PDA

View Full Version : மனதை கவரும் மதுர கானங்கள் இரண்டாவது பாகம



Pages : 1 2 [3] 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17

RAGHAVENDRA
19th August 2014, 06:56 AM
பொங்கும் பூம்புனல்

http://www.indusladies.com/forums/attachments/andhra-pradesh/53066d1350731969t-telugu-peddalu-s__varalakshmi_300.jpg

எஸ்.வரலக்ஷ்மியின் சூப்பர் ஹிட் பாடல்களில் ஒன்று இப்பாடல். இது நம் குழந்தை படத்தில் இடம் பெற்றதாக இந்த இணைய தளம் குறிப்பிடுகிறது. ஆனால் எனக்கு உறுதியாகத் தெரியவிலலை. ஓவியக் கலை தெரிந்தால் போதுமா இவரைப் புகழின் உச்சியில் கொண்டு போன பாடல். கேளுங்கள்.

http://www.inbaminge.com/t/n/Nam%20Kuzhanthai/

RAGHAVENDRA
19th August 2014, 06:59 AM
பொங்கும் பூம்புனல்

கேட்கும் போதே கால்கள் தாளமிடும் இனிய பாடல். கண்டசாலாவின் இனிய குரலில் அன்றும் இன்றும் என்றும் நெஞ்சைக் கொள்ளை கொண்ட பாடல்.. துள்ளித் துள்ளி எங்கோ போறாய் என்று நம்மை கேட்க வைக்கும் ரம்மியமான பாடல்.

நாட்டிய தாரா திரைப்படத்திலிருந்து ...

http://www.inbaminge.com/t/n/Nattiya%20Thara/

இப்படத்தில் மற்றொரு பிரபலமான பாடல் மாடப்புறா பாடுதம்மா... இதுவும் கண்டசாலா பாடியது.

RAGHAVENDRA
19th August 2014, 07:02 AM
பொங்கும் பூம்புனல்

பெண்ணரசியில் இடம் பெற்ற இனிமையான பாடல் ... திரை இசைத் திலகம் இசையில் திருச்சி லோகநாதன் (பெண் குரல் எம்.எஸ்.ராஜேஸ்வரியினுடையதா அல்லது கே.ராணயினுடையதா) பாடிய சூப்பர் டூயட் பாடல்

http://www.inbaminge.com/t/p/Pennarasi/

RAGHAVENDRA
19th August 2014, 07:05 AM
பொங்கும் பூம்புனல்

சுபமங்களம் பொங்கிடும் நாளே... தரணி மாதா உன்னருளாலே..

ஆம்.. இது நம் ஒவ்வொருவருக்கும் காலை வேண்டுதல் ஆசை இதுதான்...

பாடலிலேயே சூழ்நிலையைக் கொண்டு வரும் இசையமைப்பாளர்கள் படைத்த திருநாடு நம் தாய்த்தமிழ் நாடு..

இப்பாடலில் வசந்த ருது என பாடகி சொல்லும் போது நாம் அதை உணர்கிறோம்...

1955ல் வெளிவந்த ஏழையின் ஆஸ்தி திரைப்படத்திலிருந்து

http://www.inbaminge.com/t/y/Yezhayin%20Asthi/

RAGHAVENDRA
19th August 2014, 07:10 AM
பொங்கும் பூம்புனல்

ஆஹா... என்ன அருமையான ரம்மியமான காட்சி... இன்றைய மிமிக்ரி கலைஞர்களெல்லாம் நாக்கைப் பிடுங்கிக் கொண்டு சாக வேண்டும்.. குழந்தைகள் ஒரு ரயில் பணத்தை பாடலில் என்ன விஷுவலாகத் தந்திருக்கிறார்கள்.. எதிர்பாராத இன்ப அதிர்ச்சி என கேள்விப் பட்டிருக்கிறோம். இதை அந்த ரகத்தில் சேர்க்க்லாம்.

1955ல் வெளிவந்த வள்ளியின் செல்வன் திரைப்படத்தில் குழந்தைகள் ஒன்றாக ஒரு ரயில் பயணத்தை நம் கண்முன்னே கொண்டு வந்து நிறுத்துவதைப் பாருங்கள்.


http://www.dailymotion.com/video/xjfvdg_valliyin-selvan-rail_creation

இப்பாடலில் குழந்தைகள் குரலில் ஒரு வாப்ளிங் வரும். அது பின்னாளில் ஒரு பிரபலமான இசையமைப்பாளரின் பாடலில் இடம் பெற்றது. கண்டு பிடியுங்கள்.

காணொளி வழங்கியவர்... நம்ம கிரேட் டிஎஃப்எம்லவர் அவர்கள் தான். நம் உளமார்ந்த நன்றி... அவருக்கு

Gopal.s
19th August 2014, 07:14 AM
அவள் ஒரு காவியம்... பெயர்க் குழப்பம்..

யாராச்சும் தீர்த்து வையுங்க..

"நானோ உன் அடிமை" பாடல் ஒரிஜினலாக "உன்னை நான் சந்தித்தேன்" என்ற பெயரிடப்பட்ட படத்துக்கு சொந்தமானது.
( வாணி ஜெயராமின் " நிலாவை நேற்று பார்த்தது" இடம் பெற்ற அதே படம்தான்..) .. அதன் பின் "தியாக உள்ளம்" என்று பெயர் மாற்றப்பட்டு வெளிவந்தது.

ஆனால் "தியாக உள்ளம்" என்று பெயரிடப்பட்ட சுமித்ரா நடித்த படம் "அவள் ஒரு காவியம்" என்ற பெயரில் வெளியானது என்று படித்தேன்.

இரண்டையும் ஒன்றாக்கி அந்தப் பாட்டை இந்தப் படம் என்று யூ டியூபில் போட்டு ஒரு முடிவே கட்டி விட்டார்கள். ( முக நூலில் ஒருவர் சண்டைக்கே வந்து விட்டார். யூ டியூபில் சொன்னப்புறம் நீங்க யாரு வேற படம் என்று சொல்வதற்கு என்று.... :) )

நம்ம ஜீ-க்கள் இதை விலாவாரியாக கண்டு பிடித்துக் கொடுக்க வேணுமாய் கேட்டுக் கொள்கிறேன்.
ஆஹா,



மது,வரலாறு முக்கியம் அமைச்சரே என்ற வகையில் ஜெய்கணேஷ், முத்து ராமன்,சுமித்ரா போன்றோர் நடித்த 70 களின் படங்களின் ஆராய்ச்சியில் தாங்கள் காட்டும் ஈடுபாடு அடடா?



என்ன பண்ணி தொலைவது,நண்பராக போய் விட்டீர். ஏற்கெனவே எனக்கு மிக மிக நற்பெயர். பிழைத்து போங்கள் .:wave:

Gopal.s
19th August 2014, 07:21 AM
அடுத்து இளையராஜாவின் இசை ஆளுமை என்ற தொடர் ஆரம்பிக்க போகிறேன். உள்ளதை உள்ள படி உரைக்க போகும் தொடர்.



நண்பர்கள் தொடர்ந்து வந்து,ஏதேனும் குறையிருப்பின் திருத்த வேண்டுகிறேன்.



period Related என்பதால் எல்லா நண்பர்களின் தயவும் தேவை படும்.

RAGHAVENDRA
19th August 2014, 07:27 AM
பொங்கும் பூம்புனல்

கிஷோர் குமார் பாடிய ஈனா மீனா டீகா சூப்பர் ஹிட்டானாலும் ஆனது. அது இந்தியாவின் பல மொழிகளிலும் பயன்படுத்தப் பட்டது. தமிழ் மட்டும் விதிவிலக்கா என்ன... அதிசயப் பெண் திரைப்படம் இன்று வரை மக்கள் நினைவில் நிற்பதற்கு இந்தப் பாடல் தானே காரணம். பாடகர் திலகம் மற்றும் பாடகியர் திலகம் இருவருமே பாடியதாச்சே.

ஆனால் அதே அதிசயப் பெண் திரைப்படத்தில் எஸ் எம் எஸ் அவர்கள் இன்னொரு ஹிட் பாடலைத் தந்துள்ளார்... மகர வீணை தனது மடியின் நாத மகிமை அறியுமோ என்ற இந்தப் பாடல் தொடர்ந்து நாம் கேட்டுக் கொண்டே இருக்கலாம்..

http://www.inbaminge.com/t/a/Athisaya%20Penn/

கோபால் சார்.. இது தேஷ் தானே..

RAGHAVENDRA
19th August 2014, 07:32 AM
பொங்கும் பூம்புனல்

http://mytelugulyrics.com/1MTL/Imgs/CMDPSL/P-Susheela.jpg

இசையரசி ஏன் நம் மக்கள் மனதில் ஆளுமை பெற்றிருக்கிறார் என்பதற்கு மிகச் சிறந்த சான்று இப்பாடல். நாடி நரம்பெல்லாம் அப்படியே மெலிதாகி நாம் அப்படியே வான் வெளியில் பறந்து விடுவோம்... இந்தப் பாட்டின் பல்லவி அப்படியே சுசீலா அவர்களுக்குப் பொருந்தும்..

நிலவும் தாரையும் நீயம்மா..

அழகர் மலைக் கள்வன் திரைப்படத்திலிருந்து... பி.கோபாலம் இசையில்...

பாடலாசிரியர் யார் என்பதில் கருத்து வேறுபாடு உள்ளது. வாலி என்று சிலரும் இல்லை என்று ஒரு சிலரும் கூறுகின்றனர். வாலியின் பாடல்கள் பட்டியல் புத்தகத்தில் பார்த்தால் தெரியும்.

தெரிந்தவர்கள் விளக்கவும்.

http://www.inbaminge.com/t/a/Azhagar%20Malai%20Kalvan/

RAGHAVENDRA
19th August 2014, 07:35 AM
பொங்கும் பூம்புனல்

இதே அழகர் மலைக் கள்வன் படத்தில் திருச்சி லோகநாதனின் சூப்பர் மெலடி பாடல்.. இந்தப் பாடல்களெல்லாம் நம்மை அந்தக் காலத்திற்கும் அந்த இடத்திற்கும் நம்மை அழத்து சென்று விடுகின்றன.

தேன் தூங்கும் பொதிகை மலைச் சாரலிலே நாமெல்லாம் ஒரு சுற்றுலா போவோமா..

http://www.inbaminge.com/t/a/Azhagar%20Malai%20Kalvan/

போகும் போது பஸ்சை நல்ல கண்டிஷனாக வைத்து எடுத்து செல்ல வேண்டும். இல்லையென்றால் இந்தப் பாடலைப் போல் திடீரென நின்று விடும் அபாயம் உள்ளது.

vasudevan31355
19th August 2014, 09:09 AM
இன்றைய ஸ்பெஷல் (56)

http://www.inbaminge.com/t/k/Kettikaran/folder.jpg

படம்: கெட்டிக்காரன்.

வெளிவந்த ஆண்டு: 1971

நடிக, நடிகையர்: ஜெயசங்கர், லீலா,நாகேஷ், மேஜர்

கதை, திரைக்கதை: சாண்டோ எம்.எம்.ஏ.சின்னப்பா தேவர்.

வசனம்: மா.ரா

பாடல்கள்: மருதகாசி, மாயவநாதன்

தயாரிப்பு: தண்டாயுதபாணி பிலிம்ஸ்

இசை: சங்கர் கணேஷ்

காமெரா, இயக்கம்: எச்.எஸ்.வேணு

http://i1.ytimg.com/vi/e1USxkvN3ek/0.jpg

'இன்றைய ஸ்பெஷல்' தொடரில் ஒரு அபூர்வமான பாடல். 'கெட்டிக்காரன்' படத்தில் ஒரு ஹோட்டலில் நாகேஷும், அறிமுக நடிகை லீலாவும் (பிற்காலத்தில் இவர் 'கெட்டிகாரன்' புகழ் லீலா என்றே அழைக்கப்பட்டார்) வழக்கம் போல எதிரிகளுக்கு டிமிக்கி கொடுத்து கதாநாயகனுக்கு ஆதரவாக உதவி செய்ய ஆடிப் பாடும் பாடல்.

அப்போது இந்த 'கெட்டிக்காரன்' படம் பத்திரிக்கைகளால் கடும் விமர்சனம் செய்யப்பட்டது. படுமட்டமான படம் என்று விமர்சனங்கள் எழுந்தன. தேவர் இப்படியெல்லாம் படம் எடுப்பதா என்ற கேள்வி எழுந்தது.

ஆபாசக் காட்சிகள் அதிகம் (அப்போதைக்கு)... லீலா மற்றும் நடித்த நடிகைகள் ரொம்ப தாராளம். காவல் அதிகாரி ஜெய் கொள்ளையர் கூட்டத்தில் புகுந்து கொள்ளைக்காரனாகவே அவர்களுடன் நடித்து பின் அந்தக் கூட்டத்தை வளைக்கும் அறுத பழசு கதைதான்.

ஆனால் குப்பை மேட்டில் வைரம் ஒன்று ஜொலித்ததைப் போல இப்படத்தில் ஒரு பாடல் அமர்க்களமாக அமைந்துவிட்டது. அப்படி ஒன்றும் பிரமாதமான வரிகள் எல்லாம் இல்லை. ஆனால் சங்கர் கணேஷ் மிகக் குதூகலமாக இப்பாடலை உற்சாகத் துள்ளல் போட வைத்துவிட்டார்.

சுசீலாவும், சௌந்தரராஜனும் செம ஜாலியாகப் பாடியிருப்பார்கள். ரொம்ப கேஷுவலான ஒரு பாடல். ஜனரஞ்சகம். பாடலின் நடுவே கொள்ளையர் நடத்தும் அயோக்கியத்தனங்கள், ஜெய் திரு திரு முழி, ஓட்டிப் பிறந்த சகோதர்கள் போல 4 கொள்ளயர்கள் சேர்ந்தே வருவது, அவர்களின் பின்னால் மறைந்து ஜெய் போலீசுக்கு டிமிக்கி தருவது என்று 'விறுவிறு'வுக்கு பஞ்சமில்லை.

ஆனால் நாகேஷும் லீலாவும் தூள். கலக்கலான டான்ஸ் மூவ்மெண்ட்ஸ். லீலா புதுமுக கூச்சம் இல்லாமல் நாகேஷுடன் இணைந்து நன்றாகவே ஆடுவார். பாடகர் திலகம் அமர்க்களமாக வழக்கம் போல நாகேஷின் குரலில் பின்னுவார். லீலாவுக்கு சுசீலாவின் குரல் செமை பொருத்தம். லீலா பொம்மை போல இருப்பார். படத்தில் ரொம்ப தாராளம்.

பாட்டின் ஆரம்ப இசையே நம்மை நிமிர்ந்து உட்காரச் செய்துவிடும். பாடல் முழுந்தும் உற்சாகம் கொப்பளிக்கும். ஹார்மோனியம் ,டிரம்பெட், ஷெனாய், கிளாரினெட் என்று அனைத்து இசை உபகரணங்களையும் சகட்டு மேனிக்கு பயன்படுத்தி வெற்றி கண்டிருப்பார்கள் இரட்டையர்கள்.

https://i1.ytimg.com/vi/_GNo7ZXKlgo/mqdefault.jpg

இனி பாடலின் முழு வரிகள்.

தேன் சொட்ட சொட்ட சிரிக்கும் ஒரு திருமண மேடை
கை தட்ட தட்ட துடிக்கும் இதன் கருவிழி ஜாடை
தேன் சொட்ட சொட்ட சிரிக்கும் ஒரு திருமண மேடை
கை தட்ட தட்ட துடிக்கும் இதன் கருவிழி ஜாடை

பொன் கொட்டிக் கொட்டி அளக்கும்
பூ பட்டு பட்டு மணக்கும்
செந்தமிழ் நாட்டு சிலையாட்டம் தித்திக்கும்

தேன் சொட்ட சொட்ட சிரிக்கும் ஒரு திருமண மேடை
கை தட்ட தட்ட துடிக்கும் இதன் கருவிழி ஜாடை

கிட்டே கிட்டே வா வா
ஜில்லென்று கிட்டே நீ வா
நகையும் சுவையும் பசியும் உணவும் நாமாகலாம்

சிரிப்பூட்டும் ராஜா
தேனூறும் இந்த ரோஜா
கிடைக்காது நினைக்காதே ரொம்ப லேசா

தேன் சொட்ட சொட்ட சிரிக்கும் ஒரு திருமண மேடை
கை தட்ட தட்ட துடிக்கும் இதன் கருவிழி ஜாடை

சின்ன சின்ன பாப்பா
சிங்கார கண்ணு பாப்பா
சிலையே மலையே உன்மேல்
ஆசை கொண்டால் தப்பா
சின்ன சின்ன பாப்பா
சிங்கார கண்ணு பாப்பா
சிலையே மலையே உன்மேல்
ஆசை கொண்டால் தப்பா

தமிழ்நாட்டு பாப்பா
தன்மானம் உள்ள பாப்பா
தவறான ஆசைக்கு போடும் இது தாப்பா

தேன் சொட்ட சொட்ட சிரிக்கும் ஒரு திருமண மேடை
கை தட்ட தட்ட துடிக்கும் இதன் கருவிழி ஜாடை
பொன் கொட்டிக் கொட்டி அளக்கும்
பூ பட்டு பட்டு மணக்கும்
செந்தமிழ் நாட்டு சிலையாட்டம் தித்திக்கும்

தேன் சொட்ட சொட்ட சிரிக்கும் ஒரு திருமண மேடை
கை தட்ட தட்ட துடிக்கும் இதன் கருவிழி ஜாடை


https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=4-msePQdDio

madhu
19th August 2014, 09:35 AM
வாசு ஜி.. கெட்டிக்காரன் ரொம்ப விமரிசனத்துக்கு உள்ளான படம்தான்... இதில் டி.எம்.எஸ்., சுசீலாவின் இன்னொரு பாட்டு அடிக்கடி வானொலியில் ஒலிபரப்பப்பட்டு புகழ் அடைந்தது. அஃப் கோர்ஸ் வரிகளும் கொஞ்சம் நல்லாவே இருக்கும்

பார்த்தேன் பார்க்காத அழகே..
கேட்டேன் கேட்காத இசையே

http://www.inbaminge.com/t/k/Kettikaran/Paarthen%20Paarkatha%20Azhagai.vid.html

vasudevan31355
19th August 2014, 09:41 AM
ஆமாம் மதுஜி! அந்தப் பாட்டும் கேட்க ஓரளவிற்கு நன்றாகவே இருக்கும்.

rajeshkrv
19th August 2014, 09:55 AM
வாசு ஜி, மது அண்ணா, ராகவ் ஜி காலை வணக்கங்கள்

வாசு ஜி.. கெட்டிக்காரன் பாடல்கள் சூப்பார்.. மதுண்ணா பார்த்தேன் பார்க்காத அழகை எனக்கு பிடித்த பாடல்

வாசு ஜி .. கன்னட கதம்பம்
இதோ

கூத்தடிக்கும் கும்பலை ஒரு கத்தலில் நிறுத்தி பின் கல்பனாவிற்காக இசையரசி இசைத்த கீதம்
இதேனா சப்யதே இதேனா ஸ்ம்ஸ்குருதி... என நமது கலாச்சார பெருமையையும் அது சந்திக்கும் அழிவையும் பற்றிய பாடல்

இதோ

http://www.youtube.com/watch?v=mg4CHkvyyUo

vasudevan31355
19th August 2014, 10:02 AM
வணக்கம் ராஜேஷ்ஜி! நல்லா சூடா 6 இட்லி, சூப்பர் மிளகாய்ப் பொடி நல்லெண்ணெயுடன் கலந்து. எப்படி இருக்கும்? இப்போதுதான் முடித்தேன்.
கல்பனா பாட்டு கேட்கிறேன்.

rajeshkrv
19th August 2014, 10:04 AM
சூப்பர் இட்லி மிளகாய்பொடி .. இந்த காம்பினேஷனை மிஞ்ச எதுவும் இல்லை

chinnakkannan
19th August 2014, 10:22 AM
ஹாய் ஆல்.. நலம் தானே :)

நானோ உன் அடிமை நல்ல பாட்டு..அப்புறம் இ.ஸ்பெ பாட்டு வாசு ஜி கேள்விப்பட்டதில்லை..மதுண்ணா சொன்னபாட் கேட்டிருக்கிறேன் நன்றி..
பொ.பூம்புனல் வெள்ளிக்கிழமை தான் கேட்க வேண்டும்.. நேற்றைய வீடியோக்களையும் பார்க்க வில்லை..(கண்னா வேலையைப் போஸ்ட் போன் பண்ணாதடா)

அப்புறம் வாசு சார், வெறும் மிளகாய்ப் பொடி என்பது கோபம் கொண்ட கன்னியைப் போலவும், அதுவே எள்ளு மிளகாய்ப் பொடி என்றால் காதலுடன் கோபம் கொண்ட கன்னியைப் போல என என் தாத்தா கூறியிருக்கிறார் :) முருகன் இட்லிக் கடையில் பொடி எண்ணெய் என ரொம்ப நைஸாய் அரைக்கப் பட்ட மிளகாய்ப்பொடி எனச் சொல்லப்படும்பருப்புப் பொடியை வைப்பார்கள்.. ரத்னாகஃபே பொடி தோசை ஓகே..

ம்ம் நேத்து ஜெயா டிவியில்

சின்னஞ்சிறு பூவே எந்தன் சீனாக்கற்கண்டே என சாரங்கபாணியும் எம்.என்.ராஜமும் பாடுவதைப் பார்க்க நேர்ந்தது..சீனாக்கற்கண்டு..இந்த ஸ்கொயர் ஷேப்பில இருக்குமே அது தானே..

ஏதோ இந்தப் பாட்டு மனசுல நேத்து இரவிலிருந்து ஓடிக்கிட்டிருக்கு..சிசி பூவே இல்லை இதுவேற..

வாடையிலே வாழை இலை குனியும் -
கரைவருகையிலே பொங்கும் அலை குனியும்
காதலிலே பெண்மை தலை குனியும் -
இடம்கொடுப்பதற்கே நாணம் தடை விதிக்கும்

நல்ல லைன்ஸ்..கண்ண தாசன்னு நினைச்சுப் பார்த்தா வாலியாம்..

என்ன பாட்டா..உங்களுக்குத் தெரியாதா என்ன :)

இன்னிக்கு அவ்வளவா வர முடியாது..இரவும் பகலும் உரசிக் கொள்ளும் அந்திப் பொழுதில் வருகிறேன்

vasudevan31355
19th August 2014, 10:24 AM
ராஜேஷ் ஜி

'ஒருநாள் இரவில் கண் உறக்கம் பிடிக்கவில்லை'

'பணத்தோட்டம்' படத்தில் சரோஜாதேவி பாடும் பாடல். 'இசை ராணி'யின் இன்பக் குரல். அப்படியே சொர்க்கத்தில் கொண்டு போய் நம்மைக் கிடத்தும் பாடல்.

எம்.ஜி.ஆர் அவர்களின் படத்தில் வித்தியாசமான பாடல்.

எம்.ஜி.ஆர் குழல் ஊதுவது போலவும், அபிநய சரஸ்வதி ஆண்டாளாகவும் இருப்பது போன்ற காட்சிகள். மிக அமைதியாகச் செல்லும் பாடல்.

ஆனால் டியூன் கடினமானது. சுலபமாக இருப்பது போல் தோன்றும். ஆனால் சரணத்தில்

'தினையும் பனையாய் வளர்ந்தே'

அற்புதமாக அவர் குரலில் எங்கோ பயணிக்கும். பின்

'இரு விழிகள் அரும்பவில்லை'

என்று அமைதியாகும்.

மாயாஜால வித்தைகள் புரியும் இந்தக் குரலில் மயங்காதாரும் உண்டோ! 'திருடாது ஒரு நாளும் காதல் இல்லையென்றேன்' அற்புத சொர்க்கம். இரவில் கேட்டால் ஒரு நொடியில் தூக்கம் நிச்சயம்.


https://www.youtube.com/watch?v=xiDpDeDt2Bo&feature=player_detailpage

madhu
19th August 2014, 10:28 AM
ஏதோ இந்தப் பாட்டு மனசுல நேத்து இரவிலிருந்து ஓடிக்கிட்டிருக்கு..சிசி பூவே இல்லை இதுவேற..

வாடையிலே வாழை இலை குனியும் -
கரைவருகையிலே பொங்கும் அலை குனியும்
காதலிலே பெண்மை தலை குனியும் -
இடம்கொடுப்பதற்கே நாணம் தடை விதிக்கும்

நல்ல லைன்ஸ்..கண்ண தாசன்னு நினைச்சுப் பார்த்தா வாலியாம்..

என்ன பாட்டா..உங்களுக்குத் தெரியாதா என்ன :)



http://youtu.be/Ej07LWFhQp0

chinnakkannan
19th August 2014, 10:29 AM
அச்சோ.. ம்ம் இதான் மதுண்ணா.. தாங்க்ஸ் :)

vasudevan31355
19th August 2014, 10:38 AM
எனக்கு நீராழி மண்டபத்தில் குளிப்பதைவிட ஓடையிலே ஒரு தாமரைப் பூவுடன் குளிப்பதில்தான் சுகம்.

vasudevan31355
19th August 2014, 10:45 AM
ராஜேஷ்ஜி

'அவனா இவன்' வீணை பாலச்சந்தர் படம். ரொம்பப் புதுமையான படம்.

http://www.google.co.in/url?sa=i&source=images&cd=&docid=Gu2IYHUSgvJkbM&tbnid=H_8S9DeBk0OoyM:&ved=0CAUQjBw&url=http%3A%2F%2Fwww.thehindu.com%2Fmultimedia%2Fd ynamic%2F00784%2F18cp_Avana_Ivvan__j_784374e.jpg&ei=Qd3yU_S7EoS-uATOqIGoBg&psig=AFQjCNH4036LfhxxbG7LbIsdRbZf_agowA&ust=1408511681469318

'மனம் விட்டு சிரித்திட்டு
கரம் தொட்டு இளம் சிட்டு'

என்ற அற்புதமான பாடல் உண்டு. அவ்வளவு அருமையான பாடல்.
நம்ம ராட்சஸி சும்மா பூந்து விளையாடுவார். பாடல் முழுதும் வரும் கைக்கொட்டல் இசை அட்டகாசம்.

மது அண்ணா! ப்ளீஸ். வீடியோ கிடைக்குமா? ரொம்ப நாளா பார்க்கணும்னு ஆசை.


http://www.ganaamp3.com/song/42678/manam-vittu-sirithittu

chinnakkannan
19th August 2014, 10:49 AM
வாவ்,,என்ன பாட்டு அது..ஓடையிலே ஒரு தாமரைப் பூ நீராடையிலே அதைப் பார்த்தீகளா.. நைஸ் எனக்கும் வாசு சார் )

முத்துக் குளிக்க வாரீகளா..வும் பிடிக்கும்

குளிக்குது ரோசா நாத்து ஓ அது லேட்டஸ்ட் (?!) வைரமுத்து பாட்டோ :)

இன்னிக்கென்ன குளியல் பத்தி
அலசலாமா :)

எஸ்.வி சார் வந்து ஒரு பாட் போடுவார்...அது என்னன்னு எல்லாருக்கும் தெரியும் :)

vasudevan31355
19th August 2014, 11:03 AM
எஸ்.வி சார் வந்து ஒரு பாட் போடுவார்...அது என்னன்னு எல்லாருக்கும் தெரியும் :)


பின்னாடியே அவர் எதிரி ஒருத்தர் ஓடி வந்து 'தெய்வமே! நன்றி சொல்வேன் தெய்வமே 'அப்படின்னு பாடுவார்.:tongueout:

vasudevan31355
19th August 2014, 11:05 AM
உம்ம நோக்கம் புரிஞ்சுடுத்து. குளியல் பாட்டா அலசினா நிறைய சீன் கிடைக்குன்னு எண்ணமா? மாட்ட மாட்டேன்பா. தணிக்கை அதிகாரிகள் சுத்து முத்திலும் இருக்காக.

vasudevan31355
19th August 2014, 11:28 AM
அது என்னன்னு எல்லாருக்கும் தெரியும் :)

ஆடை முழுதும் நனைய நனைய மழை அடிக்குதடி.

chinnakkannan
19th August 2014, 11:40 AM
//ஆடை முழுதும் நனைய நனைய மழை அடிக்குதடி.// யுவர் ஹானர் ..இது மழைப்பாட்டு கேடகரில்ல வருமாக்கும்..:) நான் சொன்னது குளியல் பாட்டு..ஒரு க்ளூ..சொன்னால் கண்டு பிடித்துவிடுவீங்க..

நான் சும்மா சொன்னேன்..அதுக்காக இப்படி என் எண்ணம் புரியுதுன்னு சொன்னீங்கன்னா எனக்கு இந்த்ப் பாட்டு நினைவுக்கு வருது..

நீல வண்ணக் கண்ணனே
உனது எண்ணமெல்லாம் நானறிவேன்
கண்ணா என் கையைத் தொடாதே - மோகனக்
கண்ணா என் கையைத் தொடாதே!

தன்னந் தனியான என்னைத்
துன்புறுத்தல் ஆகுமோ?
நான் உனக்குச் சொந்தமோ
ராதை என்ற எண்ணமோ?

கண்ணைக் கண்ணைக் காட்டி என்னை
வம்பு செய்யல் ஆகுமோ?
இன்னும் இங்கு நின்று வம்பு செய்தால்
ஏளனம் செய்வேன் - கண்ணா என் கையைத் தொடாதே!
(நீல வண்ணக் கண்ணனே)

மல்லி என் கரத்தை விட்டு
வந்த வழி செல்லுவாய்!
நல்லதல்ல உன் செயலை
நாடறிய சொல்லுவேன்!

கள்ளனே உன்னை எல்லோரும்,
பொல்ல பிள்ளை என்று சொல்லி - கண்டபடி பேசுவார்!
இளம் கன்னி எந்தன் உள்ளம் தன்னை
துன்புறச் செய்யாதே - கண்ணா என் கையைத் தொடாதே!

சுசீலாம்மா துள்ளல் பாட்டு.. நல்ல பாட் தானே

vasudevan31355
19th August 2014, 12:27 PM
சி.க.சாரே!

உஷாரா இருக்குற மாதிரி தெரியுது.

நீல வண்ணக் கண்ணனைப் பிடிக்காதவர் உண்டோ?

கண்ணா! இன்னொரு கூத்து. இதன் இந்தி வெர்ஷனில் தமிழ்ப் பாட்டைப் புகுத்தி ரீமிக்ஸ் பண்ணியிருக்கிறார்கள். தமிழில் 'மல்லிகா'. தமிழ் ஒரிஜினல் கிடைக்கலையோ? எப்படியோ சாதம் வெந்தால் சரி!

தமிழ் ரீமிக்ஸ்


https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=GQ_3boKlnjI

'பாயல்' (1957) என்ற இந்திப்படம்தான் அது. 'bhole salone natkhat' என்று வரும் இந்த இந்திப் பாடலைப் பாடியவர் லதா. இந்திப் பாடலை எடுத்துவிட்டு அந்த இடத்தில் தமிழ்ப் பாடலை நுழைத்து விட்டார்கள். மேலதிக விவரங்களை மதுஜி தருவார் என்று நினைக்கிறேன்.

http://img.hindilinks4u.to/2013/10/Payal-1957.jpg

'பாயல்'


https://www.youtube.com/watch?v=kVcOMuC1zuU&feature=player_detailpage

chinnakkannan
19th August 2014, 01:11 PM
ஓ..இப்படி எல்லாம் நடக்குதா என்ன..வாவ்.. விவரங்களுக்கு நன்றி வாசு சார்..இந்த நீல வண்ணக் கண்ணன் இருக்கானே..இன்னொரு பாட்டும் நினைவு படுத்திட்டான்.. நீல வண்ணக் கண்ணா வாடா. நீ ஒரு முத்தம் தாடா..

இந்த க் குட்டி க் கிருஷ்ணன் லீலைகள் எல்லாம் தமிழ் சினிமாவில் கொஞ்சம் கம்மியாத் தான் யூஸ் ப்ண்ணியிருக்காங்கள்ள.. (ஹையா ஒரு வெடி பத்த வெச்சாச்சு..)

Richardsof
19th August 2014, 03:59 PM
GOOD EVENING FRIENDS...

http://youtu.be/5KujiR-Aom4

Richardsof
19th August 2014, 04:05 PM
http://youtu.be/6T0cMP1T_U8

Gopal.s
19th August 2014, 04:22 PM
அய்யய்யோ, ஆபாச பதிவுகள்,இரட்டை அர்த்த பதிவுகள்,அதிரடி பதிவுகள் இனிமேல் மாட்டேன் என்று அவசர பட்டு சத்தியம் செஞ்சு கொடுத்திட்டேன். சிந்து பைரவி ஜனகராஜ் மாதிரி தலை வெடிக்கத்தான் போகுது. இந்த நேரம் பார்த்து துரோகிகளா, குளியல் கேக்குதா உங்களுக்கு?மித்திர சத்துருக்கள்.

madhu
19th August 2014, 04:58 PM
அடடா.. கஷ்டப்பட்டு டைப் செஞ்சு மதியம் பதிவு செஞ்சது காணாம போயிடிச்சே !

மறுபடி எங்கே தேடி எடுப்பேன் ???

ம்ஹ்ம்ம்.. அப்புறம் பார்க்கலாம் :(

mr_karthik
19th August 2014, 05:04 PM
டியர் வாசு சார்,

இன்றைய ஸ்பெஷல் வரிசையில் தேவரின் கெட்டிக்காரன் படத்திலிருந்து "தேன் சொட்ட சொட்ட சிரிக்கும் ஒரு திருமண மேடை கை தட்ட தட்ட துடிக்கும் இதன் கருவிழி ஜாடை" பாடலைத்தந்து அசத்திவிட்டீர்கள். உங்களுக்கு எப்படி இந்த பாடல்களெல்லாம் நினைவுக்கு வருகின்றன என்பதே ஆச்சரியப்பட வைக்கிறது. (99% காரர்கள் இதுபோன்ற பொதுப்பாடல்களை எங்கெங்கோ தேடிக்கொண்டு வந்து பதிக்கிறீர்கள். ஆனால் 1% காரர் கர்ம சிரத்தையாக தன தலைவரின் பாடல்களை அசராமல் பதித்து தள்ளுகிறார்).

கெட்டிக்காரன் வெளியானபோது நான் சின்னப்பையன். நடிகர்திலகம் படங்கள் தவிர அவ்வளவாக ஆர்வமின்மை (ச்சும்மா.., உண்மையில் பொருளாதார நெருக்கடி, எப்போதும் பற்றாக்குறை பட்ஜெட்). திரையரங்கில் படம் பார்த்த காலத்துக்கும், சிடி - டிவிடி காலத்துக்கும் நடுவே வீடியோகேசட், விசிஆர் பிளேயர் காலம் ஒன்று இருந்ததல்லவா அப்போது கெட்டிக்காரனை (தேடிப்பிடித்து) பார்த்தது.

நல்லவேளை எம்.ஏ.திருமுகம் இயக்கவில்லை. இயக்கியிருந்தால் லீலாவெல்லாம் இழுத்துப் போர்த்திக்கொண்டு வந்திருப்பார்கள். இந்தப்படத்தில் உருப்படியான சில விஷயங்களும் அடிபட்டுப் போயிருக்கும். ஹெச்.எஸ்.வேணு நம்மைப்பொறுத்தவரை இன்னொரு கர்ணன். (அதாவது இயக்குனர் கர்ணன்) . புராணக் கர்ணன் தன்னிடம் இருந்தவைகளை அள்ளி வழங்கினான். இந்த கர்ணன்களோ தங்கள் கதாநாயகிகளிடம் இருந்தவற்றை அள்ளி வழங்கினார்கள். (கார்த்திக் பதிவைப் படிக்கிறோமா அல்லது கோபால் பதிவைப் படிக்கிறோமா என்று சந்தேகம் வந்திருக்கணுமே)

தேவர், மக்கள் கலைஞர் ஜெய்யை வைத்து அக்கா தங்கை, பெண் தெய்வம், மாணவன் போன்ற அருமையான படங்களுக்கு நடுவே கெட்டிக்காரன், நேர்வழி போன்ற படங்களையும் தந்து நிழலின் அருமையை நமக்கு உணர்த்தினார். 'நேர்வழி' படத்துக்கு இசையமைத்த பி.எஸ்.திவாகர், நடிகர் ரமேஷ்கன்னாவின் மாமனாராம். ரமேஷே ஒரு பேட்டியில் சொல்லியிருந்தார்.

ரொம்ப பாப்புலரான பாடல்களெல்லாம் எப்போதும் சுலபமாக கிடைத்துவிடும். இதுபோன்ற பாடல்களைப் பார்ப்பதுதான் மிக மிக அரிது. அவற்றுக்கு அழகான விளக்கங்களும் தந்து அசத்துகிறீர்கள்.

(பொண்ணு மாப்பிளே படத்தின் 'மணமகன் அழகனே' பாடலுக்கு விரிவான பதில் டைப் செய்து போஸ்ட் பண்ணப்போகும் நேரத்தில் கரண்ட் கட். அவ்வளவும் போச்சு. மீண்டும் எழுதுவதற்குள் பல பக்கங்கள் ஓடிப்போய் தங்களின் அந்தப்பதிவு ரொம்ப பின்னாடி போய்விட்டது. அதனால் முயற்சியைக் கைவிட்டேன்).

தங்களின் 'இன்றைய ஸ்பெஷல்' பதிவுகள் ஒவ்வொன்றும் அருமை...

madhu
19th August 2014, 05:24 PM
vasu ji..

அவனா இவன் போன வருடம் டி.வியில் ஒளிபரப்பானபோது பார்த்ததுதான். ஆரம்பத்திலிருந்து பார்க்காததால் படத்தில் "கல்யாணப் பொண்ணு கலங்காதே கண்ணு" பாட்டு வரும்போதுதான் எந்த படம் என்று புரிந்து கொண்டேன். நெட்டில் வீடியோ கிடைக்கவில்லை. கோலாலம்பூர் கொலம்பியாவிலும் இல்லை. என்னைக்காவது "மனம்விட்டு" மாட்டாமலா போய்விடும் ?

என்னவோ எல்.ஆர். ஈஸ்வரியின் பாடல்களில் இது போன்ற பாடல்கள் என்னை மிகவும் கவரும்.

மனைவி படத்தில் விஜயகுமாரியைப் பார்த்து ரமாபிரபா பாடும் இந்தப் பாடலில் ஈஸ்வரியின் குரல் கொஞ்சம் வித்தியாசமாக ஒலிப்பதாக எனக்குத் தோன்றும்

சிக்கா.. உங்க அபிப்ராயம் என்ன ?

http://youtu.be/b1vVwlhJJYo

Gopal.s
19th August 2014, 05:26 PM
Madhu,

Annai pola ,is one of my favourites. Thanks sir.

mr_karthik
19th August 2014, 05:36 PM
தலைவரின் சமூகப் படங்களில் மூன்றாவது கலர் படம். செட்தான் என்றாலும் வெளிப்புறக்காட்சி போலவே நேச்சுரலாக, நைட் எபெக்ட் தான் என்றாலும் மேதாவி இயக்குனர்கள் போல இருட்டு கிடையாது. எல்லாமே நமக்குத்தெரிவது போலவே பளிச் காட்சி.

சுருள் சுருளான சொந்த முடியுடன் பிரௌன் பேண்ட், வெள்ளை அரைக்கை சட்டையில் பதினாறு தாண்டி பதினேழு போகும் இளமையுடன் திராவிட மன்மதன். ஒல்லியான அழகான, ஆனால் சேற்றில் மலர்ந்த... ஸாரி... விழுந்த செந்தாமரையாக பாரதி (பாரிலேயே ரதி) மெல்லிசை மன்னர் ராமமூர்த்தியின் அழகான மெட்டில் பாடகர்த்திலகத்தின் டீஸிங் பாடல்.

கட்டழகு பாப்பா கண்ணுக்கு
கள்ளத்தனம் ஏனோ பெண்ணுக்கு
அகப்பட்டுக்கொண்டதோ - இல்லை
சிக்கிக்கொண்டதோ
உடல் சேறானதோ சிலை போலானதோ

கடைசி பல்லவியில் ஹேன்ட் ஷவரை எடுத்து நாயகியை குளிப்பாட்ட, மேகத்துக்குள் இருந்து வெளிப்படும் வெண்ணிலாவாக பாரதி வெளிப்படும்போதுதான் என்ன ஒரு குதூகலம். (தலைவரே, இன்னும் மூன்று நான்கு படங்களிலாவது ஜோடி சேர்ந்திருக்கணும். மொக்கை விஜயாவையே கட்டிக்கிட்டு அழுதியே, நியாயமா?).

இந்தக்காட்சியின்போது பின் சீட்டிலிருந்து ஒரு தாய்க்குலத்தின் குரல் "சி.ஐ.டி.வண்டின்னா அதிலேயே குளிக்கிற வசதியெல்லாம் கூட இருக்குதடி"...

Gopal.s
19th August 2014, 05:38 PM
then sotta sotta- nejamagave then sottuthu. jaali pattuppa vasu.

Gopal.s
19th August 2014, 05:46 PM
கட்டழகை ஞாபக படுத்தி மூடை வர வழச்சுட்டாருப்பா.
டி.கே .ஆர்,கண்ணதாசன் .

டி.எம்.எஸ் ,ராமண்ணா, சிவாஜி,பாரதி, கேட்கவும் வேண்டுமோ? சிவாஜி எனக்கு பிடித்த இடத்தில் இரண்டு முறை தட்டி.....

முடிக்கும் போது ஷவருக்கு அழகாக ,தோதாக முகம் காட்டும் பாரதி.

என் வயிற்றெரிச்சலை ,நான் பேச நினைப்பதெல்லாம், கார்த்திக் பேசி விட்டாரே?

https://www.youtube.com/watch?v=TojrKH2x7lo

Richardsof
19th August 2014, 06:00 PM
கார்த்திக் சார்

காதலிக்க வாங்க படத்தில் இடம் பெற்ற பாடல் .

http://youtu.be/UaCwDYkXs5k

Gopal.s
19th August 2014, 06:18 PM
அடடா ,முரளி என்னை பற்றி எழுதியது உண்மையோ?சற்றே உணர்ச்சி வசப் பட்டு ,வாக்கு கொடுத்து விட்டோமோ?

யோசித்ததில் பளிச் மின்னல்.

1) ஆபாசம்தான் கூடாதே தவிர,கவர்ச்சி ஒகே தானே?

2)இரண்டு அர்த்தம் கூடாதே தவிர,ஒரே அர்த்தம் ஓகே தானே?

வாசு உன் மேலான யோசனையை எதிர்பார்க்கிறேன்.

(மணிவண்ணன் ஒரு படத்தில் ....

என்னா பாஸ் அவரச பட்டு திருந்திட்டீங்களே ?

கொஞ்சம் போர் தாண்டா அடிக்கும் என்ன பண்றது?)

mr_karthik
19th August 2014, 06:30 PM
2)இரண்டு அர்த்தம் கூடாதே தவிர,ஒரே அர்த்தம் ஓகே தானே?

ஒருமுறை குமுதம் அரசு பதில்களில் படித்தது...

கேள்வி : 'இரட்டை அர்த்தமுள்ள வசனங்கள் எப்போது ஒழியும்?'

பதில் : 'மூன்று அர்த்தமுள்ள வசனங்கள் வரும்போது'...

Gopal.s
19th August 2014, 06:50 PM
மறுபடியும் சலில் சௌத்ரி. 1965 இல் வெளியான சாந்து ஔர் சூரஜ் படத்தில்.தனுஜா (நம்ம கஜோல் அம்மா) கஷ்கு முஷ்குன்னு என்னா cute ?
இதை சலில் ரொம்ப பிடிச்சு போயி பெங்காலி (அசல்),ஹிந்தி ,மலையாளம் (செம்மீன்)மூணு மொழிகளில் போட்டுள்ளார். வொர்த் துப்பா.

ஆஷா குரல் தூள் .

https://www.youtube.com/watch?v=9XKko4591bk

Gopal.s
19th August 2014, 07:42 PM
மதன் மோகன்.

சலீலை ஒரு பிடி பிடித்தாயிற்று. அடுத்து நம்ம மதன் மோகன் சார். நம் ஹிந்துஸ்தானி இசையில் வித்தியாச பரிமாணம் கண்ட மேதை.மேற்கத்திய இசையை எஸ்சென்ஸ் மாதிரி விடுவார்.இராக்கில் பிறந்து( 1924) பிறகு பஞ்சாப் வந்தவர். அப்பா பாம்பே டாக்கீஸ்,பில்மிஸ்தான் இவற்றில் பாகஸ்தர்.அம்மா,தாத்தா கவிஞர்களாகவும்,இசை பிரியர்களாகவும் இருந்தது இள வயது மதனுக்கு தோது.எஸ்.டீ .பர்மன் உதவியாளர். 1950 முதல் இசையமைப்பாளர்.1975 இல் 51 வயதில் மறைந்தாலும் இசையில் சாதித்தது நிறைய.

எனக்கு பிடித்தம் அன்பத்,ஷராபி,வோ கௌன் தீ (நம்ம யார் நீ),தஸ்தக் (தோரஹா போல நியூ வேவ்.ரெஹனாசுல்தான் அறிமுகம்),பாவர்ச்சி (நம்ம சமையல் காரன்),கோஷிஷ் (தமிழில் நம்ம திரி கார்த்திக் நடித்தது),வீர் சாரா .

சில சாம்பில்கள்..

,ஷராபி.,கபினா கபி ,முஹம்மத் ரபி.

https://www.youtube.com/watch?v=ZLXGlz1yCKo

வோ கௌன் தீ,லக் ஜா கலே (பொன்மேனி),லதா.

https://www.youtube.com/watch?v=cz7LhJiNfc4

,மேரா சாயா ,து ஜஹான்,லதா .

https://www.youtube.com/watch?v=bKOGFXvTY5E

தஸ்தக்,பையன் நா தரோ,லதா .

https://www.youtube.com/watch?v=2hAhmm7zDjg

chinnakkannan
19th August 2014, 09:03 PM
எஸ்.வி சார்..அதுபாலாடை மேனி இல்லை..பறக்கும் பாவை..உன்னைத் தானே ஏய்.பாட்டு...:)

rajeshkrv
19th August 2014, 09:05 PM
கோபால் ஜி,
தனுஜா ஆரம்பத்தில் மட்டுமே க்யூட் அப்புறம் ஒரே ஆம்பளத்தனமாக இருப்பார்(கொஞம் பாட்டி மாதிரி)

RAGHAVENDRA
19th August 2014, 10:08 PM
பெரும்பாலும் நாம் பழைய பாடல்களைத் தான் இங்கு பகிர்ந்து கொண்டு வருகிறோம். ஆனால் சமீப காலத்தில் ஒரு பாடல் முதல் முறை கேட்கும் போதே மனசையெல்லாம் என்னவோ செய்து அந்தப் பாட்டுக்குள்ளேயே நம்மையும் அறியாமல் நம்மை உள்ளே அழைத்துச் சென்று விடுகிறது. இந்தப் பாட்டில் எந்த இடத்தைப் பாராட்டுவது எனத் தெரியவில்லை.. பாடலாசிரியரைப் பாராட்டுவதா... பாடலின் இனிமையான இசையைப் பாராட்டுவதா... பாடியவரைப் பாராட்டுவதா... பாடலைப் படமாக்கிய விதத்தைப் பாராட்டுவதா..

இந்த அளவிற்கு நம் உள்ளத்தைக் கொள்ளை கொண்ட அந்தப் பாடலை சமீப காலத்தில் வந்த மிகச்சிறந்த பாடல் என அடித்துச் சொல்லலாம்..

பாடலின் இடையே நடுவில் ஒரு ஹம்மிங்... மிகவும் மெலியதாக...

அவ்வாறே நோக்கினான் என்ற வரிகளின் முன்னர் வரும் இந்த ஹம்மிங்...

இதைத் தொடர்ந்து வரும் ஆலாபனை...

அதனைத் தொடரும் சாரங்கி...

நடுவில் தனியாக சிதார் ....கூடவே கிடார்....

சிதாரும் கிடாரும் இணைந்து ஒலிக்கும் போது நரம்புகளில் ஒரு பரவச உணர்வு எழுவது நிஜம்..

ஹிந்துஸ்தானியும் கர்நாடகமும் இணைந்து இசையின் மேன்மையையும் அதன் உலகளாவிய தன்மையையும் பறை சாற்றுகின்றன.

இந்தப் பாட்டைப் பற்றி எழுதவே ஒரு தனித்திரி வேண்டும்...

இதிலுள்ள ஃப்யூஷனைப் பற்றி கோபால் மிகச் சிறப்பாக விரிவாக எழுதக் கூடியவர்..

ஓவர் டு கோபால்...

கோபால் இந்தப் பாட்டிற்கு நீங்கள் எழுதக் கூடிய விரிவான விளக்கம் தங்களுடைய பதிவிலேயே முத்திரை பதித்ததாக இருக்கும் என்பது நிஜம்..

http://archives.deccanchronicle.com/sites/default/files/styles/article_node_view/public/Viswaroopam%20(1)_0_0_0.jpg

http://gaana.com/song/unnai-kaanadhu-naan

கேட்கும் போதெல்லாம் மெய் சிலிர்க்கும் விஸ்வரூபம் படத்தில் இடம் பெற்ற உனைக் காணாத நானிங்கு நானில்லையே பாட்டைப் பற்றி..

கோபால்... நீங்கள் எழுத வேண்டும்.. நாங்கள் படித்துக் கொண்டே இருக்க வேண்டும்...

vasudevan31355
19th August 2014, 10:46 PM
கோ,

இதெல்லாம் நியாயமே இல்ல! என் பாட்டுக்கள் சிலத நீங்க எப்படி தொடலாம்? அதுவும் தனுஜா ரசிகன் வேற. 3 மாசத்துக்கு முன்னாடியே எடுத்து வச்சேன்.

"bag me kali khili ன்னா அப்படியே சொக்கிப் போவேன். அதுவும் தனுஜா
குதூகலமாக வைக்கும் அந்த கால் ஸ்டெப்ஸ். சான்ஸே இல்லே கோ. ஆஷா வேற கொன்னுடுவார்.

இப்படியே போய்கிட்டு இருந்தா நான் 'விஸ்வரூபம்' எடுக்க வேண்டி வரும். ஆமாஞ் சொல்லிபுட்டேன்.

சலீலை எங்கே முடிச்சாச்சு? இருக்கு கண்ணு. வர்றேன்.

rajeshkrv
19th August 2014, 11:13 PM
கோ,

இதெல்லாம் நியாயமே இல்ல! என் பாட்டுக்கள் சிலத நீங்க எப்படி தொடலாம்? அதுவும் தனுஜா ரசிகன் வேற. 3 மாசத்துக்கு முன்னாடியே எடுத்து வச்சேன்.

"bag me kali khili ன்னா அப்படியே சொக்கிப் போவேன். அதுவும் தனுஜா
குதூகலமாக வைக்கும் அந்த கால் ஸ்டெப்ஸ். சான்ஸே இல்லே கோ. ஆஷா வேற கொன்னுடுவார்.

இப்படியே போய்கிட்டு இருந்தா நான் 'விஸ்வரூபம்' எடுக்க வேண்டி வரும். ஆமாஞ் சொல்லிபுட்டேன்.

சலீலை எங்கே முடிச்சாச்சு? இருக்கு கண்ணு. வர்றேன்.

வாசு ஜி சூப்பர்

vasudevan31355
19th August 2014, 11:20 PM
ராஜேஷ்ஜி

'இதேனா சப்யதே இதேனா ஸ்ம்ஸ்குருதி' இரவு வேலை முடித்து வந்து பார்த்தேன். அமைதியான ஒரு பாடல். உணர்ந்து அனுபவித்து பாடியிருக்கிறார் இசையரசி.

கல்பனா அட்டகாசம். அமைதியாக அதே சமயம் ஆழமாக தன் கருத்தை முன்வைத்து. சில இடங்களில் கத்தின கும்பலை ஓரக்கண்ணில் கேலி கலந்த கண்டிப்புடன் மேய்வது சூப்பர்.

மறைந்த தேசபக்தி தலைவர்கள் காந்தி, நேரு, பட்டேல், நேதாஜி இவர்களின் கிளிப்பிங்கஸ் அருமை. (தமிழில் பெரும்பாலும் நடிகர் திலகம் படங்களில் மட்டுமே மறைந்த தேசத் தலைவர்களைக் காண முடியும்)
அதே போல ராணுவ வீரர்கள் படும் கஷ்டங்களும், சோற்றுக்கு வழி இல்லாமல் ஏழைகள் திண்டாடும் காட்சிகளும் பாடலுக்குத் தோதாக இணைக்கப்பட்டுள்ளன.

இன்னொன்று பார்த்தீர்களா? .ம்.. நான் உங்களைப் போய்க் கேட்கிறேனே? நம்ம ஜெயகுமாரி எவ்வளவு கியூட்டாக இருக்கிறார்! குரூப்பில் ஆடிக் கொண்டிருந்தவர் படிப்படியாக முன்னேறி 'சோலோ'வுக்கு வந்தவுடன் மிக அழகாக இருப்பார். கல்பனாவை பார்த்து ஜெயகுமாரி முகம் சுளிப்பாரே, நம் தமிழ் 'கண்ணம்மா' படத்தில் 'எங்கெங்கும் உன் வண்ணம்' பாடலின் போது பாடும் முத்துராமனை சைட் அடிக்கும் (!) கே.ஆர்.விஜயாவைப் பார்த்து அதே முகஞ்ச்சுளிப்பைக் காட்டுவார் ஜெயகுமாரி. எனக்கு அது ஞாபகம் வந்து விட்டது.

ராஜ்குமார் பாடலின் ஆரம்பத்தில் என்ன செய்வது என்று தெரியாமல் கோட்டைப் பிடித்துக் கசக்கிக் கொண்டு முழிப்பது நன்றாகத் தெரியும். அதற்கெல்லாம் நடிகர் திலகம் ஒருவரே!

நல்ல பாடலை அளித்ததற்கு நன்றி ராஜேஷ்ஜி!

ஒரு பாடலை எடுத்தால் எத்தனை விஷயங்கள் ஞாபகத்திற்கு வருகின்றன? எங்கு சுற்றினாலும் அது முடிவது நடிகர் திலகத்திடம்தான். பாடலில் மட்டுமல்ல. எல்லாவற்றிலும்தான். (எங்களைப் பொருத்தவரையில்)

கார்த்திக் சார்,

இந்தப் பாடலை விட்டுவிடாதீர்கள். ஒரு சில வினாடிகளே வந்தாலும் நம் பிரிய ஜெயகுமாரி தூள்.

vasudevan31355
19th August 2014, 11:25 PM
ராஜேஷ் ஜி

'ஒருநாள் இரவில் கண் உறக்கம் பிடிக்கவில்லை'

காலையிலே இருந்து அதுதான் உடம்பு முழுக்க ஓடிகிட்டு இருக்கு.

vasudevan31355
19th August 2014, 11:36 PM
'புதியபூமி' படத்தில் சுசீலாம்மா கலக்கும் ஒரு பாடல்.

நெத்தியிலே போட்டு வச்சேன்
நெஞ்சை அதில் தொட்டு வச்சேன்.

அந்த 'குங்குமாஜம்... குங்குமாஜம்' செம ரகளை. குரல் அப்போது பிறந்த குழந்தை போல அவ்வளவு ரம்மியம். மேடம் டான்ஸ் சொல்லணுமா? (இவரிடம் பிடித்தது என்னவென்றால் வலது புறமாக ஒரு ஸ்டெப் வைத்து ஆடினால் அதற்கு ஈக்வலாக கொஞ்சம் கூட பேலன்ஸ் தவறாமல் இடது புறமும் மிகச் சரியாக, சிறப்பாக ஆடுவார். பல பேர் இந்த விஷயத்தில் தடுமாறுவதை பார்த்திருக்கிறேன்)

இசை அருமையோ அருமை.

புதிய பூமியின் சூப்பர் ஹிட் பாடல்களால் இந்தப் பாடலுக்குக் கிடைத்த வரவேற்பு கம்மிதான். ஆனால் என்னுடைய நெம்பர் 1 இந்தப் படத்தில் இதுதான். சலிக்கவே சலிக்காது.


https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=RGqKPr5f4lA

vasudevan31355
19th August 2014, 11:50 PM
இன்னைக்கு ராத்திரி ராட்சஸி பாட்டு என்ன தரலாம்? ம்..

'ராத்திரிக்கு ராத்திரி என் நினைப்பு வரவேணும்
ராஜன் மட்டும் ராணியைத்தான்
ரகசியமா தொட வேணும்

பூத்திருக்கு பூத்திருக்கு பன்னீர்ப் போல் பூத்திருக்கு
காத்திருக்கு கண் பறிக்கக் காத்திருக்கு

ராத்திரிக்கு ராத்திரி என் நினைப்பு வரவேணும்
ராஜன் மட்டும் ராணியைத்தான்
ரகசியமா தொட வேணும்
தொட வேணும்'

'மனிதரில் மாணிக்கம்' திரைப்படத்தில் பிரமிளாவுக்கு ராட்சஸி பிளந்து கட்டியிருப்பார்.

http://www.nadigarthilagamsivaji.com/Photos/MovieStills/166.jpg

என்ன மாதிரி ஒரு பாடல்!

'ஜானகியோ ராமனுக்கு
நானோ என் மாமனுக்கு'

என்ன கொஞ்சல்! என்ன ஒரு உற்சாகம்!

ஏன் இந்தப் பாட்டையெல்லாம் போடவே மாட்டேன் என்கிறார்கள்?
வயித்தெரிச்சல் படாம வேற என்ன செய்ய?

சரி! நாம கேட்டு என்ஜாய் பண்ணுவோம். (சி.கவுக்கு ரொம்பப் பிடிக்கும்னு நினைக்கிறேன்)

http://www.inbaminge.com/t/m/Manitharil%20Maanikkam/

chinnakkannan
20th August 2014, 12:18 AM
ஏன் இந்தப் பாட்டையெல்லாம் போடவே மாட்டேன் என்கிறார்கள்?
வயித்தெரிச்சல் படாம வேற என்ன செய்ய?//linக்லயும் வரலை..ரொம்ப நாள் முன்னாடி கேட்டது நன்றி வாசு சார் :)

பறக்கும்பறவையும் நீயேன்னு பி.பி.எஸ் பாடற பாட்டில வர்ற அஹ்ஹ ஹஹ்ஹா அஹ்ஹஹ்ஹா அஹ்ஹஹ் ஹஹ்ஹா வ நினைச்சுக்கலாம் :)

madhu
20th August 2014, 04:14 AM
இன்னைக்கு ராத்திரி ராட்சஸி பாட்டு என்ன தரலாம்? ம்..

'ராத்திரிக்கு ராத்திரி என் நினைப்பு வரவேணும்
ராஜன் மட்டும் ராணியைத்தான்
ரகசியமா தொட வேணும்

பூத்திருக்கு பூத்திருக்கு பன்னீர்ப் போல் பூத்திருக்கு
காத்திருக்கு கண் பறிக்கக் காத்திருக்கு

ராத்திரிக்கு ராத்திரி என் நினைப்பு வரவேணும்
ராஜன் மட்டும் ராணியைத்தான்
ரகசியமா தொட வேணும்
தொட வேணும்'

'மனிதரில் மாணிக்கம்' திரைப்படத்தில் பிரமிளாவுக்கு ராட்சஸி பிளந்து கட்டியிருப்பார்.

http://www.nadigarthilagamsivaji.com/Photos/MovieStills/166.jpg

என்ன மாதிரி ஒரு பாடல்!

'ஜானகியோ ராமனுக்கு
நானோ என் மாமனுக்கு'

என்ன கொஞ்சல்! என்ன ஒரு உற்சாகம்!

ஏன் இந்தப் பாட்டையெல்லாம் போடவே மாட்டேன் என்கிறார்கள்?
வயித்தெரிச்சல் படாம வேற என்ன செய்ய?

சரி! நாம கேட்டு என்ஜாய் பண்ணுவோம். (சி.கவுக்கு ரொம்பப் பிடிக்கும்னு நினைக்கிறேன்)

http://www.inbaminge.com/t/m/Manitharil%20Maanikkam/

சில வருடங்களுக்கு முன் இந்தப் பாட்டை யூடியூபில் பிடித்தேன். அப்போது மனிதரில் மாணிக்கம் படத்தின் மற்ற பாடல்களையும் கேட்டு கோரிக்கை விடுத்திருந்தேன். மற்றவையும் இப்போது available. ஆனால் வீடியோவின் நடுவில் ஒரு பெரிய கலர் பட்டை.. அதுதான் தொந்தரவு. இன்னும் சரியாக்கப்படவில்லை. வேறு வீடியோ இருக்குதான்னு தேடணும்

http://youtu.be/tAmc8Z_XeiA

Gopal.s
20th August 2014, 04:28 AM
கோ,


"bag me kali khili ன்னா அப்படியே சொக்கிப் போவேன். அதுவும் தனுஜா
குதூகலமாக வைக்கும் அந்த கால் ஸ்டெப்ஸ். சான்ஸே இல்லே கோ. ஆஷா வேற கொன்னுடுவார்.


.

தனுஜா , ஒரு 50% மும்தாஜ், 50% ஆலம் கலந்த முகம் இல்லை?

Gopal.s
20th August 2014, 05:22 AM
ஓ .பீ .நய்யார்.

ஓ .பீ .நய்யார்.என்கிற ஓம்கார பிரசாத் நய்யார் பற்றி விட்டு விட முடியுமா? தற்போது பாகிஸ்தானில் இருக்கும் பஞ்சாப் லாகூர் இல் 1926 இல் பிறந்தவர். பஞ்சாபிகளின் கொண்டாட்ட மன நிலை இவர் பாடல்களிலும் பிரதிபலித்தது.முதலில் பின்னணி இசை மட்டும் செய்தவர் ,1952 முதல் இசையமைக்க தொடங்கினார்.என் ஆதர்ஷ நாயகன் குருதத் இவரை சுவீகரித்து கொண்டார். பிறகென்ன? கொடி நாட்டினார்.இவரின் 50 களின் பாடல்கள் எனக்கு மிக பிடிக்கும்.பெரும்பாலும் ஷம்ஷாத் பேகம்,கீதா தத் போன்ற வித்தியாச குரல்களே உபயோக படுத்துவார். ஆஷாதான் பாடகி.லதா அறவே இவர் உலகில் இல்லை.பின்னாட்களில் உலகு,சுற்றார்,நண்பர்கள் வெறுத்து தனிமையில் வெதும்பி 2007 இல் மறைந்தார் என்று கேள்வி.

ஆர்பார் ,மிஸ்டர் &மிஸ்ஸஸ் ,சி.ஐ.டீ ,ஹௌரா பிரிட்ஜ்,நயா தௌர் ,பசந்தி,தோ உஸ்தாத் ,காஷ்மீர் கி கலி,கல்பனா,கிஸ்மத் ,படங்கள் இவர் பெயரை காலகாலத்திற்கும் நிலைக்க வைக்கும்.

சில பாடல்கள்.

ஆர் பார் ,ஷம்ஷாத் பேகம் வித்தியாச குரலில்.(கபி ஆர் கபி பார் )

https://www.youtube.com/watch?v=DJFwNErOujc

சி.ஐ.டீ , முஹம்மது ரபி,கீதா தத் குரலில் ஜானி வாக்கர் ஏ தில் முஷ்கில்

https://www.youtube.com/watch?v=HlAOZrst6fQ

நயா தௌர் ,ஷம்ஷாத்,ஆஷா இணைந்து கலக்கும் ரேஷ்மி சல்வார் குர்தா

https://www.youtube.com/watch?v=YQQDlClWaSA

காஷ்மீர் கி கலி, ரபி,ஆஷா இணைந்து கலக்கும் தீவானா ஹூவா பாடல் , ஷர்மிளா அறிமுக நாயகியாய் .

https://www.youtube.com/watch?v=oF2KTeb_m0E

madhu
20th August 2014, 06:15 AM
O.P. நய்யார்- கீதா தத் - முகமத் ரஃபி என்றதும் நினைவுக்கு வந்தது தேவ் ஆனந்த், ஷகீலா நடித்த சி.ஐ.டி. படத்தின் இந்தப் பாட்டுதான்..
அந்தக் காலத்திலேயே காமிரா கோணங்களை கொஞ்சம் வித்தியாசமாக எடுத்திருக்காங்க..

http://youtu.be/J9ANgzH9Pwc

vasudevan31355
20th August 2014, 06:51 AM
மதுண்ணா,

மது அண்ணாவா? கொக்கா? 'ராத்திரிக்கு ராத்திரியை' ராத்திரி முடியறதுக்குள்ளே கொடுத்திட்டீங்களே! சபாஷ்.

யூ டியூபில் பாடலைத் தரவேற்றிய அன்பருக்கு நன்றி! ஆனால் ஒரு வேண்டுகோள்.

பாடலை தரவேற்றும்போது பாட்டின் ஆரம்ப வரிகளை டைட்டிலாக கொடுத்தால் பாடல் தேடுபவர்களுக்கு வசதியாக இருக்கும். டியூபில் ஈஸியாக சர்ச் செய்யலாம். Angelmajeed என்று தன் பெயரை முதலில் வருமாறு பார்த்துக் கொண்டு பின் பாடலின் வரிகளை கொடுத்தால் பாடல் எப்படிக் கிடைக்கும்? மது அண்ணா மாதிரி பொறுமை இல்லை நமக்கு.

மதுண்ணா... அந்தப் பாடலில் ஏன் கீழே பட்டைகள் தெரியுமா? அப்போதெல்லாம் 'மனிதரில் மாணிக்கம்' படம் டிவிடி வரவில்லை. நான் எங்கெங்கெல்லாமோ தேடினேன். அதுவும் தலைவர் படம் வேற. திடீர்னு ஒரு நாள் ஜெயா டிவியில் போட்டார்கள். படம் முழுக்க கீழே பட்டையாக அன்றைய பிளாஷ் நியூஸ், இதர செய்திகள் ஓடிக் கொண்டே இருந்தது. (இதற்கு அந்தப் படத்தைப் போடாமலேயே இருந்திருக்கலாம்). அதனால்தான் அப்லோடர் அதை கலர்ப் பட்டைகள் கொண்டு மறைத்திருக்கிறார். பின் கே டிவி, மெகா டிவி, ஜெயா மூவீஸ் என்று இப்படம் சரமாரியாக சேனல்களில் ஒளிபரப்பப்பட்டது. எல்லாவற்றிலேயும் கீழே படத்தை பாதி மறைக்குமளவிற்கு விளம்பரங்கள். இன்னொன்று காப்பி ரைட்ஸ் பிரச்சனை. ஜெயா டிவி குழுவினர் வானத்திலிருந்து குதித்து வந்து விடுவார்கள். யூ டியூப் நமக்கு வார்னிங் தரும். நான் இரண்டு முறை வார்னிங் கொடுக்கப்பட்டு இருக்கிறேன். எல்லாம் ஜெயா டிவி புண்ணியம். இன்னொரு முறை தவறு நேர்ந்தால் என் அக்கௌண்ட் கிழிந்தது.

இப்போது 'மனிதரில் மாணிக்கம்' பட டிவிடி ஈஸியாகக் கிடைக்கிறது.

vasudevan31355
20th August 2014, 06:54 AM
கோ,

சலீல், மதன் மோகன், நய்யார் என்று அதகளம் பறக்கிறது. ஆனால் உள் நோக்கம் என்னவென்று நன்றாக எனக்குத் தெரியும். ஜமாய் கண்ணா ஜமாய்.

vasudevan31355
20th August 2014, 06:59 AM
தனுஜா (black & white)

http://1.bp.blogspot.com/-IhcXWmR57EI/UGCxeYF6M2I/AAAAAAAATTQ/Q0ZbARfhuV8/s1600/Popular+Hindi+Movie+Actress+Tanuja+-+1960-70%27s.jpg

http://2.bp.blogspot.com/-cPh8rL9FITI/UGCxhGgn17I/AAAAAAAATTk/RxxESEKFoUk/s1600/Popular+Hindi+Movie+Actress+Tanuja+-+1960-70%27s.jpg+d.jpg

http://2.bp.blogspot.com/-Jeqnx6bjDs0/UGCxfu5paXI/AAAAAAAATTY/GY9mWG3staM/s1600/Popular+Hindi+Movie+Actress+Tanuja+-+1960-70%27s.jpg+c.jpg

http://1.bp.blogspot.com/-5QQvZ6iZZoo/UGCxiuwcCrI/AAAAAAAATTs/Q9smYzpczy0/s1600/Popular+Hindi+Movie+Actress+Tanuja+-+1960-70%27s.jpg+e.jpg

vasudevan31355
20th August 2014, 07:00 AM
Nutan And Tanuja Sisters

http://www.123bollywood.com/wp-content/uploads/2010/12/TanujaSisters.jpg

vasudevan31355
20th August 2014, 07:01 AM
http://mumbaimag.com/wp-content/uploads/2013/04/Tanuja.jpg

vasudevan31355
20th August 2014, 07:04 AM
http://1.bp.blogspot.com/_BK1UUIu3ulI/SOxB8kb8JEI/AAAAAAAADpo/7KQCVyYSw7s/s400/21.jpg

http://i1.ytimg.com/vi/a4RQWDrYDI8/0.jpg

http://memsaabstory.files.wordpress.com/2008/10/pkk_tanuja2.jpg

https://i.ytimg.com/vi/Zed2BLoyVVc/hqdefault.jpg

RAGHAVENDRA
20th August 2014, 07:06 AM
வாசு மது எல்லோரும் சேர்ந்து எல்லா ஏரியாவிலேயும் ஜமாய்க்கிறீர்கள்...ஹ்ம்ம்... நாங்கள்லாம் கேலரி ஆடியன்ஸ் ... பார்த்து ரசிக்கிறோம்...

Gopal.s
20th August 2014, 07:06 AM
O.P. நய்யார்- கீதா தத் - முகமத் ரஃபி என்றதும் நினைவுக்கு வந்தது தேவ் ஆனந்த், ஷகீலா நடித்த சி.ஐ.டி. படத்தின் இந்தப் பாட்டுதான்..


என்னது ஷகீலா 1957 இலேயே அறிமுகமா? நீங்க உண்மையிலேயே சி.ஐ.டீ தான் சாரே!!!

vasudevan31355
20th August 2014, 07:07 AM
தனுஜா ஒரு செயின் ஸ்மோக்கர். (அப்படியே சி.க. கேட்பதற்கு முன்னாடியே அவருக்குப் பிடித்த வயதான படத்தையும் போட்டாச்சு).

http://heandshe.in/wp-content/uploads/2012/08/tanuja-smoking.jpg

RAGHAVENDRA
20th August 2014, 07:08 AM
பொங்கும் பூம்புனல்

வாழ்க்கை ஒப்பந்தம்..

ஆம் ... இன்றைய வாழ்க்கை, ஒப்பந்தம் போட்டு வாழ்வது போல் தான் போய்க் கொண்டிருக்கிறது..ஒரு ஒட்டுமில்லை உறவுமில்லை என்று இயந்திர வாழ்க்கை .... இதையே படத்தின் டைட்டிலாக வைத்து 1959லேயே படம் வந்து விட்டது... எவ்வளவு தீர்க்கதரிசனம் பாருங்கள்..

கண்டசாலா இசையமைத்து இசையரசியுடன் இணைந்து பாடிய அருமையான பாடல்... வாராய் ராதா ...

http://www.inbaminge.com/t/v/Vazhkai%20Oppandham/

Gopal.s
20th August 2014, 07:11 AM
பெரும்பாலும் நாம் பழைய பாடல்களைத் தான் இங்கு பகிர்ந்து கொண்டு வருகிறோம். ஆனால் சமீப காலத்தில் ஒரு பாடல் முதல் முறை கேட்கும் போதே மனசையெல்லாம் என்னவோ செய்து அந்தப் பாட்டுக்குள்ளேயே நம்மையும் அறியாமல் நம்மை உள்ளே அழைத்துச் சென்று விடுகிறது. இந்தப் பாட்டில் எந்த இடத்தைப் பாராட்டுவது எனத் தெரியவில்லை.. பாடலாசிரியரைப் பாராட்டுவதா... பாடலின் இனிமையான இசையைப் பாராட்டுவதா... பாடியவரைப் பாராட்டுவதா... பாடலைப் படமாக்கிய விதத்தைப் பாராட்டுவதா..

கோபால்... நீங்கள் எழுத வேண்டும்.. நாங்கள் படித்துக் கொண்டே இருக்க வேண்டும்...

நிச்சயம் தலைவா.

RAGHAVENDRA
20th August 2014, 07:13 AM
பொங்கும் பூம்புனல்

திரை இசைத் திலகம் கே.வி.மகாதேவன் அவர்களின் இசையில் 1959ம் ஆண்டு வெளிவந்த உழவுக்கும் தொழிலுக்கும் வந்நனை செய்வோம் திரைப்படம் பாடல்களால் புகழ் பெற்றதாகும். இந்த டூயட் பாடல் இலங்கை வானொலியில் மதியம் 2.30 மணியளவில் பல நாட்கள் ஒலிபரப்பப் பட்ட பாடல். ஓ... சிங்கார சோலை..

திருச்சி லோகநாதன் ஜமுனாராணி பாடிய இனிமையான பாடலைக் கேட்டு மகிழுங்கள்...

http://www.inbaminge.com/t/u/Uzhavukkum%20Thozhilukkum%20Vanthanai%20Seivom/

Gopal.s
20th August 2014, 07:15 AM
தனுஜா ஒரு செயின் ஸ்மோக்கர். (அப்படியே சி.க. கேட்பதற்கு முன்னாடியே அவருக்குப் பிடித்த வயதான படத்தையும் போட்டாச்சு).



யக் ....உவ்வே....அப்போ முத்தாவை மறந்துட வேண்டியதுதானா?

RAGHAVENDRA
20th August 2014, 07:18 AM
பொங்கும் பூம்புனல்

காதல் கை கூடி கல்யாணம் செய்து கொள்ளலாம் என்கிற நிலை வரும் போது காதலர்களின் மன நிலை எப்படி இருக்கும்... தெரிந்து கொள்ள இப்பாடலைக் கேளுங்கள்..

சந்தோஷம் தான் இனி வாழ்விலே...

http://www.inbaminge.com/t/u/Ulagam%20Sirikaradhu/

எஸ்.தக்ஷிணாமூர்த்தி இசையில் உலகம் சிரிக்கிறது திரைப்படத்திலிருந்து...

RAGHAVENDRA
20th August 2014, 07:23 AM
பொங்கும் பூம்புனல்

கலை... இறைவன் மனிதனுக்குக் கொடுத்த விலை மதிப்பில்லாத அரும் பொருள்... இதை உணர்ந்து பேணிப் பாதுகாப்பவன் வாழ்க்கையில் மிக உயரத்திற்குப் போவான் ..

தலைவரின் கௌரவ வேடத்தில் வெளிவந்த தாயைப்போல பிள்ளை நூலைப் போல சேலை படத்திலிருந்து காலத்தால் அழிக்க முடியாத இனிய பாடல். திரை இசைத் திலகம் கே.வி.எம். அவர்களின் இசையில் வீணையிசையின் சிறப்புடன் ஒலிக்கும்..

விலை மதிப்பில்லாத அரும் பொருள் கலையே..

போற்றிடும் ரசிகரால் வளர்ந்திடும் பெருமை... இது பாடலின் வரிகள்... எந்த அளவிற்கு உண்மை என்பது நமக்குத் தெரியுமல்லவா...

http://www.inbaminge.com/t/t/Thayai%20Pola%20Pillai%20Noola%20Pola%20Selai/

vasudevan31355
20th August 2014, 07:27 AM
கோ,

தனுஜா அப்படினாலே என் நினைவுக்கு வரும் ஒரு பாடல். 'ஜுவல் தீப்' படத்தில் வரும்

https://i.ytimg.com/vi/gQ2rMuuJENI/maxresdefault.jpg

'ராத் அகேலி ஹே... புஜ் கயே தியே
ஆக்கே மேரே பாஸ்... கோனோ நே மேரே
ஜோ பி சாஹே கஹியே
ஜோ பி சாஹே கஹியே

பாடல்தான். கொள்ளை அழகு கலரில் தனுஜா. நைட் கவுன் அமர்க்களம். ஆஷாவின் குரல் அல்வா. ('து சுப் கியூன் ரஹியே...........யே தூக்கல் அருமையோ அருமை). மஜ்பூர் சுல்தான்புரி பாடல்களுக்கு எஸ்.டி.பரமன் பட்டை கிளப்பிய இசை அளித்திருப்பார். தேவ்ஜி வழக்கமான ஸ்டைலில். ஷெனாயும் கிடாரும் ஒன்றோடொன்று போட்டி போட்டு இழையும். தனுஜா குறும்பும், நைட் எபெக்ட்டும் நம்மைப் பாடாய் படுத்தி இம்சிக்கும்.

Raat Akeli Hai, Bujh Gae Diye
Aake Mere Paas, Kaano.N Me.N Mere
Jo Bhi Chaahe Kahiye, Jo Bhi Chaahe Kahiye, Raat ...

Tum Aaj Mere Liye Ruk Jaao, Rut Bhi Hai Furasat Bhi Hai
Tumhein Na Ho Na Sahii, Mujhe Tumase Muhabbat Hai
Mohabbat Ki Ijaazat Hai, To Chup Kyuun Rahiye
Jo Bhi Chaahe Kahiye, Raat ...

Savaal Banii Hui Dabi Dabi Ulajhan Siinon Mein
Javaab Denaa Thaa, To Duube Ho Pasiino.N Mein
Thaanii Hai Do Hasiinon Mein, To Chup Kyun Rahiye
Jo Bhi Chaahe Kahiye, Raat ...

http://3.bp.blogspot.com/-eyiIP0nP1t8/T_0AsM6q70I/AAAAAAAAJ7s/Qg4XMjsKRqg/s1600/Tanuja+in+Jewel+Thief+1967.jpg


http://www.youtube.com/watch?v=gQ2rMuuJENI&feature=player_detailpage

RAGHAVENDRA
20th August 2014, 07:27 AM
பொங்கும் பூம்புனல்

பண்போடு எந்நாளுமே வாழ்வெனும் படகினில் ஒன்றாக செல்வோம்...

இந்த சூளுரையை ஒவ்வொரு கணவனும் மனைவியும் மேற்கொண்டால் வாழ்க்கை என்றும் குதூகலமாக இருக்கும்..

இதை நான் சொல்லவில்லை... இந்தப் பாடல் சொல்கிறது..

இன்னும் கொஞ்சம் சொல்லு தம்பி சொல்லு என்கிறீர்களா..

நீங்களே கேளுங்கள்..

http://www.inbaminge.com/t/s/Sollu%20Thambi%20Sollu/

சொல்லு தம்பி சொல்லு திரைப்படத்திலிருந்து இசையரசியும் சீர்காழி கோவிந்தராஜனும் இணைந்து பாடிய இனிய பாடல்

vasudevan31355
20th August 2014, 07:31 AM
.ஹ்ம்ம்... நாங்கள்லாம் கேலரி ஆடியன்ஸ் ... பார்த்து ரசிக்கிறோம்...

ராகவேந்திரன் சார்,

முதன் முறையாக உங்கள் கருத்தை மறுக்கிறேன். (ஒரு ஆளுக்கு இப்போ குஷியாயிடும். ஹாய்... வாசுவும் எதிரியாயாச்சுன்னு:))

RAGHAVENDRA
20th August 2014, 07:32 AM
பொங்கும் பூம்புனல்

எஸ்.சி.கிருஷ்ணன் பாடிய பெரும்பாலான பாடல்கள் வேகமாக அல்லது குத்துப் பாட்டு போன்ற வகையில் தான் இருக்கும். சில சமயம் மிகவும் இனிமையான பாடல்களை அளித்திருக்கிறார். இந்தப் பாடல் அப்படியே ஆங்கில மெட்டில் அமைக்கப் பட்டிருந்தாலும் அவருடைய குரலில் அவர் செய்திருக்கும் மாடுலேஷன் பிரமிக்க வைக்கிறது. இன்று பேசப்படும் பல சங்கீத நுட்பங்களை அவர் அன்றே இப்பாட்டில் செய்திருக்கிறார்.. உடன் பாடும் ஜமுனா ராணியும் லேசுப்பட்டவரா என்ன..

மெலோடியான பாடல்...சபாஷ் ராமு படத்திலிருந்து..

ஹலோ டார்லிங்... பறந்தோடி வா...(என்று வாசு கோபாலை அழைக்கிறாரோ...)

http://www.inbaminge.com/t/s/Sabash%20Ramu/

RAGHAVENDRA
20th August 2014, 07:35 AM
வாசு சார்... முந்தைய பாடல் கோபாலுக்காகத் தான்...

vasudevan31355
20th August 2014, 07:36 AM
பொங்கும் பூம்புனல்

எஸ்.சி.கிருஷ்ணன் பாடிய பெரும்பாலான பாடல்கள் வேகமாக அல்லது குத்துப் பாட்டு போன்ற வகையில் தான் இருக்கும். சில சமயம் மிகவும் இனிமையான பாடல்களை அளித்திருக்கிறார். இந்தப் பாடல் அப்படியே ஆங்கில மெட்டில் அமைக்கப் பட்டிருந்தாலும் அவருடைய குரலில் அவர் செய்திருக்கும் மாடுலேஷன் பிரமிக்க வைக்கிறது. இன்று பேசப்படும் பல சங்கீத நுட்பங்களை அவர் அன்றே இப்பாட்டில் செய்திருக்கிறார்.. உடன் பாடும் ஜமுனா ராணியும் லேசுப்பட்டவரா என்ன..

மெலோடியான பாடல்...சபாஷ் ராமு படத்திலிருந்து..

ஹலோ டார்லிங்... பறந்தோடி வா...(என்று வாசு கோபாலை அழைக்கிறாரோ...)




http://www.youtube.com/watch?v=x_LXdZ8OAt4&feature=player_detailpage

RAGHAVENDRA
20th August 2014, 07:40 AM
பொங்கும் பூம்புனல்

வாசு சார்,
பண்பில் படிப்பில் உயர்ந்தவர் வரும் போது பத்தாம் பசலி போல் இருப்பதும் கூடாது.. என்று எனக்கு புத்தி கூறுவது போல் இந்தப் பாடல் அமைந்து விட்டதே...ஹ்ம்ம்.. கோபால் சார் வரும் போது நாமும் கொஞ்சம் அவருக்கேற்றார் போல் விஷய ஞானத்தோடு இருக்கணும் என்று இப்பாடல் சொல்கிறதோ..

1959ல் வெளிவந்த புதுமைப் பெண் திரைப்படத்தில் டி.ஜி.லிங்கப்பா இசையமைத்து ஜிக்கி பாடிய பாடலைக் கேட்போமா

http://www.inbaminge.com/t/p/Puthumai%20Pen%201959/

RAGHAVENDRA
20th August 2014, 07:41 AM
வாசு சார் சூப்பர் கலக்கல்... வீடியோவோடு தூள் கிளப்பிட்டீங்க...

RAGHAVENDRA
20th August 2014, 07:46 AM
பொங்கும் பூம்புனல்

வம்பும் வழக்கும் நீங்கி உலகில் வாழத் தெரியணும்..

ஐயையோ.. நான் யாரையும் சொல்லலீங்க.. இந்தப் பாட்டில் வரும் வரிகள் .... யாரோ ஒருவரைக் குறிப்பிடுவதாக நீங்களெல்லாம் நினைத்தால் அதற்கு நான் பொறுப்பல்ல..

திரை இசைத் திலகம் கே.வி.மகாதேவன் இசையில் பாஞ்சாலி திரைப்படத்திற்காக இசையரசி பாடிய பாடல்..

http://www.inbaminge.com/t/p/Paanjali/

vasudevan31355
20th August 2014, 07:47 AM
ஹலோ டார்லிங்... பறந்தோடி வா...

ஹிந்தி ஒரிஜினல் (பாடல் மட்டும்) C.I.D (1956)

கோபால் சொன்ன அதே 'சிஐடி' படத்தில் அந்தக்கால பம்பாய் நகர வாழ்க்கையை நக்கலடித்து (நாகேஷ் 'அனுபவி ராஜா அனுபவி' படத்தில் 'மெட்ராஸ் நல்ல மெட்ராஸ்' என்று கிண்டலடித்து பாடுவாரே அது மாதிரி) ஜானி வாக்கர் பாடும் அருமையான பாடல். ரபியின் குரல் வளம் அட்டகாசம். கீதாதத் வேறு நடுவில் புகுந்து தன் காந்தக் குரலால் மயக்குவார்.

பம்பாயில் எல்லாம் இருக்கிறது மனிதத்தன்மை மட்டுமே இல்லை என்ற பாடலின் பொதுவான அர்த்தம் அருமை.

எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல். பாடலை நினைவூட்டிவிட்ட ராகவேந்திரன் சாருக்கு நன்றிகள்.

Mohd.Rafi: Ae Dil Hai Mushkil Jeena Yahan, Zara Hat Ke, Zara Bach Ke
Yeh Hai Bombay Meri Jaan
Aha Ha Ho Hoo Heehee Aaa Hmm Hmm
Ae Dil Hai Mushkil Jeena Yahan, Zara Hat Ke, Zara Bach Ke
Yeh Hai Bombay Meri Jaan

Kahin Building, Kahin Traame, Kahin Motor, Kahin Mill
Milta Hai Yahan Sab Kuchh, Ek Milta Nahin Dil (2)
Insaan Ka Nahin Kahin Naam-o-Nishaan
Zara Hat Ke, Zara Bach Ke, Yeh Hai Bombay Meri Jaan
Ae Dil Hai Mushkil Jeena Yahan, Zara Hat Ke, Zara Bach Ke
Yeh Hai Bombay Meri Jaan....

Kahin Satta, Kahin Patta, Kahin Chori, Kahin Race
Kahin Daake, Kahin Phaanke, Kahin Thokar Kahin Thes (2)
Bekaaron Ke Hain Kayi Kaam Yahan
Zara Hat Ke, Zara Bach Ke, Yeh Hai Bombay Meri Jaan
Ae Dil Hai Mushkil Jeena Yahan, Zara Hat Ke, Zara Bach Ke
Yeh Hai Bombay Meri Jaan....

Beghar Ko Aawaara Yahan Kehte Hans Hans
Khud Kaate Gale Sabke Kahein Isko Business (2)
Ek Cheez Ke Hain Kayi Naam Yahan
Zara Hat Ke, Zara Bach Ke, Yeh Hai Bombay Meri Jaan
Ae Dil Hai Mushkil Jeena Yahan, Zara Hat Ke, Zara Bach Ke
Yeh Hai Bombay Meri Jaan....

Geeta Dutt: Bura Duniya Ko Hai Kehta, Aisa Bhola Tu Na Ban
Jo Hai Karta, Woh Hai Bharta, Hai Yahan Ka Yeh Chalan
Daadagiri Nahin Chalne Ki Yahan, Yeh Hai Bombay Meri Jaan
Mohd.Rafi: Ae Dil Hai Mushkil Jeena Yahan, Zara Hat Ke, Zara Bach Ke
Yeh Hai Bombay Meri Jaan
Geeta Dutt: Ae Dil Hai Aasaan Jeena Yahan, Suno Mister, Suno Bandhu
Yeh Hai Bombay Meri Jaan
Mohd.Rafi: Ae Dil Hai Mushkil Jeena Yahan, Zara Hat Ke, Zara Bach Ke
Yeh Hai Bombay Meri Jaan!


http://www.youtube.com/watch?v=O3oW4PZ7F4I&feature=player_detailpage

RAGHAVENDRA
20th August 2014, 07:50 AM
பொங்கும் பூம்புனல்

நீ ஆடினால் ஊராடிடும் ... நான் ஆடினால் யார் ஆடுவார்... சந்திரபாபு வின் பாடல்கள் மக்களிடம் மிகவும் வரவேற்புப் பெற்றவை.. இந்தப் பாடலை அதிகம் பேர் கேட்டிருக்க மாட்டார்கள்... சொல்லுறதை சொல்லிப் புட்டேன் என்ற சந்திரபாபுவின் பாடல் இடம் பெற்ற அதே பாண்டித் தேவன் படத்தில் தான் இந்தப் பாடலும் இடம் பெற்றுள்ளது..

ஜமுனாராணி சந்திரபாபு இணையில் சூப்பர் டூயட்..

http://www.inbaminge.com/t/p/Paandi%20Thevan/

இந்தப் பாட்டில் சங்கதிகளை சந்திரபாபு வித்தியாசமாக போட்டிருப்பார்.

RAGHAVENDRA
20th August 2014, 07:51 AM
வாசு சார்..
சி.ஐ.டி. பாட்டு லிரிக்ஸோடு ... அட்டகாசம்..

RAGHAVENDRA
20th August 2014, 07:56 AM
பொங்கும் பூம்புனல்

ஒரு காலத்தில் பட்டி தொட்டியெங்கும் ஒலிபரப்பான பாடல்... சூப்பர் டூப்பர் ஹிட் பாடல்.. பலபேருக்கு படத்தின் பெயர் தெரியாது ஆனால் பாடல் மட்டும் தெரியும்... அந்த பட்டியலில் இடம் பெற்ற பாடல்...

இந்த்ப் பாட்டின் வரிகளையும் மெட்டையும் எங்கோ கேட்ட மாதிரி இருக்கிறதே என்று நினைக்கிறீர்களா..

(காதைக் கொடுங்கள்.. காசே தான் கடவுளடா பாட்டில் ஜம்புலிங்கமே ஜடாதரா பாட்டைத் தான் நீங்கள் நினைப்பீர்கள் என்று நான் யூகிக்கிறேன்)

பணநாதா இன்ப குணநாதா

ஒரே வழி திரைப்படத்தில் கோவர்த்தனம் இசையில் பாடகர் திலகமும் எஸ்.சி.கிருஷ்ணன் இணைந்து பாடிய பாடல்...

http://www.inbaminge.com/t/o/Ore%20Vazhi/

Gopal.s
20th August 2014, 07:57 AM
சில சமயம் ,இந்த திரியில் பங்களிப்பதை விட வெட்டி வேலை கிடையாதோ, என்று தோன்றும் படி அலட்சிய மனோபாவம்.மற்றவர் போட்டதை படிப்போம் என்ற மனநிலை நமக்கு வர வேண்டியது முக்கியம்.



இல்லையென்றால் ஜானி வாக்கர் பாட்டு இரண்டே பக்கங்களில் ,இவ்வளவு repeat ஆ?(
அது சரி, ஹிந்தி பாட்டுக்கெல்லாம் முழு லிரிக்ஸ் எழுதுவது வெட்டி தனமான வேலையாக படவில்லையா?)


குறைந்த பட்சம்,பங்கு கொள்ளும் திரிகளில் முழுவதையும் படிக்க வேண்டாமா?



அதே மாதிரி ,தனிப்பட்ட நடிகர்களின் பாடல்களையே promote செய்யும் மனநிலையில் உள்ளவர்களுக்கு ஒரு வேண்டுகோள்.இங்கேயாவது ,கொஞ்சம் சிந்திக்க கற்று ,உலகத்தின் மனநிலையோடு ஒட்டுங்கள். இங்கே மனிதர்களின் மனநிலை,புத்திகூர்மை,ரசனை வேறு நிலை பட்டது என்பதை,தயவு செய்து உணருங்கள்.

RAGHAVENDRA
20th August 2014, 08:00 AM
பொங்கும் பூம்புனல்

முந்தைய பாட்டில் பணம் தான் முக்கியம் என பாடினார்கள் என்றால் இங்கே இவர் பாடுவதைக் கேளுங்கள்..

அதற்கு நேர்மாறான கருத்துள்ள பாடல் ...

சிரிக்குது ஜோராய் வெள்ளிப் பணம்... எனக்கது தேவையில்லை ... என்று சொல்கிறார் இந்தப் பாடலில்..

ஓடி விளையாடு பாப்பா படத்தில் பி.பி.ஸ்ரீநிவாஸ் குரலில்..

http://www.inbaminge.com/t/o/Odi%20Vilaiyadu%20Pappa/

vasudevan31355
20th August 2014, 08:29 AM
ராகவேந்திரன் சார்,

எப்படி இப்படியெல்லாம் முடிகிறது தங்களால்? ஒவ்வொரு பாடலும் அபூர்வக் களஞ்சியமாய் என்னுடைய பொங்கும் பூம்புனல் போல்டரில் குடி கொள்கின்றன.

இந்தப் பாடல்களை எல்லாம் தனியே எடுத்து ஒரு மலைப்பிரதேஸ் டூர் சென்று நம் ஹப்பர்கள் அனைவரும் ஜாலியாக நீங்கள் சொன்னது போல ஜமுக்காளம் விரித்து (கோபாலைத் தனியாக விட்டு விடுவோம். அவர் சோமபானம், சுரா பானம் அருந்தட்டும்) பாப்கார்ன் கொறித்துக் கொண்டே கேட்க வேண்டும் நடிகர் திலகத்தைப் பற்றி பேசியபடியே. நடிகர் திலகத்தைப் பற்றிப் பேசினால் பாடல்களில் எங்கே கவனம் போகும் என்கிறீர்களா? அதுவும் சரிதான். சரி அதற்கென்று தனியே ஒரு டூர். இதற்கென்று தனியே ஒரு டூர். ராஜேஷ்ஜி கன்னடக் கதம்பத்துடன் வந்துவிட வேண்டும்.

உண்மையாகவே ஒவ்வொரு பாடலும் அருமை சார். ஆனால் இன்னும் என் ஐ பாடல் பிரிய 'நைட்டிங்கேல்' ஒலித்துக் கொண்டே இருக்கிறது.

RAGHAVENDRA
20th August 2014, 08:31 AM
பொங்கும் பூம்புனல்

50களில் தமிழ்நாட்டில் பிறந்தவர்களில் பலர் தங்கள் தாயிடமிருந்து இந்தப் பாட்டைத் தாலாட்ட நிச்சயமாகக் கேட்டிருப்பார்கள்.. அந்த நினைவுகள் நெஞ்சில் ஆழமாக நிலைத்திருக்கும்.. எம்.எல்.வி. அவர்களின் வசீகரக் குரலில் இந்தப் பாட்டைக் கேளுங்கள்...தாங்கள் இதை உணர்வீர்கள்..

மாமியார் மெச்சிய மருமகள் படத்திலிருந்து..

http://www.inbaminge.com/t/m/Mamiyar%20Mechiya%20Marumagal/

Gopal.s
20th August 2014, 08:33 AM
எனக்கு தமிழ் படங்கள்,பாடல்கள் அளவு ஹிந்தி பரிச்சயம் இல்லை. அதனால் ,நான் குறிப்பிடும் இசையமைப்பாளர்களின் ,நல்ல படங்களோ,பாட்டோ தவறியிருந்தால் குறிப்பிடவும். நன்றியுள்ளவனாக இருப்பேன்.



இந்த நேரத்தில் எனது ஹிந்தி பாடல்களின் பரிச்சயத்திற்கு வழி வகுத்த ,தமிழின் மாபெரும் ஆளுமை ஒன்றை குறிப்பிடாமல் இருக்கவே முடியாது.



விஸ்வநாதன் -ராமமூர்த்தி இருவருக்கும் இணைத்து இசைக்காக பாரத் ரத்னா கொடுப்பது அவசியம்.

ஆனால் விஸ்வநாதன் அவர்களுக்கு தனியாக கொடுப்பதென்றால் ,தேசிய ஒருமைப்பாட்டு விருது கொடுக்க பட்டே ஆக வேண்டும். மத்திய அரசாலும் முடியாத சாதனையான , ஹிந்தி எதிர்ப்பாளர்களாகிய எங்களை போன்றவர்களை ஹிந்தி பட,பாடல் பிரியர்களாக மாற்றி ,ஹிந்தி பிரசார சபையை நோக்கி ஆரம்ப 70 களில் ஓட வைத்தவராயிற்றே?



ஒரு ஜி.ராமநாதன் முடிவு பெரும் காலத்தில் தக்க சமயத்தில் விஸ்வநாதன்-ராமமூர்த்தி,கே.வீ.மகாதேவன் எழுச்சி பெற்ற மாதிரியோ, இளையராஜா சற்றே stale ஆன போது முற்றிலும் புதுமையாய் ரகுமான் எழுச்சியுற்ற மாதிரியோ இல்லாமல் 71 முதல் 76 வரை ஒரு பெரிய வெற்றிடம், தமிழ் இசை தரை மட்டம் தொட்டது.



இதற்கு முழு பொறுப்பும் ,இரு திலகங்கள் மற்றும் அவர்களை தொங்கி கொண்டிருந்த ஒரு இசையமைப்பாளர், அவர்களால் ஆதரிக்க பட்ட ஒரு over -used நளினம் ,nuances அற்ற பாடகர். தமிழர்களின் தடித்த தோல்.அதில் ஒரு திலகமாவது கொஞ்சம் முழித்து, தன்னுடைய முனைவில் புதிய பாடலாசிரியர்கள்,பாடகர்கள் ,நடிகைகள் என்றாவது புது ரத்தம் பாய்ச்சினார். ஆனால் இன்னொரு திலகமோ, நடிப்பை தவிர வேறொன்றறியேன் பராபரமே ,என்று தனது 150 ஆவது படத்திற்கே டப்பிங் ரேஞ்சில் பாடல்கள் அமைந்ததை பொருட்படுத்தாமல் , தனது படங்கள் பாதிக்க பட விட்டார். மகாதேவன், முழு நேரம் தெலுங்குக்கு தாவ, சங்கர்-கணேஷ்,விஜய பாஸ்கர் என்று சில்லறைகளின் கொட்டம்.



இளைய ராஜா வந்து,தமிழ் பட உலகையும், தமிழையும் முழுதாக ஹிந்தி பக்கம் தாவ விடாமல் ரட்சித்தார். (ஆனால் matriculation பள்ளிகள் 80 களில் பல்கி பெருகி தமிழ் அழிப்பு புண்ணியம் தேடி கொண்டு விட்டன)

RAGHAVENDRA
20th August 2014, 08:33 AM
பொங்கும் பூம்புனல்

வாசு சார் தங்கள் பாராட்டிற்கு மிக்க நன்றி.
தாங்கள் கூறுவது போல் நடிகர் திலகத்தைப் பற்றி பேச ஒரு சுற்றுலாவும் பழைய பாடல்களுக்கென்று ஒரு சுற்றுலாவும் வேண்டும் . இரண்டும் ஒன்றாகி விட்டால் இந்தப் பாட்டைப் போலத் தான் நாம் அல்லாடுவோம்.

http://www.inbaminge.com/t/m/Mamiyar%20Mechiya%20Marumagal/Mamiyar%20Mechiya%20Marumagal.jpg

இங்கே இருப்பதா அங்கே வருவதா


http://www.inbaminge.com/t/m/Mamiyar%20Mechiya%20Marumagal/

vasudevan31355
20th August 2014, 08:33 AM
சில சமயம் ,இந்த திரியில் பங்களிப்பதை விட வெட்டி வேலை கிடையாதோ, என்று தோன்றும் படி அலட்சிய மனோபாவம்.மற்றவர் போட்டதை படிப்போம் என்ற மனநிலை நமக்கு வர வேண்டியது முக்கியம்.

அது சரி, ஹிந்தி பாட்டுக்கெல்லாம் முழு லிரிக்ஸ் எழுதுவது வெட்டி தனமான வேலையாக படவில்லையா?)



இல்லை.:)

Richardsof
20th August 2014, 08:36 AM
இனிய நண்பர்களின் காலை பதிவுகள் எல்லாம் புத்துணர்ச்சி .

தனுஜா படங்கள் .வாசு சார் முந்தி கொண்டார் .ராகவேந்திரன் சார் .- அபாரமான கண்டு பிடிப்புகள்

பாராட்டுக்கள் .சி.க சார் - பறக்கும் பாவை பாடலை போட நினைத்தேன் .ஏற்கனவே கோபால்

குளிர்ச்சியில் இருக்கிறார் .விட்டு விட்டேன் .பூவா தலையா பாடலை போட்டுள்ளேன் .

மது சார் .. கோபால் சார் பதிவிட்ட இந்தி பாடல்கள் அருமை .

இன்றைய கண்ணுக்கு விருந்து - நம் எல்லோரின் மனதிலும் இருந்த ......

http://i62.tinypic.com/2rwal44.jpg

Richardsof
20th August 2014, 08:38 AM
http://i57.tinypic.com/2l2tua.jpg

RAGHAVENDRA
20th August 2014, 08:38 AM
அது சரி, ஹிந்தி பாட்டுக்கெல்லாம் முழு லிரிக்ஸ் எழுதுவது வெட்டி தனமான வேலையாக படவில்லையா?)

வாசு சார், பலே ஆள் சார் நீங்கள்.. குல்சார், கைஃபி ஆத்மி, போன்று நீங்களும் ஹிந்திப் படங்களுக்குப் பாடல்கள் எழுதுவதைப் பற்றி சொல்லவேயில்லை....
ஆனாலும் தன்னடக்கம் அதிகம் சார் உங்களுக்கு..

Richardsof
20th August 2014, 08:39 AM
http://i60.tinypic.com/2wdbsbd.jpg

Richardsof
20th August 2014, 08:39 AM
http://i58.tinypic.com/9t0e55.jpg

Gopal.s
20th August 2014, 08:41 AM
(கோபாலைத் தனியாக விட்டு விடுவோம். அவர் சோமபானம், சுரா பானம் அருந்தட்டும்)


ஓஹோ... நீங்க யோக்கியரோ? ஒரு லேபலை காட்டினால் ,ராகவேந்தரை டபக்கென்று உதிர்த்து எந்த பக்கம் ஓடி வருவாய் என்று தெரியாதா கள்ள (சாராய) தேவரே?



உன்னை நன்கு புரிந்தவன் இருக்கிறேன்.....இன்றைக்கும் நான்தான் உதவி செய்ய வந்திருக்கிறேன்.

vasudevan31355
20th August 2014, 08:41 AM
சில சமயம் ,இந்த திரியில் பங்களிப்பதை விட வெட்டி வேலை கிடையாதோ, என்று தோன்றும் படி அலட்சிய மனோபாவம்.மற்றவர் போட்டதை படிப்போம் என்ற மனநிலை நமக்கு வர வேண்டியது முக்கியம்.

இல்லையென்றால் ஜானி வாக்கர் பாட்டு இரண்டே பக்கங்களில் ,இவ்வளவு repeat ஆ?(

குறைந்த பட்சம்,பங்கு கொள்ளும் திரிகளில் முழுவதையும் படிக்க வேண்டாமா?



அது வேற... இது வேற கண்ணா! இது தெலுங்கிலிருந்து தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்ட பாடலுக்கான இந்தி ஒப்பீடு. (தலைவரின் 'ராஜா' படத்தை விதவிதமாக நாம் அலசவில்லை அதைப் போல) இதைத்தான் உள்நோக்கம் என்று இன்று காலை முன்னமேயே குறிப்பிட்டது. எலி ஈஸியாக பொறிக்குள் வந்து மாட்டிக் கொண்டது. சக்சஸ். கிராண்ட் சக்சஸ்.:)

Gopal.s
20th August 2014, 08:43 AM
வாசு சார், பலே ஆள் சார் நீங்கள்.. குல்சார், கைஃபி ஆத்மி, போன்று நீங்களும் ஹிந்திப் படங்களுக்குப் பாடல்கள் எழுதுவதைப் பற்றி சொல்லவேயில்லை....
ஆனாலும் தன்னடக்கம் அதிகம் சார் உங்களுக்கு..

:-D:thumbsup:

vasudevan31355
20th August 2014, 08:49 AM
வாசு சார், பலே ஆள் சார் நீங்கள்.. குல்சார், கைஃபி ஆத்மி, போன்று நீங்களும் ஹிந்திப் படங்களுக்குப் பாடல்கள் எழுதுவதைப் பற்றி சொல்லவேயில்லை....
ஆனாலும் தன்னடக்கம் அதிகம் சார் உங்களுக்கு..

உடுக்கை இழந்தவன்....

vasudevan31355
20th August 2014, 08:51 AM
கோ குழந்தே!

காலையிலே இருந்து உங்களுக்கு நேரம் சரியில்லேன்னு நினைக்கிறேன்.
நல்ல பழைய சாதத்துல நெறைய நெய் ஊத்தி சாப்பிட்டுட்டு சாச்சுக்கோங்க. குட்டி செல்லம் இல்ல.

vasudevan31355
20th August 2014, 08:53 AM
ஓஹோ... நீங்க யோக்கியரோ? ஒரு லேபலை காட்டினால் ,ராகவேந்தரை டபக்கென்று உதிர்த்து எந்த பக்கம் ஓடி வருவாய் என்று தெரியாதா கள்ள (சாராய) தேவரே?

உன்னை நன்கு புரிந்தவன் இருக்கிறேன்.....இன்றைக்கும் நான்தான் உதவி செய்ய வந்திருக்கிறேன்.

அடப்பாவி! கிட்ட இருந்து ஊத்திக் கொடுத்தவன் மாதிரி பேசறியே! ஊறுகா பாகெட் கூடக் கண்ணுல காட்டுலியே. பாவி மனுஷா...:)

Gopal.s
20th August 2014, 08:53 AM
உடுக்கை இழந்தவன்....


உடுக்கை இழந்தவன், குடுகுடுப்பாண்டி, மந்திரிக்கும் பூசாரி ஆக முடியாது. குலத்தொழில் இழப்பு?

rajeshkrv
20th August 2014, 08:58 AM
ராஜேஷ் ஜி

'ஒருநாள் இரவில் கண் உறக்கம் பிடிக்கவில்லை'

காலையிலே இருந்து அதுதான் உடம்பு முழுக்க ஓடிகிட்டு இருக்கு.

அட அட அட.. தேனில் ஊரிய பலாச்சுளை அல்லவா இப்பாடல் .. இசையரசியின் குரலும் அபிநய சரஸ்வதியின் அழகும் என்னமாய் இருக்கு

vasudevan31355
20th August 2014, 08:59 AM
இன்று வினோத் ஜெயந்தியா?

ஆமாம். என் பிரியசகி சைலஸ்ரீ என்கிற ஆஷாவும், உங்க ஜெயந்தியும் குளிக்கும் படம் எந்த கன்னடப்படம் என்று சொல்லவே இல்லையே வினோத் சார்.

சின்னக் கண்ணன் வந்து கேட்டால் நான் என்ன பதில் சொல்றது?

ஆமாம்! திடீர்னு நேற்று இரவு சம்பந்தமில்லாமல் 'வேட்டையாடி விளையாடியது' எதற்கு? அரச கட்டளையா?:)

vasudevan31355
20th August 2014, 09:01 AM
உடுக்கை இழந்தவன், குடுகுடுப்பாண்டி, மந்திரிக்கும் பூசாரி ஆக முடியாது. குலத்தொழில் இழப்பு?

உங்க மனசுல என்ன ஓடுதுன்னு 'ராஜராஜ சோழன்' சினிமாஸ்கோப் திரை அளவுக்கு என்னாலே புரிஞ்சிக்க முடியுதே.

rajeshkrv
20th August 2014, 09:03 AM
காதலிக்க நேரமில்லை வயது 50
நான் முகனூலில் எழுதியது இங்கே பதியலாமா ?? கோபால் ஜி கோபிப்பார்
சரி இருந்தாலும் திட்டு வாங்கி கொள்ளுவோம்
https://fbcdn-sphotos-g-a.akamaihd.net/hphotos-ak-xpa1/v/t1.0-9/10628492_512194042244152_9174681720467891987_n.jpg ?oh=f84b9921da0b9309dbadb962b5bbcea1&oe=547F9DA5&__gda__=1415694877_f918763daf661e4fe1e38232bdc4b79 2

காதலிக்க நேரமில்லை வயது 50

ஒரு திரைப்படம் 50 ஆண்டுகள் தாண்டியும் நம்மை மகிழ்ச்சியில் ஆழ்த்தும் என்றால் அது இந்த படம் தான் .. முழு நீள நகைச்சுவை திரைப்படம் எவ்வளவோ வந்துள்ளது ஆனாலும் ஒரு காதலிக்க நேரமில்லை மட்டும் தான் இன்றும் கலையை ரசிப்பவர்களையும் சரி நகைச்சுவை ரசிகர்களையும் சரி கட்டி இழுக்கத்தான் செய்கிறது .. அப்படிப்பட்ட படம் இது. இதற்கெல்லாம் காரணம் இயக்குனர் ஸ்ரீதரும் சித்ராலயா கோபுவும் தான்.

முழுக்க முழுக்க சீரியஸ் படங்களை எடுத்துக்கொண்டிருந்த ஸ்ரீதர் முழு நீள நகைச்சுவை சித்திரமாக ஒரு வெற்றியை கொடுக்க முடியும் என நிரூபித்தார்

படமா இது . இல்லை இல்லை காவியம் . எளிமையான கதை தான் . ஆனால் அதற்க்குள் மிகப்பிரமாதமான திரைக்கதை அமைத்து ஒரு நகைச்சுவை தோரணாமாக தொங்க விட்டார் என்றால் அது மிகையில்லை.

புது நாயக நாயகியரை வைத்து இப்படி ஒரு மாபெரும் வெற்றி கொடுத்தார் என்றால் அது எவ்வளவு பெரிய சாதனை .. இதற்கு முன்னால் முத்துராமன் சோகமான வேடங்களே செய்து வந்தார் .. அப்படி நடித்தவரை ஒரு வித்தியாசமான முழுக்க முழுக்க நகைச்சுவை நாயகனாக அதுவும் பெரும்பகுதியில் முதியவராகவும் வந்து நம்மை அசத்தியிருப்பார்.

மூன்று பெருமைக்குரிய அறிமுகமாக ரவிச்சந்திரன், காஞ்சனா மற்றும் ராஜஸ்ரீ .. ஆஹா இவர்களின் வளர்ச்சி பற்றி நான் சொல்லித்தெரியவேண்டுமா ..

இந்த படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு இன்னொரு முக்கிய காரணம் இருவர் .
ஆம நாகேஷ் மற்றும் டி.எஸ்.பாலய்யா .. தந்தை மகன் வேடமேற்று நகைச்சுவை காட்சிகளை இவர்கள் செய்தவிதம் வேறு எவரும் செய்ய இயலாத ஒன்று … இது போன்ற நடிகர்கள் கிடையாது.

கதை . மிகவும் எளிமையான கதைக்கரு .. ஒரு பெரிய பணக்காரர் விஸ்வ நாதன்(பாலய்யா) , அவருக்கு ஒரு மகன் செல்லப்பா, மகள்கள் ராஜி மற்றும் காஞ்சனா. இவருக்கு கவுரவம் மிகவும் முக்கியம், இவரது மில்லில் வேலை செய்யும் அசோக்(ரவி) இவரிடம் வம்பு செய்ய அவரை வேலையில் இருந்து நீக்கிவிடுகிறார். அதை தாங்கமுடியாத அசோக் அவரது வீட்டின் முன் கூடாரம் அமைத்து தர்ணா செய்கிறார். இதன் நடுவே கல்லூரி தேர்வு முடிந்து இரு மகள்களும் ஊர் திரும்புகின்றனர். இரு மகள்களிடமும் ரவி மோத அதில் ஒருவருடன் காதல் மலர .. அதை பெரியவர் ஒப்புக்கொள்ள மாட்டார் என்பதால் தன் ஆருயிர் நண்பனான வாசு(முத்துராமன்) வரவழைத்து தன் அப்பாவாக, விஸ்வநாதனைவிட பெரிய பணக்காரராக நடிக்க வேண்ட முதலில் மறுக்கும் வாசு பின் ஒப்புக்கொள்கிறான். இதனால் ஏற்படும் களேபரம் மீதி கதை
இதன் நடுவே வெட்டியாக சுத்தும் செல்லப்பா சினிமா படம் எடுக்கபோவதாக சொல்லிக்கொண்டு அப்பாவிடம் பணம் கேட்டு தொல்லை படுத்துகிறார்,பின் தன் அப்பாவின் மில்லில் மேனேஜர் வேலை செய்யும் தொழிலாளியின் மகளை நடிக்கவைக்கிறேன் பேர் வழி என்று அவர் அடிக்கும் லூட்டி அபாரம்…

ஒவ்வொரு வசனமும் நச்… இப்பொழுது பஞ்ச் டயலாக் பேசுகிறேன் என்று பலரும் கடித்து துப்புகிறார்களே ,..இதில் திரு சித்ராலயா கோபு அவர்கள் குறும்பாகவும் குசும்பாகவும் வசனம் எழுதியிருப்பது படத்திற்கு பெரிய பலம்
ஊரிலிருந்து வந்த தங்கைகள் தன் அண்ணாவிடம் பேசும்பொழுது நாகேஷ் சொல்கிறார் படம் எடுக்க போகிறேன் என்று … உடனே ராஜியும், காஞ்சனாவும் “ வீ டோண்ட் சி டமில் மூவீஸ் வி சீ ஒன்லி இங்லீஷ் முவீஸ்” என்று கூறுவதாகட்டும், ஓஹோ ஃப்ரொடக்ஷன்ஸ் என்று கூற உடனே இருவரும் ஓஹோ என்று சொல்ல இது வேற ஓஹோ என்று நாகேஷ் சொல்வது …. அடேயப்பா

நாகேஷ் சச்சுவை தன் சினிமாவில் நடிகையாக்குவதற்கு அவரது தந்தையிடம் சென்று பேசும் அந்த வசனங்கள் .. நச் நச்..
அதுவும் அவரை தன் அப்பா போல் பணக்காரர் ஆக வேண்டாமா, கார் வாங்க வேண்டாமா என ஆசை காட்ட அவரும் கார் வாங்கலாமா . என்று சொல்லிக்கொண்டே வர, நாகேஷ் அப்படியே கால் மேலே கால் போட்டு ஆட்டலாம் என்று சொல்ல உடனே அவர் “அது மரியதையில்ல அது மரியாதையில்ல” என்று சொல்வாரே .. அதெல்லாம் சொல்லி மாளாது ..

நாகேஷ் சச்சுவை புக் செய்துவிட்டு அவரிடம் கம்பெனி காண்ட்ராக்ட் பற்றி சொல்லுவாரே .. அதுவும் நடிப்பு அனுபவம் உண்டா என்று கேட்க சச்சுவோ ஒ பள்ளியில் ராணியாக நடித்தவருக்கு சாமரம் போடும் வேடமேற்றதை சொல்வாரே , நாகேஷின் முகத்தை பார்க்க வேண்டுமே

இந்த வசனம் தான் என்று இல்லை. படம் முழுக்க முழுக்க சிரிப்பு வசனங்கள்
இதற்கெல்லாம் மைல்க்கல்லாக அமைந்தது தந்தை மகன் கதை படலம்
ரொம்ப காஷுவலாக பாலய்யா டேய் செல்லப்பா ஏதோ படம் எடுக்கிறேன்னு சொல்லிக்கிட்டு திரியிரியே .. எங்க கத சொல்லு பார்ப்போம் என்று கூற .. உடனே நாகேஷ் பணம் கேட்க உடனே பாலய்யா நீ கதைய சொல்லுடா .. நல்லாருந்தா கண்டிப்பா பணம் தரேன் என்று சொல்லி ஆரம்பிக்கும் அந்த திகில் கதை. அப்பப்பா … நாகேஷ் சொல்லும் விதமும் சரி, பாலய்யாவின் முக பாவங்கள் , அந்த திடுக்கிடும் மர்ம கதையை சொல்ல சொல்ல முகமெல்லாம் வேர்த்து பாலய்யா படும் அவஸ்தை … அப்பா நடிப்பா அது … இருவருக்கும் சாஷ்டாங்க நமஸ்காரம்..

ஒவ்வொரு நடிகர்களையும் பார்ப்போம்
படத்தின் ஹீரோ திரு பாலய்யா…. இவர் பிறவிக்கலைஞனய்யா … நடிப்பா அது .. அந்த விஸ்வநாதனாகவே வாழ்ந்திருப்பார், அசோக்கிடம் காட்டும் கண்டிப்பு, பெண்களிடம் காட்டும் பாசம், நாகேஷிடம் குதர்க்கம், தன்னை விட பெரிய பணக்காரர் என்று தெரிந்த முத்துராமனிடம் குழைவதாகட்டும் .. அப்பப்பா ….. இதற்கு மேல் சொல்ல முடியவில்லை அப்படி ஒரு பட்டய கிளப்பும் நடிப்பு
அடுத்து நாகேஷ் … செல்லப்பா வேடத்திற்கு இவரைத்தவிர யாரையும் யோசித்து கூட பார்க்க முடியாது .. அந்த ஒல்லி வெட வெட உருவத்துடன் இவர் இந்த படம் முழுக்க நடத்தும் காமெடி ராஜாங்கம் சொல்லி மாளாது.. ஆங்கிலத்தில் சொல்வது போல் “viewer’s delight” அப்படித்தான் இந்த கதாப்பாத்திரம்.
அடுத்து வாசுவாகிய முத்துராமன்.. அதுவரை சீரியஸாகவே நடித்து வந்த இவர் இதில் அருமையான வேடம்.. படத்தின் முக்கால்வாசி வரை இவருக்கு வயதான வேடம்.. அதிலும் விஸ்வநாதனை எதிர்க்கும் அந்த முரட்டு கம்பீரம் மிடுக்கு என இவர் செய்யும் ரகளை அசத்தல் .

ரவி .. ஆஹா அழகன் அறிமுகம். இளம்பெண்களின் மனதை கவரும் வசீகர முகம்,,, குறும்பு, ரொமான்ஸ் என எல்லாவற்றையும் அழகாக வெளிப்படுத்தும் முகம்… தூள் .. பெருமைக்குரிய அறிமுகம்..
ராஜஸ்ரீ… முதலில் பணக்கார அப்பாவின் பெண்ணுக்கே உரிய அகங்காரமும் அகம்பாவமும் பின் ரவியுடன் காதலுக்கு பின் நாணம் கலந்து வரும் இவரது நடிப்பு … அழகு

காஞ்சனா .. துடுக்கு திமிர் அழகு பின் நளினம் என எல்லாமும் கலந்த நடிப்பு.. மேலே விமானத்தில் பறந்து கொண்டிருந்த இவர் சினிமா வானில் பறக்க தொடங்கினார்.
சச்சு .. அப்பாவி மீனாவாக இவர் அடிக்கும் லூட்டி சொல்ல முடியாது.
நாகேஷ் என்ற ஜாடிக்கு ஏத்த மூடி ..
இவர்களுடன் வி.எஸ்.ராகவன், ராதாபாய், வீராச்சாமி என எல்லோரும் அளவான நடிப்பை வெளிப்படுத்தினார்கள்.

படத்தின் அடுத்த பலம் பாடல்கள் மற்றும் கண்ணுக்கு குளிர்ச்சியான படப்பிடிப்பு .. காரணம் மெல்லிசை மன்னர்கள் மற்றும் ஏ.வின்செண்ட்
படத்தின் ஓப்பனிங் சாங். சாந்தோம் பீச் ..”என்ன பார்வை உந்தன் பார்வை “
ஏசுதாஸ் இசையரசி குரல்களில் அருமையோ அருமை..
நாளாம் நாளாம் திரு நாளாம் … இதுவெல்லாம் பொக்கிஷ பாடல்
பி.பி.ஸ்ரீனிவாசும் இசைத்த காதல் காவிய்ப்பாடல்
நெஞ்சத்தை அள்ளி கொஞ்சம் தா தா.. என யேசுதாஸ், இசையரசியுடன் ஈஸ்வரி ..
ஈஸ்வரி தனித்து பின்னி பெடலெடுத்த பாடல் . விப்ராட்டோவெல்லாம் வந்து விழும்… மல்ரென்ற முகம் இன்று சிரிக்கட்டும் .. என்ன பாட்டு என்ன நடனம்

இதையெல்லாம் விட .. வேலை போன அசோக் தன் குழுவினருடன் வேலையை திரும்ப கேட்டு பாடும் பாடலாக அமைந்த விஸ்வ நாதன் வேலை வேண்டும் பாடலாகட்டும் நடனமாகட்டும் .. இன்று வரை இது ஒரு Classic example of Song making “

மொத்தத்தில் காதலிக்க நேரமில்லை .. எத்தனை வருடங்களானானும் சோடை போவதில்லை . அப்படிப்பட்ட ஒரு காவிய படைப்பு..
இதன் 50’ஆண்டு நிறைவு விழாவை திரு ஒய்.ஜி. மகேந்திரன் ஏற்பாடு செய்து சித்ராலாயவில், இந்த படத்தில் பணிபுரிந்த அனைவரையும் அழைத்து கெளரவித்ததற்கு நெஞ்சார்ந்த நன்றிகள். இன்றைக்கு செத்தா நாளைக்கு பால் என்ற விவேக்கின் வசனத்த்றிகேற்ப இன்று மறைந்தவர்களை இன்றே மறந்துவிடக்கூடிய சினிமா உலகமிது .. அப்படியிருக்கையில் இது போன்ற ஒரு சிலாரால் தான் தமிழ் சினிமா அங்கீகாரம் தர மறுத்த பல பிரம்மாண்ட கலைஞர்களும் படைப்பாளிகளும் நம்முள் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். மீண்டும் ஒரு முறை மனமார்ந்த நன்றிகள் ஒய்.ஜி.எம்மிற்கு.,

ராஜேஷ்
(Rajesh Venkatasubramanian)

vasudevan31355
20th August 2014, 09:05 AM
ராஜேஷ்ஜி வாங்க! வாங்க! நலமா?

என்ன நேத்து நைட் திடீர்னு காணாம போயிட்டீங்க. உங்களுக்காக 'இதேனா சப்யதே இதேனா ஸ்ம்ஸ்குருதி' பார்த்து பதில் போட்டேனே. பார்த்தீங்களா. அப்புறம் 'நெத்தியிலே போட்டு வச்சீங்களா'?. 'ராத்திரிக்கு ராத்திரி என் நினைப்பு' வந்ததா?

rajeshkrv
20th August 2014, 09:08 AM
ராஜேஷ்ஜி வாங்க! வாங்க! நலமா?

என்ன நேத்து நைட் திடீர்னு காணாம போயிட்டீங்க. உங்களுக்காக 'இதேனா சப்யதே இதேனா ஸ்ம்ஸ்குருதி' பார்த்து பதில் போட்டேனே. பார்த்தீங்களா. அப்புறம் 'நெத்தியிலே போட்டு வச்சீங்களா'?. 'ராத்திரிக்கு ராத்திரி என் நினைப்பு' வந்ததா?
இப்போ தான் எல்லாம் பார்க்கிறேன் வாசு ஜி, மன்னிக்கவும் .. நேற்று சீக்கீரம் உறங்க சொல்லி வீ.கா உத்தரவு .. என்ன செய்வது...

ஆம் இதேனா சப்யதே ஜெய்குமாரியே தான் ... பாடலை பற்றி நீங்கள் சொன்ன ஒவ்வொரு வரியும் அருமை

vasudevan31355
20th August 2014, 09:15 AM
ராஜேஷ்ஜி

என்னது பதியலாமாவா? இப்படி நீங்க கேக்கலாமா? திரி இல்ல கொடுத்து வச்சிருக்கணும். இதைவிட பொருத்தமான கட்டுரை கா.நே.பட பொன்விழாவிற்கு உண்டா? அருமை ஜி. கொன்னுட்டேள் போங்கோ.

'விஸ்வ நாதன் வேலை வேண்டும்'

எந்தத் தலைமுறையும் விரும்பிப் பார்க்கும் ஒரு அதிசயம்.

பாலையாவின் அந்த ஒரு வினாடி சுருட்டு சீன்.

'பேப்பர்ல மட்டும்தான் வரல' என்று பாலையா நாகேஷிடம் நொந்து சொல்ல 'வருதுப்பா... பேப்பர்ல வருது என்று எகிறிக் குதித்து சொல்வாரே... அது

தலையணையில் உதட்டு சாயத்தைக் காட்டும் இளமைக் காமம்.

கூட்டமே இல்லாத மெரினா கடற்கரை சாலையில் படகு போன்ற கார் பவனி. காரின் முன்னால் காஞ்சனா ஆடிக் கொண்டே வரும் அழகு.

சொல்லிக் கொண்டே இருக்கலாம். நேரம்தான் பற்றாக்குறை.

rajeshkrv
20th August 2014, 09:22 AM
வாசு ஜி. நன்றி
கூடுதாலாக நீங்கள் எழுதியிருக்கும் ஒவ்வொரு வரியும் சூப்பர். நான் சொல்ல மறந்ததை சொல்லி இன்னும் அழகு சேர்த்துவிட்டீர்.. நன்றி

rajeshkrv
20th August 2014, 09:25 AM
வாசு ஜி..
இதோ உங்களுக்காக

தாலாட்டு என்றாலே அது இசையரசியின் தாலாட்டு தான்

இசையரசியை முதன் முதலில் தக்*ஷிணாமூர்த்தி ஸ்வாமிகள் சீதா என்ற படத்தின் மூலம் மலையாள திரையுலகிற்கு அறிமுகம் செய்தார்

சீதையாக குசல குமாரி ..

பாட்டு பாடி உறக்காம் ஞான் தாமரப்பூம் பைதலே
கேட்டு கேட்டு நீ உறங்கென் கரளிண்டே காதலே

http://www.youtube.com/watch?v=PfzzkQ3NOh0

rajeshkrv
20th August 2014, 09:30 AM
இதோ ஒரு கன்னட தாலாட்டு

http://www.youtube.com/watch?v=SBSpZeummZM

Richardsof
20th August 2014, 09:32 AM
வாசு சார்

ஜெயந்தி - சைலஸ்ரீ நடித்த படத்தின் பெயர் இன்னும் நினைவிற்கு வரவில்லை .வந்தவுடன் தெரிவிக்கிறேன் . நேற்றய பதிவுகளில் குளியல் பாடல்கள் இடம் பெற்றதால் ... அரசகட்டளை
பாடல் .சரோஜாதேவியின் முழு குளியல் உங்கள் கண்ணுக்கு விருந்தாக போட்டேன் .


கோபாலுக்கு எத்தனை துரோகிகள் ..அப்பப்பா . அத்தனை பேரும் ஒன்று சேர்ந்தால் நம் கோபால்
பாடல் இதுவோ

''சட்டி சுட்டதடா ...கை விட்டதடா ''...

madhu
20th August 2014, 09:39 AM
50களில் தமிழ்நாட்டில் பிறந்தவர்களில் பலர் தங்கள் தாயிடமிருந்து இந்தப் பாட்டைத் தாலாட்ட நிச்சயமாகக் கேட்டிருப்பார்கள்.. அந்த நினைவுகள் நெஞ்சில் ஆழமாக நிலைத்திருக்கும்.. எம்.எல்.வி. அவர்களின் வசீகரக் குரலில் இந்தப் பாட்டைக் கேளுங்கள்...தாங்கள் இதை உணர்வீர்கள்..


ராகவ்ஜி..

எம்.எல்.வி. குரலில் தாய் உள்ளம் படத்தின் இந்தப் பாடலும் ஒரு காலத்தில் பிரசித்தமன்றோ

கதையக் கேளுங்க...

http://youtu.be/m_-Obun6nys

vasudevan31355
20th August 2014, 09:40 AM
தாலாட்டுப் பாடல்கள் சுகமோ சுகம் ராஜேஷ்ஜி. நிஜமாகவே தூக்கம் வருகிறது. குயில் குரல்.

Gopal.s
20th August 2014, 09:41 AM
அத்தனை பேரும் ஒன்று சேர்ந்தால் நம் கோபால்
பாடல் இதுவோ

''சட்டி சுட்டதடா ...கை விட்டதடா ''...

இல்லை நண்பரே.



உலகம் பிறத்தது எனக்காக ஓடும் நதிகளும் எனக்காக, உன்னை அறிந்தால் நீ உலகத்தில் போராடலாம்.அங்கே சிரிப்பவர்கள் சிரிக்கட்டும் அது ஆணவ சிரிப்பு.:smile2:

rajeshkrv
20th August 2014, 09:45 AM
இல்லை நண்பரே.



உலகம் பிறத்தது எனக்காக ஓடும் நதிகளும் எனக்காக, உன்னை அறிந்தால் நீ உலகத்தில் போராடலாம்.அங்கே சிரிப்பவர்கள் சிரிக்கட்டும் அது ஆணவ சிரிப்பு.:smile2:

பலே பலே

rajeshkrv
20th August 2014, 09:46 AM
மதுண்ணா எம்.எல்.வியின் தாலாட்டு பாடல் அருமை
நன்றி

Richardsof
20th August 2014, 09:56 AM
எப்படியோ இருந்த கோபாலை இந்த நிலைமைக்கு கொண்டு வந்த பெருமை ''சிரிப்பிற்கு ''உண்டு .
கொஞ்சம் சிரிங்க பாஸ்

Gopal.s
20th August 2014, 10:00 AM
எப்படியோ இருந்த கோபாலை இந்த நிலைமைக்கு கொண்டு வந்த பெருமை ''சிரிப்பிற்கு ''உண்டு .
கொஞ்சம் சிரிங்க பாஸ்

நாங்கள் எப்பவுமே இப்படித்தான் ஒரே மாதிரி பாஸ். உங்களுக்கு புதுசா தெரிய காரணம் புதிய சூழ்நிலை,நல்ல நட்பு.

vasudevan31355
20th August 2014, 10:03 AM
ராஜேஷ் சார்,

'இன்றைய ஸ்பெஷலை'க் கண்டிப்பாகப் பாருங்கள். உங்களுக்காகவே தயாராகிறது.

Gopal.s
20th August 2014, 10:12 AM
காதலிக்க நேரமில்லை வயது 50
நான் முகனூலில் எழுதியது இங்கே பதியலாமா ?? கோபால் ஜி கோபிப்பார்
சரி இருந்தாலும் திட்டு வாங்கி கொள்ளுவோம்

ராஜேஷ்
(rajesh venkatasubramanian)

நான் ஏம்பா கோச்சுக்க போறேன்? இப்ப கூட பாரு,உன் சார்பிலே,கர்ம சிரத்தையாக ,இதை ரவி திரியில் பதிச்சுட்டு வரேனாக்கும்..உன் புது நண்பர்களில் யாரோதான் என்னை பற்றி தவறாக pm இல் போட்டு கொடுக்கிறார்கள் போல .:???:

chinnakkannan
20th August 2014, 10:22 AM
ஹாய் ஆல் குட்மார்னிங்க்..

ஜஸ்ட் ஒரு ப்ரசண்ட் சொல்றதுக்கு வந்தேன்..ஆமாம் ராத்திரி 55 இப்போ 63 ஒரே ராவுல 8 பெக்கமா; சாரி 8 பக்கமா..

இருப்பினும் தனுஜா கொடுத்த்மைக்கு வாசு சாருக்கு நன்றி

//தனுஜா ஒரு செயின் ஸ்மோக்கர். (அப்படியே சி.க. கேட்பதற்கு முன்னாடியே அவருக்குப் பிடித்த வயதான படத்தையும் போட்டாச்சு// எனக்குப் பிடிச்சன்னு நான் எங்க சொன்னேன்..

ஜெயந்தியின் படங்களைக் கொடுத்த எஸ்.வி சாருக்கு நன்றி..
மத்தபடி ராகவேந்தர் சாரோட பொங்கும் பூம்புனல், மதுண்ணாவோட பாட்ஸ் ராஜேஷோட ரைடப்ஸ், கோபாலின் போஸ்டிங்க்ஸ் மன்னிக்க இண்ட்ரஸ்டிங்க் போஸ்டிங்க்ஸ் (ஏதாவது கோச்சுக்கிட்டாருன்னா..அதான் உஷாரா சொல்லிட்டேன்) .(ஹிந்திப் பாட்டுக் கேட்டல் அண்ட் அதர் சாங்க்ஸ் போஸ்ட் போண்ட் டு ஃப்ரைடே) எல்லாத்துக்கும் நன்றி

படிச்சுட்டு மீண்டுவர்றேன்..:)

rajeshkrv
20th August 2014, 10:43 AM
நான் ஏம்பா கோச்சுக்க போறேன்? இப்ப கூட பாரு,உன் சார்பிலே,கர்ம சிரத்தையாக ,இதை ரவி திரியில் பதிச்சுட்டு வரேனாக்கும்..உன் புது நண்பர்களில் யாரோதான் என்னை பற்றி தவறாக pm இல் போட்டு கொடுக்கிறார்கள் போல .:???:

உங்களை பத்தி சொல்ல தைரியம் யாருக்கு ஜி இருக்கு.. சும்ம கிண்டலுக்கு சொன்னேன்..

vasudevan31355
20th August 2014, 11:13 AM
உங்களை பத்தி சொல்ல தைரியம் யாருக்கு ஜி இருக்கு.. சும்ம கிண்டலுக்கு சொன்னேன்..

எனக்கிருக்கு ராஜேஷ்ஜி...எனக்கிருக்கு.

vasudevan31355
20th August 2014, 11:14 AM
இன்றைய ஸ்பெஷல் (57)

'இன்றைய ஸ்பெஷலி'ல் நான் மிக மிக மிக அனுபவித்துத் தரும் பாடல் இது. எனக்குப் பிடித்த பி.சுசீலா அவர்களின் டாப் 5 இல் இடம் பிடித்த பாடல். பைத்தியம் பிடித்து அலைவேன் இந்தப் பாடல் என்றால். இன்றைய ஸ்பெஷல் 50- அவது சிறப்புப் பதிவாக பதிவிட நினைத்திருந்தேன். ஆனால் நேரமின்மையால் மிஸ் ஆகி விட்டது.

http://www.thehindu.com/multimedia/dynamic/01577/08cp_Addhutha_Veet_1577005e.jpg

படம்: அடுத்த வீட்டுப் பெண் (முழு நீள காமெடி)

ஆண்டு: 1960

நடிகர்கள்: டி.ஆர். ராமச்சந்திரன், அஞ்சலிதேவி, ஏ.கருணாநிதி, தங்கவேலு, 'பிரண்ட்' ராமசாமி, சட்டாம்பிள்ளை, பக்கிரிசாமி, (முக்கியத்துவம் கொடுத்து தனியே டைட்டிலில் போடுவார்கள்) எம்.சரோஜா, முத்து லஷ்மி

ஒளிப்பதிவு: நாகேஸ்வரராவ்

தயாரிப்பு பேனர் : அஞ்சலி பிக்சர்ஸ்

தயாரிப்பு, இசை: ஆதி நாராயணராவ்.

இயக்கம்: 'வேதாந்தம்' ராகவய்யா

பாடலென்றால் சாதாரணப் பாடல் அல்ல. சக தோழியருடன் அழகுப் பெட்டகம் அஞ்சலிதேவி மாடர்ன் உடை அணிந்து சைக்கிளில் பயணித்துக் கொண்டே பாடும் உல்லாச இன்பப் பாடல். இனிமை வண்டி வண்டியைக் கொட்டிக் கிடக்கிறது இந்த சைக்கிள் வண்டிப் பாட்டிலே.

என்ன வளமையான, தெள்ளத் தெளிவான, உலகில் உள்ள எல்லா குரல்களுக்கும் முதன்மையான, முழுமையான குரல் இசை அரசியினுடையது! அப்படியே கல்கண்டாக, தேனாறாக, அமிர்தமாக
காதில் பாய்ந்து கோலோச்சுகிறது இவர் குரல்!.

'அஹ்ஹஹாஹஹா ஓஹ்ஹஹ்ஹோஹோஹோ
அஹ்ஹஹ்ஹாஹஹா ஹஹ்ஹஹ்ஹா'

என்று ஒவ்வொரு முறையும் அவர் ஹம்மிங் செய்யும்போது சொர்க்கம் வரை சென்று சென்று வந்து விடுவோம். வார்த்தைகள் வர்ண ஜாலமாய் ஜொலிக்கிறது இந்தத் தங்கக் குரல் கொண்ட அதிசயப் பெண்மணியால். பாடகிக் கண்மணியால்.

படப்பிடிப்பு அருமை. படம் டைட்டில் முடிந்தவுடன் இசையரசியின் இனிமையான குரலோடு, அஞ்சலி தேவியின் சைக்கிளோடு சேர்ந்து நாமும் பயணிக்க ஆரம்பித்து விடுவோம். உற்சாகம் கரை புரண்ட காவேரியாய் நம் மனதில் பெருக்கெடுத்து ஓடும். சைக்கிள் பெல்களின் டிரிங் டிரிங் சப்தத்துடன் பாடல் துவங்கும். அஞ்சலி ஹீரோயின் என்பதால் முன்னால் அவரை சைக்கிள் ஓட்ட வைத்து விடுவார்கள். எம்.சரோஜா உள்ளிட்ட அஞ்சலியின் தோழிகள் அவரைப் பின் தொடர்ந்து வருவார்கள். (எம்.சரோஜா கொஞ்சம் முன்னாடி வருவார்). தோழியரின் கோரஸ் ஆர்ப்பாட்டம் ஆரம்பமாகி பாடல் துவங்கும்.

அஞ்சலி தலைமுடியின் வலது பக்க ஜடை கழுத்தின் முன்னால் புரள, இடது பக்க ஜடை முதுகில் ஒய்யாரமாக இருக்கும். காதுகளில் ஜிமிக்கி தோடுகள் அட்டகாசமாய் இருக்கும் இவருக்கு. இவரது சில ஷாட்களை தனியேவும், தோழியர் காட்சிகளைத் தனியேவும் எடுத்திருப்பார்கள். அஞ்சலி நிஜமாகவே சைக்கிள் ஓட்டிக் கொண்டு வருவார். ஸ்க்ரீன் ப்ரொஜெக்ஷன் சீன் அவ்வளவாக இருக்காது. நேச்சுரலாக சைக்கிள் ஓட்டியபடி காட்சிகள் அதிகம் இருக்கும். அழகான பூங்காவை சைக்கிளில் சுற்றியபடி வலம் வருவார்கள். பின் சாலையில் சைக்கிள் பயணம் தொடரும்.

பாடலின் மூன்றாவது சரணத்தில் சைக்கிளில் வேகம் அதிகம் எடுப்பார்கள் அந்தப் பாடலின் வரிகளுக்கேற்ப ('பட்டம் போலே வேகமாய் பறந்து செல்லுவோமே')

ஒரு பிகர் தலையில் கர்சிப் கட்டி கூலிங் கிளாஸ் அணித்ந்து அட்டகாசமாய் இருக்கும். (கோபால் கவனிக்க) பாடலின் முடிவில் தோழியர் ஒவொருவரும்

வஹ்வவ்வாஹ்வவா வவவவ்வவ்வாஹ்
வஹ்வவ்வாஹ்வவா வவவவ்வவ்வாஹ்

(அப்பாடி! இதை டைப் அடிப்பதற்குள் நான் பட்ட அவஸ்தை!)

என்று குரல் கொடுத்துக் கொண்டு வருவது செம ஜோர்.

பாடலின் கடைசி வரை அஞ்சலியின் இரட்டை ஜடைப் பின்னல் ஒன்று முன்னாலேயும், ஒன்று பின்னாலேயும் இருக்கும். மாறாவே மாறாது. அந்த அளவிற்கு பாடலின் காட்சிகளில் கண்டின்யூட்டி கெடாமல் கண்கொத்திப் பாமபாய்ப் பார்த்து கவனித்துச் செதுக்கியிருப்பார்கள்.

எத்தனயோ சைக்கிள் வண்டிப் பாடல்கள் உண்டு. அதில் 'வந்த நாள் முதல்' பாடலையும், 'இன்றைய ஸ்பெஷல்' பாடலையும் அடித்துக் கொள்ள எந்தக் காலத்திலேயும் தமிழில் பாடல்கள் இல்லை. (வினோத் சார்! 'பணக்காரக் குடும்பத்தை'த் தேட வேண்டாம்)

'இன்றைய ஸ்பெஷலி'ல் நான் அனுபவித்துப் போட்ட பாடல் இது.

http://i1.ytimg.com/vi/KAlOJAbuZc0/0.jpg

இனி பாடலின் முழு வரிகள்.

ஹஹஹஹாஹஹா ஹஹஹஹஹா
ஹஹஹஹாஹஹா ஹஹஹஹஹா

ஹோய்

கன்னித் தமிழ் மணம் வீசுதடி
காவியத் தென்றலுடன் பேசுதடி
கன்னித் தமிழ் மணம் வீசுதடி
காவியத் தென்றலுடன் பேசுதடி

பாரிலே பூவிலே காணும் இன்பம் பாராய்
வாழ்விலே கொஞ்சிடும் வண்டுகளும் ஜோராய்
ஓ ஓ ஓ வண்டுகளும் ஜோராய்

அஹ்ஹஹாஹஹா ஓஹ்ஹஹ்ஹோஹோஹோ
அஹ்ஹஹ்ஹாஹஹா ஹஹ்ஹஹ்ஹா

பாரிலே பூவிலே காணும் இன்பம் பாராய்
வாழ்விலே கொஞ்சிடும் வண்டுகளும் ஜோராய்
ஓ ஓ ஓ வண்டுகளும் ஜோராய்

அலை மோதுதே நிலை மாறுதே
ஆனந்த சோலை இதுவே

(கோரஸ்)

கன்னித் தமிழ் மணம் வீசுதடி
காவியத் தென்றலுடன் பேசுதடி
கன்னித் தமிழ் மணம் வீசுதடி
காவியத் தென்றலுடன் பேசுதடி

சோலைக்குயில் மாலையில் இன்னிசையும் பாட
நீலமயில் ஆவலுடன் தோகை விரித்தாட
ஓ ஓ ஓ தோகை விரித்தாட

அஹ்ஹஹாஹஹா ஓஹ்ஹஹ்ஹோஹோஹோ
அஹ்ஹஹ்ஹாஹஹா ஹஹ்ஹஹ்ஹா

புள்ளி மான்கள் அங்கும் இங்கும் துள்ளித் துள்ளி ஓட
பொங்கும் கதிரவன் தங்கத் தகடாய் பூவாரம் போல் கூட
ஓ ஓ ஓ பூவாரம் போல் கூட

அலை மோதுதே நிலை மாறுதே
ஆனந்த சோலை இதுவே

(கோரஸ்)

கன்னித் தமிழ் மணம் வீசுதடி
காவியத் தென்றலுடன் பேசுதடி

வட்டம் போடும் சிட்டுகளும் வானகத்தில் நாமே
பட்டம் போலே வேகமாய் பறந்து செல்லுவோமே
பறந்து செல்லுவோமே

அஹ்ஹஹாஹஹா ஓஹ்ஹஹ்ஹோஹோஹா
அஹ்ஹஹ்ஹாஹஹா ஹஹ்ஹஹ்ஹா

சிட்டு போலே உல்லாசமாய் ஓடி ஆடுவோமே
இன்னல் தீர நாமே இன்ப கானம் பாடுவோமே
இன்ப கானம் பாடுவோமே

அலை மோதுதே நிலை மாறுதே
ஆனந்த சோலை இதுவே

கன்னித் தமிழ் மணம் வீசுதடி
காவியத் தென்றலுடன் பேசுதடி

(கோரஸ்)


http://www.youtube.com/watch?v=ehT_vQ-SgP4&feature=player_detailpage

rajeshkrv
20th August 2014, 11:26 AM
Adutha veetu penn arumai vasu Ji

Morning detaileda ezhudhuren

vasudevan31355
20th August 2014, 11:35 AM
Thanks Rajeshji. ungalukku thoonga neramaayiduththunnu ninikkiren. thontharavu panninathukku sorry. night paarkkalaam. bye.

chinnakkannan
20th August 2014, 12:06 PM
hi vasu sir.. கன்னித் தமிழ் பாட்டு நன்றி.. பட் இதுலயே தானே இன்னொரு பாட் வித் ஜபானீஸ் காஸ்ட்யூம் மன்னவா வா வா வாவா கிழவான்னு வரும்..

பாக்யலஷ்மில வர்ற கோரஸ் பாட்டு பட ஆரம்பத்துல வரும் என்று நினைக்கிறேன்..கேட்க மட்டும் செய்தது..டிவிடியில் இல்லை டிவியிலும் வரவில்லை..என்ன பாட்டாக்கும்.. கல்லூரி ராணிகாள் உல்லாசத் தேனிகாள் பொன்னான இந்த மாலை நேரமே..

Gopal.s
20th August 2014, 12:10 PM
[QUOTE=vasudevan31355;1157935]இன்றைய ஸ்பெஷல் (57)
'இன்றைய ஸ்பெஷலி'ல் நான் மிக மிக மிக அனுபவித்துத் தரும் பாடல் இது. எனக்குப் பிடித்த பி.சுசீலா அவர்களின் டாப் 5 இல் இடம் பிடித்த பாடல். பைத்தியம் பிடித்து அலைவேன் இந்தப் பாடல் என்றால். இன்றைய ஸ்பெஷல் 50- அவது சிறப்புப் பதிவாக பதிவிட நினைத்திருந்தேன். ஆனால் நேரமின்மையால் மிஸ் ஆகி விட்டது

(QUOTE)

Wah! Vasu ,young voice of our Suseela,My Favourite. By the way, here after I want to be a dictator. All Suseela songs should be dedicated only to me in my name.(If you want,I will get it in writing from Suseela.

Gopal.s
20th August 2014, 12:12 PM
hi vasu sir.. கன்னித் தமிழ் பாட்டு நன்றி.. பட் இதுலயே தானே இன்னொரு பாட் வித் ஜபானீஸ் காஸ்ட்யூம் மன்னவா வா வா வாவா கிழவான்னு வரும்..

பாக்யலஷ்மில வர்ற கோரஸ் பாட்டு பட ஆரம்பத்துல வரும் என்று நினைக்கிறேன்..கேட்க மட்டும் செய்தது..டிவிடியில் இல்லை டிவியிலும் வரவில்லை..என்ன பாட்டாக்கும்.. கல்லூரி ராணிகாள் உல்லாசத் தேனிகாள் பொன்னான இந்த மாலை நேரமே..

மன்னவா வா வா வாவா ம கிழவான்னு வரும்..

Richardsof
20th August 2014, 12:29 PM
KANNADA ACTOR DR.RAJKUMAR'S SON PUNEETH .MARRIAGE

http://i62.tinypic.com/ehj81z.jpg

http://youtu.be/GrmF1PIPT78

vasudevan31355
20th August 2014, 12:32 PM
நன்றி கார்த்திக் சார்.

'மணமகன் அழகனே' தங்களுக்குப் பிடிக்கும் என்று எனக்குத் தெரியும்.

நேற்று 'தங்கச் சுரங்கம்' கட்டழகுப் பாப்பா தங்கள் கைப்பக்குவத்தில் சுவையோ சுவை. வெகு நேர்த்தி. பார்க்க ரதி போல் இருப்பதினால்தான் பாரதி. பாரதியைப் பார்த்துக் கொண்டே இருக்கும் 'அதி சின்னப்பயல்' இனிய, என் செல்ல நண்பரும் இங்குண்டு. தலைவரின் மூன்றாவது வண்ணப்படம் நினைவாற்றலுக்கு நன்றி!

நிஜமாகவே நீரில் நனைந்து சேறு கழுவப்பட்டவுடன் பாரதி மேகம் பிளந்த வெண்ணிலவு போல்தான் இருப்பார். தலைவரின் ரகளையில் பாரதிக்கு மூச்சு திணறும். முகத்தை அப்படி இப்படி திருப்புவார். அந்த நேரம் மேக்-அப் கலைந்தாலும் அவ்வளவு அழகாகத் தெரிவார்.

பாடகர் திலகத்தின் அந்த நக்கல் சிரிப்பு. அருமை.

vasudevan31355
20th August 2014, 12:35 PM
ராஜ்குமார் மகன் புனித் திருமணத்தில் எங்கள் புனித 'ராஜா'. சூப்பர் வினோத் சார். நன்றி!

vasudevan31355
20th August 2014, 12:37 PM
hi vasu sir.. கன்னித் தமிழ் பாட்டு நன்றி.. பட் இதுலயே தானே இன்னொரு பாட் வித் ஜபானீஸ் காஸ்ட்யூம் மன்னவா வா வா வாவா கிழவான்னு வரும்..

பாக்யலஷ்மில வர்ற கோரஸ் பாட்டு பட ஆரம்பத்துல வரும் என்று நினைக்கிறேன்..கேட்க மட்டும் செய்தது..டிவிடியில் இல்லை டிவியிலும் வரவில்லை..என்ன பாட்டாக்கும்.. கல்லூரி ராணிகாள் உல்லாசத் தேனிகாள் பொன்னான இந்த மாலை நேரமே..

சி.க.சார்,

முரசு டிவியில் போட்டு சலிக்க வைத்து விட்டார்கள்.


http://www.youtube.com/watch?v=JAb6EUr1zYs&feature=player_detailpage

vasudevan31355
20th August 2014, 12:41 PM
மன்னவா வா வா வாவா ம கிழவான்னு வரும்..

அவுருதான் டபாய்க்கிறார்னா நீங்களும் ஏமாந்துட்டீங்களே கோபால். oh! what a pity!

chinnakkannan
20th August 2014, 01:46 PM
//முரசு டிவியில் போட்டு சலிக்க வைத்து விட்டார்கள்.// எனக்கு முரசு ஒலிப்பதில்லை.. நன்றி வாசுசார்..

பாரதி.. கட்டழகுப்பாப்பா கண்ணுக்குவை விட சந்தனக் குடத்துக்குள்ளேயில் இன்னும் ஓ.கே. கருப்பு வெள்ளையில் ஜில்லென்று காற்று வந்ததோ (அவர் தானே) வெள்ளிமுத்துக்கள் (கடல் பாட்டெல்லாம் அலசியிருப்பாங்களே) கூட் ஓகே..
அ.எ.ஒ.மவில் மலர் எது ஓகே..அடுத்து்முழுக்கை போட்டு ஆடும் பாட்டு பிடிக்கும்..முழுக்கை பிடிக்காது..(சந்தோஷமா சார்)

அவுருதான் டபாய்க்கிறார்னா// இப்படியே கைப்புள்ளய உசுப்பேத்தி விடுங்க.. சார். .நான் என்னைச் சொன்னேன் :)

chinnakkannan
20th August 2014, 01:49 PM
தெலுங்குல்ல எனக்குப் புடிச்ச படம் சப்த பதி.. ரொம்ப நாளைக்கு(வருஷங்களுக்கு) முன்னால விமர்சனம் எழுதியிருந்தேன்..தேடி எடுத்து சாயந்திரம் போடறேன்..நெமிலிகி நெரிதகி நடதளிரே.. ந்னு பாட்டு.. தெரியுமா..

mr_karthik
20th August 2014, 03:19 PM
இந்த நேரத்தில் எனது ஹிந்தி பாடல்களின் பரிச்சயத்திற்கு வழி வகுத்த ,தமிழின் மாபெரும் ஆளுமை ஒன்றை குறிப்பிடாமல் இருக்கவே முடியாது.



விஸ்வநாதன் -ராமமூர்த்தி இருவருக்கும் இணைத்து இசைக்காக பாரத் ரத்னா கொடுப்பது அவசியம்.

ஆனால் விஸ்வநாதன் அவர்களுக்கு தனியாக கொடுப்பதென்றால் ,தேசிய ஒருமைப்பாட்டு விருது கொடுக்க பட்டே ஆக வேண்டும். மத்திய அரசாலும் முடியாத சாதனையான , ஹிந்தி எதிர்ப்பாளர்களாகிய எங்களை போன்றவர்களை ஹிந்தி பட,பாடல் பிரியர்களாக மாற்றி ,ஹிந்தி பிரசார சபையை நோக்கி ஆரம்ப 70 களில் ஓட வைத்தவராயிற்றே?



ஒரு ஜி.ராமநாதன் முடிவு பெரும் காலத்தில் தக்க சமயத்தில் விஸ்வநாதன்-ராமமூர்த்தி,கே.வீ.மகாதேவன் எழுச்சி பெற்ற மாதிரியோ, இளையராஜா சற்றே stale ஆன போது முற்றிலும் புதுமையாய் ரகுமான் எழுச்சியுற்ற மாதிரியோ இல்லாமல் 71 முதல் 76 வரை ஒரு பெரிய வெற்றிடம், தமிழ் இசை தரை மட்டம் தொட்டது.



இதற்கு முழு பொறுப்பும் ,இரு திலகங்கள் மற்றும் அவர்களை தொங்கி கொண்டிருந்த ஒரு இசையமைப்பாளர், அவர்களால் ஆதரிக்க பட்ட ஒரு over -used நளினம் ,nuances அற்ற பாடகர். தமிழர்களின் தடித்த தோல்.அதில் ஒரு திலகமாவது கொஞ்சம் முழித்து, தன்னுடைய முனைவில் புதிய பாடலாசிரியர்கள்,பாடகர்கள் ,நடிகைகள் என்றாவது புது ரத்தம் பாய்ச்சினார். ஆனால் இன்னொரு திலகமோ, நடிப்பை தவிர வேறொன்றறியேன் பராபரமே ,என்று தனது 150 ஆவது படத்திற்கே டப்பிங் ரேஞ்சில் பாடல்கள் அமைந்ததை பொருட்படுத்தாமல் , தனது படங்கள் பாதிக்க பட விட்டார். மகாதேவன், முழு நேரம் தெலுங்குக்கு தாவ, சங்கர்-கணேஷ்,விஜய பாஸ்கர் என்று சில்லறைகளின் கொட்டம்.



இளைய ராஜா வந்து,தமிழ் பட உலகையும், தமிழையும் முழுதாக ஹிந்தி பக்கம் தாவ விடாமல் ரட்சித்தார்.

1970 - 76 வரை ( ஸாரி, 75 வரைதான், 76-ல்தான் ரட்சிக்க இசைக்கடவுள் வந்துவிட்டாரே) நீங்கள் சொன்னது முற்றிலும் உண்மை, உண்மையைத்தவிர வேறொன்றுமில்லை (உங்களுக்கும் உங்களைப்போன்ற சிலருக்கும் மட்டும்)

மேற்குறிப்பிட்ட காலகட்டத்தில் டி.கே.ராமமூர்த்தி உயிருடன்தான் இருந்தார். ஏன் செத்துக்கொண்டிருந்த இசையைக் காப்பாற்ற முன்வரவில்லை?. (என்று யாரும் கெட்டுவிடக்கூடாது . அதற்கு ரெடிமேட் பதில் உண்டு. 'மார்கெட்டிங் தெரியாது'. தாஜா பண்ணத்தெரியாது என்று). நானில் துவங்கி தங்க சுரங்கம் வரை வாழ்வளித்த ராமண்ணாவையே ஏன் சொர்க்கத்தில் கோட்டைவிட்டார் என்று தெரியவில்லை. சங்கர்கணேஷ், வி.குமார், விஜயபாஸ்கர் இவர்களையே வளரவிட்டு வேடிக்கை பார்த்த விஸ்வநாதன் தன முன்னாள் நண்பருக்கு இடைஞ்சல் செய்திருப்பாரா?.

சரி இந்த காலகட்டத்தில் விஸ்வநாதனின் குப்பைகளைப் பார்ப்போம். சொர்க்கம், எங்கிருந்தோ வந்தாள், எங்கள் தங்கம், குமரிக்கோட்டம், காவியத்தலைவி, பிராப்தம், சுமதி என் சுந்தரி பாடல்களை மனிதன் கேட்பானா. இருதுருவம் 50 நாட்களாவது ஓடியதற்கு முக்கிய காரணம் 'தேருபாக்க வந்திருக்கும் சித்திரப்பெண்ணே' என்று என்னைப்போன்ற சில கிறுக்கன்கள் சொல்வதையெல்லாம் கணக்கில் எடுத்துக்கொள்ளக்கூடாது.

குலமா குணமா படத்தில் கே.வி.மகாதேவன் இசைத்த \மாத்தூரு ராமக்கா' மற்றும் 'சொர்க்கத்தில் மயங்கும் மயக்கம்' பாடல்களுக்கு ஏன் ஆஸ்கார் தரவில்லையென்பது பில்லியன் டாலர் கேள்வி. இவற்றோடு ஒப்பிடும்போது சவாலே சமாளி, சுமதி என் சுந்தரி பாடல்கள் குப்பையில் வீசப்பட வேண்டியவையே.

வெளிநாட்டில் எடுக்கப்பட்ட படங்களில் சிவந்த மண், உலகம் சுற்றும் வாலிபன், நினைத்தாலே இனிக்கும் அளவுக்கு வேறு யாரும் சிறந்த இசையைத்தரவில்லை என்று சில பைத்தியக்காரர்கள் சொல்லக்கூடும். அதை சீரியசாக எடுத்துக்கொள்ளத்தேவையில்லை. அல்லது வழக்கம்போல ரெடிமேட் பதில் "அவையெல்லாம் அவரது முன்னாள் நண்பர் 1958-லேயே போட்டுவைத்த ட்யூன்கள்".

இந்த காலகட்டத்தில் (70-75) எத்தனை குப்பைகள். 'நல்லதொரு குடும்பம் ஒரு பல்கலைக்கழகம்' ஒரு நாராசம். 'என் உள்ளம் உந்தன் ஆராதனை' கேட்க சகிக்காது. 'மலரே குறிஞ்சி மலரே' தூ... பாட்டா அது.

'அவளுக்கென்று ஓர் மனம்', 'அவள் ஒரு தொடர்கதை', 'அபூர்வ ராகங்கள்', 'அவர்கள்', மன்மத லீலை' சிடிக்களைஎல்லாம் இப்போதுதான் நெருப்பில் போட்டுவிட்டு வருகிறேன்.

ஆராதனா உள்பட பல ஹிந்தி ரீமேக் படங்களுக்கு இசையமைத்தும் அவற்றிலுள்ள ஒரு ட்யூனைக்கூட தொட்டதில்லை என்று சில பைத்தியங்கள் சொல்லும். அதையெல்லாம் காதில் வாங்கத் தேவையில்லை.

தேசிய ஒருமைப்பாட்டு விருது வழங்குவதென்றால் முதலில் வேதா, பின்னர் சங்கர்கணேஷ், பின்னர் கே.வி.எம். என்று வழங்க வேண்டும். ஹிந்தி ட்யூன்களை அப்படியே இறக்குமதி செய்ததற்காக. (ஆராதனா வின் 'கும்-கு-நாரஹே' யை காப்பி பண்ணி 'எங்கவீட்டு தங்கத்தேரில் எந்த நாளும் திருவிழா') . இவர்தான் அனாதை ஆனந்தன் படத்துக்காக மயிரிழையில் ஆஸ்கரை தவறவிட்டவர். (அதிலும் கூட 'கேரவன்' பாடலை காப்பி பண்ணி 'கண்ணாடி முன்னாடி தள்ளாடி வண்டாக ஆடட்டுமா') . ஏ.பி.என்னின் புராணப்படங்களையே குன்னக்குடியிடம் கோட்டைவிட்டு நின்றவர். கேட்டால் தெலுங்கில் பிஸி என்ற காரணம்.

ஆனால் கிறுக்கர் விஸ்வநாதன் செய்ததென்ன 'முத்துக்குளிக்க வாரிகளா' மெட்டை தமிழிலிருந்து ஹிந்திக்கு ஏற்றுமதி செய்தார். அது தப்பில்லையா?. .

76-ல் தமிழ் இசையைக் காக்க வந்தவர், வந்தபின்னும் 'குர்பானி', ஹம கிஸிஸே கம் நஹி' பாடல்கள் தமிழகத்தை ஆளத்தான் செய்தன என்று யாராவது சொன்னால் ஒப்புக் கொள்ளக்கூடாது.

Gopal.s
20th August 2014, 03:46 PM
கடவுளிடம் ஒரே ஒரு வரம் கேட்பேன்.அடுத்த பிறவியிலாவது,நல்லவர்களுடனும்,நண்பர்களுடனும் என்னை மோத வைக்காதே.

ஆனால்,இப்பிறவியில்,வேறு வழியில்லை போல் இருக்கிறது.(கே.எஸ்.ஜி படம் போல இரு நல்ல சக்திகளுக்குள் மோதல்)



1960-1965 (65 out of 80 very Good ones)-ஒப்பிடும்போது,1966-1969(25 out of 64) தேய்ந்து விட்டது. 1965-1969 ஒப்பிடும் போது 1970-1975(9 out of 90) தரைமட்டம். சராசரியாக வருடத்திற்கு 75-80 நேரடி தமிழ் படங்கள் வந்த பூமியில் 15 படங்களுக்கு சராசரியாக இசையமைத்த பழுத்த அனுபவஸ்தர்,6 வருடத்தில் 90 படங்களில் 10% ,அதாவது குறிப்பிடும் படி 9 படங்கள்.



எங்கமாமா, ராமன் எத்தனை ராமனடி,குமரி கோட்டம்,சுமதி என் சுந்தரி,அவளுக்கென்று ஓர் மனம்,பட்டிக்காடா பட்டணமா,பொன்னூஞ்சல்,அபூர்வ ராகங்கள்,அவன்தான் மனிதன். (அம்புடுதேன். சிவந்த மண் -69. இன்னொன்று என்னை சுத்தமாக கவராத ஒன்று.மற்றொன்று 75க்கு அப்புறம்).சராசரி இசையில் இன்னும் நாலைந்து தேறலாம்.(ராஜபார்ட் ரங்கதுரை போல)



இது அப்போது உச்சத்திலிருந்த ஹிந்தி இசையோடு போரிட போதுமா?



1970-1975-ஏனோதானோ பின்னணி இசை. அவசரமாக ரெகார்ட் செய்தது போல பாடல்கள்.கற்பனையற்ற இசை. கத்திக் கொண்டு ட ட டா பாடி இசையமைப்பாளர்களின் கற்பனையை சிதைத்து கொண்டிருந்த வீண் கர்வியான பாடகர் திலகம்.அந்த மாதிரி ஒரு காலகட்டத்தில் தமிழ் நாட்டில் பள்ளி மாணவனாக இருந்தது துரதிர்ஷ்டம்.அவமானம்.

mr_karthik
20th August 2014, 04:13 PM
கடவுளிடம் ஒரே ஒரு வரம் கேட்பேன்.அடுத்த பிறவியிலாவது,நல்லவர்களுடனும்,நண்பர்களுடனும் என்னை மோத வைக்காதே.
குதர்க்க வாதம் செய்வது என்ற கொள்கையை விடாவிட்டால் எந்தப்பிறவியிலும் இப்படித்தான்.


1970-1975-ஏனோதானோ பின்னணி இசை. அவசரமாக ரெகார்ட் செய்தது போல பாடல்கள்.கற்பனையற்ற இசை. கத்திக் கொண்டு ட ட டா பாடி இசையமைப்பாளர்களின் கற்பனையை சிதைத்து கொண்டிருந்த வீண் கர்வியான பாடகர் திலகம்.அந்த மாதிரி ஒரு காலகட்டத்தில் தமிழ் நாட்டில் பள்ளி மாணவனாக இருந்தது துரதிர்ஷ்டம்.அவமானம்.

இசையின் மறுவடிவமான டி.கே.ராமமூர்த்தி, கே.வி.மகாதேவன் ஆகியோர் அப்போது இருக்கத்தானே செய்தார்கள்?. இசையென்றால் என்னவென்றே தெரியாத விஸ்வநாதன் பின்னால் ஓடவேண்டிய அவசியமென்ன?. இப்போது அவரை மட்டுமே குறைசொல்ல வேண்டிய தேவையென்ன?.

Gopal.s
20th August 2014, 04:37 PM
இசையின் மறுவடிவமான டி.கே.ராமமூர்த்தி, கே.வி.மகாதேவன் ஆகியோர் அப்போது இருக்கத்தானே செய்தார்கள்?. இசையென்றால் என்னவென்றே தெரியாத விஸ்வநாதன் பின்னால் ஓடவேண்டிய அவசியமென்ன?. இப்போது அவரை மட்டுமே குறைசொல்ல வேண்டிய தேவையென்ன?.

தனித்தியங்க முடியாதவர் தூக்கி எறிய பட்டு விட்டு பிறகு, அவருடைய தன்னம்பிக்கை அகன்றிருக்கும் .தங்க சுரங்கம் ,பெரு வெற்றி பெற்றிருந்தால் கதையே வேறு.(Like Sachin out of form)



மாமா- ஏனோ தெலுங்கிற்கு ஓடி போய் ,தூள் கிளப்பி கொண்டு அகில இந்தியாவை தெலுங்கு தேசம் திருப்பினார்.

madhu
20th August 2014, 05:22 PM
சிக்கா...
உங்களுக்காக சட்டுனு ஒரு பாட்டை போஸ்ட் செய்தேன். அது ஏற்கனவே போட்டாச்சு என்று நண்பர் சொன்னதால் மாற்றி விட்டேன்.

அதனால் உங்களுக்குப் பிடிக்கும்னு இந்தப் பாட்டு

http://youtu.be/0hlqlHoejsg?list=UUoE4R1j-TVsi7DrOTIgGu7A

Gopal.s
20th August 2014, 05:26 PM
கார்த்திக்,மன்னிக்கவும்.இன்னிக்கு ஹிந்தி பட பாடல்கள் போட்ட flow வில் வயிற்றெரிச்சல் வெளியாகி பீரிட்டு விட்டது. இனி இந்த சப்ஜெக்ட் தவிர்த்து விடுகிறேன்.

Gopal.s
20th August 2014, 05:26 PM
[QUOTE=madhu;1157990]சிக்கா.. சிக்கா..

உங்களுக்காக பாவாடை தாவணியில் தலை பின்னி பூ வைத்து பொட்டு வைத்த ஜோதிலட்சுமியுடன் ரவிச்சந்திரன் ..

ஆடி முடிந்து ஆவணி வந்தாச்சு இல்லையா.. அதனால்தான் தாவணி போட்டிருக்காங்களாம்.

பட்டம் விட்டது போலே பறக்குதம்மா உன் மேலாடை
குடை ராட்டினம் போலே சுற்றுதம்மா உன் பாவாடை

டி.எம்.எஸ்ஸும் ஈஸ்வரியும் கலக்குறாங்க

(QUOTE)

pottachchu sir.

madhu
20th August 2014, 05:27 PM
தெலுங்குல்ல எனக்குப் புடிச்ச படம் சப்த பதி.. ரொம்ப நாளைக்கு(வருஷங்களுக்கு) முன்னால விமர்சனம் எழுதியிருந்தேன்..தேடி எடுத்து சாயந்திரம் போடறேன்..நெமிலிகி நெரிதகி நடதளிரே.. ந்னு பாட்டு.. தெரியுமா..

http://youtu.be/hb0j7N7a6fA

madhu
20th August 2014, 05:36 PM
[QUOTE=madhu;1157990]சிக்கா.. சிக்கா..

உங்களுக்காக பாவாடை தாவணியில் தலை பின்னி பூ வைத்து பொட்டு வைத்த ஜோதிலட்சுமியுடன் ரவிச்சந்திரன் ..

ஆடி முடிந்து ஆவணி வந்தாச்சு இல்லையா.. அதனால்தான் தாவணி போட்டிருக்காங்களாம்.

பட்டம் விட்டது போலே பறக்குதம்மா உன் மேலாடை
குடை ராட்டினம் போலே சுற்றுதம்மா உன் பாவாடை

டி.எம்.எஸ்ஸும் ஈஸ்வரியும் கலக்குறாங்க

(QUOTE)

pottachchu sir.

மன்னிச்சுக்குங்க நண்பரே.. மாற்றி விட்டேன்.

Gopal.s
20th August 2014, 05:55 PM
[QUOTE=Gopal,S.;1157992]

மன்னிச்சுக்குங்க நண்பரே.. மாற்றி விட்டேன்.

அச்சச்சோ ,சும்மா information தான் மது. ரவி-ஜோதி பாட்டை எவ்வளவு போட்டு,எவ்வளவு முறை பார்த்தாலும் சுகமே. திருப்பி போடுங்கள்.

mr_karthik
20th August 2014, 05:57 PM
டியர் வாசு சார்,

இன்றைய ஸ்பெஷலில் அடுத்தவீட்டுப் பெண் படத்தின் பாடல் நல்ல தேர்வு. அந்தநாள் முதல் இந்தநாள் வரை தமிழ்ப்படங்களுக்கு ஒரு சென்ட்டிமென்ட் உண்டு. அது நகைச்சுவை படங்கள் என்றாலே பாடல்களும் சூப்பராக அமைந்துவிடும். அடுத்தவீட்டுப்பெண்ணும் அதில் சேர்த்தி.

வனிதாமணியே, மாலையில் மலர்ச்சோலையில், கண்ணாலே பேசிப்பேசி கொல்லாதே என்று பி.பி.எஸ் கலக்கியிருப்பார். அதுபோல ஒன்றுதான் இந்த சைக்கிள் பாடல். நல்ல செலக்ஷன், வழக்கம்போல தங்களின் நல்ல விரிவுரை.

மகளிரின் சைக்கிள் பாடல் என்றதும் நண்பர் வினோத் தர்மம் தலைகாக்கும் படத்தின் 'அழகான வாழை மரத்தோட்டம்' பாடலுடன் வருவார் என்று நினைத்தேன். (ஐயோ நானே எடுத்துக்கொடுத்து விட்டேனோ)......

madhu
20th August 2014, 06:18 PM
கோபால்ஜி...

மறுபடி ரவி-ஜோதி பாட்டு இதோ

http://youtu.be/Wk9Rzk5p3qU

மூன்றெழுத்தில் ஜெயலலிதா ஆட ஈஸ்வரி பாட... எங்கே.. எங்கே.. கே.. கே.. கே...

( Hope இந்தப் பாட்டாச்சும் ஏற்கனவே போட்டதாக இல்லாமல் இருக்குமா ? ??

உடனடி தேவை.. ஒரு INDEX )

http://youtu.be/eXHG7ltwMvk

mr_karthik
20th August 2014, 06:38 PM
போட்டாச்சா..... போடலையா.... போட்டாச்சுன்னுதான் நினைக்கிறேன்... இல்லையில்லை போடலைன்னுதான் தோணுது... போட்டமாதிரியும் இருக்கு... போடாதமாதிரியும் இருக்கு... நிஜமாகவே போடலையா... இல்லே, போட்டதை நாமதான் மறந்திட்டோமா... போட்டதுதான் போடாதமாதிரி தோணுதா... அல்லது போடாமலே போட்டமாதிரி நினைவுக்கு வருதா... போட்டதும் போடாததும் தெரியலையே....

Gopal.s
20th August 2014, 07:19 PM
இனி ராகவேந்தர் விருப்பம்.

இந்த பாடலின் அமைப்பு முற்றிலும் fusion என்று சொல்ல முடியாது.பெரும்பாலும் ஹிந்துஸ்தானி துவிஜாந்தி
(ஸ ரி 2,க 3ம1ப த 2ஸ --ஸ நி 2த 2ப ம 1க 3ம 1ரி 2க 2ரி 2ஸ )ஹரி காம்போதியின் ஜன்யம்.ராக மாலிகையாய்(எவ்வாறு நாணுவேன்) காபி. (சங்கருக்கு பிடித்தது துவிஜாந்தி-முகுந்தா முகுந்தா). இதில் உபயோகமான வாத்தியங்கள் சாரங்கி,வீணை,bassline ,ஹார்மோனியம்,தபேலா.

melody flow வில் ஹிந்துஸ்தானி பாணியே. ஆனாலும் subtle touches in interlude ,,bassline ,chords களின் தொடர்ந்த உபயோகம்,time signature ,pausing percussion இவை கொண்டு contemporary feel ஏற்படுத்தியுள்ளார்கள்.

சங்கர் மகாதேவனின் கார்வை குரல் ,கம்பீரம் கலந்தது.உரத்து high pitch செல்ல கூடியது.(டி.எம் .எஸ் அவர்களுக்கு அடுத்து இந்த குரலே விசேஷம்).அப்படியே இனிமையாய் மெதுவாய் ஓடும் ஆறு போல rendition .அழகாக தாள இடைவெளி,மௌனம்,நீரை நிறுத்தி நிறுத்தி பாய்ச்சுவது போன்ற (bisecting fluid flow )உன்னை காணாமல் என்பதை ஆலாபனை போல அழகு படுத்துவது என்று தன் பாட்டை தானே மெருகேற்றி உள்ளார்.

இதன் ஆரம்ப கொன்னக்கோல் (தா தை), supporting oral reciting கமல் சுத்தமாக செய்திருப்பார். எனக்கென்னவோ நம்மூர் ஜதி போலவே பட்டது.கதக் ஆ என்று தெரிந்தவர்கள் சொல்லலாம்.(கதக் feel இல்லை)ஹார்மோனியம் .தொடர்ந்து bassline ,சாரங்கியின் ஒலியோடு தொடங்கும் பாட்டு. மெதுவான ஆலாபனை போன்ற இடங்களில் வீணை,சாரங்கி , மிதமான வேக நடையில் தொடரும் தபலா ,நிசப்தங்கள்,விட்டு விட்டு தொடரும் சங்கதிகள் என்று நிறைய நகாசு.

கமல் ,எனக்கு தெரிந்து சிவாஜிக்கு அடுத்து இவர் ஒருவரே (திருவிளையாடல்) கொன்னக்கோல் வாயசைவை இவ்வளவு அழகாக செய்தவர்.நடனத்தில் கதக் கற்று நளினம் மிளிர இவர் செய்யும் அழகு.

ராகவேந்தர் சொன்ன மாதிரி ,விவரித்தால் மட்டும் போதாது. கண்டும் ரசியுங்கள்.கேட்டும் ரசியுங்கள்.

https://www.youtube.com/watch?v=qqtiFt0F_GU

Gopal.s
20th August 2014, 07:26 PM
போட்டாச்சா..... போடலையா.... போட்டாச்சுன்னுதான் நினைக்கிறேன்... இல்லையில்லை போடலைன்னுதான் தோணுது... போட்டமாதிரியும் இருக்கு... போடாதமாதிரியும் இருக்கு... நிஜமாகவே போடலையா... இல்லே, போட்டதை நாமதான் மறந்திட்டோமா... போட்டதுதான் போடாதமாதிரி தோணுதா... அல்லது போடாமலே போட்டமாதிரி நினைவுக்கு வருதா... போட்டதும் போடாததும் தெரியலையே....

பட்டம் விட்ட நாள் 6 ஜூலை 2014.(மதுர கானங்கள்-1) பதிவு-1412.பக்கம்-142.

mr_karthik
20th August 2014, 07:34 PM
நான் இஸ்லாம் மதத்தை தழுவியதற்கு என் அம்மாவே காரணம் என்று இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.


இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா, இஸ்லாம் மதத்தை தழுவினார் என்பது தமிழ் திரையுலகினர் பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. ஆனால், அது தொடர்பாக யுவன் விளக்கம் எதுவுமே கொடுக்கவில்லை.


யுவன், ஜெய் இருவருமே இஸ்லாம் மதத்தை தழுவி, ரம்ஜான் அன்று மசூதிக்கு சென்று தொழுகை நடத்திய படங்கள் இணையத்தில் வெளியானது.


இந்நிலையில் ஏன் இஸ்லாம் மதத்தை தழுவினார் என்ற கேள்விக்கு முதன் முறையாக பதிலளித்திருக்கிறார் யுவன். இது குறித்து யுவன் கூறியிருப்பது:


"எனது தந்தை தீவிரமான இந்து. ஒரு கண்ணாடி உடைந்தாலும் ஜோசியரைக் கூப்பிடும் அளவுக்கு மூட நம்பிக்கை உடையவர். எனது பெற்றோர் பல சம்பிரதாயங்களை பின்பற்றி வந்தனர். ஆனால் எனது சிறுவயது முதலே இவற்றையேலாம் தாண்டி ஒரு அமானுஷ்யமான சக்தி உலகை கட்டுப்படுத்துகிறது என்ற எண்ணம் எனக்குள் இருந்தது.


எனது மதமாற்றத்திற்கு முக்கியக் காரணமாக இருந்தது எனது அம்மாவின் மறைவு தான். வேலையின் காரணமாக மும்பைக்கு சென்றிருந்தேன். சென்னைக்கு வந்தபோது, அம்மா கடுமையாக இரும்பிக் கொண்டிருந்தைக் கண்டேன். நானும் எனது சகோதரியும் அவரை மருத்துவமனைக்கு அவசரமாக அழைத்துச் சென்றோம். நான் கார் ஓட்டிச் சென்றேன். நாங்கள் மருத்துவமனையை அடைந்தோம். அம்மாவின் கையைப் பிடித்துக் கொண்டு, அவர் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டிருந்தேன். ஆனால், அடுத்த நொடி அவரது கை விழுந்தது, அவர் காலமானார். நான் அழுது கொண்டிருந்த அதே நேரத்தில், அந்த சில நொடிகளில் அம்மாவின் ஆன்மா என்னவாகியிருக்கும் என்று யோசிக்க ஆரம்பித்தேன், ஏனென்றால் அவர் சில விநாடிகளுக்கு முன் தான் உயிரோடு இருந்தார்.


எனக்கான விடையைத் தேடிக் கொண்டிருக்கும்போது அல்லாவிடமிருந்து நேரடியாக அழைப்பு வந்தது என்றுதான் சொல்ல வேண்டும். அது ஒரு ஆன்மிக அனுபவம். எனது நண்பர் ஒருவர் அப்போது தான் மெக்காவிலிருந்து வந்திருந்தார். "நீ தற்போது மிகவுள் தளர்ந்துள்ளாய். இதிலிருந்து நீ மீண்டு வரவேண்டும்" எனக் கூறி ஒரு முசல்லாவை (பிரார்த்தனை செய்யும்போது பயன்படுத்தப்படும் பாய்) எனக்குத் தந்தார். "இந்தப் பாய் மெக்காவில் நான் அமர்ந்து பிரார்த்தனை செய்தது. இது மெக்காவை தொட்டு வந்த பாய். உன் மனது பாரமாக இருக்கும்போது இதில் உட்கார்ந்து பார்" என்றார். நான் அந்த பாயை எனது அறையின் ஒரு மூலையில் வைத்துவிட்டு மறந்துவிட்டேன்.


சில மாதங்கள் கழித்து எனது உறவினர் ஒருவருடன் அம்மாவைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்த்போது மிகவும் பாரமாக உணர ஆரம்பித்தேன். எனது அறையில் நுழைந்தேன், எதேச்சையாக அப்போது அந்தப் பாயைப் பார்த்தேன். எப்படி இவ்வளவு நாள் இதை மறந்துபோனோம் என நினைத்தேன்.


முதல் முறையாக அதில் அமர்ந்தவுடனேயே நான் அழ ஆரம்பித்தேன். ’எனது பாவங்களை மன்னியுங்கள் அல்லா’ என்று வேண்டினேன். இது 2012-ஆம் ஆண்டு நடந்தது. குரானை படிக்க ஆரம்பித்தேன். அது என்னை சீக்கிரத்தில் ஆட்கொண்டது. இஸ்லாமை பின்பற்றி, தொழுகை செய்வதைக் கற்றுக் கொண்டேன். ஜனவரி 2014-ல் மதமாறுவதைப் பற்றி உறுதியாக முடிவு செய்தேன்.


படங்களில் யுவன் ஷங்கர் ராஜா என்ற பெயரையே பயன்படுத்துவதால் இதுவரை அதிகாரப்பூர்வமாக எனது பாஸ்போர்ட் மற்றும் இதர கோப்புகளில் நான் எனது பெயரை மாற்றவில்லை. ஆனால் சில காலம் கழித்து அதைச் செய்வேன். இதைப் பற்றி எனது அப்பாவிற்குதான் நான் கடைசியாக தெரிவித்தேன். "நான் குரானை படிக்க ஆரம்பித்துள்ளேன். அது எனக்கு மன அமைதியைத் தருகிறது" என்றேன். அவர், "யுவன், நீ இஸ்லாமியனாக மாறுவதில் எனக்கு உடன்பாடில்லை" என்றார். ஆனால் எனது சகோதரரும் அவர் மனைவியும் எனக்கு ஆதரவளித்துள்ளனர்.


இது விசித்திரமாக இருக்கலாம். ஆனால் என் அம்மாவே என் கையைப் பிடித்துக் கொண்டு, "யுவன், நீ தனியாக இருக்கிறாய்.. இஸ்லாம் என்ற மரத்தின் கீழ் நீ நிற்க வேண்டும் என நான் விரும்புகிறேன்" என அவர் சொல்வதாக எனக்குப் பல முறை தோன்றியுள்ளது." என்று கூறியுள்ளார்.


நன்றி: தி.இந்து

Gopal.s
20th August 2014, 07:44 PM
என்னை பொறுத்த அளவில் மதங்களே தேவையற்ற ஒன்று. மாற்றங்கள் இன்னும் அபத்தமான கேலி கூத்து.மதம் மாறி இருந்தால் அன்னையின் மரணம் நிற்குமா?எதிர்பார்த்த மன அமைதிதான் கிட்டுமா? அதுவும் சுதந்திரமான இந்திய சூழ்நிலையில் ,தனி வாழ்வில் குறுக்கிடாத மத சூழ்நிலையில், free thinker ஆக இருப்பதை விட்டு....

ஒருவேளை ரகுமான்(திலிப் முதலியார்) போல பெயரை மாற்றினால் ஆஸ்கார் கிடைக்கும் என்ற சபலமோ என்னவோ. அதற்கு பிறவியிலேயே ரகுமான் போல இசை மேதையாகவும் பிறக்க வேண்டும்.

chinnakkannan
20th August 2014, 09:16 PM
//சீவி முடித்த கூந்தலுக்குள்ளே ஆவி துடிக்குதடி// தாங்க்ஸ் மதுண்ணா இந்தப் பாட் முன்னாடி இங்க போட்டப்ப பார்க்கலை..இப்ப தான்பார்க்கறேன் கேக்கறேன்..முதன் முறையா. தாங்க்ஸ்.. நல்லா இருக்கு..
பி ஓ ஒய் பாய் யும் எனக்குப் பிடிக்கும் நன்றி.. அந்தப்பெண்மகள் யாரோ

chinnakkannan
20th August 2014, 09:37 PM
சொல்ல மறந்த நன்றி..தாங்க்ஸ் மதுண்ணா நெமிலிகி பாட்டுக்கு..சபிதா பொம்மிடிப்பாட்டி எனும் நடிகை ஆடினார்..நடித்ததுஒரே ஒரு படம்..அந்த ஆழ க்கண்களில் கடல்புறாவே விடலாம்.. பாட்டுஇல்லாமல் ஒரு நடனம்..மினி சூறாவளி தான்..அகிலாண்டேஸ்வரி, அயிகிரி நந்தினி, ஜாதவே ..என நல்ல பாடல்கள்..கே.விஸ்வனாத் இயக்கம்.. எனக்கு மிகவும் பிடித்த ஒரு படம்..மரு கேலரா ஓ ராகவா..ன்னும் ஒரு பாட்டு..வாவ்..

chinnakkannan
20th August 2014, 10:06 PM
இந்த மறக்க முடியுமா படம் தேவிகா நடித்தும் நான் பார்த்திராத ஒரு படம்..காகித ஓடம் கடலலை மீது – கேட்டிராதவர் யாரும் உண்டோ..என்னவோ அழுகை என்று யாரோ சொன்னதினால் பார்த்ததில்லை..பட்
இசைக்களஞ்சியத்தின் தயவில் கேட்டிருக்கும் இந்தப் பாட்டு உணர்வை உருக்கும்.. கேட்டும் ரொம்ப நாளாச்சு..சுசீலாம்மாவின் உருக்கும்குரல்..ஜேசுதாஸ்.. பாடல் எழுதியது யாரெனப் பார்த்தால்..உவமைக் கவிஞர் சுரதா..இசை..டி.கே.ராமமூர்த்தி..

*

வசந்த காலம் வருமோ, நிலை மாறுமோ
வைகை பெருகி வருமோ, குறை தீருமோ

ஆசை அரும்பு மலராகி, நெஞ்சில்
ஆடும் நினைவு கனியாகி
மடி மீதிலே விளையாடவே
கொடி போலவே உறவாடவே
எனையே தேடி...


வீணை இருந்தும் பயனேது, வந்து
மீட்டும் வரையில் இசையேது
ஹாஹா ஹாஹா ஹா ஹா
வீணை இருந்தும் பயனேது, வந்து
மீட்டும் வரையில் இசையேதுகுயில் கூவுமோ மழை நாளிலே
கயல் நீந்துமோ சுடும் நீரிலே
எனையே தேடி...

*

Gopal.s
21st August 2014, 02:51 AM
இந்த மறக்க முடியுமா படம் தேவிகா நடித்தும் நான் பார்த்திராத ஒரு படம்..காகித ஓடம் கடலலை மீது – கேட்டிராதவர் யாரும் உண்டோ..என்னவோ அழுகை என்று யாரோ சொன்னதினால் பார்த்ததில்லை..பட்
இசைக்களஞ்சியத்தின் தயவில் கேட்டிருக்கும் இந்தப் பாட்டு உணர்வை உருக்கும்.. கேட்டும் ரொம்ப நாளாச்சு..சுசீலாம்மாவின் உருக்கும்குரல்..ஜேசுதாஸ்.. பாடல் எழுதியது யாரெனப் பார்த்தால்..உவமைக் கவிஞர் சுரதா..இசை..டி.கே.ராமமூர்த்தி..

*
சி.க.,

போட்டாச்சுப்பா. ம.கீ-1.பக்கம்-106,பதிவு-1059.(வீடியோ இல்லை)ஒரு தடம் சிரமம் இல்லையென்றால் பாகம்-1 ஐ புரட்டி பாத்துடேன். இதை பற்றி ஏழு எட்டு இடங்களில் விவரிக்க பட்டுள்ளது.இந்த பாகம்-2 இல் டி.கே.ஆர் சிறந்த 20 இலும்.எல்லோரும் படிக்கவே மாட்டேன்னு அடம் புடிச்சா? நாங்கள் சொந்த கவிதை முதற்கொண்டு எல்லாத்தையும் படிக்கிரோமுல்ல ?

https://www.youtube.com/watch?v=hZy4UgL7mi8

rajeshkrv
21st August 2014, 02:54 AM
இன்றைய ஸ்பெஷலாக வாசு ஜி நீங்கள் அளித்த அடுத்த வீட்டு பெண் பாடல் அபாரம் எனக்கு மிகவும் பிடித்த ஒன்று .

1953’ல் தெலுங்கில் பக்கிண்டி அம்மாயி வெளியானது .. இதிலும் இசையரசி தான் பாடல்கள். அஞ்சலிக்கு ரேலங்கி ஜோடி .. அருமையாக செய்திருந்தார்கள்
அதையே அடுத்த வீட்டு பெண் என்று தமிழில் வடிவம் பெற ரேலங்கி பாத்திரத்தை டி.ஆர்.ராமச்ச்சந்திரன் செய்தார்.

டி.ஆர்.எம் அடிக்கும் லூட்டி, அஞ்சலியின் ஃப்யூட்டி, தங்கவேலு சரோஜாவின் காமெடி ஃட்யூட்டி என ஏக அமர்க்களம்..

இதில் தான் முதன் முதலாக ஒருவர் பாடுவது போல பாவனை செய்ய படத்திற்குள்ளேயே இன்னொருவர் பாடுவதாக அமைந்த காட்சி ..

ஆதி நாராயணராவ்..ஜீனியஸ் .. என்னமாய் இசையமைப்பார் இவர் .. ஒவ்வொரு டியூனும் வித்தியாசம்

மன்னவா வா துள்ளலுடன் இசையரசி பாடும் விதமே அழகு.. கொஞ்சும் கண்களுடன் அஞ்சலி அழகோ அழகு

மலர்க்கொடி நானே மகிழ்ந்திடுவேனே

பாடல்கள் ஒவ்வொன்றும் முத்து..
பி.பி.ஸ்ரீனிவாஸ் அவர்களின் குரலில் மாலையில் மலர்ச்சோலையில் எனக்கு மிகவும் பிடித்த பாடல் (கண்ணாலே பாடலையே போட்டு போட்டு தேய்ப்பார்கள்)

அதேபோல் சீர்காழியாரும் லோகனாதனுன் இசைத்த கண்களும் கவி பாடுதே இன்றும் வயிறு குலுங்க சிரிக்க வைக்கும்.

மொத்தத்தில் அடுத்த வீட்டு பெண் .. நம்ம் மனத்தில் குடி கொண்ட பெண் .. பாடல்கள் நம் நெஞ்சத்தில் குடி கொண்டன

Gopal.s
21st August 2014, 03:14 AM
யாராவது சிரமம் பார்க்காமல் index செய்தால் ,அப்பாவிகளின் எண்ணிக்கை கணிசமாக குறையும்.(Young thread started only on 8th June!!!!)

நாளன்னிக்கே சின்ன கண்ணன் ,எப்போதோ சிலோன் ரேடியோவில் 1969 இல் கேட்டது பட்டம் விட்டது போலே (Full பாட்டு வேறு எழுதி விடுவார் ):-D

vasudevan31355
21st August 2014, 05:41 AM
இன்றைய ஸ்பெஷல் (58)

'இன்றைய ஸ்பெஷல்' பாடல் 'கண்டதை சொல்லுகிறேன்'.சில நேரங்களில் சில மனிதர்கள்.படத்திலிருந்து. பாடலை 'மெல்லிசை மன்னர்' எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்களே பாடியிருப்பார் அவருக்கே உரித்தான அந்த தனி ஸ்டைலில்.

http://arsonist.asia/blog/wp-content/uploads/2014/01/SilaNerangalilSilaManithargal0001.jpg

http://www.sylvianism.com/wp-content/uploads/2011/03/Silanerangallisilamanidhargal.jpg

லஷ்மி, ஸ்ரீகாந்த், சுந்தரிபாய், நாகேஷ், ஒய்.ஜி.பி, ராஜசுலோச்சனா ஆகியோர் நடித்த இப்படத்தை இயக்கியவர் பீம்சிங்.

ஜெயகாந்தனின் அருமையான வரிகள் இந்த ஆர்ட் பிலிமிற்கு அருமையாய் அமைந்தது. எழுத்தாளர் நாகேஷ் கண்ணில் படும் அனுபவங்கள் அவருடைய எண்ணத்தில் பின்னணியில் ஒலிக்கும் பாடலாய் இப்பாடல் வரும்.

பாரதியார் போல சில வரிகளை அமைத்திருப்பார் ஜெயகாந்தன்.

'இதற்கெனை கொல்வதும் கொன்று
கோயிலில் வைப்பதும் கொள்கை உமக்கென்றால்
உம்முடன் கூடி இருப்பதுண்டோ
கூடி இருப்பதுண்டோ'

நடைபாதைகளில், சாலைகளில் மக்களோடு மக்களாக சர்வசாதாரணமாக நாகேஷ் ஜோல்னாப் பையுடன் நடந்து செல்ல பின்னணியில் இப்பாடல் அற்புதமாய் ஒலிக்கும்.

'என்னை நம்பவும் நம்பி
அன்பினில் தோயவும் நம்பிக்கை இல்லையென்றால்
எனக்கொரு தம்பிடி நஷ்டம் உண்டோ
ஒரு தம்பிடி நஷ்டம் உண்டோ'

என்ற வரிகள் என்னை மிகவும் கவர்ந்தவை. சமூகத்தின் அவலங்களைப் பார்த்து அதைச் சாடி 'மனிதர்களே நீங்கள் திருந்தவே மாட்டீர்களா? என்று கேவிக்கணை தொடுத்து 'அதனால் எனக்கு ஒரு நஷ்டமும் இல்லை' என்று அர்த்தம் தொனிக்க வரும் இப்பாடல் மிகச் சிறந்த தமிழ்ப்பாடல்களில் ஒன்றாகும்.

சாகித்ய அகாடமி பரிசு பெற்ற ஜெயகாந்தனின் அருமையான நாவல் அழகான காவியப் படமானது.

http://i1098.photobucket.com/albums/g364/albertjraj/SilaNerangalilSilaManithargal0003.jpg

1975-ன் சிறந்த தேசிய நடிகையாக லஷ்மி இப்படத்தின் மூலம் தேர்வு செய்யப்பட்டார்.

இன்றுவரை தமிழில் ஒரு சிறந்த ஆர்ட் பிலிம் என்ற அந்தஸ்தை இப்படம் தக்க வைத்துக் கொண்டிருக்கிறது.

http://i.ytimg.com/vi/dtWMrA98Gjs/0.jpg

கண்டதை சொல்லுகிறேன்
உங்கள் கதையை சொல்லுகிறேன்
கண்டதை சொல்லுகிறேன்
உங்கள் கதையை சொல்லுகிறேன்

இதைக் காணவும் கண்டு நாணவும்
உமக்கு காரணம் உண்டென்றால்
அவமானம் எனக்குண்டோ

கண்டதை சொல்லுகிறேன்
உங்கள் கதையை சொல்லுகிறேன்

நல்லதை சொல்லுகிறேன்
இங்கு நடந்ததை சொல்லுகிறேன்
நல்லதை சொல்லுகிறேன்
இங்கு நடந்ததை சொல்லுகிறேன்

இதற்கெனை கொல்வதும் கொன்று
கோயிலில் வைப்பதும் கொள்கை உமக்கென்றால்
உம்முடன் கூடி இருப்பதுண்டோ
கூடி இருப்பதுண்டோ

கண்டதை சொல்லுகிறேன்
உங்கள் கதையை சொல்லுகிறேன்
இதைக் காணவும் கண்டு நாணவும்
உமக்கு காரணம் உண்டென்றால்
அவமானம் எனக்குண்டோ

வாழ்ந்திட சொல்லுகிறேன்
நீங்கள் வாழ்ந்ததை சொல்லுகிறேன்
வாழ்ந்திட சொல்லுகிறேன்
நீங்கள் வாழ்ந்ததை சொல்லுகிறேன்
இங்கு தாழ்வதும் தாழ்ந்து
வீழ்வதும் உமக்கு தலை எழுத்தென்றால்
உம்மை தாங்கிட நாதியுண்டோ
தாங்கிட நாதியுண்டோ

கண்டதை சொல்லுகிறேன்
உங்கள் கதையை சொல்லுகிறேன்
இதைக் காணவும் கண்டு நாணவும்
உமக்கு காரணம் உண்டென்றால்
அவமானம் எனக்குண்டோ

கும்பிட சொல்லுகிறேன்
உங்களை கும்பிட்டு சொல்லுகிறேன்
கும்பிட சொல்லுகிறேன்
உங்களை கும்பிட்டு சொல்லுகிறேன்
என்னை நம்பவும் நம்பி
அன்பினில் தோயவும் நம்பிக்கை இல்லையென்றால்
எனக்கொரு தம்பிடி நஷ்டம் உண்டோ
ஒரு தம்பிடி நஷ்டம் உண்டோ

கண்டதை சொல்லுகிறேன்
உங்கள் கதையை சொல்லுகிறேன்
இதை காணவும் கண்டு நாணவும்
உமக்கு காரணம் உண்டென்றால்
அவமானம் எனக்குண்டோ...ஓ..ஓ


http://www.youtube.com/watch?v=dtWMrA98Gjs&feature=player_detailpage

Gopal.s
21st August 2014, 06:05 AM
வாசு,

கண்டதை சொல்ல ஆரம்பித்து விட்டீர்கள். நன்றி. விசு நன்றாகவே பாடி, களை கட்ட .வைப்பார்.

சி.நே.சி.ம ஆர்ட் பிலிம் கிடையாது. off beat (அ ) compromise parallel cinema ரகம்.

இப்போது அந்த மாதிரி வித்தியாசத்தை யாரும் லட்சியம் செய்வது கிடையாது.

ஆர்ட் பிலிம் என்றால், ஒரு கால கட்டம் ,அது சார்ந்த பிரச்சினையை எடுத்து ,பார்வையாளர்களுக்கு,இயக்குனர் கோணத்தில் ,பார்வையில் ,கதாபாத்திரங்களின் அந்த கண மனநிலை ,உணர்வு ரீதியில் உணர்த்த பட வேண்டும். உதாரணம்... சராசரி வாழ்க்கையில் ஒரு போர் அடிக்கும் ஒருவன் மனநிலை சொல்ல ,நிறைய அடிகளில் அதை எடுத்து, அதை உணர்வு ரீதியில் தானும் அனுபவிக்க வேண்டும். மொத்த தொகுப்பில் நோக்கம், தெரிய வேண்டும் போலி தனம் இல்லாமல்.ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் கிட்டத்தட்ட கிட்ட வரும்.

off beat என்றால், வழக்கமான பாத்திரங்கள்,பழக்க பட்ட திரைகதை,என்று இல்லாமல் சற்றே புதுமையாய் ,ரசிகர்களுக்கு nerrative surprise கொடுப்பது.உ.ம் -அரங்கேற்றம்,அவள் ஒரு தொடர்கதை,சில நேரங்களில் சில மனிதர்கள்,அபூர்வ ராகங்கள்.

Richardsof
21st August 2014, 06:24 AM
வாசு சார்

சில நேரங்களில் சில மனிதர்கள் - அருமையான பாடல் . நாகேஷின் நடிப்பு அபாரம் . மெல்லிசை மன்னரின் பாடல்
என்றென்றும் நினைவில் நிற்கும் என்பதை இந்த பாடல் மூலம் அறியலாம் .

RAGHAVENDRA
21st August 2014, 07:36 AM
கோபால் ஜி
அருமை... விஸ்வரூபம் பாடலைப் பற்றிய தங்கள் கருத்துக்களை ஆவலுடன் எதிர்பார்த்தேன்.. ஏமாற்றவில்லை..
உண்மையிலேயே தமிழ்த் திரையுலக இசை வரலாற்றில் இப்பாடலுக்குத் தனியிடம் என்றும் உண்டு.

RAGHAVENDRA
21st August 2014, 07:36 AM
வாசு சார்
ஒவ்வொரு நாளும் ஸ்பெஷலே தாங்கள் தரும் பாடலாலே அமைகிறது. தொடர்ந்து தாருங்கள்..

RAGHAVENDRA
21st August 2014, 07:38 AM
பொங்கும் பூம்புனல்

அன்னம் போலே அன்னை அருகில் வைத்தாள் உன்னை..

இசையரசியின் இனிமையான குரலில் மெதுவாக தென்றல் தாலாட்டும் உணர்வைத் தரும் இந்தப் பாடல்

1961ல் வெளியான அன்பு மகன் திரைப்படத்திலிருந்து... இசை டி.சலபதி ராவ்..

http://www.inbaminge.com/t/a/Anbu%20Magan%201961/

RAGHAVENDRA
21st August 2014, 07:42 AM
பொங்கும் பூம்புனல்

1961ம் ஆண்டு வெளிவந்த என்னைப் பார் திரைப்படத்தில் இடம் பெற்ற இனிமையான பாடல்..

காட்சியும் நீதான் கற்பனையும் நீதான்... சிலோன் ரேடியோவில் அடிக்கடி ஒலிபரப்பாகும்.. குறிப்பாக ராஜேஸ்வரி சண்முகம் அவர்கள் காலை 8.30 மணிக்கு ஒலிபரப்பாகும் நிகழ்ச்சியில் தவறாமல் ஒலிபரப்புவார்...

http://www.inbaminge.com/t/e/Ennai%20Paar/

இடையியைசில் கிளாரிநெட் இசைக்கருவி மேல்நாட்டு இசையின் பாணியில் வாசித்திருப்பது இப்பாடலில் உள்ள சிறப்பு..

பெண்களின் திலகமே,,,
முத்தமிழ் செல்வமே...

என்று காதலர்கள் ஒருவரையொருவர் வர்ணித்துக் கொள்ளும் அழகே தனி..

RAGHAVENDRA
21st August 2014, 07:48 AM
பொங்கும் பூம்புனல்

ஜே.பி.சந்திரபாபு ... தமிழ் சினிமாவின் மாபெரும் கலைஞர்களில் ஒருவர்..இவரை எத்தனை முறை புகழ்ந்தாலும் எப்படியெல்லாம் புகழ்ந்தாலும் சலிக்காது...
அதுவும் இவருடைய பாடல்கள் இன்றைய தலைமுறையையும் ஈர்க்கும் வண்ணம் இருப்பது இவருடைய சிறப்பு..

இவருடைய மறக்க முடியாத படம் குமார ராஜா.. ஒண்ணுமே புரியலே பாடல் காலத்தைக் கடந்து நிற்கும் கருத்தாழமிக்க பாடல்..

இதே படத்தில் இடம் பெற்ற ஆணொன்று பாட என்னாளும் என் நெஞ்சம் கவர்ந்த பாடல்..

மெலோடி என்ற வார்த்தைக்கு அர்த்தம் தந்த இன்னொரு பாடல்..

மாலை நேரம் ஆனந்தம்,, வாழ்க்கை நாடகம் ஆரம்பம்..
நாளையானால் ஏதாகுமோ .. இந்த கவலை ஏன் வேண்டும் என்கிறார் பாபு..


http://www.inbaminge.com/t/k/Kumara%20Raja/

RAGHAVENDRA
21st August 2014, 07:51 AM
பொங்கும் பூம்புனல்

ஏ.எல். ராகவன் ஜமுனா ராணி இணையாக பாடிய பல பாடல்கள் துள்ளி விளையாடும் உணர்வை ஏற்படுத்தும்.. அப்படிப் பட்ட ஒரு பாடலை இதோ கேளுங்கள்..

மல்லியம் மங்களம் திரைப்படத்திலிருந்து ...

சுந்தர கண்ணை இந்திர லோகம் காட்டுது..

ஏ.எல். ராகவன் குரலில் செய்யும் மாயா ஜாலம் பிரமிக்க வைக்கிறது..

வெவ்வேறு பாணிகளில் இப்படம் களை கட்டும் ... கேட்டுப் பாருங்கள்...

http://www.inbaminge.com/t/m/Malliyam%20Mangalam/

மைடியர் மார்த்தாண்டன் பாட்டு ஞாபகம் வந்தால் நான் பொறுப்பில்லை...

அப்பாவுக்கு லூசான நாட்டு... என்பதெல்லாம் இப்பாட்டில் வரும் வரிகள்..

RAGHAVENDRA
21st August 2014, 07:54 AM
பொங்கும் பூம்புனல்

மல்லியம் மங்களம் பாடல்களால் பிரசித்தமான படம்.. அருமையான பாடல்கள் இப்படத்தின் ஸ்பெஷாலிட்டி..

குறிப்பாக பாடகர் திலகம் பி.லீலா பாடிய இப்பாடல் அந்நாளைய குழந்தைகளைத் தாய்மார்கள் பாடி உற்சாகமூட்டிய பாடல்..

இப்பாடலை நமது நடிகர் திலகம் நடித்த படம் ஏதாவது ஒன்றில் பயன்படுத்தியிருக்கலாமே என்ற ஏக்கம் எனக்கு எப்போதுமே உண்டு.. காரணம் பாடகர் திலகத்தின் குரல் அப்படியே இருக்கும்.

சிங்கார வேலா விளையாட வா

http://www.inbaminge.com/t/m/Malliyam%20Mangalam/

RAGHAVENDRA
21st August 2014, 07:58 AM
பொங்கும் பூம்புனல்

சைக்கிள் பாட்டு கேட்டார்கள் இங்கு யாரோ... இந்த சைக்கிள் பாட்டுக்களிலெல்லாம் சூப்பர் டூப்பர் பாடலாக இதோ..

மாமியாரும் ஒரு வீட்டு மருகமளே.. படத்தில் இடம் பெற்று சீர்காழியை பாமர மக்களிடம் பெருமளவு கொண்டு சேர்த்த பெருமைக்குரிய பாடல்... ஜிக்கியின் சூப்பர் வாய்ஸ்....

பாய்லா பாய்லா சைக்கிள்...

http://www.inbaminge.com/t/m/Mamiyarum%20Oru%20Veettu%20Marumagale/

RAGHAVENDRA
21st August 2014, 08:00 AM
பொங்கும் பூம்புனல்

இதே போல ஒரு உற்சாகமான டூயட் பாடல்..

வாவென்று சொன்னதும் வரவாயா நீ, என்ற இந்தப் பாடலும் காதலைப் பரிமாறிக் கொள்ளும் பாடல்.. எப்படி உருவாயிற்று காதல்.. இதோ பாடலிலேயே விடையிருக்குது கேளுங்கள்..

சீர்காழி கோவிந்தராஜன் ஜிக்கி டூயட் ..

http://www.inbaminge.com/t/m/Mamiyarum%20Oru%20Veettu%20Marumagale/

RAGHAVENDRA
21st August 2014, 08:05 AM
பொங்கும் பூம்புனல்

உங்களைச் சிரிக்க வேண்டுமென்று கேட்கிறார்களே.. சிரித்துத் தான் வையுங்களேன்... என நான் சொல்லவில்லை.. இந்தப் பாட்டில் தான் கேட்கிறார்கள்..

யார் மணமகன் திரைப்படத்தில் கொஞ்சம் சிரிங்க..

எஸ்.சி.கிருஷ்ணன் கே.ஜமுனா ராணி குரல்களில் பிரதர் லக்ஷ்மணன் இசையில் சுந்தர கண்ணன் வரிகள்..

http://www.inbaminge.com/t/y/Yaar%20Manamagan/

Gopal.s
21st August 2014, 08:08 AM
கோபால் ஜி
அருமை... விஸ்வரூபம் பாடலைப் பற்றிய தங்கள் கருத்துக்களை ஆவலுடன் எதிர்பார்த்தேன்.. ஏமாற்றவில்லை..
உண்மையிலேயே தமிழ்த் திரையுலக இசை வரலாற்றில் இப்பாடலுக்குத் தனியிடம் என்றும் உண்டு.

வெளியீட்டு முறையில் நான் நேரடி,நீங்கள் பூடகம். அதனால் அவ்வப்பொழுது உரசல்கள் இருந்தாலும்,ரசனை என்ற விதத்தில் ஒரே நேர்கோட்டில் பயணிப்பவர்கள்தானே நாம்.

RAGHAVENDRA
21st August 2014, 08:12 AM
பொங்கும் பூம்புனல்

நாகமலை அழகி ... இப்படி ஒரு படம் வந்ததா என பலருக்கு கேள்வி எழுவது இயல்பே.. ஆனால் இந்தப் பாட்டைச் சொன்னால் இந்தப் படத்திலா என்று கேட்பீர்கள்.. அப்படி ஒரு ஹிட்டான பாடல் தான் வண்டு வந்து மெல்ல மெல்ல... சிலோன் ரேடியோவிற்கு நம்மையெல்லாம் அடிமையாக்கிய பல பாடல்களில் இதுவும் ஒன்று..

http://www.inbaminge.com/t/n/Nagamalai%20Azhagi/

RAGHAVENDRA
21st August 2014, 08:17 AM
பொங்கும் பூம்புனல்

இன்ப உலகின் ரகசியம் இங்கே ஆரம்பம்... கண்கள் மயங்கும் காவியம் இங்கே ஆரம்பம்..

மனதை மயக்கும் மதுர கானங்களைப் பற்றி நான் சொல்லவில்லை..

பாடகர் திலகமும் இசையரசியும் கூறுகிறார்கள் .. சீமான் பெற்ற செல்வங்கள் திரைப்படத்தில்... திரை இசைத் திலகத்தின் இசையில்..

http://www.inbaminge.com/t/s/Seemaan%20Petra%20Selvangal/

rajeshkrv
21st August 2014, 09:45 AM
ராகவ் ஜி பாடல்கள் எல்லாமே அருமை..


கோபால் ஜி, உங்க கிழவன் கமெண்ட் அபாரம்..

வாசு ஜி,

பெல்லி சேசி சூடு (கல்யாணம் பண்ணிப்பார்)
இதோ அதன் கன்னட வடிவம் மதுவே மாடி நோடு

இசையரசியின் குரலில் வெங்கடாசலவாசா

http://www.youtube.com/watch?v=wyO11oyI8Ao

chinnakkannan
21st August 2014, 10:01 AM
குட் மார்னிங்க் ஆல்..

கோபால் சார் தாங்க்ஸ் :) நான் ம.கீ பக்கம் 101 ல் இருந்து 210 வரைக்கும் லீவில் இருந்தேன் :) அர்ரியர்ஸ் நெறய இருக்கு படிக்கணும்.
வாசு சார் நன்றி.. கண்டதை ச்சொல்லுகிறேன் பிடித்த பாட்டு தான்..என்னுடைய கொஞ்சம் கதைக்கலாம் வாங்க என ஒருகாலத்தில் எழுதிய தொடரில் இந்த நாவல் பற்றி எழுதியிருப்பேன்.. வேறு இடம் தேடிப்போவாளோ வும் அருமையான பாடல்..
பருவமழை பொழியப் பொழியப்பயிரெல்லாம் செழிக்காதோ
இவள்பருவமழையாலே வாழ்க்கை பாலைவனம் ஆகியதே.. ம. நி.வரிகள்..

ராஜேஷ் ராகவ்ஜி தாங்க்ஸ்..ஃபார் பொ.பூ அண்ட் பிஎஸ்பாட்டுக்கள்..

chinnakkannan
21st August 2014, 10:03 AM
படிக்கட்டில் ஏறிவரும் பாதத்தெழில் பார்ப்பதற்கு
படிக்கட்டின் இடையிலே ஓர் பலகையாய் மாறேனா..சித்திரப் பூ சேலை..
ம்ம்ஜெயகாந்தன் (யாரோ எழுதியாச்சுன்னு சொல்றதுகேக்கறது :) )

rajeshkrv
21st August 2014, 10:06 AM
அதே போல் படிக்காத மேதையின் கன்னட வடிவம்

இதோ ஒரே ஒரு ஊரிலே ஒரே ஒரு ராஜா பாடல் இசையரசியுடன் பி.பி.ஸ்ரீனிவாஸ் அவர்கள்

http://www.youtube.com/watch?v=_J_pjijFY3M

mr_karthik
21st August 2014, 10:26 AM
யாராவது சிரமம் பார்க்காமல் index செய்தால் ,அப்பாவிகளின் எண்ணிக்கை கணிசமாக குறையும்.(Young thread started only on 8th June!!!!)

உண்மைதான் கோபால் சார்,

சில பாடல்கள் அப்படி "ரிப்பீட்டூ" ஆகியிருக்கின்றன. உதாரணமாக முதல் பாகத்தின் மத்தியில் நான் எழுதியிருந்த, கல்யாண ஊர்வலம் படத்தின் "கூந்தலிலே நெய்தடவி" பாடல் மீண்டும் எழுதப்பட்டு 'நல்ல பாட்தானே' என்று கேள்வியும் கேட்கப்பட்டிருந்தது. (இத்தனைக்கும் தமிழில் ஒரே சித்தப்பா - அண்ணன்மகள் டூயட் என்றும் குறிப்பிட்டிருந்தேன்)

நானும் சில பாடல்களை எழுத நினைத்து, சந்தேகத்துக்கு முந்தைய பக்கங்களைப் பார்க்கும்போது அவை நன்றாக ரின் கொண்டு அலசப்பட்டிருப்பது தெரிய வர, என் பதிவை கைவிட்டிருக்கிறேன்.

கண்டிப்பாக தேவை ஒரு இன்டெக்ஸ்.

இப்போதைக்கு பதிவுகளைப் பாராட்டிக் கொண்டிருப்பதே ஸேப்டி எனத்தோன்றுகிறது.

chinnakkannan
21st August 2014, 10:29 AM
போன பாக எண்ட்லயே சொல்லியிருந்தேனே..இன் டெக்ஸ் விட நண்பர்களின் எழுத்து வாரியாக என்று கார்த்திக் சார்..
ஸாரி ..உங்கள் கூந்தலிலே நெய் தடவி.. நான் படித்திருப்பேன்..எழுதியபோது நினைவில் வரவில்லை.

காதலைப் பொய்யென்றேனே கவனிக்கவில்லை நீயே என புத்தர் வேஷத்தில் கமல்ஹாசன் அப்புறம் ஜெயலலிதா ஒரு பாட்டு நினைவுக்குவருது ஏற்கெனவே இருக்கா..

mr_karthik
21st August 2014, 10:31 AM
ராகவேந்தர் சார்,

என்ன இப்படி, ஆற்று மணலைக்கடத்தும் கள்ளக்கடத்தல் லாரிக்காரர்கள் மாதிரி, 'பொங்கும் பூம்புனலை' இப்படி கொண்டுவந்து கொட்டுகிறீர்கள்.

தாங்கள் தரும் பாடல்களில் பல இப்போதுதான் முதல்முறையாகவே கேட்கிறேன். மிக்க நன்றி.

Richardsof
21st August 2014, 10:41 AM
MORNING ATTRACTION

http://youtu.be/pc-r5PtqPz0

madhu
21st August 2014, 10:58 AM
பொங்கும் பூம்புனல்

மல்லியம் மங்களம் பாடல்களால் பிரசித்தமான படம்.. அருமையான பாடல்கள் இப்படத்தின் ஸ்பெஷாலிட்டி..

குறிப்பாக பாடகர் திலகம் பி.லீலா பாடிய இப்பாடல் அந்நாளைய குழந்தைகளைத் தாய்மார்கள் பாடி உற்சாகமூட்டிய பாடல்..

இப்பாடலை நமது நடிகர் திலகம் நடித்த படம் ஏதாவது ஒன்றில் பயன்படுத்தியிருக்கலாமே என்ற ஏக்கம் எனக்கு எப்போதுமே உண்டு.. காரணம் பாடகர் திலகத்தின் குரல் அப்படியே இருக்கும்.

சிங்கார வேலா விளையாட வா

http://www.inbaminge.com/t/m/Malliyam%20Mangalam/

my all time fav... சின்ன வயதில் இந்தப் பாட்டை கேட்டபோதெல்லாம் இது நடிகர் திலகம் நடித்தது என்றேதான் நினைத்திருந்தேன். ( இன்னை வரைக்கும் இதுக்கு யாரு நடிச்சாங்கன்னு தெரியாது. அதனால் என் மனக்காட்சியில் இன்னமும் சிவாஜிதான் பாடிக்கிட்டு இருக்காரு )

madhu
21st August 2014, 11:05 AM
காதலைப் பொய்யென்றேனே கவனிக்கவில்லை நீயே என புத்தர் வேஷத்தில் கமல்ஹாசன் அப்புறம் ஜெயலலிதா ஒரு பாட்டு நினைவுக்குவருது ஏற்கெனவே இருக்கா..

இதுவா ?

http://youtu.be/7_Lb1iwkOAA

mr_karthik
21st August 2014, 11:08 AM
my all time fav... சின்ன வயதில் இந்தப் பாட்டை கேட்டபோதெல்லாம் இது நடிகர் திலகம் நடித்தது என்றேதான் நினைத்திருந்தேன். ( இன்னை வரைக்கும் இதுக்கு யாரு நடிச்சாங்கன்னு தெரியாது. அதனால் என் மனக்காட்சியில் இன்னமும் சிவாஜிதான் பாடிக்கிட்டு இருக்காரு )

இதுபோலவே 'கத்தியை தீட்டாதே உந்தன் புத்தியை தீட்டு" பாடல் ஏதோ ஒரு எம்.ஜி.ஆர். படத்தில் என்றே ரொம்ப நாள் நினைத்துக்கொண்டிருந்தேன். ஏனென்றால் இந்தமாதிரி பாடல்கள் அவர் படத்தில்தானே வரும் என்பதால். பின்னர்தான் தெரிந்தது அப்பாடல் 'விளக்கேற்றியவள்' படத்தில் ஆதித்தன் என்பவர் நடித்தது என்று.

madhu
21st August 2014, 11:12 AM
இதுபோலவே 'கத்தியை தீட்டாதே உந்தன் புத்தியை தீட்டு" பாடல் ஏதோ ஒரு எம்.ஜி.ஆர். படத்தில் என்றே ரொம்ப நாள் நினைத்துக்கொண்டிருந்தேன். ஏனென்றால் இந்தமாதிரி பாடல்கள் அவர் படத்தில்தானே வரும் என்பதால். பின்னர்தான் தெரிந்தது அப்பாடல் 'விளக்கேற்றியவள்' படத்தில் ஆதித்தன் என்பவர் நடித்தது என்று.

ஹய்யோ.. நானும் அப்படியேதான் நினைச்சுகிட்டு இருந்தேன். ( ரொம்ப நாள் "சத்தியம் இது சத்தியம்" பாட்டு கூட அசோகனுக்கு என்று தெரியாது )

chinnakkannan
21st August 2014, 11:20 AM
கேட்டதும் கொடுப்பவரே மதுண்னா..:) நன்றி..

என்னால் ஏற்றுக் கொள்ளவே முடியாத விஷூவல்..சின்னப் புறாவொன்று எண்ணக் கனாவினில்.. தேங்காய் சீனிவாசன் :sad:

chinnakkannan
21st August 2014, 12:17 PM
இ.ஊ பேசியாச்சா..

ம்ம் எனக்கு ப்பிடிச்ச வரிகள்..

கன்னத்தில் தேன் குடித்தால்
கற்பனை கோடி வரும்
உள்ளத்தில் பூங்கவிதை
வெள்ளம் போல் ஓடி வரும்

கவிதை மட்டுமில்லை சுகரும் வரும் :)

gkrishna
21st August 2014, 12:19 PM
அன்புள்ள நண்பர்களே அழகு உள்ளங்களே

இரண்டு தினங்கள் சபரிமலை பயணம் . காலை வந்து சேர்ந்தேன் .
எல்லாம் வல்ல இறைவன் அருள் எல்லோருக்கும் கிடைக்க வேண்டினேன்.வேண்டுகிறேன்.வேண்டி கொள்வேன்

அருமையான பாடல்கள் நல்ல தகவல்கள் சூப்பர் பாஸ்ட்

வாசு சார் இன் கெட்டிக்காரன் பாடல் நம்பர் ஒன் தேன் - இந்த லீலா வேறு சில படங்களிலும் நடித்ததாக நினைவு - குரு நம்பியாரின் சிஷ்யை இவர்தான் என்று நினைவு. தேங்காய் கூட ஒரு படம் நினைவு உண்டு அது ஹலோ partner ஆ இல்லை இத்யகனியா நினைவில் இல்லை .
இதயக்கனியில் ராதா சலூஜா போக இன்னொரு கனி உண்டு (தொழிலாளி எங்க விட்டு பிள்ளை ரத்னா - நீங்கள் நல்லா இருக்கணும் பாட்டில் கையை தலயில் வைத்து கொண்டு ஆடுவார் )

ராகவேந்தர் சார் இன் பொங்கும் பூம்புனல் , சின்னகண்ணன் அவர்கள் இன் கவிதை வரிகளுடன் கூடிய பாடல்கள் ,ராஜேஷ் வேங்கடசுப்ரமணியன் இன் இசைஅரசி,காதலிக்க நேரமில்லை மற்றும் தகவல்கள் கூடிய பதிவுகள் ,மெல்லிசை மன்னர் பற்றிய கோபால் கார்த்திக் அவர்களின் விவாதங்கள் எல்லாமே அருமை . கோபால் அவர்களின் இளையராஜா இனிதே தொடர வாழ்த்துகள்

சார் ஒரு படம் நினைவில் உண்டு
தேங்காயும் லீலாவும் - ரூப்தேர மஸ்தான பாடல் backround மியூசிக் இல் ஒலிக்கும் சார் - லீலா nice சாட்டின் துணியில் உடை அணித்து இருப்பார்
என்ன படம் னு மறந்து போச்சு


முத்தாய்பாக மது அண்ணாவின் தகவல் பதிவுகள் எல்லாமே அருமை

gkrishna
21st August 2014, 12:23 PM
ஆனி பொன் கட்டில் உண்டு
கட்டில் மேல் மெத்தை உண்டு
மெத்தைகோர் வித்தை உண்டு
வித்தைகோர் தத்தை உண்டு
தத்தைகொர் முத்தம் உண்டு
முத்தங்கள் நித்தம் உண்டு

வாலி தானே பாடல்கள் சார் - கொஞ்சம் குண்டு ஜெயசித்ரா - கமலுக்கு சூட் ஆகலை

இப்ப கூட சமீபத்தில் ஒரு செய்தி படித்தேன்
தனுஷ் சிம்பு இணைந்து மீண்டும் இளமை ஊஞ்சல் ஆடுகிறது எடுக்கபோரங்கனு

gkrishna
21st August 2014, 12:30 PM
https://i.ytimg.com/vi/68j7udZp3vk/hqdefault.jpghttps://encrypted-tbn1.gstatic.com/images?q=tbn:ANd9GcSPLix6qbgSgxcUTlYfhn8Ro6SJv3qth sXZKXZYzArb9WRT9ztzSg

Russellmai
21st August 2014, 12:38 PM
1965ல் ஜெய்சங்கர் அறிமுகமான- இரவும் பகலும்-படத்தை அடுத்து ஜோசப் தளியத் சிட்டாடல் மூவீஸ் பேனரில் ஆதித்தன் என்பவரைக் கதாநாயகனாக அறிமுகப் படுத்திய
படம்-விளக்கேற்றியவள்.டி.ஆர்.பாப்பா இசையமைப்பில் கத்தியைத் தீட்டாதே உந்தன்
புத்தியைத் தீட்டு என்ற பாடலும்,முத்தமா ஆசை முத்தமா என்ற பாடலும் பிரபலமானவை.
கோபு

chinnakkannan
21st August 2014, 12:47 PM
ரீ மேக் பண்ணினா எல்லாம் நல்லா இருக்காது கிருஷ்ணா சார்..முதலில் வெல்கம் பேக்.. ட்ரிப் நல்லபடியா இருந்ததா..கூட்டம் எல்லாம் இருந்திருக்காதோன்னோ..நான் கடைசியாய்ப்போனது 98இல் சபரி மலை..இனி அவர் எப்போ கூப்பிடுவார்னு தெரியலை..

இ.ஊவில் எல்லா ப் பாடல்களுமே நன்றாக இருக்கும்

ஒரே நாள் உனை நான்
தண்ணி கருத்துருச்சு
என்னடி மீனாட்சி..

சினிப்ரியாவில் பார்க்க இயலாமல் சாந்தி தியேட்டரில்பார்த்தது.ஹிந்தி வெர்ஷன் தர்மேந்த்ரா சத்ருகன் சின்ஹா..அவ்வளவாக நல்லா இல்லாத நினைவு..

நீ கேட்டால் நான் மாட்டேன் என்றா சொல்வேன் கண்ணா குறும்பு கொப்பளிக்கும்குரலோடு கொண்ட பாடலில் இறுதியில் டபக்கென்று ஸ்விம் ஸ்யூட்டில் ஸ்ரீப்ரியா வர, கொஞ்சம் கஷ்டமாக இருக்கும்..ஜெ.சி குண்டு தான்..இருந்தாலும் பரவாயில்லை..ஸ்ரீப்ரியாவும் புடவையில் சற்றே பூசின மாதிரி(?!) இருப்பார்..

ரஜினி ஸ்டைல்களைத் தொடர்ந்து கொடுத்துக் கொண்டிருந்த சமயம் அது..இரண்டு முழ நீள பாட்டம் வைத்த பாண்ட் அப்போதைய ஃபேஷன்..

திடீரென கே.எஸ்.ஜியின் நாயக்கர் மகள் என ஒரு சரித்திரப் படம் வந்து கொஞ்ச நாட்கள் ஜாஸ்தியாகவே ஓடியது..ஜெ.சி. அண்ட் படம் முழுக்க செந்தமிழ் வசனங்கள்.. கொஞ்சம் இன்னும் யோசித்து ச் செதுக்கி, பாட்லகளும் நன்றாக ப் பண்ணியிருந்தால் இன்னும் நன்றாக ஓடியிருக்கும்..

gkrishna
21st August 2014, 12:59 PM
இளமை ஊஞ்சல் ஆடுகிறது படத்தில் நான் மிகவும் ரசித்தது
nivas in துல்லியமான ஒளிபதிவு சிகா சார் (திவாரி என்று முதலில் தவறாக குறிப்பிட்டு விட்டேன். திரு கார்த்திக் அவர்கள் கொடுத்த சரியான தகவல் நிவாஸ் )


நீங்கள் சொன்னது போல் நீ கேட்டால் பாடல் வாணியின் மிக சிறந்த பஜனை - முதலில் ஒரு ஜால்ரா சூப்பர் ஆ இருக்கும் - ராஜேஷ் சார் கூட ஒரு பதிவில் வாணியின் குரல் கேட்கும் போது பஜனை பாடுவது போல் இருக்கிறது என்று சொன்ன நினைவு . ஒரு வேளை வாணி நிறைய கஜல் பாடல்கள் ,மீரா பஜன்,அபங் பாடியதின் விளைவாக கூட இருக்கலாம் . நீ கேட்டால் பாடலில் ஒரு ஹம்மிங் ஒன்னு நினைவில் உண்டு 'ரரரர ராராரா ரா " வாணி மூச்சு விடாமல் பாடுவார்

ஸ்ரீப்ரிய கூட அப்ப தான் கொஞ்சம் வீங்க ஆரம்பிட்சாங்கனு நினைவு

mr_karthik
21st August 2014, 01:01 PM
டியர் கோபால் சார்,

நீலவானம் பற்றிய முரளிசாரின் பதிவை மீள்பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி. அண்ணியின் மிக மிக அருமையான நடிப்பில் மிளிர்ந்த படம். நடிகர்திலகம் நடிப்பைப் பற்றி சொல்ல வேண்டியதில்லை. அதுவும் ஒவ்வொரு காட்சியையும் முரளிசார் விவரித்திருக்கும் விதம் அவருக்கே கைவந்த கலை.

சோகம் என்னவென்றால், நீலவானம்தான் இருவரும் ஜோடியாக நடித்த கடைசிப்படம். (பதினொரு ஆண்டுகள் கழித்து வந்த சத்யம் சும்மா ஒரு டெயில் என்டர்). இதன்பிறகு நடிகர்திலகத்தின் படங்களான சரஸ்வதி சபதம், எங்கிருந்தோ வந்தாள், பாரதவிலாஸ் போன்ற படங்களில் நடித்திருந்தாலும் யார் யாருக்கோ ஜோடியாக...

chinnakkannan
21st August 2014, 01:26 PM
//யார் யாருக்கோ ஜோடியாக...//:sad: நீலவானம் பதிவு நானும் பார்த்தேன்..எனக்கு மிகவும் பிடித்த படங்களில் அதுவுமொன்று..ஓஹோ ஹோ ஓடும் எண்ணங்களே. குலமகள் ராதையில் பார்க்கும் குறும்பு ந.தியை இந்தப் படத்தில் ராஜஸ்ரீயுடன் ஆரம்பக் காட்சிகளில் பார்க்க முடியும்..ஆனால் அந்தக் காலத்தில் லிஃப்ட் என்பது சாதாரணமான ஒன்றாக இருந்ததா என்ன..முதல் தடவை படம் பார்த்த போது பாபுவைத் தனியாக குழந்தை பொம்மையுடன் போக விட்டது ஒருவித கோபமே வந்தது எனக்கு..ஏன் முதலில் லவ் பண்ணிய பெண்ணுடன் இருப்பதாகக் காண்பித்திருக்கக் கூடாதா என ஒரு சண்டையே போட்டிருந்தேன் அந்த சமயம் - மனதிற்குள்..

க்ருஷ்ணா சார்..ஸ்ரீப்ரியா அதற்கப்புறம் தானே வாழ்வே மாயத்தில் நடித்திருந்தார்..கொஞ்சம் இளைச்ச ஃபீலிங்க் இருந்தது..ஓ ராஜாவே ஓ ரோசாப்பூ.. பாட்டு ஓ நோ எனக்குப் பிடிக்காது :)

madhu
21st August 2014, 01:37 PM
சாமியே சரணம் ! கிருஷ்ணா ஜி.. நல்ல தரிசனம் கிடைத்து எல்லாரும் எல்லாமும் பெற வேண்டிக் கொண்டதற்கு நன்றி ஜி.

நாயக்கரின் மகளில் வாணி ஜெயராம் பாடும் "கலையாத கனவொன்று கண்டேன்" எனக்கு பிடித்த பாடல். கர்நாடக சங்கீத மெட்டு என்பதால் வாணிக்கு நல்லாவே பொருந்தும்.

சிக்கா... ஜெ.சி... ஸ்ரீப்ரியா... நடிகர் திலகத்துடன் ரத்த பாசத்திலும் நடிச்சாங்க.. அதிலேயும் இளைக்கலையே !!

gkrishna
21st August 2014, 01:38 PM
சிகா,madhu anna

ஸ்ரீப்ரிய ஆரம்பம் சூப்பர் பியுட்டி.பட்டிகாட்டு ராஜா படத்தில்
அசோகன் சொல்வார் "மாற்றன் தோட்டத்து மல்லிகையே வா வா வா
மன்சூர் கண்டுஎடுத பெட்டகமே வா வா " அப்படி மல்லிகை மாதிரி இருப்பார் .6 அல்லது 7 வருசம் பீக் மார்க்கெட்.மல்லிகையை எல்லோரும் மோந்து பார்த்ததினால் என்னவோ
பொல்லாதவன் அப்பறும் என்னடி மீனாட்சி (ரொம்ப நாளாக எனக்கொரு ஆசை ) பீக் வீங்கல் ,
தீடீர்னு 3 மாதம் அஞ்சாத வாசம் (வெளிநாடு அமெரிக்கானு நினைவு .உறிஞ்சு எடுத்துட்டான் டாக்டர் எக்ஸ்ட்ரா கொழுப்பை ) திருப்பி வரும் போது வசந்தத்தில் ஒரு நாள்,வாழ்வே மாயம் ,தீ,தனிகாட்டு ராஜ இப்படின்னு ஒரே ஸ்லிம் அதிலும் வாசு சார் ஒரு பாட்டு போட்டார்
(அய்யாவுக்கு மனசு இருக்கு அம்மாவுக்கு வயசு இருக்கு இஷ்க் இஷ்க்)
ஒரு டிராயர் பனியன் costume சகிகல்லை

mr_karthik
21st August 2014, 01:43 PM
இளமை ஊஞ்சல் ஆடுகிறது படத்தில் நான் மிகவும் ரசித்தது
திவாரியின் துல்லியமான ஒளிபதிவு சிகா சார்

டியர் கிருஷ்ணாஜி,

இளமை ஊஞ்சலாடுகிறது ஒளிப்பதிவு நிவாஸ்.
அழகே உன்னை ஆராதிக்கிறேன் படம்தான் திவாரி.

gkrishna
21st August 2014, 01:47 PM
http://antrukandamugam.files.wordpress.com/2013/08/sripriya-sathya-sundaram-3jpg.jpg?w=412http://antrukandamugam.files.wordpress.com/2013/08/sreepriya-sangili-11.jpg?w=358

ரஜpனி முதன் முதலாக கதாநாயகனாக நடித்த ~பைரவி' யில் ஜோடி சேர்ந்தவர் ஸ்ரீபிரியா
வில்லனாக நடித்துக் கொண்டிருந்த ரஜினிகாந்த் முதன் முதலாக ‘பைரவி’ படத்தில் கதாநாயகனாக நடித்தார். அந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு ஸ்ரீபிரியாவுக்கு கிடைத்தது.

ஸ்ரீபிரியாவின் முதல் படமான ‘முருகன் காட்டிய வழி’ படம் தயாராகிக் கொண்டிருந்த நேரத்தில் டைரக்டர் கே. பாலசந்திரனின் ‘அவள் ஒரு தொடர்கதை’ படத்திலும் ஒப்பந்தமானார் ஸ்ரீபிரியா.

‘முருகன் காட்டிய வழி’ படம் 1974 ஜூன் மாதம் ரிலீசானது. இதே ஆண்டில் தீபாவளி தினத்தில் ‘அவள் ஒரு தொடர்கதை’ படம் வெளியானது. இந்த நேரத்தில் எம். ஜி. ஆர். நடித்து டைரக்டர் ஸ்ரீதர் இயக்கிய ‘உரிமைக்குரல்’ உள்ளிட்ட சில பெரிய படங்களும் வெளிவந்தன. இருந்தும் முற்றிலும் புதுமுகங்களை வைத்து கே. பாலசந்தர் இயக்கிய ‘அவள் ஒரு தொடர்கதை’ படம் மகத்தான வெற்றிபெற்றது

இதுபற்றி ஸ்ரீபிரியா கூறியதாவது ::-

‘அவள் ஒரு தொடர்கதை’ படத்தில் நடிக்கும்போதே டைரக்டர் கே. பாலசந்தர் என்னிடம் ‘படத்தில் எத்தனை கெரக்டர்கள் இருந்தாலும் உன் கெரக்டர் தனித்துப் பேசப்படும்’ என்றார். அப்படியே நடந்தது.

தமிழில் வெற்றிபெற்றதைத் தொடர்ந்து இந்தப் படத்தை தெலுங்கிலும் கே. பாலசந்தர் அந்துலேனி கதா’ என்ற பெயரில் உருவாக்கினார். தமிழில் சுஜாதா நடித்த கெரக்டரில் தெலுங்கில் ஜெயபிரதா நடித்தார். தமிழில் படாபட் ஜெயலட்சுமியும், நானும் ஏற்றிருந்த அதே கெரக்டர்களை தெலுங்கிலும் நடித்தோம். தெலுங்கிலும் படம் பெரிய அளவில் வெற்றி பெற்றது.

இந்த வெற்றியைத் தொடர்ந்து தெலுங்கு ரசிகர்களிடமும் நான் பிரபலமானேன். தமிழில் என் அண்ணன் கெரக்டரில் ஜெய்கணேஷ் நடித்திருந்தார். தெலுங்கில் இந்தக் கெரக்டரில் ரஜினி நடித்து பிரபலமானார்.

இப்படி ரஜினியும், ஸ்ரீபிரியாவும் தெலுங்கில் நல்லவிதமாக அறிமுகமானதைத் தொடர்ந்து ‘சிலகம்மா செப்பந்தி’ என்ற தெலுங்குப் படத்தில் இருவரும் ஜோடியாக நடித்தனர். இது ‘அடிமைகள்’ என்ற மலையாளப் படத்தின் ரீ மேக், மலையாளத்தில் சாரதா நடித்த கெரக்டரில் தெலுங்கில் ஸ்ரீபிரியா நடித்திருந்தார். கே. பாலசந்தர் மேற்பார்வையில் ஈரங்கி ஷர்மா டைரக்ட் செய்திருந்தார்.

இந்த தெலுங்குப் படமும் வெற்றிபெற்றது. இதையே தமிழில் ‘நிழல் நிஜமாகிறது’ என்ற பெயரில் சில மாற்றங்களுடன் உருவாக்கினார். தெலுங்கில் ரஜினி நடித்த கெரக்டரில் தமிழில் கமலஹாசனும், ஸ்ரீபிரியா நடித்த கெரக்டரில் ஷோபாவும் நடித்தார்கள். தமிழிலும் படம் வெற்றிபெற்றது.

தமிழில் பாலசந்தர் கேட்ட திகதிகளை தரமுடியாத அளவுக்கு ஸ்ரீபிரியா பிசியாக இருந்ததால், தமிழில் ஸ்ரீபிரியாவுக்கு பதிலாக ஷோபா நடித்தார்.

இதுபற்றி ஸ்ரீபிரியா கூறும்போது, ‘1974 ல் வருஷத்துக்கு ஐந்தாறு படம் என்ற நிலையில் இருந்தேன். ஆனால் அடுத்து வந்த வருடங்களில் வருடத்துக்கு 16 முதல் 18 படம் வரை நடித்தேன்! அந்த ஆண்டுகளில் அதிக படங்களில் நடித்த நடிகை என்ற பெயரை தொடர்ந்து தக்க வைத்துக் கொண்டிருந்தேன்’ என்கிறார்.

வி. சி. குகநாதன் டைரக்ட் செய்த ‘மாங்குடி மைனர்’ படத்தில் ஸ்ரீபிரியா கதாநாயகியாக நடித்தார். இப்படத்தில் ரஜினி நடித்திருந்தாலும், விஜயகுமார்தான் ‘மாங்குடி மைனர்’. ரஜினி, வில்லனாகவே நடித்துக் கொண்டிருந்த காலக்கட்டம் இது.

இந்தியில் ‘ராம் கு காலட்சுமண்’ என்ற பெயரில் ரந்திர்கபூர், சத்ருகன் சின்கா, ரேகா நடித்த படத்தில் தமிழ்ப் பதிப்பு இது. இந்தியில் சத்ருகன் சின்கா ஏற்றிருந்த வேடத்தை தமிழில் ரஜினி ஏற்க, ரேகா கெரக்டரில் ஸ்ரீபிரியா நடித்தார்.

இந்த சமயத்தில்தான் ‘பைரவி’ படத்தில் ரஜினியை கதாநாயகனாக அறிமுகப்படுத்தினார் தயாரிப்பாளர் கலைஞானம். இந்தப் படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடிக்கும்படி ஸ்ரீபிரியாவை கேட்டார்.

ஸ்ரீபிரியா ஏராளமான படங்களில் நடித்துக் கொண்டு பிசியாக இருந்த நிலையிலும், கால்iட்டுகளை அட்ஜஸ்ட் செய்து ‘பைரவி’யில் கதாநாயகியாக நடித்தார்.

இதுபற்றி ஸ்ரீபிரியா கூறியதாவது :-

‘அப்போது நான் நிறைய தெலுங்குப் படங்களை கைவசம் வைத்திருந்தேன். நான் கமல், ரஜினி, மூவருமே சம காலத்தில் நடிக்க வந்தவர்கள். டைரக்டர் கே. பாலசந்தர் படங்களில் நடிக்கும்போதே எங்களுக்குள் நல்ல நட்பு இருந்து வந்தது. ருத்ரையா டைரக்ஷனில் ‘அவள் அப்படித்தான்’ படத்தில் கமல், ரஜினி, நான் என்று மூவருமே நடித்தும் இருக்கிறோம். ரஜினியுடன் ‘ஆடுபுலி ஆட்டம்’ போன்ற சில படங்களில் நடிப்பை தொடர்ந்திருக்கிறேன்.

‘அவள் அப்படித்தான்’ படத்தில் என் நடிப்புக்காக தமிழக அரசு ‘சிறந்த நடிகை’ விருது தந்தது. உண்மையில் இந்தப் படத்தின் கதையை கேட்டதும் நான் நடிக்கத் தயங்கினேன். திருமணமானவரை விரும்பும் பெண் கெரக்டரை ரசிகர்கள் ஏற்பார்களோ, மாட்டார்களோ என்று பயந்தேன். ஆனால் கமல்தான், ‘நிச்சயமாக இந்த கெரக்டர் உனக்கு பேரும் புகழும் வாங்கித் தரும், நடி’ என்று வற்புறுத்தினார்.

இப்படி ஒருவர் வளர்ச்சியில் மற்றவர்கள் அக்கறை செலுத்தி மகிழ்ந்து கொண்டிருந்தோம்.

முதல் முதலாக ரஜினி கதாநாயகனாக நடித்த படத்தில், அவருடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பு எனக்கு வந்ததும், அப்போது ‘பத்மாலயா’ நிறுவனத்தின் தெலுங்குப் படத்துக்கு கொடுத்திருந்த கால்iட்களை அவர்களிடம் கேட்டு மாற்றிக்கொண்டு? ‘பைரவி’ படத்தில் நடித்தேன். படமும் வெற்றிபெற்றது’ என்றார் ஸ்ரீபிரியா.

http://www.thinakaran.lk/2013/05/07/f4.jpg

gkrishna
21st August 2014, 01:51 PM
டியர் கிருஷ்ணாஜி,

இளமை ஊஞ்சலாடுகிறது ஒளிப்பதிவு நிவாஸ்.
அழகே உன்னை ஆராதிக்கிறேன் படம்தான் திவாரி.

சாரி கார்த்திக் சார் .திருத்தி கொள்கிறேன்

mr_karthik
21st August 2014, 01:55 PM
நமது திரியின் முதல் பாகத்தில் லட்டு லதாவைப்பற்றி அலசும்போது ஒருவர் சொன்னார் "லதா சிகாமியின் செல்வன் என்ற ஒரே படத்தில் மட்டுமே நடிகர்திலகத்துடன் நடித்தார். இன்னும் சில படங்களில் நடித்திருந்தால் நன்றாக நடிக்க கற்றுக்கொண்டிருப்பார்" என்று.

அப்போது எனக்கு தோன்றிய எண்ணம்... 'ஸ்ரீபிரியாவும் தானே நடிகர்திலகத்துடன் பல படங்களில் நடித்தார். ஆனால் நடிப்பைக் கற்றுக்கொண்டாரா என்ன'

அப்பனே அப்பனே புள்ளையாரப்பனே பாட மட்டுமே லாயக்கு...

gkrishna
21st August 2014, 01:59 PM
வலைப்பூவில் படித்து ரசித்த ஒரு பகுதி

சந்திரோதயம் பாடல் பற்றி பாகம் ஒன்றில் அலசி விட்டோம்
திரு கார்த்திக் சார் கூட அருமையான பாடலை வீணாக்கி விட்டார்கள்
என்று எழுதிய நினைவு இருந்தாலும் இந்த கட்டுரை நன்றாக இருப்பதாக நினைத்ததால் மீள் பதிவு


http://www.thinakaran.lk/2013/05/07/f5.jpghttps://encrypted-tbn2.gstatic.com/images?q=tbn:ANd9GcQRAxnZOrseQSCW4-9gTZn2MIsbiKFOxzT8QeQ8_ZwqerkXYhWb

வைரங்களைப் புதைத்திருக்கும் வரிகளை கொண்ட உவமைகள் நிறைந்த பாடல்
மிகவும் சாதாரணமான, சுவாரஸ்யமற்ற கதையைக் கொண்ட சந்திரோதயம் படத்துக்கு முத்து முத்தான பாடல்களை எழுதியிருக்கிறார் வாலி. அவை அனைத்துக்கும் சத்தான இசையை ஊட்டி, உலவ விட்டிருக்கிறார் மெல்லிசை மன்னர்.

இது ஒரு வழக்கமான காதல் டூயட்தான் என்றாலும், இதை ஒரு சிற்பம்போல மிக அழகாக செதுக்கியிருக்கிறார் வாலி.

இந்தப் பாடலில் நாயகன் பாடும் வரிகள் வழக்கமானவைதான். ஆனால் நாயகியின் வரிகளில்தான் வைரங்களைப் புதைத்திருக்கிறார் இந்த வித்தகக் கவிஞர். ஒரே பாடலில் எத்தனை உவமைகள்! இத்தனை உவமைகள் நிறைந்த பாடல் வேறொன்று இருக்குமா (அத்திக்காய் நீங்கலாக) என்பது சந்தேகம்தான்.

இந்தப் பாடலில் இசைக் கருவிகளைக் குறைந்த அளவே பயன்படுத்தியிருக்கிறார் எம். எஸ். வி. என்று தோன்றுகின்றது. பாடல் முழுவதும் அவர் நடத்தியிருக்கும் கச்சேரிக்கு இசைக்கருவிகள் தடங்கலாக இருக்கக் கூடாது என்பதாலோ என்னவோ!

மிக எளிமையான துவக்க இசை கட்டியம் கூறும் குழல் இசை (பாடல் முழுவதிலுமே, புல்லாங்குழலின் இனிமைதான் தூக்கி நிற்கிறது) ஒரு பிரமாண்டமான இசை வேள்வி நடக்கப்போகிறது என்பதற்கான எந்த ஒரு குறிப்பும் இல்லாமல் மெல்ல மென்மையாக ஆர்ப்பாட்டமில்லாமல் இசைத்துவிட்டுப் போகிறது துவக்க இசை.

கேட்டவுடனேயே மயங்க வைக்கும் இனிமையான பல்லவியை டி. எம். எஸ். துவங்கி வைக்கிறார். பல்லவியிலேயே மூன்று உவமைகளைத் தாராளமாக அநாயாசமாக இந்தா எடுத்துக்கொள் என்பது போல எடுத்து வீசியிருக்கிறார் கவிஞர் வாலி.

சந்திரோதயம் ஒரு பெண்ணானதோ

செந்தாமரை இரு கண்ணானதோ

பொன்னோவியம் என்று பேரானதோ

என் வாசல் வழியாக வலம் வந்ததோ

அடுத்து நாயகி தன்னைப் பற்றிப் பேசுகிறாள் நான் எப்படிப்பட்டவள் தெரியுமா?

குளிர்காற்று கிள்ளாத மலர்

கிளி வந்து கொத்தாத கனி

நிழல்மேகம் தழுவாத நிலவு

வியப்பாக இருக்கிறதா? ஆயினும் என்ன? இப்படிப்பட்டவளை நீ உன் நெஞ்சோடு சேர்த்துக் கொண்டு விட்டாயே!

இந்த வரிகளில் நாயகியின் பெருமை தெரிகிறது. எப்படிப்பட்ட தூய்மையான பொருளை நீ அடைந்திருக்கிறாய் என்பதை நீ உணர வேண்டும்’ என்று நாயகனுக்கு உணர்த்துவதாக அமைந்திருக்கின்றன இவ்வரிகள். இப்படி என்னைத் தூய்மையாக வைத்துக் கொண்டதெல்லாம் நீ உன் நெஞ்சுடன் என்னை இணைத்துக் கொள்ளத்தானா?’ என்ற (போலியான) ஆதங்கமும் இவ்வரிகளில் ஒலிக்கிறது.

இவ்வரிகளுக்கு இன்னொரு விதமாகவும் பொருள் கொள்ள முடியும்.

குளிர் காற்று கிள்ளாத (என்ன அருமையான சொல்! குளிர் காற்று உடலில் படும்போது ஏற்படும் சிலிர்ப்பை ‘கிள்ளல்’ என்று வாணித்திருக்கிறார். மலர், கிளி வந்து கொத்தாத கனி, நிழல் மேகம் தழுவாத நிலவு இவை எல்லாம் இயற்கையில் இருக்க முடியாதே? அப்படியானால் நான் மட்டும் எப்படி? நீ என்னை உன் நெஞ்சோடு சேர்த்துக் கொண்டு விட்டதால் வேறு எந்த விதத் தீண்டல்களும் எனக்கு ஏற்படவில்லை!

குளிர்காற்று கிள்ளாத மலரல்லவோ

கிளி வந்து கொத்தாத கனியல்லவோ

நிழல்மேகம் தழுவாத நிலவல்லவோ

நெஞ்சோடு நீ சேர்த்த பொருளல்லவோ

எந்நாளும் பிரியாத உறவல்லவோ

இதைத் தொடர்ந்து, நாயகி நாயகனை வர்ணிக்கும் பல்லவி

இளம் சூரியன் உந்தன் வடிவானதோ

செவ்வானமே உந்தன் நிறமானதோ

பொன்மாளிகை உந்தன் மனமானதோ

என் காதல் உயிர் வாழ இடம் தந்ததோ

பாடல் இன்னும் பாதி கூட முடியவில்லை அதற்குள் பன்னிரண்டு உவமைகளை அள்ளித் தெளித்து விட்டார் இரண்டாம் கம்பன். உவமைக் கவிஞர் என்ற பட்டம் இவருக்கும் பொருந்தும். இந்த ஒரு பாடலுக்காகவே இளம் சூரியன் உந்தன் வடிவம். செவ்வாணம் உந்தன் நிறம் என்பதெல்லாம் வழக்கமான வர்ணனைகள் ஆனால் ‘பொன்மாளிகை உந்தன் மனமானதோ’ என்ற வரியில் ஒரு பொடியை (பொறியை) வைத்திருக்கிறார் கவிஞர். ‘என் காதல் உயிர் வாழ இடம் தந்ததோ’ என்ற அடுத்த வரியின் மூலம் ‘நீ பொன்மனச் செம்மல்தான். ஆனால் அது எதனால்? என் காதல் உன் மனதில் உயிர் வாழ்கிறதே அதனால்தான் என் காதல்தான் பொன் அது உன் மனதில் இருப்பதால்தான் அது பொன் மாளிகை’

மீண்டும் பல்லவியின் இரு வரிகளைப் பாடுகிறார் நாயகி

(இளம் சூரியன்)

இந்த இடத்தில் மெல்லிசை மன்னருக்கு ஒரு எண்ணம் தோன்றுகிறது. இது ஒரு நீளமான பாடல் இந்த நீளமான பாடலின் சுருக்கத்தை அளித்தால் என்ன? எப்படி அளிப்பது? ஒரு ஹம்மிங் மூலமாகத்தான்! ஆஹாஹாஹா

என்ன ஒரு ஹம்மிங் (இதற்கு சரியான தமிழ்ச் சொல் இருக்கிறதா?)

இந்த ஹம்மிங்கைக் கேட்கும் போது வேறு இரண்டு ஹம்மிங்குகள் நினைவுக்கு வருகின்றன. மூன்றையும் ஒப்பிட்டு இந்தப் பாடலின் ஹம்மிங் காற்றில் லேசாக மிதப்பது போன்ற உணர்வைத் தருகிறது. இங்கே நாயகி இப்போதுதான் காதலின் உணர்வை அறியத் தொடங்கியிருக்கின்றாள்.

‘சிட்டுக்குருவி முத்தம் கொடுத்து’ பாடலில் வரும் ஹம்மிங். ஒரு இன்பக் கடலில் மூழ்கி மூழ்கி எழும் உணர்வை வெளிப்படுத்துகிறது. இந்த நாயகியின் காதல் உறுதியாகி விட்ட ஒன்று.

யாருக்கு மாப்பிள்ளை யாரோ’வில் வரும் ஹம்மிங் நாயகியின் உல்லாசமான, குறும்புத்தனமான, சீண்டிப் பார்க்கும் மனப்பான்மையை வெளிப்படுத்துகிறது.

பகவத் கீதையை முழுமையாகப் படிக்க முடியாதவர்கள், ‘ஸர்வ தர்மான பரித்யஜ்ய என்ற சரல் ஸ்லோகத்தை மட்டும் படித்தால் போதும் என்று சொல்வார்கள். அது போல், இந்தப் பாடலை முழுமையாகக் கேட்க நேரம் இல்லாவிட்டால், இந்த ஹம்மிங்கை மட்டும் கேட்டுப் பாடல் முழுவதையும் கேட்ட உணர்வைப் பெறலாம்.

mr_karthik
21st August 2014, 02:25 PM
டியர் கிருஷ்ணாஜி,

'சந்திரோதயம் ஒரு பெண்ணானதோ' பாடல் மிக அருமையான ஒன்றுதான், சந்தேகமேயில்லை. எனக்கு மிகவும் பிடித்த பாடல். பாடலை பல நூறுமுறை கேட்டபின்பு படத்தில் பார்த்தால்..... என் மனநிலைக்கு இப்போதைய உதாரணம் ஒன்றைச்சொல்லலாம்.

நண்பர் வாசு அவர்கள் பழைய நடிகைகளின் அழகான, இளமையான, மனதைக்கவரும் ஸ்டில்களையெல்லாம் போட்டுவிட்டு, கடைசியில் அந்த நடிகையின் இன்றைய தோற்றம் என்று ஸ்டில்லை போட்டு ஒரு அதிர்ச்சி அளிப்பார் அல்லவா, அதுபோல...

gkrishna
21st August 2014, 02:30 PM
நமது திரியின் முதல் பாகத்தில் லட்டு லதாவைப்பற்றி அலசும்போது ஒருவர் சொன்னார் "லதா சிகாமியின் செல்வன் என்ற ஒரே படத்தில் மட்டுமே நடிகர்திலகத்துடன் நடித்தார். இன்னும் சில படங்களில் நடித்திருந்தால் நன்றாக நடிக்க கற்றுக்கொண்டிருப்பார்" என்று.

அப்போது எனக்கு தோன்றிய எண்ணம்... 'ஸ்ரீபிரியாவும் தானே நடிகர்திலகத்துடன் பல படங்களில் நடித்தார். ஆனால் நடிப்பைக் கற்றுக்கொண்டாரா என்ன'

அப்பனே அப்பனே புள்ளையாரப்பனே பாட மட்டுமே லாயக்கு...

இதுவாவது பரவாய் இல்லை kaarthik sir . டைரக்ட் செய்கிறேன் பேர்வழி என்று
'சாந்தி முஹர்தம் (மோகன் ஊர்வசி ),காதோடு தான் நான் பேசுவேன்
,மாலினி பாளையம்கோட்டை போன்ற படங்கள் எல்லாம் டைரக்ட் செய்த நினைவு

http://www.meditations.jp/images/7LPE23588.jpg

gkrishna
21st August 2014, 02:35 PM
டியர் கிருஷ்ணாஜி,

'சந்திரோதயம் ஒரு பெண்ணானதோ' பாடல் மிக அருமையான ஒன்றுதான், சந்தேகமேயில்லை. எனக்கு மிகவும் பிடித்த பாடல். பாடலை பல நூறுமுறை கேட்டபின்பு படத்தில் பார்த்தால்..... என் மனநிலைக்கு இப்போதைய உதாரணம் ஒன்றைச்சொல்லலாம்.

நண்பர் வாசு அவர்கள் பழைய நடிகைகளின் அழகான, இளமையான, மனதைக்கவரும் ஸ்டில்களையெல்லாம் போட்டுவிட்டு, கடைசியில் அந்த நடிகையின் இன்றைய தோற்றம் என்று ஸ்டில்லை போட்டு ஒரு அதிர்ச்சி அளிப்பார் அல்லவா, அதுபோல...

உண்மை கார்த்திக் சார் . நாம் மிகவும் எதிபார்த்து இந்த பாடல் இப்படி இருக்குமா அல்லது அப்படி இருக்குமா என்று நண்பர்கள் எல்லோரிடமும் விவாதித்து விட்டு இறுதியில் படத்தில் பார்த்தால் அது நாம் எதிர்பார்த்ததற்கு நேர் மாறுதல் ஆக அமைந்து இருக்கும்

vasudevan31355
21st August 2014, 02:40 PM
இதுவாவது பரவாய் இல்லை kaarthik sir . டைரக்ட் செய்கிறேன் பேர்வழி என்று
'சாந்தி முஹர்தம் (மோகன் ஊர்வசி ),காதோடு தான் நான் பேசுவேன்
,மாலினி பாளையம்கோட்டை போன்ற படங்கள் எல்லாம் டைரக்ட் செய்த நினைவு

http://www.meditations.jp/images/7LPE23588.jpg


வருக கிருஷ்ணா சார்,

ஈகரை நெட்டில் நான் எழுதிய விமர்சனம்

மாலினி 22
பாளையங்கோட்டை

மாலினி வயது 22 கொண்ட பாளையங்கோட்டையை சேர்ந்த இளம் பெண். சென்னையில் நர்ஸாக ஒரு ஹாஸ்பிடலில் பணிபுரிகிறாள். தன் சக தோழிகளுடன் ஒரு தோழியின் வீட்டில் தங்கியிருக்கிறாள். வேலை நிமித்தம் மாலினி கனடா செல்ல ஆசைப்பட்டு விசாவுக்காக ஏற்பாடு செய்யும் போது விசா ஆபிசில் பணிபுரியும் வருண் என்ற இளைஞனுடன் பழக்கம் ஏற்பட்டு அது காதலாக மாறுகிறது. தோழி வெளிநாடு செல்வதால் வருண் வீட்டிலேயே மாலினி தங்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது. நல்லவன் போல நடிக்கும் நயவஞ்சகன் வருண் மாலினியை தான் அனுபவிப்பது மட்டுமின்றி பணத்துக்காக பெண் பித்தனான தன்னுடைய பாஸ் பிரகாஷையும் அனுபவிக்க வைக்கிறான் மாலினி அறியாமலேயே. மாலினியின் வாழ்வு சின்னாபின்னமாகிறது. மாலினிக்கு மறு வாழ்வு தருவது போல வருண் நடித்து அவள் உடல்நிலை தேறியவுடன் மீண்டும் நரேஷ் மூலம் அவள் வாழ்வை சீர் குலைக்கிறான். உடலாலும், மனதாலும் பாழ்பட்டுப் போன மாலினியை தந்திரமாக போதை மருந்து கடத்தல் கேஸில் போலீசில் சிக்க வைத்தும் விடுகிறான் வருண். அப்போதுதான் மாலினிக்கு வருணின் மோசடி லீலைகள் புரிகிறது. ஜெயில் தண்டனை பெறும் மாலினி தன்னுடன் இருக்கும் தீவிரவாதி பெண் கைதி ஜானகி என்பவளுக்கு பிரசவம் பார்த்து அவள் அன்புக்கு பாத்திரமாகிறாள். ஜானகி மூலம் பெயிலில் சிறையிலிருந்து வெளிவருகிறாள். ஜானகியின் தீவிரவாத கும்பலின் உதவியோடு தன்னை சீரழித்த பிரகாஷையும், தன்னை நம்பி ஏமாற்றி வாழ்வை நாசமாக்கிய மோசடிக் காதலன் வருணையும் வித்தியாசமான முறையில் பழி வாங்குகிறாள்.

'மாலினி 22 பாளையங்கோட்டை' படத்தின் கதை இதுதான். '22 female kottayam' என்று மலையாளத்தில் ஹிட்டடித்த படத்தை தமிழில் தந்திருக்கிறார் முன்னாள் தமிழ் 'கிளாமர் குயின்' ஸ்ரீப்ரியா. தயாரிப்பு முன்னாள் நடிகர் ராஜ்குமார் சேதுபதி.

http://galleries.celebs.movies.2.pluz.in/albums/abirami/uploads/Kollywood/2013/Jul/08/Malini_22_Palayamkottai_Movie_Posters/Malini_22_Palayamkottai_Movie_Posters6a671ac7b5df5 b5c76f771ecb2566a95.jpg

டைட்டில் ரோலில் நடிகை நித்யா மேனன் பரிதாபப்பட வைக்கிறார். நர்ஸாக வரும் போது வெகு இயல்பான நடிப்பு. பின் வருணால் ஏமாற்றப்பட்டு நரேஷால் கற்பழிக்கப் படும்போது 'உச்' கொட்ட வைக்கிறார். ஜெயிலில் இருக்கும் காட்சிகளிலும் நேர்த்தியாகப் பண்ணியிருக்கிறார். ஜெயிலில் இருந்து திரும்பி வில்லன்களைப் பழி வாங்கும் போதும் அமைதியாகவே தன் பங்கைச் செய்திருக்கிறார். ஆனால் எப்போதுமே 'உம்'மென்று இருப்பதால் என்னவோ போல் இருக்கிறது. (கேரக்டர் அப்படியோ!) முன்னாள் இந்தி நடிகை டினா முனிம், மறைந்த நடிகை சௌந்தர்யா போன்ற முக அமைப்பைக் கொண்டுள்ள மாலினி தமிழில் ஒரு ரவுண்டு வர சந்தர்ப்பம் இருக்கிறது.

கிரிஷ் J.சத்தார் 'வருண்' என்ற நயவஞ்சகக் காதலனாக பார்வையாளர்கள் ஆத்திரப்படும்படி தன் பங்கை சிறப்பாகச் செய்திருக்கிறார். இவர் பிரபல மலையாள நடிகர் சத்தார் மற்றும் நடிகை ஜெயபாரதி நட்சத்திர ஜோடியின் மகன் ஆவார்.

வருணின் பாஸ் பிரகாஷாக பெண்களை வித்தியாசமான கோணத்தில் கற்பழிக்க முயலும் காமக் கொடுரனாக நடித்திருக்கிறார் பிரபல தெலுங்கு நட்சத்திர ஜோடி கிருஷ்ணா மற்றும் விஜயநிர்மலா ஆகியோரின் மகனான நடிகர் நரேஷ். பெண் பித்து பிடித்த பெரிய மனிதர்களின் குணத்தை அப்படியே அசலாகப் பிரதிபலிக்கிறார். கால் ஊனமுற்ற பெண் ஒருத்தியை அவர் அனுபவிக்க ஆசைப்படுவதும், அதற்குண்டான காரணத்தை அவர் விளக்குவதைக் கேட்டும் நமக்கு 'பகீர்' என்கிறது.

மற்றும் கோவை சரளா, கோட்டா ஸ்ரீனிவாசராவ் போன்ற பிரபலங்களும் உண்டு.

இசை அரவிந்த் சங்கர். ஒளிப்பதிவு மனோஜ் பிள்ளை.

நடிகை நித்யா மேனனுக்கு காட்சியை விளக்கும் இயக்குனர் ஸ்ரீப்ரியா

http://moviegalleri.net/wp-content/gallery/malini-22-palayamkottai-movie-working-stills/malini_22_palayamkottai_movie_working_stills_07bef f9.jpg

நடிகை ஸ்ரீப்ரியாவின் இயக்கம் தெளிந்த நீரோடை போல் செல்கிறது. இயக்குனர் தான் பெண் என்பதால் பெண்களுக்கு ஏற்படும் பாலியல் கொடுமைகளைக் கையில் எடுத்திருக்கிறார். சிறைக் காட்சிகள் ஏற்கனவே பல படங்களிலும், சீரியல்களிலும் வந்து விட்டதால் சலிப்பை ஏற்படுத்துகின்றன. அடுத்த காட்சிகள் என்ன என்பதை யூகித்தும் விட முடிகிறது. ஆனால் மாலினி வெளியே வந்து பிரகாஷை வித்தியாசமாக நல்ல பாம்பை விட்டு கடிக்க வைத்து சாகடிக்கும் காட்சி அமர்க்களம். ஆனால் கதாநாயக வில்லனுக்கு மாலினி இறுதியில் தரும் தண்டனை கொஞ்சம் ஏமாற்றமே.

கே.பாலாஜி எடுத்த 'நிரபராதி' என்ற தமிழ்ப் படத்தில் (இந்தியில் 'இன்சாப் கா தராசு') நடிகை மாதவி ஏற்கனவே இம்மாதிரி மாலினி ரோலில் நடித்து விட்டார். அதில் தன்னை நாசப்படுத்திய கயவர்களின் பிறப்புறுப்பை அறுத்து அவர்களுக்கு தண்டனை வழங்குவார் மாதவி. அதே முறையை மாலினி இப்படத்தில் இறுதியில் கையாள்வதால் கிளைமாக்ஸ் அவ்வளவு சுவாரஸ்யமில்லை. வேறு வகையில் யோசித்திருக்கலாம்.

எப்படியோ! தான் சொல்ல வந்ததை மிக நேர்த்தியாக ஸ்ரீப்ரியா சொல்லியிருகிறார் என்பது பாராட்டப்பட வேண்டிய விஷயம். சமுதாயத்தில் கமுக்கமாக இருக்கும் பெரிய இடத்து காமுகப் பேய்களின் முகமூடிகளைக் கிழித்திருக்கிறார் இயக்குனர்.

நம் ஹீரோக்களின் அலட்டல்களும், 'ஏய்' கத்தல்களும், பஞ்ச் வசனங்களும், அடியாட்களின் அரிவாள்களும், வில்லனின் உருட்டல்களும், நம்ப முடியாத சண்டைக் காட்சிகளும் இல்லாமல் ஒரு நல்ல படத்தைப் பார்த்த உணர்வு நிச்சயம் இப்படத்தைப் பார்த்ததும் ஏற்படுவது உண்மை.

அந்த வகையில் இயக்குனருக்கு வெற்றியே!

gkrishna
21st August 2014, 02:47 PM
http://tamil.oneindia.in/img/2014/01/19-ila-ganesan5-300.jpg
இல கணேசன் அவர்கள் வழங்கிய பேட்டி ஒன்று சமீபத்தில் படித்தேன்

அதன் ஒரு பகுதியின் பகிர்வு ஏன் என்றால் அதன் மறு பகுதி விவாதத்திற்குரியது . நமது திரியின் நோக்கம் மற்றும் பதிவுகளை வேறு திசைக்கு கொண்டு சென்று விடும் என்று மனதிற்கு தோன்றியதால் தவிர்த்து விட்டேன்


ஒரு காலத்தில் நிறைய படங்கள் பார்த்ததுண்டு. தஞ்சாவூர் கிருஷ்ணா திரையரங்கில் திரையிடப்படும் படங்களில் குறிப்பாக சிவாஜி கணேசன் நடித்தவை

ஒன்றுவிடமாட்டேன். நடிப்பு என்றால் சிவாஜிதான் என்று தீர்மானமாக இருந்தது அக்காலம். அவர் நடிப்பின் மீது அப்படி ஒரு மயக்கம்.

சிவாஜி படம் பார்த்துக் கண்கலங்காமல் வருவதில்லை. ‘கப்பலோட்டிய தமிழன்’ பார்த்து அழுதிருக்கிறேன். எத்தனை முறை பார்த்தாலும் என் அழுகையை நிறுத்த முடிந்ததில்லை. ஒவ்வொரு முறையும் புதிதாகப் பார்ப்பது போலப் பார்ப்பேன். அழுவேன். குறிப்பாக அந்தப் படத்தில் பாரதியின் பாத்திரமும் மிகவும் பிடித்தது. அந்தப் பாரதி போல பிறகு வந்த ‘பாரதி’ மனதைக் கவரவில்லை.

சிவாஜிக்குப் பிறகு எனக்கு பிடித்த நடிகர் கமல். அவரது படங்கள் விரும்பிப்பார்ப்பேன். ‘சலங்கை ஒலி’, ‘மூன்றாம் பிறை’, ‘அன்பேசிவம்’ போன்ற பல படங்களை விரும்பிப் பார்த்ததுண்டு. அவை என்னைக் கவர்ந்த படங்கள்.

ரஜினி மக்களைக் கவர்ந்த நடிகர். அவர் ஒரு வித்தியாசமான நடிகர். அவர் மக்களிடம் இளைஞர்களிடம் ஏற்படுத்தியுள்ள தாக்கம் பெரியது. அவரை பின்பற்றுபவர்களைப் பெற்றிருப்பது அவரது சிறப்பு. ஆற்றல் என்று கூறலாம். பிற நடிகர்களுடன் ஒப்பிட முடியாத வித்தியாசமான ரகம் அவர்.

கதாநாயக நடிகர்களைத் தவிர்த்து விட்டு சில வில்லன் நடிகர்களும் குணச்சித்திர நடிகர்களும் எனக்குப் பிடித்தவர்களாக இருக்கிறார்கள். அந்தவகையில் ரகுவரனை எனக்குப் பிடிக்கும். பல படங்களில் என்னைக் கவரும்படி நடித்திருப்பார். இன்னொருவர் பிரகாஷ்ராஜ். பிரமாதமான நடிகர். அவர் நடித்த படங்களில் அலியாக ‘அப்பு’ படத்தில் வரும் பாத்திரம் என்னைக் கவர்ந்த ஒன்று என்பேன்.

இப்போது அரசியலில் தீவிரமானவுடன் படங்களே பார்ப்பதில்லை. எப்போதாவது மட்டும் பார்க்கிறேன். ‘அன்பே சிவம்’ போல நான் பார்த்த கடைசிப்படம் ‘எந்திரன்’ என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.

நான் நிறைய படங்கள் பார்ப்பதில்லை. தொலைக்காட்சிகளில் ஏராளமான திரைப்படங்கள் வருகின்றன. எனக்கு வருத்தமாக இருக்கிறது.

தமிழ்த் திரையுலகில் எவ்வளவோ நல்ல படங்கள் வருகின்றன. நல்ல சிந்தனைகள் வருகின்றன. ஆனால் சில படங்கள், அதில் வரும் காட்சிகளைப் பார்க்கும்போதும் பேசுகின்ற வசனங்களைக் கேட்கும்போதும் வருத்தம் வரும். கோபமும் வரும்.

mr_karthik
21st August 2014, 02:51 PM
சந்திரோதயம் படத்தில் எனக்குப்பிடித்த இரண்டாவது பாட்டு, சந்தேகமென்ன 'எங்கிருந்தோ ஆசைகள்' தான் (முதல் பாகத்தில் அலசியாச்சு). வழக்கமாக புஜம் தெரிய சட்டை அணியும் மக்கள்திலகம் எம்.ஜி.ஆர். இப்படத்தில் படம் முழுவதும் வித்தியாசமான காலருடன் கூடிய முக்கால் கை சட்டை அணிந்து எடுப்பாக இருப்பார்.

'மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்கள்' பற்றி சொல்லவே வேண்டாம். அழகுன்னா அழகு அப்படி அழகு. (எனக்கு ரொம்ப பிடித்த நடிகை, அறவே பிடிக்காத அரசியல்வாதி) . புடவை, ஜாக்கெட், வித்தியாசமான ஹேர் ஸ்டைல் என்று கிறங்கடிப்பார்.. ஸாரி.. கிறங்கடித்தார். அதுவும் ஒரு கட்டத்தில் மேஜையின்மீது குனிந்தவாறு.... நமக்கு முந்தைய தலைமுறையின் துக்கத்தை பறித்திருப்பார்.

சரணம் முழுக்க தபேலா, பாங்கோஸ் என்று தாள வாத்தியங்கள் எதுவுமில்லாமல் ஜஸ்ட் ட்ரம்ஸ் மீது பிரஷ் டச். இடையிசையின்போது ஐயோ அந்த சாக்ஸபோன் நம்மை எங்கோ கொண்டுபோகும். இசை யாரோ பூர்ணம் விஸ்வநாதனோ என்னமோ சொல்வார்கள் (நண்பரின் பாதிப்பு)

இரண்டு பாடல்களை அருமையாக அமைத்துவிட்டதாலோ என்னவோ மற்றவை சுமார்.

கம்பன் ஏமாந்தான் ஆணாதிக்கப்பாடல் என்றால் இப்படத்தில் வரும் 'கொட்டுமேளம் கொட்டுற கல்யாணம்' அக்மார்க் பெண்ணியப்பாடல்.
'காசிக்குப்போகும் சந்நியாசி' நகைச்சுவையை வரவழைக்கவில்லை.
'புத்தன் ஏசு காந்தி பிறந்தது' தலைவர் முதலில் மக்களை மழையிலிருந்து வேகமாக கொண்டுசென்று சத்திரத்தில் சேர்த்துவிட்டு அப்புறம் நிதானமாக பாடியிருக்கலாம். முதியவர்கள் முதல் சிறுவர்கள் வரை (ஆட்டுக்குட்டி உள்பட) குளிரில் நடுங்கிக் கொண்டிருக்கும்போது, நின்று நிதானித்து பாடியிருக்க வேண்டுமா?. (மாற்று திரி நண்பர்களும் இதை ஒத்துக்கொள்வார்கள்) .

அடடே, படத்தில் நம்ம பாரதியும் இருக்கிறாரே...

gkrishna
21st August 2014, 02:59 PM
நம் ஹீரோக்களின் அலட்டல்களும், 'ஏய்' கத்தல்களும், பஞ்ச் வசனங்களும், அடியாட்களின் அரிவாள்களும், வில்லனின் உருட்டல்களும், நம்ப முடியாத சண்டைக் காட்சிகளும் இல்லாமல் ஒரு நல்ல படத்தைப் பார்த்த உணர்வு நிச்சயம் இப்படத்தைப் பார்த்ததும் ஏற்படுவது உண்மை.

அந்த வகையில் இயக்குனருக்கு வெற்றியே!

வாசு சார்
மிக்க நன்றி . நலம் தானா ?
22 Female Kottayam ஏற்படுத்திய ஒரு தாக்கத்தை மாலினி 22 பாளையம்கோட்டை ஏற்படுத்தவில்லை என்பது எனது தனிப்பட்ட கருத்து

ஷாலினி எண்டே கூட்டுகாரி என்ற மலையாள படம் தமிழில் சுஜாதா என்று வந்தது . சரிதா ராஜலக்ஷ்மி நடித்து இருப்பார்கள்.
கல்யாணி மேனன் இன் 'நீ வருவாய் என நான் நினைத்தேன் ஏன் மறந்தாய் என் நான் அறியேன் ' அருமையான பாடல் உண்டு
ஆனாலும் மலையாளத்தில் ஏற்படுத்திய தாக்கம் தமிழ் இல் இல்லை
http://upload.wikimedia.org/wikipedia/en/9/92/Shalini_Ente_Koottukari.gifhttp://i29.tinypic.com/2iavn8k.png

vasudevan31355
21st August 2014, 03:03 PM
கேட்டதும் கொடுப்பவரே மதுண்னா..:) நன்றி..

என்னால் ஏற்றுக் கொள்ளவே முடியாத விஷூவல்..சின்னப் புறாவொன்று எண்ணக் கனாவினில்.. தேங்காய் சீனிவாசன் :sad:

சி.க.சார்,

என்னுடையதையும் சொல்லி விடுகிறேன்

பூவே செம்பூவே வாசம் வரும்- ராதாரவி

கண்ணனை நினைக்காத நாளில்லையே- பாதிப் பாடலை தேங்காய் சீனிவாசனுக்கும், மனோரமாவிற்கும் தந்து கொடுமை படுத்தியிருப்பார்கள். என்ன மாதிரிப் பாட்டு அது.

இறைவன் இரண்டு பொம்மைகள் செய்தான் தான் விளையாட- இதுவும் தேங்காயின் கொடுமை

ஜெயுச்சுட்டே! கண்ணா நீ ஜெயுச்சுட்டே -தேங்காய் கொடுமைடா சாமி. இதற்கு நடிகர் திலகத்தைவிட தேங்காய் சிறப்பாக நடித்து விட்டார் என்று சில பத்திரிக்கைகளின் பாராட்டு வேற. இந்த தமிழ் நாடு உருப்படும்?

உனைப் பார்க்க வேண்டும் ரசிக்க வேண்டும் - முத்துராமன்.

சம்சாரம் என்பது வீணை- முத்துராமன் (உணர்ச்சியே இல்லாமல் மண் மாதிரி நிற்பார்)

அசோக அறுவை- அனைத்துப் பாடல்களும்.

சந்திரகாந்தா- ஆம்பிளை சண்முக சுந்தரம். பல பாடல்கள்.

எனக்கொரு காதலி இருக்கின்றாள் - தேங்காய், ஜெய் கணேஷ்

ஓராயிரம் கற்பனை- ஸ்ரீகாந்த்

இன்னும் நிறைய.

மனதில் உள்ளதை எழுத வாய்ப்பு தந்தற்கு நன்றி!

mr_karthik
21st August 2014, 03:21 PM
டியர் வாசு சார்,

'மாலினி 22 பாளையங்கோட்டை' ஆய்வு ரொம்ப அருமை. நான் இந்தப்படம் பார்க்கும் சந்தர்ப்பம் இதுவரை வாய்க்கவில்லை. ஆனால் ஸ்ரீபிரியா இயக்கிய 'சாந்தி முகூர்த்தம்' மற்றும் நீயா படத்தின் இரண்டாம் பாகமான 'நானே வருவேன்' படங்கள் பார்த்திருக்கிறேன். ஆய்வைப்படிக்கும்போது மாலினியை தேடிப்பிடித்து பார்க்கவேண்டுமென்று தோன்றியது. ஆனால் முடிவைப்படித்தபோது, 'நிரபராதி'தான் ஏற்கெனவே பார்த்துவிட்டோமே. மாலினியை மெதுவாகப் பார்க்கலாம் என்று தோன்றுகிறது.

ராஜ்குமார் சேதுபதி என்பவர் ஸ்ரீபிரியாவின் கணவர்தானே. அதாவது லட்டு லதாவின் தம்பிதானே. அதாவது கடல்மீன்கள் ஸ்வப்னா பின்னால் ஜொள்ளுவிட்டு, அது நடக்காமல் போனதும் ஸ்ரீபிரியா கழுத்தில் தாலி கட்டியவர்தானே....

gkrishna
21st August 2014, 03:22 PM
நவம்பர் 21, டிச. 3, 1990

நன்றி : இந்தியா டுடே

http://www.internationalreporter.com/wp-content/uploads/2012/11/kamal-hassan-wallpaper.jpg

அது சாவகாசமாகப் பேட்டி அளிக்கும் நேரமே அல்ல. மூன்று நாட்களாக கமல்ஹாசனுக்குத் தூக்கமில்லை. தீபாவளிக்கு வெளிவர வேண்டிய அவர் படம் மைக்கேல் மதன காமராஜன், நாள் நெருங்கியும் கூட முடிந்த பாடில்லை. மூவியோலாவில் ஒலியையும், ஒளியையும் இணைக்கும் பணியில் கமல் பிஸியாக இருந்தார்.

இதற்கிடையில் இரண்டாவது பெண் குழந்தைக்குத் தந்தையானார். ஆனால், சகலகலாவல்லவரான அந்த நடிகர் களைப்படைந்தவராகத் தோற்றமளிக்கவில்லை. பேட்டியின்போது வார்த்தைகள் சரளமாக வந்தன.

தன் குடும்பம் பற்றி: சராசரி மயிலாப்பூர் குடும்பம் அல்ல எங்கள் குடும்பம். அப்பாவுக்கு அன்பு அதிகம். சற்று தோரணையும் உண்டு. என் பெண் ஸ்ருதி என் முதுகில் ஏறிக் குதித்து விளையாடுவது போல் நான் அப்பாவிடம் நடந்துகொள்ள முடியாது. நான் பிறக்கும் போது அவருக்கு 48 வயது. அதனால் நான்தான் செல்லப்பிள்ளை. என் அப்பா மிகவும் சுதந்திரமான மனிதர். வீட்டின் வாசல் பக்கம் இருந்த கடைகளை வாங்கினார். ஒருவேளை நான் வாழ்க்கையில் வெற்றி பெறாமல் உதவாக்கரையாகிவிட்டால், இந்தக் கடைகளை வைத்தாவது நான் பிழைத்துக் கொள்ளட்டுமே என்ற நினைப்பில் வாங்கினார். ஆனால் கடைகளையும், வீட்டையும் சேர்த்தே நான் வாங்கி விட்டேன். என்னை அவர்கள் கட்டிக் காப்பாற்ற வேண்டியிருக்கவில்லை. இதை நினைத்தால் எனக்குப் பெருமைதான்.

பாதிப்புகள் பற்றி: முதலில் வீட்டிலிருந்து. எல்லோருக்கும் மேலாக சிவாஜி கணேசனைக் கூறலாம். நடிகர்கள் என்று எடுத்துக் கொண்டால் ரங்காராவ், நாகேஷ் இருவரிடமும் நிறைய கற்றுக்கொண்டேன். கே.பாலசந்தர் ஒரு அற்புதமான நடிகர். அவரை நடிக்கச் சொல்லி நான் டைரக்ட் செய்ய வேண்டும் என்று எனக்கு ஆசை.

என்னை அதிகம் பாதித்தவை பதேர் பாஞ்சாலி. முகல் ஏ ஆஜம் போன்ற படங்கள். ஆரம்ப நாட்களில் என் மனதில் ஷ்யாம் பெனகல் அதிமுக்கிய இடம் வகித்தார். அவரது போட்டோக்களையும் சேர்த்துச் சேர்த்து வைத்துக் கொள்வேன். இந்திய நடிகர்களை எடுத்துக் கொண்டால், அம்ரீஷ் பூரியிடம்தான் நிஜமான ஹீரோத்தன்மை இருக்கிறது என்று 15 வருடங்களாகச் சொல்லி வருகிறேன். ஸ்டாலோன், ப்ரான்ஸன், ஈஸ்ட்வுட் ஆகியோருக்கெல்லாம் சமமானவர். மாகம்பாஸிற்கு இணையாக ஹீரோ வேடம் ஏற்கக்கூடியவர்; இவரிடம் ஒரு முரட்டுத்தனம் பொருந்துகிறது. இதில் இவருக்கு ஒரே போட்டி தர்மேந்திராதான். புதிய டார்ஜான் மற்றும் ப்ரேஸ்டோக் டார்ஜானில் நடித்த பெல்மாண்டோ அல்லது கிறிஸ்டோபர் லேம்பர்ட் ஆகியோரிடம் உள்ள அதே தன்மை அமிதாப்பச்சனிடம் உள்ளது. இவர்கள் எல்லோருமே கற்கால மனிதனுக்கு அடுத்தபடியில், நியாண்டர்தால் மனிதன் ஜாடையில் இருப்பவர்கள். யூசுப் கான் சாகிப் (திலீப்குமார்) கூட அதே ஜாடைதான்.

அபூர்வ சகோதரர்கள் தயாரித்தது பற்றி: நான் எப்படி தயாரித்தேன் என்று என்னாலேயே சொல்ல முடியவில்லை. எவ்வாறு மாஜிக் செய்கிறாய் என்று மாஜிக் நிபுணரைக் கேட்பதைப் போலிருக்கிறது இது. சாகரில் நடிக்கும்போது, ரமேஷ்ஜியிடம் (சிப்பி) நான், ஹீரோவின் கண்ணாடியில் பிரதிபலிக்கும் மனசாட்சியாக, குள்ளனை ஏன் காட்டக்கூடாது என்று கேட்டேன். இயேசு கிறிஸ்துவிடம் பேசுவதாகப் பல படங்களில் பாத்திரங்கள் வருகின்றன. அமிதாப் குடித்து விட்டுத் தனது துன்பங்களையெல்லாம் கடவுளிடம் கொட்டுவார். ஆனால் எனது கேரக்டர், தன்னையே குள்ளனாகப் பார்க்கிறான். எப்படியெல்லாம் அலட்சியப்படுத்துகிறார்கள் என்று வருந்துகிறான். இதை நானே ஏன் நடிக்கக் கூடாது என்று யோசித்தேன். இறுதியில் அதை நானே செய்தேன்.

உயரமானவர்கள், குள்ளமானவர்கள் பற்றி: நான் உயரமாக இல்லை என்ற உணர்வு உள்ளூர உறுத்தியது. அதனால்தான் எனது லட்சிய மனிதர்களாக நான் கொண்ட அனைவருமே குள்ளம். சிவாஜி, சார்லி சாப்ளின், ப்ராண்டோ, சஞ்சீவ் குமார், பாசினோ இப்படியாக அ..ப்..பா எவ்வளவு உயரம், என்ன தீர்க்கமான மூக்கு என்று சிலரைப் பற்றிக் கூறுகிறார்கள். இந்த அம்சங்கள் இல்லாதவர்கள், அதனாலென்ன? என்று சொல்வார்கள். அதனாலென்ன என்று கூறி எதையும் பெரிதாக எடுத்துக் கொள்ளாதவர்கள் நாம். அபூர்வ சகோதரர்களில் நான் உயரமாக என்னைக் காட்டிக் கொள்ள இதையே பயன்படுத்தியிருக்கலாம். நம்ப முடியாத அளவிற்கு குண்டனாகக் கூட நடித்திருக்கலாம். ஆனால், அப்படி நான் நடிக்கவில்லை.

இந்திப் படங்கள்: நான் தவறு செய்தேன். நான் என் திறமையைக் காட்ட விரும்பினேன். நான் முதலில் ஒரு நகைச்சுவை படத்தில் நடித்திருக்க வேண்டும். ‘தில்’ படம் போல் ஒரே நகைச்சுவையும் காதலுமாக. இந்தி ரசிகர்கள் என்னை ஏற்றுக் கொள்ளும் வரை நான் அப்படி செய்திருக்க வேண்டும்.

காமெடி பற்றி: காமெடி என்பது மிகவும் சீரியஸான ஒரு விஷயம். பாலசந்தருக்கு நகைச்சுவை உணர்வு அதிகம். ஒரு கோமாளியின் சாவுதான் சோகரசம் ததும்பும் காட்சி என்று நினைப்பவர். நிஜமாகவே கோமாளி என்று சொல்லிவிடுவார்களோ என்றுதான் நடிகன் பயப்படுகிறான். உதாரணமாக சோ, நாகேஷ் போன்றவர்கள் மிகவும் ஆழமான உணர்வு உடையவர்கள். காமெடியன்கள் தலைக்கு மேல் எப்போதுமே கத்தி தொங்கிக் கொண்டிருக்கும். காமெடி எனக்கு மிகவும் பிடிக்கும்.

மதம் பற்றி: இது மிகவும் சொந்த விஷயம். மதமே இல்லை என்பதை உறுதிப்படுத்த நான் நேரத்தை வீணடிக்க மாட்டேன். ஆனாலும் மக்களுக்குப் பைத்தியம் பிடிக்காமல் தடுப்பது மதம்தான்.

கடவுள் பற்றி: முதலில் எனக்கு கடவுள் மீது நம்பிக்கை இருந்தது. பிறகு நான் கேள்விகள் கேட்க ஆரம்பித்தேன். ஆனால், அப்போதெல்லாம் எனக்கொரு பயம் இருக்கும். தன்னைப் புறக்கணிக்கிறேன் என்பதால் கடவுள் என்னை தண்டித்துவிடுவாரோ? பிறகு நானே சமாதானப்படுத்திக் கொள்வேன்: அற்ப விஷயங்களுக்கெல்லாம் ஒரு பொடிப்பயலைக் கடவுள் தண்டித்தால், அவர் நிச்சயம் கொடுமையானவர்.

சினிமா பற்றி: எனக்கு சினிமா பிடிக்கும். ஆனால், அதுவே வாழ்க்கையல்ல. வேறு பல ஆசைகளும் எனக்கு உண்டு. எழுத்து எனக்குப் பிடிக்கும். இன்று கூட எழுதுகிறேன். சிறு சிறு கவிதைகள் எழுதுவேன். ரஜினிகாந்த மிகவும் தெளிவானவர். இருவருக்கும் ஒரே மாதிரியான மனநிலைதான். நாங்கள் எதிரிகள் – தொழிலில். அடிப்படையில் அவரிடம் உள்ள நேர்மை எனக்குப்பிடிக்கும். நாங்கள் அடிக்கடி சர்ச்சையில் ஈடுபட்டிருக்கிறோம். ஏதாவது கருத்து வேற்றுமை என்றால் நேரடியாகத் தான் பேசித் தீர்த்துக் கொள்வோமே தவிர, தூதுவர்கள் மூலம் அல்ல.

நண்பர்கள் பற்றி: எனக்கு நண்பர்கள் வெகு சிலர்தான். நான் தனிமையானவன். அதற்காக அகம்பாவம் பிடித்தவனல்ல. நண்பர்கள் என்னைக் குற்றம் சாட்டியதே இல்லை. ஆனால் சிலர் எனக்கு, நண்பர்களை விட உயர்ந்தவர்கள் – அனந்துவைப் போன்றவர்கள்.

ரசிகர் மன்றங்கள் பற்றி: 73லிருந்து 80 வரை எனக்கு ரசிகர் மன்றங்கள் கிடையாது. அதன் பின்னர், எனது ரசிகர்கள் தாமாகவே மன்றங்கள் அமைத்துக் கொண்டார்கள். விவாதம் செய்வதிலேயே பொழுதை வீணடிக்கிறார்கள் என்பது எனக்குத் தெரிய வந்தபோது, நான் அவர்களை அழைத்தேன். ஒரு நடிகரிடம் ஏன் இப்படி நேரத்தை வீணடிக்கிறீர்கள்? என்று கேட்டேன். சமூக சேவை செய்யுங்கள் என்று புத்தி சொன்னேன்.

நான் முதலமைச்சராக வரவேண்டும் என்ற வண்ணக்கனவு என் ரசிகர்களுக்கு உள்ளது. ஆனால், அரசியலில் நுழைவதில்லை என்பதில் மிகவும் தெளிவாக இருக்கிறேன்.

சர்வதேச திரைப்படத் துறையில் நுழைய இந்திய சினிமாத் துறையிடம் திறமை இருக்கிறது. நமது பசங்கள் செய்வார்கள். மணி, பாலுவால் செய்ய முடியும் இந்த வகையில்.

தனது தோற்றம் பற்றி: நான் முழுவதுமாக ஆரியனல்ல. என்னிடம் நிறைய மொஹஞ்சதாரோ சாயல் உண்டு. உதடுகளைப் பாருங்கள், மூக்கைப் பாருங்கள்; கச்சிதமான திராவிட – ஆரியக்கலப்பு.

gkrishna
21st August 2014, 03:25 PM
ராஜ்குமார் சேதுபதி என்பவர் ஸ்ரீபிரியாவின் கணவர்தானே. அதாவது லட்டு லதாவின் தம்பிதானே. அதாவது கடல்மீன்கள் ஸ்வப்னா பின்னால் ஜொள்ளுவிட்டு, அது நடக்காமல் போனதும் ஸ்ரீபிரியா கழுத்தில் தாலி கட்டியவர்தானே....

dear kaarthik sir

நடிகர் முத்துராமனின் புதல்வர் நடிகர் கார்த்திக் இடம் 'நட்பு' பாராட்டி அது தொடராமல் போகவே ராஜ்குமார் சேதுபதி இடம் கழுதை நீட்டியவர் ஸ்ரீப்ரிய தானே ?

mr_karthik
21st August 2014, 03:29 PM
டியர் வாசு சார்,

ஏமாற்றிய பிக்சரைஸெஷன் லிஸ்ட்டில் மறக்காமல் சேர்க்க வேண்டிய பாடல்கள் நமது "மலரே குறிஞ்சி மலரே" மற்றும் "மல்லிகை முல்லை பூப்பந்தல்"

தலைவரைப்பார்த்தால் பத்திக்கிட்டு வரும். ஏ.சி.டி.யை நினைத்தால் கொல்லனும்போல இருக்கும்...

vasudevan31355
21st August 2014, 03:32 PM
டியர் வாசு சார்,

ராஜ்குமார் சேதுபதி என்பவர் ஸ்ரீபிரியாவின் கணவர்தானே. அதாவது லட்டு லதாவின் தம்பிதானே. அதாவது கடல்மீன்கள் ஸ்வப்னா பின்னால் ஜொள்ளுவிட்டு, அது நடக்காமல் போனதும் ஸ்ரீபிரியா கழுத்தில் தாலி கட்டியவர்தானே....

கார்த்திக் சார்,

மிக்க நன்றி!

இதோ சேதுபதியும், அவர் தாரமும். (இதய பலகீனமுள்ளவர்கள் இந்த நிழற்படத்தைப் பார்க்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்).:)

http://moviegalleri.net/wp-content/gallery/malini-22-movie-press-meet/malini_22_movie_press_meet_stills_973b849.jpg

mr_karthik
21st August 2014, 03:36 PM
// இதற்கிடையில் இரண்டாவது பெண் குழந்தைக்குத் தந்தையானார். ஆனால், சகலகலாவல்லவரான அந்த நடிகர் களைப்படைந்தவராகத் தோற்றமளிக்கவில்லை.//

இதில் கமல் களைப்படைய என்ன இருக்கு?.

களைப்படைந்திருக்க வேண்டியவர் சரிகா அல்லவா?...

vasudevan31355
21st August 2014, 03:40 PM
டியர் வாசு சார்,

ஏமாற்றிய பிக்சரைஸெஷன் லிஸ்ட்டில் மறக்காமல் சேர்க்க வேண்டிய பாடல்கள் நமது "மலரே குறிஞ்சி மலரே" மற்றும் "மல்லிகை முல்லை பூப்பந்தல்"

தலைவரைப்பார்த்தால் பத்திக்கிட்டு வரும். ஏ.சி.டி.யை நினைத்தால் கொல்லனும்போல இருக்கும்...

கார்த்திக் சார்,

உங்களிடம் எனக்கு மிகப் பிடித்த விஷயமே இந்த 'பட்' 'படார்' 'படார்' தான்

அப்படின்னா எனக்கு 'எங்கெங்கோ செல்லும் என் எண்ணங்கள்'. (எனக்கு மட்டும்தான் எனக்கு மட்டும்தான்)

நிறைய எதிர்பார்த்தேன். தெலுங்கு ஹீரோக்கள் பாணி மேக்-அப்பில் நம்மவர் இருக்க, அதுவும் மீசையின் ஓரங்கள் மேல் நோக்கி சற்றே வளைந்து.... ஜெயசுதாவுடன்... எனக்கென்னவோ பொருந்தவில்லை.
ம்...இதுக்கே என்னென்ன விமர்சனம் வருதோ. கார்த்திக் சார், நாம் ரெண்டு பெரும் ரெண்டு நாளைக்கு ஜூட் வுட்டுடுவோமா?

gkrishna
21st August 2014, 03:44 PM
// இதற்கிடையில் இரண்டாவது பெண் குழந்தைக்குத் தந்தையானார். ஆனால், சகலகலாவல்லவரான அந்த நடிகர் களைப்படைந்தவராகத் தோற்றமளிக்கவில்லை.//

இதில் கமல் களைப்படைய என்ன இருக்கு?.

களைப்படைந்திருக்க வேண்டியவர் சரிகா அல்லவா?...

இரண்டாவதும் பெண் ஆயிற்றே என்ற களைப்பு 1990

இரண்டினாலும் இப்போது களிப்பு 2014

https://encrypted-tbn2.gstatic.com/images?q=tbn:ANd9GcT4l9AW6Ap51JNWTQVG3BFBReu8ebMbn 9FxYyOgFLnBGx_k7pb41whttp://4.bp.blogspot.com/-bK_e2cQMtSw/TpegtMCqcTI/AAAAAAAATlA/kvQfjWdamSE/s1600/Akshara%2BHaasan.jpg

vasudevan31355
21st August 2014, 03:45 PM
அம்பிகாவுடன் 'தேன் பூவே பூவே வா' 'அன்புள்ள ரஜனிகாந்த்' படத்திலும்,
அதே அம்பிகா கமலுடன் 'கூ.. கூ.. என்று குயில் கூவாதோ' 'காதல் பரிசு' படத்திலும் ராஜ்குமார் ஆடியிருப்பார்.

chinnakkannan
21st August 2014, 03:54 PM
//மாலினியை தேடிப்பிடித்து பார்க்கவேண்டுமென்று தோன்றியது.// கார்த்திக் சார்..22 ஃபிமேல் கோட்டயமே பாருங்கள்.. ரீமா கல்லிங்கல், ஃபஹத் ஃபாஸில், பிரதாப் போத்தன்.. நான்முழுக்கப் பார்த்ததில்லை.. க்ளைமேக்ஸ் மற்றும் பட ஆரம்பத்தில் சில காட்சிகள் மட்டும் தான் பார்க்க நேர்ந்தது ..அவர்கள் நன்றாக நடித்திருப்பார்கள்..

ஸ்ரீப் ரியா- ஆமாம் ந.தியுடன் நடித்தும் ந. கற்றுக் கொள்ளாதவர்..என்ன லக்கு ஆட்டுக்கார அலமேலு..வெல்லாம்ஹிட் ஆனதினால்..

வாசு சார் .. நீங்கள் சொன்ன படங்களும் விஷீவல் எனக்கும் ஒத்துக்காது..மல்ரே குறிஞ்சி மலரேயும் தான்.. அதுஎன்னா பாட்டு.. பாட்டு மட்டும் கேட்டால் எங்கேயோ இழுத்துச் செல்லும்..

chinnakkannan
21st August 2014, 03:56 PM
ரொம்ப டபக்கென்று அடிக்கலாம்னு தோன்றிய பிக்சரைஸேஷன்.. தேவதை படப் பாட்டு.. மாந்தளிரே மயக்கமென்ன உன்னை பூந்தென்றல் தீண்டியதோ என்னைப் போல் ..
அதே மாதிரி தம்தன தம்தன் தாளம் வரும்..புதிய வார்ப்புக்கள் நான் பார்க்காத ஒரு படம்..படம் வந்து பற்பல ஆண்டுகள் கழித்து இந்தப் பாட்டைப் பார்க்க நேர்ந்தது.. மறுபடியும் பயங்கரக் கோபம்..

chinnakkannan
21st August 2014, 03:58 PM
இப்படியா சின்னப் பையனை இந்தக் கால ஸ்ரீப்ரியா படத்தைப் போட்டுபயமுறுத்தறது..பட் பூர்ணிமா பாக்கியராஜ் பரவாயில்லை அன்றிலிருப்பது போன்ற அதே சிரிப்பு..
ஆச்சர்யப் படுத்துவது/தியது இங்க்லீஷ் விங்க்லீஷ் ஸ்ரீ தேவி..

chinnakkannan
21st August 2014, 04:11 PM
//ஜெயுச்சுட்டே! கண்ணா நீ ஜெயுச்சுட்டே -தேங்காய் கொடுமைடா சாமி. இதற்கு நடிகர் திலகத்தைவிட தேங்காய் சிறப்பாக நடித்து விட்டார் என்று சில பத்திரிக்கைகளின் பாராட்டு வேற. இந்த தமிழ் நாடு உருப்படும்?// ஆமாங்க அந்த ச் சமயத்துல அப்படில்லாமெழுதியிருந்தாங்க..எனக்குப் பயங்கரக் கோபம்..என்னாலானது அந்தப் படங்களைப் பாக்கமா இருக்கறதுதான்..கலியுகக் கண்ணன் காரோட்டிக் கண்ணன் எனவரிசையாக வர ஆரம்பித்தகாலம் அது..ஹையோ..தங்க ரங்கன், அதிர்ஷடம் அழைக்கிறது என அவர் படுத்தல் தொடர்ந்தது..(ஹீரோவாக)..

ஆனால் காலம் செல்ல ச் செல்ல ஒரு சின்னக் கோடுக்குப் பக்கத்துல பெரியகோடு போட்டாற்போல தேங்காயின் இடத்தில் ராமராஜன் வந்துட்டார்..:) (யாரும் திட்ட மாட்டாங்கன்னு நினைக்கிறேன்)

mr_karthik
21st August 2014, 04:22 PM
இப்படியா சின்னப் பையனை இந்தக் கால ஸ்ரீப்ரியா படத்தைப் போட்டுபயமுறுத்தறது..பட் பூர்ணிமா பாக்கியராஜ் பரவாயில்லை அன்றிலிருப்பது போன்ற அதே சிரிப்பு..
ஆச்சர்யப் படுத்துவது/தியது இங்க்லீஷ் விங்க்லீஷ் ஸ்ரீ தேவி..

ஸ்ரீதேவிக்கே அதிசயப்பட்டால் எப்படி?.

வெண்ணிறக்கொடியிடை நிம்மி, லட்சுமி, பாரதி எல்லாம் இன்னும் அப்படியேதான் இருக்கிறார்கள். இப்போதும் இவர்களை வைத்து 35 எம்.எம்.படம் எடுக்கலாம். (வாணிஸ்ரீ குண்டாகிவிட்டார். சாதாரண சேர் போதவில்லை).

மற்றபடி ஸ்ரீபிரியா, ஜெயசித்ரா, சுலக்ஷ்னா எல்லாம் ரோடு ரோலர்கள். 70 எம்.எம். படத்தில் கூட அடக்க முடியாது...

gkrishna
21st August 2014, 04:24 PM
அம்பிகாவுடன் 'தேன் பூவே பூவே வா' 'அன்புள்ள ரஜனிகாந்த்' படத்திலும்,
அதே அம்பிகா கமலுடன் 'கூ.. கூ.. என்று குயில் கூவாதோ' 'காதல் பரிசு' படத்திலும் ராஜ்குமார் ஆடியிருப்பார்.

ராஜ்குமார் சேதுபதி லது லதாவின் தம்பி ஸ்ரீப்ரிய ஆத்துகாரர் பற்றி
வலைப்பூவில் படித்த ஒன்று

பூச்ச சந்நியாசி னு ஒரு மலையாள படம் (பூச்ச என்றால் தமிழில் பூனை என்று அர்த்தம் ) அதாவது கபட சந்நியாசி நடைமுறையில் ருத்ராட்ச பூனை ,ஆஷாட பூதி அதாவது வேஷம் போட்டு ஏமாற்றுபவர் (அதாவது கிருஷ்ணாவை போல் )

http://www.webmallindia.com/img/film/malayalam/poocha_sanyasi_1327139583.jpg

One of the first full length comedy films in Malayalam, Poocha Sanyasi(1981) stars Raj Kumar in the leading role as the flirtatious playboy son of a millionaire businessman(K.P.Ummer). I wonder how Raj Kumar came to play lead role in Malayalam movies, he obviously doesn’t look anything like a Malayali, infact to me he looks a typical Kannadiga or Konkani. Anyway the guy did a load of Malayalam movies in the early eightier, most of them in the comedy genre.


Rajkumar and Madhavi in Poocha Sanyasi

http://photos1.blogger.com/blogger/2291/189/320/poochasanyasi.jpg

Coming back to the movie, since the leading man is a playboy there is a bevy of beauties surrounding him in the first half and in the second half he is blissfully (which is soon to be lost as his earlier girl friends start plotting against him) married to Madhavi(again a non-Kerala import from Punjab who tried hand in Bollywood movies where success eluded her that she had to move South, she was a strong presence in Malayalam movies in the eighties.) The wife(Madhavi) was chosen by the playboy’s strict disciplinarian father(K.P.Ummar) to correct son of his wandering ways. Comedians Bahadur, Kuthiravattam Pappu and Sukumari has major roles as well. A surprise role was that of Balan.K Nair, who excelled in villain roles during this period, but has an interesting part as an Anglo-Indian party-animal, the brother of one of the girl friends who morphs in to a convincing villain in the climax scenes. I also glimpsed Silk Smitha – the one-time sex siren of the South as an extra in one of the dances.

gkrishna
21st August 2014, 04:26 PM
ஸ்ரீதேவிக்கே அதிசயப்பட்டால் எப்படி?.

வெண்ணிறக்கொடியிடை நிம்மி, லட்சுமி, பாரதி எல்லாம் இன்னும் அப்படியேதான் இருக்கிறார்கள். இப்போதும் இவர்களை வைத்து 35 எம்.எம்.படம் எடுக்கலாம். (வாணிஸ்ரீ குண்டாகிவிட்டார். சாதாரண சேர் போதவில்லை).

மற்றபடி ஸ்ரீபிரியா, ஜெயசித்ரா, சுலக்ஷ்னா எல்லாம் ரோடு ரோலர்கள். 70 எம்.எம். படத்தில் கூட அடக்க முடியாது...

excellant one sir

mr_karthik
21st August 2014, 04:43 PM
மதிஒளி சண்முகம் தயாரித்து கையை சுட்டுக்கொண்ட 'காஷ்மீர் காதலி' படத்தின் ஹீரோ ராஜ்குமார்தான்.

படத்தில் இரண்டு பாடல்கள் நன்றாக இருக்கும். கதாநாயகி வங்க நடிகையா?...

gkrishna
21st August 2014, 04:55 PM
ரஜினி ஷர்மா
மேகத்துக்கும் தாகமுண்டு படத்திலும் நடித்தார்
நம்ம நடிகர் திலகத்துடன் மாடி வீட்டு ஏழை படத்தில் முதல்
பாட்டில் நடனம் ஆடுவார்

'அழகிய செந்நிற வானம் '
'சங்கீதமே என் தெய்வீகமே '

gkrishna
21st August 2014, 05:12 PM
http://4.bp.blogspot.com/_WHjLECFgZBQ/SxUj1ltKEFI/AAAAAAAACtY/9yKUvSJF4V8/s1600/sba4.jpg

இந்த நிழல் படத்தில் ஸ்ரீப்ரியா உடன் குளிப்பது யார் ?
பார்பதற்கு அம்பரீஷ் (சுமலதா) போல் இருக்கிறது
யாரவது உறுதி செய்யவும்

vasudevan31355
21st August 2014, 05:29 PM
http://i.ytimg.com/vi/BU4Ykra7SfY/0.jpg

அவரேதான் கிருஷ்ணாஜி. இது 'Matte Vasantha' படத்தில்.

mr_karthik
21st August 2014, 05:29 PM
நன்றி கிருஷ்ணாஜி,

'மேகத்துக்கும் தாகமுண்டு' தனது திசைமாறிய பறவைகள் சுமார் வெற்றிக்குப்பின், பி.எஸ்.வீரப்பா தயாரித்த படம். சரத்பாபு - ரஜினி சர்மா ஜோடி. மெல்லிசைமன்னர் இசை.

ரொம்ப பொறுமையை சோதிக்கும் வித்தியாசமான கதை. படம் பலமுறை வெளிவரப்போவதாக செய்தித்தாள், வானொலி விளம்பரங்கள் வந்து, வந்து நின்று போய் ஒருவழியாக வந்து தோல்வியைத் தழுவியது.

'மரகத மேகம் சிந்தும் மழைவரும் நேரமிது'
'ஆடாலாமா அன்னநடை பின்னலிட' இரண்டும் சூப்பர் பாடல்கள்.

படத்தில் ஒரு வசனம் மட்டும் எனக்கு ஞாபகம் இருக்கிறது.....

"விமானம் ஒழுங்காகப் போய்க்கொண்டிருக்கும் வரை பயணிகள் எல்லாம் எந்த ஊருக்குப் போகிறோம், எங்கே போய் இறங்கப்போகிறோம் என்ற சிந்தனையில் இருப்பார்கள். ஆனால் விமானத்தில் ஏதாவது கோளாறு என்று தெரியவந்தால் எங்கே போகிறோம் என்ற கவலையை விட்டு, எங்காவது போய் பத்திரமாக தரையிறங்கினால் போதும் என்று கவலைப்பட துவங்கி விடுவார்கள். அந்த இரண்டாவது நிலையில்தான் நாம் இப்போது இருக்கிறோம்"....

Gopal.s
21st August 2014, 05:32 PM
சிறு வயதில் பார்க்க சுமாராக இருந்து ,நடு வயதில் செம கட்டப்பா என்று அதிசயிக்க செய்தவர்கள், ரம்யா கிருஷ்ணன்,நதியா. (Aging Gracefully )

Gopal.s
21st August 2014, 05:33 PM
rajkmar- has slight Kamal resemblance?(ithazhil thenpandi muthukkal?)

gkrishna
21st August 2014, 05:34 PM
http://mmimages.maalaimalar.com/Articles/2014/Aug/86eddda8-b4ef-4e44-b93b-81265f0d8c5e_S_secvpf.gif

ஆயிரக்கணக்கான பாடல்கள் எழுதிய கவிஞர் வாலி, கமலஹாசன் தயாரித்த "ஹேராம்" உள்பட 4 படங்களில் நடித்தார். எம்.ஜி.ஆர்., சிவாஜிகணேசன் ஆகியோர் நடித்த படங்களுக்கும், அந்தக் காலகட்டத்தில் உருவான மற்ற படங்களுக்கும் இரவு - பகலாக பாடல்கள் எழுதிக்கொண்டிருந்தபோது, படங்களில் நடிப்பதற்கு வந்த அழைப்புகளை வாலி ஏற்கவில்லை.

பிற்காலத்தில், நண்பர்களின் அழைப்பின் பேரில், சில படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்தார். கே.பாலசந்தர் இயக்கிய "பொய்க்கால் குதிரை", கமலஹாசனின் "ஹேராம்", "சத்யா", "பார்த்தாலே பரவசம்" ஆகிய 4 படங்களில் நடித்ததுடன், "கையளவு மனசு", "அண்ணி" ஆகிய டெலிவிஷன் தொடர்களிலும் நடித்தார். ஏராளமான கவிதை நூல்கள் எழுதியிருப்பதுடன், "அவதாரபுருஷன்" (ராமாயணம்), "பாண்டவர் பூமி" (மகாபாரதம்), ராமானுஜ காவியம், கிருஷ்ண விஜயம் ஆகிய காவியங்களையும் படைத்துள்ளார்.

"நானும் இந்த நூற்றாண்டும்" என்ற தலைப்பில் தன் சுய சரிதையை எழுதியுள்ளார். 1984 அக்டோபரில், எம்.ஜி.ஆர். உடல் நலம் பாதிக்கப்பட்டு, ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இருந்தபோது, அவர் குணம் அடைய தமிழகம் முழுவதும் பிரார்த்தனைகள் நடந்தன.

அப்போது "ஒளிவிளக்கு" படத்தில் வாலி எழுதியிருந்த "இறைவா, உன் மாளிகையில் எத்தனையோ திருவிளக்கு! தலைவா, உன் காலடியில் என் நம்பிக்கையின் ஒளிவிளக்கு" என்ற பாடல்தான் பிரார்த்தனை கீதமாக ஒலிபரப்பப்பட்டது.

இதுகுறித்து வாலி எழுதியிருப்பதாவது:-

"எம்.ஜி.ஆர். உடல் நலம் பாதிக்கப்பட்டு, அப்பல்லோ மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தபொழுது, மிகுந்த மனச்சுமையோடு அவரைப் பார்ப்பதற்காக ஆஸ்பத்திரிக்குச் சென்றேன். அண்ணியார் ஜானகி அம்மாளும், சத்தியவாணிமுத்து அம்மையாரும் கண் கலங்க நின்று கொண்டிருக்க, நான் அண்ணியாருக்கு ஆறுதல் சொன்னேன். "உங்கள் ஒளிவிளக்கு படத்து பாடலைத்தான், நாடே பாடி உங்கள் அண்ணனுக்காகப் பிரார்த்தனை செய்து கொண்டு இருக்கிறது.

அந்த பிரார்த்தனையின் பலனாகத்தான், அவர் ஆபத்தான கட்டத்தை தாண்டிவிட்டார் என்று டாக்டர்கள் கூறியிருக்கிறார்கள். இனிமேல் அவருக்கு ஆபத்து இலலை" என்று திருமதி ஜானகி அம்மையார் கண்கள் பனிக்க என்னிடம் சொன்னார்கள்.

என் பாட்டுடைத் தலைவனுக்கு என் பாட்டே பிரார்த்தனை கீதமாக ஆனது குறித்து, நான் அளவில்லாத ஆனந்தம் அடைந்தேன். இருந்தாலும் அண்ணியாரிடம், "அம்மா! இது வாலி பாக்கியம் அல்ல; உங்கள் தாலி பாக்கியம்" என்று சொன்னேன்."

இவ்வாறு வாலி குறிப்பிட்டுள்ளார்.

10 ஆயிரம் பாடல்கள் திரைப்படங்களுக்கு கவிஞர் வாலி எழுதிய பாடல்கள் 10 ஆயிரத்துக்கு மேல். அவற்றில் எம்.எஸ்.விஸ்வநாதன் ஏறத்தாழ 3 ஆயிரம் பாடல்களுக்கும், இளையராஜா சுமார் 3 ஆயிரம் பாடல்களுக்கும் இசை அமைத்துள்ளனர்.

வாலியின் பாடல்களில் பி.சுசீலா பாடியவை சுமார் 1,500. டி.எம்.சவுந்தரராஜன் பாடியவை ஏறத்தாழ 700.
"திரை உலகில் நீண்ட காலம் இருந்திருக்கிறீர்கள். இதுவரை வெளிவந்துள்ள படங்களில் உங்களுக்குப் பிடித்த 20 படங்களைக் கூறுங்கள்" என்று கேட்டதற்கு, வாலி கூறியதாவது:-

"அந்தக் காலத்துப் படங்களில், பாகவதர் நடித்த படங்களில் எனக்குப் பிடித்தது "சிவகவி." இதைவிட நீண்ட காலம் ஓடிய படம் "ஹரிதாஸ்" என்றாலும், சகல அம்சங்களிலும் சிறப்பான படம் "சிவகவி." பி.யு.சின்னப்பா நடித்த படங்களில் என்னைக் கவர்ந்தது "குபேர குசேலா." சில ஆண்டுகளுக்கு முன் கமலஹாசன் நடித்த "கல்யாணராமன்" படத்தை இன்றைய தலைமுறையினர் பலர் பார்த்திருப்பார்கள்.

இதே கதை, சுமார் 50 ஆண்டுகளுக்கு முன் "இது நிஜமா" என்ற பெயரில் வெளிவந்தது. எஸ்.பாலசந்தர் இரட்டை வேடங்களில் அற்புதமாக நடித்திருந்தார். நான் மிகவும் ரசித்த படம் அது.

1947-ல் வெளிவந்த "ஏவி.எம்" தயாரித்த "நாம் இருவர்", கே.சுப்பிரமணியம் தயாரித்த "தியாகபூமி", ஜெமினியின் "நந்தனார்", "அவ்வையார்" ஆகிய படங்களும் என்னைக் கவர்ந்தவை. என் மனதில் இடம் பெற்ற சிறந்த படங்களின் பட்டியலில் உள்ள மற்ற படங்கள்:-

மந்திரிகுமாரி, மனோகரா, நாடோடி மன்னன், பெற்றால்தான் பிள்ளையா, உலகம் சுற்றும் வாலிபன், தில்லானா மோகனாம்பாள், வியட்னாம் வீடு, அபூர்வ சகோதரர்கள் (கமல்), நாயகன், இருகோடுகள், புவனா ஒரு கேள்விக்குறி, அந்த 7 நாட்கள், சில நேரங்களில் சில மனிதர்கள்."

இவ்வாறு வாலி கூறினார்.

விருதுகள் சிறந்த பாடலாசிரியருக்கான தமிழக அரசின் விருதுகளை 4 முறை பெற்றவர் வாலி. 1972-ல் "கலைமாமணி" விருது பெற்றார். "கலை வித்தகர்" என்பதற்கான தமிழக அரசின் பாரதிதாசன் விருது, தமிழக அரசின் பாரதி விருது (ரூ.1 லட்சம்) முரசொலி அறக்கட்டளை விருது (ரூ.1 லட்சம்), ஆழ்வார் மையத்தின் தமிழ்த்தாத்தா உ.வே.சா. விருது (ரூ.25,000) முதலான விருதுகள் கிடைத்துள்ளன. இவர் கதை - வசனம் எழுதிய "ஒரே ஒரு கிராமத்திலே" படம், மத்திய அரசின் விருது பெற்றது. ஒரே மகன் வாலி -திலகம் தம்பதிகளுக்கு ஒரே மகன் வி.பாலாஜி. "எம்.ஏ" பொருளாதாரம் படித்தவர். சொந்த தொழில் செய்கிறார்.

தமிழில் பேசும் படங்கள் வரத்தொடங்கி 75 ஆண்டுகள் ஆகின்றன. இதுவரை திரையில் ஒலித்த பல்லாயிரக்கணக்கான பாடல்களில், தனக்குப் பிடித்த 20 பாடல்களை வாலி கூறுகிறார். (தான் எழுதிய பாடல்களை அவர் தவிர்த்துள்ளார்.)

1. வள்ளலைப் பாடும் வாயால்... (படம்: `சிவகவி' பாடியவர்: பாகவதர் பாடலாசிரியர்: பாபநாசம் சிவன் இசை: ஜி.ராமநாதன்)
2. மானமெல்லாம் போனபின்னே... (`கண்ணகி' பி.யு.சின்னப்பா உடுமலை நாராயணகவி எஸ்.வி.வெங்கட்ராமன்)
3. காற்றினிலே வரும் கீதம்... (`மீரா' எம்.எஸ்.சுப்புலட்சுமி கல்கி எஸ்.வி.வெங்கட்ராமன்)
4. வெண்ணிலாவே... (`அவ்வையார்' கே.பி.சுந்தராம்பாள் கொத்தமங்கலம் சுப்பு எம்.டி.பார்த்தசாரதி, ராஜேஸ்வரராவ்)
5. சிந்தையறிந்து வாடி... (`ஸ்ரீவள்ளி' பி.ஏ.பெரியநாயகி பாபநாசம் சிவன் சுதர்சனம்)
6. இந்த உலகில் இருக்கும் மாந்தரில்... (`கஞ்சன்' எம்.எம்.மாரியப்பா அய்யா முத்து எஸ்.எம்.சுப்பையா நாயுடு)
7. வாழ்க்கை என்னும் ஓடம்... (`பூம்புகார்' கே.பி.சுந்தராம்பாள் கலைஞர் மு.கருணாநிதி சுதர்சனம்)
8. அருள் தரும் தேவமாதாவே... (`ஞானசவுந்தரி' பி.ஏ.பெரியநாயகி கம்பதாசன் எஸ்.வி.வெங்கட்ராமன்)
9. ஆடல் காணீரோ!... (`மதுரை வீரன்' எம்.எல்.வசந்தகுமாரி உடுமலை நாராயணகவி ஜி.ராமநாதன்)
10. மணப்பாறை மாடு கட்டி... (`மக்களைப் பெற்ற மகராசி' டி.எம்.சவுந்தரராஜன் மருதகாசி கே.வி.மகாதேவன்)

11. துணிந்தபின் மனமே... (`தேவதாஸ்' கண்டசாலா கே.டி.சந்தானம் சி.ஆர்.சுப்பராமன், எம்.எஸ்.விஸ்வநாதன்)
12. வாழ்ந்தாலும் ஏசும், தாழ்ந்தாலும் ஏசும்... (`நான் பெற்ற செல்வம்' டி.எம்.சவுந்தரராஜன் கா.மு.ஷெரீப் ஜி.ராமநாதன்)
13. மயக்கமா, கலக்கமா?... (`சுமைதாங்கி' பி.பி.சீனிவாஸ் கண்ணதாசன் எம்.எஸ்.விஸ்வநாதன்)
14. சோதனை மேல் சோதனை... (`தங்கப்பதக்கம்' டி.எம்.சவுந்தரராஜன் கண்ணதாசன் எம்.எஸ்.விஸ்வநாதன்)
15. நான் ஒரு சிந்து... (`சிந்துபைரவி' சித்ராறீ வைரமுத்து இளையராஜா)
16. வசந்த கால கோலங்கள்... (`தீபம்' எஸ்.ஜானகி கண்ணதாசன் இளையராஜா)
17. சின்னச்சின்ன ஆசை... (`ரோஜா' மின்மினி வைரமுத்து ஏ.ஆர்.ரகுமான்)
18. ஆயிரம் நிலவே வா... (`அடிமைப்பெண்' எஸ்.பி.பாலசுப்பிரமணியம், சுசீலா புலமைப்பித்தன் கே.வி.மகாதேவன்)
19. திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால்... (`கந்தன் கருணை' சுசீலா, சூலமங்கலம் ராஜலட்சுமி பூவை செங்குட்டுவன் குன்னக்குடி வைத்தியநாதன்)
20. அன்புக்கு நான் அடிமை.... (`இன்றுபோல் என்றும் வாழ்க' ஜேசுதாஸ் முத்துலிங்கம் எம்.எஸ்.விஸ்வநாதன்)

vasudevan31355
21st August 2014, 05:42 PM
'காஷ்மீர் காதலி' படத்தில் ராஜ்குமாரும், ரஜனி சர்மாவும்.

http://i.ytimg.com/vi/oR_-P_tB4FA/0.jpghttp://i1.ytimg.com/vi/54z-iEJga50/sddefault.jpg

இதில் ராஜ்குமாரின் ஜோடி ரஜனி சர்மா. (இவர் 'மாடி வீட்டு ஏழை' படத்தில் நடிகர் திலகத்துடன் 'இங்கே இங்கே இங்கே... இன்ப உள்ளங்களில் எல்லை இங்கே.... சிம்மக்குரல் கொண்ட கலைஞன் இங்கே'.. என்ற பாடலில் ஜோடி போல பாடி ஆடுவார்)

'காஷ்மீர் காதலி' திரைப்படத்தில் ஒரு அருமையான பாடல் உண்டு. ஜி.கே.வெங்கடேஷ் இசையில் ஜெயச்சந்திரனும், சுசீலாவும் பாடும் நல்லதொரு பாடல் 'சங்கீதமே! என் தெய்வீகமே!'


http://www.youtube.com/watch?v=oR_-P_tB4FA&feature=player_detailpage

mr_karthik
21st August 2014, 06:18 PM
டியர் வாசு சார்,

'சில நேரங்களில் சில மனிதர்கள்' படத்தில் இடம்பெற்ற இரண்டு அருமையான பாடல்களில் ஒன்றான 'கண்டதைச் சொல்லுகிறேன்' பாடலைப்பற்றிய ஆய்வு ரொம்ப பிரமாதம். ஆர்.கே.விஸ்வநாத சர்மாவாக வரும் நாகேஷ் படத்துக்கே முக்கிய பாத்திரங்களில் ஒருவர். கதை நகர்வுக்கு மிகவும் உதவியாக இருப்பார்.

ஜெயகாந்தன் எழுதிய பாடல். முதலில் எழுதப்பட்டு அதன்பின் இசையமைக்கப்பட்டது. ஜெயகாந்தன் வீட்டிலிருந்தபடியே பாடலை உரைநடைபோல எழுதிக்கொடுத்து விட, மெல்லிசை மன்னரும், பீம்சிங்கும் வேறொரு சின்ன கவிஞரை வைத்து (ஜெயகாந்தனின் ஒப்புதலோடுதான்) அங்கங்கே வார்த்தைகளை மெட்டுக்கு வருவதுபோல பட்டி, டிங்கரிங் எல்லாம் பார்த்து முழுமை பெற்றதாக ஆனந்த விகடனில் படித்ததுண்டு.

ஆனால் படப்பிடிப்பு நடைபெறும் நேரங்களில் ஜெயகாந்தன் அடிக்கடி ஷூட்டிங்க் ஸ்பாட்டுக்கு வந்து பார்வையிடுவாராம்.

இது முழு ஆர்ட் பிலிமா, அல்லது செமி ஆர்ட் செமி கமர்ஷியல் பிலிமா என்பதெல்லாம் தெரியாது. ஆனால் மாபெரும் வெற்றிப்படம் என்பதில் எல்லோருக்கும் மகிழ்ச்சி. திரையில் கருப்பு வெள்ளையில் வரையப்பட்ட ஓவியம்.

தங்கள் சிறந்த ஆய்வுக்குப் பாராட்டுக்கள்.....

gkrishna
21st August 2014, 06:21 PM
கௌசிகன் னு ஒரு டைரக்டர்

பிரார்த்தனை மற்றும் சந்ததி இரண்டு படம் டைரக்ட் செய்த நினைவு

சந்ததி நல்ல நினைவில் உள்ள படம் .1976 கால கட்டத்தில் பிலிமாலய பத்திரிகை இதை ஆகா ஓஹோ என்று புகழ்ந்து எழுதிய நினைவு
சிவகுமார் வசந்த மாளிகை கெட் up இல் சால்வை எல்லாம் போட்டு கொண்டு வருவார் .சிவகுமார் ஸ்ரீப்ரியா மேஜர் நடித்து வந்த படம்
சிவகுமார் கான்செர் நோயாளி பெரிய பணக்காரர் .அவர் அப்பா மேஜர்
சிவகுமர்க்கு கல்யாணம் செய்து வித்து தனக்கு ஒரு சந்ததி உருவாக்கி விடவேண்டும் என்ற எண்ணத்தில் ஸ்ரீப்ரியவை திருமணம் செய்து வைப்பார் .

சிவகுமார் ஒரு பேட்டியில் தான் மிகவும் ரசித்து செய்த படம் .ஆனால் படம் ஓடவில்லை என்று கேள்விப்பட்டு மெரினா பீச் இல் தனியாக உட்கார்ந்து அழுதேன் என்று கூறினார்

இந்த பிரார்த்தனை நடிப்பு சுடர் படமா அல்லது மக்கள் கலைஞ்ர் படமா நினைவில் இல்லை

madhu
21st August 2014, 06:24 PM
பிரார்த்தனை ஏ.வி.எம்.ராஜன், சௌகார் ஜானகி, வெண்ணிற ஆடை நிர்மலா நடித்த படம் என்று ஞாபகம்.

நேற்று வரை பதினாறு இன்று முதல் பதினேழு
நான் வாழ நல்வாழ்த்து சொல்லுங்கள்
எல்லோரும் நில்லுங்கள்..ம்ம்..ம்ம்..ம்ம்..

என்று ஒரு பி.சுசீலா பாடல் ... பெல்பாட்டம் போட்டுக் கொண்டு நிர்மலா டான்ஸ்..

gkrishna
21st August 2014, 06:27 PM
டியர் வாசு சார்,

'சில நேரங்களில் சில மனிதர்கள்'
தங்கள் சிறந்த ஆய்வுக்குப் பாராட்டுக்கள்.....


கார்த்திக் சார்
நல்ல வேளை நினைவு கூர்ந்தீர்கள். காலையில் படித்த உடன்
பதில் எழுத நினைத்த பதிவு .திரு வாசு அவர்கள் மன்னிக்க வேண்டுகிறேன் . மிக சிறந்த ஆயுவு .
ஸ்ரீகாந்த் நடிப்பில் வெளிவந்த ஒரு நல்ல சித்திரம்
சுந்தரி பாய் மொட்டை அடித்து கொண்டு வரும் யாரும் எதிர் பாராத ஒரு காட்சி. மன்மத லீலை y G பார்த்தசாரதி கங்காவின் (லக்ஷ்மி) மாமாவாக வந்து லக்ஷ்மியை பாலியல் பலாத்காரம் செய்ய நினைக்கும் காட்சியில் லக்ஷ்மி மற்றும் YGP இருவருமே கலக்கி இருப்பார்கள்
சிநா கானா கூட வாணியின் 'வேறு இடம் தேடி போவாளோ ' பாடலை சிலாகித்து எழுதி இருந்தார்

gkrishna
21st August 2014, 06:29 PM
பிரார்த்தனை ஏ.வி.எம்.ராஜன், சௌகார் ஜானகி, வெண்ணிற ஆடை நிர்மலா நடித்த படம் என்று ஞாபகம்.

நேற்று வரை பதினாறு இன்று முதல் பதினேழு
நான் வாழ நல்வாழ்த்து சொல்லுங்கள்
எல்லோரும் நில்லுங்கள்..ம்ம்..ம்ம்..ம்ம்..

என்று ஒரு பி.சுசீலா பாடல் ... பெல்பாட்டம் போட்டுக் கொண்டு நிர்மலா டான்ஸ்..

thanks madhu anna

என்னுடய நினைவில் இது நடிப்பு சுடர் படம் என்று தான் நினைவு
ஆனால் விக்கியில் ஜெய் என்று போட்டு உள்ளார்கள்

மீண்டும் ஒரு முறை நன்றி

madhu
21st August 2014, 06:35 PM
thanks madhu anna

என்னுடய நினைவில் இது நடிப்பு சுடர் படம் என்று தான் நினைவு
ஆனால் விக்கியில் ஜெய் என்று போட்டு உள்ளார்கள்

மீண்டும் ஒரு முறை நன்றி

ஏ.வி.ராஜன், சௌகார் ஜானகி தம்பதிகள் வாழ்வில் ஆபீஸ் கலீக் நிர்மலாவால் வம்பு வளர, ஸ்ரீகாந்தால் கெடுக்கப்பட்ட நிர்மலாவின் சாவுக்கு ராஜன் ஜெயிலுக்குப் போக சௌகார் பைத்தியமாக.. கடைசியில் வயசானப்புறம் திரும்ப ஒன்று சேருவது போல கதை என்று நினைவு... ( எல்லாமே பனிமூட்டத்தில் தெரியும் மலைப்பாதை மாதிரி மனசுக்குள் மங்கலா தெரியுது )

விக்கிபீடியாவில் சோ, மனோரமா என்றே போட்டிருக்காங்க பாருங்க.. இது வேற பிரார்த்தனையோ ?

gkrishna
21st August 2014, 06:36 PM
திருமதி சாரதா madem அவர்கள் எழுதிய பதிவின் மீள் பதிவு

"சில நேரங்களில் சில மனிதர்கள்"

ஸ்ரீகாந்தின் புகழ் மகுடத்தில் ஒளிவீசும் வைரம்
லட்சுமிக்கு ஊர்வசி பட்டம் தந்த காவியம்
பீம்சிங்கின் கடைசி வெற்றிச்சித்திரம்
கருப்புவெள்ளை யுகத்தின் கடைசி வெற்றி அத்தியாயம்
ஜெயகாந்தனின் ஒப்பற்ற திரை ஓவியம்

.....இப்படி புகழ்மாலை சூட்டிக்கொண்டே போகலாம் இப்படத்துக்கு.

ஆர்ட் பிலிம் என்றாலே வெற்றிக்கும் அதற்கும் வெகுதூரம். மக்களைச் சென்றடையாது என்ற சித்தாந்தங்களைப் பொய்யாக்கி மாபெரும் வெற்றியடைந்ததன் மூலம், இதுபோன்ற திரைப்படங்களை எடுக்கும் தைரியத்தை தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்களுக்கு தந்த உன்னதச் சித்திரம்.

ஒரே வீட்டில் பல குடித்தனங்கள் சேர்ந்து, அதே சமயம் தனித்தனியாக வாழும் ஒண்டுக்குடித்தன வாழ்க்கையில் தன் தாயுடன் வசிக்கும் ஒருத்தி ஒரு மழைபெய்த மாலை நேரத்தில் காரில் வந்த காமுகனால் சூறையாடப்பட, அதை மறைக்கத்தெரியாமல் தாயிடம் வெகுளித்தனமாகச் சொல்லப்போக, அதை அந்தத்தாய் அவளைவிட வெகுளித்தனமாக, ஒண்டுக்குடித்தனக்காரர்கள் மத்தியில் விஷயத்தைப்போட்டு உடைத்து, மகளைத் அடிக்க, வெறும் வாய்களுக்கு கிடைத்த அவலாக, அவளது அந்த கருப்பு சம்பவம் அலசப்பட, அவள் களங்கப்படுத்தப்பட்டதை விட அதை வெளியில் சொன்னதுதான் மகா பாவம் என்ற நிலைமைக்கு ஆளாகிப்போனாள்.

முள்ளில் விழுந்த சேலையாக ரொம்ப ஜாக்கிரதையாகக் கையாளப்பட வேண்டிய கதை. கொஞ்சம் நூலிழை பிசகினாலும் விரசம எனும் பள்ளத்துக்குள் விழுந்துவிடக்கூடிய கதையை, இந்திய பாகிஸ்தான் பிரிவினையை விட கவனமாகக் கையாண்டிருந்தார் இயக்குனர் பீம்சிங். அதற்கு அடித்தளமாக அமைந்தது ஜெயகாந்தனின் யதார்த்தமான நடை.

ஊர்வாயில் விழுந்த அவலாக மெல்லப்படும் அவள் அவஸ்தை தாங்காமல் துடிப்பதை லட்சுமியை விட இன்னொருவர் சிறப்பாகக் காண்பித்திருக்க முடியுமா என்ன?. அதிலும் அந்த 'அக்கினிப்பிரவேசம்' என்ற நாவலை தாயிடம் கொடுத்து, அதில் வரும் குறிப்பிட்ட இடத்தைச்சுட்டிக்காட்டும்போது, மீண்டும் பழைய காட்சி... அம்மா சுந்தரிபாய் லட்சுமியை அடிக்கும்போது, வீடு மொத்தமும் எழுந்துபார்க்க.. 'ஒண்ணுமில்லே, இப்படி மழையிலே நனைஞ்சிட்டு வந்திருக்காளேன்னுதான் அடிச்சேன்' என்று சொல்ல மொத்த வீடும், மீண்டும் தங்கள் வேலையைப் பார்ப்பதைக்காண்பித்து, 'அன்னைக்கு மட்டும் நீ இப்படிச் சொல்லியிருந்தால், என் வாழ்க்கை இன்று சேற்றில் போட்டு இழுக்கப் பட்டிருக்குமா' என்பது போல லட்சுமி பார்ப்பாரே ஒரு பார்வை. அப்பப்பா... (தேசிய விருதுக்கமிட்டி அந்த இடத்தில்தான் விழுந்திருக்க வேண்டும்). எப்பேற்பட்ட ஒரு நடிகையை வெறுமனே டூயட் பாடவைத்ததன் மூலம், ஒரு நாதஸ்வரத்தை அடுப்பு ஊத பயன்படுத்தியுள்ளோம் என்ற குற்ற உணர்வு எழுகிறது.

ஸ்ரீகாந்த் மட்டும் என்னவாம். சூப்பர்ப். பாத்திரத்தின் தன்மைக்கு ஈடுகொடுத்து அற்புதமாகச்செய்துள்ளார். ஆரம்பத்தில் லட்சுமியை ஏமாற்றிவிட்டுப்போனதும், அவருக்கு வழக்கமான ரோல்தானோ என்று தோன்றும். ஆனால் மீண்டும் லட்சுமியைச் சந்தித்தபின், அவர் தொடரும் அந்த உறவில் அவர் காட்டும் கண்ணியம், நேர்மை. ஏற்கெனவே தனக்கு ஒரு குடும்பம் இருந்தும், லட்சுமியிடம் அவர் காட்டும் அன்பு, வரம்பு மீறாத பெரியமனுஷத்தனம் .....வாவ். இன்னும் ஒரு நாலைந்து படம் இதுபோல தேர்ந்தெடுத்து நடித்திருந்தால் மனிதர் எங்கோ போயிருப்பார்.

மறக்காமல் குறிப்பிடப்படவேண்டிய இருவர் அம்மாவாக வரும் சுந்தரிபாய் (வெகுளியான அம்மா), மற்றும் மாமாவாக வரும் ஒய்.ஜி.பார்த்தசாரதி. தங்கை மகள் கெட்டுப்போய்விட்டாள் என்று தெரிந்ததும், அவளைத் தான் அடைய அவர் மேற்கொள்ளும் முயற்சிகள், பெரிய மனிதனின் வக்கிர புத்திக்கு ஒரு எடுத்துக்காட்டு. சாய்வு நாற்காலியில் படுத்துக்கொண்டே, கட்டிலில் படுத்திருக்கும் லட்சுமியிடம் செய்யும் சேஷ்டைகள் எல்லைமீறுமுன், கொதித்தெழும் லட்சுமி அவரை பெல்ட்டால் விளாச, தன் மனதில் இருந்த சாத்தான் விரட்டியடிக்கப்பட்டதும், லட்சுமி தூக்கி எறிந்த பெல்ட்டை கையில் வைத்துக்கொண்டு கண்ணீர் சிந்தும்போது, இந்த மனிதர் ஏன் நாடக மேடைகளிலேயே தன்னைக் குறுக்கிக்கொண்டார் என்ற ஆதங்கம் நமக்கு வரும். அதற்கு ஈடாக இன்னொரு காட்சியைச் சொல்வதென்றால், மறுநாள் பொழுது விடிந்ததும் ஒய்.ஜி.பி., லட்சுமியின் அறைக்கதவைத்தட்டி, 'ஐ ஆம் லீவிங்' என்று சொன்னதும், லட்சுமி சட்டென்று அவர் காலில் விழுந்து நமஸ்கரிப்பாரே அதைச்சொல்லலாம்.

இப்படி, படிப்படியாக நம்மை படத்துடன் ஒன்றவைத்து, படம் பார்த்துக்கொண்டிருக்கிறோம் என்ற நினைவை மாற்றி, அல்லது மறக்கடித்து, ஏதோ நம் கண்முன் நடந்துகொண்டிருக்கும் சம்பவங்களில் நாமும் ஒன்றாகிப்போனோம் என்ற நினைவில் நம்மைக்கொண்டு விடுவதால்தான், அந்த கிளைமாக்ஸ் காட்சி நம்மை அப்படி பாதிக்கிறது.

நம் ஊனையும் உருக வைக்கும் வாணி ஜெயராம் குரலில்....
'வேறு இடம் தேடிப்போவாளோ - இந்த
வேதனையில் இருந்து மீள்வாளோ' என்ற பாடல் பின்னணியில் ஒலித்துக்கொண்டிருக்க,
அவர் (ஸ்ரீகாந்த்) இனிமேல் மாட்டார் என்று தெரிந்தும், வாசலை வாசலைப் பார்த்துக்கொண்டும், திரைச்சீலை அசையும்போதெல்லாம் ஆவலோடு திரும்பிப் பார்த்துக்கொண்டும் இருக்கும் லட்சுமி இனி வரமாட்டார் என்ற நிதர்சனத்துடன் கடைசியில் ஸ்ரீகாந்த் கழற்றி வைத்துவிட்டுப்போன கோட்டை எடுத்து தன்னோடு அணைத்துக்கொள்ளும்போது, உணர்ச்சிப்பெருக்கால் நம் மனதில் விழும் சம்மட்டி அடி. (பின்னாளில், 'பூவே பூச்சூட வா' கிளைமாக்ஸில் நதியாவை ஆம்புலன்ஸில் கொண்டுபோனபின், கண்களில் நீருடன் மீண்டும் காலிங் பெல்லை பொருத்திக் கொண்டிருக்கும் பத்மினியைப் பார்த்தபோது, மீண்டும் மனதில் விழுந்த அதே சம்மட்டி அடி). ஆம், செல்லுலாய்டில் கவிதை வரையும் திறன் சிலருக்கு மட்டுமே வாய்த்திருக்கிறது.

படம் முடிந்தபின்னும் பிரம்மை பிடித்தது போன்ற உணர்வுடன், இருக்கையை விட்டு எழக்கூட மனமில்லாமல் எழுந்து செல்கையில், அடுத்த காட்சிக்காக கியூவில் நிற்பவர்களைப்பார்த்து, 'பீம்சிங் கொன்னுட்டாண்டா' என்று கத்திக்கொண்டு போகும் ரசிகர் கூட்டம் (அன்று 'பாகப்பிரிவினை' பார்த்துவிட்டு இவர்களது அப்பாக்கள் கத்திக்கொண்டு போன அதே வார்த்தை).

இப்படத்துக்கு அற்புதமான இசையைத் தந்தவர் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன். 'கண்டதைச் சொல்லுகிறேன்' என்ற பாடலும், 'வேறு இடம் தேடிப்போவாளோ' என்ற பாடலும் படத்தின் தரத்தை மேலும் உயர்த்தின. பின்னணி இசையிலும் மனதை வருடியிருந்தார்.

தமிழ்த்தாயின் தலைமகன் ஜெயகாந்தன் எழுதி, முதலில் தினமணி கதிர் பத்திரிகையில் தொடர்கதையாகவும், பின்னர் முழுநாவலாகவும் வெளியாகி மக்கள் உள்ளங்களைக்கொள்ளை கொண்டு, கிடைத்தற்கரிய 'சாகித்ய அகாடமி' விருதையும் பெற்ற இந்நாவல், திரைப்படமாகிறது என்றதும் ஒரு பயம். காரணம் அதற்கு முன் திரைப்படமாக உருப்பெற்ற நாவல்களில் 95 சதவீதம், சிதைந்து உருமாறி, நாவலைப்படித்து விட்டு படம் பார்க்கச்சென்றோர் மனங்களை ரணமடையச்செய்தன என்பதுதான் உண்மை. ஆனால், இப்படி மாமல்லபுரம் சிற்பமாக இப்படம் உருப்பெற்று, உயர்ந்து நிற்கும் என்பது எதிர்பாராத இன்ப அதிர்ச்சி என்றால், 'சில நேரங்களில் சில மனிதர்கள்' என்ற இப்ப்டம் மாபெரும் வெற்றிப்படமாகவும் அமைந்தது தமிழ் ரசிகர்களை தலைநிமிரச்செய்தது. ஆம், 112-ம் நாள் படம் பார்க்கச்சென்று டிக்கட் கிடைக்காமல் ரசிகர்கள் திரும்பிய அதிசயமும் நடந்தேறியது.

லட்சுமிக்கு, இந்தியாவின் சிறந்த நடிகை என்ற தேசிய விருதான 'ஊர்வசி' விருதையும் பெற்றுத்தந்தது. ஸ்ரீகாந்த்தை நினைக்கும்போதெல்லாம் எனக்குத்தோன்றுவது, "உங்களுக்கு இந்த ஒரு படம் போதுமய்யா".

mr_karthik
21st August 2014, 06:37 PM
டியர் கிருஷ்ணாஜி,

கவிஞர் வாலி பற்றிய பதிவுக்கு நன்றி.

இறைவா உன் மாளிகையில், வாலி பாக்கியம் தாலி பாக்கியம் எல்லாம் பலமுறை படிக்கப்பட்டது. "வேறொரு" திரியில் பத்து பக்கங்களுக்கு ஒருமுறை பதிவிடப்படும்.

பதிவு ரொம்ப பழையதா, அல்லது தொகுத்தவர் விட்டுவிட்டாரா தெரியவில்லை. விருதுகள் பட்டியலில் அவர் பெற்ற 'பத்மஸ்ரீ' இடம்பெறவில்லை...