Dollars More ...
http://www.youtube.com/watch?v=WtblCZQXRsA
RAGHAVENDRA
29th September 2014, 10:03 PM
And now... to peak all the above...
Good Bad Ugly theme music ...
Original in HD
http://www.youtube.com/watch?v=h1PfrmCGFnk
madhu
30th September 2014, 04:13 AM
Raghav ji..Thanks a lot for those wonderful songs... nostalgic..
Add this too... Mckennas gold's "Old turkey buzzard"
http://youtu.be/8EhrzCBElXw
இதன் தமிழ் வடிவம் பற்றி ஐந்து வருடங்களுக்கு முன் நான் கேட்டபோது நீங்கதான் பதில் கொடுத்திருந்தீங்க..
ஆனால் அந்தப் பாட்டு நெட்டில் சிக்கவில்லை.. :)
எஸ்,பி.பாலசுப்ரமணியனின் குரலில்
"எனக்கொரு எண்ணம்.. உனக்கொரு எண்ணம் இல்லை..
இங்கு காண்பது ஓருயிரே..
திறக்கட்டும் உள்ளம்.. சிவக்கட்டும் கன்னம்"
என்று ஒரு பாடல் இருக்கிறது.
இடம் பெற்ற படம், இசையமைப்பாளர் யார் என்று நினைவில்லை.
Dear Madhu,
Great.
The song is correct. It was sung by S.P. Balasubramaniam.
Film: Avalukkaagave Naan
Music: BAAPJI
This film has another popular song, "Raagam vandadhu, raagam vandadhu, paada chonnadhu, paada chonnadhu", sung by T.M.S., L.R.Easwari and SPB.
And also this is the first film which used the Ceylon Baaila, "Suraangani" sung by Baapji or A.E. Manohar (I don't exactly remember the singer).
Raghavendran.
rajraj
30th September 2014, 04:54 AM
krishna: Here is the link to an article on 'En Veedu' by Randor Guy in The Hindu:
http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-cinemaplus/en-veedu-1953/article3021078.ece
The article says that the story comes from a Hollywood movie ! :)
Raghavendra: It is not 'paaiter' for Poitier. It is 'paaitiye'. The last syllable is pronounced like French ! :)
rajeshkrv
30th September 2014, 06:54 AM
வாசு ஜி,
இதோ இசையரசியும் ராட்சசியும் கலக்கும் ஒரு கன்னட பாடல்..
கிட்டத்தட்ட குங்குமப்பொட்டு குலுங்குதடி சாயலில்.... அதை விட இன்னும் சிறப்பாக இருவரும் வெளுத்து வாங்குகிறார்கள்
http://www.youtube.com/watch?v=Khpo10at4OQ
RAGHAVENDRA
30th September 2014, 07:18 AM
டியர் மது,
தங்களுடைய நினைவு சக்தி முரளி சாருக்கு ஒப்பானது.. ஐந்து ஆண்டுகளுக்கு முன் நான் கூறியதை நினைவு படுத்திக் கூறியது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாகவும் வியப்பாகவும் உள்ளது.
பாராட்டுக்கள்.
http://s.ecrater.com/stores/47612/483a61a801a35_47612n.jpg
http://www.meditations.jp/index.php?main_page=product_music_info&products_id=12453&language=en
மேலே தரப்பட்டுள்ள இணைப்பில் இப்படத்தின் இசைத்தட்டு விற்பனைக்குள்ளதாகக் கூறுகிறது. ராகம் வந்தது பாடலின் சில விநாடிகள் ஒலிப்பதிவும் இணைக்கப்பட்டுள்ளது.
இப்பாடலை தரவிறக்கம் செய்து கொள்வதற்கான இணைப்பும் கிடைத்துள்ளது.
http://www.mediafire.com/listen/7s3hizh79ck0r6u/AVALUKKAGAVE+NAAN+-+Raagam+Vanthathu%28MADURAI+SOMU-HARERAM%29.mp3
இசைத்தட்டில் வீரமணியின் சகோதரர் சோமு கஜா இசையமைத்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த ஹரே ராம் என்பவர் தான் பாப்ஜி என எண்ணுகிறேன்.
இந்தப் பாட்டில் ஒலிக்கும் அக்கார்டின் இசை, சுமதி என் சுந்தரி படத்தில் வரும் எல்லோருக்கும் காலம் வரும் பாட்டில் வரும் அக்கார்டின் இசையை அப்படியே ஒத்திருக்கும்.
rajraj
30th September 2014, 08:13 AM
Brindhaavanamum Nandhakumaaranum .....from Missiammaa (Tamil) (1955)
http://www.youtube.com/watch?v=JVEkHJ5bv2Q
Brindhaavan kaa Krishna Kanhaiyaa........... from Miss Mary (Hindi) (1957)
http://www.youtube.com/watch?v=kFsPjHXMCiU
This pair we always sing. Some Telugu singers also participate with version from Missamma! :)
.................
Gopal.s
30th September 2014, 09:26 AM
கிருஷ்ணா,
உங்களின் சுறுசுறுப்பை ரசிக்கும் கணங்களில் ஒரு ஆதங்கம் மேலிடுகிறது.இவ்வளவு ரசனையும்,அறிவும் ,ஓரளவு எழுதும் ஆர்வமும் கொண்ட ஒருவர் ,வெறி பிடித்தது போல ஒரு நாளுக்கு 20 cut paste போட்டு சாதிக்க நினைப்பது எதை? பல நண்பர்கள் சொன்ன கருத்தும் இதே.
cut paste என்பது நாம் சொல்ல நினைத்ததை இன்னொருவர் சொல்லி விட்டார் என்றால், reinventing the wheel என்பதை விட்டு ,அதை நீங்கள் பிரசுரிக்கலாம்.தவறில்லை.
ஆனால் எல்லா விஷயங்களிலும் இதை செய்தால்,நாம் எதை குறிப்பிட விரும்புகிறோம் என்பதே குழப்பமாகி விடும். முக்கால் வாசி நபர்கள்,அளவு மீறி தன் மாமன் ,மச்சான்,அப்பா இவர்களை பற்றி தப்பும் தவறுமாக அளவு மீறி புகழ்ந்து வெளியிடும் குப்பைகள் .பேதி போல இணையமெங்கும். வாந்தியோ,பேதியோ எடுப்பதென்றால் சொந்தமாகவாவது பண்ணுவோமே? இன்னொருவன் எங்கேயோ கழிந்து தொலைத்ததை அள்ளி வந்து ,பாவம் ,நம் திரி வாசகர்களுக்கு தர வேண்டுமா?(சமீபத்தில் கண்ணதாசனின் பெண் ,சித்திர பூவிழி வாசலிலே ,கவிஞர் கண்ணதாசன் பாட்டு என்று குறித்திருந்தார்.)
சொந்தமாக எழுதுவது என்றால் 100% உங்கள் கருத்து,உங்கள் விஷயங்களாக இருக்க வேண்டியது இல்லை.உங்களுக்கு உடன்பாடுள்ள ஒத்த கருத்துக்கள்,புதிய செய்திகள், இவற்றை உங்கள் சொந்த பதிவில் வேண்டிய அளவு உபயோகித்து பகிரலாமே?உங்களுக்கு நான் உட்பட 5 நண்பர்கள் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் இதையே நேரடியாகவோ,பூடகமாகவோ தெரிவித்தும் உணர மறுத்ததும் இன்றி,திரியை நிம்மதியாக படிக்க விடாத அளவுக்கு சனி,ஞாயிறுகளில் வெறி தாண்டவம் ஆடியுள்ளீர்கள்.சம்பந்தமே இல்லாமல் நரிக்குறவன் வாந்தி போல .
அத்தோடு நில்லாமல் பாட்டை திரும்ப எழுதுவது, இன்னும் விபரீதம் ஆஆ ஆஆஆ ஆஆஆஅ ஆஆஆஆ ஆஆஆஅ என்று ஒரு பக்கம். (ஹம்மிங் என்றோ,ஆலாபனை என்றோ,பிர்கா என்றோ குறித்து விடலாமே?
உங்கள் மேல் மதிப்பு கொண்டவன் (பொய் இல்லை)என்ற வகையில், உங்களை வேண்டி விரும்பி கேட்பது ,200 பதிவுகளும் cut paste ஆக போடுவதை விட ,ஒரு சொந்த பதிவு ,வாரம் ஒன்றானாலும் நீங்கள் உங்கள் அறிவை பிரயோகித்து,மற்ற தகவல்களை உபயோகித்து போட்டால், நான்தான் உங்கள் முதல் ரசிகன்.
Gopal.s
30th September 2014, 09:43 AM
நண்பர் கிருஷ்ணா ஆரம்பித்த திரி முடியும் தருவாயை எட்டியுள்ளது. முதல் திரிக்கு பலமாய் இருந்தவர்,தான் ஆரம்பித்த திரிக்கு ,மிக பலவீனமாக cut paste பண்ணி ,வரும் நபர்களுக்கு நேரமின்மை,ஆர்வமின்மை வர செய்து விட்டார். அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு. அளவுக்கு மீறி நஞ்சையே கொடுத்தால்?
சிந்திப்பவர்களுக்கு மதிப்பளிக்காத எதுவும் உன்னதம் எய்தாது.
இந்த திரியில் நான்,கார்த்திக்(ரசிக மணி),வாசு(என்ன உழைப்பு) ,புதுமை சித்தர் சின்னகண்ணன்(இவர் கொஞ்சம் எல்லாவற்றையும் படித்தால் நலம்.கேட்டதையே கேட்பார்),magic மதுஜி ,இசையரசி தாஸ் ராஜேஷ்,ராகவேந்தர்(ஆஹா),எஸ்வி (ஆவணங்கள்),வெங்கி(அற்புதமான பதிவர்)முடிந்த அளவு செய்ததை, யாரும் கவனிக்க விடாமல் distract செய்தது cut paste கிருஷ்ணாதான்.இதை அவர் தவிர்த்து நேரத்தையும்,ஆர்வத்தையும் சொந்த பதிவுகளில் செலவிட வேண்டும்.இது என் வேண்டுகோள்.
அடுத்த திரியை தொடங்க திரு ராஜேஷ் அவர்களை வேண்டுகிறேன். இத்திரிக்கு தினமும் வருகை தந்து பன்மொழி களம் அமைத்தவர். என் இசை தெய்வம் சுசீலா தாசர். திரிக்கு இளமை முலாம் பூசியவர். அவரை முன் மொழிவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
vasudevan31355
30th September 2014, 10:33 AM
இன்றைய ஸ்பெஷல் (82)
'இன்றைய ஸ்பெஷலி'ல் சிட்டாடலின் 'காதல் படுத்தும் பாடு' திரைப்படத்திலிருந்து ஓர் அருமையான டூயட் பாடல். அதிகம் விளம்பரம் இல்லாத பாடல்.
http://i.ytimg.com/vi/32TjlUzV5yw/0.jpg
படம்: 'காதல் படுத்தும் பாடு'
நடிகர்கள்: ஜெயசங்கர், வாணிஸ்ரீ, தங்கவேலு, ஆதித்யன்,சுருளிராஜன், வெண்ணிற ஆடை மூர்த்தி, ஜெயந்தி, பண்டரிபாய், முத்துலஷ்மி
ஒளிப்பதிவு பி.பி.லூகஸ்
இசை: டி.ஆர்.பாப்பா
பாடல்கள்: மாயவநாதன், ஆத்மநாபன், ஆலங்குடி சோமு, பஞ்சு அருணாசலம்
கதை கலைஞானம்
வசனம்: பனசை மணியன் கலைஞானம்
தயாரிப்பு: டொமினிக் ஜோசப்
டைரக்ஷன் : ஜோசப் தளியத் Jr.
ஜெயசங்கரை அறிமுகப்படுத்திய (இரவும் பகலும்) ஜோசப் தளியத் படம் இது.
படத்தின் ஆரம்பத்தில் நம்ம மணிரத்னத்தைத் தூக்கி சாப்பிடும் அளவிற்கு ஒரு அற்புதமான டான்ஸ். இருட்டில் படமாக்கியிருப்பார்கள். பின்னணி இசையை அற்புதமாக அளித்திருப்பார் டி.ஆர்.பாப்பா.
https://i1.ytimg.com/vi/YEvB6DQ1Ipo/hqdefault.jpg
'என்னடா பாட்டெல்லாம் ரொம்ப சூப்பாரா இருக்கே' ன்னு பாத்தா நம்ம 'பாப்பா மியூசிக்'. இனிமையான இனிமை. ஜெயந்தி பாடும் 'மேலாடை காற்றாட' பாடல் ஒன்று போதும் இந்த படத்திற்கு. அதுவல்லாமல் 'வெள்ளிநிலா வானத்திலே வந்து போகுதடா' என்ற இசைக்குயிலின் அற்புதமான பாடலும் உண்டு இந்த சுமார் ரகப் படத்திற்கு. பாடல் எழுதியவர்கள் எல்லாம் நம் கோபால் சாருக்குப் பிடித்த ஜாம்பவான்கள்.
வழக்கமான ஜெய், வாணிஸ்ரீ நடிப்பு. வழக்கமான வெளிப்புற பூங்காக்களில் படப்பிடிப்பு. பாடகர் திலகமும் சுசீலாவும் அலட்டிக் கொள்ளாமல் அசர வைப்பார்கள் நம்மை. அழகான தமிழ் வரிகள்.
நாயகியின் வயதை 'ஈரொம்போது பதினெட்டு' என்பான் நாயகன் நம் பேச்சு வழக்கு கணக்கு வாய்பாடு மாதிரி. (2 x 9=18) நாயகியின் வயசை இப்படி நாயகன் உரைக்கிறான். அவளும் இவருக்கு வயது மூவெட்டு என்பாள். (3 x 8=24) நல்ல கற்பனை.
'உன்னிடம் மார்பில் இடம் உண்டா
இந்தக் கன்னியைத் தாங்க மனமுண்டா'
வரிகள் தூள்.
http://i.ytimg.com/vi/RYTcHTbWl3s/hqdefault.jpg
இனி பாடலின் வரிகள்.
இவளொரு அழகிய பூஞ்சிட்டு
வயசு ஈரொம்போது பதினெட்டு
உடலது பனி விழும் மலர் மொட்டு
பேசும் ஒவ்வொரு சொல்லும்
தேன் சொட்டு
இவளொரு அழகிய பூஞ்சிட்டு
வயசு ஈரொம்போது பதினெட்டு
இவருக்கு வயசு மூவெட்டு
பொங்கி இளமை சதிராடும் உடற்கட்டு
விழியது கூரிய வாள்வெட்டு
நான் விளையாடும் மார்பு பூந்தட்டு
இவருக்கு வயசு மூவெட்டு
பொங்கி இளமை சதிராடும் உடற்கட்டு
சித்திரப் பூவடி சாமந்தி
இவள் சிரிக்கிற அழகு செவ்வந்தி
சித்திரப் பூவடி சாமந்தி
இவள் சிரிக்கிற அழகு செவ்வந்தி
நெற்றியிலே துண்டு நிலவேந்தி
இங்கு நெருங்குதமா அல்லி பூச்செண்டு
தாமரைப் பூமுகம் சிவப்பேற
இங்கு தள்ளாடும் கால்
கொஞ்சம் இளைப்பாற
தாமரைப் பூமுகம் சிவப்பேற
இங்கு தள்ளாடும் கால்
கொஞ்சம் இளைப்பாற
உன்னிடம் மார்பில் இடம் உண்டா
இந்தக் கன்னியைத் தாங்க மனமுண்டா
கன்னியைத் தாங்க மனமுண்டா
இவளொரு அழகிய பூஞ்சிட்டு
வயசு ஈரம்போது பதினெட்டு
இவருக்கு வயசு மூவெட்டு
பொங்கி இளமை சதிராடும் உடற்கட்டு
முத்தமிழ்க் கவிதை பின்னட்டும்
இங்கு மூவகை கனியும் சிந்தட்டும்
முத்தமிழ்க் கவிதை பின்னட்டும்
இங்கு மூவகை கனியும் சிந்தட்டும்
இளமையும் இனிமையும் இணைக்கட்டும்
இந்த இருவருக்கும் இடம் கிடைக்கட்டும்
இருவருக்கும் இடம் கிடைக்கட்டும்
(இருவரும் ஹம்மிங்)
http://www.youtube.com/watch?v=RYTcHTbWl3s&feature=player_detailpage]
madhu
30th September 2014, 10:58 AM
வாரே வா வாசு ஜி..
தூள் கிளப்பும் பாட்டு...எப்படியோ ரெண்டு பேரும் மேஜர்தான்.. :)
அந்த வரி " நெற்றியிலே துண்டு நிலவேந்தி" என்று இருக்கணும்.. ( அஷ்டமீ சந்திர விப்ராஜ தளிகஸ்தல சோபிதா என்று சஹஸ்ர நாமத்தில் வருவது போல எட்டாம் நாள் துண்டு நிலவைப் போல நெற்றி இருக்குதாம் )
"காவலும் இல்லாமல் வேலியும் இல்லாமல் தர்மம் கலங்குதம்மா" பாட்டு ரொம்பவும் பிடிக்கும்.
vasudevan31355
30th September 2014, 11:05 AM
மதுஜி! வாங்கோ வாங்கோ. உங்களைத்தான் எதிர்பார்த்தேன். நீங்கள் கேட்டிருந்த உங்களுக்கு விருப்பமான 'நானும் ஒரு பெண்' படத்தின் இடம்பெறாத சுசீலா பாடலான
'கண்ணழகின் சன்னதியில் காத்திருந்தேன்
உன் கனிமுகத்தின் தரிசனத்தைப் பார்த்திருந்தேன்'
பாடலை அளித்திருந்தேன். கேட்டு ரசித்தீர்களா?
Gopal.s
30th September 2014, 11:08 AM
வாரே வா வாசு ஜி..
தூள் கிளப்பும் பாட்டு...எப்படியோ ரெண்டு பேரும் மேஜர்தான்.. :)
அந்த வரி " நெற்றியிலே துண்டு நிலவேந்தி" என்று இருக்கணும்.. ( அஷ்டமீ சந்திர விப்ராஜ தளிகஸ்தல சோபிதா என்று சஹஸ்ர நாமத்தில் வருவது போல எட்டாம் நாள் துண்டு நிலவைப் போல நெற்றி இருக்குதாம் )
"காவலும் இல்லாமல் வேலியும் இல்லாமல் தர்மம் கலங்குதம்மா" பாட்டு ரொம்பவும் பிடிக்கும்.
நல்லவேளை, இப்போது 6 வயது வித்யாசமென்றால் ,பெண்களும் பெற்றோர்களும் reject செய்து விடுகின்றனர். இப்போது +/- 2 தான் Target .
vasudevan31355
30th September 2014, 11:10 AM
வாரே வா வாசு ஜி..
தூள் கிளப்பும் பாட்டு...எப்படியோ ரெண்டு பேரும் மேஜர்தான்.. :)
அந்த வரி " நெற்றியிலே துண்டு நிலவேந்தி" என்று இருக்கணும்.. ( அஷ்டமீ சந்திர விப்ராஜ தளிகஸ்தல சோபிதா என்று சஹஸ்ர நாமத்தில் வருவது போல எட்டாம் நாள் துண்டு நிலவைப் போல நெற்றி இருக்குதாம் )
ஆமாம் மதுஜி. அது 'துண்டு' தான். 'என்னடா உதைக்கிறதே? என்று பார்த்தேன். அழகாக சொல்லி நிம்மதிப் படுத்தி விட்டீர்கள். திருத்தியும் விடுகிறேன்.
Gopal.s
30th September 2014, 11:26 AM
என்ன கிருஷ்ணா,
ஆளையே காணோம்? கார்டு பஞ்ச் பண்ணி விட்டு வந்து விடுவீர்களே?
என்னை திட்ட யாரையாவது PM அனுப்ப சொல்லி ,cut paste பண்ணி போட waiting ஆ???:-D
madhu
30th September 2014, 11:37 AM
கண்ணழகுக்கு நன்றி வாசுஜி.. ஏற்கனவே பதிந்த பதிவுகள் சில சரியாக பதியப்படாமல் போய்விட்டன. ( நன்றி : சென்னை சிடியின் எலெக்டிரிசிடி )
வி. குமாரின் இசையில் பியானோ எப்போதும் தேனைப் பொழியும் என்பது தெரிந்ததே.. அந்தத் தேனில் கரும்புச் சாறைக் கலப்பது போல ஜேசுதாஸின் குரல் இணைய அது போதாதென்று அமுதத்தைக் கலக்க எண்ணி சுசீலாவின் குரலையும் ஒன்றாக்கி இந்தப் பாடலை உருவாக்கினார்களோ ? கொஞ்சம் "உன்னிடம் மயங்குகிறேன்" பாடலில் சாயல் நல்லாவே இருந்தாலும் இனிமைக்கு குறைவில்லை.
படம் : மங்கல நாயகி
ஜேசுதாஸ், சுசீலா
சரத்பாபு, கே.ஆர். விஜயா
கண்களால் நான் வரைந்தேன் அன்பெனும் ஓர் கவிதை
http://youtu.be/zgqBb-ZrDFQ
vasudevan31355
30th September 2014, 12:37 PM
சூப்பர் மதுஜி! 'கண்களால் நான் வரைந்தேன்' காதுகளால் கேட்டு ரசித்தேன் பலமுறை. அருமையான பாடல்.
இதே போல 'கண்ணாமூச்சி' படத்தில் இதே குமாரின் பியானோ இசையில்
ஒலிக்கும் இன்னொரு பாடல்
'பொன்னை நான் பார்த்ததில்லை
பெண்ணைத்தான் பார்த்ததுண்டு
பூவை நான் கண்டதில்லை
பூவையைக் கண்டதுண்டு'
வரிகள் சரியா? ரொம்ப நாள் ஆச்சு. குமாரின் பியானோ என்று நீங்கள் பதிந்ததால் இப்போது ஞாபகம் வந்தது.
மதுஜி! வீடியோவில சத்தமே வரலியே! வீடியோவின் ஆடியோ பிராபளமா?
http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=BNckGtcOYyo
vasudevan31355
30th September 2014, 01:14 PM
மதுஜி,
நீங்கள் கேட்டிருந்த இன்னொரு பாடல். ஏ.எம்.ராஜா, ஆண்டாள் பாடிய பாடல் "வானம்பாடிகள் போலே பிரேம கானம் பாடி மகிழ்வோம்". இது 'கள்வனின் காதலி' என்ற நாடகத்தின் பாடலாமே! அப்படியா மதுஜி!?
http://www.mediafire.com/download/r7gxy3hb0n4h4uu/Vaanambadigal+pola+++Drama+Kalvanin+Kathali++A+M+R ajah+Andaal++Music++M+Athmanathan+++Lyric++Athmana than+1++Drama++Kalvanin+Kathali.mp3
Gopal.s
30th September 2014, 02:47 PM
இப்போது பக்கத்தை வேகமாய் ஓட்டுவது என்ற ஒரு வியாதி எல்லா திரிகளையும் தொற்றியுள்ளது. குறைந்த காலத்தில் நிறைய பதிவுகள். இது ஆரோக்யமானதல்ல.
கஷ்டப்பட்டு போட படும் அசல் பதிவுகளை கொஞ்சம் கூட மதிக்காமல் ஹிந்தி வீடியோ போட்டு மூடுகிறார் சித்தூர் வாசுதேவன். இன்னொரு வகையில் மூடுகிறார் கிருஷ்ணா.
நான் எல்லோருடனும் உரையாடும் போது ,எல்லோரும் வருந்துவது ,எங்கே சார் படிக்க முடியுது ,எங்கே இருக்குன்னே கண்டு பிடிக்க முடியறதில்லே,என்று. இப்படி பண்ணினால் உழைத்து ஆராய்ந்து பதிவுகள் போடும் எனக்கு,வாசுவிற்கு,கார்த்திக்கிற்கு என்ன interest வரும்? எங்கள் பதிவுகளை பார்த்த பிறகு சிறிதாவது தாமதித்து நேரம் கொடுக்க வேண்டாமா?நாங்கள் எப்போதாவதுதானே போடுகிறோம்?ஏன் இப்படி செய்கிறார்கள்? அவ்வளவு முன்னுரை கொடுத்து செய்த பிறகும் சித்தூர் வாசுதேவனும்,கிருஷ்ணாவும் படுத்தி எடுத்தால்,எங்கேயிருந்து ஒரிஜினல் பதிவுகள் வரும்?
madhu
30th September 2014, 04:12 PM
மதுஜி! வீடியோவில சத்தமே வரலியே! வீடியோவின் ஆடியோ பிராபளமா?
தெரியவில்லையே வாசுஜி ! இப்போது கூட கிளிக் செய்து பாட்டு கேட்டேனே.. எனக்குக் கேட்கிறதே ? volume போதவில்லையோ ?
கோபால் ஜி.. உங்க inbox நிரம்பி விட்டதாம். கவனிங்க ப்ளீஸ்.
madhu
30th September 2014, 04:15 PM
மதுஜி,
நீங்கள் கேட்டிருந்த இன்னொரு பாடல். ஏ.எம்.ராஜா, ஆண்டாள் பாடிய பாடல் "வானம்பாடிகள் போலே பிரேம கானம் பாடி மகிழ்வோம்". இது 'கள்வனின் காதலி' என்ற நாடகத்தின் பாடலாமே! அப்படியா மதுஜி!?
எனக்கு இந்தப் பாடலைப் பற்றிய எந்த விவரமும் தெரியாது. முன் காலத்தில் வாரத்தில் குறைந்தது மூன்று, நான்கு முறை இந்தப் பாடல் சிலோன் ரேடியோவில் கேட்டதுண்டு. ஆனால் படத்தின் பெயரை அவர்கள் சொன்னதே இல்லை. அதனால்தான் குழப்பம். இதே பாடல்தான். ஆனால் இன்னும் கொஞ்சம் வேகமாக இருக்கும். ( வருஷம் போயாச்சு.. பாட்டுக்கும் வயசாச்சு.. அதான் ஸ்லோவா ஆயிடிச்சு போல இருக்கு என்று சிக்கா வந்து சொல்ல சான்ஸ் இருக்கு )
இனிமேல் கேட்கவே வாய்ப்பு இல்லை என்று நினைத்த பாடலை அப்படியே அள்ளிக் கொண்டு வந்து கொடுத்த வாசு-ஜிக்கு ஒரு பெர்ர்ரிய "ஓ" !!!
vasudevan31355
30th September 2014, 08:21 PM
மாலை மதுரம்
'மணமாலை' (1958) என்ற படம் கேள்விப்பட்டிருப்பீர்கள்.
அதில் மிக இளமையான குரல்களில், பாடகர் திலகமும், இசை சாம்ராஜ்ய ராணியும் பாடும் கேஷுவலான பாடல்.
'நடக்காது ஜம்பம் பலிக்காது
என்னை ஏமாற்றி ஓடவே முடியாது'
'நடக்காது ஜம்பம் பலிக்காது
என்னைத் தொடவே உம்மாலே முடியாது'
'எட்டப் பழத்துக்கே வீணா
வந்து கொட்டாவி போடவே வேணாம்'
ஆஹா! என்ன ஒரு குரல் ஜாலம்! நடக்காது என்று இருவரும் எவ்வளவு ஆணித்தரமகப் பாடுகிறார்கள்!
வேதா இந்தியில் இருந்து திருடிய இசையாய் இருந்தாலும் பாடகர்களால் மிகச் சிறப்பு பெறுகிறது இப்பாடல்.
(ஆமாம்! பாடலைத் தரவேற்றிய மணிவண்ணன் பாடலின் வீடியோ கிடைக்காமல் நடிகர் திலகம், பத்மினி நடித்த 'பணம்' படத்தின் ஸ்டில்லை வீடியோவாக தந்துள்ளாரே! ஜெமினி, சாவித்திரி நடித்த படமல்லவா இது?! ஜெமினி, சாவித்திரி ஸ்டில்லுக்கு அவ்வளவு பஞ்சமா என்ன:) )
http://www.youtube.com/watch?v=CNQFJmdH1_I&feature=player_detailpage
1957-இல் வெளிவந்த 'Naya Daur' (1957) இந்திப் படத்தில் 'Ude Jab Jab Zulfe' என்ற புகழ் பெற்ற பாடலைத்தான் மேலே கொடுத்துள்ள பாடலை வேதா சற்று மாற்றித் தந்துள்ளார். ஆஷாவும், ராபியும் இந்த அற்புத பாடலுக்கு இசை அமைத்தவர். ஓ.பி, நய்யர். திலீப் குமாரும், வைஜந்தியும் அமர்க்களமான டான்ஸ். (திலீப் 'கங்கா ஜமுனா'வை ஞாபகப்படுத்துகிறார்).
http://www.youtube.com/watch?v=052hIZziQ5c&feature=player_detailpage
rajeshkrv
30th September 2014, 10:48 PM
உடே ஜப் ஜப் பாடலின் தமிழ் வடிவம்
http://www.4shared.com/mp3/G875rLKh/un_mugil_surul-tamil_version_o.html?locale=en
madhu
1st October 2014, 05:18 AM
உடே ஜப் ஜப் பாடலின் தமிழ் வடிவம்
தமிழ் காணொளி இங்கே
http://youtu.be/sY7Bew9H1XQ
Richardsof
1st October 2014, 06:36 AM
இன்று நடிகர் திலகத்தின் பிறந்த நாள் .அவரது பிறந்த நாளை மகிழ்வுடன் கொண்டாடும் இனிய நண்பர்கள் அனைவருக்கும் மக்கள் திலகம் திரியின் நண்பர்கள் சார்பாக வாழ்த்துக்களை தெர்வித்து கொள்கின்றோம் .
http://i60.tinypic.com/vdzfwi.jpg
rajeshkrv
1st October 2014, 07:16 AM
தமிழ் காணொளி இங்கே
http://youtu.be/sY7Bew9H1XQ
madhunna arumai.. i was searching but couldnt find... neenga thaan boodha kannadi pottundu paapeengale kidaikkama poguma :lol:
vasudevan31355
1st October 2014, 07:21 AM
நன்றி ராஜேஷ்ஜி /மதுஜி
'உடே ஜப் ஜப்' பாடலின் (பாட்டாளியின் சபதம்) தமிழ் வடிவத்திற்கு.
வேதா இந்தப் பாடலிலிருந்து இரண்டு வரி டியூனை எடுத்துக்கொண்டு தன்னுடைய ஒரிஜினலையும் சேர்த்து கண்டுபிடிக்க முடியாதபடி மிளிர வைத்திருப்பார் மணமாலை படத்தின் 'நடக்காது ஜம்பம் பலிக்காது
என்னை ஏமாற்றி ஓடவே முடியாது' பாடலை.
RAGHAVENDRA
1st October 2014, 07:30 AM
http://i1146.photobucket.com/albums/o528/imagivity/NTBirthDay2014/NTBD2014COLLAGE01_zpseebd5d89.jpg
உலகத்திலே ஒருவனென உயர்ந்து நிற்கும் திலகமே...
உடனிருந்து காலமெல்லாம் மணம் பரப்பும் இதயமே...
vasudevan31355
1st October 2014, 07:32 AM
பொன்னான நன்னாள் திருநாள்.
இன்று நடிகர் திலகத்தின் பிறந்த நாள்.
http://ak.webfetti.com/assets/3dani/1/501.gif
http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/01380d34-86ff-4d17-8c33-f47e72fcb35c.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/01380d34-86ff-4d17-8c33-f47e72fcb35c.jpg.html)
vasudevan31355
1st October 2014, 07:35 AM
மய்ய நண்பர்கள் அனைவருக்கும் என் இதய தெய்வத்தின் பிறந்த நாள் சார்பாக என் மனமுவந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/sivanthaman.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/sivanthaman.jpg.html)
vasudevan31355
1st October 2014, 07:37 AM
மதுர கானங்கள் திரி நண்பர்களுக்கும், நடிகர் திலகம் திரி நண்பர்களுக்கும் என் மனப்பூர்வமான நடிகர் திலகத்தின் பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
vasudevan31355
1st October 2014, 07:39 AM
இன்று நமது திரி நடிகர் திலகத்தின் பிறந்தநாள் சிறப்புத் திரியாக சுடர் விட்டு பிரகாசிக்க இருக்கிறது. நண்பர்கள் நடிகர் திலகம் பற்றிய தங்களுடைய பதிவுகளை வழங்குமாறு பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.
vasudevan31355
1st October 2014, 07:48 AM
நடிகர் திலகம் நாடகங்களில் நடித்த சில அபூர்வ நிழற்படங்கள்.
'தேன் கூடு' நாடகத்தில் (மிக மிக அபூர்வமான படம்)
http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/e4aec96d-de13-4be0-8472-0502ab087046.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/e4aec96d-de13-4be0-8472-0502ab087046.jpg.html)
Gopal.s
1st October 2014, 07:51 AM
உன்னை தவிர யாராவது நான் சோழ மன்னன் பரம்பரை என்று சொல்லியிருந்தால் நகைத்திருப்போம். நீ சொன்ன போது வருந்தினோம். உலகத்தையே ஆண்டு கொண்டிருக்கும் சக்கரவர்த்தி ,ஏன் சோழ பரம்பரை என்று தமிழ் நிலத்தை மூன்றிலொரு பங்காக குறுக்க வேண்டும்?
உலகத்திலே ஒருவனென உயர்ந்து நிற்கும் திலகமே.
அவதார புருஷர்களில் தந்தை தாய் இருவரையுமே பெருமையாக அடையாளம் காட்டி வாழும் ஒரே அவதாரன் நீ.
சரியான நிலத்தில் சரியான விதையாக ,நாடக உரத்தில் தழைத்த அற்புத பயிரே! உன்னை சுவைக்க வேண்டிய இனமோ , அந்நிய கள் குடித்து அறியாமையில் உழன்றது.
நாங்கள் ஏற்றுமதி செய்திருக்க வேண்டிய முதல் உலகத்தரம் வாய்ந்த இந்திய பொருள் நீதான்.ஆனால் தரமான பொருளுக்கு அழகான உறை போட்டு அலங்கரிக்க தவறினோம் . இப்போது சரியான உறைகளில் தவறான பொருளெல்லாம் ஏற்றுமதி கண்டு தழைக்கிறது.
நீ மட்டுமே பணம்,அதிகாரம் விளம்பர போதைகளால் போலி புகழில் வாழாமல், எங்கள் குடிசை வீடுகளிலும் நிரந்தர தெய்வமாய் எங்களை உன்னதம் பெற வைத்து எங்கள் ஒவ்வொரு அணுக்களிலும் அனுதினமும் உயிர்க்கிறாய்.இந்த உயிர்ப்பு ,சமாதிகள் அல்ல.சந்நிதிகள் .
ஒரு பிறவியால் ,இத்தனை பிறவிகளுக்கு வாழும் போதே மோட்சமளித்த நடிப்பு ராமானுஜனே!!!
உலகத்திற்கு பல நாட்கள் ,பல தினங்கள். தாய்க்கு,தந்தைக்கு,நண்பர்களுக்கு,காதலர்களுக்க ு என்று. தமிழர்களுக்கு ஒரே நாள். அக்டோபர் 1 மட்டுமே.
தமிழர் பெருமை நாள்.
திருவள்ளுவனுக்கு பிறகு பெருமை மீட்ட நாள்.
சேர பாண்டியர்களை தலை குனிய வைத்த சோழ திருமகனின் அவதார நாள்.
மேதைமையும்,திறமையும் ,உழைப்பும்,நேர்மையும்,புகழும் அதிசயமாக இணையும் ஒரே நாளின் நினைவு திருநாள்.
உன்னால் தலை நிமிர்ந்த தமிழே தலை குனிகிறது. உன்னை போற்ற போதிய சொற்களின்றி.
என் உயிர்,உடல் என்றவற்றை தாண்டி எதை உனக்கு காணிக்கையாக்குவேன்?அழியும் இவைகள் அழியாத உனக்கு எப்படி காணிக்கையாகும்?
என் எழுத்தே உனக்கு நானளித்த காணிக்கை. அது என்றும் வாழும் சரஸ்வதி தேவி.என் எழுத்துக்களே நான் உன்னை அர்ச்சித்து போற்றும் சத்திய பூஜை.
எங்கள் போற்றுதலுக்குரிய தலை தமிழ் மகனே!!! தரம் கேட்ட தமிழர்களையும் உன் ஆன்மா மன்னிக்குமாக.வாழும்போதே நண்பர்-பகைவர், உற்றோர்-மற்றோர் என்று பேதம் காட்டாத நீயா ,தெய்வமாகிய பின் பேதம் காட்டுவாய்? உன்னை திரிக்கும் ,திரிக்கும் ,தமிழர்களாய் வாழாமல் தாழும் நரிக்கும் கூட அருள் தருவாய்
நடிப்புக்கும்,ஆண்மைக்கும்,அழகுக்கும்,திண்மைக்கும், தன்மைக்கும்,தகைமைக்கும்,பண்புக்கும்,நட்புக்கும்,தூ ய மனதுக்கும், சொற் தமிழுக்கும் இலக்கணம் வகுத்த எங்கள் தலை தெய்வமே!!
தமிழனான எனது முழு முதற் கடமை நிறைவேறிய திருப்தியில் ,நான் நிஜமாக நேசிக்கும் ஒரே நாளில் என் பணிகளை தொடங்குகிறேன்.
vasudevan31355
1st October 2014, 07:53 AM
'நீதியின் நிழல்' நாடகத்தில் ஒரு காட்சி.
http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/1b166ce4-4dd4-41ab-90ce-b7911dcb5c32.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/1b166ce4-4dd4-41ab-90ce-b7911dcb5c32.jpg.html)
vasudevan31355
1st October 2014, 08:00 AM
'தேன் கூடு' நாடகத்தில் (மிக மிக அபூர்வமான படம்)
http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/922649d3-088e-44f2-b1c3-2757b0a0ba77.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/922649d3-088e-44f2-b1c3-2757b0a0ba77.jpg.html)
vasudevan31355
1st October 2014, 08:02 AM
தெய்வத் தாயுடன் நம் 'தெய்வ மகன்'
http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/withmother.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/withmother.jpg.html)
vasudevan31355
1st October 2014, 08:08 AM
'வேங்கையின் மைந்தன்' நாடகத்தில்
http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/98468f29-a69f-4b6a-9eaa-b31fe936984b.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/98468f29-a69f-4b6a-9eaa-b31fe936984b.jpg.html)
vasudevan31355
1st October 2014, 08:16 AM
'வீர பாண்டியக் கட்ட பொம்மன்' நாடகமாக நூறு முறை இடம் பெற்ற இடங்கள்
http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/17a09294-6f78-462f-b22c-c3d2054b5749.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/17a09294-6f78-462f-b22c-c3d2054b5749.jpg.html)
http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/IMG_0027.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/IMG_0027.jpg.html)
http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/IMG_0028.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/IMG_0028.jpg.html)
http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/IMG_0029.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/IMG_0029.jpg.html)
vasudevan31355
1st October 2014, 08:24 AM
'வீர பாண்டியக் கட்ட பொம்மன்' நாடகக் காட்சி.
http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/729eeab9-a5e8-4b79-ad65-fb88c5101f17.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/729eeab9-a5e8-4b79-ad65-fb88c5101f17.jpg.html)
vasudevan31355
1st October 2014, 08:33 AM
நடிகர் திலகம் டாப் 10
இயக்குனர் சி.வி.ராஜேந்திரன் பார்வையில்.
(விகடன் தீபாவளி மலர் 2013.)
http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/8-10.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/8-10.jpg.html)
http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/84.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/84.jpg.html)
http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/86.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/86.jpg.html)
http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/87.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/87.jpg.html)
http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/88.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/88.jpg.html)
http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/90-1.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/90-1.jpg.html)
http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/91-1.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/91-1.jpg.html)
vasudevan31355
1st October 2014, 08:37 AM
http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/b3.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/b3.jpg.html)
vasudevan31355
1st October 2014, 08:37 AM
http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/b4.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/b4.jpg.html)
vasudevan31355
1st October 2014, 08:38 AM
http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/b2.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/b2.jpg.html)
vasudevan31355
1st October 2014, 08:42 AM
http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/a5-2-1.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/a5-2-1.jpg.html)
vasudevan31355
1st October 2014, 08:46 AM
http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/VTS_02_1VOB_001330643-1.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/VTS_02_1VOB_001330643-1.jpg.html)
vasudevan31355
1st October 2014, 08:46 AM
http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/3-6.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/3-6.jpg.html)
Richardsof
1st October 2014, 08:55 AM
http://i58.tinypic.com/2ewf9et.jpg
Richardsof
1st October 2014, 08:56 AM
http://i60.tinypic.com/2uidu85.jpg
Richardsof
1st October 2014, 08:57 AM
http://i62.tinypic.com/2r4izyr.jpg
Richardsof
1st October 2014, 08:58 AM
http://i61.tinypic.com/2zrjh93.jpg
madhu
1st October 2014, 08:59 AM
வாசு ஜி... நடிகர் திலகத்தின் அசத்தல் புகைப்படங்கள் அத்தனைக்கும் நன்றியோ நன்றி...
பெட்டகத்தில் இன்னும் உள்ள விலைமதிப்பற்ற ரத்தினங்களில் சிறந்தவற்றை வழங்குங்க.. காத்திருக்கிறோம்.
parthasarathy
1st October 2014, 09:40 AM
கலைமகளின் அவதாரமே,
கலைமகள், அலைமகள், மலைமகள் மூவரையும் போற்றும் நவராத்திரி சமயத்தில் உலகத்தில் நீ அவதரித்ததே, நீ கலைமகளின் அவதாரம் என்பதைப் பறை சாற்றத்தானோ?
எங்கள் ஊன், உடல், உயிர் எல்லாவற்றிலும் நீக்கமற நிறைந்து விட்ட கலைக்குரிசிலே, நடிகர் திலகமே, எப்பிறவி எடுத்தாலும், என்னை உன் ரசிகனாகவே படைத்து விடு.
இரா. பார்த்தசாரதி
vasudevan31355
1st October 2014, 09:51 AM
'திரும்பிப் பார்' (நடிகர் திலகம் பிறந்தநாள் சிறப்பு ஆய்வுக் கட்டுரை)
திரும்பிப் பார்
http://2.bp.blogspot.com/-NpA7Yf6NLcU/Uo7aEYNScoI/AAAAAAAALZE/FFaHPbjIDU4/s1600/thirumbi+paar.PNG
நடிகர் திலகத்தின் 5 ஆவது அற்புதப் படைப்பு.
வெளியான நாள் - 10.07.1953
தயாரிப்பு - மாடர்ன் தியேட்டர்ஸ்
கதை வசனம் - மு.கருணாநிதி
சென்னையில் வெளியான திரையரங்குகள் - பாரகன், பிரபாத், சரஸ்வதி, நூர்ஜஹான்
இசை - 'இசைமேதை' ஜி.ராமநாதன்
படத்தொகுப்பு - எல்.பாலு
ஒளிப்பதிவு - w.r.சுப்பாராவ்
இயக்கம் - டி.ஆர். சுந்தரம்
நடிக நடிகையர்:
நடிகர் திலகம், பி.வி.நரசிம்ம பாரதி, பண்டரிபாய், கிரிஜா, கிருஷ்ணகுமாரி, டி.எஸ்.துரைராஜ், ஏ.கருணாநிதி, டி.பி.முத்துலட்சுமி மற்றும் பலர்
கதை:
பெற்றோரை இழந்து தன் தம்பி பரந்தாமனுடன் கோவையில் தனியே வாழ்ந்து வருகிறாள் நல்மனம் கொண்ட பூமாலை. தம்பி பரந்தாமனோ பரம அயோக்கியன். கபடதாரி, வேஷதாரி, காமுகன், நயவஞ்சகன் போன்ற பல பட்டங்களுக்கு முதல் சொந்தக்காரன். பெண்களிடம் காதல் போதையூட்டும் களிப்பான கனிமொழி வார்த்தைகளை தேன் குழைத்து பேசி, வாளிப்பான அவர்கள் அழகை சூறையாடி விட்டு அவர்கள் வாழ்வை நாசம் செய்து சுகம் காணுவதில் கை தேர்ந்த சூத்ரதாரி. தம்பியைத் திருத்த பல வழிகளில் முயன்று முடியாமல் முழிக்கிறாள் பூமாலை.
கோவை சிவசக்தி மில் தொழிலார்களின் மேஸ்திரி புண்ணிய கோடியின் மகன் பாண்டியன் ஒரு எழுத்தாளன். நல்லவன். அவன் எழுதும் கதைகளைத் திருடி அவற்றை தான் எழுதுவதாக தன் பெயரை அச்சிட்டு ஊரை ஏமாற்றுகிறான் பரந்தாமன். அவனுக்கு உடந்தை கருடா பதிப்பகத்தின் உரிமையாளன் கருடன். அவனும் ஒரு எத்தன். பணப் பித்தன். இந்த ஏமாற்று அக்கிரமத்தைத் தட்டிக் கேட்கும் பாண்டியனுக்கும், பரந்தாமனுக்கும் அடிக்கடி தகராறு எற்பட்டு இருவரும் பகையாளியாகிறார்கள்.
பாண்டியனின் எழுத்தை தன் எழுத்தாக கருதி தெரியாமல் ஏமாளியாக நம்பும் பாமா என்ற இளம் பெண்ணை தன் காதல் வலைக்குள் சிக்க வைக்கிறான் பரந்தாமன். அந்தப் பேதையும் இவனுடைய காதல் ரசம் சொட்டும் பேச்சுகளுக்கு மயங்கி அடிமையாகிறாள்.
பூமாலைக்கு குமுதா என்றொரு சொந்தம். பரந்தாமனுக்கு முறைப்பெண். குமுதாவை தன் தம்பி பரந்தாமனுக்கு மணமுடித்து வைக்க எண்ணியிருக்கிறாள் பூமாலை. ஆனால் பரந்தாமன் பாமாவைக் காதலிப்பதை அறிந்து பாமாவை அவனுக்கு மணமுடித்து வைக்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகிறாள் பூமாலை. திருமணத்தன்று பாமாவைக் கல்யாணம் செய்து கொள்ளாமல் அவளை வெறும் மணக் கோலத்திலேயே விட்டுவிட்டு தாலி கட்டாமல் யாருக்கும் தெரியாமல் வெளியே கம்பி நீட்டி விடுகிறான் கயவன் பரந்தாமன். தன் கல்யாணம் நின்று போனதை எண்ணிக் கண்ணீரும் கம்பலையுமாய் நிற்கிறாள் பாமா.
சில நாட்கள் சென்று வீட்டிற்கு திரும்பி வரும் தம்பி பரந்தாமனை பாமாவை ஏமாற்றி ஓடிய குற்றத்திற்காக அக்காள் பூமாலை கடுமையாக கடிந்து கொள்ள, திருமணத்திற்கு முன் பாமா நடத்தை கெட்டவள் என்று தனக்குத் தெரிந்தததால் கல்யாணம் பிடிக்காமல் ஓடி விட்டதாக வாய் கூசாமல் பொய் கூறி பாமாவின் மீது பழி சுமத்தி அக்காள் வாயை அடைத்து விடுகிறான் அந்த பசப்பு வார்த்தை பரந்தாமன் எனும் கபட நரி. என்றாலும் பூமாலை அதை நம்ப மறுக்கிறாள். தம்பியை எவ்வழியிலும் திருத்த இயலவில்லையே எனக் கவலை கொள்கிறாள்.
பாண்டியனின் தந்தை அவனுக்கு திருமணம் செய்ய பாமாவைப் பெண் பார்த்து முடிக்கிறார். இதைக் கேள்விப்பட்ட பரந்தாமன் தன் விரோதியான பாண்டியனின் வாழ்வை சீர்குலைக்க முடிவு செய்கிறான். அவன் கல்யாணத்தை நாசமாக்கவும் சதி செய்கிறான்.
அதனால் பாண்டியனுக்கு நிச்சயத்திருக்கும் பாமாவின் வீட்டிற்கு திரும்ப வந்து தன் சதித் திட்டங்களை நிறைவற்றத் தொடங்குகிறான் பரந்தாமன். திருமணத்தன்று தாலி கட்டாமல் ஓடிப் போன பரந்தாமன் தன் மேல் கோபமுற்றிருக்கும் பாமாவை பல கட்டுக் கதைகள் கூறி அவளை சமாதானப் படுத்தி, மறுபடியும் அவளுக்குக் காதல் போதையூட்டி, அவளை வீட்டை விட்டே தன்னுடன் ஓடி வந்து விடும் படியும் தூண்டுகிறான். இதனால் பாண்டியனின் வாழ்வு நாசமாகும் அல்லவா! அவன் எண்ணியபடியே எல்லாம் நடக்கிறது. அந்த அப்பாவி பாமாவும் இவன் பேச்சை நம்பி அவனுடன் வீட்டை விட்டு வெளியேறுகிறாள். மணமகள் பாமா ஓடிப் போன நிலையில் திருமணம் தடைப் பட்டு பாண்டியன் பேரதிர்ச்சிக்கு உள்ளாகிறான். அன்று பரந்தாமன் பாமாவை திருமணத்தன்று தவிக்க விட்டு ஓடிப் போனான். இன்று பாமாவோ பாண்டியனைத் தவிக்க விட்டு விட்டு பரந்தாமனுடன் ஓடிவிட்டாள். இரண்டு குற்றங்களுக்கும் மூல காரணம் பகல் வேஷக்காரன் பரந்தாமனே!
பாமாவை சென்னைக்கு அழைத்து செல்லும் பரந்தாமன் அவளுடன் சில நாட்கள் உல்லாசமாய் இருந்து விட்டு அவளை தன்னந்தனியே தவிக்க விட்டு விட்டு ஊருக்கு ஓடி வந்து விடுகிறான். தான் மீண்டும் பரந்தாமனால் ஏமாற்றப்பட்டு விட்டோம் என்று தெரிந்த பாமா கடற்கரையில் மூர்ச்சையாகிறாள். வாழ வேறு வழி தெரியாமல் வேசியாகிறாள். தன் வாழ்வை சூறையாடிய பரந்தாமனை பழி வாங்க சமயம் பார்த்திருக்கிறாள்.
தன் திருமணம் தடை பட்டதை எண்ணி வருந்தும் பாண்டியனை தற்செயலாக ரயிலில் சந்திக்கிறாள் பூமாலை. அவன் நிலைமை அறிந்து அவனை சென்னையில் உள்ள குமுதா வீட்டில் வைத்து ஆதரிக்கிறாள் அவள். பாண்டியன் மேல் ஒருதலைக் காதலும் கொள்கிறாள். ஆனால் குமுதாவும் பாண்டியனைக் காதலிக்கிறாள். பாண்டியனும் அவளை விரும்புகிறான்.
ஊர் திரும்பிய பரந்தாமன் அங்குள்ள சிவசக்தி மில் தொழிலாளிகளின் நியாயமான போராட்டங்களை தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கிறான். 'பாட்டாளியின் குரல்' என்ற ஒரு புத்தகத்தை தொழிலாளர்களுக்காக குரல் கொடுப்பது போல் எழுதி அவர்களின் நம்பிக்கையை நயவஞ்சகமாகப் பெறுகிறான். தொழிலாளர்களின் தலைவனாகவும் ஆகி விடுகிறான்.வேலை நிறுத்தத்தையும் அறிவிக்கிறான். மேஸ்திரியும், தொழிலாளர்களும் அவனை மலை போல் நம்பி ஏமாறுகின்றனர்.
இது சம்பந்தமாக பேச அழைக்கும் மில் முதலாளியிடம் தொழிலார்களை விலை பேசி பெரும் பணத்தையும் அவரிடமிருந்து லஞ்சமாகப் பெற்றுக் கொண்டு தொழிலார்களை ஏமாற்றுகிறான் பரந்தாமன். அது தெரியாத தொழிலார்கள் இன்னும் அவன் மாய்மாலப் பேச்சை நம்பி அவன் சொன்னபடி திரும்ப வேலைக்கு செல்கிறார்கள்.
குமுதா பாண்டியன் இவர்களுடன் சென்னையிலிருந்து கோவை திரும்புகிறாள் பூமாலை. பாண்டியன் அங்கிருப்பது கண்டு ஆத்திரமுற்று அவனை அடித்து விடுகிறான் பரந்தாமன். இதனால் மனம் நொந்து தன் தந்தையிடமே சென்று விடுகிறான் பாண்டியன். இதனால் வேதனையடையும் குமுதா பூமாலையிடம் தான் பாண்டியனைக் காதலிப்பதை சொல்ல அதிர்ச்சியடையும் பூமாலை தன் ஒருதலைக் காதலை மனதுக்குள்ளேயே பூட்டி அழுகிறாள். பாண்டியனை குமுதாவிற்கு திருமணம் செய்து தருவதாக உறுதி கூறுகிறாள்.
பாண்டியனின் தந்தை மேஸ்திரி ஒரு ஊமைப் பெண்ணை இரண்டாவது திருமணம் செய்து கொள்கிறார் தன் மகனின் எதிர்ப்பை மீறி. . பாண்டியன் இது பிடிக்காமல் வீட்டை விட்டு வெளியேறுகிறான். திரும்பவும் அவனைச் சந்தித்து தன் வீட்டிற்கு அழைத்துச் சென்று பாண்டியனுக்கும், குமுதாவிற்கும் திருமணம் செய்து வைக்கிறாள் பூமாலை தன் காதல் தோல்வியுற்ற நிலையில்.
தான் இல்லாத நேரத்தில் சொன்னபடி குமுதாவை தனக்கு திருமணம் செய்து வைக்காமல் பாண்டியனுக்குத் திருமணம் செய்து வைத்த விட்டதாக அக்காளின் மேல் பாய்கிறான் பரந்தாமன்.
http://www.thehindu.com/multimedia/dynamic/00959/2009031350291601_959370e.jpg
பரந்தாமனின் தொழிலாளர் நயவஞ்சகத்தை எண்ணிக் கொதிப்படையும் பாண்டியன் தொழிலார்களிடம் பேசி பரந்தாமனின் அக்கிரமங்களைப் பற்றி அவர்களுக்குப் புரிய வைக்கிறான். தவிர தொழிலாளர்களின் தலைவனாகவும் ஆகிறான்.தொழிலாளர்களுக்காக முதலாளியிடம் பரிந்து பேசுகிறான். முதலாளி தரும் கையூட்டையும் தூக்கி தூர எறிகிறான் அந்த நல்லவன். முதலாளியின் மகள் டாக்டர் உஷாவும் தொழிலாளர்களுக்காகப் பரிந்து பேசுகிறாள்.
மேஸ்திரி புண்ணியகோடி இரண்டாவது திருமணம் செய்து கொண்ட அந்த ஊமைப் பெண்ணையும் கூட சூறையாடத் துடிக்கிறான் பரந்தாமன். மேஸ்திரி புண்ணியகோடி பரந்தாமனின் உண்மையான சொருபத்தை அறிந்து கொள்கிறான்.
உஷாவைத் தனக்குத் திருமணம் செய்து தரும்படி முதலாளியிடம் நிர்ப்பந்திக்கிறான் பரந்தாமன். ஆனால் முதலாளி அதற்கு மறுத்து விடுகிறார்.
குமுதாவை தன்னிடமிருந்து பிரித்து திருமணம் செய்து கொண்டது, தொழிலாளிகளிடம் தன் துரோக செயல்களை எடுத்துரைத்து தன் முகமூடியைக் கிழித்தது என்று பாண்டியன் மேல் கடும் கோபம் கொள்ளும் பரந்தாமன் பாண்டியனைக் கொலை செய்ய முயற்சிக்கிறான். இதை அறிந்த குமுதா பரந்தாமன் மேல் கடும் கோபம் கொள்கிறாள். இனியும் இருந்தால் தன் கணவனைக் கொன்று விடுவான் பரந்தாமன் என்று பயந்து கண்ணீர் வடிக்கிறாள். இதனால் பூமாலை அவர்கள் இருவரையும் திரும்ப சென்னைக்கே அனுப்பி விடுகிறாள்.
சென்னையில் தங்கியிருக்கும் பாண்டியனை சாமர்த்தியமாக ஒரு திருட்டுக் குற்றம் சுமத்தி ஜெயிலுக்கு அனுப்பி விடுகிறான் பரந்தாமன். கர்ப்பவதியான குமுதா ஆதரவற்று நிற்கிறாள். ஒரு ஆஸ்பத்திரி வாட்ச்மேன் அவளை ஆதரித்து தன் வீட்டிற்கு அழைத்துச் செல்கிறார்.
வேலை நிறுத்தத்திற்காக தொழிலாளர்களைத் தூண்டி விட்டதற்காக போலீஸ் பரந்தாமனைத் தேட, பரந்தாமன் மாறு வேடத்தில் தப்பி சென்னை செல்கிறான். அங்கு எதிர்பாராவிதமாக வேசியாக பாமாவை சந்திக்கும் பரந்தாமன் அவளிடமிருந்தும் தப்பி விடுகிறான். போலீசிலும் சிக்கி கோர்ட்டாரிடம் தன் சாமர்த்திய வாதத் திறமையினால் முதல் மன்னிப்புப் பெற்று வெளியே வந்து விடுகிறான். ஆனால் தொழிலாளிகள் பரந்தாமனின் கயமைத்தனத்தைப் புரிந்து கொள்கிறார்கள்.
ஜெயில் வாழ்க்கையில் வாடும் பாண்டியனும் சுதந்திரதின நாளன்று கருணை விடுதலை செய்யப்பட்டு பல கஷ்டங்களுக்கிடையே கைக்குழந்தையுடன் கஷ்டப்படும் தன் மனைவி குமுதாவைத் தேடிக் கண்டு பிடித்து அவளுடன் சேர்கிறான். மில் முதலாளி வேலை நிறுத்தம் செய்த தொழிலாளர்களை வேலையை விட்டே நீக்கி விட, மேஸ்திரி புண்ணியகோடியும்,இதர தொழிலார்களும் பிச்சைக்காரர்களாய் சென்னை வந்து சேர, அவர்களை காணும் பாண்டியன் தன் தந்தையும், மற்றவர்களும் வேலை இழந்து தவிப்பதை அறிந்து அவர்கள் மீண்டும் வேலை பெற வேண்டி முதலாளியைச் சந்திக்க அனைவருடனும் கோவை செல்கிறான்
பரந்தாமனின் பேச்சை நம்பி வேலை பறி போன தொழிலாளர்களுக்காக வேலைக் கேட்க முதலாளியைச் சந்திக்க செல்லும் பூமாலையின் வேண்டுகோளை நிராகரிக்கிறார் முதலாளி. அங்கு மயக்கமாகும் பூமாலையை முதலாளி மகள் டாக்டர் உஷா முதல் உதவி செய்து பூமாலையின் வீட்டிற்குக் கொண்டு சென்று உடன் இருந்து கவனிக்கிறாள். உஷாவின் மேல் ஒரு கண்ணாயிருக்கும் பரந்தாமன் அங்கே இரவில் உறங்கிக் கொண்டிருப்பது தன் அக்காள் பூமாலை என்பது தெரியாமல் அவளை உஷா என்று நினைத்து காம வெறியில் நெருங்கித் தொட, திடுக்கிட்டு எழுந்திருக்கும் பூமாலை தன் தம்பியின் கெட்ட எண்ணத்தைப் தெரிந்து கொண்டு கோபத்தின் உச்சத்தில் பொங்கி விடுகிறாள். "உனக்கு பெண் சுகம் தானே வேண்டும். இதோ உன் அக்காள் நான் இருக்கிறேன். என்னிடமே அதைப் பெற்றுக் கொள்' என்று அவனை வார்த்தை அம்புகளால் தைக்கிறாள். நீ ஏமாற்றிய பெண்களின் வாழ்க்கையைத் 'திரும்பிப் பார்'... நீ செய்த கொடுமைகளைத் திரும்பிப் பார்... நீ நடந்து வந்த பாதையைத் திரும்பிப் பார்' என்று கர்ஜிக்கிறாள். சற்றும் இதனை எதிர்பாராத பரந்தாமன் அக்காளின் கடும் கோபச் சொல்லையும், அக்காவே தன் காம வெறியைத் தீர்க்க அவளையே தனக்கு அர்ப்பணிக்கத் தயாரான நிலையையும், தன்னைத் திருத்த அவள் மேற்கொண்ட அந்த கொடுஞ் செயலையும் கண்டு துடித்துத் துவள்கிறான். கதறுகிறான். கண்ணீர் வடிக்கிறான். மனம் திருந்துகிறான். ஆனால் அக்காள் நம்ப மறுக்கிறாள்.
தன் முறைப் பெண் கோமதி வாழ்வு தன்னால் தானே கேட்டது என்று எண்ணி அவளிடம் மன்னிப்பு கேட்க கோமதியின் விலாசம் தேடி அவள் வீட்டிற்கு செல்கிறான் பரந்தாமன்.ஆனால் அங்கு தன்னால் பாதிக்கப்பட்டு வேசியான பாமா துப்பாக்கியுடன் தன்னை சுட வந்தததை அவன் எதிர்பார்க்க வில்லை. தான் திருந்திவிட்டதைக் கூறும் பரந்தாமன் தன்னை சுடாமல் இருக்கும்படி பாமாவிடம் வேண்ட, வழக்கம் போல பரந்தாமன் நாடகமாடுகிறான் என்று பாமா மறுக்க, இருவரும் துப்பாக்கியுடன் போராடும் போது துப்பாக்கி வெடித்து பாமா கொலையுண்டு விழ, அங்கே தம்பி பரந்தாமனைத் தேடி வரும் பூமாலை பரந்தாமன் கோமதியைத்தான் பழி உணர்ச்சியின் காரணமாக சுட்டு விட்டான் என்ற தவறுதலான கோபத்தில் தம்பியையே தான் கொண்டு வந்த துப்பாக்கியால் சுட்டு விடுகிறாள். திருந்திய தம்பியாக பரந்தாமன் தான் இப்போது நல்லவன் என்று அக்காளிடம்கூறி உயிரை விடுகிறான். தன் தம்பியைத் தன் கையால் சுட நேர்ந்த துரதிருஷ்டத்தை எண்ணி கலங்குகிறாள் பூமாலை. இறந்தது கோமதி அல்ல...பாமா என்றும் கண்டு கொள்கிறாள்.
ஊர் திரும்பி முதலாளியைச் சந்திக்கும் பாண்டியன் வேலை இழந்த அனைவருக்கும் வேலையைத் திருப்பித் தருமாறு அவரிடம் வேண்டுகிறான். மில் முதலாளி தன் மகள் உஷாவால் மனம் திருந்தி பாண்டியனிடம் மில் நிர்வாகத்தை ஒப்படைகிறார். தொழிலாளர் மனம் மகிழ்கின்றனர். அனால் செய்தித்தாளில் பூமாலை தன் தம்பி பரந்தாமனைக் கொலை செய்ததாக வந்த செய்தியைப் படித்து அதிர்ச்சியாகும் பாண்டியனைப் போலீஸ் கைது செய்கிறது. போலீஸ் பாண்டியனுக்கும் பரந்தாமனுக்கும் இருந்த முன் விரோதத்தின் காரணமாகவே பாண்டியன் பரந்தாமனைக் கொலை செய்தான் என்று பாண்டியனைக் கைது செய்கிறது
கோர்ட்டில் விசாரணை நடக்கிறது. 'பூமாலை பரந்தாமனை சுட்டிருக்க முடியாது....முன் விரோதம் காரணமாக பாண்டியன்தான் பரந்தாமனை சுட்டு விட்டான். பாண்டியன் மேல் உள்ள அன்பினால் கொலைப் பழியை பூமாலை ஏற்றுக் கொண்டாள்' என்று அரசு தரப்பு வக்கீல் வாதாடுகிறார். ஆனால் பூமாலை 'தன் தம்பியைக் சுட்டுக் கொன்றது நானே! பாண்டியன் அல்ல... அவன் நிரபராதி' என்று நீதிபதி முன் வாக்குமூலம் கொடுத்து, நடந்த கதைகள் அத்தனையையும் விளக்க, உண்மைகள் அனைவருக்கும் புரிகிறது. நீதிபதி பூமாலைக்கு மரண தண்டனை விதிக்கிறார். பாண்டியன் நிரபராதி என விடுவிக்கப் படுகிறான்.
பரந்தாமனாக நடிகர் திலகம்
https://fbcdn-sphotos-c-a.akamaihd.net/hphotos-ak-ash4/s720x720/393733_134366080002496_1126851230_n.jpg
பரந்தாமன் என்னும் அனைவரையும் மிரள வைக்கும் வில்லன் பாத்திரத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன். ஆண்டி-ஹீரோ. ஹீரோவும் அவரே. (நரசிம்மபாரதி ஒப்புக்கு சப்பாணி நாயகர்) கதாநாயகர்கள் எவருமே செய்யத் துணியாத பாத்திரம். அதுவும் முதல் படத்தில் முழு ஹீரோவாக நடித்து விட்டு ஐந்தாவது படத்தில் கொடிய வில்லன் என்ற பாத்திரத்தை ஏற்று நடிக்க நடிகர் திலகத்திற்கு மட்டுமே துணிச்சல் வரும். அந்த அளவிற்கு தன் திறமை மேல் அவருக்கு அவ்வளவு நம்பிக்கை.
பல பெண்களை ஏமாற்றும் காமுகன் வேடம். அக்கா குழந்தைகளுக்கு பாடம் சொல்லிக் கொடுக்கும் போது குழந்தைகள் போடும் சப்தம் பிடிக்காமல் அக்காவிடம் சலித்துக் கொள்வது, சோம்பேறித்தனத்தின் உச்சியில் போட்டிருக்கும் நைட் கவுனுடனே ஷவர் பாத் எடுப்பது, கருடன் பதிப்பகம் நடத்தும் டி.எஸ். துரைராஜுடன் சேர்ந்து எழுத்தாளன் பாண்டியன் எழுத்துக்களைத் திருடுவது, பாண்டியனின் எழுத்தை தன் எழுத்து என்று நம்பி ஏமாறும் கிருஷ்ணகுமாரியிடம் காதல் மொழி வசனங்கள் பேசி ஏமாற்றுவது, கள்ளச் சிரிப்பு, பேச்சிலே நயம் காட்டி பசப்பு வார்த்தைகளால் பாவையரை மயக்குவது, பாண்டியன் தனக்குப் போட்டியாக தொழிளார்களுக்கு தலைவன் ஆகி விட்டானே என்ற பொறாமையில் வெந்து தணிவது, அக்கா தன்னைக் கண்டிக்கும் போதெல்லாம் ஏதாவது சமாதானம் சொல்லி அவள் வாயை அடைப்பது, தன் செயலுக்கு நியாயம் கற்பிப்பது, புத்திசாலித்தனமாக பேசி பிரச்னைகளிடமிருந்து தப்பிக்கும் சாமார்த்தியம், கிருஷ்ணகுமாரியை மீண்டும் மயக்கும் பேச்சுக்களால் மதி மயங்கச் செய்து சென்னை அழைத்துச் சென்று அவளை பரிதவிக்க விட்டு விட்டு ஓடி வந்து விடும் துரோகம், தொழிலாளர்களின் அவல நிலையை தனக்கு சாதகமாக்கி அவர்களை வேலை நிறுத்தத்திற்கு தூண்டும் மேடைப் பேச்சு சாமர்த்தியம், முதலாளியிடம் தொழிலாளர்களை அடகு வைத்து விட்டு லஞ்சம் வாங்கும் கோரம், பாண்டியனை கொலை செய்யவே போகும் அளவிற்கு கண்மண் தெரியாத ஆத்திரம், கோர்ட்டில் எசகுபிசகாக மாட்டிக் கொண்டவுடன் 'இது என்னுடைய முதற்குற்றம்... அதற்காகவே நான் மன்னிக்கப் படலாம்' என்று சாதுர்யமாக வாதிட்டு தண்டனையில் இருந்து தப்பிக்கும் விவேகம், மேஸ்திரி தங்கவேலுவின் ஊமை மனைவியியைக் கூட விட்டு வைக்காத காமுக குணம், முதலாளி மகள் டாக்டர் உஷா மீதும் கண், பாண்டியனின் மீது சாமர்த்தியமாக சுமத்தும் நகை திருட்டு குற்றம் என்று அத்தனை கெட்ட குணங்களையும் கொண்ட ஒரு வஞ்சக நரி கதாபாத்திரத்தை அற்புதமாகச் செய்ய நடிகர் திலகத்தை விட்டால் செய்ய ஆளேது?
மனிதர் கண்களாலேயே அசத்துகிறார். கண்களில் தெரியும் கள்ளத்தனம், ஓரப்பார்வையில் தெரியும் வஞ்சகக் குணம், சிரிப்பில் காட்டும் குரூரம் என்று அச்சு அசலாக ஒரு பெண்பித்தனையையும்,பஞ்சமாப் பாதகம் செய்யும் ஒரு கொடூரனையும் நம் கண் முன் கொண்டு வந்து நிறுத்திவிடுகிறார் நடிகர் திலகம்.
கிளைமாக்ஸ் காட்சிகளில் நடிப்பின் பல பரிமாணங்களைத் தொடுகிறார் அந்த இளம் வயதிலேயே. டாக்டார் உஷா என்று நினைத்து படுக்கையில் படுத்திருக்கும் தன் அக்காளைத் தெரியாமல் தொட்டு விட , அக்கா பண்டரிபாய் எழுந்து இவருடைய அக்கிரமக் குணங்களை வசைபாடி 'என்னை எடுத்துக் கொள்' என்று அதிர்ச்சி தரும்போது மனம் திருந்தும் நடிகர் திலகத்தின் நடிப்பு நம்மை சிலிர்க்க வைக்கிறது. இறுதியில் நல்லவனாகத் திருந்தியும் தன் உடன் பிறந்த அக்காவினால் விவரம் அறியாமல் சுடப்பட்டு சாவின் வாசலைத் தொடும் போது 'நான் குற்றமற்றவன் அக்கா' என்று தன்னை நிரூபித்து கண் மூடும் போது எல்லோரையும் கலங்கடித்து விடுவார்.
இந்தப்படத்தில் நடிகர் திலகம் வில்லனாக நடித்திருந்தாலும் முதன் முதலாக வில்லன் நடிப்பையும் ரசிக்க வைத்த பெருமைக்கு உரியவராகிறார். அதே போல நடிகர் திலகம் இப்படத்தில் வித விதமாக அணிந்து வரும் உடை அலங்காரங்கள் மிக பிரசித்தி பெற்றவை இன்றளவும் கூட.
பரந்தாமனாக நடிகர் திலகம், பாண்டியனாக நரசிம்ம பாரதி, அக்கா பூமாலையாக பண்டரிபாய், கோமதியாக கிரிஜா, பாமாவாக கிருஷ்ணகுமாரி, கருடனாக டி.எஸ்.துரைராஜ், மேஸ்திரி புண்ணிய கோடியாக தங்கவேலு ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்தனர்.
"திரும்பிப் பார்"
திரும்பிப் பார்க்க வைக்கும் சில விசேஷ தகவல்கள்.
1. நடிகர் திலகத்தின் ஐந்தாவது படம் இது.
2. நடிகர் திலகமும், கலைஞரும் இணைந்த மூன்றாவது படம் இது.
3. மாடர்ன் தியேட்டர்ஸ் சிவாஜி அவர்களை வைத்து தயாரித்த முதல் படம்.
4. இயக்குனர் டி.ஆர். சுந்தரம் அவர்களின் சிவாஜிக்கான முதல் இயக்கம்.
5. முதன் முதலாக கிருஷ்ண குமாரி (நடிகை சௌகார் ஜானகியின் தங்கை), கிரிஜா, தனலக்ஷ்மி ஆகியோர் நடிகர் திலகத்துடன் இணைந்து நடித்தனர்.
6. நடிகர் திலகமும், நரசிம்ம பாரதியும் நடித்த முதல் படம் இது.
7. பராசக்திக்குப் பிறகு நிறைய புரட்சிக் கருத்துக்களும், புதுமையான வசனங்களும் நிறைந்த படம்.
8. 'கலப்படம் கலப்படம் எங்கும் எதிலும் கலப்படம்" என்ற பாடல் அப்போது ரொம்பவும் பிரபலம். அரிசியில் கால், நெய்யில் டால்டா, காபித் தூளில் புளியங்கொட்டைத் தூள் என்ற கலப்பட சந்தையின் தகிடு தத்தங்கள் இப்பாடலில் அப்பட்டமாக எதிரொலிக்கும். காணொளி வடிவில் காணுங்கள்.
9. திராவிட முன்னேற்றக் கழகம் திரைப்படங்களை சாதகமாக்கி வளர்ந்து வந்த வேளையில் ஆளும் காங்கிரஸ் கட்சியை பல்வேறு விமர்சனங்கள் செய்தது. இதனால் கோபமுற்ற நேரு திராவிட முன்னேற்றத் தலைவர்களை நான்சென்ஸ் என்று திட்டி விட்டார். இந்த சம்பவத்தை திமுக தலைவர் கருணாநிதி அவர்கள் இப்படத்தின் வசனங்கள் மூலம் அருமையாகப் பயன்படுத்திக் கொண்டார். சிவாஜி அவர்கள் கூலிங் கிளாஸ் அணிந்து அடிக்கடி 'நான்சென்ஸ்' என்று பலரை அடிக்கடி கடிந்து கொண்டே இருப்பார். நேருவை நக்கல் செய்வதற்காகவே இப்படிப்பட்ட காட்சிகள் உருவாக்கப் பட்டனவாம்.
10. இப்படத்தில் சிவாஜி அவர்கள் அணிந்திருந்த பல நவீன புதுவிதமான உடையலங்காரகளைக் கண்டு அனைவரும் அப்போது மிகவும் அதிசயப்பட்டனராம் . குறிப்பாக பத்திரிகைகள் சிவாஜி அவர்களின் உடை தேர்வினை பாராட்டி மகிழ்ந்தனவாம்.
11. ஜி.ராமநாதன் அவர்கள் இசையமைத்த முதல் நடிகர் திலகத்தின் படம் இது.
13. குறிப்பாக நடிகர் திலகத்தின் வில்லன் நடிப்பு அப்போது மிக மிகப் பேசப்பட்டது. 'திரும்பிப் பார்' படத்தின் புரட்சிமிகு வசங்கள் மிக பிரபல்யமாயின.
14. 'கருடன் பதிப்பகம்' என்ற வாசகம் உள்ள பலகையில் 'க' என்ற எழுத்தை 'தி' என்று மாற்றி எழுதி 'திருடன் பதிப்பகம்' என்று மாற்றி வைத்து விட்டு செல்லுவார் அங்கு வேலை செய்யும் ஊழியர். இந்தக் காட்சியும் அப்போது மிகவும் பேசப்பட்ட ஒன்று.
15. படத்தில் வரும் பரந்தாமன் (சிவாஜி ) எழுதும் 'பாட்டாளியின் குரல்' என்ற புத்தகத்தின் பெயரும் அப்போது ரொம்ப பிரபலமடைந்த ஒரு பெயராம்.
16. அப்போது தெலுங்கில் புகழ் பெற்றுக் கொண்டிருந்த நாயகி கிருஷ்ணகுமாரி சிவாஜி அவர்களுடன் நடித்த ஒரே படம் இது.
17. 'பராசக்தி' அளவிற்கு இந்தப் படம் பிரம்மாணடமான வெற்றியடைய முடியாவிட்டாலும் நல்ல வெற்றியடைந்த படம் இது. சிவாஜி அவர்களின் மறக்கவொண்ணா சிறந்த படங்களின் பட்டியலில் 'திரும்பிப்பாரு'ம் நிச்சயம் இடம் பெறும்.
இக்கட்டுரைத்தொடர் முழுதும் என் சொந்தப் படைப்பே!
நன்றி!
chinnakkannan
1st October 2014, 10:26 AM
ஹாய் குட்மார்னிங்க் ஆல்
நேற்று கொஞ்ச்ம் வேலை..வீட்டிலும்கூட எனில் வர இயலவில்லை..ஹோம் வொர்க்கும் செய்யவில்லை ( நிறையவுமில்லை போல)
வாசு சார்.. நினைவிருக்கிறதா போன அக்டோபர் அல்லது செப்டம்பரில் தான் ந.தி திரிக்கு வந்ததாய் நினைவு (அடியேன்)..
அனைத்து ந.தி ரசிக நண்பர்களுக்கும் அவரது பிறந்த நாளில் எனது மனப்பூர்வமான வாழ்த்துக்கள்..(எனக்கும் தான்)
எண்ணம் போலப் பலவிதமாய்
..ஏற்றங் கொண்ட நடிப்பினை
வண்ணங் கொண்டு திரையினிலே
..வாழ்ந்து பார்த்தே இருந்தவர்
கண்கள் மூலம் ரசிகநெஞ்சம்
..கவர்ந்தே அமர்ந்த நாயகர்
விண்ணில் சென்ற போதிலுமெம்
..நெஞ்சம் மறப்ப தில்லையே..
திரும்பிப் பார் பற்றிய அலசல் வெகு அருமை வாசு சார்.. வெகு சின்ன வயதில் பார்த்த படம்..ஒரே ஒரு தடவை தான் பார்த்திருக்கிறேன்.. உங்கள் பதிவு திரும்பப் பார்த்தது போன்ற உணர்வைத் தந்தது.. நன்றி..
படங்களுக்கும் நன்றி..
கோபால் சார் நன்றி (இந்த நன்றி நான் சொந்தமாக டைப்படித்தது :) )
அப்புறம் வரட்டா
vasudevan31355
1st October 2014, 12:10 PM
இன்றைய ஸ்பெஷல் (83)
வித்தியாசமான இந்த பாடலை நடிகர் திலகம் பிறந்தநாளுக்கு நம் மது அண்ணாவுக்கு டெடிகேட் செய்கிறேன்.
நடிகர் திலகம் பிறந்த நாளை முன்னிட்டு அவர் நடித்த 'பாதுகாப்பு' படத்திலிருந்து ஒரு மிக அரிய ஸ்பெஷல் பாடல். சன் பீம்ஸார் தயாரித்த இப்படத்தை திரைக்கதை அமைத்து இயக்கியவர் ஏ.பீம்சிங்.
பாலையா, மேஜர், சந்திரபாபு, நம்பியார், நாகேஷ், கருணாநிதி, செந்தாமரை, சௌகார் ஜானகி, ராஜகாந்தம் என்று நிறைய நடிகர்கள்.
கதை எஸ்.எல்.புரம் சதானந்தம். வசனம் பாசுமணி. பாடல்கள் கண்ணதாசன். நடனம் பசுமரத்தி கிருஷ்ணமூர்த்தி ஒளிப்பதிவு ஜி.விட்டல்ராவ். இசை 'மெல்லிசை மன்னர்'.
கப்பலில் ஒரு பாடல். நடிகர் திலகமும், ஜெயலலிதாவும் ஆடிப் பாடும் இப்பாடல் அவ்வளவு பிரபலம் ஆகவில்லை. கொஞ்சம் கடினமான வரிகள். கடினமான டியூனும் கூட. ஆனால் அருமை.
http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/PATHUMPG_000058104.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/PATHUMPG_000058104.jpg.html)
முற்றிலும் புதுமையான ஆங்கில பாணி நடனம். நடிகர் திலகம் அற்புதமான மூவ்மெண்ட்ஸ் கொடுத்திருப்பார். டார்க் பிரவுன் பேண்ட்டும், ரவுண்டு நெக் புளூ பனியனுமாக ஒவ்வொரு அசைவும் கேட்க வேண்டுமா! அமர்க்களப் படுத்தியிருப்பார். ஜெயா மேடம் சொல்லவே வேண்டாம். ஆங்கிலப் பாடல் பாணி என்பதால் நடிகர் திலகத்திற்கு குரல் தந்திருப்பவர் சாய்பாபா அவர்கள். ஜெயாவுக்கு குரல் ராட்சஸி.
மிக மிக வித்தியாசமான பாடல். ஈஸ்வரி ராஜாங்கம் நடத்துவார். இதர நடன கலைஞர்களும் அருமையாகச் செய்திருப்பார்கள்.
இந்தப் பாடலை ரொம்பநாள் மனதில் வைத்திருந்தேன். நடிகர் திலகத்தின் ரசிகர்களே முற்றிலும் மறந்து போய் இருக்கக் கூடிய பாடல் இது. அதனால் நடிகர் திலகத்தின் பிறந்த நாளை முன்னிட்டு இன்று முதன் முதலாக you tube ல் தரவேற்றியுள்ளேன்.
ரொம்ப ரசித்து மகிழக் கூடிய அபூர்வ பாடல். கேட்டு, நடிகர் திலகத்தைப் பார்த்து மகிழுங்கள். நன்றி!
http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/PATHUMPG_000117390.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/PATHUMPG_000117390.jpg.html)
இனி பாடலின் வரிகள்.
அஹ்.. நான் கொஞ்சம் ஓவர்
என் துன்பங்கள் ஓவர்
நான் மதுச்சுவை அறிந்த பெண்ணல்ல
அ ...நான் சுகத்தையும் மறந்த பெண்ணல்ல
சொர்க்கம் போ
சொர்க்கம் போ
ஓ ஷர ஷட்ஷட்ஷட் ஷரா
ஓ ஓ ஷர ஷட்ஷட்ஷட் ஷரா
ல லலலலல்லா
ல லலலலல்லா
சொர்க்கம் போ
சொர்க்கம் போ
(அருமையான கோரஸ்)
இடை இசையாய் ஒலிக்கும் அந்த பேங்கோஸ், ஷெனாய், புல்லாங்குழல் , டிரம்பெட் ஒவ்வொன்றும் தனித்தனி ஜாலங்கள் புரியும்.
என் இதழில் உண்டு மதுவுண்டு
தேன் அதுவும் சேர்ந்தால் சுகமுண்டு
என் இதழில் உண்டு மதுவுண்டு
தேன் அதுவும் சேர்ந்தால் சுகமுண்டு
கண்கள் மயக்க
என் கன்னங்கள் கிண்ணங்கள் எண்ணங்கள்
எல்லாமும் காதல் துடிக்க
இடையோடு வா
நடை போடும் தாளம்
சிந்த சிந்த பிஞ்சு உள்ளம் கொஞ்சக் கொஞ்ச
என்ன இன்பம்
ஓ ஷர ஷட்ஷட்ஷட் ஷரா
ஓ ஓ ஷர ஷட்ஷட்ஷட் ஷரா
come along baby
want to dance with me
http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/PATHUMPG_000157141.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/PATHUMPG_000157141.jpg.html)
(நடிகர் திலகத்தை இந்த இடத்தில் பாருங்கள். ஸ்டைல் கொடி கட்டிப் பறக்கும்)
நான் நதியில் இங்கே விளையாட
நீ அழகைக் கண்டு வலை போட
நான் நதியில் இங்கே விளையாட
நீ அழகைக் கண்டு வலை போட
நித்தம் கிடைக்க
ஒரு பொன்வண்டு கள்ளுண்ட பூச்செண்டு மேல் வந்து
மோதிக் கிடக்க
வெள்ளம் நடக்க
ஹோஹோஹோ ...வெட்கம் பறக்க
இன்னும் இன்னும் என்னும் வண்ணம்
பின்னப் பின்ன என்ன இன்பம்
(கோரஸ்)
ஓ ஷர ஷட்ஷட்ஷட் ஷரா
ஓ ஓ ஷர ஷட்ஷட்ஷட் ஷரா
ல லலலலல்லா
ல லலலலல்லா
ல லலலலல்லா
லலலல லலலலல்லா
சொர்க்கம் போ
சொர்க்கம் போ
https://www.youtube.com/watch?v=owNiq_d_jDg&feature=player_detailpage
vasudevan31355
1st October 2014, 12:23 PM
மிக மிக மிக அபூர்வமான படம்.
மதுஜி!
இந்தப் பெண் சிறார்கள் யார் என்று கண்டு பிடிக்க முடிகிறதா?
சாட்சாத் நம் நடிகர் திலகமும், காக்கா ராதாகிருஷ்ணனும்தான்.
மிக மிக மிக அபூர்வமான படம்.
'கதரின் வெற்றி' நாடகத்தில்தான் இப்படி சிறுமியர் வேடத்தில் இருவரும் தோன்றுகின்றனர். எப்படியெல்லாம் கஷ்டப்பட்டு முன்னுக்கு வந்தார் நடிகர் திலகம்!
கையில் குடம் வைத்திருக்கும் சிறு வயது அழகி சிறுமிதான் நம் நடிகர் திலகம்.
http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/e199bd85-f3ea-43af-8add-1a0cfb954799.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/e199bd85-f3ea-43af-8add-1a0cfb954799.jpg.html)
vasudevan31355
1st October 2014, 12:28 PM
திருச்சி சங்கிலியாண்டபுரத்தில் நடிகர் திலகம் வாழ்ந்த வீடு.
http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/IMG_0004-4.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/IMG_0004-4.jpg.html)
vasudevan31355
1st October 2014, 12:32 PM
மும்பை டெலிவிஷன் நாடகம் 'சத்ரபதி சிவாஜி' யில்.
http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/1e66aed6-a351-40d5-8a62-fd5442d6dfa9.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/1e66aed6-a351-40d5-8a62-fd5442d6dfa9.jpg.html)
vasudevan31355
1st October 2014, 12:36 PM
எம்.ஆர்.ராதா அவர்களின் நாடகக் குழுவில் சிறு வயது நடிகர் திலகம்.
http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/5cf9be18-9348-4184-a507-1b79d6a464cd.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/5cf9be18-9348-4184-a507-1b79d6a464cd.jpg.html)
vasudevan31355
1st October 2014, 12:49 PM
'நாக நந்தி' நாடகத்தில் நடிகர் திலகம்.
http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/05ffcdac-ae31-40fa-bb9b-7f160aa5ad9f.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/05ffcdac-ae31-40fa-bb9b-7f160aa5ad9f.jpg.html)
vasudevan31355
1st October 2014, 12:52 PM
'சாம்ராட்' அசோகனாக.
http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/5f3bf9ff-684c-481a-bf08-4e228146beda.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/5f3bf9ff-684c-481a-bf08-4e228146beda.jpg.html)
vasudevan31355
1st October 2014, 12:59 PM
இந்த ஒரு போஸுக்கு ஈடுஇணை உண்டா?!
http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/c467d4ff-19f6-43e4-b821-98f7865caeff.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/c467d4ff-19f6-43e4-b821-98f7865caeff.jpg.html)
chinnakkannan
1st October 2014, 03:51 PM
வாழ்க்கையில் வரும்போது தெரியாது.. போன பின்பு அதைப் பற்றி நினைக்கத் தூண்டிக் கொண்டே இருக்கும்.. அது வேறொன்றுமில்லை இளமை..
வளமையாம் எண்ணங்கள் வாகாக உடலில்
விழவைக்கும் அழகினை விந்தையெனத் தந்தேn
சிலகாலம் தானிருக்கும் சீக்கிரம் செல்லும்
இளமையெனும் அற்புதமே ஆம்..
அதோ பாருங்கள்.. இந்த இளைஞனுக்கு என்ன ஆயிற்று.. துள்ளித் திரிய வேண்டிய இளமைப் பருவம் தான் ஆனால் என்ன செய்வதென்று தெரியவில்லை..காரணம்...யெஸ்..அவனுளம் கவர்ந்த நங்கை..
கண்ணினைக் கொட்டிப் பார்த்து
...கருத்தினில் விழுந்து விட்ட
பெண்ணினை என்ன சொல்ல
..பித்தமும் மாறும் மெல்ல
அவளுக்கு அவன் மேல் கோபம்.. கோபம் என்றால் ரியலெல்லாம் இல்லை..பொய்க்கோபம்..ஊடல் தான்..
வேல்விழிகள் நெஞ்சத்தை வேரோடே தானழிக்க
பால்நிறத்துக் கன்னமதும் பண்கூட்டிப் பாநவில
மேலாடை அணிந்திருந்தாள் மெய்யிலே பொய்கூட்டிக்
கேளாமல் கொன்றாளே காண்
பாவம் புள்ளையாண்டான் என்ன செய்வான்.. இந்தக் காலம்னா இருடி சகி..உனக்காக ஜாய் அலுக்காஸ்ல போய் சின்னதா டைமண்ட் பெண்டண்ட் வாங்கியிருக்கேன் அப்புறம் நீதான் கேட்டியோன்னோ ஒனக்காக ஆப்பிள் ஐ 6 வாங்கியிருக்கேன் பாரு..வீட்டுக்குப் போய் சார்ஜ் பண்ணிட்டு என்னோட பேசு..என்ன” என்று சொல்வான்..அது மட்டும் பத்தாம ஹோட்டலுக்கு வேற – சென்னைன்னா கிருஷ்ண விலாசம், எஸ்கேப் அவென்யூன்னு கூட்டிக்கிட்டு டின்னர் போகணும்..
ஆனா அந்த இளைஞனோ ப்ளாக் அண்ட் ஒய்ட் கால இளைஞன்.. என்ன செய்வான் பாட்த்தான் செய்வான்.. என்ன பாட்டு..
ராதே உனக்குக் கோபம் ஆகாதடி
காதலியே தவறேது செய்தேன் பிரிய?
ராதே உனக்குக் கோபம் ஆகாதடி
உனை மணம் புரிபவன் நானல்லவோ - நீ
ஒன்றும் புரியாத சின்னஞ்சிறு நீயும் ஓடாதே
எந்தன் அருகினில் நாணம் ஏனோ?
இன்னும் நீ வேறு நான் வேறோ எனைப் பாரடி
சொந்த பந்தம் எதுவும் இல்லாமலே
துடிக்கும் உணர்வில் இரு நெஞ்சம் கலந்த பின்னும்
ராதே உனக்குக் கோபம் ஆகாதடி
கொழுக் மொழுக்குன்னு கண்கள் முழுக்க குறும்பு மின்ன அந்த இளைஞன் பாடறதக் கேட்டு அவளுக்கும் சிரிப்பு வருது சிரிச்சுடறா..
ம்ம் ந.தி இளைஞன் சர்ரோஜா தேவி இளைஞி.. படம் குலமகள் ராதை..
(எப்ப நினைச்சாலும் கேட்டாலும் இனிக்கும் பாட்டு)
chinnakkannan
1st October 2014, 03:56 PM
மறுபடியும் ஒரு இளைஞன் மறுபடியும் ஒரு மங்கை.. காதல் தான்..
வாதனை செய்துவிடும் வேதனை கூட்டிவிடும்
சோதனை கூட்டியே சொக்கிடும் – காதலிலே
எண்ணம் மயங்கியே என்றும் விழுந்திடுவார்
திண்ணமாய் மாந்தரவ்ர் தான்..
என்ன பண்றது.. இந்தக் காதல் செய்யும் மாயம் அப்படி.. அந்த இளைஞன் மீது இவளுக்கும்கோபம்.. காதல் இருக்கு ஆனா இல்லை என்பது மாதிரியான பேதை..(உடை கூட சின்ன உடை தான் அந்த நங்கைக்கு!)
இவனுக்கோ புரியறது.. சரி..இதுஏதோ ஊடல் என்னடா இது லீவ் விட்டிருக்கு எஞ்சாய் பண்ணலாம்னு வந்தா..பார்க்கறா..ஆஹா எவ்ளோ அழகாப்பா இருக்கா இவ..
அகராதியில் இருக்காதவோர் அசைத்தாடிடும் உணர்வாய்
பகராததாம் எழிலாயென பலபாவலர் திகைக்கும்
நகராமலே இதயந்தனில் நல்மாகவே எழும்பும்
நகங்கள்முதல் உடலெங்கிலும் துலங்குமவள் அழகே
மனசே சொக்கி மயங்குதே.. சரி கொஞ்சம் என்னடின்னு கேக்கலாம்னு கேட்டா கோச்சுக்கிட்டு எங்கேயோ போறாளே..
பாடலும் வருதே..பாடப் பாட அப்படி ப் பாடறவன் படற பாட்டப் பார்த்து அவளுக்குச் சிரிப்பு வருது..ஊடல் போச்சே போயிந்தே இட்ஸ் கான்..
இளைஞன் நடிகர் திலகம்.. ஹீரோயின்.. வேறு யார் லத்து.. படம் சிவகாமியின் செல்வன்.. ந.தி. இந்தப் பாட்டுல க்ம்ப்யூட்டர் யூஸ் பண்ணியிருப்பார்..(லேப்டாப் )
*
ஆடிக்கு பின்னே ஆவணி மாதம் வருவது உண்டு
ஆமா
அல்லி மலரை சந்திரன் தேடி அணைவது உண்டு
ஆமா
தோட்டத்து காட்டில் பூங்கொடி ஆடும்
சொக்கும் குரலில் பூங்குயில் பாடும்
ஆமா ஆமா
சொந்தம் அதுபோல் என்னிடம் கொண்டவள்
நீ அல்லவோ
ஆ இல்ல இல்ல இல்ல இல்ல இல்ல
அது உன் எண்ணம்
ஏக்கம் கொள்ளாதே நீ தூக்கம் கெடாதே
வானிடை ஓடிய மின்னலினாலே
மேகம் வில்லொன்று போடும்
தேனிடை ஊறிய செங்கனி வாயும்
காதல் உண்டென்று கூறும்
மனதுக்குள் இருப்பது ரகசியம்
உனக்கதை பெண்மை சொல்லாது
கனவுகள் பிறப்பதும் கவிதையில் விரிப்பதும்
காதல் ஆகாது
ஏக்கம் கொள்ளாதே நீ தூக்கம் கெடாதே
மான் விளையாடிடும் மைவிழி ஒரு நாள்
காதல் உன்னோடு பேசும்
பூ விளையாடிடும் மேடையின் மேலே
பூவும் பொட்டோடு ஆடும்
அது சரி நடக்கட்டும் புதுக் கதை பிறக்கட்டும்
நேரம் பார்ப்போமா
ஒரு பக்கம் திரையிட்டு மறு பக்கம் அணையிட்டு
உலகை வெல்வோமா
இல்லை சொல்லாதே இனி ஆமாம் சொல் கண்ணே
ஆமாமாமா ஆமா ஆமா ஆமா
அது நானல்லவோ
*
ந.தியின் குறும்பும் பாடலும் என்றும் மறக்காது..
madhu
1st October 2014, 04:16 PM
வாசு ஜி.. ஒவ்வொரு படமும் ஒரு பொக்கிஷம்.
பாதுகாப்பு படம் அந்தக் காலத்தில் தி. நகர் கிருஷ்ணவேணி திரையரங்கில் பார்த்தது. இந்தப் பாடல் வானொலியில் கேட்ட நினைவே இல்லை. "ஒரு நாள் நினைத்த","வரச்சொல்லடி","முத்து நகை" மற்றும் "ஆத்துக்கு பக்கம்" பாடல்கள் அடிக்கடி ஒலிக்கும். பல வருடங்களுக்குப் பிறகு வீடியோவுடன் மீண்டும் காணக் கிடைக்கும் என்று எண்ணியதே இல்லை. ( அட.. அந்தப் பாட்டு முழுவதுமே இளமை துள்ளும் விதமாக ஒரு ஸ்டைலாக அவர் நடப்பார் கவனிங்க ). சும்மா நன்றி நன்றி என்று எழுதுவதில் பயனில்லை என்று தோணுது. அட்வான்ஸா நிறைய நன்றிகளை இப்பவே அனுப்பி விட்டேன்.
சிக்கா.. என்ன ஆச்சு ? பாலைவன ஏரியாவில் ஏதும் ஜில்லுனு காத்தும் மழையுமா இருக்கா ? கவிதை பொங்குதே !
chinnakkannan
1st October 2014, 05:26 PM
சும்மா தான் மதுண்ணா.. நேத்து வல்லியா.. இப்ப வந்தேனா..அதான் (எங்களுக்கு வெள்ளி டு சனி ஒன்பது நாள் லீவ் : இங்க!)
அழகிய படங்களுக்கு நன்றி வாசுசார்..
chinnakkannan
2nd October 2014, 01:05 AM
hi all
hi gopal sir
Ellaarukkum en ganthi jeyanthi vaazhthukkaL..(mm jeyanthi kanni nathi Ooram (kanna unnai thiruththavE mudiyaathudaa):))
sorry friends. my tamil font went on holiday.
enna aacchchu..yEn intha sleep for this thread.. Rajesh ji, Rajraj sir venkiraam ji oru ganthi jeyathi paattu pOdunga
enakku ennamO mu.mehtha thaan ninaivukku varaar..oru desap pidhaavukku therup paadakaanin anjali..mm
raghupathi raaghava raajaaraam... vaasu sir..ithila laththu irukkulla.. naalaikku kaN muzhikkarachchE this thred has to reach 364 pages atleast.
krishna ji neer bEganE vaarO..(thirumpip paarukkellaam pOittaar vaasu sir..vaanga.. naama tamannaa paththi pEslaam..sumathi en suntharilla tamannaa j role.. na.thi.role namma thala..enna solreenga.. apdi remake paNNa eppadi irukkum :) vaanga discus paNNalaam..!)
rajraj
2nd October 2014, 02:04 AM
oru ganthi jeyathi paattu pOdunga
Here it is. From Naam Iruvar (1947)
Mahaan Gaandhi Mahaan......
http://www.youtube.com/watch?v=k9Hfx1MNO9U
Sorry ChinnakkaNNan you have to watch a baby dancing ! :lol:
madhu
2nd October 2014, 04:08 AM
சிக்கா..
இந்தாங்க மொத்தமா புடிங்க.... "காந்தி" ஆங்கிலத் திரைப்படம்
http://youtu.be/G4Nm_MGwe5s
rajeshkrv
2nd October 2014, 07:30 AM
காலை வணக்கம் அன்பு நெஞ்சங்களே
rajeshkrv
2nd October 2014, 07:39 AM
வாசு ஜி,
இதோ ஏழு நிறமுள்ள தேரு ஆம் வானவில் தான்... அதை பற்றி இசையரசி பாடும் அழகான பாடல்
http://www.youtube.com/watch?v=YEiAkPQqspk
vasudevan31355
2nd October 2014, 07:40 AM
வணக்கம் ராஜேஷ்ஜி!
நலம்தானே! நடிகர் திலகம் பிறந்த நாளான நேற்று நீங்கள் திரிக்கு வராமல் உங்களை நான் மிகவும் மிஸ் செய்தேன். தங்களுக்கு என் இதயபூர்வமான சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை நல்வாழ்த்துக்கள்.
vasudevan31355
2nd October 2014, 07:52 AM
அருமை ராஜேஷ்ஜி!
ஏழு சிறகுள்ள தேரு
ஏழு நிறமுள்ள தேரு
அழகான கே.ஆர்.விஜயா. சற்று பொருந்தாத இரட்டை ஜடை. முதல் சரணம் முடிந்தவுடன் 'ஏழு நிறமுள்ள தேரு' வரிகளை இவர் பாடும்போது தேரு என்பதை சற்றே இழுத்து தே...ரு என்று பாடுவது கொள்ளை அடிக்கிறது நம் மனதை. குதிரையில் நசீர்.
கொஞ்சும் பஞ்சவர்ணக் கிளியுடன் புன்னகை அரசி கொஞ்சும் போது எனக்கு இந்தப் பாடல்தான் ஞாபகத்திற்கு வருகிறது. எனக்கு ரொம்ப ரொம்ப பிடித்த அம்மாவின் நம் சுசீலாம்மாவின் பாடல் இது. மெய் மறந்து போவேன்.
'தத்தை நெஞ்சம்
முத்தத்திலே
தித்திதத்தா இல்லையா'
அது சரி! 'திரும்பிப் பார்' திரும்ப பார்த்தீர்களா?
http://www.youtube.com/watch?v=Itoc9VIF1Aw&feature=player_detailpage
vasudevan31355
2nd October 2014, 07:57 AM
திரி நண்பர்கள் அனைவருக்கும் என் இதயம் கனிந்த சரஸ்வதி பூஜை நல்வாழ்த்துக்கள்
http://commentsstack.com/wp-content/uploads/2014/08/Saraswati-Puja-2.jpg
vasudevan31355
2nd October 2014, 07:59 AM
மதுஜி!
நேற்றைய பதிவுகளுக்கான உங்கள் சந்தோஷமான பாராட்டுதல்களுக்கு நன்றி. மொத்த அட்வான்ஸ் நன்றிகளுக்கும் நன்றி! காந்தியை முழுமையாய் ரசிக்கத் தந்தமைக்கும் நன்றி.
vasudevan31355
2nd October 2014, 08:02 AM
சின்னக் கண்ணன் சார்,
பதிவுகளைப் படித்து பார்த்து ரசித்ததற்கு நன்றி!
தங்கள் கவிதைகளை மிகவும் ரசித்தேன்.
நெஞ்சம் மறக்காமல் நெஞ்சில் குடிகொண்டவரை
நெஞ்சு நிறையப் பாராட்டிய அன்பு நெஞ்சம் கொண்ட
எங்கள் சின்னக் கண்ணன் நெஞ்சார வாழியவே.
எனக்குத் தெரிந்தது அவ்வளவுதான். ஆனால் நெஞ்சின் அடித்தளத்திலிருந்து வந்தவை. இலக்கணப் பிழையெல்லாம் பார்க்கக் கூடாதாக்கும்.
vasudevan31355
2nd October 2014, 08:03 AM
வினோத் சார்,
நடிகர் திலகம் பிறந்தநாள் முன்னிட்டு தாங்கள் அளித்திருந்த திலகத்தின் நிழற்படங்கள் அருமை. மிக்க நன்றி.
vasudevan31355
2nd October 2014, 08:05 AM
சி.க.சார்,
கிருஷ்ணா சாரின் சிஸ்டம் கொஞ்சம் ப்ராப்ளம். அனேகமாக இன்று சரியாகி விடும். வந்து கலக்குவார் பாருங்கள். நேற்று நடிகர் திலகம் பிறந்த நாள் விழாவுக்கு கிருஷ்ணா சார் சென்றிருந்தார். அதைப் பற்றியும் இங்கே பகிர்வார்.
vasudevan31355
2nd October 2014, 08:10 AM
கோபால்,
செம கலக்கல் கவிதை நம் திலகத்தைப் பற்றி. என்ன ஒரு கலப்படமில்லாத உண்மையான பக்தி. இந்த பக்தி நடிகர் திலகம் ரசிகன் ஒருவனுக்கே சொந்தமானது. உணர்வு பூர்வமான கவிதை.
'என் எழுத்தே உனக்கு நானளித்த காணிக்கை. அது என்றும் வாழும் சரஸ்வதி தேவி.என் எழுத்துக்களே நான் உன்னை அர்ச்சித்து போற்றும் சத்திய பூஜை'.
கண்ணில் நீர்த்துளிக்கிறது.
ஒரு நாள்... ஒரே ஒருநாள் நம் தெய்வம் நமக்கு காட்சியளிக்கக் கூடாதா? நம் உண்மையான பக்திக்கு அது நடக்கவும் சாத்தியம் உண்டு.
தங்கள் எழுத்துக்களுக்கு என் ராயல் சல்யூட்.
vasudevan31355
2nd October 2014, 08:13 AM
முரளி சார்,
'ஹிஸ் ஹைனெஸ் 'அப்துல்லா'படத்தின் நீங்கள் பதித்த பாடலை அனுபவித்து பார்த்து ரசித்தேன். லால்ஜி கலக்கல். அருமையான பாடல்.ஜேசுதாதாஸா கொக்கா!. நன்றி சார்.
rajeshkrv
2nd October 2014, 08:16 AM
வணக்கம் ராஜேஷ்ஜி!
நலம்தானே! நடிகர் திலகம் பிறந்த நாளான நேற்று நீங்கள் திரிக்கு வராமல் உங்களை நான் மிகவும் மிஸ் செய்தேன். தங்களுக்கு என் இதயபூர்வமான சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை நல்வாழ்த்துக்கள்.
ஆம் வாசு ஜி
வெளியூர் பயணம் அதான் வர இயலவில்லை
நடிகர் திலகத்தின் பிறந்த நாளில் நீங்கள் பதிவிட்ட சில புகைப்படங்கள் பார்த்தேன் அருமை. இன்னும் படித்துவிட்டு எழுதுகிறேன்.
vasudevan31355
2nd October 2014, 08:28 AM
சி.க சார்,
ராதே உனக்குக் கோபம் ஆகாதடி
காதலியே தவறேது செய்தேன் பிரிய?
ராதே உனக்குக் கோபம் ஆகாதடி
பாடலுக்கான முன்னுரைக் கவிதை அருமையாக இருந்தது. ஆமாம்! ஆப்பிள் ஐ 6 என்ன விலை? எனக்கு ஒன்னு வாங்கி அனுப்புங்கோ.
பாடலில் நடிகர் திலகம் அபிநய சரஸ்வதியின் ஜடையை கண்ணாடியைப் பார்த்தபடி பின்னாலிருந்து பிடித்து என்ன பாடுபடுத்துகிறார் பாருங்கள்! இந்தப் பாடலில் நடிகர் திலகத்தின் நடையழகையும், முக அழகையும் காணக் கண் இரண்டு போதாது சார்.
http://www.youtube.com/watch?v=wk8FSKUNrf8&feature=player_detailpage
rajeshkrv
2nd October 2014, 08:28 AM
வாசு ஜி,
இதோ சோமயாஜுலுவிற்கு மனோ பாடிய ஒரு பாடல் . மலையாளத்தில்.
http://www.youtube.com/watch?v=EuXL5MApF-E
vasudevan31355
2nd October 2014, 08:34 AM
பாகவதரின் 'ராதே உனக்குக் கோபம் ஆகாதேடி' ஆமாம்! பாகவதர் அழகு அழகு என்று சிலாகிக்கிறார்களே! சி.க. உண்மையா?
http://www.youtube.com/watch?v=7Gv2JlXTJng&feature=player_detailpage
vasudevan31355
2nd October 2014, 08:36 AM
நன்றி ராஜேஷ்ஜி! நிதானமாக நேரம் கிடைக்கையில் படியுங்கள். சோமயாஜுலு பாடலை இன்னும் பார்க்கவில்லை. பார்த்து சொல்கிறேன்.
vasudevan31355
2nd October 2014, 08:53 AM
சரஸ்வதி பூஜை சிறப்புப் பாடல்.
'குழந்தையின் கோடுகள் ஓவியமா
இந்தக் குருடன் வரைவது ஒரு காவியமா
நினைந்ததை உரைத்தேன் புலவர்களே
குற்றம் நிறைந்திருந்தாலும் அருளுங்களேன்'
'கலைமகள் எனக்கொரு ஆணையிட்டாள்
சில காவியப் பொருள்களைத் தூது விட்டாள்
தூது விட்டாள்
கலைமகள் எனக்கொரு ஆணையிட்டாள்
அலை என்னும் எண்ணங்கள் ஓட விட்டாள்
அதை ஆயிரம் அவையில் பாட விட்டாள்
பாட விட்டாள்'
http://i1.ytimg.com/vi/7oertwqSFMU/hqdefault.jpg
காளிதாசனாக 'காவிய நாயகன்'
'சரஸ்வதியின் மைந்தன்'
என் சொல்ல!
காவியங்கள் அரங்கேற்றும் கம்பீரம். நடிகர் திலகம் மகாகவியாக அமர்ந்து தன் காவியங்களை அரங்கேற்றுவதை இந்த ஒரே பாடலில் அற்புதமாக வடிவமைத்திருப்பார்கள்.
நடுவில் அப்படியே நம்மை மெய் சிலிர்க்க வைக்கும் சுசீலா அம்மா
'காதல் மனம் கொண்ட பாசம்
இந்த கவிஞனின் மேக சந்தேசம்
தூது செல்லும் ஒரு மேகம்
அதை சொல்வது மேக சந்தேசம்
சூரசம்ஹார சம்பவம்
கவி சொல்லும் குமார சம்பவம்
தாரகன் மீண்ட சம்பவம்
கவி தந்த குமார சம்பவம்
குமார சம்பவம்'
அனுபவித்தால்தான் புரியும். உடல் சிலிர்க்க வைக்கும் பாடல்.
http://www.youtube.com/watch?v=HpPOKaKrbrU&feature=player_detailpage
vasudevan31355
2nd October 2014, 09:10 AM
சரஸ்வதி பூஜை சிறப்புப் பாடல் 2
நல்லதொரு மனைவியாய் நாயகி கொலு வைத்து குத்து விளக்கேற்றி தன் தலைவனைப் பற்றிப் பாடுகிறாள்.
'கலைமகள் அலைமகள் மலைமகள் மூவரும் உலவிடும் ராத்திரி
நவராத்திரி
எந்தன் தலைவனை அழகிய இளைஞனை முதன் முதல் தரிசித்த ராத்திரி
நவராத்திரி சுபராத்திரி'
காமத்தால் கெட்டழிந்த நாயகன் நோயுற்று, தவறை உணர்ந்து, மனைவியின் மாண்பு கண்டு, மனதுக்குள் வேதனையுடன் பாடுகிறான்.
'ஒருமகள் அழகிய திருமகள் என இவன் தரிசித்த ராத்திரி நவராத்திரி'
'நாள்தோறும் நான் கண்டேன் சிவராத்திரி
எந்த நங்கைக்கும் நான் சொந்தம் சில ராத்திரி
பாவங்கள் நான் செய்தேன் பகல் ராத்திரி
அதன் பலன் கண்டேன் உனைக் கண்ட முதல் ராத்திரி'
'வெள்ளிரதம்' படத்தின் மிக அருமையான பாடல். 'மெல்லிசை மாமன்னர்' நெஞ்சை உருக்கும் வண்ணம் போட்ட பாடல். புன்னகை அரசியும், விஜயகுமாரும் அமைதியான நடிப்பில் மனத்தைக் கொள்ளை கொள்வார்கள். ஜெயச்சந்திரனும், சுசீலாம்மாவும் அனுபவித்து உணர்ந்து பாடியிருப்பார்கள்.
ராத்திரி ராத்திரி என்று முடியும் பாடல் மட்டுமல்ல. அற்புதமான வரிகளைக் கொண்ட பாடல். கதைக் களத்தை கானத்திலேயே உணர்த்தும் பாடல். அருமையிலும் அருமை.
https://www.youtube.com/watch?v=qV3MOkqwCgE&feature=player_detailpage
vasudevan31355
2nd October 2014, 09:34 AM
ராஜேஷ்ஜி
இன்று ஒருநாள் நான் நீங்களாக உங்கள் அனுமதி தேவை. ஒரு அருமையான கன்னடப் பாடல் கேட்டேன். தங்களுக்குப் பிடித்த அபிநய சரஸ்வதி பாடும் பாடல் இசையரசியின் குரலில்.
'லஷ்மி சரஸ்வதி' கன்னடப் படத்தில்.
'நூறு வருஷா பாழிரி'. (ரைட்டா ராங்கா? எனக்கு கன்னடம் தெரியாதே! )
(என்னை ரொம்பத்தான் கெடுத்து வைத்திருக்கிறீர்கள்) :)
https://www.youtube.com/watch?v=T0l3cXuueqM&feature=player_detailpage
chinnakkannan
2nd October 2014, 10:10 AM
ஹாய் குட்மார்னிங் ஆல்..
அனைத்து நண்பர்களுக்கும் சி.கவின் காந்தி ஜெயந்தி, சரஸ்வதி பூஜை நல் வாழ்த்துக்கள்
வாசு சார்..மிக்க நன்றி.. ராதே உனக்குக் கோபம் ஆகாதடி அண்ட் ச.பூ சி.பா க்கும் நன்றிகுழந்தையின் கோடுகள் ஓவியமா
இந்தக் குருடன் வரைவது ஒரு காவியமா
நினைந்ததை உரைத்தேன் புலவர்களே
குற்றம் நிறைந்திருந்தாலும் அருளுங்களேன்' வெகு அழகிய பாடல்..
இது கண்ணதாசன் என நினைக்கிறேன்..தவறாகக் கூட இருக்கலாம்..ஏனெனில் படம் முழுக்க ஊடாடிய மரபுக் கவிதைகள் எல்லாம் கு.மா. பாலசுப்பிரமணிய்ன் என்று நினைவு..
அன்னையே எம்மில் அரும்புலவர் யாரென்று
இன்னமுத வாயால் இயம்பு..
என்ன ஒரு ஸிம்ப்பிள் வெண்பா..சொல்வது நடிகர் திலகம் கம்பீரமாய்..
காளி - தண்டியே கவி தண்டியே கவி..
கண் மூக்கு வாய் எல்லாம் துடிதுடிக்க காளிதாஸ் ந.தி - அன்னையே அப்படி எனில் நான்..
காளி.. நீயே நான் நானே நீ.. (பின் பொங்கும் உணர்ச்சிப் பிரவாகம் முகத்தில்..)
காலங்காத்தால காளிதாஸையும் அவங்களோட முறைப்பெண்ணையும், எல்.வியையும் நினைவு படுத்தனுமா (ஹையா..இன்றைக்கான வெடி போட்டாச்சு)
ராஜ்ராஜ் சார் மகான் காந்தி மகானுக்கு நன்றி..
மதுண்ணா காந்தி முழுப்படத்தை ப் போட்டதற்கும் நன்றி..அந்தப் படத்தில் ஜாலியன் வாலா பாக் நினைத்தாலே பகீர் என்கும்.. சிலவருடங்கள் முன் நேரில் சென்று பார்த்தபோது தான் புரிந்தது..எவ்ளோ சின்னக் குறுகலான கிணறு தெரியுமா..
ராஜேஷ் பாடல்களுக்கு நன்றி.. இன்னும் ஹோம் வொர்க் பண்ணித் தான் பாட்டெல்லாம் பார்க்கணும்
அப்புறம் வரட்டா..
vasudevan31355
2nd October 2014, 12:11 PM
இன்றைய ஸ்பெஷல் (84)
'இன்றைய ஸ்பெஷல்' பகுதியில் 'கும் நாம்' இந்தியைத் தழுவி எடுத்த 'நாளை உனது நாள்' படத்திலிருந்து மிக மிக அட்டகாசமான ஒரு பாடல்.
உமாரமணன் பாடிய இப்பாடல் என்னை அநியாயத்திற்கு கவர்ந்த பாடல். என்ன ஒரு அழகான குரல்வளம்!
கார்த்திக் சார் எழுதினாரே 'அதே கண்கள்' திரைப்படத்தில் என்னென்னவோ நான் நினைத்தேன்' பாடல் கடற்கரையில் அழகாகப் படம் பிடிக்கப்பட்ட ஒரு சில பாடல்களில் என்று. அது போல இந்தப் பாடலும் கடற்கரையில் ரொம்ப அழகாகப் படமாக்கப் பட்டுள்ளது.
https://i.ytimg.com/vi/nLubEDsarp0/hqdefault.jpg
http://i.ytimg.com/vi/Vvsj9rft650/hqdefault.jpg
விஜயகாந்த், நளினி ஒரு ஜோடி
ஜெயசங்கர், 'அச்சமில்லை அச்சமில்லை' படத்தில் விடுகதை போட்ட அகல்யா இன்னொரு ஜோடி. (பொருத்தம் ஒட்டாது)
செந்தாமரை தனியாக.
பாடல் அகல்யாவுக்கு பிகினி உடையில். இடையில் டான்ஸ் விஜிக்கும், நளினிக்கும்.
இளையராஜா அமர்க்களப்படுத்தி பின்னியெடுத்திருப்பார். இப்பேர்ப்பட்ட பாடலை யாருமே கண்டு கொள்ளவில்லை. அவ்வளவு இனிமையான பாடல். ஏன் பிரபலமாகவில்லை என்பது மாறாத வடுவாக மனதில் பதிகிறது. இப்படத்தில் வரும் இன்னொரு பாடலான 'வெண்ணிலா ஓடுது' பாடல் கூட ஓரளவிற்கு ஹிட்டான பாடல்.
இளையராஜாவின் மிகச் சிறந்த பாடல்கள் வரிசையில் இந்தப் பாடலும் ஒன்று என்று நான் ஆணித்தரமாகக் கூறுவேன். அதுவும் உமா ரமணன் 'ல்லாலலா ல்லாலலா' என்று கொஞ்சம் விட்ட மாதிரி விட்டு பின் அற்புதமாக ஹம்மிங் செய்வது ஹம்சம்.
இனி பாடலின் வரிகள்.
அலை அலையாய் பல ஆசைகளே
அடி இளமையிலே இந்த இளமையிலே
இரவினில் பூக்கள் பூக்கலாம்
விடிந்ததும் வாடிப் போகலாம்
இடையினில் காலம் மாறலாம்
இளமையும் ஓடிப் போகலாம்
பிறவியில் நானும் கூட பூவின் ஜாதிதான்
அலைஅலையாய் பல ஆசைகளே
அடி இளமையிலே இந்த இளமையிலே
செவ்வாழை போலிரண்டு கால் நடக்க
ல்லாலலா ல்லாலலா
செம்மீனைப் போலிரண்டு கண் சிரிக்க
ல்லாலலா ல்லாலலா
நதி போல் நானும் நடைதான் போட
கொடி போல் மேலே கனிதான் ஆட
இளகிய மாலைப் பொழுதினிலே
வாலிபமே வா நான் அணைக்க
அலைஅலையாய் பல ஆசைகளே
அடி இளமையிலே இந்த இளமையிலே
ஆகாயம் மின்னுகின்ற பூங்குருவி
ல்லாலலா ல்லாலலா
அம்மாடி நானும் ஒரு தேனருவி
ல்லாலலா ல்லாலலா
சிறகை நானும் விரித்தேன் இங்கே
நினைத்தால் போதும் பறப்பேன் அங்கே
பொழுதொரு பாடல் படித்திருப்பேன்
ராத்திரியில் வா நீ ரசிக்க
அலை அலையாய் பல ஆசைகளே
அடி இளமையிலே இந்த இளமையிலே
இரவினில் பூக்கள் பூக்கலாம்
விடிந்ததும் மாறிப் போகலாம்
இடையினில் காலம் மாறலாம்
இளமையும் ஓடிப் போகலாம்
பிறவியில் நானும் கூட பூவின் ஜாதிதான்
ஹம்மிங்.
https://www.youtube.com/watch?v=nLubEDsarp0&feature=player_detailpage
மதுஜி,
கொடுமைஜி. இந்த வீடியோவில் டூரிங் டாக்கீஸில் ரெண்டாவது ஆட்டம் 'ஆயிரம் தலைவ்ங்கிய அபூர்வ சிந்தாமணி' படம் பார்க்கும் போது கட்டாகி கட்டாகி எகிறுமே... அது போல அப்படியே பாடல் காட்சிகள் தவ்வி தவ்வி பாடலின் சில வாக்கியங்கள் ஸ்வாஹா. முன்னம் டேப் ரெகார்டரில் கேட்டதை ஞாபகம் வைத்து எழுதினேன்.
இன்னொரு கொடுமை என்னவென்றால் இந்தப் பாடலின் ஆடியோவைக் கொடுத்திருக்கும் எல்லா தளங்களும் இந்தப் பாடலுக்குப் பதிலாக 'அலை அலையாக' என்ற 'கண்ணோடு கண்' படத்தின் பாடலைக் கொடுத்து தப்பும் தவறுமாக படுத்தி இருக்கிறார்கள். என்னத்த சொல்ல!
Gopal.s
2nd October 2014, 01:27 PM
வாசு,
கடை விரித்தோம் கொள்வாரில்லை என்று அசல் சரக்குகளை விற்றும் போணியாகாதவர்களுக்கு, ஆறுதல் வாசு ,கார்த்திக் போன்றவர்களே. இப்போதுதான்(இரண்டு நாட்களாக) வாசு போன்றவர்களின் தின பதிவுகளை நிம்மதியாக படிக்க முடிகிறது. சிஸ்டம் நிரந்தரமாக பெயில் ஆக கடவதாக.
chinnakkannan
2nd October 2014, 03:53 PM
//நெஞ்சம் மறக்காமல் நெஞ்சில் குடிகொண்டவரை
நெஞ்சு நிறையப் பாராட்டிய அன்பு நெஞ்சம் கொண்ட // தாங்க்ஸ் வாசுசார்.. போன பதிவுலையே கோட் பண்ணி சொல்லியிருக்கணும்..
அப்புறம் ஐ-6 இங்கே கிட்டத் தட்ட ரூ 45000 க்கு விற்கப் படுகிறது.. வர்றச்சே கொண்டு வரட்டா..:)
கோபால் சார்..கார்த்திக் சார் தான் இப்போதெல்லாம் வருவதில்லையே.. ஏன்..
chinnakkannan
2nd October 2014, 04:03 PM
வாசு சார்.. கும் நாம் நாளை உனது நாளாக சக்தி தியேட்டரில் போட்டார்கள்..குட்டி ஏசி தியேட்டர் 350 பேர் கெபாசிட்டி என நினைக்கிறேன்.. நார்மலாக அந்தக்கால மதுரையில் படம் ஆரம்பிக்கும் முன் ஏசி போடுவார்கள் பின் நிறுத்தி விடுவார்கள்..எனில் நான் போனது மதியக் காட்சி..படமும் த்ரில்லர்..கும் நாம் பார்த்ததில்லை..எனில் சுவாரஸ்யமாகப் பார்க்க, ஏசி நிறுத்தி ஃபேன் மட்டும் சோகையாய் கொஞ்சம் காற்றனுப்பி எங்கள் வெக்கையைக் குறைத்துக் கொண்டிருந்த போதில்..டபக்..கரெண்ட் கட் (படம் 90 பெர்சண்ட் முடிந்த நேரம்) பின் ஜெனரேட்டர் போட்டுப் ஒரு நிமிடத்தில் மறுபடியும் திரை இருளுக்குப் போக.. நாங்கள் வெய்ட் வெய்ட் வெய்ட்பண்ணி (கிட்டத்தட்ட 40 நிமிடம்- வரும் வரும் என்) (ஏனெனில் ஜெனரேட்டரும் ரிப்பேர் என்றார்கள்) சட்டை பேண்ட் எல்லாம் தொப்பலாக.. வரவேயில்லை..
இன்று வரை அந்தப் படத்தைத் திரும்பப் பார்க்கவில்லை..க்ளைமாக்ஸ் வில்லன் யார் என்று மட்டும் நண்பனிடம் கேட்டுத் தெரிந்து கொண்டேன்..
இந்தப் பாட்டு பார்த்துச் சொல்கிறேன்..அதுவும் கேட்டுக்கேட்டு டைப்படித்த பாடல்.. நானும் நிறைய பாட்டிற்கு அவ்வண்ணம் செய்திருக்கிறேன்.. ஆனா வாசு சார்.. படத்தோட முதல் சீட்டு சீட்டு என்ற அனுராதா பாட்டை ப் போடாமல் போனீர்களே ( நல்லவேளை :)) அகெய்ன் தாங்க்ஸ்..
Richardsof
2nd October 2014, 07:05 PM
http://youtu.be/r-Q2ofNRmdU
Richardsof
2nd October 2014, 07:09 PM
EN VIRUPPA PADAL
http://youtu.be/xWAzQ75Sj5k
vasudevan31355
2nd October 2014, 07:21 PM
//முதலும் முக்கியமான சந்தோஷம் அருமை நண்பர் ராகவேந்தர் சார் மேடையில் நினைவு பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டது. அதை விட சந்தோஷம் அவரையும் அவரின் நடிகர் திலகம். காம் இணையதளத்தைப் பற்றியும் குறிப்பிட்டு பிரபு பேசியது. ராகவேந்தர் சாரை எழுந்து நிற்க சொல்லி அனைவரையும் கரகோஷம் செய்யுமாறு பிரபு கேட்டுக் கொள்ள அனைவரும் கைதட்டியது//
நன்றி முரளி சார்.
http://i.ytimg.com/vi/6vnpSZdz8nI/maxresdefault.jpg
வாழ்த்துக்கள் ராகவேந்திரன் சார். ரொம்பப் பெருமையாக இருக்கிறது. நான் விருது வாங்கினால் கூட இவ்வளவு சந்தோஷப் பட மாட்டேன். நிறைகுடமான தங்களுக்கு இது போன்ற பல விருதுகள் நம் இதய தெய்வத்தின் அருளால் கிட்டிக் கொண்டே இருக்கும்.
இதயபூர்வமான வாழ்த்துக்கள்.
Richardsof
2nd October 2014, 07:25 PM
UNAKKUM ENAKKUM
http://youtu.be/AGvtQj5U33g
vasudevan31355
2nd October 2014, 07:33 PM
மாலை மதுரம்.
'செங்கோட்டை சிங்கம்' படத்தில் ஜிக்கியின் குரலில் அழகான சரோஜாதேவி பாடும் பாடல்.
'இருவிழி பருகும் விருந்து'
https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=08a7Xqb4pEw
vasudevan31355
2nd October 2014, 07:49 PM
மாலை மதுரம்.
'அமிர்த யோகம் வெள்ளிக் கிழமை கண்ணாளா
அதுக்குதான் காத்திருந்தேன் இந்நாளா
அழகுச் சிலையே
அமிர்தக் கலையே உன்னாலே
மெழுகு போலே உருகி நின்றேன் தன்னாலே'
http://i.ytimg.com/vi/j1BjBNNSZcg/hqdefault.jpg
'அன்பு எங்கே'? திரைப் படத்திலிருந்து ஒ.பி.நய்யர் புண்ணியம் கட்டிக்கொள்ள வேதாவிடமிருந்து நமக்குக் கிடைத்த பாடல். 'Naya Daur' படத்தில் வரும் 'Reshmi Salwar Kurta Jali Ka' பாடலைத் தழுவி சௌந்தரராஜனும், லீலாவும் பாடியது. சந்திரபாபுவின் 'தடுக்காதே என்னைத் தடுக்காதே' பாடலும் சட்டென்று நம் நினைவுக்கு வரும். இந்தப் படத்தில் பாடகர் திலகத்தின் பட்டை கிளப்பிய ('டிங்கிரி டிங்காலே மீனாட்சி டிங்கிரி டிங்காலே' பாடல் உண்டு)
https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=SZlx4piVpLg
'Naya Daur' படத்தில் வரும் 'Reshmi Salwar Kurta Jali Ka' பாடல்.
https://www.youtube.com/watch?v=YQQDlClWaSA&feature=player_detailpage
vasudevan31355
2nd October 2014, 07:52 PM
மாலை மதுரம்.
http://i.ytimg.com/vi/BuqxXOZBD-g/hqdefault.jpg
பாடல்: டிங்கிரி டிங்காலே
திரைப்படம்: அன்பு எங்கே
பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன்
இயற்றியவர்:
இசை: வேதா
ஏய்..யா
டிங்கிரி டிங்காலே மீனாட்சி டிங்கிரி டிங்காலே
உலகம் போற போக்கப் பாரு தங்கமே தில்லாலே ஹா
டிங்கிரி டிங்காலே மீனாட்சி டிங்கிரி டிங்காலே
உலகம் போற போக்கப் பாரு தங்கமே தில்லாலே
அதிகமாகப் படிச்சுப் படிச்சு மூளை கலங்கிப் போச்சு
அணுகுண்டைத் தான் போட்டுகிட்டு அழிஞ்சு போகலாச்சு
அறிவில்லாம அடக்கிப்புட்டா மிருகமின்னு சொன்னோம் - அந்த
மிருகமெல்லாம் நம்மைப் பாத்து சிரிக்குதென்ன செய்வோம்
உலகம் போற போக்கப் பாரு தங்கமே தில்லாலே
டிங்கிரி டிங்காலே மீனாட்சி டிங்கிரி டிங்காலே
டிங்கிரி டிங்காலே மீனாட்சி டிங்கிரி டிங்காலே
உலகம் போற போக்கப் பாரு தங்கமே தில்லாலே
ஐயா வரவப் பாத்து வீட்டில் ஏங்குறாங்க அம்மா - அந்த
ஐயா இங்கே கும்மாளந்தான் போடுறாரு சும்மா
அப்பன் பாட்டன் ஆஸ்தியெல்லாம் சிகரெட்டாக மாறி
ஐயா வாயில் புகையுது பார் ஐயம் வெரி சாரி
உலகம் போற போக்கப் பாரு தங்கமே தில்லாலே
டிங்கிரி டிங்காலே மீனாட்சி டிங்கிரி டிங்காலே
டிங்கிரி டிங்காலே மீனாட்சி டிங்கிரி டிங்காலே
உலகம் போற போக்கப் பாரு தங்கமே தில்லாலே
டிங்கிரி டிங்காலே மீனாட்சி டிங்கிரி டிங்காலே
உலகம் போற போக்கப் பாரு தங்கமே தில்லாலே
கறியும் கூட்டும் சோறும் தின்ன மாட்டார் இந்த மைனர்ர்ர்ர்
காஞ்சு போன ரொட்டித் துண்டும் சூப்பும் இவரு டின்னர்
குறுக்கு வழியில் பணத்தை சேர்க்க இந்த மனுஷன் ஆச
குதிரை வாலில் கொண்டு போயி கட்டிடுவார் காச
உலகம் போற போக்கப் பாரு தங்கம தில்லாலே
டிங்கிரி டிங்காலே மீனாட்சி டிங்கிரி டிங்காலே
டிங்கிரி டிங்காலே மீனாட்சி டிங்கிரி டிங்காலே (ஆஹாஹா)
உலகம் போற போக்கப் பாரு தங்கமே தில்லாலே
டிங்கிரி டிங்காலே மீனாட்சி டிங்கிரி டிங்காலே (ஆஹாஹா)
உலகம் போற போக்கப் பாரு தங்கமே தில்லாலே
கண்ணுங்கண்ணும் பேசிக்குது மூக்கும் மூக்கும் முட்டுது
பொண்ணும் ஆணும் ஜோடி போட்டு கையைக் காலை ஆட்டுது
கண்ணுங்கண்ணும் பேசிக்குது மூக்கும் மூக்கும் முட்டுது
பொண்ணும் ஆணும் ஜோடி போட்டுக் கையைக் காலை ஆட்டுது
கண்டவங்க மண்டையெல்லாம் தாளத்தோட ஆடுது
காலு கையி உடம்பையெல்லாம் தூக்கித் தூக்கிப் போடுது
உலகம் போற போக்கப் பாரு தங்கமே தில்லாலே
டிங்கிரி டிங்காலே மீனாட்சி டிங்கிரி டிங்காலே
டிங்கிரி டிங்காலே மீனாட்சி டிங்கிரி டிங்காலே
உலகம் போற போக்கப் பாரு தங்கமே தில்லாலே
ஹாய்..யா
டிங்கிரி டிங்காலே மீனாட்சி டிங்கிரி டிங்காலே
உலகம் போற போக்கப் பாரு தங்கமே தில்லாலே
டிங்கிரி டிங்காலே மீனாட்சி டிங்கிரி டிங்காலே
உலகம் போற போக்கப் பாரு தங்கமே தில்லாலே
https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=eG6f5dKzVxA
vasudevan31355
2nd October 2014, 08:09 PM
மாலை மதுரம்.
எத்தனை முறை கேட்டாலும் அலுக்காது சலிக்காது ஊன் உறக்கம் கொள்ளாது இமைப் பொழுதும் சோராது கேட்டுக் கொண்டே இருக்க ஒரு பாடல் வேண்டுமா? அந்தப் பாடலுக்கு ஒரு அழகு தேவதை தோன்றி அகமெலாம் குளிர்ந்து நிறைய வேண்டுமா? இசை உடம்பின் உள்ளே ஊடுருவி அணுக்களனூடே பயணிக்க வேண்டுமா? இயற்கை அழகை அருமையான வண்ணத்தில் அள்ளித் தோய்த்து அப்படியே பருக வேண்டுமா?
இதோ 'கங்கா ஜமுனா' படத்தின் "Dhoondo Dhoondo Re Sajna" இந்திப் படப் பாடல்.
லதா என்ற லட்சணக் குரல் கொண்ட லட்டுப் பாடகியின் குரல் வளமையிலும், இனிமையிலும் உலகை அப்படியே சில நிமிடங்கள் மறந்து ஆனந்த உணர்வை தியானத்திற்கு ஈடாக உணரலாம்.
https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=oBiv-iTruHc
RAGHAVENDRA
2nd October 2014, 08:17 PM
வாசு சார்
தங்களுக்கு என் மனப்பூர்வமான நன்றிகள்..
எல்லாப்புகழும் நடிகர் திலகத்திற்கே.
அன்புடன்
ராகவேந்திரன்
RAGHAVENDRA
2nd October 2014, 08:17 PM
வினோத் சார்
தங்கள் பாராட்டிற்கு என் உளமார்ந்த நன்றிகள்.
எல்லாப்புகழும் நடிகர் திலகத்திற்கே.
அன்புடன்
ராகவேந்திரன்
vasudevan31355
2nd October 2014, 08:49 PM
'மலர்களின் நடுவில் ஒரு ரோஜா
மக்களின் மத்தியிலே காமராஜா'
பெருந்தலைவரின் நினைவு தினத்தையொட்டி அவர் பெருமை பறை சாற்றும் பாடல்.
http://www.youtube.com/watch?v=oUpkuYSjv_E&feature=player_detailpage
chinnakkannan
2nd October 2014, 09:13 PM
Raghavendran sir.. Congrats.. Ennudaiya namaskarams to you..
Vasu sir..ellaam inimaiyaana paadalkaL.. h w paNNittu vaREn..:)
rajeshkrv
2nd October 2014, 09:19 PM
ராஜேஷ்ஜி
இன்று ஒருநாள் நான் நீங்களாக உங்கள் அனுமதி தேவை. ஒரு அருமையான கன்னடப் பாடல் கேட்டேன். தங்களுக்குப் பிடித்த அபிநய சரஸ்வதி பாடும் பாடல் இசையரசியின் குரலில்.
'லஷ்மி சரஸ்வதி' கன்னடப் படத்தில்.
'நூறு வருஷா பாழிரி'. (ரைட்டா ராங்கா? எனக்கு கன்னடம் தெரியாதே! )
(என்னை ரொம்பத்தான் கெடுத்து வைத்திருக்கிறீர்கள்) :)
https://www.youtube.com/watch?v=T0l3cXuueqM&feature=player_detailpage
தாராளமாக..
மிகவும் அருமையான பாடல்
பாளிரி ( நூறாண்டுகள் வாழ்க நூறு தீபங்கள் காண்க (100 தீபாவாளி )
rajraj
2nd October 2014, 10:27 PM
From Miss Malini (1947)
Sree Saraswathi Naamosthuthe........ by T.V.Rathinam, a popular singer in the 50s.
http://www.youtube.com/watch?v=Jci-XpxnYL4
Hope all of you celebrated Sarswathi Poojai with aa lot of sweets, pottukkadalai and pori ! :)
madhu
3rd October 2014, 05:02 AM
Raghav ji..
Congratulations... ungaL kireedathil pathikka innum niraiya gems baakki irukku..
RAGHAVENDRA
3rd October 2014, 06:59 AM
Thank you Madhu, All credit should go to Nadigar Thilagam, the Lord of Arts
RAGHAVENDRA
3rd October 2014, 07:01 AM
Chikka Sir
Thank you so much for your appreciation. All credit should go to NT the Lord of Arts
vasudevan31355
3rd October 2014, 10:10 AM
இன்றைய ஸ்பெஷல் (85)
'இன்றைய ஸ்பெஷலி'ல் பொன்மலர் இன்டர்நேஷனல் தயாரிப்பில் மௌலி இயக்கிய 'நன்றி மீண்டும் வருக' படத்தின் கலக்கலான ஒரு பாடல்.
ஒவ்வொரு படத்திலும், ஒவ்வொரு பாடலிலும் தனி முத்திரை பதிக்கும் என் மனம் கவர்ந்த அசாத்திய திறமை கொண்ட ஷியாம் அவர்களின் மியூசிக். இவர் இசை என்றாலே நெஞ்சமெல்லாம் இனிக்க ஆரம்பித்து விடும்.
http://www.kosmikmusic.com/contents/labels/Kosmik/ArtworkImages/KMDF047.jpg
பிரதாப் போத்தன், சுஹாசினி, தேவிகாராணி, ஜெயமாலினி, கௌரவ நடிகராக ஜெய்சங்கர், ரஜினிகாந்த், ரவீந்தர், சுதாகர் ஆகியோர் நடித்திருந்தனர். பிரதாப் சினிமா நடிகராக வந்து பந்தா பண்ணுவார். 'மதி ஒளி' சண்முகம் கூட இயக்குனராக தலை காட்டியிருப்பார். படம் காமெடி நிறைந்த துணுக்குத் தோரணம்.
https://i.ytimg.com/vi/8PQKBHoaGvU/mqdefault.jpg
பிரதாப் போத்தனும், சுஹாசினியும் ஜோடி சேர்ந்த பின்னணியில் ஒலிக்கும் பாடல். கரை புரண்ட உற்சாகத்துடன் பாலா பாட, உடன் ஜானகி. ஜெட் ஸ்பீட் பாடல். சும்மா அதம் பறக்கும். வழக்கம் போல பாலாவின் ரபபப்பாபா....பபபாப்பபபபா (பாம்பு நாக்கோ இவருக்கு) கொஞ்சல், கெஞ்சல், கேலி எல்லாமே உண்டு இன்னும் உற்சாகமாக.
பாடல் நகருவதே தெரியாத அளவுக்கு அப்படி ஒரு வேகம். காட்சியை யார் பார்த்தார்கள்? அதுவும் பிரதாப், சுஹாசினி. கண்ணை மூடிக் கொண்டு பாடலைக் கேட்டாலே போதும். உடலும், உள்ளமும் உன்னத துள்ளல் போடும்.
இனி பாடலின் வரிகள்.
i love you
I behind you
I love you
காதல் கனவுகளே
நீராடும் என் நினைவுகளே
கண்ணிலே காதல் சுமந்தவள்
தன்னையே இன்று மறந்தவள்
கண்ணிலே காதல் சுமந்தவள்
தன்னையே இன்று மறந்தவள்
மௌனங்களால் ஒரு பல்லவி பாடுகிறாள்
ஹேஹேய்
பூங்காற்று சூடாகும் வேளை
சொர்க்கங்கள் போகும் நம் பாதை
ரெண்டுள்ளம் ஒன்றாகும் நாளை
காதல் கனவுகளே
நீராடும் என் நினைவுகளே
இதயம் முழுதும் ஒரு சங்கீதம்
கனவில் தெரியும் அதன் ரீங்காரம்
ஏதோ ஒன்று நெஞ்சில் நீராடும்
இனிய கனவொன்று உள்ளோடும்
இணையும் சுமையில் மனம் தள்ளாடும்
கண்ணும் நெஞ்சும் இன்று போராடும்
பூந்தேனில் குளிக்க நினைத்த ஒரு வண்டு
பூங்காவை மறந்து கிடப்பதென்ன இன்று
ரபபப்பாபா..
பூந்தேனில் குளிக்க நினைத்த ஒரு வண்டு
பூங்காவை மறந்து கிடப்பதென்ன இன்று
ஹே பூங்காற்று சூடாகும் வேளை
சொர்க்கங்கள் போகும் நம் பாதை
ரெண்டுள்ளம் ஒன்றாகும் நாளை
காதல் கனவுகளே
ரபபப்பாபா..........பபபாப்பபபபா
பப்பரப்பப்பர பர பப்பரப்பப்பர பர
லாலாலலா
பப்பரப்பப்பர பர பப்பரப்பப்பர பர
லாலாலலா
I loveyou
I belongtoyou
I loveyou
இரண்டு நதி எழுந்து கொஞ்சட்டும்
புரண்டு விழும் அலைகள் சிந்தட்டும்
பெண்மை எங்கும் விட்டுப் போகாதே
நதியில் பிரிந்த அலை துள்ளாது
மலையில் பிறந்த நதி நில்லாது
கண்ணை விட்டு இமை தூங்காது
நீராடும் இவளின் மடியில் ஒரு மேகம்
தீராதோ விடியும் வரையில் ஒரு தாகம்
நீராடும் இவளின் மடியில் ஒரு மேகம்
தீராதோ விடியும் வரையில் ஒரு தாகம்
பூங்காற்று சூடாகும் வேளை
சொர்க்கங்கள் போகும் நம் பாதை
ரெண்டுள்ளம் ஒன்றாகும் நாளை
காதல் கனவுகளே
நீராடும் என் நினைவுகளே
கண்ணிலே காதல் சுமந்தவள்
தன்னையே இன்று மறந்தவள்
மௌனங்களால் ஒரு பல்லவி பாடுகிறாள்
ஹே ஹே ஹே
பூங்காற்று சூடாகும் வேளை
சொர்க்கங்கள் போகும் நம்பாதை
ரெண்டுள்ளம் ஒன்றாகும் நாளை
ஹே லாலலாலாலாலாலா
லாலலாலாலாலாலா
லாலலாலாலாலாலா
https://www.youtube.com/watch?v=AwTkIki4xQo&feature=player_detailpage
mahendra raj
3rd October 2014, 10:46 AM
மாலை மதுரம்.
http://i.ytimg.com/vi/BuqxXOZBD-g/hqdefault.jpg
பாடல்: டிங்கிரி டிங்காலே
திரைப்படம்: அன்பு எங்கே
பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன்
இயற்றியவர்:
இசை: வேதா
ஏய்..யா
டிங்கிரி டிங்காலே மீனாட்சி டிங்கிரி டிங்காலே
உலகம் போற போக்கப் பாரு தங்கமே தில்லாலே ஹா
டிங்கிரி டிங்காலே மீனாட்சி டிங்கிரி டிங்காலே
உலகம் போற போக்கப் பாரு தங்கமே தில்லாலே
அதிகமாகப் படிச்சுப் படிச்சு மூளை கலங்கிப் போச்சு
அணுகுண்டைத் தான் போட்டுகிட்டு அழிஞ்சு போகலாச்சு
அறிவில்லாம அடக்கிப்புட்டா மிருகமின்னு சொன்னோம் - அந்த
மிருகமெல்லாம் நம்மைப் பாத்து சிரிக்குதென்ன செய்வோம்
உலகம் போற போக்கப் பாரு தங்கமே தில்லாலே
டிங்கிரி டிங்காலே மீனாட்சி டிங்கிரி டிங்காலே
டிங்கிரி டிங்காலே மீனாட்சி டிங்கிரி டிங்காலே
உலகம் போற போக்கப் பாரு தங்கமே தில்லாலே
ஐயா வரவப் பாத்து வீட்டில் ஏங்குறாங்க அம்மா - அந்த
ஐயா இங்கே கும்மாளந்தான் போடுறாரு சும்மா
அப்பன் பாட்டன் ஆஸ்தியெல்லாம் சிகரெட்டாக மாறி
ஐயா வாயில் புகையுது பார் ஐயம் வெரி சாரி
உலகம் போற போக்கப் பாரு தங்கமே தில்லாலே
டிங்கிரி டிங்காலே மீனாட்சி டிங்கிரி டிங்காலே
டிங்கிரி டிங்காலே மீனாட்சி டிங்கிரி டிங்காலே
உலகம் போற போக்கப் பாரு தங்கமே தில்லாலே
டிங்கிரி டிங்காலே மீனாட்சி டிங்கிரி டிங்காலே
உலகம் போற போக்கப் பாரு தங்கமே தில்லாலே
கறியும் கூட்டும் சோறும் தின்ன மாட்டார் இந்த மைனர்ர்ர்ர்
காஞ்சு போன ரொட்டித் துண்டும் சூப்பும் இவரு டின்னர்
குறுக்கு வழியில் பணத்தை சேர்க்க இந்த மனுஷன் ஆச
குதிரை வாலில் கொண்டு போயி கட்டிடுவார் காச
உலகம் போற போக்கப் பாரு தங்கம தில்லாலே
டிங்கிரி டிங்காலே மீனாட்சி டிங்கிரி டிங்காலே
டிங்கிரி டிங்காலே மீனாட்சி டிங்கிரி டிங்காலே (ஆஹாஹா)
உலகம் போற போக்கப் பாரு தங்கமே தில்லாலே
டிங்கிரி டிங்காலே மீனாட்சி டிங்கிரி டிங்காலே (ஆஹாஹா)
உலகம் போற போக்கப் பாரு தங்கமே தில்லாலே
கண்ணுங்கண்ணும் பேசிக்குது மூக்கும் மூக்கும் முட்டுது
பொண்ணும் ஆணும் ஜோடி போட்டு கையைக் காலை ஆட்டுது
கண்ணுங்கண்ணும் பேசிக்குது மூக்கும் மூக்கும் முட்டுது
பொண்ணும் ஆணும் ஜோடி போட்டுக் கையைக் காலை ஆட்டுது
கண்டவங்க மண்டையெல்லாம் தாளத்தோட ஆடுது
காலு கையி உடம்பையெல்லாம் தூக்கித் தூக்கிப் போடுது
உலகம் போற போக்கப் பாரு தங்கமே தில்லாலே
டிங்கிரி டிங்காலே மீனாட்சி டிங்கிரி டிங்காலே
டிங்கிரி டிங்காலே மீனாட்சி டிங்கிரி டிங்காலே
உலகம் போற போக்கப் பாரு தங்கமே தில்லாலே
ஹாய்..யா
டிங்கிரி டிங்காலே மீனாட்சி டிங்கிரி டிங்காலே
உலகம் போற போக்கப் பாரு தங்கமே தில்லாலே
டிங்கிரி டிங்காலே மீனாட்சி டிங்கிரி டிங்காலே
உலகம் போற போக்கப் பாரு தங்கமே தில்லாலே
https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=eG6f5dKzVxA
Song written by Seetharaman.
vasudevan31355
3rd October 2014, 12:10 PM
நன்றி மகேந்திரராஜ் சார்.
வி.சீதாராமன் ஓர் அருமையான பாடலாசிரியர். இவர் அதிகம் பரிச்சயமில்லாத ஒரு கவிஞர்.
'மனம் ஒரு குரங்கு' படத்தில் இடம் பெறும் 'மனம் ஒரு குரங்கு' என்ற டைட்டில் பாடலும்,
'கணவனே கண்கண்ட தெய்வம்' படத்தில் வரும் 'அன்பில் மலர்ந்த நல் ரோஜா' பாடலும்,
'கொஞ்சும் சலங்கை' படத்தில் வரும் 'காணக் கண் கோடி வேண்டும்' என்ற பாடலும் கவிஞர் வி.சீதாராமன் இயற்றிய பாடல்களில் குறிப்பிடத் தகுந்தவை ஆகும்.
'கணவனே கண்கண்ட தெய்வம்' படத்தின் டைட்டிலில் பாடலாசிரியர் சீதாராமன் பெயர் இருப்பதைக் காணலாம்.
http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/seeetha.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/seeetha.jpg.html)
chinnakkannan
3rd October 2014, 12:24 PM
ஹாய் குட்மார்னிங் ஆல்..
நீண்ட விடுமுறையின் முதல் நாள் என்பதால் –நேற்றிரவு வெகுலேட்டாகத் தூங்கி சீக்கிரமா எழுந்து ( அஞ்சே முக்காலுக்குல்லாம் இன்னிக்கு முழிப்பு வந்துடுத்த்து) மடமடன்னு காஃபிகுடிச்சு வாக் போய்ட்டு வந்துசுறுசுறுப்பா குளிச்சு சமர்த்தா டிஃபன் சாப்பிட்டா மறுபடிகண்ணைச் சுழட்டி வர தூங்கிட்டேன் அரை மணி நேரம்..
தென் கம்ப்யூட்டர் ஆன்பண்ணி ஹோம் ஒர்க்கெல்லாம் முடிச்சேனா..கொஞ்சம்முன்னப் பின்ன வரும்..
வாசு ஜி டி.எம் எஸ் பாட்டுன்னு சொன்னதுக்கப்புறம் தான் தெரிஞ்சது..
ஐயா வரவப் பாத்து வீட்டில் ஏங்குறாங்க அம்மா - அந்த
ஐயா இங்கே கும்மாளந்தான் போடுறாரு சும்மா
அப்பன் பாட்டன் ஆஸ்தியெல்லாம் சிகரெட்டாக மாறி
ஐயா வாயில் புகையுது பார் ஐயம் வெரி சாரி
நல்ல பாட்டு..இப்பத்தான் காணொளி காண்கிறேன்.. காணவைத்தமைக்கு பல காணி நன்றி நண்பரே!
ரெஷ்மி சல்வார் ஹிந்திப்பாட்டு தடுக்காதே எனைத் தடுக்காதே யின் (சந்திரபாபுவின் கூட ஆடுபவரின்(?!)) இடைப்பட்டு வரும் மியூசிக்காக இருந்தது.. நன்றாக இருந்தது..
இந்த க் கன்னடப் பாட்டு இன்ப அதிர்ச்சியாய் இருந்தது (கன்னடான்னாலே கொஞ்சம் ஷாக் தான் கொடுக்குமோ) அது என்ன…நூறு வருஷா பாழிரி'. நல்ல பாட்டு
நடுவில் ஊடாடி வந்தபாட்டு கொடுத்தவர் எஸ்வி சார்..
பட்டெடுத்து விரிக்கவா.. உன்னைப் பெற்ற அம்மாவுக்கு ப் பொன்னாடை போர்த்தவா ..குரு அந்தக்க்காலத்துல இருந்தே இப்படி இருக்கே..இந்தக்காலத்துல மரியாதை கொஞ்சம் குறைச்சல் தான் (எவண்டி உன்னப் பெத்தான்)
இருவிழி பருகும் விருந்து கூலிங்க்க்ளாஸ் கழ்ட்டாமலேயே பருகிய ச்ர்ரோஜா.. கண்ணாடியைக் கழற்றியவுடன் சரியான அழகு ரோஜாவாய்ப்பாடும் பாட்டு.. (ஊட்டியா கொடைக்கானலா ஏற்காடா)
//Sorry ChinnakkaNNan you have to watch a baby dancing// வாட்ச் பண்ணிட்டேனே ராஜ் ராஜ் சார்.. தாங்க்ஸ்.. அப்புறம் அந்த சரஸ்வதி பாட்டுக்கும்..
//இதோ ஏழு நிறமுள்ள தேரு ஆம் வானவில் தான்... அதை பற்றி இசையரசி பாடும் அழகான பாடல் // ராஜேஷ்.. பாடல் மட்டுமில்லை..விஜயாவும் அழகாயிட்டு இருந்தார்.. ( நன்றி
//தத்தை நெஞ்சம் முத்தத்திலே தித்தித்ததா இல்லையா- (எங்களைக் கேட்டா நீங்கதான் சொல்லணும்!)) நல்லபாட்டு தாங்க்ஸ்
வாசு சார்.. நன்றி மீண்டும் வருக ஒரு நல்ல படம்..முன்பு பல வருடங்களுக்கு முன் ஒரு விமர்சனம் எழுதியிருந்தேன்..கிடைத்தால் இடுகிறேன்(முரசு ஃபாண்ட்).. காதல் காதல்பாட்டு முடிந்ததும் தான் படமே மாறும்..! (ஒரு ஜெயமாலினியின் தத்துவப்பாட்டும் உண்டு..பச்ச மிளகா கிச்சடி வெச்சான் பருப்பு சோத்துக்கு வெண்ணைய வெச்சான்)..மெளலியின் நகைச்சுவை, ப்ரதாப் போத்தனின் வித்யாச நடிப்பு..என.. படம் வெளிவந்த போது மார்க்கெட் இழந்திருந்ததால் படம் ஓடாமல் போய் மெளலி தெலுங்குப்பக்கம் திசை திரும்பினார். பாடலுக்கு நன்றி..
ஹப்பாடி ஹோம் ஒர்க் முடிச்ச்..ஓ நோ.. வாசு சார்.. ராதே உனக்குக் கோபம் ஆகாதடி பார்த்து முடித்தேன்..படம் முழுக்க குறும்\பான பாடி லாங்க்வேஜ் இருக்கும் ந.தியிடம்..அதுவும் தேவிகையுடன் வரும் காட்சிகளில்..
அப்புறம் வரட்டா..
vasudevan31355
3rd October 2014, 12:35 PM
'ஹம் தோனோ' (Hum dono)1961 ஆம் ஆண்டு வெளிவந்த இப்படத்தில் தேவ் ஆனந்த், (தேவ் ஆனந்த்) இரட்டை வேடங்களில் நடித்திருந்தார்) சாதனா, நந்தா முதலியோர் நடித்திருந்தனர்.
http://mrandmrs55.files.wordpress.com/2012/07/dev-anand-hum-dono-main-zindagi-ka-saath-2.jpg
இந்தப் படத்திலிருந்து காலத்தால் அழிக்க முடியாத காவியப் பாடல்.
'Mein zindagi ka saath nibhata chala gaya'
ஆஹா! எப்படிப் புகழ்வது இந்தப் பாடலை!
ஜெய்தேவின் இசையும், ரபியின் குரலும் அப்படியே நம்மை இப்பாடலுக்கு நம்மை அடிமை சாசனம் எழுதிக் கொடுக்க வைக்கின்றன.
தேவ்ஜியின் ஸ்டைல் அப்படியே நம் நெஞ்சை அள்ளுகிறது. பாடலின் ஆரம்பத்தில் சிகரெட்டை விடாமல் பப் செய்து புகை விடும் ஸ்டைல் அபாரம். ஒவொரு போசிலும் அவர் நிற்கும் ஸ்டைல் ஓஹோ! சிகரெட்டை அங்குள்ள ஒரு குட்டையில் தூக்கிப் போட்டு விட்டு காலை விறைப்பாக வளைத்தபடி அவர் நிற்கும் போஸ் நம் கண்ணை விட்டு அகலாது.
அந்தக் காட்டில் சாதாரண உடையிலிருந்து ராணுவ ஜவான் உடைக்கு அவர் கேஷுவலாக மாறுவது படு இயற்கையாகப் படமாக்கப் பட்டுள்ளது. தன் காதலி சாதனாவை நினைத்தவாறு அந்தக் காட்டில் அவர் நடந்து வருவது படு இயல்பு.
அது போல ஜீப்பை எடுக்கும் அலட்சியமும் அருமை.
பாடல் முழுக்க நம் மனதை அப்படியே அள்ளும் அந்த மெல்லிசை. கொஞ்சம் கூட செயற்கைத்தனம் இல்லாமல் பாடல் முழுக்க வெகு யதார்த்தமான காட்சியமைப்பு மற்றும் நடிப்பு. சினிமாவுக்காக எடுத்த பாடல் போலவே இராது. நிஜமான காட்சியமைப்பை அப்படியே நம் நெஞ்சில் நிறுத்தும் பாடல்.
தேவ்ஜிக்கு ஒரு சபாஷ். ரபிக்கும், ஜெய்தேவிற்கும், ஒளிப்பதிவாளருக்கும் சேர்த்துத்தான்.
நிறுத்தவே மனம் வராத பாடல். பாடல் வரிகள் உண்மையாகவே அம்சம்.
Thanks to bollymeaning.com
Movie: Hum Dono
Music: Jaidev
Lyrics: Sahir Ludhiyanvi
Singers: Mohd Rafi
Main zindagi ka saath nibhata chala gaya
Har fikr ko dhuein mein udata chala gaya
(I just kept going with the life,
Kept on flowing every worry like smoke)
Barbadiyon ka soz manana fizool tha
Barbadiyon ka jashn manata chala gaya
(it was useless to be sad for the runings (of life, the things I lost)
(so) I kept on celebrating the runinings)
Jo mil gaya usi ko muqaddar samajh liya
Jo kho gaya main usko bhulata chala gaya
(Whatever I got, I considered that as my fate,
whatever I lost, I kept going, forgetting it)
Gham aur khushi mein fark na mehsoos ho jahaan
Main dil ko us makaam pe lata chala gaya
(Where there is no difference felt in sorrow and joy,
I kept myself bringing to that point)
https://www.youtube.com/watch?v=Vmo2LTC3iC0&feature=player_detailpage
vasudevan31355
3rd October 2014, 12:54 PM
அந்தக் குளத்தில் தன் காதலி சாதனாவின் உருவம் பிரதிபலிப்பதாக தேவ் கற்பனை செய்து பார்க்கும் காட்சி வெகு அழகு. இதோ அந்த ஸ்டில்.
http://mrandmrs55.files.wordpress.com/2012/07/dev-anand-sadhana-hum-dono.jpg
vasudevan31355
3rd October 2014, 12:56 PM
சிகரெட் ஸ்டைலில் சக்கரவர்த்தி நம் நடிகர் திலகம் என்றால் தேவ் ஆனந்த் ஒரு குறுநில மன்னர். இந்த ஸ்டில் பாருங்கள்.
http://mrandmrs55.files.wordpress.com/2012/07/dev-anand-hum-dono-zindagi-ka-saath.jpg
http://mrandmrs55.files.wordpress.com/2012/07/dev-anand-hum-dono-main-zindagi-ka-saath.jpg
vasudevan31355
3rd October 2014, 01:01 PM
தேவ்ஜி நந்தாவுடன்
http://www.iaac.us/NYIFF2012/images/HumDono15.JPG
http://www.iaac.us/NYIFF2012/images/HumDono13.jpg
vasudevan31355
3rd October 2014, 01:06 PM
1961-இல் கருப்பு வெள்ளைப் படமாக வெளிவந்த 'ஹம் தோனோ' திரைப்படம் 2011 இல் வண்ணமாக்கப்பட்டு புதுப்பிக்கப்பட்டது.
https://www.youtube.com/watch?v=MyxQjP5xghg&feature=player_detailpage
chinnakkannan
3rd October 2014, 01:14 PM
Main zindagi ka saath nibhata chala gaya
Har fikr ko dhuein mein udata chala gaya// ஹச்சோ எனக்கு ரொம்பப்பிடிச்ச பாட்டு தாங்க்ஸ் வாசு சார்..அர்த்தங்க்ளுக்கும்.. தேவின் ஸ்டில்களுக்கும்..
தந்தனான தான தனா தான தான நா
வாழ்க்கை ஓடும் பாதையிலே நானும் செல்கிறேன்
கலைந்து செல்லும் புகையைப் போலக் கவலை தீர்க்கிறேன்..
கவலை தந்த சோகத்தினை நினைக்கலாகுமா நான் நினைக்கலாகுமா
உபயோகமில்லா கவலைதனை வாழ்த்திப் பாடுவேன்..
வந்ததெல்லாம் விதியின் வழி என்று நினைப்பேன் நான் நினைத்து நடப்பேன்..
போனதெல்லாம் படக்கெனவே மறந்து நடப்பேன் நான் மறந்து நடப்பேன்..
சோக மின்பம் இரண்டும் ஒன்று என்ற நிலை வரும்வரையில்
நானும் இங்கு தான் நடப்பேன் நடந்திடுவேனே
(மொழி பெயர்ப்பு ஓகேயாங்க..)
Main zindagi ka saath nibhata chala gaya
Har fikr ko dhuein mein udata chala gaya
(I just kept going with the life,
Kept on flowing every worry like smoke)
Barbadiyon ka soz manana fizool tha
Barbadiyon ka jashn manata chala gaya
(it was useless to be sad for the runings (of life, the things I lost)
(so) I kept on celebrating the runinings)
Jo mil gaya usi ko muqaddar samajh liya
Jo kho gaya main usko bhulata chala gaya
(Whatever I got, I considered that as my fate,
whatever I lost, I kept going, forgetting it)
Gham aur khushi mein fark na mehsoos ho jahaan
Main dil ko us makaam pe lata chala gaya
(Where there is no difference felt in sorrow and joy,
I kept myself bringing to that point)
vasudevan31355
3rd October 2014, 01:16 PM
இதே படத்தில் இன்னொரு இனிமை கொட்டிக் கிடக்கும் ஒரு பாடல்.
"Abhi Na Jao Chhod Kar"
இந்தப் பாடலின் இனிமையை வர்ணிக்க நேரம் போதாது. ஆஷாவும், ரபியும் பாடிய பாடல். பாடல் இல்லை அது. பரவசம் கொள்ள வைக்கும் பாயசம். அமிர்தத்துக்கும் மேல்.
https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=v20a_MDLOkU
vasudevan31355
3rd October 2014, 01:40 PM
ஆகா! ஆகா! அருமை சி.க சார். கொன்னுட்டீங்க. தமிழ் மொழி பெயர்ப்பு அருமை.
என்ன ஒரு தன்னம்பிக்கை கொண்ட ராணுவ வீரனின் பாடல். ஒன்றுக்கும் உதவாத சிகரெட் புகையைக் கூட பாடலாசிரியர் பாடலில் நல்ல வரிகளுக்கு உபயோகப்படுத்திக் கொண்டாரே!
உங்கள் ஹோம் வொர்க்கும் அட்டகாசம். அனைத்துப் பதிவையும் ரசித்துப் படித்து பதிலிட்டதற்கு என் மனமார்ந்த நன்றி!
சி.க.சார்!
'நன்றி மீண்டும் வருக' நான் ரொம்ப ரசிச்சு சிரிச்ச படம் உங்களைப் போலவே. அப்போதே இரண்டு மூன்று முறை பார்த்தேன். வயிறு சில காட்சிகளில் புண்ணானது. அதில் ஒரு கவிஞர் திரைப்படத்திற்கு பாடல் எழுதுவாரே!
'என் பச்ச முளகா'
என்று! அடி தூள்.
'பச்ச மிளகா கிச்சடி வெச்சான் பருப்பு சோத்துக்கு வெண்ணைய வெச்சான்' ஜெயமாலினி பாட்டை மறக்காம ஞாபகம் வச்சிருக்கீங்களே. அதுவும் கலக்கல்தான் சார். அப்புறம் ஜெய்க்கும் பிரதாபிற்கும் நடக்கும் அந்த கத்திச் சண்டை. சினிமா ஷூட்டிங்குகள். எரிச்சல் படும் பிரதாப். 'பாலைவனச் சோலை' சுஹாசினி என்று ஜாலியான படம். ரசிக்கப் படாமல் போனதில் வருத்தமே.
நல்ல ஞாபக சக்தி உங்களுக்கு இருக்கிறது என்று நீங்களே உங்களைக் காட்டி கொடுத்து விட்டீர்கள். 'டிங்கிரி டிங்காலே' பாட்டு பாடியது சௌந்தரராஜன்னு தெரியாதுன்னு நீங்க சொன்னதை நான் எப்படி இப்ப நம்பறது?:smile:
ஹையாங்!:smile: மாட்டிக்கிட்டீங்களா?
'மாட்டிகிட்டாரடி சின்னக் கண்ணன்'
vasudevan31355
3rd October 2014, 01:47 PM
தனிமையிலே இனிமை காண முடியுமா?:-)
தனிமையிலே … தனிமையிலே ..தனிமையிலே
தனிமையிலே இனிமை காண முடியுமா
நள் இரவினிலே சூரியனும் தெரியுமா…
தனிமையிலே இனிமை காண முடியுமா
துணையில்லாத வாழ்வினிலே சுகம் வருமா
துணையில்லாத வாழ்வினிலே சுகம் வருமா
மன துயரமெல்லாம் தனிமையிலே மறைந்திடுமா
மனமிருந்தால் வழி இல்லாமல் போகுமா
உயிர் வாழும் வரை நெஞ்சம் மறந்திடுமா
தனிமையிலே… தனிமையிலே இனிமை காண முடியுமா
மலரிருந்தால் மணமிருக்கும் தனிமையில்லை
மலரிருந்தால் மணமிருக்கும் தனிமையில்லை
செங்கனியிருந்தால் சுவை இருக்கும் தனிமையில்லை
கடலிருந்தால் அலை இருக்கும் தனிமையில்லை
நாம் காணும் உலகில் ஏதும் தனிமை இல்லை
தனிமையிலே… தனிமையிலே இனிமை காண முடியுமா
நள் இரவினிலே சூரியனும் தெரியுமா
தனிமையிலே இனிமை காண முடியுமா
https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=DWD9Unxdiow
chinnakkannan
3rd October 2014, 02:32 PM
நன்றி வாசு சார்.. மொ.பெ இன்னும் செதுக்கியிருக்கலாம்..:)
நன்றி மீண்டும் வருகல்ல முதல்ல சினிமாக் கவிஞர் எழுதும் பாடல்.
.
கல்யாணம் பண்ணிக்கோ இல்ல வேண்டாம்னா விட்டுக்கோ
நீ எதைச் செய்தாலும் எதுக்குச் செஞ்சேன்னு ஏக்கம் கொள்வாயடா வாழ்வில் தூக்கம் கொள்வாயடா..
இதுல ஒண்ணும் சுவையா இல்லை கொஞ்சம் காரமா பாட்டுப் போடுங்கன்னுசொல்லி வரும் பச்ச மிளகா பாட்டு ஒண்ணு ஒரு எக்ஸ்ட்ரா ஜெயமாலினி போலவே இருக்குன்னு கூட்டி வந்து ஆடத்தெரியாததால ஜெ.மாவையே ஆட விடுவாங்க..(ரெண்டுமே ஜெ.மா தான்)
முதல் ப்ரதாப் வெகு அசடாய் லிட்டர்கணக்கில் வழிந்து பொசுக் கென சாக, இரண்டாம் ப்ரதாப் வெகு ஜோர்.. ரஜினியெல்லாம் உண்டு/….உனக்கு ஒரு பிடிப்பு வேணும்ல உன்னை நீயே தூக்கிக்கறதுக்கு.. அதான் கல்யாணம் சம்சாரம் ஹஹ் ஹஹ் ஹா என ச் சிரிக்கும் அழகே அழகு..
சாருஹாசன், ரவீந்தர் ப்ரதாப் – சாருஹாசன் ப்ரதாப்பிடம் நீங்க போலீஸ் ரவீந்தரிடம் நீங்க திருடன் அதாவது திருடன் திருடறான் போலீஸ் காரன் பிடிக்கறார் என்ன அழகான காட்சி பாத்தீங்களா..திருடன்… ப்ரதாப் : திருடறான்.. போலீஸ்காரர்.. ரவீந்தர் எரிச்சலுடன் பிடிக்கறார் சார்..
கடைசியில் ஸ்டார்ட் செய்தவுடன் அந்தப்பக்கம் வரும் சுஹாசினியைப் பார்த்து பயந்து ப்ரதாப் வெகுவேகமாக ஓட, தியேட்டரில் பொங்கும் சிரிப்பு..
ஃபர்ப்யூம் வைத்தே ப்ரதாப் பெண்களுடன் பழகுவதைக் கண்டுபிடிக்கும் சுஹாசினி.. கடைசியில் அவர் விழுவதைப் பார்த்து ஹார்ட் அட்டாக்கில் மரிக்கும் தருணாம்.. ம்ம்
நடு நடுவில் ஜெய்சங்கர் ப்ரதாப் – ஷூட்டிங்கில் ஒழிந்தாய் நீ என் வாள் சண்டை பின் இருவரும் சிகரட் பிடித்துக் கொண்டுபேசுவது..
ப்ரதாப்பின் எரிச்சலான முன்னனி ஹீரோ என இயல்பான நடிப்பு..யோவ் அவ என்னப் புருசன்னு சொல்றா.. நான் என்னபுருசனா என வள்ளென விழும் நடிப்பு.. வெகு அழகு.
.
அந்த டிங்கிரி டிங்காலே நிஜமமாவே வித்யாசமாய்ப் பாடியிருக்கிறார் டிஎம் எஸ் இல்லையா சார்..
மலரிருந்தால் மணமிருக்கும் தனிமையில்லை
செங்கனியிருந்தால் சுவை இருக்கும் தனிமையில்லை
கடலிருந்தால் அலை இருக்கும் தனிமையில்லை
நாம் காணும் உலகில் ஏதும் தனிமை இல்லை
.
வெகு அழகான பாட்டு வாசு சார் தாங்க்ஸ்
Richardsof
3rd October 2014, 02:39 PM
கிருஷ்ணா சார்
சிலரின் பிராத்தனைகள் ஒரு போதும் பலிக்காது ........தூய தமிழில் அர்ச்சனைகள்நிலைக்காது .
வெட்டி ஓட்டுவது ஒரு கலையே .
தொடருங்கள் உங்கள் பதிவுகளை ......
Gopal.s
3rd October 2014, 03:59 PM
கிருஷ்ணா சார்
சிலரின் பிராத்தனைகள் ஒரு போதும் பலிக்காது ........தூய தமிழில் அர்ச்சனைகள்நிலைக்காது .
வெட்டி ஓட்டுவது ஒரு கலையே .
தொடருங்கள் உங்கள் பதிவுகளை ......
ஆமாமா, தெருவில் ஜாதி பெயரை அழித்த திரியில் ,அய்யர்கள் வருகை அதிகமாகி விட்டதாலோ என்னவோ ,தமிழ் அர்ச்சனைக்கு எதிராக கொடி தூக்கி விட்டீர்கள்.
Richardsof
3rd October 2014, 05:11 PM
நான் குறிப்பிட்ட தூய தமிழ் அர்ச்சனை - நீங்கள் பதிவிட்ட பதிவு ...எண் 3562
மீண்டும் படித்து பாருங்கள் .உங்கள் தமிழ் அர்ச்சனையை முதலில் மாற்றுங்கள் .
திரியை பற்றியோ அய்யரை பற்றி கவலை வேண்டாம் .எல்லோரும் நாகரீகம் தெரிந்தவர்கள் .
கிருஷணனை தாக்க இன்னொரு கோபாலரா ?
உங்களுக்காக ஒரு பாடல் ... ரசிக்கவும் கோபாலரே
http://youtu.be/Dlj0CLgVPuU:pink::pink::pink:
vasudevan31355
3rd October 2014, 07:04 PM
மாலை மதுரம்.
http://i.ytimg.com/vi/yHIQfz4JzqQ/movieposter.jpg
'அசோக் குமார்' திரைப்படத்தில் பாகவதரின் மனம் கொள்ளை கொண்ட பாட்டு.
அற்புதக் கருத்துக்களை ஆணித்தரமாகக்கூறும் அவனி போற்றும் பாடல் இது.
சத்திய தயாநிதி புத்தரைப் போற்றச் சொல்லும் இப்பாடல் மிகச் சிறப்பு வாய்ந்தது உன்னதத் தமிழ் வரிகளால்.
மனதில் ஆணி அடித்தாற் போல நச்சென்று பதிந்து மனதைக் குடையும் அறிவுத்தல் பாடல் இது. தியாகராஜ பாகவதர் என்ற கந்தர்வ இசைக் குரலோனின் குரலால் காந்த சக்தி கொண்டது இப்பாடல்.
பூமியில் மானிட ஜென்மமடைந்துமோர்
புண்ணியமின்றி விலங்குகள்போல்
பூமியில் மானிட ஜென்மமடைந்துமோர்
புண்ணியமின்றி விலங்குகள்போல்
காமமும் கோபமும் உள்ளம் நிரம்பவே
காமமும் கோபமும் உள்ளம் நிரம்பவே
காலமும் செல்ல மடிந்திடபோம்
காலமும் செல்ல மடிந்திடபோம்
உத்தம மானிடராய் பெரும் புண்ணிய
நல் வினையால் உலகில் பிறந்தோர் …ஓ..
உத்தம மானிடராய் பெரும் புண்ணிய
நல் வினையால் உலகில் பிறந்தோர்
சத்திய ஞான தயாநிதியாகிய
சத்திய ஞான தயாநிதியாகிய
புத்தரை போற்றுதல் நம் கடனே
புத்தரை போற்றுதல் நம் கடனே
உண்மையும் ஆருயிர் அன்பும் அகிம்சையும்
இல்லையெனில் நர ஜென்மமிதே
மண்மீது ஓர்சுமையே பொதி தாங்கிய
பாழ் மனமே வெறும் பாமரமே
மண்மீது ஓர்சுமையே பொதி தாங்கிய
பாழ் மனமே வெறும் பாமரமே
http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=Cwb4tvP9yv8
vasudevan31355
3rd October 2014, 07:40 PM
'வான்மதி நீ அறிவாய்'
http://cdn1.biscoot.com/Thumbnail/Song/AvanAmaran_x141113035150273_190x190.jpg
'அவன் அமரன்' (1958) திரைப்படத்தில் சீர்காழி கோவிந்தராஜன், ஜிக்கி குரலில் ஒலிக்கும் மதுர கானம்.(பல இடங்களில் இணையத்தில் ஏ.பி.கோமளா என்று போட்டிருப்பார்கள். எது சரி?) ராஜ சுலோச்சனா, நடிப்பிசைப் புலவர் கே.ஆர்.ராமசாமி இருவரும் பங்கு பெற்ற பாடல் இது. பாலையா கண்ணாம்பா, எஸ்.வி.சுப்பையா, முத்துலஷ்மி போன்ற பெரிய நடிகர்கள் நடிக்க, நம் வீணை பாலச்சந்தர் இப்படத்தை இயக்கியிருந்தார். டி.எம்.இப்ராஹீம் இப்படத்திற்கு இசை அமைத்திருந்தார்.
இப்பாடலில் இன்னொரு சிறப்பு உண்டு. தானே தனக்கு சொந்தக் குரலில் பாடிக் கொள்ளும் 'நடிப்பிசைப் புலவர்' கே.ஆர் .ராமசாமி அவர்களுக்கு சீர்காழி கோவிந்தராஜன் குரல் தந்திருப்பது வியப்பாய் இருக்கிறது.
http://www.youtube.com/watch?v=ZC5eH4omD9E&feature=player_detailpage
'டாக்சி டிரைவர்' (1954) (தேவ்ஜி நடித்தது) என்ற இந்திப் படத்தில் எஸ்.டி.பர்மன் இசையமைக்க Talat Mahmood பாடிய 'Jaayen tu jayen kahan' என்ற புகழ் பெற்ற இந்திப் பாடல்தான் மேலே சொன்ன 'வான்மதி நீ அறிவாய்' தமிழ்ப் பாடலாக மாறியது.
http://www.youtube.com/watch?v=9XLhptDlJN0&feature=player_detailpage
அப்படியே 'Jaal' (1952) படத்தின் 'Yeh Raat Ye Chandni Phir Kahan' பாடலையும் கேட்டு வையுங்கள். ஹேமந்த்குமார் பாடியது. ஏதோ ஒற்றுமை தெரிவது போல் இல்லை?!
http://www.youtube.com/watch?v=Aq_BtFLi1F4&feature=player_detailpage
vasudevan31355
3rd October 2014, 07:50 PM
Avan Amaran 1958. (The Hindu)
http://www.thehindu.com/features/cinema/avan-amaran-1958/article3411992.ece
rajeshkrv
3rd October 2014, 07:55 PM
நடிகர் திலகத்தின் பிறந்த நாள் பதிவுகள் அனைத்தும் அருமை வாசு ஜி
Russellmai
3rd October 2014, 08:22 PM
டியர் கிருஷ்ணாஜி சார்,
தங்களது பதிவுகளைத் தொடருங்கள்.
கோபு.
Russellmai
3rd October 2014, 08:30 PM
டியர் வாசு சார்,
அசோக் குமார் திரைப்படத்தில் தியாகராஜ பாகவதரின்
காலத்தால் அழியாத கானத்தினைப் பதிவிட்டமைக்கு நன்றிகள்.
கோபு.
Gopal.s
3rd October 2014, 09:01 PM
நான் குறிப்பிட்ட தூய தமிழ் அர்ச்சனை - நீங்கள் பதிவிட்ட பதிவு ...எண் 3562
மீண்டும் படித்து பாருங்கள் .உங்கள் தமிழ் அர்ச்சனையை முதலில் மாற்றுங்கள் .
திரியை பற்றியோ அய்யரை பற்றி கவலை வேண்டாம் .எல்லோரும் நாகரீகம் தெரிந்தவர்கள் .
கிருஷணனை தாக்க இன்னொரு கோபாலரா ?
உங்களுக்காக ஒரு பாடல் ... ரசிக்கவும் கோபாலரே
http://youtu.be/Dlj0CLgVPuU:pink::pink::pink:
விதைகள் எங்கே?டாஸ்மாக் கடைகளில் கிடைக்குமா?
எல்லோரும் நாகரீகம் தெரிந்தவர்கள் .:idontgetit:
Gopal.s
3rd October 2014, 09:03 PM
Krishna,
You need not take offence in my statement. Limit your postings not to bury Good ones and try to be original.
rajraj
4th October 2014, 01:24 AM
'Naya Daur' படத்தில் வரும் 'Reshmi Salwar Kurta Jali Ka' பாடல்.
https://www.youtube.com/watch?v=YQQDlClWaSA&feature=player_detailpage
Tamil equivalent from PaattaaLiyin Sabatham:
ankiyodu nizaar aNindhu...
http://www.youtube.com/watch?v=p6zwrMjHmYQ
I don't know whether this was posted earlier.
nizaar was common in my school days. It is probably 'kaal sattai' or 'araikkaal sattai' ! :)
rajeshkrv
4th October 2014, 07:39 AM
Tamil equivalent from PaattaaLiyin Sabatham:
ankiyodu nizaar aNindhu...
http://www.youtube.com/watch?v=p6zwrMjHmYQ
I don't know whether this was posted earlier.
nizaar was common in my school days. It is probably 'kaal sattai' or 'araikkaal sattai' ! :)
innum kooda sila oorgalil Nijar is famous ankil
rajeshkrv
4th October 2014, 07:47 AM
கோபால் ஜி ,
நீங்கள் அடுத்த பகுதியை ஆரம்பிக்கும்படி என்னை சொல்லியிருந்தீர்கள், நியாயமா அடுக்குமா .. என்னை விட திறமைசாலிகளும், பெரியவர்களும் உள்ள இந்த திரியில் நான் ஆரம்பிக்கலாமா..
ராகவ் ஜி, எஸ்.வி ஜி, வாசு ஜி எல்லோரும் இருக்கையில் வால் ஆடலாமா....
vasudevan31355
4th October 2014, 07:52 AM
வணக்கம் ராஜேஷ்ஜி! நடிகர் திலகம் பிறந்த நாள் பதிவுகளை படித்துக் களிப்புற்றதற்கு மிக்க நன்றி!
'மதுர கானங்கள்' பாகம் பாகம் 3 தொடங்க தங்கள அழைத்திருக்கிறோம். ஏற்கனவே கோபால் சாரும், நானும் இது சம்பந்தமாகப் பதித்திருக்கிறோம்.
தாங்கள் பாகம் மூன்றை விரைவில் தொடங்க வேண்டுமாய் மீண்டும் நமது திரியின் சார்பாகக் கேட்டுக் கொள்கிறேன். நன்றி!
நண்பர்களும் தங்கள் கருத்தைக் கூறுமாறு பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.
vasudevan31355
4th October 2014, 07:57 AM
ராஜேஷ்ஜி!
என்ன ஒற்றுமை!. ஒரே சமயத்தில் ஒரே கருத்தைப் பதிகிறோம்.
இல்லைஜி!.வரிசையாக முறையாக நியாயமாகத்தான் சொல்கிறோம். முதல் பாகம் நான் தொடங்கியாகி விட்டது. இரண்டாவது கிருஷ்ணா தொடக்கி விட்டார். மதுரகானங்கள் திரிக்கு கை கோர்த்து முற்றிலுமாக வலு சேர்த்தவர் நீங்கள். மற்ற நண்பர்களும் அப்படியே! திரிக்கு ஒரு புதிய பரிணாமத்தைக் கொடுத்தவரும் நீங்களே! அதனால்தான் தங்களை அழைக்கிறோம். எல்லோருமே சமாகத்தான் இங்கு மதிக்கப் படுவார்கள். எனவே மறுக்க வேண்டாம்.
vasudevan31355
4th October 2014, 07:58 AM
மதுர கானங்கள் இத்துடன் முடிந்துவிடப் போவதில்லை. உயிருக்குயிரான நண்பர்கள் அனைவருக்கும் இதன் வெற்றியில் சரிசமமான பங்குண்டு. எல்லோருமே ஒவ்வொரு பாகமாகத் தொடங்கலாம். அனைவருக்கும் வாய்ப்புண்டு.
vasudevan31355
4th October 2014, 08:10 AM
nizaar was common in my school days. It is probably 'kaal sattai' or 'araikkaal sattai' ! :)
கால்சரா, டிராயர் என்ற பேச்சு வழக்கு சொல்லும் உண்டு. ஆங்கிலத்தில் பெர்முடாஸ்.
இங்கே ராமராஜன் தான் இதற்கெல்லாம் புகழ் பெற்றவர்.
போட்டுடுவோம்.
கறவை மாட்டிடம் கால்சரா கதாநாயகன்.
அழகே நீ பேரழகி
அழகான கண்ணழகி
அம்மா நீ காலழகி
ஆத்தா நீ காதழகி
http://www.youtube.com/watch?v=42EPMuVX9Z4&feature=player_detailpage
rajeshkrv
4th October 2014, 08:13 AM
ராஜேஷ்ஜி!
என்ன ஒற்றுமை!. ஒரே சமயத்தில் ஒரே கருத்தைப் பதிகிறோம்.
இல்லைஜி!.வரிசையாக முறையாக நியாயமாகத்தான் சொல்கிறோம். முதல் பாகம் நான் தொடங்கியாகி விட்டது. இரண்டாவது கிருஷ்ணா தொடக்கி விட்டார். மதுரகானங்கள் திரிக்கு கை கோர்த்து முற்றிலுமாக வலு சேர்த்தவர் நீங்கள். மற்ற நண்பர்களும் அப்படியே! திரிக்கு ஒரு புதிய பரிணாமத்தைக் கொடுத்தவரும் நீங்களே! அதனால்தான் தங்களை அழைக்கிறோம். எல்லோருமே சமாகத்தான் இங்கு மதிக்கப் படுவார்கள். எனவே மறுக்க வேண்டாம்.
சரி அன்புக்கட்டளை ஏற்று கொள்ளப்படுகிறது.
Richardsof
4th October 2014, 08:15 AM
இனிய நண்பர் திரு வாசு சார்
தாங்கள் கூறுவது சரியே . திரு ராஜேஷ் அவர்கள் பாகம் - 3 துவக்க பொருத்தமான இசை ஆய்வாளர்
அவரை அன்புடன் வரவேற்கிறேன் .வாழ்த்துக்கள்
http://youtu.be/ZtpLfu5dEGE
rajeshkrv
4th October 2014, 08:27 AM
எஸ்.வி ஜி.. நன்றி ... என்ன அருமையான பாடலுடன் வழி மொழிந்துள்ளீர்.. அருமை
vasudevan31355
4th October 2014, 08:32 AM
இதோ! அரைக்கால் சட்டையில் கலக்கும் நடிகர் திலகம்.
சாப்பாட்டு ராமனாகவும், ஆனந்த் ஆகவும்.
http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/VTS_02_2VOB_000667656.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/VTS_02_2VOB_000667656.jpg.html)
http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/VTS_02_2VOB_000071402.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/VTS_02_2VOB_000071402.jpg.html)
http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/VTS_02_1VOB_001277981.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/VTS_02_1VOB_001277981.jpg.html)
vasudevan31355
4th October 2014, 08:33 AM
Thanks Rajeshji.
rajeshkrv
4th October 2014, 08:35 AM
வாசு ஜி,
இதோ மாஞ்சோலை கிளி தானோ தெலுங்கில் டூயட்டானது.
இசையரசியும் பாலுவும் கலக்கும் பாடல்
https://www.youtube.com/watch?v=FTP91WBivO0
vasudevan31355
4th October 2014, 08:38 AM
டியர் கிருஷ்ணாஜி!
நண்பர்கள் சொல்வது போல திரியில் மீண்டும் தங்கள் பதிவுகள் இன்றே வரவேண்டும். இது எல்லோருடைய அன்பு வேண்டுகோளாகும். கோபாலைப் பற்றித் தெரியாதா? அவர் வேண்டுமென்றே வெறுப்பேற்றுவார். ஆனால் உங்களுக்கும் உங்கள் பதிவுகளுக்கும் நல்ல ரசிகர். சும்மா கிச்சு கிச்சு மூட்டுவார். அவ்வளவே! அவரே சிஸ்டம் பெயில் ஆகிக் கிடக்கிறார்.:) நீங்க வேற! வாங்க! வாங்க!
rajeshkrv
4th October 2014, 08:39 AM
கிருஷ்ணா ஜி.. நீங்கள் தயவு செய்து மீண்டும் வரவேண்டும். பதிவுகளை அள்ளி அள்ளி தர வேண்டும்.
vasudevan31355
4th October 2014, 08:42 AM
சூப்பர் ராஜேஷ்ஜி!
ஏற்கனவே ஒருமுறை பார்த்திருக்கிறேன்.
vasudevan31355
4th October 2014, 08:43 AM
கிருஷ்ணாஜி
அரிதிற் பெரும்பான்மை ஓட்டு பெற்றுவிட்டீர்கள். தனி ஆட்சி இனி உங்களுடையது. ஜமாயுங்கள்.
vasudevan31355
4th October 2014, 08:45 AM
நன்றி: தலைவன்.சிவாஜி.காம்.
http://www.thalaivansivaji.com/wp-content/uploads/2014/09/ad.jpg
rajeshkrv
4th October 2014, 08:47 AM
சூப்பர் ராஜேஷ்ஜி!
ஏற்கனவே ஒருமுறை பார்த்திருக்கிறேன்.
நானும் நினைத்தேன்.. இன்று கேட்டு கொண்டிருந்தேன் உங்கள் ஞாபகம் வந்தது.. அதான் பதிவு செய்தேன்.
vasudevan31355
4th October 2014, 08:48 AM
மிக அபூர்வ நடிகர் திலகத்தின் புகைப்படம்.
நன்றி: தலைவன்.சிவாஜி.காம்.
http://thalaivansivaji.com/wp-content/uploads/2014/01/Sivaji232-1024x719.jpg
vasudevan31355
4th October 2014, 08:51 AM
நன்றி: தலைவன்.சிவாஜி.காம்.
http://www.thalaivansivaji.com/wp-content/uploads/wppa/1570.jpg?ver=1
venkkiram
4th October 2014, 08:51 AM
நன்றி: தலைவன்.சிவாஜி.காம்.
http://www.thalaivansivaji.com/wp-content/uploads/2014/09/ad.jpg
யாருங்க அது? 'சிவாஜின்', 'வாழ்த்துக்கல்' :)
vasudevan31355
4th October 2014, 08:52 AM
நன்றி: தலைவன்.சிவாஜி.காம்.
http://www.thalaivansivaji.com/wp-content/uploads/wppa/1583.jpg?ver=1
vasudevan31355
4th October 2014, 08:53 AM
யாருங்க அது? 'சிவாஜின்', 'வாழ்த்துக்கல்' :)
:):):)
vasudevan31355
4th October 2014, 08:58 AM
ராஜேஷ்ஜி
சின்னஞ்சிறு உலகம் என்ற கே.எஸ்.ஜியின் படம்.
மேஜிக் ராதிகா நாயகி. இவர் தன் தோழியருடன் பாடும்
புதுமைப் பெண்களடி
பூமிக்குக் கண்களடி
பாரதி சொன்னானே
கவி பாரதி சொன்னானே
என்ற அருமையான இசையரசியின் பாடல் ஒன்று உண்டு. கேட்டிருக்கிறீர்களா?
மதுஜி! வீடியோ ப்ளீஸ்.
RAGHAVENDRA
4th October 2014, 08:58 AM
ராஜேஷ்ஜீ,
வாருங்கள் வாருங்கள்...வானத்து மேகங்களே..
பாடுங்கள் பாடுங்கள்.. ஆனந்த கீதங்களே...
http://www.youtube.com/watch?v=DyXTy3bP7V4
மனதை மயக்கும் மதுர கானங்கள்
மூன்றாம் பாகம் முத்தான பாடல்கள்
முக்கியெடுத்து அளிக்கின்ற ராஜேஷ்ஜி
முனையவேண்டும் எனக் கேட்கிறேன்ஜி
vasudevan31355
4th October 2014, 09:02 AM
வணக்கம் ராகவேந்திரன் சார்.
rajeshkrv
4th October 2014, 09:02 AM
ராஜேஷ்ஜி
சின்னஞ்சிறு உலகம் என்ற கே.எஸ்.ஜியின் படம்.
மேஜிக் ராதிகா நாயகி. இவர் தன தோழியருடன் பாடும்
புதுமைப் பெண்களடி
பூமிக்குக் கண்களடி
பாரதி சொன்னானே
கவி பாரதி சொன்னானே
என்ற அருமையான ஈசையரசியின் பாடல் ஒன்று உண்டு. கேட்டிருக்கிறீர்களா?
மதுஜி! வீடியோ ப்ளீஸ்.
ஆமாம் அருமையான பாடல்.
இதில் ஜெமினி கே.ஆர்.வி அண்ணன் தங்கை
vasudevan31355
4th October 2014, 09:09 AM
'சரணாலயம்' படத்தில் மெல்லிசை மன்னர் இசை அமைத்த அற்புதமான ஒரு பாடல்
மலேஷியா வாசுதேவன் மிக அற்புதமாகப் பாடியிருப்பார்.
எழுதுகிறாள் ஒரு புதுக் கவிதை
வண்ண இருவிழியால் இந்தப் பூங்கோதை
இதைவிட இலக்கியம் கிடையாது
இலக்கண வரம்புகள் இதற்கேது
நளினியின் நளின நாட்டியம்!? மைக் இல்லாத மோகன்.
வாழை மடல் போல உடலழகும்
தங்கம் வார்த்த சிமிழ் போல உதடழகும்
தஞ்சை கோயில் ரதம் போல நடையழகும்
வந்து குலவும் வேளையில் மனம் கவரும்
ரசிக்கக் கூடிய பாடல். ஆர்.சுந்தரராஜன் இயக்கம்தானே.
http://www.youtube.com/watch?v=gnOEZCvT08M&feature=player_detailpage
vasudevan31355
4th October 2014, 09:19 AM
மோகன், ரூபிணி காதலர்களாக கார்மேகம் கொட்டும் மழையில் ஆடிப்பாடும் மிக அருமையான பாடல். 'நினைக்கத் தெரிந்த மனமே' படத்தில். இளையராஜா இசை. ஜேசுதாசும், ஜானகியும் பின்னியெடுத்த பாடல்.
பாடல் முழுக்க ராஜாவின் ராஜாங்கம் இமயம் தொடுகிறது. மழைப் பாடல் என்றாலே மனுஷர் மகிழ்ச்சி பொங்க ட்யூன் போடுவார். ஜேசுதாஸ் இளமை கொப்பளிக்க அற்புதமாக பாடியிருப்பார். ரூபிணி நல்ல அழகு. மோகனும் நல்ல மூவ்ஸ் கொடுப்பார்.
எனக்கு மிகவும் பிடித்த ஒரு பாடல்.
சின்ன சின்ன முத்து நீரிலே
தேகம் வண்ண வண்ண கோலம் போடுதே
பூமியெங்கும் ஈரம்
நேரம் காதல் நேரம்
பூவிருக்கு தேனிருக்கு வா அன்பு நெஞ்சமே
https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=LQCXfVdEtCQ
rajeshkrv
4th October 2014, 09:22 AM
'சரணாலயம்' படத்தில் மெல்லிசை மன்னர் இசை அமைத்த அற்புதமான ஒரு பாடல்
மலேஷியா வாசுதேவன் மிக அற்புதமாகப் பாடியிருப்பார்.
எழுதுகிறாள் ஒரு புதுக் கவிதை
வண்ண இருவிழியால் இந்தப் பூங்கோதை
இதைவிட இலக்கியம் கிடையாது
இலக்கண வரம்புகள் இதற்கேது
நளினியின் நளின நாட்டியம்!? மைக் இல்லாத மோகன்.
வாழை மடல் போல உடலழகும்
தங்கம் வார்த்த சிமிழ் போல உதடழகும்
தஞ்சை கோயில் ரதம் போல நடையழகும்
வந்து குலவும் வேளையில் மனம் கவரும்
ரசிக்கக் கூடிய பாடல். ஆர்.சுந்தரராஜன் இயக்கம்தானே.
http://www.youtube.com/watch?v=gnOEZCvT08M&feature=player_detailpage
வாலி அவர்களின் அற்புத வரிகள்
gkrishna
4th October 2014, 10:10 AM
மதுர கானம் மூன்றாவது பதிவை தொடங்க திரு ராஜேஷ் அவர்கள் மிகவும் பொருத்தமானவர் .இந்த கருத்தில் எனக்கும் உடன்பாடு உண்டு
chinnakkannan
4th October 2014, 10:18 AM
ஹாய் குட்மார்னிங்க் ஆல்..
வாங்கோ வாங்கோ க்ருஷ்ணாஜி..:)
ராஜேஷ்.. மதுர கானத்தில் மாறாமல் மின்னிடும் சுடர் தாரகையே.
சுசீலாம்மாவின் சூப்பர் ரசிகரே,
இசையில் உமக்கிசைந்தது பல மொழிகள்..எனில் வருக வருக
தங்களது நுண்ணுணர்வில் கலந்த பாடல்களைத் தருக தருக
மூன்றாம் பாகத்தில் எனச் சொல்லி வாய்ப்பளித்த வாசு சாருக்கும் முன்னாள் திரித்தலைவர் ஆகப் போகிற கிருஷ்ணா ஜிக்கும், மற்ற நண்பர்களுக்கும் நன்றி சொல்லிஇந்தச் சிற்றுரையை ( யாரப்பா சோடா கொண்டா) முடிக்கிறேன்..:)
gkrishna
4th October 2014, 10:20 AM
வாழை மடல் போல உடலழகும்
தங்கம் வார்த்த சிமிழ் போல உதடழகும்
தஞ்சை கோயில் ரதம் போல நடையழகும்
வந்து குலவும் வேளையில் மனம் கவரும்
ராஜேஷ் சார்/வாசு சார்
கண்ணதாசனின் 'அழகே அழகு தேவதை ' பாடலிலும் பெண்ணின் அழகை வர்ணிக்கும் வரிகள் நினைவில் வந்தது .அதே போல் 'நிலவு ஒரு பெண்ணாகி ' பாடலிலும் நிறைய உண்டு .பெண்ணின் உடலை வர்ணிக்காத கவி யாரவது உண்டா ?
gkrishna
4th October 2014, 10:22 AM
வணக்கம் சி கே சார்
நன்றி உரைக்கு நன்றி :)
gkrishna
4th October 2014, 10:30 AM
பிரியமானவள், காதலி, மனதில் இருப்பவள் போன்ற பல பொருளை உள்ளடக்கியது, மெஹுபூபா என்ற உருதுக் கவிச் சொல். பல பாடல்களில் நாம் இன்றும் கேட்டுவரும் இந்த சொல்லின் உருவகமான காதலியை எல்லாக் கவிஞர்களையும் போலத் திரைப்பட பாடலாசிரியர்களும் நிலவுடன் ஒப்பிடுவது வழக்கம்.
இப்படி நிலவுடன் காதலியை ஒப்பிட்டுள்ள ஒரு இந்திப் படப் பாடலும் அதற்கு இணையாகவும் வேறாகவும் விளங்கும் தமிழ்ப் படப் பாடலையும் பார்ப்போம்.
முதலில், 1965-ல் வெளிவந்த ‘ஹிமாலய் கி கோத் மே’ என்ற திரைப்படத்திற்காக கல்யாண்ஜி-ஆனந்த்ஜி இசையில், சோகத்தையும் காதல் சுகத்தையும் வசீகரமாக வெளிப்படுத்தும் முகேஷ் பாடிய, ஆனந்த் பக்*ஷி எழுதிய இந்திப் பாடல். சுமார் 638 திரைபடங்களில் 3500க்கும் அதிகமாகப் பாடல் எழுதிய ஆனந்த பக்*ஷிக்கு ‘பிரேக்’ கிடைத்த பாடல் இது. இந்தப் படத்தின் நாயகன் மனோஜ் குமார், படத்தின் முதன்மை நாயகியான மாலா சின்ஹாவின் மோவாயைப் பிடித்து முகத்தை நிலவாக ரசித்தபடி பாடும் பாடல் இது. இன்று 77 வயதாகும் வாங்காள நடிகையான மாலா சின்ஹா அன்று இந்தி ரசிகர்கள் மத்தியில் ஒரு நிலவைப் போலவே கொண்டாடப்பட்டவர்தான்.
https://encrypted-tbn1.gstatic.com/images?q=tbn:ANd9GcQVB9jWEfoldvLc743sHVcWLmvVYYMMk YYicLm7wbdokJpMFV5Afwhttps://encrypted-tbn0.gstatic.com/images?q=tbn:ANd9GcRMDqYQ9yat2FWl48g3f0n9qvRwv2vjf cubDNjn9jefTh2cSA7U
பாடலின் சில வரிகள்:
சாந்த் ஸீ மெஹுபூபா ஹோ மேரி
கப் ஐஸ்சா மைனே சோச்சா தா
ஹான், தும் பில்குல் ஐஸ்ஸி ஹோ
ஜைஸ்ஸா மைனே சோச்சா தா
(சாந்த்)
ந கஸ்மே ஹை ந ரஸ்மே ஹை
ந ஷிக்வே ஹை ந வாதே ஹை
ஏக் சூரத் போலி- பாலி ஹை
தோ நயனே ஸீதே- ஸாதே ஹை
ஐஸ்ஸா ஹி ரூப் கயாலோமே தா,
ஜைஸ்ஸா மைனே சோச்சா தா,
வழக்கமான இந்திப் பாடல் போல் அல்லாது ஒரு புதிய பாணியில் அமைந்த இந்தக் கவித்துமான பாடலின் பொருள்:
நிலவை விட அழகாக என்னவள் இருக்க வேண்டும்
என்று எப்பொழுது நான் நினைத்தேன்.
ஆம், முழுவதுமாக அப்படியே நீ இருக்கிறாய்.
நான் எப்படி நினைத்தேனோ அப்படி
நிலவை விட அழகாக...
இலக்கணப்படி இல்லை இதிகாசப்படி இல்லை
இல்லை ஒரு குறை, இல்லை உறுதிமொழி
நிர்மலமான ஒரு முகம்
நேர்மையான இரு விழிகள்
இப்படித்தான் இருந்தது என் உள்ளக் கிடக்கை
ஆம், அப்படியே முழுவதுமாக இருக்கிறாய்
எப்படி நான் நினைத்தேனோ அப்படியே
கவின் மாளிகை வாசக் கனவைக் காணாது
என் உள்ளத்தில் வசிக்கும் விருப்பத்துடன்
இந்த உலகில் யார் இருப்பார் (உன்னைத் தவிர என)
எப்படி நான் நினைத்தேனோ
ஆம், முழுவதும் அப்படியே நீ இருக்கிறாய்.
www.youtube.com/watch?v=aNJH7S-omjg
இப்பாடலின் மையக் கருத்துடன் இணைந்தும் வெளிப்படுத்தும் உணர்விலும் நடையிலும் சற்று மாறுபட்டும் விளங்கும் தமிழ்ப் பாட்டு கவிஞர் வாலி எழுதியது. படம்: உலகம் சுற்றும் வாலிபன்
நிலவு ஒரு பெண்ணாகி உலவுகின்ற அழகோ
நீரலைகள் இடம் மாறி நீந்துகின்ற குழலோ
மாதுளையின் பூ போலே மலருகின்ற இதழோ
மானினமும் மீனினமும் மயங்குகின்ற விழியோ
புருவம் ஒரு வில்லாக பார்வை ஒரு கணையாக
பருவம் ஒரு தளமாக போர் தொடுக்க பிறந்தவளோ
குறுநகையின் வண்ணத்தில் குழி விழுந்த கன்னத்தில்
தேன் சுவையைத் தான் குழைத்து
கொடுத்ததெல்லாம் இவள்தானோ
பவளமென விரல் நகமும்
பசும் தளிர் போல் வளைக்கரமும்
தேன் கனிகள் இரு புறமும்
தாங்கி வரும் பூங்கொடியோ
ஆழ்கடலின் சங்காக நீள் கழுத்து அமைந்தவளோ
யாழிசையின் ஒலியாக வாய்மொழிதான் மலர்ந்தவளோ
செந்தமிழின் ஒளி எடுத்து சந்தனத்தின் குளிர் கொடுத்து
பொன்பதத்தில் வார்த்துவைத்த
பெண்ணுடலை என்னவென்பேன்
மடல்வாழைத் தொடை இருக்க
மச்சம் ஒன்று அதில் இருக்க
படைத்தவனின் திறமை எல்லாம்
முழுமை பெற்ற அழகி என்பேன்
http://www.youtube.com/watch?v=drcBFuf2y8U
Richardsof
4th October 2014, 10:34 AM
Very nice song. Makkal thilagam m.g.r's superb style and face expressions ..omg
thanks krishnaji
நிலவு ஒரு பெண்ணாகி உலவுகின்ற அழகோ
நீரலைகள் இடம் மாறி நீந்துகின்ற குழலோ
மாதுளையின் பூ போலே மலருகின்ற இதழோ
மானினமும் மீனினமும் மயங்குகின்ற விழியோ
புருவம் ஒரு வில்லாக பார்வை ஒரு கணையாக
பருவம் ஒரு தளமாக போர் தொடுக்க பிறந்தவளோ
குறுநகையின் வண்ணத்தில் குழி விழுந்த கன்னத்தில்
தேன் சுவையைத் தான் குழைத்து
கொடுத்ததெல்லாம் இவள்தானோ
பவளமென விரல் நகமும்
பசும் தளிர் போல் வளைக்கரமும்
தேன் கனிகள் இரு புறமும்
தாங்கி வரும் பூங்கொடியோ
ஆழ்கடலின் சங்காக நீள் கழுத்து அமைந்தவளோ
யாழிசையின் ஒலியாக வாய்மொழிதான் மலர்ந்தவளோ
செந்தமிழின் ஒளி எடுத்து சந்தனத்தின் குளிர் கொடுத்து
பொன்பதத்தில் வார்த்துவைத்த
பெண்ணுடலை என்னவென்பேன்
மடல்வாழைத் தொடை இருக்க
மச்சம் ஒன்று அதில் இருக்க
படைத்தவனின் திறமை எல்லாம்
முழுமை பெற்ற அழகி என்பேன்
[
gkrishna
4th October 2014, 10:53 AM
அருவிமகள் அலையோசை - இந்த
அழகுமகள் வளையோசை..
பொதிகைமலை மழைச்சாரல் - உந்தன்
பூவிதழில் மதுச்சாரல்!
ஜேசுதாஸ் மற்றும் சூலமங்கலம் ராஜலக்ஷ்மி குரலில் இந்த பாடல் இடம் பெற்ற திரை படம் ஜீவநாடி தானே ?
http://lh6.ggpht.com/_sEsdnTYdgAY/SqxykrV_KYI/AAAAAAAAAEQ/lLo5hq_Trzo/jeevanaadi%20ad_thumb.jpg?imgmax=800
வீ தக்ஷினாமூர்த்தி இசை என்று படித்தேன் .இந்த திரைபடத்தை பற்றி மேல் தகவல்கள் உண்டா ?
http://play.raaga.com/tamil/album/jeeva-nadi-t0002138
chinnakkannan
4th October 2014, 11:04 AM
வாசு சார்..சரணாலயம் பாட்டெல்லாம்பற்றி முன்பு எழுதியிருந்தேனே..படித்தீர்களா.. எழுதுகிறாள் ஒரு புதுக்கவிதை நல்ல பாடல்..நன்றி..
**
கவிதைன்னா என்ன..
தவிக்கின்ற நெஞ்சகத்து தாக்கங்கள் எல்லாம்
கவிதையாய்ப் பொங்குதே காண்..
இல்லியோ..
எனில் என்னல்லாம் கவிதை என்று வரும் பாட்டு இருக்கு..
*
முதலில் வருவது….
வெள்ளைப் புறா ஒன்று ஏங்குது கையில் வராமலே
நமது கதை புதுக்கவிதை இலக்கணங்கள் இதற்கு இல்லை..
( ரஜினி, கொஞ்சம் ரொம்ப எரிந்த ஜோதி (பாவம் சின்னவயதிலேயே மரித்து விட்டார்).. அண்ட் இளையராஜா)
ஸ்ப்த ஸ்வரதேவி யுணரு.. ம்ம் நினைவில் வருகிறது
கவிதை அரங்கேறும் நேரம்
மலர்க்கணைகள்பரிமாறும் தேகம்.. (பாக்யராஜ், முருங்கைக்காய் ஒல்லி ஊர்வசி)
கீழே வருவது கொஞ்சம் லேட்டஸ்ட் கவிதை…(ஜெயம் ரவி, நாபிக்கமலப் புகழ் சதா!!)
கவிதையே தெரியுமா
என் கனவு நீதானடி
இதயமே தெரியுமா
உனக்காகவே நானடி
இமை மூட மறுக்கின்றதே ஆவலே
இதழ் சொல்ல துடிக்கின்றதே காதலே
அப்புறம் எம்.ஜி.ஆர் பாட்டு..இளமை துள்ளிடும் மாலைவெயில் நிற மஞ்சு..
காற்று வாங்கப் போனேன்
ஒருகவிதை வாங்கி வந்தேன்..
மைக் மோஹனுக்கு வாழ்வு.. பலப்பல நல்ல நடிகைகளுடன் நடித்திருப்பார்..அவரும் ரேவதியும் பாடும் பாடல்..
பாடு நிலாவே தேன் கவிதை பூமலர
உன் பாடலை நான் கேட்கிறேன்..
உதயகீதத்தில் இளையராஜா//
*
கவிஞர்களுக்குக் கற்பனை எப்படியெல்லாம் வருகிறது பாருங்கள்..
*
இந்தப் பாடலில் கவிதையைப் பற்றி என்ன சொல்றார் கமல் சொர்ண புஷ்பத்திடம்..
வளையோசை கலகலகலவென கவிதைகள் படிக்குது
தென்றல் காற்று வீசுது
சின்னப் பூ பெண்ணல்ல வண்ணப் பூந்தோட்டம்..
ஹையாங்க் அந்த பஸ் காட்சி, அப்புறம் பட்டும் படாமலும் தொட்டும் தொடாமலும் மெல்லிய துணியால் சொர்ண புஷ்பம் அமலாவின் இதழில் தரப்படும் இன்னொரு கவிதை முத்தம்..! ம்ம்
*
மகாகவி பாரதியார் என்ன சொல்றார்..
சிந்து நதியின் மிசை நிலவினிலே
சேர நன்னாட்டிளம் பெண்களுடனே
சுந்தரத்தெலுங்கினில் பாட்டிசைத்து
தோணிகளோட்டி விளையாடி வருவோம்னு பாடிட்டு..
சிங்க மராட்டியர் தம் கவிதை கொண்டு
கேரளத்துத் தந்தங்கள் பரிசளிப்போம்..ம்ம்
*
நாயகி நாயகனைத் தொலைத்து மலங்க மலங்க கண் மயங்கி மனம் மயங்கி கண்கலங்கி மனம் கலங்கி பார்ப்பவரையும் கொஞ்சம் உருக வைக்கும் பாடல்..எழுதியவர் வைரமுத்து.. வேறுயார்.. வீனஸ் ஐஸ்வர்யா பாடும் பாடல்..
எங்கே எனது கவிதை கனவில் எழுதி மடித்த கவிதை..
வெகு அழகானபாடல் வெகு அழகான கவிதை..வெகு அழகான ஐஸ்வர்யா..வெகு அழகான படமாக்கல்,..ம்ம்
*
எம்.ஜி.ஆர் எப்படி அளவோடு ரசிக்கிறார் இந்தப் பாட்டுல
கன்னம் செந்தாமரை சிந்தும் முத்தம் செந்தேன் மழை
கண்கள் இன்பகடல் குரல் தான் கொஞ்சும் புல்லாங்குழல்
மங்கை பொன்னோவியம் பேசும்மழலைச் சொல்லோவியம்
கனிவான நெஞ்சில் உருவான கவிதை என்னென்று சொல்லவோ..
*
அப்புறம் சொல்லலைன்னு வெங்க்கி கோச்சுக்கப் போறார்..
உன்னை எண்ணிப்பார்க்கையில் கவிதை முட்டுது
அதை அள்ளத் தவிக்கையில் வார்த்தை முட்டுது.. (சரிதானா)
*
இந்தப் பாட்டுல இந்தக் கவிஞர் என்ன சொல்றார்..ஆமா யாரு இவர்..
உளி தேடல்கள் இல்லாமல் சிலையே இல்லை
விழி தேடல்கள் இல்லாமல் காதல் இல்லை
மழை தூறல்கள் தேடல்கள் மண்ணைத்தொடும்
மன வேர் தேடும் தேடல்கள் பெண்ணைத்தொடும்
தனக்குள்ளே ஓர் தேடல்கள் ஞானம் தரும்
பேனா மை கொண்ட தேடல்கள் கவிதைதரும்
விரல் கொண்டாடும் தேடல்கள் இசையைத்தரும்
விதை கொண்டாடும் தேடல்கள் விடியல் தரும்..
*
ரசிகா ரசிகா என மஜ்னு பாடலில் ப்ரசாந்த் ஜோதிகா மும்தாஜ வாயசைக்கும்பாடலை எழுதியவர் கவிஞர் பிறை சூடன் (ஹை..இவரப் பத்தியாருமே எழுதலையே இன்னும்..(நைஸா வெடி போட்டாச்சு))
*
காளிதாசன்கண்ண தாசன்கவிதை நீன்னு ஒரு பாட்டும் நினைவுக்கு வருது.என்னபடம்னு நினைவுக்கு வரலை
விட்டுப்போன பழையகவிதைகளைச் சொல்வீர்கள் தானே
chinnakkannan
4th October 2014, 11:10 AM
கவிதையைப்பற்றி எழுதிப் போஸ்ட் பண்றதுக்குள்ள ஹிந்தி தமிழ்க் கவிதைகள் வந்துடுச்சே..
நிலவு ஒரு பெண்ணாகி ரொம்ப ப் பிடிச்ச பாட்டாச்சே..
எஸ்வி சார், கிருஷ்ணாஜி நீங்கள் இட்ட பாடலில் பிழை இருக்கிறது..
செந்தமிழின் ஒளிகொடுத்துகிடையாது என நினைக்கிறேன்.. அது செந்தணலின் ஒளிகொடுத்து சந்தனத்தில் நிறம் கொடுத்து
பொன்பதத்தில் வார்த்து வைத்த ந்னு வரும்..!
gkrishna
4th October 2014, 11:15 AM
உங்கள் திருத்தும் சரி சி கே சார்
'செந்தழலின் ஒளி எடுத்து சந்தனத்தின் குளிர் கொடுத்து
பொன்பதத்தில் வார்த்துவைத்த' என்று தான் இருக்க வேண்டும்
rajeshkrv
4th October 2014, 11:27 AM
புத்தம் புது மேனி
வாலி கே.வி.எம் பாலமுரளி இசையரசி
https://www.youtube.com/watch?v=fWelPVcwD9o
gkrishna
4th October 2014, 11:40 AM
ராஜேஷ் சார்
இந்த பாடல் சுபதினம் படம் தானே .மாமாவின் அருமையான மெல்லிசை
gkrishna
4th October 2014, 11:46 AM
கவிஞர் வாலியின் இன்னொரு பாடல் நினைவில் உண்டு
'ஆண்டுக்கு ஆண்டு தேதிக்குத் தேதி ஆயிரம் இருக்குது சுப தினம் '
வெண்கல குரலோன் சீர்காழி பாடியது இந்த படம் தானே
rajeshkrv
4th October 2014, 11:50 AM
ஆம் சுபதினமே தான்
rajeshkrv
4th October 2014, 11:53 AM
https://www.youtube.com/watch?v=S8yHE8pFa0M
gkrishna
4th October 2014, 12:00 PM
http://tamil.thehindu.com/multimedia/dynamic/01814/1_1814584h.jpg
https://encrypted-tbn2.gstatic.com/images?q=tbn:ANd9GcRw4yJ4wlSqAbREuc-DUNleE_Q7rkAb9pOSYWcP4bvlkAkg-AL0
தேசிய கவி என்று திரைப்படப் பாடலாசிரியர் ஒருவரைப் புகழும் அளவு பெருமைக்கும் திறமைக்கும் உரியவர் கவி பிரதீப். இந்திய விடுதலைப் போராட்டத்தின் உச்சகட்டக் காலத்தில், தமிழ்த் திரைப் படங்களில் பாரதியாரின் பாடல்கள் இடம் பெற்றதுபோல், இந்தித் திரைப்படங்களில் கவி பிரதீப் எழுதிய பாடல்கள் மக்களுக்கு எழுச்சியை ஏற்படுத்தின. 1943ஆம் ஆண்டு வெளிவந்த ‘கிஸ்மத்’ என்ற திரைப்படத்திற்காக இவர் எழுதிய “ஆஜ் ஹிமாலயா கி சோட்டி சே ஃபிர் ஹம்னே லல்காரா, தூர் ஹட்டோ துனியா வாலோ” (இன்று இமயமலையின் உச்சியிலிருந்து மறுபடியும் நாங்கள் அறைகூவல் விடுக்கிறோம் விலகி விடுங்கள் அன்னிய மக்களே) என்ற பாடல் ஒன்றுக்காவே அந்தப் படம் மூன்று வருடங்களுக்கு மேல் ஒரு திரையரங்கில் ஓடியது.
ராமச்சந்திர நாரயண திரிவேதி என்ற இயற்பெயருடன், லக்னோவில் 1915இல் ஒரு ஆச்சாரமான பிராமணக் குடும்பத்தில் பிறந்தவர் கவி பிரதீப்.
1962ஆம் ஆண்டு நடந்த சீன யுத்தத்தின்போது இவர் எழுதிய ‘ஏ மேரே வதன் கி லோகோன்’ (ஓ என் தேச மக்களே) என்ற சி. ராமசந்திராவின் இசையில் அமைந்த பாடலை 63ஆம் வருட சுதந்திர தினத்தன்று பிரதமர் நேரு முன்னிலையில் லதா மங்கேஷ்கர் பாடினார். அதைக் கேட்ட நேரு கண் கலங்கி உணர்ச்சிவசப்பட்டார். கங்கன் என்ற திரைபடத்தில் இடம் பெற்ற இப்பாடல் மூலம் தேசிய கவி என அறிவிக்கப்பட்ட பிரதீப், அதன் பொருட்டு எச்.எம்.வி. நிறுவனத்தை அப்பாடலின் ராயல்டியாக மும்பை உயர் நீதிமன்றம் தரச் சொன்ன 10 லட்சம் ரூபாய் உடபட அனைத்துத் தொகையையும் போர் வீரர்களின் விதவை நல நிதிக்கு அளித்துவிட்டார்.
நாம் இங்கு காணும் பாடல், ‘நாஸ்திக்’ என்ற திரைப்படத்திற்காக அவர் எழுதியது. 1954இல் எழுதப்பட்ட இந்தப் பாடலைப் பாடுவதற்கு முகமது ரஃபியை அணுகியபொழுது, மத உணர்வையும் இறை நம்பிக்கையையும் இப்பாடல் வரிகள் கேலி செய்யும்படி உள்ளதாகக் கூறிப் பாட மறுத்துவிட்டார்.
சி. ராமச்சந்திராவின் இசையில், ஐ.எஸ். ஜோகர் எழுதி நடித்த இந்தப் படத்தின் பாடலை இயற்றிய கவி பிரதீப், தாமே இப்பாடலைப் பாடினார்.
அந்தப் பாடலின் சில வரிகள்:
தேக்கோ தேரி சன்சார் கி ஹாலத் க்யா ஹோகயா பகவான்
கித்னா பதல் கயா இன்சான், கித்னா பதல் க்யா இன்சான்
எனத் தொடங்கும் அந்தப் பாடலின் பொருள்:
பார், உன் உலகின் நிலை என்னவாக ஆகிவிட்டது கடவுளே
எத்தனை மாறிவிட்டான் மனிதன் எத்தனை மாறிவிட்டான் மனிதன்
சூரியன் மாறவில்லை சந்திரன் மாறவில்லை ஆகாசமும் மாறவில்லை
அவலமான காலம் வந்துவிட்டது. அற்பனாக ஆகிவிட்டான் மனிதன்.
சண்டை சில இடங்களில் சச்சரவு சில இடங்களில் ஆடுகின்றான் மனிதன்
அரை நிர்வாணமாக
சூது நிறைந்த கபட வாழ்விற்காக தன் நியதியை விற்கிறான் மனிதன்
ராம பக்தர்களும் ரஹீம் தாசர்களும் இன்று
ஏமாற்று வலையை விரிக்கிறார்கள்.
எவ்வளவு மோசக்காரர்கள் எத்தனை அறிவிலிகள்
கண்டுகொண்டோம் இவர்களது தொழிலையும்
இவர்களது கள்ளச் செய்கையினால்தான் இந்த நாடே மயானமாக ஆனது.
நாம் நமக்குள் சண்டையிடாவிட்டால் ஆடிகொண்டிருந்த ஆட்டம்
ஏன் நின்று போயிருக்கும்
லட்சம் வீடுகள் ஏன் எரிந்திருக்கும், சிசுக்கள் ஏன் தாயைப் பிரிந்திருக்கும்
பாப்புவின் (காந்தி) மறைவுக்காக நாம் விம்மி அழ வேணடிய நிலை ஏன் வந்திருக்கும்?
மேலோட்டமாகப் பார்த்தால் சாதாரணமான மத நல்லிணக்கப் பாடல் போன்று தோன்றும் இந்தப் பாடலின் ஒவ்வொரு வரியும் தேசப் பிரிவினை, மதக் கலவரங்கள் ஆகியவற்றால் கடுமையாக பாதிக்கப்பட்ட வட இந்திய மக்களின் உணர்வுகளின் வெளிப்பாடாகவும் வடிகாலாகவும் இருப்பதைப் புரிந்து கொள்ளலாம்.
http://www.youtube.com/watch?v=1_5LLtxAB4I
கிட்டத்தட்ட இந்தப் பாடலின் அழகும் ஜீவனும் கொண்ட ஒரு பாடலைத் தமிழ்த் திரை உலகின் அறிஞர்களில் ஒருவராகத் திகழ்ந்த கு.மா. பாலசுப்ரமணியன் எழுதினார். 1956இல் ‘நாஸ்திகன்’ என்ற பெயரில் வெளிவந்த அப்படத்தின் பாடல் அனைவராலும் பாராட்டப்பட்டது.
சி. ராமச்சந்திரா மெட்டமைத்த, இந்தி, தமிழ்ப் பாடல்களின் மெட்டு மிகவும் பிரபலம் அடைந்தது. இந்தி ‘நாஸ்திக்’ படம் தமிழில் வெளிவருவதற்கு முன்பே நாகதேவதை என்ற படத்தில் பி.பி. னிவாஸ் ‘பாவி என் தீவினை—ஹர ஹர சம்போ மகாதேவா’ என்ற பாடலை இதே மெட்டில் பாடியுள்ளார். கடவுளையே விமர்சிக்கும்படி கவி பிரதீப் ஹிந்தியில் எழுதிய பாடலின் மெட்டு தமிழில் ஒரு பக்திப் பாடலுக்குப் போய்ச் சேர்ந்தது நல்ல முரண் நகை.
நாஸ்திகன் படத்தில் இடம் பெற்ற கு.மா. பாலசுப்ரமணியன் பாடலைக் கணீரென்ற குரலில் பாடியவர் திருச்சி லோகநாதன். அந்தப் பாட்டு:
மா நிலம் மேல் சில மானிடரால் என்ன மாறுதல் பாரைய்யா
மனிதன் மாறியதேன் ஐயா மனிதன் மாறியதேன் ஐயா
வானத்தின் நிலவில் ஆதவன் திசையில் மாறுதல் ஏதைய்யா
மண்ணில் பலவித பிரிவினையாலே மனிதன் மிருகம் மாறுவதினாலே
என்னே கொடுமை எங்கும் இந்நாளே ஈனர்கள் தாண்டவம் பேய்களைப் போலே
அன்பையும் பண்பையும் தன்னலத்தால் பலி ஆக்கிடும் பேதையாய்
ஈஸ்வரன் அல்லா தாசர்கள் இன்றோ பூசனை செய்வது நாசத்தை அன்றோ
தேசம் சுடுகாடு ஆவது நன்றோ தெய்வத்தின் பேரால் கொல்வதும் உண்டோ
நேசம் மறந்து ஆசை மிகுந்து மோசடி புரிபவனாய் மனிதன் மாறியதேன் ஐய்யா
அன்பே ஆண்டவன் என்று நினைந்தால் அனைவரும் ஓர் குலமாகவே வாழ்ந்தால்
தணலாய் இங்கே வீடுகள் விழுமா தாயின் பிரிவால் சேய்கள் அழுமா
சாந்தி சாந்தி எனும் காந்தியின் குரலும் ஓய்ந்திடச் செய்பவனாய்
இந்த பாடலுக்கு ஒலி அல்லது ஒளி வடிவம் இரண்டும் கிட்ட வில்லை
பல வருடங்களுக்குப் பிறகு வெளிவந்த பாவ மன்னிப்பு படத்தின் பிரபலமான, “மனிதன் மாறிவிட்டான் மதத்தில் ஏறிவிட்டான்” என்ற கண்ணதாசன் பாடல் வரிகளும் இதே உணர்வைப் பிரதிபலிப்பது குறிப்பிடத்தகுந்தது.
rajraj
4th October 2014, 12:10 PM
krishna: There are video clips for 'dekh tere sansar ki haalat' and 'maanilamel sila maanidaraal' ! :)
chinnakkaNNan: another kavidhai song: kaalamenum sirpi seyyum kavidhai thaai koviladaa ! :)
gkrishna
4th October 2014, 12:16 PM
நன்றி ராஜ்ராஜ் சார்
தமிழ் பாடலின் விடியோ வடிவம் கிடைத்தால் பதிவிடவும் . நான் தேடி பார்த்தேன் . எனக்கு கிட்ட வில்லை .
மேலும் இந்த நாஸ்திக் படத்தின் ஹீரோ அஜித் பின்னாட்களில் வில்லன் ஆக வருவாரே அந்த அஜித் தானா ?
gkrishna
4th October 2014, 12:29 PM
http://antrukandamugam.files.wordpress.com/2013/11/ponnunjal-1973-8.jpg?w=443
மேலே உள்ள டைட்டில் கார்ட் பொன் ஊஞ்சல் திரை படத்தில் இடம் பெற்ற பாடல்கள் கார்ட். இதில் இடம் பெற்று உள்ள கவிஞர் நெல்லை அருள்மணி மற்றும் கவிஞர் செல்வபாரதி பற்றிய மேல் தகவல்கள் கிட்டுமா ?
நெல்லை அருள்மணி - வா ராஜ வா - குன்னக்குடி இசை
'இறைவன் படைத்த உலகை எல்லாம் மனிதன் ஆளுகிறான் .மனிதன் படைத்த சிலையில் எல்லாம் இறைவன் வாழுகிறான் ' - கண்ணதாசன் பாடல் போல் இருக்கும் . வேறு ஏதாவது பாடல் உண்டா ?
vasudevan31355
4th October 2014, 12:34 PM
இன்றைய ஸ்பெஷல் (86)
'இன்றைய ஸ்பெஷலி'ல் ரொம்ப ரொம்ப கேட்க முடியாத அனைவரும் மறந்தே போய்விட்ட ஒரு காவியப் பாடல்.
'இன்றைய ஸ்பெஷல்' பாடலை கோபால் அவர்களுக்கு டெடிகேட் செய்கிறேன். (இது அவருக்கு மிகவும் பிடித்த பாடல்)
https://encrypted-tbn2.gstatic.com/images?q=tbn:ANd9GcRzEX4MPfcxdpyaEQcOkdqHWDz9uipTd KZoOwLI-l0QZuAClqDZUg
படம்: பந்தயம்
தயாரிப்பு: எம்.கே. மூவீஸ் பாலன் பிக்சர்ஸ்
நடிகர்கள்: ஜெமினி, ஏ.வி.எம்.ராஜன், நாகேஷ், விஜய நிர்மலா, சைலஸ்ரீ, எம்.ஆர்.ஆர். வாசு
இசை: என் பிரியத்துக்குரிய டி.ஆர்.பாப்பா
பாடல்கள்: கண்ணதாசன்
கதை, வசனம்: மதுரை திருமாறன்
ஒளிப்பதிவு: துரை, விஜயம்
இயக்கம்: A.காசிலிங்கம்
இப்படத்தின் பாடல்கள் ஒவ்வொன்றும் தேன் சொட்டும் ரகம்.
'நாலா புறமும் கோடு கட்டி'
'ஒருவர் பின்னாலே ஒருவர்'
'பார்த்தால் போதுமா... பழக வேண்டாமா' (ஆஹாஹா! என்ன ஒரு பாடல்! எனக்குப் பிடித்தமான சைலஸ்ரீ கிளப் டான்ஸ்)
சுசீலா அம்மாவின் காலத்தால் அழியாத பாடல்கள். ஆனால் மிக நல்ல முத்தான பாடல்கள் கிளப் டான்ஸ் பாடல்களாகப் போனதுதான் கொடுமை)
'தென்றல் வந்து தொட்டதனாலே' பாடகர் திலகமும் சுசீலாவும் பாடும் டூயட்.
இரு நண்பர்கள். முத்து, சோமு. ஏழைகள். ஒரு வாடகை வீட்டில் இருவரும் குடி இருக்கின்றனர். முத்து பொறுமைசாலி. சோமு கொஞ்சம் கோபக்காரன். சோமு ஒரு ஆபீஸில் பணி புரிகிறான். நியாயமானவனும் கூட. அங்கு நடக்கும் அக்கிரமங்களைத் தட்டிக் கேட்டு வேலை இழக்கிறான். வாடகை கொடுக்கக் கூட வழியில்லாமல் போகிறது. வேலை இழந்த சோமுவை முத்து கடிந்து கொள்கிறான். இதனால் கோபம் கொண்ட சோமு வீட்டை விட்டு வெளியேறுகிறான். முத்து அவனைக் கண்டுபிடித்து சமாதானப்படுத்த முயன்று தோல்வியுறுகிறான்.
இருவருக்கும் வாதம் முற்றி இறுதியில் பந்தயத்தில் முடிவடைகிறது..சோமு முத்துவை விட்டு பிரிவதாகக் கூடுகிறான். 'உன் குணத்திற்கு உன்னால் தனியாக இந்த சமூகத்தில் வாழ முடியாது' என்று சோமுவிடம் முத்து கூறுகிறான். சோமு தன்னால் தனித்து 'என் குணத்திற்கேற்ப வாழ முடியும்' என்று முத்துவிடம் பந்தயம் கட்டுகிறான்.
5 வருடங்கள் ஒருவரையொருவர் விட்டுப் பிரிவதென்று முடிவெடுக்கிறார்கள். அப்போது இருவரின் நிலைமை என்ன என்று பார்ப்போம் என்று பந்தயம் கட்டுகிறார்கள். 5 வருடம் சென்று பிரிந்த அதே இடத்தில் சந்திக்க முடிவு செய்து ஒருவரை ஒருவர் ஆரத் தழுவி, கண்ணீர் மல்கியபடி பிரியாவிடை பெறுகிறார்கள்.
சோமு விதி வசத்தால் ஒரு பெரிய திருடனாகிறான். ஒரு கொள்ளைக் கூட்டத்தையே நடத்தும் அளவிற்கு வளர்ந்து விடுகிறான். ஆனால் முத்துவோ கஷ்டப்பட்டு ஒரு போலீஸ் அதிகாரியாகி விடுகிறான்.
5 வருடங்கள் ஓடி விடுகின்றன. இப்போது இருவரும் சந்திக்கும் வேளை வரப் போகிறது. இருவருமே ஒருவரை ஒருவர் சந்திக்கும் மன நிலையில் சந்தோஷமாக தாங்கள் பிரிந்த இடத்திற்கே கிளம்புகிறார்கள். 'என் பாதைக்கு நீ வருவாய்' என்று இருவருமே தன்னம்பிக்கையுடன் பாடுகிறார்கள் தனித்தனியே.
இந்த சிச்சுவேஷனில் அமைந்த அற்புத பாடல்.
இருவரும் சந்திக்கின்றனர். ஒருவன் போலீஸ் அதிகாரி. இன்னொருவன் திருடன். இருவரும் நெருங்கிய நண்பர்கள். போலீஸ் நண்பன் திருடனை சரண் அடையச் சொல்லுகிறான். திருட நண்பன் முடியாதென்கிறான்.
முடிவு என்ன? என்ன? என்ன?
'பந்தயம்' படத்தின் கிளைமாக்ஸ் பதில் சொல்லும்.
போலீஸ் அதிகாரி முத்துவாக ஜெமினி கணேசன், திருடன் சோமுவாக ஏ.வி.எம்.ராஜன். லட்சாதிபதியான திருடன் தன் ஆருயிர் நண்பனை சந்திக்க புறப்படுகிறான் 5 வருடங்களுக்குப் பிறகு அவன் சந்திக்கப் போகும் நண்பன் போலீஸ் அதிகாரி என்று தெரியாமலேயே.
ஜெமினிக்கு பாடகர் திலகமும், ஏ.வி.எம்.ராஜனுக்கு 'சீர்காழி' கோவிந்தராஜனும் குரல் தந்திருப்பார்கள். கதைக் களத்திற்கேற்ற அருமையான வரிகளைக் கொண்ட பாடல்.
சீர்காழி அடிக்குரலில் அதிக வல்லின உச்சரிப்புகளுடன் 'இறவு நடக்கின்றது' என்று பாடும் பாணியே அலாதி. அதே போல உச்சஸ்தாயியில் பாடகர் திலகம் பாடலின் இறுதில் 'நண்பனைத் தந்துவிடு' என்று கெஞ்சிப் பாடும் போது 'நானும் கொஞ்சமும் உனக்குச் சளைத்தவன் அல்ல' என்று சீர்காழியாரிடம் 'பந்தயம்' கட்டுகிறார்.
போலீஸ் நண்பனின் மன நிலைமையையும், திருடனின் மன நிலைமையையும் வெகு அழகாக நமக்கு உணர்த்தும் பாடல்.
இரவு வேளையில் அமைதியாக ஒலிக்கும் பாடல். அற்புதமான ட்யூன். நல்ல நடிப்பு. ராஜன் அப்படியே நடிகர் திலகத்தை ஜெராக்ஸ் எடுக்க முயல்வார். ஜெமினி அமைதியாக நடித்திருப்பார்.
கண்ணதாசன் கருத்தாழமிக்க இப்பாடலை இயற்றியுள்ளார். இரு நண்பர்கள் நீண்ட வருடங்களுக்குப் பிறகு சந்திக்கப் போகும் போது இருவர் மனநிலைமையையும் அவர் விளக்கும் வரிகள் அற்புதம். 'சீக்கிரமாக நண்பனை சந்திக்க வேண்டும்... பொழுதே ஏன் போக மாட்டேன் என்று அடம் பிடிக்கிறாய்? விரைவில் சென்று விடு' என்று காதலன் காதலி ரேஞ்சுக்கு இருவரும் ஒருவரை ஒருவர் கண்டு சந்திக்கத் துடிக்கும் வேகத்தை அற்புதமாக நமக்கு வரிகள் மூலம் உணர்த்துகிறார் கவிஞர். அப்படி அவர்கள் சந்திக்க ஆர்வம் கொள்வது மட்டுமின்றி அவரவர் கருத்தில் அவரவர் ஸ்ட்ராங்காய் இருப்பதையும் எடுத்துக் காட்ட கவிஞர் மறக்கவில்லை.
இந்தப் பாடலை எப்போதும் நானும் கோபாலும் சேர்ந்தே பாடுவோம். எங்கள் இருவருக்கும் அவ்வளவு பிடித்த பாடல்.
இனி பாடலின் வரிகள்.
http://i.ytimg.com/vi/bfzFIFcd8BI/hqdefault.jpg
இரவு நடக்கின்றது
என் இதயம் மலர்கின்றது
உன் வரவு தெரிகின்றது
வாழ்ந்த வாழ்க்கை புரிகின்றது
இரவு நடக்கின்றது
என் இதயம் மலர்கின்றது
உன் வரவு தெரிகின்றது
வாழ்ந்த வாழ்க்கை புரிகின்றது
சாலைகள் இரண்டும் பிரிந்து
மீண்டும் சந்திக்கும் வேளையிலே
சாலைகள் இரண்டும் பிரிந்து
மீண்டும் சந்திக்கும் வேளையிலே
அவை தனக்குள் பேசும் ஆயிரம் பேச்சு
ஆனந்த போதையிலே
நாளைப் பொழுது யாருக்கு விடியும்
இருவரின் வாழ்க்கையிலே
நாளைப் பொழுது யாருக்கு விடியும்
இருவரின் வாழ்க்கையிலே
இந்த நாடகத்தில் வெற்றி யாருக்கென்று
தெரியும் சேர்க்கையிலே
இரவு நடக்கின்றது
என் இதயம் மலர்கின்றது
உன் வரவு தெரிகின்றது
வாழ்ந்த வாழ்க்கை புரிகின்றது
வஞ்சக உலகை வஞ்சகத்தாலே
வென்றது என் மனமே
வஞ்சக உலகை வஞ்சகத்தாலே
வென்றது என் மனமே
என் வாழ்க்கையைக் கேட்டால்
இதுதான் சரியென வருவாய் என்னுடனே
நீ வருவாய் என்னுடனே
சட்டம்.. தர்மம்.. நீதி
சட்டம் தர்மம் நீதிக்கு
என்னைத் தந்து விட்டேன் மனமே
சட்டம் தர்மம் நீதிக்கு
என்னைத் தந்து விட்டேன் மனமே
நாம் சந்தித்வுடனே இதுதான் சரியென
வருவாய் என்னுடனே
நீ வருவாய் என்னுடனே
இரவு நடக்கின்றது
என் இதயம் மலர்கின்றது
உன் வரவு தெரிகின்றது
வாழ்ந்த வாழ்க்கை புரிகின்றது
பொழுதே பொழுதே போய்விடு போய்விடு
ஏன் இன்னும் தயங்குகிறாய்
பொழுதே பொழுதே போய்விடு போய்விடு
ஏன் இன்னும் தயங்குகிறாய்
அன்பு பொங்கும் எங்கள் இதயத்தைக் கண்டு
நீ ஏன் மயங்குகிறாய்
விடியும் பொழுதே விடியும் பொழுதே
விரைவில் வந்துவிடு
விடியும் பொழுதே விடியும் பொழுதே
விரைவில் வந்துவிடு
எங்கள் பிரிவின் துயரைப் பேசி முடிக்க
நண்பனைத் தந்துவிடு
நண்பனைத் தந்துவிடு
https://www.youtube.com/watch?v=fI2-M3v8dHM&feature=player_detailpage
gkrishna
4th October 2014, 01:11 PM
கே விஸ்வநாத்... தென்னிந்திய திரையுலகின் சாதனை இயக்குநர். இவரும் இளையராஜாவும் இணைந்த படங்கள் இசைக் காவியங்கள். சலங்கை ஒலி, சிப்பிக்குள் முத்து என பல படங்களைச் சொல்லலாம். சிப்பிக்குள் முத்து (ஸ்வாதி முத்யம்) படத்தின் இசைச் சேர்ப்பு வேலைகளின்போது நடந்த ஒரு சம்பவத்தை சமீபத்தில் நினைவு கூர்ந்துள்ளார் இளையராஜா.
அவர் கூறுகையில், "ஸ்வாதி முத்யம் அதாவது சிப்பிக்குள் முத்து படத்தின் போது ஒரு காட்சியை எடுத்து வந்து பின்னனி இசைக்காக கொடுத்திருந்தார் விஸ்வநாத். அந்த காட்சி மாடியிலிருந்து மேஜர் சுந்தர்ராஜன் இறங்கிவருவது் போன்றும் அதை ராதிகா பர்ப்பது போன்றும் காட்சி. இதற்கு பின்னனி இசை வரவேண்டும் என்று அவர் சொல்ல, நான் இல்லை இந்த இடத்தில் இசை வராது என்று நான் இசையமைக்காமல் அந்த இடத்தை சைலண்டாக விட்டு வைத்தேன். அங்கே மியூசிக் போடணும் என்றார் விஸ்வநாத். காரணம் கேட்டேன். அவர்கள் இருவருக்குள்ளும் ஒரு ஈகோ இருக்கிறது. அதைக் காட்ட வேண்டும் என்றார். 'படமே இங்குதான் ஆரம்பிக்கிறது... ரசிகர்களுக்கு அது எப்படி தெரியும்.. கதை எழுதிய உங்களுக்குதான் தெரியும். ரசிகர்களுக்கு தெரிய வாய்ப்பில்லையே,' என்றேன். நான் சொன்னதில் இருந்த நியாயத்தைபப் புரிந்து கொண்டு விஸ்வநாத், 'இது எப்படி எனக்குத் தெரியாமல் போனது.. இனி படம் முடியும் வரைக்கும் நான் உங்கள் இசையமைப்பில் தலையிட மாட்டேன்," என்று ரெக்கார்டிங் தியேட்டர் பக்கமே வராமல் இருந்தார்." ராஜா இப்படிச் சொல்லி முடிக்க கேட்டுக் கொண்டிருந்தவர்கள் மத்தியில் மத்தியில் கரகோசம்!
http://tamil.filmibeat.com/img/2014/10/01-k-vishwanath--director-600.jpg
vasudevan31355
4th October 2014, 01:12 PM
கிருஷ்ணா சார்,
வருக வருக! 'இன்றைய ஸ்பெஷலி'ல் முழுக்க கவனம் செலுத்தி விட்டதால் உடனே வரவேற்க இயலவில்லை. மன்னிக்க.
'நாஸ்திகன்' படத்தின்
'மா நிலம் மேல் சில மானிடரால் என்ன மாறுதல் பாரய்யா'
திருச்சி லோகநாதன் பாடலை ஏற்கனவே நான் இங்கு பதிந்திருக்கிறேன். இருந்தாலும் மீண்டும் ஒருமுறை இதோ!
http://www.youtube.com/watch?v=vAuyp_bEwyk&feature=player_detailpage
vasudevan31355
4th October 2014, 01:16 PM
மேலும் இந்த நாஸ்திக் படத்தின் ஹீரோ அஜித் பின்னாட்களில் வில்லன் ஆக வருவாரே அந்த அஜித் தானா ?
அதே வில்லன் அஜீத்தான். அபோதெல்லாம் ஹீரோ, ஹீரோவின் நண்பன் என்று நடித்து பின்னாளில் வில்லன் ஆனார். ('mughal e azam, naya daur போன்ற படங்களில் அட்டகாசமான வேடங்கள்)
Richardsof
4th October 2014, 01:30 PM
MSV - FILE
http://i62.tinypic.com/15fokjm.jpg
Richardsof
4th October 2014, 01:31 PM
http://i57.tinypic.com/2vknn8l.jpg
Richardsof
4th October 2014, 01:32 PM
http://i62.tinypic.com/2q8vgrc.jpg
Richardsof
4th October 2014, 01:33 PM
http://i61.tinypic.com/1z1btyd.jpg
Richardsof
4th October 2014, 01:34 PM
http://i62.tinypic.com/11rvhb9.jpg
Richardsof
4th October 2014, 01:34 PM
http://i62.tinypic.com/t8ax5x.jpg
Powered by vBulletin® Version 4.2.5 Copyright © 2024 vBulletin Solutions, Inc. All rights reserved.