PDA

View Full Version : சொல்ல துடிக்குது மனம் !



Russellhni
3rd July 2015, 07:25 AM
அலுவலகத்திற்கு இன்றும் மட்டம்
ஆறு நாளாய் அடித்து ஓய்ந்த சுரம்
அன்பு மனைவியோ அங்காடி பக்கம்
அனுவுடன் வீட்டில் நான் மட்டும்

இரண்டு வயது தான் என் அனுவுக்கு
ஆனால் என்ன ஒரு பாங்கு அவளுக்கு
அப்பா டீ வேணுமா: அவள் வெல்லமாய்
ஆஹா குடு பேஷா: நான் செல்லமாய்

சின்ன சொப்பில் கொண்டு வந்தாள்
சூடான தேநீர் என வெறும் நீர் தந்தாள்
எடுத்து குடித்தேன் “அடடா அற்புதம்”
எகிறி குதித்தாள் கிளுக்கியே ஓடினாள்

அனுவின் கேள்வி மீண்டும் மீண்டும்
அப்பா டீ வேணுமா இன்னும் கொஞ்சம் ?
ஆமாம் கொஞ்சினேன் வேண்டும் வேண்டும்
அவள் குப்பியில் டீ கொடுக்க நான் குடிக்க

அதை கெடுக்க அகம் நுழைந்தாள் பத்தினி
என்ன குடிக்கிறீர்கள்? கூத்தடிக்கிறீர்கள்?
அதட்டினாள் அருமை மனைவி சிரித்தேன்
அடியே அனுவின் டீ அபாரம் நீயும் குடி

முறைத்தாள் மனைவி மறுத்தாள் டீயை
அது சரி, அனுவோ குழந்தை! அவளுக்கு
எட்டும் உயரத்தில் டாய்லெட் மட்டும் தான்
அது கூடவா தெரியாது அசட்டு அத்தான் ?

கதவின் பின்னால் அரவம் அனு தலை எட்டி
குசு குசு மழலையில் “ வேணுமா அப்பா டீ ?“
குண்டுஅனு இன்றேனோ அணு குண்டானாள் !
கரிய கண்ணால் எனை கவிழ்த்து விட்டாள் !
.
.

.

(எப்போதோ வலையில் படித்த ஜோக்கின் தாக்கு :-)
https://encrypted-tbn3.gstatic.com/images?q=tbn:ANd9GcQOR7ToVDzOlsc-PekgGc-ouHJKufBr42n8nvWRhTFJ8tofwTnt

pavalamani pragasam
3rd July 2015, 08:36 AM
Yes, an old, hilarious joke read in fb long ago!

Russellhni
3rd July 2015, 12:46 PM
வருமானம் பெருக்கவே
சுருக்கான வழி
வெளிநாட்டு நிறுவனம்
வெட்டிய குழி
விழுந்தது இந்தியன் தானே !

இடியாப்பம் இட்லி தோசை வடகறி
என ஏராளமாய் கிடக்கையில்
ஏன் நமக்கு நூடுல்ஸ் வெறி
என்ன குறை நம் வீட்டினில் ?
என்ன காரணம் நம் நாட்டினில் ?

தரங்கெட்ட அரசியல்வாதியா ?
துணை நிற்கும் அதிகாரியா?
தன்மானம் விற்ற வியாபாரியா?
தறி கெட்ட விளம்பரமா ?

ஏற்றமற்ற போட்டி கொண்டு
ஏமாற்றியவர் பலர் உண்டு
ஏமாந்ததில் இந்தியாவும் ஒன்று!
இன்றாவது விழித்தோமா ? இல்லை
இன்னொரு சதியில் விழுந்தோமா?

https://encrypted-tbn0.gstatic.com/images?q=tbn:ANd9GcS3zIlWDVRPyZ751GiAioGHltV1390AR BJSazhsmGz6VjGHqUMWaw

pavalamani pragasam
3rd July 2015, 09:11 PM
Very good!

Russellhni
4th July 2015, 02:20 PM
ஆசுபத்திரியில் அவன்
ஆவி போகும் நேரம்
அருகில் மனைவி மக்கள்
அழகான நர்சும் ஆங்கே

அன்பு கோவிந்தா அப்பா நீ
ஆரெம்ஸி நகரில் அபார்ட்மென்ட்
இருவதும் இன்றே எடுத்துக் கொள்

ஆசை மகனே !அருகே வா ! சுப்புடு !
அடையாரில் உனக்கு பதினைந்து வீடு
அளித்தேன் அப்படியே உன் ஆசைப்படி

அருமை கடைக் குட்டி நந்தலால் !
அறிவில் சிறந்தவன் நீ ஆதலால்
ஆழ்வார்பேட்டை ஆபீஸ் ஐந்துமுனக்கு

அன்பே ஆருயிரே ! அனிதா ! என் இதர
எல்லா வீடுகளையும் நீயே எடுத்துக் கொள்
இருமினான் நோயாளி! செருமினாள் நர்ஸ் !

ஆச்சரியம் நர்சுக்கு ! அம்பானிக்கும் மேல்
அநியாய பணக்காரரா இவர் ?அடடா!
அறிந்திருந்தால் அமுக்கியிருக்கலாமே!

இவ்வளவு சொத்தா ! என்ன ஒரு பாக்கியம்!
எல்லாம் உங்கள் பூர்வ ஜன்ம புண்ணியம்!
என்னையும் கொஞ்சம் கவனியுங்கள் என்றாள்

எரிந்து விழுந்தாள் மனைவி ! எடு கட்டைய!
எல்லாம் இவன் பால் பாக்கட் போடற வீடு !

https://encrypted-tbn3.gstatic.com/images?q=tbn:ANd9GcRo8tQm8zbc4xcwTN-kK8SIwZdOrbDySbYTE24tdX_8sQ4y5j3RlA

(நன்றி Pogo jokes 2013 - முகநூலில் ரசித்ததின் தமிழாக்கம் )

pavalamani pragasam
5th July 2015, 12:51 AM
:rotfl::rotfl:

Russellhni
7th July 2015, 08:06 AM
காரோட்டி :
------------
இந்தியா போல் எங்கும் காணோம்
ஏழை நாட்டில் நடக்காது எதுவும்
எக்கச்சக்க சட்டம் எதற்கும் ஒரு திட்டம்
ஏமாற்று வேலை பம்மாத்து எல்லாம்

கருப்பு பணம் கையூட்டு கூடவே குப்பை
கொடிய நச்சு சூழல் குடிநீரில் சாக்கடை
கூடும் பணவீக்கம் விவசாயி வேதனை
குண்டும் குழியுமாய் நெடுஞ்சாலை

கொள்ளையர் ஆளும் நொள்ளை நாடிதே
குறை ஒன்றும் இல்லை அவர் பாடுகிறார்
கூசாமல் பொய் கூடையாய் சொல்கிறார்
கோபம் ஆத்திரம் பொத்து கிட்டு வருதே !

காரோட்டியின் மனைவி
-----------------------------
எல்லாம் போகட்டும் கதை தேவையில்லை
என்ன சொல்லியும் ஒன்னும் ஆவதில்லை
எதானாலும் சரி! ஒன்னும் பெரிதில்லை
எனது பிரச்னை இப்போ அதுவுமில்லை !

எங்கேயும் இல்லியே இந்த ரோட்டிலே இடம்!
எப்படி காரை நாம் பார்க் பண்ணுவோம் ?
என்ன கொடுமை இது ? என்ன செய்வோம் ?
ஏதேனும் கொடுத்து சரி செய் ! ஆச்சு நேரம்!




http://laugh18.com/wp-content/uploads/2012/07/Fine-for-parking.jpg

pavalamani pragasam
7th July 2015, 10:13 AM
kodumai!

Russellhni
19th July 2015, 07:37 AM
அமரராகிவிட்டார் அப்பா ஆனால்
அகலவில்லை அவர் எங்களை விட்டு
அங்கங்கே பிரித்து கொடுத்தார் ஆசையாய்
அவர் இறந்த பின்னும் இருக்கும் சொத்தாய்

அவர் ஆஸ்தி அத்துடன் ஆஸ்துமா என்னிடம்
அவர் முட்டைமுழி முகச்சாயல் என் மகனிடம்
அவர் அறிவு அகச்சாயல் ஆணவப் பேத்தியிடம்
அவர் தம் அழியா பிம்பம் மட்டும் அம்மாவிடம்!

அப்பாவி என்னப்பா! அவரை - அடபாவி மனுஷா
அநியாயாமா எனை அம்போன்னு விட்டாயென
அவர் நினைவை கண்ணீரால் நனைக்காமல்
அனுதினமும் அம்மா உலர்ந்ததேதில்லை !

அவர் நிழலை நிஜமாக நினைந்து அழுதபடி
அவருடன் அளவளாமல் விட்டவளுமில்லை
அவர் எங்கே போனார் எங்களை விட்டு?
அவர் அணுக்கள் எங்களிடம் உள்ள போது!


https://encrypted-tbn1.gstatic.com/images?q=tbn:ANd9GcRwer5Gls7cXd7HQClrWUX3xDbfXqnc5 12rilaNJ7R1PU4p_6q7

Russellhni
20th July 2015, 09:17 AM
முரட்டு முனியனும் மூர்க்கன் மணியனும்
முட்டாள் முத்துவும் மூன்றாம் மாடியில்
மச்சு வீடு கட்டும் தச்சர் மூன்று பேரும்

முனியன் சொன்னான் மதிய வேளையில்!
இன்னிக்கும் என் டப்பாவில் குழம்பு சாதம்
என்ன புழைப்பு ! பட்டது போதும்
இது போல் நாளை பட்டை சாதமெனில்
எகிறி குதித்திடுவேன் இங்கிருந்து தரைதனில்

மணியன் தூக்கிலோ இன்றும் புளி சாதம்
மன்னிக்க மாட்டேன்! மனைவியா அவள்?
நாளைக்கும் புளியெனில் நானும் குதித்துடுவேன்

முத்துவின் டப்பாவில் இன்றும் மோர் சாதம்
மாட்டேன் மாட்டேன் நாளைக்கும் மோரென்றால்
நான் என்ன மாங்கா மடையனா?
நாலு மாசமா மாறவில்லை ! குதிப்பேன் நானும்!

மறு நாளும் வந்தது மதியம் அமர்ந்தனர் மூவரும்
முனியன் டப்பாவில் குழம்பு சாதம் ! வெறுத்தான்
மாடியிலிருந்து குதித்தான் மறுநாளே மடிந்தான்

மணியன் தூக்கினில் பச்சை புளியின் வாசம்
மாடியிலிருந்து குதித்தான் மறுநாளே மடிந்தான்

முத்துவின் டப்பாவிலோ இன்றும் மோர் சாதம்
மாடியிலிருந்து குதித்தான் மடிந்தான் மறுநிமிடம்

மடியுமுன் கொடுத்தனர் இருவர் மரணவாக்குமூலம்
முனியனும் மணியனும் ‘மனைவி தான் காரணம்’

மூவரின் ஈமச்சடங்கு மூன்றாம் நாள்
முனியனின் மனைவி மல்லிகா முறிந்தாள்
மோசம் போனேனே உன் மனம் அறியாமல் !
மாமா ! மணக்க கறி சோறு மாற்றியிருப்பேனே !

மணியனின் மனைவி மேனகா மறுகினாள்
மச்சான்! உன் மனசுகேத்த மாதிரி மீன் குழம்பு
மாங்கா தொக்கு கொடுக்காமல் போனேனே!

முத்துவின் மனைவியோ மௌனமாய் நிற்க
மயானத்தில் மற்றவர் அவளை முறைக்க
மறுத்தாள் அவள்! நானில்லை நானில்லை காரணம்!

மடையன் அவன் மறைவுக்கு அவனேதான் காரணம் !
முட்டாள் கணவன் ! டிபன் பாக்ஸில் அனுதினமும்
மோர் சாதம் அவனே தான் கட்டிப்பான் !


https://fbexternal-a.akamaihd.net/safe_image.php?d=AQAg39DxYTTXg6gs&w=240&h=92&url=https%3A%2F%2Fencrypted-tbn1.gstatic.com%2Fimages%3Fq%3Dtbn%253AANd9GcRkL3 WJFViILOwiVLQE-Gu0OFcnukDwr0g3qjJQjg7Le7C7byhdeg

pavalamani pragasam
20th July 2015, 09:28 AM
sirippathaa azuvathaa?

Russellhni
20th July 2015, 09:38 AM
மேடம் :ty:.

சிலர் சிரிப்பார் சிலர் அழுவார் ! இந்த துணுக்கை படிக்கையில் நான் தலையை முட்டிக்கொண்டே சிரித்தேன் ! :banghead: :-D

Russellhni
22nd July 2015, 11:30 AM
காதலன் வர காத்திருந்தேன்
கண்ணிமையாமல் பூத்திருந்தேன்
கண்ணன் வந்தான் கண் பொத்தினான்
கை மங் கை பற்றினான் தொற்றினேன்

காணமல் போன கோபம் தேடினேன்
கடிந்தேன் கால தாமதம் ஏனென்றேன்
கண்ணே கடிதாய் காற்றாய் வந்தேன்
காதல் கைகூட பரிசும் கைகூட என்றான்

கள்ளனே பரிசென்ன காட்டு என்றேன்
கபடமாய் சிரித்தான் காட்டேன் என்றான்
கன்னி உன் பெற்றோருக்கு பரிசு முன்னே
கண்டிப்பாய் காதலி உனக்குண்டு பின்னே

காட்டுவேன் பரிசாய் மாப்பிள்ளை நானே
கொண்டு செல் என்னை அவரிடம் தேனே !
குறும்பாய் சிரித்தான் கொஞ்சலாய் தானே
கொள்ளை போனேன் நொடியில் நானே !

https://encrypted-tbn0.gstatic.com/images?q=tbn:ANd9GcQfI0JN-MVBOdJ7t9borDx6ztCMT9SySwe4OWL0LUKwSb3zjZXUXg

* மாமனார் மாமியார் மனங்கவர் மாப்பிள்ளை ஆவானோ இவன்?

Russellhni
25th July 2015, 03:49 PM
பச்சை வண்ணன் பவள வாய் செங்கண்
அச்சுதன் அவன் தன் அரவணைப் பாயில்
அழகாய் படுத்திருக்கிறான் அசதி போலும்
அவனுக்கும் தான் ஆயிரம் வேலைகள்

அவன் அருகே ஆழ்வார் அவன் புகழ் பாடி
அப்போது சீடன் கனி கண்ணன் அவரை தேடி
ஆசானே ! அரசன் ஆணை இது ! அவாது
அறுவது வயது மூப்பை நீர் அறுக்கணுமாம்
இருபது வயது இளமை என்றும் வேணுமாம்

அடாது கேட்கிறார் : அசையவில்லை நானும்
அன்று நீர் கிழவியை குமரியாக்கிய அதிசயம்
அவர் காதில் யாரோ போட்டனர் போலும்
அடித்துச்சொன்னேன் :ஆகாத ஆசை வேண்டாம்

ஆழ்வார் அனுமதியார் ஆண்டவனை பற்றும்!
ஆயின் விடாக்கண்டன் வெகுள்கின்றார்
ஆசை ஆணவம் அவரை விடவில்லை
அடித்தே கொல்கிறார் தொல்லை தாளவில்லை

அப்போது வந்தனர் அரண்மனை சேவகர்
அழைத்து போக வந்தோம் அரசனின் ஆணை
ஆழ்வார் வர மறுத்தார் : அவரது சீடனை
அப்போதே அடித்து துரத்தினர் நாட்டை விட்டு

ஆழ்வாருக்கு வந்ததே ஆத்திரம் அட போய்யா
அத்யந்த சீடனே போயிட்டான் எனக்கென்ன !
நானும் போறேன் நாட்டை விட்டு நமஸ்காரம்
நல்லா இருங்க நவின்றார் திரும்பினார்

நிம்மதியாக நிட்டையில் இருந்தான் இறைவன்
நல்லா தூங்கினே போ அதட்டினார் ஆழ்வார்
நானே போகிறேன் உறக்கமென்ன உனக்கு ! கிளம்பு !
நாகப்பனையும் நன்றாக சுருட்டிக்கொள் !

(திருமழிசை ஆழ்வார் சொன்னது இதுதான் :

“கணிகண்ணன் போகிறான் காமரு பூங்கச்சி
மணிவண்ணா நீ கிடக்க வேண்டா – துணிவுடைய
செந்நாப் புலவனும் செல்கின்றேன் நீயும் உன்றன்
பைநாகப் பாய் சுருட்டிகொள்” )



பாகம் இரண்டு

ஆழ்வார் சொன்னார் ஆண்டவன் கேட்டான்
அழகிய கமலக்கண்ணன் அவனுடன் ஆதிசேஷன்
அனைவரும் காஞ்சி விட்டு அப்போதே அகன்றனர்
அத்தனை தேவரும் அவர் பின்னே சென்றனர்

அந்தகாரம் நாட்டினில் அந்தகாரன் காஞ்சியில்
அக்கணமே அத்தனை பொலிவும் காஞ்சிபோச்சி
அறிந்தான் அரசன் அடடா அறியாமல் போனோமே

அடித்து பிடித்து ஆழ்வாரை தேடினான் ஓடினான்
அவர் காலில் விழுந்து அறியாமல் செய்த பிழை
ஆழ்வாரே மன்னித்தருளுங்கள் அமைதி கோளுங்கள்

திருமழிசை ஆழ்வாரும் திருச்செவி சாய்த்து
திரும்பினார் திருவெக்கா கோவிலுக்கு : திரும்புமுன்
திருமாலை நோக்கினார் சரி! சரி !திரும்பு கண்ணா
தீர்ந்தது பிரச்னை ! போய் படுத்துக்கொள் நாகமோடு

உஸ் அப்பா என மணிவண்ணன் திரும்பவும்
உஸ்ஸ்ஸ் என்று அவன் பின்னால் அவனரவும்
உடன் அனைத்து தேவரும் ஒன்றாய் வரவும்
உயரிய காஞ்சி ஒரு வழியாய் பிழைத்தது

சொல்பவர் அன்பன் என்றால் அவர்
சொன்ன வண்ணம் செயும் பெருமாள்
என்ன ஒரு ஏற்றம் ! அடியவன் சொல்கிறான்
ஆண்டவன் அப்படியே நடக்கிறான் !




திருமழிசை ஆழ்வார் இரண்டாவதாக சொன்னது இதுதான் :

"கனிகண்ணன் போக்கொழிந்தான் காமருபூங் காஞ்சி
மணிவண்ணா! நீ கிடக்க வேண்டும் - துணிவுடைய
செந்நாப்புலவனும் போக்கொழிந்தேன்;
நீயும் உன்றன் பைந்நாகப் பாய்படுத்துக் கொள்"

****முற்றும்

https://encrypted-tbn3.gstatic.com/images?q=tbn:ANd9GcR4Ijnjd9ppMokwg6SA5X5Lf1hKRShfy oXjXR8QpnJHcqjW1YTO

(சொன்ன வண்ணம் செயும் பெருமாள் - வெக்கா - காஞ்சிபுரம்)

Russellhni
1st August 2015, 06:27 PM
கத்திரிக்காய் பொரியலும்
காரமாய் கேரட் குழம்பும்
கண்மணி சமையல் வாசம்
கணவன் அதிரடி பிரவேசம்

காந்துகிறது கத்தரி காருகிறது
கவனியாமல் காரியம் என்னதிது
காஸ் அணை அணை கண்ணில்லை
கருகுவது கூடவா தெரியவில்லை?

குழம்பை ஏன் கொதிக்க விடுகிறாய்
கொஞ்சம் சூட்டை உடனே குறை
உப்பை ஏன் இப்போதேடுக்கிறாய்
உள்ளே அப்படி என்ன தேடுகிறாய்

குழைந்தது சாதம் இறக்கு இறக்கு
குழம்பில் கொஞ்சம் பருப்பை கூட்டு
கரைசல் புளி ஏன் தண்ணியாயிருக்கு
காய்ந்த மிளகாய் வேண்டாம் ஒதுக்கு

சதிக்கு எதுவும் புரியவில்லை
சாத்தான் பதியை ஆட்டுகிறதோ
சத்தம் ஏன் சும்மா போடுகிறீர்
சம்பந்தமின்றி ஏன் உளறுகிறீர்

https://encrypted-tbn1.gstatic.com/images?q=tbn:ANd9GcQbdqvXvWlOlKGbmT3sm9s0B-_v2FeenxOkuwYphdg4WYN4cRo1wA

என்ன தெரியும் இங்கே உமக்கு
என்ன ஆயிற்று இன்றைக்கு
சாதாரண சாம்பார் வைக்க
சமைக்க எனக்கு தெரியாதா?

அவன் சொன்னான் அப்படிச் சொல்
அது எனக்கும் தெரியும் ஆனால்
அனுதினம் நான் காரோட்டுகையில்
அன்பே நீ தொணதொணத்தால்
இப்படித்தானே கடுப்பாயிருக்கும் !

https://encrypted-tbn0.gstatic.com/images?q=tbn:ANd9GcR6HlacoddGLd0mJUG-MNhhPBvKQ2J1Svu0CsqQChXxq9hqRnV3yw


*படித்த ஜோக்கின் தாக்கம்

pavalamani pragasam
1st August 2015, 09:12 PM
:clap::clap::clap: For all the posts!

Russellhni
2nd August 2015, 07:42 AM
நன்றி மேடம் :ty: :ty::ty:

Russellhni
10th August 2015, 11:41 AM
இவன் :

அது மேல எனக்கு ஒரு இது
அடக்க முடியாம கட்டிகிட்டேன்
ஆசையே துன்பத்திற்கு காரணமாம்
அது பொய்
அவளில்லாமல் நானில்லை
அதுவே மெய்

https://encrypted-tbn2.gstatic.com/images?q=tbn:ANd9GcT8twDiYT6Yn0JguMpawr-UsY1dPNsbzRjDhAhOSH45BnrLK-k8-w


இவன் மவன் :

மோதியது விதி - கண்டோம்
மனதில் காதல் கொண்டோம்
மூணு வார சந்தோசம்
முட்ட முட்ட அனுபவித்தோம்
மால் என்ன பீச் என்ன - பின்
முடிவெடுத்தோம்
முடிந்தது திருமணம்
முப்பதே நாள் மோகம் -பின்
முறிந்தது இருமனம்
மகிழ்ச்சி எங்கே! காணோம் !
மீண்டும் தேடுகிறோம் தனித் தனியே !
மெய் இதுவே !

https://encrypted-tbn2.gstatic.com/images?q=tbn:ANd9GcQn4dM2Tlq3-1-vF0lJRnQ9H9GHeT5PbebYcFkFiCrHEeq-ydROhA


**

Russellhni
13th August 2015, 08:38 PM
மறைந்தான் மந்திரவாதி மாயமாய்
தெரிந்தான் மீண்டும் தந்திரமாய் – அவன்
தேர்ந்த செயல்திறனை தெரிந்து கொள்ள
தைரியமாக எழுந்து கேட்டான் ஒருவன்

பறைவாய் இம்மன்றத்தில் தெளிவாய்
மறைந்த முறை மறைக்காது பகர்வாய்
சிந்தித்தான் மந்திரவாதி சிறிது நேரம்
செப்புவேன் ஆயின் சிக்கல் உண்டு

செத்து விடுவாய் நீ கேட்டால் ! சம்மதமா ?
சலசலப்பு மன்றமதில் : சளைத்தானா நம் ஆள்?
சிரித்தான் அச்சமின்றி : சரி சொல்
சீக்கிரமாய் ! என் மனைவியிடம் மட்டும் !

அமர்ந்தோரின் ஆர்பரிப்பு அமர்க்களம்!
ஆயிரம் குரல் அங்கே ! அதிர்ந்தது அரங்கம்!
என் சதிக்கு சொல் ! என் பதிக்கும் சொல் !
அடடா ! என்ன ஒரு அவசரம் ! எல்லோருக்கும்!
https://encrypted-tbn2.gstatic.com/images?q=tbn:ANd9GcT7nl4u25heRU3hdqR6Xg6WVJThJEIxw Qg9P7t5n4vjlUr4Xl3ctA


அவை நடுவே அந்த அவை நடுவே
அழுகைக் குரல் சிறுமியின் குரல்
அங்கிள் ! என் அம்மாவுக்கும் சொல்
அரங்கம் அடங்கியது! ஆச்சரியம் அங்கே!

https://encrypted-tbn2.gstatic.com/images?q=tbn:ANd9GcSxAv7jTeqxbEs9eF_72jVWWNhYv8pcd uw0yrJLkOy5ku0JLBTh

அது ஏன்! அங்கலாயித்தான் மந்திரவாதி
"அம்மா செத்துவிடுவாள் அதுவா வேண்டும் ?"

அழுகை நிறுத்தி சொன்னது அக்குழந்தை
அம்மா தான் செத்து மறைந்தாளே!
அவள் உன் போல் மீண்டும் தெரியனும்
அங்கிள் ! ப்ளீஸ் என் அம்மாவுக்கும் சொல் !


/Inspired by a joke read in Web/

Russellhni
22nd August 2015, 12:37 PM
பற்றினை விடு பாசத்தை விடு
பாரம் ஏன் ? ஆண்டவன் தேன் !
ஆசை கொள் : அவனிடம் மட்டும்
அடித்து சொன்னார் ஆத்திகர்

ஆசைப்படு அத்தனையும்! அறிவிலியே !
ஆண்டவனை விடு ! அவனே இல்லையே!
ஆதாரம் எங்கே ?அறிவு கொண்டு அலசு !
அனலாய் ஆணித்தரமாய் நாத்திகர்

விடிய விடிய வாக்கு வாதம்
விடை தான் தெரியவில்லை
வந்ததே ஐயம் இருவருக்கும்
விடிந்த பின் நடந்தது இது!

பற்றினை விட்டார் நாத்திகர் !
பற்றினார் பாண்டவ தூதனை !
பரமனை விட்டார் ஆத்திகர் !
பற்றினார் டாஸ்மாக் பார்தனை!

மறுநாளும் தொடர்ந்தது வாதம்
மறுபடியும் மாறியது மனங்கள்
தொடர் கதை இது தொக்கியே நிற்கும்
துவக்கமும் இல்லை தொய்வும் இல்லை !


https://encrypted-tbn3.gstatic.com/images?q=tbn:ANd9GcQ0AIR4rLoohkS6VHSEsTu1IN_lrOOqZ IOWke3oskDK-zdrpcj7lA


/எங்கோ படித்த ஜோக் ! /

pavalamani pragasam
22nd August 2015, 08:20 PM
nalla comedy!!!

Russellhni
11th September 2015, 07:19 PM
கடும் வெயில் காயும் மரத்தடி
சுடும் வேளை சோர்ந்த நேரமடி
திடும் என்றே இருவர் வந்தனர்
எடும் அந்த அரிவாள் என்றனர்

கொடும் அரக்கர் அவர் கண்டு என்
குலை நடுங்கியது தொலைந்தேன்
கூட்டத்தில் மறைந்திருந்தேன்
குறிப்பாய் ஒருவர் கண்டு விட்டார்

உன்னைத்தான் தேடினேன் என்றே
ஓங்கினார் கை வீசினார் – அன்பே !
சரிந்தேன் நங்கை உன் மடியில்
உதிர்ந்தேன் நுங்காய் ஒரு நொடியில்




....... நுங்கின் ஓலம் ஓலையிடம்

Russellhni
25th September 2015, 11:32 AM
எதிர்கொள்வேன் எதையும் என்றாயே அன்று
இறப்பையும் தாங்கும் இதயம் உண்டென்று
என்னாயிற்று இன்று வா வா நேரமாயிற்று
இழுத்தான் காவலாளி தர தரவென்று

அழுதான் ஓவென தொழுதான் தூக்குக் கைதி
என்னால் முடியாது முடியவே முடியாது
என்றுமே முடியாது என்றான் கைதி
ஆர்பாட்டம்! அமர்க்களம் ! அம்மாடி
https://encrypted-tbn1.gstatic.com/images?q=tbn:ANd9GcSw4TBhwznY0z3UkOBHP0iYX8LQaP4TH LhupacJrsoIrTRdPv8z

என்னை விடுங்கள்! வேண்டினான் கைதி
ஆகாது ! ஆகாது ! அது எங்கள் விதி
அரை மணி தானே ! வா ! வா இது அதிகாரி
அனுபவி !என் செய்ய ! அது உன் தலை விதி !

இழுத்து சென்றனர் கைதியை எல்லோருமாய்
கழுத்து தொங்கி கண் தாழ்த்தி சென்றான் கைதி
அவனது மனைவியை பார்க்க ! அறுவை கேட்க !
அது சிறையின் பார்வை நேரம் !




/ * எங்கோ படித்த ஜோக்/

Russellhni
6th November 2015, 06:14 PM
ஆறப்போவது ஓர்நாள் ஆன்மா - ஆயின்
தீரப்போவது எப்போது இப்பாவம் ?
சேரப்போவது எப்போது அவன் பாதம் ?
நேரப்போவது எப்போது எந்தன் முக்தி ?

இளையாழ்வான் கணைகளை கொடுக்க
எடுத்து திருக்கச்சி நம்பி தொடுத்து
அருளாளன் கச்சி வரதனிடம் விடுக்க
ஆண்டவனும் அவர் சொல் செவிமடுத்தார்

வரந்தரும் வரதனின் ஆறு வார்த்தைகள்
வைணவர் வாழ்வுதனில் ஒளி விளக்காய்
விசிட்டாத்வைத பொறியாய் அறநெறியாய்
வந்ததே எம்பெருமான் வாய் வேதப்பொருளாய் !

'அஹம் ஏவ பரந்தத்வம்' என்றான் இறைவன்
அடைய வேண்டிய பரம்பொருள் நானே என்றான்
அடுத்து அவன் 'பேதமே தரிசனம்' என்றான்
ஆண்டவன் வேறு நாம் வேறேதான் அன்றோ !

அவனடி சேர அறவழி 'உபாயம் ப்ரபத்தியே!'
அகங்காரத்தை விடு என் கதி பற்று – என்றான்
ஐயனே மரணம் வருங்கால் உனை மறப்பேனோ
அப்போதைக்கு இப்போதே நின் பாதம் பற்றவோ

ஐயம் கொண்ட கேள்விக்கு அவன் ஆசுவாசம்
'அந்திம ஸ்மிருதி வேண்டாம்' -தப்பாமல் தினம்
எனை நினை ! உன் நினைவு தப்புங்கால்
தப்பாமல் காப்பேன் அந்நாளில் உனை

ஐந்தாவதாய் மொழிந்தான் : சரண் கொண்டால்
ஆன்மா அகலும் போழ் 'அக்கணமே மோட்சம்'!
ஆறாவதாய் சொன்னது 'சத் ஆச்சார்யம் சமாஸ்ரைய! '
ஆண்டவனை அடைய ஆன்மிக குருவை பற்று !

பேரருளாளன் சொல் கேட்டு இளையாழ்வானும்
பெரியநம்பி பற்றவே வைணவம் தழைத்ததே
ஆறு வார்த்தையால் ஆண்டவன் நெறி பற்றி
அழகாய் திருவடி காட்டிய திருக்கச்சி நம்பி வாழி !

http://2.bp.blogspot.com/_h7qhuHzSykY/S1UFub-BXlI/AAAAAAAACJE/UBjJ5jqlfcU/s400/015.jpg

Russellhni
17th November 2015, 04:06 PM
பெய்யும் என்றிடும் வானிலை மய்யம்
பெய்யாது அன்று பொய்த்து விடும் வானம்
பெய்யாது இன்று என்றால் கருவுடை மேகம்
பிய்த்துக் கட்டி வெளுத்து விடும் திண்ணம்

வாடியே வாடி வருந்தியே வருந்தி வழி
தேடியே தேடி மையம் எடுத்த நல்முடிவாம் !
வானம் மேகமூட்டமாய் காணலாம் இன்று
விட்டு விட்டும் பெய்யலாம் : இங்குமங்கும்

விடாமல் தொடர் மழை மற்றும் கனமழை
வேகமான காற்று இடியுடன் சில இடங்கள்
வானிலை அறிக்கை இனி பட்டும் படாமல்
வம்பெதற்கு! போதும் போதும் பட்டது!

இரவி இருக்கும்போது விண்மீன் தெரியாது
இரவு நேரத்தில் இருள் சூழ வாய்ப்பு - என
ஒரே மூச்சில் சொன்னால் உலகம் நம்பும்
இப்படித்தான் இனி நம் அறிக்கை இருக்கும்

இது போல் அப்பத்தாவும் சொன்னார் வருமென்று
ஆகாயம் பார்த்து கண் சுருக்கி ஜன்னல் வழியாய்
அது போல் கொட்டியது மழை நேற்று விடிய விடிய
அடடா! என் பாட்டியும் ஒரு வானிலை மையமே !


***
நகைச்சுவைக்காக எழுதியது ..
நமது வானிலை அறிக்கை நம்பும் படியாகத்தான் இருக்கிறது .



One more Bite :

Whether the weather be fine,
Whether the weather be not,
Whether the weather be cold,
Whether the weather be hot,
We’ll weather the weather,
Whatever the whether,
Whether we like it or not


~Author Unknown

Russellhni
19th February 2016, 07:02 PM
காப்பாற்று கடவுளே எனக்கு கருணை காட்டு !
கேசவா மாதவா கோவிந்தா உன்னருள் நீட்டு!
கண்ணனின் கதறல் கரியவன் காதோ செவிடு :(
கைவளை ஓசை ! கதவு தட் தட்டு !அம்மா அதட்டு !

பள்ளி கொண்டது போதும் கண்ணா எழுந்திரு
பள்ளிக்கு நேரமாச்சு பார் பர பரவென்றே எழு
பக்கத்து வீட்டு பையன் கூட போய் விட்டான்
பிடிவாதம் வேண்டாம் போகத்தான் வேண்டும்

பள்ளிக்கா? மாட்டேன் அம்மா ! போகமாட்டேன் !
புரிந்து கொள் அம்மா ! பாடம் சொல் வாத்திகளுக்கும்
பின்னே பசங்களுக்கும் என்னை பிடிக்கவில்லையே
போகத்தான் வேண்டுமெனில் ஏனென்று சொல்?
.

.

.
.
.

.

(விடை கீழே பார்க்க ! )
https://external.fmaa1-1.fna.fbcdn.net/safe_image.php?d=AQAbT9a-pJVfBP6Z&w=188&h=188&url=https%3A%2F%2Fencrypted-tbn3.gstatic.com%2Fimages%3Fq%3Dtbn%253AANd9GcR1ke R5untjwD4dUZkBMNZLRi2IP3nnidv9VXgUq4Jyf_UYbiAOfQ

அம்மாவின் பதில் :
படுத்தாதே கண்ணா ! பள்ளி ஆசிரியரே நீ தான் !

Russellhni
21st February 2016, 01:01 PM
உன்மத்தமாய் மகன் ஆடுகிறான்
ஊரைக்கூட்டி யாருடனோ பாடுகிறான்
உறக்கத்தில் யாரையோ தேடுகிறான்
உண்மையென்ன சொல்லுங்கள் டாக்டர்

கண்மணியின் கவலை இது கலங்கினாள்
கண்ணன் சின்ன குழந்தை அவன்
கண்முன் தான் யாரும் இல்லையே பின்
காரணம் என்ன டாக்டர் ?

கவலை வேண்டாம் - டாக்டர் தில்லை
காரணம் இது மனநோய் இல்லை
கற்பனைக்கு கடிவாளம் இல்லை
கண்ணனுக்கு ஒன்றுமேயில்லை

கூட்டி வா உன் மகனை சரியாகும் !
கூட வந்த கணவனுக்கோ ஆச்சரியம்
அதெப்படி சாத்தியம் டாக்டர் ?
அவளுக்குத்தான் மகனே இல்லையே !

https://encrypted-tbn2.gstatic.com/images?q=tbn:ANd9GcRILtTN7LXCcFkSbRAmxTf4pMTe-OEUWrjnPlvsFylp_FQb52o_6w

Russellhni
26th February 2016, 03:36 PM
பாண்டவருக்கு பீஷ்மர் படுத்தபடி
பார் உய்ய வழிதன்னை பகர்ந்தபடி:
பால் வெளியில் தேவருடன் நின்றபடி
பார்வதி பரம சிவனார் பார்த்தபடி :

பரந்தாமன் திருநாமம் ஆயிரம்
பாடி பணிந்து தினமும் சிந்திக்க
அமுதம் போல் அனந்தன் பெயர்
அவர் அருளிக் கொண்டிருந்த நேரமது !


https://encrypted-tbn3.gstatic.com/images?q=tbn:ANd9GcTkwdfXcQ4A2y2kpa098Hu2Sqk8rlpDy aW77sPvku8P020wYACHRQ

கலைவாணியும் பிரமனும் வருணனும் அருணனும்
கண்ணாயிரம் கொண்ட இந்திரனும் சந்திரனும்
கந்தர்வரும் தேவரும் கிங்கரரும் ஒன்றாய் நின்று
கண்கொள்ளா காட்சிதனை காணலாயிற்றே !

கருமுகில் வண்ணனை மாதவன் கோவிந்தன்
கேசவன் ஸ்ரீதராவென போற்றிப் பாடலாயிற்றே!
கண்ணனும் சத்யபாமா ருக்மணி சகிதம்
காவியமாய் அவர் உரை கேட்கலாயிற்றே !

**

என்னத்தை சொன்னார் கங்கை மைந்தன்
எப்படி அறுப்பது சம்சார பந்தன்
எப்படி பெறுவது பிறப்பறு முக்தி -என
பக்தியுடன் கேட்ட பாண்டு மகனுக்கு
பாசமாய் நேசமாய் பதில் சொன்னார்

பிறப்பு பின்னர் இறப்பு பின் தாயின் கருவில்
மீண்டும் உயிர்ப்பு மீளா துக்கம் மேதினியில்
மீள வேண்டில் மேக வண்ணன் புகழ் பாடு
பாரில் நாராயணன் நாமம் நீக்கும் பந்தம்
பாடு நாளெல்லாம் தேடு அவனை நாடு !

**
இதமானது எது ஆதாரமெது இறைவன் யார்
அச்சுதன் யார் பக்தவத்சலன் யார் -தேடினார்
தேடி தெளிந்தார் தெளிந்தது பகன்றார்
நாடினார் நாடி கண்டுகொண்டார் பீஷ்மர்

நாராயணா வென்னும் நாமம் - நவின்றார்
ஆயிரம் நாமம் விஷ்ணு சஹஸ்ரநாமம்
தருகிறான் விஷ்ணு தயக்கமின்றி கேள்
தருமம் பொருள் வம்சம் செழிக்கும்

துதிப்பவன் இருவினை இடரும் தீரும்
தூய்மையுடன் ஆயிரம் நாமம் சொன்னால்
நெறி சொல்லி நின்றாரில்லை பேரறிவு பீஷ்மர்
பெருமாள் பேர்பாட அவன் புகழ் பாட

அருந்தெய்வ நாமம் அதை அடுக்கடுக்காய்
அருளினார் அழகாய் அம்பு படுக்கையில்
அநேகமூர்த்தி அநிருத்தன் அமலன் பேரோடு
அநேகரூபன் அஜாதன் அமரப்ரபு ஆதித்யன்

அச்சுதன் அச்சலா அனுகூலா அஜீதா என
அனந்த கல்யாண குணமாய் ஆயிரம் பேர்
அத்துடன் தாமோதரன் திரி விக்கிரமன்
மாதவன் கேசவன் இருடிகேசன் மதுசூதன்

கோவிந்தன் என சிலபல நாமம் செதுக்கி
செவ்விய சஹஸ்ரனாம மாலை சேர்த்தார்
மாயன் பேர் பாடவே மானுடம் உய்யவே
மண்ணு புகழ் மகாவிஷ்ணு அடி சேரவே

https://encrypted-tbn1.gstatic.com/images?q=tbn:ANd9GcQWMX3AZ5tDe1xRozO7Aqhpo-3JNeZa6zJFkxdR3YNJIl5_fhSqKA

**
ஜகத்தோரே அறிவீர் சர்வம் விஷ்ணு மயம்
ஜகத்ரக்ஷகன் சர்வம் கிருஷ்ணார்ப்பணம்
துக்கித்தோரே துதியுங்கள் ஆயிரம் நாமம்
தூரப்போகும் துன்பமெல்லாம் இன்பம் சேரும்

அருளியே முடித்தார் பீஷ்மர் ஆயிரம் நாமம்
அன்னை பார்வதியும் அங்கேயே பரமனும்
ஆவலுடன் அனைத்தையும் கேட்ட பின்னர்
அன்னபூரணி அகிலாண்டேஸ்வரி அவளது பதி
அம்பிகாபதி அவனிடம் ஆச்சரியமாய் கேட்டதிது


என்னதிது ! ஈஸ்வரா! எவ்விதம் சாத்தியம்
எந்நாளும் சொல்வது ஆயிரம் திருநாமம்
ஏது மாந்தர்க்கு காலம் நேரம் தினம்
ஏதேனும் எளிதான உபாயம் உங்களிடம்
இருந்தால் சொல்லவேண்டும் என்னிடம்


இனிமையாக சிரித்துக் கொண்டே சொன்னான்
இறைவன் : என்னுயிர் மனோரமா - ஏனில்லை
எளிதான உபாயம் உண்டு ராம ராம என்று
நாளும் சொன்னால் ஆயிரம் நாமத்தின்
பலனும் அப்போதே கிடைக்கும் அறிவாய்

https://encrypted-tbn3.gstatic.com/images?q=tbn:ANd9GcRdGNPgwdNm0mihA1D4y14fYmXmHcoRv y2KkWlaUHQiEpRP-f4S


***




ஸ்ரீ ராம ராம ராமேதி ரமே ராமே மனோரமே
ஸஹஸ்ர நாம தத்துல்யம் ராம நாம வரானனே !!!


***


Ref : விஷ்ணு சஹஸ்ரநாமம்

Parvathi uvacha :

kenopayena laghunaa visnornama saharakam
padyathe panditair nityam srothumichamyaham prabho
(Parvathi said:- I am desirous to know oh Lord, How the scholars of this world,
Will chant without fail,These thousand names ,By a method that is easy and quick) .


Iswara uvacha :

sri rama rama rameti rame rame manorame
sahasra nama tat tulyam rama nama varanane
(Lord replied "The Name of Rama is as Great as the Thousand Names of God - Vishnu Sahasranama).".

Russellhni
5th March 2016, 08:04 AM
தகவல் வந்தது தங்கள் தனயன்
தீரன் வீரன் அசகாய சூரன் அவன்
தண்ணீரில் தவித்தவனை
தன்னலம் இன்றி தரை சேர்த்தனன்

மறுநாள் மீண்டும் வந்த தகவல்
மீட்ட உம் மகன் உதவி வியர்த்தமே
உயிர் மீண்டவன் இன்று மாண்டான்
மனநோய் ! மரத்து தூக்கில் தொங்கினான்

அரண்டான் என் மகன் ஆகாது ஆகாதே
அவனாகவா தொங்கினான் ? தகாது தகாதே
அன்பாய் ஈரம் போக உலர்த்தினேனே !
அவனை காயப்போட்டதே நான்தானே !


https://encrypted-tbn0.gstatic.com/images?q=tbn:ANd9GcSo9kdzbROs-932FoVZTYQcMMGP7DX3DcHUTTYZX-Z6_9s967MoUA

Russellhni
27th April 2016, 10:49 AM
மறையது உண்டு அவனியில் இன்று
அல்லாரை அழிக்க நல்லாரை காக்க
ஆண்டவன் அவதாரம் என்று!

மறைந்தது ஆதவன் மறைத்தது மாதவன்
மன்னவன் சயத்ரதன் சிரம் கொய்ய
மகா பாரதத்தில் அன்று !

மாறியது இருண்மதி தோன்றியது நிறைமதி
மறை பட்டர் காக்க மன்னன் சினம் போக்க
மாயன் தங்கையால் : நன்று !

அழித்தல் காத்தல் போல் ஆக்கவும்
அவன் அவதாரம் ஏதேனும் உண்டா
அன்புடன் சொல்வீர் !

https://encrypted-tbn2.gstatic.com/images?q=tbn:ANd9GcQJ1iivRD8y83ib_TTp94dmXLDW5awFM 0-3Ese8MGCEUrnJLMMv https://encrypted-tbn1.gstatic.com/images?q=tbn:ANd9GcSW0VOBz4FyQSZYjnYgORFZnNB1UTW_l hsfbIpVM8WXdFDcBf4Y

கண்ணன் சொன்னது கீதையில் :

பரித்ராணாய ஸாதூநாம் விநாஸா²ய ச து³ஷ்க்ருதாம்|
தர்மஸம்ஸ்தா²பநார்தா²ய ஸம்பவாமி யுகே³ யுகே³ ||4-8||

(நல்லோரைக் காக்கவும், தீயன செய்வோரை அழிக்கவும், அறத்தை நிலை நிறுத்தவும் நான் யுகந்தோறும் பிறக்கிறேன்.)