PDA

View Full Version : Nadigar Thilagam Sivaji Ganesan - Part-15



Pages : 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 [14] 15 16 17

adiram
22nd June 2015, 02:05 PM
டியர் கோபால் சார்,

எதிரொலி படத்தின் ஹைலைட் காட்சிகள் சிலலவற்றைப் பற்றிய நினைவுகள் அருமை. நடிகர்திலகமும் அற்புதமாகப் பண்ணியிருந்தார். கே.பியும் சிறப்பாக கையாண்டிருந்தார். ஏன் பெரிய வெற்றியைப் பெறவில்லை என்பது இன்றுவரை கேள்விக்குறியே.

இயக்குனரின் தலையீடும் அதிகம் இல்லையென்பதை கே.பி. அவர்களின் பல பேட்டிகளில் அறியலாம். அவர் சொன்னது "இப்படத்தின் ஹீரோ சிவாஜியாக இருந்ததால் சீன் பை சீனாக காட்சிகளை விளக்கவேண்டிய அவசியம் எனக்கு இல்லாமல் இருந்தது. காட்சியைப்பற்றிய விளக்கத்தை மட்டும் அவரிடம் சொல்லிவிட்டு நான் ஒதுங்கிக்கொள்வேன். காட்சியை நான் எதிர்பார்த்ததுக்கு மேலாக நடித்துக் கொடுத்து விடுவார். பல காட்சிகளில் இரண்டாவது டேக் எடுத்ததே கிடையாது. படம் நிச்சயம் பெரிய வெற்றி பெரும் என்று நானும் எதிர்பார்த்தேன். ஆனால் படம் வெற்றிபெறாமல் போனாலும், நான் மன திருப்தியோடு செய்த நல்ல படங்களில் எதிரொலியும் ஒன்று என்பதை மறுக்க முடியாது. வெற்றி பெற்ற பல படங்கள் என் மனதைவிட்டு அன்னியப்பட்டு நின்றாலும், வெற்றி பெறாத எதிரொலி, புன்னகை, அவர்கள் போன்றவை எனக்கு மிகவும் பிடித்தவை".

நீங்கள் குறிப்பிட்டதுபோல படத்தில் மேஜர் செம வில்லன். பேச்சிலேயே அருமையாக வில்லத்தனம் செய்வார். "அப்படி ஒரு போர்ட்டரே இல்லையே தொரை" என்னுமிடத்திலும், விஜயலலிதாவிடம் "சத்தியமா இனிமே அவரை பணம் கேட்டு மிரட்டமாட்டேன், பழைய காரணத்தை சொல்லி" என்றவாறு தனது புதிய மிரட்டல் ஆயுதமான போட்டோவை காட்டும் இடத்திலும் அட்டகாசம். மற்ற படங்களில் இவரைப்போய் கதாநாயகிகளின் அப்பாவாகவே காட்டிய மற்ற இயக்குனர்களை என்ன சொல்வது.

எதிரொலி பற்றி நிறைய பேசியிருக்கிறோம். இன்னும் நிறைய பேசவேண்டும்.

Russellxss
22nd June 2015, 02:34 PM
சென்னையில் 1972..ம் வருடம் ஓடிக்கொண்டிருந்த சினிமா படங்கள்...a sweet memory

https://fbcdn-sphotos-e-a.akamaihd.net/hphotos-ak-xft1/t31.0-8/s720x720/10524229_949019758483016_3517314586830028429_o.jpg


சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல, எவரும் எட்டாத அதிசயம்.

Russellxss
22nd June 2015, 02:48 PM
https://fbcdn-sphotos-g-a.akamaihd.net/hphotos-ak-xfp1/v/t1.0-9/p480x480/11163915_832947076789898_8806282936279634773_n.jpg ?oh=b0305b894b999fb3a707e323765cb2d2&oe=56284FBE&__gda__=1445834126_b8f4d57a60c867cf42534fdb1e3690d d


சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல, எவரும் எட்டாத அதிசயம்.

Gopal.s
22nd June 2015, 07:30 PM
பாலாடை படம் நாளாகி வந்த படம். பீம்சிங் பிசியாகி விட்டதால் Associates திருமலை-மகாலிங்கமே பெரும் பகுதியை இயக்கினர்.கமலா movies ,சந்தானம் தயாரிப்பில் வெளிவந்த இந்த படம் சுமார் வெற்றியையே ஈட்டியது. பல குறைகள் ,பிழைகள் மலிந்த படம். சீரான ஓட்டம் இருக்காது. (தொபேலென்று உப்பு சப்பில்லாத சம்பவங்களில் நகரும். ) நாகேஷ் படத்தை ஆக்கிரமித்து சிரிப்பும் வராமல் குட்டிசுவர் ஆக்குவார். இந்த அழகில் டூயட் வேறு.

இந்த படத்தில் நான் ரசித்தது பிலஹரி என்ற ராமனின் அற்புத வசனங்கள்,பாத்திர வார்ப்புக்கள். ஒப்பு கொள்ளும் படி லாஜிக்.
சிவாஜி-பத்மினி-கே.ஆர்.விஜயா ஆகியோரின் அற்புத பங்களிப்பு.
இந்த இணையில் சிவாஜிக்கு அடுத்து விஜயாவே ஸ்கோர் செய்வார்.(இரு மலர்களிலும் அப்படியே)

1)இதில் அற்புதமான விஷயம் சிவாஜி பாத்திரங்களுடன் கொள்ளும் உறவு.கதையுடன் அற்புதமாக விரியும். முதலில் கணவன்-மனைவு அன்னியோன்யம், அடுத்தது குழந்தை பெற வாய்ப்பில்லை என்ற குறையை முழுங்கி வாழும் ஏமாற்றம் மறைக்கும் காதல் வாழ்வு, தான் பார்த்து வளர்ந்த விஜயாவை குழந்தை போல பாவிப்பது,
பத்மினி தன்னை திருமணத்துக்கு வற்புறுத்தும் போது அரை மனதாக சம்மதித்தாலும், விஜயாவை எந்த விதத்திலும் புண் படுத்தாமல் உறவில் திளைக்கவும் முடியாமல் இருதலை கொள்ளி நிலை,பத்மினி கர்ப்பம் என்றதும் எல்லாவற்றையும் உதாசீனம் செய்து துச்சமாக நினைத்து பத்மினியிடம் முழு அன்பை பொழிவது,பின் விஜாயாவை மனைவியாக மதிக்க நிர்பந்திக்க படும் நிலையில் அவருடம் ஒட்டா உறவு என அற்புத நடிப்பு. அடடா ,அந்த மேதை இந்த nuisance புரிந்து நடிக்கும் பாங்கு ,படத்தை திரும்பி திரும்பி பார்க்க வைக்கும். கே.ஆர்.விஜயாவுக்கும் ரொம்ப சிக்கலான பாத்திரம். அற்புதமாக கையாண்டு மெருகேற்றுவார். ஏமாற்றம் இருந்தாலும், முழுங்கி அத்தானுடன் சிறுமி நிலையிலேயே தொடர்வார். அக்காவை முன்னிட்டு வெளி காட்டவும் முடியாத நிலை. கடைசியில் வெளி கொணருவார். பத்மினியை முழுங்கி ஏப்பம் விடுவார் நடிப்பில்.(ஒரு வேளை பாத்திர வார்ப்பினாலா)

2)பிள்ளையில்லா ஏக்கத்தில் ,தன் கனவான fantasy மயக்கத்தில் கே.ஆர்.விஜயாவிடம் ,தன் வீட்டிற்குள் ஒரு சிறுவன் புகுந்து அட்டகாசம் செய்ததை, தான் அவனை கண்டிக்க முடியாமல் நேசத்தின் பார்ப் பட்டதை விவரிக்கும் பாங்கு. இதனால்தானா ,இந்த மனிதரிடம் அடிமை பட்டு வாழ்கிறோம்.

3) இது ஒரு trivial விஷயம் என்றாலும் சிவாஜி-கே.ஆர்.விஜயா இணையில் எனக்கு மிக பிடித்த காதல் காட்சி. ஓரளவு நெருக்கம். அழகாக வந்திருக்கும் இங்கே ஆஹா இங்கே பாடல்.(மற்றது ஒன்றா இரண்டா,சுகம் சுகம், பூ மாலையில்,அங்கே மாலை மயக்கம்)

பாலாடை போன்ற dull படங்களை கூட நடிகர்திலகத்திற்காக ஐந்து முறை பார்க்க முடிகிறது.(இத்தனைக்கும் உலக பட ரசிகனாக்கும்)

Harrietlgy
22nd June 2015, 10:03 PM
Courtesy Mr. Sudhangan facebook

செலுலாய்ட் சோழன் – 79
எம்.ஆர். ராதா சிவாஜியின் பெற்றோர்கள் மனதை கெடுத்துக்கொண்டிருக்கும் போது, சிவாஜி தன் வீட்டிற்கு வந்து சேருவார்!
எம்.ஆர்.ராதா யார் என்பது தெரிந்ததும் அவரை சரியாக உதைத்து வெளியே அனுப்புவார்!
இப்போது சிவாஜியின் பெற்றோர்கள் மனது சஞ்சலப்படும்.
அப்போது சிவாஜியின் தாயார் ` அந்தப் பெண் நல்ல பெண் என்பதற்கு என்ன ஆதாரம் ? என்று கேட்பார் சிவாஜியின் தாயார்.
`என் தாய் நல்லவங்கறதுக்கு நான் எப்படி ஆதாரத்தை காட்ட முடியும்’ என்பார் சிவாஜி
அந்தப் பெண்ணைத்தான் திருமணம் செய்து கொள்ளப்போகிறேன் என்று சொல்லிவிட்டு சாவித்திரி அதாவது எஸ்.எஸ்.ஆர் வீட்டிற்கு போவார்!
ஆனால் அதற்குள் எஸ்.எஸ். ஆர் எழுதிய கடித்தை பார்த்த சாவித்திரி விஷத்தை குடித்திருப்பார்!
சிவாஜி போய்ப் பார்க்கும் போது சாவித்திரி அப்படியே மயங்கி சாய்ந்து உயிரை விடுவார்!
இறந்த அந்த பெண்ணுக்கு தாலி கட்டுவார் சிவாஜி
படம் மிக அருமையாக ஒடியது!
சிவாஜி படங்களில் பல நல்ல கதாபாத்திரங்கள் இருக்கும்!
இந்தப் படத்தில் சாவித்திரி,எஸ்.எஸ். ஆர், கே.ஆர்.விஜயா எஸ்.வி.ரங்காராவ், எம்.ஆர். ராதா என்று போட்டி போட்டுக்கொண்டு பியந்து உதறியிருப்பார்கள்!
பாரதியாரின் ` சிந்து நதியின் மிசை நிலவினிலே’ என்கிற பாட்டை பிரபலப்படுத்தியிருப்பார்கள்.
சிவாஜியைப் பொருத்தவரையில் படம் நன்றாக வரவேண்டும் என்பதில் அதிக கவனம் செலுத்துவார்!
`சிவாஜி கண்ட சினிமா ராஜ்யம்’ புத்தகத்தில் வசனகர்த்தா ஆரூர்தாள் சிவாஜியில் குணநலன்களை அருமையாகச் சொல்லியிருப்பார்!
`சிவாஜியிடம் சிறந்த நடிப்பாற்றலுடன் சீரிய நற்பண்புகளும் குடி கொண்டிருந்தன என்பது, அவருடன் நெருங்கி பழகி அவரை நன்கு புரிந்து கொண்டவர்களுக்குத்தான் தெரியும்.
மனதார யாருக்கு எந்தக் கெடுதலும் செய்ய மாட்டார்.
தன்னால் ஒரு படமோ அந்தப் படத்தின் படப்பிடிப்போ பாதிக்கப்படக்கூடாது என்பதில் மிகக் கவனமாக இருப்பார்.
அவர் நடிக்கும் படங்களில், மனதளவுக்கு அவருக்கு ஒவ்வொத சக நடிகர்கள் இருப்பதை சிறிதும் பொருட்படுத்த மாட்டார். `இவர் வேண்டாம், அவரை போடு’ என்ற வார்த்தை அவர் வாயிலிருந்து வந்து நான் கேட்டதேயில்லை.
எம்.ஜி.ஆருடன் பல படங்களில் இணைந்து நடித்து அந்நாட்களில் அவரோடு ஒரு ` காம்பினேஷன் மவுஸ்’ ஏற்படுத்திக்கொண்டிருந்த சரோஜாதேவியை, சிவாஜி ஃபிலிம்சின் சொந்த படம் ` புதிய பறவை’யில் கதாநாயகியாகப் போட்டுக் கொள்ளலாம் என்று தன் தம்பி சண்முகம் சொன்னதற்கு சிவாஜி எந்த வித மறுப்பும் தெரிவிக்கவில்லை.
தான் நடிக்கும் படங்களின் `பாலிடிக்ஸ்’ பற்றி எந்த விவரத்தையும் அறிந்து கொள்ளும் ஆர்வம் இல்லாமல், தான் உண்டு,தன் நடிப்பு உண்டு என்று இருந்துவிடுவார்.
தனக்கு இந்தப் படத்தில் இவ்வளவு சம்பளம் என்பதே அவருக்கு நினைவிருக்காது. முன்பணத்தையும், படம் முடிந்ததும் தரப்புடும் முழுப்பணத்தையும் அவர் தன் கையால் தொட்டதே இல்லை.
சிவாஜி `ஃபிலிம்சிலிருந்து அவ்வப்போது, கடிதங்கள் வரும். அவற்றில் கையெழுத்துப் போடுவார். அந்த சமயங்களில் அவர் அருகில் அமர்ந்திருக்கும் என்னிடம் குறும்பாகக் கூறுவார்.
` சிவாஜி ஃபிலிம்ஸ் என்னை குத்தகைக்கு எடுத்திருக்கு.அந்தக் குத்தகை பத்திரத்திலதான் நான் இப்போது கையெழுத்தூப் போடறேன்.
இதை நான் சிரித்துக்கொண்டே கேட்பேன், ` அண்ணே!, இப்போ ஒரு லட்ச ரூபாயை ஒங்க கையில குடுத்தா நீங்க என்ன செய்வீங்க?’
`உடனே ஒங்கையில கொடுத்திடுவேன்’
`எதுக்கு?’
`சரியா இருக்கான்னு எண்ணிப்பாக்கறதுக்கு !’
`ஏன் நீங்க எண்ணிப் பாக்க மாட்டிங்களா ?’
`ஊகூம் எண்ணத் தெரிஞ்சாதானே? ஆமா... ஒரு லட்சத்தில எத்தனை ஆயிரம் இருக்கும்?’
`நூறு ஆயிரம் இருக்கும்.’ என்று நான் சொன்னதைக் கேட்டு
ஆச்சரியத்துடன், ` அடேங்கப்பா... நூறு ஆயிரமா? ஆயிரமே ரொம்பப் பெரிசாச்சே! சரி! ஆருரான் (ஆருர்தாஸைஅப்படித்தான் சிவாஜி அழைப்பார்) நான் இப்படிக் கேட்டதைஅ வெளியில சொல்லிடாதே’
`ஏன்?’
` எனக்கு ஒண்ணும் தெரியாதுன்னு நினைச்சுடுவாங்க’
`உண்மைதானே, நடிப்பு ஒண்ணைத்தவிர வேறு எதுவுமே உங்களுக்கு தெரியாதுங்கறது நாடறிஞ்சதுதானே. நீங்கள் என்னைக் கேக்கறீங்க. நீ ஏண்டா சினிமாவுக்கு வந்தேன்னு’
`ஆமா! தம் அடிக்க மாட்டேங்கறே! தண்ணி அடிக்க மாடேங்கறே! சீட்டாடத் தெரியாது. பெண்ணுங்க சகவாசன் இல்லே. இப்படி ஒன்னை எவன் சினிமாவுக்கு வரச் சொன்னான் ?’
`தெரியாத்தனமா வந்துட்டேன். மன்னிச்சுடுங்க. இனிமே வரமாட்டேன்’
`இனிமே என்னத்த வராம இருக்கிறது ? அதான் வந்து என் உயிரை வாங்கிக்கிட்டிருக்கியே அப்புறம் என்ன ?
`உயிரை வாங்கிக்கிட்டிருக்கியேன்னு’ அவர் சொன்னது வசனம் பேசுவது சம்பந்தமாக சில நேரங்களில் சிவாஜிக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு அதனால் எங்களுக்குள் உண்டாகும் வாய்ச் சண்டையை குறிக்கும் பொருட்டு!
பண விஷயத்தில் ` நடிகர் திலகம்’ மட்டுமல்ல ` மக்கள் திலகமும் இவ்வண்ணமே.
எம்.ஜி.ஆருக்கு நான் எழுதிய வண்ணப் படம் ஏவிஎம்மின் ` அன்பே வா’ சிவாஜிக்கு சிவாஜி ஃபிலிம்சின் ` புதிய பறவை’.
இன்றைக்கு இந்த இரண்டு படங்களையும் புதுப்படங்களைப் போல பார்த்து பார்த்து ரசித்து இன்புறுகிறார்கள்.
அந்த நேரத்தில் ஏவி.எம்.மின் ` காக்கும் கரங்கள்’ பிரசாத் ப்ரொடக்ஷன்ஸின் ` இதயக் கமலம்’ வாகினி ஸ்டுடியோவின் ` ஜகதலப் பிரதாபன்’ எம்.ஜி.ஆர் நடித்த ` தாலி பாக்கியம்’ `தாழம்பூ’ ` ஆசைமுகம்’ ஆகிய படங்கள் என் கையில் இருந்தது.
தேவரண்ணன் மிக வேகமாக தயாரித்துக் கொண்டிருந்த `வேட்டைக்காரன்’ படத்துக்கு இரவு பகலாக எழுதி எழுதி விழிகள் சிவந்து, விரல்கள் வீங்கி போயிருந்த வேதனையான வேளை அது!
அப்போதுதான் சிவாஜி ஃபிலிம்சின் `புதிய பறவை’ பறந்து வந்து என் தலையில் அமர்ந்து என்னைக் கொத்தியது.
`புதிய பறவை’ க்கு நான் எழுத முடியாது என்று மறுத்த செய்தி சிவாஜியின் செவிகளுக்கு எட்டியது.
உடனே, சிவாஜி படத் தயாரிப்பு நிர்வாகியாக இருந்த துரை என்பவரிடன் வினயமாக இப்படி கூறியிருக்கிறார்.
`சாரை நான் பாக்கணும். சார் எங்கிட்ட வராரா ? அல்லது நான் சார் கிட்டே வரட்டுமா ? இப்ப நான் சொன்ன இந்த வார்த்தையை அப்படியே ஆருரான் கிட்ட போய் சொல்லு’
துரை வந்து இப்படி சொன்னதும் அவர் கொண்டு வந்திருந்த காரில் ஏறி சிவாஜியை சந்திக்க அவர் வீட்டிற்கு சென்றேன்.
மாடிக் கூடத்தில் சிவாஜி, கமலாம்மா இருவரும் இருந்தனர்.
என்னப் பார்த்தது சிவாஜி என்ன செய்தார் தெரியுமா ?

Harrietlgy
22nd June 2015, 10:05 PM
Courtesy Mr. Sudhangan Face book


செலுலாய்ட் சோழன் – 80
சிவாஜி அழைத்து அவரைப் பார்க்க போகிறார் கதை-வசனகர்த்தா ஆரூர்தாஸ். அவரே சொல்கிறார் அந்த சந்திப்பைப் பற்றி!
என்னைக் கண்டதும் ஆசிரியரைக் கண்ட பள்ளி மாணவர் போல,எழந்து நின்று கைகுவித்து வணங்கியவாறு ( இதெல்லாம் பழைய நாடகக்காரர்களுக்கே உரித்தான குறும்பு என்பதை நான் அறியாதவனா என்ன ?)
`வாங்க சார்! வணக்கம் உக்காருங்க! கமலா ஸாருக்கு வணக்கம் சொல்லிக்க (அவர் புன்னகை புரிந்தார்)
சிவாஜி: `புதிய பறவை’ படத்துக்கு எழத முடியாதுன்னு சொல்லிட்டிங்களாமே ?’
நான்: முடியாதுன்னு சொல்லலே! நேரமில்லைன்னுதான் சொன்னேன்’
அவர்: மத்த படங்கள் எல்லாம் எப்படி எழுதறீங்க?’
நான்: கஷ்டமாகத்தான் இருக்கு !’
அவர்: அந்த கஷ்டத்தோடு இதையும் சேத்துக்க வேண்டியதுதான்!
நான் : ( மெளனம்)
இப்போது அவரது பேச்சின் தொனி மாறியது.
சிவாஜி : ஏண்டா! ஒனக்கு என்ன தைரியம் இருந்தா என் படத்துக்கு எழுத மாட்டேன்னு சொல்லுவே? டேய்! இது சிவாஜி ஃபிலிம்ஸோட படம்.பா. first colour film! நீ ரொம்ப பிஸியா இருக்கேன்னு தெரிஞ்சுதான் இவ்வளவு நாளா உன்னை விட்டுவெச்சான் சண்முகம்.இல்லேன்னா முதல்லேயே உனக்கு அட்வான்ஸ் கொடுத்து கமிட் பண்ணியிருப்பான்
ஏவிஎம்க்கு எழுத நேரமிருக்கு. தேவருக்கு எழுத நேரம் இருக்கு.எம்.ஜி.ஆருக்கு எழுத நேரமிருக்கு! எனக்கு எழுத மட்டும் உனக்கு நேரமில்லையா ? முடியாதுன்னு சொன்னியாமே?’
நான்: மன்னிக்கணும் வார்த்தை மாறுது. முடியாதுன்னு நான் சொல்லலே. முடியலேன்னுதான் சொன்னேன். முடியாதுன்னு சொல்றதுக்கும், முடியலேன்னு சொல்றதுக்கும் வித்தியாசம் இருக்கு’
சிவாஜி ( சற்று கோபத்துடன்) எங்கிட்டயே டயலாக் பேசிக் காட்டறியா நீ ?’
நான் ( நிதானமாக) நான் டயலாக் பேசி காட்டறதுக்கு ஒங்களை விட்டா எனக்கு வேற யார் இருக்காங்க ?’
இப்படி நான் சொன்னதும் ஒரு சிறு ஊமைப் புன்னகை அவருடைய உதடுகளின் இடையில் நெளிந்து ஒளிர்ந்தது. ஒப்பனை இட்டுக் கொண்டு படப்பிடிப்புத்தளத்தில் நடிக்கும் போதும் நடிக்காத மற்றா நேரங்களிலும் அவருடைய முகபாவங்கள் அனைத்தும் எனக்கு அத்துப்படி!
அடித்த வேகத்தில் உயரே எழும்பிய பந்து சற்றைக்கெல்லாம் கீழே விழுந்து அடங்கிவிட்டதை நான் புரிந்து கொண்டேன்
எனக்குச் சிரிப்பு வந்தது – சிரித்தேன்
அவர் : என்ன சிரிக்கிறே ?’
நான்: ஒண்ணும் இல்லே – இதே சிவாஜி அண்ணனை அஞ்சாறு வருஷத்துகு முந்தி நண்பர் ஜெமினி கணேசன் முதல் முதல்லே எனக்கு அறிமுகப்படுத்தி ` பாசமலர்’ படத்துக்கு என்னை வசனம் எழத வச்ச, அந்தப் பழைய காட்சி ஞாபக்த்துக்கு வந்தது. அதோட. சேர்ந்து சிரிப்பும் வந்தது’
அவர்: என்ன கிண்டல் பண்றியா ? நீ ரொம்ப `பிஸி’ யா இருக்கேன்னு எனக்குத் தெரியும் .அதுக்குத் தகுந்த மாதிரி காசை வாங்கிட்டுப்போ. நீ ஒண்ணும் சலுகை காட்ட வேண்டாம்
இதோ பார், இந்த படத்தை பொறுத்தவரையிலே சிவாஜி ஃபிலிம்சுக்கும் உனக்கும் சம்பந்தம் இல்லே. எனக்கும் ஒனக்குந்தான் பேச்சு ( பக்கத்தில் நின்ற கமலாம்மாவிடம்) கமலா! ஐயாயிரம் ரூபா பணம் கொண்டா ( அவர் உள்ளே போனார்)
நான் : அண்ணே! நான் காசை எதிர்பார்த்து இங்கே வரலை
அவர்: ` என் படத்துக்கு எழுத மறுப்பேன்னு நானும் எதிர்பார்க்கலே’
இதற்குள் கமலாம்மா கையில் கரன்ஸி நோட்டுக்களுடன் வந்தார்.
சிவாஜி: ஒங்கையாலே அதை அவன்கிட்டே கொடு
கமலா அம்மா என்ற ` பாக்கியலட்சுமி’ யின் கரத்திலிருந்து பணம் என்கிற ` தனலட்சுமி’ தானாக வந்தாள். தட்டாமல் வாங்கிக் க்ண்களில் ஒற்றிக் கொண்டு பையில் வைத்துக் கொண்டேன்.
அந்த நாட்களில் முன்னனிக் கதை வசனகர்த்தாவுக்கு முன்பணமாக ஆயிரத்தி ஒன்றுதான் கொடுப்பார்கள். இயக்குனர்களுக்குத்தான் ஐயாயிரம் தருவார்கள். எனக்கு சிவாஜி கொடுத்த அந்த ஐயாயிரம் மிகவும் அதிகம். அது கணக்குப்பிரகாரம் கொடுத்தது அல்ல. என் எழுத்துக்கள் மீது அவர் கொண்டிருந்த காதலுக்காகக் கொடுத்தது என்பதை நான் அறிவேன்.
சிவாஜி: இதோ பார் ! இது அட்வான்ஸ்தான். ஒணக்கு எவ்வளவு பணம் வேணுமோ வாங்கிக்க. எங்கிட்ட கேக்க வேண்டாம். ஒனக்கு எப்போ எவ்வள்வு தேவைப்படுதோ அம்மாகிட்ட கேளு. நீ வந்து கேக்கணும்னு அவசியம் இல்லே. ஒரு போன் பண்ணு. கொடுத்து அனுப்புவாங்க. எனக்கு வேண்டியதெல்லாம் படத்தோட மொத்தம் வசனங்கள் அடங்குன முழு ஸ்கிரிப்ட். எவ்வளவு சீக்கிரம் எழுத முடியுமோ எழுதி முடிச்சிட்டு,முதல்லேருந்து எல்லாத்தையும் எங்கிட்ட படிச்சுக் காட்டிடு.
`பாசமலர்’ லேருந்து இது வரைக்கும் நீ எழுதின எந்த ஸ்கிரிப்டையும் நான் படிக்கச் சொல்லிக் கேட்டதில்லே. ஷீட்டிங்கல, செட்டுல நீ சொன்ன வசனத்தை நான் பேசியிருக்கேன் அவ்வளவுதான்.
இந்தப் படத்துல என்னவோ எனக்கு ஒரு ` இண்ட்ரஸ்ட்’ ஏற்பட்டிருக்கு. அதோட டைரக்டர் தாதாமிராசி தமிழ் தெரியாதவன். ஆனால் நல்லா எடுப்பான். அதனால் தான் அவனைப் போட்டிருக்கோம்.
எங்கள்ள நீயும் ஒருத்தன். அதனால் இதை ஒன்னோட சொந்தப் படமா நினைச்சிக்கிட்டு, அப்பப்போ ஷிட்டிங்குக்கு வந்து டயலாக் சொல்லிக் கொடுத்து மேக்ஸிமம் ஒத்துழைக்கணும். நான் கேட்டதுக்க்காக எழுதிப் போட்டுட்டு ஒடிடாதே.
வேடனிடம் அகப்பட்ட மான் வேறு வழியின்றி மிரண்டு போய் நிற்குமே அதைப் போல நின்றேன்.
அவர்: எப்ப எழத ஆரம்பிக்கப் போறே?
நான்: யோசிச்சு சொல்றேன்
அவர்: யோசிக்கறதுக்கெல்லாம் நேரம் இல்லே
நான்: ஷெட்யூல் பை ஷெட்யூலா எழுதி கொடுக்கட்டுமா ?
சிவாஜி: ஷெடியூல் பை ஷெட்யூலா ? டேய் ஆருரான். ஒரே ஷெட்யூல்ல இந்த ஜீலை மாசத்துக்குள்ளே படத்தை முடிச்சி ஆகஸ்ட்ல ரீலிஸ் பண்ணனும்னு சண்முகம் சொல்லி இருக்கான்.
நான்: அப்படின்னா இப்போ எனக்கு இருக்கிற நெருக்கடியான நிலமையில் ராத்திரியில் ஒக்காந்து விடிய விடிய எழுதறதை வேற வழி இல்லே’
சிவாஜி: சரி எத்தனை ராத்திரியில் எழுதி முடிப்பே?
நான்: ஏழு இரவுகள். ! ஒண்ணு ரெண்டு நாள் கூடலாம் இல்லே குறையலாம். அது நான் போற வேகத்தை பொறுத்தது.
சிவாஜி : எனக்குத் தெரியும். நீ வேகமாக எழதக் கூடியவன். சீக்கிரம் முடிச்சிடுவே. ஒகே அப்போ எழத ஒக்கார்ரே?
நான்: இன்னிக்கு ராத்திரியே
சிவாஜி உடனே அடுத்த கட்டத்திற்கு போனார்
எப்படி ?

RAGHAVENDRA
23rd June 2015, 12:04 AM
சென்னையில் 1972..ம் வருடம் ஓடிக்கொண்டிருந்த சினிமா படங்கள்...a sweet memory

https://fbcdn-sphotos-e-a.akamaihd.net/hphotos-ak-xft1/t31.0-8/s720x720/10524229_949019758483016_3517314586830028429_o.jpg


சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல, எவரும் எட்டாத அதிசயம்.

சுந்தர்ராஜன்
மிக மிக அபூர்வ ஆவணமாக 1972ம் ஆண்டில் ஓர் தமிழ் நாளிதழின் இன்றைய சினிமா பகுதியின் நிழற்படம் பதிவிட்டு அசத்தி விட்டீர்கள். பாராட்டுக்கள்.

ஆனால் தினத்தந்தி உள்பட பல நாளிதழ்களின் இந்தப் பகுதி மட்டும் துல்லியத்தன்மை கொண்டதல்ல. பல நாட்களில் சில குறிப்பிட்ட திரையரங்குகளின் படங்களின் பெயர்கள் மாற்றப்படாமல் அப்படியே இருக்கும். இதில் சென்னை மட்டுமின்றி சுற்று வட்டாரத்திலுள்ள செங்கல்பட்டு, வட தென்னாற்காடு மாவட்ட திரையரங்குகளின் பெயர்களும் இடம் பெற்றிருக்கும்.

மேற்காணும் நிழற்படத்திலேயே எடுத்துக்கொண்டோமானால் கூட, 1972ம் ஆண்டில் குளோப் திரையரங்கைப் பொறுத்தவரை, எம்.ஜி.ஆர். படங்கள் நான் ஏன் பிறந்தேன், இதயவீணை, மற்றும் கருந்தேள் கண்ணாயிரம், மிஸ்டர் சம்பத், வாழையடி வாழை, ராணி யார் குழந்தை, நவாப் நாற்காலி, கருந்தேள் கண்ணாயிரம், போன்ற படங்கள் வெளியாயின. இவற்றில் ஏதாவது ஒன்று தான் அந்தப் பட்டியலில் இடம் பெற்றிருக்கவேண்டும். அப்படியில்லையென்றால், இவற்றிற்கு ஊடாக ஆங்கிலப் படங்கள் சிலவும், இதர மொழிப்படங்கள் சிலவும் வெளியாகின.

மேற்காணும் பட்டியலை அடிப்படையாக வைத்து யூகித்தால் குளோப் திரையரங்கில் அநேகமாக இதயவீணை ஓடிக்கொண்டிருக்க வேண்டும்.



என்றாலும் கூட அந்தக் காலகட்டத்தில் சென்னையில் இருந்த திரையரங்குகள் என்னென்ன என்பதை எடுத்தியம்பும் வரலாற்றுச்சான்றாக இந் நிழற்படம் விளங்குகிறது. இந்த வகையில் தங்களுக்கு உளமார்ந்த பாராட்டுக்களைக் கூறிக்கொள்ள விரும்புகிறேன்.

RAGHAVENDRA
23rd June 2015, 12:22 AM
ரங்கனின் பாதிப்பு தலைமுறைகளைக் கடந்தது என்று நேற்றும் நிரூபணமானது.

நேற்று, 21.06.2015 ஞாயிறு மாலை நமது நடிகர் திலகம் திரைப்படத்திறனாய்வு அமைப்பின் சார்பாக படிக்காத மேதை திரைக்காவியம் திரையிடப்பட்டது. அரங்கு நிறைந்து மக்கள் பெருவாரியாக வருகை புரிந்து ரங்கனோடு ஒன்றிப்போயினர். இதற்கு எத்தலைமுறையும் விதிவிலக்கல்ல.

முன்னதாக படத்தொகுப்பாளர் இயக்குநரும் பீம்சிங் அவர்களின் புதல்வருமான திரு லெனின் அவர்கள் சிறப்புரையாற்றினார்.

விழா பற்றிய தொகுப்பினை முரளி சார் அவர்களின் எழுத்தில் படிப்பதே சுவை,முழுமை என்பதால் அனைவரைப் போல் நானும் காத்திருக்கிறேன்.

அது வரை விழாவிலிருந்து ஓரிரு நிழற்படங்கள்

திரு லெனின் அவர்களுக்கு திரு கவிதாலயா கிருஷ்ணன் அவர்கள் நினைவுப்பரிசு வழங்குகிறார்.

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/ntfans%20programmes/MEMENTOPRESENTM_zpslyhduhaf.jpg

திரு லெனின் அவர்கள் உரையாற்றுகிறார்.

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/ntfans%20programmes/BLSPEAKS_zpskd2vx8to.jpg

Murali Srinivas
23rd June 2015, 01:04 AM
படிக்காத மேதை - 55

ரங்கனின் பிறந்த நாளை அவனுக்கு 55 வயது நிறைவு பெறுவதை முன்னிட்டு ஞாயிறு மாலை கொண்டாடினோம். எத்தனை வருடம் ஆனாலும் ஒரு காலகட்டத்தில் சிவாஜி என்கிற பெயரே மறந்து போனாலும் ரங்கன் மட்டும் மனங்களை விட்டு மறையவே மாட்டான் என்று குமுதம் 55 வருடங்களுக்கு முன்பு சொன்னது எக்காலத்துக்கும் பொருந்தும் உண்மை என்பது விழாவிலும் படம் திரையிட்டப்பட்டபோதும் தெளிவாகியது.

சென்ற வருடம் பச்சை விளக்கு திரைப்படத்தின் பொன்விழா நடைபெற்றபோது வருகை தந்திருந்த படத் தொகுப்பாளார் இயக்குனர் B.லெனின் நமது அழைப்பை ஏற்று இந்த விழாவிலும் கலந்துக் கொண்டார். விழாவின் தொடக்கத்தில் படத்தைப் பற்றிய சிறப்பு செய்திகளை நாம் பகிர்ந்துக் கொண்டபிறகு லெனின் பேசினார்.

படிக்காத மேதை படத்தை பற்றி மட்டும் குறிப்பிடாமல் நடிகர் திலகத்துடனான பரிச்சயத்தை பழகியதை பகிர்ந்துக் கொண்டார் லெனின். சென்ற வருடம் குறிப்பிட்ட அதே செய்தியை மீண்டும் சொல்லி பேச்சை துவக்கினார். அதாவது நடிகர் திலகத்தின் திரைப்படைப்புகள் அனைத்தும் ஆவணப்படுத்தப்பட வேண்டும் என்ற செய்திதான் அது. அவரின் படங்களில் பல விஷயங்கள் பொதிந்துக் கிடக்கின்றன என்றார். உதாரணமாக நாம் சாதாரணமாக நினைக்கக் கூடிய பலே பாண்டியாவில் வரும் மருது கேரக்டர் உடுத்தியிருக்கும் லுங்கியை சற்றே மேலே தூக்கி கட்டும் அந்த ஸ்டைல் இருக்கிறதே அதை ஒரு எடிட்டர் என்ற முறையில் ஷாட் பை ஷாட்டாக தொகுத்தால் அதில் படிப்பதற்கு இருக்கிறது பல செய்திகள் என்றார்.

நடிகர் திலகத்தின் மிகப் பெரிய சிறப்பு அவரது குரல் modulation. ஏதென்ஸ் நகரத்து எழில்மிக்க வாலிபர்களே என்று ஆரம்பிக்கும்போது அவரது modulation-ஐ கவனிக்க வேண்டும். வீரம் விலை போகாது எனும் வரியில் வீரம் என்ற வார்த்தை எப்படி அழுத்தம் கொடுக்கப்பட்டு ஏறுமுகமாக உச்சரிக்கப்படுகிறது என்பதை கவனித்தால் எப்படி வசனம் பேச வேண்டும் என்பது யாரும் சொல்லாமலே புரியும். எங்கே கூட்டி எங்கே குறைத்து எங்கே அழுத்தி எங்கே மெதுவாக தொட்டு தமிழ் பேசப்பட வேண்டும் என்பதற்கு இன்றைக்கும் பாடமாக இருக்கக் கூடியவர் அவர். கருணாநிதியின் வசனங்களுக்கு சிறப்பூட்டியது நடிகர் திலகத்தின் குரல் வளம். வசனங்களை மனப்பாடம் செய்து பேசுவது பெரிதல்ல. யார் வேண்டுமானாலும் பேசலாம். ஆனால் சிவாஜி மாதிரி பேச முடியுமா என்று கேட்டால் முடியாது என்றே சொல்ல வேண்டும். சிவாஜி மாதிரி என்று சொல்லும்போதே அங்கே originality போய் செயற்கைதனம் வந்து விடும் என்றார்.

சரித்திரப் படங்கள் மட்டுமல்லாமல் சமூகப் படங்களிலும் இதை நாம் காணலாம் என்ற லெனின் எங்கே போய்விட்டாய் சாந்தி எங்கு போய்விட்டாய் சாந்தி என்று பாலும்பழமும் படத்தில் பேசுவதை அந்த modulation-ஐ உதாரணமாக எடுத்துச் சொன்னார். படங்களில் சிவாஜிக்கு வைக்கப்பட்டது போல் மிக அதிக அளவு tight close up வைக்கப்பட்ட நடிகனே உலகத்தில் இருக்க முடியாது என்ற லெனின் ஒன்றோடு ஒன்றாக உயிர் சேர்ந்த பின்னே என்ற வரிக்கு 75 mm லென்ஸ் பயன்படுத்தி எடுக்கபப்ட்ட tight close up நினைவிருக்கிறதா என்று கேட்டு அதில் கழுத்தை மட்டும் அசைத்து அந்த கன்னமும் புருவமும் ஏறி இறங்குவதை செய்வதற்கு யார் இருக்கிறார்கள் என்று கேட்டார். அதன் தொடர்ச்சியாக மற்றொரு சம்பவத்தையும் நினைவு கூர்ந்தார் லெனின்.

பார் மகளே பார் படத்தின் ஷூட்டிங் நடந்துக் கொண்டிருந்த சமயம். அவள் பறந்து போனாளே பாடல் காட்சி படமாக்கப்பட்டுக் கொண்டிருந்தது. முத்துராமன் பாடும் portions outdoor -லும் நடிகர் திலகம் பாடும் காட்சிகள் indoor -லும் படமாக்கப்பட்டு பின்பு match செய்யப்பட்டது. Indoor ஷூட்டிங்கில் இந்த வீட்டிற்கு விளக்கில்லை என்ற வரிகள் படமாக்கப்படும்போது செட்டிற்கு வந்த மற்றொரு இயக்குனர் செட்டையும் கேமரா ஆங்கிளையும் பார்த்துவிட்டு " ஏன் பீம் பாய், trolley பயன்படுத்தி long shot -ல் எடுத்தால் செட்டும் கவராகும். காட்சியும் அழகுற அமையுமே" என்று கேட்க அதற்கு பீம்சிங் "சிவாஜி பாயை வைத்துக் கொண்டு எதற்கு long shot?" என்று பதில் கேள்வி கேட்டாராம். இதை பெருமையாக சொன்ன லெனின் அவர் ஒரு cameraman -ன் delight என்றார். அவரிடம் காட்சியை மட்டும் விளக்கி விட்டால் போதும் எங்கே நிற்க வேண்டும் எப்படி திரும்ப வேண்டும் என்பதையெல்லாம் அவரே அழகாக செய்து விடுவார். left-ல் 25 டிகிரி என்றால் மிக சரியாக 25 டிகிரி திரும்புவார். Right -ல் 40 டிகிரி என்றால் 40 டிகிரி மிக சரியாக் இருக்கும். வேறு எந்த அடிகராக இருந்தாலும் அந்த perfection -ஐ பார்க்க முடியாது. மற்றவர்களுக்கு நிற்கிற இடத்தை விட்டு நகர கூடாது என்பதற்காக தரையில் சாக்பீசால் வட்டம் வரைவார்கள். வலது பக்கம் பார்க்க வேண்டும் என்றால் அங்கே ஒரு assistant கையில் ஒரு பொருளை பிடித்துக் கொண்டு இதையே பாருங்கள் என்று நிற்க வைக்க வேண்டிய கட்டாயம். இது போன்ற பிரச்சனைகள் எதுவும் சிவாஜி படங்களில் வராது என்றார் லெனின்.

நடிகர் திலகம் போல டப்பிங் பேசுவதிலும் நேர்த்தி காட்டக்கூடியவர் யாருமில்லை என்று சொன்ன லெனின் அது போல் வயதில் எவ்வளவு சிறியவர் ஆனாலும் அவர்கள் சொல்லும் குறைகளையும் காது கொடுத்துக் கேட்கும் பெருந்தன்மை கொண்டவர் நடிகர் திலகம் என்றார். மேற்சொன்ன இரண்டையும் பாதுகாப்பு படத்தின் டப்பிங் நேரத்தில் பார்த்ததாக சொன்னார். தன் தந்தையார் வேறு ஒரு படப்பிடிப்பில் இருந்ததால் பாதுகாப்பு படத்தின் டப்பிங் வேலைகளை தான் மேற்பார்வையிட போனதை குறிப்பிட்ட அவர் சிவாஜி அதிகாலையிலே வந்து டப்பிங் தொடங்கி விடுவார். அப்படி அவர் தொடங்கும்போது திரையில் முதல் காட்சி ஓட சிவாஜி டப்பிங் பேச துவங்கினார். முதல் ஷாட் முடிந்தது. அதில் சற்று குறை இருப்பது போல் தோன்றியதால் நான் one more என்று கேட்க என்னடா என்று அவருக்கே உரித்தான பாணியில் கேட்க நான் இன்னும் கொஞ்சம் பாவம் வேண்டும் என்று கேட்க போடா என்று சொல்லிவிட்டு அடுத்தடுத்த ரீல்களுக்கு டப்பிங் பேச ஆரம்பித்து விட்டார். நானும் சரி என்று விட்டு விட்டேன்.

எல்லாம் முடிந்த பிறகு என்னை கூப்பிட்டு அந்த முதல் ரீலிலே என்னமோ சொன்னியே அதை மறுபடியும் போட சொல்லு என்றார். இல்லே வேண்டாம். அதே இருக்கட்டும் என்று நான் சொல்ல போட சொல்லுடா என்று சொல்லி அந்த ரீல் மீண்டும் திரையிடப்பட்டவுடன் நீ எப்படி எதிர்பார்க்கிறே என்று கேட்டு நான் சொல்ல அதேற்கேற்றாற்போல் மீண்டும் பேசி கொடுத்துவிட்டு இப்போது திருப்தியா என்றார். என் வயதுக்கு என அனுபவத்திற்கு அவர் அதை செய்ய வேண்டிய அவசியமில்லை. இருந்தாலும் செய்தார். தன நடிப்பை பற்றிய விமர்சனம் எந்தப் பக்கத்திலிருந்து வந்தாலும் அதை விமர்சிப்பவர்கள் கூற்றில் நியாயம் இருந்தால் தன்னை திருத்திக் கொள்ள தயங்க மாட்டார் நடிகர் திலகம் என்பதற்கு இது ஒரு உதாரணம் என்றார்.

மேலும் முதலில் அவர் ஏன் மறுத்தார் என்பதற்கும் பிற்பாடுதான் காரணத்தை தெரிந்துக் கொண்டேன் என்று சொன்ன லெனின் அது என்னவென்பதையும் சொன்னார். டப்பிங் பேசும்போது காலையில் பேசும் வசனம் முதல் ஷாட்டில் ஓகே ஆக வேண்டும் என்று நினைப்பார். அதனால்தான் இது தெரியாமல் நான் one more கேட்க அப்போது அதை மறுத்து விட்டு அடுத்த ரீலுக்கு போயிருக்கிறார். அதே நேரத்தில் தாம் பேசியதில் ஏதோ குறை இருக்கிறது. அதனால்தான் அவன் அப்படி சொல்லியிருக்கின்றான் என்பதை புரிந்துக் கொண்டு பிற்பாடு அந்த தவறை சரி செய்திருக்கிறார். சொன்னவன் சிறுவன் ஆயிற்றே அவன் என்ன சொல்வது என்றெல்லாம் நினைக்காமல் என் வார்த்தைக்கும் மதிப்பு கொடுத்து இறங்கி வந்தாரே அதுதான் அவரின் தொழில் பக்தி அர்பணிப்பு! என்று நெகிழ்ச்சியோடு நினைவு கூர்ந்தார் லெனின்.

இன்றைக்கு இருக்கக் கூடிய இளைய தலைமுறையில் ஒரு சில பேர்கள் அவரின் நடிப்பை பற்றி சில மாறுபட்ட கருத்துகளை கொண்டிருக்க கூடும். அப்படி இல்லை. அவரின் நடிப்பு என்பது over the top கிடையாது என்பதை ஒரு ரசிகனாக இல்லாமல் ஒரு எடிட்டராக உலகின் எந்த மனிதனோடும் என்னால் வாதிக்க முடியும். I can challenge anybody in this world! என்று சொன்னார் லெனின்.

இறுதியாக மீண்டும் ஒரு முறை சிவாஜியை அவர்தம் படைப்புகளை ஆவணப்படுத்துங்கள். இந்த விஷயமாக நானும் என்னால் முடிந்த சில விஷயங்களை செய்துக் கொண்டிருக்கிறேன் என்று குறிப்பிட்ட லெனின் அப்படி உருவாக்கப்படும் ஆவணங்கள் 365 நாட்களிலும் 24 * 7 அனைவருக்கும் available ஆக இருக்க வேண்டும் என்ற தன ஆசையை வெளிப்படுத்தி பேச்சை நிறைவு செய்தார்.

திரு லெனின் அவர்களுக்கு நமது அமைப்பின் சார்பாக ஒரு நினைவு பரிசு [படிக்காத மேதை 55 என்ற Memento] நமது அமைப்பின் நிர்வாக குழு உறுப்பினரான திரு கவிதாலயா கிருஷ்ணன் வழங்கினார்.

அதன் பிறகு படிக்காத மேதை படம் திரையிடபப்ட்டது. அதைப பற்றிய ஒரு சிறிய குறிப்பு நாளை!

(தொடரும்​)

அன்புடன்

Gopal.s
23rd June 2015, 04:54 AM
முரளி,

உன் reporting நேர்த்தி அலாதி. கே.எஸ்.ஜி கூப்பிடவில்லையா?

Subramaniam Ramajayam
23rd June 2015, 07:28 AM
Murali sir
your PADIKKADAMETHAI write-up very good especialy about NT's camera knowledges and positioning etc very well written. Lenin's speach narrated superbly for the benefit of those latecomers like me .
pleae continue your analysis. thanks,

Russellxor
23rd June 2015, 09:07 AM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/A0plsvQDcbA_X_9131_zpsjilcyrqg.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/A0plsvQDcbA_X_9131_zpsjilcyrqg.jpg.html)

http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/A0plsvQDcbA_X_5091_zpsoshh6zl2.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/A0plsvQDcbA_X_5091_zpsoshh6zl2.jpg.html)

http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/A0plsvQDcbA_X_2915_zpsga5iy0ox.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/A0plsvQDcbA_X_2915_zpsga5iy0ox.jpg.html)

http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/A0plsvQDcbA_X_5249_zpsaqgnqc8j.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/A0plsvQDcbA_X_5249_zpsaqgnqc8j.jpg.html)

http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/A0plsvQDcbA_X_7003_zpsodsppqcq.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/A0plsvQDcbA_X_7003_zpsodsppqcq.jpg.html)

http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/A0plsvQDcbA_X_9624_zps9xb2u4lc.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/A0plsvQDcbA_X_9624_zps9xb2u4lc.jpg.html)

http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/A0plsvQDcbA_X_2907_zps5pvk4yth.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/A0plsvQDcbA_X_2907_zps5pvk4yth.jpg.html)

http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/A0plsvQDcbA_X_1207_zps6lxyssts.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/A0plsvQDcbA_X_1207_zps6lxyssts.jpg.html)

http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/A0plsvQDcbA_X_3284_zpsyntms2dq.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/A0plsvQDcbA_X_3284_zpsyntms2dq.jpg.html)

KCSHEKAR
23rd June 2015, 10:58 AM
படிக்காத மேதை - 55

இறுதியாக மீண்டும் ஒரு முறை சிவாஜியை அவர்தம் படைப்புகளை ஆவணப்படுத்துங்கள். இந்த விஷயமாக நானும் என்னால் முடிந்த சில விஷயங்களை செய்துக் கொண்டிருக்கிறேன் என்று குறிப்பிட்ட லெனின் அப்படி உருவாக்கப்படும் ஆவணங்கள் 365 நாட்களிலும் 24 * 7 அனைவருக்கும் available ஆக இருக்க வேண்டும் என்ற தன ஆசையை வெளிப்படுத்தி பேச்சை நிறைவு செய்தார்.
டியர் முரளி சார்,
படிக்காத மேதை - விழா தொகுப்பு (வழக்கம்போல) அருமை.

இந்தித் திரைப்பட ஜாம்பவான் திரு.ராஜ்கபூரின் திரைப்படங்கள் ஆவணப்படுத்தப்பட்டு பாதுகாக்கப்படுவதாக அறிகிறேன். திரு.லெனின் கூறியது போல நடிகர்திலகத்தின் திரைப்படங்களை ஆவணப் படுத்தும் முயற்சியை யாராவது மேற்கொள்வார்களா என்று என் மனம் மட்டுமல்ல, லட்சக்கணக்கான சிவாஜி ரசிகர்களின் மனமும் ஏங்குகிறது. நடக்குமா?

Russellxor
23rd June 2015, 12:01 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/cartoon1435040764362_zpswgcwl4np.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/cartoon1435040764362_zpswgcwl4np.jpg.html)

Russellxor
23rd June 2015, 12:01 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/cartoon1435040656486_zps6d850l88.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/cartoon1435040656486_zps6d850l88.jpg.html)

Russellxor
23rd June 2015, 12:02 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/cartoon1435040282519_zpsscyziogc.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/cartoon1435040282519_zpsscyziogc.jpg.html)

Russellxor
23rd June 2015, 12:56 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/20150622185111_zpskjmwxys9.gif (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/20150622185111_zpskjmwxys9.gif.html)

Russellxor
23rd June 2015, 12:57 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/20150622175602_zpstf5atgza.gif (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/20150622175602_zpstf5atgza.gif.html)

Russellxor
23rd June 2015, 12:58 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/20150622124430_zps4u2oc2hl.gif (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/20150622124430_zps4u2oc2hl.gif.html)

KCSHEKAR
23rd June 2015, 03:40 PM
டியர் முரளி சார்,
படிக்காத மேதை - விழா தொகுப்பு (வழக்கம்போல) அருமை.
இந்தித் திரைப்பட ஜாம்பவான் திரு.ராஜ்கபூரின் திரைப்படங்கள் ஆவணப்படுத்தப்பட்டு பாதுகாக்கப்படுவதாக அறிகிறேன். திரு.லெனின் கூறியது போல நடிகர்திலகத்தின் திரைப்படங்களை ஆவணப் படுத்தும் முயற்சியை யாராவது மேற்கொள்வார்களா என்று என் மனம் மட்டுமல்ல, லட்சக்கணக்கான சிவாஜி ரசிகர்களின் மனமும் ஏங்குகிறது. நடக்குமா?
ஐந்தாறு வருடங்களுக்கு முன்பு, நான் உத்தம புத்திரன் திரைப்படத்தை மறு வெளியீடு செய்திருந்தேன். அதன்பிறகு அந்தத் திரைப்படத்தை மாயாபஜார் மாதிரி கலர் செய்து டிஜிட்டலில் வெளியிடலாம் என்ற எண்ணத்தில் திரு.ஒய்.ஜி.மகேந்திரா உள்ளிட்ட சிலர் கேட்டார்கள். அதற்காக விசாரித்தபோது அதன் (ஒரிஜினல்) நெகட்டிவ் இல்லை எனத் தெரிவித்தார்கள். இதுபோலவே நடிகர்திலகத்தின் பல முக்கிய திரைப்படங்களின் நெகட்டிவ் இல்லை எனத் தெரிய வந்ததும் என் மனம் உடைந்துபோனது.

இனியாவது தாமதிக்காமல்நடிகர்திலகத்தின் மீதமுள்ள திரைப்படங்களையாவது ஆவணப்படுத்திப் பொக்கிஷமாகப் பாதுகாக்கவேண்டும்.

Russellxor
23rd June 2015, 05:24 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/cinema%20%20express/FB_IMG_1435060223763_zpsixpwrjru.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/cinema%20%20express/FB_IMG_1435060223763_zpsixpwrjru.jpg.html)

Russellxor
23rd June 2015, 05:26 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/cinema%20%20express/FB_IMG_1435060220868_zpshetognqy.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/cinema%20%20express/FB_IMG_1435060220868_zpshetognqy.jpg.html)

Russellxor
23rd June 2015, 05:27 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/cinema%20%20express/FB_IMG_1435060217925_zpsxnzcgb7z.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/cinema%20%20express/FB_IMG_1435060217925_zpsxnzcgb7z.jpg.html)

Russellxor
23rd June 2015, 05:27 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/cinema%20%20express/FB_IMG_1435060214737_zps6csz3lgq.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/cinema%20%20express/FB_IMG_1435060214737_zps6csz3lgq.jpg.html)

Russellxor
23rd June 2015, 05:32 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/PhotoFunia-Playing_cards_zpskg5zpgcp.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/PhotoFunia-Playing_cards_zpskg5zpgcp.jpg.html)

Russellxor
23rd June 2015, 05:33 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/PhotoFunia-Oxford_zpsvro2zovo.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/PhotoFunia-Oxford_zpsvro2zovo.jpg.html)

Russellxor
23rd June 2015, 05:33 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/PF_Raining_22062015224515039_zpso1cgecpf.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/PF_Raining_22062015224515039_zpso1cgecpf.jpg.html)

Russellxor
23rd June 2015, 05:34 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/PF_Pirates_of_the_Caribbean_22062015224957342_zpsk lpb1wwr.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/PF_Pirates_of_the_Caribbean_22062015224957342_zpsk lpb1wwr.jpg.html)

Russellxor
23rd June 2015, 05:35 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/IMG_20150623_142430_zpsibvdzqjd.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/IMG_20150623_142430_zpsibvdzqjd.jpg.html)

Russellxor
23rd June 2015, 05:39 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/fb4fb250-885c-430c-a321-703117d9a278_zpsb415wrdt.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/fb4fb250-885c-430c-a321-703117d9a278_zpsb415wrdt.jpg.html)

Russellxor
23rd June 2015, 05:40 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/c36ab9f5-6717-4c82-ba19-ba45b3805565_zpsj1w06bzh.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/c36ab9f5-6717-4c82-ba19-ba45b3805565_zpsj1w06bzh.jpg.html)

Russellxor
23rd June 2015, 05:41 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/da6788c2-d954-44a0-94f9-ea7fbda02944_zpsxkxigpmz.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/da6788c2-d954-44a0-94f9-ea7fbda02944_zpsxkxigpmz.jpg.html)

Russellxor
23rd June 2015, 05:42 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/ad5a431f-8e52-4d87-8252-7a1842a6e929_zpsya3wz7zf.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/ad5a431f-8e52-4d87-8252-7a1842a6e929_zpsya3wz7zf.jpg.html)

Russellxor
23rd June 2015, 05:43 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/535bee63-b90d-4d6d-9a4f-bfeba9f4b803_zpspsls5emu.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/535bee63-b90d-4d6d-9a4f-bfeba9f4b803_zpspsls5emu.jpg.html)

Russellxor
23rd June 2015, 05:44 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/2a3dcc26-9b24-4b73-adaa-6dd80b72e7a8_zpsuk9q8drl.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/2a3dcc26-9b24-4b73-adaa-6dd80b72e7a8_zpsuk9q8drl.jpg.html)

Russellxor
23rd June 2015, 05:44 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/b458b6dd-7795-4bce-9017-5cd55cba19a9_zpsh0s1swto.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/b458b6dd-7795-4bce-9017-5cd55cba19a9_zpsh0s1swto.jpg.html)

Russellxor
23rd June 2015, 05:46 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/414cb02b-75e6-40ef-a696-093745651e9a_zps1dxlvcph.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/414cb02b-75e6-40ef-a696-093745651e9a_zps1dxlvcph.jpg.html)

Russelldwp
23rd June 2015, 07:56 PM
[QUOTE=SUNDARAJAN;1233481]https://fbcdn-sphotos-g-a.akamaihd.net/hphotos-ak-xfp1/v/t1.0-9/p480x480/11163915_832947076789898_8806282936279634773_n.jpg ?oh=b0305b894b999fb3a707e323765cb2d2&oe=56284FBE&__gda__=1445834126_b8f4d57a60c867cf42534fdb1e3690d d


நன்றி கெட்ட தமிழ் திரையுலகில் பிறந்த நடிப்பின் உச்சம் சிங்கத்தமிழன் சிவாஜி அவர்களுக்கு இறந்து 14 ஆண்டுகள் ஆகியும் மணிமண்டபம் அமைக்க துப்பில்லாத நடிகர் சங்கத்திற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் சிவாஜியின் புகழ் ஒன்றே தன நோக்கம் என செயல் பட்டுக்கொண்டிருக்கும் திரு.சந்திரசேகர் அவர்களின் உண்ணாவிரத போராட்டம் வெற்றி பெற்று இந்த ஆண்டு இறுதிக்குள் சென்னையில் மணிமண்டபம் அமையட்டும் - அதற்கு இந்த உண்ணா விரதப்போரட்டம் ஒரு தூண்டுகோலாக இருக்கட்டும்.
சிவாஜி ச்மூகநலப்பேரவையின் இந்த முயற்சி பெரு வெற்றி காணவும் உண்மையான சிவாஜி ரசிகர்கள் இந்த போராட்டத்தில் கலந்து கொள்வார்கள் எனவும் தெரிவித்துகொள்கிறேன்


https://fbcdn-sphotos-h-a.akamaihd.net/hphotos-ak-xpf1/v/t1.0-9/10421379_1546963448853664_4683151876540173382_n.jp g?oh=520c37f2e93dcfdc168ab396f389da8b&oe=55F15B13&__gda__=1441715756_29077682f0e2d7c45023a40da39857c 5

https://fbcdn-sphotos-h-a.akamaihd.net/hphotos-ak-xpf1/v/t1.0-9/10421379_1546963448853664_4683151876540173382_n.jp g?oh=520c37f2e93dcfdc168ab396f389da8b&oe=55F15B13&__gda__=1441715756_29077682f0e2d7c45023a40da39857c 5


மாரிஸ் குருப் சிவாஜி முரட்டு பக்தர்கள் திருச்சி
தில்லைநகர் பாஸ்கர், புத்தூர் வேதகிரி ச்ன்ஜீவ்நகர் ராஜேந்திரன் முரளி வெங்கட்

Russellbpw
23rd June 2015, 07:56 PM
வரும் ஜூலை மாதம் 4ஆம் தேதி முதல்
நமது "கலை உலகின் சக்ரவர்த்தி",
"இந்திய திரை உலகின் முதல் உலக நாயகர்"
"நடிகர் திலகம்" சிவாஜி அவர்களின் அசால்டான நடிப்பில்

கே.எஸ். கோபாலகிருஷ்ணன் அவர்கள் இயக்கத்தில்,
நடிகையர் திலகம் சாவித்திரி, புன்னகை அரசி கே ஆர் விஜயா, லட்சிய நடிகர் எஸ் எஸ் ராஜேந்திரன், நடிகவேள் எம் ஆர் ராதா, சர்வமொழி குணசித்திர கதிரவன் எஸ் வீ ரங்கா ராவ் அவர்களின் நடிப்பில் 1964இல் வெளிவந்து பெரு வெற்றி பெற்ற

கை கொடுத்த தெய்வம் - புத்தம் புது சிங்கிள்டோன் கலர் பிரிண்டில்
- தினசரி 4 காட்சிகள் திருச்சி கெய்டி யில் திரையிடப்படவுள்ளது.

http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC3910a.jpg (http://s1094.photobucket.com/user/pammalar/media/GEDC3910a.jpg.html)


http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC3913a-1.jpg (http://s1094.photobucket.com/user/pammalar/media/GEDC3913a-1.jpg.html)


தணிக்கை 10.07.1964
வெளியீடு 18.06.1964

நடிக நடிகையர்
நடிகர் திலகம் சிவாஜி கணேசன்,
நடிகையர் திலகம் சாவித்திரி
எஸ்.எஸ். ராஜேந்திரன்,
கே.ஆர்.விஜயா,
எஸ்.வி.ரங்காராவ்,
எம்.ஆர்.ராதா,
வி.நாகையா,
எஸ்.வி.சஹஸ்ரநாமம்,
புஷ்பலதா,
புஷ்பவள்ளி,
ராதா பாய் மற்றும் பலர்.

கதை டி.எஸ்.மகாதேவன்
பாடல்கள் – மகாகவி பாரதியார், கண்ணதாசன்
இசை – மெல்லிசை மன்னர்கள் எம்.எஸ்.விஸ்வநாதன், டி.கே.ராமமூர்த்தி
பின்னணி பாடியவர்கள் டி.எம்.சௌந்தர்ராஜன், பி.சுசீலா, எல்.ஆர்.ஈஸ்வரி, ஜே.வி.ராகவலு
ஒளிப்பதிவு – எம்.கர்ணன்
ஒலிப்பதிவு – டி.எஸ்.ரங்கசாமி, டி.எஸ்.ராஜு
கலை – கங்கா
எடிட்டிங் ஆர்.தேவராஜ்
தயாரிப்பு – பொன்னி புரொடக்ஷன்ஸ் - எம்.எஸ்.வேலப்பன்
திரைக்கதை வசனம் இயக்கம் – கே.எஸ்.கோபாலகிருஷ்ணன்

சென்னையில் வெளியான திரையரங்குகள்
மிட்லண்ட், பிரபாத், சரஸ்வதி, ராம்

நூறு நாட்களும் அதற்கு மேலும் ஓடிய திரையரங்குகள்

சென்னை மிட்லண்ட் – 105 நாட்கள்
சென்னை பிரபாத் 100 நாட்கள்
சென்னை சரஸ்வதி – 100 நாட்கள்
சென்னை ராம் – 100 நாட்கள்
மதுரை சென்ட்ரல் – 108 நாட்கள்
கோவை கர்நாடிக் – 108 நாட்கள்

மற்றும்

சேலம்,
திருச்சி,
நாகர்கோவில்,
குடந்தை,
வேலூர் மற்றும் திண்டுக்கல் ஆகிய ஊர்களில் 50 நாட்களுக்கு மேல் ஓடியது

Russellxor
23rd June 2015, 08:14 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/PhotoArt_06232015200709_zpsm6u9ibyc.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/PhotoArt_06232015200709_zpsm6u9ibyc.jpg.html)

http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/PhotoArt_06232015200858_zpsgsz4hhqp.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/PhotoArt_06232015200858_zpsgsz4hhqp.jpg.html)

http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/PhotoArt_06232015200948_zps4kqoczxu.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/PhotoArt_06232015200948_zps4kqoczxu.jpg.html)

Russellbpw
23rd June 2015, 08:43 PM
24 ஆம் தேதி கவிஞர் கண்ணதாசன் பிறந்தநாள்

நடிகர் திலகத்தின் மீது அதீத அன்பு கொண்டவர், காலப்போக்கில் அரசியல் இருவரையும் சிறிது காலம் சக நண்பர்களின் சூழ்ச்சியால் பிரித்துவைக்க...நடிகர் திலகம் கட்டபொம்மன் திரைப்படம் தயாரிக்க அதில் திரு எஸ் எஸ் ராஜேந்திரன் அவர்களை வெள்ளையத்தேவன் பாத்திரத்தில் நடிக்க அழைக்க, எதற்கு இனியும் கணேசனுடன் சேர்ந்து நடிக்கவேண்டும், என்ற துர்போதனையில் அவரையும் தனது சொந்த படமான சிவகங்கை சீமையில் நடிக்கவைத்தார். வெள்ளையத்தேவன் கதாபாத்திரம் திரு ஜெமினி அவர்கள் நடிக்க மேலும் சிறப்பு பெற்றது கட்டபொம்மன்.

திரை விற்பன்னர்கள் திரு மெய்யப்ப செட்டியார் முதல் பலர் கட்டபொம்மன் திரைப்படம் வெளிவந்து மூன்று மாதங்கள் கழித்து சிவகங்கை சீமையை வெளியிட்டால் பெரிய வெற்றி பெரும் என்று அடித்து கூற....சுயநலம் கொண்ட, நடிகர் திலகம் மீது வெறுப்பு கொண்ட கயவர் கூட்டத்தின் துர்போதனையால் சிவகங்கை சீமை படத்தை கட்டபொம்மன் வந்த சில நாட்களில் வெளியிட்டு தனது கையை வெகுவாக சுட்டுக்கொண்டார்,...

தனது வெளிவராத ஒரு புத்தகத்தில் நடிகர் திலகம் திரைப்படங்கள் மூலம் தனக்கு தொடர்ந்து அதிகமாக பாடெழுதும் வாய்ப்பு வந்ததை பற்றி மறைமுகமாக கோடிட்டு காட்டி இருந்தார் கவிஞர் கண்ணதாசன்.

இவர் கடைசியாக எழுதி வெளிவந்து சுபெர்ஹிட் பாடல் கண்ணே கலைமானே என்ற பாடல்.

திரை உலகிலும் மக்களாலும் இப்படி ஒரு சொல் இப்பொழுதும் நிலவையில் உள்ளது

பாடல் என்றால் அது ....
கண்ணதாசன் எழுதவேண்டும்
விஸ்வநாதன் இசை அமைக்கவேண்டும்
சுந்தரராஜன் பாடவேண்டும்
சிவாஜி கணேசன் நடிக்கவேண்டும் .....!!!!

எத்துனை சத்தியமான வார்த்தைகள் !!

https://www.youtube.com/watch?v=Wt6A8uxdZD0

https://www.youtube.com/watch?v=H7xlhIaJFSQ&spfreload=10


Rks

ifohadroziza
23rd June 2015, 09:15 PM
நம் இதயதெய்வம் நடிகர்திலகத்தின படிககாதமேதை திரைப்படத்தை பற்றி திரு கோபால் அவர்களும் எனது நண்பர் திரு.முரளி அவர்களும் அழகாக மிக நேர்த்தியாக விமர்சித்ததை படிக்கும் வாய்ப்பு கிடைத்ததிற்கு எனது நன்றிகள்.
திரு கோபால் அவர்கள்
ரங்கனை பாண்டுரங்கனுக்கு மேல் என்று எழுதி இருந்தார்..என்னோட கருத்தும் அது தான். நான் அந்த படத்தை பற்றி
எனது நண்பர்களிடமோ அல்லது யாரிடமோ பகிர்ந்து கொள்ளும் போதுநான சொல்லும் வார்த்தைகள் .1.கடவுளே இறங்கிவந்தால் கூட நடிக்க இதுபோல் நடிக்கமுடியாது.2.இந்தபடத்தை முழுவதும் பார்த்துவிட்டு நடிகர்திலகத்தை தவிர வேறு யாருக்கும் இரசிகராக இருப்பது மிக கடினம்.அப்படிஒரு படம்.இந்த மாதிரி ஒரு படத்தை கொடு த ததிற்கு நாம் இதன் மூல கர்த்தர்களுக்கு நன்றி சொல்லிக்கொண்டே இருப்போம்.

Gopal.s
24th June 2015, 04:45 AM
கண்ணதாசனும், எம்.எஸ்.விஸ்வநாதனும் நம் ரத்தத்தில் கலந்த இரு மேதைகள். இருவரும் ஒரே நாளில் பிறந்தநாள் காணும் பிரித்தறிய முடியா உயிர் நண்பர்கள். (ஜூன் 24) கண்ணதாசன் ஒரு வருடம் மூத்தவர்.(1927) .இருவருமே நடிகர்திலகத்தை விட மூத்தவர்கள்.
நடிகர்திலகம்- விஸ்வநாதன்-ராமமூர்த்தி-கண்ணதாசன் இணைவு பாகபிரிவினை (1959)முதல் சாந்தி(1965) வரை தொடர்ந்தது. நடிகர்திலகம்-விஸ்வநாதன்-கண்ணதாசன் இணையோ ,கண்ணதாசன் இறப்பு வரை தொடர்ந்தது. பல உயரிய தமிழ் பாடல்கள் இந்த இணைவுக்கு சொந்தமானவை.

கண்ணதாசன் சுப்ரமணிய பாரதிக்கு அடுத்த நிலையில் கொண்டாட படும் உன்னத கவிஞன். என்னதான் வசனம், தனி பாடல்கள்,நாவல்கள்,சுயசரிதை,தத்துவம்,மதநூல்கள் என்று எழுதியிருந்தாலும், மறக்க முடியாத சாதனை அவர் திரைப்பாடல்களே.

அவர் திரை பாடல்கள் சாதித்தவை ,பலருக்கு ஊக்கம் கொடுத்து கவிஞனாக தூண்டியவை,.

1)இலக்கியத்துக்கும் ,திரை பாடல்களுக்கும் கலப்பு மணம் செய்வித்தவர். திருக்குறள்(உன்னை நான் பார்க்கும் போது ),அக-புற பாடல்கள்(நேற்று வரை நீ யாரோ), கம்ப ராமாயணம் (பால் வண்ணம் ),திருப்பாவை(மலர்ந்தும் மலராத,மத்தள மேளம் முரசொலிக்க ),காளமேக புலவர் சிலேடைகள் (இலந்த பயம்)பட்டினத்தார் (வீடு வரை உறவு), பிற்கால கவிஞர்கள் (அத்தான் என்னத்தான் ) என்று எத்தனை எத்தனை.என்று ஆய்வு செய்தால் வாழ்நாள் காணாது.

2)நடைமுறையை இணைத்தவர்.அரசியலை அழகாக படத்துடன் ,கதையமைப்பு கோணாது இணைத்தவர்.(ஓஹோ ஓஹோ மனிதர்களே,அண்ணன் காட்டிய வழியம்மா,யாரை எங்கே வைப்பது என்றே,என்னதான் நடக்கும்,ஒளிஞ்சு மறைஞ்சு ஆட்டம் போட்டு உத்தமன் போல் பேசு,சிவகாமி மகனிடம்,நலந்தானா யாரை நம்பி நான் பொறந்தேன்)

3)சொந்த வாழ்விலிருந்து கவிதைக்கு பொருள் சேர்த்து உரமாக்கியவர்.அவரின் வாழ்க்கையில் அனுபவங்களுக்கோ பஞ்சமில்லை. வாழ்க்கையை வெற்றி-தோல்வி,இன்ப-துன்பம்,பற்றி கவலையின்றி வாழ்ந்து பார்த்தவர். ஒளிவு மறைவில்லா திறந்த புத்தகம்.(அண்ணன் என்னடா தம்பி என்னடா, நாளை முதல் குடிக்க மாட்டேன்,இரண்டு மனம் வேண்டும்,ஆட்டுவித்தால்,மனிதன் நினைப்பதுண்டு ,)

4)இவ்வளவையும் மீறி இசையின் தேவையறிந்து,குறிப்பறிந்து ,வார்த்தைக்கு அழகியல் மெருகு சேர்த்து அர்த்தமும் கொடுத்து இசையை வள (வசமும்)படுத்திய கவிஞர்.

5)ஒரு படத்தின் ஜீவன் உணர்ந்து பாடல்கள் தருவதில் மிஞ்ச முடியாதவர். ஒரே வரியில் கதையை முடிப்பார்.(,கட்டிலுக்கு கடன் கொடுத்தாள் தொட்டிலுக்கு விலை கொடுத்தாள் ,சிந்தையிலே நான் வளர்த்த கன்று சேர்ந்ததடி உன் வயிற்றில் இன்று )

கண்ணதாசா, நீ எங்கள் ஞான தந்தைகளில் ஒருவன்.

RAGHAVENDRA
24th June 2015, 07:19 AM
http://msvtimes.com/images/rare/msv7.JPG

மெல்லிசை மன்னர்கள் இசையமைப்பாளர்களாக பணிபுரியத் தொடங்கியதும்

நடிகர் திலகத்தின் திரைப்படம் - பணம்

மெல்லிசை மன்னரும் கவியரசரும் முதன் முதலில் இசையமைப்பாளர் பாடலாசிரியராக இணைந்து பணிபுரியத் தொடங்கியதும்

நடிகர் திலகத்தின் திரைப்படம் - பணம்.

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/Panam1.jpg

ஆம் .. பணம் இவர்களை இறுதி வரை பிரிக்க வில்லை..

ஆனால்.. அந்த பணம் எத்தனை எத்தனை தத்துவங்களை இவர்கள் மூலம் கொண்டு வந்தது..

அண்ணன் என்னடா தம்பி என்னடா..

பணம் என்னடா பணம் என்னடா..

என ஏராளமான வாழ்க்கைத் தத்துவங்களை நமக்களித்த இவர்களின் பிறந்த நாள்.. தமிழ் சினிமாவுக்கு சிறந்த நாள்..

முகநூலில் ஒரு நண்பர் கூறியது போல்..

இந்நாளை மெல்லிசை நாளாக அழைப்போமே..

இவர்களை இணைத்த பணம் திரைப்படத்தின் பாடல் வரிகளைப் பாருங்கள்..

படத்தின் பெயர் பணமாக இருந்தாலும் இவர்கள் நாடியது ஏழையின் கோவிலை அன்றோ..

ஜி.கே.வெங்கடேஷைத் தமிழ்ப்பட உலகில் பாடகராக அறிமுகப்படுத்தியதும் இந்தப் பணம் தானன்றோ..

http://www.inbaminge.com/t/p/Panam/

KCSHEKAR
24th June 2015, 11:30 AM
இன்று கவியரசர் கண்ணதாசன் அவர்களின் 89-வது பிறந்தநாள்
http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/Kannadasan%20-%20Nadigarthilagam/KannadasanNTPhoto004_zps650fe1e4.jpg (http://s1234.photobucket.com/user/sivajiperavai/media/Kannadasan%20-%20Nadigarthilagam/KannadasanNTPhoto004_zps650fe1e4.jpg.html)
http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/Kannadasan%20-%20Nadigarthilagam/KannadasanNTPg1_zps2f8ed75c.jpg (http://s1234.photobucket.com/user/sivajiperavai/media/Kannadasan%20-%20Nadigarthilagam/KannadasanNTPg1_zps2f8ed75c.jpg.html)
http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/Kannadasan%20-%20Nadigarthilagam/KannadasanNTPg2003_zpsb10e6419.jpg (http://s1234.photobucket.com/user/sivajiperavai/media/Kannadasan%20-%20Nadigarthilagam/KannadasanNTPg2003_zpsb10e6419.jpg.html)

Russellxor
24th June 2015, 05:10 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/cinema%20%20express/FB_IMG_1435145640464_zpsqpbbbfvr.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/cinema%20%20express/FB_IMG_1435145640464_zpsqpbbbfvr.jpg.html)

Russellxor
24th June 2015, 05:11 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/cinema%20%20express/FB_IMG_1435145636729_zpsoykm8hkg.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/cinema%20%20express/FB_IMG_1435145636729_zpsoykm8hkg.jpg.html)

Russellxor
24th June 2015, 05:12 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/cinema%20%20express/FB_IMG_1435145632789_zpsqi1bgfhr.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/cinema%20%20express/FB_IMG_1435145632789_zpsqi1bgfhr.jpg.html)

Russellbpw
24th June 2015, 05:32 PM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/DSC_0165_zpscbcbhm1g.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/DSC_0165_zpscbcbhm1g.jpg.html)


QUESTION and ANSWER THAT CAME IN DINAKARAN - COURTESY - Mr. ANNADURAI - TRICHY DISTRICT ALL INDIA SIVAJI FANS ASSOCIATION

Russellbpw
24th June 2015, 05:33 PM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/TRC_2015-06-12_maip4_16.jpg_zpsvyw3unv1.png (http://s501.photobucket.com/user/subbuchennai/media/TRC_2015-06-12_maip4_16.jpg_zpsvyw3unv1.png.html)

DECCAN CHRONICLE writes .....!

Russellxor
24th June 2015, 05:34 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/cinema%20%20express/FB_IMG_1435145629579_zpsv74lkvqq.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/cinema%20%20express/FB_IMG_1435145629579_zpsv74lkvqq.jpg.html)

Russellxor
24th June 2015, 05:35 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/cinema%20%20express/FB_IMG_1435145621701_zpsk4i1yz60.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/cinema%20%20express/FB_IMG_1435145621701_zpsk4i1yz60.jpg.html)

Russellxor
24th June 2015, 08:32 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/IMG_20150624_185041_zpsjjy2drss.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/IMG_20150624_185041_zpsjjy2drss.jpg.html)

Russellxor
24th June 2015, 11:01 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/20150625104626_zpscgwmnmlq.gif (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/20150625104626_zpscgwmnmlq.gif.html)

Russellxor
24th June 2015, 11:04 PM
. http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/20150625104834_zps0b0bksek.gif (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/20150625104834_zps0b0bksek.gif.html)

eehaiupehazij
25th June 2015, 02:44 AM
காந்தப் புயல் கரை ஒதுக்கிய கவர்ச்சிக் குண்டூ(ஸ்)சிகள் !
புயல் 1 பராசக்தி (1952)

குண்டூசி 1 அந்தக் கால கட்டத்தில் கவர்ச்சி நடனப் புயல் குமாரி கமலா


நடிகர்திலகம் ஒரு புயலாக நுழைந்து தமிழ்த் திரையுலகையே தனது அதிரடி நடிப்பால் புரட்டிப் போட்டார் பராசக்தி மூலமாக! அன்றிலிருந்து இன்றுவரை என்றுமே வடக்கு நோக்கி எந்திரமான பூமிப்பந்தின் வடதிசை காட்டும் காந்த முள் (MAGNETIC NEEDLE of the Compass) நடிகர்திலகம் மட்டுமே! பூமியில் அனைத்து கோணங்களும் வடதிசையை ஆதாரமாகக் கொண்டே கணக்கிடப் படுகின்றன அவ்வாறே உலகின் எந்தவொரு நடிகனின் நடிப்புக் கோணத்துக்கும் அடிப்படை அளவு கோல் நடிகர்திலகத்தின் நடிப்பம்சங்களே !!!ஆனால்.....அந்தப் படத்திலேயே அவரது கதாபாத்திரத்தை துளியும் ஆபாசமற்ற நடன அங்க அசைவுகள் மூலம் கவர்ச்சிக் குண்டூசியாகத் துளைத்தார் குமாரி கமலா!! காந்தப்புயல் குண்டூசியை நோக்கி நகர்ந்த அதிசயம் ஒரு கமர்ஷியல் உள்ளடக்கமே !!

நாம் ரசிக்கும் நடிப்புக் கோமான் குமாரி கமலாவின் கட்டழகு நடனத்தை ரசிக்கும் சீமானாக !::shhh:

https://www.youtube.com/watch?v=3w4MAmf7Pog

Electro-magnetic Cyclone NT comes back and rocks again!!

ஒரு புயல் கரையைக் கடந்தாலும் அடுத்த புயல் என்பது இயற்கையில் சாத்தியமான நிகழ்வே !!
பராசக்தி காந்தப் புயலாக கவர்ச்சிக் குண்டூசி குமாரி கமலாவை ஈர்த்து கரை ஒதுக்கியது.
உத்தம புத்திரனோ அடுத்த மின்காந்தப் புயலாக உருமாறி ஹெலன் என்ற நடன (க)இரும்பை ஈர்த்தார் 1958ல்

eehaiupehazij
25th June 2015, 08:39 AM
காந்தப் புயல் கரை ஒதுக்கிய கவர்ச்சிக் குண்டூ(ஸ்)சிகள் !
புயல் 2 உத்தமபுத்திரன் (1958)

குண்டூசி 2 கவர்ச்சித் தாரகை ஹெலன்


உத்தமபுத்திரன் திரைப்படம் பராசக்தியின் காந்தப் புயலை மின்காந்தப் புயலாக பரிணாம மாற்றம் செய்தது விக்கிரமன் பாத்திரப் படைப்பின் வாயிலாக!
மக்களை மறந்து தன்னிலை இழந்து சூழ்ச்சிக்கு அடிமையாகி சூழ்நிலைக் கைதியாக மது மயக்கத்தில் கவர்ச்சி மங்கையருடன் நடிகர்திலகத்தின் ஸ்டைலான தள்ளாட்டம் தமிழ் திரையுலகில் மறக்க முடியாத ஒரு காட்சியமைப்பே ! இந்த மின்காந்தத்தின் ஸ்டைலே பின்னாளில் வேறு காந்தங்கள் ஸ்டைல் காட்டிட அடிப்படைப் பாடமாக அமைந்தது திரை வரலாறு !!
யாரடி நீ மோகினி வாயிலாக கவர்ச்சித் தாரகை ஹெலன் ஒரு குண்டூசியாக நமது ஸ்டைல் காந்தத்தை நோக்கி இழுக்கப் பட்டார் ..

https://www.youtube.com/watch?v=0RLXatsOS5I

Russellxor
25th June 2015, 10:58 AM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/cinema%20%20express/FB_IMG_1435145617962_zpsh7agm5qw.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/cinema%20%20express/FB_IMG_1435145617962_zpsh7agm5qw.jpg.html)

Russellxor
25th June 2015, 11:02 AM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/cinema%20%20express/FB_IMG_1435145621701_zpsk4i1yz60.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/cinema%20%20express/FB_IMG_1435145621701_zpsk4i1yz60.jpg.html)

Murali Srinivas
25th June 2015, 12:47 PM
படிக்காத மேதை - 55 [தொடர்ச்சி]

இந்தப் படத்தைப் பற்றி இனியும் என்ன சொல்வது? நான் ஒரே முறை படத்தின் சிறப்புகளை எழுதினேன். பிரபுராம் அழகாக சில விஷயங்களை தொடுத்திருந்தார். ரவி ஸ்ரீரங்கத்து ரங்கனை கொஞ்சும் பாணியில் பங்களிப்பு செய்திருந்தார். கோபாலோ கேட்கவே வேண்டாம். அப்படி இருக்க இனியும் எழுத விஷயம் இருக்கிறதா என்று கேட்டால் நிறைய இருக்கிறது என்பதே பதிலாக வருகிறது. அதிலும் குறிப்பாக ஞாயிறு மாலை ரசிக நெஞ்சங்களோடு பார்த்த பிறகு.

எனக்கு எப்போதும் நமது ரசிகர்களைப் பற்றி ஒரு பெருமிதம் உண்டு. நடிகர் திலகம் எத்தனை நுணுக்கங்களை தன் நடிப்பில் கொண்டு வந்தாலும் அதை மிக சரியாக இனங்கண்டு தங்கள் ரசிப்புத்தன்மையை வெளிப்படுத்துவார்கள். அதில் உயர்நிலை ரசிகன், கடைநிலை ரசிகன் என்ற பாகுபாடே கிடையாது.

அதில் மற்றொரு வியப்புக்குரிய விஷயம் சோகத்தை கூட எந்தளவிற்கு இவர்கள் ரசிக்கிறார்கள் என நினைக்கும்போது இன்னும் அந்த பெருமிதம் கூடும். இப்படிபட்ட ரசிப்புத்தன்மையை அந்த கடைகோடி ரசிகனுக்கும் சென்று சேர்த்திருக்கிறார் என நினைக்கும்போது நடிகர் திலகம் மனதுக்கு இன்னும் பிரியப்பட்டவராகிறார்.

படிக்காத மேதை படமெல்லாம் எப்படி என்றால் திருஷ்டி பூசணிக்காய் முகத்தை மறைக்க எடுத்து வரும் நடிகர் திலகம் அறிமுகமாகும் முதல் காட்சியில் ஆரம்பித்து இறுதியில் ஒரே ஒரு ஊரில் பாடல் ஒலிக்க [படத்தின் நடுவில் இடம் பெறுவதிலிருந்து காட்சியமைப்பு மாறுபட்டு] a film from Bala movies Krishnaswamy என்று படம் முடிவைடையும்வரை ஒவ்வொரு காட்சியும் ரசித்து சுவைத்து அனுபவிக்கப்படும் படம். அன்றும் அப்படிதான் நடந்தது. முழு காட்சிகளையும் எழுத முடியாது என்பதனால் முக்கியமான காட்சிகள் சிலவற்றை மட்டும் சொல்ல விரும்புகிறேன். குறிப்பாக இரண்டு மூன்று காட்சிகள்.

ரங்காராவ் நடிகர் திலகத்தை வீட்டை விட்டு வெளியே போக சொல்லும் காட்சி. மாமா தன்னிடம் சீரியசாக பேசுகிறார் என்பதே புரியாமல் பதில் சொல்லுவது, அவரிடம் தன நிலைமையை எடுத்துச் சொல்வது, அதனால் மிகுந்த கோவத்துடன் ரங்காராவ் அவரிடம் கேள்விகள் கேட்க அதற்கு ஒரே வார்த்தையில் பதில் சொல்வது, [உன் உடம்பிலே நல்ல ரத்தம் ஓடலே? ஓடுது], இறுதியாக வேலைக்கு போய் உன் மனைவியை வச்சு காப்பாத்த முடியாது என்று கேட்க முடியாது என்று அதே தொனியில் பதில் சொல்லிவிட்டு முடியாது மாமா என்று என்று பாவமாக அப்பாவியாக பதில் சொல்லும்போது அரங்கமே ஆர்ப்பரித்தது. தான் படிக்காதவன் வெளியில் போனால் வேலை கிடைக்குமா பணத்திற்கு எங்கே போவது? மனைவியை எப்படி காப்பாற்றுவது? இதையெல்லாம் புரிந்துக் கொள்ளாமல் மாமா பேசுகிறாரே என்ற அந்த தவிப்பை கவலையை அந்த ரங்கன் பாத்திரத்தின் மனநிலை வழியாக நடிகர் திலகம் வெளிப்படுத்தும் அழகு அற்புதம் என்றால் அதை புரிந்து அதற்கான அங்கீகாரத்தை தன கைதட்டல் மூலம் வெளிப்படுத்திய அந்த ரசிகர்களுக்கும் ஆஹா!

அதன் தொடர்ச்சியாக கண்ணாம்பாவிடம் போய் புலம்பும் காட்சியும் ஓஹோ ரகம். "ஓஹோ உனக்கு ஒன்னும் தெரியாத மாதிரி நடிக்கிறியா? வெளியே போனா எனக்கு என்ன வேலை கிடைக்கும்? உன் பையன்களை மாதிரி என்னை BA, MA படிக்க வச்சியா? முட்டா பயலாத்தானே வளர்த்தே! இப்போ தீடீர்னு வெளியே போன்னு சொன்னா எப்படி?" என்று தன் மனதில் இருப்பதையெல்லாம் கொட்டுவாரே அதுவும் பிரமாதமாக வரவேற்கப்பட்டது. . .

சாமான்களையெல்லாம் கட்டிக் கொண்டு புறப்படும்போது தான் பயன்படுத்திய தபலாக்களை எடுத்துக் கொண்டு போக முற்பட அதை தடுத்து அசோகன், நடிகர் திலகம் கையிலிருந்து பிடுங்க முற்பட அப்போது அங்கே வரும் கண்ணாம்பாவிடம் புகார் கூறும் நடிகர் திலகத்திடம் தபலாவை திருப்பி கொடுக்க சொல்லிவிட்டு " இந்த தபலாவுக்கு போய் சண்டை போடறியே விலை மதிப்பில்லாத உன் அன்பையும் பாசத்தையும் இந்த வீட்டை விட்டு எடுத்துட்டு போறியே அதுக்கு நாங்க யார்கிட்டடா கேட்கிறது?" என்ற வசனத்திற்கும் செம அப்ளாஸ்.

வீட்டை விட்டு வெளியே குதிரை வண்டியில் வரும் நடிகர் திலகத்தையும் சௌகாரையும் நிறுத்தும் ரங்காராவை பார்த்தவுடன் வந்டிளிருந்து இறங்கி முதுகு காட்டி நிற்கும் நடிகர் திலகம், சௌகாரிடம் பேசிவிட்டு தன்னுடன் பேச வரும் ரங்காராவை திரும்பி பார்க்காமல் முதுகு காட்டியே நின்று விட்டு ஒரு கட்டத்தில் தாங்க முடியாமல் அப்படியே உடைந்து போய் காலை பிடித்துக் கொண்டு அழுவாரே, அதுவும் அள்ளியது அப்ளாஸ்.

எல்லாவற்றிக்கும் சிகரம் வைத்தது ரங்காராவ் மறைந்த பிறகு அது தெரியாமல் நடிகர் திலகம் வீட்டிற்கு வரும் காட்சி. ஞாயிறன்று படம் பார்த்த பிறகு மறுநாள் மாலை நண்பர் சாரதியோடு பேசினேன். அவரை முதல் நாள் பார்க்கவில்லை என்பதால் படத்திற்கு வந்திருந்தீர்களா? என்று கேட்டேன். வந்தேன். லேட்டாக வந்தேன். மேலே குறிப்பிட்ட காட்சியை பார்க்க வேண்டும் என்று காத்திருந்து அது முடிந்தவுடன் கிளம்பி போனேன். வேலையிருந்தது. இருந்தாலும் இதை மிஸ் பண்ணக்கூடாது என்பதற்காக வந்தேன்.என்று சொன்னவர் அந்த காட்சியை எடுத்துச் சொல்லி அதை மீண்டும் என் மனக்கண் முன் ஓட விட்டார். அவர் அதை பற்றி பேசும்போது சட்டென்று வேறு ஒரு விஷயம் நினைவிற்கு வந்தது.

அலுவலகத்தில் சில நாட்களுக்கு முன் ஒரு கருத்தரங்கம் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு உரையாற்றிய உயர் அதிகாரி ஒருவர் ஒரு விஷயத்தை குறிப்பிட்டார். அவர் சொன்னது என்னவென்றால் மனிதனின் மனநிலை தனக்கு பிடிக்காத தான் விரும்பாத ஒன்றை ஒப்புக் கொள்ள மறுக்கிறது. அந்த உண்மையை எதிர்கிறது. பின் வேறு வழியில்லாமல் ஏற்றுக் கொள்கிறது. இது மனோததுவத்தின் அடிப்படையில் கண்டறிந்த உண்மை என்றார். ஆங்கிலத்தில் இதை Deny, Resist, Accept mode என்று கூறுவார்கள் என்று சொன்னார். இதை உங்களுக்கோ மற்றவர்களுக்கோ நடந்து பார்த்திருக்கிறீர்களா என்று கேட்டார். அந்த நேரத்தில் எதுவும் தோன்றவில்லை. படிக்காத மேதை படம் ஞாயிறன்று பார்த்த பிறகு, மறுநாள் நண்பர் சாரதியோடு பேசியபோது அலுவலக அதிகாரி சொன்னதை 55 வருடங்களுக்கு முன்பே நடிகர் திலகம் காட்சி வடிவில் வெளிப்படுத்தியிருக்கிறார் என்று நினைக்கும்போதே பிரமிப்பாக இருந்தது.

வீட்டிற்கு வருகிறார். ரங்காராவின் படம் மாலையிட்டு வைக்கப்பட்டிருக்கிறது. அந்நேரம் அவர் முகபாவம் காண்பிக்கப்படுகிறது. இல்லை இது உண்மையில்லை என்ற denial முகபாவம் காண்பிக்கிறார். முகம் மாறுகிறது உண்மைதானா என்று ஒரு சிந்தை தெரிகிறது. அப்படி கிடையாது என்ற resistance நிலை. வலது பக்கம் திரும்புகிறார். அங்கே பொட்டிழந்து அமர்ந்திருக்கும் கண்ணாம்பாவை பார்க்கிறார். இப்போது உண்மை பொட்டில் அறைகிறது. Acceptance mode-ற்கு வருகிறார். அந்த உண்மையை தாங்க முடியாமல் அப்படியே நெடுஞ்சாண்கிடையாய் விழுந்து கதறுவார். அரங்கமே அதிர்ந்து போனது. இங்கே என்ன அற்புதம் என்றால் இந்த மறுப்பு, எதிர்ப்பு, ஒப்புதல் என்ற மூன்று நிலையையும் நிமிட நேரத்தில் முகத்தில் கொண்டு வருவார். அதை பார்வையாளனுக்கும் கடத்துவார்.

நடிகர் திலகம் பங்கு பெறும் பாடல் காட்சிகளும் அன்று மிகுந்த வரவேற்பை பெற்றது. சீவி முடித்து சிங்காரித்து பாடல் காட்சி. திருமணம் நிச்சயமாகியிருக்கும் ஈ.வி.சரோஜாவை கிண்டல் செய்து பாடும் பாடல். நடிகர் திலகத்தைப் பொறுத்தவரை கிட்டத்தட்ட 70-களின் மத்தி வரை கேரக்டர்ஐ மீறி நடிகர் திலகம் தன்னை வெளிப்படுத்திக் கொள்ள மாட்டார். படிக்காத மேதையிலும் அப்படியே. படிக்காத முரட்டுதனமான ரங்கன் எப்படி நடந்துக் கொள்வானோ அப்படிதான் எல்லா காட்சிகளிலும் வருவார், ரங்கன் போன்ற குணாதிசயம் கொண்ட ஒருவன் கிண்டல் செய்து பாடினால் எப்படி இருக்குமோ அப்படியே செய்வார்.

ஒரே ஒரு ஊரிலே பாடல் பற்றி கேட்கவே வேண்டாம். ஆனால் இதில் குறிப்பிடப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால் பாடல் ஆரம்பிக்கும்போது அவர் பாடும் மூடிலேயே இருக்க மாட்டார். குழந்தைகளை விளையாடுவதற்கு கூட்டிக் கொண்டு போவார். சௌகார் பாட ஆரம்பிக்கும்போது குழந்தை டெய்ஸி ராணியை தோளில் தூக்கி வைத்துக் கொண்டிருப்பார். சௌகார் இரண்டு வரி பாடியதும் உடனே அவருக்கும் பாட தோன்ற இடது கையை மேலே உயர்த்தி சௌகாரை நிறுத்த சொல்லிவிட்டு ஒரேயொரு ராணி பெற்றாள் ஒன்பது பிள்ளை.என்று பாட ஆரம்பிப்பார். செயற்கையான பாடல் காட்சியில் கூட எப்படி லாஜிக்கான gestures செய்திருக்கிறார் என்று யோசிக்கும்போதுதான் அவரின் மேதமை புரிகிறது.

பிள்ளை பெற்ற ராஜா ஒரு நாயை வளர்த்தார் என பாடும்போது முகத்தில் ஒரு பாவம். அதே போல் சொந்தமென்று வந்ததெல்லாம் சொந்தமுமில்லை என்ற வரியில் சோபாவில் உட்கார்ந்திருப்பார் அவர் முகத்தில் ஒரு சாந்தம் தென்படும். அதே சரணத்தில் இறுதி வரி பாடும்போது [நாய்கள் மேலடா] முகம் மாறி கோவம் கொப்புளிக்கும். ரசிகர்களின் ஆர்ப்பரிப்பு ஆணை உடைந்து பாய்வது போல் பாய்ந்தது.

இறுதியாக எங்கிருந்தோ வந்தான் பாடல். கிருஷ்ண பரமாத்மாவாக நடிகர் திலகம். 5,6 ஷாட்கள்தான். அதற்குள்ளாகவே கண்ணனின் குறும்புத்தனம், குழந்தைகளோடு விளையாட்டு, வேணுகானமிசைத்தல், ஆலோசனை கூறுதல், பகவத்கீதையை உபதேசித்தல், இறுதியில் விஸ்வரூபம் காட்சி அருளால் என்று அதகளம் பண்ணியிருப்பார்

அந்த பாடலின் பல்லவியில் வரும் வரிகள்தான் நடிகர் திலகத்திற்கு என்னமாய் பொருந்துகிறது!

இங்கிவனை யாம் பெறவே என்ன தவம் செய்துவிட்டோம்! .

உண்மைதானே! அந்த ஒப்புயர்வற்ற கலைஞனை கலைத்தாயின் தவப்புதல்வனை பெற நாம் தவம்தான் செய்திருக்க வேண்டும்!

அன்புடன்

சின்ன பதிவு என்று சொல்லி (வழக்கம் போல்) பெரிய பதிவாகி விட்டது. படித்த அனைவருக்கும் நன்றி! .

Russellbpw
25th June 2015, 04:31 PM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/Capture_zpsp8y4dsho.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/Capture_zpsp8y4dsho.jpg.html)

Russellbpw
25th June 2015, 04:56 PM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/Capture_zpsjj1vjmdf.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/Capture_zpsjj1vjmdf.jpg.html)


https://www.youtube.com/watch?v=a3IQKvcZEPQ

Russellbpw
25th June 2015, 04:58 PM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/Capture_zpsjj1vjmdf.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/Capture_zpsjj1vjmdf.jpg.html)

https://www.youtube.com/watch?v=J8dpq9d7k3M

adiram
25th June 2015, 05:54 PM
டியர் முரளி சார்,

படிக்காத மேதை படத்தின் சிறப்புக் காட்சியினைப் பற்றிய உங்கள் தொகுப்பு நேரில் பார்க்க முடியாத குறையை போக்கும் வண்ணம் சிறப்பாக இருந்தது.

இரண்டாவது பாகம் படத்தின் சிறப்பான கட்டங்களைப் பற்றிய ஆய்வாகவும், அதனை ரசிகர்கள் எப்படி ரசித்தார்கள் என்பதையும் விளக்குவதாக அமைந்துள்ளது.

சந்திரசேகர் அவர்கள் சொன்னதுபோல பல நல்ல படங்களின் நெகடிவ்கள் அழிந்துவிட்டன என்பதையும், இருக்கின்ற சிலவும் சிதைந்த நிலையில் உள்ளன என்பதும் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. சிவகாமியின் செல்வன் நெகட்டிவ் ரோல்கள் அதன் தயாரிப்பாளர்கள் ஜெயந்தி பிலிம்ஸ் வசமே இல்லைஎன்று அவர்களே சொன்னதாக முன்னொருமுறை சொல்லியிருந்தீர்கள். 70-களில் வந்த படங்களுக்கே இந்த கதியென்றால், 50 மற்றும் 60 களில் வந்த படங்களின் கதி?.

நிச்சயதாம்பூலம் படத்தின் நெகடிவோ அல்லது பாஸிட்டிவ் பிரின்ட்களோ யாரிடமும் இல்லைஎன்கிறார்கள். இது உண்மையா என்று தெரியவில்லை.

இருக்கின்ற சிலவற்றையும் காப்பாற்றும் வண்ணம் அவைகளை பத்திரப்படுத்த வேண்டும். இதற்கு சிவாஜி மன்றத்தலைவர் ராம்குமார் அவர்கள் சம்மந்தப் பட்டவர்களை அணுகி ஆவண செய்யவேண்டும.

Russellbpw
25th June 2015, 07:55 PM
நேற்று முரசு தொலைகாட்சியில் நடிகர் திலகம் அவர்களின் உயர்ந்த நடிப்பில் வெளிவந்து நல்லதொரு வெற்றிகண்ட "வா கண்ணா வா" ஒளிபரப்பப்பட்டது.

சிறந்த கதை, சிறந்த நடிப்பு, சிறந்த பாடல், சிறந்த இயக்கம் - வா கண்ணா வா - பிருந்தாவனம் !

http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/ShantiVKVa02_zpskmnpg6bu.jpg (
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/ShantiVKVa02_zpskmnpg6bu.jpg)

http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/100days_zpsygkknihe.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/100days_zpsygkknihe.jpg.html)

https://www.youtube.com/watch?v=sX5mVzhSv9k

Russellxor
25th June 2015, 08:19 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/cinema%20%20express/FB_IMG_1435145607881_zpstty5oskf.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/cinema%20%20express/FB_IMG_1435145607881_zpstty5oskf.jpg.html)

Russellxor
25th June 2015, 08:20 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/cinema%20%20express/FB_IMG_1435145604810_zpsm6tzc4hx.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/cinema%20%20express/FB_IMG_1435145604810_zpsm6tzc4hx.jpg.html)

Russellxor
25th June 2015, 08:21 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/20150625201533_zpsqquur7s2.gif (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/20150625201533_zpsqquur7s2.gif.html)

Russellisf
25th June 2015, 08:26 PM
முதல் வரிவிலக்கு வ உ சிதம்பரனாரின் வாழ்க்கை வரலாற்றை வைத்து பிஆர் பந்துலு இயக்கிய கப்பலோட்டிய தமிழன்தான் முதல் முதலில் வரிவிலக்கு பெற்ற படம். சிவாஜி கணேசன் வஉசியாகவே வாழ்ந்த இந்தப் படம் 1961-ல் வெளியானது.

வீரபாண்டிய கட்டபொம்மன் எகிப்தின் கெய்ரோ நகரில் நடந்த சர்வதேச திரைப்பட விழாவில் கலந்து கொண்ட வீரபாண்டிய கட்டபொம்மன் நடிப்பு மற்றும் இசைக்காக இரு விருதுகளை வென்றது. அந்த விருதினைப் பெற நடிகர் சிவாஜி கணேசன் கெய்ரோவுக்குச் சென்றார். அவருக்கு எகிப்தின் அதிபர் நாசர் விருது வழங்கி சிறப்பித்தார். ஆண்டு: 1960.




courtesy one india tamil

Russellbpw
25th June 2015, 08:33 PM
COMPILED CHENNAI RELEASE INFORMATION NOTICE - PAMMALAAR & MR. VIJAYAN

http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/ReleaseCenters_zps4f1nq4vw.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/ReleaseCenters_zps4f1nq4vw.jpg.html)

Russellbpw
25th June 2015, 08:38 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/cinema%20%20express/FB_IMG_1435145607881_zpstty5oskf.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/cinema%20%20express/FB_IMG_1435145607881_zpstty5oskf.jpg.html)

திரு மெய்யப்பன் அவர்கள் மற்றும் எம்வீ ராமன் அவர்கள் வேண்டுமென்றே நடிகர் திலகத்தை நொட்டை கூறினர் !

ஆனால் கலைவாணியின் அருள் பெற்ற நடிகர் திலகம் அவற்றை தவிடு பொடியாகி நொட்டை சொன்னவர்களே பிற்காலத்தில் எதற்கு ரிஸ்க் எடுக்கவேண்டும் சிவாஜி அவர்களையே போட்டுவிடுவது நல்லது என்று வீட்டு வாயிலில் வந்தனர் !

அதுதான் இறைவன் அருள் என்பது.

திரை உலகை கணிப்பதில் சிறந்தவர் என்று போற்றப்பட்ட திரு மெய்யப்பன் அவர்களே நம் நடிகர் திலகத்தை பற்றி கணிப்பதில் படு தோல்வி அடைந்தார் என்றால் நமது நடிகர் திலகத்திற்கு கலைவாணியின் அருள் உள்ளது என்பதனை சொல்லவும் வேண்டுமோ ?

ifohadroziza
25th June 2015, 09:38 PM
Today i met mr.sivanath babu, a old sivaji fan.i was very much surprised when i was gone through his note book.he maintained a record of collection of all nt movies released in madurai. For an examble
movie-bagaprivinai
216 days
gross col-336180.54
net- 252301
distri share 131733.58
at chinthamani theatre
and he gave a news that no movie touched 3.00 lakhs collection before 1965.
Like that he maintained the records of all the nt movies.
I have asked the xerox copies .
Hope i will share .

Russellxor
25th June 2015, 10:52 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/20150625224456_zpssu1ea6ze.gif (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/20150625224456_zpssu1ea6ze.gif.html)

Russellxor
25th June 2015, 10:56 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/cinema%20%20express/FB_IMG_1435145601736_zpskpsrnkfo.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/cinema%20%20express/FB_IMG_1435145601736_zpskpsrnkfo.jpg.html)

Russellxor
25th June 2015, 10:57 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/cinema%20%20express/FB_IMG_1435145598389_zpsvknhpfsx.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/cinema%20%20express/FB_IMG_1435145598389_zpsvknhpfsx.jpg.html)

Russellxor
25th June 2015, 10:58 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/cinema%20%20express/FB_IMG_1435145595188_zpsgj3ezszo.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/cinema%20%20express/FB_IMG_1435145595188_zpsgj3ezszo.jpg.html)

Gopal.s
26th June 2015, 09:59 AM
மீள முடியவில்லை. 'மன்னிக்க வேண்டுகிறேன்'. அருமையான பாடல்கள் நிறைந்த படம். எஸ்கேப்.:)

Thanks Vasu.

http://padamhosting.me/out.php/i123783_vlcsnap-2011-11-02-14h34m54s136.pnghttp://padamhosting.me/out.php/i123784_vlcsnap-2011-11-02-14h37m34s195.pnghttp://padamhosting.me/out.php/i123782_vlcsnap-2011-11-02-14h35m34s24.png
http://padamhosting.me/out.php/i123781_vlcsnap-2011-11-02-14h34m33s178.pnghttp://padamhosting.me/out.php/i123780_vlcsnap-2011-11-02-14h33m20s214.pnghttp://padamhosting.me/out.php/i123779_vlcsnap-2011-11-02-14h35m22s157.png
http://padamhosting.me/out.php/i123778_vlcsnap-2011-11-02-14h34m12s231.pnghttp://padamhosting.me/out.php/i123777_vlcsnap-2011-11-02-14h31m53s120.png[IMG]http://padamhosting.me/out.php/i123785_vlcsnap-2011-11-02-14h33m37s136.png[/IMG

Gopal.s
26th June 2015, 10:03 AM
Thanks Vasu.

http://thiruttudvd.net/wp-content/uploads/2014/07/IruMalargal00004.jpg[/IMG]http://thiruttudvd.net/wp-content/uploads/2014/07/IruMalargal00005.jpg
http://thiruttudvd.net/wp-content/uploads/2014/07/IruMalargal00003.jpghttp://thiruttudvd.net/wp-content/uploads/2014/02/IruMalargal00001.jpg[/

Russellxor
26th June 2015, 02:14 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/20150626141212_zpssywllsyl.gif (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/20150626141212_zpssywllsyl.gif.html)

Russellxor
26th June 2015, 02:19 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/1435306928141_zps9dpmneyf.png (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/1435306928141_zps9dpmneyf.png.html)

Russellxor
26th June 2015, 02:20 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/1435306751691_zps59p1mhvh.png (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/1435306751691_zps59p1mhvh.png.html)

Russellxor
26th June 2015, 02:23 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/cinema%20%20express/FB_IMG_1435145591655_zpsxpws7cjj.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/cinema%20%20express/FB_IMG_1435145591655_zpsxpws7cjj.jpg.html)

Russellxor
26th June 2015, 02:24 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/cinema%20%20express/FB_IMG_1435145587976_zpsd8npmfbg.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/cinema%20%20express/FB_IMG_1435145587976_zpsd8npmfbg.jpg.html)

Russellxor
26th June 2015, 02:25 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/cinema%20%20express/FB_IMG_1435145584112_zpsebpfgyvk.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/cinema%20%20express/FB_IMG_1435145584112_zpsebpfgyvk.jpg.html)

Russellxor
26th June 2015, 02:26 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/cinema%20%20express/FB_IMG_1435145578946_zps1oh19syt.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/cinema%20%20express/FB_IMG_1435145578946_zps1oh19syt.jpg.html)

Russellxor
26th June 2015, 02:26 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/cinema%20%20express/FB_IMG_1435145575365_zpsq7r1qsft.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/cinema%20%20express/FB_IMG_1435145575365_zpsq7r1qsft.jpg.html)

Russellxor
26th June 2015, 04:30 PM
இன்றைய இந்து நாளிதழ்

http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/FB_IMG_1435316271556_zps3rh1p5fm.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/FB_IMG_1435316271556_zps3rh1p5fm.jpg.html)

http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/FB_IMG_1435316264609_zpsyumhjimt.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/FB_IMG_1435316264609_zpsyumhjimt.jpg.html)

Russellxor
26th June 2015, 07:32 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/20150626191358_zpswxxdtks2.gif (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/20150626191358_zpswxxdtks2.gif.html)

RAGHAVENDRA
26th June 2015, 10:18 PM
http://media.dinamani.com/2015/03/06/Din-logo-main.png/article2700950.ece/binary/original/Din-logo-main.png

இந்த நாளில் அன்று (19.06.1960) 1959-ம் ஆண்டின் சிறந்த நடிகர் சிவாஜி கணேசன்; சிறந்த நடிகை பத்மினி; சிறந்த படம் கல்யாணப் பரிசு

http://media.dinamani.com/2015/03/27/padmini-3.jpg/article2733346.ece/binary/w460/padmini-3.jpg

1959-ம் ஆண்டில் திரையிடப்பட்ட பல தென்னிந்திய மொழி சினிமாப் படங்களில் சிறந்த படங்கள், நடிகர்கள், நடிகைகள், டைரக்டர்கள் ஆகியோருக்கு சென்னை கவர்னர் ஸ்ரீ விஷ்ணுராம் பரிசுகள் வழங்கினார்.

சினிமா ரசிகர்கள் சங்கம் சார்பில் நடத்தப்பட்ட இந்த பரிசளிப்பு விழாவுக்கு திரையுலகப் பிரமுகர்களும், ஏராளமான ரசிகர்களும் வந்திருந்தனர்.

சிறந்த படமாக வீனஸ் பிக்சர்ஸின் கல்யாணப் பரிசு தேர்ந்தெடுக்கப்பட்டது. சிறந்த நடிகராக சிவாஜி கணேசன் (பாகப்பிரிவினை), சிறந்த நடிகையாக பத்மினி (தங்கப்பதுமை), சிறந்த டைரக்டராக ஸ்ரீதர் (கல்யாணப் பரிசு), சிறந்த துணை நடிகராக டி.எஸ். பாலையா (பாகப்பிரிவினை), சிறந்த துணை நடிகையாக சி.ஆர். விஜயகுமாரி (கல்யாணப் பரிசு), சிறந்த நகைச்சுவை நடிகராக கே.ஏ. தங்கவேலு (மஞ்சள் மகிமை), சிறந்த இசையமைப்பாளராக ஏ.எம்.ராஜா (கல்யாணப் பரிசு) சிறந்த குழந்தை நட்சத்திரமாக மாஸ்டர் பாபுஜி (கல்யாணிக்குக் கல்யாணம்) உள்ளிட்டோர் தேர்வு செய்யப்பட்டு பரிசுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டனர்.


தினமணி இன்றைய நாளிதழின் இணைய தளப்பக்கத்திலிருந்து..

இணைப்பு - http://www.dinamani.com/impressions/2015/06/19/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%A F%8D-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-19.06.1960-1959-%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF/article2873333.ece

Russellbpw
26th June 2015, 10:23 PM
இன்றைய இந்து நாளிதழ்

http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/FB_IMG_1435316271556_zps3rh1p5fm.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/FB_IMG_1435316271556_zps3rh1p5fm.jpg.html)

http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/FB_IMG_1435316264609_zpsyumhjimt.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/FB_IMG_1435316264609_zpsyumhjimt.jpg.html)

இதில் கூறியிருப்பது ஒரு விஷயம். ஆனால் மிக முக்கியமான விஷயம் யாதெனில் திரு தேவர் அவர்களின் மணிவிழாவை நடத்தியே ஆகவேண்டும் என்று அதற்க்கு முதல் முதலாக முயற்சி எடுத்து ( தேவர் மணிவிழா விருப்பம் இல்லை என்று கூறியபிறகும் ) திரு தேவர் அவர்களுக்கு மணிவிழா காணாமல் வேறு யாருக்கு மணிவிழா காணுவது என்று விடாபிடியாக இருந்து மணிவிழா நடத்தினார் நமது நடிகர் திலகம் !

வியாபாரம் வேறு..தனிமனித மரியாதை அதனால் வரும் மனிதாபிமானம் வேறு என்பதை செயலில் உணர்த்திகாடியவர் நமது நடிகர் திலகம்.

Russellbpw
26th June 2015, 10:39 PM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/a_zpstnixjvg3.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/a_zpstnixjvg3.jpg.html)

Russellxss
26th June 2015, 10:46 PM
26.06.2015 இன்றைய தினகரன் வெள்ளி மலரில்


https://fbcdn-sphotos-a-a.akamaihd.net/hphotos-ak-xpf1/v/t1.0-9/s720x720/11667421_489552141201897_8773371901250073143_n.jpg ?oh=87955c2a37db19ad5e6d8139356068c2&oe=55E8F1DC&__gda__=1444387681_8f70148d61624dbaf5190293c359d7c 4

சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல, எவரும் எட்டாத அதிசயம்.

Russellxss
26th June 2015, 10:47 PM
https://fbcdn-sphotos-b-a.akamaihd.net/hphotos-ak-xpf1/v/t1.0-9/s720x720/1509012_489552621201849_2111592580198887480_n.jpg? oh=6861957e7ba1788e8bdddddd5bb0319a&oe=5622A641&__gda__=1444785094_d6b43726890dc9c1c077c5f2b648334 0


சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல, எவரும் எட்டாத அதிசயம்.

Russellxss
26th June 2015, 10:48 PM
https://scontent-mrs1-1.xx.fbcdn.net/hphotos-xfp1/v/t1.0-9/s720x720/10155919_489552364535208_1527922997304019177_n.jpg ?oh=37e61a6d6336cee75e6c9f8118ea1d70&oe=562F97BC


சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல, எவரும் எட்டாத அதிசயம்.

Russellxss
26th June 2015, 10:52 PM
https://scontent-mrs1-1.xx.fbcdn.net/hphotos-xpf1/v/t1.0-9/s720x720/11168895_951582594893399_1265659300502071641_n.jpg ?oh=0ddd524edf6971b4cb31b509dcdc5ccf&oe=55E94AB2


சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல, எவரும் எட்டாத அதிசயம்.

Russellbpw
26th June 2015, 10:54 PM
26.06.2015 இன்றைய தினகரன் வெள்ளி மலரில்


https://fbcdn-sphotos-a-a.akamaihd.net/hphotos-ak-xpf1/v/t1.0-9/s720x720/11667421_489552141201897_8773371901250073143_n.jpg ?oh=87955c2a37db19ad5e6d8139356068c2&oe=55E8F1DC&__gda__=1444387681_8f70148d61624dbaf5190293c359d7c 4

சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல, எவரும் எட்டாத அதிசயம்.

சுந்தரராஜன் சார்

நடிக்க தெரியாத அத்தனை பயல்களும் அப்படிதான் கூறுவார்கள் நமது நடிப்பு அட்சய பாத்திரத்தை பற்றி. அவரை காழ்புணர்ச்சியால் விமர்சனம் செய்த நடிப்பு என்றால் என்னவென்றே தெரியாவிட்டாலும் தம்மை நடிகர் என்று கூறிகொள்பவர்களும் நடிகர் திலகம் கால் தூசுக்கு விடுங்கள்..அந்த தூசியின் நிழலுக்கு கூட ஈடுகொடுக்கமுடியாது ...அந்த காலத்திலும் சரி...எந்த காலத்திலும் சரி !

இன்றைய காலகட்டத்தில் முதலில் நடிக்கிறார்களா என்ன?
கேட்டால் இயற்க்கை நடிப்பு என்று ஒரு சப்பை கட்டு கட்டுவார்கள் !

இயற்க்கை அமைப்பு என்றுதான் கூறவேண்டும் என்பதை கூறக்கூட தெரியாதவர்கள். ...இயற்க்கை என்று கூறும்போது நடிப்பு என்று ஒரு வார்த்தையை ஏன் சேர்க்கவேண்டும் என்கின்ற அடிமட்ட அறிவு கூட இவர்களுக்கு இல்லையே !

நடிகர் திலகத்தை அப்படி விமர்சிப்பவர்களிடம் - அமெரிக்க அதிபர் கென்னடியே அன்கீகரித்தாராமே என்று கேட்டுபாருங்கள்...!

உடனே என்ன பதில் சொல்வார்கள் தெரியுமா ?

என்னது அமெரிக்க அதிபர் கண்ணாடியும் அங்கியும் கரிக்கிதுன்னாரா ? ? என்று நீங்கள் அசந்துபோகும் அளவுக்கு கேட்பார்கள் இந்த குண்டு சட்டிகுள்ளயே குதிரை ஓட்டுபவர்கள் !

சொந்தநாட்டில் இருப்பவர்களுக்கு அறிவு இருந்தால் தானே அதனை பற்றி சிந்தித்து செயல்படுவதற்கு. 10 பைசா வாங்கி தமது அடிமை சாசனத்தை எழுதி கொடுப்பவர்கள் நாட்டையே தாரை வார்பவர்கள் அல்லரோ இங்குள்ள முக்கால் வாசி பயல்களும் !

The standard of Tamil Cinema was too too low to capitalize on the talents of Nadigar Thilagam. Few Directors tried to do something about it like Mr. K.S. GopalaKrishnan, Mr. BhimSingh, Mr.Bandhulu, Mr. Madhavan, Mr. ACT, etc.,

International Body of Film Veterans were not fools to appreciate, award, reward our Nadigar Thilagam for his extra ordinary talents in the era of world cinema.

RKS

Russellxss
26th June 2015, 10:54 PM
முகநுாலில் திரு.ஆதவன் ரவி அவர்கள்

ஊரெங்கும்
பெருமழை பெய்யும்.

ஜனங்களின்
சந்தோஷம் போல்
எங்கெங்கும்
வெள்ளம் பெருக்கெடுக்கும்.

விவசாயிகளின்
மகிழ்ச்சிக் கண்கள்
ஆனந்தக்கண்ணீர்
என்ற பெயரில்
அந்த மழையை
நகலெடுக்கும்.

மழலையர் விட்ட
காகிதக் கப்பல்கள்
அடுத்தடுத்த
தெருக்கள் தாண்டி
ஆனந்த நீர்ப் பவனி வரும்.

அத்தனை வீட்டு
ஜன்னல்களிலும்
வியப்பு,வியப்பாய்
முகங்கள் முளைக்கும்.

அற்புத மழைக்கு நன்றி கூறி
ஆயிரம் முகங்கள்
சிரித்தாலும்,
அபத்தமாய் சுளிப்பதற்கும்
ஒரு முகம் இருக்கும்.

சகதிக்குள் செருப்பைத்
தவற விட்ட
சலிப்பில் ஒருவன்
"தேவையே இல்லாத மழை"
என்பான்..
எரிச்சலுடன்.
-----------
ஊருலகமே
நடிகர் திலகத்துள்
ஆழ்ந்து, வியந்திருக்க..
"சிவாஜில்லாம் ஓவர் ஆக்டு"
என்று திருவாய் மலர
ஊருக்கொரு கிறுக்கன்
இருப்பானே..!?

அவனோடு ஒப்பிடலாம்...
இந்த மழை வெறுப்பவனை.

https://scontent-mrs1-1.xx.fbcdn.net/hphotos-xpf1/v/t1.0-9/p720x720/11666273_492056554287004_8287194497412394496_n.jpg ?oh=856ea0c47cca27caeb043e380430cbc2&oe=561A9672


சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல, எவரும் எட்டாத அதிசயம்.

Russellbpw
26th June 2015, 11:11 PM
நடிகர் திலகம் அவர்களின் மணிமண்டபம் சென்னையில் வரவேண்டும் என்றால் அது நடிகர் சங்கம் மொத்தமாக குரல் எழுப்பினால்தான் முடியும்.

ஆனால், இப்போதுள்ள சங்கத்தில் ஆளும் கட்சிக்கு ஜால்ரா, தபேலா மற்றும் என்னென்ன கருவிகள் உண்டோ அத்தனையும் வாசிக்கும் அரசியல்வாதிகள் ஆபீஸ் நிர்வாகத்தில் மேல் மற்றும் நடுமட்டத்தில் இருக்கும்வரை அது நடைபெறுவது சாத்தியம் அல்ல என்று தான் எண்ணத்தோன்றுகிறது.

நடிகர் திலகம் இரவு பகலாக கண்விழித்து கட்டிய நடிகர் சங்கத்தையே பிளாட் போட்டு கம்மீஷனுக்கு ஆசைப்பட்டு அந்த இடத்தை தரைமட்டமாகி இன்று அதனை கோர்ட் வரை கொண்டு சென்றுள்ள இந்த ஊழல் கனவான்களா நடிகர் திலகம் மணிமண்டபம் அமைக்க விரும்புவார்கள் !

இந்த காழ்புணர்ச்சி கொண்ட அரசியல் வியாபாரிகள் சங்கத்தில் உள்ளவரை அது நடக்காது. ஆளும் கட்சியின் பலத்தை பயன்படுத்தி நடுநிலையாக நடக்க இருந்த நடிகர் சங்க தேர்தலை தடை செய்துவிட்டனர் இந்த ஊழல் பெருச்சாழிகள். காரணம் பயம் ...எங்கே நடிகர் விஷால் வெற்றி பெற்று விடுவாரோ என்று பயம் தான் காரணம் !

அதிகார துஷ்ப்ரயோகம் செய்து .....பெரிய யோகியர்கள் போல பேசுவதில் கைதேர்ந்தவர்கள் இவர்கள்.

Rks

Russellbpw
26th June 2015, 11:48 PM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/Capture_zpsjj1vjmdf.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/Capture_zpsjj1vjmdf.jpg.html)


https://www.youtube.com/watch?v=VvIu8X-AwXU


DEAR SAILESH SIR

NO AGENDA...NO INTENTIONS !

PURELY FOR FUN !!! :notthatway::ty:

RKS

Gopal.s
27th June 2015, 05:41 AM
சுந்தரராஜன் சார்

நடிக்க தெரியாத அத்தனை பயல்களும் அப்படிதான் கூறுவார்கள் நமது நடிப்பு அட்சய பாத்திரத்தை பற்றி. அவரை காழ்புணர்ச்சியால் விமர்சனம் செய்த நடிப்பு என்றால் என்னவென்றே தெரியாவிட்டாலும் தம்மை நடிகர் என்று கூறிகொள்பவர்களும் நடிகர் திலகம் கால் தூசுக்கு விடுங்கள்..அந்த தூசியின் நிழலுக்கு கூட ஈடுகொடுக்கமுடியாது ...அந்த காலத்திலும் சரி...எந்த காலத்திலும் சரி !

இன்றைய காலகட்டத்தில் முதலில் நடிக்கிறார்களா என்ன?
கேட்டால் இயற்க்கை நடிப்பு என்று ஒரு சப்பை கட்டு கட்டுவார்கள் !

இயற்க்கை அமைப்பு என்றுதான் கூறவேண்டும் என்பதை கூறக்கூட தெரியாதவர்கள். ...இயற்க்கை என்று கூறும்போது நடிப்பு என்று ஒரு வார்த்தையை ஏன் சேர்க்கவேண்டும் என்கின்ற அடிமட்ட அறிவு கூட இவர்களுக்கு இல்லையே !



நமது உலகத்திலேயே unique &Best product சரியாக marketing செய்ய படவில்லை.

அவருடைய வெவ்வேறு பாணியிலான,.நடிப்பு மற்றவர்களால் புரிந்து கொள்ள படாமல் ,பல குற்ற சாட்டுகள் சுமத்தி கொண்டிருந்தனர். அதை இந்த மாதிரி வெவ்வேறு school of Acting உலகம் தழுவிய அளவில் உள்ளது என்று சொல்லி, அவரை ,அவரது நடிப்பின் அளவற்ற எல்லைகளை கோட்பாடுகளின் படி விஞ்ஞான விளக்கம் கொடுத்தே ஆக வேண்டிய அவசியம்.Einstein கோட்பாட்டை அனைவரும் புரிந்து கொள்ள முடியாதே?

மற்ற நடிகர்களை ,sampling முறையில் ஒரே படத்தில் திறமையை அளந்து விடலாம்.ஆனால் நடிகர்திலகத்தை தொடருபவர்கள் மட்டுமே அவரை புரிந்து கொள்ள முடியும் .

அவ்வாறு தொடர நினைப்பவர்களுக்கு நமது shoddy way of movie making ஒரு தடை.அவருக்காக மட்டுமே படம் பார்க்கும் பொறுமை நமக்கு மட்டுமே இருக்கும்.

அவருடைய ஆற்றலுக்கு ஈடு கொடுக்கும் இயக்குனர்களோ,கதாசிரியர்களோ நம்மிடையே இல்லை.(தில்லானா தவிர) அவருடைய மிக சிறந்தவை பெங்காலி,கேரளா ,hollywood இலிருந்து வந்தவையே.

Russellbpw
27th June 2015, 12:25 PM
The Stylist Forever
The Tamil chevalier leaves behind him a kaleidoscope of characters and emotions
KAMAL HAASAN ON SIVAJI GANESAN


Sivaji saab is the genetic code embedded in every Tamil actor. Even if we try to be independent, the dna imprint remains. For 48 years, Tamils have been under the spell of Sivaji. He had a large heart—that was his medical problem too. We had almost given up on him in 1993 when the doctors gave him just two years. We took him to France, did everything we could. He survived his heart ailment for 15 years. But for his ill-health, he would have been active even in the last four years.

Sivaji was style personified—he would not take it off like a shirt.

He slept in style;
Woke up in style;
Came to work in style.

He was style !

He was the trendsetter !! .

And I'm proud to be his descendant.

My association with him dates back to my childhood. I was about four years old when we met in the studios. Once, he even said how I might have sat on his lap more than his children. He would always be in the studios then. I was the vidushak who would be made to recite Sivaji sir's dialogues on the sets.

Sivakumar, a fellow-actor, and I used to have sessions where we competed over narrating his dialogues. We would compete over who remembered more. That's the kind of effect he has. Even for the present generation, Sivaji is the man. Upcoming artists are told, "Become an actor like Sivaji." Even for my children, he is the ultimate.

As for criticism that Sivaji overacted or was loud, why don't these westernised critics look at Akira Kurosawa's films? We have a certain style that is rooted here. We have either actors or non-actors. The Japanese never compromised to suit European tastes and I respect them. So much so that Hollywood went on to adapt/remake Japanese films. This is part of an Asian aesthetic. Sivaji too has to be translated for a western audience.

For that matter, even the early Chaplin was "loud". And so were Hollywood stars of the early black-and-white era. We are more willing to learn and try hard to appreciate an Elvis Presley but not our own icons. If Elvis spawned a thousand clones in the West, so did Sivaji here. He is our Elvis. He is the King.

Now, an Indian funeral is itself so different—there's so much emotion, so many tears, such drama. A European funeral is such a contrast. There's great restraint. Even the sorrow is muted. Sivaji's acting is as much a part of our culture. But see how Sivaji in Thevar Magan turns a new leaf. Here, the actor steps out of his era. And Thevar Magan was my kind of salute to a doyen.

Personally, I can't be critical of Sivaji sir. I have been so close to him and such an admirer, I cannot be alive to his faults, if any. I lose my critical faculties. He's been a goading force, other than a guiding force. I am utterly biased about him and there's no scholar left in me. Sivaji has been such a challenge that it makes an actor ask himself, "What's the use of being born after him?" With Sivaji, you touch base.

The only thing Sivaji perhaps regretted was that he was not well-read like me. He lacked the vocabulary, he felt. That was his modesty. "I'm just a school dropout," he once said at a function. On the other hand, I have the dubious distinction of having uttered dialogues, even reciting poetry, in Telugu, Malayalam and other tongues. But I cannot read any of these languages. Whereas Sivaji was the master when it came to Tamil. Nobody could match up to him. Once, when I was a child actor, I could not pronounce arisi (Tamil for rice) correctly and he would intone it like me and make fun. He was the master of Tamil diction.

As a politician, Sivaji failed. He was too straightforward. He never asked for favours, and was not clever or even wise in politics. Sivaji behaved like a king even in politics. I differed with Sivaji's political beliefs, but that would not in any way lessen my regard for him. And whatever their political differences, Karunanidhi and Sivaji made for a great artistic duo. (Karunanidhi scripted Sivaji's debut film Parasakthi and many more.) If one was the mind, the other was the voice.

The irony is Sivaji gave me an opportunity to rehearse the death scene in real life. After Thevar Magan, where we did a death scene, I received news from Singapore that he had passed away during a function there. I was so shaken and went through such emotions, and I was only a happy fool the next morning to realise that the news was wrong. But this time it was for real.

(The writer is a renowned actor and filmmaker)

RAGHAVENDRA
27th June 2015, 12:58 PM
வானத்து விண்மீன்களைக் கூட எண்ணி விடலாம். ஆனால் ஜெயா டி.வி.யில் புதிய பறவை ஒளிபரப்பப் படுவதை எண்ணி மாளாது. ஆனால் அத்தனை முறையும் பார்க்க வைக்கும் உன்னதத் திரைக்காவியமன்றோ..

எங்கே நிம்மதி.... வெறும் பாடல் என்ற வார்தையைத் தூக்கி எறிந்து இனம் புரியா உணர்வை நாடி நரம்புகளில் ரத்த நாளங்களில் செலுத்தும் போதை வஸ்துவன்றோ நடிகர் திலகத்தின் நடிப்பு. இது மிகவும் விரும்பி ஏற்றுக் கொள்ளும் போதை வஸ்து. இதற்கு எந்த உலகத்திலும் தடையில்லை. எப்போது வேண்டுமானாலும் செலுத்தலாம். குறிப்பாக திரையரங்குகளில் இந்த வஸ்து செலுத்த்ப்படும் போது அதன் வீரியம் பல்லாயிரம் மடங்கு கூடி அங்கிருக்கும் அத்தனை பேரையும் கட்டிப் போட்டு இழுத்துச் சென்று விடும். நம்மை அவருடைய நடிப்பில் மயங்க வைத்து கிறங்க வைத்து அவருடைய நினைப்பிலேயே மிதக்க வைத்து விடும். அவராக நிறுத்த வேண்டும் அல்லது காட்சி முடிய வேண்டும். இந்த நன்றி கெட்ட தமிழ்நாடே வேண்டாம் நாங்கள் சிவாஜியின் உலகத்திலேயே இருந்து விடுகிறோமே.. எங்களை பூமிக்கு அனுப்பாதே இறைவா என கெஞ்சத் தோன்றும்.

எல்லாம் முடிந்து பூமிக்குத் திரும்பினால்..

சே.. திரும்பவும் தமிழ்நாடா.. இந்த நன்றி கெட்ட தமிழனோடா வாழ வேண்டும்.. தமிழின் கலை அடையாளத்தை மதிக்கத் தெரியாதவர்களோடா நாம் வாழ வேண்டும் என்கிற எண்ணத்தைத் தோன்ற வைக்கும். ஆனால்.. உடனே நம் கடமை உணர்வு நம்மைத் தடுத்து விடும். முதலில் நீ உன் பங்கை ஆற்று. உன்னால் முடிந்த வகையில் நடிகர் திலகத்தின் புகழ் பரப்பும் பணியில் உன்னை ஈடுபடுத்திக் கொள். மற்றவை தானாக நடந்து விடும்.. என்று உள்ளுணர்வு நம்மைத் தேற்றி உற்சாகப்படுத்தி விடும்.

இது தான் ஒரு சிவாஜி ரசிகனின் வாழ்க்கைச் சக்கரம்.. சுழன்று கொண்டே இருக்கும்..
இது தான் சிவாஜி என்னும் கடலின் வாழ்க்கை அலைகள்..ஓயவே ஓயாது...

Russellxor
27th June 2015, 02:14 PM
படித்தததில் ஒரு பகுதி

சிவாஜியின் நடிப்பு நிச்சயம் விமர்சனத்துக்கு அப்பாற் பட்டதல்ல. மற்றவர்கள் இயல்பாக வசனம் பேசும் காட்சிகளில், அதீத உணர்வுடனும் அழுத்தமான உச்சரிப்புடனும் திரையில் தனிக் கவனம் பெறும் அவர் மீது காத்திரமான விமர்சனங்கள் பல உண்டு. அவற்றையெல்லாம் மீறி, அற்புதமான தன் நடிப்புத் திறனால், பல படங்களின் வெற்றியை உறுதி செய்தார் சிவாஜி. தன்னை விட அதிக வயதுள்ள நாயகர்கள் இளைஞர்கள் வேடத்தில் நடித்துக்கொண்டிருந்த கால கட்டத்தில், ‘மோட்டார் சுந்தரம் பிள்ளை' படத்தில் 13 குழந்தைகளுக்குத் தந்தையாக நடிக்கும் துணிச்சலை வேறு எவரிடமும் எதிர்பார்க்க முடியாது. ‘திருவருட்செல்வர்' தொடங்கி எத்தனையோ வயோதிகப் பாத்திரங்களில் நடிக்கத் தயங்கியதில்லை.

வேறென்ன செய்ய முடியும்?

உண்மையில், நடுத்தர மற்றும் சற்றே வயதான வேடங் களில் நடித்தபோது சிவாஜியிடம் கம்பீரமும் மிடுக்கும் கூடியிருந்ததைப் பார்க்க முடியும். ‘தெய்வமகன்' படத்தின் புகழ்பெற்ற அந்த கோரமுக மகன் பாத்திரத்தைவிடத் தந்தை பாத்திரத்தில் வரும் சிவாஜிதான் சிறப்பாக நடித்திருப்

பார். மகனைப் புறக்கணிக்க நேர்ந்ததால் எழும் குற்றவுணர்ச்சி யும், சமூகத்தின் முன் அவனைத் தன் மகனாக அறிவிக்கத் தயங்கும் போலி கவுரமும் தன்னை அலைக்கழிப்பதை நுட்பமாக வெளிப்படுத்தியிருப்பார். ஒரு காட்சியில், கேமராவுக்கு முதுகைக் காட்டியபடி சிவாஜி விசும்பிக் கொண்டிருப்பார். அப்போது எதிரில் மேஜர் சுந்தர்ராஜன் அசைவற்று அவரையே பார்த்துக்கொண்டு நிற்பார். அதை ஒரு விமர்சனத்தில் இப்படி எழுதியிருந்தார்களாம்: ‘சிவாஜியின் முதுகுகூட நடித்துக்கொண்டிருந்தது. மேஜர் சுந்தர்ராஜன் தேமேயென்று நின்றுகொண்டிருந்தார்’ என்று. பின்னாட்களில் அதைக் குறிப்பிட்டு மேஜர் சுந்தர்ராஜன் சொன்னார், “சிவாஜி நடித்துக்கொண்டிருக்கும்போது அதைப் பார்த்துக்கொண்டு நிற்காமல் வேறென்ன செய்ய முடியும்!”

eehaiupehazij
27th June 2015, 03:13 PM
நடிப்புக் கடலின் நினைவலைகள் NT's Total Recall !

நடிப்புச் சக்கரவர்த்தியின் ராஜமுத்திரைகள் குறுந்தொடர்

நடிப்பின் ஓவியர் திலகம் நம் இதயத்தில் செதுக்கிட்ட மனகா(சா)ட்சியின் மாட்சி !! (Ca)scen(o)e Royale ! ராஜ முத்திரைக் காட்சி!!Royal Seal of Acting!


தான் நடித்திட்ட அனைத்துப் படங்களிலும் நடிப்பில் முத்திரை பதித்து நடிப்பிலக்கணம் இயற்றிய தொல்காப்பியர் நடிகர்திலகம் !!
ஆனாலும் நடிகர்திலகத்தின் படக்காட்சிகளை அசைபோட்டு ரசித்து ஆனந்திக்கும் வேளையிலும் எல்லாக் காட்சிகளையும் மீறி ஒரு காட்சி நம் இதயம் கவர்ந்த காட்சியாக நமது மனசாட்சியால் அங்கீகரிகப்பட்டு நாம் நிற்கும்போதும் நடக்கும் போதும்...உறங்கும்போதும் நம் மனக்கண்ணில் நிழலாடிக் கொண்டேயிருக்கும் !! அத்தகைய Scene Stealerகளின் தொகுப்பு!!!!

ராஜமுத்திரை 1 / Royal (Scene) Seal 1 :

கா..கா... கா.... Crow...Crow....Crow ...../பாடல் காட்சியின் மாட்சி : பராசக்தி (1952)

புயலாய் சூறாவளியாய் சுழன்றடித்த முதல் படம். நாடகங்களில் பெற்ற அனுபவம் நடிப்புக்கும் உணர்ச்சி மிக்க வசன உச்சரிப்புடன் கூடிய முக பாவங்களுக்கும் கை கொடுத்தது இயற்கையே! ஆனால் இந்தப் புதுமுக இளமைப் புயலுக்கு ஒரு பாடல் காட்சிக்கு உதட்டசைவு தருவது இயற்கையாக அமைந்தது விந்தையே! அதுவும் பாடல் வரிகளைக் கிரகித்துக் கொண்டு பாடகரின் கனமான குரலின் (சிதம்பரம் ஜெயராமனார்!) மாடுலேஷனுக்கேற்ப அலட்டிக்கொள்ளாமல் கலைந்த சுருள்முடி தலையுடன் தீர்க்கமான உருட்டு விழிகளுடன் லேசாக ஸ்டைலாக மடக்கி ஏற்றிவிடப்பட்ட இன் செய்த வெள்ளை முழுக்கை சட்டையுடன் புன்முறுவலுடன் பகிர்ந்துண்ணும் காகங்களுக்கு உணவை சுண்டிவிடும் உற்சாக ஸ்டைலுடன் உதட்டசைவு தந்து இக்காட்சியை கல்வெட்டுக் காட்சியாக நமது இதயத்தில் செதுக்கினார் நடிப்போவிய Leonardo DaVinci சிற்பி நடிகர் திலகம்!!

சாப்பாடில்லாமே தவிக்குதுங்க ஜனம் கூப்பாடு போட்டு குமுறுதுங்க ....காப்பாற்றக் கஞ்சி தண்ணி ஊத்துங்க.....
இப்பாடல் வரிகளில் ஒரே டேக்கில் நடிகர்திலகத்தின் உடல்மொழி முகபாவனை மாற்றங்கள் ....100 பெர்சன்ட் பாடலுக்கேற்ற உதட்டசைவு....
என் மனதில் தே(த)ங்கிவிட்ட காட்சி இதுவே !!

இறுதிக்கட்ட கோர்ட் சீன் வசனப் பிரளயம் நிகழ்ந்த போதும் இன்னும் இக்காட்சியமைப்பின் பிரமிப்பிலிருந்து வெளியேற இயலவில்லையே......!!

https://www.youtube.com/watch?v=H2kPbPF7dIE


இப்பதிவின் உள்ளடக்கம் முழுக்க முழுக்க என்னுடைய தனிப்பட்ட கருத்துக் கண்ணோட்டமே! கருத்து மாறுபாடுகள் / எண்ணப் பரிமாறல்கள் நடிகர் திலகத்தின் பெருமைக்கு இன்னும் மெருகேற்றும் உரைகற்களாகும் என்று நம்புகிறேன்!
செந்தில்

eehaiupehazij
27th June 2015, 10:20 PM
நடிப்புக் கடலின் நினைவலைகள் NT's Total Recall !

நடிப்புச் சக்கரவர்த்தியின் ராஜமுத்திரைகள் குறுந்தொடர்

நடிப்பின் ஓவியர் திலகம் நம் இதயத்தில் செதுக்கிட்ட மனகா(சா)ட்சியின் மாட்சி !! (Ca)scen(o)e Royale ! ராஜ முத்திரைக் காட்சி!!Royal Seal of Acting!


ராஜமுத்திரை 2 : பாலும் பழமும்


உடலும் உயிரும் தந்ததோடு நில்லாது பாலூட்டி சீராட்டி வளர்த்த விதத்தில் அன்னையும் பிதாவுமே முன்னறி தெய்வங்கள்
ஆனால் ஒவ்வொரு மனிதனின் வெற்றிகரமான வாழ்வியல் சாதனைக்குப் பின்னும் துணை நின்று அவன் வம்சவிருத்திக்கு ஆதாரமாக விளங்கி வாழ்வின் இன்ப துன்பங்களில் சமபங்கு வகிப்பது இறைவன் கொடுத்த வரமான மனைவியே !!
பெரும்பாலும் ஆணாதிக்கம் தலைதூக்கி நிற்கும் கலாசார வாழ்வமைப்பில் ஆணைச் சார்ந்தே பெண்ணின் பெருமை அமைகிறது !
அந்தக் கால கட்டத்திலேயே ஆணுக்குப் பெண் சமமே என்ற உயரிய கருத்தை நடிகர்திலகம் வாயிலாக மறக்க முடியாத இந்த நடிப்பின் ராஜமுத்திரைக் காட்சியோட்டத்தின் வாயிலாக மானுடம் கடைப்பிடிக்க வேண்டிய பாடமாக வரையறுக்க இயன்றது
நோய்வாய்பட்ட மனைவியை குழந்தை போல நடிகர்திலகம் மனதில் சோகத்தையும் விழிகளில் கண்ணீரையும் தேக்கி மனத்தைக் கசிய வைக்கும் நடிப்பு வெளிப்பாட்டில் பேணிக்காக்கும் இக்காட்சி பாலும் பழமும் திரைக்காவியம் வாயிலாக மனதில் ஆழப் பதிந்தது !!நடிகர்திலகத்தின் மிக வித்தியாசமான சால்ட் பெப்பர் சிகையலங்கார தோற்றப் பொலிவு சிரஞ்சீவித்துவம் பெற்றது

https://www.youtube.com/watch?v=usRpe2nB3MY

இதே காட்சியமைப்பு பின்னாளில் தங்கபதக்கம் திரைப்படத்திலும் இடம் பெற்றது சுமைதாங்கி சாய்ந்தால் பாடல் மூலம் !!

Murali Srinivas
27th June 2015, 10:57 PM
படிக்காத மேதை பதிவுகளைப் பாராட்டிய அனைத்து நல்லிதயங்களுக்கும் என் மனமார்ந்த சிரந்தாழ்ந்த நன்றி! குறிப்பாக படத்தின் சிறப்பு காட்சிகளை பற்றிய இரண்டாவது பதிவிற்கு அமோக பாராட்டுகளை வழங்கிய அனைவருக்கும் நன்றி! அதில் ஒரு சில விஷயங்களை ஒப்பீட்டு முறையில் எழுதுவதற்கு தூண்டுகோலாக இருந்த சாரதிக்கும் நன்றி!

சாரதி அந்த பதிவைப் படித்து விட்டு மற்றொரு விஷயத்தை குறிப்பிட்டு அதை நீங்கள் எழுதியிருக்கலாமே என்றார். அதனால் என்ன இப்போது எழுதி விட்டால் போகிறது என்று சொன்னேன்.

அவர் சொன்னது என்னவென்றால் ஒரு சில வினாடி அல்லது நிமிட நேரங்களில் பல வித உணர்வுகளை முகத்தில் காட்டுவதில் நடிகர் திலகம் சமர்த்தர். ஆனால் வெகு சில படங்களில் மட்டுமே ஒரே நேரத்தில் விதவிதமான உணர்வுகளை ஒரு சேர வெளிப்படுத்தியிருப்பார். அந்த வெகு சிலவற்றில் படிக்காத மேதை படத்தில் ரங்காராவ் மறைவிற்கு பின் வரும் அந்த காட்சியும் ஒன்று. ஒரே நேரத்தில் திகைப்பு, மறுதலிப்பு, அதிர்ச்சி, சோகம், அழுகை ஆகிய அனைத்தும் அந்த நிமிட நேரத்தில் முகத்தில் வந்து போகும். ஒவ்வொரு முறை படம் பார்க்கும்போதும் இந்தக் காட்சிக்காக காத்திருப்பேன் என்றார் சாரதி.

உண்மைதான்! நடிகர் திலகத்தைத்தான் எப்படி எப்படியெல்லாம் ரசிக்கலாம் என்பதற்கு நமது ரசிகர்களுடன் பேசினாலே புரிந்துக் கொள்ளலாம்!

நன்றி சாரதி!

அன்புடன்

RAGHAVENDRA
27th June 2015, 11:42 PM
Definition of Style 27 & திலக சங்கமம்

அன்னை இல்லம்

http://madrasmusings.com/Vol%2018%20No%2011/images/Houses0.jpg


ஆம், அன்னை இல்லம் என்றால் நம் நினைவுக்கு நடிகர் திலகம் வாழுகின்ற இந்த இடம் தான் நம் நினைவில் உடனே தோன்றுகிறது. அந்த அளவிற்கு நம்முள் கலந்து விட்ட அந்த இல்லத்தின் மேன்மை அவருடைய அந்தப் படத்திற்கும் கிட்டியது சிறப்பன்றோ..

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/NTFILMOGRAPHY/aicollage_zpsa4c925c8.jpg

நடிகர் திலகத்தின் திரைப்பட வரலாற்றில் அன்னை இல்லம் திரைப்படத்திற்குத் தனியிடம் உண்டு. அதே போல் ரசிகர்கள் நெஞ்சிலும் இதற்குத் தனியிடம் உண்டு. குறிப்பாக நடிகர் திலகத்திற்கு ஜோடியாக படங்களில் தேவிகா தான் சிறந்தவர் என்றும் அதுவரை பத்மினியை சிறந்த ஜோடியாக எண்ணியவர்களும் பந்த பாசம் பாவ மன்னிப்பு படங்களுக்குப் பிறகு தேவிகா வசம் சரணடைந்தவர்களும் ஏராளம் (அடியேன் உட்பட).

இயக்குநர் பி.மாதவன் நடிகர் திலகத்துடன் இணைந்த முதல் படம் அன்னை இல்லம்.
அப்போதையை கால கட்டத்தில் சென்னையிலேயே உயரமான கட்டிடமான 14 மாடி ஆயுள் காப்பீட்டுத்திட்ட அலுவலக்க் கட்டிடத்தின் உச்சியில் உள்ள தளத்தில் சிவப்பு விளக்கு எரியுதம்மா பாடல் காட்சியின் ஒரு பகுதி படமாக்கப் பட்டது. இது அபூர்வமானதாகும்.
சென்னை காஸினோ திரையரங்கில் 100- நாட்களைக் கடந்து வெற்றி நடை போட்டது அன்னை இல்லம்.

இது போன்ற பல சிறப்புகளைக் கொண்ட இத்திரைக்காவியத்தின் கதைச் சுருக்கம்,
(பாட்டுப்புத்தகத்தில் உள்ளவாறு)




வாழ்ந்தவன் தாழ்ந்து விட்டால் மீண்டும் அவனால் வாழ முடியாதா?
இந்த உலகில் கெட்டவர்கள்தான் வாழ்வுச் சக்கரத்தை சுலபமாக உருட்ட முடியுமா?
கெட்டுப்போன பிறகு, தனக்குத் தானே வாழ்ந்து கொண்டிருக்கும் ஒருவன், மற்றவர்களுக்காகவும் பகிரங்கமாக வாழ முடியுமா
இந்தக் கேள்விகளுக்குக் கிடைக்கும் விடைதான் 'அன்னை இல்லத்'தின் வரலாறு!
பரமேசன், கௌரி, குமரேசன், ஷண்முகம் - இது கயிலைநாதனின் தெய்வீகக் குடும்பம் அல்ல; கருணையே உருவான ஒரு மனித ஜீவனின் திருக்குடும்பம்!
'இல்லை' என்போருக்கு இல்லாது என்னாமல், அள்ளி அள்ளிக் கொடுத்தான். இறுதியில் அவனுக்கே இல்லை எனும் பொல்லாத நிலை வந்தது. மனைவியின் பிரசவத்துக்குப் பணம் தேவைப்பட்டது. கொடுத்தவர்களிடம் எல்லாம் கையேந்தினான் - யாரும் கொடுக்கவில்லை. மனம் மாறியது - குணம் மாறியது - கொலைகாரன் என்ற பழியோடு சட்டத்துக்கு பயந்து ஓடினான்.
வேடனின் வலையிலிருந்து தப்பிய மான் வேங்கையின் விழியில் பட்டது போல் நமது கொடைவள்ளல் ஒரு கொடியவனின் வலையில் சிக்கினான்.
வருடச் சக்கரம் இருபத்தைந்து முறைகள் சுழன்றது!
இந்த இடைக்காலத்தில் உலகில் எத்தனையோ மாற்றங்கள்!எத்தனையோ தோற்றங்கள்!பிரிந்து போன எத்தனையோ மனிதர்கள் கூடினர் - கூடியிருந்த எத்தனையோ உயிர்கள் பிரிந்தன! - ஆனால் நம் கொடைவள்ளலின் குடும்பமோ பிரிந்தது பிரிந்தபடியே தான் இருந்தது! அதற்காக உலகம் விடியாமலா போயிற்று? கருவிகள் இயங்காமலா இருநதது? இல்லை - இல்லை!
அந்தோ ?
ஒரு கணவன் - மனைவியைப் பிரிகிறான்.
ஒரு மனைவி - கணவனையும் மகனையும் பிரிந்தாள்.
ஒரு மகன் - தந்தையையும் தமையனையும் பிரிந்தான்.
இன்னொரு மகன் - தாயைப் பிரிந்தான்.
இவர்கள் எல்லோருமே ஒரே குடும்பமாக இருக்க வேண்டியவர்கள். ஒருவருக்கொருவர் யாரென்று தெரியாமலே இந்த உலகில் அவர்கள் பழகுகின்றனர்.
தந்தையும் மூத்த மகனும் ஒரு இல்லத்தில்!
தாயும் இளைய மகனும் இன்னொரு இல்லத்தில்!
இந்த இரண்டு இல்லங்கள் ஒன்று சேர்ந்தனவா!
- அன்னை இல்லம் திரைப்படத்தைப் பாருங்கள்



ராஜாமணி பிக்சர்ஸ் நிறுவனத்தைத் தொடங்கி பாசமலர், குங்கும்ம் படங்களை இணைந்து தயாரித்த, மோகன் ஆர்ட்ஸ் மோகன் மற்றும் எம்.ஆர்.சந்தானம் இருவரும் தனித்தனியே பட நிறுவனங்களைத் தொடங்கினர். அதில் எம்.ஆர்.சந்தானம் தொடங்கிய நிறுவனமே கமலா பிக்சர்ஸ். இந்த கமலா பிக்சர்ஸ் முதல் தயாரிப்பே அன்னை இல்லம். முலக்கதையை தாதா மிராஸி எழுதியிருக்க, திரைக்கதையை ஜி.பாலசுப்ரமணியம் அமைக்க, வசனம் ஆரூர்தாஸ் எழுதியிருந்தார். தனி ஒளிப்பதிவாளராக நடிகர் திலகத்தின் படங்களில் பி.என்.சுந்தரம் பணிபுரிநத முதல் படம். அன்னை இல்லம் படத்தில் பணியாற்றிய கலைஞர்களைப் பற்றிய முழுவிவரங்களைக் கீழ்க்காணும் இணைப்பில் காணலாம்.
http://www.mayyam.com/talk/showthread.php?10239-Nadigar-Thilagam-Sivaji-Ganesan-Filmography-News-and-Events&p=1135586&viewfull=1#post1135586



கவியரசரின் பாடல்கள் ஒவ்வொன்றும் காலத்தைக் கடந்து வாழ்கின்றன என்றால் கூடவே திரை இசைத் திலகத்தின் சிறப்பான இசையும் அதற்கு முக்கிய பங்காற்றியது. நடையா இது நடையா பாடல் எந்த அளவிற்கு மிகப் பிரபலமானதோ, அந்த அளவிற்கு விமர்சனத்தையும் சந்தித்தது. குறிப்பாக அந்தக் கால இளைஞர்கள் பெண்களை கேலி செய்ய இப்பாடலைப் பாடி, பெரும் எதிர்ப்பையும் சம்பாதித்தது பலருக்கு நினைவிருக்கும்.

ஆனாலும் இரண்டு பாடல்கள் மிகப் பெரும் அளவில் இன்றளவும் புகழ் பெற்று அன்றாடம் வானொலியிலோ தொலைக்காட்சியிலோ ஒலிபரப்ப அல்லது ஒளிபரப்பப் பட்டுத் தான் வருகிறது. அதில் ஒன்று மடிமீது தலைவைத்து என்ற பாடல்.
இன்னொரு பாடலே இன்றைய விரிவுரைக்கு காரணி. இந்த அளவிற்கு இப்பதிவிற்கு முன்னுரை தரவேண்டியதன் காரணம் பலருக்கு தேவைப்படலாம். இருக்கிறது. எடுத்துக் கொண்ட பாடலின் சிறப்பு அப்படி.

எண்ணிரண்டு பதினாறு வயது

சினிமா ... திரையரங்குகளில் புரொஜக்ட்ரில் 27 ஃப்ரேம்ஸ் ஒரு விநாடிக்கு என அசையும் அளவிலானது. அதே சினிமா, இன்றைய நவீன யுகத்தில், இணைய தளங்களில் மற்றும் நெடுந்தகடு சாதனங்களில் 29.97 அல்லது 30 ஃப்ரேம்ஸ் என்ற வேகத்தில் அசைகிறது. இந்த இரு வேறுபாடுகளுக்கும் காரணம் அவை வீசும் ஒளியின் வேகம், அதனுடன் பயணிக்கும் ஒலியின் வேகம் இவற்றின் அடிப்படையில் இவை வகுக்கப்படுவதேயாகும்.

இந்த அளவினை இங்கு குறிப்பிடக் காரணம், இக்காணொளியின் இப்பாடலின் நீளம் 4.05 நிமிடங்கள். அதில் நடிகர் திலகத்தின் காட்சி இடம் பெறுவது 0.30 முதல் 4.00 வரை. அதாவது 3.30 நிமிடங்கள், அதாவது 210 விநாடிகள். இந்த 210 விநாடிகளில் சராசரி 30 ஃப்ரேம்ஸ் என வைத்துக் கொண்டால், 6300 ஃப்ரேம்ஸ் வருகிறது.

இந்த 6300 ஃப்ரேம்களில் நடிகர் திலகம் தோன்றும ஒவ்வொரு ஃப்ரேமும் ஒவ்வொரு காவியம் படைக்கலாம் என்கின்ற அளவிற்கு அவருடைய உடல் மொழி, நடை, உடை அனைத்தும் நெஞ்சை அள்ளிக் கொண்டு போகும். எந்த அளவிற்கு முடியுமோ அந்த அளவிற்கு இப்பாடல் காட்சியில் நடிகர் திலகத்தின் ஸ்டைலைக் குறிப்பிட்டு எழுத விரும்புகிறேன்.

அதற்கு முன் ஒரு சிறிய Flashback. கடந்த பிப்ரவரி மாதம் நம் நடிகர் திலகம் திரைப்படத் திறனாய்வு அமைப்பின் சார்பில் அன்புக்கரங்கள் திரையிட்ட போது ஒரு இளம் ரசிகை, இப்பாடலைப் பற்றி மிகவும் சிலாகித்துக் கூறினார். குறிப்பாக நடிகர் திலகத்தின் வாயசைப்பிலேயே மொழியின் உச்சரிப்பு வேறுபாட்டைக் கண்டதாக மிகவும் ரசித்துக் கூறினார். இதைப்பற்றிய பதிவுகள் இங்கே மீண்டும் நம் பார்வைக்குத் தர விரும்புகிறேன்.

முரளி சாரின் பதிவு



இன்று மாலை நமது NT FAnS சார்பில் திரையிடப்பட்ட அன்புக் கரங்கள் திரைப்படம் நல்ல ஒரு மாலையை பரிசாக தந்தது. ஆழமான உணர்ச்சிபூர்வமான ஒரு திரைப்படத்தை நடிகர் திலகத்தின் நடிப்பை ஒரே அலைவரிசை ரசிகர்களோடு சேர்ந்து பார்ப்பது ஒரு சுவையான அனுபவம் என்றால் அந்த சுவைக்கு சுவையூட்டுவது போல் அமைந்தது ஒரு இளம் பெண்ணின் பேச்சு.

நமது அமைப்பில் உறுப்பினராக இருக்கும் இருபதுகளின் முதல் பகுதியில் இருக்கும் அந்த இளம் பெண் சபையில் ஒரு சில வார்த்தைகள் பேசலாமா என்று அனுமதி கேட்க பேசுங்கள் என்று சொன்னோம்.

சபையோருக்கு தன் வணக்கத்தை சொல்லிவிட்டு ஆரம்பித்த அந்த இளம் பெண் தன் தமிழில் ஏதேனும் குறைகள் இருந்தால் மன்னிக்கும்படி கூறிவிட்டு பேச்சை தொடங்கினார். காரணம் அந்தப் பெண் பிறந்து வளர்ந்து படித்ததெல்லாம் பம்பாய் மாநகரத்தில். ஆனால் அந்தப் பெண்ணின் பெற்றோர் தங்கள் பெண் தமிழ் கற்றுக் கொள்ள வேண்டும் என்ற காரணத்திற்காக தமிழை ஒரு பாடமாக சொல்லித்தரும் பள்ளிக்கூடத்தில் சேர்த்திருக்கின்றனர். அது மட்டுமல்ல வீட்டில் பேசுவது முழுக்க தமிழில் மட்டும்தான் என்பதோடு நின்று விடாமல் தமிழ படங்களையும் தமிழ் பாடல்களையும் பார்க்க வைத்திருக்கின்றனர். பழைய தமிழ் படங்கள் குறிப்பாக நடிகர் திலகத்தின் படங்களை காண்பித்திருக்கின்றனர். தமிழை அதன் உச்சரிப்பு சுத்தியோடு கற்றுக் கொண்டது நடிகர் திலகதிடமிருந்துதான் என்று பெருமையாக குறிப்பிட்டார் அந்த இளம் பெண்.

வைணவ சம்பிரதாயத்தை பின்பற்றும் குடும்பம் என்பதால் திவ்யப்பிரபந்தங்கள், பாசுரங்கள் திருவாய்மொழி முதலியவற்றை கற்க ஆரம்பித்திருக்கிறார் அந்தப் பெண். அந்த நேரத்தில்தான் திருமால் பெருமை பார்க்கும் வாய்ப்பு அந்தப் பெண்ணிற்கு கிடைத்திருக்கிறது. ஆண்டாளைப் பற்றியும் பெரியாழ்வார் பற்றியும் படித்துக் கொண்டிருந்த தனக்கு பெரியாழ்வாரும் திருமங்கையாழ்வாரும் தொண்டரடிப்பொடியாழ்வாரும் உருவகப்பட்டது நடிகர் திலகத்தின் மூலமாகத்தான் என்று அந்தப் பெண் சொன்னபோது அரங்கம் கைதட்டி வரவேற்றது. அதே போன்று திருவிளையாடல் ஈசனையும் அந்தப் பெண் நினைவு கூர்ந்தார்.

இறுதியாக அந்தப் பெண் குறிப்பிட்ட விஷயம் அவர் எந்தளவிற்கு கிரகிப்பு தன்மை வாய்ந்தவர் என்பதையும் எத்துனை நுணுக்கமாக காட்சிகளை உற்று நோக்குபவர் என்பதை புலப்படுத்தியது. பொதுவாக தமிழில் ர மற்றும் ற ஆகிய இரண்டு எழுத்துக்கள் எப்படி வித்தியாசப்படுகின்றன அவற்றை எப்படி உச்சரிக்க வேண்டும் என்பதில் ஒரு குழப்பமே இருந்ததாகவும் அது அன்னை இல்லம் படத்தில் வரும் எண்ணிரெண்டு பதினாறு வயது பாடல் காட்சியை பார்த்ததும்தான் தெளிவு கிடைத்ததாகவும் குறிப்பிட்ட அந்தப் பெண் அந்த வரிகளை சொல்லிக் காட்டினார்.

சுற்றி நான்கு சுவர்களுக்குள் தூக்கமின்றி கிடந்தோம்

என்ற வரியில் சுற்றி என்ற வார்த்தையில் வரும் ற வையும் சுவர்களுக்குள் என்ற வார்த்தையில் வரும் ர வையும் எப்படி உச்சரிக்க வேண்டும் எதற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் எதை இலகுவாக உச்சரிக்க வேண்டும் என்பதை தன் வாயசைப்பினாலேயே சொல்லிக் கொடுத்தவர் நடிகர் திலகம் என்றபோது அனைவரும் சிலிர்த்து விட்டனர். வாய்பிற்கு நன்றி கூறி விடைபெற்றார் அந்தப் பெண்.

அவரின் மனதிலிருந்து நேரடியாக வந்த அந்த கருத்துகளுக்கு நன்றி தெரிவித்த நான் அவரின் பார்வையை சிலாகிக்கும் விதமாக ஒன்றை சுட்டிக் காட்டினேன். அவர் குறிப்பிட்ட அந்த அன்னை இல்லம் பாடல்காட்சியில் அந்த குறிப்பிட்ட வரிகளில் கடற்கரையில் பாறை மீது ஏறி நிற்கும் நடிகர் திலகம் தனக்கே உரித்தான அந்த கையை சற்றே மேலே தூக்கி நீட்டியவாறே பாடுவார். அந்த வசீகரத்தில் அனைவரும் தன்னை மறந்து அவரின் உடல்மொழியைதான் பார்த்துக் கொண்டிருப்போம். ஆனால் அதையும் தாண்டி அவரின் வாயசைப்பை கவனித்த அந்தப் பெண்ணிற்கு பாராட்டுகளை தெரிவித்தேன்.

எந்த தலைமுறையையும் ஏன் எத்தனை தலைமுறைகள் கடந்தாலும் அவர்கள் அனைவரையும் கவரக்கூடிய ஒரே நடிகன் என்றென்றும் நமது நடிகர் திலகம் மட்டும்தானே!

அன்புடன்


மேற்காணும் பதிவிற்கான இணைப்பு - http://www.mayyam.com/talk/showthread.php?11021-Nadigar-Thilagam-Sivaji-Ganesan-Part-14&p=1207943&viewfull=1#post1207943


அடியேனின் பதிவிலிருந்து..



8.2.2015 மாலை மறக்க முடியாத மாலை. தலைமுறைகளைத் தாண்டி நூற்றாண்டுகளைத் தாண்டி, பல புதினங்கள், பல இலக்கியங்கள், பல இலக்கண நூல்கள் செய்வதை தன் ஒரே ஒரு வாயசைப்பில் செய்து சரித்திரம் படைத்துள்ளார் நடிகர் திலகம்.
மெய் சிலிர்க்க வைக்கும் அனுபவம். இன்று மாலை அன்புக்கரங்கள் நமது நடிகர் திலகம் திரைப்படத் திறனாய்வு அமைப்பின் சார்பில் திரையிடப்பட்டபோது வந்திருந்த உறுப்பினர்களில் ஒருவர் இளைய தலைமுறையைச் சார்ந்தவர். அந்தப் பெண்மணி நடிகர் திலகத்தின் தீவிர ரசிகை என்பது மிகவும் மகிழ்ச்சியான செய்தி என்றால் அவர் அதை எப்படி உணர்ந்திருக்கிறார் என்பதை அறிந்த போது அது மெய் சிலிர்க்க வைக்கும் செய்தியாகி விட்டது.
தமிழின் சிறப்பான வல்லினம், மெல்லினம் இடையினம் இவை மூன்றையும் பாடங்களில் உச்சரித்து வகுப்பறையில் கேட்டிருக்கிறோம். நடிகர் திலகத்தின் உச்சரிப்பில் அதை சரியாகப் புரிந்து கொண்டிருக்கிறோம்.
ஆனால் அவருடைய உதட்டசைவில் அந்த வேறுபாட்டை அவர் உணர்த்தியிருக்கிறார் என்பதையும் அதை இன்றைய தலைமுறை இளம்பெண் ஒருவர் கவனித்து ரசித்து அதைக் கூறிய போது ஆஹா.. நாம் எவ்வளவு பெரிய மேதையுடன் வாழ்ந்திருக்கிறோம் என மிகப் பெரிய கர்வம் ஏற்பட்டது. வாழ்ந்த வாழ்க்கையின் பயன் பூர்த்தியாகி விட்டது எனத் தோன்றியது.
எண்ணிரண்டு பதினாறு வயது .. இந்தப் பாடலில் ஒரு சரணத்தில் சுற்றி நான்கு சுவர்களுக்குள் தூக்கமின்றிக் கிடந்தோம் என்ற வரிகளின் போது அவருடைய ஸ்டைலையே பார்த்து ரசித்து மெய் மறந்து கை தட்டியிருக்கிறோம்.
மடையா அதற்கும் மேலே அந்தப் பாட்டில் விஷயம் இருக்கிறது எனப் பொட்டில் அடித்தாற்போல அந்த இளம் பெண் கூறியது இவ்வளவு வயதானால் என்ன எத்தனை முறை பார்த்திருந்தால் தான் என்ன நடிகர் திலகம் என்ற கடலில் நாம் ஓரிரு முத்துக்களைத் தான் நாம் எடுத்து அணிந்திருக்கிறோம் என மறைமுகமாக நம்மை சாடியது போல் இருந்தது.
சுற்றி என்ற வார்த்தையில் வரும் வல்லின ற விற்கு அதற்கேற்பவும், சுவர்களுக்குள் என்ற வார்த்தையில் வரும் இடையின ர விற்கு அதற்கேற்பவும் நடிகர் திலகம் தன் உதட்டசைவை வெளிப்படுத்தியிருக்கிறார் என அந்தப் பெண் எடுத்துரைத்த போது..
ஓ... எனக் கத்த வேண்டும் போலிருந்தது.. தலைவா என்று உரக்கக் கூறி இறைவனுக்கு நன்றியை மிகவும் பலத்த குரலில் சொல்ல வேண்டும் போலத் தோன்றியது..

நடிகர் திலகம் பாட்டிற்கு வெளிப்படுத்தும் உதட்டசைவை ஏளனம் புரிவோர்க்கு இது சரியான சவுக்கடி

அந்த இளம்பெண்ணிற்கு என் உளமார்ந்த பாராட்டுக்களும் நன்றியும்.
அந்த வேறுபாட்டை நீங்கள் இப்போது கவனியுங்கள்.


இப்பதிவிற்கான இணைப்பு - http://www.mayyam.com/talk/showthread.php?11021-Nadigar-Thilagam-Sivaji-Ganesan-Part-14&p=1207958&viewfull=1#post1207958

மேற்காணும் நிகழ்வின் போதே இப்பாடலைப் பற்றி சற்று விரிவாக எழுதவேண்டும் என எண்ணம் ஏற்பட்டது. இந்த அடிப்படையிலேயே இப்பதிவின் நீளம் அமைந்து விட்டது.


https://www.youtube.com/watch?v=i5LaULZ-vFo

இக்காட்சியின் துவக்கத்தில் கவனித்தால் தெரியும். முத்துராமன் கையில் ஒரு பூ இருக்கும். காதலியுடன் உரையாடும் அவரை கலாய்த்தவாறே வருகிறார் நடிகர் திலகம். நாணத்துடன் அவள் ஓடி விட, பதிலுக்கு முத்துராமன் நடிகர் திலகத்தை சீண்டுகிறார். உங்கள் காதல் விவகாரம் எப்படி. என்று. அதுவரை முத்துராமன் கையிலிருந்த பூவை நடிகர் திலகம் வாங்குகிறார். அங்கேயே ஆரம்பிக்கிறது அவரின் ஆளுமையும் ஸ்டைலும். வைப்ரஃபோன் போன்று ஒரு வாத்தியம் இரண்டு மூன்று முறை ஒலிக்க, ஒவ்வொரு முறைக்கும் பூவை உதிர்க்கிறார் நம்மவர். எண்ணிரண்டு பதினாறு வயது என்றவாறே எழுந்து நிற்கிறார். அந்த எழுந்திருக்கும் ஸ்டைலே அசத்த ஆரம்பித்து விடுகிறது. இப்போது, அக்கார்டின் ஆரம்பிக்கிறது. இந்த அக்கார்டின் ஒலிக்கும் போது என்ன ஸ்டைலாக கம்பீரமாக பூவை முகர்ந்தவாறே நடக்கிறார். இப்போது முத்துராமன் எழுந்து பின் தொடர்கிறார். மிகச் சிறப்பான ஒத்துழைப்பை இப்பாடலில் அவர் அளித்திருப்பார்.
முத்துராமன் உரிமையோடு தோளில் கை போடும் போது திரும்பி அவளைப் பற்றி பாட ஆரம்பிக்கிறார். இப்போது தாளம் துவங்குகிறது. இரு கண்களினாலும் பக்கவாட்டில் முத்துராமனைப் பார்த்தவாறே திரும்புகிறார். ஆஹா அந்த திரும்பும் ஸ்டைலை என்ன சொல்ல...உடனே இரு விரல்களைக் காட்டி அவள் கண்ணிரண்டை குறிப்பிடுகிறார். அடுத்த்து ஆஹா... மொத்த திரையரங்கிலும் ரசிகர்கள் இருக்கையிலிருந்து எழுந்து அரங்கத்தின் உத்தரத்தை தலையால் முட்டி விட்டு கீழிறங்கும் அளவிற்கு துள்ளிக் குதிக்க வைக்கும் ஒரு கண்ணடிப்பு... அதில் ஒரு புன்சிரிப்பு...

இப்போது இரு கைவிரல்களும் பாடலின் தாளத்திற்கேற்ப சொடுக்குப் போட்டவாறே அட்டகாசமான ஒரு நடை... இதை முத்துராமனும் ரசிக்கிறார்.
இப்போது ஈஸ்வரியின் ஹம்மிங்.. ஃப்ரேமின் இடப்புறம் நாயகன் வலப்புறம் நாயகி எனப்பிரிக்கிறார்கள் இயக்குநரும் படத்தொகுப்பாளரும். நல்ல கான்செப்ட். நாயகி நேர்நிலையில் காமிராவைப் பார்த்தவாறு வர அவளை நடிகர் திலகம் பக்கவாட்டில் பார்க்கும் வகையில் காட்சியை உருவாக்கிய விதம் லாஜிக்க்காவும் சிறப்பாக உள்ளது. பார்ப்பதற்கும் ரம்மியமாக உள்ளது. இந்த இடத்தில் ஃப்ரேமில் தனக்கு எதிரே நாயகி உள்ளதாக கற்பனை செய்து நாயகன் பாடுவதாக எடுத்துள்ளார்கள்.

நாயகி இறங்கி வர வர நாயகனான நடிகர் திலகம் ரசித்துக் கொண்டே இருக்கிறார். அவள் அழகாக புடவைத் தலைப்பை இங்குமங்குமாக அசைக்க, உடனே ஒரு ப்ளையிங் கிஸ்... இதையெல்லாம் எங்கள் தலைவர் அப்பவே பண்ணிட்டாராக்கும் .

காதலின் ஆழம் எந்த அளவிற்கு இருக்கும் என்பதை எவ்வளவு அழகாக த்த்ரூபமாக வடித்துள்ளனர் இயக்குநரும் நடிகர் திலகமும். தன்னிலை மறந்த நிலையில் முன்னிரண்டு மலரெடுத்தாள் என் மீது தொடுத்தாள் என்கிற சரணத்தைத் தொடங்கும் போது அவள் நினைவாகவே தரையை வெறித்துப் பார்ப்பதும், பிறகு திடீரென நினைவுக்கு வந்தவராக அவளை உருவகப் படுத்திப் பார்ப்பதுமாக ... எழுத்தை எந்த அளவிற்கு ஜீவனுடன் வடித்திருக்கிறார் நடிகர் திலகம்... இப்போது இரண்டாம் முறை அந்த டையினை இங்கும் அங்கும் ஆட்டும் நேர்த்தி ... என்ன நான் சொல்வது சரிதானே என்பது போல் முத்துராமனைப் பார்த்து தலையாட்டிய வாறே முக்கனியும் சர்க்க்ரையும் என்ற வரியை முதன் முறை பாடுகிறார்.

இப்போது மீண்டும் அந்த வரி. முக்கனியும் சர்க்கரையும் சேர்த்தெடுத்துக் கொடுத்தாள்.. ஆஹா.. கண்கொள்ளாக் காட்சி.. அவள் நினைப்பில் லயித்தவாறே தன் டையை முறுக்கிக் கொள்வதும், ஆனந்த்ப் புன்னகை புரிவதும் அப்போது அதற்குள் பல்லைக் கடித்தவாறே சிரிப்பதும்...

இப்போது பாருங்கள்.. கடற்கரை நீர்ப்பரப்பில் ரசித்துப் பாடியவாறே தலையை ஆட்டிக் கொண்டு நடப்பதை.. ஆஹா.. பிறவிப்பயன் அடைந்து விட்டோம் என ரசிகர்கள் பரவசத்தின் உச்சிக்கே அல்லவா செல்கிறார்கள். அதுவும் சும்மாவா, இடது கை சுட்டு விரலால் லேசாக மேலே சுட்டிக்காட்டி விட்டு மடக்கிக் கொள்ளும் ஒய்யாரம்.. உதட்டிலோ சொக்கவைக்கும் புன்னகை..

அந்த நிலையிலேயே அவர் மீண்டும் அவள் நினைவில் ஆழ்ந்து விட, படத்தொகுப்பாளரின் கைங்கரியத்தில் அந்த ஃப்ரேமிலேயே மேலெழும்புகிறாள் நாயகி.

இப்போது இரண்டு ஸ்டெப் எடுத்து வைத்து விட்டு நிற்கிறாள். அவள் காலந்தாளாம். இதை அவர் சொல்லிக் காட்டுகிறார். காலளந்த நிலையினில் என் காதலையும் அளந்தாள்.. இந்த வரிகளின் போது அவர் முகத்தைப் பக்கவாட்டில் காட்டுகிறார்கள். அப்போதும் நாயகனின் நினைவு காதலியிடம் தான் என்பதை சித்தரிக்கும் வகையில் பார்வையில் எங்கோ இருப்பது போல பார்வை.

இப்போது அடுத்த வரி, காலமகள் பெற்ற மயில் இரவினிலே மலர்ந்தாள் ... இந்த வரிகளின் போது தலையை இப்படியும் அப்படியுமாக அசைக்கும் அழகு..

இப்போது வருகிறது பாருங்கள்.. உலகத்திலேயே சிறந்த நடையழகனின் உன்னத நடையழகு, ரசிகர்களை உற்சாகத்தின் உச்சிக்கே கொண்டு செல்லும் மன்மத நடையழகு.. காலளந்த நடையினில் என் காதலையும் அளந்தாள் என்ற வரிகளுக்கு அவர் காட்டும் அந்த ஸ்டைல்.. இன்னும் எத்தனை காலம் தவம் புரிந்தாலும் இப்படி ஓர் அழகு சுந்தரனை நம்மால் காண முடியாது என்று நம்மை அறுதியாகக் கூற வைக்கும்.

அதற்குப் பிறகு.. ஆஹா.. அற்புதம்... அந்த படகின் கொம்பைப் பிடித்துக் கொண்டே தன் உடம்பை இப்படியும் அப்படியுமாக மிக இயற்கையாக அசைத்து காலமகள் பெற்ற மயில் இரவினிலே மலர்ந்தாள் என்ற வரியைப்பாடும் அருமையை...

இது தானய்யா இயற்கை நடிப்பு...

ஆஹா ... ஆஹா.. இப்போது அந்த மணல் முகட்டிலிருந்து பார்வையாளரை நோக்கி நடக்கும் வகையில் காட்சியமைப்பு. இப்போது அவருடைய நடையைப் பாருங்கள்..

இந்த மூன்றாவது சரணம் தான் உச்சம்.. இப்போது ஃப்ரேமின் இடது புறத்தில் நடிகர் திலகத்தின் பக்கவாட்டுத் தோற்றமும் வலது புறத்தில் நாயகியான தேவிகாவின் நளினமான அசைவுகளும் அவருடைய மனக்கண் முன் நிழலாட, அவள் அதில் விடைபெறுவது போன்ற பாவனை காட்ட அவளுடைய அந்த அழகிய தோற்றம் தந்த சந்தோஷத்தில் அவன் முகத்தில் புன்னகை மலர தலையை மேலும் கீழும் ஆட்டி ஆமோதித்து அதனை சித்தரிக்கும் நடிகர் திலகத்தின் நடிப்பு.. அப்போது அங்கு புன்சிரிப்பு...

இப்போது தான் அந்த சரணம்.. மேலே குறிப்பிட்ட அந்த இளம் ரசிகையின் மனம் கவர்ந்த சரணம். முதன் முறை அந்த வரிகளைப் பாடும் போது சற்று லாங் ஷாட்டில் தலைவரின் அட்டகாசமான போஸ். இரு கைகளையும் பாக்கெட்டில் வைத்தவாறே பாடுகிறார். சுற்றி நான்கு சுவர்களுக்குள் தூக்கமின்றிக் கிடந்தோம்.. இதை இரண்டாம் முறை சொல்லும் போது காமிரா அவருடைய முகத்தை க்ளோஸப்பில் கொண்டு வர, இங்கே தான் நடிப்பிலக்கணம் இன்னோர் எடுத்துக்காட்டை இயம்புகிறது. சுற்றி எனும் போது வல்லின ற விற்கான உதட்டசைவையும், சுவர் என்கின்ற போது இடையின ர விற்கான உதட்டசைவையும் வெளிப்படுத்தி தமிழிலக்கண வகுப்பே எடுத்திருப்பார் தலைவர்.

இப்போது சரணத்தின் முடிவில் வரும் வரியான துன்பம் போன்ற இன்பத்திலே இருவருமே நடந்தோம் என்கிற வரி இரண்டாம் முறை வரும் போது..

ஆஹா.. மீண்டும் தியேட்டர் அதிருதே.. கொட்டாய் பிச்சிக்கிட்டில்லே விழுது.. யாரங்கே இனிமே சிவாஜி படம் போடறதாயிருந்தா மொதல்லே ஸீலிங்ஸை ஸ்ட்ராங்கா போடுங்கப்பா.. இவங்க குதிக்கிறதில்லாம நாமளும் குதிக்கிறோம்.. சீலிங்கே ஆடுதே... என தியேட்டர் உரிமையாளர் கூறுவதெல்லாம் சர்வ சாதாரணமான விஷயமாகி விடுகிறதே.. இருவருமே நடந்தோம் என்கிற போது இரு கைகளையும் விரித்து தோளை சிலுப்புகிறாரே..

சும்மாவா முடிக்கிறார் பாட்டை.. நம்மையெல்லாம் கட்டிப்போட்டு விடுகிறாரே.. எங்கோ பார்த்தவாறே தன் இடது கை சுட்டு விரலால் சுட்டிக்காட்டியவாறே உதட்டில் புன்னகையுடன் ஒரு மாதிரி தலையைக் குனிந்து அவர் பார்க்கும் போது..

ஆஹா.. கடவுளே.. நீ உலகத்தில் எத்தனையோ சோதனைகளை மக்களுக்குத் தருகிறாய். எத்தனையோ தொல்லைகள் தருகிறாய்.. சொல்லொணா துயரங்களக்கு மக்கள் ஆளாகிறார்கள். இதறகாக எல்லாருமே உன்னை சபிக்கிறார்கள். அதில் நாங்களும் விதி விலக்கல்ல..

ஆனால் அத்தனையையும் மறக்க வைக்க எங்களுக்கு நடிகர் திலகத்தை அளித்தாயே.. இது போதும இறைவா.. உன்னுடைய இறைவன் பதவி காப்பாற்றப்பட்டு விட்டது.. பிழைத்துப் போ...

Murali Srinivas
27th June 2015, 11:48 PM
http://padamhosting.me/out.php/i50914_victorlove1235.png

திரையுலகில் மட்டுமின்றி பொதுவாழ்விலும் சரித்திரம் படைத்த திருவிளையாடல் திரைக்காவியத்தின் பொன்விழா நமது நடிகர் திலகம் திரைப்படத்திறனாய்வு அமைப்பின் சார்பில் கொண்டாட உத்தேசிக்கப் பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் துவங்கியுள்ளன. நமது எண்ணங்களும் திட்டங்களும் ஈடேறினால் இது மிகவும் சிறப்பானதாகவும் மறக்க முடியாத வகையிலும் அமைந்து வரலாற்றில் இடம் பெறும் என்கின்ற நம்பிக்கை உள்ளது.

இதைப் பற்றி சில மேலான விவரங்களை நமது முரளி சார் கூறுவார்.

ஆவலுடன் காத்திருப்போம்..

நமச்சிவாய வாழ்க!

நாதன் தாழ் வாழ்க!

இமைப்பொழுதும் என் நெஞ்சில்

நீங்காதான் தாழ் வாழ்க!

எல்லாம் வல்ல சர்வேஸ்வரன் தாழ் பணிந்து முதல் அடியை எடுத்து வைத்திருக்கிறோம்!

அவனருளால் அனைத்தும் நல்லபடியாகட்டும்!

தேவா! மகாதேவா! சம்போ மகாதேவா!

அன்புடன்

Russellxor
28th June 2015, 10:51 AM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/20150628104325_zpspjadxl2n.gif (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/20150628104325_zpspjadxl2n.gif.html)

Russellxor
28th June 2015, 11:05 AM
Definition of Style 27 & திலக சங்கமம்

அன்னை இல்லம்

http://madrasmusings.com/Vol%2018%20No%2011/images/Houses0.jpg


ஆனால் அத்தனையையும் மறக்க வைக்க எங்களுக்கு நடிகர் திலகத்தை அளித்தாயே.. இது போதும இறைவா.. உன்னுடைய இறைவன் பதவி காப்பாற்றப்பட்டு விட்டது.. பிழைத்துப் போ...
ரயில்
மழை
மலை
அப்புறம்
இது போன்ற நடிகர்திலகத்தை
பற்றிய வர்ணனைகள்
எப்போதும்
சலிக்காது.

RAGHAVENDRA
28th June 2015, 11:19 AM
மேலே தரப்பட்டுள்ள Definition of Style 27 முகநூலிலும் பகிர்ந்து கொள்ளப்பட்டது. இதற்கு நண்பர்கள் அளித்துள்ள பாராட்டிற்கு மிக்க நன்றி. குறிப்பாக பிரணவ மூர்த்தி என்ற நண்பர் மேலும் அவருக்கு விருப்பமான படங்கள் சிலவற்றைக் குறிப்பிட்டு அவற்றிலிருந்து சில பாடல் காட்சிகளைப் பற்றி எழுதக் கேட்டுக்கொண்டுள்ளார். அவருடைய கோரிக்கையை நிறைவேற்றுவதாக் கூறியிருக்கிறேன்.

இன்னோரு நண்பர் - தன்னை என் எழுத்துக்கு விசிறி என்று அறிமுகப்படுத்திக்கொண்டு சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில் நேரில் கூறினார். அவருக்கும் என் உளமார்ந்த நன்றி.

அனைத்திற்குமே நம் மய்ய இணைய தள நண்பர்கள், முகநூல் நண்பர்கள் உள்ளிட்ட ஏராளமான சிவாஜி ரசிகர்கள் தரும் ஊக்கமே காரணம். அனைவருக்கும் நன்றி.

எல்லாப்புகழும் நடிகர் திலகத்திற்கே..

திரு பிரணவமூர்த்தி அவர்களின் வேண்டுகோள் பதிவு..



உங்களுடைய வர்ணணையுடன் அந்த பாடல் காட்சியை என் மனத்திரையில் ரீவைண்ட் செய்து பார்க்கிறேன்.......ஹும்
காலம்ஒடி விட்டது.
அந்த பாடல் காட்சியில் ஒரு ஷாட்டில்
அவர் கழுத்தில் உள்ள
..டை..யின் ..நாட்..டை சரி
செய்யும் லாவகம் அதற்கு ஏற்ற கழுத்து தலை அசைவு அப்பப்பா
எதைசொல்ல,எதைவிட.
ஆனால் அந்த பாடல்
காட்சியை முழுமையாக
ரசிக்க அசை போட விடா
மல் தடுக்கிறது,தொடர்ந்து
வரும் காட்சியமைப்பு.
பாடல் காட்சி முடியும்
தருவாயில் நம்மவர்
பாறையிலிருந்து
வழுக்கி விழுந்து விடுவார்.இக்காட்சி
முந்தைய பாடல் காட்சியை அசைபோட
விடாமல்செய்து விடும்.
சார் அவர்களுக்கு ஒரு
விண்ணப்பம்.
பார்மகளே பார்.
காத்தவராயன்
நவராத்திரி(அற்புதராஜ்)
பார்த்தால் பசிதீரும்
இவைகளில் இருந்து
பாடல் அ காட்சியை
போஸ்ட்மார்ட்டம் செய்யும்படி வேண்டுகிறோம்.நன்றி!

Russellxor
28th June 2015, 12:31 PM
படித்ததில் பிடித்தது

சிவாஜி வந்து நிற்கும் தோரணையைக் கண்டு, அதற்கு முன் ஆர்ப்பாட்டமாகப் பேசிக்கொண்டிருப்பவர்கள், பேச மறந்து உறைந்து நிற்கும் காட்சிகளைப் பல படங்களில் பார்க்கலாம். ‘முதல் மரியாதை' படத்தில் மரணப் படுக்கையில் படுத்திருக்கும் சிவாஜியை, சில சிறுவர்கள் வேடிக்கை பார்க்க வந்து நிற்பார்கள். அந்த நிலையிலும் தன் கோபத்தைக் காட்ட ஒரு உறுமு உறுமுவார். அடுத்த கணத்தில் சிறுவர் குழாம் சிதறி ஓடும். படத்தின் தொடக்கத்தில் இடம்பெறும் இந்தக் காட்சியே, சிவாஜியின் கதாபாத்திரம் எத்தனை மரியாதைக்குரியது என்பதை உணர்த்திவிடும். ‘பாசமலர்’ படத்தில் தொழிலாளர்களுக்கு ஆதரவாக ஜெமினி கணேசன் எழுப்பும் கேள்விகளைக் கேட்டுக் கொதிப்படைந்து சிவாஜி பேசும் வசனங்கள் மிகுந்த வரவேற்பைப் பெற்றவை. “யாருடைய துணையுமின்றித் தனியாகவே நான் உழைப்பேன்” என்று கர்ஜித்துவிட்டு, முத்தாய்ப்பாக ‘‘கெட் அவுட்'' என்று மெல்லிய குரலில் சொல்ல சிவாஜியால்தான் முடியும்.

parthasarathy
28th June 2015, 02:14 PM
படிக்காத மேதை பதிவுகளைப் பாராட்டிய அனைத்து நல்லிதயங்களுக்கும் என் மனமார்ந்த சிரந்தாழ்ந்த நன்றி! குறிப்பாக படத்தின் சிறப்பு காட்சிகளை பற்றிய இரண்டாவது பதிவிற்கு அமோக பாராட்டுகளை வழங்கிய அனைவருக்கும் நன்றி! அதில் ஒரு சில விஷயங்களை ஒப்பீட்டு முறையில் எழுதுவதற்கு தூண்டுகோலாக இருந்த சாரதிக்கும் நன்றி!

சாரதி அந்த பதிவைப் படித்து விட்டு மற்றொரு விஷயத்தை குறிப்பிட்டு அதை நீங்கள் எழுதியிருக்கலாமே என்றார். அதனால் என்ன இப்போது எழுதி விட்டால் போகிறது என்று சொன்னேன்.

அவர் சொன்னது என்னவென்றால் ஒரு சில வினாடி அல்லது நிமிட நேரங்களில் பல வித உணர்வுகளை முகத்தில் காட்டுவதில் நடிகர் திலகம் சமர்த்தர். ஆனால் வெகு சில படங்களில் மட்டுமே ஒரே நேரத்தில் விதவிதமான உணர்வுகளை ஒரு சேர வெளிப்படுத்தியிருப்பார். அந்த வெகு சிலவற்றில் படிக்காத மேதை படத்தில் ரங்காராவ் மறைவிற்கு பின் வரும் அந்த காட்சியும் ஒன்று. ஒரே நேரத்தில் திகைப்பு, மறுதலிப்பு, அதிர்ச்சி, சோகம், அழுகை ஆகிய அனைத்தும் அந்த நிமிட நேரத்தில் முகத்தில் வந்து போகும். ஒவ்வொரு முறை படம் பார்க்கும்போதும் இந்தக் காட்சிக்காக காத்திருப்பேன் என்றார் சாரதி.

உண்மைதான்! நடிகர் திலகத்தைத்தான் எப்படி எப்படியெல்லாம் ரசிக்கலாம் என்பதற்கு நமது ரசிகர்களுடன் பேசினாலே புரிந்துக் கொள்ளலாம்!

நன்றி சாரதி!

அன்புடன்

Thank you very much Murali Ji.

Regards,

R. Parthasarathy

Russellxor
28th June 2015, 04:10 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/cinema%20%20express/FB_IMG_1435487785248_zpsuw2yyyjl.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/cinema%20%20express/FB_IMG_1435487785248_zpsuw2yyyjl.jpg.html)

Russellxor
28th June 2015, 04:11 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/cinema%20%20express/FB_IMG_1435487781788_zps5yxnjprd.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/cinema%20%20express/FB_IMG_1435487781788_zps5yxnjprd.jpg.html)

Russellxor
28th June 2015, 04:14 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/FB_IMG_1435488157120_zpsarxns3iv.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/FB_IMG_1435488157120_zpsarxns3iv.jpg.html)

Russellxor
28th June 2015, 04:43 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/20150628164201_zpsraupzbtu.gif (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/20150628164201_zpsraupzbtu.gif.html)

Russellxor
28th June 2015, 07:17 PM
(படித்தது)

எப்போதும் மரியாதை

மிகை நடிப்பு என்று அவரை விமர்சிப்பவர்கள்கூட பின்னாட்களில் ‘முதல் மரியாதை', ‘தேவர் மகன்' ஆகிய படங்களில் அவர் ஏற்று நடித்த பாத்திரங்களை வியக்கின்றனர். குறிப்பாக, தேவர் மகன் படத்தில், முகத்தில் படர்ந்த வீர மீசையும், தோளைச் சுற்றிய சால்வையுமாக அவர் வந்து நிற்கும் கம்பீரம் அலாதியானது. சிவாஜியைப் புகைப்படம் எடுக்கும் கவுதமி, அவர் சற்று திரும்பி முறைத்ததும் தடுமாறும் காட்சியே சொல்லும் சிவாஜியின் கம்பீரத்தை.

திரைக்கு வெளியிலும் தன் கம்பீரத்தைக் கடைப்பிடித்தார் சிவாஜி. ஒருமுறை அவரது மகன் ராம்குமார் குறிப்பிட்டார்: “வெளிநாடுகளுக்குச் செல்லும்போது அப்பா மிக நேர்த்தியாக உடையணிந்துகொள்வார். விமான நிலையங்களில் எங்களையெல்லாம் சோதனை செய்வார்கள். அப்பா நடந்துவரும் தோரணையைப் பார்க்கும் விமான நிலையக் காவலர்கள் அவரை ஒருபோதும் சோதித்துப் பார்க்கத் துணிந்ததில்லை.” அதுதான் சிவாஜியின் ஆளுமை

Russellxor
28th June 2015, 10:34 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Sivaji%20Ganesan%20Hits%20-%20Sono%20Papade%20HD%20Song%20-%20480P_9839_zpsbhvepjor.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Sivaji%20Ganesan%20Hits%20-%20Sono%20Papade%20HD%20Song%20-%20480P_9839_zpsbhvepjor.jpg.html)

http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Sivaji%20Ganesan%20Hits%20-%20Sono%20Papade%20HD%20Song%20-%20480P_6842_zpsrjkyeqgq.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Sivaji%20Ganesan%20Hits%20-%20Sono%20Papade%20HD%20Song%20-%20480P_6842_zpsrjkyeqgq.jpg.html)

Russellxor
28th June 2015, 10:35 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Sivaji%20Ganesan%20Hits%20-%20Sono%20Papade%20HD%20Song%20-%20480P_1532_zpsmgoumdbr.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Sivaji%20Ganesan%20Hits%20-%20Sono%20Papade%20HD%20Song%20-%20480P_1532_zpsmgoumdbr.jpg.html)

http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Sivaji%20Ganesan%20Hits%20-%20Sono%20Papade%20HD%20Song%20-%20480P_8729_zpsx3pmpycp.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Sivaji%20Ganesan%20Hits%20-%20Sono%20Papade%20HD%20Song%20-%20480P_8729_zpsx3pmpycp.jpg.html)

Russellxor
28th June 2015, 10:36 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Sivaji%20Ganesan%20Hits%20-%20Sono%20Papade%20HD%20Song%20-%20480P_4728_zpsd2l7vw5g.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Sivaji%20Ganesan%20Hits%20-%20Sono%20Papade%20HD%20Song%20-%20480P_4728_zpsd2l7vw5g.jpg.html)

http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Sivaji%20Ganesan%20Hits%20-%20Sono%20Papade%20HD%20Song%20-%20480P_0870_zpsxdjpui5x.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Sivaji%20Ganesan%20Hits%20-%20Sono%20Papade%20HD%20Song%20-%20480P_0870_zpsxdjpui5x.jpg.html)

http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Sivaji%20Ganesan%20Hits%20-%20Sono%20Papade%20HD%20Song%20-%20480P_2464_zpsaaicjcqp.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Sivaji%20Ganesan%20Hits%20-%20Sono%20Papade%20HD%20Song%20-%20480P_2464_zpsaaicjcqp.jpg.html)

Russellxor
28th June 2015, 10:38 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Sivaji%20Ganesan%20Hits%20-%20Sono%20Papade%20HD%20Song%20-%20480P_9777_zpscsudokpb.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Sivaji%20Ganesan%20Hits%20-%20Sono%20Papade%20HD%20Song%20-%20480P_9777_zpscsudokpb.jpg.html)

http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Sivaji%20Ganesan%20Hits%20-%20Sono%20Papade%20HD%20Song%20-%20480P_2109_zpswopstrmf.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Sivaji%20Ganesan%20Hits%20-%20Sono%20Papade%20HD%20Song%20-%20480P_2109_zpswopstrmf.jpg.html)

Russellxor
28th June 2015, 10:39 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Sivaji%20Ganesan%20Hits%20-%20Sono%20Papade%20HD%20Song%20-%20480P_8171_zpsaaed2zu8.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Sivaji%20Ganesan%20Hits%20-%20Sono%20Papade%20HD%20Song%20-%20480P_8171_zpsaaed2zu8.jpg.html)

http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Sivaji%20Ganesan%20Hits%20-%20Sono%20Papade%20HD%20Song%20-%20480P_6367_zpszxljvyrg.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Sivaji%20Ganesan%20Hits%20-%20Sono%20Papade%20HD%20Song%20-%20480P_6367_zpszxljvyrg.jpg.html)

Russellxor
28th June 2015, 10:40 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Sivaji%20Ganesan%20Hits%20-%20Sono%20Papade%20HD%20Song%20-%20480P_8718_zpsn4rytvdf.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Sivaji%20Ganesan%20Hits%20-%20Sono%20Papade%20HD%20Song%20-%20480P_8718_zpsn4rytvdf.jpg.html)

http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Sivaji%20Ganesan%20Hits%20-%20Sono%20Papade%20HD%20Song%20-%20480P_9220_zps8nnnwlgc.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Sivaji%20Ganesan%20Hits%20-%20Sono%20Papade%20HD%20Song%20-%20480P_9220_zps8nnnwlgc.jpg.html)

http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Sivaji%20Ganesan%20Hits%20-%20Sono%20Papade%20HD%20Song%20-%20480P_8834_zpsrl2rxnzv.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Sivaji%20Ganesan%20Hits%20-%20Sono%20Papade%20HD%20Song%20-%20480P_8834_zpsrl2rxnzv.jpg.html)

Russellxor
28th June 2015, 10:41 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Sivaji%20Ganesan%20Hits%20-%20Sono%20Papade%20HD%20Song%20-%20480P_0869_zpsi0p8ixte.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Sivaji%20Ganesan%20Hits%20-%20Sono%20Papade%20HD%20Song%20-%20480P_0869_zpsi0p8ixte.jpg.html)

http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Sivaji%20Ganesan%20Hits%20-%20Sono%20Papade%20HD%20Song%20-%20480P_0400_zpscoxl3jna.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Sivaji%20Ganesan%20Hits%20-%20Sono%20Papade%20HD%20Song%20-%20480P_0400_zpscoxl3jna.jpg.html)

http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Sivaji%20Ganesan%20Hits%20-%20Sono%20Papade%20HD%20Song%20-%20480P_7168_zpsm8iev9jk.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Sivaji%20Ganesan%20Hits%20-%20Sono%20Papade%20HD%20Song%20-%20480P_7168_zpsm8iev9jk.jpg.html)

Russellxor
28th June 2015, 10:42 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Sivaji%20Ganesan%20Hits%20-%20Sono%20Papade%20HD%20Song%20-%20480P_6193_zpsqytmwpn1.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Sivaji%20Ganesan%20Hits%20-%20Sono%20Papade%20HD%20Song%20-%20480P_6193_zpsqytmwpn1.jpg.html)

http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Sivaji%20Ganesan%20Hits%20-%20Sono%20Papade%20HD%20Song%20-%20480P_4281_zps4fww3xrc.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Sivaji%20Ganesan%20Hits%20-%20Sono%20Papade%20HD%20Song%20-%20480P_4281_zps4fww3xrc.jpg.html)

Russellxor
28th June 2015, 10:44 PM
எமனுக்கு

http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Sivaji%20Ganesan%20Hits%20-%20Sono%20Papade%20HD%20Song%20-%20480P_7629_zpshzhbq5ji.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Sivaji%20Ganesan%20Hits%20-%20Sono%20Papade%20HD%20Song%20-%20480P_7629_zpshzhbq5ji.jpg.html)

எமன்

http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Sivaji%20Ganesan%20Hits%20-%20Sono%20Papade%20HD%20Song%20-%20480P_4633_zpsik8xpgjg.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Sivaji%20Ganesan%20Hits%20-%20Sono%20Papade%20HD%20Song%20-%20480P_4633_zpsik8xpgjg.jpg.html)

Gopal.s
29th June 2015, 07:00 AM
எண்பதுகளுக்கு பிறகு. மூன்றே படங்கள்தான் பிரஸ்தாபிக்க பட்டன என்றாலும் (வணிக வெற்றி வேறு. இளம் நாயகர்கள் கூட திரிசூலம்,வெள்ளை ரோஜா இவற்றை நெருங்க முடியவில்லை தொண்ணுறுகள் வரை.)துணையும்,முதல் மரியாதையும்,தேவர் மகனும், இவர் எக்காலத்திலும் மற்றவரால் நெருங்க கூட முடியாத பிறவி மேதை என்று உணர்த்தியவை.



ஞாபக படுத்த பட்டதால் பிரபுராமின் தேவர் மகன் (அடடா ரசனையின் உச்சம்.எங்கே போனாய்?), எனது முதல் மரியாதை,துணை. திரும்ப.

Gopal.s
29th June 2015, 07:05 AM
Gopal.

அவருடைய பிறந்த தினத்தில் ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணு என்று ரிலீஸ் ஆன ஒரே காவியம் "துணை"(1/10/1982). ஆனால் மறக்க முடியாத பெருமைக்குரிய படமாக அமைந்தது.
இதில் தசரத ராமன் பாத்திரம் பிரமாதமாக படைப்பு பெற்று நடிகர்திலகத்தால் அற்புதமான உருவம் பெற்றது. உயிர்ப்பு பெற்றது.உணர்வு பெற்றது. அமரத்துவம் பெற்றது.

தசரத ராமன்-

1)மகனுடன் தனித்து மகனுக்காகவே வாழும் possessive தந்தை.

2)சமூக உயர் நோக்கம் கொண்ட அரசாங்க அதிகாரி.

3)எந்த மாதிரி மனநிலையில் இருந்தாலும், extrovert ஆக எல்லோரிடமும் (பெண்கள் உட்பட) மிக நட்பாக பழகி,சரளமான நகைச்சுவை உணர்வோடு பழகும் இனிய மனிதன்.

4)தன்னுடன் உடன் இருக்கும் அக்கம்பக்கத்தார் நண்பர்கள் நலனில் மிக அக்கறை செலுத்துபவன்.

5)ஒரு சிறிய அசந்தர்ப்பம் (மகனும் நண்பனும் பேசி இவரிடம் சொல்லாமல்)அவருக்கு வாய்க்க போகும் மிக முக்கியமான (மருமகள் cum மகள்)ஒரு உறவை திரிந்த பார்வையில் பார்க்க வைக்கிறது.

6)கல்யாணத்துக்கு பிறகும் உறவு சீர்படாமல் ,மேலும் திரிவே காண்கிறது.

7)உன்னை சொல்லி குற்றமில்லை,என்னை சொல்லி குற்றமில்லை,காலம் செய்த கோலமடி ரீதியில்.

8)தசரத ராமனின் outdated மனநிலை,புலம்பல்,possessiveness ,disciplinarian attitude (out of care ) சூழ்நிலையை சீர்கெடுத்து,மருமகளை இவரை எதிரியாகவே பார்க்க வைத்து கொஞ்சம் vicious ஆகவே மாற்றுகிறது.

9)எனக்கு பிடித்த இரு அற்புத காட்சிகள். சம்பந்தியிடம் தேவையில்லாமல் பேசி,புலம்பி, (insulting tone கொண்டு )வாங்கி கட்டும் இடம்.வேறு ஏதோ நினைவில் இருக்கும் போது,அலுவலகம் வந்து கூப்பிடும் மகனிடம், சடாரென்று அங்கே இங்கே பார்த்து நினைவு வந்து சுதாரிக்கும் இடம்.

10)தசரத ராமன், தன்னிலை மறந்து ,dejection ,depression ,loneliness ஆகியவற்றில் தவித்து ,வீட்டை விட்டு போகும் நிலைக்கு ஆளாகும் கட்டங்களில் நடிகர்திலகம் தவிர வேறு யாரையேனும் நினைத்தேனும் பார்க்க முடியுமா?

இளைய தலைமுறையினர் பார்த்தே ஆக வேண்டிய எண்பதுகளின் நடிகர்திலகத்தின் பெருமைக்குரிய படம்.(இசையை மறந்து,தவிர்த்து விடவும்)

வியட்நாம் வீடு சுந்தரம்,துரை ஆகியோருக்கு மனமார்ந்த நன்றிகள்.

Gopal.s
29th June 2015, 07:08 AM
Gopal

முதல் மரியாதை- 1985-

திரையில் விரியும் ஆழமும்,அழுத்தமும் கொண்ட கவிதை,மிதமான ஆனால் அபாரமான sensitivity யோடு ,மற்ற வழக்கமான கிராம கதைகளின் பழி வாங்கல்,வன்முறை அம்சங்களே இல்லாமல், அருவியின் ஓசை ,குருவிகளின் இசை, நதியின் சலனம் இவற்றினோடு, அந்த கிராம மனிதர்களின் சிரிப்பு,மகிழ்ச்சி,வலி,மனகிலேசம்,வைராக்கியம், தியாக உணர்வு அனைத்தையும் , நம் மனதை பிசையும் வகையில்,ஒரு அப்பாவி தனம் தொனிக்கும் deceptive simplicity யோடு,சாதாரண நிகழ்வுகளை கொண்டே ஒரு iconic moments அளவு பிரமிப்பை தந்த காவியம் முதல் மரியாதை.

நடிகர்திலகம்,பாரதிராஜா,செல்வராஜ்,கண்ணன்,வைரமு த்து, இளையராஜா,ராஜகோபால் இணைவில் , rhythmic என சொல்லப்படும் ஒத்திசைவோடு,எண்ண எழுச்சி,கிராம அழகியல்,Rustic sensitivity யோடு,மனித மனங்களை ஊடு பாவாகி நெய்த அழகிய அதிசயம்.

நடிகர் திலகத்தின் நடிப்பின் வீச்சை,வீரியத்தை,புதுமையை ,பசுமையை அன்றைய(இன்றைய) இளைய தலைமுறையினர்க்கு கல்வெட்டாய் உணர்த்திய படம்.

மலைச்சாமி(தேவர்) என்ற கிராமத்து பெரியவர்,ஒரு நதியோர குடிசையில் தன் இறுதி நாட்களை எண்ணி கொண்டிருப்பதிலும்,(நெஞ்சு குழிக்குள்ளே ஏதோ ஏக்கம்),காத்திருக்கும் சுற்றத்தார் நண்பர்கள் உரையாடலில் தொடங்கும் கதை பின்னோக்கி பயணிக்கிறது.

மலைச்சாமி ,ஊருக்கு நாட்டாமையாய் மதிப்போடு வாழும் பெருந்தன நடுத்தர வயது காரர். (கல்யாணம் ஆகி இருபது வருடம் ஆன)ஆனால் வீட்டிலே மனைவியால் அவமரியாதையாய் (துரட்டு கம்பு,இருபது ஆடுகளுடன் பஞ்சம் பிழைக்க வந்து,தன்னை மணந்ததால் அந்தஸ்து பெற்றவர் என்று குறிப்பிட்டு ) ,இடித்து பழித்து கொண்டு ,சுருதி-பேதமாய் உறவு நிலை பேதலித்து கிடக்கிறது.நாடோடியாய்,ஊருக்கு பஞ்சம் பிழைக்க வரும் குயில் என்ற இளம் பெண்ணிடம்,வேடிக்கையாய் தொடங்கும் உறவு,பிறகு ஆதரவு தரும் நிலையாகி,ஈர்ப்பு,உணர்ச்சி (உணவும்தான்)பரிமாறும் நிலைக்கு உயர்ந்து, ஊராரால் கவனிப்பு பெரும் நிலைக்கு உயர்கிறது.இதற்கிடையில்,மலைசாமியின் தங்கை மகன்(அத்தையால் அதே முறையில் கேவலமாய் நடத்த படும் இன்னொரு துறட்டு கம்பு,ஆடு கேஸ்)செல்ல கண்ணு,அந்த ஊரில் வாழும் செங்கோடன் என்ற செருப்பு தைப்பவர் மகள் செவளியை காதலிக்க, முதலில் எதிர்க்கும் மலைச்சாமி,குயிலின் ஆவேச வேண்டுகோளுக்கு செவி சாய்த்து,காதலர்களை சேர்த்து வைக்கிறார்.ஆனால் விதிவசமாய்,நகைக்கு ஆசைப்பட்டு ஒருவன் செவளியை கொன்று விட,தடயங்களை வைத்து,தனது மகள் ராசம்மாளின் கணவனே (ஊதாரி,குற்ற செயல்களுக்கு அஞ்சாத பெண் பித்தன்,பொய்யன்,)என்றறிந்து,காவலர்களுடன் பிடித்து கொடுக்கிறார்.செல்லகண்ணுவும் செவளியை மறக்க முடியாமல் தற்கொலை செய்து கொள்கிறான்.வீட்டில் வாய் பேச்சு முற்றும் போது ,பொன்னாத்தா ஒருவனோடு ஓரிரவு படுத்து,வயிற்றில் பிள்ளை சுமந்த நிலையில்,தன் மாமனின் மனம் திறந்த வேண்டுகோளுக்கு செவி சாய்த்து பொன்னாத்தாளை மணந்ததையும்,அவளோடு தாம்பத்ய வாழ்க்கையில் ஈடு படாததையும் குறிப்பிட்டு,ராசம்மா தனக்கு பிறந்தவள் இல்லையென்றாலும்,ஏழேழு ஜென்மத்திற்கும் அவள்தான் தனது மகள் என்று நெகிழ்கிறார்.
ஊரிலுள்ள ஒரு கயிறு திரிக்கும் தொழிலாளி,தற்செயலாய் குயிலுடன் மலைச்சாமி சந்தையில் எடுத்து கொண்ட photo ஐ பொன்னாத்தாளிடன் காட்ட,பஞ்சாயத்து கூட்ட பட்டு,கேள்வி(கேலி?)களால் துளைக்க படும் மலைச்சாமி,ஆமா,அவளை நான் வச்சிருக்கேன்,என்ன முடியுமோ செஞ்சிக்கங்க என்று சொல்லி,குற்றவுணர்வுடன்(நிறைவுடன்?)குயில் வீட்டிற்கு செல்கிறார்.அங்கு தன மனம் திறக்கும் குயிலுடன் கோபித்து வீட்டிற்கு வருபவர்,பொன்னாத்தாள் தாய் வழி உறவுகளை துணைக்கழைத்து ,குயிலை விரட்ட(கொல்ல ?) திட்டமிட,அவர்களிடம் கோபித்து,சவால் விட்டு குயில் குடிசைக்கு வரும் மலைச்சாமி,அவள் அங்கு இல்லாததை கண்டு திகைக்கிறார்.

பின் ஒரு கொலை குற்றத்திற்காக சிறை செல்லும் குயில்,தான் கொன்றது பொன்னாத்தாளிடன் ஓரிரவு தகாத உறவு கொண்ட,குழப்பம் விளைவிக்க ஊருக்கும் வரும் ,மயில் வாகனன் என்ற மிருகத்தையே என்றும்,மலைச்சாமி குடும்ப மானம் காக்கவே அவ்வாறு செய்ததாக சொல்லி,இதை கோர்ட் இல்,வெளியிட கூடாது என்று சத்தியம் வாங்குகிறாள்.மலைச்சாமி,தன மனிதில் இருப்பவள் குயில் ஒருவளே என்று மனம் திறக்கிறார்.
முதல் காட்சியின் ,தொடர்பாக, போலீஸ் காவலில் வரும் குயிலை கண்டதும், சிலிர்த்து மலைச்சாமி உயிர்துறக்க, குயிலும் செல்லும் வழியில் உயிர் துறக்கிறாள்.

பற்பல யூகங்களுக்கு இடமளித்து,பார்வையாளர்களின் புத்திசாலித்தனத்திற்கு தீனி போட்ட திரைக்கதைகள்,அகில இந்திய ரீதியில் அலசினாலும்,சொற்பமே மிஞ்சும்.அவற்றுள் ,முக்கியமான ஒன்று செல்வராஜும்,பாரதி ராஜாவும் இணைந்து
அளித்த இந்த அற்புதம்.ஆண் -பெண் உறவுகளின் எதிர்பார்ப்புகளை,ஆசைகளை,முரண்களை,நிராகரிப்புக ளை,சி தைவுகளை , இதை விட அழகாய் சொன்ன படங்கள் வெகு சிலவே.

Carl Jung psycho -analysis முறையில், உணர்வுகள்,எண்ண நீட்சிகள்,அனைத்திலும், தன்னுணர்வற்ற(sub conscious )உள் நினைவுகளிலும், தன நிலை,இருப்பு இவைகளில் பாதுகாப்பின்மை ,தாழ்மையுணர்வு,உளவழுத்த நெருக்கடி,அதனால் விளையும் உறவின் சீர்கேடு ,இவற்றை நன்கு உள்வாங்கி, பூடக (suggestive )முறையில் அமைந்த திரைகதை வசனம் , Film -institute இல் பாடமாகவே வைக்கலாம்.பெண்களுக்கு அவர்களின் பெண்மையை உதாசீனம் செய்து மதிக்காதோரிடம் ,எந்த நிலையிலும் காதல் உணர்வு வராது என்பது உண்மையோ,அதைப்போல,ஆண்களுக்கு,visual arousal and provider 's pride என்பது காதல் உணர்வுக்கு அவசியம்.

மலைசாமியோ, தன் நிலை பற்றிய தாழ்மையுர்வை சுமந்து திரிபவன் .தன் மாமன் சுய நலம் கருதி காலில் விழுந்ததற்கே ஆயுளுக்கும் செருப்பு போடாமல் திரிபவன்.தன் நிலைக்கு தான் என்றுமே அடைய முடியாத மாமன் மகளை, அவள் சமூக அறத்திற்கு புறம்பாக நடந்து பிடியும் பட்டதால்,அடைந்து விட்டாலும் ,அவளை ஆண்டு அனுபவிக்காமல்(சொத்து அந்தஸ்தை அனுபவிக்க தவறவில்லை)அதற்கு தன் தாழ்மையுணற்சியே காரணம் என்ற உண்மையை வசதியாக மறந்து(மறைத்து),மனைவியின் பழைய தவறை சொல்லாமல் சொல்லி தினமும் அவள் பெண்மையை அவமதித்து,செருப்புக்கு சமமாகவே நடத்துகிறார்.(செருப்பையும் அணியவில்லை.இந்த செருப்பையும் அணையவில்லை)
படம் முழுவதும் ,கணவன் என்ற உரிமையை நிலை நாட்டாமல் ,தானும் தன சொந்தங்களும்(தங்கை மகனையே இழி பட விடுபவன் என்ன தலைவன்?)இழிவு படுத்த படும் போது வாய் திறக்காமல் சகித்து,கெட்டு போன வரலாற்றை சொல்லி உதைக்கும் அளவு செல்வது,பல கோடி மௌன கதைகள் பேசவில்லையா?மனைவிடமும் இச்சையை தீர்த்து கொள்ளாமல்,தன் sexual frustration ஐ ,தன் நிலைக்கு தாழ்வான வறிய பெண்களிடம்வேவ்வேறு நிலைகளில் வெளி காண்பிக்கிறார்.(வார்த்தைகளில்,கிண்டலாய்,வம்பு க்கிழ த்து தொட கூடாத இடங்களில் தொடுவது உட்பட)அவருடைய interraction முழுக்கவே ,நிலை தாழ்ந்தவர்களிடன் மட்டுமே(திருமணத்திற்கு பின் இவர் நிலை உயர்ந்து விட்ட போதிலும்).பஞ்சாயத்து காட்சியில் அந்த நிலை தாழ்ந்தவர்களே ,இவர் அற வீழ்ச்சியால் உயர் நிலை அடையும் போது அவர்களை எதிர் கொள்ளவே துணிவில்லை இந்த தலைமை நாட்டாமைக்கு?தன் சொந்த மனைவியிடமும், மற்ற பெண்களிடமும் நிரூபிக்க இயலா ஆண்மையை, கல்லை தூக்கி குயிலிடம் பௌருஷத்தை காட்டும் பரிதாப பாத்திரம் இந்த மலைச்சாமி.

தன்னை சார்ந்தே இயங்கும்,தன்னையே உலகமாக்கி வாழும்(அப்பா கூட weak ஆன ஒப்புக்கு சப்பாணி)குயிலிடம் ஈர்க்க படுவதில் என்ன அதிசயம்?குயில் அவருடைய இடத்தை அவருக்கு அளிக்கிறாள். கேலி கிண்டலால் அவரின் தகைமையை ,இளமையை திருப்புகிறாள்.அவரை விட தாழ்ந்தவள் என்று ஒவ்வொரு கணமும் மலைசாமியின் weak ஆன ego விற்கு தீனி கொடுக்கிறாள். தன் சம்மதம் கேட்க கூட அவசியமின்றி வெச்சிருக்கேன் என்று சொல்லும் உரிமையை, dominance வழங்கும் இந்த உறவு மலைசாமிக்கு இனிக்காதா பின்னே?குயில் வாழ்க்கை நிலையாமையில் உழலுவதால் ,வலிமையான துணையின்றி (தகப்பனும் பலவீனன்) ஏற்படும் electra complex , மலைசாமியின் நிலையறிந்து ,அடைவதும் சாத்தியம் என்ற கைகெட்டும் தூரத்தில் பழுத்த காதலை,அதனால் ஏற்படும் குற்ற உணர்வை,தியாகத்தால் மெழுகுகிறாள் .

பொன்னாத்தா ,தன் தகுதிக்கு குறைந்த அத்தை மகனை மணந்தாலும்,அவன் உதாசீனத்தால்(பெண்மை, மனைவி என்ற ஸ்தானம் மதிப்பு) அவளின் அற வீழ்ச்சியை வைத்து நகையாடி கொண்டிருக்கும் கணவனை, தன் பண செருக்கையும்,provider role கூட செய்ய முடியாத கணவனை ,எதிர் கொண்டு ,மூர்க்கத்தால் தற்காலிக வெற்றிகளை சுவைத்து,பெரும்துக்கங்களை கரைக்கிறாள்.(பின் என்ன sexual frustration ஐ மலைச்சாமி போல் ,இந்த பெண் ஜன்மத்தால் demonstrate செய்ய முடியாதே?).தன்னை மதியாத கணவன் முன் அழகாகவும்,சுத்தமாகவும் இருந்துதான் என்ன பயன்?ஆனாலும்,கணவனின் அற செருக்கில் பெருமையும்(ஜனகராஜிடம் வெளியிடுவார்),அவன் வேறொரு பெண்ணிடம் காட்டும் ஈடுபாட்டை அறிந்ததும் சீறும் possessiveness உம் ,அவளுக்கு மலைசாமியுடன் உள்ள மிச்சமிருக்கும் காதலை உணர்த்துகிறதே?(மலைசாமியிடம் மருந்துக்கும் காண படுவதில்லை).உலகத்தின் பார்வையில் தன் ஒழுக்கங்கெட்ட முத்திரையை மறைக்க இந்த பத்ரகாளி வேஷம் அவசியமா?(மயில் வாகனன் விவரிக்கும் பொன்னாத்தாள் அவ்வளவு பிடாரியல்லவே!!)தன் கணவனின் குற்றத்தை பஞ்சாயத்திடமும்,உறவுகளிடமும் தம்பட்டம் அடிப்பதில்,தன் பழைய களங்கத்தை கரைக்கிறாளா?

இந்த முக்கோண ஆண் -பெண் விவரிப்பில்,அழகான திரைகதை,மௌன காட்சி(சாட்சி?),ஒன்றிரண்டு வசன குறிப்புகள்,பார்வையாளர்களின் இட்டு நிரப்பும் பயிற்சிக்கு சவால் விடுகிறது.


கேமரா வழியாக கதை சொல்ல தெரிந்த ,திரைகதையில் பயணிக்க தெரிந்த,நடிப்பின் பலம் அறிந்த இயக்குனர்,உன்னத உலக நடிகன் இணைவில்,மற்ற கதாபாத்திரங்களும் உணர்ந்து நடித்ததால்,நடிகர்திலகத்தின் வீச்சு பல மடங்கு ஜொலிப்பதில் ஆச்சர்யம் என்ன? அவரின் tired looking தோற்றத்தில், மின்னி மறையும் வலுகட்டாய மகிழ் மலர்ச்சியில்,ஓராயிரம் மடங்கு இந்த melancholic பாத்திரம் மெருகேறியது,ஒரு தன்னிகழ்வு.

தனியாக,குடிசையில் குயிலை எதிர் பார்த்து,அவளுக்காக உயிரை பிடித்து வைத்திருப்பதில் தொடங்கி,(நெஞ்சு குழிக்குள் ஏக்கத்தை பிரதிபலிப்பார்),வீட்டில் ,ஈரமில்லா மனைவியின் நடத்தையை தளர்வான ஏக்க சோர்வோடு எதிர் கொள்பவர்,சிட்டு குருவிகளை கூட கட்ட அழைத்து சுதந்திர உணர்வு கொள்வார்.பெண்களை வம்புக்கிழுக்கையில் 75% நட்பு,25%sex உணர்வை(தட்டுமிடம் அப்படி)அழகாய் வெளிகொணர்வார்.(உலகத்திலேயே எந்த நடிகனாலும் முடியாத சாதனை)குயிலிடம் ஒரு சிறுவனை போல் மந்தகாசம் காட்டி,இளகி சிரிப்பார்.வரப்பு மேட்டில், நெல் புடைக்கையில்,கையை சொரிந்து விட்டு கொண்டு கூலியாட்களிடம் காட்டும் வாஞ்சை,ராசம்மா புருஷனிடம் அவனை திருத்தவே முடியாது என்ற பாவனையில் காட்டும் அலட்சிய ஏமாற்றம்,சந்தை காட்சியில் படி படியாய் இறுகும் நட்பு,மீன் பிடிக்கையில் செல்ல அதட்டலோடு காட்டும் அன்னியோன்யம்(உன் முந்தானையே என்கிட்டே கொடுக்கிறவ )காட்டி தன துண்டை கொடுத்து,தங்கள் இணைவின் அதிர்ஷ்டத்தை ரசிக்கும் அழகு,பூங்காத்து பாட்டில் எனக்கொரு தாய் மடி கிடைக்குமாவில் காட்டும் தீரா ஏக்கம் ,மெத்தை வாங்கி தூக்கத்தை வாங்காத இயலாமை சோகம்,பெண் குயிலை பார்த்ததும் இன்ப அதிர்வு,குயிலின் சவாலை ஏற்று கல்லை தூக்கியதும் ,அவள் பார்த்து விட்ட கூச்சத்தில்,கல்லை ஏடா கூடமாய் விடும் தடுமாற்றம்,மீன்குழம்பு காட்சியில் விளையாட்டாய் துவங்கி,தன் தாயின் அன்பு கலந்த அன்னத்துடன் ஒப்பீடு செய்து ,செல்லமான வேறுபாட்டை சொல்லி நெகிழ்வது,தன் மாப்பிள்ளையை பிடித்து கொடுத்து விட்டு,பேரனிடம் பேசுவது போல் மகளுடன் மன்றாடும் சோக நெகிழ்வு,குயிலிடம் மனதை பறி கொடுத்தாலும் தனக்கு தானே நொண்டி சமாதான denial ,மனைவியை காலால் உதைத்து ,அவள் குறையை குத்தி, செருப்புக்கு சமம் என்று சொல்லும் தன்னிரக்கம் கலந்த குரூர கோபம் ,ஊர் பஞ்சாயத்தில் வச்சிருக்கேன் என்று பலவீனமான வீம்புடன் சொல்லி விட்டு,குயில் காதலை வெளியிட,போலியாய் பம்மும் பாங்கு,உறவு கார்களால் சீண்ட பட்டு குடிசைக்கு சீற்றத்துடன் வந்து அவள் இல்லாததை கண்ட அதிர்ச்சி ஏமாற்றம் என சொல்லி கொண்டே போனாலும்,நடிகர்திலகத்தின் high light மரண காட்சியே. நாட்டிய சாத்திரத்தில் சொல்லிய படியே அந்த மரணத்தை நிகழ்த்தி காட்டுவார். உயிர் போவதை அப்படியே காணலாம். ஒரு தேர்ந்த நாட்டிய விற்பன்னர் கூட இதை இவ்வளவு perfect ஆக செய்ததில்லை(வேறு யாராலும் இது சா த்திய படாது)

வடிவுக்கரசி பொன்னாத்தாள் பாத்திரத்தில், அதற்கு தேவைப்படும் greyish black shade இல் பின்னியிருப்பார்.இவரின் நடிப்பு, நடிகர்திலகத்திற்கு இன்னும் ஏதுவாய் ,தூக்கி கொடுக்கும்.குயில் சுலபமான பாத்திரம்.ராதாவும் குறை வைக்கவில்லை(ராதிகா குரல் அருமை).எனக்கொரு உண்மை தெரிஞ்சாகனும் வீராசாமி,ஜனகராஜ்,அருணா, ரஞ்சனி ,தீபன் எல்லோருமே பாரதி ராஜா என்ற ring -master இனால் நன்கு பயன் படுத்த பட்டுள்ளார்கள்.

இளைய ராஜாவுக்கு அல்வா சாப்பிடுவது போல்.தோதாய் பின்னியிருப்பார்.ஏரியிருக்கு ,குருவி குருவி,ஏறாத மல மேல,பூங்காத்து, அந்த நிலாவத்தான்,ராசாவே என்ற நல்ல பாடல்களுடன், re -recording இலும் பின்னணி யிசையும்,rustic melody ,natural sounds ,ஆகியவை கலந்து joy ,melancholy கலந்த counter -point ஆக தொடுத்திருப்பார்.
வைரமுத்துவும்,வேஷம் மாறி சாமிக்கு மகுடம் ஏற விழைந்திருப்பார்.ஆனால் மத்திய அரசின் வேஷம் மாறவில்லை.
பாரதிராஜாவும்,கண்ணனும் சில shotகள் உலக பட தரத்தில் பண்ணியிருப்பார்கள்.(முக்கியமாய் ஆரம்ப சில காட்சிகள்)

கி.ராஜ் நாராயணின் ,கோபல்ல கிராமத்திலிருந்து உருவி, செல்லகண்ணு-செவளி துணை கதையில் அழகாக,முக்கிய கதை போக்கு கெடாமல் உபயோகித்திருப்பார்கள்.செல்வராஜின் கிழக்கே போகும் ரயிலை பார்த்து, அடடா,இவர் சிவாஜிக்கு எழுதினால்...என்று ஏங்கிய ஏக்கம் போக்க,அதை விட சிறப்பாகவே சிவாஜிக்கு இப்படத்தை தந்திருக்கிறார்.தமிழிலேயே மிக மிக சிறப்பான வசனம் கொண்ட படம் என்று இதைதான் நான் தேர்வு செய்வேன்.ஒரு அட்சரம் கூட எடுக்கவோ,மாற்றவோ,சேர்க்கவோ முடியாத ஒரு கச்சிதம்.அழகுணர்ச்சி,யதார்த்தம்,மனோதத்துவம்,ஜ னரஞ்ச கம் எல்லாம் சரி-விகிதமாய், அறிவும்-உணர்ச்சியும் சரிக்கு சரி கலந்த அதிசயம்.(ஜானகிராமன் மோக முள் கதை போல)

பாரதிராஜாவின் மிக சிறந்த படைப்பு இதுதான்.அனைத்து நல்ல சினிமா ரசிகர்களின் சிறந்த பத்தில் நிச்சயம் இடம் பெரும் உலக-தரமான திரை படம்.

Gopal.s
29th June 2015, 07:12 AM
என்னை மிக மிக கவர்ந்த P _R என்ற அதிசய இளைஞனின் அற்புத பதிவு. எனக்கு இந்தியாவின் ஒரே உலக அதிசயம் எழுதும் inspiration கொடுத்த சிறந்த பதிவு.(மார்ச் 2008 பாகம்-4 இல் வெளியானது)

தேவர் மகன்- 1992

மேதை என்ற சொல்லை நாம் தண்ணியைப் போல செலவிடுகிறோம். பட்டங்களும் ஸ்துதிகளும் நிறைந்த நம் தமிழ் சினிமாவால் கோடம்பாக்கத்தில் ஒரே மேதை நெரிசல். துதிக்கப்படுகிறவர்களைப் பற்றி ஏதாவது தெரிந்திருந்தால் பிழைத்தோம். வெறும் துதிகளை வைத்து மதிப்பீடுகளை உருவாக்க முனையும்போது படுதோல்வி தான். சக்ரவர்த்தியின் புத்தாடைகள் ஜொலிப்பதைக் காணும் ஆரவாரம் தான்.

இச்சூழலில் உண்மையான மேதமைக்கு மதிப்பு குறைந்து போவது இயற்கை. அவ்வாறு ஒன்று இருக்கிறதா என்ற சந்தேகங்கள் எழும் சூழல். இத்தகைய சூழலில் பிரமிக்கவைக்கும் திறமையாளன் நிகழ்த்துவது என்னவென்றால் அவன் மீது ஏற்படுத்தும் மதிப்பு மட்டுமல்ல, அவன் துறை மீதே ஏற்படுத்தும் ஒரு மதிப்பு நம்பிக்கை. கிட்டத்தட்ட உண்மை மீதே நம்பிக்கை வரவழைப்பதைப் போல.

இத்தகைய ஒரு அதிசய நடிப்பு தான் சிவாஜி கணேசன் 'தேவர் மகன்' படத்தில் நிகழ்த்தியது. ஓடாய் தேய்ந்து போய் ராஜ் டிஜிடல் ப்ளஸ்ஸில் மட்டுமே காண்பிக்கப்படும் தமிழ் படங்களைக்கூட பரவலாகப் பார்த்தவன் என்ற முறையில் கொஞ்சம் அழுத்தமாகவே சொல்கிறேன்: "நான் பார்த்ததிலேயே சிறந்த நடிப்பு" என்றால் இதைத்தான் சொல்ல வேண்டும்.

இது என் விருப்பத்தில் மிகையான வெளிப்பாடு மட்டும் அல்ல.
இது ஒரு 'அப்ஜெக்டிவ்' (இதற்கு தமிழ் என்ன ?) உண்மை என்று பின்வரும் பதிவுகளில் நிருவ முயல்வேன்.


நடிப்பு என்பது என்ன ?

ஐரிஷ் எழுத்தாளர் ஆஸ்கர் வைல்ட் கலையின் தன்மையைப் பற்றிய தனது குறுங்கட்டுரையில் சொல்கிறார்:

'உணர்ச்சி' என்பதை பொறுத்தவரை நடிகனின் வித்தையே , கலைகளுக்கு முன்மாதிரி: From the point of view of feeling, the actor's craft is the type (of all art).

இது வைல்டின் குறும்பு. ஏன் ? நடிகனின் வித்தையின் மகிமையே அவன் நிகழ்த்திக்காட்டும் உணர்ச்சிகள் எல்லாமே பொய் என்பது தானே. இங்குதான் 20ம் நூற்றாண்டின் நடிப்பியல் வரலாற்றில் முக்கியமான இரு வாதங்கள் இதைச் சுற்றியே இருக்கின்றன.

ஒன்று: பாத்திரத்தோடு முழுவதுமாக இணைவது. இதை ரஷ்ய நிபுணர் ஸ்டானிஸ்லாவ்ஸ்கியின் முறை (மெதட் ஆக்டிங்) என்று சொல்வார்கள். பாத்திரத்தின் உந்துதல்கள், மனநிலை, பேசும் முறை எல்லாவற்றையும் புரிந்துகொண்டு பாத்திரமாகவே மாறிவிடுவது - தமிழ் சினிமாவைப் பொறுத்தவரையில் அர்த்தம் நீங்க அடித்துத் துவைக்கப்பட்ட ஒரு சொல்லாடல் இது

இதற்குமேல் இங்கு நிகழ்வது நடிப்பு என்று கூறுவதே கடினம். கொடுக்கப்பட்ட சூழ்நிலையில் அப்பாத்திரம் எவ்வாறு பேசும், பிரதி-வினைக்கும் (ரியாக்டுக்கு மோசமான மொழிபெயர்ப்பு - மேலான சொல் இருந்தால் கூறவும்) என்பதை அவ்வாறு வாழ்வது தான் நிகழ்கிறது.

இதிலிருந்து பிரிந்த கிளை நடிப்பியல்களின் (உம். லீ ஸ்ட்ராஸ்பெர்க் என்ற நிபுணரின் முறைகள்) மாணவர்கள்/விர்ப்பன்னர்கள் அமெரிக்காவின் தலைசிறந்த நடிகர்களான பிராண்டோ, டி நீரோ, ஹாஃப்மன் யாவரும்.

இன்னொரு முறை: பாத்திரத்திற்கு வெளியே நின்றுகொண்டு அதை ஆழ்ந்து கவனித்து நடிப்பது. இதில் நடிப்பது என்பது மிகுந்த பிரக்ஞையுடன் நிகழ்வது. சொடக்கிட்ட நொடியில் நிஜ உலகுத்துக்கும் நடிப்புலகத்துக்கும் பாய முடிய வேண்டும். வேறு பெயர்கள் இல்லாதலால் இதற்கும் வைல்ட் பெயரையே வைத்துக்கொள்ளலாம் ("என் மேதமையை என் வாழ்க்கையில் செலவிடுகிறேன், என் படைப்புகளில் என் திறமையை மட்டுமே பயன்படுத்துகிறேன்"...I reserve my genius for my life, I only use my talents in my works )

இது பெரும்பாலும் லாரென்ஸ் ஒலிவியெ போன்ற பிரட்டிஷ் நடிகர்கள் கையாண்ட உத்தி. இரு சாராரும் சந்தித்துக் கொள்வதைப் பற்றிய சுவாரஸ்யமான பல தகவல்கள் உண்டு.

காட்டாக: மாரதான் மான் என்ற அமெரிக்கப் படம். ஒலிவியேவும் (வைல்ட் பள்ளி) டஸ்டின் ஹாஃப்மனும் (ஸ்ட்ராஸ்பெர்க் பள்ளி) இணைந்து நடிக்கும் ஒரு காட்சி. அதில், மூன்று நாட்களாக தனியறையில் அடைக்கப்பட்ட ஹாஃபமனைக் காண வில்லன் ஒலிவியெ வருகிறார்.

அக்காட்சிக்குத் தன்னை தயார் செய்து கொள்வதற்காக ஹாஃப்மன் மூன்று நாட்கள் உண்ணாமல் இளைத்து கண்ணின் கீழ் கருவளையங்கள் வந்து சோர்ந்து கிடந்தாராம். படப்பிடிப்புக்கு வந்த ஒலிவியெ ஹாஃமனைப் பார்த்தார். அவர் உடல்நலத்தைப் பற்றி இயக்குனர் ஜான் ஷ்லெசிங்கரிடம் விசாரித்தபோது, ஹாஃப்மனின் "உடல்வருத்த முயற்சிகளைப்" பற்றி அவர் (சற்று பெருமையாக) சொல்லியிருக்கிறார். ஒலிவியெவின் பதில் " ஓ...அந்த தம்பி "நடிப்பு" என்பதைப் பற்றி கேள்விப்பட்டதில்லையா ?" (Hasn't the young boy heard of acting)

கலைஞன் கலைக்காக செய்யும் முயற்சிகளை ஒதுக்கிவிட்டு, படைப்பை மட்டுமே ரசிக்க முடிந்துவிட்டால் (ஊடகங்களின் செய்திப்பொழிவால் இது கடினமாகிக்க்கொண்டே வருகிறது), மாமேதமையின் அடையாளம் வைல்ட் பள்ளியிலேயே என்று தோன்றுகிறது. பல வகை நடிப்புக்குச் சொந்தக்காரர்களாக, ஒரே சமயத்தில் ஒரே சூழ்நிலைக்கு நினைத்த மாத்திரத்தில் பலவகை பாணிகளை நிகழ்த்திக்காட்டவல்லவர்களாக அவர்கள் தான் இருப்பார்கள்.

எனக்கு புரிந்தவரை சிவாஜி இவ்வகை தான். ஆழமான கவனிப்பும், அபாரமான உள்வாங்குதலும், அதிசயமான திறமையும் இணைந்த ஒரு நடிப்பே பெரிய தேவரை உருவாக்கியது.

தேவர் மகன் கமல்ஹாசன் எழுதிய காட்ஃபாதர்.

நியூயார்க்கின் இத்தாலிய மாஃபியா குடும்பங்களில் ஒன்றான கொர்லியோன் குடும்பத்தின் தலைவன் விடோ கொர்ர்லியோன்.
தன் தொழிலில் ஈடுபட்டிருக்கும் சான்டினோ , ஃப்ரெடோ என்ற தனது இரு மகன்களையும்விட தன் இளைய மகனான மைக்கேல் மீதே அவருக்கு நம்பிக்கை, பிரேமை. ஆனால் மைக்கேலோ எதிர் தரப்பு அடையாளங்களைத் தேடுகிறான். ராணுவத்தில் சேர்கிறேன், ப்ரோடஸ்டன்ட் பெண்ணைக் காதலிக்கிறான் (இத்தாலிய-அமெரிக்கர்கள் பெரும்பாலும் குடும்ப உறவுகளையும், கத்தோலிக்க மதத்தையும் பெரிதும் மதிப்பவர்கள்), குடும்பத் தொழிலிலிருந்து எவ்வளவு தூரம் செல்ல முடியுமோ செல்ல முயல்கிறான். சூழ்நிலைகளின் மாற்றங்கள் எவ்வாறு அவனை தன் இயல்பான அடையாளங்களிடம் கொண்டு போய் சேர்த்துவிடுகின்றன என்பதுதான் கதை. காட்ஃபாதர் என்ற பட்டம் மைக்கேலை(யும்) குறிக்கக்கூடும் சாத்தியங்களைப் படம் வளர வளர வலுப்படுத்துகிறது.

தேவர் மகன், இந்த எலும்புக்கூட்டை எடுத்துக்கொண்டு வரையப்பட்டது. தமிழ் சினிமா வரலாற்றில் மிகக் கச்சிதமாக ஏழுதப்பட்ட திரைக்கதைகளில் தேவர் மகன் முன்னணி வகிக்கிறது. நம் அடையாளங்களை நாம் மறுக்க முடியுமா ? கல்வி, அன்னிய (உயர் ?) கலாசார பரிச்சயத்தால் நம் சூழலிலிருந்து விடுவித்து கொள்ள முடியுமா ? இல்லை நம் கலாசார அடையாளங்களை, அவற்றின் அழுக்குகளோடு ஏற்றுக்கொண்டு உள்ளிருந்து மட்டுமே மாற்ற முயல முடியுமா ? கடைசியில், மிக முக்கியமாக: நமது அடையாளங்கள் நமது இயல்புகளில் பிரிக்கமுடியாதவாறு பிணைந்திருக்கின்றனவா ? (தேவர் மகன் தேவரா ?) இத்தகைய கேள்விகளை அழகாக எழுப்பும் படம். இந்தியச் சூழலில் இவை எல்லாம் மிக முக்கியமான சமூகக் கேள்விகள். காட்ஃபாதருக்கு இப்படி ஒரு (இந்திய) சமகோடு யோசித்ததே சாதனை தான்.

சூழ்நிலைகள் ஒப்பிடத்தக்கவை என்றாலும் விடோ கொர்லியோனும் பெரிய தேவரும் முற்றிலும் வேறுபட்ட மனிதர்கள். நியாய தர்மம் பற்றியா விவாதங்கள், கடமை/பொறுப்பு ஆகியவற்றை பற்றிய உரையாடல் எல்லாம் டான் விடொ செய்ய மாட்டார். மைக்கேலிடம்: " உன்னைத் தானே நம்பணும்..வேற யாரு இருக்கா நம்புறதுக்கு ?" என்ற உருக்கமான கேள்வியை கேட்க மாட்டார்.தேவர் மகனில் அந்த மையக் காட்சி தான் பெரிய தேவரின் முழு சித்திரத்தை நமக்கு அளிக்கிறது. இருந்தாலும்...அகர வரிசையில் வருவோம்.

படத்துவக்கத்தில் மகன் சக்தியை பற்றிய எதிர்பார்ப்பு, ஆனால் இளைக்காத தற்பெருமை ("எல்லாம் பழைய முறுக்குத்தேண்டி"). மகனைக் கண்டதும் அவர் காட்டும் பெருமிதம். அதன் பின் சக்தி காரை நோக்குவதால் 'அங்கு என்ன இருக்கிறது' என்ற ஆர்வப்பார்வை. பானுவைப் பார்த்ததும் வரும் இயல்பான தயக்கம் (கிட்டத்தட்ட வெறுப்பு). இதுவரை அந்தக் காட்சியில் வசனம் இல்லை என்பதே பார்ப்பவர்கள் உணர வாய்ப்பில்லை. "ஆரு இவுக ?" என்ற கேள்வியின் தொனியும் "வாங்க" என்பதில் உள்ள வரவேற்பின்மையுமே கதைகள் சொல்லும். நடிகனின் குரல் செய்ய வேண்டியவற்றை இதற்கு இணையாக சுறுக்கமாக காட்ட இயலாது.

பானுவைப் பற்றிய ஆவலை, மிடுக்கு குறையாமல் கேட்பது அடுத்த காட்சி.

"சீராலா""என்ன.......ளா ?" என்பதில் அந்த எள்ளலின் ஆரம்பம்.

வட்டார வழக்கையும், பேச்சு வழக்கங்களையும் பரிபூரணமாக உள்வாங்கிக்கொண்டு பேசப்பட்டது: "ங்கொண்ணேன் ஸ்டேஷ்னுக்கு வந்தாரா ?"
தனது ஃப்ரெடோ குடிகாரனாக இருப்பதைப் பற்றிய வருத்தத்தை இக்காட்சியிலேயே பதிவு செய்கிறார். சிரிப்பில் !
இதைப் பற்றிய கோபம் இரண்டு இடங்களில் வருகிறது, ஒரு இடத்தில் கிண்டலாக, ஒரு இடத்தில் உக்கிரமாக :

"ச்சாப்டர ஓட்டலா ....அட போடா....அம்மூர்ல எவன்டா ஓட்டல்ட ச்சப்டுவியான்.....ங்கொண்ணென் மாதிரி எவனாச்சும் இருந்தா அவன் ச்சப்டுவியான்"

"என்ன ஐயா, கண்ணை மூடி திறக்கிறதுக்குள்ள வேலியை போட்டுப்புட்டாய்ங்க"
"நீங்க ஏன் கண்ணை மூடுறீய ? திறந்துகிட்டே இருக்கணும்......நாம தான் கண்ணை திறந்திட்டிருக்க நேரம் ரொம்ப குறைச்சல் ஆச்சே"

இதுபோன்ற கலைஞர்களுக்காக நாம் கண்னை திறந்திருக்கும் நேரம் குறைச்சல் தான்

எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் முக்கியமான பாத்திரங்க்களை பார்வையாளர்களுக்கு அறிமுகம் செய்திவிடவேண்டும் என்பது ஒரு திரைக்கதை நியதி. நாவலாசிரியரைப்போல "அவர் கொஞ்சம் பழமைவாதி, ஆனால் பாசக்காரர், சர்காஸ்டிக்,..." என்று ஒரே வரியில் சொல்லிவிட்டு விரல் சொடக்கிக்கொண்டுவிடும் வசதி திரையெழுத்தாளனுக்கு இல்லை. காட்சிகளில் நீட்டிக் காட்டவேண்டும். சம்பவங்களை உருவாக்க வேண்டும். அப்படியும் அவை உதாரணங்களாகவே இருக்கும். ஒரே காட்சியில் அதிக பரிமாணங்களைக் காட்டுவது கஷ்டம்.அவற்றைத் தெளிவாக பார்வையாளனைக் குழப்பாமல் கொண்டுபோய் சேர்ப்பதும் எளிதல்ல.

'போற்றிப் பாடடி' பாடலில் காட்சித்தொகுப்புகளில் பல அழகான இடங்கள். வசனங்கள் எல்லாம் யாருக்குத் தேவை என்பது போல. மனநிறைவுடன் திருமணம் நடத்தி வைப்பது, தான் கடந்து போகும்போது எழுந்துகொள்ளும் சாப்பிட்டுக்கொண்டிருப்பவார்களை கையசைத்து அமரச் சொல்வது, கம்பீரமாக உட்கார்ந்து துதிப்பாடலைக் கேட்பது இவையெல்லாம் சிவாஜி தூக்கத்தில் கூட செய்வார்.

படிக்கக் கொடுத்துவிட்டு குறுக்கே பேசிக்கொண்டிருக்கும் மகனை "படிக்க விடு" என்று சைகை செய்வார். சந்தோஷமாக துணி வழங்கிக்கொண்டிருப்பரை பானு படம்பிடிக்க "என்ன இது" என்பதைப்போல் பானுவையும் "வேண்டாம் என்று சொல்" என்று சக்தியையும் சொல்வார். அதன் பிறகு முகத்தில் ஒரு இறுக்கம் குடிகொள்ளும். இவையெல்லாம் 2-3 நொடிகளில், வசனமில்லாமல். பாடல் முடிந்ததும் இந்த மனிதரை நமக்கு பல நாட்களாக தெரிந்தது போன்ற பிரமையை எழுத்தாளரும் நடிகரும் சேர்ந்து உருவாக்கிவிடுகிறார்கள்.

புரிந்துகொள்ளப்படுவது ஒரு சொகுசு (It is a luxury to be understood) என்று அமெரிக்க கவிஞர் எமர்ஸன் சொல்கிறார்.நமக்கு பிரியமானவர்கள் நம்மை புரிந்துகொள்ளவேண்டும் என்பது ஒரு ஆதாரமான எதிர்பார்ப்பு. அவர்களிடம் தன்னை 'நிரூபித்து'க் கொள்ள வேண்டிய நிலைமை, சொல்லிப் புரியவைக்கப்படவேண்டிய நிலைமையே வருத்தமனாது. பெரிய தேவர் தன் மகனால் கூட புரிந்துகொள்ளப்படவில்லை என்ற வருத்தத்தைத் தெளிவாக்கும் காட்சி அந்த உணவருந்தும் காட்சி.

பானுவின் மீது தனக்கிருக்கும் அதிருப்தியை பெரிய தேவர் பதிவுசெய்வதாக காட்சி ஆரம்பிக்கும்.

ஐயயே.... உங்களைப் பொம்பளையாவே நினைக்கலீங்களே......இந்த வீட்டுக்கு வந்திருக்கிற விருந்தாளியாத்தான் நினைக்கிறேன்.
அரைச் சிரிப்புடன் சொல்லும் அழுத்தமான வார்த்தைகள்.

தன் மகன் இவ்வூரில் (இவ்வுருக்கு) எதுவும் செய்வதாக இல்லை, செய்ய முனையும் வியாபாரம் எல்லாம் வெளியூரில் என்பதே அதிர்ச்சியாக இறங்குகிறது. ஆனால் ஆச்சர்யமாக வெளிப்படுகிறது:

"நீ எப்பிடி செய்வே ?"

"....பானுவோட அப்பா ஹொடேலியர்....அவருக்கு இதெல்லாம் நல்லாவே தெரியும்.."

"ஓ...அவருக்கு எல்லாம் தெரியுமோ.....இந்தப் பொண்ணு இங்க உன் கூட வந்திருக்கிறதும் தெரியுமோ ?"
இந்த கடைசி வரியில் சிவாஜி காட்டும் விஷமமும், கிண்டலும், அதிருப்தியும் விவரணைக்கு உட்பட்டவை அல்ல.

தான் தேர்ந்தெடுத்த பெண்ணை தந்தையின் கண்களில் உயர்த்த சக்தி அவர்கள் குடும்பத்தைப் பற்றி பேசுவான். இதில் தான் அவன் தன் தந்தையை கொஞ்சம் கூட புரிந்துகொள்ளவில்லை என்று புலப்படும். ஜாதி, செல்வ அந்தஸ்து போன்ற விஷயங்களுக்காகவே பானுவை அவர் நிராகிரப்பதாக நினைக்கிறான்.

"...பெரிய பணக்காரங்க...அங்க ராஜூன்னு சொல்வாங்க....நம்ம தேவர்-க்கு இணையான கேஸ்ட் தான் யா"
பணத்தைப் பற்றி கமல் சொன்னதும், சிவாஜி புருவத்தை உயர்த்தி "அடேங்கப்பா" என்பதுபோல பாசாங்கு செய்வார்.

ஜாதி பற்றி கேட்டதும் முகத்தை சுளிப்பார்.இதை கமல் பேசும்போது படக்கட்டத்தில் (frame) முன்னால் இருக்கும் சிவாஜி ஃபோகஸில் இருக்க மாட்டார். ஆனால் அவர் முகபாவனைகள் தெளிவாகப் புரியும்படி இருக்கும்.

தன் ஆரம்பகால படம் ஒன்றில் புகை மலிந்த நிழலுருவிலேயே (silhoutte) பாவனைகள் தெரியும்படி நடித்தவரல்லவா !

என் குழந்தைகளிடத்தில் எனக்கு ஒரு பலவீனம் உண்டு. அவர்களுக்கு நான் அதிகமாக செல்லம் கொடுப்பதைத் தான் பார்க்கிறீர்களே....செவிசாய்க்க வேண்டிய நேரத்தில் அவர்கள் பேசுகிறார்கள். (I have a sentimental weakness for my children, and I spoil them as you can see; they talk when they should listen. )

இது காட்ஃபாதரில் பெரியவர், விடோ கொர்லியோன், பேசும் மிக அழகான வசனம். தவறு செய்த மகன் சான்டினோவை வெளியாட்கள் முன்னிலையில் கடிந்து கொள்ளும் இடத்தில் வரும் வசனம். அம்மனிதரின் கோபம் அவர் ஸ்டைலை இழக்கச் செய்யவில்லை. வெளி மனிதர்கள் சென்றபின் "உன் மூளை பழுதாகிவிட்டதா ?" என்றே திட்டுவார். ஆனாலும் மிதமாகவே.

பெரிய தேவர் அப்படி அல்ல. பெரிய தேவருக்கு சக்தி வந்ததிலிருந்தே ஏமாற்றம் தான். தெலுங்குப் பெண்தோழி, நகரத்துக்கு புலம்பெயர்ந்துவிட அவன் திட்டம் என்று. ஆனால் ஊரில் சக்தியால் பிரச்சனை கிளம்புகிறபோது கோபம்-ஏமாற்றத்துடன் சேர்ந்துகொள்கிறது.

அழைக்கப்பட்ட சக்தி அவருக்கு முன் நிற்காமல் பக்கவாட்டில் நின்று, அப்பாவிக்கு பின் நிற்கும். கணக்குப்பிள்ளையிடம் "எதற்காக அழைத்திருக்கிறார்" என்று சைகையில் கேட்டுக்கொண்டிருப்பான். பெரிய தேவர் ஒரு சாய்வு நாற்காலியில் சாயாமல் அமர்ந்திருப்பார். கைபனியனுக்குமேல் துண்டு போர்த்தி. "முன்னால் வா" என்று வலது கையால் சைகை செய்வார், எதன் மீதும் குறிப்பாக பார்வையை செலுத்தாமல்.

அவர் ஏன் கூப்பிட்டார் ? கோபமாக இருக்கிறா ? ஏன் ? இதுவரை நடந்தவற்றில் ஏதாவது அவரை கோபப்படுத்தியதா ? இவை சக்தி மனதில் மட்டும் இருக்கும் கேள்விகள் அல்ல. பார்வையாளர்கள் மனத்திலும். இந்த காட்சியில் ஓரிரு காமிரா கோணங்கள் இதை உணர்த்தும் வகையில் சக்தியின் நோக்கில் இருக்கும் (point of view shots)

அதனால் பெரிய தேவர் மீதே முழுக்கவனமும். இங்கு அவர் கதைமாந்தர் மட்டுமல்ல கிட்டத்தட்ட கதைசொல்லி.

"ஏன் போனீய ?" என்று கேட்கும்போது பார்வை நேராக யாருமில்லாத இடத்தில் பாயும்.

"கோவில் கும்பிடத்தானேய்யா" என்று பொறுப்பில்லத பதில் வந்த மாத்திரத்தில் ("ஐயோ" என்பதுபோல வாயை தட்டிக் கொள்ளும் கணக்குப்பிள்ளை) பெரிய தேவர் முதல் முறையாக மகனைப் பார்த்து "தர்க்கம் பண்றீய ?" என்பார்.

பானுவை காரணம் சொல்ல முயன்று, அது தவறை விட மோசமான காரணம் என்று சக்தி உணர்வதற்குள்
"பானு....பானு கோவில் பாக்கணும்னா பூட்டை உடைக்கணுமா ?" என்று கேட்டுவிட்டு மகனை கூர்மையாகப் பார்ப்பார். அவன் கூறும் பதிலை அளந்துகொண்டு. ஒரு தலைவனுக்கான பொறுப்பின் சுவடே இல்லாமல் அவன் இசக்கியை பழி சொல்ல.....

"ஓஹோ அப்பொ உங்க தலைமையில இசக்கி பூட்டை உடைச்சிறுக்கார். அப்பிடித்தானே ?" என்ற கேள்வியில் கடுங்கோபத்திலும் அவரிடமிருந்து பிரிக்கமுடியாதபடி கலந்திருக்கும் கிண்டல். சுட்டெரிக்கும் பார்வையில் தெளிவாகத் தெரியும் ஏமாற்றம். கண்ணில் நீர் கோர்த்துக்கொண்டதுபோலக் கூட இருக்கும்.

சக்தி:"என் தப்புத்தேன் யா"
கவனிக்கப்படவேண்டிய வசனம், பின்னர் ஒரு முறை படத்தில் வரும். அப்போது தான் சக்தி அதை மனமுணர்ந்து சொல்வான். அப்போது தான் அவன் தலைவன் ஆனது - சொக்காய் மாற்றிக்கொண்ட போது அல்ல.

இம்முறை இது இப்போதைய பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்க சொல்லப்படும் வாய்வார்த்தை. அதை நன்கு உணர்ந்த பெரிய தேவர்:
"அப்பா ...ஒத்துக்கிட்டாகப்பா....உங்க தப்பில்லையா...என் தப்பு..
.....எலேய் அந்தப் பயகள எந்த வம்பு தும்புக்கும் போகாம இருக்கச் சொல்லு.........பஞ்சாயத்தில வேணா நான் மன்னிப்பு கேட்டுக்கிர்றேன்...என்ன பண்ண முடியும்"

முதல் பாதியில் உத்தரவு பிறப்பிக்கும் தலைவனின் தொனி. இரண்டாவது பாதியில், வரவிருக்கும் அவமானத்தை இப்போதே அநுபவிப்பதுபோல கூனிக்குறுகும் தொனியும் உடல்மொழியும் (''என்ன செய்ய முடியும்' என்பது கையே பேசிவிடும்).

"எசக்கி மன்னிப்பு கேட்கட்டும் ? எங்கே எசக்கி ?" என்று , நமக்குத் தெரிந்த அளவே தெரிந்த சக்தி கேட்க,

"எலே....ஒண்ணும் தெரியாம திர்ரவென் !" என்று வெடிப்பார்.

பானுவின் வருகையால் ஒரு பொய்யான இடைப்பட்ட அமைதி நிலவும். சக்தி கணக்குப்பிள்ளை பூசினாற்போல சொல்லும் அறிவுரையை எதிர்த்து வாதிட "அவுக சொல்றாஹல்ல ?.....கேட்டா கௌரவம் குறைஞ்சிரும் உங்களுக்கு..." என்றுவிட்டு...."போங்க" என்பார்.

பானு வந்த நொடி அமைதிக்குப் பிறகும் அவள் குரல் சன்னமாகவே ஒலிக்கும். மறுமுறை சொல்லும்படி ஆகும். இம்முறை காலில் விழும்போதும் கண்டுகொள்ளவில்லை தான். ஆனால் இது முற்றிலும் வேறு மாதிரி தொனிக்கும் நிராகரிப்பு.

உட்கார்ந்த இடத்தில் இருந்துகொண்டு ஆதங்கத்தையும், கடுஞ்சினத்தையும், நெஞ்சறுக்கும் ஏமாற்றத்தையும் உணர்வடிவத்தில் (palpable) ஒரு நடிப்பு நான் பார்த்ததில்லை.


பெரிய தேவர் ஒரே ஒரு முறை தான் மூக்குக்கண்ணாடி அணிந்து காணப்படுகிறார். 'போற்றிப் பாடடி' பாடலில். அவ்ர் இறந்தபின் அந்த கண்ணாடி காண்பிக்கப்படும். சக்தி உடைமாற்றிக்கொண்டு வரும் இடைவேளிக் காட்சியில். பெரியாருடன் பெரிய தேவர் இருக்கும் புகைப்படத்திற்கு முன் ஒரு பகவத் கீதை (!). அதன் மேல் அவர் கண்ணாடி. ஒரே படக்கட்டதுள் அவர் பார்வையைப் பற்றி சொல்கிறார்கள்.

வெத வெதச்சதும் பழம் ச்சாப்டரணும்னு நெனைக்க முடியுமோ....இன்னிக்கு நான் வெதைக்கிறேன்.....நாளைக்கு நீ சாப்டுவ....அப்புறம் உன் மயென் ச்சப்டுவியான்....அப்புறம் அவன் மயென் ச்சப்டுவியான்.....இதெல்லாம் இருந்து பார்க்க நான் இருக்கமாட்டேய்ன்....ஆனா வெத நான் போட்டது....இதெல்லாம் என்ன பெருமையா..ஹான் ? கடமை.....ஒவ்வொருத்தன் கடமை.

கீதையை மிக மேலோட்டமாக (என்னைப்போல!) படித்தவர்களுக்குக் கூட மேற்சொன்ன வார்த்தைகளின் மூலம் கீதையில் உயர்த்திச் சொல்லப்படும் 'பலனை எதிர்பாராத கடமையாற்றல்' என்று புலப்படும். இதை சமூக சிந்தனையுடன் எளிமையாக சொல்ல முடிந்ததுதான் பெரியாரின் தாக்கமோ என்றெல்லாம் யோசிக்கவைத்த அந்த ஒரு படக்கட்டம் எழுத்தாளர்-இயக்குனருக்கு வெற்றி.

உபதேசம் சினிமாவின் மொழிக்கு அப்பார்ப்பட்டது. ஆனால் உபதேசக் காட்சிகள் தமிழ் சினிமாவில் தொன்றுதொட்டு இருந்து வந்திருக்கின்றான. உணர்ச்சியும், அறிவும் ஒன்றுபட இயங்கும் காட்சி பெரிய தேவரும் -சக்தியும் மழைக்கு இடையில் பேசும் காட்சி.

பிராண்டோ வசனத்தை முணுமுணுப்பவர் என்று சொன்னபோது, 'நிஜத்தில் யாரும் முழு சொற்றொடர்களை, ஒரே தொனியிலோ, அதன் பொருளுக்கு ஏற்ற ஏற்ற-இறக்கத்துடன் பேசுவதில்லை' என்றாராம். மேடையில் தான் முழங்கவேண்டிய நிர்பந்தங்கள். சினிமா முணுமுணுப்பையும் உணர வல்லது.

கோவில் கும்புடத்தான்னு பேசுநீயளே...இப்பொ இந்த ஊரோட நிலைமை உங்களுக்குப் புரிஞ்சதா ?

இதைச் சொல்லும் போது அந்த நாற்காலியில் புரண்டு படுப்பார் பெரியதேவர். அந்த அசைவிற்குத் தோதாக வசன உச்சரிப்பின் தொனி மாறும். இதை நேரொலியில் பதிவுசெய்திருந்தார்கள் என்றால் (live-recording) இது மிக நுணுக்கமான கவனிப்பின் வெளிப்பாடு எனலாம். ஒருவேளை இது பின்னணியில் தனியாக பேசப்பட்டது (dubbing) என்றால் பிரமிப்பு ஏற்படுகிறது.

சக்தி ஊரை விட்டுப் போகிறேன் என்றதும் சாய்வில் இருந்து உடனே முன்னால் வருவார். அதிர்ச்சியை மறைக்க ஒரு பொய்ச்சிரிப்பு. பொறுப்பு என்பது தான் இல்லை, பொறுப்பிற்கு அடித்தளமாக இருக்கும் வீரம் இருக்கிறதா என்பதை கிளரும் வகையில், சக்தியை கோழை என்பார். வீரத்தின் அடிக்கோல்கள் பிழையாக இருக்கிறதாக, வெளிநாட்டில் படித்த சக்தி சற்று காட்டமாகவே சொல்வான்.

"...இந்த காட்டுமிராண்டிப்பய கூட்டத்துல் ங்கொப்பனும் ஒருத்தந்தேய்ங்கறத மறந்துறாத" என்று சொல்வார் நெற்றியைத் தடவியபடி.

படத்தின் சாரமான வசனம் அதன்பிறகு தான்: "அப்படிப்பார்த்தா நானும் ஒருத்தந்தான்யா......ஆனா அத நெனச்சுப் பெருமப்பட முடியல". இதைத் தொடர்ந்தே உபதேசம் துவங்குகிறது. மரணத்தை வழக்கமாக வயசாளிகள் போல அல்லாமல், மிக யதார்த்தமாக எதிர்நோக்குவார் (போ....செத்துப்போ.....எல்லா பயபுள்ளையும் ஒரு நாளைக்கு போக வேண்டியது தேன்). கொஞ்சம் கடுமையாக பேசிவிட்டோமோ என்பதுபோல அடுத்த வரி சிறுபிள்ளையுடன் பேசுவதுபோன்ற எளிமையோடும், கனிவான தொனியிலும் வ்வரும் (வாழறது முக்கியந்தான்....இல்லைங்கல...).

கனிவும், பகுத்தறியும் பேச்சும் சக்தியின் முரட்டுத்தனமான முன்தீர்மானத்துடன் மோதி மோதி தோற்பதைக் கண்டு சட்டையை கொத்தாக பிடித்து முறைக்கும் நிலை வரும். அது அத்துமீறலா, இதுவரை மரியாதையுடன் நடத்தியதால் அப்படித் தோன்றுகிறதா என்ற குழப்பமும்-கோபமும் கலந்த பிரமாதமான பாவனை கமல் முகத்தில்.

அத்துமீறல்,உரிமை என்பது இவ்வுறவில் வயது சார்ந்தது என்பது ஒரு வலி கலந்த உண்மை. அந்தக் கணத்தில் அதை உணர்ந்துவிட்டதால் : "தாடியும், மீசையும் வச்சுகிட்டு...ஐயாவை நெஞ்சுநிமித்தி பேசுற வயசுல்ல" என்று காட்சியில் முதல்முறை தளர்வார் பெரிய தேவர்.

உணர்ச்சி கூட சக்தியிடம் தோற்க கணக்குப்பிள்ளையை பொறுமையில்லாமல் கத்திக் கூப்பிடுவார்: "ஏய்...யார்ராவென்....எங்க கணக்குப்புள்ள"

"டிக்கெட்ட ஒரு பத்து நாள் சென்டு எடுக்கட்டுங்களா ?"சக்தி, "ஏனய்யா இக்கட்டில் மாட்டி விடுகிறீர்" என்று சமிக்ஞை செய்வதை பார்த்துவிடும் பெரிய தேவர் "ஏம்ப்பு பத்து நாள் இருக்க மாட்டீயளா ?" என்று இருக்கமாக கேட்டுவிட்டு, தானே பதிலாக கையசைத்து கணக்குப்பிள்ளையை அனுப்புவார்.

அனுப்பிவிட்டு சக்தியை அருகில் அழைத்து தன் மகனை அருகில் வைத்துப் பார்க்க விழைவதை நெகிழ்வாகச் சொல்வார். வெளியாள் முன்னிலையில் உக்ரமாக மகனை திட்ட மறுக்கும் டான் விடோ போல அல்லாமல், கணக்குப்பிள்ளையிடமிருந்து தேவர் மறைக்க நினைப்பது தன் மென்மையைத் தான்.

"உங்களைத் தானே நம்பணும்....வேற யாரு இருக்கா இங்க நம்புறதுக்கு" என்கிறபோது முழுமையாக உடைந்து போன ஒரு பெரிய மனிதனை அவன் உள்பயங்களும் மனதை உருக்குவதைப் போல தெரியும்.

என் ஞாபகத்தில் இந்தக் காட்சியில் பாத்திரக் கோண படக்கட்டங்கள் மிகக் குறைவு, அல்லது முற்றிலுமாகத் தவிர்க்கப்பட்டிருக்கிறது. குழுவாகப் பாடும் 'ஆ' காரத்தை ஒரு இசைக்கருவி போல் பயன்படுத்தும் மேல்நாட்டு இசை உத்தியை இளையராஜா இந்தப் படத்தில் சில இடங்களில் கையாண்டிருப்பார். இந்தக் காட்சியில் குழு வயலின்களும், கம்பீரமாக ஒலிக்கும் அடிக்கட்டை பேஸ் வாத்தியங்களும் மிகச்சரியான இடங்களில் ஒலித்து (உம். ஊரை விட்டு வெளியே வர பெரிய தேவர் மறுக்கும்போது) காட்சியை மெருகேற்றும்.

இதற்கு மேல், கிட்டத்தட்ட, பெரிய தேவரை புரிந்துகொள்ளுவதற்கு புதுத் தகவல்கள் படத்தில் இல்லை எனலாம். பாசம், கோபம், (மிகையான) மான/அவமான மதிப்பீடுகள், தலைமை குணங்கள் என்று எல்லாமே இக்காட்சியில் அடக்கம். இதற்குப் பிறகு நடப்பதெல்லாம் நமக்கு மிக நெருக்கமாகத் தெரிந்தவருக்கு நடப்பவை. கதையின் போக்குக்கும், பார்வையாளர்கள் பெரியவரின் உள்பயங்களுடன் அடையாளப்படுத்திக்கொள்வதற்கும் இந்தத் தன்னிலை-விளக்கக் காட்சி மிக முக்கியமானது.

பல உணர்ச்சி நிலைகளும், நிலைத்தடுமாற்றங்களும் காண்பிக்கப்படும் மிகக் கடினமானக் காட்சி. நன்கு எழுதப்பட்டிருந்தாலும் வெகு சுலபமாக நம் சினிமாவின் வழக்கமான உணர்ச்சிச் சுழலில் சிக்கி ஒரு சாதாரண மிகையுணர்ச்சி/உபதேசக் காட்சியாக மாறிய்யிருக்கும்.மிக இயல்பாக வெளிவந்து மக்களை கவர்ந்திழுத்தற்கு பெருங்காரணம் சிவாஜியின் அசாத்தியத் திறமை தான்.

இசக்கிக்கு நடந்ததற்குப் பழி வாங்கும் விதமாக எதிரிகளின் குடிசைகளுக்கு தீ இடப்படுகிறது. தீயின் கனல் கதையில் தகித்துக்கொண்டிருக்கையில் மழை வருகிறது. மருத்துவமனையில் இசக்கியை காணப்போகும்போதே மழை தான். கண்மாய் வெடிவைத்துத் தகர்க்கப்படும் வரை மழை ஓயாமல் பெய்கிறது. மழையின் ஈரம் காயாத ஒரு இடத்தில் தான் கோவில் பிரச்சனையைத் தீர்த்து வைக்கும் அதிகாரி வரும் காட்சி.

ஊர் பிரச்சனைகளை பேச மகனை ஊக்குவிக்கிறார், அதிகாரிகளின் பொறுப்பின்மையை நகைச்சுவையுடன் சுட்டிக்காட்டுகிறார் (பஞ்சாயத்தில் மன்னிப்புக் கேட்கவேண்டிய நிலை வரவில்லை அல்லவா), வீட்டுக்கு வர அழைப்பு விடுக்கிறார் ("காப்பிகீப்பி "). நல்லது செய்து முடித்த தலைவன். அதற்கு அடுத்து அவர் தோன்றும் காட்சியிலும் ஒரு தலைவன். தன் மக்களுக்கு நடந்த கொடுமையைக் கண்டு அதிர்ச்சியும், சோகமும் கவிய பார்க்கிறார். சொற்கள் இல்லை.

கொடுஞ்செயல் செய்தவனைப் பிடித்துக் கொடுத்த மகன் தலையில் கைவைத்து உட்கார்ந்திருக்கினான். (அதற்குக் காரணம் பொறுப்பின் சுவடுகளே இல்லாத மூத்த மகன்). சுற்றி, அவதியிலிருந்து சற்று ஆசுவாசம் பெரும் ஊர்மக்கள். மகனருகே சென்று அவனை தொடும்போது முகத்தில் ஒரு பெருமிதம். இவ்வளவு மோசமான சம்பவம் நடந்த ஒரு நாளில், பெருமிதம் போன்ற நல்லுணர்ச்சிகளுக்கு இடம் உண்டா ? முரண் தான். ஆனால் அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ் ?

மகன் சாப்பிடவில்லை.

பசிக்கலையா ?
பிடிக்கலை
ஒரு கண நேரம் அந்த பெருமிதம் மறைந்து அவ்ர் முகத்தில் ஒரு தொய்வு ஏற்படும். 'அவசரப்பட்டு பெருமிதம் கொண்டுவிட்டோமா ? மகன் இந்தக் (காட்டுமிராண்டிப்பய) வாழ்க்கைச்சுழலை இன்னும் முழுவதுமாக ஏற்றுக்கொள்ளவில்லை போலிருக்கிற்றதே' என்று.

ஒரு தாய் சாப்பிட்டுக் கொண்டிருப்பதைக் காட்டி, ஒரு குழந்தையைப் பறிகொடுத்த அவள், தன் இரண்டாவது குழந்தைக்காக சாப்பிடுவதை சொல்வார். "மத்தவங்களுக்கு உதவி செய்யணும்னா முதல்ல நாம் திராணியோட இருக்கணும்" (திராணியோடு என்பதை சொல்லும் போது மீசை முறுக்கு சரி செய்து கொள்ளப்படும்!). அவர் சொல்வதுக்கும் மேலே புரிந்துகொண்டதுபோல சக்தி கணக்குப்பிள்ளையைக் கூப்பிடுவான்.

ஒரு குழந்தை இழந்துவிட்ட, இரண்டாம் குழந்தைக்கு வாழ்வையும் , எல்லாவற்றைய்யும் தருவதற்காகவே போராடும் அவளைக் கண்டதும், ஒருவேளை சக்திக்கு தன் தந்தையின் நிலையும் கிட்டத்தட்ட அப்படித்தானே என்று தோன்றியிருக்காலாம். இது தான் தோன்றியது என்றெல்லாம் சொல்ல முடியாது. நல்ல திரைக்கதைகளில் இந்த அனுமானங்களுக்கு இடம் உண்டு. தேவரின் பேச்சுக்குப் பதிலாக சக்தி உதிர்க்கும் அர்த்தம் பொதிந்த சிரிப்பைக் கண்டால் எனக்குத் தோன்றியது இதுதான்.

பயணச்சீட்டை தள்ளிப்போட வேண்டும் என்று சக்தி பூசினாற்போல சொல்ல, இப்போது விட்டுவிட்டால் கிடைப்பது கஷ்டம் என்று கணக்குப்பிள்ளை சொல்வார். "கூடி வரும் நேரத்தில் கெடுக்காதே" என்பது போல தேவர் சமிக்ஞை செய்வதில் ஒரு வித்தியாசமான முக்கோணம் முடிவடைக்கிறது. சக்தி-கணக்கு-பெரியவர் மூன்று பேருக்கும் உள்ள தனித்தனி நெருக்கங்களை காண்பிக்கப்படுகின்றன.

முதல் விசாரணையில் "எதற்கு அழைக்கப்பட்டோம்" என்று ஐயாவுக்குத் தெரியாமல் கணக்குப்பிள்ளையைக் கேட்பான். அடுத்து ஒரு காட்சியில், கணக்குப்பிள்ளையிடம் இருந்து தன் மென்மையான இயல்பை மறைப்பார் பெரியவர். இம்முறை தன் பாசத்தின் தீவிரத்தை கணக்குப்பிள்ளையிடம் மட்டும் காண்பிப்பார்.

இணைகோடாக: விடொ கொர்லியோனுக்கு வலது கையாக (consigliori) இருப்பது டாம் ஹேகன். அநேக சமயங்களில் தன் மகன்களைவிட இந்த வளர்ப்பு மகன் டாம்'ஐ டான் விடோ நம்புவார்.

சக்தி, தந்தையின் செய்கையைப் பார்த்துவிட்டு வெளிப்படையாக, அந்த பயணச்சீட்டை 'கேன்சல்' செய்யச் செல்வான். "சொல்றாஹள்ள...கேன்சல் கேன்சல்" என்று தாழ்திறந்து பாசம் வெடிட்த்தோடும். புல்லாங்குழல் கரு-இசையை அழகாக ஒலிக்க, சக்தியின் கையைப் பற்றி தன் நெஞ்சருகே வைத்துக் கொள்வார். பெருமிதம் மட்டுமே தெரிந்த முக்கத்தில் முத்ன்முதலாக ஒரு நிறைவு தெரியும். சாந்தமான பெருமூச்சே தேவையானவற்றைப் பேசிவிடும்.

நெருப்புக்கு பதில் நீரால் அடித்தாகிவிட்டது. எதிராளிகளின் அடுத்த இடைஞ்சல் நிலத்தின் வழியாக. வேலியிட்டுப் பிரிக்கப்படுகிறது நிலம். மக்கள் முறையிடுகிறார்கள். கேட்கச்செல்லும் பெரிய தேவர் துணையுடன் அங்கு செல்ல வேண்டும் என்று நினைக்கும் கணக்குப்பிள்ளை கூட அதை தயங்கி தான் சொல்கிறார். சக்தியை மட்டும் அழைத்துக்கொண்டு அங்கு செல்கிறார் - அவருக்கு தேவையான போதுமான துணை.

நிலத்துக்கு சொந்தக்காரர்கள் நிலத்தை அடைத்து வேலிபோடுவதாக வக்கீல் சொல்லிக் கேட்டவுடன்.

"யார்ராவென்...நெலத்துக்கு சொந்தக்காரன்...இது எங்க நெலம்...நாங்க எலவசமா கொடுத்தது"

இதை சொல்லும்போதே சட்டத்தின் பலவீனமான பக்கத்தில் அவர் இருப்பது நமக்குத் தெரிகிறது. கௌரவம் மேல்நிலை வேண்டும் என்று அடம் பிடித்தாலும், சட்டம் கொடுக்கவிருப்பது ஒரு விதத்தில் கீழ்நிலை தான். இது அடுத்த காட்சியில் அவர் நிலையை புரிந்துகொள்வாதற்கு மிக அவசியமானது.

"இங்க செல்லையா ஒருத்தனுக்கு தான் சொந்தமா நெலம் இருக்கு....எலாய்....இந்த வேலிய நீ போடச்சொன்னியா ?"

"ம்ஹான்....கருக்கலோட கருக்கலா வந்து ஆவுகளே போட்றாஹய்யா" என்று சொல்லும் பெண்ணை அடக்குவார் செல்லையா.

"....கேனப்பய.....பாவம் அவன் என்ன செய்வான்... ஆட்டிவச்சபடி ஆடுறான்" என்று சக்தியிடம் சொல்வார். அதை உரக்கச் சொல்வதே அந்த வசனம் கேட்கும் எல்லோருக்கும் என்பதற்காக. அந்த பாவனை சக்தி முகத்தில் தெரியும்.

"ஏய் வக்கீய்ல்....இந்த வேலிய பிடுங்கி எறிய எம்புட்டு நேரமாகும்" என்று முரட்டுத்தனமாகக் கேட்பார். மரியாதை கெட்ட பதில் வரும். இதற்கு உடனடியாக வரும் எதிர்வினை ஒரு வட்டார வசவு. முழுவதுமாக சொல்லமாட்டார். தொண்டையிலிருந்து பாதி ஒலிக்கும். பொதுவில் கண்ணியம் காப்பது என்பது இயற்கையாக அவருக்கு வருகிறது. இது வேறொருவர் யோசித்திருந்தாலும் கூட கனக்கச்சிதமாக நிகழ்த்திக்காட்டுவது மிகக் கடினம். என் அபிப்ராயத்தில் இது திட்டமிடுதல் இல்லாமல் களத்தில் நிகழ்ந்ததாக தான் இருக்கவேண்டும். நேரொலியில்லாமல் இது எப்படி சாத்தியம் என்று புரியவில்லை. ஒரு பாத்திரத்தை முழுமையாக உள்வாங்குவதற்கு இதை விட சிறப்பான உதாரணங்கள் நான் பார்த்தவரை இல்லை.

பஞ்சாயத்தில் எதிரிகள் காலதாமதமாக வருவதை மகன் சுட்டிக்காட்ட, "அட போடா ...கவலைப்படவேண்டிய கடைசி அசௌகர்யம் இது..." என்பதுபோல கையை தட்டி விடுவார். அவர்கள் வந்ததும் தன் எதிர்பார்ப்பை மகனிடம் கண்கலால் தெரிவிக்க, சக்தி சின்னத்தேவரைக் கும்பிடுவான்.

"வைத்தியனுக்கு சீக்கு வந்தா இன்னொரு வைத்தியன் கிட்ட தான் பார்க்கணும்......இன்னிக்கு நீதி சொல்ற நெலமையில நான் இல்லையப்பு.....கேட்டுக்கிற இடத்துல இருக்கேன்"
என்ற ஒரு வரியில் பல தொனி-பாவனை மாற்றங்கள். தீர்ப்பு சொல்லும் நிலைமையான முதன்மை நிலையில் இல்லை என்பதைப் பற்றி ஒரு தயக்கம். தன்னை விட்டால் இவர்களில் யார் தீர்ப்பு என்று ஒன்றை சொல்லமுடியும் என்கிற இளக்காரம் எல்லாம் அந்த பாவனையிலும் அவர் தொனியில் இருக்கும் அசௌகரியத்திலும் தெரியும்.

ஊர்ப்பெரியவர் ஒருவர் மிகுந்த மரியாதையுடன் அவரை பேசச்சொல்ல எழுவார். கீழே அமர்ந்திருக்கும் எல்லோரும் எழ அவர்களை உட்காரச்சொல்லும்போது மிக உரிமையானவரை கடிந்துகொள்ளும் பாங்கும் பொறுமையின்மையும் தெரியும்.

ஒரு தேர்ந்த வழக்கறிஞன் வழக்கிற்கு வரும் முன் எவ்வாறு எதிர்தரப்பினரை தீர்ப்பு கூறுபவர்கள் கண்ணில் இறக்கிக் காட்டவே முயல்வர். அதை மிகக் கச்சிதமாக செய்வார். "எங்க பெரியதேவர் செத்து...கொள்ளிக்குடம் உடைக்கிறதுக்கு முன்னாடியே பாகப்பிரிவினை கேட்டவுக சின்னச்சாமி ஐயா....அப்புறம் என்னை வெட்டப் பார்த்தாக.. வெசம் வெச்சுக் கொல்லப்பார்த்தாக...ஹஹும் ஒண்ணும் நடக்கலை"

இதை சொல்லும்போது ஒரு இளைஞனின் வீம்பும், சண்டித்தனமும் தெரியும். அதை மறுத்துப் பேச முயலும் தம்பி மகனை "ஏலாய்....அப்பொல்லாம் நீ சின்னப்பய...உனக்கொண்ணும் தெரியாது வாயம்மூடிட்டு பேயாம இருக்கணும் தேரியும்ல" என்று அதட்டுவார் (முன்னே வரும் சக்தியை ஒரு கையால் தடுத்துவிட்டு).

தான் சொல்லவந்ததை சொல்லியாகிவிட்டதில் பிரச்சனைக்கு வருவார். "இப்பொ பிரச்சனை என்னன்னா...அந்த வேலிய புடுங்கி அங்குட்டு எரியணும்..அது பதிலா வேற எடம் வேண்ணாலும் நான் கொடுக்கறேம்பா..பணம் காசு வேண்ணாலும் கொடுக்கறேன் உம்..."
பிரச்சனையைத் தீர்க்கும் அணுகுமுறை மருந்துக்குக் கூட இல்லை. ஒரு கீழ்நோக்குப் பார்வை, எள்ளல் இவற்றின் மொத்த உருவமாக இருக்கிறார். மனிதர் அப்படிப்பட்டவர். அரசனின் கர்வம். இவனோடெல்லாம் பேசிக்கொண்டிருக்க வேண்டி இருக்கிறதே என்ற அலுப்பு, கோபம். இதைத் தான் 'மானம்' என்று கிடுக்கிப் பிடியாகப் பிடித்துக்கொண்டுவிட்ட மனோபாவம். இவை அவரை எங்கு இட்டுச் செல்கின்றன ?

நம்முயிர்க்கு மேலே மானம் மரியாதெ
மானமிழந்தாலே வாழத் தெரியாதே

பின் வருவதை முன் சொல்லும் விதமாக ஒரு பாடல் வரி. இதை ஏதோ வீரமரணம் போல சித்தரிக்கப்படுகிறது. இதில் 'மானம்' என்பது ஒவ்வொருவர் மதிப்பு சார்ந்தது. கடமை தவறியதால் தன் குலத்துக்கும், பதவிக்கும் இழுக்கு வந்துவிட்டதாக எண்ணி "கெடுக என் ஆயுள்" என்று சொல்லி வீழும் மன்னனன ஓரளவு புரிந்துக்கொள்ள முடிகிறது. ஆனால் பெரிய தேவருக்கு நிகழ்வது அவர் மண்ணின் பொது மதிப்பீடு. ஒரு வகையில் காட்டுமிராண்டி மதிப்பீடு தான். பலம் படைத்தவன் பெரியவன். அடி கொடுத்துவிடுவது வெற்றி - வாங்கிக்கொள்வது தோல்வி என்று. இதன் நீட்சியே சொல்லடிக்கும் இருக்கும் அதே மதிப்பு. இதைத் தான் இந்தப் படம் சாடுகிறது. ஆனால் இந்த மரணத்துக்கு ஒரு கௌரவம் சேர்த்து.

தம்பி மகன் இவரை சரியான இடத்தில் மடக்க "ங்கொப்பனை விட நல்லாத்தேம்பு பேசற" என்று கோபத்துக்கும்-தோல்விக்கும் இடையிலும் லேசாக மிஞ்சியிருக்கும் ரசனையோடு சொல்வார். ஒரு இடத்தில் சக்தி துள்ளியெழ மிகுந்த சாந்தத்துடன் கட்டுப்படுத்துவார்: "பேயாம இரு...அப்புறம் அவனுக்கும் நமக்கும் என்ன வித்தியாசம் ?".

கூட்டத்திலிருந்து வித்தியாசமானவன் நீ என்று நினைத்துக்கொண்டாயே மகனே' என்பது அந்த அமைதியில் தெரியும்.

ஆனால் அடுத்ததாக தம்பி மகன் மரியாதை கெட்டத்தனமாக பேசிவிட்டதால் ஆடிப்போகிறார் பெரியதேவர். என் முன்னிலையில் அப்படி அவன் பேசலாயிற்று என்பது அதிர்ச்சி, கடுங்கோபம், பெருத்த அவமானம். இதுபோன்ற வீம்பான மதிப்பீடுகளை சாடும் விதமாக முன் பேசிய சக்தியும் அந்த கணத்தில் ஒரு 'காட்டுமிராண்டி'யைப் போல் வெடிக்கிறான். படிப்பும், 'பண்பட்ட' கலாசார பரிச்சயமும் அவன் மேல்தோல் கொஞ்சம் சுரண்டிவிட்டால் விலகிவிடுகின்றன. உள்ளிருக்கும் இயல்பு வெளிவருகிறது. பெரிய தேவர் எழுந்தவேகத்தில் நாற்காலியை விசிறியடிக்கிறார்.


பொறிபறக்க விழிகளிரண்டும்
புருவமாங்கே துடிக்க சினத்தின்
வெறி தலைக்க....

என்று பாஞ்சாலி சபதத்தில் சில வரிகள் வரும். அந்த உக்ரத்தை திரையில் காண வேண்டும் என்றால் இந்தக்கணம் தான் அதற்கு சரியான கணம்.

கோபத்தை கஷ்டப்பட்டுக் கட்டுக்குள் வைத்து கடைசி முறையாகக் எதிரியிடம் மறுமுறை கேட்க,
வரும் பதிலில் கூட்டமே பொங்கி எழும். "பஞ்சாயத்தாடா இது....பஞ்சாயத்தே கிடையாதுறா....இந்த கூட்டத்துல எனக்கு மரியாதையும் கிடையாது" என்றுவிட்டு வெளியேறுவார். அங்கிருந்து வீடுவரை நடந்து செல்லும்போது அவமானம், அங்கலாய்ப்பு,கோபம், பாசத்துடன் வரும் கோபம் என்று சகலத்தை ஓரிரு நிமிடங்களில் காட்டுவார். அவற்றை வார்த்தையில் அடக்க முயல்வதே வீண். ஒரு சூராவளி அடித்துச் சென்றார் போன்ற அனுபவம். tour-de-force.

"என்னப்பு பைத்தியக்காரனா இருக்கே...எனக்கெப்படி கோபம் வரும்...வெக்கம் மானம் ரோசம் இருந்தாத்தேன் கோபம் வரும்....அதல்லாந்தான் அந்த சின்னப்பய வாங்கிப்டானே" என்று சொல்லும் போது குரல் நடுங்கும், கண்ணீல் நீர் கோத்திருக்கும். அரை நொடியில் தலைவன் தன்னிலைக்கு வந்து மகனிடம், "பசங்களுக்கு புத்தி சொல்லி அனுப்பு", என்று விவேகமான தொனியில் சொல்லிவிட்டு "எலாய்" என்று கண்ணை விரித்துக் காட்டி ஒரு வழிகாட்டியின் தோரணையில் மிரட்டிவிட்டுப் போவார்.

வலியை முதல்முதலில் வெளிப்படுத்தும் போது ஒரு வித மூச்சுத்திணரல் போலவே ஒலிக்கும். மாரடைப்புக்கு முதல் அறிகுறியே இதுபோன்ற ஒரு கைவலி தான். பேத்திகள் சூழ, "அம்ம பாட்டு" கேட்டபடி தன் வலி மிகுந்த கடைசி கணங்களை கழிப்பார்.

ரத்தம் கக்கி வசனம் பேசி, கத்திக்குத்துடன் பாட்டு பாடி, மரணப்படுக்கையில் நாயக நாயகியரை சேர்த்து வைத்து, அல்லது இக்கட்டான சத்தியங்கள் வாங்கி, கதாநாயகன் திருக்கரங்களால் தலை திருகப்பட்டு என்று பல வகைகளை தமிழ் சினிமாவில் பார்த்து பார்த்து மரணம் என்பது மரத்துப்போய்விட்ட நிலையில், இன்றளவும் நம் ஞாபகத்தில் இருக்கும் தமிழ் சினிமாவில் காட்டப்பட்ட உருக்கமான மரணங்களில் ஒன்று பெரிய தேவரின் மரணம். அதன் வெறுமையை நாமும் உணர்கிறோம்.

இன்று அதைப் பார்க்கையில் திரைக்கு அப்பாலும் அந்த வெறுமை இன்னும் பெரிதாகத் தெரிகிறது.

ஈக்வானிமஸ் சொன்னதை வழிமொழிகிறேன். சிவாஜியின் முற்றிலும் மாறுபட்ட நடிப்பு இது என்று சொல்வது முழு உண்மை அல்ல. இது சிவாஜியின் ப்ரத்யேக அடையாளங்கள் உள்ள வெளிப்பாடு தான். ஆழ்ந்த, பிரமிப்பூட்டும் கவனிப்பு, முயற்சியின் சுவடுகளே தெரியாத அனாயாசமான நடிப்பு, இதையெல்லாம் நிகழ்த்த முடிந்த அதிசயமான திறமை.
இதை மிகச்சரியாக வெளிக்கொணரக் கடைத்த களம் இந்தப் படம். இது பரவலாக கவனிக்கப்பட்டதில் மகிழ்ச்சி என்றாலும், இன்னும் ஆழமாக கவனிக்கப்படவேண்டியது.

அதை இயன்றவரை சொல்ல முயன்றிருக்கிறேன். முன்னொருமுறை சொன்னதுபோல நடிப்பு போன்ற நிகழ்த்தப்படும் கலைகளைப் பற்றி எழுதுவது வெறும் குறியீடாகத் தான் இருக்க முடியும். அதற்கு மேல் அதை கண்டு அதில் திளைப்பதற்கு ஊக்கியாக இருக்கும் என்ற நம்பிக்கை மட்டுமே எழுதுபவனுக்கு.

Gopal.s
29th June 2015, 08:35 AM
தலைகளா,



மூட்டை கட்டும் வேளையும் ,வேலையும் நெருங்கி விட்டது. இந்தோனேசியா போய் வீடு,அலுவலகம், வேலையாட்களை இறுதி செய்ய வேண்டும். ஒரு இரண்டு மாத கால விடுதலை.

Russellxor
29th June 2015, 08:49 AM
[QUOTE=Gopal,S.;1234663]
என்னை மிக மிக கவர்ந்த P _R என்ற அதிசய இளைஞனின் அற்புத பதிவு. எனக்கு இந்தியாவின் ஒரே உலக அதிசயம் எழுதும் inspiration கொடுத்த சிறந்த பதிவு.(மார்ச் 2008 பாகம்-4 இல் வெளியானது)

தேவர் மகன்- 1992

http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/military_salute_zpsobo4cxv0.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/military_salute_zpsobo4cxv0.jpg.html)

RAGHAVENDRA
29th June 2015, 10:08 AM
https://fbcdn-sphotos-g-a.akamaihd.net/hphotos-ak-xpf1/v/t1.0-9/q90/s720x720/11058817_1607897842812769_7280361011408486016_n.jp g?oh=bd8b0e661971d5a6d25184ce9e073b1f&oe=561C3362&__gda__=1441306797_6ce444c7babfdfcb0835d0265d44029 2

https://scontent-sin1-1.xx.fbcdn.net/hphotos-xtf1/v/t1.0-9/q91/s720x720/11659495_1607897889479431_354312691393991467_n.jpg ?oh=57d1354fe1da3f31669591e889df09a0&oe=5618F380

courtesy FB friends

Russellxor
29th June 2015, 03:31 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/cinema%20%20express/FB_IMG_1435560400636_zpshxkrrgit.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/cinema%20%20express/FB_IMG_1435560400636_zpshxkrrgit.jpg.html)

Russellxor
29th June 2015, 03:32 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/cinema%20%20express/FB_IMG_1435560404107_zpsyw4z4dcz.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/cinema%20%20express/FB_IMG_1435560404107_zpsyw4z4dcz.jpg.html)

Russellxor
29th June 2015, 03:33 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/cinema%20%20express/FB_IMG_1435560407519_zpsiqyo1g4x.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/cinema%20%20express/FB_IMG_1435560407519_zpsiqyo1g4x.jpg.html)

Russellxor
29th June 2015, 08:00 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/cinema%20%20express/FB_IMG_1435587892478_zpsjdit9amp.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/cinema%20%20express/FB_IMG_1435587892478_zpsjdit9amp.jpg.html)

Russellxor
29th June 2015, 08:01 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/cinema%20%20express/FB_IMG_1435587897355_zpst7r8xjl9.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/cinema%20%20express/FB_IMG_1435587897355_zpst7r8xjl9.jpg.html)

Russellxor
29th June 2015, 08:04 PM
Face book

http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/FB_IMG_1435587699751_zpszyaltzau.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/FB_IMG_1435587699751_zpszyaltzau.jpg.html)

Russellxor
29th June 2015, 09:58 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/20150629215444_zpsc4wvhcqt.gif (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/20150629215444_zpsc4wvhcqt.gif.html)

Russellxor
29th June 2015, 10:35 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/20150629222510_zps9tpjgnkp.gif (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/20150629222510_zps9tpjgnkp.gif.html)

Harrietlgy
29th June 2015, 11:42 PM
Courtesy Mr.Sudhangan Face book.


https://fbcdn-sphotos-d-a.akamaihd.net/hphotos-ak-xfp1/v/t1.0-9/11693894_10206637203706046_4500235514269217154_n.j pg?oh=cbebcbed30df9856236f507d088908f2&oe=56353622&__gda__=1445870919_48d053414817acb6c4b0bce020cbcb9 f

செலுலாய்ட் சோழன் – 81
``புதிய பறவை’ படத்திற்கு எழத ஒருவழியாக ஆருர்தாஸ் ஒப்புக்கொண்டார்.
அதற்காக ஐயாயிரம் ரூபாய் அட்வான்ஸையும் கொடுத்தார் சிவாஜி!
உடனே சிவாஜி ஆரூர்தாஸிடம் கேட்டார்.
`எங்க ஒக்காந்து எழுதப் போறே ?’
ஆரூர்தாஸ்: `எங்கே சொல்றீங்களோ அங்கே’
சிவாஜி : `ஒண்ணு செய்யறீயா ? ராயப்பேட்டை சண்முக முதலித் தெருவில் நான் இருந்த வீடு இப்ப காலியாக இருக்கு.அதோட மொட்டை மாடியில் நான் ஒய்வெடுக்கறதுக்காக ஒரு சின்ன கீத்துக் கொட்டகை போட்டு வெச்சிருக்கேன். அமைதியா இருக்கும். நல்ல காத்து வரும். அது ஒனக்கு பிடிக்கும்னு நினைக்கிறேன்.அங்க உக்காந்து எழுதறியா ? ஒரு தொந்தரவு இருக்காது’
ஆ.தாஸ்: சரி.... அதுல ஒரு சின்ன கண்டிஷன் ?
சிவாஜி : என்ன ?
ஆ.தாஸ்: ` தேவர் பிலிம்ஸ் எழுத்து வேலை கூட ஷீட்ட்ங்கிற்கும் வந்து `டயலாக்’ சொல்லிக் கொடுக்கணும்னு தேவரண்ணணும் எம்.ஜி.ஆரும் சொல்லி இருக்காங்க. ஆரம்பத்துலேர்ந்தே அப்படித்தான். அதனால ராத்திரி ஒம்பது மணிக்கு மேலதான் நான் `புதிய பறவை’க்காக எழுத முடியும்.
சிவாஜி : உன் செளகரியப்படி செய். அப்போ, நம்ம பையன் ராஜீவையும், டிரைவர் முனுசாமியையும் உங்கூட தங்க வெச்சிடறேன். நீதான் சிகரெட் குடிக்க மாட்டியே!.வயத்துக்கு வஞ்சகமில்லாமல் சாப்பிடுவே.ன்னு எனக்குத் தெரியும். எதிர்ல மெயின் ரோடில `அமீன் கபே’ இருக்கு. அங்கேயிருந்து ஒனக்கு வேணுங்கறதை வாங்கி சாப்பிட்டுக்க.சிரமத்தை பாக்காம எழுதி முடிச்சிட்டின்னா, உடனே ஷீட்டிங்க ஆரம்பிச்சு ஆக்ஸ்டல ரீலிஸ் பண்ணிடலாம். பிசினஸ்ஸெல்லாம் ஆயிடுச்சு சரி... வேற என்ன வேணும் ?’
ஆ.தாஸ்: வேறு ஒண்ணும் வேண்டாம்
என்றபடி சிவாஜி காலைத் தொட்டு வணங்கிவிட்டு கிளம்புகிறார்.
சிவாஜி பாசத்தோடு கட்டியணைத்து விடை கொடுக்கிறார்.
அடுத்த சில நாட்களில் ராயப்பேட்டை பகுதி முழுவதும் உறங்கிக் கொண்டிருக்க , அந்த நள்ளிரவில் `கொலைகாரன் பேட்டை என்றழைக்கப்பட்ட இடத்திலிருந்த சண்முக முதலித் தெருவில் ஒரே ஒரு வீட்டின் மொட்டை மாடியில் ஒலை வேயப்பட்ட அறையில் மட்டும் ஒளி தெரிகிறது.
உள்ளே பாயா, இடியாப்பம் சாப்பிட்டுவிட்டு ஒருவர் எழுதித் தள்ளிக்கொண்டேயிருக்கிறார் ஒருவர்
அவர்தான் ஆரூர்தாஸ்!
இரவு பகல் தூக்கமில்லாமல் எழுதிக் கொண்டேயிருக்கிறார்!
காலையில் எம்.ஜி.ஆர் படம்!
இரவில் சிவாஜி படத்திற்கான எழுத்து வேலைகள்
இந்த விஷயம் எம்.ஜி.ஆருக்கும் தெரியும்.
`அன்புக்கு கட்டுப்பட வேண்டியதுதான். உடம்பையும் பாத்துக்கணுமில்லே’ என்று சொன்னார் எம்.ஜி.ஆர்
இந்த இடத்தில் ஆருர்தாஸ் நினைவு கூர்ந்த எம்.ஜீ.ஆர் பற்றிய ஒரு தகவலை இங்கே பதிவு செய்தே ஆகவேண்டும்.
ஒரு நாள் மதிய உணவுக்கான இடைவேளை.
ஒப்பனை அறையில் எம்.ஜி.ஆருடன் உணவருந்தி விட்டு, அங்கிருந்த நீண்ட சோபாவில் உறக்கக் கலக்கத்தில் இருந்திருக்கிறார் ஆருர்தாஸ்!
வழக்கம் போல தன் கையிலிருந்த `பாக்கெட் ரேடியோ’வில் எம்.ஜி.ஆர் மதிய செய்தி கேட்டிக்கொண்டிருந்தார்
தூக்க கலக்கத்திலிருந்த ஆரூர்தாஸ் அப்படியே சாய்ந்துவிட்டார்.
சற்றைக்கெல்லாம் சட்டென எழுந்தார் ஆரூர்தாஸ்.
இப்போது அவருடைய தலை எம்.ஜி.ஆரின் தொடையில்!
திகைத்து எழுந்து `மன்னிக்கணும் அண்ணே’ என்று சொல்லியிருக்கிறார்!
`பரவாயில்ல! நல்ல தூக்கத்தில் ஒரு பக்கம் சாஞ்சிட்டிங்க!
தலை தொங்குச்சு. கழுத்து சுளுக்கிடுமேன்னுதான் நான் உங்க தலையை எடுத்து என் தொடையில் வைத்துக்கொண்டேன்’ என்றாராம் எம்.ஜி.ஆர்.
இதைக் கேட்டதும், அடக்கி வைத்திருந்த அழுகை பீறிட்டதாம் ஆருர்தாஸுக்கு1
எழு இரவுகள் போராடி ` புதிய பறவை’ படத்துக்கான முழு வசனத்தையும் எழுதி முடித்து சிவாஜியிடம் தெரிவித்திருக்கிறார் ஆருர்தாஸ்!
முழு வசனத்தையும் கேட்க சிவாஜி ஒரு நாளை ஒதுக்கிக் கொண்டார்!
கதை, வசனம் படிக்கும்போதெல்லாம் கிழே மொஸைக் தரையில் உட்கார்ந்து பின்னால் சோபாவில் சாய்ந்தபடி காலை நீட்டிக்கொண்டு கேட்பதைத்தான் அவர் பெரிதும் விரும்புவார்!
ஆரூர்தாஸ் படிக்க ஆரம்பிக்கிறார்!
இப்போது க்ளைமாக்ஸ் காட்சி!
தன்னை உயிருக்குயிராய் காதலித்த சரோஜாதேவி ஒரு போலீஸ் உளவாளி என்பது சிவாஜிக்கு தெரிய வருகிற காட்சி!
இந்த காட்சியின் வசனங்கள் மிகவும் அந்த நாளில் பிரபலமானவை!
சரோஜாதேவியின் கதாபாத்திரத்தின் பெயர் லதா!
சிவாஜிசொல்ல ஆரம்பிப்பார்!
`லதா! என் மேல் படையெடுத்து என்னை வீழ்த்த உன் கைக்கு கிடைச்ச ஆயுதம், காதல்ங்கற மென்மையான மலர்தானா ? அதை வெச்சா என்னை அடிச்சிட்டே?’
முழு வசனத்தையும் கேட்டு முடித்த சிவாஜி, ஆரூர்தாஸின் கையை பிடித்துக் குலுக்குகிறார்!
`ஒங்கிட்ட நான் என்ன எதிர்பார்தேனோ – அதே மாதிரி - ஏன் அதுக்கு மேலயும் ரொம்ப நல்லா எழுதியிருக்கே!! `காங்கிராட்ஸ்’ இதுக்காகத்தான் உன்னை வற்புறுத்தி எழுத வெச்சேன்.
`புதிய பறவை’ படப்பிடிப்பு நெப்டியூன் ஸ்டுடியோவிலும் கோடம்பாக்கம் விஜயா ( வாகினி) ஸ்டுடியோவிலும் தொடர்ந்து நடந்தது!
இப்போது க்ளைமாக்ஸ் எடுத்து முடிந்து எல்லோரும் கிளம்புகிற நேரம்!
ஆரூர்தாஸ் சிவாஜியிடம் போய் ` அண்ணே ! ஒரு நிமிஷம்!
செட்டை விட்டு வெளியே போய்க்கொண்டிருந்த சிவாஜி ஒரு நிமிடம் நின்றார்!
`என்னப்பா ?’ என்றார்
சரோஜாதேவி ` என்ன நம்புங்க கோபால்! என்னை நம்புங்கன்னு’ உங்க கால் விழுந்து அழும்போது நீங்க பேசாம போறீங்க! அது சரியாக இல்லை! அதோட உங்க கேரெக்டர் நிறைவு பெற்றதாக நான் நினைக்கலை! அந்த இடத்தில் நீங்க ரெண்டு வார்த்தை பேசினா நல்லா இருக்கும்’ என்றாராம் ஆருர்தாஸ்!
`நான் என்ன சொல்லணும்னு நினைக்கிறே?’ இது சிவாஜி
`பெண்மையே நீ வாழ்க! உள்ளமே உனக்கு ஒரு நன்றி!’ இதை சொன்னிங்கன்னாத்தான் சரோஜாதேவி உங்களை காதலிச்சது உண்மைதான் என்கிறதை நீங்க ஒப்புக் கொண்ட மாதிரியிருக்கும். அப்பதான் ஒங்க கதாபாத்திரத்தை நியாயப்படுத்த முடியும். உங்க கதாபாத்திரத்தின் மீது மக்களுக்கு அனுதாபம் ஏற்படும்!
இதை அவர் சொன்னதும் சிவாஜியின் முகபாவனை மாறியது!
`என்னப்பா படப்பிடிப்பு முடிந்து ` பேக் அப்’ சொன்னபிறகு இதைச் சொல்றியே?’
` இப்பதாண்ணே எனக்கு இது தோணிச்சு!
காட்சி மறுபடியும் எடுக்கப்பட்டது!
12.09.1964 `புதிய பறவை ‘ படம் வெளியானது!
சரோஜாதேவியின் அன்றைய இளம் பருவத்து எழில் தோற்றமும், செளகார் ஜானகியின் அந்தப் பாத்திரத்திற்கேற்ற மெருகேறிய சிறந்த நடிப்பும் ` புதிய பறவை’ படத்திற்கு புதிய பொலிவை கொடுத்தது!
படத்தின் இன்னொரு மிகப்பெரிய ப்ளஸ் பாயிண்ட் ! படத்தின் பாடல்கள் அதன் இசை!
அதற்காக தனி அத்யாயமே எழுதலாம்!
அதுவும் அந்த ` எங்கே நிம்மதி’ பாட்டு எப்படி உருவானது ?
(தொடரும்)

Russellxss
30th June 2015, 08:57 AM
மதுரைையச் சேர்ந்த மக்கள் தலைவரின் அன்பு ரசிகர் திரு.டி.ஆர்,ராஜன் அவர்கள் மணிவிழா காண்கிறார். அவரை வாழ்த்தி ரசிகர்கள் வைத்திருக்கும் வாழ்த்து பேனர்கள்.
60 வயது நெருங்கிய அவர் தலைவரைப் பற்றி பேசினாலோ அல்லது தலைவர் படம் வந்தாலோ 16 வயது இளைஞன் போல் மாறி விடுவார். அவர் நீடுழி வாழ அனைவரும் வாழ்த்தி நாம் வணங்கும் கடவுள் சிவாஜியை வணங்குவோம்.


https://scontent-sin1-1.xx.fbcdn.net/hphotos-xtp1/t31.0-8/s720x720/11357343_836870529730886_7538557626631725900_o.jpg


சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல, எவரும் எட்டாத அதிசயம்.

Russellxss
30th June 2015, 08:59 AM
மதுரைையச் சேர்ந்த மக்கள் தலைவரின் அன்பு ரசிகர் திரு.டி.ஆர்,ராஜன் அவர்கள் மணிவிழா காண்கிறார். அவரை வாழ்த்தி ரசிகர்கள் வைத்திருக்கும் வாழ்த்து பேனர்கள்.
60 வயது நெருங்கிய அவர் தலைவரைப் பற்றி பேசினாலோ அல்லது தலைவர் படம் வந்தாலோ 16 வயது இளைஞன் போல் மாறி விடுவார். அவர் நீடுழி வாழ அனைவரும் வாழ்த்தி நாம் வணங்கும் கடவுள் சிவாஜியை வணங்குவோம்.


https://fbcdn-sphotos-h-a.akamaihd.net/hphotos-ak-xfp1/v/t1.0-9/p480x480/11015356_836870729730866_4766075077205075421_n.jpg ?oh=0ccecac4bd4924dc4dcb47407a705557&oe=562B8223&__gda__=1444392723_cb87b2ed3557acffedf18304fc3b7ef 3

சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல, எவரும் எட்டாத அதிசயம்.

RAGHAVENDRA
30th June 2015, 09:49 AM
http://i1146.photobucket.com/albums/o528/imagivity/SivajiFansEvents/trrajanmanivizhagrtgsjune2015_zpsugnnqeas.jpg

Murali Srinivas
30th June 2015, 10:33 AM
அந்த நாள் ஞாபகம்

1960-களின் இறுதியில் துவங்கி நடிகர் திலகத்தின் படங்கள் வெளியான காலகட்டத்தை பற்றிய என் நினைவலைகளை தாங்கிய இந்த தொடர் பதிவின் அடுத்த கட்டம்

கடந்த பதிவின் இறுதி பகுதி

வசந்த மாளிகை முதல் நாள் ஓபனிங் ஷோ பார்பதற்காக டிக்கெட்டிற்கு அலைந்தது பற்றி பேசிக் கொண்டிருந்தோம்.

இங்கிருந்து பதிவு தொடர்கிறது

இந்த தொடரில் பலமுறை நான் மன்ற டோக்கன் டிக்கெட்டுகள் பற்றி குறிப்பிட்டு எழுதியிருக்கிறேன். பிற்காலத்தில் ஒரு காட்சியை மட்டும் ஒதுக்கி அந்த ஷோவிற்குண்டான அனைத்து டிக்கெட்டுகளும் மன்றத்திடம் கொடுக்கப்பட்டு அவை விற்பனை செய்யப்படுவது அனைவரும் அறிந்திருக்க கூடும். அன்றைய நாட்களில் ஒவ்வொரு காட்சிக்கும் குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே டிக்கெட்டுகள் மன்றத்தினரிடம் கொடுக்கப்பட்டு அவை ரசிகர்களுக்கு அல்லது கேட்பவர்களுக்கு விற்பனை செய்யப்படுவது வழக்கம். நான் முன்பே குறிப்பிட்டிருப்பது போல் எங்களைப் போன்றவர்களுக்கு இதில் உள்ள மிகப் பெரிய advantage என்னவென்றால் வரிசையில் நின்று கஷ்டப்பட வேண்டாம். அதுவும் தவிர மன்றத்தில் உறுப்பினராக இருக்க வேண்டும் என்ற அவசியமுமில்லை. என் கஸினுக்கு மன்ற ஆட்களை தெரியும் என்பதனால் வாங்கி விடுவோம். இந்த டிக்கெட்டுகள் ரீலிசிற்கு ஒரு வாரம் முன்னதாக கொடுக்க ஆரம்பிப்பார்கள்.

செப்டம்பர் 29 வெள்ளிக்கிழமை படம் ரிலீஸ் 1972-ல் முதன்முறையாக வெள்ளிக்கிழமை படம் ரிலீஸ். 72-ல் முதல் படமான ராஜா ஜனவரி 26 ரிலீஸ். அது புதன்கிழமை. அதன் பிறகு வெளியான நான்கு படங்களும் [ஞான ஒளி, பட்டிக்காடா பட்டணமா, தர்மம் எங்கே மற்றும் தவப்புதல்வன்] சனிக்கிழமை வெளியானதால் தானாகவே முதல் நாள் 4 காட்சிகள் என்று ஆகிவிட்டது. ஆனால் இது வெள்ளிக்கிழமை என்பதனால் 3 காட்சிகள்தான் இருக்குமா அல்லது காலைக்காட்சி போடுவார்களா என்ற சந்தேகம் இருந்தது. அன்று 4 காட்சிகள் என்று விநியோகஸ்தர் தரப்பிலிருந்து உறுதிப்படுத்தப்பட மார்னிங் ஷோதான் ஓபனிங் ஷோ என்பது confirm ஆனது.

ஸ்கூல் வேறு லீவ் ஆகவே ஓபனிங் ஷோ டோக்கன் வாங்கி விட வேண்டும் என்று முடிவு செய்தோம் நமக்குதான் அனைவரையும் தெரியுமே அது மட்டுமல்ல இரண்டு டிக்கெட்டுகள்தானே என்ற நினைப்பில் என் கஸின் சற்று தாமதமாக போய் விட ஓபனிங் ஷோ டிக்கெட்டுகள் எல்லாம் விற்று விட்டன. அன்றைய நாட்களில் ரசிகர்களின் முதல் சாய்ஸ் ஓபனிங் ஷோவாக இருக்கும். அதற்கு அடுத்த சாய்ஸ் நைட் ஷோ. பிறகு ஈவினிங் ஷோ. கடைசி சாய்ஸ்தான் மாட்னி ஷோ. எவ்வளவு முயற்சித்தும் ஓபனிங் ஷோ டிக்கெட் கிடைக்கவில்லை. மாட்னி ஷோ டிக்கெட் மட்டும்தான் இருந்தது என்பதனால் அதை வாங்கிக் கொண்டு வந்துவிட்டான். எப்படியாவது ஓபனிங் ஷோ டிக்கெட்டுகள் தேற்றி விடலாம் என்று ஒரு நம்பிக்கை. ஆனால் எவ்வளவு முயற்சித்தும் மார்னிங் ஷோ டிக்கெட் கிடைக்கவேயில்லை. வீட்டருகே நியூசினிமா தியேட்டர் என்பதனால் காலையில் தியேட்டர் பக்கம் போய் பார்த்தோம். பயங்கரமான கூட்டம். தெரிந்தவர்கள் யாரைக் கேட்டாலும் இல்லை இல்லை என்றே கை விரித்து விட்டார்கள். ராஜா, பட்டிக்காடா பட்டணமா தர்மம் எங்கே போன்ற படங்களுக்கு எங்களுக்கு உதவி செய்த அதிர்ஷ்டம் இந்த முறை கை கொடுக்கவில்லை.

எப்படா 1 மணி ஆகும் என்று காத்திருந்து வீட்டை விட்டு கிளம்பி தியேட்டருக்கு போய் விட்டோம். 1.15 மணி வாக்கில் தியேட்டரின் மெயின் கேட் திறந்து வைக்கப்பட்டது. கொஞ்சம் கொஞ்சமாக ஆட்கள் வெளியே வர ஆரம்பிக்க திடீரென்று ஒரு பெரிய கூட்டம் வெளியே வந்து சந்தோஷக் கூச்சலிட பட்டாஸ் வாலாக்கள் வெடித்து சிதற ஆரம்பித்தன. வெளியே வருபவர்கள் அப்படியே உற்சாகமும் சந்தோஷமும் துள்ள படம் டாப் என்று ரிசல்ட் சொல்ல (நான் ஏற்கனவே எழுதியிருந்தது போல சூப்பர் என்ற வார்த்தை அன்றைய காலகட்டத்தில் தமிழ் அகராதியில் சேர்க்கப்பட்டிருக்கவில்லை) அந்த ஏரியாவே ஜெகஜோதியானது.

தெரிந்தவர்கள் முகம் தென்பட அவர்களிடம் படம் பற்றி கேட்கிறோம். அந்நேரம் கஸினின் நண்பர்கள் குழாம் ஒன்று படம் பார்த்துவிட்டு வெளியே வருகிறது. அதில் ஒருவர் என் கஸினிடம் " காலையிலே எங்கடா போனே? டிக்கெட் எக்ஸ்ட்ரா இருந்தது. சரி உனக்கு கொடுக்கலாம்னு உங்க வீட்டுக்கு வந்தேன். நீ வெளியே போயிட்டேன்னு சொன்னாங்க. தியேட்டருக்கு வந்து பார்த்தேன். உன்னை காணோம். நம்ம பசங்க அவன் (என் கஸின் பெயர் சொல்லி) எப்படியாவது டிக்கெட் வாங்கியிருப்பான்னு சொன்னதனாலே அதை வேற ஆட்களுக்கு கொடுத்துட்டேன்" என்று சொல்ல எத்தனை டிக்கெட்-னு என் கஸின் கேட்க இரண்டு எக்ஸ்ட்ரா டிக்கெட் இருந்ததுனு நண்பர் சொல்ல எங்களுக்கு எப்படி இருந்திருக்கும் என்பது நான் விளக்காமலே அனைவருக்கும் புரியும் என நினைக்கிறேன். நாங்கள் காலையில் தியேட்டர் போய் டிக்கெட்டுகளுக்காக அலைந்த நேரத்தில் அந்த நண்பர் எங்கள் வீட்டிற்கு வந்திருக்கிறார்.

அவர்களுடன் பேசிக் கொண்டிருந்துவிட்டு நேரமாகி விட்ட காரணத்தினால் நாங்கள் உள்ளே செல்வதற்கு மெயின் கேட் பக்கத்தில் இருக்கும் சைடு கேட் அருகே சென்றோம். மன்ற டோக்கன் டிக்கெட்டுகள் வாங்கியவர்கள் அனைவரும் அந்த கேட் வழியாகதான் போக வேண்டும் என்று சொல்லி விட்டதால் அங்கே போய் நின்றோம். கையில் டிக்கெட் இருந்தும் உள்ளே போவதற்கு நாங்கள் பட்ட பாடு?

(தொடரும்)

அன்புடன்

HARISH2619
30th June 2015, 01:51 PM
திரு முரளி சார்,
ஆவலை அடக்க முடியவில்லை அதிக இடைவெளி தராமல் கூடிய சீக்கிரம் அடுத்த பதிவை இடவேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்

Russellxor
30th June 2015, 05:48 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/cinema%20%20express/FB_IMG_1435666605727_zpsylgytxzn.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/cinema%20%20express/FB_IMG_1435666605727_zpsylgytxzn.jpg.html)

Russellxor
30th June 2015, 05:49 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/cinema%20%20express/FB_IMG_1435666609241_zps4wphhbbv.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/cinema%20%20express/FB_IMG_1435666609241_zps4wphhbbv.jpg.html)

Russellisf
30th June 2015, 10:16 PM
சிவாஜி, சிவாஜி சகோதரர்கள், காமராஜர்


http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/a_zpsdeh067jq.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/a_zpsdeh067jq.jpg.html)

Russellxor
30th June 2015, 10:33 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/23v1646_zps8eysyrae.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/23v1646_zps8eysyrae.jpg.html)

Russellxor
30th June 2015, 10:34 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/vlcsnap-2012-11-11-19h43m22s163_zpsgn96rrhn.png (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/vlcsnap-2012-11-11-19h43m22s163_zpsgn96rrhn.png.html)

Russellxor
30th June 2015, 10:35 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/0-1_zpsqckeplj1.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/0-1_zpsqckeplj1.jpg.html)

Russellxor
30th June 2015, 10:36 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/24Justice-Gopinath_zpst0ducxre.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/24Justice-Gopinath_zpst0ducxre.jpg.html)

Russellxor
30th June 2015, 10:37 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/0_zpsfoejbfg3.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/0_zpsfoejbfg3.jpg.html)

Russellxor
30th June 2015, 10:40 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/MADRAS-26_zps2frjizo6.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/MADRAS-26_zps2frjizo6.jpg.html)

Russellxor
30th June 2015, 10:41 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/bf582-4_zpsvhxeqqif.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/bf582-4_zpsvhxeqqif.jpg.html)

Russellxor
30th June 2015, 10:42 PM
?!

http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/ysr3p_teravelpulu_nataviswarupam_sivajiganesan_281 011_01_zpswxlmw3ll.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/ysr3p_teravelpulu_nataviswarupam_sivajiganesan_281 011_01_zpswxlmw3ll.jpg.html)

eehaiupehazij
30th June 2015, 11:55 PM
தலைக் கவசம் உயிர்க் கவசம் !அன்றே உணர்த்தினார் நடிகர்திலகம் !! Helmet is compulsory for both two wheeler rider and the pillion riders from today 01.07.2015 : NT's depictions on Helmet's indispensability and inevitability!!

கர்ண மகாப் பிரபுவே கவச குண்டலங்களை தானத்தால் இழந்ததால்தானே இறுதிப் போரில் இரு/நான்கு சக்கர வாகனமான தேரில் செல்லும்போது தலைக்கவசம் அணிய நேரிட்டது ?!

https://www.youtube.com/watch?v=6K9UgFkelyA

உத்தமபுத்திரனும் விதிவசத்தால் இரும்புக் கவசத்தை தலையில் ஏந்த நேர்ந்ததே !

https://www.youtube.com/watch?v=IxIxd6zeT6c

புராண சரித்திர காலத்தில் மட்டுமன்றி சமூகப் பட காலத்திலும் ஹெல்மெட் என்னும் தலைக்கவசத்தின் இன்றியமையாமையை உணர்த்தியவர் நடிகர்த்திலகமே!!

Watch our NT as SP Chowdhry with an ISI brand genuine helmet in the climax!!

https://www.youtube.com/watch?v=d7200Zmqx4o !

செந்தில்வேல் சார் நமது பட்டாக்கத்தி பைரவருக்கு உங்கள் கிராபிக்ஸ் உபயத்தில் ஒரு ஹெல்மெட் போட்டுவிடுங்களேன் ப்ளீஸ் !!

https://www.youtube.com/watch?v=Ogv_5o3Ejw8

James Bond / Connery too endorses the wearing of helmet in risk taking bike rides or chases!!

https://www.youtube.com/watch?v=NWQHlNaBVRM

Russellxor
1st July 2015, 12:48 PM
Sivaji senthil sir o.k.

http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/FB_IMG_1435680285429_zpsf4bfy3uc.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/FB_IMG_1435680285429_zpsf4bfy3uc.jpg.html)

tacinema
1st July 2015, 01:15 PM
மதுரைையச் சேர்ந்த மக்கள் தலைவரின் அன்பு ரசிகர் திரு.டி.ஆர்,ராஜன் அவர்கள் மணிவிழா காண்கிறார். அவரை வாழ்த்தி ரசிகர்கள் வைத்திருக்கும் வாழ்த்து பேனர்கள்.
60 வயது நெருங்கிய அவர் தலைவரைப் பற்றி பேசினாலோ அல்லது தலைவர் படம் வந்தாலோ 16 வயது இளைஞன் போல் மாறி விடுவார். அவர் நீடுழி வாழ அனைவரும் வாழ்த்தி நாம் வணங்கும் கடவுள் சிவாஜியை வணங்குவோம்.


https://fbcdn-sphotos-h-a.akamaihd.net/hphotos-ak-xfp1/v/t1.0-9/p480x480/11015356_836870729730866_4766075077205075421_n.jpg ?oh=0ccecac4bd4924dc4dcb47407a705557&oe=562B8223&__gda__=1444392723_cb87b2ed3557acffedf18304fc3b7ef 3

சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல, எவரும் எட்டாத அதிசயம்.

Dear Mr. Rajan,

A proud and memorable day. மதுரையை ஆட்சி செய்யும் அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் துணை என்றும் தங்களுக்கு உண்டு.

Wish a long, prosperous and healthy life to you and your family

Regards.
A proud NT Fan from Madurai

Russellxor
1st July 2015, 03:04 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/20150701131833_zpss66kactc.gif (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/20150701131833_zpss66kactc.gif.html)

Russellxor
1st July 2015, 03:16 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/FB_IMG_14357342707150_zpsxmtpttea.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/FB_IMG_14357342707150_zpsxmtpttea.jpg.html)

Russellxor
1st July 2015, 03:16 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/FB_IMG_14357342193670_zpsjgmbwx9l.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/FB_IMG_14357342193670_zpsjgmbwx9l.jpg.html)

Russellxor
1st July 2015, 03:17 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/FB_IMG_14357341141730_zpslu29zwd1.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/FB_IMG_14357341141730_zpslu29zwd1.jpg.html)

Russellxor
1st July 2015, 03:18 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/FB_IMG_14357340652320_zpsyslslysq.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/FB_IMG_14357340652320_zpsyslslysq.jpg.html)

Russellxor
1st July 2015, 03:19 PM
F b

http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/FB_IMG_14357340104800_zps0thyze8h.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/FB_IMG_14357340104800_zps0thyze8h.jpg.html)

Russellxor
1st July 2015, 03:23 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/FB_IMG_14357339771510_zpsxexcv49y.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/FB_IMG_14357339771510_zpsxexcv49y.jpg.html)

Russellxor
1st July 2015, 03:36 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/FB_IMG_1435744604367_zpsjc4fscid.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/FB_IMG_1435744604367_zpsjc4fscid.jpg.html)

eehaiupehazij
1st July 2015, 06:20 PM
Sivaji senthil sir o.k.

http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/FB_IMG_1435680285429_zpsf4bfy3uc.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/FB_IMG_1435680285429_zpsf4bfy3uc.jpg.html)

Superb Senthilvel Sir.Thanks a lot for your kind response and action. NT shines in your imaginative re-creations!! Kudos!!
regards, senthil

Russellxor
1st July 2015, 07:53 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/20150701194922_zps5hxar5ms.gif (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/20150701194922_zps5hxar5ms.gif.html)

Russellxor
1st July 2015, 08:03 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/cinema%20%20express/FB_IMG_1435761133624_zpsxjxgi1t0.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/cinema%20%20express/FB_IMG_1435761133624_zpsxjxgi1t0.jpg.html)

Russellxor
1st July 2015, 08:04 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/cinema%20%20express/FB_IMG_1435761137604_zpsdohkoklt.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/cinema%20%20express/FB_IMG_1435761137604_zpsdohkoklt.jpg.html)

eehaiupehazij
1st July 2015, 10:10 PM
நடிகர்திலகத்தின் பைனாகுலர் (தொலைநோக்குப்) பார்வை ! NT's long vision!!

பைனாகுலர் தூரத்து நிகழ்வுகளையும் இயற்கையின் அழகம்சங்களையும் அருகில் நடப்பது போல பிரமைப்படுத்தும் ஊடகம் !!
ஆனால் தூரத்துப் பச்சையில் நமது கவனம் செல்லும்போது நம்மைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதை நாம் உணராது இடறிவிழும் வாய்ப்புக்களும் சாத்தியமே !!
புதியபறவை திரைக்காவியத்தில் டைட்டில்ஸ் முடிந்தவுடன் அறிமுகக் காட்சியில் பைனாகுலரில் கடலை ரசித்துக் கொண்டே பின்புறம் நகர்ந்து வரும்போது சரோஜாதேவியின் கால் பட்டு இடறித் தடுமாறுவார்! இது ஒரு suggestive ஆன காட்சியமைப்பே !!!
சரோஜாதேவியின் காதல் வலையில் சிக்கி படம் முழுவதும் இடறித் தடுமாறி வதைபடப் போகிறார் என்பதன் முன்னோட்டமே !!
2:23 முதல்....
https://www.youtube.com/watch?v=_DwRLo1bBx4

பலே பாண்டியா திரைப்படத்தின் ஆரம்பமே கட்டட உச்சியிலிருந்து நடிகர்திலகத்தின் அமர்க்களமான பைனாகுலர் பார்வையால் பூமியில் தரைமேல் நடக்கும் திருட்டு புரட்டுக்களை அம்பலப் படுத்தும் வண்ணம் கலகலக்க வைக்கும் !!


https://www.youtube.com/watch?v=nOuV4SlBjfU

ஆலயமணி திரைப்படத்தில் எஸ் எஸ் ஆர் சரோஜாதேவி நடத்தையில் சந்தேகப் பட்டு பைனாகுலரில் பார்க்கிறார் நடிகர்திலகம் !

https://www.youtube.com/watch?v=ZMhIoZi7fUk



எங்க ஊர் ராஜா திரைக்காவியத்தில் சர்வேயராக binocular dumpy level மூலம் நடிப்பின் ஏற்றத்தாழ்வுகளை அளவீடு செய்யும் போது கதாநாயகி வம்பு அம்புகளைத் தொடுத்து இடறச் செய்கிறார் !

https://www.youtube.com/watch?v=Mq5HUJSAOx8

Murali Srinivas
2nd July 2015, 12:28 AM
நான்மாடக்கூடலில் வெற்றி பதாகையை பறக்க விட்டு

நெல்லை சீமையில் வெற்றி தேரோட்டம் நடத்தி விட்டு இப்போது

மலைகோட்டை மாநகருக்கு விஜயம் செய்கிறார் மக்கள் பிரதிநிதி ராஜ சேகர்.

வரும் சனிக்கிழமை [ஜூலை 4-ந் முத்ல்] தர்மம் எங்கே திரைப்படம் தினசரி 4 காட்சிகளாக திருச்சி கெயிட்டியில் திரையிடப்படுகிறது.

http://i1369.photobucket.com/albums/ag235/sundarajan/m5_zps4af2af0e.jpg

http://i1369.photobucket.com/albums/ag235/sundarajan/m1_zps87a9a016.jpg

தர்மம் எங்கே ராஜசேகரை வரவேற்க திருச்சி ரசிகர்கள் கோலாகல ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். சென்ற இடமெல்லாம் பெரும் வரவேற்பை பெறும் நடிகர் திலகம் இம்முறையும் அதை திருச்சியில் தெளிவுப்படுத்த வருகை புரிகிறார்.

அன்புடன்

வரும் ஜூலை 4-ந் திருச்சி கெயிட்டியில் வெளியாவதாக இருந்த நடிகர் திலகத்தின் காவிய திரைப்படம் கை கொடுத்த தெய்வம் ஒரு சில தவிர்க்க முடியாத காரணங்களினால் வெளியீடு ஒத்தி வைக்கப்பட்டிருக்கிறது.

Russellbpw
2nd July 2015, 11:55 AM
ஜூலை மாதம் வெளியான நடிகர் திலகம் படங்கள் : 23

guest appearances : 3

as hero : 20


1. திரும்பிப்பார். - 10-07-1953
2. அன்பு - 24-07-1953
3. துளிவிஷம் - 30-07-1954
4. அன்னையின் ஆணை - 04-07-1958
5. பில்லாலு தெச்சின செல்லானி ராஜ்ஜியம் - 01-07-1960
6. குழந்தைகள் கண்ட குடியரசு - 29-07-1960
7. எல்லாம் உனக்காக - 01-07-1961
8. ஸ்ரீ வள்ளி - 01-07-1961
9. வடிவுக்கு வளைகாப்பு - 07-07-1962
10. பார் மகளே பார் - 12-07-1963
11. கை கொடுத்த தெய்வம் - 18-07-1964
12. திருவிளையாடல் - 31-07-1965
13. திருவருட்செல்வர் 28-07-1967
14. தில்லான மோகனம்பாள் - 27-07-1968
15. சவாலே சமாளி - 03-07-1971
16. தேனும் பாலும் - 22-07-1971
17. தர்மம் எங்கே 15-07-1972
18. பக்த துக்காராம் - 05-07-1973
19. எங்கள் தங்கராஜா - 15-07-1973
20.. இமயம் - 21-07-1979
21. லாரி டிரைவர் ராஜாகண்ணு - 03-07-1981
22. தாய்க்கு ஒரு தாலாட்டு - 16-07-1986
23. ஒண்சுமோர் - 04-07-1997

rks

Russellxor
2nd July 2015, 03:59 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/20150702135009_zpsuqsunpom.gif (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/20150702135009_zpsuqsunpom.gif.html)

Russellxor
2nd July 2015, 04:00 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/20150702124115_zps6hbsqczp.gif (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/20150702124115_zps6hbsqczp.gif.html)

Russellxor
2nd July 2015, 04:58 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/cinema%20%20express/FB_IMG_1435836278084_zpsb911i1vi.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/cinema%20%20express/FB_IMG_1435836278084_zpsb911i1vi.jpg.html)

Russellxor
2nd July 2015, 04:59 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/cinema%20%20express/FB_IMG_1435836272023_zpsjtvteq0c.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/cinema%20%20express/FB_IMG_1435836272023_zpsjtvteq0c.jpg.html)

Russellxor
2nd July 2015, 05:00 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/cinema%20%20express/FB_IMG_1435836296926_zpsf2jkuinw.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/cinema%20%20express/FB_IMG_1435836296926_zpsf2jkuinw.jpg.html)

Russellxor
2nd July 2015, 05:01 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/cinema%20%20express/FB_IMG_1435836275149_zpskhuvuo6j.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/cinema%20%20express/FB_IMG_1435836275149_zpskhuvuo6j.jpg.html)

eehaiupehazij
2nd July 2015, 06:10 PM
மிச்ச சொச்சமில்லாத உச்சம் தொட்ட மச்சக்கா(ளை)ரர் நடிகர் திலகம் !! Mole Model NT!!

உலகில் உதித்த எல்லோருமே மச்சக்காரராகி சாதனைகள் புரிந்து மக்கள் மனதை ஈர்த்து விட முடியாது....அதுவும் அடியெடுத்து வைத்த முதல் படத்திலேயே உச்சமடைந்து நடிப்பின் நிலைபெற்ற உருவகமாக !!

இப்பேர்ப்பட்ட சாதனை மச்சக்காரருக்கு முகத்திலும் ஒரு மச்சத்தை பொருத்திப் பார்த்தால் ...பிரபுவின் குழிவிழுந்த கன்னம் நம்மை ஈர்த்ததை விட நடிப்பின்கர்ண மகாப் பிரபு நம்மை வசியம் செய்தது மச்சத்தின் மச்சமே !Kind Attention Senthilvel Sir..Your Graphics Maayaajaal awaits ...!!
ரா(மனின்)ஜமச்சம் ...ராமன் எத்தனை ராமனடி!

https://www.youtube.com/watch?v=y0khGzjDhNQ

இந்த மச்சக் காளையின் கவின்மிகு கறுப்பு வெள்ளைப்படம்தான் அந்த நாளைய வசூலில் உச்சமாமே !!

https://www.youtube.com/watch?v=ev5G35lzX3M

இந்த மச்சக்காரருக்குக் குரல் தந்த பிறகுதான் பாடகர்களில் மச்சக்காரராக உச்சம் தொட்டார் TMS!!
https://www.youtube.com/watch?v=1S3JZU2tW7E

மச்சக்காரருக்கு ஏற்ற மச்சக் கன்னி பாரதி தங்கசுரங்கம் காவியத்தில் !

https://www.youtube.com/watch?v=lnObODMJnHY

Russellisf
2nd July 2015, 11:18 PM
நமது திலகங்கள்

http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/a_zpsvyvaoqfg.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/a_zpsvyvaoqfg.jpg.html)

RAGHAVENDRA
3rd July 2015, 12:11 PM
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/Ramkumar1.jpg

ஜூலை 3 இன்று பிறந்த நாள் காணும் அன்புச் சகோதரர் ராம்குமார் அவர்களுக்கு உளமா்ரந்த பிறநத நாள் நல்வாழ்த்துக்கள்.

eehaiupehazij
3rd July 2015, 01:04 PM
Mood Changers!

ஓடிப்போனவர்கள் நடிகர்திலகத்துக்கு எழுதி வைத்த கடிதக் கடுக்காய்கள்!!

கடிதக் கடுக்காய் : 1 பாலும் பழமும் by சரோஜாதேவி!


அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சே! உண்மையான ஆழமான அன்பும் இதற்கு விதிவிலக்கல்ல !!
தமிழ் படங்களில் தவறாமல் இன்று வரை இடம் பெரும் காட்சிகளில் முக்கியமானது வீட்டைவிட்டு எஸ்கேப் ஆகும் ஆத்மாக்கள் தங்களின் துக்கத்தின் வடிகாலாக எழுதி வைத்து விட்டு செல்லும் கடிதங்களை கதாநாயகன் படித்து காண்டாகி சித்தப் பிரமை பிடித்து அலைந்து திரிந்து ஞான முக்தி அடைவதே !! அன்று கடிதங்கள்...இன்று செல்போன் குறுந்தகவல்கள்!! (சில கடிதங்களை கதாநாயகனோ நாயகியோ படிக்கும் போது இக்காலத்திய Face Time, Viber, Skype...மாதிரி கடிதம் எழுதியவரின் முகமே கடிதத்தில் வந்து நின்று வாசிக்கும் இம்சையும் உண்டு!)
பாலும் பழமும் உண்மையான ஆத்மார்த்தமான தம்பதியினரின் அன்புப்பிணைப்புக்கு உரைக்கல்லான திரைக்காவியம். கணவரது மருத்துவ ஆராய்ச்சிகள் அவர் தன் மீது காட்டும் அளவற்ற காதல் அன்பினால் கவனிப்பின்றி வீணாவதை உணருகிறார் மனைவி. ஆராய்ச்சிக்கு துணை நிற்கும் போது புற்று நோயின் தாக்கத்துக்கு உள்ளாகிறார். இனி கணவருக்கு தாம் உதவாதவள் என்னும் தவறான முடிவில் உருக்கமாக ஒரு கடிதம் எழுதி வைத்துவிட்டு வீட்டைத் துறந்து எங்கோ செல்ல ரயிலேறி விடுகிறார். வீடு திரும்பும் அன்புக் கணவர் எஸ் ஆகிவிட்ட மனைவியின் கடிதம் படித்து அடையும் வேதனை உணர்வுகளை சித்தரிக்க நடிகர் திலகத்தால் மட்டுமே முடியும் !! கண்ணுற்று அவர் சோகத்தில் பங்கு பெறுவோமே!


Watch from 16:00...
https://www.youtube.com/watch?v=P7iE_iv9xTs

Russellbpw
3rd July 2015, 02:54 PM
JULY 3

http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/Capture_zpsodtqbphs.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/Capture_zpsodtqbphs.jpg.html)

Russellxor
3rd July 2015, 02:59 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/20150703124623_zpsemry5c0i.gif (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/20150703124623_zpsemry5c0i.gif.html)

Russellxor
3rd July 2015, 03:00 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/20150703145202_zpstqjfqjv7.gif (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/20150703145202_zpstqjfqjv7.gif.html)

Russellxor
3rd July 2015, 03:00 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/20150703145456_zpsslnminzg.gif (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/20150703145456_zpsslnminzg.gif.html)

eehaiupehazij
3rd July 2015, 03:24 PM
Mood Changers!

ஓடிப்போனவர்கள் நடிகர்திலகத்துக்கு எழுதி வைத்த கடிதக் கடுக்காய்கள்!!


அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சே! உண்மையான ஆழமான அன்பும் இதற்கு விதிவிலக்கல்ல !!
தமிழ் படங்களில் தவறாமல் இன்று வரை இடம் பெரும் காட்சிகளில் முக்கியமானது வீட்டைவிட்டு எஸ்கேப் ஆகும் ஆத்மாக்கள் தங்களின் துக்கத்தின் வடிகாலாக எழுதி வைத்து விட்டு செல்லும் கடிதங்களை கதாநாயகன் படித்து காண்டாகி சித்தப் பிரமை பிடித்து அலைந்து திரிந்து ஞான முக்தி அடைவதே !! அன்று கடிதங்கள்...இன்று செல்போன் குறுந்தகவல்கள்!! (சில கடிதங்களை கதாநாயகனோ நாயகியோ படிக்கும் போது இக்காலத்திய Face Time, Viber, Skype...மாதிரி கடிதம் எழுதியவரின் முகமே கடிதத்தில் வந்து நின்று வாசிக்கும் இம்சையும் உண்டு!)


கடிதக் கடுக்காய் 2 : கே ஆர் விஜயா......சொர்க்கம் திரைப்படத்தில்!

அடிப்படையில் நல்ல குடும்பத்தலைவரான நடிகர் திலகம் பணக்கார வர்க்க தொழில்முறை நட்பு சூழலால் குடிப்பழக்கத்துக்கு ஆளாகிறார் !

தந்தையின் செயல்பாடுகளைக் கூர்ந்து நோக்கும் பாலகன் அவரைப் போலவே குடிகாரன் போல இமிடேட் செய்யும் போது தாயின் மனம் பரிதவிக்கிறது.

செய்வதறியாது மகனின் கல்வி மற்றும் எதிர்காலம் கருதி ஒரு கடிதம் எழுதி வைத்துவிட்டு எஸ்....அப்புறமென்ன?
கடிதக் கடுக்காய் அடிக்கும் கடுப்பில் சோக அலப்பறைக்கு மாறுகிறார் நடிகர்திலகம் !


Watch from 13 :30....
https://www.youtube.com/watch?v=4YXqhPNsmKc

Russellbpw
3rd July 2015, 06:32 PM
THOUGH THIS HAS GOT NO RELEVANCY TO OUR THREAD, STILL, FOR A DIVERSION - THE MOST STURDY & ECONOMICAL NON-BREAKABLE HELMET USED BY ONE OF OUR TAMIZHAR !!!

THE PRESENCE OF MIND OF THIS GENTLEMAN IS SOMETHING THAT NEEDS TO BE APPRECIATED & HIS WILLINGNESS TO ADHERE TO TRAFFIC RULE FOR WEARING HELMET SHOULD BE GIVEN A APPRECIATION TOO..!

http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/helmet_zpsemejgib0.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/helmet_zpsemejgib0.jpg.html)

RKS - :goodidea: :rotfl:

eehaiupehazij
3rd July 2015, 07:56 PM
Mood Changers!

ஓடிப்போனவர்கள் நடிகர்திலகத்துக்கு எழுதி வைத்த கடிதக் கடுக்காய்கள்!!

கடிதக் கடுக்காய் : 3 விஜயகுமாரி/பார் மகளே பார்

தான் பாசம் பொழிந்து கண்ணுக்குள் இமையாக வளர்த்த இரு மகள்களில் ஒரு மகள் தனக்குப் பிறந்தவர் அல்ல என்பதை அறிந்ததும் தடுமாற்றமடைகிறார்
நடிகர்திலகம். அதை உணர்ந்து தானே அந்த வேண்டாத மகள் என்றெண்ணி ஒரு கடிதம் எழுதி வைத்துவிட்டு எஸ் ஆகிறார் விஜயகுமாரி !!
இப்படிக் கடுக்காய் கொடுத்தவரின் கடிதத்தைக் கூடப் படிக்க மனமில்லாத பாவனைகளை சிறப்பாக வெளிப்படுத்தி அசத்துகிறார் நடிப்புத் தந்தை!!

https://www.youtube.com/watch?v=_tuN1WxSsZM

Russellxss
3rd July 2015, 09:26 PM
உத்ரகாண்ட் வெள்ளத்தில் சிக்கியவர்களை காப்பாற்ற சென்ற போது ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் தம் இன்னுயிரை நீத்த மதுரையை சேர்ந்த 27 வயதான திரு பிரவீன் அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது. அவர் இறந்தபோது சுயவிளம்பரத்திற்காக அவரின் தாயார் திருமதி.மஞ்சுளா அவர்களை சந்தி்த்து ஆறுதல் சொல்லிவிட்டு செய்தித்தாளில் தனது போட்டோ வந்ததை பார்த்து விட்டு சந்தோசமடைந்த அரசியல்வாதிகள் அதன் பின்பு கண்டு கொள்ளவேயில்லை.
ஆனால் சிவாஜி காமராஜ் கல்வி அறக்கட்டளை சார்பில் நாம் சந்தித்து ஆறுதல் சொன்னதவுடன் இனி அறக்கட்டளை சார்பில் நடத்தப்படும்
அனைத்து நிகழ்ச்சியிலும் அவரது படமும் போட்டு அவருக்கு மரியாதை செலுத்தப்படும் என்று உறுதி அளித்திருந்தோம். அதே போல் அறக்கட்டளை சார்பில் நாங்கள் நடத்திய அனைத்து நிகழ்ச்சியிலும் அவரது தாயார் திருமதி.மஞ்சுளா அவர்களை அழைத்து மரியாதை செலுத்தி வருகிறோம்.
இந்த ஆண்டு நடைபெற்ற அவரது நினைவு நாள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் அனைவருக்கும் அறக்கட்டளை சார்பில் திரு.பிரவீன் அவர்களின் உருவத்துடன் பேட்ஜ் வழங்கப்பட்டது. பேட்ஜை பார்த்து விட்டு அவரது தாயார் நாட்டுக்காக உயிர் விட்ட எனது மகனை நாடே மறந்து விட்டபோது, நீங்கள் எனது மகனுக்காக செய்வது எனக்கு மிகவும் ஆறுதலாக இருக்கிறது என்று கூறினாா். அதற்கு நாங்கள் சொன்ன பதில் நாங்கள் இருந்த இடம் அப்படி எங்கள் தலைவர் சிவாஜி அவர்கள் எப்படி நாட்டுக்காக இரத்தம் சிந்தியவர்களை மதித்தாரோ அதை நாங்கள் தொடர்ந்து செய்கிறோம்-செய்வோம் என்று கூறினோம்.
இதில் இன்னொரு முக்கியமான விசயம் என்னவென்றால் சிவகாமியின் செல்வன் திரைப்படத்தில் நமது மக்கள் தலைவர் சிவாஜி அவர்கள் ஏற்றிருந்த விமானப்படைவீரர் கதாபாத்திரத்தை அப்படியே பிரதிபலித்தது திரு.பரவீன் அவர்களின் வாழ்க்கை.


https://scontent-sin1-1.xx.fbcdn.net/hphotos-xtp1/v/t1.0-9/s720x720/11692681_492553940901717_8284467677261842431_n.jpg ?oh=12e1795f9404a2732f65155a3c34a47a&oe=5621500C

https://fbcdn-sphotos-f-a.akamaihd.net/hphotos-ak-xtp1/v/t1.0-9/11703200_492554930901618_7035094028440200818_n.jpg ?oh=cdee6510c107a9e96197d173b8710853&oe=562CEF01&__gda__=1445185591_9fddcd4456ca749d50e263485764237 2

https://scontent-sin1-1.xx.fbcdn.net/hphotos-xft1/v/t1.0-9/s720x720/11694860_492555097568268_4147114678899760190_n.jpg ?oh=a3649edd44178c715f0a8f1ee0111f4c&oe=5612F107

செய்தித்தாளில் இரண்டாமாண்டு என்பதற்கு பதிலாக முதலாமண்டு என்று தவறுதலாக அச்சிடப்பட்டுள்ளது.


சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல, எவரும் எட்டாத அதிசயம்.

Russellxss
3rd July 2015, 09:37 PM
https://fbcdn-sphotos-h-a.akamaihd.net/hphotos-ak-xfp1/v/t1.0-9/s720x720/11659503_413763655490979_5031271724753105787_n.jpg ?oh=2333857c4468502c4f613fd2f4fdb830&oe=562D5C15&__gda__=1444042277_e2297dfa015646c7ec2775b2dd08f91 6


சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல, எவரும் எட்டாத அதிசயம்.

Russellxor
3rd July 2015, 11:04 PM
உத்ரகாண்ட்
[COLOR="#FF0000"][SIZE=5][B]சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல, எவரும் எட்டாத அதிசயம்.


பாராட்டுதலுக்குரியது[emoji120] [emoji120] [emoji120] [emoji120] [emoji120] [emoji120] [emoji120] [emoji120] [emoji120] [emoji120] [emoji120] [emoji120] [emoji120] [emoji120] [emoji120] [emoji120] [emoji120] [emoji120] [emoji120] [emoji120] [emoji120] [emoji120] [emoji120] [emoji120] [emoji120] [emoji120] [emoji120] [emoji120] [emoji120] [emoji120] [emoji120] [emoji120] [emoji120] [emoji120] [emoji120] [emoji120] [emoji120] [emoji120] [emoji120] [emoji120] [emoji120] [emoji120] [emoji120] [emoji120] [emoji120] [emoji120] [emoji120] [emoji120] [emoji120] [emoji120] [emoji120] [emoji120] [emoji120] [emoji120] [emoji120] [emoji120] [emoji120] [emoji120] [emoji120] [emoji120] [emoji120] [emoji120] [emoji120] [emoji120] [emoji120] [emoji120] [emoji120] [emoji120] [emoji120] [emoji120] [emoji120]

KCSHEKAR
4th July 2015, 11:02 AM
[B][COLOR="#0000FF"][SIZE=4]உத்ரகாண்ட் வெள்ளத்தில் சிக்கியவர்களை காப்பாற்ற சென்ற போது ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் தம் இன்னுயிரை நீத்த மதுரையை சேர்ந்த 27 வயதான திரு பிரவீன் அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.
இதில் இன்னொரு முக்கியமான விசயம் என்னவென்றால் சிவகாமியின் செல்வன் திரைப்படத்தில் நமது மக்கள் தலைவர் சிவாஜி அவர்கள் ஏற்றிருந்த விமானப்படைவீரர் கதாபாத்திரத்தை அப்படியே பிரதிபலித்தது திரு.பரவீன் அவர்களின் வாழ்க்கை.
திரு.சுந்தர்ராஜன்,
நடிகர்திலகத்தின் நினைவைப் போற்றும் விதத்தில் அமையும் தங்களுடைய பணி போற்றுதலுக்குரியது.

Russellxss
4th July 2015, 10:07 PM
https://fbcdn-sphotos-d-a.akamaihd.net/hphotos-ak-xaf1/v/t1.0-9/p480x480/11402980_838960339521905_7644189636673213012_n.jpg ?oh=cdce4839dfe8f512fbcd05358f132b44&oe=562958A9&__gda__=1445432142_014190a499a582c4cf1c5aecd1a5112 5


சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல, எவரும் எட்டாத அதிசயம்.

Russellxss
4th July 2015, 10:31 PM
மலைக்கோட்டை மாநகர் திருச்சியில் மக்கள் தலைவர் சிவாஜி அவர்கள் நடித்த தர்மம் எங்கே திரைப்படத்திற்கு ஞாயிறு மாலைக் காட்சிக்கு வரும் ரசிகர்களுக்கு வழங்குவதற்காக தயாரிக்கப்பட்டுள்ள படம்.

https://scontent-sin1-1.xx.fbcdn.net/hphotos-xpf1/v/t1.0-9/11027465_838967986187807_4794477328632391404_n.jpg ?oh=4fbcb5a9019f011f49641b0e569fae73&oe=560F1E09


சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல, எவரும் எட்டாத அதிசயம்.

RAGHAVENDRA
4th July 2015, 10:40 PM
சுந்தரராஜன்
சிவாஜி காமராஜ் கல்வி அறக்கட்டளை சார்பில் தாங்கள் நிகழ்த்தியுள்ள உன்னதமான தொண்டிற்கு என் உளமார்ந்த பாராட்டுக்கள். இது போன்ற தேச பக்தியையும் இறையாண்மையையும் போற்றுவதில் என்றுமே முதன்மை வகிப்பவர்கள் சிவாஜி ரசிகர்கள் தான் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளீர்கள்.
வாழ்க. நடிகர் திலகத்தின் ஆசி தங்களுக்கு பரிபூரணமாக உண்டு.

RAGHAVENDRA
4th July 2015, 10:41 PM
http://i1146.photobucket.com/albums/o528/imagivity/ntfans%20programmes/TV502015FW_zpsllm1mcwn.jpg

Harrietlgy
4th July 2015, 11:12 PM
Courtesy: 04.07.2015 Dinamani, Pa. Dinadayalan's Kanavu kannigal

எதிலும் அகலக்கால் ஆகாது என்பார்கள். ‘அக்கம்மா பேட்டை பரமசிவம் நாகராஜன்’ என்கிற ஏ.பி. நாகராஜன்’ ஆர்வக் கோளாறில் ஒரே நேரத்தில் அநேக படங்களில் தன் கைப் பணத்தையும் கடின உழைப்பையும் முதலீடு செய்தார். பல்வேறு காரணங்களினால் அவை தோல்வியில் முடிந்தன.

மீண்டும் எழுந்திருக்க முடியாத அடி. வி.கே. ராமசாமியும், ஏ.பி.என்னும் இணைந்து நான் பெற்ற செல்வம், மக்களைப் பெற்ற மகராசி போன்ற வசூல் படங்களைத் தயாரித்தவர்கள். நவராத்திரி கதைக்கான உரிமையும் வி.கே. ஆரிடம் இருந்தது. அதைத் திரும்பப் பெற்றுக் கொண்டு, மறுபடியும் யுகக் கலைஞன் சிவாஜி கணேசனை நாடிப் போவதைத் தவிர வேறு வழியில்லை.

நெப்டியூன் ஸ்டுடியோவில் அன்னை இல்லம் ஷூட்டிங். வி.கே.ராமசாமியும் சிவாஜியும் பங்கேற்கும் காட்சி.ஏ.பி. என், வி.கே.ஆரிடம் கெஞ்சாத குறையாக வற்புறுத்தினார்.

‘நீங்க எப்படியாவது சிவாஜிகிட்டே சொல்லி, நவராத்திரி எடுக்க எனக்குச் சீக்கிரமா கால்ஷீட் வாங்கிக் கொடுக்கணும்’



‘அது உடனடியா கிடைக்காதே. அவர் அவ்வளவு பிசி. கர்ணன் அது இதுன்னு ஏகப்பட்ட படங்கள் வரிசையில் இருக்கு. சிவாஜி பிலிம்ஸ்னு சொந்த பேனர்ல வேற நடிக்கப் போறார். சரோஜாதேவிக்காகக் காத்திருக்கிறாங்க. இப்ப எங்கே போய் நாம முந்திக்கிறது...?’

‘1952லிருந்தே சிவாஜி பிஸின்றது எனக்கும் தெரியும். காலையில் 9 மணியிலிருந்து சாயங்காலம் 5 மணி வரைக்கும் தானே நடிக்கிறார். எனக்கு 6 லிருந்து ராத்திரி 9 வரைக்கும் ஒரு அரை கால்ஷீட் வாங்கித் தந்தீங்கன்னா நான் பொழைச்சுக்குவேன்.’

‘வாழ்ந்து கெட்டவர்’ என்கிறப் பரிதாபத்தோடும், வித்தியாசமான கதைக்கருவோடும் ‘அன்னை இல்லத்தை’ அண்டி நின்றார் ஏ.பி.என். குரு பார்வையை விட உயர்ந்ததாகப் படைப்பாளிகள் நினைத்தது சிவாஜிகணேசனின் விழி அசைவை. அது காட்டிய வழியில் வெளிச்சம் பெற்றவர்கள் ஏராளம்! தமிழ் சினிமாவில் முதல் மண்வாசனைக் கலைஞன் ஏ.பி.என்! அவரது எழுத்தாற்றல் திரும்பவும் உச்சம் தொட உதவியது.

‘நான் தற்போது மிகச் சிரமமான நிலையில் இருக்கிறேன். சிவாஜி எனது ‘நவராத்திரி’ படத்தில் 9 வேடங்களில் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார். கையில் நயாபைசா கிடையாது. ஆனால் சினிமாவை எடுத்து வெளியிட வேண்டும். மிகப் பெரிய அளவில் நவராத்திரி பற்றியச் செய்திகளையும் விளம்பரங்களையும் பத்திரிகைகளில் வெளியிட்டு உதவுங்கள். அதைப் பார்த்ததும் பைனான்சியர்கள் என்னைத் தேடி வருவார்கள்.’

‘மின்னல்’ என்கிற பெயரில் சினிமா பப்ளிசிடி கம்பெனி நடத்தியவர் எம். உதுமான் முகையதீன். அவரிடம் ஏ.பி. என். வைத்த வேண்டுகோளுக்கு நல்ல பலன் கிடைத்தது.

பூஜ்யத்திலிருந்து தொடங்கியது நடிகர் திலகத்தின் முதல் நூறு! சிவாஜியும் சாவித்ரியும் நமக்குக் கிடைத்திருக்காவிட்டால், பல அற்புதமானப் பொற்காலச் சித்திரங்களைத் தமிழ் சினிமா நிச்சயம் இழந்திருக்கும்.

புத்தம் புதிதாக ‘ஸ்ரீவிஜயலட்சுமி பிக்சர்ஸ்’ என்கிற பேனரில் நவராத்திரி உருவானது.

நள்ளிரவில் காதலன் ஆனந்தனைத் தேடி அலையும் பரிதாபகரமான ‘நளினி’ என்ற வித்தியாசமான ரோல் சாவித்ரிக்கு. 9 வேடங்களில் நவரஸங்களைக் கொட்டித் தீர்த்த சிவாஜிக்குப் போட்டியாக சாவித்ரி ஒவ்வொரு எபிசோடிலும் நடிப்பில் இலக்கியம் படைத்தார்.

அதிலும் திரையில் பத்து நிமிஷம் நடைபெறும் ‘சத்தியவான் சாவித்ரி’ தெருக்கூத்து விசேஷ விருந்து.

எனக்குத் தெரிந்து 85 ஆண்டு காலத் தமிழ் சினிமா வரலாற்றில், வேறு எந்த வேற்று மொழி நாயகியும் சாவித்ரியைப் போல் தெருக்கூத்து ஆடியது கிடையாது. அதைப் பற்றி சிவாஜி தன் சுயசரிதையில் குறிப்பிட்டுள்ளார்.

‘தெருக்கூத்து, வில்லுப்பாட்டு, சாக்கியர் கூத்து போன்றவற்றைச் சிறு வயதிலேயே பார்த்துப் பல விஷயங்களைக் கற்றுக் கொண்டவன் நான். அவற்றில் பாடுகின்ற முறை, வசனம் பேசுகின்ற லாகவம், மேடையில் தோன்றும் விதம் எல்லாமே சற்று வித்தியாசமானவை.

நவராத்திரி படத்தில் அத்தகையக் கலைத் திறமைகளை வெளிப்படுத்தும் அக்காட்சியை அமைத்த டைரக்டருக்கும், எனக்குச் சமமாக ஆடிய சாவித்ரிக்கும் அந்தப் பெருமை சேரும். நவராத்திரியில் நடித்தது எனது திறமைக்கு ஒரு சோதனை.’

சிவாஜி பார்த்துப் பரவசப்பட்டு நடித்ததை சாவித்ரி பார்க்காமலேயே வெளுத்துக் கட்டினார்.



‘வந்தேனே... ஏஏஏ... வந்தேனே... ஏஏஏ... ராஜாதி ராஜன் மகன் மகாராஜன் பிறந்ததாலே ராஜாதிராஜன் வந்தேனே...

வந்தேனய்யா வந்து நின்று சபைக்கு வந்தனம் தந்தேனய்யா...’

எனத் தொடங்கும் தெருக்கூத்து சிவாஜி- சாவித்ரியின் ஜோடிக் குரலிலேயே முழுவதும் பாடப்பட்டது. இடை இடையே ‘வசீகர வயாகரா’ வசனங்களும் நிறைய உண்டு.

‘இன்னும் மணமானதோ... ஓஹோ! இல்லையோ... சொல்லு. இச்சை கொண்டேன் கேட்பதற்கு லஜ்ஜையும் ஆகாது.’

‘சொல்ல வெட்கமாகுதே. ஓஹோ! இன்னும் மணமில்லை.’ சொந்தமான தந்தை தாயார் எண்ணிடவுமில்லை.’

‘அதாகப்பட்டது ப்ரபோ...’

‘பெண் பாவாய்’

‘என் திருமணத்தைப் பற்றி தாய் தந்தையர் நினைக்கவும் இல்லை. நானும்... - நேற்று வரை அதைப் பற்றிச் சிந்திக்கவும் இல்லை’

‘இன்றென்னவோ...’

‘அதை நான் சொல்லித் தெரிய வேண்டுமா ஸ்வாமி!’

‘ரூப சித்திர மாமர குயிலே உனக்கொரு வாசகத்தினை நான் உரைத்திட நாடி நிற்கிறதா...! அன்பினால் இன்பமாய் இங்கு வா ...’

‘அட்டி ஏது? இதோ கிட்டி வாரேன்.’

‘சித்தமானேன். சமீபத்தில் நீ வா’

‘மன்னா என் ஆசை மறந்திடாதே!’

‘சகி! உன் ஆசை நானோ மறப்பதில்லை.’

‘மறந்திடாதே!’

‘மறப்பதில்லை.’

‘தங்கச் சரிகை சேல எங்கும் பளபளக்க’ என கூத்தில் பாடியவாறு தோன்றும் சாவித்ரியின் தஞ்சாவூர் பொம்மை போன்ற பாந்தமான தோற்றமும், அங்க அசைவுகளும், காட்டும் முக பாவங்களும், ஸ்வாமி! என்று இழுத்துக் கூப்பிடும் அழகும், கைக்குட்டை வீசி ஆடும் ஆட்டமும், கூத்து முடிந்ததும் மூச்சு வாங்க போடும் கும்பிடும் அபாரம். எத்தனை முறை பார்த்தாலும் திகட்டாதது.

தாய்மைப் பேறடைந்தத் தனக்காகக் காத்திருந்து, வடிவுக்கு வளைகாப்பில் நஷ்டத்தைச் சந்தித்த ஏ.பி. என்னுக்குக் கை கொடுத்துத் தூக்கி விடும் தூய உள்ளம் சாவித்ரிக்கு இருந்தது. அதற்காகத் தூக்கத்தையே மறந்து, அதுவரையில் கடைப் பிடித்த கொள்கையையும் தியாகம் செய்தார் நடிகையர் திலகம்.

‘இரவு ஷூட்டிங்கில் நடிப்பதை நான் பொதுவாக விரும்புவதில்லை.அப்படி நடித்தால் மறுநாள் மிகுந்த சோர்வாக இருக்கும்.அதற்குத் தேவையான ரெஸ்ட் கிடைப்பதும் அரிதாக இருந்தது.

‘மிகுந்த வெளிச்சத்தில் குளோஸ் அப் அதிகமாக எடுத்துக் கொள்ளாதே. கூடியவரையில் இரவு ஷூட்டிங் வேண்டாம். முகத்தின் பொலிவு கெட்டு சீக்கிரம் முற்றிப் போய் விடும்.’

என்று அடிக்கடி என்னுடன் நடித்த என்.டி. ராமாராவும், நாகேஸ்வர ராவும் சொல்வதுண்டு. அது ஓரளவுக்கு உண்மை. என்னுடைய முகம் கள்ளமில்லாத குழந்தை முகமாக இருக்கிறது என்று பல ரசிகர்கள் குறிப்பிடுவது உண்டு. அதற்குக் காரணம், நான் கூடிய வரை இரவு ஷூட்டிங்கை மேற்கொள்ளாதுதான்.

ஆனால் நவராத்திரி மட்டும் விதிவிலக்கு. படப்பிடிப்புக்கும் பெயருக்கும் நல்ல பொருத்தம். இரவு வேளைகளில் தான் அந்தப் படத்தின் ஷூட்டிங்ஸ். சரியான ராத்திரிப் படம்! டைட்டிலுக்கேற்றவாறு அமைந்து விட்டது.

நவராத்திரியில் நடிக்கிற போது அது அண்ணனின் 100வது படம் என்று எனக்குத் தெரியாது. சிவாஜியோடு யார் நடித்தாலும் அவரது நடிப்புக்கேற்ற ரீ ஆக்ஷன் பண்ணியாக வேண்டும். அவர் கூட நடிப்பது ரொம்பவும் எளிதானது.

நாம் டல்லடித்து விடக்கூடாது என்ற வீம்பும் பிடிவாதமும் கூட நடிப்பவர்களுக்குத் தானாகவே வந்துவிடும். சத்யவான் சாவித்ரி தெருக்கூத்தை முழுக்க முழுக்க அவரிடமே பாடம் பண்ணிக்கொண்டு நடித்தேன். காரணம் தெருக்கூத்தை நான் பார்த்தது கிடையாது.

பைத்தியக்கார ஆஸ்பத்திரி சம்பவங்களில் டாக்டராக வரும் சிவாஜியை, அவர் முன்னிலையிலேயே சில காட்சிகளில் குறும்பாக இமிடேட் செய்து நடித்தேன். நான் அவ்வாறு நடிப்பதை அவர் ஆர்வமாக ரசித்துப் பார்த்துக் கொண்டிருந்தார்.

எத்தனைப் பெரிய நடிகர் சிவாஜி! நான் அவரை கேலி செய்வதாக நினைக்காமல், பெருந்தன்மையுடன் என்னைப் பாராட்டினார். ரசிகர்களும் அதற்குக் கலகலப்பாகக் கைத்தட்டினார்கள். மற்ற பிரபல ஹீரோக்களிடம் அது சாத்தியமா என்ன...?’ - சாவித்ரி.

‘நவராத்திரியில் கதாநாயகியாக சாவித்ரி ஜே ஜே என்று நடித்து இருக்கிறார்’ என குமுதம் நடிகையர் திலகத்தைப் பாராட்டியது.

பீம்சிங்குக்குப் பிறகு ஏ.பி.என்.இயக்கத்தில் சிவாஜி- சாவித்ரி தொடர்ந்து சங்கமித்தனர். நவராத்திரியை அடுத்து வரலாறு காணாத ஆன்மிக பிரம்மாண்டமாக திருவிளையாடல் உருவானது. சாவித்ரி அதில் ஈஸ்வரி. சக்தி ஸ்வரூபமாக, பெண் உரிமைக்காக சிவனிடம் போராடும் வேடம். ‘சிவா’ ஜியுடன் ஒப்பிடும் போது சாவித்ரிக்கு நடிப்பாற்றலைக் காட்டும் வாய்ப்பு குறைவு.

இருந்தாலும் படகோட்டி சரோவுக்குப் போட்டியாக, அலைகளில் எதிர்பார்ப்புடன் ஏராளமான காஸ்ட்யூமில் சாவித்ரியும் பாடினார். ‘ ஏலே எலோ... நீலச் சேலை கட்டிக் கொண்ட சமுத்திரப் பொண்ணு’ பாடற் காட்சி அடங்கிய கடற்கரை சம்பவங்கள் ரசிகர்களுக்கு நிறைவளித்தது.

வெகு காலம் வரையில் இலங்கை வானொலியில் திருவிளையாடல் வசனங்களை ஒலிபரப்பி, ‘நல்ல தமிழ் கேட்டீர்கள்’ என அறிவித்தார்கள். ஒவ்வொரு ஆடி பிறந்ததும் அம்மன் உற்சவங்களில் மூலை முடுக்கெல்லாம் திருவிளையாடல் ஒலிச்சித்திரம் கேட்கும்.



வலைத்தளம், செல்போன், வாட்ஸ் அப், ட்ப்ஸ் மேஷ் என ஏதேதோ வந்து விட்டன. நாத்திகம் கொடி கட்டிப் பறந்த 1965ன் ஆடி அமாவாசை முதல், ஐம்பது ஆண்டுகளாக திருவிளையாடலில் சாவித்ரியின் சந்தனக் குரல், நம் செவிகளில் திரும்பத் திரும்ப பக்திமணம் கமழச் செய்கிறது.

‘திருவிளையாடலில் எனக்குப் பார்வதி வேஷம். அதுவும் பச்சை நிற மேக் அப். அதைப் போட்டுக் கொள்ளும் போது எனக்கு மிகவும் தயக்கமாக இருந்தது. ஆனால், அப்புறம் படத்தில் அதுவே பிரமாதமாகப் பொருந்தி விட்டது.

பரமசிவன், பார்வதி, பிள்ளையார், முருகன் அப்படியோர் அமைப்பை நீங்கள் எங்கே பார்ப்பது? நாங்கள் காலண்டரைப் பார்த்து அமைத்துக் கொண்டோம்!’ - சாவித்ரி.

சென்னையில் முதன் முதலாக சாந்தி, கிரவுன், புவனேஸ்வரி என்று மூன்று தியேட்டர்களில் மகத்தான வசூலுடன் வெள்ளி விழா கொண்டாடிய முதல் படம் திருவிளையாடல். தேசிய அளவில் பாராட்டுப் பத்திரமும் அதற்குக் கிடைத்தது.

கே. பாலசந்தரின் நாணல் படத்தில், ‘விண்ணுக்கு மேலாடை’ பாடல் காட்சியை நீங்கள் பார்க்க நேர்ந்தால், அதில் ‘சாந்தி’யில் திருவிளையாடல் ஓடிய காலம் கண்களில் தெரியும்.

கற்பூர ஆரத்தி!

திருவிளையாடலைத் தொடர்ந்து உடனடியாக ஏ.பி. என். கூட்டணியில் சரஸ்வதி சபதம் தொடங்கியது. சாவித்ரி- சரஸ்வதி. பத்மினி- பார்வதி. தேவிகா- மகாலட்சுமி.சிவாஜி கணேசன் நாரதராகவும், சரஸ்வதியால் ஊமையாக இருந்து ஞானம் பெற்றப் புலவராகவும் இரு வேடங்களில் நடித்து முப்பெரும் தேவியருக்கும் வேலை இல்லாமல் செய்து விட்டார்.

மகன் சதீஷை வயிற்றில் சுமந்தவாறு கர்ப்ப ஸ்திரீ சாவித்ரி, சந்தோஷ சங்கடத்துடன் நடித்த படம் சரஸ்வதி சபதம். அம்மாவோடு ஷூட்டிங்குக்குச் சென்ற ஆறு வயதுச் சிறுமி விஜியை வியப்பில் ஆழ்த்தினார் டைரக்டர் ஏ.பி. நாகராஜன். அன்று ‘கோமாதா என் குலமாதா’ என்கிற ஏழு நிமிட பாடலைப் படமாக்கினார்கள்.

தினமும் முதல் காட்சி படமாகும் வேளையில் தேங்காய் உடைத்து கற்பூரம் காட்டி, கலைஞர்கள் பய பக்தியோடு சாமி கும்பிடுவது சினிமா சடங்கு. ஏ.பி. என். என்ன செய்தார் தெரியுமா...?

சாவித்ரி முழுதாக அரிதாரம் பூசி சர்வ அலங்காரத்துடன், சரஸ்வதி தேவியாக சத்திய லோகம் செட்டுக்குள் நுழைவார். நடிகையர் திலகத்தை அரங்க வாசலில் நிறுத்தி, அவருக்கு உச்சி முதல் பாதம் வரை திருஷ்டி கழித்து கற்பூர ஆரத்தி காட்டினார்.

சரஸ்வதி சபதத்துக்கு முன்னும் பின்னும் எத்தனையோ பக்திச் சித்திரங்கள் திரையை ஆக்ரமித்து இருக்கின்றன. அவ்வளவு ஏன் நாடு விடுதலை பெறும் வரையில் புராணப் படங்களே அதிகம் தயாரானது.

கவுன் அணிந்து கவர்ச்சி காட்டிய அநேக கனவுக் கன்னிகள் மார்க்கெட் இழந்ததும், அம்மன் வேடத்தில் ஆன்மிகம் பரப்புவது கோலிவுட் வாடிக்கை. ஆனால் சாவித்ரிக்கு நடந்தது போல் அவர்கள் யாருக்காவது நேர்ந்திருக்கிறதா ...?

ஒரு வேளை தொடர்ந்து சாமி படங்களில் நடித்துள்ள ‘நம்ம வீட்டு தெய்வம்’ கே.ஆர்.விஜயாவை, யாராவது ஏ.பி. என். போல் இறைவியாக அர்ச்சித்து இருக்கிறார்களா...? தெரிந்தால் சொல்லுங்கள்.

1966 ஆயுத பூஜைக்கு வெளியாகி சரஸ்வதி சபதமும் சென்னை ‘சாந்தி’யில் 133 நாள்கள் ஓடியது. சாவித்ரி டைட்டில் ரோலில் நடித்து தமிழில் வெற்றி பெற்ற கடைசிப் படம் அதுவே.

eehaiupehazij
5th July 2015, 07:20 AM
பங்காரு பாபு தெலுங்கு படத்தில் இடம்பெற்ற அரிதான வசந்த மாளிகை ஷூட்டிங் சீன் !

https://www.youtube.com/watch?v=UQWyclTmXzo

RAGHAVENDRA
5th July 2015, 08:02 AM
http://i1146.photobucket.com/albums/o528/imagivity/AISFA/bd471501_zpsuanlyvx4.jpg

நடிகர் திலகத்தின் அருந்தவப்புதல்வரும் அகில இந்திய சிவாஜி மன்றத்தலைவருமான திரு ராம்குமார் கணேசன் அவர்களின் பிறந்த நாளையொட்டி மன்ற நிர்வாகிகளும் ரசிகர்களும் 04.07.2015 அன்று காலை அவரை சந்தித்து வாழ்த்துக் கூறினார்கள். வீரபாண்டிய கட்டபொம்மன் டிஜிட்டல் வெளியீட்டினையொட்டி நமது நண்பர் திரு எஸ்.கே. விஜயன் அவர்கள் கொண்டு வந்துள்ள சிறப்பு மலர் ஒன்றினை திரு ராம்குமார் அவர்கள் அப்போது வெளியிட, மாநில நிர்வாகி திரு முருகவிலாஸ் நாகராஜன் அவர்கள் முதல் பிரதியைப் பெற்றுக்கொண்டார்.

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/AISFA/bd471508_zpstz3foint.jpg

மலர் பற்றிய மேல் விவரங்கள் விரைவில் வெளியிடப்படும்.

RAGHAVENDRA
5th July 2015, 09:23 AM
http://i1146.photobucket.com/albums/o528/imagivity/NTFilmsRerelease2015/vijayanmalarfw_zpsw28csjln.jpg

வீரபாண்டிய கட்டபொம்மன் டிஜிட்டல் வடிவ வெளியீட்டினையொட்டி திரு எஸ்.கே.விஜயன் அவர்கள் தொகுத்து திரு ராம்குமார் கணேசன் அவர்கள் வெளியிட்ட சிறப்பு மலரின் முகப்பு. மலர் பற்றி மேல் விவரங்களுக்குத் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி -

இதயவேந்தன் வாசகர் வட்டம்,
257, பவுடர்மில்ஸ் ரோடு,
காந்திஜி நகர், புளியந்தோப்பு,
சென்னை-600012.

கைப்பேசி எண் 9941798850

திரைப்படம் வெளியாகும் தருணத்தில் மலரை விற்பனைக்குத் தர உத்தேசித்துள்ளனர்.

Russelldvt
5th July 2015, 12:03 PM
http://i59.tinypic.com/o74tbk.jpg

Russellxor
5th July 2015, 01:52 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/IMG_20150705_135910_zpskd77sx5n.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/IMG_20150705_135910_zpskd77sx5n.jpg.html)




தியாகம்

ஜமீன்தாரின் பேரன் ராஜா.படித்தவர்.ஏழைகளுக்கு உதவும் கர்ணன்.டாக்டரின் தங்கை ராதா.இருவரும் ஒரு கொடியில் பூத்த இரு மலர்கள் போல் காதலர்கள்.வசந்த மாளிகை போல் இருக்கும் அந்த ஜமீன் வீட்டு கணக்குப்பிள்ளையின் சதியால் ராஜா சிறைக்கு செல்லும்படி ஆகிறது.எதிர்பாராதது நடந்து விட்ட இந்த விஷயங்களால் ராதாவின் நட்பும் இழந்த காதல் ஆகி விடுகிறது.சிறைதண்டனை க்கு பின் ராஜா தன்னுடைய வாழ்க்கை முறைகளை முறைகளை மாற்றி வாழ்ந்து கொண்டிருக்கிறார்.ராதாவைப் பார்க்கும் சமயங்களில் எல்லாம் தன் பழைய வாழ்க்கையை திரும்பிப் பார் த்து ஆறுதல் பட்டுக் கொள்வார்.
அந்த ஊருக்கு புதிதாக வரும் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜாவின் நடவடிக்கைகளை பார்த்து அவருடைய இந்த நிலைக்கு என்ன காரணம் என்பதை அறிந்து ராஜாவிடம் உனக்காக நான் என்றுநட்பு கொள்கிறார்.
நேர்மையான இன்ஸ்பெக்டர் என்று ராஜாவும் உணர்ந்து இன்ஸ்பெக்டருக்கு முதல் மரியாதை அளிக்கிறார்.
கணக்குப்பிள்ளையின் சதிகள் தான் இவற்றுக்கெல்லாம் காரணம் என சில சம்பவங்களின் மூலம் தெரியவருகிறது.
நெஞ்சங்கள் பாரந்தாங்கிகள் போல் வாழ்ந்து கொண்டிருக்கும் ராதாவுக்கும் ராஜாவின் உண்மையான அன்பு புரிகிறது.
பிறகென்ன அனைத்தும் சுபமாக முடிகிறது.

கதைநாயகனைப் பற்றி..
ராஜாவாக நடிப்புச்சிங்கம் சிவாஜி.அது என்ன நடிப்புச்சிங்கம்?
காட்டுக்கு ராஜா சிங்கம்.நடிப்புக்கு ராஜா நடிகர்திலகம்.படத்திலும் பெயர் ராஜா.எல்லாமே பொருந்திப் போவதால் நடிப்புச்சிங்கம்.

அமர்க்களமாக ஆரம்பிக்கும்ஆரம்பக்காட்சியில் தோளில் மீன்கூடையை சுமந்து கொண்டு அப்படியே சிகரெட் பிடிச்சுகிட்டுநடந்து வரும் அழகு இருக்கின்றதே.ஆயிரம் கண் போதாது அப்படின்னு அவருடையபாடலைத்தான் உவமையாக சொல்ல வேண்டும்.யானையின் நடையழகுபார்ப்பதற்கு அழகாக இருக்கும.்ஒரு பெரிய யானை அப்படியே மெல்ல மெல்ல அசைந்து அசைந்து நடந்து வரும் அழகை பார்த்திருக்கிறீர்களா?இது அதுக்கும் மேலே.அந்த நடையையே ஒரு 3மணி நேரத்திற்கு காண்பித்தாலும் சலிக்காது என்பது போல் அமைந்திருக்கும் அந்தக் காட்சி.

கலர் கலரா பொடிகள் பறக்க .பக்க வாத்தியங்கள் பட்டைய கிளப்ப ஒரு சூறாவளிக்காற்று சுழன்று அடிச்சா எப்படி இருக்குமோஅப்படி ஒரு ஆட்டம் ஆடிக்கொண்டே கோவிலுக்குள் நுழையும் காட்சி இருக்கின்றதே.அதிர வைக்கும் காட்சி அமைப்பு.தேங்காய் வந்து கோவிலுக்குள் நுழையக்கூடாது என்று சொல்லும்போது ஆடி வந்த வேகத்துடன் நின்று மூச்சு வாங்கிக்கொண்டேமுகத்தில் வேர்வை வழிய நாவால் உதட்டைலேசா தடவிக்கொண்டேஒரு பார்வை பார்ப்பார்.அந்த ஒரு கடினமான காட்சியிலும் சர்வ சாதாரணமாக கம்பீரமான முக பாவனையை வெளிப்படுத்தியிருப்பார்.

எச்சில் இலை மேலே பறந்தாலும் எச்சில் இலைதான்
கோபுரம் கீழே சாய்ஞ்சாலும்கோபுரம்தான்
இந்த இரண்டு வரி வசனத்தில் இடம் பெறும் ஒவ்வொரு வார்த்தையையும் ஒவ்வொரு தொனியுடன்,ஒவ்வொரு வார்த்தைக்கும் ஒவ்வொரு விதமான முகபாவத்தைக் காட்டி பேசியிருப்பார்.அந்த காட்சி ஆரம்பிக்கும் ஆரம்பமே அசத்தலாக இருக்கும்.தேவையில்லை இன்ஸ்பெக்டர்.,நானே வந்துட்டேன் னு சொல்லி ஸ்டேசன் வாசலில் வந்து நின்று கொண்டு ஒரு போஸ் கொடுப்பார்.அவர் அப்படி வந்து நிற்பதுக்கும் நம் உடம்பின் ரோமங்கள் சிலிர்ப்பதுக்கும் என்ன சம்பந்தம்?அதுதான்உன்னதமான நடிப்பும் உண்மையான ரசிப்பும் இணைந்த பிணைப்பு.இது போகபோக வளர்ந்து கொண்டேதான் இருக்கும்.
அந்த ஸ்டேசன் காட்சிகள்பசுமரத்தாணி காட்சிகள்.

நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு பாடல் காட்சியில்நின்று கொண்டே அவர்பாடும் ஸ்டைல்,ஸ்டைல் என்று ஒன்றும் செய்யாமலேயே மிகப்பெரிய ஸ்டைலாக அமைந்த காட்சி.மனிதனம்மா மயங்குகிறேன்என்று அவர் பாடும்போது ஒவ்வொரு எழுத்துக்கும் ஒவ்வொரு முகபாவனையை வெளிப்படுத்தியிருப்பார்.அந்த பிரேமை ஸ்லோமோஷனில் வைத்து ஒவ்வொரு எழுத்தையும் உச்சரிக்கும் போது நிறுத்தி நிறுத்தி பார்த்தால் அவர் வெளிப்படுத்திய அந்த பாவனைகள்வியப்பின் உச்சம்.
ம எழுத்துக்கு ஒரு பாவம்,அடுத்த எழுத்து
னி எழுத்துக்கு ஒரு பாவம் இப்படி எழுத்துகளை உச்சரிப்பதுக்கு கூ ட முகபாவனைகளை வெளிப்படுத்தியிருப்பார்நடிப்புச்சிங்கம்.
இந்தப் படத்தை ஷாட் பை ஷாட்டாக
ரசித்துக்கொண்டே இருக்கலாம்.முகபாவனைகளையும்,அங்க அசைவைகளையும் கொண்டே அற்புத ங்களை நிகழ்த்திய படம்.
மேலும்,

இன்ஸ்க்டரிடமே சிகரெட் எடுத்து அதை பற்ற வைப்பது,அப்படியே இன்னொரு சிகரெட்டை எடுத்து காதில் வைப்பது,

உங்க தங்கச்சிக்கு இதயம் இருக்கான்னு முதல்ல செக் பண்ணுங்க டாக்டர் னு மேஜரிடம் சொல்வது

வி கே ஆரிடம் சவால் விடுவது, அவரை கிண்டல் செய்து பாடும் பாடல் காட்சிகள்

மீன் மார்க்கெட் சண்டைக்காட்சிகள்,
சைக்கிள் போட்டி,
என்று படம் முழுவதும்அமர்க்களமான காட்சி அமைப்புகளைகொண்டிருக்கும்.

கர்ணன்.,கட்டபொம்மன்.,கப்பலோட்டிய தமிழன் காவியப்படங்கள்.கமர்ஷியல் படங்களில்காவியப்படம் தியாகம்.
மற்றவர்கள் கடினமாக முயற்சி செய்தாலும் கொண்டுவர முடியாத முக பாவனைகளையும்,அங்க அசைவுகளையும் சர்வ சாதாரணமாக நடிகர்திலகம் வெளிப்படுத்திய படங்களில் ஒன்றுதான்

தி
யா

ம்

RAGHAVENDRA
5th July 2015, 01:58 PM
தியாகம் பற்றிய தங்கள் பதிவு அருமை செந்தில்வேல்

மேலும் பல படங்களைப் பற்றி உங்கள் கைவண்ணத்தில் எதிர்பார்க்கும் ஆவலை உண்டாக்கி விட்டது.

RAGHAVENDRA
5th July 2015, 01:59 PM
நடிகர் திலகம் திரைப்படத் திறனாய்வு அமைப்பின் சார்பில் செப்டம்பர் 20, ஞாயிறு அன்று மாலை சென்னை தியாகராய நகர் வாணி மகால் பிரதான அரங்கில் திருவிளையாடல் திரைக்காவியத்தின் பொன்விழா நடைபெற உள்ளது.

இதைப் பற்றிய மேலும் ஒரு TEASER நிழற்படம் தங்கள் பார்வைக்கு...

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/ntfans%20programmes/TV502015bFW_zpsjzghulhf.jpg

joe
5th July 2015, 07:26 PM
பாசமலருக்கு அழாதவன் மனுஷனாடே !

- சிவாஜி ரசிகன் சுயம்புலிங்கம்

RAGHAVENDRA
5th July 2015, 07:54 PM
ஜோ,
பாபநாசம் இன்னும் பார்க்கவில்லை. அதில் கமல் சிவாஜி ரசிகராக நடித்துள்ளார் எனக் கூறுகின்றனர்.
இவ்வையம் படம் வெளியாவதற்கு சில நாட்கள் முன்பே கமல் திரியில் கேட்டிருந்தேன்.
தாங்கள் படம் பார்த்திருப்பீர்கள். இதைப்பற்றிக் கூற முடியுமா.

joe
5th July 2015, 08:14 PM
ஜோ,
பாபநாசம் இன்னும் பார்க்கவில்லை. அதில் கமல் சிவாஜி ரசிகராக நடித்துள்ளார் எனக் கூறுகின்றனர்.
இவ்வையம் படம் வெளியாவதற்கு சில நாட்கள் முன்பே கமல் திரியில் கேட்டிருந்தேன்.
தாங்கள் படம் பார்த்திருப்பீர்கள். இதைப்பற்றிக் கூற முடியுமா.

ராகவேந்திரா சார்,
ஆம் .. சுயம்புலிங்கம் கேபிள் டிவி இணைப்பு வைத்து நடத்துபவர் மட்டுமல்ல .. சினிமா ஆர்வலர் . ஒரு நாளைக்கு புதுசு ,பழசு என ரெண்டு படமாவது பார்த்து விடுவார் . 11 மணிக்கு மேல மிட் நைட் மசாலாவும் பார்க்கும் எதார்த்தமான மனிதர் ..சுயம்புலிங்கம் சுயம்புலிங்கமாக நடித்திருக்கும் கமல்ஹாசனைப் போல ஒரு சிவாஜி ரசிகர் . முடியை சுருட்டி விட்டுக்கொள்வார் .. மகள் அது பற்றி ஏன்பா இப்படி செய்கிறீர்கள் என கேட்கும் போது "ஏம்ப்டி , இது 30 வருஷமா வச்சிருக்கேன் ..இது சிவாஜி ஸ்டைல்" என்பார் .. வழக்கம் போல தன் கேபிள் டிவி அலுவலகத்தில் படம் பார்க்கும் போது பாசமலர் படத்தின் கிளைமாக்ஸ் கைவீசம்மா கைவீசு பார்த்துக்கொண்டு கண்ணீர் மல்க இருக்கும் போது அவர் உதவியாளர் பையன் வந்ததும் வேட்டியால் கண்ணீரை துடைத்துக்கொண்டே சமாளிப்பார் .. அப்போது அந்த பையன் அவரை கிண்டல் செய்யும் போது சுயம்புலிங்கம் பாசமலர் குறித்தும் சிவாஜி குறித்தும் சில வார்த்தைகள் சொல்வார் ..

பாபநாசம் கண்டிப்பாக பாருங்கள் .

eehaiupehazij
5th July 2015, 09:02 PM
நடிகர்திலகத்தின் நினைவு நாள் நெருங்குகையில் அவர் நினைவில் ஊறித்திளைக்கும் முதல் ரசிகராக தனது இதய அஞ்சலியை பாபநாசம் வாயிலாக 'திருஷ்யமாக' முன்னோட்டமாக்கியிருக்கும் கமல் என்னும் நடிகர்திலக விருக்ஷத்தின் கிளைத்தளிருக்கு எங்கள் நெஞ்சார்ந்த நன்றிகள் !

https://www.youtube.com/watch?v=EUpn70-z5FM

https://www.youtube.com/watch?v=h8kfABvuJBk

Russelldwp
5th July 2015, 09:54 PM
https://fbcdn-sphotos-f-a.akamaihd.net/hphotos-ak-xpa1/v/t1.0-9/11232228_1613428825540459_2349326178811447896_n.jp g?oh=27bc14a47dd2d81e21abf1f8dd4a694d&oe=5616F1CF&__gda__=1444227749_99dadba1f5435d18707d26dc4c9565d 6

RAGHAVENDRA
5th July 2015, 10:04 PM
அன்புச் சகோதரர் ராம்குமார் பிறந்த நாளையொட்டி அன்னை இல்லத்திற்குச் சென்று அவரை வாழ்த்தி வந்திருக்கிறார் கமல். இதனுடைய நிழற்படம் முகநூல் பக்கத்தில் பார்த்த நினைவு.

RAGHAVENDRA
5th July 2015, 10:07 PM
ராகவேந்திரா சார்,
...
பாபநாசம் கண்டிப்பாக பாருங்கள் .

நிச்சயம் பார்க்கிறேன் ஜோ. விஸ்வரூபத்தின் பாதிப்பே இன்னும் அடங்கவில்லை. பாபநாசம் படத்தைப் பொறுத்த வரையில், இது வரை கிடைத்துள்ள அனைத்து கருத்துக்களுமே ஒருமித்ததாக, பாராட்டத்தக்கதாக உள்ளன.

முதன் முறையாக அவருக்குள் நடிகர் திலகம் உத்வேகம் எடுத்திருக்கிறார் எனக் கேள்விப்படுகிறேன்.

இதற்கிடையில் ஒய்.ஜி.மகேந்திராவின் சொப்பன வாழ்வில் நாடகத்தில் அவருடைய நடிப்பு ஒவ்வொரு காட்சியிலும் அவருக்குள் இருக்கும் நடிகர் திலகத்தின் தாக்கத்தை வெளிக்கொணர்ந்துள்ளது.

சினிமாவில் கமலும் நாடகத்தில் மகேந்திராவும் நடிகர் திலகத்தின் பெயரை இன்னும் பல தலைமுறைகளுக்குக் கொண்டு செல்வார்கள் என்பது இதன் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

RAGHAVENDRA
6th July 2015, 09:27 AM
https://scontent-sin1-1.xx.fbcdn.net/hphotos-xpf1/v/t1.0-9/11012905_944554795595193_4966424568063961484_n.jpg ?oh=0a8084f76f5c6a5a271c73355285e11f&oe=562DC52D

sivaa
6th July 2015, 09:48 AM
எதிர்வரும் 21ம் திகதி வரும் நடிகர் திலகத்தின்&nbsp;நினைவு நாளை முன்னிட்டு<br>கனடாவில் வெளிவரும்&nbsp; ஈ குருவி பத்திரிகை &nbsp;தனது இம்மாத பதிப்பில்<br>பதிவிட்ட அஞ்சலி கட்டுரை<br><br><br>http://i59.tinypic.com/71hjbr.jpg


http://i60.tinypic.com/5509k9.jpg

sivaa
6th July 2015, 09:53 AM
http://i61.tinypic.com/34fbtkl.jpg
http://i58.tinypic.com/23w6tfn.jpg
http://i61.tinypic.com/2a6o7ds.jpg
http://i61.tinypic.com/33nuq6r.jpg

sivaa
6th July 2015, 09:57 AM
http://i59.tinypic.com/ydmv5.jpg
http://i57.tinypic.com/333loya.jpg
http://i61.tinypic.com/2hxbuih.jpg

sivaa
6th July 2015, 09:59 AM
http://i57.tinypic.com/npqs6g.jpg
http://i61.tinypic.com/v66eq8.jpg

Russellbpw
6th July 2015, 11:24 AM
"மிகை நடிப்பு " - காலம் காலமாக தவறாக பயன்படுத்தபட்டுகொண்டிருக்கும் அர்த்தமில்லா ஒரு வார்த்தை. தமது திறமயில்லாமைக்கு, இயலாமைக்கு பெரும்பான்மையினர் கூறிகொள்ளும் ஒரு மாற்று வாய்தா "மிகை நடிப்பு "

இன்று அரிவாள் எடுக்கும் ஒரு வில்லன் நடிகர் கை எட்டும் தூரத்திற்குள் இருக்கும் ஒரு நபரை வெட்ட....டாய் ய் ய் ய் ய் ய் ய் ய் ய் .....என்று கத்திக்கொண்டு வெட்டுவது இந்த இயலாமைகாரகள் பாராட்டும் அற்ப்புத "இயல்பு நடிப்பு " ஆனால் நடிகர் திலகம் சோகத்தில் கதறி அழுதால் அது "மிகை நடிப்பு ". !

Amidst those who beleive there is god...there are those who says there is n't one.
Not that they have found out something in those lines but to generally get popular among the bunch of their own idiots !
Likewise, amidst those highly talented there does exist segment of substandard who come out with jargons to identify themselves in a negative way..!

Rgds
rks

HARISH2619
6th July 2015, 01:22 PM
பாபநாசம் படத்தில் நடிகர்திலகத்தின் ரசிகனாக தன்னை காட்டிக்கொண்ட உலகநாயகனுக்கு பலகோடி நன்றி ,thanks,వందనం ,ಧನ್ಯವಾಧ ,നന്രി ,धन्यवाद

Russellxor
6th July 2015, 05:21 PM
அன்புச் சகோதரர் ராம்குமார் பிறந்த நாளையொட்டி அன்னை இல்லத்திற்குச் சென்று அவரை வாழ்த்தி வந்திருக்கிறார் கமல். இதனுடைய நிழற்படம் முகநூல் பக்கத்தில் பார்த்த நினைவு.
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/FB_IMG_1436178055612_zpsgzxcgw6j.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/FB_IMG_1436178055612_zpsgzxcgw6j.jpg.html)

Russellxor
6th July 2015, 05:23 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/cinema%20%20express/FB_IMG_1436181239609_zpsvmveoudf.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/cinema%20%20express/FB_IMG_1436181239609_zpsvmveoudf.jpg.html)

Russellxor
6th July 2015, 05:24 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/cinema%20%20express/FB_IMG_1436181236505_zpsetgzvk6i.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/cinema%20%20express/FB_IMG_1436181236505_zpsetgzvk6i.jpg.html)

Russellxor
6th July 2015, 05:25 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/cinema%20%20express/FB_IMG_1436181233487_zps7gx5acvp.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/cinema%20%20express/FB_IMG_1436181233487_zps7gx5acvp.jpg.html)

Russellxor
6th July 2015, 05:25 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/cinema%20%20express/FB_IMG_1436181177380_zpsz01ptsef.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/cinema%20%20express/FB_IMG_1436181177380_zpsz01ptsef.jpg.html)

Russellxor
6th July 2015, 05:33 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/cinema%20%20express/FB_IMG_1436181230558_zpstctn5wkq.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/cinema%20%20express/FB_IMG_1436181230558_zpstctn5wkq.jpg.html)

RAGHAVENDRA
6th July 2015, 05:33 PM
எத்தனை யுகங்களானாலும் திரையரங்கிற்கு தாய் தந்தை குழந்தைகள் என குடும்பம் குடும்பமாக வரவழைக்கும் ஆகர்ண சக்தி படைத்த ஒரே நடிகர், நடிகர் திலகம் என்பதை 2012ல் கர்ணன் மூலமும், 2015ல் சிவாஜி ரசிகராக நடித்த கமல் மூலமும் நிரூபணமாகியுள்ளது. எத்தனையோ ஆண்டுகளுக்குப் பிறகு, ஒரு புதுப்படத்திற்கு மக்கள் தங்கள் குழந்தைகளோடு வரத் தொடங்கியுள்ளனர். பாபநாசம் படம் ஓடும் திரையரங்கா அல்லது ஏதேனும் குடும்ப விழாவா என மக்கள் வியப்படையும் வண்ணம் குடும்பத்தோடு வரத் தொடங்கியிருப்பது, நடிகர் திலகத்தின் வீச்சு எந்த அளவிற்கு மக்களிடம் ஊடுருவியுள்ளது, அவர் பாணி படங்கள் எத்தனை யுகங்களானாலும் மக்களால் வரவேற்கப் படும் என்பதையெல்லாம் ஆணித்தரமாக எடுத்தியம்பியுள்ளன.

பிரம்மாண்டத்தை விட, பொழுதுபோக்கு அம்சங்களை விட, மக்களின் உள் மனதில் ஊடுருவி அவர்களுடைய கஷ்டங்களையும் சுகங்களையும் தன்னோடு சேர்ந்து உணரவைப்பதில் தான் ஒரு திரைப்படத்தின் வெற்றியும் அந்த நடிகனின் வெற்றியும் அடங்கியுள்ளது என்பதைத் தன் படங்களின் மூலம் நிரூபித்த நடிகர் திலகத்தின் இந்த பாணி இன்னும் பல நூற்றாண்டுகளுக்கு செல்லுபடியாகும் என்பதை மக்கள் பாபநாசம் படம் மூலம் அழுத்தமாகக் கூறியுள்ளனர்.

கமல் இனி பயணிக்க வேண்டிய பாதை, கமல் இனி பயணிக்க வேண்டிய தூரம், கமல் இனி பயணிக்க வேண்டிய வேகம், அனைத்தையும் பாபநாசம் திட்டவட்டமாகக் கூறிவிட்டது.

என்னாளும் நடிகர் திலகத்தின் பாதை வெற்றிப்பாதை என்பதை மீண்டும் நிரூபித்துக் காட்டிய ரசிகர்களுக்கும் பொதுமக்களுக்கும் உலகெங்கிலும் உள்ள கோடிக்கணக்கான சிவாஜி ரசிகர்களின் சார்பில் உளமார்ந்த நன்றி.

இவ்வெற்றிக்குப் பின்னால் உள்ள உழைப்பிற்கு, குறிப்பாக அன்புச் சகோதரர் கமலின் நடிப்பிற்கும், ஜீது ஜோசப்பின் இயக்கத்திற்கும் மற்ற அனைத்துக் கலைஞர்களுக்கும் என் உளமார்ந்த பாராட்டுக்கள்.

தமிழ் சினிமா எந்த திசையில் பயணிக்கிறது என்பதே தெரியாமல் இருந்த நேரத்தில் அதை சரியான திசையில் திருப்பி விட்ட பெருமையை பாபநாசம் பெறுகிறது. இவ்வெற்றியின் பின்னால் உள்ள ஒவ்வொருவருக்கும் வாழ்த்துக்கள்.

Russellxor
6th July 2015, 05:34 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/cinema%20%20express/FB_IMG_1436181227691_zpsapfbkafj.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/cinema%20%20express/FB_IMG_1436181227691_zpsapfbkafj.jpg.html)

Russellxor
6th July 2015, 05:35 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/cinema%20%20express/FB_IMG_1436181224786_zpswffkejju.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/cinema%20%20express/FB_IMG_1436181224786_zpswffkejju.jpg.html)

Russellxor
6th July 2015, 07:13 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/20150706182834_zpshguc3lvc.gif (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/20150706182834_zpshguc3lvc.gif.html)

Russellxor
6th July 2015, 07:14 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/FB_IMG_1436190016234_zpswejelctw.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/FB_IMG_1436190016234_zpswejelctw.jpg.html)

Russellxor
6th July 2015, 07:15 PM
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/FB_IMG_1436189785715_zpsgniekowv.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/FB_IMG_1436189785715_zpsgniekowv.jpg.html)

Russellxss
6th July 2015, 09:24 PM
மலைக்கோட்டை மாநகர் திருச்சி கெயிட்டி தியேட்டரில் மக்கள் தலைவர் சிவாஜி அவர்கள் நடித்த தர்மம் எங்கே திரைப்படம் 5.7.15 அன்று மாலைக்காட்சி மக்கள்தலைவரின் ரசிகர்களால் திருவிழாக் கோலம் பூண்டது. மாலை 5 மணி முதலே ரசிகர்கள் திரையரங்கை நோக்கி வரத்தொடங்கினர். மதுரையில் இருந்து அகில இந்திய தலைவன் சிவாஜி மக்கள் இயக்கத்தின் சார்பில் கா.சுந்தராஜன், அண்ணாநகர் பழனிச்சாமி, சமூகநலப் பேரவையை சேர்ந்த பாண்டி மற்றும் படம் வெளியிட உறுதுணை புரிந்த திரு.வி.சி.எஸ் அவர்கள், சென்னையிலிருந்து திரு.நாஞ்சில் மு.ஞா.செ.இன்பா மற்றும் புதுக்கோட்டையைச் சேர்ந்த குணசேகரன் ஆகியோர் வந்திருந்தனர். திருச்சி மாவட்ட சிவாஜி மன்ற தலைவர் திரு.உறந்தை செல்வம் அவர்கள் அனைவரையும் வரவேற்றார்.
நிகழ்ச்சியில் முத்தாய்ப்பாக திருச்சி சீனவாசன் அவர்கள்(ரயில்வே) கலந்து கொண்டார். விழாவில் நாஞ்சில் மு.ஞா.செ.இன்பா அவர்கள் எழுதிய கலையில் எரிந்த சந்திரபாபு என்ற புத்தகத்தின் அறிமுக விழா நடத்தப்பட்டது. இன்பா அவர்கள் வெளியிட ஜெயபிரகாஷ் அவர்கள் பெற்றுக் கொண்டார். மேலும் பாரதி பாஸ்கர், வெங்கட்ராமன், நாகராஜன், முன்னாள் சிவாஜி மன்ற மாவட்ட தலைவர் முருகேசன் மற்றும் நமது் திரியை சார்ந்த திரு.செளத்ரிராம், அன்னை இல்லத்தின் உண்மை விசுவாசிகள் அனைவரும் வந்திருந்தனர்.
வருகை புரிந்த அனைவருக்கும் தலைவன் சிவாஜி மக்கள் இயக்கத்தின் சார்பில் மக்கள் தலைவரின் போட்டோவும், திருச்சி மாவட்ட சிவாஜி மன்றத்தின் சார்பில் இனிப்பும் வழங்கப்பட்டது.

https://fbcdn-sphotos-e-a.akamaihd.net/hphotos-ak-xtp1/v/t1.0-9/s720x720/11709556_839839919433947_4735004086858889404_n.jpg ?oh=d3b12a4535749e17f78f61a5439f0355&oe=56148957&__gda__=1443746496_604bc665b5cd16630b52861b105c810 a

https://scontent-sin1-1.xx.fbcdn.net/hphotos-xtf1/v/t1.0-9/s720x720/11403484_839840049433934_2457140152388823783_n.jpg ?oh=0f8dc85c39a3ca872e27b7811dbb4ba7&oe=5629A9EA

https://scontent-sin1-1.xx.fbcdn.net/hphotos-xpf1/v/t1.0-9/s720x720/11018190_839840479433891_4678014649289848119_n.jpg ?oh=0409c815380e5e3c09b3a97a43fa9b5b&oe=560F10E5


சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல... எவரும் எட்டாத அதிசயம்.

Russellxss
6th July 2015, 09:26 PM
https://scontent-sin1-1.xx.fbcdn.net/hphotos-xtp1/v/t1.0-9/s720x720/11707604_839840492767223_916801165911310555_n.jpg? oh=b7627ceb14490ac88789082d83c84404&oe=56255433

https://fbcdn-sphotos-d-a.akamaihd.net/hphotos-ak-xpt1/v/t1.0-9/s720x720/11140299_839840526100553_1391542283862334186_n.jpg ?oh=913743cc247e203b398de889d24ace60&oe=561589D5&__gda__=1445470707_528ea0012f9d8a0f8f98fbfc26c2334 0

https://scontent-sin1-1.xx.fbcdn.net/hphotos-xpf1/v/t1.0-9/s720x720/10423726_839840789433860_3783968482352023065_n.jpg ?oh=c4fa4d8dfb04e780de796bd1e23215b4&oe=562F23D0


சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல... எவரும் எட்டாத அதிசயம்.

Russellxss
6th July 2015, 09:28 PM
https://fbcdn-sphotos-e-a.akamaihd.net/hphotos-ak-xpf1/v/t1.0-9/s720x720/20324_839840802767192_6536541217796234553_n.jpg?oh =54ddc1060ce8e6b5673b062a935fa778&oe=5614B805&__gda__=1445352737_92021dc02d7b8f56d0f098cbc26893b 0

https://fbcdn-sphotos-a-a.akamaihd.net/hphotos-ak-xft1/v/t1.0-9/s720x720/11709537_839840786100527_2516263840053872956_n.jpg ?oh=0a8888ee601a0571e6a93e9c6b3cb6ca&oe=560E28B6&__gda__=1443795108_dfb800b10e78d0c37fc59132ffef003 5

https://scontent-sin1-1.xx.fbcdn.net/hphotos-xap1/v/t1.0-9/s720x720/10422304_839841142767158_8898276757050693494_n.jpg ?oh=6bc9a224af8506e0d3f9704a6bfbf46b&oe=562CB4B8

https://fbcdn-sphotos-c-a.akamaihd.net/hphotos-ak-xft1/v/t1.0-9/s720x720/11666213_839841132767159_4061284040616356880_n.jpg ?oh=6a2f8597a96dd640ed20e1a19ce05acf&oe=562AA580&__gda__=1445611922_e7642ab3351aad38c676f75cf5c1573 0

சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல... எவரும் எட்டாத அதிசயம்.

Russelldwp
6th July 2015, 10:13 PM
திருச்சியில் ஞாயிறு மாலை காட்சியில் கெய்ட்டியில் தர்மம் எங்கே படத்திற்கு மதுரையிலிருந்து வருகை புரிந்த திரு.சுந்தரராஜ் திரு.இன்பா திரு பழனிச்சாமி திரு பாண்டி திரு.சந்திரசேகர் (சிவா பிலிம்ஸ்) திரு குணசேகரன் மற்றும் அனைவருக்கும் திருச்சி மாரிஸ் குருப் சிவாஜி பக்தர்கள் சார்பிலும் இத்திரியின் சார்பிலும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

வருகை புரிந்து சிறப்பித்ததோடு அனைத்து நிகழ்வுகளையும் மிக அழகாக படம் பிடித்து இங்கே தொகுத்து வழங்கிய அன்பு நண்பர் இளைய திலகம் அன்போடு சுந்தர் என வாய் நிறைய கூப்பிடும் திரு .சுந்தரராஜ்
அவர்களுக்கு மிக்க நன்றி

சௌத்திரி ராம் என்கிற ராமச்சந்திரன்

Russellxss
6th July 2015, 10:44 PM
https://scontent-sin1-1.xx.fbcdn.net/hphotos-xfp1/v/t1.0-9/s720x720/11665652_839923412758931_4910079966771924533_n.jpg ?oh=71edccdc811914dff6948816daf8792f&oe=562588C9


சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல... எவரும் எட்டாத அதிசயம்.

eehaiupehazij
6th July 2015, 11:00 PM
குமுறும் எரிமலை குளிர் நிலவாகும் தருணம் The Lava solidifies! நடிகர்திலகத்தின் Flow Hot Flow Cold Strategies!!

பகுதி 1 : பாசமலர்


தான் நடித்த எல்லாப் படங்களிலுமே ஏதோவொரு காட்சிக் கோர்வையில் நடிகர்திலகம் எரிமலையாய்க் குமுறி குளிர் நிலவாய் முடியும் காட்சியமைப்பை ரசித்திருக்கிறோம் ! மிகச்சிறந்த உதாரணம் பாசமலரில் தனது உயர்ந்த அந்தஸ்துக்கு மாறாக தங்கை சாமான்ய தொழிலாளி ஜெமினியை இதயத்தில் இருத்துவதை சகிக்கவொன்னாது எரிமலையாய் குமுறி பின் தங்கையின் உண்மை நிலையை கண்ணுற்று மனம் குளிர்ந்து சுடக் கொண்டு வந்த துப்பாக்கி நுனியால் விழிநீரைத் துடைத்து மனம் இறுகுவது....
நடிப்பு தெய்வத்தின் மானுட அவதாரமே!!


https://www.youtube.com/watch?v=i4EVchjQSno

https://www.youtube.com/watch?v=aG3_B-OJdz0

https://www.youtube.com/watch?v=6SbQ7eAGHHc

Russellisf
6th July 2015, 11:09 PM
https://www.youtube.com/watch?v=MEeESQidph8



குமுறும் எரிமலை குளிர் நிலவாகும் தருணம் The Lava solidifies! நடிகர்திலகத்தின் Blow Hot Blow Cold Strategies!!

பகுதி 1 : பாசமலர்




https://www.youtube.com/watch?v=i4EVchjQSno

https://www.youtube.com/watch?v=aG3_B-OJdz0

https://www.youtube.com/watch?v=6SbQ7eAGHHc

Russellisf
6th July 2015, 11:11 PM
https://www.youtube.com/watch?v=yb2gzvrNhXs



https://www.youtube.com/watch?v=MEeESQidph8

ifohadroziza
6th July 2015, 11:33 PM
Nadigar thilam formula is always success formula.the one and only actor who gave continuous 100 days and silver jublies in his olden days.
Santhippu,theerppu,neethipathi,padikkathavan,thevr magan, padaiyappa -175 days
100 days -plus -ennikkaiyil adangathathu.i.e countless movies like MARUMAGAL,BANTHAM,SATHYA SUNDARAM,KALTHOON,PILOT PREMNATH,ONCE MORE, VAA KANNA VAA.THIRUPPAM,ETC

Murali Srinivas
7th July 2015, 12:32 AM
நமது நடிகர் திலகம் அவர்களின் விவாத மன்றத்தில் [Discussion Forum -ல்] அந்தந்த நேரத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் திரியை மட்டும் பார்வையிட்டு அல்லது பங்களிப்பு செய்து போகின்றவர் நிறைய பேர். Nadigar Thilagam And His Movies என்ற தலைப்பில் இயங்கும் இந்த Discussion Forum-த்தில் நடிகர் திலகம் சம்மந்தப்பட்ட திரிகள் என்னென்ன இருக்கின்றன என்பதனை தெரிந்துக் கொள்வதற்கும் நடிகர் திலகம் திரியின் பழைய பாகங்களை வாசிக்க நினைப்பவர்களும் பின்வரும் சுட்டியை பயன்படுத்திக் கொள்ளலாம்.


http://www.mayyam.com/talk/forumdisplay.php?91-Nadigar-Thilakam-Sivaji-and-His-Movies

அன்புடன்

Russellxss
7th July 2015, 08:51 AM
https://scontent-sin1-1.xx.fbcdn.net/hphotos-xpa1/v/t1.0-9/s720x720/11219613_840116256072980_5753541470865346663_n.jpg ?oh=9c96cc68ede36f5c97896f66bb402c7a&oe=56236D3F


சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல... எவரும் எட்டாத அதிசயம்.

Murali Srinivas
7th July 2015, 09:50 AM
அந்த நாள் ஞாபகம்

1960-களின் இறுதியில் துவங்கி நடிகர் திலகத்தின் படங்கள் வெளியான காலகட்டத்தை பற்றிய என் நினைவலைகளை தாங்கிய இந்த தொடர் பதிவின் அடுத்த கட்டம்

கடந்த பதிவின் இறுதி பகுதி

வசந்த மாளிகை முதல் நாள் மதியக் காட்சிக்கு டிக்கெட் கையில் இருந்தும் உள்ளே போவதற்கு சிரமப்பட்ட அன்றைய சூழல் பற்றி பேசிக் கொண்டிருந்தோம்

இங்கிருந்து பதிவு தொடர்கிறது

நியூசினிமா தியேட்டர் என்பது நீளவாக்கில் அமைந்த தியேட்டர் கட்டிடம். தியேட்டரின் எதிரே அதே நீளவாக்கில் அமைக்கப்பட்டிருக்கும் ஜான்சி ராணி பூங்கா. தியேட்டருக்கும் ஜான்சி ராணி பார்க்கிற்கும் இடையில் ஒரு சின்ன சந்து. அந்த குறுகிய இடத்தில்தான் மக்கள் வரிசையில் நிற்க வேண்டும். நான் சென்ற அத்தியாயத்தில் குறிப்பிட்ட சைடு கேட் என்பது பொதுவாக பெண்கள் உள்ளே போகும் வழி. அந்த வழியாகத்தான் மன்ற டோக்கன்களும் போக வேண்டும் என்று அரங்க நிர்வாகத்தினர் முடிவெடுத்ததால் வேறொரு பிரச்சனை வந்தது. பெண்களும் அப்படிதான் போக வேண்டும் என்பதால் பெண்கள் டிக்கெட்டுகள் கொடுத்து முடிக்கும்வரை மன்ற டோக்கன்களை உள்ளே அனுமதிப்பதில்லை என்ற முடிவுதான் அது. இதனால் என்னவாயிற்று என்றால் ஒரே நேரத்தில் பெண்களும் மன்ற டோக்கன் வைத்திருந்த ஆண்களும் மன்ற டோக்கனோ அல்லது வேறு டிக்கெட்டோ கையில் இல்லாமல் ஆனால் இருப்பது போல் நடித்து எப்படியாவது உள்ளே புகுந்து பிறகு டிக்கெட் வாங்கும் முயற்சியில் ஈடுபடலாம் என்ற நினைப்பில் இருந்த ஆட்களும் ஒரே நேரத்தில் முட்டி மோத அங்கே பெரிய தள்ளு முள்ளே நடந்தது. மன்ற டோக்கன் வைத்திருந்த ஒரு சிலரை உள்ளே அனுமதிக்க அதை பயன்படுத்திக் கொண்டு வேறு சிலர் உள்ளே நுழைய அதை கட்டுப்படுத்த முடியாமல் தியேட்டர் ஊழியர்கள் திணற இந்த களேபரத்தை கண்ட போலீஸ் லாத்தி வீச திரையரங்கம் அமைந்திருக்கும் இடமே ஒரு சின்ன சந்து என்பதால் கூட்டம் இரண்டு பக்கம் சிதற அங்கே ஒரு கலவர சூழல்.

டிக்கெட்டுகள் கையில் இருந்தும் உள்ளே போக முடியவிலையே என்ற பிரச்னை எங்களுக்கு. இருக்கும் சூழலை பார்த்தால் எங்களை உள்ளே போக விடுவார்களா என்ற பயம் வேறு. படத்தின் முதல் காட்சியே நடிகர் திலகத்தின் அறிமுக காட்சி அதுவும் பாடல் காட்சி என்ற விவரத்தையும் ஓபனிங் ஷோ பார்த்தவர்கள் சொல்லி விட்டார்களா, அதை மிஸ் பண்ணி விடப் போகிறோமோ என்ற கவலை, மேலும் ஒருவர் படத்தின் டைட்டில் போடுவதே டாப். ராஜாவை விட டைட்டில் காட்சி இதில் பிரமாதம் என்று வேறு சொல்லியிருந்தார். அத்தனையும் மிஸ் பண்ணப் போகிறோம் என்றே முடிவு கட்டி விட்டோம். அப்போது அங்கே இருந்த ஒருவரை மறக்கவே முடியாது. அந்த ரசிகர் காலில் அடிபட்டு blisters என்று சொல்வார்களே அது போன்று வெடிப்புகள் அதன் காரணமாக ஏற்பட்ட கொப்புளங்கள் என்று காலே ரணகளமாக இருக்கிறது. அந்த நிலையிலும் காலில் செருப்பு கூட இல்லாமல் அவரும் படம் பார்க்க அந்த சைடு கேட் வழியாக உள்ளே நுழைய முயற்சி செய்துக் கொண்டிருக்கிறார். அவர் காலை மிதித்து விடப் போகிறோமே என்ற பயத்தில் நாங்கள் சற்று விலகி நின்று உள்ளே போக முயற்சி செய்ய இதை அறியாத வேறு பலர் அந்த gap-ல் புகுந்து விட (அவர் கத்தினாரோ இல்லையோ) நாங்கள் கால் கால் என்று (காள் காள் என்று!) கத்தியது 43 வருடங்களுக்கு பிறகும் பசுமையாக நினைவில் இருக்கிறது.

ஒரு வழியாக மணி கதவு தாள் திறக்க உள்ளே ஓடி போய் டோக்கனை மாற்றி டிக்கெட் வாங்கி கொண்டு அரங்கத்திற்கு உள்ளே நுழைந்து இடம் பிடித்து அப்பா படம் ஆரம்பிப்பதற்கு முன் வந்து உட்கார்ந்து விட்டோம் என்று ஆசுவாச பெருமூச்சும் படம் பார்க்க போகும் ஆவலுமாய் திரையையே பார்த்துக் கொண்டிருக்கிறோம். பெல் அடித்து விள்க்குகள் அணைக்கப்பட்டு அரங்கத்தின் வாசல்களில் தொங்கவிடப்பட்டிருக்கும் திரைச்சீலைகள் மூடப்பட ஆரவார புயல் அரங்கத்தில் மையம் கொள்ள சென்சார் சர்டிபிகேட் திரையில் ஒளிர - - - -

(தொடரும்)

அன்புடன்

Russelldvt
7th July 2015, 11:49 AM
அவன்தான் மனிதன் ...தொடர்கிறது..

http://i57.tinypic.com/28i6etz.jpg

Russelldvt
7th July 2015, 11:50 AM
http://i60.tinypic.com/2upfkbd.jpg