View Full Version : மனதை கவரும் மதுர கானங்கள் இரண்டாவது பாகம
Pages :
1
2
3
[
4]
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
gkrishna
21st August 2014, 06:46 PM
கார்த்திக் சார்
வாலி பதிவை மீள் பதிவு இட்டதற்கு அதில் இடம் பெற்று இருந்த வாலியின் விருப்ப பாடல்கள் மற்றும் விருப்ப படங்கள் தான் காரணம்
vasudevan31355
21st August 2014, 06:59 PM
'பிரார்த்தனை'யில் இன்னொரு பாடல் உண்டு
'காதல் பிறந்தது ஆவல் எழுந்தது'
சுசீலா மயக்கும் குரலில் பாடும் மோகப் பாடல்.
gkrishna
21st August 2014, 07:24 PM
thanks vaasu sir
கவிஞ்ர் முத்துலிங்கம் அனைவரும் அறிந்த ஒரு திரைப்பட பாடல் ஆசிரியர் . அவர் பேட்டி ஒன்றில் இருந்து
http://2.bp.blogspot.com/_dEm3ZhM7YQs/TT1cmJVmFRI/AAAAAAAAJBw/lt-AtaMwnno/s400/muthu.png
தமிழ் நாட்டில் என் சொந்த ஊர் சிவகங்கை மாவட்டத்தில் இருக்கும் கடம்பன்குடி என்கின்ற கிராமம். சொந்தத் தொழில் விவசாயம் தான். சிவகங்கை அரசினர் உயர்நிலைப்பள்ளியில் எஸ்.எஸ்.எல்.சி வரை படித்தேன். படிக்கும் போதே தமிழ் மீதான ஆர்வத்தினால் இலக்கண இலக்கியங்களை எல்லாம் கற்றுக்கொண்டேன். எனக்கு இலக்கிய உணர்வை ஏற்படுத்தியது பள்ளியிலே ஒன்பதாம் வகுப்பில் மனப்பாடச் செய்யுளாக இருந்த கம்பராமாயணமும் சிலப்பதிகாரமும் தான். இந்த அளவுக்குப் படித்ததே சிறப்பாக இருக்கிறதே என்றெண்ணி நூலகங்களுக்குச் சென்று கம்பராமாயணத்தையும், சிலப்பதிகாரத்தையும் முழுமையாகப் படித்தேன். அர்த்தம் தெரியாமல் ஓசை இன்பத்தால் ஈர்க்கப்பட்டு நான் படித்தேன். அதன் பிறகு தான் அவற்றின் பொருளுணர்ந்து படித்தேன். அதன் வழியாக எனக்குத் தமிழார்வம் ஏற்பட்டது. அதன் பிறகு நான் பத்திரிகைகளுக்குக் கதை கட்டுரை எல்லாம் அனுப்புவேன். கவிஞர் சுரதா அவர்கள் "இலக்கியம்" என்ற கவிதைப் பத்திரிகை நடத்தினார். அந்தப் பத்திரிகையில் தான் என் முதற் கவிதை வெளிவந்தது. அப்போது நான் பத்தாம் வகுப்புப் படித்துக் கொண்டிருந்தேன். அப்படித்தான் என் கவிதை ஆர்வம் வளர்ந்தது. அதுபோக என் தாயார் தாலாட்டுப் பாடல்களை என் தம்பி தங்கைகளுக்குப் பாடும் போது இளவயதில் கேட்டவகையில் அதன் மூலமும் என்னுடைய கவிதை உணர்வு உள்ளத்திலே எழுந்தது.
அப்போது கண்ணதாசன் தென்றல் என்றொரு பத்திரிகை நடாத்தினார். அதில் வெண்பாப் போட்டி ஒன்று வைத்தார். அதே சமயம் கவிஞர் சுரதா இலக்கியம் என்ற பத்திரிகையில் குறள் வெண்பாப் போட்டி வைத்தார். அதில் கேள்வி ஒன்று கேட்டார்
"பறக்கும் நாவற்பழம் எது கூறுக?" என்ற அந்தக் கேள்விக்கு நாம் குறள் வெண்பாவில் எழுதணும்.
"பறக்கும் நாவற்பழம் எது கூறுக? இது அகவல், ஆசிரியப்பா வகையைச் சேர்ந்தது
நான் எழுதினேன்,
"திறக்கின்ற தேன்மலரைத் தேடிவரும் வண்டே
பறக்கின்ற நாவற்பழம்"
அப்படின்னு எழுதினேன்.
இதற்கு எனக்கு முதற்பரிசு கிடைத்தது.
அதன் பிறகு சென்னைக்கு வந்தேன். சென்னைக்கு வந்த பிற்பாடு நான் பத்திரிகைத் துறையில் தான் முதலில் பணியாற்றினேன் முரசொலி, அலையோசை ஆகியவற்றில் எல்லாம். அப்போது ஊரில் இருக்கும் காலத்திலே எல்லாம் திரைப்பாடப் பாடல்களை நாமும் எழுத வேண்டும், அவை திரையில் வரவேண்டும் என்ற ஆர்வம் இருந்ததால் சென்னைக்கு வந்தபிறகு அதற்கான முயற்சி செய்தேன். கதாசிரியர் பாலமுருகன் என்பவரால் தான் திரைப்படத்தில் எனக்குப் பாடல் எழுதும் வாய்ப்புக் கிடைத்தது. இயக்குனர் மாதவனிடம் எனக்கு அந்த வாய்ப்பை வாங்கிக் கொடுத்தார். "பொண்ணுக்குத் தங்கமனசு என்ற திரைப்படத்தில் தஞ்சாவூரு சீமையிலே கண்ணு தாவி வந்தேன் பொன்னியம்மா என்ற பாடல்.
http://3.bp.blogspot.com/_dEm3ZhM7YQs/TT1csizNmjI/AAAAAAAAJB4/9o1UAltDj20/s400/gkv
அந்தப் படத்தின் இசையமைப்பாளர் ஜி.கே.வெங்கடேஷ். அப்போது அவரிடம் உதவியாளரா இருந்தவர் ராஜா. முதலில் என்ன சொன்னாங்கன்னா கங்கை, காவிரி, வைகை இந்த நதிகள் எல்லாம் பாடுறது மாதிரி அவங்களுக்குள்ள போட்டி வந்து சண்டையிடுவதாகவும் உழவன் வந்து சமாதானம் செய்வதாகவும் ஒரு காட்சி இதை முதலில் எழுதிட்டு வாங்க அப்புறமா ட்யூன் போட்டுடுவோம் என்று கதாசிரியர் பாலமுருகன் சொன்னார். நான் எழுதிட்டுப் போனேன். பாட்டைப் பார்த்தார் ஜி.கே.வெங்கடேஷ் எல்லாம் ஒரே மாதிரி இருக்கே நான்கு ஐந்து பேர் பாடுறதனால ராகமாலிகை மாதிரி அதாவது மாண்டேஜ் சாங் ஆ இருக்கணும். அப்படி இருந்தாத் தான் நல்லா இருக்கும் நாம ட்யூன் போடுறோம் அதுக்கேத்த மாதிரி எழுதுங்கன்னார். ட்யூன் போட்டார் அந்த ட்யூன் டைரக்டர் மாதவனுக்குப் பிடிக்கல. அந்தப் படத்தில் அவர் இயக்குனர் இல்லை என்றாலும் அவரின் தயாரிப்பில் அவரின் உதவியாளர்கள் தேவராஜ் மோகன் டைரக்ட் பண்ற படம். இரண்டு நாள் இருந்து டியூன் போட்டார் வெங்கடேஷ் சரியா வரல. அப்புறமா ஜி.கே.வெங்கடேஷ் சொன்னார் "என்னுடைய அசிஸ்டெண்ட் பாடிக்காண்பிப்பாருய்யா அதை வச்சு எழுதுங்க"ன்னார். அப்போது இளையராஜா தத்தகாரத்தில் பாடிக் காண்பிக்க அந்த ட்யூன் நல்லா இருக்கே அதையே வச்சுக்கலாம் என்று அமைந்தது தான் அந்தப் பாட்டு. அதனால இளையராஜா இசையில் முதலில் பாட்டு எழுதியவன் என்ற பெருமை என்னைச் சாரும், அல்லது என்னுடைய பாட்டுக்குத் தான் இளையராஜா முதலில் இசையமைச்சார் என்று சொல்லலாம்.
இதோ அந்த "தஞ்சாவூரு சீமையிலே கண்ணு தாவி வந்தேன் பொன்னியம்மா" என்ற அந்தப் பாடலை எஸ்.ஜானகி.பி.எஸ்.சசிரேகா, சீர்காழி கோவிந்தராஜன் ஆகியோர் பாடுகின்றார்கள். இந்தப் பாடல் எண்பதுகளின் பிரபலக் குயில்களில் ஒன்றாக விளங்கிய பி.எஸ்.சசிரேகாவின் முதற்பாட்டு என்பதும் கொசுறுத் தகவல்
பத்திரிகையாளர் ஒருவர் திரைப்பட பாடல் எழுதி வெற்றி பெறுகிறார் என்பதற்காக ஒரு பாராட்டு விழாவையே நடத்தினார் அலை ஓசை வேலூர் நாராயணன்
http://3.bp.blogspot.com/-xeD2CSQT6go/Tl3hUV_afEI/AAAAAAAACz4/pJU0b25Gwp4/s320/ponnukku%2Bthanga%2Bmanasu.jpg
http://www.youtube.com/watch?v=7VljE-yLA90
Gopal.s
21st August 2014, 07:41 PM
குன்னக்குடி வித்தியாச பாடல்கள்.
தோடி ராகம் படத்தில், குன்னக்குடி பாடி,இசையமைத்த ,அவரது மருமகன் ராம்கி எழுதிய பிரபல டப்பாங்குத்து அலம்பல் ஜாலி.
https://www.youtube.com/watch?v=SUiUvP_6I8U
ராஜ ராஜ சோழனின் இளைத்த கம்பீர ராஜாவாக சிவாஜி திருவுருவை தவிரவும் தேடினால் கிடைக்கும் ஒரே முத்து . இந்த பாட்டு. கண்டு கொள்ள படாமல் விடப்பட்டது குன்னக்குடிக்கு இழப்பு. ஈஸ்வரியின் மகாராஜா,மகாராணி , மெல்ல மெல்ல, க் கதை, சின்ன பெப் என்று கேட்டு மகிழவும். நல்ல வேலை வீடியோ இல்லாததால் ச..... பார்க்க தேவையில்லை.
https://www.youtube.com/watch?v=FzjpIbQ0b9k
அதே நாகராஜன் படத்தில் (நவரத்தினம்) ஒரே கேட்கும் படியான குருவி கார பாடல். பாலமுரளியும் ஓரளவு சமாளித்திருப்பார்.குன்னக்குடி நன்றாகவே பண்ணியிருந்தார்.
https://www.youtube.com/watch?v=HNZ3FlV8NlE
Gopal.s
21st August 2014, 07:55 PM
இரவின் மடியில் (ராகவேந்தர் இரவு போட்டி )
சிறு வயதில் கேட்ட சுசிலாவின் இந்த தடி குரலில் எண்ணிப்பார் வாழ்வினிலே என்ற 1960 பாடல்.சவுக்கடி சந்திரகாந்தா என்ற படம்.டப்பிங் பாடலா தெரியாது. பல்லவி வித்தியாச கேட்ச் உடன், different pitching .இனிமை அல்ல. வேறானது.(Music-G.Ramanathan?)
http://www.inbaminge.com/t/s/Savukkadi%20Chandrakantha/
Gopal.s
21st August 2014, 08:10 PM
இரவின் மடியில்
வித்யாசமான முயற்சி பாதை தெரியுது பார் என்ற நிமாய் கோஷ் பிலிம்(1960). பின்னால் நம்ம ஆஸ்தான திரிசூலம் இயக்குனர் நாயனாக அறிமுகம்,
highlight எம்.பீ.ஸ்ரீனிவாசன் பாடல்கள்.
இளம் எஸ்.ஜானகியின் இந்த வித்தியாச மாசில் வீணையும் ,அழகு.
https://www.youtube.com/watch?v=XFUgMTIddt4
Epic Song ,பீ.பீ.எஸ்,ஜானகி இணைவில் அற்புதமான தென்னங்கீற்று.
https://www.youtube.com/watch?v=OGkebWnTk-o
டி.எம்.எஸ் இன் சின்ன சின்ன மூக்குத்தியாம்.
https://www.youtube.com/watch?v=f6dVJ3fBI8w
இதை தவிர உண்மை ஒரு நாள் வெளியாகும் என்ற லோகநாதன் பாட்டும் உண்டு.
Gopal.s
21st August 2014, 08:27 PM
இரவின் மடியில்.
பனித் திரை -1961 இல் வந்த படம். ஏதோ மனிதன் பிறந்து விட்டான், இருக்குமிடம் எங்கே சொல் என்ற பல பாடல்கள்.
கே.வீ.மகாதேவன் இசையில் .
ஒரே கேள்வி ஒரே கேள்வி .
https://www.youtube.com/watch?v=qJO5UrrKkhE
அந்த கால ரேடியோ வில் ஏப்ரல் 1 இல் தவறாமல் இடம் பெரும் ஜாலி பாடல்.ஏ.எல்.ஆர்,சுசீலா.
https://www.youtube.com/watch?v=YK7LjVNyyrs
மாமியாருக்கு ஒரு சேதி சொல்லும் சீர்காழி, லீலா.
http://www.inbaminge.com/t/p/Panithirai/
தப்பாக ஆயிரம் பெண்மை சேர்த்திருக்கிறார்கள். (படம்,Music Directors ரெண்டும் தப்பு).
RAGHAVENDRA
21st August 2014, 09:28 PM
பொங்கும் பூம்புனல்
ஒரு நாள் காலையில் சென்று விட்டு மாலை திரும்பி வந்து பார்ப்பதற்குள் எவ்வளவு விஷயங்கள்.. எவ்வளவு பக்கங்கள்..பொங்கும் பூம்புனலில் பங்கு கொண்டு பாராட்டளித்த ஒவ்வொரு உள்ளத்திற்கும் உள்ளம் கனிந்த நன்றி
கோபால் சார் இரவின் மடியில் போட்டாலும் போட்டார்... சூப்பர் பாட்டு ஞாபகத்துக்கு வந்து மனதை துள்ள வைத்து விட்டது..
மறக்க முடியாத பாடல்.. ஜாலியாக ஒரு பாடல்.. துள்ளாட்டம் போட வைக்கும் பாடல்...
வேதா சாரின் இசையில் இரவின் மடியில் துள்ளல் பாட்டுக்கெல்லாம் முன்னோடி.. விதம் விதமான டான்ஸைப் பற்றிய அருமையான பாடல்..
கன்னிப்பருவம் துள்ளுதுங்க.. காதல் பண்ண சொல்லுதுங்க..
http://www.inbaminge.com/t/s/Sarasa%20B%20A/
RAGHAVENDRA
21st August 2014, 09:33 PM
பொங்கும் பூம்புனல்
சின்ன வயசில் முதன் முதலில் கேட்ட போதே மனசுக்குள் ஒரு இனம் புரியாத உணர்வை உண்டாக்கிய பாடல்... இசையரசியின் குரலில் எவ்வளவு உணர்வுகளைக் கொண்டு வருகிறார்...
பெண் பார்க்கும் படலத்தை ஒரு பெண்ணின் கோணத்தில் பார்க்கும் இந்த பாடலில் அந்த காலத்தில் பெண்கள் பட்ட மனப்போராட்டத்தை மிக அருமையாக சித்தரித்திருப்பார் கவிஞர்.. பாட்டின் பொருளுக்கேற்ற உணர்வுகளை பாடலில் வடித்திருப்பார் இசையரசி.
இன்று கேட்டாலும் மனதில் அதே உணர்வை கொண்டு வரும் பாடல்..
டி.ஆர். பாப்பாவின் சிறந்த பாடல்களுள் ஒன்று..
விளக்கேற்றியவள் படத்திலிருந்து...
வரிசையாய் மாப்பிள்ளை வருவாரு..
http://www.inbaminge.com/t/v/Vilakketriyaval/
RAGHAVENDRA
21st August 2014, 09:36 PM
பொங்கும் பூம்புனல்
விளக்கேற்றியவள் அந்தக் கால ரசிகர்கள் நெஞ்சில் பசுமையாய் நிலைகொண்டதற்கு முக்கிய காரணம் பாடகர் திலகமும் இசையரசியும் ஜீவனளித்த இப்பாடல்..
இரவின் மடியில் என்றென்றும் உறங்கும் போது உடன்படுக்கை கொள்ளும் இசையின் ஒரு வடிவம்...
விளக்கேற்றியவள் படத்திலிருந்து முத்தமா ஆசை மொத்தமா பாடல்...
http://www.inbaminge.com/t/v/Vilakketriyaval/
RAGHAVENDRA
21st August 2014, 09:44 PM
பொங்கும் பூம்புனல்
http://upload.wikimedia.org/wikipedia/en/4/41/Thengai_Srinivasan.jpg http://antrukandamugam.files.wordpress.com/2013/10/oruviral-krishnarao-aaniver.jpg
ஒரு விரல் .... தமிழ்த் திரையுலகிற்கு இரு நட்சத்திரங்களின் அறிமுக திரைப்படம் ... தேங்காய் சீனிவாசன் மற்றும் கிருஷ்ணா ராவ் இருவரும் அறிமுகமான வெற்றித் திரைப்படம்... அனைத்துத் திரங்குகளிலும் நல்ல வசூல் பெற்று வெற்றி வாகை சூடிய படம்..
வேதாவின் இசை இப்படத்தின் வெற்றியில் மிகப் பெரும் பங்கு பெற்றது என்றால் மிகையில்லை..
இந்தப் படத்தில் இடம் பெற்ற இசையரசியின் சோலோ பாடலான மல்லிகை மொட்டு நம்மை மெய் மறக்கச் செய்யும்..
கேளுங்கள்..
http://www.inbaminge.com/t/o/Oru%20Viral/
vasudevan31355
21st August 2014, 10:05 PM
ராகவேந்திரன் சார்,
http://www.thehindu.com/multimedia/dynamic/01210/16cp_Oru_Virral_jp_1210012e.jpg
'ஒரு விரல்' படத்தில் இன்னொரு மறக்க முடியாத பாடல். பாடகர் திலகமும் சுசீலாம்மாவும் கலக்கி எடுக்கும் பாடல்.
உங்கள் தேவை என்னவென்று தெரியும்
இந்தப் பாவை நெஞ்சம் துணை புரியும்
இங்கு தேவை தேவை கொஞ்சம் பொறுமை
எங்கு ஓடிப் போகும் இந்த இளமை
http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=34skeagzgi8
vasudevan31355
21st August 2014, 10:10 PM
'ஒரு' விரல் படம் பற்றி ராண்டார் கை 'தி ஹிந்து' வில் எழுதிய கட்டுரை
http://www.thehindu.com/features/cinema/oru-viral-1965/article3900844.ece
vasudevan31355
21st August 2014, 10:28 PM
இன்றைய இரவு ராட்சஸி பாடல் பாடகர் திலகத்தோடு கொஞ்சிப் பாடும் பாடல்
மனோரமாவிற்கு ஈஸ்வரி அவர்களின் குரல். உடன் நாகேஷ் பாடகர் திலகத்தின் குரலில்.
நடுவில் வரும் இடையிசை கொஞ்சம் 'அன்பே வா' படத்தின் 'புதிய வானம் புதிய பூமியை' ஞாபகப்படுத்தும்.
'சக்கரம்' திரைப்படத்தில் இடம் பெற்ற ஒரு அபூர்வப் பாடல் இது.
'நான் 16 தாண்டி 17 போறேன்
பார்த்துகிட்டு நிக்கிறியே மாமா
என் பருவத்த போக விடலாமா'
அந்த மாமா இந்த பாடகி வாயில் எப்படியெல்லாம் புகுந்து ஜாலம் செய்யுது!
ம்ம்ம்மாமா.... அடேயப்பா! அலட்சிய கர்வி.
https://www.youtube.com/watch?v=Ng201r2kcBs&feature=player_detailpage
madhu
22nd August 2014, 04:09 AM
[
ஒரு விரல்
வேதாவின் இசை இப்படத்தின் வெற்றியில் மிகப் பெரும் பங்கு பெற்றது என்றால் மிகையில்லை..
இந்தப் படத்தில் இடம் பெற்ற இசையரசியின் சோலோ பாடலான மல்லிகை மொட்டு நம்மை மெய் மறக்கச் செய்யும்..
கேளுங்கள்..
http://www.inbaminge.com/t/o/Oru%20Viral/
இதோ பாடலின் வீடியோ... நடிப்பவர் வி.ஆர்.திலகம்
http://youtu.be/NBolNUw1DVw
Gopal.s
22nd August 2014, 05:09 AM
வரலாறு முக்கியம் அமைச்சரே என்ற வகையில்,நமது மாற்று திரி நண்பர்களுடன், விக்கியும் கிளம்பி விட்டது. நாமெல்லாம் இளையராஜா இசையமைத்த முதல் படம் அன்னக்கிளி என்றுதானே நம்பி கொண்டிருந்தோம்?இல்லை இல்லை என்று அறைகிறது விக்கி. 1970 களின் தமிழ் பட வரிசையில் 1973 இல் வந்த பெத்த மனம் பித்து ,இளையராஜா இசையாம்? டி.வீ. சேனல் கள் அடிக்கும் கூத்து போதாது என்று இது வேறே.
Gopal.s
22nd August 2014, 05:43 AM
வேதா.
நாமெல்லாம் கொண்டாடும் வேதாசலம் என்ற வேதாவை பற்றி ,தமிழ் இசை அமைப்பாளர் வரிசையில் குறிப்பிட படவில்லை.விக்கி குறிப்பும் இல்லை.
முதலில் பல படங்களுக்கு சொந்தமாகவே அருமையான இசை கொடுத்தார்.(பார்த்திபன் கனவு,சித்ராங்கி)என்ன செய்வது?விதியின் கொடுமை.வெற்றி கைகொடுக்கவில்லை.1963 இல் மாடர்ன் தியேட்டர் உடன் கை கோத்தவர் ,1965 வல்லவனுக்கு வல்லவன் முதல் புதிய பாதை கண்டார். பிரபல ஹிந்தி மெட்டு,ஆங்கில மெட்டுக்கள். ஆயிரம் பேர் அதை பண்ணியிருந்தாலும்,வேதா போல வெற்றி எத்தனை பேருக்கு கிடைத்தது?எதை,எப்படி எடுத்து ,எப்படி package பண்ணுவது என்பதுடன் ,Back Ground music அருமையாக பண்ணியிருந்தார். கர்நாடகம்,ஹிந்துஸ்தானி,.மேற்கத்திய இசைகளில் நன்கு பரிச்சயம் உள்ளவர் என்று கேள்வி. வருடத்திற்கு,இரண்டு மூன்றுக்கு மேல் கிடைக்காமல் அல்லாடி ,மாடர்ன் தியேட்டர் அதிபரிடம் மாத சம்பளம்.
ஏ.வீ.எம், பீ.எஸ்.வீ படங்களுக்கும் பண்ணியுள்ளார்.
எனக்கு தெரிந்து நான் திரட்டியவை.(குறிப்புகள் எங்கும் இல்லை)
1956- மர்ம வீரன் (அறிமுகம்)
1958- அன்பு எங்கே ,மணமாலை.
1959- சொல்லு தம்பி சொல்லு,சுமங்கலி.
1960-எங்கள் செல்வி,பார்த்திபன் கனவு.
1962- நாகமலை அழகி,யாருக்கு சொந்தம்,கண்ணாடி மாளிகை.
1963- யாருக்கு சொந்தம்,கொஞ்சும் குமரி.
1964- சித்ராங்கி,அம்மா எங்கே.
1965- வழிகாட்டி, வல்லவனுக்கு வல்லவன்,ஒரு விரல் .
1966- யார் நீ, இரு வல்லவர்கள்,வல்லவன் ஒருவன்.
1967- காதலித்தால் போதுமா,அதே கண்கள்,எதிரிகள் ஜாக்கிரதை.
1969- நான்கு கில்லாடிகள்,பொண்ணு மாப்பிள்ளை,உலகம் இவ்வளவுதான்,மனசாட்சி .
1970- சி.ஐ.டீ சங்கர்.
1971- ஜஸ்டிஸ் விஸ்வநாதன் (கடைசி??!!)
குறிப்பிட வேண்டிய பல பாடல்கள்.
டிங்கிரி டிங்காலே, பூவில் வண்டு, பழகும் தமிழே,கண்ணாலே நான் கண்ட,இதய வானின்,ஆசை வந்த பின்னே,பாப்பா பாப்பா கதை கேளு,ஆயிரம் பேர் வருவார்,நெஞ்சினிலே நினைவு முகம்,இன்று வந்த சொந்தமா,மனம் என்னும் மேடை ,ஓராயிரம் பார்வையிலே,பாரடி கண்ணே,பொழுதும் விடிந்தது,நான் மலரோடு தனியாக,ஆசையா கோபமா , பார்வை ஒன்றே, டிக்கிரிக்கு டிக்கிரிக்கு,நானே வருவேன்,என் வேதனையில்,பொன் மேனி தழுவாமல்,இன்னும் பார்த்து ,பளிங்கினால்,அம்மம்மா,எந்தன் நெஞ்சம் யாரை கண்டு,லவ் லவ்,கண்ணுக்கு தெரியாதா,பொம்பளை ஒருத்தி,வா அருகில் வா,என்னென்னவோ நான்,நீயாக எனை தேடி,அப்பா பக்கம் வந்தா,எனக்கொரு ஆசை,நேருக்கு நேர்,இங்கு தேன்நிலவு,ஜிலுக்கடி ஜிலுக்கடி,செவ்வானத்தில் ஒரு,நெஞ்சுக்கு நிம்மதி,மணமகன் அழகனே,இவ்வளவுதான் உலகம்,லவ் பண்ணுங்க சார்,ஏழு தினங்கள்,ஆயிரம் வடிவில், கோட்டை நமது,நாணத்தாலே கன்னம் ,இது நீரோடு செல்கின்ற.
rajeshkrv
22nd August 2014, 06:48 AM
கிருஷ்ணா ஜி . வருக வருக..
கோபால் ஜி, வேதா பற்றிய கட்டுரை அருமை. எனக்கு பிடித்த படம் அதே கண்களில் அவரது அனைத்து பாடல்களும் அருமை
ராகவ் ஜி .. பொ.பூ வழக்கம் போல் அருமையோ அருமை
ஸ்ரீபிரியா பற்றிய நீண்ட விளக்கமான அலசல் போல .., சி.க போட்ட தூபமா.. இருந்தாலும் மற்ற எத்தனையோ மண்டுக்களுக்கு மத்தியில் இவர் கொஞம் நடிப்பார் ... மொத்தமாக கழித்து கட்டி விட முடியாது கார்த்திக் ஜி
rajeshkrv
22nd August 2014, 07:41 AM
வாசு ஜி,
கிருஷ்ணா ஜி சமீபத்தில் காத்திருந்த மல்லி மல்லி பாடலை போட்டு 80-90’களின் இசையரசி பாடல்களை நினைவூட்டிவிட்டார்
அதன் விளைவு
இதோ இன்னொரு தாலாட்டு “மூடடி வாசற்கதவை கண்கள் தான் பட்டு விடுமே”
https://www.youtube.com/watch?v=c5Uvk6ShT6k
அரும்பருப்பா சரம் தொடுத்த .. என்ன அருமையான பாடல்
https://www.youtube.com/watch?v=dEMCvJ2bgVM
இது மட்டுமல்லாது எனக்கு அரண்மனைக்கிளியில் நட்டுவச்ச ரோசாச்செடி பாடலும் மிகவும் பிடிக்கும்
மானுக்கு மேலழகு மயிலுக்குத்தான் வாலழகு பெண்ணுக்கு எது அழகு கூறு மச்சான்
https://www.youtube.com/watch?v=9_LUcnCeWFE
Richardsof
22nd August 2014, 08:31 AM
அருமையான பாடல்களை பொங்கும் பூம்புனல் - பதிவுகளில் வழங்கி வரும் ராகவேந்திரன் சார் நன்றி
ஒருவிரல் - இதுவரை கேட்காத பாடலை பதிவிட்ட வாசு அவர்களுக்கு நன்றி .
எம்ஜிஆர் ரசிகர்களே எதிர் பார்காத நவரத்தினம் பாடலை பதிவிட்ட கோபாலை எப்படி .....?
சி,கே சார் , கிருஷ்ணா சார் , மது சார் , கார்த்திக் சார் [ சந்திரோதயம் -பாடல் -அலசல் ] மிக்க நன்றி .
gkrishna
22nd August 2014, 09:40 AM
இதோ பாடலின் வீடியோ... நடிப்பவர் வி.ஆர்.திலகம்
ஒரு விரல் நமது பதிவில் இது வரை இடம்பெறாத ஒரு திரைப்படம்
நினைவு ஊட்டிய ராகவேந்தர் சார்,மேல் தகவல்கள் வழங்கிய வாசு சார் மது சார் மற்றும் அனைவருக்கும் நன்றி . பாகம் ஒன்றில் பாலச்சந்தர் இன் நடு இரவில் திரைப்படம் பற்றிய ஆயுவு ஒன்றில் திரு பிரேம் ஆனந்த் அவர்கள் நடித்த படம் இதுவா ? அல்லது வேறு எதாவது ஒரு மர்ம படமா ? என்று கேள்வி எழுப்பப்பட்டு இருந்தது . இப்போது விடை கிடைத்து விட்டது . நமது நடிகர்திலகம் பிரேம் ஆனந்த்தும் இந்த ஒரு விரல் பிரேம் ஆனந்தம் ஒருவரா ?
Remembered For the interesting storyline and impressive performances by ‘Thengai’ Srinivasan, ‘Oru Viral’ Krishna Rao, Kannan, Prem Anand, Pandarinath, Radhika and Thilakam, and the good background score.
http://antrukandamugam.files.wordpress.com/2013/08/vr-thilagam-kumarikkottam-1971.jpg?w=487http://antrukandamugam.files.wordpress.com/2013/08/vr-thilagam-jj-kumarikkottam-1971.jpg?w=487
V.R.திலகம் – துணை நடிகை. அவளுக்கு நிகர் அவளே, தசாவதாரம், குமரிக்கோட்டம், வா ராஜா வா, பிராயச்சித்தம், சர்வர் சுந்தரம், மாணிக்கத்தொட்டில், காரைக்கால் அம்மையார், உட்பட நூற்றுக்கணக்கான தமிழ்த் திரைப்படங்களில் நடித்துள்ளார்.
இவர் கணவரும் ஒரு நடிகர் . அவரது பெயர் நினைவில் இல்லை. ஜெயா டிவி யின் திரும்பி பார்கிறேன் நிகழ்ச்சியில் இவர்களது பேட்டி இடம் பெற்று இருந்தது . மேலும் திருமதி திலகம் தங்கபதக்கம் திரை படத்தில் vK ராமசாமி அவர்களின் மனைவி ஆக வருவார் என்றும் நினைவு
இன்று போய் நாளை வா திரைபடத்தில் பாக்யராஜ் அம்மா வாக வருவர் என்றும் நினைவு
rajeshkrv
22nd August 2014, 09:50 AM
இசையரசியும் ராட்சசியும் கலக்கும் ஒரு பாடல்
https://www.youtube.com/watch?v=W3ndMOFAtQ4
rajeshkrv
22nd August 2014, 09:51 AM
ஒரு விரல் நமது பதிவில் இது வரை இடம்பெறாத ஒரு திரைப்படம்
நினைவு ஊட்டிய ராகவேந்தர் சார்,மேல் தகவல்கள் வழங்கிய வாசு சார் மது சார் மற்றும் அனைவருக்கும் நன்றி . பாகம் ஒன்றில் பாலச்சந்தர் இன் நடு இரவில் திரைப்படம் பற்றிய ஆயுவு ஒன்றில் திரு பிரேம் ஆனந்த் அவர்கள் நடித்த படம் இதுவா ? அல்லது வேறு எதாவது ஒரு மர்ம படமா ? என்று கேள்வி எழுப்பப்பட்டு இருந்தது . இப்போது விடை கிடைத்து விட்டது . நமது நடிகர்திலகம் பிரேம் ஆனந்த்தும் இந்த ஒரு விரல் பிரேம் ஆனந்தம் ஒருவரா ?
Remembered For the interesting storyline and impressive performances by ‘Thengai’ Srinivasan, ‘Oru Viral’ Krishna Rao, Kannan, Prem Anand, Pandarinath, Radhika and Thilakam, and the good background score.
V.R.திலகம் – துணை நடிகை. அவளுக்கு நிகர் அவளே, தசாவதாரம், குமரிக்கோட்டம், வா ராஜா வா, பிராயச்சித்தம், சர்வர் சுந்தரம், மாணிக்கத்தொட்டில், காரைக்கால் அம்மையார், உட்பட நூற்றுக்கணக்கான தமிழ்த் திரைப்படங்களில் நடித்துள்ளார்.
இவர் கணவரும் ஒரு நடிகர் . அவரது பெயர் நினைவில் இல்லை. ஜெயா டிவி யின் திரும்பி பார்கிறேன் நிகழ்ச்சியில் இவர்களது பேட்டி இடம் பெற்று இருந்தது . மேலும் திருமதி திலகம் தங்கபதக்கம் திரை படத்தில் vK ராமசாமி அவர்களின் மனைவி ஆக வருவார் என்றும் நினைவு
இன்று போய் நாளை வா திரைபடத்தில் பாக்யராஜ் அம்மா வாக வருவர் என்றும் நினைவு
நல்ல நடிகை.. நடு இரவில் படத்தில் ராட்சசியின் குரலில் இவருக்கு அழகான பாடலும் உண்டு..
இவர் தொலைக்காட்சி நடிகர் ராஜசேகரின் மனைவி..
chinnakkannan
22nd August 2014, 10:12 AM
ஹாய் ஆல் குட் மார்னிங்..
ஆஹா..எவ்ளோ விஷயங்க்ள்..காலையில் பொங்கும் பூம்புனல் நைட்ல இரவின் மடியில் நடுவில் பல வித பாடல்கள்..மிக்க நன்றி டு ஆல் நினைவுக்கு வரும் பாட்டுக்கள்.. பாட்டொன்று தருவார் பாரடியம்மா, பாட்டு வரும் பாட்டு வரும் (இங்கே) அதைக் கேட்டுக் கொண்டிருந்தால் நாட்டம் வரும்..
ஒரு விரல் கிருஷ்ணா ராவ் யாரும் சரியாக உபயோகப்படுத்திக்கொள்ள வில்லை என நினைக்கிறேன்.. நடுஇரவிலில் வி.ஆர்.திலகம்பாடுவது என்ன பாட்டு நாலுபக்கம் ஏரியா ராஜேஷ்ஜி..ம்ம் புரிகிறது..உங்கள் உறவினர் ஒருவர் தீவிர ஸ்ரீப்ரியா ரசிகர் என்று முன்பொருமுறை சொல்லியிருக்கிறீர்க்ள்..அதான் விட்டுக்கொடுக்க மாட்டேன் என்கிறீர்கள்..
வி.ஆர் திலகம் மற்றும் மற்ற இடுகைகளுக்கு நன்றி க்ருஷ்ணாஜி..இன்னிக்கு எந்த ஸ்ரீ படம் அலசலாம்..மாலாஸ்ரீன்னு யாரோ இருக்காங்கள்ள! அவங்க தங்கை கூட ரசிகான்னு நினைவு..அக்கா தங்கைன்னு பார்த்தா ஜெயசுதா சுபாஷினி அம்பிகா ராதா சிம்ரன் மோனல், நக்மா ஜோதிகா, இந்திரா ராசி…விட்டுப் போனவை நீங்க சொல்வீங்க தானே..
இந்த ராசி நடித்த படம் எதுவும் நினைவில்லை..பட் ரயில் சினேகம் தொடரில் வருவார்..ரயில் சினேகத்தில் வரும் ரெண்டு பாட்டும் எனக்கு ரொம்பப் பிடிக்கும்
இந்த வீணைக்குத் தெரியாது அதைச் செய்தவன் யாரென்று
இந்தப் பிள்ளையும் அறியாது இதைத் தந்தவன் யாரென்று..
…எங்கோ அழுத கண்ணீர் துடைக்க எங்கோ ஒரு விரல் இருக்கிறது.. ( நல்ல வரிக்ள்) ராகம் சஹானாவா..கோபால் சாரைத் தான் கேட்கணும்.. ராசி பற்றி அப்படியே விட்டு விட்டேனே.. நல்ல கெண்டை மீன் கண்கள் என ப் பழைய உவமை தான் வருது..கன்னம் மட்டும் நன்றாக ஊறிய குலோப் ஜாமூன் மாதிரி கொழுக்மொழுக்கென இருக்கும் (ரயில் சினேகத்தில்) இன்னொரு அழகான நடிகை அமுதா (பூங்கதவே தாழ்திறவாய்..) அவர் தான் இதன் நாயகி..
அப்புறம்.. ஒருவிரல் ஒரு இருபத்தைந்து வருடம் முன்பு பார்த்திருகிறேன்.. ரொம்ப த்ரில்லா இருக்கும் என நினைத்துப் பார்த்தது..அவ்வளவு ஒன்றும் இல்லை…அ.கால த்ரில்லர் நெஞ்சம் மறப்பதில்லை(நம்பியாரின் கிழ உருவம் வரும் ஒரு செகண்டே போதும்)., நடு இரவில், அப்புறம் யார். நீ..(பொன்மேனி தழுவாமல் பாட்டுதான் நினைவு)
அப்புறம் வரட்டா..
அன்புடன்
சி.க
gkrishna
22nd August 2014, 10:17 AM
ராஜேஷ் சார் . நன்றி
தொலை காட்சி நடிகர் ராஜசேகர் . இவரும் தில் படத்தில் வருவார் என்று நினைவு
rajeshkrv
22nd August 2014, 10:27 AM
ராஜேஷ் சார் . நன்றி
தொலை காட்சி நடிகர் ராஜசேகர் . இவரும் தில் படத்தில் வருவார் என்று நினைவு
ஆம் அவரே தான்
gkrishna
22nd August 2014, 10:34 AM
நாம் ஏற்கனவே ஞாயிறு ஒலி மழையில் பாடல் பற்றி அலசி விட்டோம்
இருந்த போதிலும் அந்த பாடல் கமல் அவர்களால் பாடப்பட்ட முதல் தமிழ் திரை பட பாடல் . அது பற்றிய ஒரு தகவல்
From The Hindu - Kamal Haasan’s tryst with the classical arts.
Between takes, Kamal would keep humming on the sets, and one day ‘Muktha’ Srinivasan, the director, caught him singing a keerthanai.
I had one last question about theatre when I met Kamal Haasan again in June, at his office in Chennai. Did he miss it? Doesn’t he feel like doing the odd play between films, the way Richard Burton did, the way Denzel Washington does? “Yes,” he said. “But even if I am performing on stage, I’d still like it to be televised. I want more people to see it. The bane of a theatre artist is that he can’t get his art across to a large audience. I have gotten used to technology, to that audience.” He compared this to running, and then suddenly slowing down to walk. “I am refusing to walk... unless it’s for health reasons.” He does this often. He’ll think up a metaphor on the spot, and then he’ll put a spin on it that sounds like a non sequitur but perhaps really isn’t.
***
We then began to talk about the movies, about his singing for them, beginning with the number ‘Gnayiru oli mazhayil’. The film was ‘Andharangam’, where Kamal played the manager of a “beauty clinic” that’s frequented exclusively by young women who want to get into shape and often find themselves entwined in the tape measure in his hands. Between takes, he would keep humming on the sets, and one day ‘Muktha’ Srinivasan, the director, caught him singing a keerthanai. A surprised Srinivasan decided to make Kamal sing a number for the film and took him to the music director G. Devarajan – or “Devarajan Master,” as he was called. Devarajan Master was very close to Thangappan Master, the choreographer under whom Kamal had worked for a while as an assistant, and he knew Kamal. During the recording, he stood near the new playback singer, moving his hands the way conductors do. “I was very scared of him,” Kamal Haasan said. “You can feel that fear in the song.”
Part 1: His classical odyssey
The same year, 1975, Kamal spent seven months learning to play the mridangam when K. Balachander told him that his character in ‘Aboorva Raagangal’ was required to play the instrument. “That’s why I play so convincingly in the film,” he said. Music was all around him. He spoke of his co-stars – the Malayalam actress Srilalitha who was a student of the composer Dakshinamurthy, and Srividya, who, of course, was the daughter of ML Vasanthakumari. “We were all very close and I would keep asking them to sing.”
Sometimes, they would perform at music nights helmed by Gangai Amaran. “Film stars singing light music was a new thing then,” Kamal Haasan said. They used to sing Tamil songs, Hindi songs, and then, one day, they were invited to perform at a function organised by Cinema Express magazine. Kamal suggested that they sing ‘One, a song written by Harry Nilsson and later popularised by Three Dog Night. Someone asked him if the audience would understand. He said if they could “understand” a Sanskrit shloka then they could understand this. “It’s the same. It’s all music.”
This is not a new anecdote (and people familiar with the Kamal Haasan mythology will know where this is headed), but it was something to hear it in person. The Harry Nilsson original is a mid-range song, and the Three Dog Night cover touches a few higher notes, but when Kamal Haasan launched into the number, he leaped over an octave and hit a stunning falsetto note – it isn’t there in either of the earlier versions.
This is probably how he sang the song that night, at the function, and the audience applauded. Seated in the audience, and listening very carefully to the way Kamal caught that pitch, was Ilaiyaraja.
http://www.youtube.com/watch?v=zJcJXRCCSIY
gkrishna
22nd August 2014, 10:40 AM
இன்னொரு அழகான நடிகை அமுதா (பூங்கதவே தாழ்திறவாய்..)
பூங்கதவே தாழ்திறவாய்.. பாடலுக்கு நடித்தவர் ரோகினி என்று நினைவு
(ரகுவரன் மனைவி அல்ல ) பின்னாட்களில் ஒருவர வாழும் ஆலயம் படத்தில் ராது என்ற பெயரில் மீண்டும் மீள்ப்ரவேசம் பிரபுவின் மனைவியாக என்று நினைவு சி கே சார்
gkrishna
22nd August 2014, 10:42 AM
ரயில் ஸ்நேஹம் அமுதா நிழல்கள் படத்தில் சுவேதா என்று அறிமுகம் என்று நினைவு cee kay sir
http://upload.wikimedia.org/wikipedia/en/thumb/d/d8/Nizhalgal_dvd.jpg/220px-Nizhalgal_dvd.jpg
gkrishna
22nd August 2014, 10:48 AM
சி கே சார் ராஜேஷ் சார்
நிழல்கள் ரவியின் முதல் படம் நிழல்கள் தானா ? ஒரு சின்ன சந்தேகம் உண்டு அதற்கு முன்னே ஒரு கருப்பு வெள்ளை படத்தில் அவர் வீட்டு தரகர் ஆக ஒரு காட்சியில் மட்டும் வருவார் என்று (அது சதுரங்கம் மா அல்லது வேறு எதாவது படமா நினைவில் இல்லை )
gkrishna
22nd August 2014, 10:52 AM
ராஜேஷ் சார்
நேற்று ஒரு பாடல் கேட்டேன் இசை அரசி பாலாவின் குரல்களில்
சுகமான ராகங்கள் -மெல்லிசை மன்னர் இசை
ஆற்றை கடக்க வேணும் அக்கரைkku போக வேணும்
இது விடியோ இருக்கா சார்
gkrishna
22nd August 2014, 11:00 AM
https://encrypted-tbn0.gstatic.com/images?q=tbn:ANd9GcQpKQ2pe1F148zImc2hPRc_d7XNzHfv5 eHucnFbo5a5RMttyZ3Uhttps://i.ytimg.com/vi/X82IFcTvOIc/hqdefault.jpg
madhu
22nd August 2014, 11:11 AM
ராஜேஷ் சார்
நேற்று ஒரு பாடல் கேட்டேன் இசை அரசி பாலாவின் குரல்களில்
சுகமான ராகங்கள் -மெல்லிசை மன்னர் இசை
ஆற்றை கடக்க வேணும் அக்கரைkku போக வேணும்
இது விடியோ இருக்கா சார்
இதோ
http://youtu.be/524qQpnkk1Y
gkrishna
22nd August 2014, 11:18 AM
நீண்ட நாள் கழித்து நேற்று கேட்ட ஒரு நல்ல பாடல்
சாமந்தி பூ திரை படத்தில்
மலேசிய வாசுதேவன் இசை அமைப்பு
கே எஸ் மாதங்கன் இயக்கம்
சிவகுமார் ஷோபா
பாலா ஜென்சி குரல்களில்
http://www.youtube.com/watch?v=gR7mRvdnXDE
மாலை வேளை ரதி மாறன் பூஜை
அடி மானே இதோ இதோ தேவை நானா நானா
மாலை வேளை ரதி மாறன் பூஜை
அடி மானே இதோ இதோ தேவை நானா நானா
மணி ஓசை இதழ் தரும் நாதம்தானா
மாலை வேளை ரதி மாறன் பூஜை
அடி மானே இதோ இதோ தேவை நானா நானா
தேனோடை இதில் ஏன் ஆடை
வெறும் நூலாடை இனி நான் ஆடை
நூலாடை இது மேலாடை
வரும் பூமேடை அதில் நீ ஆடை
தேனோடை இதில் ஏன் ஆடை
வெரும் நூலாடை இனி நான் ஆடை
நூலாடை இது மேலாடை
வரும் பூமேடை அதில் நீ ஆடை
தழுவிட வரவோ லலலலல்லல்லா
குளிர் அதில் விடுமோ
இருவர் இன்று ஒருவர் என்று நாம் ஆவோமே
மாலை வேளை ரதி மாறன் பூஜை
அடி மானே இதோ இதோ தேவை நானா நானா
தாங்காது என நான் தள்ள
என்னை நீ அள்ள சுகம் தான் என்ன
போதாது என நான் சொல்ல அடி
நீ துள்ள வரும் நாள் என்ன
தாங்காது..ஹோய்... என நான் தள்ள
என்னை நீ அள்ள சுகம் தான் என்ன
போதாது என நான் சொல்ல அடி
நீ துள்ள வரும் நாள் என்ன
விரல்களின் நகங்கள்....தரரரா..
எழுதின இடங்கள்
அழகின் கோலம் முழுதும் காணட்டும் இப்போது
மாலை வேளை ரதி மாறன் பூஜை
அடி மானே இதோ இதோ தேவை நானா நானா
இந்த படத்தில் விஜயகாந்த் ஒரு சிறிய வேடத்தில் வருவார் என்று நினைவு
gkrishna
22nd August 2014, 11:21 AM
இதோ
தேங்க்ஸ் மது சார்
இளையராஜாவிடம் கோபித்து கொண்டு இயக்குனர் சுந்தர்ராஜன் மெல்லிசை மன்னரை இசை அமைக்க வைத்து சில படங்கள் இயக்கினார் அதில் ஒன்று இது . மிக்க நன்றி .
சமீபத்தில் வெளிவந்த சித்திரையில் நிலா சோறு சுந்தர்ராஜன் இயக்கிய சிறு முதலீடு படம் ஒன்றுக்கு இளையராஜா நீண்ட நாள் கழித்து இசை அமைத்து இருந்தார்
madhu
22nd August 2014, 11:22 AM
இந்த ராசி நடித்த படம் எதுவும் நினைவில்லை..
சி.க
எந்த ராசி ? இவரா ?
http://youtu.be/DRQJnp1v4UY
madhu
22nd August 2014, 11:23 AM
கிருஷ்ணா ஜி..
மாலை வேளை பாடும் பெண் குரல் எஸ்.பி.ஷைலஜா என்று நினைக்கிறேன். சரியாகத் தெரியாது. கேட்டால் அப்படி தோணுது.
( அண்ணனும், தங்கையும் டூயட் பாடுறாங்களான்னு பேச்சு நடந்ததாக நினைப்பு. அதன் பிறகு "ஏதோ நடக்கிறது" பாட்டின்போதும் வம்பு உண்டு )
gkrishna
22nd August 2014, 11:29 AM
http://i1.ytimg.com/vi/v4ZQFdssn-g/hqdefault.jpg
முதல் பாகம் பதிவு 789 இல் ராசியின் இந்த படம் திரு வாசு அவர்களால் பதிவிடப்பட்டு உள்ளது
gkrishna
22nd August 2014, 11:31 AM
கிருஷ்ணா ஜி..
மாலை வேளை பாடும் பெண் குரல் எஸ்.பி.ஷைலஜா என்று நினைக்கிறேன். சரியாகத் தெரியாது. கேட்டால் அப்படி தோணுது.
( அண்ணனும், தங்கையும் டூயட் பாடுறாங்களான்னு பேச்சு நடந்ததாக நினைப்பு. அதன் பிறகு "ஏதோ நடக்கிறது" பாட்டின்போதும் வம்பு உண்டு )
நன்றி மது சார்
இந்த பாட்டு எப்பவுமே குழப்பும் . குரல் பார்த்தீர்கள் என்றால் சைலு ஜாடை தான் ஆனால் என் நண்பர் ஒருவர் இது ஜென்சி என்று அடித்து (என்னை அல்ல ) சொல்கிறார்
madhu
22nd August 2014, 11:35 AM
நன்றி மது சார்
இந்த பாட்டு எப்பவுமே குழப்பும் . குரல் பார்த்தீர்கள் என்றால் சைலு ஜாடை தான் ஆனால் என் நண்பர் ஒருவர் இது ஜென்சி என்று அடித்து (என்னை அல்ல ) சொல்கிறார்
சில தளங்களில் ஜென்சி என்றும் சில தளங்களில் sps என்றும் போட்டிருக்கு. ஆனால் வார்த்தைகளை உச்சரிக்கும் விதம் ஷைலஜா என்றே காட்டுகிறது.
gkrishna
22nd August 2014, 11:35 AM
http://img33.imageshack.us/img33/2041/soolamfront.jpg
நேற்று ஸ்ரீப்ரியா ஆத்துகாரர் ராஜ்குமார் சேதுபதி பற்றி பேசும்போது ஒரு படம் கிடைத்தது சார் சூலம் னு 1980 கால கட்டம் என்று நினைவு
இதில் ஜோடி ராதிகா சரத்குமார் .இன்னும் ஒரு நடன நடிகை அது யாரு சார்
gkrishna
22nd August 2014, 12:28 PM
நேற்று கே டிவியில் இரவு அக்னி நட்சத்ரம் திரைப்படம் ஓடிக்கொண்டு இருந்தது. இளையராஜாவின் இசை அமைத்து தானே பாடிய 'ராஜா ராஜாதி ராஜன் இந்த ராஜா ' பாடல் வரை பார்த்தேன் . அப்போது மனதில் ஓடிய இன்னும் ஒரு பாடல் 'வெண்ணிலா என்னோடு வந்து ஆட வா தென்றலே ' சார்லி நடனம் மனோ பாடுவார் சங்கர் கணேஷ் இசை வைரமுத்து பாடல்.
திரைப்படம் நியாய தராசு
மோகன்லால் கீதா நடித்த பஞ்சாக்னி என்ற மலையாள படத்தின் தழுவல்
https://encrypted-tbn0.gstatic.com/images?q=tbn:ANd9GcR3WNB8yW0hgWv-eeQNA2GTMGpZFG_vO1HIHhNyDoT_DnQuP9FTww
http://www.youtube.com/watch?v=Hh3z6YWMsbs
gkrishna
22nd August 2014, 01:48 PM
ஸ்பரிசம் தலைப்பு மலையாள வாடையில் இருக்கும்
1982 இல் வெளிவந்த படம்
எஸ் வீ சேகர் ஸ்ரீலட்சுமி னு ஒரு நடிகை கதாநாயகி இவங்க வேறு எதாவது படத்தில் நடித்தார்களா என்று நினைவு இல்லை
செய்தி வாசிப்பாளர் ஷோபனா அவர்களின் கணவர் ரவி இசை அமைத்து உள்ள படம்
பாலாவின் ஒரு பாடல் நினைவில் உண்டு
'ஊடல் சிறு மின்னல் ' - மெல்லிசை மன்னர் மாதிரி ஒரே பாட்டில் பல tune போட்டு இருப்பார் .
விடியோ இருக்கா னு கேட்டா இதோ என்று சொல்ல எங்கள் மது அவர்கள் இருக்கிறார்களே ஹெல்ப் ப்ளீஸ் மது சார்
http://www.inbaminge.com/t/s/Sparisam/
gkrishna
22nd August 2014, 02:21 PM
http://www.inbaminge.com/t/a/Anni%20En%20Deivam/folder.jpg
படத்தில் சிரித்து கொண்டு இருப்பவரை பார்த்தால் பஞ்ச கல்யாணி புகழ் எம் எஸ் வசந்தி போல் தெரிகிறது. இடுப்பை வளைத்து கொண்டு மேல் நோக்கி பார்ப்பவர் திருமுருகன் இவரும் பஞ்ச கல்யாணி புகழ் தான் போல் தெரிகிறது . பின்னாட்களில் இருவரும் திருமணம் செய்து கொண்டார்கள் என்று படித்த நினைவு . இசை குணசிங் (மெல்லிசை மன்னரின் குழுவை சேர்ந்தவர் என்று நினைவு )
இது பற்றிய மேல் தகவல்கள் உண்டா ?
vasudevan31355
22nd August 2014, 03:04 PM
காலை ஷிப்ட் முடித்து வருவதற்குள் எவ்வளவு தகவல்கள்! சுவாரஸ்யமான தகவல்கள்.
http://i.ytimg.com/vi/c5Uvk6ShT6k/hqdefault.jpghttp://i.ytimg.com/vi/6N-veIZ_rxg/0.jpg
ராஜேஷ் சார் 'நினைவுசின்ன'த்தை அருமையாகத் தந்து அப்படத்தின் முதல் காட்சியில் கடலூர் பாலாஜி தியேட்டரில் நடந்த அமர்க்களத்தை, (அப்போது தென் ஆற்காடு பிரபு ரசிகர் மன்ற செயலாளராக பிரபு என்னை நியமித்திருந்தார். ரசிகர் மன்ற ஷோ போட்டு கொடி தோரணங்கள் கட்டி சும்மா அமர்க்களப்படுத்தி விட்டோம்) நினைவு படுத்தி விட்டார். படமும் நன்றாக இருந்து வெற்றி வாகை சூடியது. கடலூரில் ஒட்டப்பட்ட 5ஆவது வார போஸ்டர் (பிரபு குதிரை வண்டி சாரட்டில் சவுக்குடன் இருப்பது போன்ற போஸ்டர்) இன்னும் நன்றாக நினைவு இருக்கிறது. பிரபு, ராதிகா அருமையாக நடித்திருந்தனர். முரளி, சித்ரா வேறு கூட. ம்..ஞாபகம் எங்கெங்கோ செல்ல ஆரம்பித்து விட்டது. நன்றி ராஜேஷ் சார்.
vasudevan31355
22nd August 2014, 03:09 PM
'நினைவுச் சின்னம்' படத்தில் சித்ரா. அள்ளிகோங்க. எங்க சி.க.சார்?:)
சித்ரா ஸ்பெஷல்.
http://1.bp.blogspot.com/-g9t28kZyOhQ/U7a1sFl9kXI/AAAAAAAAgAE/wq2X_wpjkE0/s1600/Actress+Chitra+Ninaivu+Chinnam+wearing+saree+witho ut+blouse.jpg
vasudevan31355
22nd August 2014, 03:10 PM
http://4.bp.blogspot.com/-JUz7gbfxJNU/U7a1rCWTSwI/AAAAAAAAf_0/AP_w6Ly01QU/s1600/Actress+Chitra+Ninaivu+Chinnam+movie+gorgeous+phot os+(1).jpg
vasudevan31355
22nd August 2014, 03:10 PM
http://1.bp.blogspot.com/-tMQBZJKLyZ4/U7a1q3AnVjI/AAAAAAAAf_s/wTdbSKo2ly4/s1600/Actress+Chitra+Ninaivu+Chinnam+hot+scenes.jpg
vasudevan31355
22nd August 2014, 03:11 PM
http://2.bp.blogspot.com/-aoZ6WWCeQxo/U7a1tO8Y1_I/AAAAAAAAgAM/vraHWCieizg/s1600/Sexy+Tamil+Actress+Chitra+in+Old+South+Movie.jpg
vasudevan31355
22nd August 2014, 03:12 PM
http://2.bp.blogspot.com/-lPun8DEG1rk/U7a1soZrDwI/AAAAAAAAgAI/noKLe6kZRuw/s1600/Sexy+Tamil+Actress+Chitra+Old+Movie+Ninaivu+Chinna m+Pics.jpg
vasudevan31355
22nd August 2014, 03:13 PM
http://4.bp.blogspot.com/-mhm7E0fXA3U/U7a1rNCuduI/AAAAAAAAf_w/ptllhD4N-zw/s1600/Actress+Chitra+Ninaivu+Chinnam+movie+gorgeous+phot os.jpg
vasudevan31355
22nd August 2014, 03:25 PM
வேதாவின் லிஸ்ட் இதுதான் முதல்தடவை என்று நினைக்கிறேன். சிரமப்பட்டு படங்களையும் பாடல்களையும் தொகுத்து திரியை மேலும் புகழடையச் செய்ததற்கு நன்றி கோ. நிஜமாகவே அசத்தல்.
vasudevan31355
22nd August 2014, 04:21 PM
கிருஷ்ணா சார்,
பதிவுகள் ஒவ்வொன்று அட்டகாசம். அதைவிட சந்தேகங்கள் அட்டகாசம். அதைவிட அதற்கான விளக்கங்கள் அட்டகாசம்.
mr_karthik
22nd August 2014, 04:25 PM
டியர் கோபால் சார்,
வேதாவின் படங்களின் பட்டியல் உண்மையிலேயே அருமையான தொகுப்பு. சிரமப்பட்டு தொகுத்திருக்கிறீர்கள். பாராட்டுக்கள். வேதாவின் தனிச்சிறப்பு ஹிந்திப்பாடல் மெட்டுக்களை ஒரிஜினலை விட அழகாக தருபவர் என்பது.
அதுபோல 'இரவின் மடியில்' தொடரும் அருமை. பாதை தெரியுது பார் படத்தின் பாடல்கள் தொகுப்பு சூப்பர்.
அசத்துங்க சார்...
gkrishna
22nd August 2014, 04:25 PM
கிருஷ்ணா சார்,
பதிவுகள் ஒவ்வொன்று அட்டகாசம். அதைவிட சந்தேகங்கள் அட்டகாசம். அதைவிட அதற்கான விளக்கங்கள் அட்டகாசம்.
உங்களுடைய இந்த பதிவே மிகுந்த அட்டகாசம் வாசு சார்:)
vasudevan31355
22nd August 2014, 04:34 PM
கிருஷ்ணா ஜி..
( அண்ணனும், தங்கையும் டூயட் பாடுறாங்களான்னு பேச்சு நடந்ததாக நினைப்பு. அதன் பிறகு "ஏதோ நடக்கிறது" பாட்டின்போதும் வம்பு உண்டு )
மதுஜி,
'மனிதன்' படத்தில் வரும் 'ஏதோ நடக்கிறது' பாடலைச் சொல்கிறீர்களா? அப்படியென்றால் தங்களுக்குத் தெரியாதது அல்ல. அப்பாடல் ஜேசுதாஸ், சித்ரா இணைந்து பாடியது.
vasudevan31355
22nd August 2014, 04:37 PM
'சாமந்திப்பூ' திரைப்படத்தில் இன்னொரு பாடல்.
கனவுகளே ஊர்கோலம் எங்கே
கவிதையை தேடும் ராகம் இங்கே
பாடிடும் உள்ளம் ஒன்று
காண வேண்டும் இன்பம் என்று
ஷோபா நடிக்க பின்னணியில் ஒலிக்கும் ஜானகியின் குரல். நல்ல பாடல்.
https://www.youtube.com/watch?v=fdHd5y5i8wM&feature=player_detailpage
mr_karthik
22nd August 2014, 04:37 PM
'நினைவுச்சின்னம்' நல்ல படம். ஆனால் பழிவாங்கும் எண்ணம்கொண்டு அலைவதால் சுவாரஸ்யம் குறைந்தது. வயதான தோற்றத்தில் பிரபு அங்கங்கே நடிகர்திலகத்தை நினைவூட்டினார். பிரபு ராதிகா பேசிக்கொள்ளும் வசனங்களில் அங்கங்கே கொஞ்சம் பச்சை தலைகாட்டியது. தவிர்த்திருக்கலாம்.
பிரபு ரசிகர்மன்ற முன்னாள் செயலாளருக்கு வாழ்த்துக்கள்...
vasudevan31355
22nd August 2014, 04:39 PM
கிருஷ்ணா சார்,
எனக்கு மிக மிக பிடித்த 'மாலை வேலை... ரதி மாறன் பூஜை' பாடலுக்கு ஆயிரமாயிரம் நன்றிகள். அசத்தல் சார். என்னா ஒரு ஒத்துமை டேஸ்ட்!
gkrishna
22nd August 2014, 04:40 PM
'சாமந்திப்பூ' திரைப்படத்தில் இன்னொரு பாடல்.
கனவுகளே ஊர்கோலம் எங்கே
கவிதையை தேடும் ராகம் இங்கே
பாடிடும் உள்ளம் ஒன்று
காண வேண்டும் இன்பம் என்று
ஷோபா நடிக்க பின்னணியில் ஒலிக்கும் ஜானகியின் குரல். நல்ல பாடல்.
thanks vasu sir
இந்த சாமந்தி பூ நிறைய பேருக்கு மலேசிய வாசுதேவன் இசை என்றே தெரியாது என்று நினைவு நிறைய பேர் ராஜாவின் ஆரம்ப கால பாடல்கள் என்று சொல்லி கேள்வி பட்டு இருக்கிறேன்
அதிலும் மலேசிய வின் 'ஆகாயம் பூமி எங்கும் ' பாடல் டிபிகல் ராஜா பாடல்
vasudevan31355
22nd August 2014, 04:44 PM
http://img33.imageshack.us/img33/2041/soolamfront.jpg
நேற்று ஸ்ரீப்ரியா ஆத்துகாரர் ராஜ்குமார் சேதுபதி பற்றி பேசும்போது ஒரு படம் கிடைத்தது சார் சூலம் னு 1980 கால கட்டம் என்று நினைவு
இதில் ஜோடி ராதிகா சரத்குமார் .இன்னும் ஒரு நடன நடிகை அது யாரு சார்
அந்த நடிகை பெயர் பொன்னி கிருஷ்ணா சார். பாக்யராஜின் ஒரு படத்தில் அவற்றுக்கு ஜோடியாகவே நடித்தார். சொல்லுங்கள் பார்ப்போம். 80-களில் நிறையப் படங்களில் கிளப் நடனமாடியிருக்கிறார். பின்பு பேரைக் கூட மாற்றியதாக நினைவு. (என்ன இன்னைக்கு ஒரே நினைவா இருக்கு?. நினைவுச் சின்னம்.... கிருஷ்ணாஜியின் ஒவ்வொரு பதிவின் 'நினைவு'... அந்த நாள் 'நினைவு'.)
mr_karthik
22nd August 2014, 04:45 PM
டியர் வாசு சார்,
கிருஷ்ணாஜிக்கு பதில்சொல்லும் சாக்கில் மனிதன் படத்தைச்சொல்லி ரூபிணியை நினைவுபடுத்தி விட்டீர்களே. இன்று பொழுது போன மாதிரிதான்.
கூடவே வந்த குஷ்பூ, கௌதமியெல்லாம் இன்னும் குப்பை கொட்டிக்கொண்டிருக்க, 'பளிச்'னு வந்துட்டு 'பளிச்'னு போயிட்டாரே ரூபிணி.
புதிய வானம், கூலிக்காரன், மைக்கேல் மதனகாமராஜன் என்று அழகாக வலம் வந்தவரை ராமராஜனுக்கு ஜோடியாகபபோட்டு ஒருவழியாக்கி விட்டார்கள்...
chinnakkannan
22nd August 2014, 04:49 PM
பொன்னி - பாக்யராஜின் ஒருகை ஓசை.. அந்தப் படத்தில் இரண்டு பாட்ட்டுக்கள் உண்டு..சுமாராக இருக்கும் கேட்க..ஒரேபாட்டில் ஹீரோயின் கதை சொல்வது.. நான் நீரோடையில் நீராடையில் யாரோ வந்து ஏதோ சொல்லி கன்னத்தைக் கிள்ளி நெஞ்சத்தை தொட்டு கையைப் பிடிச்சான்..ஹப்பா எனக்கு நினைவுஇருக்கே:) அப்புறம் முத்துத் தாமரை வானவீதிவர ..ஊர்கோல நேரமிது..இரண்டிலுமுதிரிப் பூக்கள் அஸ்வினி வாசு சார்.. பொன்னிக்கு ஒரு பாட்டு உண்டு நினைவில்லை..காதலிக்கும் முறைப்பெண் படத்தில் அவர்...
இன்னும் மத்த பக்கம் படித்து விட்டு வரேன்..
gkrishna
22nd August 2014, 04:50 PM
அந்த நடிகை பெயர் பொன்னி கிருஷ்ணா சார். பாக்யராஜின் ஒரு படத்தில் அவற்றுக்கு ஜோடியாகவே நடித்தார். சொல்லுங்கள் பார்ப்போம். 80-களில் நிறையப் படங்களில் கிளப் நடனமாடியிருக்கிறார். பின்பு பேரைக் கூட மாற்றியதாக நினைவு. (என்ன இன்னைக்கு ஒரே நினைவா இருக்கு?. நினைவுச் சின்னம்.... கிருஷ்ணாஜியின் ஒவ்வொரு பதிவின் 'நினைவு'... அந்த நாள் 'நினைவு'.)
ஒரு கை ஓசை யா வாசு சார்
mr_karthik
22nd August 2014, 04:50 PM
//நேற்று ஸ்ரீப்ரியா ஆத்துகாரர் ராஜ்குமார் சேதுபதி பற்றி பேசும்போது ஒரு படம் கிடைத்தது சார் சூலம் னு 1980 கால கட்டம் என்று நினைவு
இதில் ஜோடி ராதிகா சரத்குமார் //
அப்போது ராதிகா சரத்குமார் அல்ல, ராதிகா பிரதாப்போத்தன்..
gkrishna
22nd August 2014, 04:52 PM
டியர் வாசு சார்,
கிருஷ்ணாஜிக்கு பதில்சொல்லும் சாக்கில் மனிதன் படத்தைச்சொல்லி ரூபிணியை நினைவுபடுத்தி விட்டீர்களே. இன்று பொழுது போன மாதிரிதான்.
கூடவே வந்த குஷ்பூ, கௌதமியெல்லாம் இன்னும் குப்பை கொட்டிக்கொண்டிருக்க, 'பளிச்'னு வந்துட்டு 'பளிச்'னு போயிட்டாரே ரூபிணி.
புதிய வானம், கூலிக்காரன், மைக்கேல் மதனகாமராஜன் என்று அழகாக வலம் வந்தவரை ராமராஜனுக்கு ஜோடியாகபபோட்டு ஒருவழியாக்கி விட்டார்கள்...
அருமை கார்த்திக் சார்
ஒரு அழகான நடிகை மோகன் உடன் ஒரு படம் கூட நினைவு உண்டு
தீர்த்த கரையினிலே என்று நினைக்கிறேன்
gkrishna
22nd August 2014, 04:55 PM
//நேற்று ஸ்ரீப்ரியா ஆத்துகாரர் ராஜ்குமார் சேதுபதி பற்றி பேசும்போது ஒரு படம் கிடைத்தது சார் சூலம் னு 1980 கால கட்டம் என்று நினைவு
இதில் ஜோடி ராதிகா சரத்குமார் //
அப்போது ராதிகா சரத்குமார் அல்ல, ராதிகா பிரதாப்போத்தன்..
சூப்பர் கார்த்திக் சார்
இந்த படம் வரும் போது அவர் மிஸ் ராதிகா னு நினைவு கார்த்திக் சார்
எல்லோரும் அவர் mrs ராதிகா சுதாகர் ஆவர் என்று எதிர்பார்க்க அவரோ mrs ராதிகா பிரதாப் ஆனார் . அதற்கு முன் அவர் mrs ராதிகா விஜயகாந்த் ஆவர் என்று கிசுகிசு கூட எழுந்த நினைவு
chinnakkannan
22nd August 2014, 04:57 PM
க்ருஷ்ணாஜி ரயில் சினேகம், நிழல்கள் - அமுதா ஸ்வேதா - பெயர் மறந்துவிட்டது..ரயில் சினேகம் சிடிபோட்டுப்பார்க்கறேன் - ஆனா ஒருவர் வாழும் ஆலயம் ராது வேறு.. நல்லா இருப்பார்..
கொஞ்சம் ஸ்டில்ஸ்லாம் சென்சார் செஞ்சா நல்லது..:)
அந்த நிழல்கள் - அமுதா ரோகினி ச்வேதா - நடிகை கடைசியாய் நடித்தது ஜோடிக்கிளி.. (எனக்குத் தெரிந்து).. ஊரிவசியின் தம்பி நடித்த முதலும் கடைசியுமான திரைப்படம்..எஸ்..படத்தில் நடித்து முடித்து காதல் தோல்வியில் அவரும் அவர் காதலித்த பெண்ணும்லாட்ஜில் விஷம் குடித்துத் தற்கொலை செய்து கொண்டதாக நியூஸ் பேப்பரில் வந்தது..
chinnakkannan
22nd August 2014, 04:59 PM
ராசியின்படம் நன்றி..ஓ ரபழைய பக்கங்களை சீக்கிரம் புரட்டியாக வேண்டும்..ஈரவிழிக்காவியங்கள் தானே ராதிகா பிரதாப்போத்தன் இணைந்த படம்..
vasudevan31355
22nd August 2014, 04:59 PM
படத்தில் சிரித்து கொண்டு இருப்பவரை பார்த்தால் பஞ்ச கல்யாணி புகழ் எம் எஸ் வசந்தி போல் தெரிகிறது. இடுப்பை வளைத்து கொண்டு மேல் நோக்கி பார்ப்பவர் திருமுருகன் இவரும் பஞ்ச கல்யாணி புகழ் தான் போல் தெரிகிறது . பின்னாட்களில் இருவரும் திருமணம் செய்து கொண்டார்கள் என்று படித்த நினைவு . இசை குணசிங் (மெல்லிசை மன்னரின் குழுவை சேர்ந்தவர் என்று நினைவு )
இது பற்றிய மேல் தகவல்கள் உண்டா ?
சரியான தகவல் கிருஷ்ணா சார். இப்போது இன்னொன்று உங்களுக்கு ஞாபக படுத்துகிறேன். திருமுருகன் நடிகர் மட்டுமல்ல. ஒரு சில படங்களையும் இயக்கியிருக்கிறா என்று நினைவு.:) ஒரு படத்தில் அட்டைக் கருப்பாக மேக்-அப் போட்டுக் கொண்டு வருவார்.
இவர் திருமுருகன் என்ற பெயர் ராசி இல்லாததால் தன் பெயரை அலெக்ஸ் பாண்டியன் என்று மாற்றி வைத்துக் கொண்டார்.
இப்போது உங்களுக்கு அருவி மாதிரி விஷயங்கள் வந்து கொட்டுமே.
இவர்தான் அலெக்ஸ் பாண்டியன் என்ற திருமுருகன்.
http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/th-1.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/th-1.jpg.html)
vasudevan31355
22nd August 2014, 05:01 PM
கொஞ்சம் ஸ்டில்ஸ்லாம் சென்சார் செஞ்சா நல்லது..:)
நெசம்மா?:):):)
gkrishna
22nd August 2014, 05:03 PM
கார்த்தி சார்
சுதாகர் ஜெயசித்ரா கிசுகிசு ஒன்று 1980-82 களில் தினத்தந்தியில்
நினவு உண்டு
படம் டைட்டில் நினைவு இல்லை சார்
ஸ்ரீகாந்த் ஜெயசித்ரா ஒரு ஜோடி
சுதாகர் ராதிகா இன்னொரு ஜோடி
இதன் இயக்கனுர் சுப்ரமணியம் (வீட்டு மாப்பிள்ளை அல்லது புகுந்த வீடு இயக்கியவர் )
இந்த படத்தில் ஜெயசித்ரா சுதாகர் இன் மாமியார் அல்லது வேறு எதோ உறவு . நிஜத்தில் காதல் ஜோடி ஆக பார்த்தது .
சுதாகரின் உறவினர்கள் எல்லாம் சேர்ந்து அவசர அவசரமாக சுதாகர் கல்யாணம் ஜெயந்தி என்ற பெண் உடன் நடந்த நினைவு
பதிலுக்கு ஜெயா சித்ரா வும் மங்கள நாயகன் கணேஷ் என்பவரை கை பிடித்த நினைவு
gkrishna
22nd August 2014, 05:05 PM
சரியான தகவல் கிருஷ்ணா சார். இப்போது இன்னொன்று உங்களுக்கு ஞாபக படுத்துகிறேன். திருமுருகன் நடிகர் மட்டுமல்ல. ஒரு சில படங்களையும் இயக்கியிருக்கிறா என்று நினைவு.:) ஒரு படத்தில் அட்டைக் கருப்பாக மேக்-அப் போட்டுக் கொண்டு வருவார்.
இவர் திருமுருகன் என்ற பெயர் ராசி இல்லாததால் தன் பெயரை அலெக்ஸ் பாண்டியன் என்று மாற்றி வைத்துக் கொண்டார்.
இப்போது உங்களுக்கு அருவி மாதிரி விஷயங்கள் வந்து கொட்டுமே.
இவர்தான் அலெக்ஸ் பாண்டியன் என்ற திருமுருகன்.
அலமு மொவீஸ் ஆண்களை நம்பாதே இயக்க்னுர் தானே இவர் .
ஆண் பாவம் வெற்றியை தொடர்ந்து எடுத்த படம்
chinnakkannan
22nd August 2014, 05:05 PM
வாசு சார் :)
இந்த அலெக்ஸ்பாண்டியன் தான் பின்னாளில் ஸ்டெல்லா புரூஸ் எழுதிய விகடன் தொடர் ஒரு முறை தான் பூக்கும் - அழகான நாவலை - ஆண்களை நம்பாதே- என சொதப்பல் தலைப்பு வைத்து ஹீரோவாக + ஹீரோயினா ரேகா என நினைவு.. எடுத்தவரா..
chinnakkannan
22nd August 2014, 05:06 PM
க்ருஷ்ணா ஜி..என்னா ஒத்துமை..ம்ம் நமக்குள்ள இன்னாபொருத்தம்.. :)
vasudevan31355
22nd August 2014, 05:12 PM
ஒரு கை ஓசை யா வாசு சார்
கிருஷ்ணாவா கொக்கான்னானம்!
இந்தாங்க சார். உங்க பொன்னி :) அதே 'ஒரு கை ஓசை' படத்திலிருந்து.
http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/po.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/po.jpg.html)
vasudevan31355
22nd August 2014, 05:13 PM
வாசு சார் :)
இந்த அலெக்ஸ்பாண்டியன் தான் பின்னாளில் ஸ்டெல்லா புரூஸ் எழுதிய விகடன் தொடர் ஒரு முறை தான் பூக்கும் - அழகான நாவலை - ஆண்களை நம்பாதே- என சொதப்பல் தலைப்பு வைத்து ஹீரோவாக + ஹீரோயினா ரேகா என நினைவு.. எடுத்தவரா..
புடிச்சாருப்பா சி.க செமத்தியா. கரெக்ட் பதில். யப்பா! யாரும் யாருக்கும் சளைத்தவர்கள் இல்லை சாமியோவ்.
chinnakkannan
22nd August 2014, 05:14 PM
பழைய பாட்டு எடுத்து அலசலாம்னா பயம்மா இருக்கு..ஏற்கெனவே வந்திருக்குமோன்னு ஒரு யோசனை..பேசாம நானே புதுசாஒரு பழைய பாட்டு எழுதிடட்டுமா :)
gkrishna
22nd August 2014, 05:17 PM
வாசு சார் :)
இந்த அலெக்ஸ்பாண்டியன் தான் பின்னாளில் ஸ்டெல்லா புரூஸ் எழுதிய விகடன் தொடர் ஒரு முறை தான் பூக்கும் - அழகான நாவலை - ஆண்களை நம்பாதே- என சொதப்பல் தலைப்பு வைத்து ஹீரோவாக + ஹீரோயினா ரேகா என நினைவு.. எடுத்தவரா..
ஆண்களை நம்பாதே ஹீரோ பாண்டியன் தானே சி கே சார்
gkrishna
22nd August 2014, 05:18 PM
பழைய பாட்டு எடுத்து அலசலாம்னா பயம்மா இருக்கு..ஏற்கெனவே வந்திருக்குமோன்னு ஒரு யோசனை..பேசாம நானே புதுசாஒரு பழைய பாட்டு எழுதிடட்டுமா :)
நீங்கள் பெரிய கடல் மைனா சி கே சார்
vasudevan31355
22nd August 2014, 05:20 PM
சி.க.சார்,
'ஆண்களை நம்பாதே' படத்தில் அப்போது ஒரு பாடல் மிகப் புகழ் பெற்றது. பாண்டியனுக்கு கல்யாணம் பண்ணி வைத்து அலெக்ஸ் பாண்டியன் கோஷ்டியினருடன் அதாவது திருநங்கைகளுடன் பாசமலர் பாட்டை உல்டா செய்து, அதாவது 'வாராயோ என் தோழா வாராயோ' என்று வார்த்தைகளை மாற்றி கிண்டல் பண்ணி பாடுவார். காமெடிப் பாடல்.அதனால் ஒன்றும் சொல்வதற்கில்லை. ஆனால் அப்போது பாப்புலர்.
https://www.youtube.com/watch?v=qtD-EuOkebU&feature=player_detailpage
gkrishna
22nd August 2014, 05:21 PM
தின தந்தி குருவியார் பாணியில் சில சூடான சுவையான பழசான கிசு கிசு எல்லாம் சொல்லி இருக்கேன் . அது உண்மையா அல்லது பொயா ?
உண்மை னா சந்தோசம் பொய் நா ரொம்ப சந்தோசம்
vasudevan31355
22nd August 2014, 05:22 PM
சி.க.சார்,
நீங்க எப்பதான் பழைய பக்கங்களை புரட்டப் போறீங்க? நீங்கதான் லேட்.:)பாட் பார்க்கறதுல:) அ ... வர்ட்டா.
chinnakkannan
22nd August 2014, 05:22 PM
கிருஷ்ணா சார்.. நன்றி :) (ஓகேயா இருக்கா) யா.. ஹீரோ பாண்டியன்(இப்போ நினைவுக்கு வந்துடுத்து..) இந்த அலெக்ஸ்பாண்டியன் டைரக்டர் என நினைவு..விகடன் தொடரில் ம.செ ஓவியங்கள் ப்ரமாதமா இருக்கும்
வாசு சார் ஃபென்னி படம் சாரி கால் விட்டுட்டேன்..பொன்னி படம் நன்றி :)
vasudevan31355
22nd August 2014, 05:24 PM
மக்களே!
சந்தேகமெல்லாம் தீர்ந்துதா?:) இன்னும் ஏதாவது இருந்தா கேளுங்க. முடிந்தா சொல்றேன். ஒழுங்கா படிக்கணும். தெரிஞ்சுதா?:)
chinnakkannan
22nd August 2014, 05:24 PM
இன்னிக்கு நைட் சமயம் ஒதுக்கியிருக்கேன்.. அப்புறம் ஒரு சர்ப்ரைஸ் தொடர்.. எழுதலாம்னுஇருக்கேன் இங்க..எழுதிட்டுப் போடறேன்..(கொஞ்சம்பாட்டு ரிப்பீட் ஆனாலும் ஆகும்..ஷமிக்கணும்)..:)
சி.க.சார்,
நீங்க எப்பதான் பழைய பக்கங்களை புரட்டப் போறீங்க? நீங்கதான் லேட்.:)பாட் பார்க்கறதுல:) அ ... வர்ட்டா.
vasudevan31355
22nd August 2014, 05:26 PM
கிருஷ்ணா சார்.. நன்றி :) (ஓகேயா இருக்கா) யா.. ஹீரோ பாண்டியன்(இப்போ நினைவுக்கு வந்துடுத்து..) இந்த அலெக்ஸ்பாண்டியன் டைரக்டர் என நினைவு..விகடன் தொடரில் ம.செ ஓவியங்கள் ப்ரமாதமா இருக்கும்
வாசு சார் ஃபென்னி படம் சாரி கால் விட்டுட்டேன்..பொன்னி படம் நன்றி :)
என்னது கால் விட்டுட்டீங்களா? பெரிய ஆள் சார் நீங்க. இது எப்பையில இருந்து?:):)
gkrishna
22nd August 2014, 05:27 PM
வாசு சார்
நலெண்ணெய் சித்ரா படங்கள் சூப்பர்
சமீபத்தில் இவரை விருகம்பாக்கம் kk நகர் அருகில் ஒரு ஐஸ் பார்லர் கடையில் பார்த்தேன் . பிறகுதான் தெரிந்தது இதன் உரிமையாளரே இவர் தான் . கே எஸ் ரவிக்குமார் இன் எல்லா படங்களிலும் வருவார்
https://encrypted-tbn3.gstatic.com/images?q=tbn:ANd9GcTEuVXa3bzlDcsJ105YaLoOVzx3O28fS 55sNjNSnOJ8GhvpFUOj
vasudevan31355
22nd August 2014, 05:30 PM
சரி! இன்னும் நான் 'இன்றைய ஸ்பெஷல்' போடல. யாராவது கண்டிச்சி கேட்டீங்களா? வாத்தியாருங்க சரியில்லே.:)
vasudevan31355
22nd August 2014, 05:32 PM
வாசு சார்
நலெண்ணெய் சித்ரா படங்கள் சூப்பர்
சமீபத்தில் இவரை விருகம்பாக்கம் kk நகர் அருகில் ஒரு ஐஸ் பார்லர் கடையில் பார்த்தேன் . பிறகுதான் தெரிந்தது இதன் உரிமையாளரே இவர் தான் . கே எஸ் ரவிக்குமார் இன் எல்லா படங்களிலும் வருவார்
கிருஷ்ணா சார்,
சண்டே சென்னை வரேன். அந்த kk நகர் ஐஸ் பார்லர் கடைக்கு கண்டிப்பா அழைச்சுகிட்டு போறீங்க. சரியா? இல்லன்னா உங்க பேச்சு 'டூ'
gkrishna
22nd August 2014, 05:32 PM
இன்றைய ஸ்பெஷல் kku முன் இந்த ஒரு கேள்விக்கு விடை வாசு சார்
நீங்க தான் வாத்தியார் எங்க வாத்தியார்
நமது நடிகர்திலகம் பிரேம் ஆனந்த்தும் இந்த ஒரு விரல் பிரேம் ஆனந்தம் ஒருவரா ?
Remembered For the interesting storyline and impressive performances by ‘Thengai’ Srinivasan, ‘Oru Viral’ Krishna Rao, Kannan, Prem Anand, Pandarinath, Radhika and Thilakam, and the good background score.
gkrishna
22nd August 2014, 05:35 PM
கிருஷ்ணா சார்,
சண்டே சென்னை வரேன். அந்த kk நகர் ஐஸ் பார்லர் கடைக்கு கண்டிப்பா அழைச்சுகிட்டு போறீங்க. சரியா? இல்லன்னா உங்க பேச்சு 'டூ'
கண்டிப்பா போறோம் சித்ராவின் மன்னிக்கணும் அவசரத்தில் எழுதி விட்டேன் (i மீன் கடையின் உள்ளே ) உள்ள ஐஸ் ai
சாப்பிடுவோம்
https://encrypted-tbn3.gstatic.com/images?q=tbn:ANd9GcQmqps6ICRvBA2CRrbF9pPkqN4E6It91 d00WAgE5SYEZpiPI9wG
chinnakkannan
22nd August 2014, 05:40 PM
எங்கிட்டுருந்து தான் ஸ்டில்ஸ் கிடைக்குதுதோ..கடவுளே கடவுளே :)
ஆமா ஏன்..இன்றைய ஸ்பெஷல் போடலை( நான்கேட்டுட்டேன்..) டி.ஆர்.ராஜகுமாரி பாட்டு தானே
gkrishna
22nd August 2014, 05:41 PM
சி கே சார்
நீங்கள் சொன்ன படி சென்சர் செய்ய பட்ட பதிவு
இதுவும் சித்ரா போட்டோ தானே 50 ml
madhu
22nd August 2014, 05:45 PM
ஸ்பரிசம் தலைப்பு மலையாள வாடையில் இருக்கும்
1982 இல் வெளிவந்த படம்
எஸ் வீ சேகர் ஸ்ரீலட்சுமி னு ஒரு நடிகை கதாநாயகி இவங்க வேறு எதாவது படத்தில் நடித்தார்களா என்று நினைவு இல்லை
செய்தி வாசிப்பாளர் ஷோபனா அவர்களின் கணவர் ரவி இசை அமைத்து உள்ள படம்
பாலாவின் ஒரு பாடல் நினைவில் உண்டு
'ஊடல் சிறு மின்னல் ' - மெல்லிசை மன்னர் மாதிரி ஒரே பாட்டில் பல tune போட்டு இருப்பார் .
விடியோ இருக்கா னு கேட்டா இதோ என்று சொல்ல எங்கள் மது அவர்கள் இருக்கிறார்களே ஹெல்ப் ப்ளீஸ் மது சார்
http://www.inbaminge.com/t/s/Sparisam/
கிருஷ்ணாஜி.. எல்லாப் பாட்டும் சிக்குமான்னு சொல்ல முடியாது. ஆனா..
இது சிக்கிடிச்சி
https://www.youtube.com/watch?v=sv4kGZbzik0
gkrishna
22nd August 2014, 05:49 PM
http://tamil.thehindu.com/multimedia/dynamic/02073/balakailasam_2073304h.jpg
தமிழ் ஹிந்து இன்றைய ஸ்பெஷல்
தமிழகத்தில் சக்திவாய்ந்த ஊடகமாகத் திகழும் தொலைக்காட்சி ஊடகத்தின் சாத்தியங்களை விஸ்தரித்தவர் பால கைலாசம். அவரது அகால மரணத்தை முன்னிட்டு அவருடைய பங்களிப்புகளையும் நினைவுகளையும் தொகுப்பது துரதிர்ஷ்டவசமானது. இயக்குநர் பாலச்சந்தரின் மகனான கைலாசத்தின் ஆளுமையில், அவரது பிரபல பின்னணி எந்தத் தாக்கத்தையும் செலுத்தியதில்லை. மிக எளிமையாகத் திரைக்குப் பின்னே மதிப்பு வாய்ந்த பல காரியங்களைச் செய்தவர் அவர். தனது நண்பர்களிடமும், தன்னிடம் வேலை பார்த்தவர்களிடமும் அவர் ஏற்படுத்தியிருக்கும் தாக்கத்தை அவரது மரணத்துக்குப் பிறகு சமூக வலைதளங்களில் எழுதப்பட்ட குறிப்புகள் காண்பிக்கின்றன.
எண்பதுகளில் பத்திரிகைத் துறை சார்ந்து பல மாற்றங்களை உருவாக்கக் கனவு கண்ட இளைஞர்கள் சிலர் தொடங்கிய பத்திரிகை ‘திசைகள்’. பின்னாளில் பிரபல எழுத்தாளராகவும் பத்திரிகையாளராகவும் உருவான மாலன் இதற்கு ஆசிரியராக இருந்தார். சென்னைப் பல்கலைக்கழகத்தில் பொறியியல் பட்டப் படிப்பு படித்துக்கொண்டிருந்த பால கைலாசம், திசைகள் பத்திரிகையில் பகுதிநேர போட்டோ எடிட்டராகப் பணிபுரிந்தார். புகைப்படப் பணியின் மூலம்தான் தனது துறை காட்சி ஊடகம் என்பதைக் கண்டுகொண்டார்.
அமெரிக்காவில் உள்ள அயோவா பல்கலைக்கழகத்தில் திரைப்படம் மற்றும் ஒலிபரப்புப் பிரிவில் பயிற்சி பெற்ற கைலாசம் தனது ஆய்வுப் படமாக ‘தி ட்வைஸ் டிஸ்கிரிமினேடட்’ஐ எடுத்தார். தமிழகத்தில் சாதி ஒடுக்குமுறையால் பாதிக்கப்பட்ட தலித் மக்கள், கிறிஸ்தவத்திற்குச் சென்ற பின்னும் பாதிக்கப்படுவதைப் பற்றிய படம் இது.
1991-ல் அவர் எடுத்த ‘வாஸ்து மரபு’தான் அவருக்குச் சிறந்த திரைப்படத்திற்கான தேசிய விருதைப் பெற்றுத் தந்தது. தமிழகத்தைப் பொறுத்தவரை ஆவணப்படத் துறை இன்னும் உள்ளடக்கம் மற்றும் சந்தை சார்ந்து வளர்ச்சியடையாத நிலையில் ‘வாஸ்து மரபு’ என்ற இப்படைப்பு தொழில்நுட்பம், உள்ளடக்கம் மற்றும் வெளிப்பாடு சார்ந்து, சிறந்த படைப்பாக விமர்சகர்களால் பாராட்டப்படுகிறது. “மறைந்த சிற்பி கணபதி ஸ்தபதியின் அபாரமான சிற்ப சாஸ்திரம் குறித்த பதிவு இது. கோவில்களையும், நாம் வணங்கும் கடவுள் சிற்பங்களையும் உருவாக்கும் ஒருவனின் மனம் சார்ந்த ரகசியங்களையும் இப்படம் திறக்கிறது. சிற்ப சாஸ்திரம் என்பது கணிதம், கலை, அறிவியல் அனைத்தும் கலக்கும் இடம். கல்லையும், உலோகத்தையும் செதுக்கும் சிற்பியின் மன ஆளுமை மீது கவனம் குவித்த அற்புதப் படைப்பு ‘வாஸ்து மரபு’ ஆவணப்படம்” என்கிறார் பால கைலாசத்தின் நண்பரும் ஆவணப்பட இயக்குநருமான சொர்ணவேல்.
ஒலி வடிவமைப்புத் தொழில்நுட்பத்தில் ஈடுபாடு கொண்டிருந்தவர் பால கைலாசம். காட்சியழகு, கதை சொல்லல் ஆகியவற்றோடு பின்னணியில் ஒலிக்கும் சத்தங்களின் யதார்த்தமும் ஒரு படத்துக்கு மிக அவசியம் என்று கருதினார். ஒலியமைப்பின் மீதான அவரது ஈடுபாட்டுக்கு அவரும், ஆவணப்பட இயக்குநர் சசி காந்தும் சேர்ந்து காவிரி நதியை எடுத்த ‘வெளி’ படம் உதாரணம்.
2009-ல் அவர் எடுத்த ‘நீருண்டு நிலமுண்டு’, நீருக்கும் சுற்றுச்சூழல் நலத்துக்கும் இடையிலான தொடர்பை ஆராயும் படம். அதிகாரத்துவமும், மக்களின் மீதான அலட்சியமும் கொண்ட அரசு அதிகாரத்துவ அமைப்பிலேயே சில நல்ல அதிகாரிகளின் தொடர்ந்த முயற்சிகளின் மீது கவனம் குவிக்கும் ஆவணப்படம் இது. தனிநபர்களின் மனதில் ஏற்படும் மாற்றத்தின் மூலம் அமைப்பில் சிற்சில மாற்றங்களையாவது ஏற்படுத்த முடியும் என்ற நம்பிக்கையை விதைக்கும் படைப்பு அது.
அமெரிக்காவில் திரைப்படக் கல்வியை முடித்துவிட்டு வந்தவுடன், சினிமாத் துறை சார்ந்த பெரும் கனவுகளுடன் இறங்கியவர் பால கைலாசம். கி.ராஜநாராயணனின் எழுத்துகள் மீது பெரும் ஈடுபாடு கொண்டிருந்த அவர், கி.ரா.வின் கதையை திரைப்படமாக இயக்க விரும்பினார். அவருக்காக உருவாக்கப்பட்ட கதைதான் கி.ராஜநாராயணனின் பிரபல நாவலான ‘அந்தமான் நாயக்கர்’.
தமிழ் சினிமாவில் அன்று பெரிய பின்னணி உள்ளவர்கள்கூடக் குறைந்தபட்ச சோதனைகளைச் செய்ய முடியாத காலகட்டத்தில் கைலாசத்தின் சினிமா ஆசை நிறைவேறவில்லை.
தொலைக்காட்சி ஊடகம் மீதான அரசின் பிடி விடுபட்ட நிலையில், செயற்கைக்கோள் தொலைக்காட்சி ஊடக முயற்சிகள் மெதுவாக உருவாகத் தொடங்கிய காலம் அது. கே. பாலச்சந்தரின் பார்வையாளர்கள் தொலைக்காட்சியின் முன் வந்து அமர்ந்துவிட்ட நாள்கள் அவை.
90-களின் தொடக்கத்தில் உயர்ரக தொழில்நுட்பத்துடன் அவர் மின் பிம்பங்கள் தொலைக்காட்சி நிறுவனத்தைத் தொடங்கினார். இன்று மெகா சீரியல்கள் எனச் சொல்லப்படும் கதைத்தொடர்கள், நகைச்சுவைத் தொடர்கள், த்ரில்லர்கள், செய்தி நிகழ்ச்சிகள், ரியாலிட்டி ஷோக்கள் அனைத்து வடிவங்களும் அவரது சமையலறையில்தான் முழுமை பெற்றன.
ரயில் சினேகம், கையளவு மனசு, மர்ம தேசம், கதையல்ல நிஜம், நையாண்டி தர்பார் என பல வகைகளில் அவர் தயாரித்த படைப்புகள் இன்றும் சிறந்த முன்மாதிரிகளாக உள்ளன.
கி. ராஜநாராயணன் தொடங்கி பிரபஞ்சன், எஸ். ராமகிருஷ்ணன், ம.வே. சிவகுமார், பா. ராகவன் வரை பல எழுத்தாளர்களைத் தனது வேலைகளில் ஈடுபடுத்தியவர் அவர். விரிவான வாசிப்பும், பிறரின் கருத்துகளையும் விமர்சனங்களையும் கூர்ந்து கேட்கும் நிதானமும் உடையவர்.
தான் சம்பந்தப்படாத திரைப்பட முயற்சிகளிலும் தானே முன்வந்து தனது ஒலி வடிவமைப்புத் தொழில்நுட்பம் தொடர்பான அறிவையும், தன்னிடம் உள்ள தொழில்நுட்ப வசதிகளையும் பிறருக்கும் பகிர்ந்துகொள்பவராக இருந்துள்ளார்.
பரபரப்பு, வன்முறை சார்ந்த இன்றைய தொலைக்காட்சி ஊடகத் துறையில் டி.ஆர்.பி. ரேட்டிங்கில் மட்டுமே கவனம் கொள்ளாத ஆரோக்கியமான செய்தி மற்றும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை உருவாக்குவதில் அவருக்கு ஆர்வம் இருந்தது. அறிவுபூர்வமான, உண்மைக்கு நெருக்கமான நிகழ்ச்சிகளைக் கொடுக்கும் ஒரு தொலைக்காட்சி நிறுவனத்தை உருவாக்குவது அவரது கனவுகளில் ஒன்றாக இருந்தது. அது பெரிதாக நிறைவேறவில்லை.
சிலருக்கு அவர்களின் பின்னணி அவர்கள் நினைத்ததை வெகு சீக்கிரத்தில் நிறைவேற்றிக்கொள்ள உதவும். சிலருக்கு அந்தப் பின்னணியும் அந்தஸ்துமே அவர்களது கனவை அடையவிடாமல் தாமதப்படுத்திக்கொண்டிருக்கும். கைலாசத்தைப் பொருத்தவரை மரணம் முந்திவிட்டது.
gkrishna
22nd August 2014, 05:51 PM
கிருஷ்ணாஜி.. எல்லாப் பாட்டும் சிக்குமான்னு சொல்ல முடியாது. ஆனா..
இது சிக்கிடிச்சி
மது சார்
உண்மையில் காலையில் இருந்து தேடி தேடி தேடி தேஞ்சு போச்சு
நன்றி சொல்லவே என் மன்னவா வார்த்தை இல்லையே உனக்கு
madhu
22nd August 2014, 05:51 PM
மதுஜி,
'மனிதன்' படத்தில் வரும் 'ஏதோ நடக்கிறது' பாடலைச் சொல்கிறீர்களா? அப்படியென்றால் தங்களுக்குத் தெரியாதது அல்ல. அப்பாடல் ஜேசுதாஸ், சித்ரா இணைந்து பாடியது.
சாரிங்கோ.. அவசரக் கோலத்தில் அள்ளித் தெளிச்சுட்டேன்.. நான் சொல்ல வந்த பாடல் " மனதில் என்ன நினைவுகளோ?"
gkrishna
22nd August 2014, 05:58 PM
http://tamil.thehindu.com/multimedia/dynamic/02073/10608956_101544555_2073242g.jpg
சென்னையும் சினிமாவும்: குதிரைகள் தயவால் உருவான கோடம்பாக்கம்!
மதராஸ் மாகாணம் என்று அழைக்கப்பட்ட சென்னையை ஆட்சி செய்ய இங்கிலாந்து அரசால் கவர்னர்கள் நியமிக்கப்பட்டார்கள். 1670களில் எலிகு யேல் என்னும் ஆங்கிலேயர் மதராஸ் கவர்னராக இருந்தார். அப்போது புனித ஜார்ஜ் கோட்டைக்கு வெளியே, வெள்ளையர்களுக்கு உதவி வேலைகளைச் செய்ய அழைத்து வரப்பட்ட குடும்பங்கள் குடியமர்த்தப்பட்ட பகுதி ஜார்ஜ் டவுனாக உருவானது. பிறகு கோல்கொண்டா சுல்தானின் நிர்வாகத்தில் இருந்த திருவல்லிக்கேணி, தண்டையார்பேட்டை, எழும்பூர் ஆகிய கிராமங்களை விலைக்கு வாங்கி நகரின் எல்லையை விரிவுபடுத்தினார் கவர்னர் யேல். கோட்டைக்குள் இருந்த குதிரை லாயத்தால் சுகாதாரப் பிரச்சினை எழுந்தது. இதனால் குதிரைகளை மேய்க்க ‘பிளாக் டவுன்’ அதாவது கறுப்பர்கள் நகரம் என்றழைக்கப்பட்ட ஜார்ஜ் டவுன் தேர்வு செய்யப்பட்டது. ஆனால் அங்கே போதிய மேய்ச்சல் நிலம் இல்லை. மேய்ச்சல் நிலமும் நீர்வளம் நிறைந்த பகுதியைத் தேடியபோது, கண்களில் பட்டது ஆற்றுக்கரையில்(அடையாறு) இருந்த திருப்புலியூர். அதுதான் இன்றைய கோடம்பாக்கம்.
ஆடு மாடுகளை நம்பி வாழும் இடையர்குடி மக்கள் இங்கே அதிகம் வாழ்ந்தனர். கர்நாடக நவாபுகளின் ஆதிக்கத்தில் இருந்த இந்தப் பகுதி, அவர்களது குதிரைப்படை லாயமாகவும் இருந்தது. நவாபுகளிடமிருந்து முதல்தரமான குதிரைகளை வாங்கிய யேல் நிர்வாகம், புலியூருக்குத் தனது குதிரைகளின் லாயத்தை மாற்றியது. நவாபுகள் தங்கள் குதிரைப்படை லாயத்தை உருது மொழியில் ‘ கோடா பாக்’ என்று அழைத்தனர்.
கோடா பாக் என்பதற்குக் குதிரைகளின் தோட்டம் என்பது பொருள். கோடா பாக்கே காலப்போக்கில் கோடம்பாக்கம் என்று மருவியதாகச் சொல்கிறார்கள் சென்னை வரலாற்றை ஆய்வுசெய்தவர்கள். இப்படிப்பட்ட கோடம்பாக்கம் எப்படிக் கனவுகளை உற்பத்தி செய்யும் கோலிவுட்டாக மாறியது?
புரசைவாக்கத்திலிருந்து முதல் கனவு
அரிச்சந்திரா படத்தின் மூலம் பால்கே அடைந்த புகழைப் பார்த்து, மவுனப் படத்தயாரிப்பில் ஈடுபடச் செல்வந்தர்கள் பலர் முன்வந்தார்கள். அன்றைய மதராஸ் மாகாணத்தில் வாழ்ந்த ஆர்.நடராஜ முதலியாருக்கும் அப்படியொரு ஆசை உண்டானது. அமெரிக்காவில் தயாராகும் மோட்டார் கார்களையும் அவற்றுக்கான வாகன உதிரிப்பாகங்களையும் ‘ரோமர் டான் & கம்பெனி’ என்ற பெயரில் வியாபாரம் செய்துவந்த இவர், தனது அலுவலகம் இயங்கிவந்த புரசைவாக்கம், மில்லர்ஸ் சாலையில் ஒரு பிரம்மாண்டமான மாளிகையை 1915-ம் ஆண்டு விலைக்கு வாங்கினார். அதையே ஸ்டூடியோவாக மாற்றி அமைத்தார். அதற்கு ‘இந்தியா பிலிம் கம்பெனி’ என்று பெயரும் சூட்டினார். பிறகு சினிமா கேமரா வேண்டுமே? கேமரா வாங்க கல்கத்தா செல்லும் முன் சினிமா கேமராவை இயக்கக் கற்றுக்கொள்ள வேண்டும் என்று விரும்பினார்.
முதலியாரின் அதிர்ஷ்டமோ என்னவோ, அவர் நினைத்த நேரத்தில் கர்சன் பிரபுவைப் பற்றி ஒரு ஆவணப்படம் தயாரிக்க மதராஸ் வந்திருந்தது இங்கிலாந்து படக்குழு ஒன்று. அந்தக் குழுவின் கேமராமேன் ஸ்டீவர்ட் ஸ்மீத்தை அழைத்து வந்து தனது ஸ்டூடியோவைக் காட்டினார் முதலியார். அவரது குழுவுக்கு ஆவணப்படமெடுக்க மூன்று கார்களையும் கொடுத்து உதவினார்.
அன்று முதலியார் விற்றுவந்த ஒரு காரின் விலை பிரிட்டிஷ் இந்தியப் பணத்துக்கு வெறும் ஆயிரம் ரூபாய். முதலியாரின் உதவியில் நெகிழ்ந்த ஸ்டீவர்ட் அவருக்குச் சினிமா கேமராவை இயக்கக் கற்றுக்கொடுத்தார். கூடவே மைக்கேல் ஓமலேவ் என்ற அமெரிக்கத் திரைப்பட இயக்குநரையும் அறிமுகப்படுத்தி வைத்தார்.
37 நாட்கள் 50 ஆயிரம் வசூல்
கல்கத்தா சென்று கேமரா வாங்கி வந்த முதலியார், உடனடியாக ‘கீசக வதம்’ என்ற மகாபாரதக் கிளைக் கதையைத் தேர்வுசெய்து, படத் தயாரிப்பில் இறங்கினார். கதை எழுதி, காட்சிகளை அமைத்து மட்டுமல்ல, நடிகர்களை இயக்கியது, கேமராவை இயக்கியது, எடிட் செய்தது, உட்பட மவுனப் படக் காலத் தமிழ்சினிமாவின் முதல் டி.ராஜேந்தர் அவர்தான். 37 நாட்களில் 6 ஆயிரம் அடிகள் படம் எடுத்து முடித்ததும், சும்மா பெட்டிக்குள் வைத்துக் கொண்டிருக்க ஒரு வெற்றிகரமான மோட்டார் வியாபாரியால் முடியுமா என்ன? மவுனப் படம் என்பதால் கதாபாத்திரங்கள் பேசிக்கொள்ளும் வசனம் அப்போது டைட்டில்களாக எழுதப்பட்டு ஆப்டிகல் முறையில் சேர்க்கப்ப்டும்.
‘கீசக வதம்’, ஆங்கிலம், தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் வசன டைட்டில்களுடன் வெளியாகிப் பெரும் வெற்றி பெற்றது. இந்தப் படத்துக்கான இந்தி டைட்டில்களை எழுதியவர் காந்தியின் மகன் தேவதாஸ் காந்தி என்ற ஆச்சரியமான தகவலும் கிடைக்கிறது. இதைவிட ஆச்சரியம் கடல் கடந்து வெளிநாட்டு மார்க்கெட்டைச் சந்தித்தது தமிழின் முதல் மவுனப் படம். ஆமாம்! பர்மா, மலேயா, பினாங்கு ஆகிய இடங்களில் திரையிடப்பட்டது. 35 ஆயிரம் ரூபாயில் தயாரிக்கப்பட்ட இந்தப் படம் முதலியாருக்கு 15 ஆயிரம் ரூபாய் லாபம் சம்பாதித்துக் கொடுத்தது. அதாவது ‘கீசக வத’த்தின் மொத்த வசூல் 50 ஆயிரம்.
இதன் பிறகு வரிசையாகப் புராணக் கதைகளை படமாக எடுத்துக் குவித்தார் முதலியார். சினிமா தொழில் அவருக்குக் கொட்டிக்கொடுத்தது. ஆனால் எதிர்பாராமல் அவரது மில்லர்ஸ் சாலை ஸ்டூடியோவில் ஏற்பட்ட தீவிபத்தில் அவரது ஒரே மகன் அகால மரணமடைந்தார். இதனால் சினிமாவையே வெறுத்தார் தமிழ் சினிமாவின் முதல் தயாரிப்பாளர், இயக்குநர், விநியோகஸ்தரான முதலியார் ஸ்டூடியோவை விற்றுவிட்டு அந்தத் தொழிலிலிருந்து வெளியேறினார். அதன்பிறகு அவர் சினிமாவுக்குத் திரும்பவே இல்லை.
மதராஸைப் புரட்டிப்போட்ட பேசும்படம்
மதராஸின் முதல் சினிமா தியேட்டர் எது என்பதில் இன்னும் சர்ச்சை இருந்தாலும், மவுனப் படங்களுக்கான முதல் திரையரங்கைக் கட்டியதாகச் சொல்லப்படும் வெங்கையா சினிமா தயாரிக்க முன்வந்தார். இதற்காகத் தனது மகன் பிரகாஷ் என்பவரை லண்டனுக்கு அனுப்பி ‘ கினிமட்டோகிராஃப்’ படித்துவரச் செய்தார். வந்தவேகத்தில் சென்னை புரசைவாக்கத்தில் தனது அப்பாவின் ‘ஸ்டார் ஆப் தி ஈஸ்ட்’ பிலிம் கம்பெனிக்காக ஒரு லட்சம் ரூபாய் செலவில் ஸ்டூடியோ அமைத்தார். இந்த ஸ்டூடியோவின் பரப்பளவு 600 ஏக்கர். இங்கே பல வெற்றிப்படங்கள் தயாராகின.
இந்தக் காலகட்டத்தில் மவுனப் படங்களின் யுகம் முடிந்து பேசும் படக் காலத்தைத் தொடங்கி வைத்த ‘காளிதாஸ்’ திரைப்படம்’ இம்பீரியல் மூவி டோன் ஸ்டூடியோவில் தயாரானது. தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளுக்கும் முதல் படம் காளிதாஸ்தான். படத்தை இயக்கியவர் எச்.எம். ரெட்டி.
1931-ம் ஆண்டு அக்டோபர் 31-ம் தேதி, இன்று முருகன் தியேட்டராக இருக்கும் ‘சினிமா சென்ட்ரல்’ தியேட்டரில் ரிலீஸ் ஆனது. இந்தப் படத்துக்காகப் பொது இடங்களில் வைக்கப்பட்ட தட்டி விளம்பரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. முதல் தமிழ் பேசும் படத்தைக் காண, ரசிகர்கள் வெளியூர்களில் இருந்தும் கூட்டம் கூட்டமாக வர, சினிமா சென்ட்ரலில் பிரிட்டிஷ் போலீசாரின் பாரா போடப்பட்டது. இந்தப் படத்தில் பூசாரியாக நடித்த எல்.வி.பிரசாத், பின்னாளில் கோடம்பாக்கத்தின் மிகப் பெரிய ஸ்டுடியோக்களில் ஒன்றான பிரசாத் ஸ்டூடியோவைக் கட்டியவர்.
பிறகு கோடம்பாக்கத்தின் பக்கத்து வீடாகிய கீழ்ப்பாக்கத்தில் 1934-ம் ஆண்டு ‘ஸ்ரீனிவாசா சினிடோன்’ என்ற ஸ்டூடியோவைத் தொடங்கினார் நாராயணன். தமிழின் முதல் பேசும் படம் என்று கூறப்படும் ‘னிவாச கல்யாணம்’ படமாக்கப்பட்டதும் இங்கேதான். இங்கே 100க்கும் அதிகமான தெலுங்கு, கன்னடம், மலையாளப் பேசும் படங்கள் படமாக்கப்பட்டன. இதனால் தென்னிந்தியாவில் அன்று பிரபலமாக இருந்த நட்சத்திரங்கள் பலரும் மதராஸில் ஜாகை செய்தார்கள்.
முதலில் காரைக்குடியில் இயங்கிவந்த தனது ஸ்டூடியோவை 1948-ல் வடபழனிக்கு மாற்றினார் ஏ.வி.எம் செட்டியார். பிறகு பி.என். ரெட்டி தொடங்கிய வாகினி ஸ்டூடியோவும் அருகிலேயே அமைய, எல்லீஸ்.ஆர். டங்கன் அதிகப் படங்களை இயக்கிய மூவிடோன் ஸ்டூடியோ கிண்டியில் அமைந்தது. இப்படிக் கோடம்பாக்கத்தைச் சுற்றி உருவான 28 ஸ்டுடியோக்களில் இன்று எஞ்சியிருப்பது ஏ.வி.எம்., பிரசாத் ஸ்டுடியோ உட்பட ஒரு சிலவற்றின் உள்ள சில தளங்கள் மட்டும்தான்.
கோடம்பாக்கம் கனவுத் தொழிற்சாலை என்பதற்கு அடையாளமாக இன்று அங்கே ஒரு திரையரங்கு கூட இல்லை. கோடம்பாக்கத்தில் ஏ.ஆர். ரஹ்மான், ஜெயம் ரவி போன்ற பிரபலங்கள் குடியிருப்பதால் தனக்கும் திரைக்குமான உறவை இன்னும் இழக்காமால் இருக்கிறது குதிரைகளின் தயவால் உருவான கோடம்பாக்கம்.
madhu
22nd August 2014, 05:59 PM
சித்ராவின் படங்களில் இதயமே தெரிகிறது. அதாவது இதயம் நல்லெண்ணெய் விளமபரம் மனசுக்குள் ஓடுது... அதெல்லாம் பொம்பளைங்க சமாசாரம். அதனால்...
சாமந்திப்பூ ஷோபாவின் படம் இன்னொரு படத்தை நினைவு படுத்தி விட்டது. எண்பதுகளில் வெளிவந்த "பொன்னகரம்" படத்தில் ஜெயச்சந்திரன், வாணி ஜெயராம்
குரல்களில் "முத்துரதமோ முல்லைச்சரமோ" என்ற பாடல் நினைவுக்கு வந்தது. பாடலாசிரியர் பேர் சுல்தான்-னு போட்டிருக்கு.
அதிலேயே ஜேசுதாஸ் கூட "வாழுகின்ற மக்களுக்கு வாழ்ந்தவர்கள் பாடமடி" என்று
ஒரு பாட்டு பாடுவார்.
வீடியோ கிடைக்கவில்லை. ( மொத்தப் படத்துக்கும் வீடியோ இருக்குது. முழுசா பார்க்க நேரம் ஏதுங்கோ ? )
http://youtu.be/3-_nOeKRwGQ
vasudevan31355
22nd August 2014, 06:35 PM
இன்றைய ஸ்பெஷல் (59)
'இன்றைய ஸ்பெஷலி'ல் இன்று 'ராஜா வீட்டுப் பிள்ளை' படப் பாடல். நீங்கள் நீண்ட நாட்களுக்குப் பிறகு மீண்டும் கேட்டு இன்புற.
https://i.ytimg.com/vi/zlIk5Kg0ZjU/movieposter.jpg?v=506fbb20
மக்கள் கலைஞர் ஜெய்சங்கரும், மேடம் ஜெயலலிதாவும் இணைந்து பாடும் டிபிகல் ஜெய் டூயட். இந்தப் பாட்டு அப்போதிருந்தே எனக்கு மிகவும் பிடிக்கும். அப்படி ஒன்றும் அதிசயம் இல்லைதான். ஆனால் பிடிக்கும். உங்களுக்கு கேட்கும் போது ஒரு உற்சாகம் பிறக்கும். வாலியின் வரிகளுக்கு எஸ்.எம்.சுப்பையா நாயுடு இசை அமைத்து தூள் பரத்தியிருப்பார். பாடகர் திலகம் ஜெய் குரலில் அப்படியே த்தரூபம். சுசீலாவோ தெள்ளத் தெளிவான இளமை. ஜெயா மேடம் கொள்ளை அழகு. அதனால் ஜெய்க்கு உற்சாகம். இந்தப் படத்தில் நம்பியார், வி.எஸ்.ராகவன், ஸ்ரீகாந்த், தேங்காய், புஷ்பலதா, ஜெயபாரதி மற்றும் பலர் நடித்திருப்பார்கள். இதுவும் ஒரு 'பாண்ட்' டைப் படம்தான்.
https://i.ytimg.com/vi/zlIk5Kg0ZjU/maxresdefault.jpg
இந்தப் பாடல் பின்னால் வந்த பல ஜெய், ஜெயலலிதா டூயட்களை ஞாபகப்படுத்தும். 'பொம்மலாட்டம்' ஞாபகத்திற்கு வரும். 'மெல்லிசை மாமணி' குமார் சில பாடல்களில் எஸ்.எம்.எஸ் ஸை பின்பற்றியிருப்பார். பாடலின் ஆரம்ப இசையைக் கேளுங்கள். தெரியும். இப்படத்தை இயக்கியவர் தாதாமிராஸி.
இந்தப் படத்தில் இந்தப் பாட்டு மட்டுமல்ல.... எல்லாப் பாடல்களும் செமத்தியாக இருக்கும்.
'ராஜா வீட்டுப் பெண்ணானாலும் நாலும் இருக்கணும்'.... ராட்சஸி, டிக்.எம்.எஸ். கலக்கலில்
https://encrypted-tbn1.gstatic.com/images?q=tbn:ANd9GcTJVfmdcsoUXgy_Xfen5JmdLewCCtzPZ swLuhh-YM1mV6fYSn3ZzA
'அரும்பாய் இருந்தது நேற்று'.... ராட்சஸி பூ விற்கும் அமர்க்களம்.
'பைத்தியக்காரன் பத்தும் சொல்வான்'.... பாடகர் திலகத்தின் தத்துவம்.
'அன்று நினைத்தோம்.... அதற்கு உழைத்தோம்'.... பாடகர் திலகமும், சுசீலாம்மாவும் ரகளை கிளப்பும் பாடல். இசை பிரம்மாண்டம். (இது இன்னொரு 'இன்றைய ஸ்பெஷலி'ல் கண்டிப்பாக வரும்)
இனி பாடலின் வரிகள்
ஊருக்கெல்லாம் பூச்சூட்டும் மீனா மீனா
உன் உள்ளத்திலே உள்ளவனும் நானா நானா
ஊருக்கெல்லாம் காரோட்டும் ராஜா ராஜா
உன் உள்ளத்திலே உள்ளதிந்த ரோஜா ரோஜா
ஊருக்கெல்லாம் பூச்சூட்டும் மீனா மீனா
ஊருக்கெல்லாம் காரோட்டும் ராஜா ராஜா
குங்குமச் சிவப்பு கன்னத்திலே
ஒரு கோலம் வரையட்டுமா
குங்குமச் சிவப்பு கன்னத்திலே
ஒரு கோலம் வரையட்டுமா
இடை கொஞ்சி நடக்கும் வஞ்சிக் கொடிக்கு
கோவில் எழுப்பட்டுமா
இடை கொஞ்சி நடக்கும் வஞ்சிக் கொடிக்கு
கோவில் எழுப்பட்டுமா
கோவில் எழுப்பட்டுமா
அத்தை மகனுக்கு பள்ளி கொள்ள
ஒரு மெத்தை விரிக்கட்டுமா
அத்தை மகனுக்கு பள்ளி கொள்ள
ஒரு மெத்தை விரிக்கட்டுமா
அவன் சந்தன மேனி சொந்தம் கொண்டாட
விட்டுக் கொடுக்கட்டுமா
ஊருக்கெல்லாம் பூச்சூட்டும் மீனா மீனா
ஊருக்கெல்லாம் காரோட்டும் ராஜா ராஜா
பருவத்தின் பாட்டுக்கு முதல் முதலாக
பல்லவி சொல்லட்டுமா
அந்த பல்லவி சொன்ன நல்லவர் கையில்
சரணம் ஆகட்டுமா
பருவத்தின் பாட்டுக்கு முதல் முதலாக
பல்லவி சொல்லட்டுமா
அந்த பல்லவி சொன்ன நல்லவர் கையில்
சரணம் ஆகட்டுமா
தென்றல் காற்றே தென்னங் கீற்றே
தென்றல் காற்றே தென்னங் கீற்றே
இன்னும் ஏனடி அச்சம்
அச்சம் என்பதை பெண்மை மறந்தால்
என்ன இருக்கும் மிச்சம்
ஊருக்கெல்லாம் பூச்சூட்டும் மீனா மீனா
உன் உள்ளத்திலே உள்ளவனும் நானா நானா
ஊருக்கெல்லாம் காரோட்டும் ராஜா ராஜா
உன் உள்ளத்திலே உள்ளதிந்த ரோஜா ரோஜா
https://www.youtube.com/watch?v=7EFD3fqh91w&feature=player_detailpage
sss
22nd August 2014, 06:45 PM
சாமந்திப்பூ படத்தில் ஷோபா இறுதி காட்சியில் மரணமடைந்த பின்னர் வரும் இந்த வீடியோ
https://www.youtube.com/watch?v=w9ekP722XJ8
அவரின் இறுதி ஊர்வலத்தை படத்தில் இணைத்து விட்டார்கள்.
sss
22nd August 2014, 06:48 PM
நல்லெண்ணெய் சித்ராவுக்கும், யூகி சேது வுக்கும் திருமணம் நிச்சயம் ஆகி நின்று விட்டது தெரியும் தானே ...
gkrishna
22nd August 2014, 07:20 PM
நல்லெண்ணெய் சித்ராவுக்கும், யூகி சேது வுக்கும் திருமணம் நிச்சயம் ஆகி நின்று விட்டது தெரியும் தானே ...
அருமையான தகவல்
குமுதம் விழுந்து விழுந்து எழுதிய தகவல் sss சார்
நன்றி
gkrishna
22nd August 2014, 07:22 PM
சாமந்திப்பூ படத்தில் ஷோபா இறுதி காட்சியில் மரணமடைந்த பின்னர் வரும் இந்த வீடியோ
அவரின் இறுதி ஊர்வலத்தை படத்தில் இணைத்து விட்டார்கள்.
ஆமாம் sss சார்
இந்த படம் பாதியில் தான் அவர் மரணம் அடைந்த செய்தி
அந்நாட்களில் பிரபல திரைப்பட இயக்குனர் ஒளிபதிவாளர் மீது விசாரணை கூட நடந்த நிகழ்வு உண்டு
gkrishna
22nd August 2014, 07:24 PM
இன்றைய ஸ்பெஷல் (59)
'இன்றைய ஸ்பெஷலி'ல் இன்று 'ராஜா வீட்டுப் பிள்ளை' படப் பாடல். நீங்கள் நீண்ட நாட்களுக்குப் பிறகு மீண்டும் கேட்டு இன்புற.
வாசு சார்
அடிகடி சிலோன் வானொலியில் கேட்டு மகிழ்ந்து மறந்து இருந்த பாடலை நினைவு ஊட்டி உள்ளீர்கள்
ஜெய் ஜெயா madem ஜோடி மிகவும் பொருத்தமான ஜோடி
vasudevan31355
22nd August 2014, 07:40 PM
கிருஷ்ணா சார்,
'ஞாயிறு ஒளி மழையில்' ஹிந்து வெளியிட்ட தகவல் கட்டுரைக்கு மிக்க நன்றி. இப்போதுதான் படித்து முடித்தேன்.
பத்திரிகையில் படித்த செய்தி ஒரு வரி நினைவிருக்கிறது.
http://i.imgur.com/QGnien2.jpg
'ஞாயிறு ஒளி மழையில்' பாடலை கமல் அவர்கள் லேசான பயம் கலந்த நடுக்கத்தில் ரிக்கார்டிங்கில் பாட ஆரம்பிக்க எல்லோரும் அது ஜேசுதாசின் குரல் போலவே இருப்பதாகக் கூறினார்களாம். கமலுக்கு பெருமையாய் இருந்ததாம். ஆனால் தன்கென்று ஒரு தனி பாணி வேண்டுமே என்று சிரமப்பட்டு வேறு விதமாகப் பாடி முடித்தாராம்.
vasudevan31355
22nd August 2014, 07:48 PM
இப்பாடலை வண்ணத்தில் போட்டாயிற்றா இல்லையா என்று தெரியவில்லை. போட்டிருந்தால் பொறுத்தருள்க.
https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=a513fQZqTXA
vasudevan31355
22nd August 2014, 07:55 PM
கிருஷ்ணா சார்,
வி.ஆர்.திலகம் பற்றி எல்லோரும் அருமையாக நினைவு கூர்ந்து அவரை பெருமைப் படுத்தியுள்ளீர்கள். நன்றி! இப்படி அபூர்வமான பல கலைஞர்களை மக்களுக்கு ஞாபகப்படுத்தும் திரியாக நமது திரி விளங்குவது மகிழ்ச்சி.
vasudevan31355
22nd August 2014, 07:56 PM
http://s2.dmcdn.net/Ci6S6.jpg
ராஜேஷ்ஜி, மதுஜி விளக்குவார்களாக.
ஒரு சந்தேகம்.
http://cdn4.static.ovimg.com/m/0zb6jkj/?width=150
'கறுப்புப் பணம்' படத்தில் வரும் புகழ்பெற்ற பாடலான
இசையரசி மற்றும் ராட்சஸியின்
'அம்மம்மா... கேளடி தோழி'...
பாடலில் கே.ஆர்.விஜயாவுடன் இணைந்து அப்பாடலைப் பாடுபவர் வி.ஆர். திலகம்தானே? ரொம்ப நாளாக சந்தேகம்.
gkrishna
22nd August 2014, 07:56 PM
எத்தனை தடவை கேட்டாலும் சலிக்காத பாடல் வாசு சார்
அதுவும் நீங்கள் போடும் போது தனி சுகம் தானே
புது முகமே சிறு மது குடமே
(இந்த சிறு என்பதை நாங்கள் சிறு வயதில் திரு என்று படித்த நினைவு )
நான் புரிந்து கொண்டேன் ஒரு அனுபவமே .
எழில் முகமே இள மதி முகமே
உன் இதயத்தில் விழுந்தது என்
http://www.youtube.com/watch?v=h6LkIxW64AU
கண்ணதாசனின் எளிய ஆனால் இனிய வரிகள்
gkrishna
22nd August 2014, 08:05 PM
பழைய குங்குமம் பத்திரிகையில் பாட்டு புத்தகத்தின் இன்றைய நிலை பற்றி வந்த கட்டுரையின் பகுதி - இதை தந்த நண்பர் ஜகதீஷ் க்கு நன்றி
மயக்கும் மாலைப் பொழுதே நீ போ போ என்று ஜிக்கி பாடிய பாடலானாலும் சரி, புத்தியுள்ள மனிதன் எல்லாம் வெற்றி பெறுவதில்லை என்ற சந்திரபாபுவின் பாட்டானாலும் சரி அதன் அற்புத வரிகளைத் தேடிய ரசிகர்களுக்கு வரப்பிரசாதமாக கிடைத்தவை பாட்டுப் புத்தகங்களே.மீதியை வெள்ளித் திரையில் காண்க என்ற வாசகத்தை பிரபலப்படுத்தியதே சினிமா பாட்டுப் புத்தகங்கள்தான்.
ரேடியோ மட்டும் பொழுதுபோக்காக இருந்த அந்தக் காலத்தில் அகில இந்திய வானொலியும் இலங்கை ஒலிபரப்பு கூட்டு ஸ்தாபனமும் ஒலிப்பரப்பிய திரைப்படப் பாடல்களை கண்விழித்துக் கேட்டு, மெய்மறந்து வளர்ந்த முந்தைய தலைமுறையினருக்கு பாடலைப் பாடியவர், இயற்றியவர், இசையமைத்தவர் போன்ற தகவல்களை தெரிவிக்கவும் பாட்டுப் புத்தகங்களே உதவின.
ஐபாடும், மௌபைல் போனும் பாடல்களை சேமித்து வைக்கும் இசைப்பேழைகளாகி விட்ட இந்தக் காலத்தில் பாட்டுப் புத்தகம் என்பது பழங்கால கலைப் பொருள் போல் ஆகிவிட்டது. 40 ஆண்டுகளாக சென்னையில் பாட்டுப் புத்தகம் அச்சிடும் தனலட்சுமி அச்சக உரிமையாளரிடம் இதுபற்றி பேசினேன்.
இப்போதெல்லாம் 20 படங்கள் வெளியானால் ஒரு படம் நன்றாக ஓடுவதே பெரிய விஷயம்.படங்களே ஓடாத போது பாட்டுப் புத்தகங்களும் விற்பனையாவதில்லை என்றார்.
எம்.ஜி.ஆர். சிவாஜி காலத்தில் பாட்டுப் புத்தகங்களின் விற்பனை கொடிகட்டிப் பறந்தது. ஒரு லட்சம் பிரதிகள் பாட்டுப் புத்தகங்கள் அச்சிடப்பட்டன. இப்போது அவை 2 ஆயிரம் 3 ஆயிரமாக குறைந்து விட்டன. அஜித் விஜய் மாதிரி ஹீரோக்களின் படங்கள் என்றால் பத்தாயிரம் பிரதிகள் வரை விற்கிறதாம்.கடைசியாக 10 ஆயிரம் இலக்கைத் தொட்டது மங்காத்தா தான்.இதன் காரணமாக சிறிய பதிப்பகங்கள் இத்தொழிலைக் கைவிட்டு, ஜோதிடம்,மருத்துவம் என இதர புத்தகங்களை மலிவு விலையில் அச்சிட்டு பட்டி தொட்டியெல்லாம் விற்று வருகின்றன.
பாட்டுப்புத்தகங்களுடன் மனோகரா, பராசக்தி, திருவிளையாடல், சரஸ்வதி சபதம் போன்ற வசனத்திற்காகவே ஓடிய படங்களின் திரைக்கதை வசனப் புத்தகங்களுக்கும் இப்போது மதிப்பு குறைந்து விட்டது.
புதுக்கவிதை எழுதும் இளைஞர்களிடம் உங்கள் கவிதை எதி்ல் இடம்பெற வேண்டும் என்று கேட்டால் சினிமா பாட்டுப் புத்தகத்தில் என்பார்கள். அந்தளவுக்கு சினிமா பாட்டு எழுதும் மோகம் நமது கவிச்சக்கரவர்த்திகளை ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது.
ஆனாலும் ரசிகர்களின் மத்தியில் பாட்டுப் புத்தகம் விற்பனை குறைந்துப் போன காரணம் என்ன ?
சினிமா பாட்டு என்பது வாழ்க்கையின் மாயத்தன்மை மிக்க இன்பமும் துன்பமுமான கணங்களில் இடையறாது கலந்திருந்த காலம்தான் மாறி விட்டதா ?
இல்லை. அந்தக் கணங்கள் இன்றும் வாழ்க்கையிலிருந்து விலகி விடவில்லை. ஆயினும் இன்னும் அந்த தேவையை பழைய பாடல்களே பூர்ததி செய்கின்றன. மனதை வாட்டும் இருண்ட கணத்தில் நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் என்று ஏதுமில்லை என்று பிபி.ஸ்ரீநிவாசனின் குரல்தான் இப்போதும் ஆறுதல் அளிக்கிறது. மனப்பாடம் ஆகிவிட்ட இந்தப் பாட்டுக்கெல்லாம் பாட்டுப் புத்தகம் தேவையில்லைதான்.
vasudevan31355
22nd August 2014, 08:14 PM
'நளாயினி' மற்றும் பழைய பாடல்கள் அடங்கிய ஒரு பாட்டு புத்தகத்தை ஒருவர் எப்படி பாதுகாத்து வைத்திருக்கிறார் பாருங்கள்.
http://www.thehindu.com/multimedia/dynamic/01218/19cbjescinemaso_CM_1218152e.jpg
விவரங்களுக்கு
http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/tunes-and-trivia/article3940789.ece
Gopal.s
22nd August 2014, 08:21 PM
J.P.Chadra Babu list of Songs.
Budhi Ulla Manidharellam
Film:Annai(1962 )
Music Director: Sudharshan.
Puthaiyal
Hello My Dear
Film:Puthaiyal( 1957 )
Music Director: viswanathan-ramamoorthy
Puthaiyal
Unakkaaga Ellam
Film:Puthaiyal( 1957 )
Music Director: viswanathan-ramamoorthy
Needhi
Engalathu Bhoomi
Film:Needhi( 1972 )
Music Director: MS Viswanathan
Andavan Kattalai
Siripu Varuthu
Film:Aandavan kattalai-1964
Music Director: MS Viswanathan-T.K.Ramamoorthy.
Nimirnthunil
Pudichalum
Film:Nimirnthunil( 1968 )
Music Director: K.V.Mahadevan
Kadavulai Kanden
Konjam Thallikkanum
Film:Kadavulai Kanden( 1963 )
Music Director: K.V. Mahadevan
Bandha Pasam
Eppo Vetchikalaam Eppadi
Film:Bandha Pasam( 1962 )
Music Director: Viswanathan-Ramamurthi
Senthamarai
Thangaathamma Thaangaathu
Film:Senthamarai( 1962 )
Music Director: Viswanathan-Ramamurthi
Patha Kaanikai
Kaadhal Enbadhu
Film:Patha Kaanikai( 1962 )
Music Director: Viswanathan-Ramamurthi
Policekaaran Magal
Poranthaalim Ambpillaiya
Film:Policekaaran Magal( 1962 )
Music Director: Viswanathan-Ramamurthi
Patha Kaanikai
Thaniyaa Thavikkira Vayasu
Film:Patha Kaanikai( 1962 )
Music Director: Viswanathan-Ramamurthi
Kumara Raja
Aan Ondru Paada
Film:Kumara Raja( 1961 )
Music Director: T.R. Paappa
Kumara Raja
Ennaipaarttha Kannu
Film:Kumara Raja( 1961 )
Music Director: T.R. Paappa
gkrishna
22nd August 2014, 08:25 PM
கோபால் அவர்களின் உழைப்பு வேதா விலும் சந்திர பாபு புதையலிலும் தெரிகிறது புரிகிறது
Gopal.s
22nd August 2014, 08:26 PM
Moodinalum Thirandhaalum
Film:Kumara Raja( 1961 )
Music Director: T.R. Paappa
Kumara Raja
Onnume Puruyale
Film:Kumara Raja( 1961 )
Music Director: T.R. Paappa
Kavalai Illadha Manidhan
Pirakkum podhu Azhugindraai
Film:Kavalai Illadha Manidhan( 1960 )
Music Director: Viswanathan-Ramamurthi
Kavalai Illadha Manidhan
Kavalai Illaadha Manidhan
Film:Kavalai Illadha Manidhan( 1960 )
Music Director: Viswanathan-Ramamurthi
Maragatham
Kunguma Poove
Film:Maragatham( 1959 )
Music Director: S.M.Subbiah Naidu
Naan Sollum Ragasiyam
Vilaiyadu Raja
Film:Naan Sollum Ragasiyam( 1959 )
Music Director: G. Ramanathan
Pandi Thevan
Nee Aadinaal
Film:Pandi Thevan( 1959 )
Music Director: Meenakshi Subramaniam
Kaathavarayan
Thandhane Thandhana
Film:Kaathavarayan( 1958 )
Music Director: G. Ramanathan
Kaathavarayan
Jigu Jigu
Film:Kaathavarayan( 1958 )
Music Director: G. Ramanathan
Naadodi Mannan
Thadukkathey
Film:Naadodi Mannan( 1958 )
Music Director: S.M.Subbiah Naidu
Pathi Bakthi
Dharmam Enbaar
Film:Pathi Bakthi( 1958 )
Music Director: Viswanathan-Ramamurthi
Pathi Bakthi
Rock Rock
Film:Pathi Bakthi( 1958 )
Music Director: Viswanathan-Ramamurthi
Pathi Bakthi
Inthe Thinnai
Film:Pathi Bakthi( 1958 )
Music Director: Viswanathan-Ramamurthi
Mahadevi
Thanthana Pattu
Film:Mahadevi( 1957 )
Music Director: Viswanathan-Ramamurthi
Mahadevi
Un Thirumugatthai
Film:Mahadevi( 1957 )
Music Director: Viswanathan-Ramamurthi
Aaraachi Kadalile
Film:Puthumai Pitthan( 1957 )
Music Director: G. Ramanathan
Samaya Sanjeevi
Paper Paper Ayya
Film:Samaya Sanjeevi( 1957 )
Music Director: N/A
Pathini Daivam
Aatthukku Paalam
Film:Pathini Daivam( 1957 )
Music Director: T. Chalapathi Rao
Manamagal Thevai
Bambara Kannaale
Film:Manamagal Thevai( 1956 )
Music Director: G.Ramanathan.
Pen
Kalyanam kalyanam
Film-Pen.-1954.
Music Director-G.Ramanathan.
valiba virunthu.
ondrai kannu doria
Film-Valiba Virunthu-1967
Music Director-Sudhashan.
sagothari
naan oru muttalunga
Film-Sagothari-1959.
Music Director-G.Ramanathan.
Kalyanam panniyum brammachari.
Jolly life
Film-Kalyanam panniyum brammachari.-1954.
Music Direction-T.G.Lingappa.
gkrishna
22nd August 2014, 08:28 PM
'நளாயினி' மற்றும் பழைய பாடல்கள் அடங்கிய ஒரு பாட்டு புத்தகத்தை ஒருவர் எப்படி பாதுகாத்து வைத்திருக்கிறார் பாருங்கள்.
அருமை வாசு சார்
நேர் கோட்டில் பயணிக்கும் நமது ரசனை
மிக்க நன்றி
Gopal.s
22nd August 2014, 08:47 PM
இரவின் மடியில்.
யதுகுல காம்போதி என்ற இந்த ராகத்தை பற்றி டி.கே.ராமமூர்த்தியிடம் பேசி உள்ளேன். இந்த ராகத்தில் விஸ்வநாதன்-ராமமூர்த்தி அமைத்துள்ள இரண்டு பாடல்களுமே இரண்டு வகை வேறு பட்டது.
சந்திரோதயத்தில் வரும் காசிக்கு போகும் இந்த ஒரு சாதனை பாடல். இசையமைத்த விதம்,டி.எம்.எஸ் -சீர்காழி உணர்ந்து பாடும் அழகு,சம்பத்த நடிகர்களின் இதமான performance .எல்லாம் சேர்ந்து ,இந்த பாடலுக்கு தனி இடம் எப்போதும் உண்டு.
https://www.youtube.com/watch?v=1iYP2yvXNJM
அந்த epic படத்தின் epic பாடல். தங்கைக்காக அண்ணன் கனவு காணவு காணும் முதல் பாடல்.அப்பப்பா ,இந்த பாடலின் அழகு,டீ .எம்.எஸ். உணர்வு கலந்து ,தன் சுகமான சுரத்தில் பாட,நடிகர்திலகம் ,நடிப்பால் நிமிர்த்த ,இதோ அந்த பிரபல பாடல்.
https://www.youtube.com/watch?v=9P8Hynotz1M
JamesFague
22nd August 2014, 08:48 PM
Wonderful song from the Movie Aandhi starring Sanjeev Kumar. Now Enjoy the song.
http://youtu.be/UxHFP10N1xE
JamesFague
22nd August 2014, 08:50 PM
One more melodious song from Aandhi. Sanjeev Kumar with Suchitra Sen. What a composition.
http://youtu.be/bTCX_M-meHc
Gopal.s
22nd August 2014, 08:55 PM
இரவின் மடியில்.
பொன்னி திருநாள் என்றொரு படம் 1960 இல் . படம் பற்றி கேள்வி பட்டிருக்காவிட்டாலும் கே.வீ.மகாதேவனின் அற்புத பாடல்கள்.
கண்ணும் கண்ணும் கதை பேசி, பீ.பீ .எஸ்.-பீ.எஸ் உருக்கம்.
https://www.youtube.com/watch?v=ulkPEyahpis
ஏன் சிரித்தாய் என்னை பார்த்து.
https://www.youtube.com/watch?v=_R1B_1gIeBo
JamesFague
22nd August 2014, 08:55 PM
Evergreen Song from the movie Black Mail starring Dharmendra with Rakhi. Old is Gold. Music by Kalyanji Anandji
http://youtu.be/viKdF7sp_cY
JamesFague
22nd August 2014, 08:59 PM
For a change Ilayaraja Hit from the Movie Pandi Nattu Thangam
http://youtu.be/XcqFyJcG_U4
JamesFague
22nd August 2014, 09:07 PM
Enjoy the Evergreen super hit song of Surangani
http://youtu.be/NVsXnsClGgA
rajeshkrv
22nd August 2014, 10:19 PM
அட நாராயணா
ஒரு நினைவுச்சின்னப்பாடல் இவ்வளவு நினைவுகளை தூண்டிவிட்டது போல
vasudevan31355
22nd August 2014, 10:34 PM
வாங்க ராஜேஷ்ஜி. பார்த்து ரொம்ப நாளா ஆனா மாதிரி இருக்கு. சுகந்தன்னே!
vasudevan31355
22nd August 2014, 10:35 PM
இன்னிக்கு ஏகப்பட்ட பதிவுகள், நினைவுகள், நினைவூட்டல்கள், பாடல்கள் ராஜேஷ்ஜி
vasudevan31355
22nd August 2014, 10:39 PM
ராஜேஷ்ஜி
எனக்கு மிக மிக பிடித்த இசை சாம்ராஜ்ய ராணியின் பாடல். இளையராஜாவின் இசையில்.
'கங்கை ஆற்றில் நின்று கொண்டு
நீரைத் தேடும் பெண்மான் இவள்'
'ஆயிரம் நிலவே வா' படத்திலிருந்து.
What a classic!
ஆயிரம் நிலவே வா படத்தில் இருந்து கங்கை ஆற்றில் பாடல் வரிகள் :-
கங்கை ஆற்றில் நின்று கொண்டு
நீரைத் தேடும் பெண்மான் இவள்
கண்ணை மூடி காட்சி தேடி
இன்னும் எங்கே செல்வாள் இவள்
தன்னயே தான் நம்பாது
போவதும் ஏன் பேதை மாது
கங்கை ஆற்றில் நின்று கொண்டு
நீரைத் தேடும் பெண்மான் இவள்
பொய் போலவே வேஷம் மெய் போட்டது
அந்த மெய்யே பொய்யாய்க் கொண்டாள்
நூறாயிரம் சாட்சி யார் கூறினும்
அவை எல்லாம் வேஷம் என்றாள்
தன் கண் செய்த மாயம்
பெண்மேல் என்ன பாவம்
தன் நெஞ்சோடு தீராத சோகம்
இப்போராட்டம் எப்போது தீரும் இனி
கங்கை ஆற்றில் நின்று கொண்டு
நீரைத் தேடும் பெண்மான் இவள்
பொய் மானையே அன்று மெய் மான் என
அந்த சீதை பேதை ஆனாள்
மெய் மானையே இன்று பொய் மானென
இந்த கோதை பேதை ஆனாள்
பொய் நம்பிக்கை அங்கே வீண் சந்தேகம் இங்கே
கண் ஒவ்வொன்றும் வெவ்வேறு பார்வை
என்றாலும் ஏமாற்றம் ஒன்றானது
கங்கை ஆற்றில் நின்று கொண்டு
நீரைத் தேடும் பெண்மான் இவள்
கண்ணை மூடி காட்சி தேடி
இன்னும் எங்கே செல்வாள் இவள்
தன்னயேதான் நம்பாது
போவதும் ஏன் பேதை மாது
கங்கை ஆற்றில் நின்று கொண்டு
நீரைத் தேடும் பெண்மான் இவள்
https://www.youtube.com/watch?v=RNK9akd_Xu8&feature=player_detailpage
RAGHAVENDRA
22nd August 2014, 10:41 PM
இரவின் மடியில்
காலமகள் மேடை நாடகம்...
சலீல்தா இசையில் மதனோத்சவம் திரைப்படத்தின் தமிழ் வடிவம்... பருவ மழை என்ற பெயரில் வெளிவந்தது. கமலின் ஆரம்பகாலத் திரைப்படங்களில் ஒன்று.. இனிமையான சிதார் நம்மை வருடிக் கொடுக்க ஜேசுதாஸின் மென்மையான குரல் இரவின் மடியில் நம்மை உறங்க வைத்து விடும்..
http://www.inbaminge.com/t/p/Paruva%20Mazhai/
RAGHAVENDRA
22nd August 2014, 10:42 PM
வாசு சார்
ஒரே நாளில் பம்பர் அடித்தாற்போல ஏராளமான பதிவுகள் தகவல்கள் என மதுர கானம் மனதை மயக்கி அழைத்துச் செல்கிறது. தங்கள் ஒவ்வொருவருக்கும் பாராட்டுக்கள்.
vasudevan31355
22nd August 2014, 10:42 PM
வணக்கம் ராகவேந்திரன் சார். ஆரம்பமே அமர்க்களம்.
RAGHAVENDRA
22nd August 2014, 10:50 PM
இரவின் மடியில்
ஹிந்திப் பாடல்களின் மெட்டுக்களைப் பயன்படுத்துவதில் தாங்கள் யாருக்கும் சளைத்தவர்களில்லை என்று நிரூபித்தவர்கள் சங்கர் கணேஷ் என்று அந்தக் காலத்தில் நண்பர்கள் பேசிக்கொள்வதுண்டு. அதற்கேற்ப அமைந்த பாடல், ஆசை மனைவி திரைப்படத்தில் இடம் பெற்ற இந்த அழகான மேனி பாடல்...
சிலோன் ரேடியோவில் காலை 7.30 மணி எப்பொழுது ஆகும் இந்தப் பாட்டை எப்போது போடுவார்கள் என்று ஆவலுடன் ஏங்கிக் கிடந்த காலங்களும் உண்டு.
சில சமயம் ஆழ்கடலில் முத்தெடுத்து பாடலையம் நினைவூட்டும்.
http://www.inbaminge.com/t/a/Aasai%20Manaivi/
RAGHAVENDRA
22nd August 2014, 10:52 PM
இரவின் மடியில்
நன்றி வாசு சார்... தங்களின் அமர்களமான இன்றைய ஸ்பெஷலை விடவா..
சிதார் கலக்கும் இன்னோரு பாடல்.. இரவில் நம்மை வருடிக் கொடுக்கும் இசைக் கருவியில் சிதாருக்கு தனியிடம் உண்டு...
ஆசை மனைவி படத்திலிருந்து எஸ்.ஜானகி வாணி ஜெயராம் இருவருமே பாடியிருக்கிறார்கள் என எண்ணுகிறேன்.
http://www.inbaminge.com/t/a/Aasai%20Manaivi/
வரலாமோ.. சுகம் தரலாமோ...
வரலாமோ.. சுகம் பெறலாமோ..
RAGHAVENDRA
22nd August 2014, 10:58 PM
இரவின் மடியில்
இந்தப் பாடலும் நம்மை அந்தக் காலத்திற்கே அழைத்துச் செல்லும் பாடல்.. இந்த மகிமை விஜயபாஸ்கர் இசைக்கு அதிகம் உண்டு. ஆங்கிலத்தில் கூறுவதென்றால்.. Oh... what a melody.... சுகமான இரவில் இது போன்ற பாடல்களை மெமரி கார்டில் பதிவு செய்து கொண்டு ஒரு ஐபாடிலோ டேபிலோ ப்ளேயரில் இயங்க விட்டு கடற்கரை மணலில் இரவு 10 மணிக்கு மேல் சாய்ந்து கண்களை மூடிக் கொண்டு கேட்டுக் கொண்டே இருக்க வேண்டிய பாடல்..
கோபால் சாரின் இரவின் மடியில் சூப்பர் தொடர்.. அவருக்கு பாராட்டுக்கள் மற்றும் நன்றிகள்.. இந்த இனியை வாய்ப்பைத் தந்ததற்காக. மற்றும் என்னுடைய புதிய இணைய இணைப்பிற்கும் தான்..
காலமடி காலம் படத்திலிருந்து தொடங்கலாம்....
நான் பாட்டின் பல்லவியை சொன்னேன்..
http://www.inbaminge.com/t/k/Kaalamadi%20Kaalam/
RAGHAVENDRA
22nd August 2014, 11:05 PM
இரவின் மடியில்
1975ல் வெளியான இசைத் தட்டு மெல்லிசை மன்னரின் இசையில் மாமியார் விஜயம் என்கிற படப்பாடல்கள். இதில் நான்கு பாடல்கள். நான்கும் அருமையான பாடல்கள். பி.சுசீலா பாடிய சாண் பிள்ளை யானாலும் என்ற பாடலும், குழந்தை வேணும் குழந்தை வேணும் கோமதியக்கா என்கிற பாடலும் பிரசித்தம். ஒரே ஒரு பாடல் மட்டும் இணையத்தில் இசையரசியின் இணைய தளத்தின் புண்ணியத்தில் கிடைக்கிறது. மற்ற பாடல்கள் எங்காவது கிடைத்தால் நண்பர்கள் தர வேண்டும்.
இப்போது சாண் பிள்ளையானாலும் பாடலைக் கேட்டு மகிழுங்கள்.
http://psusheela.org/audio/ra/tamil/all/saanpillai_aanalum.ra
RAGHAVENDRA
22nd August 2014, 11:09 PM
இரவின் மடியில்
என்னை அழைத்தது யாரடி கண்ணே...
உடனே தெரிந்திருக்குமே இப்பாடலைப் பற்றி..
சங்கறன் சொன்னான் சரவணன் கேட்டாண் என்ற பாடல் இடம் பெற்ற அதே ஒருவனுக்கு ஒருத்தி திரைப்படத்திலிருந்து தான் இப்பாடல்.
நடுவில் ஒரு இடத்தில் ஜானகி சபதம் படப் பாடலை நினைவூட்டும்.
http://www.inbaminge.com/t/o/Oruvanukku%20Oruthi/
chinnakkannan
23rd August 2014, 01:16 AM
எஸ்.வாசு தேவன் சார்.. மொழியறியாமல் சின்ன வயதில் நான் மிகவும் ரசித்த ஆந்தி, பல்பல் தில் கே ப்பாஸ் பாடல்கள் இட்டமைக்கு மிக்க நன்றி..
பல்பல் தில் கே பாஸ் தும் ரஹ்தி ஹோ
தும் ஆகயேஹம்
தேரேபினா ஜிந்தஹி அகெய்ன் தாங்க்ஸ் எஸ்.வாசுதேவன் சார்..
வாசு சார்..மறுமுறை ஞாயிறு ஒளி மழையில் போட்டீர்களா இல்லையா தெரியவில்லை இப்போது தான் பார்த்தேன்..மிக்க்க நன்றி( இந்தப் பாட்டை இப்படி எடுக்கவேண்டுமென ரூம் போட்டு யோசித்திருப்பார்களோ)
க்ருஷ்ணா ஜி.. கைலாசம் அவர்களைப் பற்றிய பதிவுக்கு நன்றி..ம்ம் கொடியவன் காலன்..
இரவின் மடியில்.. காசிக்குப் போற சன்யாசி,மலர்களைப் போல் தங்கை கோபால்சார்க்குத் தாங்க்ஸ்..
ராகவேந்திரரின் இரவின் மடியில் பாடல்கள் அழகு..ஆனால் ஏனோ என் சிஸ்டத்தில் பாட மாட்டேன் என்கிறது..பொங்கும் பூம்புனலும்பாடல்களும் அப்படியே..லாப் டாப்பில் கொஞ்சம் ட்ரை செய்ய வேண்டும்..
க்ருஷ்ணா ஜி..புதுமுகமே அறிமுகமே வீடீயோ வொர்க் செய்யலை ஆதலின் என்ன..பாடல் நினைவு படுத்தியதற்கு தாங்க்ஸ்..
ஊடல் சிறு மின்னல்- எஸ்வி சேகர் ஹீரோவான படம் தேவி தியேட்டரில் தான் ரிலீஸ்..தேவையே இல்லாமல் ஹீரோ ஹீரோயினை சாகடித்திருப்பார்கள்..தேடிக் கண்டுபிடித்த மதுண்ணாவிற்கு ஒரு ஓ..
சந்த்ரபாபு லிஸ்ட் வேதா லிஸ்ட் தாங்க்ஸ் கோபால் சார்..
பாட்டுப்புத்தகம்- ஓ.. சின்ன வயதில் என் அண்ண(னும்)ன் ந.தி ரசிகர்.. அவர் ரா.ரா.சோழன்படம் ஃபர்ஸ்ட் டே பார்த்து விட்டு வந்து இரவில் கொடுத்த பாட்டுப் புத்தகம் இன்னும் நினைவில்..கொஞ்சம் நிறையக் கலரில்பளபள என்றிருந்தது.. நான் மறுவாரமோ என்னவோ படம் பார்த்துவிட்டு வந்து வீட்டில் வந்ததும் செய்த முதற்காரியம் கத்து திரைக்கால் சூழ் அவனிக்கொரு..பா.பு பார்த்து மனப்பாடம் செய்து பாடிப் பார்தது தான்.இன்னும் விதவிதமாய் வைத்திருந்தார் அவர்..எங்கு போயிற்றென்று தெரியவிலலை..அது ஒரு நிலாக் காலம்..ம்ம்..
rajeshkrv
23rd August 2014, 03:06 AM
வாசு ஜி,
இன்று அருமையான பதிவுகள்... நீங்கள் சொன்னால் நம்ப மாட்டீர்கள்
நினைவு சின்னப்பாடலை பதிவிடும்போது நான் நினைத்த மற்றுமொரு பாடல் கங்கை ஆற்றில் நின்று கொண்டு ... ஆஹா இதமோ இதம் .. என்ன அழகான பாடல்
madhu
23rd August 2014, 04:30 AM
பாட்டு புத்தகங்கள்... ஆஹா.. ஒவ்வொரு படம் பார்க்கும்போதும் பத்து பைசாவுக்கு கலர் அட்டை.. ஐந்து பைசாவுக்கு சாதாரண பேப்பரில் என்று வித்தியாசமாக விற்ற காலங்களும் உண்டு. அடுத்து வரப்போகும் தயாரிப்புகள் பற்றிய விளம்பரங்களும் பின் அட்டையில் இருக்கும்.
ஆசை அண்ணா அருமைத் தம்பி, ஆயிரம் தலை வாங்கிய அபூர்வ சிந்தாமணி என்று ஆரம்பித்து அவளுக்கென்று ஒரு மனம் ( டபுள் கலர் அட்டை ) வரை சேகரித்து வைத்திருந்தேன். வெளியூரில் வேலைக்கு சென்றிருந்தபோது பெட்டிக்குள் இருந்த எல்லாவற்றையும் கரைத்துக் குடித்தவர் கரையானார். அதனால் மொத்தத்தையுமெ வெள்ளித் திரையில்தான் காண வேண்டி ஆகிவிட்டது.
இன்றைய பதிவுகள் எல்லாமே சுப்பர்ப்.
rajraj
23rd August 2014, 04:59 AM
வெளியூரில் வேலைக்கு சென்றிருந்தபோது பெட்டிக்குள் இருந்த எல்லாவற்றையும் கரைத்துக் குடித்தவர் கரையானார்.
madhura gaanam aachche ! :) adhaan!
vasudevan31355
23rd August 2014, 07:07 AM
கோ,
நகைச்சுவை மன்னரின் படப் பட்டியலும், பாடல் பட்டியலும் அருமை. நல்ல சேவை. ஆக்ஷன் காமெடியே பிடிக்காத என்னையும் சிரிக்க வைத்த சாகசக்காரர். ஒரு நல்ல சந்தர்ப்பத்துக்காக இவரைப் பற்றிய ஆவணம் ஒன்றை சேமித்து வைத்திருந்தேன். நீங்கள் அதை உருவாக்கிக் கொடுத்து விட்டீர்கள். நன்றி!
இதோ 'குங்குமம்' (4-11-2013) இதழில் வந்த
'சரித்திர நாயகன் சந்திரபாபு'
அட்டகாசமான கட்டுரை.
'மனதை மயக்கும் மதுர கானங்களி' ன் இன்றைய காலை இந்த காமெடி நாயகன் புகழ் பாடுவதன் மூலம் தொடங்கட்டும்.
http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/2-49.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/2-49.jpg.html)
http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/1-50.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/1-50.jpg.html)
http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/3-33.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/3-33.jpg.html)
http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/4-23.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/4-23.jpg.html)
http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/5-17.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/5-17.jpg.html)
http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/6-17.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/6-17.jpg.html)
JamesFague
23rd August 2014, 08:00 AM
Enjoy the melody from Zamane ko Dikana hai. Rishi Kapoor with Padmini Kolaphuri
http://youtu.be/UjgKy68huBY
JamesFague
23rd August 2014, 08:01 AM
One more melody from the same movie.
http://youtu.be/NQomDMmxQb8
Gopal.s
23rd August 2014, 08:47 AM
ஒரே கான்செப்ட் , ஒரு கன்னியின்(அல்லது கன்னியாக உணரும்) எல்லையில்லா ஆனந்த பாடல் .இது கால மாற்றம் கொண்டு இசையிலும் ,படமாக்கத்திலும் எதிரொலித்த விதங்கள்?? விஸ்வநாதன்-ராமமூர்த்தி, கே.வீ.மகாதேவன்,விஸ்வநாதன்,இளையராஜா,ரெஹ்மான் வரை சுவையான ஒன்று.
1961 இல் பாக்யலட்சுமி காதெலெனும் வடிவம் காணுகிறாள்.
https://www.youtube.com/watch?v=5A9sX_rStpA
1968 இல் மாறியது நெஞ்சம்.(பணமா பாசமா)
https://www.youtube.com/watch?v=dBQRr5GT75Q
1977 இல் காற்றுகென்ன வேலி இனி அவர்கள் உள்ளமே உலகம்.
https://www.youtube.com/watch?v=pkTpGFFRjvQ
1978 பெண்ணின் பொன்னூஞ்சல் ஆடும் இளமை முள் மலரானதா?
https://www.youtube.com/watch?v=Xqq_I_x0BjI
1992 இல் பெரிய ஆசைகள் இல்லாமல் சின்ன சின்ன ஆசையானது.
https://www.youtube.com/watch?v=3dT99bwT8io
vasudevan31355
23rd August 2014, 09:02 AM
நண்பர்களுக்கு ஒரு அன்பு வேண்டுகோள்.
பாடல்களை வீடியோவாகத் தரும் போது ஒன்று அல்லது இரண்டு பாடல்களை தந்தால் நலம். அத்தனை பாடல்களையும் ஒரே சமயத்தில் பார்த்து, கேட்டு ரசிக்க நேரம் இல்லை. தள்ளிவிட்டு அடுத்த பக்கம் சென்றுவிடவும் அது ஏதுவாகிவிடும். அப்புறம் பின்னாடி அதே பாடல்களை நினைவில்லாமல் மறுபடியும் தர வாய்ப்புள்ளது. பேஜ் அதிக நேரம் லோட் ஆவதும் தவிர்க்கப்படும். நிம்மதியாகப் பாடலைப் பார்த்து ரசித்துவிட்டு அப்பாடலைப் பற்றிய நமது கருத்துக்களையும் அழகாகப் பதியலாம். அப்புறம் 'நான்தான் அப்போதே போட்டு விட்டேனே' என்று சொல்லாமலும் இருக்கலாம். :)
தயவு செய்து யாரும் தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம்.
கண்டிப்பாக ஆதரவு தருவீர்கள் என்று தெரியும்.
நன்றி!
Gopal.s
23rd August 2014, 09:23 AM
ரோஷன்(1917-1967)
ஹிந்தி படவுலகில் நௌஷத் ,ரோஷன் இருவருக்கும் உள்ள மதிப்பு அலாதியானது. இரண்டு பேரும் trend -setters .இவரை பற்றி நம் தமிழர்களுக்கு சொல்வதானால் ரித்திக் ரோஷன் அப்பா ராகேஷ் ரோஷனுக்கு அப்பா. பஞ்சாபில் பிறந்து 1948 இல் கே.கே.அன்வர் என்ற இசையமைப்பாளர்களுக்கு உதவியுள்ளார்.
1950 களில் பெரிய வெற்றி கனியை சுவைக்க முடியவில்லை.சாதிக்க முடியவில்லை.முகேஷ்,தலத் முகம்மத் ,லதா இவர்களோடு பணி புரிந்தாலும்.இந்த காலகட்டத்தில் சாதனை என்றால் இந்திவர்,ஆனந்த் பக்ஷி என்ற பின்னாட்களின் சூப்பர் ஸ்டார் பாடலாசிரியர்களை அறிமுக படுத்தியது ஒன்றுதான்.
1960 களில் விஸ்வரூபம் எடுத்து 1961 முதல் 1967 வரை ஒரு டசன் இசையமைப்பாளர்கள் மத்தியிலும் மதிப்பு பெற்றார் .இவர் ஹிந்துஸ்தானி,folk இசைகளில் காட்டிய வேறு பட்ட த்வனி அலாதியானது.பஞ்சாபி பின்னணி என்பதாலோ என்னவோ காவாலி யில் பின்னி எடுத்துள்ளார்.
இவரது சிறந்த படங்கள் .
பர்சாத் கி ராத்- 1961.
ஆர்த்தி- 1962.
தாஜ் மஹால்-1963.
சித்திர லேகா-1964.
அனோக்கி ராத்-1965.
மம்தா - 1966(நம்ம 1969 இன் காவிய தலைவி.ஈயடிச்சான் காபி)
தேவர் -1967.
பாடல்கள் சும்மா சாம்பிள் மட்டுமே.
நா தூ கார்வான் ,மன்னா டே ,கவாலி பாடல் ,பர்சாத் கி ராத்.
https://www.youtube.com/watch?v=996FZokJ2jI
பார் பார் தொ ஹாய் ,ரபி,லதா, ஆர்த்தி .
https://www.youtube.com/watch?v=2Do7dknvqPc
ஜோ பாத் துஜூ மே ஹய் ,ரபி, தாஜ் மகால் (என்னுடைய உயிர் பாடல்)ஹிந்துஸ்தானியில் சாதனை பாடல்.
https://www.youtube.com/watch?v=U5kuatik-tM
ரெஹ்தா தே கபி (நம் பெண் பார்த்த மாப்பிள்ளைக்கு),லதா, மம்தா.
https://www.youtube.com/watch?v=szPnGL5y-gY
Gopal.s
23rd August 2014, 09:27 AM
அதெல்லாம் சும்மா வீடியோ மட்டும் போட்டு ஓபி அடிக்கும் வாசு (சித்தூர்)போன்றோருக்கு மட்டுமே.ஒரு கான்செப்ட் எடுத்து பண்ணும் போது ,இதெல்லாம் ஒத்து வராது. எல்லோருக்கும் நன்றி அறிவிப்பு வேண்டுமானால் ஒன்றாக செய்.இந்த மாதிரி செய்தியெல்லாம் பேர் மட்டும் போட்டே வெளியிடு.
சில பேர் பதிவு போடுவது தனக்காக. நான் எழுதும் பதிவுகள் உங்களுக்காக. என்னுடைய பதிவுகளை எல்லோரும் ஒழுங்காக படித்தால் உங்களுக்கு நல்லது.
பாராட்டுகள் வேண்டுமானால் எண்ணிக்கை பார்த்து போடு.(2000,3000 என்ற எண்ணிக்கை.என்ன போட்டான் என்பதெல்லாம் கணக்கில்லை) ஆனால் எல்லோரும் ஒன்றல்ல.
நான் என்ன செய்வது என்று ஒருவன்தான் தீர்மானிக்க முடியும்.கடவுள் என்று தப்பான முடிவுக்கு செல்லாதே.நான் மட்டுமே.
rajeshkrv
23rd August 2014, 09:52 AM
வாசு ஜி, ராகவ் ஜி, கோபால் ஜி காலை வணக்கம்
வாசு ஜி, சந்திரபாபுவின் நினைவு கூறல் அருமை அபாரம் பலே
இதோ சந்திரபாபு, இசையரசி மற்றும் டி.ஜி.லிங்கப்பா வின் குரலில் அருமையான பாடல்
க்யூட் சரோ, சந்திரபாபுவின் கலக்கல் அந்த பிச்சைக்காரன் நடிப்பு பலே
https://www.youtube.com/watch?v=UIa21s6iMwI
vasudevan31355
23rd August 2014, 10:00 AM
அதெல்லாம் சும்மா வீடியோ மட்டும் போட்டு ஓபி அடிக்கும் வாசு (சித்தூர்)போன்றோருக்கு மட்டுமே.ஒரு கான்செப்ட் எடுத்து பண்ணும் போது ,இதெல்லாம் ஒத்து வராது. எல்லோருக்கும் நன்றி அறிவிப்பு வேண்டுமானால் ஒன்றாக செய்.இந்த மாதிரி செய்தியெல்லாம் பேர் மட்டும் போட்டே வெளியிடு.
சில பேர் பதிவு போடுவது தனக்காக. நான் எழுதும் பதிவுகள் உங்களுக்காக. என்னுடைய பதிவுகளை எல்லோரும் ஒழுங்காக படித்தால் உங்களுக்கு நல்லது.
பாராட்டுகள் வேண்டுமானால் எண்ணிக்கை பார்த்து போடு.(2000,3000 என்ற எண்ணிக்கை.என்ன போட்டான் என்பதெல்லாம் கணக்கில்லை) ஆனால் எல்லோரும் ஒன்றல்ல.
நான் என்ன செய்வது என்று ஒருவன்தான் தீர்மானிக்க முடியும்.கடவுள் என்று தப்பான முடிவுக்கு செல்லாதே.நான் மட்டுமே.
ஐயோ! முடியலடா சாமி! தேன் கூட்டுல கைய வச்சா மாதிரி இருக்கு. பகவானே! இதுக்கு ஒரு விடிவு காலமே இல்லையா?
நான் சொன்னா நீ அடங்க மாட்டே! உன்னை எப்பிடி அடக்கறதுன்னு எனக்குத் தெரியும். உனக்கு கார்த்திக் சார்தான் சரியான ஆள். அவர் சொன்னா நீ பம்மிடுவே ராசா. நான் சொல்லாமலேயே அவர் இன்னைக்கு நான் எழுதிய கருத்தை உன்னிடம் சொல்லுவார்.
'நாடோடி' :)...போக வேண்டும் ஓடோடி:)
வெவ்வே! வாயாடி! போக வைப்(போம்)பேன் போராடாமலே.:)
காவலன் சென்றான்
இடை வாளை எடுத்தான்
அந்த மகனை இழுத்தான்
வாளை ஓங்கினான்... வாளை ஓங்கினான்:)
'மன்னா!..... 'நாடோடி' மன்னா!:)....தாங்கலையே மன்னா!:)
vasudevan31355
23rd August 2014, 10:03 AM
ஆஹா! வணக்கம் ராஜேஷ்ஜி!
'கங்கை ஆற்றில் நின்று கொண்டு' வணக்கம் சொல்கிறேன். வாழ்க இசையரசி நாமம். தெரியாம அந்தப் பாட்டை போட்டுவிட்டு நைட் முழுதும் காதில் அந்தப் பாடலே ஒலித்து தூக்கம் அவுட்.
vasudevan31355
23rd August 2014, 10:07 AM
என்னுடைய பதிவுகளை எல்லோரும் ஒழுங்காக படித்தால் உங்களுக்கு நல்லது.
நான் மட்டுமே.
சும்மா வெத்து துப்பாக்கிய வச்சி மிரட்டாதே தம்பி.:)
http://mimg.sulekha.com/tamil/naan-kadavul/images/wallpaper/1024-768/naan-kadavul-02.jpg
vasudevan31355
23rd August 2014, 10:12 AM
அதெல்லாம் சும்மா வீடியோ மட்டும் போட்டு ஓபி அடிக்கும் வாசு (சித்தூர்)போன்றோருக்கு மட்டுமே.
சென்னை வரும் போது N.T.Fans club இல் தலைவர் படம் பார்க்க வரும் போது சித்தூராரை நீ எப்படியும் சந்திக்க வேண்டித்தான் வரும். அப்ப இருக்கு சாமி உனக்கு. சித்தூரார் உன்னை புத்தூரார் ஆக்கிடுவார். :)
chinnakkannan
23rd August 2014, 10:23 AM
குட் மார்னிங்க் ஆல்..
கோபால் ஜியின் வேரியஸ் பரிமாணங்களில் பெண்., வெரிகுட்.. காலத்திற்கேற்றாற் போல மாறும் வரிகள்..அப்படியே சில பாடலகளில் ஆடை மாற்றத்தைப்பற்றி அலசினால் இங்கு இருக்கும் சின்னப் பையன்களுக்கு ( நான் தான்) பிடிக்கும் என ஆன்றோர் சொல்வார்கள்! :)
அப்புறம்..வாசு சார்..என்ன தான் நான்கடவுள் போட்டுப் பயமுறுத்தினாலும்..காலையிலிருந்து ஒலிக்கும் தமிழகப் பாடலை என்னவென்று சொல்வேன்..
மதுரையில் பிறந்த மீன் கொடியை உன் கண்களில் கண்டேனே....
ஹை கோபால் சார்..இந்த்ப் பெண்ணழகை வர்ணிக்கும் பாடல் மாற்றம் கூட லிஸ்ட் போடலாமே
சட்டென்று நினைவுக்கு வருபவை..
ஃபேக்ஸில் வந்த பெண்கவிதை எனக்கே எனக்கா..
ஒன்ன வெள்ளாவி வெச்சுத் தான் வெளுத்தாய்ங்களா..
செந்தழலின் ஒளியெடுத்து சந்தனத்தில் உயிர்கொடுத்து
பொன்பதத்தில் வார்த்து வைத்த பெண்ணழகை என்ன சொல்வேன்..
(அடுத்த வரி போட மாட்டேன்)
ம்ம் வெடி வெச்சாச்சு..
வரட்டா..
rajeshkrv
23rd August 2014, 10:47 AM
வாசு ஜி,
இதோ இன்னிக்கு நீங்க வேலை செய்ய தடை செய்யும் விதமாக ஒரு பாடல்
மலையாள ஃபோக் ஸ்டைல் பாடல் .. இசையரசி,தேவராஜன், வயலார் அற்புத கூட்டணி
நசீரும் சாரதாவும் திரையில் .. ஃத்ரிவேனி திரையில்
பாமரம் பளுங்கு கொண்டு ...
http://img6a.flixcart.com/image/av-media/movies/4/r/z/triveni-400x400-imadpgykaj4csfvh.jpeg
https://www.youtube.com/watch?v=27bUi7Hlt7Y
chinnakkannan
23rd August 2014, 11:13 AM
ராஜேஷ்..மஞ்ஞில் விரிஞ்ஞ பூக்களில் விழியோரம் நிலாவருன்னு பாட் போடுங்க்ளேன்.. அப்புறம்..கமல்ஹாசன்பாடும் ஒரு மலையாள்ப் பாட்டு ..முறுக்கிச் சிவன்னதோ மாறன் முத்தி ச் சிவப்பித்ததோன்னு ஒரு பாட்டு..படம் நினைவிலில்லை..!
vasudevan31355
23rd August 2014, 11:29 AM
வாசு ஜி,
இதோ இன்னிக்கு நீங்க வேலை செய்ய தடை செய்யும் விதமாக ஒரு பாடல்
மலையாள ஃபோக் ஸ்டைல் பாடல் .. இசையரசி,தேவராஜன், வயலார் அற்புத கூட்டணி
நசீரும் சாரதாவும் திரையில் .. ஃத்ரிவேனி திரையில்
பாமரம் பளுங்கு கொண்டு ...
வேலை செய்ய தடை செய்ததற்கு நன்றி ஜி!:) கண்டிப்பாக கேட்டு விட்டு சொல்கிறேன். அதற்குள் தங்களுக்கு ஒரு பாடல்.
'தொட்டு தொட்டுப் பார்த்தால் சுகம் தெரியும்
சொக்கி சொக்கி விழுந்தால் சொர்க்கம் புரியும்'
அருமையான சுசீலாம்மா அவர்களின் பாடல் வீட்டுக்கு வீடு திரைப் படத்திலிருந்து.
இந்தப் பக்கம் ஜெய்யும், லஷ்மியும் காதல் சல்லாபம் புரிய, அந்தப் பக்கம் தன்னை சீண்டாமல் கொடுமைப்படுத்தும் கணவன் முத்துராமனை நினைத்து வேதனைப்பட்டு நெக்குருகும் 'வெண்ணிற ஆடை' நிர்மலா.
'இந்த மஞ்சம் தந்த இன்பம் எங்கும் இல்லை
பெண்கள் எல்லாம் பேசிக்கொள்ள சங்கம் இல்லை'
வரிகளை கவனித்தீர்களா?
ஹிட் ஆகாவிட்டாலும் என்னை அதிகம் கவர்ந்த பாடல் ராஜேஷ்ஜி.
https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=Z8AztSlKjm4
rajeshkrv
23rd August 2014, 11:33 AM
சி.க
முறுக்கி சுவன்னதோ ஈட்டா படத்தில் . கமலுக்கு ஷீலா மற்றும் சீமா ..
https://www.youtube.com/watch?v=xNa44hUDoz0
இதோ மஞ்சல் விரிஞ்ச பூக்கள் பாடல்
https://www.youtube.com/watch?v=hCtC2emhoRc
rajeshkrv
23rd August 2014, 11:34 AM
வாசு ஜி, எனக்கு மிகவும் பிடித்த பாடல் தொட்டு தொட்டு பார்த்தால் .. தூள் தூள்
vasudevan31355
23rd August 2014, 11:46 AM
அருமை ராஜேஷ்ஜி! 'திரிவேணி' பாடலில் சங்கமம் ஆகி விட்டேன். சாரதா சூப்பர். இசையரசி குரல் தெளிவான அற்புதம்.
'இதிலே வா தோணி இதிலே வா'
வார்ரே வா.
chinnakkannan
23rd August 2014, 12:20 PM
ராஜேஷ்..சூப்பர்..இந்தமுறுக்கிச் சுவன்னதோ ஒரே ஒரு தடவை டிவி மாற்றும் போது கமல்ஹாசன் பாடுவதைப் பார்த்திருக்கிறேன்..பிறிதொருசமயம் பாடல் முழுக்க க் கேட்டு மட்டும் இருக்கிறேன்..இப்போ தான் உங்கள் தயவில் பார்த்தேன்.. நன்றி..(கொஞ்சம் விவகாரமாத் தான் இருக்கு!) ஆனால் ஷீலா சீமா இரண்டுபேருமே இளமை..கமலும் தான்..ஈட்டா என்னவாக்கும் கதை.. மிக்க நன்றி அகெய்ன்.. மஞ்ஞில் விரிந்த பூக்களும்பார்க்கணும்..ஆனா..வாசு சார் கொடுத்த பாட்டைப் பார்த்துட்டேனே..
வாசு சார்.. தொ.தொ பா சு பாட்டு ஆரம்பத்தில் கேட்காத பாட்டாகத் தோன்றியது..அப்புறம் இடையில் சுசீலாம்மா வின் ஹம்மிங்கில் கேட்ட நினைவு வந்து விட்டது..ரேர் பாட்டு தான்.. ஆமா.வீட்டுக்கு வீடு காமடிப் படமோன்னோ..ஏன் நிம்மி சீரியஸ்… நன்றி ஃபார் த நல்ல சாங்க்..
vasudevan31355
23rd August 2014, 12:25 PM
ஆமா.வீட்டுக்கு வீடு காமடிப் படமோன்னோ..ஏன் நிம்மி சீரியஸ்… நன்றி ஃபார் த நல்ல சாங்க்..
முத்துராமன் முரடன். அதான் நிம்மி சீரியஸ்.
vasudevan31355
23rd August 2014, 12:26 PM
இன்றைய ஸ்பெஷல் (60)
இன்று ஒரு அரிய, மிக அருமையான பாடல். ஒரு folk டைப் சாங். ஆனால் அதிலேயே இது கிளாஸ் ரகம். அவ்வளவு ரம்மியம். தன் காதலை அழகாக சூசகமாக வெளிப்படுத்தும் காதலி. 'என்னைக் கைவிட்டு விடாதேடா' என்று காதலனுக்குக் கோரிக்கை விடுக்கிறாள். காதலனும் அவளுக்கு நம்பிக்கை கூறி அவளை அரவணைக்கிறான்.
மிக மிக அழகாக எடுக்கப்பட்டதொரு பாடல் காட்சி.
http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/manokar.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/manokar.jpg.html)
'மாதவி' என்ற படத்தில் ஏழைகளான மனோகரும், சௌகாரும் ஒருவரையொருவர் தங்களை மெய்மறந்து காதலிக்க, இவர்கள் காதலை நமக்கு உணர்த்த ஒரு கிரமாத்து காதல் ஜோடி பாடும் அழகானதொரு காதல் பாட்டை அந்த இடத்தில் மிகப் பொருத்தமாகப் புகுத்தி இயக்குனரும், இசையமைப்பாளரும், நடித்தவர்களும் ஒரு காவியம் படைத்து விட்டார்கள் என்றே சொல்ல வேண்டும்.
ரம்மியமான கிராமத்து சூழ்நிலையின் பின்னணியில் படமாக்கப்பட்ட பாடல். தென்னை மரங்கள் சூழ்ந்திருக்க, ரசமான இரவு வேளையில், நிலா வெளிச்சத்தில் மாட்டு வண்டியின் அருகே கிராமத்துக் காதலர்களாக நடன மாஸ்டர் தங்கப்பனும், ஜெமினி சந்திராவும் மிக அழகாக, அமைதியாக ஆடிப்பாட, அந்தப் பாடல் நாயகன் மனோகருக்கும், நாயகி சௌகாருக்கும் அழகாகப் பொருந்த மனோகரும், சௌகாரும் மிக மிக நெருக்கம். இந்தக் காதல் காட்சியில் இவ்விருவரும் காட்டும் நெருக்கம் இன்றுவரை எனக்கு ஆச்சர்யம். அது மட்டுமல்ல. மனோகரும், சௌகாரும் கொள்ளை அழகு. அதுமட்டுமல்ல. இருவரும் சேர்ந்து அழகாகச் செய்யும் அந்த சின்ன சின்ன அன்புச் சீண்டல்கள் மனோகரமாய் இருக்கும்.(மனோகர் தலைமுடியை அழகாகத் தட்டி விடுவார் சௌகார்).
http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/m2-1.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/m2-1.jpg.html)
பின்னாளில் வந்த பல படங்களில் சௌகாரின் ஜாக்கெட்டைப் பிடித்துக் கிழித்து 'தோரஹா' பண்ணிய வில்லன் மனோகருக்கு தன் இளம் வயதில் நாயகனாக சௌகாருக்கு இணை. என்னே காலத்தின் மாற்றம்!
சௌகார் அப்படியே அச்சில் வார்த்த மாதிரி 'மண்வாசனை' ரேவதி போலவே இருப்பார். மனோகரின் மடியில் சாய்ந்து எந்த நேரத்திலும் அவருக்கு 'இச்' கொடுத்துவிடுவாரோ என்று அஞ்சும் அளவிற்கு நெருக்கம்.
படம் நெடுக வரும் அந்த துள்ளல் போட வைக்கும் புல்லாங்குழல் இசை அற்புதத்திலும் அதியற்புதம். நம் கால்கள் நம்மையறியாமல் தாளம் போடும்.
சீர்காழி கோவிந்தராஜனும், எம்.எஸ்.ராஜேஸ்வரியும் இப்பாடலின் தன்மையை உணர்ந்து மிக அழகாகப் பாடியிருப்பார்கள். சீர்காழி தனது 'கணீர்'க் குரலை கொஞ்சம் கம்மி பண்ணி, தாழ்த்தி, மிருதுவாகப் பாடி இப்பாடலில் தூள் கிளப்பியிருப்பார். எம்.எஸ்.ராஜேஸ்வரி அன்று பிறந்த குழந்தையைப் போல் 'இளநீர்க் குரலி'ல் 'கிறீச்' என்று பாடி அசத்தியிருப்பார்.
நடனம் ஆடும் தங்கப்பன் மாஸ்டர் 'அன்னை வேளாங்கண்ணி' படத்தைத் தயாரித்தவர். கமல் அவர்களின் நடன குரு. ஜெமினி சந்திரா சிறந்த நடன நடிகை. 'உத்தம புத்திரனி'ல் 'யாரடி நீ மோகினி' பாடலில் ஆடும் தலைவரின் ஏகப்பட்ட பிகர்களில் இவரும் ஒருத்தி. நிரம்ப அழகானவர்.
'காட்டு மாடு மேய்ந்து பயிர் நாசமாகி தோட்டம் வீணாப் போனாலும் என்ன... இருவரும் காதலித்து சுகம் பெறலாம் அதுதான் இப்போதைக்கு முக்கியம்'
எவ்வளவு அழகான எளிதில் புரியும்படியான வரிகள்! இப்போது என்ன காதலனை 'வாடா போடா' என்று இளசுகள் அழைப்பது? அப்போதே இந்தப் பாடல் பாடும் காதலி தன் காதலனை 'அடா புடா'
என்று செல்லமாக விளிக்கிறாளே!. பாடலின் கவிஞர் அப்போதே எழுதி விட்டாரே.
இனி பாடலின் வரிகள்
http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/thang.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/thang.jpg.html)
தோட்டக்கார சின்ன மாமா
தோப்புக்குள்ளே பாரு மாமா
தோட்டக்கார சின்ன மாமா
தோப்புக்குள்ளே பாரு மாமா
காட்டு மாடு மேயுது பார் அங்கே
என் ஆசை மாமா
காவல் அழகா நடக்குதே அங்கே
என் ஆசை மாமா
காவல் அழகா நடக்குதே அங்கே
தோப்பில் மாடும் மேய்ஞ்சால் என்ன
தோட்டம் வீணா போனால் என்ன
தோப்பில் மாடும் மேய்ஞ்சால் என்ன
தோட்டம் வீணா போனால் என்ன
தோகை மயிலே எந்தன் கிட்டே வா
என் ஆசை மானே
சுகமே பெறலாம் சும்மா கிட்டே வா
என் ஆசை மானே
சுகமே பெறலாம் சும்மா கிட்டே வா
ஆசை கொண்ட மங்கையோடு
ஆயுள் பூரா வாழ வேணும்
ஆசை கொண்ட மங்கையோடு
ஆயுள் பூரா வாழ வேணும்
மோசம் நீயும் செய்திடாதேடா
என் ஆசை மாமா
வாழ்வில் என்னை மறந்திடாதேடா
என் ஆசை மாமா
வாழ்வில் என்னை மறந்திடாதேடா
கவலை நீயும் அடையலாமோ
கலக்கம் வீணே கொள்ளலாமோ
கவலை நீயும் அடையலாமோ
கலக்கம் வீணே கொள்ளலாமோ
உன்னை நானே என்றும் மறவேனே
என் ஆசை மானே
ஒன்று சேர்ந்தே என்றும் வாழ்வோமே
என் ஆசை மானே
ஒன்று சேர்ந்தே என்றும் வாழ்வோமே
தோட்டக்கார சின்ன மாமா
தோப்புக்குள்ளே பாரு மாமா
தோட்டக்கார சின்ன மாமா
தோப்புக்குள்ளே பாரு மாமா
காட்டு மாடு மேயுது பார் அங்கே
என் ஆசை மாமா
காவல் அழகா நடக்குதே அங்கே
என் ஆசை மாமா
காவல் அழகா நடக்குதே அங்கே
தோப்பில் மாடு மேய்ஞ்சால் என்ன
தோட்டம் வீணா போனால் என்ன
தோகை மயிலே எந்தன் கிட்டே வா
என் ஆசை மானே
சுகமே பெறலாம் சும்மா கிட்டே வா
என் ஆசை மானே
சுகமே பெறலாம் சும்மா கிட்டே வா
என் ஆசை மானே
சுகமே பெறலாம் சும்மா கிட்டே வா
தாயுமில்லை தந்தையில்லை
வேறு எனக்கு கதியும் இல்லை.
தாயுமில்லை தந்தையில்லை
வேறு எனக்கு கதியும் இல்லை.
நானும் உன்னை நம்பி வந்தேனே
என் ஆசை மாமா
நாளும் உனக்கே அடிமை ஆனேனே
என் ஆசை மாமா
நாளும் உனக்கே அடிமை ஆனேனே
ஆசையாலே பாசத்தாலே
அன்பினாலே சேர்ந்த நெஞ்சம்
ஆசையாலே பாசத்தாலே
அன்பினாலே சேர்ந்த நெஞ்சம்
பேசிப் பேசி இன்பம் கண்டிடிடுதே
என் ஆசை மானே
பிறவிப் பயனை இன்று கண்டோமே
என் ஆசை மானே
பிறவிப் பயனை இன்று கண்டோமே
தோட்டக்கார சின்ன மாமா
தோப்புக்குள்ளே பாரு மாமா
காட்டு மாடு மேயுது பார் அங்கே
என் ஆசை மாமா
காவல் அழகா நடக்குதே அங்கே
என் ஆசை மாமா
காவல் அழகா நடக்குதே அங்கே
https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=s8X8RDou9-Y
chinnakkannan
23rd August 2014, 12:33 PM
இந்த தோகா.சி.மாமா பாட்டுக் கேட்டதிலலை வாசுசார்.வீடியோ இல்லையா..அழகான ரைட் அப்..மனோகர் செளகார்.எங்கிட்டிருந்து தான் பிடிக்கறீங்களோ..அடுத்து பாலாஜி கே.ஆர்.விஜயாவா.. தாங்க்ஸ் :)
chinnakkannan
23rd August 2014, 12:39 PM
ராஜேஷ்.. த்ரிவேணி பாட்டு இப்ப தான் கேட்டேன் பார்த்தேன்.. அழகு.. தோணி இதிகே வா.. பாமரம் ப்ளிங்குகொண்டு..அதாவது படகு பளிங்குபோல ஆகிடுமாமா ஒரு பருவப் பெண்பாடறச்சே.. நல்ல பாட்டு..தாங்க்ஸ்.
vasudevan31355
23rd August 2014, 12:56 PM
இந்த தோகா.சி.மாமா பாட்டுக் கேட்டதிலலை வாசுசார்.வீடியோ இல்லையா..அழகான ரைட் அப்..மனோகர் செளகார்.எங்கிட்டிருந்து தான் பிடிக்கறீங்களோ..அடுத்து பாலாஜி கே.ஆர்.விஜயாவா.. தாங்க்ஸ் :)
நன்றி சி.க. சார். இரண்டு மூன்றுமுறை கேளுங்கள். அப்புறம் அந்தப்பாடலை விடவே மாட்டீர்கள். என்னது பாலாஜி அண்ட் விஜயாவா? அதெல்லாம் ரொம்பப் பழசாச்சே!:)
mr_karthik
23rd August 2014, 02:03 PM
மலரும் நினைவுகள் (பாட்டுப் புத்தகங்கள்)
கிருஷ்ணாஜி பதித்த குங்குமம் இதழில் வந்த பாட்டுப்புத்தக சேகரிப்பு மற்றும் அது தொடர்பான வாசு அவர்கள் பதிவிட்ட நிழற்படம் ஆகியவற்றை படித்தபோது, பாட்டுப்புத்தகங்களை ஆவலாய் சேகரித்த என் சிறுவயது நினைவுகள் மனதில் எழுந்தன...
வானொலியில் மட்டுமே பாடல்களைக் கேட்க வாய்ப்பிருந்த அந்தக்காலத்தில் பாட்டுப்புத்தகங்களை வாங்கி சேகரித்து, பள்ளிக்கு எடுத்துச்சென்று, இடைவேளைகளின்போது பாடி மகிழ்வது வழக்கம். அப்படி எடுத்துச்செல்லும்போது, பையில் வைத்து கசங்கி மடங்கி கிழிந்து போவதும் உண்டு. அப்போதுதான் ஒருமுறை மண்ணடி தம்புசெட்டித்தெரு, கிருஷ்ணன் கோயில் தெரு முனையில் இருந்த சாந்தி நூலகம் என்ற கடையில் ஒருவர் நிறைய பாட்டுப் புத்தகங்களை சேர்த்து பைண்டு செய்து வாங்கிப்போவதை பார்த்தேன். அப்போதுதான் தோன்றியது இது நல்ல ஐடியாவாக இருக்கே என்று என்னுடைய அனைத்து பாட்டுப்புத்தகங்களையும் இதே முறையில் பைண்டு செய்து பத்திரப்படுத்தலாம் என்று பரிசீலித்தால், அவை பாதிக்குமேல் கிழிந்து போயிருந்தன. சரி புதிதாகவே மீண்டும் வாங்கி பைண்டு செய்வோம் என்று கடைக்குப் போனால் அங்கும் பல படங்களின் பாட்டுப் புத்தகங்கள் மிகவும் பழையதாக இருந்தன.
அப்போதுதான் என் நண்பனின் யோசனைப்படி பதிப்பகத்துக்கே சென்று வாங்கலாம் என்று ஏழுகிணறு பகுதியில் போர்ச்சுகீஸ் சர்ச் தெருவிலிருந்த தனலக்ஷ்மி பதிப்பகத்துக்கு நானும் என் நண்பன் ராஜசேகரும் போனோம். இரண்டு அறைகள். ஒன்றில் பிரிண்டிங் மெஷினுடன் அச்சகம். அடுத்த அறையில் விற்பனைக்கூடம். ஒவ்வொன்றாக கேட்டு வாங்கவேண்டியதில்லை. சுற்றிலும் நான்கு அடுக்கு ராக்கைகளில் ஒவ்வொரு படத்தின் பாட்டுப்புத்தகமும் அடுக்கடுக்காக வைத்திருந்தார்கள். நாம் பார்த்து எடுத்துக்கொள்ள வேண்டியதுதான். பார்த்ததுமே கண்ணைக்கவரும் வண்ணம் அனைத்தும் புத்தம்புதியதாக இருந்தன ஆனால் அனைத்துமே ஏதாவது ஒருவண்ண அட்டைதான். பெரும்பாலும் சந்தன நிறத்தில். கடைகளில் 10 பைசா விற்ற புத்தகங்கள் அங்கு 6 பைசா. அதுவும் கூடுதலாக வாங்கினால் 5 பைசா என்றார்கள்.
நடிகர்திலகம், மக்கள்திலகம், மற்றும் ஜெமினியின் முக்கிய படங்கள், ஸ்ரீதர் படங்கள் என்று கிட்டத்தட்ட 100 படங்களின் பாட்டுப் புத்தகங்களை செலக்ட் செய்தோம். அப்போது அங்கிருந்த விற்பனையாளரிடம் "கலர் கலராக அட்டைப்படம் போட்டவை இல்லையா?" என்று கேட்க, அவர் "அதெல்லாம் படத்தயாரிபாளர்கள் வெளியிடுவது. படங்கள் ரிலீசாகும் நேரத்தில் தியேட்டர்களில்தான் கிடைக்கும்" என்று சொல்லிவிட்டார்.
சரி, அப்படின்னா பழைய படங்களுக்கு அவை கிடைக்க சாத்தியமில்லை. இனிமேல் புதுப்படங்கள் ரிலீசாகும்போது வாங்கிவிட வேண்டியதுதான் என்று முடிவு செய்தேன். வாங்கிய பாட்டுப்புத்தகங்களை முதலில் சொன்ன கடையில், நடிகர்திலகம் படங்கள் ஒரு வால்யூமாகவும், எம்.ஜி.ஆர். மற்றும் மற்றவர்களின் படங்களின் பாடல்கள் இன்னொரு வால்யூமாகவும் பைண்ட் பண்ணச்சொல்ல, அவரோ 'அதெல்லாம் எனக்குத் தெரியாது. வரிசைப்படி நீயே அடுக்கிக்கொடு, அப்படியே பைண்ட் பண்ணித்தாரேன்' என்று சொல்ல அதுபோலவே செய்தேன். இரண்டு தடித்த அருமையான பாட்டுப்புத்தக தொகுப்பாக அமைந்து மனதுக்கு மகிழ்ச்சியூட்டியது.
புதுப்படங்களுக்கு தியேட்டரில் கிடைக்கும் வண்ணமயமான பாட்டுப் புத்தகங்கள் வாங்குவது என்ற முடிவுப்படி முதலில் வாங்கிய படம் 'பதிலுக்கு பதில்' (கொடுமை) . சில படங்களுக்கு நான் போகாவிட்டாலும் (எல்லா படங்களையும் பார்க்க ஏது பணம்) படம்பார்க்க போகின்றவர்களிடம் சொல்லி வாங்கிவரச்சொல்வதுண்டு.
இதுபோக வித்தியாசமான வடிவில் வந்த பாட்டுப் புத்தகங்களையும் தனியாக சேகரித்ததுண்டு. 'சிவந்த மண்' படத்துக்காக வெளியிடப்பட்ட பெரிய சைஸ் பாட்டுப்புத்தகம், 'அன்பே வா' படத்துக்காக கிராமபோன் ரிக்கார்ட் வடிவில் வெளியிடப்பட்ட புத்தகம், 'தங்கை' படத்துக்காக சீட்டுக்கட்டு வடிவில் வந்த புத்தகம், 'என்தம்பி' படத்தின் பேட் வடிவ புத்தகம் என்று பலவற்றை பல இடங்களில் இருந்தும் (அவற்றை வைத்திருந்த சிலரிடம் வெட்கப்படாமல் கேட்டும்) சேகரித்ததுண்டு. பட்டணத்தில் பூதம் படம் வெளியானபோது (பூதம் அடைபட்டிருந்த) ஜாடியின் வடிவத்தில் பாட்டுப்புத்தகம் வெளியானதாம். அது எங்கு தேடியும் கிடைக்கவில்லை.
ஆடியோ கேஸட் யுகம் துவங்கிய பின் பாட்டுப்புத்தகங்கள் சேகரிக்கும் ஆர்வம் படிப்படியாக குறைந்து போனது...
Richardsof
23rd August 2014, 03:58 PM
http://i61.tinypic.com/x44qip.jpg
Richardsof
23rd August 2014, 04:01 PM
http://i62.tinypic.com/kar9jk.jpg
Richardsof
23rd August 2014, 04:03 PM
http://i57.tinypic.com/2yn1ou9.jpg
Richardsof
23rd August 2014, 04:06 PM
http://i59.tinypic.com/2hpoq3n.jpg
chinnakkannan
23rd August 2014, 04:06 PM
கார்த்திக் சார்..பா.பு நினைவலைகள் நன்று..அந்த பைண்ட் வால்யூம்கள் இன்றும் வைத்திருக்கிறீர்களா..
Richardsof
23rd August 2014, 04:11 PM
http://i58.tinypic.com/2j11wl0.jpg
Richardsof
23rd August 2014, 04:13 PM
http://i57.tinypic.com/2jfiqf7.jpg
sss
23rd August 2014, 04:36 PM
விஜய பாஸ்கர் இசையில் (1975) வெளிவந்த " உறவுக்கு கை கொடுப்போம்" படத்தில் உள்ள ஒரு பஞ்சாபி பாடல்.
இசை அரசியும் மென்குரல் மன்னன் ஸ்ரீநிவாசும் பாடியது....
பஞ்சாபி பாடல் தமிழ் படத்தில் என்பது ஆச்சரியமே !!
http://www.inbaminge.com/t/u/Uravukku%20Kai%20Koduppom/folder.jpg
http://www.mediafire.com/listen/1pj886isd67zu8i/Kattinthu_Kalyaathe_Ishyaakung(Punjabi_Song)_PBS_P S_Uravukki_Kai_Koduppom.mp3
கேட்டு மகிழுங்கள்.
Richardsof
23rd August 2014, 04:41 PM
http://i59.tinypic.com/2uxzn6q.jpg
mr_karthik
23rd August 2014, 04:48 PM
என் விருப்பம் (5)
'பொன் அந்தி மாலைப்பொழுது' (இதய வீணை)
1972-ல் மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் இரண்டு படங்களுக்கு சங்கர் கணேஷ் இசையமைத்திருந்தார் (மொத்தமும் இரண்டுதான்) அதில் நான் ஏன் பிறந்தேன் படத்தை அடுத்து இரண்டாவதாக வந்த படம் இதய வீணை. அதுவரை பத்திரிகையாளராக மட்டுமே இருந்த மணியனை திரைப்பட தயாரிப்பாளராக எம்.ஜி.ஆர். உருவாக்கிய படம் இதயவீணை. அதற்கு காரணம் உண்டு. 1970-ல் ஜப்பான் எக்ஸ்போ மற்றும் கிழக்காசிய நாடுகளில் எம்.ஜி.ஆர். உலகம் சுற்றும் வாலிபன் படம் உருவாக பெரிதும் துணையாயிருந்தவர் மணியன். படப்பிடிப்பு நடத்த அனுமதி கிடைக்காது என்று கருதப்பட்ட இடங்களில் கூட தனது சாமர்த்தியத்தையும் செல்வாக்கையும் உபயோகித்து படப்பிடிப்பு நடக்க காரணமாக இருந்த மணியனுக்கு ஏதாவது கைம்மாறு செய்யவேண்டும் என்று நினைத்தார் எம்.ஜி.ஆர். பணமாக அல்லது பொருளாக கொடுத்தால் அது நட்புக்கு கூலியாக மாறி விடக்கூடும். அன்பளிப்பாக எதையும் கொடுத்தால் அது அதிகபட்சம் மணியன் வீட்டு வரவேற்பறையை அலங்கரிக்கும். யாருக்கும் தெரிய வாய்ப்பில்லையென்பதை யோசித்த எம்.ஜி.ஆர். காலாகாலத்துக்கும் மக்கள் மத்தியில் நிலைத்திருக்கிறாற்போல ஏன் மணியனை ஒரு 'எம்.ஜி.ஆர்.படத்தயாரிப்பாளர்' ஆக்கக்கூடாது என்று எண்ணி அவரே மணியனிடம் விவரத்தை சொல்லி, மணியனோடு வித்வான் லட்சுமணனையும் கூட்டு தயாரிப்பாளராக்கி உதயம் ப்ரொடக்ஷன்ஸ் என்ற நிறுவனத்தை துவக்கி வைத்தார். அந்த நிறுவனம் தயாரித்த முதல் படம்தான் 'இதயவீணை' (மணியன் தயாரிப்பாளரான தகவல் உதவி நண்பர் முரளி சீனிவாஸ் அவர்கள்).
ரிக்ஷாக்காரனுக்கு அடுத்து எம்.ஜி.ஆருடன் மஞ்சுளா நடித்து வெளியான இரண்டாவது படம். இதற்கு முன் மஞ்சுளா நடித்து படப்பிடிப்பு நடந்த உலகம் சுற்றும் வாலிபன் மேற்கொண்டு வேலைகள் நடைபெறாததால், அதற்குப்பின் துவங்கப்பட்ட இதயவீணை வெளியீட்டில் முந்திக்கொண்டது. இதற்கு அடுத்த படமாக உலகம் சுற்றும் வாலிபன் வெளியானது.
இதயவீணையில் இன்றைய என் விருப்பமாக வருவது 'பொன் அந்தி மாலைப்பொழுது' என்ற மனதை மயக்கும் ரம்மியமான பாடல். பாடல் வரிகளிலும், இசையமைப்பிலும், படமாக்கப்பட்ட விதத்திலும் அருமையான டூயட்டாக அமைந்தது. அழகிய வண்ணத்தில் எழிலான காஷ்மீர் பின்னணியில் படமாக்கப்பட்ட இப்பாடல் படத்துக்கே ஹைலைட் பாடலாக அமைந்தது. குடியிருந்த கோயில் படத்தில் 'நான்யார் நான்யார் நீ யார்' பாடல் மூலம் திரையுலகில் அறிமுகமாகி அங்கொன்றும் இங்கொன்றுமாக பாடல்கள் எழுதிக்கொண்டிருந்த புலவர் புலமைப்பித்தன் எழுதிய பாடல் இது.
பாடகர்திலகம் மற்றும் இசையரசியின் அருமையான ஹம்மிங்கோடு துவங்கும் இப்பாடலுக்கு மூன்று சரணங்களுக்கும் மூன்று வித்தியாசமான மெட்டைத்தந்து அசத்தியிருந்தார்கள் இன்னிசை வேந்தர்கள் சங்கர் கணேஷ். அவர்களது இசைப்பயணத்தில் இந்தப்படமும், இந்தப்பாடலும் மைல்கல் என்றால் மிகையில்லை.
பொன் அந்தி மாலைப்பொழுது
பொங்கட்டும் இன்பநினைவு
அன்னத்தின் தோகையென்ற மேனியோ
அள்ளிக்கொள் என்று சொல்லும் ஜாடையோ
கொஞ்சி சிரித்தாய் என் நெஞ்சைப்பறித்தாய்
கொஞ்சி சிரித்தாய் என் நெஞ்சைப்பறித்தாய்
(முதல் சரணம் ஒரு மெட்டில்)
மலைமகள் மலருடை அணிந்தாள் - வெள்ளிப்
பனிவிழ முழுவதும் நனைந்தாள்
வருகென அவள் நம்மை அழைத்தாள்
தன் மடிதனில் துயிலிடம் கொடுத்தாள்
இதயத்து வீணையில் எழுகின்ற பாடலின்
இசை நம்மை மயக்கட்டுமே
உதயத்துக்காலையில் விழிக்கின்ற வேளையில்
மலர்களும் சிரிக்கட்டுமே
பொன் அந்தி மாலைப்பொழுது
பொங்கட்டும் இன்ப நினைவு
(அடுத்த சரணம் வேறொரு மெட்டில்)
கட்டுக்கூந்தல் தொட்டுத்தாவி என்னைத்தேடி ஆடிவர
கன்னித்தேனை உண்ணும் பார்வை வண்ணம் நூறு பாடிவர
சொல்லிசொல்லி வழங்கட்டும் கவிதை
எண்ணி எண்ணி மயங்கட்டும் இளமை
எந்நேரமும் உன்னோடு நான்
ஒன்றாகி வாழும் உறவல்லவோ
பொன் அந்தி மாலைப்பொழுது
பொங்கட்டும் இன்ப நினைவு
(மூன்றாவது சரணம் பிறிதொரு மெட்டில்)
ஆடைமூடும் ஜாதிப்பூவில் ஆசை உண்டாக
ஆசைகொண்டு பார்க்கும் கண்ணில் போதை உண்டாக
கண்ணோடு கண் பண்பாடுமோ
என் மேனிதான் என்னாகுமோ
அணைத்திடும் கரங்களில் வளைந்து நின்றாடும்
ஆனந்த அருவியில் சுகம் பல தேடும்
பொன் அந்தி மாலைப்பொழுது
பொங்கட்டும் இன்பநினைவு
அன்னத்தின் தோகையென்ற மேனியோ
அள்ளிக்கொள் என்று சொல்லும் ஜாடையோ
கொஞ்சி சிரித்தாய் என் நெஞ்சைப்பறித்தாய்
கொஞ்சி சிரித்தாய் என் நெஞ்சைப்பறித்தாய்
இந்தப்பாடலில் மக்கள்திலகம் மற்றும் மஞ்சுளாவுக்கு அருமையான கண்ணைக்கவரும் உடைகள். மக்கள்திலகம் முதலில் மஞ்சள், அடுத்து ஆரஞ்சு, இறுதியில் சிவப்பு வண்ணங்களில் பேண்ட் கோட், அணிந்து கூடவே விதவிதமான கூலிங்க் கிளாசும் அணிந்து அசத்த, மஞ்சுளாவும் அதற்கேற்றார்போல வண்ண உடைகளணிந்து நம்மை கிறங்கடிப்பார்.
பாடல் வரிகள், சிறப்பான இசை, அருமையான வெளிப்புறப் படப்பிடிப்பு, பொருத்தமான நாயகன், நாயகி என எப்போது பார்த்தாலும் மனதைக்கவரும் பாடல் 'பொன் அந்தி மாலைப்பொழுது'...
chinnakkannan
23rd August 2014, 05:06 PM
பொன் அந்தி மாலைப் பொழுது..எனக்கும்பிடிக்கும் கார்த்திக் சார்.. நன்றி..அதை நாவலாகவும் படித்திருக்கிறேன்..பக்கத்து வீட்டு மாமி வீட்டில் பைண்ட் புத்தகமாக..
chinnakkannan
23rd August 2014, 05:07 PM
நதியைத்தேடி வந்த கடலில் தவிக்குது தயங்குது ஒரு மனது பாட்டு தெரியும்.. அழகான பாடல்..அதே போல் இந்தப் பாட்டும் அந்தப் படம் என எனக்குத் தெரியாது.. அழகான பாட்டு சுசீலாம்மா எஸ்பிபி..இந்தப் பாட்டும் ஜெயலலிதா சரத்பாபுவா தெரியவில்லை.
*
எங்கேயோ ஏதோ பாட்டொன்று கேட்டேன்
அங்கே வா நீயும் ஆனந்தம் காண்போம்
குளிர் மேகங்கள் பனிக்காலங்கள் பெற வேண்டும் சுகங்களே
பூஞ்சோலை பூந்தென்றலில் பொன்மேனி நடமாடுது
என் நெஞ்சம் தடுமாறுது
நாளோடு நான் சாய்ந்தாடவா
சொல்லாத சுவை கூறவா
சூடான காதல் சொல்லவா
பொன் மாலை நேரம் தேனாடுது
பூ மஞ்சள் மேனி ஏன் வாடுது சொர்க்கத்தைக் கண்டேனம்மா
தாயாகினேன் தாலாட்டினேன்
கண்ணா என் ராஜாங்கமே
நீ தான் என் ஆதராமே
மணிப் பில்லைகள் மான் குட்டிகள்
உறவாடும் தெய்வங்களே
ஒளி வீசும் தீபங்களே
வாடாதா முல்லைப் பூ மேனியே
தேடாமல் வந்த செல்வங்களே
என் ஜீவன் உன்னோடு தான்
*
நதியைத் தேடிவந்த கடல் – மகரிஷியின் கதை. அந்தக் கால ஆனந்த விகடனில் புல் அவுட் குறு நாவல் எனக் கொண்டு வந்தார்கள்..அதில் வெளியானது.. அதை அப்படியே படம் பிடித்திருந்தார்களா என்ன எனத்தெரியாது.அட.இதைத் தொடர்ந்து வாசு சார் போடாத பாடல் நினைவுக்கு வருதே..இருங்க தேடிப் பார்க்கறேன்..
chinnakkannan
23rd August 2014, 05:08 PM
*
அவன் ஒரு டாக்டர்.. நார்த் இண்டியாவில் ஒரு கிராமத்தில் வசிப்பவன்.. அந்தச்சமயம் மழைக்காலம்..ஊருக்கு வெளியில் இருந்த ஆற்றில் கரைபுரண்ட வெள்ளத்தால் ஒரு பஸ் அடிக்கப் பட்டுச் சென்று விடுகிறது..அதில் இருந்த அனைவரும் ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப் பட்டு விட ஒரேஒரு இளம்பெண் கரை ஒதுங்குகிறாள்..ஊர் மக்கள் டாக்டரான இவனிடம் கொண்டு வருகிறார்கள்..
ஆஹா..வெள்ளத்தில் கிடைத்த குறிஞ்சி மலரா..என்ன அழகு இந்தப் பெண்.என வியந்து வைத்தியம் பார்க்கிறான் (அவனுடைய வீட்டில் ஒரே ஒரு அம்மா இவன் பிரம்மச்சாரியாக இருக்கக் கூடாது கல்யாணம் செய்து கொள்ள வேண்டும் எனச் சொல்லிக் கொண்டே இருக்கிறார்.)
இவன் அந்தக் குறிஞ்சிக்கு மருத்துவம் செய்ய கண்விழிக்கிறாள்..ஆனால் அந்த மலர் மலங்க மலங்க முழிக்கிறது… தான் யாரெனக் கேட்கிறது..
இது ஒரு வகை அம்னீஷியா எனப் புரிந்து கொள்கிறான்.. டாக்டரின் அம்மா அந்தப் பெண்ணிடம் குணமாகும் வரை இங்கேயே இரு அம்மா எனச் சொல்லிவிட அவளால் பாரமாக இருக்க விரும்பவில்லை..எனில் ஹாஸ்பிடலிலேயே வேலைபார்க்கிறாள்..அவளது ப்ரில்லியன்ஸ் மூலமாக டாக்டருக்கு அவள் நிறையப் படித்தவள், அதி புத்திசாலி வெகு நல்ல குணமுள்ளவள் எனத் தெரிகிறது…அழகாகவும் இருக்கிறாள்..எனில் அவளது பழைய வாழ்க்கையை மறந்து அவளைத் திருமணம் செய்து கொள்ளலாம் என முடிவெடுத்து முதலில் அம்மாவிடம் பர்மிஷன் கேட்டு ஓகே வாங்கி அவளிடம் கேட்கிறான்..அவளுக்கும் கொஞ்சம் குழப்பம் முதலில்..பின் கொஞ்சம் கொஞ்சமாய் க் கனிந்து சரி என்கிறாள்
ஆனால் எல்லாமே ஸ்மூத் ஆகிவிட்டால் வாழ்க்கையில் எப்படி சுவாரஸ்யம் ஏற்படும்..
ஒரு நாள் ஒரு மனிதன் வருகிறான்..தன் பெயர் ராகேஷ் என்கிறான் டாக்டரிடம்.. குறிஞ்சிப் பெண்ணின் போட்டோ காண்பித்து இது என் மனைவி லலிதா என்கிறான்.பார்த்தீர்களா என டாக்டரிடம் கேட்கிறான்..
டாக்டர் திகைக்கிறார்..
பின் அவனிடம் லலிதாவின் நிலைமையைச் சொல்லிக் காட்டுகிறார்..அவன் கொஞ்சம் லலிதாவிடம் பேச்சுக் கொடுக்க லலிதாவிற்கோ (இப்போது குறிஞ்சி) அவன் தன் கணவன் எனச் சிறிதும் நினைப்பே வரவில்லை..
இன்னும் கொஞ்சம் முயற்சி செய்து பார்த்துவிட்டு அந்தக் கணவன் டாக்டரிடம்- டாக்டர் நீங்கள் தான் இந்தப் பெண்ணிற்கு மறு ஜனனம் கொடுத்தீர்கள்..உங்களைப் பற்றி பேசும் போது அவளின் கண்களில் நாணம் மின்னல் எல்லாம் பார்க்கிறேன்..என் லலிதாவிடம் நான் பார்த்தறியாத ஒன்று.. நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்றால் குறிஞ்சியை மணம் செய்துகொள்ளுங்கள்.. நான் விலகுகிறேன்” என ராகேஷ் விலகிச் செல்கிறான்..
இதுவும் ஆனந்த விகடனில் வந்த தொடர்கதை தான்..ஜனனம் என்ற தலைப்பு என நினைக்கிறேன்..வாஸந்தியின் மென்னெழுத்துக்களில் மனதை வருடும் தொடர்..மாருதியின் உயிரோவியங்கள் மனதை அள்ளும்..
சில காலம் அட்லீஸ்ட் ஒருவருடம்கழித்து ஸ்ரீதர் சிவகுமார் ஜெயஸ்ரீயை வைத்து எடுத்தார்.. தலைப்பு யாரோ எழுதியகவிதை.. க்ளைமாக்ஸை மாற்றி டாக்டர் அந்த் க் கணவனிடம் செர்த்து வைப்பதாகச் செய்திருந்தார் என நினைக்கிறேன்..அதனாலேயே அது தோல்வி அடைந்திருக்கும்..(இதையே தழுவி பாக்யராஜ் வீட்ல விசேஷங்க எடுத்தார் பிற்காலத்தில்)
இதில் பலபாடல்கள் இருந்தாலும் தெரிந்தபாடல்.. கேஜே ஜேசுதாஸ் வாணி ஜெயராம்..இசை இளைய ராஜா..
ம்ம் வாசு சார் மற்றவர்கள் அனலைஸ் செய்திருக்க மாட்டார்க்ள் என நினைக்கிறேன்.. நாராயணா காப்பாத்து..
*
பருவம் கனிந்து வந்த பாவை வருக
புடவை அணிந்து வந்த பூவே வருக
ஆஹா சொந்தம் ஆனந்தம்
சுகம் தெய்வீகம் இது நிரந்தர வரம் தரும்
கண்ணோடு கண்ணாக ஒன்றோடு ஒன்றாக
பருவம் கனிந்து வந்த பாவை இவளே
புடவை அணிந்து வந்த பூவும் இவளே
யாரோ எழுதிய கவிதை மனப் பாடம் செய்தேன் வரிகளை
காதல் பருவம்கனிந்து வந்த பாவை இவளே
புடவை அணிந்து வந்த பூவை இவளே..
அன்பே கண்ணால் பேசுங்கள் போதும்
நெஞ்சில் நிலா காயுமே உயிருக்குள் சுகம் வருமே
ஒரே புன்னகை போதும் உள்ளே வெள்ளம் பாயுமே
நிலவொன்றுகண்ணீரில் மிதந்தது அப்போது
கறைகளும் இல்லாமல் கரைவந்ததிப்போது
தோளை சேர்த்து மாலை மாற்று..
*
அடுத்த பாட்டில் வரட்டா..
Gopal.s
23rd August 2014, 06:34 PM
என் அம்மா கிட்டதட்ட தன்னுடைய சிறு வயது முதலான தனது ஸ்டாம்ப் ஆல்பத்தை என்னிடம் கொடுத்தார்.(கிட்டத்தட்ட 500 வேறு வேறு நாடுகளின் ).எங்களுடன் வளர்ந்த என் அக்கா போன்றவர் , நூலகம் செல்லும் வழக்கம், தொடர்களை கிழித்து ,சேர்த்து வைத்து ,நாங்களே தைத்து bind பண்ணும் கலையை கற்று கொடுத்தார்.(நான் முதலில் கிழிக்க ஆரம்பித்த தொடர்கள் ஒளிவதற்கு இடமில்லை,(குமுதம்),இரண்டு பேர் (கல்கண்டு),நினைத்தேன் வந்தாய் (ஆனந்த விகடன்),சுழி காற்று (கல்கி) ).அப்போதெல்லாம் ,வீட்டிலேயே பம்ப் வைத்து எங்கள் சைக்கிள் நாங்களே காற்றடிப்போம். பஞ்சர் ஓட்ட dunlop solution ,emery sheet (கட்டையில் சுற்றியது),சுத்தி,spanner ,screw டிரைவர் ,பழைய tube collection உண்டு. (பழைய tyre தூக்கி எரியாமல் வைத்து உருட்டி விளையாடுவோம்).பாட புத்தகத்தை நாங்களே bind செய்து ,அட்டை போட்டு label ஓட்டுவோம்.பெரிய தோட்டம். நாவல் மரம்,வாழை (மொந்தன்,ரஸ்தாளி,பூவன்),மாமரங்கள் (பெங்களுரா கிளி மூக்கு,பங்கன பல்லி ,தாடி பசந்த் என்ற ஜூஸ் மாம்பழம்,எலுமிச்சை மரங்கள், தக்காளி,வெண்டை,உருளை,வெங்காய செடிகள்.ஆப்பிள் ,பலா மரங்கள் எங்கள் நெய்வேலி தோட்டம். நாங்களே பாத்தி கட்டி ,களை வெட்டி ,தண்ணீர் விட்டு....(விடுங்கள் ரேடியோ காலம்)
வெளி கேம்ஸ். செவென் ஸ்டோன்ஸ்,உப்பு,கல்பாரி,மர கவுண்டி,பாண்டி,பம்பரம்,கிட்டிபுள்,கபடி,பால் பாட்மிட்டன்,foot ball ,கிரிக்கெட்,கேரம்,சீட்டு, என்று மூட்,சீசன்,செட் பொறுத்து. அதை தவிர முக்கியமாய் கோலி .இந்த விளையாட்டிற்கு சிகரெட் அட்டை ரொம்ப முக்கியம். யானை படம் போட்டது 100. scissors 50.passion show (தொப்பி) 25 என்று இதுதான் exchange value .இதை பொறுக்க கடை கடையை தெரு தெருவாய் விஜயம்.இன்று சிகரெட் தொடாமல்,மற்றோரை மாற செய்யும் நான்,அன்று உலகத்தில் எல்லோரும் புகை பிடிக்க மாட்டார்களா என்று ஏங்கியது நகை முரண்.(அதுவும் costly யானை brand )
அடடா...பாட்டு புஸ்தகம் மறந்தேனே? என்னுடைய சொந்த முயற்சியில் நான் சேர்த்த பழக்கம்.சினிமா நோட்டீஸ் மற்றும் பாட்டு புத்தகங்கள். புது படங்களுக்கு தியேட்டர் ஸ்டால் கிடைக்கும்.(10-15 பைசா). பழசுக்கு ,வடலூர் தை பூசம்,வேலுடையான் பட்டி பங்குனி உத்திரம் என்று நடை பாதை கடைகள். கிட்டத்தட்ட 200-250 புத்தகங்கள். சோக கதை என்னவென்றால்,கல்லூரி போகும் போது ,மூன்று பெரிய trunk பெட்டிகளில், bind கதைகள், சிவாஜி பாட்டு புத்தகங்கள்,notice ,சஞ்சிகைகள்(திரை கதிர்,குண்டூசி,சித்ராலயா ,சிவாஜி ரசிகன் ETC ), ஆவணங்கள் எல்லாமே அடக்கம். வீட்டில் இடம் போதாமல் ஷெட் போட்டு இவை சேகரம். ஐந்தாம் செமஸ்டர் விடுமுறை. எல்லாம் எடுத்து பார்க்கலாம் என்று தூக்கினால் செம கனம் . பூட்டை திறந்து (முப்பந்தைந்து பைசா பூட்டு ஒன்று)பார்த்தால் உள்ளே மண்ணுக்கு நடுவில் அரித்து போன காகித மிச்சங்கள்.இரண்டு நாள் தொடர்ந்து அழுதிருக்கிறேன்.
Gopal.s
23rd August 2014, 06:46 PM
கார்த்திக் ,
சங்கர்-கணேஷ் ஒரு பேட்டியில் சொன்னது. முதலில் புக் ஆன எம்.ஜி.ஆர் படம் இதய வீணை தானாம். நான் மாமனார் தயவில் நான் ஏன் பிறந்தேன் முதல் படம் என்று நம்பி கொண்டிருந்தேன்.சங்கர் ராமன் என்ற சங்கர் எம்.எஸ்.வீ-டி.கே.ஆர் குரு என்று போற்றும் மேதை சுப்பராமன் தம்பி. கணேஷ், வேலுமணி பெண் விஜய சந்திரிகாவை ,மாமனார் விருப்பமின்றி மணந்தவர்.
எம்.ஜி.ஆர் பாடல் பதிவில் உட்கார்ந்தாராம். முதலில் பல்லவி. ஒரு 30 போட்டும் எதுவும் தேறல்லையாம். எம்.ஜி.ஆர் எல்லாவறையும் ஞாபகம் வைத்து, அந்த 8வது ஆரம்பம், 15 ஆவது நடு , நாலாவது முடி என்று ஒட்டி பாடல் உருவானதாம். கலப்பு அவியலாக இருப்பதில் ஆச்சரியம் இல்லை.
இந்த படத்தில் என் விருப்ப பாடல் நீராடும் அழகெல்லாம்.(இசையரசி விளையாடி இருப்பார்)
Gopal.s
23rd August 2014, 06:48 PM
vasu,
manohar-sowkar song ,brilliant narration. kudos to you.
Richardsof
23rd August 2014, 08:37 PM
இனிய நண்பர் கார்த்திக் சார்
மக்கள் திலகத்தின் இதய வீணை - பொன்னந்தி மாலை பொழுது - பாடல் பற்றிய விரிவான அலசல் மிகவும் அருமை .
நன்றி . உங்களுக்காக இதய வீணை வீடியோ .
http://youtu.be/qxHDwqg1ygo
chinnakkannan
23rd August 2014, 08:39 PM
//உள்ளே மண்ணுக்கு நடுவில் அரித்து போன காகித மிச்சங்கள்.இரண்டு நாள் தொடர்ந்து அழுதிருக்கிறேன். // ஹையாங்க்..எனக்கும் உங்கள் சோகம் தொற்றுகிறது கோபால் சார்..
இந்த பைண்ட் வால்யூம்கள் என் சகோதரி தான் செய்து வைத்திருந்தார்..கொஞ்சம் பத்தாம்கிளாஸ் தருவாயில் பர்ணில் ஏதோ தேடப் போகையில் எனக்குக் கிடைத்தன.. ராஜமுத்திரை பாகம் ஒன்று இரண்டு, மிலாட், எனக்கென்று ஓர் இதயம், ராஜ திலகம், அவன் அவள் அவர் புனிதன் பூங்காற்று ஜ.ரா.சுந்தரேசன், மின்னல் மழை மோகினி ஜாவர், பணம் பெண் பாசம் என பெரிய லிஸ்ட்..ஒவ்வொன்றாய் எடுத்து லீவில் படித்தது பரம சுகமாய் நினைவில்..இப்போ எங்கிட்டு இருக்கோ..
madhu
24th August 2014, 04:26 AM
ஆஹா.. மிதிலா விலாஸ், பொன்னியின் செல்வன், இது சத்தியம், படகு வீடு, மலர்கள், வேங்கையின் மைந்தன் தொடங்கி கதம்பாவின் எதிரி, ராஜமுத்திரை, சத்திய வெள்ளம் என்று ஓடி மறுமுறை பதியப்பட்ட அலை ஓசை, சிவகாமியின் சபதம், உடல் பொருள் ஆனந்தி வரைக்கும் ஏறக்குறைய ரெண்டாயிரம் புத்தகங்கள்... கடலளவு கரையான் சாப்பிட கையளவு தப்பித்தன்.. ( அதிலும் அந்தக் கால பொன்னியின் செல்வன் ஐந்து பாகங்களும் அப்படியே கிடைத்தது விசேஷம் )... அனுத்தமாவின் நைந்த உள்ளம் நையாமல் இருந்ததும் ஆச்சரியம். பாட்டு புத்தகங்களில் தெருவோரம் வாங்கிய பத்து, பனிரெண்டு எஸ்கேப் ஆயின. ஆனாலும் மூர் மார்க்கெட் வாசலில் தேடிப் பிடித்து வாங்கிய பல அரிய பாட்டுப் புத்தகங்கள் ( படம் ரிலீஸ் ஆகும்போது தியேட்டரில் விற்கும் ஒரிஜினல்கள் மிஸ் ஆயிட்டா எப்போதாவது அப்பாவுடன் மூர் மார்க்கெட் போகும்போது குடை குடை என்று குடைந்து ஆர்ப்பாட்டம் செய்து வாங்கி வைத்தவை ) எல்லாம் போயே போச்சே !
கோபால் ஜி... நெய்வேலி வீட்டுத் தோட்டங்கள் அலாதியானவை. மெயின் பஜார் இந்தியன் காபி ஹவுஸ் பிற்பகல் பஜ்ஜி... செவ்வாய் சந்தை வாழைப்பழ ஏலம்... மந்தாரக்குப்பம் கண்பதி, சென் ட்ரல் பஸ் ஸ்டாண்டு அமராவதியில் சினிமாக்கள், மாத ஆரம்பத்து பே டே பஜாருக்கு சைக்கிளில் போய் சுற்றுவது என்று அது ஒரு பொற்காலம்....
Gopal.s
24th August 2014, 04:48 AM
ஆஹா.. மிதிலா விலாஸ், பொன்னியின் செல்வன், இது சத்தியம், படகு வீடு, மலர்கள், வேங்கையின் மைந்தன் தொடங்கி கதம்பாவின் எதிரி, ராஜமுத்திரை, சத்திய வெள்ளம் என்று ஓடி மறுமுறை பதியப்பட்ட அலை ஓசை, சிவகாமியின் சபதம், உடல் பொருள் ஆனந்தி வரைக்கும் ஏறக்குறைய ரெண்டாயிரம் புத்தகங்கள்... கடலளவு கரையான் சாப்பிட கையளவு தப்பித்தன்.. ( அதிலும் அந்தக் கால பொன்னியின் செல்வன் ஐந்து பாகங்களும் அப்படியே கிடைத்தது விசேஷம் )... அனுத்தமாவின் நைந்த உள்ளம் நையாமல் இருந்ததும் ஆச்சரியம். பாட்டு புத்தகங்களில் தெருவோரம் வாங்கிய பத்து, பனிரெண்டு எஸ்கேப் ஆயின. ஆனாலும் மூர் மார்க்கெட் வாசலில் தேடிப் பிடித்து வாங்கிய பல அரிய பாட்டுப் புத்தகங்கள் ( படம் ரிலீஸ் ஆகும்போது தியேட்டரில் விற்கும் ஒரிஜினல்கள் மிஸ் ஆயிட்டா எப்போதாவது அப்பாவுடன் மூர் மார்க்கெட் போகும்போது குடை குடை என்று குடைந்து ஆர்ப்பாட்டம் செய்து வாங்கி வைத்தவை ) எல்லாம் போயே போச்சே !
கோபால் ஜி... நெய்வேலி வீட்டுத் தோட்டங்கள் அலாதியானவை. மெயின் பஜார் இந்தியன் காபி ஹவுஸ் பிற்பகல் பஜ்ஜி... செவ்வாய் சந்தை வாழைப்பழ ஏலம்... மந்தாரக்குப்பம் கண்பதி, சென் ட்ரல் பஸ் ஸ்டாண்டு அமராவதியில் சினிமாக்கள், மாத ஆரம்பத்து பே டே பஜாருக்கு சைக்கிளில் போய் சுற்றுவது என்று அது ஒரு பொற்காலம்....
வயிற்றெரிச்சலை ஏன் கேட்கிறீர்கள்?இதில் என் அம்மா தந்த தில்லானா மோகனம்பாள்(துப்பறியும் சாம்பு சித்திர கதையாக இதில் இணைப்பு),மிதிலா விலாஸ்,காஞ்சனையின் கனவு,பெண் மனம்,பொன்னியின் செல்வன்,சிவகாமியின் சபதம்,உடல் பொருள் ஆனந்தி,மின்னல் மழை மோகினி,படகு வீடு,இது சத்தியம்,மறுபடியும் தேவகி ,யவன ராணி நானே சேர்த்த புரபசர் மித்ரா,23 ஆம் படி ,ஹேமா ஹேமா ஹேமா,மூவிரண்டு ஏழு,வயது பதினேழு,அணைக்க அணைக்க,ஜலதீபம்,ராஜமுத்திரை,அன்புள்ள ஆறாம் வேற்றுமை,நாளை வந்தே தீரும்,இன்றிரவு,எனக்கென்று ஒரு இதயம்,அப்புசாமியும் ஆப்பிரிக்க அழகியும்,மாணவர் தலைவர் அப்புசாமி,தூக்கு மர நிழலில் ,என்று ஒரு 150 bind புத்தகங்கள். முக்கிய வயிற்றெரிச்சல் சித்திர கதைகள். காதல் காவலர் அப்புசாமி,ரத்ன சாமிக்கு ஜே,குண்டு பூபதி,ஆறாவது விரல்,நடு வானத்தில்,முகமூடி,சிலையை தேடி,என்று ஒரு இருபது சித்திர தொடர்கள்.தமிழ் மக்களை விட கரையானுக்கு அறிவு தாகம் அதிகம் போலும். நல்லதை நாடி பெற்று ஜீரணித்தும் விட்டன.
நெய்வேலி ஸ்பெஷல் என்றால் இந்தியன் காபி ஹவுஸ் சிப்ஸ்,ரோஸ் மில்க்,அம்பாள் கபே முறுகல் ரோஸ்ட்,பாதாம் அல்வா,லட்சுமி பேகரி puffs ,ஆப்பிள் கேக், payday சந்தை ஜி.டீ .நாய்டு பேனா,டி சட்டைகள்,டெரிலின் சட்டை, வாரா வார நெய்வேலி சந்தை வாழை பழ பேரம். அந்த ஊரால்தான் எனக்குள் கவிதையும் ,எழுத்தும் மிச்சம் உள்ளன.
Gopal.s
24th August 2014, 05:26 AM
நவ்ஷாத் (1919-2006)
நடிகர்திலகம் சிவாஜியை எப்படி திலிப் குமார்,ராஜ் கபூர்,தேவ் ஆனந்த்,சஞ்சீவ் குமார்,சுனில் தத் ,அமிதாப்,என்.டி.ஆர்,ஏ.என்.ஆர்,ராஜ் குமார்,மது,சத்யன்,மம்முட்டி,மோகன்லால்,கமல்,ரஜினி,ப ாரதி ராஜா,பாலு மகேந்திரா எல்லோரும் கொண்டாடுகிறார்களோ ,அது மாதிரி இசை துறையில் விஸ்வநாதன் ,இளைய ராஜா,ரகுமான் இவர்களால் குரு ஸ்தானத்தில் வைத்து கொண்டாட படுபவர் நௌஷாத்.இவர் பஞ்சாபை சேர்ந்த இஸ்லாமியர். சிறு வயதில் உஸ்தாத் அலி போன்றோரிடம் ஹிந்துஸ்தானி இசை பயின்றாராம்.இவர் ஹர்மோனியம் ,பியானோ,தபலா வாசிப்பில் பயிற்சி பெற்று,ராயல் தியேட்டர் ,லக்னோ வில் மௌன படங்களுக்கு ,live ஆக வாசிக்கும் பணியில் இடம் பெற்றது ,இவரது கம்போஸிங் பயிற்சிக்கு ஆரம்ப உரம் இட்டது. காம் சந்த் என்பவரை இவர் கடைசி வரை நினைவு கூர்ந்துள்ளார் குரு என்று.பிரேம் நகர் (1940) இவரது முதல் படம். இவர் ஒரு டான் பிராட்மன் போல. நூறுக்கும் குறைவான படங்களுக்கு இசையமைத்து ,35 சில்வர்,12 கோல்டன் ,3 டைமண்ட் ஜுபிலி ஹிட்ஸ் தந்தவர்.
சாதனைகள்-
முதல் முதல் ,இந்திய திரைப்பட இசையை classical ராகங்களை நோக்கிய திசையில் திருப்பியதுடன் இன்றி பல்வேறு சோதனை முயற்சிகள் செய்தவர்.
முதல் ஆஸ்கார் சென்ற இந்திய படமான மதர் இந்தியா இசையமைப்பாளர்.
voice தனியாக sound mixing தனியாக செய்த முதல் இந்திய composer .
இணைப்பு இசையை முயன்றவர். புல்லாங்குழல்-கிளாரினெட்,சிதார்-மாண்டலின் இப்படியெல்லாம்.
பீ.ஜி.எம் என்னும் பின்னணி இசையில் மிக கவனம் செலுத்தி பாத்திரங்களின் மூட்,உணர்வு,கதையின் தன்மை இவற்றுக்கேற்ப செய்தவர். மூட் மியூசிக் செய்த முதல் ஆள்.(தமிழில் கே.வீ.மகாதேவன்)
ஆன் படத்தில் 1952 இலேயே 100 piece archestra வைத்து,western notation கொண்டு வந்தவர்.(லண்டனில் புத்தக வடிவில் வெளியிட பட்டது)
choral sounds மட்டும் வைத்து,இசை கருவிகள் இல்லாமல் பாடல்கள் செய்துள்ளார்.
பியார் கி ஆஜா என்ற முகலே ஆசம் பாட்டில் echo சவுண்ட் .
அது மட்டும் இன்றி கங்கா ஜமுனா படத்தில் போஜ்புரி இசை .
ரபி,தலத்,லதா,நூர்ஜஹான் இவர் அறிமுகமே.
சோகம் என்னவென்றால், 40 களில் 50களில் என்று ஆரம்ப 60 கள் வரை கோலோச்சியவர் 60 களில் rock &roll trend வந்ததால் மதிப்பிழந்தார்.
இவர் விஸ்வநாதன்-ராமமூர்த்தி ரசிகர் என்பது கூடுதல் தகவல். ஆத்மி(ஆலயமணி),ஸாத்தி (பாலும் பழமும்) முதலிய V -R மூல படங்களின் இசைக்கு re -make இல் தன்னால் ஈடு கொடுக்க முடியாததை வெளிப்படையாக ஒப்பு கொண்டவர்.
குறிப்பிட பட வேண்டிய படங்கள்.
நயா துனியா- 1942.
தீதார்- 1951.
ஆன் -1952.
பைஜு பாவ்ரா- 1954.
உரான் கட்டோலா -1955.
மதர் இந்தியா-1957.
கோகினூர்- 1960.
முகலே ஆஸம் -1960.
மேரே மெஹபூப்- 1963.
லீடர்- 1964.
ராம் அவுர் ஷ்யாம் -1967.
ஆத்மி- 1968.
ஸாத்தி- 1968.
பகீஸா -1972.
Gopal.s
24th August 2014, 05:40 AM
Naushad Songs.
மொ ஹே பங்க்பட் பெ- முகலே ஆஸம் .
https://www.youtube.com/watch?v=H4y8tXUlJjA
பியார் கி யா தோ டர்ணா கா -முகலே ஆஸம்
https://www.youtube.com/watch?v=TdOS-0sIW-Y
துனியா தும் மெய்ன் -மதர் இந்தியா.
https://www.youtube.com/watch?v=RjYhUk6M0iM
மதுபன்னு மெய்ன் ராதிகா - கோஹினூர்.
https://www.youtube.com/watch?v=2yiG24KHpRA
Gopal.s
24th August 2014, 07:16 AM
இசையரசி நீராடும் அழகு. வா என்று சொல்லும் நளினம் இவரால் வாவுக்கே பெருமை.(வாட்டியவரல்லவா -கலை கோவிலில் இசையரசி)
இதய வீணையை மீட்டுகிறார்.
https://www.youtube.com/watch?v=cm_Xa_T9J4k
Gopal.s
24th August 2014, 07:25 AM
சின்ன கண்ணன்,
திரி நண்பர்களின் சிறுகதைகள் என்று ஒரே திரியாக தொடங்கி நாம் எல்லோரும் பங்கு பெறலாமே? ஒரு யோசனை மட்டுமே.
RAGHAVENDRA
24th August 2014, 08:15 AM
சின்ன கண்ணன்,
திரி நண்பர்களின் சிறுகதைகள் என்று ஒரே திரியாக தொடங்கி நாம் எல்லோரும் பங்கு பெறலாமே? ஒரு யோசனை மட்டுமே.
Tamil Literature forum is already there. we can use it.
chinnakkannan
24th August 2014, 08:33 AM
குட் மார்னிங்க் ஆல்..:)
23 ஆம் படி இன்னும் இருக்கிறதா கோபால்..வெகு நாளாகத் தேடிக் கொண்டிருக்கிறேன். ரா.கி.ர வின் த்ரில்லர்.. மறுபடியும் தேவகி புக் கங்கை புத்தக நிலையம் வெளியிட்டது.. சிலையைத் தேடியும் விரும்பிப் படித்த சித்திரத்தொடர்..வாண்டுமாமாவின் மரகதச் சிலை மட்டும் ரி.ப்ரிண்ட் பண்ணினார்கள்.. தி.மோ..மதுண்ணா ப.வீ மாமி வைத்திருந்தார் முதல் பாகம்..இரண்டாம் பாகம் ஒரு தவம் போல் மூன்று நாட்கள் சிம்மக்கல் லைப்ரரி போய்ப் படித்து வந்தேன்..
பாடல்களுக்கு நன்றி..
திரி நண்பர்க்ளுக்குத் தானே ஸ்டோரீஸ் கதைகள் த்ரெட் இருக்கிறதே..ராகவேந்த்ர் சார்.. இரண்டுமூன்று வருடங்க்ளுக்கு முன் பாட்டுக்குப்பாட்டு நண்பர்கள் சேர்ந்து டிராமா தொடர் எழுதி அதகளம் செய்தோம்..அதாவது இது அவுட்லைன்..இதான் உங்கள் கேரக்டர் என்று கொடுத்து விடுவோம்..கதை எங்கிட்டெல்லாமோ போகும்..மதுண்ணா மெய்ன் கேரக்டர்..முழுங்கு பாப்பா..சிம்ப்ப்ளி ஹிலாரியஸ்..சிவன் தான் திரி கொளூத்திப் போட்டு மாயமாகி விடுவார்..
வாசு சார் வந்து இ.ஸ்பெ தரட்டும்.. நான் இப்போ ஆஃபீஸ்கிளம்புகிறேன்..
அன்புடன்
சி.க.
madhu
24th August 2014, 08:45 AM
இரவின் மடியில்
இந்தப் பாடலும் நம்மை அந்தக் காலத்திற்கே அழைத்துச் செல்லும் பாடல்.. இந்த மகிமை விஜயபாஸ்கர் இசைக்கு அதிகம் உண்டு. ஆங்கிலத்தில் கூறுவதென்றால்.. Oh... what a melody.... சுகமான இரவில் இது போன்ற பாடல்களை மெமரி கார்டில் பதிவு செய்து கொண்டு ஒரு ஐபாடிலோ டேபிலோ ப்ளேயரில் இயங்க விட்டு கடற்கரை மணலில் இரவு 10 மணிக்கு மேல் சாய்ந்து கண்களை மூடிக் கொண்டு கேட்டுக் கொண்டே இருக்க வேண்டிய பாடல்..
கோபால் சாரின் இரவின் மடியில் சூப்பர் தொடர்.. அவருக்கு பாராட்டுக்கள் மற்றும் நன்றிகள்.. இந்த இனியை வாய்ப்பைத் தந்ததற்காக. மற்றும் என்னுடைய புதிய இணைய இணைப்பிற்கும் தான்..
காலமடி காலம் படத்திலிருந்து தொடங்கலாம்....
நான் பாட்டின் பல்லவியை சொன்னேன்..
http://www.inbaminge.com/t/k/Kaalamadi%20Kaalam/
வீடியோ இதோ
http://youtu.be/K-k8kmplzCo
Richardsof
24th August 2014, 09:05 AM
SUNDAY SPECIAL - OLDEN DAYS WEEKLY MAGAZINE COLLECTION.
http://i58.tinypic.com/spej3l.jpg
Richardsof
24th August 2014, 09:08 AM
http://i61.tinypic.com/10pvub5.jpg
Richardsof
24th August 2014, 09:09 AM
http://i61.tinypic.com/i542fm.jpg
Richardsof
24th August 2014, 09:10 AM
http://i58.tinypic.com/2h73x52.jpg
Gopal.s
24th August 2014, 09:34 AM
Thanks Esvee.
chinnakkannan
24th August 2014, 09:55 AM
Thanks s.v sir.. azhagaana oviyangkaL..
Richardsof
24th August 2014, 10:27 AM
RARE STILLS
http://i58.tinypic.com/2r2m8ms.jpg
Richardsof
24th August 2014, 10:28 AM
VERY SURPRISE STILL
http://i61.tinypic.com/160epgx.jpg
Richardsof
24th August 2014, 10:29 AM
http://i60.tinypic.com/2qvfjq1.jpg
Richardsof
24th August 2014, 10:30 AM
http://i62.tinypic.com/ifd9hv.jpg
mr_karthik
24th August 2014, 10:46 AM
டியர் வினோத் சார்,
அன்றைய வார இதழ்களின் அட்டைப்படங்கள் அருமை. அப்படியே பழைய காலங்களுக்கு இட்டுச்செல்கின்றன.
கோபால் சார், மது சார், சின்னக்கண்ணன் சார்,
வார இதழ்களில் வந்து, வாராவாரம் சிரத்தையாக கிழித்து பைண்ட் செய்யப்பட்டு பாதுகாக்கப்பட்ட தொடர்கதைகளின் பைண்ட் வால்யூம்களைப்பற்றிய மலரும் நினைவுகள் அருமை. எங்கள் வீட்டிலும் இதுபோன்ற பல வால்யூம்கள் இருந்தன. குறிப்பாக சாண்டில்யனின் யவனராணி, கடல்புறா, ராஜமுத்திரை, நங்கூரம் (எனக்குத் தெரிந்து அவர் எழுதிய ஒரே சமூக நாவல். சரித்திர கதை வாடையிலே எழுதியதால் எடுபடவில்லை). பெரும்பாலும் எல்லோர் வீட்டிலும் இருந்த மின்னல் மழை மோகினி, மிதிலாவிலாஸ், மெரினாவின் ஊர்வம்பு (நாடகம்), புதிருக்குப்பெயர் ரஞ்சனா என்ற சித்திரக்கதை, இப்படி நிறைய இருந்தன. இப்போது என்னாயிற்று என்று தெரியவில்லை. கரையான் அரித்ததாக நினைவில்லை. இரவல் வாங்கிச்சென்ற பலர் திருப்பித்தரவில்லை என்றே ஞாபகம்...
mr_karthik
24th August 2014, 10:53 AM
டியர் வினோத் சார்,
நீங்களெல்லாம் நடிகர்திலகம் திரியில் பங்குகொள்ள (எங்களில் சிலருக்கு விதிக்கப்பட்டது போல) எந்த தடையுத்தரவும் இல்லையே. இந்த ஸ்டில்களை அங்கேயே பதிக்கலாமே...
Richardsof
24th August 2014, 11:03 AM
very nice telugu song
http://youtu.be/3Oay0cqA2u8
Richardsof
24th August 2014, 11:07 AM
http://youtu.be/PLdy7MCtRWs
chinnakkannan
24th August 2014, 11:20 AM
//நங்கூரம் (எனக்குத் தெரிந்து அவர் எழுதிய ஒரே சமூக நாவல். சரித்திர கதை வாடையிலே எழுதியதால் எடுபடவில்லை). //கார்த்திக் சார்.. மனமோகம் நு இன்னொரு சமூக நாவல் சாண்டில்யன் எழுதியிருக்கிறார்..ஆனந்த விகடனில் வந்தது.. எனக்கு ஒரு சின்ன வருத்தம் என்ன வென்றால் ஜீவ பூமி ந.தி சரோஜாதேவியை வைத்துஎடுக்காமற் போனது தான்..நல்ல நாவல்.. கதானாயகனுக்கு வெகு பொருத்தம் ந.தி.ரதன் சந்தாவத் சலூம்ப்ரா என நினைவு..
rajeshkrv
24th August 2014, 11:20 AM
எஸ்.வி ஜி
ஸ்டில்ஸ் எல்லாமே சூப்பர்.
வாசு ஜி காலை வணக்கம். என்ன சேட்டா சுகந்தன்னே
rajeshkrv
24th August 2014, 11:27 AM
வாசு ஜி
உங்களுக்காக அழகு தேவதை ஜெயப்பிரதா மற்றும் சூப்பர் ஸ்டார் கிருஷ்ணா நடித்த ஸ்ரீ ராஜேஸ்வரி விலாஸ் காபி கிளப் திரையிலிருந்து
பெண்டியாலாவின் இசையில் இசையரசியின் குரலில்
ஒரு கிரிஸ்துவ பையனும் ஐயராத்து பெண்ணும் லவ் பண்ணும் கதை
https://www.youtube.com/watch?v=2MSQxe-M9ps
rajeshkrv
24th August 2014, 11:35 AM
கொஞ்ச நாள் முன் சூர்ய கலா பற்றி அலசினோமே
இதோ அவர் ஆடிய பரத நாட்டியம்
https://www.youtube.com/watch?v=_6kOGI8cI3M
mr_karthik
24th August 2014, 11:44 AM
எனக்கு ஒரு சின்ன வருத்தம் என்ன வென்றால் ஜீவ பூமி ந.தி சரோஜாதேவியை வைத்துஎடுக்காமற் போனது தான்..நல்ல நாவல்.. கதானாயகனுக்கு வெகு பொருத்தம் ந.தி.ரதன் சந்தாவத் சலூம்ப்ரா என நினைவு..
ஜீவபூமியை கைவிட்டதுவரை நல்லதுதான். வந்திருந்தால் இன்னொரு சித்தூர் ராணி பத்மினியாகத்தான் ஆகியிருக்கும். சரித்திரப்படங்களின் தாக்கம் மங்கிக்கொண்டு வந்த காலகட்டம் அது. அச்சமயத்தில் வந்த சித்தூர் ராணி பத்மினி, ராணி சம்யுக்தா, காஞ்சித்தலைவன் என எதுவும் தேறவில்லை. இவர் உயிரைக்கொடுத்து நடிப்பதுதான் மிச்சமாக இருந்திருக்கும்...
JamesFague
24th August 2014, 11:46 AM
Fantastic song from Mungaru Mala Kannada movie which had ran for nearly 1 year in Bangalore due to
wonderful songs. Mr Ganesh the lead actor has become super star overnight due to this movie.
http://youtu.be/YG3Kxsln5xw
mr_karthik
24th August 2014, 11:47 AM
டியர் முரளி சார்,
ஏ.பி.என்.பரமசிவம் மற்றும் ஜெயந்தி பிலிம்ஸ் கனகசபை செட்டியாரின் மகன் ஆகியோருடன் தாங்கள் கலந்துரையாடிய விவரங்கள், வெளியுலகுக்கு தெரியாத பல உண்மைகளை வெளிக்கொண்டு வந்தன. மாயவரம் குருநாதன் செட்டியார் மட்டும் கொஞ்சம் பெரிய மனது பண்ணி அனுமதித்திருந்தாரானால் திருவிளையாடல் மறுவெளியீட்டில் இன்னொரு கர்ணனாக சாதித்திருக்கும். (இதுவரை வந்த டிஜிட்டல் வெர்ஷன்களிலேயே திருவிளையாடல்தான் மிகச்சிறப்பாக அமைந்ததாக கேள்விப்பட்டிருக்கிறேன்).
போகின்ற காலத்தில்கூட தன குடும்பத்துக்கு இடைஞ்சலாக 'ஏதோ ஒரு' படத்துக்காக தன்னுடைய மிகச்சிறந்த படத்தை சிக்கலில் மாட்டிவிட்டுப் போய்விட்டார் ஏ.பி.நாகராஜன்.
மனதை சோகத்திலும் அதிர்ச்சியிலும் ஆழ்த்தும் இன்னொரு விஷயம் தங்கள் பதிவில் அறிந்தது. நடிகர்திலகத்தின் பல படங்களின் நெகட்டிவ் பிலிம்கள் பாழாகிவிட்டன என்பதுதான். இப்படியே போனால் வருங்கால சந்ததிகள் நடிகர்திலகத்தின் பல அற்புத திரைப்படங்களை காணும் வாய்ப்பிலாமலேயே போய்விடுமா?...
rajeshkrv
24th August 2014, 11:48 AM
ஜீவபூமியை கைவிட்டதுவரை நல்லதுதான். வந்திருந்தால் இன்னொரு சித்தூர் ராணி பத்மினியாகத்தான் ஆகியிருக்கும். சரித்திரப்படங்களின் தாக்கம் மங்கிக்கொண்டு வந்த காலகட்டம் அது. அச்சமயத்தில் வந்த சித்தூர் ராணி பத்மினி, ராணி சம்யுக்தா, காஞ்சித்தலைவன் என எதுவும் தேறவில்லை. இவர் உயிரைக்கொடுத்து நடிப்பதுதான் மிச்சமாக இருந்திருக்கும்...
ஒரு பொன்னெழில் பூத்தது போல் நடிகர் திலகமும் சரோவும் பாடுவது போல் பாடல் கிடைத்திருக்கும் போங்கள் கார்த்திக் ஜி
JamesFague
24th August 2014, 11:50 AM
Dr Rajkumar song from the movie OM. Unique voice.
http://youtu.be/TG3zTKhmrqw
JamesFague
24th August 2014, 11:55 AM
Dr Rajkumar at his best from the movie OM. Enjoy the song.
http://youtu.be/0zBZFxG8Z6A
Gopal.s
24th August 2014, 12:38 PM
இன்று நாம் உரையாடும் கதைகள்,நினைவுகள் சம்பந்தமான ஒரு சுவாரஸ்ய தகவல். குமுதம் ஆசிரியர் குழுமத்தில் ஏ.எஸ்.பீ தவிர்த்து மோகினி என்கிற கிருஷ்ணகுமார் என்கிற டி.துரைசாமி என்கிற லலித் என்கிற சரஸ்வதி ராமகிருஷ்ணன் என்கிற வினோத் என்கிற ரா.கி.ரங்கராஜன் , பாக்கியம் ராமசாமி என்கிற ஜா.ரா.சுந்தரேசன், புனிதன் என்கிற ஷண்முக சுந்தரம். இந்த புனிதனின் பெண்ணை மணந்தவரே நடிகர் பாண்டு.
புனிதனின் அன்புள்ள ஆறாம் வேற்றுமை,அணைக்க அணைக்க என்னுடைய பிடித்தம். முக்கியமாக அணைக்க அணைக்க.ஒரு ஆங்கில கதையில் சுட்டது என்றாலும்,படு மனதை தொடும் சுவாரஸ்ய romance thriller . ஒரு டாகுமென்ட் திருட skylark என்ற callgirl நிறுவனம் ஸ்வீடி என்ற பெண்ணை ,நாயகனை வீழ்த்த அனுப்ப ,அவர்களுக்குள் விளையும் சீரியஸ் காதல். அருமை.
chinnakkannan
24th August 2014, 12:52 PM
//சரஸ்வதி ராமகிருஷ்ணன்// ச. ரா ரா.கி.ரங்கராஜன் இல்லை..என நினைக்கிறேன்.. ஜ.ரா.சுந்தரேசனின் நெருங்கி நெருங்கி வருகிறாள் ஆவிக் கதை டிஃபரண்டாக இருக்கும்..ரா.கி.ர காதல் கதைகள் யோகேஷ் என்ற பெயரில் எழுதியிருக்கிறார்.. அணைக்க அணைக்க படித்த நினைவு.. புனிதனின் அவன் அவள் அவரும் த்ரில்லர்..கலா என் க்ளாஸ்மேட்டும் த்ரில்லர் ரகம்..
chinnakkannan
24th August 2014, 12:54 PM
கார்த்திக் சார்..கடல்புறா அந்தக்கால பைண்ட் படித்திருக்கிறேன்..மறுபடியும் குமுதத்தில் வெளியானது.. யவனராணி இருந்திருந்தால் நன்றாக இருக்கும் உங்களிடம்..
chinnakkannan
24th August 2014, 12:55 PM
//ஜீவபூமியை கைவிட்டதுவரை நல்லதுதான். வந்திருந்தால் இன்னொரு சித்தூர் ராணி பத்மினியாகத்தான் ஆகியிருக்கும். சரித்திரப்படங்களின் தாக்கம் மங்கிக்கொண்டு வந்த காலகட்டம் அது.// நீங்கள் சொன்னால் சரியாகத் தானிருக்கும்..
Gopal.s
24th August 2014, 03:16 PM
டியர் வினோத் சார்,
நீங்களெல்லாம் நடிகர்திலகம் திரியில் பங்குகொள்ள (எங்களில் சிலருக்கு விதிக்கப்பட்டது போல) எந்த தடையுத்தரவும் இல்லையே. இந்த ஸ்டில்களை அங்கேயே பதிக்கலாமே...
I did it.Thanks to your idea and Vinod.
Russellmai
24th August 2014, 04:57 PM
https://www.youtube.com/watch?v=6w1s54La2SM
Another song from malayalam film EETTA
Russellbpw
24th August 2014, 05:55 PM
என்னை மிகவும் கவர்ந்த ஹிந்தி பாடல்களில் ஒன்று - வடக்கின் காதல் மன்னன் திரு ராஜேஷ் கண்ணா அவர்கள் நடிப்பில் தனுஜவுடனான இந்த பாடல்.
எந்த நிமிடமும் எதுவும் நடக்கலாம் .....இப்போ நடக்கும்...இப்போ நடக்கும் என்று பாடல் முடியும்வரை அனைவரை உட்காரவைக்கும் பாடல்...
ஒ மேரே தில் கி ச்சேயன் .....
https://www.youtube.com/watch?v=heXQRxM2Gro
Russellbpw
24th August 2014, 06:02 PM
அதே போல நாயகன் தன்னுடைய காதலை நாசூக்காக தெரிவிக்கும் பாடல்.
கில்தி ஹே குலுயஹான் ..கிலுகெ பிச்சடுனே தொ..
நாயகி ஏற்கனவே நாயகன் மீது ஒரு SOFT CORNER கொண்டவர்...இந்த பாடல் ஒரு நல்ல காதல் PROPOSAL மற்றும் APPROVAL !
சசி கபூர் அப்படி ஒரு smartness ...நாயகி ராக்கியோ அழோகோ அழகு..அப்படி ஒரு அழகு...
லயோலா கல்லூரியில் நான் படிக்கும்போது என்னுடைய ஒரு நல்ல தோழி அண்ணா ஆதர்ஷ் கல்லூரியில் BSC PHYSICS படிப்பவர் ...அப்படியே ஆச்சு அசல் ராக்கி போல இருப்பார் ....அவரும் அப்போது திருவல்லிக்கேணி...நானும் திருவல்லிக்கேணி....ஆகையால் 27JJ பேருந்து நல்ல நண்பர்களாக எங்களை இணைத்தது...!
ஒரு தருணத்தில் நானே இதை அவரிடம் தெரிவித்தேன் ..ராக்கி போல இருக்கிறீர்கள் என்று...! பதிலுக்கு அவரும் மற்றொரு தருணத்தில் பல சக மாணவர்கள் பங்குகொண்ட CULTURAL PROGRAMME ஒன்றில் கிட்டத்தட்ட ஒரு 20 முதல் 25 நண்ப நண்பிகளுக்கு நடுவே திடீரென " ஹே,,,YOU HAVE THE SHADES OF CHINNATHAMBI PRABU DA ! என்றாரே பார்க்கலாம் ! உண்மையா பொய்யா என்று தெரியாது ...ஆனால் அவர் சொன்ன காம்ப்ளிமென்ட் நன்றாக இருந்தது அப்போது அதுவும் அத்துணை பேர் நடுவில் சொல்லி அதை பலர் ஆமொதித்தபோது !
ஷர்மிலி திரைப்பட பாடல் ..காதல் இப்போதும் நாம் வயபடலாம் என்போருக்கு !
https://www.youtube.com/watch?v=tIRzLXHsK8o
தமிழில் இதன் சாயல் கொண்ட பாடல் திருமதி P SUSHEELA குரலில் நாம் கேள்விபட்டுளோம்...ராதையின் நெஞ்சமே....கண்ணனுக்கு சொந்தமே...ராதையின் நெஞ்சமே...
https://www.youtube.com/watch?v=0ir54iimkxo
JamesFague
24th August 2014, 06:31 PM
Enjoy the melody from the movie Aradhanai
http://youtu.be/d-nJrSt46cU
JamesFague
24th August 2014, 06:35 PM
Melody from the movie Parvaiyin Marupakkam starring Vijayakanth & Sripriya
http://youtu.be/koakPCNdOks
Gopal.s
24th August 2014, 07:46 PM
இரவின் மடியில்.
தமிழின் பிரபல பாடக பாடகியரின் முதல் தமிழ் பாடல்களை பார்ப்போம்.
(எல்லாவற்றுக்கும் வீடியோ இல்லை)
முதலில் பாடகர்திலகம் டி.எம்.சௌந்தரராஜன் (உபகாரம் செய்தவற்கே ,ஒரு பிச்சைக் காரனுக்கு பாடுவது போல வரும்.மந்திரி குமாரி ,ஜி.ராமநாதன் இசையில் 1950 இல்)
http://www.inbaminge.com/t/m/Mandhiri%20Kumari/
ஏ.எம்.ராஜா, சம்சாரம் படத்தில் 1951 இல் சம்சாரம் பாடல்.எமனி சங்கர சாஸ்திரி இசையில். ஜெமினி வாசன் தயாரிப்பு.
https://www.youtube.com/watch?v=87aTACl1iUw
பீ.பீ.ஸ்ரீநிவாஸ் ,ஜாதகம்(1953) படத்தில் சிந்தனை என் செல்வமே,டி.ஜி.லிங்கப்பா இசையில்.
https://www.youtube.com/watch?v=6PWehab2xEU
சீர்காழி கோவிந்த ராஜன் ,பொன் வயல் (1954) படத்தில் சிரிப்புத்தான் வருகுதையா.துறையூர் ராஜ கோபால் சர்மா இசையில்.
http://music.cooltoad.com/music/song.php?id=482683&PHPSESSID=a9e3ccdf3167c01b82b265b622f4f0e5
ஏ.எல்.ராகவன் , எனக்கு தெரிந்து ஆட்டத்திலே பல வகையுண்டு ,பாக பிரிவினை,1959(31.10.1959).விஸ்வநாதன்-ராமமுர்த்தி இசையில்.
இதே நாளில் (31.10.1959 இல்) பாஞ்சாலி மாதவி படமும் ரிலீஸ்.கே.மகாதேவன் இசையில் ஒரு முறை பார்த்தாலே போதும்.
https://www.youtube.com/watch?v=9_eEkQQzoeA
ஜேசு தாஸ் , கொஞ்சும் குமரி,1963, ஆசை வந்த பின்னே ,வேதா இசையில்.
http://www.inbaminge.com/t/k/Konjum%20Kumari/Aasai%20Vantha%20Pinne%20Arugil%20Vantha.vid.html
எஸ்.பீ.பாலசுப்ரமணியம்,முத்து சிப்பிக்குள்ளே ஒரு பூ வண்டு,குழந்தை உள்ளம்,கோதண்டபாணி இசையில்.1969.இதே வருடம் மல்லிகை பூ வாங்கி வந்தேன்,பால் குடம்,ஆயிரம் நிலவே வா,அடிமை பெண்,இயற்கை என்னும்,சாந்தி நிலையம் எல்லாமே வெளி வந்தது.
https://www.youtube.com/watch?v=bSNc_zIo6jY
மலேசியா வாசுதேவன்.,டெல்லி டு மெட்ராஸ்(1972),பாலுவிக்கிற பக்கம்மா, வீ.குமார் இசையில்.
https://www.youtube.com/watch?v=0iX_zxJ5bB0
ஜெயச்சந்திரன் -அலைகள், 1973, பொன்னென்ன பூவென்ன கண்ணே ,எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில்.
https://www.youtube.com/watch?v=QGNcIyBX1Cs
chinnakkannan
24th August 2014, 10:06 PM
//எந்த நிமிடமும் எதுவும் நடக்கலாம் .....இப்போ நடக்கும்..//.இப்போநடந்துடுச்சே ஆர்.கே.எஸ் சார்.:).வாங்கோ வாங்கோ.. அந்தப் பாட்டு எனக்கும் பிடிக்கும்
மத்த பாட்டுகளுக்கும் நன்றி..
கோபால் சார்..பாடகர்க்ளின் முதல் பாடல் பற்றிய குறிப்பு நன்று..இருந்தாலும் ஜேசுதாஸ் முதலில் பாடிய பாட்டு பொம்மை என்று தான் கேள்விப் பட்டிருக்கிறேன் இல்லையா?
RAGHAVENDRA
24th August 2014, 10:38 PM
கோபால் சார்
முதல் பாடல் தொகுப்பு நல்ல கான்செப்ட்... தொடருங்கள் மேலும் பல பாடகர்களின் பங்களிப்பினைப் பற்றிய விவரங்களோடு..
RAGHAVENDRA
24th August 2014, 10:41 PM
பொங்கும் பூம்புனல்
அனாரி ஹிந்திப் படத்தின் தமிழாக்கமாகக் கருதப்படும் பாசமும் நேசமும் திரைப்படம் பாடல்களால் தமிழகத்தில் பேசப்பட்டது. குறிப்பாக ஏ.எம்.ராஜா இசையரசி பாடிய பார்த்தாய் பார்த்தேன் பாடல் மிகவும் பிரபலமானது. ஆனால் அதை விட அதிகமாக இப்படத்தில் பேசப்பட்டது ஜெமினி கணேசனை கலாய்த்து சரோஜா தேவி பாடுவதாக இடம் பெற்ற கோமாளி நீ ஒரு கோமாளி பாடல்.. ஜெமினி ரசிகர் மன்றத்தினர் சில ஊர்களில் கண்டனங்கள் எழுப்பியதாகவும் கேள்விப்பட்டிருக்கிறேன்.
இதெல்லாம் ஒரு புறம் இருக்க, இசையரசயின் குரலில் அந்த இனிமையான பாடலைக் கேளுங்கள். பாருங்கள்.
http://www.youtube.com/watch?v=R1kVdfwjCCI
RAGHAVENDRA
24th August 2014, 10:44 PM
பொங்கும் பூம்புனல்
இதுவும் பாசமும் நேசமும் படத்திலிருந்து தான்.. ஜமுனாராணியின் குரலில் வசீகரமான கிளப் நடனப் பாடல்..
வருவானோ இல்லையோ..
http://www.youtube.com/watch?v=FQoPQxbV0fc
RAGHAVENDRA
24th August 2014, 10:46 PM
இரவின் மடியில்
மங்கையர் உள்ளம் மங்காத செல்வம் ... பாடல்களாலே பிரபலமான திரைப்படங்களில் ஒன்று.. எல்லா பாடல்களும் இனிமை.. அதிலும் குறிப்பாக இந்தப் பாடலைக் கேட்கும் போது ஏனோ.. என்னாளும் இல்லா ஆனந்தம்...
http://www.youtube.com/watch?v=9MmqE_lmBx8
RAGHAVENDRA
24th August 2014, 10:51 PM
இரவின் மடியில்
http://tamilgallery.com/images/2011/03/P.susheela-sings-for-nilavil-mazhai-306.jpg
http://2.bp.blogspot.com/_QfYosNdsYWY/TTnm4tS4fSI/AAAAAAAAAVg/dwWD0baqhPI/s1600/pbscut.JPG
மாடர்ண் தியேட்டர்ஸ் அம்மா எங்கே திரைப்படத்தில் வேதா இசையில் இப்பாடல் மற்றவற்றைப் போன்று பிரபலமடையவில்லை என்பது கசப்பான உண்மை. ஆனால் இசையரசியின் குரலில் இப்பாடல் காலத்தால் அழியாத சிறப்புப் பெற்றதாகும்.
நெஞ்சுக்குத் தெரியும் என்ற இப்பாடலைக் கேட்டும் பார்த்தும் மகிழுங்கள்.
http://www.youtube.com/watch?v=EweGDh0yLkM
Gopal.s
25th August 2014, 03:12 AM
//
கோபால் சார்..பாடகர்க்ளின் முதல் பாடல் பற்றிய குறிப்பு நன்று..இருந்தாலும் ஜேசுதாஸ் முதலில் பாடிய பாட்டு பொம்மை என்று தான் கேள்விப் பட்டிருக்கிறேன் இல்லையா?
இது நமது பிரபல பத்திரிகைகளின் தவறான தகவல்களால் நேரும் வரலாற்று பிழைகள்.
கொஞ்சும் குமரி- 1.1.1963- ஆசை வந்த பின்னே.
காதலிக்க நேரமில்லை-27.2.1964- என்ன பார்வை,நெஞ்சத்தை அள்ளி கொஞ்சம்.
பொம்மை-22.4.1964- நீயும் பொம்மை நானும் பொம்மை.
Gopal.s
25th August 2014, 03:45 AM
இரவின் மடியில்
மாடர்ண் தியேட்டர்ஸ் அம்மா எங்கே திரைப்படத்தில் திரை இசைத் திலகம் இசையில் அனைத்துப் பாடல்களும் மக்கள் அறிந்தவையே என்றாலும் கூட இப்பாடல் மற்றவற்றைப் போன்று பிரபலமடையவில்லை என்பது கசப்பான உண்மை. ஆனால் இசையரசியின் குரலில் இப்பாடல் காலத்தால் அழியாத சிறப்புப் பெற்றதாகும்.
நெஞ்சுக்குத் தெரியும் என்ற இப்பாடலைக் கேட்டும் பார்த்தும் மகிழுங்கள்.
ராகவேந்தர்,
அம்மா எங்கே ,இசையமைப்பாளர் வேதா. ஆதாரம்-இந்த படத்தின் வீடியோ டைட்டில் கார்டு பார்க்கவும்.
http://links2sites.net/tamizh/dailymotion.php?l=xqurq6
RAGHAVENDRA
25th August 2014, 07:47 AM
ராகவேந்தர்,
அம்மா எங்கே ,இசையமைப்பாளர் வேதா. ஆதாரம்-இந்த படத்தின் வீடியோ டைட்டில் கார்டு பார்க்கவும்.
http://links2sites.net/tamizh/dailymotion.php?l=xqurq6
திருத்தத்தைப் பார்க்கவும்... வேதா தான் இசையமைத்தார்... தவறாக திரை இசைத் திலகம் எனக் குறிப்பிடப் பட்டு விட்டது. சுட்டிக்காட்டலுக்கு நன்றி
rajeshkrv
25th August 2014, 07:49 AM
எல்லோருக்கும் காலை வணக்கம்.
Gopal.s
25th August 2014, 07:56 AM
கரையான்களுக்கு விண்ணப்பம்
மண்ணின் மெய்யான மைந்தர்களே மண்ணுடன்
பொன்னின் நிறம் பெற்ற சிறு மதியாளர்களே
அரவங்கள் இல்லங்களை ஆக்ரமிப்பதால்
சிரமங்கள் பலவே சிரம் தாழ்த்தி வருந்துகிறோம்
நண்பர்கள் உண்டே நட்பு காண நாடுகள் பலகண்டினும்
வீணகேடுகள் உமக்கு கண்டிரா நானில்லையோ,என்பிரிய
அமலா என்ற அதிசய அழகில்லையோ மனேகா போல
கமலசின்ன காசினி தலைவர்கள் கோடி கோடி
எங்கள் செல்ல பிரிய நாய்களும் பூனைகளும் நட்பாகி
செங்கல் வீடுகளில் சுற்றம் சூழ செழுமை காணவில்லையா
நட்பு நாடி வந்தால் கேட்டு பெறலாமே விரும்பவதை
நடப்பில் நாங்களுண்ணும் சோத்து கவளங்களா நெல்மணிகளா
அல்லது காகிதமே வேண்டுமெனினும் ,பழைய வியாபாரிக்கு
செல்லும் குப்பைகளை செல்லரிப்புக்கு செல்ல காணியாக்குவோமே
உண்ணுமுன் சிந்தியுங்கள் உங்களின் உணவு எங்கள் சிந்தைக்கு
ஊணுரம் எங்கள் சிந்தையின்றி எங்கு போவீர் காகிதங்களுக்கு
உங்கள் உணவு எங்கள் பொன்னாட்களின் நினைவு மிச்சங்கள்
தங்கிய சிறார் நாட்களின் மனித சொச்சங்கள் செல்லரிக்கும்
ஆத்மாவின் ரகசிய ராகவீணையின் நாதக் குறிப்புகள் இதை
சோத்துக்காக சிதைக்காதீர்கள் சொத்துக்களாக காத்ததை
கனவினும் கேட்டினை நினையா காவலன் என் ஆணை
வினவினும் விடையுருப்பேன் விட்டொழியுங்கள் நினைவு
நிக்ரகஹங்களை உண்ணும் உணவு உறைவிடம் சுற்றம்
விக்ரகங்களுக்கே தேனும் பாலும் அளிக்கும் இனம்
சுற்றங்களுக்கு சோறளிக்காதோ சிலைகளுக்கு இல்லம் காணும்
கற்றபுனிதர் அடைக்கலங்களுக்கு (மனேகா)காந்தியாவோம்
RAGHAVENDRA
25th August 2014, 08:00 AM
காலை வணக்கம், ராஜேஷ், கோபால்
gkrishna
25th August 2014, 09:21 AM
காலை வணக்கம், ராஜேஷ், கோபால்
அனைவருக்கும் காலை வணக்கம்
அருமை ராகவேந்தர் சார்
வெளியில் தெரியாத ஆனால் ரசிக்க தகுந்த பாடல்களை தருகிறீர்கள்
வல்லரயன் வந்திய தேவன் ராஜ பாட்டையில் புரவியை தட்டி விட்டது போல் பறந்து கொண்டு இருக்கீறீர்கள் . மிக்க மகிழ்ச்சி .
இரண்டு தினங்கள் சிஸ்டம் problem . திரிக்குள் வர முடியவில்லை
ஆனாலும் நல்ல பல தகவல்களையும் பாடல்களையும் கண்டு ரசித்தேன்
Richardsof
25th August 2014, 09:58 AM
http://i62.tinypic.com/2czamuu.jpg
gkrishna
25th August 2014, 10:19 AM
திருநெல்வேலி, சுண்டங்கோட்டை பாலையா என்ற அமரத்துவமற்ற திரைச்சிற்பி, ’நடிப்புச் செல்வர்’ டி .எஸ்.பாலையா அவர்களின் நூற்றாண்டு தினம் (22.08.2014). டி.எஸ்.பாலையா அவர்களின் நடிப்பால் ஈர்க்கப்பட்டவர்கள் பலர் அவரது வில்லத்தனமான நடிப்பையும் ரசித்ததுண்டு. குணச்சித்திர நடிப்பையும் ரசித்ததுண்டு]. இவ்விரண்டையும் விட எல்லோரும் அதிகமாக நேசித்தது அவரது நகைச்சுவை வேடங்களையே. நடிகர் சங்கம் டி.எஸ்.பாலையா’ அவர்களின் நூற்றாண்டு விழாவைக் கொண்டாடவிருப்பதாக அறிவித்துள்ளது. (22.8.2014) அன்று சூரியன் தொலைக்காட்சியில் ‘சூரிய வணக்கம்’ நிகழ்ச்சியில் டி .எஸ்.பாலையாவின் மகனும் கலை வாரிசுமான ஜூனியர் பாலையாவும் இயக்குநர் சித்ராலயா கோபு அவர்களும் டி .எஸ்.பாலையாவின் அருமை பெருமைகளை அள்ளி வழங்கினார்கள்.
டி .எஸ்.பாலையா அவர்களின் பெருமைகளை ‘தி இந்து’ தமிழ் நாளிதழில் இந்து டாக்கீஸ் பகுதியில் திரு.ஆர்.பி.ராஜநாயஹம் அவர்கள் விவரித்து டி .எஸ்.பாலையாவுக்குப் பெருமை சேர்த்துள்ளார். திரு.ஆர்.பி.ராஜநாயஹம் அவர்களுக்கும் ‘தி இந்து’ நாளிதழுக்கும் நன்றி . உலக சினிமா ரசிகர்கள் பெரும்பாலோனோர் டி .எஸ்.பாலையாவின் நூற்றாண்டு விழாவைக் கொண்டாடிக் கொண்டிருக்கும் இந்நன்னாளில் நமது வலைப்பூவும் இக்கொண்டாட்டத்தில் பங்கெடுத்துக் கொள்வதில் பெருமை கொள்ள வேண்டும் என்பது எனது அவா
வாழ்க பாலையா அவர்களின் புகழ்
http://tamil.thehindu.com/multimedia/dynamic/02073/4_2073192g.jpg
டி.எஸ். பாலையாவின் நேரடி கலை வாரிசாக அவரை அப்படியே நினைவுபடுத்தும் குணச்சித்திரமாகத் தமிழ் சினிமாவில் வலம் வருகிறார் அவரது மகன் ஜூனியர் பாலையா. தனது அப்பா குறித்த நினைவுகளைத் ‘தி இந்து’வுக்காக அசைபோட்டதிலிருந்து...
அப்பா ஒரு திரைப்பட நடிகர் என்பது எத்தனை வயதில் உங்களுக்குத் தெரியவந்தது?
எனக்கு 7 வயதாக இருக்கும்போது ஒரு நாள் வீட்டிலிருந்தே மேக்-கப் போட்டுக்கொண்டு ஸ்டுடியோவுக்குக் கிளம்புவதைக் கவனித்தேன். அம்மாவிடம் கேட்டேன். பிறகு அப்பா படப்பிடிப்பிலிருந்து வந்ததும், நான் கேட்ட விஷயத்தை அம்மா அவரிடம் சொல்ல, அன்று பேசி நடித்த வசனத்தை எனக்கு முன்பாக நடித்துக் காட்டி, “குற்றம் குறை இருந்தா சொல்லுங்க முதலாளி” என்று கையைக் கட்டி கேட்டுவிட்டு என்னைத் தூக்கிக் கொஞ்சினார். அன்று இரவே மவுண்ட் ரோட்டில் இருந்த சித்ரா தியேட்டருக்கு இரண்டாவது காட்சி பாடம் பார்க்கக் குடும்பத்துடன் கூட்டிச் சென்றார். அந்தப் படம் ‘பாகப் பிரிவினை’.
எனக்குப் பத்து வயதானபோது அப்பாவுக்கு எவ்வளவு ரசிகர்கள், எவ்வளவு செல்வாக்கு என்பதைப் புரிந்துகொண்டேன். காங்கிரஸ் மைதானத்தில் வீரபாண்டிய கட்டபொம்மன் நாடகம் நடந்தது. அதற்கு அப்பாவை சிவாஜி அழைத்திருந்தார். அங்கே திரண்டிருந்த மக்கள் அப்பாவைப் பார்த்ததும் ‘பாலையா’ ‘பாலையா’ என்று கத்தினார்கள். “எல்லோரும் ஏன் உங்களைக் கூப்பிடுறாங்க” என்றேன். “அவங்க என்னோட ரசிகர்கள். அவங்களாலதான் நமக்குச் சாப்பாடு கிடைக்குது. அவங்கதான் நமக்குக் கடவுள்” என்று கூறிக்கொண்டே, “அவங்க எப்போ நம்மள கூப்பிட்டாலும், நாம இப்படிக் கையெடுத்து கும்பிடணும், அவங்களோட கை குலுக்கணும்” என்று தன்னை அழைத்த ரசிகர்களைப் பார்த்துக் கையெடுத்துக் கும்பிட்டார். பிறகு 15 வயதில் அவருடன் படப்பிடிப்புக்குச் செல்ல ஆரம்பித்தேன். ஸ்டூடியோவில் பல நடிகர்களுடன் சேர்ந்து நடிக்கும்போதுதான் அவரது தகுதி என்ன என்பதைப் புரிந்துகொண்டேன்.
அப்பாவைப் பற்றி உங்களிடம் வியந்து கூறிய சமகாலக் கலைஞர் யார்?
பலர். நான் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியது நாகேஷ் அண்ணன். அவர் என்னைவிடப் பல ஆண்டுகள் மூத்தவர் என்றாலும் என்னுடன் நெருக்கமாக நட்பு பாராட்டி வந்தவர். ‘காதலிக்க நேரமில்லை' படத்தில் அப்பாவிடம் அவர் கதை சொல்லும் காட்சி படமாக்கப்பட்டபோது நடந்ததை என்னிடம் பகிர்ந்துகொண்டார். அந்தக் காட்சி எடுத்து முடித்ததும் செட்டில் இருந்த அத்தனை பேரும் கைதட்டியிருக்கிறார்கள். ஆனால் அப்பா மட்டும் முகத்தை உம்மென்று வைத்துக்கொண்டு உட்கார்ந்திருக்கிறார். நாகேஷுக்கோ நமது நடிப்பைப் பார்த்து இவர் பொறாமைப்படுகிறாரோ என்று ஒரு எண்ணம். பிறகு படப்பிடிப்பு முடிந்து எல்லோரும் கிளம்பிக் கொண்டிருந்தபோது அவரது அருகில் போய், அண்ணே நான் எப்படி நடிச்சேன்? என்று கேட்டிருக்கிறார். அதற்கு அப்பா, “ இன்னும் நல்லா பண்ணியிருக்கணும். கோட்டை விட்டுட்டே!” என்று கூறியிருக்கிறார். சந்தேகமே வேண்டாம். இவருக்குக் கண்டிப்பாகப் பொறாமைதான் என்று நினைத்துக் கொண்டு போய்விட்டாராம். பிறகு படம் வெளியான அன்று ரசிகர்களின் ரசனை அறிந்து வருவதற்காக மாறு வேடத்தில் பல தியேட்டர்களுக்குப் போயிருக்கிறார் நாகேஷ். “சொல்லி வைத்த மாதிரி எல்லாத் தியேட்டர்களிலும் ஒரு வசனமும் பேசாத உனது அப்பாவின் நடிப்பைத்தான் அத்தனை பேரும் ரசித்தார்கள். உனது அப்பாவின் ஆற்றல் அப்போதுதான் எனக்குப் புரிந்தது. அதன் பிறகு உன் அப்பாவைச் சந்தித்து, அண்ணே உங்களைத் தப்பா நினைச்சுட்டேன் என்று சொன்னேன். அவர் கட்டிப்பிடித்து எனக்கு முத்தம் கொடுத்தார். அதுதான் நான் வாங்கிய தலை சிறந்த பாராட்டு. கடைசிவரை உனது அப்பாவை மட்டும் என்னால் நடிப்பில் வெல்ல முடியவில்லை” என்றார். அதை என்னால் மறக்க முடியாது.
அதேபோல 85 வயது முதியவராக எல்லீஸ் ஆர். டங்கன் சென்னை வந்திருந்தார். அவரைப் பார்க்க ஆவலோடு சென்றேன். பாலையாஸ் சன் ஹஸ் கம்” என்றதும் அத்தனை வயதிலும் சட்டென்று எழுந்து என்னைக் கட்டிப்பிடித்துக் கொண்டார். “ யூ ஆர் லைக் யூவர் ஃபாதர்” என்றார். எனது அப்பாவின் குரலும் நகைச்சுவை உணர்வும், அவரது உடல் மொழியும்கூட என்னிடம் அப்படியே இருக்கிறது என்றேன். இரண்டு நிமிடத்திற்குமேல் அனுமதியில்லை என்ற அவரது உறவினர்களிடம் இன்னும் ஒரு மணிநேரத்துக்கு எங்களைத் தொந்தரவு செய்ய வேண்டாம் என்று 40களுக்குப் பயணிக்க ஆரம்பித்துவிட்டார். அப்பாவைக் குறித்து அவர் சொன்ன விஷயங்களைப் பற்றி தனிப் புத்தகமே போடலாம்.
உங்களுக்கு எப்போது நடிப்பில் ஆர்வம் வந்தது?
எட்டாம் வகுப்பு படிக்கும்போது மிமிக்ரி பண்ணிக் காட்டுவேன். அதில் அப்பாவின் குரலும் ஒன்று. இதைப் பார்த்த என் ஆசிரியர் ‘காதலிக்க நேரமில்லை’ படத்தின் முக்கியமான காட்சிகளை நாடகமாகப் பள்ளி ஆண்டுவிழாவில் நடத்த முடிவுசெய்தார். நாகேஷ் கேரக்டரைச் சின்னம்மா பையன் செய்தார். சச்சு கேரக்டரை எனது தங்கை செய்தார். அப்பா கேரக்டரை நான் செய்தேன். பாராட்டென்றால் அப்படியொரு பாராட்டு. தலைமையாசிரியர் வீட்டுக்கு போன்செய்து எனது அப்பாவிடம், “உங்களை அச்சு அசலாக அப்படியே உங்கள் பையன் நடித்துக் காட்டினான்” என்று சொல்ல அப்பாவுக்குப் பெருமை தாங்கவில்லை.
பிறகு, ‘நம்ம வீட்டுத் தெய்வம்’ என்ற படத்தில் அப்பா நடித்தபோது அவரது நடிப்புத்திறனை அணுஅணுவாக ரசிக்க ஆரம்பித்தேன். நானே அவரது தீவிர விசிறியாகவும் மாறினேன். நான் நடிக்கப் போகிறேன் என்றதும் எனக்கு ஜூனியர் பாலையா என்று பெயர் சூட்டியதும் அவர்தான்.
அப்பாவுடன் இணைந்து நீங்கள் நடித்தமாதிரி தெரியவில்லையே?
எம்.ஆர். ராதாவை நான் பெரியப்பா என்றுதான் கூப்பிடுவேன். அப்பாவின் கடைசி நாட்கள் வரை அவருக்கு நெருக்கமாக இருந்த நண்பர்களில் அவர் மிக முக்கியமானவர். அவரது தயாரிப்பில் அப்பாவும் நானும் இணைந்து நடிப்பதாகத் திட்டமிடப்பட்டது. நானும் ஆவலோடு அந்த நாளுக்காகக் காத்திருந்தேன். ஆனால் அதற்கு முன்பே அப்பா காலமாகிவிட்டார். அந்த விஷயத்தில் நான் கொடுத்து வைக்காதவன்.
இப்போது நீங்கள் நடிப்பதைக் குறைத்துக் கொண்டது ஏன்?
நல்ல கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டும் என்பதுதான் முக்கியமான காரணம். பிரபு சாலமன் இயக்கிய கும்கி படத்தில் கதை நாயகி அல்லியின் சித்தப்பாவாக மாடன் என்ற கேரக்டரில் நடித்தேன். அதேபோலச் சாட்டை படத்திலும் அழுத்தமான கதாபாத்திரம்தான். 200 படங்களில் நடித்திருந்தாலும் வில்லனாக நடிக்கவே அதிக வாய்ப்புகள் வந்தன. இதனால் பல வாய்ப்புகளை மறுத்தேன். தற்போது மீண்டும் முழுமூச்சாக நடிக்க வந்துவிட்டேன். விரைவில் பல படங்களில் என்னை நீங்கள் பார்க்கலாம். இப்போது என் மகன் ரோஹித் பாலையா நடிக்க வந்துவிட்டார்.
இறப்பதற்கு முன் வறுமையில் வாடினார் என்று உங்கள் அப்பாவைப் பற்றி குறிப்பிடுகிறார்களே?
அது சுத்த பேத்தல். சென்னை மடிப்பாக்கத்தில் அப்பாவுக்கு 350 ஏக்கர் நிலம் இருந்தது. இன்றும் பாலையா கார்டன் என்ற பகுதியாக இருக்கிறது. நாங்கள் சகோதர சகோதரிகள் மொத்தம் ஏழுபேர். அங்கே எங்கள் ஒவ்வொருவர் பெயரிலும் தெருக்கள் இருக்கின்றன. இன்று கோடீஸ்வரர்களாக இல்லாவிட்டாலும், அப்பா எங்களை நடுத்தெருவில் நிறுத்தவில்லை. எங்களுக்கு அவர் எந்தக் குறையும் வைக்கவில்லை.
Richardsof
25th August 2014, 10:24 AM
http://i61.tinypic.com/i6cbb9.jpg
gkrishna
25th August 2014, 10:31 AM
http://tamil.thehindu.com/multimedia/dynamic/02073/1_2073182g.jpg
இன்றைய தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சுண்டாங்கோட்டை என்ற சின்னஞ்சிறு கிராமம்தான் டி.எஸ். பாலையாவின் சொந்த ஊர். சர்க்கஸில் சேர்ந்து பெரிய கலைஞனாக வேண்டும் என்ற உந்துதலோடு, அப்பா அம்மாவிடம் சொல்லாமல் 14 வயதில் வீட்டை விட்டு ஓடி வந்தவருக்கு அடைக்கலம் கொடுத்தது மதுரை மண். அங்கே பிரபலமாக இருந்த மதுரை ஒரிஜினல் பாய்ஸ் நாடக கம்பெனியில் சேர்ந்துவிடத் துடித்தவருக்கு ஒரு வாய்ப்பு அமைந்தது. பாய்ஸ் கம்பெனியிலிருந்து விலகி, பல இளம் நடிகர்கள் ஒன்றிணைந்து ஆரம்பித்த ‘பாலமோஹன சபா’வில் இடம் கிடைத்தது.
அப்போது பாலையாவுக்கு 15 வயது. அந்த சபாவில் பாலையாவுக்கு நடிப்புக் கலையைச் சொல்லிக்கொடுத்தவர் அவரது வாத்தியார் கந்தசாமி முதலியார். அவர் ஒரு திரைப்படத்துக்கு வசனம் எழுதினார். அந்தப் படம் எல்லீஸ் ஆர். டங்கன் முதல்முறையாக இயக்கிய ‘சதி லீலாவதி’(1936). அந்தப் படத்தில், தனக்கு மிகவும் பிடித்த மாணவன் பாலையாவுக்கு வாய்ப்பு வாங்கிக் கொடுத்தார். அறிமுகப் படத்திலேயே வில்லன் வேடம் என்பதுதான் பாலையா திரை வாழ்க்கையில் ஆச்சரியமான தொடக்கம்.
எம்.ஜி.ஆர். சுயசரிதையில் பாலையா சதி லீலாவதி எம்.ஜி.ஆருக்கு மட்டும் முதல் படம் என்று நினைத்துவிடாதீர்கள்.
அந்தப் படத்தின் கதாநாயகன் எம்.கே.ராதா,என்.எஸ்.கிருஷ்ணன்,டி.எஸ்.பாலையா, கே.ஏ.தங்கவேலு ஆகியோருக்கும் கூட முதல் படம் ‘சதி லீலாவதி’ தான். அந்தப் படத்தில் ஒல்லியான வில்லனாக டி.எஸ்.பாலையா வருவார்.
பி.யூ.சின்னப்பா நடித்த ஆரிய மாலா (1941), ஜகதலப் பிரதாபன் (1944) போன்ற படங்களிலும் வில்லனாக நடித்தார் பாலையா. மீரா படத்தில் பாலையாவுடன் வரும் தாடி வைத்த இளைஞர்தான் எம்.ஜி.ஆர். ஒரு படத்தில், எம்.ஜி.ஆருக்கு ஒரு நல்ல பாத்திரம் கிடைத்து கல்கத்தாவுக்குப் படப்பிடிப்புக்காகப் போன போது, பாலையா அங்கு வந்தாராம். எம்.ஜி.ஆருக்கு ஒதுக்கப்பட்ட அந்தப் பாத்திரம் பாலையாவுக்குப் போய்விட்டது. எம்.ஜி.ஆருக்குச் சின்ன கதாபாத்திரம் கிடைத்தது. “அந்த ரோலை அன்று பாலையா செய்த மாதிரி என்னால் நிச்சயமாகச் செய்திருக்க முடியாது” என்று ‘நான் ஏன் பிறந்தேன்?’ சுயசரிதையில் எழுதினார் எம்.ஜி.ஆர்.
மீட்டுவந்த சுந்தரம்
ஒரு குறிப்பிட்ட காலத்தில் விரக்தியில் சாமியாராகப் போய் விட்டார் பாலையா. பாண்டிச்சேரிக்குப் பட வேலையாகச் சென்றிருந்த மாடர்ன் தியேட்டர் டி.ஆர். சுந்தரம் கண்ணில் பட்டிருக்கிறார். ‘யார்டா அந்தச் சாமியார். பாலையா மாதிரி தெரியுதே’ என்று ‘கண்டு’ அவரைப் ‘பிடித்து’ அந்தக் கணமே அவரை வலுக்கட்டாயமாகத் தனது காரில் ஏற்றிக்கொண்டு சேலம் வந்து சேர்ந்து விட்டார். அடுத்தநாளே அங்கே படப்பிடிப்பு நடந்துவந்த ‘பர்மா ராணி’ என்ற படத்திலும் நடிக்க வைத்து விட்டாராம்.
மாடர்ன் தியேட்டர்ஸ் ‘சித்ரா’ படத்தில் பாலையா கதாநாயகனாக நடித்தார். ஒரு மலையாளப் படம் ‘ப்ரசன்ன’. லலிதா, பத்மினி நடித்த அந்த மலையாளப் படத்திலும் பாலையா கதாநாயகனாக நடித்தார். இதன் பிறகு பாலையா தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகரானார்.
முன்னோடிக் கதாபாத்திரம்
வேலைக்காரி (1949) படத்தில் பாலையா செய்த பகுத்தறிவாளன் பாத்திரம்தான் பின்னாட்களில், எம்.ஜி.ஆர்., சிவாஜி, எஸ்.எஸ்.ஆர். செய்த பகுத்தறிவுக் கதாபாத்திரங்களுக்கு முன்னோடி என்று அசோகமித்திரன் சொல்வார். இதில் விசித்திரம் என்னவென்றால் பாலையா ஒரு பழுத்த காங்கிரஸ்வாதி! என்றாலும் பகுத்தறிவு இயக்கத்தின் அபிமானியாகவும் இருந்தார். திரையில் பகுத்தறிவு பீரங்கியாக இருந்த நடிகவேள் எம்.ஆர். ராதாவுடன் கடைசி நாட்கள் வரை இணை பிரியாத நண்பராக இருந்தார்.
நகைச்சுவை வில்லன் முத்திரை
1956-ல் ‘மாமன் மகள்’ படத்தில் ஜெமினி,சாவித்திரி,சந்திரபாபு, டி.எஸ்.துரைராஜ் ஆகியோருடன் பாலையா நடித்தார். அதே வருடம் மதுரை வீரன் படத்தில் எம்.ஜி.ஆருக்கு வில்லனாகி ஆக்ரோஷமாகக் கத்தியை உருவி “இன்று என்ன கிழமை?” என்பார். வெள்ளிக்கிழமை என்று அல்லக்கை சொல்லவும் “அடடா! இன்று விரதம்” என்று மீண்டும் உறையில் போட்டு விடுவார்.
“அரசே! நாங்கள் ‘பின் தொடர்ந்து’ போனோம்.ஆனால் அவர்கள் ‘முன் தொடர்ந்து’ போய்விட்டார்கள்!” என்பார்.
‘புதுமைப்பித்தன்’ (1957 ) படத்தில் எம்.ஜி.ஆர் “அதோ வருகிறது வஞ்சகத்தின் மொத்த உருவம்” என்பார். அப்போது, பாலையா குண்டாகக் கொழுகொழுவென்று நடந்து வருவார்.
வில்லனாக நடித்ததில் அவர் கலந்து செய்த நகைச்சுவை எம்.ஆர்.ராதாவின் பாணிக்கு முற்றிலும் மாறானது. நகைச்சுவை வில்லனாக அவர் ஏற்படுத்திய தாக்கம் அத்தனை சீக்கிரம் மறையக் கூடியது அல்ல.
புதையல் படத்தில் அவர் “ இங்கு சகலவிதமான சாமான்களும் விற்கப்படும்” என்ற வரிகளை “ இங்கு சகலவித 'மான' சாமான்களும் விற்கப்படும்” என்று பிரித்து வாசிப்பார். வசன உச்சரிப்பில் அவரது வித்தகத் தன்மை ஒவ்வொரு படத்திலும் பளிச்சிட்டது.
மாற்று இல்லாத குணச்சித்திரம்
குணச்சித்திர நடிப்பிலும் ரங்காராவ் போல உச்சத்தைத் தொட்டவர் பாலையா. பாகப் பிரிவினை(1959) படத்தில் பாகப் பிரிவினை செய்யும் காட்சியில் பாலையா, வாயில் துண்டை வைத்துக்கொண்டிருக்கும் தன் தம்பி எஸ்.வி. சுப்பையாவிடம் தாய், தந்தையர் போட்டோவைக் காட்டிப் பேசும் நடிப்பில் தியேட்டரில் அழாதவர்கள் இருக்க முடியாது.
பாலைய்யாவும் நாகேஷும் காதலிக்க நேரமில்லை (1964) படத்தில் அடிக்கும் லூட்டி மறக்கவே முடியாதது. நகைச்சுவையின் அதிகபட்ச சாதனை அது. ‘திருவிளையாடலில்’ (1965) வித்துவச் செருக்கை அழகாகக் காட்டி நடித்த ‘ஒரு நாள் போதுமா?’ பாடல் காட்சியும், ‘என்னடா இது மதுரைக்கு வந்த சோதனை?’ என்று பேசிய வசனமும் இன்றும் பிரபலம். ‘பாட்டும் நானே, பாவமும் நானே’ பாடலைக் கேட்டபின் அவர் வெளிப்படுத்தும் மிரட்சியும்தான். கர்வம், எகத்தாளம், மிரட்சி என்ற உணர்வுகள் பாலையாவின் நடிப்பில் விசேஷ பரிமாணங்கள்.
தில்லானா மோகனாம்பாள் (1968) அவரது நகைச்சுவை நடிப்பின் மற்றொரு சிகரம். ‘தம்பி,வயிறு சரியில்ல சோடாக்கடைக்குப் போனேன். அவன் என்னத்தையோ ஊத்திக்கொடுத்துட்டான். பித்த உடம்பா… தூக்கிடுச்சி!’
அடிமைப ்பெண் படத்தில் செங்கோடன் வில்லன் பாத்திரத்தை பாலையா செய்ய ஆசைப்பட்டார். அந்தப் பாத்திரத்தை எம்.ஜி.ஆர். தரவில்லை. அசோகன்தான் அந்தப் பாத்திரத்தில் நடித்தார்.
பாலையாவின் மூத்த மகன் சாய்பாபா திரையில் நாகேஷுக்கு இரண்டு பாடல்கள் பாடியிருக்கிறார்.
‘எங்கிருந்தோ வந்தாள்’ படத்தில் ‘ஹலோ மை டார்லிங்', ‘வீட்டுக்கு வீடு’ படத்தில் ‘மலர்களில் படுத்தவள் சகுந்தலை' போன்ற பாடல்கள் சாய்பாபா பாடியவைதான்.
அப்பா வழியில் திரைக்கு நடிக்க வந்த அவரது மற்றொரு மகன் ஜூனியர் பாலையா. அப்படியே பாலையாவின் மற்றொரு நகலாக விளங்குகிறார்.
ஏழு பிள்ளைகளின் தந்தையான பாலையா 1972-ல் மறைந்தபோது அவருக்கு வயது 60. ரங்காராவ் போல இவரும் முதுமையைப் பார்க்காமலே தான் மறைந்தார். நடிப்புலகில் அவரது முன்மாதிரி என்றும் மறையாது.
பாலையாவுக்கு மாற்று இல்லை!
காலத்தை வெல்லும் தமிழ்ப்படங்களின் வரிசையில் 50 ஆண்டுகளைக் கொண்டாடி முடித்திருக்கிறது ’காதலிக்க நேரமில்லை’. ஒய்.ஜி.மகேந்திரனின் முன்முயற்சியில் சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற ‘காதலிக்க நேரமில்லை’ பொன்விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய இயக்குநர் மனோபாலா, இந்தப் படத்தின் மறுஆக்க உரிமையை வாங்கியும் அதைப் படமாக்க முடியவில்லை என்று அதற்கான காரணத்தைக் கூறியபோது, அரங்கமே அதிர்ந்தது. அதற்குக் காரணம் என்னவாக இருக்கும்?
“காதலிக்க நேரமில்லை படத்தின் ரீமேக் உரிமையை வாங்கிய சந்தோஷத்துடன், அந்தப் படத்தின் இயக்குநர் ஸ்ரீதரை பார்க்கச் சென்றேன். எனக்கு வாழ்த்துகள் சொன்ன அவர் நட்சத்திரங்களை தேர்வு செய்துவிட்டாயா என்றார். நான் இன்று பிரபலமாக இருக்கும் இளம் நட்சத்திரங்களின் பெயர்களை வரிசையாக சொல்லிக்கொண்டே வந்தேன். உடனே என்னை இடைமறித்த அவர், “எல்லாம் சரி.. பாலையா கேரக்டருக்கு யாரைப் போடப்போறே?” என்றார். நானும் அவர் முன்னால் அமர்ந்து யோசித்துக் கொண்டே இருந்தேன். ஆனால் பாலையாவுக்கு மாற்றாக எனக்கு யாருமே தோன்றவில்லை. எனது தோல்வியை ஒப்புக்கொண்டு மறுஆக்க உரிமையை அவரிடமே திரும்பக் கொடுத்துவிட்டு வந்தேன்” என்றார்.
chinnakkannan
25th August 2014, 11:14 AM
ஹாய் குட்மார்னிங்க் ஆல்..
ராகவேந்தர் சார் பாடல்களுக்கு நன்றி
எஸ்வி.சார்.. என்னாச்சு ..காலங்காத்தால விஜி., செம்மீன் ஷீலான்னு ஞாபகம் :) க்ருஷ்ணாஜி வெல்கம் பேக்.. நீங்க கொடுத்த பாலையா தகவல்கள் சுவை.. ம்ம் நீங்க பாலையா நினைவுபடுத்தறீங்க..
பாலையா ஒரு மிகச் சிறந்த நடிகர்..பாவமன்னிப்பில் பாலிருக்கும் பழமிருக்கும் பாடலில் பார்த்து அவர் பதறும் ஒரு காட்சி போதும்..
Richardsof
25th August 2014, 11:18 AM
http://i59.tinypic.com/102pkox.jpg
Richardsof
25th August 2014, 11:23 AM
http://i59.tinypic.com/n19lyr.jpg
chinnakkannan
25th August 2014, 11:30 AM
க்ருஷ்ணா ஜி பத்து நாள்ல நூறு பக்கம்..ம்ம் கங்க்ராட்ஸ் டு ஆல்..
மேஜர் சந்த்ரகாந்த் நல்ல படம்.. பாடல்கள் படஓட்டத்தைக் குறைக்கின்றன்வாம்..அந்தக்காலம்..இ காலப் பாட்டுல்லாம் கேட்டா என்ன எழுதியிருப்பாங்க..முத்துராமன், நாகேஷ், ஜெயலலிதா(அழகு, நளினம் கூட), ஏவி எம் ராஜன் என எல்லாருக்கும் இளமை துள்ளினாலும் கூட வயதான மேஜரும் இளமையாய்த் தான் தெரிவார்!
செளண்ட் ஆஃப் மியூசிக்..ஒரே ஒரு தடவை தான் வெகுகாலம் முன் பார்த்திருக்கிறேன்.. அதன் தமிழ் உல்டா நேற்று ராஜ் டிவியில் போட்டார்கள் ( சாந்தி நிலையம் :) )
Richardsof
25th August 2014, 11:31 AM
http://i58.tinypic.com/2dbqaus.jpg
Powered by vBulletin® Version 4.2.5 Copyright © 2024 vBulletin Solutions, Inc. All rights reserved.