PDA

View Full Version : மனதை கவரும் மதுர கானங்கள்: பாகம் -3



Pages : 1 [2] 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16

JamesFague
12th October 2014, 10:13 AM
Mr Neyveliar

As you have uploaded the The Hindu article on NT and you can upload the article by our NT in Dinamalar Varamalar for the
benefit of millions of NT's fans since you have the facility.

Regards

vasudevan31355
12th October 2014, 10:14 AM
'ராஜபார்ட் ரங்கதுரை' படத்தில் நடிகர் திலகத்துடன் டி.கே.பகவதி


http://t0.gstatic.com/images?q=tbn:ANd9GcSXVAS_z6DPPY4UBKxbVn1qoS7bbHbTg O86REFtYxrZ2e1jsoia2g

http://i.ytimg.com/vi/bflp40ReqeE/hqdefault.jpg

http://i.ytimg.com/vi/psOZW2_pm_g/0.jpg

Richardsof
12th October 2014, 10:15 AM
http://i57.tinypic.com/2lsjnyo.jpg

http://youtu.be/Ik38lU80tMg

vasudevan31355
12th October 2014, 10:19 AM
Mr Neyveliar

As you have uploaded the The Hindu article on NT and you can upload the article by our NT in Dinamalar Varamalar for the
benefit of millions of NT's fans since you have the facility.

Regards

அய்யய்யோ! நான் மாட்டேன்பா! நீங்க கேட்டத இங்கே பதிவிட்டா என்னைய அடிச்சி துவச்சி இங்கேயே காயப் போட்டுடுவாங்க.:hammer: காலைல போட்டதுக்கே நடுங்கிக்கிட்டு கிடக்கிறேன். நீங்க வேற. உங்களுக்கு சிவாஜி சலிக்கவே சலிக்காதா? என்ன ஆளு சார் நீங்க?!

JamesFague
12th October 2014, 10:22 AM
Enjoy the melody from the movie GHAR - starring Vinod Mehra and Rekha


http://youtu.be/MqCzyGLxQeQ

rajeshkrv
12th October 2014, 10:22 AM
ராஜேஷ்ஜி!

பி.எம்.அனுப்ச்சி இருக்கேன் பாருங்க.

பதில் போட்டாச்சு

Richardsof
12th October 2014, 10:24 AM
VASU SIR

UNGALUKKU ORU PARISU

http://i61.tinypic.com/rc79ll.jpg

JamesFague
12th October 2014, 10:24 AM
One more melody from the same movie. OH what a song. Superb Song.


http://youtu.be/jRI-B9tx76w

JamesFague
12th October 2014, 10:31 AM
Enjoy the mesmerising voice of Mukesh from the movie

Chetna


http://youtu.be/4j8HpfXCoW4

JamesFague
12th October 2014, 10:31 AM
Enjoy the mesmerising voice of Mukesh from the movie

Chetna


http://youtu.be/4j8HpfXCoW4

vasudevan31355
12th October 2014, 10:44 AM
பதில் போட்டாச்சு

தேங்க்ஸ்ஜி! பார்த்துட்டேன்.

'பலே பலே பலே தேவா
பாரோர் அறியார் உன் மாயா':)

'மாயா பஜார்' படத்தில் சீர்காழியின் நல்ல பாட்டு இல்ல ராஜேஷ்ஜி?!. மலைச் சாலைகளில் குதிரை வண்டி சாரட்டில் நாமே பயணிப்பது போன்ற உணர்வை நமக்குத் தரும் பாடல்.


http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=XlmR5fu0zyk

vasudevan31355
12th October 2014, 10:53 AM
ஆஹா! அருமை! 1000 பொற்காசுகள் கிடைத்தது போல மனம் மகிழ்கிறது வினோத் சார். இதெல்லாம் எங்கே கிடைக்கும்? நினைத்தாலும் கிடைக்குமா? ஏதோ உங்களைப் போன்ற சில நல்ல உள்ளங்கள் இருப்பதால் இத்தகைய சந்தோஷங்களை நாங்கள் உணர முடிகிறது. இந்த மாதிரி ஆவணங்களின் அருமைகளை உணர்ந்ததால் இவைகளின் மதிப்பு என்னவென்றும் புரிகிறது.

ஒன்று தெரியுமா வினோத் சார்? இந்த மாதிரி ஒரு பக்கம், ஒரே ஒரு பக்கம் பழைய நடிகர் திலகத்தின் பட விளம்பரம் ஒன்றுக்கு ஆனந்த விகடன் அலுவலகத்தில் ஒரு ஜெராக்ஸுக்கு 500 ரூபாய் கேட்டார்களாம். அவ்வளவு பொக்கிஷம் போல இவைகள். சில பேர்களுக்கு இதன் அருமை பெருமைகள் புரியாததுதான் வருத்தமாக இருக்கிறது. தெரியாவிட்டாலும் பரவாயில்லை. வாயை வைத்துக் கொண்டு சும்மாவாவது இருக்கலாம் இல்லையா? இதெல்லாம் எங்கே பார்க்க முடியும்?

'ஆலயமணி' ஆவணத்திற்கு மிக நன்றி வினோத் சார்.

vasudevan31355
12th October 2014, 10:58 AM
கோபு சார்,

தங்கள் நன்றிகளுக்கு என் மனமார்ந்த நன்றி

vasudevan31355
12th October 2014, 01:58 PM
இன்றைய ஸ்பெஷல் (91)

ஸ்ரீ நவநீதா பிலிம்ஸ் அளிக்கும் 'தாய்க்கு ஒரு பிள்ளை' படத்திலிருந்து ஒரு பாடல்.

http://img.youtube.com/vi/Ps9EiUvY_9k/hqdefault.jpg

ஜெய்சங்கர், நிர்மலா, சாவித்திரி, சோ, ஏ.வி.எம்.ராஜன், பாலாஜி, சசிகுமார், தேங்காய் சீனிவாசன் ஆகியோர் நடித்தது.

கதை வசனம் : குகநாதன்.

பாடல்கள் : வாலி, புலமைப்பித்தன், முத்து.

நடனம் : மதுரை ராமு.

ஒளிப்பதிவு : டி. ராஜகோபால்.

இசை : சங்கர் கணேஷ்.

தயாரிப்பு : சுப்ரமணிய ரெட்டியார்.

டைரக்ஷன் : பட்டு.

ஒரு அயோக்கியனால் காதலிக்கப்பட்டு, கர்ப்பமுற்று, அவனால் விபச்சாரி என்ற பழிச் சொல்லுக்கும் ஆளாகி, இறுதியில் தந்தையையும் இழந்து, அந்த சதிகாரனால் நடுத்தெருவுக்கு வரும் அபலைப்பெண் ஒருத்தி ஒரு டாக்டரால் காப்பாற்றப்படுகிறாள். அந்தக் கருணை உள்ளம் கொண்ட மருத்துவன் அவள் மேல் அனுதாபம் கொண்டு, அவளுக்குப் பிறக்கும் சிசுவைத் தன் குழந்தையாக ஏற்றுக் கொண்டு, சமூகத்தில் அந்தக் குழந்தைக்கு உயர்ந்த அந்தஸ்து கிடைக்க உறுதி பூணுகிறான். அந்தக் குழந்தையை நன்கு படிக்க வைத்து, அவனை உயரிய நிலைக்கு கொண்டு வருகிறான்.

அந்த அபலைக்கு குழந்தை பிறந்தவுடன் அந்தக் குழந்தையைத் தன் குழந்தையாக ஏற்றுக் கொண்டு, அதன் தகப்பனாக மகிழ்ச்சியுடன் அவன் பாடும் பாடல். குழந்தையின் எதிர்காலம் எப்படி இருக்க வேண்டும் என்று அவன் கனவு காணுவதை இப்பாடலில் உணர்த்துகிறான். அன்னையின் ஆசைகளை நிறைவேற்றும் 'தாய்க்கு ஒரு பிள்ளை'யாக நீ வளர வேண்டும்" என்று அந்தப் பிள்ளைக்கு அறிவுரை கூறுகிறான்.

டாக்டராக ஏ..வி.எம்.ராஜனும், அபலைப் பெண்ணாக 'நடிகையர் திலகம்' சாவித்திரியும், நயவஞ்சக நரியாக பாலாஜியும், தாய்க்கு ஒரு பிள்ளையாக ஜெய்சங்கரும் நடித்த படம் இது.

ஏ.வி.எம்.ராஜன் சாவித்திரியின் குழந்தையை படிப்படியாய் வளர்த்தபடியே கொஞ்சிப் பாடும் அருமையான பாடல். ஏ.வி.எம்.ராஜனுக்கு ஏ.எம்.ராஜா குரல் தந்திருப்பார். செகண்ட் ரவுண்ட். ('செந்தாமரையே... செந்தேன் இதழே' (புகுந்த வீடு), 'மலரே... ஓ மலரே', 'ராசி நல்ல ராசி' (வீட்டு மாப்பிள்ளை), 'மனதுக்குத் தெரியும் என்னை' (எனக்கொரு மகன் பிறப்பான்) என்று சூப்பர் ஹிட் பாடல்கள். எல்லாமே ஏ..வி.எம்.ராஜனுக்குத்தான்) பொருத்தமாகவே இருக்கும். ராஜன் டிப் டாப்பாக கோட் சூட்டெல்லாம் போட்டுக் கொண்டு, உள்ளங்கை அகல கூலிங் கிளாஸ் அணிந்து கொண்டு, அநியாயத்துக்கு உடை அலங்காரத்திலும், நடிப்பிலும் நடிகர் திலகத்தை அப்படியே ஜெராக்ஸ் எடுக்கிறார். (போதும்டா சாமி நடிகர் திலகம் இவர்களிடம் பட்ட பாடு). வயது முதிர்ந்த சாவித்திரி இளம் கன்னிகையாக. அதுவும் பாலாஜிக்கு ஜோடி. சகிக்காது. அப்புறம் வயதான பிறகு தாயாக ஓ.கே. இப்பாடலில் சில முகபாவங்கள் இவர் 'நடிகையர் திலகம்' என்பதை சூளுரைக்கின்றன. பாடலில் வரும் தாய்க்கு ஒரு பிள்ளையாய் வரும் சிறார்கள் கொள்ளை அழகு.

அப்போதும் இப்போதும் எப்போதுமே சூப்பர் டூப்பர் ஹிட் பாடல் இது. சங்கர் கணேஷ் போட்ட அருமையான டியூன். கருத்துச் செறிவுள்ள பாடலும் கூட.

இனி பாடலின் வரிகள்.

http://i.ytimg.com/vi/D23veiafaDs/hqdefault.jpg

சின்னக் கண்ணனே
நான் தந்தையென நீயும் பிள்ளையென
ஒரு பந்தம் வந்தது நெஞ்சில் பாசம் வந்தது
சின்னக் கண்ணனே
நான் தந்தையென நீயும் பிள்ளையென
ஒரு பந்தம் வந்தது நெஞ்சில் பாசம் வந்தது
எந்த நாளிலும் நம் உறவு வாழட்டும்
எந்த நாளிலும் நம் உறவு வாழட்டும்
பிரிந்த போதிலும் உன் நினைவு வாழட்டும்

சின்னக் கண்ணனே
நான் தந்தையென நீயும் பிள்ளையென
ஒரு பந்தம் வந்தது நெஞ்சில் பாசம் வந்தது
பந்தம் வந்தது நெஞ்சில் பாசம் வந்தது

அரும்பு விழி குறும்பு மொழி
ஆட அழைக்காதோ என்னை
சிறு குழந்தை விளையாட்டில்
தன்னை மறப்பாளோ அன்னை
அரும்பு விழி குறும்பு மொழி
ஆட அழைக்காதோ என்னை
சிறு குழந்தை விளையாட்டில்
தன்னை மறப்பாளோ அன்னை
அப்பா முதுகு பிள்ளைக்கேற்ற ஆனை வாகனம்
அப்பா முதுகு பிள்ளைக்கேற்ற ஆனை வாகனம்
நாளை இந்தப் பிள்ளை ஒரு ராஜாவாகணும்
நாளை இந்தப் பிள்ளை ஒரு ராஜாவாகணும்

சின்னக் கண்ணனே
நான் தந்தையென நீயும் பிள்ளையென
ஒரு பந்தம் வந்தது நெஞ்சில் பாசம் வந்தது
பந்தம் வந்தது நெஞ்சில் பாசம் வந்தது

ஏடெடுத்து நீ படித்து
தந்தை பேர் சொல்ல வேண்டும்
என் மகனே உன் புகழை
நாளும் ஊர் சொல்ல வேண்டும்
ஏடெடுத்து நீ படித்து
தந்தை பேர் சொல்ல வேண்டும்
என் மகனே உன் புகழை
நாளும் ஊர் சொல்ல வேண்டும்
அன்னை நெஞ்சின் ஆசைகளை
அளந்தவரில்லை
அன்னை நெஞ்சின் ஆசைகளை
அளந்தவரில்லை
அதை நிறைவேற்று நீயோ
அந்த தாய்க்கொரு பிள்ளை
அதை நிறைவேற்று நீயோ
அந்த தாய்க்கொரு பிள்ளை

சின்னக் கண்ணனே
நான் தந்தையென நீயும் பிள்ளையென
ஒரு பந்தம் வந்தது நெஞ்சில் பாசம் வந்தது
பந்தம் வந்தது நெஞ்சில் பாசம் வந்தது


http://www.youtube.com/watch?v=D23veiafaDs&feature=player_detailpage

chinnakkannan
12th October 2014, 02:10 PM
ஹாய் குட் ஆஃப்டர் நூன் ஆல்..

ஹாய் வாசு சார்.. சின்னக் கண்ணனே பாட்டு எனக்குப் பிடித்த பாடல்..வீட் போய் தான் படம் பார்க்கவேண்டும். அஸ் யூஸ்வல் கதைச்சுருக்கம் அண்ட் பதிவு குட்.. நன்றி..:)

சச்சா மம்மா பப்பா ஓ.. அழகு மொழி...பருவ எழில்...முத்துரதம் முழு நிலவோமுத்தமிழின்..கரையெதுவோ தந்தாள் உன் அன்னை உன்னை.. (லிரிக்ஸ் தப்பா இருக்கலாம்) ஹம்மிங்க் ஒலிக்கிறது..அது என்ன பாட்டு..

ஹை.. நானும் சொல்லுவேனே..வாசு சார் நான் ஒரு பி.எம். பண்ணியிருக்கேனே..:)

RAGHAVENDRA
12th October 2014, 02:12 PM
ஆஹா... வாசு சார்... சி.க.வை வரவழைக்க என்ன மாதிரியெல்லாம் ஐடியா போடுகிறீர்கள்... சூப்பர் சார்...

எங்கே நம்ம கிருஷ்ணா...ஜீ....யைக் காணோம்...

vasudevan31355
12th October 2014, 02:16 PM
ஆஹா... வாசு சார்... சி.க.வை வரவழைக்க என்ன மாதிரியெல்லாம் ஐடியா போடுகிறீர்கள்... சூப்பர் சார்...

எங்கே நம்ம கிருஷ்ணா...ஜீ....யைக் காணோம்...

கிருஷ்ணாஜி இன்று லீவ் ராகவேந்திரன் சார். ஈவ்னிங் வருவார்.

JamesFague
12th October 2014, 02:17 PM
Mr Neyveliar - a song from your favourite movie. Enjoy


http://youtu.be/eZyzQ4xq3JQ

RAGHAVENDRA
12th October 2014, 02:29 PM
அருமையான தேர்வு வாசு சார்... இலங்கை ரேடியோவின் புண்ணியத்தில் இப்பாடலும் ஹிட்டாகியது. சங்கர் கணேஷின் பங்களிப்பு தமிழ்த்திரையுலகிற்கு கணிசமானதாகும். அதில் அவர்கள் ஏ.எம்.ராஜாவின் இரண்டாவது ரவுண்டை அமர்க்களமாக தொடங்கி வைத்தார்கள். இன்னும் சொல்லப் போனால் இளையராஜா அவர்களின் இசையில் ஏ.எம்.ராஜா அவர்கள் ஒரு பாடல் பாடியுள்ளார். இன்று வரை அதனுடைய விவரம் சரியாகத் தெரியவில்லை. ஆனால் பாடியிருக்கிறார் என்பது மட்டும் நிச்சயம். ஒரு கிராமஃபோன் இசைத்தட்டில் இந்த விவரங்களைப் பார்த்தேன். ஆனால் படத்தின் பெயர் சரியாக நினைவில்லை.

மேலே தாங்கள் அளித்துள்ள பாட்டும் மறக்க முடியாத பாட்டுத் தான்.

இதில் ஏ.எம்.ராஜாவின் குரலில் ஏற்பட்ட தொய்வையும் மாற்றத்தையும் அப்பட்டமாக பிரதிபலித்த பாடல் மனதுக்குத் தெரியும் உன்னை என்கிற பாடல்.

மற்றவை ஓ.கே. ரகம்..

vasudevan31355
12th October 2014, 02:48 PM
ஹாய் குட் ஆஃப்டர் நூன் ஆல்..

ஹாய் வாசு சார்.. சின்னக் கண்ணனே பாட்டு எனக்குப் பிடித்த பாடல்..வீட் போய் தான் படம் பார்க்கவேண்டும். அஸ் யூஸ்வல் கதைச்சுருக்கம் அண்ட் பதிவு குட்.. நன்றி..:)

சச்சா மம்மா பப்பா ஓ.. அழகு மொழி...பருவ எழில்...முத்துரதம் முழு நிலவோமுத்தமிழின்..கரையெதுவோ தந்தாள் உன் அன்னை உன்னை.. (லிரிக்ஸ் தப்பா இருக்கலாம்) ஹம்மிங்க் ஒலிக்கிறது..அது என்ன பாட்டு..

ஹை.. நானும் சொல்லுவேனே..வாசு சார் நான் ஒரு பி.எம். பண்ணியிருக்கேனே..:)


தேங்க்ஸ் சி.க .சார்.

'மின்மினியைக் கண்மணியாய் கொண்டவனை
என்னிடமே தந்தாள் உன் அன்னை(அம்மாதான்) உன்னை'

டி.எம்.எஸ், ராட்சஸி பாடிய எவர்க்ரீன் பாடல். 'கண்ணன் என் காதலன்' படத்தில் எம்.ஜி.ஆர்.அவர்களும், ஜெயலலிதா அவர்களும் குழந்தையுடன் பாடும் பாடல். சாகாவரம் பெற்ற பாடல்.


http://www.youtube.com/watch?v=xqoOqS4bpWs&feature=player_detailpage

chinnakkannan
12th October 2014, 02:55 PM
வாசு சார்..மின்மினியைக் கண்மணியாய்க் கொண்டவனை..பாடலுக்கு நன்றி..யா..ரொம்ப்ப அழகான பாட்டு..

இன்னொரு சின்னக் கண்ணன்பாட்டு..

சின்னச் சின்னக் கண்ணனுக்கு என்ன தான் புன்னகையோ?
கண்ணிரண்டும் தாமரையோ கன்னம் மின்னும் என்தன் கண்ணா

பால் மணக்கும் பருவத்திலே உன்னைப் போல் நானிருந்தேன்
பட்டாடை தொட்டிலிலே சிட்டுப்போல் படுத்திருந்தேன்
அந்நாளை நினைக்கையிலே என் வயது மாறுதடா
உன்னுடன் ஆடி வர உள்ளமே தாவுதடா

ஜெமினி அழகாய் வாயசைத்திருப்பார்.. தேவிகா ஜோடி..வாழ்க்கைப் படகு பி.பி. ஸ்ரீனிவாஸ்.. நல்ல படமும் கூட..

vasudevan31355
12th October 2014, 02:59 PM
சி.க.சார்,

பி.எம்.பார்த்தேன். இன்னும் சிரிப்பை அடக்க முடியல.:) விரைவில் பதில் பதிவிடுகிறேன்.

vasudevan31355
12th October 2014, 03:15 PM
வாசு சார்.

சின்னச் சின்னக் கண்ணனுக்கு என்ன தான் புன்னகையோ?
கண்ணிரண்டும் தாமரையோ கன்னம் மின்னும் என்தன் கண்ணா

பால் மணக்கும் பருவத்திலே உன்னைப் போல் நானிருந்தேன்
பட்டாடை தொட்டிலிலே சிட்டுப்போல் படுத்திருந்தேன்
அந்நாளை நினைக்கையிலே என் வயது மாறுதடா
உன்னுடன் ஆடி வர உள்ளமே தாவுதடா

ஜெமினி அழகாய் வாயசைத்திருப்பார்.. தேவிகா ஜோடி..வாழ்க்கைப் படகு பி.பி. ஸ்ரீனிவாஸ்.. நல்ல படமும் கூட..

சி.க.சார்,

Enjoy


http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=5p4AUtrmVVU

vasudevan31355
12th October 2014, 03:18 PM
சி.க.சார்

உங்கள் பெயரில் ஒலிக்கும் இன்னொரு பாட்டு. தூள்.

'காட்டு ரோஜா' படத்தில் இலட்சிய நடிகரும், நாட்டியப் பேரொளியும் இணைந்து நடித்த பாடல்.


http://www.youtube.com/watch?v=TZzFChww-EY&feature=player_detailpage

Russellmai
12th October 2014, 03:48 PM
டியர் வாசு சார்,
காட்டு ரோஜா திரைப்படத்தில் இடம் பெற்ற சின்ன சின்ன கண்ணனுக்கு என்ன
வேண்டும் என்ற பாடலை என் சிறிய வயதில் கேட்டு ரசித்திருக்கிறேன்.அதனை மீண்டும் காண,கேட்க வாய்ப்பளித்தமைக்கு நன்றி.இது போன்ற பதிவுகளால் எனக்கு நேரம் போகவில்லை என்ற நிலை மாறி,நேரம் போதவில்லை என்ற இக்கட்டான நிலையில் நான்
உள்ளேன்..
அன்புடன் கோபு

chinnakkannan
12th October 2014, 03:57 PM
வாசு சார்..சி.க ரெண்டு பாட்டுக்கும் தாங்க்ஸ்..கீழே இருப்பது ஒரு புதுப்பாட்டு தான்..ஆனால் கொள்ளை அழகான பாட்ல். புதிய படம் தான்.. பார்த்திருப்பீர்கள் என நினைக்கிறேன்.. நா. முத்துக்குமார் பாட்டு

ப்ளீஸ் புதுப்பாட்டுப் போட்டுட்டேன்னுஎன்னைத் திட்டாதீங்க.. விஷூவல் முன்பு பார்த்த்து..இப்போது உங்களுக்காக..படம்..ஷ்ஷ்..சத்தம் போடாதே

அழகு குட்டி செல்லம்
உன்னை அள்ளி தூக்கும் போது
உன் பிஞ்சு விரல்கள் மோதி
நான் நெஞ்சம் உடைந்து போனேன்


ஆளை கடத்திப் போகும்
உன் கன்னக்குழியின் சிரிப்பில்
விரும்பி மாட்டிக்கொண்டேன்
நான் திரும்பி போக மாட்டேன்


http://www.youtube.com/watch?v=6_OXIDXpgBs

Richardsof
12th October 2014, 04:56 PM
மாலை நேர தென்றல் என்ன பாடுதோ
என் மன்னன் எங்கே எங்கே என்று தேடுதோ
மாலை நேர தென்றல் என்ன பாடுதோ
என் மன்னன் எங்கே எங்கே என்று தேடுதோ

மஞ்சள் வண்ண வெய்யில் என்று தோணுதோ
என் மங்கை மேனி தங்கம் என்று நாணுதோ
பூ விரிந்த சோலை என்று என்னை எண்ணுதோ
இந்த பூவைப்போல மென்மை இல்லை என்றதோ

மாலை நேர தென்றல் என்ன பாடுதோ
என் மன்னன் எங்கே எங்கே என்று தேடுதோ

தங்க நிற கலசம் எடுத்து நடக்கும் தேரோடு
பக்கம் வந்து மெதுவாய் பதமாய் இதமாய் உறவாடு
தங்க நிற கலசம் எடுத்து நடக்கும் தேரோடு
பக்கம் வந்து மெதுவாய் பதமாய் இதமாய் உறவாடு

அணைத்தாலும் அடங்காததோ அது
போகப்போக இன்னும் கொஞ்சம் விளங்காததோ....விளங்காததோ

மாலை நேர தென்றல் என்ன பாடுதோ
என் மன்னன் எங்கே எங்கே என்று தேடுதோ

கண்மணி என் மனம் உன் வசம் வந்தது
உன் மந்திரப்புன்னகையோ ......
உன் மந்திரப்புன்னகையோ
கன்னி என் பொன்முகம் உன்னிடம் கண்டது
நீ முத்தாடும் வித்தைகளோ
கை வண்ணம் என்னென்று சொல்லவோ
கட்டும் நேரத்தில் பூப்பந்தாய் துள்ளவோ மெல்லவோ அள்ளவோ சொல்லவோ கிள்ளவோ
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ அ
ஆஆஆஆஆஆஆஆஅ

மாலை நேர தென்றல் என்ன பாடுதோ
என் மன்னன் எங்கே எங்கே என்று தேடுதோ
மஞ்சள் வண்ண வெய்யில் என்று தோணுதோ
என் மங்கை மேனி தங்கம் என்று நாணுதோ
பூ விரிந்த சோலை என்று என்னை எண்ணுதோ
இந்த பூவைப்போல மென்மை இல்லை என்றதோ
மாலை நேர தென்றல் என்ன பாடுதோ
என் மன்னன் எங்கே எங்கே என்று தேடுதோ
அஹா அஹஹா அஹா ஆஹா ஹா அஹா

நீரும் நெருப்பும் -1971 படத்தில் இடம் பெற்ற கனவு பாடல் . ஒரு ரசிகனின் தேவைகளை பூர்த்தி செய்த இனிய காதல் பாடல் . மக்கள் திலகம் - ஜெயா இருவரும் இந்த பாடல் காட்சியில் கொள்ளை அழகு .
இருவரின் உடை அலங்காரம் - நடன அசைவுகள் - அபாரம் . ஹும்மிங்க்ஸ் காட்சிகளில் மக்கள் திலகத்தின் முக பாவங்கள் பிரமாதம் . இந்த ஒரு பாடல் காட்சிக்காக ரசிகர்கள் மீண்டும் மீண்டும் பார்த்தார்கள் .
http://youtu.be/qVI0B6f5U_s
ரிக்ஷாக்காரன் படத்தில் இடம் பெற்ற அழகிய தமிழ் மகள் போல் புகழ் பெறவில்லை .இருந்தாலும் இந்த
பாடல் எப்போது பார்த்தாலும் மனதை மயக்கும் பாடலாக உள்ளது . இசை அரசி- பாலா இருவரின் அட்டகாசமான குரலில் மெல்லிசை மன்னரின் இசையில் மக்கள் திலகம் - ஜெயா இணையில் மறக்க முடியாத மாலை நேர தென்றல் பாடல் .

vasudevan31355
12th October 2014, 06:41 PM
வாசு சார்..

ப்ளீஸ் புதுப்பாட்டுப் போட்டுட்டேன்னுஎன்னைத் திட்டாதீங்க.. விஷூவல் முன்பு பார்த்த்து..இப்போது உங்களுக்காக..படம்..ஷ்ஷ்..சத்தம் போடாதே



அய்யய்யோ! சி.க.சார்,

என்ன இப்படி கேட்டுட்டீங்க. நானாவது உங்களைத் திட்றதாவது?

அதுக்கெல்லாம் வேற டிபார்ட்மெண்ட்ல ஆளுங்க இருக்காங்க. திட்டலாம் மாட்டாங்க. குத்துவாங்க. கோணி ஊசியால நகக் கண்ணுல குத்துவாங்க. கோபால் தான் பாவம். திட்டி திட்டி மாட்டிக்குவார். ஆனா இவுங்கல்லாம் நாசூக்கா நேக்கா சத்தமே இல்லாம கிள்ளி விடுவாங்க. சில்மிஷம் பண்ணுவாங்க. அடுத்தவன் வேதனையில அவ்வளவு இன்பம் அனுபவிப்பாங்க. வாழ்த்தும் போது கூட வக்கனையா வாழ்த்துவாங்க. இப்ப நான் போடுற பதிவு கூட அவுங்ககிட்டு இருந்து கத்துகிட்டதுதான். ஆனா ஒண்ணுமே தெரியாத பூனை மாதிரி இருப்பாங்க. என் கவலையெல்லாம் அவுங்க உங்களை திட்டாம இருக்கணும் அப்படிங்கறதுதான். மதுர கானங்கள் திரியிலே புதுப்பாட்டு எப்படி வரலாம்னு கேக்கலாம். எதுக்கும் ரெடியா இருங்க.:)

நான் போய் எங்க செல்லத்தை திட்டுவேனா?:) ஆனா சி.க.சார் நான் புதுப் படமே பாக்கறதில்ல. அதை ஒரு கொள்கையாகவே கொஞ்ச நாளா வச்சிருக்கேன். ஆனா நீங்க எனக்காக ஒரு பாடல் தந்ததால் கண்டிப்பாக பார்க்கிறேன். நன்றி சி.க.சார்.

vasudevan31355
12th October 2014, 06:52 PM
மாலை மதுரம்.

சி.க.சார்,

இந்த கானத்தைக் கேளுங்கள்.

'மாமழை காலமும் போனதே
ஒரு மாசம் ஆனதே
மார்கழி மாசமும் போனதே
வெயில் வந்தே காயுதே
பூவெல்லாம் பூக்குது புதுமணம் வீச (இந்தப் பெண்ணின் முகத்தில்தான் இப்போது எத்துனை மலர்ச்சி)
மாவும் பலாவும் காய்க்குது
நல்ல வாடை தூக்குது'

உரலில் உலக்கையை இட்டு மாவிடித்தபடியே இந்தப் பெண்மணி தமிழர் பண்பாடு மாறாமல் பாடும் இந்த இனிய கானத்தை கண்டு களியுங்கள்.

'என் மனைவி' என்ற திரைப்படத்தில் மிக இனிமையான பாடல். உங்களுக்கு ரொம்ம்பப் பிடிக்கும்.


http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=rI2LWHC6Uy8

vasudevan31355
12th October 2014, 07:01 PM
மாலை மதுரம்.

'கண்ணீரின் வெள்ளம் இங்கே ஓடுதய்யா
கரை கூடும் ஆளைக் காணத் தேடுதய்யா
கருனையுல்லோரும் இல்லையா அய்யா'

'ஆயிரத்தில் ஒருவன்' பாணியில் வைஜயந்திமாலாவை ஏலம் விடும் எத்தன். கண்ணீர்ப் புலம்பல் பாட்டுடன் என்னைக் காப்பற்ற யாருமில்லையா என்று தவிக்கும் வை.மாலா.

சுசீலாம்மாவின் உருகும் குரல். உருக்கும் குரல்.

'பாக்தாத் திருடன்' திரைப்படத்தில்.


http://www.youtube.com/watch?v=fg9ExfkHb2M&feature=player_detailpage

vasudevan31355
12th October 2014, 07:02 PM
மாலை மதுரம்.

'கண்ணீரின் வெள்ளம் இங்கே ஓடுதய்யா
கரை கூடும் ஆளைக் காணத் தேடுதய்யா
கருணையுள்ளோரும் இல்லையா அய்யா'

'ஆயிரத்தில் ஒருவன்' பாணியில் வைஜயந்திமாலாவை ஏலம் விடும் எத்தன். கண்ணீர்ப் புலம்பல் பாட்டுடன் என்னைக் காப்பற்ற யாருமில்லையா என்று தவிக்கும் வை.மாலா.

சுசீலாம்மாவின் உருகும் குரல். உருக்கும் குரல்.

'பாக்தாத் திருடன்' திரைப்படத்தில்.


http://www.youtube.com/watch?v=fg9ExfkHb2M&feature=player_detailpage

vasudevan31355
12th October 2014, 07:14 PM
சித்தூர் வாசுதேவன் சார்,

இடம் பார்த்து அடிச்சீங்களே ஒரு அடி. அப்படியே பிளாட் ஆயிட்டேன்.

'கருடா சௌக்கியமா' என் ஆவி குடி கொண்ட படம்.

'கீதை சொல்ல கண்ணன் வந்தான்' அருமையான பாடல்.

தலைவருக்கு இதில் ஒரு வரி வரும்.

'பலர் ஏளனமாய் சிரித்த போது மனம் ஒடிந்தது
வன்முறைகள் செய்திடவே துணிச்சல் வந்தது
அந்த வரலாற்றை கடந்த காலம் எழுதுகின்றது'

எவ்வளவு பொருத்தமான வரிகள்! இப்போதைய என் நிலைமைக்கும் கூட. தலைவர் தலைவர்தான்.

தலைவர் அசத்தல் ஆக்டிங். பாடி லாங்க்வேஜும், ஸ்டைலும் சும்மா அதம் பறக்குமில்ல!

சித்தூராரே!

'இதைச் சொல்ல வந்தாயோ!
எனை (இந்தப் பாடலைப் போட்டு வெல்ல) வந்தாயோ!'

ரொம்ப நன்றி வாசு சார்.

ஆனாலும் உமக்கு என்ன துணிச்சல்? ந.தி.பாட்டை இங்கே எப்படி போடப் போச்சு? இரும். உம்மை அப்புறம் கவனிச்சுக்குறேன்.:)

Richardsof
12th October 2014, 07:23 PM
http://i59.tinypic.com/dfyog3.jpg

vasudevan31355
12th October 2014, 07:26 PM
மாலை மதுரம்

ராகவேந்திரன் சார்,

தங்களுக்காக இந்த பாடல். இந்தப் படத்தைப் பற்றி சில தடவை இணையத்தில் பகிர்ந்து கொண்டுள்ளோம். அலை பேசியிலும் பேசி மகிழ்ந்துள்ளோம்.

'கானல் நீர்' படத்தில் ஓர்.அற்புத பாடல். டப்பிங் ஆக இருந்தாலும் பானுமதி அவர்களின் சோகக் குரலால் நம்மை ஈர்க்கிறது. நம் கண்களை ஈரமும் ஆக்குகிறது.

'கண்ணாலே காணாமலே
சொன்னாலும் கேளாமலே
பெண் மேலே பழி சொல்வதே
பேரின்பமா'


http://www.youtube.com/watch?v=GP7-jOJ6RIA&feature=player_detailpage

vasudevan31355
12th October 2014, 07:27 PM
அருமை! அருமை! வினோத் சார். பல நூறு நன்றிகள். பாவிகள் 'பாவ மன்னிப்பு' பெறட்டும்.

vasudevan31355
12th October 2014, 07:30 PM
காலம் பல கடந்து
அத்தான்
வந்த நாள் முதல்
காலங்களில்
ஓவியம் கலைந்ததென்று
பாலிருக்கும்
எல்லோரும் கொண்டாடுவோம்
சாயவேட்டி

vasudevan31355
12th October 2014, 07:45 PM
முரளி சார்,

'சபதம்' பதிவு தங்கள் கடந்தகால இளமைக்கால நினைவுகளை அசை போட வைத்து தங்களிடமிருந்து ஓர் அருமையான பிளாஷ்பேக் பதிவை இங்கே இடச் செய்திருக்கிறது என்பது எனக்கு ரொம்பப் பெருமை.

அடடா! என்ன ஒரு ஞாபக சக்தி! ரயில் பெட்டிகளின் நிறங்களைக் கூட விட்டு வைக்காமல். படிப்பவர்களை அப்படியே கட்டிப் போட்டு வைக்கும் கலை தங்களுக்கே உரித்தானது.

ரவியைப் பற்றி நீங்கள் கூறிய கருத்துக்கள் நூறு சதம் உண்மை என்றாலும் அதையும் மீறி கோபாலையும், என்னையும் அவர் கவர்ந்த மாயம்தான் புரியவில்லை. இளம் வயதில் நாம் எதிர்பார்த்த அனைத்தையும் தந்தவர் என்பதாலோ?! அழகு, பாடல்கள், நடனம், பைட் என்று கவர்ந்து விட்டார்.

(ரவி ஒருமுறை நமது 'மெக்கா'வுக்கு வந்து தலைவர் படம் பார்த்து, போதையில் கூடாத விமர்சனம் பண்ணிவிட்டு, நமது ஆட்களிடம் கும்மாங்குத்து வாங்கிக் கட்டிக் கொண்டாராமே... அப்படியா முரளி சார்?)

நம்ப 'மெக்கா' வை ரொம்ப ரசித்தேன். பாரதத்தின் பெருமையை பாருக்குள்ளே பரவ வைத்த பரம்பொருள் அல்லவோ நம் 'பாரத்'.

தங்கள் சென்னை அனுபவங்களும் சிறகடிக்கின்றன.

இது போன்ற தங்களின் அனுபவப் பதிவுகளுக்காக ஆயிரம் 'சபதம்' போட நான் ரெடி.

நன்றி முரளி சார்.

chinnakkannan
12th October 2014, 09:48 PM
மாமழைக்காலம் போனது ஒரு மாசம் ஆனது..
மார்கழி மாசம் போனது வெயில் வந்தே காயுது
தென்றலும் கன்னலும் தென்னையும் ஓங்குது..
வண்ணக் கமுகும்குலை தாங்குது அடுத்த வரி வேகமாயோடி தூங்குது என முடிகிறது.. – கலக்கல் பாட்டு வாசு சார்.. தாங்க்ஸ்.. அதுவும் என்ன ஒரு எளிமையான இசை என்ன ஒரு இயல்பான நடிப்பு.. நடுவில் கைப்பை குடையுடன் வரும் அம்மணி யார்.. அகெய்ன் தாங்க்ஸ்..

சின்னச் சின்னக் கண்ணனுக்குஎன்ன வேண்டும் சிங்கார மொழி சொல்லும் பொண்ணு வேண்டும்..எஸ் எஸ் ஆர் பத்மினி.. பாட்டு கேட்டிருக்கிறேன்..இப்போது தான் பார்க்கிறேன்.. தாங்க்ஸ் அகெய்ன்.. ஆமா அப்படி இப்படின்னு எஸ்.எஸ். ஆருக்குன்னு சில பல நல்ல பாட்டு அமைஞ்சுருக்குல்ல.. நினைவுக்கு வர்ற லிஸ்ட் பாத்தா

என்னை விட்டு ஓடிப் போக முடியுமா
பூப்போலப் பூப்போலப் பிறக்கும்
கடவுள் மனிதனாகப் பிறக்கவேண்டும்
கல்லிலே கலைவண்ணம்கண்டான்
ஏட்டில் எழுதி வைத்தேன்
வாராதிருப்பாளோ வண்ண மலர்க் கன்னியவள்
கண்ணான கண்ணனுக்கு அவசரமா
சாந்துப் பொட்டு சிலுசிலுக்க சந்தனப் பொட்டு கமகமக்க
வாழ்ந்து பார்க்க வேண்டும் மனிதனாக வேண்டும்
எஸ்.எஸ்.ஆரை டி.ஆரும் இன்னொரு நடிகையும் கேலிசெய்யும்பாடல் – நில் கவனி புறப்படு (இதுபற்றி வாசு சார் விலா, வாரியாக எழுதலாம்)

ம்ம் இன்னும் இருக்கு என்று தெரியும் மறந்து போச்…

rajraj
12th October 2014, 09:56 PM
chinnakkaNNan: We are leaving for San Francisco tomorrow. You are welcome to join us ! :)

chinnakkannan
12th October 2014, 10:03 PM
//என்னை விட்டு ஓடிப் போக முடியுமா// இதோ வந்துக்கிட்டே இருக்கேன்.. (இப்போ ரொம்பக்குளிருமா ராஜ்ராஜ்சார்)

rajraj
12th October 2014, 10:25 PM
//என்னை விட்டு ஓடிப் போக முடியுமா// இதோ வந்துக்கிட்டே இருக்கேன்.. (இப்போ ரொம்பக்குளிருமா ராஜ்ராஜ்சார்)


You have to put up with 60 deg F difference ! :lol: Bring warm clothing ! The high is about 60 deg F ! Nice weather !

chinnakkannan
13th October 2014, 12:33 AM
அவன் அழகன். அவள் அழகி.. (பெயரும் அதுவே தான்) பருவம் இளமை..பின் என்ன காதல் தான்..

கண்ணிமைக்க மாட்டேனே கண்ணா நானும்
…கண்ணுக்குள் நீயிருப்ப தாலே தானே
எண்ணங்கள் மயங்குகின்ற மாலைப் போதும்
..ஏற்றாதே உறக்கத்தை எந்தன் விழியில்
என அவள் சொல்ல
பண்ணிசைத்துப் பாடுகின்ற பாவை உந்தன்
..பக்குவத்தை நானறிவேன் கேட்பாய் நீயே
தன்னிறைவு பெறலாமே மணந்தான் செய்தே
…தளிர்க்கொடியே விரைவில்தான் என்றே சொன்னான்..

பின் என்ன..இருவீட்டார்களுக்கும் மகிழ்ச்சி.. வாவ் வாட் எ பேர் யா.. என கண்கொட்டாமல் பார்த்துப் பார்த்து மகிழ்ந்து இருக்கையில் பொசுக்கென்று கண்..
எதற்கோ அந்த அழகி எங்கோ செல்ல விபத்தாகி விடுகிறது.. மோதிய கார்க்கார டாக்டர் தம்பதிகளுக்கு பயம்..அதே சமயம் கருணை உள்ளம்.

அந்தப் பெண்ணை அள்ளிப்போட்டுக் கொண்டு தங்கள் ஊருக்கே அதாவது சென்னைக்கே கொண்டு சென்று விடுகிறார்கள்..

அழகியையோ காணோம்.. ஊர் என்ன செய்யும்.. ஏசுகிறது.. ஒழுங்காகப் பெண்பார்த்தாயா அழகனுக்கு என அழகனின் பெற்றோரை.. அழகனுக்கோ தெரியும் ஏதோ அழகிக்கு ஆகிவிட்டது என்று..

ஊரில் அவர்கள் சந்திக்கும் ஆலமரம், கோவில் ஏரிக்கரை எல்லாம் தேடிப்பார்க்கிறான்.ம்ஹீம் இல்லை..துயரில் கண்களில் தண்ணீர்லாரியிலிருந்து தளும்பும் நீர்போல நீர் தளும்பிக்கொண்டே இருக்கிறது.. உலகத்திலேயே படிக்காமல், கேட்காமல், பார்க்காமல் வளரக்கூடிய ஒன்றே ஒன்று..முகத்தில் தாடி சமர்த்தாய் அடர்த்தியாய் மிகக்கருப்பாய் அவன் கண்களின் கருவளையத்துக்குப் போட்டி போட்டு வளர்கிறது..

பார்க்க சகிக்க முடியாமல் போகவே அப்பா அழகனைக் கூப்பிடுகிறார்.. மகனே

டாடி

இந்தப்பார்..அந்தப் பெண் எங்கோ ஓடிப் போய்விட்டாள்

அப்படி எல்லாம் இருக்காதுப்பா.. ஏதோ ஆச்சு என் அழகிக்கு

சரி அப்படியே இருக்கட்டும்..அவ திரும்பி வருவான்னு உனக்கு நம்பிக்கை இருக்கா

டன் டன்னாப்பா..

தென்..வா என்கூட.. நாம சென்னை போவோம்..சென்னை நீலாங்கரைப் பக்கத்தில நம்ம பங்களா சும்மா தான் இருக்கு. அங்கே போய் தேடுவோம்..

சரி என்று சொல்லிச் சென்னை.. நீலாங்கரை பங்களா.. பின்புறம் அழகிய கடல்..

அப்பா சொல்லி விடுகிறார்.. டேய் இங்க உள்ள மேகசீன் நண்பர்களிடமெல்லாம் சொல்லி வைத்திருக்கிறேன்..உன்னவளோட ஃபோட்டோவையும் தான்..கவலைப் படாதே..கடல் இருக்குன்னா டபக்குன்னு குதிச்சுடாத.. இது நான் சொந்தமா சேர்த்த சொத்து.. ட்ரஸ்ட்லாம் எழுதி நல்லகாரியம்லாம் என்னைப் பண்ணவெச்சுடாதே..

சரி

சரில்லாம் பத்தாது..இந்தா ஐ நூறு ரூபா..

எதுக்குப்பா

அதான் முகத்துல ஒரு தாடித் தோட்டமே வச்சுர்க்கியே.. தலையும் பாக்க பயங்கரமா இருக்கு.. சமத்தா வெட்டிக்கிட்டு வா..இவ்வளவு ஆகும்..

போய் வேண்டா வெறுப்பாய் முகம், முடி திருத்தி மாலை கடற்கரையில் தரையைப் பார்த்தவண்ணம் நடந்தால் தொலைவில் யார்.. கொஞ்சம் கிட்டக்கச் சென்று பார்த்தால் அவள் தான்..

அவள் இயல்பில் சற்றுக் குள்ளம் தான்..ஒல்லியான உடம்பு..அவனுடைய அழகி தான்..அழகாய்ப் பாவாடை சட்டை தாவணி.. முகம் மட்டும் சற்றே வெளிறியிருக்கிறது..

அழகி அழகி..

அவளோ அவனை ப் புதிராய்ப் பார்க்கிறாள்..

யார் நீங்க..

அதற்குள் அந்த டாக்டர் தம்பதிகள் வர, டாக்டரின் மனைவி அவளை அழைத்துக் கொண்டு சென்று விட டாக்டரிடம் அவன் தன்கதையைச் சொல்ல..ஓ நீ அந்த மரங்கொத்தி கிராமமா.. அங்கு தான் இவளுக்கு ஆக்சிடெண்ட் ஆகி நினைவெல்லாம் போய்டுத்தேப்பா..

சார்..மறுபடியும் வருமா

இந்தபார் என்னை என்ன சினிமா டாக்டர்னா நினச்சே.. நெஜம்மாவே நிறையப் படிச்சவனாக்கும்..எனில் இவளுக்கு அனேகமா ஒரு சில மாதங்கள்ள வரலாம் வராமலும் போகலாம்..

இப்பத் தான் சினிமா டாக்டர் மாதிரிப் பேசறீங்க..

சரி வா.. நீயும் ட்ரை பண்ணு..

அழகியின் அருகே சென்று அழகன் டாக்டரின் நண்பன் என அறிமுகப் படுத்தி அவளுடன் தான் பழகிய நாட்கள், அவர்கள் பேசிக்கொண்ட வெற்று இனிமைகள் (தமிழில் ஸ்வீட் நத்திங்க்ஸ்) இன்னும் இன்னும்பலப் பலவாய் சொல்லச் சொல்ல..

நாட்களும் செல்லச் செல்ல

ஒரு நாள் மறுபடியும் அவளுக்கு அடிபடுகிறது..அஃப்கோர்ஸ் நினைவும் வருகிறது..

இவனுக்கோ வாழ்க்கை வெறுக்கிறது..அவளுக்கு நினைவு திரும்பவில்லை என மறுபடியும் கடைசிமுயற்சியாக அவர்கள் சந்தித்ததும் தம்மைப் பற்றிச் சிந்தித்ததும் ஆனகதையைச் சொல்லிப் பாடுகிறான்..

அவளுக்கோ நினைவும் வருகிறது.. கண்ணில் நீரும் வருகிறது.. முகம் சோகமான ஹூட் ஹூட் புயலால் பாதிக்கப் பட்ட செடியாய் வாட,கண்களில் மலையாளத் தண்ணீர்..அதாவது வெள்ளம்..

ஹோ மை ஸ்வீட் ஹார்ட் என் அழகா, அழகுக் கண்ணா.. உனை இவ்வளவு நாளா மறந்துட்டேனே என்றபடி அவனைத் தொடர்ந்து பாடி அவனை அணைத்துக் கொள்கிறாள்..பின்னால் வரும் டாக்டரும் அவரது சகாக்களும் ஜோடிகள் இணைந்ததில் ஆனந்தம் கொள்கின்றனர்..

இது மலர்களே மலருங்கள் என்ற படத்தின் மிகச் சுருக்கிய கதையே இல்லை!

மலர்களே மலருங்கள் என்ற படத்தில் ஜேசுதாஸூம் எஸ்.ஜானகியும் பாடிய பாடலைப் பார்த்ததால் அதற்கேற்ப இட்டுக் கட்டிப் பார்த்த கதையாக்கும்..

அழகான பாடல். சற்றே வெளிறிய உயரக் குறைவான தாமரையாக ஒல்லி வனிதா, (ஆச்சர்யம்) ஆற்று மணற்படுகையைப் போல வரிவரியான ஹேர்ஸ்டைலுடன் சுதாகர்.. நல்லபாடல்

**
.ஞாபகம் இல்லையோ
ஞாபகம் இல்லையோ கண்ணே
ஞாபகம் இல்லையோ
பல பொன்மாலைகள் போனது
அதில் உன் ஆசையில்
என் மனம் பாடும் பாடல்
ஞாபகம் இல்லையோ கண்ணே
ஞாபகம் இல்லையோ

பாடுவது உனை பார்த்தாடும் நெஞ்சம்
பார்வைகளில் பல பாவங்கள் கொஞ்சும்
ஓடும் நீரானதே எண்ணமே
இசை தேவன் சன்னிதி அதில் காணும் நிம்மதி
தினம் தேடித்தேடி பாடும் ஏழை மனம்
நெஞ்சமதில் அந்த நினைவென்னும் வண்ணம்
எண்ணுகின்றேன் அவை அழியாத எண்ணம்
எந்தன் முன் ஜென்மத்தின் புண்ணியம்

உனை காண நேர்ந்தது இசை பாட சேர்ந்தது
இனி இன்றுபோல வாழும் என் மனது
ஞாபகம் இல்லையோ கண்ணா
ஞாபகம் இல்லையோ
பல பொன்மாலைகள் போனது

அதில் உன் ஆசையில்
என் மனம் பாடும் பாடல்
ஞாபகம் இல்லையோ கண்ணா
ஞாபகம் இல்லையோ

வீடியோ..கீழே..

https://www.youtube.com/watch?feature=player_embedded&v=dlgENw6-aJ0

*
அடப்பாவி இதைச்சொல்ல இவ்ளோ பெர்ரிய கதையா என அடிக்க வருமுன் எஸ்ஸ்ஸ்கேப்..! :)

raagadevan
13th October 2014, 01:19 AM
Chinnakkannan: Here is the solo version of ஞாபகம் இல்லையோ கண்ணே...

http://www.youtube.com/watch?v=-ikrfOOuzJI

ஞாபகம் இல்லையோ கண்ணே
ஞாபகம் இல்லையோ
பல பொன்மாலைகள் போனது
அதில் உன் ஆசையில்
என் மனம் பாடும் பாடல்
ஞாபகம் இல்லையோ கண்ணே
ஞாபகம் இல்லையோ

பாடுவது உன்னை பார்த்தாடும் நெஞ்சம்
பார்வைகளில் பல பாவங்கள் கொஞ்சும்
ஓடும் நீரானதே எண்ணமே
ஆ... ஆ ஆ ஆ... ஆ... ஆ...
ஓடும் நீரானதே எண்ணமே
இசை தேவன் சன்னிதி
அதில் காணும் நிம்மதி
தினம் தேடித் தேடி பாடும் ஏழை மனம்

ஞாபகம் இல்லையோ கண்ணே
ஞாபகம் இல்லையோ

வைகறையில் பனி தான் மூடும் நேரம்
வைகை நதிக் கரை பூஞ்சோலை ஓரம்
வந்து போராடுதே என் மனம்
ஆ... ஆ ஆ ஆ... ஆ... ஆ... ஆ... ஆ...
வந்து போராடுதே என் மனம்
உனைக் காண நாளெல்லாம்
பல வந்து போனது
உறங்காத கண்கள் உன்னைத் தேடியது

ஞாபகம் இல்லையோ கண்ணே
ஞாபகம் இல்லையோ
பல பொன்மாலைகள் போனது
அதில் உன் ஆசையில்
என் மனம் பாடும் பாடல்
ஞாபகம்இல்லையோ கண்ணே
ஞாபகம் இல்லையோ
கண்ணே...

sivaa
13th October 2014, 09:05 AM
மதுரகான வாசகர்கள் நேயர்கள் அன்பர்கள் நண்பர்கள்
அனைவருக்கும் வணக்கம்

வாசு சார் உங்கள் எழுத்துக்கள் மிகவும் பிரமிப்பாக
இருக்கின்றன வாழ்த்துக்கள்

எனக்கு ஒரு பாடல் வேண்டும்

தேவர் பிலிம்ஸ் தயாரிப்பில் வந்த
தெய்வதிருமகள் படத்தில் இடம்பெற்ற

சந்தையிலே நான் கண்ட சரக்கு
நல்ல தங்கச்சிலை போல இருக்கு
என்ற பாடல்

யாராவது முடிந்தால் பதிவேற்றம்
செய்யுங்கள்
நன்றி

rajeshkrv
13th October 2014, 09:48 AM
சிவா

இதோ நீங்கள் கேட்ட தெய்வத்திருமகள் படப்பாடல்

https://www.youtube.com/watch?v=Ue5TnStdPGA

Richardsof
13th October 2014, 09:59 AM
http://i60.tinypic.com/2yoztzq.jpg

Richardsof
13th October 2014, 10:00 AM
MUSIC DIRECTOR - SUDHARSAN
http://i61.tinypic.com/29zvb74.jpg

Richardsof
13th October 2014, 10:01 AM
1963- PONGAL GREETINGS

http://i61.tinypic.com/zwbwgi.jpg

Richardsof
13th October 2014, 10:02 AM
1963- PONGAL GREETINGS
http://i58.tinypic.com/2n0u80y.jpg

vasudevan31355
13th October 2014, 10:05 AM
வினோத் சார்,

ஜெமினி சாவித்திரியின் பொங்கல் வாழ்த்து அபூர்வம்

சுதர்சனம் என்ற அந்த அருமையான இசையமைப்பாளரின் புகைப்படத்திற்கு நன்றி!

'கனிமுத்து பாப்பா' இசையரசி புகைப்படமும் அருமை.

rajeshkrv
13th October 2014, 10:08 AM
http://i60.tinypic.com/2yoztzq.jpg

இது கனிமுத்து பாப்பா படத்தின் ஏழுமலை வாசா பாடலின் ஒலிப்பதிவு. இசையரசிக்கு அருகில் இருப்பவர் ஜோதி கண்ணா (இசையரசியின் அக்கா மகன் பாடகர் ராமகிருஷ்ணாவின் மனைவி). முகனூலில் இசையரசியின் குழுமத்தில் இவரும் உள்ளார். இந்த பாடல் பற்றி நிறைய நாட்களுக்கு முன் பேசி அலசினோம். அவரும் அவரது கருத்துக்களை சொன்னார்.

Richardsof
13th October 2014, 10:09 AM
http://i60.tinypic.com/10dcv7m.jpg

http://youtu.be/9xdy8P6rFjw

vasudevan31355
13th October 2014, 10:11 AM
மதுரகான வாசகர்கள் நேயர்கள் அன்பர்கள் நண்பர்கள்
அனைவருக்கும் வணக்கம்

வாசு சார் உங்கள் எழுத்துக்கள் மிகவும் பிரமிப்பாக
இருக்கின்றன வாழ்த்துக்கள்

எனக்கு ஒரு பாடல் வேண்டும்

தேவர் பிலிம்ஸ் தயாரிப்பில் வந்த
தெய்வதிருமகள் படத்தில் இடம்பெற்ற

சந்தையிலே நான் கண்ட சரக்கு
நல்ல தங்கச்சிலை போல இருக்கு
என்ற பாடல்

யாராவது முடிந்தால் பதிவேற்றம்
செய்யுங்கள்
நன்றி

http://latchuart.files.wordpress.com/2014/07/shivajiganesan2.jpg?w=360&h=360&crop=1

ஆஹா! வாருங்கள் எங்கள் சிவா சார்! உங்களை இருகரம் கூப்பி இனிதே 'மதுர கான'த்திற்கு வரவேற்கிறேன். இலங்கை தந்த எங்கள் 'ஆவணச் செம்மலே'! 'உயர்ந்த மனிதன்' புகழ் ஒன்றே லட்சியம் என்று வாழ்ந்திருக்கும் எங்கள் உயர்ந்த, இனிய நண்பரே! வருக வருக!

தங்கள் மனம் நிறைந்த பாராட்டிற்கு என் உளம் கனிந்த நன்றி!

chinnakkannan
13th October 2014, 10:21 AM
ஹாய் குட்மார்னிங்க் ஆல்..

எஸ்.வி.சார்..காலையில் தேவிகையின் பொங்கல் வாழ்த்துக்கும் இதர ஆவணங்களுக்கும் நன்றி..

//இந்த பாடல் பற்றி நிறைய நாட்களுக்கு முன் பேசி அலசினோம். அவரும் அவரது கருத்துக்களை சொன்னார்.// ராஜேஷ் அதை இங்கு கொடுக்கலாமே.. அப்புறம் ராஜஸ்ரீ வில்லியா..எனிவே ஷி இஸ் தேர் இன் மாய மோதிரம் (வரலாறு முக்கியம் அமைச்சரே! :) ) தாங்க்ஸ் குரு..

அழகிய ஸோலோ கொடுத்த ராகதேவன் ஜி உங்களுக்கு ஒரு ஓ..:)

rajeshkrv
13th October 2014, 10:23 AM
சி.க அவர் இந்த பாடலை இசையரசியுடன் பாடியது பாக்கியம் என்று கூறினார்.

ராஜஸ்ரீ பாரதியின் தந்தையை மயக்கி ஒரு மயக்க நிலையில் வைத்திருக்கும் நடன மாது..

vasudevan31355
13th October 2014, 10:29 AM
சிவா சார்,

நீங்கள் கேட்டு இல்லாமலா? இதோ நீங்கள் கேட்ட அந்த வித்தியாசமான அருமையான பாடல். அப்படியே ஈழத்தமிழ் பாடல் போல குதூகலிக்க வைக்கும். அதனால்தான் இதை விருப்பமாக தேர்ந்தெடுத்தீர்களோ?
மிக அரிய பாடலைக் கேட்டு தங்கள் வித்தியாசமான ரசனையை இங்கு வெளிப்படுத்தியமைக்கு நன்றி! பலருக்கு இப்பாடல் தெரிய வாய்ப்பில்லை. எனக்கு மிகவும் பிடித்த பாடல். (ஏற்கனவே ராஜேஷ் சார் பதிவிட்டு விட்டார். பரவாயில்லை)

'சந்தையிலே நான் கண்ட தளுக்கு
நல்ல தங்கச் சிலை போல இருக்கு
கண்ணாலே நான் போட்ட கணக்கு
அது பொன்னாக விளைந்தது எனக்கு'


https://www.youtube.com/watch?v=Ue5TnStdPGA&feature=player_detailpage

vasudevan31355
13th October 2014, 10:30 AM
இன்றைய ஸ்பெஷல் (92)

மிக மிக ஸ்பெஷல் பதிவு

'மகனே நீ வாழ்க' என்றொரு படம். 1969- ல் வெளியானது. ஜெய்சங்கர், லஷ்மி, நாகேஷ், அஞ்சலிதேவி நடித்தது. அற்புதமான பாடல்களை கொண்ட படம்.

'இன்றைய ஸ்பெஷலி'ல் இந்தப் படத்தின் அதியற்புதமான ஒரு பாடலைப் பற்றித் தெரிந்து கொள்ளலாம்.

http://i40.tinypic.com/2w53i8l.jpg

ஒரு ஏழை அண்ணன். அவனுக்கு ஒரு தங்கை. தங்கை மேல் கொள்ளைப் பிரியமும், பாசமும் அவனுக்கு. தங்கையை ஒரு பெரிய பணக்கார வீட்டு நல்ல மனது வாலிபன் காதலிக்கிறான். அந்த ஏழைப் பெண்ணுக்கு அந்த பணக்கார இடத்தில் சம்பந்தம் நடைபெறுகிறது. அது பணக்கார வீடுதானே ஒழிய குணம் நிறைந்த வீடு. கோயில். அந்த வாலிபனின் தாய் அதாவது அந்த குடும்பத்தின் தலைவி தங்கமான குணம் கொண்ட நல்ல பெண்மணி. குணக்குன்று.

அந்தக் குடும்பத்திற்கு தன் தங்கையை தாரை வார்த்துக் கொடுக்கிறான் அந்த அன்பு அண்ணன் திருமணம் நடப்பதற்கு முன்னால். அதாவது நிச்சயத்தன்று.

அந்த அதிர்ஷ்டக்கார ஏழைப் பெண்ணை அந்த பணக்கார வருங்கால மாமியார் எப்படி வரவேற்கிறாள் பாருங்கள்! தன் சொந்த மகளை அந்த வீட்டுக்கு அழைப்பது போல தன் வீட்டிற்கு அழைக்கிறாள். தன் மகனுடன் காலம் முழுதும் குடும்பம் நடத்தி அவனை நல்லபடியாக கவனித்துக் கொள்ள அந்தக் குடும்பத்தின் மருமகளாகும் அந்த இளம் பெண்ணை மனம் நிறைந்து வாழ்த்தி வரவேற்கின்றாள். எப்படி?

'அழகுமயில் கோலமென பழகும் மகள் வருக
ஆடிவரும் தீபமென தேவ மகள் வாழ்க
இளைய மகள் போல வரும் புதிய மகள் வருக
இன்ப மனை ஆள வரும் அன்பு மகள் வாழ்க'

இப்படி.

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/azhagumayilMPG_000091247.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/azhagumayilMPG_000091247.jpg.html)

'என் மருமகளே! பூங்கொடி போன்றவளே! நீ சுதந்திரமாக வாழ்க்கை நடத்த இங்கு தடை இருக்காது... உன் இஷ்டம் போல் இங்கு நீ இருக்கலாம்... கொடுமை என்பதையே நீ இங்கு இன்னதென்று அறிய மாட்டாய்' என்பதை எவ்வளவு அழகாகச் சொகிறாள்?

'பூங்கொடி விளையாட எங்கள் பூமியில் இடம் உண்டு'

அது மட்டுமா?

'என்னை வேறாக நினைக்காதே! உன்னைப் பெற்ற தாயாக நினைத்துக் கொள்' என்று ஆசீர்வதிக்கிறாள்.

'தாய்வழி உறவென்று நினைத்து வாழிய நலம் கொண்டு'

எந்தப் பெண்ணுக்கு இப்படி ஒரு மாமியார் அமையும்?

மருமகள் கர்ப்பத்தைக் கலைப்பதும், விஷம் வைத்துக் கொள்வதும், அவளை வாழாவெட்டி ஆக்கத் துடிப்பதும், சமையல் கேஸை ஒப்பன் செய்து அவளை எரிக்கப் பார்ப்பதுமாக தொலைக்காட்சி சீரியல்களின் மாமியார்களைப் பார்த்துப் பார்த்து அலுத்து, சலித்துப் போய் மனம் கெட்டுப் போன நமக்கு இப்பாடல் எவ்வளவு ஆறுதலையும், படிப்பினையையும், நற்குணத்தையும் போதிக்கிறது. அன்பு என்ற சொல்லுக்கு ஆதாரமே இப்பாடல்தான்.

இப்போது தங்கையைத் தாரை வார்த்துக் கொடுக்கும் அண்ணன் ஆனந்தக் கண்ணீருடன் தன் தங்கைக்கு 'நல்லதொரு பண்பான, அன்பான இடத்தில் வாழ்க்கை அமையப் போகிறதே' என்ற சந்தோஷத்தில் பாட ஆரம்பிக்கிறான்.

'தங்கத் தட்டில் பூச்சரத்தோடு வெற்றிலை களிப் பாக்கு
வைத்து தாய் போல உன்னை வருக என்றழைக்கும்
உள்ளத்தைக் களிப்பாக்கு கண்ணே உள்ளத்தைக் களிப்பாக்கு'

'தங்கத் தட்டிலே வெற்றிலையும், களிப் பாக்கையும் வைத்து உன்னை வரவேற்கும் உன் அன்னை போன்ற மாமியாரின் உள்ளத்தை களிப்பாக்கு... அதாவது சந்தோஷமாக்கு' என்று தங்கையிடம் பாடுகிறானே! எப்படிப்பட்ட வரிகள்!

களிப் பாக்கு - வெற்றிலையுடன் சேர்ந்து தரும் கொட்டைப் பாக்கு
களிப்பாக்கு - சந்தோஷமாக்கு

(ஒரே வாத்தையை பிரித்து இரண்டு அர்த்தமாக்கிய கவிஞனின் கற்பனையை எப்படிப் பாராட்ட!)

'கண் அவன் என்பதே கணவனாகும் அவன் நெஞ்சம் மயங்கும் வண்ணம் நீ அவனிடம் குடும்பம் நடத்து' என்கிறான் அண்ணன்.

தங்கைக்கு அறிவுரை முடித்து நேரே அந்த மாமியாரிடம் வருகிறான் பாடலின் மூலம். தன் தங்கையைப் பற்றி அவனுக்கு முழுதாகத் தெரியும். ஆனால் அவள் காலடி எடுத்து வைக்கப் போகும் அந்த நல்ல குடும்பத்திற்கு அவ்வளவாகத் தெரியாதல்லவா? அதனால் தன் தங்கையின் பொன்னான குணத்தை சில வரிகளிலேயே சொல்லி அவர்களுக்கு அவளைப் பற்றி விளக்கி விடுகிறான்.

'நிலத்தைப் பார்த்து நடந்ததல்லால் நேரே பார்த்ததில்லை
ஒரு நினைவும் கனவும் ஏழைத் தங்கை நிழலைத் தொட்டதில்லை'

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/azhagumayilMPG_000199683.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/azhagumayilMPG_000199683.jpg.html)

அடடா! தன் தங்கையின் குணத்தை எப்படி புரிந்து வைத்து அதை இங்கே தெரியப்படுத்துகிறான்.

'என் தங்கை இதுநாள் வரை நிலத்தைப் பார்த்துதான் நடந்திருக்கிறாள். தலை நிமிர்ந்து எவரையுமே பார்க்காத மாதர் குல மாணிக்கம் அவள்.. ஒரு ஆடவரைக் கூட இதுவரை அவள் நிமிந்து பார்த்திருப்பாளா?'

என்று பூரிக்கிறான்.

'அவள் இதுவரை எந்தக் கற்பனையும் மனதுக்குள் செய்து வைத்ததில்லை. அவள் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று எந்த நினைவும் வைத்துக் கொள்ளவில்லை... அல்லது இப்படியெல்லாம் வாழ வேண்டும் என்று எந்தக் கனவும் நெஞ்சில் வைத்ததில்லை'

என்றும் கண்ணீர் விட்டபடி அவள் மீது பெருமிதம் கொள்கிறான். 'அவள் உங்கள் குடும்பத்திற்கு முழுத் தகுதியானவளே' என்று சொல்லாமல் சொல்கிறான்.

பின்,

'என் தங்கை என்ற மாணிக்கத்தை, என் வீட்டுப் பெண்ணையா உங்களுக்கு தருகிறேன்... இல்லை இல்லை... என் கண்களையேதான் உங்களிடம் ஒப்படைக்கிறேன். அதுவும் உங்கள் நல்ல மனங்களை நம்பித்தான் அவளைத் தருகிறேன். நீங்கள்தான் அன்னை போல இருந்து அவளைக் காக்க வேண்டும்'

என்று கண்ணீர் மல்க வேண்டுகிறான். என்ன இருந்தாலும் இதுநாள் வரை கண்மணி போலக் காத்த தங்கையைப் பிரிய வேண்டிய தருணம் வந்து விட்டதல்லவா? அதுதான் அவன் கண்களில் கண்ணீர்.

அவன் கண்ணீரைக் கண்டு அந்த மாமியார் அவனுக்கு ஆறுதல் கூறுகிறாள்.

'கவலைப்படாதே அப்பா! நானும் ஒரு காலத்தில் இந்த வீட்டுக்கு மருமகளாய் வந்தவள் தானே! அதன் கஷ்ட நஷ்டங்கள் புரிந்தவள் தானே! பயப்படாமல் உன் பெண்ணைக் கொடு. அவளைத் தாய் போல் வைத்து நான் காப்பாற்றுவேன்"

என்று உறுதி அளிக்கிறாள்.

பின் மருமகளை வாழ்த்தி வரவேற்று உச்சி முகர்கிறாள்.

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/azhagumayilMPG_000059524.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/azhagumayilMPG_000059524.jpg.html)

என்ன ஒரு காவியப் பாடல்! அண்ணனின் நிலைமையையும், அந்த மாமியாரின் மனநிலைமையையும் எவ்வளவு அழகாக வடித்து எடுத்துரைக்கிறார் கவிஞர்.

அண்ணனாக நாகேஷ் கண்ணீர் மல்க, ஆனந்தத்துடன் தன் தங்கை லஷ்மியை அஞ்சலிதேவி, மேஜர் குடும்பத்திற்கு ஜெய்சங்கர் மனைவியாக அனுப்பி வைக்கும் அர்த்தம் தொனிக்கும் அன்பு கலந்த ஒன்று பட்ட நெஞ்சங்களின் உணர்வுகளின் சங்கமப் பாடல். நடிகர்கள் அனைவரும் அற்புதமாக நடித்திருப்பார்கள் ஜெய்சங்கர் உட்பட.

இப்படிப்பட்ட மாமியாரும், இப்படிப்பட்ட அண்ணனும் நமக்குக் கிடைக்க மாட்டார்களா என்று பெண்கள் ஏங்கிப் போகும் பாடல்.

சற்று பெரிய பாடல். நீளமான வரிகள். நாகேஷுக்கு சீர்காழியும், அஞ்சலி தேவிக்கு சுசீலா அம்மாவும் குரல் தந்து இப்பாடலை ஜொலிக்க வைத்திருப்பார்கள். பாடல் பலவித டியூன்களில் நம் நெஞ்சில் சிம்மாசனமிட்டு அமர்ந்து கொள்கிறது.

பெண்ணின் அண்ணனும், அந்தப் பெண்ணிற்கு வரப் போகும் மாமியாரும் இணைந்து பாடும் பாடல் தமிழ்ப் படங்களிலேயே இந்த 'மகனே நீ வாழ்க' திரைப் படத்தில்தான் இருக்க வேண்டும். இது ஒரு புதுமைதானே!

எக்காலத்திலும் மறக்க முடியாத ஏற்றமிகு பாடல்.

எனதருமை டி.ஆர். பாப்பா என்பதனால் தான் இப்படிப்பட்ட அருமையான ஒரு பாடல். இப்பாடல் அவரால் மட்டுமே முடிந்த ஒரு அதிசயம்.

இந்தப் பாடல் என்னை மிகவும் பாதித்த ஒரு பாடல். இப்பாடலைக் கேட்கும் போதோ அல்லது பார்க்கும் போதோ எனக்கும் பல இனம் புரியாத உணர்வுகள் வந்த போகும். இப்பாடல் காட்சி சினிமா பாடல் போலவே இராது. நம் குடும்பத்தில் நிகழும் ஒரு சம்பவம் போலவே நம்மை பாதிக்கும். நம் கண்களில் நம்மையுமறியாமல் நீர் தேங்கி நிற்பதை உணரலாம். நீங்கள் கண்டிப்பாக இப்பாடலை வரிகளுடன் சேர்த்து ரசிப்பீர்கள் என்ற நம்பிக்கையோடு இப்பதிவை எழுதுகிறேன்.

http://n3.sdlcdn.com/imgs/a/a/i/VTAF0288_M_1_2X-6209f.jpg

இனி பாடலின் வரிகள்.

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/azhagumayilMPG_000059338.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/azhagumayilMPG_000059338.jpg.html)

அஞ்சலிதேவி

அழகுமயில் கோலமென பழகும் மகள் வருக
ஆடிவரும் தீபமென தேவ மகள் வாழ்க
அழகு மயில் கோலமென பழகும் மகள் வருக
ஆடிவரும் தீபமென தேவ மகள் வாழ்க
இளைய மகள் போல வரும் புதிய மகள் வருக
இன்ப மனை ஆள வரும் அன்பு மனம் வாழ்க

பூங்கொடி விளையாட எங்கள் பூமியில் இடம் உண்டு
பூங்கொடி விளையாட எங்கள் பூமியில் இடம் உண்டு
பொன்மணிச் சரத்தோடு வாழ்த்தும் புன்னகை முகம் உண்டு
தாய்வழி உறவென்று நினைத்து வாழிய நலம் கொண்டு
தாங்கிடக் கிளை உண்டு மயிலைத் தழுவிடத் துணை உண்டு

நாகேஷ்

தங்கத் தட்டில் பூச்சரத்தோடு வெற்றிலை களிப் பாக்கு
தங்கத் தட்டில் பூச்சரத்தோடு வெற்றிலை களிப் பாக்கு
வைத்து தாய் போல் உன்னை வருக என்றழைக்கும்
உள்ளத்தைக் களிப்பாக்கு கண்ணே! உள்ளத்தைக் களிப்பாக்கு

கண் அவன் என்றே கணவன் என்றார் கன்னித் தமிழினிலே
கண் அவன் என்றே கணவன் என்றார் கன்னித் தமிழினிலே
அந்த மன்னவன் நெஞ்சம் மயங்கிட வேண்டும்
வாழ்க்கை உறவினிலே வாழ்க்கை உறவினிலே

நிலத்தைப் பார்த்து நடந்ததல்லால் நேரே பார்த்ததில்லை
நிலத்தைப் பார்த்து நடந்ததல்லால் நேரே பார்த்ததில்லை
ஒரு நினைவும் கனவும் ஏழைத் தங்கை நிழலைத் தொட்டதில்லை

கண்ணைத் தந்தேன் உயிரையும் தந்தேன் பெண்ணைத் தரவில்லை
கண்ணைத் தந்தேன் உயிரையும் தந்தேன் பெண்ணைத் தரவில்லை
உங்கள் நல்ல மனங்களை எண்ணித் தந்தேன் வேறொரு நினைவில்லை

மஞ்சள் பூசி மாலை அணிந்து மாளிகை வரும் பெண்ணை
மஞ்சள் பூசி மாலை அணிந்து மாளிகை வரும் பெண்ணை
தன் மடியில் வைத்துக் காத்திட வேண்டும் நீங்கள்தான் அன்னை
இனி நீங்கள்தான் அன்னை

அஞ்சலிதேவி

மாமி என்றால் அவள் தானொரு காலத்தில்
மருமகள் தான் அல்லவா
குலசாமியின் பெயரால் சத்தியம் செய்தேன்
தாய்க்கொரு மகளல்லவா

மகளே மகளே மணமகளே என் வாசலில் வரவேண்டும்
என் வாழ்நாள் முழுதும் கூட இருந்து மங்களம் பெற வேண்டும்
என் வாழ்நாள் முழுதும் கூட இருந்து மங்களம் பெற வேண்டும்

அழகுமயில் கோலமென பழகும் மகள் வருக
ஆடிவரும் தீபமென தேவ மகள் வாழ்க

இந்தப் பாடல் முன்பு இணையத்தில் இருந்தது. இப்போது தேடியதில் கிடைக்கவில்லை. (ஒருவேளை என்னால்தான் கண்டு பிடிக்க முடியவில்லையோ என்னவோ) எனவே என்னுடைய டி.வி.டி யை எடுக்க வேண்டியதாயிற்று. பாடலின் ஆடியோவைக் மட்டும் கேட்டால் இப்பாடலின் அருமை அவ்வளவாகத் தெரியாது. வீடியோவுடன் பார்க்கும் போதுதான் இப்பாடலின் முழு அருமையையும் உணர முடியும். அதனால்தான் எல்லோரும் கண்டு இன்புற வேண்டுமென்று 'you tube' ல் இன்று இப்பாடலை அப்லோட் செய்துள்ளேன்.


https://www.youtube.com/watch?v=jVOAJsfDI0g&feature=player_detailpage

vasudevan31355
13th October 2014, 10:57 AM
சி.க.சார்,

பி..எம்.பார்க்கவும்.

vasudevan31355
13th October 2014, 10:58 AM
ராஜேஷ்ஜி,

காலை வணக்கம்.

chinnakkannan
13th October 2014, 12:51 PM
வாசு சார் பி.எம். பார்த்தேன்..

அழகு மயில் கோலமென பழகு மகள் வருக.. மெல்ல ஆரம்பிக்கும் பாடல் வேகம் பிடிக்கும் வித் சீர்காழி.. ஈவன் இந்த ப் பூங்கொடி விளையாட் இந்தப் பூமியில் இடமுண்டு..என்ற சரணத்திலும்..

தங்கத் தட்டில் பூச்சரத்தோடு வெற்றிலை களிப் பாக்கு.. களிப்பாக்கு என்பது கொட்டை ப்பாக்கு என எனக்குத்தெரியாது..பாடல் கேட்ட போது களிப்பாக்கு சந்தோஷமாக்கு தமிழில் ஹேப்பியாக்கு எனத் தான் நினைத்துக் கொண்டேன்.. உங்கள் மூலமாகத்தான் தெரிந்தது..

மாமியென்றால் ஒரு காலத்திலே மருமகள் தானல்லவா.. ஆமாம் தான்..ஆனால் வருஷம் வர வர ஜெனரேஷன்கேப்ங்கறது வந்துடுமே

(உங்களுக்குத் தெரியுமா சிலமாதங்களுக்கு முன்னால் நண்பரின் மகனுக்குப் பெண் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.. அந்தப் பெண் அந்தப் பையனிடம் கேட்டதாம்.. எதை..ஸேலரி ஷீட் கேட்டதெல்லாம் இருக்கட்டும்.. கல்யாணம் செய்த பிறகு லக்கேஜும் கூட வருமா என.. என்ன செய்வது காலம்..!)

நிலத்தைப் பார்த்து நடந்தலல்லால் நேரேபார்த்ததில்லை..ரொம்ப அந்த்க்காலப் பொண் போல இருக்கு..:)

வாசு சார்...ரொம்ப அனுபவிச்சு எழுதியிருக்கீங்க.. நன்றி அழகான பதிவிற்கு.. வீடியோ பார்த்து விட்டு மீண்டுமெழுதுகிறேன்..

Gopal.s
13th October 2014, 06:27 PM
வாசு,

உன் சபதம் எனக்கும் பல நினைவுகளை கிளறியது. 1971 தமிழ் வருட பிறப்பில் என்னுடைய முழு கவனமும் சுமதி என் சுந்தரி,ப்ராப்தம் மீதே.இரண்டையும் கும்பகோணத்தில் பார்த்ததோடு அல்லாமல்,சுமதியை நாலு தரம் repeat பண்ணி கொண்டிருந்தேன். திருவிடை மருதூர் நண்பன் ஸ்ரீதர் சபதம் பற்றி குறிப்பிட்டான்.(தொடுவதென்ன, போட்டு வைத்த முகமோவிற்கு சமமாக பிரபலமாகி கொண்டிருந்தது.)கே..ஆர்.விஜயா என்பதால் ஒரு தயக்கம் இருந்தது.ஸ்ரீதர் ,ராஜாவில் பார்த்ததோடு அல்லாமல் ,எனக்கு முழு கதை சீன் பை சீன் விவரித்து சொன்னான். அவனையும் அழைத்து கொண்டு (காசு நான்தான்)போனேன்.பிடித்திருந்தது.திரும்ப வரும் போது ஆரிய பவனில் சோன் பாப்பிடி,மெது பக்கோடா,முறுகல் தோசை என்று வெட்டினோம்.

உங்கள் பதிவு, அந்த மெது பக்கோடா சுவையை நாக்கில் ஏற்றியது.பிரமாதம்.

மகனே நீ வாழ்க பாடல் ரொம்ப வித்யாசமானது.எனது பிடித்தம் மட்டுமே என்று ப்ரத்யேகம் என்று நினைத்தது உங்களுக்கும் பிடித்தது தற்செயல் அல்ல.எண்ணத்தால் இந்த சகோதரத்துவம் நமக்குள் தொடர்ந்து கொண்டே உள்ளது.

சின்னகண்ணன்- சமீபத்தில் உன் எழுத்தில் இளமையும் ,சொல்லோடு இணைந்த ஜொள்ளும் ரொம்ப துள்ளுகிறதே?என்ன சமாசாரம்?

Richardsof
13th October 2014, 06:48 PM
http://i1273.photobucket.com/albums/y412/esvee6/4d355795-0804-4a22-ba88-752f7ee90641_zpse625632c.jpg (http://s1273.photobucket.com/user/esvee6/media/4d355795-0804-4a22-ba88-752f7ee90641_zpse625632c.jpg.html)

Richardsof
13th October 2014, 07:33 PM
SPECIAL SONG DEDICATION TO GOPAL

http://youtu.be/i46jlVrrwdQ

gkrishna
13th October 2014, 07:59 PM
வீணை இசையில் தனக்கென்று தனி முத்திரை பதித்த சிட்டிபாபுவின் பிறந்தநாள் இன்று.

Chitti Babu (October 13, 1936 – February 9, 1996) was a renowned classical musician from India, and arguably one of the greatest Veena artistes, in the Carnatic Music genre of South India, who became a legend in his own lifetime

1948-ல் ‘லைலா – மஜ்னு’ படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார்.நாகேஸ்வர ராவ் – பானுமதி நடித்த லைலா மஜ்னு என்ற படத்தில் (ஸி.ஆர். சுப்பராமன் இசையில் அருமையான பாடல்களைக் கொண்டிருந்த படம் இது!) இளம் மஜ்னுவாக நடித்திருந்தார்,

சிங்கிதம் சீனிவாச ராவின் ‘திக்கற்ற பார்வதி’ (1974) படத்துக்கு இசையமைத்தார். தெலுங்கு, தமிழ்த் திரைப்படங்களில் சிட்டிபாபுவின் வீணை இசை தனி முத்திரையைப் பதித்தது.

எழுத்தாளர் ஜெயகாந்தனின் ‘உன்னைப்போல் ஒருவன்’ நாவல் சினிமாவாக்கப்பட்டபோது அதற்கு இசை அமைத்தார். பாடல் இல்லாமல் பின்னணி இசையை மட்டும் கொண்ட அந்த படம் விருது பெற்றது.

‘என்னைப் பொறுத்தவரை ‘MUSIC’ என்பது இன்பமான விஷயம். அதில் ‘M’-யை நீக்கிவிட்டால் ‘U SICK’ (துன்பத்தில் நீங்கள்) என்று அடிக்கடி சொல்வார்.

ஒரு வீணை இசைக் கலைஞனின் கதையான 'kalai koil' இப் படத்தில் பிரபல வீணை இசைக் கலைஞர் சிட்டிபாபு அருமையாக வீணை வாசித்திருந்தார்.

http://upload.wikimedia.org/wikipedia/en/thumb/c/c3/ChittiBabu.jpg/220px-ChittiBabu.jpg

புகழ் பெற்ற வீணை கலைஞர் சிட்டி பாபு மனைவி சுதக்சினா தேவியும் வீணை கலைஞர் .இவர்களின் மகன் 2006 ஆம் ஆண்டு ''சித்திரம் பேசுதடி'' மூலம் இசை அமைப்பாளராக அறிமுகமான சுந்தர் சி பாபு அவர்கள் ,

சுந்தர் சி பாபு தமிழ் , தெலுங்கு , கன்னட மொழிகளில் சுமார் 30 படங்களுக்கு இசை அமைத்துள்ளார். வித்தியாசமான எளிய இசை இவர் அடையாளம். நாடோடிகள் படத்தில் பின்னணி இசையில் அசத்தி இருப்பார். '' வால மீனுக்கும் விலாங்கு மீனுக்கும் '' மூலம் வித்தியாசமான கானா பாடல் பாணியை அறிமுகப்படுத்தினார்.

ஹிட் படங்கள் :

சித்திரம் பேசுதடி , பஞ்சாமிர்தம் , அஞ்சாதே , நாடோடிகள் , தூங்கா நகரம் , போராளி ....

’தேவியர் இருவர்’ பாட்டு, ஸ்ரீ எனப்படும் ராகத்தைத் தழுவி அமைக்கப் பட்ட மெட்டு.சுசீலாவின் இசைப் பயணத்தில் ஒரு மைல் கல் இந்தப் பாட்டு. அவரின் தேன்குரலோடு வீணையும் தபலாவும் போட்டி போடும் பாட்டைக் கேட்டு ரசியுங்கள்.திரை படத்தில் முத்துராமன் வீணை வாசிக்க ,ராஜஸ்ரீ நடனமாட சுசீலாவின் பிசிறு தட்டாத சுருதி விலகாத ஆலாபனையும் ,கண்ணதாசனின் கவித்துவமான வரிகளும் சேர்ந்து மெல்லிசை மன்னர்களின் இசை கோர்வை

http://www.youtube.com/watch?v=cl0_rTAF81M

rajeshkrv
13th October 2014, 10:09 PM
வாசு ஜி

மகனே நீ வாழ்க பாடல் மிகப்பிரமாதம்.. அருமை அருமை ... நன்றி நன்றி

vasudevan31355
13th October 2014, 11:06 PM
கோ,

http://www.ittaleem.com/attachments/announcment-greetings/14285d1210868846-congrats-ayebenzer-2000-posts-congrat1.gif

http://blocs.xtec.cat/anglesceipsplai/files/2013/02/3000-posts.jpg

http://www.thehindu.com/multimedia/dynamic/01200/09cp_thiruvilayada_1200228g.jpg

மூவாயிரம் பதிவுகள் கடந்து பீடுநடை போடுவதற்கு என் வாழ்த்துக்கள்.:cheer:

எங்களுடைய ஆயிரமாயிரம் பதிவுகள் உங்களுடைய 'நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்' 'ஸ்கூல் ஆப் ஆக்டிங்'கின் ஒரு ஓரத்தை கூட தொட முடியாது. இயலாது. பதிவுகளின் தரம் உயர வேண்டும் என்று உங்களைத் தரம் தாழ்த்திக் கொண்ட உயர் தியாகியாகவே எனக்கு நீங்கள் தென்படுகிறீர்கள்.

இறுமார்ந்த நட்பு நம்முடையது உங்களுடைய இறுமாப்பைப் போலவே. இந்த 3000-ல் உங்கள் தனி மனித போராட்டம் நல்லதோ கெட்டதோ பிரம்மிக்க வைக்கக் கூடியது உங்களுடைய ஈடுஇணையில்லா பதிவுகளின் பிரம்மிப்பைப் போலவே.

என் நெஞ்சம் நிறைந்த நண்பரான உங்களுக்கு அதே நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள்.

'சபத'த்துக்கும் நன்றி! மகனே நீ வாழ்க!:) நிஜ வாழ்த்து. பொய்யுரை அல்ல.

vasudevan31355
13th October 2014, 11:08 PM
வாசு ஜி

மகனே நீ வாழ்க பாடல் மிகப்பிரமாதம்.. அருமை அருமை ... நன்றி நன்றி

Thanks Rajeshji.

vasudevan31355
13th October 2014, 11:11 PM
ராஜேஷ்ஜி!

'கனிமுத்துப் பாப்பா' ஜோதிகண்ணா விளக்கம் அருமை. நன்றியோ நன்றி!

vasudevan31355
13th October 2014, 11:41 PM
கிருஷ்ணா!

சிட்டிபாபுவின் பிறந்த நாளை ஞாபகப்படுத்தி அவருக்கு சிறப்பான புகழாரம் சூட்டியதற்கு நன்றி! சிட்டிபாபுவைப் பற்றி நிறைய விஷயங்கள் தெரிந்து கொண்டேன்.

vasudevan31355
13th October 2014, 11:55 PM
கிருஷ்ணா!

உங்களுக்காக.

இளம் வயது பாலகனாக வீணை 'மாஸ்டர்' சிட்டிபாபு 'லைலா மஜ்னு' தெலுங்குப் படத்தில். (என்ன ஒரு அழகு) அப்போது அவருக்கு வயது 13. இந்தப் படம் 1949-ல் வெளியான படம். 'ஹிந்து'வும் சிட்டிபாபு பெயரைக் குறிப்பிட்டிருக்கிறது தனது விமர்சனத்தில்.

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/LailaMajnu-YouTubemp4_000285719.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/LailaMajnu-YouTubemp4_000285719.jpg.html)

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/LailaMajnu-YouTubemp4_000421220.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/LailaMajnu-YouTubemp4_000421220.jpg.html)

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/sitti.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/sitti.jpg.html)

rajraj
14th October 2014, 06:04 AM
I attended a concert by Chittibabu about 25 years back. I did not expect that his end would come so soon.
It is sad!

I also remember buying a Chitti Babu LP for my father long time back.

Here is 'Chinnanchiru KiLiye' by Chittibabu.

http://www.youtube.com/watch?v=zZCTVJKKYtQ

I like VeeNaa. We have one at home. But, there is no teacher here! :(

First veena concert I attended was by S.Balachander when he played at the centenary celebrations of my college in Kumbakonam. Time flies ! :)

rajeshkrv
14th October 2014, 06:35 AM
சிட்டிபாபுவை மறக்க முடியுமா... என் தந்தை அறிமுகம் செய்த இந்த கலைஞர் கலைத்தாயின் வரப்பிரசாதம்.
டி. நகரில் இவரது வீட்டில் தான் எங்களது குடும்ப நண்பர் வாடகைக்கு இருந்தார். அப்பொழுது இவரை பார்த்து பேசியும் இருக்கிறேன்..

மறைவு ரொம்பவே அதிர்ச்சி .

அவரது மகனும் இசையமைப்பாளர் ... வாழ்க வளர்க

rajeshkrv
14th October 2014, 06:38 AM
அங்கிள் எஸ்.பாலச்சந்தர், சிட்டிபாபு போன்ற வீணை வித்வான்களின் வாசிப்பை நேரில் கண்டு களித்த நீங்கள் அதிர்ஷ்டசாலி

rajeshkrv
14th October 2014, 07:34 AM
தேனிசை தென்றலின் முத்துக்கள் -1

இசையரசியின் பல்வேறு பாடல்கள் , மற்றும் மற்ற மொழிகளின் பாடல்கள் பதிவிடும் வேளையில் நான் ரசித்த மற்ற கானங்களையும் அதாவது கொஞ்சம் புதிய (எனக்கு 90’ஏ புதுசுதான்) பாடல்களையும் பதிவிடலாம் என நினைக்கிறேன்...

90 ‘களின் இசைப்பற்றி பேசும் வேளையில் தேனிசை தென்றல் தேவாவை பற்றி பேசாமல் இருக்க முடியாது. கானா பாடல்கள், காப்பியிடித்தார் என்ற என்ன சொன்னாலும் மனுஷர் சில அருமையான மெலோடி பாடல்களை தந்திருக்கிறார் என்பது சத்தியம் .. அப்படி தேனிசை தென்றலின் இசையில் நான் ரசித்த (சில பாடல்கள் உங்களுக்கு புது அறிமுகமாக கூட இருக்கலாம்)பாடல்களை பதிவிடுகிறேன்.. கேட்டு கண்டு ரசியுங்கள்

http://db.w4rlock.in/media/person_image/2012/11/27/e76f0ace-4a0c-4718-96bd-88eb9d40efac.jpg

முத்துக்கள் - பாகம் 1

89’ல் மனசுக்கேத்த மகராசா மூலம் அறிமுகமான் இவர் பல படங்களில் மிக இனிமையான பாடல்களை வழங்கியுள்ளார்.
அதேபோல் பாடகி ஸ்வர்ணலதாவிற்கு ரகுமானுக்கு அடுத்து நிறைய வாய்ப்புகள் கொடுத்தது தேவா அவர்கள்.

முரளி ஒரு அதிர்ஷடக்கார நடிகர். பாடல்கள் இவருக்கும் சரி மைக் மோகனுக்கும் சரி லட்டு போல அமைந்துவிடும் .. 90’களில் தேவா முரளிக்கு அள்ளி அள்ளி கொடுத்தார். அப்படி ஒரு பாடல் இதோ

உன்னுடன் படத்தில் நல்ல பாடல்கள் கொடுத்தார்
ஹரிஹரன் குரலில் வானம் தரையில் வந்து நின்றதே பாடல் மிகவும் பிரபலம்
கண்டுபிடி அவனை கண்டுபிடி - ஹரினி,பாலு

என்னை மிகவும் கவர்ந்த பாடல் உண்ணி கிருஷ்ணனும், ஸ்வர்ணலதாவும் பாடிய கொச்சின் மாடப்புறா என்னை கொஞ்சிக்கூடும் புறா
வெட்கத்தில் தாம்பூலம் போடும் ஜோடிப்புறா

ஸ்வர்ணலதா பாடும் வரிகள் அருமை
நெஞ்சோடு வார்த்தைகளோ முண்டியடிக்கிறதே
நாவோடு வந்தவுடன் தந்தியடிக்கிறதே ..


கொச்சின் மாடப் புறா
என்னைக் கொஞ்சிக் கூடும் புறா
வெட்கத்தில் தாம்புலம் போடும் ஜோடிப் புறா


கொச்சின் மாடப் புறா
என்னைக் கொஞ்சிக் கூடும் புறா
வெட்கத்தில் தாம்புலம் போடும் ஜோடிப் புறா


நெஞ்சோடு வார்த்தைகளோ முந்தி அடிக்கிறதே
நாவோடு வந்தவுடன் தந்தி அடிக்கிறதே

இனி இருவரா இல்லை ஒருவரா

சிங்கார பூம்பாவை சிந்திக்கிறா


கொச்சின் மாடப் புறா
என்னைக் கொஞ்சிக் கூடும் புறா
கொச்சின் மாடப் புறா
என்னைக் கொஞ்சிக் கூடும் புறா


உன் வாய் மலர் பூத்தால் என்ன
ஒரு வார்த்தை சொன்னால் என்ன
நீ பாலைவனத்தில் ஐஸாய் கரைவதென்ன


நீ கூட நடந்தால் என்ன
என்னைக் கொள்ளை அடித்தால் என்ன
நீ கடலில் பெய்த துளி போல் ஒளிவதென்ன


கண்ணால் யாசிக்கிறேன் காதல் சொன்னால் என்ன

நானும் யோசிக்கிறேன் அதை நீயா சொன்னால் என்ன

உன் பார்வை என் கண்ணில் மோதிய செய்தி என்ன


கொச்சின் மாடப் புறா
என்னைக் கொஞ்சிக் கூடும் புறா
கொச்சின் மாடப் புறா
என்னைக் கொஞ்சிக் கூடும் புறா


சின்னச்சிறியது பறவை
தன் சிறகில் சுமக்குது சிலுவை
இது வார்த்தை இழந்தது வாழ்வில் முதல் தடவை

சந்திர மண்டலம் வரையும்
நான் தவிப்பில் இருப்பது புரியும்
என் விடுகதைக்கெல்லாம் உனக்கே விடை தெரியும்


வார்த்தை இல்லாமலே நாம் பேசும் பாஷை பல

ஓசை இல்லாமலே நாம் பாடும் பாடல் பல

சொல்லாத சொல்லோடு அர்த்தங்கள் கோடி உழ


கொச்சின் மாடப் புறா
என்னைக் கொஞ்சிக் கூடும் புறா
வெட்கத்தில் தாம்புலம் போடும் ஜோடிப் புறா


நெஞ்சோடு வார்த்தைகளோ முந்தி அடிக்கிறதே
நாவோடு வந்தவுடன் தந்தி அடிக்கிறதே


இனி இருவரா இல்லை ஒருவரா

சிங்கார பூம்பாவை சிந்திக்கிறா

http://www.dailymotion.com/video/x17a6zd_unnudan-1998-cochin-madapura_shortfilms?start=73

தொடரும்

rajraj
14th October 2014, 08:11 AM
அங்கிள் எஸ்.பாலச்சந்தர், சிட்டிபாபு போன்ற வீணை வித்வான்களின் வாசிப்பை நேரில் கண்டு களித்த நீங்கள் அதிர்ஷ்டசாலி

You are right Rajesh. I used to drive about 120 miles to attend classical concerts and return home past midnight around 1 AM. Those days are gone. Now, I have to be happy with CDs and DVDs ! :lol: Nothing like attending a concert in person! :)

gkrishna
14th October 2014, 09:46 AM
அனைவருக்கும் காலை வணக்கம்

வீணை சிட்டிபாபு அவர்களின் இள வயது புகைப்படம் வழங்கிய வாசு சார் அவர்களுக்கு நன்றி

வீணை சிட்டிபாபுவின் பிறந்த நாள் பதிவிற்கு likes பட்டன் அமுக்கிய திரு கோபு சார் அவர்களுக்கும் திரு s.கோபால் அவர்களுக்கும் நன்றி

சிட்டிபாபுவின் சின்னஞ்சிறு கிளியே பாடலை பகிர்ந்து கொண்ட பேராசரியர் திரு ராஜ்ராஜ் அவர்களுக்கு நன்றி .அத்துடன் அவரது நினைவலைகளுக்கும் நன்றி .அதே போல் திரு ராஜேஷ் சார் அவர்களின் நினைவலைகளுக்கும் நன்றி .கர்நாடக சங்கீத கச்சேரியை நேரில் கேட்பது என்பது தனி சுகம் தான் சார்

இந்த சின்னஞ்சிறு கிளியே பாடல் காபி ராகம் அடிப்படையில் அமைந்த ஒன்று என்று நினைவு . திரு ராஜ்ராஜ் அவர்கள் உறுதி செய்யவேண்டும்

தேவாவின் பாடல் வரிசையை ஆரம்பித்துள்ள திரு ராஜேஷ் அவர்களுக்கும் நன்றி .

3000 பதிவுகள் கடந்த திரு எஸ் கோபால் அவர்களுக்கு வாழ்த்துகள்

chinnakkannan
14th October 2014, 10:45 AM
ஹாய் குட்மார்னிங்க் ஆல்..

தேவியர் இருவர் முருகனுக்கு பாடல் தந்தமைக்கு நன்றி வெகு அழகான பாடல்..

//தேனிசை தென்றலின் முத்துக்கள் -1// நடத்துங்க நடத்துங்க ராஜேஷ்.. சில படங்களிலெல்லாம் காப்பியாயினும் நன்றாகவே இருக்கும் .. வீ.போ.பாட் கேக்கறேன் :)

//சின்னகண்ணன்- சமீபத்தில் உன் எழுத்தில் இளமையும் ,சொல்லோடு இணைந்த ஜொள்ளும் ரொம்ப துள்ளுகிறதே?என்ன சமாசாரம்?// கோபால் சார் நன்றி :) ஹி ஹி:) அதாவது..ம்ம் திடீர்னு வாழ்க்கை வெறுத்து ஆன்மீகப் பக்கம்போகலாம் என்று பார்க்கையில் இதயத்து மனக் கிளையில் அமர்ந்த மனங்கொத்திப் பறவை கொத் கொத் எனக் கொத்தி நினைவுகளைக் கிளறி விட அதில் மூழ்கியிருந்த போது காலிங்க் பெல் (மனைவி வெளியில் ஷாப்பிங்க் போயிருந்தாள்) திறந்து ஒரு செகண்ட் பார்த்ததில்- சிறகுகள் எல்லாம் இல்லாமல் அழகிய பிங்க் டாப் டார்க் ப்ளூ ஜூன்ஸ் மின்னும் கண்கள் பஃப் முடி நெற்றியில் பொட்டில்லை..காதில் கொஞ்சம் வளையம் போல ஒரு தோடு உதட்டில் சிறுபுன்னகைப் பாப்கார்ன் கொண்ட ஒரு தேவதை...:) ம்க்கும்.. அப்புறம் கண்ணா பெர்ஸனல் கதைல்லாம் சொல்றான் என்று சொல்வார்கள் எனில் அதை இத்துடன் நிறுத்திக் கொள்கிறேன் :)

gkrishna
14th October 2014, 11:31 AM
நன்றி சகோதரி ஸ்டெல்லா அவர்களுக்கும் ,திரு சின்னகண்ணன் அவர்களுக்கும்

chinnakkannan
14th October 2014, 11:44 AM
க்ருஷ்ணாஜி..கலைக்கோவில் தானே நாதஸ்வர ஓசையிலே பாட்டு வெகு அழகான ஒன்று..

வாசுசார் சிலேடை என்று சொன்னார்..களிப்பாக்கு களி பாக்கு.. அதையொட்டி இன்னொரு பாட் நினைவுக்கு வந்ததாக்கும்..

மஞ்சள் கலைந்தால் திலகம் கலைந்தால் வாழ்வைஇழந்தாளென்பார்
பள்ளி அறையில் இரண்டும் கலைந்தால் பாவை வாழ்ந்தாளென்பார்
பள்ளிக்கூடம் தானாக முடியும் பள்ளி முடியாதன்றோ

என் வாழ்வு உன்னோடு தான் ம்ம்ம் கல்யாணமே ஒரு பெண்ணோடு தான்..லலிதா கம்ல் சுமி என நினைவு..ஏற்கெனவே பேசியிருக்கிறோம் என நினைக்கிறேன்..தீபாவளிக்கு ஒரு வாரம் தான் இருக்கிறது..மக்கள்ஸ் தலை தீபாவளி அன்று ஏதாவது பார்த்த ப்டம் பற்றி எழுதலாமே..

Russellisf
14th October 2014, 11:55 AM
அட...நம்ம ஹேமமாலினி...ஒரு துக்கனூண்டு பாடல் காட்சியில் ....குரூப் டான்சில்....

’இது சத்தியம்’ படத்தில்
’சிங்காரத்தேருக்கு சேல கட்டி..
சின்னச்சின்ன இடையினில் பூவக்கட்டி தெருத்தெருவாக நடக்கவிட்டா சின்னச் சின்ன மனசுகள் என்னவாகும்’

இந்தப் பாடல் காட்சியில் ஹேம மாலினி ஆடிப்பாடுவதை அசோகன் பார்ப்பார்.அவருக்கு கதாநாயகி சந்திரகாந்தா ஆடிப்பாடுவது போல தோன்றும்.
உடனே அசோகன் முகம் பரவசமாக மலரும்.

இந்தப் படம் டூரிங் தியேட்டரில் ஓடும்போது ...
தமிழ் ரசிகர்கள் ஏற்கனவே ஹிந்தியில் ஷோலே உட்பட பல படங்கள் நடித்து புகழின் உயரத்துக்குப் போய் விட்ட கனவுக்கன்னி ஹேமா மாலினியை பார்த்து ரசித்திருந்த காலம்.!

கொட்டகையில் ’டே ஹேமா மாலினிடா !’ என்று சத்தம் போடுவார்களாம்.....
இந்தப் பாடல் காட்சியில் அசோகன் ... ஹேமமாலினியின் முகம் பார்த்து படு சோகமாகும்போது தரை டிக்கட் ரசிகர்கள் கத்துவார்களாம்...
“ டே அசோகா! உனக்கு ஹேமாமாலினி கசக்குதா !! என்னா ரசனைடா..”

தரை டிக்கட் ரசிகர்களில் புலவர்களும் உண்டு. “ டே.. கனியிருப்ப காய் கவர்ந்தற்று..! ஹேமா மாலினி தாண்டா சூப்பர் ..சரி..சரி.. ஒன் தலைவிதி..”
என்று புலம்புவார்களாம்...

[நண்பர் ராஜநாயகத்தின் பதிவில் படித்து ரசித்தது......யூ டியூபில் பார்த்து ரசித்தது..]

https://www.youtube.com/watch?v=R-ZPq5omV_E

gkrishna
14th October 2014, 01:54 PM
க்ருஷ்ணாஜி..கலைக்கோவில் தானே நாதஸ்வர ஓசையிலே பாட்டு வெகு அழகான ஒன்று..

என் வாழ்வு உன்னோடு தான் ம்ம்ம் கல்யாணமே ஒரு பெண்ணோடு தான்..லலிதா கம்ல் சுமி என நினைவு..ஏற்கெனவே பேசியிருக்கிறோம் என நினைக்கிறேன்..தீபாவளிக்கு ஒரு வாரம் தான் இருக்கிறது..மக்கள்ஸ் தலை தீபாவளி அன்று ஏதாவது பார்த்த ப்டம் பற்றி எழுதலாமே..

சி கே சார்

நாதஸ்வர ஓசையிலே தேவன் வந்து பாடுகிறான் ' பாடலை பற்றி சொல்கிறீர்கள் என்று நினைக்கிறன் .அந்த பாடல் 'பூவும் பொட்டும்' ஏவிஎம் ராஜன் நடித்த படத்தில் இடம் பெற்ற பாடல் .


தலை தீபாவளி 1989 மாப்பிள்ளை(நெல்லை பேரின்பவிலாஸ் அல்லது பூர்ணகலா இரண்டும் பக்கத்தில் பக்கத்தில் கொஞ்சம் குழப்பும்) ,வெற்றிவிழா(நெல்லை சென்ட்ரல்) இரண்டுக்கும் போய் டிக்கெட் கிடைக்கலை தலை .

இறுதியில் புரட்சி தமிழன் நடித்த வாத்தியார் வீட்டு பிள்ளை (நெல்லை சிவசக்தி என்று நினைவு) செம கடி . ஆனால் சூப்பர் பாட்டு ஒன்னு நினைவில் உண்டு 'மணமாலையும் மஞ்சளும் சூடி புது கோலத்தில் நீ வரும் நேரம்' மொட்டை கலக்கி இருப்பார் . பாலா தானே பாடுவது.கோல்டன் ஹிப் 'ஷோ' கொஞ்சம் போனஸ் :)

பிறகு அடுத்த நாள் இன்னொரு படம் 'திராவிடன்' (nellai sri rathna) அதுவும் சத்யராஜ் தான் .சுஜாதாவின் சுரேஷ் சினி ஆர்ட்ஸ் பாலாஜி படம்
வ வ பி எவ்வளோவோ தேவலை

படம் பார்த்துட்டு வீட்டம்மா
'என்ன படம் இது' என்று கிள்ள

'உயர்ந்த மனிதன்' (சௌகார் ,ஜி சகுந்தலா) வசனம் நினைவிற்கு வருகிறதா ?:) தலை

http://cdn.raaga.com/r_img/250/t/t0000333.jpg

chinnakkannan
14th October 2014, 02:04 PM
ஸாரி..கலைக்கோவில் உள்ள பாட்டை தப்பாய்ச் சொல்லிவிட்டேன்.. நான் சொல்ல நினைத்த பாடல் தங்கரதம் வந்தது வீதியிலே. சாரி க்ருஷ்ணா ஜி ஸ்டெல்லா ராக்.. பால முரளி கிருஷ்ணா சுசீலாம்மா இனிமையாய் இருக்கும்

நைஸ் க்ருஷ்ணா ஜி.. வாத்தியார் வீட்டுப் பிள்ளையா..(புதுப்பட ரிலீஸ் பார்ப்பதெல்லாம் எப்போதோ போய்விட்டதில்லை) நான் பார்த்ததில்லை..

நான் தலை தீபாவளிக்கு துபாயில் இருந்தேன்..அன்ஃபார்ச்சுனேட்லி.. அக்டோபர் முதல் வாரம் என் மாமனார் இறந்து விட்டிருந்தார் எனில் தீபாவளி இல்லை..92 அதற்கடுத்த வருடம் எதுவும் படம் பார்க்கவில்லை என நினைக்கிறேன்..பட் ரோஜா தான் என் வீ.காவுடன் பார்த்த முதல் படம்..

gkrishna
14th October 2014, 02:06 PM
சகோதரி ஸ்டெல்லா அவர்களுக்கு

கார்த்திக் சார் என்று ஒரு பதிவர் நீங்க கூட கேள்வி பட்டு இருப்பீர்கள்.'உயர்ந்தவர்கள்' படத்தில் ஒரு செகண்ட் சீன்இல் காட்சி தந்ததாக எழுதினார் முதல் பாகத்தில்.

அவரும் ரொம்ப உயர்ந்தவர் இசையை ரசிப்பதில்.
வாசு சார் அவர்களின் நல்ல பெட்.உங்களை போல.
அவருக்கு ரொம்ப பிடிச்ச படம் கலை கோயில்.பாடல்களை பற்றி ரசிச்சு ரசிச்சு எழுதுவார் .அதுவும் சந்திரகாந்தா பற்றி கேட்கவே வேண்டாம் . நீங்க அவர் எழுதி படிக்கணும் madem .மிக சிறந்த கலா ரசிகர் .

நம்ம மதுர கானம் திரியின் 'நாயக்' அவர் என்று சொன்னால் அது மிகை ஆகாது. என்ன இப்ப கொஞ்சம் மனதை 'கல்' ஆக்கி கொண்டு விட்டார்.இந்த பக்கம் வருகிறதே இல்லை

gkrishna
14th October 2014, 02:10 PM
ஸாரி..கலைக்கோவில் உள்ள பாட்டை தப்பாய்ச் சொல்லிவிட்டேன்.. நான் சொல்ல நினைத்த பாடல் தங்கரதம் வந்தது வீதியிலே. சாரி க்ருஷ்ணா ஜி ஸ்டெல்லா ராக்.. பால முரளி கிருஷ்ணா சுசீலாம்மா இனிமையாய் இருக்கும்

நைஸ் க்ருஷ்ணா ஜி.. வாத்தியார் வீட்டுப் பிள்ளையா..(புதுப்பட ரிலீஸ் பார்ப்பதெல்லாம் எப்போதோ போய்விட்டதில்லை) நான் பார்த்ததில்லை..

நான் தலை தீபாவளிக்கு துபாயில் இருந்தேன்..அன்ஃபார்ச்சுனேட்லி.. அக்டோபர் முதல் வாரம் என் மாமனார் இறந்து விட்டிருந்தார் எனில் தீபாவளி இல்லை..92 அதற்கடுத்த வருடம் எதுவும் படம் பார்க்கவில்லை என நினைக்கிறேன்..பட் ரோஜா தான் என் வீ.காவுடன் பார்த்த முதல் படம்..

நானும் அப்படி தான் சி கே. திரை அரங்கு போய் நிறைய வருஷம் ஆகி விட்டது .வீட்டம்மா உடன் பார்த்த முதல் படம் மணமகளே வா .பிரபு ராதிகா ,பஞ்சு அருணாசலம் படம்
1989 பெப்ரவரி
இதை ஏற்கனவே சொல்லிட்டேனானு தெரியலை .

chinnakkannan
14th October 2014, 02:16 PM
சொல்லவில்லை க்ருஷ்ணாஜி.. ஆனால் அந்தப் படம் - மணமகளே வாநினைவிலில்லை.. பாட்டு மட்டும் மறுபடிகேட்காமலேயே மனதில் பதிந்திருக்கிறது..அடிக்கடி பாட்டுக்குப் பாட்டில் விளையாடுவேன்..என்ன பாட்.. கன்னி மனம் கெட்டுப் போச்சு சொன்னபடி கேக்குதில்ல என்னபொடி போட்டீஹளோ மாமா..

http://www.youtube.com/watch?v=q_3Azifbw-8

gkrishna
14th October 2014, 02:43 PM
டியர் சி கே

இந்த பாட்டு கேட்டு இருப்பீர்கள் என்று நினைக்கிறன் . நம்ம திரியில் பதிவிட்டோமா என்று நினைவில்லை .இரண்டு தினங்களுக்கு முன் மக்கள் திலகம் திரியில் திரு கலை வேந்தர் பதிவு இட்டு இருந்தார். ரொம்ப நல்ல பாட்டு . இன்று காலையில் கேட்டேன் .டி எம் எஸ் அவர்கள் பாடி உள்ளார் .

தீர்மானம் சரியாக ஆடாவிட்டால் !

தீர்மானம் சரியாக ஆடாவிட்டால்
தீர்மானம் சரியாக ஆடாவிட்டால்
தன்மானம் போய்விடும்
சன்மானம் ஏது சொல்

தீர்மானம் சரியாக ஆடாவிட்டால்
தன்மானம் போய்விடும்
சன்மானம் ஏது சொல்
தீர்மானம் சரியாக ஆடாவிட்டால்

நண்பர் யுகேஷ் பாபு சார் பாடல் லிங்க் கொடுத்து இருந்தார் ராஜேஸ்வர் ராவ் இசை என்று நினைவு
விக்ரமாதித்தன் 1962 திரை படத்தில் மக்கள் திலகமும் பத்மினியும்

http://clip.dj/vikramathithan-mugathai-parthu-song-download-mp3-mp4-g7rKilcFE58

gkrishna
14th October 2014, 03:06 PM
சீனியர் ஜேம்ஸ்பாண்ட் நடிகர் ரோஜர் மூரின் பிறந்தநாள் இன்று.

Sir Roger George Moore, KBE (born 14 October 1927) is an English actor. He is perhaps best known for playing British secret agent James Bond in the official film series for seven films between 1973 and 1985. He appeared as Bond in more official Bond films than any other actor, and is the oldest actor to play Bond. Moore also portrayed Simon Templar in The Saint from 1962 to 1969. He is also a Goodwill Ambassador for the charity organisation UNICEF.

1973-ல் வெளிவந்த ‘லிவ் அண்ட் லெட் டை’ திரைப்படத்தில் ஜேம்ஸ்பாண்ட் அவதரித்தார்.

இதுவரை வெளியாகியுள்ள ஜேம்ஸ் பாண்ட் படங்கள் மொத்தம் 22. அதில் 7 படங்களில் பாண்ட் வேடத்தில் நடித்தவர் ரோஜர் மூர். 12 வருடங்கள் அவர்கள் ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரமாகவே வாழ்ந்தவர்.

http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/f/f3/Roger_Moore_Beau_Maverick_1960.JPG/220px-Roger_Moore_Beau_Maverick_1960.JPG

madhu
14th October 2014, 03:54 PM
டியர் சி கே

இந்த பாட்டு கேட்டு இருப்பீர்கள் என்று நினைக்கிறன் . நம்ம திரியில் பதிவிட்டோமா என்று நினைவில்லை .இரண்டு தினங்களுக்கு முன் மக்கள் திலகம் திரியில் திரு கலை வேந்தர் பதிவு இட்டு இருந்தார். ரொம்ப நல்ல பாட்டு . இன்று காலையில் கேட்டேன் .டி எம் எஸ் அவர்கள் பாடி உள்ளார் .

தீர்மானம் சரியாக ஆடாவிட்டால் !

தீர்மானம் சரியாக ஆடாவிட்டால்
தீர்மானம் சரியாக ஆடாவிட்டால்
தன்மானம் போய்விடும்
சன்மானம் ஏது சொல்

தீர்மானம் சரியாக ஆடாவிட்டால்
தன்மானம் போய்விடும்
சன்மானம் ஏது சொல்
தீர்மானம் சரியாக ஆடாவிட்டால்

நண்பர் யுகேஷ் பாபு சார் பாடல் லிங்க் கொடுத்து இருந்தார் ராஜேஸ்வர் ராவ் இசை என்று நினைவு
விக்ரமாதித்தன் 1962 திரை படத்தில் மக்கள் திலகமும் பத்மினியும்

http://clip.dj/vikramathithan-mugathai-parthu-song-download-mp3-mp4-g7rKilcFE58

அது முகத்தைப் பார்த்து முறைக்காதீங்க பாட்டு லிங்க் அல்லவோ

இந்தாங்க தீர்மானம் இங்கே சரியா இருக்குது

http://youtu.be/hvRjaE1q_cM

madhu
14th October 2014, 04:02 PM
ஊருக்குப் போய்விட்டு திரும்பிய இந்த இரண்டு நாட்களுக்குள் சிட்டிபாபுவின் வீணை முதல் சிக்காவின் வளையம் போட்ட வனிதை வரை பல பதிவுகள்.. மெல்ல படிக்கணும்.

வாசு ஜி..
சொன்னா நம்பவே மாட்டீங்க.. சனிக்கிழமைதான் "அழகு மயில் கோலமென" பாட்டை வெட்டி ஒட்டி ரெடி செஞ்சு வைத்தேன். அது யூடியூபில் இருக்கிறதா என்று செக் செய்து விட்டு போடலாம் என்று நினைத்திருந்தேன். இன்னைக்கு வந்து பார்த்தால்...? ஆஹா.. வாசு ஒரு ஹூட் ஹூட் :) என்ன ஒரு வேகம் !!

எஸ்.பி.பி சுருளிக்குப் பாடிய பல பாடல்களில் இதுவும் ஒன்று. ஆனந்த பைரவியில் ராமா நாயுடு இசையில் ஜானகியுடன் இணைந்து சுருளிக்கேற்ற குரலில் அவர் பாடியிருப்பது நல்லாவே இருக்கும்.

சில்லறகொட்டு செட்டம்மா என்ற தெலுங்குப் படத்தின் தமிழாக்கமான பெண்ணுக்கு யார் காவல் படத்தில் ஜெயசித்ராவுடன் சுருளி பங்கு பெறும் காட்சி..இந்தப் படத்தில் "உள்ளத்தில் இடம் கொடுத்த" என்ற சுசீலாவின் பாடல் காணொளியைத் தேடிக் கொண்டு இருக்கிறேன். மாட்டிக்கிட்டதும் இங்கே போட்டுடுவோம்.

http://youtu.be/KxuHVAsHRWA

vasudevan31355
14th October 2014, 04:07 PM
இன்றைய ஸ்பெஷல் (93)

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/sxdcvb.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/sxdcvb.jpg.html)

இன்றைய ஸ்பெஷல் பாடலில் 'வரப்பிரசாத'மாய் அமைந்த காலத்தால் அழித்துவிட முடியாத காவிய கானம்.

படம்: வரப்பிரசாதம்

நடிகர்கள்: ரவிச்சந்திரன், விஜயகுமார், ஜெயசித்ரா

வருடம்: 1976

இசை: ஆர்.கோவர்த்தன்

பாடல்: புலமைப்பித்தன்

பாடியவர்கள்: வாணி ஜெயராம், ஜேசுதாஸ்.

இயக்கம்: கே.நாராயணன்

http://i.ytimg.com/vi/dJ4JFxtsNA4/hqdefault.jpg

இந்தப் பாடலைப் பற்றி நான் அதிகம் சொல்ல வேண்டிய தேவையே இராது. அனைவர் நெஞ்சங்களின் அடித்தளத்தில் ஊடுருவிய பாடல்.

பாடலின் அந்த இசைத் துவக்கம் எவரும் கற்பனை செய்ய முடியாதது. கிடாரின் பின்னல்கள் கிறுகிறுக்க வைக்கின்றன. கோவர்த்தனுடன் இணைந்து இளையராஜா இனிக்க இனிக்க நமக்குக் கொடுத்த பாடல் இது. ஆரம்ப இசையிலேயே இன்பபுரிக்குச் செல்லலாம்.

ஜேசுதாசும், வாணியும் இணைந்து தந்த காவியப் பாடல்களில் முதன்மையானது இந்தப் பாடல்தான்.

புலமைப்பித்தனின் புருவம் உயர வைக்கும் ஆச்சரியமளிக்கும் வரிகள். எல்லாப் பாடல்களுக்கும் இது போன்ற காவிய வரிகள் அமையாது.

அழகான வேட்டி கட்டிய ரவிச்சந்திரன், இணையாக ஜெயசித்ரா (இப்பாடலில் இவரும் அழகாகவே தெரிகிறார்)

விஜயகுமாரை காதலிக்கும் ஜெயசித்ரா. இருவருக்கும் கோவிலில் திருமண ஏற்பாடு. ஆனால் விஜயகுமாரால் திருமணத்திற்கு வரமுடியாத சூழல். அப்போது ஜெயில் கைதியாக இருக்கும் ரவிச்சந்திரன் ஜெயில் இருந்து தப்பி ஓடி வந்து, போலீசிடமிருந்து தப்பிக்க 'டக்'கென்று ஜெயசித்ரா கழுத்தில் மணமகன் வேடம் பூண்டு யாரும் எதிர்பாரா வண்ணம் இருட்டில் தாலி கட்டி விடுவார். அதிர்ச்சியடையும் ஜெயசித்ரா பின் தமிழ் மரபுப்படி 'கணவனே கண் கண்ட தெய்வம்' என்று ரவிக்கு உண்மையான, அன்பான மனைவியாக வாழ்ந்து, ரவி விடுதலைக்கு முயற்சி செய்து வெற்றி பெறுவார் என்று லேசாக நினைவு. எப்போதோ பார்த்தது. கதை, காட்சிகள் லேசாக நெஞ்சில் இழையோடுகின்றன. தெரிந்தவர்கள் தவறிருந்தால் திருத்தித் தொடரலாம்.

மிக அழகாகவும் படமாக்கப்பட்ட பாடல்.

இனி பாடலின் வரிகள்

கங்கை நதியோரம் ராமன் நடந்தான்
கண்ணின் மணி சீதை தானும் தொடர்ந்தாள்
மெல்ல நடந்தாள்

கங்கை நதியோரம் ராமன் நடந்தான்
கண்ணின் மணி சீதை தானும் தொடர்ந்தாள்
மெல்ல நடந்தாள்

கல்யாணம் என்னும் தெய்வீக பந்தம்
காலங்கள் தோறும் வாழ்கின்ற சொந்தம்
கல்யாணம் என்னும் தெய்வீக பந்தம்
காலங்கள் தோறும் வாழ்கின்ற சொந்தம்
விளையாட்டுப் பிள்ளை மணல் வீடு அல்ல
விதி என்னும் காற்றில் பறி போவதல்ல

கங்கை நதியோரம் ராமன் நடந்தான்
கண்ணின் மணி சீதை தானும் தொடர்ந்தாள்
மெல்ல நடந்தாள்

மங்கை அவள் சீதை முள்ளில் நடந்தாள்
மன்னனவன் கண்ணில் கங்கை வழிந்தாள்
உள்ளம் நெகிழ்ந்தான்
மன்னனவன் கண்ணில் கங்கை வழிந்தாள்

மாணிக்கப் பாவை நீ வந்த வேளை
நினையாததெல்லாம் நிறைவேறக் கண்டேன்
அன்பான தெய்வம் அழியாத செல்வம்
பெண்ணென்று வந்தாள் என்னென்று சொல்வேன்

மங்கை அவள் சீதை முள்ளில் நடந்தாள்
மன்னனவன் கண்ணில் கங்கை வழிந்தாள்
உள்ளம் நெகிழ்ந்தான்

மணியோசை கேட்டு மணமாலை சூட்டி
உறவான வாழ்க்கை நலமாக வேண்டும்
நடமாடும் கோவில் மணவாளன் பாதம்
வழிபாட்டு வேதம் விழி சொல்லும் பாவம்
திருநாளில் ஏற்றும் அணையாத தீபம்
ஆனந்தப் பூஜை ஆரம்ப வேளை

கங்கை நதியோரம் ராமன் நடந்தான்
கண்ணின் மணி சீதை தானும் தொடர்ந்தாள்
மெல்ல நடந்தாள்

ஆஹாஹஹஹா.....ஆஹாஹஹஹா


http://www.youtube.com/watch?v=dJ4JFxtsNA4&feature=player_detailpage

madhu
14th October 2014, 04:13 PM
வாசு ஜி..

வரப்பிரசாதம் கதை கரீட்டுதான்.. ஜெய்சித்ராதான் ரவிச்சந்திரனுக்கு தண்டனை கொடுத்த நீதிபதியின் மகள் என்று நினைவு. உண்மைக் குற்றவாளி விஜயகுமார் என்பதும் ரவிச்சந்திரன் நிரபராதி என்பதும்தான் கடேசியில் தெரியும் விஷயம்...

அதுசரி.. கடைசியில் வீடியோ லிங்க் கொடுப்பீங்களே ! ஏன் மறந்துட்டீங்க ?

http://youtu.be/dJ4JFxtsNA4

vasudevan31355
14th October 2014, 04:19 PM
நன்றி மதுண்ணா! மறக்கல. மதியம் மூன்று மணியிலிருந்து நான்கரை மணி வரை பதிவுகள் போஸ்ட் பண்ணுவது பெரிய மல்யுத்தம் செய்வது போல இருக்கிறது. நொடிக்கொரு தரம் 'லாகின்' பண்ணச் சொல்லிக் கேட்கிறது. வெறுத்துப் போகிறது. வீடியோ லிங்க் கொடுப்பதற்குள் 10 முறையாவது 'லாகின்' ஆகியிருப்பேன். 3 வருடமாகப் புலம்புகிறேன். நிர்வாகிகள் காதில் விழவில்லை போல் இருக்கிறது. அதான் காரணம்.

vasudevan31355
14th October 2014, 04:29 PM
மதுண்ணா!

அங்கும் அப்படித்தானா?

gkrishna
14th October 2014, 04:30 PM
அது முகத்தைப் பார்த்து முறைக்காதீங்க பாட்டு லிங்க் அல்லவோ

இந்தாங்க தீர்மானம் இங்கே சரியா இருக்குது



நீங்கள் சொல்வது சரி மது சார்
அந்த லிங்க் கிளிக் செய்தால் 12 பாடல்கள் உள்ளது .அதில் முதல் பாடல் 'முகத்தை '.10வது பாடல் 'தீர்மானம் ' . எனக்கு youtube சரிவர கிடைக்காததினால் இந்த லிங்க் இணைத்து உள்ளேன். youtube தளத்தின் பாடலை கண்டு பிடித்து கொடுத்ததற்கு நன்றி

vasudevan31355
14th October 2014, 04:38 PM
இறுதியில் புரட்சி தமிழன் நடித்த வாத்தியார் வீட்டு பிள்ளை (நெல்லை சிவசக்தி என்று நினைவு) செம கடி . ஆனால் சூப்பர் பாட்டு ஒன்னு நினைவில் உண்டு 'மணமாலையும் மஞ்சளும் சூடி புது கோலத்தில் நீ வரும் நேரம்' மொட்டை கலக்கி இருப்பார் . பாலா தானே பாடுவது.கோல்டன் ஹிப் 'ஷோ' கொஞ்சம் போனஸ் :)



அதைவிட இன்னொரு சூப்பர் ஹிட் பாட்டு ஒன்னு இருக்கு கிருஷ்ணா.

'சிக்குன்னு இழுக்குது சிட்டான் ஜினுக்கு'

'என்னங்கடா டேய்'

ஷோபனா கலக்கல்.

gkrishna
14th October 2014, 04:41 PM
அழகு ரவியின் வரப்ரசாதம் படத்தில் இடம் பெற்ற 'கங்கை நதி ஓரம் ராமன் நடந்தான் கண்ணின் மணி சீதை ' பாடல் அந்நாளைய என் brand வார்த்தைகளான 'சிலோன் ரேடியோ ஹிட்' . இந்த படத்திலும் சபதம் திரை படத்தில் ஜி கே வெங்கடேஷ்க்கு வாசித்ததை போல் கோவர்தனுக்கு இளையராஜாவின் வாசிப்பு இடம் பெற்றது என்று படித்த நினைவு .
இந்த படத்தின் டைட்டில் கார்டு பார்தீர்களா ? அதில் இளையராஜா பெயர் உதவி இசையில் இடம் பெற்றதாக படித்த நினைவு .அது இந்த படமா அல்லது இந்த கால கட்டத்தில் வெளி வந்த வேறு ஏதாவது படமா என்று மறந்து விட்டது . in fact அன்னக்கிளி படத்திற்கு இசை 'கோவர்தன் -இளையராஜா ' என்று போடுவதாகவே இருந்தது . ஆனால் பஞ்சு அருணாசலம் தான் இசை இளையராஜா மட்டும் தான் என்று முடிவு எடுத்தார் என்றும் படித்த நினைவு

gkrishna
14th October 2014, 04:43 PM
வாசுவுக்கு எப்பவுமே 'ஷோ' மேல ஒரு ஷோதான் (அதாவது பார்வை :))

vasudevan31355
14th October 2014, 04:56 PM
வாசுவுக்கு எப்பவுமே 'ஷோ' மேல ஒரு ஷோதான் (அதாவது பார்வை :))

'ஹிப்' 'நாட்டி' 'ஸம்' கிருஷ்ணா :)

vasudevan31355
14th October 2014, 05:00 PM
இன்னொன்னு விட்டுட்டீங்களே!

'படித்த நினைவு' :)

அது முக்கியமான brand வார்த்தை இல்லியோ!:)

Scottkaz
14th October 2014, 05:16 PM
மக்கள்திலகத்தின் தீவிர பக்தர் சொன்ன வேண்டுகோளை உடனே செய்த நடிகர்திலகத்தின் தீவிர பக்தர் திரு வாசுதேவன் சார் அவர்களுக்கு எனது நன்றிகள்
உங்களுக்காக எனது பதிவு
http://i59.tinypic.com/e5heoh.jpg
என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்

Russellcaj
14th October 2014, 05:16 PM
சகோதரி ஸ்டெல்லா அவர்களுக்கு

கார்த்திக் சார் என்று ஒரு பதிவர் நீங்க கூட கேள்வி பட்டு இருப்பீர்கள்.'உயர்ந்தவர்கள்' படத்தில் ஒரு செகண்ட் சீன்இல் காட்சி தந்ததாக எழுதினார் முதல் பாகத்தில்.

Yes, I also read his posts in this forum Mr. Krishna.

vasudevan31355
14th October 2014, 05:28 PM
மிக்க நன்றி ராமமூர்த்தி சார்.

அந்த ஈடு இணையில்லா இரு சகோதர திலகங்கள் போலவே நாமும் சகோதரத்துவம் காப்போம். அன்பு ஒன்றே இன்ப வழி.

Scottkaz
14th October 2014, 05:36 PM
மிக்க நன்றி ராமமூர்த்தி சார்.

அந்த ஈடு இணையில்லா இரு சகோதர திலகங்கள் போலவே நாமும் சகோதரத்துவம் காப்போம். அன்பு ஒன்றே இன்ப வழி.

http://youtu.be/nhVztpWRldY
http://i61.tinypic.com/sv6xzc.jpg
என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்

gkrishna
14th October 2014, 05:42 PM
Yes, I also read his posts in this forum Mr. Krishna.

நன்றி சகோதரி ஸ்டெல்லா அவர்களே

நீங்கள் ஆங்கிலத்தில் எழுதுவதற்கு நான் தமிழில் பதில் கொடுப்பதற்கு மன்னிக்க வேண்டுகிறேன் . தமிழ் இல் கிடைக்கும் ஒரு தொடர்ச்சியான நடை ஆங்கிலத்தில் எனக்கு கிடைக்க சற்று தாமதமாகிறது

vasudevan31355
14th October 2014, 05:50 PM
நல்ல பாடலுக்கும், நடிகர் திலகம் மற்றும் ஜெமினி பரிசு பெரும் அருமையான 'தினத்தந்தி' ஆவணத்திற்கும் நன்றி ராமமூர்த்தி சார்.

gkrishna
14th October 2014, 06:03 PM
நண்பர் வாசு அவர்களுக்கு
நமது (இப்படி சொல்லலாமா என்று தெரியவில்லை :)) எனது
அபிமான இயக்குனர் கே எஸ் ஆர் தாஸ் அவர்கள் பற்றி ஒரு கட்டுரை படித்தேன் . இன்றோ நாளையோ பதிவிடலாமா ?

vasudevan31355
14th October 2014, 06:18 PM
'திருக்கல்யாணம்' படத்தின் அனைத்துப் பாடல்களின் டீஸர். விஜயகுமார், ஸ்ரீவித்யா நடித்த படம். இளையராஜாவின் இசையில்.

அலையே கடல் அலையே

தேவதைகள் வாழ்த்துவது தேவி என் கல்யாணமே

நீ மோகினியா இல்லாட்டி ஊர்வசியா (சுருளி, மனோரமா)

தாலி ஒன்று தேவை


http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=O_I3J5LLXoA

vasudevan31355
14th October 2014, 06:20 PM
நண்பர் வாசு அவர்களுக்கு
நமது (இப்படி சொல்லலாமா என்று தெரியவில்லை :)) எனது
அபிமான இயக்குனர் கே எஸ் ஆர் தாஸ் அவர்கள் பற்றி ஒரு கட்டுரை படித்தேன் . இன்றோ நாளையோ பதிவிடலாமா ?


தாரளமாகச் சொல்லலாம். தாஸ். வாஸ்.:)

ஆமாம்! என்ன மரியாதையெல்லாம் பலமாய் இருக்கிறதே!:)

vasudevan31355
14th October 2014, 06:25 PM
மாலை மதுரம்

'கன்னியின் சபதம்'. (1958)

அதிகம் வெளியே தெரியாத படம். 'நடிப்பிசைப் புலவர்' கே.ஆர்.ராமசாமி மாட்டு வண்டி ஓட்டியபடி பாடும் பாடல்.

'பள்ளம் மேடுள்ள பாதையிலே
பாத்து நடக்கணும் காளைகளே'


http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=XstEz1JYCe4

vasudevan31355
14th October 2014, 06:28 PM
மாலை மதுரம்

'கன்னியின் சபதம்'. (1958)

இன்னொரு அற்புதமான பாடல்

'டியோ டியோ டியோ

வண்ண மயில் ஆடுது
கன்னித்தமிழ் பாடுது
மன்னவா என்னை நீ
கண்ணா கொஞ்சம் பார்'


http://www.youtube.com/watch?v=wpNFxK84dtw&feature=player_detailpage

vasudevan31355
14th October 2014, 06:40 PM
மாலை மதுரம்

'திகம்பர சாமியாரி'ல் மனம் கொள்ளை கொள்ளும் உற்சாகம் கொப்பளிக்கும் பாடல்.

http://antrukandamugam.files.wordpress.com/2013/11/digambara-samiyar-1950-2.jpg?w=470

அண்ணனை கேலி செய்யும் சிறுமி. அற்புதமான ஆட்டம். விறுவிறு பாடல். அழகுச் சிறுமி.

ஆமா

அண்ணா ஒரு பைத்தியமா ஆகிடுச்சு
அண்ணி மேலே சொக்கி சொக்கி
ஓ அண்ணா சொக்கி சொக்கி

அண்ணா ஒரு பைத்தியமா ஆகிடுச்சு
அண்ணி மேலே சொக்கி சொக்கி
ஓ அண்ணா சொக்கி சொக்கி

தூங்காமல் அண்ணாவையே
சுத்தி சுத்தி ஓடுறாளே மக்கு மக்கு
ஓ அண்ணி மக்கு மக்கு

தூங்காமல் அண்ணாவையே
சுத்தி சுத்தி ஓடுறாளே மக்கு மக்கு
ஓ அண்ணி மக்கு மக்கு

எங்க வீட்டு ராஜாவை எங்கிருந்தோ
ராணி வந்து இழுத்து வளச்சிகிட்டா பாத்தியா

எங்க வீட்டு ராஜாவை எங்கிருந்தோ
ராணி வந்து இழுத்து வளச்சிகிட்டா பாத்தியா

இனி ரெட்டை மாட்டு வண்டியாச்சு கேட்டியா
இனி ரெட்டை மாட்டு வண்டியாச்சு கேட்டியா

இனி வேலைக்கு நீ வீடு வந்து ஆகணும்
சொந்த வேலையெல்லாம் மூட்டை கட்டி போடணும்
நாளுக்கொரு வேட்டி சட்டை மாத்தணும்
நட ராஜா போல் நடை நடந்து காட்டணும்

டக்கு டக்கு டக்கு டக்கு டக்கு டக்கு டக்கு டக்கு


http://www.youtube.com/watch?v=W7UGsQY-800&feature=player_detailpage

Gopal.s
14th October 2014, 07:25 PM
என் நெஞ்சம் நிறைந்த நண்பரான உங்களுக்கு அதே நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள்.

'சபத'த்துக்கும் நன்றி! மகனே நீ வாழ்க!:) நிஜ வாழ்த்து. பொய்யுரை அல்ல.

வாசு,

என்னை இதை விட புரிந்து பதிவிடும் இன்னொருவர் இருக்க முடியாது.
நான் வேலை பார்த்த எல்லா இடங்களிலும் ,ஒழுங்கமைவு, திறமையான முழுமையான செயல் பாட்டிற்காக எப்போதுமே போராடும் வழக்கம் கொண்டவன். அதனால் நீங்கள் சொன்ன படி எனக்கு கொஞ்சம் பின்னடைவுகள் வந்ததுண்டு. நன்றி புரிதலுக்கு.

vasudevan31355
14th October 2014, 07:28 PM
நன்றி கோ.

நாளைய 'இன்றைய ஸ்பெஷல்' உங்கள் ஸ்பெஷலாக மலரப் போகிறது. உங்கள் 3000 க்கு நான் தரும் முக்கியப் பரிசு.

Gopal.s
14th October 2014, 07:31 PM
Thanks Esvee,Krishna,Stella.

rajeshkrv
14th October 2014, 08:11 PM
வணக்கம் வாசு ஜி...
இன்றைய ஸ்பெஷம் வரப்பிரசாதம் மற்றும் திகம்பர சாமியார் பாடல்கள் அருமை .. நன்றி நன்றி

RAGHAVENDRA
14th October 2014, 08:50 PM
மனதை மயக்கி கவரும் மதுர கானங்களின் அசுர வேகம் ஹூட் ஹூட் புயலை மிஞ்சி செவ்வாய் கிரத்தைத் தொட்ட மங்கள்யானின் வேகத்தையும் மிஞ்சி பறக்கிறது... அனைத்து நண்பர்களுக்கும் பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.

வாசு சார்
வழக்கமான பல்லவி தான் ... இருந்தாலும் சொல்லாமல் இருக்க முடியவில்லை... உங்களின் இன்றைய ஸ்பெஷல் ஒவ்வொரு நாளும் சூப்பராக வருகின்றது.. தங்களின் பதிவுகள் இன்றைய தலைமுறையினருக்கு வரப்ரசாதம்.

அதே போல் திகம்பர சாமியாரும்...

பாராட்டுக்கள்.. தொடருங்கள்..

RAGHAVENDRA
14th October 2014, 08:51 PM
நன்றி கோ.

நாளைய 'இன்றைய ஸ்பெஷல்' உங்கள் ஸ்பெஷலாக மலரப் போகிறது. உங்கள் 3000 க்கு நான் தரும் முக்கியப் பரிசு.


வாசு சார்
அஷோக்...?

vasudevan31355
14th October 2014, 09:54 PM
வாசு சார்
அஷோக்...?

ஷாக்!

rajeshkrv
14th October 2014, 09:57 PM
https://scontent-a.xx.fbcdn.net/hphotos-xpa1/v/t1.0-9/s480x480/1538807_478742662234241_71733448_n.jpg?oh=70462fb5 f3e51f5dc55f6f316be42b04&oe=54F6A62E

ஒரு மலையாள படப்பாடல் பதிவின் போது

vasudevan31355
14th October 2014, 10:08 PM
நன்றி ராகவேந்திரன் சார்.

எல்லாம் உங்கள் ஆசி.

vasudevan31355
14th October 2014, 10:22 PM
ராஜேஷ்ஜி!

தங்கள் தேனிசை 'தென்றலின் முத்துக்கள்' பாடல்களின் தொடருக்கு என் இதயம் கனிந்த வாழ்த்துக்கள். (எனக்கு 90’ஏ புதுசுதான்) அப்போ ராஜேஷ் வயசு?!

உண்மையை சொல்லட்டுமா?....தேவாவின் சில பாடல்கள் பிடிக்கும். ஆனால் அவரின் 'கானா' வில் எனக்கு உடன்பாடில்லை. பொதுவாக கானா என்றாலே காத தூரம் ஓடி விடுவேன். அப்படி ஒரு வெறுப்பு கானா மீது.

தேவாவும் நல்ல பாடல்கள் தந்துள்ளார் என்பதும் உண்மை. அதை நீங்கள் தேடி வெளிக் கொணர்வீர்கள் என்று நான் சொல்ல வேண்டியதில்லை.

கலக்குங்கள்.

rajeshkrv
14th October 2014, 10:28 PM
ராஜேஷ்ஜி!

தங்கள் தேனிசை 'தென்றலின் முத்துக்கள்' பாடல்களின் தொடருக்கு என் இதயம் கனிந்த வாழ்த்துக்கள். (எனக்கு 90’ஏ புதுசுதான்) அப்போ ராஜேஷ் வயசு?!

உண்மையை சொல்லட்டுமா?....தேவாவின் சில பாடல்கள் பிடிக்கும். ஆனால் அவரின் 'கானா' வில் எனக்கு உடன்பாடில்லை. பொதுவாக கானா என்றாலே காத தூரம் ஓடி விடுவேன். அப்படி ஒரு வெறுப்பு கானா மீது.

தேவாவும் நல்ல பாடல்கள் தந்துள்ளார் என்பதும் உண்மை. அதை நீங்கள் தேடி வெளிக் கொணர்வீர்கள் என்று நான் சொல்ல வேண்டியதில்லை.

கலக்குங்கள்.


வாசு ஜி , நானும் கானா பாடல்கள் விரும்பி அல்ல.. ஆனாலும் தேவாவும் நல்ல மெலோடி பாடல்களை தந்துள்ளார். அதை இங்கே கொண்டு வருவதே நோக்கம்.
தங்களது ஊக்கத்தாலும் வாழ்த்தினாலும் அது சாத்தியமே

நன்றி நன்றி

vasudevan31355
14th October 2014, 10:44 PM
ராஜேஷ்ஜி!

http://i.ytimg.com/vi/YgSu_PESwrQ/maxresdefault.jpg

'எங்க ஊரு மாப்பிள்ளை' என்ற ராமராஜனும், கெளதமியும் நடித்த படம் ஒன்று உண்டல்லவா! அந்தப் படத்தில் 'இசைஞானி' இளையராஜாவின் இசையில் ஒரு பாடல் எனக்குள் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது.

அப்போதெல்லாம் இந்தப் பாடலைக் கேட்காத நேரமே கிடையாது. TDK 90 ஆடியோ கேசட்டில் முதன் முதலாகப் பதிந்த இப்பாடல் இப்போதும் மெருகு குலையாமல் அப்படியே என்னிடம் உள்ளது. ஆனால் டேப் ரிகார்டர்தான் இல்லை.:) எபெக்ட் அவ்வளவு அருமையாக இருக்கும்.

'வானத்துல வெள்ளி ரதம்
அது வீதியில வந்ததென்ன
வீதியில வந்த ரதம்
ஒரு சேதி இன்று சொன்னதென்ன'

மிக அருமையான பாடல். மனோவும் சித்ராவும் மனம் லயித்துப் பாடியிருப்பார்கள்.

எதற்கு இந்தப் பதிவை இடுகிறேன் என்றால் தேவா இளையராஜாவைப் பின்பற்றி இது போல நிறையப் பாடல்கள் கொடுத்திருப்பார். அதுவும் நன்றாகவே இருக்கும். அதனால் என் மனம் கவர்ந்த பின்னாளைய பாடலான இந்தப் பாடல் நினைவுக்கு வந்து உங்கள் எல்லோரிடமும் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற ஆவல் எழுந்தது. மனோ சித்ரா கூட்டணி என்றாலே கூட்டாஞ்சோறின் சுகம்தானே. நான் இருவர் கூட்டணிக்கும் மிகப் பெரிய விசிறி.

இதோ மனதை சுண்டி இழுக்கும் அந்தப் பாடல்.


http://www.youtube.com/watch?v=-wfRc8-bEco&feature=player_detailpage

rajeshkrv
14th October 2014, 10:48 PM
வாசு ஜி . ஆம் நல்ல பாடல் ... கெளதமி ராமராஜனுடன் தான் நிறைய நடித்தார்.. வெள்ளி கொலுசு மணி, அரும்பாகி மொட்டாகி, மாலை நிலவே பாடல்கள் எல்லாம் என்னை கவர்ந்தவை ..

மனோ- சித்ரா எனக்கும் பிடிக்கும். மனோ-ஸ்வர்ணலதா ஒரு படி மேலே பிடிக்கும்

vasudevan31355
14th October 2014, 10:58 PM
Rajeshji,

p.m.paarunga. G.N.

chinnakkannan
15th October 2014, 12:51 AM
அவரவர்கள் ஆளுக்கொரு தலைப்பை ப் பிடித்து க் கொண்டார்கள்..பொங்கும் பூம்புனல், பகல்பாட்டு, மாலை மதுரம் இரவின் மடியில் என.. ஞான் எந்து செய்யும் விக் விக் வி.க்

எனில் வீட்டிற்கு வந்து ரூம் போட்டு யோசித்ததில் ஹையா சிக்கிக்கிடுச்சு…

மிட் நைட் மசாலா..- 1

அவள் ப்யூட்டிஃபுல் பொண்ணு..அவனோ ஹேண்ட்ஸம் பையன் பின் என்ன லவ் தான்....இருங்க..யாருங்க கல்லால அடிக்கறது.. நிறுத்துங்க..சரி சரி..வேற ஆரம்பிக்கிறேன்..

நடுத்தர வயதுப் பெரியவன் தான் அவன்..அவனுக்கு ஒரு மனைவி..ஒரே ஒரு கறிவேப்பிலைக் கொத்துப் போன்ற தம்பி.. அந்த அண்ணனுக்கு வாழ்க்கையில் ஒரே ஒரு ஆசை.. தன் கிராமத்தில் கூரையில்லாமல் இருக்கும் பெருமாளுக்கு (அண்ணனின் பெயரும் பெருமாள்..தம்பியின் பெயர் நாராயணன் ) ஒருகோவில்கட்டிக்கும்பாபிஷேகம் பண்ண வேண்டும் என்று.. பட் அவனோ அன்றாடம்காய்ச்சி..தம்பிக்கோ வேலை நிரந்தரமில்லை..என்ன செய்யலாம்.. பெருமாளே என வாழ்க்கை போய்க்கொண்டிருந் போது..

தம்பியைக் காதலிக்கும் பெண் லதா.. அவளையே கல்யாணமும் செய்து வைத்துவிட.. ஆஹா வாழ்க்கையே சந்தோஷமாகத் தான் இருக்கிறதே என நினைக்கும்போது..

தம்பி மேல்கொலைப் பழி விழுந்து போலீஸ் கைது செய்து ஜெயிலில் போட பெருமாளுக்குப் பெருமாள் பேரிலேயே கோபம் வருகிறது.. யோவ் நாராயணா..உனக்கு கோவில் தானேய்யா கட்ட ஆசைப்பட்டேன்..இப்படி என்னைப் பண்ணிப்புட்டயே.. இது பாரு என் தம்பி சம்சாரம்..இதுக்கும் பைத்தியம் பிடிச்சுருச்சான்னு தெரியலை முட்டை முட்டைக் கண்ணை முழிச்சு முழிச்சு மலங்க மலங்க முழிக்கிறா.. நான் என்னையா பண்ணினேன் எனக் கோவில்கோவிலாய்ப் பாடுகிறான்..

பின் கைதியாய் இருக்கும்தம்பியை சக கைதி அடித்து சிறைக்கு வெளியில் போட..மேலே இருக்கும் கடவுள் பெருமாள் கைதியாய் சிறையிலிருக்க.. தம்பிக்கு நினைவு வந்து பெருமாள் கோவில்திருப்பணிக்குபெருமாளின் நகையும் எதிர்பாராமல்கிடைக்க..கோவில்கட்டிமுடிக்கிறான். .
அண்ணன் பெருமாள் ஊர் ஊராய்ப் போய் பத்ரி முதலான இடங்களெல்லாம் போய்விட்டு ஊருக்கு வந்தால் கோவில்கட்டி கும்பாபிஷேகத்திற்கு ரெடியாக இருக்க தம்பி தாடியுடன் இருப்பதால் அடையாளமும் தெரியாமலிருக்க…

ஆனால் என்னதான் இருந்தாலும் ஆம்படையான் மனசும் முகமும் ஆத்துக்காரிக்கு மறக்குமோ..தாடியுடன் இருப்பது தனது உயிர் நாடி என அவளுக்குத் தெரிந்துவிட..

இறுதியில் கைதி நாராயணப் பெருமாள் ஓடி இந்தக் கோவிலுக்கு வந்து கருவறையில் மறைய தம்பி தம்பிமனைவி, அண்ணா அண்ணன்பெண்டாட்டி எனக் குடும்பம் இணைய…

சுபம் எனப் போட்டு பாட்டிற்குப் போவதற்கு முன்..

படம் சுப்ரபாதம் அண்ணன் நம்பியார் அண்ணி விஜயகுமாரி தம்பி ஜெய்கணேஷ் தம்பி மனைவி லத்து என்றலதா..
ஓஹோ என்றில்லாவிட்டாலும் கொஞ்சம் ஓகேயான படம் தான்..(கதை மறந்து போனதால் இன்னிக்கு ஓட்டி ஓட்டிப் பார்த்தேனாக்கும்)(கண்ணா எவ்ளோ கஷ்டப் படறடா நீ..)

என் முன்னோடி வாசு சார் செய்தாற்போல பாடல்கிடைக்கவில்லை ஆதலின் கீழே படத்தின் லிங்க்.. முப்பத்தி எட்டாம் நிமிடத்தில் நம்பியார் பாடும் கோபப்பாட்டு ஆரம்பிக்கும் என்று சம்சயம்..

படத்தின் ஹைலைட் கண்ணனை நினைத்தால் சொன்னதுபலிக்கும் பாட்டு, முத்துராமனின் பார்த்த சாரதிப் பெருமாள் வேஷம் (என்ன கம்பீரமான உடற்தோற்றம்), பின் பத்ரி நாத்பண்டரி புரத்தில் பாடும் உன்னைத்தான் நீ அறிவாய் என்ற அனதர் பக்திப்பாடல்.. கே.ஆர்.விக்கும் ஒரு பாட் உண்டு..
இந்தப் பெருமாளிடம் கோபித்துக் கொண்டு பாடும் பாடலில் ஒரு பக்தி டூரே அடித்திருப்பார் நம்பியார்..(அனேகமாக வயதானதிற்கப்புறம் கொஞ்சம்குணசித்திரத்திற்கு மாறிய முதல் படம் இதுவாய்த் தானிருக்கும்) காஞ்சீபுரம் என்ன குடந்தை என்ன ஸ்ரீ ரங்கம் என்ன.. ஆனால் என்ன கோவில் சென்று என்ன

கட்டக்கடோசியில் சோளிங்கரில் படிக்கட்டுகளில் லொங்கிடி லொங்கிடி என நம்பியார்,விஜயகுமாரி லதா(குழந்தை ரொம்பக் கஷ்டப்பட்டிருக்கும்!) என ஏறிப் பாடி முடித்ததற்கு அப்புறம் தான் லதாவிற்கே குணமாகும்..ம்ம்

பாடியவர்கள் சீர்காழி கோவிந்த ராஜன், வாணிஜெயராம் + கோரஸ்..

**
பாடல் வரி..
*
http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=o_1h1QVr5ec
38 ம் நிமிடத்திற்குப் போகவும்
திருக்கோயில் கட்ட எண்ணி
பொறுப்போடு வந்த என்னை
வெறுப்போடு பார்த்தாயே பெருமாளே

பலர் மிதித்தாலும் விடமாட்டேன் திருமாலே
காஞ்சிநகர் வரதராஜா உன் கருணை பெருமை என்ன லேசா
வாஞ்சையுடன் எனக்கு அருள காஞ்சி வரதா விரைந்தோடி வருக
திருப்பணி செய்வதற்கு உடந்தை
நீ திருக்கோயில் கொண்டிருக்கும் குடந்தை

தினம் தோறும் சேவை செய்ய வரவா
ரங்க ஶ்ரீவில்லிப்புத்தூரின் தலைவா

பூலோக வைகுண்ட வாசா
புகழோங்கும் ஶ்ரீரங்கநாதா
திருவரங்கத்து ரங்கநாதா
என் தேவைக்கு துணை புரிய வா வா

அனந்த பத்மநாபா ஆனந்த விஸ்வரூபா
திருவனந்தை பத்மநாபா
உனக்கு சிங்கார கோயில் கட்ட வா வா

நாராயண நாராயண நாராயண நாராயண
நாராயண நாராயண நாராயண கிருஷ்ணா
குருவாயூர் தன்னில் ஒரு குழந்தை
நடக்கக் கொஞ்சுதம்மா இரண்டு சலங்கை

வரவேண்டும் ஶ்ரீகிருஷ்ண பாலா
நிறைந்த வரத்தோடு ஆனந்த லாலா
பழமை நிறைந்த திருப்பதியே
எங்கள் அழகர்மலை கருணை நிதியே

சோளிங்கர் ஆள்கின்ற முகமே
பாவம் தொலைவதற்கு நீராடும் குளமே

தொண்டு செய்யும் அடியார்கள் தமக்கு
உன் சோதனை போதுமடா
சோதனை தீர்த்து உன் பாத மலர்களில்
எங்களை சேர்த்திடடா
கொண்டது கொள்கை என்றதில்
நின்றவர் கூறுதல் கேளுமடா

கோவில் பிறந்திடவில்லை எனில்
வைகுண்டத்தில் சேர்த்திடடா

நரசிம்மா நரசிம்மா நரசிம்மா
வைகுந்தா வைகுந்தா வைகுந்தா
ஶ்ரீரங்கா ஶ்ரீரங்கா ஶ்ரீரங்கா
மைவண்ண மேனி கொண்ட ஶ்ரீநாதா
திருமகள் தன்னை மார்பில் வைத்த மலர் மார்பா

நெய் கூந்தல் வேதவல்லி தலைமகனே
மனம் நிறைந்திருக்கும் அலமேலு மணந்தவனே
எத்தனையோ உலகில் வடிவெடுத்தாய்
அங்கு எல்லா வடிவினிலும் பெண்ணெடுத்தாய்
பித்துப் பிடித்த பெண்ணை அறியாயோ
இன்று பித்தம் தெளிந்ததென்று அருள்வாயோ

பாண்டுரங்கா பண்டரிநாதா பன்னக சயனா மணிவண்ணா
பத்மநாபனே வீரராகவா ஆதிகேசவா ஶ்ரீகிருஷ்ணா
ரிஷிகேசா ரிஷிகேசா ஶ்ரீரங்கா ஶ்ரீரங்கா
திருமாலே திருமாலே நரசிம்மா நரசிம்மா

***/

தலைப்பு என்னமோ வெச்சுட்டு பக்திபாட்டெல்லாம் போடறேன்கறீங்களா.. முதல் பாட்டு ஒம்மாச்சிக்கு..ஓகே..யா.. அண்ட் திஸ் பாட் இஸ் டெடிகேட்டட் டு கோபால்sir3000!

அடுத்த பாட்டு ஃபார் க்ருஷ்ணா ஜி..(க்ளூ..he knows everything!)

(இன்று போய் நாளை வாரேன்)

rajeshkrv
15th October 2014, 02:09 AM
சி.க அருமை. தூள். உங்கள் எழுத்து நடை தூள்

rajraj
15th October 2014, 04:11 AM
From Apoorva SagotharargaL:

Bhanumathi sings

Laddu Laddu.......

http://www.youtube.com/watch?v=aUuju6v3Frc


Happy DeepaavaLi to all of you! :) Have fun with fireworks , sweets and kaaram- laddu, jilebi,jangiri,adhirasam, halwa, seedai, murukku,kaara boondhi etc! :lol:

I miss Halwa from Arya Bhavan, Kumbakonam and their degree coffee ! :(

Another restaurant I miss is KaLiyagudi im Mayavaram (Mayiladuthurai)

Migration has its own price ! :lol:

madhu
15th October 2014, 04:13 AM
மிட் நைட் மசாலா..- 1

என் முன்னோடி வாசு சார் செய்தாற்போல பாடல்கிடைக்கவில்லை ஆதலின் கீழே படத்தின் லிங்க்.. முப்பத்தி எட்டாம் நிமிடத்தில் நம்பியார் பாடும் கோபப்பாட்டு ஆரம்பிக்கும் என்று சம்சயம்..

பாடியவர்கள் சீர்காழி கோவிந்த ராஜன், வாணிஜெயராம் + கோரஸ்..

திருக்கோயில் கட்ட எண்ணி

தலைப்பு என்னமோ வெச்சுட்டு பக்திபாட்டெல்லாம் போடறேன்கறீங்களா.. முதல் பாட்டு ஒம்மாச்சிக்கு..ஓகே..யா.. அண்ட் திஸ் பாட் இஸ் டெடிகேட்டட் டு கோபால்sir3000!

அடுத்த பாட்டு ஃபார் க்ருஷ்ணா ஜி..(க்ளூ..he knows everything!)


கோபால்ஜி... 38 நிமிஷம் உங்களை வெயிட் செய்ய விடமாட்டேன்.
சிக்கா... பாட்டு லிங்கைப் புடியுங்க..
( மிட் நைட்ல கோவில் கட்டினவர் நீங்கதானுங்கோ ! )

http://youtu.be/16j5oViE9u0

rajraj
15th October 2014, 04:44 AM
krishna: Chinanchiru kiLiye is in raagamaaligai beginning with Kapi. There has been a lot of discussion about this song and the ragas used. We had a thread 'raga of songs please', where it was discussed. :)

Gopal.s
15th October 2014, 05:01 AM
Raj Raj- Your postings are very crisp and enjoyable. Pl.Contribute more to enlighten us.

vasu- Awaiting surprise.

Chi.ka&Madhu - thanks.

Richardsof
15th October 2014, 05:43 AM
பாடல் வரிகள் ...ஒருவரின் வாழ்க்கையில் ஏற்பட்ட அனுபவங்களை தத்துவங்களாக பிரதிபலிக்கிறது . மாறி வரும் சமுதாயத்தில் மனிதனின் மாற்றங்கள் , ஏமாற்றங்கள் , கசப்பான சம்பங்கள் , எதிர்மறை எண்ணங்கள் , போட்டி , பொறாமை , தரமின்றி பேசுதல் , பொறாமை , அடக்கும் ஆளுமை .,கெஞ்சினால் மிஞ்சுவது , மிஞ்சினால் கெஞ்சுவது ஆத்திரம் , இந்த மாதிரி மனிதர்களுக்காக பல பாடல்கள் வந்துள்ளது . எனக்கு பிடித்த பாடல்


http://youtu.be/IEUaXQPmtdY

Richardsof
15th October 2014, 05:58 AM
http://youtu.be/DmhN74ky5Vs

rajeshkrv
15th October 2014, 06:19 AM
சிறிய வயதில் எனக்கு ஒரு குரலின் மீது மயக்கம் . காரணம் என் தந்தை.. கிருஷ்ண கானம் என்ற ஒரு காஸெட் அதுவும் அந்த நாராயண நாராயண ஹரி ஹரி நாராயண நாராயண என்ற அந்த வரிக்காகவே அந்த ரெக்கார்டை தேய்த்திருக்கிறேன். ஆம் இசையரசியின் குரலில் ஈடுபாடு வர காரணம் “குருவாயூருக்கு வாருங்கள் ஒரு குழந்தை சிரிப்பதை பாருங்கள் “ என்ற பாடல். மெல்லிசை மன்னரின் இசை, கவியரசரின் வரிகள், இசையரசியின் குரல் என இந்த பாடல் என்றுமே மறக்க முடியாத பாடல்

கண்ணனின் மேனி கடல் நீலம் அவன் கண்களிரண்டும் வான் நீலம்
கடலும் வானும் அவனே என்பதை காட்டும் குருவாயூர் கோலம்


https://www.youtube.com/watch?v=Mmk5O-vHgiE

RAGHAVENDRA
15th October 2014, 06:23 AM
ராஜேஷ்
தேவா அவர்களின் 'காணா' பாடல்களின் மீது சற்றும் எனக்குப் பிடிப்பில்லை. ஆனால் அவருடைய இசை'யமைப்பில் ' இனிமையான பாடல்களை ரசிக்கத் தவறியதில்லை.
தெற்குத் தெரு மச்சான் படத்தில் தென்ன மரத் தோப்புக்குள்ளே குயிலே குயிலே - அப்படியே முல்லை மலர் மேலே - நன்றாக இருக்கும். அவருடைய டூயட் பாடல்கள் பெரும்பாலும் வேறு பாடல்களை நினைவூட்டினாலும் கேட்கும் போது இனிமையாக இருக்கும்.
தொடருங்கள்..கேட்டு மகிழலாம்

RAGHAVENDRA
15th October 2014, 06:27 AM
வாசு சார்
வானத்திலே வெள்ளி ரதம் ... அருமையான பாடல்... ஆனால் அந்த ஆண் குரல்...

இன்று வரை என்னால் மனோவை ஒரு பாடகராக ஏற்றுக் கொள்ள முடியவில்லை. டிராக் பாடகராகவே தொடர்ந்திருக்கலாமே என பல முறை நினைத்ததுண்டு.
இருந்தாலும் ஒரு சில பாடல்கள் பரவாயில்லை..
குறிப்பாக செந்தமிழ்ப் பாட்டு படத்தில் இடம் பெற்ற கூட்டுக்கொரு பாட்டிருக்கு .... அவர் பாடியதில் நான் விரும்பிக் கேட்ட ஒரு சில பாடல்களில் ஒன்று... (ஒரு வேளை மெல்லிசை மன்னரின் கைவண்ணத்தாலோ என்னவோ இப்பாடலில் குரலில் ஒரு மெச்சூரிட்டி தெரியும்).

இளையராஜாவின் இசையில் மனோ பாடிய பல பாடல்கள் வேறு யாராவது பாடியிருக்கக் கூடாதா என பல முறை நான் நினைத்ததுண்டு.

இது என்னுடைய சொந்தக் கருத்தே தவிர யார் மனதையும் புண்படுத்த அல்ல.

RAGHAVENDRA
15th October 2014, 06:37 AM
பொங்கும் பூம்புனல்

இன்றைய பாடல் இன்றைய ராகம் இன்றுடன் முடிவதில்லை..

இது இப்பாடலில் இடம் பெற்ற ஒரு வரி... நம்முடைய மதுர கானம் திரிக்கு எந்த அளவிற்கு பொருந்துகிறது பாருங்கள்..

திரை இசைத் திலகம் கே.வி.மகாதேவன் அவர்கள் 1970களின் பிற்பகுதியில் இசையமைத்த தமிழ்ப் படங்களில் பெரும்பாலும் தமிழிலிருந்து விலகியே நின்று வேற்று மொழியின் சாயலே அமைந்திருந்தது. அதற்கு இப்பாடலும் ஒரு சான்று.
என்றாலும் இசைக்கு மொழி ஒரு பொருட்டல்லவே..கேட்கும் போது இப்பாடல் நம்மைக் கவரத் தவறுவதில்லை..

மௌன யுத்தம் திரைப்படத்திலிருந்து ... அழைத்தால் வருவாள்... எஸ்.பி.பாலா, வாணி குரல்களில்

http://www.inbaminge.com/t/m/Mouna%20Yuththam/

RAGHAVENDRA
15th October 2014, 06:44 AM
பொங்கும் பூம்புனல்

நல்லது நடந்தே தீரும்...

ஆம்.. இது ஒரு படத்தின் தலைப்பே..

இப்படம் வெளிவந்ததா தெரியவில்லை.. இளைய ராஜா இசையில் இந்த பாடல் அவருடைய ஆரம்ப கால சூப்பர் பாடல்களில் ஒன்று.. மிகக் குறைந்த அளவிலான இசைக்கருவிகளுடன் இனிமையாக நெஞ்சை வருடிச் செல்லும் எஸ்.ஜானகியின் குரலில் கேட்டுக் கொண்டே இருக்கலாம்..

அந்த ஆத்தோரமா ஒரு ஆலமரம்...

http://www.inbaminge.com/t/n/Nallathu%20Nadanthe%20Theerum/

rajeshkrv
15th October 2014, 06:44 AM
தேனிசை தென்றலின் முத்துக்கள் - 2

ஆரம்ப காலங்களில் சில சின்ன சின்ன படங்களுக்கு இசையமைத்திருந்தாலும் பெரிசாக ஒன்னும் பெயர் கிடைக்கவில்லை
பாடல்கள் நன்றாக இருந்தும் படங்கள் வெற்றி பெறாததால் பாடல்கள் ஹிட் ஆகவில்லை .
அதன் பின்னர் அன்பாலயா பிரபாகரன் தயாரித்த வைகாசி பொறந்தாச்சு படத்தின் அனைத்து பாடல்களும் பிரபலமாகி தேவா என்ற இசையமைபாளரை திரும்பி பார்க்க வைத்தது.

இன்று நான் பதிவிடப்போகும் பாடலும் மிகவும் அழகான பாடல்.
1993’ல் அன்பாலயா பிரபாகரன் தயாரிப்பில் வெளிவந்த மதுமதி திரைப்படத்தில் பாலாவின் குரலில் அழகான பாடல்

கவிஞர் காளிதாசனின் வரிகள்
ஓ ஓ மதுபாலா இது தான் சுக நாளா

ஹ ஹா ஹா
ஓ ஓ மதுபாலா இதுதான் ஆ ஆஆ சுபலாலா
ஓ ஓ மதுபாலா இதுதான் ஆ.. ஆ..ஆ.. சுபலாலா
இனி மாதம் பணிரண்டுமே..
மலர் காலம் தொடந்திடுமே..
இளம் காதல் சபையினிலே..
புது வேதம் மலர்ந்திடுமே..
மதுபாலா என் மதுபாலாஆஅ ஆஅ ஆஅ ஆஅ
நானாக மாறவா.. தாலாட்டு பாடாவா..

ஊரெங்குமே ஒர் வெள்ளிநிலா..நீதானே தேவி
ஏழைமகள் என்வீட்டில் நீ செந்தூர ஜோதி
இளமைக்காலங்கள் ஒளிவீசும்
இன்பவசந்தங்கள் நாமல்லவா..ஆஆஆஆஆ
எளிமைகோலத்தில் நாம் இருந்தாலும்
உன் இதயம் நானல்ல்வா..ஆஆ
மதுபாலா என் மதுபாலாஆஆ
உன் மனதுக்குள் வரைந்தேன் வெகுநாளா..
ஓ ஓ மதுபாலா இதுதான் ஆ ஆஆ சுபலாலா

ஸ்ரீராமனின் சீதை வரம் பூபூக்கும் நேரம்..ம்..ம்
ஊடல்களில் மாதங்களும் நாளாக மாறும்
திசைகள் எல்லமே தடுமாறும்
இந்த திருமகள் பாதம் பட்டாள்ஆ..ஆ...ஆஆ
உதயம் சொல்லமல் இடம் மாறும்
உந்தன் விழிமலர் ஜாடைக்கண்டாள்..
மதுபாலா என் மதுபாலாஆஆ
உன் மனதுக்குள் வரைந்தேன் வெகுநாளா..
ஓ ஓ மதுபாலா இதுதான் ஆ ஆஆ ஆ சுபலாலா
.. ஓ .. ஓ மதுபாலா.. இதுதான் ஆ ஆஆஆ சுபலாலா
இனி மாதம் பணிரண்டுமே.. மலர் காலம் தொடந்திடுமே..
இளம் காதல் சபையினிலே.. புது வேதம் மலர்ந்திடுமே..
மதுபாலா என் மதுபாலாஆஅ ஆஅ ஆஅ ஆஆஆ
நானாக மாறவா.. தாலாட்டு பாடாவா..
ஓ ஓ மதுபாலா இதுதான் ஆ ஆஆ சுபலா....லா....


https://www.youtube.com/watch?v=FB_LqwKWTOg

தொடரும்

RAGHAVENDRA
15th October 2014, 06:48 AM
பொங்கும் பூம்புனல்

இனி ஆகாயம் மண்ணில் வரும்...ஒரு
ஆகாய கங்கை விழும்...

அருமையான பாடல்.. ஜெயச்சந்திரன் எஸ்.ஜானகி குரல்களில் சங்கர் கணேஷ் இசையில் நீதி பிழைத்தது படத்திலிருந்து ..
நெஞ்சைத் தொடும் இனிய பாடல்..

எது வரை இன்பம் அது வரை...

http://www.inbaminge.com/t/n/Needhi%20Pizhaithadhu/

rajeshkrv
15th October 2014, 06:49 AM
வாசு சார்
வானத்திலே வெள்ளி ரதம் ... அருமையான பாடல்... ஆனால் அந்த ஆண் குரல்...

இன்று வரை என்னால் மனோவை ஒரு பாடகராக ஏற்றுக் கொள்ள முடியவில்லை. டிராக் பாடகராகவே தொடர்ந்திருக்கலாமே என பல முறை நினைத்ததுண்டு.
இருந்தாலும் ஒரு சில பாடல்கள் பரவாயில்லை..
குறிப்பாக செந்தமிழ்ப் பாட்டு படத்தில் இடம் பெற்ற கூட்டுக்கொரு பாட்டிருக்கு .... அவர் பாடியதில் நான் விரும்பிக் கேட்ட ஒரு சில பாடல்களில் ஒன்று... (ஒரு வேளை மெல்லிசை மன்னரின் கைவண்ணத்தாலோ என்னவோ இப்பாடலில் குரலில் ஒரு மெச்சூரிட்டி தெரியும்).

இளையராஜாவின் இசையில் மனோ பாடிய பல பாடல்கள் வேறு யாராவது பாடியிருக்கக் கூடாதா என பல முறை நான் நினைத்ததுண்டு.

இது என்னுடைய சொந்தக் கருத்தே தவிர யார் மனதையும் புண்படுத்த அல்ல.

எனக்கு இந்த கருத்தில் உடன்பாடில்லை. தமிழ் உச்சரிப்பிலும் சரி பாடும் விதத்திலும் சரி மிகவும் நன்றாகவே பாடுவார்
விழியில் புது கவிதை படித்தேன், எந்தன் வாழ்க்கையின் அர்த்தம் சொல்ல இன்னும் நிறைய பாடல்கள் ..

இசையமைப்பாளருக்கு உதவியாளர், பாடகர்களுக்கு பாடல் சொல்லிக்கொடுப்பவர் எப்படி பாடத்தெரியாமல் இருப்பார். குலாம் அலி, மெஹந்தி ஹசனின் கசல், தெலுங்கு பத்யங்கள் எல்லாம் பின்னுவார்.

என்னை பொருத்தவரை பாலாவை கொண்டாடும் அதே வேளையில் இவரையும் பாராட்டி கொண்டாடுவேன் .. பாடலை பாடலாக பாடுவார்..
இது என் கருத்து தான் .

https://www.youtube.com/watch?v=f6tHtahXMZU

RAGHAVENDRA
15th October 2014, 06:50 AM
ராஜேஷ் சார்...
மது பாலா மிகவும் இனிமையான பாடல்.. அக்கால கட்டத்தில் என்னுடைய இசைத் தொகுப்பில் இடம் பெற்ற பாடல்.. ஒலி நாடாவின் ஆயுள் குறைந்து விட்டதால்... பாதுகாக்க முடியவில்லை..
அருமையான பாடல்..

rajeshkrv
15th October 2014, 06:52 AM
ராஜேஷ் சார்...
மது பாலா மிகவும் இனிமையான பாடல்.. அக்கால கட்டத்தில் என்னுடைய இசைத் தொகுப்பில் இடம் பெற்ற பாடல்.. ஒலி நாடாவின் ஆயுள் குறைந்து விட்டதால்... பாதுகாக்க முடியவில்லை..
அருமையான பாடல்..

ஆமாம் ராகவ் ஜி, மிகவும் அருமையான பாடல். இதே பாடல் சித்ராவின் குரலிலும் உண்டு.

RAGHAVENDRA
15th October 2014, 06:54 AM
பொங்கும் பூம்புனல்

சி.க.சார் இது உங்களுக்காகத் தான்...

அதே நீதி பிழைத்தது படத்தில் வாணி ஜெயராம் குரலில் .. துள்ளியாட வைக்கும் பாடல்..

சிக்கு சிக்கா ...

... கட்டி வைச்த தேரு .. இந்த கட்டழகைப் பாரு ....பாட்டு வரிகளெல்லாம் ஒரு மாதிரியாகத் தான் இருக்கு..

வாணி செம மூடில் பாடிய பாடல்..

http://www.inbaminge.com/t/n/Needhi%20Pizhaithadhu/

RAGHAVENDRA
15th October 2014, 06:58 AM
பொங்கும் பூம்புனல்

நெஞ்சிலே துணிவிருந்தால் ...

உடனே நினைவுக்கு சித்திரமே பாட்டு நினைவுக்கு வந்து விடுகிறது..

இப்படத்தில் இன்னொரு இனிமையான பாடல்.. சங்கர் கணேஷ் டிரேட்மார்க் இசையில் பாலா மற்றும் வாணியின் குரலில் ஒரு துள்ளல் டூயட்..

கண்ணி வெச்சேன் கன்னி..

http://www.inbaminge.com/t/n/Nenjil%20Thunivu%20Irundhal/

RAGHAVENDRA
15th October 2014, 07:03 AM
பொங்கும் பூம்புனல்

நெருப்பிலே பூத்த மலர்... இப்படம் பேர் சொன்னால் உடனே ஜெயச்சந்திரனின் எங்கெங்கும் அவள் முகம் நமக்கு நினைவிற்கு வந்து விடுகிறது..

ஆனால் இதே படத்தில் இந்த இனிமையான டூயட் பாடல் ஏன் பிரபலமாகவில்லை எனத் தெரியவில்லை... சொல்லப் போனால் இப்பாடலை சென்னை வானொலி நிலையம் ஒலிபரப்பிய அளவிற்கு கூட இலங்கை வானொலியில் ஒலிபரப்பானதாகத் தெரியவில்லை.

திரை இசைத் திலகத்தின் வித்தியாசமான புதுமையான பாணியில் சூப்பர் பாடல்..

ஜெயச்சந்திரன் வாணி ஜெயராம் . இந்த பிரபலமான பாட்டு ஜோடியின் பட்டியலில் இதற்கு தனியிடம் என்றுமே உண்டு..

இரவினில் பனியினில் இருவரும் விழித்திருப்போம்...கேட்டு மகிழுங்கள் இந்த இனிமையான பாடலை..

http://www.inbaminge.com/t/n/Nerupil%20Pootha%20Malar/

RAGHAVENDRA
15th October 2014, 07:06 AM
பொங்கும் பூம்புனல்

மலேசியா வாசுதேவனின் இசையில் மலையாளத்திலிருந்து தமிழுக்கு வெளி வந்த பாக்கு வெத்திலை படத்தில் இடம் பெற்ற இப்பாடல் இலங்கையில் சக்கைப் போடு போட்ட பாடல்..

கே.ஜே.ஜேசுதாஸ் எஸ்.ஜானகி குரல்களில் சூப்பர் டூப்பர் ஹிட்...

தேன் நிலா வரும் ...சொல்லித் தான் தரும் சுகம்..

கேட்டவுடனே .. ஆஹா.. இதுவா என்று தங்கள் நினைவுகள் அசை போடுவது நிச்சயம்..

http://www.inbaminge.com/t/p/Pakkuvethilai/

RAGHAVENDRA
15th October 2014, 07:09 AM
பொங்கும் பூம்புனல்

ஆஹா.. இந்தப் பாட்டை கேட்டிருக்கிறேனே... என மனம் அசை போடும் அந்நாளைய அருமையான பாடல்களில் ஒன்று..

மெல்லிசை மன்னரின் இசையில் பட்டம் பதவி படத்திலிருந்து இசையரசியும் எஸ்.பி.பாலாவும் பாடிய சூப்பர் டூப்பர் பாட்டு...

வானத்தைப் பார்த்திருந்தேன்...

http://www.inbaminge.com/t/p/Pattam%20Pathavi/

சின்ன இடை... இந்த வார்த்தை எப்படியெல்லாம் அழகு பெறுகிறது இசையரசியின் குரலில்...

RAGHAVENDRA
15th October 2014, 07:14 AM
பொங்கும் பூம்புனல்

பல பாடல்கள் படத்தின் பெயரை அறிந்து கொள்ள மிகவும் உதவுகின்றன. இந்தப் பாட்டால் இந்தப் படம் மக்களிடையே அறிமுகமானது என நாம் நினைக்கக் கூடிய படங்களில் ராஜாங்கம் படமும் ஒன்று.. ராஜாங்கம் படம் என்று யாரிடமாவது சொன்னால் இப்படம் எப்போது வந்தது என பலர் கேட்கலாம் ஆனால் இந்தப் பாடலைச் சொன்னால்... ஓ... இந்தப் பாடல் இந்தப் படத்தில் தானா எனக் கேட்பதுண்டு..

ரோசா மலரே அழுவக் கூடாது... ஜெயச்சந்திரனின் குரலில் ... நெஞ்சைத் தொடும் இனிய பாடல்..

சங்கர் கணேஷ் இசையில்..

http://www.inbaminge.com/t/r/Rajangam/

பாட்டின் கடைசியில் குழந்தையின் குரலில் இந்தப் பாட்டு ஒலிக்கும்.

sivaa
15th October 2014, 08:08 AM
சிவா

இதோ நீங்கள் கேட்ட தெய்வத்திருமகள் படப்பாடல்



நன்றி ராஜேஷ்

sivaa
15th October 2014, 08:10 AM
http://latchuart.files.wordpress.com/2014/07/shivajiganesan2.jpg?w=360&h=360&crop=1

ஆஹா! வாருங்கள் எங்கள் சிவா சார்! உங்களை இருகரம் கூப்பி இனிதே 'மதுர கான'த்திற்கு வரவேற்கிறேன். இலங்கை தந்த எங்கள் 'ஆவணச் செம்மலே'! 'உயர்ந்த மனிதன்' புகழ் ஒன்றே லட்சியம் என்று வாழ்ந்திருக்கும் எங்கள் உயர்ந்த, இனிய நண்பரே! வருக வருக!

தங்கள் மனம் நிறைந்த பாராட்டிற்கு என் உளம் கனிந்த நன்றி!

நன்றி வாசு

sivaa
15th October 2014, 08:12 AM
சிவா சார்,

நீங்கள் கேட்டு இல்லாமலா? இதோ நீங்கள் கேட்ட அந்த வித்தியாசமான அருமையான பாடல். அப்படியே ஈழத்தமிழ் பாடல் போல குதூகலிக்க வைக்கும். அதனால்தான் இதை விருப்பமாக தேர்ந்தெடுத்தீர்களோ?
மிக அரிய பாடலைக் கேட்டு தங்கள் வித்தியாசமான ரசனையை இங்கு வெளிப்படுத்தியமைக்கு நன்றி! பலருக்கு இப்பாடல் தெரிய வாய்ப்பில்லை. எனக்கு மிகவும் பிடித்த பாடல். (ஏற்கனவே ராஜேஷ் சார் பதிவிட்டு விட்டார். பரவாயில்லை)

'சந்தையிலே நான் கண்ட தளுக்கு
நல்ல தங்கச் சிலை போல இருக்கு
கண்ணாலே நான் போட்ட கணக்கு
அது பொன்னாக விளைந்தது எனக்கு'

]

நன்றி வாசு

சிறுவயதில் பார்த்த படம் தெய்வத்திருமகள்

அந்தப்பாடல் மனதில் பதிந்துவிட்டது
அப்பொழுது கேட்டதற்கு பின் அதிகம் கேட்கவில்லை
வானொலிகளிலும் அதிகமாக ஒலிபரப்பாகவில்லை

சில பாடல்களின் சிலசொற்கள் சிலவேளைகளில்
சிலரது காதுகளில் வேறு அர்த்தமாக விளங்கிக்கொள்கின்றது
அப்படி நான் இப்பாடலில் இன்றுவரை விளங்கிக்கொண்டது
தளுக்கு என்பதை சரக்கு என்று

rajeshkrv
15th October 2014, 08:24 AM
நன்றி ராஜேஷ்

நோ ஃப்ராப்ளம் சிவா ஜி.

உங்கள் வருகை இங்கே புது பொலிவை உண்டாக்கட்டும்.. இங்கும் நீங்கள் நிறைய பதிய வேண்டும்.

Richardsof
15th October 2014, 09:09 AM
அலுவலகத்தில் வேலை பார்க்கும் ஊழியர்கள் தங்கள் வேலை சுமைகளுக்கு இடையே மதுரமான
பாடலை வயது வித்தியசம் இல்லாமல் தங்களை மறந்து ஆடி பாடி மகிழும் காட்சி

http://youtu.be/DXKfHTLM3YY.

rajeshkrv
15th October 2014, 09:16 AM
ஜெர்மன் பெண்மனி பேசும் அழகு தமிழ்

https://www.youtube.com/watch?v=UXbtqSB2MqE

gkrishna
15th October 2014, 12:30 PM
நண்பர் குருஜி ராகவேந்தர் அவர்களே

உங்கள் இன்றைய பொங்கும் பூம்புனல் 70 களின் இறுதியிலும் 80 களின் முதலிலும் வந்த நல்ல பல பாடலகளை நினைவு படுத்தி உள்ளது .

நன்றி

gkrishna
15th October 2014, 12:38 PM
அவரவர்கள் ஆளுக்கொரு தலைப்பை ப் பிடித்து க் கொண்டார்கள்..பொங்கும் பூம்புனல், பகல்பாட்டு, மாலை மதுரம் இரவின் மடியில் என.. ஞான் எந்து செய்யும் விக் விக் வி.க்

எனில் வீட்டிற்கு வந்து ரூம் போட்டு யோசித்ததில் ஹையா சிக்கிக்கிடுச்சு…

மிட் நைட் மசாலா..- 1

(இன்று போய் நாளை வாரேன்)

அருமை சி கே சார்
மிகவும் நெருங்கி விட்டீர்கள் - மனதளவில் :)
உங்கள் அடுத்த பாடலை அனுபவிக்க காத்து கொண்டு இருக்கிறேன்

gkrishna
15th October 2014, 12:41 PM
ராஜ் ராஜ் சார்

சுப்ரமணிய பாரதியாரின் 'சின்னஞ்சிறு கிளியே ' பாடலின் (காபியில் ஆரம்பித்து ராகமாலிகை ஆகா) ராக கட்டமைப்பை விளக்கியதற்கு நன்றி
இதே போல் நீங்கள் மேலும் பல காபி ராக அடிப்படையில் அமைந்த பாடல்கள் பற்றி விளக்கி கூற எதிபார்க்கிறேன் .நன்றி

gkrishna
15th October 2014, 01:12 PM
கே.எஸ்.ஆர்.தாஸ்...! சாதனை கலைஞனை மறந்த சினிமா

http://img1.dinamalar.com/cini//CNewsImages/NT_120904121140000000.jpg

1970 முதல் 1980 வரையிலான காலட்டத்தில் தென்னிந்திய சினிமா உலகம் முழுவதும் உச்சரிக்கப்பட்ட பெயர். உலகில் 100 படங்களுக்கு மேல் இயக்கியவர்கள் பத்துக்கும் குறைவானவர்கள்தான். நம் நாட்டில் தமிழ் நாட்டை சேர்ந்த ராம நாராயணன், கே.பாலச்சந்தர், தெலுங்கில் தாசரி நாராயணராவ் இந்த பட்டியலுக்குள் வருகிறார்கள். இதற்கு அடுத்த இடத்தில் இருந்தவர் கே.எஸ்.ஆர் தாஸ்.
99 படங்களை இயக்கியவர். 2012 ஜுன் மாதம் 8ந் தேதி சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் காலமானார். சென்னை மகாலிங்கபுரத்தில் எளிமையாக தனது கடைசி காலத்தை கழித்த கே.எஸ்.ஆர் தாஸின் இறுதி சடங்குகளும் எளிமையாகவே நடந்தது. உறவினர்களைத் தவிர சினிமா உலகில் இருந்து ஒரு லைட்மேன்கூட கலந்து கொள்ளவில்லை. ஒரு மாபெரும் சாதனை கலைஞனுக்கு சினிமா தந்த மரியாதை இவ்வளவுதான்.
அதனால்தான் தினமலர் இணையதளம் தனது வாசகர்களுக்கு கே.எஸ்.ஆர்.தாஸ் பற்றிய நினைவுகளை தருகிறது.

1936ம் ஆண்டு ஆந்திர மாநிலத்தில் பிறந்தவர் தாஸ். காந்தாராவுடன் பல ஆண்டுகாலம் பணியாற்றி சினிமா திறமையை வளர்த்துக் கொண்டார். புராண படங்களின் பக்கமே திரிந்து கொண்டிருந்த தெலுங்கு சினிமாவை கமர்ஷியலுக்குள் கொண்டு வந்தவர் தாஸ். 1966ம் ஆண்டு லொகுட்டு பெருமுள்ளுகேர்னுகா என்ற படத்தின் மூலம் தனது சினிமா கணக்கை துவக்கினர். 1969ம் ஆண்டு அப்போதைய தெலுங்கு சூப்பர் ஸ்டார் கிருஷ்ணா நடிக்க இவர் இயக்கிய தக்கரி தொங்கா சக்கரி சுங்கா என்ற படம்தான் தாஸை திரும்பி பார்க்க வைத்தது. பக்கா கமர்ஷியல் ஆக்ஷன் படமான இது பெரும்பாலான இந்திய மொழிகளில் டப் செய்யப்பட்டு கலெக்ஷனை அள்ளியது.

விருதுக்காக படம் எடுக்கிறேன். சமுதாயத்தை திருத்த போகிறேன். மெசேஜ் சொல்கிறேன் என்கிற வேலையெல்லாம் தாஸிடம் கிடையாது. பணம் கொடுத்து படம் பார்க்க வரும் ரசிகனை இரண்டறை மணிநேரம் மகிழ்ச்சியுறச் செய்து அனுப்ப வேண்டும், பணம் போட்டு படம் எடுக்கும் தயாரிப்பாளருக்கு லாபம் ஈட்டித் தரவேண்டும் என்பதுதான் அவரது நோக்கம். இதை அவர் பல நேர்காணல்களில் கூறியிருக்கிறார்.

1980களில் தமிழ் சினிமா காதலில் மூழ்கி கிடந்தபோது தெலுங்கிலிருந்து அதிரடி ஆக்ஷன் படங்களை அனுப்பியவர் தாஸ். இயக்கம் கே.எஸ்.ஆர் தாஸ் என்றாலே டப்பிங் பட உலகில் கண்ணை மூடிக் கொண்டு படத்தை வாங்குவார்கள். தமிழகத்தின் கடைக்கோடி ரசிகனுக்கும் தாஸின் பெயர் தெரியும். தமிழில் ஜெய்சங்கர் நடித்த பல ஜேம்ஸ் பாண்ட் பாணி படங்களுக்கும், கர்ணன் இயக்கிய கவ்பாய் பாணி படங்களுக்கும் வாத்தியார் இவர்தான். ரவுடி ராணி, ஜேம்ஸ் பாண்ட் 007, சி.ஜ.டி ராணி, கன்பைட்டர் ஜானி, பெண்ணின் சவால், பில்லா ரங்கா, இப்படித்தான் இருக்கும் தாஸின் படங்கள். 2000மாவது ஆண்டில் அவர் இயக்கிய நகுபம்மாதான் கடைசி படம். தெலுங்கு, கன்னடம், இந்தி மொழிகளில் படம் இயக்கிய தாஸ். தமிழில் படம் இயக்கவில்லை. ஆனால் ரஜினி நடிப்பில் இதாரு ஆசாத்தியாலு, ஆனந்தமுல்ல சவால் என்ற இரு தெலுங்கு படங்களை இயக்கினார். என்.டி.ராமராவ், சிரஞ்சீவி, விஷ்ணுவர்த்தன், மோகன்பாபு என எல்லா சூப்பர் ஸ்டார்களையும் இயக்கினார்.

99 படங்களை இயக்கிய தாஸ்க்கு 100 வது படத்தை இயக்கி சென்ஞ்சுரி அடிக்க வேண்டும் என்ற கனவு மட்டும் நிறைவேறாமல் போய்விட்டது. இப்படிப்பட்ட சாதனையாளனின் மறைவு சாதாரண நிகழ்வாகவே கடந்து போய்விட்டது. இத்தனைக்கும் தென்னிந்திய திரைப்பட இயக்குனர்கள் சங்கத்தின் முதல் உறுப்பினர் அவர். தாஸின் மரணத்தை மறந்தது இருக்கட்டும் அவரை நினைவூட்ட வேண்டிய கடமை தெலுங்கு மற்றும் தமிழ் சினிமாவுக்கு இருக்கிறது.

https://encrypted-tbn3.gstatic.com/images?q=tbn:ANd9GcR0Q7OSAH3SVHHURsBH3F-uIm_zwWM4xzFLc9bW8pC-NJExKslShttps://encrypted-tbn3.gstatic.com/images?q=tbn:ANd9GcRk1M6cS5KlmesQCfgdRG23S5MXaltDS-VLhmYklSAbD_octZvthttps://encrypted-tbn1.gstatic.com/images?q=tbn:ANd9GcRksmj9U4ze8shVK7Hl2u_TMqqYXDCpR AngMTzjrD5wEWH5CEkp6Ahttp://2.bp.blogspot.com/-dFcIn-IFfx0/Tr-RdUYDUzI/AAAAAAAAE0s/idmk6RWCj6Y/s1600/cid-raju.png

gkrishna
15th October 2014, 01:16 PM
கே எஸ் ஆர் தாஸ் இயக்கிய முதல் தெலுகு கவ்பாய் படம் மோசகல்லகு மோசகடு .தமிழ் இல் மோசகாரனக்கு மோசக்காரன் என்று டப் செய்யப்பட்டது .இந்த பாடலை தமிழ் இல் சௌந்தர்ராஜன் பாடியிருப்பார் என்று நினைக்கிறன்

http://www.youtube.com/watch?v=670Xk_Kuz78

Richardsof
15th October 2014, 01:38 PM
http://i58.tinypic.com/e0fpll.jpghttp://i62.tinypic.com/bg4pza.jpghttp://youtu.be/Qk6DQWsacbo

gkrishna
15th October 2014, 01:42 PM
எஸ்வி சார்
நா காமராசனின் அருமையான பாடலை எழுதி உள்ளீர்கள் . இப்ப சி கே ஓடி வருவார் பாருங்க லத்துவிர்காக :)

gkrishna
15th October 2014, 03:32 PM
இன்று காலையில் வந்த மெயில் நண்பர் அனுப்பியது. நல்ல பல கருத்துகள் உள்ளன

ஏன் இந்த மனிதர்கள் பணத்திற்காக இப்படி அடித்துக் கொள்கிறார்கள்..
மனிதன்தானே பணத்தை படைத்தான்..
ஆனால் இன்றைய நிலையில் பணம்தான் மனிதனை ஆட்டி படைக்கிறது..
உறவுகளுக்கு நாம் தந்து வந்த முக்கியத்துவம் பணம் நம் வாழ்வில் வந்ததும் மறைந்து போயிற்று..
நல்வழியிலோ தீயவழியிலோ பணத்தை சேர்ப்பதிலேயே பெரும்பாலான மக்கள் கண்ணும் கருத்துமாய் இருக்கின்றனர்..
கல்வியையும் வியாபாரம் ஆக்கி விட்டார்கள்..
மருத்துவத்தையும் சேவையென்னும் பாதையிலிருந்து வியாபார பாதையில் மாற்றிவிட்டார்கள்..
அன்பு என்பது காணாமலேயே போய்விட்டது..
நன்றாக படிக்கும் ஏழை சிறுவனுக்கு பணம் இல்லை என்னும் காரணத்தால் மேற்படிப்பு படிக்கும் வாய்ப்பு மறுக்கப் படுகிறது..
பணம் தந்தால்தான் இன்றைய அரசு அலுவலகங்களில் நமது வேலைகள் சீக்கிரம் நடைப்பெறுகிறது..
பணம் இருந்தால்தான் உறவுகளும் நம்முடன்..
பணம் இல்லையென்றால் உறவுகள் நம்மை திரும்பிகூட பார்ப்பதில்லை..
ஒரு சில நேரங்களில் காதலும்கூட பணத்தை பார்த்துவருவது வேதனையான விஷயம்..
பணம் இருப்பவர்களிடம் அதிகமான நண்பர்கள் இருப்பார்கள்..
அது அவருக்கு தெரியாது வெறும் பணத்திற்காகவே அவர்கள் தன்னை சுற்றி இருக்கின்றனர் என்று..

இன்னும் இப்படி நீண்டுக் கொண்டிருக்கிறது இந்த பணப் பேய்களின் பட்டியல்..

பணம் என்பது உற்று நோக்கினால் வெறும் காகிதம் மட்டுமே.. காகிதத்திற்கு தரும் மதிப்பும் மரியாதையும் இந்த பாவப்பட்ட மனிதனுக்கு கிடைப்பதில்லை..
பணம் சம்பாதிப்பதையே தன் வாழ்நாளின் குறிக்கோளாக வைத்திருக்கின்றனர் பலர் இங்கே..
மனிதர்களையும் மனித உணர்வுகளையும் கொஞ்சம் மதிக்க கற்றுக் கொள்ளுங்கள்..
ஒரேயொரு எடுத்துக்காட்டு சொல்ல விரும்புகிறேன்..
நாம் இறந்துவிட்டால் நம் பணம் நம்மோடு வரப்போவதில்லை..
நம்மை இடுகாட்டிற்கு எடுத்து செல்லப்போவது மனிதர்கள்தான்..
நீ சேர்த்துவைத்த பணம் இல்லை..
வாழ்வில் நல்ல மனிதர்களை சம்பாதிக்க கற்றுக்கொள்..

அதிகமான மனிதர்களை தெரிந்திருப்பவன் அதிர்ஷ்டக்காரன் இல்லை..
நீ அறிந்திருப்பவர்களில் எத்தனைப்பேர் உன்னிடம் உண்மையாக இருக்கிறார்கள் என்பதே முக்கியம்..

வாழ்க்கையை கண் திறந்துப் பாருங்கள்.. பணம் என்னும் கோட்டையிலிருந்து வெளியே வாருங்கள்.. வாழ்வின் பயணத்தை தொடங்குங்கள் ஒரு புத்தம்புது
மனிதனாய்.....

வாழ்க மனிதநேயம்..

அன்புடன் -

நினைவிருக்கிறதா இந்த பாடல்.. இல்லையெனில் இனியாவது நினைவிருக்கட்டும்...

நடிகர் திலகம் நடித்த முக்தா ஸ்ரீனிவாசன் இயக்கத்தில் மெல்லிசை மன்னர் இசையில் வெளிவந்த அந்தமான் காதலி
திரைபடத்தில் இடம் பெற்ற ஒரு அருமையான பாடல். கண்ணதாசனின் அனுபவத்தில் விளைந்த கவித்துவமான வரிகள்

பணம் என்னடா பணம் பணம்...
குணம் தானடா நிரந்தரம்...

பணம் என்னடா பணம் பணம்
குணம் தானடா நிரந்தரம்
பணம் என்னடா பணம் பணம்
குணம் தானடா நிரந்தரம்
என்னிடத்தில் இல்லாததா
நல்ல விலை பேசாததா
அத்தனையும் பெற்றேனடா
தத்துவத்தை கற்றேனடா
இரக்க மனத்தை கெடுக்கும் அரக்கன்
பணம் பணம் பணம் ஆ...

பணம் என்னடா பணம் பணம்
குணம் தானடா நிரந்தரம்

இசை சரணம் - 1

சொந்தமில்லை பந்தமில்லை ஏறி மிதிக்கும்
தோள் மீது ஏறி நின்று காதை கடிக்கும்
பல கோடி சேர்த்தாலும் மேலும் நினைக்கும்
படுபாவி என்கின்ற பேரை கொடுக்கும்
பணத்தாலே நல்ல உள்ளம் பேயானது
குணத்தாலே அது மீண்டும் தாயானது

பொன்னுலகில் நீராடினேன்
கண்ணிழந்து கொண்டாடினேன்
மன்னனுக்கும் மேலாகினேன்
தன்னந்தனி ஆளாகினேன்
இரக்க மனத்தை கெடுக்கும் அரக்கன்
பணம் பணம் பணம் ஆ...

பணம் என்னடா பணம் பணம்
குணம் தானடா நிரந்தரம்

இசை சரணம் - 2

காசு என்ற சொல்லின் பொருள் குற்றம் என்பது
காசு வர ஓடி விடும் சுற்றம் என்பது
நாணயம் என்றால் அதன் பேர் நேர்மை என்பது
நல்லவர்க்கு காசு பணம் தேவையற்றது
பகவானின் மணியோசை கேட்கின்றது
பணம் என்னும் பேராசை மறைகின்றது

நல்ல புத்தி யார் தந்தது...
பிள்ளையிடம் தான் வந்தது...

எந்த நிலை வந்தால் என்ன
நல்ல வழி நான் செல்வது
இரக்க மனத்தை கெடுக்கும் அரக்கன்
பணம் பணம் பணம் ஆ...

பணம் என்னடா பணம் பணம்
குணம் தானடா நிரந்தரம் ( இசை )


http://www.youtube.com/watch?v=QBVKYfEyMeo

madhu
15th October 2014, 04:03 PM
பொங்கும் பூம்புனல்

சி.க.சார் இது உங்களுக்காகத் தான்...

அதே நீதி பிழைத்தது படத்தில் வாணி ஜெயராம் குரலில் .. துள்ளியாட வைக்கும் பாடல்..
சிக்கு சிக்கா ...
... கட்டி வைச்த தேரு .. இந்த கட்டழகைப் பாரு ....பாட்டு வரிகளெல்லாம் ஒரு மாதிரியாகத் தான் இருக்கு..
வாணி செம மூடில் பாடிய பாடல்..


சிக்காவுக்கு வீடியோ பாக்காமல் போனால் ஏது தூக்கம் ?

http://youtu.be/RIolmtI-Js4

madhu
15th October 2014, 04:07 PM
பொங்கும் பூம்புனல்

ரோசா மலரே அழுவக் கூடாது... ஜெயச்சந்திரனின் குரலில் ... நெஞ்சைத் தொடும் இனிய பாடல்..
சங்கர் கணேஷ் இசையில்..


http://youtu.be/9nLgjU6jyDI

vasudevan31355
15th October 2014, 04:48 PM
இன்றைய ஸ்பெஷல் (94)

மூவாயிரம் முத்தான பதிவுகள் அளித்த கோபால் அவர்களுக்கு என் அன்புப் பரிசு

1969-களில் ஒரு பாடல். அப்போதும் கூட அது அபூர்வ பாடல்தான். வழமை போல் சிலோன் ரேடியோ புண்ணியம் கட்டிக் கொண்டது.

துள்ளல் இசையுடன் உற்சாகம் கொப்பளித்த அந்தப் பாடல் முதல் முறை கேட்டவுடன் வஜ்ரம் போல் அப்படியே என் மனசுக்குள் 'ப்பச்சக்' என்று குந்திக் கொண்டது. அது என்ன படம் ஏது படம் என்று தெரியாது. ஷார்ட்வேவ் (SW2) அலைவரிசைகளில் 'இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத் தாபனம்' பட்டும் படாமலும், விட்டும் விடாமலும் கிடைக்கும் போது, இந்தப் பாடல் போடும் போது, அப்படியே காதை ரேடியோ பொட்டியின் ஸ்பீக்கரோடு ஸ்பீக்கராக ஒட்டி வைத்து அந்த மூன்று நிமிடங்களுக்கு மேலாக கேட்டு அனுபவித்த சில நாட்களின் இன்பங்கள் இருக்கிறதே. வார்த்தைகளில் கொட்டி விட முடியாது அதை.

அப்புறம் இந்தப் பாடல் கேட்க முடியாத பாடலாகி விட்டது. ஆனால் பசுந்தாள் உரம் போட்ட மாமரச் செடிபோல மனது உள்ளேயே இந்தப் பாடலின் தாக்கம் ராட்சஷத்தனமாக என்னையுமறியாமல் வளர்ந்து கொண்டிருந்தது.

ஒருமுறை கண்ணதாசன் அவர்களின் பாடல்களின் தொகுப்பு கொண்ட புத்தகம் ஒன்றை 1986 இல் படிக்க நேரிட்டது. அதில் கண்ணதாசனின் அபூர்வ பாடல்கள் சில தென்பட்டன. அதில் இந்தப் பாடலும் பதிக்கப்பட்டிருந்தது. அப்போதுதான் இந்தப் பாடல் இடம் பெற்ற படம் 'ஓடும் நதி' என்று தெரிந்து கொண்டேன்.

ஏற்கனவே 'ஓடும் நதி' என்ற படம் பற்றி கேள்விப்பட்டு இருக்கிறேன். ஆனால் அந்த அபூர்வமான படத்தை இன்றுவரை என்னால் பார்க்க முடியவில்லை. அந்தப் படத்தில் ரவிச்சந்திரன், சரோஜாதேவி, நாகேஷ் போன்றவர்கள் நடித்திருப்பார்கள் என்று படித்திருந்தேன் நூலகங்களில். இயக்கம் தாதாமிராசி என்றும், இசை 'மெல்லிசை மன்னர்' என்றும், பாடல்கள் எழுதியது கவிஞர் என்றும் தெரிந்து கொண்டேன்.

அடுத்த நிமிடமே ஆடியோ ரிகார்டிங் கடைக்கு சென்று 'இந்தப் பாடல் கிடைக்குமா? அவசியம் வேண்டுமே" என்றேன். ம்... கடைகாரர் கைவிரித்து விட்டார். 'விழுப்புரம் சென்றால் அங்கொரு கடையில் கிடைக்கலாம்' என்று அட்ரஸ் வேறு தந்து விட்டார். அடுத்த நாள் விழுப்புரம் பயணித்து அந்த குறிப்பிட்ட கடையில் இந்தப் படத்தின் எல்லாப் பாடல்களையும் ரிகார்ட் செய்து கொண்டு வந்து விட்டேன். என் ஆசை தீர அன்று முழுதும் இந்தப் பாடலைக் கேட்டு கேட்டுக் களித்தேன். ஒன்றிரண்டு வரிகள் மட்டுமே வானொலியில் கேட்டு தெரிந்த எனக்கு பாடல் முழுதும் அன்று மனப்பாடம் ஆயிற்று. (இந்தப் பாடலை நான் திரும்பத் திரும்ப கேட்டதனால் என் தந்தை கோபம் வந்து தாங்க முடியாமல் பக்கத்து டீக்கடைக்கு ஓடியே போய்விட்டார். ஒரு இரண்டு மணி நேரம் சென்று திரும்பி வந்தும் இதே பாடலைக் கேட்டு டென்ஷன் ஆகி விட்டார். அப்புறம் மனமில்லாமல் இப்பாடலை நிறுத்தினேன்)

அப்புறம் வீடியோக்களின் காலம் வந்ததும் இந்தப் படத்தின் கேசட் தேடித் தேடி அலைந்தேன். இப்பாடல் படத்தில் எப்படி இருக்கும் என்று தெரிந்து கொள்ள ஆர்வம். ஆனால் ஏமாற்றம். 60 வருட தமிழ்ப் படங்கள் எல்லாம் ஈஸியாகக் கிடைத்தன. 1969 -ல் வெளிவந்த இப்படம் இன்றுவரை எனக்குக் கிடைக்கவில்லை.

கோபாலின் நட்பு கிடைத்ததும் நடிகர் திலகத்தைப் பற்றிய பேச்சுக்களை முடித்துவிட்டு பிறர் நடித்த பாடல்களைப் பற்றி மணிக்கணக்கில் பேசுவோம். இருவரின் ரசனை வேறு ஒரே ராஜபாட்டையில் பயணித்ததால் இந்தப் பாடல் பற்றி விரைவிலேயே பேச்சு வந்தது. அலாவுதீன் பூத விளக்கு கிடைத்தது போல ஒருநாள் இருவரும் இந்தப் பாடலைப் பற்றி பேசிப் பேசி மகிழ்ந்தோம். இந்தப் பாடல் 'எனக்குத்தான் சொந்தம்' என்று அவர் சொந்தம் கொண்டாட, 'இல்லை இல்லை எனக்குத்தான் உரிமை' என்று நான் ராம் ஜெத்மாலனியாக வாதாட, இன்பச் சண்டை இனிதே இன்றுவரை நடந்து வருகிறது எங்களுக்கிடையில்.

தினமும் 'யூ டியூபி'ல் இப்பாடலைக் search செய்வேன். அப்படி சமீபத்தில் தேடிய போது யாரோ ஒரு புண்ணியவான் இந்தப் பாடலை அப்லோட் செய்து வைத்திருந்தார். அந்த மனிதரின் பெயரைத் தொட்டு ஒரு 'உம்மா' தந்துவிட்டு, அவரை வாயார வாழ்த்திவிட்டு, பாடலை அப்படியே 'லபக்'கிக் கொண்டேன். கோபாலின் 3000 பதிவுகளுக்காக பரிசாக கொடுக்க நினைத்து அது இன்று நிறைவேறியது.

இந்தப் படத்தின் பிற பாடல்களும் ஒன்றுக்கொன்று சளைத்தவை அல்ல.

1. சுசீலாம்மா பாடும்

'காலமகள் மடியினிலே ஓடும் நதி'

என்ற பாடல் அப்படியே உள்ளத்தை பனிக்கட்டியாய் உருக வைக்கும். இது அப்போது சூப்பர் ஹிட் பாடல்.

2. 'குன்றத்தில் கோவில் கொண்ட நம்பி நம்பி' என்ற இன்னொரு அருமையான பாடல். சுசீலா பாடியது.

3. 'தங்கச் சலங்கை கட்டி தழுவுது தழுவுது பூச்செண்டு'

என்ற இன்னொரு அதியற்புதமான பாடல் உண்டு. கோபாலுக்கும், எனக்கும் இதுவும் மிக மிகப் பிடித்த பாடல். இந்தப் பாடலை எனக்கு ஞாபகப்படுத்தியவர் 'கோ' தான். தேங்க்ஸ் கோ.

4. அடுத்தது தான் நான் பெரிய பீடிகை போட்டு உங்களை 'சொல்லித் தொலையேண்டா' என்று நீங்கள் என்னை அடிக்க வரும் 'இன்றைய ஸ்பெஷல்' பாடல்.

http://i.ytimg.com/vi/Cb7Aiy58Wfc/hqdefault.jpg

'வா அந்த உலகத்தின் ஒரு பக்கம் இங்கே
காதல் பருவத்தின் மறுபக்கம் இங்கே'

இந்த வரிகளை டைப் செய்யும் போதே மனவலிகள் அப்படியே கற்பூரமாய் கரைந்து போகின்றன. ஒன்றுமே இல்லைதான் இந்தப் பாடலில். ஆனால் இந்தப் பாடலில் விட்டலாச்சாரியாவின் மந்திர தந்திரங்கள் போல ஏதோ ஒரு அசாத்திய ஈர்ப்பு குடிகொண்டிருக்கிறது. அது என்னவென்றுதான் தெரியவில்லை.

'வா' என்று 'பாடகர் திலகம்' முதல் எழுத்தை ஒரு இழுப்பு இழுப்பு ஆரம்பித்து பாடத் தொடங்கும் போதே செத்தான் ரசிக்கத் தெரிந்த ஒவ்வொருத்தனும்.

அப்புறம் சுசீலாவும், டி.எம்.எஸ்ஸும் சும்மா விசிறி வீசியடிக்கும்,

அந்த

'பாயப்ப பாயப்ப பய பாயப்ப பாயப்ப பய'

(சுசீலாம்மா சில பாடல்களை ரொம்ப ரொம்ப அழகாகப் பாடுவார். அப்படிப்பட்ட ஒரு சில பாடல்களில் இது ஜனரஞ்சக உச்சம் என்று அடித்துச் சொல்வேன்)

அடப் போங்கப்பா! கர்ணன் காமெராவில் மாட்டி பறக்கும் 'கங்கா' குதிரை போல மனசு அப்படியே பறக்கும் பாருங்க.

பல்லவி முடிந்ததும் அந்த 'விறுவிறு' 'கிடுகிடு' வென ஒலிக்கும் புல்லாங்குழல் பிட் இடையிசை... அதை தொடர்ந்து சில வினாடிகளே வரும் அந்த ஷெனாயின் பங்கு. பட்டிக்காட்டான் 'ஒய்ங்க்' என்ற சத்தத்தை கேட்டுவிட்டு, எங்காவது ஏரோபிளேன் தென்படுகிறதா என்று கைகளை கண்களுக்கு மேல் சல்யூட் போட்டது போல் வைத்து, சூரிய வெளிச்சம் கண்களைக் கூச, வானத்தில் தேடிக் கண்டுபிடித்து 'அதோ பார்ரா 'ஏர்ர்ரோபிளேனு' என்று அதே வானத்துக்கும் பூமிக்கும் துள்ளிக் குதித்து குதூகலமடைவானே... அந்த குதூகலத்தையும் தாண்டிய சந்தோஷத்தை அளிக்கும் அந்த ஷெனாய் ஒலி.

இப்படி பாடல் முழுதும் இனம் காண முடியாத அற்புதம் பரவிக் கிடக்கும்.

'யோக மேடையில் மௌன நாடகம்'
ஆடிப் பார்க்கலாம் வா'

முதல் சரணத்தின் இரண்டாம் வரிகள் முடிந்ததும் 'டங் டங் டங் டங் டங்' என்று கிடார் இசை பின்னி இழையுமே! அப்படியே உச்சி முதல் உள்ளங்கால் வரை ஆனந்த கங்கை ஓடும்.

வழக்கமான சுறுசுறு ரவி. அதே குறும்பு. அதே 'கலகல'. அதே உடல் நெளிவு டான்ஸ். சற்றே சோகமும், மகிழ்வும் கலந்து சுடிதாரில் 'சிக்'கென்று அழகு சரோஜாதேவி. வெளியில் பாலையா.

ஒரு எழுத்தை கூட மாற்றி சாமர்த்தியமாக பாடலை எழுதிய கவிஞர். கண்டு பிடியுங்கள் பார்ப்போம்.

'என்னடா இருக்கிறது இந்தப் பாடலில்!? சாதாரண ஒரு பாடல் போலத்தானே இருக்கிறது... இதற்கு இவ்வளவு அமர்க்களமா?" என்று கண்டிப்பாக நீங்கள் நினைக்கலாம். ஒரு 3 தடவை இடைவிடாமல் நன்கு ரசித்து கேளுங்கள். என்னுடன் இசைப் பைத்தியக்கார இன்ப ஹாஸ்பிட்டலுக்கு என் பக்கத்துக்கு பக்கத்து பெட்டில் உங்களுக்கு இடம் கிடைக்கும். ரிசர்வுக்கு முந்துங்கள்.:) ஏனென்றால் என் பக்கத்து பெட்டில் கோபால் அடமிட் ஆகி ரொம்ப நாளாச்சு.:)

இனி பாடலின் வரிகள்

வா அந்த உலகத்தின் ஒரு பக்கம் இங்கே
காதல் பருவத்தின் மறுபக்கம் எங்கே
அந்த உலகத்தின் ஒரு பக்கம் இங்கே
காதல் பருவத்தின் மறுபக்கம் எங்கே

பூவைப் பார்ப்பதே வாசமா
ஆசைப் பார்வையால் தீருமா
பூவைப் பார்ப்பதே வாசமா
ஆசைப் பார்வையால் தீருமா...ஆ

பாயப்ப பாயப்ப பய பாயப்ப பாயப்ப பய
பாயப்ப பாயப்ப பய பாயப்ப பாயப்ப பய
பாயப்ப பாயப்ப பய பாயப்ப பாயப்ப பய
பாயப்ப பாயப்ப பய பாயப்ப பாயப்ப பய

(புல்லாங்குழலும், ஷெனாயும் பின்னி எடுக்கும்)

ஜன்னல் இல்லாத மாடி வீட்டிலே
மன்னன் பந்தாட வேண்டும்
ஜன்னல் இல்லாத மாடி வீட்டிலே
மன்னன் பந்தாட வேண்டும்

சாயும் கண்ணாடி மேனி மீதிலே
தங்கம் கொண்டாட வேண்டும்
சாயும் கண்ணாடி மேனி மீதிலே
தங்கம் கொண்டாட வேண்டும்

மூடும் கண்ணிலும் முன்னால் தரும்

மூன்று பாஷையும் தன்னால் வரும்

மூடும் கண்ணிலும் முன்னால் வரும்

மூன்று பாஷையும் தன்னால் வரும்

யோக மேடையில் மௌன நாடகம்
ஆடிப் பார்க்கலாம் வா (கிடார் பின்னல்)

வா அந்த உலகத்தின் ஒரு பக்கம் இங்கே
காதல் பருவத்தின் மறுபக்கம் எங்கே

அந்த உலகத்தின் ஒரு பக்கம் இங்கே
காதல் பருவத்தின் மறுபக்கம் எங்கே

பூவைப் பார்ப்பதே வாசமா
ஆசைப் பார்வையால் தீருமா

பூவைப் பார்ப்பதே வாசமா
ஆசைப் பார்வையால் தீருமா...ஆ

பாயப்ப பாயப்ப பய பாயப்ப பாயப்ப பய
பாயப்ப பாயப்ப பய பாயப்ப பாயப்ப பய
பாயப்ப பாயப்ப பய பாயப்ப பாயப்ப பய
பாயப்ப பாயப்ப பய பாயப்ப பாயப்ப பய

ஹாஹஹாஹஹாஹஹாஹா
லாலலாலலாலலால டாடாடடடாஜா

கொஞ்சும் பெண்ணோடு பேசும் வேளையில்
மஞ்சம் திண்டாட வேண்டும்
கொஞ்சும் பெண்ணோடு பேசும் வேளையில்
மஞ்சம் திண்டாட வேண்டும்

வஞ்சம் இல்லாமல் வாடைக் காற்றிலே
ஒன்றில் ஒன்றாட வேண்டும்
வஞ்சம் இல்லாமல் வாடைக் காற்றிலே
ஒன்றில் ஒன்றாட வேண்டும்

கேள்வி ஞானத்தில் வாராதது

கேட்டுப் பார்த்த பின் தீராதது

கேள்வி ஞானத்தில் வாராதது

கேட்டுப் பார்த்த பின் தீராதது

போதும் என்பது இல்லையென்று
நாம் வாழ்ந்து பார்க்கலாம் வா

வா அந்த உலகத்தின் ஒரு பக்கம் இங்கே
காதல் பருவத்தின் மறுபக்கம் எங்கே
அந்த உலகத்தின் ஒரு பக்கம் இங்கே
காதல் பருவத்தின் மறுபக்கம் எங்கே

பூவைப் பார்ப்பதே வாசமா
ஆசைப் பார்வையால் தீருமா
பூவைப் பார்ப்பதே வாசமா
ஆசைப் பார்வையால் தீருமா...ஆ

பாயப்ப பாயப்ப பய பாயப்ப பாயப்ப பய
பாயப்ப பாயப்ப பய பாயப்ப பாயப்ப பய
பாயப்ப பாயப்ப பய பாயப்ப பாயப்ப பய
பாயப்ப பாயப்ப பய பாயப்ப பாயப்ப பய


http://www.youtube.com/watch?v=Cb7Aiy58Wfc&feature=player_detailpage

madhu
15th October 2014, 05:41 PM
வாசு ஜி..

பி.எம். பாருங்களேன் !

vasudevan31355
15th October 2014, 06:32 PM
வாசு ஜி..

பி.எம். பாருங்களேன் !

மதுஜி! பதில் போட்டுட்டேன். நன்றி!

vasudevan31355
15th October 2014, 06:37 PM
கிருஷ்ணா!

கே.எஸ்.ஆர் தாஸ் படங்கள் ஒவ்வொன்று ஜெட் வேகம். படம் போவதே தெரியாது. லாஜிக் இருக்கோ இல்லையோ என்ஜாய் பண்ணிவிட்டு வரலாம்.

gkrishna
15th October 2014, 06:43 PM
வாசு சார்
மாலை வணக்கம் . ஓடும் நதி பாடல் வழக்கம் போல் :) அருமை.
சௌந்தர்ராஜன் குரலுக்கு ஈடு கொடுக்கும் சுசீலாவின் குரல். நீண்ட நாள் மறந்து இருந்த பாடல் நினைவு படுத்தி விட்டீர்கள்.
1977 கால கட்டத்தில் ரவி நடித்து நீ வாழ வேண்டும் என்று ஏதாவது திரைப்படம் வந்ததா ? ரவியின் திரைப்பட வரிசையில் குறிப்பிட்டு உள்ளார்கள் .இந்த படத்தை பற்றி நினைவு இருந்தால் சொல்லவும்

vasudevan31355
15th October 2014, 07:30 PM
https://cinemachaat.files.wordpress.com/2014/07/pistolwali.jpg

vasudevan31355
15th October 2014, 07:31 PM
K.S.R.doss style

http://1.bp.blogspot.com/-1pXJvDh7aNQ/TcCSqI_a3_I/AAAAAAAANxQ/qzuFedAW42Y/s1600/Mosagalaku_Mosagadu-00085.jpg

vasudevan31355
15th October 2014, 07:32 PM
மோசக்காரனுக்கு மோசக்காரன்

http://4.bp.blogspot.com/-HTg10e3c-DE/TcCP8C8FtEI/AAAAAAAANvo/M8O5AhL3T0o/s1600/Mosagalaku_Mosagadu-00257.jpg

rajeshkrv
15th October 2014, 08:56 PM
வாசு ஜி,
ஓடும் நதி பாடலை நானும் சமீபத்தில் யூடியூபில் கண்டு மகிழ்ச்சி அடைந்து முகனூல் இசையரசி குழுமத்தில் பதிவு செய்தேன்.. எனக்கு பிடித்த பாடல்

குன்றத்தில் கோயில் கொண்ட நம்பி நம்பி, காலமகள் மடியினிலே எனக்கு மிகவும் பிடித்த பாடல்கள் ..

இந்த டூயட் பாடலும் அருமை .. வித்தியாசமான பாடல் இசையரசியும், ஏழிசை வேந்தரும் சும்ம பின்னி பெடலெடுத்திருப்பார்கள் :thumbsup:

பதிவிற்கு நன்றி நன்றி

chinnakkannan
15th October 2014, 09:55 PM
ஹாய் குட் ஈவ்னிங்க் ஆல்..

ஹோம் ஒர்க் நெறய்ய இருக்கே..

முதலில் ராகவேந்த்ரா சார்.. மிக்க நன்றி.. எனக்கு டெடிகேட் பண்ண பாட்டுக்கு...ஒர்ரே சிரிப்பு+சந்தோஷம் (எனக்கில்லை விஜிக்கும் அருணாவுக்கும்.. பார்த்த எனக்குக் கொஞ்சம் சோகம் தான்).. மதுண்ணா வீடியோவிற்கு தாங்க்ஸ் கொஞ்சம் வெவகாரமாத் தான் இருக்குங்க.. சரின்னு பாட் உள்ற போய் பார்த்தேனா..

ஹை…கோல்கேட் சிரிப்பு விஜயகாந்த் நாவல்பழக் கண்ணு அருணா..

சிக்கு சிக்காம் சிக்கா சிக்காம் சிக்கிடுச்சாம்
சின்ன மச்சான் கண்ணு ரொம்ப சொக்கிடுச்சாம்..
தாவி உன்னைப்பார்க்கும் பருவ மனசு கேக்கும்
பார்வை தந்த ஏக்கம் பொண்ணுக்கேது தூக்கம்..
தனியா வரவா ராசா ( வந்துட்டாங்களே..)

கண்ணன் கூட கருப்பு நிறம் அழகில்லையா கோபிகள் மயங்கலையா..
கண்ணில் அன்பு இருந்தா ஒரு கரியும் வைரம் தானே (?!)
காதல் வந்த நெஞ்சிலே கனவு தோன்றுமே..

இரவு வந்தா நினைப்பு எல்லாம் ஒம்மேல் தான் நினைச்சா சந்தோஷம் தான்
கட்டி வச்ச தேரு இந்தக் கட்டழகைப் பாரு (தேருஎப்படி ஒய்ட் அண்ட் ஒய்ட்ல இருக்கும்?) காதலிச்சா பாவமா கன்னி தோஷமா..

நினைச்சு இங்கே தனிச்சிருக்கு துடிச்சுக்கிட்டு உன்னையே நெனச்சுக்கிட்டு
தானே வந்து நின்னு துணை தேடும் சின்னப் பொண்ணு..(ம்ம்ஹூம்ம்.. பெருமூச்சு!)
தெரிஞ்சுக்காத பாவமா..தெரிஞ்சும் வேஷமா..
(பார்த்துப் பார்த்து கேட்டுக் கேட்டு சிரித்து சிரித்துடைப்படிச்சேன்.. புலியூர் சரோஜா டான்ஸ் தெரிகிறது..ரூம்போட்டு உட்கார்ந்து பாட் எழுதினது யாரு?)

சிக்கு சிக்காம் சிக்கிக்கிடுச்சு மனசு ராகவேந்திரா சார் அருளாலே+ மதுண்ணாவின் வழிமொழிதலாலே.. நீதி பிழைச்சதான்னு தெரியாது..மனசு சொக்கிடுச்சு..

**
'//இல்லை இல்லை எனக்குத்தான் உரிமை' என்று நான் ராம் ஜெத்மாலனியாக வாதாட, இன்பச் சண்டை இனிதே இன்றுவரை நடந்து வருகிறது எங்களுக்கிடையில்.// வா அந்த உலகத்தின் ஒரு பக்கம் இங்கே
காதல் பருவத்தின் மறுபக்கம் எங்கே//போதும் என்பது இல்லையென்று
நாம் வாழ்ந்து பார்க்கலாம் வா // வாவ் .. சூப்பர் பாட்டு வாசு சார்.. வழக்கம்போல நல்ல விவரணை…. நான் முன்பே பாடல் கேட்டிருக்கிறேன்..சமீபத்திய குறைந்தபட்சம் பதினைந்து வருடங்களில் இந்தப் பாட்டு கேட்டதில்லை.. இப்போதுதான் உங்களினால் வீடியோவாகவும் பார்க்கிறேன்.. ஃபர்ஸ்ட்களாஸ்..ஒண்ணாங்க்ளாஸ்.. தாங்க்ஸ் அகெய்ன்..

*
ரோசா மலரே அழுவக் கூடாது – ஆடியோகொடுத்த ராகவேந்திராசாருக்கும் வீடியோ கொடுத்த மதுண்ணாவிற்கும் மறுபடி ஒரு ஓ..என்னாது… சந்திரசேகர் விஜயசாந்தியா .ம்ம் என்னா ரசனையோ

*
கிருஷ்ணா ஜி பணம் என்னடா பணம் பணம் பாட்டுக்கு தேங்க்ஸ்..இதோ பின்பக்கமா ஓடி வந்துக்கிட்டே இருக்கேன்.. பாராட்டியதற்கு மிக்க நன்றி..

*

எஸ்வி.சார்.. நா.காமராசன் நல்ல கவிஞர்..போய்வா நதியலையே பிடிக்க்கும்.. கனவுகளே பாட்டிற்கும் தாங்க்ஸ்.. கைவளை விலங்குகள் உடையட்டுமே அங்கு காதல் சிறகுகள் உயரட்டுமே..ம்ம் நல்ல லைன்ஸ்..பாவாடை சட்டையில் இருந்த அடக்கம் ஸாரி கட்டியவுடன் காணமல் போய்விட்டது.. காவியம் தொட்டிலில் தவழட்டுமே சரி..எதுக்கு தாவிக் குதிக்கணும் இப்படி லத்து?!

*கே.எஸ். ஆர் தாஸ் பதிவுக்கு தாங்க்ஸ்.. நான் ஏதாவது அந்த டப்பிங்க் படம் பார்த்திருக்கேனா என்ன (இந்தக்காலத்தில் வருபவற்றைப் பார்த்திருக்கிறேன்..எனக்கு மிக இஷ்டலுவாக்கும்) மஞ்சள்பேண்ட் ஹீரோ செகப்பு பேண்ட் ஹீரோயின்.. இதில் குட் பேட் அக்ளியின் ட்யூன் ஆரம்பத்தில் தென் காஷ்மீரா சிம்லாவா..ம்ம்

*
ராஜேஷ் கண்ணா! வளர தாங்க்ஸும்மா. பாராட்டியதற்கு..
//“குருவாயூருக்கு வாருங்கள் ஒரு குழந்தை சிரிப்பதை பாருங்கள் “ என்ற பாடல். மெல்லிசை மன்னரின் இசை, கவியரசரின் வரிகள், இசையரசியின் குரல் என இந்த பாடல் என்றுமே மறக்க முடியாத பாடல்.// இந்தப் பாட்டு எனக்கும் ரொம்பப்பிடிக்குமாக்கும்.. அகெய்ன் தாங்க்ஸ்..

தேவா சீரீஸ் தான்- ஓ ஓ மதுபாலா நல்ல பாட்டு தான்..நான் இப்பதான்கேட்டு, பார்க்கிறேனாக்கும்.. யாராக்கும் அது..ம்ம் ராஜேஷைக் கேட்க வேண்டாம்.பாவம் அவர்க்குத் தெரியாது! வானத்துல வெள்ளி ரதம்..பாட்டும் ஓகே..ஆனா ராமராஜன் கெளதமி.. ம்ம் ராமராஜன் கொடுத்துவைத்தவர்…தொடருங்கள்..அதென்ன மக்கள்ஸ்லாம் கானா பிடிக்காதுங்கறாங்க..சின்னக்கண்ணா எழுதின கானா நினைவிருக்கா ராஜேஷ்.. தேடிப் போடறேன்!

பொங்கும்பூம்புனலில் பாடல்களுக்கென்றே ஒரு சனிக்கிழமை ஒதுக்கலாம் என்றிருக்கிறேன் ராகவேந்தர் சார்..மிக்க நன்றி..

ஹோம் ஒர்க் பண்ணி முடிக்கவே டைம் ஆகிடுச்சு..மி. நை ம வேற எழுதணும்..ஆமா… நான் தொடர் ஆரம்பிச்சாலும் ஆரம்பிச்சேன் அதே டைப்பில பாட்டு போட்டா எனக்கு மிச்சமிருக்காதே!:)

சரி போய்ட்டு சற்று நேரத்தில் வாரேன்..

RAGHAVENDRA
15th October 2014, 11:47 PM
வாசு சார்
இது நியாயமா...
'ஓடும் நதி'யில் என்னைத் தவிக்க விட்டு விட்டு நீங்களும் கோபாலும் மட்டும் கரை கடந்து விட்டீர்களே..
நான் என்ன பாவம் செய்தேன்...

காலமகள் வழியினிலே ஓடும் நதியினில் நீந்தி வந்து தங்களுடன் இணைந்து விடுவேன்...

...

வா அந்த உலகத்தின் ஒரு பக்கம் பாட்டைப் பொறுத்த வரையில் நான் சென்னை வானொலி நிலையத்தை கோயில் கட்டி கும்பிடுவேன்... இப்படம் ஓடிய கால கட்டத்தில் ஒவ்வொரு நாளும் மதராஸ் ஏ அலைவரிசையிலும் இரவு 7 மணி சுமாருக்கு மதராஸ் பி அலைவரிசையிலும் இரவு விவித் பாரதியிலும் (அப்போது தான் விவித்பாரதி தமிழ் ஒலிபரப்பு ஆரம்பித்த புதிது. ஏப்ரல் 1969ல் தமிழ்ப்புத்தாண்டு நாளன்று ஆரம்பிக்கப் பட்டது.) சக்கைப் போடு போட்ட பாடல். அப்போதெல்லாம் படம் வெளியாகும் முன் விவித் பாரதியில் பாடல்களை ஒலிபரப்ப ஆரம்பித்தார்கள். விவித்பாரதிக்கு முன்னால் படம் வெளியான பிறகு தான் மதராஸ் வானொலியில் படப்பாடல்கள் ஒலிபரப்பாகும். சிலோன் ரேடியோவில் மட்டும் தான் முன்பாகவே ஒலிபரப்புவார்கள். அதுவும் புதியதாக ஒரு பாடலை அறிமுகம் செய்ய வேண்டுமென்றால் அதை பொங்கும் பூம்புனல் நிகழ்ச்சியில் தான் அறிமுகம் செய்வார்கள்.
இந்த ஓடும் நதி பாட்டைப் பொறுத்த வரையில் விவித்பாரதியில் அதிகம் ஒலிபரப்பினார்கள். அப்போதெல்லாம் சென்னை மற்றும் ஒரு சில ஊர்களில் மட்டும் தான் விவித்பாரதியின் ஒலிபரப்பைக் கேட்க முடியும். செங்கல்பட்டைத் தாண்டினால் அதிகம் சிக்னல் கிடைக்காது. சிலோன் ரேடியோவின் புண்ணியம் தான். அதே போல் சிலோன் ரேடியோவின் ஒலிபரப்பு சென்னைக்குக் கேட்காது. காலையில் ஒரு சில மணி நேரம், மாலையில் ஒரு சில மணி நேரம் மட்டுமே கேட்கும். ஷார்ட் வேவ் சிற்றலை ஒலிபரப்பில் தான் சிலோன் ரேடியோ கேட்கும். ஆனால் தெளிவாக இருக்காது.

அப்படி விவித்பாரதியில் இப்பாடல் சூப்பர் டூப்பர் ஹிட்டாகி அன்று முதல் இன்று வரை என் நெஞ்சில் நிரந்தரமாகக் குடிகொண்டதுடன் நம்மையெல்லாம் தீவிர எம்எஸ்வி வெறியர்களாகவும் ஆக்கி விட்டது.

விவித்பாரதி ஆரம்பித்த புதிதில் காலை 9.30 முதல் 10.00 வரை உங்கள் விருப்பம், மதியம் 2.30 மணிக்கு திரை அமுதம், மாலை 5.30 மணி முதல் 6.30 மணி வரை மாலை இசை, இரவு 7.45 மணி முதல் 9.00 மணி வரை தேன்கிண்ணம், 9.00-9.15 மணி வரை வண்ணச்சுடர் இவ்வளவு தான். இதில் காலை 9.30 மணிக்கு உங்கள் விருப்பம் நிகழ்ச்சியில் பல நாட்கள் இடம் பெற்றது. கூடவே சிவந்த மண், நம்நாடு, தங்க சுரங்கம், அடிமைப் பெண், சாந்தி நிலையம் என கொடிகட்டிப் பறக்கும்.

சென்னை குளோப் தியேட்டர் என நினைக்கிறேன். இந்தப் பாட்டிற்காகவே சென்று படம் பார்த்த ஞாபகம் இருக்கிறது. அதற்குப் பிறகு இது வரை பார்க்கவில்லை.

இப்பாடல் காட்சியில் சூழ்நிலையை மெல்லிசை மன்னர் தன்னுடைய இசையில் அருமையாக கொண்டு வந்திருப்பார். கதைப்படி ஒரு நிர்ப்பந்தத்திற்காக சரோஜா தேவி ரவிச்சந்திரனுடன் டூயட் பாடுவாரே தவிர மனதில் ஒரு சோகம், பயம் போன்ற வேறு உணர்வுகள் இருக்கும். ரொம்ப நாளைக்கு முன்பு பார்த்ததால் முழுசாக நினைவில்லை. ஆனால் சரோஜா தேவி சோகமாத்தான் டூயட் பாடுவார். அவருடைய முகத்தை நன்கு கவனித்தால் தெரியும். அதை விட அருமையாக இசையரசியின் குரலில் இதை கவனிக்கலாம். இதை கவியரசர் வரிகளில் சொல்லி யிருப்பார் வஞ்சம் இல்லாமல் வாடைக் காற்றிலே ஒன்றில் ஒன்றாக வேண்டும்.. இதிலேயே பாடல் மற்றும் படத்தின் கதையையே சொல்லி யிருப்பார்.

இந்தப் பாடல் முடிவடைந்தவுடன் சரோஜா தேவியின் நடிப்பு நம் கண்களைக் குளமாக்கி விடும்.

கொஞ்சம் கொஞ்சமாகத் தான் இப்படம் நினைவிருக்கிறது..

அருமையான பாடலை வழங்கிய வாசு சாருக்கு பாராட்டுக்கள்..

முக்கியமாகக் குறிப்பிட வேண்டிய விஷயம்..

இப்படத்தை ரவியின் அற்புதமான நடிப்பிற்காக கண்டிப்பாகப் பார்க்க வேண்டும்.

அப்புறம்..

ஒரு நூறு முறையாவது மெல்லிசை மன்னரின் பின்னணி இசைக்காகப் பார்க்க வேண்டும்.

RAGHAVENDRA
15th October 2014, 11:59 PM
இரவின் மடியில்

http://mytelugulyrics.com/1MTL/Imgs/CMDPSL/P-Susheela.jpg

தமிழில் புதியதாக ஒரு டிக்ஷனரி உருவாக்கி பாராட்டுவதற்கென்றே ஒரு லட்சம் வார்த்தைகளாவது போட்டு வெளியிட்டால் நன்றாக இருக்கும். அதை வைத்து இசையரசியின் குரலை வர்ணிக்கலாம்.

கேட்கும் போதெல்லாம் உள்ளத்தில் பரவசம் ஏற்படுத்தும் உன்னதமான பாடல்....

பால்குடம் படத்திலிருந்து மெல்லிசை மன்னரின் இசையில் (வரிகள் வாலி?) காலத்தைக் கடந்து நிற்கும் பாடல்...

முழுநிலவின் திருமுகத்தில் களங்கமில்லையோ...

http://www.inbaminge.com/t/p/Paal%20Kudam/

RAGHAVENDRA
16th October 2014, 12:03 AM
இரவின் மடியில்

சீர்காழியாரின் குரலில் சோகம் என்கிற உணர்வு அவர் சொல்கிற படியெல்லாம் கேட்கிறது... அதே போல அனைத்து உணர்வுகளும்...சும்மாவா அவரைப் பாட வைத்தார்கள் திரைப்படங்களில் பின்னணிப் பாடல்களையெல்லாம்...

சிறு குழந்தை வடிவினிலே தெய்வம் வந்து பேசுதம்மா... என்றும் நம்மை கட்டிப் போடும் அருமையான பாடல்..

முதல் படத்தையை முத்திரைப் படமாகத் தந்த குன்னக்குடி வைத்தியநாதனின் இசையில் வா ராஜா வா படத்திலிருந்து ...

http://www.inbaminge.com/t/v/Vaa%20Raja%20Vaa/

RAGHAVENDRA
16th October 2014, 12:06 AM
இரவின் மடியில்

ஈஸ்வரியின் மெலோடி பாடல்கள் கொஞ்சமாக இருந்தாலும் ஒவ்வொன்றும் காலத்தைக் கடந்து நிற்கும் பாடலாக அமைந்தன. அதற்கு ஓர் உதாரணம் மனைவி படத்தில் இடம் பெற்ற இப்பாடல். திரை இசைத் திலகம் கே.வி.எம். இசையில் அருமையான பாடலைக் கேளுங்கள்..

அன்னை போல என்னைக் காத்த அன்பு தெய்வமே..

http://www.inbaminge.com/t/m/Manaivi/

RAGHAVENDRA
16th October 2014, 12:11 AM
இரவின் மடியில்

அன்றாட அலுவல்களை முடித்தீர்களா
வீடு திரும்பினீர்களா
சாப்பிட்டு விட்டீர்களா
ஒரு சின்ன குளியல் போட்டீர்களா..
பாயை எடுத்துக் கொள்ளுங்கள்..
தலையணை இருந்தால் சரி இல்லையென்றால் இருக்கவே இருக்கிறது தலைக்குப் பின்புறம் கைகள் கட்டி தலையை சாய்த்துக் கொள்ளுங்கள்..
நிலா வானில் உலா வரும் பின்னிரவு...
எம்பி3 பிளேயரில் இப்பாட்டை ஒலிக்க விடுங்கள்..
கண்ணை மூடுங்கள்..

தூக்கிப் போடுங்கள் ரத்த அழுத்த மாத்திரைகளை... டாக்டர் ஃபீஸை மிச்சப் படுத்துங்கள்..

http://mytelugulyrics.com/1MTL/Imgs/CMDPSL/P-Susheela.jpg

இசையரசியின் குரலை விட மன பாரத்தைக் குறைக்கும் மருந்து வேறேதேனும் உள்ளதா என்ன...

குழந்தைக்காக படத்திலிருந்து தைமாத மேகம் பாடலைக் கேளுங்கள்..

http://www.inbaminge.com/t/k/Kuzhandhaikkaaga/

chinnakkannan
16th October 2014, 01:06 AM
மிட் நைட் மசாலா – 2

எழுதியவர் சின்னக் கண்ணன்

**

சிந்த்தால் சோப் கொடுப்பா
எனக் கேட்டு வாங்கி
சுத்தமாவதற்காக
மங்கை நடக்க
பார்த்த அவனுக்கோ
அவளது சுத்தத்தை எண்ணி
அழுக்கானது மனசு..

என்றெல்லாம் கவிதை எழுதிப் பார்த்தவன் தான் நமது ஹீரோ..ராமகிருஷ்ணன்..இளம் வயது கல்லூரி முடித்த பருவம்..கனவில் கன்னியர்கள் ஃபேஷன் பரேட் செய்தபடி வலம் வரும் காலம்..

இருந்தாலும் இப்போது அவன் குருடன்..ஓ. நோ..அவனுக்குக் கண்ணெல்லாம் போகவில்லை..கண்ணிருந்தும் குருடன்..ஹை..அப்படிச் சில மனிதர்களும் இருக்கிறார்கள் என்றெல்லாம் அவனுக்கு வேதாந்தம் பேசத்தெரியாது..காரணம் இளமை.. குருடனாய் இருப்பதற்குக் காரணம் யார் எனக் கேட்டால் அவனது பற்கள் கரகர எனத் தன்னைத் தாமே நற நறக்கும்..

காரணம் சம்பந்தம்..

சம்பந்தம் யார்.. அவரது முகத்தோற்றம் பார்த்தீர்களானால் பட்டைக் கண்ணாடி..(கறுப்பு) அதற்குப் பின் ஒளி வீசும் கண்கள்.. ஐம்பதைக் கடந்த வயது… லிப்ஸ்டிக் போடாமலேயே வெற்றிலை மெல்வதால் சிகப்பேறிய உதடு..

ஒவ்வொருவருக்கும் ஒரு பொழுதுபோக்கு உண்டு..ராஜேஷ் எல்லா மொழிப் பாடல், வாசு சார் எஸ்.வி.சார் பழைய ஆவணங்கள் சேகரிப்பு, சி.க ஜொள் இப்படி நிறைய..

ஆனால் இந்த சம்பந்தம் இருக்கிறாரே அவருக்கு உயிர்மூச்சு உயிர் பேச்சு எல்லாம் பெட் தான் பந்தயம் தான்..

சூழ்நிலையில் ராமக்ருஷ்ணனிடம் ச்வால் விடுகிறார் சம்பந்தம்.. நீ என்பொண்ண லவ் பண்ணிக் காமி.. ராம்கி.. பண்ணிட்டேன்னா.. (சம்பந்தத்தின் மனது=அதைவிட ஒனக்கு ஒரு பெரிய தண்டனை தரமுடியதுடா) சம்பந்தம் – என் பொண்ணையே கட்டி வைக்கிறேன்..

சரி சொல்லி நண்பர்கள் உதவியுடன் ஏற்றது தான் இந்தக் குருடன் வேடம்.. சம்பந்தத்தின் பெண்.. ராதா என வைத்துக்கொள்ளலாம்.. ராம்கியைக் குருடன் என நம்புகிறாள்..தனது வீட்டிற்கும் அழைத்து வந்து வைத்துக் கொள்கிறாள்..

ஒரு நாள் என்ன ஆகிறது..

காலை வேளை..

சூரியனின் சுடர்பட்ட ரோஜா என்ன செய்யும்..பனித்துளியால் முகமலம்பும்..

அது போலக் கண்விழித்த ராதாவும் என்ன செய்கிறாள்..

சமர்த்தாய் கிச்சன் போய் திக்க்க் டிகாக்ஷனில் காஃபி போட்டுக் குடித்து பின் உடல் ஃபங்க்ஷன் ஆக அமெரிக்காவில் ரெஸ்ட் ரூம் என வழங்கப் படும் நம்ம ஊர் பாத்ரூமிற்குச் செல்கிறாள்..பின் குளிக்..கிறாள்..

இங்கே நம் பையனும் குடித்தது காஃபி.. அதுவும் பைங்கொடி ராதா போட்டுக் கொடுத்த தண்ணீர்கலக்காத பாலில் சொட் சொட் டென இறக்கிய டிகாக்ஷன் ( சிக்கரிகலக்காத நரசுஸ் காஃபி) போட்டுச் செய்த கள்ளிச் சொட்டுக் காஃபி..

இருந்தாலும் அவனுக்குள் கலங்குகிறது..காஃபி செய்த வேலையில்லை..

துளிதான் பெய்தாலும் தூங்காதே ரோஜா
குளித்ததால் சாரலில் தான்..

என்பது போலவும்..

ஓடையிலே ஓர் தாமரைப்பூ நீராடையில் நீர் அதைப் பாத்தீஹளா என பாடகி தன் காதுக்கடியில் சொல்வதைப் போலவும்.,

நினைத்ததால் மனதிற்குள் ஒரு மிக்க சந்தோஷம்.. கூட்டமாய் இருக்கும் பஸ்ஸில் உட்கார சீட் கிடைத்தாற்போல…

அவனுக்குபிற்காலத்திரைப்பாடலாய்

குளிக்குது ரோஜா நாத்து தண்ணிகொஞ்சம் ஊத்து ஊத்து வரும் என்றெல்லாம் தெரியாது..தெரிவது என்ன ஊகிக்கவே முடியாது..ஏனெனில் பயல் ஒருபிரமையில் சிக்கியிருந்தான்.. இருந்தாலும் சங்க காலப் புலவராய்ப் போங்கடித்த கவிஞர் சின்னக் கண்ணனார் அவனுக்கு நினைவுக்கு வந்தார்!

கோமகள் அழகுடன் சென்றாள் சென்றாள்
…கொண்டநல் லுடலினைக் காப்ப தற்காக
சாமரம் வீசிய தென்றல் தவிர்த்தே
…தக்கதாய் அறையினில் புகுந்தாள் மேலும்
வாமனத் தோற்றமாய்க் குனிந்தே நீரை
…வக்கணை யாகவே நிறைக்க பின்பு
தாமரை அழகியல் கூட்டி அங்கே
..தட்டென நீரினில் குளிர்ந்ததே நன்றாய்..

என்ன செய்வது எனத் தெரியவில்லை.. நேரில் போய் நங்கையைப் பார்க்கலாமா..ம்ஹூம் தப்பு..அவளுடைய தகப்பனுடன் செய்து கொண்ட ஒப்பந்தம் அப்படி..

இருந்தாலும் சும்மா இருக்க முடியவில்லையே.. காற்றில் யார் கரும்புச் சாற்றுடன் தேன் கலந்து காதில் ஊற்றுவது..

கொஞ்சம் உற்று கவனிக்கையில்… அவள் தான்..அந்த ரா ரா ராதா தான்.. மெல்லிய ல ல ல ஹம்மிங்க்..

இங்கோ ராமகிருஷ்ணன் தன்னுடைய கூலிங்க்ளாஸிற்குள் துடிக்கும் கண்ணைக் கண்ட்ரோல் செய்கிறான்..மெல்லக் கண் மூட அவனுக்குள் ராதாவின் பிம்பம் எழுகிறது..உளத்திலிருந்து பாடல் எழுகிறது..குளிக்கிற அவளுடைய அங்கங்கள் அவன் கண்முன் தோன்றுவது போலப்ரமை..

பாடுகிறான்..

**
இது கே.பாலச்சந்தர் இயக்கத்தில் வந்த பொய்க்கால் குதிரையின் கதைச் சுருக்கம்..பின்கதை வேறென்ன பந்தயத்தில்வென்று பாவையை மாலை சூடுகிறான் ஹீரோ..

கலகலவென இருக்கும் என மிக எதிர்பார்த்துச் சென்ற படம்.மிக எதிர்பார்த்ததாலேயே அந்தக் காலத்தில் கொஞ்சம் ஏமாற்றத்தை த் தந்த படம்.. முதலில் பார்த்ததற்கப்புறம் இந்தப் படத்தைக் கண்டதில்லை

கதா நாயகனாக ராமகிருஷ்ணன்(கன்னடம்) சம்பந்தமாய் வாலிப வாலி, ஹீரோயின் ராதாவாய் (பெயர் நினைவிலில்லை) விஜி..

விஜி ஒரு சபிக்கப் பட்டதேவதை.. எவ்வளவு தான் அழகிருந்த போதிலும் அம்மணிக்கு பாவம் நடிப்பு மட்டும் கொஞ்சம் மெழுகுவர்த்தியில் காய்ச்சிய தோசைத்திருப்பியின் பின்புறக் காம்பினை வைத்துச் சுட்டாலும் ம்ஹூம் வரவே வராது.. பக்கத்தில் இடி விழுந்தாலும் இடி விழுந்துச்ச்சா என்பது போன்ற முகபாவம்.. ரியல் லைஃபுக்கு ஓ.கே..ரீல் லைஃபுக்கு க் கஷ்டம் தான்.. அதே போல் ரியல் லைஃபிலும் அடி வாங்கியிருக்க வேண்டாம்..பாவம் சின்ன வயதிலேயே சென்றுவிட்டார் மேலுலகம்

படத்தில் ஹைலைட் வாலியின் முதல் படம், ராதாரவி, ரவீந்தர் நகைச்சுவையில் கலக்கிய படம்..அதுவும் ராதாரவி ரேடியோ மெகானிக்..அவரிடம் “ என்ன நாயரே.. என்ன கன்ஃப்யூஷன்”

“ஒண்ணுமில்லை இந்த பார் இந்த ரேடியோவை ரிப்பேர்பண்ணினேனா கேட்டுப்பார்..” வைக்க “ ஹேய் த்ரீ நாட் டூ அந்த அக்யூஸ்ட செல்ல போடு” கொஞ்சம் திருப்ப “ விருது நகர் விருத்தாச்சலம் வழியாகச் செல்லும் மதுரை சென்னைபாண்டியன் எக்ஸ்பிரஸ்” ஓ.. இது என்ன ப்ராப்ளம்னே தெரியலை.. ரேடியோ ஸ்டேஷனுக்குப் பதிலா எல்லா ஸ்டேஷனும் எடுக்குது… எனச் சொல்ல தியேட்டரில் குபீர் சிரிப்பு வந்தது (மதுரை சிவம்)

பாடல் எழுதியதுவாலி.. (பின்ன அவரில்லாமலா) பாடியவர் எஸ்பி.பி. இசை.எம்.எஸ்வி..

..
பாடல் வரிகள்..

எல்லாம் தெரிகிறது எனக்கு எல்லாம் தெரிகிறது
எல்லாம் தெரிகிறது எனக்கு எல்லாம் தெரிகிறது

மனக்கண்ணுக்கு முன்னாலே ஒரு கண்ணாடியைப் போலே
அழகு எல்லாம் தெரிகிறது

உயர்ந்து நிற்கும் மாமலையே உன்னை மேகம் தொடுகிறது
கொஞ்சம் இறங்கி வந்தால் நானும் தொடுவேன் ஆசை சுடுகிறது
ஓடிடும் ஓடையே பூமியின் ஆடையே
உன்னைத்தான் தீண்டிட ஏங்குது வாடையே

அழகு எல்லாம் தெரிகிறது
எனக்கு எல்லாம் தெரிகிறது

நனைந்து நிற்கும் தாமரையே எங்கும் தண்ணீர் வழிகிறது
பக்கம் நெருங்கி வந்தாய் ஈரம் துடைக்க கைகள் துடிக்கிறது

நாளெல்லாம் நீரிலே நூலிடை நீந்துமோ
நான் அதைப் பார்க்கையில் என் மனம் தாங்குமோ
திரண்டு நிற்கும் பால் நிலவே உன்னை வானம் அணைக்கிறது
மண்ணில் தவழ்ந்து வந்தால் நானும் அணைப்பேன் தேகம் கொதிக்கிறது

பார்வைகள் தேடிடும் பேரெழில் பிம்பமே
நீ எனை சேர்ந்த பின் வேறெது இன்பமே

அழகு எல்லாம் தெரிகிறது எனக்கு எல்லாம் தெரிகிறது
மனக்கண்ணுக்கு முன்னாலே ஒரு கண்ணாடியைப் போலே
அழகு எல்லாம் தெரிகிறது

**



பாடல் வீடியோ…

.. http://www.youtube.com/watch?v=4_Ah4UIXTWY&feature=player_detailpage

*

கன்னட ராமக்ருஷ்ணன் அதற்கப்புறம் மெளலியின் அந்தப்புரத்தில் நடித்ததாக நினைவு..
*
இது க்ருஷ்ணாஜிக்காக டெடிகேட் செய்யப்பட்ட பாடலாக்கும்..க்ருஷ்ணாஜி ஷூட் பி ஹேப்பி அண்ணாச்சி!

*

அடுத்த பாடல் கொடுக்கப் போவது நம் ராகவேந்தர் சாருக்காக..

என்ன பாட்… க்ளூ.. .. Don’t worry my dear. I am here !

( நா போய்ட்டு நாளைக்கு வாரேன்!) :)

rajeshkrv
16th October 2014, 01:12 AM
இரவின் மடியில்

http://mytelugulyrics.com/1MTL/Imgs/CMDPSL/P-Susheela.jpg

தமிழில் புதியதாக ஒரு டிக்ஷனரி உருவாக்கி பாராட்டுவதற்கென்றே ஒரு லட்சம் வார்த்தைகளாவது போட்டு வெளியிட்டால் நன்றாக இருக்கும். அதை வைத்து இசையரசியின் குரலை வர்ணிக்கலாம்.

கேட்கும் போதெல்லாம் உள்ளத்தில் பரவசம் ஏற்படுத்தும் உன்னதமான பாடல்....

பால்குடம் படத்திலிருந்து மெல்லிசை மன்னரின் இசையில் (வரிகள் வாலி?) காலத்தைக் கடந்து நிற்கும் பாடல்...

முழுநிலவின் திருமுகத்தில் களங்கமில்லையோ...

http://www.inbaminge.com/t/p/Paal%20Kudam/

வரிகள் வாலியே தான்..

எனக்கு மிகவும் பிடித்த பாடல்
இசையரசி பாடியிருக்கும் விதம் ...

எல்லாமே சூப்பர்

rajraj
16th October 2014, 04:56 AM
Krishna: You wanted songs in Kapi. Here is one I like:

enna dhavam seidhanai yasodhaa engum nirai para brahmam.........

http://www.youtube.com/watch?v=gLj7EDVDEFw

This is a composition by Papanasam Sivan rendered in Carnatic concerts these days.

Gopal.s
16th October 2014, 06:21 AM
வாசு,

நான் ஆச்சர்யத்தைத்தான் எதிர்பார்த்திருந்தேனே தவிர,மந்திரத்தை அல்ல.இது ஒரு மாயமோ என்று கிள்ளிகொள்கிறேன்.

மெல்லிசை மன்னரின் அற்புதங்களில் ஒன்று ஓடும் நதி. ரவி- சரோஜாதேவி இணையில் இந்த பாடலை ரவி திரியில் அலசியிருந்தாலும்,இவ்வளவு விஸ்தாரமாக எனது 3000 க்கு அன்பளிப்பா?

என்னவோ போடா மாதவா.....

rajeshkrv
16th October 2014, 07:48 AM
கோபால் ஜி, உங்கள் அன்பளிப்பில் ஆனந்த கூத்தாடுகிறீர் போல :)


என் தமிழாசான் வாலி ஐயாவின் அற்புத வரிகளில், திரையிசைத்திலகத்தின் மெய் மறக்கும் இசையில் எனக்கு மிகவும் பிடித்த பாடல்
பாலமுரளியும் சூலமங்கலம் ராஜலெக்*ஷ்மியும் இசைத்த கண்மலர் திரைப்பாடல்

தேவார நடையில் அழகான பாடல் . கவியரசர் வாலி ஐயாவை பாராட்டிய பாடல் ..

இந்த வரிகள் ஆஹா

கங்கைக் கொண்டான் என் மேல் கருணைக் கொண்டான்
பிறைத் திங்கள் கொண்டான் நெஞ்சை திருடிக் கொண்டான்
கங்கைக் கொண்டான் என் மேல் கருணைக் கொண்டான்
பிறைத் திங்கள் கொண்டான் நெஞ்சை திருடிக் கொண்டான்
மங்கைக் கொண்டான் எனது மனத்தைக் கொண்டான்
மங்கைக் கொண்டான் எனது மனத்தைக் கொண்டான்
இவையாவையும் கொண்டான் உந்தன் மாலையும் கொண்டான்


இதோ முழுப்பாடல்

தோடுடைய செவி யன் விடையேறியோர் தூவெண் மதி சூடிக்
காடுடைய சுடலைப் பொடி பூசியென்னுள்ளங்கவர் கள்வன்
ஏடுடைய மல ரான்முனை நாட்பணிந்தேத்தவருள் செய்த
பீடுடைய பிர மாபுர மேவிய பெம்மானிவனன்றே.
ஓதுவார் உன் பெயர் ஓதுவார்
ஓதுவார் உன் பெயர் ஓதுவார்
ஓம் ஓம் ஓம் ஓமெனும் மந்திர சொல்
உட்பொருள் நாடுவார்
ஓதுவார் உன் பெயர் ஓதுவார்
ஓம் ஓம் ஓம் ஓமெனும் மந்திர சொல்
உட்பொருள் நாடுவார்

ஓதுவார் உன் பெயர் ஓதுவார்
ஓதாமல் ஒரு நாளும் இருப்பதில்லை
உந்தன் பாதார விந்தத்தை மறப்பதில்லை
ஓதாமல் ஒரு நாளும் இருப்பதில்லை
உந்தன் பாதார விந்தத்தை மறப்பதில்லை
நாதா உன் திரு நாமம் கசப்பதில்லை
நாதா உன் திரு நாமம் கசப்பதில்லை
எங்கள் ஆதாரமான இடம் உனது திரை
ஓதுவார் உன் பெயர் ஓதுவார்

கங்கைக் கொண்டான் என் மேல் கருணைக் கொண்டான்
பிறைத் திங்கள் கொண்டான் நெஞ்சை திருடிக் கொண்டான்
கங்கைக் கொண்டான் என் மேல் கருணைக் கொண்டான்
பிறைத் திங்கள் கொண்டான் நெஞ்சை திருடிக் கொண்டான்
மங்கைக் கொண்டான் எனது மனத்தைக் கொண்டான்
மங்கைக் கொண்டான் எனது மனத்தைக் கொண்டான்
இவையாவையும் கொண்டான் எந்தன் மாலையும் கொண்டான்
ஓதுவார் உன் பெயர் ஓதுவார்
ஓம் ஓம் ஓம் ஓமெனும் மந்திர சொல்
உட்பொருள் நாடுவார்
ஓதுவார் உன் பெயர் ஓதுவார்

http://music.cooltoad.com/music/song.php?id=558460

Gopal.s
16th October 2014, 08:04 AM
ராஜேஷ்,



இசையரசி, வாலி இரண்டிலும் ,நான் உங்கள் கட்சியே.



நீங்களே குறிப்பிட்டது போல,கவியரசரை ,அசர வைத்த இரு வாலியின் முத்துக்கள். மாதவி பொன் மயிலாள், ஓதுவார் .

rajeshkrv
16th October 2014, 08:05 AM
தேனிசை தென்றலின் முத்துக்கள் - 3

மதுரை வானொலி இந்த பாடலை ஒலிபரப்பாத நாளில்லை. 90’களில் தேவா வளர்ந்து கொண்டிருந்த நிலையில் ஒரு படத்தின் எல்லா பாடல்களும் முனுமுனுக்கும் படி அமைந்தது இந்த படத்தில் எனலாம்

1991’ல் வெளி வந்த வாசலில் ஒரு வெண்ணிலா.
மலையாள/தமிழ் நடிகர் திரு வி.எம்.சி.ஹனீபா இயக்கிய இந்த படத்தில் நிழல்கள் ரவி, அமலா மற்றும் பேபி ஷாம்லி நடித்திருந்தனர்.

தேவாவின் இசையில் ஷாம்லிக்கு ஜானகி பாடிய ராஜா மகள் இந்த சின்ன ராணி பாடல் மிகவும் பிரபலம்
அதே போல் இருவருக்கும் ஜோடிப்பாடலாக மாலையிலே தெற்கு மூலையிலே பாடலும் இனிமை

ஆனால் என் மனதை கவர்ந்தது (மதுரை என்ற காரணத்தினாலே என்னவோ ) திரு யேசுதாஸ் அவர்கள் ஹனீபாவிற்காக பாடும்
என் ஊரு மதுர பக்கம் என் பாட்டு மனசில் நிக்கும் நான் பாடும் நேரம் ராப்போதுதான்

வாலி ஐயாவின் வரிகளில் இந்த பாடல் நம்மை என்னவோ செய்யும்... இந்த பாடல் இன்றும் என் நினைவில் உள்ளதற்கு காரணம் மதுரை வானொலி நிலையம் ..

என்னை போல் நீங்களும் கேட்டு ரசியுங்கள்


என் ஊரு மதுர பக்கம்
என் பாட்டு மனசில் நிக்கும்
நான் பாடும் நேரம் ராப்போது தான்
நீர் தூங்கும் நிலமும் தூங்கும்
ஆகாய நிலவும் தூங்கும்
நான் தூங்கமாட்டேன் ராக்கோழிதான்
என்னோடு நூலும் இல்ல
பின்னோடு வாலும் இல்ல
என்னோடு நூலும் இல்ல
பின்னோடு வாலும் இல்ல
காத்தோடு போகும் காத்தாடி நான்

என் ஊரு மதுர பக்கம்
என் பாட்டு மனசில் நிக்கும்
நான் பாடும் நேரம் ராப்போது தான்



யாராரோ ஆசைப்பட்டா
சேத்துவைக்கும் அன்னக்கிளியே
உன் வாழ்க்கை என்ன ஆச்சு நான் கேக்குறேன்
ஊரார ஏத்தி விட்டு ஏணி நிக்கும் தன்னந்தனியே
அதைப்போல உன்னத்தானே நான் பார்க்குறேன்
விதியோடு மோது அடி தங்கச்சி
குடிகாரன் அண்ணன் இவன் உன் கட்சி
பாட்டால சோகம் தீரும் அதனால பாடுறேன்

என் ஊரு மதுர பக்கம்
என் பாட்டு மனசில் நிக்கும்
நான் பாடும் நேரம் ராப்போது தான்



எல்லோர்க்கும் வாழ்க்கை இங்கே
எண்ணம் போல வாய்க்காதம்மா
வாய்க்காட்டி விட்டுத்தள்ளு
ஏன் ஏங்கணும்
வந்தாலே வரவில் வைப்போம்
விட்டுப்போனா செலவில் வைப்போம்
வேண்டாத பாரம் எல்லாம்
ஏன் தாங்கணும்
பூ பூத்ததெல்லாம் காயாகுதா
காயானதெல்லாம் கனியாகுதா
இதுக்காக வாடலாமா
அதனால பாடுறேன்

என் ஊரு மதுர பக்கம்
என் பாட்டு மனசில் நிக்கும்
நான் பாடும் நேரம் ராப்போது தான்
நீர் தூங்கும் நிலமும் தூங்கும்
ஆகாய நிலவும் தூங்கும்
நான் தூங்கமாட்டேன் ராக்கோழிதான்
என்னோடு நூலும் இல்ல
பின்னோடு வாலும் இல்ல
என்னோடு நூலும் இல்ல
பின்னோடு வாலும் இல்ல
காத்தோடு போகும் காத்தாடி நான்

என் ஊரு மதுர பக்கம்
என் பாட்டு மனசில் நிக்கும்
நான் பாடும் நேரம் ராப்போது தான்
நீர் தூங்கும் நிலமும் தூங்கும்
ஆகாய நிலவும் தூங்கும்
நான் தூங்கமாட்டேன் ராக்கோழிதான்

http://www.youtube.com/watch?v=NjUISTBt5sM

தொடரும்.

Richardsof
16th October 2014, 08:46 AM
பிரபல பாடலாசிரியர்கள் பற்றிய ஒரு சிறு குறிப்பு .

மதுர பாஸ்கர் தாஸ் ------- காளிதாஸ் -1931

பூமி பாலக தாஸ் - மேனகா - 1935

நடராஜ ஆசாரி - மிஸ் கமலா - 1936

ஏ . சுப்பையா - லீலாவதி சுலோச்சனா - 1936

இரத்தின சபாபதி - பக்கா ரௌடி - 1937

பாபநாசம் சிவன் - சிந்தாமணி - 1937

மாரியப்ப சுவாமிகள் - 1939

வேல்சாமி - பக்த கௌரி -1941

உடுமலை நாராயண கவி - கண்ணகி - 1942

கல்கி கிருஷ்ண மூர்த்தி - 1945

சுந்தர வாத்தியார் - பிழைக்கும் வழி -1948

ராஜகோபாலய்யர் - போஜன் -1949

கம்ப தாசன் - 1949

பட்டியல் தொடரும் .....

Richardsof
16th October 2014, 08:51 AM
பிரபல பாடலாசிரியர்கள் பற்றிய ஒரு சிறு குறிப்பு .


கண்ணதாசன் - கன்னியின் காதலி - 1949

மு .கருணாநிதி - மந்திரிகுமாரி - 1950

மருதகாசி - மந்திரிகுமாரி - 1950

சந்தானம் - மோகன சுந்தரம் - 1951

காமாக்ஷி சுந்தரம் - ஓர் இரவு -1951

டி .கே . சண்முகம் - ஓர் இரவு -1951

சுந்தரம் - மனிதனும் மிருகமும் -1953

ராஜப்பா - அன்பு -1953

சிவம் - மதனமோகினி - 1953

அய்யா முது - மலைக்கள்ளன் - 1954

Richardsof
16th October 2014, 08:57 AM
சுரபி - எதிர்பாராதது - 1954

சுத்தானந்த பாரதியார் - பொன்வயல் -1954

விந்தன் - கூண்டுக்கிளி - 1954

சுப்பு ஆறுமுகம் - விடுதலை - 1954

ராமையா தாஸ் - கதாநாயகி - 1955

கா .மு ஷெரிப் - நான் பெற்ற செல்வம் - 1956

பட்டு கோட்டை கல்யாண சுந்தரம் - பாசவலை -1956

vasudevan31355
16th October 2014, 09:00 AM
ஹரே ராமா! ராமகிருஷ்ணா! சின்னக் கண்ணா!

ஒரே பதிவில் எங்கேயோ போய் விட்டீர்களே! நாடி ஜோசியம் தெரிந்தது போல என் பிடித்தமான பொய்க்கால் குதிரையை அலசி தூங்க விடாமல் பண்ணி விட்டீர்களே.

கதையோடு சேர்ந்த மிட் நைட் மசாலா. விஜியின் மேல் வழுக்கி விழும் நீர்த் திவலைகள். விரசம் இல்லாமல் வெறி ஏற்றிய குளியல் காட்சி என்று என் நண்பன் அடிக்கடி கூறுவான். (விஜி இந்தப் படத்திதான் கொஞ்சூண்டு நடிச்சிருப்பார்)

படமும் டாப். பாலச்சந்தர் ஆச்சே! ஒவ்வொரு பிரமையும் மன்மத லீலை போல இழைச்சி பின்னியிருப்பார். வாலி போட்டுக் கொள்ளும் அந்த வாய்ப்பூட்டு மறக்க முடியாதது. ரவீந்தரையும் சேர்த்துத்தான். பாட்டு ஒவ்வொன்றும் தூள்.

ஆஹா பதிவு போட்ட உங்களுக்கு ஒரு ஓஹோ.

vasudevan31355
16th October 2014, 09:04 AM
ராஜேஷ்ஜி!

நன்றி!

'தேனிசைத் தென்றலின் முத்துக்கள்' தொடரின் மூலம் நல்ல பாடல்களை சிரத்தை எடுத்து தருகிறீர்கள். இப்பாடல்களை கேட்டு நாளாகியும் விட்டது. உங்கள் உழைப்புக்கு நன்றி!

vasudevan31355
16th October 2014, 09:14 AM
ராஜேஷ்ஜி!

என்னே விந்தை! நேற்றுதான் ஓதுவார் பாடலை இன்றைய ஸ்பெஷலுக்கு ரெடி பண்ணலாம் என்று வைத்தேன். இருவரின் அதிர்வலைகள் ஒன்றாக இருக்கும் போது இதெல்லாம் சாத்தியமே. இப்போது வீடியோவில் கண்டு அனைவரும் மகிழலாம். பாடல் வரிகளுக்கு மிக்க நன்றி!

ஓதுவார் உன் பெயர் ஓதுவார்
ஓதாமல் ஒரு நாளும் இருப்பதில்லை
உந்தன் பாதார விந்தத்தை மறப்பதில்லை
ஓதாமல் ஒரு நாளும் இருப்பதில்லை
உந்தன் பாதார விந்தத்தை மறப்பதில்லை
நாதா உன் திரு நாமம் கசப்பதில்லை
நாதா உன் திரு நாமம் கசப்பதில்லை
எங்கள் ஆதாரமான இடம் உனது திரை
ஓதுவார் உன் பெயர் ஓதுவார்

கங்கைக் கொண்டான் என் மேல் கருணைக் கொண்டான்
பிறைத் திங்கள் கொண்டான் நெஞ்சை திருடிக் கொண்டான்
கங்கைக் கொண்டான் என் மேல் கருணைக் கொண்டான்
பிறைத் திங்கள் கொண்டான் நெஞ்சை திருடிக் கொண்டான்
மங்கைக் கொண்டான் எனது மனத்தைக் கொண்டான்
மங்கைக் கொண்டான் எனது மனத்தைக் கொண்டான்
இவையாவையும் கொண்டான் எந்தன் மாலையும் கொண்டான்
ஓதுவார் உன் பெயர் ஓதுவார்
ஓம் ஓம் ஓம் ஓமெனும் மந்திர சொல்
உட்பொருள் நாடுவார்
ஓதுவார் உன் பெயர் ஓதுவார்


http://www.youtube.com/watch?v=fdcMVMsXTVs&feature=player_detailpage

rajeshkrv
16th October 2014, 09:50 AM
ராஜேஷ்ஜி!

நன்றி!

'தேனிசைத் தென்றலின் முத்துக்கள்' தொடரின் மூலம் நல்ல பாடல்களை சிரத்தை எடுத்து தருகிறீர்கள். இப்பாடல்களை கேட்டு நாளாகியும் விட்டது. உங்கள் உழைப்புக்கு நன்றி!

நன்றி வாசு ஜி.

rajeshkrv
16th October 2014, 09:51 AM
ராஜேஷ்ஜி!

என்னே விந்தை! நேற்றுதான் ஓதுவார் பாடலை இன்றைய ஸ்பெஷலுக்கு ரெடி பண்ணலாம் என்று வைத்தேன். இருவரின் அதிர்வலைகள் ஒன்றாக இருக்கும் போது இதெல்லாம் சாத்தியமே. இப்போது வீடியோவில் கண்டு அனைவரும் மகிழலாம். பாடல் வரிகளுக்கு மிக்க நன்றி!

ஓதுவார் உன் பெயர் ஓதுவார்
ஓதாமல் ஒரு நாளும் இருப்பதில்லை
உந்தன் பாதார விந்தத்தை மறப்பதில்லை
ஓதாமல் ஒரு நாளும் இருப்பதில்லை
உந்தன் பாதார விந்தத்தை மறப்பதில்லை
நாதா உன் திரு நாமம் கசப்பதில்லை
நாதா உன் திரு நாமம் கசப்பதில்லை
எங்கள் ஆதாரமான இடம் உனது திரை
ஓதுவார் உன் பெயர் ஓதுவார்

கங்கைக் கொண்டான் என் மேல் கருணைக் கொண்டான்
பிறைத் திங்கள் கொண்டான் நெஞ்சை திருடிக் கொண்டான்
கங்கைக் கொண்டான் என் மேல் கருணைக் கொண்டான்
பிறைத் திங்கள் கொண்டான் நெஞ்சை திருடிக் கொண்டான்
மங்கைக் கொண்டான் எனது மனத்தைக் கொண்டான்
மங்கைக் கொண்டான் எனது மனத்தைக் கொண்டான்
இவையாவையும் கொண்டான் எந்தன் மாலையும் கொண்டான்
ஓதுவார் உன் பெயர் ஓதுவார்
ஓம் ஓம் ஓம் ஓமெனும் மந்திர சொல்
உட்பொருள் நாடுவார்
ஓதுவார் உன் பெயர் ஓதுவார்


http://www.youtube.com/watch?v=fdcMVMsXTVs&feature=player_detailpage

மன்னிக்கவும் . இன்று முழுவதும் என் தமிழாசான் ஐயா வாலியின் நினைவாகவே இருந்தேன்... ஏதோ ஒரு இனம் புரியாத சோகம்
அது தான் இந்த பாடல் ஞாபகம் வந்தது .. பதிவிட்டுவிட்டேன்... கானொளி கிடைத்ததில் மிக்க மகி்ழ்ச்சி .. என் சரோவாயிற்றே :)

JamesFague
16th October 2014, 10:02 AM
a beautiful song from Raman Ethanai Ramanadi. This is for Mr Rajesh ji


http://youtu.be/0ZUtPzTkAZo

vasudevan31355
16th October 2014, 10:09 AM
மிக்க நன்றி ராகவேந்திரன் சார். உங்களை மறப்பேனா?

'வா இந்த உலகத்தின்' பாடல் பதிவின் மூலம் அன்றைய வானொலி நிகழ்ச்சிகளின் விவரங்களை பிட்டு பிட்டு வைத்து விட்டீர்களே! தங்களுக்கும் அந்தப் பாட்டு உயிர் என்று எனக்கு முன்னமேயே தெரியும். என்னதான் கோபால் வெளியே பேசினாலும் அவர் மனது முழுக்க நீங்கள் இருக்கிறீர்கள் என்பதனால் அவருக்குப் போட்ட பதிவு உங்களுக்கும்தானே!

தங்களுடைய 'இரவின் மடியில்' ஹூட் ஹூட் போல வெளுத்து வாங்குகிறது. ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமான சுவை. அதில் உச்சம் 'முழுநிலவின் திருமுகத்தில் களங்கமில்லையோ' பாடல்தான். இந்த ஒரு பாட்டு போதும் சார் வாழ்நாள் முழுக்க இசை இன்பம் அளிக்க.

என்ன வரிகள்!

முழுநிலவின் திருமுகத்தில் களங்கமில்லையோ
அது கண்குளிர தண்ணொளியை வழங்கவில்லையோ

தண்ணொளி அதாவது குளிச்சி தரும் வெளிச்சம் என்ற அர்த்தம். இப்படியும் எடுத்துக் கொள்ளலாம் போல. தன்னொளி அதாவது நிலவு தான் வழங்கும் ஒளி என்றும் பொருள் கொள்ளலாம்.

அடடா! எப்படி வேண்டுமானாலும் இன்பமாகப் பருகலாம்.

பாலும் நீரும் பிரித்து உண்ணும் அன்னப் பறவை நான்.
உன் கண்ணிரடில் குடியிருக்கும் வண்ணப் பறவை நான்

பிரித்து மேய்கிறார் கவிஞர்.

இன்னும் ஒரு படி மேலே போய் மனைவியின் பொறுப்புகளை வார்த்தைகளில் வடித்து இறுதியில் தாம்பத்ய உறவில் கொண்டு வந்து எவ்வளவு அழகாக முடிக்கிறார் கவிஞர்! அதுவும் கொஞ்சம் கூட விரசம் இல்லாமல். கவனியுங்கள்.

'என்றும் இரவினிலே தனிமையிலே துணைவியாகினேன்'

'எல்லா வேலைகளும்,பொறுப்புகளும் முடிந்து தனிமையிலே இருக்கும் போது, அதுவும் இரவில் மட்டுமே துணைவி ஆகினேன்' என்று பொருள் தருவது அருமையிலும் அருமை.

அற்புதமான பாடலைத் தந்து அகம் மகிழச் செய்ததற்கு நன்றி ராகவேந்திரன் சார்.

vasudevan31355
16th October 2014, 10:12 AM
என் சரோவாயிற்றே :)

ஜி! ம்..ம்...ம்.... நடத்துங்க. ஆணானப்பட்ட விஸ்வாமித்திரரே.......:)

rajeshkrv
16th October 2014, 10:13 AM
மிக்க நன்றி ராகவேந்திரன் சார். உங்களை மறப்பேனா?

'வா இந்த உலகத்தின்' பாடல் பதிவின் மூலம் அன்றைய வானொலி நிகழ்ச்சிகளின் விவரங்களைபிட்டு பிட்டு வைத்து விட்டீர்களே! தங்களுக்கும் அந்தப் பாட்டு உயிர் என்று எனக்கு முன்னமேயே தெரியும். என்னதான் கோபால் வெளியே பேசினாலும் அவர் மனது முழுக்க நீங்கள் இருக்கிறீர்கள் என்பதனால் அவருக்குப் போட்ட பதிவு உங்களுக்கும்தானே!

தங்களுடைய 'இரவின் மடியில்' ஹூட் ஹூட் போல வெளுத்து வாங்குகிறது. ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமான சுவை. அதில் உச்சம் 'முழுநிலவின் திருமுகத்தில் களங்கமில்லையோ' பாடத்தான். இந்த ஒரு பாட்டு போதும் சார் வாழ்நாள் முழுக்க இசை இன்பம் அளிக்க.

என்ன வரிகள்!

முழுநிலவின் திருமுகத்தில் களங்கமில்லையோ
அது கண்குளிர தண்ணொளியை வழங்கவில்லையோ

தண்ணொளி அதாவது குளிச்சி தரும் வெளிச்சம் என்ற அர்த்தம். இப்படியும் எடுத்துக் கொள்ளலாம் போல. தன்னொளி அதாவது நிலவு தான் வழங்கும் ஒளி என்றும் பொருள் கொள்ளலாம்.

அடடா! எப்படி வேண்டுமானாலும் இன்பமாகப் பருகலாம்.

பாலும் நீரும் பிரித்து உண்ணும் அன்னப் பறவை நான்.
உன் கண்ணிரடில் குடியிருக்கும் வண்ணப் பறவை நான்

பிரித்து மேய்கிறார் கவிஞர்.

இன்னும் ஒரு படி மேலே போய் மனைவியின் பொறுப்புகளை வார்த்தைகளில் வடித்து இறுதியில் தாம்பத்ய உறவில் எவ்வளவு அழகாக முடிக்கிறார் கவிஞர்! அதுவும் கொஞ்சம் கூட விரசம் இல்லாமல். கவனியுங்கள்.

'என்றும் இரவினிலே தனிமையிலே துணைவியாகினேன்'

எல்லா வேலைகளும்,பொறுப்புகளும் முடிந்து தனிமையிலே இருக்கும் போது அதுவும் இரவில் மட்டுமே துணைவி ஆகினேன் என்று பொருள் தருவது அருமையிலும் அருமை.

அற்புதமான பாடலைத் தந்து அகம் மகிழச் செய்ததற்கு நன்றி ராகவேந்திரன் சார்.

ஆம் வாசு ஜி, நான் கோட் செய்ய நினைத்த வரிகளையே அழகாக சொல்லியுள்ளீர்கள்(வாலி ஐயாவிற்கு கோடி கோடி நமஸ்காரம்) ... என்றும் இரவினிலே தனிமையினிலே என்று இசையரசி பாடும் விதம்.... பெண்மையின் மென்மையை குரலில் கொண்டுவந்தவர் எங்கள் இசையரசி

rajeshkrv
16th October 2014, 10:15 AM
ஜி! ம்..ம்...ம்.... நடத்துங்க. ஆணானப்பட்ட விஸ்வாமித்திரரே.......:)

அதாவது எனக்கு பிடித்த அபிநய சரஸ்வதி என்று தானய்யா சொன்னேன்

rajraj
16th October 2014, 10:18 AM
அதாவது எனக்கு பிடித்த அபிநய சரஸ்வதி என்று தானய்யா சொன்னேன்

Looks like there is some Chinnakkannan in you ! :lol:

vasudevan31355
16th October 2014, 10:19 AM
பெண்மையின் மென்மையை குரலில் கொண்டுவந்தவர் எங்கள் இசையரசி

ம்ஹூம்...நான் ஒத்துக் கொள்ளவே மாட்டேன்பா. நம் இசையரசி தான் பொருத்தம். அவில் பாகத்தை சரிசமமாக பிரித்துத் தராவிட்டாலும் ஒரு 25% ஆவது தரலாம் இல்லையா?:)

vasudevan31355
16th October 2014, 10:20 AM
மாட்னீங்களா உங்கள் ankil கிட்ட:)

chinnakkannan
16th October 2014, 10:24 AM
ஹாய் குட்மார்னிங்க் ஆல்..

தாங்க்ஸ் வாசு சார்..ஃபார் த கமெண்ட்..ம்ம் கொஞ்சம் பயம்மா தான் இருந்தது எழுதறச்சே..



//என் சரோவாயிற்றே // ஹாய் ராஜேஷ் சித்தப்பா..:) சொல்லவே இல்லை :) ஓதுவார் ஓதுவார் பாட்டுக்கு நன்றி..

//Looks like there is some Chinnakkannan in you ! // ராஜ் ராஜ் சார்..இருக்குமா இருக்கும் :)

vasudevan31355
16th October 2014, 10:25 AM
ராகவேந்திரன் சார்

'குழந்தைக்காக' 'தை மாத மேகம்' பாடல் ஜோர் என்றால் 'தொட்டுப் பாருங்கள்... ஜோடி பூவைப் போலக் கன்னங்கள்' குற்றால அருவியின் சுகம்.

vasudevan31355
16th October 2014, 10:27 AM
ஹாய் குட்மார்னிங்க் ஆல்..

தாங்க்ஸ் வாசு சார்..ஃபார் த கமெண்ட்..ம்ம் கொஞ்சம் பயம்மா தான் இருந்தது எழுதறச்சே..



அதெல்லாம் பயப்படப் படாது. நான், கிருஷ்ணா, இப்போ ராஜேஷ்ஜி:) எல்லாம் இருக்கோமில்ல. பயப்படக் கூடாது. தெரியமா!

rajeshkrv
16th October 2014, 10:29 AM
ம்ஹூம்...நான் ஒத்துக் கொள்ளவே மாட்டேன்பா. நம் இசையரசி தான் பொருத்தம். அவில் பாகத்தை சரிசமமாக பிரித்துத் தராவிட்டாலும் ஒரு 25% ஆவது தரலாம் இல்லையா?:)

அதே அதே .. நம் இசையரசி

rajeshkrv
16th October 2014, 10:30 AM
மாட்னீங்களா உங்கள் ankil கிட்ட:)

நம்ம அங்கிள் தானே ... குறும்பு

gkrishna
16th October 2014, 11:05 AM
சூப்பர் நண்பர்களே

சின்ன கண்ணன் ராமகிருஷ்ணன் விஜி நடித்த பொய் கால் குதிரை பாலாவின் பாட்டு அருமை. மெல்லிசை மன்னர் பாலச்சந்தர் இணையில் இது வரை வந்த படங்களில் இறுதி படமா ?. இதற்கு பிறகுதான் நரசிம்ஹன் இடம் போனாரா (கல்யாண அகதிகள்).

'நான் ஒரே ஒரு தம் அடிசேண்டா' ஒரு பாட்டு வருமே .
ராமகிருஷ்ணன் நடித்த இன்னொரு படம் மௌலி இயக்கத்தில் வந்த 'அண்ணே அண்ணே ' தானே . மிகவும் பெரிதாக வருவார் என்று எதிர்பார்கபட்ட நடிகர் .நிறைய புதுமுகங்கள் அறிமுகம்

http://antrukandamugam.files.wordpress.com/2013/12/poikkal-kuthirai-f.jpg?w=487http://antrukandamugam.files.wordpress.com/2013/12/poikkal-kuthirai.jpg?w=487http://antrukandamugam.files.wordpress.com/2013/12/poikkal-kuthirai-1.jpg?w=487http://antrukandamugam.files.wordpress.com/2013/12/poikkal-kuthirai-3.jpg?w=487http://antrukandamugam.files.wordpress.com/2013/12/poikkal-kuthirai-e.jpg?w=487

Gopal.s
16th October 2014, 11:25 AM
கவிதாலயா பாலசந்தர் திடீரென்று நாடக பாசம் கொண்டு பண்ணிய படங்கள் பொய்கால் குதிரை (அவரே இயக்கம். marriage made in saloon ),அண்ணே அண்ணே (மௌலி இயக்கம், அந்தபுரம்) .மணல் கயிற்றில் வெற்றி கண்ட அளவு இந்த இரண்டிலும் இல்லை.



crazy எஸ்.வீ.சேகரிடம் முரண் பட்டு பிரிந்து,தன் தம்பியுடன் இணைந்த முதல் நாடகம். அவ்வளவு பிடிக்கும். படம் ஏனோ தானோ. அண்ணே அண்ணே ,நாடகம் அளவு இல்லை. கொஞ்சம் போர் .



இதற்கு மாறாக சராசரி நாடகம் மோடி மஸ்தான் ,மணல் கயிறாக உருவெடுத்து மெகா வெற்றி கண்டு ,சேகரை எங்கோ கொண்டு சென்றது.

chinnakkannan
16th October 2014, 11:39 AM
//கவிதாலயா பாலசந்தர் திடீரென்று நாடக பாசம் கொண்டு பண்ணிய படங்கள்// இல்லையே கோபால் சார்..அவரது ஆரம்ப கால நாடகம் எதிர் நீச்சல், மேஜர் சந்திரகாந்த் தானே படங்களாக உருவெடுத்தன.. பின் ரொம்ப இடைவெளி என வேண்டுமானல் சொல்லலாம்..தண்ணீர் தண்ணீரும் கோமல் ஸ்வாமி நாதனின் நாடகம் தானே..

gkrishna
16th October 2014, 11:42 AM
கலாகேந்திரா பாலச்சந்தர் கவிதாலயா பாலச்சந்தர் ஆக மாற்றம் எந்த படத்தில். கலாகேந்திரா லோகோ திருவள்ளுவர் மெல்லிசை மன்னர் குரலில் குறள் மேல் ஸ்தாயியில் 'அகர முதல எழுத்தெல்லாம் '
கவிதாலயா லோகோ திருவள்ளுவர் இளையராஜா குரலில் பேஸ் வாய்ஸ் 'அகர முதல எழுத்தெல்லாம் ' .
திருவள்ளுவர் சிலை திரும்பும் போதே பர பரனு இருக்கும்

gkrishna
16th October 2014, 11:54 AM
வாசு சார்

இந்த வாரம் குமுதம் படித்தீர்களா ? நீங்கள் வெளியிட்ட வரப்ரசாதம் படத்தை பற்றி இளையராஜாவிடம் கி போர்டு வாசித்த விஜி மனுவேல் பேட்டி வெளி வந்து உள்ளது . இந்த வரப்ரசாதம் படத்திற்கு இசை கோவர்த்தனம் .இளையராஜா பின்னணி இசை என்று சொல்லி உள்ளார் .மிகவும் அருமையாக பின்னணி இசை இருக்கும் என்று சொல்லி உள்ளார்.படம் பார்க்கும் ஆசையை ஏற்படுத்தி விட்டது அவர் பேட்டி ..இதை பார்த்து விட்டு தான் பஞ்சு அன்னக்கிளி சான்ஸ் கொடுத்தார். .பாம் க்ரோவ் ஹோட்டல் தான் அவர்கள் வாசஸ்தலம் என்றெல்லாம் நிறைய சொல்லி இருக்கிறார்

gkrishna
16th October 2014, 12:18 PM
Krishna: You wanted songs in Kapi. Here is one I like:

enna dhavam seidhanai yasodhaa engum nirai para brahmam.........

This is a composition by Papanasam Sivan rendered in Carnatic concerts these days.

திரு ராஜ்ராஜ் சார்

நன்றி காபி ராகத்தில் இடம் பெற்ற என்ன தவம் செய்தனை யசோதா பாடலை நினைவு கூர்ந்ததற்கு. பார்த்திபன் கனவு 2003 ஸ்ரீகாந்த் சினேகா நடித்து வெளிவந்த படத்தில் இந்த பாடலை இசை அமைப்பாளர் வித்யா சாகர் சற்று வித்யாசமாக கையாண்டு 'ஆலங்குயில் கூவுகையில்' என்ற பாடலில் வெளிப்படுத்தி இருப்பார்

http://www.youtube.com/watch?v=8-M-MVjSPoA

vasudevan31355
16th October 2014, 12:27 PM
இன்றைய ஸ்பெஷல் (95)

http://i.ytimg.com/vi/CVtPt3h3Y_k/0.jpg

'இன்றைய ஸ்பெஷலி'ல் தன் குரலால் எல்லோரையும் மயக்கிக் கட்டிப் போடும் ஜிக்கியின் பாடல். 'முதலாளி' படத்தில் எம்.என்.ராஜம் டி.கே.ராமச்சந்திரனுடன் ஆடிப் பாடும் மனம் சொக்க வைக்கும் பாடல்.

அன்றைய எல்.ஆர்.ஈஸ்வரி ஜிக்கிதானே! ஒவ்வொரு முறையும் 'யௌவன ராணிதா....ன்' என்று முடிப்பது சுகமோ சுகம். அருமையாக எழுதப்பட்ட பாடல்.

'பித்தனைப் போல் மறுத்துரைத்தால்
உருமாறி அவனையும் வெற்றி காண்பேனே'

என்ற திமிர்த்தனமான நம்பிக்கையுடன் ஒலிக்கும் வரிகள்.

ராஜம் வழக்கம் போல ஆடிப் பாடி மயக்கும் கட்டழகி அந்தக்கால வில்லன்களுக்கு. நமக்கல்ல. இது மாதிரி ராஜத்துக்கு நிறையப் பாடல்கள் உண்டு. (ரத்தக் கண்ணீர், பாக்கியவதி, திருடாதே, பெண்ணின் பெருமை)

கள்ளத்தனத்திலும், வில்லத்தனத்திலும் டி.கே.ராமச்சந்திரன் எப்போதுமே டாப்.

'இலட்சிய நடிகர்' கதாநாயகனாக நடிக்க தேவிகா நாயகி.

'ஏரிக்கரையின் மேலே' ஏகத்துக்கும் எகிறி ஹிட்டடித்ததால் 'யௌவன ராணி' சுருண்டுவிட்டாள் அற்புதமான அழகிருந்தும் கூட. அதான் நாமிருக்கிறோமே அவளைத் தூக்கி நிறுத்த. முக்தா சீனிவாசன் இயக்கிய இப்படம் அப்போதய ஒரு பெரிய ஹிட்தான். 'திரை இசைத் திலகம்' இசை. ஆரம்ப இசை அமர்க்களம். ஜிக்கி செய்யும் அமர்க்களம் அதிகம். 'யௌவன ராணிதான்' பாடல் முடிந்தவுடன் ராஜம் ராமச்சந்திரனிடம் கேட்பார் 'பாட்டு எப்படி?' என்று. அதற்கு ராமச்சந்திரன் சொல்வார். "இன்பத் தேனாமிரத்ம்". உண்மையும் அதுதானே!

இனி பாடலின் வரிகள்

http://vt.showyou.com/y:iEEnz7s05DI.480x360.jpg

யௌவன ராணிதான் இசை பாடும் வாணிதான்
என் மேலே ஆசை கொள்ளும் இளைஞரும் கோடிதான்.
யௌவன ராணிதான் இசை பாடும் வாணிதான்
என் மேலே ஆசை கொள்ளும் இளைஞரும் கோடிதான்.
யௌவன ராணிதான்

அழகென்னும் போதையூட்டி
அறிவென்னும் ஜாலம் காட்டி
அழகென்னும் போதையூட்டி
அறிவென்னும் ஜாலம் காட்டி
விழி அம்பு பாணம் பூட்டி வெல்லுவேன்
எல்லோரையும் வெல்லுவேன்

நா....ன்

யௌவன ராணிதான் இசை பாடும் வாணிதான்
என் மேலே ஆசை கொள்ளும் இளைஞரும் கோடிதான்.
யௌவன ராணிதான்

கோடானுகோடி வெள்ளிக் கூட்டத்தில் நிலவாக
வாடாத வாலிபனைக் கண்டேன்
கோடானுகோடி வெள்ளிக் கூட்டத்தில் நிலவாக
வாடாத வாலிபனைக் கண்டேன்
காதல் கொண்டேன்

நா....ன்

யௌவன ராணிதான் இசை பாடும் வாணிதான்
என் மேலே ஆசை கொள்ளும் இளைஞரும் கோடிதான்.
யௌவன ராணிதான்

எத்தனையோ நாளாக எதிர்பார்த்த இன்பமெல்லாம்
இன்று பெறுவேனே
பித்தனைப் போல் மறுத்துரைத்தால்
உருமாறி அவனையும் வெற்றி காண்பேனே

ஆ.......

யௌவன ராணிதான் இசை பாடும் வாணிதான்
என் மேலே ஆசை கொள்ளும் இளைஞரும் கோடிதான்.
யௌவன ராணிதான் இசை பாடும் வாணிதான்
என் மேலே ஆசை கொள்ளும் இளைஞரும் கோடிதான்.

யௌவன ராணிதான்


http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=iEEnz7s05DI

gkrishna
16th October 2014, 12:43 PM
...

வா அந்த உலகத்தின் ஒரு பக்கம் பாட்டைப் பொறுத்த வரையில்

அருமையான பாடலை வழங்கிய வாசு சாருக்கு பாராட்டுக்கள்..

முக்கியமாகக் குறிப்பிட வேண்டிய விஷயம்..

இப்படத்தை ரவியின் அற்புதமான நடிப்பிற்காக கண்டிப்பாகப் பார்க்க வேண்டும்.

அப்புறம்..

ஒரு நூறு முறையாவது மெல்லிசை மன்னரின் பின்னணி இசைக்காகப் பார்க்க வேண்டும்.


மிக அருமையான நினைவலைகள் ராகவேந்தர் சார்

இந்த கால கட்டங்களில் அப்போது எல்லாம் வால்வ் செட் ரேடியோ தான். திருநெல்வேலியில் சென்னை a மட்டும் தான் எடுக்கும் (mw) .விவித் பாரதி சுத்தமாக வராது . கூட படித்த ஒரு நண்பன் விஸ்வநாதன் என்று பெயர் கொஞ்சம் வசதி ஜாஸ்தி.பெரிய வீடு. வேறு யாரும் அல்ல பழைய நடிகர் எஸ் ஜி கிட்டப்ப்பவின் முதல் சம்சாரம் கிட்டம்மா பாட்டியின் நேர் வழி பேரன். அவன் வீட்டில் இங்கிலாந்த் பிலிப்ஸ் என்று ஒரு ரேடியோ இருக்கும். அவன் அப்பா ஸ்டேட் பாங்க மேனேஜர் வரதராஜன்.பயங்கர கண்டிப்பான பேர்வழி. சினிமா பாட்டு மூச் பேச்சே எடுக்கபடாது.சரி மனுஷன் கர்நாடக கச்சேரியாவது கேட்பாரானு பார்த்தால் அதுவும் கிடையாது. தானும் செய்ய மாட்டான் தள்ளியும் படுக்க மாட்டான் கேஸ் :) இந்த ரேடியோவை பெரிய சைஸ் உஷா தையல் மெஷின் மேல் மூடும் கேஸ் போல் மூடி வைத்து இருப்பார். சரஸ்வதி பூஜை ஆயுத பூஜை அன்று சந்தன பொட்டு குங்கும பொட்டு வைப்பதோடு சரி.மற்ற நாள் எல்லாம் மூடி இருக்கும். அவனிடம் எப்படியாவது அடி போட்டு ஒரு நாள் 8 மணி விவித் பாரதி பாடல் கேட்க நாங்க 2, 3 பேர் அவனை கெஞ்சி கூத்தாடி வீட்டில் உள்ள மற்றவர்களுக்கு தெரியாமல் திறந்தால் பவர் கார்ட் எலி கடித்து சின்னா பின்னமாகி ரேடியோ சோலி காலி.இங்கிலாந்த் செட் என்பதால் ரிப்பேர் செய்யவும் வழி இல்லை

இப்ப எல்லாம் fm ரேடியோ 10 சேனல் இருக்கு செல் போன் இல். எங்கே கேட்க ? ரேடியோ ஜாக்கிகளின் கொட்டம் தாங்கலை

அது சரி இப்ப விவித் பாரதி வருகிறதா ? நான் அப்பப்ப fm கோல்ட் கேட்கிறேன் .அதிலும் பழைய பாடல்கள் நிறைய போடுவதில்லை

vasudevan31355
16th October 2014, 01:11 PM
வாசு சார்

இந்த வாரம் குமுதம் படித்தீர்களா ? நீங்கள் வெளியிட்ட வரப்ரசாதம் படத்தை பற்றி இளையராஜாவிடம் கி போர்டு வாசித்த விஜி மனுவேல் பேட்டி வெளி வந்து உள்ளது . இந்த வரப்ரசாதம் படத்திற்கு இசை கோவர்த்தனம் .இளையராஜா பின்னணி இசை என்று சொல்லி உள்ளார் .மிகவும் அருமையாக பின்னணி இசை இருக்கும் என்று சொல்லி உள்ளார்.படம் பார்க்கும் ஆசையை ஏற்படுத்தி விட்டது அவர் பேட்டி ..இதை பார்த்து விட்டு தான் பஞ்சு அன்னக்கிளி சான்ஸ் கொடுத்தார். .பாம் க்ரோவ் ஹோட்டல் தான் அவர்கள் வாசஸ்தலம் என்றெல்லாம் நிறைய சொல்லி இருக்கிறார்

நன்றி கிருஷ்ணா சார்! குமுதம் இன்னும் பார்க்கல்ல. ஆனா 'வரப்ரசாதம்' சந்தோஷமான நியூஸ்.

Gopal.s
16th October 2014, 01:34 PM
கலாகேந்திரா பாலச்சந்தர் கவிதாலயா பாலச்சந்தர் ஆக மாற்றம் எந்த படத்தில். கலாகேந்திரா லோகோ திருவள்ளுவர் மெல்லிசை மன்னர் குரலில் குறள் மேல் ஸ்தாயியில் 'அகர முதல எழுத்தெல்லாம் '
கவிதாலயா லோகோ திருவள்ளுவர் இளையராஜா குரலில் பேஸ் வாய்ஸ் 'அகர முதல எழுத்தெல்லாம் ' .
திருவள்ளுவர் சிலை திரும்பும் போதே பர பரனு இருக்கும்
அழகாக வித்தியாசத்தை பிரிந்து கொண்டீர்கள் கிருஷ்ணா. .கவிதாலயா உருவெடுத்தது 1981 இல் நெற்றிக்கண் படத்திலிருந்தே. சின்ன கண்ணன், சீனியர்கள் சீனியர்கள்தான்.

chinnakkannan
16th October 2014, 01:54 PM
//சின்ன கண்ணன், சீனியர்கள் சீனியர்கள்தான்.// அது ட்ரூ தான்..பட் நாம பேசியது நாடகபாசம் ஆஃப் பாலச்சந்தர் தானேயொழிய எந்தக் கம்பெனின்னு இல்லையே..இடையில் எந்த வருடம் என நினைவில்லை ஒரு நாடகம் வேறு எழுதினார் குமுதத்தில்..விவாகரத்து கிட்டு பட்டு ஸ்டைல்..என..மனோரமா என நினைவு.. அவருடைய பெளர்ணமி, அப்புறம் ஒரு கூடை பாசம் - மேடை நாடகம் எந்த வருடம் போட்டார் எனத் தெரியாது. அதன் டி.வி.டி பார்த்திருக்கிறேன்..

அவருடைய ஃபேவரிட் ரீசண்ட் ஆக்ட்ரஸ் இன் டி.வி சீரியல்ஸ் என்று வேண்டுமானல் சொல்லலாம்.. ரேணுகா..( சீரியலில் காதல்பகடையில் கலக்கி ப்ரேமியாய் உருவெடுத்தவர்..கொஞ்சம் ஓவர் டோஸான நடிப்பு..படுத்தவும் செய்வார்..(அயனில் சூர்யாவின் அம்மா) அவர் தான் இரண்டு நாடகங்களிலும் கதானாயகி.

பெளர்ணமி கொஞ்சம் போர் தான் .. திரைப்பட டச் வைத்து ரோஜா கதை போல் இருக்கும்..

ஆனால் ஒரு கூடை பாசம் கொஞ்சம் பரவாயில்லை.. நன்றாகவே இருந்தது..பாலச்சந்தரும் ஒரு சிறு வேஷம் செய்திருப்பார்..அண்ட் வசனங்களை எப்படி மறக்காமல் அனைவரும் நடித்தார்கள் என இப்போதும் ஆச்சர்யமே எனக்கு

chinnakkannan
16th October 2014, 02:06 PM
நாடகத்திலிருந்து திரைக்கு வந்த படங்கள் எனும் போது முதலில் நினைவுக்கு வருவது ஞான ஒளி..அது கல்கியில் தொடர்கதையாக வந்து பைண்ட் செய்யப் பட்ட புத்தகமாய்ப் பலவருடம் முன் படித்திருக்கிறேன். அஃப் கோர்ஸ் ஞான ஒளி வந்த பிறகு தான்.. ஒரு ஆச்சர்யம் என்னவெனில் நடு நடுவில் நாடக் ஸ்டில்ஸூம் நாடக வசனங்களுடன் போட்டிருப்பார்கள்.. மேஜர் ந.தியை அப்படியே ரிஸெம்பிள் பண்ணுவார்..(லாரன்ஸ் காரெக்டருக்கு வீர ராகவன் என நினைவு)

குடும்பம் ஒரு கதம்பம், அவள் சுமங்கலி தான் - நாடகமாய்ப் பார்த்திருக்கிறேன்.. பின் திரையில்

கீழ் வானம் சிவக்கும் - அதுவும் முதலில் நாடகம் அப்புறம் சினிமா..

பரீட்சைக்கு நேரமாச்சு..அதுவும் முதலில் நாடகம் அப்புறம் சினிமா.. (இந்த நாடகங்கள் எல்லாம் பார்த்தது மதுரை லட்சுமி சுந்தரம் ஹாலில்..)

சமீபத்தில் பரீட்சைக்கு நேரமாச்சு வை மறுபடியும் அரங்கேற்றியிருக்கிறார் ஒய்.ஜி. மகேந்திரா.. ந.தியின் ரோல் அவர்..அவர் நடித்த ரோல் வேறு யாரோ..

சோவின் நாடகங்கள் பார்த்ததில்லை.. அவருடைய நாடகங்களில் படமான திரைப்படங்கள் உண்மையே உன்விலை என்ன , யாருக்கும் வெட்கமில்லை, முகமது பின் துக்ளக்.. உ உ எவில் முத்துராமனின் ஃபாதர் ரோல் அண்ட் வி.கே.ஆரின் ஏன்னு கேளு நன்றாக இருக்கும்..திடுமென வரும் இத்தனை மாந்தருக்கு ஒரு கோவில் போதாது (மதுண்ணா சமீபத்தில் போட்டார் போன பாக எண்டில்) வெகு அழகிய பாடல்..

மெளலியின் சில நாடகங்களும் ல.சு. ஹாலில் பார்த்திருக்கிறேன்.. அதில் ஒன்று (பெயர் நினைவிலில்லை) மற்றவை நேரில் என்று படமானது.. இன்னொரு மறக்க முடியாத நாடகம் அவன் அவள் அது.. வெகு நல்ல நாடகம்..ஒரு ஹாஸ்பிடலையே கண் முன் கொண்டுவந்து காட்டியிருப்பார்கள்.. இதை ஏன் அவர் படமாக ஆக்கவில்லை எனத் தெரியவில்லை..அது மறக்காததற்கு இன்னுமொரு காரணம் 6 மணி நாடகம் என்று சொல்லிவிட்டு எட்டு மணிக்குத் தான் நாடகமே போட்டார்கள்..அந்த அது க்கான அர்த்தம் ஆதரவு என்று..(அவன் அவள் அது என்ற திரைப்படத்திற்கும் இதற்கும் சம்பந்தமில்லை)

gkrishna
16th October 2014, 02:26 PM
சி கே சார்

உங்கள் நாடக அனுபவம் கட்டுரை அருமை. திரு பூர்ணம் விஸ்வநாதன் கூட சுஜாதாவின் மேடை நாடகங்களை கொண்டு வந்தார்.
'கடவுள் வந்து இருந்தார்' ,'அடிமைகள்','ஊஞ்சல்','டாக்டர் நரேந்தர் வினோத வழக்கு ' .இதுல 'டாக்டர் நரேந்தர் வினோத வழக்கு ' ரொம்ப ரசித்த நாடகம்

gkrishna
16th October 2014, 02:33 PM
( அமுதசுரபி ஏப்ரல் 2008, நன்றி: மெலட்டூர். இரா.நடராஜன் )

எழுத்தாளர் சுஜாதவின் விஞ்ஞானக் கதைகளில் கால இயந்திரத்தில் உட்கார்ந்து கொண்டு பின்னோக்கி பயணிப்பது மாதிரி கற்பனைகள் வரும். அந்த மாதிரி நாம் 25 வருடங்கள் பின்னோக்கிப் போக வாய்ப்புக் கிடைத்தால், அதே சுஜாதா பூர்ணம் விஸ்வநாதனோடு கை கோர்த்துக் கொண்டு வழங்கிய மேடை நாடகங்கள் நம்மை பிரமிக்க வைக்கும்.

http://bp1.blogger.com/_Oaz-PZqz7Q0/R_28ETIpCgI/AAAAAAAAAOY/XPqINVNJffw/s320/poornamsujatha.jpg

டாக்டர் நரேந்திரனின் விநோத வழக்கு, கடவுள் வந்திருந்தார், அடிமைகள், ஊஞ்சல், அன்புள்ள அப்பா என்று பூர்ணம் நியூ தியேட்டர்ஸ் மேடையேற்றிய நாடகங்கள் ஒரு எழுச்சியை உண்டாக்கின. அவைகளில் விஞ்சி நிற்பது சுஜாதாவின் எழுத்தாற்றலா, பூர்ணத்தின் நடிப்பாற்றலா என்று பட்டி மன்றமே நிகழ்த்தலாம். தன் நீண்ட கால நாடக அனுபவங்களில் சிலவற்றை நம்மோடு பகிர்ந்து கொண்டார் பூர்ணம்.

அதெப்படி சுஜாதா உங்களுக்கு எழுதிய நாடகங்கள் உங்களுக்காகவே எழுதப்பட்டது மாதிரி இருக்கிறது என்று கேட்டோம்.

"சுஜாதா பூர்ணம் நியூ தியேட்டர்ஸுக்காக நாடகம் எழுத யோசிக்கும் போதே என்னை மனதில் வைத்துக் கொண்டு எழுதியிருக்கலாம். அவருக்கும் அவர் அப்பாவுக்கும் உள்ள அன்யோன்யம் என் மூலமாக வெளிப்படுவதாகவே நான் நினைக்கிறேன். தவிர, அவரோடு கலந்து பேசி சில மாற்றங்கள் கொண்டு வருவோம். அது இன்னும் மெருகு சேர்க்கும். அந்த மாதிரி பாரதி இருந்த வீடு என்ற நாடகத்தில் என் பேத்தி 'நீங்க பாட்டியை பெண் பார்க்க போன போது என்ன பேசினீர்கள்' என்று கேட்பாள். அதற்கு நான் சொல்லும் டயலாக் ஸ்கிரிப்டில் உள்ளதைவிட கொஞ்சம் கூடுதலாகவும் ஸ்வாரஸ்யமாகவும் இருக்கும். அந்த சீன் வரும்போது சுஜாதா சீட்டின் நுனிக்கே வந்து மிக ஆர்வமாக கவனித்து ரசித்திருக்கிறார்" என்றார் பூர்ணம்.

ஒர் ஆணின் வெற்றிக்கு பின்னால் ஒரு பெண் இருக்கிறாள் என்பது பூர்ணத்துக்கு முழுக்கப் பொருந்தும். பூர்ணம் மேடையில் சுடர் விட்டுப் பிரகாசித்தார் என்றால் அதற்கு இன்றும் இயங்கு சக்தியாக இருப்பவர் திருமதி சுசீலா விஸ்வநாதன்.

"பூர்ணம் நியூ தியேட்டர் சென்னையை மையமாக வைத்து இயங்கிக் கொண்டிருந்தாலும் ஸ்கிரிப்ட் எழுதித்தரும் சுஜாதா அந்த சமயத்தில் பெங்களூரில்தான் இருந்தார். சாதா போஸ்டில்தான் ஸ்கிரிப்ட் வரும். சுஜாதாவின் எக்ஸ்பிரஸ் ஸ்பீட் கையெழுத்தைப் படிப்பது என்பதே மிகப் பெரிய சவால். பெரும்பாலும் அந்தப் பணி எனக்குத்தான் வரும். கடிதம் வந்ததும் அந்தக் கணமே படிக்க வேண்டும் என்பார் என் கணவர். என்க்கு நானே ஒரு முறை தனியாக ரிஹர்சல் செய்து கொண்டு படித்தால்தான், அவர் மனம் கோனாமல் பிசிறில்லாமல் படிக்க வரும். எனவே கடிதம் வந்ததும் யாருக்கும் தெரியாமல் எடுத்து ஒளித்து வைத்துவிட்டு, நான் முழுவதுமாக தயாரான பிறகுதான் கடிதத்தையே அவர் கண் முன்னால் காட்டுவேன்" என்றார் திருமதி சுசீலா பூர்ணம்.

"சுஜாதாவின் பல நாடகங்களில் உச்சமான நாடகமாக நான் கருதுவது ஊஞ்சல் நாடகம்தான். அதில்தான் சுஜாதா எழுத்தின் வீச்சு மிகவும் உயர்ந்திருப்பதாக நான் நினைக்கிறேன். ஒவ்வொரு காட்சியிலும் நான் நடித்தபோது அந்தப் பாத்திரத்தை ரசித்து ரசித்து செய்திருக்கிறேன். அந்த நாடகத்தில் நான் ஓர் அறிவு ஜீவி. ஆனால் எனது கண்டுபிடிப்புகள் நிகழ்காலத்துக்கு ஒத்துவராது என்பதை அறியாதவன். அப்படிச் சொன்னாலும் அதை ஏற்க மறுப்பவன். நிகழ்காலத்தால் உதாசீனப்படுத்தப்படும் ஒர் இறந்தகால மனிதன். ஒரு கட்டத்தில் என் ப்ராஜெக்ட்டுக்காக என் மகள் தன் கல்யாணத்திற்காக சேர்த்து வைத்திருக்கும் மேமிப்பிலிருந்து பதினைந்தாயிரம் ரூபாயைக் கடனாக கேட்பேன். என் மகளும் தன் தந்தை படும் மன வேதனையை உணர்ந்து தர ஒப்புக் கொள்வாள். ஆனால் என் மனைவியோ அதை வன்மையாக கண்டிப்பாள். மனதை பிழியும் காட்சி அது. இது கற்பனை என்றாலும் நாடகம் பார்த்துக் கொண்டிருந்த என் மகள் பத்மஜா உணர்ச்சிக் கொந்தளிப்பில் நாடகம் முடிந்ததும் ரூபாய் பதினைந்தாயிரத்துக்கு என் பெயருக்கு செக் எழுதி என் டேபிளில் வைத்துவிட்டாள். அப்பறம் அவளுக்கு புரியவைத்து சமாதானபடுத்துவதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது. இன்றும் அவளைக் கிண்டலடிக்க 'அந்த பதினைந்தாயிரம் செக்' என்று சொல்லி சொல்லி சிரித்து மகிழ்வோம். என்னால் அந்த பரிமாணத்தை கொடுக்க முடிந்ததற்கு காரணம் சுஜாதாவின் எழுத்துதான்".

" ஊஞ்சல் நாடகத்துக்காக மும்பை போனதை என்னால் மறக்கவே முடியாது. இந்த நாடகத்துக்கு முக்கிய செட் பிராப்பர்டி மேடையில் பிரதானமாக முன்னும் பின்னுமாக ஆடும் ஊஞ்சல்தான். ஆனால் மும்பை வந்து சேர்ந்ததும் எங்களுக்கு ஆரம்ப சோதனையே அந்த ஊஞ்சல்தான். எங்கள் எதிர்பார்ப்புக்கு ஏற்ற ஊஞ்சல் அவ்வளவு எளிதாக கிடைக்கவில்லை. தெரிந்தவர்களின் விலாசங்களை வைத்துக் கொண்டு தேடுதல் வேட்டையை தொடங்கினோம். நேரம் ஆக ஆக ஒரு நாள் கிரிக்கெட்டின் கடைசி ஓவர்கள் மாதிரி டென்ஷன் தலைக்கேற ஆரம்பித்துவிட்டது. அதிர்ஷ்டவசமாக கடைசி ஒரு சில மணி நேரங்களில் கண்டேன் சீதையை என்ற மாதிரி ஒரு ஊஞ்சலை கண்டு கொண்டோம். மும்பை ஊஞ்சல் நாடகத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது என்றால் அதில் அந்த ஊஞ்சலுக்கும் பங்குண்டு" என்று சிரித்தார் பூர்ணம்.

"மற்ற நாடகக் குழுவில் இருப்பது போல தனக்கு ஏ.சி. ரூம் மற்றவர்களுக்கு சாதாரண ரூம்கள் என்பது பூர்ணம் நியூ தியேட்டரில் கிடையாது. பூர்ணமும் சுஜாதாவும் அந்த நாட்களில் எங்களோடு இரண்டாம் வகுப்புப் பெட்டியில் பயணித்திருக்கிறார்கள். ஒரு முறை வெளியூருக்குச் சென்றிருந்தபோது அவர்கள் அளித்திருந்த ரூம்கள் சராசரிக்கும் குறைவாக இருந்தது என்பதை எங்கள் முக பாவனைகளிலேயே புரிந்து கொண்ட பூர்ணம், உடனடியாக செயலில் இறங்கி மாற்று ஏற்பாடுகள் செய்து அதன் பிறகுதான் சாப்பிட்டார்" என்கிறார் நாடக மற்றும் டி.வி. சீரியல் நடிகையான உஷா.

chinnakkannan
16th October 2014, 02:44 PM
க்ருஷ்ணா ஜி.. தாங்க்ஸ்.. சுஜாதாவை எப்படி விட்டேன்..ஏனெனில் அவரது நாடகங்கள் திரையில் வரவில்லை..

ஆனால் அடிமைகள் கடவுள் வந்திருந்தார்..டா.வி.வ படிக்க நன்றாக இருக்கும்.. நாடகங்கள் எதுவும் பார்த்ததில்லை..டி.விக்காக எடுக்கப் பட்ட போது டா. ந.வி.வ அவ்வளவு சுவாரஸ்யமாக இல்லை..அதே போல் ஒரு கொலை ஒரு பிரயாணம்.. நாடகம். நன்றாக இருக்கும்.. டிவியில் ஓ.. நோ.. மாறுதல் வரும் மட்டும் (செட் ஆஃப் ஓரங்க நாடகங்கள்) பார்த்திருக்கிறேன் என நினைக்கிறேன்..

டாக்டர் நரேந்திரனின் வினோத வழக்கு - சிட்னி ஷெல்டனின் நத்திங்க் லாஸ்ட்ஸ் ஃபாரெவர் இரண்டையும் படித்தால் இரண்டுக்கும் கொஞ்சம் ஒற்றுமை தென்படும்..

பூர்ணம் விஸ்வனாதன் நல்ல நடிகர்..அவரை அவ்வளவாக வெள்ளித் திரை உபயோகப் படுத்திக் கொள்ளவில்லை என என் அபிப்ராயம்..

ஓஹ்.. மறந்துட்டேனே கிருஷ்ணாஜி.. நாடகம் பார்க்காமல் படமாய்ப் பார்த்தது எது தெரியுமா மெரீனாவின் “தனிக்குடித்தனம்”.. சினிமாவில் பூர்ண்ம் ரோல் சோ..

பூர்ணம்பற்றிய பதிவிற்கு தாங்க்ஸ்..

வாசு சார்..இன்றைய ஸ்பெஷல் பார்த்து கேட்டு சொல்கிறேன்.. ஏன் ஏரிக்கரையில் போடவில்லை..ம்ம்க்கும்.. :)


சி கே சார்

உங்கள் நாடக அனுபவம் கட்டுரை அருமை. திரு பூர்ணம் விஸ்வநாதன் கூட சுஜாதாவின் மேடை நாடகங்களை கொண்டு வந்தார்.
'கடவுள் வந்து இருந்தார்' ,'அடிமைகள்','ஊஞ்சல்','டாக்டர் நரேந்தர் வினோத வழக்கு ' .இதுல 'டாக்டர் நரேந்தர் வினோத வழக்கு ' ரொம்ப ரசித்த நாடகம்

gkrishna
16th October 2014, 02:50 PM
டியர் சி கே

இப்ப சமீபத்தில் (4 அல்லது 5 மாசம் இருக்கும்) சென்னையில் பொன்னியின் செல்வன் நாடகம் பார்த்தேன் .ரொம்ப interesting . நிறைய செலவு செய்து இருந்தார்கள் .விருமாண்டி பசுபதி கூட நடித்து இருந்தார் .அவர் தான் ஆதித்த கரிகாலன. வந்திய தேவன்,ஆழ்வார்கடியான் இவங்களுக்கு நல்ல கைத்தட்டு கிடைத்தது. டிக்கெட் காஸ்ட்லி .நிறைய நடிகர்கள் யார் யார் என்று தெரியவில்லை

http://2.bp.blogspot.com/-L1CFhtVcMUo/U5rJkHH-J7I/AAAAAAAAAjc/bpcBGuU6DMg/s400/PS2.jpg

gkrishna
16th October 2014, 02:56 PM
உங்கள் எழுத்தில் வசீகர நடை உள்ளது சி கே என்று முரளி சார் சொல்வது ரொம்ப சரி . என்ன அழகாய் எழுதுகிறீர்கள் . வெறும் புகழ்ச்சி அல்ல

நீங்கள் கால சக்ரம் நரசிம்ஹன் (ஹிந்து சப் எடிட்டர் - காதலிக்க நேரமில்லை கோபு சடகோபன் - கமலா சடகோபன் (கதவு நாவல் புகழ்) அவர்களின் புதல்வர் ) எழுதிய சங்கத்தார படித்து இருக்கிறீர்களா ?. ஆதித்த கரிகாலன் கொலையை வேறு விதமாக அணுகி இருப்பார்

chinnakkannan
16th October 2014, 03:05 PM
அகெய்ன் தாங்க்ஸ்..

இல்லீங்க க்ருஷ்ணா ஜி.. ஆனால் சமீபத்தில் படித்தது மாயா என்று ஒரு பெண்மணி எழுதிய கடாரம் என்ற சரித்திர நாவல்..(ராஜேந்திர சோழன் காலம்) கிட்டத்தட்ட 600 பக்கங்கள் கொண்ட நாவலில் இருநூறு பக்கங்களுக்குள் 75 கேரக்டர்ஸ் அண்ட் கடாரம் படையெடுப்பும் முடிந்துவிடும்..பின்னும் படிக்கத்தூண்டி, அத்தியாயத்துக்கு அத்தியாயம் சஸ்பென்ஸ் கொடுத்துக் கொடுத்து ஒரு லெவலுக்கு மேல்..சரி முடித்துவிடுவோம் என முடித்தேன்.. நன்றாக எழுதியிருக்கிறார் அவர்..ஆனால் நிறைய கேரக்டர்ஸ் நிறைய சஸ்பென்ஸ்..

கங்கை கொண்ட சோழன் நான்காம் பாகம் இன்னும் பாதியிலேயே நிற்கிறது..உடையார் பாலகுமாரன் ஆறு பாகங்கள்.. படிக்கவில்லை எனில் படித்து விடுங்கள்..கொஞ்சம் படக்கென படிக்க இயலாது எனக்கு மூன்று மாதங்கள் ஆயின..

நந்திபுரத்து நாயகி என விக்கிரமன் பொன்னியின் செல்வனைத் தொடர்ந்திருந்தார் எனக் கேள்விப் பட்டிருக்கிறேன்..ஆனால் பார்த்தீர்களெனில்..விக்ரமன் சீனியர் எழுத்தாளர் தான்..எனக்கென்னவோ கொஞ்சம் ஸ்லோவாகப் போவது போலப் பிரமை..

நீங்கள் சொன்ன காலசக்ரம் நரசிம்ஹன் புத்தகம் அடுத்த லீவு வரும்போது வாங்க வேண்டும்..

பொன்னியின் செல்வன் பார்த்தீர்களா..கொடுத்து வைத்தவர்.. நான் சிவகாமியின் சபதம் இங்கு மார்ச் மாதமோ பிப்ரவரியோ நினைவு..தோட்டா தரணியின் செட்.. ஆனால் நடித்தவர்கள் கொஞ்சம் அமெச்சூர் ஆர்ட்டிஸ்ட் போலும் .. சிவகாமிக்கு மொத்தமே மூணே மூணு டிரஸ் தான்..பரஞ்சோதி நல்ல ஒல்லியாய்க் குறுந்தாடியெல்லாம் வைத்துக் கொண்டு வேலெறிவார்..சுகமில்லை..

chinnakkannan
16th October 2014, 03:08 PM
இப்போது மனதில் ஒலித்துக் கொண்டிருக்கும் பாடல் என்ன தெரியுமா..சமுத்திர ராஜ குமாரி சுகபுஷ்ப சுகுமாரி.. ஆனால் பாடல் வரிகள் கிடைக்கவேயில்லை.. பாட்டு வீடியோ கிடைத்தது..சாயந்திரம் பார்த்து பாடல் வரிகளை இடுகிறேன்..சரியா..( நல்ல பாட்டு)

http://www.youtube.com/watch?v=Fu3xfmKFUSE

Gopal.s
16th October 2014, 03:31 PM
கிருஷ்ணா/சி.க,



ஏதோ casual ஆக சொல்ல போக ,தகவல் களஞ்சியம் ஆகவே ஆகி விட்டது.சோ,விசு,மௌலி,எஸ்.வீ.சேகர்,கிரேசி ,கோமல்,மெரினா,பூரணம் ஒரு நாடகம் கூட விட்டதில்லை.சிவாஜியின் வியட்நாம் வீடு, எம்.ஆர்.ராதா தூக்கு மேடை,ரத்த கண்ணீர் என்று சில.



சிறு வயதில் நானே எழுதி ,நானே நடிப்பேன். எம்.ஐ period ,என் சொந்த கதைகளை எழுதி,படிக்க சொல்லி என்னை ஊக்குவித்தார்கள் ராஜேந்திரன் ,ஆர்.பீ சார்.(11,12 வயதில்).D.E .O வந்தால்,இலக்கிய மன்றங்களில்,ஆண்டு விழாக்களில்,ரேடியோ நாடகங்களில் (பாண்டி,திருச்சி) நானே எழுதி ,இயக்கியவை.நான் தான் ராஜா ரோல் ஆண்டு விழாக்களில் (கதாநாயகிகள் ,தோழிகள்,ராணிகள் இத்யாதி. மீரா,ஜெயந்தி,விமலா என்று)



என் நாடகம் பற்றிய பார்வை,புரிதல் மாறியது ஞானியை சந்தித்த பின். முத்துசாமி,இந்திரா பார்த்தசாரதி,அம்பை,பிரபஞ்சன்,வண்ணநிலவன்,பாதல் சர்க்கார் (work shop ),டெண்டுல்கர் என்ற ஜாம்பவான்களுடன் சந்திப்பு. பரீக்ஷாவில் 6 வருடம் தொடர்ந்த பங்களிப்பு.கூத்து பட்டறை,எம்.பீ.எஸ் youth coir என்று ஒரு பெரிய வட்டம்.



பிறகுதான் வியாபாரியாகி விட்டேனே??

gkrishna
16th October 2014, 04:12 PM
கிருஷ்ணா/சி.க,



ஏதோ casual ஆக சொல்ல போக ,தகவல் களஞ்சியம் ஆகவே ஆகி விட்டது.சோ,விசு,மௌலி,எஸ்.வீ.சேகர்,கிரேசி ,கோமல்,மெரினா,பூரணம் ஒரு நாடகம் கூட விட்டதில்லை.சிவாஜியின் வியட்நாம் வீடு, எம்.ஆர்.ராதா தூக்கு மேடை,ரத்த கண்ணீர் என்று சில.



சிறு வயதில் நானே எழுதி ,நானே நடிப்பேன். எம்.ஐ period ,என் சொந்த கதைகளை எழுதி,படிக்க சொல்லி என்னை ஊக்குவித்தார்கள் ராஜேந்திரன் ,ஆர்.பீ சார்.(11,12 வயதில்).D.E .O வந்தால்,இலக்கிய மன்றங்களில்,ஆண்டு விழாக்களில்,ரேடியோ நாடகங்களில் (பாண்டி,திருச்சி) நானே எழுதி ,இயக்கியவை.நான் தான் ராஜா ரோல் ஆண்டு விழாக்களில் (கதாநாயகிகள் ,தோழிகள்,ராணிகள் இத்யாதி. மீரா,ஜெயந்தி,விமலா என்று)



என் நாடகம் பற்றிய பார்வை,புரிதல் மாறியது ஞானியை சந்தித்த பின். முத்துசாமி,இந்திரா பார்த்தசாரதி,அம்பை,பிரபஞ்சன்,வண்ணநிலவன்,பாதல் சர்க்கார் (work shop ),டெண்டுல்கர் என்ற ஜாம்பவான்களுடன் சந்திப்பு. பரீக்ஷாவில் 6 வருடம் தொடர்ந்த பங்களிப்பு.கூத்து பட்டறை,எம்.பீ.எஸ் youth coir என்று ஒரு பெரிய வட்டம்.



பிறகுதான் வியாபாரியாகி விட்டேனே??

Great http://static.freepik.com/free-photo/hands--cook--cooking--clap_3256198.jpg

chinnakkannan
16th October 2014, 04:12 PM
குரு கோபால் ஜி.. :) ஹையாங்க்..இவ்ளோ எக்ஸ்பீரியன்ஸ்லாம் வச்சுக்கிட்டு அதப் பத்தி சொல்லாம் கொய்ங்க் கொய்ங்க்னு குதிச்சா எப்படி.. ஞானியின் மொழிப்யர்ப்பு நாடகங்கள் சில படித்திருக்கிறேன்..

சமீபத்தில் எழுத்தாள நண்பர் இரா.முருகனின் சிலிக்கன் வாசல் நாடகம் பார்த்தீர்களா ஷ்ரத்தா என நினைவு.. ஒண்ணு ரெண்டு கதைகளை கதைகள் த்ரெட்ல எழுதுங்களேன்..இரா.முருகன் அவரது சில கதைகளை நாடகப் படுத்தி உள்ளார்..உத்தராயணம் முதல் ஆட்டம்..அவரது இணைய தளத்தில் இருக்கும்..நேரமிருப்பின் படித்து ப் பாருங்கள் நன்றாக இருக்கும்

chinnakkannan
16th October 2014, 04:16 PM
கோபால் ஜி.. நீங்கள் சொல்ல மறந்த நானும் சொல்ல விட்ட நாடகங்கள்..ஆர்.எஸ் மனோகருடையவை.. துரோணர் அப்புறம் இன்னுமொரு நாடகம் பார்த்த நினைவு.. சிவதாண்டவம் என ராஜா முத்தையா மன்றத்தில் போட்டார்..அந்தப் பாஸை வேஸ்ட் செய்துவேறு ஏதோ சினிமாவிற்குச் சென்றதை எண்ணி இப்போதும் மனதிற்குள் வருத்தம்..

chinnakkannan
16th October 2014, 04:22 PM
ரொம்ப வருடம் முன்பு எழுதிப் பார்த்த ஓரங்க நாடகம்!

http://www.mayyam.com/talk/showthread.php?10468-%26%232984%3B%26%233007%3B%26%232996%3B%26%232994% 3B%26%233021%3B

madhu
16th October 2014, 04:59 PM
கிருஷ்ணா/சி.க,
ஏதோ casual ஆக சொல்ல போக ,தகவல் களஞ்சியம் ஆகவே ஆகி விட்டது.சோ,விசு,மௌலி,எஸ்.வீ.சேகர்,கிரேசி ,கோமல்,மெரினா,பூரணம் ஒரு நாடகம் கூட விட்டதில்லை.சிவாஜியின் வியட்நாம் வீடு, எம்.ஆர்.ராதா தூக்கு மேடை,ரத்த கண்ணீர் என்று சில.
சிறு வயதில் நானே எழுதி ,நானே நடிப்பேன். எம்.ஐ period ,என் சொந்த கதைகளை எழுதி,படிக்க சொல்லி என்னை ஊக்குவித்தார்கள் ராஜேந்திரன் ,ஆர்.பீ சார்.(11,12 வயதில்).D.E .O வந்தால்,இலக்கிய மன்றங்களில்,ஆண்டு விழாக்களில்,ரேடியோ நாடகங்களில் (பாண்டி,திருச்சி) நானே எழுதி ,இயக்கியவை.நான் தான் ராஜா ரோல் ஆண்டு விழாக்களில் (கதாநாயகிகள் ,தோழிகள்,ராணிகள் இத்யாதி. மீரா,ஜெயந்தி,விமலா என்று)
என் நாடகம் பற்றிய பார்வை,புரிதல் மாறியது ஞானியை சந்தித்த பின். முத்துசாமி,இந்திரா பார்த்தசாரதி,அம்பை,பிரபஞ்சன்,வண்ணநிலவன்,பாதல் சர்க்கார் (work shop ),டெண்டுல்கர் என்ற ஜாம்பவான்களுடன் சந்திப்பு. பரீக்ஷாவில் 6 வருடம் தொடர்ந்த பங்களிப்பு.கூத்து பட்டறை,எம்.பீ.எஸ் youth coir என்று ஒரு பெரிய வட்டம்.


Wow ! எண்ணி முடியாதவை ! சுப்பர்ப் !

http://karenmaezenmiller.com/wp-content/uploads/ss_101456818.jpg

Gopal.s
16th October 2014, 07:36 PM
மனோகர் நாடகங்கள் நிறைய பார்த்திருக்கிறேன். பரீக்ஷாவில் இருந்த காலத்தில் அவை நாடகங்களல்ல.magic show என்று கிண்டலடித்துள்ளோம்.

பூரணத்தின் அத்தனை பின்னாள் நாடகங்களும் தழுவல்,இரவல்.
டாக்டர் நரேந்திரன் வினோத வழக்கு- சிகாகோ கான்ஸ்பிரசி .
ஊஞ்சல்- Death of a Sales man .

எனக்கு பூரணம் நல்ல பழக்கம். என்னுடன் பலமுறை அவர் குழுவில் இணைய சொல்லி கேட்பார். ஆனால் எனக்கு ஊர் சுற்றும் வேலை.அதனால் நான் ஒப்புதல் அளிக்கவில்லை.

நான் நடித்த தழுவல் நாடகங்கள்.

நிரபராதிகள் காலம்.(Siegfried Lenz )
மீள முடியுமா(சாத்தர்)
விசாரணை(காப்கா)
பிறகொரு இந்திரஜித்- பாதல் சர்க் கார்.
ஊர்வலம்- பாதல் சர்க்கார்.
கமலா- டெண்டுல்கர்.

rajeshkrv
16th October 2014, 09:13 PM
வாசு ஜி, முதலாளி படப்பாடலும் விளக்கமும் சூப்பர்.

கோபால் ஜி, கிருஷ்ணா ஜி, சி.,க நாடக நினைவலைகளை தூண்டியதற்கு நன்றி


பொய்கால் குதிரை .. பார்த்து மகிழலாம்.. வாலி சும்மா தூள் கிளப்பியிருப்பார். சார்லி அறிமுகம் அதில்.
ராமகிருஷ்ணா நல்ல அம்சமாய் இருப்பார். அண்ணே அண்ணேவில் இவர் வரும்போது விஜியும் சுமித்ராவும் குழைவதும் எல்லாம் தமாஷ் ..

அதே போல் கன்னட ஸ்ரீதரும் நல்ல பரத நாட்டிய கலைஞர் .. நல்ல நடிகரும் கூட
எந்த மொழியிலும் நல்ல கலைஞர்களை ஊக்குவிப்பதில் பாலசச்ந்தருக்கு ஈடு யாருமில்லை

chinnakkannan
16th October 2014, 10:28 PM
கண்ணுக்குள்ள ஒண்ணிருக்கு ஒண்ணுக்குள்ளே பெண்ணிருக்கு
பெண்ணுக்கிட்ட என்ன தான் இருக்கு… ராகினி எம்.ஆர் ராதா – படம் கவிதா..ம்ம் ஒரு குத்துப் பாட்டின் இடையில் வீணை (தானே) இப்ப தான் கேட்கிறேன்.. டி.எம்.எஸ்.. எல்.ஆர் ஈஸ்வரி.. (பாடும் போதே அவர்களும் ஆடியிருப்பார்கள் போல)

http://www.youtube.com/watch?v=8p6KK0SP5pM&feature=player_detailpage

எதையோ தேடப் போய் இது அகப்பட்டதாக்கும்..(வாசு சார் வந்து குதிக்கப் போகிறார்.. நான் இ.ஸ்பெ ல எழுதியிருப்பேனே என்று..(எழுதிட்டாரா என்ன))

**

RAGHAVENDRA
16th October 2014, 11:50 PM
வாசு, சி.க. ராஜேஷ், கிருஷ்ணா, கோபால், மது என ஒவ்வொருவரின் பங்களிப்பிலும் ஜெட் வேகத்தில் பறக்கிறது மதுர கானத் திரியின் பக்கங்கள்..

அனைவருக்குமே பாராட்டுக்கள்.

தங்கள் அனைவருக்காகவும் அபூர்வமான ஒரு சில பாடல்கள்..

1. கோடுகள் இல்லாத கோலங்கள் படத்திலிருந்து ஜெயச்சந்திரன் வாணி ஜெயராம் குரல்களில் பூமலரும் வேளையிலே ... இனிமையான பாடல்

http://www.youtube.com/watch?v=I8YIS4KUO04

2. தன் வினை தன்னைச் சுடும் படத்திலிருந்து ... எம்.எல்.ஸ்ரீகாந்த் இசையமைத்துப் பாடிய பாடல்.. சூப்பர் ஹிட் உபயம் .. சிலோன் ரேடியோ..

http://www.youtube.com/watch?v=d_wCNwQ_i6o

3. அல்லி பெற்ற பிள்ளை... பி.பானுமதி ... உன்னோடு என் நெஞ்சமே ஒன்றாய் ஊஞ்சலாடுதடா...

இப்பாடலைப் பற்றி முன்னரே விவாதித்திருக்கிறோம் என எண்ணுகிறேன். என்றாலும் பாடல் அலுக்கவில்லை.. அதனால் இங்கே மீண்டும்..

http://www.youtube.com/watch?v=yFnCJL4pcHs.

RAGHAVENDRA
17th October 2014, 12:03 AM
புண்ணியவான் மகராசன் நல்லா இருக்கணும்.. கடவுள் இவனிடம் இன்னும் ஏராளமான அபூர்வ பழைய படங்களைக் குடுக்கணும்..

இப்படி இந்தப் பாடல் காட்சியை யூட்யூப் இணைய தளத்தில் தரவேற்றிய நண்பரை நீங்கள் பாராட்டத் தான் போகிறீர்கள்.. நானும் தான்..

எத்தனை ஆண்டுகளானால் என்ன இப்பாடலை சலிக்காமல் கேட்டு வருகிறோம்.. இன்று...

பார்க்கவே போகிறோமே..

கோபால் சார்... இது உங்களுக்காகத் தான்.. வாசு சார் உங்களுக்கும் சேர்த்துத் தான்...

யாரடி வந்தார் உன் எண்ணத்தைக் கொள்ள .. நீயும் நானும்... ரவி .... டி.எம்.எஸ்... மெல்லிசை மன்னர்...

என்ஜாய்...

தரவேற்றிய அன்பருக்கு நன்றி.

http://www.youtube.com/watch?v=74lAcTssmnA&index=6&list=UUXPzhGHR8ZJPZxJpuaFfXzw

RAGHAVENDRA
17th October 2014, 12:17 AM
எவ்வளவோ எழுத மனம் துடிக்கிறது... வார்த்தையோ முட்டுகிறது..

நீண்ட நாட்களுக்குப் பிறகு..

திருக்கோயில் தேடி ரதி தேவி வந்தாள்...

http://www.youtube.com/watch?v=VjiOVob1LOQ&index=88&list=UUXPzhGHR8ZJPZxJpuaFfXzw

RAGHAVENDRA
17th October 2014, 12:21 AM
சி.க. சார்... இந்தப் பாடல் வரிகளுக்காக இப் பாடல் உங்களுக்காக..

காலம் என்னோடு வரும் போது
கடவுள் வருகின்றார்...
காதல் என்னோடு வரும் போது என்
தலைவன் வருகின்றார்..

பல ஆண்டுகளுக்குப் பிறகு காட்சிக்கு...

புதிய வாழ்க்கை திரைப்படத்திலிருந்து எஸ்.ஜானகி குரலில் திரை இசைத் திலகம் இசையில் ...

http://www.youtube.com/watch?v=zi8bAUy3v4w&index=94&list=UUXPzhGHR8ZJPZxJpuaFfXzw

chinnakkannan
17th October 2014, 01:43 AM
//காலம் என்னோடு வரும் போது
கடவுள் வருகின்றார்...
காதல் என்னோடு வரும் போது என்
தலைவன் வருகின்றார்..

அது தான் உலகம்..தேடினேன் கைவந்தது.
அழைக்கும் பொன்னான இரவு
மணக்கும் என்வாழ்க்கை உறவு..//
//எங்கு பார்த்தாலும் இயற்கைக் காட்சி//
//யாரடி வந்தார் உன் எண்ணத்தைக் கொள்ள.. ஐலல்லோ..//
//உன்னோடு என் நெஞ்சமே ஒன்றாய் ஊஞ்சலாடுதடா...//

.மிக்க நன்றி ராகவேந்திரா சார்.. அனைத்துப் பாடல்களுக்குமே. இனிமை….கோடுகள் இல்லாத கோலங்கள் மட்டும் ஒர்க் செய்யவில்லை தேடிக் கேட்கிறேன்..அகெய்ன் தாங்க்ஸ்..

Gopal.s
17th October 2014, 03:57 AM
விழியாலே காதல் மொழி பேசும் ... சிவகாமி ... அசோக் .... இனியவளே என்று பாடியவர் இனியவள் தான் என்று ஏன் ஆக மாட்டார் இந்தப் பார்வையினால் ...

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/nt%20snaps/SIVSEL01.jpg

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/nt%20snaps/SIVSEL02.jpg

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/nt%20snaps/SIVSEL03.jpg

http://www.youtube.com/watch?v=Mlw4rNyjVTY

Gopal.s
17th October 2014, 04:11 AM
வாசு,

ஜிக்கியின் பாடல் என் பிடித்தம்.இவரை பற்றி கூடிய விரைவில் ஒன்று.

ராகவேந்தர்,

யாரடி வந்தார்- வேறு யார் ராகவேந்தரே

ஏனடி வந்தார்- யாரடி வந்தார் போட .

யம்மாடி ,தவம் வீண் போகவில்லை.

புதிய வாழ்க்கை ஒரு நல்ல முயற்சி.சி.வீ.ஆர் நன்கு சோதனை முயற்சியில் பண்ணிய படம் ரசிர்களால் கண்டு கொள்ள படவில்லை.

மூன்று பாடல்களுமே தூள்.

பேசு மனமே, காலம் என்னோடு, பாட தெரிந்தவர்.
.

rajraj
17th October 2014, 04:31 AM
Poonkuyil Koovum Pooncholaiyil Oru Naal.........

I don't know whether this song was in any movie. I post this because of fond memories.

Whenever we visited India we used to visit D.K.PattammaL at her home. In one such visit she allowed me to record our conversation. The recording is still with us (video tape). Some day I will transfer it to a DVD and ,may be, post in Youtube. She was very affectionate and unassuming. A rare musician.

Here is the song by DKP and DKJ:

http://www.youtube.com/watch?v=uyqUwU6thFA

Lyrics by Kalki.

If you need better audio please listen to Nithyasri singing this song in Youtube.

madhu
17th October 2014, 04:51 AM
ராகவ் ஜி..

அருமையோ அருமை. அந்தப் பாடல்களை இங்கே தரவேற்ற முயற்சி செய்தேன். சுட்டி சரியாக வேலை செய்யவில்லை. அதனால்தான் அந்த நண்பருக்கு தனிமடல் அனுப்பி வைத்துவிட்டு ஒரு சில பாடல்களை மட்டும் சுட்டு எடுத்திருந்தேன். இப்போது நேரடியாகவே சுட்டி வேலை செய்கிறதா ? சுப்பர்ப்...

கோபால் ஜி.. இதோ புதிய வாழ்க்கையின் மேலும் சில பாடல்கள்

பாடத் தெரிந்தவர் பாடுங்கள்

http://youtu.be/MMx9Q7XsjxU

பேசு மனமே பேசு

http://youtu.be/omfaWZjatBk

madhu
17th October 2014, 05:04 AM
இந்தப் பாடலைப் படத்தில் பார்த்ததோடு சரி.. அப்புறம் டி.வி.யில் கூட கண்ணுல சிக்கவே இல்லை.
( சிக்கா.. உங்களுக்குப் பிடித்த மெல்லினமாச்சே )

வி.குமார் இசையில் சுவர்ணா பாடிய பாடல்களில் இதற்கு ஒரு தனி இடம் எப்போதுமே உண்டு. ( ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணின் முதல் பாட்டு "கண்ணெல்லாம் உன் வண்ணம்" மற்றும் தேன் சிந்துதே வானத்தின் "எழுதாத பாடல் ஒன்று" ஆகியவையும்தான் )

இனங்களிலே என்ன இனம் பெண்ணினம் ?

http://youtu.be/bv6u94M9nUw

rajeshkrv
17th October 2014, 08:46 AM
காலை வணக்கம் நண்பர்களே

மதுண்ணா என்ன தேனிசை தென்றலின் முத்துக்கள் பற்றி மூச்சு விடவில்லையே .. பாடல்கள் கேட்டீர்களா ??

rajeshkrv
17th October 2014, 09:03 AM
தேனிசை தென்றலின் முத்துக்கள்-4

தேவாவை ஆதரித்தது அன்பாலயா பிரபாகரன் . 1991’ல் புது முகங்களுடன் தயாரித்த “மாங்கல்யம் தந்துனானே” படத்திற்கு இரண்டு அற்புத பாடல்கள் தந்தார் தேவா

இதோ “காட்டு வழி பாதையில கண்டெடுத்த ஆணிமுத்து நான் புடிச்ச மாமன் மகன் தான்”

மனோவும் சித்ராவும் பாடிய இந்த பாடல் சிலோன் வானொலியிலும், மதுரை வானொலியிலும் அடிக்கடி ஒலிபரப்பியது இந்த பாடலை

இதோ அது உங்களுக்காகவும்


http://www.youtube.com/watch?v=RATAEs4V6rU

chinnakkannan
17th October 2014, 09:48 AM
//“காட்டு வழி பாதையில கண்டெடுத்த ஆணிமுத்து நான் புடிச்ச மாமன் மகன் தான்”// நல்ல பாட்டு ராஜேஷ்.. அந்தப் பெண் தான் வளர்ந்து வைஷ்ணவி ஆகிறதா..(யாராக்கும் அந்த பா.ச.தா)

இனங்களிலே என்ன இனம் பெண்ணினம்
உயிரெழுத்துக்களில் இருக்கும் அந்த மெல்லினம்
மனசுக்குள்ளே இருக்கும் ஆசை வல்லினம்
என் மன்னனுக்குப் பிடித்த்தெல்லாம் இடையினம் // நல்ல பாட்டு மதுண்ணா சிலோன் ரேடியோவில் அலறும்.. படம் பார்த்ததில்லை.. (காலங்களில் அவள் வசந்தம்?) ம்ம் இன்னொரு சிலோன் ரேடியோ பாட்டு..

அன்பே உன் பேர் என ரதியோ..கமல் சுஜாதா – எனத் தெரியாது இப்போது தான் பார்க்கிறேன்..கமல் நல்ல வெய்ட் லிஃப்டராக்கும்!

http://www.youtube.com/watch?feature=player_embedded&v=0dmawzHv0AY

பூங்குயில் கூவும் சோலையில் ஒரு நாள் ..மின்னலைப் போலே மறைந்தாள்..

டி.கே.பட்டம்மாள் தெரியுமா உங்களுக்கு ராஜ்ராஜ் சார்..க்ரேட்..(எனக்கு அவர் பேத்தி நித்யஸ்ரீ பாடிய சி.பாட்ஸ் தான் தெரியும்) நல்ல பாட்டு சீக்கிரம் அந்த வீடியோ அப்லோட் செய்யுங்க..

கோபால் ஜி.. காலங்கார்த்தால இன்பமெல்லாம் ஏந்திவரும் வரும் இளமை கொண்டவள் பாட்டு ம்ம்.. என்ன விஷயம்..(கொஞ்ச நாளைக்கு முன்னால தான் நான் க்ருஷ்ணாஜி, மதுண்ணா இதைப் பற்றிப் பேசினோம்) எனிடைம் கேட்கக் கூடிய பார்க்க கூடிய பாடல் (குளிச்சுட்டு பூஜை பண்ணப் போகணும்!)

இன்றிரவு மறுபடி மி. நை.ம தரப் பார்க்கிறேன்.. நேற்று முடியவில்லை..(இன்னும்சில எழுத்துப் பணி முடிக்கணும் உப்புமா சாப்பிடணும்.. லஞ்ச் சாப்பிடணும்....லீவ் நாள்னாலே வேலை நிறைய இருக்கு!)

நடு நடுல்ல வருவேன்!

vasudevan31355
17th October 2014, 09:49 AM
ராகவேந்திரன் சார், மதுஜி!

அனைத்துப் பாடல்களும் அருமை. அனுபவித்துக் கேட்டுக் கொண்டிருக்கிறேன்.