PDA

View Full Version : மனதை கவரும் மதுர கானங்கள்: பாகம் -3



Pages : 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 [13] 14 15 16

kalnayak
4th March 2015, 11:32 AM
குட்மார்னிங் சி.க.,

சில தவிர்க்க முடியாத காரணங்களினால் சில நாட்களாக திரிக்கு வரமுடியவில்லை. அது கிடக்கட்டும். இங்குதான் நீங்கள் கலக்கிக்கொண்டு இருக்கிறீர்களே.கூடவே ராஜ்ராஜ் அவ்வப்போது தனது ஜுகல்பந்தியுடன் பங்குகொள்ள, சிறிது நாட்களுக்குப் பிறகு நேரம் எடுத்துக்கொண்டு ராகவேந்திரா அவர்களும் கைவண்ணம் காட்ட, அரிதாய் தனது சங்கராபரணத்துடன் கோபால் வர ஆக நன்றாகவே மதுரகானத் திரி களை கட்டியிருக்கிறது. நீங்கள் வாசுவை வரவேற்று எழுதியுள்ள கவிதையைக் கண்டாவது அவர் திரிக்கு உடனடியாக வரவேண்டும்.

kalnayak
4th March 2015, 11:53 AM
நிலாப் பாடல் 29: "ஆகாய வெண்ணிலாவே தரைமீது வந்ததேனோ"
---------------------------------------------------------------------------------------------------------

மறுபடி ஒரு காதல் பாட்டுதான். வெண்ணிலா கீழே இறங்கி வந்ததாக காதலன் காதலியை பாடுவதாக ஒரு பாடல். பாசிலின் படத்திற்காக பிரபு, ரேவதி நடிப்பில் கே.ஜே.ஜேசுதாஸ், உமா ரமணன் பாட இளையராஜா இசையமைத்த்து கிறக்கினார். பாடல் நெறய உவமைகளாக கொண்டிருக்கிறது. காதல் இல்லாம படம் எடுத்து நிலா இல்லாமல் பாடல் எழுதுறதை விட, காதலை படமெடுத்த்து நிலா மற்றும் மலர் இல்லாம பாடல் எழுதுவதுதான் சிரமம் என்று நினைக்கிறேன். மலர்களை பற்றி அடுத்த தொடர் துவங்கினால் தமிழில் 60-லிரிந்து 70 சதவீத பாடல்களை குறிப்பிட்டு விடலாம்.

பாடல் வரிகள்:
----------------------

ஆண்: ஆகாய வெண்ணிலாவே தரை மீது வந்ததேனோ
பெண்: அழகான ஆடை சூடி அரங்கேறும் வேளைதானோ
ஆண்: மலர் சூடும் கூந்தலே மழைக் காலமேகமாய் கூட
பெண்: உறவாடும் விழிகளே இரு வெள்ளி மீன்களாய் ஆட

(ஆகாய வெண்ணிலாவே)

ஆண்: தேவார சந்தம் கொண்டு தினம் பாடும் தென்றல் ஒன்று
பூவாரம் சூடிக்கொண்டு தலைவாசல் வந்ததின்று

பெண்: தென்பாண்டி மன்னன் என்று திருமேனி வண்ணம் கண்டு
மடியேறி வாழும் பெண்மை படியேறி வந்ததின்று

ஆண்: இளநீரும் பாலும் தேனும் இதழோரம் வாங்க வேண்டும்

பெண்: கொடுத்தாலும் காதல் தாபம் குறையாமல் ஏங்க வேண்டும்

ஆண்: கடல் போன்ற ஆசையில் மடல் வாழை மேனி தான் ஆட

பெண்: நடு ஜாம வேளையில் நெடு நேரம் நெஞ்சமே கூட

( ஆகாய வெண்ணிலாவே )


பெண்: தேவாதி தேவர் கூட்டம் துதி பாடும் தெய்வ ரூபம்
ஆதாதி கேசமெங்கும் ஒளி வீசும் கோவில் தீபம்

ஆண்: வாடாத பாரிஜாதம் நடை போடும் வண்ண பாதம்
கேளாத வேணு கானம் கிளி பேச்சை கூட்டக் கூடும்

பெண்: அடியாளின் ஜீவன் ஏறி அதிகாரம் செய்வதென்ன?

ஆண்: அலங்கார தேவ தேவி அவதாரம் செய்ததென்ன

பெண்: இசை வீணை வாடுதோ இதமான கைகளில் மீட்ட

ஆண்: ஸ்ருதியோடு சேருமோ சுகமான ராகமே காட்ட

(ஆகாய வெண்ணிலாவே)

-----------------------------------------------------------------------------------------------------------

பாடல் காட்சி:
---------------------

https://www.youtube.com/watch?v=XEnNT2qI4Cw

சாயங்கால வேளையில் இரவு நேரங்களில் பாடலாம். எல்லா அரங்கேற்றவேளைகளில் இப்பிடியெல்லாம் பாட முடியுமா?

chinnakkannan
4th March 2015, 01:33 PM
//சில தவிர்க்க முடியாத காரணங்களினால் சில நாட்களாக திரிக்கு வரமுடியவில்லை// குட் மார்னிங் கல் நாயக் நோ ப்ராப்ளம்..வீகேன் அண்டர்ஸ்டாண்ட்.. எனக்கும் கூட கொஞ்சம் சூழ் நிலை அப்படி அமைந்து விடுகிறது..இரண்டு தொடர் ரெண்டு அத்தியாயம் பெண்ட்டிங்க்.. எழுதணும்..

இந்த ஆகாய வெண்ணிலாவே எனக்குப் பிடித்த பாடல். ரொம்ப நாள் முன்னால பார்த்த படத்தில் திடுதிப்பென ஆட்கொண்ட மெலடி.. வி.கே.ஆர் பழைய நாடகக் கலைஞர் அண்ட் அவ்ர் பிரபு ரேவதி பற்றிக் கனவு காண்பது போல வரும்.. கொஞ்சம் நெற்றிச் சுருக்கி உற்றுக் க் கேட்டால் தான் பாடல் புரியும்..அதன் ஆழமான அர்த்தமும்..

பட ஆரம்பத்திலும் கூட ஒரு பாட்டு வரும் குண்டு ஒண்ணு வெச்சுருக்கேன் என ஆரம்பிக்கும்.. மலையாள ரீமேக் என நினைக்கிறேன்..

வந்ததுக்கு காலையிலருந்து ஓடிக்கிட்டிருக்கற பாட்டு - மனசுல தான் (அது யார் அந்த ஜீவன் நு கேக்காதீங்க எனக்கே கன்ஃப்யூஷ்னா இருக்கு!)

ஒரு ஜீவன் அழைத்தது
ஒரு ஜீவன் துடித்தது
இனி எனக்காக அழவேண்டாம்
இங்கு கண்ணீரும் விழவேண்டாம்
உன்னையே எண்ணியே வாழ்கிறேன்


https://www.youtube.com/watch?v=lfoMZTONOzI

kalnayak
4th March 2015, 04:15 PM
நிலாப் பாடல் 30: "வெண்ணிலாவின் தேரில் ஏறி"
----------------------------------------------------------------------
இன்னொரு வெண்ணிலாப் பாடல், அதே பிரபு, அதே கே.ஜே.ஏசுதாஸ். ஆனால் என்ன இங்கு காதல் சோகத்துடன், தம்பியின் மீதான பாசத்தை காட்டும் பாடல். வைரமுத்துவின் பாடலுக்கு A.R. ரஹ்மான் இசையமைக்க அமரர் கே.பீ இயக்கியிருந்தார். இங்க வெண்ணிலாவோட தேரை எடுத்துகினு காதல் தேவி நேரில வந்திட்டா. நீதான் குறுக்கால நிக்கிற தம்பி-ன்னு எம்மாஞ் சோகமா சொல்றாரு பாருங்க. இதுவும் கேட்க சுகமாகத்தான் இருக்கிறது.

பாட்டு வரிகளைப் பாருங்களேன்:
--------------------------------------------------

வெண்ணிலாவின் தேரில் ஏறி
காதல் தெய்வம் நேரில் வந்தாளே!!

மானமுள்ள ஊமைபோல
நானும் கேட்க கூசி நின்றேனே!


நிறம்கண்டு முகம்கண்டு நேசம் கொண்டேன்
அவள் நிழல்கண்டு நிழல்கண்டு நான் பாசம் கொண்டேன்
வெண்ணிலாவின் தேரில் ஏறி காதல்தெய்வம் நேரில் வந்தாளே!


அட கைநீட்டும் தம்பியே எனை கட்டிவைத்தாள் அன்னையே
நீ வெட்டினாலும் நீரை வார்க்கும் இந்தப் பாறையே....
அட கைநீட்டும் தம்பியே எனை கட்டிவைத்தாள் அன்னையே
நீ வெட்டினாலும் நீரை வார்க்கும் இந்தப் பாறையே....
நிறம்கண்டு முகம்கண்டு நேசம் கொண்டேன்
அவள் நிழல்கண்டு நிழல்கண்டே நான் பாசம் கொண்டேன்.
வெண்ணிலாவின் தேரில் ஏறி காதல்தெய்வம் நேரில் வந்தாளே!

காலழகும் மேலழகு கண்கொண்டுக் கண்டேன்
அவள் நூல் அறியும் இடை அழகும் நோகாமல் தின்பேன்
கத்தி மூக்கில் காதல் நெஞ்சைகாயம் செய்து மாயம் செய்தாளே

அட கைநீட்டும் தம்பியே எனை கட்டிவைத்தாள் அன்னையே
நீ வெட்டினாலும் நீரை வார்க்கும் இந்தப் பாறையே....

அவள் சிக்கெடுக்கும் கூந்தல் சீப்பாக இருப்பேன்
இல்லை செந்தாமரை பாதத்தில் செருப்பாக பிறப்பேன்
அண்டமெல்லாம் விண்டு போகும் கொண்ட காதல்
கொள்கை மாறாது.

அட கைநீட்டும் தம்பியே எனை கட்டிவைத்தாள் அன்னையே
நீ வெட்டினாலும் நீரை வார்க்கும் இந்தப் பாறையே....

சரி பாட்டைப் பார்த்திடுங்க:
-------------------------------------------

https://www.youtube.com/watch?v=9Br1ckfsDPk

இந்த பாட்டு டூயட் இல்லைங்கன்னு சொன்னால் யாரும் நம்ப மாட்டேங்கிறாங்க. நான் சொல்றது தப்பா?

kalnayak
4th March 2015, 04:21 PM
வந்ததுக்கு காலையிலருந்து ஓடிக்கிட்டிருக்கற பாட்டு - மனசுல தான் (அது யார் அந்த ஜீவன் நு கேக்காதீங்க எனக்கே கன்ஃப்யூஷ்னா இருக்கு!)



என்ன சி.க. யாரு அந்த ஜீவன்னு கண்டு பிடிச்சு கன்ஃப்யூஷ்ன் போச்சா இல்லையா? முடியலைன்னா தெரிஞ்சவங்க மூலமா கண்டுபிடிங்க!!! நான் யாருன்னு கேட்கமாட்டேன். பயப்படாதீங்க.

மத்தபடி எனக்கும் இந்த பாட்டு ரொம்ப பிடிக்கும். நானும் நெறைய நாளா விரும்பிக் கேட்ட பாட்டுதான்.

chinnakkannan
5th March 2015, 10:31 AM
ரொம்ப நாளா கேட்க நினைத்திருந்த கேள்வி..

உத்தம புத்திரன் படத்தில் வரும் யாரடி நீ மோகினி பாடல் பல காலம் முன் இசைக்களஞ்சியத்தில் கேட்ட போது - அன்பே வா வா ..என் அன்பே வா வா வா வரிகள் முடிந்த பிறகு..

நானும் நீயும் நல்ல ஜோடி
தேனும் பாலும் போன்ற ஜோடி
கூட்டமாகப் பாட்டுப்பாடி
ஆசையாக ஆடி ஆடி...
.... அப்புறம் பலவரிகள்..மன்னா இங்கே நீயே வாவா என முடிந்து பின் அன்பே வா வா..வந்து க்ளாப்ஸில் முடியும்

ஐ திங்க்..அதற்கப்புறம் தான் நினைவு தெரிந்து கல்லூரிப் பருவத்தில் பரமேஸ்வரியில் படம் பார்த்தேன்.. அந்த வரிகள் இல்லை..பின்னும் இன்று வரை இல்லை..

கேள்வி.. அப்படி வரிகள் இருந்தது தானே..?

kalnayak
5th March 2015, 11:20 AM
ரொம்ப நாளா கேட்க நினைத்திருந்த கேள்வி..

உத்தம புத்திரன் படத்தில் வரும் யாரடி நீ மோகினி பாடல் பல காலம் முன் இசைக்களஞ்சியத்தில் கேட்ட போது - அன்பே வா வா ..என் அன்பே வா வா வா வரிகள் முடிந்த பிறகு..

நானும் நீயும் நல்ல ஜோடி
தேனும் பாலும் போன்ற ஜோடி
கூட்டமாகப் பாட்டுப்பாடி
ஆசையாக ஆடி ஆடி...
.... அப்புறம் பலவரிகள்..மன்னா இங்கே நீயே வாவா என முடிந்து பின் அன்பே வா வா..வந்து க்ளாப்ஸில் முடியும்

ஐ திங்க்..அதற்கப்புறம் தான் நினைவு தெரிந்து கல்லூரிப் பருவத்தில் பரமேஸ்வரியில் படம் பார்த்தேன்.. அந்த வரிகள் இல்லை..பின்னும் இன்று வரை இல்லை..

கேள்வி.. அப்படி வரிகள் இருந்தது தானே..?

சி.க.,
இந்த கேள்வியை, நடிகர் திலகம் திரியில் இட்டிருந்தால் இந்நேரம் பதில் கிடைத்திருக்கக்கூடும்.இருக்கட்டும். பரவாயில்லை. ராகவேந்திரரோ, இல்லை முரளியோ வந்தால் பதில் கிடைத்துவிடும். ஏன் கலைவேந்தன் கூட பதில் அளிக்கலாம். நாம் காத்திருக்கலாம். எனக்கும் நீங்கள் சொல்கின்ற வரிகளை முன்பு எங்கேயோ கேட்டது போல் தோணுகின்றது. என்னிடம் உள்ள cd காபியும் சரியாக இல்லை- பார்த்து எதையாவது சொல்வதற்கு!!!

chinnakkannan
5th March 2015, 11:36 AM
ஹாய் குட்மார்னிங்க் கல் நாயக் வாங்க..கேகே கமெண்ட்ஸ் திரி பார்த்தீங்களா :)

kalnayak
5th March 2015, 04:17 PM
"நிலவே நீ சாட்சி.." : நிலாப் பாடல் 31
----------------------------------------------------------

K.R. விஜயாவை ஏற்கனவே இரண்டு சோகப்பாடலில் பார்த்து விட்டோம். (ராமன் எத்தனை ராமனடி மற்றும் ராமு படப் பாடல்களில்). இப்போது ஒரு சந்தோஷப் பாடலில் பார்க்கலாம். இசையரசியின் குரலில் அழகானப் பாடல். மெல்லிசை மன்னர் இசை.*என்ன இங்கே நிலாவை சாட்சியாக்கப் பார்க்கிறாங்க.


பாட்டு வரிகளை பார்க்கலாமா இப்ப:
------------------------------------------------------
நிலவே நீ சாட்சி..
மன நிம்மதி நாடும் உயிர்களுக்கெல்லாம்
நிலவே நீ சாட்சி..

( நிலவே )


அலையும் உறங்க முயல்வதென்ன - மன
ஆசைகள் உறங்க மறுப்பதென்ன
வலையில் விழுந்த மீன்களென - சில
வாலிப உள்ளங்கள் துடிப்பதென்ன

( நிலவே )

ஒரு சில இல்லத்தில் சுவைப் பேச்சு - சில
உள்ளங்களில் ஏனோ பெருமூச்சு
இருவரை இணைத்து திரை போட்டு - இது
இறைவன் நடத்தும் விளையாட்டு

( நிலவே )

கண்கள் இரண்டும் குருடானால் - இந்தக்
காதல் கதைகள் பிறப்பதில்லை
உறவும் பிரிவும் நடப்பதில்லை - இந்த
உலகில் இனிப்பும் கசப்புமில்லை

( நிலவே )

படத்தோட பாக்கலாமா இப்ப:

https://www.youtube.com/watch?v=sFSJVnHY8lA

பாடும் நிலாவுடன் இசையரசி பாடின சோகப் பாடலும் உண்டு. அது இதோ:

https://www.youtube.com/watch?v=o8YWpamt4Ic

என்ன படத்தோட பேரை கேக்கிறீங்களா நீங்க. .அங்க தானே ஆரம்பிச்சோம்.

chinnakkannan
5th March 2015, 10:56 PM
கொஞ்சம் நில்லடி என் கண்ணே
கொஞ்சம் சொல்லுங்கள் என் கண்ணா. வெ.ஆ நி ஜெய்ஷங்கர்.காதலித்தால் போதுமா அப்போ வாணி யார்.கன்ஃபீஷன்..


https://www.youtube.com/watch?v=GAFot8yisbY&feature=player_detailpage

RAGHAVENDRA
5th March 2015, 10:57 PM
சி.க. சார்...

இதோ... இந்தாருங்கள்... பிடியுங்கள்...

வேறோர் இணைய தளத்திலிருந்து... தரவேற்றிய நண்பருக்கு உளமார்ந்த நன்றி -

http://www.mediafire.com/listen/hnh8m9czqh46jt7/Yaaradi+nee+mohini+%28Full-Record%29.mp3

திராட்சையின் தேன் சாறடி..டி.எம்.எஸ். பாடும் இந்த வரிகளுக்குப் பிறகு தான் தேன் வேணுமா ஒலிக்கும்..

chinnakkannan
6th March 2015, 12:38 AM
ராகவேந்திரா சார்.சோ ச்வீட். எவ்ளோ நாள் ஆசை நிறைவேற்றியமைக்கு ஆல் லேங்க்வேஜஸில் நன்றி.. நேரில் பார்க்கும் வாய்ப்புக் கிடைக்கும்போது கண்டிப்பாய் ஐஸ்க்ரீம் உண்டு உங்களுக்கு :) ஹப்பா முழுக்கக் கேட்டு விட்டுத் தான் இதை எழுதுகிறேன்..

நானும் நீயும் நல்லஜோடி
தேனும் பாலும் போல ஜோடி
நேசமாகப் பாட்டுப் பாடி
ஆசையாக ஆடி ஆடி
காதலாலே போதை ஏறி
போதையாலே காதல் ஏறி பாடவே
ஓ நீ இங்கு வா பாபமேது புண்யமேது
லாபமேது நட்டமேது
நானுமேது நீயுமேது
ஆணுமேது பொண்ணுமேது
உண்மையேது பொய்மையேது
நன்மை தீமை ஏது
தன்மானமேது ஈனமேது
தானமேது தர்மமேது
மாறா வீரா தீரா நீயே இங்கு வாராய்.. (ஹப்பா டைப்படிக்கற எனக்கே மூச்சு வாங்குது :) ) ஜமுனா ராணி?

மிக்க நன்றி அகெய்ன் ராகவேந்திரா சார்..:)

kalnayak
6th March 2015, 10:34 AM
நிலாப் பாடல் 32: "நிலவே நீ தான் தூது செல்லாயோ"
------------------------------------------------------------------------------

ஆஹா. ஒரு அருமையான பழைய பாடல். தமிழ் திரை இசை ஜாம்பவான் G.ராமநாதன் அவர்களின் இசையில் திருச்சி லோகநாதன் மற்றும் P. லீலா அவர்களின் மயக்கும் குரல்களில் இந்த பாடல். திரு.ஸ்ரீதரன் நாயரும் மிஸ்.குமாரி அவர்களும் (எனக்கு தெரியவில்லை இவர்களை? கல்யாண் குமார் போல தான் தெரிகிறார் திரு.ஸ்ரீதரன் நாயர். யார் இவர்களின் வாரிசுககளோ - அனைவரும் நலமாய் வாழ்க) நடித்த நிலாப் பாடல். அருகிலேயே காதலன் காதலி இருக்க நிலவை மாறி மாறி தூது போகின்றாயா, தூது போகின்றாயா என்று கடுப்படித்து பாடும் பாடல். இரவில் கேட்டுப் பாருங்களேன். சுகமாக இருக்கும்.

பாட்டு வரிகள்:
------------------------
நிலவே நீ தான் தூது செல்லாயோ
ஓ .. ஓ.. ஓ.. ஓ..
நிலவே நீ தான் தூது செல்லாயோ
ஓ .. ஓ …ஓ ..ஓ
நேரில் என் காதலை நீ சொல்லாயோ
என் மேல் கோபமா
நேரில் என் காதலை நீ சொல்லாயோ
என் மேல் கோபமா….. என் மேல் கோபமா
வெண்ணிலவே நீ தான் தூது செல்லாயோ…

நேரமிதே அனுராக கீதமே
நேரமிதே அனுராக கீதமே
வாழ்வில் இன்பமே… ஆ..ஆ..ஆ.ஆ
நேரமிதே அனுராக கீதமே
வாழ்வில் இன்பமே
சிங்கார வண்டு பூங்காவை கண்டு
நீங்கா தென்றுமே ..ஆஆ …ஆஆ …ஆஆ..
சிங்கார வண்டு பூங்காவை கண்டு
நீங்கா தென்றுமே
நிலவே நீ தான் தூது செல்லாயோ…..
நிலவே நீ தான் தூது செல்லாயோ
--------------------------------------------------------------------------

பாட்டைப் பாருங்கள்:
--------------------------------

https://www.youtube.com/watch?v=9u1DPOsMF4c

பாட்டை கேட்டால் ஆத்மசாந்தி என்ற மனோரஞ்சிதம் மலர்கின்றதா என்றுதான் சொல்லுங்களேன்.

kalnayak
6th March 2015, 10:58 AM
நிலாப் பாடல் 33: "கண்களின் வெண்ணிலவே..."
---------------------------------------------------------
இசை மேதை G.ராமநாதன் அவர்களின் இசையில் ஒரு பாடல் கேட்டால் அடுத்தும் அவரது இசையிலே இன்னொரு பாடல் கேட்கத் தோன்றுகின்றதா. இதோ அவர்களுக்காக, மதுரை தந்த தங்கம் தேன் மதுர குரலோன் T.R. மகாலிங்கம் மற்றும் அஷ்டாவதானி பானுமதி அம்மா அவர்கள் குரலில் ஒரு அழகான நிலாப் பாடல்.


கண்களின் வெண்ணிலவே
உல்லாச காதல் தரும் மதுவே
சல்லாப கானம் பாடிடும் வானம்பாடி
நாம் அலைபோலே இணைவோம்

இளமையின் தேன் நகையே விண்மீது
ஒளிதரும் தாரகையே மண்மீது
கானம் பாடிடும் வானம்பாடி
நாம் அலைபோலே இணைவோம்

மென்மலர் மேல்பனியே அன்பாக
சொல்வது நம் கதையே…ஆ…ஆ
பண்பாக கானம் பாடிடும் வானம்பாடி
நாம் அலைபோலே இணைவோம்

காவிரி ஆழ்கடல்போல் கண்தானா
காற்றொடு மென் குளிர்போல்…ஆ
ஒன்றாக கானம் பாடிடும் வானம்பாடி
நாம் அலைபோலே இணைவோம்

என்னுயிர் மாமணியே
இப்பாரில் யாதுமில்லை தனியே
மெய்காதல் கானம் பாடிடும் வானம்பாடி
நாம் அலைபோலே இணைவோம்

விண் சேரும் கார்முகிலே
ஒன்றாக ஒன்றுதல் நின் எழிலே
தெய்வீக கானம் பாடிடும் வானம்பாடி
நாம் அலைபோலே இணைவோம்

கண்களின் வெண்ணிலவே
உல்லாச காதல் தரும் மதுவே
சல்லாப கானம் பாடிடும் வானம்பாடி
நாம் அலைபோலே இணைவோம்

***************************************


பாட்டைப் பாருங்களேன் இங்கே:
-----------------------------------------------------------

https://www.youtube.com/watch?v=pRqbvtWTOLI

மணிமேகலை துறவு பூண்டவள் என்றே கேள்வி பட்டிருப்போம். இங்கே மணிமேகலையா தெரியவில்லை, வெண்ணிலாவை வைத்து காதல் பாடல் பாடிக்கொண்டிருக்கிறார்கள்.

Russellzlc
6th March 2015, 05:56 PM
சிந்திக்க தெரிந்த மனித குலத்துக்கே
சொந்தமான கையிருப்பு


சின்னக்கண்ணன், கல்நாயக்,

அலுவல் நெருக்கடியால் வரமுடியவில்லை. மன்னிக்கவும். நீண்ட நாட்களாக திரியையும் படிக்க முடியவில்லை.

கல்நாயக், நிலா பாடல்கள் இன்னும் எவ்வளவுதான் ஸ்டாக் வைத்துள்ளீர்கள்? ஆராய்ச்சிக்கு பாராட்டுக்கள். என் மனங்கவர்ந்த பாடகர் திரு.டி.ஆர்.மகாலிங்கம், பானுமதி அவர்கள் பாடிய அருமையான பாடலை பதிவிட்ட உங்களுக்கு நன்றி. ஸாரி. உங்கள் நிலவு சீரியலில் இடையில் தொந்தரவு செய்கிறேன்.

நான்தான் வரவில்லை என்று பார்த்தால் வாசு சார், கிருஷ்ணா சாரையும் பார்க்க முடியவில்லையே. ஏமாற்றம்தான்.

வழக்கமாக, நாட்டு நடப்புடன் கூடிய பாடலை பதிவிடச் சொல்லி கேட்பீர்கள். நாட்டு நடப்புகள் பெரும்பாலும் வருத்தமளிக்கக் கூடியதாகவே இருந்தபோதிலும், அவ்வப்போது வாய்விட்டு சிரிக்க வைக்கும் நிகழ்ச்சிகள், பேட்டிகள் இடம் பெறத்தான் செய்கின்றன. ஒரு மாறுதலுக்கு நகைச்சுவையான விஷயத்தை பார்ப்போமே.

நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் ஒரு வார இதழுக்கு (ஆனந்த விகடனிலும் அவரது பேட்டியை வெளியிட்டுள்ளனர். அதை நான் முழுமையாக படிக்கவில்லை)அளித்த பேட்டியை சமீபத்தில் படித்து சிரித்து வயிறு புண்ணாகிவிட்டது. அதை உங்களுடன் பகிர்ந்து கொண்டு சிரிப்போமே என்பதால் இந்தப் பதிவு.

திரு.சீமான் இப்போது வீரத் தமிழர் பேரவை என்ற அமைப்பை ஏற்படுத்தியுள்ளார். பக்திக்கு மாறியுள்ளார். பழநியில் கையில் வேலுடன் காவடி எடுத்துள்ளார். நல்ல விஷயம்தான். ஆனால், சொல்லும் காரணங்கள் வயிற்றை பதம் பார்க்கின்றன. சாரம் இதுதான்...

பேட்டியில், ஏன் முருகனை கும்பிடுகிறீர்கள்? என்ற கேள்விக்கு,

‘அவன் தமிழ் கடவுள். என் முப்பாட்டன். அப்போதே தனி நாடு கேட்டவன்’ என்கிறார்.

‘தனி நாடு கேட்டதற்கு என்ன ஆதாரம்?’ என்ற கேள்விக்கு அவர் அளித்துள்ள பதில் டாப்.

‘திருவிளையாடல் படத்தில் பழத்துக்காக முருகன் கோபித்துக் கொண்டு போய் ‘எனக்கென்று ஒரு நாடு, எனக்கென்று மக்கள்..’ என்று சொல்லவில்லையா? இதை விட என்ன ஆதாரம் வேண்டும்?’’ என்று கேள்வி கேட்ட நிருபரை திணறடித்ததுடன் ..... ‘‘என்ன தம்பி பேசறீங்க?’’ அவரையே திருப்புகிறார்.

அப்படியானால், முருகனின் தந்தை சிவன்?... இது கேள்வி.

சீமான் பதில் ‘‘ அவரும் தமிழ் கடவுள்தான் தமிழ்ச் சங்கத்தின் தலைவராக இருந்தார்.’

பிள்ளையார்?.... நிருபரின் கிடுக்கிப் பிடியில் சிக்குவாரா சீமான்?

‘அதுதான் தம்பி ஆரிய சூழ்ச்சி. வட நாட்டில் இருந்து வந்த பிள்ளையாரை இங்கே சொருகி விட்டனர்’ என்று ஒரே போடாய் போட்டுவிட்டார். சிரித்து கண்களில் தண்ணீரே வந்து விட்டது எனக்கு. நாட்டு நடப்புகளால் வேதனைப்படும் மக்களுக்கு சீமானின் பேட்டி பெரிய ரிலாக்ஸ்.
------------

ராஜா ராணி திரைப்படத்தில்

கலைவாணர் பாடும் ‘சிரிப்பு இதன் சிரிப்பை சீர்தூக்கி பார்ப்பதே நமது பொறுப்பு..’ அருமையான சிந்தனையைத் தூண்டும் பாடல். கலைவாணர், திருமதி. மதுரம் மற்றும் பாடலின் பின்பகுதியில் வரும் குலதெய்வம் திரு.ராஜகோபால் ஆகியோர் உண்மையாகவே மனம் விட்டு சிரித்திருப்பார்களோ என்று தோன்றும்.

சாகச சிரிப்பு, அசட்டு சிரிப்பு என்று கலைவாணர் வகை வகையாக சிரித்து விட்டு கடைசியில் சங்கீதச் சிரிப்பு என்று ஹஹஹஹ.....ஹஹஹ...ஹஹஹஹ என்று தாளக்கட்டோடு சிரிப்பது அட்டகாசம். பாடிப்பார்த்தால் கஷ்டம் புரியும்.

அதிலும் வீட்டுப் பணியாளராக வரும் ராஜகோபால், கடைசியில் சிரிப்பு தாங்க முடியாமல் முதலாளியான கலைவாணரின் தலையிலேயே கையை வைத்து சிரிப்பார். அதை கலைவாணரும் ஏற்றுக் கொள்வார். அவரது சோஷலிச சிந்தனையை விளக்குவது போலிருக்கும்.

உம்மனா மூஞ்சியையும் சிரிக்க வைக்கும், அதே நேரம் கருத்துள்ள பாடல்.

-----
திரு.சீமானின் பேட்டி நிச்சயம் உயர்ந்த நகைச்சுவைதான். ஆனாலும் அவரது அந்தப் பேட்டியில் எனக்கொரு குறை உண்டு.

திருவிளையாடல் படத்தில் நடித்துள்ள திராவிட இயக்க நடிகர்களுள் ஒருவரான திரு.இ.ஆர்.சகாதேவன்தான் வரகுண பாண்டிய மன்னன், படத்தில் அந்த வேடத்தில் அவர் நடித்திருப்பதே ஆதாரம் என்று சீமான் சொல்லியிருந்தால் பேட்டி மட்டுமல்ல, நகைச்சுவையும் முழுமையடைந்திருக்கும். நாமெல்லாம் நகைச்சுவை என்று எதையோ சொல்கிறோமே. திரு.சீமான் அவர்களிடம் நிறைய கற்றுக் கொள்ள வேண்டும்.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

kalnayak
6th March 2015, 06:33 PM
வாங்க கலைவேந்தன் வாங்க.
இப்பவாவது நேரம் கெடைச்சதே. நிலாப் பாட்டு இன்னும் நெறைய இருக்கு பார்ப்போம் எவ்வளவு ஞாபகத்தில் வருதுன்னு.

அப்புறம் சீமான் காமடி பற்றி சொல்லியிருக்கீங்க. பாவம் அவரும் ஒரு குடும்பஸ்தர். நம்ம எல்லாரையும் போல அவரும் வீட்டுக்காரம்மா பேச்சை கேட்கனும் இல்லையா. இதுக்கு மேல என்னத்த்த சொல்றது. சிரிச்சு வைப்போம்.

அப்புறம் கலைவாணர் பாட்டு கேட்டீங்க இல்ல? இந்தாங்க அதுவும் இங்கே வண்ணத்தில்!!!

https://www.youtube.com/watch?v=x4ydqLOOVJY

Russellzlc
6th March 2015, 06:43 PM
மிக்க நன்றி கல்நாயக்.

‘‘நம்ம எல்லாரையும் போல அவரும் வீட்டுக்காரம்மா பேச்சை கேட்கணும் இல்லையா?’’

என்னை அந்தப் பட்டியலில் சேர்க்காதீர்கள் கல்நாயக். எனக்கு சரி என்று படுவதைத்தான் செய்வேன். வீட்டுக்கார அம்மா சொல்வதைப் பற்றி கவலைப்படமாட்டேன். இதை தைரியமாக சொல்வதில் எனக்கு எந்த தயக்கமும் இல்லை. ( வீட்டுக்கார அம்மாவிடம் அனுமதி வாங்கிவிட்டேன்)

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

rajraj
6th March 2015, 09:55 PM
From PeNNin Perumai (1956)

kaNNaa maraiyaadhedaa.....

http://www.youtube.com/watch?v=gnbqso2_jHI

From Ardhangi (Telugu)

vaddura kannaiyaa....

http://www.youtube.com/watch?v=mP4y9ZQbToU

chinnakkannan
6th March 2015, 10:58 PM
ஹாய் கலைவேந்தன் வாங்க.. வழக்கம் போல சீமான் நகைச்சுவை.. சிரிக்கத் தான் வைத்தது..ஆனால் அவர் இயக்கிய (?) ஒரு படத்தில் ஒரு பாடல் எனக்கு ரொம்பப் பிடிக்கும்..

படம் வாழ்த்துக்கள் உன் மேல ஆசப்பட்டு...

அட சரிதாண்டி போடி என் தங்க வானம்பாடி - இந்த வரிக்கு பாவனா நன்றாகவே பொருந்துகிறார் :)

https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=dwiDwrX24uM


ராஜ் ராஜ் சார்..ஏனோ ஜூகல் பந்தி ஒர்க் ஆகவிலலை..மறுபடி காலையில் பார்க்கிறேன்..

chinnakkannan
7th March 2015, 10:56 AM
ஹப்பாடி..காலையில் முதல் காரியமாய் க் கேட்டாயிற்று. ராஜ் ராஜ் சார்.. கண்ணா மறையாதேடா தான் எனக்கு ப் பிடித்திருக்கிறது வதுரா கண்ணய்யாவை விட :) நன்றி..

chinnakkannan
7th March 2015, 11:12 AM
கோபால்.. வாங்க.. நலமா

உங்களிடம் எனக்குப் பிடித்த விஷயம் ஒன்று உண்டு .அது நீங்கள் அறிந்து செய்வதில்லை..( நற நற).. முரளி வீ.பா.க.பொ பற்றி எழுதியவுடன் அந்தப் படத்தைப் பற்றி எழுத வேண்டும் என டிவிடி போட்டால் (நேற்று) ஏனோ அது வொர்க் ஆகவில்லை.. சரி..இன்று யூட்யூபில் பார்த்து ரிஃப்ரெஷ் பண்ணிவிட்டு எழுதலாம் என நினைத்திருந்தேன்..

வந்து பார்த்தால் மறுபடியும் அதை அலசி அழகாக கொத்துமல்லி மற்றும் இன்னபிற போட்டு அலங்காரங்கள் செய்து ஒரு ஐந்து நட்ச்த்திர ஹோட்டல் விருந்தாகப் படைத்து விட்டீர்கள்.. பாரட்டுக்கள்..

(இதற்கு முன் நீலவானம் பற்றி எழுத நினைத்திருந்த போதும் இதே போல் நிகழ்ந்த நினைவு)


நீங்கள் சொன்ன கவலை ரேகை - கபொ ந.தி முகத்தில் தெரிவதை அந்தக்காலத்திலேயே உணர்ந்திருக்கிறேன்..ரசித்தும் இருக்கிறேன்..

ம்ம் மறுபடி இன்று பார்க்கப் பார்க்கிறேன்..


இன்னும் ஒரு விஷயத்தில் இருந்து மாறு படுகிறேன்.. ரத்னா கஃபே பழைய தரத்தில் இல்லை என்று சொன்னது.. பழைய தரம் என்னவென்று எனக்குத் தெரியாது..ஆனால் 2000 2005,2011,2014 என்று அருந்தியிருக்கிறேன்.. மாறுதல் எனக்குத் தெரியவில்லை ( அதுவும் சாம்பாரிலிருந்து முழித்துமுழித்துப் பார்க்கும் குட்டி வெங்காயம்).. மதுராவில் அப்படி இருக்குமா..எந்த ஏரியா.. நான் உண்டா..

இதை ந.தி இழையிலேயே பதிந்திருக்கலாம்..பட் கொஞ்சம் உருப்படியாய் (?!) எழுதி இடும்போது வரலாம் என இருக்கிறேன்..

அந்த சிறுகதைத் தொகுப்பின் பெயர் என்ன..அவரும் நவீன இலக்கியந்தானா..

chinnakkannan
7th March 2015, 12:01 PM
அம்மன் கோவில் கிழக்காலே – படம் வந்த புதிதில் இந்தப் பாடல் ஒருமுறை கேட்டிருக்கிறேன்.. நல்ல பாட்டு தான் ஆனால் அவ்வளவாகப் பதியவில்லை..


அதையே பலவருடங்கள் கழித்துக் கல்லூரி என்றபடத்தில் உபயோகப் படுத்தியிருந்தார்கள்..ரீமிக்ஸெல்லாம் பண்ணாமல் கதானாயகி கல்யாணத்தில் பாடுவதாக.. அகோ கி சிச்சுவேஷனை விட இந்தப் படத்தில் சிச்சுவேஷனுக்கு இந்தப்பாட்டு சரியாகப் பொருந்தியதாகப் பட்டது எனக்கு..

வரிகளும் அழகு..எனில் அவற்றை முழுமையாக கட்பேஸ்ட் செய்திருக்கிறேன்..

ம்ம் இந்தக் காதல் படுத்தற பாடு இருக்கே..கஷ்டம் தான்..

**


உன் பார்வையில் ஓராயிரம்
கவிதை நான் எழுதுவேன் காற்றில் நானே
நிதமும் உன்னை நினைக்கிறேன்
நினைவினாலே அணைக்கிறேன்


அசைந்து இசைத்தது வளைக்கரம்தான்
இசைந்து இசைத்தது புது சுரம்தான்
சிரித்த சிரிப்பொலி சிலம்பொலிதான்
கழுத்தில் இருப்பது வலம்புரிதான்
இருக்கும் வரைக்கும் எடுத்துக்கொடுக்கும்

மனதை மயிலிடம் இழந்தேனே
மயங்கி தினம் தினம் விழுந்தேனே
மறந்து பிறந்து பறந்து தினம் மகிழ
(

அணைத்து நனைந்தது தலையணைதான்
அடுத்த அடியென்ன எடுப்பது நான்
படுக்கை விரித்தது உனக்கெனத்தான்
இடுப்பை வளைத்தெனை அணைத்திடத்தான்
நினைக்க மறந்தாய் தனித்துப் பறந்தேன்
மறைத்த முகத்திரை திறப்பாயோ
திறந்து அகத்திடை இருப்பாயோ
இருந்து விருந்து இரண்டு மனம் இணைய

கல்லூரியில் தமன்னா

https://www.youtube.com/watch?v=s3PEdTojVoA&feature=player_detailpage

அ கோ கி யில் ராதா விஜயகாந்த்

https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=eeBMLA3q3RQ

ஒரு ஆண் பாடும் பாடல் (படத்தில் இருப்பது டிவி சீரியல் நடிகையா?)


https://www.youtube.com/watch?feature=player_embedded&v=LpFmN4u8RYo

chinnakkannan
8th March 2015, 12:30 AM
பாடினார் கவிஞர் பாடினார் – 2

**

ஹாய் ஆல் செளக்கியமா…

ஓ..ரொம்ப இடைவெளி கொடுத்துட்டேனா ஸாரி ( அதனால பரவாயில்லைங்கறீங்களா.. தாங்க்யூ)

போன தடவை ஒரு யூனிக் கவிஞர் பத்தி –பார்க்கலாம்னு சொல்லியிருந்தேன்..ஆனாக்க அப்படிச் சொன்னதும் தப்பு தான்.. ஏனெனில் கவிஞராய் இருந்து பாடலாசிரியராக மாறிய ஒவ்வொருவருமே அவங்க அவங்க எழுத்துல யூனிக் தான்..
**
முதலில் இந்தக் கவிஞர் சில பல பாடல்கள் திரையில் எழுதி பிரபலமாகியிருந்த காலம்..

சினிமா என்பதே தொழில் தானே.. தயாரிப்பாளர் இன்னொரு கவிஞர் உடுமலை நாராயணகவியிடம்.. “ நாராயணரே..எனக்கு இந்தப் பாட்டு (அந்தப் பாட்டைச் சொல்லி) அதே போல் எனக்கு இன்னொரு பாட்டு வேண்டுமே..

உடுமலைக்\கோ கொஞ்சம் கோபம் ப்ளஸ் வருத்தம்.. சரி போ இதான் லைஃப் இதான் வேர்ல்ட் என க் கொஞ்சம் மனதிற்குள் குமுறி “ஒன் மீட் ஓய் ப்ரொட்யூசர்..இதோ வந்துட்டேன்” என்று வெளிச் சென்று விட்டார்..
பின் திரும்பி வந்த போது ப்ரொட்யூஸர் கேட்ட – இது போன்ற பாட்டை எழுதிய கவிஞரையே முன்னிறுத்தி “இந்தாங்க.. இவர் கவிஞர் சுரதா.. நீங்கள் எழுதிய அமுதும் தேனும் எதற்கு எழுதியவர் இவர் தான்..இவரையே வைத்து அதே டைப்பில் பாட்டு எழுதிக் கொள்ளுங்கள்”

“ நாராயணர்வாள் ஷமிக்கணும்”

“”கோபம்லாம் இல்லைங்காணும்.. “

சரி என்று கவிஞர் சுரதாவை இசையமைப்பாளர் கேவி மகாதேவனிடம் கொண்டு விட..கனஜோராய்ப் பாடலின் முதல்வரிகள் எழும்பின..

பின்
முதல் மூன்று வரிகள் வந்துவிட அதற்கப்புறம் தான் நானகைந்து வரிகளைக் கவிஞர் சொன்னாலும் இசையமைப்பாளர் கே.வி.எம்க்கிற்கு ஏனோ பிடிக்கவில்லை.. இன்னொண்ணு சொல்லுமேன்.. எனக் கேட்க சுரதாவிற்கோ முணுக் கென்று கோபம் வந்து எழுந்து சென்றுவிட்டார்..

மறுபடியும் தயாரிப்பாளர் உடுமலை நாராயண கவியைப் பிடிக்க, அவர் சரி நோப்ராப்ளம் பேலன்ஸ் நான் எழுதறேன்..ஆனா டைட்ட்டில்ல மறக்காம சுரதா பேரையும் போடணும்.. ஓகே சொல்லி எழுதப்பட்ட பாடல் தான் கீழே இருப்பது..

ஒரு கவிதை இருகவிஞர்கள் எழுதும் போது எப்படி வித்தியாசப் படுகிறது என்பதற்கு இது ஒரு உதாரணம்..

வெண்ணிலா குடைபிடிக்க
வெள்ளீ மீன் தலையசைக்க
விழிவாசல் வழி வந்து இதயம் பேசுது
இனி நீ என் வசமே
இனி நான் உன் வசமே
இணையாய் நாம் காணும் ஆனந்தம் நேசமே

கொல்லாமல் கொல்லுகிறாய் கோமளமே விழியாலே
சொல்லாமல் சொல்லுகிறாய் சுத்தத் தமிழ் மொழியாலே
ஒண்ணுமே புரியலையே எண்ணமே சரியிலையே
சரியாக இது வேளை தனிமை வேண்டுமே

: பழமும் பழுத்திருக்க பருவம் அமைந்திருக்க
பசி நோய் தீராமல் பார்த்தாலே போதுமா..


எழிலிற்கிருப்பிடமே எனக்கில்லை மனத்திடமே
எளியேன் மேலிந்த ஏனிந்த கோபமே

http://tamilmp3songs.mobi/mp3/load/320%20kbps/Classic%20Hits/Super%20Hit%20Songs%20Of%20The%20Year%201959/Vennila%20Kudai%20Pidikka%20-%20Tamilanda.com.mp3

இந்தக் கவிஞர் சுரதா இருக்காரே..அவருக்கு இன்னொரு கவிஞர் மேல ரொம்ப மரியாதைகுருபக்தி, ரொம்பப் பிடிக்கும்.. அந்தக் கவிஞருக்கு இன்னொரு மகாகவி மேல பக்தி ..ஸோ அந்த மகாகவிக்கே தாஸனா தன் பெயரை மாற்றிக் கொண்டுவிட்டார்..

அவர் பாரதி தாசன் தன்னுடைய இயற்பெயரான சுப்பு ரத்தினத்தை பாரதி தாசன் என மாற்றிக் கொண்டு விட்டார்.. இந்த கவிஞருக்கு என்ன பண்றது.. பாரதி தாசன் ரொம்பப்பிடிக்கும்..ஆனா பெயர் எப்படி மாத்திக்கறது..பாரதி தாச தாசனா.. எங்கயோகொஞ்ச்ம் இடிக்குதே.. சரி என்று தனது சொந்தப் பெயரான ராஜகோபாலனை விடுத்து சுப்பு ரத்தின தாசன் சுரதா என்று மாற்றிக்கொண்டு விட்டார்..

இவர் எழுதிய ..திரைப்பாடல்கள் என்று பார்த்தால் 22 வருடங்களில் சுமார் 30 தான் இருக்கும்.. ஆனால் கலந்துகொண்ட கவியரங்கங்கள் அளவிடற்கரியவை..1990இல் த்மிழக அரசு வழங்கிய பாவேந்தர் விருது பெற்ற முதல் கவிஞர் இவர் தான்..பிறந்தது 1921 மறைந்தது 2006
சில்பாடல்கள்

கண்ணில் வந்து மின்னல் போல் காணுதே
விண்ணுக்கு மேலாடை..
அமுதும் தேனும் எதற்கு நீஅருகினில் இருக்கையிலே
புரியாது புரியாது வாழ்க்கையின் ரகசியம் புரியாது
ஆடி அடங்கும் வாழ்க்கையடா
நெருங்கி நெருங்கிப் பழகும் போது..

*
எனக்குப் பிடித்த பாடல் விண்ணுக்கு மேலாடை..
விண்ணுக்கு மேலாடை பருவ மழை மேகம்
வீணைக்கு மேலாடை நரம்புகளின் கூட்டம்
கண்ணுக்கு மேலாடை காக்கும் இரு இமைகள்
கனவுக்கு மேலாடை தொடர்ந்து வரும் தூக்கம்
விண்ணுக்கு மேலாடை பருவ மழை மேகம்

மண்ணுக்கு மேலாடை
ம் ம் ம் ..மண்ணுக்கு மேலாடை ரா ரா ரா
மண்ணுக்கு மேலாடை மரத்தின் நிழலாகும்
ஹையே
மண்ணுக்கு மேலாடை வண்ண மயில் இருட்டு
மனதிற்கு மேலாடை
வளர்ந்து வரும் நினைவு

பத்துக்கு மேலாடை
பத்துக்கு மேலாடை..ஆ ஆ ஆ ஆ ஆ
ஆஹா
ஆ ஆ ஆ ஆ
நிறுத்து..ராகம் பாடாதே..பதிலைச் சொல்லு
பத்துக்கு மேலாடை
தெரியலையா? ம் சொல்லட்டுமா?
பத்துக்கு மேலாடை பதினொன்றேயாகும்
பக்கத்தில் நீ இருந்தால் பல கதை உருவாகும்

விண்ணுக்கு மேலாடை பருவ மழை மேகம்
வீணைக்கு மேலாடை நரம்புகளின் கூட்டம்

காலத்தின் அடையாளம் பருவங்களேயாகும்
காதலர்கள் நடத்துவது கண் சேர்தல் ஆகும்
காதலர்கள் நடத்துவது கண் சேர்தல் ஆகும்
இது வரையில் புது உலகம் நாம் கண்டதுமில்லை
எது வரையில் சென்றாலும் எல்லை இதற்கில்லை
*
https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=1lyf-YEM2_8
வெகு அழகிய பாடல்..
**
நிலவு நம்மை எட்டிப் பார்க்கும்
நேரமல்லவா
நீயும் நானும் கொண்ட காதல்
அமுதமல்லவா

தலையை நீட்டும் இந்த நிலவு
தலைமை தாங்கட்டும்

தழுவும் போது வீசும் தென்றல்
விலகி ஓடட்டும்
https://www.youtube.com/watch?v=ot60UbsBXjs&feature=player_detailpage

அடுத்த கவிஞர் எழுதிய ஒரு அடிமைப் பாடலுக்கு அடிமையாகாதார் யார்..

பின்ன வாரேன்..

chinnakkannan
8th March 2015, 11:32 AM
ஹாய் ஆல் ஹாப்பி விமன்ஸ் டே..


எண்ணத்தில் நின்று ஏற்றங்கள் செய்வதெலாம்
என்றென்றும் பெண் தானே ஆம்..

**



இளமை கொலுவிருக்கும் இனிமை சுவையிருக்கும்
இயற்கை மணமிருக்கும் பருவத்திலே பெண்
இல்லாமல் சுகமில்லை உலகத்திலே

அணைத்து வளர்ப்பவளும் தாயல்லவோ?
அணைப்பில் அடங்குவதும் அவளல்லவோ?
அணைத்து வளர்ப்பவளும் தாயல்லவோ?
அணைப்பில் அடங்குவதும் அவளல்லவோ?

கவிஞர் பாடுவதும் கலைஞர் நாடுவதும்
இளைஞர் தேடுவதும் பெண்ணல்லவோ? பெண்
இயற்கையின் சீதனப் பரிசல்லவோ?


பொன்னும் பொருளும் வந்து மொழி சொல்லுமா? ஒரு
பூவைக்கு மாலையிடும் மணம் வருமா?
இன்று தேடி வரும் நாளை ஓடிவிடும்
செல்வம் சிரிததபடி அமுதிடுமா? எந்த
செல்வமும் பெண்மையின் சுகம் தருமா?
*
https://www.youtube.com/watch?v=IbS6KHTlhsM

chinnakkannan
8th March 2015, 12:03 PM
மதிபோல் முகமென்றாய் மங்கையெனைப் பின்னர்
..மானென்றாய் மீன்சுற்றும் விழியென்றாய் மேலும்
சுதிசேர்ந்த கானமெனச் சூழுகிறாய் என்றாய்
..சொக்கவைக்கும் பார்வையினால் கொல்கின்றாய் என்றாய்
சதியாக நானுன்னை இணைந்தபின்பு அழகாய்
..சார்ந்திருப்பேன் என்றென்றும் எனையென்றாய் மெய்யாய்
புதிதாக வாழ்வென்னும் புதுமலரை இன்று
..பூத்தூவி வரவேற்போம் வாராய்நீ கண்ணா


*
மானாட்டம் தங்க மயிலாட்டம்
பூவாட்டம் வண்ண தேராட்டம்
தாலாட்டும் மங்கை சதிராட்டம்… கண்டு
தேனோடும் எங்கும் நதியாட்டம்

**

https://www.youtube.com/watch?v=dUTn9N0OgfQ

chinnakkannan
8th March 2015, 11:29 PM
யாரையும் காணோமே.. சரி ஒரு மலையாளப்பாட்டு போடலாம்

படம் ஆசீர்வாதம் யங்க் கமல் குட்டி ஸ்ரீதேவி.. ஜேசுதாஸ்

https://www.youtube.com/watch?v=aoUI7NIID7c&feature=player_detailpage&list=PLxOgviOgmQLbVDEEoxhCHgB5p_SLUXFAR

kalnayak
9th March 2015, 11:47 AM
குட் மார்னிங் சி.க. நான் வந்துட்டேன். யாருமில்லைன்னா மலையாளப் பாட்டு கேட்பீங்களா? நல்லாவே இருக்கு.

kalnayak
9th March 2015, 12:00 PM
உவமைக் கவிஞர் சுராதாவைப் பற்றிய பதிவு நல்ல அறிமுகம் என்னைப் போன்றவர்களுக்கு. சுராதாவைப் பற்றி படித்திருந்தாலும் அவர் இவ்வளவு நல்ல திரைப்பாடல்கள் கொடுத்திருக்கிறார் என்பது எனக்கு புதிது.

இருவர் எழுதிய பாடல் நன்றாகவே இருக்கிறது. விண்ணுக்கு மேலாடை பாடல் அடிக்கடி கேட்கும் பாடல் தான். இதையும் நெருங்கி நெருங்கி பாடலையும் இப்படி நீங்கள் கவிஞர் சுரதா எழுதியது என்று சொல்லாவிட்டால் நான் எப்போதாவது சொல்லும்போது அவர் எழுதியது, இவர் எழுதியது என்று எங்கேயாவது பார்த்து விட்டு தவறாய் சொல்லுவேன். நல்லவேளை.

kalnayak
9th March 2015, 12:18 PM
நிலாப் பாடல் 34: "ஆனந்த யாழை மீட்டுகிறாய்"
------------------------------------------------------------------
மிகப் பழைய பாடல்களை கேட்டுவிட்டோம். சற்றே பழதான புதுப் பாடலை கேட்கலாமா? அட இந்தப் பாடல் முதல் வரியில் நிலா என்று வரவில்லையே என்று சிலர் கேட்டாலும் அதன் ஒளிக் காட்சியை பார்த்தவர்கள் தந்தையும் மகளும் வெண்ணிலாவை கையில் எடுத்து பந்து போல விளையாடியதை மறந்திருக்க மாட்டார்கள். பாட்டு வரிகளில் என்னமோ அந்த சின்ன வெண்ணிலா மேகத்தின் பின்புறம் மறைந்து அக்குழந்தையிடம் வெளிச்சம் கேட்பதாகவும் அதனால் அதை கையில் பிடித்து ஆறுதல் சொல்லி அதன் வீட்டிற்கு அனுப்புமாறு தந்தை கூறுவதாகவும் பாடலாசிரியர் நா. முத்துக்குமார் எழுதியுள்ளார். பல விருதுகளை இந்த பாடல் பெற்றுள்ளது. யுவன் சங்கர் ராஜாவின் இசையில் ஸ்ரீராம் பார்த்தசாரதியின் குரலில் இந்த பாடல் நாவில் தேன் போல் காதில் இனிக்கிறது.

பாடல் வரிகள்:
----------------------------

ஆனந்த யாழை மீட்டுகிறாய்
அடி நெஞ்சில் வண்ணம் தீட்டுகிறாய்
அன்பெனும் குடையை நீட்டுகிறாய்
அதில் ஆயிரம் மழை துளி கூட்டுகிறாய்

இரு நெஞ்சம் இணைந்து பேசிட உலகில்
பாஷைகள் எதுவும் தேவையில்லை
சிறு புல்லில் உறங்கும் பனியில் தெரியும்
மலையின் அழகோ தாங்கவில்லை
உந்தன் கைகள் பிடித்து போகும் வழி
அது போதவில்லை இன்னும் வேண்டுமடி
இந்த மண்ணில் இதுபோல் யாருமிங்கே
எங்கும் வாழவில்லை என்று தோன்றுதடி.

ஆனந்த யாழை மீட்டுகிறாய்
அடி நெஞ்சில் வண்ணம் தீட்டுகிறாய்
அன்பெனும் குடையை நீட்டுகிறாய்
அதில் ஆயிரம் மழை துளி கூட்டுகிறாய்

தூரத்து மரங்கள் பார்க்குதடி
தேவதை இவளா கேட்குதடி
தன்னிலை மறந்து பூக்குதடி
காற்றினில் வாசம் தூக்குதடி
அடி கோயில் எதற்கு தெய்வங்கள் எதற்கு
உனது புன்னகை போதுமடி

இந்த மண்ணில் இதுபோல் யாருமிங்கே
எங்கும் வாழவில்லை என்று தோன்றுதடி

ஆனந்த யாழை மீட்டுகிறாய்
அடி நெஞ்சில் வண்ணம் தீட்டுகிறாய்

உன் முகம் பார்த்தால் தோணுதடி
வானத்து நிலவு சின்னதடி
மேகத்தில் மறைந்தே பாக்குதடி
உன்னிடம் வெளிச்சம் கேக்குதடி
அதை கையில் பிடித்து ஆறுதல் உரைத்து
வீட்டுக்கு அனுப்பு நல்லபடி

இந்த மண்ணில் இதுபோல் யாருமிங்கே
எங்கும் வாழவில்லை என்று தோன்றுதடி

ஆனந்த யாழை மீட்டுகிறாய் அடி
நெஞ்சில் வண்ணம் தீட்டுகிறாய்
---------------------------------------------------------------


பாட்டின் காட்சிகள்:

https://www.youtube.com/watch?v=E7y9H-Rit6o

தங்க மீன்கள் பாடினால் இப்படித்த்தான் இனிமையாய் இருக்குமோ?

chinnakkannan
9th March 2015, 01:12 PM
hi kalnayak vaanga good morning

வந்ததும் அழகான பாட்டு ஒண்ணு போட்டிருக்கீங்க.. தாங்க்ஸ்..

சுட்டியென சுந்தரியின் புன்னகையில் வட்டமுகம்
குட்டிநில வென்றுதான் கூறு.. :)

மெல்லச் சிரிக்குமகள் மென்விழியில் பூமலரும்
அள்ளக் குறையா அமுது.

chinnakkannan
9th March 2015, 10:11 PM
பாடினார் கவிஞர் பாடினார் – 3
*
வணக்கம்”

நிமிர்ந்து பார்த்த இசையமைப்பாளர் ஜி.கே.வெங்கடேஷிற்கு ஆச்சர்யம்.. “வாங்க பால முருகன்.. என்ன இந்தப் பக்கம்”

“சும்மாத் தான் வெங்கடேஷ்ங்க்ணா.. ஜஸ்ட் பார்க்க வந்தேன்..வழக்கம் போல பிஸியா..’

“மியூசிக்கே மூச்சா இருக்கறவனோட பிஸியைக் கேக்கணுமா என்ன.. ஒரு டியூனை என்னோட அஸிஸ்டெண்ட் போட்டுட்டாரு..பாட்டுக்கு யாரைப் போடலாம்னு யோசனையில இருக்கேன்…சொல்லுங்க”

“இதோ” கூடவந்தவரைக் காண்பித்தார் பாலமுருகன் “இவரும் கொஞ்சம் நல்லாவே பாட்டு எழுதுவார்.. டென் த் படிக்கறச் சொல்லவே ஒரு கவிதைத் தொகுப்பு வெளியிட்டிருக்காராக்கும்..பாரதிதாசனே முன்னுரை எழுதியிருக்கார்”

“ஐ ஸீ” என்று சற்றே அசுவாரஸ்யத்துடன் பார்த்தார் இசையமைப்பாளர்.. ரொம்ப யங்கா இருக்க்காரே நல்லா எழுதுவாரா.. நான் நம்ம கவிஞரையே (கண்ணதாசன்) இன்னொரு பாட்டும் எழுதச் சொல்லிடலாம்னு ப்ரொட்யூஸர்கிட்டக்க சொல்லியிருந்தேன்..ம்ம் சரி.. டைரக்டர் மாதவன் சொல்லியிருந்தவர் தானே இவர்.. டைரக்டரே ஒரு சிச்சுவேஷன் சொல்லியிருக்கார்.. என்ன கேக்கறீங்களா..”

ஆஹா “ என்றார் பாலமுருகன்.. கூடவே தலையாட்டினார் வந்திருந்த கவிஞர்.

சிச்சுவேஷன்னு ஒண்ணும் இல்லை.. ஹீரோயின் காலேஜ்ல படிச்சவ ஆனாலும் கிராமத்துப் பொண்ணு

“ஆஹா”

“என்னக் கிண்டல் பண்றா மாதிரி இருக்கு ..சரி விடுங்க.. அவளோட ஹஸ்பெண்ட் நிலத்துல கிணறு தோண்டறான்..ஆழம் ஆழமாத் தோண்டினாலும் தண்ணி வரலை..கட்டக்கடோசில தண்ணிவருது..ஹீரோ மயக்கமாயிடறார்.. ஹீரோயின் அந்தத் தண்ணியையே ஹீரோ மொகத்துல தெளிக்கறார்..அடுத்த சீன் பாட்டு வரணுமாம்..”

“டூயட்டா”

“ஏங்க ஹீரோ நிலத்துல பாடுபட்டு முன்னேறுகிற மாதிரி கதையாம்.. டூயட்லாம் நம்ம கவிஞரே சூப்பராப் போட்டுக் கொடுத்துட்டார்.. இது கிராமக் கூத்து மாதிரி..ரெண்டு பொண்ணுங்களுக்குள்ள சண்டை வர்ற மாதிரி இருக்கணுமாம்..”

“மூணு பொண்ணு வச்சுக்கலாமா” உடன் வந்திருந்த கவிஞர் கேட்க “பரவாயில்லையே சரி யாருக்குள்ள சண்டை வைக்கறாமாதிரி” என்றார் இசையமைப்பாளர்..

“மூணு பொண்ணுன்னா திரிவேணி சங்கமமா வெச்சுக்கலாம் கங்கை யமுனை சரஸ்வதி..ஆனாக்க இது தமிழ்க் கிராமம் ஆச்சுதுங்களே.. காவேரி வைகை அப்புறம் ம்ம் கங்கையையே கொண்டுவந்துடலாம்..


“கொஞ்சம் இருங்க..என் உதவியாளரைக் கூப்பிடறேன்..ராஜா” உதவியாளர் வந்தார் (பிற்காலத்தில் இளையராஜா எனப் பிரபலமானவர்).. “ நீங்க ஒரு மெட்டுப் போட்டீங்கள்ள..அதப் போட்டுக் காட்டுங்க..இவர் எப்படி பாட்டு தர்றார்னு பார்ப்போம்”

ராஜா மெட்டுப் போட அந்தப் கவிஞரின் பயணம் அந்தப்பாட்டிலிருந்து துவங்கியது.. அந்தக் கவிஞரின் பெயர் முத்துலிங்கம்.. பாடல்.. தஞ்சாவூரு சீமையிலே நான் தாவி வந்தபொன்னியம்மா..

சைலண்ட்டாக ஆரம்பிக்கும் பாடல் பொன்னி வைகை கங்கை என கச்சைகட்டிக்கொண்டு மூன்று நதிகளும் சண்டை போடுவது சுவாரஸ்யமாகவே இருக்கும்..(உரையாடல் எல்லாம் என் கற்பனையூரில் நடந்தது!)

https://www.youtube.com/watch?v=nd3JYOYEezg&feature=player_detailpage





*

சிவகங்கை மாவட்டம் கடம்பங்குடி கிராமத்தில் பிற்ந்தவர் முத்துலிங்கம்..பத்தாம் வகுப்பு வரை படிப்பு வரவில்லை..ஆனால் கவிதை வந்தது.. பத்தாம் வகுப்பையே தனிக்கல்வி முறையில் படித்துத் தேறினார் அவர். பின்னர் முரசொலியில் வேலை வாய்ப்பு..

பட்டிக்காடா பட்டணமா வசனகர்த்தா பாலமுருகனின் பழக்கம் ஏற்பட்டு பின் பொண்ணுக்குத் தங்கமனசில் முதல்பாடல்.. ம.தியின் உழைக்கும் கரங்களில் கந்தனுக்கு மாலையிட்டாள் பாடல் எழுத வாய்ப்பு வந்தது..

தேவனைத் தேடிச் சென்றேன்
தேவியுடன் அவன் இருந்தான்
வீணையுடன் நானிருந்தேன்
விதியை எண்ணிப்பாடுகின்றேன்.. என வாணி ஜெயராமின் உருக்கமான குரலில் வீணை நாதமும் சேர்ந்து கொண்டு மிக அழகாக அமைந்தது அந்தப் பாடல்

அது ஹிட் ஆக தொடர்ந்து ம.தி படங்களில் எழுத ஆரம்பித்தார்..

மீனவ நண்பன் என்ற படம்..ஸ்ரீதர் இயக்கி ம.தி நடித்து முழுவதும் ஷீட் செய்யப்பட்ட நிலை..திடீரென்று எம்.ஜி.ஆருக்கு ஒரு சிந்தனை.. நம்ம முத்துலிங்கத்துக்குப் பாட்டு கொடுத்தீங்களா.. இல்லீங்க..

சரி சரி..அவரை டூயட் எழுதச் சொல்லுங்க

படமே முடிஞ்சாச்சேங்க

பரவால்லை..கனவுக்காட்சியில சேர்த்துக்கலாம்..

அப்படி எழுதியபாடல் தான்

தங்கத்தில் முகமெடுத்து,
சந்தனத்தில் உடலெடுத்து
மங்கை என்று வந்திருக்கும் மலரோ
நீ மாலை நேர பொன் மஞ்சள் நிலவோ

முல்லை மலர் செண்டுகள் கொண்டு கொடி ஆடுது
தென்றல் சதிராடினால் அந்த இடை தாங்குமா?
இந்த இடை தாங்கவே கைகள் இருக்கின்றது
கொஞ்சி உறவாட மலர் மஞ்சம் அழைக்கின்றது
மலர்ந்து கனிந்து சிரித்து குலுங்கும் கனியாகவோ

*

https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=Uo7QPV9J8YQ

*

இன்று போல் என்றும் வாழ்க படத்திற்கு இவர் எழுதிய அன்புக்கு நான் அடிமை பாடலும் மிகப் பிரபலம்..

அதுவந்த கதையும் கொஞ்சம் சுவாரஸ்யம் தான்.. பாடல் எழுதுகையில் தயாரிப்பாளர் ஏதோ சொல்லிவிட்டாராம்.. கவிஞர்கள் எல்லாம் கொஞ்சம்கோபக்காரர்கள் போல.. எனில் இவருக்கும் சுர்ரென்று கோபம் வந்துவிட்டது..எழுந்து சென்று விட்டாராம். பின் எம்.எஸ்.வியும் டைரக்டரும் தான் அவரை சமாதானப் படுத்தி அழைத்துவந்தார்களாம்..அப்போது எழுதிய பாடல் – அன்புக்கு நான் அடிமை தமிழ்ப் பண்புக்கு நான் அடிமை..

ம.தி பாடுவதாக எடுக்கப் பட இன்ஸ்டண்ட் ஹிட்..

**

இவர் எழுதிய மேலும் சில பாடல்கள்

ராகதீபம் ஏற்றும் நேரம் புயல் மழையோ – பயணங்கள் முடிவதில்லை
மணியோசை கேட்டு எழுந்து –அதே படம்
சங்கீத மேகம் தேன்சிந்தும் நேரம் – உதய கீதம்
மாஞ்சோலை கிளிதானோ மான் தானோ – கிழக்கே போகும் ரயில்
சின்னச் சின்ன ரோஜாப்பூவே – பூவிழி வசலிலே
இதழில் கதை எழுதும் நேரமிது – உன்னால் முடியும் தம்பி
இதயம் போகுதே –புதிய வார்ப்புக்கள்..
பொன்மானைத் தேடி நானும் பூவோடு வந்தேன் – எங்க ஊரு ராசாத்தி
பூபாளம் இசைக்கும் பூமகள் ஊர்வலம் – தூறல் நின்னு போச்சு
பட்டுக்கன்னம் தொட்டுக்கொள்ள ஒட்டிக் கொள்ளும் (ஈரமா இருந்திருக்குமோ)


நாம் பார்க்கப் போவது

ஆறும் அதுஆழம் இல்லை..அது சேரும் கடலும் ஆழமில்லை
ஆழம் எது அய்யா
அது அந்த சின்ன ரம்யா கிருஷ்ணன் மனசு தான்யா :)


https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=7oEyzJmlE9k
**

அடுத்த பாடலாசிரியர் கவிஞர் என்பதை விட நாவலாசிரியர் , அஸிஸ்டெண்ட் டைரக்ஷன், நடிப்பு எனப் பிரபலமானவர்..

அவர்ர்ர்ர்..

(அப்புறமா வாரேன்)  :)

kalnayak
10th March 2015, 11:25 AM
நிலாப் பாடல் 35: "வெண்ணிலா ஓடுது கண்ணிலே ஆடுது"
----------------------------------------------------------------------------------------------
இளையராஜாவின் இசையில் அற்புதமான இன்னொரு நிலாப் பாடல். எல்லோரும் கட்டாயம் கேட்டிருப்போம். கேப்டன் விஜயகாந்த், நளினி நடிக்க கே.ஜே.ஜேசுதாஸ் மற்றும் வாணி ஜெயராம் அம்மா பாடிய நா. காமராசன் எழுதிய இனிமையான பாடல். இங்க வெண்ணிலா ஓடுறது அப்பிடியே கண்ணில ஆடுதுங்களாம். மறுபடியும் காதல் பாட்டுதான்.

பாட்டை படிங்க:
-----------------------
ஆண்: வெண்ணிலா ஓடுது கண்ணிலே ஆடுது
என்னோடு தான் பாடுது
வெண்ணிலா ஓடுது கண்ணிலே ஆடுது
என்னோடு தான் பாடுது
சொந்தமே தேடுதே சந்தோஷப் பூ மழையே
கொஞ்சும் சிங்காரத் தேன் கனவே
கொஞ்சும் சிங்காரத் தேன் கனவே

வெண்ணிலா ஓடுது கண்ணிலே ஆடுது
என்னோடு தான் பாடுது


பெண் :வானம் மாலை ஏந்துதே பூமிப் பூக்கள் நாணுதே
வானம் மாலை ஏந்துதே பூமிப் பூக்கள் நாணுதே
காற்றிலே பேசலாம் கீதம் பாடலாம்
காற்றிலே பேசலாம் கீதம் பாடலாம்

ஆண்: மோகமே ஓடி வா கண்ணிலே ஓவியம்
மோகமே ஓடி வா கண்ணிலே ஓவியம்
நெஞ்சிலே காவியம்

பெண்: துள்ளுதே உள்ளமே அள்ளவா கிள்ளவா
சந்தோஷப் பூ மழையே
கொஞ்சும் சிங்காரத் தேன் கனவே
கொஞ்சும் சிங்காரத் தேன் கனவே

வெண்ணிலா ஓடுது கண்ணிலே ஆடுது
என்னோடு தான் பாடுது

ஆண்: மார்பில் ஆடும் பாவையே ஆசைக் காதல் தேவியே
மார்பில் ஆடும் பாவையே ஆசைக் காதல் தேவியே
தேகமோ வீணையோ ராகம் பாடுதே
தேகமோ வீணையோ ராகம் பாடுதே

பெண்: மஞ்சமே தேடுதே நெஞ்சமே வாடுதே
மஞ்சமே தேடுதே நெஞ்சமே வாடுதே
மன்னவா ஓடி வா

ஆண் : கன்னியின் வண்ணமே கண்ணிலே மின்னுதே
சந்தோஷப் பூ மழையே
கொஞ்சும் சிங்காரத் தேன் கனவே
கொஞ்சும் சிங்காரத் தேன் கனவே

பெண்: வெண்ணிலா ஓடுது கண்ணிலே ஆடுது
என்னோடு தான் பாடுது
சொந்தமே தேடுதே சந்தோஷப் பூ மழையே

இருவர் : கொஞ்சும் சிங்காரத் தேன் கனவே
கொஞ்சும் சிங்காரத் தேன் கனவே
லல லாலால லாலல லா... லல லாலால லாலல லா...
லல லாலால லாலல லா... லல லாலால லாலல லா...

பாட்டை பாருங்க:
--------------------------

https://www.youtube.com/watch?v=VSWrRERAX-w

இந்த மாதிரி பாட்டை கேட்டால் நாளை உனது நாள்னு தைரியமா சொல்லலாம்.

kalnayak
10th March 2015, 11:39 AM
சி.க.,
முத்துலிங்கம் அறிமுகம் அற்புதம். உங்கள் கற்பனையூறில் நடந்த உரையாடல் உண்மை போலவே தோன்றுகிறது. ஆமாம் முத்துலிங்கம் அருமையான பாத்துக்களாகவே எழுதியுள்ளார். அவர் எழுதிய ம. தி.யின் பாடல்கள் மிகவும் நல்ல பாடல்களே. பலமுறை கேட்டிருக்கிறேன். இளையராஜாவின் ஒரு இசை நிகழ்ச்சியில் முத்துலிங்கம் சொன்ன சில பாடல்களை ராஜா பாட காண நேர்ந்தது (உபயம் ஒரு தொலைக்காட்சிதான்) மிகவும் அரிதாக சிறப்பாக இருந்தது. அவர்கள் இணைந்து கொடுத்த பாடல்கள் மிகவும் நன்றாகவே இருக்கின்றன. முதல் வசந்தம் பாடல் இன்னும் கூட நான் அவ்வப்போது கேட்டுக் கொண்டிருக்கிறேன். ஆனால் அந்தப் பாடல் "மானாடக் கோழி.." என்று துவங்குகிறது.

chinnakkannan
10th March 2015, 11:52 AM
கல் நாயக் நன்றி.. அந்தப் பாடல் மானடக் கோழி எந்த பாட்டு..(சத்யராஜ் மலேசியா வாசுதேவ னாடும் பாட்டா- அது நினைவில் இல்லை)
லிஸ்ட் பார்த்தா ஆச்சர்யமா இருக்கில்ல..


உங்களின் நாளை உனது நாள் பாட்டும் கேட்கணும் நினைவில் இல்லை..படம் மட்டும் நினைவில் ( யூ நோ மதுரை சக்தியில் ஒரு மேட்னி போய்விட்டு பட இறுதியில் கரெண்ட் போய்விட ஜெனரேட்டரும் போட்டு அதுவும் ரிப்பேர் ஆக - சஸ்பென்ஸ் தெரியாமல் திரும்ப வந்த படம்..வெகு நாட்கள் கழித்து நண்பனிடம் சஸ்பென்ஸ் கேட்டுத் தெரிந்து கொண்டேன்!)

kalnayak
10th March 2015, 01:09 PM
கல் நாயக் நன்றி.. அந்தப் பாடல் மானடக் கோழி எந்த பாட்டு..(சத்யராஜ் மலேசியா வாசுதேவ னாடும் பாட்டா- அது நினைவில் இல்லை)
லிஸ்ட் பார்த்தா ஆச்சர்யமா இருக்கில்ல..



"மானாடக் கோழி" பாடல் ரம்யா கிருஷ்ணன் மற்றும் பாண்டியன் நடிப்பில் S.Janaki-yin பாடல். அது இதோ:

https://www.youtube.com/watch?v=RjCMItwrHl8

kalnayak
10th March 2015, 05:52 PM
நிலாப் பாடல் 36: "நிலவே நிலவே நிலவே நிலவே நில்லு நில்லு"
------------------------------------------------------------------------------------------------
வித்யாசாகர் இசையில் நடிகர் விஜய் மற்றும் அனுராதா ஸ்ரீராம் பாடிய வைரமுத்துவின் நிலாப் பாடல். இங்க சும்மா போயிட்டிருக்குற நிலாவை நில்லு நில்லுன்னு சொல்லி திருவாய் மொழிகள் சொல்லச் சொல்லி கேட்குறாங்க. வழக்கமான காதல் பாட்டுதான். விஜய்-யும் நடிகை சுவலக்ஷ்மியும் நடிச்சிருக்காங்க.

இந்தாங்க வரிகளை வழக்கம் போல கொடுத்திடறேன்.
-----------------------------------------------------------------------------

நிலவே நிலவே நிலவே நிலவே நில்லு நில்லு
திருவாய் மொழிகள் சொல்லு சொல்லு
மலரே மலரே மலரே மலரே சொல்லு சொல்லு
மனதைத் தமிழில் சொல்லு சொல்லு
கண்கள் சொல்கின்ற பாஷையெல்லாம்
கண்டு தெளிகின்ற ஞானம் இல்லை
தங்கச் செவ்வாயின் தாழ் திறந்து
சொல்லு சொல்லு சொல்லு சொல்லு

கொடி கொண்ட அரும்பு மலர்வதற்கு
கொடியோடு மனுக்கள் கொடுப்பதில்லை
பழங்கள் பழுத்ததும் பறவைக்கெல்லாம்
மரங்கள் தந்தி என்றும் அடிப்பதில்லை
மௌனத்தைப் போல் பெண்ணின் மனமுரைக்க
மனிதரின் பாஷைக்கு வலிமையில்லை
மொழியே போ போ, அழகே வா வா வா
மொழியே போ போ போ, அழகே வா வா வா

ரதியே ரதியே ரதியே ரதியே
காதல் என்னும் கனிவாய் மொழியில் சொன்னால் சொன்னால்
வளரும் பிறையே பிறையே பிறையே
வானம் எட்டித் தொடவும் முடியும் என்னால் என்னால்
வாயில் வரைந்த ஒரு வார்த்தை சொன்னால்
காற்றைக் கடன் வாங்கிப் பறந்து போவேன்
கால வெளியோடு கரைந்து போவேன்
சொல்லு சொல்லு சொல்லு சொல்லு

வண்டுகள் ஒலித்தது கேட்டதுண்டு
மலர்கள் சத்தமிட்டுப் பார்த்ததுண்டா
நதிகள் சொற்பொழிவு செய்வதுண்டு
கரைகளின் மௌனம் என்றும் கலைப்பதுண்டா
சொல்கிற மொழிகள் தீர்ந்துவிடும்
சொல்லாத காதல் தீர்வதுண்டா
மொழியே போ போ, அழகே வா வா வா
மொழியே போ போ போ, அழகே வா வா வா

நெஞ்சே நெஞ்சே நெஞ்சே நெஞ்சே
கெஞ்சக் கெஞ்ச இன்னும் மௌனம் என்ன என்ன
கனவே கனவே கனவே கனவே
கண்ணீர் வற்றிக் கண்ணில் ஜீவன் மின்ன மின்ன
வார்த்தை உன் வார்த்தை நின்று போனால்
வாழ்க்கை என் வாழ்க்கை நின்று போகும்
உடலை என் ஜீவன் உதறிப் போகும்
சொல்லு சொல்லு சொல்லு சொல்லு

உள்ளங்கள் பேசும் மொழி அறிந்தால்
உன் ஜீவன் தொலைக்கத் தேவையில்லை
இரு கண்கள் பேசும் பாஷைகளை
இருநூறு மொழிகள் சொல்வதில்லை
தான் கொண்ட காதல் மொழிவதற்கு
தமிழ்நாட்டுப் பெண்கள் துணிவதில்லை
மொழியே போ போ, அழகே வா வா வா
மொழியே போ போ போ, அழகே வா வா வா
---------------------------------<><><><><><><><><><><><><><>-------------------------------------
இந்தாங்க ஒளி-ஒளி காட்சியும்:

https://www.youtube.com/watch?v=eW-af9Rn49Y

பாட்டில் நிற்கச் சொல்லும் நிலவை, என்னமோ தெரியலை நிலாவே வா-ன்னு கூப்பிடறாங்க.

chinnakkannan
10th March 2015, 11:22 PM
பாடினார் கவிஞர் பாடினார்…- 4

**

ஆயிரம் சொல்லுங்கள்..இந்த கிராமப் புறங்களில் பாடப்படும் நாட்டுப்புறப்பாடல் இருக்கிறதே.. அது கேட்கும் போது மென்மையாய் வரும் தென்றல்பட்டு சலசலக்கும் அருவி, படபடக்கும் இலைகள், தலையாட்டும் மலர்கள், கொஞ்சம்மெல்லத் துள்ளி எங்கும் பறக்க முடியாமல் துவண்டு தரையில் விழும் உதிர்ந்த பூக்க்ள் போன்றவற்றைப் பார்க்கும் போது உண்டாகும் மகிழ்ச்சி வரும்..இல்லியோ..

அடியேனும் முன்பு ஒரு நாட்டுப்புறப் பாட்டு எழுதிப் பார்த்தேன்..(பின்ன இப்படிப் போட்டாத்தான் உண்டு!  :)

சொல்லிவிட வேணு மின்னு
...சுறுசுறுப்பாய்த் தானி ருந்தேன்
அல்லிமலர்க் கால வெச்சு
..அன்றவளும் போகை யிலே
மெல்லமெல்ல வேகங் கூட்டி
..மேவிமுன்னால் சென்று நிக்க
கள்ளவிழி பாத்த பின்னால்
...காணாமப் போச்சு வார்த்தை..

என்ன..அவ்வளவு கிராமியமா இல்லைங்கறீங்களா..என்ன பண்றதுங்க.. பிறந்து வளர்ந்ததெல்லாம் மதுரை சிட்டில.. ஸோ அங்கிட்டு சாயல் கொஞ்சம்கொஞ்சம் வரும்.. இன்னும் எழுத எழுதப் பழகிடுவேன்னு நெனைக்கேன்..

அதுல பாருங்க ஒரு சினிமால வந்த நாட்டுப் புறப் பாட்டை இப்ப பாக்கலாமா..

ஆத்தோரம் கொடிக்காலாம்
அரும்பரும்பா வெத்திலையாம்
போட்டா சிவக்குதில்லே
பொன்மயிலே உன் மயக்கம்
வெட்டி வேருவாசம் அதிலே வெடலப் புள்ள நேசம்..
வெடலப் புள்ள நேசம்

இத எழுதின கவிஞரைப் பத்திச் சொல்லணும்னா ஒரு சின்ன ஃப்ளாஷ்பேக் சொல்லியே ஆகணும்..
*

“ மகாலிங்கம்.. ஒண்ணு சொல்லட்டுமா..தப்பா நெனைக்க மாட்டேளோன்னோ””

:உங்களை ஏன் ஓய் நான் தப்பா நெனைக்கப் போறேன்..என் சகோதரியின் ஆம்படையான் வேற.. சொல்லுங்கோ..” இப்படிச் சொன்னவர் கன்னரியேந்தல் மகாலிங்கம்..

“ஒம்ம பையன் சுப்பிரமணிக்கும் வயசாச்சு..என் பொண்ணுக்கும் கல்யாணப் பருவம் வந்தாச்சு.. நல்ல நாள் பாக்கலாமா..”

:பாக்கலாந்தான்..ஆனா மாமா”

“ஷ்.. நமக்கு நெலம் நீச்சுல்லாம் இருக்கு..இருந்தாலும் பிள்ளை வேலை பார்த்தா நன்னா இருக்கும்னு அபிப்ராயப் படற..சரி செஞ்சு புடலாம்.. எனக்குத் தெரிஞ்ச ஒரு பெரிய பணக்கார வெயாபாரி நம்ம ஊர்லயே இருக்கான்..அவன் கூட கணக்குக்கு நம்பிக்கையா ஆள் வேணும்னு கேட்டான்..அதனால கல்யாணம் கட்டிக்கிட்டு நம்ம ஊர்லயே வேலையும் பாக்கட்டும்..என்ன சொல்றீங்க..”

“பேஷா” ஆவுடையார்கோவில்க்கருகே உள்ள கன்னரியேந்தல் கிராமத்தில் பிறந்த சுப்பிரமணியன் பெரியவர்களால் நிச்சயிக்கப் பட்டு தன் அத்தை பெண்ணையே திருமணம் செய்து மாமனார் ஊருக்கே ட்ரான்ஸ்ஃபர் (பின்ன எப்படிச் சொல்றது) ஆனார்..அங்கு ஒருகடையில் கணக்கு உத்தியோகமும்(மாதச்சம்பளம் பத்து ரூபாய்) பார்த்தார்..

பின் அந்தக்காலத்தில் நாடகங்களின் மீது ஆர்வமேற்பட அப்பாவிடம் சம்மதம் வாங்கி (அந்தக்காலங்க) நாடகங்களில் நடிக்க ஆரம்பித்தார் சுப்பிரமணியம்..

பின் பின் என்ன ..சினிமா என்று ஒன்று வந்து அதிலும் ஆர்வம் ஏற்பட்டு நடிப்பதற்கும் கதை எழுதுவதற்கும் ஆசை வந்தது சுப்பிரமணியத்திற்கு..


இவரெழுதிய சில நாடகங்கள் வானொலியில் ஒலிபரப்பப் பட, அவற்றில் சிலவற்றிற்கு கல்கி பாராட்டி விமர்சனம் எழுத சுப்புவின் பெயர் பிரபலமாயிற்று..சொல்ல மறந்துவிட்டேனே.. மாமனாரின் ஊர் கொத்தமங்கலம்.. சுப்பிரமணியம் வாழ்க்கையைத் துவங்கிய இடம்.. எனில் கொத்தமங்கலம் சுப்பு என்றே அறியப்பட்டார்..

அப்புறம் சந்திர மோகனா என்ற திரைப்படத்துக்குக் கதை எழுதி (1936) நடிக்கவும் செய்தார்..

கொத்தமங்கலம் சுப்பு பின் ஜெமினி கம்பெனியில் மாதச்சம்பளம் 300 ரூபாய்க்குச் சேர அவரது கனவும் ஓரளவிற்கு நனவானது எனலாம்.. கதைஇலாகாவில் பிரதான எழுத்தாளர், நடிகர், இயக்குனர் ( போன தொடர் இறுதியில அசிஸ்டெண்ட் டைரக்ஷன்னு தவறாய் எழுதியிருந்தேன்),கதாசிரியர் , வில்லிசைக் கலைஞர் , நாவலாசிரியர் எனப்பன்முகத் திறன் இருந்தாலும் கூட இவர் கவிஞராக – பாடலாசிரியராக எழுதிய சில பாடல்கள் மறக்கவொண்ணாதவை (ஹை..என்ன தமிழ்!)

நாவல்னு பார்த்தீங்கன்னா ந.தி நடித்த தில்லானா மோகனாம்பாள் நாவலா இரண்டரை வருடங்க்ளுக்கும் மேலாக விகடனில் வெளிவந்தது.. கோபுலுவின் சித்திரங்கள் மனதைக் கொள்ளைகொள்ளும்.. நாம் படத்தில் பார்த்திருக்கும் ஒவ்வொரு பாத்திரமும் எக்டெண்டட் வெர்ஷனில் இன்னும் வெகு அழகாய் கண் முன் மிளிர்வார்கள்..

சிக்கல் ஷண்முக சுந்தரம் வாசிக்க மோகனாம்பாள் ஆடும் போட்டி – ஆஹா பைண்ட் செய்யப் பட்ட அந்தப் புத்தகத்தில் படங்களுடன் வாசித்தது இன்னுமெனக்குச் சிலிர்ப்பாய் இருக்கிறது..

வடிவாம்பாள் திருந்துவாள், மோகனா ஷண்முக சுந்தரம் திருமணம் செய்து கொள்வர் (இதற்குக் கல்யாணப்பத்திரிகையும் விகடன் அடித்திருந்த நினைவு)
பின் ஒரு குழந்தையும் பிறக்கும்..இருவரும் கப்பல் பயணம் மதன்பூருக்குச் செல்வர் எனப் போகும் நாவல்.. முடிவு நினைவிலில்லை..

தி.மோ தான் திரைப்படத்தில் வந்து இன்னும் நம் நெஞ்சில் இருக்கிறதே..அந்த ச்சிக்கலாருக்கும், மோகனா, தருமன், முத்துராக்கு வடிவாம்பாள், சவடால் வைத்தி என எல்லாருக்கும் முதன் முதல் நாவலில் உயிர் கொடுத்த கொத்தமங்கலம் சுப்பு – விகடனில் வெளியானபோது கலை மணி என்ற பெயரில் எழுதினார்..

இவர் எழுதிய ராவ் பகதூர் சிங்காரம் ஜெமினியே தயாரித்தது..விளையாட்டுப்பிள்ளை என்ற பெயரில்.. ந.தி, பத்மினி, காஞ்ச்..

பட் இவரதுகவிதா உள்ளத்தைச் சொல்லவில்லையே.. ஹை..சொல்லாமல் தெரியவேண்டுமே..

இல்லை இல்லை..சொ.தெ.வே பாடலைஎழுதியவர் இவரில்லை.. இவர் எழுதியபாடல் இன்னும்பல வருடங்களுக்குப் பின்னும் பார்க்க உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும்..அது போல மறுபடி வருமா எனச் சந்தேகமே..

ஆறு பெருகி வரின் அணை கட்டலாகும்
அன்பின் பாதையில் அணையிடலாமோ
பேதைமையாலே மாது இப்போதே
காதலை வென்றிட கனவு காணாதே

சாதூர்யம் பேசாதடி
என் சலங்கைக்குப் பதில் சொல்லடி
நடுவிலே வந்து நில்லடி..
நடையிலே சொல்லடி

ஆடுமயில் எந்தன் முன்னே என்ன
ஆணவத்தில் வந்தாயோடி?
பாடுங்குயில் கீதத்திலே பொறாமை கொண்டு
படமெடுத்து ஆடாதேடி நீ படமெடுத்து ஆடாதேடி

யெஸ்.. வஞ்சிக் கோட்டை வாலிபனில் கண்ணும் கண்ணும்கலந்து எழுதியவர் இவரே.. என்னா பாட்டு என்னா ஆட்டம் என வியக்காதவர் யாருமில்லை அந்தக்காலத்தில்.. இந்தக் காலத்திலும்.

ராஜாமகள் ரோஜாமலர் – இதுவும் கொத்தமங்கலம் சுப்புவின் கைவண்ண்ம் தான்..
பலபடங்களில் தன்னுடன் நடித்த சுந்தரிபாய் என்ற மராத்தியப் பெண்மணியைக் காதலித்து இரண்டாவது மனைவியாக்கிக் கொண்டார் ( நிழல் நிஜமாகிறதில் வரும் அனுமந்தின் அம்மா) இருவருமே ஜோடியாக பல படங்களில் நடித்திருக்கின்றனர்..

கலைமாமணி, பத்மஸ்ரீ எல்லாம் இவர் பெற்ற பட்டங்கள்..

ஹிந்தோள ராகத்தில் இவர் எழுதிய பாடல் மோட்டார் சுந்தரம் பிள்ளையில் வரும்..என்னவாக்கும் அது…

மனமே முருகனின் மயில்வாகனம்
மானிட தேகமே குகனாலயம்
குரலே செந்தூரின் கோவில் மணி – அதுகுகனே ஷண்முகனே
என்றொலிக்கும் இனி….

ம்ம் செளகாரும் ஒல்லி ஒல்லி மணிமாலாவும் இணைந்து பாடும் பாடல் (மணிமாலா ரொம்ப அழகா இருப்பார் என என் சித்தப்பா சொல்லக் கேட்டிருக்கிறேன்!)

வழக்கம் போல அந்தக் காலத்திலும் கரெக்ஷன் உண்டு… மானிட தேகமே என்றால் ஒருமாதிரியோ என்னவோ நினைத்தார்களோ..அல்லது பாடுவது பெண்கள் என்பதால் – மாந்தளிர் மேனியே குகனாலயம் –என மாற்றிவிட்டார்கள் – சுப்புவின் அனுமதி பெற்று..

பாட். இதோ.. இதில் வரும் வீணை இசையை மறக்க முடியுமா என்ன..

https://www.youtube.com/watch?v=-uKUXueJYDc&feature=player_detailpage

குபுகுபு குபுகுபு நான் இஞ்ஜின் டகடக டக டக நான் வண்டி.. நகைச்சுவைப்பாடலையும் எழுதியவர் இவர் தான்..

பாடல்களில் எளிய சொற்களைக் கையாள்வது இவருக்கு மிகப் பிடிக்கும்..இவரது பாணி என்று கூடச் சொல்லலாம்..

ஒளவையார் என்று ஒருபடம்.

கே.பி.எஸ் நடிக்க ஸ்டார்ட் ஆக்ஷன் சொல்லப்பட

ஒளவையார் – அதியமான் அள்ளி அள்ளிக் கொடுத்தார் –என்பது போல பேசவேண்டும்.. கே.பி.எஸ் ஏதோ நினைவில் – அதியமான் அள்ளிக் கொடுத்தார் – என்றுமட்டும் சொல்லிவிட …கட்ட்.ட்

டைரக்டர்..- பசின்னா கண்டதையும் சாப்பிடக் கூடாது..இப்படி அல்லிய முழுங்கிட்டீங்களே – என ச் சொல்ல செட்டில் அனைவரும் சிரித்தார்களாம்.. டைரக்டர்… கொத்தமங்கலம் சுப்பு (இது பலவருடங்களுக்கு முன் என் பள்ளி ஆசிரியர் சொன்ன நிகழ்வு- தவறாகக் கூட இருக்கலாம்). ஒளவையாரில் ஒரு முக்கிய கதா பாத்திர்மாகவும் நடித்திருந்தார் கொத்தமங்க்லம் சுப்பு..

இப்படி எல்லாவகையிலும் மறக்கமுடியாத கவிஞர் கொத்தமங்கலம் சுப்பு (மறைந்தது 1974) எழுதிய நாட்டுப் புறப்பாடல் வந்த படம் சந்திரலேகா..

ஆத்தோரம் கொடிக்காலாம்
அரும்பரும்பா வெத்திலையாம்
போட்டா சிவக்குதில்லே
பொன்மயிலே உன் மயக்கம்

மாடுகளைக் கட்டிப்போட்டு வெகுநேரமாச்சு
மானமிருண்டு போச்சு
ஆருக்களவாணிகண்டா வந்து வந்து போக்கிடுவார்

மாட்டைப் பார்த்து..: மாமியா வீட்டுக்குப் போறாப்புல
மசமசன்னு நடக்குற
கழனிவெக்கிற நேரமாச்சு வேகமாக ஓட்டு
(கொஞ்சம் வேகமாகஓடும் பாடல் வேகமாக டைப் அடிக்க இயலவில்லை..

https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=05jFqxsPT2w

*
அடுத்து வரப்போகும் கவிஞர் எழுதிய கணீர்க்குரல் அருவிப்பாட்டு ரொம்பப் பிரபலம் தான்..

அவர்ர்ர்ர்ர்ர்

(அப்புறம் வாரேன்):)

//ரொம்ப நீளமாய்டுச்சா//

chinnakkannan
11th March 2015, 12:10 AM
குயிலாக நானிருந்தென்ன குரலாக நீ வரவேண்டும்

ம்ம் சரி அப்புறம்..

நாம அழகா குழந்த பெத்துக்கிட்டு அத வளத்து ஆளாக்கி சூப்பர் சிங்கர் ஜூனியர்ல பாட விட்டு ப்ரைஸ் வாங்க விடணும்!!!

‘...........’

(நல்ல வேளை ஜெய்ஷங்கர் கிட்ட இந்தம்மா இப்படிக் கேக்கலை.. ஓ அது அந்தக்காலமோ!)

https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=Rc6TEnbfkbs

rajraj
11th March 2015, 01:34 AM
maname muruganin mayil vaahanam
en maanthaLir meniye guhan aalayam

:)

Gopal.s
11th March 2015, 04:41 AM
சி. க,

உங்கள் கவிஞர் அறிமுக கற்பனையூர் உரையாடல் ரொம்ப ரொம்ப ஜாலி.உங்கள் சரளமான நகைச் சுவை கலந்த எழுத்து பளிச். உங்களுக்கும் என்னைபோல யாப்பிலக்கணத்தில் ஆர்வம் போல?(வெண்பா போல காசு என்பதில் முடித்துள்ளேன்.)

கல்நாயக்,

உங்கள் ஜுகல் பந்தி சி.க வுடன் அடிக்கும் லூட்டி உங்களின் புதிய பரிமாணம். ஒரு வரி ஊசி குத்தல் மட்டுமே உங்கள் பிரத்யேக எழுத்தாக இருந்த காலம் ஒன்று உண்டு.நம் ஆடையழகை பார்த்து, மாற்றணி நண்பர் ஒருவர் ,ஆர்வ கோளாறாய் அலிபாபாவை குறிப்பிட்டு, இந்த ஆடைகளை பார்த்து அனைவரும் பின்பற்றினர் என்று எழுத போக, நீங்கள் கேட்டது.... அப்போது அந்த கால இளைஞர் அனைவரும் தமிழ் நாட்டில் அராபிய உடையிலா அலைந்து கொண்டிருந்தனர் என்று....
நான் விழுந்து விழுந்து சிரித்தேன். மறக்க முடியாத காலங்கள்.

kalnayak
11th March 2015, 10:46 AM
நன்றி கோபால்,

நான் நடிகர் திலகம் திரிக்கு வந்து எல்லோருடைய பதிவுகளையும் படிப்பது உங்களுக்கும் தெரியும். உங்களைப் போன்ற ஜாம்பவான்களுடன் எனது சிறிய நகைச் சுவைப் பதிவுகள் ஒன்றுமே இல்லை என அயர்ந்து ஓய்வெடுத்துக் கொண்டிருக்கிறேன். அதுவுமில்லாமல் நடிகர் திலகத்தை பற்றி பெரிதாக எழுத வேண்டுமானால் நிறைய பயிற்சி வேண்டுமென நினைக்கிறேன். அதற்கு அவ்வளவாக நேரம் கொடுக்க முடியவில்லை. நமது சின்ன கண்ணனும் தமிழ் பற்றி நிறைய எழுதுகிறாரா ஆர்வத்தில் அப்படியே இறங்கி விட்டேன். நிச்சயம் நடிகர் திலகம் திரிக்கு நான் வருவேன். எழுதுவேன். நான் எழுத அவர்கள் வாய்ப்பு கொடுக்க மாட்டார்களா என்ன!!!

வாய்ப்புகள் அமைந்து பார்த்து கொண்டுதான் உள்ளேன். இருந்தாலும் இப்போதைக்கு வேண்டாம் என்று ஓய்வு.

kalnayak
11th March 2015, 11:13 AM
அருமை அருமை சி.க.,

கொத்தமங்கலம் சுப்பு எனக்கு மிகவும் பிடித்த பழம் பெரும் இயக்குனர், கதாசிரியர், பாடலாசிரியர். நீங்கள் சொன்ன அவ்வையார், வஞ்சிக்கோட்டை வாலிபன், தில்லானா மோகனாம்பாள் படங்கள் மிகவும் பிரபலமானவை. முதல் இரண்டு படங்களையும் மிகவும் பிற்காலத்திலேயே என்னால் காண முடிந்தது. ஏன் அவரது திரைப் படங்கள் இவ்வளவு புகழ் பெற்று விளங்குகின்றன என்ற காரணமும் புரிந்தது. ஒரு சமயத்தில் கொத்தமங்கலம் என்ற ஊர் எங்கிருக்கிறது என்று தேடி அது எர்ணாகுளம் பக்கத்தில் என்று பார்த்துவிட்டு கேரளாவில் இருந்து வந்து தமிழ் திரையுலகில் (கதை, பாடல்கள் எழுதி) இவ்வளவு புகழ் பெற்றிருக்கிறாரா என்று தவறாக கூட நினைத்து விட்டேன். பின்னர்தான் தெரிந்தது அது சிவகங்கை அருகே என்று.

"மனமே முருகனின் மயில் வாகனம்" பாடலைப் பற்றி எழுதியிருந்தீர்கள். இதுவும் எனது அலைபேசியில் அமர்ந்து நான் அடிக்கடி கேட்டு ரசிக்கும் ஒரு பாடலாக இருக்கிறது. சந்திரலேகா படம் சில முறை பார்த்திருந்தாலும் "ஆத்தோரம் கொடிக்காலாம்" பாடல் நினைவில் இல்லை. அந்த பிரமாண்டம் தான் ஞாபகம் வருகிறது. எனது நினைவுகளை பின்னோக்கி ஓட வைத்து விட்டீர்கள். நன்றி. அடுத்த கவிஞருக்காக காத்திருக்கிறேன்.

chinnakkannan
11th March 2015, 11:33 AM
கோபால் நன்றி :)

போல என்றால் காசு வாய்ப்பாடு கிடையாது தேமா.. போலும் எனச் சொல்லலாம் (ம் சைலண்ட்) காசு வரும்.. :)

chinnakkannan
11th March 2015, 11:37 AM
நன்றி கல் நாயக் :)

குபு குபு குபுவென நான் இன் ஜின் டகடக டக டக நான்வண்டி..

இஞ்சின் மட்டும் ரயிலாகாது என்னை விட்டுப் போகாதே.. என்ன எளிய உவமை.. சிவகங்கைப் பக்கமெல்லாம் சின்னவயசில் போயிருக்கிறேனா என நினைவில் இல்லை..முடிந்தால் ஒரு ட்ரிப் அடிக்க வேண்டும்..

chinnakkannan
11th March 2015, 11:39 AM
சொல்ல மறந்துட்டேன்.. மானாடக் கோழிக்கும் நிலாப் பாட்டுக்கும் தாங்க்ஸ் (ரம்யா - இளமைக்கும் இப்போது இருப்பதற்கும் அவ்வளவு வித்யாசம் தெரியவில்லை (கொஞ்சம் ஹைட் ஆன மாதிரிப் படுகிறது))

kalnayak
11th March 2015, 02:55 PM
நிலாப் பாடல் 37:"வா வெண்ணிலா உன்னைத் தானே வானம் தேடுதே"
--------------------------------------------------------------------------------------------------------

மிகப் பிரபலமான ஒரு பாடல். தமிழ் திரை உலகில் நினைவில் கொள்ளவேண்டிய படம். இசை ஜாம்பவான்கள் மெல்லிசை மன்னர் M.S. விஸ்வநாதனும், இசைஞானி இளையராஜாவும் இணைந்து இசையமைத்த படம். பாடல்களினாலேயே படமும் புகழடைந்தது. இப்படிப்பட்ட படத்தில் ஒரு நிலாப் பாடல் இல்லையென்றால் என்ன செய்வது? யோசித்தார்கள். வைத்துவிட்டார்கள். மச்சக்காரர் மோகனும், மச்சக்காரிகள் அமலாவும், ராதாவும் (இப்படிப்பட்ட படத்தில் நடித்ததால்) இருக்கிறார்கள். இந்த காதல் பாடலுக்கு மோகனும் அமலாவும் மட்டுமே. எங்கே இந்த பாடலையெல்லாம் எழுதாமல் விட்டுவிடுவேனோ என்று பயம் வந்துவிட்டது. அதனால் தொடர்ந்து சில பிரபலமான பாடல்கள் வரும். பாடும் நிலா எஸ்.பி.பாலசுப்பிரமணியம், எஸ். ஜானகியுடன் பாடிய பாடல்.

இந்த மாதிரி பத்து பதினைந்து நிலாப் பாடல்களை கேட்டால் எல்லோருமே நிலாப் பாடல் எழுதிவிடலாம் என்று தோன்றுமே.நாம்தான் எத்தனை விதமான நிலப் பாடல்களை பார்த்துவிட்டோம்!!! இங்கே வெண்ணிலாவை வானம் தேடுவதாக கவிஞர் ஆரம்பிக்கிறார். மேலாடை மூடி போவது ஏன் என்று அதனிடம் கேள்வி கேட்பது நன்றாகவே இருக்கிறது அல்லவா?
சரி. பாடல் வரிகள் இங்கே:
---------------------------------------------------

வா வெண்ணிலா உன்னை தானே வானம் தேடுதே
வா வெண்ணிலா உன்னை தானே வானம் தேடுதே
மேலாடை மூடியே ஊர்கோலமாய் போவதேன்
மேலாடை மூடியே ஊர்கோலமாய் போவதேன்

முகம் பார்க்க நானும் முடியாமல் நீயும்
திரை போட்டு உன்னை மறைத்தாலே பாவம்
ஒரு முறையேனும் ஆ ஆ திருமுகம் காணும்
வரம் தர வேண்டும் ஆ ஆ எனக்கது போதும்

எனைச்சேர எதிர்பார்த்து உன்னை ஏழு ஜென்மம் ஏங்கினேன் (வா வெண்ணிலா )

மலர் போன்ற பாதம் நடக்கின்ற போது
நிலம் போல உன்னை நான் தாங்க வேண்டும்
இடையினில் ஆடும் உடையென நானும்
இணை பிரியாமல் துணை வர வேண்டும்

உனக்காக பனிக்காற்றை தினம் தூது போக வேண்டினேன் (வா வெண்ணிலா )
----------------------------------------------------------------

பாடலை பாருங்கள் இங்கே :
---------------------------------------------
https://www.youtube.com/watch?v=9VMs5JITg5Q

மெல்லத் திறந்தது கதவு - இன்னாத்துக்கு இப்பிடி சொல்றாங்கோ? வேகமாய் திறக்காதே கதவை என்று ஏன் உத்தரவிடவில்லை.

chinnakkannan
11th March 2015, 06:21 PM
//எங்கே இந்த பாடலையெல்லாம் எழுதாமல் விட்டுவிடுவேனோ என்று பயம் வந்துவிட்டது// அப்படில்லாம் பயப்பட வேண்டாம்.. எனக்கு பிரபலமான பாடல்கள் தான் தெரியும்.. நான் சொல்லிடுவேனாக்கும் :)

மெ தி க பாடல்களுக்காகவே ஓடிய படம்.. இன்னொரு ப்ளஸ் பாய்ண்ட் சொர்ண புஷ்பம்.. அதுவும் ப்ளாக் அண்ட் ப்ளாக் ட்ரெஸ்ஸில் கண்கள் மட்டும் பேசும் கவிதை..

கருப்பென ஆடை அணிந்தவள்தான்
..கண்களில் இசையைப் பொழிந்தவள்தான்
விருப்பமோ துக்கமோ எஃதெனினும்
..விளக்கமாய்ச் சொல்லிடும் விழிமலர்கள்
கருக்கலில் மெல்லிய தென்றலைப்போல்
..கன்னியின் கண்மொழி பேசிடுமே
புருவமும் வளைந்துதான் நெஞ்சகத்தை
..புரட்டியே போட்டதும் அறிவீரே..

ஹி ஹி.. மூணு நிமிஷால எழுதின பாட்.. குறையிருந்தால் மன்னிக்க :)

chinnakkannan
11th March 2015, 06:50 PM
இன்னிக்கும் நாளைக்கும் மழையாம் சோன்னு கொட்டப்போகுதாம்.. வானத்தைப் பார்த்தாக்க அப்படித் தெரியில..சோகையா சில வயசான ஒல்லி மேகங்கள் வாக் போயிட்டிருக்கு.. ம்ம்.. சரி நாம என்ன பண்ணலாம்..இப்பவே கிளம்பிடலாம் வீட்டுக்கு :)

அதுக்கு முன்னால ஒரு காம்போதி ராகப் பாட்டு..( சரிதானா) கேக்கலாமா..


https://www.youtube.com/watch?v=NZrpLo9NCiw

rajraj
11th March 2015, 09:15 PM
From Avan, Tamil dubbed version of Aah(1953):

KaariruL neram kaalaiyo dhooram......

http://www.youtube.com/watch?v=hnLptfnezZs

From the Hindi original:

Raath andheri dhoor saveraa......

http://www.youtube.com/watch?v=5Len9ZbotAU

chinnakkannan
11th March 2015, 11:27 PM
ராஜ் ராஜ் சார்..ஜூகல் பந்தி பாடல்களுக்கு நன்றி நான்கேட்டதிலலை இதுவரை என நினைக்கிறேன் :) அடுத்த போஸ்ட் புதிர்ல நீங்க வர்றீங்க..! :)

chinnakkannan
11th March 2015, 11:31 PM
பாடினார் கவிஞர் பாடினார் - 5

*

ஸ்டார்ட்

டேப் சுழல ஆரம்பிக்க – மெட்டு – தானனா தன தானனா – என்பதற்கேற்ப எழுதப் பட்ட பாடலைப் பார்த்து பாடகர் பாட ஆரம்பிக்க – டபக்… இருள்.. கரெண்ட் கட்..

யாரங்கே..

அந்த யாரங்கேயும் எதுவும் செய்ய இயலவில்லை.. இருபது நிமிடம் கடந்து தான் வந்தது கரண்ட்.

இசையமைப்பாளருக்கோ எரிச்சல்.. என்னையா இது காலைலருந்து ஒழுங்கா நடக்க மாட்டேங்குது..

என்ன ஆச்சுதுங்க

அதையேன் கேக்கற போ..இட்லிக்குத்தொட்டுக்க வித்யாசமா ஒரு வடகறியோ என்னவோ புதுசா ப்ண்ணியிருந்தா வீட்டுக்காரி..ஏதோ மசாலா தூக்க்லோ என்னவோ.. ஒரே கலக்கல்.. இப்ப பரவாயில்லை இங்க வந்தா கரெண்ட் கட்.. இதோ வந்துடுச்சே.. எங்கே செளந்தர்ராஜன்..

செளந்தர்ராஜன் என விளிக்கப் பட்ட டி.எம்.எஸ். இல்லை.. எதற்கோ அல்லது அருகிலோ தொலைபேசி பண்ணிவிட்டு வருவதாகத் தகவல் வர, இசையமைப்பாளருக்கு மறுபடிகோபம்..அடச் சே. ரிகர்ஸல்பண்ணனுமா மறுபடியும்.. எல்லாம் இந்தப் புதுசா பாட்டெழுத வந்தவனால…

ஒல்லி ஒல்லியாய்க் கண்ணில் கனவு மின்ன அமர்ந்திருந்த புதுப்பாடலாசிரியருக்கு ஒரு மயக்கம்.. நாமென்ன தவறு செய்தோம்..

ஆரம்பிச்சதுலருந்தே சகுனம் சரியில்லை – என்றார் இசை.. என்ன பண்ணலாம்.. பேசாம இந்தப் பாட்ட நமக்குத் தெரிஞ்ச பிரபலகவிஞர்கிட்டயே கொடுத்துடலாமா என்ன சொல்றீங்க ப்ரொட்யூஸ்..

ப்ரொட்யூஸர் பவ்யமாய் ‘ நீங்க சொன்னா சரிண்ணா”

அவருக்கு ஒரு ஃபோனைப் போடும் )கேட்டுக் கொண்டிருந்த புதிதாய்ப் பாடல் எழுதவந்த கவிஞருக்கு பக் பக்) ஓ.. நூறு ஆயுசு அவரே வந்துட்டாரே..

ரொம்ப சிம்ப்பிளாய் ஒரு ஆட்டோவில் வந்து இறங்கிய பழகியபாடலாசிரியரிடம் இசை சொன்னார்.. இதாங்க மெட்டு ஒரு பாட்டுப் போட்டுத்தாங்களேன்..

“பேஷா..” என்ற ப.பா “இது யாரு பையன்..”

ப்ரொட்யூஸர் “ இவரு ஒரு பாட்டுப் போட்டாரு.. என்ன காரணமோ இசைக்குப் பிடிக்கலை”

“எங்கே.. அந்தப் பாட்டைக் கொடும்” புது ப் பாடலாசிரிய இளைஞன் பவ்யமாய் தான் எழுதிய பாடலைக் கொடுக்க ரசித்துப் படித்து – மலர் மழை போலே மேனியின் மீதே குளிர் நீரலைகள் கொஞ்சிடுதே..வாவ். நன்னா எழுதியிருக்கயேப்பா “ (இளைஞன் முகத்தில் மலர்ச்சி) எங்கே இசைப்பாப்பா..

இசையமைப்பாளர் டி.ஆர்.பாப்பா – என்னங்க

இந்தப்பாட்டே நல்லாத் தான் இருக்கு இதை வச்சுக்கும் – நான் அப்புறமா வர்றேன்.. எனச் சொல்லி பெரிய கவிஞர் (மனதால்) புறப்பட பு.பா.எ.வ கவிஞருக்குக் கண்ணில் நீர் முட்டியது..

நிற்க நாம் சொல்லப் போவது அந்தக் காலத்தில் புதிதாய்ப் பாடல் எழுதவந்த கவிஞர்.. பிற்காலத்தில் வாலி என அறியப்பட்டவர் – அவரைப் பற்றி இல்லை..

வாலியின் பாட்டை எடுத்துக்கொள்ளுங்கள் நன்றாக எழுதியிருக்கிறார –எனப் பெருந்தன்மையுடன் சொல்லிச் சென்ற கவிஞர் பற்றி..

வாலி எழுதிய பாடல் – சிரிக்கின்றாள் இன்று சிரிக்கின்றாள் (படம் நல்லவன் வாழ்வான்)-

(நிகழ்வின் வர்ணனை என் கற்பனையூர்)

அவர்…மருதகாசி..

*
திருச்சி மாவட்டம் கொள்ளிடக் கரையில் உள்ள மேலக்குடிகாடு என்ற கிராமத்தில் கிராம அதிகாரியான அய்யம்பெருமாளுக்கும் மிளகாயி அம்மாளுகும் பிறந்தவர் மருதகாசி (1920) பிறந்து வளர்ந்து குடந்தையில் கல்லூரி.. சிறுவயது முதலே கவிதை எழுதத்தேர்ந்தவர்.. பின் நாடக ஆர்வம்.

சேர்ந்தது குடந்தை தேவி நாடக சபை.. திருச்சி லோக நாதனின் இசைக்கு இவர் எழுதிய நாடகப் பாடல்கள் பேசப்பட கதவைத்தட்டியது சினிமா வாய்ப்பு..

ஜி. ராமனாதனின் இசையில் பெண் எனும்மாயப் பேயாம் (படம் மாயாவதி தயாரிப்பு மாடர்ன் தியேட்டர்ஸ்) எனும் பாடலே முதல் பாடல்..

மெட்டுக்குத் தக்கபடி வார்த்தைகள் இவருடைய விரல்களில் சுற்றிச் சுற்றிச் சுழன்றோடி வந்து டபக்கென ஆங்காங்கே அமர்ந்து கொண்டன.. இவரது திறமையில் அழைப்புகளும் தானே வந்தன..

சுமார் 250 படங்களில் 4000 பாடல்கள் இவர் எழுதியிருக்கிறார் என்றால் கொஞ்சம் நம்புதற்குச் சிரமம் தான்..ஆனால் தெரிந்த பாடல்களைப் பார்க்கும் போது இவரா என ஆச்சர்யப்படாமல் இருக்க முடியவில்லை..

தூக்குத்தூக்கியில்…
இதுவும்,

சுந்தரி சௌந்தரி நிரந்தரியே!
சூலியெனும் உமையே!
சூலியெனும் உமையே குமரியே!
குமரியே சூலியெனும் உமையே குமரியே

சீலமும் வீரமும் சீரும் செல்வமும்
தேர்ந்த கலைஞானம் கானம் நிதானம் - நிதானம்
மாந்தரின் மானம் - மானம் காத்திட வேணும் - வேணும்
கண்காணும் தெய்வமே கண்காணும் தெய்வமே!


https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=VlULJclM6IQ

*

கண்ணொளி புகுந்து கருத்தினில் கலந்த மின்னொளியே ஏன் மெளனம்.. பாடலும் இவர் தான்..

*

இவர் எழுதிய பாடல்களில் எதைச்சொல்ல எதைவிட எனத் தெரியவில்லை..எல்லாமே எனக்குப் பிடித்த பாடல்கள் தான்..இருந்தாலும் கொஞ்சம் செலக்ட் செய்ததில்..

"அடிக்கிற கைதான் அணைக்கும், அணைக்கிற கைதான் அணைக்கும்" (வண்ணக்கிளி, 1959)
"அன்பினாலே உண்டாகும் இன்பநிலை - அதை அணைந்திடாத தீபமாக்கும் பாசவலை " (பாசவலை, 1954)
"அன்பே அமுதே அருங்கனியே ஆனந்த வாழ்வை காண்போம் நாமினிதே" (உத்தமபுத்திரன், 1958)
"ஆடாத மனமும் உண்டோ! நடை அலங்காரமும் அழகு சிங்காரமும் கண்டு" (மன்னாதி மன்னன், 1960)
"ஆயிரம் கண் போதாது வண்ணக்கிளியே குற்றால அழகை நாம் காண்பதற்கு வண்ணக்கிளியே" (பாவை விளக்கு, 1960)
"இன்பமெங்கே இன்பமெங்கே என்று தேடு - அது எங்கிருந்த போதும் அதை நாடி ஓடு" (மனமுள்ள மறுதாரம், 1958)
"உலவும் தென்றல் காற்றினிலே ஓடமிதே நாம் மகிழ ஊஞ்சலாடுதே"
(மந்திரி குமாரி, 1950)
"எந்நாளும் வாழ்விலே! கண்ணான காதலே! என்னென்ன மாற்றமெல்லாம் காட்டுகின்றாய் ஆசை நெஞ்சிலே!" (விடிவெள்ளி, 1960)
"என் வாழ்வில் புதுப்பாதை கண்டேன்" (தங்கப்பதுமை, 1958)
"என்னை விட்டு ஓடிப்போக முடியுமா? இனி முடியுமா?" (குமுதம், 1960)
"ஏர் முனைக்கு நேர் இங்கே எதுவுமே இல்லே! என்றும் நம்ம வாழ்விலே பஞ்சமே இல்லே!" (பிள்ளைக் கனியமுது, 1958)
"ஒற்றுமையாய் வாழ்வதாலே உண்டு நன்மையே! வேற்றுமையை வளர்ப்பதனாலே விளையும் தீமையே!" (பாகப்பிரிவினை, 1959)
"கடவுள் என்னும் முதலாளி கண்டெடுத்த தொழிலாளி விவசாயி" (விவசாயி, 1967)
"கண் வழி புகுந்து கருத்தினில் கலந்த மின்னொளியே ஏன் மௌனம்?" (தூக்கு தூக்கி, 1954)
"கண்களால் காதல் காவியம் செய்து காட்டும் உயிர் ஓவியம்" (சாரங்கதாரா, 1958)
"கண்ணாலே நான் கண்ட கணமே உயிர்க் காதல் கொண்டதென் மனமே" (பார்த்திபன் கனவு,1960)
"காவியமா? நெஞ்சின் ஓவியமா? அதன் ஜீவியமா? தெய்வீக காதல் சின்னமா?" (பாவை விளக்கு, 1960)
"கொஞ்சிக் கொஞ்சிப் பேசி மதிமயக்கும்! வஞ்சகரின் உலகம் வலை விரிக்கும்!" (கைதிகண்ணாயிரம், 1960)
"கொடுத்துப் பார் பார் பார் உண்மை அன்பை!" (விடிவெள்ளி, 1960)
"சத்தியமே லட்சியமாய் கொள்ளடா தலை நிமிர்ந்து உனை உணர்ந்து செல்லடா" (நீலமலைத்திருடன், 1957)
"சந்திரனைக் காணாமல் அல்லி முகம் மலருமா?" (குலமகள் ராதை, 1963)
"சித்தாடை கட்டிக்கிட்டு சிங்காரம் பண்ணிக்கிட்டு" (வண்ணக்கிளி, 1959)
"தென்றல் உறங்கிய போதும் திங்கள் உறங்கிய போதும்" (பெற்ற மகனை விற்ற அன்னை, 1958)
"தேவியின் திருமுகம் தரிசனம் தந்தது" (வெள்ளிக்கிழமை விரதம், 1974)
"நீல வண்ணக் கண்ணா வாடா! நீ ஒரு முத்தம் தாடா!" (மங்கையர் திலகம், 1955)
"நேரம் வந்தாச்சு நல்ல யோகம் வந்தாச்சு" (தாய் மீது சத்தியம், 1978)
"மணப்பாறை மாடு கட்டி, மாயவரம் ஏரு பூட்டி" (மக்களைப் பெற்ற மகராசி, 1957)
"மனுஷன மனுஷன் சாப்பிடுறாண்டா தம்பிப் பயலே! இது மாறுவதெப்போ? தீருவதெப்போ நம்மக் கவலே" (தாய்க்குப்பின் தாரம், 1956)
"மாசிலா உண்மைக் காதலே மாறுமோ செல்வம் வந்த போதிலே" (அலிபாபாவும் 40 திருடர்களும், 1955)
"மாட்டுக்கார வேலா! ஒம் மாட்டைக் கொஞ்சம் பார்துக்கடா!" (வண்ணக்கிளி, 1959)
"மாமா.. மாமா.. மாமா ...சிட்டுப் போல பெண்ணிருந்தால் வட்டமிட்டு சுத்திசுத்தி" (வண்ணக்கிளி, 1959)
"மியாவ் மியாவ் பூனைக்குட்டி" (குமுதம், 1961)
"முல்லை மலர் மேலே மொய்க்கும் வண்டு போலே உள்ளம் உறவாடுதுங்கள் அன்பாலே" (உத்தமபுத்திரன், 1958)
"வசந்த முல்லை போலே வந்து அசைந்து ஆடும் வெண்புறாவே" (சாரங்கதாரா, 1958)
"வண்டி உருண்டோட அச்சாணி தேவை" (வண்ணக்கிளி, 1959)
"வண்டு ஆடாத சோலையில் மலர்ந்து வாடாமல் இருக்கும் பூ என்ன பூ?" (எங்கள் குலதேவி, 1959)
"வண்ணத் தமிழ் பெண்ணொருத்தி என்னெதிரில் வந்தாள்!" (பாவை விளக்கு, 1960)
"வருவேன் நான் உனது மாளிகையின் வாசலுக்கே! ஏனோ அவசரமே எனை அழைக்கும் வானுலகே!" (மல்லிகா, 1957)
"வாராய் நீ வாராய்! போகுமிடம் வெகு தூரமில்லை நீ வாராய்" (மந்திரி குமாரி, 1950)


ஸாரிங்க..லிஸ்ட் கொஞ்சம் நீளமாய்டுத்து.. இருந்தாலும் அந்த அருவிப்பாட்டு..

வானரங்கள் கனிகொடுத்து மந்தியொடுகொஞ்சும்
மந்திசிந்து கனிகளுக்கு வான்கவிகள் கெஞ்சும் என்னும் குற்றாலக் குறவஞ்சிப்பாட்டு தான் நினைவுக்கு வரும்.. சி.எஸ் ஜெயராமன்,தோற்ற்ப்பொலிவுடன் ந.தி இன் பாவை விளக்கு..

பாடல் முடிந்தவுடன் கொய்ங்க் கொய்ங்க் என்று ஒயிலாக அசைவதாக நினைத்து அசைந்தவண்ணம் :”எண்ணக்கிளி வண்ணக் கிளியிடம் சொல்லுதோ” என ந.தியிடம் கேட்பார் எம்.என். ராஜம்

ஆயிரம் கண் போதாது வண்ணக்கிளியே
குற்றால அழகை நாம் காண்பதற்கு வண்ணக்கிளியே..

https://www.youtube.com/watch?v=vW-5iFAOM7c&feature=player_detailpage

*

1949 இலிருந்து 1960 வரை பறந்த மருதகாசியின் கொடி கண்ணதாசனின் வரவிற்குப் பிறகு கொஞ்சம் இறங்கியது எனத் தான் சொல்லவேண்டும்.. இவரது குடும்பம் விவசாயக் குடும்பம் எனில் ஊருக்கே சென்றுவிட்டார்..பின் மறுபடி வந்து பாடல்கள் எழுதி..பின் 1989 இல் மறைந்தார்.

கவிஞர் வாலி தனது இரங்கற்பாவில் இவரைப் பற்றிக் குறிப்பிட்டது:

எளிய சந்தமும் எழுச்சிப் பொருளும்
இணைந்த பாடல் இவரது பாடல்;
எளியேன் போன்றோர் இசைக்குப் பாடல்
எழுதுவதற் கிவரே இலக்கண மானார்!

பாக்களின் மேன்மை படித்தால் புரியும்;
பாமரன் என்னால் புகலத் தரமோ?
செய்யநற் றமிழின் சீர்த்திக ளனைத்தும்
சிந்துகள் மூலம் செப்பிய மேதை

உண்மை தான்..

**

இன்னொரு பாட்டுப் போட்டுக்கறேனே..

சிட்டுப் போலப் பெண்ணிருந்தா வட்டமிட்டு சுத்தி சுத்தி
கிட்டக் கிட்ட ஓடி வந்து தொடலாமா? தாலி
கட்டுமுன்னே கை மேலே படலாமா?

மாமா மாமா மாமா மாமா மாமா மாமா

வெட்டும் விழிப் பார்வையினால் ஒட்டுறவாய்ப் பேசிவிட்டு
எட்டி எட்டி இப்படியும் ஒடலாமா? கையைத்
தொட்டுப் பேச மட்டும் தடை போடலாமா?

https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=JoyCPyBySrc

*

அடுத்து வரப்போகும் கவிஞர் ஒரு சமூகப் படத்திற்காக எழுதிய சோழன் பாட்டு பிரபலமான ஒன்று..

அவர்ர்ர்ர்ர்...

(அப்புறம் வாரேன்) :)

rajraj
12th March 2015, 01:45 AM
kaN vazhi pugundhu karuthinil kalandha minnoLiye yen mounam
veredhile undhan gavanam.......

:)

Nice to see a list of songs from my days ChinnakkaNNan ! :)

Gopal.s
12th March 2015, 04:58 AM
எம்.எஸ்.விஸ்வநாதன் -ஒரு வாழும் இசை அதிசயம்.

இவரை பற்றி நான் எழுதும் போது ,இவரை தனியாக பிரித்து ,பகுத்து, இவருள் ராமமூர்த்தி எவ்வளவு, அவருள் இவர் எவ்வளவு என்ற ஆராய்ச்சியில் இறங்காமல் ,இவரின் இசை வெள்ளத்தில் நான் கண்ட சிறப்புக்களை மட்டுமே ஆராய போகிறேன்.

நான் நன்கு இசையறிந்த விஸ்வேஸ்வரன் போன்றோரிடம் பழகியுள்ளேன். அவர் இவரை பற்றி சொல்வது "விஸ்வ""நாதம்".எதனிலும் சாராது தன்னுள்ளில் பொங்கும் நாத வெள்ளம் என்று குறிப்பார்.இவர் இசை வாழ்வை 1952- 1959, 1960-1965, 1966-1969, 1970- 1976, 1976 க்கு பிறகு என்றெல்லாம் பகுத்து நான் பிரித்து மேய போவதில்லை. இந்த ஆய்வுக்கு அது அவசியமும் இல்லை.

நான் விஸ்வநாதன்-ராமமூர்த்தி இணைவு இசைஞர்களை , இந்தியாவிலேயே இது வரை வந்ததிலேயே சிறந்த composers என்று போற்ற காரணங்கள் - மிக சிறந்த பத்து ஹிந்தி இசை மேதைகள் தந்த அத்தனை வகை இசையையும் தனியாகவே தந்து ,அனைத்திலும் வெற்றி கண்ட சுயம்புகள். அந்த எதையும் சாராத originality and novelty . எதிலும் அடக்கி விட முடியாத ஒரு அதிசய தன்மை கொண்ட இசையமைப்பு.எல்லா பாணியையும் ஒரு கை பார்த்து எல்லாவற்றையும் ரசிக்க வைத்த ,வெற்றி பெற்ற தனித்துவம்.

இத்தனைக்கும் இவர்கள் trend -setter கள் கிடையாது. Trend -setters ஜி.ராமநாதன்,சி.ஆர்.சுப்பராமன்,ஏ.எம்.ராஜா,கே.வ ீ.மகா தேவன் ,ஏ.ஆர்.ரகுமான் ஆகியோர்கள் மட்டும்தான்.ஆனால் ,இவர்களில் இருந்து வேறு பட வேண்டும் என்று எண்ணி, பலரின் இசையை சுவீகரித்து, அதிலும் தங்களுக்கென புது பாதை கண்டு, இசையை பற்றி புதிய நுண்ணுணர்வு பெற்று (perspective on music ),யாரையும் போல இன்றி,பலரை போல மாறி, versatile genius என்ற வகையில் எல்லோரையும் திருப்தி படுத்தினர்.

எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்களின் மிக மிக பிரத்யேக திறமையாக குறிப்பிடுவது பாடல்களின் போக்கை முன் கூட்டியே தீர்மானிக்காத ஒரு நீக்கு போக்கான தன்மை.(nebulous ).இதற்கு முக்கிய காரணம் அவருக்கு ராகங்கள்,தீர்மானமான நோட்ஸ் எதுவுமே அவசியமில்லாதவை. சில சத்தங்கள், அவற்றின் மன கிலேசங்கள்,உணர்வுகள்,அதிர்வுகள் போதுமானவை .அவற்றை வைத்து trial &error என்ற பாணியில், ஒரே வார்த்தையையோ, வரிகளையோ வித விதமாக உச்சரித்து , சோர்வேயில்லாமல் முப்பது நாற்பது tune கொடுப்பாராம். (டி.கே.ராமமுர்த்தி வேறு ரகம்.பாடல்கள் பிடிக்க வேண்டும். முன்தீர்மானம் செய்வார்.எனக்கு என்ன கொடுப்பது என்று தெரியும் என்று ஒன்றிரண்டு மட்டுமே தருவாராம்). இவர்களுக்கிடையே உள்ள முக்கிய வித்யாசமே இதுதான். ராமமூர்த்தியை குருவாக மதித்து,அவரிடம் இசை கற்றாலும், அவரை மிஞ்சி field இல் பலமாக நிற்க இதுவே முக்கிய காரணமானது.

பாடகர்களும் ,என்னிடம் குறிப்பிடுவது, அவர்களின் improvisation சுய தன் முயற்சியில் செய்ய படும் சோதனைகள்,நகாசுகளை அனுமதிப்பாராம். இரு முறை ,மூன்று முறை பாடி காட்டும் போது வெவ்வேறு மாற்றங்களை காட்டுவாராம். மேதை என்பதன் அறிகுறியே அதுதானே?

இவர் பாடல்களுக்கு ,ஒரு எதிர்பாரா புது புதிர் தன்மை அளித்தது ,இந்த ஒரு குணமே. மற்ற இசையமைப்பாளர்கள், ஒரு ராகத்தை மனதில் வைத்து,பாடல் கட்டமைப்பை உருவாக்குவது போல எம்.எஸ்.வீ செய்ததே இல்லை.(கர்ணன் போன்ற படங்கள் விதிவிலக்கு). தோன்றிய படி போகும் பல்லவி,சரணங்களினுடே ,ராகம் ஒன்றோ ,இரண்டோ,மூன்றொ கூட புதையலாம். ஆனால் அவை ஒட்டு போட்ட சட்டையாக தோன்றாமல், ஒரு யூகிக்க முடியாத புதிர்த்தன்மை கொண்டு, எம்.எஸ்.வியின் வெகு ஜன பிடித்தம் பற்றிய பரிச்சயம்,இசையறிவு கொண்ட தயாரிப்பாளர்,மற்றும் இயக்குனர்களின் தேர்வுகள்,அந்த தேர்வுகளுக்கு எம்.எஸ்.வீ அளித்த வற்றாத எண்ணிக்கை கொண்ட tunes , பிறகு அதற்கான இசை தொகுப்பை நிர்ணயிக்கும் முறை,இசை கலைஞர்களுக்கு கொடுக்கும் சுதந்திரம் ,இவற்றால் அவர் பாடல்கள் தனித்து தெரிந்ததில் அதிசயம் என்ன?

மேலும் தொடர்வோம், உதாரணங்கள்,விளக்கங்கள்,சுட்டிகள் இவற்றோடு?எங்கே வேறு பட்டார் என்ற ஆணித்தரமான விளக்கங்களோடு.(நானே உணர்ந்தவை,மற்றோரிடம் தெரிந்தவை எல்லாமே தொகுத்து).இவை முற்றிலும் வேறு பரிமாணத்தோடு ,மற்றும் வித்தியாச புரிதலோடு.

எம்.எஸ்.வீயை பற்றி விளக்க வேண்டுமானால் முத்துக்களோ கண்கள் பாட்டை எடுங்கள்.

இந்த பாடலில் பொதுவாக மத்யமாவதியின் சாயல் (ச ரி2 ம1 ப நி1 ச ) இருந்தாலும் அதில் பல அந்நிய ஸ்வரங்களின் கலப்பினால் புது வடிவம் பெறுகின்றது. காகலி நிஷாதம் (நி2) கலந்ததனால் பிருந்தாவன சாரங்கா போல தெரியும். ஆனால் மேலும் சரணத்தில் ஷதுர்ஷ்ட தைவதம் (த2) மற்றும் சுத்த காந்தாரம் (க1) சேர்க்கை மேலும் இனிமையை கொடுப்பதோடு ராகங்களின் இலக்கணத்தை முற்றுமாக தாண்டுகிறது. இதை MSV கந்தர்வனி என்று வேண்டுமானால் அழைக்கலாம்.

இதெல்லாம் தெரிந்து பண்ணும் அளவு எம்.எஸ்.வீ சங்கீத பிஸ்தா எல்லாம் ஒண்ணும் கிடையாது.ஆனால் எந்த சங்கீத பிஸ்தாவும் இதை மீறி சாதிக்க முடியாது.

அடானா ராகத்தை முதலில் பயன் படுத்தியவர்.(வருகிறாள் உன்னை தேடி). ஒப்பாரிக்கு இசைவான முகாரி ராகத்தில் டூயட் போட்டவர். (கனவு கண்டேன்). பெரிய சங்கீத வித்வான்களும் தொட தயங்கும் சந்திர கௌன்ஸ் என்ற ராகத்தில் மிக மிக சிறந்த பாடலான மாலை பொழுதின் மயக்கத்திலே ,உண்மையான அதிசய ராகம் மகதியில்(S G 2M 2P D1N 1S ----S N 1D1P M 2G 2S )
அதிசய ராகம் பாட்டை தந்தவர் (பாலமுரளி ஸ்பெஷல் ராகம் படத்தில் ஜேசுதாஸ்),கர்ணன் ஒரு படத்தில் ஹம்சா நந்தினி,ஆனந்த பைரவி,கம்பீர நாட்டை,சஹானா,பிலு,சுத்த சாவேரி,ஆரபி,பேஹாக் ,சாரங்க தரங்கிணி,நீலாம்பரி,ககரபிரியா,சக்கரவாகம்,சரசாங ்கி,க ேதாரம்,பகாடி,ஹமீர்கல்யாணி,ஹம்சநாதம்,ஹிந்தோளம் என்று பதினேழுக்கு மேற்பட்ட ராக அணிவகுப்பை தந்தவர்(கள் ) என்பதெல்லாம் ஒரு புறம்.

ஆனால் ராகங்களை முன்னிலை படுத்தாமல் ,ராகமே அந்த பாடல் சந்தத்தில் இயல்பாக பொருந்தும் படி செய்து மீட்டர் உடைப்பு,தாள மாற்றம்,ராக கலப்பு அனைத்தும் அவ்வளவு இயல்பாக விழுந்து கேட்போரை மயங்கி விழ செய்யும்.ஒரு பாட்டின் போக்கினை ஒரு சின்ன ட்விஸ்ட் கொடுத்து எங்கோ நிறுத்துவார். (ஆபேரி அல்லது பீம்ப்ளாஸ் பூமாலையில் ஒரு சான்று), தேடினேன் வந்தது பாட்டில் சரணம் பல்லவியோடு loop back பாணியில் ஹம்மிங் ஓடு இணைவது,ஒரே ராகத்தை விதவிதமாக வளைப்பது.

தேஷ் ராகத்தில் சிந்து நதியின் மிசை, அன்றொரு நாள் , ரசிக பிரியா ராகத்தில் உருக்கும் ஒரு நாள் இரவு,துள்ள வைக்கும் இன்று வந்த இந்த மயக்கம், கல்யாணியா இது என்று விற்பன்னர்களும் காண முடியா கஜல் பாணி இந்த மன்றத்தில் ஓடி வரும்,அதே கல்யாணியில் நாட்டு புற குத்து என்னடி ராக்கம்மா என்று எத்தனை ஜாலங்கள்???

Gopal.s
12th March 2015, 05:04 AM
எம்.எஸ்.விஸ்வநாதன் -ஒரு வாழும் இசை அதிசயம்.


ஒரு நிர்வாகியின் திறமை என்பது teamwork என்பதில்தான் உள்ளது என்பது நிர்வாக சூத்திரம்.அத்தனை பேரின் திறமையும் உழைப்பும் தரும் பலன் தலைமை நிர்வாகிக்கே போய் சேரும். ஆனாலும் தலைவன்,தனக்காக உழைத்தவர்களை பெருமை படுத்தி ,அவர்கள் முன்னேற விரும்பினால் உதவ வேண்டும்.அத்தனை பலங்களையும் நமதாக்கி பெருமையும் அடைந்து ,புகழும் பெற்று மற்றவரையும் பெருமை படுத்தலாம்.ஆனால் அதற்கு தலைமை நிர்வாகி ,தன் பொருளை விற்பனை (நல்ல விலைக்கு)செய்ய தெரிந்தவராகவும் ,தொடர்ச்சியாக சந்தையில் நிலைக்க எல்லோரையும் அணைத்து ,நல்லுறவை பேண வேண்டும்.

எம்.எஸ்.வீயை விட இதற்கு சிறந்த உதாரணம் ஏது?வேறு எந்த இசை குழுவிலாவது தனி தனி இசை கலைஞர்கள் ,இந்த அளவு கவனம் பெற்று போற்ற பட்டார்களா?உலக அளவில் பார்த்தாலும் சொற்பமே.யோசித்து பாருங்கள்.விஸ்வநாதன்-ராமமூர்த்தி தலைமையில் ஜி.கே.வெங்கடேஷ்,சங்கர்,கணேஷ்,கோவர்த்தனம்,ஹென் றி டேனியல்,ஜோசெப் கிருஷ்ணா,ஷ்யாம் பிலிப்,டி.என்.மணி,சத்யம்,பிரசாத்,மங்கள மூர்த்தி,எம்.எஸ்.ராஜு,சதன்,கோபாலகிருஷ்ணன்,நோய ல் க்ராண்ட்,நஞ்சுண்டையா,ஆகிய இசை கலைஞர்கள் ,உதவியாளர்கள் மட்டுமின்றி,ரெகார்டிங் engineer சம்பத் கூட கவனிக்க பட்டார். இவர்களுக்கு தனி வாய்ப்பு வந்த போது எம்.எஸ். வீ தடுத்ததே இல்லை. திரும்பி தன்னுடன் வந்து பணியாற்றிய போதிலும் வரவேற்றுள்ளார்.
புது இசையப்பாளர்கள் வந்த போது இவர் அவர்களை வரவேற்ற விதம்,பெருந்தன்மை, அவர்கள் தன கோட்டை என்று நினைத்த எல்லா இடத்திலும் புகுந்த போதும் வன்மம் காட்டி சுடுசொல் கூறாத பண்பு அதுதான் எம்.எஸ்.வீ. (அதற்கென்று ராமமூர்த்திக்கு செய்ய பட்ட துரோகத்தை நான் ஒப்பு கொள்ளவே மாட்டேன் )

எம்.எஸ்.வியின் அற்புத பண்புகளுக்கு மூன்று உதாரணங்கள் .

1)ஸ்ரீதர் ,தன் ஆஸ்தான ஏ.எம்.ராஜாவை விட்டு சில கருத்து வேறுபாடுகளினால் ,நெஞ்சில் ஓர் ஆலயத்தில் விஸ்வநாதன்-ராமமூர்த்தி புக் பண்ண வந்த போது ,உடனே "ஞானி" போல ஒப்பு கொள்ளாமல் ,நிஜ ஞானியாய் ,தான் genova காலத்திலிருந்து கருத்து வேறுபாடு,மனத்தாங்கல் கொண்டிருந்த ஏ.எம்.ராஜாவை சந்தித்து அனுமதி கேட்டார்.ராஜாவின் பதில் (பெயர் விசேஷமோ?)படு கீழ்த்தரமானது. நான் தூக்கி போட்டு விட்டேன். எவன் எடுத்து கொண்டால் எனக்கென்ன?

2)தேவர் ,கே.வீ.மகாதேவனை விட்டு தன்னிடம் தாவ நினைத்த போது ,தான் குருவாக நினைத்த கே.வீ.எம் இற்கு துரோகம் செய்யாமல் ,தன் அன்னையின் ஆணையை ஏற்றவர் எம்.எஸ்.வீ. தேவரின் வேண்டுகோளை நிராகரித்தார்.

3)தன் நண்பர் கண்ணதாசன் ,சிலசொந்த படங்களுக்கு கே.வீ.எம்முடன் பணி புரிந்த போதும்,இவர் சுணக்கம் காட்டியதில்லை.தடுத்ததில்லை.

4)ஒரு முறை தபேலா இசை கலைஞருடன் ,பாடகர் ஜேசுதாஸ் மன வேறுபாடு கொண்ட போது ,இவர் தபேலா கலைஞர் பிரசாத்துக்கு ஆதரவாக நின்றார். ஜேசுதாஸ் ,அப்படியானால் நான் தங்களுடன் பணியாற்ற மாட்டேன் என்று சொன்ன போது சரி ,வேண்டாம், எனக்கு பிரசாத் முக்கியம் என்று சொன்ன தலைவர் எம்.எஸ்.வீ. (அவர் நினைத்தால் வேறு தபேலா ஆளா கிடைக்காது?)

எம்.எஸ்.வீ யின் குழுவினரை அணைத்து சிறப்பான பணி வாங்கும் தலைமை குணம், வியாபார திறமை,அதிலும் நேர்மை,பெருந்தன்மை என்பதை விளக்கவே இந்த பகுதி.

இனி எம்.எஸ்.வியின் அபூர்வ இசை வெள்ளத்தில் நுழைவோம்.

Gopal.s
12th March 2015, 05:05 AM
எம்.எஸ்.விஸ்வநாதன் -ஒரு வாழும் இசை அதிசயம்.

ஒரு சினிமா பாடல் புனைவது சுலபம் அல்ல.தியாகராஜர் போன்றவர்களின் பணி உன்னதமானாலும் ,சுலபமானது.அவர் வியாபாரம் செய்ய வேண்டியது இல்லை. பல விதமான புதுமை பாடல்களை,களங்களை தேட வேண்டியதில்லை. துந்தனா போதும் சுருதி கூட்ட.ராகங்களின் நேர்த்தி ,ஸ்வர அணிவகுப்பு இதற்கு தகுந்த நெளிவு சுளிவுடன் கிருதி கீர்த்தனைகள்.ராமா உன் அருள் வேண்டும், தொழுவேன்,காத்தருள் ரீதியில் பாடல்கள்,இதற்கு signature வேறு ஓவியர் மாதிரி.

ஆனால் ஒரு சினிமாவிற்கு பாடல் compose செய்வது படு கஷ்டமானது.ஒவ்வொன்றும் வேறு பட வேண்டும். சுவையாக கலக்க வேண்டும்.பல வகை கருவிகள்,இசை பாணிகள் பற்றிய புரிதல்.Composing ,constructing ,arranging ,conducting ,choosing appropriate voices ,preludes ,interludes ,beginning &Finishing touches ,unpredictable twists &Catches ,Emotive expression in the song ,lyric clarity ,breaking the music grammer in acceptable and pleasant way ,improvisation Breaking the tonal ,pitch and melody meters ,experimentation ,instrument mix Voice blending with instruments என்று பல விஷயங்கள் உண்டு.எம்.எஸ்.வீ தான் எனக்கு தெரிந்த வகையில் இந்தியாவில் complete music director என்று சொல்ல தக்கவர்.(நௌஷட் கிட்டே வருவார்)

எனக்கு தெரிந்து நான் எழுத நினைத்ததை இன்னும் நன்றாக எழுதிய இருவரின் கருத்துக்களை சொல்லி விட்டு ,எனது கருத்துக்களை இன்னும் ஓங்கி பதிவேன். ராகங்களை தேடி இவர் ஓடாமல்,அவைகளாக இவரின் காட்டாறு போன்ற கற்பனையில் வந்து ஒன்றாகவோ,இரண்டாகவோ,மூன்றாகவோ கொஞ்சம் நிறம் மாறியோ ,படு அழகாக வந்து அமர்கிறது. இனி எனக்கு பிடித்த வாணியின்"நீராட நேரம்" பற்றி ராம் என்ற ஒருவர் எழுதியது.

இந்த பாடல் அமிர்தவர்ஷினி ராக பல்லவியுடன் அதற்கு உறவான பந்துவராளி ( அமிர்தவர்ஷினி +ரி 1+த 1)சரணத்துடன் தொடரும் .ஒரு புதிர்த்தன்மை கொண்ட மர்ம உணர்வுடன் ,தெய்வீக பேரமைதி தரும் இந்த காம பாடலுக்கு கிட்டே கூட யாரும் வர முடியாது.

chords உடன் சேரும் புல்லாங்குழல்,தொடரும் அமானுஷ்ய ஒற்றை வயலின் ,மத்திம துவக்கத்துடன் சுத்த தைவதம் வருடி,மேல் ஷட்ஜமத்தில் பாடல் துவங்கும்.(நீராட நேரம் நல்ல நேரம்)ஷட்ஜமத்தில் தொடரும் போராட பூவை நல்ல பூவை.திடீரென்று ப விலிருந்து ஸ விற்கு பல்டி மேனி ஒரு பாலாடை.rhythm வேகம் பெரும் மின்னுவது நூலாடை.

கிடார் முடிந்து காலம் பார்த்து வந்தாயோ ,பந்துவராளிக்கு திரும்பும்.

இரண்டாம் இடையிசை ஒரு நூதனம்.பரமானந்தமாய் உள்ளுணர்வுகளில் உறங்கியிருக்கும் அழுத்தமான எரிமலை பூகம்பங்களுக்கு ,விடுதலை தந்து அமைதி அளிக்கும் தெய்வீக கலப்பு.எலெக்ட்ரிக் ஆர்கன் ,புல்லாங்குழல் ,கிளாரினெட் இணைவில் அரங்கேறி விடும்.

அருகில் வந்து நில் நில் நில் என்று இசையிலக்கணம் மீற படும் பேஸ் கிடார் துணையுடன்.

மூன்றாவது இடையிசையோ distortion கிடார்,இதமான பியானோ,புல்லாங்குழலுடன் இணையாக வயலின் ,முடிவாக ஒற்றை கிளாரினெட்.

சொல்லுங்கள்,சவால் விடுகிறேன் ,பல கற்று அதை செய்தேன் ,இதை செய்தேன் என்று தனக்குதானே பீற்றும் யாரும் இந்த தெய்வீக இசைக்கு அருகே வர முடியுமா?


இனி விஸ்வநாதன் அவர்களின் பிரத்யேக சிறப்பு ஒன்றை பார்ப்போம். அவருடைய இசையமைப்பு ஒரு மூளையின் ரகசிய விளையாட்டு. ஒரு பாட்டுக்குரிய வெவ்வேறு அம்சங்களை எப்படி திட்டமிடுகிறார்,அதிலும் காலத்துக்கு முந்திய sophistication கொண்டு என்பது புதிர்தான்.

நான் தொழில் நுட்ப முன்னேற்றத்தை குறிப்பிடவில்லை. creativity என்று சொல்ல படும் வித்தியாச படைப்பு திறனை சொல்கிறேன்.

அவர் இசை கருவிகளை உபயோக படுத்தியதில் நிஜமாகவே இசை மகாராஜாவே. யாழ்,கொட்டங்கச்சி வயலின்,உறுமி மேளம்,பறை ொட்டு,வீணை,வயலின்,மிருதங்கம்,தவில்,தபேலா,சாக் ஸ்,ஹா ர்மோனியம்,சிதார்,சாரங்கி,ட்ரம்பெட் ,புல் புல் தாரா,பியானோ,கிடார்,அக்கார்டியன்,புல்லாங்குழல் ,மௌத் ஆர்கன்,விசில்,கஞ்சிரா,பாங்கோ,ட்ரம்ஸ்,கிளாரினெ ட்,ஷெ னாய் ,நாதஸ்வரம்,என்று கணக்கே இல்லை. அத்துடன் ஒன்றோடு மற்றதை இணைக்கும் லாவகம், ஏதோ பெரிய சோதனை முயற்சி என்று படாமல்,உங்கள் அறிவுக்கும் ரசனைக்கும் இயல்பாக தெரியும் அழகுணர்ச்சி கொண்டிருக்கும்.

அதைத்தவிர கருவி சாரா அழகு படுத்தல்,(non -instrumental embellishmant )என்று ஒன்று உண்டு. அதுதான் infusing grandeaur mood with drafted voices என்பது. அது மனிதர்களின் வித்யாசமான ஏதோ ஒரு ஹம்மிங் அல்லது ஆலாபனை, அல்லது மழலை போன்ற gibbarish என்று ஒன்றுடன் தாளத்தை இணைத்து அழகான காற்று இசை கருவிகளையோ,அல்லது தந்தி இசை கருவிகளையோ கொண்டு பல்லவியுடனோ ,சரணத்துடனோ லீட் கொடுப்பது.

இவை சில சமயம் மனித குரல்களின் இணைந்த தாள- ஒலி கருவிகளாகவோ, வெறும் தாள-ஒலி கருவிகலாகவோ ,அல்லது திடீர் குரல் ஆரம்பமாகவோ கூட இருக்கலாம். அது பாட்டின் தன்மை மற்றும் இசையமைப்பாளரின் உள்ள போக்கில் அது மக்களை கவருமா என்று கணிப்பில் அடங்குவது.

"நெஞ்சத்தில் இருப்பது என்ன என்ன "பாட்டில் வினோத ஒலி சுசிலா குரலில் எழும்ப பாங்கோ ஒலி அதற்கு பதில் சொல்வது போல துணை நிற்கும். "ரோஜா மலரே" பாட்டிலும் ஹம்மிங் உடன் சேரும் பாங்கோ ,"பூமாலையில் ஓர் மல்லிகை" பாடலில் ஆலாபனையுடன் அழகாக சேரும் தபலா,என்பவை மனித குரலுடன் இணைந்த கருவிகளை கொண்டு ஆரம்பத்தையே களை கட்ட வைப்பார்.

கருவிகள் என்றால் ட்ரம் ,கிடார் சேரும் "யாரோ ஆட தெரிந்தவர் யாரோ ", தபலா,பாங்கோஸ் என்று சேர கூடாத கருவிகளை சேர வைத்து கொடுத்த "நாளை இந்த வேளை பார்த்து ", தவிலும்,பாங்கோவும் இணையும் "அதிசய உலகம்",ட்ரம் ,பாங்கோ இணையும் "அவளுக்கென்ன " என்று சொல்லி கொண்டே போகலாம்.

"தண்ணிலவு தேனிறைக்க ","எங்கே நீயோ நானும் அங்கே","நினைத்தால் போதும்","சின்ன சின்ன கண்ணனுக்கு ","பௌர்ணமி நிலவில்" போன்ற பாடல்கள் முகாந்திரம் இல்லாமலே திடீரென்று ஆரம்பிக்கும்.

ஆனால் எல்லா பாடல்களிலும் , ஆரம்பத்திலேயே ,இசை ரசிகர்களை கட்டி போட்டு விடுவார்.

"தூது சொல்ல ஒரு தோழி" ரெகார்டிங் முடித்து ஏதோ ஒன்று குறைவதாக தோன்ற சுசிலா பல்லவி பாட ஈஸ்வரி குரலை கொண்டு இணையாக ஆஹா சொல்ல வைத்து முடிவு கொடுத்தாராம்.

பாடல்களின் உயிர் நாடியை பிடித்தல் ஆரம்பமே. ஆனால் ஆத்மார்த்தமான இசை பங்களிப்பால் ஜீவ நாடியையே பிடித்து சிம்மாசனத்தில் அமர்த்தும் வித்தையை வரும் பதிவுகளில் பார்ப்போம்.

Gopal.s
12th March 2015, 07:28 AM
இது நான் கார்த்திக்கிற்காக எழுத ஆரம்பித்து ,பாதியில் விட்டது.இதற்கு இப்போது கிடைக்க போகும் வரவேற்பை பொறுத்து தொடரலாமா வேண்டாமா என்று தீர்மானிப்பேன்.

கார்த்திக்கே மீண்டு வந்து சொன்னால் ,கூடுதல் உற்சாகம்.

chinnakkannan
12th March 2015, 09:14 AM
கோபால்.. காலையிலிருந்து மனதில் ஓடிக்கொண்டிருக்கும் பாடல் -அடடா அடடா அடடா எனை ஏதோசெய்கிறாய்” என்ன இது என இங்கு வந்து பார்த்தால் உங்கள் எம்.எஸ்.வி கட்டுரைகள்.. நீங்கள் தான் ஏதோ செய்கிறீர்கள்..எங்களை..

எழுதுங்கள் படிக்கக் காத்திருக்கிறோம் ( நான் செய்வதெல்லாம் ரோடு ரோலர் போவதற்கு முன் செய்யப் படும் விஷய்ம் - ஜல்லி :) ) உங்கள் அனலிஸிஸ் அப்ப்டி இல்லை..எழுதுங்கள்..

கொஞ்சம் உடல் நிலை சரியில்லை..இருப்பினும் அலுவ்லுக்குக் கிளம்பிக் கொண்டே இருக்கிறேன்..விரிவாய் பின்னர் எழுதுகிறேன்..தொடருங்கள்

(இப்படிக்கு..
சினா கனா :)

chinnakkannan
12th March 2015, 09:16 AM
ராஜ் ராஜ் சார்.. நன்றி.. :)

kalnayak
12th March 2015, 12:37 PM
கோபால்,

சிறிது நாட்களுக்கு முன் msv பற்றி கட்டுரை தொடர் எழுதப் போவதாக நீங்கள் சொன்னபோது சந்தோஷப் பட்டேன். இப்போது நீங்கள் எழுதியதை பார்த்ததும் இரட்டை சந்தோஷம். ஏன் கார்த்திக் மட்டும் வரவேண்டும். வாசுவும் வரவேண்டும் . வருவதை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ள கிருஷ்ணாவும் வரட்டுமே. எப்போதோ வரும் ராஜேஷ்-உம் அதிக முறை வரட்டுமே. ராஜ்ராஜ் அவர்களும் தனது வருகையை அதிகமாகட்டும். நீங்கள் எழுதுவதையெல்லாம் பார்த்து சி.க. வும் இங்கே அதிகமாக பதிவார். இந்த மதுர காண திரியே களை கட்டட்டும்.

மதுர கான திரியில் பாடல்களையும் அதன் ராகங்களையும் மட்டுமே நீங்கள் அதிகம் எழுதியுள்ளீர்கள். நான் அறிந்து இப்போதுதான் இசைக் கருவிகளையும் விஸ்தாரமாக அலசி ஆராய்ந்துள்ளீர்கள். Msv அவர்கள் ஸ்ரீதர், கண்ணதாசன், தேவர் போன்றோருடன் கொண்டிருந்த நட்பு அத்துடன் மற்றவர் எண்ணங்களுக்கு மதிப்பளித்து அவர்கள் வாய்ப்பு கெடாமல் அவர் நடந்து கொண்ட விதம் என்று நல்ல நல்ல தகவல்கள் என்னைப் போன்றவர்களுக்கு புதிது. எழுதுங்கள். எழுதுங்கள். தெரிந்து கொள்கிறோம். சில சமயம் தனிப் பாடல்களை எடுத்துக் கொண்டு ஆராய வேண்டுகோள் விடுக்கிறேன்.

எல்லோரும் திரும்பி வாருங்கள். மதுர காணத் திரி களை கட்டத் துவங்கிவிட்டது.

chinnakkannan
12th March 2015, 12:39 PM
//"தண்ணிலவு தேனிறைக்க ","எங்கே நீயோ நானும் அங்கே","நினைத்தால் போதும்","சின்ன சின்ன கண்ணனுக்கு ","பௌர்ணமி நிலவில்" போன்ற பாடல்கள் முகாந்திரம் இல்லாமலே திடீரென்று ஆரம்பிக்கும்.// இதை நானும் யோசித்திருக்கிறேன்..எஸ்பெஷலொஇ சி.சிக சிரித்துக் கொண்டே சகஜமாக எழும்பும் பாடல், நினைத்தால் போதும் பாடுவேன்.. டாப் பிட்ச்..ஓஹ்..

(அதற்கென்று ராமமூர்த்திக்கு செய்ய பட்ட துரோகத்தை நான் ஒப்பு கொள்ளவே மாட்டேன் )// அது என்ன என்பதையும் சொல்லி விடுங்க்ளேன்..

chinnakkannan
12th March 2015, 12:40 PM
கல் நாயக் குட் மார்னிங்.டு யு,. கிவ் டுடே நிலா சாங்க் டு மதுர கானத் திரி :)

kalnayak
12th March 2015, 12:48 PM
சி.க.,

சத்தியமாக சொல்கிறேன். மருத காசி இவ்வளவு நிறைய நல்ல பாடல்களை வழங்கியுள்ளார் என்று எனக்கு தெரியாது. அதுவும் நீங்கள் உங்களுக்கு பிடித்த பிரபலமான பாடல்களை மட்டுமே குறிப்பிட்டுள்ளதாக சொல்லும் போது அவர் எழுதியுள்ள எல்லாப் பாடல்களையும் நினைத்தால் மலைப்பாய் இருக்கிறது.

பாவை விளக்கு குற்றாலத்துப் பாடல் நல்ல அழகானப் பாடல். குற்றாலக் குறவஞ்சியுடன் போட்டி போடும் பாடல்தான். நல்ல தேர்வு. Kvm-ன் நாட்டுப் புறப் பாடல் எனப் பெயர் பெற்ற "சிட்டு போல பென்ணிருந்தா..." tms குரலில் மயக்குமே.

வாலியின் இரங்கற்பாவில் அவரது வழக்கமான டச்சிங் தெரிகிறது.

kalnayak
12th March 2015, 12:50 PM
குட் மார்னிங் சி.க.,
பிரபலமான நிலாப் பாடல் தயாராகிக் கொண்டு இருக்கிறது. விரைவில் பதிந்து விடுகிறேன்.*

kalnayak
12th March 2015, 01:11 PM
நிலாப் பாடல் 38: "என் வானிலே ஒரே வெண்ணிலா"
-------------------------------------------------------------------------------
தலைப்பைப் பார்த்தவுடனே பலருக்கு இந்த பாட்டை இன்னுமா எழுதலை. இது இல்லாம நிலாப் பாடல் முழுமையே அடையாது அப்படின்னு சிலருக்கு சொல்லத் தோன்றும். அதுதான் எழுதிட்டேன். மகேந்திரன்-இளையராஜா கூட்டணியில் என்றும் நிலைத்து நின்று மனத்தை மயக்கும் ஆற்றல் கொண்டால் பாடல்களை கொண்ட ஜானி' 'திரைப்படத்திலுருந்துதான் இப்பாடல். இளையராஜாவின் பத்து சிறந்த பாடல்கள் கொண்ட ஒரு திரைப்படங்களில் இடம் பெறத் தகுதி கொண்டது.

ரஜினி-ஸ்ரீதேவி நடிப்பில் பாடகி ஜென்சி அவர்கள் குரலில் இன்னும் நம்மை கட்டிப் போட்டிருக்கும் காவியப் பாடல். காதல் பாடலாயினும் சற்றே சோகம் கலந்து வருவதை காணவும், உணரவும் முடியும். வரிகள் சாதாரணமாகத் தோன்றினாலும் ஒவ்வொரு முறையும் ஒன்றை நினைக்கத் தோன்றுகிறது. எழுதியவர் கவியரசர். அவரின் இந்தப் பாடல் வரிகள் இதோ:

என் வானிலே ஒரே வெண்ணிலா
என் வானிலே ஒரே வெண்ணிலா
காதல் மேகங்கள் கவிதை தாரகை
ஊர்வலம்....
என் வானிலே ஒரே வெண்ணிலா

நீரோடை போலவே என் பெண்மை
நீராட வந்ததே என் மென்மை
நீரோடை போலவே என் பெண்மை
நீராட வந்ததே என் மென்மை
சிரிக்கும் விழிகளில் ஒரு மயக்கம் பரவுதே
வார்த்தைகள் தேவையா
ஆஆஆஆஆ

என் வானிலே ஒரே வெண்ணிலா

நீ தீட்டும் கோலங்கள் என் நெஞ்சம்
நான் பாடும் கீதங்கள் உன் வண்ணம்
நீ தீட்டும் கோலங்கள் என் நெஞ்சம்
நான் பாடும் கீதங்கள் உன் வண்ணம்
இரண்டு நதிகளும் வரும் இரண்டு கரையிலே
வெள்ளங்கள் ஒன்றல்லவா
ஆஆஆஆஆ

என் வானிலே ஒரே வெண்ணிலா
காதல் மேகங்கள் கவிதை தாரகை
ஊர்வலம்....

என் வானிலே ஒரே வெண்ணிலா

----------------------------------------------------------------------------------
காணொளிக் காட்சி இதோ:

https://www.youtube.com/watch?v=27WmXqtvtV0

chinnakkannan
12th March 2015, 01:26 PM
//மருத காசி இவ்வளவு நிறைய நல்ல பாடல்களை வழங்கியுள்ளார் என்று எனக்கு தெரியாது.// எனக்கும் கல் நாயக்..

என் வானிலே ஒரே வெண்ணிலா ஓ.கே சாங்க் தான்..ஸ்ரீ தேவியை சோகமாகப் பார்க்கப் பிடிக்காது எனக்கு :)

kalnayak
12th March 2015, 01:55 PM
கோபால்.. காலையிலிருந்து மனதில் ஓடிக்கொண்டிருக்கும் பாடல் -அடடா அடடா அடடா எனை ஏதோசெய்கிறாய்” என்ன இது என இங்கு வந்து பார்த்தால் உங்கள் எம்.எஸ்.வி கட்டுரைகள்.. நீங்கள் தான் ஏதோ செய்கிறீர்கள்..எங்களை..

எழுதுங்கள் படிக்கக் காத்திருக்கிறோம் ( நான் செய்வதெல்லாம் ரோடு ரோலர் போவதற்கு முன் செய்யப் படும் விஷய்ம் - ஜல்லி :) ) உங்கள் அனலிஸிஸ் அப்ப்டி இல்லை..எழுதுங்கள்..

கொஞ்சம் உடல் நிலை சரியில்லை..இருப்பினும் அலுவ்லுக்குக் கிளம்பிக் கொண்டே இருக்கிறேன்..விரிவாய் பின்னர் எழுதுகிறேன்..தொடருங்கள்

(இப்படிக்கு..
சினா கனா :)

சி.க.,
நன்றி.

நீங்கள் இங்கே செய்வது ஜல்லி போடுவதென்றால் நான் செய்வது என்ன என்று எனக்கே தெரியவில்லை. அதையும் நீங்களே சொல்லியிருக்கலாம்.

உங்கள் உடல் நிலை தற்போது நன்றாக உள்ளதா? பார்த்துக் கொள்ளுங்கள். அலுவலையும் பார்த்து, வீட்டு வேலைகளையும் பார்த்து நான் நன்றாகவே உங்கள் சிரமம் உணர்கிறேன். உடல் நலம் மிக விரைவில் சீராக வாழ்த்துகிறேன்.

kalnayak
12th March 2015, 02:16 PM
நிலாப் பாடல் 39: "வெண்ணிலவே வெண்ணிலவே விண்ணைத் தாண்டி வருவாயா"
----------------------------------------------------------------------------------------------------------------------------

போனப் பாட்டு சோகப்பாட்டு. அதனால இந்தப் பாட்டு ஜாலிப் பாட்டு. பிரபுதேவாவும், காஜோலும் வெண்ணிலாவை விண்ணைத் தாண்டி வந்து எங்க கூட ஜோடியா விளையாட வான்னு கூப்பிட்டு என்னா ஆட்டம் போடுறாங்க. அது சரி பிரபு தேவா காஜோலைத் தானே வெண்ணிலான்னு கூப்பிடறார். என்னமோ போங்க இந்த காதல் பாட்டுக்கு இவ்வளவு ஆட்டம். அதனால்தான் இந்த பாடல் நல்ல பிரபலமானது.

AR ரஹ்மான் இசையில் ஹரிஹரன், சாதனா சர்கம் பாட வைரமுத்துவின் வரிகள் இந்த பாடலுக்கு.

வெண்ணிலவே வெண்ணிலவே
விண்ணை தாண்டி வருவாயா
விளையாட ஜோடி தேவை
(வெண்ணிலவே..)

இந்த பூலோகத்தில் யாரும் பார்க்கும் முன்னே
உனை அதிகாலை அனுப்பி வைப்போம்
(வெண்ணிலவே..)

இது இருள் அல்ல அது ஒளி அல்ல
இது ரெண்டோடு சேராத பொன் நேரம்
இது இருள் அல்ல அது ஒளி அல்ல
இது ரெண்டோடு சேராத பொன் நேரம்
தலை சாயாதே விழி மூடாதே
சில மொட்டுக்கள் சட்டென்று பூ ஆகும்
பெண்ணே பெண்ணே

பூலோகம் எல்லாமே தூங்கி போன பின்னே
புல்லோடும் பூமீது ஓசை கேட்கும் பெண்ணே
நாம் இரவினில் மடிகளில் பிள்ளைகள் ஆவோம்
தாலாட்ட நிலவுண்டு
(வெண்ணிலவே..)

எட்டாத உயரத்தில் நிலவை வைத்தவன் யாரு?
கையோடு சிக்காமல் காற்றை வைத்தவன் யாரு?
இதை எண்ணி எண்ணி இயற்கையை வியக்கிறேன்
எட்டாத உயரத்தில் நிலவை வைத்தவன் யாரு?
பெண்ணே பெண்ணே
பூங்காற்றே அறியாமல் பூவை திறக்க வேண்டும்
பூக்கூட அறியாமல் தேனை ருசிக்க வேண்டும்

அட உலகை ரசிக்க வேண்டும்
நான் உன் போன்ற பெண்ணோடு
(வெண்ணிலவே..)
------------------------------------------------------

காணொளிக் காட்சி:
------------------------------

https://www.youtube.com/watch?v=wkkrkXzKCDo

மின்சாரக் கனவு கண்டால் வெண்ணிலாவை இப்படி அழைத்து ஆடுவதைக் காணலாம். யாரும் மறுக்க முடியுமா?

kalnayak
12th March 2015, 02:55 PM
ராஜண்ணாவின் சிந்தனைகள்:
--------------------------------------------
நீண்ட நாட்களுக்குப் பிறகு நேற்று சாயங்காலம் எனக்கு ஒரு பெரிய சர்ப்ரைஸ் - ராஜண்ணா எனது அலுவலகத்த்துக்கு நேரா வந்திட்டார். எனது எதிர் இருக்கையில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார்.

ஷூ-க்களை கழற்றினார். பார்த்தால் இரண்டு கால்களிலும் வேறு வேறு வண்ணங்களில் சாக்ஸ் அணிந்திருந்தார்.

"என்ன அண்ணே. சாக்ஸை பார்க்காமல் வேற வேற கலர்-ல போட்டுட்டு வந்துட்டீங்க?"

"ஆமாம் கல்நாயக். எத்தனை ஜோடி சாக்ஸ் வாங்கினாலும் உங்க அண்ணி மாத்தி மாத்தி போட்டிர்ராங்க" என்று வருத்தப் பட்டார்.

"ஏன் என்ன ஆச்சுண்ணே?"

"வீட்டிலேயே, ஒரே கலர்ல சாக்ஸ் போட்டிரலாம்னு தேடிப் பார்த்தேன். அங்கேயும் இதே மாதிரி கலர் மாறின ஒரு ஜோடி தான் இருந்தது. என்ன பண்றது? இதையே போட்டுட்டு வந்துட்டேன்."

"ஏன்ணே நீங்களா அதுல இருக்கிற ஒரு சாக்சையும் இதுல இருந்து ஒரு சாக்சையும் ஒரே கலர்ல எடுத்து போட்டு வந்திருக்கலாம்ல" என்றேன்.

"அவ மாத்தி மாத்தி வச்சே இப்பிடி மாறிப் போயிருக்கு. இன்னும் நான் வேற நீ சொல்ற மாதிரி மாத்தினால் அவ்வளவுதான். ஜோடி திரும்ப கிடைக்கவே கிடைக்காது" என்று மிகவே உறுதியாய் இருந்தார்.

"அண்ணி கிட்ட சொன்னால் அவங்க எடுத்து தருவாங்களே?" என்றேன்.

"'இது கூட எடுத்து தர நான்தான் வரணுமா'ன்னு கேட்கிறா" என்றார். நான் இதற்கு மேல் என்ன செய்வது.

சற்று நேரத்துக்குப் பிறகு ஒரு அப்ளிகேசன் எழுதணும். ரெண்டு வெள்ளைத் தாள்கள் வேண்டுமென்றார். அப்போது அலுவலகத்தில் எல்லோரும் போயிருந்திருந்தார்கள். என்னிடம் வெள்ளைத் தாள்கள் வைத்துக் கொள்வதில்லை.

"இதோ எடுத்து வருகிறேன்." என்று சொல்லி போய் தேடினேன்.

எல்லா ரேக்குகளும் பூட்டப் பட்டிருந்தன. நல்ல வேலையாக ஜெராக்ஸ் மெசின் அருகிலேயே இருந்தது. சென்று அதன் தாள்கள் இடும் இடத்தில் தேடினேன்.
ஒன்றே ஒன்று தான் கிடைத்தது.

அண்ணனிடம் கொடுத்து "மன்னியுங்கள். ஒன்றுதான் கிடைத்தது.அதுவும் ஜெராக்ஸ் மெசினில் இருந்துதான்" என்றேன்.

"என்ன கல்நாயக் நீ, ஒரு ஃவைட் ஷீட் ஜெராக்ஸ் எடுத்தவன் இன்னொரு ஜெராக்ஸ் எடுத்துக் கொடுக்கக் கூடாதா?" என்றார்.

அதிர்ந்து போனேன் என்றால் சாதாரணம்.

chinnakkannan
12th March 2015, 08:21 PM
ஹையாங்க்..கல் நாயக் அதெல்லாம் தன்னடக்கத்துல சொல்றது….அப்புறம் உமக்கென்ன குறைச்சல்..

அப்புறமேல்ட்டுக்கு ஒங்க ராஜண்ணாவுக்காக காகிதம் நானும் தேடிப் பார்த்தேனா இதான் அம்புட்டுச்சு (அகப்பட்டது) நயாகரா கனடா சைட்ல இருந்து சிம்மி, பிரஷாந்த்..

ஜோடியில் உன்னிமேனன் எஸ். ஜானகி.. வரிகள் வைரமுத்து..(குமுதத்துல இப்ப ஜோரா சிறுகதைகள் எழுதிக்கிட்டிருக்கார்.. படிக்கறீங்களா)

அப்புறம் இங்க வானில கருமேகங்கள் எல்லாம் மீட்டிங்க் போல ஒண்ணாக் கூடி இருக்கு.. அப்பப்ப சீக்கிரம் கலைஞ்சுடு என்று சொல்லும் வண்ணம் மெல்லிய குளிர் காற்று அடிச்சுக்கிட்டிருக்கு..என்னாச்சு ஓமானுக்கு..
https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=2hGON9d3_Gk
காதல் கடிதம் தீட்டவே மேகம் எல்லாம் காகிதம்
வானின் நீலம் கொண்டு வா பேனா மையோ தீர்ந்திடும்
சந்திரனும் சூரியனும் அஞ்சல் காரர்கள்
இரவு பகல் எப்பொழுதும் அஞ்சல் உன்னைச் சேர்ந்திடும்.(ஹை நல்லா இருக்கே)

கடிதத்தின் வார்த்தைகளில் கண்ணா நான் வாழுகின்றேன்
பேனாவில் ஊற்றி வைத்தது எந்தன் உயிரல்லவோ

பொன்னே உன் கடிதத்தை பூவாலே திறக்கின்றேன்
விரல் பட்டால் உந்தன் ஜீவன் காயம் படுமல்லோ

**

டேப்லட்ஸ் கொஞ்சம் ஹெவி டோஸ்..(இத்தனைக்கும் ஆண்டிபயாடிக்ஸ் இல்லை) மத்யானம் ஜூட் விட்டுட்டு வீட்டுக்கு வந்து கொர்ர்ர்ர்..இப்பத் தான் எழுந்தேன்..கொஞ்சம் ஓகே.. ( ரெண்டு நாள் வீக் எண்டில தூங்கினா அல்லதுஏதாவது உருப்படியா (?!) எழுதினா சரியாய்டும்..

chinnakkannan
12th March 2015, 11:56 PM
பாடினார் கவிஞர் பாடினார் - 6

*
மனதுள் பொதிந்து
மலர நினைக்கும்
வார்த்தை அரும்புகளின் மணம்
வெளிவிழுந்து வாடிய மலர்களை விட
மேலானது..

*

ஹலோ.. ஏன் மெளஸ க் கீழ தள்ளறீங்க.. இது நா எழுதினதுங்க்ணா..அதுவும் இப்ப..
சரீ ஈ..இப்போ ஒரு நிகழ்வு (கற்பனையூர் தான்!)

*

நமஸ்காரம்

நமஸ்காரம்..

இவர்…. இன்னவர்… கல்லூரியில் பேராசிரியரா இருக்கார்…

ஓஒ…. அந்த… எழுதினது இவர் தானே.. கேள்விப் பட்டிருக்கேன்.. – என்றார் இசையமைப்பாளர்.. சரி பாட்டு எழுதறீங்களா.. தைரியமா எழுதுங்க..இப்பக்கூட இந்தப் புதுப்படத்துக்குத் தான் ட்யூன் போட்டிருக்கேன்..கிராமியக் காதல் கதை.. கிராமத்துப் பொண்ணு ஹீரோயின் ஹீரோ – டூயட்.. பொண்ணு பாடறா மாதிரி ஸ்டார்ட் ஆறது..இந்த…”

சொல்லிக்கொண்டு போன இசையை மறித்தார் பேராசிரியர்.. இது சரியா பாருங்க..

காத்து வீசுது புது காத்து வீசுது
இங்கே
கதிர்கள்கூட வயல்வரப்பில்
காதல் பேசுது

“வாவ்..” என்றார் இசை.. கவிஞரோன்னோ அதான் வார்த்தைகள் குளத்து மீன்களாட்டம் துள்ளி வருது ஸீ.. உங்க கவிதையக் கேட்டும் எனக்கு இப்படி ப் பேசற வர்றது.. சரி..ப்ரொபஸர் சார்..இந்த மெட் கேளுங்க..

தானனா தானேனா தனனனானே தானேனா.. இந்த பாருங்க..இதுக்கு நானும் குட்டியா எழுதியிருக்கேன்.. சின்னம்மா பொன்னம்மா ஆத்தோரம் போய்ட்டு வரலாமாம்மா.. இந்த மாதிரி வார்த்தை போடப் பாருங்க..”

கேட்ட பேராசிரியருக்கு நெற்றிக்குள் சுர்ர்ர்ர்.. மன்னிக்கவும்..எனக்கு இப்படி வராதுன்னு நினைக்கறேன்..

ஓ.. நீங்க கோச்சுக்கிட்டீஙன்னு நினைக்கறேன்.. ஒங்க காத்து வரியை அப்படியே வெச்சுக்கிட்டு ஆரம்பிக்கலாம்.. ஆனா இந்த மாதிரி பாட்டுக்கள் தான் ஜனங்களுக்குப் பிடிக்குது..இப்ப பாருங்க.. வீட்ல வீட்டுக்காரி நமக்காக வார்த்துக்கொடுக்கற தோசை சட்னி எல்லாம் நாம சாப்பிடுவோம். நம்ம ஃப்ரெண்ட்ஸூக்கு வீட்டுக்கு வர்றச்சே கொடுப்போம்.. இதுவே வஸந்தபவன் பார்த்தீங்கன்னா ஹோட்டல்…அது பிஸினஸ்..வர்ற எல்லாருக்கும் பிடிச்சா மாதிரி பண்ணனும்.. அப்பத் தான் நிறையபேர் சாப்பிட வருவாங்க..அதே மாதிரி தான் சினிமாவும்..

இங்க காதல், சோகம், பாசம், நேசம், துரோகம்,, சண்டை எல்லாமே விஷூவல்ல தூக்கலாத்தான் காட்டப் படும்..ஏன்னாக்க பிஸினஸ்ங்க.. உட்காருங்க எழுதுங்க..”

பேராசிரியர் அரைமனதாய் எழுதினார்.. செல்லம்மா சின்னம்மா ஒம்மேல ஆசை இருக்குதம்மா.. அப்படியும் அவருக்கு அவருடைய வரிகள் வந்து விழுந்தன..

ஆத்தங்கரையில் மஞ்சவரப்பில்
ஒன் ஆசைய உடம்புல பூசிக் குளிச்சேன்.

பாடல் எழுதி முடித்து படம் பேர் என்னங்க.. அனிச்ச மலர்..ம்ம் தொட்டால் சுருங்கற மலர்.. படம் ஓடணுமே.. “ என மனதுள் ஒரு எண்ணம்..

அது போலவே அந்தப் படம் பிரபலமடையவில்லை.. கவிஞரின் முதல் பாடல் இடம்பெற்ற படம் என்ற பெருமையை மட்டும் பெற்றது..(அந்தப் படத்தை எடுத்தவர் உடையப்பா என்ற நாடக நடிகர்..)

http://freetamilmp3.in/load/A%20to%20Z%20Tamil%20Mp3/A/Anicha%20Malar/Kaathu%20Veesuthu%20Puthu.mp3


*

இப்ப ஒரு ஃப்ளாஷ்பேக் சொல்லியே ஆகணும்

மன பி.எம்.டபிள்யூ காரை டபக்கென ரிவர்ஸ் கியர் எடுத்து முன்னால் ஸ்க்ரீனில் பார்த்தபடியே பலவருடங்கள் தள்ளிப் பின்போனால்..

தெரியுமே.. தலைகீழ்ப் ப மீசை.. கொஞ்சம் காதைத்தாண்டி நீண்டிருக்கும்கிருதா, ஒல்லி ஒல்லி உடம்பு பளீர் மின்னற்கண்கள்.. வெள்ளை மனசு, வெளிர் கருமை உதடு என அழகாய் இருக்கும் இளைஞனான கல்லூரிக் கண்ணன் என்பீர்கள் தானே..

எஸ்.. அவனுடைய கையில் உள்ள நோட்புக்கில் முதற்பக்கத்தில் ச்சும்மா மனசுல பதிந்ததுஎன எழுதப்பட்டிருப்பது என்ன..

என் இதயத் தோட்டத்தில்
ரோஜாக்களினால் பதியனிட்டேன்
அறுவடை செய்ய
உனை அழைத்தேன்
நீ அரிவாளோடு வந்த பிறகு தான்
என் தவறு எனக்குப் புரிந்தது..

இதை எழுதியவர் கவிஞர் மு. மேத்தா.. அவரது கண்ணீர்ப் பூக்கள் கவிதைத்தொகுப்பில் மயக்காத கல்லூரி இளைஞரில்லை இளைஞியில்லை..

எனக்கு மிகப்பிடித்த கவிஞர்.. இவரது தேசப்பிதாவிற்கு ஒரு தெருப்பாடகனின் அஞ்சலி பாடல் தமிழ் அன்சிலியரியில் பாடமாக வந்தது..

விழிகள் நட்சத்திரங்களை
வருடினாலும்
விழிகள் என்னவோ
ஜன்னல் கம்பிகளுடன் தான்

என்ற வரிகள்பேசும் கதை தான் எத்தனை எத்தனை..

ச்ரி சரி ..தலைகீழ்ப் ப மீசை குட்டிக்கண்ணனைத்தவிக்க விடுவானேன்.. அந்தக் காலகட்டத்தில் சினிப்ரியாவில் கல்லூரியை விட்டுப் போய்ப்பார்த்த படம் என நினைக்கிறேன்.. என் கூட இருந்த நண்பன் மிஸாணஷ்ருகி (கிஷ்ணஸ்வாமியின் தலைகீழ்) என்னடா இந்தப் படம்பார்க்கலாம் என்கிற..

படம் சுமார் தான்… ஆனால் கேள்விப்பட்டது மு.மேத்தா பாட்டு எழுதுகிறார் என்று.. போனால் முன்னுக்கு வந்துகொண்டிருந்த – பக்கத்துவீட்டுப் பெண் சாயல் எனப் பேசப்பட்ட சுகாசினி அவரது ஸோ ஸோ நடனம் – பரப்ப்ரம்மமே என ப் பாடும் கார்த்திக் எல்லாம் ஈர்க்கவில்லை பாடல்..பாட்டு வரிகள்.. தனியாய்த்தெரிந்தன..

அவை..

தீம் திரனனன்

தேனருவியில் நனைந்திடும் மலரோ.. தொடரும் கதையோ
எது தான் விடையோ
மன வீணை நான் இசைத்திட..

முக வாசல் மீது தீபம் இருகண்கள் ஆனதோஓஒ ம்ம்.
மனவாசல் கோலமே தினம் போடுதோ
துறையாகும் தேவியை க் கொடி தேடுதோ
புன்னகையோ பூமழையோ
உன் நடையோ தேர்ப்படையோ
வரமோ அறமோ நான் வளம் பெற

நாளும் ஒவ்வொரு நாடகமோ இது மேடையோ
இனி மைவிழி நாட்டியமோ எனை வாட்டுமோ
ஏன் தொலைவோ நீ நிலவோ
தனிமை கொடுமை எனதுயிர் அழைத்திட
தீம் திரனன
தேனருவியில் நனைந்திடும் மலரோ (பாட் கேட் பிடிச் வரி அடிக்கறதும் ஒரு இன்பம்).

https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=lrCmn2WdRSE

ஸோ இவ்ளவு அழகாப்பாடல் எழுதின மு மேத்தா அவருடைய திரைப்பயணம் அப்புறம் என்ன ஆச்சு…..

*

அனிச்ச மலருக்கப்புறம் வெகு நாட்களாக எழுதவில்லை.. பின் ஆகாய கங்கை.. பாடல் பிரபலமானாலும் படம் பிரபலமாகவில்லை ( இப்பொழுது நகைச்சுவையில் தனியாகத் தெரியும் மனோபாலா இயக்கியபடம்)

அதன் பிறகு பாலச்சந்தர்.. வேலைக்காரனில் பாட்டு..

படம் பார்த்த போது இவர் எழுதியிருக்கிறார் என்பதைப் பார்க்கவில்லை நான்.. (சொர்ண புஷ்பம் இருக்கே) .. ஆனால்

தோட்டத்துல பாத்தி கட்டி
பாத்திருக்கேன் பாத்திருக்கேன்
சோத்துக்குள்ள பாத்தியைக் கட்டுற பட்டணம் பட்டணமே
மனம்
கெட்டியாக இல்லாட்ட மனசு கெட்டுடும் கெட்டுடுமே வரிகள் நிமிரவைத்தன என்றால் வா வா வா கண்ணா வா… வும் ஈர்த்தது..

அதில் சில வரிகள்..
காளிதாசன் காண வேண்டும்
காவியங்கள் சொல்லுவான்
கம்பநாடன் உன்னைக் கண்டால்
சீதை என்று துள்ளுவான்

தாஜ்மகாலின் காதிலே
இராம காதை கூறலாம்
மாறும் இந்தப் பூமியில்
மதங்கள் ஒன்றுசேரலாம்

**

உதய கீதத்தில் இளையராஜாவின் இசை.. பாடல் பாடு நிலாவே.

எழுத ஆரம்பித்தார் கவிஞர்..

பாடு நிலாவே தேன் கவிதை பூ மலர
உன் பாடலை நான் கேட்கிறேன்.. என எழுதிவிட்டு ஆண்பாடும் பாட்டிற்கும்
அதே வரி போட.. இளையராஜா.. கவிஞரே.. இது கொஞ்சம் இயல்பா இல்லையே..

என்ன .

இந்தப் பொண்ணு பாடுது தன்னோட எண்ணத்தை. அந்தப் பாட்டக் கேட்டு ஹீரோபாடறான்..இல்லியோ

ஆமம்

இந்தப் பொண்ணு பாடறது நிலாவப் பாத்து அதுவும் ஹீரோக்கு கேக்கணும்னு பாடுது.. ஆனா ஹீரோ இவபாட்டைக் கேட்டுட்டுத் தானே பாடறான்..அதனாலே.

கவிஞருக்குப் புரிய..சரி பாடும் நிலாவேன்னு ஹீரோபாடறதா வெச்சுக்கலாமா..உங்களுக்கு ஆட்சேபணையில்லியே..

ஷ்யூர் என்றாராம் மேத்தா..

இவர் எழுதிய இன்னும் சில பாடல்கள்..

நட்சத்திர ஜன்னலில் வானம் எட்டிப் பார்க்குது
வா வா வா கண்ணா வா
வேலை இல்லாதவன் தான் வேலை தெரிந்தவன் தான் வீரமான வேலைக்காரன்
யார் வீட்டில் ரோஜா பூப் பூத்ததோ
கற்பூர பொம்மை ஒன்று
பொன் மானே சங்கீதம் பாடிவா

*

எதற்காகப் பாலச்சந்தரிடம் போனாராம்.. கவிதைகள் எழுதினால் சிலபேரை மட்டும் சென்றடைகிறது..திரைப்பாடல்களின் ரீச் எல்லாரையும் சென்றடைகிறதே.. – என்கிறார் கவிஞர்..

இளையராஜா பாடலுக்கு பல பல்லவிகள் கொடுக்க இளையராஜா தேர்ந்தெடுத்தபல்லவி ஒரு பாடலுக்கு என்ன தெரியுமா..

ராஜ ராஜ சோழன் நான்
எனை ஆளும் காதல் தேசம் நீதான்..

அதில் சில வரிகள்

உல்லாச மேடை மேலே
ஓரங்க நாடகம்..
இன்பங்கள் பாடம் சொல்லும்
என் தாயகம்.

கள்ளூரப் பார்க்கும் பார்வை
உள்ளூரப் பாயுமே
துள்ளாமல் துள்ளும் உள்ளம்
சல்லாபமே

வில்லோடு அம்பு ரெண்டு
கொல்லாமல் கொல்லுதே
பெண்பாவை கண்கள் என்று
பொய் சொல்லுதே.

மனதை வருடும் மெல்லிசை, வெகு அழகியபிக்சரைசேஷன் , மின்னற் வரிகள் என்றும் மறக்காது..

https://www.youtube.com/watch?v=7f1kEtA-xRM&feature=player_detailpage

*

அவரது வரிகள் தனியாகத் தெரிவது தான் ஸ்பெஷாலிட்டி மு.மேத்தாவிடம்..

மரபுக்கவிதையில் தேர்ந்த அவர் எளிமையாகச் சொல்லப்படும் புதுக்கவிதை மூலம் மரபிற்கும் பாலம் கட்டினார் எனலாம்

அவர் எழுதிய ஒரு மரபு க்கவிதை..
வ்ரலாறு என்பது தலைப்பு..

சரித்திரம் என்பது விளம்பர மனிதரின்
சாகச முத்திரைகள் - கடல்
தெறித்திடும் போதினில் புகைப்பட மாகிடும்
சிற்சில நீரலைகள்!

ஆயிரங் கோடி மனிதரில் ஒருசிலர்
அடைகிற பிரபலங்கள் - பல
ஆயிர மாயிரம் பெயரை மறைத்திடும்
அற்புதப் புதைகுழிகள்!

வையத்து மாந்தர் நடந்துசென் றேகிய
வழிகளின் ஓவியங்கள் - சில
பொய்யையும் தூக்கி மெய்யென ஆக்கிப்
புகன்றிடும் மூலங்கள்!

செப்டம்பர் 5 வந்தால் எழுபது வயதாகிடும் கவிஞர் இன்னும் திரைப்பாடல் எழுதவேண்டும் என்பது என்னுடைய உள்மன ஆசை..

**
அடுத்து வரப்போகும் கவிஞர் இந்தப் பாட்டெல்லாம் இவரா எழுதினார் என ஆச்சரியப்பட வைத்தவர்..அவரும் ஒரு இசையமைப்பாளர், டைரக்டர்..

அவர்ர்ர்ர்ர்ர்……

(அப்புறம் வாரேன்) :)

rajeshkrv
13th March 2015, 10:15 AM
சி.க.,

சத்தியமாக சொல்கிறேன். மருத காசி இவ்வளவு நிறைய நல்ல பாடல்களை வழங்கியுள்ளார் என்று எனக்கு தெரியாது. அதுவும் நீங்கள் உங்களுக்கு பிடித்த பிரபலமான பாடல்களை மட்டுமே குறிப்பிட்டுள்ளதாக சொல்லும் போது அவர் எழுதியுள்ள எல்லாப் பாடல்களையும் நினைத்தால் மலைப்பாய் இருக்கிறது.

பாவை விளக்கு குற்றாலத்துப் பாடல் நல்ல அழகானப் பாடல். குற்றாலக் குறவஞ்சியுடன் போட்டி போடும் பாடல்தான். நல்ல தேர்வு. Kvm-ன் நாட்டுப் புறப் பாடல் எனப் பெயர் பெற்ற "சிட்டு போல பென்ணிருந்தா..." tms குரலில் மயக்குமே.

வாலியின் இரங்கற்பாவில் அவரது வழக்கமான டச்சிங் தெரிகிறது.

மருதகாசி ஐயா மிகச்சிறந்த பாடலாசிரியர். அதற்கு முன் கவிஞர்களாக பாடல்கள் எழுதி வந்தனர். பாடலாசிரியர் எப்படி எழுதவேண்டும் என்று வழி வகுத்தவர் மருதகாசி ஐயா.
திரையிசைத்திலகம் தான் அவருக்கு கடைசி வரை நிறைய வாய்ப்புகள் வழங்கினார்.
நமக்கெல்லாம் பிடித்த நீல வண்ண கண்ணா வாடா முதல் ஓசை கொடுத்த நாயகியே வரை எல்லாவிதமான பாடல்களையும் எழுத வல்லவர்.

முகனூலில் இவரைப்பற்றி நான் எழுதியதை விரைவில் இங்கே பதிவிடுகிறேன்.

rajeshkrv
13th March 2015, 10:21 AM
நிலாப் பாடல் 37:"வா வெண்ணிலா உன்னைத் தானே வானம் தேடுதே"
--------------------------------------------------------------------------------------------------------

மிகப் பிரபலமான ஒரு பாடல். தமிழ் திரை உலகில் நினைவில் கொள்ளவேண்டிய படம். இசை ஜாம்பவான்கள் மெல்லிசை மன்னர் M.S. விஸ்வநாதனும், இசைஞானி இளையராஜாவும் இணைந்து இசையமைத்த படம். பாடல்களினாலேயே படமும் புகழடைந்தது. இப்படிப்பட்ட படத்தில் ஒரு நிலாப் பாடல் இல்லையென்றால் என்ன செய்வது? யோசித்தார்கள். வைத்துவிட்டார்கள். மச்சக்காரர் மோகனும், மச்சக்காரிகள் அமலாவும், ராதாவும் (இப்படிப்பட்ட படத்தில் நடித்ததால்) இருக்கிறார்கள். இந்த காதல் பாடலுக்கு மோகனும் அமலாவும் மட்டுமே. எங்கே இந்த பாடலையெல்லாம் எழுதாமல் விட்டுவிடுவேனோ என்று பயம் வந்துவிட்டது. அதனால் தொடர்ந்து சில பிரபலமான பாடல்கள் வரும். பாடும் நிலா எஸ்.பி.பாலசுப்பிரமணியம், எஸ். ஜானகியுடன் பாடிய பாடல்.

இந்த மாதிரி பத்து பதினைந்து நிலாப் பாடல்களை கேட்டால் எல்லோருமே நிலாப் பாடல் எழுதிவிடலாம் என்று தோன்றுமே.நாம்தான் எத்தனை விதமான நிலப் பாடல்களை பார்த்துவிட்டோம்!!! இங்கே வெண்ணிலாவை வானம் தேடுவதாக கவிஞர் ஆரம்பிக்கிறார். மேலாடை மூடி போவது ஏன் என்று அதனிடம் கேள்வி கேட்பது நன்றாகவே இருக்கிறது அல்லவா?
சரி. பாடல் வரிகள் இங்கே:
---------------------------------------------------

வா வெண்ணிலா உன்னை தானே வானம் தேடுதே
வா வெண்ணிலா உன்னை தானே வானம் தேடுதே
மேலாடை மூடியே ஊர்கோலமாய் போவதேன்
மேலாடை மூடியே ஊர்கோலமாய் போவதேன்

முகம் பார்க்க நானும் முடியாமல் நீயும்
திரை போட்டு உன்னை மறைத்தாலே பாவம்
ஒரு முறையேனும் ஆ ஆ திருமுகம் காணும்
வரம் தர வேண்டும் ஆ ஆ எனக்கது போதும்

எனைச்சேர எதிர்பார்த்து உன்னை ஏழு ஜென்மம் ஏங்கினேன் (வா வெண்ணிலா )

மலர் போன்ற பாதம் நடக்கின்ற போது
நிலம் போல உன்னை நான் தாங்க வேண்டும்
இடையினில் ஆடும் உடையென நானும்
இணை பிரியாமல் துணை வர வேண்டும்

உனக்காக பனிக்காற்றை தினம் தூது போக வேண்டினேன் (வா வெண்ணிலா )
----------------------------------------------------------------

பாடலை பாருங்கள் இங்கே :
---------------------------------------------
https://www.youtube.com/watch?v=9VMs5JITg5Q

மெல்லத் திறந்தது கதவு - இன்னாத்துக்கு இப்பிடி சொல்றாங்கோ? வேகமாய் திறக்காதே கதவை என்று ஏன் உத்தரவிடவில்லை.

வரிகள் வாலி ஐயா

rajeshkrv
13th March 2015, 10:24 AM
நிலாப் பாடல் 29: "ஆகாய வெண்ணிலாவே தரைமீது வந்ததேனோ"
---------------------------------------------------------------------------------------------------------

மறுபடி ஒரு காதல் பாட்டுதான். வெண்ணிலா கீழே இறங்கி வந்ததாக காதலன் காதலியை பாடுவதாக ஒரு பாடல். பாசிலின் படத்திற்காக பிரபு, ரேவதி நடிப்பில் கே.ஜே.ஜேசுதாஸ், உமா ரமணன் பாட இளையராஜா இசையமைத்த்து கிறக்கினார். பாடல் நெறய உவமைகளாக கொண்டிருக்கிறது. காதல் இல்லாம படம் எடுத்து நிலா இல்லாமல் பாடல் எழுதுறதை விட, காதலை படமெடுத்த்து நிலா மற்றும் மலர் இல்லாம பாடல் எழுதுவதுதான் சிரமம் என்று நினைக்கிறேன். மலர்களை பற்றி அடுத்த தொடர் துவங்கினால் தமிழில் 60-லிரிந்து 70 சதவீத பாடல்களை குறிப்பிட்டு விடலாம்.

பாடல் வரிகள்:
----------------------

ஆண்: ஆகாய வெண்ணிலாவே தரை மீது வந்ததேனோ
பெண்: அழகான ஆடை சூடி அரங்கேறும் வேளைதானோ
ஆண்: மலர் சூடும் கூந்தலே மழைக் காலமேகமாய் கூட
பெண்: உறவாடும் விழிகளே இரு வெள்ளி மீன்களாய் ஆட

(ஆகாய வெண்ணிலாவே)

ஆண்: தேவார சந்தம் கொண்டு தினம் பாடும் தென்றல் ஒன்று
பூவாரம் சூடிக்கொண்டு தலைவாசல் வந்ததின்று

பெண்: தென்பாண்டி மன்னன் என்று திருமேனி வண்ணம் கண்டு
மடியேறி வாழும் பெண்மை படியேறி வந்ததின்று

ஆண்: இளநீரும் பாலும் தேனும் இதழோரம் வாங்க வேண்டும்

பெண்: கொடுத்தாலும் காதல் தாபம் குறையாமல் ஏங்க வேண்டும்

ஆண்: கடல் போன்ற ஆசையில் மடல் வாழை மேனி தான் ஆட

பெண்: நடு ஜாம வேளையில் நெடு நேரம் நெஞ்சமே கூட

( ஆகாய வெண்ணிலாவே )


பெண்: தேவாதி தேவர் கூட்டம் துதி பாடும் தெய்வ ரூபம்
ஆதாதி கேசமெங்கும் ஒளி வீசும் கோவில் தீபம்

ஆண்: வாடாத பாரிஜாதம் நடை போடும் வண்ண பாதம்
கேளாத வேணு கானம் கிளி பேச்சை கூட்டக் கூடும்

பெண்: அடியாளின் ஜீவன் ஏறி அதிகாரம் செய்வதென்ன?

ஆண்: அலங்கார தேவ தேவி அவதாரம் செய்ததென்ன

பெண்: இசை வீணை வாடுதோ இதமான கைகளில் மீட்ட

ஆண்: ஸ்ருதியோடு சேருமோ சுகமான ராகமே காட்ட

(ஆகாய வெண்ணிலாவே)

-----------------------------------------------------------------------------------------------------------

பாடல் காட்சி:
---------------------

https://www.youtube.com/watch?v=XEnNT2qI4Cw

சாயங்கால வேளையில் இரவு நேரங்களில் பாடலாம். எல்லா அரங்கேற்றவேளைகளில் இப்பிடியெல்லாம் பாட முடியுமா?

வரிகள் வாலி ஐயா

rajeshkrv
13th March 2015, 10:36 AM
https://www.youtube.com/watch?v=EoCKuc01BLs

chinnakkannan
13th March 2015, 10:49 AM
வாங்க ராஜேஷ் வாங்க..

//மைவண்ணக் கண்ணன் இங்கே
மான் குட்டி ராதா எங்கே
உறவாடும் காதல் கங்கை விளையாடுது..

சொல்லாதே யாரும் கேட்டால் பொல்லாத வார்த்தை சொல்வார்//

வாலி ஐயாவா வரிகள்.. தாங்க்ஸ் ராஜேஷ்.. இந்தப் பாட்டு கேட்டதுமில்லை பார்த்ததுமில்லை..பார்த்தால் கொஞ்சம்
கஷ்டம் தான் என்னவோ ஸ்ரீகாந்துக்கும் ஜெயசித்ராவிற்கும் கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகவில்லை (அக்கா தம்பி போல் இருக்கு ) :)

chinnakkannan
13th March 2015, 10:54 AM
இந்தப் பாட்டும் ஃபர்ஸ்ட டைம் பாக்கேன் கேக்கேன் :)

ஜெய்சித், விஜயகுமார்.. என்னா படம் ?

https://www.youtube.com/watch?feature=player_embedded&v=qrVn0rVwPc0

என்ன சொல்ற்து நான் என்ன சொல்றது..:)

டாடி எனக்கொரு டவுட்டு பிங்க் தாவணிக்கு எப்படி யெல்லோ பிளவுஸ் மேட்ச் ஆகும்?!

chinnakkannan
13th March 2015, 10:57 AM
ஹையாங்க்..இந்தப் பாட்டையும் இப்பத் தான் பாக்கேன் (கேட்டு மட்டும் ரசித்ததுண்டு..) ஆமா ஏந்தான் பார்த்தேனோ..

உதடுகளில் உனது பெயர் ஒட்டிக் கொண்டது
அதை உச்சரிக்கும் போது நெஞ்சம் தித்திக்கின்றது..

https://www.youtube.com/watch?feature=player_embedded&v=jESkyexXYA4

ம்ம் கார்த்திக் வர்றாரான்னு பார்க்கலாம்.. (தங்க ரங்கன் படத்திலிருந்து விஜயகுமார்பிரமீளா) :)

rajeshkrv
13th March 2015, 10:59 AM
வாங்க ராஜேஷ் வாங்க..

//மைவண்ணக் கண்ணன் இங்கே
மான் குட்டி ராதா எங்கே
உறவாடும் காதல் கங்கை விளையாடுது..

சொல்லாதே யாரும் கேட்டால் பொல்லாத வார்த்தை சொல்வார்//

வாலி ஐயாவா வரிகள்.. தாங்க்ஸ் ராஜேஷ்.. இந்தப் பாட்டு கேட்டதுமில்லை பார்த்ததுமில்லை..பார்த்தால் கொஞ்சம்
கஷ்டம் தான் என்னவோ ஸ்ரீகாந்துக்கும் ஜெயசித்ராவிற்கும் கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகவில்லை (அக்கா தம்பி போல் இருக்கு ) :)

jodi Jaichitra muthurman. srikanth will just sing that;s all

chinnakkannan
13th March 2015, 11:05 AM
ஒரு பக்கம் மறைந்தால் மறுபக்கம் வருவேன்
ஒளிந்து மறைந்தால் வளைத்துப் பிடிப்பேன்

உனக்கு நான் சொந்தம் எனக்கு நீசொந்தம்

ஹைஇதுவும் ஃபர்ஸ்ட் டைம் பாக்கறேன்.. கேட்டிருக்கிறேன்.. ஆமா என்ன படம் ரொம்ப த்ரில்லிங்கா இருக்குதுங்க்ணா..

https://www.youtube.com/watch?feature=player_embedded&v=neZf0FlcNA4

chinnakkannan
13th March 2015, 11:09 AM
//jodi Jaichitra muthurman. srikanth will just sing that;s all // happaadi.. ippa thaan manasukku nimmathi.. rajesh :) anthak kaala makkaLs paavamnu ninaichukkittirunthEn..

https://www.youtube.com/watch?feature=player_embedded&v=4D3NCYGQ9ZQ

மேலே உள்ளதும் நான் முதலில்பார்க்கிறேன் கேட்கிறேன்.. ராதா ராதா உன் காதோடு சொல்ல ஒரு சேதி இருக்கு.. முத்துராமன் தெரிகிறது..கூட இருப்பது?

chinnakkannan
13th March 2015, 11:20 AM
இந்தப் பாட்டும்முதல் முதல் பார்க்கிறேன்..ஆனால் எனக்கு ரொம்பப்பிடிக்குமாக்கும்

ஆவணி மலரே ஐப்பசி மழையே ( ஜெய்-ஜெய்சித்)

https://www.youtube.com/watch?v=yJwgsxMWn1Q&feature=player_detailpage

kalnayak
13th March 2015, 04:19 PM
தாங்க்ஸ் ராஜேஷ்,
தவறாய் பாடலாசிரியரை கொடுப்பதை விட கொடுக்காமலிருப்பது நல்லது என்று அந்தபாடல்களுக்கு*பாடலாசிரியர்களை கொடுக்க வில்லை. அதை கொடுப்பதற்காவது நீங்கள் வந்தீர்களே. நிறைய எழுதுங்கள்.

மருதகாசி அய்யா அவர்களைப் பற்றிய உங்கள் கட்டுரைக்கு காத்திருக்கிறோம்.

நான் ராதைதான் முதல் முறையாக கேட்கிறேன். நன்றாக இருக்கிறது. இந்த பாட்டுமூலம் சி.க. வை ஒரு ஜெயசித்ரா தொடர் போட வைத்து விட்டீர்கள். நன்றி.

kalnayak
13th March 2015, 04:30 PM
சி.க.,

மு.மேத்தா பற்றிய "பாடினார் கவிஞர் பாடினார்" கட்டுரை நன்றாக இருந்தது. அப்பவே நீங்க காலேஜா. சரி சரி. மு.மேத்தா உங்களுக்கு பிடித்த கவிஞர்-னு சொல்லிட்டீங்க. முழுசா படிச்சால் காரணம் புரியுது. நீங்களும் கவிஞர்தானே. ஆகாய கங்கை பாட்டை கேட்டிருக்கிறேன். அவ்வளவுதான். மு.மேத்தா நிறைய நாவல்கள் எழுதியிருக்கிறார் அல்லவா? நானும் ஒன்றிரண்டு அவரின் நாவல்கள் படித்திருப்பேன் என்று நினைக்கிறேன். இப்போதெல்லாம் கதைகள் படிப்பதையே நிறுத்திவிட்டேன். நேரமில்லை.

மற்றபடி நல்ல பாடல்களையே கொண்டிருக்கிறது அவருடய திரைப்பட பாடல்கள் வரிசை. நீங்கள் குறிப்பிட்ட உதயகீதம் பாடல் என்னுடைய அடுத்த பாடல்.

chinnakkannan
13th March 2015, 04:42 PM
அஹோ வாரும் கல் நாயக்.. நன்றி..

ஹையாங்க்..எ ப்படி மறந்தேன்.. ஆனந்த விகடன் பொன்விழாப் போட்டியில் மு.மேத்தா வின் சோழ நிலா முதல் பரிசு பெற்றது..அந்தத் தொடரை விகடனிலேயே தொடர்ந்துபடித்தவன் நான்.. அப்புறம் மகுட நிலா என்று ஒரு நாவல் அதுவும் விகடனிலேயே வந்தது.. பின் சில சிறுகதைகள் எழுதியிருக்கிறார்..அப்பவே நீங்க காலேஜா..யார் சொன்னா.. ஹி.ஹி..:)

kalnayak
13th March 2015, 04:47 PM
நிலாப் பாடல் 40: "பாடு நிலாவே தேன் கவிதை பூ மலர"
----------------------------------------------------------------------------------

இளையராஜாவின் உச்சக்கட்ட காலம் என்று இந்த திரைப்படம் வந்த காலத்தைத்தான் சொல்வார்கள். மூலை முடுக்குகளிலெல்லாம் அவரது பாடல்கள் ஒளிபரப்பப் பட்டுக்கொண்டிருந்தது. இந்த பாட்டிற்கு பின்புதான் SP. பாலசுப்ரமணியம் பாடும் நிலாவாக புதுப் பட்டம் பெற்றார். S. ஜானகி அம்மாவுடன் அவர் பாடிய இந்த பாடல் மிகவே புகழ் பெற்றது. மச்சக்கார மோகனும், ரேவதியும் நடித்திருக்கிறார்கள். அதுதான் சி.க. சொல்லிவிட்டாரே கவிஞர் மு. மேத்தா எழுதினார் என்று. அவர் மட்டும் நிலாவை வைத்து காதல் பாடல் எழுதக் கூடாதா என்ன. ஆனால் சி.க. சொன்ன அந்த கவிதா விலாசம் தெரிகின்றது தேன் கவிதை பூ மலர நிலாவை பாடச் சொல்லும்போதே.

பாடல் வரிகள்:
-----------------------
பாடு நிலாவே தேன் கவிதை பூ மலர
உன் பாடலை நான் தேடினேன் கேட்காமலே நான் வாடினேன்

(பாடு நிலாவே)

நீ போகும் பாதை என் பூங்காவனம்
நீ பார்க்கும் பார்வை என் பிருந்தாவனம்
ஊரெங்கும் உன் ராக ஊர்கோலமோ
என் வீடு வாராமலே போகுமோ
கைதான பொதும் கை சேரவேண்டும்
உன்னொடு வாழும் ஓர் நாளும் போதும்
என் ஜென்மமே ஈடேறுமே

பாடு நிலவே தேன் கவிதை பூ மலர
உன் பாடலை நான் கேட்கிறேன் பாமாலையை நான் கோர்க்கிறேன்

(பாடு நிலாவே)

ஊரெங்கும் போகும் என் ராகங்களே
உன் வீடு சேரும் என் மேகங்களே
பூ மீது தேன் தூவும் காதல் வரம்
என் நெஞ்சில் நீ ஊதும் நாதஸ்வரம்
காவேரி வெள்ளம் கை சேர வேண்டும்
ராகங்கள் சேரும் தாகங்கள் தீரும்
காதல் நிலா தூதாகுமே

(பாடு நிலாவே)
----------------------------------------------------------------

காணொளிக் காட்சி:

https://www.youtube.com/watch?v=nrTKUhNQaWg

உதய கீதம் என்றுதான் சி.க. சொல்லி விட்டாரே. நான் என்ன டையலாக் சொல்றது.

kalnayak
13th March 2015, 04:50 PM
தாங்க்ஸ் சி.க.,

அந்த சோழ நிலா தொடரைத்தான் நானும் நினைத்தேன். உடனடியாக தலைப்பு ஞாபகத்தில் வரவில்லை. நீங்கள் சொன்னதும் நினைவில் ஏறியது. ஆம் நானும் அதை படித்திருக்கிறேன் விகடனில். ஆனால் இப்போது கதை ஞாபகத்தில் இல்லை. எனது நினைவில் பொன்னியின் செல்வரும், யவன ராணியும் நினைவில் இருக்கிறார்கள். மற்றவர்கள் மறைந்து போனார்கள்.

chinnakkannan
13th March 2015, 05:14 PM
பொன்னியின் செல்வன் - மணியத்தின் படங்களுடன் -விகடன் பப்ளிகேஷ்ன்ஸ் -இரண்டு வருடம் முன் வாங்கினேன்.. வெகு அழகாக இருக்கும்..எத்தனை முறை சின்ன வயதிலிருந்து படித்திருப்பேன் நினைவிலில்லை.. சிவகாமியின் சபதம் மும் இப்போது வ்ந்திருக்கிறதாம்.. கல்கியில் வினு படங்களுடன் வந்தபோது படித்த நினைவு - பைண்ட் புத்தகமாய்.. ஊருக்குப் போகும்போது வாங்க வேண்டும்

யவன ராணி,கடல்புறா, ஜீவ பூமி,மலைவாசல், கன்னிமாடம், மூங்கில் கோட்டை, ராஜ முத்திரை, ராஜ திலகம் - சாண்டில்யனின் எனதுஃபேவரைட்ஸ். ஃபுல் கலெக்*ஷன் என்னிடம் உண்டு..

சரித்திர நாவல்களில் உங்களுக்கு விருப்பமா கல் நாயக்.. எனது சிபாரிசுகள்

திருமலைத் திருடன், விசித்திர சித்தன், எம்டன் 1914 - திவாகர் என்பவர் எழுதியது அவரே கலிங்கத்துப் பரணியை வைத்து வம்ச தாரா என்ற நாவல் எழுதியிருக்கிறார்..இப்பொழுது பதிப்பில் இல்லை..வந்தால் வாங்கவேண்டும்..

ராஜ கேசரி, பைசாசம் - கோகுல் சேஷாத்ரி

கடாரம் - மாயா..

உடையார் (6 பாகங்கள்) கங்கை கொண்ட சோழன் - 4 பாகங்கள் - பால குமாரன்..இன்னும்க.கொ.சோ 4ம்பாகம் முடிக்கவில்லை.. பட் பொறுமையாய்ப் படித்தால் மிக சுவையாக் இருக்கும்..உடையார் முடிக்க 4 மாதங்களும் க.கொ.சோ 3 பாகம் முடிக்க 3 மாதங்களும் ஆயின எனக்கு.

ஆலவாய் அழகன், மகரயாழ் மங்கை - ஜெகச் சிற்பியன்

அடிமையின் காதல், வாளின் முத்தம், நான் - கிருஷ்ண தேவ ராயன் - ரா.கி ரங்கராஜன்

திருவரங்கன் உலா மோகினித் திருக்கோலம் - ஸ்ரீ வேணு கோபாலன்

கயல் விழி - ஐலன்

மணி பல்லவம், பாண்டி மா தேவி - நா.பார்த்த சாரதி இன்னும் லிஸ்ட் நீளும்..


சோழ நிலாவில் லதா வின் படங்கள் -கஷ்கு முஷ்க் இளவரசிகள்...திக்க்க் மீசை வாலிபர்கள் அழகு..மகுட நிலாவிற்கு ம.செ (மணியம் செல்வன் என நினைக்கிறேன்)

பாடு நிலாவே எனக்கு ரொம்பப்பிடிக்கும் .. போட்டிருப்பேன் உங்கள் நினைவு வந்ததால் இடவில்லை (என்னே ஒரு தியாகம்!) :)

ராஜேஷின் மருதகாசி ரைட் அப் எப்படி ப் படிக்க விட்டேன்..ராஜேஷ் மறுபடி இடுங்கள்..( வாலி பற்றி எழுத வ்ரும் போது எனக்குச் சிரமமேகிடையாது கல் நாயக்.. முக நூலில் வாலி ஐயா நினைவலைகள் என ஒரு தொடர் கட்டுரை ராஜேஷ் எழுதிக் கலக்கிக் கொண்டிருக்கிறார்..)

chinnakkannan
13th March 2015, 05:17 PM
கடாரம் - மாயா ( இந்த மாயா என்பவர் நம் மய்யம் டாட்காமில் எழுதியிருப்பதாகச் சொல்கிறார் தன் முன்னுரையில் ( அவர் ஒரு பெண்)) ராஜேந்திர சோழனின் கடாரப் படையெடுப்பைப் பற்றி செம த்ரில்லிங்காக சஸ்பென்ஸ் அத்தியாயத்துக்கு அத்தியாயம் வைத்து - கொஞ்சம் தலைகுழம்பி விடும் அளவுக்க்கு க் கேரக்டர்ஸ் வைத்து- நேர்த்தியாகக் கையாண்டிருப்பார்..

kalnayak
13th March 2015, 05:43 PM
சி.க.,

கல்கியின் சிவகாமியின் சபதமும் படித்திருக்கிறேன். பார்த்திபன் கனவு-தான் படமாகியதே. அது பார்த்திருக்கிறேன். அவரின் மற்ற சரித்திர தொடர்கள் படித்ததில்லை.

சாண்டில்யனின் நீங்கள் குறிப்பிட்ட எல்லா சரித்திர நாவல்களும் படித்திருக்கிறேன். மன்னன் மகள் வானொலி மற்றும் தொலைக் காட்சி நாடக வடிவில் கூட வந்தது. வானொலியில் சில நாட்களில் நாடகத்தை கேட்டிருக்கிறேன். நன்றாகவே இருக்கும்.

ரா.கி. ரங்கராஜனின் 'நான் கிருஷ்ணதேவராயன்' படித்திருக்கிறேன். அருமையாக எழுதியிருப்பார். நினைவில் உள்ளது. திருப்பதி திருமலை கோயில் செல்லும்போது மறக்காமல் கிருஷ்ணதேவராயர் மற்றும் அவரது இரு மனைவிகள் சிலைகளை காணும்போது இந்த கதை நினைவில் வரும்.

சுஜாதாவின் பல நாவல்கள் படித்திருக்கிறேன். அவரது நின்று போன சரித்திர நாவல் 'இரத்தம் ஒரே நிறம்'. அடுத்த சரித்திர நாவல் படித்திருக்கிறேன். அதன் பெயர் என்ன?

மற்ற நீங்கள் குறிப்பிட்ட எழுத்தாளர்களை படிக்க வாய்ப்பு கிடைக்க வில்லை. இப்போது அவ்வளவு பொறுமை இல்லை நீண்ட புதினங்களை படிப்பதற்கு. பொன்னியின் செல்வனையே திரும்ப என்னால் படிக்க முடியவில்லை.

சோழ நிலா சித்திரங்கள் நெஞ்சில் நிழலாடுகின்றன.

chinnakkannan
13th March 2015, 08:18 PM
மன்னன் மகளைப் பற்றிக் குறிப்பிட மறந்து விட்டேன் .. நல்ல நாவல்..சரித்திர நாவல்க்ள்னு பார்த்தீங்கன்னா இந்த ராஜ ராஜ சோழன், ராஜேந்திர சோழனைப் பத்தி மட்டுமே நிறைய நாவல்கள் வந்திருக்கின்றன..

சுஜாதா ஆரம்பத்தில் சிகப்பு கருப்பு வெளுப்பு எனக் குமுதத்தில் எழுத ஆரம்பித்தார்.. மூன்றே மூன்று வாரங்களில் நிறுத்தப்பட்டது..பின் வெகுகாலத்திற்குப்பிறகு ஒரு வருடத்திற்குப்பின் என நினைக்கிறேன் - ரத்தம் ஒரே நிறம் என ஜாலியன் வாலா பாக் பேஸ் பணணி எழுதியிருந்தார்.. ( இந்தக் க.வெ.சி வந்த காலகட்டத்தில் தான் பத்திரிகைகள் வண்ணப்படங்களுக்கு மாறின) ர.ஒ. நி யும் நன்றாக இருக்கும் (ஒருமுறை தான் படித்திருக்கிறேன்..மறுமுறை படிக்க இயலவில்லை) பின் காந்தளூர் வசந்த குமாரன் கதை..எனக்குப் பிடிக்கவில்லை..

அவரது இரண்டாவது நாவல் அனிதா - இளம் மனைவி -அதுவே பிற்காலத்தில் இது எப்படி இருக்கு என ஜெய்சங்கர் ஸ்ரீதேவி வைத்துப் படமாக ஆனது..அந்தப்படத்தை நான் பார்க்கவில்லை..

ம்ம்

எங்கும் நிறைந்த இயற்கையில் என்ன சுகமோ என ஜெய் ஸ்ரீதேவியைப் பார்த்துப் பாடுகிறார்..ஸ்ரீதேவி தான் இயற்கையோ

(இ.எ .இ படப் பாடல்)

https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=dtv165n4KlI

chinnakkannan
13th March 2015, 08:25 PM
இன்னிக்கு என்ன.. நான் பார்க்காத ஜெய் பாடல்களா ச் சிக்குதே..

ஏழு முறை தான் பிறவி வரும்
அந்த ஏழிலும் நமக்குள் காதல் வரும் (போரடிக்காதோ)
மனசாட்சி – ஜெய் வாணிஸ்ரீ

https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=N308U9Vewvs

chinnakkannan
13th March 2015, 09:04 PM
**
ஃபார் எ சேஞ்ச் நடிப்புச் சுடரோட பாட்டு ஒண்ணு!
*
இன்னொரு நாள் தருவதெல்லாம் இன்று தந்தால் ஆகாதா (என்னா தெகிரியம்)
அன்று வரை பொறுத்திருந்தால் அந்த மனம் கேளாதா ( நைஸா ஏன் கிட்டக்க வர்றாங்க)

ஒருவருமே பார்க்காமல் ஒன்று தந்தால் ஆகாதா (பாவம் பசி போல இருக்கு ஹீரோயினோட அம்மா பண்ணீயிருக்கற பொரிஉருண்டை கேக்கறான்.. இந்தம்மா என்ன சொல்லுது)

தனிமையிலே தவறு செய்தால் தன்மனமே பார்க்காதா ( அவங்க அம்மா எண்ணி வெச்சுருக்காங்களாம் தரமுடியாதுன்னு நாசூக்கா சொல்லுது பொண்ணு)

கால்களே நில்லுங்கள் கண்களே சொல்லுங்கள் –எங்கவீட்டுப் பெண்- ஏவி.எம் ராஜன் அப்புறம் ஹீரோயின் புஷ்பலதா ஜாடை யார்னு தெரியலை

https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=-EcDiwC5zbU

rajeshkrv
13th March 2015, 10:06 PM
**
ஃபார் எ சேஞ்ச் நடிப்புச் சுடரோட பாட்டு ஒண்ணு!
*
இன்னொரு நாள் தருவதெல்லாம் இன்று தந்தால் ஆகாதா (என்னா தெகிரியம்)
அன்று வரை பொறுத்திருந்தால் அந்த மனம் கேளாதா ( நைஸா ஏன் கிட்டக்க வர்றாங்க)

ஒருவருமே பார்க்காமல் ஒன்று தந்தால் ஆகாதா (பாவம் பசி போல இருக்கு ஹீரோயினோட அம்மா பண்ணீயிருக்கற பொரிஉருண்டை கேக்கறான்.. இந்தம்மா என்ன சொல்லுது)

தனிமையிலே தவறு செய்தால் தன்மனமே பார்க்காதா ( அவங்க அம்மா எண்ணி வெச்சுருக்காங்களாம் தரமுடியாதுன்னு நாசூக்கா சொல்லுது பொண்ணு)

கால்களே நில்லுங்கள் கண்களே சொல்லுங்கள் –எங்கவீட்டுப் பெண்- ஏவி.எம் ராஜன் அப்புறம் ஹீரோயின் புஷ்பலதா ஜாடை யார்னு தெரியலை

https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=-EcDiwC5zbU

heroine is vijayanirmala

chinnakkannan
13th March 2015, 10:29 PM
தாங்க்ஸ் ராஜேஷ்..வேற எந்தப் பாடலாசிரியர் பத்தி எழுதியிருக்கீங்க..?

Gopal.s
14th March 2015, 09:15 AM
சி.க
பாப நாசம் சிவன் முதல் வாலி ஐயா வரை எழுதியுள்ளேன்
கே.பி.காமட்சி, டி.கே.சுந்தரவாத்தியார், கு.மா.பா, தஞ்சை ராமய்யா தாஸ், மாயவனாதன், விந்தன், கே.டி.சந்தானம், கா.மு.ஷெரிப், மருதகாசி என பட்டியலிட்டு கொண்டே போகலாம்.

இதோ முகனூல் லிங்க் தருகிறேன்.

லிங்க் இல்லாத கட்டுரைகளை இங்கே பதிவிடுகிறேன்.

பகுதி 4 முதல் முகனூலில் உள்ளது

https://www.facebook.com/182114621918764/photos/a.182729691857257.39408.182114621918764/197489043714655/?type=3&permPage=1

https://www.facebook.com/182114621918764/photos/a.182729691857257.39408.182114621918764/198810566915836/?type=3&permPage=1

https://www.facebook.com/182114621918764/photos/a.182729691857257.39408.182114621918764/199987120131514/?type=3&permPage=1

https://www.facebook.com/182114621918764/photos/a.182729691857257.39408.182114621918764/201795403284019/?type=3&permPage=1

https://www.facebook.com/182114621918764/photos/a.182729691857257.39408.182114621918764/207901619340064/?type=3&permPage=1

https://www.facebook.com/182114621918764/photos/a.182729691857257.39408.182114621918764/209978909132335/?type=3&permPage=1

https://www.facebook.com/182114621918764/photos/a.182729691857257.39408.182114621918764/280756062054619/?type=3&permPage=1

https://www.facebook.com/182114621918764/photos/a.182729691857257.39408.182114621918764/299370246859867/?type=3&permPage=1

https://www.facebook.com/182114621918764/photos/a.182729691857257.39408.182114621918764/328729677257257/?type=3&permPage=1

இந்த முகநூலை படிக்காமலிருப்பது நல்லது. பிழைகள் மலிந்த ,சுவாரசியம் அற்ற விவரணை. (ஒரு துளி --ஸ்ரீதர் அமர தீபம் படத்தில் அறிமுகம் அல்ல. அதற்கு முன்பே ரத்த பாசம்,எதிர்பாராதது எல்லாம் பண்ணியாயிற்று.)

தயவு செய்து நல்ல முறையில் எழுத பட்ட வாமனன் புத்தகத்தின் 5 பகுதிகளை வாங்கி பாடலாசிரியர் ,திரை இசையமைப்பாளர்கள்,பாடகர்கள்,தமிழ் இசை வரலாறு இவற்றை ஒழுங்காக ,சுவாரஸ்யமாக தெரிந்து கொள்ளவும்.என்னுடைய பிரத்யேக சிபாரிசு.

Thirai isai alaigal- Vol 1-5.The book has been published by Manivachagar Pathippagam….They can be contacted at 044-2356 1039 The main office is on Stringers street, opposite HC and Kuralagam. They have a retail outlet on Sivagnanam Street near T.Nagar head post office. The book is in Tamil.

rajeshkrv
14th March 2015, 09:42 AM
இந்த முகநூலை படிக்காமலிருப்பது நல்லது. பிழைகள் மலிந்த ,சுவாரசியம் அற்ற விவரணை. (ஒரு துளி --ஸ்ரீதர் அமர தீபம் படத்தில் அறிமுகம் அல்ல. அதற்கு முன்பே ரத்த பாசம்,எதிர்பாராதது எல்லாம் பண்ணியாயிற்று.)

தயவு செய்து நல்ல முறையில் எழுத பட்ட வாமனன் புத்தகத்தின் 5 பகுதிகளை வாங்கி பாடலாசிரியர் ,திரை இசையமைப்பாளர்கள்,பாடகர்கள்,தமிழ் இசை வரலாறு இவற்றை ஒழுங்காக ,சுவாரஸ்யமாக தெரிந்து கொள்ளவும்.என்னுடைய பிரத்யேக சிபாரிசு.

Thirai isai alaigal- Vol 1-5.The book has been published by Manivachagar Pathippagam….They can be contacted at 044-2356 1039 The main office is on Stringers street, opposite HC and Kuralagam. They have a retail outlet on Sivagnanam Street near T.Nagar head post office. The book is in Tamil.

ok sir. edho therindhathai ezhudhinen. neengal sonnal ok thaan, yaarum padikka vendam. ok

naan sridhar amaradeepathil arimugam endru sollvillaye

kalnayak
14th March 2015, 10:08 AM
கோபால்,
இதை சொல்வதற்கு மன்னிக்கவும். நீங்கள் வந்தால் இந்த மாதிரி கலாட்டாக்களையும் உடன் கொண்டு வந்து விடுகிறீர்கள். அந்த முகநூல் பதிவுகளில் பிழை இருக்கலாம். அதை படித்து அதில் எங்கே பிழை என்று சொன்னால் திருத்திக் கொள்ள ஒரு வாய்ப்பளிப்பீர்கள். இல்லை. நீங்கள் திருத்தி எழுதலாம். அதுவும் இல்லையா, அதை பாங்காக எழுதியவர் மனம் நோகாமல் சொல்லலாமே. எடுத்தேன், கவிழ்த்தேன் என்று இப்படி ஓரிரு வாக்கியங்களில் முடிவு எடுத்து கணித மதிப்பெண் பூஜியம் இல்லை நூறு என்பது போல் சொல்வது சரியா?

இதை நான் சொல்வது தகுமா என்றும் பார்த்தேன். நான் அப்படி எழுதுவதில்லையா என்றும் எனக்கு நானே கேட்டுக் கொண்டேன். தொடர்ந்து தவறான தகவல்கள் தந்து பிறர் மனம் நோக செய்தால் நீங்கள் சொல்வது போல் சொல்வது சரியாகலாம். அப்படிப்பட்ட சூழ்நிழைகளில்தான் நான் நகைச்சுவையாக சிலர் நாணும்படி எழுதி இருப்பேன் என்று நினைக்கிறேன். மேற்குறிப்பிட்ட இந்த பதிவிகளினால் நீங்கள் மனம் நொந்திருந்தால் சொல்லுங்கள். கேட்கலாம்.

நன்றாக எழுதக் கூடிய விஷய ஞானம் உள்ள நீங்கள் இப்படி எழுதலாமா? சிந்தியுங்கள்.

Gopal.s
14th March 2015, 11:23 AM
ok sir. edho therindhathai ezhudhinen. neengal sonnal ok thaan, yaarum padikka vendam. ok

naan sridhar amaradeepathil arimugam endru sollvillaye


ஸ்ரீதரின் முதல் படமான அமரதீபம் (இது தான் அவரது முதல் படம் இயக்குனராக அல்ல) படத்தில் ஒலித்த ஜாலிலோ ஜிம்கானா பாடல் ஜிக்கியின் குரலில்
இன்றும் பிரபலமே. ஆம் புரியாத வார்த்தைகளை அறிமுக படுத்தியது இவரே . குறவன் குறத்தி பாடுவதாக அமைந்ததால் இப்படி அமைத்தார் அந்த பாடலை.
Rajesh-This is from your writing. You didn't have consistency which has angered me. Certain movies you mentioned with lead actor and certain movies you didnt.
readers can easily decipher it. If you suffix certain movie with lead actor name ,Amara deepam is sivaji Film. Mind it. your writing is very uninteresting. I appreciate your enthusiasm.

Gopal.s
14th March 2015, 11:47 AM
கல்நாயக்,

நான் பிழைகளை சுட்ட ஆரம்பித்தால் மைனஸ் மார்க்தான். பூஜ்யத்துக்காக சந்தோஷ படுங்கள். இந்த பிரகஸ்பதி ,வாக்கியத்துக்கு வாக்கியம் பொருட்குற்றம், சொற்குற்றம் எல்லாம் உள்ளது.

அத்துடன் இயக்குனர் பெயரை சொல்லி படத்தை சுட்டலாம். அல்லது முக்கிய நடிகரின் பெயரில். இந்த அரைகுறை மலைக் கள்ளனை பட்சி ராஜா படமென்றோ, குலேபகவலியை ராமண்ணா படம் என்றோ சொல்லவில்லை .ஆனால் அமர தீபம் ஸ்ரீதர் படமாம்!!! அதுவும் அறிமுகமாம்!!!! என்ன திமிர். சிவாஜியின் அமரதீபம் என்று எழுதாமல் ,இப்படி ஒருதலையாக எழுதும் இவர், சுவாரஸ்யமாகவும் எழுதாமல்,படு போர் அடிக்கிறார்.

இப்படி ஆர்வகோளாறு அரைகுறை எழுத்தை விட ,சும்மா இருப்பதே சுகம்.

chinnakkannan
14th March 2015, 11:54 AM
ராஜேஷ்.. நான் கேட்ட லிங்க்ஸ் கொடுத்து விட்டு பின் எப்படி அவற்றை நீங்கள் டெலீட் செய்யலாம்.. கோபால் எதிர்வினை புரிவதற்கு வந்திருக்காவிடில் அது பற்றிஎனக்குத் தெரிந்திருக்காது..நான் முழுக்கப் படிக்கவில்லை..படித்த சில பதிவுகளும் எனக்குப் பிடித்திருந்தது..(முயன்று, நேரம் செலவழித்து விஷயங்களைத்தொகுத்திருக்கிறீர்கள்.. பாராட்டுக்கள்) மற்றவையும் அப்படியே தான் இருக்கும்..முழுக்க இன்று படிக்க நினைத்திருக்கிறேன்..

கோபால், வாமனன் புத்தகம் வாங்க வேண்டும்.. ஜூனில் ஊருக்குப் போகும் போது தான் முடியும்..தகவலுக்கு நன்றி

kalnayak
14th March 2015, 12:13 PM
கல்நாயக்,

நான் பிழைகளை சுட்ட ஆரம்பித்தால் மைனஸ் மார்க்தான். பூஜ்யத்துக்காக சந்தோஷ படுங்கள். இந்த பிரகஸ்பதி ,வாக்கியத்துக்கு வாக்கியம் பொருட்குற்றம், சொற்குற்றம் எல்லாம் உள்ளது.

அத்துடன் இயக்குனர் பெயரை சொல்லி படத்தை சுட்டலாம். அல்லது முக்கிய நடிகரின் பெயரில். இந்த அரைகுறை மலைக் கள்ளனை பட்சி ராஜா படமென்றோ, குலேபகவலியை ராமண்ணா படம் என்றோ சொல்லவில்லை .ஆனால் அமர தீபம் ஸ்ரீதர் படமாம்!!! அதுவும் அறிமுகமாம்!!!! என்ன திமிர். சிவாஜியின் அமரதீபம் என்று எழுதாமல் ,இப்படி ஒருதலையாக எழுதும் இவர், சுவாரஸ்யமாகவும் எழுதாமல்,படு போர் அடிக்கிறார்.

இப்படி ஆர்வகோளாறு அரைகுறை எழுத்தை விட ,சும்மா இருப்பதே சுகம்.

கோபால்,

நீங்கள் நிறைய உணர்ச்சி வசப்படுகிறீர்கள். இப்போது பாருங்கள் தான் இங்கே இட்ட பதிவை அவரே அழித்துவிட்டார். இதற்கு மேல் நான் சொல்வதற்கு ஒன்றும் இல்லை. நன்றி.

rajeshkrv
15th March 2015, 02:09 AM
ராஜேஷ்.. நான் கேட்ட லிங்க்ஸ் கொடுத்து விட்டு பின் எப்படி அவற்றை நீங்கள் டெலீட் செய்யலாம்.. கோபால் எதிர்வினை புரிவதற்கு வந்திருக்காவிடில் அது பற்றிஎனக்குத் தெரிந்திருக்காது..நான் முழுக்கப் படிக்கவில்லை..படித்த சில பதிவுகளும் எனக்குப் பிடித்திருந்தது..(முயன்று, நேரம் செலவழித்து விஷயங்களைத்தொகுத்திருக்கிறீர்கள்.. பாராட்டுக்கள்) மற்றவையும் அப்படியே தான் இருக்கும்..முழுக்க இன்று படிக்க நினைத்திருக்கிறேன்..

கோபால், வாமனன் புத்தகம் வாங்க வேண்டும்.. ஜூனில் ஊருக்குப் போகும் போது தான் முடியும்..தகவலுக்கு நன்றி

cika , i deleted because i dont want any controversies here.
also i didnt write anything he said also i didnt write to get any marks from anyone.
it's what i know and what i read and what is available .. that's all .
people do correct if it's wrong and that's fine

anyways i've sent you the links in messenger.

Gopal.s
15th March 2015, 04:03 AM
cika , i deleted because i dont want any controversies here.
also i didnt write anything he said also i didnt write to get any marks from anyone.
it's what i know and what i read and what is available .. that's all .
people do correct if it's wrong and that's fine

anyways i've sent you the links in messenger.

ராஜேஷ்,

இங்கிருக்கும் யாரின் மீதும் எனக்கு தனி பட்ட விரோதமோ,வெறுப்போ கிடையாது. எனக்கு பட்டதை எழுதுவேன். பிடித்தால் பிடித்தது. இல்லையென்றால் இல்லை.

நான் சொல்ல வருவது என்னவென்று புரிந்து கொள்ளுங்கள்.

சாரு நிவேதிதா என்ற எழுத்தாளர் சொல்லுவார்.

சில சமயம் 10 மாத ஆண் குழந்தைக்கு கூட விறைப்பு ஏற்படலாம். ஆனால் அது கல்யாணத்திற்கு தயார் என்று அர்த்தமல்ல.

எழுத வேண்டும் ,அறிய படாத பாடலாசிரியர்களை அறிமுகம் செய்ய வேண்டும் என்ற உங்கள் நல்லெண்ணத்திற்கு என் வாழ்த்துக்கள்.

ஆனால் பொது பார்வைக்கு வைக்க படும் போது எழுத்திற்கு பொறுப்புணர்வு,புரிதல்,உண்மை தன்மை, இவை கலக்க வேண்டும்.

காமாட்சி எழுதிய தனிமையிலே பாடல் குறிக்கவே படவில்லையென்றால் அவரை பற்றி எழுதி என்ன பிரயோசனம்?

அதே மாதிரி முழு பாடலையும் எழுதி பிரதிஎடுக்காமல், அந்த பாடலாசிரியரின் பிரத்யேக திறமை,குணநலன்கள், பாடலின் முக்கிய பகுதி என்று போனால் சிறப்பு.

உதாரணம் முகத்தில் முகம் பார்க்கலாம், இந்த ஒரு வரி ,பிறகு இகத்தில் இருக்கும் சுகம் எத்தனை ஆனாலும் இருவர்க்கும் பொதுவாக்கலாம்,அதன் எண்ணிக்கை விரிவாக்கலாம் ,இது போதுமே?

வாலியின் தன்னுயிர் பிரிவதை பார்த்தவரில்லை,என்னுயிர் பிரிவதை பார்த்து நின்றேன்,இந்த ஒரு வரிதான் பாடலின் சிறப்பு.

உதாரணம் மட்டுமே. வெறும் விவரணை அடுக்குகளுக்கு விக்கி போதுமே?

அதனால்தான் ,இளைஞர்கள் கூரிய பார்வையின்றி ,மொக்கையாக ஜல்லியடித்து ,பீற்றி கொள்வதை விரும்பாதவன் நான். ஆனால் ,உங்களை சிறிது மாற்றி எழுத்தில் மெருகு கூட்டி ,பொறுப்புணர்வோடு எழுதினால் புளகாங்கிப்பவனும் நான்தான். பிரபுராம்,வெங்கி ராம் போன்றோர் சிறந்த உதாரணங்கள்.இவர்கள் கருத்துக்கள் சிலவற்றோடு நான் முரண் பட்டாலும் , எங்களுக்குள் விவாதங்கள் வந்தாலும் ,அது ரசனைக்குரியதே.இவர்கள் ,இளைய தலைமுறை எழுத வேண்டிய முறை,கூரிய பார்வை,பண்பட்ட எழுத்து திறனுக்கு சில உதாரணங்கள்.

rajeshkrv
15th March 2015, 07:44 AM
ராஜேஷ்,

இங்கிருக்கும் யாரின் மீதும் எனக்கு தனி பட்ட விரோதமோ,வெறுப்போ கிடையாது. எனக்கு பட்டதை எழுதுவேன். பிடித்தால் பிடித்தது. இல்லையென்றால் இல்லை.

நான் சொல்ல வருவது என்னவென்று புரிந்து கொள்ளுங்கள்.

சாரு நிவேதிதா என்ற எழுத்தாளர் சொல்லுவார்.

சில சமயம் 10 மாத ஆண் குழந்தைக்கு கூட விறைப்பு ஏற்படலாம். ஆனால் அது கல்யாணத்திற்கு தயார் என்று அர்த்தமல்ல.

எழுத வேண்டும் ,அறிய படாத பாடலாசிரியர்களை அறிமுகம் செய்ய வேண்டும் என்ற உங்கள் நல்லெண்ணத்திற்கு என் வாழ்த்துக்கள்.

ஆனால் பொது பார்வைக்கு வைக்க படும் போது எழுத்திற்கு பொறுப்புணர்வு,புரிதல்,உண்மை தன்மை, இவை கலக்க வேண்டும்.

காமாட்சி எழுதிய தனிமையிலே பாடல் குறிக்கவே படவில்லையென்றால் அவரை பற்றி எழுதி என்ன பிரயோசனம்?

அதே மாதிரி முழு பாடலையும் எழுதி பிரதிஎடுக்காமல், அந்த பாடலாசிரியரின் பிரத்யேக திறமை,குணநலன்கள், பாடலின் முக்கிய பகுதி என்று போனால் சிறப்பு.

உதாரணம் முகத்தில் முகம் பார்க்கலாம், இந்த ஒரு வரி ,பிறகு இகத்தில் இருக்கும் சுகம் எத்தனை ஆனாலும் இருவர்க்கும் பொதுவாக்கலாம்,அதன் எண்ணிக்கை விரிவாக்கலாம் ,இது போதுமே?

வாலியின் தன்னுயிர் பிரிவதை பார்த்தவரில்லை,என்னுயிர் பிரிவதை பார்த்து நின்றேன்,இந்த ஒரு வரிதான் பாடலின் சிறப்பு.

உதாரணம் மட்டுமே. வெறும் விவரணை அடுக்குகளுக்கு விக்கி போதுமே?

அதனால்தான் ,இளைஞர்கள் கூரிய பார்வையின்றி ,மொக்கையாக ஜல்லியடித்து ,பீற்றி கொள்வதை விரும்பாதவன் நான். ஆனால் ,உங்களை சிறிது மாற்றி எழுத்தில் மெருகு கூட்டி ,பொறுப்புணர்வோடு எழுதினால் புளகாங்கிப்பவனும் நான்தான். பிரபுராம்,வெங்கி ராம் போன்றோர் சிறந்த உதாரணங்கள்.இவர்கள் கருத்துக்கள் சிலவற்றோடு நான் முரண் பட்டாலும் , எங்களுக்குள் விவாதங்கள் வந்தாலும் ,அது ரசனைக்குரியதே.இவர்கள் ,இளைய தலைமுறை எழுத வேண்டிய முறை,கூரிய பார்வை,பண்பட்ட எழுத்து திறனுக்கு சில உதாரணங்கள்.

writing style differs gopal.
anyways i'm not going to argue here .

Gopal.s
15th March 2015, 09:32 AM
writing style differs gopal.
anyways i'm not going to argue here .

But there should be some Style ,Form and content. Isn't it?

rajeshkrv
16th March 2015, 07:25 AM
But there should be some Style ,Form and content. Isn't it?

everyone creates their own not from someone's judgement or measurement.

Gopal.s
16th March 2015, 08:17 AM
திரியின் முக்கியத்துவமே புரியாமல் , வெறுமே பரஸ்பரம் ஆஹா ஓஹோ என்று ஒருவரையொருவர் சொரிந்து கொடுப்பதாக மாற்ற பட்டு விட்டது. (முக்கால்வாசி நேரம் படிக்காமலே).ராஜேஷ், நீங்கள் மற்றவர் பதிவுகளை படிப்பதேயில்லை. எப்படி உங்களுக்கு அறிவு விசாலமடையும்?



திரி என்பது பகிர்தல் ,விமரிசத்தல் என்பதை விட விவாத களம். விவாதிப்பதற்கு முதல் தேவை மற்றவர் எழுதியதை படித்தல்.இது ஒரு தார்மீக கடமை. நான் இந்த திரிகளின் 100% விஷயங்களை முழுவதும் படித்துள்ளேன். என் நேரத்தை செலவிட்டுள்ளேன். என் ஒரு மணி நேரம் என்பது உங்கள் இந்திய மதிப்பு 3000 ரூபாய்க்கு சமம். எழுத பட்ட விஷயம் உவப்பாக இல்லையென்றால் ,விமரிசிக்க, மேம்படுத்த உரிமையுண்டு. தாண்டி போவதுதானே என்று நீங்கள் கேட்கலாம். திரி என்பது ஹோட்டல் போன்றதல்ல. வெளியில் பொதுவில் வைக்க படும் நீர் மோர் பந்தல். இதில் ஏதாவது கேடு நேர்ந்தால் ,கொடுத்தவர் பொறுப்பெற்றே ஆக வேண்டும்.



திரியில் ,முக்கால்வாசி ஜென்மங்கள் படிக்காமலே ஜல்லியடித்து, மோசமான பதிவுகளையும் அளிக்கும் போது , என் திறம்,நேரம்,அறிவு,உழைப்பு செலவழித்து எழுதும் எனக்கு,எல்லா அபத்தங்களையும் படித்து தொலையும் எனக்கு ,சொல்லும் உரிமை கூடவா இல்லை?



ராஜேஷ், நீங்கள் எழுதும் திறன் கொண்டவர் இல்லை. நல்ல பதிவுகளை படித்து ,அதை பற்றி எழுதி பழகுங்கள்.

நான் உங்கள் முகநூல் எழுத்துக்களை முழுவதும் அன்றே சகித்து படித்தேன்.எனக்கு இது அவசியமே இல்லை. ஒரு வரி கூட புது தகவல் இல்லை.(கிடைத்த புது தகவல்கள் தவறானவை மட்டுமே). ஆனால் விஷயம் தெரிந்து கொள்ள வேண்டிய நிலையில் உங்கள் நீங்கள், எதையுமே படிக்காமல் , சுசிலாவின் மூன்றாந்தர ,அயல் மொழி பாடல்களை போட்டு எங்களை பிராண்டி எடுத்தீர்கள்.



தயவு செய்து,உங்களை மேம்படுத்தி கொண்டால் நலம்.எழுத்தாளர் முதலில் நினைக்க வேண்டியது,வாசகர்களை. எழுத்து என்பது மைதுனம் அல்லது வாந்தி போன்றதல்ல. நன்கு தேர்ந்து சமைக்க பட்டு பரிமாறும் உணவு போன்றது. சற்றே பொறுப்புடன் செயல் படவும்.

rajeshkrv
16th March 2015, 09:51 AM
திரியின் முக்கியத்துவமே புரியாமல் , வெறுமே பரஸ்பரம் ஆஹா ஓஹோ என்று ஒருவரையொருவர் சொரிந்து கொடுப்பதாக மாற்ற பட்டு விட்டது. (முக்கால்வாசி நேரம் படிக்காமலே).ராஜேஷ், நீங்கள் மற்றவர் பதிவுகளை படிப்பதேயில்லை. எப்படி உங்களுக்கு அறிவு விசாலமடையும்?



திரி என்பது பகிர்தல் ,விமரிசத்தல் என்பதை விட விவாத களம். விவாதிப்பதற்கு முதல் தேவை மற்றவர் எழுதியதை படித்தல்.இது ஒரு தார்மீக கடமை. நான் இந்த திரிகளின் 100% விஷயங்களை முழுவதும் படித்துள்ளேன். என் நேரத்தை செலவிட்டுள்ளேன். என் ஒரு மணி நேரம் என்பது உங்கள் இந்திய மதிப்பு 3000 ரூபாய்க்கு சமம். எழுத பட்ட விஷயம் உவப்பாக இல்லையென்றால் ,விமரிசிக்க, மேம்படுத்த உரிமையுண்டு. தாண்டி போவதுதானே என்று நீங்கள் கேட்கலாம். திரி என்பது ஹோட்டல் போன்றதல்ல. வெளியில் பொதுவில் வைக்க படும் நீர் மோர் பந்தல். இதில் ஏதாவது கேடு நேர்ந்தால் ,கொடுத்தவர் பொறுப்பெற்றே ஆக வேண்டும்.



திரியில் ,முக்கால்வாசி ஜென்மங்கள் படிக்காமலே ஜல்லியடித்து, மோசமான பதிவுகளையும் அளிக்கும் போது , என் திறம்,நேரம்,அறிவு,உழைப்பு செலவழித்து எழுதும் எனக்கு,எல்லா அபத்தங்களையும் படித்து தொலையும் எனக்கு ,சொல்லும் உரிமை கூடவா இல்லை?



ராஜேஷ், நீங்கள் எழுதும் திறன் கொண்டவர் இல்லை. நல்ல பதிவுகளை படித்து ,அதை பற்றி எழுதி பழகுங்கள்.

நான் உங்கள் முகநூல் எழுத்துக்களை முழுவதும் அன்றே சகித்து படித்தேன்.எனக்கு இது அவசியமே இல்லை. ஒரு வரி கூட புது தகவல் இல்லை.(கிடைத்த புது தகவல்கள் தவறானவை மட்டுமே). ஆனால் விஷயம் தெரிந்து கொள்ள வேண்டிய நிலையில் உங்கள் நீங்கள், எதையுமே படிக்காமல் , சுசிலாவின் மூன்றாந்தர ,அயல் மொழி பாடல்களை போட்டு எங்களை பிராண்டி எடுத்தீர்கள்.



தயவு செய்து,உங்களை மேம்படுத்தி கொண்டால் நலம்.எழுத்தாளர் முதலில் நினைக்க வேண்டியது,வாசகர்களை. எழுத்து என்பது மைதுனம் அல்லது வாந்தி போன்றதல்ல. நன்கு தேர்ந்து சமைக்க பட்டு பரிமாறும் உணவு போன்றது. சற்றே பொறுப்புடன் செயல் படவும்.

i did put an end right there but not sure why are you dragging .. why should i write the way you like or some one like
i've been reading posts and i write in a style. many of your posts also are very dragging and pointless so at times that happens. not everytime everybody is right. All i'm saying is remove your critic spectacle and try to encourage others/ budding writers rather than bashing them at once.. using harsh words doesnt help anything but counter argument.. so let's leave this topic right here. I did not post my link here for you read (you dont need to bear but close the FB link , problem would have ended right there). It was for Ci.Ka who asked the link. you didnt like it that's fine. When it's written in public many will like and many might not. that's fine..

Anyways i dont want to drag this anymore, I have a way of writing and and i'll try to improve .. but i write for my own and not to please anyone.

rajeshkrv
16th March 2015, 09:54 AM
Cika here is a kannada song for you.

Kannada version of Thamarapoo kulathile

https://www.youtube.com/watch?v=5UZ9HtTG1Aw

kalnayak
16th March 2015, 03:12 PM
மெகாஹிட் நிலாப் பாடல் 41: "அந்த நிலாவத்தானே நான் கையிலே பிடிச்சேன், என் ராசாவுக்காக"
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------
பிரபல தமிழ் தொலைக்காட்சி நிலையத்தின் பாடகர்களை தேர்ந்தெடுக்கும் நிகழ்ச்சி. கேரளத்திலிருந்து ஒரு ஆண் தன் தங்கை மகளுடன் முதல் முறையாக தொலைபேசியில் இந்த நிகழ்ச்சிக்காக பேசுகிறார். உரையாடல் மலையாளத்தில்தான். அவர் தன் தங்கை மகளை 'நீ எனக்காக முதல் மரியாதை படத்திலிருந்து 'அந்த நிலாவைதானே கையிலே பிடிச்சேன்' பாடலை பாடுகிறாயா?" என்று கேட்கிறார். தமிழ் பேசத் தெரியாதவரை கூட இந்த பாடல் 25 மேல் கழித்தும் தன் வசம் வைத்திருந்தது என்பதுதான் இந்த பாடலின் சிறப்பு.இப்படித்தான் பலரிடமும் இந்த பாடல் நிறைந்திருக்கிறது.

இளையராஜா தன் இசையில் சித்ராவுடன் பாடியிருந்தார். ரஞ்சனி மற்றும் தீபக் என்ற நடிகர் நடித்திருந்தார். இன்னும் இந்த திரைபடம் மூலமாக இந்த பாடலில் இவர்கள் வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறார்கள். பாடலை எழுதியவர் வைரமுத்து.

பொதுவாக பாடல்களில் காதலன்தான் காதலியை நிலாவென்றோ, நிலவுடன் ஒப்பிட்டோ பாடுவதாக இருக்கும். பெண்களும் சில நேரம் நிலவை தூதாக அனுப்ப, இல்லை சாட்சியாக அனுப்பிவைக்க உபயோகித்து பாடுவார்கள். இங்கே சற்று வித்தியாசமாகத்த்தான் கவிஞர் யோசித்து ஆனால் சற்றும் வித்தியாசமில்லாமல் அதே காதலுக்குத்தான் பயன்படுத்தியிருக்கிறார்.

அந்த நிலாவ தான்… நான் கையில புடிச்சேன்… என் ராசாவுக்காக
அந்த நிலாவ தான் நான் கையில புடிச்சேன் என் ராசாவுக்காக (2)

எங்க எங்க கொஞ்சம் நான் பாக்கறேன்
கண்ண மூடு கொஞ்சம் நான் கட்டுறேன்(2)

அந்த நிலாவ தான் நான் கையில புடிச்சேன் என் ராசாத்திக்காக…

மல்லு வேட்டி கட்டி இருக்கு
அது மேல மஞ்ச என்ன ஒட்டி இருக்கு
முத்தழகி முத்தம் குடுக்க
அது மேல மஞ்ச வந்து ஒட்டிகிருச்சி
மார்கழி மாசம் பார்த்து மாருல குளிராச்சு
ஏதுடா வம்பா போச்சி லவுக்கையும் கெடயாது
சக்கம்பட்டி சேலை கட்டி பூத்திருக்கு பூஞ்சோலை
பூவு ஒன்னு காண்ணடிச்சா வண்டு வரும் பின்னால
எக்கு தப்பு வேணாம் ம்ம்..

அந்த நிலாவ தான் நான் கையில புடிச்சேன் என் ராசாத்திக்காக

எங்க எங்க கொஞ்சம் நான் பாக்கறேன்
கண்ண மூடு கொஞ்சம் நான் காட்டறேன்(2)

அந்த நிலாவ தான் நான் கையில புடிச்சேன்.. என் ராசாத்திக்காக..

ரத்தினமே முத்தம் வைக்கவா
அதுக்காக பட்டணம் போய் வக்கீல் வைக்கவா
வெக்கதையும் ஒத்தி வைக்கவா
அதுக்காக மந்தையில பந்தி வைக்கவா
ஓடிவா ஓடை பக்கம் ஒளியலாம் மெதுவாக
அதுக்குள்ள வேணாமுங்க ஆளுக வருவாங்க
காத்தடிச்சா தாங்காதடி மல்லிகப்பூ மாராப்பு
கையிருக்கு காவலுக்கு வேணாமுங்க வீராப்பு
போடி புள்ள எல்லாம் டூப்பு….

அந்த நிலாவ தான் நான் கையில புடிச்சேன்… என் ராசாவுக்காக (2)


இதோ காணொளிக் காட்சி.

https://www.youtube.com/watch?v=kKYGde-3zbQ

kalnayak
16th March 2015, 05:31 PM
நிலாப் பாடல் 42: "வாராயோ வெண்ணிலாவே?"
-----------------------------------------------------------------------
பாடியவர்: ஏ.எம். ராஜா, பி. லீலா
இயற்றியவர்: தஞ்சை என். ராமையா தாஸ்
இசை: எஸ். ராஜேஸ்வர ராவ்
திரைப்படம்: மிஸ்ஸியம்மா

அற்புதமான ஒரு மெலோடி பாட்டு நல்லதொரு திரைப்படத்தில். என்ன இனிமையாய் ஒலிக்கிறது பாருங்களேன். திரைப்படத்தோடு பார்க்கும்போது இன்னும் அது அதிகரிக்கும். ஜெமினி கணேசன் மற்றும் சாவித்திரி அழகாக நடித்திருக்கிறார்கள். காதல் பாட்டு(?) படம் பார்த்தால் புரியும். இங்கு வெண்ணிலாவை அழைத்து தங்களின் கதையை சொல்கிறார்கள்.

பாட்டு வரிகள்:
-----------------------

வாராயோ வெண்ணிலாவே? கேளாயோ எங்கள் கதையே?
வாராயோ வெண்ணிலாவே?
வாராயோ வெண்ணிலாவே? கேளாயோ எங்கள் கதையே?
வாராயோ வெண்ணிலாவே?
அகம்பாவம் கொண்ட சதியாள் அறிவால் உயர்ந்திடும் பதி நான்
அகம்பாவம் கொண்ட சதியாள் அறிவால் உயர்ந்திடும் பதி நான்
சதி பதி விரோதம் மிகவே சிதைந்தது இதந்தரும் வாழ்வே

வாராயோ வெண்ணிலாவே? கேளாயோ எங்கள் கதையே?
வாராயோ வெண்ணிலாவே? கேளாயோ எங்கள் கதையே?
வாராயோ வெண்ணிலாவே?

வாக்குரிமை தந்த பதியால் வாழ்ந்திடவே வந்த சதி நான்
வாக்குரிமை தந்த பதியால் வாழ்ந்திடவே வந்த சதி நான்
நம்பிடச் செய்வார் நேசம் நடிப்பதெல்லாம் வெளி வேஷம்

வாராயோ வெண்ணிலாவே? கேளாயோ எங்கள் கதையே?
வாராயோ வெண்ணிலாவே?

தன் பிடிவாதம் விடாது என் மனம் போல் நடக்காது
தன் பிடிவாதம் விடாது என் மனம் போல் நடக்காது
தமக்கென எதுவும் சொல்லாது நம்மையும் பேச விடாது

வாராயோ வெண்ணிலாவே? கேளாயோ எங்கள் கதையே?
வாராயோ வெண்ணிலாவே?

அனுதினம் செய்வார் மோடி அகமகிழ்வார் போராடி
அனுதினம் செய்வார் மோடி அகமகிழ்வார் போராடி
இல்லறம் இப்படி நடந்தால் நல்லறமாமோ நிலவே

வாராயோ வெண்ணிலாவே? கேளாயோ எங்கள் கதையே?
வாராயோ வெண்ணிலாவே?

காணொளிக் காட்சி:
-----------------------------
https://www.youtube.com/watch?v=oRrnQg4SboQ

chinnakkannan
16th March 2015, 06:17 PM
வீட்டு பிசியில் ஜெகெப்ரோவின்ஸ்கி டாட் காம் என்பது போல ஒரு வைரஸ் அட்டாக் செய்துவிட நேற்று அதை துவம்சம் செய்யப்பார்த்து முடியவில்லை..எனில் இங்கு வரவும் இயலவில்லை..

வழக்கம்போல வேலையில் இன்று கொஞ்ச்ம் பிஸி மீட்டிங்க்ஸ்...என ..

தாங்க்ஸ் ஃபார்த கன்னடப் பாட்டு ராஜேஷ்..

கல் நாய்க் வாங்க.. அ.நி.கை பி பாட்டு பிடிக்கும்..கி.ராஜ நாராயணனின் கோபல்ல கிராமம்(என நினைக்கிறேன்) அதில் ஒரு சிறுகதை மாதிரி வரும் - இந்த ரஞ்சனி தீபக் எபிசோட்..(என நினைக்கிறேன்)..படம் பார்த்த போது (கோபல்ல கிராமம் படிக்கவில்லை) அட என இருந்தது.. ஜாமி எனக்குஒரு உம்ம தெரிஞ்சாவணும் எனப் புலம்பும் செங்கோடன்(?) கதாபாத்திரம் (அந்த ரஞ்சனியின் அப்பா) உருக்கமாய் இருக்கும்..ப்ளஸ் நீதி தவறாத ந.தி.. ம்ம்

வாராயோ வெண்ணிலாவேயும் எனக்குப் பிடிக்கும்..ம்ம் கவிஞர் பேர்லாம் போட ஆரம்பிச்சுட்டீங்க :) முடிந்தால் ஈவ்னிங்க்..ஆர் டுமாரோ..ஓகேயா..:)

kalnayak
16th March 2015, 06:27 PM
Double OK!!!

rajeshkrv
16th March 2015, 10:53 PM
Kalnayak,

Nila padalgal thoguppu arumai..

thanjai ramiah doss was aasthanam for all vijaya vauhini .. Nagireddy-chakrapani always opted thanjai ramiahdoss for Dialogues and Songs.
Vaarayo vennilave is a fantastic song by him

chinnakkannan
17th March 2015, 11:27 AM
ஹாய் குட்மார்னிங்க் ஆல்..


ம்ம் காலையில் தினமல்ர் பார்த்தா இயக்குனர் அமீர் ஜான் மறைவு.. எனத்தகவல்..அவர் ஆத்மா சாந்தியடைவதாக..

அவரது படங்கள் பூவிலங்கும் வண்ணக் கன்வுகளுக்கும் முன் என் நினைவில் வந்தது புதியவன்..கதை வெகு சுமார் தான்.. காதல்கதை முரளி ரெட்டை வேடம் என்று எங்கோ ஆரம்பித்து எங்கிட்டோ போகும் கதை.. முரளி அறிமுகம் என நினைக்கிறேன்..கல்கத்தாவிஸ்வனாதன் நிழலாய் நினைவில் ப்ளஸ் ஒரு புது முகம் அனிதா (பிற்காலத்தில் நடிகர் சுரேஷின் மனைவியாகி பின் விவாகரத்தும் ஆனது என நினைக்கிறேன்..)

ஆனால் இந்தப் பாட்டு எனக்கு ப் பிடிக்கும்..படத்தில் ஒரு முறை பின் ஓரிருமுறை கேட்டிருக்கிறேன் அவ்வளவு தான் அது நினைவில்..

வி.எஸ். நரசிம்மன் இசையில் ஜேசுதாஸ்

நானோ கண் பார்த்தேன்
நீயோ மண்பார்த்தாய்
பேசவா பெண்ணே
நாள் பார்க்கும் முன்னே..

இருதயம் ஏனோ உறங்கவில்லை
இமைகளும் கீழே இறங்கவில்ல
புதிதாய்ப் பிறந்தேன் இது நானா நானா

உயிரைச் சுடுதே இது காதல் தானா
நீயும் என்போல் தானா..

https://www.youtube.com/watch?v=jbQFQgyfLnI

வண்ணக் கனவுகள் கொஞ்சம் யோசிக்க வேண்டும் மறந்து விட்டது பாடல்களே இல்லாத படம்.. பூவிலங்கு - போட்டேனே பூவிலங்கு மட்டும் நினைவில்!

பின்ன வாரேன்..

chinnakkannan
17th March 2015, 11:32 AM
அதாகப் பட்டது லோகத்துல கண்ணா இருக்கானே..(அடியேன் தான்) கொஞ்சம் கஞ்சூஸ் மார்வாடி..(ஒரு சில விஷயங்கள்ல) ஏன்னாக்க

அழகா..
தான் நோக்குங்கால் நில நோக்கும் நோக்காக்கால் (எத்தனை கா)
தான் நோக்கி மெல்ல நகும் என

வள்ளுவர் சொன்னாற்போல ரெண்டு பாட்டு கிடச்சு ஒண்ண மட்டும் போட்டுட்டு விட்டுட முடியுமா என்ன..

உன்னை நான் பார்க்கும் போது
மண்ணை நீ பார்க்கின்றாயே
விண்ணை நான்பார்க்கும் போது
என்னை நீ பார்க்கின்றாயே
நேரிலே பார்த்தால் என்ன நிலவென்ன தேய்ந்தா போகும் ..(அச்சோ..கல் நாயக் பாட்டப் போட்டுட்டேனா என்ன :) )


பழைய்ய்ய்ய வாழ்க்க்கை ப் படகு.. தேவிகா ஜெமினி

நேற்றுவரை நீயாரோ நான் யாரோ

https://www.youtube.com/watch?v=2mFhVClnn4Q

mm ippo raj raj sir vanthu oru jughal banthi tharuvaar.. :)

kalnayak
17th March 2015, 06:49 PM
ஹாய் சி.க.,
நிலா இருக்கிற பாட்டை என்னைத் தவிர யாரும் போடக் கூடாதுன்னா நெறைய பாட்டுங்களை மத்தவங்க யாரும் போட முடியாது. அதுனால ஒரு ஒப்பந்தம் போட்டுக்கலாம். முதல் அடியில் நிலவைப் பற்றி வந்தால் அந்தப் பாட்டை நான் முடிக்கும் வரை போடாதீர்கள். இது ஒரு வேண்டுகோள்தான். நான் ஒருவழியா முடிச்சதுக்கப்புறம் யார் வேண்டுமானாலும் போடலாம். மத்ததெல்லாம் யார் வேண்டுமென்றாலும் எப்போது வேண்டுமென்றாலும் போடலாம் ஓகேயா?

மற்றபடி இந்த வாழ்க்கைப்படகு படத்தை இன்னும் நான் பார்க்கவில்லை. ஆனால் பாடல்களை கேட்டிருக்கிறேன். பார்க்கலாம் வாய்ப்பு கிடைக்காமலா போய்விடும்.

kalnayak
17th March 2015, 07:03 PM
நிலாப் பாடல் 43: "ஆடை கட்டி வந்த நிலவோ"
--------------------------------------------------------------------

பாடியவர்: டி.ஆர். மஹாலிங்கம், பி. சுசீலா
இசை: எம்.எஸ். விஸ்வநாதன், டி.கே. ராமமூர்த்தி
இயற்றியவர்: தஞ்சை டி.என். ராமையா தாஸ்

மற்றொரு T.R. மகாலிங்கம் அவர்களின் பிரபலமான பாடல். என்ன அற்புதமான மயக்கும் குரல். தஞ்சை டி.என். ராமையா தாஸ் அவர்கள்தான் இந்த பாடலையும் எழுதியிருக்கிறார். இந்த படம் விஜயா-வாஹினி சம்பந்தப்பட்டதா இல்லையாவென்று ராஜேஷ்தான் சொல்லவேண்டும். அப்படியே நாயகியின் பெயரையும் சொல்லுங்கள்.

கற்பனை பலமாகத்தான் இந்த பாடலில் உள்ளது. நிலாவே ஆடை கட்டிக் கொண்டு வந்ததாக சொல்லும் கவிஞரின் கற்பனை என்ன குறைவானதா?

ஆடை கட்டி வந்த நிலவோ?
கண்ணில் மேடை கட்டி ஆடும் எழிலோ?
இவள் ஆடை கட்டி வந்த நிலவோ?
கண்ணில் மேடை கட்டி ஆடும் எழிலோ? குளிர்
ஓடையில் மிதக்கும் மலர் ஜாடையில் சிரிக்கும் இவள்
காடு விட்டு வந்த மயிலோ நெஞ்சில்
கூடு கட்டி வாழும் குயிலோ?

துள்ளித் துள்ளி ஆடும் இன்ப லோக மங்கை
சொந்தமுள்ள ராணி இவள் நாக மங்கை
துள்ளித் துள்ளி ஆடும் இன்ப லோக மங்கை
சொந்தமுள்ள ராணி இவள் நாக மங்கை
எல்லையற்ற ஆசையில் ஓடி வந்தாள்
தள்ளி விட்டுப் போன பின் தேடி வந்தாள்
எல்லையற்ற ஆசையில் ஓடி வந்தாள்
தள்ளி விட்டுப் போன பின் தேடி வந்தாள்
கிளை தான் இருந்து கனியே சுமந்து
தனியே கிடந்த கொடி தானே
கண்ணாளனுடன் கலந்தனந்தமே பெற
காவினில் வாழும் கிளி நானே

துள்ளித் துள்ளி ஆடும் இன்ப லோக மங்க்கை
சொந்தமுள்ள ராணி இவள் நாக மங்க்கை

ஆ...ஆ..ஆ..
அந்தி வெய்யில் பெற்ற மகளோ குலுங்கும்
அல்லி மலர் இனத்தவளோ?
அந்தி வெய்யில் பெற்ற மகளோ குலுங்கும்
அல்லி மலர் இனத்தவளோ?
உந்தி உந்தி விழும் நீரலையில்
ஓடி விளையாடி மலர் சிந்தி வரும் தென்றல் தானோ?
இன்பம் தந்த மயில் இந்த மானோ?
ஆஹா அஹஹஹஹஹஹா ஓஹொஹோஹொஹோ..ம்ம்..லாலா..

அன்பு மனம் கூடுவதில் துன்பமில்லை
அஞ்சி அஞ்சி ஓடுவதில் இன்பமில்லை
வீணை மட்டும் இருந்தால் நாதமில்லை
மீட்டும் விரல் பிரிந்தால் கானமில்லை

இதயம் கனிந்து எதையும் மறந்து
இருவர் மகிழ்ந்து உறவாட
நன்னேரமிதே மனம் மீறிடுதே
நன்னேரமிதே மனம் மீறிடுதே
வன மாளிகை ஓரம் ஆடிடுவோம்
ஆ.. ஆ.ஆஆ..ஆஆ...

ஆடை கட்டி வந்த நிலவோ கண்ணில்
மேடை கட்டி ஆடும் எழிலோ? குளிர்
ஓடையில் மிதக்கும் மலர் ஜாடையில் சிரிக்கும் இவள்
காடு விட்டு வந்த மயிலோ?
நெஞ்சில் கூடு கட்டி வாழும் குயிலோ? முகில்
ஆடை கட்டி வந்த நிலவோ கண்ணில்
மேடை கட்டி ஆடும் எழிலோ?
--------------------------------------------------------------------------------

https://www.youtube.com/watch?v=G8QcPKPYc2Y

அமுதவல்லி அழகாய் இருந்தால் இப்படிதான் ஆடை கட்டி வந்த நிலவோ என்று சொல்வார்களோ?

rajeshkrv
17th March 2015, 08:00 PM
நிலாப் பாடல் 43: "ஆடை கட்டி வந்த நிலவோ"
--------------------------------------------------------------------

பாடியவர்: டி.ஆர். மஹாலிங்கம், பி. சுசீலா
இசை: எம்.எஸ். விஸ்வநாதன், டி.கே. ராமமூர்த்தி
இயற்றியவர்: தஞ்சை டி.என். ராமையா தாஸ்

மற்றொரு T.R. மகாலிங்கம் அவர்களின் பிரபலமான பாடல். என்ன அற்புதமான மயக்கும் குரல். தஞ்சை டி.என். ராமையா தாஸ் அவர்கள்தான் இந்த பாடலையும் எழுதியிருக்கிறார். இந்த படம் விஜயா-வாஹினி சம்பந்தப்பட்டதா இல்லையாவென்று ராஜேஷ்தான் சொல்லவேண்டும். அப்படியே நாயகியின் பெயரையும் சொல்லுங்கள்.

கற்பனை பலமாகத்தான் இந்த பாடலில் உள்ளது. நிலாவே ஆடை கட்டிக் கொண்டு வந்ததாக சொல்லும் கவிஞரின் கற்பனை என்ன குறைவானதா?

ஆடை கட்டி வந்த நிலவோ?
கண்ணில் மேடை கட்டி ஆடும் எழிலோ?
இவள் ஆடை கட்டி வந்த நிலவோ?
கண்ணில் மேடை கட்டி ஆடும் எழிலோ? குளிர்
ஓடையில் மிதக்கும் மலர் ஜாடையில் சிரிக்கும் இவள்
காடு விட்டு வந்த மயிலோ நெஞ்சில்
கூடு கட்டி வாழும் குயிலோ?

துள்ளித் துள்ளி ஆடும் இன்ப லோக மங்கை
சொந்தமுள்ள ராணி இவள் நாக மங்கை
துள்ளித் துள்ளி ஆடும் இன்ப லோக மங்கை
சொந்தமுள்ள ராணி இவள் நாக மங்கை
எல்லையற்ற ஆசையில் ஓடி வந்தாள்
தள்ளி விட்டுப் போன பின் தேடி வந்தாள்
எல்லையற்ற ஆசையில் ஓடி வந்தாள்
தள்ளி விட்டுப் போன பின் தேடி வந்தாள்
கிளை தான் இருந்து கனியே சுமந்து
தனியே கிடந்த கொடி தானே
கண்ணாளனுடன் கலந்தனந்தமே பெற
காவினில் வாழும் கிளி நானே

துள்ளித் துள்ளி ஆடும் இன்ப லோக மங்க்கை
சொந்தமுள்ள ராணி இவள் நாக மங்க்கை

ஆ...ஆ..ஆ..
அந்தி வெய்யில் பெற்ற மகளோ குலுங்கும்
அல்லி மலர் இனத்தவளோ?
அந்தி வெய்யில் பெற்ற மகளோ குலுங்கும்
அல்லி மலர் இனத்தவளோ?
உந்தி உந்தி விழும் நீரலையில்
ஓடி விளையாடி மலர் சிந்தி வரும் தென்றல் தானோ?
இன்பம் தந்த மயில் இந்த மானோ?
ஆஹா அஹஹஹஹஹஹா ஓஹொஹோஹொஹோ..ம்ம்..லாலா..

அன்பு மனம் கூடுவதில் துன்பமில்லை
அஞ்சி அஞ்சி ஓடுவதில் இன்பமில்லை
வீணை மட்டும் இருந்தால் நாதமில்லை
மீட்டும் விரல் பிரிந்தால் கானமில்லை

இதயம் கனிந்து எதையும் மறந்து
இருவர் மகிழ்ந்து உறவாட
நன்னேரமிதே மனம் மீறிடுதே
நன்னேரமிதே மனம் மீறிடுதே
வன மாளிகை ஓரம் ஆடிடுவோம்
ஆ.. ஆ.ஆஆ..ஆஆ...

ஆடை கட்டி வந்த நிலவோ கண்ணில்
மேடை கட்டி ஆடும் எழிலோ? குளிர்
ஓடையில் மிதக்கும் மலர் ஜாடையில் சிரிக்கும் இவள்
காடு விட்டு வந்த மயிலோ?
நெஞ்சில் கூடு கட்டி வாழும் குயிலோ? முகில்
ஆடை கட்டி வந்த நிலவோ கண்ணில்
மேடை கட்டி ஆடும் எழிலோ?
--------------------------------------------------------------------------------

https://www.youtube.com/watch?v=G8QcPKPYc2Y

அமுதவல்லி அழகாய் இருந்தால் இப்படிதான் ஆடை கட்டி வந்த நிலவோ என்று சொல்வார்களோ?

idhu pattu kottaiyin varigal

chinnakkannan
18th March 2015, 11:58 AM
ஹாய் கல் நாயக் ராஜேஷ் அண்ட் ஆல்..

//துள்ளித் துள்ளி ஆடும் இன்ப லோக மங்கை
சொந்தமுள்ள ராணி இவள் நாக மங்கை// இந்த வரிகள் பாடுவதைக் கேட்கும் போதே மனதுக்குள் ஒரு துள்ளல் வரும்..


நானும் பட்டுக்கோட்டையார் எழுதியது தானென்று கேள்விப் பட்டிருக்கிறேன்..சரி என கொஞ்சம் செக் பண்ண இணையத்தில் நுழைந்தால் தமிழிசை ப்ளாக்கில் தஞ்சை ராமையா தாஸ் இன்னும் சில இடங்களில் மருதகாசி பட் மோஸ்ட்லி பட்டுக்கோட்டையார் தான்..அதுவும் இந்தப் பாரா..’

“பட்டுக்கோட்டையாரின் துணைவியின் பதிவு..!

“எனக்கு பட்டுக்கோட்டை பக்கத்துல ஆத்திக்கோட்டைதான் சொந்த ஊர். எங்க அண்ணன் சின்னையனும்‘அவுக’ளோட அண்ணனும் சிங்கப்பூர்ல வேலை பார்க்கும்போது சிநேகிதமானவங்க. ‘எனக்கு ஒரு தங்கச்சி இருக்கா. அவளுக்கு கல்யாணம் பண்ணணும்னு எங்க அண்ணன்தான் சொல்லிருக்காக. அப்ப அவுக அண்ணன் ஒண்ணும் சொல்லலையாம்.

சிங்கப்பூர்லேர்ந்து லீவுல ஊருக்கு வரும்போது, தம்பியைக் கூட்டிட்டு என்னைப் பொண்ணு பார்க்க வந்துட்டார். அப்ப அவுக, ’அண்ணனுக்குதான் பொண்ணு பார்க்கப் போறோம்’னு நினைச்சுக்கிட்டு வந்தாகளாம். பொண்ணு பார்த்துட்டு ஊருக்குத் திரும்பும்போது, ‘பொண்ணு எப்படிடா இருக்கு’ன்னு அண்ணன் கேட்க, ’அழகாதான் இருக்கு’ன்னு இவுக சொல்லிருக்காக.‘உனக்குத்தான்டா இந்தப் பொண்ணு’னு அண்ணன் சொன்னதும், இவுகளுக்கு ரொம்ப சந்தோஷமாப் போச்சாம். அப்போ வீட்டுல வந்து எழுதுனதுதான், ஆடை கட்டி வந்த நிலவோ, கண்ணில் மேடைகட்டி ஆடும் எழிலோ பாட்டு. இப்போ தெரிஞ்சுக்கோங்க நாந்தான் ஆடைகட்டி வந்த நிலவு”என்று மலர்ந்து சிரிக்கிறார் கௌரவம்மாள்.

“அன்னைக்கு அவுக அண்ணன் பொஞ்சாதிக்கு வளைகாப்பு. அப்போ நான் கிண்டலா, ‘அக்காளுக்கு வளைகாப்பு. அத்தான் மொகத்துல பொன் சிரிப்பு’ன்னு சொன்னேன். இதை, ‘கல்யாணப் பரிசு’படத்துல, அவுக பல்லவியா போட்டு பாட்டா எழுதிட்டாக. ‘இது நீ எழுதுன பாட்டு. இந்தா பிடி சன்மானம்’னு அந்தப் பாட்டு எழுதுனதுக்குக் கிடைச்ச பணத்தை என் கையில கொடுத்தாக.//

நைஸ் இல்லியோ..

உடனே தப்பா எழுதிட்டேன்னுல்லாம் வருத்தப் படவேண்டாம் கல் நாயக்..ஜஸ்ட் தெரிஞ்சதை ஷேர் பண்ணிக்கறோம் அவ்வளவே..காலங்காலைல நிலாக் காட்டினதுக்குத் தாங்க்ஸ்..

//மற்றபடி இந்த வாழ்க்கைப்படகு படத்தை இன்னும் நான் பார்க்கவில்லை. ஆனால் பாடல்களை கேட்டிருக்கிறேன். பார்க்கலாம் வாய்ப்பு கிடைக்காமலா போய்விடும்.// கிட்டத்தட்ட கல்லூரிப்பருவத்தில் பார்த்தது.. மேட்னி ஷோ மீனாட்சி டாக்கீஸ் மதுரை.. படம் இரண்டே காலுக்கே போட்டுவிட்டார்கள் .. தென் வேகமாய் இண்ட்டர்வெல் (இதிலென்ன புதுமை என்கிறீர்களா..) ..நேரம் பார்த்தான் நாலரை.. இரண்டே கால் மணி நேரம் போனதே தெரியவில்லை..அப்புறம் முக்காலோ ஒருமணி நேரமோ படம். பாடல்கள் தேவிகா அஃப்கோர்ஸ் ஜெமினி நன்றாக நடித்திருப்பார்கள்..

ஆயிரம் பெண்மை மலரட்டுமே
நேற்று வரை நீயாரோ
சின்னச் சின்னக் கண்ணனுக்கு

எத்தனை தடவை கேட்டிருப்பேன் பார்த்திருப்பேன்..ம்ம் நேரம் கிடைக்கும் போது பாருங்கள் கல் நாயக்..

பின்ன வாரேன் :)

rajeshkrv
18th March 2015, 09:16 PM
hello CiKa

Gopal.s
18th March 2015, 09:28 PM
vaanga rajesh.

rajeshkrv
18th March 2015, 10:13 PM
vaanga rajesh.

vandhen gopal vandhen gopal

Gopal.s
19th March 2015, 03:03 AM
vandhen gopal vandhen gopal

ராஜேஷ்,

தங்களின் பண்பு மிகுந்த எதிர் வினைகளுக்கு நன்றி. எம்.எஸ்.வீ பற்றி எழுத பட்ட ஆய்வுகளை படித்து ,உங்கள் அபிப்ராயங்களை எழுதுங்கள்.இசை ஆர்வமும்,பாடலின் நுணுக்கமும் தெரிந்த தாங்கள் ,சற்று ஆழமாக எழுதலாமே என்ற ஆதங்கத்தின் வெளிப்பாடே. மற்ற படி என் பதிவுகளில் உள்நோக்கங்கள் இல்லை.

புரிந்து கொண்டு ,நட்பை தொடர்வதற்கு மீண்டும் நன்றி.

rajeshkrv
19th March 2015, 03:26 AM
ராஜேஷ்,

தங்களின் பண்பு மிகுந்த எதிர் வினைகளுக்கு நன்றி. எம்.எஸ்.வீ பற்றி எழுத பட்ட ஆய்வுகளை படித்து ,உங்கள் அபிப்ராயங்களை எழுதுங்கள்.இசை ஆர்வமும்,பாடலின் நுணுக்கமும் தெரிந்த தாங்கள் ,சற்று ஆழமாக எழுதலாமே என்ற ஆதங்கத்தின் வெளிப்பாடே. மற்ற படி என் பதிவுகளில் உள்நோக்கங்கள் இல்லை.

புரிந்து கொண்டு ,நட்பை தொடர்வதற்கு மீண்டும் நன்றி.

gopal sir , you are welcome. you are welcome to voice your opinion, all i request you is not to be harsh .. that's all

thanks. will read MSV related article and definitely post my comments .

chinnakkannan
19th March 2015, 10:30 AM
ஹாய் ராஜேஷ் கோபால் அண்ட் வரப்போகும் கல் நாயக்..:)

நேத்திக்கு வீட் கம்ப் க்ராஷ் ஆகிடுச்சு.. இன்னிக்கு ஈவினிங்க் தான் போய்பார்க்கணும்..இல்லைன்னா லேப் டாப் தான் ..(அதுல டைப்ப கொஞ்சம் டிஃபிகல்ட் என்கு) எப்படியும் பா க பா நாளைக்கு த் தொடர்வேன்..

kalnayak
19th March 2015, 05:13 PM
ராஜேஷ், கோபால் நீங்கள் இருவரும் சுமூகமாக உரையாடுவதை கண்டு எனக்கு மகிழ்ச்சி. இருவருக்கும் எனது நன்றிகள்.

kalnayak
19th March 2015, 05:23 PM
சி.க.,
"ஆடை கட்டி வந்த நிலவோ" பாடலின் பின் இவ்வளவு அழகான உண்மைக் காதல் கதையே இருக்கும் என்று எனக்குத் தெரியாது. தவறை சுட்டிக் காட்டிய ராஜேஷுக்கும் உங்களுக்கும் எனது நன்றி. "யாரைத்தான் நம்புவதோ கல்நாயக் நெஞ்சம்" என்று வலைத் தளங்களில் எழுதுவோரை நினைத்து எனக்கு பாடத் தோன்றுகிறது.

வாழ்க்கைப் படகு படத்தின் பாடல்கள் அத்தனையும் அவ்வளவு அருமை. எல்லாப் பாடல்களையும் கேட்டிருக்கிறேன். பாடல்களுக்காகத்த்தான் படத்தை பார்க்க விரும்பினேன். நிறைவேறவில்லை என்று சொல்லி இருந்தேன்.

kalnayak
19th March 2015, 05:55 PM
நிலாப் பாடல் 44: "ஓ வெண்ணிலா ஓ வெண்ணிலா, வண்ணப் பூச்சுடவா வெண்ணிலா"
---------------------------------------------------------------------------------------------------------------------------------

மக்கள் திலகமும், நாட்டியப் பேரொளியும் தோன்றும் நல்ல இனிமையான காதல் பாடல். பாடியவர்கள்: டி.எம். சௌந்தரராஜன், பி. சுசீலா. இசை: திரை இசைத் திலகம் K.V. மகாதேவன். விகிபேடியா சொல்வதின் படி கவியரசர்தான் திரைக்கதை மற்றும் பாடல்கள். எனவே அவர்தான் இந்த பாடலும் எழுதி இருக்க வேண்டும். காதலியை காதலன் வெண்ணிலாவாக சொல்வதைத்தான் இதுகாறும் பார்த்திருக்கிறோம். இங்கேதான் காதலி பதிலுக்கு காதலனை மன்னவா என்று கூறுவதைப் பார்க்கிறோம். ஆனால் மன்னா, அரசே என்று காதல் பாடல்கள் தேடினால் எத்தனை தேறுமோ தெரியவில்லை. பாவம் ஆண்கள் நாம்.

பாடல் வரிகள் இங்கே. காணொளிக் காட்சி அதற்கு கீழே

ஓ வெண்ணிலா ஓ வெண்ணிலா வண்ணப்
பூச்சூட வா வெண்ணிலா ஆஆஆஆ
ஓ வெண்ணிலா ஓ வெண்ணிலா வண்ணப்
பூச்சூட வா வெண்ணிலா ஆஆஆஆ
ஓ வெண்ணிலா

ஓ மன்னவா வா மன்னவா வண்ணப்
பூச்சூட வா மன்னவா ஆஆஆஆ
ஓ மன்னவா வா மன்னவா வண்ணப்
பூச்சூட வா மன்னவா ஆஆஆஆ
ஓ மன்னவா

நேற்று கனவாக நான் கண்ட இன்பம்
இன்று நனவாக நீ இங்கு வந்தாய்
நேற்று கனவாக நான் கண்ட இன்பம்
இன்று நனவாக நீ இங்கு வந்தாய்
ஆலிலை பனி போல நான் வாழ்ந்த வேளை
ஆலிலை பனி போல நான் வாழ்ந்த வேளை
அள்ளிய கைகள் உங்கள் கையல்லவா
அள்ளிய கைகள் உங்கள் கையல்லவா

ஓ வெண்ணிலா ஓ வெண்ணிலா வண்ணப்
பூச்சூட வா வெண்ணிலா ஆஆஆஆ
ஓ வெண்ணிலா

பஞ்சு மலர் மேனி பழகாத பெண்மை
பார்த்துக் கதை பேசும் பழம் போன்ற மென்மை
பஞ்சு மலர் மேனி பழகாத பெண்மை
பார்த்துக் கதை பேசும் பழம் போன்ற மென்மை
மன்னவர் திருமார்பில் கண் மூட வேண்டும்
மன்னவர் திருமார்பில் கண் மூட வேண்டும்
வாழ்வினில் வெற்றி கண்ட நாளல்லவா
வாழ்வினில் வெற்றி கண்ட நாளல்லவா

ஓ மன்னவா வா மன்னவா வண்ணப்
பூச்சூட வா மன்னவா ஆஆஆஆ
ஓ மன்னவா
ஓ வெண்ணிலா ஓ வெண்ணிலா வண்ணப்
பூச்சூட வா வெண்ணிலா ஆஆஆஆ
ஓ வெண்ணிலா

https://www.youtube.com/watch?v=PGvEySGEVqo

ராணி சம்யுக்தா என்பதினால்தான் காதலனை மன்னவா என்று சொன்னார் என எடுத்துக் கொள்வோம்.

rajraj
20th March 2015, 08:07 AM
From Kumudam

Miaw miaw poonaik kutti......

http://www.youtube.com/watch?v=gpDgoHre0u4


From Pooja ke phool

Miaw miaw meri Sakhi.........

http://www.youtube.com/watch?v=DnacDocV_Mo



...

chinnakkannan
22nd March 2015, 10:21 AM
hi all good morning

இன்னும் வீட்டுக்கம்ப்யூட்டருக்கு குணமாகவில்லை..எனில்..எழுத இயலவில்லை..பள்ஸ் ஊரிலிருந்துசகோதரிஅண்ட்குடும்பம் வந்திருக்கிறார்கள்.. எனில் விரைவில் வருவேன்..

ஓ ஓ வெண்ணிலா பிடிக்கும்.. மன்னவாஆ வா மன்னவா.. அந்தராகம் பிடிக்கும்.. நன்றி கல் நாயக்

ராஜ் ராஜ் சார்.. மியாவ் மியாவ் பூனைக்குட்டியும் பிடிக்கும்.. தாங்க்ஸ்..

rajeshkrv
24th March 2015, 09:05 AM
seekiram vaanga Cika

kalnayak
24th March 2015, 11:39 AM
நிலாப் பாடல் 45: "நிலவென்ன பேசும், குயிலென்ன பாடும்"
---------------------------------------------------------------------------------------

மீண்டும் மக்கள் திலகமும், நாட்டியப் பேரொளியும் இந்த நிலாப் பாடலுக்கு தோன்றுகிறார்கள். படத்திருகொரு நிலாப் பாடல் இருக்கும் என்று நான் நினைப்பதுண்டு. காதல் பாடல் என்றால் நிலா, மலர், இயற்கை, காற்று என்று போவார்கள். எனவே இரண்டாவது காதல் பாடலுக்கு முதல் பாடலில் சொன்னதை திரும்பவும் சொல்லாமல் வேறொன்றை தேடுவார்கள். இந்த பாடலுக்கு கவியரசர் அதை நினைக்கவில்லை போலிருக்கிறது. மறுபடி நிலாவிலேயே ஆரம்பிக்கிறார். இதுவும் நல்ல பாடல்தான். ஆனால் முந்தைய பாடல் போல் இல்லை.

பாடல் வரிகள்:
----------------------
நிலவென்ன பேசும் குயிலென்ன பாடும் மலரென்ன சொல்லும்
மனதிலேகதை பேசுமோ இன்பக் கவி பாடுமோ
இங்குகண்ணோடு கண் சொல்லும் மொழியிலே
தங்கச்சிலை போல உறவாடும் காளை
அழகில் விளையாடும் இவ்வேளை -
என்அழகில் விளையாடும் இவ்வேளை
வானகம் கீழே வையகம் மேலே
மாறுதல் போலவே தோன்றுவதாலே
( நிலவென்ன )


இரு கரை போல தனியாக இருந்தோம்
அக்கறையோடு இங்கே கலந்தோம்
வருமென்று எதிர்பார்க்கும் முன்னே
வரும் மழை போலே நீ வந்தாய் கண்ணே
கவலை அல்லவோ கொண்டு வந்தேன் -
நான்காதல் கதை இங்கே சொல்லித் தந்தேன்
பருவங்கள் ஒன்றாக மகிழும் நிலையில் -
நீலப்பட்டாடை போல் தோன்றும் வானோடு
( நிலவென்ன )
-----------------------------------------------------------------------

காணொளிக் காட்சியைப் பாருங்கள்.

https://www.youtube.com/watch?v=X4Pex1fh0zs

அதே படம்தான், அதே பாடலாசிரியர், அதே இசையமைப்பாளர். அதே-ன்னு பெயர் வைத்த ஒருவர் தன் பெயரை வைத்து படம் எடுத்து பாடல் எழுதி இசையமைத்தாரா என்று கேட்காதீர்கள். அதே பாடகர்கள் என்று சொல்வதில் உங்கள் சந்தேகம் தீர்ந்திருக்கும் என்று நம்புகிறேன்.

kalnayak
24th March 2015, 11:47 AM
சி.க. சீக்கிரம் வாங்க.
உங்க வீட்டு கணினி நன்றாக உள்ளதா? (காலக் கொடுமை!!!)
வீட்டில் அனைவரும் நலமா? விருந்தினர்கள் மகிழ்ச்சியா?

எனக்குத்தான் ராகங்கள் தெரியாதென்பது உங்களுக்குத் தெரியுமே. நான் சொல்லுகின்ற பாடல்களின் ராகங்களை நீங்கள் சொல்லலாமே.*

kalnayak
24th March 2015, 11:58 AM
நிலாப் பாடல் 46: "என் இனிய பொன் நிலாவே"
-----------------------------------------------------------------------

இதுவும் மிகப் புகழ் பெற்ற நிலாப் பாடல்தான். இசைஞானி இளையராஜாவின் இசைப் பயணத்தில் முக்கிய இடம் வகிக்கக் கூடியது. ஆம் அவரின் நூறாவது படத்தில் இடம் பெற்ற பாடல். அவரது இருநூறாவது படத்தின் பெயர் "ஆயிரம் நிலவே வா" இதையெல்லாம் பார்க்கும் போது நிலா அவரது படங்களில் பாடல்களில் எவ்வளவு முக்கிய இடம் பெறுகிறது என்பது தெரிகிறது!!! (விட்டால் ஒருவர் இதை வைத்து ஆராய்ச்சி கூட செய்து விடுவார். நமக்கு அது வேண்டாம்.) பிரதாப் போத்தன், ஷோபா நடிப்பில் உருவான பாலு மகேந்திராவின் இயக்கத்தில் வந்த அருமையான பாடல்.KJ ஜேசுதாஸ் பாடிய கங்கை அமரனின் பாடல்.இசை இந்த பாடலில் என்னமாக நர்த்தனம் புரிகிறது!!!

பாடல் வரிகள் இதோ:
--------------------------------
என் இனிய பொன் நிலாவே
பொன்நிலவில் என் கனாவே
நினைவிலே புது சுகம் ....
தொடருதே தினம் தினம் ....
(என் இனிய..)

பன்னீரைத் தூவும் மழை ஜில்லென்ற காற்றின் அலை
சேர்ந்தாடும் இன்னேரமே
என் நெஞ்சில் என்னென்னவோ வண்ணங்கள் ஆடும் நிலை
என் ஆசை உன்னோரமே
வெண்நீலவானில் அதில் என்னென்ன மேகம்
ஊர்கோலம் போகும் அதில் உள்ளாடும் தாகம்
புரியாதோ என் எண்ணமே
அன்பே.....
(என் இனிய..)

பொன்மாலை நேரங்களே என் இன்ப ராகங்களே
பூவான கோலங்களே
தென் காற்றின் இன்பங்களே தேனாடும் ரோஜாக்களே
என்னென்ன ஜாலங்களே
கண்ணோடு தோன்றும் சிறு கண்ணீரில் ஆடும்
கைசேரும் காலம் அதை என் நெஞ்சம் தேடும்
இது தானே என் ஆசைகள்
அன்பே...
(என் இனிய..)
--------------------------------------------------------------------------------

காணொளிக் காட்சி:

https://www.youtube.com/watch?v=Y8lT9PTwDbs

மூடு பனி

chinnakkannan
24th March 2015, 12:34 PM
ராஜேஷ், கல் நாயக் வந்துட்டேன்.. ஆனா ஃபுல் ஃப்ளெட்ஜா வர்ற கொஞ்சம் டயம் ஆகும்..ஷமிக்கணும் :)

படர்ந்து விரிந்தே பரவுகின்ற பூவாய் (மல்லிகையாய்)
தொடரும் நிலாப்பாக்கள் தூள்..!

சரி சரி வந்ததுக்கு பருவம் கனிந்து ஜெயஸ்ரீன்னு ஒரு பெண்மகள் வந்துட்டாங்க..

பருவம் கனிந்து வந்த பாவை வருக
புடவை அணிந்து வந்த பூவே வருக..

(ஜெயஸ்ரீ அழகுன்னுசொல்ல முடியாது..ஆனாலும் கொஞ்சம் துருதுரு முகம்..இல்லியோ)

(ஏற்கெனவே போட்டாச்னு நினைக்கறேன்)

https://www.youtube.com/watch?v=dcGlb_CgQEE


இந்த யாரோ எழுதிய கவிதை பற்றி முன்பே எழுதியதாய் நினைவு..இருந்தாலும் என் நினைவிலிருந்து அகெய்ன் ரிபீட்ட்..

வாஸந்தி எழுதி ஜனனம் என குறு நாவல் இலவச இணைப்பாய் ஆனந்த விகடனோடு வந்தது.. மாருதி ஓவியம் ..கஷ்கு முஷ்கு கன்னம் கொண்டு பெரீய்ய நதி போல அகலக் கண்கள் கொண்டு அழகழகாய் வண்ணப் புடவைகளுடன் இருக்கும் பெண்ணின் ஓவியங்கள்..கதையின் ஹீரோயின் கதைப்படி ஒரிஸ்ஸாவிலோ ஏதோ ஒரு வடமானிலத்திலோ சுற்றுலா போவதற்காக பஸ்ஸில் வர...பஸ் சாலையில் வந்துக் கொண்டிருக்கும் போதே எங்கிட்டிருந்தோ இருக்கும் நதியில் வெள்ளமேற்பட்டு ஜோவென ஏறி ஏறி பாலத்தில் ஏறி பஸ்ஸை அடித்துக் கொண்டு சென்று விட..பஸ்ஸில் வந்த அனைவரும் மரிக்க ஹீரோயின் மட்டும் பிழைத்து அருகில் இருந்த தமிழ் பேசும் ஹீரோவின் ஹாஸ்பிடலில் அட்மிட் ஆகிறார்..

இளம் டாக்டர், பிரம்மச்சாரி, ஒரே ஒரு அம்மா ஒரு ஹாஸ்பிடல் என மக்களுக்கு சேவை செய்யும் ஹீரோ கிருஷ்ணகுமார்னு வெச்சுக்கலாமா.. இந்தப் பெண்ணைப் பார்க்க அந்தப் பெண் ஒரு பெரிய படகு விடக்கூடிய அளவிற்கு அகண்ட கண்கள் கொய்ங்க் கொய்ங்க் என விழித்து மிக அரதப் பழசான கேள்வி - நான் எங்க இருக்கேன்.. கரெக்ட்.. அந்தப் பெண்ணுக்கு அம்னீஷியா..

டாக்டர் மெல்ல மெல்ல அந்தப் பெண்ணைக் குணப்படுத்தி அவளது அழகு, அறிவு, அடக்கம் , அன்பு, அலங்காரமற்ற எளிமை, அணிவகுத்து மறுபடி மறுபடி பார்க்கத் தூண்டும் எழில் , அளவான பேச்சு என ஏகப் பட்ட “அ” க்களால் கவரப் பட்டு மனதைப் பறிகொடுத்து.. ஹாய் கவிதா ( டாக்டரே அவளுக்குச் சூட்டிய பெயர்) நான் உன்னைத் திருமணம் செய்து கொள்ளட்டுமா எனக் கேட்க இளம் கவிதையின் முகத்தில் தயக்கம் ப்ளஸ் கண்களில் சோகம்..

ஓஹ்.. டாக்டர்.. நான்.. ஒரு அனாதை..பெயர் தெரியாது ஊர் தெரியாது..என்னைத் தேடி யாரும் வரவில்லை எனில் நான் தேவை இல்லை என்று தானே அர்த்தம்.. நான் ஒரு பாவப் பட்டவள் கிருஷ்..

ஓ கவி.. நோ.. ஒரு கவிதை அழக்கூடாது..இந்த பார் டிவில விகேர் விளம்பரத்துல சொல்ற மாதிரி உனக்கு நாங்க இருக்கோம் நான் என் அம்மா இந்த ஹாஸ்பிடல் உனக்கு ஓக்கேயா

கவிதை மலர்ந்து சிரிக்க கூடவே விதியும் சிரித்தது..

விதி ஒரு ஆடவன் ரூபத்தில்..கவிதாவின் புகைப்படத்தை வைத்து டாக்டர் கிருஷிடம் வந்து..”டாக்டர்..என் பெயர் ராஜ்.. இந்தப் பெண் பற்றி உங்களுக்குத் தெரியுமா:

கிருஷ்ஷிடம் பதற்றம் :ஏன்..:

:ஏனெனில் இவள் என் மனைவி.. ப்ரில்லியண்ட் கேர்ள்..ஷ்யாமி.. நான் அயல் நாடு போயிருந்தேன். இவள் ஏதோ சுற்றுலா போவதாகச் சொல்லியிருந்தாள்.. எனில் நான் இன்று தான் வந்தேனாக்கும்..

யோவ்.. தேடவே இல்லியா..

இல்லீங்க.. ஷ்யாமி ஒரு அனாதைப் பெண்..என் வீட்டிலும் எங்கள் காதலுக்கு எதிர்ப்பு.. எனில் இவளைத் தேட யாரும் இல்லை.. டிராவல் ஏஜன்ஸியில் கேட்டதில் அவர்கள் எனக்கு டெலிக்ராம் அனுப்பியதாகச் சொன்னார்கள்..அவர்கள் அனுப்பிய இடத்திலிருந்து நான் வேறு இடம் சென்றிருந்தேன்..எனிவே வந்தால் அதிரிச்சி தேடி அலைந்து ஊரில் சிலர் ஒரு பெண் இந்தஹாஸ்பிடலில் சேர்ந்திருப்பதாகவும் சொன்னார்கள்.. எனில்..

கிருஷ் என்ன செய்வதெனத் தெரியாமல் குழம்பி..பின் மனதை ஒரு நிலைப் படுத்தி கவிதாவைப் பற்றி ராஜிடம் “ அந்தப் பெண்ணுக்கு கவிதா எனப் பெயர் வைத்திருக்கிறேன்..அவளுக்கு எல்லாம் மறந்துவிட்டது..உடல் நிலையும் இப்போது தான் தேறியிருக்கிறாள்.. நான் அறிமுகம் செய்கிறேன் பாருங்கள் “ எனச் சொல்லி ராஜிடம் அறிமுகம் செய்ய கவிதாவின் விழிகளில் நிச்சலனம்.. “டாக்டர் ..யாரிவர்”

ராஜ் நொறுங்கிப் போகிறான்.. பின் சில பல சம்பவங்களில் கவிதா மொத்தமாய் அவனை மறந்ததும் கிருஷ்ஷிடம் முழு மனதைக் கொடுத்திருப்பதும் கிருஷ்ஷின் நல்ல குணமும் தெரிய்வர விலகி விடுகிறான்..

இது வாஸந்தியின் கதை..அதையே யாரோ எழுதிய கவிதையாக ஸ்ரீதர் (என நினைக்கிறேன்) எடுத்திருப்பார்..பட் டாக்டர் அந்தப் பெண்(ஜெயஸ்ரீ)ணின் கணவனிடமே ஒப்படைப்பதாக முடித்திருப்பார்..

இந்தக் கதையையே மறுபடியும் பாக்யராஜ் வீட்ல விசேஷங்களில் ஆரத் தழுவியிருப்பார்..

நல்ல படம் என நினைவு வந்து.. இடுகையும் நீண்ட தாகப் போய்விட்டது.. :)

kalnayak
24th March 2015, 01:23 PM
ஹாய் சி.க.,
இந்த யாரோ எழுதிய கவிதை படத்தையும், மனிதனின் மறுபக்கம் படத்தையும் நான் குழப்பிக்கொண்டுவிட்டேன். மனிதனின் மறுபக்கம் சிவகுமாரின் 150வது படம். அதிலும் ஜெயஸ்ரீ நடித்திருப்பார். இந்த படத்தின் கதையும் நீங்கள் சொல்லும் கதையும் வித்தியாசம் இருக்கிறதே என்று பார்த்தேன். பின்புதான் தெரிந்தது. நீங்கள் சொன்ன பாடல் நன்றாகவே இருக்கிறது. நான் கேட்டதே இல்லை. ஏன் படம் பார்த்ததேனோ என்னவோ தெரியவில்லை.

https://www.youtube.com/watch?v=yEayiPak0-I

அப்புறம் நீங்கள் சொன்ன கதை 'நினைவே இல்லையா நித்யா?' என்று மாலைமதியில் படித்ததாக ஞாபகம். எழுத்தாளர் பெயர் நினைவில் இல்லை. (வாஸந்தி என்று நீங்கள் சொல்வதால் ஏற்றுக் கொள்கிறேன்.அது வேறு கதை என்று நீங்கள் நினைத்தால் சொல்லுங்கள்.) இந்த கதைக்குப் பின்தான் 'நினைவெல்லாம் நித்யா' என்று ஸ்ரீதர் படம் எடுத்து வெளியிட்டார். அந்த படத்தின் கதை வேறு.

chinnakkannan
24th March 2015, 01:29 PM
கல் நாயக், மனிதனின் மறுபக்கம் பற்றி முன்னால் எழுதியிருந்தேன்..

இல்லை.. நினைவே இல்லையா நித்யா வேறு.. அது எழுதியவர் ஒரு பெண் எழுத்தாளர் தான்.. சிவசங்கரியோ இந்துமதியோ என நினைக்கிறேன்.. கதை - படித்திருக்கிறேன் சுத்தமாக மறந்து விட்டது.. இந்த ஜனனம் ஐயாம் வெரிமச் ஷ்யூர்.. நான்கு வாரங்களாக இலவச இணைப்பாக வந்தது விகடனில்.. நினைவெல்லாம் நித்யா - பாடல்கள் ஸ்வீட்.. காட்சியமைப்பு நற நற :)

chinnakkannan
24th March 2015, 03:51 PM
ஹை.. கூகுளிட்டதில் நி.இ.நி... இந்துமதியின் கதையாம் :) கண்ணா வ்ல்லாரை சாப்பிடாமலே உனக்கு இன்னா ஞாபகசக்தி.. .

kalnayak
24th March 2015, 05:27 PM
வாவ் சி.க. கலக்கிட்டீங்க!!!

Russellzlc
24th March 2015, 05:33 PM
"]‘அண்ணனவன் சொல்லிய சொல்லை
நான் எந்நாளும் மறப்பது இல்லை’

ஹலோ சின்னக் கண்ணன், கல்நாயக், எப்படி இருக்கீங்க?

இங்கு வந்து உங்களோடு உரையாடுவது, இனிமையான மாலை வேளையில் பூங்காவில் அமர்ந்து ஜாலியாக அரட்டை அடிப்பது போன்ற மகிழ்ச்சியை கொடுத்தாலும் வேலை பளுவால் அடிக்கடி வரமுடியவில்லை. மன்னிக்கவும். என்றாலும், சில நாட்கள் திரியை படிக்க முடியாவிட்டாலும் மொத்தமாக ஒருநாள் எல்லாவற்றையும் படித்து விடுவேன்.

கல்நாயக்,

ராஜண்ணா ஜெராக்ஸ் மெஷினில் இருந்து இன்னொரு வெள்ளை பேப்பர் கேட்டதை படித்து சிரித்து கண்ணில் தண்ணீரே வந்து விட்டது. சஸ்பென்ஸாக கொண்டுபோய் எதிர்பாராமல் முடித்துள்ளீர்கள். அப்புறம் நிலா பாடல்கள் இன்னும் எவ்வளவு ஸ்டாக் இருக்கு? எனக்கே நீங்கள் சொன்ன பிறகுதான் ராணி சம்யுக்தாவில் 2 நிலாப் பாடல் ஞாபகத்துக்கு வந்தது. பாடல்களுக்கு நன்றி.

சின்னக்கண்ணன்,

வாஸந்தி கதையை சுருக்கமாக சுவையாக கூறியுள்ளீர்கள். ...... ‘இந்தக் கண்ணா இருக்கானே(அடியேன்தான்) கொஞ்சம் மார்வாடி கஞ்சூஸ்’ ......... என்று உங்களை நீங்கள் சொல்லிக் கொண்டிருப்பது சும்மா நகைச்சுவைக்காக என்று கருதுகிறேன். நாங்கள் கண்கூடாக பார்ப்பது எழுத்தில் அள்ளித்தரும் கர்ணன் நீங்கள். வல்லாரை சாப்பிட்டால் போன ஜென்ம ஞாபகம் கூட உங்களுக்கு வந்து விடும் போலிருக்கிறதே.
----------

பிள்ளையோ பிள்ளை படத்தில் எனக்கு மிகவும் பிடித்த பாடல். சொல்லப் போனால் இது மக்கள் திலகத்துக்கு வரவில்லையே என்று ஏங்க வைத்த பாடல்.

ஏழையின் சிரிப்பில் இறைவன்
இருப்பதை சொன்னான் தலைவன்
அண்ணணவன் சொல்லிய சொல்லை
நான் எந்நாளும் மறந்தது இல்லை...

திரு.மு.க.முத்து நல்ல தோற்றம் கொண்டவர். நல்ல நடிகர். நன்றாக வசனம் பேசக் கூடியவர். இனிய குரலில் பாடும் திறனும் உண்டு. என்றாலும் மக்கள் திலகத்தை காப்பியடிக்காமல் தனக்கென்று ஒரு பாணியில் நடித்திருந்தால் அவர் திரையுலகில் இன்னும் சில ஆண்டுகள் தாக்குப் பிடித்திருப்பார் என்பது என் கருத்து. இந்தப் பாடலில் நடை, உடை, ஆக்க்ஷன் என அப்படியே மக்கள் திலகத்தின் ஜெராக்ஸ் ஆக இருப்பார்.

இவரைப் பற்றி கலைஞர் கருணாநிதி அவர்கள் மனக்கோட்டை கட்டியிருந்தார். ஆனால், பிள்ளையோ பிள்ளை, துஷ்ட பிள்ளையாகிவிட்டது.

இன்று பாடகர் திலகத்தின் பிறந்தநாள். அவரது நினைவாக இந்தப் பாடல் இடம் பெறட்டுமே.

அதோடு, சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான முத்துசாமி தீட்சிதரின் பிறந்த நாளும் இன்றுதான். எனக்கு சங்கீதத்தில் அவ்வளவு பாண்டித்யம் கிடையாது. ஏதோ எனக்கு தெரிந்த முத்து. சும்மா விளையாட்டுக்கு சொன்னேன். முத்துசாமி தீட்சிதரை மதிப்பவர்கள் என்னை கோபிக்காதீர்கள். இதற்குதான் நாவை அடக்க வேண்டும் என்பது.

பேரறிஞர் அண்ணா முதல்வரான பிறகு மக்களிடம் திருக்குறள் நெறி பரவட்டும் என்ற நோக்கத்துடன் பஸ்களில் திருக்குறள் எழுதிவைக்கும் முறையை கொண்டு வந்தார். சட்டப் பேரவையில் முதல்வர் அண்ணா இதுகுறித்து பேசும்போது காங்கிரஸ் உறுப்பினர் ஒருவர் குறுக்கிட்டு,

யாகாவாராயினும் நா காக்க காவாக்கால்
சோகாப்பர் சொல்லிழுக்குப்பட்டு.

என்ற குறள் பஸ்களில் எழுதப்பட்டுள்ளது. இது யாருக்கு? ஓட்டுநருக்காக? நடத்துனருக்கா? இல்லை பஸ்சில் செல்லும் பொதுமக்களுக்கா? என்று கேள்வி எழுப்பினார்.

ஓட்டுநரை சொன்னால் அவர்களுக்கு கோபம் வரும். நடத்துனருக்கு என்றால் நடத்துனர்கள் கோபித்துக் கொள்வார்கள். மக்களுக்கு என்றால் கேட்கவே வேண்டாம்.

என்ன பதில் சொல்லப் போகிறார் என்று சபையில் எதிர்பார்ப்பு எகிறிக் கொண்டிருக்க,

வெற்றிலைக் கறையேறிய காவிப் பற்கள் தெரிய இளநகை பூத்தபடி,

‘‘அந்தக் குறள் நாவுடைய எல்லாருக்கும்’’

என்று ஒரே போடாக போட்டார், அமெரிக்காவின் யேல் பல்கலைக்கழகத்தால் சப்- பெலோஷிப் என்ற அறிஞர் பட்டம் கொடுத்து கவுரவிக்கப்பட்ட அறிவின் சிகரம் அண்ணா.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

chinnakkannan
24th March 2015, 06:01 PM
வாங்க கலைவேந்தன் .. நலமா.. வீ ஆல்ஸோ மிஸ்டு யூ..:)

நன்றி தங்கள் ரசனைக்கும் பாராட்டுதலுக்கும்..

யாகாவாராயினும் முக்கியமான குறள்.. ஆழம் மிக்கது..அதுவும் பேரறிஞரின் நகைச்சுவை அழகு.


இந்தாங்க உங்க பாட்டு.. அப்புறம் நானும் அரசியல் பேசுவேனே!

https://www.youtube.com/watch?v=_4D6tUVyVc4

வல்லாரை சாப்பிட்டா முன் ஜென்மம் நினைவு வந்தாக்க நான் எந்த ராஜாவா இருப்பேன்.. திங்க்கிங்க்க்.. :)

இங்கே ஓமானிற்கு நேற்று ஓமானின் மன்னர் ஹிஸ் மெஜஸ்டி சுல்தான் காபூஸ் வெளிநாட்டில்(ஜெர்மனி) மருத்துவம்செய்து விட்டுத் திரும்பி வந்தார் - கிட்டத் தட்ட எட்டு மாதங்களுக்குப் பிறகு.. எல்லார் உள்ளத்திலும் ஒரு ரிலீஃப் அண்ட் மகிழ்ச்சி..உற்சாகம் கரைபுரண்டு ஓடுகிறது..

(ஹப்பாடி.. நானும் நாட்டு நடப்பைப் பத்திச் சொல்லிட்டேன்)

kalnayak
24th March 2015, 06:26 PM
வாங்க கலைவேந்தன் வாங்க.
அறிஞர் அண்ணாவின் சட்டசபை நிகழ்ச்சியைக் குறிப்பிட்டு கலகலப்பூட்டிவிட்டீர்கள். நன்றியும் வாழ்த்துகளும். அப்பப்ப வாங்க. எங்க ரெண்டு பேருக்கும் தனியா இங்க கொஞ்சம் பயமாத்தான் இருக்கு. ஏதோ அப்பப்ப ராஜேஷ், ராஜ்ராஜ், உங்களை மாதிரி வர்றவங்கள பாத்துதான் பயமில்லாம தெம்பா இருக்கோம்.

நிலாப் பாடல்கள் இன்னும் நிறைய இருக்கின்றன. நூறைத் தொட்டாலும் தொடலாம். முதல் வரிகளில் நிலா வரும் பாடல்களை நான் போட்டு முடித்தபின், பாடலின் இடையிலே நிலா வரும் பாடல்களை சி.க. எழுதுவார்... (என்று நினைக்கிறேன்).

kalnayak
24th March 2015, 06:28 PM
சி.க.,
வல்லாரை சாப்பிட்டு முன் ஜென்மத்து நினைவு வந்து நீங்க ராஜாவாதான் இருக்கணும்னு அவசியமா என்ன? சாதாரண...

இல்லை. இல்லை வள்ளுவராகவோ, கம்பராகவோ, இளங்கோவாவோ, பாரதியாவோ பெரும் புலவரா நீங்க இருந்திருக்கக் கூடாதான்னு கேட்கிறேன்.

உங்க நாட்டு நடப்பை கேட்டுட்டு கலைவேந்தன் கொஞ்சமாவது 'ஏன்தான் இந்த நாட்டு நடப்பை சொன்னோம்? இந்த நாட்டு நடப்பை சொன்னதுல என்ன பிரச்சினை?'-னு யோசனை பண்ணியிருப்பாரா? அப்படி பண்ணியிருந்தார் என்றால் உங்களுக்கு வெற்றிதான்.

chinnakkannan
24th March 2015, 06:47 PM
ஹையாங்க்.. நான் ஜஸ்ட் தானே சொன்னேன்..// உங்க நாட்டு நடப்பை// நான் வேலைபார்க்கும் நாட்டின் நடப்பை என வைத்துக் கொள்க.. என் நாடு நம் தேசம் இந்தியா தான்..:)

ஏன் ஓய் முன் ஜன்மத்தில் ராஜாவாக இருந்திருக்கப் படாதா.. ம்ம் சரி அட்லீஸ்ட் கல்யாண் குமாராவாவது இருந்திருப்பேன் என நினைக்கிறேன் ( நெஞ்சம் மறப்பதில்லை.. !)

தேனடி மீனடி மானடி செவ்வாய் மின்னும் சித்திரக் கன்னம் வா வா

https://www.youtube.com/watch?v=JaYaQ5uKzVU

Russellzlc
24th March 2015, 06:49 PM
நன்றி கல்நாயக்,

நிச்சயம் நேரம் கிடைக்கும்போதெல்லாம் வருகிறேன். சின்னக்கண்ணனைப் பற்றி நீங்கள் சொன்ன கருத்துதான் எனக்கும். புலமை மிகுந்த அவர் போன ஜென்மத்தில் பெரும் புலவராக இருந்திருக்கலாம்.

நன்றி சின்னக்கண்ணன்,

இளைஞர்கள் நாட்டு நடப்பைத் தெரிந்து கொள்ளாமல் இருக்கிறார்களே? விழிப்புணர்வு இல்லாமல் இருக்கிறார்களே? என்ற வருத்தம் எனக்கு உண்டு. நம்மைப் போன்றவர்களுக்குத்தான் நன்கு தெரியுமே? (கல்நாயக்கையும் சேர்த்துதான் சொல்கிறேன்)

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

kalnayak
24th March 2015, 07:05 PM
என்ன சி.க. போயும் போயும் சினிமா ராஜாவா இருந்திருப்பேன்-னு (இல்லை நடிகர் கல்யாண் குமாராக) சொல்றீங்க.

ஆசைப்படுறதுல நிஜ ராஜாவாக ஒரு ராஜராஜ சோழனாவோ, ராஜேந்திர சோழனாவோ, கரிகால் சோழனாவோ, குலோத்துங்க சோழனாவோ, மஹேந்திரவர்ம பல்லவனாகவோ, நரசிம்ம பல்லவனாகவோ (வேணாம் பாண்டியன் நெடுஞ்செழியனா இருந்திருப்பீங்கன்னு சொல்ல மாட்டேன். - முரளி உங்க கிட்ட மாட்டிகிட்டு முழிக்கிறார்; வேறு பாண்டிய மன்னர்களாகவோ) ஏன் வட நாட்டு அரசர்களாவோ, பிற நாட்டு அரசர்களாகவோ நீங்க முன் ஜென்மத்துல இருந்திருக்கக் கூடாதா?

தேனடி மீனடி பாட்டு எனக்கும் பிடிச்ச பாட்டு. நெஞ்சம் மறப்பதில்லை படமும்தான். அனேகன்-னு அதே படத்தை ரீமேக் உல்டா பண்ணியிருக்காங்க தெரியுமா உங்களுக்கு?

Russellzlc
24th March 2015, 07:18 PM
கல்நாயக்,

நெஞ்சம் மறப்பதில்லை என்றதும் நினைவு வந்தது. ‘நிலவுக்கும் மலருக்கும் ஜாதியில்லை’ எனக்கு பிடித்த பாடல். இதையும் உங்கள் பட்டியலில் சேர்க்கலாம். அப்புறம்... வஞ்சிக்கோட்டை வாலிபனில் பி.லீலாவின் தேன் குரலில் ‘வெண்ணிலவே தண் மதியே’ பாடல்.

எனது பதிவுக்கு லைக் போட்ட திரு.ராஜேஷ் அவர்களுக்கு நன்றி.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

kalnayak
24th March 2015, 07:26 PM
நன்றி கலைவேந்தன்,

என் நினைவிலேயே கிட்டத்தட்ட மேலும் இருபது நிலாப் பாடல்கள் வைத்துள்ளேன். அவைகளை பதிவிட்டதும் மற்ற பாடல்களுக்கு தேடலாம் என்று இருக்கிறேன். நீங்கள் சொன்ன பாடல்களை சமயம் வரும்போது பதிவிடுகிறேன்.

Russellzlc
24th March 2015, 07:28 PM
ஸாரி, கல்நாயக்

நான் தவறாக சொல்லி விட்டேன். நெஞ்சம் மறப்பதில்லை படத்தில் வருவது ‘அழகுக்கும் மலருக்கும் ஜாதியில்லை...’. அது உங்கள் பட்டியலில் சேராது. கொஞ்சம் வேலை ஜாஸ்தி.. ஹி..ஹி..

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

kalnayak
24th March 2015, 07:33 PM
நல்லவேளை நீங்களே இப்போது சொல்லிவிட்டீர்கள். நான் தேடிப் பார்த்துவிட்டு இந்த செய்தியை பின்பு சொல்லியிருப்பேன். நன்றி.*

Russellzlc
24th March 2015, 07:37 PM
நீங்கள் தேடிப் பார்த்து சிரமப்படக் கூடாது என்றுதான் நானே சொல்லிவிட்டேன்.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

Russellzlc
24th March 2015, 08:52 PM
இன்று முத்துசாமி தீட்சிதரின் பிறந்த நாள் என்று கூறியிருந்தேன். இதையொட்டி, நான் சமீபத்தில் படித்து ரசித்த ஒரு கட்டுரையை இங்கே பதிவிடுகிறேன். கட்டுரையின் இணையதள இணைப்பையும் கொடுத்துள்ளேன். இசைக்கு மருத்துவ குணம் இருக்கிறதோ இல்லையோ, மனம் அமைதியடையும். அந்த அனுபவம் எனக்கே உண்டு. நம் எல்லாருக்கும் இருக்கலாம்.

----------------------------------

http://www.dinamani.com/weekly_supplements/kadhir/2015/03/15/இசைக்கு-மருத்துவ-குணம்-உண்ட/article2714674.ece?playVideo=true

இசைக்கு மருத்துவ குணம் உண்டு!

By - சாருகேசி

மியூசிக் தெரபி பற்றி மியூசிக் அகடமி உட்பட இப்போது பல மேடைகளில் பல ஆய்வுச் சொற்பொழிவுகள் நடத்தப்படுகின்றன. என்ன ராகம் பாடினால் என்ன நோய் குணமாகும் என்றெல்லாம் ஆராய்ச்சிகளின் மூலம் வெளிப்பட்டதை எடுத்துச் சொல்லி வருகிறார்கள். ஆனால் ஒரு குறிப்பிட்ட கீர்த்தனையைப் பாடக் கேட்டு, வேண்டிய பலன் அடைந்ததாக யாரும் சொல்லி நான் கேள்விப்பட்டதில்லை. சென்ற வாரம், சரசுவதி வாக்கேயகார அறக்கட்டளை ஆதரவில் டாக்டர் ஆர். ஆஷா, முத்துசாமி தீட்சிதரின் கீர்த்தனைகள் பற்றி "தீபனம்' என்ற தலைப்பில் பேசும்போது, இரண்டு நிகழ்ச்சிகளை நினவுகூர்ந்தார்.

""நான் சங்கீதம் கற்றுக் கொண்ட கர்நாடக இசைப் பாடகி சீதா நாராயணனிடம் ஒரு பெண்மணியும் வந்து கற்றுக் கொண்டிருந்தார். ஒரு நாள் சீதா நாராயணன், "பிருஹஸ்பதே' என்ற அடாணா ராகக் கீர்த்தனையைச் சொல்லிக் கொடுக்கக் கேட்டுக் கொண்டிருந்த அந்தப் பெண்மணியின் கண்களிலிருந்து தாரை தாரையாகக் கண்ணீர் வந்துகொண்டிருந்தது. அவர் எதற்காக அழுகிறார் என்று தெரியவில்லை. பாடல் முடிந்ததும் அவர் அங்கிருந்து கிளம்பிப் போய்விட்டார். பின்னர் சில நாள் கழித்து அவர் வந்த போதும், அந்தப் பாடலைக் கேட்டு அவர் கண்களில் நீர் திரண்டு வழிந்தது. ஆறு மாதங்கள் போல ஆயிற்று. அவர் மீண்டும் தரிசனத்துக்காக வந்தபோது அவர் கையில் ஓர் அழகான குழந்தை இருந்தது. அவரும் மகிழ்ச்சியுடன் இருந்தார். அவருக்குக் குழந்தை பாக்கியம் இல்லாததை எண்ணி அவர் கண்ணீர் விட்டு அழுதிருக்கிறார். அந்தக் கீர்த்தனையில் "புத்ரகாரக தீன பந்தோ' என்று சரணத்தில் ஒரு வரி வருகிறது. (புத்திர பாக்கியத்தை அளிப்பவர்) அந்தப் பாடலைப் பாடியபடி வேண்டிக் கொண்டிருந்திருக்கிறார் அந்தப் பெண்மணி. அவருக்குக் குழந்தைப் பேறு கிடைத்தது.

இன்னொரு பெண்மணிக்கும் இதே போலப் பிள்ளையில்லாக் குறை. அவர் "ஹரிஹரி புத்ரம் ஸாஸ்தாரம் சதா பஜேஹம்' என்ற பாடலை என் குரு வீணைக் கலைஞர் கல்பகம் சுவாமிநாதன் வாசித்துப் பாடக் கேட்டார். அதில் அநுபல்லவியில் வருகிற "தீன ஜன பலப் ப்ரதம்' (எளியவர்களின் விருப்பங்களை அருளுபவர்) என்ற வரி வருகிறது. அவருக்கும் அந்தப் பாடலால் குழந்தை பாக்கியம் கிடைத்தது'' என்றார்.

அது மட்டுமல்ல, "கமலாம்பிகாயாம் பக்திம் கரோமி' என்ற சஹானா ராகப் பாடலும் "சங்கரம் அபிராமி மனோகரம்' என்ற மனோகரி ராகப் பாடலும் நோய்களைத் தீர்க்குமாம். குறிப்பாக "சங்கரம் அபிராமி' என்ற பாடல் காலசம்ஹார மூர்த்தியாகிய திருக்கடையூர் ஈசனைப் பற்றி அமைந்திருப்பதால், ""இந்தப் பாடலைப் பாடுபவர்களுக்கு மரண பயமும் போகும்'' என்றார் ஆஷா.

இந்த சந்தர்ப்பத்தில் முத்துசாமி தீட்சிதரின் வாழ்க்கையில் நிகழ்ந்த ஒரு நிகழ்ச்சியைப் பார்க்கலாம்:

முத்துசாமி தீட்சிதரின் சீடன் தம்பியப்பன் வயிற்று வலியால் துடித்துக் கொண்டிருந்தான். அவன் ஒரு புரோகிதரை அணுகித் தனக்குப் பரிகாரம் செய்ய வேண்டினான். அவர், ""உனக்கு குரு, சனி முதலிய கிரகங்கள் பலகீனமாக இருக்கின்றன. நீ வேதம் அறியாததால் வேத சம்பந்தமான பரிகாரமும் செய்ய இயலாது'' என்று அவர் மறுத்துவிட்டார். தம்பியப்பன் தன் குரு முத்துசாமி தீட்சிதரிடம் சென்றான். அவர் சீடனுக்கு தாயம் அளித்து, சனி, குரு ஆகிய கிரகங்களின் மீது பாடல்கள் இயற்றி, அவற்றைத் தினமும் பாடச் சொல்லி வருமாறு கூறினார் முத்துசாமி தீட்சிதர். அதன்படியே அவன் பாடிவர, அவன் வயிற்று வலி தீர்ந்தது.

""இசை எல்லாருக்கும் பொது. எந்த வேத சாரங்கள் அடங்கிய கீர்த்தனையானாலும் அதைப் பாடிப் பயன் பெறலாம்'' என்று தீட்சிதர் கூறினார். தம்பியப்பன் தன்னிடம் நோய் குணமாக வந்தவர்களிடம் நவகிரக கீர்த்தனைகளைப் பாடி அவற்றைத் தீர்த்து வைத்தான் என்பது திருவாரூரில் எல்லோரும் அறிந்த சரித்திரம்.

ஆர்.ஆஷா உரையில் இன்னும் சில அபூர்வமான தகவல்கள் இருந்தன. ஆனால் அவை மிகுந்த ஆராய்ச்சி செய்து தரப்பட்ட வேறு சில செய்திகள்.

இசை மூலம் நோய் குணமாகும் என்பது ஒரு புறம் இருக்கட்டும். கைக்கெட்டாமல் தள்ளிப் போகும் உத்தியோக உயர்வு கிடைக்கும் என்பது தெரியுமா? காயக சிகாமணி என்றும், முதன்முதலில் இசையில் டாக்டரேட் பட்டம் பெற்றவர் என்றும் அறியப்பட்ட ஹரிகேசநல்லூர் முத்தையா பாகவதரின் சகோதரர் வழிப் பேத்தியும், எர்ணாகுளம் மகாராஜா இசைக்கல்லூரிப் பேராசிரியையும் ஆன ஜெயலட்சுமி ஒரு சொற்பொழிவில் குறிப்பிட்ட நிகழ்ச்சியை இங்கே மீண்டும் நினைத்துப் பார்க்கத் தூண்டியது. (தினமணி ஞாயிறு கொண்டாட்டம் 9.9.2007).

ஜெயலட்சுமி தன் உரையில் அன்று சொன்னார்: ""திருவனந்தபுரம் இசைக் கல்லூயில் ஓர் ஆசிரியைக்கு நியாயமாகக் கிடைக்க வேண்டிய பிரமோஷன் கிடைக்கவில்லை. என் தகப்பனார் 13 வயதிலிருந்தே அம்பாளைப் பூஜை செய்துகொண்டு வருபவர். அவள், ""சார் என்ன காரணமோ தெரியவில்லை. எனக்குப் பதவி உயர்வு கிடைக்கவில்லை'' என்று சொல்லி வருத்தப்பட்டாள். என் தங்கை மீது சில சமயம் சாமுண்டீசுவரி வருவாள். அன்றைக்கு அவள் அந்த ஆசிரியையைப் பார்த்து, சுபபந்துவராளியில் முத்தையா பாகவதர் இயற்றிய "மனோன்மணி மந்தஹாசினி மஞ்சுபாஷிணி' என்ற கீர்த்தனையை 11 நாட்களுக்குப் பாடச் சொன்னாள். சொன்னால் நம்ப மாட்டீர்கள். மனோன்மணி பாடலைப் பாட ஆரம்பித்த ஏழு நாட்களிலேயே அந்த ஆசிரியைக்கு பிரமோஷன் கிடைத்துவிட்டது''.

இசைக்கு நோய் தீர்க்கும் குணம் மட்டுமல்ல, கை நழுவிப் போகும் பதவி உயர்வுகளும் கூடக் கிடைக்கும் என்பதும் ஒரு செய்தி.

---------------

அன்புடன் :கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

rajeshkrv
25th March 2015, 09:32 AM
இரண்டு அருமையான இசையரசி பாடல்கள்
இணைந்த துருவங்கள் திரையிலிருந்து

https://www.youtube.com/watch?v=NeMxKdorxvY


https://www.youtube.com/watch?v=jOxSr23qi4c

chinnakkannan
25th March 2015, 11:02 AM
ஹாய் குட்மார்னிங்க்.. கல் நாயக், ராஜேஷ், கலை வேந்தன்..

செளக்கியமா..

கல் நாயக்,

பெரிய புலவர்கள் அளவுக்கு எழுத நான் இன்னும் முயற்சி செய்ய, கற்றுக் கொள்ள வேண்டும்.. முன் ஜென்மத்தில் அப்படி என்றால் இ.ஜென்மத்தில் கொஞ்சம் சாயலாவது இருக்கவேண்டுமே.. 

அப்புறம் ராஜா..(கொஞ்சம் யோசிக்கணும்) பாடல் போட்ட்து.. எஸ்.. அது ச்சும்மா. கல்யாண்குமார் நா தேவிகாவும் பூ.ஜெ. தானே..

//எங்க ரெண்டு பேருக்கும் தனியா இங்க கொஞ்சம் பயமாத்தான் இருக்கு. // இதை நினைத்து நேற்று இரவும் சிரித்துக் கொண்டிருந்தேன்..  ம்ம் ஹிட்ஸ் பார்க்கறதில்லையா க்ல் நாயக்..மக்கள்ஸ் ஆர்வமா படிக்கறாங்க வாட்ச் பண்ணிக்கிட்டிருக்காங்க நம்மை..

ராஜேஷ் உங்கள் பாடல்களை மெல்லத் தான் கேட்க இயலும் ..வீ.கம்ப் வெள்ளி தான் கொடுத்து சரி செய்யணும்..

கலை வேந்தன்

இணையக் கட்டுரையைப் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.. ராகங்கள் பற்றி வெகு கொஞ்சம் தான் தெரியும் மீன்ஸ் அவற்றின் பெயர்கள் மட்டுமே..
அடாணா – யார் தருவார் இந்த அரியாசனம், வருகிறாள் உனைத் தேடி
மனோகரி என்று தேடினால் கிடைக்கவில்லை.. கெளரி மனோகரியும் மனோகரியும் ஒன்றா (ஹையா கோபால வரவழைக்கச் சான்ஸ்)
எனில் கெளரிமனோகரி யில் அமைந்த பாடல்கள் எனப் போடப் பட்டிருப்பவை (கண்ணா நீ ரொம்ப உஷார்ப்பா) சோலைப்பூவில் மாலைத் தென்றல், பொன்வானம் பன்னீர் தூவுது இன்னேரம்.

சஹானா – இந்த வீணைக்குத் தெரியாது, எண்ணமெல்லாம் ஓர் இட்த்தையே நாடுதே..

சுப பந்து வராளி.. உன்னை நான் சந்தித்தேன் நீ ஆயிரத்தில் ஒருவன்,வைகறையில் வைகைக்கரையில்,ஆயிரம் தாமரை மொட்டுக்களே..
எனில் இன்று என்ன பாட் போடலாம்..

ரயில் சினேகம் சீரியல் பாட்..வெகு அழகான பாடல்..வைரமுத்து.. இந்த வீணைக்குத்தெரியாது அதைச் செய்தவன் யாரென்று – சஹானா ராகம்

https://youtu.be/RmCNuf2JuoQ

சுப பந்துவராளியில் மோகன் இன் பயணங்கள் முடிவதில்லை.. வைகறையில் வைகைக்கரையில்...

https://youtu.be/Oh7o1uFfdUo

kalnayak
25th March 2015, 01:08 PM
ராஜேஷ்,
வித்தியாசமான பாடல்கள். இரண்டும் அருமை. நன்றி.


கலைவேந்தன்,
இசைக்கு மருத்துவ குணம் உண்டு என்ற கட்டுரையை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி. இளையராஜாவின் திருவாசகம் கேட்டு நோய் குணமானதாக ஒரு தகவல் உண்டு.

சி.க.,
மத்தவங்க பாத்துகிட்டு இருக்காங்க. பங்கெடுக்கிறது இல்லைன்னுதான் நானும் சொல்றேன். அதுதான் பயமா இருக்கு. பேய் பிசாசும் இப்பிடிதானே!!! நம்மை பார்த்துக்கொண்டுதானே இருக்கும். (எப்பிடி எல்லாரையும் கலந்துக்க வைக்க ஒரு வாய்ப்பு?)

நீண்ட நாட்களுக்கு பிறகு ரயில் ஸ்நேஹம் பாடல். அருமை. வைகறையில் வைகை கரையில் சோகமாக இருக்கிறது. சுப பந்துவராளி ராகம் என்றால் பொதுவாக சோகத்திற்கு போடுவார்களா?

kalnayak
25th March 2015, 01:29 PM
நிலாப் பாடல் 47: "பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா"
----------------------------------------------------------------------------

குறைந்த இசைக் கருவிகளைக் கொண்டு ராஜா இசையைமைத்த பாடல். 80-களில் மிகவே பிரபலம். எல்லாப் பாடல்களும் சூப்பர் ஹிட். ஓவியக் கல்லூரியில் படித்த கதிர் இயக்குனராக அறிமுகம். முரளி காதல் சொல்லா கல்லூரி மாணவனாக நிற்க இதுவே அச்சாரம். ஹீரா பாடலைக் கேட்டு ரசிப்பதாக வந்த அருமையான காதல் பாடல்.
வட்டமான நிலாவே இங்கு பொட்டு வைத்து வந்ததாக கவிஞர் வாலி சொல்லுகிறார். வட்டப் பொட்டு என்று ஏனோ சொல்லவில்லை. K.J. ஜேசுதாஸ் பாடியுள்ளார்.

பாட்டு வரிகள் இதோ:
-------------------------------------------------------------
பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா
குளிர் புன்னகையில் என்னை தொட்ட நிலா

பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா
குளிர் புன்னகையில் என்னை தொட்ட நிலா
என் மனதில் அம்பு விட்ட நிலா
இது எட்ட நின்று என்னை சுட்ட நிலா
வாழ்நாள் தோரும் தினம்தான் காதோரம்
பாடல் கூறும்
(பொட்டு..)

ஆராத ஆசைகள் தோன்றும் என்னை தூண்டும்
ஆனாலும் வாய் பேச அஞ்சும் இந்த நெஞ்சம்
அவள் பேரை நாளும் அசை போடும் உள்ளம்
அவள் போகும் பாதை நிழல் போல செல்லும்
மௌனம் பாதி மோகம் பாதி
என்னை கொல்லும் எந்நாளும்
(பொட்டு..)

எப்போது சேராதோ பாட்டு தமிழ் பாட்டு
தோப்போடு சேராதோ காற்று பனிக்காற்று
வினா தாள் போல் இங்கே கனா காணும் காலை
விடை போலே அங்கே நடை போடும் பாவை
ஒன்றாய் கூடும் ஒன்றாய் பாடும்
போனாள் இங்கு எந்நாளோ
(பொட்டு..)
-----------------------------------------------------------


காணொளிக் காட்சி:

https://www.youtube.com/watch?v=4oIx-V3H9dA

இதயம் தொடும் இப்பாடல் இதயத்திலிருந்து வந்தது.

chinnakkannan
25th March 2015, 01:38 PM
//சுப பந்துவராளி ராகம் என்றால் பொதுவாக சோகத்திற்கு போடுவார்களா?// தெரியவில்லை கல் நாயக்..

நேற்று ரெண்டு விஷயங்கள்..

உணவு.. புளிக்காய்ச்சல் போட்ட இடியாப்பம் - புளிசேவை வீட்டில் டின்னர்..ஏன் சொல்கிறேன் - புளியோதரை ரெஸிப்பி நம் நெய்வேலி வாசு தேவன்
முன்பு கொடுத்திருந்தார் எனக்கு.. மிக நன்றாக வந்திருந்தது.. நன்றி வாசு சார்.

இரண்டாவது: கம்ப் இல்லை எனில் புத்தகம் படித்தேன்.. மிஸ்டர் வேதாந்தம் - தேவன் .. ஏழு மணிக்கு ஆரம்பித்து டக்டக டக என ஒருமணி வரை படித்தும்முடித்துவிட்டேன்(600 பக்கங்கள்) வாசிக்க ஆரம்பித்த போது நினைவில் வரவில்லை..பட்ட் வெகு சின்ன வயதில் படித்த நினைவு வந்தது.. என்னா நடை.. என்ன எழுத்து.. 1950 இல் எழுதப் பட்ட நாவல் என நினைக்கிறேன்.. இன்னும் பல காலங்கள் கடந்தும் படிக்க சுவாரஸ்யமாக இருக்கும் நாவல்..

என்ன ஒரு மயக்கம் தரவைக்கும் எழுத்து.. வெகு சீரியஸ் நாவலில் விரவி வரும் நகைச்சுவை..44 வயதிலேயே காலமானாராம் தேவன்.. ம்ம்

ஸோ...

ஒரு பாட் போட்டுக்கலாம்..

மயங்கினேன் சொல்லத் தயங்கினேன் உனை விரும்பினேன் உயிரே..

https://youtu.be/tykuE76lv9w

chinnakkannan
25th March 2015, 01:54 PM
பொட் வைத் வட் நிலா எனக்குப் பிடிக்கும் கல் நாயக்..ஆனால் என்னவோ படம் வந்த புதிதில் எல்லாரும் ஓ ஆ என்று ஹீராவின் அழகைப் பற்றிச் சொல்வார்கள்..எனக்கென்னவோ அவ்வளவு அழகாய்த் தெரியவில்லை.. பிற்கால ப் படங்களில் சற்றே இளைத்து கொஞ்சம் அழகாகி இருப்பார் என நினைக்கிறேன்..

kalnayak
25th March 2015, 02:45 PM
சி.க.,
புத்தகம் படிக்கிறேன் என்று பொறாமையை கிளப்புகிறீர்களே. என்னால் இப்பொழுதெல்லாம் கதைப் புத்தகம் மட்டுமல்ல எந்த புத்தகமும் படிக்கமுடிவதில்லை. அதிக பட்சம் நாளிதழ்கள் மட்டுமே. ஆனால் பரவாயில்லை, உங்களிடம்தான் எல்லாம் கேட்டுக் கொள்கிறேனே. கொஞ்சம் சுருக்கமா மிஸ்டர் வேதாந்தம் கதையை சொல்லிடுங்க. யார் கிட்டயும் சொல்லிட மாட்டேன். தேவன், இவர் தானே துப்பறியும் சாம்பு கதைகளை எழுதியவர். அருமையாக இருக்கும். நான் படக் கதைகளாக படித்திருக்கிறேன்.

'மயங்கினேன் சொல்லத் தயங்கினேன்' பாடல் எனக்கும் பிடித்தது. 'நானே ராஜா, நானே மந்திரி' படத்தில் இதுமட்டும்தான் பிடித்தது.

நடிகை ஹீரா 'திருடா, திருடா' போன்ற படங்களில் நடித்த பின்பு என்ன ஆனார்?

kalnayak
25th March 2015, 03:03 PM
நிலாப் பாடல் 48: "ஓ வெண்ணிலா இரு வானிலா"
-------------------------------------------------------------------------

இதயம் படத்தில் சொல்லாத காதல் சொன்ன கதிர், நண்பர்களுக்குள் பிளவு ஏற்படுத்திய காதலை சொல்கிறார். ஓ வெண்ணிலா எனத் துவங்கும் கவியரசரின் பாடலை ஏற்கனவே பார்த்திருக்கிறோம். இது வைரமுத்துவின் ஓ வெண்ணிலா பாடல் வரிகள், A. R. ரஹ்மான் இசையில், அப்பாஸ், வினீத் நடிக்க உன்னி கிருஷ்ணன் பாடி இருக்கிறார். காதல் சோகப் பாடலாயிற்றே.

சி.க., 'ஓ வெண்ணிலா இரு வானிலா' பொருள் சொல்லுங்களேன். இரு வானிலா என்றால் இருண்ட வானம் என்று பொருள் எடுத்துக் கொள்ள வேண்டுமா?

இதோ அந்த பாடல் வரிகள்:
-----------------------------------------------
ஓ வெண்ணிலா இரு வானிலா
நீ..
ஓ நண்பனே அறியாமலா
நான்..

கண்ணே கண்ணே காதல் செய்தாய்
காதல் என்னும் பூவை நெய்தாய்
நண்பன் அந்த பூவை கொய்தால்
ஓ நெஞ்சே நெஞ்சே நீயென் செய்வாய்

(ஓ வெண்ணிலா.....)


மழை நீரில் வானம் நனையாதம்மா
விழி நீரில் பூமுகம் கரையாதம்மா
எனைக் கேட்டு காதல் வரவில்லையே
நான் சொல்லி காதல் விடவில்லையே
மறந்தாலும் நெஞ்சம் மறக்காதம்மா
இறந்தாலும் காதல் இறக்காதம்மா

(ஓ வெண்ணிலா.....)

இருக்கின்ற இதயம் ஒன்றல்லவா
எனதல்ல அதுவும் உனதல்லவா
எதை கேட்ட போதும் தரக்கூடுமே
உயிர் கூட உனக்காய் விட கூடுமே
தருகின்ற பொருளாய் காதல் இல்லை
தந்தாலே காதல் காதல் இல்லை

(ஓ வெண்ணிலா.....)
-------------------------------------------------------
காணொளி காட்சி:

https://www.youtube.com/watch?v=Xwb7VAE8ODA

காதல் தேசத்தில் இப்பாட்டு சர்வ சாதாரணம்!!!

chinnakkannan
25th March 2015, 04:19 PM
//சி.க., 'ஓ வெண்ணிலா இரு வானிலா' பொருள் சொல்லுங்களேன். இரு வானிலா என்றால் இருண்ட வானம் என்று பொருள் எடுத்துக் கொள்ள வேண்டுமா? // ஓய்.. இப்படித் தப்புத் தப்பா தபுவைப் பத்தி நினைக்கலாகுமா.. முறையா சரியா.. இங்க வெண்ணிலாங்கறது ஹீரோயின் தபு.. காதல் வயப்பட்டவர்கள் இருவாலிபர்கள் அப்பாஸ் வினீத் (என நினைக்கிறேன்.. வெகு நாள் முன்னால பார்த்தது) ஸோ ஓ ஓ ஒய்ட் மூன்.. ஹெள கேன் யூ பீ ஆன் டூ ஸ்கைஸ் அப்படின்னு வருது இந்தப் பாட்டில..

இரு வானம்னு பார்த்தீங்கன்னா இரண்டுங்கற பொருள்ள தான் வரும்..

இருள்வானம் நா இருண்ட வானம்

போகட்டா எனக்கேட்டு போகாமல் நின்றிருந்தாய்
...போயேம்மா எனச்சொல்ல மெல்லத்தான் விழிசாய்த்து
சோகமாகத் திரும்பிவிட்டாய் சடக்கென்றே கணப்பொழுதில்
...சொக்கிவிடும் கண்வீச்சாய் என்மேலே வீசிவிட்டு
மேகங்கள் மெல்லமெல்ல வேகத்தைக் கூட்டிவானில்
..மென்னிலவைச் சூழ்வதுபோல் விரைந்துதான் நீசெல்ல
வாகாக வக்கணையாய்ச் சிரித்திருந்த தெருவுந்தான்
...வண்ணங்கள் நிறமிழந்து இருள்வானாய் ஆச்சுதடி..


சரி இதுக்கும் பாட் போட்டுக்கலாமா.. :)

https://youtu.be/TsEyhomEK8c

செல்லமே செல்லம் என்றாயடி..சோகப்பாட்டு நினைவிலில்லை. நீங்க பாத் சொல்லுங்க..

chinnakkannan
25th March 2015, 04:31 PM
//நடிகை ஹீரா 'திருடா, திருடா' போன்ற படங்களில் நடித்த பின்பு என்ன ஆனார்?// அச்சோ நாட்டுக்கு முக்கியமான கேள்வியப்பாக்காம விட்டுட்டேனே..

ஆக விக்கிப் பீடியாஎன்ன சொல்ற்துன்னா..

ஹீரா ராஜகோபால் சென்னையில் பிறந்தவர் (இஸிட்.. நான் பஞ்சாபின்னா நெனச்சுருந்தேன்)

இவர் சென்னையில் உள்ள பெண்கள் கிறித்தவக் கல்லூரியில் உளவியல் பட்டம் பெற்றார். (ம்ம் நெறய பசங்களும் உளத்துல ஆட்டம் கண்டனர்னு கேள்விப் பட்டிருக்கிறேன்)

அவர் 2002 ஆம் ஆண்டு தொழிலதிபர் புஷ்கர் மாதவ் நாட்டுவை திருமணம் செய்து கொண்டார்.(எப்படிக் கூப்பிட்டிருப்பார்..பேரு கொஞ்சம் நீளமோன்னோ)

பின்னர் 2006 ஆம் ஆண்டில் விவாகரத்து பெற்றார்.(ஒழுங்கா கூப்பிட முடியலைன்னா)..

அம்புட்டு தான்..அதுக்கப்புறம் அம்மணி எங்கிருக்காங்கன்னு தெரியலை.. நான் பார்த்தது ஒளவை ஷண்முகில தான் .. ரொம்ப டயட்டுல இருந்து முருங்கைக்காய்க்கு கவுன்போட்டா மாதிரி ஆனா கண்ணுல மின்னலோட வந்திருந்ததா நினைவு..

சரீஈன்னு அவங்களப்பத்தி தேடினா..இதோ அவங்களோட வலைத் தளமே இருக்கே..

http://www.heerarajagopal.com/film/films.html

கல்நாயக் ஹாப்பி?! :)

chinnakkannan
25th March 2015, 04:38 PM
//கொஞ்சம் சுருக்கமா மிஸ்டர் வேதாந்தம் கதையை சொல்லிடுங்க. // அந்தக்காலத்துப் பழைய கதைதான்.. ஆனா எழுதின விதம் இன்னும் ஃப்ரெஷ்..ஆ இருக்கு.. அப்புறமா பிறிதொரு பொழுதில் சொல்கிறேன்..

kalnayak
25th March 2015, 05:00 PM
அய்யோ சி.க. இரண்டு வானத்தில் ஒரு நிலா எப்பிடி இருக்கும் என்று புரிந்தும் கதையை நினைக்காமல் சோகத்தினால் இருண்ட வானமா என்று கேட்டுவிட்டேன். கவியரசர் என்றால் என்னைப் போன்றவர்களுக்காக 'ஒரு வெண்ணிலா இரு வானிலா' என்று எழுதி இருப்பார்.

இந்த செல்லமே செல்லம் பாட்டோட படத்தை நான் ஏதோ டீவீ-இல் பார்த்திருக்கிறேன். பார்க்கும்படி இருந்தது. இந்த கதாநாயகி தேங்காய் சீனிவாசனின் பேத்தியாம்.இதே போன்ற நாட்டுக்கு முக்கியமான ஹீரா தகவல்களுக்கும் நன்றி.

rajeshkrv
25th March 2015, 08:22 PM
சி.க.,
புத்தகம் படிக்கிறேன் என்று பொறாமையை கிளப்புகிறீர்களே. என்னால் இப்பொழுதெல்லாம் கதைப் புத்தகம் மட்டுமல்ல எந்த புத்தகமும் படிக்கமுடிவதில்லை. அதிக பட்சம் நாளிதழ்கள் மட்டுமே. ஆனால் பரவாயில்லை, உங்களிடம்தான் எல்லாம் கேட்டுக் கொள்கிறேனே. கொஞ்சம் சுருக்கமா மிஸ்டர் வேதாந்தம் கதையை சொல்லிடுங்க. யார் கிட்டயும் சொல்லிட மாட்டேன். தேவன், இவர் தானே துப்பறியும் சாம்பு கதைகளை எழுதியவர். அருமையாக இருக்கும். நான் படக் கதைகளாக படித்திருக்கிறேன்.

'மயங்கினேன் சொல்லத் தயங்கினேன்' பாடல் எனக்கும் பிடித்தது. 'நானே ராஜா, நானே மந்திரி' படத்தில் இதுமட்டும்தான் பிடித்தது.

நடிகை ஹீரா 'திருடா, திருடா' போன்ற படங்களில் நடித்த பின்பு என்ன ஆனார்?

Kelayo Kanna is another stunner by PS from Naane Raja NAane Mandhiri

rajeshkrv
25th March 2015, 08:24 PM
நிலாப் பாடல் 48: "ஓ வெண்ணிலா இரு வானிலா"
-------------------------------------------------------------------------

இதயம் படத்தில் சொல்லாத காதல் சொன்ன கதிர், நண்பர்களுக்குள் பிளவு ஏற்படுத்திய காதலை சொல்கிறார். ஓ வெண்ணிலா எனத் துவங்கும் கவியரசரின் பாடலை ஏற்கனவே பார்த்திருக்கிறோம். இது வைரமுத்துவின் ஓ வெண்ணிலா பாடல் வரிகள், A. R. ரஹ்மான் இசையில், அப்பாஸ், வினீத் நடிக்க உன்னி கிருஷ்ணன் பாடி இருக்கிறார். காதல் சோகப் பாடலாயிற்றே.

சி.க., 'ஓ வெண்ணிலா இரு வானிலா' பொருள் சொல்லுங்களேன். இரு வானிலா என்றால் இருண்ட வானம் என்று பொருள் எடுத்துக் கொள்ள வேண்டுமா?

இதோ அந்த பாடல் வரிகள்:
-----------------------------------------------
ஓ வெண்ணிலா இரு வானிலா
நீ..
ஓ நண்பனே அறியாமலா
நான்..

கண்ணே கண்ணே காதல் செய்தாய்
காதல் என்னும் பூவை நெய்தாய்
நண்பன் அந்த பூவை கொய்தால்
ஓ நெஞ்சே நெஞ்சே நீயென் செய்வாய்

(ஓ வெண்ணிலா.....)


மழை நீரில் வானம் நனையாதம்மா
விழி நீரில் பூமுகம் கரையாதம்மா
எனைக் கேட்டு காதல் வரவில்லையே
நான் சொல்லி காதல் விடவில்லையே
மறந்தாலும் நெஞ்சம் மறக்காதம்மா
இறந்தாலும் காதல் இறக்காதம்மா

(ஓ வெண்ணிலா.....)

இருக்கின்ற இதயம் ஒன்றல்லவா
எனதல்ல அதுவும் உனதல்லவா
எதை கேட்ட போதும் தரக்கூடுமே
உயிர் கூட உனக்காய் விட கூடுமே
தருகின்ற பொருளாய் காதல் இல்லை
தந்தாலே காதல் காதல் இல்லை

(ஓ வெண்ணிலா.....)
-------------------------------------------------------
காணொளி காட்சி:

https://www.youtube.com/watch?v=Xwb7VAE8ODA

காதல் தேசத்தில் இப்பாட்டு சர்வ சாதாரணம்!!!

KAdhal desathin anaithu paadalgalum Kavingar Vaali ayya.
KAdhir-ARR endral Vaali thaan no VM

kalnayak
26th March 2015, 09:29 AM
Good Morning to All.

Kadhalar Dinam paadalaasiriyar Vaali enra thagavalukku Nanri Rajesh.

chinnakkannan
26th March 2015, 10:33 AM
ஹாய் குட்மார்னிங் கல் நாயக் ராஜேஷ்..


//புத்தகம் படிக்கிறேன் என்று பொறாமையை கிளப்புகிறீர்களே. என்னால் இப்பொழுதெல்லாம் கதைப் புத்தகம் மட்டுமல்ல எந்த புத்தகமும் படிக்கமுடிவதில்லை. அதிக பட்சம் நாளிதழ்கள் மட்டுமே. // எனக்கும் தான்..பட் சைக்கிள் கேப்ல படிச்சுடுவேன்.. குமுதம் விகடன் வதி சிஎ ரெகுலர்.. கல்கி பொ.செ படங்களுக்காக வாங்குகிறேன்.. இன்னும் படிக்காத புத்தகங்கள் நிறைய இருக்கு.. முன்போல் படிக்க முடிவதில்லை..

இன்னிக்கு என்னா பண்ணலாம் திரைப்படமான நாவல்கள் பற்றிப் பேசலாமா ப்ளஸ் ஒரு பாட்..வாட் டு யூ ஸே..

kalnayak
26th March 2015, 11:02 AM
ஹாய் சி.க,

திரைப் படமான நாவல்களா? தாராளமா சொல்லுங்கோ. கேட்டுக்கறோம். எனக்கும் ஏதாவது தெரிஞ்சால் சொல்லுகிறேன்.

kalnayak
26th March 2015, 11:54 AM
நிலாப் பாடல் 49: "ஓ வெண்ணிலாவே வா ஓடி வா"
----------------------------------------------------------------------------

அடுத்த ஓ வெண்ணிலா(வே) பாடல். இதன் படம் வெற்றி அடையாமல் போயிருந்திருக்கலாம். ஆனால் இதன் பாடல்களுக்காக இன்னும் நினைவில் உள்ளது. வைரமுத்துவின் கதை, இளையராஜாவின் சொந்த படம் என்று நினைக்கிறேன். இதுவும் காதல் பாடல்தான். எதிர்பாராதது, மூன்று முடிச்சு, போன்று காதலுக்குள் முரணான உறவு முறைகளை நுழைத்த படம். புதிய முகங்கள் நடித்திருக்கிறார்கள். நாயகன் பெயர் பாலச்சந்தர் என்று போட்டிருக்கிறது. நாயகி அஷ்வினி பின்னாட்களில் பார்த்திபனின் பொண்டாட்டி தேவை படத்தின் மூலம் பெயர் பெற்று பல படங்களில் நடித்தார். படத்தை இயக்கியவர் பாலகிருஷ்ணன்(?) பாடலை எழுதியவர் கங்கை அமரன் என்பதை ராஜேஷ் உறுதிப் படுத்துவார். பாடியவர்கள் S.P. பாலசுப்ரமணியம், S. ஜானகி.

பாடல் வரிகள்:
------------------------
ஆண் : ஓ வெண்ணிலாவே வா ஓடி வா
ஓ வெண்ணிலாவே வா ஓடி வா

பெண் : ஓ வெண்ணிலாவே வா ஓடி வா

{ஆண் : நாளை இந்த வேளை எமை நீ காண வா ஓ
பால் போல வா

பெண்குழு : ஆ...ஆ...ஆ... ஆ...ஆ...ஆ..} (ஓவர்லாப்)

{பெண் : நாளை இந்த வேளை எமை நீ காண வா ஓ
பால் போல வா

பெண்குழு : ஆ...ஆ...ஆ... ஆ...ஆ...ஆ..} (ஓவர்லாப்)

ஆண் : ஓ வெண்ணிலாவே

பெண் : வா ஓடி வா

(இசை) சரணம் - 1

பெண் : நிலவின் ஜாடை தெரியும் ஓடை
அழகே நீயும் நீராடு ஹோ

ஆண் : மலர்கள் சேர்ந்து மாலை கோர்த்து
அடடா நீயும் பூச்சூடு

பெண் : கதைகள் பேசு கவிகள் பேசு
விடியும் வரையில் நீ பாடு

ஆண் : நிலவே நீயும் தூங்காதே ஹோய்

{ஆண் : நாளை இந்த வேளை எமை நீ காண வா
பால் போல வா
பெண்குழு : ஆ...ஆ...ஆ... ஆ...ஆ...ஆ..} (ஓவர்லாப்)

பெண் : ஓ வெண்ணிலாவே வா ஓடிவா

ஆண் : ஓ வெண்ணிலாவே வா ஓடி வா

{பெண் : நாளை இந்த வேளை எமை நீ காண வா ஓ
பால் போல வா

பெண்குழு : ஆ...ஆ...ஆ... ஆ...ஆ...ஆ..} (ஓவர்லாப்)

{பெண் : லாலி லாலி லாலி லாலி லா
பெண்குழு : லாலி லாலி லாலி } (ஓவர்லாப்)

{பெண் : லாலி லாலி லாலி லாலி லா
பெண்குழு : லாலி லாலி லாலி } (ஓவர்லாப்)

{பெண் : லாலி லல்லாலி லாலி லல்லாலி லா
பெண்குழு : லாலி லாலி லாலி } (ஓவர்லாப்)

{பெண் : லாலி லாலி லாலி லாலி லாலி லாலி லா
லாலி லாலி லாலி லாலி லாலி லாலி லா
லாலி லல்லேல லாலி லல்லேல ஓ

பெண்குழு : லா...ஆ.. ஆ..ஆ.. ஆ..ஆ.. ஆ..ஆ..
ஆஆஆ ஆ...ஆ.. ஆஆஆஆ...ஆ...} (ஓவர்லாப்)

(இசை) சரணம் - 2

ஆண் : இதமாய்ச் சாய்ந்து இமைகள் மூடு
இது தான் முடிவு வேறேது ஹோய்

பெண் : இறக்கும் போதும் இதுவே போதும்
இனிமேல் பிறவி வாராது

ஆண் : காதல் மாலை சூடும் வேளை
அழுகை ஏனோ கூடாது

பெண் : நிலவே நீயும் தூங்காதே ஹோய்

{பெண் : நாளை இந்த வேளை எமை நீ காண வா ஓ
பால் போல வா

பெண்குழு : ஆ...ஆ...ஆ... ஆ...ஆ...ஆ..} (ஓவர்லாப்)

இருவர் : ஓ வெண்ணிலாவே வா ஓடிவா
ஓ வெண்ணிலாவே வா ஓடி வா

நாளை இந்த வேளை எமை நீ காண வா ஓ
பால் போல வா

ஆனந்தம் கொண்டு நீங்கள் இன்று போல் வாழ்கவே
ஆயிரம் பௌர்ணமிகள் கண்டு தான் வாழ்கவே
ஆதியில் சேர்ந்த காதல் ஆனந்தம் காணவே
ஆகாயம் உள்ள மட்டும் அழியாமல் வாழ்கவே


காணொளி காட்சி:
---------------------------
https://www.youtube.com/watch?v=h83E2pXPvzQ

பாட்டைக் கேட்டுவிட்டு ஆனந்த கும்மி கொட்டுங்கள்.

chinnakkannan
26th March 2015, 01:06 PM
//பாடலை எழுதியவர் கங்கை அமரன் என்பதை ராஜேஷ் உறுதிப் படுத்துவார்.// :)

ஆனந்தக் கும்மி படம் பார்த்ததில்லை பாடல்கள் கேட்டிருக்கிறேன் ஃபேமஸ் பாட்டு ஒரு கிளி உருகுது உரிமையில் பழகுது ஓ மைனா மைனா..
இந்தப் பாட்டு நினைவில் வரவில்லை..வீட் போய் பார்க்கணும்.. தாங்க்ஸ்

kalnayak
26th March 2015, 01:52 PM
சந்திரன் பாடல் 50: "வதனமே சந்திர பிம்பமோ?"
-----------------------------------------------------------------------

நிலவை இதுவரை நிலவு, வெண்ணிலவு, வெள்ளி நிலவு, தங்க நிலவு, மஞ்சள் நிலவு, வானத்து நிலவு என்று கவிஞர்கள் பாடி காதல் பாடல்கள் எழுதி பார்த்தோம். இதை மாற்றுவார்களா என்று பார்த்தால் அதே நிலவை பல பாடல்களில் சந்திரன் என்று அழைத்தும் பாடியிருக்கிறார்கள். தொடர்ந்து சில சந்திரன் பாடல்களைப் பார்த்துவிட்டு நிலவு பாடல்களுக்கும், மதி, அம்புலி பாடல்களுக்கும் போகலாம்.

50வது பாடல் வித்தியாசமாக எழுத நினைத்தேன். கிடைத்தார் M.K. தியாகராஜ பாகவதர். அதுவும் சந்திரன் பாட்டை பாடி. விடுவோமா?

பாபநாசம் சிவன் பாடல் எழுத தமிழ் இசை சாம்ராட் G. ராமநாதன் இசையில் M.K. தியாகராஜ பாகவதர் நடித்து பாடிய பாடல். உடன் நடித்தவர் நடிகை எஸ். ஜெயலக்ஷ்மி. 1943-ல் வெளிவந்த படமாம். ராகவேந்திரா போன்றவர்கள் அதிக விவரம் கொடுக்கக் கூடும். பாடல் நன்றாகவே உள்ளது. எப்பொழுதிருந்து காதலை சொல்ல சந்திரனை அழைத்தார்கள் என்ற விவரம் சி.க. சொல்லக் கூடும்.

பாட்டு வரிகள்:
-----------------------

வதனமே சந்திர பிம்பமோ மலர்ந்த சரோஜமோ?
வதனமே சந்திர பிம்பமோ மலர்ந்த சரோஜமோ?
வதனமே சந்திர பிம்பமோ?

மாறன் அம்போ நீள் விழியோ?
மாறன் அம்போ நீள் விழியோ மதுர கானமோ?
மாறன் அம்போ நீள் விழியோ மதுர கானமோ?

வதனமே சந்திர பிம்பமோ மலர்ந்த சரோஜமோ?
வதனமே சந்திர பிம்பமோ?

மின்னும் மோகனக் கொடியிடையாள் ஆ..
மின்னும் மோகனக் கொடியிடையாள்
அன்னமோ மடப் பிடி நடையாள்
மின்னும் மோகனக் கொடியிடையாள்
அன்னமோ மடப் பிடி நடையாள்

புன்னகை தவழ் பூங்கொடியாள்
புன்னகை தவழ் பூங்கொடியாள் புவன சுந்தரியோ?
புன்னகை தவழ் பூங்கொடியாள் புவன சுந்தரியோ?

வதனமே சந்திர பிம்பமோ மலர்ந்த சரோஜமோ?
வதனமே சந்திர பிம்பமோ?
----------------------------------------------------------------------------------------

காணொளி:
-----------------

https://www.youtube.com/watch?v=TtCxsP1mrUg

ஒரே திரை அரங்கில் மூன்று வருடம் ஓடிய சிவகவி என்பார்கள்.

chinnakkannan
26th March 2015, 03:34 PM
//ஒரே திரை அரங்கில் மூன்று வருடம் ஓடிய சிவகவி என்பார்கள்.//என்னா எக்ஸர்ஸைஸ்.. இளைச்சு துரும்பா போயிருப்பாரோ :)

அது சரீ ஈ.. சந்திரனையும் எடுத்துக்கிட்டீங்களா..ரொம்ப வெய்ட்டான டைட்டில் தான்.. ஒரு இருநூறு பாட் ஓடும்னு நினைக்கறேன்..

kalnayak
26th March 2015, 05:13 PM
சி.க.,
நான் அதிக பட்சமாக நூறு பாடல்களில் முடித்துக் கொள்கிறேன். நான் விட்டுவிடும் பாடல்கள் நீங்கள் உங்கள் பாணியில் தொடரலாம்.

chinnakkannan
26th March 2015, 05:37 PM
//நான் அதிக பட்சமாக நூறு பாடல்களில் முடித்துக் கொள்கிறேன். நான் விட்டுவிடும் பாடல்கள் நீங்கள் உங்கள் பாணியில் தொடரலாம்// ஏன்.. நான் சும்மா தானே சொன்னேன்..எழுதுங்க்ணா...

ம்ம் இந்தியா தோல்வி..ஏற்பது கடினமாகத் தான் இருக்கிறது..

chinnakkannan
26th March 2015, 05:44 PM
டபக்கென நினைவுக்கு வரும் திரைப்படங்களான நாவல்கள்

தில்லானா மோகனாம்பாள் -அதே பெயர்
ராவ் பகதூர் சிங்காரம் - விளையாட்டுப் பிள்ளை
பாவை விளக்கு - அகிலன் - அதேபெயர் படத்திலும்
வாழ்வு எங்கே - அகிலன் - குலமகள் ராதை
சுமைதாங்கி - ராகி ரங்கராஜன் - அதே பெயர்
இது சத்தியம் - ரா.கி. ரங்கராஜன் -அதேபெயர்
மோக முள் தி ஜானகிராமன் 0 அதே பெயர்
கையில்லாத பொம்மை - ராகி ரங்கராஜன் - கைராசிக்காரன்
அனிதா இளம்மனைவி - இது எப்படி இருக்கு
ப்ரியா - ப்ரியா
காயத்ரி - காயத்ரி
கரையெல்லாம் செண்பகப்பூ - க.செ. எல்லாம் சுஜாதா நாவல்கள்
சில நேரங்களில் சில மனிதர்கள் - ஜெயகாந்தன்
புவனா ஒரு கேள்விக்குறி மகரிஷி
வணக்கத்துக்குரிய காதலியே - ராஜேந்திர குமார்..
பார்த்திபன் கனவு கல்கி

எதாச்சும் விட்டுப் போச்சா..

chinnakkannan
26th March 2015, 05:56 PM
திரையில் மலர்ந்த நாவல்கள் - நாலு பாரா திடீர்த் தொடர் 1


விஷூவலுக்கும் எழுத்துக்கும் வித்யாசமென்பது அகண்ட காவிரியைவிட அகலமானது..கற்பனையில் எழுத்தாளர் உருக்கமாக இரண்டு மூன்று பாராக்களில் கதானாயகனான சின்னக் கண்ணன் இந்தியா தோல்வியை நினைத்து மெழுகுவர்த்தீ எரிந்து உருகியதைப் போல உருகி உருகி வருத்தப் பட்டான் என ஈஸியாக எழுதிவிடுவார்.. சி.கவை நடிக்கவைப்பதே கஷ்டம் அதுவும் உருகி நடிக்க வேண்டுமென்றால் அந்த் அந்த மெழுகால் சுட்டாலும் வராது..

எனில் விஷீவல் அல்லது சினிமா என்பதில் நாவலைக் கொண்டுவருவது மிகக் கடினம்..சில சமயங்களில் எழுத்தாளரின் கதை என்று வாங்கிவிட்டு தலைப்பை வைத்து வேறு கதை பண்ணிய சம்பவங்க்ள் நிகழ்ந்திருக்கின்றன..

ஸ்ரீதர் ரா.கி ரங்கராஜனின் கதையான சுமைதாங்கியைக் கொஞ்சம் முக்காலே மூணுவீசம் கொண்டுவந்துவிட்டார் என்று தான் சொல்லவேண்டும்..கடைசி கிளைமாக்ஸ் மட்டும் மாற்றிவிட்டார்.. //திடுதிப்பென கதானாயகன் எந்தக் காட்சியிலும் சொல்லாத - சொல்லப் படாத கிறிஸ்தவ மதத்தில் பாதிரியாராகச் சேர்கிறான் -என ஸ்ரீதர் மாற்றியது கொஞ்சம் எனக்கு திடுக்கெனத் தான் இருந்தது என்கிறார் ரா.கி ர. தனது சுயசரிதையான அவன் -இல்//

சுமைதாங்கியில் பிடித்த பாடல் பல இருந்தாலும் உருகி உருகி ப் பாடும் என் அன்னை செய்த பாவம் எனக்கு ப் பிடிக்குமாக்கும்..

https://youtu.be/H304GEPiMQQ

என் அன்னை செய்த பாவம்..
நான் மண்ணில் வந்தது..
என் அழகு செய்த பாவம்
நீ என்னை கண்டது..

என் அன்னை செய்த பாவம்..
நம் கண்கள் செய்த பாவம்..
நாம் காதல் கொண்டது..
இதில் கடவுள் செய்த பரிகாரம்..
பிரிவு என்பது..

mm நிறைய எழுதலாம் ..ஆனா நறுக் சுறுக்னு எழுதிடலாம்னு பாக்கேன் :)

chinnakkannan
26th March 2015, 06:13 PM
திரையில் மலர்ந்த நாவல்கள் -2 ( நாலு பாரா திடீர்த் தொடர்)


சோகையாய் ஒரு ரயில்வேஸ்டேஷன்.. சோம்பலாய் ஒரு கிராமம். அதில் இறங்கும் ஒரு பட்டணத்து இளைஞன்.. வந்திருப்பது நாட்டுப்புற ப் பாடல்கள் ஆராய்ச்சி. பார்ப்பது ஒரு ஒல்லி ஒல்லி ஆனால் அழகான வெள்ளரிபிஞ்சு விற்பவள்.. அவளே கிராமத்து ஜமீன் வீட்டை வழிகாட்டுகிறாள்..பின் ஜமீன் வாரிசு என ஒரு பெண் வந்து சேர்ந்து பின் பின் பின்.. கொலையாகிறாள்..

விகடனில் வெகு ஜோராய் சுஜாதாவால் ஆரம்பிக்கப் பட்ட நாவல் கரையெல்லாம் செண்பகப்பூ.. வாரா வாரம் வெள்ளிக்கிழமை காலை அக்காவீட்டுக்குப் போய் விகடன் படித்து விட்டுத் தான் போவேன் (வீட்டில் குமுதம் மட்டும்தான்வாங்குவார்கள்) வெகு சுவாரஸ்யம்.. அதில் நாட்டுப்புற இளைஞன் கல்யாண ராமன் வெ.பி.விற்கும் வெள்ளி என்ற கிராமியப் பெண்ணின் மீது கொள்ளும் மெல்லிய காதல் வெள்ளியோ தன் மாமன் மருதமுத்துவை நினைத்து உருகி பின் க.ரா.காதலைப் புரிந்து க்ளைமாக்ஸில் க.ரா வுடன் சேர ஆசைப்பட்டு மனதுள் பேச...எதுவும் பேசாமலேயே ரயில் கடகடவென வேகமெடுக்க முடியும் கதை.. நடுவில் அந்தக் கொலை கொலைகாரன் யார் என்பது தெரிவது எல்லாம் வெகு நன்றாக இருக்கும்..போதாக்குறைக்கு ஜெ.. எனச்சொல்லப்படும் ஜெயராஜின் ஓவியங்கள்..பின் இருக்கா - என ரெண்டு வார்த்தை சினேகலதா சொல்வதாக சுஜாதா எழுதியிருக்க அந்த இரண்டு வார்த்தைக்கு சினேகலதாவிற்குச்சட்டை போட்டு பின் போடாமல் கேட்பதாக வரைந்திருக்கும் படமிருக்கிறதே இன்னும் நினைவிருக்கிறதென்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.... நைஸ் :)

கதை படித்த ஹேங்க் ஓவரில் இருக்கும் போதே படக் படக் கென படமெடுக்கப்பட்டு மதுரை கல்பனாவில் ரிலீஸாக போய் பார்த்தால் வெகு ஏமாற்றம் தான் மிஞ்சியது..என்ன கல்யாண ராமனாக பிரதாப் வெள்ளியாக ஸ்ரீப் ரியா மருத முத்துவாக சுந்தர் கிழவியாக வரும் மனோரமா ஜமீன் பொண்ணாக வரும் சுமலதா ஜமீன் பங்களா கிராம லொகேஷன் எல்லாமே கன ஜோர் ஆஆஆனால்...... அந்த மெல்லிய காதல்.. கூடாதாம்.. லேடீஸ் செண்டிமெண்ட்டிற்கு ஒத்து வராதாம்..எனில் அதை வெட்டி விட...படம் என்னவோ நா.பு பா ரிசர்ச் செய்யறவன் ஒரு கிராமம் விசிட் செஞ்சுட்டு திரும்ப வர்றான் என்ற ஒன்லைனுக்கு ஏற்றபடி இருந்து வெறுமை தான் மிச்சம்..

ஆறுதலாய் இசை இளையராஜா.. மற்றபாடல்கள் நினைவிலில்லை பிஜிஎம் நன்று என நினைவு.. ஏரியிலே இலந்த மரம் நினைவில் இருக்கிறது..ஆரம்ப அத்தியாயத்தில் - காடெல்லாம் பிச்சி கரையெல்லாம் செண்பகப்பூ.. நாடே மணக்குதில்ல நல்ல மகன் போற பாதை - நாட்டுப்புறப் பாடலை முதல்வனில் யூஸ் பண்ணியிருப்பார் சுஜாதா..


https://youtu.be/goTE1xWs0uE

rajeshkrv
26th March 2015, 10:37 PM
lakshmi's novel was made as kulamagal radhai

yes aandha kummi lyircs by GA

Gopal.s
27th March 2015, 07:05 AM
lakshmi's novel was made as kulamagal radhai

yes aandha kummi lyircs by GA

No Rakesh. Lakshmi's Novel Pen Manam was made as Iruvar ullam. Kulamagal Radhai is Akilan's Vazhvu Enge.

some more to add. Kalki thyaga boomi, Kalvanin Kathali, Jayakanthan yarukkaaga azhuthan,unnai pol oruvan,kaval deivam,oru nadigai nadagam parkiral,mu.varada rasan petra manam,akilan kayal vizhi, jaya mohan ezhavathu ulagam, magarishi ennathan mudivu,vattathukkul sathuram,pathrakali , hema anandha dheerthan mannippe kidaiyadhu,kamala sadagopan kadhavu, indhra parthasarathy kuruthi punal as kan sivanthal man sivakkum,anuradha ramanan sirai, uma chandran mullum malarum, pudhumai pithan sitrannai, ponneelan poottatha poottukkal, siva sankari nandu,oru manithanin kathai,47 natkal,manian idhaya veenai,ilavu kaatha kili, idhaya malar, perumal neruppu as aval oru thodarkathai,Plenty more.

madhu
27th March 2015, 07:26 AM
romba naal kazhichu... clinic pogadha day !! :).... Friend-oda laptop kidaichadhu innum santosham ( though for a short time ).
phone-il padikkavum mudivadhillai.. type adikkavum mudivadhillai. As I am in rural area.. ippo signal kidaipadhe kashtama pochu.
Gopalji, chikkaji, rajeshji.. ellarum nalla irukkeenga enru nambugiren.

Unable to read more posts... Gopalji.. kadhavu novel movie-a vandhucha ? enna title ? Javar seetharamanin sila novels kooda vandhirukku illiya ?

( keypad thontharavu.. so thappaga type aagi irundha mannichukunga )

RAGHAVENDRA
27th March 2015, 08:38 AM
சினிமாவுக்குப் போன சித்தாளு.. எந்த படம்.. சி.நே.சி.ம. வா அல்லது ஒ.ந.நா.பா. வா

RAGHAVENDRA
27th March 2015, 08:38 AM
சிற்றன்னை .. உதிரிப்பூக்களா..

rajeshkrv
27th March 2015, 09:55 AM
madhunna

javar seetharaman - panam pen paasam

kalnayak
27th March 2015, 10:20 AM
சி.க.,
திரையில் மலர்ந்த நாவல்கள் - நல்ல துவக்கம். சுமை தாங்கி படம் பார்த்ததில்லை. வாலியின் கதையில் வரும் "மயக்கமா, கலக்கமா" பாடல் மட்டுமே தெரியும். சோகமான படம் என்று கேள்வி. ரா.கி ரங்கராஜனின் நாவல் என்பது எனக்கு புது தகவல். நீங்கள் போட்டிருக்கும் அமைதியான பாடல் "என் அன்னை செய்த பாவம்" இப்போதுதான் முதல் முறையாக கேட்கிறேன் என்று நினைக்கிறேன்.

இருந்தாலும் இதுக்கு நீங்கள் கொடுத்த அறிமுகம் இருக்குதே. என்னத்த சொல்லி, என்னத்த பண்ண. நாம கொடுத்துவைச்சது அவ்ளோதான். அதுக்கு எதுக்கு உங்களோட நடிப்பயெல்லாம் சொல்லி வம்பிழுக்கறீங்க.

கரையெல்லாம் செண்பகப்பூ - நாவலும் படித்ததில்லை, படமும் பார்த்ததில்லை. வீட்டில சொல்லிட்டாங்களோ, டேய் இந்த படம் நாவலா இருந்து எடுத்திருக்காங்க. போகாதே அப்படின்னு. தெரியலை. ஆனால் ஒரு சில நாவல் படங்கள் பார்த்திருக்கேனே!!! இந்தப் பாட்டு - ஏரியிலே எலந்த மரம் - கேட்டிருக்கேன் போல இருக்கே. நல்ல பாட்டுதான். எல்லாம் இந்த இளையராஜா கொடுத்த தைரியம். பாட்டை மட்டுமே நம்பி படம் எடுத்திருக்காங்க.

அப்புறம் 80-களில் ரவிச்சந்திரன் (கன்னட படங்களில் நடிப்பவர்) நடித்து பருவராகம் (இதை பற்றி இங்கே எழுதியிருந்தார்கள்.) அடுத்து பொய் முகங்கள் என்று ஒரு படம் வந்தது. அதுவும் சுஜாதாவின் கதைதான். ஒரே சோகமாக படம் போனதால் வெற்றி அடையவில்லை. நானும் பார்த்து சோகமாகிப் போனேன். ரவிச்சந்திரனும் கன்னடத்திலேயே செட்டில் ஆகி விட்டார். அதிலிருந்து ஒரு பாடல்:

https://www.youtube.com/watch?v=OXoDAdSba9s

kalnayak
27th March 2015, 10:26 AM
சி.க.,
தகவல் களஞ்சியம் கோபாலே வந்துட்டாரே - திரைப் படங்களான புதினங்களோடு. உங்க லிஸ்டோட அந்த லிஸ்ட யும் வைச்சு கலக்கலாம் நீங்க.

மதுவும் வந்துட்டாரு. ராகவேந்திராவும் வந்திட்டாரு. பெரியவங்களுக்கு இடம் கொடுத்து, நான் கெளம்ப வேண்டிய நேரம் வந்துடுச்சோ!!! அவங்க எழுத நான் படிக்கோனுமில்லையா? பார்க்கலாம். அவங்க நெறைய கொடுத்தால் (கொடுக்கணும்) நான் கெளம்பறேன். கொறைச்சலா இருந்தா நானும் கொஞ்சம் தர்றேன்.

Gopal.s
27th March 2015, 11:49 AM
B.S.Ramaiah Selvam, naluveli nilam,Javar seetharaman panam pen pasam to add more.

Gopal.s
27th March 2015, 11:51 AM
Kalnayak,

Gandhi seththuttaraa engira maathiri irukku unga kelvi. annai seitha pavam,mothiram pottathu ,jal jal jal pondra janaki padalgagai piriththu menjirukkome?

kalnayak
27th March 2015, 11:58 AM
சந்திரன் பாடல் 51: "சந்திரனை காணாமல் அல்லி முகம் மலருமா?"
-----------------------------------------------------------------------------------------------

இந்த பாட்டோட படத்தைத்தான் விவாதிச்சுகிட்டு இருக்காங்க. நாம முந்திக்கணும். கன்னடத்துப் பைங்கிளியும், ஸ்டைலிஷ் நடிகர் திலகமும் நடித்திருக்கும் பாடல். ஆகா!!! இங்கே காதலி காதலனை பார்த்து சந்திரன் என்று சொல்வது எல்லா ஆண்களுக்கும் எவ்வளவு சந்தோஷமாக இருக்கும் என்று தெரிகிறது. ஏ.பி.நாகராஜன் இயக்கத்தில், K.V. மகாதேவன் இசையில் பாடகர் திலகம் டி.எம்.சௌந்தரராஜன் மற்றும் இசையரசி P.சுசீலா பாடி வந்த அருமையான பாடல்.

பெண்: சந்திரனை காணாமல் அல்லி முகம் மலருமா
சந்திரனை காணாமல் அல்லி முகம் மலருமா
சிந்தையிலே கொண்ட சஞ்சலம் தீருமா
சிந்தையிலே கொண்ட சஞ்சலம் தீருமா
நெஞ்சில் இன்பம் வளருமா எந்நாளுமே

சந்திரனை காணாமல் அல்லி முகம் மலருமா

இசை சரணம் - 1

ஆண்: சந்தேக மேகம் சூழ்ந்திடும் போதிலே
சந்தேக மேகம் சூழ்ந்திடும் போதிலே
சந்திரன் முகத்தையே அல்லி பார்க்க முடியுமா
சந்திரன் முகத்தையே அல்லி பார்க்க முடியுமா

பெண்: என்னை இவ்விதம் வதைப்பதும் ஞாயமா
என்னை இவ்விதம் வதைப்பதும் ஞாயமா
ஏழை என் மீது இன்னும் சந்தேகமா
ஏழை என் மீது இன்னும் சந்தேகமா

ஆண்: உன் மனக் கண்களை மூடிய மேகமே
உன் மனக் கண்களை மூடிய மேகமே
தன்னால் விலகிப் போனதா என் தங்கமே

சந்திரனை காணாமல் அல்லி முகம் மலருமா
சிந்தையிலே கொண்ட சஞ்சலம் தீருமா
நெஞ்சில் இன்பம் வளருமா எந்நாளுமே

சந்திரனை காணாமல் அல்லி முகம் மலருமா

இசை சரணம் - 2

பெண்: சந்திரன் ஒளியை உண்டு வாழும்
சாதகப் பறவை ஆனேனே நானே
சந்திரன் ஒளியை உண்டு வாழும்
சாதகப் பறவை ஆனேனே நானே

ஆண்: அன்பெனும் சிறகை விரித்தே பறந்து
ஆனந்த உலகை காண்போம் நாமே
அன்பெனும் சிறகை விரித்தே பறந்து
ஆனந்த உலகை காண்போம் நாமே

பெண்: இன்பம் உண்டு என்றும் இனி
துன்பமே இல்லை
இன்பம் உண்டு என்றும் இனி
துன்பமே இல்லை

ஆண்: இனி இங்கு நீ வேறு நான் வேறில்லை
இனி இங்கு நீ வேறு நான் வேறில்லை

பெண்: ஆ... ஆ... சந்திரனை காணாமல்
அல்லி முகம் மலருமா

ஆண்: சிந்தையிலே கொண்ட சஞ்சலம் தீருமா

இருவர்: நெஞ்சில் இன்பம் வளருமா எந்நாளுமே
சந்திரனை காணாமல் அல்லி முகம் மலருமா...
---------------------------------------------------------------------------------------

காணொளி:
------------------
https://www.youtube.com/watch?v=0pgxMJQhLuE

குலமகள் ராதை-ன்னு சொல்லத்தான் வேண்டுமோ?

kalnayak
27th March 2015, 11:59 AM
Kalnayak,

Gandhi seththuttaraa engira maathiri irukku unga kelvi. annai seitha pavam,mothiram pottathu ,jal jal jal pondra janaki padalgagai piriththu menjirukkome?

மறந்து போச்சே கோபால்!!! மருத்துவரை பாத்திடலாமா?

அது சரி. நான் என்ன கேள்வி கேட்டேன் - காந்தி இறந்து போயிட்ட விஷயத்தை நீங்க சொல்றதுக்கு? சுமை தாங்கி நான் பார்த்ததில்லை. அதனால் எனக்கு அந்த படத்தை பற்றி அவ்வளவு தெரியாது என்று சொன்னேன். நீங்க பிரிச்சு மேஞ்சிருந்தா, அதை நான் பார்க்காதிருந்திருக்கலாம். பார்த்திருந்தாலும் மறந்திருக்கலாம்.

எல்லாவற்றையும் பார்த்து இருப்பதற்கோ, அப்படி பார்க்கும் எல்லாவற்றையும் மறக்காமல் இருப்பதற்கோ நான் கோபால் இல்லையே!!!

kalnayak
28th March 2015, 11:30 AM
சந்திரன் பாடல் 52: "சந்திரோதயம் ஒரு பெண்ணானதோ"
-----------------------------------------------------------------------------------
ராமச்சந்திரன் என்று பெயர் கொண்ட மக்கள் திலகம் சந்திரன் வரும் பாடலுக்கு நடிக்காமல் இருப்பாரா? அம்மாவுடன். இங்கே சந்திரனின் உதயம் ஒரு பெண்ணாக வந்ததாக இளமைக் கவிஞர் வாலி எழுத மெல்லிசை மன்னர் MSV இசை அமைத்துள்ளார். இந்த சந்திரன் மட்டும் இல்லாதிருந்தால் தமிழ் சினிமாவிற்கு எவ்வளவு பாட்டுக்கள் இழப்பாய் இருந்திருக்கும்?

சந்திரோதயம் ஒரு பெண்ணானதோ
செந்தாமரை இரு கண்ணானதோ
சந்திரோதயம் ஒரு பெண்ணானதோ
செந்தாமரை இரு கண்ணானதோ
பொன்னோவியம் என்று பேரானதோ
என் வாசல் வழியாக வலம் வந்ததோ
சந்திரோதயம் ஒரு பெண்ணானதோ
செந்தாமரை இரு கண்ணானதோ

குளிர் காற்று கிள்ளாத மலரல்லவோ
கிளி வந்து கொத்தாத கனியல்லவோ
குளிர் காற்று கிள்ளாத மலரல்லவோ
கிளி வந்து கொத்தாத கனியல்லவோ
நிழல் மேகம் தழுவாத நிலவல்லவோ
நெஞ்சோடு நீ சேர்த்த பொருளல்லவோ
எந்நாளும் பிறியாத உறவல்லவோ ….
இளம் சூரியன் உந்தன் வடிவானதோ
செவ்வானமே உந்தன் நிறமானதோ
பொன் மாளிகை உந்தன் மனமானதோ
என் காதல் உயிர் வாழ இடம் தந்ததோ
இளம் சூரியன் உந்தன் வடிவானதோ
செவ்வானமே உந்தன் நிறமானதோ

ஆ அஅ ஆ ஹா ...................................

முத்தாரம் சிரிக்கின்ற சிரிப்பல்லவோ
முழு நெஞ்சை தொடுகின்ற நெருப்பல்லவோ
முத்தாரம் சிரிக்கின்ற சிரிப்பல்லவோ
முழு நெஞ்சை தொடுகின்ற நெருப்பல்லவோ
சங்கீதம் பொழிகின்ற மொழியல்லவோ
சந்தோஷம் வருகின்ற வழியல்லவோ
என் கோயில் குடி கொண்ட சிலையல்லவோ
சந்திரோதயம் ஒரு பெண்ணானதோ
செந்தாமரை இரு கண்ணானதோ

அலையோடு பிறவாத கடல் இல்லையே
நிழலோடு நடக்காத உடல் இல்லையே
துடிக்காத இமையோடு விழியில்லையே ….
துணையோடு சேராத இனமில்லையே
என் மேனி உனதன்றி எனதில்லையே

எழிலோடு எழில் சேர்த்து இமை மூடவோ
எனக்கென்ற சுகம் வாங்க துணை தேடவோ
மலர் மேனி தனைக் கண்டு மகிழ்ந்தாடவோ
மணக்கின்ற தமிழ் மண்ணில் விளையாடவோ
கண் ஜாடை கவி சொல்ல இசை பாடவோ

இளம் சூரியன் உந்தன் வடிவானதோ
செவ்வானமே உந்தன் நிறமானதோ

சந்திரோதயம் ஒரு பெண்ணானதோ
செந்தாமரை இரு கண்ணானதோ

ஆ அஅ ஆ ஹா ...................................

----------------------------------------------------------------------------------
இந்த பாட்டோட பெருமையை ஒருத்தர் சொல்லியிருக்காரு பாருங்க:

http://tamil-blog-india.blogspot.in/2010/01/blog-post_7375.html

சரி சரி காணொளி இங்கே:

https://www.youtube.com/watch?v=nMc8d53LLaM

சந்திரோதயம் ஒரு பாட்டானதே!!!

Gopal.s
28th March 2015, 12:09 PM
Kalnayak/Si.Ka,

kalakkureenga. Enakku Apollo 11 il nilavukke pona maathiri feeling. Santhi nilayaththil oru paattu.boomiyil iruppathum.

Gopal.s
28th March 2015, 05:08 PM
நல்ல விஷயங்கள் எந்த மொழியில், உலகின் எந்த பகுதியில் இருப்பினும்,அதை தமிழுக்கு கொண்டு வந்து ,தமிழுக்கு வளம் சேர்க்க சொன்னவர் பாரதி.பாரதியாரின் ஆணையை சிரமேற்கொண்டு பல நல்ல வெளிநாட்டு திரைப்பட காவியங்களை, பல நல்ல பிற மொழி கதைகளை,படங்களை,பல நல்ல இந்திய நாடகங்களை,நமது மரபாம் தெரு கூத்து, மற்றும் காவியங்களை தமிழ் திரைப்படங்களுக்கு கொண்டு வந்து, புதிய சிந்தனைகள்,பரிசோதனை முயற்சிகள் ,புதிய வித்தியாச கதை களம், தமிழில் கொண்டு வர தளம் அமைத்த முன்னோடி நமது முழு முதல் நடிப்பு கடவுளாம் நடிகர் திலகமே. அது மட்டுமன்றி தமிழில் வெளி வந்த சிறந்த நாவல்கள்,கதைகள் திரைப்படங்களாக காரணமாய் இருந்த முன்னோடி.

நடிகர் திலகம் நடித்து படமான சில சிறந்த தமிழ் கதைகள்-

கள்வனின் காதலி- அமரர் கல்கி-
ரங்கோன் ராதா- அமரர் அண்ணா.
புதையல்- கருணாநிதி
மரகதம்- வழுவூர் துரைசாமி
பாவை விளக்கு- அகிலன்
பெற்ற மனம்- மு.வரதராசனார்.
குலமகள் ராதை- அகிலன்
இருவர் உள்ளம் - லட்சுமி
தில்லானா மோகனாம்பாள்- கொத்தமங்கலம் சுப்பு.
காவல் தெய்வம் - ஜெயகாந்தன்
விளையாட்டு பிள்ளை-கொத்தமங்கலம் சுப்பு.

chinnakkannan
29th March 2015, 10:12 AM
ஹாய் குட்மார்னிங்க் ராஜேஷ், கல் நாயக், கோபால், ராகவேந்தர் மதுண்ணாவ்...
வாங்க வாங்க..

ஒரு க்விக்கா போஸ்ட் போட்டுக்கட்டா.. அப்புறமா ஆஃப்டர்னூன் வாரேன்..

கோபால்.. எனக்குத் தெரியும் நீங்கள் லிஸ்ட் கொடுப்பீர்கள் என்று..வாவ் நைஸ்.. நானும் யோசிக்க யோசிக்க வந்தன.. பட் எழுத த் தான் முடிய்வில்லை வீட்டிலிருந்து.. ம்ம்.ஆஃபீஸ் லேப்டாப்பிலும் ஆன் ட்டி வைரஸ் எக்ஸ்பைராகி ஆன் செய்ய பயம்.. இன்னும் இரு நாட்களில் சரியாகி விடும்..

ராஜேஷ்.. பெண் மனம் தான் லஷ்மி என ச் சொல்ல ஆசை முடியவில்லை..பட் எனக்குக் கன்ஃபர்ம் செய்வதற்கோ என்னவோ நேற்று கலைஞர் டிவியில் இருவர் உள்ளம் போட்டார்கள்..எஞசாய்ட் த மூவி

கதவு வந்ததாக நினைவில்லை கோபால்..மீன்ஸ் எந்தப் பெயரில்..

ராகவேந்தர் சார் வாங்க்..சினிமாவுக்குப்போன சித்தாள்..?

திடீர்னு நினைவுக்கு வ்ந்த நாவல்.. இன்று நீ நாளை நான் (சி.ஏ.பாலன் தூக்குமர நிழலில்)

கோபால்..புதையல் தொடர்கதையாக வந்ததா என்ன..

கல் நாயக்..அடுத்த போஸ்டில் வாரேன்..

chinnakkannan
29th March 2015, 11:04 AM
//சந்திரனை காணாமல் அல்லி முகம் மலருமா
சிந்தையிலே கொண்ட சஞ்சலம் தீருமா // கல் நாயக் இந்தப் படத்திலேயே இன்னொரு பாட் இருக்கே.. பகலிலே சந்திரனைப் பார்க்கப் போனேன் அவன் இரவிலே வருவதாக ஒருத்தி சொன்னாள்..

சந்த்ரோதயம் ஒரு பெண்ணானதோ பாடலும் அழகுப்பாட்டு..

அப்புறம் முக்கியமான ஒரு விஷயம் மறந்துட்டேன் கல் நாயக் ..ஷமிக்கணும்...

பொறுமையா அலசி அலசி தேர்ந்தெடுத்து நிலாப்பாடல்கள் ஹாஃப் செஞ்சுரி போட்டு த் தொடர்ந்துக்கிட்டிருக்கீஙக்.. நைஸ்..அண்ட் குட்.. அண்ட் தாங்க்ஸ் :) அந்தக் கடைசி ஒன்லைனர்ஸ் மிகவும் ரசிக்கிறேன்/றோம்..

கோபால்: சி.க வி்ன் சி.வி (ஹிஹி ரெஸ்யூமே இல்லீங்க்னா..) சின்ன விருப்பம்.. அடுத்து நாலு பாரா எழுதணும்னு நெனச்சுக்கிட்டிருக்கறது மோக முள்.. தாங்கள் அதைப் பற்றி உங்கள் எண்ணங்களை எழுதுங்களேன்.. ப்ளஸ்..சி. நே.சி. ம பற்றியும் (முன்னாலேயே வந்திருக்கிறதா)

chinnakkannan
29th March 2015, 03:01 PM
//பொய் முகங்கள் என்று ஒரு படம் வந்தது. அதுவும் சுஜாதாவின் கதைதான். ஒரே சோகமாக படம் போனதால் வெற்றி அடையவில்லை. நானும் பார்த்து சோகமாகிப் போனேன். ரவிச்சந்திரனும் கன்னடத்திலேயே செட்டில் ஆகி விட்டார். //சுஜாதாவின் காகிதச் சங்கிலிகள் நாவல் என நினைக்கிறேன்..சாவியில் தொடராக வந்த நினைவு..மணியம் செல்வன் படங்கள்.. தன் கணவனுக்கு சிறு நீரகப் பிரச்னை..மாற்றுச் சிறு நீரகத்திற்கு அம்மா அப்பா அண்ணா தம்பி தங்கை யாருமே கொடுக்க முன்வராத நிலையில் .. அந்தப் பெண் என்ன செய்தாள்..கடைசியில் கணவன் இறந்துவிடுவது போல வரும்..

சுஜாதாவின் இன்னொரு நாவல் ஜன்னல் மலர்.(ஆனந்த விகடன்). இது தான் திரையில் படமான அவரது முதல் நாவல் என நினைக்கிறேன்.. தலைப்பு யாருக்கு யார் காவல் என்று நினைவு..சம்பந்தமே இல்லாமல் எடுத்திருந்தார்கள் என அவர் எழுதியிருந்ததாக நினைவு..

Gopal.s
30th March 2015, 11:48 AM
//சந்திரனை காணாமல் அல்லி முகம் மலருமா
சிந்தையிலே கொண்ட சஞ்சலம் தீருமா // கல் நாயக் இந்தப் படத்திலேயே இன்னொரு பாட் இருக்கே.. பகலிலே சந்திரனைப் பார்க்கப் போனேன் அவன் இரவிலே வருவதாக ஒருத்தி சொன்னாள்..

சந்த்ரோதயம் ஒரு பெண்ணானதோ பாடலும் அழகுப்பாட்டு..

அப்புறம் முக்கியமான ஒரு விஷயம் மறந்துட்டேன் கல் நாயக் ..ஷமிக்கணும்...

பொறுமையா அலசி அலசி தேர்ந்தெடுத்து நிலாப்பாடல்கள் ஹாஃப் செஞ்சுரி போட்டு த் தொடர்ந்துக்கிட்டிருக்கீஙக்.. நைஸ்..அண்ட் குட்.. அண்ட் தாங்க்ஸ் :) அந்தக் கடைசி ஒன்லைனர்ஸ் மிகவும் ரசிக்கிறேன்/றோம்..

கோபால்: சி.க வி்ன் சி.வி (ஹிஹி ரெஸ்யூமே இல்லீங்க்னா..) சின்ன விருப்பம்.. அடுத்து நாலு பாரா எழுதணும்னு நெனச்சுக்கிட்டிருக்கறது மோக முள்.. தாங்கள் அதைப் பற்றி உங்கள் எண்ணங்களை எழுதுங்களேன்.. ப்ளஸ்..சி. நே.சி. ம பற்றியும் (முன்னாலேயே வந்திருக்கிறதா)

சி.க,



நான் மோகமுள் நாவல் ,படம் பற்றி அவசியம் எழுத போகிறேன். 1978-1981 ,நான் தி.ஜ வுடன் நெருங்கி பழகியவனாக்கும்.

kalnayak
30th March 2015, 11:50 AM
சி.க.,
என்ன ஃபோரத்திலிருந்து இரண்டு நாட்கள் தப்பித்துக் கொண்டீர்களா?

"பகலிலே சந்திரனைப் பார்க்கப் போனேன்" பாடல் கட்டாயம் வரும். அருமையான சோகப் பாடல் ஆயிற்றே.

மற்றபடி நான் எண்களோடு விளையாடுபவன்தான். ஆனால் இந்த கிரிக்கெட் போல எண்களை வைத்து ரெகார்ட் என்று கணிப்பதை அவ்வளவாக ரசிப்பதில்லை. எண்களை வைத்து புள்ளியியல் சொல்வதை படித்தவனாதலால் கன்சிஸ்டன்சி வருமா என்று பார்ப்பதையும், அதன் பிராபாபீலிட்டி (தமிழில் சொல்லத் தெரியவில்லை. மன்னிக்கவும்.) அளவெடுப்பதையும் அதன் கணித உருக்களை உருவாக்கவும் விரும்புபவன்.

கடைசி ஒன் லைனர்-க்கு உங்கள் பாராட்டுக்களுக்கு நன்றி. நல்ல பன்ச் கொடுக்க முயற்சிக்கிறேன்.

பொய் முகங்கள் படத்தின் நாவலின் பெயர் காகிதச் சங்கிலியா அல்லது பொய் முகங்கள்தானா என்று சிறு சந்தேகம். வலையில் சரி பார்க்க நினைத்தேன். மறந்தே போனேன். அதனால் சொல்லவில்லை. அதுதான் நீங்கள் இப்போது சொல்லிவிட்டீர்களே!!! யாருக்கு யார் காவல் பார்த்ததில்லை. சொல்லமுடியவில்லை.

chinnakkannan
30th March 2015, 01:34 PM
//நான் மோகமுள் நாவல் ,படம் பற்றி அவசியம் எழுத போகிறேன். 1978-1981 ,நான் தி.ஜ வுடன் நெருங்கி பழகியவனாக்கும்.// கோபால்.. வாவ்.. எழுதுங்க எழுதுங்க.. நான் மோ.மு ஹோல்ட் ல போட்டுட்டு மத்தது குட்டியா எழுதப் பார்க்கிறேன்..

கல் நாயக்..//மற்றபடி நான் எண்களோடு விளையாடுபவன்தான். // . எண்கள் பாட்டுக்கூட எழுதலாமே.. பத்துக்குள்ள நம்பர் ஒண்ணு சொல்லுங்க..:)

//ஆனால் இந்த கிரிக்கெட் போல எண்களை வைத்து ரெகார்ட் என்று கணிப்பதை அவ்வளவாக ரசிப்பதில்லை// நானும்..

//யாருக்கு யார் காவல் பார்த்ததில்லை. // அதற்காக வருத்தமெல்லாம் படாதீர்கள்.. ஸ்ரீதேவியில் ரிலீஸ் என நினைவு.. மூன்று நாட்களில் எடுத்தும் விட்டார்கள்..

அனேகமா நாளைலருந்து ரெகுலரா வருவேன் என நினைக்கிறேன்..ஆண்டவன் தான் அலோ செய்யணும்ம்ம்ம்.

chinnakkannan
30th March 2015, 02:35 PM
திரையில் மலர்ந்த நாவல்கள் - 3

அது ஒரு கிராமத்தில் வாழுகின்ற குடும்பம்.. பஞ்சாயத்துத் தலைவர் அப்பா , அம்மா. இரு மகள்கள் தேவி, சித்ரா.. தேவி இளையவள்..சித்ராவிற்கு அவளுடைய அத்தை பையன் உமாசங்கர் தான் என ஏற்கெனவே பெரியவ்ர்களால் முடிவு செய்யப் பட்ட விஷயம்..சூழ் நிலையில் தேவிக்கு ஒரு விபத்து நிகழ்ந்து அதனால் அவளுக்கு சற்றே முன்கூட்டி நடக்கப் போகிறவை தெரிய ஆரம்பிக்கின்றன..(உதாரணம்..ஒருவன் மாடு காணவில்லை எனச் சொல்ல அவன் கையை எதேச்சையாகத் தொட்ட தேவிக்குள் கொஞ்சம் அதிர்வு ஏற்பட அதான் அந்த வடகிழக்கு வயக்காட்டுப்பக்கம் இருக்குதே எனச் சொல்ல - சொன்னவன் தேடிப்பார்த்தால் மாடு தேவி சொன்ன இடத்திலேயே இருக்கிறது.. தன் வீட்டு வேலைக்காரியை ஒரு நாள் கோடீஸ்வரி என விளிக்கிறாள் தேவி..ஏன்மா என்றால் நீ தான் தங்கவளையல்கள் எல்லாம் போட்டுக்கொண்டு பட்டுப்புடவையில் பவனி வருவது போல த் தோணிச்சு என்கிறாள்.. மறு நாள் வேலைக்காரிக்கு லாட்டரியில் பத்து லட்சமோ என்னமோ எனறு விழுந்து விடுகிறது..) தேவி இருப்பது கிராமம்..எனில் தீயை விட வேகமாக விஷயம் பரவி எல்லோரும் அவளை த் தெய்வமெனப் பார்க்க ஆரம்பிக்கிறார்கள்..

பட்டணத்தில் இன்னொரு பெண் ஜென்னி.. தேவியின் ஜெராக்ஸ்.. அவளுக்கு ஒரு லவ்வர்.. ஜோஸப்..வழக்கம் போல காதலுக்குப் பணக்காரத் தந்தை தாமஸ் ஒத்துக்கொள்ள வில்லை.. எனில் திருமணம்செய்து கொள்ளலாமென நினைக்கும் போது ஜென்னிக்கு அடிவயிற்றில் பிரளயமாய் ஒரு வலி உருக்கி உருக்கி வலிக்க அவள் அலறுகிறாள்.. ஜோஸப் டாக்டரிடமழைத்துச் சென்று காட்டுகையில் டாக்டர் கான்ஸரோ என்னவோஎன ஒரு கொடிய வியாதியின் பெயர் சொல்லி அவள் இருக்கப் போவது கொஞ்ச நாள் தான் என்கிறார்.. ஜென்னி தந்தையைப் பார்க்க வருகையில் தாமஸ் தான் அவளது வள்ர்ப்புத் தந்தை என்றும் ஒரிஜினல் தந்தை கிராமத்தில் இருக்கிறார் என்றும் இரட்டையரில் ஜென்னியைத் தானெடுத்து வந்ததாகவும் கூற கிராமத்தில் இருக்கும் தேவியைப்பார்க்க ஆசைப்பட்டுப் போனால்..

கிராமத்தில் தேவியின் நிலைமை மோசமாக இருக்கிறது.. காரணம் அவளே தான்.. விஷயமென்ன வென்றால் எல்லாரும் அம்மன் ரேஞ்சுக்கு அபிஷேக ஆராதனை செய்வதை பொறுக்கவொண்ணாத தேவி சில பல தப்புத்தப்பான ஹேஷ்யங்களைச் சொல்லி விடுகிறாள்..கிராமத்தினருக்கு நம்பிக்கை போய்விடுகிறது..கொஞ்சம் நிம்மதியாக இருக்கலாம் என தேவி நினைக்கையில் அக்கா சித்ராவிற்கு அத்தை பையன் உமாசங்கர் வருகிறான்..வெளி நாடு போவதாகவும் உடனடியாக க் கல்யாணம் செய்யவேண்டுமென்றும் கூற தேவியின் பெற்றோருக்கு ஒரே மகிழ்ச்சி.. தேவிக்கும் மகிழ்ச்சி..அத்தானின் கைகுலுக்கப் பார்க்கையில் மறுபடியும் அவளுக்கு ஏற்படும் அதிர்வு ஏற்படுகிறது..

அதில் அத்தான் உமாஷங்கர் போகும் விமானம் தீப்பிடித்து எரிவதைப் பார்க்கிறாள் காட்சியாக.. தான் சொல்வதை எவரும் நம்ப மாட்டார்கள் எனத் தெரிந்ததால் கல்யாணத்தைத் தடுக்க நினைக்க அனைவரும் அவளைத்தப்பாக நினைத்து விடுகிறார்கள்.. அவள்- உமாஷங்கரை ஆசைப்படுவதாக நினைக்கிறார்கள்..விதி வலியதாகி உமாஷங்கர் கிளம்பிச் சென்ற பிறகு தான் தேவி தான் கண்ட கனவை..தனது உள அதிர்வுகள் சொன்னதை அக்காவிடம் சொல்கிறாள்..அக்கா அதிர்ந்து நிற்க ஃபோனும் வருகிறது..உமாஷங்கரின் மரணச்செய்தியைத் தாங்கி..அனைவரும் தேவியைக் குறை சொல்ல நொந்து போய் தேவி வெளியேறும் தருணம் ஜென்னியின் கார் அந்த வீட்டு வாசலில் வந்து நிற்கிறது..

தேவி ஜென்னி இருவரும் சந்திக்க ஜென்னி பெற்றோரைப் பார்த்து வருகிறேனெனச் சொல்லி உள் செல்ல - ஏற்கெனவே கோபத்தில் அவளை கன்னா பின்னாவென அடித்திருந்த அவள் அப்பா அவளிடம் மன்னிப்புக் கேட்க வர..ஜென்னி அவர்களைப்பார்த்த மகிழ்ச்சியிலேயே விழுந்து உயிர் விட எல்லோரும் தேவி என அலறி அழ,

வெளியில் இருக்கும் ஜோஸப் உள்ளே ஓட முயற்சிக்க தேவி தடுக்கிறாள்..என் ஜென்னீ என் ஜென்னீ எனப் புலம்புகிறான்.. அவனைத் தடுத்து சென்னை வந்தால் தாமஸ் மிக மரணப் படுக்கையில்.. எனில் தாமஸூக்காக ஜென்னியாக வாழ முடிவெடுக்கிறாள்.. ஜோஸப் எனக்கு என் ஜென்னி தான் நினைவு..அவள் மாதிரி நீ இருந்தாலும் உன்னை நினைக்க மாட்டேன்..தாமஸூக்காக நாம் சேர்ந்தே பிரிந்து இருப்போம் எனச் சொல்ல... நாவல் முடிகிறது (சொல்ல மறந்து விட்டேன்..தேவிக்கும் ஒரு காதலன் உண்டு..அவனும் அவளைத் தப்பாக நினைத்திருப்பான்..)

இது ராஜேந்திர குமார் எழுதி மாலை மதியில் வெளியான வணக்கத்த்க்குரிய காதலியே வின் சுருக்க்கம்.. இதுவே பின்னால் அதே தலைப்பில் படமாக வந்தது.. தேவி, ஜென்னியாக ஸ்ரீதேவி(வெகு இளமை) ஜோடிகளாக - முறையே விஜயகுமார், ரஜினிகாந்த். அப்பாவாக எஸ்வி சுப்பையா வேலைக்காரத் தம்பதிகளாக தேங்காய் சீனிவாசன் மனோரமா தாமஸாக அசோகன் தேவியின் அக்காவாக ஜெய்சித்ரா, தேவியின் அத்தானாக ஜெய்கணேஷ் என..

என்ன நாவலை அப்படியே படமாக்கி இருந்திருக்கலாம்..கதாசிரியர் சொன்னசம்பவங்களையே காட்டியிருக்கலாம்.. கொஞ்சம் மாற்றி, கடைசியில் ரஜினிகாந்த் தேவியான் ஸ்ரீதேவியை அவளது காதலன் விஜயகுமாருக்குக் கொடுப்பது போல முடித்திருந்தது விறுவிறுப்பான நாவல் படித்திருந்த எனக்குக் கொஞ்சம் ஏமாற்றமாய்த் தான் இருந்தது..சுமாராக ஓடியது என நினைக்கிறேன்..

பாடல்கள் இரு பாடல்கள் ஓகே அடியேனைப்பாரம்மா அப்புறம் ஸ்விங்க் ஸ்விங்க் உனது ஊஞ்சல் நான்.. அந்த ஸ்ரீதேவி க்யூட்டியான ஊஞ்சலை இப்போ பார்ப்போம்...:)


https://youtu.be/q22B2uaJyfc

kalnayak
30th March 2015, 02:48 PM
சி.க.,
'வணக்கத்துக்குரிய காதலியே' நானும் கதையை படித்தேனோ என்னவோ தெரியவில்லை. நிற்க. கோபால் இங்க வரமாட்டாரே. ஒரு முன் ஜாக்கிரதைதான். அவர் இதை முன்னாடியே பிரிச்சு மேஞ்சிருந்தா சொல்லிடுங்க. தேடி படிச்சுட்டு வந்து மேல சொல்றேன்.

ஆனாலும் நீங்க நல்ல எழுதியிருக்கீங்க. நெறைய எழுதியிருக்கீங்க. சொன்னமாதிரி ஸ்ரீதேவி இளமையா அழகா இருக்காங்க. பாட்டும் பட்டைய கெளப்புது.

chinnakkannan
30th March 2015, 02:55 PM
//ஆனாலும் நீங்க நல்ல எழுதியிருக்கீங்க. நெறைய எழுதியிருக்கீங்க. // அதான் சேஃபா நாலு பாராங்கறத எடுத்துட்டேனே :) போரடிச்சுதா என்ன?(அப்படி இருப்பின் அது என்ற மிஷ்டேக்.. நாவல் சுவாரஸ்யமா இருக்கும்)

ராஜேந்திர குமார் எழுதிய துப்பறியும் நாவல்களை விட அந்தக்காலத்தில் விகடனில் எழுதிய தொடர்கள் எனக்குப் பிடிக்கும்..எப்படியடி காதலிப்பது - நாவல் ஹிலாரியஸ் ப்ளஸ் ஆழமாகவும் இருக்கும்..வால்கள்.. குமுதத்தில் இஷ்டத்திற்கு பத்து விஷயங்களின் பெயர்கள் கிரிக்கெட் பால், பகவத் கீதை, கொரியப் படம் என க் கொடுத்து ஒரு கதை எழுதச் சொல்ல இவரும் ஆசிரியரின் பத்துக் கட்டளைகள் எனக் கதை எழுதியிருந்தார்..! மூடுபனி இவரது கதையைத் தழுவி பாலுமகேந்திரா எடுத்திருந்தார்.. அந்தக் கதை நான் படித்ததில்லை..

kalnayak
30th March 2015, 03:11 PM
சந்திரன் பாடல் 53: "சந்திரனே சூரியனே நட்சத்திர நாயகனே"
----------------------------------------------------------------------------------------

அப்பாடி, அம்மாடி ஒரு வித்தியாசமான பாட்டு. பார்த்ததெல்லாமே காதல் பாட்டுக்களாய், சோகமாய், சந்தோஷமாய் இருக்க, இது ஒன்றாவது தந்தை மகனைப் பார்த்து சோகமாக கொஞ்சிப் பாடும் பாட்டாக இருக்கிறதே. அதனாலேயே சூரியனுடன், நட்சத்திரங்களுடன் சந்திரன் பகிர்ந்து கொள்ள வேண்டியதாக உள்ளது. நாயகன் நினைப்பில் எடுத்த படமா தெரியவில்லை. வெற்றி பெற்றதா எனவும் தெரியவில்லை. படமா என்று பார்த்துவிட்டு நிறைய பேர் திரும்பினோம். கார்த்திக் ஒரு பாட்டு பாடி ஹிட் ஆகி (சரி வேண்டாம் விடுங்க.) ஆனாலும் ஸ்ரீவித்யா பாட்டுதான் மிக பிரபலம். இந்த பாடலை பார்ப்போம். இயக்குநர்: திரு.கே.ராஜேஸ்வர், இசை: திரு.ஆதித்யன், திரு.சிவகுரு, நடிகர்கள்: கார்த்திக், பானுப்ரியா; பாடும் நிலா பாலசுப்ரமணியம் ஒரு முறையும், கந்தர்வ குரலோன் கே.ஜே.யேசுதாஸ் அவர்கள் ஒரு முறையும் பாடியிருக்கிறார்கள்.

சந்திரனே சூரியனே நட்சத்திர நாயகனே
சந்திரனே சூரியனே நட்சத்திர நாயகனே
கிழக்கு வெளுத்ததடா மனசு அங்கே சிவந்ததடா
சுட்ட வடு ஆறல நெஞ்சில் பட்ட பின்பும் மாறல
சுட்ட வடு ஆறல நெஞ்சில் பட்ட பின்பும் மாறல

சந்திரனே சூரியனே நட்சத்திர நாயகனே
சந்திரனே சூரியனே நட்சத்திர நாயகனே

நெஞ்சிலே நெருப்ப வச்சா நீரும் அணைக்க முடியுமா
கண்ணுல முள்ளு தைச்சா இமையும் மூட முடியுமா
பாரத கதையும் கூட பழியில் முடிஞ்ச காவியம் தான்
இருப்பதும் இறப்பதும் அந்த இயற்கையோட கையிலே
இருப்பதும் இறப்பதும் அந்த இயற்கையோட கையிலே
நான் மறைஞ்ச பின்னும் நிலைப்பது என் உயிர் எழுதும் கதையிலே

சந்திரனே சூரியனே நட்சத்திர நாயகனே
சந்திரனே சூரியனே நட்சத்திர நாயகனே

நீயும் நானும் வாழனும்னா தீமையெல்லாம் தீயிடு
கெட்டது இங்கே அழியனும்னா கொடுமையெல்லாம் பழிகொடு
கண்னன் கீதையிலே சொன்னது போல் நடந்திடு
பச்சை பயிர் வாழ மண்ணில் களை எடுத்தால் தவறில்ல
பச்சை பயிர் வாழ மண்ணில் களை எடுத்தால் தவறில்ல
அந்த முடிவில் தானே தொடக்கம் தேடி புதுக்கதை நான் எழுதல

சந்திரனே சூரியனே நட்சத்திர நாயகனே
சந்திரனே சூரியனே நட்சத்திர நாயகனே

கிழக்கு வெளுத்ததடா மனசு அங்கே சிவந்ததடா
சுட்ட வடு ஆறல நெஞ்சில் பட்ட பின்பும் மாறல
சுட்ட வடு ஆறல நெஞ்சில் பட்ட பின்பும் மாறல

சந்திரனே சூரியனே நட்சத்திர நாயகனே
சந்திரனே சூரியனே நட்சத்திர நாயகனே

https://www.youtube.com/watch?v=J-yNLAwaTyQ

https://www.youtube.com/watch?v=UdLaj6v4bIo

இதுக்கு ரெண்டாம் பாகம் எடுக்கப் போறாங்களாம். ஜனங்க விட்டாலும் இவங்க அமரனை தூங்க விட மாட்டாங்க போல இருக்கே.

kalnayak
30th March 2015, 03:28 PM
//ஆனாலும் நீங்க நல்ல எழுதியிருக்கீங்க. நெறைய எழுதியிருக்கீங்க. // அதான் சேஃபா நாலு பாராங்கறத எடுத்துட்டேனே :) போரடிச்சுதா என்ன?(அப்படி இருப்பின் அது என்ற மிஸ்டேக்.. நாவல் சுவாரஸ்யமா இருக்கும்).

சி.க. நிச்சயமா போராடிக்கலை. கதை முழுவதும் கொடுத்திருந்தீங்க. சுவாரசியமாவே எழுதி இருந்தீங்க. தப்பா நினைக்க வச்சது என்ர மிஸ்டேக்


ராஜேந்திர குமார் எழுதிய துப்பறியும் நாவல்களை விட அந்தக்காலத்தில் விகடனில் எழுதிய தொடர்கள் எனக்குப் பிடிக்கும்..எப்படியடி காதலிப்பது - நாவல் ஹிலாரியஸ் ப்ளஸ் ஆழமாகவும் இருக்கும்..வால்கள்.. குமுதத்தில் இஷ்டத்திற்கு பத்து விஷயங்களின் பெயர்கள் கிரிக்கெட் பால், பகவத் கீதை, கொரியப் படம் என க் கொடுத்து ஒரு கதை எழுதச் சொல்ல இவரும் ஆசிரியரின் பத்துக் கட்டளைகள் எனக் கதை எழுதியிருந்தார்..! மூடுபனி இவரது கதையைத் தழுவி பாலுமகேந்திரா எடுத்திருந்தார்.. அந்தக் கதை நான் படித்ததில்லை..
எப்போதாவதுதான் நான் விகடன் படித்திருந்தேன். அதனால் அந்த தொடர்களை நான் படித்ததில்லை. குமுதம் படித்திருந்தாலும் பத்து கட்டளைகள் நினைவில் இல்லை.
*****இப்பொழுது இரண்டும் படிப்பதில்லை.****************

chinnakkannan
30th March 2015, 03:39 PM
//*****இப்பொழுது இரண்டும் படிப்பதில்லை.****************// ஹப்பாடி இப்ப ரொம்ப நிம்மதியா இருக்கீங்கன்னு சொல்லுங்க.. பட் இப்ப குமுதம் கொஞ்சம் பிக்கப் ஆகிடுச்சு இறையன்பு, வைரமுத்து, ரா.கி.ரவின் பழைய தொடர் என..மீன்ஸ் கொஞ்சம் சுவாரஸ்யமா இருக்கு..

அமரன் பாட்டுக் கேட்டதில்லை..கேட்டுச் சொல்கிறேன்..ஐ திங்க் படமாகவும் பார்க்கவில்லை என நினைக்கிறேன்..டப்க்குன்னு மனசுல முணுமுணுக்க ஒரு பாட்டு நினைவலையில் நீந்தி வருது..அது க்யாஹூவா தேரா வாடா ஹிந்திப்பாட்டு மெட்டில் போடப்பட்ட தமிழ்ப்பாடல்..படம் காளிக் கோவில் கபாலி! உங்களுக்கு நினைவுக்கு வருதா? :)

kalnayak
30th March 2015, 03:50 PM
அமரன் பாட்டுக் கேட்டதில்லை..கேட்டுச் சொல்கிறேன்..ஐ திங்க் படமாகவும் பார்க்கவில்லை என நினைக்கிறேன்..டப்க்குன்னு மனசுல முணுமுணுக்க ஒரு பாட்டு நினைவலையில் நீந்தி வருது..அது க்யாஹூவா தேரா வாடா ஹிந்திப்பாட்டு மெட்டில் போடப்பட்ட தமிழ்ப்பாடல்..படம் காளிக் கோவில் கபாலி! உங்களுக்கு நினைவுக்கு வருதா? :)

வெண்ணிலா வெள்ளித் தட்டுதானே. எழுதுகிறேன், கூடிய சீக்கிரம். சொன்ன காரணமும் புரியுது.

chinnakkannan
30th March 2015, 04:00 PM
திரையில் மலர்ந்த நாவல்கள் - 4

அவன் இளைஞன்..அழகன்.. நிறையப் படித்தவன்..அதனாலேயே நல்லவேலை.. எனில் கல்யாணம் செய்துகொள்ள வேண்டியது தானே..செய்தும் கொள்கிறான்.. கொஞ்சமே கொஞ்சம் உயரம் கம்மியான தங்கச் சிலை போன்ற நங்கை..மூக்கும் முழியும் கன்னமும் மற்றவையும் வெகு அழகாக அளவாக இருக்கின்றன்.. கல்யாணத்தன்று இரவே அவனுக்கு ஏமாற்றம்.. மலர்ந்து விகசிப்பாள் என்றால் தொட்டாச் சுருங்கியாய் சுருங்கி உடலைச் சுருக்கியும் கொள்கிறாள்..அவனுக்குப் புரியவில்லை..(இளைஞன் பெயர் வாசு அவன் மனைவி பெயர் வசு என வைத்து கொள்ளலாம்)..பின் தான் புரிகிறது. வசு வளர்க்கப் பட்ட விதம் அப்படி.. வளர்க்கப் பட்டது கல்யாணம் ஆனவுடனேயே கணவர் இறந்து போன அத்தைப் பாட்டியிடம் என்பது..இல்லறம், உணர்வுகள் என்பதே தெரியாதவளாக வளர்க்கப் பட்டிருக்கிறாள் வசு..

வாசுவின் அலுவலக் செக்ரட்டரி பிரகதி..அவளுடைய கணவன் ஓவியன் விஜயன். ஓவியனென்றால் பெண்களை இயற்கை அழகுடன் உடையில்லாமல் வரைபவன்.. தொழில் முனைப்பில் மனைவியிடம் சந்தோஷமாக இருப்பதுமில்லை.. சூழ் நிலையில் வாசுவின் மேலதிகாரியின் பெண் கமலி வாசு வீட்டில் தங்க நேர்கிறது..வசுவுக்கு க் கோபம் வருகிறது.. கடைசியில் வசுவிற்கு இல்லறமென்றால் என்னவென்று புரியவைத்து கமலி இறக்கிறாள்.. ஒரு சந்தர்ப்ப சூழ் நிலையில் வாசுவும் பிரகதியும் கொஞ்சம் உணர்வு நிலை மறக்கும் வண்ணம் நிகழ சட்டென இருவருமே சுதாரித்து வருந்துகிறார்கள்.. அதையே நாசூக்காய் பிரகதி விஜயனிடம் சொல்லி அழ, புரிந்து கொள்கிற விஜயனும் தொழிலுக்குத் தற்காலிக ஓய்வு கொடுத்து பிரகதியுடன் இனிய வாழ்வினைத் தொடர்கிறான்..(கண்ணா நன்னா சமாளிச்ச போ)


இது மணியன் எழுதி ஆனந்த விகடனில் வந்த மோகம் முப்பது வருஷத்தின் சுருக்கமான கதை..(பெயர்கள் மட்டும் நினைவில்லாமல் மாற்றியிருக்கிறேன்) தொடராகவோ புத்தகமாகவோ படித்த நினைவு..சுவாரஸ்யமாகத் தானிருக்கும்..

இதுவே படத்தில் வாசுவாக கமல் வசுவாக சுமித்ரா பிரகதியாக ஃப்டாபட் விஜயனாக விஜி என மோகம் முப்பது வருஷம் என்ற தலைப்பிலேயே வந்தது..சினிப்ரியாஎன நினைவு.. கொஞ்சம் சுவாரஸ்யமாகத் தான் இருக்கும். கொஞ்சம் நழுவியிருந்தாலும் விரசமாகியிருக்கும் விஷயத்தை வெகு நாசூக்காக இயல்பாக எடுத்திருப்பார்கள்.. நாவலில் கமலி இறக்கமாட்டாள்..இதில் கமலியாய் நடித்த ஸ்ரீப்ரியா டபக்கென்று பரங்கி மலையில் இருந்து விழுந்து செத்துப்போவார்..ம்ம் (ஹை நாலு பாரால முடிச்சுட்டேனே) நினைவுக்கு வரும் பாடல்..எனது வாழ்க்கைப் பாதையில் எரியும் இரண்டு தீபங்கள் எண்ணெய் இல்லை ஒன்றிலே என்ன இல்லை ஒன்றிலே- கொஞ்சம் பூசினாற்போன்ற குண்டு தீபம் ஸ்ரீப்ரியா.. (கொஞ்சம் ஷார்ட் சுமித்ரா..இந்தப் பாட்ல வர்றாங்களான்னு நினைவில்லை) பாக்கலாமா.. :)

https://youtu.be/ygSJ0c9oTtA

chinnakkannan
30th March 2015, 04:02 PM
//சொன்ன காரணமும் புரியுது.// எந்தக் காரணமும் இல்லைங்க..அதுசட்டுனு நினைவுக்கு வந்தது..க்யாஹீவாவை வெண்ணிலான்னு எழுதறதுக்கு என்ன ஒரு மனத்திட்பம் வேண்டும்..!

kalnayak
30th March 2015, 04:38 PM
என்ன சி.க. ஷார்ட்டா முடிச்சிட்டீங்க - மோகம் முப்பது வருஷம் படத்தை. நெறையவே எழுதுங்களேன்; நான் படிக்கிறேன்.

யாராவது இந்த படம் பார்த்தவங்க கமெண்ட் போடுங்க. புண்ணியமா போகும். கோபால் எங்கே?

எனது வாழ்க்கைப் பாதையில் - அப்பொழுது வந்த பாடல்கள் நிறைய இந்த மாதிரி சாயல்களிலேயே படமாக்கப் பட்டிருந்ததாக நினைவு. அழகான, இளமையான கமல். சோகமாக இருக்கும் நாயகி (ஸ்ரீபிரியாவா இது? அடையாளமே தெரியவில்லை.) இந்த பாட்டிற்கு அவ்வப்போது ஆடுவது... என்னத்த சொல்றது?

chinnakkannan
30th March 2015, 04:55 PM
ரொம்ப நாளைக்கு முன்னால் பார்த்த படம் இது கல் நாயக்.. அவ்வளவாய் நினைவிலில்லை.. கமல் சுமித்ரா,ஃப்டாபட் ஸ்ரீப்ரியா நன்றாகவே நடித்திருப்பார்கள்.. விஜயகுமார் - ஸோ ஸோ.

கமல் தொடவரும்போதெல்லாம் சுருங்கி பாட்டீ ஈ என்று கத்தி ஒளிவது, பின் புரிந்து கொண்டு கமலினிடம் சேர்வது என சுமி ராஜ்யம் தான்.. சுமித்ராவின் அம்மா அப்பாவாக வரும் சுகுமாரி மேஜர் சுந்தர்ராஜன் - ஆதர்ச தம்பதிகளாக நடித்திருப்பார்கள்..கெஸ்ட் அப்பியரன்ஸாக வந்து சுமிக்கு சொல்லிக்கொடுக்கப் பார்க்கும் மனோரமாவும் ஓ.கே. பாட்டி எஸ்.என்.லட்சுமி என நினைவு..

ஃபடாபட் கணவரிடம்(விஜயகுமார்) கண்கலங்கப் பொருமுவது நன்றாக இருக்கும்.

யூ ட்யூபில் கிடைக்கிறதா எனப் பார்க்கிறேன்..

rajeshkrv
30th March 2015, 11:47 PM
ரொம்ப நாளைக்கு முன்னால் பார்த்த படம் இது கல் நாயக்.. அவ்வளவாய் நினைவிலில்லை.. கமல் சுமித்ரா,ஃப்டாபட் ஸ்ரீப்ரியா நன்றாகவே நடித்திருப்பார்கள்.. விஜயகுமார் - ஸோ ஸோ.

கமல் தொடவரும்போதெல்லாம் சுருங்கி பாட்டீ ஈ என்று கத்தி ஒளிவது, பின் புரிந்து கொண்டு கமலினிடம் சேர்வது என சுமி ராஜ்யம் தான்.. சுமித்ராவின் அம்மா அப்பாவாக வரும் சுகுமாரி மேஜர் சுந்தர்ராஜன் - ஆதர்ச தம்பதிகளாக நடித்திருப்பார்கள்..கெஸ்ட் அப்பியரன்ஸாக வந்து சுமிக்கு சொல்லிக்கொடுக்கப் பார்க்கும் மனோரமாவும் ஓ.கே. பாட்டி எஸ்.என்.லட்சுமி என நினைவு..

ஃபடாபட் கணவரிடம்(விஜயகுமார்) கண்கலங்கப் பொருமுவது நன்றாக இருக்கும்.

யூ ட்யூபில் கிடைக்கிறதா எனப் பார்க்கிறேன்..

ஆம் வித்தியாசமான படம். சுமி நன்றாக செய்திருப்பார்.

Gopal.s
31st March 2015, 05:19 AM
There are certain Films while in Script stage,got published in popular magazines. One is Vikram by sujatha(kumudam), Metti by Mahendran(Savi).

Other Novels that comes to my mind.

Sasanam by Mahendran by Thamarai Senthur Pandi Story.

Solla marantha kathai by Thangar Bachan based on thalaikeezh vigithangal by Nanjil Nadan.

Magizhchi by Gowthaman based on Thalaimuraigal by Neela.Padmanaban.

Onbathu roopai nottu by Thangar Bachan based on his own story.

Some movies have seen the light of the Day. Udal Porul Anandhi By "Javert" seetharaman to be made with Nadigarthilagam and Ushanandhini by Ramkumar Films.

Yarukkaaga Azhuthan to be originally made with Sivaji by beemsingh.

Padagu Veedu by Ra.Ki.rangarajan was planned with Sivaji in lead but it was dropped due to its resemblance to Andavan Kattalai.

Even Vasantha Maligai is based on Kowsalya Devi Telugu Story. DevDas is based on Bengali Story. Bala's Paradesi based on George Novel. Sivaji's Babu based on Malayalam Novel.

Gopal.s
31st March 2015, 05:24 AM
There are certain Films while in Script stage,got published in popular magazines. One is Vikram by sujatha(kumudam), Metti by Mahendran(Savi).

Other Novels that comes to my mind.

Sasanam by Mahendran by Thamarai Senthur Pandi Story.

Solla marantha kathai by Thangar Bachan based on thalaikeezh vigithangal by Nanjil Nadan.

Magizhchi by Gowthaman based on Thalaimuraigal by Neela.Padmanaban.

Onbathu roopai nottu by Thangar Bachan based on his own story.

Some movies have not seen the light of the Day. Udal Porul Anandhi By "Javert" seetharaman to be made with Nadigarthilagam and Ushanandhini by Ramkumar Films,Jeeva Boomi by Shandilyan was halfway thru with Sivaji-sarojadevi pair.Pandiyan Parisu by Barathi Dhasan was planned to be produced by him with Sivaji in lead.

Yarukkaaga Azhuthan to be originally made with Sivaji by beemsingh.

Padagu Veedu by Ra.Ki.rangarajan was planned with Sivaji in lead but it was dropped due to its resemblance to Andavan Kattalai.

Other Language Stories found their way in our Movies.Even Vasantha Maligai is based on Kowsalya Devi Telugu Story. DevDas is based on Bengali Story. Bala's Paradesi based on George Novel. Sivaji's Babu based on Malayalam Novel.

kalnayak
31st March 2015, 10:22 AM
சந்திரன் பாடல் 54: "சந்திரனை தொட்டது யார் ஆம்ஸ்ட்ராங்கா"
------------------------------------------------------------------------------------------

A.R.ரஹ்மான் இசையில் நாகார்ஜுனும், பிரபஞ்ச அழகி சுஷ்மிதா சென்னும் ஆட வைரமுத்து எழுதிய பாடல். இதுவும் காதல் பாடல்தான். காலத்திற்கு ஏற்றது போல பாடலை எழுதியிருக்கிறார். சொல்வார்கள் ஆம்ஸ்ட்ராங் பெயரை பாடலில் கொண்டுவர சிரமம் எடுத்துக் கொண்டார்களாம். ஆனால் அமெரிக்காவிலேயே சந்திரனை மனிதன் தொட்டான் என்பதை ஏற்றுக்கொள்ளாதவர்கள் நிறைய பேர் இருக்கிறார்களாம். இன்னும் அதைப் பற்றிய விவாதம் நடந்து கொண்டுதான் இருக்கிறது. அமெரிக்காவும் அங்கு சென்றதாக சொல்பவர்களும் தாங்கள் சந்திரனுக்கு போகவில்லை என்று சொல்லும் வரை, போனார்கள் என்று பெரும்பாலானவர்களும், போகவேயில்லை என்று மற்றவர்களும் சொல்லிக் கொண்டுதான் இருப்பார்கள். இந்த விவாதத்தை கவிஞர் கண்டு கொண்டாரோ என்னவோ தெரியவில்லை. அதனால்தான் சத்தியமாய் சந்திரனை தொடுவது நான்தானே என நாயகனை சொல்ல வைக்கிறார். மற்றபடி கவிஞர், காதலனை காதலி எப்படி தாங்குகிறாள் என்று கேள்வி கேட்டு, காதலை சுமக்கையிலே காதலரும் பாரமில்லை என்று அங்கேயே பதிலும் தருகிறார். என்னமோ போங்க. எப்படியோ நமக்கு ஒரு இனிமையான பிரபலமான சந்திரன் பாடல் கிடைத்தது.

சரி பாடல் வரிகளை பார்ப்போமா:
--------------------------------------------------
சந்திரனை தொட்டது யார் ஆம்ஸ்ட்ராங்கா அடி ஆம்ஸ்ட்ராங்கா
சத்தியமாய் தொட்டது யார் நாந்தானே அடி அடி நாந்தானே
கனவு தேவதையே நிலவு நீதானே உன் நிழலும் நாந்தானே ஆ..
(சந்திரனை..)

பூக்களை செடிக்கொடியின் பொருளென்று நினைத்திருந்தேன்
பூக்களை செடிக்கொடியின் பொருளென்று நினைத்திருந்தேன்
பூவை உன்னைப் பார்த்த பின்னே பூக்களின் மொழியறிந்தேன்
தலையணை என்பதெல்லாம் தலைக்கென்று நினைத்திருந்தேன்
தலைவனைப் பிரிகையிலே தலையணைத் துணையறிந்தேன்
தீப்பந்தம் போன்றவன் நான் தீபமென்று மாறிவிட்டேன்
புயலுக்கு பிறந்தவள் நான் தென்றலென்று மாறிவிட்டேன்
கருங்கல்லைப் போன்றவன் கற்பூரம் ஆடிவிட்டேன்
(சந்திரனை..)

தாமரை மலர்கொண்டு செதுக்கிய ஓவியமே
என்னுடல் பாரம் மட்டும் எந்த விதம் தாங்குகிறாய்
மீன்களை சுமப்பதொன்றும் நீருக்கு பாரமில்லை
காதலை சுமக்கையிலே காதலரும் பாரமில்லை
சொர்க்கத்துக்கு வந்துவிட்டோமே தர்க்கத்துக்கு நேரமில்லை
முத்தங்கள் நீ வழங்கு இதழுக்கு நேரமில்லை
(சந்திரனை..)

காணொளி:

https://www.youtube.com/watch?v=ZIQXtyJQMIE

ரட்சகர்களுக்கு சந்திரனை தொடுவது ஒரு பெரிய விஷயம்இல்லாமல் இருக்கலாம். ஆனால் இப்படி ஒரு சந்திரனை தொடுவது...

chinnakkannan
31st March 2015, 10:33 AM
ஹாய் குட்மார்னிங்.. கல்நாயக் ராஜேஷ் கோபால்

என் நினைவுக்கு வருபவை.. லைக் விக்ரம்..

மெளன கீதங்கள் - குமுதம்..கடைசி அத்தியாயம் வெள்ளித் திரையில் காண்க எனப் போட்டிருப்பார்கள்..வெள்ளித்திரையில் கிளைமாக்ஸ் ஏமாற்றமே..

கல்யாண கனவுகளோ என்னமோ - ராஜசேகர்.. ஒரே நாளில் ஆரம்பித்து முடியும் கதை என குமுதத்தில் வந்தது..சுஹாசினி.. என நினைவு..ஒரே வாரத்தில் தியேட்டரை விட்டு ஓடிய நினைவு..(குமுதத்தில் போட்டி வைத்திருந்தார்கள்..எத்தனை சீத்தா போட்டி..!)

விக்ரம்.. எழுத்தில் வந்த போது வெகு சுவாரஸ்யம்.. நடனாவோ நர்த்தனாவோ மதுரை தியேட்டர்.. ஃபர்ஸ்ட் அரை மணி ஆர் முக்கால் மணியில் இண்ட்டர்வெல் போனதே தெரியவில்லை..இண்டர்வெல்லுக்கு அப்புறம் சலாமியாவில் ஸோ ஸோ தான்..அது கூட கதை எழுதியவண்ண்ம்..சுகிர்த ராஜாவிற்கு ஒரு பாட்டுக் கொடுத்திருப்பார்கள்..அது படத்தில் கொடுத்திருக்கலாம்.. நாலே நாலு கம்ப்யூட்டர் காண்பிக்கையில் கொஞ்சம் சிரிப்பு வந்தது நிஜம்..டிம்ப்பிள் கபாடியா ஆஸம்.

உடல் பொருள் ஆனந்தி சீரியலாய் வந்தது என நினைக்கிறேன்..சினிமா நியூஸ் எனக்குப் புதிது....

சாண்டில்யனின் ஜீவ பூமி எனக்கு ரொம்பப் பிடிக்கும்..அது சிவாஜி சர்ரூவைத்து எடுப்பதாக இருந்து நின்றது எனக் கேள்விப்பட்ட போது கொஞ்சம் வருத்தமே..(ரதன் சந்தாவத் சலூம்ப்ரா.. ரொம்பப் பொருத்தமாய் இருந்திருக்கும் ந.திக்கு)

பின்ன வாரேன்..

kalnayak
31st March 2015, 11:14 AM
மண் வாசனை கதை கூட வெளியீட்டிற்கு முன்பு ஒரு திரைப் புத்தகத்தில் வந்து படித்திருக்கேன். ஏன் திரைப்படம் வந்த பின்பு 'பேசும் படம்' புத்தகத்தில் அதன் உரையாடலை கூட போடுவார்களே!!!

மற்றபடி எனக்கும் நினைவில் இருக்கிறது - விக்ரம், மற்றும் மௌன கீதங்கள் திரைக்கதைகள் வெளியீட்டிற்கு முன்பு குமுதத்தில் வந்ததும் (நானும் படித்திருக்கிறேன்.) சி.க. சொன்னது போல் மௌன கீதங்கள் கிளைமாக்ஸ் திரையில் சற்று ஏமாற்றமே!!!

chinnakkannan
31st March 2015, 04:00 PM
திரையில் மலர்ந்த நாவல்கள் - 5

தன்மை ஒருமையில் நாவல்கள் எழுதுவது கொஞ்சம் கஷ்டமான விஷயம் தான்.. ’நான்’ என்று ஆரம்பிக்கும் போது..வேறு எந்தக் காட்சியையோ திடீரென வேறிடத்தில் இருக்கும் சம்பவங்களையோ கொண்டு வருவது கஷ்டம்..ஏனெனில் எல்லாவிடங்களிலும் கதை சொல்லியான ’நான்’ இருந்து அவளோ அவனோ - அவரவர் பார்வையில் சொல்ல வேண்டி வரும்..(குழப்பறேனா என்ன)

ஆனால் எழுத்தாளர் சுஜாதா ”காயத்ரி” என்ற இந்த நாவலில் தானே ஒரு கதாபாத்திரமாகி அவரே சொல்வது போல் எழுதியிருந்தார்..நாவல் - காயத்ரி.. ஒரு பழைய புத்தகக் கடையில் கிடைக்கும் நோட்டுப்புத்தகம்..அதில் ஒரு பெண் எழுதியிருக்கும் விஷயம் - அதை வைத்து அவரே தனது நண்பர்கள் கணேஷ் வசந்திடம் சொல்லி - அவர்கள் கண்டுபிடித்து அந்தப் பெண்ணைக் கண்டு பிடிப்பது என முழுக்க முழுக்க வெகு சுவாரஸ்யமாக
எழுதியிருப்பார்..அதுவும் காயத்ரியை அந்தப் பணக்கார வீட்டில் எதற்காக உபயோகப் ப்டுத்துகிறார்கள் என்ற சஸ்பென்ஸை உடைக்கும் விதம் திக்..திக்..(தினமணி கதிரில் தொடராக வந்தது..ஆனால் நான் முழுப் புத்தகமாகப் படித்து வெகு காலத்திற்கு ப் பின் வேலையில் எல்லாம் சேர்ந்த பிறகு பார்த்த படம்)

திரையில் ஏறக்குறைய முழுமையாக எடுத்தார்கள் என்று தான் சொல்ல வேண்டும்..ஆனால் எழுத்தாளருக்குக் கிடைக்கும் நோட்டுப் புத்தகம் என ஆரம்பித்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்..அப்படியில்லாமல் நேரடியாக காயத்ரியாக ஸ்ரீதேவியைக்காட்டி ரஜினிகாந்த் கல்யாணம் செய்து கொள்வது, ரஜினியின் அக்காவாக ராஜ சுலோசனா,எதையுமே கேட்காமல் கொடுக்கும் காயத்ரியின் குடும்பம், பின் ரஜினியின் வீட்டிற்கு ஸ்ரீதேவி குடிபோவது அங்கு நிகழும் சம்பவங்கள் என த்ரில் கெடாமலேயே சொல்லப் பட்டிருக்கும்..கதையில் வந்த மாந்தருக்கு (?!) ப் பொருத்தமான நடிக நடிகையர் தேர்வு அப்பாவி காயத்ரி - முழியும் முழியுமாய் இளமை துள்ளும் ஸ்ரீதேவி,அவளது கணவன் பிஸினஸ் மேனாக ரஜினிகாந்த் அக்காவாக ராஜ சுலோசனா, அய்யராக அசோகன், அம்மணியாக ஒரு நடிகை (யார் என நினைவில்லை) கணேஷாக ஜெய்ஷங்கர் வசந்தாக வெ.ஆ மூர்த்தி எல்லாருமே பாத்திரத்திற்கு பச்சக் கென பொருந்தியிருப்பார்கள்.. (இதில் அந்த நோட் புக் ஜெய்ஷங்கரிடமேயே அகப்படும் என நினைக்கிறேன்)
..

என்ன தமிழ்ப் பாரம்பர்யத்திற்கேற்ப திரையில் கொண்டு வரவேண்டும் என நினைத்ததாலோ என்னவோ தன்னை வைத்து தப்பான படமெடுக்கும் கணவனைப் பற்றி அறியாமலேயே கற்பைக் காப்பாற்றுவதற்காக காயத்ரியான ஸ்ரீதேவி கண்ணாடிச் சில்லால் குத்திக் கொண்டு இறந்து போவதாக முடித்திருப்பார்கள் என நினைவு..(கதையில் ஜாலியாக முடித்திருப்பார்கள்.. காயத்ரி “கணேஷ் அண்ணா வசந்தண்ணா உங்கள் இருவருக்குமே தாங்க்ஸ்.. “அண்ணாவெல்லாம் வேண்டாம் காயத்ரி” என்றான் கணேஷ்.. “ஏன்னாகக் நாங்க அந்தப் படத்தைப் பார்த்துவிட்டோம்” என்றான் வசந்த் - என்பது போல் முடித்திருப்பார்) இரண்டு பாடல்கள் அல்லது மூன்றா.. காலைப்பனியில் ஆடும் மலர்கள், வாழ்வே மாயமா வெறுங்கனவா கடும்புயலா, இது நிழலா நிஜமா.. அதுவும் இந்த வாழ்வே மாயமா..அடிவயிற்றிலிருந்து ஆரம்பிப்பது போல்க்றிச்சென ஆரம்பிக்கும் பாடல்..பிடிக்கும்..
வரிகளும் பிடிக்கும்..பாட்டுக்குப் போலாமா..

https://youtu.be/NUixEzeTpuI

Gopal.s
31st March 2015, 05:06 PM
பஞ்சு அருணாச்சலத்திடம் கதையை கொடுத்து படமாக்கிய பின் சுஜாதா comment .



என் கதை அப்படியே பத்திரமாத்தான் இருக்கு.திருப்பி கொடுத்து விடுங்களேன்.



படுபாவி பஞ்சு மூன்று கதைகளை குற்றுயிரும் கொலையுயிருமாக சிதைத்தார். (அருவருப்பான தோற்றமுள்ள தஸ்கா புஸ்கா ஒருவன் கணேஷ் ஆக)



ச்சே அனிதா இளம் மனைவி,காயத்ரி, ப்ரியா என மூன்றும் அருவருப்பான படங்களாய் வெறுப்பூட்டின.

madhu
31st March 2015, 05:09 PM
Happy Birthday Chikka சிக்கா.......உங்களை மாதிரி கவிதை எல்லாம் எழுத வராதுங்கோ..

மஸ்கட்டின் தங்க பிஸ்கட்டே..
இஸ்பேட்டு ராசாவே..
இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்

ஹிஹி.. அம்புட்டுதாங்க..

https://youtu.be/i-jlk4dEFLY

Gopal.s
31st March 2015, 05:13 PM
Happy BirthDay Kavignare.

chinnakkannan
31st March 2015, 05:21 PM
நன்றி மதுண்ணா, கோபால் :)

அனிதா இளம்மனைவி - இது எப்படி இருக்கு என எடுத்து கொலை பண்ணியிருந்தார்கள்.. நான் பார்த்ததில்லை..எங்கும் நிறைந்த இயற்கையில் என்ன சுகமோ பாட்டு என நினைக்கிறேன்..

ப்ரியா.. கேட்கவேவேண்டாம் மதுரை ஸ்ரீதேவியில் எதிர்பார்ப்புடன் போய் பொசுக்கென ஏமாற்றமளித்தது..

காயத்ரி பார்த்த போது ஏமாற்றம் தான்.. இப்போது எழுதும் போது பரவாயில்லை என்று தான் தோன்றுகிறது(கதை படிக்காமல் படம் பார்த்த் சிலர் நல்ல த்ரில்லா இருக்கு எனச் சொன்னதும் ஒரு காரணம்..) ஜெய்ஷங்கர் என்னங்க செய்றது அந்த் டைம் ஹீரோ..:)

kalnayak
31st March 2015, 05:53 PM
ஹாய் சி.க.,

இனிய பிறந்த நாள் வாழ்த்துகள். பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு பல்வளங்களும் பெற்று நோய் நொடியில்லாமல் வாழ்க, வாழ்க என்று வாழ்த்துகிறேன்.

https://www.youtube.com/watch?v=c2ZwdkMaaLU

raagadevan
31st March 2015, 06:05 PM
"மஸ்கட்டின் தங்க பிஸ்கட்டே"... Happy Birthday! :)

rajeshkrv
31st March 2015, 06:36 PM
மதுண்ணா எடுத்த கொடுக்க நான் தொடர முயற்ச்சிக்கிறேன்

மஸ்கட்டின் தங்க பிஸ்கட்டே
ஐஸ்கட்டி போல் உனது மனத்தட்டே
குறும்பு பொங்கும் உனது கவிதைக்கட்டே
கவிதை வரியில்என்றும் தருவாய் லட்டே
மன்றம் சார்பில் சொல்வோம் ஹாப்பி பர்த்டே
கூடவே துணையாய் சொல்வோம் ஹாவ் எ வொண்டர்புல் டே...

பிறந்த நாள் வாழ்த்துக்கள் சி.க

kalnayak
31st March 2015, 07:16 PM
சின்ன கண்ணன் சிங்காரக் கண்ணன்
சிரிக்க இங்கே சிக்கனம் பார்க்காதவன்
யாரும் மனம் புண்பட எழுதாதவன்
மதுரையில் வளர்ந்த சின்ன கண்ணன்
மதுரா வளர்த்த கண்ணனுக்கு பக்தன்
மதுரகானத் திரியின் மாமன்னன்
கவிதையாய் தந்தே மயக்கும் இவன்
மஸ்கட்டில் வாழும் தங்கம் என்றே
திரியில் வாழ்வோர் வாழ்த்திடவே
வந்ததிங்கே பிறந்தநாள் - பல்லாண்டு
பல்லாண்டு வாழ்ந்திடவும் எல்லா வளமும்
பெற்றிடவும் எல்லோரும் கூடி வாழ்த்துவமே!!!!

rajeshkrv
31st March 2015, 08:17 PM
சின்ன கண்ணன் சிங்காரக் கண்ணன்
சிரிக்க இங்கே சிக்கனம் பார்க்காதவன்
யாரும் மனம் புண்பட எழுதாதவன்
மதுரையில் வளர்ந்த சின்ன கண்ணன்
மதுரா வளர்த்த கண்ணனுக்கு பக்தன்
மதுரகானத் திரியின் மாமன்னன்
கவிதையாய் தந்தே மயக்கும் இவன்
மஸ்கட்டில் வாழும் தங்கம் என்றே
திரியில் வாழ்வோர் வாழ்த்திடவே
வந்ததிங்கே பிறந்தநாள் - பல்லாண்டு
பல்லாண்டு வாழ்ந்திடவும் எல்லா வளமும்
பெற்றிடவும் எல்லோரும் கூடி வாழ்த்துவமே!!!!

super kalnayak..

Richardsof
31st March 2015, 08:51 PM
கண்ணன் பிறந்தான் எங்கள் கண்ணன் பிறந்தான்

கண்ணன் என் காதலன்

கண்ணன் எந்தன் காதலன் ...கண்ணிலாடும் மாயவன் .

கண்ணனுக்கு எத்தனை கோயிலோ

இனிய நண்பர் சின்ன கண்ணனுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் .

RAGHAVENDRA
31st March 2015, 09:18 PM
Many happy returns of the day Si Ka Sir

Raghavendran

chinnakkannan
31st March 2015, 11:13 PM
அன்பின் கல் நாயக், ராகதேவன், ராஜேஷ், எஸ்.வி சார் , ராகவேந்திரர் சார்.. மிக்க நன்றி..உங்கள் அன்பிற்கு என்ன சொல்வதெனத் தெரியவில்லை..

மதுண்ணா ராஜேஷ் கல் நாயக் ....பாடல்கள் ஜோர்..:) நன்றி

எஸ்.வி.சார்.. யூ டோண்ட் பிலீவ் இட்.. நேற்றோ நேற்று முன் தினமோ முரசுவில் கண்ணனுக்கெத்தனை கோவிலோ பாட்டு பார்த்தேன் (முதல் தடவை) உங்களையும், கலையையும் நினைத்தேன் தெரியுமா.. தாங்க்ஸ்..

kalnayak
1st April 2015, 10:37 AM
சந்திரன் பாடல் 55: "ஒரு மாலை சந்திரன் மலரைத் தேடுது"
-------------------------------------------------------------------------------------

பார்த்திபன் காதல் சோகத்தில் பாடி ஆரம்பிக்க ஒரு நடனக் குழுவினர் காதல் மோகத்தைப் பற்றி பாடி அவரது பாடலுடன் கலக்குகின்றனர். இல்லை. இல்லை. ராஜாதான் கலக்குகிறார். எஸ்.பி.பாலசுப்ரமணியமும், மின்மினியும் பாடியுள்ள நல்ல பாடல்.

பாடல் வரிகள்:
----------------------
ஆண்: பால் நெலவு சூரியன்போால் சுட்டதென்ன நியாயம்
பச்சாக்கிளி தோளைக்கொத்தி வந்ததிந்த காயம்
ஓடிவந்த வைகை நதி காஞ்சதென்ன மாயம்
கூடவழி இல்லையென்றே ஆனது பெண் பாவம்

பெண்: ஒரு மாலைச் சந்திரன் மலரைத் தேடுது மலையடிவாரத்திலே
இள மானைக் கண்டிட கானம் பாடுது மன்மத ராகத்திலே
புயல் வீசும் மாசியிலே ஒரு ஆசை மேகமடி
அது பேசும் பாஷையிலே ஒரு காதல் விரகமடி
ஒரு தேகம் வெந்தது மோகத் தீயினிலே ஆஆஆ


ஆண்: வெண்ணிலவில் தேடுகின்றேன் கன்னி முகம் காணோம்
புன்னகையும் நானிழந்தேன் என் மனதில் சோகம்
சித்திரத்தைப் பார்க்க வந்தேன் கற்குவியல் கண்டேன்
செம்மலையைப் போலிருந்தேன் தென்னிலங்கையானேன்
செல்லக் குயில் கூவ மெல்ல வரும் நேரம்
சொல்லில் வரும் சோகம் கங்கை நதியாகும்
எங்கிருந்த போதிலும் நீ வந்துவிடு தேவி

பெண்: ஒரு மாலைச் சந்திரன் மலரைத் தேடுது மலையடிவாரத்திலே
இள மானைக் கண்டிட கானம் பாடுது மன்மத ராகத்திலே
புயல் வீசும் மாசியிலே ஒரு ஆசை மேகமடி
அது பேசும் பாஷையிலே ஒரு காதல் விரகமடி
ஒரு தேகம் வெந்தது மோகத் தீயினிலே ஆஆஆ

ஒரு மாலைசந்திரன்

காணொளி:
---------------------

https://www.youtube.com/watch?v=mHtRCyFFG1E

உன்னை வாழ்த்திப்பாடுகிறேன் என்று சொல்லி யாரும் இப்படி பாடக்கூடும். இனிமைதான், ஆனால் சோகமாயிற்றே!!!

kalnayak
1st April 2015, 06:17 PM
சந்திரன் பாடல் 56: "பகலிலே சந்திரனைப் பார்க்கப் போனேன்"
--------------------------------------------------------------------------------------------

சி.க. நீங்களே கேட்டிருந்தீர்கள் - குலமகள் ராதையின் இரண்டாம் சந்திரன் பாடல் எங்கே என்று. இதோ அது. நடிகர் திலகத்தை காட்டாமலே சோகத்தைப் பிழிந்து கன்னடத்துப் பைங்கிளி கொடுத்த பாடல். பாடியவர்: P. சுசீலா. இயற்றியவர்: கவியரசர் கண்ணதாசன். இசை: K.V. மஹாதேவன்.

காதலனை காணாமல் அவன் எங்கே போனாலும் தேடி போவேன் என்று காதலி பாடும் பாடல். முதலில் சந்திரன் என்று குறிப்பிட்டவர், அடுத்த அடியில் காதலனை கரையேறிய மீன் என்கிறார். இப்படியே பாடல் முழுதும் காதலனை மாற்றி மாற்றி சொல்லி தேடுவதாக கவியரசர் எழுதி இருக்கிறார். சோகம் என்றாலும் இசையரசியின் குரலில் என்ன சுகமாக இருக்கிறது!!!

பாடல் வரிகள்:
----------------------

பகலிலே சந்திரனைப் பார்க்கப் போனேன் - அவன்
இரவிலே வருவதாக ஒருத்தி சொன்னாள்
பகலிலே சந்திரனைப் பார்க்கப் போனேன் - அவன்
இரவிலே வருவதாக ஒருத்தி சொன்னாள்

இரவிலே அவனைக் காண நானும் நடப்பேன்
இரவிலே அவனைக் காண நானும் நடப்பேன் - அவன்
எல்லோரும் பார்க்கும்படி உயரத்தில் இருப்பான்

பகலிலே சந்திரனைப் பார்க்கப் போனேன் - அவன்
இரவிலே வருவதாக ஒருத்தி சொன்னாள்

கடலிலே மீன் பிடிக்க நானும் போன் - மீன்
கரையேறிப் போனதாக ஒருததி சொன்னாள்
கடலிலே மீன் பிடிக்க நானும் போன் - மீன்
கரையேறிப் போனதாக ஒருததி சொன்னாள்
படகிலே மனதை ஏற்றிப் பார்க்கப் போனேன்
படகிலே மனதை ஏற்றிப் பார்க்கப் போனேன் - அதைப்
பாறையிலே மோதும்படி ஒருத்தி சொன்னாள்

பகலிலே சந்திரனைப் பார்க்கப் போனேன் - அவன்
இரவிலே வருவதாக ஒருத்தி சொன்னாள்

ஆலயத்தில் ஆண்டவனைப் பார்க்கப் போனேன் - அவள்
அர்த்த ஜாமப் பூஜையிலே பார்க்கச் சொன்னாள்
ஆலயத்தில் ஆண்டவனைப் பார்க்கப் போனேன் - அவள்
அர்த்த ஜாமப் பூஜையிலே பார்க்கச் சொன்னாள்
மாலை ஒன்று கையில் கொண்டு நானும் போனேன்
மாலை ஒன்று கையில் கொண்டு நானும் போனேன் - அவள்
மலரை மட்டும் உதிர்த்து விட்டுப் போகச் சொன்னாள்

பகலிலே சந்திரனைப் பார்க்கப் போனேன் - அவன்
இரவிலே வருவதாக ஒருத்தி சொன்னாள்

காணொளி:
------------------

https://www.youtube.com/watch?v=WQj73XR67m0

Russellzlc
1st April 2015, 06:54 PM
பல்லாண்டு வாழ்க!

மஸ்கட்டின் தங்க மார்க்கெட்டே (பிஸ்கட் சின்னதா இல்ல?)
தமிழின் பெருமையை விண்ணுக்கு ஏவும் ராக்கெட்டே,
எழுத வேண்டும் எங்களுக்காக நீ மெனக்கெட்டே,
என்றே வேண்டுகிறோம் நின் கரம் தொட்டே.

(அட! எனக்கும் கவித வருதுங்கோ. சாமானியனான எனக்கும் ஒங்கள மாதிரி எழுத ஆசை. மன்னிச்சுடுங்க)

பிறந்த நாள் வாழ்த்துக்கள், சின்னக் கண்ணன்.
தாமதத்துக்கு மன்னிக்கவும். இப்போதுதான் பார்த்தேன்.

உங்களுடைய ஒரு பதிவில் ஓரிருக்கை சென்றிருந்தபோது கன்றுக்குட்டி ஒன்று உங்களைப் பார்த்து மிரள விழித்ததாக கூறியிருந்தீர்கள். ஓரிருக்கை செல்கிறீர்கள் என்றால்....... நீங்கள் காஞ்சிப் பெரியவரின் பக்தராக இருக்க வேண்டும் என்று கருதுகிறேன். (எங்களுக்கும் காஞ்சியில் ஒரு பெரியவர் உண்டு)

எனக்கு நம்பிக்கை இருக்கிறதோ? இல்லையோ? மற்றவர் நம்பிக்கைகளுக்கு மதிப்பளிப்பவன் நான். அந்த வகையில், காஞ்சிப் பெரியவர், பரமாச்சாரியாரின் அருளாசி என்றென்றும் உங்களுக்கு கிடைத்து, நலமோடும், வளமோடும் பல்லாண்டு வாழ்க.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

Russellzlc
1st April 2015, 06:55 PM
கல்நாயக்,

நிலா பாடல்கள் தொகுப்பு விறுவிறுப்பாக செல்கிறது. கண்ணகி படத்தில் கம்பீரக் குரலோன் (தோற்றமும்தான்) பி.யு.சின்னப்பா அவர்கள் பாடிய ‘சந்த்ரோதயம் இதிலே....’ பாடலையும் சேர்க்கலாம். இந்த படத்தை சிறுவயதில் நான் பார்த்திருக்கிறேன் (மறுவெளியீட்டில் கல்நாயக்).

எம்.கே.டி.யுடன் புரட்சித் தலைவர் நடித்த அசோக்குமார் பார்த்திருக்கிறேன். பி.யு.சின்னப்பாவுடன் புரட்சித் தலைவர் நடித்த ரத்னகுமார் பார்க்க ஆசை. டிவிடி கிடைக்கிறதா என்று தெரியவில்லை.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

rajeshkrv
1st April 2015, 10:12 PM
oru malai chandiran malarai is a great number. regularly featured in ceylon radio at that time.

chinnakkannan
2nd April 2015, 12:27 AM
ஒரு மாலை சந்திரன் மலரைத் தேடுது"// கல் நாயக்..வெகு நல்ல பாடல்.. நான் இப்போது தான் கேட்டேன்.. பார்த்திபன் தான் கொஞ்சம் கஷ்டம்!

//சி.க. நீங்களே கேட்டிருந்தீர்கள் - குலமகள் ராதையின் இரண்டாம் சந்திரன் பாடல் எங்கே என்று. இதோ அது. நடிகர் திலகத்தை காட்டாமலே சோகத்தைப் பிழிந்து கன்னடத்துப் பைங்கிளி கொடுத்த பாடல். பாடியவர்: P. சுசீலா. இயற்றியவர்: கவியரசர் கண்ணதாசன். இசை: K.v. மஹாதேவன்.// நல்ல பாட்டு.. தாங்க்ஸ் கல் நாயக்..

**

கலை வேந்தன்.. //மஸ்கட்டின் தங்க மார்க்கெட்டே (பிஸ்கட் சின்னதா இல்ல?)// மிக்க நன்றி உங்கள் வாழ்த்துக்களுக்கு..தங்க மார்க்கெட்டா இது கொஞ்சம் ஓவராக இல்லை..:) ஆனால் தினசரி பார்த்துக் கொண்டு தான் இருக்கிறேன் வலையில்.//.(அட! எனக்கும் கவித வருதுங்கோ. // நல்லாவே இருக்குங்கோவ்.. :)

ஓரிருக்கை சென்றதாக முக நூலில் எழுதிய நினைவு..இங்கும் எழுதினேனா என்ன..(ஆக்சுவலா இப்போ அதன் பெயர் ஓரிக்கை)

(எங்களுக்கும் காஞ்சியில் ஒரு பெரியவர் உண்டு) // :) அந்தப் பெரியவர் முதலமைச்சராவதற்கு முதல் வாரமோ என்னமோ - எழுத்தாளர் ரா.கி ரங்கராஜன் ஒரு நாவல் தொடராக குமுதத்தில் எழுத ஆரம்பித்தார்.. ஆரம்பத்தில்கதா நாயகனின் பெயரை பெரியவர் நினைவாக வைத்து பின் அப்படியே வைத்து முழு நாவலையும் எழுதிவிட்டார் (இது அவரே எழுதியிருந்த விஷயம்) .;.வெகு அருமையான சரித்திர நாவல். விறுவிறுப்பாகவும் இருக்கும்..பெயர் அடிமையின் காதல்.. கதானாயகனின் பெயரைச் சரியாகக்கண்டு பிடித்தால் மதுராவில் உண்ணும் போது உங்களுக்கு ஒரு ஃபலூடா..::)

rajeshkrv
2nd April 2015, 07:33 AM
kalnayak ..

with ur permission posting my fav chandamama raave in tamil

https://www.youtube.com/watch?v=x1gE4-lQySc

chinnakkannan
2nd April 2015, 10:02 AM
ஹாய் ராஜேஷ்..கல் நாயக் கோபால்

ராஜேஷ்.. தங்கவெண்ணிலா வாவா இப்ப தான் கேட்கிறேன்.. நைஸ் மெலடி.. நல்லா இருக்கு..என்ன படம்..குட்டிப்பெண் மீனா தானே..

kalnayak
2nd April 2015, 10:33 AM
ராஜேஷ்,

மிக அருமையான பாடல். இப்போதுதான் கேட்கிறேன் முதல் முறையாக என்று நினைக்கிறேன். நிச்சயமாக இந்த பாடல் என்னுடைய நிலாப் பாடல் வரிசையில் வந்திருக்காது.நீங்கள் போட்டதே நல்லது.

சி.க.,
அந்த குட்டிப் பெண் மீனாதான்.அதன் அக்காவாக நடித்திருப்பவர் நித்யா (நடிகர் திலகத்தின் மகளாக தீர்ப்பு படத்தில் நடித்திருப்பார்.)

kalnayak
2nd April 2015, 03:01 PM
கலைவேந்தன்,
நீங்கள் சொல்லும் 'சந்திரோதயம் இதிலே' பாடல் நான் கேட்டதில்லை. நீங்கள் p.u. சின்னப்பா படத்தை காட்டி யார் இது என்று கேட்டால் எனக்கு சொல்லத் தெரியாது. அவரின் எந்த படமும் நான் பார்த்ததில்லை. ஏன் தியாகராஜா பாகவதரின் எந்த படமுமே நான் பார்த்தது கிடையாது. ஆனால் அடையாளம் தெரியும். அதனால் நான் எந்த குமாரின் (அதுதான் அசோக்குமார் மற்றும் ரத்னகுமார்) படங்களையும் நான் பார்த்ததில்லை.

கண்ணகி படத்தை மறு வெளியீட்டிலும் நீங்கள் பார்த்திருக்கிறீர்கள் என்பதைச் சொல்லும் போது படத்தின் செல்வாக்கு புரிகிறது. இந்த பாடல் பற்றிய விவரங்கள் கிடைக்கும்போது அதைப் பற்றி எழுதுகிறேன். நன்றி.

kalnayak
2nd April 2015, 03:29 PM
சந்திரன் பாடல் 57: "நானே இந்திரன் நானே சந்திரன்"
-----------------------------------------------------------------------------

இதுவும் வித்தியாசமான பாடல்தான். ஆமாம் இதுவும் காதல் பாடல் இல்லை. இது தற்பெருமை பாடல் என்று வேண்டுமானால் சொல்லலாம்.பரவாயில்லையே சந்திரன் இதற்கும் பயன்படுகிறதே!!!

நடிகர் சூரியா சிவகுமார் நடிக்க ஹரி இயக்கத்தில் இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்க கவிஞர் விவேகா வரிகளை பென்னியும் மாணிக்க விநாயகமும் பாடியுள்ளனர்.

ஆண்: ஏ நாலு காலு பாச்சலிலே
ரெண்டு கண்ணு மேச்சலிலே
எட்டு திசை கூச்சலிலே
தட்டுகிற ஓசையிலே
சுத்திவாரான் சுழண்டுவாரான் புயலப்போல எங்கும்
அட பாய்ஞ்சு வரான் பறந்து வரான் நம்ம துரை சிங்கம்
(இசை...)
ஆண்: நானே இந்திரன் நானே சந்திரன் பொறந்த ஊருக்குள்ள
சூரியனைப் போல்... சுத்தி வருவேன்...
பாதி நல்லவன் மீதி வல்லவன் மோத வந்தவன
எட்டி மிதிப்பேன்... முட்டி உடைப்பேன்...
காக்கி சட்ட நாட்டாமை நானே
கைது பண்ணும் வேலை இல்லை
அண்ணன் தம்பி சண்டைக்கு வீணா
கேசு போட தேவையில்லை
வீராதி வீரன் எல்லாம் எப்போதுமே வீராப்பா திரிவதில்லை
ஹேய் சொல்லித்தரவா... ஹேய் அள்ளிவிடவா....
ஹேய் சொல்லித்தரவா.. வா.. வா.. ஹேய் அள்ளிவிடவா....
(இசை...)
ஆண்: ஹேய் அம்மாவின் கையில் சோறு
அதில் உள்ள ருசியே வேறு
தினம் தோறும் திண்ணு பாரு
உன்னோட ஆயுள் நூறு
சொந்த பந்தங்கள் கூட இருந்தா
வந்த துன்பங்கள் தூர பறக்கும்
தாமிரபரணியில மூழ்கி குளிச்சா
தரணி ஆளுகிற தெம்பு கிடைக்கும்
ஊரோட இருக்கணும்டா
என்னைப்போல பேரோட இருக்கணும்டா
கத்துத்தரவா ஒத்துக்கிடவா
கத்துத்தரவா... வா... வா... ஒத்துக்கிடவா...
நானே இந்திரன் நானே சந்திரன் பொறந்த ஊருக்குள்ள
சூரியனைப் போல்... சுத்தி வருவேன்...
(இசை...)
குழு: ஹேய் சீறிவரும் காளை கூட ஒதுங்கும்
இவன் பேரை சொன்னா வன்முறையும் அடங்கும்
நல்லூரில் பொறந்த ஒரு தங்கம்
இவன் காக்கிச்சட்டை போட்ட சிங்கம்
ஆண்: ஏ கருக்குவேல் அய்யனாரு கலையாத்தான் நிக்குறாரு
களவாணி யாரும் வந்தா களவாங்க விடமாட்டாரு
எங்க ஊரில் ஒரு கெட்ட பழக்கம்
யாரும் கேட்டாலும் அள்ளிக் கொடுப்போம்
எதிரி வந்தாலும் நாங்கள் மதிப்போம்
எந்த நிலமையிலும் மேலே இருப்போம்
குல தெய்வம் ஆறுமுகம்
எங்களுக்கு எப்போதும் ஏறுமுகம்
வேண்டிக்கிடவா... வெற்றி தரவா...
வேண்டிக்கிடவா... வெற்றி தரவா...
நானே இந்திரன் நானே சந்திரன் பொறந்த ஊருக்குள்ள
சூரியனைப் போல்... சுத்தி வருவேன்...
பாதி நல்லவன் மீதி வல்லவன் மோத வந்தவனை
எட்டி மிதிப்பேன்... முட்டி உடைப்பேன்...

---------------------------------------------------------------------------------------


காணொளி:
-----------------

https://www.youtube.com/watch?v=fQoQ2W1Y7mI

அடிப்பேன், உதைப்பேன் அப்படின்னு சொல்றதுக்கு யாரும் கோச்சுக்காதீங்க. போலீஸ் வேஷம் ஆச்சா அப்படிதான் சொல்வாரு. குற்றவாளிகளை விசாரிக்கணும். 'அடி உதவற மாதிரி அண்ணன் தம்பி உதவ மாட்டாங்க' அப்படின்னு சொல்வாங்க. நாலைந்து ஸ்கார்பியன் வண்டிங்களையே காலி பண்ணிட்டாராம் 'ஓங்கி அடிச்சா ஒன்றை டன்னு வெய்ட்டு'ன்னு. சிங்கம்னா சும்மாவா!!!

Russellzlc
2nd April 2015, 04:00 PM
கல்நாயக்,

திரு.பி.யூ. சின்னப்பா அவர்களின் இமேஜ் நெட்டில் நீங்கள் தேடிப்பார்த்தால் கிடைக்கும். அவர் புதுக்கோட்டையை சேர்ந்தவர். (புதுக்கோட்டை உலகநாதன் சின்னப்பா. இயற்பெயர் சின்னச்சாமி)திரு.தியாகராஜ பாகவதருக்கு தொழில்முறை போட்டியாளர். நான் சொன்ன பாடல் மிகவும் பிரபலமான பாடல். நீங்கள் கேட்டிருக்க வாய்ப்பு உண்டு. பாகவதரைப் போல பல ஹிட் பாடல்கள் இவருக்கும் உண்டு.

திருவிளையாடல் படத்தில் திரு.சிவாஜிகணேசன் அவர்கள் ‘பாட்டும் நானே’ பாடலில் புல் பெஞ்ச் கச்சேரி செய்வாரே. அதேபோல, ஜெகதலப் பிரதாபன் என்ற படத்தில் திரு.சின்னப்பா அவர்கள் ‘நமக்கினி பயமேது?’ என்ற பாடலில் கலக்குவார். தொழில்நுட்பம் வளராத அந்தக் காலத்திலேயே மாஸ்க் ஷாட் எடுத்து அசத்தியிருப்பார்கள். திருவிளையாடலில் கொன்னக்கோல் சொல்லிவிட்டு முடிக்கும்போது திரு.டி.எம்.எஸ். ‘இந்தா’ என்பாரே. அதேபோலவே சின்னப்பாவும் லந்தடிப்பார். உத்தமபுத்திரன் (பழைய) படத்தில் இருவேடங்களில் நடித்து தமிழில் முதல் இரட்டை வேட பாத்திரம் செய்தவர். மங்கையர்க்கரசி என்ற படத்தில் 3 வேடங்கள் போட்டவர்.

புதுக்கோட்டையில் ஏராளமான வீடுகளும் நிலங்களும் வாங்கிப் போட்டார். ஒரு கட்டத்துக்குமேல் இனி அவர் எந்த வீடும் புதுக்கோட்டையில் வாங்கக் கூடாது என்று புதுக்கோட்டை மன்னர் உத்தரவே போட்டார். (அப்புறம் மன்னருக்கு என்ன மரியாதை?)

திரையில் கோலோச்சிய திரு.சின்னப்பா அவர்கள் கடைசியில் தீய பழக்க வழக்கங்களுக்கு அடிமையாகி மோசமான மரணத்தை சந்தித்தார்.

ரிக்க்ஷாக்காரன் படத்தில் பாரத் விருது பெற்றதற்காக புரட்சித் தலைவருக்கு அப்போது சென்னை ஓட்டலில் பத்திரிகையாளர்கள் சார்பில் பாராட்டு விழா நடந்தது. அந்த விழாவில் புரட்சித் தலைவர் பேசிய பேச்சு அவர் இறந்த பிறகு 1988ம் ஆண்டு ‘எம்.ஜி.ஆரின் தீர்க்க தரிசனம்’ என்ற பெயரில் ஒலிநாடாவாக வந்தது. அதை மதிஒளி பத்திரிகையை நடத்திய மதிஒளி சண்முகம் வெளியிட்டிருந்தார். அந்த ஒலிநாடா நான் பல முறை கேட்டபின், பல ஆண்டுகளுக்கு முன் அறுந்துபோய் விட்டது. அதில் புரட்சித் தலைவர் பேசியதைக் கேட்டுத்தான் திரு.சின்னப்பா அவர்கள் எப்படிப்பட்ட துயரமான மரணத்தை அடைந்தார் என்பதை தெரிந்து கொண்டேன்.

புகழ் பெற்ற நட்சத்திரமாக திரு.சின்னப்பா விளங்கியபோது அவர் அணிந்திருந்த மோதிரத்தில் இருந்த வைரக்கல்லின் விலை ரூ.32,000 (அந்தக் காலத்திலேயே), வாழ்வில் நொடித்துப் போன திரு.சின்னப்பா கடைசியில் அந்த வைரத்தையே பொடி செய்து சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்.

இப்படி கலைஞர்களின் நிலையை குறிப்பிட்டு வேதனைப்பட்டிருப்பார் புரட்சித் தலைவர். அந்த உரையில் மேலும் பல அரிய தகவல்கள் உண்டு. நேரம் கிடைக்கும்போது சொல்கிறேன்.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

kalnayak
2nd April 2015, 04:13 PM
நல்ல தகவல்கள் சொன்னீர்கள் கலைவேந்தன்.
தமிழ் திரை உலகின் முடி சூடா மன்னர்களாக ஒவ்வொரு காலத்திலும் இரண்டு இரண்டு நடிகர்கள் கோலோச்சி இருந்து இருக்கிறார்கள். முதலில் m.k.t.யும் p.u.சின்னப்பாவும் , அப்புறம் நீங்க சொன்னால் நான் கேட்டுக்கிறேன். M.k.t-யின் முடிவு எல்லோரும் அறிந்ததே. சிறை வாழ்க்கை அதை தொடர்ந்து சரிந்த திரை வாழ்க்கை, p.u.c.இன் வாழ்க்கையும் இவ்வளவு துயரம் நிறைந்ததா? இப்போதுதான் தெரிகிறது. பின்னால் வந்தவர்கள் வாழ்வு செழித்ததே. அந்த விதத்தில் நிம்மதிதான்.

நல்ல வேளை, நீங்கள் இந்த வாக்கியத்தை பார்க்கவில்லை போலிருக்கிறது: "கண்ணகி படத்தை மறு வெளியீட்டிலும் நீங்கள் பார்த்திருக்கிறீர்கள் என்பதைச் சொல்லும் போது படத்தின் செல்வாக்கு புரிகிறது." இப்போதும் பார்க்காதீர்கள். பார்த்தாலும் முழுதுமாக புரிந்து கொள்ளமுயற்ச்சிக்காதீர்கள்.

madhu
2nd April 2015, 04:31 PM
அட... "சந்திரோதயம் இதிலே காணுவதுன் செந்தாமரை முகமே" என்ற பி.யூ.சின்னப்பா பாடல் controversy கிளப்பி விட்டதாகக் கேள்விப் பட்டிருக்கிறேன். சந்திரோதயத்தை வர்ணிக்கையில் முகத்தை செந்தாமரை என்றால் அது கூம்பி இருக்குமே... என்று கிரிடிக்ஸ் கேள்வி கேட்டார்களாம். என்ன பதில் கிடைத்தது என்றுதான் தெரியவில்லை.

chinnakkannan
2nd April 2015, 04:47 PM
மதுண்ணா..செந்தாமரை மொட்டுமுகமே எனக் கவிஞர் பாடியிருக்கலாம்..கு.மா.பா போல :) காண்ட்ரவர்ஸி வந்திருக்காது..

கலைவேந்தன்..சின்னப்பா தற்கொலை செய்து கொண்டார் என்ற செய்தி எனக்குப் புதிது..மேலும் ம.தி சொன்ன தகவல்கள் சொல்லுங்கள்.. நன்றி

கல் நாயக் என்னமோ உடல் கொஞ்சம் சரியில்லை எனில் சுட்டி இன்று.. இந்த நானே இந்திரன் நானே சந்திரன் என்னைக் கவர்ந்ததில்லை.. (பொதுவாகவே சிவகுமாரின் வாரிசுகள் படம் எல்லாம் ரிவ்யூ படித்துவிட்டுத் தான் செல்வது என்றிருக்கிறேன்..இப்போதெல்லாம் செஸ்ட்பீட்டிங்க் தான் நிறைய இருக்கிறது அவர்களிடம்..

ம்ம்

வந்ததுக்கு நிழல்கள் படத்தில் இல்லாத பாடல்.. தூரத்தில் நான் கண்ட உன்முகம் ( கொஞ்சம் சோகமான பாடலோ என நினைக்கத் தோன்றினாலும் அப்படி இல்லை.. நல்ல பாடல்)

அமுதா நிழல்கள் படத்தில் அறிமுகம்.. ரயில் சினேகத்தில் வித்யாச அழகாய் வித்யாச தலையலங்காரத்தில் வெகு வடிவாக இருப்பார்...(ஹை..இலங்கைத் தமிழ் :) )

https://youtu.be/QvtwHqc1ArU

இது படத்தில் இல்லாததினாலேயே தெலுங்குப் படமான சித்தாராவில் உபயோகப்படுத்திக் கொண்டார்கள்.. அப்படியே மெட்டு ஆனால் ஆடுபவர் பானுப்ரியா

வெண்ணல்லோ கோடரி அண்ட்டம்..

https://youtu.be/5yiYUP7t-uw


ஹை..என்னையுமறியாமல் ஜுகல் பந்தி வந்துடுத்தே எங்கே ராஜ் ராஜ் சார்.. (இரண்டு பாட்டும் எஸ் ஜானகி)

kalnayak
2nd April 2015, 04:58 PM
ஆஹா பெரிய விவாதமே நடக்கும் போல் உள்ளதே இந்தப் பாடலுக்கு. இப்பவே இந்தப் பாடலை சுருக்கமா எழுதிடலாம்.

சந்திரன் பாடல் 58: "சந்திரோதயம் இதிலே காணுவதுன் செந்தாமரை முகமே"
---------------------------------------------------------------------------------------------------------------

P.U. சின்னப்பாவும், கண்ணாம்பாள் நடித்தது. பூம்புகாரின் முன்னோடி. கோவலன் பாத்திரமே சற்று நெகடிவ் குணாதிசயங்கள் கொண்டது. பெண் கதாபாத்திரமே முன்னிலை வகிக்கும். இதிலும் P.U. சின்னப்பா எப்படி நடித்திருந்தார் என்று படம் பார்த்த கலைவேந்தன் சொல்லவேண்டும். இசை எஸ்.வி. வெங்கட்ராமன். மூலக்கதை: இளங்கோவடிகள் (சி.க. என்னை அடிக்காதீங்க.) பாடல்கள் எழுதியவர் உடுமலை நாராயணகவி. இந்தப் பாடல் சங்கராபரண ராகத்தில் அமைந்தது.

இப்போதைக்கு காணொளி மட்டுமே.

காணொளி:
-----------------
https://www.youtube.com/watch?v=mlwCwpBhQ4Q

கண்ணகியைப் பாடினாலும் காண்ட்ரோவர்ஸியா!!!

kalnayak
2nd April 2015, 05:21 PM
சி.க.,

அரிதான பாடலின் காணொளியை வழங்கி இருக்கிறீர்கள். நீங்கள் சொன்னது உண்மைதான். ஆரம்பத்தில் சோகம்போல் தோன்றுகிறது. போகப் போகத்தான் தெரிகிறது - அப்படி அல்லவென்று. தெலுங்கு பாடலுக்கும் நன்றி. தெலுங்கென்றாலே ஆட்டம்தான் என்பதை நிரூபித்திருக்கிறது.

Russellzlc
2nd April 2015, 05:50 PM
கல்நாயக்,

அட! ஆமாம். நைசாக நீங்கள் பொடி வைத்திருப்பதை நான் கவனிக்கவில்லை. இப்போதுதான் பார்த்தேன். உங்கள் சந்தேகத்தை தெளிவுபடுத்தி விடுகிறேனே. முதல் வெளியீட்டில் எனது தாத்தாவுடைய அப்பா பார்த்தாராம். 28 வயதாகும் நான் எப்படி முதல் வெளியீட்டில் பார்த்திருக்க முடியும்? மறுவெளியீட்டில் பார்த்தது மங்கலாய்த்தான் நினைவில்.

சின்னக் கண்ணன்,

புரட்சித் தலைவர் அந்த உரையில், நாடோடி மன்னன் திரைப்படம் ஆஸ்கர் பட விழாவுக்கு அனுப்புவதற்காக, ஆக்க்ஷன் பிக்சர் என்ற வகையில் ,மத்திய அரசு அனுப்பச் சொல்லி கேட்டதாகவும் அதற்காக, படத்தை 11 ரீல்களாக தானே எடிட் செய்து அனுப்பியதையும் கடைசியில் இவர் திமுக என்பதால் அரசியல் தலையீடுகளால் படம் தடுக்கப்பட்டதையும் கூறியிருப்பார்.

பின்னர், தனக்கு பாரத் விருது கிடைத்தது பற்றிய சர்ச்சைகளை எடுத்துக் கூறி, பத்ம ஸ்ரீ விருது இவருக்கு (பாரத் பட்டத்துக்கு முன்பே) வழங்கப்பட்டபோது, இந்தியை திணிக்கும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து அந்தப் பட்டத்தை பெற மறுத்த நான், பாரத் விருதுக்கு ஆசைப்படுபவன் அல்ல என்றும் கூறியிருப்பார். அப்போது இந்தி திணிப்பு இருந்தது. அதன்பிறகு திணிக்கமாட்டோம் என்று உத்தரவாதம் அளித்தனர். இப்போது, என் தொழிலுக்கும் திறமைக்கும் அங்கீகாரம் அளிக்கும்போது நான் ஏன் மறுக்க வேண்டும்? என்று கேட்டிருப்பார். (இந்தி திணிப்பும் அதற்கு தமிழகத்தில் எழுந்த எதிர்ப்புக்கும் திமுக போராட்டத்தை விடுங்கள். காங்கிரசைச் சேர்ந்த மத்திய அமைச்சர்கள் சி.சுப்பிரமணியமும், ஓ.வி.அளகேசனும் ராஜினாமா செய்ததே சான்று. அடைப்புக்குறிக்குள் இருப்பது என் கருத்து.)

உலகம் சுற்றும் வாலிபன் படத்துக்காக ஜப்பான் சென்றபோது படப்பிடிப்பு நிலையங்கள் டி.வி.நிலையங்களாக மாற்றப்பட்டதை பார்த்ததாகவும் தமிழ் சினிமாவுக்கும் எதிர்காலத்தில் இந்த அபாயம் உண்டு என்றும் எச்சரித்திருப்பார். ஒருமணி நேர உரையில் இன்னும் பல உண்டு. நேரம் கிடைக்கும்போது சொல்கிறேன்.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

chinnakkannan
3rd April 2015, 06:02 PM
அன்பின் கலைவேந்தன்.. மிக்க நன்றி உங்கள் பதிவிற்கு. பதினோரு ரீல்கள் ஆக்குவதற்குமிகுந்த சிரமப் பட்டிருப்பார் ம.தி என நினைக்கிறேன்..எழுதுங்கள் இன்னும்..


ஒரு கட்டுரை பாதியில் நிற்கிறது..அதை முடித்துச் சேர்த்து உங்களுக்கு நன்றி சொல்ல இருந்தேன்.. தாமதத்திற்கு மன்னிக்க.. இன்றைக்குள் எழுதிவிடுவேன் என நினைக்கிறேன்..

Russellzlc
3rd April 2015, 06:07 PM
கல்நாயக், சின்னக்கண்ணன்,

உங்கள் இருவருக்கும்தான் நன்றி சொல்ல வேண்டும். புரட்சித் தலைவரின் உரை பற்றி நேற்று குறிப்பிட்டிருந்தேன். அந்த ஒலிப்பதிவு ஒரு நண்பரிடம் இருப்பதாக தகவல் கிடைத்திருக்கிறது. விரைவில் அது மக்கள் திலகம் திரியில் தரவேற்றப்படும் என்று நம்புகிறேன். உலகெங்கும் உள்ள தமிழர்கள் அந்த உரையை கேட்க முடியும். காணாமல் போன பொக்கிஷம் மறுபடியும் கிடைத்த மகிழ்ச்சி எனக்கு. இருவருக்கும் நன்றி.

அதேநேரம், நாம் எழுதுவது எல்லாம் கவனிக்கப்படுகிறது என்பதும், சின்னக்கண்ணன் சொன்னது போல மதுரகானம் திரியை பலர் மவுனப் பார்வையாளர்களாக படிக்கிறார்கள் என்பதும் தெரிகிறது. இங்கே வருவதே ஆறேழு பேர்தான் என்று நினைத்திருந்தேன். அந்த தைரியத்தில் உங்கள் இருவருடனும் கொஞ்சம் விளையாட்டுத்தனமாக பேசுவேன்.

இனி அப்படி பேசுவதற்கு தயக்கமாக இருக்கிறது. நேற்று கூட என் வயது 28 என்று குறிப்பிட்டிருந்தேன்.பலர் பார்க்கும் திரியில் உண்மையை சொல்லிவிடத்தான் வேண்டும். இல்லாவிட்டால் அவர்கள் என்னைப் பற்றி என்ன நினைப்பார்கள்? பொய் சொல்கிறான் என்று நினைக்க மாட்டார்களா? எனவே, உண்மையை சொல்லி விடுகிறேன் என் வயது 18. (அடிக்க வராதீர்கள் கல்நாயக்)

புரட்சித் தலைவர் உரையை நான் மட்டுமின்றி அனைவரும் கேட்க காரணமாக இருக்கப்போகும் உங்கள் இருவருக்கும் மீண்டும் நெஞ்சார்ந்த நன்றி.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்