PDA

View Full Version : ச்..ச்..ச்யாமளி..



chinnakkannan
23rd August 2014, 03:19 AM
ச்..ச்.. ச்யாமளி…
*
சின்னக் கண்ணன்
*
ஹலோ செளக்கியமா..எப்படி இருக்கீங்க?

ஒரு நிமிஷம்..உங்களை ஒரு இருபத்து ஐந்து வயசுப் பையனாக் கற்பனை செஞ்சுக்கிறீங்களா?

ரைட்டோ.. இப்ப ஒரு பதினெட்டு வயசுப் பொண்ணு கொஞ்சம் முன்னிரவு வேளைல, அதாவது ஒரு எட்டு எட்டரை மணிக்கு உங்க ரூமுக்கு வர்றா..உங்க வீட்டிலயும் யாரும் இல்லை..என்ன ஆகும் உங்களுக்கு?

கொஞ்சம் நாக்கு உலந்து போகும்..அவளோட பேசணும்.. அரட்டை அடிக்கணும்னு தோணும்..கொஞ்சம் விட்டா லேசா தொடலாமான்னு கூடத் தோணும் இல்லையா..

அப்படில்லாம் இல்லாம இந்த தத்தி முரளி இருக்கே..ஜஸ்ட் லைக் தட் சுவாதீனமா கம்ப்யூட்டர்ல என்னவோ படிச்சுக்கிட்டு இருக்கு..இண்டர் நெட்ல யாரோ ரொம்ப சுவாரஸ்யமா கட்டுரை எழுதியிருக்காங்களாம்.. தலைப்பு என்னன்னு பார்த்தாக்க “பசுமை சமவெளிகளை விலங்குகள் எவ்வாறு பாதுகாக்கின்றன” சே!

சுத்திலும் பாக்கறேன்..ஒரே தமிழ் புக்ஸ் தான்..டைட்டில்லாம் பார்த்தாக்க ..என்பிலதனை வெயில் காயும், உப பாண்டவம், ஒரு வெங்காயத்தின் கதை, புற நானூறு எளிய உரை, ஆவிகளின் உலகம்னு இருக்கு..

ஓ..ஐம் ஸோ ஸாரி.. நான் யாரு முரளி யாருன்னு சொல்லாம நேர ஏதேதோ சொல்ல ஆரம்பிச்சுட்டேன்.. நா எப்பவுமே இப்படித் தான். ஒரு அவசரக் குடுக்கை.

நா ச்யாமளி..யா..பதினெட்டு வயசு.. க்வின் மேரிஸ்ல பிஎஸ்ஸி மேத்ஸ் பண்றேன். பாக்க ஏதோ கொஞ்சம் சுமாரா திரும்பிப் பாக்கறா மாதிரி இருக்கேன்னு இந்த சப்பை மூக்கு காயத்ரி தான் சொன்னா(அவளுக்கு என்மேல எப்பவும் ஒரு ஜெ உண்டு..ஜென்னா ஜெலஸி)

இந்த முரளி என்ன லவ்வரான்னு கேக்கறீங்களா..சேச்சே இல்லை..

இல்லைன்னு சொல்றது கூடத் தப்பு.இன்னும் இல்லை.. அவன் காயத்ரியோட ப்ரதர்..ஹூண்டாய்ல ஒர்க் பண்றான்..

இவன் எனக்கு அறிமுகமானதே வேடிக்கை தான்..

chinnakkannan
23rd August 2014, 03:20 AM
என் வீடு அசோக் நகர்ல ஸெவன் த் அவென்யூல இருக்கு..

வழக்கம் போல உதயம் தியேட்டர் கிட்டக்க பஸ்ல இருந்து அன்னிக்கு இறங்கி நடந்துக்கிட்டு இருந்தேனா..பார்த்தா பின்னால இவன்.
சே! பஸ் கூட்டத்தில ஒரே வியர்வை..ஒரே கசகசன்னு இருக்கு..வீட்டுக்குப் போய் முதல்ல நன்னா முகமலம்பணும். தலைல்லாம் கன்னா பின்னான்னு கலைஞ்சு இருக்கு..இவன் வேற பின்னாலேயே வரானே..

கமீஸை ஒழுங்கா சரி செஞ்சுக்கிட்டே ஓரக்கண்ணால பார்த்துக்கிட்டே வேகத்தைக் கூட்டி நடந்தேன். மெய்ன் ரோட்ட் எப்பவும் கொஞ்சம் ட்ராஃபிக் இருக்கும். ஸோ என் வீட்டுப் பக்கம் போகாம எதிர்த்திசைல போக ஆரம்பிச்சேன்.

அங்க பக்கத்துல உள்ள தெருல்ல தான் என் ஃப்ரண்ட் வீடு இருக்கு..

மூச்சிரைக்க போய் பெல் அடிச்சாஅ ஃப்ரெண்ட் தான் திறந்தா.. என்னப் பாத்துத் திகச்சுப் போய்ட்டா.

ஹேய் என்னாச்சு உனக்குன்னு சொல்லி உள்ள கூப்பிட்டுக் கிட்டா.. அவ கிட்ட நடந்ததைச் சொல்லிக்கிட்டே இருக்கறச்சே மறுபடி காலிங்க்பெல்.

ஹேய்! அவன் தான்னு நினைக்கறேன்னு பதறினேன்..”ச்ச்ச் கவலைப் படாதே சியாமா”ன்னு சொல்லிக்கிட்டே பீப் ஹோல்ல பாத்தா.

ஏய். எங்க அண்ணனும் வந்துட்டாண்டி. இனிமே எவன் வந்தாலும் ஒரு கை பாக்கலாம்னு கதவைத் திறந்தா. பாத்தா என் பின்னாடியே வந்த ஆள் தான் அவன்.

ஏய்..இவன் தான் என் பின்னாடி வந்த்துன்னு சொல்ல நினைச்சு நிறுத்திட்டேன்.

“யாரு இவ? உன்னோட ப்ரெண்ட்டா”ன்னு எருமை மாட்டுமேல மழை பேஞ்ச மாதிரி எக்ஸ்ப்ரஷனே இல்லாம கேட்டுட்டு ப்திலே எதிர்பாக்காம சட்டுனு மாடிக்குப் போயிடுத்து அது.

“எங்க அண்ணன் முரளி டீ.. கவலைப் படாதே..அவனையே கொண்டு விடச் சொல்லட்டா”ன்னா காயத்ரி.

சே . நா என்ன ஒரு இடியட்! முரளி பாட்டுக்கு அவன் வீட்டுக்கு வந்துக்கிட்டுருந்திருக்கான். நான் தான் என் பின்னால வர்றான்னு நினச்சுட்டேன். ஆமா நான் என்ன அழகா இல்லையா என்ன! இவன் கண்டுக்கவேயில்லையே. சீக்கிரம் வீட்டுக்குப் போய் கண்ணாடில்ல பாக்கணும்.

வேணாம் காயத்ரி. இன்னேரம் அவன் போயிருப்பான்னு சொல்லிட்டு வீட்டுக்குப் போயிட்டேன்.

இன்னொரு நாள். பாண்டி பஜார்ல பொட்டு வாங்கிட்டு அப்படியே வந்து ராம்ஸ் மில்க்கி வேல்ல ஸ்கூட்டிய நிப்பாட்டி உள்ளே போனேன்.

என் அம்மா தான் கிளம்பறச்சயே சொல்லிட்டா..”ச்யாமி. போய் அந்தக் கண்ணாடிக் கடைல என்னோட்ட கண்ணாடிய வாங்கிட்டு வா”ன்னு

ஏதோ ஸ்க்ரூ லூசாருக்குன்னு கொடுத்திருந்தாளாம். நான் தான் வாங்கிட்டு வரணுமாம். அதுவும் ஸ்கூட்டியவே ரொம்ப ரேராத்தான் எடுப்பேன் நான்..அதுக்கே ஆயிரத்தெட்டுப் பாட்டுப் பாடுவா..

ரொம்ப ஸ்பீடாப் போவாதே..கொஞ்சம் ஜாக்ரதையா போ.ஒண்ணும் அவசரமில்லை.லைசென்ஸ் எடுத்துண்டுட்டயா? கைல பெட்ரோல்க்கு பெட்டி கேஷ் வெச்சுருக்கயா?etc etc..

கண்ணாடிக் க்டைக்குள்ள போய்ட்டு வெளிய வந்தா ஹாய்னு குரல். திரும்பினா முரளி!

chinnakkannan
23rd August 2014, 03:21 AM
“என்ன இந்தப் பக்கம்”னான். கொஞ்சம் ஸ்டோன் வாஷ் ஜீன்ஸும்(மஸ்டர்ட் கலர்) டார்க் ப்ளூ கட்டம் போட்ட சட்டையுமா நல்லாவே இருந்தான்..இதுக்கு இப்படில்லாம் ட்ரஸ் போடத் தெரியுமா என்ன..

விஷயத்தைச் சொன்னேன். சரி. நானும் ஒரு ஃப்ரெண்ட் பார்க்கத்தான் வந்தேன்னு சொன்னவன் கீழே போய் காபி சாப்பிடலாம்னு சொல்லியிருப்பான்னு நினைக்கறீங்க தானே..அதான் இல்லை. கஞ்சூஸ் மார்வாடி.

சரி வரட்டா பைன்னு சொல்லிட்டு ரோடைக் க்ராஸ் பண்ணப் பார்த்தான்.

நான் ஸ்கூட்டிய எடுத்துத் திரும்பி ஸ்டார்ட் பண்றதுக்குள்ள தடால்னு சத்தம். என்னன்னு பார்த்தா எதிர்ச்சாரில க்ராஸ் பண்றச்சே ஒரு பைக் காரன் வந்து முரளி மேல மோதிட்டான் போல. ரெண்டு பேருமே கீழே விழுந்திருந்தாங்க.

பதறி,மறுபடியும் ஸ்கூட்டிய ஸ்டாண்ட் போட்டுட்டு அங்க ஓடினேன். முரள் எழுந்திருச்சிருந்தான். பைக்காரன் சாரி சாரின்னு கேட்டுக்கிட்டிருக்க இட்ஸால் ரைட்டுன்னு சொன்னவன், ஓடி வந்த என்னைப் பார்த்தான்.

ஒண்ணும் இல்லீங்க. நான் தான்பார்க்காம வந்துட்டேன்..

அடி கிடி எதுவும் படல்லியே..ஏன் இப்படிப் பதற்றப் படறேன்னு எனக்கே புரியலை..சுத்து முத்தும் பார்த்தேன்.

அவனோட கால்.. கட்டை விரல்ல கொஞ்சம் ரத்தம்.

ஓரமாக் கூட்டிக்கிட்டுப் போய்.,”முரளி..ஸீ”

“ச்ச்..இதெல்லாம் ஒண்ணும் இல்லை.சியாமளி.. சரியாய்டும்”

“ம்ம்..அதெல்லாம் அலட்சியமா விட்டுடக் கூடாது..பாருஙக் விந்தி விந்தி நடக்கறீங்க..வாங்க டாக்டர் வீட்டுக்குப் போலாம்”

“டாக்டர் வீட்டுக்கா..இந்தக் காயத்துக்கா” அலட்சியமா அவன் சிரிக்க எனக்கு ஏனோ கோபமா வந்துச்சு.

”சும்மா வாங்க.. எனக்குத் தெரிஞ்ச டாக்டர் தான் இந்த சந்தில இருக்காங்க..என் அப்பாவோட ப்ரெண்ட்ன்னு முப்பாத்தம்மன் கோவில் தெருவிற்கு அடுத்த தெருவில் இருந்த டாக்டர் வீட்டுக்குக் கூட்டிப் போனேன்..

“என்ன சியாமளி. என்ன உடம்புக்கு.அப்பால்லாம் செளக்கியமா” சினேகமாய்ச் சிரிச்சார் டாக்டர் சந்திர மோகன்.

“எல்லாம் ஓக்கே..அங்கிள். இவர்..மிஸ்டர் முரளி. சி.ஏ. ஹையுண்டை. என் ப்ரெண்ட் காயத்ரியோட ப்ரதர்”

“எல்லாம் சரி. என்ன விஷய்ம் குழந்தை.”

”மொதல்ல என்னைக் கொழந்தைன்னு கூப்பிடறத ஸ்டாப் பண்ணுங்க.இவர் பாருங்க. சிரிக்கிறார். அதாவது.” என்று முரளியின் கால் காட்டி விஷய்ம் சொல்ல சந்த்ரு சிரிச்சார்.

”இது ஒண்ணுமே இல்லையேம்மா. சாதாரணமா விட்டாலே சரியாய்டும்”

“அதத் தான் நானும் சொன்னேன் டாக்டர்”

“மிஸ்டர் முரளி. ச்யாமளி இருக்காளே. ரொம்ப பயந்த சுபாவம். ஏதாவது யாருக்காவது உடம்புக்கு முடியலைன்னா இன்னும் பயப்படுவா. ச்யாமி..வேணும்னா இவருக்கு ஒரு ஏ.டி.எஸ் போடட்டுமா” எனச் சந்த்ரு சொல்ல முரளி சிரிக்க எனக்குக் கோபமாய் வந்தது. வெளியில் வந்து விட்டேன்.

chinnakkannan
23rd August 2014, 03:22 AM
பின் நான் வீட்டிற்கு வந்ததும் முரளி ஃபோனில் ஸாரி சொன்னதெல்லாம் வேறு கதை..

அதன் பிறகு சில பல தடவை பார்த்திருப்போம். எனக்கு அவன் பேரில் ஒரு வித..ஒரு வித..அதென்ன ஈர்ப்பா.. அஃபெக்ஷனா..இது தான் லவ்வான்னு கூடத் தெரியலை..ஆனா ரொம்ப எனக்குப் பிடிச்சுப் போச்சு..அதுவா ஏதாவது சொல்லும்னு நினைச்சுக்கிட்டே இருந்தேன்.

இன்னிக்குப் பாத்தா காயத்ரியைப் பார்க்கணும்னு தோணிச்சு. அம்மாக் கிட்ட சொல்லிட்டு ஸ்கூட்டிய எடுத்துக்கிட்டு அவ வீட்டுக்கு வந்தா அவ இல்லை. இவன் தான் கதவைத் திறந்தான்.

“ஹை. சியாமி. வாட் எ ஸர்ப்ரைஸ்”னான். உள்ள போனா, :உனக்கு இந்த ட்ரஸ் ரொம்ப அழகா இருக்கு”

கிண்டல் பண்றானான்னு தெரியலையே. நான் போட்டிருந்தது பிங்க் கலர் சுரிதார். கொஞ்சம் யோசிச்சுத் தான் போட்டுக்கிட்டேன். அவ்வளவு ஒண்ணும் நன்னா இருக்காது. அதுவும் இந்த டெய்லர் கடங்காரி ரெண்டு மூணு தடவை ஆல்ட்ர் பண்ணிக் கொடுத்தது.

“நெஜம்மாவா”ன்னேன்.

“ஆமா.. காயத்ரி..அம்மால்லாம் எங்கே?”

“வெளிய போயிருக்கா. கொஞ்சம் வெய்ட் பண்ணு வந்துடுவா..”

“நா வேணும்னா கிளம்பட்டா..”

“வெய்ட் பண்ணிப் பாத்துட்ட்டே போயேன்”ன்னான். “ஹால்ல டிவி பாரு..அப்படி இல்லைன்னா மாடிக்கு என் ரூமுக்கு வா.பேசிக்கிட்டிருக்கலாம்”

“படவா.. நீ தான் பேசறயா”ன்னு மனசுல நினைச்சுக்கிட்டேன். சரின்னு சொல்லிட்டு (கொஞ்சம் பயம்மா.. வெட்கமா தான் இருந்துச்சு.. இருந்தாலும் என்ன ஆயிடப் போறதுன்னு ஒரு அசட்டு தைரியம்) மேல அவன் ரூமுக்கு வந்தா.

ரொம்ப ஆர்கனைஸ்டா இருந்தது அறை..

இது என்னை புக்ஸ்லாம் பார்த்துண்டு இருன்னு சொல்லிட்டு நெட்ல ஒக்காந்துடுத்து.. சொல்லுங்க கோபம் வருமா வராதா?

chinnakkannan
23rd August 2014, 03:23 AM
வேற ஏதாவது புக்ஸ் இருக்குதான்னு ஷெல்பில பார்த்தா தடி தடியா அக்கெளண்ட்ஸ் புக்ஸ், கம்பெனி லா..ஒரு மூலைல ப்ரிண்ட்டட் பேப்பர்கள் இருந்தது. நின்னுக்கிட்டே எடுத்துப் படிச்சேன்..

கவியரங்கம்..
பூவாக நானிருந்தால்

பூவாக நானிருந்தால் எந்தவண்ணம்
புவனமதில் பிறந்திருப்பேன் என்ற எண்ணம்
பாவாகப் புனைகின்ற இந்த வேளை
பாலகனென் பிழைகளைநீர் பொறுக்க வேண்டும்..

முடியாது போய்யா..

நிமிர்ந்தால்..முரளி.. புஸ்ஸூ புஸ்ஸுன்னு அவனோட மூச்சு எனக்குக் கேக்கற அளவுக்கு நின்னுக்கிட்டிருந்தான். “ச்ச் ச்யாமி”ன்னு என்னோட கையைப் பிடிச்சுக்கிட்டான்.

எனக்குப் படபடன்னு வந்தது.. என்ன செய்யறதுன்னு தெரியலை..பட். அவன் கண்ணில கெட்டதா எதுவும் தெரியலை. ஜஸ்ட் என்னோட க்ண்ணைப் பார்த்துத் தான் பேசினான்.

“ச்யாமி..எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியலை..ஐ..ஐ லவ் யூ”ன்னு சொன்னவன் டக்குன்னு என்னோட கன்னத்தைப் பிடிச்சு அவனோட உதட்டுக்கு இழுக்க…

படால்னு திமிறிட்டேன்.. “ நோ முரளி.. இதுல்லாம் தப்பு.. உங்க கிட்ட..உன் கிட்ட இப்படில்லாம் எதிர்பார்க்கலே” இன்னும் என்னவெல்லாமோ சொல்லிட்டு நெஞ்செல்லாம் படபடக்க கீழே ஓடி வந்து வாசக்கதவைத் திறந்து வெளியே வந்துட்டேன்.

ரோட்டுக்கு வந்து ஒரே வேகமா ரொம்பப் பதட்டத்தோட நடக்க ஆரம்பிச்சேன்.

பலப் பல சிந்தனை மனசுல. “என்ன இவன் இப்படி நடந்துக்கிட்டான்! வீட்டு வாசல்ல வந்து கூப்பிடுவானோ? நல்லவேளை கூப்பிடலை.. நலலவன்னு தானே நினச்சோம்”னு நினைக்கறச்சயே மனசு, “ச்யாமி.. கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி நீ தானேடி வருத்தப் பட்ட அவன் தொடல்லயேன்னு’னு குத்திக் காமிச்சுது.

ட்ரூ.. இருந்தாலும்..இருந்தாலும்..இவ்ளோ ஃபாஸ்டா அவன் இருந்திருக்கக் கூடாது..அவன் நடந்துக்கிட்டது தப்புத் தான்.. என்னை என்னன்னு நினச்சான் அவன்.

மெய்ன் ரோட்டைக் கிராஸ் பண்ணினேன். ஒரு லாரி தடதடத்து என்னைக் கடந்தது.

*

chinnakkannan
23rd August 2014, 03:24 AM
நினைச்சுப் பாத்தா சிரிப்புத் தான் வருது எனக்கு.

அவன் என்ன அப்படித் தப்புப் பண்ணிட்டான்..ஒரு சின்ன முத்தம் கொடுக்கப் பார்த்தான். கொடுத்துட்டுப் போயிருக்கலாமில்லை..

அது என்ன பாட்டு..

கண்கள் படாமல் கைகள் தொடாமல் காதல் வருவதில்லை “ சரி தானே!

“ச்யாமி.. நீ ஒரு ஏ கே ஜே” (அறிவு கெட்ட ஜென்மம்) எல்லாம் பண்ணிட்டு இப்படி வருத்தப் படறியே

இப்படிப் பண்ணினா என்ன? அவன் வீட்டுக்குப் போய் அவனுக்கு ஸர்ப்ரைஸா “ஸாரிடா” சொல்லி சின்னதா கிஸ் கொடுத்தா..

எப்படி ஃபீல் பண்ணுவான்னு பார்க்கலாமா..

யோசனை தோணின உடனே பறந்து போய் அவன் ரூமுக்குப் போனேன். வழக்கம் போல கம்ப்யூட்டர் முன்னால் ஒக்காந்துண்டு இருந்தது அது. கண்ணு கொஞ்சம் சிவப்பா இருந்துச்சு..அது சரி.. ராத்திரி வேளைல்ல இப்படித் தூக்கமில்லாம நெட் பாத்தா இப்படித் தான்..

ஹேய் முர்ளின்னேன்.. பரப் ப்ரம்மம்..திரும்பியே பார்க்கலை..சடார்னு குனிஞ்சு அவன்கன்னத்தில கிஸ் பண்ணிட்டு ஓடி வந்துட்டேன்.

இப்போக் கொஞ்சம் ஹேப்பியா இருக்கு.. நான் கிஸ் பண்ணினதை அவனால நம்பவே முடியலை போல.. அவன் முகம் போன போக்கை நினைச்சா,, எனக்கு மறுபடியும் சிரிப்புத் தான் வருது.

வீட்டுக்கு வந்து என்னோட அறைக்குப் போய் லைட்ட ஆன் பண்ணி டேப் ரெகார்டரைப் போட்டேன். என்ன பாட்டுக் கேட்கலாம்..ம்ம் தேவிகா பாட்டு.. முரளிக்குப் பிடிக்கும். சரியான இடியட்! அவனவன் சினேகா, மதுமிதானு அலையறான். இவன் இன்னும் பழைய நடிகைய நினச்சுக்கிட்டு இருக்கான்..

மெலிசாப் பாட ஆரம்பிச்சுது..

“அங்கும் இங்கும் அலை போலே
நடமாடிடும் மானிடர் வாழ்விலே
எங்கே நடக்கும் எது நடக்கும்
அது எங்கே முடியும் யாரறிவார்..”

பெட்ல தொப்னு விழுந்தேன்..

யாரோ வர்ற சத்தம் கேட்டது..அம்மாவா இருக்கும்..

அம்மா வந்தாள். கதவைத் திறந்தாள். உடன் மயங்கி விழுந்தாள்..
**
“ஹல்லோ..சந்த்ருவா.. நான் தாண்டா”

“…………………….”

“எங்கே.. அழுதுண்டு தான் இருக்கோம்.. எங்க பார்த்தாலும் எதப் பார்த்தாலும் அவதான் தெரியறா.. பாழாப் போன லாரி.. மூணு நாளாயிடுச்சு.. ஆசை ஆசையா வளர்த்த கொழந்த.. நீ கூட அவள அப்படித் தானே கூப்பிடுவ”

“………………………….”

“சரி சரி..அழலை..கண்ட்ரோல் பண்ணிக்கறேன்.. இவ இருக்காளே என் ஆத்துக்காரி.. பாரேன்..திடீர்னு அவ ரூம்ல சத்தம் கேக்குது. பாட்டு கேக்குதுங்கறா.கொஞ்சம் ப்ளீஸ்…இந்தப் பக்கம் வந்துட்டுப் போறயா ப்ளீஸ்”

**
(முற்றும்)
(மரத்தடி இணையக் குழுவில் இருந்த போது எழுதியது..2005 என நினைவு..ஸாஃப்ட் காப்பி இல்லை எனில் மறுபடியும் ஃப்ரெஷ்ஷாக டைப்படித்தேன்)

rajeshkrv
23rd August 2014, 05:43 AM
சூப்பர் சி.க

pavalamani pragasam
23rd August 2014, 08:21 AM
அட்டகாசமாய் (அரைக்கபாட்ட மாவை) நகர்த்திவிட்டு இப்படி ஒரு திடுக்! அழுவாச்சியா வருது!

chinnakkannan
23rd August 2014, 10:09 AM
ராஜேஷ், பவளமணிக்கா., கோபால் சார்.. நன்றி ...

AREGU
19th November 2014, 10:21 AM
கடைசியில் வரும் `சடார்` திருப்பத்துக்காக, ஆரம்ப அனத்தல்களைப் பொறுத்துக்கொள்ளலாம்..