PDA

View Full Version : மனதை கவரும் மதுர கானங்கள்: பாகம் -3



Pages : 1 2 3 4 5 6 7 8 [9] 10 11 12 13 14 15 16

uvausan
8th December 2014, 08:21 PM
வாசு - போலீஸ் இலாக்காவில் எப்பொழுது சேர்ந்தீர்கள் ?

JamesFague
8th December 2014, 08:41 PM
அன்பு நண்பர் ரவி அவர்களுக்கு,

நீங்கள் எப்பொழுது மேடை பாடகர் ஆனேர்களோ அப்போழுதே வாசு அவர்கள் போலீஸ் வேலையில் சேர்ந்து விட்டார்.

Regards

Russellisf
8th December 2014, 08:42 PM
ilayaraja one of the melodious song movie karakattakaran

குடகு மலை காற்றில் வரும் பாட்டு கேக்குதா என் பைங்கிளி
எதோ நினவுதான் உன்னை சுத்தி பறக்குது
என்னோட மனது தான் கண்ட படி தவிக்க்து
ஒத்த வழி என் வழி தானே மானே
(குடகு மலை..)

மானே மயிலே மரகத குயிலே
தேனே நான் பாடும் தென்மாங்கே
பூவே பொழுதே பொங்கி வரும் அமுதே
காதில் கேட்டாயோ என் வாக்கே
உன்னை எண்ணி நான் தான் ஒரு ஊர்கோலம் போனேன்
தன்னந் தனியாக நிற்க்கும் தேர் போல ஆனேன்
பூ புத்த சோலையிலே பொன்னான மாலையிலே
நீ வந்த வேளையிலே மயிலே
நீர் பூத்த கண்ணு ரெண்டு
நீங்காத ராகம் கொண்டு பாட்டு பாடுது
(குடகு மலை..)

மறந்தால் தானே நினைக்கனும் மாமா
நின்னைவே நீ தானே நீ தானே
மனசும் மனசும் இணைந்தது மாமா
நினச்சு தவிச்சேனே நான் தானே
சொல்லி விட்ட பாட்டு தெற்கு காற்றோடு கேட்டேன்
தூது விட்ட ராசா மனம் தடுமாற மாட்டேன்
ஊரென்ன சொன்னால் என்ன
ஒன்னாக நின்னா என்ன
உம் பேரை பாடி நிப்பேன் மாமா
தூங்காம உன்னை ந்ண்ணி துடிச்சாலே இந்த கன்னி மாமா

https://www.youtube.com/watch?v=g5WQc88dJyA

vasudevan31355
8th December 2014, 08:50 PM
வாசு - போலீஸ் இலாக்காவில் எப்பொழுது சேர்ந்தீர்கள் ?

இதய தெய்வத்தை மட்டுமே போலீஸ் அதிகாரியாய் ஏற்றுக் கொள்ள முடியும் ரவி சார்.

JamesFague
8th December 2014, 08:56 PM
இந்த பாடலை கேட்டால் உறக்கம் தானாகவே
வரும் ஒரு இனிமையான பாடல். தனது குரலில் தேன்வளம் உள்ள யேசுதாஸ் பாடிய அற்புத பாடல். என்றும் எப்போதும் கேட்க தோன்றும் நல்ல பாடல்.



http://youtu.be/8lIzPue8IXI?list=PLh8jScWWly7oA0CohSUBe1JH4CwcSZX2 P

vasudevan31355
8th December 2014, 09:20 PM
பாடல் இரண்டு
பாணி ஒன்று


புதிய தொடர் 1

ஆமாம். ஒரே பாணியில் இரண்டு பாடல்களைத் தந்தால் என்ன என்று ஒரு எண்ண ஓட்டம் தோன்றி மறைந்ததன் விளைவே இந்தத் தொடர்.

முதலில் இரண்டு திலகங்களில் இருந்து ஆரம்பிப்போம்.

நடிப்பின் நாயகரும், புரட்சி நாயகரும் குழந்தைகளுடன் குதூகலித்து பல பாடல்கள் பாடியுள்ளார்கள். அவை மிக பிரபலமான பாடல்களாய் இன்றும் எங்கும் ஒலிக்கின்றன.

உலகே வியந்து பார்த்த இரு மாபெரும் நட்சத்திரங்கள் இமேஜ் பார்க்காமல் குழந்தைகளோடு இணைந்து தந்த காவியப் பாடல்கள்.

நடிப்பின் வேந்தர் குழந்தைகளின் செல்ல 'எங்க மாமா'வாக மழலைகளோடு மழலையாய் ஜீப்பில் உலா வரும் அழகு, பொருட்காட்சியில் குழந்தைகள் ரயிலில் அவர்களோடு பயணம் செய்து களிக்கும் அழகு. நல்ல புத்திமதிகளை நளினமாகத் தெரிவிக்கும் நயம். ரயிலுடனேயே ஆடியபடி ஓடி வரும் அற்புதமான ஸ்டைல். ராட்டினத்தில் அமர்ந்து சின்னப் பிள்ளையாய் சிங்கார சிரிப்பை கள்ளமில்லாமல் உதிர்த்து குதூகலிக்கும் உற்சாகம் பிள்ளைகள் யார் மாமா யார் என்று தெரியாத அளவுக்கு அழகு கொட்டிக் கிடக்கும் இளமை அழகன். என்றுமே நடிப்பில் 'தன்னந்தனிக் காட்டு ராஜா'. அவர் தோட்டத்தில் ரசிகர்களாகிய நாங்கள் ரோஜாதானே!


https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=2BqghZZSNnQ

இதோ உலகம் சுற்றும் இந்த நாயகரை பாருங்கள். 'சிக்கு மங்கு சிக்கு மங்கு சச்ச பாப்பா' என வெளிநாட்டுக் குழந்தைகளுடன் கள்ளமில்லாமல் இவரும் சிரித்து மகிழ்ந்து ஆடிப் பாடி நல்லதைக் கற்றுக் கொடுக்கும் பாங்கு. அந்தக் குழந்தைகள்தான் எத்தனை அழகு! மல்லிகைப் பூவைச் சிதற விட்டது போல் முல்லைப் பறக்ளைக் காட்டி சிரிப்பைச் சிந்தும் முத்து முத்தான, சத்து சத்தான குழந்தைகள். 'சிரித்து வாழ வேண்டும்... பிறர் சிரிக்க வாழ்ந்திடாதே' என்ற தன்மான அறிவுரையை பிஞ்சு மனங்களில் விதைத்து இந்த நாயகரும் அவர் கடமையை செவ்வனே செய்து காலத்தால் அழியாத கருத்துள்ள இப்பாடலைத் தந்தாரே!


https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=YN3a660t6Mo

இந்த இரு திலகங்கள் இடத்தில் வைத்துப் பார்க்க வேறு நடிகப் பிறவிகள் என்று எவரும் அகிலத்தில் உண்டோ!

uvausan
8th December 2014, 10:19 PM
வாசு - ஆரம்பம் அருமை . உண்மையில் இருதிலகங்களும் படங்கள் மூலமாகவும் , பாடல்கள் மூலமாகவும் , நடிப்பின் மூலமாகவும் வழங்கிய நல்ல கருத்துக்கள் ஏராளம் - இவைகளை மட்டுமே ஆராயிந்தால் இவர்கள் இருவரின் ஒருமை பண்பாடு , ஆரோக்கியமான நட்பு , மக்களை மதித்த விதம் , ரசிகர்களிடம் இவர்களுக்கு இருந்த ஈடுபாடு எல்லாமே தெளிவாக தெரிய வரும் - நாம் தான் இந்த ஒற்றுமையை புரிந்துக்கொள்ளாமல் மனஸ்தாபத்தை அதிகமாக வளர்த்துக்கொள்கின்றோமோ என்று சில சமயம் தோன்றுகின்றது

இதோ குழந்தைகளை அரவணைக்கும் பாடல் இரண்டு - பாணி ஒன்று

http://youtu.be/Xr4gvXXgCnU

http://youtu.be/D2kQOWCzcl4

uvausan
8th December 2014, 10:37 PM
ஒற்றுமையை இருவரும் எவ்வளவு அழகாக எடுத்து சொல்லியுள்ளார்கள் பாருங்கள் - சுதந்திர வேட்க்கை போல இப்பொழுது நமக்கு தேவை ஒற்றுமை வேட்க்கை - ஒருமித்த எண்ணங்கள் - எல்லோருமே சமம் என என்னும் பண்பு - பாடல் இரண்டு - பாணி ஒன்று

http://youtu.be/rJ8F1ANSyuE

http://youtu.be/smlQQAZHKpk

uvausan
8th December 2014, 10:40 PM
தாயின் அன்பை இவர்கள் சொன்னது போல இதுவரை நெஞ்சை தொடும் படியாக எவருமே சொன்னதில்லை - பாடல் இரண்டு - பாணி ஒன்று

http://youtu.be/2K096xYEtsY

http://youtu.be/b1PuDk_WyS0

uvausan
8th December 2014, 10:43 PM
வாசு

இன்னும் இருவரை பற்றியும் எவ்வளவோ சொல்லலாம் - உங்களுடைய சீறுகின்ற நடை என்னால் தடை பெறவேண்டாம் என்று எண்ணி , சற்றே தாமதமாக பதிவுகளை இடுகிறேன்

chinnakkannan
8th December 2014, 10:48 PM
ஹாய் ஆல்.. செளக்கியமா..

ஆரம்பத்தில்…ஒரு மொழிபெயர்ப்பு முயற்சி

*

நீ என்ன சொன்னாய் எனத் தெரியாது
நான் என்ன கேட்டேன் எனத் தெரியாது
ஆனால் ஏதோ நிகழ்ந்து விட்டது…

வெப்ப உணர்வு ஒருபுறம்
நடுக்கும் குளிர் மறுபுறம்
நிறையக் கனவுகள் எழும்பின
ஏதோ நிகழ்ந்து விட்டது..

என் கண்கள் தாழ்ந்தன நிமிர்ந்தன
பாதங்கள் தாளமிட்டு நடுங்கி உறைந்தன
எனக்கொரு புதிய அனுபவம்….
ஏதோ நிகழ்ந்துவிட்டது

என் கூந்தல் தோள்களிலே சுருண்டன
ஒரு வாசனை மலர்ந்து எழுந்தது
ரகசிய க் கதவுகள் திறந்தன
ஏதோ நிகழ்ந்து விட்டது..

ம்ம்

ப்யாஸா வஹீதா ரஹ்மான்…(ஆங்கிலத்திலிருந்து தமிழ்ப்படுத்திப் பார்த்தேன்..) வெகு இனிமையான பாடல்..

http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=mLGCAGHNTJU
***
கழுதைக்கும் காதலுக்கும்முக நூலில் ஒரு நண்பர் எழுதியிருந்தார்..அதை ஒட்டி நான் எழுதிப்பார்த்தது…

எண்ணப் பொதிசுமக்கும் ஏற்றங்கள் கண்டவுடன்
வண்ணமாய் மாற்றத்தை வாகாய் உரக்கசொலும்
கண்ணேற் படாமலே கால்தாவும் காலந்தான்
எண்ணக் கழுதையா மே
(இரண்டு தடவை எண்ணம் வந்துடுத்து)

கிட்ட வருமென்று கீழ்நோக்கிப் பார்த்தாலோ
எட்டாமல் நின்றுசெயும் ஏகடியம் – விட்டால்
பழுதாகிப் பாய்ந்தோடி பல்திசையும் ஓடுங்
கழுதைதான் கற்பனையே காண்..

*/*

ஆக.. முதல் வெண்பால சொல்லியிருக்கறா மாதிரி இந்தக் காலம் பாருங்க போறதே தெரியலை.. இங்க வர்றதுக்கு கொஞ்சம் நேரமாயிடுத்து..காரணம்.. இரண்டாம் பாட்டுல வந்த கற்பனை தான்.. எழுதவே வல்லைப்பா ஹையாங்க்க்..

*

வாசு சார்..கார் ஷெட்லாம் போட்டு முடிச்சாச்சா.. வேலை எல்லாம் முடிந்ததா.. வந்த ஜோர்ல புதுத் தொடர் வேறயா.. குட்.. நைஸ்..தன்யவாத்..தப்போ சுக்ரியா.. தாங்க்ஸ்.. நினைவுக்கு வர்ற பாட்டூஸ்.. நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி, தங்கங்களே நாளைத் தலைவர்களே, கடவுள் ஒரு நாள் உலகைக்காண..ஓ அது காஞ்ச்சுவோ..

ஞான ஒளி எஸ்.வாசு தேவனுக்கு ஒரு தாங்க்ஸ் சொல்லியே தீரணும்..என்னுடைய வெகு நாள் ஆசையான பார்த்திராத ஜூலி பாட்டூஸ் போட்டதுக்கு.. அது போல ஜெயாபாதுரி யோட ப்ரேயர் சாங்க் மனம்கவர்ந்தது..

ம்ம் நிறைய எழுதணும் பேசணும் படிக்கணும்.. (கண்ணா எப்படா பண்ணப் போற நீ!)

அப்புறமேல்ட்டு வாரேன்..

RAGHAVENDRA
8th December 2014, 10:49 PM
வாசு சார்
சூப்பரோ சூப்பர்.... சமுதாயத்தில் நன்னெறி புகட்டக்கூடிய ஏராளமான நடிகர் திலகத்தின் படப்பாடல்களை மக்களிடத்தில் கொண்டு சேர்க்க இத்தலைப்பு மிகவும் பயனுள்ளதாய் உள்ளது. அருமையான தலைப்பு..

தங்களுடன் பயணம் செய்யும் வகையில் ரவியும் அமர்க்களமாய்ப் பாடல்களைக் கொண்டு வந்து விட்டார்.

இதோ அடியேனின் பங்கு..

கல்யாணியின் கணவன் (1963) படத்திலிருந்து கையிருக்கு காலிருக்கு முத்தையா..

https://www.youtube.com/watch?v=v2mZUk6vm_c

விவசாயி (1967) படத்திலிருந்து நல்ல நல்ல நிலம் பார்த்து

https://www.youtube.com/watch?v=PzBZaezGBIo

Richardsof
9th December 2014, 04:54 AM
இனிய நண்பர்கள் திரு வாசு , திரு ரவி, திரு ராகவேந்திரன்

இரண்டு திலகங்கள் நடிப்பில் வந்த இனிமையான குழந்தைகளுடன் பாடிய பாடல்களை அருமையாக தொகுத்து வழங்கிய உங்களுக்கு அன்பு பாராட்டுக்கள் .

மென்மையான காதல் பாடல்களில் இரண்டு திலகங்களும் கலக்கிய காவிய பாடல்கள் என்றுமே மறக்க முடியாது .

ஒரு தாய் மக்கள்
http://youtu.be/2qAI__2gIc4

நெஞ்சிருக்கும் வரை .
http://youtu.be/ED0bwUuSQMg

vasudevan31355
9th December 2014, 07:31 AM
அன்பின் ரவி சார், ராகவேந்திரன் சார், சின்னக் கண்ணன் சார், வினோத் சார் அனைவர்க்கும் நன்றி!

vasudevan31355
9th December 2014, 07:32 AM
ரவி சார்,

பாடல் இரண்டு - பாணி ஒன்று தலைப்பில் தங்கள் பங்குக்கு அளித்த இரு திலகங்களின் பாடல்கள் ஜோர். ஒரே மாதிரியான கருத்துக்களை இருவரும் தத்தம் பாணியில் பாடி அசத்தி அளித்திருப்பார்கள். பாடல்களும் கொள்ளை இனிமைதான். நன்றி!

vasudevan31355
9th December 2014, 07:35 AM
ராகவேந்திரன் சார்,

விவசாயப் பாடல்கள் அனைவரும் விரும்பி ரசித்த பாடல்கள். மக்கள் திலகம் நல்ல நல்ல நிலம் பார்த்து தர, அதில் கையிருக்கு காலிருக்கு என்று முத்தையனை உழுவதற்கு அழைக்கும் நடிகர் திலகம் என்று அசத்தலான இரு பாடல்களுக்கு நன்றி!

vasudevan31355
9th December 2014, 07:38 AM
வினோத் சார்,

மென்மையான காதல் பாடல்கள். அதுவும் தமிழ்த் திரையுலகை இன்று வரை ஆண்டு கொண்டிருக்கும் இரு மாபெரும் நடிகர்களும் தந்தது. இரண்டுமே தென்றலின் வகையைச் சேர்ந்தவை. சுகமோ சுகம். நன்றி!

vasudevan31355
9th December 2014, 08:04 AM
பாடல் இரண்டு
பாணி ஒன்று


தொடர் 2

இந்த ஹிப்பி இளைஞர்களைப் பாருங்கள். அடங்காத குதிரைகளான தங்கள் மனைவியை அடக்க இருவருமே ஹிப்பி வேடம் புனைந்து நாகரீக அலங்கோலத்தை விரும்பும் தங்கள் பத்தினிக்களுக்கு பாடல்கள் மூலம் பாடம் புகட்ட கிளம்பி விட்ட தமிழ்ப் பண்பாட்டைக் கட்டிக் காக்கும் கட்டிளங் காளைகள். இருவருமே ஒத்த குணம் கொண்டவர்கள். இருவருமே தங்கள் மனைவியத் திருத்தப் பாடுபட்டு அதில் வெற்றி கண்டவர்கள். வாழ்க்கையில் மட்டுமல்ல. வசூலிலும்தான்

முதலாவது தமிழகத்தை தன் வசப்படுத்திய கிராமத்துப் பண்பாட்டினைக் கட்டிக் காக்கும் மூக்கையாத் தேவன். வெளிநாட்டு நாகரீக மோகம் கொண்டு பிரிந்து வாழும் மனைவியை திருத்த ஹிப்பி முகேஷ் வேடம் பூண்டு

'நல்வாழ்த்து நான் சொல்லுவேன்'

என்று பாடியபடி வார்த்தைகளால் அவளுக்கு சவுக்கடி கொடுக்கும் பாடல்.

'வாழ்வது ஒருமுறை
வாழ்த்தட்டும் தலைமுறை'

என்று தலைமுறைகள் வாழ்த்த வாழ்ந்த, வாழுகின்ற, வாழப் போகின்ற நாயகன்.

'பட்டிக்காடா பட்டணமா'


https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=HkXXY_m6EIY

இந்த ஹிப்பி வாலிபன் அதே வேலையைத்தான் செய்கிறான். 'காலம் பொன்னானது' என்று கூறி

'கண் அவன் என்பது கணவன் என்றாகும்'

என்று அறிவுறுத்தி,

'அவன்தான் ராஜாங்கத் தலைவனடி'...

'கோதைக்குக் கணவன் கோவிலடி'

என்று கணவன் பெருமையை அவளுக்கு உயர்த்த எண்ணி சீறிப் பாடுகிறானே.

'கல்யாணமாம் கல்யாணம்'


https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=-V61lyegx98

Richardsof
9th December 2014, 09:13 AM
http://i61.tinypic.com/2mfdvrc.jpg

http://youtu.be/okbqB3dJ-aw

Richardsof
9th December 2014, 09:14 AM
http://i62.tinypic.com/zwkf9l.jpg

Richardsof
9th December 2014, 09:16 AM
http://i62.tinypic.com/qo9lpv.jpg
http://youtu.be/RFNwENsJDDU

Richardsof
9th December 2014, 09:17 AM
http://i59.tinypic.com/143jext.jpg

http://youtu.be/hT0Rb9BgFkU

rajeshkrv
9th December 2014, 10:34 AM
beautiful song from Aasai manaivi (Meenakshi koyil konda mani osai)

https://www.youtube.com/watch?v=Ydaa-04NP_I

rajeshkrv
9th December 2014, 10:37 AM
வாசு ஜி
நலம் தானே

இதோ எல்.விஜயலெக்*ஷ்மியின் அற்புத நடனம் இசையரசியின் தெள்ளத்தெளிவான குரல்
பக்த பிரஹலதா படப்பாடல்

https://www.youtube.com/watch?v=L81B3bHcdYY

vasudevan31355
9th December 2014, 10:40 AM
சி.க.சார்,

Jane Kya Tune Kahi

வா ... வா வார்ர்ரே வா ... இன்னா பாட்டு கண்ணா அது! அதுவும் என் உள்ளம் கவர்ந்த பாடகி. இப்படியா போட்டுத் தாக்குவது மீண்டும் போட்டாலும் கூட. 'பியாஸா' படப் பாட்டுகளுக்கு எவ்வளவோ பைஸா வேணும்னாலும் தரலாம்.

மொழி பெயர்ப்பு மிகச் சரியாக இருக்கிறது என்று சொல்லலாம் என்றால் எனக்கு இந்தி தெரியாது. ஆனால் பாடல்களை ரசிக்கும் ரசனை வெகுவாகவே உண்டு. இருந்தாலும் கஷ்டப்பட்டு தமிழாக்கம் செஞ்சதற்கு நன்றி!

vasudevan31355
9th December 2014, 10:49 AM
ஆஹா! ராஜேஷ் சார்! எப்படி இருக்கீங்க? எங்கே பிடிக்கவே முடியல?

vasudevan31355
9th December 2014, 10:53 AM
ஏற்கனவே பார்த்திருந்தாலும் இப்போதும் பார்த்து ரசித்தேன் ஜி! நன்றி!

rajeshkrv
9th December 2014, 10:53 AM
ஆஹா! ராஜேஷ் சார்! எப்படி இருக்கீங்க? எங்கே பிடிக்கவே முடியல?

நான் உங்களை கேட்க நினைத்தேன்.. இங்கேயே தான் உள்ளேன்

Gopal.s
9th December 2014, 10:55 AM
வாசு,



நேரமின்மையாலும், நண்பர்களை சங்கட படுத்தும் பதிவுகளை தவிர்க்கும் பொருட்டும் ,இங்கு பதிவிட முடியாவிட்டாலும்,நேரம் கிடைக்கும் போதெல்லாம், தங்கள் பதிவுகளை, சின்ன கண்ணன் பதிவுகளை ,ராகவேந்தர் பதிவுகளை ரசித்து சுவைத்தே வருகிறேன்.சின்ன கண்ணனின் நகைசுவை ததும்பும் இலக்கிய சுவை கூடிய பதிவுகள்,உங்களின் உழைப்பு தந்து மெனக்கெட்டு பதியும் அமர்க் கள ஜுகல்பந்தி, ராகவேந்தரின் அறியா பாடல்கள் என மிக மிக சுவையாக செல்கிறது. எஸ்வி,க.வே வேறு பட்ட பங்களிப்பை செய்கின்றனர். கிருஷ்ணாவை அடிக்கடி காணாதது குறையே. ரவியின் வரவு புத்தெழுச்சி ஊட்டுகிறது. தொடருங்கள் ரவி.



நடிகர்திலகம் திரி -15 இல் உங்களின்,சி.கவின்,ரவியின் ,கிருஷ்ணாவின் பங்களிப்பை வேண்டி இப்போதே விண்ணப்பிக்கிறேன்.

vasudevan31355
9th December 2014, 11:04 AM
இதே 'பக்த பிரகலாதா' படத்தில் நால்வர் நாட்டியம். 'வெண்ணிற ஆடை' நிர்மலா, விஜயலலிதா, கீதாஞ்சலி, சாந்தா ('அவளுக்கென்ன அழகிய முகம் புகழ்' முற்றித் தெரிகிறார்) ஆகியோர் நாட்டியத்தில் பின்ன, அற்புதமான பாடல்.


https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=t2jg_CZ7XIA

vasudevan31355
9th December 2014, 11:08 AM
தேங்க்ஸ் கோ.

உங்கள் பங்களிப்புகள் அவசியம் இங்கு தேவை. காத்திருக்கிறேன். இன்னொன்று. நாளை அல்லது நாளை மறுநாள் நிச்சயம் நீங்கள் பதிலுக்குப் பங்கெடுத்துக் கொள்வது போன்று ஒரு பதிவை நான் இடுகை செய்ய வேண்டியுள்ளது. பிளான் பண்ணி எல்லாம் அல்ல. தற்செயலாகத்தான்.. அந்தப் பதிவிற்கு நீங்கள் பதில் பதிவு அளித்தால் அது முழுமை பெறும். ரெடியாக இருக்கவும்.

vasudevan31355
9th December 2014, 11:12 AM
கிருஷ்ணாஜி சிஸ்டம் கொஞ்சம் பிஸி. வேறு ஒன்றும் காரணம் இல்லை. விரைவில் வந்து விடுவார். அவர் அலுவலகத்திலும் கொஞ்சம் ஜோலி அதிகம். அதனால் ஜாலி கம்மியாகி விட்டது.

rajeshkrv
9th December 2014, 11:21 AM
ஆம் வாசு ஜி
நீங்கள் குறிப்பிட்ட பாடலும் அருமை. இசையரசி ஜானகி வசந்தா பாடியது என்று நினைவு.

vasudevan31355
9th December 2014, 11:31 AM
நான் உங்களை கேட்க நினைத்தேன்.. இங்கேயே தான் உள்ளேன்

ராஜேஷ்ஜி!

வீட்டில் இரண்டு ஷெட். கார் ஷெட் உட்பட. இரண்டுமே பழுதாகி விட்டது. சரி செய்து கொண்டிருக்கிறேன். அதுவல்லாமல் அலுவலக மருத்துவ பரிசோதனை வேறு. டைட் ஷெட்யூல். அதுதான் வந்து வந்து தலை காட்டுகிறேன். இன்று கொஞ்சம் ஒய்வு. அம்புட்டுதேன்.:smile:

vasudevan31355
9th December 2014, 11:33 AM
http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/IMG-18.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/IMG-18.jpg.html)

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/IMG_0001-12.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/IMG_0001-12.jpg.html)

vasudevan31355
9th December 2014, 11:44 AM
ராஜேஷ்ஜி!

நேற்று அருமையான இசையரசியின் பாடல் ஒன்று கேட்டேன். இன்னும் காதுகளில் ஒலித்துக் கொண்டே இருக்கிறது. அதுவும் பல்லவியின் முதல் 4 வரிகள் டாப். கிராமத்து குயிலாக சுசீலாம்மா இசைக்கும் இந்தப் பாடல் பலர் கேட்டிருக்க வாய்ப்பில்லை. நீங்கள் கைவிரல் நுனியில் வைத்திருப்பீர்கள். இதோ அந்தப் பாடல் உங்களுக்கும், நம் அன்பு நண்பர்களுக்கும்.

'என்னதான் முடிவு?'

இசையரசியின் குரலின் இனிமைக்கு முடிவேது? குரலின் அடிமுடி தொடமுடியாத அற்புத கான சரஸ்வதி அல்லவா?

'பொண்ணப் பார்த்து மயிலைக் காளை
மயங்குதிப்போது
இந்தப் பொண்ணப் பார்த்து மயங்கும்
ஆளும் வருவதெப்போது'

ஆமாம் அந்த நடிகை யார்? இதுவரை பார்த்ததாக தெரியவில்லையே. உதவுங்களேன்! ப்ளீஸ். (இவர் பெயர் நிர்மலா என்று நினைவு. ஆனால் 'வெண்ணிற ஆடை' நிர்மலா அல்ல. வேறு எந்தப் படத்தில் நடித்திருந்தார் என்றும் தெரியவில்லை).

இன்னொன்றுஜி! 'என்னதான் முடிவு?' படத்தைப் பற்றி விரிவாக எழுதவுள்ளேன். ஏனென்றால் விஷயம் நிறைய இருக்கிறது இந்தப் படத்தில். கே.எஸ்.ஜி.நிறைய பாதிப்பை உண்டாக்கி விட்டார். அதனால்தான் இந்த முடிவு.


https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=DOGmJERSWMQ

Murali Srinivas
9th December 2014, 02:12 PM
<Dig>

வாசு,

பார்த்தீர்களா? எங்கள் மதுரையின் வரவேற்பை பார்த்தீர்களா? உங்களுக்கு மிகவும் பிடித்த மருத்துவருக்கு எத்தனையோ முறை எங்கள் ஊருக்கு வந்திருந்தபோதிலும் இப்போதும் நாங்கள் கொடுத்த வரவேற்பு எப்படி?

அன்புடன்

<end dig>

vasudevan31355
9th December 2014, 02:25 PM
அடாடாடா! முரளி சார்,

மயங்கிப் போனேன்
கிறங்கிப் போனேன்
உருகிப் போனேன்

அடேயப்பா! நடிப்பின் மன்னனுக்கு மதுரை ரசிக மன்னர்கள் மலைக்க வைத்த மாலைகள், கனக்க வைத்த பேனர்கள், ஆகாய ஆர்ச்சுகள், பட பட பட்டாசுகள் என்று அலங்காரம் செய்து விட்டீர்கள்.

இருக்கட்டும். இருக்கட்டும். எங்கள் கடலூரில் மன்னவன் வலம் வரட்டும். பிறகு பேசிக் கொள்கிறேன்:) மதுரையா கடலூரா என்று.

அருமை முரளி சார். அருமையான ஆர்ப்பாட்டம். ஸ்டோர் செய்து விட்டேன்.

Russellisf
9th December 2014, 08:07 PM
https://www.youtube.com/watch?v=O0Illao6zT4

https://www.youtube.com/watch?v=k3YN6RCZHs0




வாசு - ஆரம்பம் அருமை . உண்மையில் இருதிலகங்களும் படங்கள் மூலமாகவும் , பாடல்கள் மூலமாகவும் , நடிப்பின் மூலமாகவும் வழங்கிய நல்ல கருத்துக்கள் ஏராளம் - இவைகளை மட்டுமே ஆராயிந்தால் இவர்கள் இருவரின் ஒருமை பண்பாடு , ஆரோக்கியமான நட்பு , மக்களை மதித்த விதம் , ரசிகர்களிடம் இவர்களுக்கு இருந்த ஈடுபாடு எல்லாமே தெளிவாக தெரிய வரும் - நாம் தான் இந்த ஒற்றுமையை புரிந்துக்கொள்ளாமல் மனஸ்தாபத்தை அதிகமாக வளர்த்துக்கொள்கின்றோமோ என்று சில சமயம் தோன்றுகின்றது

இதோ குழந்தைகளை அரவணைக்கும் பாடல் இரண்டு - பாணி ஒன்று

http://youtu.be/Xr4gvXXgCnU

http://youtu.be/D2kQOWCzcl4

Russellisf
9th December 2014, 08:08 PM
https://www.youtube.com/watch?v=27IdJ4o71KQ



https://www.youtube.com/watch?v=FB_mHPsm6Bk

vasudevan31355
9th December 2014, 09:51 PM
டி.ஆர்.ராஜகுமாரி
அபூர்வ தகவல்கள் - 7

cinema express

http://www.cinemaexpress.com/Images/article/2014/11/27/trr.jpg

"கனவுக் கன்னி', "ஆடும் மயில்', "பாடும் குயில்', "கோயில் சிற்பம்', "தந்த பொம்மை' என்றெல்லாம் அக்கால சினிமா பத்திரிகைகள் டி.ஆர்.ராஜகுமாரிக்கு கவர்ச்சிப் பட்டங்கள் அளித்தன. அழகான கண்களும் கொஞ்சும் மொழியும் கொண்ட இவர் சேலையணிந்து உடல் முழுவதும் மறைத்து நடித்தாலும், அதையும் மீறிய ஒரு கவர்ச்சி இவரிடம் இருந்தது.



5.5.1922 வெள்ளிக் கிழமையன்று தஞ்சாவூரில் ராதாகிருஷ்ணப் பிள்ளை-ரங்கநாயகி தம்பதிக்கு பிறந்தவர் டி.ஆர்.ராஜகுமாரி. இவரது இயற்பெயர் "ராஜாயி' என்பதாகும். பள்ளியில் 3ஆம் பாரம் (8ஆம் வகுப்பு) வரை இவர் படித்துள்ளார். இவர் தனது குடும்பத்தினர் நலனையே குறிக்கோளாகக் கொண்டு, திருமணமே செய்துகொள்ளாமல் இருந்தார்.



டி.ஆர்.ராஜகுமாரியின் குடும்பமே ஒரு கலைக் குடும்பமாகும். டி.ஆர்.ராஜகுமாரியின் தாய்வழிப் பாட்டி குசலாம்பாள் கர்நாடக பாடகியாக விளங்கியவர். டி.ஆர்.ராஜகுமாரியின் சித்தி எஸ்.பி.எல். தனலக்ஷ்மி பிரபல கதாநாயகி நடிகையாவார். எஸ்.பி.எல்.தனலக்ஷ்மியின் மகள்களான ஜோதிலட்சுமியும் ஜெயமாலினியும் கவர்ச்சி நடிகைகள். டி.ஆர்.ராஜகுமாரியின் மற்றொரு சித்தி டி.எஸ்.தமயந்தியும் நடிகை. டி.எஸ்.தமயந்தியின் மகள் குசல குமாரியும் நாயகி நடிகையாவார். டி.ஆர்.ராஜகுமாரியின் தம்பி டி.ஆர்.ராமண்ணா சிறந்த தயாரிப்பாளரும் இயக்குநரும் ஆவார். டி.ஆர்.ராமண்ணாவின் முதல் மனைவி பி.எஸ். சரோஜாவும், இரண்டாவது மனைவி ஈ.வி.சரோஜாவும் நாயகி நடிகையர். ஈ.வி.சரோஜாவின் சகோதரர் ஈ,வி.ராஜன் (ஈ.வி.ஆர்.பிக்சர்ஸ்) தயாரிப்பாளர்.



படப்பிடிப்பின் போது சரியான நேரத்தில் வந்து, தயாரிப்பாளர்களின் நன்மதிப்பைப் பெற்றவர் டி.ஆர்.ராஜகுமாரி. சினிமாவிற்கு வந்த பின்பே நாட்டியம் ஆட கற்றுக் கொண்டார்.



தமிழ் நட்சத்திரங்களில் டி.ஆர்.ராஜகுமாரிதான் முதன் முதலாக சினிமா தியேட்டர் கட்டினார். "ராஜகுமாரி' என்று அவர் பெயரிலேயே அமைந்த இந்த தியேட்டரை ஜெமினி அதிபர் எஸ்.எஸ்.வாசன் திறந்து வைத்தார். சென்னை, தியாகராயநகர், பாண்டிபஜாரில் "ராஜகுமாரி' தியேட்டர் இருந்த இடம் இன்று வணிக வளாகமாக மாறிவிட்டது.



தமிழக முதல்வர்கள் எம்.ஜி.ஆர்., வி.என்.ஜானகி, மு.கருணாநிதி ஆகியோருடன் கலைத் தொடர்பு கொண்டவர் டி.ஆர்.ராஜகுமாரி. பாசம், பெரிய இடத்துப் பெண், குலேபகாவலி, பணக்காரி ஆகிய படங்களில் எம்.ஜி.ஆருடன் இணைந்து நடித்துள்ளார். டி.ஆர்.ராஜகுமாரி நடித்த சந்திரலேகா படத்தில் வி.என்.ஜானகி ஒரு நாடோடிப் பெண்ணாக நடித்துள்ளார். மு.கருணாநிதி வசனம் எழுதிய மனோகரா, புதுமைப் பித்தன் ஆகிய படங்களில் டி.ஆர்.ராஜகுமாரி நடித்துள்ளார்.



"மனோகரா' படத்தில் சிவாஜியின் நடிப்பு போற்றப் படுவதற்கு, டி.ஆர்.ராஜகுமாரியின் பாத்திரமும் நடிப்பும் ஒரு காரணமாகும். குளிர்ந்த நீராக இருந்த மனோகரனை (சிவாஜியை), கொதிக்கும் நீராக மாற்றியது வசந்தசேனை (டி.ஆர்.ராஜகுமாரி) தானே.

"மனோகரா' படத்தில் சிவாஜிக்கு, வில்லி சித்தியாக நடித்த டி.ஆர்.ராஜகுமாரி, "அன்பு' படத்தில் நல்ல சித்தியாக நடித்துள்ளார்.



பி.பானுமதி தன்னைவிட வயதில் குறைந்த சிவாஜியுடன் நடித்ததைப் போலவும், செüகார் ஜானகி தன்னைவிட வயதில் குறைந்த ஏ.வி.எம்.ராஜனுடன் நடித்ததைப் போலவும், தன்னைவிட வயதில் குறைந்த டி.ஆர்.மகாலிங்கத்துடன் ஜோடியாக "இதய கீதம்' படத்தில் நடித்துள்ளார் டி.ஆர்.ராஜகுமாரி. இப்படத்தின் நாயகி, நாயகனுக்கு அக்காள் போல் உள்ளார் என்று, இப்பட வெளியீட்டின்போது விமர்சனம் எழுந்தது.



"மதனமாலா' (1947) என்ற படத்தின் நாயகி டி.ஆர்.ரஜினி என்பவர் பவளக்கொடி படத்தில் டி.ஆர். ராஜகுமாரிக்கு தாயாக நடித்துள்ளார். தமிழ் சினிமாவின் முதல் நாயகி நடிகையான டி.பி.ராஜலக்ஷ்மி என்பவர் இதய கீதம் படத்தில் டி.ஆர். ராஜகுமாரிக்கு தாயாக நடித்துள்ளார்.



டி.ஆர்.ராஜகுமாரி இரு வேடங்கள் ஏற்று நடித்த ஒரே படம் "விஜயகுமாரி' என்ற படம். ராஜகுமாரி என்ற பெயரில் இளவரசியாகவும், தூயமணி என்ற பெயரில் தீவுவாசிப் பெண்ணாகவும் இரு வேடங்கள் ஏற்று இப்படத்தில் நடித்தார் டி.ஆர்.ராஜகுமாரி. இந்த "விஜயகுமாரி' படத்தின் எடிட்டர் எம்.ஏ.திருமுகம்.



டி.ஆர்.ராஜகுமாரி நடித்த முதல் சமூகப் படம் "விகடயோகி'.



இவர் பிறமொழிப் படங்களில் நடிக்கவில்லை என்றாலும்,"சந்திரலேகா' இந்தியிலும் ஆங்கிலத்திலும் மொழி மாற்றம் செய்து வெளியிடப் பட்டது. 1948இல் உருவான சந்திரலேகா 1949இல் செக்கோஸ்லேவேக்கியாவில் சிறந்த படத்திற்கான விருது பெற்றது.



தமிழ்த் திரைப் படங்களிலேயே 110 வாரங்கள் திரையிடப்பட்ட ஒரே படம், டி.ஆர்.ராஜகுமாரியும் தியாகராஜ பாகவதரும் இணைந்து நடித்த "ஹரிதாஸ் படம் மட்டுமே. ஓடிய தியேட்டரில் மூன்று தீபாவளிகளைக் கண்ட ஒரே படம் "ஹரிதாஸ்' மட்டுமே.



டி.ஆர்.ராஜகுமாரி "கச்ச தேவயானி' படத்தில் குளத்தில் குளித்துவிட்டு உடலில் ஈரப்புடவையுடனும், இடுப்பில் குடத்துடனும் வரும் காட்சியும், "சந்திரலேகா' படத்தில் ரஞ்சனின் தழுவலில் இருந்து ராஜகுமாரி மயங்கியவர் போல் நடித்து நழுவும் காட்சியும், அன்றைய பத்திரிக்கைகளில் பரபரப்பான விமர்சனங்களாயின. "கச்ச தேவயானி' படத்தை 30 முறை பார்த்தேன் 40 முறை பார்த்தேன் என்று அக்காலத்தில் ரசிகர்கள் பெருமையாக சொல்லிக் கொள்வார்கள். "கச்ச தேவயானி' படத்தில் தேவகுருவின் மகன் கச்சனும் அசுரகுருவின் மகள் தேவயானியும் காதல் புரிந்து புராண காலத்திலேயே கலப்பு மணம் செய்துள்ளனர்.



"பிரபாவதி' படத்தில் நாயகன் ஹொன்னப்ப பாகவதருடன், டி.ஆர்.ராஜகுமாரியின் சித்தி எஸ்.பி.எல். தனலக்ஷ்மி நாயகியாக நடித்து ஒரு டூயட் பாடியிருந்தாலும், டி.ஆர்.ராஜகுமாரியும் துணை நாயகியாக நடித்து நாயகனுடன் ஒரு டூயட் பாடியுள்ளார்.



டி.ஆர்.ராஜகுமாரி தனது தம்பி டி.ஆர்.ராமண்ணாவின் இயக்கம் மற்றும் தயாரிப்பில் வாழப்பிறந்தவள், குலேபகாவலி, புதுமைப் பித்தன், பாசம், பெரிய இடத்துப் பெண் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.



வி.நாகையா திரைக்கதை எழுதி நடித்து இயக்கிய "என்வீடு' படத்தின் நாயகியாக டி.ஆர்.ராஜகுமாரி நடித்தார். மேலும் டி.ஆர்.ராஜகுமாரி நாயகியாக நடித்த "பணக்காரி' படத்திலும் வி.நாகையாதான் நாயகன்.



"தங்கமலை ரகசியம்' படத்தில் பி.எஸ்.வீரப்பாவுக்கு மனைவியாகவும், நாயகி ஜமுனாவுக்கு சித்தியாகவும் நடித்தார் டி.ஆர்.ராஜகுமாரி.



டி.ஆர்.ராஜகுமாரி சொந்தக்குரலில் பாடி நடிக்கக் கூடியவராக இருந்தாலும், சில படங்களில் இவருக்கு வேறு பாடகிகள் பின்னணி பாடியுள்ளது ஒரு அபூர்வ நிகழ்ச்சியாக உள்ளது. "புதுமைப் பித்தன்' படத்தில் வரும் "மனமோகனா மறந்து போவேனா' என்ற பாடலை டி.ஆர்.ராஜகுமாரிக்காக பி.லீலா பாடியுள்ளார். "தங்கமலை ரகசியம்' படத்தில் டி.ஆர்.ராஜகுமாரிக்காக மூன்று பாடல்களை ஜிக்கி பாடியுள்ளார்.

"குலேபகாவலி' படத்தில் வரும் "வில்லேந்தும் வீரரெல்லாம்' என்ற பாடலில் டி.ஆர்.ராஜகுமாரிக்காக பி.லீலா குரல் கொடுத்துள்ளார்.



இவர் நடித்த 25 படங்களில் மொத்தம் 94 பாடல்கள் பாடியுள்ளார். இதில் இவர் தனித்து 54 பாடல்கள் பாடியுள்ளார். மற்றவர்களுடன் இணைந்து 40 பாடல்களை பாடியுள்ளார்.



லலிதா - பத்மினி சகோதரிகள் டி.ஆர்.ராஜகுமாரி நடித்த பவளக்கொடி, விஜயகுமாரி, இதய கீதம், அமர கீதம் ஆகிய 4 படங்களில் நாட்டியமாடியுள்ளார்கள். டி.ஆர்.ராஜகுமாரி நடித்த "அன்பு' படத்தில் லலிதாவும் பத்மினியும் நடித்துள்ளார்கள். டி.ஆர்.ராஜகுமாரி நடித்த "விஜயகுமாரி' படத்தில் வைஜெயந்திமாலா நாட்டியமாடியுள்ளார்.



கமல்ஹாசன் குழந்தை நட்சத்திரமாக நடித்த "வானம்பாடி'(1962) படத்தில் டி.ஆர்.ராஜகுமாரி நடித்துள்ளார்.



டி.ஆர்.ராஜகுமாரி நடித்தது மொத்தம் 32 படங்கள். இதில், 21 படங்களில் நாயகியாகவும், 11 படங்களில் துணை வேடங்களிலும் நடித்துள்ளார்.



1959 இல் தமிழக அரசு இவருக்கு "கலைமாமணி விருது' அளித்தது.



ராஜகுமாரியாக நடித்து, ராககுமாரியாக பாடி ரசிகர்களை மகிழ்வித்து, தம் குடும்பத்தாருக்காக திருமணம் செய்யாமலேயே தியாககுமாரியாக வாழ்ந்த டி.ஆர்.ராஜகுமாரி தமது வீட்டிற்கு "கன்யாகுமரி பவனம்' என்று பெயர் வைத்திருந்தார். எண்: 77, அபிபுல்லா ரோடு, மதறாஸ்- 17 என்ற முகவரியில் வசித்து வந்த ராஜகுமாரி, தனது 77 ஆவது வயதில் 20.09.1999 இல் மறைந்தார்.

- சிவ.குகன்


டி.ஆர்.ராஜகுமாரி நடித்த படங்கள்

மந்தாரவதி (1941) சூரியபுத்ரி (1941) கச்ச தேவயானி (1941) மனோன்மணி (1942) சதி சுகன்யா (1942) சிவகவி (1943) குபேர குசேலா (1943) பிரபாவதி (1944) ஹரிதாஸ் (1944) சாலிவாஹணன் (1945) வால்மீகி (1946) விகடயோகி (1946) பங்கஜவல்லி (1947) சந்திரலேகா (1948) கிருஷ்ண பக்தி (1949) பவளக்கொடி (1949) விஜயகுமாரி (1950) இதய கீதம் (1950) வனசுந்தரி (1951) அமரகவி (1952) வாழப் பிறந்தவள் (1952) பணக்காரி (1953) என் வீடு (1953) 24. அன்பு (1953) மனோகரா (1954) குலேபகாவலி (1955) புதுமைப்பித்தன் (1957) தங்கமலை ரகசியம் (1957) தங்கப் பதுமை (1959) பாசம் (1962) வானம்பாடி (1962) பெரிய இடத்துப் பெண் (1963)

chinnakkannan
9th December 2014, 10:18 PM
வாசு..

கோபால் சாரின் பாராட்டுக்களுக்கு என் நன்றியைத் தெரிவியுங்கள்..ம்ஹூம் ஒத்துக் கொள்ள மாட்டேன் என்றும் கூறுங்கள்..அவரிடமிருந்து அவையில் ஹை இண்டலக்ட் என்று பேர் வாங்கும் வரையில் எழுதிப் படுத்துவேன் எல்லாரையும் என்று சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்..… அவரும் சொல்ல மாட்டார் - நான் நிறைய எழுத வேண்டுமென்பதற்காக..(மேதாவி எனத் தமிழ்ப்படுத்திப் பார்க்கக் கூடாது எனச் சொல்லிக்கொள்கிறேன் யுவர் ஹானர்!) (சாரை அடுத்த பாராவில் போட்டிருக்கிறேன் வாசு சார்.(ஓ இந்தப் பாராவிலேயே வந்துடுத்தோ!))

//இப்படியா போட்டுத் தாக்குவது மீண்டும் போட்டாலும் கூட.// ஹி ஹி..இதான் வாசு சார்.. தாங்க்ஸ் ஜி.

அப்புறம் எப்போதுமே உங்களுக்கு ஒரு கண்ணில் கூலிங்க்ளாஸூம் ஒரு கண்ணில் பவர் க்ளாஸூம் போடுவது வழக்கமாகிவிட்டது!..ம்ம்(ஒரு கண்ணில் வெண்ணெய் ஒரு கண்ணில் சுண்ணாம்பு என்பது பழைய வசனமோன்னோ..)
எழுதுங்கள் படித்தபிறகு வைத்துக்கொள்கிறேன்.

அம்புடன்
சி.க..

chinnakkannan
9th December 2014, 10:19 PM
தொழில் பாட்டுக்கள் – 8

**

மிருகம் என்றால் என்ன..? (அடப்பாவி என நெற்றிச் சுழித்தல் தெரிகிறது!)

ஐந்தறிவு உள்ளவை மிருக வகை.. ஆறறிவு கொண்டவன் மனிதன்.. அவனுக்கும் ஒரு அறிவுகுறையும் தருணம் எது..

விருப்பங்கள் தீயவாய் உள்ளத்தில் தோன்ற
மிருகம் எழுந்திடு மே

என்பார்கள் ஆன்றோர்கள்!

திருமூலர் என்ன சொல்கிறார்..

இந்த உள்ளம் என்றவொன்று மனிதனுக்கு இருக்கிறதே..அது ஒரு காடாம்..அதில் பலவித மிருகங்கள் அவ்வப்போது அலைந்து கொண்டிருக்கின்றனவாம்..என்ன டைப் மிருகங்கள்…

திகைக்கின்ற சிந்தையுள் சிங்கங்கள் மூன்று
நகைக்கின்ற நெஞ்சுக்குள் நரிக்குட்டி நான்கு
வகைக்கின்ற நெஞ்சினுள் ஆனைகள் ஐந்து
பகைக்கின்ற நெஞ்சுக்குள் பால் இரண்டு ஆமே..

அது என்ன திகைக்கின்ற சிந்தை.. டபக்குன்னு சிந்தனை ஸ்தம்பிக்க வைக்கிறது என்ன விஷயமாக்கும்..யெஸ்..ஓஹ்..இந்த நடன மங்கை எவ்வளவு அழகு எத்துணை அழகாய் நாட்டியம் ஆடுகிறாள் என்பது ரசனை., இதுவே அவளுடன் ஓரிரவு துயில் கொள்ளலாம் என நினைத்தால் அது காமம்.. இது ஒரு சிங்கம்

ஓ நீங்க கிச்சாமி மாமாக்கு உறவா.. நாங்க அவர் வீட்டுக்கு நாலு வீடு தள்ளி மதுரையில இருந்தோம் என முன்பின் தெரியாதவரிடம் சொல்வது பேச்சுத் தொடர்பை வளர்க்கும் காரியங்கள்.. அதே சமயத்தில் அந்த மு.பி தெரியாத ரயிலில் சந்தித்த மனிதரிடம் நான் இன்னான், நான் இந்த வேலை எனக்கு இவ்வளவு சம்பளம் என் உறவுகள் பெயர் இன்னின்ன எனச் சொல்வதென்பது வெகுளித்தனம் இன்னொஸன்ஸ் என்று தமிழில் சொல்வார்கள்.. வெள்ளந்தி மனப்பான்மை இதுவும் ஒரு சிங்கம்

அழகில் மயங்கினேன், பாட்டில் மயங்கினேன், பேச்சில் மயங்கினேன், நடிப்பில் மயங்கினேன் என்று வகைவகையாக மயக்கங்கள் உண்டு.. அப்படி மயக்கம் என்பது மூன்றாவது சிங்கம்..

அது என்ன நான்கு நரிக்குட்டிகள்.. மனம், புத்தி சித்தி அகங்காரம்.. இந்த நகைக்கின்ற நகைவாங்கி, நகைபட்டு நகையாய் நகைக்க வைக்கின்ற (ஹையா புரியாத மாதிரிச் சொல்லியாச்சு) நெஞ்சுக்குள்ளே இந்த நான்கு நரிக்குட்டிகள் இருக்கின்றனவாம்.(.சித்தின்னா ராதிகாவால்லாம் கேக்கப்படாது ரவி..)

வள்ளுவர் என்ன சொல்லியிருக்கார்னா..(யோவ் வள்ளுவர் எங்கிருந்துய்யா வந்தார் இங்க)

கண்டு கேட்டு உண்டுயிர்த்து உற்றறியும் ஐம்புலனும்
ஒந்தொடி கண்ணே உள..

காண்பது,கேட்பது, உண்பது, உயிர்வாழ்வது, உற்றுக் கேட்பது என இந்த ஐம்புலன்களும் ஒரு பெண்ணின் வசம் உள்ளன என்று சற்றே மயக்க சிங்கம் வந்தப்ப எழுதிவிட்டார்..

ஆக இந்த ஐம்புலன்களையும் ஐந்து ஆனைகள் என்கிறார் திருமூலர்.. இதனால பலவிதமான ஆசைகள் மனசுல அலைபாயவைக்கும்.. ஜோன்னு கடல்ல விடாம கரையத்தொட்டுத்தொட்டு திரும்பற அலைகள் மாதிரி மனசுல ஆசை அலைகளுக்கு ஓய்வேது..

இந்த ஐம்பொறிகளால நமக்கு ஆணவம் நச்சு என க் குற்றத்தன்மைகள் வந்து சேரும் என்கிறார்..

ஆக மனமென்னும் காட்டுக்குள்ள இருக்குற மிருகங்கள் இப்படி.. நிஜக்காட்டுக்குள்ள மிருகங்கள் எப்படி இருக்கும்..

நான் மதுரைக்காரன்.. பக்கா சிட்டி மேன்..(மெட்ராஸ் லாம் ஒருகாலத்தில் கனவு) எனில் மதுரை தான் சிட்டி..அங்கே மிருகங்கள் என்று பார்த்ததெல்லாம் கோடி வீட்டு சோமுவின் பாமரேனியன் ஜிம்மி, பி.4 போலீஸ் ஸ்டேஷன் அருகே பசும்பால் கிடைக்கும்.. சமயத்தில் மாடையே ஒரு ஓரத்தில் கட்டி க் கறந்து நுரை பொங்கப் பொங்க பிளாட்பாரத்தில் ஒரு பெஞ்ச்சில்\ வாயகன்ற பாத்திரத்துடன் இருக்கும் கடையில் விடுவார்கள்.. ஸோ மாடு.

அப்புறம் ச்சும்மா சலனப்பட்ட கண்களோட பார்க்கும் பருவமங்கை மாதிரி சுற்றுமுற்றும் பார்த்தவண்ணம் தாவிச்செல்லும் பக்கத்து வீட்டுப் பூனை..கூடவே ஷ்ஷீ என விரட்டிய பக்கத்து வீட்டு நங்கை.. இந்தப்பக்கம் ஆட்டுமந்தையில் எதிர்காலம் தெரியாமலேயே உற்சாகமாகத் துள்ளியிருந்த ஆடுகள், பெருமாள் கோவில் மீனாட்சி அம்மன் கோவில் ஆனை..இவ்வளவு தான்

மற்றபடி சிங்கம் பார்த்தது அடிமைப் பெண் புலி பார்த்தது நவராத்திரி மற்றும் சில காட்டுப் படங்கள் தான்..முதன் முதலில் நேரில் பார்த்தது எங்கே..

ஒரே ஒருதடவை.. அரசரடி மைதானத்தில் விவரம் அறியாத வயதில் வீனஸ் சர்க்கஸோ ஜெமினி சர்க்கஸோ வந்திருக்க அம்மா அண்ணன் கூட்டிச் சென்ற நினைவு வெகு வெகு புகையாக..

யெஸ் சர்க்கஸ்..

கலர்கலராக வாழ்க்கையின் வண்ணங்களை முன்கூட்டியே சொல்லும் வண்ணம் இருந்த கூடாரம்..உள் செல்கையில் பளபளா விளக்குகள், பளபள (சற்றே குறைந்த) உடைகளுடன் பெண்கள், கட்டு மஸ்தான ஆண்கள்..குள்ளமாய்ச் சிரிக்க வைக்கவேண்டுமென்பதற்காக மெனக்கெடும் பஃபூன்.. அழகாய் வட்டமாய்க் கட்டப்பட்ட சாரப் பலகைகள்.. அப்புறம் இதோ

எதிர்பார்த்த சிங்கம்,புலி கரடி யானைகளின் அணிவகுப்பு..

உயிர் துச்சமாய் இந்தக் கோடியிலிருந்து அந்தக்கோடியில் தாவும் சாகசர்கள்..

அன்ஃபார்ச்சுனேட்லி ஒரே ஒருதடவை தான் பார்த்திருக்கிறேன் சர்க்கஸை..பின் பார்த்ததெல்லாம் திரைப்படங்களில் தான்..

கலகலத்த சோகமதைக் காட்டாமல் ஆடை
பளபளத்து மின்னிற்றே பார்..

நிஜமாகவே அன்றைய நாட்களில் அவ்வளவு மிருகங்களுக்கும் சாப்பாடு., ஆட்கள் குமரிகள் சம்பளம் பயிற்சி கூடாரம், ரயில் செலவு, எனக் கைக்கொண்டு சர்க்கஸ் நடத்தியவர்கள் திறமை மிக்கவர்கள் தான்..

மாறுகின்ற காலத்தில் மாறாமல் நின்றவர்க்கு
ஆறுதல் சொல்லிடலா மா..

கஷ்டம் தான்.. சில காலம் முன்னால் கூட இணையத்தில் ஒரு நண்பர் சர்க்கஸ் சமீபத்தில் பார்த்தேன்..ஒன்றும் மாற்றமே இல்லை.. ஏன் இப்படியே இருக்கிறார்க்ள் என்பது போல் எழுதியிருந்தார்..

ஜேம்ஸ் பாண்ட் படங்கள் டையமண்ட்ஸ் ஆர் ஃபார் எவர், ஆக்டோபஸ்ஸி – ராஜ்கபூர் படம் (பெயர் மறந்து விட்டது) நினைவுக்குவருகின்றன..

கொஞ்சம் சிறந்த சிந்தனாவாதி மாதிரி சிந்தித்து டி.வி பார்த்தபடி (ஆன் செய்யாமல்!) யோசித்ததில் தின வாழ்க்கையே ஒரு வித சர்க்கஸ் போலத் தான் இருக்கிறது.!

*

குறும்புத் தனம் பொங்கி வழியும் ந.தி, கண்களில் குறும்பு மின்னும் தேவிகை – சர்க்கஸ் காரம்மா என வந்த படம் குலமகள் ராதை.. பாடல் எத்தனை தடவை பார்த்தாலும் எத்தனை தடவை கேட்டாலும் எத்தனை தடவை போட்டாச் சொன்னாலும் அலுக்காதாக்கும்..

இரவுக்கு ஆயிரம் கண்கள் பகலுக்கு ஒன்றே ஒன்று

http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=7-MeOefFKHs

*

ஹை.. கலர்ப்படம். இளமை ம.தி...ப்ளஸ் க.பை சர்ரூ போதாக்குறைக்கு காஞ்ச் வேற.. சஸ்பென்ஸ் குறையாமல் இருந்த சர்க்கஸ் படம் பறக்கும் பாவை..இந்தப் பாடலும் தான் வெகு அழகு..

கல்யாண நாள் பார்க்கச் சொல்லலாமா

http://www.youtube.com/watch?v=nMj2jTwpwiY&feature=player_detailpage

*

அப்புறம் வரட்டா..

rajeshkrv
9th December 2014, 10:47 PM
சி.க
அடேயப்பா இப்பொழுதெல்லாம் உமது எழுத்து அசுர வேகத்தில் சும்மா தூள் கிளப்புதே .. ஹ்ம்ம்ம் கலக்குங்க

chinnakkannan
10th December 2014, 01:02 AM
ராஜேஷ்.. மிக்க நன்றி..
*
அங்கிட்டு ஆரம்பிக்கறப்ப வந்து ந.தி பற்றி எழுதவேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன் என்று நண்பருக்கு நண்பர் எழுதியிருக்கிறார்..

ஆரம்பிக்கறச்சே தான் எழுதணுமா ஏன் இப்பவே எழுதிப்பார்த்தால் என்ன என்று யோசித்தால்.. ம்ஹூம் ஒன்றுமே தோன்றவில்லை..

எல்லாரும் எல்லாவற்றைப் பற்றியும் வெகு சிறப்பாக எழுதியாயிற்று.. ந.தி படங்கள், பாடல்கள், இணைந்து நடித்தவர்கள், நடை உடை பாவனை, உடனிருக்கும் பாத்திரங்கள் நடிகையர் துணை நடிகைகள் நகைச்சுவை நடிகர்கள் என.. என்னதான் விட்டு வைத்திருக்கிறார்கள்..எல்லாரும்..அதுவும் ந.தியின் தீவிர பக்தர்கள் விதவிதமாய் எழுதிப் பார்த்துவிட நானோ சிறுவன்..துகளிலும் துகளான குட்ட்டி ரசிகன்..நானென்ன எழுத இயலும்..

ஊற்றாகக் கற்பனை உள்ளத்தில் பொங்காமல்
ஆற்றாமை கொண்டதே நெஞ்சு..

யோசிக்க யோசிக்க வேதனை அதனால் சற்றே மேலெழும்பும் கோபம்

சீறி வரும் நோக்குகொண்ட சீர்மிக்க மங்கையின் பார்வை போல், சர்ரென்றுச் சீறும் ராக்கெட் வெடியைப் போல், சீறிப் பாய்ந்து வால் முறுக்கிவிட இலக்கில்லாமல் சுழலும் காளையைப் போல்,, இன்னும் பல சீற்றங்களை உள்ளடக்கி எழும்பும் போது பல கைகள் விரித்து அங்குமிங்கும் ஒரே சமயத்தில் அழிக்கும் சுனாமியைப் போல.க்க்க் கோபம் வருகிறது ..என்னைப் பற்றி எனக்கே..


ஹை.... கோபத்தை ப் பற்றி எழுதினால் என்ன… இங்கிட்டு அப்படியே கொஞ்சம் பாட் கொடுத்தா த்ரெட்ல எழுதினதுக்கு ஜஸ்டிஃபையும் ஆகிவிடுமோன்னோ. (கண்ணா சமர்த்துடா நீ).

என்றால்….முதலில் கண் தெரிகிறது சிவக்கண் சிவந்த கண் துடிக்கும் நடிப்பில் ஒற்றைக் கண்.. சிவாஜி கண்..

பொங்குதேர்வாவி அஞ்சிறைத் தும்பி
காவும் செப்பாது கண்டறியுமோ
பயிரியர் செரிய…அரிய கூந்தலும் உளவோ
நீயறியும் பூவே…( நினைவிலிருந்து எழுதுகிறேன்)

நக்கீரர் நை நை என்று பேசப் பேசக் கொஞ்சம் கொஞ்சமாய் அடிவயிற்றிலிருந்து கனன்று மேலெழும்பும் கோபம் மெல்ல மெல்ல க் கன்னச் சதைகளில் ஏறி துடிக்கவைத்து கண்கள் மூக்கு வாய் என்று எல்லாம் துடிக்கத் துடிக்க குரல் உச்சியிலேறி பின் திறக்கும் நெற்றிக்கண்ணில் தெறிக்கும் கோபம்.. ந.தி.. மறக்க முடியுமா..

*

கண்ணா எங்க

போய்ட்டான்

போய்ட்டானா… …. எனச் சீறி.. அவன் என்னைக் கண்டிக்கறச்சே நா அவனைக் கண்டிக்கக் கூடாதோ எனக் கொள்ளும் கோபம்..வேறொண்ணுமில்லைடி..கிளிக்கு ரெக்கை முளைச்சுடுத்து ஆத்த விட்டுப் பறந்து போய்டுத்து எனத் தன்னைத் தானே சமாதானப் படுத்திக் கொள்ளப் பார்க்கும் கோபம்.. பாரிஸ்டர் ரஜினிகாந்த்..கெளரவம்.. ந.தி.. மறக்க முடியுமா…

*
அப்படியே போனேன்..ஹ…ஹா. அரிவாளால போட்டேன் ஒரு போடு ஒரு தலையில்லை நிறைய தலை உருண்டுச்சு(வசனம் மறந்து விட்டது) பழிவாங்கிட்டேன்.. பழிவாங்கிட்டு இங்க வந்தா நீ போலீஸ் உன்னைத் துரத்தி வருதுன்னு சொல்ற ஹஹ்ஹா.. அவங்க உன்னைத்தேடல்ல என்னைத் தேடி வந்திருக்காங்க..– மிரட்டல், உருட்டல், முழிக்கும் விழிகள் முரட்டு உடல் கலைந்த தலை குலைந்த ஆடையுடன் எதிரில் ஆட்டுக்குட்டியென நடுங்கிக் கொண்டிருக்கும் சாவித்திரியிடம் பேசும் கோபக் கார ந.தி.. நவராத்திரி.. மறக்க முடியுமா..

*

நா மரியாதையாத் தான் கூப்பிட்டேன் ஃபாதர்..அவன் வரமாட்டேன்னான்.. ஒரே அறை விட்டேன் ஓரே ஒண்ணு தான் ஃபாதர்..- எனக் கோபமாய்ச் சொல்லும் ஆண்ட்டனி என்ற அருண்.. ஞான ஒளி ந.தி மறக்க முடியுமா..

*
அரங்கனுக்குத் தானே திருப்பணி செய்கிறேன்..என்னை எதற்குக் கப்பம் கட்டவேண்டும் என்கிறான் சோழன்..ம்ம் நான் அவனுக்குப் பாடம் கற்பிக்கிறேன்.. எனச் சீறும் திருமங்கை மன்ன சீற்றம்..விழிகளில் தெறிக்கும் கோபம்… மறக்க முடியுமா..

*

மனைவி மகள் களங்கப்பட்டதை மறைத்து நாடகமாட,அது தெரிந்துவிட குமுறிப் பொங்கியெழுந்து பாடலாய்ப் பெருகும்கோபம்…
குயில் இட்ட முட்டை என்று காக்கைக்குத் தெரியும்
அது கூவும் போதும் தாவும் போதும் யாருக்குப் புரியும்
காட்டுக்கதை வீட்டில் கூட நடக்குது கண்ணா
கடவுள் கண்ணை தீபப் புகை மறைக்குது கண்ணா


எனக் குழந்தையிடம் பாடும் நீ.என்ன கண்ணனா நான் என்ன கம்சனா ஜெனரல் சக்ரவர்த்தி ந.தி கோபம் மறக்க முடியுமா..

*

அழகாய் நாட்டியமாடி மேடையிலும் மனதிலும் நாட்டியமாடிப் பின் மாறிவிட்ட நங்கை தானாய் வந்து வம்புக்கிழுக்க…கண்களில் சீற்றம்.. நான் எங்கயும் ஓடல்ல.. இந்தத் தில்லானாவ வாசித்து உன் கால ஒடிக்கல..பாக்கலாமா பாக்கலாம் எனச் சீற்றத்துடன் வெளியில் சென்று திரும்பி அதே சீற்றத்துடன் பாக்கலாண்டி எனச் செல்லும் சிக்கல் சண்முக சுந்தரமாய் வாழ்ந்த ந.தி.. மறக்க முடியுமா..

*
முதல் மரியாதையில் மனைவி கணவனை எதிர்ப்பதற்காக சொந்தத்தை அழைத்து விருந்துபோடும் போது வரும் ந.தியின் கண்களில் கனலாய்ச் சுழலும் கோபம்.. கர்ஜனை மறக்க முடியுமா

*

கோபத்தில் தங்கையுடன் இருந்த காதலனைக் கொன்றுவிட்டேன் எனத் தவிக்கும் ந.தியின் நடிப்பு அன்புக் கரங்கள்..மறக்கமுடியுமா..

*


இன்னும் பல ந.தியின் கோப நடிப்பாற்றல்கள் வரிசை கட்டி நிற்கின்றன..வீரபாண்டிய கட்ட பொம்மன் ஆலய மணி பைலட் ப்ரேம் நாத் எனப் பல மனதில் முட்டி மோதுகின்றன.. நீங்கள் எழுத மாட்டீர்களா என்ன..
*
பாடல்போடலாமெனத்தேடினால் வாசு சார் அக்குவேறு ஆணிவேறாக அலசிய லிங்க் தான் கிடைத்தது..அதுவும் வொர்க் ஆகவில்லை..

உங்கள் அழகென்ன அறிவென்ன
உங்கள் அழகென்ன அறிவென்ன
மனமென்ன குணமென்ன கோபம் வரலாமா
இரு கண்ணிருக்க கண்ணெதிரே பெண்ணிருக்க
பெண்ணெதிரே கொஞ்சம் வரலாமா
கோபம் வரலாமா கொஞ்சம் வரலாமா

எனில் வேறு பாட் போட்டு விட்டேன்..

மகாராஜன் உலகை ஆளலாம்
இந்த மகாராணி அவனை ஆளுவாள்…

http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=DBVdIzzgwgc

(வாசக தோஷ சந்தவ்யஹ..)

RAGHAVENDRA
10th December 2014, 07:25 AM
சி.க. சார் ... ஆசை தீர கோபப் படுங்கள்

http://i.ytimg.com/vi/NLQhKMtG3ik/hqdefault.jpg

Gopal.s
10th December 2014, 08:23 AM
வாசு..

கோபால் சாரின் பாராட்டுக்களுக்கு என் நன்றியைத் தெரிவியுங்கள்..ம்ஹூம் ஒத்துக் கொள்ள மாட்டேன் என்றும் கூறுங்கள்..அவரிடமிருந்து அவையில் ஹை இண்டலக்ட் என்று பேர் வாங்கும் வரையில் எழுதிப் படுத்துவேன் எல்லாரையும் என்று சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்..… அவரும் சொல்ல மாட்டார் - நான் நிறைய எழுத வேண்டுமென்பதற்காக..(மேதாவி எனத் தமிழ்ப்படுத்திப் பார்க்கக் கூடாது எனச் சொல்லிக்கொள்கிறேன் யுவர் ஹானர்!) (சாரை அடுத்த பாராவில் போட்டிருக்கிறேன் வாசு சார்.(ஓ இந்தப் பாராவிலேயே வந்துடுத்தோ!))

சி.க..

சி.க சார்(நீங்கள் விரும்புவதால் சேர்க்கிறேன்),



உங்கள் ஆதங்கம் புரிகிறது. ஆனால் என்னை புரிந்து கொள்ளுங்கள். தமிழர்களின் மடமையை கண்டு எனக்கு கொதிப்பே உண்டு. (என் நகைசுவை உணர்வை,எழுத்தை எல்லாவற்றிலும் காட்ட இயலாது). பாரதியை,புதுமைப்பித்தனை,அசோகமித்ரனை,புறக்கணித ்த சமூகம், ருத்ரையா,மகேந்திரன் போன்ற சத்யஜித்ரே,அடூர் கோபாலகிருஷ்ணன்,ஷ்யாம் பெனெகல் இவர்களுக்கு நிகரான திரை மேதைகளை புறக்கணித்து பாவம் தேடி கொண்டது. அற்ப அரசியல் சுயநல காரணங்களால் மூளை சலவை செய்யப்பட்டு ,சிறு வயது முதலே பொய்களை கேட்டு வளர்ந்த ஒரு தவறான தலைமுறை (மாறவும் விரும்பாத)பிரிந்து நின்ற தமிழ் சமூகம் ,சிவாஜி போன்ற நிகரற்ற மேதைகளுக்கு அளிக்க வேண்டிய கௌரவத்தை கிடைக்காமல் செய்து தமிழர்களை தலை குனிய வைத்தது. இவற்றுக்கு தமிழன் என்று தலை நிமிர்த்தும் நாம் தார்மீக பொறுப்பேற்றே ஆக வேண்டும். நல்லவேளை பார்க்கவில்லை என்ற தங்கள் வேடிக்கையான வினோத புறக்கணிப்பால் நான் சற்றே தடுமாறி ,ஒரு பதிவை சிறிதே கோபத்தில் இட்டேன். (தங்கள் புறக்கணிப்பு ருத்ரையா மரணத்தில் முடிந்தது)தாங்கள் இன்னும் மறக்கவில்லை. நான் மறந்து மேற்சென்று விட்டேன்.



எனக்கு யார் மீதும் தனிப்பட்ட கசப்புணர்வோ,வெறுப்புணர்வோ கிடையவே கிடையாது. அந்தந்த தருணங்களின் உண்மை வெளிப்பாடு. கசக்கலாம்,இனிக்கலாம்,புளிக்கலாம்,துவர்க்கலாம் ,ஆனால் வாழ்வை அசல் சுவையாக்கும்.

rajeshkrv
10th December 2014, 09:12 AM
காலை வணக்கம்

சில தினங்களுக்கு முன் ராட்சசியின் பிறந்த நாள் ..
இதோ ராட்சசி கலக்கும் கன்னட பாடல்

https://www.youtube.com/watch?v=86rJJSET9RA

vasudevan31355
10th December 2014, 11:53 AM
//அப்புறம் எப்போதுமே உங்களுக்கு ஒரு கண்ணில் கூலிங்க்ளாஸூம் ஒரு கண்ணில் பவர் க்ளாஸூம் போடுவது வழக்கமாகிவிட்டது!..ம்ம்(ஒரு கண்ணில் வெண்ணெய் ஒரு கண்ணில் சுண்ணாம்பு என்பது பழைய வசனமோன்னோ..)
எழுதுங்கள் படித்தபிறகு வைத்துக்கொள்கிறேன்''.

அய்யய்யோ!

என்ன தப்பு செய்தேன்னு தெரியலையே கண்ணா!

ஒரு கண்ணுல வெண்ணெய் புரியுது. கோபால் வெண்ணைய்னு புரியுது.:) ஒரு கண்ணுல சுண்ணாம்பு. யாராக்கும் அது? அந்த மாதிரி தப்பெல்லாம் வாசு பண்ணவே மாட்டானே!

சி.க வேற எல்லாப் பதிவையும் கோபமா வேற போட்டிருக்கார். சாது மிரண்ட ராமச்சந்திரன். ம்.. என்ன நடக்கப் போகுதோ!

என்ன வேகம் நில்லு பாமா
என்ன கோபம் சொல்லலாமா


https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=eSbrFxvhC8s

vasudevan31355
10th December 2014, 11:55 AM
//ஜேம்ஸ் பாண்ட் படங்கள் டையமண்ட்ஸ் ஆர் ஃபார் எவர், ஆக்டோபஸ்ஸி – ராஜ்கபூர் படம் (பெயர் மறந்து விட்டது) நினைவுக்குவருகின்றன..//

http://www.google.co.in/url?sa=i&source=images&cd=&ved=0CAUQjBw&url=http%3A%2F%2Fwww.celebratingindiancinema.com%2 Fevergreen-movies%2Fimages%2Fevergreen-movie%2Fmera-naam-joker.jpg&ei=ROeHVODrAsGi8AWX4YKQCw&psig=AFQjCNEzju5Q7Fj-N5e-px_f9wes_0xZ8Q&ust=1418279108151141

vasudevan31355
10th December 2014, 01:08 PM
சி.க சார்,

தொழில் பாட்டுக்கு விளக்கம் களேபரம். மிருகத்துக்கு விளக்கமென்ன... சிங்கத்துக்கு விளக்கமென்ன...சர்க்கஸ் பார்த்த அனுபவம் என்ன... அதுவும் 'அழகாய் வட்டமாய்க் கட்டப்பட்ட சாரப் பலகைகள்' அழகான வர்ணனை சி.க.வால் மட்டுமே முடிந்த ஒன்று. அருமை நடை.

தேவிகா என்றால் தேவுடு காத்து பார்ப்பீர்களே ஜொள் விட்டு.

எனக்கு நடிகர் திலகம் நடிக்கும் போது பக்கத்தில் யார் நின்றாலும் கண்களுக்குத் தெரியாது. ஒரு இருபது முப்பது தரம் நடிகர் திலகத்தின் முகபாவங்களையும், உடல் மொழிகளையும் பார்த்த பின் தான் அடுத்தவர்களுக்கு போனால் போகுது என்று சான்ஸ்.

'இரவுக்கு ஆயிரம் கண்கள் பகலுக்கு ஒன்றே ஒன்று'

ஆயிரம் கண்களிலும் சுண்ணாம்பா இல்லை வெண்ணையா? நீரே சொல்லும் துரை.

'பறக்கும் பாவை' எனக்குப் பிடித்த நல்ல படம். ரசித்துப் பார்ப்பேன். கலர்ஃபுல் மூவி. அதனால்தான் 'இன்றைய ஸ்பெஷலி'ல் கூட 'சுகம் எதிலே' பாடல் பற்றி எழுதினேன். ராமண்ணா அனுபவித்துப் பண்ணியிருப்பார். பாடல்கள் பாயாசம். ஆயாசம் வரும் போது கேட்டால் பரவசம். என்ன டி.ஆர் மாதிரி எழுத ஆரம்பித்து விட்டேன்!

நடிகர் திலகத்தின் கோபக்காட்சிகள் பற்றிய தொகுப்பும், வர்ணனையும் கலக்கல். உமக்கு ஒன்றும் எழுதத் தெரியாது... நீர் சிறுவன்... குட்டியூண்டு ரசிகன்... அதை நாங்கள் நம்ப வேண்டும்.... அப்படித்தானே!:)

கோபக் காட்சிகள் எழுதும் போதே உமது கோபமும் புரிகிறது.:) அது வியட்நாம் திசை நோக்கி செல்வதும் தெரிகிறது.:) நெய்வேலி பக்கம் திரும்பாமல் இருந்தால் சரி! நம்மால் தாங்க முடியாது சாமியோவ்.:)



சி.க,

கிண்டி விட்டு விட்டீர்.

நடிகர் திலகத்தின் கோபம் பிற்காலப் படங்களில் பின்னி எடுக்கும்.

உதாரணத்திற்கு 'நீதிபதி'.

வில்லன்கள் பேச்சை கேட்டு நீதிபதியை பெயர் சொல்லி 'ஜஸ்டிஸ் ராஜா' என்று அழைக்கும் மருமகன் விஜயகுமார். நீதிபதியின் மகளை வாழாவெட்டியாக்கி வீட்டுக்கு கொண்டு வந்து வாய்க்கு வந்தபடி பேசும் மருமகனுக்கு பதிலடி கொடுக்கும் நீதிபதி நடிகர் திலகம். சும்மா தியேட்டரே கிடுகிடுக்கும் அந்த சிம்மக் குரலில்

மருமகன் விஜயகுமார் குற்றவாளி ஜகன்நாத்தை நிரபராதி என்று கூறி கோர்ட்டில் தீர்ப்பு கூற வேண்டும் என்று நடிகர் திலகத்திடம் சொல்ல, 'இல்லைன்னா?' என்று நடிகர் திலகம் திரும்பக் கேட்க, 'உங்கள் மகள் (மேனகா) வாழாவெட்டியாகிவிடுவாள்' என்று விஜி பயமுறுத்த, (அப்போது விஜி டர்ன்)

வருவார் பாருங்கள் கோபத்தோடு. கையில் பைப் வேறு. கேக்கணுமா? மன்னவன் பின்னி விடுவார் பின்னி. (இப்போது சிங்கத்தின் டர்ன்)

நேரே விஜயகுமாரிடம் வந்து,

'எய்தவன் எவனோ?... விஷ அம்பா என் நெஞ்சில குத்தற?'

என்று கர்ஜிக்க ஆரம்பிப்பார். சும்மா வசனம் வீடு கட்டி விளையாடும். கோபமாக பேசிக் கொண்டே வருவார்.

'என்னைப் படைச்ச ஆண்டவணானாலும் சரி! எனக்கு வேலை கொடுத்த அரசாங்கமா இருந்தாலும் சரி! ரெண்டு பெரும் சேர்ந்து கோர்ட்டுக்கு வந்தாலும் நீதிக்குத்தான் மதிப்பு கொடுப்பேனே தவிர வேற எந்த நாய்க்கும் மதிப்பு கொடுக்க மாட்டான் இந்த ஜஸ்டிஸ் ராஜா"

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/sivaji.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/sivaji.jpg.html)

அடுத்து பின்னல் நிற்கும் மருமகன் விஜயகுமாரை அழைப்பதை கவனியுங்கள்.

'ஏய் ரமேஷ்!

பார்க்காமலேயே பின் பக்கம் வலது கையை உயர்த்தி ஆட்காட்டி விரலால் கூப்பிடுவார். இடது கையில் பைப் புகையும்.

'என் மகளுடைய புருஷன் அப்படிங்கிற ஒரே காரணத்துக்காக உன்னை மரியாதையா போகச் சொல்றேன். போடா.. சீ! சீ!... போடா"

என்று முகத்தில் கோபமும், கடுப்பும், ஆத்திரமும், வேதனையும், விரக்தியும், வேதனையும் ஒன்று கலந்து ஒரு சேர அரை நொடியில் காட்டுவாரே.

அடப் போங்கப்பா! தலைவர் கோபத்தைப் பத்தி எழுதி கொலை வெறியை ஏத்தி விடறீங்க.

அப்புறம் இது சிவாஜி திரி ஆயிடுச்சுன்னு வெளியில் இருந்து தலையை நீட்டி சிலர் பார்த்துட்டு வயிறு எரிவாங்க.:) வேணாம். நமக்கேன் வீண் வம்பு.:)

vasudevan31355
10th December 2014, 06:06 PM
சி.க,

சர்க்கஸ் பட வரிசையில் இவற்றையும் சேர்த்துக் கொள்ளுங்கள்

சந்திரலேகா
பாகப் பிரிவினை
தெய்வச் செயல்
நல்ல நேரம் (தெரு சர்க்கஸ்)
அபூர்வ சகோதரர்கள்
சர்க்கஸ் சுந்தரி

இன்னும் இருந்தா போடுங்களேன்.

vasudevan31355
10th December 2014, 06:10 PM
'குலமகள் ராதை' படத்தில் சர்க்கஸ் கூடாரத்தில் அண்ணியார்

http://i.ytimg.com/vi/yQHDlc2zvvY/hqdefault.jpg

vasudevan31355
10th December 2014, 06:13 PM
இரு வில்லன்கள் 'பறக்கும் பாவை'யில்

http://padamhosting.com/out.php/i139052_ParakkumPaavai1.jpg

vasudevan31355
10th December 2014, 06:14 PM
பறக்கும் பாவை சர்க்கஸ் கூடாரக் குளியலறையில் எம்.ஜி.ஆர் அவர்களும், சரோஜாதேவியும்

http://tamildada.com/wp-content/uploads/2013/11/parakkum-paavai-songs-free-download.jpg

vasudevan31355
10th December 2014, 06:15 PM
புலியுடன் மோதும் எம்.ஜி.ஆர்.

http://i.ytimg.com/vi/XQ5MHDgj3cs/hqdefault.jpg

vasudevan31355
10th December 2014, 06:16 PM
http://padamhosting.com/out.php/i139055_ParakkumPaavai53.jpg

Russellisf
10th December 2014, 06:56 PM
எந்த ஊர் என்றவனே இருந்த ஊரைச் சொல்லவா?
அந்த ஊர் நீயும்கூட அறிந்த ஊர் அல்லவா!
உடலூரில் வாழ்ந்திருந்தேன் உறவூரில் மிதந்திருந்தேன்
கருவூரில் குடி புகுந்தேன் மண்ணூரில் விழுந்து விட்டேன்!
கண்ணூரில் தவழ்ந்திருந்தேன் கையூரில் வளர்ந்திருந்தேன்
காலூரில் நடந்து வந்தேன் காளையூர் வந்துவிட்டேன்!
வேலூரைப் பார்த்து விட்டேன் விழியூரில் கலந்து விட்டேன்
பாலூறும் பருவம் என்னும் பட்டினத்தில் குடிபுகுந்தேன்!
எந்த ஊர் என்றவனே இருந்த ஊரைச் சொல்லவா?
அந்த ஊர் நீயும்கூட அறிந்த ஊர் அல்லவா!
காதலூர் காட்டியவள் காட்டூரில் விட்டுவிட்டாள்
காதலூர் காட்டியவள் காட்டூரில் விட்டுவிட்டாள்
கன்னியூர் மறந்தவுடன் கடலூரில் விழுந்துவிட்டேன்!
கன்னியூர் மறந்தவுடன் கடலூரில் விழுந்துவிட்டேன்!
பள்ளத்தூர் தன்னில் என்னை பரிதவிக்க விட்டு விட்டு
மேட்டூரில் அந்த மங்கை மேலேறி நின்று கொண்டாள்!
கீழுரில் வாழ்வதற்கும் கிளிமொழியாள் இல்லையடா
மேலூரு போவதற்கும் வேளை வரவில்லையடா!
எந்த ஊர் என்றவனே இருந்த ஊரைச் சொல்லவா?
அந்த ஊர் நீயும்கூட அறிந்த ஊர் அல்லவா!

Russellzlc
10th December 2014, 07:41 PM
கடவுள் செய்த பாவம்...

திரு.வாசு சார், திரு. சின்னக் கண்ணன் சார், திரு.கிருஷ்ணா சார் எப்படி இருக்கிறீர்கள்? பணிச் சுமை காரணமாக ரெகுலராக வர முடியவில்லை. மன்னிக்கவும். இருந்தாலும் எல்லா பதிவுகளையும் ரசித்து வருகிறேன். திரு. வாசு சார், பாடல் இரண்டு, பாணி ஒன்று அருமை. நன்றி. திரு. ராகவேந்திரா சாருக்கும்.

திரு.சின்னக் கண்ணன் சார், (சித்தி என்றால் ராதிகாவா என்று கேட்கப்படாது ரவி சார்) உங்கள் அட்டகாசத்துக்கு அளவே இல்லையா? பணியில் டென்ஷனாக இருக்கும்போது எனக்கு ரிலாக்ஸ் உங்கள் எழுத்து.

உங்கள் கோபமும் திரு.வாசு சாரின் கோபமும் நியாயமானதே. அதோடு, என்னுடைய இந்த தார்மீக கோபத்தையும் சேர்த்துக் கொள்ளுங்களேன்.

மக்கள் திலகம் நடித்த நாடோடி திரைப்படம் எனக்கு மிகவும் பிடித்த படம். சாதிக் கொடுமையை லேசாக தொட்டுக் காட்டியிருக்கும் படம். படத்தில் இடம் பெற்ற ‘கடவுள் செய்த பாவம்....’ பாடல் தினமும் ஒருமுறையாவது மனதில் ரீங்காரமிடும். பொன்மனச் செம்மலின் நடிப்பும் அற்புதமாக இருக்கும். காதலியை இழந்து விட்ட வேதனையில் தலைவர் இருக்கும்போது இந்தப் பாடல். காட்சியோ சோகக் காட்சி. பாட்டோ சோகம் கலக்காத சற்று கோபமான பாடல்.

அந்தக் காட்சியில் சோகமாக இருக்கும் மக்கள் திலகமே பாடினால் பொருந்தாமல் போகலாம் என்பதால் புத்திசாலித்தனமாக காட்சி அமைக்கப்பட்டிருக்கும். அதாவது, சோகமாக இருக்கும் மக்கள் திலகம் முன் அவரது மனசாட்சியாக மக்கள் திலகமே பாடுவதுபோல காட்சி அமைப்பு அட்டகாசம். பாடலுக்கேற்ப அவரின் துடிப்பான நடிப்பும் டான்சும்தான். பாடலின் சில வரிகளை சொல்கிறேன்.

கடவுள் செய்த பாவம்
இங்கு காணும் துன்பம் யாவும்
என்ன மனமோ என்ன குணமோ, இந்த
மனிதன் கொண்ட கோலம்

பொருளேதும் இன்றி கருவாக வைத்து
உருவாக்கி விட்டு விட்டான்
அறிவென்ற ஒன்றை மரியாதை இன்றி
இடம் மாற்றி வைத்து விட்டான்

எவ்வளவு அருமையான வார்த்தைகள். அடுத்த பாராவில் ‘முகத்துக்கு நேரே சிரிப்பவர் கண்கள் முதுகுக்கு பின்னால் சீறும், முகஸ்துதி பேசும் வளையும் குழையும் காரியம் ஆனதும் மாறும்’ என்ற வரிகளுக்கு மக்கள் திலகத்தின் ஆக்க்ஷன் சூப்பர். அதிலும் ‘காரியம் ஆனதும் மாறும்’ என்ற வரியின்போது காலால் எட்டி உதைப்பது போன்ற அபிநயம் அழகு.

பாடலின் கடைசியில் ‘நடப்பது யாவும் விதிப்படி என்றால் வேதனை எப்படி தீரும்? உடைப்பதை உடைத்து வளர்ப்பதை வளர்த்தால் உலகம் உருப்படியாகும்’ என்ற வரிகளில் மக்கள் திலகத்தை மட்டுமின்றி நம்மையும் உற்சாகம் தொற்றிக் கொள்ளும். அதுவரை சோகமாக இருக்கும் அவர், உற்சாகமாகி இந்த வரிகளை பாடுவார். இங்கே, கவனிக்க வேண்டிய ஒன்று, அற்புதமான எடிட்டிங். இந்த வரிகளை மனசாட்சியாக வருபவர், பாடத் தயாராகும்போது, சோகமாக இருக்கும் மக்கள் திலகம் சரியான நேரத்தில் பாடத் தொடங்குவார். அதைப் பார்த்து மனசாட்சியாக வருபவரும் பாட இருந்ததை நிறுத்தி விட்டு, கையை சொடுக்கி, சபாஷ் என்பது போல தலையாட்டுவார். இந்த காட்சி நூலிழை தவறாமல் ‘சிங்கர்னைஸ்’ ஆகியிருக்கும்.

இந்தப் பாடல் இன்றும் வழக்கம் போல என் மனதில் ரீங்காரமிட்டது. அதற்கான பின்னணிதான் வேறு.

திருப்பதியில் இலங்கை அதிபர் ராஜபக்சே சாமி தரிசனம் செய்ததையொட்டி இந்தப் பாடல் மனதில் தோன்றியது. இலங்கையில் 2009ம் ஆண்டு நடந்த இறுதிப் போரில் ஒன்றரை லட்சம் அப்பாவித் தமிழர்கள் கொல்லப்பட காரணமாக இருந்த ராஜபக்சே ஏழுமலையான தரிசனம் செய்கிறார். அதற்கு நாடோடி படத்தில் வரும் ‘கடவுள் செய்த பாவம்’ பாடல் எவ்வளவு பொருத்தமாக இருக்கிறது பாருங்கள்.

விடுதலைப் புலிகள் இயக்கத்தை தீவிரவாத இயக்கம் என்று கூறி, அதன் நடவடிக்கைகளை ஏற்காதவர்கள் கூட, அப்பாவித் தமிழர்கள் ஒன்றரை லட்சம் பேர் கொல்லப்பட்டதை ஏற்கமாட்டார்களே. இலங்கையின் மனித உரிமை மீறலுக்கு ஐ.நா.சபையே கண்டனம் தெரிவித்ததே.

தமிழர்களை கொல்ல காரணமாக இருந்த ராஜபக்சே, அந்த பாவத்தை கழுவத்தான் திருமலைக்கு சாமி தரிசனம் செய்ய வந்திருக்கிறாரோ என்று பார்த்தால் அதுவும் இல்லை. அதிலும் சுயநலம்தான். அடுத்த மாதம் 8ம் தேதி இலங்கையில் அதிபர் தேர்தல் நடக்கிறது. இதில் மீண்டும் போட்டியிடும் அவர் வெற்றி பெறுவதற்காக பிரார்த்தனையாம்.

இஸ்ரேலுக்கு எதிராக தங்கள் உரிமைகளுக்காக பாலஸ்தீன விடுதலை இயக்கம் போராடினால் இந்தியா ஆதரவு தரும்.

பாகிஸ்தானில் மக்களின் உரிமைகள் நசுக்கப்பட்டால் இந்தியா உடனே போர் தொடுத்து பாதிக்கப்பட்ட மக்களுக்காக வங்கதேசத்தை உருவாக்கி கொடுக்கும்.

இவ்வளவு ஏன்? சுதந்திரப் போராட்ட காலத்திலேயே துருக்கியில் காலிப் பதவியிழந்தால், கிலாபத் இயக்கமே இங்கு தொடங்கப்படும்.

ஆனால், இலங்கையில் உரிமைகளுக்காக போராடும் தமிழர்களுக்கு மட்டும் ஆதரவு தர மாட்டோம். ‘சொந்த சகோதரர்கள் துன்பத்தில் சாதல் கண்டும் சிந்தை இரங்காரடி’ என்று சும்மாவா பாடினார் பாரதி? ராஜபக்சே கடவுளை தரிசிப்பதால் அவருக்கு புண்ணியம் கிடைக்கலாமோ என்னவோ? நிச்சயம் இது, மக்கள் திலகம் பாடியது போல ‘கடவுள் செய்த பாவம்’ தான்.

ராஜபக்சே போன்றவர்கள் இறைவனை தரிசிப்பதற்கும், வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன் என்று, கருணையே வடிவாய் கொல்லாமையை, ஜீவகாருண்யத்தை உபதேசித்த வள்ளலாரின் பெயராலேயே கசாப்பு கடை நடத்துவதற்கும் என்ன வித்தியாசம்?

இந்தப் பாடலின் கடைசியில் மக்கள் திலகம் பாடும் வரிகளைப் போல,

‘நடப்பது யாவும் விதிப்படி என்றால்
வேதனை எப்படி தீரும்?
உடைப்பதை உடைத்து, வளர்ப்பதை
வளர்த்தால் உலகம் உருப்படியாகும்..’

உலகம் உருப்படியாகும் என்ற நம்பிக்கையை இன்னமும் நாம் இழக்கவில்லை. ஆனால், எப்போது என்றுதான் தெரியவில்லை. பாரத் மாதா கி ஜே!

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

Russellisf
10th December 2014, 08:14 PM
பாட்டு வரும்….
என்ன?
பாட்டு வரும்….
உன்னைப் பார்த்துக் கொண்டிருந்தால் பாட்டு வரும்
உன்னைப் பார்த்துக் கொண்டிருந்தால் பாட்டு வரும்
அதைப் பூங்குயில் கூட்டங்கள் கேட்டு வரும்
உன்னைப் பார்த்துக் கொண்டிருந்தால் பாட்டு வரும்
அதைப் பூங்குயில் கூட்டங்கள் கேட்டு வரும்
அதைக் கேட்டுக் கொண்டிருந்தால் ஆட்டம் வரும்
அந்த ஆட்டத்தில் பொன்மயில் கூட்டம் வரும்
பாட்டு வரும்….
ஆஹா..ஹா
பாட்டு வரும்….
அதைக் கேட்டு கொண்டிருந்தால் ஆட்டம் வரும்
அந்த ஆட்டத்தில் பொன்மயில் கூட்டம் வரும்
இதயம் என்றொரு ஏடெடுத்தேன்
அதில் எத்தனையோ நான் எழுதிவைத்தேன்
இதயம் என்றொரு ஏடெடுத்தேன்
அதில் எத்தனையோ நான் எழுதிவைத்தேன்
எழுதியதெல்லாம் உன் புகழ் பாடும்
எனக்கது போதும் வேறென்ன வேண்டும் -
பாட்டு வரும்…. பாட்டு வரும்….
உன்னைப் பார்த்துக் கொண்டிருந்தால் பாட்டு வரும்
அதைப் பூங்குயில் கூட்டங்கள் கேட்டு வரும்
அதைக் கேட்டுக் கொண்டிருந்தால் ஆட்டம் வரும்
அந்த ஆட்டத்தில் பொன்மயில் கூட்டம் வரும்
அதைக் கேட்டுக் கொண்டிருந்தால் ஆட்டம் வரும்
அந்த ஆட்டத்தில் பொன்மயில் கூட்டம் வரும்
காதல் என்றொரு சிலை வடித்தேன்
அதை கண்கள் இரண்டில் சிறை எடுத்தேன்
காதல் என்றொரு சிலை வடித்தேன்
அதை கண்கள் இரண்டில் சிறை எடுத்தேன்
சிறை எடுத்தாலும் காவலன் நீயே
காவலன் வாழ்வில் காவியம் நானே -
பாட்டு வரும்…. பாட்டு வரும்….
அதைக் கேட்டுக் கொண்டிருந்தால் ஆட்டம் வரும்
அந்த ஆட்டத்தில் பொன்மயில் கூட்டம் வரும்
மனமென்னும் ஓடையில் நீந்தி வந்தேன் - அதில்
மலர் முகம் ஒன்றை ஏந்தி வந்தேன்
மனமென்னும் ஓடையில் நீந்தி வந்தேன் - அதில்
மலர் முகம் ஒன்றை ஏந்தி வந்தேன்
ஏந்திய கையில் இருப்பவள் நானே
இறைவனை நேரில் வரவழைத்தேனே
ஏந்திய கையில் இருப்பவள் நானே
இறைவனை நேரில் வரவழைத்தேனே
பாட்டு வரும்…. பாட்டு வரும்….
உன்னைப் பார்த்துக் கொண்டிருந்தால் பாட்டு வரும்
அதைப் பூங்குயில் கூட்டங்கள் கேட்டு வரும்

Russellisf
10th December 2014, 08:15 PM
62th BIRTH ANNIVERSARY OF GREAT ACTRESS SUJATHA ..
HAPPY BIRTHDAY MADAM..
MY FAVOURITE. .....
1974 இல் பிரபல இயக்குனரான கே.பாலசந்தர் எடுத்த அவள் ஒரு தொடர்கதை என்ற படம் தான் சுஜாதாவை சிறந்த ஒரு நடிகையாகத் தமிழ் திரையுலகில் இனம் காட்டியது. எம்.எஸ்.விஸ்வநாதனின் இசையமைப்பில் வெளிவந்த இந்தப்படத்தில் சுஜாதாவுடன் கமல்ஹாசன், சிறி பிரியா , விஜயகுமார் ஆகியோர் நடித்திருந்தனர்.1976 இல் வெளிவந்த இளையராஜாவின் பாடல் மூலம் மேலும் இவரது புகழ் ஓங்கியது. மீண்டும் இவர் 1977 இல் கே.பாலசந்தரின் அவர்கள் படத்தில் ரஜினிகாந்த்,கமல்ஹாசன் ஆகியோரோடு அணு என்ற பாத்திரமேற்று நடித்துப் புகழ் பெற்றார்.
அன்றைய பிரபல தமிழ் திரைப்படத்துறை நடிகர்களான சிவாஜி கணேசன் ,ரஜினிகாந்த்,கமல்ஹாசன் ஆகியோரோடு கதாநாயகியாக நடித்த பெருமை இவருக்கு உரியது.இவர் தமிழ்,மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்திப்படங்களிலும்
நடித்திருக்கிறார். அக்னி நாகேஸ்வரராவ்,சோபன் பாபு,சிரஞ்சீவி ,கிருஷ்ணா,மோகன்பாபு, போன்றவர்களோடும் வேற்று மொழிப் படங்களில் நடித்திருக்கின்றார்.
அமரர் நடிகை சுஜாதா அவர்கள் சுமார் 150 படங்கள் நடித் திருப்பதாகத் தெரிய வருகின்றது.இதில் சுமார் 50இற்கு மேற்பட்ட தமிழ்ப் படங்களும் அடங்கும்.இவர் நடித்த கடல் மீன்,அந்தமான் காதலி,விதி,கோசில் காளை, புனர் ஜென்மம்,உன்னை நான் சந்தித்தேன் போன்ற படங்கள் பலராலும் பாராட்டப் பட்டன.
இவர் நடித்த கடைசி ப்படம் தெலுங்கில் வெளிவந்த நாகர் யுனாவின் படமான ஸ்ரீ ராம ராசு(2006) என்பதாகும்.இவரது கடைசி தமிழ்ப் படம் வரலாறு (2004) ஆகும்.இவர் தனது சிறந்த நடிப்பிற்காக தமிழக அரசின் கலைமாமணி,மற்றும் நந்தி விருது போன்றவற்றைப் பெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Russellisf
10th December 2014, 08:16 PM
அனைவருக்கும் இனிய மாலை வணக்கம் நண்பர்களே....
இன்று ஒரு வளையல் பாடல்.நிலா பாடல் கேட்டிருக்கிறோம்.
தேன் பாடல் கேட்டிருக்கிறோம்.கவியரசர் எழுதிய வளை
பாடலையும் கேட்போமே....
வான மழை போல் ஆனவளை
சுவை எங்கே எங்கே மறக்கும்
வான மழை போல் ஆனவளை
சுவை எங்கே எங்கே மறக்கும்
நீ அவளை விட்டுப் போகும் வரை
அது இங்கே இங்கே இருக்கும்
மின்னும் கை வளை மிதக்கும் பெண்களை
அசைத்தால் அசையாதோ
அது இன்னும் கொஞ்சம் என்று
பெண்மை கெஞ்சும் வரை
சுவைத்தால் சுவைக்காதோ
வந்தவளை கரம் தந்தவளை
நீ வளைத்துக் கொண்டாய் வளையிட்டு
பூங்குவளை கண்கள் கொண்டவளை
புது பூப் போல் பூப் போல் தொட்டு
சின்னவளை முகம் சிவந்தவளை
நான் சேர்த்துக் கொண்டேன் கரம் தொட்டு
என்னவளை காதல் சொன்னவளை
நான் ஏற்றுக் கொண்டேன் வளையிட்டு

rajeshkrv
10th December 2014, 09:18 PM
vasu ji
nalam thaane

rajeshkrv
10th December 2014, 09:21 PM
62th BIRTH ANNIVERSARY OF GREAT ACTRESS SUJATHA ..
HAPPY BIRTHDAY MADAM..
MY FAVOURITE. .....
1974 இல் பிரபல இயக்குனரான கே.பாலசந்தர் எடுத்த அவள் ஒரு தொடர்கதை என்ற படம் தான் சுஜாதாவை சிறந்த ஒரு நடிகையாகத் தமிழ் திரையுலகில் இனம் காட்டியது. எம்.எஸ்.விஸ்வநாதனின் இசையமைப்பில் வெளிவந்த இந்தப்படத்தில் சுஜாதாவுடன் கமல்ஹாசன், சிறி பிரியா , விஜயகுமார் ஆகியோர் நடித்திருந்தனர்.1976 இல் வெளிவந்த இளையராஜாவின் பாடல் மூலம் மேலும் இவரது புகழ் ஓங்கியது. மீண்டும் இவர் 1977 இல் கே.பாலசந்தரின் அவர்கள் படத்தில் ரஜினிகாந்த்,கமல்ஹாசன் ஆகியோரோடு அணு என்ற பாத்திரமேற்று நடித்துப் புகழ் பெற்றார்.
அன்றைய பிரபல தமிழ் திரைப்படத்துறை நடிகர்களான சிவாஜி கணேசன் ,ரஜினிகாந்த்,கமல்ஹாசன் ஆகியோரோடு கதாநாயகியாக நடித்த பெருமை இவருக்கு உரியது.இவர் தமிழ்,மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்திப்படங்களிலும்
நடித்திருக்கிறார். அக்னி நாகேஸ்வரராவ்,சோபன் பாபு,சிரஞ்சீவி ,கிருஷ்ணா,மோகன்பாபு, போன்றவர்களோடும் வேற்று மொழிப் படங்களில் நடித்திருக்கின்றார்.
அமரர் நடிகை சுஜாதா அவர்கள் சுமார் 150 படங்கள் நடித் திருப்பதாகத் தெரிய வருகின்றது.இதில் சுமார் 50இற்கு மேற்பட்ட தமிழ்ப் படங்களும் அடங்கும்.இவர் நடித்த கடல் மீன்,அந்தமான் காதலி,விதி,கோசில் காளை, புனர் ஜென்மம்,உன்னை நான் சந்தித்தேன் போன்ற படங்கள் பலராலும் பாராட்டப் பட்டன.
இவர் நடித்த கடைசி ப்படம் தெலுங்கில் வெளிவந்த நாகர் யுனாவின் படமான ஸ்ரீ ராம ராசு(2006) என்பதாகும்.இவரது கடைசி தமிழ்ப் படம் வரலாறு (2004) ஆகும்.இவர் தனது சிறந்த நடிப்பிற்காக தமிழக அரசின் கலைமாமணி,மற்றும் நந்தி விருது போன்றவற்றைப் பெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

My favourite actress. Subtle but powerful = Sujatha

vasudevan31355
10th December 2014, 09:23 PM
nalame ji

vasudevan31355
10th December 2014, 09:24 PM
My favourite actress. Subtle but powerful = Sujatha

100% true ji

rajeshkrv
10th December 2014, 09:25 PM
ஆஹா நாம் இருவரும் ஒரே நேரத்தில் ஆன் லைனில் உள்ளோமே ..

rajeshkrv
10th December 2014, 09:25 PM
வாசு ஜி
உங்கள் புதிய தொடருக்கு வாழ்த்துக்கள்

vasudevan31355
10th December 2014, 09:32 PM
ji! my favourite song from 'vaazhnthu kaattugiren'.

'HELLO SIR GOOD MORNING MY NAME IS GEETHA
WHAT CAN I DO FOR U SIR'

Sujatha's wonderful performance and raatchasi's unbeatable voice.


https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=o1q1j9BGXkg

rajeshkrv
10th December 2014, 09:34 PM
Kaviri nagaril is my fav from Vaazhndhu kaatugiren
followed by kotti kidandhadhu & hello sir

vasudevan31355
10th December 2014, 09:38 PM
ஆஹா நாம் இருவரும் ஒரே நேரத்தில் ஆன் லைனில் உள்ளோமே ..

ஆமாம் ராஜேஷ்ஜி. ஹேப்பி. உங்கள் வாழ்த்துக்கு நன்றி!

'பொண்ண பார்த்து மயிலக் காளை மயங்குதிப்போது'

பார்த்தீர்களா?

vasudevan31355
10th December 2014, 09:44 PM
Kaviri nagaril is my fav from Vaazhndhu kaatugiren
followed by kotti kidandhadhu & hello sir

'கொட்டிக் கிடந்தது கனி இரண்டு' மிக அருமை. இப்பாடலைக் கேட்கும் போது 'வா இளமை அழைக்கின்றது' 'எங்கம்மா சபதம்' படப் பாடலும், 'கடவுள் மீது ஆணை.. உன்னைக் கை விட மாட்டேன்' 'ராதா' படப் பாடலும் ஞாபகம் வருதேஜி. சரியாஜி?

rajeshkrv
10th December 2014, 09:57 PM
ஆமாம் ராஜேஷ்ஜி. ஹேப்பி. உங்கள் வாழ்த்துக்கு நன்றி!

'பொண்ண பார்த்து மயிலக் காளை மயங்குதிப்போது'

பார்த்தீர்களா?

பார்த்தேன் படித்தேன் கேட்டேன் மகிழ்ந்தேன்
இவர் கவிதான் என மனதில் நினைத்தேன்
உமை கவிதான் என முடிவெடுத்தேன்

Richardsof
11th December 2014, 08:40 AM
VASU SIR

http://i60.tinypic.com/14meu7a.jpg

Richardsof
11th December 2014, 08:41 AM
http://i58.tinypic.com/o09ycj.jpg

Richardsof
11th December 2014, 08:42 AM
http://i57.tinypic.com/j9qc83.jpg

Richardsof
11th December 2014, 08:43 AM
http://i62.tinypic.com/2u4pm5s.jpg

vasudevan31355
11th December 2014, 08:47 AM
அப்படி போட்டு தாக்குங்கள் எஸ்வி சார்.

'திருமலை தென்குமரி' படத்தில் ஏ.பி.நாகராஜன் அவர்களுடன் குமாரி பத்மினி, சி.ஐ.டி.சகுந்தலா, ரமாபிரபா, உஷா, எனக்கு மிக மிக பிடித்த சைலஸ்ரீ இருக்கும் படம் தூள் வினோத் சார்.

rajeshkrv
11th December 2014, 10:04 AM
வாருங்கள் வாசுதேவரே ... காலை வணக்கம்
உங்கள் வீட்டு யசோதா அம்மையார் நலம் தானே :)

kalnayak
11th December 2014, 03:57 PM
அனைவருக்கும் வணக்கம்.
சி.க. நீங்கள் சர்க்கஸ் சம்பந்தமான பாடல்களுக்கு எழுதிய வரிகள் புயலை கிளப்பின என்று சொன்னால், நடிகர்திலகத்தின் கோபங்களைப்பற்றிய பதிவு 'அவலாஞ்சி'-யை கிளப்பிவிட்டன. (அடுத்த பதிவிற்கு சுனாமி புக்காகியுள்ளது) நீங்கள் சொன்னதால், வாசு இங்கே எடுத்துக் கொடுக்க கோபால் நடிகர்திலகம் திரி வரை எடுத்துச் சென்றுள்ளார்.

என் பங்காக இதோ அந்த அகநானூற்றுப்பாடல் (குறிஞ்சித்திணை):

"கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி
காமம் செப்பாது கண்டது மொழிமோ
பயிலியது கெழீஇய நட்பின் மயிலியற்
செறி எயிற்று அரிவை கூந்தலின்
நறியவும் உளவோ நீ அறியும் பூவே."

தேன் தேடும் வாழ்க்கை கொண்ட அழகிய சிறகுகளை உடைய தும்பியே! தேன் உன்னும் காம ஆசையால் சொல்லாமல் உண்மையாக நீ கண்டதைச் சொல். இவள் என்னிடம் பயின்றதைக் கெழுதகை நட்பாகக் கொண்டவள். அவளும், அவள் கூந்தலும் மயிலின் இயல்பைக் கொண்டவை. அவற்றைக் காட்டிலும் நல்ல மணமுள்ள பூக்கள் இருக்கின்றனவா?

In our(!) own language:

O! honey bee with beautiful wings, you live drinking nectar from selected flowers,
tell me without bias
look at my friend who resembles a peacock in beauty
have you seen any flower that smells better than her hair?

அப்புறம் ஒன்றை சொல்ல மறந்துவிட்டேன். சிலர் இன்னும் விடாமல் என்னைத் தேடிக் கொண்டிருக்கிறார்களாம். நான் இங்கிருப்பதை அவர்களிடம் சொல்லிவிடாதீர்கள்!!!

chinnakkannan
11th December 2014, 10:00 PM
ஹாய் ஆல்..

மன்னிக்க.. இரண்டு நாளும் வேலைப்பளு..நேற்று காலை போய் நேற்றிரவு தான் அலுவல் முடிந்து வரவே நேரமாகிவிட்டது..இன்றும் அப்படியே..தொட்டுத் தொட்டுத்தொடர்ந்த வேலைகள் மீட்டிங்குகள் ப்ரச்னைகள் சொல்யூஷன் என நெக்கு வாங்கி விட்டது (நெக்கு?) எனில் உடன் வராததற்கு அகெய்ன் ம.
இனி எல்லாவற்றையும் படித்து ஒவ்வொருவருக்காகவும் பதிலிடுகிறேன்..

அன்புடன்
சி.க

chinnakkannan
11th December 2014, 10:02 PM
கோபால்
சி.கவென்றே கூப்பிடலாம். என்னை.. இந்த இழையில் ஒரு ரூலாக அது இருப்பதால் அப்படி வழக்கமாகிவிட்டது..

நன்றி உங்கள் பதிவிற்கு..உங்கள் வேதனை புரிகிறது..

ஆனால் ஒன்று.. அடித்த உங்கள் விரல்களின் வலி மறந்தும் மறைந்தும் இருக்கலாம்..அன்னெஸஸரியாக வாங்கப்பட்ட அடியின் விளைவு எனக்கு ஏற்படுத்திய தாக்கம் என்னவென உமக்குத் தெரியுமா..

மூன்று தினங்கள் தொடர்ச்சியாக வீட்டிலும் அலுவல்களிலும் எனது கோபம் வெளிப்பட்டது.. என்னாச்சு கண்ணன் சாருக்கு என வியந்த சக கலீக்ஸ் என்னாச்சுப்பா உனக்கு எனக் கேள்வி வீட்டிலும் துபாயில் இருந்த உறவுகளிடமிருந்தும். கவலை.. நல்ல நாளும் அதுவுமாக ஒரு நண்பரிடம் புலம்பவேறு செய்து அவரையும் வருத்தப் பட வைத்தேன்..

கொந்தளித்த நண்பர்கள் – பி.எம் மில். நீ ரொம்ப ஸாப்ட்பா..

இதற்கெல்லாம் உங்கள் பதிவு ஏற்படுத்திய தாக்கம் தான்.. கோப முழுமைக்கும் நான் காரணம்.. ஏன் தாக்கம் ஏற்படுத்த வேண்டும்.. தங்களின் மீது கொண்ட அதீத அன்பு தான்..

யாயும் ஞாயும் யாராகியரோ ..என்னும் சங்கப்பாட்டில் காதலர்களுக்குச் சொல்லும் செம்புலப் பெயர் நீர் இங்கு வலையில் நமக்கு, இங்கிருக்கும் நண்பர்க்ளுக்குப் பொருந்தும் .. நீர் யாரென எனக்குத் தெரியாது நான் யாரென உமக்குத் தெரியாது..ஆனாலும் இணைப்பது எது..ஒரே சிந்தனை..ஒத்த சிந்தனை.. மட்டுமல்லாது எழுதப்படும் விஷயம்..,.எழுத்தும்..

ஒரு திட்டலான பதிவு அதற்குப் பதில் எழுதுவதற்கு ( சரித்திர கால இளவரசிகளிடமிருந்து கடன் வாங்கி ) கச்சை கட்டிக்கொண்டு எழுதினால் நான் இடைக்கயிறு அணிவதில்லை என்றீர்கள்.ஜஸ்ட் லைக் தட் யூ இக்னோர்ட் இட் இஸிண்ட் இட்.

நான் சொல்லியிருந்தது – உடம்பிலும் மனதிலும் ஒன்றும் வைத்துக்கொள்வதில்லை.. சொல்லாத ஒன்று. (அது நான் அடிக்கடிச் சொல்லும் வசனம் அலுவலகத்தில்..) அவ்வப்போது ரிலீஸ் செய்து விடுவேன் என்பது.. பேசப்படும்போது இருக்கும் நகைச்சுவை எழுதும் போது விரசமாகுமோ என அப்படி எழுதவில்லை..

இப்போதும் கோபால் இதை விரிவாக எழுத விரும்பவில்லை.. உங்கள் மனது எல்லாருக்கும் தெரியும்.. யார்மீதும் காழ்ப்புணர்வு இல்லை என்று அடிக்கடி சொல்ல வேண்டாம்..

நானும் இத்துடன் விடப் பார்க்கிறேன்..(ஆனால் கொஞ்சம் நாள் ஆகத்தான் செய்யும்… நாவினாற் சுட்ட வடுங்க்ணா..)

உங்கள் மீது இப்போது கோபம் இல்லை..வருத்தம் தான் இப்போது இதை எழுதியதில் குறைந்து மறையும்..மறையவேண்டும்..

அன்புடன்
சி. க.

chinnakkannan
11th December 2014, 10:05 PM
//சி.க. சார் ... ஆசை தீர கோபப் படுங்கள்// ராகவேந்தர் சார். நன்றி..என்னை நிறைய எழுதவைக்கும் உங்கள் எண்ணம் புரிகிறது.. நன்றாக எழுதவேண்டுமே என்ற பயம் எப்படி என்றால் புகுந்தவீட்டிற்குச் செல்லும் போது மருமகளுக்குத் தோன்றும் படபடப்பு மெல்லிய பயம் – எனக்கும் ஏற்படுகிறது..again thanks. Anpudan chi.ka

chinnakkannan
11th December 2014, 10:05 PM
வாசு சார்..

முதலில் சொல்ல ம/றந்து விட்டேனே.. என் தாத்தா நேற்று கனவில் வந்து உங்களுக்கு தாங்க்ஸ் சொல்லச் சொன்னார் (டி.ஆர்.ராஜகுமாரி பதிவிற்காக)

தங்களின் ரசிப்புக்கும் பாராட்டுக்கும் நன்றி.. . //நீர் சிறுவன்... குட்டியூண்டு ரசிகன்... அதை நாங்கள் நம்ப வேண்டும்.... அப்படித்தானே!// அப்படித் தான்

பின் நீதிபதியை காட்சியும் செயலுமாய் விவரித்திருக்கிறீர்களே.. ஆழ்ந்த பக்தி இருந்தால் மட்டுமே இப்படி வர்ணிக்க இயலும்..உடனே உங்கள் அன்னை இல்லப் பக்கத்திற்கும் போய்விட்டது தானே..

//கோபக் காட்சிகள் எழுதும் போதே உமது கோபமும் புரிகிறது.// நிஜமாகவே கடுமையா இருக்கா என்ன.. ஐயாம் ஸாரி.. என்னால் எழுத முடியவில்லை எனக் கோபம் வருகிறது என்ற ஆரம்பத்திற்காகத் தான் எழுதினேனே தவிர கோபால் மேல் கோபம் காட்டுவதற்காக அல்ல..எழுத வைத்தது அவர் சொல் தானே.. இனி குறைத்து மென்மையாக எழுத முயற்சிக்கிறேன்..

//சர்க்கஸ் பட வரிசையில் இவற்றையும் சேர்த்துக் கொள்ளுங்கள்// கண்டிப்பாக.. ஆமாம் சர்க்கஸ் சுந்தரி என்ன படம்..

தேவிகா,ம.தி, சர்ரூ படங்களுக்கு நன்றி. சுஜாதாவின் படங்களில் கவர்ந்த படம் மயங்குகிறாள் ஒரு மாது.. அந்தக் காலத்தில் வித்தியாசமான கதை வித்தியாச நடிப்பு.. தேங்காய் கூட கொஞ்சம் வில்லத்தனம் செய்ய முயன்றிருப்பார்.. வேறு யாரையாவது போட்டிருந்தால் இன்னும் பிரமாதமாக இருந்திருக்கும்..முத்துராமன் ஓ.கே..விஜயகுமார் தான் ஸோ ஸோ..

சம்சாரம் என்பது வீணை.. நல்ல பாட்டு சுஜாதா மயங்கும் பாடல் மறந்து போச்..

http://www.youtube.com/watch?v=jT8QYMpSd_Y&list=RDjT8QYMpSd_Y&feature=player_detailpage

அன்புடன்
சி.க

chinnakkannan
11th December 2014, 10:08 PM
கலைவேந்தன் சார்..

நன்றி....// என்னுடைய இந்த தார்மீக கோபத்தையும் சேர்த்துக் கொள்ளுங்களேன்.// சேர்த்துக் கொண்டுவிட்டோமே..

ஜீவகாருண்யத்தை உபதேசித்த வள்ளலாரின் பெயராலேயே கசாப்பு கடை நடத்துவதற்கும் என்ன வித்தியாசம்?// பத்தாம் வகுப்பு படிக்கும் போது (மதுரைசெய்ண்ட் மேரீஸ்) க்ளாஸ் மாகஸீனுக்காக எழுதிப் பார்த்த கவிதை (?!) நினைவுக்கு வந்ததுங்க..

ஆட்டை வெட்டி
வீதியில் விற்று
கிடைத்த பணத்தில்
புத்தர் பிறந்த
நாடிது என்று
புத்தகம் எழுதி
விற்பனை செய்தோம்..!

கடவுள் செய்த பாவம் தான்.

.அப்புறம் அந்தப்பாட்டை மட்டும் போட்டுவிட்டு மற்ற பாடல்கள் சொல்லாமல் நீங்கள் விட்டது நாங்கள் செ.பா.

பாட்டுவரும், பாரதியுடன் பாடும் பாடல் இந்தப் புன்னகை என்னவிலை(தானா)..அன்றொரு நாள் அதே நிலவில் அவரிருந்தால் அருகே.. நான் அடைக்கலம் என்றே.. நீஅறிவாயோ வெண்ணிலவே..வெகு அழகுப் பாடல்கள்.. நன்றிங்க..

கடவுள் தந்த பாடம்…

http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=tR6TgUTWI84

கடவுள் செய்த பாவம் வேறு பாட்டுல்லியா..

//ஆனால், எப்போது என்றுதான் தெரியவில்லை. பாரத் மாதா கி ஜே!// களுக்கென இளங்குமரியைப் போல நகைக்க வைக்கிறீர்கள்..

chinnakkannan
11th December 2014, 10:09 PM
கல் நாய்க் சார்.. பாராட்டிற்கும் கரெக்டான லிரிக்ஸ் கொடுத்ததற்கு நன்றி.. சுனாமியா. ஸ்வாமி.. ரொம்ப எதிர்பார்க்காதீங்க.. சிங்கம் போல கர்ஜிக்க ட்ரைபண்றேன். மியாவ்னு வந்துடுச்சுன்னா ஷமிக்கணும்..பாடலை கட் பேஸ்ட் பண்ணி போஸ்ட்ல எடிட் பண்ணிக்கட்டா..உங்க பர்மிஷன் வேணுமே..

எஸ்வி சார் நன்றி கொடுத்திருக்கும் ஃபோட்டோவில் கூலிங்க்ளாஸ் அணிந்திருப்பது சுஜாதா..அடுத்த படத்திலிருப்பவர்?

anpudan chi.ka

RAGHAVENDRA
11th December 2014, 11:13 PM
...

எஸ்வி சார் நன்றி கொடுத்திருக்கும் ஃபோட்டோவில் கூலிங்க்ளாஸ் அணிந்திருப்பது சுஜாதா..அடுத்த படத்திலிருப்பவர்?

anpudan chi.ka

ஒன்று உன்னி மேரி எ தீபா, இன்னொன்று ஷீலா ...

என்று நான் யூகிக்கிறேன்...

RAGHAVENDRA
11th December 2014, 11:14 PM
வாசு சார்
"பாவி என்னை மறுபடியும் பிறக்க வைத்தானே..
இதற்கு என்ன தான் முடிவு?..."

chinnakkannan
12th December 2014, 01:06 AM
sheela therigirathu..unni meri .mm thanks ragavendra sir..


oru chinna jugal bandhi (rajraj sir ninaivu)


http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=JVEkHJ5bv2Q

middhunm sp balasubramaniyam lakshmi..

http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=uYjbaBxTV84

ippo thaan ithaip paarthEn..udan ungaludan :)

rajraj
12th December 2014, 08:31 AM
From Annai VeLankaNNi

karuNai mazhaiye Mary maathaa.....

http://www.youtube.com/watch?v=zHJRh6O4avc

From Maathaa VeLankaNNi (Hindi)

karunamayi hai Mary maathaa......

http://www.youtube.com/watch?v=yfisFy8m8Yw

VelankaNNi Maathavu(Malayalam)

karuNamayiye....

http:///www.youtube.com/watch?v=eQECCYR_fH4



Wishing you all a Very Merry Christmas ! :)
.........

Gopal.s
12th December 2014, 08:52 AM
வாசு சார்
"பாவி என்னை மறுபடியும் பிறக்க வைத்தானே..
இதற்கு என்ன தான் முடிவு?..."

என்ன ஜோக்கடிக்கிறீர்களா?உங்களுக்கு முற்பிறவி,மறு பிறவியே இல்லாத தனி பிறவி என்றல்லவா உங்கள் சிஷ்யர்கள் ஆன நாங்கள் உங்களை கொண்டாடி கொண்டிருக்கிறோம்?

RAGHAVENDRA
12th December 2014, 08:58 AM
https://www.youtube.com/watch?v=l62mkvoVwEA


தணிக்கையில் பிறக்க வைக்காதே என மாற்றப்பட்டுள்ளது என தெரிகிறது.இசைத்தட்டில் வைத்தானே எனக் கேட்ட ஞாபகம்.
பாடல் முழுதும் அறம் பாடும் வரிகள்... இதைப் போன்ற பாடல் மிகவும் அபூர்வமே. இதனாலேயே இப்பாடல் வானொலியிலோ அல்லது தொலைக்காட்சிகளிலோ ஒளிபரப்பப் படவில்லை என எண்ணுகிறேன்.

Gopal.s
12th December 2014, 09:03 AM
கோபால்
சி.கவென்றே கூப்பிடலாம். என்னை.. இந்த இழையில் ஒரு ரூலாக அது இருப்பதால் அப்படி வழக்கமாகிவிட்டது..

நன்றி உங்கள் பதிவிற்கு..உங்கள் வேதனை புரிகிறது..

ஆனால் ஒன்று.. அடித்த உங்கள் விரல்களின் வலி மறந்தும் மறைந்தும் இருக்கலாம்..அன்னெஸஸரியாக வாங்கப்பட்ட அடியின் விளைவு எனக்கு ஏற்படுத்திய தாக்கம் என்னவென உமக்குத் தெரியுமா..

மூன்று தினங்கள் தொடர்ச்சியாக வீட்டிலும் அலுவல்களிலும் எனது கோபம் வெளிப்பட்டது.. என்னாச்சு கண்ணன் சாருக்கு என வியந்த சக கலீக்ஸ் என்னாச்சுப்பா உனக்கு எனக் கேள்வி வீட்டிலும் துபாயில் இருந்த உறவுகளிடமிருந்தும். கவலை.. நல்ல நாளும் அதுவுமாக ஒரு நண்பரிடம் புலம்பவேறு செய்து அவரையும் வருத்தப் பட வைத்தேன்..

கொந்தளித்த நண்பர்கள் – பி.எம் மில். நீ ரொம்ப ஸாப்ட்பா..

இதற்கெல்லாம் உங்கள் பதிவு ஏற்படுத்திய தாக்கம் தான்.. கோப முழுமைக்கும் நான் காரணம்.. ஏன் தாக்கம் ஏற்படுத்த வேண்டும்.. தங்களின் மீது கொண்ட அதீத அன்பு தான்..

யாயும் ஞாயும் யாராகியரோ ..என்னும் சங்கப்பாட்டில் காதலர்களுக்குச் சொல்லும் செம்புலப் பெயர் நீர் இங்கு வலையில் நமக்கு, இங்கிருக்கும் நண்பர்க்ளுக்குப் பொருந்தும் .. நீர் யாரென எனக்குத் தெரியாது நான் யாரென உமக்குத் தெரியாது..ஆனாலும் இணைப்பது எது..ஒரே சிந்தனை..ஒத்த சிந்தனை.. மட்டுமல்லாது எழுதப்படும் விஷயம்..,.எழுத்தும்..

ஒரு திட்டலான பதிவு அதற்குப் பதில் எழுதுவதற்கு ( சரித்திர கால இளவரசிகளிடமிருந்து கடன் வாங்கி ) கச்சை கட்டிக்கொண்டு எழுதினால் நான் இடைக்கயிறு அணிவதில்லை என்றீர்கள்.ஜஸ்ட் லைக் தட் யூ இக்னோர்ட் இட் இஸிண்ட் இட்.

நான் சொல்லியிருந்தது – உடம்பிலும் மனதிலும் ஒன்றும் வைத்துக்கொள்வதில்லை.. சொல்லாத ஒன்று. (அது நான் அடிக்கடிச் சொல்லும் வசனம் அலுவலகத்தில்..) அவ்வப்போது ரிலீஸ் செய்து விடுவேன் என்பது.. பேசப்படும்போது இருக்கும் நகைச்சுவை எழுதும் போது விரசமாகுமோ என அப்படி எழுதவில்லை..

இப்போதும் கோபால் இதை விரிவாக எழுத விரும்பவில்லை.. உங்கள் மனது எல்லாருக்கும் தெரியும்.. யார்மீதும் காழ்ப்புணர்வு இல்லை என்று அடிக்கடி சொல்ல வேண்டாம்..

நானும் இத்துடன் விடப் பார்க்கிறேன்..(ஆனால் கொஞ்சம் நாள் ஆகத்தான் செய்யும்… நாவினாற் சுட்ட வடுங்க்ணா..)

உங்கள் மீது இப்போது கோபம் இல்லை..வருத்தம் தான் இப்போது இதை எழுதியதில் குறைந்து மறையும்..மறையவேண்டும்..

அன்புடன்
சி. க.

சி.க(உங்கள் அனுமதியுடன் செய்யப்படும் மாற்றம். இதற்காக உண்ணாவிரதம் இருந்து,b .p எகிறி,நண்பர்களை வதைப்பதாக இருந்தால் நீங்களாகவே என் அனுமதியின்றி சார் சேர்த்து விடலாம்) ,



நீங்களும் ,நகைச்சுவையும் பிரிக்கவே முடியாதது,பிரிக்கவும் கூடாதது (யாரங்கே ,திருவிளையாடல் திரும்ப எடுக்க பட்டால் தருமி-சிவா உரையாடலில் சேர்க்கவும்).அதனால் உங்கள் பதிவில் எவ்வளவு சதவீதம் நகைசுவை,எவ்வளவு சீரியஸ் என்று புரியாததால் ,பாவ மன்னிப்பு பாணியில் சிரித்து கொண்டே அழுகின்றேன்.


அவ்வப்போது ரிலீஸ் செய்வதில் தவறே இல்லை. எங்கே,எப்போது,யாரிடம்,எவ்விதம்,எவ்விடத்தில் என்பதில்தான் உலக சுவாரஸ்யமே அடங்கியுள்ளது.


ஆனால் உங்களுக்கு பாராட்டு. உங்கள் நகைசுவையின் உன்னதமாக நான் கருதுவது இந்த பதிவே. உங்களுக்கு பாராட்டு மட்டுமே இதமளிப்பளிப்பதால் ,பிடியுங்கள் பாராட்டை.

RAGHAVENDRA
12th December 2014, 09:19 AM
http://www.thehindu.com/multimedia/dynamic/00655/10bgbhuSowcar_ART_G_655677g.jpg

இன்று 83வது பிறந்த நாள் காணும் சௌகார் ஜானகி அவர்கள் எல்லா வளமும் நலனும் பெற்று நீடூழி வாழ இறைவனை வேண்டுவோம்.

அவரைப் புகழின் உச்சிக்குக் கொண்டு சென்ற பாடல்

https://www.youtube.com/watch?v=xNInBEF8E7M

Richardsof
12th December 2014, 09:23 AM
http://i59.tinypic.com/2e3y79x.jpg

VASU SIR

ITHU ENTHA PADAM ?

PENNE NEE VAZHGA / PENNAI VAZHAVIDUNGAL / OR .....

rajeshkrv
12th December 2014, 09:30 AM
http://i59.tinypic.com/2e3y79x.jpg

VASU SIR

ITHU ENTHA PADAM ?

PENNE NEE VAZHGA / PENNAI VAZHAVIDUNGAL / OR .....

soodhattama kooda irukkumo?

rajeshkrv
12th December 2014, 09:34 AM
இதோ மனோவின் சில பாடல்கள்

கவிதை பாடும் அலைகளில் அழகான பாடல்
ஈஸ்வரி ராவ்வின் அப்பொழுதைய பெயர் ஜனனி .

எத்தனை பெயர் வைத்துக்கொண்டால் என்ன பலன் ஒன்றும் இருந்ததாக தெரியவில்லை

https://www.youtube.com/watch?v=4iVaLG7D4LI

அதே படத்தில் இன்னொரு நல்ல பாடல்

https://www.youtube.com/watch?v=qILQsXK4-0k

rajeshkrv
12th December 2014, 09:36 AM
https://www.youtube.com/watch?v=77bwxp25a-A

rajeshkrv
12th December 2014, 09:41 AM
அதிகம் கேட்டிராத ஆனாலும் ரொம்பவும் அழகான பாடல்
ஜெயசந்திரன் ஸ்வர்ணலதாவின் குரல்களில்

https://www.youtube.com/watch?v=ep8TmVCCUH8

chinnakkannan
12th December 2014, 10:31 AM
hi rajesh..என்ன திடீர்னு மனோ.. அப்புறம் ஈஸ்வரி ராவ்..கொஞ்சம் வித்யாச அழகு..இளமையில் துணிச்சல் (குருபார்வை நினைவிருக்கிறதா..) விரும்புகிறேன் இல் லாரி டிரைவரின் மனைவியாக நடித்திருப்பார் நன்றாக.. இப்போதுசீரியல்களில் நடித்துக் கொண்டிருக்கிறார் தானே..

vasudevan31355
12th December 2014, 11:17 AM
ஓம் விநாயக நமஹ

வணக்கம் ராஜேஷ் ஜி! மனோ பாட்டா போட்டு கலக்குறீங்க.

chinnakkannan
12th December 2014, 11:52 AM
வாசு சார்..வாங்க வாங்க.. ஓம் வாசுதேவாய நமஹ..
நேற்று பார்த்து ரசித்த பாடல் உமக்காக..
http://www.youtube.com/watch?feature=player_embedded&v=7uEZl-YvhPg

meh kyakru ram mujehe budda mil gaya..

ஆமா வைஜு பத்தி எழுதியிருக்கீங்களா..மறுபடி போடுமேன்..

(சிவாஜி செந்திலின் வர்ணனை..தமிழில் குடத்திலிட்ட விளக்கு ஹிந்தியில் குன்றிலிட்ட விளக்கு!..)

vasudevan31355
12th December 2014, 12:42 PM
வாசு சார்..வாங்க வாங்க.. ஓம் வாசுதேவாய நமஹ..
நேற்று பார்த்து ரசித்த பாடல் உமக்காக..


meh kyakru ram mujehe budda mil gaya..

ஆமா வைஜு பத்தி எழுதியிருக்கீங்களா..மறுபடி போடுமேன்..

(சிவாஜி செந்திலின் வர்ணனை..தமிழில் குடத்திலிட்ட விளக்கு ஹிந்தியில் குன்றிலிட்ட விளக்கு!..)

வைஜூ இன்னா அமர்க்களம்! (sangam) ராஜகபூரின் வியப்பும் சூப்பர் . பின்னாளில் ஸ்ரீதேவி இப்படி அமர்க்களம் செய்வார். தேங்க்ஸ் பானர்மேன்.

வையயந்தியை பற்றி எழுதணும்னா நிறைய இருக்கு கண்ணா! நேரம்தான் இல்லை. இந்தாங்க பதிலுக்கு வாங்கிக்குங்க.

'Honton Mein Aisi Baat Main'

இந்த மாதிரி டான்ஸ் வைஜயந்தியைத் தவிர வேறு எவரும் பண்ண முடியுமா(jewel thief)? சவாலா? சபாஷ்! சரியான போட்டி அப்படின்னு சொல்லல்லாம் முடியாது. நம்ம ஸ்டைல் தேவ் மேளம் கொட்டும் அழகே அழகு. ஆபிசுக்கு அவசரமா ஓடும் போது போஸ்ட் பண்ணிகிட்டே ஓடறேன் சினா கானாவுக்காக.


https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=jtn4am42kW4

chinnakkannan
12th December 2014, 01:13 PM
வாவ் சூப்பர் பாட் வாசு சார்.. முன்னால் கேட்க மட்டும் செய்திருக்கிறேன்..இப்போது தான் பார்க்கிறேன்..அவசரத்திலும் எனக்குக் கொடுத்தமைக்கு ஒரு ஓ அண்ட் தாங்க்ஸ்..

இந்த கண்ணும் கண்ணும்கலந்து சொந்தம் கொண்டாடுதேயில் ..சாதூர்யம் பேசாதடி என் சலங்கைக்குப் பதில் சொல்லடியில் வரும் சீற்ற விழிகள்..ம்ம் பிடிக்கும்..கிருஷ்ணா ஜி எங்கே எங்கே..

rajeshkrv
13th December 2014, 12:45 AM
இசையரசியின் அற்புத பாடல்களில் இதுவும் ஒன்று.

திரையில் உதய சந்த்ரிகா

https://www.youtube.com/watch?v=CuULKivWv5c

vasudevan31355
13th December 2014, 10:02 AM
பாடல் இரண்டு
பாணி ஒன்று


தொடர் 3

குழந்தை இல்லாத இந்த தம்பதியர் தங்களுக்கு வளர்க்க ஒரு குழந்தை கிடைத்தவுடன் அடையும் பேரின்பத்தையும், மகிழ்ச்சியையும் பாருங்கள். தாய் தன் கடமையைச் செவ்வனே செய்ய, தந்தை அந்த தத்துக் குழந்தையை எடுத்து ஆனந்தக் கூத்தாடுவதைக் காணுங்கள். 'பிள்ளைக்கு அப்படி செய்... இப்படி செய்' என்று மனைவுக்கு அன்புக் கட்டளை வேறு. 'தங்கச் சிலம்பெடுத்து போடாத்தா... நல்ல தமிழாலே தாலாட்டொன்னு பாடாத்தா' என்று தங்கத்தையும், தமிழையும் ஒரே தராசில் இட்டுப் பாடும் இந்த நாயகனின் ஆட்ட அசைவுகள் அகிலம் போற்றக்கூடிய புகழ் பெற்றது.

கண்டவர் கண்ணுபடும் செல்லாத்தா
கன்னத்திலே கறுப்புப் பொட்டு வைக்கச்
சொல்லி சொல்லத்தா

என்று ரெண்டு படுத்தும் ரகளை பண்ணும் குறும்பான தந்தை.

'சுட்டிப் பய தொட்டிலிலே போடாததா
அழுதா புட்டிப் பாலைக் கரைச்சி
கொஞ்சம் ஊத்தாத்தா'

என்று தாய் தாய்ப்பால் கொடுக்க முடியாததால் புட்டிப்பாலைக் கரைத்துக் கொடுக்கச் சொல்லும் புத்திசாலித்தனம்.


https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=G_HwShd-vso

இந்தத் தம்பதியரைப் பாருங்கள். இந்த நாயகர் தாயால் முடியாது என்பதால் தானே செயலில் இறங்கி விட்டார். தாய் கால்கள் வராதவள் ஆதலால், வீல் சேரில் அமர்ந்து விட்டதால், குழந்தையை குளிப்பாட்டி, செய்ய வேண்டியவைகளை செய்து இந்த தந்தை கொஞ்சி மகிழ்கிறார். குழந்தை 'மின்மினியைக் கண்மணி'யாய்க் கொண்டவனாம். 'சச்சா மம்மா பப்பா' என்று அழகுக் கொஞ்சல்.

'மணிப்பயல் சிரிப்பினில் மயக்கிடும் கலை படைத்தான்
பசிக்குரல் கொடுக்கையில் புதுப் புது இசை அமைத்தான்'

அடடா! என்ன கற்பனை! குழந்தையின் பசிக்குரல் கூட புதிய இசையாக தோன்றுகிறதாமே!


https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=xqoOqS4bpWs

இரண்டு திலகங்களும் மனைவிமார்களோடு குழந்தைகளைக் கொஞ்சி நமக்குச் சுவைக்கத் தந்த அற்புத பாடல்கள்.

ஆமாம்! பாடல் இரண்டு. பாணி ஒன்றுதானே!

vasudevan31355
13th December 2014, 10:46 AM
அன்பு கலைவேந்தன் சார்,

முதலில் தாமதமான பதிலுக்கு மன்னிக்கவும். சில சொந்த அலுவல்கள் காரணமாக உடன் பதிவிட முடியவில்லை.

புதிய தொடருக்கான தங்கள் வாழ்த்திற்கு நன்றி!

'கடவுள் செய்த பாவம்' பாடல் பற்றிய விளக்கங்கள் சுவை. இதற்கு முன்னர் ஒரு சில மாதங்கள் இருக்கும் ராகவேந்திரன் சார் இந்தப் பாடலைப் பற்றி சிலாகித்து எழுதியிருந்தார். அவருக்கு மிக மிக பிடித்த பாடல் என்று எழுதியிருந்தார். அவரைப் போலவே தான் எனக்கும். அதற்கு நானும் பின்னூட்டம் அளித்திருந்தேன். ஒரு சில வார்த்தைகள் சென்சார் பிரச்னையால் மாற்றப்பட்டு இருந்தன. பாடலின் வரிகளையும் அற்புதமாக ஞாபகப் படுத்தி விட்டீர்கள்.

இந்தப் பாடல் கேட்கும் போதெல்லாம் 'ஆனந்த ஜோதி' திரைப்படத்தில் வரும் கீழ்க் கண்ட இந்தப் பாடலும் உடனே எனக்கு ஞாபகம் வருகிறது. உங்களுக்கும் இதே மனநிலைதான் இருக்கும் என்று எண்ணுகிறேன்.

'கடவுள் இருக்கின்றார்
அது உன் கண்ணுக்குத் தெரிகின்றதா
காற்றில் தவழுகின்றாய்
அது உன் கண்ணுக்குத் தெரிகின்றதா'

இதிலும் குழப்பமான மனநிலையில் இருக்கும் எம்.ஜி.ஆரை தெளிவான மனநிலை கொண்ட இன்னொரு எம்.ஜி.ஆர் அவர்கள் தெளிவு படுத்துவது போல பாடலமைந்திருக்கும்.

'புத்தன் மறைந்து விட்டான்
அவன்தன் போதனை மறைகின்றதா?

என்ற வரிகள் அருமை. இதைக் கேட்கும் போதெல்லாம் 'நடிகர் திலகம் மறைந்து விட்டார்...அவர்தம் நடிப்பு மறைகின்றதா? என்று எண்ணத் தோன்றும்.

'இசையை ரசிக்கின்றாய்
இசையின் உருவம் வருகின்றதா?

என்ற வரிகள் ஆண்டவன் இருக்கின்றான் என்ற உன்னதக் கருத்தை வலியுறுத்தும்

இந்தப் பாடலும் நான் மிகவும் என்ஜாய் செய்யும் பாடல்.

பாடல் இரண்டு பாணி ஒன்று தலைப்புக்குக் கூட இப்பாடல் பொருந்தும்.

நல்ல பாடலை தந்ததற்கும், பிறிதொரு கருத்துள்ள பாடலை நினைவுகூர வைத்ததற்கும் நன்றி கலைவேந்தன் சார்.


https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=YuM7GxWZaN0

rajeshkrv
13th December 2014, 10:51 AM
வணக்கம் வாசு ஜி

rajeshkrv
13th December 2014, 11:23 AM
தாய் பிறந்தாள்
ஒரு வித்தியாசமான படம்

சாரதா, முத்துராமன், பானுமதி என எல்லோருமே நன்றாய் செய்திருக்க ஒரே ஒரு நெருடல் சிஐடி சகுந்தலா பானுமதிக்கு மருமகள் சஹிக்காது.

பாடல் அருமையோ அருமை
கண்ணனுக்கு பேர் சூட்டி இசைய்ரசியும் ராட்சசியும் கலக்கும் பாடல்

https://www.youtube.com/watch?v=WqFQnj2OpS8

chinnakkannan
13th December 2014, 04:07 PM
ஹாய் வாசு சார்..பா ஒ பா.இ தொடரில் இது இரண்டாவது அத்தியாயம் தானே.. அல்லது நான் இரண்டு மூன்றை மிஸ் செய்து விட்டேனா...

vasudevan31355
13th December 2014, 04:34 PM
மூன்றாவது சி.க சார். ஒன்று மிஸ் செய்து விட்டீர்கள்.

chinnakkannan
13th December 2014, 09:22 PM
பாடல் இரண்டு - பாணி ஒன்று // பார்த்து விட்டேன் வாசு சார்..கொஞ்சம் மறந்திருந்தேன்.. ந.வா நா.சொ, இ.எ.தெ மு இப்போது இது.. எல்லாம் ( நன்)* று,றி! :)

உங்களுக்காக அச்சா து ஹம் சல் தே ஹைய்ன்.. ஆஷாப்ரேக் ராஜேஷ்கன்னா..


http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=fDJLRRgvNJk

RAGHAVENDRA
13th December 2014, 09:55 PM
பொங்கும் பூம்புனல் - துயிலூட்டும் தொண்ணூறு

90களில் புதிய இசையமைப்பாளர்கள் புதிய இசை வடிவங்கள் புதிய இசை நுட்பங்கள் என முற்றிலும் பரிணாம வளர்ச்சியடைந்தது தமிழ்த் திரையிசையுலகம். எந்திரமயமாகி ஜீவனிழந்து விட்டது என மூத்த தலைமுறையினரால் கணிக்கப் பட்டாலும் இளைய தலைமுறையினர் வரவேற்கவே செய்தனர். அதற்கு அடுத்த பத்தாண்டுகளில் கைப்பேசிகளில் புகுந்து அழைப்போசையாகவும் மனிதனுக்குள் புகுந்து கொண்டது நவீன இசை.

இப்படி இரு வேறு பட்ட உணர்வுகளின் பிரதிபலிப்பாக இருந்த 90களில் நல்ல பாடல்களே இல்லையா என எண்ணியோருக்கு அல்லது இன்னும் எண்ணுவோருக்கு..

இந்தத் தொடர் விடையளிக்கும்.

இந்த எந்திரமயமான இசை என்ற விமர்சனத்தைத் தாண்டி பல படைப்பாளிகளின் அருமையான படைப்புகள் வெளிவந்துள்ளன. ஒரு இசை ரசிகனுக்கு நல்ல இசை பிடிக்கும் அது காலத்தைக் கடந்தாலும் அல்லது தலைமுறைக்கு அப்பாற்பட்டாலும்.

அப்படிப்பட்ட இனிமையான பாடல்களைத் தொண்ணூறுகளின் பிற்பகுதியில் வெளிவந்த திரைப்படங்களிலிருந்து தொகுப்பதே இத் தொடர்.

இதைத் தொடங்கி வைப்பது..

இளையராஜாவின் இசையில் முத்துக்காளை திரைப்படத்தில் வாலி எழுதி எஸ்.பி.பாலாவும் எஸ்.ஜானகியும் பாடிய புன்னை வனத்துக் குயிலே

https://www.youtube.com/watch?v=g_Oxc9bokeo

RAGHAVENDRA
13th December 2014, 10:26 PM
பொங்கும் பூம்புனல் - துயிலூட்டும் தொண்ணூறு

தொடர்வது ஜல்லிக்கட்டுக் காளை திரைப்படத்திலிருந்து தேவா இசையில் இனிமையான பாடல்..

சிறுமல்லிப்பூவே...கொடிமுல்லைத் தேனே

http://download.tamiltunes.com/songs/__F_J_By_Movies/Jallikattu%20Kaalai/Sirumallippoove%20-%20TamilWire.com.mp3

RAGHAVENDRA
13th December 2014, 10:35 PM
பொங்கும் பூம்புனல் - துயிலூட்டும் தொண்ணூறு

பாலபாரதி இசையில் எஸ்.பி.பாலா, எஸ்.ஜானகி குரலில் அமராவதி படத்திலிருந்து அட்டகாசமான பாடல்

தாஜ்மஹால் தேவையில்லை அன்னமே அன்னமே..

http://fileraja.com/Tamil/A/Amaravathi/Taj_Mahal_Thevai_Illai-VmusiQ.Com.mp3

chinnakkannan
13th December 2014, 11:20 PM
Raghavendra Sir All the three thuyiloottum thonnooru very nice.. Thanks.

*

Just thought of posting one kavithai and a song linked withi it.
*

Kavithaiyum paattum..1
***

வீரம் ( ..அந்தக்காலத்துல எழுதினது)…
**
எங்களூர் வீரத்தைச் சொல்வ தற்கு
..ஏடெதுவும் பற்றாது எழுது தற்கு
பங்கமென வந்துவிட்ட பகைவர் தன்னை
…பலவிதமாய் விரட்டிவிட்ட பாண்டி மன்னர்
தங்கமெனத் தலைநகராய்க் கொண்ட ஊராம்
…தருணியிலே இதனழகிற் கீடே ஏது
சிங்கமென விளையாட்டில் கூட வீரம்
..சிறிதளவும் குறையாமல் எட்டிப் பார்க்கும்
*
பள்ளிக் கூடம் போகும் பச்சை மண்ணுங் கூட
..ஜல்லிக் கட்டைப் பார்க்கும் சற்றே ஆவல் கொண்டே
கள்ளச் சிரிப்பைக் கண்ணில் கொண்ட கன்னிக் கூட்டம்
..துள்ளும் காளை துடிக்கும் காளை நோட்டம் பார்க்கும்..
*
வில்லும் வாளும் வலிதா இல்லை தோளின் வலிதான்
துல்லி யமாக மாட்டை மடக்கும் தீரன் வலிதான்
மல்லிப் பூவின் மயக்கம் தன்னை நெருங்க விடாமல்
கிள்ளிப் பார்க்கும் சாவை என்றும் இளைஞர் கூட்டம்
*
அலங்கா நல்லூர் endra ஊரில் வருடா வருடம்
அழகாய் ஜல்லிக் கட்டும் நடந்தே மனசை வருடும்
பலவாய் ஓடும் நினைவில் சற்றே பின்னால் சென்றால்
வளமாய்ப் பார்த்த விளையாட்டுந்தான் கண்முன் தோன்றும்
*
கட்டவிழ்த்து விட்டுவிட்ட காளைகளைத் தேடி
….கரகோஷம் எழுப்பிடுவர் சுற்றிமக்கள் கூடி
தட்டெனவே எழுந்துவிட்ட குரலொலிகள் கேட்டு
..தாவிவரும் சீறிவரும் காளைகளும் பார்த்து..
வட்டமிட்டுத் தாவிடுமே வாலிபர்கள் கூட்டம்
..வழுக்கிவிடும் திமிலினிலே தொற்றிநிற்கும் நாட்டம்
கட்டழகுக் கன்னியரைக் கைப்பிடிக்க வேண்டி
..சுட்டுவிடும் சாவணைத்த வாலிபர்கள் கோடி
*
அன்றொருநாள் பார்த்திருந்த ஜல்லிக் கட்டில்
..அழகான வீரத்தைக் கண்டு வீட்டில்
மன்றத்தில் கட்டியதால் மருண்டு நின்ற
..கன்றொன்றின் வாலினையே முறுக்கி விட்டேன்
கண்களிலே கண்ணகியின் சீற்றங் கொண்டு
..கால்களினால் அதுவுதைத்த வலியுங் கூட
நன்றாக நின்றுகொண்டு இன்றும் நெஞ்சில்
..நயமாக அறிவுரையும் சொல்லிச் செல்லும்..!

**

Annaachi Vaetti kattum aambilayaa neenga.. Palani..paattu..marakka mudiyaathu..

http://www.youtube.com/watch?v=RWirwT6XKSs&feature=player_detailpage

Sorry my tamil font is not working..

chinnakkannan
14th December 2014, 12:20 AM
தொழில் பாட்டுக்கள் – 9

*

மனிதராய்ப் பிறந்து நின்று
…மலரென மலர்ந்து காய்த்துக்
கனிகொளும் பருவ மெய்தி
..களிப்புடன் இருந்து மெல்லப்
பனியென முதுமை சூழ
..பக்குவ மனமும் பெற்று
தனியெனப் பயணம் செய்யும்
..சக்கரம் நமது வாழ்வே..

எனில் வாழ்க்கையில் ஒவ்வொரு ஸ்டேஜஸீக்கும் பயணம் செய்து கொண்டு தான் இருக்கிறோம்.. வாழ்க்கைப் பயணத்தில் வாழ்வதற்குப் பயணமும் செய்து கொண்டிருக்கிறோம்..பயணத்திற்கான வாகனங்கள் சைக்கிள், கார், பஸ் , விமானம் என..

பறவையைக் கண்டான் விமானம் படைத்தான் என்ற வரியில் வரும் விமானப் பயணம் எப்போதும் கவர்ச்சி தான்..

மெல்ல மெல்ல ஒருமிகப்பெரிய நத்தை போல ஊர்ந்து சற்றே வேகமெடுத்து பின் ஸூப் பென மேலேறி விண்ணைத்தொட்டு பின் தொடரும் பயணம்.. ஆரம்பத்தில் ஏற்படும் மெல்லிய காதடைப்பு பின் பயணங்கள் செய்யச் செய்யப் பழகிவிடும் இல்லை மறைந்து விடும்..அது போல இறங்கும் போது ஒரு வித உற்சாகம் பிறக்கத் தான் செய்யும்..

கல்லூரி படிக்கும் காலத்தில் யாராவது என்னிடம் கண்ணா உனக்கு அன்னிய மண்ணில் தான் வாசம்.. தாய்மண்ணைத்தொட்டுத்தொட்டுத் திரும்பி விடுவாய்..அதுவும் மதுரை வாசமென்பது உனக்கு இனி கனவு தான் என்று யாராவது சொல்லியிருந்தால் கெக்கலி கொட்டி (என்ன கலி) நகைத்திருப்பேன்..

கிட்டத் தட்ட இருபத்தேழு வருடங்களுக்கு முன் கொஞ்சம் ஸ்லிம் அண்ட் ட்ரிம் இளைஞனாய் முழியும் முழியுமாய் ப்ரிட்டிஷ் ஏர்வேஸில் டெல்லியில் இருந்து துபாய் செல்லும் போது தொடங்கிய பயணம் இன்னும் தொடர்ந்து கொண்டு இருக்கிறது விமானங்களில். டச் வுட். அதுவும் அருகில் அமர்ந்திருந்த ஒல்லி ஒல்லி வெளேர் ப்ரிட்டிஷோ ஸ்காட்டிஷோ பெண்ணின் அலட்சிய சுபாவம் இன்னும் நினைவில்!

ரொம்பப்பின்னால போய்ட்டேனோ..எனில் சற்று முன்னே வந்தால் 2008. மஸ்கட்

சென்னையிலிருந்து ஃபோன்..

“ஹலோ செளக்கியமா.. எப்படி இருக்கேள்.. என்னை எப்போ அங்க கூட்டிக்கப் போறீங்க..எனக்கு அங்க தான் இனி எல்லாம்”

சொன்னவர் என் மனைவியின் தாய்..என் மாமியார்..அவர் சொன்னவை விதி உதிர்த்தவையாகத்தான் இருக்கவேண்டும்..

நோ ப்ராப்ளம் ஏற்பாடு பண்றேன் எனப் போனை வைத்தாலும் ப்ராப்ளம் தான் எனத் தெரியும் எனக்கு..ஏனெனில் இதற்கு முன் இருவருடங்களுக்கு முன் மூன்று மாத விசாவில் தங்குவதற்கு வந்து விட்டு இல்லை இல்லை எனக்கு ஊருக்குப் போக வேண்டும் .. நிறைய ஃபங்க்*ஷன்ஸ்..இங்க என்னடான்னா இவ என்னை வேலையே பண்ண விட மாட்டேங்கறா..இருக்கறது ரெண்டே ரெண்டு கோவில்.. பாவம் அவ (மருமகள்) நண்டும் சிண்டுமா வச்சுண்டு என்ன கஷ்டப்படறாளோ எனச் சொல்லி ஒற்றைக்கால் கொக்காய் நின்று ஒன்றரை மாதங்களில் சென்னைதிரும்பியவர்.. இப்போது என்னடான்னா வருகிறேன் என்கிறார்..

போன முறை அவர் வந்துசென்றபின் நானிருக்கும் காம்பெளண்ட் ப்ளாட்களில் இருந்த முன் பின் தெரியாதவர்கள் கூட நின்று ஹாய் சொல்லி மென் சிரித்துச் சென்றார்கள்.. என்ன இவளே என்றால் அம்மா தாங்க அவங்களுக்கு இந்த ஹெல்ப் பண்ணா இவங்களுக்கு இந்த ஹெல்ப் பண்ணினா.. என இவள் சொல்வாள். சுறுசுறுப்பின் மறு பெயர் என்றால் அவரைச் சொல்லவேண்டும்.. பப்ளிக் ரிலேஷனில் கில்லாடி.


உடன் வீட்டில் குட்டி மந்திராலோசனை நடத்தி “என்னடி.. வந்து இருக்கறது பத்திப் ப்ராப்ளமில்லை.. போய்ட்டுப் போய்ட்டு வர்றா மாதிரி இருந்தா ஒரு ரெஸிடெண்ட் விசாவே எடுத்துடட்டுமா..

உங்க இஷ்டம் (சரி சரி வளவளன்னு பேசாம எடுக்கறவழியப் பாருங்க) எனச் சுருக்கமாய்பதில் வர கம்பெனி பி.ஆர்.ஓ ஓமானியிடம் சொன்னால் “யாருன்னு சொன்னீங்க..”

“அம்மா டா”

”உங்க அம்மாவா”

“என் மனைவியின் தாய்..மேரா பத்னிகா மா..என்லு பொண்லு அம்முலு.. என தமிழ் ஹிந்தி தெலுகு மொழிகளிலும் ஆங்கிலத்திலும் சொல்ல “அப்பக் கஷ்டம்”

“செல்லம் உனக்கு உன் பலம் தெரியாது..நீ ஆஞ்சனேய வேஷம் போட்ட தெருக்கூத்து ஆசாமி மாதிரி செய்டா” எனச்சொல்லி செய்யவைத்து மறுவாரம் அழைத்து வந்துவிட்டேன்..

முதல் வருடம் போயிருந்த போது பார்த்ததை விட இன்னும்கொஞ்சம் நாலைந்து வயது ஏறினாற் போலத்தெரிந்தார்.. நரைத்த தலை கண்களில் கண்ணாடி..அழகிய காட்டன் புடவை..க்ரே வித் ரெட் பார்டர்.. ஒற்றை ஹேண்ட் லக்கேஜே முழு லக்கேஜ்..என அலட்சியமாய் வந்து காரில் ஏறியதும் ”ஏன் இப்படி டிலே பண்ணேள்..”

எவ்ளோ சீக்கிரமோ அவ்ளோ சீக்கிரமா கூட்டிக்கிட்டேனேங்க..

சரி சரி..அவ என்ன பண்றா ஆத்துல..எப்ப ஊருக்கு லீவில போறேள்..இது ஜூன்.. நீங்க போறது அக்டோபரா ..ம்ஹூம் நான் வரமாட்டேன்..இங்கேயே மேனேஜ் பண்ணிக்குவேன்..எனக்கு இங்க தான் எல்லாம் இனி”

சரி ஏதோ அந்தப் பக்கம் ஏதோ மனஸ்தாபம் போல இருக்கிறது என எதுவும் கேட்காமல் வீட்டிற்கு அழைத்து வந்தேன்..

ரெஸிடென்ஸ் கார்ட் எடுத்தும் கொடுத்தாகி விட்டது.. எப்பப்போணும்னு தோணறதோ சொல்லுங்க.. போய்ட்டு மறுபடியும் இங்கிட்டு வந்துடலாம்..- நான் ஏதாவது கேட்டேனா உங்க கிட்ட..

இரண்டு மாதங்கள் போனது தெரியவில்லை..வழக்கத்துக்கு மாறாக இன்னும் சுறுசுறுப்பு.. அவருக்கு பருப்புருண்டைக் குழம்பு பிடிக்கும் அப்புறம் இதோ இந்த சக்கரைப் பொங்கல் அப்புறம்..இதெல்லாம் பிடிக்கும் எனலிஸ்ட் போட்டு…… நான் செய்றேன்.. நீ உன் வேலையைப் பாரு..அம்மா ரிலாக்ஸா இரேம்மா..சும்மா இருடி.. உங்க ஊர் வெயில் சும்மாக் காயுது வடாம் கெளர்றேன்..பால்கனில்ல போட்டால் பொல்லுன்னு காஞ்சுடும்..

இன்னும் நகைச்சுவை.. கொண்டும் பேசி க் கொண்டிருந்தார்..

விழுந்து விழுந்து நான் வைத்திருக்கும் புத்தகங்கள் எடுத்துப் படிப்பு..

இந்தாங்க உங்களுக்காக ப்ரிலைன்ஸ். ஐஸ்க்ரீம்..
தாங்க்ஸ்ங்க…

ஆகஸ்ட் மாதம் முதல் வாரம் கழிந்து ஒரு நாள் இரவு…உணவு முடிந்ததும் பேச்சு.

.”அக்டோபர் தானே போறீங்க.. இவளே..அந்த பென்ஷன் ஆஃபீஸ் போய் நான் உயிரோட இருக்கேன்னு சொல்லிடு..(மாமனார் வேலை பார்த்திருந்தது ரயில்வேஸில்)..உங்க கதைகள் படிச்சேன்..பேசறா மாதிரியே எழுதறீங்க..உங்க வெள்ளந்தி மனசு தெரியுது..அப்புறம் என வீட்டில் இருந்த மற்ற அனைவரையும் பற்றி ஒரு லெக்சர்.. சொன்ன நேரம் பத்தே முக்கால்..

குட் நைட் இவளே..குட் நைட்ங்க.. எனச் சொல்லி அவர் அறையுள் சென்று விளக்கணைத்துப் பத்து நிமிடங்கள் ஆகியிருக்கும்.. நான் ஹாலில் கம்ப்யூட்டரில் இணையம்..இவள் வாரப்பத்திரிகைப் புரட்டல்..ம்ஹூ ம்ஹீ என மூச்சுத் திணறல் சத்தம் வெளியில் கேட்க. அதிர்ந்தோம்..

அம்மா என்ன ஆச்சு..என இவள் பதற இந்தாங்க கதவைத்திறங்க என நான் பதறி கதவின் மேல் முட்டி மோத அதற்குள் இவள் பக்கத்து எதிர் ஃப்ளாட் நண்பர்களை செல்ஃபோனில் அழைக்க அவர்களும் வந்துவிட கதவு ஏற்கெனவே கொஞ்சம் ரிப்பேர் ஆகத் தான் இருந்ததால் மறுபடி மோதலில் திறக்கப் பட..உள் சென்றால்.. வார்த்தையில் விவரிக்க இயலா அமைதி..

படுக்கையில் அவர்.. கரத்தைத் தொட்டால் ச்சிலீர் சில்லிப்பு..வீட்டுக்காரியின் அழுகை.. பின் டபக்கென்று இருவர் தூக்கிக் கொண்டு லிஃப்டில் இறங்கி காரெடுத்து ரூவி ஹைஸ்ட்ரீட் எண்ட்டில் இருந்த பத்ர் அல் சமா ஹாஸ்பிட்டலுக்குக் கூட்டிச் சென்றால் செக் செய்த டாக்டர் உதட்டை மடித்தார்.. வரும்போதே உயிர் போயிருந்திருக்க வேண்டும் மாஸ்ஸிவ் ஹார்ட்ட் அட்டாக் எனச் சொல்லிவிட்டு ஆர்.ஓ.பி எனப்படும் ராயல் ஓமான் போலீஸிற்கு போன் செய்ய ஆரம்பித்தார்..ஃபார்மாலிட்டீஸ்..

கிழங்குகிழங்காய் நான்கு பிள்ளைகள் நல்ல வேலையில் மற்றும் மூன்று பெண்கள் (என் வீ.கா. கடைசி) இருக்கையில் இங்குவந்து உயிர் போக வேண்டுமா..அதுவும் சுவடே இல்லாமல்.. நான் வெடிக்கும் துக்கத்தைப் பொறுத்துக் கொண்டு ஆர்.ஓ.பி வந்ததைப் பார்த்து..”சலாம் அலைக்கும்” “அலைக்கும் அஸ்ஸலாம்..”

வந்திருந்த ஒல்லியாயிருந்த போலீஸ்மென் இருவர் என்னை ஏற இறங்கப் பார்த்து, என் வீ.கா வைப் பார்த்து பின் சூழ்ந்திருந்த நண்பர்களிடம் விவரம் அறிந்து என்னருகில் வந்து ஸாரி.. எனச் சொல்லி பேப்பர்களில் கையெழுத்திட்டுக் கொடுக்க அரை மணி நேரமோ அதற்கு மேலோ ஆம்புலன்ஸ் பின்னாலேயே சென்று இரவு ஒரு மணிக்கு கவர்ன்மென்ட் ராயல் ஹாஸ்பிடல் மார்ச்சுவரியில் கொடுத்துவிட்டு வீடு திரும்ப ..ஆறரை மணிவரை ஃபோன்கால்கள்..


ஏழு மணிக்கு நானும் நண்பரும் காரெடுத்து ராயல் ஹாஸ்பிட்டல் மார்க் கிற்குச் சென்றால் ஒரு ஓமானி, போலீஸ் ப்ளஸ் இரு மலையாளிகள் அங்கு வேலை பார்ப்பவ்ர்கள்.. போஸ்ட் மார்ட்டம் இல்லாமல் வேண்டுமெனில் இன்னின்ன பேப்பர்கள் வேண்டும் என லிஸ்ட்.. போய் எடுத்து மத்தியானம் ஒருமணிக்குள் வாங்கள்..அப்போது தான் நாங்கள் தயார்ப்படுத்த முடியும் இரண்டு மணிக்கு இங்கு க்ளோஸ்.. சரி ஃபீஸ் யூ கேன் பே பை கார்ட் ஆல்ஸோ..

பின் பின் பின் நீண்ட அலைச்சல்கள்..ஆஃபீஸிற்குப் போன் பண்ணி எனக்கு,என் மனைவிக்கு, பின் உயிர் துறந்த மாமியாருக்கு புக் பண்ணச் சொல்லி. விட்டு இன்னொரு இடம் போய் அங்கிருந்த இண்டியன் எம்பஸியில் பாஸ்போர்ட் கான்ஸலேஷன்…


பரப்ப்ரம்மம் மாதிரி பொல்லென்று தலைவெளுத்து மீசை வெளுத்த நபர் “ ஹூ டைய்ட்” “என் மாமியார்..” தென் உங்கள் மனைவியிடமிருந்தல்லவா கடிதம் வேண்டும்.. சரி என்று மறுபடியும் லொங்கிடி லொங்கிடி எனப் பறந்து வீடு வந்து ஃப்ளாட் நண்பர்கள் எல்லாம் சூழ இருந்த மனைவியிடம் கடிதம் வாங்கி மறுபடி இ.எ. வந்து கொடுத்தால் ஃபீஸ் நானூறு பைஸா (60 ரூபாய் அப்ராக்ஸ்) வாங்கிக் கொண்டு மாமியாரின் பாஸ்போர்ட்டின் நான்கு மூலைகளையும் வெட்டி, பின் லெட்டர் டூ ஆர் ஓபி எனவாங்கி மறுபடியும் ரூவி - ட்ராஃபிக் கடந்து போலீஸ் ஸ்டேஷன். அடையும் போது பன்னிரண்டரை.. மார்ச்சுவரியிலிருந்து ஃபோன்..

என்னாச்சு..இதோஆர்.ஓ.பியில் இருக்கிறோம்..இல்லைஇல்லை இன்றைக்கே வேண்டும்.. (என் மனைவியின் மூத்த சகோதரர் எல்லா ஏற்பாடும் மறு நாள் செய்வதாகச் சொல்லியிருந்தார்) இதோ கொண்டு வருகிறோம் சொல்லி செல்லணைத்து அறையுள் சென்றால்..மறுபடியும் அதேகேள்வி இறந்தது யார்..அதே பதில்..

சொல்வது சரி.. ஆனால் நீங்கள் ஏன் ரெஜிஸ்டர் செய்யவில்லை ஆர். ஓ.பியிடம்

இல்லையேய்யா.. எனக்கு எகிறியது. பி.ஆர்.ஓ. மூலமாகச் சொன்னேன்.. ரெண்டு பேர் வந்து பார்த்தார்களே

பெயர்

சாமிசத்தியமாக எனக்குக் கேட்கத் தோன்றவில்லை எனச் சொன்னால் புரியவா போகிறது.. இல்லை.கேட்கவில்லை..

பின் மறுபடியும் கேள்வி கேட்ட போலீஸ் மேலதிகாரி வேறுஎவருடையோ தொடர்பு கொண்டு பேசப் பேச நிமிடங்கள் நகர்ந்து கொண்டிருக்க.. போலீஸ் உடையில் பல காவலர்கள் குறுக்கே போய்க்கொண்டிருக்க யாரைப்பார்த்தாலும் நேற்று வந்திருந்த நபர்கள் போல் தெரிய.. கடைசியில் மறுபடி ஃபோனை வைத்து மெல்ல நிதானமாய் அரபிக்கில் கம்ப்யூட்டரில் அடித்து சைன் பண்ணி சீல் வைத்துக் கொடுக்கும் போது மணி இரண்டரை..

தாவிப் பறந்து ராயல் ஹாஸ்பிடல் போனால் இருந்த மலையாள நபர் கொஞ்சம் புன்சிரிக்க முயன்று தோற்றான்.. எல்லாம் ரெடி நீங்க பேப்பர் கொண்டு வந்திருக்கீங்களா .. கேட்டு வாங்கி உள்ளறைக்குக் கூட்டிச் சென்றான்.. நீங்கள் கொண்டுவந்துவிடுவீர்கள் என்ற நம்பிக்கையில் நாங்கள் ஏற்கெனவேஃபார்மாலிட்டீஸ் செய்து விட்டோம்.. யூ ஹேவ் டு ஹெல்ப் அஸ் இன் கீப்பிங்க் இன் த பாக்ஸ்..

ஒருதுணியில் சுருட்டப்பட்டு இருந்தார் அவர்..முகம் மட்டும் வெளித்தெரிய.. நானும் உடன் வந்த நண்பரும் எடுத்து வைக்க பெட்டி மூடப்பட்டு வேனில் விமான நிலைய கார்கோ செக்*ஷன் நோக்கிச் செல்ல விஷயம் முடிந்ததா என்றால் இல்லை..

ஆஃபீஸிலிருந்து அலுவலக நண்பர் ”எல்லாப் பேப்பர்களையும் எடுத்துக் கொண்டு கார்கோ செக்*ஷன் போகச் சொல்லியிருக்க அங்கு போனால் எல்லாவற்றிற்கும் ஒரு ஆறு காப்பிஎடுத்துக் கொடுங்கள்.. எனச் சொல்ல எங்கிட்டுப்பா போறது..இதோ இங்கயே இருக்கே என ஜெராக்ஸ் மெஷின் காண்பிக்க அந்த இருபதுக்கும் மேலான பேப்பர்களை மனோவேகத்தில் எடுத்து ஆர்கனைஸ் செய்து கொடுத்தால் கார்கோ செஷன் நபருக்கு ஃபோன்..

என்னப்பா என்னது இன்னொரு கேஸா..ஓ. நோ.. இப்பத் தான் ஒண்ணு முடிச்சேன்.. முடியாதுன்னு சொல்லிடு என முடித்து.. எங்களிடம்..எல்லாம் முடிஞ்சுருச்சு சார்.. நீங்களும் புறப்படறீங்களா.. சரி காலைல சென்னைல க்ளியர் பண்ணிக்கலாம்.. இந்தாங்க உங்களுக்கு ரெண்டு காப்பி.. எனச் சொன்ன போது மணி ஆறரை.. பத்தரைக்கு ஃப்ளைட் என்பது நினைவு வர கூடவே இன்னொரு நினைவும்..யெஸ் பசி..

கீழிருந்த காஃபி ஷாப்பில் ஒரு டீ ஒரு பொறை குடித்துவிட்டு பின் வீடுவந்து கிளம்பி ஏர்போர்ட் வந்து உள்ளே ஃப்ளைட் கிளம்புவதற்காகக் காத்திருக்கையில் தான் கூட துபாயிலிருந்து வந்து எங்களுடன் சென்னை வருவதற்கு இருந்த உறவினர் சொன்னார்.. “வெரிகுட் கண்ணா.. நார்மலாக இப்படி க் க்ளியரன்ஸ் செய்வதற்கு நான்கு நாட்களாகுமாம்..” கலங்கியவிழிகளுடன் அவரது வெரிகுட்டை வாங்கி அருகிலிருந்த குப்பைத் தொட்டியில் போட்டேன்..

சில சமயங்களில் சில விமானப் பயணங்கள் மறக்க முடியாதவை.. அதுவும் இந்த ஏர் இந்தியா பயணம் மறக்கவே மறக்காது.. எங்களுடன் சிரித்துப் பேசி வரவேண்டிய மாமியார் தனியாக கார்கோ கீழ் வர மேலே நாங்கள்.. கண்கள் வலித்து மூடினாலும் மனம் மூடவில்லை..தூக்கமும் வரவில்லை.என் அன்னை இருபத்து மூன்று வருடஙக்ளுக்கு முன் தவறிய போது அவரது. இறுதிச் சடங்கில் கலந்துகொள்ள முடியவில்லை ஃப்ளைட் கனெக்*ஷன் கிடைக்காததால்..ஒருவேளை அதற்காகத் தான் இதுவா.. ஒன்றும் புரியவும் இல்லை..

ம்ம். பிறகு சென்னை ஏர்போர்ட்டில் பட்ட கஷ்டங்கள் அது வேறுகதை..

*
விமானத்திற்குள் எடுக்கப் பட்ட பாடல்கள் என்றால் இரண்டு தான் நினைவுக்கு வருகின்றன..எழுதியதற்குப் பொருத்தமெல்லாம் இல்லை.. வேறு வேறு சூழல்களில் இருக்கும் விமானப் பாட்டுக்கள் தந்திருக்கிறேன்.

ஓ மானிடஜாதியே..

ஆகாயத்தில் பூகம்பம் அற்புதங்கள் ஆரம்பம்..

http://www.tamilmp3songslyrics.com/songpage/Ninaiththaaley-Inikkum-Cinema-Film-Movie-Song-Lyrics-Vaaniley-meadai-amainthathu/3828


http://www.youtube.com/watch?v=y0KULcXBoBE&feature=player_detailpage

அப்புறம் வரட்டா…
**

Gopal.s
14th December 2014, 07:18 AM
எல்லோரும் கொண்டாடுவோம் சில தோல்விகளை.

வெற்றி என்பது வாழ்க்கையில் வைப்பாட்டி மாதிரி.எல்லோருக்கும் அமைவதில்லை. அவனவன் மட்டுமே கொண்டாட வேண்டும்.ஆனால் தமிழர்களான நாமோ,இன்னொருத்தன் வெற்றியை,கொண்டாடுவதோடு மட்டுமின்றி ,வெற்றி பெற்றவனின் சூழ்ச்சிகள்,நல்ல அதிர்ஷ்டம்,நேரம் துணை போனது,சில அசம்பாவிதங்கள் சாதகமாக அமைதல்,எல்லாவற்றையும் மறந்து பிறத்தியானின் வெற்றியை மட்டுமே கொண்டாடி மகிழும் கேடு கெட்ட
ஜென்மங்களாக மாற்ற பட்டதுடன் நில்லாமல்,அவன் காணும் தோல்விகளை நம் மேல் சுமந்து ,அவன் வெற்றி மட்டுமே பெற்றதாக காட்ட எண்ணுகிறோம்.வெற்றி மகிழ்ச்சியான விஷயம் நமக்கு மட்டுமே பிரத்யேகமாக அமையும் போது மட்டும்.

ஆனால் திறமை,ஈடுபாடு,தியாகம்,அறிவு,நேர்மை,தொழில் தேர்ச்சி இவையெல்லாம் வெற்றி-தோல்வி பாராமல் மனித குலத்தால் கொண்டாடி மகிழ பட வேண்டும். ஏனென்றால் ,இந்த அம்சங்கள் ஒருவனுக்கு இருந்தால் ,அவனால் சமூகம் பல விதங்களில் பயன் பட முடியும்.

சொல்ல வந்ததை விட்டு விட்டேனே? இது இசை மேடை என்பதால் ,என்னை துன்ப படுத்திய சிலரின் தோல்விகள்,ஏமாற்றங்கள்,துயரங்கள்,துரதிருஷ்டங்க ள் இவற்றை சொல்ல போகிறேன்.இவை பழையன கழிந்து புதியவை புக்கதாலோ,நேரம் அமையாததனாலோ ,வெற்றி பெற்றும் மேற்செல்லாமல் விடுத்ததனாலோ வந்த துயர தோல்விகள். ஒரு வெற்றி பெற்ற மனிதனின் பாதையில் ,அவனை விட திறமைசாலிகள்,முன்னோர்கள்,சம போட்டியாளர்கள் இவர்களின் தோல்விகள் இருக்கும். அவனாக சேர்த்த எலும்பு கூடுகள் (சூழ்ச்சி ,வலியன எஞ்சும் எச்சம்),தானாக சேர்ந்த எலும்பு கூடுகள் என்று எண்ணி மாளாதவை. நாமாவது அவற்றை எண்ணுவோமே?

ஜி.ராமநாதன்-

50 களின் இசை அரசர். தூய கர்நாடக சங்கீதம்,மெல்லிசை,இணைப்பிசை,கிராமிய இசை என்று தொடாதவை பாக்கி இல்லை.இவர் கோலோச்சிய காலங்களில் சுப்பராமன் தோன்றி மறைந்தார்.விஸ்வநாதன் -ராமமூர்த்தி 60 களில் எழுச்சி பெற்றனர். கே.வீ மகாதேவன்,ஏ.எம்.ராஜா பின் 50 களில் உதயமாகினர். ஆனால் அறுபதுகள் எம்.எஸ்.வீ-டி.கே.ஆர் ,கே.வீ.எம் வசமானது. வீரபாண்டிய கட்டபொம்மனில் சிவாஜிக்கு ஆசிய-ஆப்பிரிக்காவின் சிறந்த நடிகர் விருது போலவே,ஜி.ராமநாதனுக்கு சிறந்த இசையமைப்பாளர் விருது கிடைத்தது.தொடர்ந்து,கப்பலோட்டிய தமிழனில் இவர் பங்கு அருமையாக வந்தது.(சில விமரிசனங்கள் பாதகமானது).அது வரை சமூக படங்களில் மட்டுமே கொடி நாட்டிய (மன்னாதி மன்னன் நீங்கலாக)எம்.எஸ்.வீ -டி.கே.ஆர் கர்ணனில் வாய்ப்பு பெற்றது ,வாய்ப்பை எதிர்பார்த்து ,ஏமாந்த ஜி.ராமநாதனை மிக பாதித்து நோய் படுக்கையில் தள்ளியது.என் கதியை பார்த்தாயா என்று புலம்பும் அளவு!!! பட்டினத்தார்,அருணகிரி நாதர் என்று கிடைத்தவற்றில் தன் முத்திரை பதித்த இம்மேதை ,சரிவின் பாதையை முழுவதும் காணாமல் மாண்டது, நமக்கு ஆசுவாசம் தந்த மறைவே.

https://www.youtube.com/watch?v=4XT2iUOqKwE

https://www.youtube.com/watch?v=pvz8D1V0QjI

https://www.youtube.com/watch?v=1t6oWLbzPCc

(தொடரும்)

Richardsof
14th December 2014, 07:33 AM
வெற்றி என்பது வாழ்க்கையில் வைப்பாட்டி மாதிரி.எல்லோருக்கும் அமைவதில்லை. அவனவன் மட்டுமே கொண்டாட வேண்டும்.ஆனால் தமிழர்களான நாமோ,இன்னொருத்தன் வெற்றியை,கொண்டாடுவதோடு மட்டுமின்றி ,வெற்றி பெற்றவனின் சூழ்ச்சிகள்,நல்ல அதிர்ஷ்டம்,நேரம் துணை போனது,சில அசம்பாவிதங்கள் சாதகமாக அமைதல்,எல்லாவற்றையும் மறந்து பிறத்தியானின் வெற்றியை மட்டுமே கொண்டாடி மகிழும் கேடு கெட்ட
ஜென்மங்களாக மாற்ற பட்டதுடன் நில்லாமல்,அவன் காணும் தோல்விகளை நம் மேல் சுமந்து ,அவன் வெற்றி மட்டுமே பெற்றதாக காட்ட எண்ணுகிறோம்.

Nice sunday's joke.

RAGHAVENDRA
14th December 2014, 08:18 AM
வெற்றி என்பது வாழ்க்கையில் வைப்பாட்டி மாதிரி.எல்லோருக்கும் அமைவதில்லை. அவனவன் மட்டுமே கொண்டாட வேண்டும்.ஆனால் தமிழர்களான நாமோ,இன்னொருத்தன் வெற்றியை,கொண்டாடுவதோடு மட்டுமின்றி ,வெற்றி பெற்றவனின் சூழ்ச்சிகள்,நல்ல அதிர்ஷ்டம்,நேரம் துணை போனது,சில அசம்பாவிதங்கள் சாதகமாக அமைதல்,எல்லாவற்றையும் மறந்து பிறத்தியானின் வெற்றியை மட்டுமே கொண்டாடி மகிழும் கேடு கெட்ட
ஜென்மங்களாக மாற்ற பட்டதுடன் நில்லாமல்,அவன் காணும் தோல்விகளை நம் மேல் சுமந்து ,அவன் வெற்றி மட்டுமே பெற்றதாக காட்ட எண்ணுகிறோம்.வெற்றி மகிழ்ச்சியான விஷயம் நமக்கு மட்டுமே பிரத்யேகமாக அமையும் போது மட்டும்.

ஆனால் திறமை,ஈடுபாடு,தியாகம்,அறிவு,நேர்மை,தொழில் தேர்ச்சி இவையெல்லாம் வெற்றி-தோல்வி பாராமல் மனித குலத்தால் கொண்டாடி மகிழ பட வேண்டும். ஏனென்றால் ,இந்த அம்சங்கள் ஒருவனுக்கு இருந்தால் ,அவனால் சமூகம் பல விதங்களில் பயன் பட முடியும்.


டியர் கோபால்
யதார்த்த வாழ்க்கையில் ஒவ்வொரு மனிதனுக்கும் ஏற்படக்கூடிய அனுபவங்கள், மனச்சோர்வுகள் இவற்றிற்கான காரணிகளில் மேலே சொன்னவையும் அடங்கும். இதை இந்த விதத்தில் பார்த்தால் தாங்கள் கூறியுள்ளது நூற்றுக்கு நூறு சரியானதாகும். இதை ஒரு சராசரி மனித வாழ்க்கையோடு இணைத்துப் பார்த்தால் தங்கள் கருத்து ஒவ்வொரு தனி மனிதனுக்கும் பொருந்தும்.

தங்களுக்கு என் உளமார்ந்த பாராட்டுக்கள்.

vasudevan31355
14th December 2014, 09:07 AM
ராஜ்கபூர் பிறந்த தினம்.

http://media-cdn.list.ly/production/7285/headline?ver=9269346372

இன்று ராஜ்கபூர் அவர்களின் பிறந்ததினம். அவருடைய ரசிகர்களுக்கு நம் மனப்பூர்வமான பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

ராஜ்கபூர். என்ன ஒரு கலைஞர்! தயாரிப்பாளாரக , நடிகராக, இயக்குனராக, பல்வேறு முகங்கள் கொண்ட திறமையாளர்.

இவர் படங்களின் பாடல்கள் எவராலுமே மறக்க முடியாதவை. படங்களில் இவர் அப்பாவியாகவும், அதே சமயம் விவரம் மிக்கவராகவும் நடிப்பதைப் பார்த்து மகிழ்ந்திருக்கிறேன். ஒரு innocent ஹீரோ இவர்.

இவர் நடித்த படங்களில் பல படங்கள் எனக்குப் பிடித்தவை. ஆவாரா, ஆக், ஸ்ரீ 420, மேரா நாம் ஜோக்கர், ஜிஸ் தேஷ் மே கங்கா பெஹத்தி ஹை. மற்றும் பாபி, ராம் தேரி கங்கா மெய்லி, சத்யம் சிவம் சுந்தரம் போன்ற மறக்க முடியாத படங்களைத் தந்து நம் உள்ளங்களில் வாழ்ந்து கொண்டிருப்பவர்.

இவர் மோதிரக் கையால் குட்டுப் பட்ட நடிகைகள் ஏராளம். நர்கீஸ், நம்மூர் பத்மினி, வைஜயந்திமாலா, ஜீனத் அமன், டிம்பிள் கபாடியா என்று இவரால் புகழ் பெற்ற நடிகைகளின் பட்டியல் நீளும்.

ரஷ்யாவில் இவர் இன்னும் கூட ரொம்ப பாப்புலர். 'ஆவாரா' படத்தில் 'ஆவராஹூ' பாடலைப் பாடியபடி வீதிகளில் வலம் வருவாரே. அந்தப் பாடல் ரஷ்யாவில் மிக மிகப் பிரபலம். சங்கர் ஜெய்கிஷன், ராஜ்கபூர், முகேஷ் கூட்டணி இசைச் சதனியே படைத்தது.

'மேரா நாம் ஜோக்கர்' திரைப்படத்தில் பல பெண்களைக் காதலித்து காதலில் தோல்வியுற்று இறுதில் ஒற்றை ஆளாய் கண் கலங்கியபடி நம்மையும் கண்கள் கலங்கச் செய்து அனுப்புவாரே! இதி மறக்க முடியுமா?

பின்னணிப் பாடகர் முகேஷ் அவர்களின் குரல் அப்படியே ராஜ்கபூர் அவர்களுக்கு நூறு சதவீதம் பொருந்தும்.

காலத்தால் அழியாத 'சங்கம்' படத்தை தந்ததும் இவரே. இந்த ஒரு படம் போதும் இவரது பேரை சொல்ல.

இந்த 'சங்கம்' படத்திற்கு தமிழ்நாட்டில் தியேட்டர் கிடைக்காமல் போக நம் நடிகர் திலகம் அருமை நண்பர் ராஜ்கபூர் அவர்களுக்கு தந்து சாந்தி திரையரங்கை தந்து உதவினார். படம் சூப்பர் டூப்பர் ஹிட்டாகிவிட நடிகர் திலகத்தின் புதிய பறவை திரைப்படம் சாந்தியில் வெளியிடப் பட முடியாமல் போய் விட்டது. அந்த அளவிற்கு படத்தை எடுக்க முடியாத அளவிற்கு சங்கம் படம் ஹவுஸ்புல். ராஜ்கபூர் நடிகர் திலகத்திடம் 'புதிய பறவை படத்தை நீங்கள் போட்டுக் கொள்ளுங்கள்... சங்கம் படத்தை எடுத்து விடலாம்' என்று சொன்னபோது 'நன்றாகப் போகும் சங்கம் படத்தை எனக்கு எடுக்க மனம் வரவில்லை...அது நியாயமும் ஆகாது' என்று பெருந்தன்மையோடு கூறி தந்து சொந்தப் படமான புதிய பறவையை பாரகன் தியேட்டரைப் புதுப்பித்து நடிகர் திலகம் வெளியிட்டாராம். இது சம்பந்தமான ஆவணங்களை நடிகர் திலகம் திரியில் நமது அருமை நண்பர் பம்மலார் அவர்கள் ஒருமுறை பதிந்தது நினைவுக்கு வருகிறது.

கடலூரிலிருந்து அப்போதெல்லாம் நெய்வேலிக்கு தினம் வேலைக்கு வருவேன். ஒரு முறை மதிய ஷிப்ட் முடிந்து இரவு நெய்வேலியில் 'ஆக்' என்ற ராஜ்கபூரின் படத்தை வாங்கிச் சென்று விடிய விடிய பார்த்து ரசித்தது நினைவுக்கு வருகிறது.

ராஜ்கபூர். இந்திய சினிமாவின் அடையாளச் சின்னம்.

அவருடைய பிறந்தநாள் நாம் அனைவரும் கொண்டாடி மகிழ வேண்டிய ஒன்று.


https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=A_3kBgasVLA

vasudevan31355
14th December 2014, 09:11 AM
Raj kapoor family

http://static.manoramaonline.com/ranked/online/MM/English/Multimedia/Slideshow/News/3490755267_shammi6.jpg

vasudevan31355
14th December 2014, 09:13 AM
சசிகபூருடன் ராஜ்கபூர்.

http://oneknightstands.files.wordpress.com/2010/03/shammi-and-raj.jpg

vasudevan31355
14th December 2014, 09:14 AM
புகழ் பெற்ற ராஜ்கபூர் நர்கீஸ் ஜோடி.

(on the set)

http://www.moviediva.com/MD_root/MDimages/Copy_of_Aag3.jpg

vasudevan31355
14th December 2014, 09:16 AM
மறக்க முடியாத மேரா நம் ஜோக்கர்.

http://im.rediff.com/movies/2013/may/07hit-flop8.jpg

vasudevan31355
14th December 2014, 09:17 AM
http://s2.dmcdn.net/DEdC.jpg

vasudevan31355
14th December 2014, 09:21 AM
'மேரா நாம் ஜோக்கர்' படத்திற்கு இரண்டு இடைவேளை விடுவார்கள். படம் பெரிது. இப்படத்தின் இந்தப் பாடலை என் வாழ்நாள் முழுக்க மறக்க இயலாது.


https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=Q9ULWBTokzw

vasudevan31355
14th December 2014, 09:40 AM
ராகவேந்திரன் சார்,

பொங்கும் பூம்புனல் - துயிலூட்டும் தொண்ணூறு ஆரம்பமே மிக நன்றாக இருக்கிறது. இன்னும் ஒரு வேண்டுகோள். எண்பதுகளையும் சேர்த்து வழங்கினால் மிகவும் சந்தோஷப்படுவேன். புதிய தொடருக்கு என் மனப்பூர்வமான வாழ்த்துக்கள்.

vasudevan31355
14th December 2014, 09:48 AM
வீரம் ( ..அந்தக்காலத்துல எழுதினது)…

சி.க சார்,

ஜல்லிக்கட்டு கவிதை ஜோர்.

'அண்ணாச்சி வேட்டி கட்டும் ஆம்பளையா' நீங்க பாடல் பொருத்தம்.

பத்மினி ஒரு காலி வளர்ப்பாரே! கட்டபொம்மனில். வீரக் காளை. 'அஞ்சாத சிங்கம் என் காளை'

'பஞ்சாய்ப் பறக்க வைக்கும் காளை' யை வைத்து நாட்டியப் பேரொளி நாட்டியமடிக் கொண்டே பாடும் பாடல்.


https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=jGh3im8Q9l8

rajraj
14th December 2014, 10:05 AM
vasu: 'Jaane kahaan gaye woh din....' is in Shivaranjani raga, not used very much in Tamil movies ! :)

Nice song in a moving raga.

vasudevan31355
14th December 2014, 10:06 AM
விமானத்திற்குள் எடுக்கப் பட்ட பாடல்கள் என்றால் இரண்டு தான் நினைவுக்கு வருகின்றன..எழுதியதற்குப் பொருத்தமெல்லாம் இல்லை.. வேறு வேறு சூழல்களில் இருக்கும் விமானப் பாட்டுக்கள் தந்திருக்கிறேன்.

சி.க.

உங்கள் மாமியார் மரணச் செய்தியைப் படித்து சோகமானது உண்மை. விதி வலியது. யாரால் மாற்ற இயலும்? அதுவும் சடென் டெத் என்றால் ஏக டென்ஷனாகும். ஆபிஸ் கெடுபிடிகள் எங்குமே இப்படித்தானோ!பார்மாலிட்டீஸ் என்ற பெயரில் சித்ரவதைகள். ஆனால் வேறு வழியில்லை.

நான் இன்னும் விமானப் பயணம் மேற்கொண்டதே இல்லை. பாருங்கள்.. இணையத்தின் மூலம் நட்பானவர்கள் பலரும் வெளிநாடுகளில் இருக்கிறார்கள். இங்கே இந்தியாவில் ஹைதராபாத் ரவி சார் பெரும்பாலும் ஏர்போர்ட்டில் இருந்தபடியேதான் எனக்கு கால் பண்ணுவார். இரண்டு நாட்களுக்கு முன் கூட மும்பை ஏர்போர்ட்டிலிருந்து கால் பண்ணினார். கோபாலும் பலமுறை அப்படித்தான் பண்ணுவார். இப்போது கூட நெய்வேலியின் மேல் பறக்கும் குட்டி விமானத்தின் சத்தம் கேட்டு வெளியே ஓடிப் போய் அண்ணாந்து கண்டுபிடித்து பார்த்து விடுவதுண்டு. பறந்து விரிந்து அடர்ந்து கிடக்கும் மரங்களின் இடைவெளிகளுக்கு மத்தியில் இத்துன்னூண்டு கோயம்புத்தூர் போகும் விமானம் தென்படும்போது ஒரு சிறு மகிழ்ச்சிதான். சென்னை சென்றால் தலைக்கு மேலே பெரிசு பெரிசா பறக்கும் விமானங்களை பார்க்க ஆசையாய் இருக்கும். ஆனால் பிரஸ்டிஜ்? ஆசையை அடக்கிக் கொண்டே யாராவது கேலியாக நினைக்கப் போகிறார்கள் என்று மனம் முழுக்க விமானத்தை நினைத்துக் கொண்டு வெளியே பார்வையில் அலட்சிய பாவம் காட்டி நானும் நடிகர் திலகமாகி விடுவது உண்டு. கொஞ்சம் விமானம் அநதப் பக்கம் போனவுடன் ஓரக்கண்ணால் பார்த்து கொஞ்சம் திருப்திப்பட்டுக் கொள்வதும் உண்டு.

இதைச் சொல்ல என்ன வெட்கம்? எல்லோருக்கும் உள்ளதுதானே!

chinnakkannan
14th December 2014, 10:26 AM
//ஆனால் திறமை,ஈடுபாடு,தியாகம்,அறிவு,நேர்மை,தொழில் தேர்ச்சி இவையெல்லாம் வெற்றி-தோல்வி பாராமல் மனித குலத்தால் கொண்டாடி மகிழ பட வேண்டும். ஏனென்றால் ,இந்த அம்சங்கள் ஒருவனுக்கு இருந்தால் ,அவனால் சமூகம் பல விதங்களில் பயன் பட முடியும்.// கோபால் .. புதிய தொடர் ஆரம்பித்ததற்கு நன்றி..இன்னும் இன்னும் எழுதுங்கள்..

நான் இன்னும் விமானப் பயணம் மேற்கொண்டதே இல்லை. // அது சி.கவுடன் போக வேண்டும் என்று இருக்கிறது.. நேரில் சந்திக்கும் போது பேசுவோம்.. ராஜ்கபூர் பற்றி அப்புறம் எழுதுகிறேன் வாசுசார்..

Russellzlc
14th December 2014, 03:11 PM
அன்புள்ள திரு.வாசு சார் அவர்களுக்கு,

எனக்கும் நேற்று கொஞ்சம் வேலை இருந்ததால் உடனே பதிலளிக்க முடியவில்லை. மன்னிக்கவும். கடவுள் இருக்கின்றார் பாடலை தாங்கள் வர்ணித்திருக்கும் விதம் அருமை. அந்தப் பாடலை தரவேற்றியதற்கும் நன்றி.

‘புத்தன் மறைந்து விட்டான், அவன் தன் போதனை மறைகின்றதா?’ வரிகளுக்கு தங்கள் மனதில் தோன்றிய எண்ணத்தை மிகவும் ரசித்தேன். மக்களின் திலகத்தின் பாடல் வரிகள் என்றாலும் கூட, அதில் நடிகர் திலகம் அவர்களைப் பற்றிய எண்ணமே உங்களுக்கு இருப்பதன் மூலமும் தேவையின்றி அடுத்தவரை காயப்படுத்தாத உயர் பண்பின் மூலமும் திரு. சிவாஜி கணேசனின் உண்மையான ரசிகர் என்பதை நிரூபித்துள்ளீர்கள்.

எனக்கு மிகவும் பிடித்த பாடகர்களில் ஒருவரும் திரு.சின்னக்கண்ணன் சாரின் மாவட்டத்தைச் சேர்ந்தவருமான திரு.டி.ஆர்.மகாலிங்கம் அவர்களின் அற்புதமான பாடலுடன் விரைவில் வருகிறேன். நன்றி.

அன்புடன்: கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

vasudevan31355
14th December 2014, 05:46 PM
பாடல் இரண்டு
பாணி ஒன்று


தொடர் 4

நானே வருவேன்
அங்கும் இங்கும்

அடிக்கடி ஒலிக்கும் பாடலைக் கேட்டு குழம்பும் ஜெய்சங்கர். பேயா ஆவியா பிசாசா அல்லது பெண்ணா? வெள்ளை சேலை அணிந்து கொண்டு மலைப் பகுதிகளில் திரிந்தபடியே பாடும் ஜெயலலிதா. பின்னாலேயே தொடர்ந்து செல்லும் மக்கள் கலைஞர்.


https://www.youtube.com/watch?list=PLTQmfXBZrVJdRtY3WRattHFMiGc3Xv97P&feature=player_detailpage&v=sF0bRsHrRJU

அதே போலத்தான் இது.

வா அருகில் வா
தா உயிரைத் தா

என்றழைக்கும் மங்கை.

முகம் காட்டாத மங்கை வெள்ளை சேலை அணிந்து இரவில் நிலவொளியில் சவுக்குத் தோப்புகளினூடே பாடியபடி செல்ல, பின்னாலேயே பதறித் துடித்தபடி கண்டுபிடிக்கத் துரத்தும் கலைநிலவு ரவிச்சந்திரன். அந்த மங்கை வேறொருவன் அணைப்பில் மயங்கி பாடியபடி நடக்க, துரத்தும் ரவியை இன்னொருவன் துரத்த, சப்தநாடிகளும் ஒடுங்காமல் என்ன செய்யும்?


https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=pNKUrrN8WYs

vasudevan31355
14th December 2014, 05:53 PM
நன்றி கலைவேந்தன் சார்.

vasudevan31355
14th December 2014, 05:56 PM
//அது சி.கவுடன் போக வேண்டும் என்று இருக்கிறது//

ஆஹா! காத்திருக்கிறேன் சி.க.சார்.

கோபால் வியட்நாம் அழைத்துப் போக, நீங்கள் துபாய் அழைத்துப் போக, ராஜேஷ்ஜி டெக்சாஸ் அழைத்துப் போக, என் பாடு கொண்டாட்டமே. உள்ளூரிலேயே ரவி சார் வேறு திருப்பதி கூப்பிட்டிருக்கிறார்.

Russellzlc
14th December 2014, 07:39 PM
உண்மையான ரசிகன்

மீனாட்சி பாலகணேஷ்

கல்யாண மண்டபத்தின் இரைச்சலிலும், சப்தங்களிலும், உறவினர்களின் குசல விசாரிப்புகளிலும் பொழுது போனதே தெரியவில்லை. இளம் தம்பதிகளை வாழ்த்தி, பரிசையும் கொடுத்தாயிற்று. சிற்றுண்டியே பலமாக இருந்ததால், மதிய உணவுக்குக் கடைசிப் பந்திக்குப் போகலாம் என எண்ணிக் கொண்டேன். ‘வள, வள’ என அரட்டை அடிக்கப் பிடிக்கவில்லை. எல்லாத் திருமணங்களிலும், நாதஸ்வர வித்வானைத்தான் ஒருவரும் கண்டு கொள்ள மாட்டார்கள். திருமணங்களில் அவருடைய பங்கு ஒரு இன்றியமையாத கடமை. ஆனால், அவரை வாழ்த்தவும் ரசிக்கவும் ஆட்கள் அபூர்வம்- என்னைப் போல ஓரிருவரைத் தவிர!

இப்போது அவர், கொஞ்சம் ‘ரிலாக்ஸ்டாக’ ‘அலை பாயுதே’ வாசித்துக் கொண்டிருந்தார். அவர் முன்பு இருந்த காலியான ஆசனங்களில் ஒன்றில் நான் போய் அமர்ந்து கொண்டேன். இன்னும் ஒரு மனிதரும் அங்கே அமர்ந்திருந்து, தலையை ஆட்டி ரசித்துக் கொண்டிருந்தார். மெல்ல நாதஸ்வர வித்வான் வாசிப்பை நிறுத்தலாமா, இடைவேளை விடலாமா என யோசிக்கத் துவங்கும் முன்னர், அவரிடம் ஒடோடிப் போய், “ஆயிரம் கண் போதாது வண்ணக் கிளியே, பாட்டை வாசிப்பீர்களா?” என்று கேட்டேன். தன்னையும் ஒரு பொருட்டாக மதித்து வந்து ஒரு பெண்மணி ஏதோ ஒரு பாட்டைக் கேட்கிறார்களே என அவர் மகிழ்ந்து போய் விட்டார். “ஓ, கட்டாயமாக,” என்று கூறி விட்டு உற்சாகமாக வாசித்தார்.

கண்ணை மூடிக் கொண்டு, ‘தில்லானா மோகனாம்பாள்’ திரைப்படத்தில் நாதஸ்வர வித்வான் சண்முகசுந்தரம் வாசித்து ஜனங்களைப் பரவசத்திலாழ்த்தும் அந்தக் காட்சியை மனக்கண்ணில் கண்டு களித்தேன். குற்றாலமும், குறவஞ்சியும், அந்த அற்புதமான சூழலும் மனதில் தோன்றி உள்ளத்தைக் களிப்படையச் செய்தன. பாடல் முடிந்ததும், வித்வானும் குழுவும் உணவு அருந்தத் தயாராகி விட்டனர். நானும் எனது நன்றியைத் தெரிவித்தேன். “இப்பவெல்லாம் யாரம்மா ஜாஸ்தி இது மாதிரி கேட்கிறாங்க? பெரிய பெரிய வித்வான்கள் விடிய விடிய வாசித்தது, ஜனங்கள் ரசித்துக் கேட்டது, அதெல்லாம் ஒரு காலம்,” எனப் பெருமூச்சு விட்டுக் கொண்டார்.

அந்த இன்னொரு ரசிகரும் இப்பொது எழுந்து வந்து என்னுடன் உரையாட ஆரம்பித்தார். மிகவும் சிறிய வயதில் தான் கேட்ட நாதஸ்வர வித்வான்களின் வாசிப்பையெல்லாம் பற்றிப் பேசிக் கொண்டிருந்தவர் மிக சுவாரஸ்யமான ஒரு நிகழ்ச்சியைக் கூறினார்.

இந்த சென்னை 2014 டிசம்பர்- மார்கழி சங்கீத சீஸனில் இதைப் பகிர்ந்து கொள்வதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.
******

“எங்க ஊர் சுவாமி கோவிலில் திருவிழா. பெரிய பெரிய வித்வான்கள் வந்து பாடுவதும், நாதஸ்வரம் வாசிப்பதும் வழக்கம். அன்றைக்கு நாதஸ்வரச் சக்கரவர்த்தி திருவாவடுதுறை ராஜரத்தினம் பிள்ளை அவர்களுடைய நாதஸ்வரக் கச்சேரிக்கு ஏற்பாடாகி இருந்தது. அந்தக் காலத்தில் எங்கள் ஊர் சம்பிரதாயம் என்னவென்றால்,வெளியூரிலிருந்து பெரிய வித்வான் வாசிக்க வந்தால், உள்ளூர் வித்வான் அதே மேடையில் அவரை வரவேற்கிற மாதிரி முதலில் ஒரு பத்து நிமிஷம் வாசிப்பார். அதற்குப் பெயர் ‘எடுத்துக் கொடுக்கிறது’ என்பது. அதாவது பெரிய வித்வானை உள்ளூர் வித்வான் வரவேற்று, மரியாதை பண்ணி, அறிமுகம் செய்கிறது மாதிரி. அப்புறம் தான் பெரிய வித்வான் தொடர்ந்து வாசிக்க ஆரம்பிப்பார். இதெல்லாம் ராத்திரி ஒன்பது- பத்து மணிக்குத்தான் ஆரம்பம். கூட்டமான கூட்டம் ராஜரத்தினம் பிள்ளைவாளின் வாசிப்பைக் கேட்கக் கூடியிருக்கிறது.

“பிள்ளைவாளும் மரியாதையை ஏற்றுக் கொண்டு தன்னுடைய வாசிப்பைத் துவக்கியிருந்தார். என்ன ராகம் என்று நினைவு இல்லை. ஆனால் அவர் அப்போது தான் ஆரம்பித்து ‘உலாத்திக்’ கொண்டிருந்தார். அப்படி என்றால் என்ன தெரியுமா? ராகத்தை, ஆலாபனையை ஆரம்பித்து, ஒரு நாலைந்து வட்டங்களுக்குள்ளேயே திரும்பத் திரும்ப வலம் வருவார்கள். ராகத்தின் ஒவ்வொரு கூடுதல் நெளிவும் சுளிவும் மெல்ல மெல்ல வெளிவர ஆரம்பிக்கும். பின்னே? நாலைந்து மணி நேரம் அல்லவா, விடிய விடிய வாசிக்கணுமில்லையா? அதனாலே பிள்ளைவாள் ‘உலாத்தி’க் கொண்டிருந்தார். கூட்டம் இதுலேயே கிறங்கிப் போய் தலையாட்டிக் கொண்டு இருக்கிறது!

“எங்க ஊரிலே ஒரு மனுஷர்- பேரு சீதாராம ஐயர். ஒரு பரதேசி மாதிரி இருப்பார். யாரையும் லட்சியம் பண்ண மாட்டார். ஊரே பிள்ளைவாள் வாசிப்பைக் கேட்க கல்யாண வீட்டுப் பந்தலிலே கூடிக் கிடக்கிறது. இவரானால் இங்கே ஊர்க்கோடியிலே, ஏதோ ஒருத்தர் வீட்டுத் திண்ணையிலே படுத்துத் தூங்கிக் கொண்டு இருக்கிறார்! ஒருமணி நேரம் ஆயிற்று; ரெண்டு மணி நேரமும் ஆயிற்று. ஒரு மனிதனும் மூச்சு விடவில்லை; ஒரு சிறு சப்தமுமில்லை; எல்லாரும் சங்கீதத்தில் மயங்கிக் கிடக்கிறார்கள். காற்றிலே மிதந்து வரும் நாதஸ்வர இசை சீதாராம ஐயரைத் தட்டிக் கூட எழுப்ப முடியவில்லை! இப்படியும் ஒரு ஞான சூன்யமா என்று எல்லாரும் நினைத்துக் கொண்டோம்.

“கொஞ்ச நேரத்துல பிள்ளைவாள் ‘உலாத்த’லை முடித்துக் கொண்டு பிருகாக்களையும், ஸ்பெஷல் பிடிகளையும், சங்கதிகளையும் வாணவேடிக்கை மாதிரி அள்ளி விட ஆரம்பித்தார். இதுவரை யாருமே கேட்டிராத கந்தர்வ கானம் அல்லது தேவகானம் அது! கூட்டம் தேன் குடித்த நரிகள் மாதிரி மயங்கிக் கிடக்கிறது.

திடீரென்று ஒரு சலசலப்பு! பார்த்தால் அங்கே வித்வானுக்கு முன்னால் மேடையின் எதிரில் நிற்கிறார் சீதாராம ஐயர். கண்ணிலிருந்து நீர் காவேரி மாதிரி வழிகின்றது. தலை இப்படியும் அப்படியும் பிள்ளையவர்களின் நாதஸ்வரத்திலிருந்து எழும் ஒவ்வொரு சங்கதிக்கும் ஆடுகின்றது.

பிள்ளைவாளும் வாசிப்பின் இடையிடையே இவரைப் பார்த்துக் கொள்கிறார். முழுமையாக வாசித்து முடித்தவர் அப்படியே எழுந்து போய் – அவர் கண்களிலும் நீர் வழிகிறது- சீதாராம ஐயரை ஆலிங்கனம் செய்து கொள்கிறார்- “நீர் தானய்யா உண்மையான, பரம ரசிகன்!” என்று கூறுகிறார். கூட்டம் பிரமித்துப் போய் அப்படியே உட்கார்ந்திருக்கிறது …………………..”

ஆமாம். அருமையான இசையை எல்லாராலும் கேட்டு அனுபவிக்க முடியும். ஆனால் கந்தர்வ கானத்தையும் தெய்வீக இசையையும் உணர்ந்து அனுபவிக்க சீதாராம ஐயர் போன்றவர்களால் தான் இயலும். அதையும் அந்த இசையின் பிறப்பிடமான ராஜரத்தினம் பிள்ளையவர்கள் போன்ற வித்வானால் தான் இனம் கண்டு கொள்ள முடியும் என்பதற்கு இது ஒரு சான்று அல்லவா !
******

நானும் ஒரு அழகான ராகப் பிரயோகத்தைக் கேட்டதைப் போல இந்தக் கதையைக் கேட்டு விட்டு, உவகையில் நிறைந்து பொங்கிய உள்ளத்துடன் செவிக்குணவில்லாத போது சிறிது வயிற்றுக்கும் ஈயலாமே எனச் சாப்பாட்டுக் கூடத்தை நோக்கி என் கணவருடன் விரைந்தேன்.

courtesy - net

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

rajraj
14th December 2014, 08:35 PM
ராஜேஷ்ஜி டெக்சாஸ் அழைத்துப் போக, என் பாடு கொண்டாட்டமே.

If Rajesh brings you to Texas make sure he brings you to my place. There is a lot to see here! :)

chinnakkannan
14th December 2014, 09:53 PM
கோபால் வியட்நாம் அழைத்துப் போக, நீங்கள் துபாய் அழைத்துப் போக,// துபாய் இல்லீங்க வாசு சார். மஸ்கட். இங்கிட்டிருந்து வேணும்னா துபாய் போய்க்கலாம்..! உள்ளூர் என்றால் டெல்லி காஷ்மீர் அல்லது பாக்டோக்ரா டார்ஜிலிங்க் ( இந்த வருடம் போய்வந்திருந்த இடம்) அழகு இடங்கள்..

கலைவேந்தன் சார்.. நீங்கள் பதிந்திருந்தது தி.ஜானகிராமனின் சாந்தி (வேறு பெயரா) சிறுகதையை நினைவு படுத்தியது..அதிலும் இது போலத் தான்..

நானே வருவேன் வா அருகில்வா படங்களில் எல்லாம் பெண்கள் பாடுவது போலப் பேய்க் காட்சி..இங்கு பாடுவது ஆண்..பார்த்து உடன் ஆடுவது..ம்ம் பேய்..அது பாடுபவனுக்கும் நமக்கும் தெரியாது அடுத்த காட்சிகள் வரும் வரை ! படம் யாமிருக்க பயமே..(பார்க்கவில்லை என்றால் பார்க்கலாம் வாசு சார்..)


http://www.youtube.com/watch?v=68VniZbcNIA&feature=player_detailpage

rajeshkrv
15th December 2014, 01:03 AM
பாடல் இரண்டு
பாணி ஒன்று


தொடர் 4

நானே வருவேன்
அங்கும் இங்கும்

அடிக்கடி ஒலிக்கும் பாடலைக் கேட்டு குழம்பும் ஜெய்சங்கர். பேயா ஆவியா பிசாசா அல்லது பெண்ணா? வெள்ளை சேலை அணிந்து கொண்டு மலைப் பகுதிகளில் திரிந்தபடியே பாடும் ஜெயலலிதா. பின்னாலேயே தொடர்ந்து செல்லும் மக்கள் கலைஞர்.


https://www.youtube.com/watch?list=PLTQmfXBZrVJdRtY3WRattHFMiGc3Xv97P&feature=player_detailpage&v=sF0bRsHrRJU

அதே போலத்தான் இது.

வா அருகில் வா
தா உயிரைத் தா

என்றழைக்கும் மங்கை.

முகம் காட்டாத மங்கை வெள்ளை சேலை அணிந்து இரவில் நிலவொளியில் சவுக்குத் தோப்புகளினூடே பாடியபடி செல்ல, பின்னாலேயே பதறித் துடித்தபடி கண்டுபிடிக்கத் துரத்தும் கலைநிலவு ரவிச்சந்திரன். அந்த மங்கை வேறொருவன் அணைப்பில் மயங்கி பாடியபடி நடக்க, துரத்தும் ரவியை இன்னொருவன் துரத்த, சப்தநாடிகளும் ஒடுங்காமல் என்ன செய்யும்?


https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=pNKUrrN8WYs

onnu kaviyarasar, onnu vaali ayya rendume isaiyarasi kuralil azhagu paadal

rajeshkrv
15th December 2014, 06:45 AM
If Rajesh brings you to Texas make sure he brings you to my place. There is a lot to see here! :)

sure . sure

vasudevan31355
15th December 2014, 09:47 AM
ஸ்பெஷல் பதிவு.

http://www.photofast.ca/files/products/5937.jpg

'காதல் ஜோதி' படத்தின் காட்டருவி வேகப் பாடல்

'சாட்டை கையில் கொண்டு
வாங்கக் கண்டு காளை ரெண்டு
ஓடுது பாரு சீறுது பாரு
பாயுது பாரு பறக்குது பாரு'

(அம்மாடி! எத்தனை 'ரு')

ரயில் வந்து கொண்டிருக்கிறது. ரெட்டை மாட்டு வண்டி ஒன்று சாலையில் 'ஜல் ஜல்' சப்தத்துடன் வீறு கொண்டு வேகமெடுத்து ஓடுகிறது. உள்ளே பனியன் தெரியும் கைகள் மடித்துவிடப்பட்ட ஜிப்பா ஒன்றை அணிந்து கொண்டு கழுத்தில் டை ஸ்டைலில் கர்சிப் ஒன்றை கட்டி, மைனர் செயினுடன் அந்த கட்டிளங்காளை மைனர் மிக மிக உற்சாகமாய் மாடுகளை சாட்டை கொண்டு விரட்டியபடியே வண்டியோட்டிப் பாடுகிறான். மாட்டு வண்டியின் வேகத்தை மிஞ்சும் வகையில் அவனது பாடல் இன்னும் வேகப் பிரவாகமெடுக்கிறது.

மழை பெய்து சாலைகளில் தண்ணீர் தேங்கி நிற்க, அதையெல்லாம் தாண்டி அவன் மாட்டு வண்டி பறக்கிறது. பனை மரங்கள் படுவேகமாய் பார்வையில் இருந்து மறைகின்றன.

ஆப்பக்கூடை சுமந்தபடி ரோடின் நடுவே ஒய்யார நாடி நடக்கும் ஆப்பக்காரி அங்கமுத்து, வண்டியின் 'ஜல்ஜல்' சப்தம் கூடத் தெரியாமல் ஒரு இளம்பெண்ணை ஃபாலோ செய்யும் மைனர் இவர்களை செல்லமாகக் கடிந்தபடியே வண்டியை ஓட்டுகிறான் நம் காளை.

ஆட்டம் போட்டு வரும் ஆப்பக்காரம்மா
ரோட்டு ஓரம் கொஞ்சம் பார்த்துப் போங்கம்மா
நோட்டம் போட்டு வரும் மைனர் யாருங்க
ஓரப் பார்வை கொஞ்சம் மாத்திப் பாருங்க
பாட்டன் போட்ட ரோட்டைப் போல
எண்ணிக்கிட்டுப் போறாங்க
வீட்டுக்குள்ளே வச்சுக்காம
ரோடு வரை வாராங்க'

என்று 'ஜனங்களுக்கு பொது அறிவு இன்னும் வரவில்லையே' என்று சலித்துக் கொள்கிறான் அவன்.

வழியில் மறுபடி ஒரு தடங்கல். ஆட்டுக் கூட்டத்தை மேய்த்துக் கொண்டு ஆடோட்டி ஒருவன் புல்லாங்குழல் வாசித்தபடி நடந்து செல்ல ஆட்டுக் கூட்டம் பாதை மறிக்க, காத்து வேகத்தில் வந்த காளைகள் தவிக்க, நம் மைனர் காளை மாட்டு வண்டியில் மூக்குக் கயிற்றை இழுத்து வைத்து ஒரு பிரேக் போடுகிறான்.

ஆடு மேய்ப்பவனுக்கு அட்வைஸ் செய்து விட்டு

'ஆட்டுக் கூட்டம் வந்து பாதை மறிக்குது
காத்து வேகம் வந்த காளை தவிக்குது
மூக்குக் கயித்துல பிரேக்கப் போடுறேன்
ஆட்ட ஓட்டுய்யா... மாட்ட ஓட்டுறேன்'

என்று தொடர்கிறான்.

'மோட்டார் என்ன சைக்கிள் என்ன
எல்லாம் எனக்குப் பின்னாடி
போட்டா போட்டி வச்சால்
இங்கே நான்தான் போவேன் முன்னாடி'

'என் வேகத்துக்கு எவரும் இல்லை ஈடு' என்று கர்வம் கொண்டு கானம் இசைக்கிறான்.

என்ன அழகான பாடல்! என்ன பொருத்தமான இசை! சீர்மிகு சீர்காழியின் 'கணீர் கணீர்' வெண்கலக் குரல். அழகான ரவி முறுக்கு மீசையுடன் மைனர் செயின் சதம் கிளி, ஜிப்பா இத்யாதிகளுடன் கிராமத்துக் காளையாக மாட்டு வண்டி ஓட்டும் நேர்த்தி. விறுவிறு பாடல். காளைக்கு மூச்சிரைப்பது போல நமக்கு இந்தப் பாடலை சீர்காழி பாடி கேட்கும் போது மூச்சு முட்டுகிறது. அவ்வளவு வேகமான பாடல். மாட்டு வண்டியுடனே பயணித்து வரும் ரயிலின் சப்தம் சிறப்பாகக் கையாளப்பட்டிருக்கிறது.

ஆட்டுக் கூட்டம் பாதை மறிக்கும் போது ரவி 'ஹொஹொஹோஹோ' என்று மூக்கணாங் கயிற்றை இழுத்து காளைகளை நிறுத்துமுன் இயல்பான வண்டிக்காரன் நாக்கால் தரும் சப்தம் அழகாகப் பதிவாகி இருக்கும்.

பேக் புரஜெக்ஷன் சித்து வேலைகள் இல்லாமல் நேரிடியாக ரோட்டிலேயே இப்பாடல் காட்சி படமாகியிருக்கும். ரவியே பெரும்பாலும் வண்டி ஓட்டி வருவார். வண்டி சில இடங்களில் அப்படியே நின்று கொண்டிருப்பதைத் தவிர்த்திருக்கலாம்.

'சாட்டை கையில் கொண்டு வாங்கக் கண்டு காளை ரெண்டு' என்ற பல்லவியின் வரிகளை ஒவ்வொரு முறை கேட்கும் போதும் உற்சாகம் நமக்குள் பீறிடும்.

பாடலின் முடிவில் சீர்காழி அவருக்கே உரித்தான ஸ்டைலில் 'லால லல்லலல்லா லால லாலோ' என்று 'லோ' வில் முடிப்பது பாடலை இன்னும் எங்கோ தூக்கிக் கொண்டுப் போய் விடும். இடையில் ஒவ்வொரு முறையும் அந்த ரயில் சப்தம் மட்டும் வெகு பொருத்தமாய் ஒலிக்கும்.

மெல்லிசை மன்னர்களில் ஒருவரான டி .கே.ராமமூர்த்தி இந்தப் பாடலை அருமையான நாட்டுப்புற மெட்டில் தந்து அசத்தியிருப்பார். மிக மிக வித்தியாசமான ஃபாஸ்ட் டிராக் டியூன். எளிமையான வரிகள். ஆனால் பாடலைப் பாடுவது மிகவும் கஷ்டம்.

பாடலை அனுபவிக்க 3.30 இலிருந்து 6.50 வரை.


http://www.dailymotion.com/video/xtowsn_dvd-rip-kathal-jothi-1970-xvid-1-39gb_shortfilms

rajeshkrv
15th December 2014, 11:06 AM
வணக்கம் வாசு ஜி

காதல் ஜோதி பாடல்கள் அனைத்தும் அருமையானவை

vasudevan31355
15th December 2014, 12:06 PM
ஹலோ ராஜேஷ்ஜி! வணக்கம். சௌக்கியம்தானே?

vasudevan31355
15th December 2014, 12:06 PM
ஜி! தேவா தொடர் முடிந்து விட்டதா?

kalnayak
15th December 2014, 12:13 PM
அனைவருக்கும் வணக்கம்!!!

vasudevan31355
15th December 2014, 01:07 PM
பாடல் இரண்டு
பாணி ஒன்று

தொடர் 5

மனைவி இல்லாத மாணிக்க நாயகர்கள்.

மனைவியை இழந்த இந்த நாயகன் தன் பேச முடியாத ஊமை மகனோடு ஊர் ஊராக அலைய, தஞ்சம் கொடுக்கிறாள் அந்த சுந்தரக் கன்னி. மகனிடம் நேரடிப் பாசத்தையும், தந்தையிடம் மறைமுகக் காதலையும் கா(கொ)ட்டுகிறாள் அவள்.

'நித்திரையில் வந்து
நெஞ்சில் இடம் கொண்ட
உத்தமன் யாரோடி
தோழி'

அவள் விரகதாபம் கொண்டு தன் காதலை அவனிடம் வெளிப்படுத்த எத்தனிக்க,

இறந்த தன் மனைவி மீது இன்னும் மாறா அன்பு வைத்திருக்கும் அவன் அந்தக் கன்னியின் காதலை மறுக்கிறான். வாழ்க்கையை வெறுத்துப் பாடுகிறான்.

'நிலவே என்னிடம் நெருங்காதே
நீ நினைக்கும் இடத்தில் நான் இல்லை'

என்று மனம் வெறுத்துப் பாடுகிறான்.

'கோடையில் ஒரு நாள் மழை வரலாம்
என் கோலத்தில் இனிமேல் எழில் வருமோ?'

'நிம்மதி இழந்து நான் அலைந்தேன்
இந்த நிலையில் உன்னை ஏன் தூது விட்டான்?'

என்று மனம் வெதும்புகிறான். அவன் மனம் கண்டு அந்தப் பேதை தவிக்கிறாள்.

ஜெமினி, விஜயா நடித்த 'ராமு' படத்தில் பி.பி.ஸ்ரீனிவாஸ் பாடிய காலத்தால் அழிக்க முடியாத கணம். ஜெமினியின் சோகம், விஜயாவின் தாபம் அருமை.


https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=F0xW0-EfOrQ


இந்த நாயகர் மனைவி இருந்தும் இழந்தவர். இவர் ஒரு போலிஸ் அதிகாரி. ஆனால் சிறு வயதில் சில திருட்டுத் தொழில்கள் செய்துதான் வாழ்க்கையில் இவர் முன்னேற வேண்டி இருந்தது. ஆனால் அவர் குற்றவாளி அல்ல. அவர் இப்போது கண்ணியமான கடமை தவறாத போலீஸ் அதிகாரி. இவர் மனைவி மிக நேர்மையானவள். கண்டிப்பானவள். ஒரு சந்தர்ப்பத்தில் தந்து கணவன் சிறு வயதில் குற்றங்கள் புரிந்தவன் என்று தெரிந்துவிட அதனால் கொதிப்படைகிறாள். தன் கணவன் மீது வெறுப்படைகிறாள். கணவன் இப்போது நல்லவன் ஆயினும் அவனை அவள் மன்னிக்கத் தயாராய் இல்லை. கணவனை விட்டு பிரிகிறாள். அவர்களுக்குப் பிறந்த மகன் இப்போது தந்தையோடு. நாயகனோ மனசாட்சி கேட்காமல் வேலையை துறந்து ஒரு தேயிலை எஸ்டேட்டில் பொறுப்பான வேலைக்கு சேர்கிறான்.

போன கதை போலவே இந்த நாயகன் வாழ்விலும் இங்கு ஒரு இளம்பெண் குறுக்கிடுகிறாள். அதுபோலவே குழந்தையுடன் பாசம் காட்டுகிறாள். அந்தக் கதையில் வருவது போலவே நாயகனை விரும்புகிறாள் வயது வித்தியாசங்களையும் மீறி. தன் மனதிலுள்ள காதலை இந்த இளம் மங்கை நாயகரின் குழந்தையை கொஞ்சுவது போலப் பாடி சூசகமாகவும், நாசூக்காகவும் தன் மனதிலுள்ள காதலைத் தெரியப்படுத்துகிறாள்.

'வாடா என் ராஜா கண்ணா
வாடாத ரோஜாப் பூவே
தாயும் இங்கே
தந்தை இங்கே
யாரும் பெற்றால்தானா பிள்ளை கண்ணா?!

மன்னனைப் போல் தந்தை பக்கம் ராணி இல்லை
கண்ணனைப் போல் தேவன் பக்கம் ராதை இல்லை
ஊமை நெஞ்சில் கோடி எண்ணம்
தேவன் வந்தால் கோபம் கொள்வான்
ஏழைக் கனவே காலம் வருமா
என்றாவது வந்தால் அதைக் கொண்டாடும் நெஞ்சம்'.

என்று ஏங்கி நாயகன் சம்மதிப்பானா என்று ஏக்கம் கொள்கிறாள்.

'ரிஷிமூலம்' படத்தில் இளையராஜாவின் இசையில் மிக மிக அற்புதமான பாடல் இது. ரீனாவும் அமர்க்களம்.

இப்போது எனக்காக. ப்ளீஸ்!

இப்போது என் திருப்திக்குக் கொஞ்சம் எழுதிக்கவா? எழுதாம இருக்க முடியலையே! புத்தி முழுக்க அங்கேதானே போகுது.:)

இப்படத்தின் நாயகர் நடிகர் திலகம். ரீனா சாரதாப்ரீதா குழந்தையுடன் கொஞ்சியபடியே தன் காதலை நடிகர் திலகத்திடம் நயமாக வெளிப்படுத்த, அதைப் புரிந்து கொண்ட நடிகர் திலகம் தரும் ஒவ்வொரு போஸையும் பாருங்கள். அசந்து அசந்து போவீர்கள். 'வாடா என் ராஜாக் கண்ணா' முதல் வரியின் போது பூவாளியில் பூஞ்செடிகளுக்கு தண்ணீர் ஊற்றும் நடிகர் திலகம் வாயில் 'தம்'முடன், கையில் பூவாளியுடன், கண்களில் கையகல கூலிங் கிளாஸுடன் 'டக்'கென்று திரும்பி அளிக்கும் அந்த 'போஸை'க் கவனியுங்கள். 'வாடா என் ராஜாக் கண்ணா' வரியை இரண்டாவது முறை ரீனா பாடும் போதும் வெகு ஸ்டைலாக 'தம்'மை வாயிலிருந்து எடுப்பார். அந்த போஸ் ஒரு செகண்ட். இந்த போஸ் ஒரு செகண்ட். ஆனால் ஈரேழு ஜென்மம் எடுத்தாலும் மறக்க இயலாத போஸ்கள். 'வாடாத ரோஜாப்பூவே' எனும் போது மறுபடியும் ஸ்டைலாக சிகரெட்டை வாயில் வைப்பார். நிற்கும் போஸ் அபாரமாக இருக்கும். பல்லவி முடிந்து இடையிசை வரும்போது ரீனா ஆடிக் கொண்டிருப்பார். அப்போது நடிகர் திலகம் 'இன்' பண்ணிய ஸ்டைலான உடையுடன் இடுப்பில் கைவைத்து மகா மெகா ஸ்டைலாக நிற்பதைப் பார்க்க வேண்டுமே. அத்தனை கண்களும் பட்டுவிடும்.

ஆனால் ரீனாவின் ஆசை அறிந்து, புரிந்து, முகத்தில் 'நீ நினைப்பது நடக்காத, முடியாத காரியம்' என்று வெகு ஈஸியாக பார்வையாலேயே எக்ஸ்பிரஷன்ஸும் காட்டி விடுவார்

அப்பாடா! இப்பத்தான் முழுத் திருப்தி.


https://www.youtube.com/watch?v=kcvBFu3bbCs&feature=player_detailpage

vasudevan31355
15th December 2014, 01:15 PM
வணக்கம் கல்நாயக்.

chinnakkannan
15th December 2014, 01:31 PM
ஹாய் ஆல்

காதல் ஜோதியும் வாடா என் ராஜாக்கண்ணாவையும் இனிமேல் தான் பாக்கணும் வாசு சார்.. பாட் கேட்டது வெகுகாலத்துக்குமுன் ரிஷிமூலம் பார்த்தப்ப.. பார்த்தது மதுரையிலில்லை..கோயம்புத்தூர்!

ஆமா..இது மாலை நேரத்து மயக்கம் நடிப்புச் சுடர் பாட்டும் இதே மாதிரி தானா?

*

vasudevan31355
15th December 2014, 01:40 PM
ஆமா..இது மாலை நேரத்து மயக்கம் நடிப்புச் சுடர் பாட்டும் இதே மாதிரி தானா?

*


வணக்கம். சி.க.சார்.

கிட்டத்தட்ட அது குடும்பப் பிரச்சனைகளை சமாளிக்க முடியாமல் மனைவி, மக்கள், அன்னை, தந்தை, சகோதரர்களை விட்டுவிட்டு வாழ்க்கை வெறுத்து ஓடிய, வாழ்க்கையில் பிடிப்பிழந்த ஒரு இயாலதவனின் சோகம் சி.க.சார். இன்னொருத்தி (என் பிரிய சைலஸ்ரீ) லட்டு மாதிரி கிடைத்து ஆசையை பகிரங்கமாகவே வெளியிட்டாலும் (முனிவன் மனமும் மயங்கும் பூமி... மோக வாசல்தானே!?) இது கொஞ்சமும் மசியாத கட்டை. முன்னால் சொன்ன அந்த இருவரும் கட்டுப்பாடு. இது கிட்டத்தட்ட சந்நியாச கேஸ். அவ்வளவே!

kalnayak
15th December 2014, 01:50 PM
நேற்று சென்னையில் மாநகரப் பேருந்தில் பிரயாணம்.

https://www.youtube.com/watch?v=aR9ul7u7HmU

என்னைத் தேடியவர்களிடம் மாட்டிக் கொண்டுவிட்டேன். நடந்த உரையாடல் இதோ:

"நாங்கள் தேடுவதையெல்லாம் திரியில் ஏன் எழுதுகிறாய்?" அவர்கள் கேட்க.

நான் "ஒரு நகைச்சுவைக்காக." என்று சொல்ல.

அவர்கள் "இதில் ஏது நகைச்சுவை? ஆமாம் நீ ஏன் மொக்கை ஜோக்கையெல்லாம் பதிகிறாய்?"

நானும் விடாமல் "எனக்குத் தெரிந்த மொக்கைச்சாமி, ஜோக்கெல்லாம் சொல்லமாட்டாரே!!!" என்று சொல்ல.

அவர்கள் "டேய்!!!" எனக் கதற.

"இல்லைங்க ஜோக் சொல்லத்தெரிந்த மொக்கைச்சாமியையோ இல்லை மொக்கைராசுவையோ எனக்குத் தெரியாது. நான் எப்படி அவர்கள் ஜோக்கை சொல்லமுடியும்?" எனத் திருப்பிக் கேட்டேன்.

இது மதுரகானம் திரி. அதனால் இதோ அடுத்த பாட்டுபோட்டுக்கறேன்:

https://www.youtube.com/watch?v=ZK5iYt-YqoA

அவர்கள் "நீ அடி வாங்க ஓயமாட்டே" என்றார்கள்.

"நாம என்ன கவுண்டமணி, செந்திலா - அடி வாங்கற ஜோக் சொல்ல?" என்றேன் பதிலுக்கு.

"ஏன் சொல்லிப்பாரேன்" என்றார்கள்

"இல்லைங்க. திரியில் சந்திரபாபு, நாகேஷ் ஆக்ஷ்ன் காமெடி செய்ய முடியாது."

"அதனால?"

"வெண்ணிற ஆடை மூர்த்தி ..." என்றேன்.

"டேய் நிறுத்து. திரிக்கு பெண்கள் வர்ராங்க. நீ இரட்டை அர்த்த காமெடி பண்ணுவியா?" என்று எகிறினார்கள்.

"இல்லைங்க. அவர் போல கொஞ்சம் கூட என்னால் இரட்டை அர்த்தத்துல பேசவராதுன்னு சொல்ல வந்தேன்"

"நீ பண்ண குசும்பெல்லாம் எங்களுக்கும் தெரியும்டி. யாரு கிட்ட கதை விடற. சரி நீ வேற யார் போல காமெடி பண்ணப்போற?"

"எனக்கு யாரைப்போலவும் மட்டுமில்லை, நானாவும் காமெடி பண்ணத் தெரியாது. அதனால் எங்க நண்பர் மற்றும் அண்ணன் ராஜண்ணனின் காமிக் காட்சிகளை பகிர்ந்துக்கறேன்"

அதுக்கு மின்னாடி ஒரு பாட்டு

https://www.youtube.com/watch?v=NW1TE_qz_Jw

kalnayak
15th December 2014, 02:04 PM
"ராஜண்ணா 1988-ல் முதன்முதல் சென்னைக்கு வந்து LIC போவதற்கு ஒரு மாநகர பல்லவன் பஸ்ஸில் ஏறினார். அவருக்கு முன்னால் நின்றிருந்த ஒரு பெண் 'சாந்திக்கு ஒரு டிக்கெட் கொடுங்க' என்றாள். அடுத்து ஒருவர் 'ஆனந்துக்கு ஒரு டிக்கெட் கொடுங்க' என்று டிக்கெட் வாங்கினார்கள். "

"நிறுத்து. உங்க ராஜண்ணா 'ராஜண்ணாவுக்கு ஒரு டிக்கெட் கொடுங்க'-ன்னு கேட்டாராக்கும்?"

"ஆமாங்க. அதெப்படி உங்களுக்குத் தெரியும்?" என்றேன்.

"அந்த அறுதப்பழசு ஜோக்க, உங்க ராஜண்ணா ஜோக்குன்னு சொல்றியா? ஆமாம். உங்க ராஜண்ணாவைப் பார்த்து பஸ்ல போனவங்க எல்லாம் சிரிச்சுருப்பாங்களே?"

"இல்லை. கண்டக்டர் 'அந்த ஸ்டாப் எங்கிருக்குன்னு எனக்குத் தெரியலை. பஸ் அங்க போகலை'ன்னு சொல்லி இறக்கி விட்டுட்டு போயிட்டார்."

"இதுல எங்க காமெடி?" என்றார்கள்.

"கொஞ்சம் பொறுங்க" என்று விட்டு, "பஸ்-ஸ்டாப்ல இருந்த நான் அடுத்துக் கூட்டமா இருந்த பஸ்-ல ராஜண்ணாவை ஏற்றி அனுப்பினேன்."

"சரி"

"அண்ணன் படியில் நிற்க முடியாமல் நின்று கொண்டு பக்கத்தில் இருந்தவரிடம் 'கொஞ்சம் தள்ளுங்க' என்றிருக்கிறார்.
அந்த ஆள் எந்த கடுப்பிலிருந்தாரோ என்னவோ தெரியவில்லை. அண்ணனை பஸ்ஸை விட்டு வெளியே தள்ளி விட்டுவிட்டார்"

"ஐயையோ அப்புறம் என்னாச்சு?"

"அப்புறம் அண்ணன் எங்க LIC போறது?" என்றேன்.

"சரி ஜோக் சொல்றேன்னு சொன்னியே. சொல்லு" என்றார்கள்.

"என்னங்க நீங்களும் 'நம்மவர்' கமல்ஹாசன் மாதிரியே ஜோக் கேக்கறீங்க. இருந்தாலும் பொருத்தமான இந்த பாட்டைக் கேளுங்க" என்றேன்.

https://www.youtube.com/watch?v=4my_iti2O0Q

kalnayak
15th December 2014, 02:59 PM
"சரி, நீங்க சிரிக்கற மாதிரி இப்பவாவது சொல்றேனா கேளுங்க" என்று ஆரம்பித்தேன்.

"உனக்கு இது கடைசி வாய்ப்பு" என்றார்கள்.

"அப்படின்னா அதுக்கு முன்னாடி இந்த பாட்டைக் கேட்டுடுங்க" என்றேன். இந்தாங்க:

https://www.youtube.com/watch?v=flqqVer1yhY


"ராஜண்ணாவும் நானும் வங்கியில் புதிதாய் சேமிப்புக் கணக்கு துவங்கப்போனோம். வங்கி மேலாளர் டாம்பீகமான உடையணிந்து கழுத்தில் டையுடனும், காலில் ஷூ அணிந்திருந்தார்.

அவரைப் பார்த்தவுடன் அண்ணன் மெள்ள என்னிடம் சொன்னார் - 'நாம வங்கிக் கணக்கு ஆரம்பிப்பதை ஆங்கிலத்தில் இவரிடம் சொல்லி கேட்கணும்டா.' என்றார்.

'அதை எப்படிண்ணே ஆங்கிலத்தில் கேட்பது?' என்றேன்.

' தமிழில் எப்படி கேட்போம்?' எனக் கேட்டார்.

'நான் ஒரு கணக்கு ஆரம்பிக்கணும். உதவுங்க' எனக் கேட்கணும் என்றேன்.

அதையே ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து - 'ஐ வாண்ட் டு ஸ்டார்ட் எ மேதமேடிக்ஸ். ஹெல்ப்'-ன்னு கேட்போம் என்றார்.

சொல்லிவிட்டு அவர்கள் முகங்களையே பார்த்தேன்

"சரியாத்தானே சொல்லியிருக்கார்" என்று சொல்லி என்னை ஏறஇறங்கப் பார்த்தார்கள்.

நான் பயந்து பஸ்ஸிலிருந்து இறங்கித் தப்பித்து ஓடி வந்துவிட்டேன். அப்பாடா.

சிலர் இந்த பாட்டை சொல்லவில்லையென்று கோபித்துக் கொள்ளக்கூடும். அதனால்...

https://www.youtube.com/watch?v=YUJNVuA8fpk

chinnakkannan
15th December 2014, 04:32 PM
கல் நாயக் சார்..ஒரேபஸ் பாட்டா பூந்து விளையாடியிருக்கீங்க.. குட்அண்ட் தாங்க்ஸ்.. (என்கண்மணி, வளையோசை,மைனா, ஜன்னலோரம் (கேட்டிருக்கேன் ஆனா இப்ப மறந்து போச்சு).. காதலன்ல ஊர்வசியவிட எர்ராணி கொர்ரதண்ட கோபாலா பிடிக்கும்....ம்ம் அந்த திருடா திருடிப் பாட்ட விட்டுட்டீங்க..ஜோக்ஸ் சிலவை கொல் சிலவை கக் சிலவை சீர்ரியஸ்..:) அடுத்து ரயிலாக்கும்.. நடத்துங்க நடத்துங்க..

kalnayak
15th December 2014, 05:30 PM
சி.க.
அயல் நாட்டில் நேர்ந்த தங்கள் மாமியாரின் மரணமும், அதனால் தாங்கள் பட்டபாடும் நெஞ்சை கணக்கச் செய்தது.

உங்கள் விமான அனுபவமும் அதற்கேற்றார் நீங்கள் போட்ட 'ஓ மானிட ஜாதியே ...' பாட்டும், ஏற்கனவே நான் நகைச்சுவை பதிவுடன் கோர்த்து வைத்திருந்த பஸ் பாட்டுக்களை உடனடியாக எழுத தூண்டியது.

நகைச்சுவை இல்லாவிட்டாலும் பரவாயில்லை, எல்லோரும் மற்ற பஸ் பாட்டுக்களை எழுதலாமே.

என்ன இரயில் பாட்டுக்கள் வேணுமா? நான் இரயிலில் அடி வாங்கணும்னு நெனக்கறீங்க. அப்படித்தானே?

vasudevan31355
15th December 2014, 06:39 PM
கல்நாயக்,

இந்தாங்க சில பஸ் பாடல்கள்.

'மெட்ராஸ் டு பாண்டிச்சேரி' படத்தில் 'எங்கே? பயணம் எங்கே? பயணம் எங்கே?' ரவி பாடும் பாடல்.


https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=z5DfTfRRv2M

'திருடா திருடி' படத்தில் தனுஷ் மற்றும் சாயாசிங் இருவரும் மங்கள வார்த்தைகளால் ஒருவரை ஒருவர் அர்ச்சித்துக் கொள்ளும் அலம்பல் பாடல். 'உன்னைப் பார்த்த பிறகுதான் என் சோதனை காலம்'. எனக்கு ரொம்பப் பிடிக்கும். தனுஷ், சாயாசிங் இருவருமே அட்டகாசம்.


https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=ZcODtQsw5QQ

vasudevan31355
15th December 2014, 06:46 PM
இதோ இன்னொரு பஸ் பாடல்.

'மீரா' திரைப்படத்தில் விக்ரம், ஐஸ்வர்யா பங்கு பெற்ற பாடல்.

' ஹொய்யா ஹொய்யார ஹொய்யா'

'புது ரூட்டுலதான்
நல்ல ரோட்டுலதான்
நின்றாடும் வெள்ளி நிலவு'


https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=rk3KLBLdwZQ

rajeshkrv
15th December 2014, 09:02 PM
ஜி! தேவா தொடர் முடிந்து விட்டதா?

இல்லை இல்லை. இப்பொழுதுதானே 1993’ல் இருக்கிறோம். இன்னும் நிறைய முத்துக்கள் எடுக்கவேண்டுமே
கொஞ்ச கவனம் சிதறல் அதனால் தொடர் எழுத இயலவில்லை.
எழுதுகிறேன் இன்றோ நாளையோ காத்திருங்கள்

rajeshkrv
15th December 2014, 09:54 PM
இதோ சில பேருந்து பாடல்கள்

https://www.youtube.com/watch?v=r_XPDHuiVxk


https://www.youtube.com/watch?v=yDXzct9gCcw

https://www.youtube.com/watch?v=uIpfjINgJXc

RAGHAVENDRA
15th December 2014, 10:29 PM
கல்நாயக் சார்
பஸ் பாட்டு தொகுப்பும் பாடல்களும் அருமை. நல்ல செலக்ஷன்.
கழுகு படத்தில் பஸ்சில் பாடும் ஒரு பாட்டு உள்ளதா..

RAGHAVENDRA
15th December 2014, 10:31 PM
பொங்கும் பூம்புனல் - துயிலூட்டும் தொண்ணூறு

வாசு சார் நிச்சயம் 80களுக்கென தனித் தொகுப்பை கொண்டு வந்து விடுவோம்.

தொடர்ந்து..

கங்கைக்கரை பாட்டு திரைப்படத்தில் தேனிசையாக தேவா இசையில் ஒரு பிருந்தாவனத்தில் நந்தகுமாரன் குழலோசை..

எஸ்.பி.பி. சித்ரா குரல்கள் சொக்க வைக்கும் இனிமை..

http://www.mayuren.org/site/mayurengorg/1Tamil/Movie%20A%20-%20Z%20Collection/G/Gangai%20Karai%20Paattu

RAGHAVENDRA
15th December 2014, 10:47 PM
பொங்கும் பூம்புனல் - துயிலூட்டும் தொண்ணூறு

தொடர்வது ஆதித்யன் இசையில் அசுரன் படத்திலிருந்து

ஓ... வான்மதி...

உன்னி கிருஷ்ணன் சங்கீதா சுஜீத் குரல்களில்

http://play.raaga.com/tamil/album/asuran-t0000523

RAGHAVENDRA
15th December 2014, 10:52 PM
பொங்கும் பூம்புனல் - துயிலூட்டும் தொண்ணூறு

90களில் வெளிவந்த ஜீவனுள்ள பாடல்களில் ஒன்று சௌந்தர்யன் இசையில் சேரன் பாண்டியன் திரைப்படத்தில் இடம் பெற்ற காதல் கடிதம் வந்ததா பாடல்..

சௌந்தர்யன் அவர்களின் இசைக்கெனத் தனி ரசிகர் பட்டாளமே உருவானது இந்தப் பாடலால்..

மறக்க முடியாத இனிமயான பாடல்..

காதல் கடிதம் வரைந்தேன்..

https://www.youtube.com/watch?v=JhBiOhrSx_c

RAGHAVENDRA
15th December 2014, 11:04 PM
பொங்கும் பூம்புனல் - துயிலூட்டும் தொண்ணூறு

நட்புக்காக திரைப்படத்தில் தேவா இசையில் கருடா கருடா என் காதலை சொல்லி விடு பாடல். குரல்கள் கிருஷ்ணராஜ், சுஜாதா. பாடல் காளிதாசன்

http://play.raaga.com/tamil/album/Natpukkaga-T0000900

Gopal.s
16th December 2014, 03:56 AM
வாசு ,

தங்களை தொடரும் நிரந்தர ரசிகர்களில் ஒருவன் நான். என்னை வரவழைக்க ஒரு பதிவா ,என்று யோசித்த போது சாட்டை கையில் கொண்டு விட்டீர்கள். நான் ஓடி வருவதை தவிர வேறு வழி?

வண்டி பாடல்கள், அது சார்ந்த வேகத்துடன் கூடிய தாளக்கட்டு என்றால் டி.கே.ராமமூர்த்திதான்.ஜல் ஜல் ஜல் எனும் சலங்கை ஒலிக்கு நிகரான பாடல் சாட்டை கையில் கொண்டு. சீர்காழி குரல் யாருக்குமே பொருந்தி வராத ஒரு விசித்திர குரல் எனினும், அவரின் கல்லிலே கலை வண்ண உருக்கமும்,நித்தம் நித்தம் விரக்தி கலந்த இயலாமையும்,உள்ளத்தில் நல்ல உள்ள பாத்திர அனுதாபமும்,மாம்பழ தோட்ட ஓட்டமும், சைக்கிள் வண்டி மேலே ராக்கிங் குறும்பும், சாட்டை கையில் கொண்டு சக்தி நிறை உற்சாக துள்ளலுடன் கூடிய ஓட்டமும், வேறு பாடகரால் தொடவே முடியாதது. என்ன செய்வது?இவரை தமிழிசைக்கென்றே,பக்திக்கென்றே இறைவன் படைத்து விட்டானே? ஆனால் 50 களில் சிவாஜியின் பாடும் குரலாக டி.எம்.சௌந்தரராஜன் அறிய பட்டது போல எம்.ஜி.யாரின் பாடும் குரல் சீர்காழியே. நல்லவன் வாழ்வான் வரை அது தொடர்ந்தது.

ரவியை பற்றி கேட்கவே வேண்டாம். சிவாஜியின் உருவ தோற்றம்,ஸ்டைல், ஷம்மியின் energy நிறைந்த uninhibited dancing skill ,அவ்வப்போது எம்.ஜி.ஆர் போன்று ஒரு ஆரம்ப நடிகனின் அலுப்பு தெரியா புத்துணர்வு வேகம் நிறைந்த சுழல் நடிப்பு முறை(ஒரு எட்டே எட்டு action, permutation மாற்றி மாற்றி ரசிகர்களின் எதிர்ப்பார்ப்புக்கிணங்க திரும்ப திரும்ப )என்று அற்புத இளமை சக்தி.ரவிக்கு சிவாஜியை போன்றே நகரம்,கிராமம் இரண்டுமே பொருந்தும் தோற்றம் . காதல் ஜோதியில் டி.கே.ராமமூர்த்தி- ரவிச்சந்திரன் ஒரு மிக பெரிய பலம். ஆனால் இன்னொரு நடிகரால் படம் போதிய வெற்றி அடைய முடியவில்லை. ரவியின் இன்னொரு பாடலான உன் மேலே கொண்ட ஆசை
எனது பிடித்தங்களில் ஒன்று.

எங்கேயிருந்துதான் அலுக்காமல் கான்செப்ட் பிடிப்பீர்களோ? சிவாஜி செந்தில் தங்களின் ஆசிரியப் பாவை ,குறட் பாவாக்கி நடிகர்திலகத்தின் கதாநாயகி யர் கான்செப்ட் செய்து கொண்டிருக்கிறார்.

வாழ்த்துக்கள் வாசு.

Gopal.s
16th December 2014, 04:40 AM
தொடரும் கொண்டாட்ட தோல்விகள்.

மனித மனங்கள் விசித்திரமானவை. அதுவும் collective psychology என்பது ஆபத்தானதும் கூட. ஒரு சுயவிரும்பி(நார்சிஸ்ட்) நினைத்தால், விளிம்பு நிலை மனபிறழ்வு கொண்டவன் (psychologically disturbed ) நினைத்தால் ,சில தேர்ந்த பொய்யர்களின் துணை கொண்டு,மனிதர்களை மூளை சலவை செய்து , வரலாற்றையே உருவாக்கி விடலாம் என்று ஹிட்லர்-கோயபல்ஸ் இணைவு நமக்கு உணர்த்தும் பாடம். இது ஜெர்மனி போன்ற அறிவு சார் வளர்ந்த நாடுகளிலேயே சாத்தியம் என்றால், ஆட்டு மந்தையாக படிப்பறிவின்றி திரிந்த கூட்டங்கள் கொண்ட நாடுகளில்? இதில் ஒரு சோகம் என்னவென்றால் சும்மாவா எல்லோரும் புகழ்கிறார்கள் ,என்று இடைநிலை அறிஞர்களும் தயவு தாட்ஷன்யமின்றி எதிர் நிலை எடுக்காமல், ஜோதியில் கலக்கும் மிக பெரிய வரலாற்று பிறழ்வுகள் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கும். இந்த வரலாற்று விபத்துகளை நிர்வாகம், விற்பனை திறன் என்றெல்லாம் கதைக்கும் unethical intellectual கூட்டங்களும் உண்டு.பிறர் வெற்றியை கேள்வி கேட்காமல் கொண்டாடுவது ,கூட்டு மனித சக்தியின் அழிவில் முடியும் அபாயங்கள் அதிகம்.இதில் பொது மீடியா க்கள் இணைவது கேட்கவே வேண்டாம்.

நாம் திறமையின் தோல்விகளை கொண்டாடுவோம்.

சுதர்சனம்-

ஒரு இசையமைப்பாளர் மூன்று வெற்றி படங்களை தொடர்ந்து கொடுத்தும் ,நல்ல வெற்றிக்கு தோதுவான பாடல்களை கொடுத்தும், ஆதரவு கொடுத்த பிரபல நிறுவனத்தால் (ஒரே இனம் வேறு) தூக்கி எறிய பட்ட சோகம் உண்டா?

ஸ்ரீவள்ளி, பராசக்தி,செல்ல பிள்ளை,தெய்வ பிறவி,களத்தூர் கண்ணம்மா, அன்னை,நானும் ஒரு பெண்,அன்பு கரங்கள், பூம்புகார்,பூமாலை,மணி மகுடம்,வாலிப விருந்து என்ற படங்களில் ஒரு பாடலாவது சோடை போனது என்று சொல்ல முடியுமா?
நெஞ்சு பொறுக்குதில்லையே,அன்பாலே தேடிய,காளை வயசு, ஆடாத மனமும்,அன்னை என்பவள் நீதானா,பக் பக் பக் பக்கும் பக்கும் மாடப்புறா, கண்ணா கருமைநிற கண்ணா,ஏமாற சொன்னது ,இரவு முடிந்து விடும், என்னை முதன் முதலாக,வாழ்க்கை என்னும் ஓடம்,பெண்ணே உன் கதி ,அவன் காதலித்தான்,எங்கே எங்கே என் மனது போன்ற வேறு பட்ட வெற்றி பாடல்களை கொடுத்த சுதர்சன் என்ற அற்புத இசையமைப்பாளரை வரலாறு புறம் தள்ளிடப் போமா? சில அயல் மொழி பாடல்களின் வெற்றி கரமான தமிழாக்கத்தில் வேதாவின் முன்னோடி. மெல்லிசைக்கு 50 களில் வெற்றிகரமான ஆரம்ப-கர்த்தா.

ஒரே தவறு .ஸ்டுடியோ சார்ந்த தயாரிப்பு முறை மாறி வந்த காலங்களில் 60 களில் ,மாற்றங்களை புரிந்து கொள்ளாமலோ ,எதிர்கொள்ளும் திறன் இன்றியோ ,கால வெள்ளத்தால் அடித்து செல்ல பட்டார்.மகா சோகம் என்னவெனில்,63 இல் மிக பெரிய வெற்றி படங்களில் ஒன்றாக,இசையமைப்பில் பேச பட்ட படங்களில் ஒன்றான நானும் ஒரு பெண் கொடுத்த கையேடு, ஏ.வீ.எம் இவரை கூப்பிட்டனுப்பி, நீங்கள் இனி இசையமைக்க தேவையில்லை,சும்மா இருங்கள்,பாதி சம்பளம் கொடுத்து விடுகிறோம் என்று சொல்லி இவர் தன்மானத்தை சீண்ட , இவர் அதுவும் தேவையில்லை என்று உதறி வெளியில் வந்தார். 64 முதல் 68 வரை பல வெற்றி படங்களுக்கு தோதான வேறு பட்ட இசை கொடுத்தும் , படவுலகால் உதறி எறிய பட்டு சக்கையான சோகம் நிகழ்ந்தது.

(தொடரும் தோல்விகள்)

rajraj
16th December 2014, 07:00 AM
Qawwali to set the mood for holidays! :)

From Vallavanukku Vallavan

Paaradi KaNNe Konjam........

http://www.youtube.com/watch?v=mD0b3kkztd8

The original tune from Ustadon Ke Ustad

Miltte Hi Nazar Tum Se.......

http://www.youtube.com/watch?v=GKr9qNiNIc8



Qawwali in Hindi/Urdu sounds much better! :lol:




...........

vasudevan31355
16th December 2014, 08:47 AM
நன்றி குரு.

தொடரும் கொண்டாட்ட தோல்விகள்.

இப்போதுதான் தங்களுடைய ஜி.ராமநாதன், சுதர்சனம் இசையமைப்பாளர்கள் பற்றிய பதிவுகளைப் படிக்க ஆரம்பித்துள்ளேன். அருமையான நினைவூட்டல்கள். நிதர்சனமான உண்மைகள், ஆதங்கங்ககள் தங்கள் பதிவில் அப்பட்டமாக தெரிகின்றன. பொய் அழித்து மெய்யுரைக்கும் இப்படிப்பட்ட பதிவுகள் இங்கு அவசியம் தேவையே. கடை விரித்தோம் கொள்வாரில்லை என்ற இந்த நிலைமை எத்தனை இசையமைப்பாளர்களை இம்சைப் பட வைத்திருக்கிறது. சுதரசனத்தை எடுத்துக் கொண்டால் அனைத்தும் மகுடம் தரித்த பாடல்கள். சாகா வரம் பெற்றவை.

,//மாற்றங்களை புரிந்து கொள்ளாமலோ ,எதிர்கொள்ளும் திறன் இன்றியோ ,கால வெள்ளத்தால் அடித்து செல்ல பட்டார்//

இரண்டாவதும் ஒன்று உண்டு. தன்மானம். எத்தனையோ பேர் உதாரணம் உண்டு. ஏ.எம்.ராஜா, குமார் என்று. திறமை இல்லாமல் இல்லை. ரசிக்கும் சீமானைத் தந்தவர் அப்படியே கால மாற்றத்துக்குத் தக்கபடி 'அவன் காதலித்தான்' தந்தாரே! 'ஒன்றைக் கண்ணு டோரியா' என்ற ரசிக்கும்படியான சீப் பாடல்களும் அவர் கொடுத்தவையே. இவர்களால் எந்த நேரத்திலும்,எத்தருணத்திலும் தேவைக்கேற்ப அம்சமாகத் தர முடியும் என்றே நான் நினைக்கிறேன். ஆனால் அவமானப்படுத்தல் என்ற ஒன்றை தாங்கும் சக்தி இவர்களுக்கில்லாததே இவர்கள் ஒதுங்கி மறையக் காரணம். இன்னும் கேட்டால் சுதர்சனம் என்ற இசையமைப்பாளர் இருந்தாரா என்ற புருவ உயர்த்தல்களை நான் நிறையப் பார்த்து நொந்து போய் இருக்கிறேன்.

vasudevan31355
16th December 2014, 08:49 AM
பக்காவான செலெக்ஷன் பாடல்கள் ராகவேந்திரன் சார். திரும்ப உங்களால் கேட்டு மகிழ்ந்து கொண்டிருக்கிறேன்.

vasudevan31355
16th December 2014, 08:58 AM
ராகவேந்திரன் சார்,

நீங்கள் கேட்ட கழுகு திரைப்படப் பாடல். பஸ்ஸில் ரஜினி, ரதி காதல் ரசம் சொட்ட சொக்கியிருக்க, பின்னணியில் ராஜாவும், ஜானகியும் பாடும் செம பாடல்.

பொன்னோவியம்....
கண்டேனம்மா எங்கெங்கும்.


https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=VNA3WTpVA5E

rajeshkrv
16th December 2014, 09:25 AM
பொங்கும் பூம்புனல் - துயிலூட்டும் தொண்ணூறு

வாசு சார் நிச்சயம் 80களுக்கென தனித் தொகுப்பை கொண்டு வந்து விடுவோம்.

தொடர்ந்து..

கங்கைக்கரை பாட்டு திரைப்படத்தில் தேனிசையாக தேவா இசையில் ஒரு பிருந்தாவனத்தில் நந்தகுமாரன் குழலோசை..

எஸ்.பி.பி. சித்ரா குரல்கள் சொக்க வைக்கும் இனிமை..

http://www.mayuren.org/site/mayurengorg/1Tamil/Movie%20A%20-%20Z%20Collection/G/Gangai%20Karai%20Paattu

தேவா தொடரில் இதை நான் பதிவு செய்தேன் ராகவ் ஜி, அருமையான பாடல்
மீண்டும் பதிவிட்டதற்கு நன்றி.

rajeshkrv
16th December 2014, 09:30 AM
தேனிசைத்தென்றலின் முத்துக்கள் தொடர்ச்சி:

1993’ல் சுரேஷ் கிருஷ்ணா அண்ணாமலை வெற்றிக்கு பின் சில படங்களை இயக்கினார்
ஆனால் பாவம் எல்லாமே படு தோல்வி

அப்படி ஒரு படம் தான் சரத்குமார் குஷ்பு நடித்த வேடன்
பாடல்கள் சுமார் ரகம். இந்த பாடல் கொஞ்சம் பிரபலமடைந்தது. இந்த பாடலுக்கு வைரமுத்து தேவையா என்று தோன்றும் அளவிற்கு வரிகள்

கம்மா கரையில சும்மா நான் மறிச்சா என்ன பன்னுவ

https://www.youtube.com/watch?v=ouP4o-aUJpc

vasudevan31355
16th December 2014, 09:49 AM
பாடல் இரண்டு
பாணி ஒன்று


தொடர் 6

காஷ்மீரிலே படகுக் காதல்.

காஷ்மீர் ஏரிகளில் பூக்களால் அலங்கரிக்கப்பட்ட படகுகளில் இரு வெவ்வேறு ஜோடிகள் காதல் களிநடம் புரிவதை இன்றைய தொடரில் பார்க்கலாம்.

இந்த இரண்டு பாடல்களையும் பார்த்து மங்கலத் தேன் சிந்த பொங்கட்டும் உங்கள் பழைய நினைவுகள்.

'திரிசூலம்' படத்தில் காஷ்மீரில் அருமையான இயற்கை பிரதேசங்களில் ஆரம்பமாகும் அருமையான டூயட். ஸ்லிம்மாக, வெகு அழகாக நடிகர் திலகம். அவர் ஜோடியாக வெகு பொருத்தத்துடன் அழகு இளமை பொங்கும் ரீனா. பாடலின் துவக்க இசையே பிரம்மாண்டம். அந்த இசைக்கேற்றவாறு நடிகர் திலகம் நடந்து வரும் அருமையான காட்சி

திருமாலின் திருமார்பில் ஸ்ரீதேவி முகமே
தீபங்கள் ஆராதனை
ஊரெங்கும் பூவாசனை

பாலேனும் நீரோடை
படகுகள் பொன்னாடை

என்று படகில் காஷ்மீர் ஏரிகளில் பயணித்தபடி நடிகர் திலகம் மிக அழகாக அமர்ந்து ரீனாவை வாசனை பிடிப்பது எல்லோரையும் பைத்தியம் பிடிக்க வைத்தது அல்லவா? நடிகர் திலகத்திற்கு இந்தப் பாடலில் ஜேசுதாஸ் அவர்களின் குரல் நிரம்பப் பொருத்தமாய் இருப்பது போலத் தோன்றும்.அதற்கும் காரணம் அவரது வாயசைப்பே. ('மாலை ராகத்தின் ஆனந்த மயக்கமே' வரிகளே சாட்சி.) வாணி ஜெயராம் சரியான ஈடு. நடிகர் திலகத்தின் ஆடை ரசனை அளவிட முடியாதது. இந்தப் பாடலில் அவர் போட்டிருக்கும் ஷர்ட்கள் அப்படியே அள்ளும். ஜோரான ஒளிப்பதிவு. பாடலின் இடையில் வரும் மன்மதன் ரதிதேவி கற்பனையும் டாப்.

மெல்லிசை மன்னரின் மெல்லிசைப் பாடல். மிக இதமாக பனிமலைகளின் குளிர்ச்சி தரும் இதம் போல மனதுக்குக் குளிர்ச்சி தருகிறது.



https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=CbUV0_bp3Ug


இதுவும் காஷ்மீர் அழகை நம் கண்முன்னே நிறுத்தும் காதல் பாடல்தான். இந்தப் பாடலிலும் படகுகள் உண்டு. அதில் டூயட் உண்டு. திரு.எம்.ஜி.ஆர் அவர்களும், இளம் சோலை போல் மஞ்சுளாவும் இணைந்து பாடும் சங்கர் கணேஷ் இசையில் பின்னிப் பெடலெடுத்த 'பொன்னந்தி மாலைப் பொழுது' பாடல். இசைத்தட்டின் இரு பக்கங்களிலும் ஒலிக்கும் நீண்ட பாடல். இப்பாடலின் சரணங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொருவித டியூனில் ஜொலிப்பவை. 'இதய வீணை' படத்திலிருந்து...

1. மலைமகள் மலருடை அணிந்தாள்...

2. கட்டுக் கூந்தல் தொட்டுத் தாவி என்னைத் தேடி ஆடிவர...

3. ஆடை மூடும் ஜாதிப் பூவில் ஆசை உண்டாக
ஆசை கொண்டு பார்க்கும் கண்ணில் போதை உண்டாக

3 சரணங்கள் தித்திப்பான விதவித சுவைகளில்.

மஞ்சுளா கொஞ்சிச் சிரித்து நம் நெஞ்சைப் பறித்தப் பாடல். எம்.ஜி.ஆர் அவர்களுக்கு ஆரஞ்சு கலர் டிரஸ் பொருத்தமாக இருக்கும்.

படகுக் காட்சிகள் உல்லாசம் தருபவை. பாடகர் திலகமும், இசையரசியும் ஆனந்த அருவியின் சுகத்தை நமக்குள் ஏற்படுத்திய பாடல்.


https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=qxHDwqg1ygo

vasudevan31355
16th December 2014, 09:52 AM
வணக்கம் ராஜேஷ்ஜி

vasudevan31355
16th December 2014, 09:54 AM
sure . sure

Thanks Rajeshji

vasudevan31355
16th December 2014, 09:56 AM
vasu: 'Jaane kahaan gaye woh din....' is in Shivaranjani raga, not used very much in Tamil movies ! :)

Nice song in a moving raga.

O...appadiyaa? Thanks rajraj sir.

vasudevan31355
16th December 2014, 09:59 AM
If Rajesh brings you to Texas make sure he brings you to my place. There is a lot to see here! :)

ஆஹா! மிக்க மகிழ்ச்சி ராஜ்ராஜ் சார். அந்த நாள் விரைவில் வரட்டும்.

vasudevan31355
16th December 2014, 10:02 AM
வினோத் சார்

http://cinemachaat.files.wordpress.com/2014/12/baghdad-thirudan-mgr.png?w=318&h=212&crop=1

தங்களுடைய 11000 பதிவுகளுக்கு என் மனம்நிறை வாழ்த்துக்கள்.

vasudevan31355
16th December 2014, 10:05 AM
Qawwali to set the mood for holidays! :)

From Vallavanukku Vallavan

Paaradi KaNNe Konjam........

The original tune from Ustadon Ke Ustad

Miltte Hi Nazar Tum Se.......

Qawwali in Hindi/Urdu sounds much better! :lol:

...........

Wonderful rajraj sir.

Richardsof
16th December 2014, 10:09 AM
இனிய நண்பர் திரு வாசு சார்

உங்களின் அன்பான வாழ்த்துக்களுக்கு நன்றி .மதுர கானத்தில் திலகங்கள் பாடல்கள் தூள் பறக்கிறது

vasudevan31355
16th December 2014, 10:11 AM
rajraj sir.

my favourite Qawwali song from Amar Akbar Anthony.

'Parda hai Parda'


https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=bBEUOZ1-_gE&list=PL16E9DD26CC6A7AE1

vasudevan31355
16th December 2014, 10:20 AM
'ஜங்க்ளி' திரைப்படத்தில் ஷம்மிகபூர், சைராபானு இணைவில் 'Kashmir Ki Kali Hoon Main' அருமையான பாடல். பாடலின் சில கட்சிகள் சிவந்த மண் படத்தை ஞாபகப் படுத்தும்.


https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=uwpfie9Dn80


அதுவே தமிழில் 'சி.ஐ.டி சங்கரி'ல் 'பிருந்தாவனத்தில் பூவெடுத்து' அழகாக உருவானது.


https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=YcwAxEdAwd0

chinnakkannan
16th December 2014, 10:44 AM
hi good morning all..

ஹையாங்க்..நிறைய ஹோம் வொர்க் பண்ணனும் போல இருக்கே.. நிறைய வேலைப் பளு எனில் உள்ளே வர முடியவில்லை..மார்கழி வேற ஆரம்பிச்சுடுத்து..பாசுரத்துக்கு வேற கமிட்மெண்ட் மனசுல இருக்கு!

கோபால் உங்கள் தொடரில் நான் நிறைய அறிந்து கொள்கிறேன்..தாங்க்ஸ்..இன்னும் இன்னும் எழுதுங்கள்..

பஸ்பாடல்க்ள் கொடுத்த அனைத்து உள்ளங்க்ளுக்கும் கல் நாயக் வாசு ராஜேஷ் ராகவேந்தர் நன்றி..

அப்புறம் வர்றேன் கடமை அழைக்கிறது..:)

vasudevan31355
16th December 2014, 10:56 AM
கோ,

http://mp3.oohotamil.com/uploads/movies/tbnail_2/ANBALIPPU637308.jpghttp://i.ytimg.com/vi/0eTOWFNLasw/hqdefault.jpg

உங்கள் 'அன்பளிப்'பை கண்களாலும், மனதாலும் அளந்தேன். நானும் வினோத் சார் முன் கூட்டியே தெரிவித்துவிட படத்தை ரெகார்ட் செய்ய உட்கார்ந்து விட்டேன்.

நல்லா இருக்கா நல்லா இல்லையா என்று இன்றுவரை நம்மை குழம்ப வைத்துக் கொண்டிருக்கும் ஒரு படம் குருதட்சனை போல.

எல்லாம் இருந்தும் என்னவோ இல்லையே என்பது போல இருக்கும்.

ஆத்தோரம் நாலுமுழ வேட்டி கட்டி காத்தாடப் போயி வரும் வீரன் அடிக்கடி சோர்ந்து போவதுதான் மிகப் பெரிய பலவீனம். அண்ணாமலைக்கு ஆதாரம். திரிலோக் ஏறினால் ரயில் இறங்கினால் ஜெயில் கேஸ். பிடித்தால் ஒரே பிடியாகப் பிடித்துவிடுவார் தெய்வமகன், இரு மலர்கள் போல். சொதப்பினால் ஒரேயடியாக சொதப்பி விடுவார் அன்பே ஆருயிரே, அன்பளிப்பு போல. அன்பு என்றால் இவருக்கு ஆகாதோ? உடனே 'அன்பே வா' வேறு ஞாபகத்திற்கு வருகிறது.

//-ஏ.சி.திருலோக் சந்தர் எங்கே குறி தவறினர்?//

குறி வைத்தால்தானே தவறுவதற்கு? குறியே வைக்க வில்லையே.:)

'வள்ளி மலை மான் பாட்டி'க்கு தாவணி போட்டால் எப்படி சகிப்பது?

ஆனால் எனக்குப் பிடித்தது 'என் வேஷப் பொருத்தம் எப்படி இருக்கு?... விவரஞ்சொல்லுடா தம்பி' எவராலும் நினைத்துப் பார்க்க முடியாத ஸ்டெப்ஸ். அதுவும் படு வேகமாக. இளமைத் துள்ளல் தென்னை மர உயரம் கிளம்பும் ரப்பர் பந்து போல்.

'தம்பியுடையான் படைக்கஞ்சான்' எனும் போது டைமிங்காய் கழுத்தை அரித்துக் கொள்வார். சிரிப்போ சிருங்கார ரசம்.

'தாய் வேறு ஆனாலும் மனம் ஒன்று பட்டதல்லோ' என்று உங்களுக்கு ஆகாத நடிகர் பாடும் போது நம்மவர் செல்லமாகக் காதைத் திருக்கும் பண்டரிபாயின் கரங்களை எடுத்துத் தன் நெஞ்சில் வைத்து, (சற்றே முதுகை பெண்டாக்குவார்) அன்பு பொங்க களங்கமில்லா சிறு பிள்ளை போல் சிரித்து, பக்கத்தில் ஜெய்யையும் பார்த்து ஆனந்தப்படுவார்.


https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=80zBTeNz-iA

'எனக்குத் தெரியும் உனக்கும் புரியும் ஏதோ அது
அடக்க நினைத்தால் அதிகம் வளரும் ஏதோ அது'

டிபிகல் ராட்சஸி காபரே கலக்கல் பாடல். கீதாஞ்சலி அப்படியே விஜயலலிதாவின் ஆட்டத்தை நினைவுபடுத்துவார்.

'கோபாலன் எங்கே உண்டோ' பாடல் 'வா கண்ணா வா' படப் பாடலை முன்னே வைக்கும்.

இறுதி தீ சண்டைக் காட்சி கொஞ்சம் பிரம்மாண்டம்தான்.

நாகேஷ், வி,கே ஆர். காமெடி ஓ.கே ரகம். ஆனால் அந்த 'அலெக் நிரஞ்ஜென்' சாமியார் இருவரையும் தூக்கி சாப்பிட்டு விடுவார்.

'மாதுளம்.... பழத்துக்குப் பெயர் மாதுளம்' படத்தில் கிடையாது. ஆடியோவோடு சரி.

நடிகர் திலகத்தின் பாத்திரப்படைப்பு இன்னும் பட்டை தீட்டப் பட்டிருக்க வேண்டும்.

எப்பேர்பட்ட நாட்டமையையும் சரியான தீர்ப்பு சொல்ல வைக்க முடியாத வினோத படம்தான் 'அன்பளிப்பு'

kalnayak
16th December 2014, 10:57 AM
காலை வணக்கம் அனைவருக்கும்.

kalnayak
16th December 2014, 10:58 AM
நன்றி சி.க., வாசு, ராஜேஷ், ராகவேந்திரா மற்றும் கோபு அவர்களுக்கும்

- என்னுடைய பஸ் பாடல்கள் பதிவை ஏற்றுக்கொண்டு பாராட்டியதற்கும், அத்துடன் மேலும் சில அருமையான பாடல்களை குறிப்பிட்டமைக்கும், உடன் பதிவேற்றியமைக்கும்.

மெட்ராஸ் டூ பாண்டிச்சேரி, மீரா மேலும் பார்த்தேன், ரசித்தேன்-களில் பஸ் பாடல் உண்டென தெரிந்திருந்தும் மறந்திருந்தேன். நினைவுபடுத்தினீர்.

திருடா, திருடி - சுத்தமாக மறந்தேபோய்விட்டது (அந்த மன்மதராசா விளைவு).

ஆளுக்கொரு ஆசை - அற்புதமான பாடல், நினைவிலிருத்திக் கொள்ள வேண்டும்.

கழுகு - பொன்னோவியம் எப்படி மறந்தேனோ தெரியவில்லை

மீண்டும் நன்றி!!!

kalnayak
16th December 2014, 11:09 AM
வாசு,

"வேஷப் பொருத்தம் எப்படியிருக்கு?" - இவரே இப்படி கேட்கணுமா-ன்னு தோணுது.

எந்த வேஷமிட்டாலும், அந்த வேஷமாகவே மாறுபவரை என்னவென்று சொல்வது? அன்பளிப்பு பதிவு அபாரம்!!!

vasudevan31355
16th December 2014, 11:29 AM
வாசு,

"வேஷப் பொருத்தம் எப்படியிருக்கு?" - இவரே இப்படி கேட்கணுமா-ன்னு தோணுது.



sabaash nayak.

vasudevan31355
16th December 2014, 11:30 AM
நன்றி:- தினமணி


"சினிமா சித்தன்" மாயவநாதன்


மறைந்துபோன திரைப்படப் பாடலாசிரியர்களுள் தனக்கென ஒரு தனிமுத்திரை பதித்தவர் கவிஞர் மாயவநாதன்.விளம்பர வெளிச்சமில்லாமல் இருட்டுக்குள் புதைந்துபோன சினிமா சித்தன்.


கேட்கும் தொகையை வழங்கத் தயாரிப்பாளர்கள் தயாராக இருந்தபோதும், பணத்தை மட்டுமே குறியாகக்கொண்டு பாடல் எழுதாத பத்தினிப் பாடலாசிரியர்.


திரையிசைப் பாடல்கள் பிரசித்தம் பெறத்துவங்கிய காலகட்டத்தில் பிரபலமாக இருந்தவர் கண்ணதாசன். அதனால் பிற கவிஞர்கள் எழுதிய நல்ல பாடல்கள் கூட கண்ணதாசன் எழுதியதாக இருக்கும் என்பதே வெகுஜனங்களின் யூகமானதால், மாயவநாதன் கண்ணுக்கு எட்டாத தூரத்திலேயே நின்றுவிட்டார்.


சொந்த ஊர், நெல்லை மாவட்டத்திலுள்ள பூலாங்குளம்.தீவிரமான காளிபக்தர்.கரம்பைச் சித்தர், கரூர் சித்தர், பாலமுருக சித்தர் என்று சித்தர்களுடன் சிநேகமாக இருந்தவர்.

படத்தயாரிப்பாளர் தேவரின் வேண்டுகோளை ஏற்று, மருதமலை முருகன் கோயில் கல்வெட்டில் பதிப்பதற்காக சில பாடல்களை மாயவநாதன் எழுதிக்கொடுத்தார்.அவரது அழியாப் புகழுக்கு அந்தக் கல்வெட்டு ஒரு நல்ல அடையாளமாகும்.


சென்னை - மயிலாப்பூரில் உள்ள ஒரு விடுதியில்தான் அவர் வெகுகாலம் தங்கியிருந்தார்.


நடிகை சந்திரகாந்தாவின் நாடகக்குழு அப்போது மிகவும் பிரசித்தம். அந்தக் குழுவினரின் நாடகங்களுக்குப் பாடல்கள் எழுதியதன் மூலம் திரையுலகின் கவனத்தைக் கவர்ந்தவர் மாயவநாதன்.


1960 முதல் 1971 வரை, சில படங்களுக்குப் பாடல்கள் எழுதினார். இவர் திரைப்படங்களுக்கு எழுதிய பாடல்கள் எண்ணிக்கையில் குறைவாக இருந்தாலும், எழுதிய அத்தனை பாடல்களிலும் வெற்றிபெற்ற கவிஞன்.


"படித்தால் மட்டும் போதுமா" திரைப்படத்தில்,

"தண்ணிலவு தேனிரைக்க
தாழைமடல் நீர்தெளிக்க
கன்னிமகள் நடைபயின்று வந்தாள் - இளம்
காதலனைக் கண்டு நாணி நின்றாள்

என்ற பாடல் மூலம் அறிமுகமாகி, தன் முதல் பாடலிலேயே தனி முத்திரையைப் பதித்தார்.


பழந்தமிழ்க் கவிதை சாயலில் இலக்கிய உணர்வலைகள் எழும்ப முதல் பாடலை எழுதி,

"யார் இந்த மாயவநாதன்?"

என்று திரையுலகில் மட்டுமல்லாமல் இலக்கிய உலகிலும் பரபரப்பை ஏற்படுத்திய கவிஞர் அவர்.


"கண்ணதாசனின் செல்வாக்கை உடைத்த முதல் கவிஞன் என்ற பெருமையுடையவன் மாயவநாதன்என்று புதுக்கவிஞர் நா.காமராசன், தான் எழுதிய "சொர்க்க வசந்தத்தின் ஊமைக் குயில்கள்" என்ற நூலில் குறிப்பிட்டிருப்பது, மாயவநாதன் பற்றிய நேர்மையான மதிப்பீடாகும்.


இதயத்தில் நீ - திரைப்படத்தில்,

"சித்திரப் பூவிழி வாசலிலே வந்து யார் நின்றவரோ - இந்த
கட்டுக்கரும்பினைத் தொட்டுக் குழைந்திட
யார் வந்தவரோ? - அவர்
தான் என்னவரே...

என்ற பாடல் இயற்றுவதில் கைதேர்ந்தவர் மாயவநாதன் என்பதற்கு இந்தப் பாடலின் மொழி இலாகவம் ஒரு நிரூபணமாகும்.


சந்தச்சுவையும், கற்பனை வளமும் மிக்க இந்தப் பாடல் திரைப்படப் பாடல்களின் வரிசையில் ஒரு வாடாமலர் என்றுதான் கூறவேண்டும்.

பூமாலை - திரைப்படத்தில், இருளில் ஓர் ஆடவனால் கற்பு சூறையாடப்பட்ட பெண் ஒருத்தியின் நிலையை விளக்க...

"கற்பூரக் காட்டினிலே கனல் விழுந்து விட்டதம்மா

என்று பளிச்சென்று நெஞ்சைத் தாக்குகின்ற மின்னல் வரிகளைப் படைத்தார்.

மாயவநாதன் யார்க்கும் அஞ்சாத, பணிந்துபோகாத குணமுடையவர்.


ஒரு முறை "மறக்க முடியுமா" திரைப்படத்துக்குப் பாடல் எழுத வந்தவர், இசையமைப்பாளரிடம் "என்ன மெட்டு?" என்று கேட்டார். அந்த இசையமைப்பாளர், "மாயவநாதன்...மாயவநாதன்" என்று தத்தக்காரத்தைக் கிண்டலாகக் கூறினார்.


மாயவநாதனுக்கு "கவிக்கோபம்" வந்துவிட்டது.கிடைத்த வாய்ப்புக்காக மண்டியிடாமல் உடனே வெளியேறிவிட்டார்.பிறகு அந்த மெட்டுக்கு மு.கருணாநிதி எழுதியதுதான் "காகித ஓடம் கடலலை மீது" - என்ற பாடல்.மாயவநாதனின் கவியாளுமையை முற்றிலும் அறிந்து, தான் எழுதித் தயாரித்த படங்களில் வாய்ப்புகள் அதிகம் வழங்கி, மாயவநாதனுக்கு மிகப்பெரிய அங்கீகாரத்தைப் பெற்றுத் தந்தவர் மு.கருணாநிதி என்பதும் மறுக்க இயலாத உண்மை.


பூம்புகார் திரைப்படத்தில் மாயவநாதன் எழுதிய பாடல்கள், சினிமாப் பாடல்கள் என்பதை மறந்துவிட்டால் அத்தனையும் சித்தர் பாடல்கள்தான்.


தத்துவசாரமும், மனிதநேயமும் உள்ளடங்கிய பாடல்கள் அவை.


பந்தபாசம் - திரைப்படத்துக்கு கண்ணதாசனுக்குப் பதிலாக யாரை வைத்து எழுதுவது என்ற கேள்வி எழுந்தது. மாயவநாதனைத்தான் தெரிவு செய்தார்கள்.


"பந்தபாசம்" படத்தில் வருகிற...

"நித்தம் நித்தம் மாறுகின்றது எத்தனையோ? - நெஞ்சில்
நினைத்ததிலே நடந்ததுதான் எத்தனையோ?
கோடுபோட்டு வாழ்ந்தவர்கள் எத்தனையோ?
குறியும் தவறிப் போனவர்கள் எத்தனையோ?

என்ற பாடல், அது வெளிவந்த காலத்தில் மட்டுமல்ல, இன்றைக்கும் பிரபலமானது.


பாலும் பழமும் - திரைப்படத்தில் ஒரு பாடல்,

"பழுத்துவிட்ட பழமல்ல நீ விழுவதற்கு
பாய்ந்துவிட்ட நதியல்ல நீ ஓய்வதற்கு
எழுதிவிட்ட ஏடல்ல நீ முடிவதற்கு
இடையினிலே முடிவென்றால் முதல் எதற்கு?


வாழ்வின் வாயிலில் முதல் அடியை எடுத்து வைக்கும் அதே கணத்தில், சாவின் வாயிலில் அடுத்த அடியை எடுத்து வைக்க நேர்ந்துவிட்ட ஓர் இளம் கதாபாத்திரத்தின் நிலையை முதல் மூன்று வரிகளில் பெருஞ்சோகத்துடன் கூறிவிட்டு, நான்காவது வரியில் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறார்.


"இடையினிலே முடிவென்றால் முதல் எதற்கு?அற்ப ஆயுளில் ஒரு ஜீவனை முடித்து வைக்கும் விதியின் பிடரியில் அறையும் கேள்வி இது.


என்னதான் முடிவு - திரைப்படத்தில் மனதை உருகவைக்கும்

"பாவியென்னை மறுபடியும் பிறக்க வைக்காதே - செய்த பாவமெல்லாம்
தீருமுன்னே இறக்க வைக்காதே

என்ற மிகச்சிறந்த தத்துவப் பாடல் ஒன்றை எழுதினார்.

நாத்திகவாதியின் மனதைக்கூட கரைந்துபோக வைக்கும் ஆன்மிக வரிகள் அவை.


திரையிசையில் மாயவநாதன் எழுதிய தத்துவப் பாடல்கள் தலைசிறந்தவை. இலக்கிய வகைகளில் இசைப்பாடலும் ஒருவகை. தமிழ் மரபில் இசைப்பாடல்கள் காலாவதியாகிவிட்ட நிலையில் அதன் நீட்சியாக திரையிசைப் பாடல்கள் உருவானது. அந்த திரையிசைப் பாடல்களுக்கு இசையின்பத்தைத் தாண்டி ஓர் இலக்கிய இன்பத்தை ஏற்படுத்திய கவிஞர்களுள் முக்கியமானவர் மாயவநாதன்.


1971இல் மாயவநாதன் காலமானார்.


"டெல்லி டூ மெட்ராஸ்" - திரைப்படத்தின் பெயர் பட்டியலில் மாயவநாதனுக்கு அஞ்சலி செலுத்தி, அந்தக் கவிஞன் மீதிருந்த மதிப்பை வெளிப்படுத்தினார்கள்.

மேதாவிலாசத்துடன் பாடல்கள் புனைந்த மாயவநாதன் சொற்ப வாய்ப்புகளையும், அற்ப ஆயுளையும் பெற்றது தமிழ்ப் பாடலுலகின் துரதிருஷ்டம் என்றுதான் கூறவேண்டும்.

பொய்யும், புரட்டும், போலி விளம்பரமும் மலிந்த சினிமா உலகில், சித்த நெறியும், சத்திய வெறியும்கொண்டு ஞானச் சிறகடித்துப் பறந்த கவிஞன் மாயவநாதன்.

vasudevan31355
16th December 2014, 11:59 AM
ரவி, காஞ்சனா நடித்த 'தேடி வந்த திருமகள்' படத்திலிருந்து ஒரு பாடல்


'கேட்டால் ஒன்று தர வேண்டும்
கொடுத்தால் அதைப் பெற வேண்டும்'


https://www.youtube.com/watch?feature=player_embedded&v=Isc6FZuWEvA

chinnakkannan
16th December 2014, 12:07 PM
கோபால்., எழுத்தாள சகோதரி என்று குறிப்பிட்டிருந்தீர்கள்.. அவர் யார் என அறிந்து கொள்ளலாமா..

rajeshkrv
17th December 2014, 12:55 AM
கோ,

http://mp3.oohotamil.com/uploads/movies/tbnail_2/ANBALIPPU637308.jpghttp://i.ytimg.com/vi/0eTOWFNLasw/hqdefault.jpg

உங்கள் 'அன்பளிப்'பை கண்களாலும், மனதாலும் அளந்தேன். நானும் வினோத் சார் முன் கூட்டியே தெரிவித்துவிட படத்தை ரெகார்ட் செய்ய உட்கார்ந்து விட்டேன்.

நல்லா இருக்கா நல்லா இல்லையா என்று இன்றுவரை நம்மை குழம்ப வைத்துக் கொண்டிருக்கும் ஒரு படம் குருதட்சனை போல.

எல்லாம் இருந்தும் என்னவோ இல்லையே என்பது போல இருக்கும்.

ஆத்தோரம் நாலுமுழ வேட்டி கட்டி காத்தாடப் போயி வரும் வீரன் அடிக்கடி சோர்ந்து போவதுதான் மிகப் பெரிய பலவீனம். அண்ணாமலைக்கு ஆதாரம். திரிலோக் ஏறினால் ரயில் இறங்கினால் ஜெயில் கேஸ். பிடித்தால் ஒரே பிடியாகப் பிடித்துவிடுவார் தெய்வமகன், இரு மலர்கள் போல். சொதப்பினால் ஒரேயடியாக சொதப்பி விடுவார் அன்பே ஆருயிரே, அன்பளிப்பு போல. அன்பு என்றால் இவருக்கு ஆகாதோ? உடனே 'அன்பே வா' வேறு ஞாபகத்திற்கு வருகிறது.

//-ஏ.சி.திருலோக் சந்தர் எங்கே குறி தவறினர்?//

குறி வைத்தால்தானே தவறுவதற்கு? குறியே வைக்க வில்லையே.:)

'வள்ளி மலை மான் பாட்டி'க்கு தாவணி போட்டால் எப்படி சகிப்பது?

ஆனால் எனக்குப் பிடித்தது 'என் வேஷப் பொருத்தம் எப்படி இருக்கு?... விவரஞ்சொல்லுடா தம்பி' எவராலும் நினைத்துப் பார்க்க முடியாத ஸ்டெப்ஸ். அதுவும் படு வேகமாக. இளமைத் துள்ளல் தென்னை மர உயரம் கிளம்பும் ரப்பர் பந்து போல்.

'தம்பியுடையான் படைக்கஞ்சான்' எனும் போது டைமிங்காய் கழுத்தை அரித்துக் கொள்வார். சிரிப்போ சிருங்கார ரசம்.

'தாய் வேறு ஆனாலும் மனம் ஒன்று பட்டதல்லோ' என்று உங்களுக்கு ஆகாத நடிகர் பாடும் போது நம்மவர் செல்லமாகக் காதைத் திருக்கும் பண்டரிபாயின் கரங்களை எடுத்துத் தன் நெஞ்சில் வைத்து, (சற்றே முதுகை பெண்டாக்குவார்) அன்பு பொங்க களங்கமில்லா சிறு பிள்ளை போல் சிரித்து, பக்கத்தில் ஜெய்யையும் பார்த்து ஆனந்தப்படுவார்.


https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=80zBTeNz-iA

'எனக்குத் தெரியும் உனக்கும் புரியும் ஏதோ அது
அடக்க நினைத்தால் அதிகம் வளரும் ஏதோ அது'

டிபிகல் ராட்சஸி காபரே கலக்கல் பாடல். கீதாஞ்சலி அப்படியே விஜயலலிதாவின் ஆட்டத்தை நினைவுபடுத்துவார்.

'கோபாலன் எங்கே உண்டோ' பாடல் 'வா கண்ணா வா' படப் பாடலை முன்னே வைக்கும்.

இறுதி தீ சண்டைக் காட்சி கொஞ்சம் பிரம்மாண்டம்தான்.

நாகேஷ், வி,கே ஆர். காமெடி ஓ.கே ரகம். ஆனால் அந்த 'அலெக் நிரஞ்ஜென்' சாமியார் இருவரையும் தூக்கி சாப்பிட்டு விடுவார்.

'மாதுளம்.... பழத்துக்குப் பெயர் மாதுளம்' படத்தில் கிடையாது. ஆடியோவோடு சரி.

நடிகர் திலகத்தின் பாத்திரப்படைப்பு இன்னும் பட்டை தீட்டப் பட்டிருக்க வேண்டும்.

எப்பேர்பட்ட நாட்டமையையும் சரியான தீர்ப்பு சொல்ல வைக்க முடியாத வினோத படம்தான் 'அன்பளிப்பு'
பாட்டி என்று எப்படி சொல்லலாம்?? வாசு ஜி உங்கள் மேல் கோபம் :)

சரோ கொஞ்சம் மெச்சூராக இருப்பாரே தவிற பாட்டியெல்லாம் இல்லை

Gopal.s
17th December 2014, 07:47 AM
தொடரும் கொண்டாட்ட தோல்விகள்.


சுதந்திர இந்தியாவை பற்றி மிக அழகாக கனவு கண்டவர் சுபாஷ் சந்திர போஸ் .நல்லெண்ண சர்வாதிகாரமே ,முதல் 20 ஆண்டுகளுக்கு சிறப்பான ஆட்சியை தரும். இந்தியா போன்ற முதிராத தேசங்களுக்கு மேற்கத்திய ஜனநாயக முறை ஒத்து வராது என்பது அவர் எண்ணம் .முன்னேறிய அமெரிக்கா போன்ற நாடுகளிலேயே ,அனைவருக்கும் வாக்குரிமை வழங்காத போது ,சில முதிர்ச்சியற்ற தலைவர்கள்,இந்தியாவிற்கு அந்த முறையை கொண்டு வந்தனர். என்ன ஒரு மடமை!!! அதிகாரத்தை மத்தியில் குவித்து ,வாக்குரிமையை பரவலாக்கும் போலி ஜனநாயகம் புகுந்து விளையாட ஆரம்பித்து ,இன்று வரை கேலி கூத்து தொடர்கிறது. ஒருவர் கொள்ளைக்கு(சர்வாதிகாரம்) பதிலாக பலர் கொள்ளை (ஜனநாயகம்),கோமாளி சந்தர்ப்பவாத தலைவர்கள்,பரவலான குட்டி சர்வாதிகாரிகள், கடவுளுக்கு பதிலாக மனித சிலைகள் ,சிலரை கேள்வியே கேட்காத பகுத்தறிவு,கேள்வி கேட்போரை மிரட்டுதல் என்ற அதி அற்புத ஜனநாயகம்.இதில் கொடுமை என்னவென்றால் கண்கட்டு வித்தை காட்டும் மந்திரவாதி போல, சினிமா என்ற புதிய ஆயுதம் கொண்டு,மக்களுடன் மாய தொடர்பிலிருந்தோர், எந்த ஒரு அறிஞர்,சமூக சேவகர்,அரசியல் வித்தகர் என்று எல்லோரையும் மீறி வளர்ந்து ,அரசியல் வெற்றி என்பதன் புனித மாண்பையே சிதைத்தனர்.

இந்த வெற்றி, தகுதி,திறமை என்பதை சிதைத்து,அரசு நிறுவனத்தை கேலி பொருளாக்கி ,இன்றோ இந்த முறையே தேவையா என்று கேட்க வைக்கிறது.



நாம் தொடர்வோம் கொண்டாட பட வேண்டிய தோல்விகளை.



கோவர்த்தனம்.



அண்ணனின்( சுதர்சனம்)அதிர்ஷ்டம் தம்பிக்குமா தொடர வேண்டும்? ஒரே வழி என்ற வாசு மேனன் படத்தில் 1959 இல் அறிமுகமான கோவர்தன் (அதுவரை அண்ணனுக்கும்,இன்னும் சிலருக்கும் உதவியாக இருந்தார்) ,1960 இல் கைராசியில்(கண்ணும் கண்ணும் பேசியது) உச்சம் தொட்டார். பெற்ற மனம்,பாவை விளக்கு,மன்னாதி மன்னன் எல்லா படங்களையும் போட்டியில் முந்திய கைராசிக்கு இசையமைப்பாளர். எங்கோ சென்றிருக்க வேண்டியவர், விஸ்வநாதன்- ராமமூர்த்தி பிறகு விஸ்வநாதன் ஆகியோருக்கு உதவியாக (ஜி.கே.வெங்கடேஷ்,சங்கர்,கணேஷ்,ஹென்றி டேனியல்,ஜோசெப் கிருஷ்ணா,பிலிப் ஷ்யாம் போல)70 வரையும் ,பிறகு தனக்கு உதவியாக இருந்த இளையராஜாவிற்கு உதவியாகவும் இருந்து, இளைய ராஜாவின் வழக்க படியே அவரால் மிகவும் அவமான படுத்த பட்டு விலாசமிழந்தார்.



1966இலிருந்து மீண்டு பல வெற்றி படங்களுக்கு ,வெற்றி பாடல்களை கொடுத்தவர் ஏன் விலாசமிழக்க வேண்டும்? பட்டினத்தில் பூதம் படத்தின் சிவகாமி மகனிடம், கண்ணில் கண்டதெல்லாம்,எதிர்பாராமல் விருந்தாளி , பூவும் போட்டும் படத்தின் நாதஸ்வர ஓசையிலே ,உன்னழகை கண்டு கொண்டால்,எண்ணம் போல கண்ணன் வந்தான்,பொன் வண்டு தீண்டாத மல்லிகை, பொற்சிலையின் அழகை பாட வந்தேன்,அக்கரையில் அவனிருக்க,பட்டு கன்னம்,ஓம் மகா கணபதி, அஞ்சல் பெட்டி 520 இன் திருமகள் என் வீட்டை,பத்து பதினாறு , வரப்ரசாதம் படத்தின் கங்கை நதியோரம் என்று அற்புத பேச பட்ட பாடல்கள்.பெரிய வெற்றி முதல் சுமார் வெற்றி என்று படங்களும் சோடை போகவில்லை. அவர் தோல்வியடைய கூட சந்தர்ப்பம் கொடுக்க படாமல் துடைத்தெரிய பட்டது என்ன வகையில் சாரும்?



வெற்றிகரமான தோல்விகள் தொடரும்.

rajeshkrv
17th December 2014, 08:03 AM
gopal ji arumai

yes sudharsanamavadhu AVM'kku aasthanamaga irundhaal

Govardanam paavam finally he worked as asst to IR.
Now he is in coimbatore or salem and bed ridden, PS is sending pension monthly .

rajraj
17th December 2014, 09:48 AM
my favourite Qawwali song from Amar Akbar Anthony.
'Parda hai Parda'


vasu: You like colorful qawwali. I like it in black and white. Here is the one I like most from "Barsaat ki Raaat":

Na To Karwan ki Talash Hai......

http://www.youtube.com/watch?v=qXmVoEwJAyU

It is about 'ishq' (love) ! :)

( I don't like to post Hindi songs here except in Jugalbandi. I made an exception for you. Have fun ! :) )

rajeshkrv
17th December 2014, 11:03 AM
இல்லறமே நல்லறம் திரையிலிருந்து 2 அழகான பாடல்கள்
இசையரசியின் மயக்கும் குரலில்

https://www.youtube.com/watch?v=s6a2DXH50r8



https://www.youtube.com/watch?v=F4IAq_jGMqA

vasudevan31355
17th December 2014, 02:52 PM
ராஜ்ராஜ் சார்!

மிக்க நன்றி! அருமையான கவாலி பாடல். இதோ என் அபிமானப் பாடகி பேகம் மற்றும் உஷா மங்கேஷ்கர் பாடிய கவாலி பாடல். 'ஆஜ் அவுர் கல்' படத்திலிருந்து. இதிலும் உங்களுக்குப் பிடித்தமான ishq தான்.:) பிளாக் அண்ட் ஒயிட்தான்.

'Kehte Hai Jisko Ishq'


https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=euKEPjDS1xI

vasudevan31355
17th December 2014, 02:54 PM
கோபால்., எழுத்தாள சகோதரி என்று குறிப்பிட்டிருந்தீர்கள்.. அவர் யார் என அறிந்து கொள்ளலாமா..

உ.பி.சகோதரி.

vasudevan31355
17th December 2014, 03:47 PM
பாடல் இரண்டு
பாணி ஒன்று


தொடர் 7

காளை மாட்டு வண்டிகள் பாடல்கள்.

காளை மாட்டு வண்டிகள் 'ஜல் ஜல்' என்று வயல்வெளிகளின் இடையே வரிசையாக பயணிக்க, இளம் சிட்டுக்கள் வண்டிகளில் பயணிக்க, காதலர்கள் ஒருவரையொருவர் கண்களால் ஆழம் பார்த்து மௌனப் புன்னகை புரிந்து காதல் புரிய, மாடு மேய்க்கும் ஒருவன் 'ஏண்டி முத்தம்மா' என்று பாட அழகான வண்டிப் பயணத்தில் எதிர்பாராத விதமாக நமக்குக் கிடைத்த அதிரசப் பாட்டு. கவிதை மயமான நாட்டுப்புறப்பாட்டு. 'ஆறு புஷ்பங்களி'ல் அர்த்தங்கள் பொதிந்து கிடைக்கும் வரிகள்.

'சுவையுள்ள வாழைக்கனி காயலாமா
சுடச் சுடக் காளை ப் பசு மேயலாமா'

அப்படியே சுடச் சுட பாடலையும் மேய்ந்து விடுங்கள். விஜயகுமார், ரஜினி, ஸ்ரீவித்யா, ஒய்.விஜயா, லட்சுமிஸ்ரீ, சஹஸ்ரநாமம், பண்டரிபாய், அனுபமா, எஸ்.ஆர்.விஜயா என்ற நட்சத்திரக் கூட்டத்துடன் நீங்களும் மாட்டு வண்டியில் பயணிக்கும் சுகத்தை உணரலாம்.


https://www.youtube.com/watch?v=NGL3IMNnBOw&feature=player_detailpage

அண்ணனுக்கு கல்யாணம் முடித்து, அண்ணியை கிராமத்து சிட்டுக்களுடன் காளை மாட்டு வண்டிகளில் கூட்டிக் கொண்டு, ஜாலியாகப் பாட்டுப் பாடியபடி ஜமாய்க்கும் தம்பி. பவானி, ஒய்.விஜயா(இதிலும்), சங்கீதா, ராமகிருஷ்ணா என்று நட்சத்திரக் கூட்டம்.

'ஜில் ஜில் ஜில் என்றது காளைக் கன்னு
ஜிலு ஜிலு என்றது நாலு கண்ணு'

என்று புதிய கல்யாண ஜோடியை இளம் பெண்கள் கலாட்டா செய்து பாட, இவர்களுக்கெல்லாம் தலைமை ஏற்று நடிகர் திலகம் 'டுர்ர்ர்ர்ர்'... என்று மாட்டு வண்டி ஓட்டியபடி 'சிங்காரத் தோப்புக்கு மச்சானை வரச் சொல்லு'ம் தேனினும் இனிய பாடல். ஒய்.விஜயாவிற்கு நடிகர் திலகத்துடன் இணையாக பாடி நடிக்க செம சான்ஸ். பாடல் முழுதும் கரை புரண்ட உற்சாகம். தலையில் மஞ்சள் பரிவட்டம் கட்டி அதிக ஒப்பனை இல்லாமல் சற்று கருமை நிற ஒப்பனையோடு, மிக எளிமையான ஆடைகள் அணிந்து, நடிகர் திலகம் மிக மிக அனுபவித்து இப்பாடலில் வழக்கத்தை விடவும் அதிகமாக அசத்தியிருப்பார். பாடகர் திலகமும், ராட்சஸி யும் இணைந்து அசத்தோ அசத்து என்று அசத்தியிருப்பார்கள்.

முழுப் பாடலும் வெளிப்புறப் படப்பிடிப்பில்தான். ஸ்டுடியோ வாசனையே இருக்காது. நடிகர் திலகத்தின் தாரக மந்திரமான 'ங்கொப்பன் தன்னானே' கண்டிப்பாக உண்டு. பாடல் முழுக்க வேகம் என்றாலும் பாடல் முடிவடையும் போது ஜெட் வேகம். (சும்மா வண்டிகள் காற்றாய் பறக்க (அம்மாடி! எத்தனை மாட்டு வண்டிகள்!) நடிகர் திலகம் ஏறி வந்த வண்டி குடை சாய்ந்து விட, விழுந்த நடிகர் திலகம் காளை மாட்டு வண்டிகளுக்குப் போட்டியாக ஜம்மெற்று ஓடுவதைப் பாருங்கள். செம ஜாலியாக இருக்கும்.

(இதில் இன்னொரு வருத்தம் உண்டு. 'புண்ணிய பூமி' படம் எதிர் பார்த்த அளவிற்கு வெற்றி பெற இயலாமல் போனதால் இப்படத்தின் சில அருமையான பாடல்கள் அப்படியே அமுங்கிப் போயின. அட்டகாசமான பாடல்கள். படத்தின் தோல்வியால் பேசப் படாமலேயே போய் விட்டன. ஒவ்வொரு பாடலிலும் வித்தியாசமான நடிகர் திலகத்தைக் கண்டு களிக்கலாம். முதல் பாதியில்தான் கோட்டை விட்டார்கள். இரண்டாவது பாதி அருமையோ அருமை. நடிகர் திலகத்தின் உழைப்பு விழலுக்கு இழைத்த நீரானது. நம் மக்களும் படத்தின் மீது அதிருப்தி அடைந்து விட்டதால் எல்லோரும் ஒரு தரம் மட்டுமே பார்த்து ஒரு மாதிரியாக முடிவு கட்டி விட்டோம். இப்போது நேரம் கிடைக்கும் போது பாருங்கள். இரண்டாவது பாதியில் நடிகர் திலகத்தின் கொடி எப்போதும் போல வானுயரப் பறப்பதைப் போல வழக்கம் போல லேட்டாகவே உணர்வீர்கள். என்னைப் பொறுத்த வரையில் மிக மிக வித்தியாசமான நடிகர் திலகத்தைத்தான் நான் இந்த 'புண்ணிய பூமி'யில் பாதிக்கு மேல் கண்டேன். நல்ல நடிப்பு பேசப்பட வில்லையே என்று இன்று மூட் அவுட்.)


https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=jllzEChlbcE

chinnakkannan
17th December 2014, 04:35 PM
ஹாய் ஆல்

வாசு சார் குட் ஆஃப்டர் நூன்:)

தேவியில் ஒரு பொங்கலுக்கு ரிலீஸ் என நினைக்கிறேன்..ஏமாற்றத்தை விளைத்த படம் இந்த சிக்ஸ் ஃப்ளவர்ஸ்..


//சுவையுள்ள வாழைக்கனி காயலாமா
சுடச் சுடக் காளை ப் பசு மேயலாமா'// முதல் வரி புரிகிறது..இரண்டாவதற்கு நிறைய தடவை தலையைப் பிய்த்துக் கொண்டிருக்கிறேன்..காளைப்பசுன்னா என்னங்க அர்த்தம்..:)

புண்ணிய பூமி நான் பார்த்ததில்லை வாசுசார்.. கமல் ஒரு விழாவில் பிற்காலத்தில் வெற்றி பெற்ற இந்தியனில் இருந்த கதையம்சம் ஒரு ந.தி படத்தில் இருந்தது என்பது போல் பேசக் கேட்டிருக்கிறேன்..அவரது பட்டிமன்ற ஜெயா.டிவியில் டைப்போ ஜெயாடிவி பட்டிமன்றத்தில்..அது இது தானா..

அன்பளிப்புல்லயும் ஒரு ஒத்தை மாட்டுவண்டி ந.தியோடது வருவதா நினைவு..அப்புறம் வீ.பா. கட்ட பொம்மன்.. சரிதானா..


அந்தக்கால (?!) ஏ. ஆர்.ஆரின் இசையில் வண்டிமாடு ரெண்ட்டுமெட்டு முன்னே செல்லுதம்மா வாக்கபட்ட பொண்ணு மனம் பின்னே செல்லுதம்மா என ஒரு பாட்டு நன்றாக இருக்கும் கிழக்குச் சீமையிலே

அப்புறம் வந்துடுவார் அண்ணனுக்கு ஜேன்னு பாடிக்கிட்டு கல் நாயக் சார்.. அவருக்கும் சிலபாட் விட்டு வைக்கலாம்.. :)

சொல்ல மறந்துட்டேனே ஜல்லிக் கட்டு ப் பாடல் க்கு நன்றி..(அதை த் தான் மொதல்ல போடலாம்னு இருந்தேன் அஞ்சாத சிங்கம் எம் வாசு)

Russellzlc
17th December 2014, 09:41 PM
பொய் கோபம்

திரு.வாசு சார், திரு. கிருஷ்ணா சார், திரு. சின்னக்கண்ணன் சார் , எல்லாருக்கும் வணக்கம்.

எனக்கு மிகவும் பிடித்த பாடகர்களில் ஒருவரான திரு.டி.ஆர். மகாலிங்கம் அவர்களின் அருமையான பாடலோடு விரைவில் வருகிறேன் என்று கூறியிருந்தேன். அதன்படி, அருமையான இந்த பாடலை நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

திரு.டி.ஆர்.மகாலிங்கம் அவர்கள் திரையுலகில் உச்சத்தில் இருந்து பின்னர், சொந்தப் படங்கள் எடுத்து பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டிருந்த நிலையில், அவருக்கு மறுவாழ்வு தந்த படம் கவியரசரின் மாலையிட்ட மங்கை. இப்படத்தில் சூப்பர் ஹிட் பாடல் செந்தமிழ் தேன் மொழியாள் என்றாலும் கூட,

எனக்கு மிகவும் பிடித்தது ‘நானன்றி யார் வருவார்...’ பாடல். அதிகபட்ச உச்ச ஸ்தாயியில் பாடக் கூடியவர் திரு.டி.ஆர்.மகாலிங்கம். ஆனால், இந்தப் பாடல் அவர் கீழ் ஸ்தாயியில் பாடியிருக்கும் வித்தியாசமான பாடல். எனது கேள்வி ஞான இசையறிவுக்கு எட்டிய வரை இந்தப் பாடல் ஆபோகி ராகம் என்று கருதுகிறேன். திரு.ஜி.கிருஷ்ணா சார் போன்ற கர்நாடக இசையில் பாண்டித்யம் உள்ளவர்கள்கள்தான் சரியா என்று கூற வேண்டும். இந்த இனிமையான ராகத்தில் திரு.டி.ஆர்.மகாலிங்கம் அவர்களோடு ஏ.பி.கோமளா அவர்களின் குரலும் சேர பாடல் முழுவதும் கூடுதல் ஜிலுஜிலுப்பு.

புராண, சரித்திர படங்களில் முருகனாக ,இளவரசராக,நாரதராக, கருவூர் தேவராக பார்த்த திரு.டி.ஆர்.மகாலிங்கம் அவர்கள் மைனாவதியுடன் பூங்காவில் ஓடியாடி டூயட் பாடும் வகையிலும் இது வித்தியாசமான பாடலே.

அதிலும், காதலனும் காதலியும் ஒருவரையொருவர் செல்லமாக பொய் கோபத்துடன் சீண்டிக் கொள்வது போல கவியரசரின் கற்பனை வளமிக்க பாடல் வரிகள்.

‘நானன்றி யார் வருவார்?
இளநங்கை உனை வேறு யார் தொடுவார்?
நானன்றி யார் வருவார்? அன்பே
நானன்றி யார் வருவார்?’
------ இந்தக் கேள்விக்கு அவருக்கு வெறுப்பேற்றும் வகையில் பதில்.

‘ஏன் இல்லை இன்றொருவர் அருகில் வந்தார்
முத்தம் எனக்கே என்றார், சொன்னார், தந்தார்
பேசாமல் பேசுகின்றார், வண்ணம் பாடாமல் பாடுகின்றார்’

------ இந்த வரிகளால் செல்லக் கோபத்துடன் இதழில் காயம் என்ன? என்று கேட்கிறார்.

‘வண்ணப் பாவை உந்தன் இதழ் கோவை தன்னில்
இந்த காயம் என்ன? வந்த மாயம் என்ன?’
----- நானில்லாமல் இந்தக் காயம் வந்திருக்க முடியாது. ஆனாலும் வந்திருக்கிறதென்றால் (வேறு யாரையும் காதலி அனுமதிக்க மாட்டாள் என்ற நம்பிக்கையால்) அது மாயமாகத்தான் இருக்க வேண்டும். அது என்ன? என்கிறார்.

இதற்கு மேல் விளையாடினால் வினையாகி விடுமே.. காதலி உண்மையை சொல்கிறாள்.
‘கூண்டுக்கிளி எடுத்து கொஞ்சினேன்’

----- அதற்கு காதலனின் பதில் கேள்வி,

‘அது கோவை என நினைத்துக் கொண்டதோ?
முத்தம் தந்ததோ? சொந்தம் கொண்டதோ?’

----இதழை கோவைப் பழம் என்று நினைத்து, முத்தம் கொடுத்ததுடன் சொந்தம் கொண்டதோ? என்று கேட்டு காதலனின் பொய்க் கோபம்.
அவரை சமாதானப்படுத்தும் வகையில், காதலி,

‘இன்னும் சந்தேகமா?’
என்ற வார்த்தைகளில் பதில் கேள்வி.

சந்தேகமில்லை என்பதை
‘கண்ணே...’ என்று அன்பு காட்டி ஒரே வார்த்தை பதில்.

அதை ஏற்றுக் கொள்ளும் வகையில், பதிலுக்கு காதலி
‘கண்ணா...’ என்று அழைத்து முழுமையாக சந்தேகத்தை போக்கும் வகையில்,
‘மாதென்னை யார் தொடுவார்?
எந்தன் மன்னன் உமையன்றி யார் வருவார்?
மாதென்னை யார் தொடுவார்?’

அடுத்த பாராவின் வரிகள் இன்னும் தூக்கும்.
‘‘காதல் கரை கடந்த உள்ளமே
அது ஆசை மடை கடந்த வெள்ளமே
இந்த நெஞ்சமே எந்தன் சொந்தமே..’’

---- கவியரசர் புல் பார்மில் இருந்திருப்பார் போலிருக்கிறது. ராகம், மெல்லிசை மன்னர்களின் அருமையான இசை, பாடகர்களின் இனிய குரல் வளம், கற்பனையைத் தூண்டும் வரிகள். பிரம்மானந்தம்.


அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

chinnakkannan
17th December 2014, 10:34 PM
//கூண்டுக்கிளி எடுத்து கொஞ்சினேன்’

----- அதற்கு காதலனின் பதில் கேள்வி,

‘அது கோவை என நினைத்துக் கொண்டதோ?
முத்தம் தந்ததோ? சொந்தம் கொண்டதோ?’// கலைவேந்தன் சார்..வாங்க வாங்க.. நல்ல பாட்டு தேன்.. ஆமா மேற்கண்ட வரிகள்ள அந்த இழுவை..இதில் சந்தேகமா..கண்ணேஏஎ கண்ணாஆஆ.. ரொம்ப அழகாக இருக்கும்..நன்றி..

http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=A9L7XgQkgzA

vasudevan31355
17th December 2014, 10:56 PM
கலைவேந்தன் சார்,

சொன்னபடி அருமையான பாடலை அழகான விளக்கங்களுடன் தந்து தங்களின் இன்னொரு பக்கத் திறமையைத் தெள்ளத் தெளிவாகக் காட்டி விட்டீர்கள்.

மதுர கீதத்தில் இதுவரை தொடாத பாடல் வேறு ஆதலால் பிரெஷ் ஆகவும் இருக்கிறது. எனக்கும் மிகவும் பிடித்த பாடல் ஆகும் இது.

vasudevan31355
17th December 2014, 11:15 PM
கலைவேந்தன் சார்!

பொய் கோபம். என் பங்கிற்கு:)

காதலி காதலனை வெறுப்பேற்ற சில வழிமுறைகளைக் கையாள்வது உண்டு. அதாவது காதலன் செய்யும் குறும்புகளை வேறு எவரோ அல்லது எதுவோ:) இவளிடம் முன்னமேயே செய்து விட்டது போல அவனிடமே கூறி காதலனை நொந்து போகச் செய்து, அவனை சீண்டிப் பார்த்து ரசிக்கும் முறை. காதலன் அதை நம்பி நரம்புகள் புடைக்க கோபப்பட, பின் காதலி உண்மையை அவனிடம் சொல்ல, உண்மையறிந்து காதலன் 'அப்பாடா' என்று நிம்மதிப் பெருமூச்சு விடுவான்.

நீங்கள் குறிப்பிட்ட பாடலில் அம்முறையைக் காணலாம். 'கூண்டுக்கிளி எடுத்துக் கொஞ்சினேன்' என்று அவள் உண்மையைச் சொல்லி விட்டாள். ஆனாலும் காதலன் ரொம்ப பொஸசிவ் ஆனவன். கிளி 'கோவைப பழம் என நினைத்துக் கொண்டதோ? முத்தம் தந்ததோ? சொந்தம் கொண்டதோ?’ என்று அப்போது கூட தாங்க முடியாத ஆத்திரத்தில் கேட்கிறான்.

இப்போது எனக்கு உங்கள் அபிமானத் தலைவரின் நடிப்பில் வெளிவந்த படத்தில் இடம் பெற்ற ஒரு பாடல் ஞாபகத்திற்கு வருகிறது.

'ஏய் மச்சான்... என் பொன்னு மச்சான்... என்னைத் தொடாதே'

'பட்டிகாட்டுப் பொன்னையா' படப் பாடல்.

இந்தப் பாடலிலும் அதே கதைதான். முதலில் காதலி தன்னைத் தொட வரும் காதலனை வேண்டுமென்றே,

'தொடாதே' என்று பாசாங்கு செய்தபடி பாடத் தொடங்குகிறாள்

'ஏய் மச்சான்... என் பொன்னு மச்சான் என்னைத் தொடாதே'

என்று காதலனுக்கு செம தண்ணீர் காட்டுகிறாள். சக்கையாக வெறுப்பேற்றுகிறாள். காதலன் கோபத்தின் உச்சிக்குப் போகும் அளவிற்கு.

'கையைப் புடிச்சானே... அய்யா கையைப் புடிச்சானே
காலையிலே ஒருத்தன் வந்து கையைப் புடிச்சானே'

இது காதலி.

காதலன் கோபமாகக் கேட்கிறான் அவளிடம்.

'கையைக் கொடுத்தாயா.... அடி நீ கையைக் கொடுத்தாயா?
காதலிலே கண் மயங்கி கட்டிப் புடிச்சாயா?

அவன் எண்ணம் எங்கெல்லாமோ போய் விட்டது. காதலியை இனிமேல் நம்புவதா? ம்ஹூம்.

உடன் அவள் இன்னும் உசுப்பேற்றுகிறாள்.

'காலைப் புடிச்சானே... மெதுவா... மெதுவா
ஏதோ கணக்கு வச்சி காரியத்தோட காலைப் புடிச்சானே'

(காதலன் தலையில் அடித்துக் கொண்டு தலையைக் கவிழ்த்துக் கொள்கிறான்)

கையை தொட்டதாக முதலில் சொல்லி, பின் காலைத் தொட்டதாக சொல்லி, இப்போது காதலி உச்ச கட்டத்திற்கு வந்து விட்டாளே!

'நெஞ்சைத் தொட்டானே...மெதுவா... மெதுவா...
நான் நீண்ட மூச்சு வாங்க வாங்க நெருங்கித் தொட்டானே!

காதலன் ஆத்திரமுற்று கத்துகிறான்.

'காலைக் கொடுத்தாயா? அடி நீ காலைக் கொடுத்தாயா?
காத்திருக்க மனமில்லாமல் கையில் விழுந்தாயா?

நெஞ்சைத் தொட்டானா? அடி உன் நெஞ்சைத் தொட்டானா?
நெனச்சுப் பார்க்க முடியல்லியே... நெருங்கித் தொட்டானா?'

காதலனைப் பாருங்கள். 'அதை' நினைத்துக் கூடப் பார்க்க முடிய வில்லையாம்.:)

இப்போது காதலி இன்னும் மலை ஏறுகிறாள்.

'சேலை எடுத்தானே... பாவி சேலை எடுத்தானே
சேலையோடு ரவிக்கையையும் சேர்த்தெடுத்தானே'

கேட்கும் போதே நமக்கு 'பக்' கென்று இல்லை? காதலன் நிலைமை எப்படி இருக்கும்?

இனிமேல் காதலன் பொறுப்பதாவது? எங்க தலைவர் பாணியில் 'நெவர்'.

அவள் மீது பாய்கிறான்.

'நாணங் கெட்டவளே... அடியே நடத்தை கெட்டவளே...
உன்னால் நானுங் கெட்டுப் போகும் முன்னால் திருத்தி விட்டவளே..
அடி போதுமடி! போதும்.. ஒரு தலைமுறைக்கே புத்தி வந்ததடி'

ஒரு பெரிய கும்பிடாக அவள் பக்கம் போட்டு விட்டு ஓடியே போய்விடப் பார்க்கிறான். அவள் பண்ணின கூத்தில் அவன் அழுதே கூடப் போய் விட்டான். அவன் புலம்பலின் உச்சத்தைக் கவனியுங்கள். தலைமுறைக்கே புத்தி வந்ததாம்.:)

இப்போதுதான் காதலிக்கு அவன் மேல் அனுதாபம் பிறக்கிறது. 'இனி தாங்க மாட்டான்' என்று விளையாட்டை நிறுத்தி, தான் சொன்னதன் இன்னொரு அர்த்தங்களை அவனுக்கு ஒவ்வொன்றாகப் புரிய வைக்கிறாள்.

'மச்சான்... மச்சான்' என்று செல்லமாக சிரித்துக் கொண்டே அவனைக் கூப்பிட்டு விளக்கமளிக்கிறாள்.

'கையைப் புடிச்சான் வளையல் போட'

வளையலை குலுக்கிக் காட்டுகிறாள். இப்போது கொஞ்சம் புரிகிறது காதலனுக்கு. 'ஓஹோ! கையைப் பிடித்தவன் வளையல்காரனா? அப்பாடா! பொழச்சேன்'

வாயெல்லாம் அவனுக்குப் பல்.

'காலைப் புடிச்சான் சலங்கை கட்ட'

காலுக்கான விளக்கம் அளிக்கிறாள் காதலி.

'அடடா! ஆமாம்...நகைக் கடைக்குப் போய் சலங்கை கட்டி வந்திருக்காள்'

காதலன் உற்சாகமாகிறான்.

சரி! இரண்டு விளக்கங்களும் சரி! அடுத்து நெஞ்சுக்கு என்ன விளக்கம் சொல்லப் போகிறாள் பார்ப்போமே! அவன் கண்களிலும், மனதிலும் ஆர்வம்.

அவள்,

'நெஞ்சைத் தொட்டான் நோயைப் பார்க்க' என்கிறாள்.

ஆமாம்! உண்மைதான்! டாக்டர் ஸ்டெதஸ்கோப் வைத்துப் பார்க்கும் போது நெஞ்சைத் தொட்டுதானே ஆகவேண்டும்? அப்பாடா! வயிற்றில் பால் வார்த்தாள் மகராசி .

இப்போது முடிவுக்கு வருகிறாள்.

'சேலை எடுத்தான் சலவை செய்ய'

காதலனுக்கு இப்போது பரம திருப்தி! சலவைத் தொழிலாளி சலவை செய்ய சேலை எடுத்து இருக்கிறான். கூடவே ரவிக்கையயும்தானே எடுப்பான்? சந்தேகம் தீர்ந்தது. இனி நிம்மதி!



இப்பதான் கதையே ஆரம்பம்.:)

இந்தக் காதலன் எம்.ஜி.ஆர் ஆச்சே! அவ்வளவு சீக்கிரம் காதலியிடம் ஏமாந்து விடுவாரா? கதையையே மாத்திபுட்டார்.

காதலியைப் பார்த்து,

'ஏமாந்துட்ட... ஏமாந்துட்ட... நல்லா ஏமாத்திபுட்டேன்'

என்று எகத்தாளம் செய்ய,

காதலி இப்போது முழிக்கிறாள் முகத்தில் ஆச்சரியக் குறிகளோடு.

'அடி போடிக்கண்ணு... எல்லாம் தெரியுமடி... எனக்கு முன்னாலே
சும்மா போக விட்டு நடிச்சேன்டி கோபத்தைப் போலே'

என்று காதலன் எம்.ஜி.ஆர் காதலி ஜெயலலிதாவிடம் போட்டாரே ஒரு போடு. அதான் எம்.ஜி.ஆர்.:)

நான் ரொம்ப ரசித்த குறும்புப் பாடல்.

கலைவேந்தன் சார் ஓ.கேவா?

இதே வகையைச் சேர்ந்த இன்னொரு பாடலும் இருக்கிறது. நீங்கள் விருப்பப்பட்டால் பதிகிறேன்.

நன்றி கலை சார். இந்தப் பாடலைப் பற்றிய இந்தப் பதிவை நான் எழுதும் இந்த நேரத்தில் என்னையுமறியாமல் எழும் சிரிப்பை அடக்கிக் கொண்டுதான் எழுதுகிறேன்.:) அவ்வளவு ஜாலியாக இருந்தது சார்.


https://www.youtube.com/watch?v=yflshq1PPFc&feature=player_detailpage

rajeshkrv
17th December 2014, 11:26 PM
vanakkam Vasu ji

RAGHAVENDRA
17th December 2014, 11:39 PM
பொங்கும் பூம்புனல்

திரு வேம்பார் மணிவண்ணன் அவர்களுக்கு முதற்கண் நன்றியுடன் இப்பாடல் இங்கு பகிர்ந்து கொள்ளப்படுகிறது.

மிக மிக மிக நீண்ட நாட்களுக்குப் பிறகு நான் உன்னைச் சேர்ந்த செல்வம் என நம்மிடம் திரும்ப வந்து விட்டது கலைக்கோயில்..

https://www.youtube.com/watch?v=8sFHi02JtAk

மணிவண்ணன் சார் மிக மிக மிக நன்றி.

rajeshkrv
17th December 2014, 11:59 PM
பொங்கும் பூம்புனல்

திரு வேம்பார் மணிவண்ணன் அவர்களுக்கு முதற்கண் நன்றியுடன் இப்பாடல் இங்கு பகிர்ந்து கொள்ளப்படுகிறது.

மிக மிக மிக நீண்ட நாட்களுக்குப் பிறகு நான் உன்னைச் சேர்ந்த செல்வம் என நம்மிடம் திரும்ப வந்து விட்டது கலைக்கோயில்..

https://www.youtube.com/watch?v=8sFHi02JtAk

மணிவண்ணன் சார் மிக மிக மிக நன்றி.

ungalai serndha selvam ungalidame vandhu vittathu

Gopal.s
18th December 2014, 03:26 AM
கலை,

டி.ஆர். மகாலிங்கம் நடுநாயகமான octave எடுத்து பாடும் போது அழகுதான். அவருக்கு bass அல்லது மேல் octave செல்ல செல்லும் போதும் பாடும் முறையில் பிசிறு இல்லாவிட்டாலும் ,கேட்க சுமாராகவே இருக்கும். இவர் தி.மு.கவில் முக்கியஸ்தராக இருந்தது தெரியுமா?இது ஆபோகியேதான். என்ன சந்தேகம்?

எனக்கு பிடித்த மற்றவை சில்லென்று பூத்த, சொட்டு சொட்டுன்னு,ஆடை கட்டி வந்த நிலவோ, இசை தமிழ் நீ செய்த,பந்த பாச காட்டுக்குள்ளே.

கண்ணதாசன் ,கதாநாயகி தன்னை பிறர் கொஞ்சியதாக சொல்லும் போது ,நாயகன் பொய் கோபம் கொண்டதில் ,இன்னொரு சுவையான பாடல் நான் மலரோடு.மற்றது வாசு சொன்ன நகைச்சுவை ரகம்.

Gopal.s
18th December 2014, 04:56 AM
தொடரும் கொண்டாட்ட தோல்விகள்.

சில தொழில்களில் இருப்பவர்கள் ,அரசியலில் ஈடு பட கூடாது அல்லது அரசியலில் ஈடு படுவதற்கு குறைந்த பட்ச நிபந்தனை விதிக்க வேண்டும் என்ற கருத்தை ஆமோதிப்பவன் நான். எல்லா குடிமகன் களுக்கும் உரிமை உண்டே என்பது நகைப்புக்கிடமான கூற்று.unfair advantage உள்ள தொழில் சினிமா நடிப்பு தொழில். மக்கள் தினமும் பார்ப்பதால் recall value கொண்டது. மிகை பிம்பங்களை நிலை நாட்டும் சத்யகூருகள் கொண்டது.அத்தோடு மக்களுக்காக அரசியலில் ஈடுபட்ட காமராஜ் போன்றவர்களோ,அண்ணா போன்றவர்களோ வெற்றியோ ,தோல்வியோ அரசியலை தொழில் போலவோ ,பொழுது போக்கு போலவோ பாவித்து வேறு தொழிலுக்கு ஓட நினைக்க மாட்டார்கள்.சில திடீர் தலைவர்கள் ,தன செல்வாக்கிற்காக மட்டும் அரசியலை ஊறுகாய் மாதிரி எடுத்து,ஒரு பிரச்சினை என்றதும் ,பழைய தொழிலுக்கு ஓட நினைத்ததை பார்த்திருக்கிறோமே?தவறான முன்னுதாரணங்களுக்கு பஞ்சமா என்ன?

இந்த மாதிரி familiarity &Image based வெற்றிகள் ,அரசியலை சேத படுத்தி,இன்றைய குட்டி நடிகர்களை கூட ,நாக்கை சுழற்ற வைப்பதையும் ,படித்தவர்கள் சதவிகிதம் அதிகமாகியும் ,பெரிய மாற்றம் இல்லாததையும் யோசித்தால்,அரசியல் அமைப்பு முறையை சீர்திருத்தி, விகிதாசார பகிர்வு முறையை அமல்படுத்தி,திடீர் தலைவர்களின் வெற்றியை ஒடுக்கி ,மக்களை காத்தே ஆக வேண்டும்.

இப்போது ஒரு முக்கிய தோல்வியை கொண்டாடுவோம்.

ஏ.எம்.ராஜா.

இவர் பெயரை உச்சரிக்கும் போதே எனக்கு ஒரு வித புளகாங்கிதம் ஏற்படும். 53 முதல் பலருக்கு பாடும் குரலாகி,பிறகு பீ.பீ.எஸ் போன்றவர்களின் வருகையாலும்,பிற காரணங்களாலும் தேய்ந்து போன பாடகர்.ஆனால் நான் பேச வந்தது இசையமைப்பாளர் ராஜாவை பற்றி.

நீங்கள் இளைய ராஜாவை எடுங்கள் (இவர் இளைய ஆனதுக்கு சீனியர் தான் காரணம்),ரகுமானை எடுங்கள் ,முதல் படம் வெற்றி,அதில் அவர்கள் பங்கு ,தொடரும் திறமை நிரூபணம்,இவை அவர்களை இருபதாண்டுகளுக்கு நிலை நாட்டவில்லையா?

அப்போது கல்யாண பரிசின் பிரம்மாண்ட வெற்றி, அதில் trend -setter ஏ.எம்.ராஜாவின் அபார பங்கு ,தொடர்ந்த விடிவெள்ளி,தேனிலவு,ஆடிப்பெருக்கு போன்ற வெற்றி படங்கள் ,அதில் ஏ.எம்.ராஜாவின் தொடர்ந்த திறமை நிரூபணம் ,இவை ராஜாவை 70 கள் வரை ராஜாவாக வலம் வர வைத்திருக்க வேண்டாமா?

இவர் எல்லா பாணி இசையையும் தொட்டு ,புதிய பாணியை நிறுவினாரே ?தமிழ் பட உலகுக்கு புது பாட்டையே போட்டு கொடுத்தாரே?
கர்நாடக- ஹிந்துஸ்தானி-மேற்கத்திய இசையிணைப்பில் தேன்நிலவில் அசுர சாதனை நிகழ்த்தினாரே?

ஏன் என்ற கேள்வி மட்டுமே மிஞ்சுகிறது இந்த ஞான கிறுக்கனின் தோல்வியை நினைத்தால். நெஞ்சு குழிக்குள் ஒரு அடைப்பு ஏற்படுத்தும் சோகம். வாடிக்கை மறந்ததும் ஏனோ,ஆசையினாலே மனம்,துள்ளாத மனமும் துள்ளும், உன்னை கண்டு நானாட,காதலிலே தோல்வியுற்றான், பண்ணோடு பிறந்தது ராகம்,என்னாளும் வாழ்விலே,இடை கையிரண்டில்,கொடுத்து பார் பார் பார்,பாட்டு பாடவா,காலையும் நீயே,ஓஹோ எந்தன் பேபி,நிலவும் மலரும் பாடுது,ஊரெங்கும் தேடினேன்,தனிமையிலே இனிமை காண முடியுமா,காவேரி ஓரம் கவி சொன்ன காதல் என்ற பாடல்களை கொடுத்தவரையா படவுலகம் ஒதுக்க முடியும்?

ஏன் நேர்ந்தது? இது நமக்குமே மாபெரும் இழப்புத்தானே? மலையாளம் பக்கம் கரையொதுங்கி நூறுக்கு மேற்பட்டதை தந்தார் ராஜா.

இது அவர் முன்கோபத்தாலா?அல்லது சுய மரியாதையாலா?(ஸ்ரீதர்,விஸ்வநாதன் போன்றவர் பகைப்பு),எல்லோரையும் யார் என்று பாராமல் தூக்கி எரியும் அகந்தையாலா? வித்தை செருக்கா?அன்றைய முன்னணி நடிகர்களின் பாடும் குரலான டி.எம்.எஸ் மேல் இவருக்கு மதிப்பில்லை என்பதால் அவரை உபயோகிக்க தவறியதாலா?(ஆனால் ஸ்ரீதர் கூட ஆரம்ப நாட்களில் ஸ்ரீநிவாஸ்,ஜானகி ஆகியோரையே கொண்டாடினார்)

இது எதுவுமே காரணமில்லை. படவுலகின் வினோத புறக்கணிப்பு.தேடல் அற்ற மக்கள் கூட்டம்.இவை நமக்கு ஏற்படுத்திய இழப்பு கொஞ்சமா நஞ்சமா?

(தொடரும் தோல்விகள்)

RAGHAVENDRA
18th December 2014, 07:36 AM
கலை சார்
டி.ஆர். மகாலிங்கம் அவர்களின் நானன்றி யாரறிவார் பாடலைப் பற்றிய தங்களின் அருமையான தொகுப்புரை இது வரை இப்பாடலை யாரேனும் கேட்காமலிருந்தார்களானால் அவர்களை நிச்சயம் கேட்கத் தூண்டியிருக்கும். மற்றவர்களுக்கு மீண்டும் புதிய அணுகுமுறையில் அதைக் கேட்க வைத்திருக்கும்.
தொடர்ந்து அபூர்வமான பழைய பாடல்களைப் பற்றிய தங்கள் பதிவுகளைத் தரவேண்டும்.
பாராட்டுக்கள்.

RAGHAVENDRA
18th December 2014, 07:37 AM
டி.ஆர். மகாலிங்கம் பாடிய பாடல்களில் என்னை மிகவும் கவர்ந்த பாடல் ஆட வந்த தெய்வம் படத்திலிருந்து

கோடி கோடி இன்பம் பெறவே தேடி வந்த செல்வம்..

https://www.youtube.com/watch?v=HWvPJ2anjKs

ஆயிரம் முறை கேட்டாலும் அலுக்காமல் புதியதாகத் தோன்றும் அருமையான பாடல்

RAGHAVENDRA
18th December 2014, 07:40 AM
கோபால்
தொடரும் கொண்டாட்ட தோல்விகளின் தொடரும் தொடரட்டும்...நிற்க வேண்டாம். தங்களுக்கே உரிய கோணத்தில் பல இசை மேதைகளி்ன் பங்களிப்பு, அவர்களுடைய சிறப்பு இவற்றை அலசுகிறீர்கள்.
ஜி. ராமனாதன் தோல்வி அடையவில்லையே... அவருடைய படைப்புகள் இன்றளவும் முன்னணியில் தானே உள்ளன. விஸ்வநாதன் ராமமூர்த்தி வருகைக்குப் பின்னர் அவருடைய பாணியை மக்கள் சற்றே நிராகரித்து வேறு பக்கம் பயணிக்கத் தொடங்கினர். இது ஒரு டிரெண்ட் அவ்வளவு தானே தவிர அவருக்குத் தோல்வியெனக் கூற முடியாது. ஏனென்றால் தெய்வத்தின் தெய்வம் வணிக ரீதியிலும் கையைக் கடிக்காமல் வெற்றி கண்ட படம். அருணகிரிநாதர் வேண்டுமானால் தோல்வி அடைந்திருக்கலாம்.
எனக்குத் தெரிந்து தோல்விப் பட்டியலில் ஜிஆர் இடம் பெறமாட்டார் என்பதே என் கருத்து.

rajraj
18th December 2014, 08:21 AM
Good to see T.R.Mahalingam songs here! :)

Here is a song from Naam Iruvar (1947) popular in my elementary/middle school years(1940s):

kOdaiyile iLaippaatrikoLLum vagai kidaitha kuLir tharuve..........

http://www.youtube.com/watch?v=KkdY71gPNFE

Gopal.s
18th December 2014, 09:17 AM
தொடரும் கொண்டாட்ட தோல்விகள்.


நமது நாட்டில் வதந்தி போல பிம்பங்களை உருவாக்குவது சுலபம்.(சிறிய வயதில் ஜம்புலிங்கம் என்ற திருநெல்வேலி சேர்ந்த கொள்ளைக் காரனை பற்றி ராபின்ஹூட் ரேஞ்சில் படிக்காத முன்னோர்கள் பேசி கேட்டிருக்கிறேன்)இங்கு ஊர் பார்த்த உண்மைகள் என்று பரப்ப படுபவை பெரும்பாலும் வதந்திகளே. புறம் பேசியும்,ஊர் வதந்தி பேசியுமே வாழ்ந்த முன்னோர்களை கொண்ட ,பகுத்தறிவில்லா இனங்களை, அதே word of others ' mouth ,மற்றவர்கள் கேள்வி பட்டதில் இருந்து கேள்விபட்டதில் இருந்து சில சுயத்தை இணைத்து மற்றோர் காதுக்கு செய்தியாக்குவது.இதற்கு நாம் செய்ய வேண்டியது சொல்லளவில் இனிமை.(செயல் எப்படி இருப்பினும்).சில விளம்பரங்கள் தரும் நிலையிலுள்ள பத்திரிகையாளர் ,பொது வாழ்விலுள்ளோர்,எல்லோர் கண் படும் படி சில சாதா மனிதர்கள் இப்படி சிலருக்கு சராசரி உதவிகள் முதலீடு போல செய்து,அவர்கள் மூலம் ஊதி , சுய பிம்பத்தை பெரிதாக்கி, வரலாறு முக்கியம் அமைச்சரே என்ற புலிகேசி பாணி செயல் பாடு. ஒரு மூடநம்பிக்கையான கடவுளை தகர்த்து,அதற்கு பிரதியாக வசதியான தலைவர்களின் பதிலீடு. இங்கு மக்களுக்கு உணர்த்த வேண்டிய பத்திரிகையார்கள் ,சிறிய சலுகைகளுக்கு வாலாட்டி,அல்லது ஓஹோவென நரஸ்துதி செய்யும் அர்ச்சசையாளர்களாக மாற்ற பட்ட விந்தை.தனி பட்ட விபத்துகளை ,தேச பிரச்சினை போல ஊதி மக்களிடையே கொண்டு சென்று ஒரு இனைத்தையே மூளை சலவை செய்தது.நல்லவேளை செத்தவர்களுக்கும் வேட்பாளர்களாகும் உரிமை இருந்திருந்தால் நம் கதி???(நல்ல வேளை அம்பேத்கர் காப்பாற்றினார்)




இப்போது சொல்லுங்கள்,இங்கு பறிக்க படும் வெற்றி கனிகள் பாராட்ட தக்கதா?




தொடருவோம் கொண்டாட்ட தோல்விகளை.




டி.ஜி.லிங்கப்பா.




திருச்சியை சேர்ந்த கோவிந்த ராஜுலு லிங்கப்பா ,குடும்ப வழியில் சங்கீதம் பெற்ற மேதை. எல்லா இசையமைப்பாளர்களையும் மேதைகள் என்று புகழ்வதில்லை.(புகழ் பெற்று உச்சம் தொட்டவர்களை விட்டு விடுங்கள்).தக்ஷினாமூர்த்தி, டி.ஜி.லிங்கப்பா போன்ற ஒரு சிலருக்கே அந்த புகழ் உண்டு. சி.ஆர் .சுப்பரமனுக்கு உதவி கொண்டிருந்த (ராமமூர்த்தி ,லிங்கப்பா இசை உதவி.ஆபிஸ் துடைக்கெவென்று சிலர்)லிங்கப்பாவுக்கு முதல் வாய்ப்பு டி.ஆர்.மகாலிங்கத்தின் சுகுமார் கம்பெனி மூலம்.வந்தது. டி.ஆர் மகாலிங்கத்தின் தயாரிப்பில் உதவியாக இருந்து பிற்கால பிரபலம் பந்துலுவுடன் தொடர்பு. அவர் தயாரிப்பாளரானதும்

கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரியில் இருந்து பத்மினி பிக்சர்ஸ் படங்களில் ஆஸ்தான இசையமைப்பாளர்.



ஹிந்துஸ்தானி இசை,கர்நாடக இசை,மேற்கத்திய இசை குத்து பாடல்கள்,கிராமிய பாடல்கள், என்று இவர் தொட்டு வெற்றியடையாத சங்கதிகளே இல்லை .கமாஸ் என்ற ராகத்தை இவர் சித்திரம் பேசுதடி ஆக்கிய விந்தை இன்றளவும் பேச படுகிறது.54 முதல் 60 வரை வருடம் ஒரு படம்,இரு படம் என்று பண்ணி கொண்டிருந்தவர் ,இங்கு விலை போகாமல்,கன்னடம் தாவி 1988 வரை தொடர்ந்தார். நடிகர்திலகத்திற்கு கிட்டத்தட்ட 6 படங்கள் பண்ணியுள்ளார்.நடிகர்திலகம்-பந்துலு இணைவின் கடைசி படமான முரடன் முத்துவுக்கும் இசை இவர்தான்.பிறகு 70 களில் கடவுள் மாமா என்ற பந்துலு படத்தில் பங்கேற்றார்.



குறிப்பிட தக்க பாடல்கள் (பெரும்பாலும் நடிகர்திலகம்)வெண்ணிலாவும் வானும்,கவியின் கனவில்,அதிமதுரா அனுராதா,காதல் உள்ளம்,ஒண்ணிலே இருந்து,தென்றலே வாராயோ,அமுதை பொழியும்,இகலோகமே,ராதா மாதவா,என்னருமை காதலிக்கு,சித்திரம் பேசுதடி,காணா இன்பம்,ஆசையில் ஊஞ்சலில்,கோட்டையிலே ,கல்யாண ஊர்வலம் பாரு,தாமரை பூ கொளத்திலே ,பொன்னாசை கொண்டோருக்கு,சந்திரபாபுவின் சில ஆங்கில மேற்கத்திய சாயல் பாடல்கள்.(ஒன்று நடிகர்திலகத்துக்கு)



இவர் யாருக்கு பாட முதல் வாய்ப்பு கொடுத்தாரோ ,அதே சந்திர பாபுவால் மோசடி செய்ய பட்டு ,இவர் இசையமைத்த குங்கும பூவே எஸ்.எம்.எஸ் பெயரில் வந்து பிரபலம் கண்டது. ரீதி கவுளையில் இவர் செய்த அற்புத பாடல் புத்தம் புது மேனி கே.வீ.எம் பெயரில் வந்து பெயர் பெற்றது.



இவரை ஒரு ,இரண்டாம் நிலை இசையமைப்பாளராக கூட அங்கீகரித்து பயன் படுத்தி கொள்ளாத குற்றத்தை தமிழ் பட உலகம் செய்தது. இவரும்,பந்துலுவும் ,கன்னடமும் போதும் என்று இருந்து விட்டார்.



இன்றும் நம் நெஞ்சில் மறையாமல். மோகனமாய் ,நிலவாய் அமுதை பொழிந்து நம்மை குளிர்வித்து கொண்டிருக்கும் தோல்வி.

(தொடரும்)

Gopal.s
18th December 2014, 09:54 AM
கோபால்
தொடரும் கொண்டாட்ட தோல்விகளின் தொடரும் தொடரட்டும்...நிற்க வேண்டாம். தங்களுக்கே உரிய கோணத்தில் பல இசை மேதைகளி்ன் பங்களிப்பு, அவர்களுடைய சிறப்பு இவற்றை அலசுகிறீர்கள்.
ஜி. ராமனாதன் தோல்வி அடையவில்லையே... அவருடைய படைப்புகள் இன்றளவும் முன்னணியில் தானே உள்ளன. விஸ்வநாதன் ராமமூர்த்தி வருகைக்குப் பின்னர் அவருடைய பாணியை மக்கள் சற்றே நிராகரித்து வேறு பக்கம் பயணிக்கத் தொடங்கினர். இது ஒரு டிரெண்ட் அவ்வளவு தானே தவிர அவருக்குத் தோல்வியெனக் கூற முடியாது. ஏனென்றால் தெய்வத்தின் தெய்வம் வணிக ரீதியிலும் கையைக் கடிக்காமல் வெற்றி கண்ட படம். அருணகிரிநாதர் வேண்டுமானால் தோல்வி அடைந்திருக்கலாம்.
எனக்குத் தெரிந்து தோல்விப் பட்டியலில் ஜிஆர் இடம் பெறமாட்டார் என்பதே என் கருத்து.

நான் தோல்வி என்று குறிப்பது அவர்களின் நன்-முயற்சிகளையோ அல்லது அவர்களின் பங்களிப்பின் தரத்தையோ பற்றி அல்ல.



விரும்பி ஓய்வு நாடுவது ஒரு வகை கலைஞர்களின் இயல்பு.

அதை செய்ய அவர்கள் விரும்பும் வரை உச்சத்தில் இருக்க வேண்டும்.நடிகர்திலகம் போல.



ஆனால் விருப்பத்துக்கு விரோதமாக ,துறையில் இருந்து திறமையாளர்கள் ஒதுக்க படுவதை ,தோல்வி என்று குறிப்பது அவர்களின் தோல்வியாக அல்ல. நம் போன்ற தேர்ந்த ரசிகர்களின் தோல்வி. புதியன புகுந்தால்,அனைத்து பழையனவும் கழிக்க பட வேண்டாமே?



தானே out -date ஆகி, ஆனால் பழைய நினைப்பிலேயே மிதப்பது வேறு வகை.(Death of a Salesman novel படித்தவர்களுக்கு புரியும்.பூரணம் இதை தழுவி நாடகம் போட்டார்)

chinnakkannan
18th December 2014, 11:15 AM
//ஆனால் விருப்பத்துக்கு விரோதமாக ,துறையில் இருந்து திறமையாளர்கள் ஒதுக்க படுவதை ,தோல்வி என்று குறிப்பது அவர்களின் தோல்வியாக அல்ல. நம் போன்ற தேர்ந்த ரசிகர்களின் தோல்வி. புதியன புகுந்தால்,அனைத்து பழையனவும் கழிக்க பட வேண்டாமே?// மாற்றங்கள் தானே வழக்கமாக நிகழ்ந்து வருகின்றன.. புதியன புகுந்தால் பழையன செல்ல த் தானே செய்யும். மீன்ஸ் எனக்குப் பிடித்த அந்தக்காலப் பாடலை நான் என் உயிர் உள்ளவரைக் கேட்டுக் கொண்டிருப்பேன்..கேட்டு வளர்ந்தது நான். என் மகள் அவள் இளம் பருவத்தில் கேட்டு மகிழ்ந்த பழைய பாடலை கடைசிவரை கேட்பார்.. ஜெனரேஷன் மாற மாற ரசனை யும் மாறி க் கொண்டு தானே இருக்கும்..அதெப்படி ஜெனரேஷனின் மாற்றத்தை நம் போன்ற ரசிகர்களின் தோல்வி எனச் சொல்ல முடியும்..

//இது ஒரு டிரெண்ட் // மிகச் சரி.. நிறைய எழுதலாம் கடமை அழைக்கிறது அப்புறம்வருகிறேன் :)

கோபால் தொடர் நன்றாக இருக்கிறது இன்னும் இன்னும் எழுதுங்கள்.. ஓபன்ஸ் வேரியஸ் தாட்ஸ்..டெத் ஆஃப் அ சேல்ஸ் மேன் மாறு தல் வரும் நாடகம் தானே

kalnayak
18th December 2014, 12:16 PM
கோபால்,

தொடரும் கொண்டாட்ட தோல்விகள் தொடர் சிறப்பாக இருக்கிறது. எனக்கு பல பாடல்கள் கேட்டிருந்தாலும், பாடியவர் யார், இசையமைத்தவர் யார் என்று நினைக்க நேரமிருந்ததில்லை. அந்த விதத்தில் உங்கள் தொடர் எனக்கு நல்ல அறிமுகம். நன்றி.

தமிழ் திரையுலகம் தோல்வியடையச் செய்த திறமைசாலிகளை வரிசைப்படுத்துகிறீர். அதே தமிழ் திரையுலகம் திறமையற்ற சிலரையோ பலரையோ அத்துடன் நன்றென சொல்லமுடியாத திரைப்படங்களையோ வெற்றி பெறச் செய்திருக்கலாம். அதை வரிசைப்படுத்தும் அசாத்திய தைரியத்தையும் உங்களிடம் காணுகின்றேன். இருந்தாலும் அதைச் செய்ய மாட்டீர்கள் என்றும் நம்புகின்றேன்.

chinnakkannan
18th December 2014, 01:11 PM
பொய்க் கோபம்...

கலை, வாசு கிளப்பி விட்டீர்கள்..

மூட மறுக்கும் முழுத்தணலாய்ச் சுட்டுவிடும்
ஊடலைக் கொண்ட உளம்

போடா எனச்சொல்லி போகாமல் நின்றவளும்
ஆடாமல் ஆடுவாள் ஆம்..

பனிபடர் மெல்லிதழ் பாய்ந்துதான் ஏசும்
கனிவிலா வார்த்தையைக் காண்.

இப்போதைக்கு அம்புட்டு தான்..

**
வாணியின் கோபம் முத்துவின் தாபம்

முல்லைப்பூ பல்லக்கு போவதெங்கே
கனி மூன்றும் போகும் பாதை எங்கே

இது காவலை மீறிய காற்று
உன் காதலை வேறெங்கும் காட்டு..

ஒரு பக்கம் பார்த்தால் அழைப்பு
மறுபக்கம் பார்த்தால் கொதிப்பு
இது பிள்ளை குணமா இல்லை கள்ளத் தனமா
நடை பின்னலிடும் காரணம் என்னம்மா

காரணம் சொல்ல ஒரு நாள் போதுமா

உதட்டினில் வருவது சிரிப்பு
உள்ளத்தில் எரிவது நெருப்பு
இதில் காதல் வருமா இல்லை மோதல் வருமா
உங்கள் கண்கள் செய்யும் சாகசம்கொஞ்சமா

அவன்.. சாகசம் பெண்களுக்குத் தான்சொந்தமா

அவள்.. உள்ளத்தைக் கொடுத்தேன் உனக்கு இதில்
உனக்கேன் வேறொரு கணக்கு
இன்று உண்மை சொல்லுங்கள்
பின்பு என்னைத் தொடுங்கள்
உங்கள் உள்ளத்துக்கு நான் மட்டும் சொந்தமா?

வானத்தில் வெண்மதி ஒன்றேயம்மா என்
வாழ்க்கைத் துணையும் நீயேயம்மா

**

இது தானா வாசு சார்.. நீங்கள் சொல்லப் போகும் பாடல்...எஸ்.பி.பி, சுசீலா..



http://www.youtube.com/watch?v=x62UuhIMT4w

kalnayak
18th December 2014, 01:19 PM
சி.க.
ராஜண்ணாவின் கட்டை வண்டி அனுபவங்கள் சட்டென்று நினைவிற்கு வரவில்லை. இருந்தாலும் பாடல்கள் இதோ:

https://www.youtube.com/watch?v=SAhnSG2e12g


https://www.youtube.com/watch?v=s0kABAp-NcM

Richardsof
18th December 2014, 02:43 PM
பொய் கோபம் .....

இனிய நண்பர் திரு கலைவேந்தனின் மகாலிங்கம் அவர்களின் பாடலை தொடர்ந்து இனிய நண்பர் திரு வாசு அவர்களின் பட்டிக்காட்டு பொன்னையா படத்தில் இடம் பெற்ற மக்கள் திலகம் - ஜெயா
நடித்த பாடல் காட்சி - பொய் கோபத்தை பற்றி விரிவாக அலசிய விதம் மிகவும் அருமை .

எனக்கு பிடித்த பொய் கோப பாடல் இதோ ...
http://youtu.be/RiL3PVs2WQs

vasudevan31355
18th December 2014, 02:48 PM
ஆஹா! கலை கலகலக்க வைத்துவிட்டார். எல்லோரும் பொய்க்கோபத்தில் மெய்யாலுமே பிரித்து மேய்கிறீர்கள்.

vasudevan31355
18th December 2014, 02:50 PM
//இது தானா வாசு சார்.. நீங்கள் சொல்லப் போகும் பாடல்...எஸ்.பி.பி, சுசீலா..//

அஸ்கு... புஸ்கு... அது இல்லே.. வேற.

vasudevan31355
18th December 2014, 03:01 PM
சி.க சார்!

அருமை. பொய்க் கோபப் பாட்டைத்தான் சொல்கிறேன். அது என்ன? இந்தப் பெண்கள் மட்டும் உங்கள் உள்ளத்துக்கு நான் மட்டும் சொந்தமா என்று கேட்டு விடுகிறார்கள். ஆண்கள் ஒருவர் கூட அப்படிக் கேட்டதாக தெரியவில்லையே? அவ்விடம் அப்பிராயம் என்னவோ!

vasudevan31355
18th December 2014, 03:08 PM
கல்நாயக்,

இந்தாங்க கட்டை வண்டி கானாக்கள்.

கட கட லொட லொட வண்டி

மாடு ரெண்டும் சண்டி
வண்டிக்காரன் நொண்டி

வண்டிக்காரன் பாடுவதைக் கேளுங்கள். நம்ம 'பழனி' ஸ்ரீராம்தான். (அப்பா! என்ன ஒரு தேஜஸ்!)

ஆத்தோரம் நடந்து போகும்
அன்ன நடைக் காரி
பக்கத்துல நீ இல்லையே
சர்க்கரை கசக்குதடி
பாயாசம் துவர்க்குதடி
பாலும் புளிக்குதடி


https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=yHG_cHfDlIg

vasudevan31355
18th December 2014, 03:14 PM
சித்தப்பா நாகேஷ் அண்ணன் மகள் மணிமாலாவுடன் கட்டை வண்டி ஓட்டியபடியே பாடி கலக்கிய பாடல்.

எதிரே ஸ்ரீகாந்த் இன்னொரு வண்டி ஓட்டி வர மணிமாலா நாகேஷ் காட்டில் 'சித்தப்பா' என்று கிசுகிசுப்பது அழகல்லவா!

'கூந்தலிலே நெய் தடவி
குளிர் நிலவில் மை தடவி'

நாகேஷுக்கு அப்போதைய ஜேசுதாஸின் மெழுகுக் குரல். அம்சம்.


https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=I2SBb_b3Tow

vasudevan31355
18th December 2014, 03:18 PM
சூப்பர் ஸ்டாரும் கட்டை வண்டியில் தன் சகோதரர்களுடன் கலகலப்பாக வந்தவர்தான். (இது எப்படி மறந்து போச்சு?)

அண்ணனுக்கு ஜே
காளையனுக்கு ஜே.


https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=78y9i6bhwuI

Richardsof
18th December 2014, 03:28 PM
http://youtu.be/9HyDHIFPq8Q

Richardsof
18th December 2014, 03:29 PM
http://youtu.be/56pNmqXOj_E

vasudevan31355
18th December 2014, 03:38 PM
கடலம்மா புகழ் பாடும் இரு பாடல்கள்

பாடல் இரண்டு
பாணி ஒன்று


தொடர் 8

கடலோரம் கடலோரம் அலைகள் ஓடி விளையாடும்
வலை வீசு வலை வீசு வாட்டம் பார்த்து வலை வீசு

ஆனந்த ராகம் திரைப்படத்தில் உயிர் நண்பர்களாக இந்த மீனவ நண்பர்கள். சிவக்குமார், சிவச்சந்திரன் இணைந்த அருமையான பாடல்.


https://www.youtube.com/watch?v=PB8s20sGTRo&feature=player_detailpage

அலை அலை அலை அலைகடலே
எங்கள் அன்னை மடியே உன்னை வணங்குகிறோம்
வாழை வலை வலை விரித்தால்
நீ வரிக் கொடுப்பாய் வாழுகிறோம்

'கடல் பூக்கள்' படத்தில் முரளி மனோஜ் மீனவ நண்பர்களாக .


https://www.youtube.com/watch?v=28Ynx9luXtQ&feature=player_detailpage

chinnakkannan
18th December 2014, 04:16 PM
வாசு சார் நன்றி.. இப்படி மறுபடியும் கல் நாயக் போல (அவரும் ஒரு பாட் போட்டார்) தர்ம சங்கடத்தில் மாட்டி விட்டீர்களே.. சரி சரி.. நான் எழுத நினைச்சுருக்கற (தொழில்) பாட்டு இங்க யாரும் சொல்லாம இருக்கணுமே .. கடலம்மா காப்பாத்து :)

vasudevan31355
18th December 2014, 04:57 PM
கடலம்மா காப்பாத்து :)

கடலூரப்பா காப்பாத்து:)

Russellzlc
18th December 2014, 07:37 PM
எல்லாருக்கும் வணக்கம்,

திரு. சின்னக் கண்ணன் சார், ‘நானன்றி யார் வருவார்..’ பாடலை தரவேற்றியதற்கும் கண்ணே... கண்ணா....வில் உள்ள இழுவையை சுட்டிக் காட்டி ரசித்ததற்கும் மிக்க நன்றி.

திரு.வாசு சார், தங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி. பட்டிக்காட்டு பொன்னையா பாடலுக்கு நீங்கள் கொடுத்த விளக்கத்தை ரசித்து படித்தேன். பாடலை பார்க்கும்போது எழுந்த சிரிப்பை விட உங்கள் விளக்கம் அதிகமாக சிரிக்க வைத்தது.

மனம் விட்டு சொல்கிறேன் சார். மக்கள் திலகம் திரியில் எனக்கு பிடிக்காதது என்ன இருக்கப் போகிறது? அதை தவிர்த்து விட்டு பார்த்தால், இன்று என்ன தாக்குதல் இருக்குமோ? வாழைப்பழத்தில் ஊசி ஏற்றல் இருக்குமோ? அதற்கு என்ன பதில் சொல்ல வேண்டியிருக்குமோ?நீங்கள், திரு. ராகவேந்திரா சார் போன்றவர்கள் எல்லாம் என்னைப் பற்றி என்ன நினைப்பீர்கள்? என்றெல்லாம் டென்ஷன் இல்லாமல், நான் மகிழ்ச்சியோடு பார்த்து பங்கேற்கும் திரி இது. உங்கள் அனைவருக்கும் நன்றி. நீங்கள் என்னை மன்னிக்க வேண்டும். எதற்கு மன்னிப்பு கேட்கிறேன் என்று புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன். பட்டிக்காட்டு பொன்னையா பாடல் விளக்கத்தை விட நான் அதிகமாக சிரித்தது உங்களின் ‘உ.பி.சகோதரி’ பதிலுக்கு. நன்றி சார்.

தங்களின் பாராட்டுக்கு நன்றிகள் திரு.ராகவேந்திரா சார். தாங்கள் கோரியபடி நான் ரசித்த பழைய பாடல்களை நிச்சயம் பகிர்ந்து கொள்கிறேன். நீங்களும் என்னை மன்னிக்க வேண்டும்.

திரு.கோபால், பாடல் ஆபோகி ராகம் என்று தெளிவுபடுத்தியதற்கு நன்றி. நான் சங்கீதம் கற்றவனல்ல. மற்ற பாடல்களோடு ஒப்பீடு செய்து பார்த்துதான் இந்த ராகமாக இருக்கலாம் என்று தெரிந்து கொள்கிறேன். அதனால்தான் சந்தேகம். மீண்டும் நன்றி.

நீங்கள் கூறியிருப்பது போல, திரு.டி.ஆர்.மகாலிங்கம் அவர்கள் திமுகவில் முக்கியஸ்தராக இருந்தார் என்று எனக்குத் தெரியாது. சொல்லப் போனால், திரு.மகாலிங்கம் அவர்கள் பிராமண சமூகத்தைச் சேர்ந்தவர். மாலையிட்ட மங்கை படம் தயாரித்தபோது கவியரசர் திமுகவில் இருந்தார். எனவே, திரு.மகாலிங்கத்தை வைத்து படம் எடுக்கக் கூடாது என்று திமுகவைச் சேர்ந்த சிலர் (பேரறிஞர், புரட்சித் தலைவர் அல்ல) கவிஞருக்கு எதிர்ப்பு தெரிவித்ததாகவும், அதனால்தான், அவர்களை சமாதானப்படுத்தும் வகையில் ‘எங்கள் திராவிடப் பொன்னாடே, கலை வாழும் தென்னாடே’ பாடலை எழுதி திரு.மகாலிங்கத்தை பாட வைத்தார் என்று படித்திருக்கிறேன்.

அன்றைய சூழலில் திரு.மகாலிங்கம் மற்றும் திமுகவின் பின்னணியை வைத்து பார்த்தால், கட்சியில் அவர் முக்கியஸ்தராக இருந்திருக்க வாய்ப்பில்லை என்றே கருதுகிறேன். அப்படி நான் படித்ததும் இல்லை. தங்களுக்கு தகவல் தெரிந்திருந்தால் சொல்ல வேண்டுகிறேன்.

மக்கள் திலகம் திரியில் எனது வேண்டுகோளை பார்த்தீர்களா என்று தெரியவில்லை. இசையால் இணைக்கும் இந்த திரியிலாவது நீங்கள் தொடர்ந்து பங்களிக்க வேண்டும் என்று விரும்புகிறேன். நன்றி.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

vasudevan31355
18th December 2014, 09:25 PM
RajRaj sir,

Another beautiful Qawwali song 'Nigah -E- Naz Ke' from 'barsaat ki raat'. Beauty Shyma is one of my favourite.:)


https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=0CsjP9tW75k

vasudevan31355
18th December 2014, 09:38 PM
என்ன ஆயிற்று? கண்களில் ரத்தம் வடிய ஆரம்பித்திருக்கிறது.

சென்னையில் உள்ள சிவாஜிகணேசனின் சாந்தி தியேட்டர் இடிக்கப்பட்டு வணிகவாளமாக மாற்றப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 53 வருடங்கள் பழமையான திரையரங்கமான அது முதல் ஏசி திரையரங்கு என்ற பெருமையுடையது. தற்போது அந்த திரையரங்கு விரைவில் இடிக்கப்பட்டு வணிக வளாகம் கட்டப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

http://moviegalleri.net/wp-content/gallery/gauravam-movie-re-release/gauravam_movie_276.jpg

vasudevan31355
18th December 2014, 09:45 PM
http://www.nadigarthilagam.com/ShanthiTheatre50/inaugstone.jpg

vasudevan31355
18th December 2014, 09:46 PM
http://cdn4.supergoodmovies.com/FilesFour/487fab9c965547ed9ab381ca31eb67f2.jpg

vasudevan31355
18th December 2014, 09:47 PM
http://www.cineshadow.com/wp-content/uploads/2011/07/DSC_6116.jpg

vasudevan31355
18th December 2014, 09:48 PM
http://www.veethi.com/images/city-images/fullsize/Chennai-13988.jpg

uvausan
18th December 2014, 10:01 PM
எங்கே போய் கொண்டு இருக்கிறோம் ?

2014 ஆம் ஆண்டு இனிதாகவே செல்லும் என்று நம்பிய பல கோடி மக்களில் நானும் ஒருவன் - ஒரு மனிதாபிமானமே இல்லாத ஆண்டாக அல்லவா முடிவடைகின்றது ? பயங்கரவாதிகளின் பசிக்கு 132க்கும் மேற்பட்ட உயிர்களை தானமாக வழங்கிவிட்டதே - அதுவும் இன்னும் அரும்பாத மொட்டுக்கள் , நாளையை தீர்மானிக்க வேண்டிய தலைவர்கள் - எவ்வளவு கனவுகள் , எவ்வளவு ஆசைகள் , எத்தனை மகிழ்ச்சியான பருவம் ? பெற்றவர்கள் என்னவெல்லாம் கனவு கண்டிருப்பார்கள் - எல்லாம் ஒரே நொடியில் தரை மட்டமாகிவிட்டது - பள்ளிக்கு போயிருக்கும் தன் மகன் இனி திரும்பி வரவே மாட்டான் என்று ஆகும் போது அந்த தாயின் புலம்பலை ஒரு இடியின் ஓசைதான் வெல்ல முடியுமா , ஒரு சுனாமிதான் தடுத்து நிறுத்த முடியுமா ? குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று என்று பாடுகிறோம் - ஆனால் இந்த பயங்கர வாதிகள் தங்கள் துப்பாக்கிகளை மட்டுமே நம்புகிறார்கள் - அவைகள் வணங்கும் ஒரே தெய்வம் வன்முறைதான் - காட்டுமிராண்டி தனம் தான் அந்த வன்முறை தெய்வத்திற்கு அவர்கள் செய்யும் பூஜை --- இவர்களின் ஒரே மதம் - தீவிரவாதம் மட்டுமே - நாம் முன்னோக்கி -செல்லவில்லை - வெகுவாக பின்னோக்கி சென்று கொண்டிருக்கின்றோம் - மனித உருவில் திரியும் இந்த மிருகங்களை என்று ஒட்டு மொத்தமாக அழிக்கின்றோமோ அன்றுதான் நமக்கெல்லாம் புதிய வருடம் --

சற்றே கண்களை மூடி நாமெல்லாம் அந்த ஒன்றுமே அறியாத , எதற்க்காக கொல்லபடுகின்றோம் என்பதை கூட உணர்ந்துகொள்ள முடியாமல் , உரு இழந்து இந்த நாட்டில் பிறந்தோமே இதை தவிர என்ன பாவம் செய்தோம் என்றே எண்ணி உயிரைவிட்ட அந்த குழந்தைகளுக்காக , அவர்கள் ஆத்மா சாந்தி அடைய வேண்டி ப்ராத்தனை செய்வோம் - அந்த பிஞ்சு உள்ளங்களுக்கு இந்த பாடல்கள் சமர்ப்பணம் ..

http://youtu.be/xDZMDgYdVlA

http://youtu.be/Qd5TfWmm1CA

http://youtu.be/now5pCZEkMI

chinnakkannan
18th December 2014, 10:01 PM
qawali song in tamil for rajraj sir and vasu sir..:)

http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=XNAo4huwzMM


pOttach pOttachchaa..

uvausan
18th December 2014, 10:12 PM
வாசு - சாந்தியை அழித்து வணிகவளமாக மாற்ற போகிறார்கள் என்பதை அறிய மிகவும் சங்கடமாக உள்ளது - அந்த முயற்சி அவர்களுக்கு சாந்தியை தருமா ? நம் எல்லோருடைய வளர்ச்சியிலும் , சாந்தி திரை அரங்கம் பெரும் பங்கை கொண்டுள்ளது - அந்த இடத்தை அழித்தே ஆகவேண்டும் என்று நினைத்தவர்கள் நாமெல்லாம் ஆவலுடன் எதிர் பார்த்துகொண்டிருக்கும் தலைவரின் மணி மண்டபத்தை அங்கு கட்டி இருக்கலாம். சாந்தி என்னும் ஒரு திரை அரங்கம் அழிந்தால் என்ன ? நம் மனங்களில் என்றும் குடியிருக்கும் , தலைவர் மூலம் ஏற்படும் சாந்தியை யாரால் அழிக்க முடியும் ?

rajraj
18th December 2014, 10:18 PM
It was already pottaachchu ! :lol: Post 2167 ! :)


qawali song in tamil for rajraj sir and vasu sir..:)

http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=XNAo4huwzMM


pOttach pOttachchaa..

vasudevan31355
19th December 2014, 08:27 AM
It was already pottaachchu ! :lol: Post 2167 ! :)

very sharp :p

vasudevan31355
19th December 2014, 08:38 AM
ரவி சார்,

வாருங்கள். எங்கே சில நாட்களாய் காணோம்? ஆபிஸ் ஒர்க்கோ?

தாங்கள் தந்திருப்பது அருமையான ஐடியா. சாந்தியை இடிக்க வேண்டிய கட்டாயம் ஒன்றுமில்லை. இதை விட பழைய கட்டடங்களெல்லாம் மிக கம்பீரமாய் சென்னையில் நிமிர்ந்து நிற்கின்றன. நம்முடைய தலைவரின் பழைய படங்களை நல்ல பிரிண்ட் எடுத்து போட்டுக்கொண்டிருந்தால் கூடப் போதும்.

அப்புறம் என்னவோ சொன்னீர்களே! சாந்தியை இடித்து விட்டு மணிமண்டபம் அது இது என்று. இன்னா சார் நீங்கள்? அநியாயத்துக்கு குழந்தையாய் இருக்கிறீர்கள். மணி மண்டபம் கட்டினால் 'மணி' வருமா? எல்லாமே காசு, பணம், மணி, துட்டு தானே சார். பணம் சம்பாதிப்பது முக்கியமா? மணி மண்டபம் கட்டுவது முக்கியமா? மணி மண்டபம் கட்டினால் பணம் வருமா? துண்டு துக்கடா சிவாஜி ரசிகர்கள் வந்து 'வாழ்க' கோஷம் போட்டு விட்டுப் போய் விடுவார்கள். நீங்க என்னவோ கற்பனையெல்லாம் பண்ணிக்கிட்டு கிடக்கிறீங்க. வணிக வளாகம் கட்டி முடிச்சவுடன் சொல்றேன். நீங்க வாங்க. ரெண்டு பேரும் அங்க இருக்கிற ஒரு கடையில டீ சாப்பிடலாம்.


https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=irW-aSl_Txg

rajeshkrv
19th December 2014, 10:22 AM
vasu ji

A Semi classical Kannada song by ISaiyarasi

Movie:Maha thyaga
Music:Rajan Nagendra

what a rendition

https://www.youtube.com/watch?v=vZlc1vTXG5g

Gopal.s
19th December 2014, 11:31 AM
அந்நிய வேந்தன்-



ஏனைய சிற்றரசர்களான வாசு,ராகவேந்தர்,கிருஷ்ணா,ரவி போன்றோர் ,எங்களால் "பண்பாளர்" பட்டம் பெற்று கௌரவிக்க பட்டு ,எங்களுக்கு வேலையே வைக்காமல் வீடியோ போட்டு எங்களை மகிழ்வித்து கொண்டிருக்கிறார்கள். இன்னொரு சிற்றரசர் எங்களுக்காக கையேடு போட்டு ஐக்கியமாகி விட்டார்.அவ்வப்போது கழுத்தை சொறிந்தால் ,கன்று குட்டி போல கழுத்தை முழுவதும் காட்ட ஒரு மதுரமான தொழுவத்தையே கட்டி விட்டார்கள்.



நீயும் ,முரளியும் மட்டும் பணிய மறுப்பதால் உங்களுக்கு லாபமா?

vasudevan31355
19th December 2014, 01:00 PM
அந்நிய வேந்தன்-



ஏனைய சிற்றரசர்களான வாசு,ராகவேந்தர்,கிருஷ்ணா,ரவி போன்றோர் ,எங்களால் "பண்பாளர்" பட்டம் பெற்று கௌரவிக்க பட்டு ,எங்களுக்கு வேலையே வைக்காமல் வீடியோ போட்டு எங்களை மகிழ்வித்து கொண்டிருக்கிறார்கள். இன்னொரு சிற்றரசர் எங்களுக்காக கையேடு போட்டு ஐக்கியமாகி விட்டார்.அவ்வப்போது கழுத்தை சொறிந்தால் ,கன்று குட்டி போல கழுத்தை முழுவதும் காட்ட ஒரு மதுரமான தொழுவத்தையே கட்டி விட்டார்கள்.



நீயும் ,முரளியும் மட்டும் பணிய மறுப்பதால் உங்களுக்கு லாபமா?

டிசம்பர் 31 எப்ப வரும்?:-):-):-)

vasudevan31355
19th December 2014, 01:04 PM
அந்நிய வேந்தன்-



ஏனைய சிற்றரசர்களான வாசு,ராகவேந்தர்,கிருஷ்ணா,ரவி போன்றோர் ,எங்களால் "பண்பாளர்" பட்டம் பெற்று கௌரவிக்க பட்டு ,எங்களுக்கு வேலையே வைக்காமல் வீடியோ போட்டு எங்களை மகிழ்வித்து கொண்டிருக்கிறார்கள். இன்னொரு சிற்றரசர் எங்களுக்காக கையேடு போட்டு ஐக்கியமாகி விட்டார்.அவ்வப்போது கழுத்தை சொறிந்தால் ,கன்று குட்டி போல கழுத்தை முழுவதும் காட்ட ஒரு மதுரமான தொழுவத்தையே கட்டி விட்டார்கள்.



நீயும் ,முரளியும் மட்டும் பணிய மறுப்பதால் உங்களுக்கு லாபமா?


அதே அந்நிய வேந்தன்:

முரளியை வேண்டுமானால் சொல். உன்னைச் சொல்லாதே. மன்னனான நீயே முன்னால் நாடோடி மன்னனின் புகழ் பாடி அடி பணிந்து விட்டாய். சிற்றரசர்கள் எம்மாத்திரம்? என் 'அன்பே வா'.

Richardsof
19th December 2014, 01:13 PM
அதே அந்நிய வேந்தன்:

முரளியை வேண்டுமானால் சொல். உன்னைச் சொல்லாதே. மன்னனான நீயே முன்னால் நாடோடி மன்னனின் புகழ் பாடி அடி பணிந்து விட்டாய். சிற்றரசர்கள் எம்மாத்திரம்? என் 'அன்பே வா'.

அட
நம்ம மாட்டுக்கார வேலன் - கோபாலா கோபாலா மலை ஏறு கோபாலா

chinnakkannan
19th December 2014, 01:23 PM
மன்றத்தில் கட்ட மருண்டே மிழற்றிடும்
கன்றின் குரலிது காண்…!

ம்மா மா….:)

http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=wdceK43P_eg