PDA

View Full Version : இதுக்குப் போயி அலட்டிக்கலாமா



RAGHAVENDRA
30th December 2014, 11:37 PM
இதுக்குப் போயி அலட்டிக்கலாமா...



“தாத்தா, தாத்தா... “ கூவியபடி ஓடி வந்தாள் லாவண்யா...

“என்னம்மா... “ மூர்த்தி பேத்தியின் கூந்தலைத் தடவியபடி கேட்கிறார் மூர்த்தி...

“நான் ஷாப்பிங் மால் போயிட்டு வந்துடறேன் அம்மாகிட்டே சொல்லிடுங்க..” என்று கூறியபடி கிளம்பும் லாவண்யாவை அப்போது தான் ஏறெடுத்துப் பார்க்கிறார் மூர்த்தி..

“ஏம்மா... பனியன் போட்டுகிட்டு போறே.. மேல் சட்டை போடலியா...”எனக் கேட்கத் துவங்குகிறார்..
அதற்குள் பாக்யம், அவர் மனைவி ஓடி வருகிறார்..

“லாவண்யா நீ கெளம்பும்மா, உங்கம்மா வந்தா நான் சொல்லிக்கிறேன்.. “ என்றவாறு தரதரவென மூர்த்தியை உள்ளிழுக்கிறார்.

“ஏங்க.. உங்ககிட்ட எத்தனை தடவை தான் சொல்றது..... இந்தக் கால பொண்டு பிள்ளைங்களோட அவ்வளோ சுலபமா நீங்க உரிமை கொண்டாட முடியாதுன்னு படிச்சு படிச்சு சொன்னாலும் கேட்க மாட்டேங்கறீங்க.. பட்டால் தான் தெரியணுமா..”

மூர்த்தி அலுத்துக்கொள்கிறார். “ஏண்டி.. இப்படி டிரெஸ் பண்ணிட்டு பொம்மனாட்டில்லாம் போலாமோ..... கண்றாவி.. இந்த 70 80 வயதிலே கூட என்னை மாதிரி கிழடு கட்டைகளுக்கே மனசு அல்லாடும் போலிருக்கே..”

பாக்யம்... “ஆமா இதுல ஒண்ணும் குறைச்சலில்லே.. முதல்லே இந்தப் பேச்சை நிறுத்துங்க... வந்தோமா, பிள்ளையைப் பாத்தோமா... போனோமான்னு இல்லாமே.. வந்த இடத்திலே வம்பை இழுத்துண்டிருக்கீங்களே..”

மூர்த்தி.. “ஆமாண்டி... என்னை சொல்லு... நம்ம கடமையை நாம செய்ய வேண்டாமா.. நீயே பார்த்தே இல்லே... லாவண்யா எப்படி டிரெஸ் பண்ணிண்டு போறான்னு... இதையெல்லாம் உம் பையனும் மாட்டுப்பொண்ணும் ஏன் கண்டுக்காம இருக்காங்களோ தெரியலியே..”

பாக்யம்... “அது சரி... அவங்களே கண்டுக்காம இருக்கச்சே உஙகளுக்கு என்ன வந்தது...”

மூர்த்தி.. “ஏண்டி இப்படி பொறுப்பில்லாமே பேசறே.. நம்ம பசங்க வேறே நம்ம பேரன் பேத்தி வேறெயா.. “

வீட்டிற்குள் அவர் பையன் மதனும் மருமகள் மாலாவும் நுழைகிறார்கள்..

வரும் போதே “லாவண்யா” எனக் குரல் கொடுத்தபடி வருகின்றனர்.

மதன்.. “அப்பா... லாவண்யாவைப் பாத்திங்களா..”

பாக்யம்.. முந்திக்கொண்டு.. “ஆமாண்டா இப்ப தான் ஏதோ ஷிப்பிங் மில்லுக்குப் போறேன்னு சொல்லிட்டுப் போறா...”

மாலா.. “ஐயோ அத்தே.. அது ஷிப்பிங் மில் இல்லே.. ஷாப்பிங் மால்... “

மதன் .. “ஏண்டி அவ எங்கே போறான்னு உனக்குத் தெரியுமா.. ஏன் எங்கிட்டே சொல்ல்லே..”

மாலா.. “சொன்னா நீங்க என்ன செய்யப் போறீங்க..”

இதற்குள் தாத்தா பேச்சை ஆரம்பிக்கிறார்...

“ஏம்மா லாவண்யாவோட டிரெஸ்... “

இதற்குள் பாக்யம் இடை மறித்து.. மாலாவிடம்.. “இல்லே இல்லே... அவ புது டிரெஸ் போட்டுண்டு போறா.. அதைத்தான் உங்க மாமா சொல்றார்..”

மூர்த்தி.. “இல்லேம்மா.. நான் அவ டிரெஸ்ஸைப் பத்தி... “ இழுக்கிறார்..

பாக்யம்... மாலாவிடம்... “அது இல்லேம்மா.. அந்.த டிரெஸ் புது மாடலாச்சே அதான் அதைப் பத்தி சொல்ல வருகிறார்..”

மாலா.. “ஏன் அத்தை மழுப்பறீங்க... அவளோட டிரஸ்ஸைப் பத்தி மாமா கமெண்ட் அடிச்சிருப்பாரு... அதை ஏன் மறைக்கப் பார்க்கிறீங்க.. இதோ பாருங்க.. வந்தோமா, உங்க பிள்ளையை பாத்தோமா போனோமான்னு இல்லாமே என் பொண்ணோட டிரெஸ்ஸைப்பத்தியெல்லாம் கமெண்ட் அடிக்காதீங்க.. உங்க காலத்திலேயே இருக்காதீங்க..”

மதன் குறுக்கிட்டு... “அது இல்லே மாலா.. அவங்க சொல்ற பாயிண்டும் சரிதானே.. பெண்பிள்ளைங்க வெளியே போகும் போது கொஞ்சம் அடக்க ஒடுக்கமா டிரெஸ் பண்ணிட்டுப் போகணும்னு சொல்றதுலே என்ன தப்பிருக்கு” என தந்தைக்கு ஆதரவாகப் பேச முற்பட..
“எல்லாம் எங்களுக்குத் தெரியும்.. ஒரு தாயாருக்குத் தெரியாதா தன் மகளை எப்படி வளக்கணும்னு...” என கோபமாக பேசுகிறாள் மாலா..

இரவு வெகு நேரம் கழித்து லாவண்யா வீடு திரும்புகிறாள்.. நேராக படுக்கையறைக்குச் சென்று படுத்து விடுகிறாள். கையில் கைப்பேசி, கலைந்த மேலாடை, சற்றே நழுவும் நிலையில் எப்போது வேண்டுமானாலும் கீழே விழலாம் என்கிற நிலையில் ஜீன்ஸ் பேண்ட்.. ஒரு குழந்தைக்கும் இன்னொரு குழந்தைக்கும் போதிய இடைவெளி வேண்டும் என்று அந்தக் கால குடும்பக் கட்டுப்பாட்டு விளம்பர வாசகத்தில், அந்த இடைவெளியை மட்டும் கெட்டியாகப் பிடித்துக் கொண்டது போன்று முதுகில் மேலாடை ஜீன்ஸ் இரண்டின் நடுவினில் இடைவெளி...

மறுநாள் காலை... மூர்த்தியும் பாக்யமும் தங்களுடைய முதியோர் இல்லத்திற்குத் திரும்ப தயாராகிறார்கள்...

அலறி அடித்தபடி ஓடி வருகிறார்கள் மதனும் மாலாவும்..

“அப்பா அம்மா, அத்தை மாமா.. நீங்கள் இங்கே இருக்க வேண்டும்.. கொஞ்ச நாளாவது தங்க வேண்டும்.. “ என ஒரே குரலில் ஓதுகிறார்கள் அவசரமாக..

மூர்த்திக்கு எங்கோ பொறி தட்டுகிறது. காட்டிக் கொள்ளாமல் பேசுகிறார்.. “ஏம்மா..”

மதன் துடிக்கிறார்.. “அப்பா அதை நான் எப்படி சொல்வது...”
“சொல்லு மதன்.. “ அப்பா..
“வந்து வந்து.. ......” இழுக்கிறார் மதன்..
“சொல்லு சீக்கிரம் .. பதற்றமாயிருக்குது....” பாட்டி...
கைப்பேசியை மூர்த்தியிடமும் பாக்கயத்திடமும் காட்டுகிறார்கள்..
அதில்..
லாவண்யா ஒரு இளம் வாலிபனுடன் உல்லாசமாக.. காதலனின் செல்ஃபியில் எடுத்த புகைப்படங்கள்...
திடுக்கிடுகிறார்கள் மூர்த்தியும் பாக்யமும்.. “என்னடா இது..”
மதன்... “இதை நான் சும்மா விடப்போவதில்லை..”
மூர்த்தி - என்னடா செய்யப் போறே.. கையை விட்டுப் போயிடுச்சு.. காதும் காதும் வெச்ச மாதிரி அந்தப் பையனோட அப்பா அம்மாவிடம் பேசி சீக்கிரம் கல்யாணத்தை முடி...

மாலா.. “மாமா.. நீங்க ஒண்ணு... இதுக்குப்போயி டென்ஷன் ஆகறீங்க... நான் உங்களை இருக்கச் சொன்னது அதுக்கில்லை.. நாளைக்கு லாவண்யாவைப் பெண் பாக்க அமெரிக்காவிலேருந்து என்ஜினீயர் வரன் குடும்பத்தோட வருகிறார்கள்.. நீங்கள் கூட இருந்தால் ஒத்தாசையாக இருக்குமேன்னு தான்..”

மாலா முடிக்கவில்லை... மூர்த்தியும் பாக்யமும் மயக்கம் போட்டு விழுகிறார்கள்.

....

மேலே உள்ள கதைக்கும் இந்தப் பாட்டுக்கும் ஸ்நானப் ப்ராப்தி கூடக் கிடையாது... தலைப்பைத் தவிர...

https://www.youtube.com/watch?v=S7Ca6bPQc_E

சும்மா ஒரு சேஞ்சுக்குத்தான்..

chinnakkannan
31st December 2014, 01:40 AM
ராகவேந்திரா சார் வாங்கோ வாங்கோ :) சுவாரஸ்யமாய் இருந்ததுங்க..ம்ம் என்ன செய்யறது..வாழ்க்கையில மாறாத ஒண்ணே மாற்றங்கள் தான்.. ஈஸி லைஃப்னுப் பழகிப் போனாலும் வயதானால் எல்லாருக்கும் தெரியத்தான் செய்யும்.. சுவையான கதை..

aanaa
31st December 2014, 05:27 AM
ராகவேந்திரா சார்

வயதானால் எல்லாருக்கும் தெரியத்தான் செய்யும்....
:clap:

pavalamani pragasam
31st December 2014, 08:26 AM
வயதானவர்கள் பதைப்பையும் இளையவர்கள் அலட்சியத்தையும் புது தலைமுறையின் தறிகெட்ட, தறுதலைத்தனமான வாழ்க்கை முறைகளையும் பட்டவர்த்தனமாக விளக்கும் யதார்த்தமான கதை. ம்ம்ம்...எங்கே போய் முட்டிக்கொள்வது?

Russellhni
31st December 2014, 07:29 PM
"தாயை போல பிள்ளை , நூலை போல சேலை" .... வளர்ப்பை சொல்வதா? சமுதாய சீரழிவா? மேனாட்டு நாகரிகமா? என்ன கொடுமை சார் இது ? கதை:clap::clap: :clap:வாழ்த்துக்கள்

RAGHAVENDRA
1st January 2015, 08:14 PM
அனைத்து நண்பர்களுக்கும் உளமார்ந்த புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்