PDA

View Full Version : Kavithaikku Kavithai (Meendum-Comments)



Pages : 1 2 [3] 4

chinnakkannan
25th March 2011, 09:53 AM
யக்கோவ்.. நானும் கதைத் திரியில் எழுதியிருக்கேனே... ரொம்ப காலத்துக்கு முந்தி..கே.ஆர். ஐயங்கார் என்ற பெயரில்..
**
நான்சொன்னது கொடுக்கும் தலைப்பில் எழுதிப் பர்ர்க்கலாம் என்று தான்.. தொடர்கதை என்பது இன்னும் சுவாரஸ்யமான விஷய்ம்..முதலில் சில சிறுகதைகள் எழுதிப் பார்க்கிறேன். பின் கதையில் விளையாடிப் பார்க்கலாம்..

chinnakkannan
27th March 2011, 08:51 PM
ஒன்று - என்பதை ஒரு கோடி எனப்பொருள் கொள்ளவும்..(ரொம்ப அநியாயமா இருக்கு..பொழிப்புரை தர்றதுக்கு பக்கத்துத் தெருக்கு வரவேண்டியிருக்கு!!!)

pavalamani pragasam
28th March 2011, 07:42 AM
தங்கு தடையின்றி ஓடும் ஆற்றில் அள்ளிப் பருக வரும் அத்தனை வாசக ரசிகர்களின் வசதியை கருத்தில் கொண்டு செய்த ஏற்பாட்டை குறை சொன்னால் எப்படி?

chinnakkannan
28th March 2011, 03:04 PM
அதெப்படீங்க ஆண்கள் மனசை அப்படியே படிக்கிறீங்க..!!!(

chinnakkannan
28th March 2011, 03:06 PM
மேலே நான் சொன்னது இன்றைய இடுகையைச் சொன்னேன்..
**
தனித் திரிக்கு வருவது கொஞ்சம் ப.தெ. வர்ற மாதிரி இருக்குன்னு ஜோக்குக்கு சொன்னா.. குறைன்னு நினச்சா எப்படி..

pavalamani pragasam
28th March 2011, 06:44 PM
இத்தனை கழுதை வயசுக்கு இவ்வளவு கூட தெரியாம இருக்குமா?:noteeth:

pavalamani pragasam
1st April 2011, 10:31 PM
அப்படியே பழைய ஒத்த அனுபவங்களை கண் முன் கொண்டு வந்து நிறுத்தி மலரும் நினைவுகளை கிளரி மகிழ வைத்துவிட்டீர்கள், சின்னகண்ணன்! இன்னும் அதே தடங்களில் இன்று வரை சென்று வருகிறோம், குடுத்துவைத்தவர்கள்தானே!

chinnakkannan
3rd April 2011, 01:17 PM
ரொம்ப நன்றிங்க.. கொஞ்சூண்டு கற்பனையும் கலந்திருக்கேன்..கொஞ்சம் வேலைப் பளு..பின் வருகிறேன்..

pavalamani pragasam
3rd April 2011, 07:44 PM
'கவிதை'க்குள் உள்ளது 'கதை' -உண்மை!

chinnakkannan
4th April 2011, 10:44 AM
இடங்கள் மட்டும் உண்மை.. கதை கற்பனையே..

chinnakkannan
6th April 2011, 10:45 AM
வாய்க்கலையேன்னு முடிச்சாலும் முடிச்சீங்க.மண்டை காஞ்சது தான் மிச்சம்..
**
“வாய்க்கலையே என்று ஏங்கியிருந்த உங்களுக்காக தலைவர் பல இலவசத் திட்டங்கள் கொண்டு வந்திருக்கிறார்.. ஒவ்வொரு கல்லூரி மாணவருக்கும் ஒரு லேப்டாப், செல்ஃபோன், டாப் அப் கார்ட்,ஒரு கேர்ள் ஃப்ரெண்ட், கல்லூரி முடித்தவுடன் சிறுதொழிலுக்கு முதலீடு,அதை திரும்ப வாங்குவதற்கென அடியாட்கள் - அனைத்தையும் இலவசமாகத் தருவார்..!”
**
‘வாய்க்கலையே எனப் புலம்பி தன்னம்பிக்கையை இழக்காதீர்கள்.. தலைவரைப் பாருங்கள்.. பத்து வருடங்களுக்கு முன் பத்து ஓட்டுக்கள் வாங்கினார்.போன எலக்*ஷனில் பதினைந்து ஓட்டுக்கள் வாங்கினார்.. இந்தமுறை கண்டிப்பாக 25 வாங்கி விடுவார் என்பதை...”
**
மேற்கண்ட மாதிரி ஜோக்குதான் வருகிறதே தவிர கவிதை வரக்காணோம்.. ம்ம் ஏதோ சுமாரா எழுதியிருக்கேன்..
**
ஜென்மங்களைன்னு ஆரம்பிச்சு நீங்கள் எப்படி எழுதறீங்கன்னு பாக்கறேன்..
ஹி.ஹி..ஹா..ஹா..ஹீ ஹீ..கொக்கரிக்கும்...சி.க.

chinnakkannan
6th April 2011, 10:05 PM
தாங்க்ஸ்.. என்னதான் இருந்தாலும் நம்ம ஊர் மண்ணாச்சே..தமிழும் கற்பனையும் டபக்குன்னு வருமில்ல..(நம்ம அண்ணன் இருக்கற ஊர்(அட சொந்த அண்ணன் தாங்க!) அப்புறம் நம்ம பெரியம்மா நிக்கற ஊருக்குப் பக்கத்து ஊர்னு சொல்லலாம்னு நினச்சேன்..ம்ம் அடிச்ச ஜோக்குக்கே சிரிப்போ அழுகையோ காணோம்.. அதனால விட்டுட்டேன்..!)
**
காதல் இன்னும் இருக்கத் தாங்க இருக்கு..என்ன கொஞ்சம் யதார்த்தமா இருக்கு..

pavalamani pragasam
7th April 2011, 01:32 PM
ஐயோ! சொல்றதெல்லாம் சொந்தக் கருத்தா இருக்கணுமா என்ன? சிலது நிசம், சிலது கற்பனை- கடைசி வரியை தொடரும் சாமர்த்தியத்திற்காக இட்டுக்கட்டியதாய் இருக்கலாம் இல்லையா? இப்படி பிச்சி பிரிச்சி ஆராயவெல்லாம் கூடாதாக்கும்!
சிரித்ததுக்கு பதில் எழுதும் முன் இணைப்பு பிட்டுக்கொண்டது போட நினைத்தது-:poke:

pavalamani pragasam
8th April 2011, 04:08 PM
சின்னக்கண்ணன் அவர்களே, உமது பாட்டில் பிழை இருக்கிறது: துவக்க வார்த்தை தவறு- பணி வேறு பணிவு வேறல்லவோ?
போகட்டும், தொடர்கிறேன்!

chinnakkannan
8th April 2011, 04:26 PM
குற்றமா.. என்பாட்டிலா.. எந்த அக்கா சொன்னது..?? ம்ம் போய்ப் பார்த்ததில் சரிதான்.. அதையும் சரி பண்ணிடலாம்.. பணிவில் என்ற ஆரம்பத்தைப் பணியில்; என்று மாற்றிப் படித்துக் கொள்ளவும்..
**
அல்லது வேறு எழுதுவதானாலும் எழுதுகிறேன்..(நீங்கள் தான்பாவம்..)

pavalamani pragasam
8th April 2011, 04:39 PM
அட, ரெண்டு வார்த்தையும் பொருந்துகிறது! பிழைத்தீர்கள்! அது சரி, நான் ஏன் பாவம்?:roll:

chinnakkannan
9th April 2011, 10:44 AM
ஒரு இறுதிச் சொல்லுக்கு நான் எழுதும் ஒரு கவிதையையே கஷ்டப் பட்டுத்தான் படிக்க வேண்டியிருக்கிறது-அதுவே ரெண்டு கவிதையா இருந்தா.. நீங்க பாவமில்லையா..
***
ஏன் எனக்கு இருக்கே.. என் அம்மா, என் மனைவி, என் சகோதரி, பவளம் அக்கா அப்புறம் ஆஃபீஸில் ஒரு ஸ்பானிஷ்..(போங்க சொல்ல மாட்டேன்)... (இது புரியவில்லை என்றால் நீங்கள் எழுதிய க்விதையின் முதல் வரியைப் படிக்கவும்..!)

pavalamani pragasam
9th April 2011, 11:44 AM
ரொம்ப குசும்பு!:lol2:
ஒரு கவிதை, ரெண்டு கவிதை என்ன ஒவ்வொரு கவிதையையும் படிக்கக் கஷ்டப்படவேண்டியிருந்தால் இந்த திரிக்கு தினமும் இத்தனை hits/views இருக்குமா?
பாவமேன்னெல்லாம் பொறுமையாய் நான் படிப்பவள் இல்லை, காரசாரமாய் விமரிசிக்காமல் சத்தமில்லாமல் இருக்கிறேன் என்றால் 'பாவம் போல' வாசிக்கவில்லை என்று அர்த்தம்!
எனக்கு ஜல்ப்பு பிடிக்க வைப்பது நியாயமேயில்ல! தும்மல் சத்தம் கேட்குதா?:noteeth:

chinnakkannan
9th April 2011, 06:13 PM
காராசாரமான்னா...ஹாப்பிமேன் ஐயங்கார் கடை காராச்சேவை சாப்பிட்டுக்கிட்டே விமர்சிப்பீங்களா..(எனக்கு அதை நினைச்சாலே கண்ணீர் வருது..)

pavalamani pragasam
9th April 2011, 07:20 PM
:rotfl:
அழாம சமத்தா மனச தேத்திக்கோங்க! சில விலைகள் தவிர்க்கமுடியாதவை!:sigh2:

pavalamani pragasam
10th April 2011, 08:04 AM
எத்தனை இலவசம்!!! கொட்டுகிறது மழையாய்!

pavalamani pragasam
10th April 2011, 11:26 PM
அச்சச்சோ! போளியை நினச்சி அடுத்த அழுகை ஆரம்பிக்கப்போகுதோ!

chinnakkannan
11th April 2011, 10:30 AM
போளில்லாம் பண்டிகைக்குப் பண்ணமாட்டாங்களாக்கும்.. அதான் பூரணம்னு சொல்லிட்டீங்களே... பிள்ளையார் சதுர்த்திக்குப் பண்ணற கொழுக்கட்டை உள்ள வைக்கறது தானே அது.. எனக்கு வெல்லக் கொழுக்கட்டையில வைக்கறத விட உப்புக்கொழுக்கட்டையில வைக்கிற பூரணம் பிடிக்கும்..
**
இன்னொன்னு.. நாளைக்கா ராம நவமி. இந்த நீர் மோர், பானகம் லாம் பண்ணிட்டு ஒரு கோசுமல்லின்னு ஒரு ஐட்டம் பண்ணுவாங்க பாருங்க..அடடா மழைடா வாய்க்குள்ளடா..!

pavalamani pragasam
11th April 2011, 04:01 PM
ஜமாய்ங்க!:mrgreen:

chinnakkannan
12th April 2011, 02:33 PM
அப்படியே ரூம்போட்டு உக்காந்து யோசிப்பீங்களா என்ன..ரொம்பப் படுத்திட்டீங்க இப்படிக் கொடுத்து..
நானும் யோசிச்சு யோசிச்சு- பூர்ணம் விஸ்வனாதனைப் பத்தி எழுதலாமா.. அப்புறம் என்ன எழுதறது என்றெல்லாம் நினச்சு, பயபக்தியா ஸ்லோகத்தையெல்லாம் தேடி - அர்த்தம் படிச்சுக்கிட்டே இருந்தப்ப ‘பல்பு’ எரிஞ்சது..அடடே..வங்காள ராமயணத்தைப் பத்தி படிச்சது..வங்காளத்தில ராமபட்டாபிஷேகம் பட்ம் வாங்கினா- அதில கொற்றக்குடையைச் சாய்ச்சே போட்டிருப்பாங்களாம்.. அதுக்குத் தான் இந்தக் கதையாம்...
ஏதோ தோணினதை நீளமா எழுதிட்டேன்.. பாத்துக்குங்க..

pavalamani pragasam
12th April 2011, 07:36 PM
:clap:
என்.எஸ்.கிருஷ்ணனின் 'சிரிப்பு' பாட்டு நினைவுக்கு வருகிறது!

chinnakkannan
14th April 2011, 05:31 PM
கவிதை எழுதுவோருக்கும், வாசிப்போருக்கும்,மற்ற இழைகளை நெய்பவருக்கும்.. தமிழ்ப் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்

pavalamani pragasam
14th April 2011, 07:59 PM
நன்றி! தங்களுக்கும் வாழ்த்துக்கள்!

chinnakkannan
14th April 2011, 09:39 PM
வேலைக்குப் போற இந்தக் கால இளைஞிகள்லாம் அழகில்லைங்கறீங்களா.. !ஜஸ்ட் சொந்தக் கால்ல நின்னுக்கிட்டு இருக்காங்க..ஏதோ லைஃப எஞசாய் பண்ணிக்கிட்டு இருக்காங்க..நிறைய மாற்றங்கள் இருக்கு எண்ணங்கள்,உடைகள், பேச்சுக்களில்..
**
சாரமோன்னு முடிச்சிருக்கீங்க.. மனசுக்குள்ள ஈரமே கெடயாதா ஒங்களுக்கு..! நான் இனிமே மனசுக்குள்ள சாரம் கட்டி யோசிச்சாகணும்..

pavalamani pragasam
14th April 2011, 10:47 PM
'மனசுக்குள்ள ஈரமே கெடயாதா'??? வேலைக்குப் போற, சொந்தக்கால்ல நின்னுகிட்டு, லைஃப என் ஜாய் பண்ணிக்கிட்டு, எண்ணங்கள், உடைகள், பேச்சுக்களில் மாற்றங்கள் காட்டுற இளைஞிகளை விடாது விமரிசிப்பதாலா, சாரம் கட்டி யோசிக்க வச்சிட்டதுக்கா?:think:

chinnakkannan
15th April 2011, 12:12 AM
பல வருடங்களுக்கு முன் எழுதிப் பார்த்த ஹைக்கூ..

கடைசி நாள் சம்பளம்
மேஸ்திரி வாங்க
கையசைத்தது வீடு..

அதையே சாரத்துடன் நீட்டி விட்டேன். அதே எஃபெக்ட் வந்திருக்கான்னு நீங்க தான் சொல்லணும்..

**
எதை முடிச்சாலும் உடனே எழுதற திறமை ஒங்களுக்கு இருக்கு..எனக்குக் கொடுக்கற சொல் - கொஞ்சம் சவாலானது தான்..அதத் தான் சொன்னேன்..ரொம்ப யோசிக்காதீங்க..

pavalamani pragasam
15th April 2011, 01:46 PM
சவால் இல்லாட்டி சப்புன்னுல்ல இருக்கும்? நல்லாத்தானே சமாளிக்கிறீங்க?:roll:

chinnakkannan
17th April 2011, 03:35 PM
உண்மை தாங்க நீங்க சொல்றது...
**
அது சரீஈஈ... இன்னிக்கு தேர் காலைல்ல. சாயந்திரம் எதிர் சேவை தல்லா குளத்தில..(அதாவது இப்ப)..நாளைக்குத் தானே சித்ரா பெளர்ணமி..
கூட்டம் ஜாஸ்தியால்ல இருக்கும்..

chinnakkannan
17th April 2011, 03:44 PM
வழக்கமா அக்கறைன்னு எழுதணும்...! நீங்க மெல்லின ர போட்டிருக்கீங்க.. பார்த்துக்குங்க..கோபம் கூட ஒரு போதை தான்..மதியை மயக்கும்..!

pavalamani pragasam
18th April 2011, 12:15 AM
வருசத்துக்கு வருசம் கூட்டம் கூடிக்கிட்டேதான் போகுது! எதிர்சேவை கூட்டத்தைத் தாண்டி இன்று இருமுறை நகருக்குள் சென்று வர வேண்டிய நிர்பந்தம் எங்களுக்கு! தூரத்தில் இருந்தாலும் மீனாட்சி திருவிழா விவரத்தை கச்சிதமாய் விரல் நுனியில் வைத்திருக்கிறீர்கள்!!!
அந்த 'ர' சந்தேகம் எனக்கு தீரவே செய்யாது! நான் தமிழில் கொஞ்சம் வீக்! அதில் முதுகலை பட்டம் பெற்ற என் தங்கைக்கு மாறாக!!!
கோபக்காரிக்கு புத்தி மட்டுன்னு ஒரு குட்டும் வைத்துவிட்டீர்கள்!:cry2:

chinnakkannan
18th April 2011, 11:04 PM
சோகமாய் எழுதினதால இந்தப்பக்கம் வரலை.. நீங்கள் கவிதையில் எழுதியிருப்பதும் வாஸ்தவம் தான்..
**
அழகரைப் பற்றி நாளைக்கு எழுதறேன்...

pavalamani pragasam
18th April 2011, 11:09 PM
ஆத்மார்த்தமான அஞ்சலி! சின்னக்குயிலின் ரணத்தை காலம் மட்டுமே ஆற்ற முடியும்!:(

chinnakkannan
21st April 2011, 12:06 AM
ஸாரிங்க..கொஞ்சம் ஜல்லியடிச்சுட்டேன்..
**
ஆக்சுவலா பார்த்தா ரெண்டு தோணிச்சு..
**
அழகு..கொள்ளை அழகு..
தூரத்திலிருந்து பார்க்கையில்
பச்சை உடை..
தங்கக் குதிரை..
அதே கம்பீரம்..
மனம் கவர்ந்த அழகர்..
ஆனால்
சரிவரப் பார்க்க முடியவில்லை..
சுற்றிலும்
இடிக்கும் கூட்டம்
இளம் பெண் நானென்பதால்....
முன்னால்
ஒரு கைலி..
அவன் கழுத்தில் ஒரு டிராயர்..
அந்தக் குழ்ந்தை மறைக்க...
எம்பி எம்பிப்பார்த்து..
தாவணி விலகுவதைச் ச்ற்றே
சரி செய்து
பார்த்தாலும் சொற்பமாய்த் தரிசனம்..
ம்ம் என்ன செய்ய..
திருவி\ழாவில்
சினிமாவில் மட்டும் தான்
கதானாயகர்கள் அகப்படுவார்கள்..
நிஜ வாழ்க்கையில்
மிஞ்சுவது இடி தான்..
மறுபடியும் எம்ப
முன்னால் தோளிலிருந்த சிறுவன்
திரும்பி
‘அக்கா தெரியலையா..
இருங்க
நான் குனிஞ்சுக்கறேன்..
யப்போவ்..
கொஞ்சம் குனி..
இந்த அக்காக்கு மறைக்குது’
என்றதில்
என் கண்முன்னால் தெரிந்தார்
அழகர்..!”

**
என்றெழுதினால் பவழம் சிவக்கும் என நினைத்தேன்..”யோவ் திருவிழால்லாம் முடிஞ்சுடுத்தே’என..
**
இரண்டாவது இப்போதே வெண்டுமா என்ன..
**
சின்ன வய்தில்..அப்பாவுடன் சித்ராபெள்ர்ணமி ஞாயிற்றுக்கிழமை வரும்பொழுதில் அழகரைக்காண அம்மா,அக்காக்களுடன் சிரப்பு (சின்ன ர தான்) எனச் சொல்லப்படும்
மண்டகப்படி சென்று மணிக்கணக்காகக் காத்திருந்து அழகர் எழுந்தருளியவுடன் தரிசித்து..
பின்னர் பிரசாதமாக புளியோதரை, சக்கரைப் பொங்கல் உண்டது நினைவிருக்கிறது. வயது வந்த பின்னர் (அட காலேஜ் சேர்ந்ததுக்கப்புறம் தாங்க) கூட்டமென்றால் அலர்ஜி.. கொஞ்சம் அழகர் ஆற்றில் இறங்கிய் மறுநாளா..அதன் பிறகா தெரியவில்லை.. மோஹினி அவதாரம் தல்லாகுளமா புதூரா நினைவில்லை.. பார்த்த நினைவு..
**
அது சரீஈஈ.. நல்லா கதை சொல்றேனா..

pavalamani pragasam
21st April 2011, 07:58 AM
ம்ம்ம்ம்..
அது என்ன ம்ம்ம்ம்? உறுமல்! ரெண்டு கவிதையை பதிவு செய்யும் தந்திரம்! ரொம்ப சமத்து! கம்பியை இழுத்து 'ரம்பம் போட்டால்' பயந்து ஓடுவேனா?!
திருவிழா எங்கே முடிந்தது? அழகர் இன்னும் எல்லையை விட்டு கிளம்பவில்லையே?

chinnakkannan
22nd April 2011, 09:43 AM
அப்பாடி..என் பாட்டிக்கு அப்புறம் என்னைச் சமத்துன்னு சொன்னது நீங்க தான்.. தாங்க்ஸ்ங்க..
ரெண்டு பதிவு செய்யும் தந்திரம்.. தந்திரம்னா என்னங்க...அந்தக்காலப்படங்கள்ள உளி போய் சிற்பம் செதுக்குமே அதைச் சொல்றீங்களா..(ரொம்ப அந்தக்காலமா சொல்லிட்டேனா..)

pavalamani pragasam
22nd April 2011, 07:25 PM
சொன்னாலும் சொல்லாவிட்டாலும் நானும் பாட்டிதான்: ஆறு பேரப்பிள்ளைகளின் பாட்டிக்கு இந்த மன்றம் வைத்த பட்டப் பெயரும் பாட்டிதான்(ஔவையை சேர்த்துக்கொள்ளவும்!)இப்போது தெரிகிறதா பாட்டிகளின் மதிப்பும் கியாதியும்?(பெரிய மனசும்:சேட்டை கண்ணன்களின் மேல் பரிவு!)

chinnakkannan
22nd April 2011, 08:33 PM
ஃபாத்திமா காலேஜ்ல ஃபர்ஸ்ட் இயர் மேத்ஸ்ன்ல்ல நினச்சுருந்தே கண்ணா.. சே.. சரி.. வா.. வேற த்ரெட்க்குப் போவோம்...!
**
சென்னையில் என்பக்கத்து வீட்டுக் காரர் - ஒரு முறை நான் விடுமுறைக்குச் சென்றிருந்த போது- அவர் வீட்டில் அவர் மனைவி சொன்னார்...”எங்க ரிலேட்டிவ் ஒருத்தங்க வந்துருக்காங்க.. அவங்க ட்வின்ஸ் மூணு கொண்டாந்திருக்காங்க... வாங்க பார்க்கலாம்’

என்னவென்று யோசித்த படி உள் சென்றால் - மூன்று குட்டிக் குழந்தைகள் -இரண்டு ஆண், ஒரு பெண் -கொய்ங்க் கொய்ங்க் என முழித்தபடி என்னைப் பார்த்தன..(ட்ரிப்ளெட்ஸ் என்பதை அந்தம்மா அப்படிச் சொல்லியிருக்கிறார்..!!)
*
பேரன்கள் எத்தனை பேத்திகள் எத்தனை.. பேரன்களுக்கெல்லாம் கல்யாணம் ஆய்டுச்சா.. ஏதாவது படம் எடுக்கறாங்களா?!!
*

கிறுக்கரே...குறளாக எழுதக் கூடாது என்ற பிடிவாதத்துடன் எழுதுகிறீர்கள்..பட்..கொஞ்சம் கூர்ந்து படிக்கவும் வைக்கிற்து உங்கள் இருவரிகள்.
*

pavalamani pragasam
22nd April 2011, 10:01 PM
கிழவியை கிண்டல் பண்ணாவிட்டால், சீண்டாவிட்டால் தூக்கம் வராதோ?
பேரப்பிள்ளைகள் பற்றிய விசாரிப்புக்கு பதில் என் கவிதையில்!

(வரிசையாய் 5 பேரன்கள், ஆறாவதாய் ஒரு பேத்தி- தலைச்சன் பேரன் ஆறாப்பு முடித்திருக்கிறான்)

kirukan
22nd April 2011, 10:05 PM
pidivathamelam kidaiyathunga kural ezhutha theriyathu anthalavu njyanam kidayathu.ithan vilakam en blog headeril pottulen.

chinnakkannan
22nd April 2011, 10:52 PM
கவிதை இயற்றிக்கலக்குன்னு என் குருநாதர் பசுபதியே இங்கு பாடம் எடுத்திருக்கிறாரே.. எதுவும் சுலபம் தான் கொஞ்சம் முனைந்தால்.. சரி சரி பயந்துடாதீங்க.. நீங்க உங்க தன்மையிலேயே எழுதுங்க )எனக்கெல்லாம் என்ன ஞானம் இருக்குங்கறீங்க.. திருவிளையாடல் தருமி மாதிரி.. கொஞ்சம் வசன நடையில எழுதறேன்... !

**
சே..சே.. சும்மா விளையாட்டுக்குச் சொன்னேங்க.. உங்க எழுத்த வ்ச்சே உங்க பேரன்கள் எவ்ளோ நேர்மையா இருப்பாங்கன்னு சொல்ல முடியுதே..!
இருந்தாலும் கவிதை நைஸ்...

pavalamani pragasam
23rd April 2011, 07:52 PM
புது ரத்தம் பாய்வது போல் உற்சாகம் கிளப்ப வருகை தந்திருக்கும் பிச்சுமணிக்கு :clap:

chinnakkannan
2nd May 2011, 11:56 PM
பஞ்சமில்லை பவளமணி அக்காவுக்கு..மாம்பழத்தைக் கொடுத்தாலும் கத்தரிக்காயைக் கொடுத்தாலும் சிரிப்பைக் கொடுத்தாலும் டபக்கென்று கூறு போட்டுக் கவிதை எழுதிவிடுவார்... நறநற்... கற்பனைப் பஞ்சத்துடன் சி.க...

pavalamani pragasam
3rd May 2011, 08:09 AM
அச்சச்சோ! பல் பத்திரம், தம்பி! கற்பனை பஞ்சம்? தங்களுக்கா? அடுக்கடுக்கா சம்பவங்களை கவிதையாய் வடிக்கும் தங்களுக்கா? நம்புற மாதிரி ஏதாவது சொல்லுங்கள்!

chinnakkannan
3rd May 2011, 01:15 PM
கஷ்டப் பட்டு ஒரு சகலகலா வல்ல சித்தப்பாவை உருவாக்கி அவரை சிற்ந்தவராகக் காட்டிவிட்டு திடீரென சாகடித்து...(எமனிடம் ஏமாந்து விட்டார் என). கொஞ்சம் யோசித்துப் பார்த்ததில் சரிவர வரவில்லை என நினைத்து மறுபடியும் அதே சித்தப்பாவை உயிர்ப்பித்து... அவருக்கு அதே திறமைகளை வாரி வழங்கி பின் அவரை சந்தர்ப்ப சூழலில் ஒரு இளம்பெண்ணை அவளின் மெளனத்தை சம்மதமாக எடுத்துக் கொண்டு மணம் புரிந்து கொண்டு வந்து என்னிடம்(கதைசொல்லியிடம்) காட்டுகையில் அந்தப் பெண்ணின் கண்ணோரம் ஈரம்.. என முடித்து மறுபடியும் பார்த்தால் ஏதோ சரிவராத மாதிரிப் பட..மறுபடியும் மாற்றி சாதாரண மாம்பழ மங்கையிடம் தோற்பது போல் காட்டி எழுதி முடித்து இட்டு..கொஞ்சூண்டு முக்கில் இருக்கும் ரூவி ஹைஸ்ட்ரீட்டில் ஷாப்பிங்க் போய் வந்து பார்த்தால்..(ஒரு மணி நேரத்தில்)பொசுக்கென்று சுருக்கமாகவும் அழகாகவும் எழுதியிருந்ததைப் (மாம்பழத்தையும்..என ஆரம்பித்து..) பார்த்ததில் பொற்ற்றாமையில் ரூட்கனால் செய்த பற்களைக் கடித்து எழுதிவிட்டேன்..!..

pavalamani pragasam
3rd May 2011, 01:21 PM
:noteeth::lol::fishgrin::rotfl:

chinnakkannan
4th May 2011, 08:48 PM
ம்ம்..
சிவக்கிறது செவ்வானம்..
கருக்கிறது கருமேகம்..
பார்க்கிறது பசுமாடு...
நடக்கிறது நாராயணன் செயல்ன்னு

ஏதாவது சீக்கிரமா வரும்..வெய்ட்பண்ணு கண்ணா...

pavalamani pragasam
4th May 2011, 10:39 PM
:poke::poke:

chinnakkannan
5th May 2011, 05:28 PM
அந் தப் பக்கம் கவிதை.. இந்தப்பக்கம்..ஹி.ஹி..
**
ரத்த ஆறு..
ம்ம் அஞ்செழுத்து.. ஒத்து வராது
ரத் தத்தின் ரத்தம்..
அரசியல் தலைப்பு வேண்டாம்..
ரத்த ச்ம்பந்தம்..
ஹிந்தி நீள் தொலைக்காட்சித் தொட்ர் பெயர்..
ரத்தம் அவசியம் வேணுங்களா..
கதானாயகன் விஞ்ஞானிய்யா..
மூட்டைப் பூச்சிக் கொல்லி மருந்து
கண்டுபிடிக்கிறான்..
அப்ப ஸ்விஸ்ல பாட்டு உண்டு..
பின்ன..
என்னப்பா சிக்கனா..
ரத்தக் குழம்பு இருக்கா பேஷ்...
என்னய்யா
ரத்த நகரம்..
உன் ரத்த்த்த எடுக்கணும் மொதல்ல..
பேசாம ரபன்னு வெச்சுடலாமா..
அர்த்தம்..
தலைப்புப் பாட்டில போட்டுக்கலாம்...
இந்தாங்க ரெண்டு நாள் ஹோட்டல் ரூம் செலவு..
தலைப்பு சீக்கிரம்முடிவாகிடும்..
செலவைப் பார்த்த தயாரிப்பாளரின்
கண்ணில் ரத்தம் வழி ந்தது....

pavalamani pragasam
5th May 2011, 09:40 PM
எதுக்கு சிரிப்பு?:roll:

ரத்தத்தை சுத்தி சுத்தி வந்து பின்னி பின்னி எடுத்து ரத்தக்காட்டேரியாகவே ஆக்கிவிட்டீரே!:argh:

chinnakkannan
6th May 2011, 11:28 PM
கிறுக்கர் நன்னா இருக்கட்டும்..தீர்க்காயுஷ்மான் பவ...!.ம்ம்.. நல்ல வேளை என்னைக் காட்டுமிராண்டிகள்னு எழுத வைக்கலை...

pavalamani pragasam
7th May 2011, 07:41 AM
கண்டதையும் கேட்டதையும் எழுத்தில் வடிக்கிறேன்..அதில் காட்டுமிராண்டிகள் நாட்டுமிராண்டிகள் எல்லோருந்தான் அடங்குவர்..படிக்கும் போது கஷ்டமான பாடம் என்று சிலதை ஒதுக்கும் பழக்கமோ சின்னக்கண்ணனுக்கு?

chinnakkannan
7th May 2011, 10:34 AM
சேச்சே.. என்ன இப்படி தப்பா நினைச்சுட்டீங்க...கஷ்டமான பாடம்னு சிலதை இல்லை.. அந்தப் பாடத்தையே ஒதுக்கிவிடுவேனாக்கும்...!
*
ஒன்பதோ/ பத்தோ வகுப்பு கால்பரீட்சையோ அரைப்பரீட்சையோ... வரலாறு புவியியல்..--செளத் ஈஸ்ட் ஆசியா பற்றிய கேள்விக்கு ஈரோப் பற்றி விலாவாரியாக இரண்டு பக்கங்கள் எழுதிவிட-கரெக்ட் செய்த ஆசிரியர் தலையில் அடித்துக்கொண்டே ஆன்சர் பேப்பரை வழங்கியது இன்னும் நினைவிருக்கிறது..!
*
சகலகலா வல்லியான பெண்கள் இந்தக் காலத்தில் காட்டுமிராண்டித் தனமான ஆண்களை மணம் செய்து கொள்ளும் சூழல் இல்லை என்பது என் கருத்து..

pavalamani pragasam
7th May 2011, 08:15 PM
'இந்தக் காலத்தில்'??? ஆம்! பரந்த பாரத கண்டத்தில் பெரும்பான்மையான பெண்களுக்கு இன்னும் விடியவில்லை என்பதே வருத்தமான உண்மை!

chinnakkannan
7th May 2011, 10:32 PM
அ.ப. கவிதை..(?!)இ.ப ஹி..ஹி..
***
தலைவலிக்கு
அனாசின்போட்டு
குணப்படுத்தியது அந்தக்காலம்..
கனிவாய்மொழிந்த
மகளால்
திருகுவலியும் சேர்ந்து வருவது
இந்தக்காலம்...

**
தலைவலியும் ஜீரமும்
தனக்கு வ்ந்தால் தான் தெரியும்
என்பான்
வைத்திய நண்பன் அடிக்கடி..
ஒரு நாள் தான் புரி ந் தது
அவனுக்கு ஜீரம் வந்து
பக்கத்துக் க்ளினிக்குக்கு
அவனே சென்ற போது....
***

chinnakkannan
7th May 2011, 10:36 PM
’பெரும்பான்மையான பெண்கள்’ ‘சகலகலாவல்லியான பெண்கள்’ - வித்தியாசம் நிறைய இருக்கிறது.....

pavalamani pragasam
8th May 2011, 06:36 AM
சின்னக்கண்ணனுக்கு என் மனமார்ந்த நன்றி! அன்னையர் தினத்தில் கண் விழித்தவுடன் பெண்களின் பிரத்தியேகமான தாய்மை உணர்விற்கு அஞ்சலி செய்யும் அருமையான கவிதையை படிக்கக் கொடுத்ததற்கு- கணவன் தான் ஒரு பெண்ணின் முதல் குழந்தை என்பது நான் அடிக்கடி சொல்லும் பிரியமான கருத்து!

பெரும்பான்மையான பெண்கள் சகலகலாவல்லிகள் என்பதை நம்ப மறுக்கும் ஏற்க மறுக்கும் மனப்பான்மைதான் பிரச்சினையின் ஆரம்பம்!!!!

chinnakkannan
8th May 2011, 08:44 PM
ரொம்ப தாங்க்ஸ்க்கா..உங்க பாராட்டுதலுக்கு..

pavalamani pragasam
8th May 2011, 10:17 PM
கதவுகள் பற்றிய தகவல்கள் மிகவும் அருமை!

chinnakkannan
9th May 2011, 09:53 PM
மறுபடியும் நன்றி...
**
‘வந்துட்டான்யா..மறுபடி நீளமா எழ்திப் போட்டுட்டு’ என முணுமுணுப்பது கேட்கிறது...

pavalamani pragasam
9th May 2011, 11:36 PM
கவிதையும் புனைந்த கதையும் சுவையாய் இருக்க நீளம் ஒரு பிரச்சினையே இல்லை!!!

chinnakkannan
11th May 2011, 02:38 PM
உங்களது கவிதை - டூ இன் ஒன் - மாதிரி.. சாதாரணமாக்ப் படித்தாலும் அழகாய் இருக்கிறது..+ நான் எனக்கான பாராட்டாகவும் எடுத்துக் கொள்ளலாம்..இல்லையா?!

chinnakkannan
12th May 2011, 01:31 AM
குயில் இட்ட முட்டை என்று காக்கைக்குத் தெரியும்..
அது கூவும்போதும் தாவும் போதும் யாருக்குப் புரியும் என்ற கண்ணதாசன் வரிகளை வைத்து வஞ்சி விருத்தத்தில் - அதிகரீணிக்கு அருகில் வரும்படி எழுத முயற்சித்திருக்கிறேன்..

pavalamani pragasam
12th May 2011, 07:37 AM
உங்களது கவிதை - டூ இன் ஒன் - மாதிரி.. சாதாரணமாக்ப் படித்தாலும் அழகாய் இருக்கிறது..+ நான் எனக்கான பாராட்டாகவும் எடுத்துக் கொள்ளலாம்..இல்லையா?!
ஷொட்டுக்கு இவ்வளவு ஆசை!!!:noteeth:

pavalamani pragasam
13th May 2011, 07:17 PM
தேர்தல் முடிவு விளக்கம்?:roll:

chinnakkannan
17th May 2011, 12:14 AM
மாயாஜாலென்றால் சென்னையிலா இருக்கிறீர்கள்...அல்லது மதுரையிலும் ஒரு மாயாஜால் இருக்கிறதா என்ன..
**
போச்சுடா.. மொதல்ல தாத்தா.. நடுல்ல அக்கா..இப்போ அம்மா பத்தி எழுதிப்புட்டான்..இவனுக்கு பாட்டில்லாம் கண்ணுக்குத் தெரியலையா எனச் சொல்லாதீர்கள்..
நல்ல ஈற்றடி (நற நற) கொடுத்தீர்களென்றால் எழுத முயற்சிப்பேன்..

**
இப்போ மதுரை எப்படி இருக்கு....

pavalamani pragasam
17th May 2011, 07:41 AM
மதுரைக்கு மாயாஜால் வரும் சாத்தியம் கம்மி- எங்களுக்கு காசை வாரி இறைக்க மனம் வராதாக்கும்- ஒரு பொருளை வாங்கும் முன்னால் நூறு தடவை விலையைக் கேட்போமே!
ஆம், வட்டம் சுற்றி திரும்ப முதல் சதுர கட்டம்தான்! Back to square one!:)
எங்கும் அக்கினி நட்சத்திர வெயில் குறைவின்றி சுட்டெரிக்கிறது!
பாட்டி பற்றி எழுத முடியும் எந்த அடியிலும் முடியும்! எந்த பாட்டியைப் பற்றி?:roll:

chinnakkannan
18th May 2011, 03:11 PM
இன்று முதல் கொஞ்சம் விடுமுறைக்காக மும்பை, சென்னை, கர்னாடகா, கேரளா எனச் சுற்றி வரலாம் என இருக்கிறேன்..உடனுக்குடன் முன்போல் எழுத முடியுமா எனத் தெரியவில்லை.. முய்ற்சி செய்து இடுகிறேன்...மறுபடியும் ஜீன் நடுவில் தான் மஸ்கட்...ஹையா..கொலம்பஸ் கொலம்பஸ் எடுத்தாச்சு லீவு!!

pavalamani pragasam
18th May 2011, 06:21 PM
என்சாய்!!!

chinnakkannan
18th June 2011, 09:53 PM
ஒரு வழியாய்விடுமுறை -மும்பை மஹாபலேஷ்வர்-மடிக்கேரி-சென்னை-தமிழ்நாட்டுக்கோயில்கள் ஒரு பதினைந்து என ப் பார்த்துமுடித்து வந்தாயிற்று.. அங்கும் விடுமுறை முடி ந்திருக்குமே... ஆமாம் எந்த க் கிளி பறக்கப் பார்க்கிறது..
நான் எழுதியது தஞ்சாவூரில் நேரில் பார்த்த ஒன்று..

chinnakkannan
18th June 2011, 09:56 PM
காலையில அலுவல் சேர்ந்த முதல் ஒரே மீட்டிங்க் இருந்ததாலிட முடியவில்லை..தாங்கள் செளக்கியம் தானே..

pavalamani pragasam
19th June 2011, 12:10 AM
விடுமுறை கொண்டாட்டம் அறிந்து மகிழ்ச்சி.
நான் சொன்ன கிளி பொதுவான நவீன பெண் மனவோட்டங்கள் பற்றி - மிகவும் விசாரம் அளிக்கும் பொறுமையில்லாத போக்கு! எதற்கெடுத்தாலும் பெண்தான் பொறுத்துப் போகவேண்டுமா என்ற புரட்சிக் குரல் ஓங்கி ஒலிக்கிறது! ரொம்ப ஆயாசமாய் இருக்கிறது - என்ன பதில் சொல்ல!மொத்தத்தில் ஆண்களுக்கு நேரம் சரியில்லை!!!

chinnakkannan
22nd June 2011, 11:41 PM
அது என்ன கதைக்கா. யாரந்த பால்கார முனீம்மா.?

pavalamani pragasam
23rd June 2011, 07:57 AM
பால் விற்கப்போகும் பெண் பால் வித்து வரப்போகும் காசில் படிப் படியாக எப்படி பணக்காரி ஆகி மாட மாளிகைக்காரியாய் அகங்காரமாய் எளியோரை காலால் எட்டி உதைக்கும் நிலை அடையப் போவதாய் பேராசை கனவு கொண்டே நடக்கையில் கனவின் செயலை- காலால் உதைத்தலை- நிசமாகவே செய்ய கால் தடுக்கி விழுந்து பால் கீழே கொட்டி வீணாகி கனவின் ஆதாரமே அழியும் நீதிக்கதை! பாலுக்கு பதில் முட்டை என்றும் சொல்லப்படுவதுண்டு. ரொம்ப சின்ன வயசில் படித்த கதை-ஏதேனும் மாற்றிவிட்டேனோ?

chinnakkannan
23rd June 2011, 07:28 PM
அச்சச்சோ.. அதெல்லாம் ஒன்றுமில்லை.. எனக்குத் தெரியாத கதைதான்..பால் என்று பார்த்தால் போப் ஜான்பால், அமலா பால் என்று தான் நினைவுக்கு வருகிறது...!

pavalamani pragasam
23rd June 2011, 07:48 PM
பால பருவத்தை தாண்டியதன் விளைவு!!!

kirukan
23rd June 2011, 07:55 PM
வலையில்லாமல் மீன் பிடிக்கையில்
சிக்குவது விதி நழுவுவது மதி காண்
super..மீண்டும் மீண்டும் படித்து ரசித்தேன்

pavalamani pragasam
23rd June 2011, 08:13 PM
மிக்க மகிழ்ச்சி, நண்பரே!:-d

chinnakkannan
26th June 2011, 02:52 PM
ந்கைச்சுவை உணர்வுமட்டும் கடலை போடுவதற்குப் பற்றாது...கொஞ்சம் ஹெவியா ப்ர்ஸீம் இருக்கணும்..!! நல்லா இருந்துச்சு கவிதை..
**
நற ந்ற.. ரெண்டு நாளா எல்லா விஷயத்தையும்,எல்லாரையும் ’காண்’டுக்கிட்டுத் தான் இருந்தேனே ஒழிய எழுத வரலை.. கடோசில்ல எண்சீர் விருத்தம் தான் வந்துச்சு...

pavalamani pragasam
26th June 2011, 07:13 PM
கண் மூலம் 'காண்'கையில் பல் ஏன் நறநற?:lol:
கடோசில்ல விருத்தம் வந்துச்சி வருத்தம் போச்சி!

chinnakkannan
27th June 2011, 09:52 PM
தள்ளை..என்னப்பா அர்த்தம்

kirukan
29th June 2011, 02:47 PM
தள்ளை..என்னப்பா அர்த்தம்
தாய் ( நெல்லை ,தூத்துக்குடி, நாகர்கோயில் ...வட்டார வழக்கு )

kirukan
29th June 2011, 02:47 PM
------duplicate-----

chinnakkannan
29th June 2011, 11:44 PM
நன்றி.. தள்ளை – தாய் என்பது – நான் அறியாத ஒன்று.. அதற்கப்புறம் நீங்கள் எழுதியிருப்பதை சரிவர படிக்க முடியவில்லை.....ஒரே வண்ணத்துப் பூச்சி பூச்சியாய் இருக்கிறது...!

pavalamani pragasam
2nd July 2011, 02:26 PM
சூப்பர் கிழவி!!!

pavalamani pragasam
7th July 2011, 08:30 AM
:rotfl2:சிரிப்பு தாங்கமுடியவில்லை! நல்லா காட்டுறீங்க பயாஸ்கோப்பு!:swinghead:

பாட்டிக்குத் தலைதான் நரைச்சிருக்கு, பல் பத்திரமாய் இருக்கு! கபர்தார்!:devil:

chinnakkannan
7th July 2011, 09:35 AM
நன்றி...சரியாக எழுதியிருக்கிறேனா என நகம் கடித்துக் காத்திருந்தேன்...!

pavalamani pragasam
7th July 2011, 11:30 AM
:lol:
நகம் கடிப்பது கெட்ட பழக்கம்! தன்னம்பிக்கை இல்லாதிருப்பதும்!

chinnakkannan
10th July 2011, 10:01 PM
தன்னம்பிக்கையெல்லாம் கொள்ளை கொள்ளையாய் உண்டாக்கும்... பாருங்க... கொஞ்சம் திணறித் திணறீ கலித்துறை மாதிரி முயற்சி பண்ணியிருக்கேன்..! பய ந்துடாதீங்க...!

pavalamani pragasam
10th July 2011, 11:14 PM
பயப்பட மாட்டேன், எனக்குத்தான் மரபுக் கவிதை இலக்கணங்கள் எதுவும் தெரியாதே!

pavalamani pragasam
11th July 2011, 03:22 PM
virtualisation?!:think::think:நிழலுலகாக்கம்?

chinnakkannan
11th July 2011, 05:26 PM
அது என்ன காக்கம்.... தேவலோக காக்காவா...(ரொம்ப நடந்து நடந்து யோசிக்காதீங்க..எடை கொறஞ்சுடும்...!) நானும் ரொம்ப யோசிச்சுட்டு பின்ன கிறுக்கரே போற்றி போற்றின்னு சொல்லிட்டு விட்டுட்டேன்...!

chinnakkannan
11th July 2011, 05:30 PM
தளைத்திருக்குமேன்னு வராது... எழுத்துப் பிழை.. தழைத்திருக்குமே என்று தான் வரும்...( நற நற...!) (இப்படிக் கஷ்டமான சொல் கொடுக்கறதுக்காக ஒங்களை செவ்வாய் ஞாலத்தில தான் கொண்டு விடணும்..!)

kirukan
11th July 2011, 06:00 PM
virtualisation?!:think::think:நிழலுலகாக்கம்?


அது என்ன காக்கம்.... தேவலோக காக்காவா...(ரொம்ப நடந்து நடந்து யோசிக்காதீங்க..எடை கொறஞ்சுடும்...!) நானும் ரொம்ப யோசிச்சுட்டு பின்ன கிறுக்கரே போற்றி போற்றின்னு சொல்லிட்டு விட்டுட்டேன்...!
Virtualization, in computing, is the creation of a virtual (rather than actual) version of something, such as a hardware platform, operating system, a storage device or network resources.
இருக்கு ஆனா இல்ல ...( நம்ம S.J. சூர்யா styla)

for more details
http://en.wikipedia.org/wiki/Virtualization

pavalamani pragasam
11th July 2011, 06:32 PM
அது என்ன காக்கம்.... தேவலோக காக்காவா...(ரொம்ப நடந்து நடந்து யோசிக்காதீங்க..எடை கொறஞ்சுடும்...!) நானும் ரொம்ப யோசிச்சுட்டு பின்ன கிறுக்கரே போற்றி போற்றின்னு சொல்லிட்டு விட்டுட்டேன்...!

எடை குறைந்தால் மிகவும் மகிழ்ச்சி அடைவேனே! என்னை எடையை குறைக்கச் சொல்லி டாக்டர் உத்தரவு போட்டுவிட்டதால் தினசரி ஜிம்முக்கல்லவா போய்க் கொண்டிருக்கிறேன்!

pavalamani pragasam
11th July 2011, 06:45 PM
தளைத்திருக்குமேன்னு வராது... எழுத்துப் பிழை.. தழைத்திருக்குமே என்று தான் வரும்...( நற நற...!) (இப்படிக் கஷ்டமான சொல் கொடுக்கறதுக்காக ஒங்களை செவ்வாய் ஞாலத்தில தான் கொண்டு விடணும்..!)

தப்புத்தான்! இலக்கணம்தான் தெரியாமல் இருந்தது இப்போது எழுத்துப்பிழையும் சேர்ந்துவிட்டது! நல்ல முன்னேற்றம்தான்! தோட்டத்து பராமரிப்பு பற்றி எழுதினேனா தளை மேயப் போய்விட்டது புத்தி!
எனக்குத் தெரிந்து கதாநாயகன், கதாநாயகிதான் உண்டு, கதானாயகனும் கதானாயகியும் எங்கிருந்து வந்தார்கள்? பழிக்குப் பழி!!!!!
நெற்றிக்கண்ணை திறந்தாலும் குற்றம் குற்றமே என்று முழங்கி பிழை தவிர்க்கும் ஊர்க்காரர்களாயிற்றே!!!
உங்கள் கவிதையில் வர்ணித்த utopia செவ்வாய் கிரகத்தில் இருந்தால் நான் இப்பவே அங்கே போக ரெடி!

pavalamani pragasam
11th July 2011, 06:51 PM
Virtualization, in computing, is the creation of a virtual (rather than actual) version of something, such as a hardware platform, operating system, a storage device or network resources.
இருக்கு ஆனா இல்ல ...( நம்ம S.J. சூர்யா styla)

for more details
http://en.wikipedia.org/wiki/Virtualization
ஐய்யா! நானும் முதலிலேயே கூகிள் பண்ணிப் பாத்துட்டேனே!
ஆனால், ஐயா, ஆளை விட்டுவிடுங்கள்! நீங்கள் முடித்த மந்திரமெல்லாம் எனக்கு மிரட்டும் சொல்லாய் இருக்கிறது!!! Clean bowled- for once!!!

pavalamani pragasam
11th July 2011, 06:56 PM
சின்னக்கண்ணரே, இந்த கிறுக்கர் திருநெல்வேலிக்கே அல்வா குடுக்குறார் திருவிளையாடல் கதையைச் சொல்லி!

chinnakkannan
11th July 2011, 10:12 PM
அட ஆமாங்க.. நானும் பார்க்கறேன் இப்படி சிவாய நாம: கொடுத்தால் எப்படி எழுதறது..ட்ரை பண்ணலாம்...
*
அட ஜிம்மா.. நானும் தாங்க வீட்ல ட்ரெட் மில் வாங்கிப் போட்டு பாத்துக்கினே இர்க்கேன்.. பாத்தா பசிதீரும் பாத்தா ஒடம்பு இளைக்காதா என்ன...
*
கதானாயகன் சுலபமா வர்து... கதா நாயகன் பிரிஞ்சு வர்து-டைப் அடிக்கறச்சே.. ஹி..ஹி..
*
புத்தி தளை மேயப் போய்விட்டது..தப்பு.. புத்தி தழை மேயப் போய்விட்டது சரி...!

pavalamani pragasam
11th July 2011, 10:56 PM
அடடா, சரியான வாத்து மடச்சியால்ல இருக்கேன்! தளைகள் அதிகம் இல்லாத யோகமிருந்தும் இப்படி ஒரு மொழித் தளை!!! தழைகளை கொஞ்சம் அதிகம் சாப்பிட்டால் சரியாகுமா? (அப்புறம் ஆடு மாதிரி மந்த புத்தி வந்துவிட்டால்???)

chinnakkannan
12th July 2011, 10:25 AM
நிலாக் காலக் கடலலை - தொடத்தானே வரும்...எப்படித் தழுவும்..?! அழகிய கவிதை...

pavalamani pragasam
12th July 2011, 03:14 PM
:-D:noteeth:

chinnakkannan
12th July 2011, 03:31 PM
அடடா.. இப்படி ட்டை ஆகிப் போச்சே.. போனதுன்னு நீங்களும் மூச்சேன்னு நானும் எழுதிடலாமா... நாட்டாம நல்ல தீர்ப்பாச் சொல்லு...!

pavalamani pragasam
12th July 2011, 04:18 PM
5 நிமிட இடைவெளி இருப்பதால் நான் வாபஸ்!!! (டை அடிக்கப் பிடிக்காதெனக்கு!!!)

pavalamani pragasam
15th July 2011, 03:47 PM
சிலப்பதிகாரம்

பாகவதர்: திமிகிட திமிகிட வாத்திய மிருதங்கம் ப்ருமானந்த ஹரே கஜானன தாண்டவ நித்ய ஹரே கஜானன தாண்டவ நித்ய ஹரே!
ஆதெள கீர்த்தனாரம்பத்திலே பூம்புகார்ங்கற துறைமுக பட்டணத்திலே கோவலன்கற பெரிய வீட்டு பிள்ளைக்கும் கண்ணகிங்கற மாசறு பொன்மணிக்கும் கல்யாணம் நடந்திச்சி.
பக்கக்குரல் 1, 2: ஆமா, கல்யாணம் நடந்திச்சி. அப்புறம்?
பாகவதர்: கோவலனுக்கு கண்ணகி மேல ரொம்ப பிரியம்.
டெலிபோன் மணி போல் சிரிப்பவள் இவளா
மெல்போன் மலர் போல் மெல்லிய மகளா
டிஜிடலில் செதிக்கிய குரலா
எலிசபெத்து டெயிலரின் மகளா
ஜாகிர் ஹஉசேன் தபலா இவள்தானா
அப்படின்னு பாடினான்
ப. குரல் 1: உவமையெல்லாம் ரொம்ப மாடர்னா இருக்கே?
பாகவதர்: சிவாஜி மாதிரி 'தாழம்பூவே தங்க நிலாவே' அப்படின்னும், எம்ஜிஆர் மாதிரி 'பச்சைகிளி முத்துச்சரம் முல்லைக்கொடி' அப்படின்னும் பாடினதெல்லாம் அந்தக்காலம்!
ப. குரல் 1: 'அந்தக்காலம் அது அந்தக்காலம்'
ப. குரல் 2: சரி, இது செலுலர் போன் யுகம், ஒத்துக்கறோம். கண்ணகியோட feeling என்னன்னு சொல்லுங்க.
பாகவதர்: 'ஒருநாளும் உனை மறவாத இனிதான வரம் வேண்டும்
உறவாலும் உடல் உயிராலும் பிரியாத வரம் வேண்டும்
விழியோடு இமை போலே விலகாத நிலை வேண்டும்
எனையாளும் எஜமானே எனையாளும் எஜமானே'
அப்படின்னு கோவலன்கிட்ட சரண்டர் ஆயிட்டா.
ப. குரல் 1: அப்போ அவங்க வாழ்க்கைல 'no problem no problem' (லவ் பேர்ட்ஸ் மெட்டு) அப்படின்னு சொல்லுங்க.
பாகவதர்: இல்லியே!
ப. குரல் 1, 2: என்ன ஆச்சி?
பாகவதர்: நம்ம அசருதீனுக்கு பிஜ்லானி வந்து வாய்ச்ச மாதிரி கோவலனுக்கு ஒரு மாதவி வந்து வாய்ச்சா.
ப. குரல் 1: மாதவியா?
ப. குரல் 2: யார் அந்த அப்சரஸ்?
பாகவதர்: 'அழகிய லேலா அது இவளது ஸ்டைலா
சந்தன பேலா இவள் மன்மதப்புயலா
அடடா பூவின் மாநாடா (உள்ளத்தை அள்ளித்தா)
அப்படிங்கற மாதிரி ஒரு ஆடலழகிதான் மாதவி அவளப் பாத்து சொக்கிப்போன கோவலன்
'என்னவளே அடி என்னவளே எந்தன் இதயத்தை தொலைத்துவிட்டேன்
எந்த இடம் அது தொலைந்த இடம் என்பதை மறந்துவிட்டேன்
உந்தன் கால் கொலுசில் அது தொலைந்ததென்று
உந்தன் காலடி தேடி வந்தேன்'
அப்படின்னு அவளே கதின்னு கிடந்தான்.
ப. குரல்1: அடப்பாவமே!
ப. குரல் 2: அப்போ கண்ணகியோட கதி?
பாகவதர்: 'என் புருஷந்தான் எனக்கு மட்டுந்தான்
சொந்தந்தான் பந்தந்தான் நினைச்சேனே
அந்த நினப்ப மட்டும் எனக்கு விட்டுட்டு போனாரே'
அப்படின்னு அழுத கண்ணும் சிந்திய மூக்குமா கிடந்தா.
ப. குரல் 1, 2: அப்புறம்?
பாகவதர்: கொஞ்ச காலத்துக்கப்புறம் கோவலனோட மோகம் தெளிஞ்சிது.
ப. குரல் 1, 2: மோகம் தெளிஞ்சிது.
பாகவதர்: கண்ணகியோட ஞாபகம் வந்திச்சி
'கண்ணகி கண்ணகி கண்ணகி
என்னை மன்னித்துவிடடி கண்ணகி
கண்ணகி கண்ணகி கண்ணகி
இப்போ நல்லவன் நானடி கண்ணகி' ('அஞ்சல'¢யில் அஞ்சலி பாட்டு மெட்டு)
அப்படின்னு வந்து கெஞ்சினான்
ப. குரல் 1: 'கோவலா கோவலா டேக் இட் ஈசி கோவலா'
அப்படின்னு அவ ஏத்துக்கிட்டாளா?
பாகவதர்: அதுதான் கண்ணகியோட கேரக்டர். ஊதாரித்தனமா கோவலன் சொத்தையெல்லாம் அழிச்சே தீர்த்திருந்தானா குடித்தனம் பண்றது பெரும்பாடா போச்சி
'ஓரண்ணா ரெண்டண்ணா
உண்டியல உடச்சி
நாலண்ணா எட்டண்ணா
கடன உடன வாங்கி
அன்டா குண்டா அடகு வச்சோம்
அஞ்சு பத்து .. பத்தல பத்தல
ஞானப்பழமே ஞானப்பழமே'
அப்படிங்கற கதையா இருந்திச்சி.
ப. குரல் 1, 2: அடப் பாவமே!
பாகவதர்: 'பட்டணந்தான் போகலாமடி கண்ணகி
பணங்காசு சேக்கலாமடி
மதுரை பட்டணந்தான் போகலாமடி கண்ணகி
பணங்காசு சேக்கலாமடி'
அப்படின்னு கோவலன் சொல்லவும் ரெண்டு பேரும் கிளம்பி மதுரைக்கு போனாங்க. கையிலயோ செப்புக்காசு கிடையாது. ஆனா கண்ணகிகிட்ட அவளோட கால் சிலம்பு ரெண்டும் கடைசி சீதனமா இருந்திச்சி. அந்த சிலம்புல ஒன்ன வித்து வர்ற பணத்துல ஏதாவது தொழில் செய்யலாங்கிற ஐடியாவில கோவலன கடைத்தெருவுக்கு அனுப்பினா கண்ணகி,
'கால் சிலம்ப தாரேன் அத வித்துபுட்டு வாங்க
சின்னதா தொழிலேதும் செய்யலாமேங்க' (ஒத்தைரூபா தாரேன் மெட்டு)
ப. குரல் 1, 2: அப்புறம்?
பாகவதர்: பாண்டிய மன்னன் நெடுஞ்செழியனோட அரண்மனைல வேலை பாக்குற ஒரு பொற்கொல்லன் ராணி கோப்பெருந்தேவி ஆர்டர் கொடுத்திருந்த சிலம்பில் ஒன்ன அமுக்கிட்டான். தன் குட்டு வெளிப்பட்டிருமோன்னு அவன் பயந்துகிட்டிருந்த சமயம் அவன் கண்ணில கோவலன் பட்டானா, பொற்கொல்லன் மூளை ஜரூரா கணக்கு போட்டுச்சி. எப்படி?
ப. குரல் 1, 2: எப்படி?
பாகவதர்: கோவலன ஏமாத்தி தர்பாருக்கு கூட்டிக்கிட்டு போயி இவந்தான் ராணியோட சிலம்பை திருடினவன்னு சொன்னா தன் திருட்டும் மறைஞ்சிரும், தனக்கு ப்ரமோஷன் கிடைக்கிறதும் நிச்சயம் அப்படின்னு தந்திரமா கோவலன அரண்மனைக்கு அழைச்சிகிட்டு போனான்,
'வாராய் நீ வாராய்
போகுமிடம் வெகுதூரமில்லை
நீ வாராய்'
ஆனா அவன் போன நேரம் அங்க நிலைமை சரியில்லை- ராணியம்மா ராஜாவோட கோவிச்சிகிட்டு போயிட்டாங்க. ராஜா அவங்க பின்னால தாஜா பண்ணிகிட்டு follow பண்ணாரு.
'கண்மணியே கண்மணியே சொல்லுறத கேளு
என் கண்மணிக்கு கோபம் வந்தா சிந்தும் பனிப்பூவு'
அப்படின்னு கவலையா இருந்தாரு. அதனால பொற்கொல்லன் அவர்கிட்ட சொன்ன சேதிய அரைகுறையா காதில வாங்கிகிட்டு யோசிக்காம சிலம்ப பறிச்சிகிட்டு திருடன கொன்னுடுன்னு சொல்லிட்டாரு.
ப. குரல் 1, 2: அடப் பாவமே!
பாகவதர்: 'தீர்ப்பு சொன்ன வேகம் என்னவோ
திரும்ப கிடைக்குமோ போனது
மன்னன் மதியை இழந்ததால்
மங்கை வாழ்வும் தொலைந்ததே
இது விதியோ' (நேற்று இல்லாத மாற்றம் மெட்டு)
கணவன் கொலையுண்ட சேதி கண்ணகி காதை எட்டுச்சி.
'ஓ ஒரு தென்றல் புயலாகி வருமே
கால தேவனின் தர்ம எல்லைகள் மாறுகின்றதே'
PSLV ஏவுகணை மாதிரி நேரா பாண்டியன் சபையில போய் நின்னா.
'மன்னர் மன்னனே எனக்கு நியாயம் சொல்லுவாய்
என்ன குற்றமோ என் கணவன் செய்தது'
அப்படின்னு பார்லிமெண்ட்ல எதிர்கட்சி எம். பி. கேக்குற மாதிரி ஆவேசமா கேட்டா. ராணியோட சிலம்பை திருடினதா பழியை கேட்டதும்,
'நீ போட்டு வைத்த பரலும் என்ன சொல்வாய் மன்னவா
ஓகோ! மாணிக்கப்பரலை இதிலே பாராய் மன்னவா
இதுதான் சாட்சி என்னிடம் என் கணவன் பழியை போக்கிடும்
நானே போட்டுடைப்பேன் இந்த சிலம்பை பாராய் மன்னவா'
அப்படின்னு சொல்லிட்டு கோவலன்கிட்டயிருந்து கைப்பற்றிய சிலம்பை கண்ணகி பறிச்சி சிதறுகாய் உடைக்கிர மாதிரி போட்டு உடைச்சா. அதிலேர்ந்து சிதறிச்சி மாணிக்கப்பரல்கள்! பாண்டியன் பெருமையை கூறுவது முத்துக்கள்தானே? அதிர்ச்சியில் மன்னனுக்கு heart attack வந்து instant death. வேரற்ற மரமாய் வீழ்ந்துவிட்டான். அதைப்பார்த்த பத்தினி ராணிக்கு அடிச்ச ஷாக்கில அவளும் பொக்குனு உசிர உட்டுட்டா. ஆனா கண்ணகியின் கோபமோ கொழுந்துவிட்டு எரிஞ்சிச்சி.
ப. குரல் 1, 2: கொழுந்துவிட்டு எரிஞ்சிச்சி.
பாகவதர்: அவளுக்கு வந்த கோபத்துல மதுரைமாநகருக்கு விட்டா பிடிசாபம் 'உடனே இங்கே பந்த் நடக்கட்டும், மின்சாரம் நின்று போகட்டும், குடி தண்ணீர் கிடைக்காமல் போகட்டும், பஸ், ஆட்டோ ஸ்டிரைக் நடக்கட்டும், ஆங்காங்கே குண்டு வெடிக்கட்டும், VIP தவிர மக்கள் அனைவரும் துடித்து சாகட்டும், துடித்து சாகட்டும்! அப்படின்னு ஆங்காரமா சபிச்சிட்டு விர்ருன்னு கேரளாவுக்கு போயிட்டா. அங்க மலை முகட்டில அவ நின்னுக்கிட்டிருந்தப்ப ஒரு பறக்கும் தட்டு வந்துச்சி.
ப. குரல் 1, 2: ஒரு பறக்கும் தட்டு வந்துச்சி.
பாகவதர்: அதுல இருந்த கோவலன பாத்து
'ஆவியே ஆருயிரே
அழைத்துப்போக வந்தீரா
உம்முடனே என்னையும்
சொர்க்கம் அழைத்துச் செல்வீரா' (மாயா மச்சேந்திரா மெட்டு)
அப்படின்னு பரவசமாகி கண்ணகி அந்த UFOவில பறந்து போயிட்டா.
அவங்க ஜோடியா பறந்து போனத பாத்ததுக்கு eyewitness இருந்ததா records சொல்லுது.
'கோவலன் கோவலன் உடன்
கண்ணகி கண்ணகி செல்ல
காவியம் காவியம் பிறந்ததம்மா
அதை ராகமாய் ராகமாய்
நாங்கள் பாடிட பாடிட
நல்ல வாய்ப்பும் கிடைத்ததம்மா' (புல்வெளி புல்வெளி மெட்டு)
'தட்டி தட்டி தாளம் போட்டு
சொன்ன கதையும் முடிஞ்சி போச்சி
திரையிலே கேட்ட வரிகள்
திரும்பவும் கேட்க இசைத்தோம்
நன்றே நன்றே என்று
குற்றங்களை மறத்தலும்
நிறைகளை நினைத்தலும்
என்றும் பெருமை ஆகுமே
மனதில் இன்ப தேனும் ஊறும்
தட்டி தட்டி' (கொஞ்சி கொஞ்சி அலைகள் மெட்டு)
மங்களம் சுப மங்கள்ம் கண்ணகி கதை கேட்ட உங்களுக்கும் சிலப்பதிகார கதை சொன்ன எங்களுக்கும் மங்களம் சுப மங்களம்.

chinnakkannan
22nd July 2011, 11:23 AM
கண்ணகி கதை ஜோர்..என்ன பண்ணுவது..கணினி திடீரென்று மோதி நொறுங்கி விட்டது..!(க்ராஷ்க்கு தமிழ் இன்னாப்பா)
*
உறங்கும் உள்ளமும் இறங்கும் சூரியனும்...-- நன்னா இருக்கு ஓய்..(நெசப் பேர் காதுல சொல்லுமேன்..)

pavalamani pragasam
22nd July 2011, 08:12 PM
கொஞ்சம் கூட பொருத்தம் இல்லாமல் ஒரு புனைப் பெயர்!!!

pavalamani pragasam
23rd July 2011, 10:19 PM
கொலு பொம்மைகள் பேச்சு கமெண்ட்டரி சூப்பர்! அடுக்கிய கொலுவின் வர்ணனை பூரணம், வந்த கூட்டத்தின் வர்ணனை அபாரம், பண்டிகையின் வண்ணக்கலவையான சம்பவங்களை கண் முன்னே கொண்டு வந்தது தனித் திறமை! அத்தனையும் தத்ரூபம்- கற்பனை, வர்ணனை!

chinnakkannan
24th July 2011, 12:11 AM
அக்கோவ்...தாங்க்ஸ்..ரொம்ப...இன்னும் எழுதியிருக்க்லாமோ எனத் தோன்றுகிற்து...

pavalamani pragasam
25th July 2011, 11:24 PM
சவுதியில் வெகு காலம் தங்கியிருந்த மகனின் கருத்துக்களும் இதுவே!

chinnakkannan
26th July 2011, 02:02 PM
பார் என்று பகட்டுவதும், கற்காலம் காட்டுவதும் யார் எனப் புரியவில்லையே....விளக்கம் கிடைக்குமா (சவுதிப் பெண் என்றும் நினைக்க முடியவில்லை..ஏனெனில் பேதமில்லாமல் பழகுகிறாள் என்கிறீர்கள்..) இந்த சி.க. பாண்டியனின் சந்தேகத்தை தீர்ப்பீர்களா...

pavalamani pragasam
26th July 2011, 03:45 PM
சவுதி பெண்கள் குசும்பெல்லாம் மூடாக்குள்ளேதான்! பகிரங்கமாய், பட்டவர்த்தனமாய், அதிரடியாய் எங்களுக்கு யார் தடா போட முடியும் என்று சிலிர்த்துக் கொண்டு கிளம்பியிருக்கும் மேலை நாகரிகம் தந்த தவறான வழிகாட்டுதலால் பெண்ணியம் பேசி கொம்பு சீவி விடும் விஷமிகளிடம் சிக்கிய இன்றைய 'நாகரிக' யுவதிகள்தான் என் முழு விசாரத்துக்கும் காரணம் - சலிப்பின்றி அரைத்த மாவை அரைத்துக் கொண்டு துவச்ச துணியை துவச்சிக் கொண்டிருக்கிறேன்!:sigh2::sigh2::sigh2:

chinnakkannan
28th July 2011, 11:21 PM
அத்தை மகள் ரத்தினத்தை அத்தான் மறந்தாரா -ன்னு பாட்டை சமீபத்தில் கேட்டீங்களாக்கும்..!

pavalamani pragasam
29th July 2011, 08:29 AM
ஏன், அதிரசத்தை ர(ரு)சித்து தின்னுக்கிட்டும் இருந்திருக்கலாமில்லையா?

chinnakkannan
29th July 2011, 11:38 AM
கிராண்ட் ஸ்வீட்ஸ் அதிரசம் தான் இப்போதைக்கு அதிரச்ங்களின் அரசி (அல்லது அம்மா!)எனலாம்..

pavalamani pragasam
29th July 2011, 03:11 PM
என் பெரியம்மாவும் மாமியாரும் செய்யும் அதிரசத்திற்கு ஈடில்லை! இப்போதெல்லாம் பாக்கெட்டில் பக்குவமாய் பாகு கலந்த மாவை விற்கிறார்கள் தீபாவளி சமயங்களில்- அதை வாங்கி அழகாய், அருமையாய் நாங்களும் அதிரசம் செய்றோமில்ல!
அந்த ரோஸ்-வெள்ளை மிட்டாய் நவராத்திரி முழுக்கவும் ரோட்டில் விற்குமே!
வக்கணையாய் சாப்பிட்ட வாயை கட்டுவது மகா கொடுமை!

chinnakkannan
29th July 2011, 09:26 PM
ஏன் நீங்க வீட்டில செய்ய மாட்டீங்களாக்கும்...! அதிரசம் சின்ன வயதில் உரலில் மாவுஇடித்து கரி அடுப்பில் அம்மா செய்து கொடுத்ததன் சுவை இன்னும் நெஞ்சில்..
விட்டுப் போன பல இனிப்ப்களில் ஒன்று..சின்ன வயதில் அக்கா கல்யாணத்தில் கன்னக் கோல் கோவிந்தய்யங்கார் என்ற சமையல் காரர் செய்து கொடுத்த அக்கார வடிசல்..அட்டா..
இப்போது என் மனைவியும் நன்றாகச் செய்வாளாக்கும்..(நேர்ல அவளப் பாக்கறச்ச மறக்காம சொல்லுங்க..!)

pavalamani pragasam
29th July 2011, 11:16 PM
உரல்...கரி அடுப்பு..உம்...இவையெல்லாம் எனக்குத் தெரியும், என் பேத்திக்கு புரியாது! அவள் பேத்தி காலத்தில் சமையல் இருக்குமா மாத்திரை வடிவ சாப்பாடா? தலை சுற்றுகிறது!!!
சம்பவக் கதைகளை கவிதையாய் புனைந்து நச்சென்று கடைசியில் ஒரு முத்தாய்ப்பு வைப்பதில் கில்லடியாயிருக்கிறீர்கள்!!!

chinnakkannan
29th July 2011, 11:41 PM
நன்றி..
**
‘கேள்வி கேட்காத ம்னைவிகள்..’கொஞ்சம் அதீத கற்பனையாய் இருக்கிறதே..அப்படி யாராச்சும் இருக்காங்களா..

chinnakkannan
30th July 2011, 03:24 PM
பெரிய இடத்து ஆட்கள் - அரசியல் வாதிகள் ; நடிகர்கள் போன்றோர் எளிதில் சென்று க்யூவையெல்லாம் கடந்து பிரார்த்தனை பண்ணினால் பலன் வராது - என்கிறீர்களா..
*
பிரார்த்தனை ஆராதனை எல்லாம் பலன் தரா பகட்டுடன்
பக்தி செய்யும் போது..

என்றால் இன்னும் தெளிவாக இருக்குமோ...

pavalamani pragasam
30th July 2011, 04:33 PM
கவிதையை புல் என்று சொன்னதற்கு என்ன தண்டனை கொடுக்கலாம்?:think:

chinnakkannan
30th July 2011, 06:01 PM
(கழுதைப்) புலிக்குத் தெரியுமா கவிதை வாசனை..ஹி..ஹி...அஃதாவது மனிதர்கள்தான் கவிதை ரசிப்பார்கள்.. மிருகங்கள் அறிந்தவை ருசி மட்டுமே ( கண்ணா..நன்னா சால்ஜாப்பு சொல்ற)

chinnakkannan
30th July 2011, 06:17 PM
வேண்டுமானால் பெண்புலியிடம் என்று ஆரம்பித்து தின்னாது என முடியும் படி வேறொன்று எழுதட்டுமா..

pavalamani pragasam
30th July 2011, 11:25 PM
வாயே திறக்கப்படாதுன்னு கங்கணம் கட்ட வைத்துவிடுவீர்கள் போலிருக்கிறது!:roll:

kirukan
31st July 2011, 12:15 AM
பெரிய இடத்து ஆட்கள் - அரசியல் வாதிகள் ; நடிகர்கள் போன்றோர் எளிதில் சென்று க்யூவையெல்லாம் கடந்து பிரார்த்தனை பண்ணினால் பலன் வராது - என்கிறீர்களா..
*
பிரார்த்தனை ஆராதனை எல்லாம் பலன் தரா பகட்டுடன்
பக்தி செய்யும் போது..

என்றால் இன்னும் தெளிவாக இருக்குமோ...
பகட்டுடன் பக்தி என பொருள்கொண்டு எழுதவில்லை பக்தி இருக்க வேண்டிய இடத்தில பக்தியின் பெயரில் வெறும் பகட்டு மேலோங்கி இருக்கும் போது என்றே எழுதியுளேன்.
கடவுளிடம் தங்களை அற்பணிக்காது தங்கத்தை மட்டும் அற்பநிபவர்களை சுட்டியது.
தவறு இருப்பின் திருத்தவும்.

chinnakkannan
31st July 2011, 06:50 PM
நீங்க எங்கேயோ போய்விட்டீர்கள் நண்பரே.. தவறெல்லாம் இல்லை..நான் புரிந்து கொண்டது ஒரு வெர்ஷன்.. உங்களுடையது நன்றாகவே உள்ளது..
*
சரி சரிக்கோவ்.. இன்னும் கோபம் தீர வில்லையா...

pavalamani pragasam
31st July 2011, 08:07 PM
பாண்டியன் கதையை சொல்லும் சாக்கில் நிகழ்கால நிகழ்வின் வர்ணனையா!?

chinnakkannan
3rd August 2011, 11:27 PM
திருஷ்டி சுத்தி போடணும்ங்க உங்களுக்கு...இது வரை ஒரு குறையும் இல்லைங்கறீங்களே...அப்படியே நல்லபடி இருக்கக் கடவது..!

pavalamani pragasam
4th August 2011, 08:34 AM
அடடா! தவறாக புரிந்துகொண்டுவிட்டீர்கள்! துன்பமில்லா சோதனையில்லா வாழ்வுண்டா? மனப்பக்குவம், இன்னல்களை எதிர்கொள்ளும் பாங்கு, எல்லாவற்றையும் விட பேராசையின்றி திருப்தி காணும் சுபாவம்- இவைதான் வரங்கள்; இவற்றோடு எனக்கு வாய்த்த மற்ற வரங்களும் தாராளம்தான்!!!

chinnakkannan
4th August 2011, 10:44 AM
எசப்பாட்டுப் பாடத்தான்(இப்போதைக்கு) கிறுக்கரும் நானும் இருக்கோமே..(அது வரமா..சாபமா?!)
*
போறது தான் போறீங்க ஒரு சன்லைட், ரின்,சர்ஃப் எக்ஸெல்லுன்னு எடுத்துட்டுப் போகப் படாது?!

raathai
4th August 2011, 11:09 AM
கவிதைகள் மனதை தொட்டு போகிறது.

pavalamani pragasam
4th August 2011, 02:54 PM
எசப்பாட்டுப் பாடத்தான்(இப்போதைக்கு) கிறுக்கரும் நானும் இருக்கோமே..(அது வரமா..சாபமா?!)
*
போறது தான் போறீங்க ஒரு சன்லைட், ரின்,சர்ஃப் எக்ஸெல்லுன்னு எடுத்துட்டுப் போகப் படாது?!

:rotfl2: வெட்டி வேலைக்கு தண்டச் செலவு வேறயா?

pavalamani pragasam
4th August 2011, 02:55 PM
கவிதைகள் மனதை தொட்டு போகிறது.
நன்றி, ராதை!:-d

chinnakkannan
9th August 2011, 09:53 PM
கவிஞன் கீட்ஸ் - நான்கு பருவத்தை இங்கு மொழிபெயர்க்கலாமே..

pavalamani pragasam
10th August 2011, 09:00 AM
The Human Seasons
FOUR Seasons fill the measure of the year;
There are four seasons in the mind of man:
He has his lusty Spring, when fancy clear
Takes in all beauty with an easy span:
He has his Summer, when luxuriously
Spring’s honey’d cud of youthful thought he loves
To ruminate, and by such dreaming high
Is nearest unto heaven: quiet coves
His soul has in its Autumn, when his wings
He furleth close; contented so to look
On mists in idleness—to let fair things
Pass by unheeded as a threshold brook.
He has his Winter too of pale misfeature,
Or else he would forego his mortal nature.

Translation follows later!

pavalamani pragasam
10th August 2011, 08:23 PM
மனித பருவங்கள்

வருட நீளத்தை நிறைக்கும் பருவங்கள் நான்கு
மனித மனங்களில் உண்டு பருவங்கள் நான்கு
தெளிவான புத்தி அழகத்தனையையும் அனாயாசமாய்
உள்வாங்கும் துடிப்பான வசந்தமுண்டு அவனுக்கு
பாதி செரித்த உணவாய் இளமை நினைவு தேனூறிக்கிடக்க
பசுவினைப் போல் சுகமாயதை அசைபோட விரும்புகிறான்
அவனுக்கு வாய்த்த வேனிற்காலத்திலே
உன்னத கனவிதில் கிடப்பதனால்
சொர்க்கத்தின் பக்கத்திலிருக்கிறான்
தனது இறக்கைகளை மடித்து
இளைப்பாறும் இலையுதிர்காலத்திலே
அமைதியான நீர் வளைவுகளை
கொண்டிருக்கும் அவன் ஆன்மா
மேகங்களைப் பார்த்துக் கொண்டு
சோம்பியிருப்பதும் நல்லவற்றை
வாசற்படியை ஒட்டியோடும் ஓடையைப் போல்
கடந்துசெல்லட்டுமென கவனியாதிருப்பதும்
போதுமென்று நிறைந்திருக்கும் மனது
சோகையான அலங்கோலமாய்
பனிக்காலமும் அவனுக்குண்டு இல்லையேல்
மனிதனென்ற அடையாளத்தையன்றோ
அவன் இழந்திருப்பான்

pavalamani pragasam
11th August 2011, 04:01 PM
:sigh2::sigh2::sigh2: தத்ரூபமான காட்சி!!!

அத்தனையையும் அனாயாசமாய் புட்டு புட்டு வைத்த திறமைதான் என்னே! (மாமியை புட்டு கேட்டு நச்சரிக்க கிளம்பிவிட வேண்டாம்- புட்டுத் திருவிழாவிற்கு இன்னும் நாள் இருக்கிறது! ஆடி முடிந்து ஆவணி பிறந்த பின் அல்லவா?)

chinnakkannan
11th August 2011, 06:49 PM
அழகான மொழிபெயர்ப்பு...கலக்கி விட்டீர்கள்..(நானும் முயற்சி ப்ண்ணினேன்..எண்சீரில்.. வ்ரலை..விட்டுவிட்டேன்!) சம்மர் - கோடை என நினைத்தேன்..வேனிற் காலம் என் அழகாய் ச்சொன்னீர்கள்... ஆட்டம்ன்.. கொஞ்சம் (நிறையவே மண்டை காய்ந்து) தமிழில் இலையுதிர் காலம் எனக் க்ண்டு பிடித்திருந்தேன்..எனிவே.. அழகிய மொழி பெயர்ப்புக்கு நன்றி..
***

chinnakkannan
11th August 2011, 06:56 PM
ஆங்கிலத்தில் கவிதை இட்டதற்கும் இன்னொரு நன்றி..
**
மறுபடி நன்றி.. (இது என்ன நன்றி அறிவிப்புப் பொ.கூ என எண்ண் வேண்டாம்..) பாராட்டியமைக்கு.. மாமி என்றால் என் வீ.கா அடிப்பாள்..அவள் இன்னும் சின்ன வயது தான்..என்றும் பதினாறு...! புட்டுத் திருவிழா சொல்லி என் நினைவுப் புட்டைக் கிள்றி விட்டீர்கள்...ம்ம்ம்.இங்கு ஒரு ஹோட்டலில் வெள்ளி காலை டிஃபன் குழல் புட்டு (மலையாளம்) + கொ.க. சுண்டல் போல் சப்ஜி.. நன்னாயிட்டு இருக்கும்..
*
இந்தக் கவிதை(?!) என் கற்பனையே...! வாழ்க்கையில்ல்ல..ஹி..ஹி..

pavalamani pragasam
11th August 2011, 07:36 PM
பிடித்த கவிதை, மொழிபெயர்ப்பிலும் ஆர்வம் உண்டு, எனவே ரசித்து, சிரத்தையுடன் முயன்றது- இன்னும் கூட அழகாய் செதுக்கியிருக்கலாமோ என்று பதிவு செய்த பின்னும் உறுத்தல்! கவிதை மூலத்தை கொடுக்காமல் எப்படி மொழிபெயர்ப்பை கொடுப்பேன்? அது பாதி விருந்தல்லவோ?
'மாமி'களுக்கு- அதாவது என்னையும் சேர்த்து, இல்லத்தரசிகளுக்கு- என்றும் வயதே ஆவதில்லை என்று எனக்கு நன்றாகவே தெரியுமே!
கதைகளின் முடிவில் போடுவது போல இக்கதையில் வரும் சம்பவங்கள் பாத்திரங்கள் அனைத்தும் கற்பனையே என்று கவிதைக்கு பின்னாலும் போட்டால்தான் தெரியுமாக்கும்?

chinnakkannan
16th August 2011, 10:40 AM
நல்ல கவிதை கிறுக்கரே..இதே போல் எனக்கும் பலதடவை நிகழ்ந்ததுண்டு.. ரொம்பப்பின்னால் போக வேண்டாம். முந்தா நாள் நண்பரின் பெண் குழந்தை - மூன்றரை வயது..கதைசொல்லு கதை சொல்லு என்று கேட்க என்ன வேண்டும் என நான் கேட்க அருகிலிருந்த முனி டிவிடியைக் காட்டி இந்தக் கதை சொல்லு.. “சரீ..ஒரு ஊர்ல ஒரு ஹீரோ இருந்தான்..அவனுக்கு பேய்ன்னா பயம் - பேய்னு சொல்லாதீங்க புரியாது.பூதம்னு சொல்லுங்க - குழந்தையின் அம்மா.. “சரி.. மஹதி... அதாவது அந்த ஹீரோக்கு பாத்ரூம் போறதுக்கே பயம்..எங்கே ஏதாவது பூதம் வந்துடுமோன்னு.. அதனால அம்மாவையும் தொணக்கி கூட்டுண்டு போவான்.. “கொஞ்சம் இருங்க அங்கிள்.. நா தைர்யமா போய்ட்டு வர்றேன்..”
ஒரு வழியாய் பாத்ரூம் போன ஹீரோவை பூதம் பிடித்துக் கொண்டு காட்டுக்கெல்லாம் போய் சிங்கம் டினோசர், முயல் எலி கரடி எல்லாம் பார்ப்பதாக இஷ்டத்துக்கு பத்து நிமிடம் ரீல் விட்டு முடித்தால் நேரே அம்மாவிடம் சென்றது.. அங்கிள் ந்ல்லா கதை சொன்னாம்மா..
குழந்தையின் அம்மா ‘ என்ன கதை சொன்னேள்..” நான் ஒரு கணம் என்ன கதை சொன்னேன் என நினைவுக்கு வராமல் முழிக்க ‘அதாவது அம்மா அந்த ஹீரோ பாத்ரூம் போறச்சே பூதம் பிடிச்சுண்டுடுத்து...’ என ஆரம்பிக்க..அதன் நினைவாற்றலை வியக்காமலிருக்க முடியவில்லை..

kirukan
16th August 2011, 10:51 AM
நன்றி !!

அவர்களிடம் அசடு வழிவதும் அலாதி சுகமே.

chinnakkannan
16th August 2011, 06:17 PM
சரி சரி....கூல் ப்ரதர்...!

pavalamani pragasam
16th August 2011, 07:03 PM
:clap:நல்லா துப்புறாங்கப்பா!:noteeth:

chinnakkannan
16th August 2011, 11:37 PM
யக்கோவ்...ஒங்க கவித புரிலை...

pavalamani pragasam
17th August 2011, 07:39 AM
அரச்ச மாவுதான் - சொல்லிச் சொல்லி மாய்கிறேன் - நெற்றிப் பொட்டை தேவையில்லையென்பது, ஊர் சாட்சியாய் கட்டிய தாலியை கழட்டி வைத்துவிடுவது போன்ற புது 'நாகரிகம்' பிடிக்கவேயில்லை!!!! ஊக்குவிப்பது ஊடகங்கள் - மூளி அலங்காரம் அழகாம்!!!!!

chinnakkannan
17th August 2011, 06:42 PM
அரச்ச மாவா இருந்தாலும் பழகின கல்லில் இருந்து வருவதால் தோசை ஓ.க்கேய்யா தான் இருக்கு..
**
கிறுக்கர் ஃபுல் பார்ம்ல இருக்காப்பல..நாட்டு நடப்பப் பார்த்து ரொம்ப கோச்சுக்கிட்டு இருக்காதீங்க..கடைசில மிஞ்சுறது ரத்தக் கொதிப்பு தான்..

chinnakkannan
17th August 2011, 06:43 PM
அட,,, மறந்தே போயிட்டேன்.. எங்க ரெண்டு பேரையும் துப்பறியும் சாம்பு எனச் சொன்னமைக்கு நன்றி!!

pavalamani pragasam
17th August 2011, 07:41 PM
:rotfl2::rotfl::rotfl3:

pavalamani pragasam
18th August 2011, 08:15 AM
ஏதோ நம்மூர் மக்கள் வரலாறு காணாத வெக்கையில் புழுங்கித் தவித்து கொஞ்சம் குளிர்ந்திருக்கிறார்களே என்றெண்ணாமல் இப்படியா??? ரொம்ப மோசம்!!!!!

pavalamani pragasam
20th August 2011, 07:46 AM
:rotfl::rotfl::rotfl:

pavalamani pragasam
20th August 2011, 08:43 PM
ஆத்தீ! அசராமல் சளைக்காமல் சாடுகிறார் கிறுக்கன்! கட்டுரை ஒன்றில் சற்று முன்னால் மஞ்சள் துண்டுக்காரரை சாடியதை படிக்கும் போது கிறுக்கன் ஞாபகம் வந்ததில் அதிசயமில்லை! இப்படி பரவலான, பகிரங்கமான ரௌத்திரத்தை பார்க்கையில் பரவசமாய் இருக்கிறது! நல்லது நடக்கட்டும்!
சின்னக்கண்ணன் சொன்னது போல் ரத்தக்கொதிப்பு ஏறி பிரச்சினையாகமல் பார்த்துக்கொள்ளுங்கள், கிறுக்கனே!

kirukan
20th August 2011, 11:05 PM
எங்க ஊர் பேச்சு வழக்கில் கும்பி எரிகிறது என்பார்கள் அதுபோல் தான் உள்ளது இந்த இர்ருபோனவர்களை நினைத்தால், நல்ல தருணமிது இதை விட்டால் மீண்டும் கிடைக்காது என மனம் சொல்கிறது.என் ரத்த கொதிபினாலும் நன்மை கிடைக்குமெனின் வந்துவிட்டு போகட்டுமே ....

pavalamani pragasam
21st August 2011, 12:05 PM
ஒரு எழுத்துப் பிழை ஒரு கவிதைக்கு விதை!!!
முறுக்கு சீடை இன்ன பிற பதார்த்தங்களை எங்களையும் நினைத்துக்கொண்டே வெட்டவும்!!!

kirukan
21st August 2011, 04:54 PM
ஒரே தலைப்பில் எழுதுவதற்காக என்னை மன்னிக்கவும்.

chinnakkannan
21st August 2011, 08:12 PM
அதுசரீ ஈ ஈ.. கொஞ்சம் வலையைப் பார்க்காமல் ஒரு நாள் இருந்தால் இப்படியா மாறி மாறி பாட்டுப் பந்து அடிப்பது..
*
எங்களுக்கு கிஷ்ண ஜயந்தி நாளன்னிக்காம்...!

pavalamani pragasam
21st August 2011, 10:54 PM
@கிறுக்கன்: கொட்டித் தீருங்கள், ரசிக்கத்தான் செய்கிறோம் நீங்கள் எடுத்தியம்பும் உண்மைகளை!
@சின்னக்கண்ணன்: பொறுத்தார் பலகாரம் தின்பார்!!! தங்கள் கவிதையின் கருத்தை அச்சசலாய் -தாயின் கைமணத்தில் சுகம் கண்டவன் கதை கல்யாணத்துக்கப்புறம் கந்தலாகிப் போனதை முன்பு என் பாணியில் எழுதி இத்தளத்திலே மேகசீனில் பதிவு செய்தேன், தேடினால் எளிதில் கிடைக்கவில்லை!

chinnakkannan
23rd August 2011, 04:18 PM
இன்னும் கிடைக்கலையா..
*
அது சரீஈஈஈ.. இப்படி வாழியவேன்னு கொடுத்து எனக்கு b.p எகிற வெக்கணுமாங்கறேன்.. நீங்க பி.பியா இருக்கலாம்..அதுக்காக..கடைசில திண்டாடி.. என்னோட பாட்டி சொன்னகதையெல்லாம் நினைவு படுத்தி போட வேண்டியதாப் போச்சு.. இப்போ தேர்ந்தெடுங்கறீங்க.. நல்ல இழையாத் தேடணும்..

chinnakkannan
23rd August 2011, 04:18 PM
கிறுக்கர் ஏதோ பொதுக்கூட்டத்தைப் பத்திப் படிச்ச்சுட்டு இருக்கறதாக் கேள்வி..!

pavalamani pragasam
23rd August 2011, 06:08 PM
:frightened:PP is not BP!!!

pavalamani pragasam
23rd August 2011, 09:52 PM
கன்னுகுட்டி சைஸ் நாயா?செயின்ட் பெர்னார்ட்? அல்சேஷன்?....:shaking:

chinnakkannan
23rd August 2011, 10:12 PM
கோல்டன் ரிட்ரீவர் என்னும் ஒரு வகை இருக்கிறது..பொன்னிற மேனியுடன் புஸீ புஸீ என்றிருக்கும்.. பார்த்து விளையாடியிருக்கிறேன்..ம்ம் ஊரில் செட்டில் ஆகையில் அதைப்போல்வளர்க்க ஆசை இருக்கிறது..முன்பு நான் சென்னையில் சில் மாதம்(சில பல வருடங்களுக்கு முன்) தெரு நாய் ஒன்றைத் தத்தெடுத்திருந்தேன்..அதன் பெயர் என்ன தெரியுமா..மாடசாமி..அதற்கு ஒரு காதலியும் உண்டு..அதற்கு நான் வைத்த பெயர் ரோஸி..(இவை இரண்டும் என் திரை விமர்சனங்களில் வந்தன முன்பு)

chinnakkannan
25th August 2011, 11:55 AM
ஹாய் கிறுக்ஸ்..மப்ரூக்... கங்க்ராட்ஸ்..இது எத்தனாவது கிறள்ப்பா...
நாங்கள்ளாம் கிறுக்கறதை கணக்கு வெச்சுகற்தில்லையாக்கும்..!

kirukan
25th August 2011, 12:16 PM
தேங்க்ஸ் இது 200 வது .
கீழே உள்ள வலைத்தளத்தில் தான் கணக்கு வைத்துள்ளேன்.
http://kirukkural.blogspot.com

chinnakkannan
28th August 2011, 01:03 PM
thiruthirukkaak ezhuthiyathu..

திருதிருவென முழித்துக் கொண்டிருந்த்து
அந்தப் பெண் குழ்ந்தை
நூற்றுக்கணக்கான குடியிருப்பில்
எந்த வீட்டில் இருந்து வந்திருக்கும்
எனத் தெரியவில்லை..
அழகாய்க் கொழு கொழு வென
சிகப்பு கவுன் அணிந்து..
கண்களில் இப்பவோ அப்பவோ என
கண்ணீர் வரும் போல..
அதைப் பார்த்து மெல்லச் சிரித்து
சுற்று முற்றும் யார் வீட்டுத் தோட்ட்த்தில்
பூத்த்திந்த ரோஜா என
நினைத்த பொழுதினில்
ஒரு வீட்டினில் இருந்து வெளிப்பட்ட நங்கை
எப்ப்ப் பார்த்தாலும் வெளியிலேயே விளையாட்டா
என்று நச்சென ஒரு அடி அடித்து
உள்ளே அழைத்துச் செல்ல
எனக்கு வலித்த்து நிரம்ப...

chinnakkannan
29th August 2011, 03:00 PM
நீங்க வேற.. போற போக்கப் பாத்தா கதைவசனமே எழுதாம.. படைக்கறதயே விட்டாலும் விட்டுடுவாங்க... - ந்ல்ல கற்பனை...

pavalamani pragasam
29th August 2011, 07:48 PM
:exactly::-D:ty:

chinnakkannan
3rd September 2011, 09:50 AM
என்ன ஆச்சு..கொழுக்கட்டை சாப்பிட்டுட்டு நன்னா தூங்கிட்டேளா..ஆளையே காணோம்..

pavalamani pragasam
3rd September 2011, 01:55 PM
விளம்பர பாப்பா சொல்ற மாதிரி 'நான் ரொம்ப பிஸி ஈஈ'!!! சென்னையில்....ஒரு வாரமாய்....

pavalamani pragasam
4th September 2011, 08:32 AM
நல்லாத்தான் விளம்பரம் பண்ணிக்கிறாக!

chinnakkannan
6th September 2011, 09:46 AM
இப்படி எல்லாமா பயப்படறது.. கொழந்த தானே .. போகப்போகச் சரியாயிடும்..!

pavalamani pragasam
6th September 2011, 12:32 PM
குழந்தையா??? குண்டு-அணுகுண்டு!!!:rotfl2:


யோசித்துப்பார்த்தால் துணைவியை குழந்தையாய் எண்ணுபவன் தானே குழந்தையாய் தவிப்பவனை விட பாக்கியசாலி- அவளுந்தான் - என்றே தோன்றுகிறது.:)

chinnakkannan
6th September 2011, 03:48 PM
கடைசியா நீங்க எழுதியிருக்கிற்து (குழந்தையை etc) நவீன கவிதை மாதிரி புரியற மாதிரியும் இருக்கு புரியாத மாதிரியும் இருக்கு!

pavalamani pragasam
7th September 2011, 07:45 AM
கோனார் உரை: முதலில் கவிதையின் பாடு பொருள் குழந்தையல்ல முழுதாய் வளர்ந்த பெண்; அவளை குழந்தையாய் பார்க்கும் பக்குவம் உள்ள ஆண்மகனும் அவன் பேடையும் பெண்ணை ஆளத் தெரியாத பக்குவமில்லா ஆண்மகனை விட ஆனந்தமானவர்கள்.

chinnakkannan
7th September 2011, 10:40 AM
மெய்யாலுமே மன்னிச்சுக்குங்க நான் வேகமாப் படிச்சதால ஸ்கூலுக்குப் போற பெண்குழந்தைன்னு நினச்சுட்டேன்..(எல்லாம் பள்ளியறையால வந்த கன்ஃப்யூஷன்.. ப்.அறைன்னாலே குழப்பம் தானோ..)..

chinnakkannan
8th September 2011, 12:43 PM
வாய்யா சிக்கலாரே..(கிறுக்கரே) சொகமா இருக்கியளா..
*
எப்பப் பாத்தாலும் அநியாயம் நடக்குதுன்னு
பொங்கிப் பொங்கிச் சொல்றீக..
புரியுமா மக்களுக்கு...
(ஹி ஹி,, ஒச்சாயி பாணியில்..)

pavalamani pragasam
8th September 2011, 07:17 PM
இன்னும் நிறையப் பேர் பொங்கத்தான் போகிறார்கள், யுகப்புரட்சி வரத்தான் போகிறது!

pavalamani pragasam
22nd September 2011, 03:54 PM
Hindu குறுக்கெழுத்து புதிர் திரியில் தினமும் பங்கேற்கும் அன்பர் ஒருவர் தன் துணைவியாருடன் சேர்ந்து மாதம் ஒரு தமிழ் குறுக்கெழுத்துப் புதிர் வழங்குகிறார். அவை சுவையானதாய் சவாலாய் இருக்கும். 2 நாள் விடாமல் மண்டையை உடைத்து பதில்களை கண்டுபிடித்து கட்டங்களை நிரப்பும் போது ஏற்படும் மகிழ்ச்சி அலாதியானது! இந்த மாத புதிர்:

http://us.mg5.mail.yahoo.com/neo/launch?.rand=4vn6ncectol0h

chinnakkannan
2nd October 2011, 03:28 PM
அப்படி யாரப் பாத்துப்புட்டீகளாம்?!

pavalamani pragasam
2nd October 2011, 07:15 PM
நானில்லை!:notthatway:
மனதைக் கவர்ந்தவளை கவர துடித்துக்கொண்டிருப்பவன் அவ்விட ரசனை அறிந்து அடையும் அதிர்ச்சி!:shock:

chinnakkannan
9th October 2011, 05:41 PM
என்ன பண்றது போங்க.. இப்படிச் சொல்லி ஆறுதல் பட்டுக்க வேண்டியது தான்..

tiruttakkan
10th October 2011, 07:33 AM
PPjee,

It is really heartening to see you carry on for several years in a row relentlessley in this forum with your literary contributions. Kudos!

For me...it is nostalgic whenever I peep in. Beyond that....

Have a great day!

TT

pavalamani pragasam
10th October 2011, 08:51 AM
How I wish you could spare more time to post your very interesting, intelligent verses! The thread misses you! Good, old friends are always in my thought!Yes, it is nostalgia!!!

chinnakkannan
23rd October 2011, 04:04 PM
ஏனாம்......?

ஊரில் இல்லையா?

pavalamani pragasam
23rd October 2011, 04:09 PM
???புரியல!

chinnakkannan
23rd October 2011, 10:21 PM
மிகவும் யோசித்து
மிகவும் தயங்கி
மிகவும் மென்மையாய்

ஏனாம்?

ஆசுகவியாச்சே...படக்படக்குன்னு ஒடனே எழுதுவீங்களே...ஊரில் இல்லையா...

pavalamani pragasam
24th October 2011, 07:51 AM
ரோட்டோரம் அகழி வெட்டிப் போடும் புண்ணியவான்களால் தொலைபேசி வயர் பாதித்து இணைய இணைப்பு கிடைக்காமல் போய் தவிக்க வேண்டியதாகிவிட்டது!

pavalamani pragasam
26th October 2011, 09:57 AM
தம்பிக்கு மகிழ்வுடன் நன்றி! தங்கள் குடும்பத்திலும் இனிய ஒளியும் இன்பமும் என்றும் நிறைந்திருக்க வாழ்த்துக்கள்!

pavalamani pragasam
1st November 2011, 07:48 AM
என் 'அவதார்' படம் இதிலே:
www.ppavalamani.blogspot.com

chinnakkannan
1st November 2011, 10:26 PM
ரொம்ப நல்லா இருக்கு உங்க அவதார் படம்.. நீங்களே எடுத்ததா..

ம்ம்..இது தீபாவளிக்கு என் மனைவியால் கிளறப்பட்ட அல்வாவைப் போல என் நினைவுகளைக்கிளறிவிட்டது..

புள்ளிவச்சு வட்டம் போட்டா...

காலேஜ் படிக்கிறச்சே சினேகிதியோட (மெய்யாலும் நம்புங்க!!) மதுரை பிக்னிக் ஸ்பாட்டான அழகர் கோவில் போய் காடுகளை ஊடி நடந்த போது ( ரோடெல்லாம் இருந்தும் ) எங்கிருந்தோ வந்த குரங்கு அவளது கையைத் தட்டி ஆரஞ்சுப்பழத்தை எடுத்துக்கொண்டு ஓட அவள் ஆஆவ் என அலறி என்னை...(ச்சீ போங்க வெக்கமா இருக்கு) திட்டினாள்..படவா மொதல்லயே பாத்து வார்ன் பண்ணக்கூடாதுன்னு...அவ குடும்பம்(வேறயார் அம்மா அப்பா தான்( நற நற)) என்னத் தான் சப்போர்ட் பண்ணாங்க..(பின்ன மதுரயாச்சே..எப்படித் தனியாக்கூட்டிக்கிட்டு போக முடியும்..!)

மனசாட்சி; கண்ணா நலலா கத சொல்ற போ..

pavalamani pragasam
25th November 2011, 12:41 PM
அழகர்மலை குரங்கேதான்! நானே எடுத்ததுதான்!
விடலைப் பருவ நினைவுகளைக் கிளறித் திளைக்கும் தங்களுக்கு அல்வா கிளறிய கரண்டியாலேயே திருமதி மொத்தி வெகுமதி கொடுக்கவேண்டும் என்பது என் அவா!:lol:

மதுரையும் மாறிவிட்டது- உலகமகா ஜோதியில் கலந்துவிட்டது!:cry2:

chinnakkannan
30th November 2011, 12:54 PM
இப்ப மதுரைக்கு வர்றதுக்கே கொஞ்சம் யோசனையாத் தானிருக்கு..அதுவும் விகடன்ல கடந்த ஆறு மாசத்தில இன்னும் மோசமாயிடுத்துன்னு போட்டிருந்தாங்க..
முன்பெல்லாம் ஒரு நாளின் எந்த நேரத்திலும் தன்னந்தனியாக சைக்கிளில் மொபெட்டில் சுற்றியிருக்கிறேன்..நோ ப்ராப்ளம்..இப்போ அப்படி முடியுமான்னு தெரியலை... சில சமயங்களில் பஸ்ஸ்டாண்ட் ஆரிய பவனில் நடு இரவு ஒரு மணிக்கு சுடச்சுட் இட்லி சாப்பிட்டது நினைவிருக்கிறது..
லேபர் ஹைஸ்கூலுக்கு எதிரில் உள்ள பரோட்டா ஸ்டாலில் சுடச்சுட பரோட்டா ஆம்ல்ட் முன்னிரவில் உண்டது இன்னும் நினைவில்..

pavalamani pragasam
30th November 2011, 10:00 PM
:sigh2::(

pavalamani pragasam
21st December 2011, 07:31 PM
புவனமகாதேவி- செம்பியன்மாதேவி!!! சூப்பரோ சூப்பர்!!! உடன்பிறவா சகோதரியா? உள்ளிருந்து கொல்லும் விஷக்கிருமியா? இன்றைய சனிப்பெயர்ச்சியை இத்தனை நாள் பக்கம் பக்கமாய் விவரித்த பத்திரிக்கைகளில் இப்பொழுது சசிப்பெயர்ச்சிதான் தலைப்புச் செய்தி!!!:rotfl:

chinnakkannan
21st December 2011, 09:08 PM
நன்றி...மற்ற்வர்களெல்லாம் இயல்பு மாற்றி இருக்கும்போது நீங்கள் இயல்பு மாறாமல் இருப்பது ரொம்ப சந்தோஷம்..கஷடமா இயல்புதனைன்னு ஆரம்பிக்கணுமா...னற நற..

pavalamani pragasam
21st December 2011, 10:13 PM
:lol:பல் பத்திரம்!

pavalamani pragasam
28th December 2011, 03:27 PM
அய்யோ பாவம் ஓமனக்குட்டியிடம் பல்பு வாங்கிய மாமா!:rotfl3:

chinnakkannan
1st January 2012, 01:17 PM
உங்களுக்கும் குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்..

புத்தாண்டும் அதுவுமா..கொடுத்திருக்கற வார்த்தையைப் பாருங்க..!

pavalamani pragasam
2nd January 2012, 08:10 PM
தகாத வார்த்தை என்ன கொடுத்திருப்பேன் என்று பதறிப்போய் கவிதை திரியை திறந்து பார்க்க வைத்துவிட்டீர்கள்!:twisted:
உங்கள் சுறுசுறுப்பான மூளைக்கு வேலை கொடுப்பதில், வித விதமான கதை கவிதைகளை வரவைப்பதில் ஒரு அலாதி மகிழ்ச்சியிருக்கே!புத்தாண்டில் சந்தித்து வெல்ல சவால்கள் வந்துகொண்டேயிருக்கவேண்டும், வாழ்வில் அலுப்பு எழாமல் இருக்க வேண்டும்!சரிதானே நான் சொல்வது?
வாழ்த்துக்களுக்கு நன்றி; தங்களுக்கும் என் இனிய வாழ்த்துக்கள் உரித்தாகுக!

pavalamani pragasam
3rd January 2012, 10:05 AM
அன்பு மனம் கனிந்த பின்னே- இதே அருமையான பாட்டுத்தான் என் மண்டைக்குள்ளும் ரீங்கரித்தது!
பாடல் வரிகளை கோர்த்த விதமும் ஆழ்ந்த சமூக பிரக்ஞையும் என் 'மன்மத ராசா'வை நினைவூட்டியது!
http://www.mayyam.com/talk/showthread.php?112-manmatha-raasaa&highlight=manmatha+raasaa
மன்மத ராசா
பூலோக வார்ப்பிலே வடிக்காதவளே
அபூர்வ தேவதை வகையினளே
ஊர்வசி மேனகை திலோத்தமையே
வானவில்லாய், ஒரு கோடி மின்னலாய்,
ரோஜாக்கூட்டமாய், ப்பிள் தோட்டமாய்
என்னைத் துரத்தும் வியே
தூங்க விடாத பாவியே
வண்டார்குழலியே
அல்வாத்துண்டு இடுப்பிலே
செண்டிமீட்டர் சிரிப்பிலே
சிவந்த உதட்டு சுழிப்பிலே
ஜாகிர் உசேன் தபலா பின்னழகிலே
காதல் தீயை மூட்டிய பிசாசே
சர்க்கரை நிலவே சமையலறை உப்பே
அழகான ராட்சசியே அலங்கார வல்லியே
வறுத்த கோழி இறக்கி வச்சி
காத்திருக்கும் சரக்குக்காரியே
சக்கரைவள்ளிக் கிழங்கே
பாத்துட்டு போனாலும் பாக்காம போனாலும்
சிவப்பு லோலாக்கு இழுக்குதடி
அச்சச்சோ புன்னகையை கைக்குட்டையில்
பொத்தி வைக்க முடியலையே
குப்பை மேட்டில் பூத்த ரோசாவே
கணக்கு பண்ண வரட்டுமா
இச்சுத்தரவும் கிச்சு கிச்சு மூட்டவும்
காலம் நேரம் பாக்கலாமா
ஓடிப் போயி குடித்தனம் பண்ணலாம்
பின்னாலே கண்ணாலம் கட்டிக்கலாம்
பிள்ளகுட்டி சாட்சியா
ராக்கெட்டு வேகத்தில பறக்கிற உலகத்திலே
கட்டைவண்டி வேண்டாண்டி நாட்டுக்கட்டையே
ரகசிய சிநேகிதியே ராத்திரி பூத்த தாமரையே
அத்து மீறும் சை வந்ததே
அர்த்தஜாம நடத்துவோம்
அப்படியே செத்துவிட தோன்றினால்
அதையும் செய்திடுவோம்.

chinnakkannan
3rd January 2012, 09:29 PM
சிரிக்க வெக்கறீங்களே..

chinnakkannan
10th January 2012, 01:02 PM
கூட்டம் கிடைக்கும்..அழ ஆதரவாய்த் தோளா..அதானே கஷ்டம்..

pavalamani pragasam
10th January 2012, 07:38 PM
ரொம்ப ரொம்ப!

pavalamani pragasam
11th January 2012, 08:17 AM
:lol:ஒப்புதல் வாக்குமூலம்!

chinnakkannan
11th January 2012, 12:33 PM
யுவர் ஹானர்..
கவிஞர் வாலி ஒருமுறை ஆனந்த விகடனில் இப்படி எழுதியிருந்தார்: சமயத்திற்கான பாடல்கள் படத்தில் இடம்பெறும் பாடலின் சமயத்திற்கேற்ப (சூழ் நிலைக்கேற்ப ) எழுதப் படுகிறது என.. அது போல தோள் என்று முடித்ததால் அதற்காக ஆரம்பிக்க எண்ணி சிந்தனை செய்ததில் எழுதினேனே அன்றி இது ஒப்புதல் வாக்குமூலமில்லை எனத் தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்..!
அன்புடன்
சி.க

pavalamani pragasam
11th January 2012, 07:54 PM
வாதம் ஏற்றுக்கொள்ளப்படுகிறது!:bow:
அவுகவுக அனுபவத்த எழுதுறதா நினச்சா வெனதேன்!:notthatway:

'ஆண்கள்தான்'க்கு பதில் கவிதைக்கு பார்க்க:http://www.mayyam.com/talk/showthread.php?9659-Tamils-should-learn-to-respect-and-do-justice-to-women-both-young-and-old

chinnakkannan
17th January 2012, 10:26 PM
கொஞ்சம் ஷேவ் பண்ணிட்டுக் கொஞ்சியிருக்கலாமில்லை..

pavalamani pragasam
19th January 2012, 11:51 AM
மீசையவா?:shock:அப்புறம் பொண்டாட்டி கோச்சிக்கிட்டா?:roll:

pavalamani pragasam
2nd February 2012, 09:16 AM
தமிழ்நாட்டு அரசியல் கூத்துக்களின் சூடான விமரிசனம் சூப்பர்!

என் வலைமனையில் பதிவு செய்த முந்தைய க்ளூகோஸ் கவிதைக்கு வந்த பதில்:
Avasara sigicchai alithaal, namma ooril,

Bill egirum.

Sila samayam (very sad)

Operation success, anaal patient...

chinnakkannan
2nd February 2012, 12:33 PM
நேத்து டிவியில நியூஸ் சேனல்ல சூடு தாங்காம தானாவே மாறிடுத்துன்னா பாத்துக்குங்களேன்...ஆனா நல்ல காமெடியாய்த்தான் இருக்கு..யாரும் மக்களைப்பத்தி நினைக்கலேன்னு தெளிவாத் தெரியுது..

நன்றி..

பேஷண்ட் க்கு என்ன..ஹிந்துல்ல ஆபிச்சுவரி காலத்தில தான் போடணும்!

pavalamani pragasam
2nd February 2012, 02:44 PM
:yes::lol:

pavalamani pragasam
12th March 2012, 06:46 PM
வாக்குமூலம்: சுயசரிதைத் துளி இது!

chinnakkannan
13th March 2012, 10:35 AM
புரிகிறது..ஆமாம்..இப்போ ரெககவர் ஆகிட்டீங்களா..உடம்பைப் பார்த்துக்கோங்கோ..

pavalamani pragasam
13th March 2012, 11:57 AM
இத்தனை கழுதை வயசுக்கு ரொம்ப மெதுவாத்தான் நிலமை சீராகுது!:(எப்படி எங்கே என் பலமெல்லாம் போச்சின்னு என்னால நம்பவே முடியல!:roll:

kirukan
15th April 2012, 12:01 AM
Hope u r recovering well.Get well soon.

kirukan

pavalamani pragasam
15th April 2012, 08:14 AM
Thanks, kirukan! I'm quite OK now. Back to my 'busy'(?!) self!

pavalamani pragasam
28th April 2012, 09:04 AM
கருவை கவர்ந்ததால் கரு உருவாகிவிட்டது!!!

pavalamani pragasam
28th April 2012, 03:45 PM
அழுவாச்சி காவியம்! மனசு கனத்துவிட்டது.

chinnakkannan
28th April 2012, 06:54 PM
இது உண்மையான் விஷயம்.. ஒரு வாரமுன்பு நடந்த நிகழ்வு..(அவர் ஏக்கம் எல்லாம் படவில்லை...infact சந்தோஷம் தான்..சில மாதம் கழித்துச்சென்றால் கொஞ்சம் தூக்கிக்கலாமென்று நினைத்திருப்பார் போலும்..)

chinnakkannan
1st May 2012, 01:51 PM
ச்சும்மா எஞ்சாய் பண்றத விட்டுட்டு எரிச்சலாம் எரிச்சல்..! ஒரு வேளை வயசானதால் இருக்கலாமோ!! ( நான் ஓடுகின்ற படத்தையும், உட்கார்ந்திருக்கும் படத்தையும் ரசிப்பேன்!!)(ச்சும்மா..!)

pavalamani pragasam
1st May 2012, 07:49 PM
என்னது? வயசாகிவிட்டதா?:shock:எனக்கா? :evil:கடிகார முள் ஒரு தடவ சுத்தி வந்து திரும்ப இப்போதான் மூணு நிமிஷமான மாதிரி நான் என் பேரப்பிள்ளைகள் செட்டில் இருக்கிறேனே!:swinghead:

pavalamani pragasam
1st May 2012, 10:55 PM
நற நற..நிஜப்பல்தான், செட்டுப்பல் இல்லை! எவ்வளவு தில் இருந்தால் இப்படி நக்கலடிக்க முடியும்? கையில் சிக்கினீர்கள்...அவ்வளவுதான்...தூரத்தில் இருக்கும் தைரியம்!
(சிரித்து சிரித்து வயிறு வலிக்கிறது!பாட்டிக்கு செய்த ஒப்பனை ரொம்ப தப்பு! என் வழி தனி வழி!)

chinnakkannan
2nd May 2012, 10:13 AM
நா ஒளிஞ்சுக்குவேனே....

என்ன சிம்பிளா ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் வாசனை ப் பொடி பளஸ் மீனாட்சி குங்குமமா.. திருக்கல்யாணம் நல்ல படி யா முடிஞ்சுதா...

முதல்ல அடிச்ச ஏதோ...டைப்போ.. உடனேயே டெலீட்ட் பண்ணிட்டேனே.. நீங்க பாட்டீஈ லருந்து தான் ஆரம்பிக்கணும்..

pavalamani pragasam
2nd May 2012, 12:12 PM
உதட்டுச்சாயம், கறுப்புக்கண்ணாடினா நாகரிகமா? பூசுமஞ்சள் தூள், குங்குமம்னா கர்னாடகமா? இரண்டும் கலந்துகட்டி அழகான ஒரு ஒப்பனையில் உலா வரும் புதுமைப்பெண்களை அரிதாகத்தான் பார்க்க முடியும்- கற்பனை செய்யவோ காணவோ முடியாதது தங்கள் துர்பாக்கியம்!

தூங்கச்செல்லும் முன் வசியப்பெட்டியில் ஒவ்வொரு சன்னலாக மூடி முடிக்கும் அசதியில் எடிட் செய்ததை கவனிக்கவில்லை!
என்னதான் கரணம் போட்டாலும் 'பாட்டி' என்பது நிரூபணமாகிக்கொண்டேயிருக்கிறதே! சே! சோதனை!

கல்யாணம் ஜாம்ஜாமென்று முடிந்துவிட்டது.

chinnakkannan
2nd May 2012, 03:15 PM
இந்தக் காலத்தில எந்தப் பொண்ணுங்க பூசு மஞ்சள் தூள் எல்லாம் போட்டுக்கறாங்க..அதான் ஃபேர் அண்ட் லவ்லி, பேர் எவர் நு க்ரீம்லாம் வந்துடுச்சே.. நானே ஃபேர் அண்ட் லவ்லி யூஸ் ப்ண்றேந் ஜெண்ட்ஸ் க்ரீம்..இங்க மே மாத வெய்யில் ரெண்டு நாளா ரொம்ப ஜாஸ்தி..108க்கு மேல் இருக்கும் என நினைக்கிறேன்..காதல் இல்லைன்னு சொன்ன காதலியப் பார்த்து காதலன் விடற உஷ்ண மூச்சைப் போல பல மடங்கு உஷ்ணக் காத்து வேற..

அப்படி எல்லாம் மனசு தளராதீங்க.. நீங்க ஜீன்ஸ் படத்துல வர லஷ்மி மாதிரி...!

pavalamani pragasam
2nd May 2012, 07:22 PM
அட..அட..புல்லரிக்குது!
உஷ்ணக்காத்துக்கு உவமானம் சூப்பரா இருக்கே!

chinnakkannan
22nd May 2012, 06:44 PM
எல்லாம் மனசு தாங்க காரணம்..!(மறுபடியும் வ்யசாய்டுத்துன்னு சொல்ல மாட்டேனே!)

pavalamani pragasam
22nd May 2012, 07:44 PM
ஹி..ஹி..ஹி.. (அசட்டு சிரிப்பு!)
king.com என்னும் games தளத்தில் நான் ஜெயிக்கும் போது என் அவதார் உச்சரிப்பது,"age is for the body not the mind"!

pavalamani pragasam
24th May 2012, 09:24 AM
அழகான நீதிக்கதை!

chinnakkannan
24th May 2012, 09:33 AM
தாங்க்யூ..

pavalamani pragasam
19th June 2012, 09:01 AM
அழகான ஆப்பிள் கூடை!

chinnakkannan
19th June 2012, 10:00 AM
நன்றிங்க..

chinnakkannan
18th July 2012, 08:26 AM
கஜன் நன்றி நலமா எப்படி இருக்கிறீர்கள்..வெகு நாட்கள் ஆகி விட்டன.. தாங்களும் பங்கு பெறலாமே

chinnakkannan
1st August 2012, 10:05 AM
அது சரி ஈ.. பஃபே பீச்.. சினிமா.. எஞ்சாய்..கொஞ்சம் கண்ட்ரோல்லா சாப்பிடுங்க..

pavalamani pragasam
1st August 2012, 02:28 PM
:rotfl2::rotfl2::rotfl2:

chinnakkannan
1st February 2013, 10:54 PM
பவள மணிக்கா..எப்படி இருக்கீங்க..உங்களை வரவழைக்கறதுக்குத் தான் எழுதினேன்..இன்னும் பன்னிரண்டு மணி நேர மின் வெட்டா அங்கே..?

pavalamani pragasam
2nd February 2013, 09:10 AM
நிறைய முக்கிய வெளி வேலைகள், பிள்ளைகளுடன் விடுமுறை கொண்டாட்டங்கள், சம்சார சாகரத்தில் பல எதிர்பாரா நிகழ்வுகள்- எப்படியோ பொழுது பரபரப்பாய் போகிறது. 24 மணி நேரமும், இருக்கின்ற உடல் தெம்பும் போதவில்லை-ஆசைப்படும் அனைத்தையும் செய்வதற்கு-முகநூலில் விளையாட, இங்கே நடக்கும் விஸ்வரூப வெளியீட்டு காரசார விமர்சன கூத்துக்களை கூட முழுசாய் படிக்க நேரம் இல்லை. இதுவும் நல்லாத்தான் இருக்கு!மின்வெட்டில் அப்பப்போ தளர்வு, பிறகு மீண்டும் பழைய குருடி கதவை திறடி! இன்வெர்டர் கரென்டில் என்னவர் டிவி பார்ப்பதா நான் கணிணிக்குள் மூழ்கிக் கிடப்பதா என்ற பிரச்சினைக்கு முடிவாக மூத்த மகன் எனக்கு புதிய சோனி லாப்டாப் விண்டோஸ் 8 உள்ளது வாங்கி கொடுத்துள்ளான்!:-d

chinnakkannan
2nd February 2013, 10:18 AM
அதான் புது லேப்டாப் வந்துடுத்துல்ல இறங்கி விளையாடுங்க..

pavalamani pragasam
2nd February 2013, 02:02 PM
inverter இருக்கு, wifi modem இருக்கு, puthu laptop இருக்கு, நேரம் இல்லையே!

chinnakkannan
3rd February 2013, 12:39 PM
தாங்க்ஸ் ஃபார் கமிங்க்..பி.பிக்கா.. அது என்ன சம்சாரசாகரத்தில ஏகப்பட்ட மாறுதல்..உங்க பேரனுக்கும் கல்யாணம் ஆயிடுத்தா?!! (லொள்)

chinnakkannan
3rd February 2013, 12:40 PM
என் முக நூலில் என்னை நண்பராக ஏற்றுக்கொண்டிருக்கிறார் பாக்கியம் ராமசாமி (அப்புசாமி சீதாப்பட்டி..அவரே)
இந்த வயதில் என்னமாய் எழுதுகிறார் தெரியுமா..

pavalamani pragasam
3rd February 2013, 06:26 PM
லொள்ளு!

பேரன் கல்யாணத்துக்கு நாள் இருக்கு! 3 சம்பந்தம் கலந்தாச்சி; பெரிய குடும்பத்துல பிறந்து பெரிய குடும்பத்துல புகுந்து.....ஆயிரத்தெட்டு லௌகீக சமாசாரம் இருக்கே!

'பாக்கியம்' பெற்றதற்கு வாழ்த்துக்கள்!

chinnakkannan
8th February 2013, 12:31 PM
அது எப்படி பரணைச் சுத்தம் செய்யலாம் நீங்கள்..புதிய தலைமுறைக்கு என்றாவது தேவைப் படலாம் அல்லவா..அனுபவங்கள், புத்தகங்கள் எல்லாமே முக்கியம் தான்.. தெரிந்த வைத்திய முறைகள், டைரிக்குறிப்புக்ள் என்றாகிலும் பலன் கொடுக்கத் தான் செய்யும்..

pavalamani pragasam
8th February 2013, 07:35 PM
அவையெல்லாம் தேவையே படாது; யாருக்கும் பொறுமையோ அவகாசமோ இருக்காது; மாறுகின்ற சூழலில் பழங்கால வழிமுறைகள் வழக்கழிந்து போன நிலையில் அவற்றை பதிவு செய்த எந்த நூலும் பயனளிக்காது, படிக்கும் வழக்கம் இன்னும் சாகவில்லைதான், ஆனால் ஐபாடும் லேப்டாப்புமாய் திரியும் அடுத்த தலைமுறைகளை சென்றடைய என் வழி இணையமே! என் கருத்துக்கள்- இனிப்பவை, கசப்பவை,குதிங்கால் வலிக்கு எளிய தீர்வு முதற்கொண்டு, பாரம்பரிய சமையல் குறிப்புகள் வரை - எல்லாமே எங்கெங்கும் இறைந்து கிடக்கின்றனவே!
பரண் விஷயங்களை படித்து முதுகு சொறிந்து புளங்காகிக்க எனக்கே பொழுதில்லையே, என் வாரிசுகளுக்கு எப்படி இருக்கும்?:rotfl:

chinnakkannan
8th February 2013, 11:10 PM
ஏதாகிலும் ஒரு இடத்தில் பதிவாக இருந்தால் நல்ல்து..பெரியவர்களிடம் நாம் சில விஷயங்களைக் கற்றுக்கொள்ள விட்டு விடுகிறோம்..அதே தவறையும் நம் குழந்தைகள் செய்யத் தான் செய்கிறார்கள்..இருப்பினும் நமது அனுபவம்..குறிப்பாக மருத்துவக் குறிப்புகள் வீட்டில் எங்கேயாவது இருந்தால் நல்லது தானே..(உதாரண்ம்..முன்பெல்லாம் வாயுத் தொல்லை, ஹார்ட் பர்ன் என்று வரும் போது என் மாமியார் ஒரு இஞ்சு சுக்குப் பொடியோ என்னவோ ஒரு பொடி கலந்து கொடுத்தனுப்புவார்..ஒரு சிட்டிகை போட்டால் போதும்..எல்லாம் மாயமாகிவிடும்(சிறிது நிமிடம் மாமியாரின் நினைப்பு வரும் அது வேறு விஷயம்!).. இப்போதுமாமியார் காற்றில்கலந்து ஐந்து வருடங்கள்.. என் மனைவிக்கும் அந்தப் பொடி பற்றித் தெரியாது..அவர் குடும்பத்தினருக்கும்...பின் நிறைய குழந்தை வைத்தியக் குறிப்புகள் சட் சட்டென்று ..உண்டானது முதல் டெலிவ்ரி வரை வாய் வார்த்தையாகவும், மருந்தாகவும் அவரிடமிருந்து வரும்..அதெல்லாம் போயே போயிந்தே இட்ஸ் கான்..

pavalamani pragasam
8th February 2013, 11:44 PM
பிரச்சினை அனுபவ அறிவுள்ள பெரியவர்கள் மறைவதும் அவர்கள் கலை தொடராததும் மட்டும் இல்லை! மரபணு மாற்றிய பயிர்களால் மண்ணை மலடாக்கி, செயற்கை ரசாயன உரத்தால் உடம்பை வியாதிக்கூடமாக்கி, தின்ன வேண்டியது சத்தில்லாமல் விளைவிக்கப்பட, கண்ட கண்ட கொழுப்புத் தீனிகளை பெரியவரும் சிறியவரும் கொறித்துத் தள்ள நடமாடும் மாமிச மலைகளாய் மக்கள் மாறி வர-எத்தனை உடற்பயிற்சி நாகரிகம் வளர்ந்தாலும்-தாராளமாய் கிடைக்கும் ஒரு ஈனோ பொடி பாக்கெட்டோ ஒரு டைஜீன் மாத்திரையோ இருக்க சுக்குதான் வேண்டுமென்று தொலந்துபோன சகாப்த்தத்தை எண்ணிக்கொண்டிருப்பதில் எனக்கு உடன்பாடில்லை.
பழையன கழிதலும் புதியன புகுதலும் மரபு. புதியன பூதங்களாய் மரபின்றி, நெறியின்றி புகுவதுதான் வேதனை!