PDA

View Full Version : Old Relay



Pages : 1 2 3 4 5 6 7 8 9 10 11 [12] 13

NOV
13th October 2016, 03:15 PM
சக்க போடு போடு ராஜா உன் காட்டுல மழை பெய்யுது
சட்டப் படி தொட்டுப் பேசு நீ பயந்தா

Sent from my SM-G935F using Tapatalk

chinnakkannan
13th October 2016, 10:56 PM
உன்னை காண பயந்தேன் கரைந்தேன்
என்னவோ சொல்லத் துணிந்தேன்
ஏதேதோ

NOV
14th October 2016, 03:37 AM
என்னாச்சு ஏதாச்சு ஏதேதோ ஆயாச்சு
காணாத கண்ணுக்குள்ள காதல் இப்போ கண்காட்சி

chinnakkannan
14th October 2016, 10:19 AM
காணும் கலை எல்லாம் கண்காட்சி
அது காவியத் தாயின்

NOV
14th October 2016, 10:21 AM
தாயின் முகமிங்கு நிழலாடுது தந்தை மனமிங்கு உறவாடுது
கோயில்

Sent from my SM-G935F using Tapatalk

chinnakkannan
14th October 2016, 10:43 AM
கோவில் மணி ஓசை தன்னை செய்ததாரோ
அவர் என்ன பேரோ பாட்டுப்பாடும் கூட்டத்தாரோ
ஏழைக்குயில் கீதம் தரும்

NOV
14th October 2016, 10:46 AM
செழும் கனி போல சுவை தரும் மாமணி என் பாடிடும் பூங்குயிலே
இன்ப காவிய கலையே ஓவியமே

Sent from my SM-G935F using Tapatalk

chinnakkannan
14th October 2016, 11:02 AM
என்னடி என்னடி ஓவியமே
உன்னை வரைந்தது யார்
சொல்லடி சொல்லடி ஜாடையிலே
என்னை இழுத்தது யார்

ம்... பச்சை நிற தாவணியில்

rajraj
14th October 2016, 11:06 AM
paavaadai thaavaNiyil paartha uruvamaa
poo. vaadai.........

chinnakkannan
14th October 2016, 01:28 PM
பூ வாடைக் காற்று வந்து ஆடை தீண்டுமே
முந்தானை இங்கே உடையாக மாறுமே
சாரல்

NOV
14th October 2016, 03:10 PM
சஹானா சாரல் தூவுதோ
சஹாரா பூக்கள் பூத்ததோ

chinnakkannan
14th October 2016, 05:31 PM
புதிய பூவிது பூத்தது
இளைய வண்டு தான் பார்த்தது
தூது சென்றதோ சேதி

NOV
14th October 2016, 05:56 PM
அம்மம்மா கேளடி தோழி சொன்னானே ஆயிரம் சேதி
கண்ணாலே வந்தது பாதி

chinnakkannan
14th October 2016, 11:37 PM
ஒரு பாதி கதவு நீயடி
மறு பாதி கதவு நானடி
பார்த்துக் கொண்டே பிரிந்திருந்தோம்
சேர்த்து வைக்க காத்திருந்தோம்

ஒரு பாதி கதவு நீயடா
மறு பாதி கதவு நானடா
தாழ்

NOV
15th October 2016, 04:27 AM
பூங்கதவே தாழ் திறவாய் பூவாய் பெண் பாவாய்

chinnakkannan
15th October 2016, 10:01 AM
பாவாய் பாவாய் பாரடியோ
பார்வையில் ஆயிரம் வேலடியோ
தங்கம் தங்கம் உன்னுருவம் தாங்காதினிமேல் என் பருவம்
வேதனை

NOV
15th October 2016, 10:06 AM
மாலை என் வேதனை கூட்டுதடி
காதல் தன் வேலையை

Sent from my SM-G935F using Tapatalk

chinnakkannan
15th October 2016, 03:50 PM
நினச்சது நடந்தாச்சு கேட்டது கெடச்சாச்சு
எனக்கொரு வேலை கிடைச்சுடுச்சு

NOV
15th October 2016, 04:26 PM
தவமின்றி கிடைத்த வரமே
இனி வாழ்வில் எல்லாம் சுகமே
நீ சூரியன்

Sent from my SM-G935F using Tapatalk

chinnakkannan
15th October 2016, 10:40 PM
சூரியனோ சந்திரனோ யாரிவரோ சட்டுனு சொல்லு

காவிரி ஆறும் கைக்குத்தல் அரிசி

raagadevan
16th October 2016, 12:32 AM
காவிரி ஆறும் கைக்குத்தல் அரிசியும் மறந்து போகுமா
ஓஹோ தாவணி பெண்களும்
தூதுவிடும் கண்களும் தொலைந்து போகுமா
நம்ம களத்துமேடு கம்மாக்கரை கரிசக்காடு
செம்மண்...

NOV
16th October 2016, 05:52 AM
RD, you've sung the same song that ChiKa sang. :)



சூரியனோ சந்திரனோ யாரிவரோ சட்டுனு சொல்லு

காவிரி ஆறும் கைக்குத்தல் அரிசி
எந்த கடையில நீ அரிசி வாங்குற
உன் அழகுல என் உசுர


Sent from my SM-G935F using Tapatalk

raagadevan
16th October 2016, 06:04 AM
Hmmm... Okay, but my version had more lines and looked/sounded better!!! :) (Hope CK doesn't see this one!)

NOV
16th October 2016, 06:05 AM
:rotfl:

Sent from my SM-G935F using Tapatalk

raagadevan
16th October 2016, 06:14 AM
கப்பல் வாங்க வந்திருப்பாளோ
செப்பல் வாங்க வந்திருப்பாளோ
உசுர வாங்க வந்திருப்பாளோ
ஒன்னும் புரியலயே
ட்ரைலர் போல முடிந்திடுவாளோ
ட்ரைன போல நீண்டிடுவாளோ
எப்ப இவன இவ விடுவாளோ
ஒன்னும் தெரியலயே
அப்பாவி...

NOV
16th October 2016, 06:18 AM
பாலக்காட்டு ராஜாவுக்கு ஒரு அப்பாவி ராணி அவ சேலை


Sent from my SM-G935F using Tapatalk

raagadevan
16th October 2016, 06:22 AM
பட்டுச் சேலை காத்தாட
பருவ மேனி கூத்தாட
கட்டுக் கூந்தல் முடித்தவளே
என்னைக் காதல் வலையில் அடைத்தவளே
அரும்பு...

NOV
16th October 2016, 06:23 AM
சின்ன அரும்பு மலரும் சிரிப்பை சிந்தி வளரும்
கண்கள் அந்தக் காட்சி கண்டு

Sent from my SM-G935F using Tapatalk

raagadevan
16th October 2016, 06:30 AM
உன்னைக் கண்டு நானாட
என்னைக் கண்டு நீ ஆட
உல்லாசம் பொங்கும் இன்ப தீபாவளி...

NOV
16th October 2016, 06:33 AM
கொஞ்சும் மைனாக்களே கொஞ்சும் மைனாக்களே

அட இன்றே வர வேண்டும் என் தீபாவளி பண்டிகை
இன்றே

chinnakkannan
16th October 2016, 10:49 AM
மேளம் கொட்டுங்கள் இன்றே இன்றே

நீ ஒற்றை முடியால் தேரை

NOV
16th October 2016, 10:50 AM
வெண்ணிலாவின் தேரில் ஏறி காதல் தெய்வம் நேரில்

Sent from my SM-G935F using Tapatalk

chinnakkannan
16th October 2016, 02:21 PM
நேருக்கு நேர் நின்று பாருங்கள் போதும்
நீலத்தில் ஊறிய எண்ணம்

NOV
16th October 2016, 03:34 PM
ஆசை தரும் பார்வையில் எல்லாம் ஆயிரம் எண்ணம் வரும் வரும் வரும்
ஆடலுடன் பாடலைக் கேட்டு ரசிப்பதிலே

Sent from my SM-G935F using Tapatalk

raagadevan
16th October 2016, 04:06 PM
இரவு நிலவு உலகை ரசிக்க நினைத்தது
ஜொலிக்கும் சிறகை விரித்து
தரையில் இறங்கி நடந்தது
யாரோடும்தான் சொல்லாமல்தான்
வான் விட்டு தான் மண்ணில் வந்தது
மண்ணைக் கண்டு மயங்கி...

NOV
16th October 2016, 04:34 PM
நிலவும் மலரும் பாடுது
என் நினைவில் தென்றல் வீசுது
நிலை மயங்கி மயங்கி காதலினால் ஜாடை

Sent from my SM-G935F using Tapatalk

chinnakkannan
16th October 2016, 05:29 PM
செந்தாழம்பூவில் வந்தாடும் தென்றல் என் மீது மோதுதம்மா
பூவாசம் மேடை போடுதம்மா பெண்போலே ஜாடை பேசுதம்மா
வளைந்து

NOV
16th October 2016, 05:48 PM
பொது நீதிக்கும் நேர்மைக்கும் பயந்துவிடு
நல் அன்புக்கும் பண்புக்கும் வளைந்து கொடு
இன்றோடு போகட்டும் திருந்தி

Sent from my SM-G935F using Tapatalk

chinnakkannan
16th October 2016, 08:18 PM
அந்தோ விந்தியிதே அறிந்தறிந்து
ஆழ்நரகில் உழல்வாரே - இவர்
சிந்தை திருந்தி உய்ய குகனே உன்தன்
திருவருள் புரியாயோ?
சொப்பன வாழ்வில் மகிழ்ந்து

NOV
16th October 2016, 08:24 PM
இதயம் கனிந்து எதையும் மறந்து
இருவர் மகிழ்ந்து உறவாட
நன்னேரமிதே மனம் மீறிடுதே

raagadevan
17th October 2016, 06:59 AM
தெளியாதது எண்ணம் கலையாதது வண்ணம்
அழியாதது அடங்காதது அணை மீறிடும் உள்ளம்
வழி தேடுது விழி வாடுது
கிளி பாடுது உன் நினைவினில்

சிறு பொன்மணி அசையும்
அதில் தெறிக்கும் புது இசையும்
இரு கண்மணி பொன் இமைகளில் தாளலயம்
நிதமும் தொடரும் கனவும் நினைவும் இது மாறாது
ராகம் தாளம் பாவம்...

NOV
17th October 2016, 07:01 AM
தாளம் வந்ததும் பாடல் வந்ததா
பாவம் வந்ததும் ராகம் வந்ததா
பாவம் வந்ததும் ராகம்

raagadevan
17th October 2016, 07:12 AM
அதிசய ராகம் ஆனந்த ராகம்
அழகிய ராகம் அபூர்வ ராகம்
.................................................

ஒரு புறம் பார்த்தால் மிதிலையின் மைதிலி
மறுபுறம் பார்த்தால் காவிரி மாதவி
முகம் மட்டும் பார்த்தால் நிலவின் எதிரொளி
முழவதும் பார்த்தால் அவள் ஒரு பைரவி
அவள் ஒரு பைரவி...அவள் ஒரு பைரவி...

NOV
17th October 2016, 07:29 AM
வென்றிடுவேன் உன்னை வென்றிடுவேன்
பைரவி துணைவன் பாதம் பணிந்து

avavh3
17th October 2016, 06:46 PM
ஆதி சிவன் தாள் பணிந்து அருள் பெறுவோமே எங்கள் ஆதி சக்தி

NOV
17th October 2016, 06:51 PM
வீர விநாயகா வெற்றி விநாயகா
சக்தி விநாயகா பேரழகா

Sent from my SM-G935F using Tapatalk

avavh3
17th October 2016, 09:05 PM
அழகு தெய்வம் மெல்ல மெல்ல அடியெடுத்து வைத்ததோ நான் அன்பு கவிதை சொல்ல சொல்ல அடியெடுத்து கொடுத்ததோ

NOV
17th October 2016, 09:09 PM
நீயும் நானுமா கண்ணா நீயும் நானுமா

அறிவைக் கொடுத்ததோ துரோணரின் கௌரவம்

chinnakkannan
18th October 2016, 12:40 PM
கவிதையிலே பொய்களுக்கு கெளரவம் அதிகம் தான்
காதலிலே உயிர்களுக்கு கெளரவம் குறைவு தான்
நேருக்கு நேர் காதல் சொன்னால் நெஞ்சுக்கு நிறைவு தான்
காதலின் வீதியில்

NOV
18th October 2016, 05:09 PM
ஆகாய வீதியில் அழகான வெண்ணிலா
அலங்காரத் தாரகையோடு அசைந்தூஞ்சல் ஆடுதே ஆனந்தம்

chinnakkannan
19th October 2016, 10:11 AM
ஆனந்தம் இங்கு ஆரம்பம்
மெல்லச் சிரித்தால் என்ன இதழ் விரித்தால்

NOV
19th October 2016, 10:12 AM
காதல் சிறகை காற்றினில் விரித்து வான வீதியில் பறக்கவா
கண்ணில் நிறைந்த கணவனின்

chinnakkannan
19th October 2016, 10:54 AM
poogathey pogathey en kaNavaa
pollaatha soppanam naanum kandEn

NOV
19th October 2016, 10:56 AM
நிலவொன்று கண்டேன் என் ஜன்னலில்
கனவொன்று கண்டேன் உன் கண்களில்

Sent from my SM-G935F using Tapatalk

chinnakkannan
19th October 2016, 02:47 PM
கண்களில் காதல் ஒருமுறைப்பேசும்.
சிரிக்கும் போதிலும் நெஞ்சம் வாடினேன் அன்பே.
கண்களில் காயம்

NOV
19th October 2016, 03:29 PM
இரண்டு மனம் வேண்டும் ...
சிறிய காயம் பெரிய துன்பம்
ஆறும் முன்னே அடுத்த

Sent from my SM-G935F using Tapatalk

chinnakkannan
19th October 2016, 05:34 PM
அடுத்தாத்து அம்புஜத்தைப் பார்த்தேளா
அவ ஆத்துக்காரர் சொல்லுறதக் கேட்டேளா
அடுத்தாத்து சங்கதி

NOV
19th October 2016, 05:45 PM
தாரா தாரா வந்தாரா சங்கதி ஏதும் சொன்னாரா
அவர்

Sent from my SM-G935F using Tapatalk

chinnakkannan
20th October 2016, 11:45 AM
அவர்ர்ர்ர் சொன்னதெல்லாம் நடந்திடுமா சொல்லடி கிளியே
தோட்டம் துரவு வாய்க்காப் பக்கம் ஊருக்கு வெளியே

NOV
20th October 2016, 11:56 AM
வெண்ணிலா வெளியே வருவாயா
விழியிலே வெளிச்சம் தருவாயா
இரவிலே தவிக்க விடுவாயா
அருகிலே அணைக்க

Sent from my SM-G935F using Tapatalk

chinnakkannan
20th October 2016, 01:53 PM
ஒரு தனித்த மனத்தில் அணைத்து எனக்கு உணர்ச்சி கொடுத்து முகிழ்த்தவா.
கணை கடல் அலையினில் கதிரவன் ஒளியென

NOV
20th October 2016, 02:24 PM
மின்னல் ஒளியென கண்ணை பறித்திடும் அழகோ தேவதையோ

Sent from my SM-G935F using Tapatalk

avavh3
20th October 2016, 07:23 PM
ஒரு காதல் தேவதை பூமியில் வந்தாள் ஒரு காதல் காவியம் கண்ணோடு தந்தாள் கள்ளூறும் காலை வேளையில்

NOV
20th October 2016, 07:30 PM
இசை மேடையில் இன்ப வேளையில் சுகராகம் பொழியும்

Sent from my SM-G935F using Tapatalk

avavh3
20th October 2016, 07:50 PM
அமுதை பொழியும் நிலவே நீ அருகில் வராததேனோ
இதயம் மேவிய காதலினால் ஏங்கிடும் அல்லியை பாராய்

NOV
20th October 2016, 07:57 PM
இந்த மானிலத்தை பாராய் மகனே
உந்தன் வாழ்க்கை தனை உணர்வாய்

avavh3
21st October 2016, 08:02 PM
உறவுகள் தொடர்கதை உணர்வுகள் சிறுகதை ஒரு கதை இன்று முடியலாம் முடிவிலும் ஒன்று தொடரலாம் இனியெல்லாம் சுகமே

NOV
21st October 2016, 08:04 PM
ஜகமே தந்திரம் சுகமே மந்திரம் மனிதன் யந்திரம் சிவ சம்போ

Sent from my SM-G935F using Tapatalk

avavh3
21st October 2016, 09:28 PM
சம்போ சம்போ சம்போ சம்போ சாயங்கால வம்போ வம்போ
பூமி தாண்டி போகாமல் சாகாமல் மோட்சங்கள் காண்போம் இப்போ

NOV
21st October 2016, 09:32 PM
அட இப்போ இப்போ எனக்கு வேணும் அஞ்சல
அவ இல்ல இல்ல நெருப்பு

avavh3
22nd October 2016, 08:42 AM
நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் நெருப்பாய் எரிகிறது இந்த மலருக்கு என்மேல் என்னடி கோபம் முள்ளாய் மாறியது

NOV
22nd October 2016, 08:45 AM
உன்னை பார்த்து சொல்லும் வார்த்தை இன்று கங்கை என மாறியது
இதுவரை கனவுகள் இளமையின் நினைவுகள் ஈடேறும்

raagadevan
22nd October 2016, 08:59 AM
எண்ணி இருந்தது ஈடேற
கன்னி மனம் இன்று சூடேற...

NOV
22nd October 2016, 09:11 AM
நேரத்தில் ரத்தத்துல சூடேறும் மொத்தத்தையும் நான் கேட்க ஏங்குறேன்

raagadevan
23rd October 2016, 02:46 AM
புல்லுகட்டு வாசமா புத்திகுள்ள வீசுற
மாட்டுமணி சத்தமா மனசுக்குள் கேக்குற
கட்டவண்டி ஓட்டுற கையளவு மனசுல
கையெழுத்து போடுற கண்ணிப்பொண்ணு மார்பிலே
மூனு நாளா பாக்கலே ஊரில் எந்த பூவும் பூக்கல
ஆட்டுகல்லு குழியில ஒரங்கிபோகும் பூனயா
ஒன்ன வந்து பாத்துதான் கெரங்கி போறன்யா
மீனுக்கு ஏங்குற கொக்கு நீ
கொத்தவே தெரியல மக்கு...

NOV
23rd October 2016, 04:44 AM
நீ மன்னாரு சாமி போல நிக்கலாமா
மாமா மாமா மக்கு மாமா
இந்த மாலைய பார்த்து நீ சொக்கலாமா

Sent from my SM-G935F using Tapatalk

raagadevan
23rd October 2016, 05:52 AM
கன்னிப் பெண்மைப் பூவே பூவே பூவே பூவே பூவே
வின்னகைதான் பொன்னே பொன்னே
பொன்னே பொன்னே பொன்னே
மைப் பூசும் கங்கை என்ன முத்தா மைனாவே
சொக்கலை ஓரக் கண்ணால் பேசும் நிலாவே
துள்ளத் தான் துள்ளத் தனம் உள்ளத்தில் சங்கீர்த்தனம்...

NOV
23rd October 2016, 05:57 AM
கோவிந்த நாம சங்கீர்த்தனம்
குடிகொண்ட நெஞ்சந்தான் பெரும் ஆலயம்

Sent from my SM-G935F using Tapatalk

raagadevan
23rd October 2016, 06:27 AM
அவள் ஒரு நவரச நாடகம்
ஆனந்த கவிதையின் ஆலயம்
தழுவிடும் இனங்களில் மான் இனம்
தமிழும் அவளும் ஓரினம்
..................................

அறுசுவை நிரம்பிய பால்குடம்
ஆடும் நடையே நாட்டியம்
ஊடல் அவளது வாடிக்கை
என்னை தந்தேன் காணிக்கை...

https://www.youtube.com/watch?v=ANd2PNUWY2A

NOV
23rd October 2016, 06:58 AM
மயக்கமென்ன இந்த மௌளனம் என்ன
மணி மாளிகை தான் கண்ணே
தயக்கம் என்ன இந்தச் சலனம் என்ன
அன்புக் காணிக்கை தான் கண்ணே

கற்பனையில்

chinnakkannan
23rd October 2016, 10:17 AM
இப்படி இங்கொரு பெண்மையைப் படைக்க
தன்னிடம் கற்பனை தீர்ந்ததை
எண்ணித்தான் பிரம்மனும் மூர்ச்சையுற்றான்

மின்னலை பிடித்து மின்னலை பிடித்து
மேகத்தில்

NOV
23rd October 2016, 10:23 AM
வெண் பஞ்சு மேகத்தில் என் நெஞ்சை நீ வைத்தாய் பெண்ணே
உன் புன்னகையில்

chinnakkannan
23rd October 2016, 11:00 AM
பூ கொடியின் புன்னகை அலை நதியின் புன்னகை
மழை முகிலின் புன்னகை நீ காதலின் புன்னகை
அந்தப் பௌர்ணமி

rajraj
23rd October 2016, 11:09 AM
poufnami nilavil pani vizhum iravil
kadal karai maNalil.......

avavh3
23rd October 2016, 05:01 PM
மண்ணில் இந்த காதலன்றி யாரும் வாழ்தல் கூடுமோ எண்ணம் கண்ணிப்பாவையன்றி ஏழு ஸ்வரம்தான் பாடுமோ

raagadevan
23rd October 2016, 05:12 PM
poufnami nilavil pani vizhum iravil
kadal karai maNalil.......

vaNakkam Raj! :) It is pournami, not poufmani! Just kidding! :)

raagadevan
23rd October 2016, 05:15 PM
மண்ணில் இந்த காதலன்றி யாரும் வாழ்தல் கூடுமோ எண்ணம் கண்ணிப்பாவையன்றி ஏழு ஸ்வரம்தான் பாடுமோ

பாடுவோர் பாடினால் ஆடத் தோன்றும்
பாலுடன் தேன்கனி சேர வேண்டும்
கலைகளை...

NOV
23rd October 2016, 05:26 PM
வளர்ந்த கலை மறந்து விட்டாள் ஏனடா கண்ணா
அவள் வடித்து வைத்த ஓவியத்தை

Sent from my SM-G935F using Tapatalk

raagadevan
23rd October 2016, 11:10 PM
பூங்காவியம் பேசும் ஓவியம்
ஆணி பொன் தேரோ ஆரீரோ ஆரோ
வெள்ளி பன்னீரோ...

chinnakkannan
24th October 2016, 01:33 AM
//ராகதேவன் தமிழ் நாட் அரசியல்லாம் பேசக்கூடாது :)//

பொன்வானம் பன்னீர் தூவுது இன்னேரம்
பல எண்ணம் மாறுது கண்ணோரம்

NOV
24th October 2016, 04:49 AM
பொன்னாரம் பூவாரம் கண்ணோரம் ஸ்ருங்காரம்
பொழுதுகள்

raagadevan
24th October 2016, 08:18 AM
மார்பின் மேலே உன்னை சாய்த்து
கதைகள் சொன்ன தருணங்கள்
வார்த்தை எல்லாம் ஒய்வு கொள்ள
மௌனம் பேசும் பொழுதுகள்
விண்மீன் வெளிச்சத்தில் உன்னோடு
எல்லை...

NOV
24th October 2016, 08:22 AM
தவிக்குதே எல்லை தாண்டி பார்க்க
தடுக்குதே பெண் நாணம் தான்
don'னு don'னு don'னு
நான் உன்னோட கோல்ட் மீனு

chinnakkannan
24th October 2016, 01:55 PM
மீனே மீனே மீனம்மா விழியைத் தொட்டது யாரம்மா
தானே வந்து தழுவிக் கொண்டு...சங்கதி

NOV
24th October 2016, 02:38 PM
பம்பர கண்ணாலே காதல் சங்கதி சொல்வேனே
தங்க சிலை போல் வந்த மனதை தவிக்க

Sent from my SM-G935F using Tapatalk

chinnakkannan
24th October 2016, 04:56 PM
தவிக்குது தயங்குது ஒரு மனது தினம் தினம் தூங்காமலே
புது சுகம் காணாமலே எனைத் தொடர்ந்து எனைப் படர்ந்து
ஏதோ சொல்கின்றது மனம் எங்கோ செல்கின்றது
ஏதோ ஒன்று நெஞ்சிலே எழுந்த

NOV
24th October 2016, 05:32 PM
எழுந்த ராகம் ஒன்றல்ல விழுந்த தாளம் ஒன்றல்ல
ஊடல் கொண்டு கூடல் கொண்ட பாடல் ஒன்றல்ல
கண்ணொரு பாவனை கையொரு பாவனை சிந்த

Sent from my SM-G935F using Tapatalk

avavh3
24th October 2016, 09:43 PM
கல்யாண நாள் பார்க்க சொல்லலாமா..
சிந்தாமல் சிதறாமல் அள்ளலாமா
கண்ணாடி பார்த்தபடி கதை படிப்போமா

rajraj
24th October 2016, 10:47 PM
pournami nilavil pani vizhum iravil
kadal karai maNalil iruppomaa
mounathin mozhiyil mayakkathin nilaiyil
kadhai kadhaiyaaga padippomaa
........
kamban......

chinnakkannan
25th October 2016, 11:37 AM
கம்பன் எங்கு போனான் ஷெல்லி என்ன ஆனான்
நம்மை பாடாமல்

லைலா செத்து போனாள் மஜ்னு செத்து போனான்
நம்மை பாராமல்

கண்ணீரே இல்லாத காதல் சூத்திரம்

கண்டோமே கண்டோமே நாங்கள் மாத்திரம்
இது ஒரு புது முறை இதில் என்ன வரைமுறை
வருகிற தலைமுறை வணங்கட்டும் இருவரை

NOV
25th October 2016, 11:40 AM
தேவியர் இருவர் முருகனுக்கு திருமால் அழகன் மருகனுக்கு

Sent from my SM-G935F using Tapatalk

chinnakkannan
26th October 2016, 11:57 AM
திருமால் அழகன் பெருமாள் மருகன்
தலைவனாக வரவேண்டும்

NOV
26th October 2016, 12:00 PM
குமரிப் பெண்ணின் உள்ளத்திலே குடியிருக்க நான் வரவேண்டும்
குடியிருக்க நான் வருவதென்றால் வாடகை

Sent from my SM-G935F using Tapatalk

chinnakkannan
26th October 2016, 12:09 PM
வாடகை சோஃபா இருபது ரூபா
விலைக்கு வாங்கினா முப்பதே

NOV
26th October 2016, 12:13 PM
ஒண்ணிலே இருந்து இருபது வரைக்கும் கொண்டாட்டம்
இருபத்தொண்ணிலே இருந்து முப்பது வரைக்கும் திண்டாட்டம்


[emoji38]

Sent from my SM-G935F using Tapatalk

chinnakkannan
26th October 2016, 12:37 PM
சின்னச் சின்ன நடை திண்டாட்டம்
அதைக் கண்டதும் நெஞ்சினில் கொண்டாட்டம்


பூந்தோட்டம் கண்கள் மானாட்டம்
பொன் வண்டாட்டம் இதழ் தேனாட்டம்
வண்ண வண்ண முகம் பாலாட்டம்
அந்த வஞ்சியின்

NOV
26th October 2016, 12:39 PM
என்னவென்று சொல்வதம்மா வஞ்சி அவள் பேரழகை சொல்ல மொழி

Sent from my SM-G935F using Tapatalk

chinnakkannan
26th October 2016, 12:47 PM
உலகம் எங்கும் ஒரே மொழி
உள்ளம் பேசும் காதல் மொழி
ஓசை

NOV
26th October 2016, 01:58 PM
தேவன் கோவில் மணி ஓசை
நல்ல சேதிகள் சொல்லும் மணி ஓசை
பாவிகள் மீதும் ஆண்டவன்

Sent from my SM-G935F using Tapatalk

chinnakkannan
26th October 2016, 03:58 PM
ஆண்டவனில்லா உலகமெது
ஆசைகளில்லா இதயமெது
நதி இருந்தால்

NOV
26th October 2016, 04:40 PM
என்னோடு நீ இருந்தால் உயிரோடு நான் இருப்பேன்
என்னை நான் யாரென்று சொன்னாலும் புரியாதே

avavh3
26th October 2016, 10:00 PM
அன்புள்ள மன்னவனே ஆசை காதலனே இதயம் புரியாதா என் முகவரி தெரியாதா

NOV
26th October 2016, 10:05 PM
நினைக்கத் தெரிந்த மனமே உனக்கு மறக்கத் தெரியாதா
பழகத் தெரிந்த உயிரே

avavh3
28th October 2016, 09:58 PM
நீ அணைக்கின்ற வேளையில் உயிர்ப்பூ விடுக்கென்று மலரும்
நீ வெடுக்கென்று ஓடினால் உயிர்ப்பூ சருகாக உலரும்
இரு கைகள் தீண்டாத பெண்மையை உன் கண்கள் பந்தாடுதோ
மலர் மஞ்சம் சேராத பெண்ணிலா என் மார்போடு வந்தாடுதோ
புது வெள்ளை மழை
hatsoff கவி பேரரசர்

rajraj
29th October 2016, 12:27 AM
mazhai kooda oru naaLil thenaagalaam
maNal kooda sila naaLiL pon aagalaam
aanaalum avai yaavum neeyaagumaa
ammaa endru azhaikkindra.........

avavh3
29th October 2016, 12:49 PM
பொன்மாலை பொழுது இதுஒரு பொன்மாலை பொழுது வானமகள் நாணுகிறாள் வேறு உடை பூணுகிறாள்
இது ஒரு

NOV
29th October 2016, 05:08 PM
உன் மேல ஒரு கண்ணு நீ தான் என் மொர பொண்ணு
உன்னோட இவ ஒன்னு உன்ன மறந்தா வெறும் மண்ணு

Sent from my SM-G935F using Tapatalk

raagadevan
29th October 2016, 09:30 PM
யாரும் விளையாடும் தோட்டம்
தினம் தோறும் ஆட்டம் பாட்டம்
போட்டாலும் பொறுத்துக் கொண்டு
பொன்னு தரும் சாமி
இந்த மண்ணு நம்ம பூமி...

rajraj
29th October 2016, 10:00 PM
boomiyil maanida janmam adaindhum or puNNiyam indri
vilangugaL.............

raagadevan
31st October 2016, 06:11 AM
என்று தணியும் இந்த சுதந்திர தாகம்
என்று மடியும் எங்கள் அடிமையின் மோகம்
என்றெமதன்னை கை விலங்குகள் போகும்
என்றெமதின்னல்கள் தீர்ந்து பொய்யாகும்

பஞ்சமும் நோயும் நின் மெய்யடியார்க்கோ
பாரினில் மேன்மைகள்...

NOV
31st October 2016, 06:13 AM
நீதானே நாள்தோறும் நான் பாட காரணம்

எந்த நாளும் மேன்மையில் என்னை ஏற்றும் எனியே
அன்னை நீ அல்லவா இன்னும்

avavh3
31st October 2016, 07:59 PM
இன்னும் என்னை என்ன செய்யப்போகிறாய் அன்பே அன்பே என்னை கண்டால் என்னென்னமோ ஆகிறாய் முன்பே முன்பே

NOV
31st October 2016, 08:02 PM
நாணத்தாலே கன்னம் மின்ன மின்ன நடத்தும் நாடகம் என்ன

ஓ..ஓ.. மூடிய கைகள் ஓடிடும் முன்பே நீ விளையாட

avavh3
1st November 2016, 08:59 PM
வேட்டையாடு விளையாடு விருப்பம்போல உறவாடு வீரமாக நடையைப்போடு நீ வெற்றியென்னும் கடலில் ஆடு

NOV
1st November 2016, 09:03 PM
தேனோடும் தண்ணீரின் மீது மீனோடு மீனாக ஆடு
செவ்வாழைக் கால்கள் பொன்வண்டு

raagadevan
2nd November 2016, 07:36 AM
பொன்வண்டொன்று மலரென்று முகத்தோடு மோத
நான் வளை கொண்ட கையாலே மெதுவாக மூட
என் கருங்கூந்தல்...

https://www.youtube.com/watch?v=ruDSgcQAhiI

NOV
2nd November 2016, 07:39 AM
அந்த முகில் உந்தன் கருங்கூந்தல் விளையாட்டோ
உங்கள் கவிதைக்கு எந்தன் மேனி விளையாட்டோ
நீல நிறம் வானுக்கும் கடலுக்கும் நீல நிறம்
காரணம்

Sent from my SM-G935F using Tapatalk

raagadevan
2nd November 2016, 07:58 AM
பூமி யாருக்கும் சொந்தம் இல்லடா
அந்த சாமி கூட நம் பந்தம் இல்லடா
மாறிடும் லைஃப்-டா காரணம் யாரடா
போனது போகட்டும்
புது வாழ்க்கைத் தேடி...

NOV
2nd November 2016, 08:03 AM
பிறந்த இடம் தேடி நடந்த தென்றலே பெருமையுடன் வருக
உன் திருவடித் தாமரை

avavh3
2nd November 2016, 09:18 PM
ஆயிரம் தாமரை மொட்டுக்களே வந்து ஆனந்த கும்மிகள் கொட்டுங்களே
இங்கு ரெண்டு ஜாதி மல்லிகை

NOV
2nd November 2016, 09:20 PM
பூமாலையில் ஓர் மல்லிகை இங்கு நான் தான் தேன் என்றது
உன்தன் வீடு தேடி வந்தது இன்னும் வேண்டுமா

chinnakkannan
3rd November 2016, 12:02 PM
பக்கமாக வந்தபின்பும் வெட்கமாகுமா
பார்வையோடுபார்வை சேரத் தூது வேண்டுமா
மாலை அல்லவா நல்ல நேரம் அல்லவா
இன்னும்

NOV
3rd November 2016, 12:07 PM
காலைப் பூக்கள் பூத்திருக்கு
சாலை ஓரம் காத்திருக்கு
இன்னும் என்ன காதலிக்க நேரம் இல்லையா

Sent from my SM-G935F using Tapatalk

avavh3
3rd November 2016, 08:04 PM
தாயில்லாமல் நானில்லை தானே எவரும் பிறந்ததில்லை எனக்கொரு தாய் இருக்கின்றார் என்றும் என்னை காக்கின்றார்
தாயில்லாமல் நான்

NOV
3rd November 2016, 08:24 PM
கடவுள் பாதி மிருகம் பாதி கலந்து செய்த கலவை நான்
வெளியே மிருகம் உள்ளே கடவுள் விளங்க முடியாக் கவிதை நான்
மிருகம்

Sent from my SM-G935F using Tapatalk

avavh3
3rd November 2016, 09:16 PM
தைரியமாகச்சொல் நீ மனிதன்தானா இல்லை நீதான் ஒரு மிருகம் இந்த மதுவில் விழும் நேரம்

NOV
3rd November 2016, 10:04 PM
இன்னும் கொஞ்சம் நேரம் இருந்தா தான் என்ன
ஏன் அவசரம் என்ன அவசரம்

chinnakkannan
4th November 2016, 08:46 PM
என்னுடல் உனக்கென்று சமர்ப்*பணம்.
ஆ: நன... நன...நா,.....அடி என்னடி உனக்கின்று அவசரம்
இந்த மின்மினிக்கு

NOV
4th November 2016, 08:54 PM
மின்மினியை கண்மணியாய்
கொண்டவனை என்னிடமே
தந்தாள் உன் அன்னை

Sent from my SM-G935F using Tapatalk

avavh3
4th November 2016, 09:45 PM
அன்னையைப் போல் ஒரு தெய்வம் இல்லை
அவர் அடி தொழ மறுப்பவர்
மனிதரில்லை மண்ணில் மனிதரில்லை

NOV
5th November 2016, 05:03 AM
யாரடா மனிதன் இங்கே கூட்டிவா அவனை அங்கே
இறைவன் படைப்பில் குரங்குதான் மீதி இங்கே

மனிதரில் நாய்கள் உண்டு மனதினில் நரிகள் உண்டு
பார்வையில் புலிகள்

raagadevan
5th November 2016, 09:15 AM
மழைக்காகத் தான் மேகம் அட கலைக்காகத் தான் நீயும்
உயிர் கலந்தாடுவோம் நாளும் மகனே வா
நீ சொந்தக் காலிலே நில்லு தலை சுற்றும் பூமியை வெல்லு
இது அப்பன் சொல்லிய சொல்லு மகனே வா மகனே வா
ஊருக்காக ஆடும் கலைஞன் தன்னை மறப்பான்
தன் கண்ணீரை மூடிக் கொண்டு இன்பம் கொடுப்பான்
புலிகள் அழுவது ஏது அட பறவையும் அழ அறியாது
போர்க் களம் நீ புகும்போது முள்
தைப்பது கால் அறியாது
மகனே... மகனே...
காற்றுக்கு ஓய்வென்பது ஏது அட ஏது
கலைக்கொரு தோல்வி கிடையாது கிடையாது

மழைத்துளி மழைத்துளி மண்ணில் சங்கமம்
உயிர்த்துளி உயிர்த்துளி வானில் சங்கமம்
உடல் பொருள் ஆவியெல்லாம்
கலையில் சங்கமம் சங்கமம்...

https://www.youtube.com/watch?v=8zKNIWHvwWI

NOV
5th November 2016, 09:19 AM
குங்குமப் பொட்டின் மங்கலம் நெஞ்சமிரண்டின் சங்கமம்
இன்றெனக் கூடும் இளமை ஒன்றெனப் பாடும்

raagadevan
5th November 2016, 09:38 AM
நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா
என் காதல் ராணி இன்னும் தூங்கவில்லையா
கண்ணீரில் உன்னைத் தேடுகின்றேன்
என்னோடு நானே பாடுகின்றேன்

உன்னைக் கண்டு தென்றலும் நின்று போனதுண்டு
உன்னை காண வெண்ணிலா வந்து போனதுண்டு
ஏன் தேவி இன்று நீ என்னைக் கொல்கிறாய்
முள் மீது ஏனடி தூங்கச் சொல்கிறாய்
உன்னைத் தேடி தேடியே எந்தன் ஆவி...

NOV
5th November 2016, 09:46 AM
ஆவி பறக்கும் டீ கடை அவ வந்ததால பூக்கடை
தேவி தினிசா பார்த்திட நான் மறந்தே போனேன் சாப்பிட

Sent from my SM-G935F using Tapatalk

chinnakkannan
5th November 2016, 11:50 AM
தேவியின் திருமுகம் தரிசனம் தந்தது\
காற்றினில் ஆடிடும் கொடி போல் என்கைகளில் ஆட நீ வா..கமான்..

NOV
5th November 2016, 12:05 PM
தேவியின் திருமுகம் தரிசனம் தந்தது\
காற்றினில் ஆடிடும் கொடி போல் என்கைகளில் ஆட நீ வா..கமான்..enge relay word? :think:



Sent from my SM-G935F using Tapatalk

avavh3
5th November 2016, 12:23 PM
சாப்பிட வாங்க அட உங்களத்தாங்க கூட்டு கரி உருளகறி வாங்கிவந்தேங்க சாப்பிட வாங்க :smile:

NOV
5th November 2016, 12:28 PM
வாங்க மச்சான் வாங்க வந்த வழியைப் பாத்துப் போங்க்

Sent from my SM-G935F using Tapatalk

raagadevan
6th November 2016, 02:41 AM
Be Happy புரியாத சரித்திரம் நாங்க
Be Happy ஆமா திமிரு தான் போங்க
Be Happy இன்றைய ராஜா நாங்க
Be Happy நாளைய இந்தியா...

NOV
6th November 2016, 03:47 AM
இந்திய நாடு என் வீடு
இந்தியன் என்பது என் பேரு
எல்லா மக்களும் என் உறவு
எல்லோர் மொழியும் என் பேச்சு

Sent from my SM-G935F using Tapatalk

raagadevan
6th November 2016, 08:15 AM
marriage என்றால் வெறும் பேச்சு அல்ல
மீனாட்சி சுந்தரேசா
Hey village-லே போயி கல்யாணம் பாரு
மீனாட்சி சுந்தரேசா
வாங்க வாங்க என்று சொல்லணும்
சொல்லி சொல்லி வாயும் வலிக்கணும்
வந்தவங்க வயிறு நெறையனும்
வாழ்த்து சொல்லி நெஞ்சு நெறையணும்
ஒரு நாள் கூத்து...

NOV
6th November 2016, 08:22 AM
ஹெ இங்க பாரு கூத்து ஜோரு காமெடி யாரு அட நம்ம சாரு

Sent from my SM-G935F using Tapatalk

raagadevan
6th November 2016, 08:42 AM
காரு சவாரி ஜோரு
கையாலே தீண்டிடாமே பேசிடுங்க சாரு
டிரைவரு சாரு
கையாலே தீண்டிடாமே பேசிடுங்க சாரு

காரு சவாரி ஜோரு...

NOV
6th November 2016, 08:49 AM
வேண்டாத உறவ வெட்டிப்போடு
வாழ்க்கை ரொம்ப ஜோரு
ரெண்டில் ஒன்னு பாரு
அதுல தோத்துப் போனா கேலி பண்ணும் ஊரு

Sent from my SM-G935F using Tapatalk

raagadevan
6th November 2016, 09:21 AM
எங்க ஊரு மெட்ராசு
இதுக்கு நாங்க தானே அட்ரசு...

NOV
6th November 2016, 09:31 AM
நம்பரும் வாங்கல ஃபோனும் பன்னல
அட்ரசு வாங்கல லெட்டரும் கொடுக்கல
ஃபாலோப் பன்னல தூது அனுப்பல
எப்படி வந்தாள் நேருலே

Sent from my SM-G935F using Tapatalk

raagadevan
6th November 2016, 09:56 AM
நேருக்கு நேர் நின்று பாருங்கள் போதும்
நீலத்தில் ஊறிய பூ வந்து மோதும்
கோலத்தை மூடிய மேலுடை ஆடும்
கூப்பிடும் பாணியில் பாட்டொன்று பாடும்...

NOV
6th November 2016, 10:50 AM
நான் பாடும் பாடல் நலமாக வேண்டும் இசை வெள்ளம் நதியாக

Sent from my SM-G935F using Tapatalk

raagadevan
7th November 2016, 12:03 AM
வெள்ளிப் பனி விழும் மலையிருக்க
அந்த மலையினில் மழையடிக்க
அந்த மழையினில் நதி பிறக்க
அந்த நதி வந்து கடல் கலக்க...

NOV
7th November 2016, 01:33 AM
ஒன்றோடு ஒன்றாய் கலக்க என்னுயிறே
காதோரம் காதல் உரைக்க ஓ

avavh3
8th November 2016, 07:18 PM
ஓஹோ எந்தன் பேபி நீ வாராய் எந்தன் பேபி கலைமேகம் வர்ணஜாலம் கொண்டகோலம் காணலாம்

NOV
8th November 2016, 07:27 PM
கடவுளிலே கருணை தனை காணலாம்
அந்த கருணையிலே கடவுளயும் காணலாம்
நல்ல மனசாட்சியே

Sent from my SM-G935F using Tapatalk

chinnakkannan
9th November 2016, 12:13 PM
மெளனத்தில் விளையாடும் மனசாட்சியே
ஆயிரம் நினைவாகி ஆனந்த

NOV
9th November 2016, 03:23 PM
ஆலயம் என்பது வீடாகும் ஆசை வைத்தால்.
ஆனந்த மாளிகை போலாகும் சேவை

Sent from my SM-G935F using Tapatalk

chinnakkannan
9th November 2016, 06:55 PM
மானிட சேவை துரோகமா
கலைவாணி நீயே சொல்
வீதியில் நின்று தவிக்கும்

NOV
9th November 2016, 07:03 PM
ஏரிக்கரையில் மரங்கள் சாட்சி
ஏங்கித் தவிக்கும் இதயம் சாட்சி
துள்ளித் திரியும் மீங்கள் சாட்சி
துடித்து நிற்கும் இளமை சாட்சி

Sent from my SM-G935F using Tapatalk

avavh3
10th November 2016, 06:49 PM
உன்னை விட இந்த உலகத்தில் ஒசந்தது ஒன்னும் இல்லை
உன்னை விட ஒரு உறவுன்னு சொல்லிக்கொள்ள யாரும் இல்லை யாரும் இல்லை
வாக்குபட கிடைச்சான் விருமாண்டி
சாட்சி சொல்ல சந்திரன் வருவாண்டி
சாதி சனம் எல்லாம் அவன் தாண்டி
கேட்ட வாரம் உடனே தந்தானடி
உன்னை விட இந்த உலகத்தில் ஒசந்தது ஒன்னும் இல்லை

NOV
10th November 2016, 06:52 PM
தாய் இல்லாமல் நான் இல்லை
தானே எவரும் பிறந்ததில்லை
எனக்கொரு தாய்

Sent from my SM-G935F using Tapatalk

avavh3
11th November 2016, 08:30 PM
நான் தாயுமானவன் தந்தையானவன் அன்பு சேவகன் அருமை நாயகன்

NOV
11th November 2016, 08:48 PM
காதல் என்பது காவியமானால் கதா நாயகன் வேண்டும்
அந்தக் கதா நாயகன் உன்னருகே
இந்தக் கதா நாயகி வேண்டும்

Sent from my SM-G935F using Tapatalk

raagadevan
11th November 2016, 11:13 PM
எண்ணிய முடிதல் வேண்டும்
நல்லதே எண்ணல் வேண்டும்
ஸ்ரீரங்கா ஸ்ரீரங்கா ஸ்ரீரங்கம் ஸ்ரீரங்கா
ஸ்ரீரங்க நாதனை பாடுவோம்
ஸ்ரீரங்கம் சென்றாலே சேராதோ பேரின்பம்...

NOV
12th November 2016, 05:01 AM
நாடிய சொந்தம் நாம் காணும் பந்தம் இன்பம் பேரின்பம்
நாளொரு வண்ணம் நாம் காணும் எண்ணம்

raagadevan
12th November 2016, 08:42 AM
என்னம்மோ ஏதோ எண்ணம் திறலுது கனவில்
வண்ணம் திரளுது நினைவில்
கண்கள் இருளுது நனவில்
என்னமோ ஏதோ முட்டி முளைக்குது மனதில்
வெட்டி எறிந்திடும் நொடியில்...

NOV
12th November 2016, 09:25 AM
இமயே இமயே விலகும் இமயே
விழியேயேயே விழியே பிரியும் விழியே
எது நீ எது நான் இதயம் அதிலே
புரியும் நொடியில் பிரியும் கனவே

raagadevan
12th November 2016, 09:35 AM
மலர்களே மலர்களே இது என்ன கனவா
மலைகளே மலைகளே இது என்ன நினைவா...

NOV
12th November 2016, 09:37 AM
அன்னையும் இல்லை தந்தையும் இல்லை
கனவா வெறும் நினைவா
நெஞ்சிலே வரும் பந்தமே சிறுகதையா தொடர்கதையா

Sent from my SM-G935F using Tapatalk

raagadevan
12th November 2016, 09:42 AM
நிலவு தூங்கும் நேரம் நினைவு தூங்கிடாது
இரவு தூங்கினாலும் உறவு தூங்கிடாது
இது ஒரு தொடர்கதை தினம் தினம் வளர்பிறை...

NOV
12th November 2016, 09:44 AM
வளர்பிறை என்பதும் தேய்பிறை என்பதும் நிலவுக்கு தெரியாது
இன்பங்கள் என்பதும் துன்பங்கள் என்பதும் அன்புக்கு கிடையாது

raagadevan
13th November 2016, 12:34 AM
கண்டதும் காதல் வழியாது
கண்டதால் வெட்கம் கலையாது
பூனையில் சைவம் கிடையாது
ஆண்களில் ராமன் கிடையாது
புரட்சிகள்...

NOV
13th November 2016, 05:27 AM
பெரும் புரட்சிகள் வளர்வது இன்று
வலியோர் ஏழையை வாட்டிடும் கொடுமை

Sent from my SM-G935F using Tapatalk

raagadevan
13th November 2016, 09:07 AM
வேதம் புதுமை செய்
வேதம் வேதம் புதுமை செய்
சிதையா சிதையா நெஞ்சுக்குள்
சிதையா சிதையா நெஞ்சுக்குள்
கொடுமை எதிர்த்து நில்
கொடுமை கொடுமை எதிர்த்து நில்
கேட்டிடும் துணிந்து நில்
கேட்டிடும் கேட்டிடும் துணிந்து...

NOV
13th November 2016, 09:11 AM
நில்லுங்கள் நிமிர்ந்து நில்லுங்கள் சொல்லுங்கள் துணிந்து சொல்லுங்கள்

Sent from my SM-G935F using Tapatalk

raagadevan
13th November 2016, 09:14 AM
சொல்லத்தான் நினைக்கிறேன்
உள்ளத்தால் துடிக்கிறேன்
வாயிருந்தும் சொல்வதற்கு
வார்த்தை இன்றி தவிக்கிறேன்...

NOV
13th November 2016, 09:16 AM
காதலி... காதலி... காதலில் தவிக்கிறேன்
ஆதலால் வா வா அன்பே அழைக்கிறேன்

Sent from my SM-G935F using Tapatalk

avavh3
13th November 2016, 09:49 AM
தோட்டத்தில் உள்ள தோட்டத்தில் உள்ள பூக்கள் எல்லாமே வண்ண பூக்கள் எல்லாமே
தலைதிருப்பி பார்க்கும் ஆனால் அழைத்தது உனைத்தானே
இவன் யாரோ

NOV
13th November 2016, 09:52 AM
யார் பெற்ற மகனோ, நீ யார் பெற்ற மகனோ
இந்த ஊர் கும்பிடும்

Sent from my SM-G935F using Tapatalk

raagadevan
13th November 2016, 10:04 AM
கும்பிட சொல்லுகிறேன்
உங்களை கும்பிட்டு சொல்லுகிறேன்
என்னை நம்பவும் நம்பி
அன்பினில் தோயவும் நம்பிக்கை இல்லையென்றால்
எனக்கொரு தம்பிடி...

NOV
13th November 2016, 10:58 AM
ஏழை வீட்டுப் பொண்ணா இருந்தா
தம்பிடி இல்லீங்க
அவ ஏழு மாடி பொண்ணா பொறந்தா
மாப்பிள்ளை உண்டுங்க
கோழைக்கெல்லாம்

Sent from my SM-G935F using Tapatalk

avavh3
13th November 2016, 07:19 PM
எல்லாரும் எல்லாமும் பெறவேண்டும் - இங்கு
இல்லாமை இல்லாத நிலைவேண்டும் (incl in ATM machines!)

NOV
13th November 2016, 07:22 PM
விழியோடு இமை போலே விலகாத நிலைவேண்டும்
எனை ஆளும் எஜமானே.... எனை ஆளும்

Sent from my SM-G935F using Tapatalk

raagadevan
14th November 2016, 06:27 AM
ராஜ ராஜ சோழன் நான்
எனை ஆளும் காதல் தேசம் நீ தான்
பூவே காதல் தீவே
மண் மீது சொர்க்கம் வந்து
பெண்ணாக ஆனதே
உல்லாச...

NOV
14th November 2016, 06:29 AM
யாரடி வந்தார் என்னடி சொன்னார் ஏனடி இந்த உல்லாசம்
காலடி மீதில் ஆறடிக் கூந்தல்

avavh3
15th November 2016, 08:23 PM
கூந்தலிலே நெய் தடவி குளிர் விழியில் மை தடவி
காத்திருக்கும் கன்னி மகள் காதல் மனம் ஒரு தேனருவி
இளம் வயது வளர்ந்து வர கனவு தொடர்ந்துவர
கல்யாண ஊர்வலமோ

NOV
15th November 2016, 08:47 PM
வஞ்சியரின் குணமோ நெஞ்சில் வந்த சுகமோ வாலிபத்தின் ஊர்வலமோ
பருவம்

Sent from my SM-G935F using Tapatalk

raagadevan
15th November 2016, 10:06 PM
கண் திறந்ததும் காட்சி வந்ததா
காட்சி வந்ததும் கண் திறந்ததா
பருவம் வந்ததும் ஆசை வந்ததா
ஆசை...

rajraj
16th November 2016, 01:29 AM
aasaiye alaipole naam elaam ahdan mele
odampole aadiduvome vaazh naaLile......

chinnakkannan
16th November 2016, 10:32 AM
நாளாம் நாளாம் திரு நாளாம்
நம்பிக்கும் நங்கைக்கும் மண நாளாம்
இளைய

NOV
16th November 2016, 11:22 AM
இயற்கை என்னும் இளைய கன்னி
ஏங்குகிறாள் துணையை

Sent from my SM-G935F using Tapatalk

avavh3
16th November 2016, 09:44 PM
போ நீ போ
தனியாக தவிக்கின்றேன் துணை வேண்டாம் அன்பே போ
பிணமாக நடக்கிறேன் உயிர் வேண்டாம் தூரம் போ

rajraj
16th November 2016, 09:50 PM
pogaadhe pogaadhe en kaNavaa
pollaadha soppanam..........

raagadevan
17th November 2016, 06:07 AM
தூக்கம் கண்ணில் வரவில்லை
சொப்பனம் காண வழி இல்லை
எங்கோ பாடல் கேட்டாலும்
நெஞ்சில் உன்போல் தீ...

NOV
17th November 2016, 06:17 AM
ஆகாயம் தீ பிடிச்ச நிலா தூங்குமா நீ இல்லா நேரமெல்லம் நெஞ்சம் தாங்குமா

Sent from my SM-G935F using Tapatalk

raagadevan
18th November 2016, 06:16 PM
பூக்களில் உன்னால் சத்தம்
அடி மௌனத்தில் உன்னால் யுத்தம்
இதைத் தாங்குமா என் நெஞ்சம்...

NOV
18th November 2016, 06:23 PM
பூவண்ணம் போல நெஞ்சம்
பூபாளம் பாடும் நேரம் பொங்கி நிற்கும் தினம்

Sent from my SM-G935F using Tapatalk

avavh3
18th November 2016, 07:11 PM
முந்தினம் பார்த்தேனே பார்த்ததும் தோற்றேனே சல்லடை கண்ணாலே நெஞ்சமும் புண்ணானதே இத்தனை நாளாக

NOV
18th November 2016, 07:15 PM
ரொம்ப நாளாக எனக்கொரு ஆசை
மனம் தாளாமல் துடித்திடும் ஓசை

Sent from my SM-G935F using Tapatalk

raagadevan
19th November 2016, 04:34 AM
பூப்பூக்கும் ஓசை
அதைக் கேட்கத்தான் ஆசை
புல்விரியும் ஓசை
அதைக் கேட்கத்தான் ஆசை...

NOV
19th November 2016, 05:13 AM
சின்ன நெஞ்சிலே நூறு கோடி ஆசை
ஆசை பேசவே போதவில்லை பாஷை

Sent from my SM-G935F using Tapatalk

chinnakkannan
20th November 2016, 01:23 AM
இமையைத் திறந்தாள் நீயிருப்பாய்
மண்ணும் விண்ணும் உரசுகையில் என்ன பாஷை பேசிடுமோ
அலையும் கடலும்

raagadevan
20th November 2016, 04:54 AM
கண்ணே என் முன்னே கடலும் துள்ளாது
பெண்ணே நான் தூண்டில் போட்டால்
விண்மீனும்...

NOV
20th November 2016, 04:54 AM
விண்மீன் விதையில் நிலவாய் முளைத்தேன்
பெண்மீன் விழியில் எனையே தொலைத்தேன்

Sent from my SM-G935F using Tapatalk

raagadevan
20th November 2016, 05:06 AM
உயிரை தொலைத்தேன்
அது உன்னில் தானோ
இது நான் காணும் கனவோ நிஜமோ
மீண்டும் உன்னை காணும் வரமே...

NOV
20th November 2016, 05:11 AM
உயிரை தொலைத்தேன் அது உன்னில் தானோ ...
Thanks for this song.... it's a popular Malaysian song. ;)


தவமின்றி கிடைத்த வரமே
இனி வாழ்வில் எல்லாம் சுகமே
நீ சூரியன்

Sent from my SM-G935F using Tapatalk

raagadevan
20th November 2016, 05:16 AM
Thanks for this song.... it's a popular Malaysian song. ;)

Good to know that they have good songs in Malaysia too! :)

raagadevan
20th November 2016, 05:19 AM
மாலை நன்நேரம் மாறிட வேண்டாம்
மாங்குயிலே மாங்குயிலே
காலங்கள் கூட மாறிட வேண்டாம்
கண்மணியே கண்மணியே
சூரியன் மேற்கினில் சென்றிடட்டும்
சந்திரன்...

NOV
20th November 2016, 05:20 AM
நானே இந்திரன் நானே சந்திரன்
பொறந்த ஊருக்குள்ள சூரியனை போல்
சுத்தி

Sent from my SM-G935F using Tapatalk

raagadevan
20th November 2016, 06:12 AM
மழக் காத்தா நீ சுத்தி அடிக்க
நெஞ்சுக்குள்ள மின்னல் அடிக்குதடி
அதிர் வேட்டா நீ என்ன வெடிக்க
கண்ணுக்குள்ள சண்ட நடக்குதடா
நீ சொல்லுற சொல்லுல தானே
கடுங் கத்துற வெய்யிலு நானே
ரொம்ப குளிரானேன்
நீ பெய்யுற அன்பிலே தானே
பனி கொட்டுற பங்குனி நானே
பச்ச நெருப்பானேன்
விருப்பானேன் சிவப்பானேன்
மழக் காத்தா நீ சுத்தி அடிக்க
நெஞ்சுக்குள்ள மின்னல்...

https://www.youtube.com/watch?v=6AYgoyrX1_I
Immanuel Vasanth Dinakaran (D.Imman)/Yugabharathy/Haricharan & Vandana Srinivasan

NOV
20th November 2016, 06:21 AM
கண்ணில் வந்து மின்னல் போல் காணுதே
இன்ப காவிய கலையே ஓவியமே

chinnakkannan
22nd November 2016, 11:57 AM
என்னடி என்னடி ஓவியமே
உன்னை வரைந்தது யார்
சொல்லடி சொல்லடி ஜாடையிலே
என்னை இழுத்தது யார்
ம்...பச்சை நிற தாவணியில்
பட்டுடலை கடத்துகிறாய்
இச்சை

NOV
22nd November 2016, 12:00 PM
பச்சை மரம் ஒன்று இச்சை கிளி ரெண்டு
பாட்டு சொல்லி தூங்க செய்வேன் ஆரிரரோ

Sent from my SM-G935F using Tapatalk

chinnakkannan
22nd November 2016, 12:02 PM
ஆரீ ரோ ஆரிரரோ ஆராரோ ஓஓஓ
கண்ணத் தொறக்கணும் சாமி
கையப் புடிக்கணும்சாமி
இது வானம் பார்த்தபூமி

NOV
22nd November 2016, 12:05 PM
புதிய வானம் புதிய பூமி எங்கும் பனிமழை பொழிகிறது
நான் வருகையிலே என்னை வரவேற்க வண்ணப் பூமழை பொழிகிறது

raagadevan
26th November 2016, 06:46 AM
அந்தி மழை பொழிகிறது
ஒவ்வொரு துளியிலும் உன் முகம் தெரிகிறது
இந்திரன் தோட்டத்து முந்திரியே...

NOV
26th November 2016, 06:56 AM
ஆஹா அந்திரி சுந்திரி முந்திரி முந்திரி வா முன்னாலே
அஞ்சுது கொஞ்சுது கெஞ்சுது மிஞ்சுது

raagadevan
26th November 2016, 07:25 AM
உள்ளம் ரெண்டும் ஒன்றை ஒன்று
மிஞ்சும் வண்ணம் ஓடும் வேகம்
ஜிகுஜிகு ஜிகுஜிகு ஜிகுஜிகு ஜிகுஜிகு ஹேய்
பெண்மை என்னும் தென்றல் ஒன்று
என்னை தொட்டு கொஞ்சும்...

NOV
26th November 2016, 07:28 AM
கோபியர் கொஞ்சும் ரமணா
தாயின் கருணை உள்ளம் தந்தையின்

raagadevan
26th November 2016, 07:36 AM
தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும்
தந்தை அன்பின் முன்னே
தாலாட்டு பாடும் தாயின் அன்பும்
தந்தை அன்பின் பின்னே
தகப்பனின் கண்ணீரைக் கண்டோர் இல்லை
தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை
என் உயிரணுவின் வரம் உன் உயிரல்லவா
மண்ணில் வந்த நான் உன் நகல்...

NOV
26th November 2016, 07:41 AM
ஒரு தாயார் பல பிள்ளை பெறுவதுண்டு
இரு தாய்க்கு ஒரு பிள்ளை வருவதுண்டோ
அசல் யாரோ ... நகல் யாரோ

raagadevan
28th November 2016, 09:20 AM
யாரோ... இவளோ. ..
என் உயிரின் அலையிலே அலைந்து வந்த பெண்ணோ
என்னை என் கண்கள் இன்று ஜெயிக்க
இளம் சாரல் போல இங்கு தவழ்ந்து...

https://www.youtube.com/watch?v=U1FYwuOTsyY

NOV
28th November 2016, 09:48 AM
தங்கம் வைரம் பவழம் முத்து தவழும் தெய்வானை
தாங்கிக் கொண்டாள் வாங்கிக் கொண்டாள் முருகப் பெருமானை

Sent from my SM-G935F using Tapatalk

chinnakkannan
28th November 2016, 10:49 AM
ஆசை கொண்ட பெண்மானை தேடி வரும் பெருமானே..

அம்மானை அழகு மிகும் கண்மானை...

நம்பிய பெண் ஒரு தாரகை..

NOV
28th November 2016, 10:54 AM
அவள் ஒரு மேனகை என் அபிமான தாரகை
அவள் ஒரு மேனகை

Sent from my SM-G935F using Tapatalk

chinnakkannan
28th November 2016, 08:23 PM
மந்திரம் ஒன்றை மன்மதன் சொன்னான் மார்பினில் ஆடும் மேனகை வந்தாள்
என் ஆசை நெஞ்சின் ராஜா என் கண்ணில் ஆடும் ரோஜா

NOV
28th November 2016, 08:28 PM
ரோஜா கலரு பொம்மி உனக்கு யாரு மம்மி
ஹே நில்லடி அவளுக்கு நான் சபாஷ்

Sent from my SM-G935F using Tapatalk

chinnakkannan
29th November 2016, 11:24 AM
நீ நில்லடி நான் அவளுக்கு சபாஷ் போடணும்

ஊதா கலரு

NOV
29th November 2016, 11:28 AM
ஜித்து ஜில்லாடி மிட்டா கில்லாடி
மாமா டாலடிக்கும் கலரு கண்ணாடி
ஜித்து ஜில்லாடி மிட்டா கில்லாடி

Sent from my SM-G935F using Tapatalk

chinnakkannan
30th November 2016, 03:58 PM
பட்டி தொட்டி எல்லாமே கானா பிச்சு உதறும் கில்லாடி நான்..

Welldone western music Banner
Welldone music answer question
Sunday

NOV
30th November 2016, 04:02 PM
உன் விழிகளில் விழுந்த நாட்களில் நான்
தொலைந்தது அதுவே போதுமேவே
எதுவும் வேண்டாமே

chinnakkannan
1st December 2016, 10:45 AM
ஹேய் டோலி டோலி வேண்டாமே வேலி.
கொண்டாடிப் பார்ப்போம் வா. லாலி லாலி நான் பாடும் லாலி.
கொண்டாடி

NOV
1st December 2016, 10:46 AM
கல்யாணப் பொண்ணு கண்ணான கண்ணு கொண்டாடி வரும் வளையல்

raagadevan
3rd December 2016, 07:34 AM
வருவாள் காதல் தேவி என்று காற்றும் கூற
வரட்டும் வாசல் தேடி இன்று காவல் மீற
வளையல் ஓசை ராகமாக
இசைத்தேன் வாழ்த்து பாடலை
ஒரு நாள் வண்ண மாலை சூட
வளர்த்தேன் ஆசை காதலை
நெஞ்சமே பாட்டெழுது
அதில் நாயகி பேரெழுது

மாலையில் யாரோ மனதோடு பேச
மார்கழி...

NOV
3rd December 2016, 08:02 AM
காலங்களில் அவள் வசந்தம் கலைகளிலே அவள் ஓவியம்
மாதங்களில் அவள் மார்கழி மலர்களிலே அவள் மல்லிகை

raagadevan
3rd December 2016, 08:25 AM
பூமாலையில் ஓர் மல்லிகை
இங்கு நான் தான் தேன் என்றது
உன்தன் வீடு தேடி வந்தது
இன்னும் வேண்டுமா என்றது

சிந்தும் தேன் துளி இதழ்களின் ஓரம்
சென்றேன் ஆயிரம் நினைவுகள் ஓடும்
கரும்போ...

NOV
3rd December 2016, 08:43 AM
அன்னையின் அருளே வா வா வா

கட்டிக் கரும்பின் சுவையும் நீ
கம்பன் கவிதை

chinnakkannan
3rd December 2016, 04:51 PM
எங்கே எனது கவிதை கனவில்
எழுதி மடித்த

NOV
3rd December 2016, 05:36 PM
கண்ணிணை காண்பது யாராலே காற்று மடிப்பது யாராலே தண்ணீர்

Sent from my SM-G935F using Tapatalk

chinnakkannan
3rd December 2016, 07:19 PM
தண்ணீர் குடத்தில் பிறக்கிறோம் ஓஹோ
தண்ணீர் கரையில் முடிக்கிறோம் ஓஹோ
தீம்தனனா

NOV
3rd December 2016, 07:29 PM
உன் சிறகிலே தீம்தனனா தீம்தனனா
வானிலே ஆடிடவா மேகமாய் மிதந்திடவா
உன் உறவிலே ஆரிரரோ பாடிடவா
ஆசையாய் பழகிடவா

Sent from my SM-G935F using Tapatalk

raagadevan
4th December 2016, 06:45 AM
உன்னிடம் எப்போதும் உரிமை பழகிட வேண்டும்
வைரேமே ஆனாலும் தினம் தினம் தொலைத்திட தூண்டும்
இது வரை என் நெஞ்சில் இல்லவே இல்லை பயங்கள்...