PDA

View Full Version : Makkal thilagam mgr- part 25



Pages : 1 2 3 4 5 6 7 8 9 10 11 [12] 13 14 15 16 17

fidowag
7th March 2020, 05:56 PM
கடந்த*வெள்ளியன்று*(06/03/20) சென்னை சாலிகிராமம்*, ஸ்டேட்*பேங்க்*காலனியில்* திரைப்பட*பாடலாசிரியர் , கவிஞர் முத்துலிங்கம்*அவர்களின்*மகள் இல்லத்தின் புதுமனை புகுவிழா சிறப்பாக நடைபெற்றது . சென்னை*பெருநகர*முன்னாள் மேயர்*திரு.சைதை*துரைசாமி, தென்சென்னை மேற்கு மாவட்ட அ.தி.மு.க.செயலாளர் விருகை*என்.ரவி, திரையுலகை*சார்ந்தவர்கள், பத்திரிகை நிருபர்கள், கவிஞர்கள்* மற்றும் முக்கிய*பிரமுகர்கள்*கலந்து*கொண்டு*சிறப்பித்தன ர்.* உரிமைக்குரல் ஆசிரியர் திரு.பி.எஸ்.ராஜு, திரு.பாண்டியராஜு, திரு.ஆர். லோகநாதன் (ஆயிரத்தில் ஒருவன் இறைவன் எம்.ஜி.ஆர். பக்தர்கள்*குழு ) ஆகியோர்*நிகழ்ச்சியில் பங்கேற்று சிறப்பித்தனர் .

fidowag
8th March 2020, 10:35 AM
தென்னக*ஜேம்ஸபாண்டாக நடித்து புரட்சி செய்த*புரட்சி நடிகர்*எம்.ஜி.ஆரின்*"ரகசிய*போலீஸ் 115" டிஜிட்டல் வடிவில், புதிய தொழில்நுட்பத்தில் சென்னை*பெருநகரில்*கீழ்கண்ட அரங்குகளில் 13/03/20 முதல் வெளியீடு .

சத்யம்*/எஸ்கேப் / உட்லண்ட்ஸ்/பெரம்பூர்* எஸ்*2/பலாஸோ*/தி.நகர் ஏ.ஜி.எஸ்./கே.கே.நகர் -காசி, /வேளச்சேரி*லக்ஸ்*/பி.வி.ஆர்.-எஸ்.கே.எல்.எஸ்./அண்ணா*நகர் -பி.வி.ஆர்.- வி..ஆர். மால்*/ ஈ .சி.ஆர். -பி.வி.ஆர்./* *ஓ.எம்.ஆர்.-ஏ.ஜி.எஸ்./ஐனாக்ஸ்* நேஷனல் /ஓ.எம்.ஆர். ஐனாக்ஸ் மெரினா*

தினத்தந்தி*-08/03/20

fidowag
8th March 2020, 10:35 AM
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அன்புடன் ரசிகர்களை "அன்பே*வா " என*அழைக்கிறார் .

டிஜிட்டல் வடிவில்*முற்றிலும் புதிய தொழில்நுட்ப்பத்தில்* மார்ச்*27 முதல்*
புலியை*பார் நடையிலே*என*முழக்கத்துடன்* ஜே.பி. தமிழகத்திற்கு வருகை .

தினத்தந்தி*-08/03/20

fidowag
8th March 2020, 09:03 PM
தினகரன் - வெள்ளி மலர் -06/03/20
----------------------------------------------------------
எம்.ஜி.ஆர். ஸ்பெஷல் - வீழ்ச்சியும் , எழுச்சியும் .- கோட்டாறு*ஆ. கோலப்பன்*
------------------------------------------------------------------------------------------------------------------------

எம்.ஜி.ஆர். 19 வயதிலேயே சினிமாவுக்கு வந்து விட்டாலும், அவர் ஹீரோவாக நிலைபெற மேலும் பதினைந்து ஆண்டுகள் ஆகின.* இடைப்பட்ட காலத்தில் கிடைத்த வேடங்களை எல்லாம் ஏற்று நடித்தார்.* சினிமாவில் கதாநாயகனாக அவர்* உயர்ந்துக் கொண்டிருந்தபோது, தொடர்ந்து நாடகங்களிலும் நடித்துக் கொண்டிருந்தார் .* இன்பக்கனவு* என்கிற நாடகத்தில் ஸ்டண்ட் காட்சியில் நடிகர் குண்டுமணியை தூக்கி எறிவது போல காட்சி அமைக்கப்பட்டிருந்தது .* குண்டுமணியின் பாரம் தாளாமல் எம்.ஜி.ஆரின் கால் எலும்பு முறிந்தது* *

அவ்வளவுதான் எம்.ஜி.ஆரின் கதை என்று எதிரிகள் குதூகலித்தனர் .* கால் முறிவு, எம்.ஜி.ஆரை , மூன்று மாதங்கள் மட்டுமே முடக்கியது . அதன் பின்னர் முன்னிலும் வேகமாக திரைப்படங் களில் நடித்து வெற்றிகளைக் குவித்தார் .* குதூகலித்தவர்கள்* காணாமல் போனார்கள் .**

பத்து ஆண்டுகள் கழித்து எம்.ஆர். ராதாவால்* எம்.ஜி.ஆர். சுடப்பட்டபோதும் இதே போன்ற நிலை.* *அதே போன்று எம் .ஜி.ஆர். மீண்டெழுந்து* வந்து தமிழ் சினிமாவின் தன்னிகரில்லா நாயகனாக நிமிர்ந்து நின்றார் .**

எப்போதெல்லாம் வீழ்கிறாரோ, அப்போதெல்லாம் முன்னிலும் பலமடங்கு விஸ்வரூபம்* எடுத்து எழுவார் என்பது எம்.ஜி.ஆரின். ஜாதகம்

fidowag
8th March 2020, 09:46 PM
.தினகரன் - வெள்ளி மலர் -06/03/20
----------------------------------------------------------
எம்.ஜி.ஆர். ஸ்பெஷல் - கோட்டாறு* ஆ. கோலப்பன்*
------------------------------------------------------------------------------------
எம்.ஜி.ஆருக்கு இல்லாத உரிமையா ?
------------------------------------------------------------

இந்தியில் பிரபல இயக்குனரும், நடிகருமான சாந்தாராம் தன்னுடைய படங்களின் ரீமேக் உரிமையை யாருக்கும் வழங்க மாட்டார். 1957ம் ஆண்டு அவர் இயக்கி நடித்து வெளிவந்த " தோ ஆங்கேன் பாரா ஹாத் " இன்று வரையிலும் இந்தியாவின் டாப் 10 இந்தி படங்களின் பட்டியலில் இடம் பெறுகிறது .

எம்.ஜி.ஆரு க்கும் மிகவும் பிடித்த படம்* இது. சாந்தாராம், ரைட்ஸ் கொடுக்க மாட்டார் என்பதால்தான் நடிக்க விரும்பியும்* முடியாமல் இழுத்துக் கொண்டே போனது .* படம் வெளியாகி கிட்டத்தட்ட இருபது ஆண்டுகள் ஆகி கொண்டிருக்கும் நிலையில் , இனியும் பொறுக்க முடியாது என்று சாந்தாராமிடம் ரைட்ஸ் கேட்டார் .**

அட என்னங்க நீங்க .... நீங்களே நடிக்கப் போறீங்கன்னு கேட்டா நான் உரிமை* தர மறுப்பேனா ?* என்னிடம் உங்களுக்கு இல்லாத உரிமையா ? என்று* செல்லமாக கோபித்துக் கொண்டு, தமிழில் அப்படத்தை எடுக்கும்* உரிமையை கொடுத்தாராம் சாந்தாராம் .

எம்.ஜி.ஆர். நடிப்பில் புதிய பரிமாணம்* காட்டி, பெரும் வெற்றியை எட்டிய "பல்லாண்டு வாழ்க" தான் அந்த திரைப்படம்.* "பல்லாண்டு வாழ்க" திரைப்படத்தின் தெலுங்கு வடிவத்தில்தான் நடிக்க விரும்பினார் என்.டி.ஆர்.தன் உடன்பிறவா சகோதரனுக்காக சாந்தாராமிடம்* பேசி தெலுங்கு ரீமேக் உரிமையையும் எம்.ஜி.ஆர். வாங்கிக் கொடுத்தார் .

fidowag
8th March 2020, 09:57 PM
தினகரன் - வெள்ளி மலர் -06/03/20
----------------------------------------------------------
எம்.ஜி.ஆர். ஸ்பெஷல் - கோட்டாறு* ஆ. கோலப்பன்*
------------------------------------------------------------------------------------
old is gold -ரசிகர் மன்றத்தை திறந்து வைத்த இந்திய பிரதமர்*

----------------------------------------------------------------------------------------------------
ஹீரோக்களுக்கு ரசிகர் மன்றங்கள் என்கிற கலாச்சாரத்தை உலகத்திற்கே அறிமுகப்படுத்தியவர்கள் தமிழர்கள்தான் . எம்.ஜி.ஆர். திரைப்படங்களில் உச்சமடைந்த காலத்தில்தான் , தமிழகத்தில் பட்டி தொட்டியெல்லாம் அவருக்கு ரசிகர் மன்றங்கள் தொடங்கப்பட்டன .**

கடல்கடந்தும் ரசிகர் மன்றங்களை வென்றவர் எம்.ஜி.ஆர். ஒருவரே .

அந்தமான் - நிக்கோபார் தீவுகளிலும் கூட "பணத்தோட்டம் " எம்.ஜி.ஆர். ரசிகர் மன்றம் செயல்பட்டது .* இந்த மன்றத்திற்கு என்ன சிறப்பென்றால்*, அதை திறந்து வைத்தவர் இந்திய பிரதமராக இருந்த திரு. லால் பகதூர் சாஸ்திரி அவர்கள் .

இன்றளவிலும் கூட , வேறெந்த நடிகருக்கும் ,இந்திய பிரதமர் ரசிகர் மன்றம் திறந்து வைத்த வரலாறு இல்லை .

fidowag
8th March 2020, 10:08 PM
தினகரன் - வெள்ளி மலர் -06/03/20
------------------------------------------------------
எம்.ஜி.ஆர். ஸ்பெஷல்* - கோட்டாறு ஆ. கோலப்பன்*
-----------------------------------------------------------------------------------
எம்.ஜி.ஆரை வியந்த தர்மேந்திரா*
--------------------------------------------------------

இந்தி படங்களின் சூப்பர் ஸ்டாரான தர்மேந்திரா எம்.ஜி.ஆரின் பரம ரசிகராக விளங்கியவர் .* ஒருமுறை கும்பகோணத்தில் ஒரு நிகழ்ச்சிக்காக வந்திருந்தவர் மும்பை திருப்புவதற்காக சென்னை வந்தார் .* *எம்.ஜி.ஆரின் " நீரும் நெருப்பும் " படத்திற்காக சண்டைக் காட்சி படப்பிடிப்பு நடைபெறுவதை அறிந்தார் .* அதை நேரில் பார்க்க விரும்பி, எம்.ஜி.ஆரிடம் வேண்டுகோள் விடுத்தார் .**

எம்.ஜி.ஆரின் அழைப்பின் பேரில் படப்பிடிப்பு தளத்துக்கு வந்து அன்று முழுக்க படப்பிடிப்பை* விரும்பி பார்த்தார்.* எம்.ஜி.ஆர். வாள் சுழற்றும் வேகத்தை கண்டு அசந்து போனார் .* படப்பிடிப்பு இடைவேளையில் எம்.ஜி.ஆர். கையில் இருந்த வாளை* தொட்டு பார்த்தவருக்கு அதிர்ச்சி.* என்ன சார், உண்மையான* வாள் கொண்டு சண்டை* போடறீங்க ? என்று தன்* வியப்பை வெளிப்படுத்தினார் .

தான் முறையாக சண்டைக்கு கலைகளை கற்றுத் தேர்ந்தது குறித்து தர்மேந்திராவுக்கு விளக்கினார் எம்.ஜி.ஆர். அவரிடம் மேலும் சில ஸ்டண்ட் நுணுக்கங்களை கேட்டறிந்த மகிழ்ச்சியுடனேயே ஊருக்கு விமானம் ஏறினார் தர்மேந்திரா

fidowag
8th March 2020, 10:19 PM
.
தினகரன் - வெள்ளி மலர் -06/03/20
------------------------------------------------------
எம்.ஜி.ஆர். ஸ்பெஷல்* - கோட்டாறு ஆ. கோலப்பன்*
-----------------------------------------------------------------------------------
எம்.ஜி.ஆரை பின் தொடர்ந்த ஏழு*
----------------------------------------------------------
எம்.ஜி.ஆரின் பிறந்த தேதி* ஜனவரி 17, 1917

மதுரை ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனியில் சேர்ந்தபோது எம்.ஜி.ஆரின் வயது 7

எம்.ஜி.ஆர். முதன்முதலாக கதாநாயகனாக "ராஜகுமாரியில் " நடித்த ஆண்டு 1947

சொந்த நாடக கம்பெனியான எம்.ஜி.ஆர். நாடக மன்றம் அமைத்தபோது அவரது வயது 37.

காங்கிரஸ் கட்சியில் எம்.ஜி.ஆர். சேர்ந்த ஆண்டு 1947.
காங்கிரசில் இருந்து விலகி, தன்னை தி.மு.க. வில் இணைத்துக் கொண்ட ஆண்டு 1953.

எம்.ஜி.ஆர். பிக்ச்சர்ஸ் தயாரிப்பில் , தானே நடித்து , இயக்கிய நாடோடி மன்னன்*ஆரம்பிக்கப்பட்டது* 1957ல்*

முதன் முதலாக எம்.ஜி.ஆர். சட்டமன்ற உறுப்பினர் ஆன ஆண்டு* 1967.

எம்.ஜி.ஆர். தமிழக முதல்வராக பொறுப்பேற்ற ஆண்டு 1977.

எம்.ஜி.ஆர். இப்பூவுலகை விட்டு மறைந்த ஆண்டு* 1987.

fidowag
8th March 2020, 10:37 PM
.
தினகரன் - வெள்ளி மலர் -06/03/20
------------------------------------------------------
எம்.ஜி.ஆர். ஸ்பெஷல்* - கோட்டாறு ஆ. கோலப்பன்*
-----------------------------------------------------------------------------------

ஈஸ்ட் மென் கலரில்* எம்.ஜி.ஆர்.*
-------------------------------------------------
எம்.ஜி.ஆரா , அவர் ரோஸ் கலரா இருப்பாரே ? என்று இன்றும் கூட நம்ம ஊர்க்கிழவிகள் நாணப்படுகிறார்கள் .**

ரோஸ் கலர் எம்.ஜி.ஆர். வண்ணப் படங்களில் நடித்ததே குறைவு என்பதுதான் ஆச்சரியம் .* மொத்தமாக எம்.ஜி.ஆர்.136 படங்கள் மட்டுமே நடித்திருக்கிறார் .அவற்றில் கிட்டத்தட்ட 100 படங்கள் கருப்பு வெள்ளையில் எடுக்கப்பட்டவையே .

அலிபாபாவும்* 40 திருடர்களும்* படம்தான் தமிழில் முதல் வண்ணப்படம்*என்பார்கள் .* எனினும்* அது கேவா கலர் என்கிற தொழில் நுட்ப்பத்தில் எடுக்கப்பட்டது.* திரையில் பார்த்தா ல் கலர் மாதிரி* தெரியும் .* ஆனால்,கலரல்ல..பிக்ச்சர் டியூப் போய்விட்ட பழைய டி.வி.யில் படம் பார்ப்பது போல இருக்கும் .**எம்.ஜி.ஆரின் கனவு படமான நாடோடி மன்னன் இடைவேளை வரைக்கும் கருப்பு வெள்ளைதான் . சரோஜாதேவி* அறிமுகமாகும் காட்சியில் இருந்து கலராகும்.

படகோட்டி, எங்க வீட்டு பிள்ளை, ஆயிரத்தில் ஒருவன்* அன்பே வா , பறக்கும் பாவை , ரகசிய போலீஸ் 115 ,குடியிருந்த கோயில், ஒளி விளக்கு, அடிமைப்பெண் , நம்நாடு , மாட்டுக்கார வேலன் , என் அண்ணன் ,தேடி வந்த மாப்பிள்ளை, எங்கள் தங்கம் ,குமரிக்கோட்டம், ரிக்ஷாக்காரன், நீரும் நெருப்பும், சங்கே முழங்கு, நல்ல நேரம் , ராமன் தேடிய சீதை, நான் ஏன் பிறந்தேன், இதய வீணை, உலகம் சுற்றும் வாலிபன் , பட்டிக்காட்டு பொன்னையா , நேற்று இன்று நாளை, உரிமைக்குரல், சிரித்து வாழ வேண்டும், நினைத்ததை முடிப்பவன், நாளை நமதே , இதயக்கனி,* பல்லாண்டு வாழ்க , நீதிக்கு தலை வணங்கு, உழைக்கும் கரங்கள், ஊருக்கு உழைப்பவன் , நவரத்தினம் , இன்று போல் என்றும் வாழ்க, மீனவ நண்பன், மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன்* ஆகிய படங்கள் ஈஸ்ட்மென் கலரில் வெளியான படங்கள் .

fidowag
9th March 2020, 08:05 PM
மக்கள் குரல் - அலிபாபா -08/03/20
------------------------------------------------------
இயக்குனர் நீலகண்டனுக்கு உயிர் கொடுத்த எம்.ஜி.ஆர்.*
------------------------------------------------------------------------------------------

ப. நீலகண்டன் என்கிற இந்த பெயரை* தமிழ் திரையுலகம் அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியாது . இன்றைக்கு அவர் இருந்திருந்தால் 104 வயது உடையவராக இருப்பார்.1916ல் விழுப்புரத்தில்* பிறந்த நீலகண்டன்* அவரது மாவட்டத்தில் அன்றைய சூழலில் பி.ஏ. பட்டம் பெற்ற* பட்டதாரிகளில்* ஒருவர்*

தனது இளம் வயதிலேயே திரைப்பட உலகத்தால் ஈர்க்கப்பட்ட அவர் ஆங்கிலப்படங்களை அதிகம் விரும்பி பார்த்ததால், அவற்றின் திரைக்கதை, வசனங்களை எழுதும் பாணியை ஆர்வத்துடன் கற்று தேர்ந்தார் .* இளைஞர் நீலகண்டனின் திறமையைக் கேள்விப்பட்ட ஏ.வி.எம். அதிபர் மெய்யப்பன் செட்டியார் அவரை அழைத்து, தனது நிறுவனத்தின் சார்பாக " நாம் இருவர் " படத்தை இயக்கம் பொறுப்பை* அளித்தார்.* படம் மாபெரும் வெற்றி .**

அதன் பிறகு இயக்குனர் நீலகண்டனின் வாழ்வில் வசந்தம் தான் .* தமிழ் திரைப்பட உலகின் முடிசூடா மன்னரான மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்களின் பல படங்களை இயக்கினார் .* எம்.ஜி.ஆரை வைத்து அவர் இயக்கிய " மாட்டுக்கார வேளாண் " வசூலில் வெற்றி பெற்று சாதனை* படைத்தது .* இதை தொடர்ந்து ,எம்.ஜி.ஆரின் ஆஸ்தான இயக்குனர் ஆனார் நீலகண்டன் .**
இந்த சூழலில் , ஒரு நாள் எம்.ஜி.ஆரின்* திரைப்படம் ஒன்றை வாகினி ஸ்டுடியோவில் இயக்கி கொண்டிருந்தார் நீலகண்டன் .* காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை படப்பிடிப்பு சுறுசுறுப்பாக நடந்தது .* கதாநாயகன் எம்.ஜி.ஆரும்* மிகவும் உற்சாகமாக அன்றைய காட்சிகளில் நடித்தார் .**

படப்பிடிப்பு முடிந்ததும் , நேராக ஒப்பனை அறைக்கு சென்று எம்.ஜி.ஆர். சற்று நேரத்தில் மேக்கப் கலைத்துவிட்டு வெளியே வந்தார் . அதே நேரத்தில், இயக்குனர் நீலகண்டனும் தனது பணிகளை முடித்துவிட்டு மறுநாளைய படப்பிடிப்புக்கான காட்சிகளை தனது உதவியாளர்களிடமும் , கேமராமேனிடமும் விவரித்துவிட்டு புறப்பட்டார் .* அப்போது எம்.ஜி.ஆர்.*அவரிடம் கிண்டலாக , என்னய்யா , என்னை நல்லா டிரில் வாங்கறீங்களே , பாத்து பாத்து , என்று சொல்லிவிட்டு உரக்க சிரித்தபடியே வேகமாக நடந்தார் .

அவருக்கு இணையாக நடக்க முடியாமல் நீலகண்டன் சற்றும் பின்னாடியே நடந்து வந்தார் .* அப்போதுதான் அந்த சம்பவம் நடந்தது. திடீரென்று அடடா, அய்யய்யோ* என்று குரல் எழுந்ததை கேட்ட எம்.ஜி.ஆர். சட்டென்று திரும்பி பார்த்தார் .

அங்கே தரையில் நீலகண்டன் அப்படியே மயங்கி* சரிந்திருந்ததை எம்.ஜி.ஆர். கண்டு பதறினார் .* உடனே, தண்ணீர், தண்ணீர் என்று கூச்சலிட்ட அவர் ,நீலகண்டனின் முகத்தில் சிறிது தண்ணீரை தெளித்தார் .* அப்போது நீலகண்டனின் உடலில் லேசான அசைவு தென்பட்டது .*
உடனடியாக தனது ஜிப்பாவின் பாக்கெட்டில் இருந்து ஒரு மாத்திரைக்குப்பியை எடுத்த எம்.ஜி.ஆர். அதன் மேல் பகுதியில் இருந்த பட்டனை அழுத்தினார் .**அதில் இருந்து ஒரு மாத்திரை எம்.ஜி.ஆரின் உள்ளங்கையில் விழுந்தது .

அப்போது நீலகண்டன், நீலகண்டன், எழுந்திருங்க என்று சத்தமாக சொன்னார் .எம்.ஜி.ஆர். பிறகு நீலகண்டன் வாயில் கொஞ்சம் தண்ணீரை ஊற்றிவிட்டு அந்த மாத்திரையையும் வாய்க்குள் போட்டார் .

அடுத்த சில*மணித்துளிகளில் அந்த அதிசயம் நடந்தது. எ*துவுமே*நடக்காதது*போல தரையில் இருந்துஎ ழுந்து*உட்கார்ந்த*நீலகண்டன்*தன்* அருகே கவலையுடன் உட்கார்ந்து*கொண்டிருந்த எம்.ஜி.ஆரையும் சுற்றி நின்று கொண்டிருந்தவர்களை யும்*பார்த்து என்ன நடந்தது*என்று வியப்புடன்*கேட்டார் .* அப்போது எம்.ஜி.ஆர் தன்*உரித்தான புன்னகையுடன் ஒன்றும் இல்லை நீலகண்டன்*, கொஞ்சம்*சொர்க்கம்*வரைக்கும் சென்று வந்திருக்கீங்க , உங்களுக்கு மாரடைப்பு ஏற்பட்டது.* நான் ஒரு மாத்திரையை*உங்க*வாயில் போட்டேன்*.* அவ்வளவுதான் என்று கூறியபடியே எழுந்தார் .

அங்கே இருந்த*தயாரிப்பு நிர்வாகியை*பார்த்து இவரை*உடனடியாக ஆஸ்பத்திரியில் அட்மிட்*பண்ணுங்க*.* செலவு என்னுடையது .* என்று உத்தரவு பிறப்பித்தார் .* அப்ப்போது இயக்குனர் நீலகண்டன்* கண்களில் கண்ணீர் வழிய சின்னவரே, என்னை*இன்னைக்கு*காப்பாதிட்டீங்க* இன்னும் எத்தனை நாளோ*, என்றார் கலங்கியபடியே .

அவரை*மெல்ல தட்டிக் கொடுத்த*எம்.ஜி. ஆர். அய்யா , அது நம்ம*கையிலே இல்லை .* வரும்போது வரட்டும்*.* இன்னும் பத்து நாள் கழித்து ஷூட்டிங்*வைத்துக் கொள்ளலாம் .* முதல்ல*மருத்துவமனைக்கு போங்க* என்றார்*பரிவுடன்*.

இந்த நிகழ்வைக்*கேள்விப்பட்ட நடிகர்*சோ*, எம்.ஜி.ஆரிடம், அது என்னங்க மாத்திரை* இதெல்லாம் எப்படிங்க என்றார் வியப்புடன்*.

என்னிடம் இதுமாதிரி*மாத்திரைங்க எப்போதும்*கைவசம் இருக்கும் .* சிங்கப்பூரிலிருந்து வரவழைத்து என்னிடம் பத்திரமாக வைத்திருக்கிறேன் .*இன்னைக்கு*அது நீலகண்டனைக் காப்பாற்றிவிட்டது . என்று சிரித்தபடியே சொன்னார்*எம்.ஜி.ஆர் .

உடனே, " யு*ஆறே*ரியலி*கிரேட்*சார்*" என்று எம்.ஜி.ஆரை பாராட்டினார் நடிகர் சோ* ,.மக்கள் திலகத்தின் வாழ்வில்* இது போன்ற நிகழ்வுகள் பல உண்டு.*மக்கள் திலகம் என்கிற*பட்டத்திற்கு இன்று வரை பொருத்தமானவர் அவர் மட்டுமே*.

இந்த நிகழ்விற்கு பிறகு பல ஆண்டுகள் இயக்குனர் நீலகண்டன்*நலமுடன்*வாழ்ந்தார்.* படங்களையும் தொடர்ந்து இயக்கினார்.* தனது இதயத்தில் எம்.ஜி.ஆரை*வணங்கியபடியே*
=-இளமாறன் .

orodizli
10th March 2020, 10:34 PM
போட்டியிடு! தோற்கலாம்!!
--------------------------------------------
எம்.ஜி.ஆர் கொடையாளி!! என்று ஆரம்பித்தால்--யாருய்யா இல்லேன்னது என்று நீங்கள் சீறும் அபாயம் ஒரு புறம் இருந்தாலும்--
இன்றைய நமது பதிவின் சாராம்சமே--
அவர் கொடைத்தன்மை அன்றைய எதிர்க்கட்சியாளர்கள் மத்தியில் எப்படி பேசப்பட்டது என்பதே!!
அது அவ்வை இல்லம் கட்டிடம் கட்டும் விழா!!
சென்னையில் இன்று செம்மையான முறையில் இயங்கி வரும் அவ்வை இல்லத்துக்கு முதன் முதலில் கட்டிடம் கட்ட பெருத்ததொரு தொகையை தனி ஒரு நபராக அளித்தவர் எம்.ஜி.ஆர்!!
1960ஆம் ஆண்டிலேயே,,அப்போதிருந்த பண மதிப்பில் எம்.ஜி.ஆர் அன்று கொடுத்த நன்கொடை-- நாற்பதாயிரம் ரூபாய்! கணக்குப் போட்டுக்குங்க--
பலரின் நன் கொடை வேண்டியும்,,எம்.ஜி.ஆர் கொடுத்த நன்கொடையில் கட்டடம் கட்ட ஒரு விழா நடக்கிறது!
அண்ணா,,அப்போதைய நிதியமைச்சர் சி.சுப்ரமணியம்,,அப்போதைய சட்டப் பேரவைத் தலைவர் யு.கிருஷ்ணாராவ் உள்ளிட்ட சான்றோர்கள் கலந்து கொள்வதால் வேறு வழியின்றி எம்.ஜி.ஆரும் கலந்து கொள்கிறார்!
அன்று சி.எஸ் என்று அன்புடன் அழைக்கப்பட்ட திரு சி.எஸ் சுப்பிரமணி அவர்கள் பலத்தக் கரவொலியின் பின்னணியில் இப்படிப் பேசுகிறார்--
எம்.ஜி.ஆர் ஒரு விஷயத்துக்கு நன்கொடை தரார்னு சொன்னாலே அது கற்பனைக்கும் மிஞ்சியதாகத் தான் இருக்கும். அதுவும் பசிக்கு,,கல்விக்கு என்றால் பெரிய அளவிலே இருக்கும்! அதனால இந்தக் கட்டடத்துக்கு நன்கொடை தர விரும்பறவங்க எம்.ஜி.ஆரோடு போட்டி போட்டு அவர ஜெயிக்கணும்ன்னு நான் எதிர்பார்க்கறேன்??
அடுத்தது பேச எழுகிறார் யு.கிருஷ்ணா ராவ்!
காங்கிரஸ்கட்சியாளரும்,,அப்போதைய சட்டப்பேரவை தலைவருமான அவர் பேசியது--
எம்.ஜி.ஆரோடு நன்கொடை விஷயத்தில் போட்டியிடுமாறு சி.எஸ் சொன்னார். ஆனால்-?
எம்.ஜி.ஆரோடு இந்த விஷயத்துல யாரும் போட்டி போட முடியாதுங்கறது தான் உண்மை!
நாலுபேர் ஒண்ணா சேர்ந்து கொடுக்கற தொகையை அவர் ஒருத்தரே கொடுத்துடுவார்.
யாரேனும் அதிகமாக் கொடுக்கக் கூடியவங்க இருந்தாலும்,,அவுங்க கொடுக்கற தொகைக்கு மேல தான் எம்.ஜி.ஆர் பங்கு இருக்கும்??
அதனால வெற்றிகள வரிசையா அடைஞ்சிட்டு வரும் எம்.ஜி.ஆருக்கே இந்த விஷயத்திலும் வெற்றி தான் கிடைக்கும்???
நன்றாக கவனிக்கவும்!
நடந்தது அன்றைய தி.மு.க விழா அல்ல!
சொல்லப் போனால் தி.மு.கவின் நேர் விரோதியான காங்கிரஸ் ஆட்சியில் நடக்கும் விழா!
கிருஷ்ணா ராவ்,,சி.எஸ்-இருவருமே காங்கிரஸை சேர்ந்த பெரிய பதவியில் இருப்பவர்கள்!!
அவர்கள் இருவருமே,,பல நூறு பேர்கள் மத்தியில் எம்.ஜி.ஆரை இப்படிப் புகழ்கிறார்கள் என்றால்??
புகழ்ந்தது அவர்களல்ல??
எம்.ஜி.ஆரின் கொடை!!
மகிழ்ந்தது எம்.ஜி.ஆர் அல்ல??
தன் மகனை சான்றோன் எனக் கேட்ட தர்மதேவதை!!
உண்மைதானே உறவுகளே???......... Thanks.........

orodizli
10th March 2020, 10:47 PM
மக்கள் திலகத்தின் ''நல்ல நேரம் 10.03.1972 - முதல் நாள் முதல் காட்சியிலே படத்தின் மாபெரும் வெற்றி செய்திகள் தமிழகமெங்கும் திரை இட்ட அரங்கில் இருந்து ரசிகர்கள் தெரிவித்தவண்ணம் இருந்தார்கள் .மக்கள் திலகத்தின் ''சங்கே முழங்கு '' 5 வது வாரமாக தமிழகமெங்கும் ஓடிகொண்டிருந்தது .நல்ல நேரம் திரையிட்ட தினமே 13.4.1972 முதல் ''ராமன் தேடிய சீதை '' விளம்பரம் வந்து விட்டது .

சங்கே முழங்கு - நல்ல நேரம் - ராமன் தேடிய சீதை மூன்று மக்கள் திலகத்தின் வண்ணப்படங்கள் ஒரே நேரத்தில் [ பிப் - ஏப்ரல் ] ரசிகர்களுக்கு விருந்தாக வந்தது .நல்ல நேரம் மிகப்பெரிய வெற்றி அடைந்தது . ராமன் தேடிய சீதை மதுரையில் 12 வாரங்கள் ஓடியது . சங்கே முழங்கு சென்னை கிருஷ்ணாவில் 67 நாட்கள் ஓடியது .

திரை உலகம் - திரைசெய்தி -காந்தம் போன்ற மக்கள் திலகம் எம்ஜிஆர் மன்ற பத்திரிகைகளில் மக்கள் திலகம் நடித்து கொண்டிருக்கும் படங்கள பற்றியும் , புதியதாக ஒப்பந்தம் செய்யப்பட்ட படங்கள் பற்றியும் , மக்கள் திலகத்தின் படங்கள் ஓடும் தகவல்களையும் விரிவாக எழுதி வந்தார்கள் .
பொம்மை - பேசும் படம் - பிலிமாலயா மற்றும் முரசொலி - தினத்தந்தி - தென்னகம் - தினமணி - சுதேச மித்திரன் - நவமணி போன்ற தினசரி ஏடுகளிலும் மக்கள் திலகத்தின் திரை உலக செய்திகள் வந்த வண்ணம் இருந்தது .

பொம்மையில் - திரை கடல் ஓடி திரைப்படம் எடுத்தோம்

அனந்த விகடனில் - நான் ஏன் பிறந்தேன்

மக்கள் திலகம் எம்ஜிஆர் தொடர் கட்டுரை எழதி வந்தார் . மக்கள் திலகத்தின் நான் ஏன் பிறந்தேன் - அன்னமிட்ட கை - இதய வீணை - உலகம் சுற்றும் வாலிபன் - பட்டிக்காட்டு பொன்னையா - நேற்று இன்று நாளை - நினைத்ததை முடிப்பவன் போன்ற படங்களில் மக்கள் திலகம் நடித்து கொண்டு வந்தார் . மாநிலம் முழுவதும் திமுக கூட்டங்களில் சிறப்புரை ஆற்றி வந்தார் . அனைத்துலக எம்ஜிஆர் மன்றமும் சிறப்பாக செயல் பட்டு வந்தது............ Thanks.........

orodizli
10th March 2020, 10:49 PM
நல்ல நேரம் -10.3.1972



மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்களின் திரை உலக வெற்றிகளிலும் , அரசியல் ஆளுமைகளிலும் கிடைத்த மாபெரும் வெற்றியின் அடையாளம் 1972.

புரட்சி நடிகர் - புரட்சித்தலைவர் எம்ஜிஆர் என்ற பெருமை கிடைத்தது -1972



பாரத் பட்டம் கிடைத்து விழா நடந்த ஆண்டு - 1972



எம்ஜிஆர் ரசிகர்கள் - எம்ஜிஆர் மன்றங்கள் விஸ்வரூபம் எடுத்த ஆண்டு - 1972



எம்ஜிஆர் என்ற தனி மனிதரின் சக்தி - உலகம் அறிந்த ஆண்டு -1972



சினிமாவிலும் - அரசியலிலும் எம்ஜிஆர் ஹீரோ என்பதை நிரூபித்த ஆண்டு - 1972



வெற்றி என்ற தாரக மந்திரத்தோடு சங்கே முழங்கு



எங்கும் எதிலும் என்றும் எம்ஜிஆர் நல்ல நேரம்



ரசிகர்களை திருப்தி செய்த ராமன் தேடிய சீதை.



வாழ்வியல் தத்துவம் உணர்த்திய நான் ஏன் பிறந்தேன்

மக்களுக்காக வாழ்ந்த அன்னமிட்டகை



கோடிக்கணக்கான ரசிகர்களின் உள்ளங்களில் வாழும் இதய வீணை.



மக்கள் திலகத்தின் மகத்தான பெருமைகள் உணர்த்திய ஆண்டு -1972



மக்கள் திலகம் எம்ஜிஆர் வரலாற்றில் என்றுமே ''நல்ல நேரம் ''... Thanks.........

orodizli
10th March 2020, 10:50 PM
மக்களின் நல்ல நேரம் - மக்கள் திலகம் எம்ஜிஆர் நடிகரானார் .
மக்கள் மனதில் நிரந்தர இடம் பிடித்தார் ,
மக்கள் விரும்பிய நடிப்பை அள்ளி வழங்கினார்
மக்களின் வாழ்க்கையில் நம்பிக்கை என்ற ஒளிவிளக்கை ஏற்றினர்
மக்களின் துயர் துடைக்கும் வழிகளை கண்டறிந்தார் .
நாடோடி மன்னனில் தனது திட்டங்களை அறிவித்தார்
நாடே போற்றும் மன்னனாக 1977ல் பதவி ஏற்றார்
திரை வானில் நட்சத்திரமாக மின்னினார் . இன்றும் மின்னுகிறார் .
அரசியல் வானில் நம்பிக்கை நட்சத்திரம் . ஜொலித்தார் ...ஜொலிக்கிறார் .ஜொலிப்பார்.
ரசிகர்கள் - தொண்டர்கள் - மக்கள் என்று மூன்று தரப்பினரை தன்னகத்தே ஆட்கொண்ட ஒரே தலைவன் - நடிகன் மக்கள் திலகம் எம்ஜிஆர் - உலக எட்டாவது அதிசயம் எம்ஜிஆர் .
மக்கள் நேசித்த மாபெரும் நடிகரின் -தலைவரின் உன்னத வாழ்வு ஒரு நல்ல நேரம் .
43 ஆண்டுகள் எம்ஜிஆர் இல்லாத சினிமா - அவர் பாடல்கள் - அவரது திருமுகம் இல்லாத படங்களே இல்லை .
இதுவே எம்ஜிஆர் ரசிகர்களின் வெற்றி .
அரசியலில் எம்ஜிஆர் - இரட்டை இலை தொடரும் வெற்றிகள் - வெற்றி மேல் வெற்றி
கனவிலும் நினைத்து பார்க்க முடியுமா - மற்றவர்கள் ?
கனவு கண்டோம் - ஜெயித்தோம் .நாளை நமதே .......... Thanks.........

fidowag
11th March 2020, 10:39 PM
தனியார் தொலைக்காட்சிகளில் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர்* திரைக்காவியங்கள்*
ஒளிபரப்பான*/ஒளிபரப்பாகும் விவரம்*
----------------------------------------------------------------------------------------------------------------------------------
07/03/20 -* சன்லைப்* -* காலை 11 மணி - தேடி வந்த மாப்பிள்ளை*

08/03/20* - சன்லைப்* *- காலை* 11 மணி* - தேர்த்திருவிழா*

09/03/20* = கே டிவி* * *- பிற்பகல் 1மணி* - அரச கட்டளை*

10/03/20* - ஜெயா மூவிஸ்* - காலை* 7 மணி* - ஊருக்கு உழைப்பவன்*

11/03/20* - ஜெயா மூவிஸ் - காலை 7 மணி* - ஒரு தாய் மக்கள்*

12/03/20 - கே டிவி* * - பிற்பகல் 1 மணி* - கண்ணன் என் காதலன்*

14/03/20 - கே டிவி* *- பிற்பகல்* 1 மணி* - நீரும் நெருப்பும்*

fidowag
11th March 2020, 10:44 PM
தென்னக*ஜேம்ஸபாண்டாக நடித்து புரட்சி செய்த*புரட்சி நடிகர்*எம்.ஜி.ஆரின்*"ரகசிய*போலீஸ் 115" டிஜிட்டல் வடிவில், புதிய தொழில்நுட்பத்தில் சென்னை*பெருநகரில்*கீழ்கண்ட அரங்குகளில் 13/03/20 முதல் வெளியீடு .

சத்யம்*/எஸ்கேப் / உட்லண்ட்ஸ்/பெரம்பூர்* எஸ்*2/பலாஸோ*/தி.நகர் ஏ.ஜி.எஸ்./கே.கே.நகர் -காசி, /வேளச்சேரி*லக்ஸ்*/பி.வி.ஆர்.-எஸ்.கே.எல்.எஸ்./அண்ணா*நகர் -பி.வி.ஆர்.- வி..ஆர். மால்*/ ஈ .சி.ஆர். -பி.வி.ஆர்./* *ஓ.எம்.ஆர்.-ஏ.ஜி.எஸ்./ஐனாக்ஸ்* நேஷனல் /ஓ.எம்.ஆர். ஐனாக்ஸ் மெரினா* ஆல்பட்*/ அகஸ்தியா (தினசரி 3 காட்சிகள் )/ கோபிகிருஷ்ணா / அனகாபுத்தூர் அருண்மதி*

தினத்தந்தி*-11/03/2020

oygateedat
12th March 2020, 10:35 PM
13.03.2020 முதல்

கோவை

சண்முகா

பெரிய இடத்துப்பெண்


இரண்டு வருட

இடைவெளிக்குப்பின்

oygateedat
12th March 2020, 10:38 PM
திருப்பூர்

அனுப்பர்பாளையம்

கணேஷ்

திரையரங்கில்

14.3.2020
15.3.2020
16.3.2020

மூன்று நாட்கள்

தாய்க்கு தலைமகன்

oygateedat
12th March 2020, 10:39 PM
திருப்பூர்

அனுப்பர்பாளையம்

கணேஷ்

திரையரங்கில்

21.3.2020
22.3.2020
23.3.2020

மூன்று நாட்கள்

நீதிக்கு தலைவணங்கு

orodizli
12th March 2020, 11:37 PM
https://www.nakkheeran.in/special-articles/special-article/mgr-birthday-special......... Thanks.........

orodizli
12th March 2020, 11:43 PM
தென்னக*ஜேம்ஸ்*பாண்டாக*மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். நடித்த*"ரகசிய*போலீஸ் 115" டிஜிட்டல் வடிவில்*, முற்றிலும் புதிய தொழில்நுட்ப்பத்தில்* நாளை முதல்*(13/03/2020) சென்னை*பெருநகரில்* கீழ்கண்ட அரங்குகளில் வெள்ளி*த்திரைகளுக்கு வெற்றி விஜயம் .


பேபி* ஆல்பட்* - தினசரி* மாலை மற்றும் இரவு காட்சிகள் .

அகஸ்தியா* - தினசரி* நண்பகல் / மேட்னி*/ மாலை காட்சிகள்*

எம்.எம். தியேட்டர்* -* தினசரி**இரவு காட்சி*மட்டும்*

கோபிகிருஷ்ணா காம்ப்ளக்ஸ் - தினசரி 4 காட்சிகள்*

காசி*,கே.கே. நகர் - தினசரி* மேட்னி*/ இரவு காட்சிகள்*

பலாஸோ*, வடபழனி*- தினசரி பிற்பகல் 1.15 மணி* காட்சி*.

லக்ஸ்*, வேளச்சேரி* *- தினசரி இரவு 7.30 மணி காட்சி*

பி.வி.ஆர். , ஈ .சி.ஆர்., சோழிங்கநல்லூர் - தினசரி பிற்பகல் 12.50 மணி*

கோயம்பேடு ரோகினி* - தினசரி இரவு காட்சி*மட்டும் .



எனக்கு*விவரங்கள்* இணையதளத்தில்**கிடைத்த*வகையில்*பதிவிட்டுள்ளேன் . நாளிதழில் வெளியாகும்*அரங்குகள் விபரங்களை நம்பி நண்பர்கள் ஏமாற*வேண்டாம்* என்பது வேண்டுகோள். ஒரு வேளை நாளை ஏதாவது கூடுதல்* அரங்குகளில் வெளியான*விவரம் அறிந்தால்*பிறகு பதிவிடுகிறேன் .......... Thanks mr.Loganathan Sir...

orodizli
12th March 2020, 11:50 PM
கொத்தவால்சாவடி -
பாட்சா A/C DTS., தியேட்டர்
தினசரி 4காட்சிகள் ,திரையுலக வசூல் சக்கரவர்த்தி
புரட்சி தலைவர் எம் .ஜி .ஆர்., அவர்கள்,புரட்சி தலைவி
அம்மா இருவரும்இணைந்துநடித்த
"ரகசியபோலிஸ்115" S.M Batsha 9965646505......... Thanks.........

orodizli
13th March 2020, 10:49 AM
: நேற்று12-03-2020அன்று திரு ரஜினி அவர்கள் அரசியல் பற்றி கொடுத்த பேட்டியில்,சொல்லியது அனைத்தும் புதிதல்ல,புரட்சித்தலைவரை மனதில் கொண்டுதான் சொல்லியுள்ளார்.
தலைவர் கட்சியின் தலைமைப் பதவியான பொதுச்செயலாளர் பதவியை அடுத்தவரிடம் ஒப்படைத்தார்,ஆட்சித்தலைமை வேறு கட்சித்தலைமை வேறு என்று நடைமுறைப் படுத்தினார்,அதுமட்டுமல்ல ரஜினி சொல்லுவது போல 1972அக்டோபரில் மாபெரும் மக்கள் புரட்சி வெடித்து புரட்சித்தலைவரை கட்சி ஆரம்பிக்ச் செய்தனர்,அனைத்துக்கும் முன்னோடி நம் தலைவர்தான் என்பதில் பெருமிதம் கொள்வோம்.........
ஓய்வு பெற்ற நீதிபதி நாராயணசாமி முதலியாரை கட்சிக்கு சம்பந்தமில்லாவிட்டாலும்,சட்ட அமைச்சராக்கினார் புரட்சித்தலைவர்......... Thanks

orodizli
13th March 2020, 10:51 AM
திரு.ப.உ.சண்முகம் திரு.ராகவானந்தம் திரு நாவலர் நெடுஞ்செழியன் ஆ*கியோரைபுரட்சி தலைவர் முதல்வரானபோது கட்சியின் முக்கியபதவியான பொதுச்செயலாளராக செயல்படவைத்தார் நன்றி திரு ஈரோடு ராஜா அவர்கள் மதுரை எஸ் குமார் எம்ஜிஆர் மன்றம்... Thanks.........

fidowag
13th March 2020, 11:28 AM
.தென்னக*ஜேம்ஸ்*பாண்டாக*மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். நடித்த*"ரகசிய*போலீஸ் 115" டிஜிட்டல் வடிவில்*, முற்றிலும் புதிய தொழில்நுட்ப்பத்தில் இன்று** முதல்*(13/03/2020) சென்னை*பெருநகரில்* கீழ்கண்ட அரங்குகளில் வெள்ளி*த்திரைகளுக்கு வெற்றி விஜயம் . மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். ஜெயலலிதா ,நிர்மலா*, நம்பியார்*(இரட்டை வேடம் ) , அசோகன், நாகேஷ்*,மாதவி*,ஜஸ்டின்*,திருப்பதிசாமி மற்றும் பலர் நடித்தது .இசை : மெல்லிசை மன்னர் எம்.எஸ். விஸ்வநாதன், இயக்கம் : பி.ஆர். பந்துலு*11/01/1968ல் வெளியான*படம் டிஜிட்டல் வடிவில்*, முற்றிலும் புதிய தொழில்நுடபத்தில் வெளியாகிறது .* புரட்சி நடிகர்*எம்.ஜி.ஆர். ஜேம்ஸ்*பாண்ட்*பாணியில்*நடித்து தென்னகத்தில்*வெளியாகி 100 நாட்கள் ஓடிய*வெற்றிப்படம்* இந்த படம் அவரது*ரசிகர்களிடையே தனியிடம்*பிடித்தது*என்பது குறிப்பிடத்தக்கது _ தினமலர் செய்தி .-13/03/20


பேபி* ஆல்பட்* - தினசரி* மாலை மற்றும் இரவு காட்சிகள் .

அகஸ்தியா* - தினசரி* நண்பகல் / மேட்னி*/ மாலை காட்சிகள்*

எம்.எம். தியேட்டர்* -* தினசரி**இரவு காட்சி*மட்டும்*

பாட்சா*(மினர்வா*) தினசரி* 4* காட்சிகள்*

கோபிகிருஷ்ணா காம்ப்ளக்ஸ் -ராதா - தினசரி 4 காட்சிகள்*

காசி*,கே.கே. நகர் - தினசரி* மேட்னி*/ இரவு காட்சிகள்*

பலாஸோ*, வடபழனி*- தினசரி பிற்பகல் 1.15 மணி* காட்சி*.

லக்ஸ்*, வேளச்சேரி* *- தினசரி இரவு 7.30 மணி காட்சி*

பி.வி.ஆர். , ஈ .சி.ஆர்., சோழிங்கநல்லூர் - தினசரி பிற்பகல் 12.50 மணி*

கோயம்பேடு ரோகினி* - தினசரி இரவு காட்சி*மட்டும் .

திருவள்ளூர் - மீரா* - தினசரி 3 காட்சிகள்*

திருக்கழுக்குன்றம் - புவனேஸ்வரி - தினசரி 4 காட்சிகள்*


வேலூர்*- சிலம்பு*- தினசரி 4 காட்சிகள்*


எனக்கு*விவரங்கள்* இணையதளத்தில்**கிடைத்த*வகையில்*பதிவிட்டுள்ளேன் . நாளிதழில் வெளியாகும்*அரங்குகள் (அதிகம் ) விபரங்களை நம்பி நண்பர்கள் ஏமாற*வேண்டாம்* என்பது*எனது* வேண்டுகோள். நன்றி.

fidowag
13th March 2020, 11:33 AM
மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். திரைக்காவியங்கள் இந்த வாரம் (13/03/20)தமிழகத்தில் வெளியான*(இதர படங்கள்*- ரகசிய*போலீஸ் 115 தவிர )பட்டியல் விவரம் .
--------------------------------------------------------------------------------------------------------------------
சென்னை - மூலக்கடை ஐயப்பா - விக்கிரமாதித்தன் -தினசரி 3 காட்சிகள்*

கோவை* - சண்முகா - பெரிய இடத்து பெண் - தினசரி* 4 காட்சிகள்*

திருப்பூர் -அனுப்பர்பாளையம் -கணேஷ் - தாய்க்கு*தலை மகன்--*தினசரி இரவு காட்சி*மட்டும் -சனி/ஞாயிறு /திங்கள் -14-15-16/3 /20

orodizli
13th March 2020, 11:40 AM
எம்.ஜி.ஆர். 48 ஆண்டுகளுக்கு முன்பே முன்னோடியாக செயல் படுத்திய அரசியல், ஆட்சி பண்பு !

நேற்று (12-3-2020) திரு ரஜினிகாந்த் அரசியல் பற்றி ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில்,சொல்லியது அனைத்தும் புதிதல்ல. இதற்கெல்லாம் முன்னோடி புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்.

அவர் கட்சியின் தலைமைப் பதவியான பொதுச்செயலாளர் பொறுப்பை அடுத்தவரிடம் ஒப்படைத்தார். ஆட்சித்தலைமை வேறு கட்சித்தலைமை வேறு என்று நடைமுறைப் படுத்தினார். அதுமட்டுமல்ல ரஜினி சொல்வது போல 1972 அக்டோபரில் மாபெரும் மக்கள் புரட்சி வெடித்து புரட்சித்தலைவரை கட்சி ஆரம்பிக்கச் செய்தனர். இன்று அதற்கான சூழல் இருக்கிறதா என்ன ?
என்றாலும் சினிமா, அரசியல் அனைத்திற்கும் முன்னோடி புரட்சிதலைவர் தான் என்பதில் பெருமிதம் கொள்ளலாம்.

எம்.ஜி.ஆர். முதல் முறை 1977 ல் ஆட்சி பொறுப்பேற்றபோது ஓய்வு பெற்ற நீதிபதி நாராயணசாமி முதலியாரை, அவர் கட்சிக்கு சம்பந்தமில்லாவிட்டாலும், சட்ட அமைச்சராக்கினார்.

கருத்து உதவி : எம்.கே. ராஜா, ஈரோடு.......... Thanks.........

fidowag
13th March 2020, 11:20 PM
அறிவிப்பு*
------------------
ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பு மற்றும் ஆதரவின்*காரணமாக*சென்னை*பேபி*ஆல்பட்*அரங்கில்* தினசரி 2 காட்சிகள் (மாலை /இரவு ) நடைபெற்று வரும் வசூல் சக்கரவர்த்தி , எம்.ஜி.ஆர்**தென்னக*ஜேம்ஸ்*பாண்டாக*நடித்த*டிஜி ட்டல் "ரகசிய*போலீஸ் 115"வரும் ஞாயிறு (15/03/20) மாலை 6.30 மணி காட்சி*மட்டும் சென்னை*ஆல்பட்டில் ரசிகர்களின் சிறப்பு*காட்சியாக*நடைபெறும்*என்று விநியோகஸ்தர் தகவல் அளித்துள்ளார்

orodizli
14th March 2020, 09:43 AM
அர்ப்பணிப்புடன் கூடிய உழைப்புக்கு சொந்தக்காரர்!

M.G.R. முதல்வராக அரியணையில் அமரும் வரை அவர்தான் தமிழ் திரையுலகின் வசூல் சக்கரவர்த்தியாகவும்; அதிக சம்பளம் வாங்கும் நடிகராகவும்; நம்பர் 1 ஹீரோவாகவும் இருந்தார். நாடகத்தில் நடித்து, சினிமாவில் வாய்ப்பு தேடி அலைந்து, சாதாரண நடிகராக அறிமுகமாகி, துணை பாத்திரங்களில் நடித்து, பின்னர் கதாநாயகனாக உயர்ந்து நம்பர் 1 இடத்தை அவர் பிடித்தது ஏதோ குருட்டு அதிர்ஷ்டத்தால் அல்ல. அதற்கு பின்னால் இருந்தது அவருடைய ஈடுபாடு மிகுந்த திட்டமிட்ட கடும் உழைப்பு.

எம்.ஜி.ஆரின் 100-வது படம் ஜெமினியின் ‘ஒளிவிளக்கு’. எஸ்.எஸ்.வாசன் தயாரித்தார். எம்.ஜி.ஆரின் முதல் படமான ‘சதிலீலாவதி' கதையை எழுதியவர் வாசன். ஜெமினி பேனரில் அவர் தயாரித்த படமே எம்.ஜி.ஆரின் 100வது படமாகவும் அமைந்தது சிறப்பு. இந்தியில் நடிகர் தர்மேந்திரா நடித்த ‘பூல் அவுர் பத்தர்’ என்ற படமே தமிழில் ‘ஒளிவிளக்கு’ ஆக மாறியது.

படத்தில் ஒரு காட்சியில் தீ பிடித்து எரியும் வீட்டில் சிக்கிக் கொண்டு தவிக்கும் குழந்தையை எம்.ஜி.ஆர். காப்பாற்றுவார். இதில் அவருக்கு தீக்காயம் ஏற்பட்டு உயிருக்குப் போராடும் நிலை யில், அவரை காப்பாற்ற இறைவனிடம் மன்றாடி சவுகார் ஜானகி பாடும்

‘ஆண்டவனே உன் பாதங் களை நான் கண்ணீரில் நீராட்டினேன்...’

பாடல் 1984-ல் எம்.ஜி.ஆர். உடல் நலம் பாதிக்கப்பட்டு அமெரிக்காவில் சிகிச்சை பெற்றபோது, தமிழகத்தில் பட்டிதொட்டியெங்கும் ஒலித்தது.

‘ஒளிவிளக்கு' படத்தில் இன்னொரு விசேஷம். எம்.ஜி.ஆர். மது குடிப்பது போன்ற காட்சி அமைப்பு. படங்களில் கூட சிகரெட், மதுவை தொடாத எம்.ஜி.ஆர். குடியின் தீமையை உணர்த்துவதற் காக, தானே குடிப்பது போல நடித்த ஒரே படம். குடியின் தீமையை உணர்த்தும் வகையில்

‘தைரிய மாக சொல் நீ மனிதன்தானா? நீ தான் ஒரு மிருகம். இந்த மதுவில் விழும் நேரம்...’

பாடலில் எம்.ஜி.ஆரின் மனசாட்சி அவர் வடிவில் மேலும் 4 பேராக; மொத்தம் 5 எம்.ஜி.ஆர்கள் பல வண்ண உடைகளில் திரையில் தோன்றும் காட்சியில் தியேட்டர் இரண்டுபடும்.

இப்போது போல எல்லாம் அப்போது சினிமாவில் தொழில்நுட்பம் முன்னேறவில்லை. ‘மாஸ்க்' முறையில் ஒவ்வொரு எம்.ஜி.ஆராக இந்தக் காட்சியை எடுத்திருப்பார்கள். காட்சி சிறப்பாக வரவேண்டும் என்பதற்காக, காலையில் இருந்து இரவு முதல் பல நாட்கள் இந்தப் பாடல் காட்சிக்காக எம்.ஜி.ஆர். மெனக்கெட்டார்.

பாடல் காட்சி முழுவதும் படமாக்கப்பட்டது. ஜெமினி ஸ்டுடியோவிலேயே ரஷ் போட்டு பார்க்க வேண்டும். படத்தின் தயாரிப்பு வேலை களை எஸ்.எஸ்.வாசனின் மகனும் ‘ஆனந்த விகடன்’ ஆசிரியராக இருந்தவரும் ஊழியர்களால் மரியாதையாக ‘எம்.டி’ என்று அழைக்கப்பட்டவரு மான எஸ்.பாலசுப்ரமணியன் கவனித்து வந்தார். பின்னர், எம்.ஜி.ஆர். நடித்த ‘சிரித்து வாழ வேண்டும்' படத்தையும் இவர்தான் இயக்கினார்.

பாடல் காட்சிக்காக காலையில் இருந்து இரவு வெகு நேரமாகியும் நடித்துக் கொடுத்த எம்.ஜி.ஆர். களைப்பு காரணமாக, பாடல் காட்சியின் ரஷ் பார்க்காமலேயே நள்ளிரவில் வீட்டுக்குப் புறப்பட்டார். ‘‘ரஷ் பார்த்துவிட்டு எப்படி வந்திருக்கிறது என்று எனக்கு போன் பண்ணி சொல்லுங்கள்’’ என்று சொல்லிவிட்டு வீட்டுக்குக் கிளம்பினார்.

சிறிய அரங்கில் ரஷ் பார்த்தபோது ‘தைரியமாக சொல் நீ... ’

பாடல் காட்சி சிறப்பாக வந்திருந்தது. உடனே, ‘‘எம்.ஜி.ஆருக்கு போன் செய்து நல்லா வந்திருக்குன்னு சொல்லிடுப்பா..’’ என்று உதவியாளரிடம் கூறினார் பாலசுப்ரமணியன். அப்போது, பின்னாலிருந்து அவரது தோள் மீது ஒரு கை விழுந்தது. திரும்பிப் பார்த்தபோது புன்னகையுடன் நின்றிருந்தார் எம்.ஜி.ஆர்.

விஷயம் என்னவென்றால், களைப்பால் வீட்டுக்குக் கிளம்பிய எம்.ஜி.ஆருக்கும் பாடல் காட்சி எப்படி வந்திருக்கிறது என்று பார்க்க ஆசை. அதனால், களைப்பை உதறிவிட்டு ரஷ் திரையிடும் அரங்குக்குள் வந்து, படம் பார்த்துக் கொண்டிருந்தவர்களைத் தொந்தரவு செய்யாமல் அமைதியாக பின்னால் அமர்ந்திருக்கிறார். தொழிலில் அவ்வளவு ஆர்வம். அர்ப்பணிப்புடன் கூடிய உழைப்பு!

மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரித்த தமிழின் முதல் வண்ணப்படம் ‘அலிபாபாவும் 40 திருடர்களும்’. எம்.ஜி.ஆர். பிக்சர்ஸ் சார்பில் முதன்முதலில் பகுதி கலரில் தயாரிக்கப்பட்ட படம் ‘நாடோடி மன்னன்.’ சரவணா ஃபிலிம்ஸ் பட நிறுவனம் தயாரித்த முதல் வண்ணப்படம் ‘படகோட்டி.’ விஜயா கம்பைன்ஸ் தயாரித்த தமிழின் முதல் வண்ணப்படம் ‘எங்க வீட்டுப் பிள்ளை.’ ஏவி.எம் சார்பில் தயாரிக்கப்பட்ட ‘அன்பே வா’ படம்தான் அந்நிறுவனத்தின் முதல் வண்ணப்படம். ஜெமினி நிறுவனத்தின் சார்பில் தயாரிக்கப்பட்ட முதல் தமிழ் வண்ணப்படம் ‘ஒளிவிளக்கு’. சத்யா மூவிஸ் பேனரில் தயாரான முதல் வண்ணப்படம் ‘ரிக் ஷாக்காரன்’. தேவர் ஃபிலிம்ஸ் முதல் வண்ணப்படம் ‘நல்ல நேரம்’. இந்த எல்லா படங்களிலும் கதாநாயகன் வண்ணமிகு நாயகன் எம்.ஜி.ஆர்.......... Thanks.........

orodizli
14th March 2020, 11:23 PM
கண்ணை நம்பாதே
உன்னை ஏமாற்றும் உன்னை ஏமாற்றும்
நீ காணும் தோற்றம்
உண்மை இல்லாதது
அறிவை நீ நம்பு
உள்ளம் தெளிவாகும் அடையாளம் காட்டும்
பொய்யே சொல்லாதது

காவலரே வேஷமிட்டால் கள்வர்களும்
வேறுருவில் கண் முன்னே தோணுவது சாத்தியமே
காத்திருந்து கள்வனுக்கு கைவிலங்கு பூட்டிவிடும் கண்ணுக்கு தோணாத சத்தியமே
போடும் பொய்த்திரையை கிழித்து விடும் காலம்
புரியும் அப்போது மெய்யான கோலம் (கண்ணை)

ஓம் முருகா என்று சொல்லி உச்சரிக்கும் சாமிகளே
ருத்திராட்ச பூனைகளாய் வாழுரீங்க
சீமான்கள் போர்வையிலே சாமான்ய மக்களையே
ஏமாத்தி கொண்டாட்டம் போடூறீங்க
பொய்மை எப்போதும் ஓங்குவதும் இல்லை
உண்மை எப்போதும்தூங்குவதும் இல்லை (கண்ணை)

பொன் பொருளை கண்டவுடன் வந்த வழி மறந்து விட்டு
கண் மூடி போகிறவர் போகட்டுமே
என் மனதை நான் அறிவேன்
என் உறவை நான் மறவேன்
எது ஆன போதிலும் ஆகட்டுமே
நன்றி மறவாத நல்ல மனம் போதும்
என்றும் அதுவே என் மூலதனம் ஆகும் (கண்ணை)

குறிப்பு :
இந்த பாடலைப் பற்றி சுவையான தகவல் ஒன்று உண்டு .
முதலில் பாடலை இயற்றிய மருதகாசி 'பொன் பொருளைக் கண்டவுடன் ...'என்று வரும் இடத்தில 'தன் வழியே போகிறவர் போகட்டுமே' என்று முதலில் எழுதினாராம் .மக்கள் திலகம் தன் வழி சரியாக இருந்தால் அதில் போவதில் என்ன தவறு என்று கேட்டவுடன் அதில் இருக்கும் உண்மையை உணர்ந்து 'கண் மூடி போகிறவர் போகட்டுமே ......'என்று மாற்றி எழுதினாராம் .......... Thanks.........

orodizli
14th March 2020, 11:26 PM
புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களை தமிழர் இல்லை என்று எதிர்க்கட்சியினர் பிரசாரம் செய்தபோது கவியரசர் கண்ணதாசன் எழுதிய கவிதை.

நல்லோர்களெல்லாம்
நாடும் அறிவுடைமை
உள்ளோரே என்றும்
உயிர் தமிழோடிருப்பவர்கள்
கல்லூரி படியேறி
பயிலாதபோதினிலும்
சொல்லும் மொழியெல்லாம்
சுவையான செந்தமிழாய்
வெல்லும் படிசொல்லும்
வீரனை நாம் பெற்றுள்ளோம்
மன்னர் இவரொருநாள்
மலையாளம் சென்றிருந்தார்
அங்கும் தமிழில்தான்
அழகான மொழியுரைத்தார்
கேரளத்தில் பேசு என
கேட்டார்கள் தோழரெல்லாம்
ஓரளவும் பேசேன் நான்
உயிர் படைத்த நாள் முதலாய்
உண்ணும் உணவும்
உலவுகின்ற வீதிகளும்
எண்ணும் பொருளும்
ஏற்றதோர் தொழில்களும்
செந்தமிழால் வந்த
திருவென்றோ பெற்றவன் நான்
அந்த மொழியின்றி
அடுத்த மொழி பேசுவதோ
என்று பதிலுரைத்தார் இவர்
பெருமை யாருக்கு வரும்
பொன்மனத்துச் செம்மலிவர்
புரட்சித் தலைவரிவர்
தமிழரிலை என்றால்
தமிழுக்கே களங்கம் வரும்.

கவிஞர் கண்ணதாசன..

கவிதை உதவி திரு காந்தி கண்ணதாசன் அவர்கள்............. Thanks.........

orodizli
16th March 2020, 06:17 AM
https://youtu.be/Jbpu1M1NlYg. ......... Thanks.........

orodizli
16th March 2020, 06:17 AM
https://youtu.be/tR6TgUTWI84... Thanks......

orodizli
16th March 2020, 06:18 AM
https://youtu.be/rvhZBHbE0ho... Thanks......

orodizli
16th March 2020, 06:19 AM
https://youtu.be/uoHuiEFST3E... Thanks......

orodizli
16th March 2020, 06:21 AM
https://youtu.be/1pVXvQwrNBU......... Thanks.........

orodizli
16th March 2020, 04:28 PM
#மக்களின் #முதல்வர்

தமிழக முதல்வர் பொன்மனச்செம்மல், ஒரு பொதுக்கூட்டத்திற்காக மதுரை சென்று திரும்பும் வழியில் அருகே உள்ள சோழவந்தான் கிராமத்திற்கு வந்து மக்களின் குறைகளைக் கேட்டறிந்து கொண்டிருந்தார்...

அப்போது, சற்று தொலைவில் வயலில் நாற்று நட்டு வேலை செய்து கொண்டிருக்கும் ஒரு வயதான பெண்மணியைப் பார்த்து அதிர்ச்சியற்ற மக்கள்திலகம், கடகடவென்று வரப்பில் நடந்து அப்பெண்மணிக்கு அருகே செல்கிறார்...

எம்ஜிஆரைப் பார்த்து பிரமித்த அப்பெண்மணி அதிர்ச்சியுற்று நிற்க...!!!

எம்ஜிஆர் கண்களில் நீருடன் கேட்கிறார்... "என்னம்மா இது? உங்களுக்கா இந்த நிலை ? இந்த வயசான காலத்துல ஏன் இப்படி கூலி வேலை செஞ்சு கஷ்டப்படறீங்க.??? ...

அந்த வயதான தாய் பொங்கிவரும் கண்ணீரை அடக்கமுடியாமல் தன் குடும்ப நிலையைக் கூறியதும் அப்பெண்மணியின் கைகளை இறுகப் பற்றிக் கொள்கிறார்..."அம்மா! உங்க மகன் நானிருக்கும் போது, இப்படி நீங்க கஷ்டப்படலாமா!!! இதுக்கு சீக்கிரமே ஒரு வழி செய்யறேன்..." ன்னு கிளம்பிட்டார்.

அப்பெண்மணி வேறு யாருமல்ல...

நான்கு முறை காங்., எம்.எல்.ஏ.,வாக இருந்த பொன்னம்மாள் தான் அவர்...

அடுத்த சிறிது நாட்களிலேயே
"#எம்எல்ஏக்களுக்கு #ஓய்வூதிய #திட்டம்" வழங்க அரசாணை பிறப்பித்தார்.

கட்சிப் பாகுபாடின்றி
மக்களின் குறைகளை தான் நேரடியாகவே சென்றறிந்து திட்டங்களை தீட்டி செயல்படுத்தியவர் #மக்கள்திலகம் #ஒருவரே.............. Thanks.........

orodizli
16th March 2020, 04:32 PM
"ஆயிரத்தில் ஒருவன் ","கோடியில் ஒருவன்", தான் தலைவர் தான் (மக்கள் திலகம்) என்று அறிவுஜிவிகளுக்கு சுட்டிக்காட்டிய நடிகர் திரு விஜயசேதுபதி அவர்களுக்கு கோடான கோடி நன்றிகள் !

ஹயாத் !......... Thanks.........

orodizli
16th March 2020, 10:43 PM
அல்பட் திரையரங்கம் சார்பாக எடுக்கப்பட்ட அந்த ஒரு பேனரை தவிர வேறு எந்த ஒரு போஸ்டர்( ரகசிய போலீஸ் 115) கூட ஒட்டவில்லை. இருந்தாலும் எம்ஜிஆர் பக்தர்கள் திரையரங்கத்தில் நிரம்பி விட்டார்கள். இதுதான் எம்ஜிஆரின் மக்கள் சக்தி. இது மேலும் மேலும் வளர்ந்து கொண்டே இருக்குமே தவிர ஒருபோதும் தொய்வு ஏற்படாது. தங்க தலைவரின் ஆசை முகத்தை காண எப்போதும் கூட்டம் கூடிக் கொண்டேதான் இருக்கும். ஏனென்றால் அவர் என்றென்றும் ஜீவித்து இருக்கிறார். 'நின்றால் பொதுக்கூட்டம் நடந்தால் ஊர்வலம்' இது உலகத்தில் எம்ஜிஆருக்கு மட்டுமே உரித்தான வரிகள். பழுதுபடாத வீரத்திற்கு சொந்தக்காரரான வாத்தியார் எம்ஜிஆரின் கொள்கைப்படி உலகெங்கும் வாழும் எம்ஜிஆர் பக்தர்கள் மக்கள் சேவை செய்து கொண்டிருக்கிறார்கள் வாழ்க எம்ஜிஆர் புகழ்! வாழ்க எம்ஜிஆர் பக்தர்கள்.... Thanks.........

orodizli
16th March 2020, 10:47 PM
இந்த கரோனா அவசர கால நேரத்திலும், திரையரங்கம் இவ்வளவு ஆர்ப்பாட்டம் நடந்தது என்றால், அது திரையுலக வசூல் சக்கரவர்த்தி புரட்சி நடிகர் அவர்கள் காவியங்கள் மட்டுமே எனில் மிகையாகாது...

oygateedat
17th March 2020, 08:50 PM
கடந்த ஞாயிறு முதல்

திருப்பூர் k s திரையரங்கில்

ரிக்*ஷாக்காரன்

நேற்று முதல்

தாராபுரம்

சத்யாவில்

நினைத்ததை முடிப்பவன்

oygateedat
17th March 2020, 10:18 PM
ஒரு முறை காஞ்சிபுரத்தில் பேரறிஞர் அண்ணாதுரை அவர்களின்
இல்லத்தில் ஒரு விசேஷம்.

எம்.ஜி.ஆர்..சிவாஜி உள்ளிட்ட அனைவரும் அந்த நிகழ்ச்சிக்கு சென்றிருக்கிறார்கள்.

எஸ்.எஸ்.ராஜேந்திரன்.அவரது மனைவி நடிகை விஜயகுமாரியும் சென்று இருக்கிறார்கள். நிகழ்ச்சி முடிந்து திரும்பும் போது மக்கள் வெள்ளம் கார் நின்ற இடத்திற்க்கு யாரும் திரும்பி வர முடியவில்லை.

எம்.ஜி.ஆர் மட்டும் தனது கார் அருகே வந்துவிட்டார் .விஜயகுமாரி கூட்ட நெரிசலில் சிக்கி விட்டார் உடனடியாக தனது பாதுகாவலர்கள் மூலம் அவரை மீட்டு தனது காரில் அழைத்துக்கொண்டு தனது வீட்டிற்க்கு வந்து விட்டார்.

அது எஸ்.எஸ்.ராஜேந்திரனுக்கும்...விஜயகுமாரிக்கும் திருமணம் நடந்து முடிந்த சமயம்..

புரட்சி தலைவர் ...ஜானகி அம்மாவிடம் சொல்கிறார்..

" நம்ம வீட்டு பொண்ணு கல்யாணம் ஆகி முதன் முதலாக நம்ம வீட்டுக்கு வந்திருக்கு.." என்று.

உடனே ஜானகி அம்மா விஜயகுமாரியின் நெற்றியில் குங்குமம் வைத்து ஒரு தாம்பளத்தில் பட்டு புடவை ஒன்றையும்...பத்தாயிரம் ரூபாய் பணத்தையும் தாய் வீட்டு சீதனமாக வைத்து தருகிறார்.

ஒரு தடவை விஜயகுமாரியை எம்.ஜி.ஆருக்கு கதாநாயகியாக ஒரு தயாரிப்பாளர் நடிக்க வைக்க நினைக்கிறார்...எம்.ஜி.ஆர் மறுத்து விடுகிறார்..
" விஜயகுமாரி எனக்கு தங்கை போன்றவர் அவருடன் நான் ஜோடியாக நடிக்க முடியாது' என்று சொல்லி விட்டார்.

எம்.ஜி.ஆர் தலைவரல்ல
ஒரு மகாமனிதர்

orodizli
18th March 2020, 01:31 PM
இன்றைய 18.03.2020 "தினமலர் " வாசகர்கள் கடிதம் மூலம்

தமிழர்கள் கட்டுரையில் சில துளிகள் ..

1. இன்னும் ஆயிரம் வருடங்களுக்கு பின்னரும் தமிழனாக பிறக்காமல் ..தமிழனுக்காக ..தமிழுக்காக வாழ்ந்த இந்த மனிதர் M .G .R பற்றி தமிழர்கள் பேசுவார்கள்
..எழுதுவார்கள் .
.கட்டுமரம் இன்னும் சில ஆண்டுகளில் மறக்க படுவார்

2. MGR. ன் முடி தொப்பியில் ஒரு முடி தூசியின் அளவுக்கு கூட ரஜினியை ஒப்பிட முடியாது .. அப்படி ஒப்பீடு செய்பவர் MGR.ஐ பற்றி அறியாதவராகவே இருக்கமுடியும் ..MGR.தன்வாழ்வைவையும் ..சொத்துக்களையும் ,ஏன் அணைத்து வருவாய்களையும் நாட்டுக்கு அர்ப்பணித்தவர் .. அவரைப் மற்றவர்களுடன் ஒப்பிடுவது அறிவீனம் ...

3.எம் ஜி ஆருடன் யாரையும் ஒப்பிட்டு பார்க்க முடியாது. பொது மக்கள் ஆதரவு அவருக்கு இருந்த மாதிரி யாருக்கும் அமையாது. முயலை விட்டு காக்கை பிடிப்பது போன்று தான்......... Thanks.........

orodizli
18th March 2020, 01:34 PM
https://www.facebook.com/groups/1860399027616671/permalink/2667443333578899/?sfnsn=wiwspwa&extid=EIDPb4VG3KGY5SSR&d=w&vh=i............... Thanks.........

orodizli
18th March 2020, 01:35 PM
https://youtu.be/Mp7YE3yfNt4.......... Thanks...

orodizli
18th March 2020, 07:57 PM
https://youtu.be/RlIt3zeXgHg... Thanks......

orodizli
18th March 2020, 07:58 PM
``எம்.ஜி.ஆர் கொடுத்த வீடு... யாருக்கும் கொடுக்க மாட்டேன்!" திருவல்லிக்கேணி குள்ளம்மாள் பாட்டியின் கதை - https://www.vikatan.com/news/miscellaneous/157747-i-wont-vacate-this-house-for-anyone-says-kullammal-paati.html......... Thanks...

orodizli
18th March 2020, 08:01 PM
இனிய காலை வணக்கம்..!!

#எம்_ஜி_ஆர்_பற்றி_சுவையான_சிறு_குறிப்புகள்

சினிமா, அரசியல் தாண்டி ஓர் ஆளுமையாக எம்.ஜி.ஆர். அனைவருக்குமான ரோல் மாடல். இன்னமும் அவரைப் பற்றி சிலாகித்துச் சொல்ல ஆயிரம் சங்கதிகள் இருந்தாலும்... இன்று அவரை பற்றி பார்ப்போம்.

சினிமாவில் அதுவரை கட்சிக் கருத்துக்களைப் புகுத்துவார்கள்.ஆனால் எம்.ஜி.ஆர் காட்சிகளையே புகுத்தினார். தி.மு.க கொடி, உதயசூரியன் சின்னம், அண்ணா படம் இல்லாத படமே இல்லை என்ற அளவுக்கு வைத்தார் !

இது தான் திமுகவை மக்களிடம் முழுவதுமாக கொண்டு சென்றது என்று அண்ணா அடிக்கடி சொல்லுவார்..!!!... Thanks......

fidowag
18th March 2020, 10:11 PM
சென்னையில் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். 103 வது*மனித நேய*விழா,1970ம் ஆண்டில்*வெளியான*மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.*திரைக்காவியங்களின்* பொன்விழா*
----------------------------------------------------------------------------------------------------------------

, சென்னை*தி.நகர்* சர்* பி.டி.தியாகராயர் அரங்கில்*கடந்த*ஞாயிறு ( 15/03/20)* அன்று*காலை*11 மணி முதல் இரவு 9 மணி வரை* உரிமைக்குரல் மாத*இதழ் சார்பில்*திரு.பி.எஸ். ராஜு*தலைமையில் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின்*103 வது*மனிதநேய*விழா மற்றும் மாட்டுக்கார வேலன், என் அண்ணன் ,தலைவன் ,தேடிவந்த*மாப்பிள்ளை, எங்கள் தங்கம் திரைக்காவியங்களின் பொன்விழா நிகழ்ச்சி வெகு விமரிசையாக அனுசரிக்கப்பட்டது .* நிகழ்ச்சியில் , கவியரங்கம் , பொன்விழா மலர் வெளியீடு , பட்டிமன்றம், இன்னிசை நிகழ்ச்சி, சிறப்பு*விருந்தினர்கள் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். பற்றி புகழுரை*ஆகியவற்றுடன்*இனிதே*நிறைவுற்றது.*


காலை*11 மணி அளவில் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின்*திருஉருவ*படம் மேடையில்*திறந்து வைக்கப்பட்டது .* குத்துவிளக்கேற்றி*, பூஜைகள், ஆராதனைகள் செய்து* கவிஞர் திரு.முத்துலிங்கம்*, திரு.எம்.ஏ.முத்து (மக்கள் திலகத்தின் உடை அலங்கார நிபுணர் ) ஆகியோர் வழிபட , உள்ளூர், மற்றும் வெளியூர் பக்தர்கள்*தொடர்ந்து பூஜைகள் செய்து வழிபட்டனர் .


பின்னர், பிரபல*பத்திரிகையாளர் திரு.துரை கருணா*அவர்கள் அனைவரையும்*வரவேற்று , நிகழ்ச்சி நிரலை*அறிவித்தார் .அதன் பின் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆரை*புகழ்ந்து கவியரங்கம் நடைபெற்றது .* நிகழ்ச்சியில் திருவாரூர் மாவட்டம், கூத்தா*நல்லூர்*திரு.முகமது*அஷ்ரப்*, திருமதி சாந்தி, சேலம், திரு.பாரதி சொல்லரசன் ,சேலம், விழுப்புரம்*வளவனூர் திரு.இரா.முருகன், திரு.விஸ்வநாதன், திண்டுக்கல், திரு.அருகன் அடியார், ஆரணி, திரு.கவிதை மைந்தன், மதுரை, திரு.கவிராயர் கேசவன், திரு.கவிக்குமரன் , சென்னை*ஆகியோர்*பங்கேற்று புரட்சி தலைவர் எம்.ஜி.ஆருக்கு*புகழ்மாலை*சூட்டினர்*


கவியரங்கத்தை தொடர்ந்து, மாட்டுக்கார வேலன், என் அண்ணன் , தலைவன், தேடிவந்த*மாப்பிள்ளை, எங்கள் தங்கம் ஆகிய படங்களின் பொன்விழா மலரை*கவிஞர் திரு.முத்துலிங்கம்*வெளியிட திரு.எம்.ஏ.முத்து அவர்கள் பெற்றுக் கொண்டார் . கவியரங்கத்தில் பங்கு பெற்றவர்களுக்கும், கவிஞர் திரு, முத்துலிங்கம், திரு.எம்.ஏ . முத்து* ஆகியோருக்கும் பொன்னாடைகள் அணிவிக்கப்பட்டு, நினைவு பரிசுகள்*வழங்கப்பட்டன .


பிற்பகல் 1 மணியளவில் உணவு இடைவேளை விடப்பட்டது . விழாவிற்கு*வந்திருந்த அனைவருக்கும் , தி.நகர் , பாண்டி பஜார், பாலாஜி*பவனில்*மதிய*உணவு அளிக்கப்பட்டது .**


பிற்பகல் 2 மணியளவில் நடிக*மன்னன் எம்.ஜி.ஆர். படங்களில் இருந்து முக்கிய*காட்சிகள், வசனங்கள், பாடல்கள்*பக்தர்களுக்காக மேடையில்*சிறிய*திரையில்*ஒளிபரப்பு செய்யப்பட்டது* பிற்பகல் 3 மணியளவில்* மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின் நீடித்த*புகழுக்கு*காரணம்*கொடை*உள்ளமா* அல்லது* தமிழ் பற்று உள்ளமா* என்கிற தலைப்பில்*பட்டி மன்றம் நடைபெற்றது . நிகழ்ச்சியில் , பேராசிரியர் திருமதி மல்லிகா, திரு.சிந்தை வாசன் ஆகியோர்* கொடை*உள்ளம் என்ற தலைப்பிலும், திரு.இரா. முருகன், விழுப்புரம், திருமதி* சந்தியா* தமிழ்செல்வம்**ஆகியோர்*தமிழ் பற்று உள்ளம்தான்*என்ற தலைப்பிலும் வாதிட்டு பேசினார்கள் .*நடுவராக*திரு.தாமரைப்பூவண்ணன்* அவர்கள் பொறுப்பேற்று இடையிலே*சில*பாடல்கள்*பாடி , கொள்கை வேந்தன்*எம்.ஜி.ஆர். அவர்கள் திரையுலகிலும், தன் ஆட்சி காலத்திலும்* தமிழுக்கு*சிறந்த*தொண்டாற்றினார்*என்று பல உதாரணங்களை சுட்டிக்காட்டினார் ,* தஞ்சையில் தமிழ் பல்கலை*கழகம்*(ஆயிரம் ஏக்கரில்*), பெரியாரின்*எழுத்து சீர்திருத்தம், கொடைக்கானலில் அன்னை தெரசா*பெண்கள்*பல்கலை*கழகம், மதுரையில்*ஐந்தாவது உலக தமிழ் மாநாடு, போன்ற பல திட்டங்கள்*.செயல்படுத்தினார் ., தன்* வாழ்நாளில்* இளமை பருவத்தில் இருந்து , இறுதிவரையில்*கொடை உள்ளம் கொண்டு* பலபேர்*வாழ்க்கையில்*ஒளியேற்றினார் . விளம்பரங்கள் இல்லாமல் அவர் செய்த உதவிகள் எண்ணற்றவை. பெருந்தலைவர் காமராஜர், பேரறிஞர் அண்ணா, நடிகர்*சோ*போன்றவர்கள்* .இதை*சுட்டிக்காட்டி*பேசியுள்ளனர் . நடிகர்*சோ ஒருமுறை* பேசும்போது,* வீட்டில்*உலை வைத்துவிட்டு, அரிசிக்காக ஒருவர் வீட்டு*வாசலில்*காத்திருப்பது என்றால் அது எம்.ஜி.ஆர். வீடாகத்தான்*இருக்கும்.* எம்.ஜி.ஆர். விளம்பரத்திற்காகத்தான் உதவிகள், நன்கொடைகள்*செய்கிறார் என்று பலர் விமர்சனம் செய்வதை நான் கேட்டதுண்டு. அதில்*எள்ளளவும் உண்மை இல்லை. வசதி படைத்தவர்கள் ,நிறைய பேர்கள் இருந்தாலும், எவ்வளவு பேர்களுக்கு*அந்த கொடை*உள்ளம் , மற்றும் உதவிகள்*செய்யவேண்டும் என்ற எண்ணம் தோன்றும் . நாம் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம் . ஆகவே, மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். செய்த தான*தருமங்கள்*தான் அவர்* உயிரை* குண்டு*சுட்டபோதும், எமன் நெருங்கியபோதும், காப்பற்றியது என்பது*அனைவரும் அறிந்த வரலாறு .என்று*நடுவர் தீர்ப்பு கூறினார் .


மாலை 4 மணியளவில் தேநீர் இடைவேளைக்கு பிறகு ,ஸ்ரீதேவி பைன் ஆர்ட்ஸின் ஸ்ரீதர்* நவராக்ஸ் குழுவினரின்*இன்னிசை நிகழ்ச்சி நடைபெற்றது . எழில் வேந்தன் எம்.ஜி.ஆர். அவர்களின்*திரைப்பட பாடல்கள் கீழ்கண்டவாறு இசைக்கப்பட்டன ;


1. ஒன்றே குலம் என்று பாடுவோம்* - பல்லாண்டு வாழ்க*
2.உலகம் பிறந்தது எனக்காக* - பாசம்*
3.ஆஹா நம் ஆசை நிறைவேறுமா* - தாய்க்கு பின் தாரம்*
4.தங்க பதக்கத்தின் மேலே - எங்கள் தங்கம்*
5.பன்சாயி , காதல் பறவைகள்* - உலகம் சுற்றும் வாலிபன்*
6.காவேரி கரையிருக்கு* - தாயை காத்த தனயன்*
7.போய் வா நதி அலையே* - பல்லாண்டு வாழ்க*
8.நெஞ்சம் உண்டு, நேர்மை உண்டு* - என் அண்ணன்*
9.நீ என்னென்ன சொன்னாலும் கவிதை - நேற்று இன்று நாளை*
10.நீல நிறம் வானுக்கும் கடலுக்கும் நீல நிறம் - என் அண்ணன்*
11.இந்த பச்சைக்கிளிக்கு - நீதிக்கு தலைவணங்கு*
12.ஒரே முறைதான் உன்னோடு - தனிப்பிறவி*
13.காலத்தை வென்றவன்* நீ* - அடிமைப்பெண்*
14.நினைத்ததை நடத்தியே முடிப்பவன் -* நம் நாடு*
15.புதிய வானம் புதிய பூமி* -அன்பே வா*
16.கல்யாண வளையோசை* - உரிமைக்குரல்*
17.நீங்க நல்லா இருக்கோனும்* *- இதயக்கனி*
18. கண்ணை நம்பாதே* - நினைத்ததை முடிப்பவன்*
19.உன்னை நான் சந்தித்தேன்* - ஆயிரத்தில் ஒருவன்*
20.வெற்றி மீது வெற்றி வந்து என்னை சேரும் -தேடிவந்த மாப்பிள்ளை*
21.மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும் - தெய்வத்தாய்*
22.மாணிக்க தேரில் மரகத கலசம்* - தேடிவந்த மாப்பிள்ளை*
23.இறைவா உன் மாளிகையில்* - ஒளி விளக்கு*
24.நான் உங்கள் வீட்டு பிள்ளை* - புதிய பூமி*
25.கண் போன போக்கிலே* - பணம் படைத்தவன்*
26.யாரது யாரது தங்கமா* - என் கடமை*
27.உனது விழியில் எனது பார்வை* -நான் ஏன் பிறந்தேன்*


இரவு 7 மணியளவில் சென்னை பெருநகர முன்னாள் மேயர் திரு.சைதை துரைசாமி அரங்கத்திற்கு வந்து , மேடையில் அவருக்கு அளித்த மரியாதைகளை ஏற்றபின் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களுக்கு புகழ் பாடி பேசினார் .


தும்பிவாடி துரைசாமி என்கிற பெயரை சைதை துரைசாமி என்று பெயர் மாற்றம் செய்தவர் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். என்னை சட்டமன்ற உறுப்பினர் ஆக்கி அழகு பார்த்தார் .* சில காலம் அவருடன் நெருங்கி பழகும் வாய்ப்பு கிட்டியது ,அதற்கு நன்றி கடனாகவும், கடமையாகவும், கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு அவரது பெயர், அவர் வாழ்ந்த ராமாவரம் இல்லம் அமைந்துள்ள* மவுண்ட் பூந்தமல்லி சாலைக்கு , எம்.ஜி. ஆர். சாலை என்ற பெயர் , சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு அவர் பெயர்* போன்றவற்றை மத்திய , மாநில அரசுகளுக்கு முறைப்படி பரிந்துரை செய்து , அவற்றில் வெற்றியும் அடைந்தேன் .என் வாழ்வில் நான் அடைந்த பாக்கியம் ஆக இவற்றை கருதுகிறேன் .**1970ம் ஆண்டில் வெளியான நடிக பேரரசர் எம்.ஜி.ஆர். திரைக்காவியங்களின்*பொன்விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசுவது பெருமையாக கருதுகிறேன் 1970ல் வெளியான படங்கள் ஒவ்வொன்றிலும் மக்கள் சிந்திக்க கூடிய , பயன்படக்கூடிய கருத்துக்கள், சமூக சீர்திருத்த வசனங்கள், வாழ்க்கை நெறிக்கு*உபயோகமான கருத்தான பாடல்கள் பெரும் வரவேற்பை பெற்றன .* மாட்டுக்கார வேலன் வெள்ளிவிழா படம் . என் அண்ணன், எங்கள் தங்கம் போன்ற படங்கள் 100 நாட்களுக்கு மேல் ஓடியவை .* மேகலா பிக்ச்சர்ஸ் நிறுவனத்திற்கு புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். சம்பளம் வாங்காமல் இலவசமாக நடித்து கொடுத்து*முரசொலி பத்திரிகை அலுவலகம் சிக்கலில் இருந்து விடுபட உதவிக்கரம் நீட்டி*எங்கள் தங்கம் பெரும் வெற்றி பெற்று , வசூல் ஈட்ட காரணமாக திகழ்ந்தார்*புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர்.* திரைப்படங்களில் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர்.அவர்கள் வழிகாட்டுதலின்படி, அவருடைய சிந்தனைகள், கருத்துக்கள் வசனங்கள், பாடல்கள், வருங்கால இளைய தலைமுறையினருக்கு கொண்டு சேர்ப்பது நமது தலையாய கடமை , அந்த வகையில் , இந்த பொன்விழா நடத்தும் உரிமைக்குரல் ஆசிரியர் திரு.பி.எஸ். ராஜு அவர்களை*நான் மனதார பாராட்டுகிறேன் என்று பேசினார் .



அ.தி.மு.க. அமைப்பு செயலாளரும், முன்னாள் சட்ட மன்ற உறுப்பினரும் ஆகிய*திரு.ஜெ.சி.டி.பிரபாகரன்* பின்வருமாறு பேசினார் .நான் லயோலா கல்லூரியில் . மாணவர் தலைவர்* தேர்தலில்*.போட்டியிட்டு சுமார் 1000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றேன் , அப்போது சில மாணவர்கள் மதிய உணவு வசதி தேவை பற்றி முறையிட்டார்கள். நான் கல்லூரி முதல்வரிடம் பேசியபோது அப்படி ஒரு திட்டமில்லை என்றார். உடனே, நான்*மாணவர் நல சங்கம் ஒன்று உருவாக்கி அதன்மூலம் சில மாணவர்களுக்கு*மதிய உணவு வசதி ஏற்பாடு செய்ய முற்பட்டேன். உடனே 15 மாணவர்கள் சேர்ந்தார்கள் . பண தேவைக்கு , சில மாணவர்களுடன், ஆற்காடு இல்லத்தில் அப்போது அ. தி.மு.க. தலைவரான எம்.ஜி.ஆர். அவர்களை சந்தித்து திட்டத்தை எடுத்துரைத்தபோது , உடன் பத்தாயிரம் ருபாய் நன்கொடை அளித்தார்* அது போதாது ,எனவே* நடிக -நடிகைகள் மூலமாக கலை நிகழ்ச்சி நடத்தி* பணம் வசூல் செய்து, வங்கியில் டெபாசிட் செய்து அதில் வரும் வட்டியில் நிரந்தரமாக மாணவர்களுக்கு மதிய உணவு அளிப்பது பயனுள்ளதாகும் என்கிற யோசனையை ஏற்றுக்கொண்டு ,உடனே, தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு சென்று பேசுமாறு ஆலோசனை கூறினார்.* அப்போது நடிகர் சங்கத்தின் தலைவராக நடிகர் சிவாஜி கணேசன், மற்றும் நிர்வாகிகளாக, நடிகர் வி.கே. ராமசாமி, மேஜர் சுந்தரராஜன் போன்றவர்கள் இருந்தனர் .* நிர்வாகிகளை சந்தித்தபோது லயோலா கல்லூரி மாணவர் சங்கத்தில் இருந்து ரூ.1,000/-கட்டணம் செலுத்துமாறு கேட்டுக் கொண்டனர்.* கலைநிகழ்ச்சிக்கு மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்கள் தலைமை தாங்க வேண்டும் என்று நான் கேட்டுக் கொண்டேன் . அவரும் சம்மதித்தார் .* நிகழ்ச்சியின் நெருக்கத்தில் எம்.ஜி.ஆர் அவர்கள் ஷிமோகாவிற்கு படப்பிடிப்பு விஷயமாக சென்றுவிட்டார் . ஒருநாள் தென்னகம் பத்திரிகையில் எம்.ஜி.ஆர். கலைநிகழ்ச்சி விழாவில் கலந்து கொள்ள மாட்டார் என்ற செய்தி அறிந்து* பதட்டத்துடன், தொலை பேசியில் இதுபற்றி விசாரித்தேன்.* பத்திரிகை செய்தி தவறு, நான் நேரடியாக வரமாட்டேன் என்று கூறினேனா, நிச்சயம் வருவேன் . நிகழ்ச்சி ஏற்பாடு செய்யுங்கள் என்று கூறி போனை வைத்துவிட்டார்.* இருந்தாலும் அவர் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வரையில் எங்களுக்கு பயம் இருந்தது.* அவர்மட்டும் வராமல் போயிருந்தால்*எங்களை ரசிகர்களும், பொதுமக்களும் பின்னி எடுத்திருப்பார்கள் .* நல்லவேளையாக சரியான நேரத்தில்* பல்கலை கழக நூற்றாண்டு மண்டபத்தில் அரங்கம் அதிரும் வகையில் நுழைந்து எங்களுக்கு இன்ப அதிர்ச்சி அளித்தார் .நடிகர் சங்கத்தில் , மாணவர் நல சங்கத்திடம் இருந்து ரூ.1,000/- பெற்றது குறித்து அவர் அறிந்து வைத்திருந்தார் போலும் . அவர் பேசும்போது நடிகர் சங்கத்தின் செயல்பாடு தவறு என்று கூறி, அந்த பணத்தை நான் தருகிறேன் என்று கூறி*அரங்கம் அதிர* ரூ.1,000/- என்னிடம் அளித்தார் .* எங்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி .


இப்போது உள்ள தலைமை கழகம் , முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பெயர்*சூட்டி அழகு பார்க்க கட்சி தலைமை முடிவு செய்யும் பட்சத்தில், முன்னாள் முதல்வரும், மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். அன்பு மனைவி ஜானகி அம்மையார்*தனது பெயரில் உள்ள சொந்த கட்டிடத்தை எம்.ஜி.ஆர். அவர்களின் வேண்டுகோளின்படி கட்சிக்கு இலவசமாக நன்கொடை அளித்தார் .* எனவே அவர் பெயரை சூட்டுவதுதான் பெருமையாக இருக்கும்,* புரட்சி தலைவருக்கு நாம் செலுத்தும் நன்றிக்கடன்.* முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு மெரினாவில் சமாதி உள்ளது . அவர் வாழ்ந்த போயஸ் தோட்டம் நினைவு இல்லமாக செய்வதற்கு அரசின் திட்டம் பரிசீலனையில் உள்ளது என்று பேசினேன் . இறுதியில் அமைச்சரவை இதற்கு சம்மதித்தது .
தமிழ்நாட்டில் மட்டுமல்ல , வெளிநாட்டில் தமிழர்கள் வாழும் இடமெல்லாம் நான் செல்லும்போது, கூட்டங்களில் பேசும்போது எம்.ஜி.ஆர். என்ற மூன்றெழுத்தை உச்சரிக்கும்போது எழும் கைதட்டல்கள் இன்றுவரையில் வேறு எந்த தலைவர்களுக்கும் இல்லை என்பதை இதயசுத்தியோடு தெரிவித்துக் கொள்கிறேன் . ஆகவே மறைந்தும் மறையாமல் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர்.*மக்களின் இதய சிம்மாசனங்களில் வாழ்ந்து வருகிறார் .மக்களை அவர் நேசித்தார் .இன்றும் மக்கள் அவரை நினைக்க தயங்குவதில்லை , அவர் என்றும்*மக்கள் மனங்களில் வாழ்வார். அப்படிப்பட்ட தலைவரின் படங்களுக்கு பொன்விழா எடுக்கும் உரிமைக்குரல் ஆசிரியர்* திரு.பி.எஸ்.ராஜு அவர்கள்*பாராட்டத்தக்கவர் .


இறுதியாக முன்னாள் அமைச்சர் திரு.எஸ். ஆர். ராதா பேசினார் .நான் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின் அமைச்சரவையில் பணியாற்றியது பொற்காலம் .* *சட்டமன்றத்தில்* கருணாநிதி அவர்கள் ஒருசமயம் பேசும்போது தனக்கு ஆபத்து இருக்கிறது . இந்த ஆட்சியில் எனக்கு பாதுகாப்பு இல்லை என்று பேசினார் . வசந்த மண்டபத்தில் இருந்து இதைக் கேட்டு கொண்டிருந்த எம்.ஜி.ஆர் அவர்கள் ,விரைந்து வந்து சட்டமன்றத்தில்* இந்த அரசு அண்ணாவின் அரசு , எனவே கலைஞருக்கு உகந்த பாதுகாப்பை அரசு அளிக்கும், என்றார்.* *நான் பிறகு எம்.ஜி.ஆர். அவர்களிடம் சொன்னேன் . நல்லவேளையாக நீங்கள் பதில் அளித்தீர்கள்.இல்லையானால் , நாளைய பத்திரிகையில் எம்.ஜி.ஆர். ஆட்சியில் கருணாநிதிக்கு ஆபத்து என்கிற செய்தி வந்திருக்கும் என்றேன்.* ஒருமுறை மதுரையில் இருந்து திருச்செந்தூருக்கு*நீதி கேட்டு நெடிய பயணம் செய்த கருணாநிதி அவர்கள் , பாத யாத்திரையின்போது கால்களில் கொப்புளங்கள் ஏற்பட்டு அவதிப்பட்டார்.விஷயம் அறிந்த எம்.ஜி.ஆர். அவர்கள் சில மருத்துவர்களுடன் உதவி குழு ஒன்றை அனுப்பி , பகைவன் என்று பாராமல் உதவினார் .* மேலும் எம்.ஜி.ஆர். அவர்கள் சொன்னார்கள். கலைஞர் அவர்கள் என்றும் உயிருடன் இருக்க வேண்டும் . அப்போதுதான் அவரை எதிர்த்து நான் முதல்வராக நீடிக்க முடியும். ஏனென்றால் கலைஞரின் பலம் என்ன, பலவீனம் என்ன என்பது எனக்கு நன்றாக தெரியும் . ஒருவேளை எனக்கு முன்பாக அவர் மறைந்து புதிய எதிரியை எதிர்நோக்கி காய்களை நகர்த்தி ஆட்சி பிடிக்க சிரமங்கள் ஏற்படலாம் . ஆகவே*இந்த சூழ்நிலைதான் எனக்கு எப்போதும் சாதகமாக அமையும் என்றார். அதற்கு தகுந்தாற்போல கடைசிவரை கருணாநிதி , எம்.ஜி.ஆர். அவர்கள் இருக்கும்வரையில் கோட்டைவாசலில் முதல்வராக வரமுடியவில்லை .இப்போதைய ஆட்சியாளர்கள் அ. தி.மு.க. நிறுவன தலைவர் எம்.ஜி.ஆர்.*அவர்களின் இமேஜை பலப்படுத்தி செயல்பட்டால் அவர்களுக்கு எதிர்காலம் உண்டு. அல்லது இருண்ட காலமாகிவிடும் .இறுதியாக இந்த பொன்விழா நிகழ்ச்சியை* நடத்திய உரிமைக்குரல் இதழ் ஆசிரியர் திரு.பி.எஸ். ராஜு*மேன்மேலும்* புரட்சி தலைவர் எம்.ஜி. ஆர். அவர்களுக்கு புகழ் சேர்க்கும் வகையில் பல விழாக்கள் நடத்தி வெற்றி பெற நல்வாழ்த்துக்கள் என்று பேசினார் .

நிகழ்ச்சியின் இறுதியில் உரிமைக்குரல் ஆசிரியர் திரு.பி.எஸ். ராஜு*விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்த அனைவரையும், நன்றி பாராட்டி பேசினார்


பிற்பகலுக்கு பின்னர் நடந்த நிகழ்ச்சிகளின் போது , அரங்கம் நிரம்பி வழிந்தது . கொரானா வைரஸ் நோய் அச்சுறுத்தலை மீறி, பக்தர்கள் , ரசிகர்கள் திரண்டு வந்து பேராதரவு தந்தது* மகிழ்ச்சி கலந்த ஆச்சர்யம் அளித்தது*


. விழாவில்*பொன்மன செம்மல் எம்.ஜி.ஆர். நற்பணி சங்கம், சைதை கலையுலக பேரொளி எம்.ஜி.ஆர். மன்றம், மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். மன்றம், எழும்பூர், ஆயிரத்தில் ஒருவன் இறைவன் எம்.ஜி.ஆர். பக்தர்கள் குழு, சென்னை, போன்ற அமைப்புகளின் பக்தர்கள், மற்றும் சென்னைவாழ் பக்தர்கள் ஏராளமானோர்,*திரு.ஆனந்த், திரு.மூர்த்தி, பெங்களூரு,திரு.ரோசய்யா, அரக்கோணம் திரு.கிருஷ்ணன் மற்றும் குழுவினர், திருச்சி, திரு.சத்யமூர்த்தி மற்றும் குழுவினர் சேலம், திரு.ஆறுமுகம், திரு.ஜாலி, திரு.வி.ராஜா, மற்றும் குழுவினர், திருநெல்வேலி, திரு.மலரவன், திரு.பாலமுருகன் மற்றும் குழுவினர், திண்டுக்கல், மதுரை எம்.ஜி.ஆர். பக்தர்கள், திருமதி பெரிய நாயகி*.திரு.மோகன்தாஸ், திரு.புரட்சிமலர் சிவா, கோவை,திரு.வாசுதேவன்,சூலூர், கோவை, திரு.ரவி, ஆரணி* மற்றும் பலர் (வெளியூர் நண்பர்கள் சிலர் பெயர் தெரியவில்லை , மன்னிக்கவும் ) கலந்து கொண்டு சிறப்பித்தனர் .

நிகழ்ச்சி முடிவில் வெளியூர் பக்தர்கள் பலருக்கு இரவு உணவு வழங்கப்பட்டது .
*

orodizli
19th March 2020, 12:14 PM
M.G.R. அசாத்திய துணிச்சல் மிக்கவர். தவறு எங்கே நடந்தாலும் தயங்காமல் தட்டிக் கேட்பார். ஒரு காரியத்தில் இறங்க வேண்டுமென்றால் அது ஆபத்தானதாக இருந்தாலும் பொருட்படுத்த மாட்டார். அதற்கு எவ்வளவோ உதாரணங்கள்.

1977-ம் ஆண்டு சட்டப் பேர வைத் தேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெற்று முதல்முறையாக ஆட்சியைப் பிடித்தது. அந்தத் தேர்தலில் அருப்புக் கோட்டை தொகுதியில் போட்டியிட்டு எம்.ஜி.ஆர். வெற்றி பெற்றார். வேட்புமனு தாக்கல் செய்வதற்கு முன், மதுரை மேம்பாலம் அருகில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவிக்க வந்தார். சிலையின் பீடமே 10 அடி உயரம் இருக்கும். அதற்கு மேலே சுமார் 8 அடி உயரத்தில் அண்ணா சிலை கம்பீரமாக நிற்கும்.

இப்போது இருப்பது போல சிலைக்கு மாலை அணிவிக்க படி வசதி எல்லாம் அப்போது கிடையாது. எம்.ஜி.ஆர். வரப்போகிறார் என்பதை அறிந்ததும் அந்தப் பகுதியே ஜன சமுத்திரமாக காட்சியளித்தது. மாலை அணிவிப்பதற்காக வந்த எம்.ஜி.ஆர்., காரை விட்டு இறங்கியதும் சில தொண்டர்கள் எங்கிருந்தோ மர ஏணி ஒன்றைக் கொண்டு வந்தனர். தொண்டர்கள் சிலர் ‘‘நீங்கள் ஏணியில் ஏறி சிரமப்பட வேண்டாம். மாலையை தொட்டுக் கொடுங்கள். நாங்கள் சிலைக்கு அணிவிக்கிறோம்’’ என்று எம்.ஜி.ஆரிடம் கூறினர்.

அதை எல்லாம் எம்.ஜி.ஆர். கவனிக் காமல், சிலையையும் ஏணியையும் ஒரு பார்வை பார்த்தார். ‘எப்படி ஏறலாம்? எப்படி மாலையை தனது அண்ணனுக்கு அணிவிக்கலாம்? ’ என்று அவரது மனம் கணக்கு போட்டது. இதெல்லாம் சில விநாடிகள்தான். உடனே, வேகமாக ஏணியில் ஏறி சிலையின் குறுகலான பீடத்துக்கு சென்று பிடிமானத்துக்காக சிலையை கைகளால் தொட்டபடி நின்று கொண்டார். கொஞ்சம் தவறினாலும் கீழே விழும் அபாயம் உண்டு. என் றாலும் துணிச்சலாக எம்.ஜி.ஆர். ஏறிவிட்டார்.

சிலைக்கு பின்னால் இருந்து ஒருவர் பெரிய மாலையை கொடுக்க அதை லாவகமாக தூக்கி அண்ணா சிலை யின் கழுத்தில் சரியாக விழும்படி எம்.ஜி.ஆர். அணிவித்தபோது, தொண் டர்களின் ஆரவாரத்தால் தென்பாண்டி மண்டலமே குலுங்கியது........... Thanks...........

orodizli
19th March 2020, 12:16 PM
மதுரை என்றதும் சில சுவையான நினைவுகள். எம்.ஜி.ஆரின் திரைப்பட, அரசியல் வாழ்க்கையில் மதுரைக்கு தனி இடம் உண்டு. தமிழகம் முழுவ திலும் எம்.ஜி.ஆருக்கு ஆதரவு உண்டு என்றாலும் மதுரை அவரது கோட்டையைப் போல விளங்கி

சிறுவயதில் எம்.ஜி.ஆர். நடித்த நாடகக் கம்பெனியின் பெயர் மதுரை ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனி. எம்.ஜி.ஆர். கதாநாயகனாக நடித்து வெள்ளி விழா கண்ட முதல் படம் ‘மதுரை வீரன்'. படம் வெள்ளி விழா கொண்டாடியது மதுரையில்.

1958-ம் ஆண்டு ‘நாடோடி மன்னன்’ படத்தின் அசுர வெற்றிக்காக முதன் முதலில் பொதுமக்கள் முன்னிலையில் விழா நடந்த இடம் மதுரை தமுக்கம் மைதானம். இந்த விழாவில்தான் எம்.ஜி.ஆர். ஊர்வலமாக அழைத்து வரப்பட்டு 110 பவுனில் அவருக்கு தங்கவாள் வழங்கப்பட்டது.

அதிமுகவை தொடங்கிய பின் அப் போதைய திமுக ஆட்சிக்கு எதிராக பிரதமர் இந்திரா காந்தியிடம் புகார் மனு கொடுக்க மதுரைக்கு எம்.ஜி.ஆர். சென்ற ரயில், வழிநெடுக மக்களின் வரவேற்பால் 10 மணி நேரம் தாமதமாகச் சென்று பரபரப்பை ஏற்படுத்தியது. அதிமுகவை எம்.ஜி.ஆர். தொடங்கிய 7 மாதத்தில் அவரது கட்சிக்கு முதல் வெற்றியைக் கொடுத்தது திண்டுக்கல் நாடாளுமன்றத் தொகுதி இடைத்தேர் தல். அப்போது திண்டுக்கல் தனி மாவட் டமாக பிரிக்கப்படவில்லை. மதுரை மாவட்டத்தில்தான் இருந்தது. அதிமுக வுக்கு முதல் மேயரைக் கொடுத்தது மதுரைதான்.

1980-ம் ஆண்டு எம்.ஜி.ஆர்.ஆட்சி கலைக்கப்பட்டது. பின்னர், நடந்த தேர்தலில் எம்.ஜி.ஆர். போட்டியிட்டு வெற்றி பெற்ற தொகுதி மதுரை மேற்கு. மீண்டும் முதல்வரான பின்னர், மதுரை யில் உலகத் தமிழ் மாநாட்டை நடத்தி னார். 1984-ம் ஆண்டு அமெரிக்காவில் இருந்தபடியே ஆண்டிப்பட்டி தொகுதி யில் போட்டியிட்டு வென்றார். அப்போது ஆண்டிப்பட்டி மதுரை மாவட் டத்தில்தான் இருந்தது. 1986-ம் ஆண்டு ஜூலையில் மதுரையில் எம்.ஜி.ஆர். மன்ற மாநாட்டை நடத்தினார். எம்.ஜி.ஆர். நடித்த கடைசிப் படம் ‘மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்’. இப்படி மதுரையோடு எம்.ஜி.ஆருக்கு நெருக்கமான பிணைப்பு உண்டு!

ஜப்பானில் எக்ஸ்போ 70 கண்காட் சியில் ‘உலகம் சுற்றும் வாலிபன்' படத் தின் படப்பிடிப்பு நடந்தது. ‘உலகம் அழகு கலைகளின் சுரங்கம்…’ பாடலின் சில காட்சிகளை 30 ஆயிரம் பல்புகளைக் கொண்டு ஒளி வெள்ளம் பாய்ச்சப்பட்ட ஸ்விஸ் பெவிலியனில் எடுக்க எம்.ஜி.ஆர். திட்டமிட்டார்.

அந்த சமயத்தில் ஒரு காட்சிக்காக ஒளிப்பதிவாளர் அழைக்கும்வரை எம்.ஜி.ஆர், நடிகை சந்திரகலா, அசோ கன், நாகேஷ் ஆகியோர் ஒரு இடத்தில் அமர்ந்திருந்தனர். அப்போது அவர் கள் அருகில் வந்த ஜப்பானியர் ஒருவர் மது மயக்கத்தில் இருந்தார். ஆர்வத் தோடு சந்திரகலாவின் உடையை கவ னித்தார். திடீரென சில்மிஷம் செய்யும் எண்ணத்துடன் சந்திரகலாவின் உட லைத் தொட்டுவிட்டார். ஜப்பானியரின் கை சந்திரகலாவின் உடலைத் தொட்ட மறுகணம் எம்.ஜி.ஆரின் கை அவர் கன்னத்தில் விழுந்தது. ஜப்பானியரை எம்.ஜி.ஆர். பலமாக அறைந்து விட்டார். இதில் ஜப்பானியர் அணிந்திருந்த கண்ணாடி தெறித்து விழுந்தது.

தயாரிப்பாளரும் இயக்குநருமான பி.ஆர். பந்துலுவுக்கு உதவுவதற்காக அவரது ‘ஆயிரத் தில் ஒருவன்’ படத்தில் எம்.ஜி.ஆர். நடித்தார். ‘‘தொலைபேசியில்தான் எம்.ஜி.ஆரிடம் கேட்டேன். உடனே நடிக்க ஒப்புக் கொண்டு ‘கால்ஷீட்’ கொடுத்தார்’’ என்று பின்னர், 5-2-1971 தேதியிட்ட ‘சித்ராலயா’ இதழில் பந்துலு நன்றியுடன் கூறியிருந்தார். ‘மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்’ படத்தை முதலில் பந்துலுதான் இயக்குவதாக இருந்தது. இடையே அவர் இறந்து விட்டதால் எம்.ஜி.ஆரே படத்தின் இயக்குநராக பணியாற்றினார்.

சத்யா மூவீஸ் சார்பில் ஆர்.எம்.வீரப்பன் தயாரித்த ‘தெய்வத்தாய்’ திரைப்படம் 100 நாட்களைக் கடந்து வெற்றிகரமாக ஓடியது. அப்போது, கடுமையான அரிசிப் பஞ்சம் இருந்தது. மக்கள் அவதிப்படும் நிலையில், படம் வெற்றி பெற்றதற்காக 100வது நாள் விழா தேவையில்லை என்று எம்.ஜி.ஆர். கூறியதால் வெற்றி விழா கொண்டாடப்படவில்லை

எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்தபோது ஆதரவற்ற பெண் களுக்கு திருமண நிதி உதவித் திட்டம், தாலிக்கு தங்கம் வழங் கும் திட்டம் ஆகியவற்றை செயல் படுத்தியதோடு, ஆதரவற்ற விதவை தாய்மார்களின் பெண்களுக்கு ரூ.1000 உதவித் தொகை வழங் கவும் உத்தரவிட்டார்.

எம்.ஜி.ஆர். நடித்த ‘மதுரை வீரன்’ திரைப்படம் தமிழகத்தில் திரையிடப்பட்ட 33 திரையரங்குகளிலும் 100 நாட்கள் ஓடி சரித்திரம் படைத்தது. எந்த கருப்பு வெள்ளை படமும் இந்த சாதனையை முறியடிக்கவில்லை. பெங்களூரிலும், இலங்கையிலும் தலா ஒரு திரையரங்கில் 100 நாட்கள் ஓடியது. எம்.ஜி.ஆர். கதாநாயகனாக நடித்த முதல் வெள்ளி விழா படம் என்பதோடு, ரூ.1 கோடி வசூல் செய்த முதல் தமிழ்படம் என்ற பெருமை பெற்றது ‘மதுரை வீரன்.’

இதயவீணை’ படத்தை தொடர்ந்து ‘உதயம் புரொடக் ஷன்ஸ்' நிறுவனத்தின் சார்பில் எம்.ஜி.ஆர். நடித்த ‘சிரித்து வாழ வேண்டும்’, ‘பல்லாண்டு வாழ்க’ ஆகிய படங் களையும் மணியன் தயாரித்தார். இந்த மூன்று படங்களுமே 100 நாட் கள் ஓடி அமோக வெற்றி பெற்ற

எம்.ஜி.ஆரின் 100-வது படம் ‘ஒளிவிளக்கு’. 1968-ம் ஆண்டில் வெளியாகி அமோக வெற்றி பெற்றது. மதுரையில் 21 வாரங்கள் ஓடியது. மறு வெளியீடுகளிலும் சக்கைபோடு போட்டது. 1979-ம் ஆண்டு இலங்கையில் மறு வெளியீட்டிலும் 100 நாட்கள் ஓடி சாதனை படைத்தது ‘ஒளிவிளக்கு’.

அடிமைப் பெண்’ படப்பிடிப்புக்காக எம்.ஜி.ஆர். ராஜஸ்தான் சென்றபோது, அந்த மாநில முதல்வராக இருந்த மோகன்லால் சுகாதியா, எம்.ஜி.ஆருக்கு விருந்தளித்து கவுரவித்தார். அப்போது அவர் பரிசளித்த புசுபுசுவென்ற வெள்ளைத் தொப்பி, எம்.ஜி.ஆருக்கு அழகாக பொருந்தியது. அதிலிருந்துதான் எம்.ஜி.ஆருக்கு தொப்பி அணியும் பழக்கம் ஏற்பட்டது......... Thanks.........

orodizli
19th March 2020, 12:20 PM
19.03.2020 இன்று தலைவரின் துணுக்குகளில்
மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட போது திருத்தணி ஆந்திராவுடன் சேர்க்கப்பட்டது.
போராட்டம் வடக்கு எல்லையிலிருந்து நடத்தி திருத்தணியை
தமிழகத்து மீட்டார்
ம.பொ.சி.
பின்நாளில் அவர் குடல் நோயால் பாதிக்கப்பட்ட போது அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிலை............... Thanks...

orodizli
19th March 2020, 12:23 PM
அவருக்கு தைரியம் சொல்லி மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சைக்கான
செலவுகளையும் செய்து
குணப்படுத்தி மா.பொ.சியை மீட்டார்
எம்ஜிஆர்.
பின்நாளில் தலைவர் மா.பொ.சியைப் பார்த்து
இனி ஒவ்வொரு பிறந்த நாள் விழா விலும் தாங்கள் விரும்பியதை வாங்க நான் தவறாமல்
கலந்து கொண்டு அந்த வயதுக்கு ஏற்றபடி
உ.ம் 80 என்று வைத்தால் 80000.00 ரூபாய் கவரில் தருவேன் என்று
தந்தவர் நம் தலைவர்....... Thanks...

orodizli
19th March 2020, 12:28 PM
எம்.ஜி.ஆர்., நடித்த "மதுரை வீரன் "படம் தமிழகத்தில் திரையிட்ட 33திரையரங்கிலும் 100 நாட்கள் ஓடியது.எந்த கறுப்பு வெள்ளைப்படமும் சாதிக்க வில்லை.பெங்களூரிலும் இலங்கையிலும் 100 நாட்கள் ஓடியது.தலைவர் கதாநாயகனாக நடித்த முதல் வெள்ளிவிழா படம் இதுவே.ரூபாய் 1 கோடி தாண்டிய வசூல் செய்த முதல் படமும் இதுதான். திரையுலக வசூல் சக்கரவர்த்தி என எல்லோரும் எம்.ஜி.ஆர். அவர்களை கூற தொடங்கியது இந்த பட வெற்றி யினால் தான்......... Thanks.........

orodizli
19th March 2020, 12:29 PM
முன்னெல்லாம் சைக்கிளில் பின்னால் அமர்ந்து கொண்டு டபுள்ஸ் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது
போனால் போலீஸார்
அபராதம் விதிக்கப்படும்.
தலைவர் முதல்வரானதும் டபுள்ஸ் சைக்கிளில் செல்வாம் என உத்தரவிட்டார்.
ஏழைகளின் இதய தெய்வம் அல்லவா......... Thanks.........

orodizli
19th March 2020, 12:30 PM
எம்ஜிஆர் படங்களை முதல் நாளிலேயே பார்த்து விட ரசிகர்கள் துடிப்பார்கள்.
அந்த ஆர்வமே சோகமாய் முடிந்தது.
சேலத்தில் 1975 ம் ஆண்டு மே 9ம் தேதி
நினைத்ததை முடிப்பவன் படம் வெளியானது.
சேலத்தில் ஜெயா தியேட்டரில் முதல்நாள்
கூட்டநெரிசலில் 4பேர்
இறந்தனர்கள்.மேலும்
சிலருக்கு காயம்.
தலைவர் கேட்டதும்
அங்கு சென்று ஆறுதல்
மற்றும் கருணைத் தொகையும் வழங்கினார்......... Thanks.........

orodizli
19th March 2020, 12:32 PM
எம்ஜிஆர் நடித்த" நாடோடி மன்னன் "படம்
1959 ம் ஆண்டு திருவண்ணாமலை கிருஷ்ணா திரையரங்கில் மறுவெளியீடு செய்யப்பட்டது.
சினிமாஸ்கோப் போன்ற நவீன உத்திகள் இல்லாமல் தினசரி 3 காட்சிகளாக
மறுவெளியீட்டில் 100
நாட்கள் ஓடிய ஒரே முதல் படம்
நாடோடிமன்னன்........... Thanks.........

orodizli
19th March 2020, 12:34 PM
சத்யா மூவிஸ் சார்பில் ஆர்.எம்.வீரப்பன் தயாரித்த தெய்வத்தாய் படம் 100நாட்கள் ஓடியது. அப்போது கடுமையான அரிசிபஞ்சம் இருந்தது. மக்கள் அவதி ப்படும் நிலை.படம் வெற்றிவிழா தேவையில்லை என
எம்ஜிஆர் கூறியதால்
கொண்டாடப் படவில்லை........ Thanks...

fidowag
19th March 2020, 05:37 PM
ரகசிய*போலீஸ் 115 படத்திற்கு*திரண்ட பக்தர்கள் கூட்டம்*
------------------------------------------------------------------------------------------
தென்னக ஜேம்ஸ் பாண்டாக மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். நடித்து முதல் வெளியீட்டிலும், அதன்பின் பல வெளியீடுகளிலும் வசூலில் புரட்சி செய்து சாதனை புரிந்த " ரகசிய போலீஸ் 115" டிஜிட்டல் வடிவில் புதிய தொழில்நுட்ப்பதில் கடந்த வாரம் சென்னையில் சுமார் 10 அரங்குகளில் வெளியாகி வெற்றிநடை போட்டது .

முன்னதாக திருச்சி, கரூர், பழனி,தேனீ, சேலம் ,சேலம் மாவட்டத்தில் .;8 அரங்குகள் ,மதுரை (2 வாரங்கள் ) வெளியாகி புதிய படங்களுக்கு சவால் விடும் வகையில் வசூல் சாதனை செய்துள்ளது .


சென்னை பேபி ஆல்பட்டில்* தினசரி 2 காட்சிகள் (மாலை /இரவு ) 13/03/20 முதல் நடைபெற்றது.* ரசிகர்கள் / பக்தர்கள் பேராதரவு,மற்றும் வரவேற்பை முன்னிட்டு ஞாயிறு மாலை (15/03/20) காட்சி , இரவு காட்சி* ஆல்பட்டில் திரையிடப்பட்டது .ஞாயிறு* மாலை சிறப்பு காட்சிக்கு , கலைவேந்தன் எம்.ஜி.ஆர். அறக்கட்டளை பக்தர்கள் குழு சிறப்பு ஏற்பாடுகளை செய்திருந்தது .* அதன்படி ஞாயிறு காலை 10 மணி முதல் இரவு 7 மணிவரை இடைவிடாது புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். திரைப்பட பாடல்கள் அரங்க வளாகத்தில் ஒலித்த வண்ணம் இருந்தது .வசூல் சக்கரவர்த்தி எம்.ஜி.ஆரின் பிரத்யேக கட் அவுட் தயார் செய்து , அரங்க வாயிலில் அமைத்து , மலர்மாலைகளால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது .மாலை 6 மணியளவில் புரட்சி தலைவரின் கட் அவுட்டுக்கு பூஜைகள், பாலபிஷேகம், இளநீர் அபிஷேகம், ஆராதனைகள் செய்யப்பட்டது . அரங்கத்தின்*வாயில் அருகில் சாலையில் சரவெடிகள், பட்டாசுகள் வெடித்த வண்ணம் இருந்தன .பல்வேறு எம்.ஜி.ஆர். மன்ற அமைப்புகளை சார்ந்த உள்ளூர் ,மற்றும் வெளியூர் பக்தர்கள் திரண்டு வந்திருந்து இந்த நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு சிறப்பித்தனர் .


ஞாயிறு மாலை காட்சியில் சென்னை ஆல்பட்டில் சுமார் 700 நபர்களுக்கு மேல் காட்சியை ரசித்ததாக நெல்லை நண்பர் திரு.வி.ராஜா , அரங்க ஊழியர்களிடம் விசாரித்து* தகவல் தெரிவித்தார் .* பெரும்பாலான ரசிகர்களுக்கு ஆல்பட்டில் ஞாயிறு மாலை காட்சி திரையிடுவது தெரியாது .தினசரியில் முறையான விளம்பரம் இல்லை .* சென்னை தி.நகரில்* சர் பி.டி.தியாகராயர் அரங்கில் ,உரிமைக்குரல் மாத இதழ் நடத்தும்*மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். 103 மனித நேய விழா, மற்றும் 1970ல் வெளியான மக்கள் திலகத்தின் திரைக்காவியங்களின்* பொன்விழா நிகழ்ச்சிக்கு உள்ளூர் மற்றும் வெளியூர் பக்தர்கள்* சுமார் 400 நபர்கள்* கலந்து கொண்டிருந்ததால்கணிசமான பக்தர்கள் ஆல்பட் அரங்கிற்கு வரமுடியாமல் போய்விட்டது .இல்லாவிடில், அட்வான்ஸாக அரங்கு நிரம்பி வழிந்திருக்கும்**
கொரானா வைரஸ் நோய்* அச்சுறுத்தலை மீறி* இப்படி ரசிகர்கள் /பக்தர்கள்*திரண்டு வந்து காட்சியை ரசித்தது சென்னையில் ஆல்பட்* அரங்கில் மிகவும் ஆச்சர்யம் என்று அரங்க ஊழியர்கள் பேசிக் கொண்டதாக நெல்லை நண்பர் திரு.ராஜா தகவல் அளித்தார் .



ஒளி விளக்கு படத்தில் நடிகர் சோ, மக்கள் திலகம் எம்.ஜி.ஆரை பார்த்து என்ன வாத்தியாரே, மாங்குடி கிராமமே காலியாகிறது கொடிய நோயால். சீக்கிரம்*புறப்படு என்று கூறும்போது, மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். பதில் சொல்வார் . இந்த நோயே என்னை கண்டால் பறந்து போய்விடும் என்று . அதுபோல எம்.ஜி.ஆர்.*பக்தர்கள் நோயை கண்டு அசராமல், அச்சுறுத்தலுக்கு அடிபணியாமல் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். படத்திற்கு நல்ல வரவேற்பு அளித்தது மகிழ்ச்சியான தருணம் .

பல ஆண்டுகளாக , மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். திரைப்படங்களுக்கு திரை அரங்குகளில் பேனர் அமைத்து , பூஜைகள் , மலரலங்காரம் , ஆராதனைகள் செய்து சிறப்பிக்கும்* திரு. ஷிவ பெருமாள் மற்றும் ஈ பாஸ்கரன் தலைமையிலான கலைவேந்தன் எம்.ஜி.ஆர். பக்தர்கள் அறக்கட்டளை குழுவிற்கு ஆயிரத்தில் ஒருவன் இறைவன் எம்.ஜி.ஆர். பக்தர்கள் குழு சார்பில்*நெஞ்சார்ந்த நன்றிகள்

orodizli
20th March 2020, 03:02 PM
" படகோட்டி" திரைப்படத்தில் இடம்பெற்ற " கல்யாணப் பொண்ணு" முழுமையான பாடல்..
திரைப்படத்திலும் இல்லாத முழுமையான 78 Rpm இசைத்தட்டு பதிவு !
தவறாமல் கேட்டு மகிழுங்கள் நண்பர்களே !
இதோ ....

யாரும் பார்க்காத முகத்தை
கேட்காத சுகத்தை
கேளாது தரும் வளையல்
கைகளிலே ஓசை வர
கண்களிலே ஆசை வர
பெண்ணோடு வரும் வளையல்
அவ முன்னழகை சொல்லிக் கொண்டு
பின்னழகை அள்ளிக் கொண்டு
பின்னோடு வரும் வளையல்...

வாலி அவர்கள் இயற்றிய வரிகள்
ஆனால் அன்றைய பாடல் புத்தகத்தில் கூட இந்த வரிகள் இடம் பெறவில்லை என்பது நண்பர்கள் சொன்ன தகவல்...
( அன்றைய தணிக்கை குழுவினர் மேற்குறிப்பிட்ட வரிகளை அகற்றி இருக்கலாம் )
இருப்பினும் அன்றைய இசைத்தட்டு நிறுவனம் இப்பாடலை முழுமையாக தந்தமைக்கு நன்றி தெரிவித்து கொள்வோம் !.......... Thanks.........

orodizli
20th March 2020, 03:05 PM
#தெரியாதது #கடலளவு

சென்னை சத்யா ஸ்டூடியோவில் உரிமைக்குரல் படப்பிடிப்பில் வாத்தியாரைக் காண, தேனி மாவட்டத்திலிருந்து சண்முகவேலு என்ற தீவிர ரசிகர் காணச் சென்ற போது, ""என் கூட நடிக்கிறீயா...'' எனக்கேட்டார்.

"உங்க பக்கத்தில் நிற்கும்போதே, எனக்கு கை, கால் உதறுது; உங்க அன்பே போதும்,' என, அந்த ரசிகர் கூறியதும், அவரைக் கட்டிப்பிடித்து, போட்டோ எடுக்கச் சொன்னார் வாத்தியார்...

பின்னர்,

அருப்புக்கோட்டை வறட்சி நிதி வசூலுக்கு வந்த அவர், மதுரை தமிழ்நாடு ஓட்டலில் தங்கியிருந்த போது, வாத்தியாரைச் சந்திக்க, அந்த ரசிகர் மனைவி குழந்தைகளுடன் காத்திருந்தார்...நிறைய பார்வையாளர்கள் இருந்தபோதும், சண்முகவேலுவை அடையாளம் கண்டு, உதவியாளரிடம் அழைத்து வரச்செய்தார்.

அந்த ரசிகரின் இரு மகள்களுக்கு சத்யா, ராணி என பெயரிட்டு, "சத்யா, எனது தாய், ராணி எனது அண்ணியார்,' எனக் கூறி, அவர் மனைவியிடம் நலம் விசாரித்து, 'என்ன உதவி வேண்டுமானாலும், இந்த அண்ணனிடம் தயக்கமில்லாமல் கேளுங்கள்...' என்றார். வெளியே வந்த சண்முகவேலுவின் மனைவி மிகவும் நெகிழ்ந்து, "கட்சிக்காக, சொத்துக்களை நீங்கள் விற்ற போது, எனக்கு ஒரு மாதிரியாக இருந்தது... ஆனால் இந்த கூட்டத்தில், உங்களை அடையாளம் கண்டு பேசி நமக்கு உதவியும் செய்கிறேன்... என்றால்,

#அவருக்காக #நம் #சொத்துக்களை #இழந்தாலும், #பரவாயில்லை,' என்று கண்ணீருடன் கூறினார்...

வெளியே தெரியாத இப்பேர்ப்பட்ட பகட்டில்லா பக்தர்கள் இன்னும் நம்மிடையே வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்...

படித்ததைப் பகிர்கிறேன்...

வாத்தியாரின் மனிதநேயம் 'நமக்குத் தெரிந்தது கையளவு, தெரியாதது கடலளவு'....... Thanks...

orodizli
20th March 2020, 03:08 PM
தமிழகத்தில் வருகின்ற 31-ஆம் தேதி வரை பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு விடுப்பு என்று அரசால் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இதை பயன்படுத்தி நாம் ஒரு பதிவை வருங்கால சந்ததிகளுக்கு உதவுமே என்று பதிவிடுகிறோம் டாக்டர் புரட்சித்தலைவர் வாழ்ந்த வாழ்க்கை தொகுப்பை இட்டாள் பல ஆண்டுகள் பதிவிடலாம். ஆனால் மிகச் சுருக்கமாக இப்பதிவு இடுகிறோம். காரணம் வரக்கூடிய சந்ததிகளுக்கு சுருக்கமாக பதிவிட்டால் அதைப்பற்றி அவரிடம் பல கேள்விகள் உருவாகும், அதைப்பற்றி தெரிந்து கொள்வோம் என்ற ஆர்வம் உருவாகும் ஆகையால் பெற்றோர்கள் தன் குழந்தைகளுக்கு இப்பதிவை ஒரு கதையாக சொல்லி அவரவர் தன் குழந்தைகளின் மனதில் பதியவைத்து, இவ்வாறான ஒரு மாமனிதன் இவ்வுலகில் வாழ்ந்தார் என்பதை விளக்கிச் சொல்லி நீங்கள் ஒரு நல்ல வழிகாட்டியாக பெற்றோர்கள் இருப்பீர்கள் என்பதை உணர்ந்து இந்த சிறு விடுமுறை நாட்களை புரட்சித் தலைவரோடு இப்பதிவை பதிவிடுகிறோம்.

மருதூர் கோபாலன் ராமச்சந்திரன் என்ற இவர், ‘எம்.ஜி.ராமச்சந்திரன்’ என்றும், ‘எம்.ஜி.ஆர்’ என்றும் அன்போடு அழைக்கப்பட்டார். இவர் இந்தியாவின் தலைச்சிறந்த நடிகராகவும், தயாரிப்பாளராகவும், அரசியல்வாதியாகவும் இருந்தார். அவருடைய வாழ்க்கையில், நடிப்பும், அரசியலும் ஒரு முக்கிய பகுதியாக இருந்தது. அவருடைய இளமைக்காலத்திலேயே, பல நாடக குழுக்களில் பிரபலமாக திகழ்ந்தார். அவர் காந்தியின் மீதும் அவரது கொள்கைகள் மீதும் மிகவும் பற்றுடையவராக இருந்ததால், அவருடைய இளம்வயதிலேயே இந்திய நேஷனல் காங்கிரஸில் தீவிரமாக தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். 100க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்த எம்.ஜி.ராமச்சந்திரன் அவர்கள், தமிழ் திரையுலகை முப்பது ஆண்டுகளுக்கு மேல் ஆதிக்கம் செய்தார். பின்னர், திமுக அரசியல் கட்சியுடன் கைகோர்த்தார். ஒரு தமிழ் நடிகர் என்ற மகத்தான புகழ் பெற்றிருந்தாலும், எம்.ஜி.ராமச்சந்திரன் அவர்கள் சமமான வெற்றிகரமான அரசியல் வாழ்க்கையையும் அனுபவித்தார். தமிழ்நாட்டின் முதலமைச்சர் என்று தேர்ந்தெடுக்கப்பட்டப்பின், அவர் தனது சொந்தக் கட்சியான அ.தி.மு.கவை மிகச் சிறப்பாக வழி நடத்தினார். மக்கள் எம்.ஜி.ஆரை மிகவும் நேசிக்க முக்கிய காரணம், அவர் ஏழை மக்களின் இதய தெய்வமாக விளங்கினார். நாட்டின் மாநில முதலமைச்சர் நாற்காலியை ஆக்ரமித்த, முதல் இந்திய திரையுலக பிரமுகர் என்ற பெருமை எம்.ஜி.ராமச்சந்திரன் அவர்களையே சேரும். ஒரு நடிகராக இருந்து அரசியலில் பதவி அடைந்த போதும், அவர் ஏழைகளின் தோழனாகவும், இல்லாதோருக்குக் கொடையாளியாகவும் விளங்கினார். தனது மனிதநேய பண்புகளால் அன்பு செலுத்தியதால் பெருமளவில் பிரபலமானார்.

பிறந்த தேதி: ஜனவரி 17, 1917
பிறந்த இடம்: நாவலப்பிட்டி, கண்டி, இலங்கை
இறந்த தேதி: டிசம்பர் 24, 1987
தொழில்: நடிகர், தயாரிப்பாளர், அரசியல்வாதி
குடியுரிமை: இந்தியா

திரையுலக வாழ்க்கை

எம்.ஜி.ஆர் தனது இளமைப்பருவத்திலேயே, நடிப்பில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். அவர் சிறுவனாக இருந்த போதே அவரது தந்தை இறந்துவிட்டார். அவரது தந்தையின் மறைவுக்குப் பின், குடும்ப சூழ்நிலைகளின் காரணமாக படிப்பைத்தொடர முடியாமல், பணம் சம்பாதிக்கும் நிர்பந்தம் ஏற்பட்டதால், இவர் நாடகங்களில் நடிக்கத் தொடங்கினார். பணம் சம்பாதிக்க வேண்டுமென்ற எண்ணத்தில், தனது பெயரை முதல்முறையாக ‘ஒரிஜினல் பாய்ஸ்’ என்ற நாடக குழுவில் பதிவு செய்தார். அவருடைய சகோதரரும் இந்த குழுவில் உறுப்பினராக இருந்தார். சில ஆண்டுகளுக்கு பிறகு, நாடகத்தில் நடிப்பதை விட்டுவிட்டு, 1935ல் தமிழ் திரையுலகில் சேர்ந்தார். 1936ல் ‘சதிலீலாவதி’ என்ற படத்தில் துணை கதாபாத்திரமாக முதல்முறையாக நடித்தார். 1940களில் தான் அவருக்கு முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்புகள் கிடைத்தது. தமிழ் சினிமாவிலேயே இதுவரை பார்த்திராத வர்ததகரீதியான ரொமாண்டிக் மற்றும் ஆக்க்ஷன் ஹீரோ என்று அவரை உருவாக்கிய படம், ‘இராஜகுமாரி’. இது கலைஞரால் எழுதி உருவாக்கப்பட்டது. 1947ல், இராஜகுமாரி’ திரைப்படம் தமிழக திரையரங்குகளில் வெளியிடப்பட்டது. பின்னர், தமிழ் திரையுலகம் மூன்று தசாப்தங்களுக்கும் எம்.ஜி.ஆரை முழக்கமிட்டனர். 1956ல், எம்.ஜி.ஆர், திரையுலகில் தயாரிப்பாளராகவும், இயக்குனராகவும் உருவெடுத்தார். அவர் இயக்கிய முதல் படமான ‘நாடோடி மன்னன்’, தமிழ்நாட்டில் பல திரையரங்குளில் ஓடி, பெரிய வெற்றிப்பெற்று, தமிழ் ரசிகர்களின் மனதில் ஒரு அங்கீகாரத்தைப் பெற்றது. ஒரு இயக்குனராக தனது முதல் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, அவர் இரண்டு படங்களை இயக்கி நடிக்கவும் செய்தார். அவை ‘உலகம் சுற்றும் வாலிபன்’ மற்றும் ‘மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்’ ஆகும். 1971ல் வெளியான ‘ரிக்க்ஷாக்காரன்’ படத்தில், ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்ததால், எம்.ஜி.ஆர் அவர்களுக்கு, சிறந்த நடிகருக்கான ‘தேசிய விருது’ கிடைத்தது.

விருதுகள் மற்றும் அங்கீகாரம்

1960ல், எம்.ஜி.ராமச்சந்திரன் அவர்கள் இந்தியாவின் ‘பத்மஸ்ரீ விருதுக்காகத்’ தேர்வு செய்யப்பட்டார். ஆனால், அவர் அரசாங்கத்தின் பற்றற்ற நடத்தையின் காரணமாக அதை ஏற்க மறுத்துவிட்டார். ஏனென்றால், விருதில் பாரம்பரிய ஹிந்தி வார்த்தைகளுக்கு பதிலாக தனது தாய்மொழியான தமிழில் இருக்க வேண்டுமென்று அவர் விரும்பினார்.
‘ரிக்க்ஷாக்காரன்’ படத்திற்காக, தனது நடிப்பிற்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருதை 1972ல், எம்.ஜி.ஆர் பெற்றார்.
சென்னை மற்றும் உலக பல்கலைக்கழகமும் அவருக்கு ‘முனைவர் பட்டம்’ வழங்கி சிறப்பித்தது.
தமிழ்நாட்டின் சமுதாயத்தின் நன்மைக்காக அவருடைய பங்களிப்பை கௌரவிக்கும் விதமாக அவர் இறந்த பிறகு 1988ல் ‘பாரத ரத்னா விருதை’ வழங்கப்பட்டது.
தனிப்பட்ட வாழ்க்கை

எம்.ஜி.ராமச்சந்திரன் மூன்று முறை திருமணம் செய்து கொண்டார். அவரது முதல் இரண்டு மனைவிகள் நோயின் காரணமாக இறந்துவிட்டனர். எம்.ஜி.ஆரின் மறைவுக்குப் பிறகு, அவரது மூன்றாவது மனைவியான ஜானகி ராமச்சந்திரன் அவர்கள் அ.இ.அ.தி.மு.கவின் பொறுப்பை ஏற்றார்.

இறப்பு

எம்.ஜி.ராமச்சந்திரன் அவர்களுக்கு சிறுநீரக பிரச்சினைகள் இருந்தது. சிறுநீரகக் கோளாறு காரணமாக 1984ஆம் ஆண்டு அக்டோபரில், அமெரிக்காவின் புரூக்ளின் நகரில் உள்ள டவுன்ஸ்டேட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதே ஆண்டு, சிறுநீரக மாற்று சிகிச்சை மேற்கொண்டார். இறுதியாக 1987ல் நோய்வாய்ப்பட்டார். டிசம்பர் 24ஆம் தேதி, 1987ல் இயற்கை எய்தினார். எம்.ஜி.ஆருடைய மரணம் தமிழ்நாட்டில் பெருங்கொந்தளிப்பை ஏற்படுத்தியது. கட்டுக்கடங்காத மக்களையும், அதிகளவில் போராடி உயிரிழந்த உணர்ச்சித் தமிழர்களையும் நிர்வகிக்க தமிழக அரசும், போலீஸ் அதிகாரிகளும் கடுமையாக போராடினர். அவரது மறைவுக்குப் பின், அஇதிமுக இரண்டு பிரிவுகளாக பிரிந்தது. ஒன்று அவரின் மனைவி ஜானகி ராமச்சந்திரன் தலைமையிலும், மற்றொன்று ஜே.ஜெயலலிதா தலைமையிலும் தனித்தனி கட்சிகள் உருவாகின. அவரது ‘சத்யா ஸ்டுடியோ’ இப்போது ஒரு பெண்கள் கல்லூரியாக உள்ளது. சென்னை டி.நகர் பகுதியில் உள்ள அவரது வீட்டை தமிழக அரசு நினைவு இல்லமாக மாற்றி பராமரித்து வருகிறது.

காலவரிசை

1917 : எம்.ஜி.ராமச்சந்திரன் அவர்கள் ஜனவரி ம் தேதி 17 பிறந்தார்.

1936 : தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.
1947 : அவரின் முதல் வெற்றிப்படமான ‘ராஜகுமாரி’ வெளியானது.
1953 : அரசியல் கட்சியான திராவிட முன்னேற்ற கழகத்தில் சேர்ந்தார்.
1956 : முதல் முறையாக திரைப்பட இயக்குனராக மாறினார்.
1960 : பத்மஸ்ரீ விருதை ஏற்க மறுத்து விட்டார்.
1962 : மாநில சட்ட மன்றத்தின் உறுப்பினரானார்.
1967 : தமிழ்நாடு சட்டமன்றத்திற்குத் தேர்வு செய்யப்பட்டார்.
1967: எம். ராதாவால் கழுத்தில் சுடப்பட்டார்.
1969 : திமுக பொருளாளராக மாறினார்.
1972 : தனது சொந்த அரசியல் கட்சியான, அ.தி.மு.கவை உருவாக்கினார்.
1972 : ‘ரிக்க்ஷாக்காரன்’ படத்திற்காக தேசிய விருதை வென்றார்.
1977 : முதல் முறையாகவும், மூன்று முறை தொடர்ந்தும் தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஆனார்.
1984 : சிறுநீரக கோளாறால் பாதிக்கப்பட்டு, சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மேற்கொண்டார்..
1987 : டிசம்பர் 24ஆம் தேதி,1987ல் இறந்தார்.
1988 : இறப்பிற்கு பின், பாரத ரத்னா விருதை அரசு அவருக்கு வழங்கியது.......... Thanks.........

orodizli
20th March 2020, 03:19 PM
https://youtu.be/k4OS9tQXUWM... Thanks......

fidowag
20th March 2020, 11:09 PM
தினகரன் வெள்ளிமலர்*-20/3/20
-------------------------------------------------------
old is gold*- ம. சே. மயில், சாத்தான்குளம்*
எம்.ஜி.ஆர். பாட்டுன்னா*சும்மாவா*
--------------------------------------------------------
அடிமைப்பெண் படத்திற்காக ஒரு* சிச்சுவேஷனுக்கு ஏகப்பட்ட பாடலாசிரியர்கள் எழுதியும் , எம்.ஜி.ஆருக்கு திருப்தி இல்லை .* அவர் நிராகரித்தது மொத்தம் 43 பாடல்கள் .* அதன் பிறகே, ஆலங்குடி சோமு எழுதிய பாடலை ஒப்புக் கொண்டார் .அந்த பாடல்தான் "தாயில்லாமல் நானில்லை "* இதே ஆலங்குடி சோமு " எங்க வீட்டு பிள்ளை " படத்திற்கு , கண்களும் காவடி சிந்தாகட்டும் பாடலை வெறும் ஏழே நிமிடங்களில் எழுதி சரித்திர சாதனை படைத்தார் .* "நேற்று இன்று நாளை " படத்தில் இடம் பெற்ற "தம்பி நான் படித்தேன் காஞ்சியிலே நேற்று " பாடலுக்காக மொத்தம் 103 மெட்டுகள் போடப்பட்டதாம்*

fidowag
20th March 2020, 11:09 PM
தண்டோரா* வாய்ஸ் வார இதழ் - 03/03/2020
------------------------------------------------------------------------
தண்டோரா பதில்கள் :
----------------------------------
நான்கு படங்கள் ஓடிவிட்டால் தங்களையும் எம்.ஜி.ஆர். என நினைத்து* அரசியல்* கனவு காண* ஆரம்பித்து விடுகிறார்களே நடிகர்கள் ?

வரலாறு தெரியாதவர்கள் அவர்கள் ..பேரறிஞர் அண்ணாவே, தம்பி , நீ நிதி அளிக்க* வேண்டாம் .* உன் முகத்தைக் காட்டு, மக்கள் வாக்குகளை கொட்டுவார்கள் என்று கூறியது வரலாறு .* அதன் பிறகு கருணாநிதி முதல்வராக தேர்வு ஆனதற்கு எம்.ஜி..ஆர் தான் காரணம் என்பது அனைவருக்கும் தெரியும் .**அதாவது கிங் ஆவதற்கு முன்பே கிங் மேக்கராக இருந்தவர் எம்.ஜி.ஆர்.*
இன்னொரு விஷயம் .* அவரது படத்தைப் பார்த்த ரசிகர்கள் மட்டுமல்ல .*மற்ற பொதுமக்களும் எம்.ஜி.ஆர். மீது நம்பிக்கை வைத்திருந்தார்கள் .* அதாவது திரையை மீறிய மக்கள் செல்வாக்கு அவருக்கு இருந்தது .**
இதையெல்லாம் உணராமல் , பகல் கனவு காண்கிறார்கள்* இந்த இலவு காத்த கிளிகள் .*

fidowag
20th March 2020, 11:16 PM
தனியார் தொலைக்காட்சிகளில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். படங்கள் ஒளிபரப்பு*
--------------------------------------------------------------------------------------------------------------------------------
14/03/20-* *சன்லைப்* -காலை 11 மணி* - உழைக்கும் கரங்கள்*

14/03/20 - முரசு* - இரவு* 7 மணி -அலிபாபாவும் 40 திருடர்களும்*


17/03/20* *- முரசு* *இரவு 7 மணி* - நல்ல நேரம்*

18/03/20* - சன்லைப் - காலை 11 மணி - திருடாதே*

19/03/20* - முரசு* -இரவு 7 மணி* - ஆனந்த ஜோதி*

21/03/20* - சன்லைப் - காலை 11 மணி - தாழம்பூ*

orodizli
21st March 2020, 01:59 PM
புர*ட்சித்த*லைவ*ர் 1977ல் திரையுலகை விட்டு விலகி முத*ல்வ*ரானார். அப்போதும் அவ*ர்தான் நெ.1. அதிகப*ட்ச ஊதிய*மும் பெற்றார். அப்போது மட்டும் அவ*ர் கைவ*ச*ம் இருந்த ப*ட*ங்க*ள் எந்த ந*டிக*ருக்கும் இருந்ததில்லை. அதன் ப*ட்டிய*ல் இதோ!
1. அண்ணா நீ என் தெய்வ*ம்
2. ந*ல்லதை நாடு கேட்கும்
3. நானும் ஒரு தொழிலாளி
4. மக்கள் என் ப*க்க*ம்
5. தியாக*த்தின் வெற்றி
6. இதுதான் ப*தில்
7. ச*மூக*மே நான் உனக்கே
சொந்த*ம்
8. உன்னை விடமாட்டேன்
9. இமய*த்தின் உச்சியிலே
10. கேப்ட*ன் ராஜா
11. உங்க*ளுக்காக நான்
12. அண்ணா பிற*ந்த நாடு
13. ஊரே என் உற*வு
14. கிழ*க்கு ஆப்பிரிக்காவில் ராஜு
15. எல்லைக்காவ*லன்
16. மீண்டும் வ*ருவேன்.
17. புர*ட்சிப்பித்த*ன்
இவ*ற்றில் ந*ல்லதை நாடுகேட்கும் மற்றும் அண்ணா நீ என் தெய்வ*ம் ஆகிய ப*ட*ங்க*ளின் காட்சிக*ள் வேறு இயக்குனர்க*ளின் ப*ட*ங்க*ளில் இட*ம்பெற்று வெளிவ*ந்த*து.

இவை த*விர எம்ஜிஆர் மறைந்த* பிற*கு அவ*ர*து வாழ்க்கை வ*ர*லாற்றை ப*திவு செய்யும் வ*கையில் காலத்தை வென்ற*வ*ன், ந*மது தெய்வ*ம், த*ர்ம தேவ*ன் ஆகிய ப*ட*ங்க*ள் வெளியாகி உள்ளன.
இன்னமும் அவ*ர் ப*ழைய ப*ட*ங்க*ளில் 80 ச*த*வீத*ம் தியேட்ட*ர்க*ளில் வெளியிட*ப்ப*ட்டு வ*சூலை வாரி கொடுக்கின்ற*ன.

புர*ட்சித்த*லைவ*ர் ச*ரித்திர நாய*க*ர் மட்டுமல்ல! சாத*னை நாய*கரும் ஆவார்!, சகாப்தம் படைத்தவரும் ஆவார்......... Thanks.........

orodizli
21st March 2020, 02:03 PM
M G R
வீரம் திரையில் மட்டும் அல்ல நிஜத்திலும் நடத்தி காட்டியவர் எம்ஜிஆர்
ரயில் போராட்ட கைதான பின் வந்து இறங்கிய கருணாநிதி கூட்டத்தில் திணற எம்ஜிஆர் அலேக்கா தோள் மீது கருணாநிதியை தூக்கி வெளியே கொண்டு வந்தார் இதில் எம்ஜிஆரின் விலை உயர்ந்த ரோலக்ஸ் வாட்சு தொலைந்து விட்டது
வெளியூர் சென்று விட்டு காரில் திரும்பி கொண்டிருந்த எம்ஜிஆர் கார் வழி பறி கும்பலால் மறிக்க படுகிறது கூச்சலோடு காரை நெருங்க எம்ஜிஆர் இறங்கி முறைப்போடு நோக்க கும்பல் மொத்தமும் கார் வெளிச்சத்தில் எம்ஜிஆரை கண்டு வாத்தியாரே உங்களயைா மறித்தோம் மன்னித்து விடுங்கள் என காலில் விழ அவர்களை எழப்பி வழி பறி செய்வது தவறு ஏதாவது ஒரு தொழில் செய்து பிழைங்கள் என ஒரு கணிசமான தொகையை கொடுக்கிறார் எம்ஜிஆர்

எந்த வகையிலும் எவராலும் எம்ஜிஆரை வெல்ல முடியாது என்ற நிஜ வீரனாக எம்ஜிஆர் இருந்ததால் இன்றும் எம்ஜிஆர்புகழ் கொடிகட்டி பறக்கிறது

வாழ்க எம்ஜிஆர்புகழ்............ Thanks.........

fidowag
22nd March 2020, 09:26 PM
பாட்டாலே*புத்தி சொன்ன வாத்தியார் - எம்.ஜி.ஆர். ஒரு சகாப்தம்*
----------------------------------------------------------------------------------------------------------

வின்*டி.வி.யில் நேற்று (21/03/20) பிற்பகல் 3.30 மணிக்கு*"பாட்டாலே*புத்தி சொன்ன*வாத்தியார் " என்கிற*நிகழ்ச்சியில், உலகத்திலேயே, திரைப்படங்களின் மூலம் மக்களுக்கு*தேவையான சமூக*சீர்திருத்த*கருத்துக்கள், சிந்தனை தரக்கூடிய கருத்தான*வசனங்கள், முற்போக்கான இலக்கிய, இலக்கண*நயம் கலந்த*பாடல்கள்*தந்தவர்*மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். ஒருவரே. அதனால்தான் எல்லோருக்கும் அவர் வாத்தியார் .* விவசாயி, தொழிலாளி, படகோட்டி,மீனவ*நண்பன், காவல்காரன், வேட்டைக்காரன், ரிக்ஷாக்காரன் , என்று பாமர*மக்களுக்கும், ஏழை எளியோர்*துயர் துடைக்கும்*வகையிலான பாத்திரங்களை ஏற்று திரைவானில்*ஜொலித்தவர் .* இருந்தாலும், மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும் , இவர் போல யார் என்று ஊர் சொல்ல*வேண்டும் என்பது*போல அன்றும், இன்றும், என்றும் அவரது*பாடல்கள்*காலத்தால் அழியாதவை .வாழ்ந்தவர்கள் கோடி*, மறைந்தவர்கள் கோடி.* ஆனால் இடையிலே*திரைதுறையில் , நடிப்புலகில் ஆதிக்கம் செலுத்தியவர் ஒரு சிலரே.* அந்த ஒரு சிலரில் மன்னாதி*மன்னன், ராஜ*ராஜன், ஆயிரத்தில் ஒருவனாக*மக்களின்*இதய*சிம்மாசனங்களில் வீற்றிருந்ததோடு, பத்தாண்டுகள்*கோட்டை கொத்தளத்தில் பொற்கால*ஆட்சி புரிந்து சாதனை, சரித்திரம், சகாப்தம்*படைத்த*எட்டாவது வள்ளல், ஏழை பங்காளன்*எம்.ஜி.ஆர். என்றால் மிகையாகாது*.* கவிஞர்கள் எல்லா*நடிகர்களுக்கும்தான் பாடல்கள்*எழுதினார்கள் புகழ் பெற்றார்கள் . ஆனால் அந்த கவிஞர்கள் எழுதும்*பாடல்களையே திருத்தி*எளிதில் மக்களை*சென்றடையும் வகையில்*எம்.ஜி.ஆர். எனும் வாத்தியார்*செயல்பட்டார். அத்துடன் தான் ஆட்சி பீடத்தில்*அமர்ந்ததும்*, அந்த பாடல்களுக்கு தகுந்தாற்ப்போல்* பல்வேறு நல திட்டங்களை*மக்கள் பாராட்டும்*வகையில்*செயல்படுத்தினார் . *அதனால்தான் அவரது*பாடல்கள்*சாகாவரம்*பெற்று திகழ்கின்றன .தேர்தல் காலங்களில் பல கட்சியினருக்கும் பொருத்தமாக*அமைவதால்* அவர்கள் அதை பயன்படுத்தி கொள்கிறார்கள்.* அத்தகைய*பாடல்களில் நேரம் காலம் கருதி*சிலவற்றை மட்டுமே*நேயர்களுக்கு ஒளிபரப்புகிறேன் .
1.* ஓடி*ஓடி*உழைக்கணும்* -நல்ல நேரம்*

2.காடு வேளைஞ்சென்ன* மச்சான் - நாடோடி மன்னன்*

3.உன்னை அறிந்தால்* நீ - வேட்டைக்காரன்*

4. நான் ஏன் பிறந்தேன்* -நான் ஏன் பிறந்தேன்*

5.தாயில்லாமல் நானில்லை* - அடிமைப்பெண்*

6.தூங்காதே*தம்பி தூங்காதே*- நாடோடி மன்னன்*

7. மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும் - தெய்வத்தாய்*

8.சின்னப்பயலே , சின்னப்பயலே - அரசிளங்குமரி*

9.புத்தன்*இயேசு காந்தி*பிறந்தது*-சந்திரோதயம்*

10,எத்தனைகாலம்தான் ஏமாற்றுவார் -மலைக்கள்ளன்*

11.திருடாதே*பாப்பா திருடாதே*- திருடாதே*

12.கொடுத்ததெல்லாம் கொடுத்தான் - படகோட்டி*


13.தாய் மேல் ஆணை* - நான் ஆணையிட்டால்*

14..நான் ஆணையிட்டால் - எங்க வீட்டு*பிள்ளை*


15..அச்சம் என்பது*மடமையடா*- மன்னாதி*மன்னன்*

16.இறுதியாக வாசலிலே*இரட்டை இலை* கோலம்*இடுங்கள்*என்கிற*பாடல்*தேர்தல் காலத்தில், அனைவரும் வானொலி, தொலைக்காட்சிகளில் பேட்டி அளிக்கும்போது ,எம்.ஜி.ஆர். தனது முறை வரும்போது*கட்சியின்*சின்னத்தை*பிரபல படுத்தும்*நோக்கில்*இந்த பாட்டுக்கு முக்கியத்துவம் அளித்தார் என்று*கூறி முடித்தார்*.அத்துடன் நிகழ்ச்சி நிறைவுற்றது .

orodizli
24th March 2020, 07:15 AM
https://m.facebook.com/story.php?story_fbid=908783949484365&id=214921096051028&sfnsn=wiwspwa&extid=VkxPF0XR26OOxE2k&d=w&vh=e........... Thanks.........

orodizli
24th March 2020, 07:20 AM
https://www.facebook.com/groups/840914239339608/permalink/2801953979902281/... Thanks...

orodizli
24th March 2020, 07:23 AM
தீர்க்கதரிசி 2:- இன்று கொரோனா வைரஸ் னு உலகம் முழுவதும் கத்துகிறோம் அல்லவா , அன்றே நம் தலைவர் தனது 100 வது படமான ஜெமினியின் ஒளிவிளக்கு படத்திலேயே காட்டியிருப்பார் , அவர் இருக்கும் ஊருக்கு மர்மகாய்ச்சல் ஒன்று பரவும் அந்த ஊர்லேர்ந்து எல்லாரும் வேற ஊருக்கு போய்விடுவாங்க தலைவர் அப்ப தான் சௌகார்ஜானகி வீட்டுக்கு போய்பார்க்கும் அந்த மர்ம காய்ச்சல் வந்து உருக்குலைஞ்சு போயிடுவாங்க , தலைவர் தன்னோட பாதுகாப்புல கண்காணிச்சு வைத்தியம் பார்ப்பார், அதே போல் அக் கிராமத்திலே வயதான பாட்டி அந்த மர்ம காய்ச்சல் வந்து இறந்து விடுவார்கள், தலைவரோ தீ விபத்தில உயிர் பிழைத்து படுத்திருப்பார், நமக்கா படம் பார்க்கும் போது வயிற்றில் ஈரக்குலையை பிசையும், இதயமோ படபடக்கும் ஏனென்றால் படங்களில் கூட அவர் சாக கூடாது என்பது தான் நமது ஆசை அதே போல் அந்த காட்சில சங்கு ஊதும் அப்பா சௌகார் வந்து நமது தெய்வத்து கிட்ட சொல்லுவாங்க அந்த பாட்டி இறந்துட்டாங்க உடனே தலைவர " அம்மா" னு வாய் விட்டு அலறுவார் அப்பப்பா அந்த சீன்ல கண்களே குளமாகிடும். அதனால் இந்த மர்மகாய்ச்சலையும் முன்பே சொன்னவர் எங்க தலைவர் நம்ம தலைவர் தான் தீர்க்கதரிசி ............. Thanks.........

orodizli
24th March 2020, 07:28 AM
இன்றைய நிலைமையை நினைத்து பார்க்கையில், அன்றே சக்கரவர்த்தி மக்கள் திலகம் கனிந்த விஷ ஜுரம் தனது மகத்தான இணையேயில்லா வெற்றி காவியமாம் "ஒளிவிளக்கு" முன்னுதாரணமாக திகழ்கிறது...

orodizli
25th March 2020, 08:37 PM
மாமனிதர் எம் .ஜி .ஆர் .

நூற்றாண்டு கடந்தும் இன்றும் நினைக்கப்படுகிறார்

நாடே கொண்டாடி மகிழ்கின்றது எம் .ஜி .ஆரை !

ஏழ்மையில் பிறந்து வளர்ந்த காரணத்தால்

ஏழ்மை ஒழிக்க முயற்சிகள் செய்தார் !

கொடுத்துக் கொடுத்து சிவந்த கரங்கள்

கண்ணால் கண்ட காட்சிகள் ஆனது !

தோன்றின் புகழோடு தோன்றுக என்று

திருக்குறளுக்கு எடுத்துக்காட்டாக வாழ்ந்தவர் !

மனிதநேயத்தின் சின்னமாக வாழ்ந்து சிறந்தவர்

மக்கள் மனங்களில் என்றும் வாழ்பவர் !

நல்லவனாகத் திரைப்படத்தில் நடித்தது மட்டுமன்றி

நல்லவனாகவே வாழ்க்கையில் வாழ்ந்து காட்டியவர் !

ஈழத்தமிழரின் விடுதலையை பெரிதும் விரும்பியவர்

ஈழத்தின் விடுதலைக்கு பெரிதும் உதவியவர் !

ஏழைப்பங்காளன் காமராசரின் மத்திய உணவுத்திட்டத்தை

ஏழைமாணவர் அனைவருக்கும் சத்துணவாக விரிவாக்கியவர் !

வெற்றி மாலைகள் பெற்றுக் குவித்தவர்

வேதனைகள் நீக்கி மகிழ்வைத் தந்தவர் !

என்னுடைய முதல்வர் நாற்காலியில் ஒருகால்

என்பது பட்டுக்கோட்டையின் பாடல்கள் என்றவர் !

நன்றி மறக்காத உயர்ந்த உள்ளம் பெற்றவர்

நாடு போற்றும் பொன்மனச் செம்மல் ஆனவர் !

பொற்காலம் படைத்தது தமிழா வரலாற்றின்

பொன் எழுத்துக்களில் இடம் பிடித்தவர் !

விருதுகள் பல பெற்றபோதும் என்றும்

விவேகமாகச் சிந்தித்து எளிமையாய் வாழ்ந்தவர் !

ஏழைகளின் கண்ணீர் துடைக்க முதல்வராகி

எண்ணிலடங்காத திட்டங்களை நிறைவேற்றியவர் !

திரைப்படத்தில் மிகமிக நன்றாக நடித்தவர்

தமிழக மக்களிடம் என்றும் நடிக்காதவர் !

புன்னகை மன்னராக பூவுலகில் வாழ்ந்தவர்

புரட்சித் தலைவர் எனும் பட்டம் பெற்றவர் !

இன்னும் பல நூற்றாண்டுகள் வாழ்வார் எம் .ஜி .ஆர் .

என்றும் அழிவில்லை எம் .ஜி .ஆர் . புகழுக்கு !

பொன்மனச் செம்மல் எம் .ஜி .ஆர் ! கவிஞர் இரா .இரவி

தனித்தமிழ் ஈழத்தை ஆதரித்த

தனிப்பெரும் தலைவர் எம் .ஜி .ஆர்

ஈழத்திற்கு நிதி உதவி தந்து வளர்த்தவர்

ஈழத்தமிழரின் நெஞ்சம் நிறைந்தவர்

சிங்களக் கொடுமை உணர்ந்தவர்

சிங்களம் வீழ்ந்திட விரும்பியவர்

மதிய உணவை சத்துணவாக விரிவாக்கியவர்

மாணவர்கள் பள்ளி வரக் காரணமானவர்

கோடிகளைக் கொள்ளை அடிக்காதவர்

குடும்பத்திற்குச் சொத்துச் சேர்க்காதவர்

திரையில் மட்டுமே நடித்தவர்

நிஜத்தில் என்றுமே நடிக்காதவர்

விலைவாசியை கட்டுப்பாட்டில் வைத்தவர்

விவேகமாகச் சிந்தித்துச் செயல்படுத்தியவர்

அவரால் வாழ்ந்தவர்கள் கோடி

அவரால் வீழ்ந்தவர்கள் மிகச் சிலர்

உலகம் வியக்கும் வண்ணம் மதுரையில்

உலகத் தமிழ் மாநாட்டை நடத்தியவர்

உயிருள்ளவரை முதல்வராய் இருந்தவர்

உன்னத ஏழைகளின் இதயத்தில் வாழ்பவர்......... Thanks.........

orodizli
25th March 2020, 08:39 PM
#ஒருதாய்மக்கள்நாமென்போம்...

#உன்னையறிந்தால்நீஉன்னையறிந்தால்.

#ஏமாற்றாதேஏமாற்றாதேஏமாறாதேஏமாறாதே..

#இன்னொருவர்வேதனைஇவர்களுக்குவேடிக்கை..

#தொட்டுவிடதொட்டுவிடதொடரும்..

#தைரியமாகச்சொல்நீமனிதன்தானா..

#நான்பாடும்பாடல்நலமாகவேண்டும்..

மேற்கண்ட தலைவரின் பாடல்கள் இப்போதுள்ள கொரோனா வைரஸ் பரவும் சூழ்நிலைக்கு ஏற்ற பாடல்களாக கருதுகிறேன்,

நண்பர்களே, உறவினர்களே எவ்வளவு முக்கிய காரணமாக இருந்தாலும் மற்றவர்களை சந்திப்பதை தவிர்த்திடுங்கள்,

உங்களையும், உங்கள் சந்ததிகளையும் காத்திடுங்கள், அனைவரும் அவரவர் இருப்பிடத்திலேயே இருந்துகொள்ளுங்கள்,

அலட்சியம் வேண்டாம்........... Thanks...

orodizli
25th March 2020, 08:44 PM
இன்று பகல் sunlife சேனலில் புரட்சி நடிகர் வழங்கிய என்றும் எல்லோரும் ரசிக்கும் "நம்நாடு" ஓளி பரப்பப்பட்டது. நாளை காலை "சந்திரோதயம்" ஒளிபரப்பாகிறது.........

fidowag
25th March 2020, 08:56 PM
நக்கீரன் வார இதழ் --18/03/20
--------------------------------------------------
அடுத்த கட்டம் -அந்த அடையாளம் கடைசிவரை தேவைப்பட்டது -பழ கருப்பையா*
----------------------------------------------------------------------------------------------------------


அண்ணாவும் , கருணாநிதியும், கண்ணதாசனும், எம்.ஜி.ஆரும்* திரைத்துறை வழியே திராவிட இயக்கத்தை மிக எளிமையாகவும் , வலிமையாகவும் எடுத்துச் சென்றுள்ளனர் என்பது வரலாறு .

அஞ்சாமை திராவிடர் உடமையடா* என்னும் கண்ணதாசன் வரிகள் , எம்.ஜி.ஆர். நடிப்பில், அடிமட்ட கிராமமான சாலைகளே இல்லாத பட்டி, தொட்டி வரை போய் சேர்ந்தது .**

அண்ணாவும் , கருணாநிதியும், கண்ணதாசனும், எம்.ஜி.ஆரும்* திரைத்துறை வழியே திராவிட இயக்கத்தை மிக எளிமையாகவும் , வலிமையாகவும் எடுத்துச் சென்றுள்ளனர் என்பது வரலாறு .

அஞ்சாமை திராவிடர் உடமையடா* என்னும் கண்ணதாசன் வரிகள் , எம்.ஜி.ஆர். நடிப்பில், அடிமட்ட கிராமமான சாலைகளே இல்லாத பட்டி, தொட்டி வரை போய் சேர்ந்தது .**
வேலூரில் எம்.ஜி.ஆரின் செல்வாக்கோடு மோதி ஈ .வே .கி.சம்பத் நிலைகுலைந்து வெளியேறும் நிலைக்கு உள்ளானார் .* அண்ணா சம்பத்திடம் உருகினார் .**சம்பத்தின் அளப்பரிய தேவையை உணர்ந்திருந்தார் .* கசிந்தார் .* கண்ணீர் மல்கினார் .* ஆனால் நடப்பு அரசியலில் எம்.ஜி.ஆரின் பயன்பாடு (utility)இழப்பதற்குரியது இல்லை என்பதில் அண்ணா திண்ணமாக இருந்தார் .**

சம்பத் தன தமிழ் தேசிய நிலைப்பாட்டில் அவர் ஊன்றி நின்று இருந்தால் , அண்ணாவுக்கு மாற்று தலைவராக உருவாகி நிலைபெற்றிருப்பார் .* அவர்*கோபதாபங்களில் இந்திய தேசிய அரசியலில் போய்க் கரைந்து தனக்குரிய உயரத்தை இழந்துவிட்டார் .**

வழவழப்பான நெடுஞ்செழியனோ, தன்னை பெரிதும் வருத்திக் கொள்ளாத*அன்பழகனோ தலைமைக்கான பந்தய மைதானத்தை அடைய போவதில்லை .
ஆகவே, எஞ்சியவர்கள் இருவர்தாம் .* ஒருவர் கருணாநிதி. இன்னொருவர் எம்.ஜி.ஆர் .* கருணாநிதி முதல்வராவதற்கு பின் வலிமையாக திகழ்ந்தவர் எம்.ஜி.ஆர். தான் .* ராமாவரம் தோட்டம்தான் அண்ணாவின் வழித்தோன்றலை தீர்மானித்தது .*

கருணாநிதி முதல்வராகிவிட்டார்.* கட்சியிலும், ஆட்சியிலும் முதல் நிலைதான் அந்நாள் அது தன்னுடைய வலிமையினால் மட்டுமே அடைந்த இடம் இல்லை என்பதனால் அவருக்குள் ஒரு தயக்கம் இருந்து கொண்டே இருந்தது .

மாடு தன்* போக்குக்கு போக முடியாதவாறு அதன் கழுத்தில்* ஒரு கட்டை கட்டி விடப்படுவது போல், எம்.ஜி.ஆர். என்னும் கட்டை கழுத்தை விட்டு அகலாதவரை தன்னுடைய முதலிடம் பெயரளவில்தான் என்பது கருணாநிதிக்குத் தெரிந்து இருந்தது ..* பெயருக்கு முதல்வராக இருக்க எடப்பாடி*அல்லவே*கருணாநிதி .

அதே நேரத்தில் ராமாவரம் தோட்டத்தின்* தயவினால்* முடிவு செய்யப்பட பதவிதான்*அது .என்கிற எண்ணமும் எம்.ஜி.ஆருக்கு*கொஞ்சமும் குறையாமல் இருந்தது .

மோதலுக்கு*நாள்* குறிக்கப்படுவது இயற்கைதானே .* எம்.ஜி.ஆர். வெளியேற்றப்பட்டார் .* அண்ணா*எதை செய்ய தயங்கினாரோ , அதை கருணாநிதி செய்து முடித்துவிட்டார் .**

அதனுடைய விளைவு கருணாநிதி 14 ஆண்டுகள் வனவாசம்*செல்ல*நேரிட்டது*.* ஆட்சி வளையத்திற்கு வெளியே, அவர்* அவ்வளவு காலம் தாக்குப்*பிடித்து தன்னுடைய*கட்சியையும், தாக்கு பிடிக்க செய்ததுதான்*கருணாநிதியின் தனித்திறமை .* அவருக்குள்ள நிகரற்ற*தலைமைக்*கூறு .* ஆனால் காலம் சம்பத்திற்கு எதிராக*எம்.ஜி. ஆரைத்தான்* தாங்கியது.* அதுபோல*கருணாநிதிக்கு எதிராகவும் எம்.ஜி.ஆரைத்தான்* தாங்கியது*.**

திராவிட இயக்க நாட்காட்டி போடுவார்கள் .* அந்த காலத்தில் அந்த ஐம்பெருந்தலைவர்கள் படம் போட்டிருக்கும் .* அதில்*எம்.ஜி.ஆர். படம் இருக்காது .திராவிட இயக்கத்தின் கேள்விக்கு அப்பாற்பட்ட (பெரியாரும்*அப்படிதான்*) தலைவராக*அண்ணா இருந்தார் .**

கேள்விக்கு உட்பட்டவராக அதே சமயத்தில் சம்பத்தாலும் , கருணாநிதியாலும் வெல்ல முடியாத*தலைவராக*எம்.ஜி.ஆர். இருந்தார் .* என்பது*அறிவியக்கத்தின் வியப்புதானே*.**
*வெறும் திரைக்கவர்ச்சி* அதற்கு காரணமாக*முடியாது*.அது அவருக்கு*அடித்தளம் அமைத்துத்*தந்திருந்தாலும் , அவரிடமும் இயற்கை யான ஒரு தலைமைத்துவம் இருந்திருக்கிறது என்பது*ஒத்துக்*கொள்ள வேண்டிய விஷயம் அல்லவா .**

fidowag
25th March 2020, 09:01 PM
மூன்று பேர்களின் மறைவு தன்னை*மிகவும் பாதித்ததாக*மெல்லிசை மன்னர்*எம்.எஸ்.விஸ்வநாதன் தான் மறைவதற்கு முன்பு தெரிவித்திருந்தார்*
------------------------------------------------------------------------------------------------------------------------------

*அவர்கள்* பின்வருமாறு :
1. தனது*தாய் ,* *2.கவிஞர் கண்ணதாசன் .* * 3.மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.**

fidowag
25th March 2020, 09:19 PM
குமுதம் வார இதழ் -25/03/2020
--------------------------------------------------
நேற்று இன்று நாளை படத்திற்காக எம்.எஸ்.வியை ஒரு பாட்டுக்காக பல மெட்டுகள் போட* வைத்த எம்.ஜி.ஆர்.*
--------------------------------------------------------------------------------------------------------------------

நேற்று இன்று நாளை படம் , நடிகர் அசோகன் சொந்தமாக தயாரித்தது . ஒரு குறிப்பிட்ட பாட்டுக்கான மெட்டை மாற்றி மாற்றி போட்டுக் கொண்டேயிருந்தார் எம்.எஸ். வி.* ஒவ்வொரு மெட்டையும் அசோகன் விசுவிடமிருந்து கொண்டுபோய் எம்.ஜி.ஆருக்கு போட்டு காட்டுவார் .* ஓ.கே. ஆகாது . இப்படி பல மெட்டுகள் போட்டாயிற்று .

ஒரு நாள் மெட்டை வாங்கி கொண்டு வழக்கப்படி தோட்டத்துக்கு போனார் அசோகன் .* திரும்பி வந்து விசுவிடம் தலைவருக்கு மெட்டு பிடிக்கவில்லை என்றதும் விசுவுக்கு கோபம் வந்துவிட்டது .**

என்னாலே இனிமே இதுக்கு ட்யூன் போட முடியாது .* இந்த பாட்டுக்கு மட்டும் தோட்டத்திலேயே எம்.ஜி.ஆரை வைத்து* ட்யூன் போட சொல்லி, அவர் கிட்டேயே ஓ.கே. வாங்கிடுங்க என்றார் .

சில மாதங்கள் கழித்து, ஒரு ட்யூனை ஓ.கே. செய்து எம்.ஜி.ஆர். விசுவிடம் ரகசியமாக சொன்னார் .* விசு. உன் திறமை மீது எனக்கு அபார நம்பிக்கை உள்ளது* *ஆகவே ஒவ்வொரு ட்யூனும் நல்லாத்தான் போட்டிருந்தே .* நான் முதல்லேயே ஓ.கே. பண்ணியிருந்தா* உடனே படப்பிடிப்பு நடத்தணும்னு தேதி கேட்டு என்னை நச்சரிப்பாங்க .* எனக்கு கால்ஷீட் தருவதற்கு வேறு தேதியே இல்லை .* இதற்காகத்தான் இந்த தாமதம் .என்று சமாதானம் சொன்னார் .

மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வி. நூலில் இருந்து . *

orodizli
26th March 2020, 09:49 AM
எம்.ஐி.ஆரும், சரோஐாதேவியும் இணைசோ்ந்து சுமாா் 10 ஆண்டுகளில் 26 படங்களில் நடித்திருக்கின்றனா். இந்த இணை நடிப்பில் வெளிவந்த கடைசி சில படங்களில் ஒன்று பத்மினி பிக்சா்ஸ் சாா்பில் இயக்குநா் பந்தலு தயாாித்த 'நாடோடி'.
இப்படத்தில்தான் நடிகை பாரதி தமிழ்த் திரை உலகிற்கு அறிமுகமானாா். இப் படத்தில் பல பாடல்கள் நம் காதுகளுக்கு இனிமை சோ்த்தன.
கவிஞா் வாலி இப்படத்திற்காக ஒரு பாடலை இயற்றி மக்கள் திலகத்திடம் வாிகளை வாசித்து காட்டினாா்.
புரட்சி தலைவா் "இது என்ன சாித்திரப் பாடலைப் போலிருக்கிறது" எனறு சொல்லி பாடலை நிராகாித்தாா். ஆனால் அழகான அா்த்தமுள்ள அவ்வாிகளை வீணாக்காமல் இசையமைப்பாளா் கே.வி.மகாதேவனிடம் பாடி காட்டினாா் கவிஞா் வாலி.
இசையமைப்பாளருக்கு பிடித்துப் போக, அப்போது அவா் இசையமைத்துக் கொண்டிருந்த எம்.ஐி.சக்கரபாணியின் சொந்த தயாாிப்பான 'அரச கட்டளை' எனும் சாித்திர படத்தில் சோ்த்து கொண்டாா்.
'நாடோடி' படத்திற்கு எழுதப்பட்டு 'அரச கட்டறை' யில் சோ்த்துக் கொள்ளப் பட்ட அந்தப் பாடல் "புத்தம் புதிய புத்தகமே"............... Thanks.........

orodizli
26th March 2020, 10:06 AM
https://youtu.be/d9b53KsccXI... Thanks......

orodizli
26th March 2020, 07:14 PM
https://m.facebook.com/groups/571387869695933?view=permalink&id=1549379935230050

orodizli
26th March 2020, 10:02 PM
https://youtu.be/BeQWB2me668......... Thanks.........

orodizli
26th March 2020, 10:03 PM
https://youtu.be/NqC8XHFPsHE........... Thanks...

orodizli
26th March 2020, 10:04 PM
https://youtu.be/O4lJ3MiOEBU............ Thanks...

orodizli
26th March 2020, 10:04 PM
https://youtu.be/FbU4FnCdHP8......... Thanks...

fidowag
26th March 2020, 10:26 PM
தண்டோரா வாய்ஸ் வார இதழ் -03/03/2020
--------------------------------------------------------------------

பொன்மன செம்மல் எம்.ஜி.ஆர். அவர்களின் வாழ்வில் நடந்த சம்பவங்கள் மிக சுவையானவை மட்டுமல்ல .* அனைவருக்குமான பாடமும் கூட .* அவை , பொன்மன சம்பவங்கள் என்கிற தலைப்பில் தொடர்ந்து நமது இதழில் வெளியாகும் .


எம்.ஜி.ஆர். அவர்களின் எண்ணங்களை தெரிந்து கொள்ளும் வகையில் அவர் அளித்த பேட்டி .முதல் அத்தியாயத்தில் வெளியாகிறது .* இதன் கூடுதல் சிறப்பு .*எம்.ஜி.ஆரை பேட்டி கண்டவர்* முன்னாள் முதல்வர் ஜெ. ஜெயலலிதா* அவர்கள்.*1968ம் ஆண்டு பொம்மை சினிமா மாத இதழில் வெளியான பேட்டி இது .

கேள்வி :* அந்த கட்சி தலைவர்களில் நீங்கள் யாரிடம் ரொம்பவும் நெருங்கி பழகி இருக்கிறீர்கள்*


பதில்: அந்த அளவுக்கு அப்போது நான் வளர்ந்திருக்கவில்லை .* அதாவது நான்கு பேர் என்னை தெரிந்து கொள்ளுமளவிற்கு விளம்பரம் பெற்றிருக்கவில்லை .

கேள்வி : தி.மு.க. வில் எந்த ஆண்டு சேர்ந்தீர்கள் ?

பதில் : 1952ம் வருடம்* தி.மு.க. வில் சேர்ந்தேன் .

கேள்வி :தி.மு.க. வில் சேர காரணம் என்ன ?

பதில் : எனது காந்திய வழி கொள்கைகள் அண்ணாவினால் உருவாக்கப்பட்ட தி.மு.க.வில்* இருப்பதை அறிந்து சேர்ந்தேன் .

கேள்வி : உங்களை இந்த கட்சியில் செரித்த பெருமை யாருக்கு உண்டு?

பதில் : என்னை யாரும் சேர்க்கவில்லை .* அறிஞர் அண்ணா, நாவலர் நெடுஞ்செழியன் , என்.வி. நடராசன் , போன்றவர்களிடம் என்னை அழைத்து சென்று அறிமுகப்படுத்திய பெருமை நாடகமணி டி.வி. நாராயணசாமி ஒருவருக்கே உண்டு .

கேள்வி: உங்களுக்கு கடவுள் நம்பிக்கை உண்டா ?

பதில் : நிச்சயமாக உண்டு*.
கேள்வி : நீங்கள் கோவிலுக்கு போனதுண்டா ?

பதில் : நிறைய. திருப்பதிக்கு இரண்டு முறை சென்றுள்ளேன் .* முதல் தடவை நான் திருப்பதிக்குபோய்* வந்தபோது எனக்கு 12 அல்லது* 13 வயதிருக்கும் .நாடக கம்பெனியில் அப்போது நான் நடித்து வந்தேன் .* இரண்டாவது மர்மயோகி படம் வெளியானபோது இரண்டாவது தடவை போனபோதுதான் திருப்பதியை பொறுத்தவரை கடைசியானது .* அதற்கு பிறகும் வேறு பல கோவில்களுக்கு சென்றுள்ளேன் .


கேள்வி : ஏதேனும் பிரார்த்தனை செய்துகொண்டு அதை நிறைவேற்ற போயிருந்தீர்களா ?

பதில் : பார்க்க வேண்டும் என்ற ஆவல்.* பக்தி, பிரார்த்தனை எதுவும் நான் செய்து கொள்ளவில்லை .

கேள்வி : உங்கள் தாயார் எந்த கடவுளை வழிபட்டு* வந்தார் ?

பதில் : எங்கள் தாயார் இரண்டு கடவுள்களை வணங்கி வந்தார் .* ஒன்று விஷ்ணு.*நாராயணன் .* அதன் காரணமாக திருப்பதி வெங்கடாசலபதியை வணங்குவதில் ஆர்வம் உள்ளவராக இருந்தார் . குல தெய்வமாக வணங்கி வந்தது காளியை .

கேள்வி : வீட்டைவிட்டு புறப்படும் முன்பு யாரை வணங்கிவிட்டு வருகிறீர்கள் ?

பதில் :* என் பூஜை அறையில் என் தாய், தந்தை , மகாத்மா காந்தியடிகள் என் வாழ்க்கை துணைவியின் தாய் தந்தையரின் படங்கள் இருக்கின்றன .அத்துடன் முகம் பார்க்கும் கண்ணாடியும் உண்டு .* இவர்கள்தான் நான் வணங்கும் தெய்வங்கள் .


கேள்வி :: உங்களது பழைய படம் ஒன்றைப் பார்த்தேன் .* அதில் கழுத்தில் ருத்திராட்சை* மாலையுடன் இருக்கிறீர்கள் .* ஏதேனும் ஜெபம் செய்து கொண்டிருந்தீர்களா ?


பதில் : நான் வணங்கும் கடவுளுடைய நாமத்தை எப்போதும் நினைவில் வைத்துக் கொள்வதற்காகத்தான்* அந்த மாலையை கழுத்தில் அணிந்து கொண்டிருந்தேன் .* இப்போது அந்த மாலை இல்லாமலேயே கடவுளை நினைத்துக் கொண்டே இருக்கும் தகுதியை நான் பெற்றிருப்பதாக நினைக்கிறேன் .* ஒரு சின்ன திருத்தம்* அது ருத்ராட்ச மாலை அல்ல .* தாமரை மணி மாலை .


கேள்வி : அந்த மாலையை யார் தந்தார்கள் ?

பதில் : திருப்பதியில் நானே வாங்கிய மாலை .

கேள்வி : தமிழ் படங்களில் , தமிழ்நாட்டின் பண்பை விளக்கும் காட்சிகள் , கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் காட்சிகள் அவ்வளவாக இல்லை என்று சிலர் சொல்கிறார்களே. இதை நீங்கள் ஒர்க் கொள்கிறீர்களா ? உங்கள் அபிப்பிராயம் என்ன ?


பதில் : மறுக்கிறேன் .* காலை, ஆச்சாரம், பண்பாடு அதையும் கலாச்சாரம் என்று சொல்லலாம் .* பண்பு*+ பாடு = பண்பாடு* என்றால் உழைப்பு . பண்படுத்தப்பட்ட செயல் . இப்படியும் சொல்லலாம் .* ஆக இவை அத்தனையும் சமூகத்தில்*உள்ள மக்களிடையே நிலவும் நம்பிக்கைகளை , செயல்களை ஆதாரமாக கொண்டு சொல்லப்படும் வார்த்தைகள் .**


கேள்வி : தமிழ் படங்களுக்கு தங்க பதக்கம் கிடைக்குமா?

பதில் : தமிழர்களால் அமைக்கப்பட்ட குழு ஒன்றுக்கு இந்த அதிகாரம் அளிக்கப்படுமானால் தங்க பதக்கம் நிச்சயம் கிடைக்கும் .**

கேள்வி : நீங்கள் விரும்பி உங்களுக்கு கிடைக்காமல் போன விஷம் ஏதாவது உண்டா ?

பதில் : விரும்பியதை பல. ஆனால் நான் விரும்பிய பாத்திரங்களை என்னிடமிருந்து இன்னும் யாரும் பறித்துக் கொள்ளவில்லை .


கேள்வி : உங்கள் அன்னையார் இப்போது உயிருடன் இருந்திருந்தால் ?


பதில் : என் நிலைக்காக மிகவும் அனுதாபப்பட்டிருப்பார் .


* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *------தொடரும் .........

fidowag
26th March 2020, 10:32 PM
தனியார் தொலைக்காட்சிகளில் கலைவேந்தன் எம்.ஜி.ஆர். திரைப்படங்கள்*
--------------------------------------------------------------------------------------------------------------------------

22/03/20* *- வசந்த் டிவி* - பிற்பகல் 1.30மணி - நவரத்தினம்*

* * * * * * * * * * மெகா 24* * * - பிற்பகல் 2 மணி* *- காதல் வாகனம்*

23/03/20* * * சன்லைப்* - காலை 11 மணி* - மன்னாதி மன்னன்*

24/03/20* * - முரசு டிவி - இரவு 7 மணி* - தாயின் மடியில்*


25/03/20* *- சன்லைப்* - காலை 11 மணி - நம் நாடு*

* * * * * * * * *- புதுயுகம் - பிற்பகல் 2 மணி - குடும்ப தலைவன்*

26/03/20* - சன்லைப்* - காலை 11 மணி* - சந்திரோதயம்*

* * * * * * * * *மீனாட்சி டிவி* - இரவு 7 மணி - நல்ல நேரம்*

fidowag
26th March 2020, 10:45 PM
திருடாதே 23.3.1961

தமிழ்திரை உலகில் சமூக புரட்சி உருவாக்கிய படம் .
மக்கள் திலகத்தின் அருமையான நடிப்பு .
திருடுவதால் ஏற்படும் அவலம் - பாதிப்பு .
மக்கள் மனதில் சமூக சிந்தனையை தூண்டிய படம் .
இனிய பாடல்கள் .
சென்னை நகரில் பிளாசா - பாரத் - மகாலட்சுமி மூன்று அரங்கில் 100 நாட்கள் ஓடிய படம் .
2011ல் சென்னையில் திருடாதே பொன்விழா நடைபெற்றது .
மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்களுக்கு திருப்பு முனை தந்த படம் - திருடாதே


புரட்சி நடிகர் எம்ஜிஆர் நடித்த மாபெரும் வெற்றி படம் திருடாதே 23- 3-1961 வெளியானது .

fidowag
26th March 2020, 10:47 PM
தமிழகத்தை திரும்பி பார்க்க வைத்த திருடாதே திரைப்படம்..
ஆம். அன்றைய சூழலில் சமூகத்தில் நிலவி வந்த திருட்டு என்னும் அவலத்தை, திருத்தும் நோக்கோடு, அழகிய, ஆழமான திரைக்கதையில் மக்களுக்கு எடுத்துக்காட்டிய படம். சட்டங்கள் மூலமாகவோ, கடுமையான தண்டனைகள் வாயிலாகவோ திருட்டு என்னும் குற்றத்தை குறைக்க முடியாது. திருடர்களின் மனமாற்றத்தின் மூலமே சமூகத்தில் இந்த குற்றத்தை குறைக்க முடியும் என்ற உயரிய சிந்தனையை தனக்கே உரித்தான இயல்பான நடிப்பால் வெளிபடுத்திய சிறந்த திரைப்படம்..இந்த திரைப்படம் அந்த கால கட்டத்தில் பெரிய சமூக மாற்றத்தை ஏற்படுத்தியதை யாராலும் மறுக்க முடியாது. அந்த சமூக மாற்றம் ஒரு திரைப்படத்தின் மூலம் சாத்தியம் என்ற அதிசயத்தால்தான் தமிழகம் இத்திரைப்படத்தை உற்று நோக்க ஏதுவானது. பொது உடமைவாதியான எழுச்சிகவிஞர் பட்டுகோட்டையார் தன்னுடைய பொதுஉடைமை கொள்கை பாடல்களை யார் மூலம் பரப்பலாம் என்று நினைத்தபோது அதற்கு பொருத்தமானவர் உண்மையிலே பொது உடமை கொள்கை கொண்ட எம்ஜிஆர் என்பதை உணர்ந்தார். அதனால் தன்னுடைய பெரும்பாலான பாடல்களை தலைவரின் படங்களிலே இடம் பெற செய்தார்..அதே போல் தலைவர் அவர்களும் பட்டுக்கோட்டையாரை மிகவும் மதித்து அவர் இருக்கும் வரை அவரது பாடல்களை தன்னுடைய படங்களில் இடம் பெற செய்தார். கவிஞரின் பாடல்களிலே மிகவும் சிறப்பு வாய்ந்த, நமது தெய்வத்திற்கு மிகவும் பிடித்த பாடலான "திருடாதே பாப்பா திருடாதே" என்னும் சமூக சீர்திருத்த பாடல் இடம்பெற்ற படம்தான் திருடாதே. இந்த பாடல் பட்டி தொட்டி எங்கும் ஒலித்து ஒரு பெரிய சமூக மாற்றத்தையே ஏற்படுத்தியது..இன்னும் சொல்ல போனால் இந்த பாடலின் வரி தமிழ் மக்களுக்கு தாரக மந்திரமாகவே விளங்கியது..இன்றும் விளங்கிகொண்டிருக்கிறது..இன்று கூட திருட்டு குற்றங்களைப் பற்றி யார் பேசினாலும் 'திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது' என்பதை ஒப்புக்கொண்டுள்ளனர்..இன்றைக்கும் யாராலும் ஏற்றுகொள்ளப்பட்ட கருத்தை அன்றே சொன்னவர்தான் நம் தலைவர்..அதனால்தான் அவர் புரட்சித் தலைவர்..


இந்த படத்தில் திருமதி சரோஜா தேவி நடிக்கும்போது, ஒரு கட்டிலை சுற்றி ஓடி காட்சி எடுத்தபோது அவருடைய காலில் கண்ணாடி துண்டுகள் குத்தி ரத்தம் கொட்டியது..காட்சிக்கு நடுவே சொன்னால் யாராவது ஏதாவது சொல்ல போகிறார்கள் என்று திருமதி சரோஜா தேவி அவர்கள் தொடர்ந்து நடித்துக்கொண்டே இருந்தார் ..அவருடைய காலில் வந்த ரத்தத்தை யாரும் கவனிக்காதபோது. நமது தலைவர் பதறிப்போய் காட்சியை நிறுத்த சொல்லி திருமதி சரோஜா தேவி அவர்களின் அடிபட்ட காலை கைகளால் பிடித்து மடிமீது வைத்து காலில் குத்திய கண்ணாடி துண்டுகளை எடுத்து சிகிச்சை செய்தார்..திருமதி சரோஜாதேவி அவர்கள் பதறிப்போய் மதிப்பிற்குரிய ஒரு பெரிய நடிகர் ஒரு சிறிய நடிகையின் காலைத்தொட்டு சிகிச்சை செய்வதா என்று மறுத்த போதும்., அவரிடம் இனிமேல் இப்படி எல்லாம் செய்ய கூடாது..ஏதாவது விபத்து என்றால் சொல்லவேண்டும் என்று அறிவுரை கூறினார்..மேலும் அந்த காட்சியை ரத்து செய்து கால் குணமான பின் நடிக்க வைத்தார்..அதனால்தான் திருமதி சரோஜாதேவி அவர்கள் நமது தலைவரை 'எனது தெய்வம்' என்று அழைத்தார். சக நடிகரின் பாதுகாப்பில் அவர் எப்படி கவனம் செலுத்தினார் என்பதற்கும், அனைவரையும் அவர் சமமாக பாவிக்கும் தன்மைக்கும் இந்நிகழ்ச்சி ஓர் எடுத்துக்காட்டு..இதைப்போல் கோடிகணக்கான நிகழ்சிகள் தலைவரின் வாழ்க்கையில் உள்ளது.


மேலும். இந்த படத்தில் தலைவரின் இயல்பான நடிப்பு அனைவரையும் கவரும் விதத்தில் அமைந்தது..சமூக படங்களிலும் தலைவர்தான் நம்பர் ஒன் என்பதை அறிய வைத்த படம்..அதுவும் கிளைமாக்ஸ் சண்டையில் ஏற்படுத்திய புதுமை அனைவராலும் பாராட்டப்பட்டு..பல படங்களுக்கு முன்னோடியாக விளங்கியது



Climax Fight MGR - M.N.Nambiar Fight Scenes மூன்று நாட்கள் இரவு பகலாக படமாக்கப்பட்டது. இந்த சண்டை காட்சிகள் ரீரீகார்டிங் ஆகியவற்றை எம்ஜிஆர் அவர்கள் டைரக்டர் செய்தார்.




தகவலுக்கு நன்றி : திரு.சி.எஸ். குமார் , பெங்களூரு*

fidowag
27th March 2020, 08:15 PM
குமுதம் வார இதழ் -08/01/20
--------------------------------------------
பொங்கலுக்கு போட்டி வைத்த எம்.ஜி.ஆர். -சபீதா ஜோசப்*

-----------------------------------------------------------------------------------------
புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். வாழ்நாள் முழுவதும் கொண்டாடி மகிழ்ந்த ஒரே பண்டிகை பொங்கல் மட்டும் தான்.* அதற்கு பல காரணங்கள் உண்டு .*

எம்.ஜி.ஆர். உழவர் தினமான 17ம் தேதி பிறந்தார் .* பிறந்த நாள் கொண்டாடாத எம்.ஜி.ஆர். அந்த நாளில் பொங்கல் திருநாள் கொண்டாடுவார் .* அவருடைய பெரும்பாலான* படங்கள் பொங்கல் திருநாளில் வெளியாகி பெரும் வெற்றி பெற்றன .

அவரது நண்பரும் நடிகருமான எம்.என்.நம்பியார் ஒரு சமயம், எம்.ஜி.ஆர். சினிமாவில் நடித்துக் கொண்டிருக்கும்போது ஒவ்வொரு வருடமும் பொங்கல் பண்டிகையை மிட சிறப்பாக கொண்டாடி வந்தார் .* நலிந்த* கலைஞர்களுக்கு*பொங்கல் பரிசுகள் கொடுப்பார் .* *அன்று காலை முதல் மாலை வரை அவருடன் இருப்பேன் என்றார் .

சரி, எம்.ஜி.ஆர். வீட்டு பொங்கல் திருநாள் எப்படி இருக்கும் .அந்த நாளில் என்னென்ன விஷேசம் நடைபெறும் என்பதை* 1957 முதல் 1987 வரை எம்.ஜி.ஆரின் மெய்காப்பாளராக இருந்த கே.பி.ராமகிருஷ்ணன் (இப்போது 90 வயது ) அவர்களிடம் பேசியதில் இருந்து :*

புரட்சி தலைவர் தமது வாழ்நாளில் பொங்கல் திருநாளைத் தவிர* வேறு இந்தப் பண்டிகையும் கொண்டாடியதில்லை* *அந்த நாளில் மிகுந்த மகிழ்ச்சியுடன் காணப்படுவார் .* இப்போது அ. தி.மு.க. தலைமை அலுவலகம் இருக்கும் இடம் அப்போது எம்.ஜி.ஆரின் நாடக மன்றமாக இயங்கி வந்தது .* அங்கு தான் வருசா வருஷம் எம்.ஜி.ஆரின் குடும்ப* விழாபோல பொங்கல் விழா நடைபெறும் .**

பொங்கலுக்கு முதல்நாளே எம்.ஜி.ஆர். நாடக மன்றத்தை சேர்ந்தவர்களும், அவரது ஸ்டண்ட்* குழுவை சேர்ந்த நாங்களும் அங்கு கூடிவிடுவோம் .* அன்னான் ஆர்.எம்.வீரப்பன் தலைமையில் அந்த இடத்தை அலங்கரிப்பது, முதல் லாரியில் வந்த புடவைகள், வேட்டிகள், பரிசு பொருட்களை அலுவலகத்தில் அடுக்கி வைப்பது வரை அனைத்தையும் செய்வோம்.* அந்த புடவைகள் வேட்டிகள் எல்லாம் ஒரே விலையில் , ஒரே தரத்தில் இருக்கும்.**

பொங்கல் அன்று காலை ஏழு மணிக்கெல்லாம் எம்.ஜி.ஆர்.அவரது மனைவி, அவரது* அண்ணன் ,சக்கரபாணி, அவர் மனைவி மீனாட்சியம்மாள் , அவரது மைத்துனர் , அவர் மனைவி உள்பட குடும்பத்தினருடன் வந்ததும் விழா களை கட்டும் .* தன் கையாலேயே அனைவருக்கும் புடவை வெட்டி கொடுப்பார்.* அதையே தன குடும்பத்தாருக்கும் வழங்குவார் .* அதே வேட்டியை அவரும்* அணிந்து கொள்வார் . எல்லோரும் புது டிரஸ் போட்டு ஒன்பது மணிக்கு வந்துவிட வேண்டும் .* எம்.ஜி.ஆர். வீட்டில் பொங்கல் வைத்து* நடக்கும்* நிகழ்ச்சியில் அனைவருக்கும் அறுசுவை உணவு வழங்கப்படும் .* ஆண் பெண் வரிசையாக வந்து உண்டு மகிழ்வார்கள் .* அங்கு ஏராளமான இனிப்பு பதார்த்தங்கள் சிறுசிறு துண்டாக வெட்டிவைத்த* கரும்பு துண்டுகள் வழங்கப்படும்* *காலை 10* மணி அளவில்* நாடக மன்ற நிகழ்ச்சிகளை தலைவர் ஆரம்பித்து வைப்பார்*

கயிறு இழுத்தல்* போட்டி, பெண்களுக்கான மியூசிக்கல் சேர் , ஓட்டப்பந்தயம் , சாக்கு கட்டி குதித்து* ஓடுதல், நடத்தல், ஸ்டண்ட் நடிகர்களின் வீரசாகஸங்கள் , என்று ஏராளாமான போட்டிகள் தொடர்ந்து வரிசையாக நடக்கும் .* எம்.ஜி.ஆர்.* வீட்டு பொங்கல் விழாவில் கலந்து கொள்ள இயக்குனர் சுப்பிரமணியன் , சக நடிகர்களான டி.எம்.கே. முஸ்தபா , என்.என்.நாராயண பிள்ளை, சிவானந்தம்,நீலகண்டன், டி.ஏ* மதுரம், சி.டி.ராஜகாந்தம், புஷ்பலதா , ஜி.சகுந்தலா, கே.ஏ. தங்கவேலு , நம்பியார் . அவர் மதிக்கும் பேரறிஞர் அண்ணா, கலைஞர், நாவலர், மதியழகன், சத்யவாணிமுத்து, என்.வி.நடராசன் , துரைமுருகன் என பலரும் வருவார்கள் .**

1962ல் நடந்த பொங்கல் விழாவில், எம்.ஜி.ஆர். பிக்ச்சர்ஸ் ஊழியர்களும்* எம்.ஜி.ஆர். நாடக குழுவினரும் , கயிறு இழுக்கும் போட்டியின்போது* கலந்து கொண்டனர் . எம்.ஜி.ஆரும்,அவரது அண்ணனும் எதிரெதிர் நின்று வீட்டுக் கொடுக்காமல் கயிறு இழுத்தார்கள்.* திடீரென்று நடுமத்தியில்* கயிறு அறுந்துவிட* இரு கோஷ்டிகளும் தரையில் விழ ஒரே சிரிப்பு, கரகோஷம்தான் .**

ஸ்டண்ட் கலைஞர்களின்* வீர* தீர சாகச நிகழ்ச்சிகளின்போது* கலைவாணர் என்.எஸ். கே.வின் நண்பர் வி.கே.ஆசாரி தமது வயிற்றின் மேல் பெரிய பாறாங்கல் வைத்து எங்கள் இருவரை கொண்டு சுத்தியலால் உடைக்க சொல்வார் . சிலம்பாட்டம் , குத்துசண்டை என்று அவரவர்களுக்கு தெரிந்த கலைகளை செய்து காட்டுவார் .* அவர்களுக்கு புரட்சி தலைவர் சிறப்பு பரிசுகளை வழங்குவார் .**

ஊர்வலம் என்ற நாடகத்தில் ஸ்டண்ட் நடிகர்களான நான், தர்மலிங்கம், புத்தூர் நடராசன், குண்டுமணி, முத்து , திருப்பதிசாமி, கோலப்பன் , என அனைவரையும் நடிக்க வைத்து தலைவர் ரசிப்பார் .* இறுதியில் நிகழ்ச்சியில் பங்கு கொண்டவர்களின் திறமையை நகைச்சுவையை பாராட்டி பேசி பரிசுகளை வழங்குவார் . இந்த மகிழ்ச்சியான பொங்கல் நிகழ்ச்சிகள்* முடிய இரவு 11 மணியாகி விடும் .* அளவுகடந்த* மகிழ்ச்சியுடன்* வீடு திரும்புவோம் .* இதுதான் புரட்சி தலைவர் வீட்டு பொங்கல் என்றார் .* **
-

fidowag
27th March 2020, 08:15 PM
தினமலர் -13/03/20- மறக்கமுடியுமா ?எங்க வீட்டு*பிள்ளை*
--------------------------------------------------------------
வெளியான நாள் : 14/01/1965
நடிப்பு : எம்.ஜி.ஆர். (இரு வேடம் ) பி.சரோஜாதேவி, ரத்னா , எம்.என்.நம்பியார், நாகேஷ், மாதவி, தங்கவேலு ,எஸ்.வி.ரங்காராவ் மற்றும் பலர்*
இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி* *வசனம் : சக்தி கிருஷ்ணசாமி*
ஒளிப்பதிவு : வின்சென்ட்* * * * * * இயக்கம் : சாணக்யா*

தயாரிப்பு :பி. நாகிரெட்டி*

கடந்த 1958ல்* வெளியான நாடோடி மன்னன் படத்தின் வசூலை, 1965ல் வெளியான எங்க வீட்டு பிள்ளை முறியடித்தது .* ஒரே தோற்றமுடைய சகோதரர்கள், ஆள் மாறாட்டம் செய்யும் பழைய கதைதான் .* ஆனால் அது எம்.ஜி.ஆருக்கு கன கச்சிதமாக பொருந்தியது .**

ராமுவை கோழையாக வளர்த்து, அவரின் சொத்துக்களை, மைத்துனர் நம்பியார் அனுபவிப்பார் .* நம்பியாரின் கொடுமை தாங்காமல் , ராமு வீட்டில் இருந்து வெளியேறுவார் .* மறுபுறம், இளங்கோ, என்பவர், வீரனாக வளர்கிறார்**சந்தர்ப்ப சூழ்நிலையால், இருவரும் இடம் மாறுகின்றனர் .* *இதனால் நிகழும், மாற்றங்களே கதைக்களம் .

ராமு, இளங்கோ, என இரு கதாபாத்திரங்களிலும் , எம்.ஜி.ஆர். புகுந்து விளையாடி இருப்பார் .* அப்பாவி ராமுவாக, நம்பியாரிடம் ஆதி வாங்கும் போது, அட எம்.ஜி.ஆரா* இது என விமர்சகர்களை ஆச்சர்யப்பட வைப்பார்.* அதே நேரம், ஆள் மாறாட்டம் வழியாக வரும் இளங்கோ, நம்பியாரை சவுக்கால் அடிக்கும் போது, தன ரசிகர்களை கொண்டாட வைத்தார் .**

தெலுங்கில் என்.டி.ராமராவ் நடிப்பில் வெளியான ராமுடு பீமுடு* படத்தின், ரீமேக் தான் இந்த படம்.* ஹிந்தியில் திலீப்குமார் நடிப்பில் ராம் அவுர் ஷ்யாம் என வெளியானது .**

எங்க வீட்டு பிள்ளை படப்பிடிப்பு , 45 நாட்களில் நிறைவடைந்தது .* படபூஜை போட்ட இரண்டே மாதங்களில் முடிந்து வெளியாகியுள்ளது .*

மாடிப்படியில் ஏறியும் , இறங்கியும் சவுக்கால் நம்பியாரை வெளுத்து வாங்கிய பின்னர்* , நான் ஆணையிட்டால், பாடல் இடம் பெறும் .* இதற்காகவே, எங்க வீட்டு பிள்ளை படத்தை எத்தனை முறை வேண்டுமானாலும் பார்க்கலாம் .

1965ல் 7 அரங்குகளில் வெள்ளிவிழா கண்ட படம்.* எம்.ஜி.ஆர். படங்களும் சரி,*அவர் திரைத்துறையை விட்டு விலகும் வரை , வேறு எந்த படங்களும் இந்த சாதனையை முறியடிக்கவில்லை .

fidowag
27th March 2020, 08:30 PM
தினமலர் - வாரமலர்*- திரை இசை திலகம் கே.வி.மகாதேவன் (1918-2018)01/03/2020
--------------------------------------------------------------------------------------------------------------------
பாய்ஸ் கம்பெனி நடிகராக இருந்து, எந்தவித பெரிய பக்கபலமும் இல்லாமல் , திரை யுலகில் படிப்படியாக உயர்ந்த எஸ். ராகவன், எம்.ஜி.ஆரை* வைத்து படம் இயக்கி தயாரிக்கும் அளவிற்கு , சபாஷ் மாப்பிள்ளை படத்தில் வளர்ந்திருந்தார் .

அவருடைய முயற்சிக்கு துணையாக இருந்து , கே.வி.மகாதேவனும் படத்திற்கு வெற்றிப்பாடல்கள் அமைத்துக் கொடுத்தார் .* எம்.ஜி.ஆர். படம் பெற வேண்டிய* வழக்கமான வெற்றியை சபாஷ் மாப்பிள்ளை பெறவில்லை என்றாலும், வித்தியாசமான முயற்சி என்கிற அளவில் பெரிய பாராட்டை பெற்றது .* இன்றளவும், அதன் பிரதி கிடைக்கிறது .* இந்த படத்தில் எம்.ஜி.ஆருக்கு ஜோடியாக , தன்* மனைவி மாலினியை நடிக்க வைத்திருந்தார் எஸ். ராகவன் .

orodizli
27th March 2020, 08:31 PM
27 03 2020
Book park

Mynaty media
M Shajahan Bsc

இறைவனின் முடிவில் எதுவுமே நமது கையில் இல்லை.யாராவது யோசித்தோமா...?

இருபது நாள் வெளியே வர முடியாமல் இருந்த இடத்திலேயே முடங்க வைத்தது நாமாகத் தேடிக்கொண்டதல்ல...!

இருக்கும் நாட்களை எப்படி ஓட்டுவது என்ற கவலை ஒருபுறம்.எதுவுமே இல்லாத ஏழைகள் எப்படித் தவிப்பார்கள் என நினைக்கும்போது வரும் சோகம் மறுபுறம்...!

எதுவுமே நிரந்தரமல்ல என்ற எதார்த்தம் ஒன்று தான் கொஞ்சம் நிம்மதி தருகிறது.சோகத்திலும் கொஞ்சம் சுகம் தருவது இந்த எழுத்துப்
பணி தான்...!

இன்று நாம் காணப்போவது...,

திரையில் இணைந்து சொந்த வாழ்க்கையில் கடைசி வரை இணை பிரியா தம்பதியை இந்தப் பதிவு நினைவு கூர்கிறது...!

தமிழ்த் திரையுலகம் கண்ட முக்கிய ஜோடியான...,

மக்கள் திலகம்
நம் சின்னவர்
எம்.ஜி.ஆர் மற்றும் ஜானகியம்மா தான் அது...!

இந்த நாளில் நாம் அவர்களை நினைவு கூறக் காரணம் ஒரு திரைப்படம் தான்.

ஜூபிடரின் பொக்கிஷத்திற்காக நமது வரிசையில் அடுத்து வருவது மோகினி என்ற திரைப்படம்...!

தமிழகத்து இரு முதல்வர்கள் முதன் முதலில் திரையில் தோன்றக் காரணமான படம்...!

கலைஞர்கள் என்ற தகுதியை மீறி நம்மை இந்த ஜோடி வியக்க வைக்கக் காரணம் கொஞ்சம் வித்தியாசமானது.

இருவரும் முதன் முதலில் சந்திக்கும்போது தங்களது இல்லற வாழ்க்கையில் தோல்வியின் விளிம்பில் நின்றுகொண்டிருந்தார்கள்.

அதைப் பற்றி விவரிக்கும் முன்பாக மோகினியைப் பற்றி முதலில் பார்த்துவிடலாம்.

1948 இறுதியில் வெளியான மோகினி ஜூபிடரின் ஒரு முக்கியமான படம்...!

அபிமன்யு இதே ஆண்டு தான் வெளியாகியிருந்தது.36 படங்கள் இந்த ஆண்டு வெளியாக அதில் முக்கியமான படமாக சந்திரலேகா இருந்தது...!

சிட்டாடலின் ஞான சௌந்தரியும் ஹிட்டாக வாசனின் இன்னொரு ஞானசௌந்தரி தோல்வி கண்டது...!

இன்னொரு தோல்வி சூப்பர் ஸ்டார் பாகவதரின் ராஜமுக்தி...!
இதிலும் பாகவதருக்கு ஜோடி ஜானகியம்மா தான்...!

ஜூபிடரின் பிஸியான நேரத்தில் ஆண்டுக்கு இரண்டு மூன்று படங்கள் என வெளியாக அவர்களது ஆஸ்தான கதாசிரியர் ஏ.எஸ்.ஏ.சாமி பிஸியாக இயங்கிக்கொண்டிருந்த நேரம்...!

அபிமன்யுவிற்கு காசிலிங்கத்தை இணை இயக்குநராகப் போட்ட முதலாளி சோமு இந்த மோகினிக்கும் ஒரு புதுமுக இயக்குநரைத் தேடினார்...!

அப்படி தேடும்போது அகப்பட்டவர் லங்கா சத்யம்...!

தெலுங்கில் நடிகராக வாழ்க்கையைத் துவக்கிய சத்யம் செண்பக வல்லியில் இயக்குநராக வாழ்க்கையைத் துவக்கியவர்.42 ல் வெளியான புல்லைய்யா இயக்கிய பாலநாகம்மாவில் நடிகராக வாழ்க்கையைத் துவக்கியவர்...!

மோகினி தவிர மறுமலர்ச்சி மற்றும் பாரிஸ்டர் பர்வதம் என பல படங்களை இயக்கியவர்.தான் படித்த கதைகளில் இருந்து வழக்கம்போல சாமியின் ஸ்கிரிப்ட் மோகினிக்கும் பயன்பட்டது...!

ஷேக்ஸ்பியரின் முதல் நாடகமாக கருதப்படும் டூ ஜென்டில்மென் ஆஃப் வெரோனாவிலிருந்து இந்த மோகினி பிறந்தாள்...!

வெரோனா ஒரு நகரின் பெயர்.இரு நண்பர்கள் வெரோனா விலிருந்து மிலன் நகருக்கு வருவதில் தொடங்கி அவர்களது காதல் சோகம் வீரம் என ஷேக்ஸ்பியர் ட்ராமா நகரும்.சில்வியா ஜூலியா என இரு யுவதிகள் நண்பர்களின் வாழ்க்கையில் குறுக்கிட அதன் பிறகு நடக்கும் சம்பவங்களின் தொகுப்பே இந்த நாடகம்...!

சாமியின் திரைக்கதைக்கு இந்த வெரோனா பெரிதும் உதவியது.அது போக அரேபிய இரவுகளில் வந்த பறக்கும் குதிரையை கொஞ்சம் உல்டாவாக்கி உள்ளே புகுத்த ஒரு பரபரப்பான ஸ்கிரிப்ட் ரெடி.நமது மோகினியின் திரைக்கதை என்ன சொன்னது...?

மோகன் குமார் மற்றும் விஜயகுமார் இரு நண்பர்கள்.மோகன் அந்த நாட்டின் இளவரசன்.தந்தை மன்னர் ஒரு வித்தியாசமான பேர்வழி.நாட்டு மக்களின் நலனை விட விதவிதமான விநோத கலைப் பொருட்களை சேகரிப்பதற்கென்றே பிறவி எடுத்தவர்.அவருக்கு அழகானதொரு மகள்.அவள் தான் மோகினி.

இளவரசன் மோகனின் நண்பனான விஜயகுமார் மோகினி மீது மையல் கொள்ள தந்தைக்குத் தெரியாமல் இருவரும் வெளியே சந்தித்து தங்களது காதலை வளர்த்துக்கொள்கிறார்கள்.இந்தக் காதல் இளவரசன் மோகனுக்கும் தெரியும்.இந்த நேரத்தில் மன்னருக்கு பிறந்த நாள் வருகிறது.

என் வாழ்க்கையில் இது வரை காணாத விநோத பொருளை அன்பளிப்பாகக் கொண்டு வருபவருக்கு எதைக் கேட்டாலும் தருவேன் அமைச்சரே .அதை கண் குளிர கண்டுவிட்டு கண்ணை மூடினாலும் பரவாயில்லை என புலம்பிக்கொண்டிருக்கும் நேரத்தில் தான் அந்த ஊர் கை வினைஞனான காளிநாதன் ஒரு விநோத பொருளை படைத்துக்கொண்டிருக்கிறான்.அது மரத்தாலான பறக்கும் குதிரை...!

பிறந்த நாள் பரிசாக தான் பாடுபட்டு உழைத்த பறக்கும் குதிரையோடு வரும் காளிநாதன் மன்னரின் முன் மண்டியிட என்ன மரக் குதிரை பறக்குமா ?

அப்படி மட்டும் பறந்துவிட்டால் நான் இது வரை கண்ட விநோதங்களில் இது தான் தலை சிறந்தது.எங்கே பறக்க வை பார்க்கலாம்.? ஒரு நிமிடம் மன்னா அதற்கு முன்பாக இந்த குதிரைக்கான விலையையும் சொல்லி விடுகிறேன்.எவ்வளவு வேண்டும் கேள்.அள்ளித் தர தயாராக இருக்கிறேன்.அள்ளியெல்லாம் தர வேண்டாம் மன்னா உங்களது மகள் மோகினியை மட்டும் தந்தால் போதும்...!

ஏற்கனவே ஒரு முறை அவளைப் பார்த்து மயங்கிய காளிநாதன் கிடைக்கிற இடைவெளியில் காய் நகர்த்த தடுமாறிப்போகிறார் மன்னர்.

ஆசைக்கும் ஒரு அளவில்லையா காளிநாதா.?
என் நாட்டை வேண்டுமானா
லும் எடுத்துக் கொள். குதிரை பறப்பதை ஒரு முறை பார்த்து விடுகிறேன்...!

காளிநாதன் மசிவதாக இல்லை.ஒரு நாள் அவகாசம் கொடு. மன்னரின் வீக்னஸ் அவனுக்குத் தெரியும்.எப்படியும் ஓகே சொல்லிவிடுவார்.மயங்கிய மோகினியை தேற்றிவிட்டு அவளிடம் மன்றாடுகிறார் மன்னர்.நாளை வரை பறக்கும் குதிரைக்கு நீ தான் பாத்காப்பு.காதலன் விஜயன் விக்கித்து நிற்கிறான்.மன்னரின் கிறுக்குத்தனத்திற்கு ஒரு அளவில்லையா...?

வெளியே சென்ற இளவரசன் அரண்மனை திரும்ப அழுது புலம்புகிறாள் தங்கை.ஆறுதல் சொல்லிவிட்டு நண்பன் விஜயனுடன் ஆலோசித்துவிட்டு அடுத்த நாள் ஒரு திட்டத்தோடு காளிநாதனிடம் வருகிறான்.என் தங்கையை உனக்கே மணமுடிக்கிறேன் அதற்கு முன்பாக ஒரு வெள்ளோட்டம் விட்டுப் பார்க்கலாமா...?

இளவரசன் மோகனின் தந்திரம் எனக்கா தெரியாது.விடாக்கண்டன் காளி நாதன் ஓகே சொல்ல பறக்கும் குதிரை மீது அமர எங்கே பறக்க வை பார்க்கலாம்.காளியின் விஞ்ஞான மூளை ஒரு விசையில் இருக்கிறது.கழுத்துப் பக்கம் ஒரு திருகு திருக மரக் குதிரை உயிர் பெற்று பறந்தேவிட்டது...!

அனைவரும் வாய் பிளக்க காலையில் போன இளவரசன் மாலையான போதும் அரண்மனை திரும்பவில்லை...!

அடே அயோக்கியா.
எங்கடா இளவரசன்? பறக்குமா என கேட்டீர்கள் பறந்ததா இல்லையா?. சொன்ன வாக்கை காப்பாற்றுங்கள்.
என்ன காளிநாதா விளையாடுகிறாயா?. இளவரசன் வரும் வரை இவனை சிறையில் தள்ளுங்கள்.

விஜயன் ஓடிச் சென்று இழுத்துச் செல்ல எங்க தான் போனான் இளவரசன் மோகன்?

காளிநாதன் களி தின்றது நீடித்ததா? மோகினி விஜயனின் காதல் என்னவானது? ஒரே பெனிஃபிட் பறக்கும் குதிரையை பார்த்த மன்னர் தான்.வித்தியாசமான இந்த திரைக்கதையின் இன்னொருபக்கம் எப்படி இருந்தது என்பதை மீதிக் கதை அழகாகச் சொன்னது...!

இதில் குதிரையை பறக்க வைக்க இயக்குநர் லங்கா சத்யம் என்னவெல்லாமோ செய்ய முதலாளி சோமுவிற்கு கடுப்பானது தான் மிச்சம்...!

இயக்குநர் ரகுநாத் உதவிக்கு ஓடி வர ஒருவழியாக பறந்தது குதிரை...!

மோகினியில் இளவரசன் மோகனாக டி.எஸ்.பாலையா.அவரது நண்பன் விஜயகுமாராக மக்கள் திலகம்.அவரது ஜோடி மோகினியாக வி.என்.ஜானகி...!


மோகனின் காதலி குமாரியாக மாதுரி தேவி என இரண்டு ஜோடிகளின் காதல் கலைகளை இந்த மோகினியில் காணலாம்...!

வித்தியாசமான திரைக்கதைக்கு காளிநாதன் அஸிஸ்டெண்ட் பாத்திரத்தில் நம்பியார் வருவார்.எம்.எஸ்.பாக்கியம் டி.பாலசுப்ரமணியன் புளிமுட்டை ராமசாமி கே.மாலதி டி.பாரதி நிர்மலா தேவி கமலா பாய் ரங்கநாயகி என நிறைய பேர் இருந்தனர்...!

சாமியின் கதைக்கு வசனம் எஸ்.டி.சுந்தரம்
இசைக்கு ஜூபிடரின் ஆஸ்தான சுப்பையா நாயுடு மற்றும் சுப்பராமன் ஜோடி...!

சுந்தர வாத்தியார் பூமிபாலகதாஸ் வரிகள் தர சுப்பராமன் லீலா கே.வி.ஜானகி ஆகியோரோடு நம்பியார் குரலும் இருந்தது.கொரியோகிராஃபி வேதாந்தம் ராகவைய்யா.சுப்பராமன் இவரோடு ஏற்பட்ட பழக்கத்தால் தான் புகழ் பெற்ற தேவதாஸ் பாடல்கள் நமக்குக் கிடைத்தது...!

வித்தியாசமான வெஸ்டர்ன் மிக்சிங்கை துவக்கி வைத்தது சுப்பராமன் என்றால் மிகையில்லை.
இள வயதில் மறைந்த சுப்பராமன் நமக்கெல்லாம் பேரிழப்பு தான்...!

மோகினியின் சிறப்பு மக்கள் திலகம் ஜானகி ஜோடியின் ஈடுபாடு.இனி எவரும் நம்மை பிரிக்கவே முடியாது.பிரிக்கவே முடியாத பிரகாச ஜோடி போன்ற எஸ்.டி.சுந்தரத்தின் வசனங்கள் இவர்களுக்கு அழகாக செட்டானது...!

தாமதம் ஏனென்றால் தாமரை வாடுவதேன்? சூரியன் என்ன நம் சொந்தக்காரனா? சொந்தம் இல்லாமலா தன் சிவந்த கதிரை உனக்கு இரவல் தந்திருக்கிறான்..

நம் நட்பு மறையும் மின்னலல்ல.மங்காத மாலைச் சூரியனுமல்ல.அஸ்தமனமில்லா ஆனந்த வாழ்வு.முதல் முதலாக திரையில் இணைந்த இந்த ஜோடிக்காக அமைந்த வசனம்
கலைஞருடையது.!


கலைஞர் அவர்கள் ராஜகுமாரிக்கும்
அபிமன்யுவிற்காகவும்...,

ஜுபிடருக்கு எழுதிக்கொடுத்த
வசனங்களில்
மீதம் இருந்ததை
கனகச்சிதமாக
எடுத்து...,

நிறையவே மெனக்கெட்டு தகுந்த இடத்தில்
இணைத்துக் கொண்டார்கள்...!

மக்கள் திலகம் முதன் முதலில்
ஜானகியம்மா உடன் இம்ப்ரஸ் ஆனது தியாகி படத்தைப் பார்த்தபோது தான்...!

நரசிம்ம பாரதி ஜமீனாக, ஜானகியம்மா அரிஜனப் பெண்ணாக நடித்த படமது...!

இருவருக்கும் இடையே ஏற்பட்ட,
காதலை அப்போதே சொன்னார்
சின்னவர்...!

மக்கள் திலகம் மறைந்த தன் மனைவியின் சாயலை அந்தப் பெண்ணிடம் கண்டார்.அதை மறந்தும் போனார்.ஆனால் விதி நேரில் சந்திக்க வைத்தது ராஜமுக்திக்காக..!

அந்தப் படத்தில் இருவரும் இருந்தாலும் ஜோடியில்லை.
மனம் விட்டு இருவருமா பேச பாகவதர் உதவி செய்வதாக உறுதியளித்தார்...!

அப்போது அவருக்கு ஒரு மகன் இருந்ததும் இல்லற வாழ்க்கையில் தோல்வியை சந்தித்ததும் இருவரும் பறிமாறிக்
கொள்ள இங்கும் அதே சோகம்...!

அதைப் பற்றி தனது சுய சரிதையில் ஒளிவு மறைவின்றி உள்ளதைச் சொல்லியிருக்கிறார் மக்கள் திலகம்...!

வைக்கம் நாராயணி ஜானகி என்ற வி.என்.ஜானகி இளமையில் நிறைய சோகத்தை அனுபவித்தவர்...!

கேரள வழக்கப்படி தாயின் முக்கியத்துவம் பெண்களுக்குக் கிடைக்கும்.அப்பா ராஜகோபாலய்யர் தஞ்சையை பூர்வீகமாகக்கொண்டவர்.சித்தப்பா பாபநாசம் ஏற்கனவே திரையில் முக்கிய ஆளுமை...!

தந்தையும் பாடல் எழுதுவதால் திரையில் ஈஸியாக நுழைய வாய்ப்பு.ஆரம்ப காலங்களில் ஆடல் மட்டுமே...!

39ல் வெளியான மன்மத விஜயத்தில் ஆடத் தொடங்கியது.கிருஷ்ணன் தூது கச்ச தேவயானி சாவித்திரி அனந்த சயனம் கங்காவதார் தேவகன்யா சந்திரலேகா என நிறைய படங்களில் நடித்து மோகினிக்கு வரும்போது நல்ல நிலையில் தான் அவர் இருந்தார்...!

இன்னும் சொல்லப்போனால் மக்கள் திலகத்தை விட அதிக சம்பளம் பெரும் இடத்தில் இருந்தார்...!

கொத்தமங்கலம் சீனு ஜோடியாக சகடயோகத்தில் இவர் தான் ஹீரோயின்.பதினாறு வயதில் கணபதி பட்டிடம் எப்படியோ ஏமாந்தார்...!

பணம் ஒன்றையே குறியாகக் கொண்டது பிறகு தான் புரிந்தது.பிரிய விரும்பியபோது சட்ட சிக்கல்கள் குறுக்கிட்டது.பர்த்ருஹரியில் கே.சுப்ரமணியம் சந்திரலேகாவில் எஸ்.எஸ்.வாசன் ஆகியோர் தான் அப்போதைய ஒரே ஆதரவு...!

பாபநாசத்தின் பெண் என்பதால் இருவரும் தக்களது மகளாகவே நடத்தினர்...!

மனைவி நோயில் விழுந்து முதல் இல்லறமும் சட்டென மறைய இரண்டாவது வாய்ப்பும் நோயிலேயே கழிய தன்னையும் மனைவியையும் கவனித்துக்கொள்ள இன்னொரு துணை மக்கள் திலகத்திற்கு அப்போது தேவைப்பட கையில் குழந்தையோடு நிற்கும் ஜானகி மீது வந்த பரிதாபமே காதலாக மாறியது...!

பஞ்சாயத்து பெரியவர்களிடம் வரும்போது மக்கள் திலகத்தின் நிலை சொல்லிக்கொள்ளும்படி இல்லை.அந்த நேரத்திலும் தைரியமாக எடுத்த முடிவு அனைவருக்கும் சுபமாக முடிந்தது...!

மனைவி சதானந்தவதியின் இறுதிக் காலங்களில் கூடவே இருந்து கவனித்துக்கொண்டது ஜானகி தான்.அவரது மகன் அப்புவை தனது மகனாகவே ஏற்றுக்கொண்ட மக்கள் திலகம் இறுதி வரை அப்படியே இருந்தார்...!

வாழ்க்கை வாழ்வதற்கே என்ற இலக்கணத்திற்கு இந்த இணை இன்னொரு உதாரணம்...!

தாங்கள் வாழ்ந்த காலத்தில் தங்களுக்காக இல்லாமல் பிறருக்காகவே வாழ்ந்து மறைந்த ஜோடி.கணவனை கண் போல காத்தது திரையுலகமே அறிந்தது தான்...!

மோகினியில் தொடங்கிய இந்த பந்தம் நாம் படத்தோடு நிறைவடைந்தாலும் மரணம் வரை கூடவே நிழலாக நின்று மக்கள் திலகத்தை கவனித்துக்கொண்டது...!
இல்லத்தரசிகளுக்கு ஒரு முன் மாதிரி அவர்...!

ஆஹா..வசந்த மாலை நேரம் என குதிரை மீதேறி ஆரம்ப காட்சியாக ஜானகி பாடும் பாடல்.மந்த மாருதம் குளிர்ந்து வீசிடும் வசந்த மாலை நேரம்.மல்லிகை அல்லி முல்லை மலர வரி வண்டுகள் அலறும் நேரம்.என் காதலர் உள்ளம் தேடும்.காதல் வேகம் போல் இல்லையே உனது கால்கள் தாவும் வேகம்.செல்லு செல்லு பரியே என குதிரையை விரட்ட அங்கே காதலிக்காக காத்திருக்கும் விஜயனாக மக்கள் திலகம்...!

எந்தன் உயிர் மோகினி.மான் தான் வண்ண மயில் சாயல் காண்கிறேன் என சுப்பராமன் குரலில் பாடியது மக்கள் திலகம் தான்...!

ஆஹா...இவர் யாரடி? என்னை ஆள வரும் பால வடி வேலனைப் போல் காணுதடி என லலிதா பத்மினி ஜோடியின் ஆடலோடு ஒரு பாடல்...!

வேலையில்லாதவரடி.வெள்ளையர்கள் அணியும் சேலைகள் பாவாடைகள் மேலாடைகள் கொண்டோடிடும் கண்ணனோ.அறியாமல் உளறாதடி அடீ லலிதா.அடீ பத்மினிப் பெண்ணே எனையே பார்க்கிறார் என அக்கா தங்கையின் அழகான பாடல்...!

ராஜாதி ராஜன் மெச்சும் ரஞ்சிதம் என் பேரு என்றொரு பாடல்.ஜோராய் நடை நடக்கும் என மற்றொரு பாடல்.ஆஹா..ஆஹா...அதிசயம் அழகான ஓவியம் மற்றும் மாயமாய் வந்தேன் போக வா என் அருகே வா என ஏகப்பட்ட பாடல்களோடு வந்த மோகினி...,

ஜூபிடரின் முக்கியமான படம் என்பதை விட மக்கள் திலகத்தின் ரசிகர்களுக்கு இது இன்னும் முக்கியம்...!

இல்லறத்தின் இன்னொரு பக்கத்தை எடுத்துச் சொன்ன இந்த ஜோடி...,

இன்றைய இணைகளுக்கு இன்னொரு உதாரணம்...!

மீண்டும்
சந்திப்போம்...!!!......... Thanks.........

fidowag
27th March 2020, 09:38 PM
தினமலர் -வாரமலர் -23/02/20-* நெல்லை*
---------------------------------------------------------------
திரை இசை திலகம் - கே. வி. மகாதேவன்* (1918-2018)
----------------------------------------------------------------------------------

எம்.ஜி.ஆரின் மிக வித்தியாசமான படமாக பேசப்பட்ட சபாஷ் மாப்பிள்ளை படத்திற்கு 1960 களின் துவக்கத்தில் கே.வி.மகாதேவன் இசை அமைத்திருந்தார் .

ஏகப்பட்ட ராஜா, ராணி திரைபடங்களில்* எம்.ஜி.ஆர். நடித்து கொண்டிருந்த 50 களில்* அவரை ஒரு காமெடி படத்தின் நாயகனாக* பார்ப்பது , ரசிகர்களுக்கு ஒரு மாறுபட்ட அனுபவமாகத்தான் இருந்தது .

எம்.ஜி.ஆருக்கு புதுமையான பாகம்தான் .* ஒரே தமாஷாக நடித்திருக்கிறார் .**அவரது வழக்கமான ராஜ உடையும், கிருதா கிராப்பும்* மாறி இருப்பதே மாறுதல்தானே .* அசல் காமெடியனாக மாறி சக்கை போடு போட்டிருந்தார் .**நடனம் ஆடுகிறார், கத்திச்சண்டை, குத்து சண்டை க்கும் இடமளித்திருக்கிறார் .இந்த படத்தில் எம்.ஜி.ஆரின் முழு திறமையும் உண்டு .* அவருக்கு ஒரு சபாஷ் போடாமல் இருக்க முடியாது .* இந்த படம் அவரை பொறுத்தவரை பூரண வெற்றிதான் . என்று விமர்சித்தது அந்நாளைய பிரபல வார பத்திரிகை .**

இந்த வகையில் எம்.ஜி.ஆரை புது பாணியில் காட்டியவர்* பெரிய பின்னணி ஏதும் இல்லாத எஸ். ராகவன் என்பவர் .* காரைக்குடி சாமி ஐயங்காரின் மகனான ராகவன் , வைரம் அருணாச்சலம் செட்டியாரின் நாடக குழுவில் பால்ய நடிகனாக இருந்தவர் .* நாடக உலகத்திலும், திரையுலகத்திலும் ஓரளவு அனுபவமும் பயிற்சியும் பெற்றார் .* சபாஷ் மீனாவில்* நடித்த நடிகை மாலினியை மணந்தார் .இந்தப்படத்தில் நடிக்க எம்.ஜி.ஆரை அணுகி சம்மதம் பெற்றார் .* எம்.ஜி.ஆரின் துணை ராகவனுக்கு கிடைக்காமல் இருந்திருந்தால் கூட மகாதேவன் அவருக்கு இசையமைத்து உதவி இருப்பார் .**

ராகவன் புரொடக்சன்ஸ் சார்பில்* ராகவன் கதை, வசனம் எழுதி இயக்கிய படமாக* எம்.ஜி.ஆர். நடித்த சபாஷ் மாப்பிள்ளை வெளி வந்தது .* படத்தில் எம்.ஜி.ஆரின் பணத்திமிர் பிடித்த மாமனாராக வந்த எம்.ஆர். ராதாவின் கதறல்களில் சிரிப்பு வரவில்லை என்றாலும் எம்.ஜி.ஆர். கைப்பணம் இல்லாமல் பசியோடு மும்பை நகர வீதிகளில் அலையும் காட்சிகள் மனதிற்கு இறுக்கமாக அமைந்தன .
அப்போது அவர் பாடும் பாடல் , சிரிப்பவர் சில பேர், அழுபவர் பல பேர் , இருக்கும் நிலை என்று மாறுமோ ?**
மருதகாசியின் வரிகளை மகாதேவன் இசையில் சீர்காழி கோவிந்தராஜன்* பாடும் இந்த பாடலில் அவல* சுவை அழகாக முன்வைக்கப்படுகிறது .இந்தியாவின் வர்த்தக தலைநகரமாக விளங்கும் மும்பையில் படம் பிடிக்கப்பட்ட பாடல் என்பதால், வாத்திய இசை சேர்ப்பிலும் , நாகரீக முத்திரை அமைந்தது.* சோகம் இழையோடும் பாடல், செல்வரைக் குருட்டு தனமாக பழி க்காமல், எம்..ஜி.ஆரின்*எதிர்பார்ப்பை இப்படி முன்வைத்தது .**
உயர்ந்தவர் தாழ்ந்திட தேவையில்லை*உள்ளதை இழந்திட சொல்லவில்லை*உழைப்பவர் உயர்ந்தால் போ துமய்யா*

மெய்க்காதலர்கள் சந்திக்கும்போது காலம் தயங்கி நிற்கும்.* இந்த உணர்வைத்தருகிறது, யாருக்கு யார் சொந்தம் என்பது என்ற பாடல்* அதன் கனிவான* கவர்ச்சியைக் கண்ட ராகவன், சுகமாக ஒரு முறையும், சோகமாக ஒரு முறையும் அதை பயன்படுத்தினார் .* காதல் உணர்ச்சியின் மென்பையான ஈர்ப்பு, கர்நாடக இசையின் இதமான கவர்ச்சி ஆகியவற்றுடன், 50 களின் சில பாடல்களுக்குரிய அவசரம் இல்லாத போக்கில் யாருக்கு யார் சொந்தம் என்பது விளங்குகிறது .

சீர்காழி கோவிந்தராஜன், பி. சுசீலா, ஆகியோரின் குரல்களில் ஒலிக்கும் இந்த பாடலில் மகாதேவனின் மேஜிக் உள்ளது .* சீர்காழியில் எதிரொலிக்க குரலாக 90களில் *வலம்* வந்த ஒரு மெல்லிசை பாடகர், ஜோடி சேர்த்துக்* கொண்டு இந்த பாடலை பாடிக் கொண்டிருந்தார் .

சபாஷ் மாப்பிள்ளை படத்தில் கவுரவ நடிகராக ரயில் வண்டியை கூறலாம் .அதியற்புதமாக நடித்திருக்கிறது .* படத்திற்கு நல்ல ஓட்டத்தையும் தந்திருக்கிறது . உண்மையிலேயே திரைக்கதை ஆங்காங்கே ரயிலில் ஏறித்தான் செல்கிறது .என்று படத்தின் ரயிலோட்டம் ஒரு விமர்சகரை கவர்ந்தது .இதற்கு ஏற்ப, திரைக்கதையின் ஒரு திருப்பத்தில் தன்னுடைய விருப்பத்திற்கு மாறாக தன் மீது திணிக்கப்படும். திருமணத்திலிருந்து தப்பிக்க ரயிலேறுகிறாள் கதாநாயகி .**

அப்போது ரயில் பிச்சைக்காரனின் பாடல், அவளுடைய அப்பாவின் பணத்தாசையை* எதிரொலிக்கிறது .*
வெள்ளிப்பணத்துக்கும், நல்ல குணத்திற்கும் வெகுதூரம் , இது உள்ளபடி இந்த உலகம் உணர்த்தும் .ஒரு பாடம் . என்கிற பாடல் பி.பி.சீனிவாசன் குரலில் ஒலிக்கிறது .* ஸ்ரீநிவாஸின்* சிறந்த பாடல்களின் பட்டியலில் இடம் பெற்றுள்ள பாடல் இது .**

சபாஷ் மாப்பிள்ளை படத்தில் பாடல்கள் வெற்றியடைந்ததோடு , அவற்றுக்கான வாத்திய இசை சேர்ப்புகளும் ரம்மியமாக அமைந்தன .* 50களை* பின்னுக்கு தள்ளி மகாதேவன் 60களின் பாணிகளுக்கு* பயணப்பட்டுவிட்டதை அவை குறித்தன ..

orodizli
28th March 2020, 11:59 AM
இன்று 28-03-1936 - 28-03-2020 மகத்தான ஒரு மனிதரை, நடிகரை பொது மக்கள் அரங்கத்திற்க்கு அறிமுகம் செய்த நாள் "சதி லீலாவதி" காவியம் வழியாக......... திரையுலக, அரசியலுலக சக்கரவர்த்தி ஆக என்றும் திகழும் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்., புகழ் எப்பொழுதும் வாழியவே...

orodizli
28th March 2020, 12:28 PM
நண்பர்களே, கொரோனா கவலை ஒருபக்கம் 3 நாட்களாக வாட்டி வதைக்கும் சூழலில் அதிலிருந்து மனதை விலக்கி வைக்க நினைத்தேன் அதன்படி இன்று உலக திரையரங்க தினத்தையொட்டி 1980 களின் ஞாபகங்களில் சில துளிகள் இதோ.... படத்தொகுப்பு- (சித்தரிக்கப்பட்டவை)
உடன்குடி ஷண்முகானந்தா திரையரங்கம்...1980 களில் அவ்வட்டாரத்து மக்களின் கவலைகளை மறக்கடித்து சிரிக்க வைத்த மேடை. ரஜினி, கமல் ஹீரோக்களாக வலம் வந்த அக்காலக்கட்டத்தில் முதலமைச்சராக இருந்த எம்ஜிஆரின் பழைய திரைப்படங்கள் மீண்டும் திரையிடப்பட்டு ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தின. குறிப்பாக ஞாயிறு மேட்னி 50 பைசா கவுண்டரில் பெரியதாழை, மணப்பாடு மீனவர்கள் கூட்ட ( கடல்) அலையில் மற்ற ஊர்களில் இருந்து வந்த ரசிகர்கள் கடும் நெருக்கடியில் சிக்கி விழிபிதுங்கி வியர்வையில் குளித்தபடி நிற்பார்கள். மீனவர்கள் முழங்கிய வாழ்த்து கோஷம் இன்றும் அப்பகுதியில் செல்லும்போது ஞாபக அதிர்வலைகளை ஏற்படுத்துகிறது. இடைவேளையில் பாட்டுப் புத்தகம், உள்ளங்கை அளவிலான எம்ஜிஆர் படங்கள் மற்றும் ப்ளோ அப் அளவில் படங்கள் வாங்கி மகிழ்ந்த தருணங்கள் மறக்க முடியாதவை. அடுத்த படம் என்ன என்பதை ஒரு பாடல் காட்சி திரையில் ஓடவிட்டு நடுவில் சிலைடு காட்டுவார்கள். கைத்தட்டல் ஆரவாரம் அதிர வைக்கும். காலைக் காட்சியில் திரையிடப்பட்டிருக்கும் படத்தின் ஒரு பாடலைக்கூட மேட்னி படத்தின் இடைவேளையில் காட்டுவார்கள். பெரும்பாலும் சுற்று வட்டார ரசிகர்கள் சைக்கிளில் மூன்று மூன்று பேராக வந்து இறங்குவார்கள். அந்த வழியாக பயணிக்கும் டவுன்பஸ் இரவு 9.30 க்கு குறிப்பிட்ட சில ஊர் ரசிகர்களுக்காக படம் முடியும் தருணத்தை அட்ஜஸ்ட் செய்து லேட்டாக வரும். அந்த பஸ் டிரைவர் மற்றும் நடத்துநருக்கு மறுநாள் காலையில் பதநீர் வாங்கி கொடுத்து ரசிகர்கள் நன்றி செலுத்துவது வழக்கம். ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் ஊர்கள்தோறும் உள்ள பஸ்நிறுத்தம் உள்ள பயணிகள் காத்திருக்கும் அறையின் சுவர்களில் போஸ்டர் ஒட்டுவார்கள். அதில் வெறும் எழுத்துக்களும் அப்படத்தின் கதாநாயகன் போட்டோ மட்டுமே பிரிண்ட் இருக்கும். வண்ண சுவரொட்டி மெஞ்ஞானபுரம் போன்ற பெரிய கடைவீதி உள்ள ஊர்களில் சென்று பார்ப்பது தனி ஆவலாக இருக்கும். இந்த தியேட்டர் அய்யனார், மாயா என பெயர்கள் மாறி தற்போது வணிக வளாகமாக காட்சி அளிக்கிறது. திருச்செந்தூர், சாத்தான்குளம், ஆறுமுகநேரி போன்ற ஊர்களுக்கு இரவு காட்சிக்கு 20 வயதுக்கு மேற்பட்ட அண்ணன்மார்கள் சென்று படம் பார்த்து வருவதை பெரிய சாதனையாக பேசிக் கொள்வார்கள். கடைசியாக உடன்குடி தியேட்டரில் கரகாட்டக்காரன் உள்பட 3 படங்கள் ஒரேநேரத்தில் ரிலீஸ் செய்யப்பட்டு திருவிழாக் கூட்டம்போல மக்கள் திரண்டது ஞாபகம். அப்போது டெண்ட் கொட்டகை திரையரங்குகள் வீரபாண்டியன்பட்டணம், கொட்டங்காடு உள்ளிட்ட பல ஊர்களில் செயல்பட்டன. குறிப்பாக இந்த கிராமங்களில் டெண்ட் கொட்டகை அமைக்கும் பணியை ஊரே உற்சாகத்தில் திரண்டு வந்து பார்க்கும். நாளடைவில் கிராமங்களில் இவையெல்லாம் இடிக்கப்பட்டுவிட்டன. இதனிடையே கிராமங்களில் விசேஷ நாட்களில் 16 mm திரையில் கருப்பு வெள்ளை படங்கள் திரையிடுவார்கள்( இதுபற்றி முதல் கட்டுரையில் கடந்த மாதம் விரிவாக எழுதி உள்ளேன்) பக்கத்து கிராமங்களில் இன்று இரவு படம் போடுவதாக நியூஸ் காட்டுத்தீயாக பரவும். ஆண்களும் பெண்களும் குழந்தை குட்டிகளுடன் படையெடுத்துச் செல்வார்கள். குறிப்பாக செம்மறிக்குளம் என்ற ஊரில் அப்போது ரிலீசாகி ஒருமாதமே ஆன புதிய திரைப்படங்கள் திரையிடுவார்கள். இக்காலக்கட்டத்தில் எம்ஜிஆர், சிவாஜி கலர் படங்களை கலரிலேயே இந்த ஊரில் கண்டுகளிப்புறும் வாய்ப்பு கிடைத்தது. பின்னர் டிவி, டிவிடி பிளேயர் கொண்டு வந்து நடுத்தெருவிலும் வீட்டுத் திண்ணைகளிலும் ஒரே இரவில் நாலைந்து சினிமா காட்டினர். இதற்காக பெண்களும் ஆண்களும் ஐந்தோ பத்தோ பணம் வசூலித்து 150 அல்லது 200 ரூபாய் கொடுத்து விரும்பிய சினிமா படம் பார்த்து மகிழ்ந்தனர். விடிய விடிய 4 சினிமா பார்த்துட்டு மறுநாள் பள்ளி வகுப்பறையில் தூங்கி தூங்கி விழுந்து வாத்தியாரிடம் அசடு வழிந்ததும் உண்டு. விடுமுறை காலங்களில் சினிமா துண்டு பிலிம்களை வைத்து முகம் பார்க்கும் கண்ணாடி மூலம் சூரிய ஒளி பாய்ச்சி வீட்டுக்குள் சிறுவர்கள் சினிமா படம் காட்டி விளையாடியதையும் மறக்க முடியுமா? இதே போல சர்ச்சிலும் சிலைடுகள் மூலம் பைபிள் கதை திரையிடுவார்கள். காலங்கள் உருண்டோடின. இன்று வீட்டிலேயே புரஜக்டர் வைத்து படம் பார்க்கும் வசதி வந்துவிட்டது.என்ன நண்பர்களே கொரோனா துக்கத்தில் இருக்கிற இந்த நேரத்துல இப்படி சினிமா பைத்தியமான ஆட்டோகிராப் கட்டுரையா? என கேட்க தோன்றும். இன்று மார்ச் 27 உலக திரையரங்க தினமாச்சே...3 நாள் கவலை தோய்ந்த கொரோனா செய்திகளிலிருந்து விடுபட நினைத்து இந்த நினைவுகளில் மூழ்கினேன். நம்ம வாழ்க்கையும் சினிமா போலத்தான் போய்கிட்டிருக்கு....இப்போ கொரோனா படம் ஓடிகிட்டிருக்கு...முடிவில் சுபமா? அல்லது ரீல் பாதியிலேயே அறுந்துடுமா?..????..?? ... Thanks...

orodizli
28th March 2020, 08:45 PM
22 .03.2020
M.Shajahan Bsc.,

சதிலீலாவதி : 28-03-1936

இன்று என் பிறந்தநாள்...!


சதிலீலாவதி பிறந்த
மார்ச் 28 ல் தான்
நானும் பிறந்தேன்...!
வருடம் தான் வேறு(28.03.1960)

நமது சின்னவரின் முதல் திரைப்படம் "சதிலீலாவதி "...!

இப்படத்தில் நடிக்க முதலாளி எம்.கந்தசாமி முதலியார் அவர்கள் தான் எம்.ஜி.ஆரை சிபாரிசு செய்து இன்ஸ்பெக்டர் வேடத்தில் நடிக்க வைத்தார்...!

இவரது மகன் தான் நடிகர் எம்.கே.ராதா; சதிலீலவதியின் கதாநாயகன்...!

இந்த படம் எம்.கே.ராதா..., என்.எஸ்.கிருஷ்ணன்...,
டி.எஸ். பாலையா, கே.ஏ.தங்கவேலு, சகஸ்ரநாமம்...,
ஆகியோருக்கும் கூட முதல் படம்...!

சதிலீலாவதி : 28-03-1936

தயாரிப்பு : - மனோரமா ஃபிலிம்ஸ்
கதாபாத்திரம் : - ஆய்வாளர் ரெங்கையா நாயுடு ( சிறு வேடம்)
இயக்குனர் : - எல்லீஸ் R. டங்கன்
கதை : -
எஸ்.எஸ் வாசன்
இசை : -
சுந்தர் வாத்தியார்
கதாநாயகன் : - M.K.ராதா
கதாநாயகி. : - M.R.ஞானம்மாள்
வெளியான தியதி :-
28 -03-1936

இதே மார்ச் 28
எனக்கும் பிறந்நாள் என்பதில் பெருமை கொள்கிறேன்...!

ஆனந்த விகடன் இதழில் சுப்பிரமணியம் சீனிவாசன் புதினத்தை தழுவி எடுக்கப்பட்ட படமாகும்...!

1935ஆம் ஆண்டு படப்பிடிப்பு முடிந்திருந்தாலும், வழக்கின் காரணமாக இந்தத் திரைப்படத்தின் வெளியீடு தாமதமானது...!

பின்னர்...,
28 மார்ச் 1936 ஆம் தேதி படம் வெளியானது...!

கதைச்சுருக்கம்:-

சென்னையில் செல்வந்தர் கிருஷ்ணமூர்த்தி தன் மனைவி லீலாவதி மற்றும் மகள் லட்சுமியுடன் வாழ்ந்து வருகிறார்...!

தன் நண்பன் ராமநாதன் மூலமாக மது மற்றும் சூதாட்டத்திற்கு அறிமுகம் கிடைக்கிறது...!

பின்னர் மோகனாங்கி என்ற பெண் வசம் ஆசை கொள்வதால் அவளுக்கு ரூபாய் 50000 தருவதாக வாக்கு கொடுக்கிறார் கிருஷ்ணமூர்த்தி..!

கிருஷ்ணமூர்த்தியின் நண்பன் பரசுராமன் அவரை நல்வழிப்படுத்த முயற்சி செய்கிறார்...!

அந்த ஆடம்பரமான வாழ்க்கைக்காக கிருஷ்ணமூர்த்தி வாங்கிய கடனை கட்ட இயலாததால் மேலும் குடிப் பழக்கத்திற்கு அடிமையாகிறார்..!

அதன் பின்விளைவாக தன் மனைவி லீலாவதியை சந்தேகிக்கிறார்...!

பின்னர் ஒரு சமயம் குடிபோதையில் கிருஷ்ணமூர்த்தி இருக்கும்பொழுதுதன் நண்பன் பரசுராமனை தான்தான் கொன்று விட்டதாக தவறாக நினைத்து...,

மனைவி மற்றும் மகளை கோவிந்தனிடம் விட்டுவிட்டு ஸ்ரீலங்காவிற்கு தப்பிச் சென்று...,

ஒரு தேயிலை தோட்டத்தில் வேலை செய்கிறார் கிருஷ்ணமூர்த்தி..!

லீலாவதி மற்றும் லட்சுமி இருவரும் வறுமையில் வாடுகிறார்கள்...!


தலைவரின் முதல் படமான " சதிலீலாவதி" வெளியான அந்த பொன்னான நாளை குறிக்கும் ( 28-03-36 ) குறிக்கும் ஒரு ரூபாய் நோட்டு...,

மிக்க மகிழ்ச்சியுடன் உங்கள் பார்வைக்கு...!

இதில்
சின்னவர் இன்பெக்டராக நடித்திருப்பார்...!

பின்னொரு நாளில்
இப்படத்தை
இயக்கிய டங்கன்
அவர்கள்...,
காட்சிப்படுத்திய
வீடியோ தொகுப்பை
பதிவிடுகிறேன்...!

இன்னும் சந்திப்போம்...!......... Thanks.........

fidowag
28th March 2020, 08:47 PM
துக்ளக் வார இதழ் -11/03/2020
--------------------------------------------------

மக்கள் திலகம் எம்.ஜி.ஆருடன் ஒரு படத்தில் பணிபுரிந்தால் பத்துப்படத்தின் அனுபவம் கிடைக்கும் . -1973ல் பொண்ணுக்கு தங்க மனசு படத்தில் பாடலாசிரியர் ஆக உருவெடுத்தவர் கவிஞர் திரு.முத்துலிங்கம் , பின்னாளில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் மனம் கவர்ந்த பாடலாசிரியர் ஆனார் . கவிஞர் முத்துலிங்கம்* கலைமாமணி மற்றும் பல விருதுகள், பட்டங்களை பெற்றுள்ளார். அவரை துக்ளக் வாசகர்கள் துக்ளக் பத்திரிகை அலுவலகத்தில் கண்ட பேட்டி விவரம் ;


கே.எஸ். ராமன் : ஆரம்பத்தில் முரசொலியில் பணிபுரிந்த நீங்கள் , அங்கிருந்து* எப்படி எம்.ஜி.ஆர். பக்கம் வந்தீர்கள் ?
முத்துலிங்கம் : இதில் வியப்பதற்கு ஒன்றுமில்லை .* 1966ல் நான் முரசொலியில் துணை ஆசிரியராக இணைந்தேன்.* 1972ல்* எம்.ஜி.ஆர். கட்சியிலிருந்து நீக்கப்பட்டதும் அவருடன் சென்றுவிட்டேன் .* பிறகு அலைஓசை பத்திரிகையில் வேலை பார்த்தேன்.* அவர்களும் பின்னாளில் எம்.ஜி.ஆரை விமர்சிக்கத் துவங்கியதும் அங்கிருந்தும் வெளியேறினேன் .* எனவே, நான் ஆரம்பம் முதலே எம்.ஜி.ஆர். பக்கம் தான் இருந்தேன் .* எம்.ஜி.ஆர். கட்சி துவங்கியதும் அ/ தி.மு.க.வின் நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியலில் முக்கிய இடம் பிடித்தேன் .* இன்றுவரை அ.தி.மு.க. வில் ஒரு நட்ச்சத்திர பேச்சாளராகவே தொடர்ந்து இருந்து வருகிறேன் .**


எஸ்.டி.வரதராஜன் :* எம்.ஜி.ஆர். படத்திற்கு பாடல் எழுதும் வாய்ப்பு எப்படி தேடி வந்தது ?
முத்துலிங்கம் : நான் முரசொலியை விட்டு விலகியதும் அலை ஓசை பத்திரிகையில் பணியாற்றிக் கொண்டிருந்தேன் .* அந்த பத்திரிகை எம்.ஜி.ஆரை விமர்சனம் செய்ய ஆரம்பித்ததால் , நான் அங்கிருந்தும் வெளியேறினேன் .* எனவே, எம்.ஜி.ஆரை சந்தித்து வாய்ப்பு கேட்கலாம் என்று அவருடைய அலுவலகத்திற்கு சென்றேன் .* இண்டர்காமில் என்னுடன் பேசிய எம்.ஜி.ஆர். நான் விஷயத்தை சொல்லும் முன்பாகவே, வேலையை விட்டுடீங்க .போலிருக்கு .* பணம் கொடுக்க சொல்கிறேன் .* வாங்கிட்டு போங்க என்றார் .* நான் எனக்கு பணம் வேண்டாம் .* பாட்டெழுத்தும் வாய்ப்பு கொடுங்கள் என்றேன்.* அதைக் கொடுக்கும்போது கொடுக்கிறேன் .* இப்போது பணத்தை வாங்கிக்கங்க என்றார் அவர். ,* நான் திரும்பவும் எனக்கு பணம் வேண்டாம் , வேலை கொடுங்கள்* என்றேன்* *அவர் கோபமாய் போனை வைத்துவிட்டார் .* ஆனாலும் என்னை நினைவில் வைத்திருந்து அவராகவே "நினைத்ததை முடிப்பவன் " என்ற படத்திற்காக அழைத்தார் .* ஆனால் அந்த நேரம் எனக்கு அம்மை போட்டிருந்ததால் நான் ஊருக்கு சென்று விட்டேன் . பின்னர் நான் எம்.ஜி.ஆருக்கு எழுதிய முதல் பாடல் "உழைக்கும் கரங்கள் " படத்தில் கந்தனுக்கு மாலையிட்டால் என்ற துவங்கும் பாடல்.


நான் அவரிடம் பணம் வாங்கி கொள்ள மறுத்தது 1974ம் வருடம் .* ஆனால் , அவர் முதலமைச்சராகி பல்வேறு பணிகளுக்கு இடையே, இருந்தபோது கூட இதை நினைவில் வைத்து* 1981ல் எனக்கு பாவேந்தர் பாரதிதாசன் விருது வழங்கியபோது , முத்துலிங்கத்திற்கு நானாக* வலிய சென்று உதவ முற்பட்டபோதும் கூட, அவர் எனக்கு பணம் வேண்டாம்.* வேலை கொடுங்கள் என்று கேட்டதை என்னால் மறக்க முடியாது .* பாவேந்தர்* பாரதிதாசன்* தன்* காலைக்கூட குனிந்து பார்க்க தயங்கும் சுயமரியாதைக்காரர் .* அப்படிப்பட்டவரின் பெயரிலான விருதை நான் முத்துலிங்கத்துக்கு தராமல் வேறு யாருக்கு தரப் போகிறேன்* என்று பேசினார் .* அவர் இதயத்தில் இடம் பிடித்திருந்ததை நினைத்து நான் மிகவும் மகிழ்ந்து போனேன் .*


ஆர். ரெங்கசாயி : பாடல்கள் விஷயத்தில் எம்.ஜி.ஆரை திருப்திப்படுத்துவது கடினம் என்று கேள்விப்பட்டிருக்கிறேன் .* அது எந்தளவிற்கு உண்மை ?

முத்துலிங்கம் : நூறு சதவிகிதம் உண்மை .* எம்.ஜி.ஆர். படத்துக்கு பாடல் எழுதுவது என்றால் மூன்று, நான்கு பல்லவிகள் , சரணங்கள் எழுத வேண்டும் .* அதில் ஏதேனும் ஒன்றை எம்.ஜி.ஆர். தேர்வு செய்வார் .* வரிகளில், வார்த்தைகளில் நிறைய மாற்றங்கள் சொல்லுவார் .* எம்.ஜி.ஆரிடம் ஒரு படத்தில் பணிபுரிந்தால், பிறரிடம் பத்து படங்களில் பணியாற்றிய அனுபவம்* நமக்கு கிடைத்துவிடும் .**


எஸ். பாஸ்கரன் :* ஒரு பாடலாசிரியருக்கு* எங்கிருந்து வார்த்தைகள் கிடைக்கும்?

முத்துலிங்கம் : காதுகள் திறந்திருந்தால் எங்கிருந்து வேண்டுமானாலும் கிடைக்கும்.* *ஊருக்கு உழைப்பவன் என்ற படத்தில்* எம்.ஜி.ஆருக்கு உண்மையிலேயே ஒரு மனைவியும் , குழந்தையும் இருக்கும்போது , அவர் இன்னொரு பெண்ணுக்கு கணவனாக வும் , அவளது குழந்தைக்கு தந்தையாகவும் நடித்துக் கொண்டிருப்பார் .* அந்த நிலையில், தனது நிஜமான குழந்தை இறந்து* போய்விட, அதை அடக்கம்* செய்துவிட்டு* தான் தந்தையாக நடிக்கின்ற வீட்டுக்கு போகும்போது அங்கே உள்ள குழந்தைக்கு பிறந்தநாள் கொண்டாட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் .* அப்போது எம்.ஜி.ஆர். பாடவேண்டும் . அவர் தனது நிஜ குழந்தை இறந்ததை நினைத்து அழுவதா அல்லது இந்த குழந்தையின் சந்தோஷத்தை நினைத்து சிரிப்பதா என்ற தடு மாற்றமான காட்சியில் பாட வேண்டிய பாடலை நான் எழுதினேன் . பல்லவியை உடனே எழுதி கொடுத்துவிட்டேன் .* அடுத்த பல்லவியை* உடனே எழுத முடியவில்லை .* நான்* எழுந்து நார்த் போக் சாலையில் சுருட்டு பிடித்தபடி நடக்க ஆரம்பித்தேன்
.

நான் இதுவரை 1994 பாடல்களை எழுதியிருக்கிறேன் .* சுமார் 200,300பாடல்களுக்கு மட்டும் சுருட்டு புகைத்தபடியே , அங்குமிங்கும் நடந்துதான் பாடல் எழுதி கொடுத்திருக்கிறேன் .* இந்த பாடலுக்காக வும் அப்படி நடந்தபோது , வழியில் ஒரு கார் என்னை உரசியபடி வந்து நின்றது .* உள்ளே பார்த்தல் நடிகர் இசரிவேலனும், வில்லன் கண்ணனும் இருந்தார்கள் .* அவர்கள் என்னை பார்த்து, இந்த வாரம் எம்.ஜி.ஆர். பிள்ளைத்தமிழ்* அருமையாக இருந்தது . சற்றுமுன்பு கூட* தலைவரிடம் முத்துசாமி அதை சிலாகித்து கூறிக்கொண்டிருந்தார் என்று சொன்னார்கள் .* உடனே எனக்கு பொறி தட்டியது . அவர்களை அனுப்பிவிட்டு நேரே எம்.எஸ். வி. முன்பாக பொய் அரமந்தேன். பிள்ளைத்தமிழ் பாடுகிறேன் ஒரு பிள்ளைக்காக பாடுகிறேன் .* என்று ஆரம்பித்து கிடுகிடுவென்று பாடலை* எழுதி முடித்தேன்.* ஆனாலும் , எம்.ஜி.ஆர் . திருப்தியடைய**மாட்டார் என்பதற்காக, மூன்றாவது* ஒரு பல்லவியும், சரணமும் எழுதி எம்.ஜி.ஆரிடம் மூன்றையும் காட்டினேன் .* அவர் ஓ.கே. செய்த பாடல்தான் பிள்ளைத்தமிழ் பாடுகிறேன் என்று ஹிட்டான பாடல் .*

*

ஆர். சுந்தரராமன் : எம்.ஜி.ஆருடைய* தேர்தல் பிரச்சாரத்திற்கு , உங்கள்பாடல்கள்தான் உபயோகமாக இருந்தது* என்பது உங்களுக்கு பெருமை தரும் விஷயம்தானே :?

முத்துலிங்கம் : 1977ம் ஆண்டு வெளியான , இன்று போல் என்றும் வாழ்க என்ற படத்திற்காக, நான் எழுதிய இரண்டு பாடல்களும் தேர்தல் நேரத்தில் எம்.ஜி.ஆருக்கான பிரசார பாடல்கலாக அமைந்தன . அந்த படத்தில் முதல் பாடலுக்கான பல்லவியை எம்.ஜி.ஆர். ஓ.கே. செய்து விட்டதால், மறுநாள் காலை 9 மணிக்கு ரெக்கார்டிங் கிற்கு ஏற்பாடு செய்து, கே.ஜெ. ஜேசுதாஸ் உட்பட எல்லோரும் வந்துவிட்டார்கள் .* நான் இரவோடு இரவாகச் சரணங்களை எழுதிக் கொண்டு பொய் அதிகாலை எம்.ஜி.ஆரிடம் காட்டினேன். ஆனால் எம்.ஜிஆர். சரணங்கள் திருப்தியாக இல்லை என்று கூறிவிட்டார் .* அதனால் ரெக்கார்டிங் திட்டமிட்டபடி தொடங்கவில்லை . ரெக்கார்டிங் தியேட்டரில் ஏ.சி.ரூமில் அமர்ந்து கொண்டு என்னால் சரியாக யோசிக்க முடியவில்லை .* எனவே, வெளியே வந்து சுருட்டு புகைத்தபடி , அங்கிருந்த சவுக்கு மரங்களை ஒவ்வொன்றாக பிடித்தபடி நடந்து கொண்டே யோசித்துக் கொண்டிருந்தேன் .* அதை பார்த்த தயாரிப்பாளர் லட்சுமணன் செட்டியார், இந்த முத்துலிங்கம் என்ன இந்த மரத்தைப் பிடிக்கிறான் .* அந்த மரத்தைப் பிடிக்கிறான் . ஆனால் ஒரு சரணத்தைப் பிடிக்க மாட்டேங்கிறானே என்று கமெண்ட் செய்ய ,அது என் காதில் விழுந்தது . உடனே, கோபமடைந்த நான், எம்.எஸ். வியிடம் சென்று ஒழுங்காக சரணம் பிடிக்கிறவனை வச்சுப் பாட்டு எழுதிக்கோங்க என்று கோபப்பட்டு வெளியேற முற்பட்டேன் .**


எம்.எஸ். வி.யம், இயக்குனர் சங்கரும் என்னை தடுத்து நிறுத்தி , சினிமா துறையில் இதெல்லாம் மிகவும் சகஜம் .* நாங்களெல்லாம் இதை விட பெரிய அவமானங்களை* சந்தித்து விட்டு வந்திருக்கிறோம். என்று கூறி என்னை சமாதானப்படுத்தினர்.* அதன் பிறகு ஒரு வழியாக சரணங்களை எழுதி, எம்.ஜி.ஆரிடம் ஒப்புதல் வாங்கி இரவு 9 மணிக்கு அந்த பாடலின் ரெக்கார்டிங் நடைபெற்றது.* அந்த பாடல்தான் , அன்புக்கு நான் அடிமை , தமிழ் பண்புக்கு நான் அடிமை என்ற ஹிட்டான பாடல் .* அந்த படத்தில் இடம் பெற்றஇன்னொரு பாடல் , இது நாட்டைக் காக்கும் கை, உன் வீட்டை காக்கும் கை , இந்த கை நாட்டின் நம்பிக்கை என்ற பாடல்.* இந்த இரண்டு பாடல்கள்தான் அ .தி.மு.க. வின் பிரசார பாடல்களாக வீதிகளெங்கும் ஒலித்தன .* எம்.ஜி.ஆர். வெற்றி பெற்றதும் ,* அமெரிக்காவில் இருந்து வெளியாகும் வாஷிங்டன் போஸ்ட்* பத்திரிகையில், அந்த இரண்டு பாடல்களையும் குறிப்பிட்டு , இப்படி சினிமாப்பாடல்கள் மூலமாக பிரசாரம் செய்து* இந்தியாவில் ஒரு நடிகர் ஆட்சியை பிடித்திருக்கிறார்* என்று செய்தி வெளியிட்டிருந்தார்கள் .* அது எனக்கு பெருமையாக இருந்தது உண்மைதான் .*


ஆனால், இப்படி நாம் சந்தோஷப்படலாமே தவிர இதுதான் உண்மை என்று நம்பிவிடக் கூடாது .* ஏனென்றால், வெறும் பாடல்களால் மட்டுமே, மக்கள் ஈர்க்கப்பட்டு எம்.ஜி.ஆருக்கு வாக்களித்து விடவில்லை .* ஆரம்ப காலத்தில் இருந்தே அவர் செய்து வந்த சேவைகள், மக்கள் மீது காட்டிய அக்கறை ,அவர் செய்த தான தருமங்கள், ஆகியவை காரணமாக குழந்தைகளும், தாய்மார்களும் அவர்* மீ து மிகுந்த மரியாதையையும்* பாசத்தையும் பொழிந்தனர் .* அதன் காரணமாகத்தான் அவர் வெற்றி பெற்றாரே தவிர , வெறும் சினிமா காட்சிகளும், பாடல்களும் அவரை முதல்வராகி விடவில்லை .* *இன்று பல நடிகர்கள் , தங்களின் சினிமா பிரபலத்தை வைத்து அரசியலுக்கு வந்து முதல்வராகி விடலாம் என்று பகல் கனவு காண்கிறார்கள்.* அது எல்லோருக்கும் வசப்பட்டு விடாது .எம்.ஜி.ஆருக்கு நிகர் எம்.ஜி.ஆர்.தான் .

fidowag
28th March 2020, 09:09 PM
அந்தி மழை மாத இதழ் _மார்ச் 2020
------------------------------------------------------
தமிழக சினிமா மற்றும் அரசியலில் எம்.ஜி.ஆர். - ஒரு அலசல்*
------------------------------------------------------------------------------------------------


காங்கிரசில் இருந்துவிட்டு 1953ல் தி. மு.க. வில் இணைந்த எம்.ஜி.ஆர். 1962ல் எம்.எல்.சி.ஆனார் .* 1967 தேர்தலில் அரசியலில் பங்கேற்று , எம்.எல்.ஏ ஆகி கட்சியின் பொருளாளராக பதவி உயர்வு பெற்று பின் கட்சியின் தலைமையோடு மனக்கசப்பில் புதிய கட்சி தொடங்கினார் .**


ஆக்டொபர் 1972ல் கட்சி ஆரம்பித்த எம்.ஜி.ஆர். ஜூன் 1977ல் முதல்வராகிறார் .இதே கால கட்டத்தில் , அவர் நடித்த 17 படங்கள் வெளியாகி, எம்.ஜி.ஆரின் பிம்பத்தை மக்கள் மனதில் திரும்ப திரும்ப ஞாபகப்படுத்தின .புதிய கட்சி ஆரம்பித்த 1972ம் ஆண்டில் , சங்கே முழங்கு, நல்ல நேரம், ராமன் தேடிய சீதை, நான் ஏன் பிறந்தேன்,அன்னமிட்டகை , இதய வீணை என்று ஆறு படங்கள் வெளியாகின .* அது தற்செயலா அல்லது உச்சத்தில் இருக்கும்போது கட்சி ஆரம்பிக்க வேண்டுமென்ற* திட்டமிடலா என்ற கேள்விக்கு விடையில்லை .ஆனால் 1973ல் எம்.ஜி.ஆரின் இரண்டு படங்கள் மட்டும் வெளியாகின .* எம்.ஜி.ஆரின் ரசிகர் மன்றங்கள் திறம்பட இயங்கின .* ஒரு கட்சியின் கிளைகள் போன்று செயல்பட்ட மன்றங்களுக்கு போதுமான நேரத்தை செலவழித்துதான் கட்சியின் பொறுப்புகளைத் தாண்டி தென்னிந்திய நடிகர் சங்கத்தின் இருமுறை (1957-59,1961-63) பதவி வகித்துள்ளார் .* அவர் தயாரித்த மூன்று படங்களான நாடோடி மன்னன், அடிமை பெண், உலகம் சுற்றும் வாலிபன் ஆகியவை மூன்று மிக பெரிய கமர்ஷியல் வெற்றி படங்கள் .* தமிழ் சினிமாவில் இருந்து அரசியலுக்கு வந்தவர்களில் தகுதியின் அடிப்படையில் முதலிடம் எம்.ஜி.ஆருக்குத் தான் .மக்களின் நாடி துடிப்பு, பற்றிய புரிதலும், கட்சியை நடத்தும் திறனும் அவருக்கிருந்தாலும், எம்.ஜி.ஆர். 1953-1977ஆண்டுகளுக்கு மத்தியில் சுமார் 42,000 மணி நேரங்கள் அரசியலுக்காக செலவழித்திருக்க கூடும்* என்பதையும் மறந்துவிட முடியாது .அவருடைய சினிமா* மற்றும் அரசியல் சாதனைகள், வெற்றிகள், ஒரு வரலாறு, சகாப்தம் . வேறு எவராலும் இனி சாதிக்க முடியுமா என்பது மிக பெரிய கேள்விக்குறி .

fidowag
29th March 2020, 06:26 PM
கடந்த*20/02/20* வியாழனன்று*மாலை 5 மணியளவில் , சென்னை*ராஜா அண்ணாமலை மன்றத்தில் வேல்ஸ்*பல்கலை*கழக*வேந்தர்*திரு.ஐசரி*கணேஷ்*தலைமையில ் , பிரபல*திரைப்பட*இயக்குனர் எஸ். பி. முத்துராமன் சிறப்புரையில் , பிரபல*இசை அமைப்பாளர் லஷ்மண் சுருதி* இன்னிசையில்* ஒளி - ஒலி* *காட்சிகளுடன் , கவிஞர் காவிரி*மைந்தன் அவர்களின்*நூல் *20-20-20 (மணியளவில் ) பொற்கால*பாடல்களின் பூக்கோலங்கள்* வெளியீட்டு*விழா , பார்வையாளர்களின் இலவச*அனுமதியுடன் அரங்கம்* நிறைந்த*காட்சியாக*நடைபெற்றது .**


மறைந்த*பிரபல*திரைப்பட*பாடலாசிரியர்களின்* வாரிசுகள் பிரம்மாண்டமாக*ஒரேமேடையில் பங்கேற்று நிகழ்ச்சியை*சிறப்பித்தனர் .


பிரான்ஸ்*எம்.ஜி.ஆர். பேரவை, மற்றும் புதுவை*எம்.ஜி.ஆர். பேரவை தலைவர் திரு.முருகு*பத்மநாபன்* சிறப்பு*விருந்தினராக கலந்து கொண்டார்.* மேலும் சிலர்*வெளிநாட்டில் இருந்து வந்து சிறப்பு*விருந்தினர்களாக கலந்து கொண்டனர்*.


நிகழ்ச்சியில் பேசும்போது*கவிஞர் திரு.காவிரி*மைந்தன் இந்த நூல் வெளியீட்டு*விழா சிறப்பாக நடைபெற ஒத்துழைப்பு ,ஆதரவு மற்றும் உதவிகள்*செய்த*திரு. சைலேஷ்*பாசு*அவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டார் .* நிகழ்ச்சியில் கவிஞர்களின் வாரிசுகளுக்கு**மேடையில்*பொன்னாடை அணிவிக்கப்பட்டு , நினைவு பரிசுகள்*வழங்கப்பட்டன . கவிஞர்களின் வாரிசுகளும் தங்களது*பெற்றோர்களின் சினிமா*தொடர்பு, பாடல் களின்*பெருமை குறித்து*பேசுவதற்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது .,*


நிகழ்ச்சி தொகுப்பாளர்* ஒவ்வொரு பாடலுக்கும்* திரைப்படத்தில்*இடம் பெற்ற சூழல், சில*பாடல் வரிகள், பாடலாசிரியரின் பெயர் , போன்ற விளக்கத்துடன்*மிக அழகாக தொகுத்து வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது . அதற்கு*தகுந்தாற்*போல பழைய பாடல்களுக்கு பிரபல*இசை அமைப்பாளர் லஷ்மண் சுருதி*மிகுந்த சிரத்தையுடன் கம்போஸ் செய்து பாடல்களை*இனிமையாக வழங்கினார் . சுமார்*3 மணி நேரம் மறைந்த*பிரபல*தமிழ் பின்னணி பாடகர்*திரு.டி.எம்.எஸ். அவர்களின்*புதல்வர்*திரு.டி.எம்.எஸ்.செல்வகுமார ் பாடல்களை*பாடி ரசிகர்களை மகிழ்வித்தார் .


மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். பாடல்கள்*நிகழ்ச்சியில் பெரும்பான்மை பங்கு பெற்றிருந்தது .* தொகுப்பாளர்* மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். பாடல் பற்றி விளக்கம் தரும்போதும், புரட்சி தலைவர் பெயரை*மேடையில்*யார் உச்சரித்தாலும்,*ரசிகர்கள் / பக்தர்கள்*கரகோஷம் அரங்கம் அதிரும் வகையில் இருந்தது .கவிஞர் காவிரி*மைந்தன் , இயக்குனர் எஸ். பி. முத்துராமன், திரு.முருகு*பத்மநாபன் ஆகியோர்*பேச்சுகள்*, புரட்சி தலைவர் எம்.ஜி.ஆருக்கு*புகழாரம்*சூட்டும் வகையில் இருந்தது*என்பது குறிப்பிடத்தக்கது . மொத்தத்தில்*ஒரு அருமையான நிகழ்ச்சியை*கண்டுகளித்த திருப்தி ரசிகர்களுக்கு ஏற்பட்டது*என்று கூறினால் மிகையாகாது .

இன்னிசை நிகழ்ச்சியின் போது இசைக்கப்பட்ட பாடல்களின் விவரம் பின்வருமாறு பட்டியல் இடப்பட்டுள்ளது*

படம்* * பாடல்* * * * * * * * * * * *ஆசிரியர்
1.குலேபகாவலி* * - மயக்கும்* மாலை பொழுதே* - தஞ்சை*ராமையாதாஸ்*

2. சபாஷ்*மீனா* * *- சித்திரம் பேசுதடி*-* * * * * * * * * -கு.மா. பாலசுப்ரமணியம்*

3. அரச கட்டளை* *- ஆடி வா , ஆடி வா* * * * * * * *- முத்து கூத்தன்*

4.சிரித்து*வாழ வேண்டும்* -மேரா நாம் அப்துல்ரஹ்மான் -புலமைப்பித்தன்*

5.கலங்கரை விளக்கம்* *- சங்கே*முழங்கு* * * * * * * * - பாரதிதாசன்*

6.குடியிருந்த கோயில்* * -குங்கும*பொட்டின்*மங்கலம் -ரோஷனாரா* பேகம்*

7.அடிமைப்பெண்* * * * * *-தாயில்லாமல் நானில்லை* - ஆலங்குடி*சோமு*

8.வஞ்சி கோட்டை*வாலிபன் -கண்ணும்*கண்ணும்*கலந்து*-கொத்தமங்கலம் சுப்பு*

9.நினைத்ததை முடிப்பவன்* -கண்ணை*நம்பாதே* -* * * * * * *மருதகாசி*

10.உத்தம*புத்திரன்* * * - முல்லை மலர் மேலே* * * * * -* * * * *மருதகாசி*

11.நீதிக்கு*தலைவணங்கு* - கனவுகளே, ஆயிரம்* கனவுகளே /நா. காமராசன்*

12.தை பிறந்தால்*வழி பிறக்கும்*-அமுதும்*தேனும்*எதற்கு*-* சுரதா*


*13.நான் பெற்ற செல்வம்*-வாழ்ந்தாலும்* ஏசும்* * * * * - கா. மு. ஷெரீப்*

14.மிஸ்ஸியம்மா - பிருந்தாவனமும் நந்தகுமாரனும் -தஞ்சை ராமையாதாஸ்*

15.உயிருள்ளவரை உஷா* *- வைகை*கரை*காற்றே நில்லு*- டி.ராஜேந்தர்*

16.குடியிருந்த கோயில் - ஆடலுடன் பாடலை*கேட்டு -ஆலங்குடி*சோமு*

17.புதிய பூமி* * * * * * * * *-நான் உங்கள் வீட்டு*பிள்ளை -பூவை செங்குட்டுவன்*

18.பொன்னகரம்* -வாழுகின்ற மக்களுக்கு*வாழ்ந்தவர்கள்* பாடமடி**-காமகோடியான்*


19.கொஞ்சும் சலங்கை*- சிங்கார வேலனே*தேவா*- கு.மா.பாலசுப்ரமணியம்*

20.இதயவீணை* * * * -பொன்னந்தி* மாலை பொழுது* - புலமை பித்தன்*

21. உதயகீதம்* * * * * - பாடு நிலாவே*தேன் கவிதை*-மு. மேத்தா*

22.நீதிக்கு*தலை வணங்கு* - இந்த பச்சைக்கிளிக்கு* - புலமை பித்தன்*

23.ஆடிப்பெருக்கு -* தனிமையிலே*இனிமை காண முடியுமா*-கே.டி.சந்தானம்*

24.அரசிளங்குமரி* - சின்னப்பயலே, சின்னப்பயலே -ப.கோ.கல்யாணசுந்தரம்*

25.தங்கமலை*ரகசியம் - அமுதை*பொழியும்*நிலவே*-கு.மா. பாலசுப்ரமணியம்*

26. விவசாயி* * * * * * * * *-கடவுள்*எனும்*முதலாளி* * * * * *மருதகாசி**

27. ராஜாதிராஜா* * * -மீனம்மா , மீனம்மா* * * * * * * * *-* * *பிறைசூடன்*

28.மீனவ*நண்பன்* * - தங்கத்தில் முகமெடுத்து* * *- முத்துலிங்கம்*

29.உலகம் சுற்றும் வாலிபன் - நமது வெற்றியை*நாளை* சரித்திரம்* *-* *வேதா*

fidowag
29th March 2020, 06:58 PM
தினமலர் - மறக்க முடியுமா*?* - அன்பே வா*
----------------------------------------------------------------------
வெளியான நாள் : 14/01/1966
நடிப்பு : மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். பி.சரோஜாதேவி, அசோகன், நாகேஷ், மாதவி,** * * * * * * *டி.ஆர். ராமச்சந்திரன், ராமராவ்* மனோரமா மற்றும் பலர்*

வசனம் : ஆரூர் தாஸ்* * * * * * *இசை : மெல்லிசை மன்னர் எம்.எஸ். விஸ்வநாதன்*
ஒளிப்பதிவு : மாருதிராவ்* * * *இயக்கம் : ஏ.சி.திருலோகச்சந்தர்*
தயாரிப்பு* ஏ.வி.எம்.


இது வழக்கமான எம்.ஜி.ஆர். படமல்ல .* ஈகோவில் துவங்கி , காதலில் முடியும் .அழகான காதல் படம்.* ஏ.வி.எம்.நிறுவனத்தின்* 50 வது படம் . முதல் வண்ண படம் அந்நிறுவன தயாரிப்பில் எம்.ஜி.ஆர். நடித்த ஒரே படம் .* என பல்வேறு சிறப்புகள் உண்டு .**

ராபர்ட் முல்லிகன் இயக்கத்தில் உருவான கம் செப்டம்பர் என்ற ஹாலிவுட் படத்தின் தழுவல்தான் என்றாலும் , தமிழுக்கு ஏற்றவிதத்தில் திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கும் .*

பணம் இருந்தும் ஓய்வுக்காக ஏ ங்கும், எம்.ஜி.ஆர். சிம்லாவில் இருக்கும் தன்*மாளிகைக்கு செல்கிறார்.* அங்கு பணிபுரியும் நாகேஷ் அந்த மாளிகையை சரோஜாதேவி குடும்பம் மற்றும் நண்பர்களுக்கு வாடகைக்கு விட்டிருப்பார்.* நான் யார் என்பதை சொல்லாமல் , அங்கு எம்.ஜி.ஆர். நடத்தும்* நாடகமே கதைக்களம்

*.ஜே,பி.என்கிற பாலுவாக* எம்.ஜி.ஆரும், கீதா கதாபாத்திரத்தில் சரோஜாதேவியும் ரசிக்கும்படியான நடிப்பை வழங்கியிருந்தனர் .* நாகேஷ் மனோரமா கூட்டணி வழக்கம் போல நகைச்சுவையில் வெற்றிக்கொடி நாட்டியது .

ரொமான்டிக் காமெடி வகையை சார்ந்த இப்படம், விமர்சகர்களிடம் மிகுந்த பாராட்டை பெற்றது .* எம்.எஸ். விஸ்வநாதன் இன்னிசையில் , வாலியின் வரிகளில் புதிய வானம், லவ் பேர்ட்ஸ் , நான் பார்த்ததில், ராஜாவின் பார்வை ராணியின் பக்கம் , அன்பே வா,* நாடோடி, வெட்கமில்லை* ஆகிய பாடல்கள் பெரும் வரவேற்பை பெற்றன .* நாடோடி பாடலில் எம்.ஜி.ஆரின் நடனம் புதுமையாகவும் இளைஞர்களை கவரும் விதமாகவும், மிகவும் சுறுசுறுப்பாக ,*நளினமாக , அற்புத நடனம் ஆடியிருந்தார் .* நெல்லூர் காந்தாராவுடன் மோதும் சண்டை காட்சியில் அவரை அலாக்காக தூக்கி போட்டு சண்டை பிரியர்களின் பாராட்டை பெற்றார் எம்.ஜி.ஆர்.*

எம்.மாருதிராவின் ஒளிப்பதிவு ரசிகர்களுக்கு குளிர்ச்சியான அனுபவத்தை* கொடுத்தது எனலாம்.* காதல், மோதல், நடனம், நகைச்சுவை என கொண்டாட்டமான படம் .* *விஜய் நடித்த குஷி போன்ற படங்களின் முன்னோடி அன்பேவா தான் . சிறந்த பொழுது போக்கு சித்திரம் .

fidowag
29th March 2020, 08:22 PM
இனிய உதயம் மாத*இதழ் -மார்ச்*2020

--------------------------------------------------------------

பிம்பங்களின் அரசியல் -எம்.ஜி.ஆர் -பாலமுரளிவர்மன்*
---------------------------------------------------------------------------------------

எம்.ஜி.ஆர். தனது படங்களிலும், பாடல்களிலும் நல்ல* நல்ல கருத்துக்களை பரப்பினார் .* நேர்மையாளராக , ஊழலுக்கும், அநியாயத்துக்கு எதிரானவராக தனது பிம்பத்தைக் கட்டமைத்தார் .* அடித்தட்டு மக்களின் நேர்மறைத் தன்மையை கிளர்ந்தெழ செய்து அவர்களது தன்னம்பிக்கையைத் தூண்டி நிலையான நம்பிக்கையை பெற்று, தமிழகம் எதிர்கொள்ளும் நிலைக்கு விதைநெல்லாக இருந்திருக்கிறார் .அவரது வெற்றிக்கு சொந்த செல்வாக்கும், குணநலன்களே காரணம் . எம்.ஜி.ஆரின் வெற்றிக்கு அவரது உழைப்போடு* தமிழ் மக்களின் எளிய மனமும் அடிப்படையாக இருந்தது .



திரைப்படங்களின் வழியே தி.மு.க ஏற்படுத்திய தாக்கம் அதன் வெற்றிக்கு சமபங்கு வகித்தது போலவே திரைப்படத்தின் வாயிலாகவும், தி.மு.க. வழியேயும் நட்சத்திர குறியீடாக உருவான எம்.ஜி.ஆரின் பிம்பமே தி.மு.க. வை வீழ்த்தவும், எம்.ஜி.ஆரை உயர்த்தவும் செய்திருக்கிறது . காரணம், தமிழ் திரைப்படங்களின் மிக முக்கியமாக சமூகத்தாக்கமென்று குறிப்பிடும்போது, தொலைகாட்சி யுகத்திற்கு முன்பாக* தமிழ் படங்களின் வெற்றி பெண்களாலேயே தீர்மானிக்கப்பட்டிருக்கிறது .* குறிப்பாக நடுத்தர , மற்றும் அடிதட்டுப் பெண்களிடையே ஆழமாக வேரூன்றிய திரைப்பட மோகம் அவர்களுக்கு பாரிய ஆற்றுப்படுத்துதலை அளித்திருக்கிறது .* இதனூடாகவே எம்.ஜி.ஆரின் வெற்றி நிர்ணயமாயிருக்கிறது* இங்கு எம்.ஜி.ஆர். தனக்கு தானே கட்டமைத்துக் கொண்ட பிம்பம் அவருக்கு கைகொடுத்தது எனலாம் .


1984 பொதுத்தேர்தலில் நோய்வாய்ப்பட்டிருந்த எம்.ஜி.ஆர். உடல்நிலை சரியில்லாது பேச முடியாத நிலையில் அமெரிக்க மருத்துவமனையில் இருந்தபோதும்* பிரச்சாரம் செய்யாமலேயே பல்லாயிரம் மைல்களுக்கு அப்பால் இருந்து* தேர்தலி ல்* வென்று* முதல்வரானார் என்பது ஒரு தனி மனிதனின் பெருமை .எந்த ஒரு அரசியல் தலைவருக்கும் இது போல் அமையுமா என்பதை நினைத்து பார்க்க கூட முடியாது .* அந்த அளவுக்கு தமிழக மக்கள் செல்வாக்கு மிகுந்த அரசியல் தலைவராக திகழ்ந்தார் . பரவியிருந்த தன் செல்வாக்கை தக்கவைத்துக் கொள்ளவே அவர் முனைந்திருக்கிறார் .எனவே பிம்ப அரசியலே அவரால் நிலைநாட்டப்பட்டிருக்கிறது .திரைப்படத்தால் உருவாக்கிக் கொண்டதை அரசியலுக்கும் கடத்தி தக்க வைப்பதில் முழு மூச்சாக செயல்பட்டு*வெற்றியும் கண்டிருக்கிறார் .**

fidowag
29th March 2020, 08:27 PM
தனியார் தொலைக்காட்சிகளில் நடிக மன்னன் எம்.ஜி.ஆர். திரைப்படங்கள்*
--------------------------------------------------------------------------------------------------------------------
27/03/20* *- வசந்த்* டிவி.* - பிற்பகல் 1.30மணி* *- ஆனந்த ஜோதி*

* * * * * * * * * * * * * * * * * * * * * * * இரவு 7.30* மணி* - பட்டிக்காட்டு பொன்னையா*

29/03/20* *- ஜெயா மூவிஸ்* - காலை 7 மணி -ஊருக்கு உழைப்பவன்*

* * * * * * * * * * மெகா 24 டிவி* *- காலை 8.30மணி -தாயை காத்த தனயன்*

* * * * * * * * * * * சன்லைப்* * * - காலை* 11 மணி* - தாயின் மடியில்*

orodizli
30th March 2020, 07:50 AM
30 03.2020
Book park

M.Shajahan.Bsc.,
Mynaty media

மக்கள் திலகம் எம்ஜிஆருக்குப் போட்டி என்றால் மிகவும் பிடிக்கும்...!

போட்டி என்று வந்துவிட்டால் இரண்டில் ஒன்று பார்த்துவிடுவார்...!

நிஜமான போட்டிகளில் மட்டுமல்ல; விளையாட்டுக்
காக நடந்த போட்டிகளில் கூட அவர் தோற்றது இல்லை...!

படப்பிடிப்பு நடக்கும் இடங்களில் ஓய்வாக இருக்கும்போது, பொழுது போக்குக்காக நண்பர்களுடன் எம்.ஜி.ஆர். சீட்டு விளையாடுவார்...!

பணம் வைத்து விளையாடும் பழக்கம் கிடையாது...!

விளையாட்டில் தோற்றுப் போனவர்கள் தனது தலைக்கு மேல் தலையணையை வைத்துக் கொண்டு ‘‘நான் தோத்து போயிட்டேன், நான் தோத்து போயிட்டேன்’’ என்று சொல்ல வேண்டும்...!

இந்த விளையாட்டு அந்த இடத்தையே கலகலப்பாக்
கிவிடும்...!

‘உரிமைக்குரல்’ படத்தின் சில காட்சிகள் மைசூரில் படமாக்கப்பட்டன..!
‘மாட்டிக்கிட்டாரடி மயிலைக் காளை…’ என்ற பாடல் காட்சி அங்கு படமாக்கப்பட்டது...!

எம்.ஜி.ஆரை நடிகை லதாவும் அவரது தோழிகளும் கிண்டல் செய்து பாடுவது போல காட்சி. இந்தப் பாடலில் கடைசியில் இரண்டு வரிகள் மட்டும் கோவை சவுந்தரராஜன் பாடியிருப்பார்.
எம்.ஜி.ஆருக்காக அவர் குரல் கொடுத்த ஒரே பாடல் இது...!

படத்தின் நடன இயக்குனர் சலீம். அவரது உதவியாளர்தான் புலியூர் சரோஜா.பாடல் காட்சி அருமையாகப் படமாக்கப்பட்டது...!

பாடல் காட்சி படமாக்கப்பட்டு முடிந்ததும், நடனக் கலைஞர்களை பாராட்டி அவர்களுக்கு விருந்தளிக்கப் போவதாக எம்.ஜி.ஆர். அறிவித்தார்...!

தங்களை எம்.ஜி.ஆர். கவுரவிக்கிறார் என்பதால் நடனக் கலைஞர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர். சொன்னபடி, நடனக் கலைஞர்களுக்கு எம்.ஜி.ஆர். விருந்தளித்தார்...!

அப்போது, குழுவினரை மேலும் உற்சாகப்படுத்தும் வகையில் திடீரென ஒரு போட்டியை அறிவித்து அவர்களுக்கு சவாலும் விடுத்தார்...!


‘‘எல்லோரும் முடிந்த வரையில் பாயசம் குடியுங்கள். யார் அதிகம் குடிக்கிறார்களோ அவர்களை விட ஒரு கப் பாயசம் நான் கூடுதலாக குடிக்கிறேன்’’ என்று சவால் விட்டார்...!

பலர் ஒதுங்கிக் கொண்டனர். ஒரு சிலர் மட்டும் அதை ஏற்றுக் கொண்டு மளமளவென பாயசத்தைக் குடிக்கத் தொடங்கினர். ஐந்தாறு கப் குடிப்பதற்குள்ளேயே சிலர் கழன்று கொண்டனர். எட்டாவது கப் குடித்துவிட்டு ஒருவர் பின்வாங்கினார்...!

ஒருவர் மட்டும் தாக்குப் பிடித்தார். எம்.ஜி.ஆரும் சளைக்காமல் அவருக்கு போட்டியாக தானும் பாயசத்தை குடித்துக் கொண்டே வந்தார்...!

விளையாட்டாக நடக்கும் இந்தப் போட்டியை படத்தின் இயக்குநர் ஸ்ரீதரும் மற்றவர்களும் ரசித்தனர். போட்டியின் வேகம் அதிகரித்தபோது, ஒரு கட்டத்தில் ஸ்ரீதருக்கு பயம் வந்து விட்டது...!

‘எம்.ஜி.ஆர். அளவுக்கு அதிகமாக பாயசத்தைக் குடித்துவிட்டு வயிற்றுப் பிரச்சினை ஏற்பட்டால் என்னாவது..?
அவரது உடல் நலம் பாதிக்கப்படுவதோடு, படப்பிடிப்பும் பாதிக்கப்படுமே..?’ என்று ஸ்ரீதர் கவலை அடைந்தார்...!

பயமும் கவலையும் அவரது வார்த்தைகளில் வெளிப்பட்டன. எம்.ஜி.ஆரைப் பார்த்து, ‘‘அண்ணே, அதிகம் சாப்பிடாதீங்க. உடம்புக்கு ஒத்துக் கொள்ளாது’’ என்று கூறி தடுக்கப் பார்த்தார். எம்.ஜி.ஆர். கேட்கவில்லை. ‘‘போட்டி என்று வந்து விட்டால் விளையாட்டாக இருந்தாலும் போட்டிதான்’’ என்று உறுதியாகச் சொல்லிவிட்டார்...!

போட்டியில் தாக்குப் பிடித்த ஒருவர் கடைசியாக 12-வது கப் பாயசத்தைக் குடித்துவிட்டு இனி ஒரு துளி கூட உள்ளே இறங்காது என்று சொல்லி எழுந்துவிட்டார். பின்னர், எம்.ஜி.ஆர். ‘‘13-வது கப்’’ என்று கூறி உயர்த்திக் காட்டி மடமடவென்று குடித்து விட்டார்...!

பின்னர், வெற்றி பெற்றதற்கு அடையாளமாக சிறு குழந்தை போல கட்டை விரலை உயர்த்தி சைகை காட்டி கூடியிருந்தவர்களைப் பார்த்து பூவாய் புன்னகைத்தார்...!

சுற்றி இருந்தவர்கள் கைதட்டி பாராட்டினர்.
இதில் குறிப்பிட வேண்டிய விஷயம் ஒன்று உண்டு...!

எம்.ஜி.ஆருக்கு உடல்நிலை பாதிக்கக் கூடாதே என்ற கவலையால், போட்டியில் கலந்து கொண்டவர்களுக்கு பாயசம் கொடுத்துக் கொண்டிருந்தவரிடம் ஸ்ரீதர் ஜாடை காண்பித்தார்...!

எம்.ஜி.ஆருக்கு கொடுக்கும் கப்பில் முழுதாக பாயசம் ஊற்றாமல் முக்கால் கப் மட்டும் ஊற்றிக் கொடுக்கும்படி சைகையால் சொன்னார்...!

எம்.ஜி.ஆரின் கண்களில் இருந்து எதுவும் தப்புமா? இதை கவனித்துவிட்டார். பாயசம் கொடுப்பவரிடம் ‘‘முழுதாக ஊற்றிக் கொடு’’ என்று அதட்டலாக சொன்னார்...!

எம்.ஜி.ஆரின் நேர்மை உணர்வு ஸ்ரீதரை நெகிழ வைத்தது...!!!......... Thanks.........

orodizli
30th March 2020, 07:54 AM
[#பழச #மறக்கமாட்டாரு

சிவகங்கை நகர முன்னாள் திமுக செயலாளர்...
திமுக தோன்றிய காலத்திலிருந்து திமுகவில் இருப்பவர்.
வாத்தியாரை வைத்து சிவகங்கை பகுதிகளில் நாடகமெல்லாம் போட்டு அவரோடு மிக நெருக்கம்.
இருந்தும் கருணாநிதி மீது உள்ள பிடிப்பால்...
வாத்தியார் அதிமுக தொடங்கியபோது போக மறுத்து விட்டார்.

தனது மகளுக்கு திருமணம் நிச்சயித்து... பத்திரிக்கை அடித்து...
தனது தானைத்தலைவனுக்கு (???) முதல் பத்திரிகை வைத்து விட்டு கல்யாணச்செலவுக்காக வெறும் ஏழாயிரம் உதவி கேட்டார்.
கோபாலபுரத்து சீமான் 500 ரூபாய் கொடுத்து விட்டு...
நான் கல்யாணத்துக்கு வந்தா...வரவேற்பு, கட்சிக்காரனுக்கு சாப்பாடு அது..இதுன்னு
எக்கச்சக்கமா செலவு வரும்.
நான் வராததுதான் நான் உனக்கு செய்யும் பேருதவி....என தனது நரி சிரிப்பை உதிர்த்து இருக்கிறார்...

உடைந்து போனார்... தனது உதிரத்தை திமுகவுக்கு உறிஞ்சக்கொடுத்தவர்.
அப்போது உடனிருந்த அவரின் சகோதரி மகன்...
பாகநேரி ராஜேந்திரன் அதிமுக உறுப்பினர்.

"வாங்க மாமா...ராமாவரம் தோட்டத்துக்கு போவோம்..." என இழுத்திருக்கிறார்.

அவரை வச்சு நாடகம் போட்ட காலத்துல... பழக்கம்.
அவர் தனிக்கட்சி ஆரம்பிச்ச பிறகு... தொடர்பு விட்டு போச்சு...அவரை எதிர்த்து அரசியல் பண்ணிட்டு... அவர்கிட்ட உதவிக்கு எப்படி போய் நிற்க முடியும்...
என தயங்கியிருக்கிறார்.

நீ வா மாமா...தலைவர் எப்பவுமே பழசை மறக்க மாட்டாரு...
என தைரியம் சொல்லி அழைத்து சென்றார்.
முதல்வர் எம்ஜிஆரை.... வீட்டில் பார்க்க ஏகப்பட்டக கூட்டம்.
வாத்தியார் காரில் ஏறி புறப்பட்டு விட்டார்.
பொன்மனச்செம்மலின் பார்வையில் பாகநேரியும், தாய் மாமனும் பட்டு விட்டனர்.
காரை நிறுத்தி அருகில் அழைத்து....
இங்கேயே இருந்து... சாப்பிட்டு.... வெய்ட் பண்ணுங்க...
கோட்டைக்கு போய்ட்டு வருகிறேன்....
என பாசக்கயிற்றில் கட்டிப்போட்டு விட்டு போய் விட்டார்.
மத்தியானம் மட்டன் கோழியோடு சாப்பாடு.
உண்ட மயக்கத்தில்... ஒரு குட்டித்தூக்கம்.
தலைவர் கூப்பிடுகிறார் என எழுப்பி விட்டனர்.

வந்தவர்களை வரவேற்று...
சாப்பிட்டீங்களா... எனக்கேட்டு...
என்ன விஷயமா.... என்னை பார்க்க வந்தீர்கள்?என கேட்டிருக்கிறார்.
திருமணப்பத்திரிக்கையை நீட்டி இருக்கிறார்.
ஏழாயிரம் கேட்டு... கோபால புரத்தில் ஏமாந்த சோகத்தை விவரித்திருக்கிறார்.
ஒரு சிறு புன் சிரிப்பை மட்டும் தவழ விட்டு...
தனது உதவியாளரிடம் சொல்லி...
20,000 ரூபாய் வரவழைத்து... கொடுத்து விட்டு...
அந்தக்கட்சியிலேயே இரு....நான் கொடுத்தது யாருக்குமே தெரியக்கூடாது...
நல்லபடியா கல்யாணத்தை நடத்தி முடி... என வாழ்த்தி இருக்கிறார் நம்ம வாத்தியாரு.

சொந்தக்காரனுக்கு மட்டுமே உதவி செய்யும் தானைத்தலைவன் (???!!!) எப்படி
சொந்த கட்சிக்காரனுக்கு உதவி செய்வார்...???]......... Thanks.........

orodizli
30th March 2020, 07:55 AM
[M.G.R. உதவி செய்ய வேண்டும் என்று நினைத்துவிட்டால் நேரம், காலம் பார்க்க மாட்டார். தான் எவ்வளவுதான் கடினமான பணியில் இருந்தாலும் தேவைப்படும் நபருக்கு சரியான நேரத்தில் உதவி செய்யக் கூடியவர். அதிலும் வசதியுடன் வாழ்ந்து பின்னர் நொடித்துப் போனவர் என்றால் அவர்களுக்கு உதவும்வரை அவர் மனம் அமைதி அடையாது.,

அந்த உதவி இயக்குநரின் பெயர் கோபாலகிருஷ்ணன். பல படங் களில் உதவி இயக்குநராக பணியாற்றியுள்ளார். ‘நாடோடி மன்னன்’ படத்தில் எம்.ஜி.ஆருக்கு உதவியாக இருந்தவர். வேறு பல படங்களுக்கும் உதவி இயக்குநராக இருந்துள்ளார். நல்ல நிலையில் இருந்தவர், காலச் சூழலில் நொடித்துப் போனார். சென்னை நங்கநல்லூரில் வாடகை வீட்டில் தனது குடும்பத்துடன் சிரமப்பட்டு வந்தார்.

கிடைத்த சிறிய வேலைகளை செய்து குடும்பத்தினரின் பசியாற்றுவதே அவ ருக்கு பெரும்பாடாக இருந்தது. வீட்டு வாடகையைக்கூட அவரால் கொடுக்க முடியவில்லை. சில மாதங்கள் வாடகை பாக்கி இருந்த நிலையில், வீட்டின் உரிமையாளர் பொறுமை இழந்தார். ஒருநாள், வீட்டில் உள்ள தட்டுமுட்டு சாமான்களை எடுத்து வெளியே வீசி விட்டு வீட்டையும் உரிமையாளர் பூட்டி விட்டார். நிர்க்கதியாக நின்ற குடும்பத் தினரை நெருங்கிய நண்பர் வீட்டில் விட்டுவிட்டு தனது உறவினர்கள், நண் பர்களிடம் உதவி கேட்டார் கோபால கிருஷ்ணன். அவருக்கு கிடைத்தது ஏமாற்றம் மட்டுமே.

என்ன செய்வது என்று தெரியாத நிலையில், கோபாலகிருஷ்ணனுக்கு எம்.ஜி.ஆரின் நினைவு வந்தது. பல ஆண்டுகளாக எம்.ஜி.ஆரோடு அவருக்கு தொடர்பு இல்லை. தன்னை எம்.ஜி.ஆர். நினைவில் வைத்திருப்பாரா? நினைவில் இருந்தாலும் நெருக்கம் இல் லாத நிலையில் உதவி செய்வாரா? என்று அவருக்கு சந்தேகம். இருந்தாலும், கடைசி முயற்சியாக எம்.ஜி.ஆரை பார்த்துவிடலாம் என்று அவரைத் தேடிச் சென்றார்.

அப்போது, வாஹினி ஸ்டுடியோவில் ‘பட்டிக்காட்டு பொன்னையா’ படப்பிடிப் பில் எம்.ஜி.ஆர். இருந்தார். படப்பிடிப்பு முடியும்வரை காத்திருந்தார் கோபால கிருஷ்ணன். படப்பிடிப்பு முடிந்து வெளியே வந்த எம்.ஜி.ஆர்,, சோகத் துடன் நின்றிருந்த கோபாலகிருஷ்ணனை பார்த்ததும் அடையாளம் கண்டுகொண் டார். அகமும் முகமும் மலர அவரை அழைத்து நலம் விசாரித்தார்.

கோபாலகிருஷ்ணனின் முகத்தையும் உடையையும் பார்த்தே அவரது நிலை மையை எம்.ஜி.ஆர். தெரிந்துகொண் டார். அவர் அன்போடு விசாரித்ததைப் பார்த்து, கோபாலகிருஷ்ணனுக்கு அது வரை அடக்கி வைத்திருந்த அழுகை வெடித்தது. அவரை சமாதானப்படுத்தி எம்.ஜி.ஆர். ஆறுதல் கூறினார். ஆசு வாசப்படுத்திக் கொண்டு, தனது நிலை மையையும் குடும்பத்தினரை நண்பர் வீட்டில் விட்டுவிட்டு வந்திருப்பதையும் குமுறித் தீர்த்தார் கோபாலகிருஷ்ணன்.

அதைக் கேட்டு துடித்துப்போன எம்.ஜி.ஆர்., ‘‘உங்கள் நிலைமையை ஏன் முன்பே என்னிடம் தெரிவிக்கவில்லை?’’ என்று அவரை அன்போடு கடிந்து கொண் டார். ‘‘வாடகை பாக்கி எவ்வளவு?’’ என்று கேட்டார். ‘‘மூவாயிரம் ரூபாய்’’ என்று பதிலளித்தார் கோபாலகிருஷ்ணன். அவரை சாப்பிட வைத்து கைச்செலவுக்கு சிறிது பணம் கொடுத்ததுடன், தனது உதவியாளர்களிடம் அவரது வீட்டு முக வரியை கொடுத்துவிட்டு போகச்சொன் னார். எம்.ஜி.ஆரை கோபாலகிருஷ்ணன் பார்த்தது பிற்பகலில். அன்று மாலை முதல் பலத்த மழை பெய்தது.

‘எம்.ஜி.ஆரிடம் சொல்லிவிட்டோம். எப்படியும் உதவி கிடைக்கும்’ என்ற நம்பிக்கையில் கொட்டும் மழையிலும் பூட்டப்பட்டிருந்த தனது வாடகை வீடு முன்பு தாழ்வாரத்தில் ஒடுங்கியபடி அமர்ந்து, சாலையைப் பார்த்துக் கொண்டிருந்தார் கோபாலகிருஷ்ணன்.

Cont...]............ Thanks.........

orodizli
30th March 2020, 11:39 PM
காய்ந்து சிவந்தது...
சூரியகாந்தி...

அனலில் தோய்ந்து சிவந்தது...
காய்ச்சிய தங்கம்...!

ஆய்ந்து சிவந்தது...
அறிஞர்தம் நெஞ்சம்...!

தினமும் ஈந்து சிவந்தன...
#எம்ஜிஆர் இருகரமே...!!

எங்கள் வீட்டுப் பிள்ளை...!
ஏழைகளின் தோழன்...!

தங்கக்குணம் உள்ள
கலை மன்னன்...!

#மக்கள்திலகம் எங்கள்
#எம்ஜிஆர்_அண்ணன்...!

மக்கள்திலகம் எங்கள்
எம்ஜிஆர் அண்ணன்...!!

வாரி வாரி வழங்குவதில்
பாரிவள்ளல்...!

வண்ணத்தமிழ் வளர்ப்பதிலே
காஞ்சி மன்னன்...!

காரிருளை நீக்கி இன்று
கட்டுப்பாட்டைக் காத்து நிற்கும்...

கொள்கைக் காவலன்...!
கொள்கைக் காவலன்...!!

எங்கள் வீட்டுப் பிள்ளை...!
ஏழைகளின் தோழன்...!!

மின்னுகின்ற பொன்னைப் போன்ற நிறத்தைப் போன்றவர்...!

மூடிவைக்கத் தெரியாத
கரத்தைப் பெற்றவர்...!!

எண்ணுகின்ற எண்ணத்திலும்
அறத்தைப் பெற்றவர்...!

எல்லோரும் போற்றுகின்ற
தரத்தைப் பெற்றவர்...!!

தன்னலம் கருதாத மனத்தைப் பெற்றவர்...!

#திராவிடர் என்னோர்
இனத்தைப் பெற்றவர்...!!

உண்மையில் வழுவாத
நடத்தை பெற்றவர்...!

ஒவ்வொருவர் உள்ளத்திலும்
இடத்தைப் பெற்றவர்...!!

அன்பு கொண்ட #அண்ணாவின்
தம்பியல்லவா...!

அவர் அறவழியில் நடக்கும்...
தங்கக்கம்பியல்லவா...!
#தங்கக்கம்பியல்லவா...!!

எங்கள் வீட்டுப் பிள்ளை...!
ஏழைகளின் தோழன்...!

தங்கக்குணம் உள்ள
கலைமன்னன்...!!

மக்கள்திலகம் எங்கள்
எம்ஜிஆர் அண்ணன்...!

மக்கள்திலகம் எங்கள்
எம்ஜிஆர் அண்ணன்...!!!

நன்றி : நாகூர் E.M.அனீபா........... Thanks.........

orodizli
1st April 2020, 12:50 PM
மக்கள் திலகத்தின் 100வது திரைப்பட காவியம் "ஒளிவிளக்கு" இந்த திரைப்படத்தில் இப்போது நாட்டுக்கு வந்திருக்கும் கொரொனோ போல் விஷ காய்ச்சல் பற்றி அப்போதே இந்த திரைப்படத்தில் இடம் பெற்றது அதில் ஊரைவிட்டும் அனைவரும் சென்று விடும்போது மக்கள் திலகம் சொல்வார் "இந்த நோய் கூட என்னைப்பார்த்து ஓடும்" என்பார். விஷ காய்ச்சலால் ஊயுருக்கு போராடும் சௌகார் ஜானகியை காப்பாற்றுவார் எப்போதும் தன்னைப்பற்றி கவலைப்படாமல் ஊரைப்பற்றியும் மக்கள் நலனைப்பற்றி கவலைபடுவர் அதுதான் மனித நேயம் எம் ஜி ஆர் (இந்த பதிவு பற்றி தங்கள் எண்ணங்களை பதிவிடவும்).......... Thanks.........

orodizli
1st April 2020, 12:51 PM
https://youtu.be/UGOoDStrLj0... Thanks......

orodizli
1st April 2020, 12:54 PM
Mynaty media
M.shajahan.B.sc.,

RR pictures
கொடுத்து வைத்தவள் வெளியான தேதி
09.02.1963.

இதே தேதியில் தான் சிவாஜிக்கு
சித்தூர் ராணி பத்மினி ரிலீஸாகி
படு தோல்வி கண்டது...!

ஜனவரி 11(பொங்கல்) அன்று...,

சின்னவரின்
" பணத்தோட்டம் " வெளி வந்தது...!
அதே தேதியில்
பி மாதவன் முதன் முதலாக இயக்கிய "மணியோசை" வெளியானது...!
இரண்டும் பெரிய வெற்றி பெற்றது...!

அதை அறிந்து தான் தெய்வத்தாய் இயக்கும் வாய்ப்பை சின்னவர் மாதவனுக்கு வழங்கினார்...!

சின்ன இடை வெளியில் தேவரின்"தர்மம் தலை காக்கும்"
பிப்ரவரி 22 ல்
ரிலீஸ்...!

முன்னும் பின்னும் வழுவான வெற்றி
பெற்றதால்...,
இடையில் சிக்கிய கொடுத்து வைத்தவள் சராசரியாகத் தான் போனது...!

மௌண்ட் ரோடு(அண்ணா சாலை) பிளாசாவில் பணத்தோட்டம்...,
தேவர் பொங்கலுக்கே Conform பண்ணியதால் சித்ராவில் தர்மம் தலை காக்கும்...,
தியேட்டர் கிடைக்காததால் வழக்கமாக ஆங்கில படங்களும்..., ஸ்ரீதர் படங்களும் (பின்னாளில் எங்க வீட்டுப்பிள்ளை
அன்பேவா)
வெளியிடப்படும் "காசினோ" வில் கொடுத்து வைத்தவள் ரீலீஸ் அகியிருந்தது...!

அதனால் கதைக்கு முக்கியத்தும் கொண்ட இப்படத்திற்கு High class ரசிகர் ஆதரவு கிடைத்தது...!

பா நீலகண்டன் சின்னவரை இயக்கிய இரண்டாவது படம்...!

மகாதேவன் இசையில்ல அனைத்து பாடல்களும் அருமை...!

கண்ணதாசன் வரியில்...,
'என்னம்மமா சௌக்யமா...?'
TMS PS

'பாலாற்றில் தேனாடுது...!'
சீர்காழி சுசீலா

'நான் யார் தெரியுமா...?'
TMS

ஆலங்குடி சோமுவின் வார்த்தையில்...,
'மின்னல் வரும்'

மருதகாசின் மயக்கும் மொழியில்...,
'நீயும் நானும் ஒன்று;ஒரு நிலையில் பார்த்தால் இன்று'
என்ற தீர்க்க தரிசன சொல்லாடல் கொண்ட பாடல்கள் இப்பபடத்திற்கு தனிச் சிறப்பு...!
இது வெறும் Trailer தான்...,
Main pictures
நிறைய இருக்கு...!........... Thanks.........

orodizli
1st April 2020, 12:57 PM
ரத்னகுமார் படத்தில் தளபதியாக சகஸ்றநாமமும், சேனாதிபதியாக எம்.ஜி.ஆர்.அவர்களும் நடித்து இருப்பார்கள்.

அஸோக்குமார் படத்தில் எம்.கே.தியாகராஜபாகவதரின் உற்ற நண்பராக நடித்து இருப்பார் தலைவர்.
*லட்சுமிகாந்தன் கொலை வழக்கில் சதி செய்யப்பட்டு பாகவதர், கலைவாணர் சேர்க்கபட்டனர் பின்பு லண்டன் கோர்ட்டில் கேஸ் நடந்து கொலைக்கும் இவர்களுக்கும் தொடர்பில்லை என்று தீர்ப்பு வழங்கபட்டது*

*பாகவதர் நடித்த ராஜமுக்தி படம் பூனாவில் எடுக்கபட்டது அதில் எம்ஜிஆர் இரண்டாவது நாயகன் ஆவார்."அப்போது தான் எம்ஜிஆருக்கும் ஜானகிக்கும்.திருமணத்தை தனது முன்னிலையில் நடத்தியவர் தியாகராஜபாகவர் ஆவார்*

*நாடோடி மன்னன் படம் எடுக்கும்போது …றாமச்சந்திரா அதிகம் பணம் செலவளிக்காதே கடன் பட்டு விடுவாய் என எம்ஜிஆரை எச்சரித்தார் பாகவதர் ஆனால் தலைவரோ ஜெயித்தால் மன்னன், இல்லை நாடோடி*
என்று பாகவதரின் ஆலோசனையை கேட்டார் ..

எனது நினைவலைகள்.
KSG... Thanks...

orodizli
1st April 2020, 01:00 PM
01.04.2020
Book park.

எம் ஷாஜஹான்.
மைனாட்டி மீடியா

நீதிக்கு தலை வணங்கு படத்தை பற்றிய அபூர்வ செய்தி...!

இறைவன் நம் கண் முன்னால்...,

நாளை நடப்பதை இன்றே காட்டித்தருவான் என்பதற்கு சாட்சி கூறும்...,

ஒர் அதிசய காட்சி நிகழ்வு இடம் பெற்றிருக்கும்...!

ரோஜா ரமணியிடம்..., அவரின் அண்ணனுக்கு அறுவை சிகிச்சை க்கு ஏற்பாடு செய்ததர்க்கு சாட்சியாக...,

கட்சியின் அன்றய அதிகாரபூர்வ நாளேடான
" சமநீதி " யை எடுத்து வந்து காட்டுவார் நம் சின்னவர்...!

அதில் இரண்டு விசயங்கள் பின் நடப்பதை பிரதிபலிப்பதாக இருக்கும்...!

1. அமெரிக்காவில் இருந்து டாக்டர்கள் வருவதாக இருக்கும்...!

2. அந்த பத்திரிக்கையின் வெளியீட்டு தேதி டிசம்பர் 24...என்று
இருக்கும்...!

இந்த இரண்டும் சின்னவரின் வாழ்க்கையில் மிக முக்கிய நிகழ்வுகள்...!

ஒன்று...அவருக்கு அமெரிக்க மருத்துவர்களால் நிகழ்த்தப்பட்ட அறுவை சிகிச்சை...!

மற்றொன்று அவர் நம்மையெல்லாம் வீட்டுப் பிரிந்த அந்த கொடிய...,
டிசம்பர்...24...!

இறைவன் மிக........
பெரியவன்...!!!......... Thanks.........

orodizli
1st April 2020, 09:01 PM
https://youtu.be/E_rh1LziEYE... Thanks......

orodizli
2nd April 2020, 09:24 AM
இந்த இந்தி பாடல்...,
நோயுற்றவரை
குணப்படுத்த வேண்டி...,

இறைவனிடம்
இரஞ்சி பாடும்
பாடலாகும்...!

லதா மங்கேஸ்கர்
அமுத குரலில் ஒலிக்கும் இப்பாடல்...,

மக்கள் திலகத்தின் "பல்லாண்டு வாழ்க" திரைப்படத்தின் இந்தி மூலக்கதையான..,

சாந்தாராமின் "தோ ஆங்கன் பாரா ஆத்"(இரண்டு கண்கள் பன்னிரண்டு கைகள்) படத்தில் இடம் பெற்றது...!

இறுதி காட்சியில் நாயகன் கைதிகளால் தாக்கப்பட்டு ஆபத்தான நிலையில் இருக்கும் போது நாயகி பாடும் பாடல்...!

தமிழில் புகழ் பெற்ற 'ஒன்றே குலமென்று பாடுவோம்' என்ற பாடலின் காட்சியையும் ராகத்தையும் ஒத்திருக்கும்...!

உலகெங்கும் நோயுற்றவர்களின் அழுகுரல் கேட்கும் இவ்வேளையில் இப்பாடல் பாடுவது மிகப் பொருத்தமாக இருக்கும்...!

என்றென்றும்
அன்புடன்...,
எம் ஷாஜஹான்......... Thanks.........

orodizli
2nd April 2020, 09:26 AM
எம்ஜிஆர் இளமையில்
வறுமை. படிப்பை தொடரமுடியவில்லை. நாடகத்தில் சேர்ந்தார்.
பிறகு சினிமாவில் துணைநடிகராக இருந்து பிறகு கதாநாயகனாக
ஜொலித்தார்.
உச்சகட்டத்தில் இருந்தும் ஏழைகள்மீது
அன்பும் கொடுக்கும் குணமும் மனிதநேய பண்பும் ரத்தத்தில் ஊறிவிட்டது.ஏனெனில்
ரத்தத்தின்ரத்தமாயிற்றே.பிறகு அ.தி.மு.க தொடங்கி அரசியலில்
தீவிரமாக ஈடுபட்டு தமிழக முதல்வர் ஆனார். 10 ஆண்டுகள்
மக்களுக்காக வாழ்ந்த தலைவர்.
1917 லிருந்து 1987
வரை எம்ஜிஆர் காலம்
கி.மு. கி.பி..என்பது போல் சரித்திரத்தில்
இடம் பெற்று
எம்ஜிஆர் காலம் பொற்காலம். இன்று தெய்வமாக காட்சியளிக்கிறார்.
நாம் அனைவரும் அவர்
செய்த நற்காரியங்களை
வாழ்நாளில் கடைபிடித்தால் நமது
தமிழ்நாடு முதலிடம் பெறும் என்பதில்
ஐயமில்லை.......... Thanks.........

orodizli
2nd April 2020, 02:42 PM
" துஷ்ட நிக்ரஹ் சிஷ்ட பரிபாலன் "
🌹**********************************🌹

" துஷ்ட நிக்ரஹ் சிஷ்ட பரிபாலன்" என்பது இறைவனுக்கு மட்டுமல்ல; MGR கற்கும் பொருந்தும். இக்கருத்தை மெய்ப்பிக்கும் வகையில் அவர் வாழ்வில் பல நிகழ்வுகள் நடந்துள்ளன. எம்.ஜி.ஆர் திரையுலகில் இருந்தபோதும், முதல்வரான பிறகும், தன்னை வளர்த்து விட்ட திரையுலகுக்கு ஒரு காவலனாக இருந்தார். யாருக்கு நஷ்டம் என்றாலும், அந்த தகவல் அவரது கவனத்துக்கு வந்தால் உடனே அவர்களை அந்த சிரமத்திலிருந்து காக்கும் ரட்சகராக இருந்திருக்கிறார் என்பது பலரது பேட்டி வாயிலாக தெரிகிறது.

சில ஆண்டுகளுக்கு முன்பு சென்னையில் இருக்கும் பிரபல ஜுவல்லரி ஒன்றில் நகை வாங்கிக் கொண்டு காரில் வந்த சரோஜாதேவியிடம் இருந்து திருடர்கள் அந்த நகையை கொள்ளையடித்து சென்றுவிட்டனர். காவல் நிலையம் சென்று புகார் அளித்த சரோஜாதேவி; எம்.ஜி.ஆர் இருந்திருந்தால் இப்படி நடந்திருக்குமா என்று கவலையுடன் தெரிவித்தார். எம்.ஜி.ஆர் இருப்பது தனக்கு ஒரு பாதுகாப்பு என்று நம்பியிருந்தார். இது போன்ற நம்பிக்கை பலருக்கு இருந்திருக்கிறது.

நடிகை என்ற ஓரு காரணத்தால் பெண்களுக்கு மற்றவர்கள் நெருக்கடி கொடுத்தபோது; அவர்களை, அந்த கயவர்களின்பிடியிலிருந்து எம்.ஜி.ஆர் விடுவித்த சம்பவங்கள் ஏராளம். இவரும் நடிகைகளிடம் கண்ணியத்துடன் நடந்துகொண்டார் என்பதற்கு சான்றுகள் உண்டு. அவர்களின் கண்ணியத்தை காக்கவேண்டிய சந்தர்பங்களில் அவர் உறுதியுடன் இருந்தார். எனவே அந்த காலகட்டத்தில் எம்.ஜி.ஆர் தங்களின் காவலராக இருக்கிறார் என்ற நிம்மதி நடிகையருக்கு இருந்தது.
நன்றி : யாழ் பதிவு - யாழ் இணையம்.......... Thanks

orodizli
2nd April 2020, 11:36 PM
இது, இப்படியாக....

------------------------.--------

#கோட்டையில் இருந்து சென்ற #முதல்வரின் கார், #இராமாவரம் #தோட்டத்திற்குள் நுழைந்தது. வாசலில் இறங்கிய #எம்ஜிஆர் உள்ளே நுழையாமல் வெளியே பார்த்தபடி நின்றார். இது வழக்கத்திற்கு மாறானது என்று, #அதிகாரிகள் பரபரப்டைந்தார்கள். சற்று நேரத்திற்கு பிறகு, “வெளியே உள்ள கடைக்கு அருகில் ஒரு பெண்மணி உட்கார்ந்திருப்பதை பார்த்தீர்களா?” என்றார்.

யாரிடமிருந்தும் பதில் இல்லை.

மூன்று நாட்களாக கவனிக்கின்றேன். அந்த அம்மா, அந்த பெட்டிக் கடைக்கு பக்கத்திலேயே உட்கார்ந்திருக்கிறார். நம் வாகனம் வரும்போதும் போகும்போதும் எழுந்து கும்பிட்டபடி நிற்கிறார். நீங்கள் யாரும் கவனிக்கவில்லையா? என்கிறார்.

#பாதுகாப்பு அதிகாரிகளிடத்தில் மௌனம்.

போய் அழைத்துவாருங்கள் என்கிறார்.

அதிகாரிகள் சூழ உள்ளே நடந்து வரும் அந்த பெண்மணியை பார்த்தபடியே நிற்கிறார்.

நடுத்தர வயது,காய்ந்த தலை. வாடிய முகம், உழைத்து உருக்குலைந்த தேகம், கையில் ஒரு மஞ்சள் பை. முகத்தில் கலக்கமும், அச்சமும் தெரிய, எம்ஜிஆரை நெருங்க நெருங்க படபடப்பிற்குள்ளாகிறார் அந்த பெண்மணி.

அவரை சமாதானப்படுத்த, சிரித்தபடியே சாப்டீங்களாம்மா? யார் நீங்க? உங்களுக்கு என்ன வேண்டும்? வெளியவே உட்கார்ந்திருக்கீங்களே, என்ன விஷயம் என்கிறார். அந்த அம்மையார் கையெடுத்துக் கும்பிட்டபடியே, படபடப்புடன் ஏதோ சொல்ல வாயெடுத்தார்.

சரி, முதல்ல நீங்க சாப்டீங்களா? வாங்க, போய் சாப்டுட்டு நிதானமா பேசுவோம் என சிரித்தபடியே அழைத்துச் செல்கிறார். உணவு இரண்டு பேருக்கும் பரிமாறப்பட்டது. தயங்கி தயங்கி அமர்ந்திருந்த அந்த பெண்மணியிடம் சாதாரணமா பேச்சுகொடுத்து சாப்பிட வைத்தார். இரண்டு பேருமாக சாப்பிட்டு முடித்தவுடன் வெளியே இருந்த அறையில் வந்தமர்ந்து, ‘என்ன ஏது என்று விசாரிக்கின்றார்.

“ஐயா, நான் கூலி வேலை செய்யுறேங்க. வூட்டுக்காரு இறந்து போயிட்டாரு. சட்டுன்னு கையொடிஞ்சமாதிரி ஆயிருச்சி. ஒத்தை ஆளு சம்பாரிச்சு மூணு பொம்பள புள்ளைகளை காப்பாத்த முடியல, பள்ளிக்கூடம் போற புள்ளைங்கள நிறுத்திட்டேன். என்னா பண்றதுன்னு தெரியல. ஊர்ல இருந்த எல்லாரும், எம்ஜிஆர்கிட்ட போய் கேளுங்க, ஏதாவது செய்வாருன்னு சொன்னாங்க. அதான்சாமி வண்டி புடிச்சு வந்துட்டேன். கோட்டைக்கு போனேன். அங்க உங்களை பார்க்க முடியாதுன்னு சொல்லி அனுப்பிட்டாங்க. அதான் இங்க வந்து (வீட்டுக்கு) வெளியே இருக்கிற பெட்டிக் கடையாண்ட மூணு நாளா குந்திகிட்டிருக்கேன் சாமி” என்கிறார் கையெடுத்து கும்பிட்டழுதபடி..

என்ன #நம்பிக்கையில் இப்படி வண்டி ஏறி வருகிறார்கள் என நினைத்தாரோ என்னவோ, மௌனமாக பார்த்துக் கொண்டிருந்த எம்ஜிஅர், சற்று நேர யோசனைக்குப் பிறகு அதிகாரிகளை அருகில் அழைத்து ஏதோ சொன்னார். அவர்கள் குறித்துக்கொண்டார்கள்.

ஊர், பெயர் விவரங்களை மீண்டும் கேட்டுக்கொண்ட பிறகு “பிள்ளைங்க படிப்புக்கு ஏற்பாடு செய்திருக்கின்றேன். ஒன்றும் கவலைப்படாதீங்க. பத்திரமா போய்வாங்க என்றபடியே, ‘கொஞ்சமாக’ பணத்தை கையில் இருந்த மஞ்சள் பையில் போட்டுக்கொடுத்து, இதை வைத்து ஏதாவது கடை வைத்து வருமானத்த பார்த்துக்கோங்க” என்று கூறி அனுப்பி வைக்கின்றார். ஒரு ஊழியர், பொறுப்பாக வண்டி ஏற்றி அனுப்பி வைத்தார்.

ஊர் சென்று இறங்குவதற்குள்ளாகவே, வீட்டிற்கு, கலெக்டர் ஆபீஸில் இருந்து வந்து விசாரித்துவிட்டு போனதாக சொன்னார்கள். விறு விறுவென வேலைகள் நடந்தது. அந்த பெண் பிள்ளைகள் படித்து முடிக்கும் வரையான எல்லா செலவுகளும், எந்த உயர்படிப்பு வரை என்றாலும், எல்லாமுமே எம்ஜிஆரே ஏற்றுக்கொண்டதாக அதிகாரிகள் சொன்னார்கள்.

இந்த சம்பவத்தை, எம்ஜிஆர் நடத்திய ‘தென்னகம் பத்திரிகை ஆசிரியராக இருந்த ‘தென்னகம் மு.கோ. வசந்தன் அண்ணன் அவர்கள் என்னிடம் கூறினார்.

#போலீஸ் செய்தி வார இதழில் ‘#தென்னகம் மு.கோ. #வசந்தன் அவர்கள் ஆசிரியர். நான் உதவி ஆசிரியர். சாதாரண வேட்டி சட்டையில் வருவார். நான் ஏலனமாகத்தான் பார்த்தேன். பழகப்பழக அவரது அனுபவம் எனக்கொரு பொக்கிஷமாகப்பட்டது. அண்ணன் தம்பியானோம்.

எம்ஜிஆருடன் நெருங்கியிருந்தவர். அதனடிப்படையில் அவ்வப்போது நிறைய சம்பவங்களை சொல்வார். சில சம்பவங்கள் வயிறு வலிக்க சிரிக்கும்படி இருக்கும். அவற்றை எல்லாம் நான் எனது டைரியில் குறித்து வந்தேன். அவர் சொன்னது எல்லாமும் அதுவரை யாரும் எழுதியிராத-அறிந்திராத சம்பவங்கள்!

பிறகு நான் 1999-ல் குமுதம் வார இதழுக்கு வந்துவிட்டேன். 2002-ற்கு பிறகு..

வழக்கம்போல் எம்ஜிஆர் பிறந்த நாளுக்கான சிறப்பு பக்கங்கள் ஒதுக்கப்பட்டு, அதை சீனியர் எழுதியிருந்தார். அப்போதுதான், ‘என்னிடம் இப்படியான கதைகள் உள்ளது’ என்று ஆசிரியர் #கிருஷ்ணா டாவின்ஸியிடம் கூறினேன். அப்படியா, எழுதி எடுத்துட்டு வாங்கன்னு சொன்னார். இரவெல்லாம் எழுதி காலையில் எடுத்துச் சென்றேன்.

முதல் வாரமே அட்டைப்படக் கட்டுரையாக இந்த உண்மை சம்பவம் வெளியானது. (பிறகு தொடர்ந்து நான்கு வாரங்கள் மினி தொடராக குமுதத்தில் வந்தது)

அந்த பெண்மணிக்கு எம்ஜிஆர் உதவியது பற்றிய அந்த கட்டுரை வந்த இரண்டாம் நாள், ஒரு பெண்மணி அலுவலகம் வந்து ஆசிரியர் கிருஷ்ணா டாவின்ஸியை சந்தித்துவிட்டு போனதாக சொன்னார்கள். அன்று நான் தாமதமாக போயிருந்தேன்.

வந்தவர் ஒரு டெபுடி கலெக்டர். எம்ஜிஆரிடம் உதவி கேட்டு வந்திருந்தாரே, அந்த அம்மையாரின் மூன்று பெண் பிள்ளைகளில் ஒருவர். “எம்ஜிஆர்-தான் எங்கள் மூவரையும் படிக்க வைத்தார். நாங்கள் மூன்று பேரும் பெரிய அளவில் படித்தோம். எல்லா செலவும் அவருடையதுதான். இன்று நாங்கள் எல்லோரும் நல்ல நிலையில்-உத்தியோகத்தில் இருக்கின்றோம் என்றால் அது எம்ஜிஆரின் உதவிதான் என்று உருகி நன்றி சொன்னதாக கூறினார்.

அதன் பிறகு, என்னையும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு நன்றி கூறினார்.

“அவர் எங்களை படிக்க வைத்தது மட்டுமல்ல. எப்படியாக படிக்கின்றோம் என்பதை எல்லாம் விசாரித்தபடி இருந்தார். அதிக அக்கரை கொண்டிருந்தார். எனக்கு அரசு உத்தியோகம் கிடைத்ததும், அம்மா கையோடு அழைத்துக்கொண்டுபோய் (குலசாமி) அவர் முன் நிறுத்தினார் என்ற அந்த சம்பவத்தை சொன்னபோது அப்படி ஒரு நெகிழ்ச்சி...

திரும்பிப் பார்த்தபோது, இது இப்படியாக...

#பத்திரிக்கையாளர் பா. ஏகலைவன் அவர்களின் இன்றைய பதிவு......... Thanks.........

orodizli
3rd April 2020, 07:05 PM
எத்தனையோ ஆண்டுகள் கழிந்தும் எம்.ஜி.ஆர், இன்னமும் புரட்சி தலைவராகவே தமிழக மக்களின் மனதில் வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்றால் அவர் நடிகர் என்பதால் மட்டுமல்ல. அதையும் தாண்டிய அவரின் மக்களோடு மக்களாக வாழ்ந்த இயல்புதான் காரணம் என்பதை பல சம்பவங்கள் மூலமாக நாம் தெரிந்து கொண்டிருக்கலாம். அதை மறுபடியும் நிரூபிக்கும் விதமாக எம்.ஜி,ஆர் பற்றிய ஒரு ஸ்வாரஸ்யா சம்பவத்தை கூறி இருககிறார் எம்.ஜி.ஆரின் "தாய்" பத்திரிகையில் உதவி ஆசிரியராக இருந்த கல்யாண் குமார்.


"தாய் பத்திரிக்கையின் ஆசிரியராக இருந்த வலம்புரி ஜானின் வீட்டுக்குப் போன் செய்திருக்கிறார் அந்த பத்திரிக்கையின் உரிமையாளரான எம்.ஜி.ஆர்.

ஆனால் அப்போதுதான் வலம்புரி ஜான் , அலுவலகத்திற்குக் கிளம்பி இருக்கிறார். அப்போது அவரது குடும்பம் வெளியூர் போயிருந்தபடியால் வீட்டில் இருந்த பதின்மூன்று வயது வேலைக்காரச் சிறுமிதான் போனை எடுத்துப் பேசியிருக்கிறாள்.

அவளுக்கும் எம்.ஜி.ஆருக்குமான உரையாடல் இப்படி நிகழ்ந்திருக்கிறது:

‘’ ஹலோ.. யாருங்க பேசறது?’’ இது வேலைக்காரச் சிறுமி.

‘’ நான் எம்.ஜி.ராமச்சந்திரன் பேசுகிறேன். வலம்புரி ஜானிடம் பேசவேண்டும்’’-அவர் எப்போது, யாருடன் பேசினாலும் தன் முழுப்பெயரையும் சொல்லித்தான் பேசுவாராம். அதனால் பேசுவது எம்.ஜி.ஆர் என்பது தெரியாமலே அந்த வேலைக்காரச் சிறுமி பதில் சொல்லியிருக்கிறாள்!

‘’அய்யா இப்பதான் ஆபீஸுக்குக் கிளம்பிப் போனாங்க’’
‘’ நீங்க யார் பேசறது?’’

‘’ நா இங்க வேலைபாக்குற பொண்ணு. அம்மா, அக்காவெல்லாம் ஊருக்குப் போயிருக்காங்க.’’

‘’உங்க பேரு என்ன?’’

’’லச்சுமி’’

‘’எந்த ஊரு?’’

’’தூத்துக்குடி பக்கத்துல வள்ளியூர் ‘’

’’இங்க வேலைக்கு வந்து எத்தனை வருஷமாச்சு?’’

’’மூணு வருஷமா இங்கதான் இருக்கேன்’’

‘’அப்படியா? என்ன சம்பளம் கொடுக்குறாங்க?’’

‘’அதெல்லாம் எனக்குத் தெரியாது. மாசாமாசம் ஊருக்கு அப்பாவுக்கு அனுப்பிடுவாங்க. எனக்கு சாப்பாடு போட்டு தீபாவளி, பொங்கல், கிறிஸ்துமஸ்க்கு துணி எடுத்துக் கொடுத்துருவாங்க.’’

’’ உன்னை நல்லா வச்சுக்கறாங்களா? சாப்பாடெல்லாம் நல்லா இருக்கா?’’

’’ம்ம்ம்... நல்லா இருக்கும்.. அய்யாவுக்கு தினம் கறிச்சோறு செய்வாங்க. எனக்கும் கொடுப்பாங்க’’

‘’சினிமாவுக்கெல்லாம் கூட்டிட்டுப் போவாங்களா?’’

’’ஆமா. லீவு நாள்ல எல்லாரும் போவாங்க. என்னையும் கூட்டிட்டுப் போவாங்க..’’

‘’உனக்கு அய்யாவைப் புடிக்குமா, அம்மாவப் புடிக்குமா?’’

’’ரெண்டு பேரையுமே புடிக்கும். அய்யா எதாவது கடைக்கு அனுப்பினா மிச்சக் காசை என்னையே வச்சுக்கச் சொல்லுவாரு. சேர்த்துவைக்கிறேன்.’’

’’எப்ப ஊருக்குப் போகப்போற?’’

‘’ எங்க அப்பா வந்து கூட்டிட்டுப் போவாரு. இப்பதான் பொங்கலுக்குப் போயிட்டு வந்தேன். இனி தீபாவளிக்குப் போவேன். புதுத்துணியெல்லாம் அம்மா எடுத்துக் கொடுப்பாங்க..’’

‘’சரி, அய்யா வந்ததும் நான் பேசுனதாச் சொல்லு’’

‘’உங்க பேரு என்ன சொன்னீங்க?’’

‘’எம்.ஜி..ராமச்சந்திரன்’’

’’மறுபடி சொல்லுங்க....’’

‘’எம்.ஜி.ராமச்சந்திரன்’’

அப்போதும்கூட தான் எம்.ஜி.ஆர் என்பதை அவர் சொல்லிக் கொள்ளவேயில்லை!

இரவு வீட்டுக்குத் திரும்பிய ஆசிரியரிடம் அந்த வேலைக்காரச் சிறுமி இந்த போன் விபரத்தைச் சொல்லியிருக்கிறாள். அத்தனை நேரம் உன்னிடம் பேசிக் கொண்டிருந்தது, எம்.ஜி.ஆர் என்ற விபரத்தை ஆசிரியர் அவளிடம் சொன்னபோது அதை அவள் முழுசாய் நம்பவில்லை. எம்.ஜி.ஆரின் முழுப்பெயர் அவளுக்குத் தெரியாததால், ‘அவரு எம்.ஜி.ஆருன்னு சொல்லவேயில்லையே.. எதோ ராமச்சந்திரன்ன்னுதானே சொன்னார், அய்யா பொய் சொல்கிறார்’ என்றுதான் நினைத்திருக்கிறாள்.

ஆனால் அடுத்தமுறை வலம்புரி ஜான், எம்.ஜி.ஆரைச் சந்திக்கப் போனபோது அந்தச் சிறுமி பற்றி விசாரித்த எம்.ஜி.ஆர் அவளிடம் சேர்ப்பிக்குமாறு ஒரு கணிசமான தொகையைக் கொடுத்துவிட்டிருக்கிறார்.

அவ்வளவு பணமும் தனக்குத்தான், அதுவும் எம்.ஜி.ஆரே கொடுத்துவிட்டிருக்கிறார் என்று அறிந்தபோதுதான், சில நாட்களுக்கு முன் தன்னோடு பேசியது சாட்சாத் எம்.ஜி.ஆரேதான் என்பதை அவள் நம்பி இருக்கிறாள்.

நன்றி: தாய் பத்திரிகையில் உதவி ஆசிரியராக இருந்த கல்யாண் குமார் அவர்கள் !......... Thanks.........

orodizli
3rd April 2020, 07:08 PM
https://www.facebook.com/100011766189226/posts/958369624565235/?sfnsn=wiwspwa&d=w&vh=i&d=w&vh=i&extid=yug4lCtGD37wKgLq......... Thanks.........

orodizli
3rd April 2020, 07:09 PM
https://m.facebook.com/story.php?story_fbid=532724574318379&id=100027425229864&sfnsn=wiwspwa&d=w&vh=i&d=w&vh=i&extid=UU6MnVTcEPqp1YrR... Thanks......

orodizli
3rd April 2020, 07:12 PM
அண்ணாவுக்கும் எம்ஜிஆருக்கும் உள்ள ஒற்றுமைகள் சில...

1. அண்ணா எம்ஜிஆர் இருவரும் பிறப்பில் நடுத்தர குடும்பத்தில் பிறந்தவர்கள்.

2. நோயின் காரணமாக இருவரும் அமெரிக்காவில் சிகிச்சை பெற்றவர்கள்.

3. அண்ணா இறக்கும் முன் என் எஸ் கிருஷ்ணன் சிலையை திறந்து வைத்தார். எம்ஜிஆர் இறக்கும் முன் ஜவஹர்லால் நேரு சிலையைதிறந்து வைத்தார்.

4. இருவரும் முதலமை*ச்ச*ராக இருக்கும் போதே மறைந்தவர்கள்.

5. இருவரது உடலையும் அருகருகே மெரினாவில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

6. அண்ணா எம்ஜிஆரை எனது இதயக்கனி என்றார் .எம்ஜிஆர் அண்ணாவை எனது இதயதெய்வம் என்றார்.

7. இருவரும் மக்களை ஈர்ப்பதில் தனித்துவம் பெற்றனர். அதில் வெற்றியும் பெற்றனர்.

8. இருவரும் நள்ளிரவிலே மறைந்தனர்.

9. அண்ணா என்பது மூன்று எழுத்து தமிழில் எம்ஜிஆர் என்பது மூன்று எழுத்து ஆங்கிலத்தில்.

10. திமுகவை தோற்றுவித்தவர் அண்ணா அதிமுகவை தோற்றுவித்தவர் எம்.ஜி.ஆர்.,......... Thanks.........

oygateedat
3rd April 2020, 08:41 PM
*🍁🌺🍂 மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்., நடிப்பில் 1969 ம் ஆண்டு வெளிவந்த படம் ‘அடிமைப்பெண்’. 🌾🌸🌹*

*🍀🌷 புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் இரண்டு வேடங்களில் நடித்திருந்தனர்... 🌸💐*

*➡இவர்களுடன் அசோகன், ஆர்.எஸ்.மனோகர், சோ, பண்டரிபாய், ராஜஸ்ரீ, ஜோதிலட்சுமி ஆகியோர் நடித்திருக்கிறார்கள். கே.வி. மகாதேவன் இசையமைத்திருந்தார். வி.ராமமூர்த்தி ஒளிப்பதிவு, கே.சங்கர் இயக்கி இருந்தார். எம்.ஜி.ஆர் பிக்சர்ஸூம், இயக்குநர் கே.சங்கரும் அப்போதிருந்த தொழில்நுட்பத்தைக் கொண்டே, பிரம்மாண்டமான முறையில் படத்தை உருவாக்கியிருந்தனர்...🌷💐💐🍁*

*🌹🍃🍁 புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர், அடிமைப்பெண் படத்திற்கு முன், பல படங்களில் ராஜா வேடம் ஏற்று நடித்திருந்தாலும், இந்த படத்தில் தான் முதன்முறையாக ஐரோப்பிய பாணியில் உடை அணிந்து நடித்தார். பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம், இந்த படத்தில் இடம்பெற்றிருந்த ‘ஆயிரம் நிலவே வா’ என்ற பாடல் மூலம் தான் தமிழ்த் திரையுலகுக்கு அறிமுகமானார்...🌷🌸💐*

*🌺💐🌸 கே.வி.மகாதேவன், ஜெயலலிதாவை ‘அம்மா என்றால் அன்பு’ என்ற பாடலை பாடவைத்தார். ஜெயலலிதா பாடிய முதல் பாடல் இது என்பது குறிப்பிடத்தக்கது...💚💓💜*

*🔥🔥🔥இந்த படத்தில் டி.எம்.எஸ் பாடிய ‘தாய் இல்லாமல் நானில்லை’ என்ற பாடல் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆருக்கு தாய்மார்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுக் கொடுத்தது...♥️♥️♥️*

*🌟⭐✨ திருப்புமுனைகள் நிறைந்த திரைக்கதையுடனும் உருவான இந்த படம் பிரம்மாண்டமான வெற்றிப் படமாக அமைந்து, வெள்ளி விழா கொண்டாடியது.... 💐🌸🌷*

fidowag
3rd April 2020, 09:11 PM
தனியார் தொலைக்காட்சிகளில் வாத்தியார் எம்.ஜி.ஆர். படங்கள்*ஒளிபரப்பு*
-------------------------------------------------------------------------------------------------------------------------

29/03/20* *மெகா 24 டிவி - இரவு 8.30* மணி -* காதல் வாகனம்*

31/03/20* - சன் லைப் - காலை 11 மணி - கொடுத்து வைத்தவள்*

01/04/20* - சன் லைப்* - காலை 11 மணி - ஒரு தாய் மக்கள்*

* * * * * * * * -புதுயுகம்* *- இரவு 7 மணி - அரச கட்டளை*

02/4/20* *- மெகா 24 டிவி - காலை 8.30 மணி - குடும்ப தலைவன்*

02/04/20* -சன் லைப்* - காலை 11 மணி - நவரத்தினம்*

03/04/20* - முரசு டிவி* - காலை 11 மணி - பெற்றால்தான் பிள்ளையா*

* * * * * * * * * முரசு டிவி* - இரவு* 7 மணி* *-* பெற்றால்தான் பிள்ளையா*

04/04/20* * சன் லைப்* - காலை 11 மணி* - தெய்வத்தாய்*

* * * * * * * * * முரசு டிவி* - பிற்பகல் 2 மணி _ தொழிலாளி*

orodizli
4th April 2020, 08:10 AM
*������ மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்., நடிப்பில் 1969 ம் ஆண்டு வெளிவந்த படம் ‘அடிமைப்பெண்’. ������*

*���� புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் இரண்டு வேடங்களில் நடித்திருந்தனர்... ����*

*➡இவர்களுடன் அசோகன், ஆர்.எஸ்.மனோகர், சோ, பண்டரிபாய், ராஜஸ்ரீ, ஜோதிலட்சுமி ஆகியோர் நடித்திருக்கிறார்கள். கே.வி. மகாதேவன் இசையமைத்திருந்தார். வி.ராமமூர்த்தி ஒளிப்பதிவு, கே.சங்கர் இயக்கி இருந்தார். எம்.ஜி.ஆர் பிக்சர்ஸூம், இயக்குநர் கே.சங்கரும் அப்போதிருந்த தொழில்நுட்பத்தைக் கொண்டே, பிரம்மாண்டமான முறையில் படத்தை உருவாக்கியிருந்தனர்...��������*

*������ புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர், அடிமைப்பெண் படத்திற்கு முன், பல படங்களில் ராஜா வேடம் ஏற்று நடித்திருந்தாலும், இந்த படத்தில் தான் முதன்முறையாக ஐரோப்பிய பாணியில் உடை அணிந்து நடித்தார். பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம், இந்த படத்தில் இடம்பெற்றிருந்த ‘ஆயிரம் நிலவே வா’ என்ற பாடல் மூலம் தான் தமிழ்த் திரையுலகுக்கு அறிமுகமானார்...������*

*������ கே.வி.மகாதேவன், ஜெயலலிதாவை ‘அம்மா என்றால் அன்பு’ என்ற பாடலை பாடவைத்தார். ஜெயலலிதா பாடிய முதல் பாடல் இது என்பது குறிப்பிடத்தக்கது...������*

*������இந்த படத்தில் டி.எம்.எஸ் பாடிய ‘தாய் இல்லாமல் நானில்லை’ என்ற பாடல் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆருக்கு தாய்மார்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுக் கொடுத்தது...♥♥♥*

*��⭐✨ திருப்புமுனைகள் நிறைந்த திரைக்கதையுடனும் உருவான இந்த படம் பிரம்மாண்டமான வெற்றிப் படமாக அமைந்து, வெள்ளி விழா கொண்டாடியது.... ������*............ Thanks.........

orodizli
4th April 2020, 08:16 AM
தலைவர் நடித்து
வெளிவராதபடங்களின்
தொகுப்பு பார்ப்போம்.
மொத்தம் 30 படங்கள்.
அரசியலில் ஈடுபட்டதாலும்
ஆஸ்பத்திரியில் சில
மாதங்கள் கால் அடிபட்டதும் துப்பாக்கி சூடுபட்டாதலும்
மற்றும் சில காரணங்களால் தடைபட்டது 1.ஸ்ரீதரின் அன்று சிந்திய இரத்தம்.
2.ஸ்ரீதரின் நானும் ஒரு
தொழிலாளி
3.1970ல் இயேசுநாதர்
4. பரமபிதா
5.இன்பநிலா
6.நாடோடியின் மகன்
7.கேரளகன்னி
8.கேப்டன்ராஜ்
9.உன்னைவிட மாட்டேன் இதில் ஒரு சிறப்பு.வாலி எழுதி
இளையராஜா இசை
பாடல்
நான் படிக்கிறேன்
இன்னும் படிக்கிறேன்
உலகமென்னும் பள்ளியிலே
உண்மை என்னும்
கல்வியினை
ஓய்வில்லாமல் படிக்கிறேன்
ஒவ்வொரு நாளும்
படிக்கிறேன்
டி.எம்.எஸ்.பாடியது
தலைவருக்காக.
விவசாய பிரச்சினை தீர்க்கும் படம10.புரட்சிப்பித்தன்
ஜோடி லதா.தங்கை
ஸ்ரீதேவி.
11.தியாகத்தின் வெற்றி
இதில் 20 அம்சதிட்டம்
பற்றி எடுக்கப்பட்டது.
12.இன்பகனவு
இதன் இயக்குனராக எம்ஜிஆர13.சிலம்புக்குகை 1956ல்
14.மலை நாட்டு இளவரசன்
15.சிரிக்கும் சிலை.......... Thanks mr.SR.,

orodizli
4th April 2020, 08:21 AM
04.04.2020 இன்று தலைவர் நடித்து வெளிவராதபடங்களின் தொகுப்பு பார்ப்போம்
நேற்றைய தொடர்ச்சி.......
16.தேவர் பிலிம்ஸ் தலைவரின் நடிக்க இருந்த படம் மறுபிறவி.
19.ராமண்ணா இயக்கத்தில் பாகன்மகள் என்ற படம்
வளர்ந்து பின் நின்றது.
இதில் ஜோடி தேவிகா.
மேலும் நாகேஷ் எம்.ஆர்.ராதா உண்டு 17.அடுத்து தந்தையும்
மகனும் தேவர் பூஜையோடு நின்றது.
18.எம்ஜிஆர் ரசிக மன்ற
தலைவர் முசிறிபுத்தனும் என்.எஸ்.மணியனும்
1974 ல் மக்கள் என்பக்கம் எனும் படம்
நின்றது.
20.1956ல் ஈ.எம்.சி.கார்பரேஷனில்
குமார தேவன் படம்
பாதியில் நின்றது.
இதில் ஜமுனா ஜோடி
தலைவருக்கு.மற்றும்
கண்ணம்பா பி.எஸ்.வீரப்பா சூர்ய கலா நடித்து பின் நின்றது.
21.1957ல் தலைவர்
கே.ஆர்.ராமசாமி
நடித்த வாழப்பிறந்தவன்.
22.1941ல் இழந்தகாதல்
படம் வெளிவந்தது.அந்த படத்தின் பாட்டுபுத்தகத்தில் கடைசி அட்டையில்
சாயா என்ற படம்
வருகிறது எனவும்
நடிகர் பட்டியலில்
எம்ஜிஆர் முதல்இடத்தில் வந்தது
அதுதான் பாடல் முதல் தடவ 23.மேலும் சமூகமே நான் உனகக்கே சொந்தம்
24.ஊரே உன் உறவு
25.அண்ணா பிறந்த நாடு
26.வெள்ளிக்கிழமை
27. இதுதான் என் பதில்
28.தியாகத்தின் வெற்றி
29.கொடை வள்ளல்.
30.கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜூ
தற்போது ஐசரிவேலன்
மகன் ஐசரிகணேஷ்
கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜூ
படத்தை அனிமேஷனில் தயாரிக்க உள்ளார்.
வாழ்த்துக்கள். மகிழ்ச்சி.
: 31
எல்லைக்காவலன் படம்
ஆரம்பித்த நிலையில்
நின்றது......... Thanks...

orodizli
4th April 2020, 02:14 PM
தொண்டனின் குரலை ஓங்கி ஒலிக்கச்செய்வதில் ஒரு புரட்சி !

*தலைவர் எம்ஜிஆர் திமுகவில் இருந்த காலத்தில் தான் ரசிகர் மன்றங்கள் உருவாகின.. தமிழகம் மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் இந்த ரசிகர் மன்றங்கள் தன்னெழுச்சியாக உருவாகி மாபெரும் சக்தியாக உருவெடுத்தன.*

*தமிழகத்திற்கு அடுத்தபடியாக இலங்கையில் அதிக படியான மன்றங்கள் உருவாகின...*

*இந்தியாவில் தமிழ் பேசும் மக்கள் உள்ள மாநிலங்களில் எம்ஜிஆர் மன்றங்கள் பெருமளவில் உருவாகின.*

*அப்போதைய திமுக தலைவர் கருணாநிதி அவர்களுக்கு புரட்சி நடிகர் எம்ஜிஆரை விட எம்ஜிஆர் மன்றங்களின் வளர்ச்சி பெரும் அச்சுறுத்தலாக இருந்தது.*

*அவர் தன் மகன் மு.க.முத்துவை திரைப்படத்துறையில் இறக்கினார்.*

*எம்ஜிஆர் நடிக்கும் படங்களின் கதை அமைப்புகள் கொண்ட கதைகளில் நடிக்க வைத்ததுடன், தலைவர் எம்ஜிஆர் போல தோற்றமளிக்கும் வகையில் சிகை அலங்காரம், நடை உடை பாவனைகளையும் தன் மகன் மு.க.முத்துவுக்கு அமையுமாறு கவனித்து வந்தார் கருணாநிதி அவர்கள்.*

*மு.க.முத்து படங்கள் வெளியானவுடன் திமுகவினரை கொண்டு எம்ஜிஆர் மன்றங்களுக்கு எதிராக மு.க.முத்து மன்றங்களை கருணாநிதி உருவாக்கினார்.*

*தனக்கு எதிராக கருணாநிதி எடுக்கும் செயல்பாடுகளை அறிந்திருந்தும் தன்னம்பிக்கை கொண்ட தலைவர் எம்ஜிஆர் மு.க.முத்துவின் திரையுலக பயணத்திற்கு ஒரு உடன்பிறந்த சகோதரனை போல் பெருந்தன்மையுடன் உதவினார்.*

*தலைவர் எம்ஜிஆரை திமுகவிலிருந்து வெளியேற்றியவுடன் தமிழகத்தை ஸ்தம்பிக்க வைத்தவர்கள் எம்ஜிஆர் மன்றத்தினர் தான்.*

*சரி விஷயத்திற்கு வருவோம்..*

*அதன் பின்னர் தலைவர் எம்ஜிஆர் கட்சியை தொடங்கினார், ஆட்சியைப் பிடித்தார்.. இதன் பின்னணியில் இருந்து செயல்பட்டவர்கள் எம்ஜிஆர் மன்றத்தினர் தான் என்பது உலகறிந்த விஷயமே.*

*ஆட்சிக்கு வந்த பின் நடந்த எம்ஜிஆர் மன்ற கூட்டத்தில் முதலமைச்சர் எம்ஜிஆர் பேசும்போது:-*

*நாம் இப்போது அஇஅதிமுக என்ற கட்சியை ஆரம்பித்து ஆட்சியையும் பிடித்து விட்டோம். இனி அக்கட்சியை மட்டும் வளர்க்கும் பணிகளை மேற்கொள்வோம், எம்ஜிஆர் மன்றங்களை கலைத்து விடலாம் என்று உத்தேசித்துள்ளேன்" என பேசினார்.*

*அப்போது ஆவேசமடைந்த குமரி மாவட்ட முதல் எம்ஜிஆர் மன்ற செயலாளர் அ.தமிழ்மகன் உசேன் எம்ஜிஆரை பார்த்து*

*"தலைவரே அதிமுகவை உருவாக்கியது யார்??" என்று கேட்டார்*

*அதற்கு எம்ஜிஆர் "நான் தான்" என்றார்..*

*அடுத்த கேள்வியாக தமிழ்மகன் உசேன், "எம்ஜிஆர் மன்றத்தை உருவாக்கியது யார்?" என்று எம்ஜிஆரிடம் கேட்டார்*

*அதற்கு எம்ஜிஆர் "நீங்கள் தான்" என்றார்*

*"அதிமுகவை நீங்கள் உருவாக்கலாம் கலைக்கலாம். அதற்கு உங்களுக்கு எல்லா உரிமையும் அதிகாரமும் உள்ளது.*

*ஆனால் எம்ஜிஆர் மன்றங்களை உருவாக்கியது நாங்கள்.*
*அதை கலைக்க உங்களுக்கு எந்த அதிகாரமோ உரிமையோ இல்லை" என்றார் மறுமுனையில் குமரி மாவட்ட எம்ஜிஆர் மன்ற நிர்வாகி அ.தமிழ்மகன் உசேன்.*

*தலைவர் எம்ஜிஆர் பதிலளிக்க முடியாமல் அமர்ந்து விட்டார்*

*அதனை தொடர்ந்து எழுந்த மதுரை எம்ஜிஆர் மன்ற நிர்வாகி தலைவர் எம்ஜிஆரை பார்த்து*

*"தலைவரே.. எங்கள் மன்றத்தின் உழைப்பு தான் உங்கள் கட்சியும் ஆட்சியும்.. ஆனால் அதை மறந்து உங்கள் அமைச்சர்கள், நாங்கள் பொது பிரச்சனையின் மனு கொடுத்தாலும் அவர்கள் அதை கண்டுக் கொள்வதில்லை" என புகார் கூறினார்.*

*அதற்கு எம்ஜிஆர், "எந்த அமைச்சர் உங்கள் கோரிக்கையை நிறைவேற்றவில்லை? இங்கு அனைத்து அமைச்சர்களும் வந்துள்ளார்கள். பெயரை மட்டும் சொல்லுங்கள் உங்கள் முன்னிலையில் கேட்கிறேன்" என்று பதிலளித்தார்.*

*அதற்கு அந்த மதுரை நிர்வாகி.. "தலைவரே உங்களிடமே பொது பிரச்சனைக்காக மூன்று மனுக்கள் அளித்தேன், நீங்கள் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?" என்று எதிர் கேள்வி கேட்டார் தலைவரை நோக்கி.*

*தலைவர் எம்ஜிஆர் பதிலளிக்க முடியாமல் திகைத்துப் போய் நின்றார்.*

*இதெல்லாம் அந்த காலம்..*
*தலைவனை தொண்டன் கேள்வி கேட்க முடிந்தது.*

*தான் நேசிக்கும்.. ரசிக்கும் நடிகரைப் பார்த்து கேள்வி கேட்க முடிந்தது.*

*தலைவர் எம்ஜிஆர் இருந்த வரை எம்ஜிஆர் மன்ற நிர்வாகம் கட்சிக்கு அப்பாற்பட்டு சுதந்திரமாக செயல்பட்டது.*

*கூட்டங்களை மாநாடுகளை எம்ஜிஆர் மன்ற நிர்வாகிகளே முடிவு செய்து தலைவருக்கு தெரிவிப்பார்கள்.. அழைப்பார்கள்..*

*எம்ஜிஆர் மன்றத்திற்கு மட்டும் தான் அனைத்துலக எம்ஜிஆர் மன்ற பொதுச் செயலாளர் என்ற பதவி உள்ளது.*

*தலைவர் எம்ஜிஆர் அவர்களின் மறைவுக்குப் பின் எம்ஜிஆர் மன்றம் அஇஅதிமுகவின் ஒரு அணியாக மாற்றப்பட்டது.*

*இப்போது எம்ஜிஆர் மன்றத்தின் அனைத்துலக எம்ஜிஆர் மன்ற பொதுச் செயலாளராக தலைவரின் நிழலில் வளர்ந்த மூத்த நிர்வாகி
திரு அ. தமிழ் மகன் உசேன் உள்ளார்.

*காகிதம் ராஜன்*

திருத்தப்பட்ட பகிர்ந்த பதிவு !

படம் : தலைவர் எம்.ஜி.ஆருடன் தொண்டர் தமிழ் மகன் உசேன்.

-#இதயக்கனி எஸ். விஜயன்........... Thanks.........

orodizli
4th April 2020, 02:24 PM
https://m.facebook.com/groups/1666545363671016?view=permalink&id=2658318681160341&sfnsn=wiwspwa&d=w&vh=i&d=w&vh=i&extid=Ds2Roo3EUcNB4pAm......... Thanks.........

orodizli
4th April 2020, 05:56 PM
இதயதெய்வம் பொன்மனச்செம்மல் , கழக நிறுவனர்
புரட்சிதலைவரின் இதயக்கனி ,

" புரட்சித்தலைவியின் ஆங்கில புலமையும் , பன்மொழிபுலமையும்
தமிழகத்திற்கு தெரிந்தால் மட்டும் போதாது ,

இந்தியாவிற்கே , ஏன் உலகத்திற்கே தெரியவேண்டும் என்பதற்காக பாராளுமன்ற ( ராஜ்யசபா ) உறுப்பினராக ,

உருவாக்கியது மட்டுமல்லாமல் , பேரறிஞர் அண்ணா உட்கார்ந்த இருக்கையில் ( 185 ) அமரவைத்து அழகு பார்த்த நாள் இன்று !

M. அமரநாதன் B.Sc, .......... Thanks...

orodizli
4th April 2020, 06:00 PM
மக்கள் திலகத்தை காதல் காட்சிகளில் மிக சிறந்த முறையில் இயக்கிய பெருமை ப .நீலகண்டன்

அவர்களையும் சேரும் .......

காதல் மன்னன் என்று ஜெமினி புகழ் பெற்றிருந்தாலும் மக்கள் திலகம் அவர்கள் ரொமான்ஸ் காட்சிகளில் மிகவும் அழகாக , நளினமாக , நடனத்துடன் நடித்து ரசிகர்களின் நெஞ்சை கொள்ளை அடித்திருப்பார் . இனிமையான பாடல்களும் , படமாக்கப்பட்ட விதமும் , எம்ஜிஆரின் உடை ,
சிரித்தமுகம் ,மறக்க முடியாத அளவிற்கு ரசிகர்கள் ஒன்றி போனார்கள் .

இன்று பார்த்தாலும் எம்ஜிஆரின் காதல் பாடல்கள் பிரமிக்க வைக்கிறது .

இயக்குனர் ப.நீ கை வண்ணதில் வந்த சில மக்கள் திலகத்தின் கனிரச பாடல்கள் .


1. கனவுகளே ... காதல் கனவுகளே ..... நீதிக்கு தலை வணங்கு

2. ஒருவர் மீது ஒருவர் சாய்ந்து -----------நினைத்ததை முடிப்பவன்

3. நீ என்னென்ன சொன்னாலும் கவிதை - நேற்று இன்று நாளை

4. என் உள்ளம் உந்தன் ஆராதனை - ராமன் தேடிய சீதை

5. நல்லது கண்ணே .. கனவு - ராமன் தேடிய சீதை

6. தமிழில் அது ஒரு இனிய கலை --- சங்கே முழங்கு

7. இரண்டு கண்கள் பேசும் விழியில் - சங்கே முழங்கு

8. கண்ணன் எந்தன் காதலன் - ஒரு தாய் மக்கள்

9. மாலை நேர தென்றல் என்ன - நீரும் நெருப்பும்
10.கன்னி ஒருத்தி மடியில் - நீரும் நெருப்பும்
11.எங்கே அவள் என்றே மனம் - குமரிகோட்டம்
12.நாம் ஒருவரை ஒருவர் - குமரிகோட்டம்
13.தொட்டு கொள்ள வா. தொடர்ந்து - மாட்டுக்கார வேலன்
14,நீல நிறம் - வானுக்கும் - என் அண்ணன்
15.மயங்கும் வயது ......- கணவன்
16.சிரித்தாள் பதுமை - கண்ணன் என் காதலன்
17.நினைத்தேன் வந்தாய் நூறு வயது - காவல்காரன்
18.மெல்ல போ .மெல்ல போ - காவல்காரன்
19.என்னருகே நீ இருந்தால் - திருடாதே
20.பாலாற்றில் தேனாடுது - கொடுத்து வைத்தவள் .


மேற்கண்ட பாடல்களில் மக்கள் திலகத்தின் வசீகர தோற்றமும் , காதல் பாவனைகளும் அருமை.......... Thanks.........

orodizli
5th April 2020, 08:44 AM
*🌺🌷💐 உரிமைக்குரல், 1974 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்... ❤💜💙*

*💚💓💛 ஸ்ரீதர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் புரட்சித் தலைவர் எம். ஜி. ஆர், லதா, வி. எஸ். ராகவன் மற்றும் பலரும் நடித்திருந்தனர்... 🍀🌸🌺*

⬇⬇⬇⬇⬇⬇

*உரிமைக்குரல் (திரைப்படம்)*
*இயக்கம் - ஸ்ரீதர்*
*தயாரிப்பு - கண்ணைய்யா சித்ரயுகா*
*இசைசை - எம். எஸ்.விஸ்வநாதன்*
*நடிப்பு - எம். ஜி. ஆர், லதா*
*வெளியீடு - நவம்பர் 7, 1974*
*நீளம் - 4751 மீட்டர்*

*MGR_Vs_Latha*

*♥♥♥ தங்கமே தோற்றுப் போகும் மேனி அழகராம் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்கள், இந்தப் பாடலின் இறுதியில் கன்னியர் கூட்டத்தை வீழ்த்தி வழக்கம் போல் வெற்றி பெறுவார்... 🌸💐🌺🌷*......... Thanks.........

orodizli
5th April 2020, 08:47 AM
நிழலில் எதிரிகள்; நிஜத்தில் நண்பர்கள்
������������������������������

M.G.R. பற்றி பேசினால் நம்பியார் பற்றி பேசாமல் இருக்க முடியாது.

எம்.ஜி.ஆர். படங்களில் வில்லனாக நம்பியார் வந்த பிறகுதான் படத்தில் விறுவிறுப்பு கூடும். படத்தில்தான் எம்.ஜி.ஆருக்கு அவர் வில்லனே தவிர, உண்மையில் நெருங்கிய நண்பர்.

எம்.ஜி.ஆரை பெயர் சொல்லி அழைக்கும் உரிமை பெற்ற ஒரு சிலரில் நம்பியாரும் ஒருவர். ரொம்ப ஜாலியான பேர்வழியும் கூட. அவரது நகைச்சுவையை எம்.ஜி.ஆரும் விரும்பி ரசிப்பார். இருவரும் நிழலில் எதிரிகள். நிஜத்தில் நண்பர்கள்.

எம்.ஜி.ஆர். கத்தி சண்டைக் காட்சிகளில் நடிப்பதை பார்த்து அவரை ‘அட்டை கத்தி வீரர்’ என்றெல்லாம் அக்காலத்தில் விமர் சனங்கள் எழுந்தது உண்டு. ஆனால், உண்மை யான கத்தியைக் கொண்டே எம்.ஜி.ஆர். படங்களில் சண்டை போட்டிருக்கிறார். அவர் பயன்படுத்திய கத்திகள் சென்னையில் உள்ள அவரது நினைவு இல்லத்தில் மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.

‘சர்வாதிகாரி’ படத்தில் நம்பியாருடனான வாள் சண்டைக் காட்சியில் எம்.ஜி.ஆரின் கத்தி நம்பியாரின் கட்டை விரலை ஊடுருவிவிட்டது. அதே போல, ‘அரசிளங்குமரி’ படம் எம்.ஜி.ஆரின் வாள் வீச்சுக்காகவே புகழ் பெற்றது.

அந்தப் படத்தில் எம்.ஜி.ஆருக்கும் நம்பி யாருக்கும் ஆக்ரோஷமான சண்டை. ஒரு நாள் படப்பிடிப்பில் நம்பியாரின் கத்தி எம்.ஜி.ஆரின் கண்ணுக்கு மேலே புருவத்தில் பட்டு கிழித்து விட்டது. படத்துக்கான மேக் அப் இல்லாமல் எம்.ஜி.ஆர். தனது வழக்கமான தோற்றத்தில் இருக்கும்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களில் இடது புருவத்தில் அந்தத் தழும்பு தெரியும்.

படப்பிடிப்பின்போது எம்.ஜி.ஆரின் புருவத் தில் நம்பியாரின் கத்தி பட்டு ரத்தம் கொட்டுகிறது. இன்னும் இரண்டு அங்குலங்கள் கீழே பட்டிருந் தால் எம்.ஜி.ஆரின் கண் பார்வை பறிபோயிருக் கும். அங்கிருந்த அனைவரும் அதிர்ச்சியில் உறைந்து போய்விட்டனர். ஓடி வந்த உதவியாளர் ஒருவர், எம்.ஜி.ஆரின் புருவத்தில் ரத்தம் கொட்டிய இடத்தில் துணியை அமுக்கிப் பிடித்தபடி, நம்பியாரைப் பார்த்து,

‘‘என்னண்ணே, பார்த்து செய்யக் கூடாதா? நீங்க கூடவா இப்படி?’’
என்று இரைந்தார். நம்பியாருக்கும் வருத்தம்.

எம்.ஜி.ஆர். உடனே,

‘‘அவருக்கு என் மீது கோபம் இல்ல; அந்தக் கத்திக்குத்தான் என் மீது கோபம்’’ என்று சொல்லி அந்த இடத்தில் சகஜ நிலையை ஏற்படுத்தினார்.

பின்னர், நம்பியாரைப் பார்த்து,

‘‘ஏன்யா இப்படி செஞ்சீரு?’’ என்று எம்.ஜி.ஆர். கேட்டார்.

‘‘நியாயமாக பார்த்தால் எனக்கு நீங்கள் நன்றி சொல்லணும்’’ - நம்பியார் பதில்.

தெரியாமல்தான் என்றாலும் கத்தியாலும் குத்தி விட்டு, அதற்கு நன்றி வேறா? என்று நினைத்த படி ‘‘ஏன்?’’ என்று கேட்ட எம்.ஜி.ஆருக்கு,

‘‘டைரக்டர் சொன்ன இடத்தில் குத்தாமல் இருந்ததற்காக’’ என்று மேலும் புதிர் போட்டார் நம்பியார்.

‘‘டைரக்டர் என்ன சொன்னார்?’’ - வியப்புடன் கேட்டார் எம்.ஜி.ஆர்.

‘‘நெஞ்சில் குத்தச் சொன்னார்’’

என்ற நம்பியாரின் பதிலைக் கேட்ட எம்.ஜி.ஆர். சிரித்த சிரிப்பால் படப்பிடிப்பு அரங்கமே அதிர்ந்தது.

எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்தபோது அவரைப் பார்க்க அவரது வீட்டுக்கு நம்பியார் சென்றுள்ளார். அமைச்சர்கள் உட்பட வி.ஐ.பி-க்கள் எம்.ஜி.ஆரை பார்க்க காத்திருந்தனர். நம்பியார் வந்துள்ள விஷயம் எம்.ஜி.ஆருக்குத் தெரிவிக்கப் பட்டது. அவர் உடனே தனது அறையின் கதவைத் திறந்து நம்பியாரைப் பார்த்து உள்ளே வரும்படி சைகை காட்டிவிட்டு சென்றார்.

தங்களைத்தான் எம்.ஜி.ஆர். கூப்பிடுகிறார் என்று நினைத்துக்கொண்டு அங்கிருந்த அமைச்சர்கள் சிலர் எம்.ஜி.ஆர். அறைக்குச் சென்றனர். நம்பியார் வராததைப் பார்த்த எம்.ஜி.ஆர். மீண்டும் தனது அறையின் கதவைத் திறந்து, நம்பியாரைப் பார்த்து

‘‘உன்னைத்தான். உள்ளே வாய்யா’’
என்றார். நம்பியார் உள்ளே வந்த பின் உதவியாளரிடம் எல்லோருக்கும் காபி கொண்டு வருமாறு எம்.ஜி.ஆர். கூறினார். அந்த உதவியாளரை நம்பியார் தடுத்து,

‘‘எனக்கு மட்டும் ஒரு காபி கொண்டு வாருங்கள்’’ என்றார்.

அங்கிருந்த அமைச்சர் ஒருவர் நம்பியாரைப் பார்த்து,

‘‘ஏன், நாங்க என்ன பாவம் செஞ்சோம்?’’ என்று நம்பியாரிடம் கேட்டார். அதற்கு,

‘‘இங்கே நான் மட்டும்தான் விஐபி’’ என்ற நம்பியாரின் பதிலால் எம்.ஜி.ஆர் மட்டுமின்றி கேள்வி கேட்ட அமைச்சர் உட்பட எல்லோரும் சிரித்தனர்.

நகைச்சுவை உணர்வு உள்ளவர்களால்தான் நல்ல நகைச்சுவையை ரசிக்க முடியும். எம்.ஜி.ஆருக்கு நகைச்சுவை உணர்வு அபாரம்.

பல்வேறு இடையூறுகளுக்கு இடையே வெளி நாடுகளில் எம்.ஜி.ஆர். எடுத்து வெளியிட்டு மிகப் பெரும் வெற்றி பெற்ற ‘உலகம் சுற்றும் வாலிபன்’ படத்தில்தான் நடிகை லதா அறிமுகம். முதல் படத்திலேயே கதாநாயகி. அதிலும் உச்ச நட்சத்திரமான எம்.ஜி.ஆருக்கு ஜோடி. ஆரம்பத்தில் எம்.ஜி.ஆர். என்ற ஆளுமை முன் நடிப்பதில் லதாவுக்கு உள்ளூர நடுக்கம். படத்தின் இயக்குநரும் எம்.ஜி.ஆர்தான். லதா நடித்த காட்சிகளில் அவர் எதிர்பார்த்த அளவுக்கு நடிக்கவில்லை. காரணம் கேட்டார் எம்.ஜி.ஆர்.

‘‘சார், உங்கள் முன் நடிக்க எனக்கு தயக்க மாக இருக்கிறது’’ என்றார் லதா.

இவ்வளவு ஏற்பாடுகளுக்குப் பிறகு, நடிக்கத் தயக்கம் என்றால் யாருக்குத்தான் கோபம் வராது? ஆனாலும், லதாவின் நிலையை எம்.ஜி.ஆர். புரிந்துகொண்டார்.

அவருக்கு தைரியம் ஏற்படுத்த எம்.ஜி.ஆர். சொன்னதைக் கேட்டு விழுந்து விழுந்து சிரித்த லதா, இயல்பான நிலைக்கு வந்து நன்றாக நடிக்கத் தொடங்கிவிட்டார். லதாவின் தயக் கத்தை போக்குவதற்காக எம்.ஜி.ஆர். கேட்ட கேள்வி...

‘‘பேசாமல் படத்தின் கதாநாயகனை மாத்திட லாமா?’’

‘நாடோடி மன்னன்’ படத்தை எம்.ஜி.ஆர். தானே தயாரித்து, இயக்கி, கதாநாயகனாக நடித்தார். பிரம்மாண்டமான வெற்றியைப் பெற்ற இந்தப் படத்தின் வெற்றி விழா 16.10.1958-ல் மதுரையில் நடந்தது. மதுரை ரயில் நிலையத்தில் இருந்து விழா நடந்த தமுக்கம் மைதானம் வரை 4 குதிரைகள் பூட்டிய சாரட் வண்டியில் மக்களின் ஆரவார வரவேற்புக்கு இடையே எம்.ஜி.ஆர். ஊர்வலமாக அழைத்து வரப்பட்டார்.

எம்.ஜி.ஆர். சென்ற சாரட் வண்டிக்கு முன் உலக உருண்டையின் மீது 110 பவுனில் தங்க வாள்
(மதுரையில் புகழ்பெற்ற RM அப்பாவுசெட்டியார் நகைக்கடையில் செய்யப்பட்டது) எடுத்துச் செல்லப்பட்டது.

விழாவில் எம்.ஜி.ஆருக்கு தங்க வாளை நெடுஞ்செழியன் பரிசளித்தார். முதன்முதலில் பொதுமக்கள் முன்னிலையில் நடந்த திரைப்பட வெற்றி விழா இதுதான்!

நன்றி:இந்து தமிழ்............ Thanks.........

orodizli
5th April 2020, 08:48 AM
https://www.facebook.com/214921096051028/posts/508011633408638/?sfnsn=wiwspwa&extid=8YA5N2XWHPYq9Crz&d=w&vh=e... Thanks......

orodizli
5th April 2020, 12:52 PM
#ஒரு #சாமானியனின் #பார்வையில் #எம்ஜிஆரின் #நடிப்பு

எனது நண்பர்களுடன் நாகர்கோயில் கார்த்திகை திரையரங்கு சென்று எம்.ஜி.ஆர் நடித்து இயக்கி தயாரித்த நாடோடி மன்னன் திரைப்படத்தைப் பார்த்தோம். நான் அந்தப்படத்தை முதல்முறையாகப்பார்த்தது 1972 ல். நான் ஐந்தாம் வகுப்பு மாணவன் அப்போது. அன்று கண்ட காட்சிகள் பலவும் நினைவில் அப்படியே நீடிக்கின்றன.

அன்றெல்லாம் நாடோடி மன்னன் வெளியாவதென்பது ஒரு திருவிழா போல. வருடாந்தரத் திருவிழா. பலரும் பத்துப்பதினைந்து தடவைப் பார்த்திருப்பார்கள். ஆனால் அரங்கில் கூட்டம் நெரிபடும். படம் முழுக்க ரசிகர்களின் எதிர்வினை இருக்கும். வசனங்கள் வருவதற்கு முன்னரே அவற்றுக்கான கைத்தட்டல்கள் தொடங்கிவிடும். பாட்டுக்குரிய சந்தர்ப்பம் வருவதற்குள்ளே அரங்கு பாடத்தொடங்கிவிடும்.

மீண்டும் நாடோடி மன்னன் படத்தைப்பார்த்தது 1980ல், பட்டப்படிப்பு படிக்கையில். அப்போது நான் மலையாளப்படங்களின் ரசிகனாகிவிட்டிருந்தேன். படம் பிடிக்கவில்லை. கேலிசெய்தபடி பார்த்தது நினைவிருக்கிறது. இப்போது நவீனத் தொழில்நுட்பத்துடன் மேம்படுத்தப்பட்ட பிரதி என போட்டிருந்தனர். சரி, போய்த்தான் பார்ப்போமே என்று கிளம்பினோம். அரங்கில் நூறுபார்வையாளர்கள். பெரும்பாலானவர்கள் வயதானவர்கள்.

படம் தொடங்கும்வரை எந்த எதிர்பார்ப்பும் இல்லை. வேடிக்கைபார்க்கும் மனநிலைதான். ஆனால் பல ஆச்சரியங்கள் இருந்தன. மூன்றரை மணிநேரம் ஓடியபடம் கொஞ்சம் கூட சலிப்பேற்படுத்தவில்லை. தொடர்ந்து பார்க்கவைத்தது படத்தின் சரளமான, விரைவான திரைக்கதை. எம்.என்.ராஜம்- எம்.ஜி.ஆர் சம்பந்தப்பட்ட ஒரு காட்சியில் தவிர எங்குமே தமிழ்சினிமாவின் புகழ்பெற்ற மெலோடிராமா இல்லை என்பது படத்தை ரசிக்கவைத்த முக்கியமான அம்சம்.

இம்முறை, சினிமாவுக்குள் வந்துவிட்டபின் அறிந்தவற்றுடன் பார்க்கையில் உணர்ந்த சில விஷயங்களை குறிப்புட்டுச் சொல்லவேண்டும். சினிமா என்னும் விசேஷமான காட்சிக் கலைக்குரிய தனிநடிப்பை அறிந்த நடிகர் எம்.ஜி.ஆர். அவருடைய இந்தத்திறன் தமிழில் மதிப்பிடப்படவே இல்லை. அவர் ‘நடிக்கத்தெரியாதவர்’ என்றே திரும்பத்திரும்ப சொல்லப்பட்டுவருகிறது. அவருடைய ரசிகர்களுக்குக்கூட அவர் நடிகர் என்னும் எண்ணம் இல்லை.

இப்படத்தில் எம்ஜிஆர், எம்.ஜி.சக்ரபாணி, பானுமதி மூவரும்தான் மிக இயல்பாக நடித்திருந்தனர். பிறரும் இயக்குநரால் மிகவும் கட்டுப்படுத்தப்பட்டு நடிக்கவைக்கப்பட்டிருந்தமையால் உறுத்தவில்லை. ஆனால் அப்போதுகூட பிறருடைய நாடகத்தனமான நடிப்புக்கு நடுவே இம்மூவரும் தனித்துத் தெரிந்தனர்.

சினிமாவுக்குத்தேவை ‘நடிப்பு’ [acting] அல்ல ‘நடப்பு’ [behaving] தான் என்பது மிகத்தெளிவாக எம்.ஜி.ஆருக்குத் தெரிந்திருக்கிறது. அவருடைய அந்த மூக்குறிஞ்சும் ஸ்டைல் செயற்கைதான், ஸ்டைல் எதுவானாலும் செயற்கையே, ஆனால் அதையே அளந்துதான் செய்திருக்கிறார். மிக இயல்பான சிரிப்பு. அச்சுமொழி வசனத்தைக்கூட இயல்பாகவே சொல்கிறார். அவை வசனமென்றே தெரியாதபடி. உணர்ச்சிவசப்படுகிறார், உணர்ச்சிகளைக் ’காட்ட’வில்லை காதல்காட்சியில் காமிரா இருக்கும் உணர்வே இல்லாமல் அக்காட்சிக்குள் இருக்கிறார்.

எம்.ஜி.ஆரின் தலைமுறையில் சினிமாவை அவரளவுக்கு எவரும் புரிந்துகொள்ளவில்லை என்றே எனக்குப்படுகிறது. நாடகபாணி நடிப்பு சினிமா பார்க்கும் அனுபவத்தை பெரிய வதையாக ஆக்கக்கூடியது. இன்றுகூட சினிமா நடிகர்களிடமிருந்து நடிப்பை இல்லாமலாக்க ரத்தம் சிந்துகிறார்கள் இயக்குநர்கள். #எம்ஜிஆர் #என்னும் #நடிகரை #நம் #விமர்சகர்கள் #மறுமதிப்பீடு #செய்யவேண்டும்.

ஓர் இயக்குநராக காட்சிகளை ஒருங்கமைத்திருக்கும் விதமும், தொடர்ந்து எல்லா படச்சட்டங்களிலும் சிக்கலான காட்சியசைவுகள் ஊடும்பாவுமாக இயல்பாக அசைவமைக்கப்பட்டிருக்கும் விதமும், தொலைதூரப் பின்னணியில்கூட இயல்பான நடிப்பும், சண்டைக்காட்சிகளில் எல்லா சட்டகங்களும் கொப்பளித்துக்கொண்டே இருப்பதும் எம்.ஜி.ஆர் அவருடைய படங்களை இயக்கிய இயக்குநர்களில் ஸ்ரீதருக்கு மட்டுமே நிகரானவர் என்பதைக் காட்டுகின்றன.

அனேகமாக எல்லா துணை நடிகர்களிடமும் அளவான நடிப்பை வாங்கியிருக்கிறார். எல்லா காட்சிகளையும் மிகச்சரியான நீளத்தில் அமைத்திருக்கிறார். பெரும்பாலானவற்றை மிகக்குறைவான வசனங்களுடம் பெரும்பாலும் காட்சிவழியாகவே உணர்த்தியிருக்கிறார். உதாரணம் எம்.என்.நம்பியார் தன்னைப்பற்றி கண்ணாடியில் பார்த்து சொல்லிக்கொள்வதும், அதே கண்ணாடியில் எம்ஜிஆரின் படம் தெரிவதும்.

நான் இப்படி ஒரு திரையனுபவமாக இந்தப்படம் இருக்கும் என நினைக்கவேயில்லை. இது தழுவல்படம்தான். அலக்ஸாண்டர் டூமாவின் மேன் இன் த அயர்ன் மாஸ்க் வெவ்வேறு வடிவில் உலக வணிகசினிமாவில் வந்தபடியே இருந்திருக்கிறது. ஹாலிவுட் படங்களை நகல்செய்தே பெரும்பாலும் காட்சிகள் எடுக்கப்பட்டிருக்கின்றன. அரண்மனை, உடையலங்காரம் எல்லாமே ஹாலிவுட் பாணி. நம்மூர் வரலாற்றுக்கும் இதற்கும் சம்பந்தமே இல்லை. இது ஒரு பொழுதுபோக்கு மிகைபுனைவு, அவ்வளவுதான். அந்த எல்லைக்குள் நின்றுகொண்டு வணிகரீதியான எல்லா நுட்பங்களையும் உணர்ந்து எடுக்கப்பட்டிருக்கிறது படம்.

உதாரணமாக இடைவேளைக்குப்பின் படம் ஒரு தீவுக்குச் சென்றுவிடுகிறது. இன்னொரு படமாகவே ஆகிவிடுகிறது. மிகநீளமான இந்தப்படம் முதல்பகுதியின் களத்திற்குள்ளேயே இருந்திருந்தால் அரண்மனைச்சதியை மட்டுமே காட்டிச் சலிப்பூட்டியிருக்கும் என வணிகத்திரைக்கதையை அறிந்தவர்கள் சொல்லமுடியும். மேன் இன் தி அயன் மாஸ்க் திரைவடிவங்களில் பலவற்றில் அந்தச் சலிப்பு உண்டு. உண்மையில் மூலநாவலிலேயே அந்தச்சலிப்பு உண்டு, த்ரீ மஸ்கிட்டீர்ஸ் போல சுவாரசியமான நாவல் அல்ல அது.

காட்சிகளைச் சுருக்கமாகவே அமைப்பது, தேவையற்ற குளோஸப்களை வைக்காமலிருப்பது, வெவ்வேறு காமிராக்கோணங்கள் வழியாக எப்போதும் காட்சியின் பிரம்மாண்டத்தை நினைவூட்டியபடியே இருப்பது [பல காட்சிகளில் பார்வையாளன் பொருட்களுக்கு இப்பாலிருந்து பார்க்கிறான். நிகழ்வுகள் ஆடம்பரப்பொருட்களினூடாக ஒழுகிச்செல்கின்றன] என ஒரு வணிகப்பட இயக்குநராக ஏறத்தாழ எல்லா நுட்பங்களையும் எம்ஜிஆர் அறிந்திருக்கிறார். அனைத்துக்கும் மேலாக இந்த சினிமாவில் அவர் அழகாக இருக்கிறார். அவருடைய சிரிப்பில் வெளிப்படும் அந்தச் சிறுவன் உற்சாகமானவன். அவர் போரிடுகிறார், எவரையும் வெட்டுவதே இல்லை. ஏன் அவர் அவ்வளவு விரும்பப்பட்டார் என்பதைக் காட்டுகிறது இந்தப்படம்.

உண்மையில் தமிழ் சினிமாவில் நாம் இன்று வெறுக்கும் பல விஷயங்கள் மேலும் பத்தாண்டுகளுக்குப்பின் உருவாகி வந்தவை என நினைக்கிறேன். மிகையான நாடகத்தன நடிப்பு, செயற்கையான வசன உச்சரிப்பு, கண்களை உறுத்தும் காமிராக்கோணங்கள் போன்றவை. இந்தப்படத்தில் காமிரா இருப்பதே தெரியவில்லை. தனியாகக் கவனித்தால் சீரான நிதானமான காமிரா நகர்வை உணரமுடிகிறது. இன்றைய சினிமாக்களை என்னால் பலசமயம் பார்க்கவே முடிவதில்லை. ஒரு ரோலர்கோஸ்டரில் ஏறி இறங்கி சுழன்றபடி கீழே நிகழ்வதைப் பார்ப்பதுபோலிருக்கிறது இன்றைய காமிரா ஓட்டமும் வெட்டிவெட்டிச் செல்லும் படத்தொகுப்பும்.

வீட்டுக்குத்திரும்பும்போது மீண்டும் மீண்டும் வியப்புடன் பேசிக்கொண்டே வந்தேன். மூன்றரை மணிநேரம் ஒருநிமிடம்கூட சலிக்காமல் இந்தப்படத்தை பார்த்திருக்கிறேன். மிகப்பெரும்பாலான சமீபகாலப் படங்களில் நான் முதல் பதினைந்து நிமிடங்களுக்குள் நன்றாகத் தூங்கிவிடுவேன். திரும்பவரும்போது அருண்மொழியிடம் சுருக்கமாகக் கதையைக் கேட்டுத்தெரிந்துகொள்வேன்.

வணிகசினிமா என்பது கேளிக்கை. ஆனால் அது சமூகத்தின் அரசியல் விழைவுகள், சமூகமாற்றம் சார்ந்த கனவுகள் ஆகியவற்றையும் உள்ளடக்கியிருக்கும். ஏனென்றால் அது பார்வையாளனை கவர்ந்து உள்ளே அமரவைக்கவேண்டும். இப்படத்தில் ஜனநாயகம், பொதுவுடைமை சார்ந்த ஆரம்ப பாடங்கள் சொல்லப்பட்டிருக்கும் விதம் கவனத்திற்குரியது. அன்று தமிழகத்தில் பலபகுதிகளில் ஜனநாயகம் வந்தபின்னரும் மன்னராட்சியும் ஜமீன்தாராட்சியும் மறைமுகமாக நீடித்தது.அன்று படம் பார்த்தவர்களில் பெரும்பாலானவர்கள் மன்னராட்சியில் பிறந்தவர்கள். புரட்சி பற்றிப் பேசுகிறது படம், கூடவே அது வன்முறையற்ற புரட்சி என்று சொல்கிறது. இப்படி என்னென்ன கருத்துருக்களை, காட்சிக்குறியீடுகளை இது பயன்படுத்தியிருக்கிறது என எவரேனும் விரிவாக ஆராயலாம்.

கேளிக்கை வடிவங்கள் எப்போதும் வெளியே இருந்து வரும் கேளிக்கைவடிவங்கள் உள்ளூர் வடிவங்களுடன் கலந்து, ரசிகர்களின் விருப்பங்களுக்கும் மனநிலைக்கும் ஏற்ப நுட்பமாக மாற்றிக்கொண்டு மெல்லமெல்ல உருவாகி வருபவை. வணிகசினிமா என்ற கலைவடிவம் ஹாலிவுட் சினிமாவுக்கும் உள்ளூர் இசைநாடகங்களுக்கும் நடுவே திரண்டுவந்த ஒன்று. அது மெல்லமெல்ல உருவாகிவந்த விதத்தை ஆராயும் எவரும் நாடோடி மன்னன் ஒரு பெரும் திருப்புமுனை, ஒரு சாதனை என்றே மதிப்பிடுவார்கள் என நினைக்கிறேன்............ Thanks FB., Friends...💐

orodizli
5th April 2020, 12:58 PM
5.04.2020 இன்று தலைவரின் வரலாற்று சுவடுகளில் நாம் நிறைய பார்க்கலாம்
என நினைக்கிறேன்.
எம்ஜிஆர் செய்த உதவிகள் நடிகராகவும்
முதல்வராகவும்
தெரிந்தும் தெரியாமலும்
கணக்கில் அடங்காது.
1.இலங்கை அதிபர் கேப்டன் பிரபாகரன்
சொந்த செலவில்
4 கோடி ரூபாய் இலங்கை மக்களுக்காக
இரண்டு சிக்காக கொடுத்தார்
முதல்வராக இருந்த போது பதிலுக்கு
ஏ.கே.47 ரக துப்பாக்கியை ஆசைப்பட்டு கேட்டு
வாங்கினார் இது போதும் என்றார்.
2.முதல்ஆனதும் கவிஞர் கண்ணதாசனுக்கு
ஆஸ்தான கவிஞர்
அரசவையில் வழங்கி
இறக்கும்வரை மாதம்
ரூ.1000.00 வழங்க உத்தரவிட்டார்.
3.இதேபோல் கவிஞர் வாலிக்கும் பின்னாநளில் மாதம்
ரூபாய் 3000.00 வழங்கினார்....... Thanks...

orodizli
5th April 2020, 01:05 PM
4.தியாகி கக்கனுக்கு
நோய்வாய் பட்டு
ஆஸ்பத்திரியில இருக்கும் போதுஉதவிகள்செய்தார்.குடும்பத்திற்கு மாதம்
500.00 ரூபாய் வழங்க உத்தரவு.
5.சின்னப்பா தேவருக்கு
படவிஷயத்தில் அதிக கவனம் அதிக லாபம்
கிடைத்தல்
6.பட்டுக்கோட்டையார்
குடும்பத்திற்கும்
மகனுங்கு வேலைவாய்ப்பு.
7.வி.கே.ராமசாமிக்கு
பண உதவி
கஷ்ட நேரத்தில்........ Thanks...

orodizli
5th April 2020, 01:09 PM
8.நாகேஷ் பிறந்தநாள்
அன்று மோதிரம் வழங்கினார் வெளிநாட்டில் ஷூட்டிங்
இருந்த போது.
10.அப்போது நடிக சங்கத்தலைவராக இருந்த மேஜர் சுந்தர்ராஜனுக்கும் சங்க
கட்டடநிதிக்கு பண உதவி செய்தார்.
9.மா.பொ.சி க்கு 83 வது
பிறந்தநாள் அன்று 83000.00 வழங்கினார்
11.இசை சக்கரவர்த்தி
எம்.எஸ்.விஸ்வநாதனுக்கு அதிக பண உதவி
குறிப்பாக உ.சு.வாலிபன் படத்திற்கு இரண்டு சாக்கு நிறைய பணம்
12.இயக்குநர் ஸ்ரீதருக்கு
படவிஷயத்தில் எதிர்பாராத லாபம்........... Thanks...

orodizli
5th April 2020, 01:14 PM
13.கிருபானந்தர் கேட்டுகொண்டபடி
கோவில் கும்பாபிஷேகத்திற்காக
முதலில் blank செக் கொடுத்தார்.பிறகு
வாரியார் பிடிவாதத்தில்
ரூபாய் 10000.00 வழங்கினார்.
15.நடிகர் ரஜினிக்கு தான் கட்டிய
ராகவேந்தர் மண்டபத்தின் பிரச்சனை தீர்த்து வைத்தல் மற்றும்
அவர் திருமண தடையை தகர்த்தார்
14.துணை நடிகர் குண்டுமணிக்கு 5 பெண்கள் திருமணத்திற்காக
100 பவுன் வழங்கியது.
அப்போது பவுன் மிகவும்
கம்மி. இருந்தாலும் மனம் வரணுமே.16.தலைவர் அண்ணன்
எம்ஜிசக்கரபாணியின்
சடலத்தில் உதவி வெட்டியானுக்கு ரூபாய்
10000.00 வழங்கினார் 17.ஏலத்தில் இருந்த வீட்டை மீட்டுக்கொடுத்தார் தலைவர் எம்கே.டி என்.எஸ்.கே நாகேஷ்
குமுதினி நடிகை அடங்கும்......... Thanks...

orodizli
5th April 2020, 04:47 PM
ஆயிரத்தில் ஒருவர்

‘ஏப்ரல் பதினாலு பூஜை வச்சுக்கலாம்’ என்றார் எம்.ஜி.ஆர்.

சுற்றி நின்ற அத்தனைபேருக்குமே ஆச்சரியம். ஒருவருக்கொருவர் பார்த்துக்கொண்டனர். அதை எம்.ஜி.ஆரும் பார்த்தார். ‘நான்தான் ஹீரோ; சீக்கிரம் கதையை ரெடி பண்ணுங்க. நீங்கதான் வசனமும் எழுதறீங்க’ என்று சொன்னபோது கவிஞர் வாலி கருங்கல் சிலைபோல நின்றுகொண்டிருந்தார். எம்.ஜி.ஆருக்கு மிகவும் நெருக்கமான உளவுத்துறை அதிகாரி மோகன்தாஸுக்கு மயக்கம் வருவதுபோல இருந்தது.

என்ன ஆயிற்று இவருக்கு? தமிழ்நாட்டின் முதலமைச்சர். எத்தனை பெரிய பொறுப்புகள் நிறைந்த பதவி. சட்டம். ஒழுங்கு. மக்கள். பிரச்னை. திட்டங்கள். கோப்புகள். ரசிகர்கள். தொண்டர்கள். எத்தனை எத்தனை நெருக்கடிகள். எத்தனை எத்தனை பிரச்னைகள். எப்போது சறுக்குவார் என்று காத்துக்கொண்டிருக்கிறார் எதிர்க்கட்சித் தலைவர் கலைஞர். எல்லாவற்றையும் சமாளிக்கவேண்டும். மூச்சுவிடக்கூட நேரம் இல்லை. இருந்தும் நடிக்கிறேன் என்கிறாரே?
என்ன மனிதர் இவர்? பதவிக்கு வந்த ஒரே ஆண்டில் (1978) அதிகாரம் அலுத்துவிட்டதா? நாற்காலி கசந்துவிட்டதா? சொடக்கு போடும் நேரத்தில் எதையும் சாதிக்கும் வித்தை தெரிந்தவர் எம்.ஜி.ஆர் என்பது வாஸ்தவம்தான். ஆனாலும் இது சாத்தியமா?

சாத்தியம்தான் என்று புன்னகை செய்தார் எம்.ஜி.ஆர். அந்தப் புன்னகையில் தெறித்து விழுந்த பொறி மற்றவர்களை ஆக்கிரமித்தது. கதை தயாரிக்கும் பணிகள் தொடங்கின. பத்து நாள்கள். கதை தயார் என்ற விவரத்தைத் தொலைபேசியில் சொன்னார் வாலி. நல்லது. அன்று இரவே வாலி வீட்டுக்கு வந்தார் எம்.ஜி.ஆரின் உறவினர் கே.என். குஞ்சப்பன்.

‘நாளைக் காலை ஆறு மணிக்கு முதலமைச்சருடன் நீங்கள் மதுரை செல்கிறீர்கள். விமானம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. போகும் வழியில் முதலமைச்சரிடம் கதையைச் சொல்லிவிடுங்கள். காரியம் முடிந்ததும் நீங்கள் விமானத்திலேயே சென்னை திரும்பிவிடலாம்.’

ஆகாயத்தில் பறந்தபடியே வாலி சொன்ன கதையை எம்.ஜி.ஆர் கவனம் கலையாமல்
கேட்டார். பிறகு சில திருத்தங்களைச் சொன்னார். படத்துக்கான தலைப்பை வாலியே சொன்னார்: ‘உன்னை விடமாட்டேன்!’

விடமாட்டார்கள் என்றார் மோகன்தாஸ். எதையும் முகத்துக்கு நேராகச் சொல்லிவிடக்கூடியவர் அவர். எம்.ஜி.ஆருக்கு எதிரே அப்படிப் பேச அனுமதிக்கப்பட்ட ஒரே நபரும் அவர்தான். அப்படிச் சொன்னதற்குக் காரணம் இருந்தது. 1971 சட்டமன்றத் தேர்தலில் திமுக அபார வெற்றி பெற்று ஆட்சியைத் தக்கவைத்த சமயம் அது. வெற்றிக்குக் காரணகர்த்தாக்களுள் ஒருவரான எம்.ஜி.ஆருக்கு அமைச்சர் பதவி நிச்சயம் என்ற எதிர்பார்ப்பு எல்லோருக்கும் இருந்தது.

வெற்றிச் செய்தி வந்தபோது எம்.ஜி.ஆர் காஷ்மீரில் ‘இதயவீணை’ வாசித்துக் கொண்டிருந்தார். தொலைபேசி மூலம் தன் விருப்பத்தை கலைஞரிடம் நாசூக்காகச் சொல்லிவிட்டு, தனிவிமானம் மூலம் சென்னை வந்தார். ஆனால், ‘திரைப்படத்தில் நடித்துக்கொண்டே அமைச்சராக இருப்பது சரியாக இருக்காது. அரசியல் அமைப்புச் சட்டம் ஏற்றுக்கொள்ளாது’ என்று காரணம் சொல்லப்பட்டு அவருடைய கோரிக்கை
நிராகரிக்கப்பட்டது.

அமைச்சர் பதவிக்கே இத்தனை எதிர்ப்பு என்றால் முதலமைச்சர் பதவி எத்தனை முக்கியமானது. மத்திய அரசு இதை சகித்துக்கொள்ளுமா? அதிலும் பிரதமர் மொரார்ஜி தேசாய் கொஞ்சம் கெடுபிடியான மனிதர். சினிமா சங்கதிகளை எல்லாம் அவர் அனுமதிக்கவே மாட்டார். தவிரவும், அரசியல் அமைப்புச் சட்டத்துக்குச் சவால் விடக்கூடிய காரியம் இது. ஆகவே வேண்டாம்.

எம்.ஜி.ஆருக்கு நெருக்கமான எல்லோருமே கிட்டத்தட்ட இதே ரீதியில்தான் ஆலோசனை சொன்னார்கள். எல்லோருக்கும் புன்னகையை மட்டுமே பதிலாகத் தந்தார் எம்.ஜி.ஆர்.

காலை எழுந்ததும் தொலைபேசியை எடுத்து சில எண்களை சுழற்றினார் எம்.ஜி.ஆர்.

‘பேப்பர் பார்த்தீர்களா? இண்டியன் எக்ஸ்பிரஸ்?’

எதிர்முனையில் இருந்தவர் தட்டுத்தடுமாறி பேப்பரை எடுத்துப் பார்த்தார். அவர், முதல்நாள் எம்.ஜி.ஆருக்கு ஆலோசனை சொன்னவர்களுள் ஒருவர். செய்தித்தாளின்மீது வேகவேகமாகக் கண்களை அலைபாயவிட்டார். தட்டுப்பட்டது
அந்தச் செய்தி.

‘மாநில முதலமைச்சராக இருந்துகொண்டு தன்னுடைய கடமைகளுக்குக் குந்தகம் வராமல் திரு. எம்.ஜி.ஆர் சினிமாவில் நடிப்பதில் தனக்கு எந்தவித ஆட்சேபணையும் இல்லை’ என்று பேட்டி கொடுத்திருந்தார் பிரதமர் மொரார்ஜி தேசாய்.

செய்தியைப் படித்த அத்தனை பேருமே அசந்துபோனார்கள். எம்.ஜி.ஆர் மீண்டும் சினிமாவில் நடிக்கிறார் என்ற செய்தி டெல்லி வரைக்கும் கேட்டிருந்தது. பத்திரிகையாளர்கள் இந்த விஷயத்தைப் பற்றி எழுதி விஷயத்துக்கு தேசிய அந்தஸ்து கொடுத்திருந்தனர். பிரதமர் மொரார்ஜி தேசாயைச் சந்தித்தபோதும் இது தொடர்பான கேள்விகளை எழுப்பினர். அப்போது அவர் அளித்த பதில்தான் மேலே இருப்பது.

எப்படி நடந்தது இந்த அதிசயம்? யாருக்கும் தெரியவில்லை. படம் தொடர்பாக அடுத்தடுத்த வேலைகள் தொடங்கின. அப்போது புகழ்பெறத் தொடங்கியிருந்த இளையராஜா, இசையமைக்கப் பணிக்கப்பட்டார். மூத்த அமைச்சர் நாஞ்சில் மனோகரன் தலைமையில் படத்தின்
தொடக்கவிழா
தொடக்கவிழா ஜெகஜ்ஜோதியாக நடந்தது. எம்.ஜி.ஆரின் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கினார் இளையராஜா.

தமிழ்நாட்டில் மட்டுமல்ல. இந்தியா முழுவதிலுமே, எம்.ஜி.ஆர் படத்தில் நடிப்பதுதான் முக்கியச் செய்தி. எம்.ஜி.ஆரின் தைரியத்தைப் பத்திரிகைகள் அனைத்தும் மாய்ந்து மாய்ந்து சிலாகித்துக்கொண்டிருந்தன. அனைத்து அரசியல் கட்சிகளையும் ஒரு கலக்கு கலக்கியது எம்.ஜி.ஆரின் அறிவிப்பு.

கலைஞர் கொடுக்க விரும்பாத சுகாதாரத்துறையைத் தான் முதல்வரானதும் தன்வசம் வைத்துக்கொண்டு ஆட்டத்தின் முதல் காயை வெட்டினார். தற்போது முதலமைச்சர் பதவியில் இருந்துகொண்டே சினிமாவில் நடிப்பது வெட்டாட்டம். இந்நிலையில் எம்.ஜி.ஆரிடம் இருந்து திடீரென ஒரு அறிவிப்பு வெளியானது.

‘படம் நிறுத்தப்படுகிறது.’

வட்டமடித்துக் கொண்டிருந்த அத்தனை சர்ச்சைகளும் ஒரே நொடியில் அடங்கி ஒடுங்கிவிட்டன. ‘ஏன் நிறுத்தினீர்கள்?’ என்று எவருமே கேட்கவில்லை. அவரும் சொல்லவில்லை. அதுதான் எம்.ஜி.ஆர். அவர் எடுக்கும் முடிவுக்கு அவர் மட்டுமே
ராஜா. நிமிர்ந்து நிந்திக்கவும் முடியாது. குனிந்து குமுறவும் முடியாது.

முற்றிலும் புரிந்துகொள்ளமுடியாத நபர் அவர். மற்றவர்களால் கனவிலும் நினைத்துப் பார்க்கமுடியாத காரியங்களை அநாயாசமாகச் செய்து முடிக்கக்கூடியவர் அவர். ஆனாலும் எந்த நேரத்தில் என்ன முடிவு எடுப்பார் என்று எவராலும் ஊகிக்க முடியாது. ஒரு முடிவை பகிரங்கமாக எடுப்பார். பத்தே நிமிடங்களில் அதைத் தலைகீழாக மாற்றுவார். ஆனால் அவர் எந்த முடிவை எடுத்தாலும் அது சரியாகத்தான் இருக்கும் என்று நினைத்தனர் மக்கள்.

சத்துணவுத் திட்டம் என்றபோது எம்.ஜி.ஆரை நோக்கிக் கைகூப்பிய மக்கள், சாராய பேர ஊழல் வெடித்தபோது அதிகாரிகளை நோக்கியே கைகளை நீட்டியிருந்தனர். எம்.ஜி.ஆர்மீது சந்தேகத்தின் நிழல்கூட விழவில்லை. அதுதான் எம்.ஜி.ஆர் என்ற மந்திர வார்த்தையின் பலம்.

எம்.ஜி.ஆருக்குப் பல்வேறு பரிமாணங்கள் உண்டு. ரசிகர்களுக்குத் தலைவன். ஏழைகளுக்கு ரட்சகர். எதிர்க்கட்சிகளுக்கு சிம்ம சொப்பனம். படத்தயாரிப்பாளர்களுக்கு லாபதேவன்.வறியவர்களுக்கு வள்ளல். தமிழ்நாட்டுப் பாட்டிகளுக்கு அவர்தான் கடவுள். இன்னும் இன்னும் நிறைய பரிமாணங்கள் எம்.ஜி.ஆர் என்ற மனிதருக்குள் புதைந்து கிடக்கின்றன. ஆச்சரியங்களாலும் சுவாரஸ்யங்களாலும் பிரமிப்புகளாலும் நிரம்பிய மனிதர் அவர்.

நன்றி: வாத்யார்............... Thanks.........

orodizli
5th April 2020, 04:52 PM
#ஒன்னப்போல #உண்டா #வாத்தியாரே!!!

செய்யாறு இடைத்தேர்தல் ...
தேதி அறிவிக்கப்படுகிறது...
வேட்பாளர் நேர்காணலுக்குப் பலர் வருகின்றனர்...அதில் ஒருவர் "செய்யாறு வே.குப்புசாமி..."அவரிடம் நேர்காணலில் புரட்சித்தலைவர் கேட்கிறார்...

"என்னய்யா தேர்தலில் நிற்கிறேன் என்கிறாயே உன்னிடம் எவ்வளவு சொத்து இருக்கிறது" என்ற Mandatory கேள்வியைக் கேட்க...அதற்கு வே.குப்புசாமி, "அண்ணே! நான் தையல்கடை வைத்து நடத்திவருகிறேன். எனக்கு ஆறு பெண்பிள்ளைகள். என்னிடமிருந்த எல்லா சொத்துக்களையும் விற்று அவர்களுக்கு திருமணமும் செய்துவிட்டேன்...
ஆனால், #என்னிடமுள்ள #ஒரே சொத்து '#என் #தையற்கடையில் #மாட்டிவைத்திருக்கும் #உங்கள் #திரு #உருவப்புகைப்படம் #தான்..என்று சொல்ல...

இதைக் கேட்ட நம் #பொன்மனச்செம்மல் மனம் கரைந்துவிட்டார்.
'கவலைப்படாதய்யா, உன்ன தான்யா இந்த தொகுதியில் வேட்பாளராக நிற்க வைக்கப் போறேன்...
எனக்கு உன் சொத்து முக்கியமில்லை. உன்னைப் போன்ற உண்மையான தொண்டர்களை நான் இழக்கவிரும்பவில்லை. ...
தைரியமா போயிட்டு வா..' என்றார்.

யாரால இப்படி சொல்லமுடியும்???

வே.குப்புசாமிக்கான தேர்தல் செலவுகளை தலைமை கழகத்தையே ஏற்கச்செ ய்ததோடல்லாமல் அவரை 26000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச்செய்தார்.

இச்செய்தி அன்று #குமுதம் வார இதழில் வெளிவந்தது.

அன்றாடங்காய்ச்சிகளைக்கூட அரசு அதிகாரத்தில் பங்கு பெறச்செய்தவர் நம் பொன்மனச்செம்மல்!

அதேபோல் உப்பிலியாபுர*ம் ச*ரோஜா, எம்ஜிஆர் காலத்தில் ச*த்துண*வு கூட*த்தில் வேலை பார்த்துவ*ந்த*வ*ர். அவ*ரையும் எம்.எல்.ஏ. ஆக்கிய*வ*ர் புர*ட்சித்த*லைவ*ர்...

இனிய மாலை வ*ணக்கத்துட*ன்........... Thanks.........

orodizli
5th April 2020, 05:03 PM
மைனாரிட்டி திமுக - ஒரு எளிய விளக்கம்

1990 க்கு முன்பு தமிழ்நாட்டு இஸ்லாமியர்கள் இந்து கோவில்களுக்கு வருவதும், இந்துக்கள் மசூதிக்கும், தேவாலயங்களுக்கு போய் வேண்டிக் கொள்வதெல்லாம் சாதாரணம். அம்மை நோய் வந்தால் முஸ்லிம் பெண்கள் மாரியம்மனுக்கு நேர்ந்து கொள்வதும், கோவில் திருவிழா கமிட்டியில் முஸ்லிம்கள் ஒருவராக இருந்து திருவிழாக்களை முன்நின்று நடத்தியதையும் நாற்பது வயதை கடந்தவர்கள் யாரும் மறுக்க முடியாது.

தொப்புள் கொடி உறவுகளாக இருந்தவர்கள் தாலிபான்களாக எப்போது மாறினார்கள்...? மதத்தை கடந்து இந்துக்களிடமும் மிகுந்த செல்வாக்கு பெற்று விளங்கிய பாதிரியார்கள் இன்று எப்படி ஹிந்து விரோதிகளாக மாறினார்கள்? அனைத்தும் திமுகவின் திருவிளையாடல்கள் தான்.

அண்ணா துரையின் மரணத்திற்க்குப் பின் 1969 ல் முதலமைச்சரான கருணாநிதி லட்சங்களில் ஊழல் செய்து கொண்டிருந்தார். அவருக்கான அறிவு அவ்வளவு தான். 1976 வரை எட்டு ஆண்டுகளாக ஆட்சியிலிருந்து தமது அறிவுக்கு எட்டின முறைகளில் ஊழல் செய்தார். அதாவது பெரும்பாலும் அரசு கான்ட்ராக்ட்களில் கமிஷன். லட்சங்களில் மட்டுமே ஊழல் செய்யத் தெரிந்த அப்பாவி கருணாநிதி அவர்.

இந்த நிலையில் தி.மு.க உடைந்து எம்ஜிஆர் தலைமையில் அ.தி.மு.க உதயமாகிறது. எம்ஜிஆர் என்னும் மக்கள் செல்வாக்கு பெற்ற மனிதர் இருந்த வரையில் கருணாநிதி ஒரு காகிதப்புலியாகத்தான் தமிழக அரசியல் களத்தில் இருந்தார். எம்ஜிஆர் மறைந்த பின் வந்த பொதுத்தேர்தல் வரை அதாவது 1989 வரையிலான 13 ஆண்டுகள் கருணாநிதிக்கு வனவாசம் தான். இந்த வனவாச காலத்தில் கட்சியை நடத்த திமுக வினர் பிச்சையெடுத்துக் கொண்டிருந்தனர் என்றே சொல்லலாம்.

வருடத்திற்கு மூன்று முறை முப்பெரும் விழா, ஐம்பெரும் விழா, இந்தி எதிர்ப்பு மாநாடு, டெஸோ மாநாடு, அண்ணா பிறந்த நாள் விழா, பெரியார் விழா,... இப்படி மக்களையும், தொழில் அதிபர்களையும் ஏமாற்றித்தான் வயிறு வளர்த்து வந்தனர். கருணாநிதியின் மீதான மக்களின் அதிருப்தி மிக அதிகமாக இருந்த காலகட்டம் அது. ரவுடிகளின் கட்சி என்ற மதிப்பீடே அப்போது இருந்தது.

அதிமுக விற்கும் திமுக விற்கும் இருந்த நிரந்தர ஓட்டு வங்கியில் 10% ற்கும் மேலான வித்தியாசம் இருந்தது. இந்த வித்தியாசம் தான் தி.மு.க வை 13 ஆண்டுகள் வனவாசத்தில் வைத்திருந்தது. எம்ஜிஆரின் மறைவிற்குப் பின் அதிமுக இரண்டாக உடைந்தது. இது தான் கருணாநிதியின் அரசியல் வனவாச வரலாற்றில் திருப்பு முனையை ஏற்படுத்தியது.

பிளவு பட்ட அதிமுக வை எதிர்த்து தேர்தல் களம் கண்ட திமுக 1989 ல் ஆட்சியை பிடித்தார். இப்போது கருணாநிதியை சுற்றி முரசொலி மாறன் தலைமையிலான ஒரு கில்லாடியான ஒரு கூட்டம் உருவாகியிருந்தது. கில்லாடி கூட்டதும் என்றதும் தமிழக மக்களுக்காக செயல்படும் அறிவார்ந்த கூட்டம் என்று நினைக்க வேண்டாம்.

பழைய கருணாநிதி அரசு காண்ட்ராக்ட்களில் எப்படி கமிஷன் பார்ப்பது என்ற அறிவிலானவர் என்றால் முரசொலி மாறன் தலைமையிலான கூட்டம் அரசு அதிகாரத்தை பயன்படுத்தி எந்த வகையிலெல்லாம் கொள்ளையடிக்கலாம் என மிக துல்லியமாக கணக்கிட்டு சுரண்டியது. அரசு காண்ட்டிராக்ட்களில் கட்டாய கமிஷன் என்பது மாறி பினாமி நிறுவனங்களை துவக்கி அதற்கு ஒப்பந்தங்களை வழங்கினர்.

அரசு வேலைகளுக்கு ரேட் நிர்ணயிக்கப்பட்டு வசூல், பதவி உயர்வுக்கு ரேட், டிரான்ஸ்பருக்கு ரேட், டிரான்ஸ்பரை ரத்து செய்ய ரேட்... என வசூலை வாரி குவித்தனர். இதில் ஒரு கொடுமையான விசயமும் நடந்தது. லஞ்சம், ஊழல் இல்லாத அரசை அமைப்போம் என வாய் கிழிய பேசும் இவர்கள் மாமூல், கட்டிங், வசூல் கொட்டும் ஏரியாக்களில் உள்ள அரசு பதவிகளுக்கு தனி ரேட்டே நிர்னயம் செய்து வசூலித்தனர். அதாவது ஏலம் விடாத குறை தான்.

சென்னை பூக்கடை பகுதி காவல் துறை பதவிகள், சேலம் மாவட்ட வனத்துறை பதவிகள், சென்னை கோவை பத்திரப்பதிவு அலுவலர் பதவிகள், சென்னை கோவை விற்பனை வரி அலுவலக பதவிகள்.... இவற்றை போல ஆயிரக்கணக்கான பசையுள்ள இடங்களும், பதவிகளும் அடையாளம் காணப்பட்டு அவற்றிற்கு தனி ரேட் நிர்ணயிக்கப்பட்டு வசூலிக்கப்பட்ட அக்கிரம் எல்லாம் திமுக ஆட்சியில் நடந்தது.

சரி, கோடி கோடியாக கொள்ளையடிக்க வழி கிடைத்து விட்டது. லட்சங்கள், ஒரு கோடி இரண்டு கோடி எனில் கரன்சியாக பதுக்கி வைக்கலாம். பினாமி பெயரில் சொத்துக்கள் வாங்கலாம். இதெல்லாம் போக காட்டாறு போல வந்து குவிந்து கொண்டே இருக்கும் ஊழல் பணத்தை என்ன செய்தார்கள்? இந்த பணம் தான் வெளிநாட்டிற்கு கொண்டு செல்லப்பட்டு வங்கிகளில் ரொக்கமாகவும், பங்குச் சந்தை முதலீடுகளாகவும், அசையா சொத்துக்களாகவும் பதுக்கப்பட்டது.

வெளிநாட்டிற்கு பணத்தை கொண்டு போக வேண்டும் எனில் முறைப்படி ரிசர்வ் வங்கியில் முறைப்படி அனுமதி பெற்று கொண்டு போக வேண்டும். முறைப்படி ரிசர்வ் வங்கியில் அனுமதி பெற வேண்டும் எனில் அந்த பணம் வந்த வழியை சொல்ல வேண்டும். என்ன சொல்வார்கள் இவர்கள்? ஊழல் செய்து மக்களை கொள்ளையடித்த பணம் என்று சொல்ல முடியுமா? இந்த இடத்தில் இந்தியாவில் மதம்மாற்றி பிழைப்பு நடத்த வந்த கிறித்தவர்களும், முஸ்லீம்களுக்கும் இதே பிரச்சனை தான். ஆனால் அவர்களுக்கு இது தலைகீழ். மதத்தை பரப்ப வெளிநாடுகளில் இருந்து கோடிக்கணக்கில் பணம் வருகிறது. அப்படி வரும் பணத்தை என்ன சொல்லி இவர்கள் வாங்குவார்கள்? மதத்தை பரப்ப வாங்குகின்றோம் என சொல்ல முடியுமா? இந்த இடத்தில் தான் மைனாரிட்டிகளும், திமுகவும் கிவ் அன்ட் டேக் (Give and Take) என்ற ஒரு அடிப்படை புரிதலுடன் இணைகின்றனர்.

திமுக வின் ஊழல் பணம் இந்தியாவில் உள்ள மெஷினரிகளிடமும், மதராசாக்களிடமும் கொடுக்கப்படும். அதற்கு பதிலாக மதமாற்றத்திற்காக வெளிநாடுகளில் தொண்டு நிறுவனங்களுக்கு வசூலிக்கப்படும் பணத்தின் மூலம் அங்கேயே திமுக வினரின் பணம் முதலீடு செய்யப்படும். இதனால் ஒரு பக்கம் மதமாற்றத்திற்கான பணம் மைனாரிட்டிகளுக்கு இங்கேயே கிடைத்து விடுகிறது. திமுக வினரின் ஊழல் பணம் பாதுகாப்பாக வெளிநாடுகளுக்கு கொண்டு செல்லப்பட்டு பதுக்கப்படுகிறது.

இது தான் திமுக தலைமைக்கு "மைனாரிட்டி" மதங்களின் மேல் பாசம் ஏற்பட காரணம். வெளிப்படையாக பார்த்தால் திமுக என்பது நாத்திக தலைவர்களால் ஆனது. அது பெரியாரின் இறை மறுப்பு கொள்கையை அடிப்படையாக கொண்டது என்பதால் இந்துக்களை விமர்சனம் செய்கின்றனர் என்று தெரியும். ஆனால் உண்மை காரணம் இது தான்:

அதிமுக விற்கும் திமுக விற்குமான 10% இடைவெளியை மைனாரிட்டிகளை கொண்டு நிரப்புவது. அடித்த கொள்ளை பணத்தை அவர்கள் மூலம் பாதுகாப்பாக வெளிநாட்டிற்கு கொண்டு சென்று பதுக்குவது. இந்த இரண்டும் தான் திமுக வின் பிரதான கொள்கை.

திமுகவின் உதவி மதத்தை பரப்ப மைனாரிட்டிகளுக்கு அவசியம். அடித்த கொள்ளை பணத்தை வெளிநாடுகளுக்கு கொண்டு சென்று பதுக்க மைனாரிட்டிகளின் உதவி திமுக விற்கு அவசியம். கடவுள் மறுப்பு கொள்கைகளில் ஏசப்பாவிற்கும், அல்லாவிற்கும் திராவிட கொள்கையில் விதிவிலக்கு வழங்கப்பட்டது இந்த காலகட்டத்தில் தான். திமுக வின் எழுதப்படாத பார்ட்னர் ஆன தைரியத்தில் இந்த காலத்தில் தான் ஜிஹாதி கொலைகள் தொடங்கியது.

80% பெரும்பான்மை சமுதாயமாக இருந்தாலும் கோவில் விழாக்களில் தகராறு, கோவில்களையே உடைப்பது, இந்துக்களை பகிரங்கமாகவே மேடை போட்டு கேவலப்படுத்துவது என கிறிஸ்தவர்களும், முஸ்லீம்களும் கிளம்பினர். இவர்களின் தயவு தேவைப்பட்டதால் திமுக வும் மறைவில் நின்று இவர்களை ஆதரித்து வளர்த்து விட்டது.

இது படிப்படியாக வளர்ந்து திமுக வின் அனைத்து மேடைகளிலும் "மதச்சார்பற்ற அமைப்புகள்" என்ற பெயரில் மைனாரிட்டிகள் இந்துக்களை கேவலப்படுத்தி பேசுகின்றனர். மதசார்பற்ற மாநாடு என்று திமுக கூட்டம் போடும், ஆனால் அதில் முஸ்லீம்களும், கிறிஸ்தவர்களும் தங்கள் மத அடையாளத்தோடு கலந்து கொண்டு இந்து மதத்தையும், இந்துக்களையும் விலாசுவார்கள்.

சரி, இதிலிருந்து தி.மு.க விலகாதா? என அப்பாவி இந்துக்கள் கேட்கலாம். கண்டிப்பாக முடியாது. இப்போது திமுக வின் குடுமி மைனாரிட்டிகளின் கைகளில். இதுவரை சுருட்டிய பல்லாயிரம் கோடிகள் மைனாரிட்டிகளின் ஹவாலா நெட்வொர்க் மூலம் வெளிநாடுகளுக்கு கொண்டு செல்லப்பட்டு முதலீடு செய்யப்பட்டுள்ளது. வெளிநாட்டில் பதுக்கப்பட்ட கருப்பு பணத்தையும், முதலீடு செய்யப்பட்ட சொத்துக்களையும் இதே மைனாரிட்டி கும்பல் முறையாக பராமரித்து வருகிறது.

இங்கு திமுக தலைவர் ஏதாவது பல்டி அடித்தால் அத்தனை பதுக்கல் பணமும் அவர்களுக்குச் சொந்தமாகிவிடும். அது மட்டுமல்ல திமுக வினரின் சட்ட விரோத கருப்பு பண பரிமாற்றங்களையும், வெளிநாட்டு முதலீடுகளையும் போட்டு கொடுத்தால் ஸ்டாலினின் குடும்பமே சுற்றம் சூழ நீதிமன்றத்திற்கு அலைந்து சிறையில் கம்பி எண்ண வேண்டியது தான். தண்டனை முடிந்து விடுதலையாகி வந்தாலும் பூக்கடை பஸ் ஸ்டாண்டில் மாங்காய் விற்றுத்தான் பிழைக்க வேண்டி வரும்.

பச்சையாக சொன்னால் திமுக என்கிற கட்சி இன்று மைனாரிட்டிகளின் ஹவாலா மாபியாக்களுக்கு அடிமையாகி முப்பது ஆண்டுகளுக்கு மேலாகி விட்டது. மைனாரிட்டிகளுக்கு மண்டி போட்டு சலாம் போடும் நிலை வந்து விட்டது. எஜமானன்களை திருப்தி படுத்த ஒவ்வொரு இடத்திலும் முடிந்தளவு இந்துக்களை பார்த்து குரைத்து எஜமான விசுவாசம் காட்டுவதை தவிர வேறு வழியில்லை. எஜமான விசுவாசத்திற்காக இந்து மத எதிர்ப்பு என்கிற நிலைப்பாடு எடுத்தாகி விட்டது. ஆனால் அரசியலில் வெற்றி நடை போடுவது கட்டாயம். அதற்கு இந்துக்களின் ஓட்டு அவசியம். இதனால் ஒவ்வொரு தேர்தல் முடியும் வரை இந்துமத எதிர்ப்பு மூட்டை கட்டி வைக்கப்படும். தேர்தலில் இந்துக்களின் ஓட்டு வாங்க மைனாரிட்டிகளிடம் அனுமதி பெற்று - விபூதி பூசுதல், குங்குமம் வைத்தல், கோவிலுக்கு சென்று வழிபடுதல், ஐயர்களை கட்டிப்பிடித்தல்... போன்ற காமெடிகள் நடக்கும்.

இந்து மக்களுக்கு திமுக கட்சி செய்த நன்மைகள் என பைசாவிற்கு உபயோகமில்லா உதவிகளை பட்டியலிடுவார்கள். இந்து மக்களின் காவலன் திமுக என்று கூட பல்டி அடித்து வாக்கு கேட்பார்கள். இந்த பல்டியெல்லாம் ஓட்டுப்பதிவு நாள் வரை தான். வாக்குப்பதிவு முடிந்தவுடன் எஜமான விசுவாசத்தை காட்ட மறுபடியும் துண்டு சீட்டில் எழுதி வைத்து, சதா..சதா.. சந்தானத்தை வேரறுப்போம் என பேச ஸ்டாலின் கிளம்பி விடுவார்.

இந்துக்கள் வாக்களிக்கும் முன் சற்று யோசிக்கவும். மைனாரிட்டிகளின் அடிமை கூட்டணிக்கு வாக்களித்து நீங்களும் அடிமையாக போகிறீர்களா...? அல்லது சுய மரியாதையுடன் வாழ சிந்தித்து வாக்களிக்க போகின்றீர்களா? மைனாரிட்டிகளின் அடிமையாக மாறி அவர்களிம் மண்டி போட்டு நிற்பதும், மான மரியாதையுடன் நாம் வாழ்வதும் உங்கள் கைகளில் உள்ள வாக்குச் சீட்டில் தான் உள்ளது. சிந்தித்து செயல்படுவீர்............ Thanks...

orodizli
5th April 2020, 05:04 PM
பாகம் 1 [மக்கள் திலகம் அவர்களின் தந்தை கோபாலன் அவர்களுடைய பாட்டனாரின் பாரம்பரியம் கோவை மாவட்டத்தில் காங்கேயம் என்ற ஊருக்கு அடுத்து உள்ள புத்துர் என்ற கிராமம்.
அதில் ஒரு சிறிய ஜமீன் போலவும் ஒரு மிராசுதாரர் ஆகவும் வாழ்ந்து உள்ளார்கள். இவர்கள் வாழும் காலத்தில் கோவை மாவட்டத்திற்கு பெயர் "கொங்கு நாடு".
இந்த கொங்கு நாட்டில் இருந்து அந்த காலத்தில் கோபாலன் அவர்களுடைய தாய், தந்தை கேரளா பாலக்காடு வடவனூருக்கு வந்து குடியேறிவிட்டதாக தெரிகிறது. எம்.ஜி.ஆர் அவர்களுடைய பூர்விகம் தமிழ்நாடு.
இவர் பிறந்தது ஈழத்தமிழ்நாடு இலங்கை கண்டி. இவர் படித்தது, வளர்ந்தது, பிறகு வேலைக்கு சென்றது கும்பகோணம், செந்தமிழ்நாடு. மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அவர்கள், "நான் ஒரு தமிழன்" என்பதை பல முறை சொல்லி இருக்கிறார்.
கோவையிலிருந்து சுமார் 30, 40 மைல் தொலைவில் உள்ள பாலக்காடு என்ற பெரும் நகரத்திற்கு அடுத்து 20 மைலில் உள்ள வடவனூர் என்ற ஊரில் மருதூர் என்ற இடத்தில் வசித்து வந்த கோபாலன் அவர்கள் திருமணம் செய்து கொண்ட பெண்ணின் பெயர் சத்தியபாமா. அவருடைய ஊர் குழல் அந்தம்.
கோபாலன் அவர்கள் பட்டப்படிப்பு வரை படித்தவர். எந்த விஷயத்திலும் கோபப்படமாட்டார். மனிதாபிமானத்தோடு நடந்து கொள்பவர். இவர்கள் வடவனூரில் வாழ்ந்து கொண்டிருந்த காலத்தில் நான்கு குழந்தைகள் பிறந்தது. இதில் இரண்டு பெண் குழந்தைகள், இரண்டு ஆண் குழந்தைகள். நான்காவது குழந்தைதான் சக்கரபாணி.
இந்த குழந்தைகளுடன் அவர்கள் வடவனூரில் வாழ்ந்து இருந்த காலத்தில் கோபாலன் அவர்களுக்கும் நெருங்கிய உறவினர்களுக்கும் சொத்து விஷயத்தில் தகராறுகள் ஏற்பட்டது.
கோபாலன் அவர்கள் பாலக்காட்டில், ஒரு சில வருடங்கள் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் மாவட்ட முனிசிப்பு கோர்ட்டில் துணை நீதிபதியாக பணியாற்றி வரும் காலத்தில் வடவனூரை சேர்ந்த ஒரு வழக்கில், 'தனக்கு சாதகமாக தீர்ப்பு அளிக்க வேண்டும்' என்று உறவினர்கள் வற்புறுத்தினார்கள்.
அதை ஏற்றுக்கொள்ளாத துணை நீதிபதி கோபாலன், "உங்கள் பக்கத்தில் கொஞ்சம் கூட நியாயம் இல்லை. எனவே உங்களுக்கு நான் உதவ முடியாது" என்று சொன்னதில் ஏற்பட்ட எதிர்ப்பும் அந்த ஊரில் அவர்களுக்கு உண்டு.
கோபாலன் அவர்கள், 'தர்ம நியாயம் அற்றவர்களுடன் நாம் சேர்ந்து வாழ்வதா?' என்ற எண்ணத்தோடு...... 1913ல் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் நான்கு குழந்தைகளையும், தன் மனைவியையும் அழைத்துக்கொண்டு இலங்கை செல்கிறார்.
இலங்கை கண்டிக்கு சென்றவுடன் நண்பர்கள் ராமுபிள்ளை, வேலுபிள்ளை இருவரும் கோபாலன் அவர்கள் குடும்பத்தினருக்கு எல்லா வசதிகளையும் செய்து கொடுக்கிறார்கள்.
இந்த காலகட்டத்தில் ஈழ தமிழர்கள் வாழும் கண்டியில் 1917ல் செவ்வாய் கிழமை காலை 11.36க்கு 5வது குழந்தையாகப் பிறக்கிறார் எம்.ஜி.ஆர் அவர்கள்!
அண்ணன்கள் அக்காமார்கள் ராமச்சந்திரா என்று அழைத்து கொஞ்சி விளையாடும் போது அதை பார்த்து கோபால் சத்தியபாமா அவர்கள் ரசிப்பார்கள். நான்காவது குழந்தையான் சக்கரபாணிக்கும் எம்.ஜி.ஆருக்கும் 4 வயது வித்தியாசம் என்று சொல்லப்படுகிறது.
இந்த காலகட்டத்தில் கோபாலன் அவர்களுக்கு ஒரு கல்லூரியில் பேராசியராக வேலை கிடைத்தது. அதில் இருந்த சில வருடங்கள் கழித்து கண்டியின் மாவட்ட முனிசிப் போர்ட்டில் நீதிபதியாக பணியாற்றி வந்தார்.
இந்த 5 குழந்தைகளுடன் நல்ல வசதியோடு வாழ்ந்து கொண்டு இருக்கும் காலத்தில் கோபாலன் அவர்களுக்கு உடல் நலம் பாதிக்கப்படுகிறது. கோபாலன் அவர்கள் மாரடைப்பால் 1920ம் ஆண்டு இறந்து விடுகிறார்.

Cont...] பாகம் 1.......... Thanks.........

orodizli
5th April 2020, 05:17 PM
தமிழ்வாணன் கல்கண்டு இதழில்
31.07.1960 மக்கள்சக்தியும்
ஒழுக்கத்திற்கு ஒரே
நடிகர் எம்ஜிஆர் மட்டுமே. தலைவர் ரசிகர்கள் ஒவ்வொருவரும் 1ரூபாய் எம்ஜிஆருக்கு
மணியார்டர் செய்தாலே
கோடீஸ்வரர் ஆகிவிடுவார். மேலும் மது மாது புகையிலை காப்பி டீ
எந்த பழக்கமும் கிடையாது. தண்ணீர் கொடுத்தால் தூக்கித்தான் குடிப்பார்.
எச்சிலைக் காரி உமிழ்வதில்லை.நகத்தை கடிக்க மாட்டார். கெட்டவார்த்தை பேசமாட்டார்.நம் மக்கள் திலகம்.......... Thanks mr.SR.,

orodizli
5th April 2020, 05:21 PM
*������ வரலாற்றில் அழியாத திரு.சைதை துரைசாமியின் துணிச்சலை நினைவு கூறும் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் உரை... ❤����*

*திரு.சைதை துரைசாமி பற்றி புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்கள் அரசு விழாவில் பேசிய பேச்சு... ⬇⬇⬇*

*➡ நாங்கள் அரசியல்வாதிகள் எப்படி இருக்கின்றோம்...?*
*நான் இங்கு வந்து மேடையில் நிற்கும் போதே சைதாப்பேட்டை என்றாலே எலுமிச்சம்பழம் தான் எனக்கு ஞாபகம் வரும்... ��������*

*���� நான் ஒரு அரசியல்வாதி...❗����*

*☀☀☀எலுமிச்சம் பழத்தை மாலையாகப் போட்ட துரைசாமியைத் தான் எனக்கு ஞாபகம் வருமே தவிர, பிறகு தான் இந்த நிகழ்ச்சி கூட ஞாபகம் வரும்... ������*

*❤❤ நான் ஒரு அரசியல்வாதி...❗❗❗*

*������ என்னுடைய அரசியல் கட்சியில் இருந்த ஒருவர், அப்போதிருந்த முதலமைச்சருக்கு, இந்த சைதாப்பேட்டையிலே துணிச்சலாக எலுமிச்சம் பழ மாலையைப் போட்டு, அந்த மேடையையே அடித்து தூளாக ஆக்கி, அவரைத் தூக்கிக்கொண்டு போய் சிறைச்சாலையில் போட்ட அனுபவம் தான் என் கண்முன்னே முன்னே நிற்கும்... ������*

*������ ஆனால், அதை நினைத்துக் கொண்டு இங்கே வந்து, அந்த எண்ணத்தைப் பரிந்துரைக்கின்ற வகையில்நான் பேச ஆரம்பித் தேனானால், நான் முதலமைச்சராக இருக்க லாயக்கற்றவன் என்பதை இங்கே தெளிவாகக் கருதுகிறேன்... ��������*

*������ ஓட்டு வாங்குவது வேறு, அதை வாங்கிய பிறகு மக்களுக்குப் பணி செய்யும் நிலைமை வேறு... ������*

*✨⭐�� தன் தொண்டருக்காக எப்படி பட்ட எச்சரிக்கையுடன் புரட்சித் தலைவர் பேசுகிறார் என்பதற்கு இது ஒரு சான்று ....⚡⚡⚡*........... Thanks.........

orodizli
5th April 2020, 05:35 PM
மலேசியா நாட்டில் தைப்பிங் என்கிற இடத்தில் மிக பிரமாண்டமான அய்யனார் கோவில் உள்ளது இந்த கோவில் வளாகத்தில் மக்கள்திலகம் அவர்களுக்கும் கோவில் உள்ளது. மலேசியா அரசாங்கம் இந்த கோவில் வளாகத்தை சுற்றுலா மையமாக அறிவித்து உள்ளது. கோவிலுக்கு வருபவர்கள் மக்கள்திலகத்தை வணங்கி வழிபட்டு பின்னர் அய்யனாரை வழிபட செல்லுகின்றர். Unlimited videos free download! Dont miss the chance to get to know the App which 10000000+ person love the most https://www.vidmateapp.com/subpub/yqh5/site?url=aHR0cHM6Ly9tLmZhY2Vib29rLmNvbS9ncm91cHMvT UdSMTAwL3Blcm1hbGluay8yNjU5MTI3MjY3
NzQ2MTQ5Lz9zZm5zbj1zY3dzcG1v&f=wh......... Thanks...

fidowag
5th April 2020, 10:23 PM
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். சம்பளம் வாங்காமல் நடித்த*படங்கள்*விவரம்*
----------------------------------------------------------------------------------------------------------------------
1.பைத்தியக்காரன் -* *1947 - கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணனுக்காக*

2. தாய் மகளுக்கு கட்டிய தாலி -1959 -பேரறிஞர் அண்ணாவுக்காக*

3. சபாஷ் மாப்பிள்ளை* - 1961 - இயக்குனர் ராகவன் மற்றும் நடிகை மாலினிக்காக*

4.தாலி பாக்கியம்* -1966-* நடிகை மற்றும் தயாரிப்பாளர் பி.கண்ணாம்பாவுக்காக*

5.எங்கள் தங்கம்* - 1970-* மு.கருணாநிதி மற்றும் முரசொலி மாறனுக்காக*

6.மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன்* - 1978 - இயக்குனர் மற்றும் * தயாரிப்பாளர்** பி.ஆர். பந்துலுவுக்காக .


தகவல் உதவி : ஒளி விளக்கு மாத இதழ்*

fidowag
5th April 2020, 10:24 PM
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். நாடகம் மற்றும் சினிமா*துறையில்*சந்தித்த*சவால்கள்*
-------------------------------------------------------------------------------------------------------------------------------

மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். தன் சிறு வயது முதல் நாடக துறையிலும், சினிமா துறையிலும் சந்தித்த சவால்கள் குறித்து 1 yes tv* சானலில் நேற்று (04/04/20) மாலை 6.30 மணி* முதல் 7 மணி வரையில் ஒளிபரப்பான நிகழ்ச்சி* பற்றிய தொகுப்பு :


எம்.ஜி.ஆர். சிறு வயதில் ( ஏழு வயதில் ) நாடகத்தில் நடிக்கும்போது ஒரு வார சம்பளமாக 0.25 பைசா* வாங்கினார் .* நன்றாக நடித்தால் சம்பளம் இரு மடங்காக*அதாவது 0.50 பைசாவாக உயரும் .* *ஒரு முறை எம்.ஜி.ஆரும் ,அவரது அண்ணன் எம்.ஜி.சக்கரபாணியும் நடனம் கற்பதற்காக புதுவைக்கு சென்றிருந்தனர் .நடனம் ஒழுங்காக கற்காமல் இருந்தாலோ, நடன பயிற்சியில் தவறுகள் செய்தாலோ பிரம்படி விழும் .* ஆரம்பத்தில் செய்த தவறுகளினால் இருவருக்கும் அடி விழுந்தது . எனவே ஊருக்கு திரும்ப யோசித்தனர் .நாடக துறையை சார்ந்தவர் ஒருவரின் ஆலோசனையின்படி, இந்த பிரச்னைகளுக்கு பயந்தால் ஒருக்காலும் முன்னேற முடியாது என்ற சொல்லை கேட்டு** பின்னர் இருவரும்*தவறுகளை திருத்தி நடனம் பயின்றனர் .


நாடகங்களில் ராஜா, ராணி, மற்றும் ராஜபார்ட் வேடம் போடுபவர்களுக்கு அறுசுவை சாப்பாடும், மற்றவர்களுக்கு மிகவும் சாதாரண சாப்பாடும் கிடைத்து வந்தது . கொஞ்ச காலத்திற்கு பிறகு பக்கிரிசாமி என்பவர் மேலாளர் ஆக வந்த பிறகு* நிலைமை கொஞ்சம் மாறியது .


ராயல் தியேட்டர்ஸ் நிறுவனம் வள்ளி திருமணம் என்ற நாடகத்தை சென்னையில் கிட்டப்பா மற்றும் கே.பி.சுந்தராம்பாள் ஜோடியை வைத்து*நடிக்க ஏற்பாடு செய்தனர் . அந்த சமயம்* பி.யு.சின்னப்பாவும் , எம்.ஜி.ஆரும்*நாடகத்தை கண்டுகளிக்க மதுரை பாய்ஸ் கம்பெனியில் இருந்து வந்திருக்கிறோம் என்று அறிமுகம் செய்து கொண்டனர் .* அப்போது கிட்டப்பா - கே.பி.எஸ்.ஜோடி , பி.யு.சின்னப்பாவையும், எம்.ஜி.ஆரையும் மதுரை பாய்ஸ் கம்பெனி* விவரம், மற்றும் நாடக துறையில்* அவர்களது வளர்ச்சி குறித்து*கேட்டு தெரிந்து கொண்டனர் .*

மாணவ பருவத்தில் நாடக துறையில் நடிக்கும்போது எம்.ஜி.ஆர். சில சண்டை காட்சிகளுக்காக பயிற்சி எடுத்துக் கொண்டார் .* ஒருமுறை நாடகத்தில் நடிக்கும்போது கதையின் படி* எம்.ஜி.ஆர். தான் முதலில் எதிராளி மீது பாய வேண்டும் . ஆனால்* எதிராளி முதலில் பாய்ந்து சண்டையிட்டபோது ,போராடி எம்.ஜி.ஆர். எதிராளியை வீழ்த்தி நெடுநேரம் அவனை தன்* கட்டுக்குள் வைத்து*இருந்தார். பதிலுக்கு எதிராளியும் முடிந்தவரையில் போராடினான் .பயனில்லை .காட்சி முடிந்து படுதாவும் போட்டாகிவிட்டது .* எதிராளி கீழேயும் எம்.ஜி.ஆர். அவன்மீது அமர்ந்து சண்டையிட்டு கொண்டிருந்தபோது மேலாளர் வந்து இருவரையும் பிரித்து எம்.ஜி.ஆரை முதலில் கோபித்துக் கொண்டாராம். அப்போது எம்.ஜி.ஆர். முதலில் கதையின்படி நான்தான் பாய வேண்டும் . ஆனால் அவன் முந்திக் கொண்டான் . மேலும் போட்டியில் நான் தோற்றால் எதிர்பார்க்கும் சம்பளமும், வாய்ப்பும்* தரமாட்டீர்கள் .* நல்ல சாப்பாடும் கிடைக்காது* என்றதும் மேலாளர் கோபம் தணிந்து சென்றாராம் .* அன்று முதல்*எம்.ஜி. ஆர். நுணுக்கமாக சண்டை காட்சிகளுக்கான பயிற்சிகளை மேற்கொண்டு*தன்னை யாரும் வெல்ல முடியாத அளவிற்கு தயார் படுத்திக் கொண்டார் .அதன் விளைவே, பின்னாளில் சினிமா துறையிலும் சிலம்பம், குத்து சண்டை,*கம்பு சண்டை, வாள் சண்டை* போன்ற அனைத்திலும் வல்லவனாக , இருந்ததோடு , அவரது படங்களில் பிரத்யேக சண்டை காட்சிகள் அமைய*ஏதுவாகி, ரசிக பெருமக்களின் நல்ல* வரவேற்பை பெற்றார் என்று சொன்னால் மிகையாகாது .



நிகழ்ச்சியின் நடுவே படகோட்டியில் இருந்து கல்யாண பொண்ணு பாடலும்,*கன்னித்தாய் படத்தில் இருந்து சில காட்சிகளும், படகோட்டியில் முதல் சண்டை காட்சியில் கம்பு சுழற்றுவது , ரிக்ஷாக்காரன் படத்தில் கடலோரம் வாங்கிய காற்று பாடலும்* *ஒளிபரப்பப்பட்டது .



**

fidowag
5th April 2020, 10:36 PM
தனியார் தொலைக்காட்சிகளில் ஏழை பங்காளன் எம்.ஜி.ஆர். படங்கள்*
---------------------------------------------------------------------------------------------------------------
04/04/20* * * -ஜெயா மூவிஸ் - காலை 7மணி -விக்கிரமாதித்தன்*

* * * * * * * * * * -புதுயுகம்* * * *- இரவு 7 மணி* *- ராமன் தேடிய சீதை*

05/04/20* * *- ஜெயா மூவிஸ் - காலை 7 மணி -குலேபகாவலி*

* * * * * * * * * *மெகா 24 டிவி* *-பிற்பகல் 2.30 மணி* - ராஜராஜன்*

* * * * * * * * * * *சன் லைப்* * *- மாலை 4 மணி* *- எங்கள் தங்கம்*

06/04/20* * - சன்* லைப்* *- காலை 11 மணி* - நல்ல நேரம்*

மெகா*டிவி* -12 மணி* * -சக்கரவர்த்தி திருமகள்*

fidowag
5th April 2020, 11:03 PM
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். சந்தித்த*சவால்கள் - 1 yes* tv* சானல்*
--------------------------------------------------------------------------------------------------------

இன்று (05/04/20) மாலை* 6.30 மணி முதல் 7 மணி வரை ஒளிபரப்பான*நிகழ்ச்சியின் தொகுப்பு :


ஓர் இரவு என்கிற கதையை பேரறிஞர் அண்ணா ஒரு இரவு முழுவதும் இருந்து*உட்கார்ந்து எழுதி முடித்தார் .* அண்ணா அவர்கள் முதல்வராகும் சமயம் ராகு காலத்தில் உள்ளதை சிலர் சுட்டி காட்டியபோது அதில் எனக்கு நம்பிக்கை இல்லை என்று கூறி பதவி ஏற்றார் .* அதனாலோ என்னவோ, அவரது ஆட்சி இரண்டு ஆண்டுகளுக்குள் முடிவுற்றது .என்று பின்னாளில் குறிப்பிட்டனர் . அண்ணா அவர்கள் மறைந்தபோது வங்கியில் இருப்பு ரூ.5,000/- .* அவருக்கு கடன் சுமார் ரூ.35,000/- இருந்தது . அவர் மறைவதற்கு முன்னாள் நடிகர் எஸ்.எஸ். ஆர். தனது காரை அண்ணாவுக்கு வழங்கி இருந்தார் .* அண்ணா அவர்கள் மறைந்ததும், அவரது மனைவி ராணி அம்மையார் அந்த காரை விற்று கடன்களை சரிசெய்ய முற்பட்டார் .


ஒருமுறை கோவையில் நடந்த பொதுக்கூட்டம் ஒன்றில் எம்.ஜி.ஆரும், அவரது அண்ணன் சக்கரபாணியும் கலந்து கொள்வதாக ஏற்பாடு . முன்னதாக 10 வயது சிறுமி கூட்டத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் ஆட்சியின் குறைகளை சுட்டிக்காட்டி, கருணாநிதி என்று பெயர் சொல்லி பேசினார் . விவரம் அறிந்த பெரியவர் சக்கரபாணி* அந்த சிறுமியின் பேச்சையும், கூட்டத்தின் தலைவரையும் கண்டித்து பேசினார் .* பின்னர் பேசிய மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். கலைஞர் கருணாநிதி எனக்கு தலைவராக இருந்தவர், முன்னாள் முதல்வர் . எனக்கு நெடுங்கால நண்பர் .* எங்களுக்குள் அரசியல் ரீதியாக கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் ஒரு சிறுமியை வைத்து அவரை ஒருமையில் வெறும் கருணாநிதி என்று பேசுவதற்கு அனுமதி அளித்த கூட்டத்தின் தலைவரை நான் வன்மையாக கண்டிக்கிறேன் .* இனிமேல் நான் கலந்து கொள்ளும் கூட்டங்களில் இதுபோல் நடக்க கூடாது என உத்தரவிட்டார் .நானும், கலைஞரும் நண்பர்களாக இருந்தபோது* அரசியல் , பொது வாழ்க்கை ,சினிமா பற்றி நெடுங்காலம் பேசி வந்துள்ளோம் .* காங்கிரஸ் ஆட்சியின்போது கலைஞர்*குறைகளை சுட்டிக்காட்டி பேசியபோது , ஒருவேளை நீங்கள் தேர்தலில் வெற்றி பெற்று , ஆட்சி பொறுப்பை ஏற்றால் வறுமையை ஒழிப்பீர்களா, மக்களின் பசி கொடுமையை நீக்குவீர்களா* என்று கேட்டுள்ளேன்*.

எம்.ஜி.ஆர். அவர்கள் பிற்காலத்தில் அரசியல் துறையில் தன்னால் வெற்றி பெற முடியுமா , மக்கள் தன்னை நல்ல தலைவராக ஏற்றுக் கொள்வார்களா, தன்னை அங்கீகரிப்பார்களா* என்ற* வகையில் சினிமா துறையில் மெல்ல தன் காய்களை நகர்த்தி, அதற்கு தகுந்தாற் போல கதையமைப்பு, சில காட்சிகள், வசனங்கள் ,பாடல்கள் , அமைத்து* அதில்* சோதனைகளை* சந்தித்து***பெரும் வெற்றி கண்டார் .**


நிகழ்ச்சியில் நினைத்ததை முடிப்பவன் படத்தில் இருந்து பூ மழை தூவி* பாடல்,*அன்பே வா படத்தில் ராஜாவின் பார்வை ராணியின் பக்கம், மந்திரி குமாரி படத்தில் இருந்து* வாராய்* நீ* வாராய் பாடல் ஆகியன ஒளிபரப்பப்பட்டன .

orodizli
6th April 2020, 01:11 PM
1969ல்தான் தங்க சுரங்கம், அடிமைப்பெண், நம்நாடு, மற்றும் சிவந்த மண் ஆகிய எம்ஜிஆர்,சிவாஜி ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படங்கள் வெளியானது. இதில் தங்க சுரங்கம் மார்ச் மாதம் 28ம்தேதி சார்லஸ் திரையரங்கில் வெளியாகி 18 நாளில் படம் தூக்கப்பட்டது. சிவாஜி ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றத்தை கொடுத்தது. சிவாஜி ரசிகர்களால். ரொம்பபில்ட் அப் கொடுத்த படம் தங்க சுரங்கம். அது முடிந்தவுடன் சிவாஜி ரசிகர்கள் தங்கள் ஒட்டு மொத்த கவனத்தையும் சிவந்த மண் மீது வைத்தார்கள்.

தலைவருக்கு 1969ம ஆண்டு ஏப்ரல் வரை எந்த படமும் வெளியாகவில்லை.எம்ஜிஆருக்கு கடைசியாக வெளியான படம் 1968ம் ஆண்டு தீபாவளிக்கு வெளியான காதல் வாகனம். அந்த நேரம் எம்ஜிஆரின் 100வது படம் ஒளிவிளக்கு ஓடிக்கொண்டிருந்ததால் அதன் தரத்திற்கு சற்று குறைவான காதல் வாகனம் சுமாரான படமானது. ஆக நீண்ட நாட்கள் எம்ஜிஆர் ரசிகர்கள் படம் பார்க்காமல் பரிதவித்து கொண்டிருக்கும் போது வெளியான படம்தான் அடிமைப்பெண். 1969 மே 1ம் தேதி. தூத்துக்குடி பாலகிருஷ்ணா தியேட்டரில் வெளியானது.

அடிமைப்பெண்ணுடன் காவல்தெய்வம் என்ற சிவாஜி கெஸ்ட் ரோலிலும் சிவகுமார் லட்சுமி ஜோடியாக நடித்த படமும் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது. அதற்கு முன்னால் பல தடவை இதோ வருகிறது அதோ வருகிறது என்று பலமுறை தேதி அறிவித்து விளம்பரங்கள் வந்தது.
ஆனால் அந்த நேரத்தில் உள்ளாட்சி தேர்தல் நடக்கவிருந்ததால் அது முடிந்தவுடன் படம் வெளியாகும் என்று உறுதியான தேதியாக மே 1ம் தேதி வியாழக்கிழமை அறிவிக்கப்பட்டது. அன்று தொழிலாளர்கள் தினம். இப்போது போல் அப்போது விஷேசமாக கொண்டாட மாட்டார்கள் கம்யூனிஸ்ட் கட்சிக்காரர்கள். ஒரு 100 அல்லது 200 பேர்கள் ஒன்று சேர்ந்து அமைதியாக ஒரு ஊர்வலத்தை நடத்தி விட்டு சாயந்தரம் ஒரு மீட்டிங் நடத்துவார்கள். அவ்வளவு தான் மே தினம் முடிவடைந்து விடும்.

ஆனால் 1969 மே தினம் எம்ஜிஆர் ரசிகர்களால் வெகு விமரிசையாக அடிமைப்பெண் வெளியான திரையரங்குகளில் கொண்டாடப்பட்டது. ரசிகர்களும் உள்ளாட்சி தேர்தலை விட அடிமைப்பெண் வெளியாகும் தேதியைத்தான் ஆவலுடன் எதிர்பார்த்திருந்தார்கள். எனவே ஆரம்ப காட்சி அடிமைப்பெண் பார்ப்பதென்பது கனவிலும் நினைத்து பார்க்க முடியாத ஒன்று என்று தெரிந்து விட்டது. இனி என்ன செய்வது என்று தெரியவில்லை.

அதற்காக எம்ஜிஆர் ரசிகர்கள் மீனவர்கள் பலருடன் பழகியிருந்ததால் அவர்களிடம் நீங்கள் போகும் போது என்னையும் கூட்டிச் செல்லுங்கள் என்று கேட்டிருந்தேன். அவர்களும் உறுதியாக கூட்டிச் செல்கிறேன் என்று சொல்லியிருந்தார்கள். மீனவ நண்பர்கள் ரொம்ப பலசாலிகள் நாட்டு படகு பணி நிறைவடைந்தவுடன் கடலிலே செலுத்தும் போது பெரிய பெரிய வடக்கயிறுகளை கட்டி இழுக்கும் போது அவர்களின் புஜத்தை பார்த்தால் மேரு மலை போல் காட்சியளிக்கும். தரை மேல் பிறக்க வைத்தான் என்ற படகோட்டியின் பாடல்தான் அவர்களின் சமூக பாடலாக மாறிப்போனது. இன்று வரை அது தொடரந்து கொண்டுதான் இருக்கிறது. தலைவருக்காக தன் இன்னுயிரையும் மனமுவந்து தருவார்கள். அவர்கள் கூட்டத்தில் நின்று விட்டால் யாரும் அவர்களை தாண்டி செல்ல முடியாது. அவர்கள் என்னை நடுவில் நிற்க வைத்து கொண்டு சுற்றி நின்று கொண்டார்கள். ஆனால் கவுண்டர் திறந்தவுடன் அத்தனை பேரும் முண்டியடித்துக் கொண்டு முன்னேறும் போது எனக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு விட்டது.. நான் மூச்சு திணறுவது கண்டு அவர்கள் தம்பி நீ முதலில் போய்விடு என்று அனைவரையும் அணை போட்டு தடுத்தது போல தடுத்து என்னை உள்ளே அனுப்பி விட்டார்கள். எனக்கு மூச்சு நின்று திரும்பி வந்தது போல இருந்தது.

ஒருவழியாக தியேட்டருக்குள்ளே சென்று அவர்கள் கூடவே இருந்து படத்தை பார்த்தேன். படம் பார்த்ததை விட ரசிகர்களின் ஆரவாரத்தை கண்டு களித்தேன் என்று தான் சொல்ல வேண்டும்.. வசனத்தையோ பாடல்களையோ எதையுமே என்னால் கேட்கவோ பார்க்கவோ முடியவில்லை. ரசிகர்களின் ஆரவாரம் தியேட்டரை தாண்டி ரோடு வரை ஆக்கிரமித்தது. ஒரே ஆட்டம்,விசில் சத்தம் என்று பயங்கரமாக இருந்தது. அந்த சத்தத்தில் அசோகனின் குரல் கூட எடுபடவில்லை. படம் ஒன்றுமே புரியாமல் மீண்டும் அடுத்த காட்சி பார்க்க முயற்சி செய்தும் பார்க்க முடியாமல் இரவுக்காட்சிக்கு நண்பர்கள் பிளாக்கில் எனக்கும் சேர்த்து டிக்கெட் வாங்கியிருந்தார்கள்.

2வது முறையாக பார்த்தும் திருப்தி ஏற்படாததால் கிட்டத்தட்ட 14 முறை பார்த்தேன். அப்படி ஒரு பிரமிப்பை ஏற்படுத்திய படம் அடிமைப்பெண். ஓபனிங் காட்சியில் ஒற்றை காலில் சண்டை செய்யும் போதே தலைவரின் புதுமையான சிந்தனை வெளிப்பட்டது. ஒவ்வொரு காட்சியிலும் ஒரு பிரமாண்டம், புதுமை என்று படம் பார்ப்பவர்களை பிரமிக்க வைத்தது.குறிப்பாக ஜெய்ப்பூர் அரண்மனை, பாலைவனத்தில் ஒட்டகம் சுற்றி வளைக்கும் காட்சி,சிங்க சண்டை என்று ரசிகர்கள் ஆனந்த தாண்டவம் ஆடினார்கள் இப்போது உள்ளது போல் கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் காட்சிகள் இல்லாமல் ஒரிஜினலாகவே தலைவர் சிரமப்பட்டு எடுத்திருப்பார். இப்போது வந்த பாகுபலி போன்ற படங்கள் சிஜி(Computer Graphics) வேலைக்காக பல நூறு கோடிகள் செலவு செய்து விட்டு ஆஹா பிரமாண்டம் என்று கூறும்போது தலைவரின் தொழில் நுட்ப திறமையை யாரும் பாராட்டாமல் இருக்க முடியாது.

அந்த வருடம் மே மாத லீவுக்கு மக்கள் ஊருக்கு போவதை நிறுத்தி விட்டு குடும்பத்தோடு அடிமைப்பெண்ணை கண்டு ரசித்தார்கள்.50 நாட்களில் சனி,ஞாயிறு காலை காட்சி செவ்வாய்,வெள்ளி மாட்னி ஷோ தவிர மற்ற அனைத்து காட்சிகளும் கிட்டத்தட்ட அரங்கம் நிறைந்தே ஓடியது. 50 நாட்களில் மட்டும் ரூபாய் 78678.23வசூலாக கொட்டியது. 100 நாட்களில்ரூபாய் 105816.13. வசூலாக கலெக்ட் செய்து ஒரு மாபெரும் சாதனையை உண்டாக்கியது.

இனிமேல் இதுபோல் ஆகக்கூடாது என்பதற்காக எம்ஜிஆர் மன்றத்தில் சேர்ந்தால் ஓபனிங் ஷோ டிக்கெட் வாங்கி கொள்ளலாம் என்று அறிவுறுத்தப்பட்டதால் நடிகப் பேரரசர் எம்ஜிஆர் கலைக்குழுவில் உறுப்பினராக சேர்ந்தேன். இப்போது உள்ளது போல் ரசிகர் ஷோ வெல்லாம் தரமாட்டார்கள். எத்தனை பேருக்கு டிக்கெட் வேண்டும் என்று கேட்டு எம்ஜிஆர் மன்றத்தினர் டிக்கெட்டுகளை வாங்கி மன்ற உறுப்பினர்களுக்கு கொடுப்பார்கள்.
நம்நாடு படத்திலிருந்து மன்றத்தின் மூலமாக தள்ளு முள்ளு இல்லாமல் டிக்கெட் பெற்றாலும் தியேட்டருக்குள் நுழைந்து செல்வதும் ஒரு கஷ்டமான விஷயம்தான். இதை எல்லாம் தாண்டி நடிகப் பேரரசர் எம்ஜிஆர் படம் பார்ப்பதே தீபாவளி சிறப்பாக கொண்டாடியதை போலதான்.
மீண்டும் அடுத்த பதிவில்.!
தூத்துக்குடி நண்பர் ......... Thanks.........

orodizli
6th April 2020, 01:14 PM
மக்களின் இதயக்கனி, இதய தெய்வம் -எம்.ஜி.ஆர். !
எம்.ஜி.ஆர். அரசியல் கட்சி தொடங்கியதுமே புரட்சிநடிகர் என்பதை விலக்கிவிட்டு புரட்சித் தலைவர் ஆக்கினர். இவரும் அரசியல் வாழ்விலும் ஆட்சியிலும் தன்னைப் புரட்சித் தலைவராக நிரூபிக்க விரும்பவில்லை. அதைவிடத் தன்னை மக்களின் தலைவராக நிலைநாட்டவே விரும்பினார். அதில் வெற்றியும் பெற்றார்...
mgr
இரண்டிலும் தன்னுடைய பலமும் பக்க பலமும் என்ன என்பதை உணர்ந்திருந்ததுதான் வெற்றிக்குக் காரணம். சினிமாவில் அவர் புகழ்பெற்றிருந்த 20 ஆண்டுகளில் திரைப்படத்தின் போக்கு பலவிதங்களில் மாறினாலும், தனது ரசிகர்கள் எதை விரும்புவார்கள் என்பதைத் துல்லியமாக உணர்ந்து அதற்கேற்ற படங்களைக் கொடுத்தவர் எம்.ஜி.ஆர். அதுபோல, அரசியலில் தன்னை ஆதரிப்பவர்கள் என்ன எதிர்பார்ப்பார்கள் என்பதை அறிந்து அவர்களுக்கான தேவைகளையும் திட்டங்களையும் நிறைவேற்றுவதில் மட்டும் கவனம் செலுத்தி ஆட்சியைத் தக்க வைத்துக் கொண்டவர். சினிமா, அரசியல் இரண்டிலும் தனது போட்டியாளர்களின் போக்குகளை உற்று நோக்கி தன் பயணத்தில் கவனம் செலுத்தியதும் எம்.ஜி.ஆரின் வெற்றிக்குக் காரணம் (எம்.ஜி.ஆர் அகம் - புறம்) என்று கணித்துள்ளனர்.....
mgr
பெரியாரின் தமிழ் எழுத்து சீர்திருத்தம், உலகத் தமிழ் மாநாடு, தமிழ்ப் பல்கலைக்கழகம், பாரதி, பாரதிதாசன் பெயர்களில் பல்கலைக்கழகங்கள், அரசு அலுவலகங்களில் தமிழில் கையெழுத்து, இலங்கைத் தமிழர் நலம், காவேரி நடுவர் மன்ற கோரிக்கை, தெலுங்கு கங்கைத் திட்டம் என்று தமிழர் வளர்ச்சிக்கு ஆழமாகக் கால்கோள் செய்தார். சத்துணவுத் திட்டம், சைக்கிளில் டபுள்ஸ் செல்ல அனுமதித்தது, நியாய விலைக் கடையில் குறைந்த விலையில் அரிசி, பாமாயில், சர்க்கரை தந்தது, கிராம நிர்வாக அலுவலர் எனும் பரம்பரை பதவிகளை ஒழித்தது, இலவச வேட்டி சேலை, புயல் வெள்ளக் காலங்களில் உடனடி நிவாரணம் என இவர் மக்களுக்காக நடைமுறைப்படுத்திய திட்டங்கள் ஏராளம்....
mgr
மக்கள் இவரது ஆட்சியில் நடந்த அடக்குமுறைகளைப் பற்றியோ, மதுக்கடைகளைப் (டாஸ்மாக்) பற்றியோ, ஊழல்களைப் பற்றியோ, சுயநிதிக் கல்வித் தந்தைகளாகக் கட்சிக்காரர்களைப் படைத்தது பற்றியோ, பெரியாரின் சமூக நீதியைக் குலைத்தது பற்றியோ, நக்சலைட்டுகளை மனித உரிமைக்கு எதிராக நசுக்கியது பற்றியோ, கச்சத்தீவை சொன்னபடி மீட்காதது பற்றியோ, உள்ளாட்சி அமைப்பை உடைத்தது பற்றியோ, அடாவடி வரிவசூல் பற்றியோ, மேலவை கலைப்பு போன்ற எதைப் பற்றியும் கவலைப்படவில்லை. இவை எம்.ஜி.ஆருக்கே தெரியாமல் நடந்ததாக நம்பினர். இவர் பேரைச் சொல்லி யார் யாரோ சம்பாதித்துக் கொண்டார்கள் என்றே எண்ணிக் கொண்டனர். எம்.ஜி.ஆர். சுடப்பட்டு மீண்டதும் அமெரிக்க சிகிச்சைக்குப்பின் மீண்டதும் இவரைத் தனிப்பிறவியாகவும் தெய்வப் பிறவியாகவும் கருத வைத்தது மக்களின் இதயக்கனி, இதய தெய்வம் ஆனார்............ Thanks.........

orodizli
7th April 2020, 04:41 PM
மக்கள் திலகத்தின் ரசிகர்களின் '' நினைவலைகள்''
104/2020
எங்களுக்கு விபரம் தெரிந்த ''நாடோடிமன்னன்'' 1958 முதல் மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்'' 1978 வரை
மக்கள் திலகம் எம்ஜிஆரின் படங்களை கண்டு களித்த அந்த இனிய நாட்களை மறக்க முடியாது . மக்கள் திலகம் எம்ஜிஆர் படங்கள் திரை அரங்குகளில் வெளியான நேரத்தில் வண்ண தோரணங்களை கட்டியது
எம்ஜிஆரின் புதுமையான ஸ்டார்களை அலங்கரித்து வைத்தது. .
திரை அரங்கு முன்பு வைத்த பதாகைகளுக்கு மாலை அணிவித்தது ..
நகரம் முழுவதும் ஒட்டப்பட்ட''' வருகிறது'' போஸ்டர்களை கண்டு மகிழ்ந்தது .
''இன்று முதல்'' விளம்பரத்தை கண்டு ஆனந்தமடைந்தது .
ஷோ கேசில் வைக்கப்பட்ட எம்ஜிஆரின் ஸ்டில்களை கண்டு பரவசமடைந்தது .
முன்பதிவு அன்று திரை அரங்குகளில் அலை மோதிய எம்ஜிஆர் ரசிகர்களின் கூட்டத்தை கண்டு ஆர்ப்பரித்தது .
முதல் நாள் , முதல் காட்சியில் எம்ஜிஆர் ரசிகர்களின் அலப்பறையில் ஆனந்தமடைந்தது .
தொடர்ந்து 100 காட்சிகள் அரங்கம் நிறைந்த கண்கொள்ளா காட்சியை கண்டு வியப்படைந்தது .
25,50,75,100,125,150,175,200,225,250 நாட்கள் என்று வெற்றி நாட்களை பார்த்து ரசித்தது...
சில படங்கள் எதிர்பார்த்த வெற்றி இலக்கை தொடமுடியாமல் போனது கண்டு வருந்தியது...
படம் காண வரும் மக்களை வரவேற்பு நோட்டீஸ் தந்து வரவேற்றது .
வசூலை வாரி குவித்த விபரங்களை நன்றி நோட்டீஸ் மூலம் வெளியிட்டு உற்சாகமடைந்தது .
வெற்றிவிழாவில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.,
கலந்து கொண்ட திரை அரங்கை அமர்க்களப்படுத்தியது .
எம்ஜிஆர் சிறப்பு மலர்கள் வெளியிட்டது .

20 வருடங்கள் தொடர்ந்து எம்ஜிஆரின் படங்கள் திரைக்கு வந்த நாளை ஒரு திருவிழாவாக கொண்டாடி போற்றியது .
நாடெங்கும் எம்ஜிஆர் மன்ற தோழர்களின் நட்பு வட்டம் இணைத்தது
வாலிப வயதில் துவங்கிய எம்ஜிஆர் நட்பு முதுமையிலும் தொடர்வது
1978க்கு பிறகு 2019 வரை எம்ஜிஆரின் 100 படங்களுக்கு மேல் மறு வெளியீடு மூலம் இன்னமும் எம்ஜிஆர் நம்மோடு வாழ்வது .
மக்கள் திலகம் எம்ஜிஆர் 104 வது பிறந்த நாள் காணும் 2020 லும் எம்ஜிஆர் சாதனைகளை எண்ணி ஆனந்த வெள்ளத்தில்
கடந்த காலத்தின் வெற்றிகளை நினவு கொண்டு எல்லோரும் எம்ஜிஆரின் நினைவுகளோடு வலம் வருவோம் .......... Thanks.........

orodizli
7th April 2020, 04:52 PM
எம்ஜிஆர் திரை உலகில் நடித்து கொண்டிருந்த காலத்தில் அவருடைய படங்களை பார்த்து லட்சக்கணக்கான ரசிகர்கள், பின் கோடானுகோடி ரசிகர்களாக உருவானார்கள் .
எம்ஜிஆர் திமுக இயக்கத்தில் சேர்ந்த நேரத்தில் எம்ஜிஆர் ரசிகர்கள் திமுக தொண்டர்களாக மாறினார்கள் .
எம்ஜிஆர் மீது பற்றும் பாசமும் வைத்திருந்த ரசிகர்கள் இரவு பகலாக தேர்தல் நேரத்தில் திமுகவிற்காக உழைத்தார்கள் .
எம்ஜிஆர் 1967ல் குண்டடிப்பட்டபோது எம்ஜிஆருக்காக ரத்ததானம் செய்தார்கள் .
எம்ஜிஆர் மன்ற அமைப்புகள் உலகளவில் அனைத்துலகஎம்ஜிஆர் மன்றங்களாக மாறியது .
எம்ஜிஆர் அவர்களுக்கு 1972ல் சோதனையான கால கட்டத்தில் எம்ஜிஆர் ரசிகர்கள் ஆற்றிய பங்களிப்பு உலக சாதனை .
எம்ஜிஆர் 1972ல் அதிமுக உருவாக்கிய நேரத்தில் ஒட்டு மொத்த எம்ஜிஆர் ரசிகர்கள் எம்ஜிஆர் அனுதாபிகள் லட்சக்கணக்கில், கோடிக்கணக்கான மக்கள் அதிமுகவில் இணைந்தார்கள் .
எம்.ஜி.ஆர்., 1977 பாராளுமன்ற தேர்தலில் இமாலய வெற்றிக்கு எம்ஜிஆர் ரசிகர்கள் உழைத்தார்கள் .
1977ல் எம்ஜிஆர் மக்கள் பேராதரவோடு தமிழக முதல்வராக உயர்வு பெற்றார் .
எம்ஜிஆர் நடிப்பதை நிறுத்தினார் . ஆனாலும் அவர் நடித்த படங்கள் மறு வெளியீடுகளில் மகத்தான சாதனைகள் புரிந்தது .
எம்ஜிஆர் ரசிகர்கள் காலப்போக்கில் இளமையிலிருந்து முதுமை நிலைமைக்கு சென்று இருந்தாலும் வாழ்ந்து கொண்டிருக்கின்ற பலரும் இன்றும் அவர் நினைவாகவே எம்ஜிஆர் ரசிகர்களாக வாழ்கிறார்கள்

அதிசயம் ...
எம்ஜிஆர் நடிப்பதை நிறுத்திய 1977க்கு பிறகு பிறந்தவர்கள்
எம்ஜிஆர் மறைவிற்கு 1987க்கு பிறகு பிறந்தார்கள்
இன்றைய வளர்ந்து வரும் புதிய தலைமுறை ரசிகர்கள் எம்ஜிஆர் ரசிகர்களாக இருப்பது மிகுந்த ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது .
எம்ஜிஆரை நேரிலே பார்த்திரா தவர்கள் பலரும் எம்ஜிஆரின் நடிப்பையம் , அவருடைய வீர தீர சண்டைக்காட்சிகள் , மக்களுக்கு கூறிய கொள்கை மற்றும் நல்லொழுக்க காட்சிகள் இன்றைய தலைமுறை ரசிகர்களுக்கு ஈர்ப்பாக உள்ளது .

70 வருடங்கள்
7 தலை முறை சினிமா ரசிகர்கள்
லட்சக்கணக்கான எம்ஜிஆர் ரசிகர்கள்
இன்னமும் உயிர்ப்புடன் எம்ஜிஆர் ரசிகர்களாக உலகமெங்கும் இருப்பது எம்ஜிஆர் ஒருவருக்கு மட்டுமே கிடைத்த வரப்பிரசாதம் .........இது மிகையாகாது... Thanks.........

orodizli
8th April 2020, 07:25 PM
கதாநாயகிகளின் காதல் கீதங்களில் மக்கள் திலகம் எம்ஜிஆர் .

சரோஜாதேவி
தேக்கு மரம் உடலைத் தந்தது
சின்ன யானை நடையைத் தந்தது
பூக்களெல்லாம் சிரிப்பைத் தந்தது
பொன் அல்லவோ நிறத்தைத் தந்தது
ஜெயலலிதா
புண்ணியம் செய்தேனே நான் உன்னை அடைய புன்னகை புரிந்தாயே பூமுகம் மலர
தன்னலம் கருதாத தலைவா நீ வாழ்க பொன்னைப்போல் உடல் கொண்ட அழகே நீ வருக உள்ளமும் எண்ணமும் உன்னிடம் வந்தது அச்சமும் வெட்கமும் என்னுடன் நின்றது
வெண்ணிற ஆடை நிர்மலா
என்றும் இளமை மாறாமல் வாழும் சரித்திரமே -
நீ எந்தன் தலைவன் என்றெண்ணும் எண்ணம் இனித்திடுமே
மஞ்சுளா
அந்த நூற்றாண்டு சிற்பங்களும்உங்கள் பக்கத்திலே
வந்து நின்றாலும் ஈடில்லை என்று
ஓடும் வெட்கத்திலே
லதா
மன்னவன் உங்கள் பொன்னுடலன்றோ இந்திரலோகம்
அந்தி மாலையில் அந்த மாறனின் கணையில்
ஏன் இந்த வேகம் ஏன் இந்த வேகம்
பத்மினி
நெஞ்சிருக்கும் வரைக்கும் நினைவிருக்கும்
அந்த நினைவினில் அவர் முகம் நிறைந்திருக்கும்
எந்தன் நெஞ்சிருக்கும் வரைக்கும் நினைவிருக்கும்

ராஜ சுலோச்சனா
அன்புத் திருமுகம் காணாமல் -
நான்துன்பக் கடலில் நீந்தி வந்தேன்
காலப் புயலில் அணையாமல் -
நெஞ்சில்காதல் விளக்கை ஏந்தி வந்தேன்
உதய சூரியன் எதிரில் இருக்கையில்
உள்ளத்தாமரை மலராதோ ?
அஞ்சலி தேவி
அன்பு மிகுந்திடும் பேரரசே
ஆசை அமுதே என் மதனா
ராஜஸ்ரீ
இளமை பொங்கும் உடலும் மனமும்
என்றும் எனதாக
உரிமை தேடும் தலைவன் என்றும் அடிமை என்றாக
சாவித்திரி
அவன் தோட்டத்தில் எத்தனை மான்களோ
தோள்களில் எத்தனை கிளிகளோ
அவன் பாட்டுக்கு எத்தனை ராகமோ
பார்வையில் எத்தனை பாவமோ
பானுமதி
சிந்தைதன்னை கவர்ந்து கொண்ட சீதக் காதியே
திராட்சை போல இனிக்க பேசும் ஜீவ ஜோதியே
சிங்கார ரூபகாரனே என் வாழ்வின் பாதியே
கே.ஆர். விஜயா
நீ தொட்டால் எங்கும் பொன்னாகுமே பொன்மேனி என்னாகுமோ ..
லக்ஷ்மி
தமிழில் அது ஒரு இனிய கலை
உன்னைத் தழுவிக் கண்டேன் அந்த கவிதைகளை
அழகில் நீயொரு புதிய கலை
உன்னை அணைத்துக் கண்டேன் இன்ப கனவுகளை
வாணிஸ்ரீ
அடிமை இந்த சுந்தரி
என்னை வென்றவன் ராஜ தந்திரி

சௌகார் ஜானகி
பன்னிரண்டு கண்களிலே ஒன்றிரண்டு மலர்ந்தாலும்
என்னிரண்டு கண்களிலும் இன்ப ஒளி உண்டாகும்
உள்ளமது உள்ளவரை அள்ளித் தரும் நல்லவரை
விண்ணுலகம் வாவென்றால் மண்ணுலகம் என்னாகும்
ரத்னா
அல்லி மலராடும் ஆணழகன்கலைகள் தவழும் கண்ணழகன்
கன்னி மயிலாடும் மார்பழகன்

எல் .விஜயலட்சுமி
உள்ளங்கள் நேரான வழி காணட்டும்
உறுதியிலே துன்பம் தூளாகட்டும்
நன்மையே உன் வாழ்வில் தொழிலாகட்டும்
நாடெல்லாம் உன்னை கண்டு புகழ் பாடட்டும்

தேவிகா
இணையத் தெரிந்த தலைவா
உனக்கு என்னைப் புரியாதா
தலைவா என்னைப் புரியாதா
பத்மப்ரியா
அமுத தமிழில் எழுதும் கவிதை
புதுமை புலவன் நீ
புவி அரசர்குலமும் வணங்கும் புகழின்
புரட்சி தலைவன் நீ
ராதா சலுஜா
இன்பமே உந்தன் பேர் வள்ளலோ..
உன் இதயக் கனி நான் சொல்லும் சொல்லில்மழலைக்கிளி
உன் நெஞ்சில் ஆடும்பருவக்கொடி..
காஞ்சனா
இதுவரை என் கண்களுடன் ... எவரும் பேசவில்லை ...
புதியவன் நீ பார்க்கும் வரை இந்த புதுமை தெரியவில்லை.......... Thanks.........

orodizli
8th April 2020, 07:26 PM
#மக்கள்_திலகம்
#புரட்சி_நடிகர்
#வாத்தியார்
#பொன்மனச்_செம்மல்
#இதயக்கனி
#புரட்சித்தலைவர்

இப்படி எம்ஜிஆர் க்கு பல பட்டப் பெயர்கள் இருப்பது உங்கள் எல்லோருக்கும் தெரியும் ஆனால் அவர் செய்த இந்த செயலுக்கு என்ன பெயர் கொடுக்கலாம் என்று நீங்களே
சொல்லுங்கள்.

அது மெடிக்கல் காலேஜுக்கு இடம் வேண்டி விண்ணப்பித்தவர்களின் தேர்வுப் பட்டியல். முதல்வர் எம்.ஜி.ஆரின் கையொப்பத்திற்கு வருகிறது. அதைப் பார்வையிட்ட எம்.ஜி.ஆர்,,பெற்றோர் கையொப்பம் இட்ட இடத்தை முதலில் பார்க்கிறார்?
கை நாட்டு வைக்கப்பட்டிருந்த அப்ளிகேஷன்கலுக்கு முதலிலும்,,தமிழில் கையொப்பமிட்டிருந்த அப்ளிகேஷன்களுக்கு அடுத்ததாகவும்,,ஆங்கிலத்தில் கையொப்பமிட்டிருந்த படிவங்களுக்குக் கடைசியாகவும் கையொப்பமிடுகிறார்??
எம்.ஜி.ஆர் ஏன் அப்படிச் செய்தார்?

தலைவர் ஏன் இப்படி செய்தார் என்று உங்கள் பார்வைக்கே விட்டு விடுகிறேன் பதில் தெரிந்தவர்கள் கண்டிப்பாக #கமெண்ட் பண்ணுங்கள்.......... Thanks.........

orodizli
8th April 2020, 07:33 PM
MGR வாழ்க

பங்குனி 27 வியாழன்

எம்ஜிஆர் பக்தர்களே

படத்தில் இருப்பவர் பெயர் கே ஏ கிருஷ்ணசாமி

இவர் தென்னகம் என்ற ஒரு திமுக ஆதரவு பத்திரிகையை நடத்தினார்

எம்ஜிஆர் அவர்கள் திமுகவில் இருக்கும் காலத்திலேயே இவர் எம்ஜிஆரின் தீவிர விசுவாசி

,1972 அக்டோபர் மாதம் 8 ந்தேதி

திருக் கழு குன்றத்தில் நடந்த அண்ணா

பிறந்தநாள் பொதுக்கூட்டத்தில்

திமுக அமைச்சர்கள் அனைவரும் சொத்து கணக்கு காட்டவேண்டும் எண்று
பேசினார்

இந்தசெய்தியை தனது தென்னகம்

பத்திரிக்கையில் வெளியிட்டார்

அடுத்து சிலநாட்களில் திமுக. வில் இருந்து MGR அவர்களைநீக்கிவிட்டார்கள்

அடுத்தநாள் கே ஏ கிருஷ்ணசாமி அவர்களையும் திமுகவில் இருந்து நீக்கிவிட்டார்கள்

எம்ஜிஆர் அண்ணா திமுகவை ஆரம்பித்தார்

அண்ணா திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடு தென்னகம் என்று எம்ஜிஆர் அறிவித்தார்

அண்ணா திமுக வின் முதல் பொதுக்கூட்டம் சென்னை கடற்கரையில் நடந்தது

அந்தப் பொதுக் கூட்டத்திலேயே கிருஷ்ணசாமி அவர்கள் பேசும்பொழுது

இன்று முதல் நம் தலைவரை புரட்சித்தலைவர் MGR / என்றுதான் அழைக்கவேண்டும் என்று கூறினார்

எம்ஜிஆர் அவர்களே நீங்கள்ஆணையிட்டாள் முதலமைச்சர் கருணாநிதியின் தலையை வெட்டி உங்கள் காலடியில் கொண்டு வந்து சமர்ப்பிப்பேன் என்று கே எஸ் கிருஷ்ணன் கிருஷ்ணசாமி பேசினார்

இவர் இப்படிப் பேசிய காரணத்தினால்

கருணாநிதி அவர்கள்

இவரை

தலைவெட்டி கிருஷ்ணசாமி என்று கூறுவார்

அடுத்து நடந்த சட்டசபை பொதுத் தேர்தலில் வெற்றி பெற்று எம்ஜிஆர் முதலமைச்சராக பதவி ஏற்றார்

தன்னுடைய அமைச்சரவையில் கிருஷ்ணசாமி அவர்களுக்கு அமைச்சர் பதவி கொடுத்தார்

அடுத்து எம்ஜிஆருக்கு வந்த சோதனையான காலகட்டத்தில் எல்லாம் தோளோடு தோள்கொடுத்து நின்றார்

இவருடைய மகள் திருமணம் சென்னையில்முதலமைச்சர் எம்ஜிஆர் தலைமையில் நடக்கும் என்று ஏற்பாடு செய்திருந்தார்கள்

எம்ஜிஆர் இவருடைய திருமணத்திற்கு காலையில் ஜானகி அம்மாவுடன் சென்று கொண்டிருந்தார்

திடீரென்று எம்ஜிஆர் அவர்கள் வேறொரு திருமண மண்டபத்திற்கு செல்லுமாறு கட்டளையிட்டார்

அங்கு சென்று அவர்கள் திருமணத்தை நடத்தி வைத்தார்

நடிகர் ராமராஜன் நடிகை நளினி திருமணத்தை எம்ஜிஆர் ஜானகி அம்மையார் இருவரும் நடத்தி வைத்தார்கள்

பிறகு கே ஏ கிருஷ்ணசாமி வீட்டு திருமணத்திற்கு எம்ஜிஆர் சென்றார்

இப்படி எம்ஜிஆருக்கு சோதனையான காலகட்டத்தில் எம்ஜிஆருக்கு உறுதுணையாக நின்ற. K.A. கிருஷ்ணசாமி வீட்டு திருமணத்திற்கு கூட செல்லாமல்

நடிகர் ராமராஜன் திருமணத்திற்கு சென்றார் எம்ஜிஆர் ஜானகி அம்மையார்

அடுத்த சிலநாட்களில் ராமராஜன் நளினி இருவருக்கும் எம்ஜிஆர் ராமாவரம் தோட்டத்தில் விருந்து வைத்தார்

நளினிக்கு தங்க நகை பரிசளித்தார்

MGR

////////////////////////////////////////?/////////////

உப்பிட்டவரை உள்ளளவும் நினை

உண்ட வீட்டிற்கு இரண்டகம் செய்யாதே

இது நல்ல தாய் வயிற்றில் கருவாகி உருவான ஒரு மனிதன் கடைப்பிடிப்பார் கள்

/////////////////////////////////??????????????

ஆனால் எம்ஜிஆர் வீட்டில் ஜானகி அம்மையாரின் கையில் உணவை வாங்கி அருந்திய நடிகர் ராமராஜன்

எம்ஜிஆர் கையால் பல பவுன் எடையுள்ள தங்க நகையை

ராமராஜனின் மனைவிக்கு எம்ஜிஆர் அளித்ததை பெற்றுக்கொண்ட ராமராஜன்

,எம்ஜிஆரின் மனைவி விஎன் ஜானகி அவர்களின் ஆட்சியை கலைப்பதற்கு ஜெயலலிதாவிற்கு துணை போனார் நடிகர் ராமராஜன்

எங்களைப் போன்ற உண்மையான எம்ஜிஆர் ரசிகர்களின் வயிறு எரிந்தது

எம்ஜிஆரிடம் ஒரு ரூபாய் கூட உதவி பெறாத நாங்கள் எம்ஜிஆருக்கு நாயைப்போல் நன்றியுடன் விசுவாசமாக இருக்கிறோம்

எம்ஜிஆர் வீட்டு உணவு அருந்தி பல ஆயிரம் ரூபாய் உதவி பெற்ற கழுதைகள்

எம்ஜிஆருக்கு துரோகம் செய்தனர்

ஜானகி அம்மையாரின் ஆட்சியை கவிழ்க்க ஜெயலலிதாவுக்கு துணைபோன ராமராஜனை

துரோகி என்று கூறி ஜெயலலிதா அண்ணா திமுகவிலிருந்து ராமராஜனை நீக்கினார்

உண்மையான எம்ஜிஆர் ரசிகர்கள்சாபமிட்ட காரணத்தினால் ராமராஜன் மார்க்கெட் இழந்தார்

இன்று செல்லாக்காசாகி தெருவில் அலைந்து கொண்டிருக்கிறார்

எம்ஜிஆர் குடும்பத்திற்கு செய்த துரோகம் அவரை விடவில்லை

கட்சிக்காக உயிரைக் கொடுத்து பாடுபட்ட கே ஏ கிருஷ்ணசாமி வீட்டு திருமணத்திற்கு கூட செல்லாத எம்ஜிஆர்

இந்தக் துரோகத்திற்கு துணை போன இந்த கழுதையின் திருமணத்திற்கு சென்றார் எம்ஜிஆர்

வாழ்க கே ஏ கிருஷ்ணசாமி அவர்களின் எம்ஜிஆர் பக்தி

கே ஏ கிருஷ்ணசாமி போன்றவர்கள் கட்சி வளர்த்து வைத்த காரணத்தினால்தான்

ஜெயலலிதா முதல் எடப்பாடி வரை முதல்வராக வர முடிந்தது

கே ஏ கிருஷ்ணசாமி போன்றவர்கள் கட்சியை வளர்த்து வைத்த காரணத்தினால்தான்

இந்த நிமிடம் வரை தமிழ்நாட்டில் எம்ஜிஆர் கட்சியின் ஆட்சி நடந்து கொண்டு இருக்கிறது

கே ஆர் கிருஷ்ணசாமி அவர்கள்

திமுகவை ஆரம்பித்த தலைவர்களில் ஒருவரான

K.A.மதியழகனின் தம்பி

மதியழகன் திமுகவில் அமைச்சராக இருந்தார்

பிறகு சபாநாயகராகவும் இருந்தா

இவருடைய சொந்த ஊர் / கணியூர்

பழனியில் இருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது........ஒரு ரசிகரின் ஆதங்க பதிவு... Thanks...

orodizli
8th April 2020, 07:35 PM
https://youtu.be/BtU0eiUaLy8......... Thanks.........

orodizli
8th April 2020, 07:37 PM
https://youtu.be/eQG0Bflntqw......... Thanks...

orodizli
8th April 2020, 07:54 PM
கனியூர் குடும்பம்
என்று அண்ணாவால் அழைக்கப்பட்டவர்கள்...!

சட்ட அமைச்சராக இருந்தவர்...!
ஆயிரம் விளக்கு தொகுதியில் சிறுபாண்மையினரின் செல்ப்பிள்ளை...!

இரண்டு முறை இவரிடம் முக. ஸ்டாலின் அவர்கள் அதே தொகுதியில் தோல்விகண்டார்.

இவர் மறைந்த போது கலைஞர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்...!
கே. எ. கே. உடல் அவர் வீட்டு மாடியில் இருந்ததால், ஜெயலலிதா அவர்கள் படியில் என்ற இயலாளதால் கீழ் பகுதியில் வந்து அஞ்சலி செலுத்தினார்......... Thanks.........

orodizli
8th April 2020, 07:57 PM
கையெழுத்தே போடத்தெரியாதவர்கள்,படிக்காதவர்கள்,அவர்களுடைய குழந்தைகள்தான் அந்தக் குடும்பத்தில் படித்தவர்கள்... அதுவுமில்லாமல் வசதிக்குறைவானவர்களாகவும் இருக்க வாய்ப்பு உண்டு,அதை மனதில் கொண்டு அவர்களின் முன்னேற்றத்திற்கு உதவினார்,இது தனது முதல்வர் கோட்டாவில் இருக்கும் சீட்டுகளுக்குத் தலைவர் கடைப்பிடித்த சூத்திரம்......... Thanks...

fidowag
8th April 2020, 10:23 PM
தனியார் தொலைக்காட்சிகளில் நடிக*மன்னன் எம்.ஜி.ஆர். திரைப்படங்கள்*
----------------------------------------------------------------------------------------------------------------------
06/04/20* *- மெகா 24 டிவி - இரவு 10 மணி - தாயை காத்த தனயன்*

07/04/20* -ராஜ் டிஜிட்டல் ப்ளஸ் -காலை 10 மணி -ரகசிய போலீஸ் 115

* * * * * * * *-சன் லைப் - காலை 11 மணி* - பல்லாண்டு வாழ்க*

08/04/20- ஜெயா மூவிஸ் - காலை 7 மணி - தர்மம் தலை காக்கும்*

* * * * * * * * *மெகா 24 டிவி* - காலை 8.30 மணி -தர்மம் தலை காக்கும்*

* * * * * * * * * சன்* லைப்* * * - காலை 11 மணி* - தேடி வந்த மாப்பிள்ளை*

* * * * * * * * * புதுயுகம்* * - இரவு* 7மணி* - வேட்டைக்காரன்*

* * * * * * * * ஷாலினி டிவி - இரவு 8 மணி - ஆயிரத்தில் ஒருவன்*

09/04/20 - சன் லைப் -* * காலை 11 மணி - நீதிக்கு தலை வணங்கு*

orodizli
9th April 2020, 07:57 AM
நெல்லை மணி என்பவரின் பதிவில் இருந்து ...

1977 இல் மக்கள் துணையுடன் வரலாற்று சிறப்பு மிக்க வெற்றி பெற்று முதல்வர் ஆகிறார் நம் தலைவர்.

அந்த நேரத்தில் அவர் வீட்டில் தினம் தினம் வாழ்த்து சொல்ல அனைத்து தரப்பினரும் குவிந்து வந்தனர்.

ஒரு நாள் காலை வந்தவர்களில் நடிகர் வீ.கே.ராமசாமியும் இருந்தார்...அவர் வாழ்த்து சொல்லி புறப்படும் போது அண்ணே இருங்க என் கூட வாங்க ஒரு வேலை இருக்கு என்று சொல்ல.

வீ.கே.ஆர்...திகைத்து நம்மகிட்ட என்ன வேலை முதல்வர் ஆகிவிட்டார் இனி அவருக்கு தானே வேலை என்று யோசிக்க.

கோட்டைக்கு புறப்பட்ட முதல்வர் தன் காரில் வீ.கே.ஆர்... அவர்களையும் ஏற்றி கொண்டு வழி நெடுக மக்களை கை கூப்பி வணங்கி கொண்டு கார் கோட்டையை அடைகிறது.

அங்கு கார் நிற்கும் இடத்தில் தயார் ஆக இருந்த இருவரிடமும் வீ.கே.ஆர் ஐ காட்டி இவரை கோட்டை முழுவதும் நன்கு சுற்றி காட்டிவிட்டு என் அறைக்கு அழைத்து வாருங்கள் என்று சொல்ல.

அதன் படி ஒரு மணி நேரம் கழித்து நடிகர் வீ.கே.ஆர்...திரும்பி வந்து அடா அடா என்ன ஒரு இடம் என்று வெடி சிரிப்புடன் சொல்ல.

அது சரி ஏன் இந்த திடீர் ஏற்பாடு என்று கேட்க....

தலைவர் சிரித்து கொண்டே அண்ணே நீங்க 1948 இல் வால்டாஸ் சாலையில் நீங்கள் நடிக்கும் நாடகங்கள் போடுவீர்கள்... நான் தினமும் வந்து பார்ப்பேன்.

ஒரு பொங்கல் அன்று நீங்கள் நாடகத்துக்கு வரவில்லை... மறுநாள் நேற்று எங்கே போனீர்கள் என்று நான் கேட்க.

அதற்கு நீங்கள் தினமும் நாடகம் என்னென்று வெறுத்து அப்பிடியே காலாற பீச் பக்கம் போய் நடந்தே சுற்றி பார்த்து கொண்டு வீட்டை பற்றி சிந்தனை செய்து கொண்டு அப்படியே நடந்து கோட்டை பக்கம் போய் உள்ளே போகலாம் என்று நினைத்த போது.

அட இப்ப நியாபகம் வந்து விட்டது...என்னை உள்ளே விடாமல் துப்பாக்கி ஏந்திய காவலர்கள் துரத்திவிட அதை நான் உங்களிடம் சொன்னேனே அது.

ஆமாம் அண்ணே அன்று உங்கள் ஆசை இன்று நீங்கள் காலையில் வீட்டுக்கு வந்த உடன் நினைவுக்கு வந்தது.
சரி இன்றைக்கு உங்கள் ஆசையை ராஜ மரியாதை உடன் நிறைவேற்றும் பாக்கியம் எனக்கு கிடைத்துவிட்டது என்று சொல்ல.

கண்ணீர் மல்கிய கண்கள் உடன் கரம் கூப்பி விடை பெற்ற வீ கே.ஆர்...தலைவர் முதல்வர் அனுப்பிய காரில் வீடு திரும்பும் போது என்ன மனுஷன் இவரு....ஒவ்வொருவர் ஆசையையும் எப்ப நிறைவேற்ற முடியும் என்று எதிர்பார்த்து காத்து இருப்பார் போல எனக்கே மறந்து போச்சு என்று வியந்து சிந்தித்து திரும்ப.

அதுதான் எம்ஜியார்.
பல ஆண்டுகள் கழித்தாலும் ஒருவர் சொல்வது அது சாமானியன் அல்லது புகழ் பெற்றவர்கள் ஆக இருந்தாலும் அவர்கள் எண்ணங்களை அதை நிறைவேற்ற துடிக்கும் ஈடு இணையற்ற ஒரு மாமனிதர் நம் தலைவர்.......... Thanks.........

orodizli
9th April 2020, 08:04 AM
கோவை ராஜாவில் "தேர்த்திருவிழா" திரை படம் வெளியான அதே நாளில் தான் (23-02-1968) இருதயாவில் "பணமா பாசமா" வெளியானது...!
இதே கால கட்டத்தில் பொங்கலுக்கு வெளி வந்த ''ரகசிய போலிஸ் 115'' கர்னாடிக்கில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருந்தது...! ராயலில் திருமால் பெருமை வெளியானது...!

மார்ச் 15 ல் "குடியிருந்த கோயில்" வந்ததால் ராஜாவில் வசூலுடன் ஓடிக்கொண்டிருந்த "தேர்திருவிழா"
நிறுத்தப்பட்டது...!......... Thanks mr.Shajahan...

orodizli
9th April 2020, 09:38 AM
#எம்ஜிஆர் #எங்களின் #குலதெய்வம்..

#நாமக்கல் #கவிஞர் வெ. ராமலிங்கம் அவர்களின் #பேரன் திரு.H.நடராசன் தமது நினைவுகளைப் பகிர்கிறார்...!

#மலைக்கள்ளன்...
மக்கள்திலகத்தின் திரைவாழ்வில் திருப்புமுனையை ஏற்படுத்திய திரைப்படம்...

நாமக்கல் கவிஞரின் கதை கிட்டத்தட்ட ஆறு மொழிகளில் வெளியாகி அனைத்திலும் வசூலை அள்ளிக்குவித்த திரைப்படம்...

இதன் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் பட்சிராஜா ஸ்டூடியோ திரு ஸ்ரீராமுலு நாயுடு அவர்கள்... எனது தாத்தாவிற்கு கொடுப்பதாக உறுதியளித்த தொகையைத் தராமல் ஏமாற்றிவிட்டதால், வருத்தமடைந்து தயாரிப்பாளர் மீது வக்கீல் நோட்டீசு அனுப்புகிறார்..!

சில நாட்கள் கடந்து, சென்னை லாயிட்ஸ் ரோடு பகுதியில் வசிக்கும் தாத்தாவின் இல்லத்திற்கு ஒரு கார் வந்து நிற்கிறது...!

அதில் எம்ஜிஆர் ...! எனது தாத்தாவை நோக்கி விறுவிறுவென்று வந்தவர் சாஷ்டாங்கமாக காலில் விழுந்து, 'தயாரிப்பாளர் தங்களை ஏமாற்றியது குறித்து வருந்தவேண்டாம்... எனக்கு மலைக்கள்ளன் பேரும் புகழையும் ஈட்டித்தந்தது...அதனால் மறுக்காமல், இதை மறுக்காமல் வாங்கிக்கொள்ளவும் என்று சொல்லி நாங்கள் யாருமே எதிர்பாராத ஒரு பெரும்தொகையை எனது தாத்தாவிடம் அளிக்கிறார்... இப்படி ஒரு கொடைவள்ளல் யாருமுண்டா?

எனது தாத்தா வசித்த வீடு ஒண்டுக்குடித்தனம்... இதையறிந்த எம்ஜிஆர் அரசு சார்பில் ராயப்பேட்டையில் ஒரு வீடு வாங்கி அளித்து கௌரவித்தார்...! இந்தக்காலத்தில் இப்படியுமா???

மற்றுமோர் முக்கிய நினைவு...1965 ல் நடந்த AVM இல்லத்திருமணத்திற்கு என் தாத்தாவும் நானும் சென்றிருந்தோம்... தாத்தா சரியாக நடக்கமுடியாத காரணத்தினால் செல்லப்பேரனான என்னை வெளியிடங்களுக்கு அழைத்துச்செல்வார், எனது தோளில் கையைப் போட்டு தான் நடப்பார்...

அந்த திருமணத்தில் எம்ஜிஆர் சாப்பிட்டுக்கொண்டிருந்தார்...எனது தாத்தாவைப் பார்த்ததும் அப்படியே எழுந்தவர், கையைக் கழுவிட்டு பலர் முன்னிலையில் நெடுஞ்சாண்கிடையாக தாத்தா காலில் விழுந்தார்... நெகிழ்ந்து போன தாத்தாவின் ஜிப்பாவில் பணக்கட்டை யாரும் அறியாவண்ணம் போட்டார்...!

எம்ஜிஆர் மற்றவர்களுக்கு வேண்டுமானால் நடிகர்...ஆனால் எங்களுக்கு கடவுள்...!

நாமக்கல் கவிஞரின் பேரன் தனது உற்ற நண்பராகிய என் அண்ணன் சுந்தர்ராஜன் அவர்களுக்கு அனுப்பிய வாட்ஸ்அப் ஆடியோ...!

இந்த அரிய தகவலை எனக்கு அனுப்பிய #அண்ணன் #சுந்தர்ராஜன் அவர்களுக்கு என் அனந்தகோடி அநேக நமஸ்காரங்கள் 🙏🏻🙏🏻🙏🏻......... Thanks.........

orodizli
9th April 2020, 09:48 AM
*���� 1965-ல் வெளியான ‘எங்கள் வீட்டுப்பிள்ளை' தமிழ்நாட்டுப் பிள்ளையாக தலைவரை ஆக்கியது... ������*

*➡ சென்னை பிராட்வே, மேகலா, மதுரை - சென்ட்ரல், கோவை ராயல், தஞ்சை யாகப்பா ஆகிய ஐந்து ஊர்களிலும் 175 நாட்கள் ஓடியது இந்தப் படம்... ��❤��*

*������ சென்னை காசினோவில் 211 நாட்கள் ஓடியது. திருச்சி ஜூபிடரில் 236 நாட்கள் ஓடியது... ✨⭐��*

*������ ‘‘நான் ஆணையிட்டால் அது நடந்துவிட்டால் ஏழைகள் வேதனைப் படமாட்டார்'’ என்ற கனவு நாயகனாக புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரை கொண்டு போய் நிறுத்தியது இந்தப் படம்... ♥♥♥*......... Thanks.........

orodizli
9th April 2020, 11:08 AM
மக்கள் திலகம் நடிக்க ஆரம்பித்ததிலிருந்தே கொள்கை பிடிப்புடன் இருந்தார். தனக்கென்று ஒரு பாணி, அதற்கென்று ஒரு கொள்கை அதற்கென்று ஒரு தலைவன் என்று வாழ்ந்தார். யாருக்காகவும் தன் கொள்கையை
விட்டுக் கொடுக்க மாட்டார். இவர் தனக்கெதிராக செயல்படுகிறார் என்று தெரிந்தாலும் அவரை அழிக்க நினைக்க மாட்டார். மேலும் அவர்களுக்கு பல உதவிகளை செய்து அவர்களை தன் வசப்படுத்தி விடுவார்.

ஒரு சிலரைப்போல 40ஆண்டு கால நட்பு என்று சொல்லி சமயம் கிடைக்கின்ற போது எதிரியை அழிப்பதற்கு ஆலகால விஷத்தை கூட பயன்படுத்த தயங்காதவர் கிடையாது. ஆனால் நாட்டில் நல்லவர்களும் நயவஞ்சகர்களும் கலந்தே இருப்பதால் மக்கள் திலகத்தின் மீது வெறுப்புடன் இருப்பவர்கள் இன்று வரை இருப்பதை நாம் பார்க்கிறோம்.
என்ன இவருக்கு இவ்வளவு செல்வாக்கு, புகழ் என்று மனம் வெதும்பி திரிபவர்கள் நமது களத்திலேயே புகுந்து சினிமா பைத்தியம்,நாட்டுக்கு இது முக்கியமா, என்றெல்லாம் கேள்வி எழுப்புவது வயத்தெரிச்சல் இன்னும் குறையவில்லை என்பதையே இது காட்டுகிறது.

பூ மார்க்கெட்டில் பூ விற்காமல் கருவாட்டையா விற்பார்கள்.மக்கள் திலகத்தின் களத்தில் நுழைந்து கொண்டு நாட்டுக்கு இது முக்கியமா என கேட்டால் என்ன சொல்வது?!. உனக்கு தேவையான களம் வேறிடத்தில் இருந்தால் அங்கு போய் கேட்க வேண்டியதுதானே? நாங்கள் யாரும் வர மாட்டோம். நரி இடமா போனால் என்ன வலமா போனால் என்ன. நம்மை கடிக்காமல் போனால் சரி என்று பேசாமல் நாங்க பாட்டுக்கு இருப்போம். மேலும் ஒருவர் தமிழ் கலாச்சாரத்தை கெடுத்தது எம்ஜிஆரும் K R விஜயா வும் என்று கமெண்ட் கொடுத்த அவர் பெயரை பார்த்தவுடன் தான் தெரிகிறது அவர் பெயரிலேயே அழுகிய வெங்காய வாடை வீசுவதை உணர முடிந்தது. அவர்கள் தலைவர். தமிழ் கலாச்சாரத்தை மட்டுமல்ல தனது சிஷ்யர்களின் மானத்தையும் கப்பலேற்றியவர் என்று. தனது கொள்கையை விட பொருந்தா திருமணமே பெரிது, உபதேசம் ஊருக்கு தங்களுக்கல்ல என்று வாழ்ந்ததனால் அவர்கள் மீது வீசிய அழுகிய வெங்காய வாடையில் கூட இருந்த கட்சி முக்கியஸ்தர்கள் அலறிப்புடைத்து. அதை கழுவ வேறு பாதையில் திரும்பி நல்ல கதி அடைந்ததை நாடறியும்.

இன்னொரு சிவாஜி ரசிகர் அடிமைப்பெண் வெளியாகி 6 மாதங்கள் எம்ஜிஆர் படமே வெளியாகாததால் படம் வெள்ளி விழா கொண்டாடியது என்று குற்றம் சுமத்தியிருந்தார். அவர்களுக்கு நான் ஒன்றை சொல்லிக்கொள்வேன். அப்படி பார்த்தால் தேவர் பிலிம்ஸின் காதல் வாகனம் 193 நாட்கள் ஓடி சாதனை செய்திருக்க வேண்டுமே. காதல் வாகனம் வெளியாகி 193 நாட்கள் மக்கள் திலகத்தின் வேறு எந்த படமும் வெளியாகவில்லை. இதையெல்லாம் என்னவென்று அழைப்பது என்று தெரியவில்லை.
படத்தில் விஷயம் இல்லை யென்றால் ஒவ்வொரு பிறந்தநாளையும் கலரில் எடுத்து ஓடாத படத்துடன் சேர்த்தாலும் மேலும் ஒன்றிரண்டு வாரங்கள் கை கொடுக்குமே தவிர படத்தை சூப்பர்ஹிட் ஆக்க முடியாது என்பதை அனுபவத்தில் உணர்ந்தவர்கள் பேசுகின்ற பேச்சா இது. மேலும் தங்களுடைய படங்கள் சொந்த தியேட்டரிலும், வாடகை தியேட்டரையும் தவிர வேறு எங்கும் வெற்றி கொடி நாட்டி ஓட்ட இயலாது என்று தெரிந்தவர்களின் வயித்தெரிச்சலை வாங்க வேண்டாம்
என்று இத்துடன் நிறுத்தி கொள்கிறேன். நல்ல கமெண்ட்ஸை கொடுங்கள், அனைவரும் நலம் பெற்று வாழ புரட்சி தலைவரின் நாமம் வாழ்க என்று கூறி மீண்டும் அடுத்த பதிவில் சந்திக்க விரும்பும் K.சங்கர்.......... Thanks........

orodizli
9th April 2020, 11:16 AM
ஆமாம் சார், நீங்கள் கூறுவது முற்றிலும் உண்மை. சிலரது முகநூல், whatapp தளங்களில் வயிதெரிச்சல், முக்கல், முனகல், வேறு யாரும் வந்து அங்கு பதில் பதிவு போட முடியாது என நினைத்து அவர்களுக்குள்ளேயே ஆறுதலாக, சாதகமாக பதிவுகள் போட்டு கொண்டு இப்படியும் ஒரு அருவெறுக்க தனமான சாந்தியடைகிறார்கள் 'மூடர் கூடங்கள்'...

orodizli
10th April 2020, 08:37 AM
*�� உலகம் சுற்றும் வாலிபன் 1973 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்...*

*�� புரட்சித் தலைவர் எம். ஜி. ஆர் தயாரித்து இயக்கிய இத்திரைப்படத்தில் இரட்டை வேடத்தில் எம்.ஜி.ஆரும், மஞ்சுளா மற்றும் பலரும் நடித்திருந்தனர். அதிக பொருட்செலவில் இத்திரைப்படம் எடுக்கப்பட்டது... ₹₹₹ ������*

*இயக்கம் - புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்*
*தயாரிப்பு - புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் மற்றும் ஆர்.எம்.வீரப்பன்*
*கதை - சொர்ணம்*
*இசை - சு.விசுவநாதன்*
*நடிப்பு - எம்.ஜி.ஆர், நாகேஷ், லதா, சந்திரலேகா, மெட்டா ரூன்கிரேட் (தாய் நடிகை), மஞ்சுளா, எஸ். ஏ. அசோகன், இரா.சு.மனோகர், எம். என். நம்பியார்*
*ஒளிப்பதிவுவி -ராமமூர்த்தி*
*படத்தொகுப்பு - எம். உமாநாத்*
*கலையகம் - எம்ஜிஆர் பிச்சர்ஸ் லிமிடட்விநியோகம்*
*வெளியீடு - 11 மே 1973*
*ஓட்டம் - 178 நிமிடங்கள்*
*நீளம் - 4305 மீட்டர்*
*மொத்த வருவாய் - ₹4.2 கோடி*

*உலகம் சுற்றும் வாலிபன் திரைப்படம் வெளிவரும் காலத்தில் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் திமுகவினை விட்டு விலகி, அதிமுக என்ற புதுக் கட்சியை தொடங்கியிருந்தார்...*

*அதனால் ஆளும் கட்சியாக இருந்த திமுக தரப்பு உலகம் சுற்றும் வாலிபன் திரைப்படம் வெளிவருவதை தடுக்க முயற்சிகள் மேற்கொண்டது...*

*திரைப்படத்தின் விளம்பரத்திற்கு பிரதானமாக சுவரொட்டிகளை மட்டுமே நம்பியிருந்த காலத்தில் சுவரொட்டிகளின் மீதான வரியை தமிழக அரசு ஏற்றியது...*

*நிதி நெருக்கடி காரணமாக சுவரொட்டிகள் விளம்பரத்தினை எம்.ஜி.ஆர் தவிர்த்தார்...*

*இருப்பினும், மெகா ஹிட் படமாக அமைந்தது... ������������*......... Thanks.........

orodizli
10th April 2020, 01:22 PM
*எங்க வீட்டு பிள்ளையின் பக்தர்களுக்கு உதவி புரிய கோரிக்கை. எங்களை காப்பாற்ற யாரும் இல்லையா என்று கூக்குரல் வரும் போது தலைவர் நான் இருக்கின்றேன் என்று திரையில் எழுச்சியோடு வருவார். அந்த வாழும் தெய்வத்திற்காக எத்தனையோ உருவத்தில் பல வழிமுறைகளில் தன் உழைப்பையும் தன் குடும்ப எல்லைக்கு அப்பாற்பட்டு நன்கொடைகளையும் வாரிவழங்கிய தினகூலிகளாகிய சாதாரண பக்தன் இன்று சில வாரங்களாக வருமானம் இன்றி தவிக்கின்றார்கள்.அவர்களுக்கு உதவி புரிய ஒரு அமைப்பும் இல்லையே என்பதில் இருந்து நாம் எந்த கோணத்தில் உள்ளோம் என்பதை உணரும் பொழுது வருத்தமாக உள்ளது.தியேட்டரில் விழா கொண்டாட, அரங்கத்தில் விழா கொண்டாட தலைவர் புகழ் பரப்ப யார் யார் கைகள் நீண்டு வந்தனவோ அந்த 90% கைகள் வருமானம் இன்றி பூட்டப்பட்டு இருக்கின்றது.அடுத்து தலைவருக்காக எதையும் செய்ய துணியும் 10% வசதி படைத்த கைகள் எங்கே என்று தேடும் போது கண்கள் வலிக்கின்றது. அதே சமயத்தில் குறிப்பாக இந்த நேரத்திலும் இந்த மௌனம் ஏன் என்பது மட்டும் புரிகிறது.சரியான உள்கட்டமைப்பு இல்லை.ஒற்றுமை இல்லை.யார் கொடுத்து யார் பெயர் வாங்குவது என்று மனதிற்குள் நெருடல்.யார் யாருக்கு கொடுப்பது யார் சொல்லி கொடுப்பது யார் தலைவர் யார் ஒருங்கிணைப்பாளர் யார் செயளலாளர் யார் பொருளாளர் என்று நமக்குள் எழுப்பப்படும் இவை அனைத்தும் அந்த வசதி படைத்த 10% கைகளை கட்டி போட்டு இருக்கின்றது சரிதானே. ஆகவே இந்த சமயத்தில் யார் யார் தாராளமாக உதவுகிறார்களோ அவர்களை ஒருசில பதவிகளில் ஒளிரவைக்க கூடிய விரைவில் எல்லோரும் சேர்ந்து முடிவெடுப்போம். அதற்கு முன் நமக்குள் ஒவ்வொரு மாவட்டத்திலும் வசதி படைத்த பண்பாளரை ஒருவரை தேர்ந்தெடுத்து அவர்மூலமாக எல்லா நன்கொடைகளையும் வழங்கி அந்த நபர் மூலமாக தனி தனி குழுக்களாக பிரித்து அவரவர் மூலமாக மற்ற உண்மையான தலைவர் பக்தர்கள் இடத்தில் சேர்த்து சுனாமி அல்ல கண்ணுக்கே தெரியாத வைரஸ் வந்து வாழ்வாதாரத்தை சிதைத்தாலும் எங்களை அணைக்க பல கைகள் இருக்கின்றது என்று மகிழ வாட்ஸ்அப் பேஸ்புக் தொலைபேசி மூலமாக ஒவ்வொரு குழுவின் பொறுப்பாளர்களும் ஏற்பாடு செய்யுங்கள்.இதைவிட்டால் பொன்னான நேரம் அமையாது.இவன் ஷிவபெருமாள். கலைவேந்தன் எம்ஜிஆர் பக்தர்கள் அறக்கட்டளை செயலாளர்.......... Thanks.........

orodizli
10th April 2020, 01:46 PM
மஹா பெரியவாள் - மகான் - முதல்வர்
எம். ஜி .ஆர். சந்திப்பில்

திரு.பிச்சாண்டி I.A.S., அவர்கள் சொல்லகேட்டு ரா . வேங்கடசாமி.

காஞ்சி மகானின் சங்கர மடத்தில் அவ்வப்போது அபூர்வ நிகழ்சிகள் நடப்பதுண்டு திரு. எம். ஜி .ஆர்.முதல்வராக இருந்தபோது அவருடைய நேர் முக உதவியாளராக திரு. பிச்சாண்டி இருந்தார்.

முதல்வருக்கு உடலில் ஏற்பட்டிருந்த கோளாறு காரணமாக அவரால் சரியாக பேச முடியவில்லை . திரு.எம் ஜி. ஆருக்கு ஆன்மீக விஷயங்களில் உறுதுணையாக இருந்தவர் "இதயம் பேசுகிறது " திரு. மணியன் அவர்கள் . முதல்வர் மகானை தரிசிக்க விருப்பம் கொண்டவுடன் ,
திரு.மணியன் அவர்கள் அதற்க்கு செயல் வடிவம் கொடுத்தார் .

முதல்வர் அவரது துணைவியார் மணியன் மூவரும் புறப்பட ஆயத்தமானார்கள் ஆன்மீக விஷயமானதால் திரு.பிச்சாண்டி அவர்கள் முதல்வருடன் செல்ல தயங்கினார் ஆனால் முதல்வர் விடவில்லை தனது உதவியாளர் எந்த சந்தர்பத்திலும் தன்னுடன் இருக்க வேண்டும் என்று நினைத்து அவரையும் உடன் அழைத்து சென்றார் .

ஸ்ரீ மடத்திற்கு முதல்வரின் வருகை முன்னதாக அறிவிக்கப்பட்டது மகானுக்கு சற்றே உடல் நலம் பாதிப்பு இருந்த போதிலும் முதல்வரை பார்க்க அனுமதி அளித்தார் , முதல்வரும் மகானுக்கு உடல்
நலம் சரியில்லை என்று கேள்விப்பட்டுத்தான் இந்த சந்திப்புக்கு திட்டமிட்டார் .மகான் அமர்ந்திருக்க அவருக்கு சற்று எதிரே முதல்வர் தன் துணைவியாருடன் அமர்ந்திருந்தார்

செயலாளர் பிச்சாண்டியோ சற்று தள்ளி போலீஸ் வளையத்திற்கு அப்பால் நின்றிருந்தார் , இதை கவனித்த முதல்வர் அவரை சைகை கட்டி அருகே வருமாறு அழைத்தார் , காவலர்கள் உள்ளே விட மறுத்ததும் முதல்வர் அழைத்ததால் தான் செல்கின்றேன் என்று கூறி முதல்வர் அருகே சென்று அமர்ந்தார் .

மகான் பிச்சாண்டியை பார்த்து இவர் உங்கள்
பி.ஏ வா என்று கேட்க , முதல்வர் ஆமாம் என்றதும் அங்கிருந்த படியே பிச்சாண்டி தன் வணக்கத்தை தெரிவிக்க , மகானும் அவரை தனது திருக்கரத்தை உயர்த்தி ஆசிர்வதித்தார். பிறகு முதல்வர் மகானை பார்த்து "உங்கள் தேகம் எப்படி இருக்கிறது?" என்று கேட்டார்.

"தேகம்" என்று அவர் கேட்டது , "தேசம்" என்று மகான் செவிகளில் ஒலிக்க
தேசத்திற்கு என்ன நன்றாகத் தானே இருக்கிறது என்றார் மகான்

முதல்வர் பிச்சாண்டியை திரும்பி பார்க்க , அவர் மகானிடம் விளக்கினார்
"தங்களது தேகம் எப்படி இருக்கின்றது" என்று முதல்வர் கேட்கிறார்
அதற்கென்ன நன்றாகத் தான் இருகின்றது என்றார் மகான் லேசாக புன்முறுவல் செய்தபடி , இடையில் மடத்து சிப்பந்திகள் பெரியவாளுக்கு உடம்பு ரொம்ப முடியல மருந்தே சாப்பிட மாட்டேன்கரா , முதல் மந்திரிதான் சொல்லணும் என்றார்.

உடனே முதல்வர் சொல்லுங்கள் நான் என்ன செய்யவேண்டும்? மகானிடம் கேட்கிறார் . அப்போதும் மகான் தன் உடம்பை பற்றி அவரிடம் பேசவில்லை

"எனக்கு நீங்கள் மூன்று காரியங்களை செய்வதாக வாக்குறுதி தரவேண்டும்" என்றார்

"சொல்லுங்கள் செய்கிறேன் " முதல்வர் உணர்ச்சிவசப்பட்டு பதில் சொல்கிறார்

"முதல் விஷயம் - தமிழ் நாட்டிலே பல கோவில்களில் விளக்கே எரியறது இல்லை . விளக்கு எரிய நீங்கள் ஏற்பாடு பண்ணனும் , முதல்வர் தலையாட்டுகிறார்

இரண்டாவதாக , பல கோயில்கள் மிகவும் மோசமான நிலையில் இருக்கு அதெல்லாம் ஒழுங்கு படுத்தி கும்பாபிஷேகம் நடத்தனும்".

"செய்துவிடுகிறேன் "

மூன்றாவது விஷயம் என்ன என்பதை சொல்ல மகான் சற்றே தயங்குகிறார்

முதல்வரும் மகானின் முகத்தை உற்று பார்த்த வண்ணம் இருக்கிறார்
"நாகசாமியை மன்னிச்சுருங்கோ " என்கிறார் ,

(நாகசாமி யார் என்பதை பற்றி சொல்லியாக வேண்டும்) .
பழங்கால கோவில்கள் , சின்னங்கள் போன்றவைகளைப் பற்றி ஆராய்ந்து புதிய புதிய தகவல்களை சேகரித்து வந்த தொல்பொருள் ஆராய்ச்சித்துறையை சேர்ந்தவர் . அவர் கண்டுபிடிக்கும் பல பழமையான விஷயங்களை , நேரடியாக பத்திரிகைகளுக்கு தொகுத்து கொடுத்து விடுவார் . பத்திரிகைகளை பார்த்துத் தான் முதல்வரே அவைகளைப் பற்றி அறிந்து கொள்வார் .
முதல்வருக்கு இது தம்மை உதாசீனப்படுத்தும் செயல் என்கிற எண்ணம் . அரசுக்கு சொல்லிவிட்டு தானே அதை வெளியில் சொல்லவேண்டும் , இதனால் முதல்வர் நாகசாமியை தற்காலிக பதவி நீக்கம் செய்துவிட்டார் , அதை நாகசாமி மகானிடம் சொல்லவும் இல்லை , முதல்வரிடம் கேட்கவும் இல்லை . முதல்வர் ஒரு நிமிடம் மௌனம் சாதிப்பதைக் கவனித்த மகான் பேசினார்

" நாகசாமி பல கோவில்களைப் பத்தி விவரமாக ஆராய்ச்சி செய்து எவ்வளவோ விஷயங்களை நாட்டுக்காக தெரியப்படுத்தி இருக்கார் , அவர் ஆராய்ச்சி பண்ணலேன்னா பல விஷயங்கள் வெளியில தெரியாமலேயே போய் இருக்கும் "மன்னித்து விடுகின்றேன் " என்பது போல் முதல்வர் தலையை ஆட்டினார்.

மிகவும் சிறப்பு வாய்ந்த இந்தச் சந்திப்பில் தமிழ் நாட்டுக் கோயில்களுக்கு நிறைய நன்மைகள் ஏற்பட்டன , தனது உடல் நிலையை பற்றி கவலைப்படாமல் வேறு விஷயங்களை பற்றி எவ்வளவு கவலைப் படுகின்றார் என்று வியந்தார் முதல்வர்.......... Thanks.........

orodizli
10th April 2020, 01:56 PM
எம்ஜியார் நினைத்து இருந்தால் !! தன் வாழ்நாள் கடைசிவரை சிவாஜி போல அக்கடா துக்கடா வேடங்களில் நடித்து காலத்தை தள்ளி இருக்கலாம் !!! இந்த நேரத்தில் கருணாநிதிக்கு நன்றி சொல்லவேண்டும் !! தலைவரை சீண்டிபார்க்க கொம்புசீவி முக முத்துவை கலமிறக்கியமைகாக !! திட்டம்போட்டு தலைவரை மட்டம் தட்டிய கருணாநிதிக்கு நன்றிதான் சொல்லவேண்டும் !! இல்லையென்றால் ஒரு புரட்சிதலைவர் , முதலமைச்சர் நமக்கு கிடைத்து இருக்கமாட்டார் !! ஊழலை எதிர்த்து திருகழுகுன்றம் கூடத்தில் சிம்மகர்ஜனை புரிந்தார் தலைவர் !! தூக்கி எறிந்தார் கண்ணில்லாத கபோதி கருணாநிதி !! தலைவரின் வாழ்க்கையே மாறிவிட்டது !! ஊழல் கருணாநிதி கூட்டத்தை வேரோடும் !! வேரடி மண்ணோடும் சாய்த்துவிட்டார் நம்தலைவர் !!! அதன் பின் தலைவர் உயிருடன் இருக்கும் வரை கருணாநிதியால் தலைதூக்க முடியவில்லை !!
அதற்கு அவர் பட்ட கஷ்டங்கள் ஏராளம் !! அவமானங்கள் சொல்லி முடியாது !! அப்படிப்பட்டவரின் தொண்டர்கள் எப்படி இருக்கவேண்டும் ?????? ஊழலுக்கு வெண்சாமரம் வீசுவதா ?? வாழ்த்து சொல்வதா ?? அப்படி ஊழலை சிவப்புக்கம்பளம் போட்டு வரவேற்கும் !! நபர்கள் என் நண்பர்கள் என்று சொல்லிக்கொள்ள லாயக்கு அற்றவர்கள் !! தயவுசெய்து அப்படி பட்டவர்கள் நட்பு வட்டதில் இருந்து நான் விலகிகொள்கிறேன் !! நண்பர்களே ?????

இதில் நான் யாரையும் tag செய்யவில்லை !!!.... தலைவர் பக்தர் ஒருவர் ஆதங்க பதிவு...

orodizli
10th April 2020, 02:00 PM
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்., கதாநாயகனாக நடித்த முதல் படம்" ராஜகுமாரி" வெளியான நாள் 11-04-1947.
ராஜகுமாரி 1947 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.[1] ஏ. எஸ். ஏ. சாமி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். ஜி. ஆர் மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[2] உடுமலை நாராயணகவியின் பாடல்களுக்கு எஸ். எம். சுப்பையா நாயுடு இசையமைத்திருந்தார்... Thanks......

orodizli
10th April 2020, 02:03 PM
ராஜகுமாரி எம்.ஜி.ஆர் கதாநாயகனாக நடித்த முதலாவது திரைப்படமும்,[2] மு. கருணாநிதி முதன் முதலாக வசனம் எழுதிய திரைப்படமும், ஏ. எஸ். ஏ. சாமி முதன் முதலில் இயக்கிய திரைப்படமும் ஆகும்.[1] இத்திரைப்படத்திலேயே முதன் முதலில் பின்னணிக் குரல் பயன்படுத்தப்பட்டது. ‘காசினிமேல் நாங்கள்’ என்ற எஸ். எம். சுப்பையா நாயுடு இசையமைத்து திருச்சி லோகநாதன் பாடிய பாடலுக்கு எம். என். நம்பியார் வாயசைத்தார்.[3] இப்படத்துக்கு உரையாடலை மு. கருணாநிதி எழுதியபோதும் உரியமுறையில் அவர் பெயர் படத்தில் இடம்பெறவில்லை.[4] படத்தின் பாட்டுப் புத்தகத்தின் பழைய பிரதியில், ‘கதை, வசனம், டைரக்*ஷன்’ ஏ.எஸ்.ஏ.சாமி பி.ஏ., ஹானர்ஸ் என்றும் ‘உதவி ஆசிரியர்’ – மு.கருணாநிதி என்றும் அச்சிடப்பட்டிருக்கிறது.[5]
இயக்கம்
ஏ. எஸ். ஏ. சாமி
தயாரிப்பு
எம். சோமசுந்தரம்
ஜூபிட்டர்
எஸ். கே. மொக்தீன்
இசை
எஸ். எம். சுப்பையா நாயுடு
நடிப்பு
எம். ஜி. ஆர், கே. மாலதி, எம். என். நம்பியார், எம். ஆர். சுவாமிநாதன், டி. எஸ். பாலையா, புளிமூட்டை ராமசாமி, கே. தவமணி தேவி, எம். எம். ஏ. சின்னப்பா தேவர், எஸ். வி. சுப்பையா, நாராயண பிள்ளை, டி. கே. சரஸ்வதி, எம். எம். ராதாபாய்
ஒளிப்பதிவு
டபிள்யூ. ஆர். சுப்பாராவ், வி. கிருஷ்ணன்
படத்தொகுப்பு
டி. துரைராஜ்
வெளியீடு
ஏப்ரல் 11, 1947
நீளம்
14805 அடி
நாடு
இந்தியா.......... Thanks...

orodizli
10th April 2020, 02:06 PM
Directed by
A. S. A. Sami
Produced by
Jupiter Pictures
Written by
A. S. A. Sami
Screenplay by
A. S. A. Sami
Story by
A. S. A. Sami
Starring
M. G. Ramachandran
K. Malathi
M. R. Saminathan
T. S. Balaiah
K. Thavamani Devi
M. N. Nambiar
Music by
S. M. Subbaiah Naidu
Cinematography
W. R. Subba Rao
U. Krishnan
Edited by
D. Durairaj
Production
company
Jupiter Pictures
Distributed by
Jupiter Pictures
Release date
11 April 1947[1]
Running time
134 mins
Country
India Male cast
M. G. Ramachandran as Sukumar
T. S. Balaiah as Aalahalan
M. R. Swaminathan as Evil Sorcerer
S. V. Subbaiah as King
M. N. Nambiar as Bahu
Pulimoottai Ramasami as Sorcerer's Diciple
M. E. Madhavan as Boat sailor
Narayana Pillai
Female cast
K. Malathi as Princess Mallika
K. Thavamani Devi as Visha, Queen of an island
M. Sivabhagyam as Bahani
M. M. Radha Bai as Queen
C. K. Saraswathi as Anjalai
R. Malathi
Vaazhvom Vaazhvom 02:12
2 Kannara Kaanpadhenro M. M. Mariyappa 02:09
3 Maaran Avadhaaram 03:15
4 Maamayilena Nadamaaduraal 03:06
5 Neyramithe Nalla .. Sukumaaran 02:13
6 Paampaatti Chiththanaye 02:59
7 Paattil Enna Solven Paangi 03:27
8 Thirumuga Ezhilai Thirudi Kondathu M. M. Mariyappa & .. 02;53....... Thanks...

orodizli
10th April 2020, 02:08 PM
Jupiter Pictures partner Somu asked A. S. A. Sami to create a screenplay that he himself could direct with artistes on the payroll of the company. However, when he read Sami's screenplay, he suggested that P. U. Chinnappa and T. R. Rajakumari, who were in the forefront at that time, play the lead roles. But Sami requested Somu to stick to the original decision. M. G. Ramachandran was on Jupiter's payroll. His looks were handsome and he had an athletic body. Also, the Siva-Parvathi dance he performed with K. Malathi in Jupiter's 1946 production Sri Murugan was impressive. MGR and Malathi were asked to play the lead roles. After more than half the film was shot, the company's other partner S. K. Mohideen felt the project be abandoned. Somu weighed the consequences in the light of future career of Sami and MGR. He told his partner that a decision could be taken on completion of the film.[2...... Thanks.........

orodizli
10th April 2020, 02:08 PM
Rajakumari" was MGR's 15th film and first film as leading actor. Director of this film, ASA Samy arranged a wrestler called Kamaludeen to participate in a fight sequence for the film. But MGR insisted to have Sandow M. M. A. Chinnappa Thevar who had been acting in small roles to do the role. At first director was not interested to have him in the film, but later agreed.[3] K. Thavamani Devi who was a talented dancer and singer played the role of a vamp. At one point she came for shooting wearing a dress with a plunging neckline (something unseen those days). It caused ripples on the set.[2]....... Thanks...

orodizli
10th April 2020, 02:10 PM
"Rajakumari" turned out to be a commercial success with huge profits. In 2008, film historian Randor Guy said it would be "Remembered for: the debut of M. G. Ramachandran as hero and A. S. A. Sami as director.[2]... Thanks.........

orodizli
10th April 2020, 02:12 PM
"ராஜகுமாரி", சென்னை ஸ்டார் கிரௌன் மற்றும் ஒரு அரங்கு மதுரை சிந்தாமணி திருச்சி வெலிங்டன் சேலம் ஓரியண்டல் கோவை ராஜா ஆகிய திரையரங்குகளில் 100நாட்களை கடந்து ஓடியது.......... Thanks.........

orodizli
10th April 2020, 07:06 PM
நேர்மையே உன் பெயர்தான் மொரார்ஜியோ!:::

இன்றைக்கு மொரார்ஜி தேசாயின் நினைவு நாள்!

ஒரு மாமனிதரை நினைவு கூர வாய்ப்பளித்த கொரோனாவுக்கு நன்றி!

தவறாக புரிந்து கொள்ளப்பட்ட ஆளுமை என்பதுதான் ஆராய்ச்சியாளர்கள் தேசாய்க்கு தரும் அடைமொழி!

தேசாயையெல்லாம் அரசியல்வாதி என்று அரசியல்வாதிகளே ஒப்புக்கொள்வதில்லை!

இம்மியும் பிசகாத நேர்மை, வெறி பிடித்த தேசப்பற்று, லஞ்சம்ஊழல் என்றால் கொலைவெறி, வாரிசு அரசியலில் உடன்பாடின்மை என இலக்கணமாக வாழ்ந்த மனிதர்!

வழக்கம் போல் தனிமனித துவேசத்தையே ஆயுதமாக்கி, தங்களை வளர்த்துக்கொண்ட தமிழக தலைவர்கள் மொரார்ஜியையும் விட்டு வைக்கவில்லை!

மொரார்ஜி இந்தி வெறியர், மொரார்ஜி வட மாநிலங்கள் ஆதரவாளர் என்பதாக சொல்லி சொல்லி தமிழக மக்களிடம் மொரார்ஜியை வில்லனாக்கி விட்டார்கள்!

மொரார்ஜி இந்தியாவுக்கு ஒரு பொது மொழி தேவை, அது இந்தியாக இருக்கலாம் என்றவர்!
மொரரார்ஜி பிரதமராகயிருந்த போதுதான் எம்ஜிஆர் முதல்வர்!
மொரார்ஜியின் காலத்தில்தான் அதற்கு முன் காங்கிரஸ் ஆட்சியில் எப்போதும் ஒதுக்கியிராத நிதி ஒதுக்கீடு தமிழகத்துக்கு ஒதுக்கப்பட்டது என்பது வரலாறு!

மொரார்ஜியின் காலத்தில் மத்தியில் சிவில் சப்ளைசில் செக்ரடரியாகயிருந்த ராகவன் I.A.S தனது "நேரு முதல் இந்திரா வரை"சுயசரிதத்தில் இப்படி எழுதுகிறார்!
"எம்ஜிஆர் முதல்வராகயிருந்த போது அவரே உணவு அமைச்சர் ராம்நாயக் கேபினுக்கு வருவார்! பொதுவாக அமைச்சர்களும் செக்ரட்டரிகளும்தான் வருவார்கள்! எம்ஜிஆர் ஈகோ பார்க்காமல் அவரே வருவார்! ரேசன் மாதக்கோட்டாவை மூன்று மடங்காக உயர்த்திக்கேட்பார்! தமிழகத்தில் ஐயாயிரமாக இருந்த ரேசன் கடைகளை அவர்தான் இருபதாயிரம் ஆக்கியிருந்தார்! முதலில் மறுக்கும் உணவு அமைச்சர் பிறகு ஒப்புதல் தந்து விடுவார்! எம்ஜிஆர் போனதும் எங்களிடம் "என்ன செய்வது? அவர் பிரதமரின் செல்லப்பிள்ளை" என்பார்! தமிழக செக்டார் என்ற முறையில் எனக்கு பெருமையாக இருக்கும்"

எம்ஜிஆருமே மொரார்ஜியுடனான தன் சந்திப்பை இப்படி எழுதுகிறார் "முதல்வரானதும் மரியாதை நிமித்தமாக பிரதமரை பார்க்கப்போனேன்! அதற்கு முன் ஓரிரு முறை பார்த்திருந்தாலும் பேசியதில்லை! மொரார்ஜி வட இந்திய ஆதரவாளர், சினிமாவை வெறுப்பவர், திமுக கூட்டணியில் இருப்பவர் என்ற அச்சம் என்னுள் இருந்தது! எப்படி நடத்துவாரோ என பயந்தேன்! மாறாக பிரதமர் என் கரங்களை இறுக பிடித்தபடி "ராமச்சந்திரன் நீங்கள் உச்ச நட்சத்திரமாக இருந்தாலும் மது குடிக்க மாட்டீர்களாமே? தமிழ்நாட்டில் தீவிரமாக மது விலக்கை அமுல்படுத்த சட்டம் போட்டிருக்கிறீர்களாமே? பாராட்டுகள்" என்பதாக மகிழ்வோடு பேச ஆரம்பித்து விட்டார்! அவர் பிரதமராகயிருந்த வரை எந்த அப்பாயின்ட்மென்டுமே இல்லாமல் அவரை சந்திக்க அனுமதி அளித்தார்!"

மொரார்ஜி ஒன்றுபட்ட மஹராஷ்டிரத்தின் முதல்வராகயிருந்த போது நடந்த சம்பவம் சோகத்தின், நேர்மையின் உச்சம்!

தாயில்லாத மொரார்ஜியின் மகள் பியூசி தேர்வு எழுதியிருந்தார்! மெடிக்கல் சீட்டுக்கு இரண்டு மதிப்பெண் குறைந்து ரிசல்ட் வந்தது!

மகள் மதிப்பெண்ணில் ஏதோ தவறிருக்கிறது, மறு கூட்டலுக்கு பணம் கட்டுகிறேன் அனுமதி தாருங்கள் அப்பா என்று மொரார்ஜியிடம் கேட்டார்!

வாஞ்சையாக மகளின் தலையை நீவி விட்டு மொரார்ஜி "அம்மா நீ இப்போது முதல்வரின் மகள்! மறு கூட்டலில் நியாயமாகவே உனக்கு மதிப்பெண்கள் கிடைத்தாலும் முதல் அமைச்சராக நான் மிரட்டியே வாங்கியதாக ஊர் உலகம் சொல்லும்! சிரமம் பார்க்காமல் இன்னொரு வருடம் படித்து மெடிக்கலுக்கு தேர்வாகிக்கொள்!"

மனமுடைந்தப்பெண் தூக்கமாத்திரைகளை அதிகமாகக்கொண்டு தற்கொலை செய்து கொண்டதும், கதறித்துடித்த மொரார்ஜி "இது என் நேர்மைக்கு கிடைத்த பரிசு" என்றதும் சரித்திரம்!

அப்படிப்பட்ட மொரார்ஜி பிரதமராகயிருந்த போது அவரது மகன் பணி புரிந்த இன்சூரன்ஸ் நிறுவனத்துக்கு சலுகைக்காட்டினார் என காங்கிரசும் அவரது கட்சியிலேயே இருந்த சரண்சிங் ஆதரவாளர்களும் பாராளுமன்றத்திலேயே அபாண்டமாக குற்றம் சுமத்தினார்கள்!

மொரார்ஜி பாராளுமன்றத்தை விட்டு வெளியே போய் பேசுங்கள், அப்போதுதான் வழக்கு போட முடியும், பேசுங்கள் என்று சொல்லிப்பார்த்தார்!

சட்டசபையிலும் பார்லியுலும் எதை வேண்டுமானாலும் பேசலாம்!

இருந்தும் பாராளுமன்ற நிலைக்குழுவுக்கு புகார் அனுப்பப்பட்டது, கோர்ட்டில் பொது நல வழக்கும் நடந்தது!

உண்மை இருந்தால்தானே நிரூபிக்க!

அதிருப்தியாளர்களுக்கு மந்திரிப்பதவியும், எம்பிக்களுக்கு நன்கொடையும் கொடுக்க மறுத்ததால் நேர்மையாளர் மொரார்ஜி பிரதமர் பதவியிலிருந்து விலக்கப்பட்டார்!

இந்தியாவின் உயரிய விருதான பாரதரத்னா விருதும், பாகிஸ்தானின் உயரிய விருதான நிசான்- இ - பாகிஸ்தான் விருதும் வழங்கப்பட்ட ஒரே இந்தியர் மொரார்ஜிதான்!

முன்னாள் பிரதமர் என்ற முறையில் அரசு வழங்கிய குடியிருப்பு, சலுகைகள் அத்தனையும் மறுத்தவர் மொரார்ஜி!

அவர் சொன்ன காரணம்தான் மெய்சிலிர்க்க வைக்கும்! "நான் தேசத்தின் குடிமகனாக என் கடமைகளை செய்தேன்! அந்திமக்காலத்தில் அதற்கான சலுகைகளைக்கொடுத்து என்னையும் கையூட்டு பெற்றவனாக சாகடித்து விடாதீர்கள்!"

மும்பையில், ஒரு வாடகை அடுக்குமாடி குடியிருப்பில், மிகச்சிறிதான அறையில் அவரது அந்திமக்காலமும், சாவும் நடந்தது!

ஜெய் ஹிந்த்!!!......... Thanks.........

orodizli
10th April 2020, 07:07 PM
https://youtu.be/5Cr_Ida92vQ......... Thanks.........

orodizli
10th April 2020, 07:24 PM
https://youtu.be/emZPZUVRxkw......... Thanks...

fidowag
10th April 2020, 07:46 PM
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். சந்தித்த*சவால்கள் - 1 yes tv*
------------------------------------------------------------------------------------------

1 yes tv யில் வியாழனன்று*(09/04/20) மாலை 6.30 மணிக்கு ஒளிபரப்பாகிய நிகழ்ச்சியில் திரு.இருகூர் இளவரசன் (எழுத்தாளர் ) அளித்த பேட்டியின்* விவரம் :


மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்கள் நடித்த நம்நாடு படத்தை தயாரிப்பாளர் பி.நாகிரெட்டி பெரும் பொருட்செலவில் தயாரித்திருந்தார். விஜயா புரொடக்ஷன்ஸ் சார்பில் 1965ல் தயாரித்து வெளியிட்ட எங்க வீட்டு பிள்ளையின் இமாலய வெற்றி மற்றும் சாதனையை அடுத்து நாகிரெட்டி எம்.ஜி.ஆரை வைத்து 1969ல்* தயாரித்து தீபாவளி வெளியீடாக வெள்ளித்திரைக்கு வந்தது . நம்நாடு படமும் பிரம்மாண்ட வெற்றியை பெற்றது .* நம்நாடு படத்தில் அரசியல் நெடியுடன் கூடிய வசனங்கள் பன்ச் வசனங்கள், மற்றும் ஊழல் பேர்வழிகள் நாட்டுக்கு செய்யும் தீமைகள் , மக்களுக்கு எதிரான திட்டங்கள் ,அன்றைய ஆட்சியின் அவலங்கள்*,ஆகியன* அடங்கிய காட்சிகள் ஏராளம் இருந்தன.



படத்தின் வெற்றியையும், மக்களின் வரவேற்பையும் நேரில் கண்டுகளிக்க எம்.ஜி.ஆரும் , நாகிரெட்டியும்* புரசைவாக்கத்தில் உள்ள ஒரு அரங்கிற்கு படம் ஆரம்பித்து நெடுநேரம் கழித்து , அரங்க மேலாளருக்கு மட்டும் வருகையை தெரிவித்து ரசிகர்களுக்கு தெரியாமல் கதவை திறந்து ஓரமாக நின்று பார்வையிட்டனர் . ஒவ்வொரு காட்சியிலும் ரசிகர்கள், பொதுமக்கள் ஆரவாரம், வரவேற்பு, கைதட்டல்கள் ஆகியவற்றை கண்டு மெய்சிலிர்த்தனர் . நம்நாடு படத்தின் வரவேற்பு, வெற்றியை நேரில் கண்டு* ரசித்ததும் ரசிகர்களுக்கு தெரியாமல் பின்பு வெளியேறினார்கள் .* பின்னர் எம்.ஜி.ஆர். நாகிரெட்டியிடம்*பிற்காலத்தில் ஒருவேளை நான் அரசியல் உலகில் களமிறங்க நேரிட்டால்**இதுவே பிள்ளையார் சுழியாக இருக்கும். எனக்கு இருந்த சந்தேகங்கள்* தீர்ந்தன .என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.* பதிலுக்கு நாகிரெட்டி நீங்கள் எந்த துறையில் போட்டியிட்டாலும், ஈடுபட்டாலும், அந்த துறையின் சிகரத்திற்கு*சென்றடைவது திண்ணம் .* உங்களது கடந்த கால வாழ்க்கையின் வெற்றியே அதற்கு சிறந்த உதாரணம் .* சினிமா வாழ்க்கையில் சிகரத்தை அடைந்தாற்போல*அரசியல் வாழ்க்கையிலும் இமயத்தின் உச்சிக்கு செல்ல எனது அட்வான்ஸ் வாழ்த்துக்கள் என்று கூறியுள்ளார்*



நாடக துறையில் ஓரளவு அனுபவம் பெற்ற எம்.ஜி.ஆர். தனது 20 வயதில் சினிமா துறையில் அடியெடுத்து வைக்க நல்ல தருணம் பார்த்து வாய்ப்புகளை தேடினார் .அப்போது வால் டாக்ஸ் சாலையில் உள்ள ஒற்றை வாடை கொட்டகை அருகில்*(யானை கவுனி அருகில் ) வாடகை வீட்டில் எம்.ஜி.ஆர். வசித்து வந்தபோது*எம்.ஜி.ஆரின் தாயார் தங்கமணி என்ற பெண்ணை எம்.ஜி.ஆருக்கு திருமணம் செய்து வைத்தார் .* சினிமா வாய்ப்புகள் தேடி வந்த போது, போதிய வருமானம் இல்லாததால் , பெண் வீட்டார் சில காலம் தங்கமணியை கேரளாவில் பாலக்காடு அருகில் உள்ள ஊரில் தங்களுடன் தங்குவதற்கு அழைத்து சென்றனர் .* சில காலம் கழித்து திடீரென நோய்வாய்ப்பட்டு தங்கமணி* இறந்து போனார் .* * தகவல் அறிந்து எம்.ஜி.ஆர். பாலக்காடு சென்று இறுதி அஞ்சலி கண்ணீருடன் செலுத்தினார் . பெண் வீட்டார்* ஈம சடங்குகள் ஆனதும் , சம்பிரதாயப்படி*வேட்டி , சட்டை , துண்டு , ஆகியன 2 செட்* கொடுத்தனுப்பினர் . பதிலுக்கு எம்.ஜி.ஆரின் தாயார் வீடு சார்பில் பெண் வீட்டாருக்கு மரியாதைகள் செய்யப்பட்டது .**



எம்.ஜி.ஆர். இரவு வேளையில் தானே துணிகளை துவைத்து, காய்ந்ததும் ,காலையில் எழுந்து ஒரு பித்தளை சொம்பில் கரிகள் போட்டு நெருப்பு வைத்து*துணிகளை இஸ்திரி போடுவார் .* காலை சிற்றுண்டி முடிந்ததும் , நடந்தே ,கீழ்ப்பாக்கத்தில் உள்ள நியூடோன் ஸ்டூடியோ சென்று சினிமாவில் நடிக்க வாய்ப்பு கேட்பார் .* அவர்கள் வாய்ப்பு இருந்தால் தருகிறோம் , அழைக்கிறோம் என்பார்கள்* அங்கிருந்து சில சமயம் பேருந்தில் அல்லது நடந்தே வடபழனியில் உள்ள கோல்டன் ஸ்டூடியோ செல்வார் . அங்கும் வாய்ப்பு கேட்டு காத்திருப்பார் .ஒரு சமயம் மதுரை பாய்ஸ் கம்பெனியில் நாடகத்தில் நடித்த நடிகர் ஒருவர் தாடியுடன் தென்படவே நலம் விசாரித்தார் .* அவர் வாய்ப்புகள் தேடி மிகவும் சோர்ந்து இருந்தார் .* இறுதியில் சாப்பீட்டீர்களா என்று எம்.ஜி.ஆர். கேட்க, அவர்*தலை குனிந்தவாறு இருக்க, சூழ்நிலையை* புரிந்து கொண்டு , அவருக்கு தனது சட்டையில் இருந்து ரூ3/-* எடுத்து கொடுத்தார் . காலை சிற்றுண்டி, மற்றும் பேருந்து கட்டணம் செலவு ரூ.3/- போக கைவசம் இருந்த ரூ.7;ல் இருந்து தானம் செய்துள்ளார்.* எம்.ஜி.ஆருக்கே* நிரந்தர வாய்ப்புகள் கிடையாது . இன்றைக்கு வருமானம் வருமா தெரியாது . நாளைக்கு என்ன வருமானம் இருக்கும் என்பது தெரியாது . இந்த நிலையில் அடுத்தவருக்கு உதவும் மனப்பான்மை, அடுத்தவர்*பசிப்பிணி போக்கும் தன்மை ஆகிய குணங்கள் அப்போதிருந்தே இருந்துள்ளது .இன்றைய உலகத்தில் கையில் ரூ.100/- இருந்தாலும், ரூ.1,000/- இருந்தாலும் எவ்வளவு பேருக்கு அடுத்தவருக்கு உதவும் மனப்பான்மையோ* , தர்ம சிந்தனையோ* இருக்கும் யோசித்து பாருங்கள் .* இந்த நற்குணங்கள் தான் மக்கள் மனதில் எம்.ஜி.ஆருக்கு நிலையான புகழை , இடத்தைக் கொடுத்தது . அவர் வாழ்ந்த ராமாவரம் தோட்டத்தில் யார் வந்தாலும் பசியோடு திரும்பி சென்ற வரலாறில்லை .* தன்* வாழ்நாள் முழுவதும் அதை ஒரு கொள்கையாகவே எம்.ஜி.ஆர். கடைபிடித்தார். நடிகர் சோ ஒரு முறை பேட்டியில் வீட்டில் உலை வைத்துவிட்டு அரிசிக்காக ஒருவரை தேடி செல்வதாக இருந்தால் நிச்சயம் அது எம்.ஜி.ஆர். வீடாகத்தான் இருக்கும் என்று கூறியுள்ளார் . அதனால் தான்*வாழ்ந்தவர்கள் கோடி , மறைந்தவர்கள் கோடி, மக்கள் மனதில் என்றும் நிற்பவர் எம்.ஜி.ஆர். என்று சொல்கிறார்கள் . இந்த வரிகள் அவரது மன்னாதி மன்னன் படத்திலும் இடம் பெற்றுள்ளது .

fidowag
10th April 2020, 07:48 PM
என்றென்றும் கவிஞர் கண்ணதாசன் - ராஜ்*டிவி*
----------------------------------------------------------------------------

ராஜ் டிவியில் வியாழனன்று*(09/04/20) மாலை 5.30 மணி முதல்* 6 மணி வரையில்* என்றென்றும் கவிஞர் கண்ணதாசன் என்கிற தலைப்பில் ஒளிபரப்பான நிகழ்ச்சியில் அவர் வசனம் எழுதிய , புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். இரு வேடங்களில் நடித்து இயக்கிய நாடோடி மன்னன் பற்றிய சில தகவல்கள் வெளியான விவரம் :


நாடோடி மன்னன் படத்தை எம்.ஜி.ஆர். பிக்ச்சர்ஸ் நிறுவனம் 1958ல் தயாரித்தது .மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். இரு வேடங்களில் நடித்து , சிறப்பாக இயக்கி இருந்தார் .பெரும் பொருட்செலவில் , தனது சொத்துக்களை எல்லாம் அடகு வைத்து , இந்த படம் வெளியாகி வெற்றி பெற்றால் நான் மன்னன் , தோல்வியுற்றால் நான் நாடோடி என்று எம்.ஜி.ஆர். குறிப்பிட்டு இருந்தார் . படத்தில் பானுமதி, எம்.என். ராஜம், பி.சரோஜாதேவி என மூன்று கதாநாயகிகள் .* இரண்டு வில்லன்களாக , வீரப்பாவும், நம்பியாரும் , நடித்திருந்தனர் . எம்.ஜி.ஆர். அண்ணன் திரு. சக்கரபாணி துணை வேடத்தில் நடித்திருந்தார் .* வசனம்* கவிஞர் கண்ணதாசன்* இசையமைப்பு எஸ்.எம். சுப்பையா நாயுடு . இயக்கம் எம்.ஜி.ஆர். 1958ல் வெளியான நாடோடி மன்னன் சிறப்பான வெற்றி பெற்று அதுவரை வெளியான படங்களின் வசூலை தவிடு பொடியாக்கி இமாலய சாதனை பெற்றது .* 1958ம் ஆண்டின் சிறந்த படம் , சிறந்த இயக்குனர் எம்.ஜி.ஆர். என* பரிசுகள்* பெற்றது . அந்த ஆண்டில் வசூல் சாதனையில் முதலிடம் .* இந்த படத்தின் வெற்றிக்கு மதுரை தமுக்கம் மைதானத்தில் லட்சக்கணக்கான மக்கள் முன்னிலையில் , பேரறிஞர் அண்ணாவின் தலைமையில் எம்.ஜி.ஆருக்கு 110 சவரனில் தங்கவாள் பரிசு அளிக்கப்பட்டது* * அந்த வாளை ,எம்.ஜி.ஆர். அமெரிக்காவிற்கு சிகிச்சைக்காக சென்று வந்த பின்னர் உடல் நலம் தேறியதும் , மூகாம்பிகை அம்மனுக்கு தானமாக அளித்துவிட்டார் .


நாடோடி மன்னன் திரைப்படம் இதுவரை வெளிவந்த தமிழ் படங்களிலேயே மிகவும் நீளமான படம் .அதாவது கிட்டத்தட்ட 4மணி நேரம் திரையில் ஓடும் .புதிய கதாநாயகியாக பி.சரோஜாதேவியை எம்.ஜி.ஆர். படத்தின் இறுதி பகுதியில் வண்ணத்தில் ( கோவா கலர் ) அறிமுகப்படுத்தினார் .* சரோஜாதேவி அதற்கு பின் எம்.ஜி.ஆருடன் 26 படங்களில் கதாயாகியாக நடித்துள்ளார் .* நாடோடி மன்னன் அளித்த அறிமுகம் காரணமாக நட்சத்திர கதாநாயாகியாக உருவெடுத்தார் .இதை பல சமயங்களில் சரோஜாதேவி எம்.ஜி.ஆருக்கு நன்றி செலுத்தும் வகையில் தெரிவித்துள்ளார் .1958 லேயே* , சினிமாத்துறை முன்னேறாத காலத்திலேயே* மிகவும் நவீன உத்திகளுடன் அப்போதைய தொழில்நுடபத்துடன் காட்சிகள் அமைத்து , மிக சிறப்பாக தனது சொந்த படத்தை வடிவமைத்தார் எம்.ஜி.ஆர்.* ஒரு காட்சியில் இரண்டு எம்.ஜி.ஆர்களும் இணைந்து கை கொடுக்கும் காட்சி* இதற்கு உதாரணம் .**


அந்த காலத்தில் தி. மு.க. கட்சியின் சின்னம் , அடையாளம் ஆகியவற்றை பல சர்ச்சைகளுக்கு நடுவே , நீதிமன்றத்தில் போராடி எம்.ஜி.ஆர். அறிமுகப்படுத்தினார்* *தமிழின் பெருமையை உணர்த்தும் வகையில்* செந்தமிழே வணக்கம் என்ற பாடல் , உழைப்பின் சிறப்பை வெளிப்படுத்தும் வகையில் உழைப்பதிலா உழைப்பை பெறுவதிலா இன்பம் என்ற பாடல் ,*முற்போக்கு சிந்தனையுடன் கூடிய சமுதாய கருத்துக்கள் அடங்கிய பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரத்தின்* தூங்காகே தம்பி தூங்காதே* என்ற பாடல் ,தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என ஆறு மொழி பாடல் , மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் , காடு வெலெஞ்சென்ன* மச்சான்* என்ற பாடல்*காதல் கனிரசமான* சம்மதமா,* கண்ணில் வந்து மின்னல் போல் ஆகிய பாடல்கள்* நகைச்சுவைக்கு தடுக்காதே என்கிற சந்திரபாபுவின் பாடல்* பாடுபட்டா தன்னாலே , பலனிருக்குது கைமேலே என்கிற தத்துவ பாடல் ஆகியன படத்திற்கு பலம் சேர்த்தன* .


சண்டை காட்சிகள் , புதுமையாகவும், திரில்லிங்காகவும், இருந்தன .* வீரப்பா, மற்றும் நம்பியாருடன் மோதும் வாள் வீச்சு சண்டை காட்சிகள்* அபாரம் .ஹாலிவுட் படங்களுக்கு நிகராக சண்டை காட்சிகளில் கண்ணாடி விளக்குகள், கண்ணாடிகள் உடைந்து சுக்கு நூறாவது போன்ற காட்சிகள் மிகுந்த சிரத்தையுடன் படமாக்கியுள்ளனர் .* எம்.ஜி.ஆரின்* சிறப்பான இயக்கத்தில் விறுவிறுப்பான காட்சிகள் , சுறுசுறுப்பான திருப்பங்கள் கொண்ட படமாக அமைந்தது . எம்.ஜி.ஆர். தனது ரசிகர்கள், பொதுமக்களின் எதிர்பார்ப்பிற்கு தகுந்த வகையில் இருக்கையை விட்டு அகலாதவாறு* திறம்பட இயக்கி உன்னதமான படத்தை தயாரித்து வெளியிட்டு அனைவரின் பாராட்டை பெற்றார் .


நாடோடி மன்னன் படத்தை 10க்கு மேற்பட்ட பத்திரிகைகள் சிறப்பு மலர் வெளியிட்டு புகழ்மாலை சூட்டின ,கவிஞர் கண்ணதாசன் , அந்த காலத்திற்கு ஏற்றாற்போல அரசியல் பன்ச் வசனங்கள், , காதல், வீரம், அன்பு, தாய்மை, பாசம்,*மக்கள் நலம் , நகைச்சுவை, மன்னராட்சியின் அவலங்கள், மக்களாட்சியின் தத்துவங்கள் ஆகியவற்றை மக்களுக்கு எளிதில் உணர்த்தும் வகையில் மிக சிறப்பாக எழுதியிருந்தார் .* திரைப்படத்தின் நடுவே, பானுமதி இறக்கும் காட்சியை சிம்பாலிக்காக ஒரு ஆண் மான் நிற்க , பெண் மான் அம்பால் வீழ்த்தப்பட்டு இறந்து கிடக்கும் காட்சி , சிறந்த இயக்குனர் எம்.ஜி.ஆர். என்ற*பாராட்டும் , கைத்தட்டல்களும்* பெற செய்தது .**

orodizli
10th April 2020, 07:54 PM
புரட்சிதலைவர் ஆட்சி காலத்தில் அவரின் துணிச்சல் தன்மையும் அதே நேரம் ரத்தத்தில் ஊறிய மனிதாபிமானம் குறித்த இரு செய்திகள் இன்று.

1981 ஆம் ஆண்டு ராமநாதபுரம் மாவட்டத்தில் ஒரு பெரும் ஜாதி கலவரம் உருவானது...

வழி விடும் முருகன் கோவில் திருவிழாவில் மூண்ட கலவரம் அடங்காமல் யார் யாரோ பேச்சுவார்த்தை நடத்தியும் அடங்கவில்லை.

முதல்வர் அங்கு போக முனைந்த போது வேண்டாம் என்று தடுத்து விட்டனர் உயர் அதிகாரிகள்.

தீயசக்தி மறைமுக தூண்டுதல் ஒருபுறம் நடக்க துப்பாக்கி சூட்டில் 4 நபர்கள் பலி ஆனார்கள்...கலவரம் நின்றபாடு இல்லை.

இனி பொறுப்பதில்லை என்ற முதல்வர் எம்ஜியார் யார் தடுத்தும் கேட்காமல் திடீர் என்று விமானம் மூலம் மதுரை சென்று அங்கு இருந்து காரில் ராமநாதபுரம் நோக்கி சென்றார்..

உயரதிகாரிகள் , காவல்துறையினர் தடுத்தும் பலன் இல்லை....தலைவர் யோசனை படி சில கட்சி முக்கிய நிர்வாகிகள் கலவரத்தில் ஈடுபட்ட முக்கிய ஜாதி தலைவர்கள் உடன் பேச ஏற்பாடு செய்து இருந்தனர்...இந்த விவரம் அரசு சார்ந்த சில அதிகாரிகளுக்கு தெரியாது.

ராமநாதபுரம் சென்ற தலைவர் நேராக கோட்டாட்சியர் அலுவலகம் சென்று அந்த கோட்டாட்சியர் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளரையும் உடனே பணி இட மாற்றம் செய்தார்.

பிற மாவட்ட காவல்துறை சார்ந்தவர் உடனே வரவழைக்க பட்டனர்.

ஒரு பிரிவின் தலைவர் கூரியூர் வக்கீல் கோவிந்தன், மற்றும் அடுத்த பிரிவை சேர்ந்த மொடலூர் நிலக்கிழார் துரை சிங்கம் மற்றும் முனியாண்டி ஆகியோருடன் தனி தனியாக பேச்சு வார்த்தை நடத்த.

ஒரு கட்டத்தில் இழுபறி ஏற்பட பின்னர் அனைவரையும் வெளியே போக சொல்லி விட்டு அவர்களிடம் என்ன சொன்னார் என்று தெரியவில்லை.

வெளியே வரும் போது முகம் வெளுத்து மகுடிக்கு மயங்கிய நாகம் போல இரு தரப்பு தலைவர்களும் வெளியே வந்தனர்.

18 நாட்கள் மகாபாரத போர் போல நடை பெற்ற அந்த ஜாதி யுத்தம் அந்த நிமிடம் முதல் முடிந்து சகஜ நிலை திரும்பியது.

அது தான் எம்ஜியார் வைத்தியம்....தீயசக்தி அரண்டு போனது...

ஒரு மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு ஒரு பகுதியில் தீப்பிடித்து எரியும் போது துணிச்சல் ஆக எதிர் கொண்டு அரை மணி நேரத்தில் அதை முடிவுக்கு கொண்டு வந்த முதல் முதலமைச்சர் நம்ம தலைவரே...

என்ன வைத்தியம் தெரியவில்லை...ஆனால் கொடிய ஜாதி நோய் உடனே முடிவுக்கு வந்தது.

கண்டிப்பு முடிந்து இனி கருணை நிகழ்வு..

1983 டிசம்பர் மாதம் கஜா புயல் போல பெரு மழை வெள்ளம் தஞ்சை புதுக்கோட்டை மாவட்டங்களில்... சேதம் மிக அதிகம்...

பார்வையிட மக்கள் முதல்வர் புறப்பட்டு பார்வையிட்டு வர மதியம் உணவுக்கு அறந்தாங்கி அரசினர் விடுதியில் உணவு எல்லோருக்கும்...அது சின்ன இடம்.

முதல்வர் உடன் வந்த அரசு அதிகாரிகள், காவல் துறையினர், மற்றும் கட்சியினர் கூட்டம் அதிகம்.

தலைவர் சீக்கிரம் சாப்பிட்டுவிட்டு அடுத்த பகுதி பார்க்கும் அவசரத்தில் வெளியே வர காலை முதல் சுற்றிய பலர் சாப்பிடாமல் மீண்டுமா என்று யோசிக்க காரில் ஏற வந்த முதல்வர் இடம்.

அப்போது அமைச்சர் ஆக இருந்த திருச்சி சவுந்திரராஜன் தலைவர் காதில் போய் மற்றவர் நிலை சொல்ல உடனே திரும்பி அறைக்குள் சென்றார்.

முக்கால் மணி நேரம் கழித்து வெளியே வந்த நம் தலைவர் காரில் எற போக திடீர் என்று முன்னால் நோக்கி நடக்க அனைவரும் விவரம் தெரியாமல் பர பரக்க.

பைலட் போலீஸ் கார் அருகில் வந்து நின்ற முதல்வர் அந்த காரில் இருந்த போலீஸ் ஓட்டுனரை சைகையால் அழைக்க

பயந்து கொண்டு வந்த காவலரிடம் இங்கே வாங்க நல்ல சாப்பிடீங்களா என்று கேட்க அவர் நடுங்கிய படி ஆமாம் ஐயா என்று சொல்ல.

கிட்டே வாருங்கள் என்று அவரை அழைத்து அவர் வலது கையை எடுத்து தன் மூக்கின் அருகில் கொண்டு சென்று முகர்ந்து பார்த்து ஆமாம் சாப்பிட வாசம் வருகிறது என்று சொல்லி.

திரும்பி தன் முதல்வர் வாகனம் நோக்கி திரும்பி மக்களை சந்திக்க புறப்பட்டார் நம் சரித்திர நாயகன் எம்ஜியார்.

ஒரு மாநிலத்தின் முதல்வர் தனக்கு கீழே பணியாற்றும் எவரும் பசியுடன் இருக்க கூடாது என்பதில் அவரை போல இனி ஒருவரை இந்த உலகம் காண்பது சந்தேகமே.

முதன்முதலாக அரசு துறை ஓட்டுனர்களுக்கு உணவு படி என்ற திட்டத்தை இந்தியாவில் கொண்டு வந்த முதல் முதல்வர் நம் முதல்வரே.

அதன் பின்னரே மற்ற இந்திய மாநிலங்கள் இந்த சட்டத்தை தத்தம் மாநிலங்களில் கொண்டு வந்தன.

வீரமும், நெஞ்சில் ஈரமும் கொண்ட பொன்மனசெம்மல் புகழ் என்றும் காப்போம்.

வாழ்க எம்ஜியார் புகழ்..

Courtesy: Nellaimani Aiadmk......... Thanks.........

fidowag
10th April 2020, 08:38 PM
ஜூனியர்*விகடன்* வார இதழ் -12/04/20

-----------------------------------------------------------------

ரஜினி ஏன் முதல்வராக விரும்பவில்லை ?
------------------------------------------------------------------

வரி பாக்கி செலுத்த வேண்டும் .* சினிமாவில் நடிக்க அனுமதி தாருங்கள் என்று முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர். பிரதமர் மொரார்ஜி தேசாய்க்கு கடிதம் எழுதினர் .42* ஆண்டுகளுக்கு முன்பு இதே ஏப்ரல் மாதம் நடந்த விஷயம் இது .

அ . தி .மு.க வை தொடங்கிய பிறகு 1977 ம் ஆண்டு தேர்தலில் வென்று முதன்முறையாக முதல்வரானார் எம்.ஜி.ஆர். தேர்தல் முடிவுகள் வெளியாகி 15 நாட்கள்* கழித்துதான் முதல்வராக பதவி ஏற்றார் .* காரணம் மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன் படப்பிடிப்பு மீதம் இருந்தது .* முதல்வராக ஆன பின்பு* நடிக்க முடியாது* என நினைத்ததால் என்னவோ இந்த ஏற்பாட்டை செய்தார் .**

ஆட்சியில் அமர்ந்த பிறகு எம்.ஜி.ஆருக்கு சினிமா மோகம் குறையவில்லை .எம்.ஜி.ஆருக்கு நடந்த பாராட்டு விழாவில் பேசிய தயாரிப்பாளர் முக்தா சீனிவாசன் எம்.ஜி.ஆர். கோப்புகளில் கையெழுத்திடும் எளிமையான பணியில் அமர்ந்து விட்டார் என சொல்ல , சினிமாவில் நடிக்க ஆசை உண்டு , 15 நாள் முதல்வராகவும் , 15 நாள் நடிகராகவும் இருக்கப் போகிறேன்* என அதே மேடையில் பதில் சொன்னார் எம்.ஜி.ஆர்.* அதன் பிறகு பத்திரிகை ஒன்றுக்கு அளித்த பேட்டியில் , நடிப்பை விட்டு விட போவதில்லை , இரண்டு பொறுப்புகளையும் என்னால் சமாளிக்க முடியும் என்று கூறியிருந்தார் .**


1978ம் வருடம் பிப்ரவரி 11ம்* தேதி* நெல்லை பாளையங்கோட்டை அரசு விழாவில் பேசிய எம்.ஜி.ஆர். , மேற்கு வங்காள* முதல்வர் பி.சி.ராய்* ஒரே நேரத்தில் டாக்டராகவும், முதல்வராகவும் செயல்பட்டார் .* அதே போல் என்னாலும் நடித்துக் கொண்டே முதல்வர் பணியையும் செய்ய முடியும் . அதனால் மீண்டும் சினிமாவில் நடிக்கப் போகிறேன் என்றதும் கூட்டம் ஆர்ப்பரித்தது .


விஷயம் பிரதமர் மொரார்ஜியின் கவனத்திற்கு சென்றது . சினிமாவில் நடிப்பது , முதல்வர்* பதவிக்கு கண்ணியம் சேர்க்காது என்றார் . சினிமாவில் நடிக்க முடிவான நிலையில் , பிரதமரின் கருத்தை அலட்சியம் செய்ய வேண்டாம் என எண்ணி மொரார்ஜிக்கு கடிதம் எழுதினர் எம்.ஜி.ஆர்.* முதல்வர் பதவிக்கு கிடைக்கும் சம்பளம் போதுமானதாக இல்லை . அதனால் அவகாசம் கிடைக்கும் நேரங்களில் பணம் சம்பாதிக்க திரைப்படங்களில் நடிக்க வேண்டியுள்ளது .* எனவே அனுமதி தாருங்கள் என கடிதத்தில் எம்.ஜி.ஆர். குறிப்பிட்டிருந்தார் .


1978 ஏப்ரல் 2ம் தேதி* மொரார்ஜி தேசாயிடமிருந்து எம்ஜி.ஆருக்கு பதில் வந்தது .**சினிமாவில் நடிப்பது உங்கள் விருப்பம் .* அதற்கு பிரதமரின் அனுமதி தேவையில்லை .* முதல்வருக்கான கடமைகளுக்கு இடையூறு இல்லாமல் நடிப்பதில் எனக்கு ஆட் சேபனை* இல்லை என சொல்லியிருந்தார் .**


புதிய படவேலைகள் வேகமெடுத்தன .* கதாநாயகியாக லதா, இசை அமைப்பாளராக இளையராஜா, கதை வசனம் வாலி, இயக்கம் கே. சங்கர் ,தயாரிப்பு தர்மராஜ் என முடிவாகி ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி , தொடக்க விழாவுக்கு தேதி குறித்தனர் .* படத்தின் பெயர் உன்னை விடமாட்டேன் .*பிரசாத் ஸ்டுடியோவில்* ஏப்ரல்**14ம் தேதி படத்தின்* தொடக்கவிழா , ஷூட்டிங் நடந்து கொண்டிருந்த போது , அடுத்த படத்துக்கான அறிவிப்பு வெளியானது .சொந்த படமான இமயத்தின் உச்சியில் என்ற படத்தில் நடிக்க போகிறேன் என 1979 ஜனவரி 31ம் தேதி அறிவித்தார் எம்.ஜி.ஆர்.*

1978ம் ஆண்டு ஏப்ரல்*மாதம் பிரசாத்*ஸ்டுடியோவில் உன்னைவிட மாட்டேன்*படத்தின்*பூஜையின்போதும், தொடர்ந்து இசை ஞானி இளையராஜா*இன்னிசையில் டி.எம்.எஸ். பாட , படிக்கிறேன் இன்னும் படிக்கிறேன் என்ற பாடல் 9 வது* டேக்கில்*ஓ.கே. ஆனபோதும்* நான்(லோகநாதன் ) உடனிருந்து நேரில் கண்ட*காட்சி*பசுமையான நினைவுகள். மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். பூஜைகள்*முடிந்ததும்*, பாடல் பதிவிட்டு*எனக்கு அனுப்புங்கள் என்று சொல்லிவிட்டு புறப்பட்டார் .அந்த பாடல் எம்.ஜி.ஆர். அவர்களுக்கு பிடிக்காமல் போக பின்பு மலேசியா*வாசுதேவனை*வைத்து பின்னாளில் பாட வைத்து ஒலிப்பதிவு* செய்தார்கள் .* ஆனால் என்ன காரணமோ*தெரியவில்லை*, அதற்குப்பின் படப்பிடிப்பு தொடங்கவில்லை .எம்.ஜி.ஆர். அவர்களும்*முதல்வர் பணியில்*பிஸியாகிவிட்டார் .

உன்னைவிட மாட்டேன்*பிரச்னை*ஓய்ந்து*,மூன்று ஆண்டுகள்*கழித்து நடிகர்*ரஜினியின் திருமணம் 1981 பிப்ரவரி*26ம் தேதி திருப்பதியில் நடந்தது .அதற்கு*முன்தினம்*பத்திரிகையாளருக்கு அளித்த*பேட்டியில்*திருமணம் முடிந்ததும்*படப்பிடிப்பில்*கலந்து கொள்வேன்*. மனைவியை விட எனக்கு*சினிமா*தொழில் முக்கியம் என்று பேசியிருந்தார் . லதாவின் கரம் பிடிக்க எம்.ஜி.ஆரும் ஒரு காரணம்* என்று ரஜினி*குறிப்பிட்டார் .* எம்.ஜி.ஆர். சிபாரிசு*செய்ததால்தான் எனக்கு*லதாவை*திருமணம் செய்து வைக்க அவரின் குடும்பத்தினர் சம்மதித்தனர் .* என்று 2018 மார்ச்சில்*ஏ.சி.சண்முகம் அவர்களின்*எம்.ஜி.ஆர். கல்வி*நிறுவனத்தில் நடந்த*எம்.ஜி.ஆர். சிலை*திறப்பு விழாவில்*சொன்னார்*நடிகர்*ரஜினி .* அங்குதான்*அரசியலுக்கு யார்* வந்தாலும்*அவர் எம்.ஜி.ஆர். ஆக முடியாது*. அவர் ஒரு தெய்வப்பிறவி .* அவரைப்போல் ஒரு தலைவர் உருவாவது இனி கடினம் . சாமான்ய*மக்களுக்கு*எம்.ஜி.ஆர். அளித்த ஆட்சியை என்னால் ஆட்சிக்கு வந்தால் தர முடியும் என்றும் ரஜினி*பேசி இருந்தார்*.


இப்போது பிரச்னைக்கு வருவோம் .* எம்.ஜி.ஆர். ஆட்சியை என்னாலும் கொடுக்க முடியும்*என்று 2018ல்**பேசிய ரஜினி* , இப்போது , கட்சிக்கு ஒரு தலைமை ஆட்சிக்கு ஒரு தலைமை என்கிறார் .* முதல்வர் ஆவதற்கு விருப்பமில்லை .அதை நினைத்துப் பார்க்கவே முடியாது*.* நான் கட்சி தலைவராகத்தான் இருப்பேன்*. ஒரு நல்லவரை*ஆட்சியில் அமர வைப்பேன்*என்றும் கூறியிருக்கிறார் . முதல்வர் பதவியில்*அமர்ந்தால்* நடிக்க முடியாது என தீர்க்கமாக ரஜினி*நம்புகிறார் . முதல்வரானபின் எம்.ஜி.ஆர். மீண்டும் நடிக்க முடியாமல் போனது .* ஆந்திராவில் என்.டி.ராமாராவ் கூட*முதல்வரானதும் ஒரு படத்தில்*நடித்தார்*அதன்பின் நடிக்க முடியாமல் போனது* ஆட்சியில் இருந்து கொண்டு , சினிமாவில் நடிக்க முடியாது என்பது முன்னவர்களின் கடந்த கால வரலாறு .* இதையெல்லாம் மனதில் வைத்துதான்*முதல்வர் ஆவதை நினைத்து பார்க்க வே முடியாது*. கட்சி தலைவராக மட்டுமே இருப்பேன் என்று அழுத்தமாக சொல்கிறார் போலும் .**


எம்.ஜி.ஆர். சிபாரிசில் லதாவின் கரம் பிடித்த*நடிகர் ரஜினி*,எம்.ஜி.ஆருக்கு* கிடைத்த*சினிமா*, அரசியல்* பாடங்களை வைத்து , புதிய அரசியல் அரிச்சுவடி எழுத*திட்டமிட்டுள்ளார் .* அதில்*வெற்றி பெறுவாரா*என்பதை*காலம்தான்*உணர்த்தும் .**

fidowag
10th April 2020, 09:46 PM
தனியார் தொலைக்காட்சிகளில் நடிக* பேரரசர்*எம்.ஜி.ஆர்.படங்கள் ஒளிபரப்பு .
---------------------------------------------------------------------------------------------------------------------------

09/04/20* *- மெகா 24 டிவி - இரவு 9 மணி* - குடும்ப தலைவன்*

10/04/20* - ஜெயா டிவி* - காலை 10 மணி* - ஆயிரத்தில் ஒருவன்*

* * * * * * * * * *மீனாட்சி டிவி - காலை 10.30 மணி - நல்ல நேரம்*

* * * * * * * *-சன் லைப்* - காலை 11 மணி* *- என் அண்ணன்*

* * * * * * * * ராஜ் டிவி* * - பிற்பகல்* 1.30 மணி* - அடிமைப்பெண்*

* * * * * * * * * ஜெயா* டிவி - பிற்பகல் 2 மணி* * *- குமரிக்கோட்டம்*

11/04/20* - முரசு டிவி* *- காலை 11 மணி* - நீதிக்கு பின் பாசம்*
* * * * * * * * * * முரசு டிவி* -இரவு* 7 மணி* * - நீதிக்கு பின் பாசம்*

* * * * * * * * * *ராஜ் டிவி* *- பிற்பகல் 1.30 மணி* - நாடோடி மன்னன்*

* * * * * * * *** * * *சன் லைப்* - மாலை 4 மணி* *- நீரும் நெருப்பும்*


12/04/20* * *ஜெயா மூவிஸ் - காலை 7 மணி - இதய வீணை** * * * * * * * **

orodizli
11th April 2020, 02:55 PM
மக்கள் திலகம் நடித்த "குமாரி ",11-04-1952 வெளியானது. திரையிசையில் திலகம் கே.வி.மகாதேவன் இசையமைத்த முதல் எம்ஜிஆர் படம் குமாரி.
குமாரி முதல் பல்லாண்டு வாழ்க வரை 35படங்களுக்கு இசை அமைத்துள்ளார்.
இதில் குறிப்பிடத்தக்க படங்களாக அடிமைப்பெண் அரசகட்டளை,மாட்டுக்கார வேலன், அன்னமிட்டகை, என்அண்ணன், பல்லாண்டு வாழ்க, பரிசு ,காஞ்சித்தலைவன், உட்பட தேவர் பிலிம்ஸ் 16 படங்கள் அருமையாக இசை அமைத்திருந்தார்.......... Thanks.........

orodizli
11th April 2020, 03:00 PM
இயக்குநர் A.C.திருலோகசந்தர் உதவி இயக்குநர் ஆக பணியாற்றிய முதல் படம் இயக்குநர் ஏ.சி. திருலோகச்சந்தர் குமாரி படத்தில் உதவி இயக்குநர் ஆக எம்ஜிஆர் அவர்களுடன் பணிபுரிந்தார். அப்பொழுதே அரசியல் பற்றி பேசியுள்ளார்.தவிர எம்ஜிஆர் பானுமதி சந்திரபாபு நடித்த அபூர்வ சிந்தாமணி படத்தில் உதவி இயக்குநர் ஆக பணி புரிந்தார். ஆனால் படம் நின்று விட்டது. பிறகு அன்பே வா படத்தை அற்புதமாக இயக்கினார். வெற்றி விழாவில் இந்த படம் டைரக்டர் படம் என்று பெருமையாக பேசினார் எம்ஜிஆர். தன் புத்தகத்தில் அன்பே வா படம் பற்றியும் எம்ஜிஆர் பற்றி புகழ்ந்து 10 பக்கம் எழுதியுள்ளார்.இந்த படத்தின் போது மக்கள் திலகம் பணியாற்றிய அனுபவங்கள் தான் எழுதிய நெஞ்சம் நிறைந்த நினைவுகள் புத்தகத்தில் எழுதியுள்ளார்......... Thanks...

orodizli
11th April 2020, 03:03 PM
Kumari is a 1952 Indian Tamil language film directed by R. Padmanaban and starring M. G. Ramachandran and Sriranjani in the lead roles. Wikipedia
Initial release: 1952
Director: R. Padmanaban
Music director: K. V. Mahadevan
Producer: R. Padmanaban... Thanks......

orodizli
11th April 2020, 03:04 PM
The music was composed by K. V. Mahadevan and lyrics were by M. P. Sivam, T. K. Sundara Vathiyar and Ku. Sa. Krishnamoorthi.[1] Playback singers are K. V. Mahadevan, A. M. Rajah, Jikki, P. Leela, A. P. Komala and N. L. Ganasaraswathi.[3]

There were also gypsy dances choreographed by Sohanlal. One song rendered by Jikki off-screen, ‘Laalalee laallee…..' picturised on Madhuri Devi, became popular.[4]

Kantha Sohanlal danced for the song Cholla Cholla Ulley Vetkam which tune became very popular and was adapted in many other films later........ Thanks...

orodizli
11th April 2020, 03:05 PM
Directed by
R. Padmanaban
Produced by
R. Padmanaban
Story by
Ku. Sa. Krishnamurthi
Starring
M. G. Ramachandran
Sriranjani
Madhuri Devi
Serukulathur Sama
Music by
K. V. Mahadevan
Cinematography
D. Marconi
Edited by
V. P. Nataraja Mudaliyar
Release date
11*April*1952
Country
India
Language
Tamil......... Thanks...

orodizli
11th April 2020, 03:06 PM
Kumari 1952

M. G. Ramachandran, Madhuri Devi, Sriranjani Jr, Serukalathur Sama, T. S. Durairaj, K. S. Angamuthu, C. T. Rajakantham and ‘Pulimoottai' Ramaswami


one of MGR's early films Kumari
An entertainer by R. Padmanabhan, this film based on folklore, had MGR playing the hero — it was one of his early films when he was not yet the iconic star he would soon become.

Padmanabhan made his mark even during the Silent Film era and was responsible for the entry of another sadly neglected Indian film pioneer, lawyer-turned-filmmaker K. Subramanyam. KS took his bow in one of Padmanabhan's silent films as a screenwriter. Padmanabhan was also responsible for bringing in Raja Sandow who created history in Bombay and later in Madras. Produced and directed by Padmanabhan, the film was written by the lyricist and Tamil scholar Ku. Sa. Krishnamurthi and S. M. Santhanam, while the lyrics were by Ku. Sa. Ki and T. K. Sundara Vathiyar. K. V. Mahadevan composed the music, while Padmanabhan had his usual cinematographer T. Marconi, an Italian in Madras, work with him.

Shot at Neptune Studio in Adyar (later Satya Studios), the assistant director was ‘A. C. T. Chandar M.A.' Soon after he would blossom as a writer-director and producer who made many hit movies with Sivaji Ganesan, M. G. Ramachandran and others under his full name, A. C. Thirulokachandar! Santhanam also worked with ACT in the directorial department.

(Santhanam was a noted film journalist and critic during the late 1940s and worked for the popular Tamil movie monthly, Gundoosi.)

A princess (Sriranjani), while travelling in a horse carriage, meets with an accident when the horses run wild, and is rescued by a handsome young man (MGR). The two fall in love and the princess gives him a signet and invites him to her palace. Problems arise when the king wishes to get the princess married and the queen (Madhuri Devi) wishes to have her married to her useless brother (Durairaj.)......... Thanks............

orodizli
11th April 2020, 03:07 PM
Male cast
M. G. Ramachandran as Vijayan
Serukalathur Sama as Mandhara
Vijayakumar as Prathap
Stunt Somu as Vallaban
T. S. Durairaj as Saharan
Pulimoottai Ramasami as Pulimoottai
Sayeeram as Viharan
Kottapuli Jayaram as Minister
Rajamani as Minister
Ramaraj as Minister
K. K. Mani as Mani Singh
Female cast
Madhuri Devi as Chandravali
Sri Ranjani (Junior) as Kumari
Kantha Sohanlal as Jeela
K. S. Angamuthu as Mother
C. T. Rajakantham as Chandrika
Padmavathi Ammal as Mangala......... Thanks...

orodizli
11th April 2020, 03:08 PM
After many thrilling incidents, the lovers are united and live happily as expected!

The film had many songs rendered by P. Leela, Jikki (P. G. Krishnaveni), A.M. Raja, A.P. Komala, and N. L. Ganasaraswathi. There were also gypsy dances choreographed by Sohanlal. One song rendered by Jikki off-screen, ‘Laalalee laallee…..' picturised on Madhuri Devi, became popular. It was a straight lift of the popular duet in Dastan (Hindi) rendered by Suraiya and Mohammed Rafi. This tune in turn was inspired by a popular Hispanic melody of that period and was used by Naushad!

In spite of the interesting onscreen narration, deft direction and excellent camerawork by Marconi and impressive performances by MGR, Serukalathur Sama and others, Kumari did not do well. One of the important roles was played by Vijayakumar, a handsome young man. After playing lead roles in some films during the 1940s and 1950s, he faded from public memory.

Comedy was provided by C. T. Rajakantham, ‘Pulimoottai' Ramaswami and others.

Padmanabhan also produced this film in Telugu under the title Rajeswari.

Remembered for being one of the early films of the future superstar and cult figure MGR, and some catchy tunes of Mahadevan.

RANDOR GUY
Printer friendly page**
Send this article to Friends by E-Mail....... Thanks...

orodizli
11th April 2020, 03:09 PM
The film was produced and directed by R. Padmanaban. Ku. Sa. Krishnamurthi and S. M. Santhanam wrote the story and dialogues. Cinematography was done by D. Marconi while V. P. Nataraja Mudaliyar handled the editing. Choreography was done by Sohanlal and Still photography was done by R. N. Nagaraja Rao.[2]

The film was also made in Telugu with the title Rajeshwari.[1].......... Thanks...

orodizli
11th April 2020, 03:11 PM
https://youtu.be/K6w6Zgwik20....... Thanks...

orodizli
11th April 2020, 03:12 PM
13 MGR movies to binge-watch if you are a starter! | The New Stuff https://www.thenewstuff.in/13-mgr-movies-binge-watch-if-you-are-starter... Thanks...

oygateedat
11th April 2020, 10:43 PM
*“தாயே துணை”-தாயைத் தெய்வமாகப் போற்றிய மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்!*

*“தாயில்லாமல் நானில்லை*
*தானே எவரும் பிறந்ததில்லை*
*எனக்கொரு தாய் இருக்கின்றாள்*
*என்றும் என்னைக் காக்கின்றாள்”*

*-‘அடிமைப் பெண்’ படத்தில் மக்கள் திலகம் பாடிய பாடலைக் கேட்டிருப்பீர்கள். ‘அவள் தான் அன்னை மகாசக்தி’ என்று முடியும் பாடலில் வெளிப்பட்டிருக்கும் அவருடைய தாயின் மீது வைத்திருந்த அளப்பரிய பாசம்...*

*“அன்னையிடம் நீ அன்பை வாங்கலாம்” – என்று பாடியிருப்பார் ‘பெற்றால் தான் பிள்ளையா?’ படத்தில்...*

*வெற்றி மீது வெற்றி வந்து என்னைச் சேரும்.. அதை வாங்கித் தந்த பெருமை எல்லாம் உன்னைச் சேரும்” என்று பாடியிருப்பார் ‘தேடி வந்த மாப்பிள்ளை’ படத்தில்...*

*“அன்னை உலகின் மடியின் மேலே அனைவரும் எனது கூட்டாளி” என்று உணர்த்தியிருப்பார் ‘தொழிலாளி’ படத்தில்...*

*“தாயின் வடிவில் தெய்வத்தைக் கண்டால் வேறொரு தெய்வமில்லை வேறொரு தெய்வமில்லை எத்தனை செல்வங்கள் வந்தாலுமே எத்தனை இன்னல்கள் தந்தாலுமே அத்தனையும் ஒரு தாயாகுமா அம்மா அம்மா அம்மா எனக்கது நீயாகுமா?” என்றிருப்பார் ‘தாயின் மடியில்’ படத்தில்...*

*தெய்வத் தாய்’, ‘தாய் சொல்லைத் தட்டாதே’, தாயைக் காத்த தனயன், குடியிருந்த கோவில் – இவை எல்லாமே மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் நடித்த சில படங்களின் பெயர்கள்.*

*இதற்கெல்லாம் மூலம் எம்.ஜி.ஆர் தன்னுடைய தாய் ‘சத்யா அம்மையார்’ மீது வைத்திருந்த உண்மையான நேசமும், அன்பும் தான்...*

*இளமைக் காலத்தில் அவர் கஷ்டப்பட்டபோது, தாயின் அன்பு தான் அவரை அரவணைத்திருக்கிறது. வாழ்க்கையை நம்பிக்கையோடு எதிர்கொள்ள வைத்திருக்கிறது.*

*தான் வசித்த ராமாவரம் தோட்டத்தில் “தாயிற் சிறந்த கோவிலுமில்லை” என்ற முதுமொழிக்கேற்ப தன்னுடைய தாய் சத்யா அம்மையாருக்குக் கோவில் எழுப்பி, தினமும் அங்கு வணங்குவதை வழக்கமாக வைத்திருந்திருக்கிறார்.*

*எத்தனையோ கோப்புகளிலும், கடிதங்களிலும் கையெழுத்திட்டிருக்கிற புரட்சித்தலைவர் அதைத் துவங்கும் முன்பு “தாயே துணை” என்று தமிழில் எழுதியே ஆரம்பித்திருக்கிறார்.*

*மற்றவர்கள் தாயைப் பற்றி மேடையில் பேசுவார்கள், எழுதுவார்கள்...*

*ஆனால் தாய் மீது வைத்திருந்த பேரன்பைச் செயலில் காட்டி வாழ்ந்திருக்கிறார் சத்தியத்தாயின் மகத்தான புதல்வர்...*

orodizli
12th April 2020, 11:09 AM
மக்கள் திலகத்தின் "மதுரை வீரன்" : 13.04.1956 : சென்னை : சித்ரா 119 பிரபாத் 112 சரஸ்வதி 112 காமதேனு 105
மதுரை சென்ட்ரல் திரையரங்கில் வெள்ளி விழா ஓடியது.
சென்னை 4 தியேட்டர்கள், தினசரி 3 காட்சிகள், 100 நாட்கள் ஓடிய முதல் படம்.
தமிழகத்தில் முதன் முறையாக 30 திரையரங்கு மேலாக 100 நாட்கள் ஓடிய முதல் காவியம் "மதுரை வீரன்"......... Thanks.........

orodizli
12th April 2020, 11:25 AM
தென்னிந்திய திரைப்படயுலகில்... முதன் முறையாக ரூபாய் ஒரு கோடி கணக்கான வசூல் புரட்சி செய்து புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர்., அவர்கள் தான் " வசூல் சக்கரவர்த்தி" பட்டத்தை திரைப்பட விநியோகஸ்தர்கள், திரையரங்க உரிமையாளர்கள், மீடியேட்டர்கள் சார்பாக சூட்டினார்கள்... அது மட்டுமல்ல ரசிகர்கள், ரசிகைகள், பொதுமக்கள் எம்.ஜி.ஆர்., அவர்களை " வாத்தியார்" என பாசத்துடன் அழைக்க துவங்கியதும் இந்த " மதுரை வீரன்", காவியத்தின் இணையில்லாத பிரம்மாண்டமான வெற்றியை ருசித்ததற்கு பின்னர் தான்......... Thanks.........

orodizli
12th April 2020, 11:25 AM
https://www.facebook.com/100009942545019/posts/1103585993316142/?sfnsn=wiwspwa&extid=U0FF3KxZ4fSAwQHa&d=w&vh=i......... Thanks.........

orodizli
12th April 2020, 11:26 AM
https://m.facebook.com/story.php?story_fbid=604781856783714&id=100017557157217... Thanks...

oygateedat
12th April 2020, 09:28 PM
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் பற்றிப் பட்டுக்கோட்டையார் புகழ்வது...

⬇⬇⬇⬇⬇⬇⬇⬇⬇⬇

கலையென்றால் மக்களுக்குச் சொந்தம் நல்ல கலைஞருக்கு மக்களெல்லாம் சொந்தம் இந்தக் கருத்துக்கு நாடோடி மன்னன் சாட்சி கடலலைபோல் திரண்டுவந்தகூட்டம் சாட்சி

ஆகாவென் ரார்த்தெழுந்த குரல்கள் சாட்சி அரங்கத்தை யதிரவைத்தகரங்கள் சாட்சி காட்சிக்கும் நடிப்பிற்கும் கதைக்கும் உண்மைக் கருத்துக்கும் கணக்கில்லா கண்கள் சாட்சி

பாட்டுக்கும் பண்ணுக்கும் செவிகள் சாட்சி பட்ட பாட்டுக்கும் கூட்டுக்கும் வெற்றி சாட்சி எம்.ஜி.ஆர். துணிவுக்கு செலவே சாட்சி என்றார்க்கு இன்று புகழ் வரவே சாட்சி

படம் பெற்ற பெருமைக்கு பலபேர் சாட்சி பயன்கூற வெற்றிவிழா மேடை சாட்சி எண்ணரிய சாட்சிகளுக்கிடையில் நானும் இதயத்தை திறந்தொன்று சொல்கின்றேன்.

திருந்து திருந்தெனத்தானும் நடந்து காட்டும் சிறப்பாலே எம்.ஜி.ஆர். சிறப்பு பெற்றார் பொருந்தாத கூற்றுகளைப் பொய்யென் றோதும் புதுமையினால் எம்.ஜி.ஆர். புதுமையானார்

அவர் வாழ்க! கலை வளர்க! வென்று வாழ்த்தி ஆரம்பக் கருத்தினையே இங்கும் சொல்வேன்: கலையென்றால் மக்களுக்குச் சொந்தம் நல்ல கலைஞருக்கு மக்களெல்லாம் சொந்தம்.

orodizli
12th April 2020, 09:57 PM
எம்.எஸ்.விஸ்வநாதன் போட்ட டியூன்களை நிராகரித்த எம்.ஜி.ஆர்.,

-சித்ரா லட்சுமணன்

இசையமைப்பாளர் எம்.எஸ் விஸ்வநாதனை ஒரு நாள் டெலிபோனில் அழைத்த எம்.ஜி.ஆர் “என்னோட பல படங்களுக்கு நீ இசையமைச்சி இருந்தாலும் எம். ஜி. ஆர் பிக்சர்சுக்கு நீ இதுவரையில் ஒரு படம் கூட பண்ணலையே. இப்போ ஒரு மியூசிக்கல் படத்தை ஜப்பான்,சிங்கப்பூர் போன்ற வெளிநாடுகளில் படமாக்கலாம் என்று இருக்கிறேன். நீதான் அந்தப் படத்திற்கு இசையமைக்க வேண்டும்” என்றார். மகிழ்ச்சியோடு அந்த வாய்ப்பை ஏற்றக் கொண்டார் விஸ்வநாதன். அப்போது அந்தப் படத்திற்கு பெயர் வைக்கப்படவில்லை.
அந்தச் சம்பவம் நடந்து சில நாட்களுக்குப் பிறகு “தினத்தந்தி” பத்திரிகை யில் ஒரு செய்தி வெளியானது.

எம் ஜி ஆர் “உலகம் சுற்றும் வாலிபன்” என்ற பெயரில் வெளிநாடுகளில் ஒரு படத்தை உருவாக்கப் போவதாகவும் அந்தப் படத்திற்காக குன்னக்குடி வைத்தியநாதன் இசையில் நான்கு பாடல்கள் ஏவி. எம் ஸ்டுடியோவில் ஒலிப்பதிவு செய்யப்பட்டதாகவும் அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது.

அந்தச் செய்தியைப் படித்தவுடன் விஸ்வநாதனுக்கு ஏற்பட்ட குழப்பத் திற்கு அளவேயில்லை.
வீட்டில் இருந்த தனக்கு போன் போட்டு “நான் வெளிநாட்டில் ஒரு படம் தயாரிக்கப் போகிறேன். அதற்கு நீதான் இசையமைக்க வேண்டும்” என்று கூறிவிட்டு இப்போது அதே படத்துக்காக குன்னக்குடி வைத்தியநாதன் இசையில் நான்கு பாடல்களை எம். ஜி. ஆர் பதிவு செய்திருக்கிறார் என்றால் அதற்குக் காரணம் என்னவாக இருக்கும் என்ற கேள்வி விஸ்வநாதனின் மண்டையைக் குடைந்தது.

ஆனாலும் தனக்கு வரவேண்டிய வாய்ப்பு பறி போய்விட்டதே என்று விஸ்வநாதன் எந்த கலக்கமும் அடையவில்லை. அதே போன்று “ என்னை ஏன் மாற்றினீர்கள்?” என்று எம். ஜி. ஆரைத் தொடர்பு கொண்டு கேட்கவுமில்லை. வழக்கம்போல தனது வேளைகளில் கவனம் செலுத்தத் தொடங்கி விட்டார் அவர்

அந்தச் சம்பவம் நடந்து சில நாட்களுக்குப் பிறகு மெஜஸ்டிக் ஸ்டுடியோவில் ஒரு பாடல் ஒலிப்பதிவில் எம்.எஸ். விஸ்வநாதன் இருந்த போது எம். ஜி. ஆரிடம் இருந்து அவருக்கு ஒரு போன் வந்தது..
“விசு. உன் மனசிலே என்ன நினைச்சிக்கிட்டிருக்கே ? இந்தப் பக்கமே உன்னைக் காணோம்?. அது மட்டுமில்லாமல் ஒரு போன் கூட உன்கிட்ட இருந்து வரலே. “உலகம் சுற்றும் வாலிபன்” படத்துக்கு நீதான் மியூசிக் போடணும்னு எவ்வளவு நாளுக்கு முன்னாலே உங்கிட்ட சொன்னேன். அதை அப்படியே மறந்திட்டியா? என் கம்பெனின்னா நீ ஏன் எப்பவும் இப்படி பொறுப்பில்லாம இருக்கே” என்றார் எம். ஜி. ஆர்.

அவர் பேசப்பேச “தினத்தந்தி” பத்திரிகையில் “உலகம் சுற்றும் வாலிபன்” படத்தைப் பற்றிய செய்தியைப் படித்தபோது ஏற்பட்ட குழப்பத்தை விட அதிகமான குழப்பம் விஸ்வநாதனுக்கு ஏற்பட்டது. சிறிது நேரத்திற்கு பிறகு தெளிவுக்கு வந்த விஸ்வநாதன்,”அண்ணே நீங்க என்னை எப்படி நினைத்துக் கொண்டாலும் சரி, எவ்வளவு திட்டினாலும் சரி,.என்னால அந்த படத்துக்கு இசையமைக்க முடியாது. என்னை மன்னிச்சிக்கங்க”என்றார்

“விசு, என்ன பேசறோம்னு புரிஞ்சிதான் பேசறியா ?” என்று எம் ஜி ஆர் கேட்டபோது“குன்னக்குடியை வைச்சி நீங்க படத்தை ஆரம்பிச்ச செய்தியையும், உங்க படத்துக்காக அவர் நான்கு பாடல்களை பதிவு செய்திருக்கிற செய்தியையும் “தினத்தந்தி” பேப்பர்ல பார்த்தேன். அவரை வைச்சி ஆரம்பிச்ச படத்தை அவரை வச்சி முடிக்கிறதுதான் சரியாக இருக்கும். நான் இப்படி சொல்றதினால நீங்க கோவிச்சிக்கிட்டு எனக்கு இனிமே படமே கொடுக்கலேனா கூட பரவாயில்லை. “உலகம் சுற்றும் வாலிபன்” படத்திற்கு மட்டும் என்னால் இசையமைக்க முடியாது” என்று திட்டவட்டமாக பதில் சொல்லிவிட்டு போனை வைத்து விட்டார் விஸ்வநாதன்

அவர் போனை வைத்த கொஞ்ச நேரத்தில் விஸ்வநாதன் வீட்டுக்கு வந்த எம். ஜி. ஆரின் சத்யா ஸ்டு டியோ நிர்வாகி குஞ்சப்பன், நடிகர் நாகேஷ் ஆகிய இருவரும் “உங்களை எ
ம் ஜி ஆர் கையோடு அழைத்துக் கொண்டு சொன்னார் “ என்றார்கள்.

எம்.ஜி.ஆருடன் எவ்வளவு கருத்து வேறுபாடு இருந்தாலும் அவரை சந்திக்க விஸ்வநாதன் மறுத்ததே இல்லை.ஆகவே சட்டையை மாட்டிக் கொண்டு அவர்களுடன் உடனே கிளம்பினார்.
அப்போது எம். ஜி. ஆர் “பட்டிக்காட்டு பொன்னையா” படத்தின் படப்பிடிப்பில் இருந்தார். அவர் அருகே சென்ற விஸ்வநாதன் எம் ஜி ஆர் பேசுவதற்கு இடமே கொடுக்கவில்லை.
“நீங்க கூப்பிட்டு அனுப்பினால் என்னால் வராம இருக்க முடியுமா ? அதனாலதான் வந்தேன். தயவு செய்து நான் சொல்வதை கொஞ்சம் கேளுங்கள்.என்னைப் பொருத்தவரைக்கும் நான் ரசிகர்கள் மத்தியில் ஓரளவு பிரபலமாக இருக்கிற ஒரு மியூசிக் டைரக்டர். அவ்வளவுதான். ஆனால் குன்னக்குடி வைத்தியனாதன் ஒரு சங்கீத மேதை. அவரை சினிமாவில் முன்னுக்கு கொண்டு வர்றதுன்னா, அது உங்களாலதான் முறையும். என்கிட்டே வேலை வாங்கற மாதிரி நீங்க குன்னக்குடியிடமும் வேலை வாங்கினா நிச்சயம் அவர் பெரிய மியூசிக் டைரக்டரா வருவார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. நீங்க விருப்பப்பட்டா எனக்கு வேற படம் கொடுங்க. நான் நிச்சயமாக வேலை செய்கிறேன்.ஆனா இந்தப்படம் வேண்டாம் “என்று எம்.ஜி.ஆரிடம் மளமளவென்று சொல்லிவிட்டு அவர் கிளம்பிவிட்டார்.
இனி விஸ்வநாதனோடு பேசிப் பயனில்லை என்பதை புரிந்துகொண்ட எம். ஜி. ஆர், விஸ்வநாதனின் அம்மாவுக்கு போன் போட்டார். விஸ்வநாதனின் தாயிடம் அடிக்கடி போனிலே பேசக்கூடியவர் அவர்.

“உங்க பிள்ளை என்ன பண்றார் பாருங்கம்மா?” என்று எம்.ஜி.ஆர் விஸ்வநாதனின் தாயாரிடம் கூறியபோது “விசு எங்கிட்டே எல்லாத்தையும் சொல்லிட்டான். அவன் காரணம் இல்லாமல் எதையும் செய்ய மாட்டான். அதனால இந்த ஒரு படத்தில் மட்டும் அவனை விட்டு விடுங்களேன்” என்றார் விஸ்வநாதனின் தாயார்.
ஒரு வாரம் கழிந்தது.

“உலகம் சுற்றும் வாலிபன்” படத்தின் பூஜையில் கலந்து கொள்ளும்படி எம்.ஜி.ஆரிடமிருந்து எம் எஸ் விஸ்வநாதனுக்கு அழைப்பு வந்தது.
அது பூஜைக்கான அழைப்பு அல்ல தனக்காக விரிக்கப்பட்ட வலை என்பது தெரியாமல் அந்த பூஜைக்குப் போனார் விஸ்வநாதன்.
தொடக்க விழாவிலே பங்கேற்க குன்னக்குடி வைத்தியநாதனும் வந்தி ருந்தார்.அவருக்கு தனது வாழ்த்துக்களை விஸ்வநாதன் தெரிவிக்க அவரது கையைப் பிடித்துக் கொண்ட குன்னக்குடி வைத்தியநாதன் விஸ்வநாதனின் வாழ்த்துக்களுக்கு நன்றி தெரிவிக்கவில்லை. அதற்குப் பதிலாக”அண்ணா இந்தப் படத்துக்கு நீங்களே இசையமைச்சிக் கொடுங்க அண்ணா.நம்ம ரெண்டு பேர்ல யார் வேலை செஞ்சா என்ன?அது மட்டுமில்லாமல் இந்த படத்துக்காக எம்.ஜி.ஆர் எனக்கு என்ன சம்பளம் பேசினாரோ அந்தப் பணம் மொத்தத்தையும் கொடுத்துட்டார். அடுத்த படத்தில் எனக்கு சான்ஸ் தர்றதாகவும் சொல்லியிருக்கார். அதனால நீங்க இந்த படத்தைப் பண்றதில் எனக்கு எந்த வருத்தமும் இல்லே. இன்னும் சரியாகச் சொன்னா நீங்க பண்ணாதான் எனக்கு சந்தோஷம்” என்றார்
எம்.எஸ்.விஸ்வநாதனுக்கும்,குன்னக்குடி வைத்தியநாதனுக்கும் இடையே இந்த பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருந்தபோது அதற்கும் தனக்கும் சம்பந்தமில்லாததைப் போல ஒரு நமட்டு சிரிப்புடன் தூரத்தில் நின்று அதைப் பார்த்துக் கொண்டிருந்தார் எம். ஜி. ஆர்.

குன்னக்குடி வைத்தியநாதனுக்கு வருத்தம் ஏதுமில்லை என்பதை ஒரு முறைக்கு நூறுமுறை உறுதி செய்து கொண்ட பிறகு “உலகம் சுற்றும் வாலிபன்” படத்திற்கு இசையமைக்க ஒப்புக் கொண்டார் விஸ்வநாதன்

உலகம் சுற்றும் வாலிபன் படத்தை எம்ஜி.ஆர் ஆரம்பித்தபோது முழுக் கதையும் தயாராகவில்லை. ஆகவே பாடல் இடம் பெறவிருக்கின்ற காட்சிகளையும் அந்தப் பாடல் காட்சிகளைப் படமாக்கப் போகின்ற இடங்களையும் பற்றி எம்.எஸ்.விஸ்வநாதனுக்கு சொல்லிவிட்டு அதற்கேற்ப அவரை டியூன் போடச் சொன்னார் எம்.ஜி.ஆர்.
எம்ஜிஆர் பிக்சர்சில் தான் பணியாற்றும் முதல் படம் என்பது தவிர வெளிநாடுகளில் படமாக்கப்படப் போகின்ற படம் என்பதால் மிகுந்த உற்சாகத்தோடு அந்தப் படத்துக்கு வேலை செய்தார் எம்.எஸ்.விஸ்வநாதன்.ஆனால் என்ன காரணத்தாலோ அவர் போட்ட எந்த மெட்டும் எம்.ஜி.ஆருக்குப் பிடிக்கவில்லை.

அவருக்குப் பிடிக்கவில்லையே என்பதற்காக நாள் முழுவதும் உட்கார்ந்து வேறு டியூனை விஸ்வநாதன் போட்டுக் காட்டியபோது “இதுக்கு நேற்று போட்ட டியூனே பரவாயில்லை” என்றார் எம். ஜி. ஆர்.
அப்படி எம்.ஜி.ஆர் தன்னுடைய பாடல்களைக் கடுமையாக விமர்சித்த போதிலும் அதையெல்லாம் மனதிலே வைத்துக் கொள்ளாமல் புதிதாக ஒரு டியூன் போட்ட எம்.எஸ்.விஸ்வநாதன் நூற்றுக்கும் மேற்பட்ட இசைக் கலைஞர்களைக் கொண்டு அந்தப்பாடலைப் பதிவு செய்தார்.
அந்தப் பாடலைக் கேட்ட அத்தனை பெரும் விஸ்வநாதனைப் பாராட்டினார்கள்.
அந்தப் பாடலைக் கேட்டால் எம். ஜி. ஆர் நிச்சயம் அசந்து போவார் என்று நினைத்த எம்.எஸ்.விஸ்வநாதன் எம்ஜிஆருக்கு அந்தப பாடலைப் போட்டுக் காட்டிவிட்டு அவரது பாராட்டுகளுக்காக காத்துக் கொண்டிருந்தபோது பாடலைக் கேட்ட எம்.ஜி.ஆர் உதட்டைப் பிதுக்கி விட்டுப் போய்விட்டார்

தான் முதலில் இந்தப் படத்திற்கு இசையமைக்க மாட்டேன் என்று சொன்னதால் எம் ஜி ஆர் தன்னை பழி வாங்குகிறாரோ என்ற எண்ணம் கூட ஓரு கட்டத்தில் விஸ்வநாதனுக்கு வந்தது.
அப்படி ஒரு எண்ணம் எழுந்ததற்குப் பிறகும் அவர் எப்படி அந்த படத்தில் தொடர்ந்து பணியாற்றினார்
\\\2///
எம்.ஜி.ஆர் தந்த பணத்தை வாங்க மறுத்த எம்.எஸ்.விஸ்வநாதன்

-சித்ரா லட்சுமணன்

இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன் தனது வாழ்க்கையில் அதிகமாக மனம் தளர்ந்தது "உலகம் சுற்றும் வாலிபன்" படத்திற்கு இசையமைத்தபோதுதான்.கஷ்டப்பட்டு ஒரு டியூனைப் போட்டு அதை எம்.ஜி.ஆரிடம் அவர் வாசித்துக் காட்டினால் "இந்த டியூன் நன்றாகவே இல்லையே.இது வேண்டாம்"என்பாராம் எம். ஜி. ஆர்.அடுத்து "கொஞ்சம் பொறுங்கள் இன்னொரு டியூன் போடுகிறேன் " என்று விஸ்வநாதன் சொன்னால் "பரவாயில்லை விடு.இந்த டியூனே இருக்கட்டும் " என்று எம் ஜி ஆரிடமிருந்து பதில் வருமாம்.

பக்கத்தில் இருப்பவர்கள் "பாட்டு நல்லாத்தானே அண்ணே இருக்கு. எதனால உங்களுக்குப் பிடிக்கலே" என்று அவரிடம் கேட்டால் உடனே அவர்களோடு வாக்கு வாதம் செய்யத் தொடங்கிவிடுவாராம் .

“எனக்கு என்ன செய்யறதுன்னே தெரியலை. அவரை எப்படி திருப்திப் படுத்தறது அப்படீன்னும் புரியலே.ஆனா என்னுடைய மனசாட்சிக்கு விரோதமில்லாமல் என்னால முடிஞ்ச அளவுக்கு மாத்தி மாத்தி பல டியூன்களைப் போட்டு பத்து நாட்களில் பதினைந்து பாடல்களை ரிக்கார்ட் செய்து கொடுத்தேன். ஆனால் அந்தப் பாடல்களில் ஒரு பாட்டைக்கூட எம். ஜி. ஆர் பாராட்டவில்லை” என்று ஒரு கட்டுரையில் குறிப்பிட்டிருக் கிறார் விஸ்வநாதன்

"உலகம் சுற்றும் வாலிபன்" படத்துக்கான மொத்த பாடல்களையும் பதிவு செய்து முடித்துவிட்டு கே.பாலாஜியின் புதிய படத்துக்காக அவருடைய அலுவலகத்தில் பாடல் கம்போசிங்கில் விஸ்வநாதன் இருந்தபோது கையில் ஒரு போனுடன் அவசரம் அவசரமாக கம்போசிங் நடைபெற்றுக் கொண்டிருந்த அறைக்குள் ஒடி வந்தார் பாலாஜி.
“அண்ணே உங்களுக்குத்தான் போன். எம். ஜி. ஆர் பேசறார்” என்றபடி போனை விசுவநாதன் கையில் கொடுத்தார்அவர்.

“உலகம் சுற்றும் வாலிபன்" பட ஷூட்டிங்கிற்காக நாளைக்கு எல்லோரும் சிங்கப்பூர் போகப் போறோம். படத்துக்கு பாட்டு எல்லாத்தையும் போட்டுக் கொடுத்துட்ட நீ அதுக்குப் பணம் வாங்கலேன்னா எப்படி?உடனே கிளம்பி வா”என்றார் எம். ஜி. ஆர்.
“மன்னிக்கணும் அண்ணே. எனக்குப் பணம் எதுவும் வேண்டாம்.ஏன்னா நான் எவ்வளவோ கஷ்டப்பட்டு டியூன் போட்டும் அதிலே ஒரு பாட்டு கூட உங்களுக்குப் பிடிக்கலே. அதனால உங்களைப் பார்க்கவே எனக்கு வெட்கமா இருக்கு.அதனால எனக்கு பணம் எதுவும் வேணாம் அண்ணே” என்றார் விஸ்வநாதன்.

அடுத்து “மரியாதையா நீ இப்போ கிளம்பி இங்கே வர்றியா இல்லே நான் அங்கே வரட்டுமா?”என்று கேட்டார் எம். ஜி. ஆர்.

பாலாஜி உட்பட அந்த கம்போசிங்கில் இருந்த அனைவரும் "உடனே கிளம்பிப்போய் எம். ஜி. ஆரைப் பார்த்துவிட்டு வாங்க இந்த கம்போசிங்கை நாளைக்குக் கூட வைத்துக் கொள்ளலாம்" என்று சொல்லவே அரை மனதோடு தியாகராயநகர் ஆற்காடு சாலையிலிருந்த எம் ஜி ஆர் பிக்சர்ஸ் அலுவலகத்துக்குக் கிளம்பினார் விஸ்வநாதன்'
அவர் சென்றபோது அந்த அலுவலகம் கல்யாண வீடு மாதிரி இருந்தது. "உலகம் சுற்றும் வாலிபன்" பட விநியோகஸ்தர்கள், நடிகர் நடிகைகள், தொழில் நுணுக்கக் கலைஞர்கள் என்று எல்லோரும் அங்கே கூடியிருந்தனர்.

அந்த அலுவலகத்துக்குள் எம்.எஸ்.விஸ்வநாதன் அடி எடுத்து வைத்த அடுத்த நிமிடம் அந்தப் படத்தின் விநியோகஸ்தர்கள் சார்பில் ஒரு ஆளுயர மாலை அவருக்கு அணிவிக்கப் பட்டது

அடுத்து விஸ்வநாதனுக்கு அருகில் வந்து அவரை கட்டி அணைத்துக் கொண்ட எம்.ஜி.ஆர் “இவங்க எல்லோரும் விசு சார் அடுத்த படத்துக்கு மியூசிக் ஏதாவது ஸ்டாக் வைத்திருக்கிறாரா இல்லே இந்தப் படத்திலேயே தன்னுடைய எல்லாத் திறமைகளையும் கொட்டித் தீர்த்துட்டாரான்னு என்கிட்டே கேட்கறாங்க விசு. எல்லா பாட்டுக்களும் அவ்வளவு நல்லா இருக்காம். இவங்க எல்லோரும் சொல்றாங்க”என்று சொல்லிவிட்டு ஒரு பை நிறைய நோட்டுக் கட்டுகளைப் போட்டு விஸ்வநாதன் கைகளில் கொடுத்த போது “என்னை மன்னிச்சிக்கங்க. இந்தப் பணம் எனக்கு வேண்டாம்”என்றார் விஸ்வநாதன்.

"ஏன்?" என்று எம். ஜி. ஆர் தனது பார்வையாலேயே கேட்டபோது இப்போது கூட "பாட்டுக்கள் நல்லா வந்திருக்குன்னு விநியோகஸ்தர்கள் எல்லோரும் சொல்றாங்க அப்படீன்னுதானே நீங்க சொன்னீங்க. அப்படீ ன்னா இன்னும் கூட உங்களுக்கு நான் போட்ட பாட்டுக்கள் பிடிக்க லேன்னுதானே அர்த்தம்? அப்படியிருக்கும்போது எனக்கு இந்தப் பணம் எதற்கு?"என்றார் விஸ்வநாதன்
அவர் அப்படி சொன்னவுடன் வாய்விட்டு சிரித்த எம்.ஜி.ஆர் "எல்லா பாட்டுமே ரொம்பப் பிரமாதமாக வந்திருக்கு விசு. நான் வேண்டும் என்றுதான் ஒவ்வொரு பாட்டையும் நல்லா இல்லேன்னு சொன்னேன். அப்போதுதான் அடுத்த பாட்டுக்கு இன்னும் கூடுதல் கவனத்தோடு அக்கறை எடுத்துக் கொண்டு நீ இசையமைப்பாய் என்ற என்னுடைய சுயநலம்தான் அதற்குக் காரணம்"என்றார்.

"அங்கேதான் நீங்க தப்பு பண்றீங்க.ஒவ்வொரு பாட்டையும் நீங்க அப்பவே ரசித்து பராட்டியிருந்தீங்கன்னா.நான் அடுத்தடுத்து இன்னும் நல்ல டியூனா போட்டிருப்பேன்"என்று விஸ்வநாதன் அவருக்கு பதில் சொன்ன போது "அதுதான் தம்பி நல்ல கலைஞனோட குணம்"என்று சொல்லி அவரை தட்டிக் கொடுத்தார் எம். ஜி. ஆர்.
எம் எஸ் விஸ்வநாதன் இசையமைத்திருந்த பத்னைந்து பாடல்களில் இருந்து பத்து பாடல்களைத் தேர்ந்தெடுத்த எம். ஜி. ஆர் அந்தப் பாடல்களைச் சுற்றி சம்பவங்களைப் பின்னித்தான் "உலகம் சுற்றும் வாலிபன்" படத்தின் கதையை அமைத்திருந்தார்.

அந்தப்படத்தை வெளியிட எம். ஜி. ஆர் திட்டமிட்ட போது எம். ஜி. ஆர் திமுகவிலிருந்து வெளியே வந்து விட்டிருந்ததால் பல பிரச்னைகளை அவர் சந்திக்க நேர்ந்தது."உலகம் சுற்றும் வாலிபன்" படத்தின் பின்னணி இசை சேர்ப்பு நடைபெற்றபோது திட்டமிட்டு பல முறை மின்சாரத்தடை ஏற்படுத்தப்பட்டது. எப்போது மின்சாரம் வரும் எப்போது போகும் என்று தெரியாது என்பதால் இருபத்தி நான்கு மணி நேரமும் ஒலிப்பதிவுக் கூடத்திலேயே செலவழித்த எம்.எஸ்.விஸ்வநாதன் எப்போதெல்லாம் கரண்ட் வருகிறதோ அப்போதெல்லாம் பின்னணி இசையை பதிவு செய்தார். அந்தப் படத்திற்காக விஸ்வநாதன் கடுமையாக உழைத்ததைப் பார்த்து எம். ஜி. ஆர். அசந்து போனார். விஸ்வநாதனுக்கும் எம்.ஜி.ஆருக்கும் இடையே பல முறை மன வருத்தங்கள் வந்திருக்கின்றன. அப்போதெல்லாம் பல முறை எம். ஜி. ஆர் விஸ்வநாதனை திட்டியிருக்கிறார்.அப்படி பல முறை அவர் திட்டியிருந்தாலும் விஸ்வநாதனை வேறு யாராவது திட்டினால் எம். ஜி. ஆர் எப்போதும் தாங்கிக் கொள்ள மாட்டார்.

1969- ஆம் ஆண்டு இறுதியில் எம்.ஜி.ஆர். பிக்சர்ஸ் சார்பாக “இணைந்த கைகள்” கதையை பிரமாண்டமான திரைப்படமாக எடுக்க எம்.ஜி.ஆர் திட்டமிட்டார்.அந்தப் படத்திற்கு எம்.எஸ்.விஸ்வநாதன்தான் இசை. அந்தப் படத்துக்கான ஒரு பாடல் பதிவின்போது ஒலிப்பதிவுக் கூடத்துக்கு பகல் பன்னிரண்டு மணிக்கு வந்த எம்.ஜி.ஆர் பதிவாக இருந்த பாட்டைக் கேட்டார்.அந்தப் பாடல் வரிகள் எதுவுமே அவருக்குப் பிடிக்கவில்லை ஆகவே பாடல் வரிகள் மொத்தத்தையும் மாற்றச்சொன்ன அவர் இசையி லும் சில மாற்றங்களைச் சொன்னனார்.அவர் அப்படிச் சொன்னதும் "கொஞ்சம் டைம் கொடுங்க அண்ணே எல்லாத்தையும் மாத்திட்டு உங்களுக்கு வாசித்துக் காட்டு கிறேன்" என்றார் விஸ்வநாதன்.
"என்ன விசு காமெடியா பேசறே, இப்போதே மணி பன்னிரண்டு ஆகிறது.இன்னும் சிறிது நேரத்தில லஞ்ச் பிரேக் விடணும்.அதனால இப்பவே டியூன் எல்லாம் போட வேண்டாம். முதல்ல போய் சாப்பிடு.நேரத்துக்கு சாப்பிட்டாதான் உடம்பு நல்லாயிருக்கும் உடம்பு நல்லாயிருந்தாதான் உழைக்க முடியும்.லஞ்ச பிரேக் முடிஞ்சதும் நான் சொன்னபடி ட்யூனை மாத்திப் போட்டு வை. நான் வந்து கேட்கிறேன் என்று சொல்லி விட்டுக் கிளம்பினர் எம் ஜி ஆர்

அவர் அப்படி சொல்லிவிட்டுக் கிளம்பியதும் விஸ்வநாதனுக்கு என்ன செய்வது என்றே புரியவில்லை. புதிதாக ஒரு மெட்டு போடுவதில் அவருக்கு எந்தக் கஷ்டமும் இல்லை. பத்து நிமிஷத்தில் போட்டு விடுவார் ஆனால் அன்று அவர் தவித்த தவிப்பிற்கு வேறு காரணமிருந்தது.
"இணைந்த கைகள்' பாடலை முடித்து விட்டு மதியம் ஸ்ரீதர் இயக்கியிருந்த "சிவந்த மண்" படத்தின் பின்னணி இசை சேர்ப்புக்கு அவர் போகவேண்டும்.அந்தப் படத்தின் பின்னணி இசை மிகச் சிறப்பாக அமைய வேண்டும் என்ற அக்கறையில் அந்தப் படத்தின் கதாநாயகனான சிவாஜி தினமும் ரிக்கார்டிங்கிற்கு வரத் தொடங்கியிருந்தார்.

இங்கே உணவு இடைவேளை முடிந்து பாடலை கம்போசிங் செய்து அதற்குப் பிறகு ரிக்கார்டிங்கை முடித்துவிட்டு அங்கே செல்வது என்றால் நிச்சயமாக மாலை ஆறு மணி ஆகிவிடும்.அதுவரை சிவாஜியையும் ஸ்ரீதரையும் காத்திருக்க வைத்தால் நிச்சயம் அவர்களோடு தனக்குள்ள உறவு அடியோடு முறிந்துவிடும் என்று பயம் விஸ்வநாதனுக்குள் இருந்தது.
ஆனால் அதை எம். ஜி. ஆரிடம் எப்படி தெரிவிப்பது என்று அவர் தடுமாறிக் கொண்டிருந்தபோது அவரது தவிப்பைப் பார்த்த இசைக் குழுவைச் சேர்ந்த ஒருவர் காரில் ஏறப் போன எம். ஜி. ஆரிடம் விஸ்வநாதன் நிலையைப் பற்றி முழுவதுமாக எடுத்துச் சொன்னார். அதைக் கேட்டவுடன் காரில் ஏறப்போன எம். ஜி. ஆர் காரை விட்டு இறங்கி ரிக்கார்டிங் தியேட்டருக்குள் வந்தார்

"என்ன பிரச்னை உனக்கு? "சிவந்த மண்" படத்தோட ரி ரிக்கார்டிங்குக்கு நேரத்துக்குப் போகலேன்னா ஸ்ரீதர் உன்னை கோபித்துக் கொள்வார். என்பதுதானே" என்று லேசாக சிரித்தபடியே அவரிடம் கேட்ட எம்.ஜி.ஆர் "நீ அந்த ரிக்கார்டிங்குக்க்கு போறதுக்கு முன்னாலே இந்த பாட்டில என்னென்ன மாற்றம் செய்யலாம்னு நினைக்கிறியோ அதை எல்லாம் உன்னுடைய உதவியாளரான கோவர்த்தன்கிட்ட சொல்லிட்டு போ. நான் சாப்பிட்டுவிட்டு வந்து அவரை வச்சிக்கிட்டு ரிக்கார்டிங்கை பார்த்துக்கறேன். சரியா?"என்று சொல்லி விட்டு "என்ன பண்றது விசு. நீ ரொம்ப பிசியான ஒரு மியுசிக் டைரக்டர்.அதனால நீ சிவாஜி படத்துக்கு போய் வேலையைப் பாரு. நான் இங்கே உன்னுடைய அசிஸ்டண்டா இருந்துகிட்டு மத்த வேலையைப் பார்க்கிறேன்" என்று அவரை கிண்டல் செய்தார்.
அவர் அப்படிச் சொன்னவுடன் விஸ்வநாதன் கண் கலங்கி விட்டார் உடனே அவரை அருகில் அழைத்த எம். ஜி.ஆர் “நாம்ப எப்படி வேண்டுமானாலும் அட்ஜஸ்ட் பண்ணிக்கலாம் விசு. உன்னை என்ன சொல்லவும் எனக்கு உரிமை உண்டு.அதனாலே நான் உன்னை எவ்வளவு வேண்டுமானாலும் திட்டுவேன். ஆனா வேறு யாரும் உன்னைத் திட்ட நான் காரணமாக இருக்க மாட்டேன். அதனால சாப்பிட்டு முடித்துவிட்டு நீ அந்த ரிக்கார்டிங்குக்கு போய்விடு என்றார்.

விஸ்வநாதனின் பாடல்களை எம்ஜிஆர் பல முறை விமர்சித்த போதிலும் அவரிடமிருந்து விஸ்வநாதன் விலகாமல் இருந்ததற்குக் காரணம் எம்.ஜி.ஆர் அவர் மீது காட்டிய இந்த அதீத அன்புதான்......... Thanks.........

orodizli
12th April 2020, 10:05 PM
புரட்சி நடிகர் தேவர் கூட்டணி 3 வது வெற்றி படம் "தாயைக் காத்த தனயன் ",வெளியான நாள் 13.04.1962.
திரையிசைத் திலகம் கே.வி. மகாதேவன் கண்ணதாசன் அத்தனை பாடல்களும் இன்றும் இனிமையாக உள்ளது....... Thanks...

orodizli
12th April 2020, 10:15 PM
சென்னை பிளாசா, பாரத், மகாலட்சுமி, மதுரை கல்பனா , திருச்சி பேலஸ், சேலம் பேலஸ் 100 நாள் ஓடியது. பற்பல ஊர்களில் 50 நாட்கள் கடந்து 1962 ம் ஆண்டின் பிரம்மாண்ட வெற்றி காவியமாம்
எம்.ஜி.ஆர்., தேவர் சிலம்பு சண்டை இதுவரை திரைவரிசையில் காணாத அற்புதம்...... Thanks...

oygateedat
12th April 2020, 10:26 PM
முதல்வர் எம்ஜிஆர் அவர்கள் தலைமைச்செயலகம் செல்லும் வழியில் 'சென்னை பல்கலைக்கழக கட்டிடத்தில் உள்ள மணிக்கூண்டில் உள்ள கடிகாரம் தவறான நேரத்தைக் காட்டுவதைக் கண்டார். தொடர்ந்து இரு நாட்கள் அதைக் கவனித்தார். நேரம் சரிப்படுத்தப்படாமல் தவறான நேரத்தையே காண்பித்துக் கொண்டிருந்தது.

மூன்றாம் நாள் முதல்வர் நேராக பல்கலைக்கழகத்திற்குள் நுழைந்தது. அங்குள்ள அலுவலர்கள் அதிர்ச்சியடைந்து காரருகே ஓடி வந்தனர்...

அப்போது புரட்சித்தலைவர், 'மணிக்கூண்டில் உள்ள கடிகாரம் கடந்த சில நாட்களாக தவறான நேரம் காட்டுவதை சுட்டிக்காண்பித்தார்.

மேலும், "வருங்கால சமுதாயத்திற்கு நல்வழி காட்டும் பல்கலைக்கழகத்திலேயே இப்படி தவறு நடந்தால் எப்படி? உடனே நேரத்தை சரிசெய்யுங்கள்..."

தான் செல்லும் வழியில் காணும் சிறுதவறைக்கூட கண்டுபிடித்து கண்ணியமாகத் திருத்தும் கடமை உணர்வு எம்ஜிஆர் அவர்களுக்கு இருந்தது.

இந்த விஷயத்தை தனது உதவியாளர் மூலம் போனில் சொல்லியிருக்கலாம்...!!!
ஏன் செய்யவில்லை...???

தான் ஒரு மாநிலத்தின் முதல்வர் என்பதையும் மறந்து தன்னை ஒரு சராசரி பிரஜையாகவும், காணும் தவறை சுட்டுவது ஒரு பிரஜையின் தலையாய கடமை என்றும் கருதியதன் நிகழ்வு தான் இது...

இதுபோல இனி ஒரு அவதார புருஷர் நமக்கு கிடைப்பாரா ???

oygateedat
12th April 2020, 10:29 PM
13.4.2020

At 11 am

Sunlife tv

ராமன் தேடிய சீதை

orodizli
13th April 2020, 08:56 AM
அனைவருக்கும் நெஞ்சார்ந்த இனிய காலை வணக்கத்துடன்....

மக்கள் கவிஞர் "பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்" அவர்களின் பிறந்ததினம்.....

1930ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம்... 13ஆம் நாளன்று பிறந்தார் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் தனது 29ஆம் வயதிலேயே பாடல் வரிகள் மூலம் கம்யூனிஸ்ட் கொள்கை கூறி புரட்சி ஏற்படுத்தினார்....

1977ஆம் ஆண்டு "புரட்சி தலைவர்" முதல்வராக பொறுப்பேற்ற பொழுது "நான் இன்று முதல்வராக பதவி ஏற்கிறேன் என்றால் அதற்கு முக்கிய காரணங்களில் முக்கியமானது மறைந்த புரட்சி கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்களின் பாடல் வரிகள் என்று கூறனால் அது மிகையாகாது.

ஆகையால் நான் அமரும் இந்த முதல்வர் நாற்காலியில் ஒரு கால் திரு. மக்கள் கவிஞர். பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்களுடையது என்று கூறினார்..

அவர் பிறந்த நாளான இன்று அவரை வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்....

"ஆளும் வளரனும் அறிவும் வளரனும் அதுதாண்டா வளர்ச்சி
உன்னை ஆசையோடு ஈன்றவளுக்கு அதுவே நீ தரும் மகிழ்ச்சி
நாளும் ஒவ்வொரு பாடம் கூறும்
காலம் தரும் பயிற்சி
உன் நரம்போடு தான் பின்னி வளரனும்
தன்மான உணர்ச்சி தன்மான உணர்ச்சி"...

--- பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்....... Thanks.........

orodizli
13th April 2020, 09:01 AM
இலங்கை கொழும்பு கெப்பிட்டல் 105 நாள் ஓடியது.
பாரத் எம்ஜிஆர் நடித்த" ராமன் தேடிய சீதை" 13-04-1972 வெளியானது.
புதுமையான கதை அருமையான பாடல்கள் 43 வகையான உடைகளில் பொன்மனச்செம்மல் super Title music இருந்தும் படம் வசூலில் பெரிய வெற்றி எம்ஜிஆர் ரசிகர்களுக்கு திருப்தி. சென்னை மிட்லண்ட் 64 நாள் கிருஷ்ணா 64 நாள் சரவணா 50 நாள் ஓடியது. மதுரை சிந்தாமணி 78 நாள் ஓடியது.......... Thanks.........

orodizli
13th April 2020, 09:05 AM
மாபெரும் பிரம்மாண்டமான வெற்றிப்படமான "மதுரை வீரன் ",வெளியாகி இந்த ஆண்டுடன் 64 ஆண்டுகள் நிறைவு பெறுகிறது. 65ம் ஆண்டு தொடங்குகிறது.
ஒன்றிரண்டு தியேட்டரில் படத்தை 100 நாள் ஒட்டுவதற்கே பெரும் பாடு பட்டு கொண்டிருந்த கால கட்டத்தில் கண்மண் தெரியாமல் புழுதியை கிளப்பி 33 திரையரங்கில் முதல் வெளியீட்டிலேயே 100 நாட்கள் கண்ட படம்.

அடுத்த கட்ட வெளியீட்டிலும் பெங்களூர், இலங்கை போன்ற இடங்களிலும் 100 நாட்கள் ஓடி மொத்தம் 38 திரையரங்குகளில் அதிரடி வெற்றியை பதிவு செய்த படம். மதுரையில் வெள்ளி விழாவை கொண்டாடிய படம். இதுதான் வெற்றி என்று வெற்றியின் வீரியத்தை திரையுலகுக்கு எடுத்து
காட்டிய படம். ............ Thanks.........

orodizli
13th April 2020, 01:58 PM
Raman thediya seethai - 1972

13.04.1972. இன்று என்னவொரு பொருத்தம்?! அதே ஏப்ரல் 13 ம் தேதி sunlife சனெலில் ஒளிபரப்பு செய்கிறார்கள்...


மக்கள் திலகத்தின் '' ராமன் தேடிய சீதை'''.


ஜெயந்தி பிலிம்ஸ் 2 வது வண்ணப்படம் .

மக்கள் திலகம் நடித்த படங்களிலே மிக அதிகமான 43 வகையான உடைகளில் தோன்றிய படம் .

காஷ்மீரில் பாடல்கள் படமாக்கப்பட்டது .

மெல்லிசை மன்னரின் அருமையான எல்லா பாடல்கள் .

மக்கள் திலகம் இந்த படத்தில் ஆரம்பம் முதல் இறுதிவரை

மிகவும் அழகாகவும் இளமையாகவும் தோன்றி நடித்திருப்பார் .


பாடல் காட்சிகள் - ஒரு அலசல்



முதல் பாடலில் காஷ்மீரில் மக்கள் திலகம் பாடும் திருவளர் செல்வியியோ ... நான் தேடிய பாடலில் மூன்று வகையான உடையில் தோன்றி மிகவும் பிரமாதமாக நடனமாடி ரசிகர்களின் ஆவலை பூர்த்தி செய்திருப்பார் .



என் உள்ளம் உந்தன் ஆராதனை ........

இசை அரக்கனும் இசை அரக்கியும் மெல்லிசை மன்னரும்
மக்கள் திலகமும் ஜெயாவும் நம்மையெல்லாம் சொர்கத்துக்கு அழைத்து சென்ற பாடல் . இன்னும் பல ஆண்டுகள் கடந்தாலும் இந்த பாடல் நமக்கு என்றுமே முதலிடம்தான் .


நல்லது கண்ணே ...........


1972ல் சென்னை நகரிலும் மற்றும் தமிழ் நாடெங்கும் ''வருகிறது '
மற்றும் இன்று முதல் போஸ்டரில் நல்லது கண்ணே ... பாடலில் இடம் பெற்ற மக்கள் திலகம் - ஜெயா காட்சி, மறக்கமுடியாத ஸ்டில் .


மக்கள் திலகம் - நம்பியார்

மக்கள் திலகம் - அசோகன்

மோதும் சண்டை காட்சிகள் பிரமாதம் .

கிளைமாக்ஸ் காட்சி - ஒகேனக்கல் வெளிப்புற படபிடிப்பும் - அங்கு நடைபெறும் சண்டைகாட்சி அருமை .

மக்கள் திலகத்தின் ரசிகர்களுக்கு விருந்த படைத்த படம் .

நல்ல நேரமும் - நான் ஏன் பிறந்தேன் இரண்டு படங்களுக்கு நடுவே இந்த படம் வந்து சிக்கியதால் எதிர் பார்த்த மஹா வெற்றி பெற முடியாமல் 12 வாரங்கள் ஓடியது .( ஒரு சில நடிகர் படங்கள் காசு கொடுத்தோ, சொந்த அல்லது ஒப்பந்த செய்த தியேட்டர்களில் கட்டாயப்படுத்தியோ பேருக்காக ஓட்டப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது)

இலங்கை - கொழும்பு - கேபிடல், லக்ஷ்மி அரங்குகளில் 100 நாட்கள் ஓடியது . இலங்கையில் பல இடங்களில் 50 நாட்கள் வெற்றிகரமாக ஓடி திருப்தியான நல்ல வசூலை அள்ளியது......... Thanks.........

orodizli
13th April 2020, 07:34 PM
"தாய் சொல்லை தட்டாதே", தேவர் பிலிம்ஸில் எம்.ஜி.ஆர்., நடித்த இரண்டாவது படம். தமிழ் சினிமா உலகத்துக்கே வெளிச்சத்தை தந்த படம். குறைந்த பட்ஜெட்டில் குறுகிய காலத்தில் தயாரிக்கப்பட்ட ஜனரஞ்சகமான படம். பாடல்களில் புதுமை இசையில் இனிமை என ரசிகர்கள் துள்ளிக் குதிக்கும் அளவுக்கு பொழுதுபோக்கு அம்சங்களுடன் வெளியான தாய் சொல்லை தட்டாதே வியக்க தக்க வெற்றியை பெற்றது. அந்த காலத்தில் "சிரித்து சிரித்து என்னை சிறையிலிட்டாய்" பாடல் இல்லாத
கல்யாண வீடே கிடையாது.

எம்ஜிஆரை தயாரிப்பாளர்கள் மொய்க்க துவங்கியது இந்த படத்திலிருந்துதான். மக்கள் குடும்ப கதையிலிருந்து மெல்ல மெல்ல விடுபட ஆரம்பித்ததும் இந்த படத்திலிருந்துதான்.குடும்ப கதையில் கோலோச்சியவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக பக்தி மார்க்கத்துக்கு திரும்ப ஆரம்பித்தார்கள். சமூக படங்களுக்கு தலைவர் தாமதமாக வந்தாலும் விரைவில் சினிமா உலகத்துக்கே முடிசூடா மன்னனாக மாறினார். மக்கள் சக்தியை தன்னுடைய வசீகர நடிப்பாலும் சினிமா உலகின் நுணுக்கங்களை அறிந்ததாலும் எவரும் தன்னை நெருங்க முடியாத உயரத்துக்கு சென்றார். வடக்கே ராஜ்கபூர், தெற்கே தலைவர் கர்நாடகாவில் ராஜ்குமார், ஆந்திராவில் என்.டி.ஆர் என்று ஒவ்வொரு மொழியிலும் ஒருவர் ஆதிக்கத்தை செலுத்தினாலும் நடிப்பிலும்,மக்களை ஈர்ப்பதிலும் எம்ஜிஆர் அளவுக்கு எங்களால் முடியாது என்று அனைவரும் ஏற்றுக் கொண்டனர். இதற்கு நல்ல உதாரணம் எங்க வீட்டு பிள்ளை தான். பல மொழிகளில் தயாரித்த படத்தில் எம்ஜிஆர் அளவுக்கு சிறப்பாகவும், எனர்ஜியாகவும் நடிக்க யாராலும் முடியவில்லை. அதே போல் எங்க வீட்டு பிள்ளை தமிழில் பெற்ற வெற்றிக்கு ஈடாக எந்த மொழியிலும் பெறவில்லை என்பது உள்ளங்கை நெல்லிக்கனி. அதனால்தான் அவருக்கு நடிகப்பேரரசர் என்று பட்டம் மிகவும் பொருத்தமாக அமைந்தது..

தாய் சொல்லை தட்டாதே 7.11.1961 ல் வெளிவந்து தமிழ் நாட்டில் 7 திரையரங்குகளிலும் இலங்கையில் ஒரு தியேட்டர் என்று மொத்தம் 8 திரையரங்குகளில் 100 நாட்கள் ஓடியது. தலைவர் படத்தோட வெளிவந்த மற்றுமொரு தேசபக்தி படம் வெளியான சில தினங்களிலேயே கட்டணத்தை குறைத்தும் ஓட்டமுடியாமல் போனது என்பது குறிப்பிடத்தக்கது........... Thanks.........

fidowag
13th April 2020, 10:12 PM
தினமலர் -வாரமலர்*-12/04/20
-------------------------------------------------

கவிஞர் வாலி எழுதிய வாலிப வாலி நூலில் இருந்து*


சென்னை காமராஜர் அரங்கில் , ஒரு இந்து மத மாநாடு.* அதில் என் தலைமையில் கவியரங்கம், .* முதல் வரிசையில் அமர்ந்திருந்தார் முதல்வர் எம்.ஜி.ஆர்.*

மண்ணிலிருந்து புறப்பட்டது புழு*

புழுவை பூச்சி தின்ன*

பூச்சியை புறா தின்றது*

புறாவை பூனை* தின்றது*

பூனையை மனிதன் தின்ன*

மனிதனை மண் தின்றது*

மறுபடியும் மண்ணிலிருந்து புறப்பட்டது புழு*

புனரபி ஜனனம்*

புனரபி மரணம்*

என்று நான் கவிதையை படித்து முடித்தபோது , கைதட்டி ரசித்தார்* எம்.ஜி.ஆர்.*

fidowag
13th April 2020, 10:13 PM
தனியார் தொலைக்காட்சிகளில் கலை*சுடர்*எம்.ஜி.ஆர். படங்கள்*ஒளிபரப்பு*
-------------------------------------------------------------------------------------------------------------------------

11/04/20* -* மெகா டிவி* *- காலை* 10 மணி - குடியிருந்த கோயில்*

* * * * * * * * * புதுயுகம் டிவி - இரவு 7 மணி* -தாயை காத்த தனயன்*

12/04/20* - சன் லைப்* * * - காலை 11 மணி - புதிய பூமி*

* * * * * * * * * *முரசு டிவி* *- பிற்பகல் 2 மணி - வேட்டைக்காரன்*


13/04/20* - முரசு டிவி* - காலை 11 மணி* & இரவு 7 மணி*- நான் ஏன் பிறந்தேன்*

* * * * * * * * * *சன் லைப்* *- காலை 11 மணி* - ராமன் தேடிய சீதை*

* * * * * * * * * *மீனாட்சி டிவி - மதியம் 12 மணி - வேட்டைக்காரன்*

* * * * * * * * * *புதுயுகம்* டிவி - இரவு 7 மணி - தர்மம் தலை காக்கும்*

14/04/20* - சன்* லைப்* * *-* காலை 11 மணி - நினைத்ததை முடிப்பவன்*

15/04/20* - ஜெயா*மூவிஸ்*-காலை*7 மணி - தாயின்*மடியில்*


15/04/20 -* முரசு டிவி* * - காலை 11 மணி & இரவு 7 மணி *- *நீதிக்கு தலை வணங்கு*

orodizli
14th April 2020, 08:32 AM
வாழ்க வளமுடன்... அனைவருக்கும் மங்களகரமான இனிய, இன்ப "தமிழ் புத்தாண்டு", நல்வாழ்த்துக்கள்... கொடுத்து கொடுத்து சிவந்த கரங்கள் மக்கள் திலகம் புகழ், மாண்பு விளங்கிட தொடர்ந்து நன்முறையில் பரப்புவோம்...

orodizli
14th April 2020, 08:35 AM
��☘��☘��☘��☘��☘��☘

*��மலரும் நினைவுகள்....*

*மற்றவர்களுக்கு உதவு..*
*மகிழ்ச்சி தானாகவே வரும்..!!*

*விகடன் : -*

உங்களுக்குன்னு சொத்துக்களைச் சேர்த்து வச்சிருக்கணும்னு எண்ணம் இல்லாமல் இப்படி
வாரி வாரி வழங்கிக் கிட்டே இருக்கீங்களே,
அதற்கு என்ன காரணம்?

*எம்.ஜி.ஆர் :-*

சொத்துக்கள் கடைசி வரை நம்மிடையே இருக்கும்னு நினைக்கிறது தப்புங்கிறது என் கருத்து! என்னை முதன்முதலா கதாநாயகனா போட்டவர் ஜூபிடர் சோமு அவர்கள். ஒரு காலத்தில் இந்த ஸ்டுடியோ அவருக்கு சொந்தமாக இருந்தது. அவர் எதிரிலே வந்து நிக்கவே பயப்படுவோம். இப்போ அதே ஸ்டூடியோவுக்கு நான் பங்குதாரரா இருக்கேன்.

என்னை விட அனுபவத்திலும் ஆற்றலிலும் பன்மடங்கு உயர்ந்தவரான அவருக்கே அப்படி ஒரு நிலைமை வந்ததுன்னா நான் மட்டும் எத்தனை நாள் இந்த ஸ்டூடியோவுக்கு முதலாளியா இருந்திட முடியும்? எனக்கு இது புரியுது.

ஆனா, சில பேரு சட்டத்தின் பாதுகாப்பு நமக்கு இருக்குன்னு சொத்தையும் பணத்தையும் சேர்த்து வெச்சிக்கிறாங்க. நம்ம பாதுகாப்பிலே இல்லாதது, சட்டத்தின் பாதுகாப்பில் எத்தனை நாள் வாழ்ந்திட முடியும்?
அது மாத்திரமல்ல.

இந்த செல்வமெல்லாம் யார் தந்தது? அதாவது மக்கள் தந்தது தானே? அவர்கள் தந்ததிலிருந்து தான் நான் தருகிறேன். தேவைக்கு மேல் பணத்தை சேர்த்து வைப்பதில் ஏற்படக் கூடிய மகிழ்ச்சியை விட பயனுள்ள வகையில் மற்றவர்களுக்கு உதவும் போது அடையும் மகிழ்ச்சியையே நான் பெரிதாக நினைக்கிறேன்.

*- விகடன் பொக்கிஷம்*

��☘��☘��☘��☘��☘��☘.......... Thanks.........

orodizli
14th April 2020, 08:39 AM
எம்.ஜி.ஆர்., என்னிடம் கொடுக்க நினைத்த பொறுப்பு!
சிவாஜி அன்று அளித்த மனம் திறந்த பேட்டி
https://www.thaaii.com/?p=34538

கேள்வி : உங்கள் காலத்தில் செல்வாக்கு மிகுந்த நடிகராக இருந்தவர் எம்.ஜி.ஆர். குடிகாரனாகவோ, வில்லனாகவோ அவர் நடித்ததில்லை. இமேஜ் பற்றி மிகுந்த கவனத்துடன் இருந்தார். ஆனால், நீங்கள் அதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் இருந்தீர்களே.. ஏன்?

சிவாஜி : தன்னைப் பற்றி உணர்ந்தவர்களில் முக்கியமானவர் எம்.ஜி.ஆர். அவரது திறமை பற்றி அவருக்கே தெரியும். யாரும் சொல்ல வேண்டியதில்லை. அவர் அப்போதே அரசியலில் பெரிய அளவுக்கு வரவேண்டும் என்று தீர்மானம் செய்துவிட்டார்.

அதனால் மக்களிடம் நன்மதிப்பு காணும் பாத்திரங்களிலேயே நடித்தார். ஆனால், நான் எனது கேரக்டர் தான் முக்கியம் என்று நினைத்தேன். எந்தப் பாத்திரமானாலும் சரி, அதை எப்படிச் செய்வது என்பதில் தான் எனது கவனம் இருந்தது.

பின்னாளில் நானும் அரசியலுக்கு வந்திருக்கலாம். ஆனாலும் காமராஜருடைய தொண்டனாக மட்டும் தானே இருந்தேன். அவருக்குப் பக்கத்திலேயே தலைவனாக வரவேண்டும் என்றெல்லாம் நினைத்ததில்லையே!

கேள்வி : நீங்கள் அரசியலில் செல்வாக்குப் பெற்றிருந்த காலத்திலாவது, எம்.ஜி.ஆர் போல நாமும் ‘நல்ல’ பாத்திரங்களிலேயே நடிக்க வேண்டும் என்று நினைக்கவில்லையா?

சிவாஜி : இல்லை.. நடிப்புக்கும், அரசியலுக்கும் சம்பந்தம் இல்லை என்று நான் நினைத்தேன். ஆனால், சம்பந்தம் உண்டு என்று மக்கள் நிரூபித்துவிட்டார்கள்.

அதனால் தான் எம்.ஜி.ஆர் அரசியலில் வெற்றி பெற்றார். He did it. I missed the bus. எனக்கு அரசியல் இரண்டாம் பட்சம் தான். நான் குடிகாரனாக, பெண் பித்தனாக, கொலை காரனாக, ரவுடியாக பல பாத்திரங்களில் நடித்தேன். அதனால் தான் 300 படங்களில் நடிக்க முடிந்தது.

அரசியலில் இன்று வந்துவிட்டு, நாளை போய் விடுவார்கள். எத்தனை பேருக்குப் பேர் இருக்கு? ‘செல்லாக் கோபம் பொறுமைக்கு அழகு’ என்று கூட, எடுத்துக் கொள்ளலாம்.


அரசியலில் எனக்குப் பெரிய வாய்ப்புக் கிடைக்கவில்லை என்பதற்காக, ‘சீ இந்தப் பழம் புளிக்கும்’ என்று சொல்வதாகக் கூட வைத்துக் கொள்ளுங்களேன்( சிரிக்கிறார்).

இந்த இடத்தில் நான் ஒரு உண்மையைச் சொல்லித்தான் ஆக வேண்டும். மக்கள் என்னை அரசியல்வாதியாகப் பார்க்க விரும்பவில்லை என்பதைப் பின்னாளில் தான் புரிந்து கொண்டேன்.

அவர்கள் என்னை நடிகனாக மட்டும் தான் பார்க்க விரும்பியிருக்கிறார்கள். எத்தனையோ நடிகர்கள் அரசியலுக்கு வந்திருக்கிறார்கள்.

அத்தனை பேருமா தலைவராக முடிந்தது? சில பேர் நடிப்பிலே வெற்றி அடையவில்லை என்றால், அரசியல்வாதியாக மாறிவிடுகிறார்கள் ( உரக்கச் சிரிக்கிறார்).


கேள்வி : இது கடந்த கால அரசியல் பற்றி உங்கள் விமர்சனம் போல இருக்கிறதே?

சிவாஜி : கடந்த கால வரலாற்றை ஏன் சொல்றீங்க.. நிகழ்கால, எதிர்கால வரலாற்றைப் பாருங்கள்.. அதுவும் இப்படித் தான் நடக்கிறது.. நடக்கப் போகிறது!

கேள்வி : எம்.ஜி.ஆருக்கும், உங்களுக்கும் உள்ள உறவு எப்படி இருந்தது?

சிவாஜி : நாங்கள் எதிரும், புதிருமாக இருந்ததாகத் தான் வெளியிலே தெரியும். தனிப்பட்ட முறையில் நாங்கள் ஒற்றுமையாகத் தான் இருந்தோம்.

எவ்வளவு நாட்கள்.. எத்தனை பேர்களை.. நாங்கள் இரண்டு பேரும் சேர்ந்து ஏமாற்றியிருப்போம்… (சிரித்துக் கொண்டே சொல்கிறார்)

தனிப்பட்ட முறையில், எங்களுக்கிடையில் நல்லுறவு இல்லை என்றால், எதற்காகக் கடிதம் எழுதி என்னை அமெரிக்கா வரச் சொல்கிறார் எம்.ஜி.ஆர்?

எதற்காக நான் சார்டர்ட் பிளைட் வைத்துக் கொண்டு, பால்டிமோர் சென்று அவரைப் பார்க்கிறேன். எதற்காக அவர் காலமாவதற்கு நான்கு நாட்களுக்கு முன்பு “வீட்டுக்கு வாடா.. முக்கியமான பொறுப்பை உன்னிடம் கொடுக்கணும்’’ என்று சொல்கிறார்?

எதற்காக மனைவியிடம் “தம்பி வருகிறான்.. அவனுக்குப் பிடித்த ஆப்பமும், கருவாட்டுக் குழம்பும் செய்து வை’’ என்று சொல்கிறார்?

இப்படிச் சொல்லிக் கொண்டே போகலாம்.. தனிப்பட்ட முறையில் நாங்கள் நல்ல நண்பர்களாகத் தான் இருந்தோம்..

நாங்கள் இருவரும் தனித்தனியே பிரிந்ததால் தான் இருவருமே பெரிய நிலைக்கு வர முடிந்தது. ஒரே உறைக்குள் இரண்டு கத்திகள் இருக்க முடியாது.

கேள்வி : எம்.ஜி.ஆர் எந்தப் பொறுப்பை உங்களிடம் கொடுக்க எண்ணியிருப்பார் என்று கருதுகிறீர்கள்?

சிவாஜி : எந்தப் பொறுப்பை என்னிடம் கொடுக்க நினைத்திருப்பார் என்பதைப் புரிந்து கொண்டேன். இப்போது அதைச் சொல்வதில் என்ன பிரயோசனம்?

என்னுடைய நினைவுகள் என்னுடனே போகட்டும்’’

அரிதாரம் கலைத்த குரல்கள் – சுகதேவ் தொகுப்பு நூலில் – சிவாஜி கணேசனிடம் சுகதேவ் எடுத்த பேட்டியிலிருந்து ஒரு பகுதி.

பேட்டி முதலில் வெளிவந்தது 1997 தினமணி-தீபாவளி மலரில்.

நன்றி : சுகதேவ்

#MGR #MGRforever #CM #political #cinema #எம்ஜிஆர் #அரசியல் #அதிமுக #பொன்மனச்செம்மல் #சிவாஜி #மக்கள்திலகம் #SivajiGanesan #Actor #Parasakthi #Friendship #MGR_SIVAJI #Nadikar_Sangam....... Thanks...

orodizli
14th April 2020, 05:32 PM
பொக்கிஷம்!!
---------------------
நிறையப் படங்களில் நடித்தவர். எம்.ஜி.ஆருடன்,,இவர்,,என் கடமையில் மட்டுமே தோன்றியவர்!
இவரது சுஜாதா கம்பெனி,,சிவாஜி,,ரஜினி கமல் போன்றோரை வைத்து நிறையப் படங்கள் எடுத்திருக்கிறது!!
சிவாஜியுடன் நிறையப் படங்கள் செய்திருக்கும் நடிகர் பாலாஜி இல்லையென்றால்--
நாகேஷ் என்ற அற்புதக் கலைஞர் நமக்குக் கிடைத்திருக்க மாட்டார்??
ஆரம்ப நாட்களில் வறுமையுடன் போராடிக் கொண்டிருந்த நாகேஷுக்கு,,இருக்க இடம்,,உணவு ஆகியன தந்து,,அவருக்கு நிறையப் படங்களில் சான்ஸ் வாங்கித் தந்தவர்!!
நடிகர் கம் தயாரிப்பாளர் பாலாஜியை இந்தியத் தொலைக்காட்சியினர் பேட்டி காண்கிறார்கள்!!
இரண்டு மணி நேரங்கள் நடந்த அந்தப் பேட்டி 1980களின் மத்தியில் டிவியில் ஒளி பரப்பாகிறது!!
தாம் திரையில் ஜெயித்தது,,சிவாஜி,,கண்ணதாசன் இவர்களைப் பற்றியெல்லாம் சுவை படக் கூறிக் கொண்டே வந்தவரிடம் அந்தக் கேள்வி கேட்கப்படுகிறது?
இவ்வளவு சாதித்தும் விருதுகள் பல சம்பாதித்தும் உள்ள உங்களது மனதுக்குப் பிடித்த விருது எது??
அவர் சிவாஜி,,ரஜினி,,கமல் மூவரில் யாரைக் குறிப்பிடப் போகிறார் என்று ஆவலோடு நோக்க--
இந்த இடத்தில் சற்றும் எதிர்பாராத விதமாக பாலாஜி சொன்ன பதில்,,பேட்டி காண்பவரை மட்டுமல்லாது நிகழ்ச்சியைப் பார்த்துக் கொண்டிருப்பவர்கள் அனைவையுமே திகைப்பில் ஆழ்த்துகிறது??
எனக்குக் கிடைச்ச பெரிய விருது மட்டுமல்ல,,அதைப் பொக்கிஷம்ன்னும் சொல்லலாம் என்று கூறியபடியே நூறு ரூபாய் நோட்டு அன்றைக் காட்டியவர்,,மேலும் தொடர்கிறார்--
இது ஒரு பொங்கல் அன்னிக்கு தோட்டத்துல எம்.ஜி.ஆர் அண்ணனிடம் பரிசா வாங்கினது--
நான் அப்படி வாங்கணுன்னே அன்னிக்குப் போனேன்! என்ன இவ்வளவு லேட்டா வரியே என்று கேட்டபடியே இந்த நோட்டுல--வாழ்க வளமுடன் என்று எழுதித் தந்தார்!!
எம்.ஜி.ஆர் அண்ணனுக்குக் கைராசி உண்டுன்னு எல்லோரும் சொல்வாங்க. என் வாழ்க்கைலே அது நிஜமாச்சு!1
நான் எடுத்தப் படங்கள் எல்லாமே என்னை சினி லைன்லே தூக்கி விட்டுது!!
அதனால இந்த நோட்ட மட்டும் பொக்கிஷமா என் பர்சுலேயே வச்சிருப்பேன் என்று கூறி பாலாஜி புன்னகைக்கிறார்--
எல்லார் வாழ்விலும் ஏதோ ஒரு இடத்திலாவது எம்.ஜி.ஆரின் பாதிப்பு சிறிதளவாவது பேசியிருக்கிறது என்று பிரமிப்போடு நினைக்கத் தொன்றுகிறது.
உங்களுக்கு???............ Courtesy: Mr.Venkat Thiyagu...

orodizli
14th April 2020, 05:36 PM
அந்தமான் கைதி!!
-------------------------------
ராமன் கிருஷ்ணன்!
கல்லிடைக் குறிச்சி!!
எம்.ஜி.ஆர் ஆல விழுதுகளில் மூத்த விழுதுகளில் ஒன்று!!
இவரைப் பற்றிய விபரங்கள் அனைத்தையும் ஒரே பதிவில் உரைக்க இயலாது!
அவ்வளவு சுவையான விபரங்களை,,மனிதர் கொண்டிருக்கிறார்!!
அவ்வப்போது இவர் பற்றிய சுவையான நிகழ்வுகள் வெளியாகும்!!
கல்லிடைக் குறிச்சியில் இவர் பெயர் சோத்து ஐயர்?
சிறு தொண்ட நாயனாருக்குப் பின் வந்த-
ஒரு தொண்டர் எம்.ஜி.ஆர் என்றால்--
எம்.ஜி.ஆரை மனதில் கொண்டு அவரிடமிருந்த அன்னதான சிறப்பை,,அவர் அனுமதியில்லாமலேயே பறித்துக் கொண்டவர்!!
அன்றைய தனுஷ்கோடி ஆதித்தனின் சகோதரர் ஆர்.பி.ஆத்தித்தன்,,சேரன்மாதேவித் தொகுதியில் எம்.எல்.ஏ ஆகியவரின் அத்யந்த ஆலோசகர் நம் சகோதரர் ராமன் கிருஷ்ணான்!!
திரு ஆர்.பி.ஆதித்தனை எவராது பார்க்கணுமா? இவரிடம் தான் கேட்கணும்.!
தேர்தல் செலவுக்குப் பணம் வேணுமா?
இவரிடம் தான் கேட்கணும்!!
ஆர்.பி.ஆதித்தனிடம் எவராது நங்கொடை கேட்டு வந்தால்--ஆதித்தனே இவரிடம் தான் கேட்பார்--
என்ன ஐயரே எவ்வளவு கொடுக்கலாம்??~
சென்னையில் அப்போதிருந்த பழைய எம்.எல்.ஏ ஹாஸ்ட்டலில் ஆதித்தன் தங்கியிருக்கும்போது-
இவர் சொந்த அலுவல் காரணமாக இரண்டு நாட்கள் சொந்த ஊர் சென்று விட்டு வருவதற்குள் தான்-
அந்த மோசமான சம்பவம் நடக்கிறது?
எம்.எல்.ஏவுக்கு எடுபிடி வேலை செய்து கொண்டிருந்த பணியாள்,,அவரிடமிருந்து கணிசமான பணத்தைக் களவாடி விடுகிறார்?
எம்.எல்.ஏ,,மிரட்டிக் கேட்கவும்,,அந்தப் பணியாளும் ஒப்புக் கொள்கிறார்??
இருபதாயிரம் பணம் எடுத்தேன். நாலாயிரம் சொச்சம் செலவு செய்துவிட்டேன் என்ன மன்னிச்சுடுங்க??
ராமன் சந்திரன் ஊரிலிருந்து வரவும்,,அவரிடம் விபரங்களை9க் கூறிய அந்த எம்.எல்,ஏ,,காவல்துறையில் இதுபற்றிப் புகார் கொடுப்பதற்காக இவரிடம் ஆலோசனை கேக்க-
ராமன் சந்திரன் அழுத்தமாக மறுத்துவிடுகிறார்--
வேணாம். அவன் தான் ஒப்புக் கொண்டுவிட்டானே. அவனிடமிருந்து மீதி பணத்தை வாங்கியாச்சு. என்று சொல்லி அந்தப் பணியாளை அழைத்துக் கடுமையாக புத்தி சொல்லி அனுப்பி விடுகிறார்!
ராமன் சந்திரன்,,அந்தப் பணியாளைப் போலீசில் பிடித்துக் கொடுக்க வேண்டாம் என்பதற்கான காரணத்தை ஆதித்தனிடன் சொல்லியபோது அவரும் அதை ஒப்புக் கொண்டதோடு மட்டுமல்லாமல் ராமன்சந்திரனை பிரமிப்போடு நோக்கவும் செய்கிறார்??
காரணம்??/
அந்தப் பணியாளின் பெயர்--
ராமச்சந்திரன்???
எம்.ஜி.ஆர் பெயரை வைத்திருந்ததாலேயே அந்தப் பணியாள் அன்று சிறை தண்டனையில் இருந்து தப்பியிருக்கிறார்???
எம்.ஜி.ஆர்--
ரசிகர்களின் மனக் கைதி!
ஆனால்---
சிறைக்கு அனுப்பக் கூடாத கைதி???
இப்படியெல்லாம் மிக நுணுக்கமாக எம்.ஜி.ஆருக்கு இருக்கும் ரசிகர்கள் போல் வேறு எவருக்கு அமைந்திருக்கிறார்கள்???
ஒவ்வொரு அமைப்பும் எம்.ஜி.ஆர் விழா நடத்தும்போது தெரிந்த வி.ஐ.பிக்களையே மேடையில்; ஏற்றி பேசச் சொல்கிறார்கள்! அவர்களும் அரைத்த மாவையே அரைக்கிறார்கள்!
இவர்களைப் போன்றவர்களை மேடையில் ஏற்றி பேசச் சொல்வதால் இன்றைய இளைய சமுதாயத்துக்கு எம்.ஜி.ஆர் பற்றிய அனேக தகவல்கள் கிடைக்கும் என்பதுடன்--
இவர்களையும் உரிய முறையில் கௌரவப் படுத்தினாலும் ஆகும் என்பது நம் கருத்து!
நியாயம் தானே நேசங்களே???......... Thanks fb.,

orodizli
14th April 2020, 05:38 PM
மின்னலாய் ஒரு மனிதம்!!
------------------------------------------
எம்.ஜி.ஆர் நிகழ்வைப் பார்த்து நாளாயிற்று!!
அரசவைக் கண்ணதாசனின் இறுதி ஊர்வலத்தில் முதல்வர் எம்.ஜி.ஆர் இறுதிவரை பங்கு கொண்டது மட்டுமல்லாது,,தாமும் நடந்தே சென்றது நமக்குத் தெரியும்.
அந்த ஊர்வலத்தில் நடந்த நெகிழ்ச்சி ஒன்றையே இன்று பார்க்கப் போகிறோம்!!
திரையில்,,எம்.ஜி.ஆர்-தேவர்-கண்ணதாசன்-கூட்டணி ஒரு வெற்றிக் கூட்டணியே/
கம்பனுக்கு ஒரு சடையப்ப வள்ளல்!
கண்ணதாசனுக்கு ஒரு சின்னப்ப வள்ளல்!!
அடிக்கடி எம்.ஜி.ஆருக்கும் கவிஞருக்கும் முட்டிக் கொள்ளும்!
கவிஞர் இல்லேன்னா வேற ஆளே இல்லையா? சினந்து கேட்கும் எம்.ஜியாரை நொடியில் சமாதானப்படுத்துவார் தேவர்.
நல்ல மனுஷன் தான் முருகா,,சமயத்துல ஏடாகூடமாப் பேசிடுவாரு. நீங்க தான் முருகா விட்டுக் கொடுக்கணும்??
தேவரின் நைச்சியத்தில் பாகாய் உருகி விடுவார் எம்.ஜி.ஆர்!
சரி--இந்தப் பதிவுல தேவர் எதுக்கு வரார்??
பார்க்கலாம். பதிவில் எங்கேயாவது இணைவார்?
தேவருக்கும்,,கண்ணதாசனுக்கும் உள்ள நெருக்கத்தை எம்.ஜி.ஆரும் உணர்வார்
கண்ணதாசனுக்கு தேவர் செய்த அளவு எம்.ஜி.ஆரும் செய்திருக்கிறார்!!
மகனால் தனக்கு வந்த சிறப்புக்களை எண்ணிய வண்ணம் தமிழன்னை மௌனமாய் கண்ணீர் வடிக்கிறாள்--
மகனின் மரண ஊர்வலமோ மயானத்தை நோக்கி?
கவியரசனின் கடைசி ஊர்வலத்தில் கலங்கியபடி-
புவியரசன்!!
திருமலைப் பிள்ளை சாலையில் திடீர் என ஊர்வலத்தைத் திருப்புகிறார் எம்.ஜி.ஆர்??
தீச்சட்டி ஏந்தியபடி வரும் கவிஞர்களின் வாரிசுகள் திகைக்க--
அந்த அலுவலகத்தை மௌனமாய்,,சற்று மெல்ல அந்தக் கூட்டம் நெருங்க-அது--?
தேவரின் தண்டாயுதபாணி ஃபிலிம்ஸ்!!
சிலை வடிவில் தேவர்,,தன் தோழனைப் பார்க்க-
மடியளவு கொள்ளாது அன்று பொருள் இட்ட தேவரின் உறவுகள்,,மௌனமாகக் கவிஞரைத் தொழுது-
பிடியளவு வாயில் இடுகிறார்கள்??
ஆயிரம் தேள்கள் கொட்டிய அதிர்ச்சியில் கண்ணதாசனின் வாரிசுகள் உறைந்து போகிறார்கள்? அடே? நாம் மறந்து போனதை எம்.ஜி.ஆர் எப்படி நுணுக்கமாக நினைவில் வைத்திருக்கிறார்??
தேவர் வழியனுப்பாமல் தந்தையின் தேகம் வேகுமா??
சூட்சும வடிவில் புன்னகைத்த தேவரையும்-
அதற்கு வழி செய்த எம்.ஜி.ஆரையும் அலங்க மலங்கப் பார்ப்பதைத் தவிர அவர்களுக்கு வேறு என்ன தோன்றப் போகிறது?
இந்த இடத்தில் நன்றாக கவனிக்க வேண்டும்!
தன்னை விட நெருக்கமாக தேவருடன் கவிஞர் பழகியிருக்கிறார் என்பதை உணர்ந்த அந்த மா மனிதர்,சட்டென்று தேவர் அலுவலகம் நோக்கி ஊர்வலத்தைத் திருப்பியது--
உப்பிட்ட தேவரை,,அவரது சிலை வடிவிலாவது-
உப்பி விட்ட கவிஞரின் பூத உடல் சந்திக்கவும்,,
கவிஞரின் வாரிசுகளுக்கும்,, கடமையைச் செய்தாற் போலவும்--
மின்னல் வேகத்தில் எத்தனை விதமான மனித நேயங்கள்???
அதுவும் செல் ஃபோன் இல்லாத அன்றைய சூழலில்?
எம்.ஜி.ஆர்--
இவன் சித்தனா???........... Thanks mr.VT.,

orodizli
14th April 2020, 07:47 PM
��☘��☘��☘��☘��☘��☘

*��மலரும் நினைவுகள்....*

*மற்றவர்களுக்கு உதவு..*
*மகிழ்ச்சி தானாகவே வரும்..!!*

*விகடன் : -*

உங்களுக்குன்னு சொத்துக்களைச் சேர்த்து வச்சிருக்கணும்னு எண்ணம் இல்லாமல் இப்படி
வாரி வாரி வழங்கிக் கிட்டே இருக்கீங்களே,
அதற்கு என்ன காரணம்?

*எம்.ஜி.ஆர் :-*

சொத்துக்கள் கடைசி வரை நம்மிடையே இருக்கும்னு நினைக்கிறது தப்புங்கிறது என் கருத்து! என்னை முதன்முதலா கதாநாயகனா போட்டவர் ஜூபிடர் சோமு அவர்கள். ஒரு காலத்தில் இந்த ஸ்டுடியோ அவருக்கு சொந்தமாக இருந்தது. அவர் எதிரிலே வந்து நிக்கவே பயப்படுவோம். இப்போ அதே ஸ்டூடியோவுக்கு நான் பங்குதாரரா இருக்கேன்.

என்னை விட அனுபவத்திலும் ஆற்றலிலும் பன்மடங்கு உயர்ந்தவரான அவருக்கே அப்படி ஒரு நிலைமை வந்ததுன்னா நான் மட்டும் எத்தனை நாள் இந்த ஸ்டூடியோவுக்கு முதலாளியா இருந்திட முடியும்? எனக்கு இது புரியுது.

ஆனா, சில பேரு சட்டத்தின் பாதுகாப்பு நமக்கு இருக்குன்னு சொத்தையும் பணத்தையும் சேர்த்து வெச்சிக்கிறாங்க. நம்ம பாதுகாப்பிலே இல்லாதது, சட்டத்தின் பாதுகாப்பில் எத்தனை நாள் வாழ்ந்திட முடியும்?
அது மாத்திரமல்ல.

இந்த செல்வமெல்லாம் யார் தந்தது? அதாவது மக்கள் தந்தது தானே? அவர்கள் தந்ததிலிருந்து தான் நான் தருகிறேன். தேவைக்கு மேல் பணத்தை சேர்த்து வைப்பதில் ஏற்படக் கூடிய மகிழ்ச்சியை விட பயனுள்ள வகையில் மற்றவர்களுக்கு உதவும் போது அடையும் மகிழ்ச்சியையே நான் பெரிதாக நினைக்கிறேன்.

*- விகடன் பொக்கிஷம்*

��☘��☘��☘��☘��☘��☘......... Thanks.........

orodizli
14th April 2020, 07:50 PM
நம் தலைவரின் பல படங்களுக்கு வசனம் எழுதியவர் ஆரூர்தாஸ் அவர்கள்.

ஒருமுறை ஏ. எல்.சீனிவாசன் என்ற பிரபல தயாரிப்பாளர் ஆரூர்தாஸ் அவர்களை பெண் என்றால் பெண் என்ற படத்துக்கு இயக்குனர் ஆக்கி முன்பணம் கொடுத்துவிட..

விஷயம் அறிந்த வாத்தியார் அவரை அழைத்து நீங்க பெற்ற முன்பணத்தை திருப்பி கொடுங்கள் வசனம் எழுதுவது போதும் ஏன் இயக்குனர் வேலை என்று சொல்ல.

இல்லை அண்ணே ஒத்துக்கொண்டு பணம் வாங்கி விட்டேன் இனி எப்படி என்று தயங்க.

படத்தின் இரு கதாநாயகிகளில் ஒருவராக சரோஜாதேவி நடிப்பதாக மாலைமுரசு நாளிதழில் சரோ அவர்கள் திருமணத்துக்கு பின் நடிக்கும் முதல் படம் என்று வர....சரோஜாதேவி அவர்களுக்கு அப்போது திருமணம் முடிந்து இருந்தது.

ஏற்கனவே பெற்றால்தான் பிள்ளையா பட இறுதியில் சரோஜாதேவி அம்மா அவர்கள் கொடுத்த அழுத்தத்தால் தலைவர் சரோஜா தேவி அவர்களுக்கு இடையில் சற்று உரசல் இருந்தது.

கண்ணன் பிறந்தான் எங்கள் கண்ணன் பிறந்தான் பாடல் படப்பிடிப்பில் அது எதிர் ஒலித்தது.

அரச கட்டளை அடுத்து வந்தது...அதுவே வாத்தியார் சரோஜாதேவி நடித்த கடைசி படம் ஆனது.

இவை எல்லாம் நன்கு தெரிந்த ஆரூர்தாஸ் அந்த படத்தை இயக்குவது சரியல்ல என்று தலைவருக்கு தோன்றவே அப்படி சொல்ல....அவர் திருமணம் முடிந்து கர்ப்பம் தரித்தால் உங்கள் படம் பாதியில் நிற்காதா...

வேண்டியதை விடாதே..வேண்டாததை தொடாதே என்று ஒரு பழமொழி உண்டு...

ஆனால் இயக்குனர் மோகம் அவர் கண்ணை மறைக்க பெண் என்றால் பெண் படம் முழுவீச்சில் தயார் ஆனது.

தலைவரிடம் ஒரு நாள் தொலைபேசியில் இந்த படம் வெற்றி பெற்றவுடன் ஒரு பெரிய ரோஜாமாலையுடன் உங்களை வந்து சந்திப்பேன்...அல்லது உங்கள் முகத்தில கூட முழிக்கமாட்டேன் என்று ஆரூர்தாஸ் வருந்தி சொல்ல....இனி உங்கள் விருப்பம்... என்று தலைவர் பதில் சொல்ல..

அடுத்து தேவரின் விவசாயி படத்தில் நீங்கள் இல்லாததால் மாரா... இப்போது எழுத ஒப்பந்தம் செய்ய பட்டுள்ளார்.... அடுத்த படங்களும் தொடர்ந்து இருக்க......சரி இனி...என்று தலைவர் முடித்து கொள்ள.

ஏ. எல்.எஸ்.ஸ்ரீனிவாசன் பெரிய தயாரிப்பாளர் என்பதால் பெண் என்றால் பெண் படத்தை போட்டி போட்டு கொண்டு வினியாகஸ்தர்கள் வாங்க.

1967 இல் டிசம்பர் மாதம் 7 ஆம் தேதி வெளியான பெண் என்றால் பெண் மாபெரும் தோல்வி அடைய.

மீண்டும் பலகாலம் தலைவருடன் பயணித்த ஆரூர்தாஸ் தலைவருடன் மீண்டும் சேர்ந்தாரா.

பொறுத்து இருங்கள் .

வாழ்க எம்ஜியார் புகழ்.

நன்றி..உங்களில் ஒருவன் .....நெல்லை மணி......தொடரும்.......... Thanks.........

orodizli
14th April 2020, 07:55 PM
தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் நண்பர்களே

தமிழகத்தை ஆண்ட முதல்வர்களிலே தமிழுக்கு பெருமை சேர்த்தவர் எம்ஜிஆர்
உலகிலே மொழிக்கு ஆராட்சி பல்கலைகழகம் நிறுவியவர் எம்ஜிஆர்
அரசாணை தமிழில் இடவேண்டும் என உத்தரவு இட்டவர் எம்ஜிஆர்
தமிழ் புலர்வர்கட்கு மானியம் வழங்கியவர் எம்ஜிஆர்
தமிழ் புலவர் திருவள்ளுவர்க்கு சிலை நிறுவ அடிக்கல் நாட்டியவர் எம்ஜிஆர்
தமிழ் சீர்திருத்த பெரியார் எழுத்தை நடைமுறை படுத்தி கணணியில் வரசெய்தவர் எம்ஜிஆர்

வாழ்க எம்ஜிஆர் புகழ்.......... Thanks.........

orodizli
14th April 2020, 08:04 PM
ஈட்டிய பொருளை கொடுத்து மகிழ்ந்தவர் எம்ஜிஆர்
பெற்ற அதிகாரத்தை தமிழர்களை வாழவைக்க பயன்படுத்தியவர் எம்ஜிஆர்
தன் மருத்துவ செலவையே அரசுக்கு திருப்பி கொடுத்த ஒரே இந்திய தலைவன் எம்ஜிஆர்
நினைவகம் அரசு செலவு செய்ய கூடாது என அதன் சிலவை தானே சிலவு செய்ய வழி வகுத்த ஒரே தலைவன் எம்ஜிஆர்

M an
G od.
Ramachathiran

வாழ்க எம்ஜிஆர் புகழ்....... Thanks.........

orodizli
14th April 2020, 08:08 PM
மக்கள்திலகம் அதிமுகவை தொடங்கி அவர் நம்மைவிட்டு பிரிந்தபின் இயக்கம் பல முறை பிளவுபட்டு பின் மீண்டது.

தலைவர் இருக்கும் போதே 1973 இறுதியில் 74 தொடக்கத்தில் ஒரு முறை நடந்தது...தெரியுமா..

கட்சி ஆரம்பித்தவுடன் திருமதி பி.டி.சரஸ்வதி அவர்கள் மகளிர் அணி செயலாளர் பொறுப்பில் இருந்தார்.

சென்னையில் ஷீலா பஜாஜ் என்கிற ஒரு பெண்மணி வட இந்தியர். கட்சியில் சேர விரும்பி பி.டி.சரஸ்வதி மூலம் வேண்டுகோள் விடுக்க.

படித்த பெண் ஆக இருக்கிறாரே என்று தலைவரும் கட்சியில் சேர்த்துக்கொண்டு சென்னை மாவட்ட அளவில் மகளிர் அணியில் ஒரு பொறுப்பு கொடுத்தார்.

அவர் மிகவும் ஒரு நடிகையை போல அழகான தோற்றம் கொண்டவர்...அவர் பெயரை டாக்டர் பொற்செல்வி என்று மாற்றி சென்னை மற்றும் சுற்று வட்டாரங்களில் பொது கூட்டங்களில் பேசி வந்தார்.

அவரின் வசீகர தோற்றத்தை கண்டு சில வக்கீல்களும், சில தொண்டர்களும் அவர் பின்னால் நின்றனர்.

ஒரு கட்டத்தில் மாநிலம் முழுவதும் கூட்டம் பேசுகிறேன் என்று சொல்லி தலைவரும் அனுமதிக்க.

செல்லும் நகரங்கள், ஊர்களில் கட்சி நிர்வாகிகள், மன்றம் கண்ட தோழர்களை மதிக்காமல் நடக்க ஆரம்பித்தார்.

விளைவு...தலைவருக்கு தெரிந்து உடனே கட்சி பொறுப்பில் இருந்து பொற்செல்வி நீக்க பட்டார்.

உடனே அவர் கோவம் கொண்டு புரட்சி அதிமுக என்ற ஒரு கட்சியை ஆரம்பித்து தலைவரை பற்றி தவறாக பேட்டி எல்லாம் கொடுத்தார்.

ஆனால் அவர் கட்சி ஓர் இரு மாதங்களில் மக்கள் திலகத்தின் மகத்தான செல்வாக்கின் முன் கட்சியும் கரைந்து போய் அவரும் காணாமல் போனார்.

இதுதான் அதிமுகவின் முதல் சிறு சலசலப்பு...

வாழ்க எம்ஜியார் புகழ்.

நன்றி தொடரும்..உங்களில் ஒருவன் நெல்லை மணி........... Thanks...

orodizli
14th April 2020, 08:16 PM
நம் தலைவரின் கடைசி நிமிடம்...இந்த மண்ணில்.

பல எம்ஜியார் நெஞ்சங்கள் என்னிடம் கேட்டனர்...

என்ன இருந்தாலும் நம்ம தலைவர் கிட்ட போய் அவரை... அவருக்கு தொல்லை கொடுத்தவரை. என்று.

நான் சொன்னேன் நடந்து விட்டது...அதுவும் நன்மைக்கே...உலகெங்கும் இருந்து இங்கே வரும்போது...

எம்ஜியார் போல வாழ வேண்டும்....அவர் போல கூடாது என்று தன் சந்ததியினருக்கு ஒரே இடத்தில் அடையாளம் காட்ட நல்ல வசதி என்றேன்.

வாழ்க எம்ஜியார் புகழ்
தொடரும்...நெல்லை மணி...நன்றி..

வழக்கம் போல house full போர்டு .....இங்கேதான்...அங்கே காத்து வாங்குது........... Thanks.........

orodizli
14th April 2020, 08:21 PM
இனிய பிற்பகல் வணக்கம்..!!

#எம்_ஜி_ஆர்_பற்றி_சுவையான_சிறு_குறிப்புகள்

சினிமா, அரசியல் தாண்டி ஓர் ஆளுமையாக எம்.ஜி.ஆர். அனைவருக்குமான ரோல் மாடல். இன்னமும் அவரைப் பற்றி சிலாகித்துச் சொல்ல ஆயிரம் சங்கதிகள் இருந்தாலும்... இன்று அவரை பற்றி பார்ப்போம்.

#பண்டிகை

எம்.ஜி.ஆர் திராவிட இயக்கத்தைச் சேர்ந்தவர் என்பதாலும் ஆரம்பம் முதலே அவர் அம்மா தீபாவளியைக் கொண்டாடததாலும் அவர் தீபாவளி கொண்டாடுவதில்லை. பொதுவாக மலையாளிகள் தீபாவளி கொண்டாடமாட்டார்கள். இந்தியாவில் தீபாவளிக்கு விடுமுறை விடாத மாநிலமாகவே கேரளா சில ஆண்டுகளுக்கு முன்பு வரை இருந்தது. இப்போது ஊடகங்களின் செல்வக்கால் குறிப்பாக விளம்பரத்தின் ஆளுகையால் அங்கும் தீபாவளி கொண்டாடப்படுகிறது.

வேட்டைக்காரன் படத்தின் வெளிப்புற படப்பிடிப்பு ஊட்டியில் நடந்த போது தீபாவளிக்குச் சென்னை திரும்பிவிடலாம் என்று மற்றவர்கள் நினைத்தபோது எம்.ஜி.ஆர் ஷூட்டிங்கை தொடர்ந்து நடத்தலாம் என்று சொல்லிவிட்டார். அனைவருக்கும் வீட்டுக்கு அனுப்பப் பணம் தருமாறு இயக்குநர் திருமாறனிடம் சொல்லிய எம்.ஜி.ஆர் இங்கிருப்பவர்களுக்குப் புதுத்துணி எடுத்துத் தருவதும் உங்கள் செலவே என்றார். திருமாறன் தன் அண்ணன் தேவரை விட சிக்கனக்காரர் என்பதால் திணறிவிட்டார். இதுவும் முக்கியஸ்தர் பேர்களை சீட்டு எழுதி குலுக்கி போட்டதில் இவர் பெயர் வந்ததால் திருமாறனால் ஒன்றும் சொல்ல முடியவில்லை எடுத்த சீட்டில் எம்.ஜி.ஆர் பெயர் இருந்திருந்தால் எம்.ஜி.ஆர் செலவு செய்திருக்க வேண்டும். ஆனால் திருமாறன் பெயர் வந்ததால் அவர் சிக்கிக்கொண்டார். இந்தத் தகவல் அறிந்ததும் ஜெமினி சாவித்திரியுடன் தீபாவளி கொண்டாட அங்கேயே வந்துவிட்டார்.

எம்.ஜி.ஆர் பொங்கல் பண்டிகையை மட்டுமே சிறப்பாகக் கொண்டாடுவார். அன்று அனைவருக்கும் கை நிறைய ரூபாய் நோட்டுகளை வழங்குவார். அவரை வைத்து படம் எடுக்க மாட்டேன் என்று சிவாஜியிடம் சத்தியம் செய்து கொடுத்த பாலாஜி கூட எம்.ஜி.ஆரிடம் அன்று வந்து எம்.ஜி.ஆர் கையால் பணம் வாங்கிச் செல்வார்.

எம்.ஜி.ஆர் நாடக மன்றம் இருந்த போது மன்றத்தைச் சேர்ந்த அனைவருக்கும் ஒரே மாதிரி வேட்டி சேலை எடுத்து வழங்கி அன்று தன் அலுவலகத்துக்கு வரச் செய்து பல விளையாட்டுகள் நடத்தி கொண்டாடி மகிழ்வதுண்டு. பொங்கல் செலவுக்குப் பணம் வேண்டும் என்பதற்காகவே அவர் விவசாயி படத்தை ஒப்புக்கொண்டு தேவரிடம் பணம் பெற்றார் என்றும் தகவல் உண்டு. அந்தளவுக்கு அவர் பொங்கல் கொண்டாட பணம் செலவழிப்பதுண்டு........ Thanks...

orodizli
14th April 2020, 08:51 PM
நினைத்ததை முடிப்பவன் MGR ன் உரிமைக்குரல் ,,,,

1917 முதல் 1987ல் உடல் மட்டும் இந்தியமண்ணுக்கு உரமாகி பல்லாயிரம் கோடி மக்களின் இதயங்களில் இதயக்கனியாக உயிரிலே கலந்து உறவாடிகொண்டு ஒலித்துக் கொண்டிருக்கும் நம் தலைவனின் இந்த ஒரு ஸ்டில்லின் ஸ்டைலுக்கு எவனாலும் ஈடுகொடுக்கவே முடியாது......... Thanks...

orodizli
14th April 2020, 08:53 PM
மக்கள் திலகம் #எம்ஜிஆர் அவர்கள் முதன் முறையாக தனது பெயரில் தயாரித்து இரட்டை வேடத்தில் நடித்து டைரக்ட்டும் செய்த #நாடோடிமன்னன்
22 ஆக. -1958 வருடம் வெளி வந்து நம்மை மகிழ்வித்த தலைவனின் தமிழ் பற்று
முதல் வரியிலே செந்தமிழுக்குத் தான் முதல் வணக்கத்தை தெரிவித்தார் என்பதை இந்நாளை உங்களுடன்

இன்று தமிழ் புத்தாண்டு வாழ்த்தினை அனைவருக்கும் மகிழ்ச்சியுடன் பகிர்கிறேன்........... Thanks.........

orodizli
14th April 2020, 08:56 PM
எம்.ஜி.ஆருக்கும் வாலிக்கும்--
-------------------------------------------------
கண்ணதாசன்--வாலி-
ஏராளமான கவிஞர்கள் இருக்க-இவர்கள் இருவர் மட்டுமே எம்.ஜி.ஆர் ரசிகர்கள் வாயில் அதிகம் விழுந்து எழுந்தவர்கள்? காரணம்--
இவர்களிருவருமே எம்.ஜி.ஆரை அதிகம் தொட்டவர்கள்!!
கருணா நிதியை உயர்த்தி வாலி பேசியதையோ-கண்ணதாசன் இன்னா நாற்பது எம்.ஜி.ஆரை நோக்கி எய்ததையோ நாம் என்றுமே பெரிய அளவில் சிந்தித்து மனதைக் குழப்பிக் கொண்டதில்லை!
எம்.ஜி.ஆர் இருக்கும்வரையும்,,அவருக்குப் பின்னும் அவரை மறக்காமல் இருந்தார்களா என்பதே நமக்குத் தேவை என்ற கருத்து நமக்கு இருந்ததால்??
கருணா நிதியோடு தோன்றியதாலேயே இவர்கள் இருவரில் வாலி அதிகம் இலக்கானார்!
சரி! பதிவுக்குள் செல்வோம்-
சினிமா எக்ஸ்பிரஸ் ராமமூர்த்தி!
ராம்ஜி என சுருக்கமாக அழைக்கப்பட்ட இவர் எம்.ஜி ஆருக்கு மிகவும் நெருக்கமானவர்!!
அனேகமான அந்தரங்கங்களை எம்.ஜி.ஆர்,,ராம்ஜியிடம் பகிர்ந்து கொண்டிருக்கிறார்!
இவர் ஆசிரியராக இருந்த காலத்தில் எனக்கும் வாலிக்குமே ஒரு விஷயத்தில் மோதல் உண்டாகி,,அதை இந்த ராம்ஜியே தீர்த்து வைத்தார்!!
சில ஆண்டுகளுக்கு முன் ராம்ஜி ஒரு நிகழ்ச்சியில் வாலியை சந்தித்தபோது கிடைத்த ஒரு சேதியை--
அண்மையில் நான் ராம்ஜியை சந்தித்தபோது பகிர்ந்து கொண்டார். அதையே நானும் உங்களுடன்---
என்னங்க,,அவ்வளவு க்ளோஸா அவரோட இருந்துட்டு கருணா நிதியோட மேடையிலே நீங்க---ராம்ஜியின் கேள்விக்குக் கசப்பாய் புன்னகைத்த வாலி சொல்கிறார்-
கரெக்ட்டுங்க. ஆனால் அதுக்காக நான் எம்.ஜி.ஆரை நான் எந்த இடத்திலும் மட்டப்படுத்தலே. அப்படி நான் பேசினா நான் சாப்பிடற உப்பு விஷமாயிடும்?
தமிழ் என்ற தளத்தில் நான் கருணா நிதி கூப்பிடற நிகழ்ச்சிகளுக்குப் போயிருக்கலாம். அங்கே உயர்வு நவிற்சியாக அவரை உசத்திப் பேசியிருக்கலாம். ஆனால் ஒரு விஷயத்த இங்க சொல்றேன்--
அது எம்.ஜி.ஆர் கட்சி ஆரம்பிச்சிருந்த நேரம்-
என்ன வாலி,,நம்மக் கட்சியிலே சேர்ந்துட வேண்டியது தானே??
எம்.ஜி.ஆர் கிண்டலாக் கேக்கறார்னு உணராம நான் சீரியஸா பதில் சொன்னேன்-
கண்ணதாசனுக்கு நான் செஞ்சு கொடுத்த மூணு சத்தியங்களில்--
எந்த அரசியல் கட்சியிலும் சேர மாட்டேங்கறதும் ஒண்ணு. இல்லேன்னா உங்கக் கட்சியிலே முதல் ஆளா நான் சேர்ந்திருப்பேனே??
பலமா சிரிச்சுண்டே எம்.ஜி.ஆர் சொன்னார்-
யோவ் நான் விளையாட்டாக் கேட்டேன்!!
நான் சொன்னேன்--
நீங்க விளையாட்டாக் கேட்டிருக்கீங்க. ஆனால் நான் இப்போ உங்கக்கிட்டே ஒரு சத்தியம் செய்யறேன்-
என் மூச்சு இருக்கற வரைக்கும் என் வயிறும் இருக்கும். என் வயிறு இருக்கறவரைக்கும் அது உங்களை மட்டுமே நினைக்கும்!! அதாவது உங்கக் கட்சிக்குத் தான் ஓட்டுப் போடுவேன்.
என் ஒரு ஓட்டுக்காகத் தான் உங்கக் கட்சி இருக்குன்னு சொன்னால் என்னை விடப் பைத்தியக்காரன் எவனும் இருக்க முடியாது? ஆனாலும் நான் சொன்னது சொன்னது தான்-
இந்தத் தேர்தல் வரைக்கும் நான் அ.தி.மு.கவுக்குத் தான் ஓட்டு போட்டிருக்கேன். அடுத்த தேர்தலுக்கு நான் இருப்பேனோ தெரியாது???
தமிழில்-
ஒரு வார்த்தை வெல்லும்!!
ஒரு வார்த்தை கொல்லும்!!
சத்தியத்தை இறுதி வரை வாலி காத்ததாலோ-
இறக்கை நிலை வரும் வரையிலும் தமிழ்,,வாலியை-
இறக்கை கட்டிக் கொண்டாடியது???........ Thanks...

orodizli
14th April 2020, 09:00 PM
எம்.ஜி.ஆர் அஞ்சலி!!
------------------------------------
இன்பம் துன்பம் இரண்டும் கலந்ததே வாழ்க்கை!
இந்தப் பதிவிலும் அப்படியொரு நிலை!!
திண்டுக்கல் மலரவன்.
மனித நேய மக்கள் திலகம் என்ற எம்.ஜி.ஆர் அமைப்பை நடத்தி வரும் எம்.ஜி.ஆரின் முரட்டுக் குழந்தை?
வருடந்தோறும் மிகச் சிறப்பாக இவரது குழுவால் எம்.ஜி.ஆர் விழா நேர்த்தியுடன் நடை பெறும்/
அப்படி நடத்துவதில்-
மாரி பொய்த்தாலும் இவர் நெஞ்சம் மட்டும்-
மாறிப் பொய்க்காது?
உறவினரால் ஒதுக்கப்பட்ட இவரது மாமியார் இருதயமேரியை கடைசிக் காலத்தில் இவரே மகனாக இருந்து போஷித்தார்!
எண்பதுக்கும் மேலே அகவை கண்ட அந்த மூதாட்டி ஏறக் குறைய சுய நினைவில்லாமலே தன் உயிரை உடற் கூட்டுக்குள் உறுதியாகப் பிடித்திருந்தார்.
இருக்குமிடத்திலேயே எல்லா கடன்களையும் கழிக்கும் நிலையில் அவர்!
முகம் கோணாது அந்த மூதாட்டியை மலரவனும் அவர் துணைவியாரும் கடைசிக் காலத்தில் காத்து வந்திருக்கிறார்!!
இருப்பதிலேயே கொடியது ஜீவ ஹிம்சை!
நிரந்தர ஓய்வை அந்த மூதாட்டி நேற்று மேற்கொண்டு விட்டார்!!
உறவுகள் சரிவர உதவாத நிலை?
கொரானாவால் திண்டுக்கல்லே இடிந்து போய் இருக்கிறது?
என்ன செய்வது?? திகைத்து நின்ற மலரவனுக்கு தெய்வம் போல் கைக் கொடுக்கிறது ஒரு நட்பு!!
சென்றாய் பெருமாள்!
அந்த எம்.ஜி.ஆர் அமைப்பின் பொதுச் செயலர்.
எம்.ஜி.ஆரை நெஞ்சிலும்,,அவர் மூலம் மலரவனை நட்பிலும் கொண்டிருக்கும் அந்தப் பெருந்தகை மின்னல் வேகத்தில் ஆஜராகிறார்.
இடிந்து போய் செய்வதறியாது நின்ற மலரவனை ஆற்றிவிட்டு,,அடுத்தடுத்து நடக்க வேண்டியவைகளைக் கிரமத்தோடு செய்து இரவு வரை அங்கேயே அதன் பின்னரே புறப்பட்டிருக்கிறார்?
நினைத்துப் பாருங்கள்?
பொருளாதாரத்தில் மிக சாமானியனாகவும் எம்.ஜி.ஆர் பக்தியில் உலக கோடீஸ்வரராகவும் இருக்கும் மலரவன் மகன் போல் அந்த மூதாட்டிக்குச் செய்தவை கொஞ்சமல்ல என்றால்--
கொரோனா பீதியில் நாடே உறைந்திருக்கும்போது,,தன்னுயிர் பற்றி சிறிதும் கவலையுறாமல் உடனே வந்து சேவை செய்த சென்றாய் பெருமாளின் மனித நேய மாண்பு??
எம்.ஜி.ஆர் ரசிகர்களுக்கு மட்டும் தான் இத்தகைய அதிசயங்கள் மிக எளிதாக நடக்கின்றன??
அணைந்த சென்றாய் பெருமாளின் கரங்களால்-துக்கத்தில்-
அணைந்த மலரவன் உள்ளத்தில் ஒளி உண்டாகியிருக்கிறது என்பது உண்மை தானே?
மூதாட்டியை மனதோடு நினைத்துக் கொண்டு-
|சென்றாய் பெருமாளின் சீர்மையை வாய்க் கொள்ளாமல் வாழ்த்துவோமே???......... Thanks...

orodizli
14th April 2020, 09:05 PM
இது எம்.ஜி.ஆர் சினிமா!!
---------------------------------------
கொரானாவுக்கு பயந்து அவரவர் கட்டிலுக்கு அடியிலும் சோஃபாவுக்குக் கீழேயும் பதுங்கிக் கொண்டிருப்பதால் இன்று ஒரு சினிமாப் பதிவு?
கண்ணதாசன்,,வாலி,,இருவரும் இணைந்து இயற்றிய பாடல்? அதுவும் எம்.ஜி.ஆர் படப் பாடல்??
உரிமைக் குரல் படத்தில் எம்.ஜி.ஆரின் சங்கதி தெரியாமல் கண்ணதாசனை வைத்து ஸ்ரீதர் இயற்றிய பாடல்--
விழியே கதை எழுது!!
எம்.ஜி.ஆரிடம் பஞ்சாயத்துக்குப் போய்--
இந்தப் பாடலில் கவிஞர் பெயரையே டைட்டிலில் போடுங்கள். ஏனையப் பாடல்களை வாலியை வைத்து எழுதுங்கள் என்று எம்.ஜி.ஆரும் தீர்ப்பு சொன்ன விபரம் நமக்குத் தெரிந்தது தான்!
விழியே கதை எழுது பாடலை எழுதியக் கவிஞரே இன்னொரு பாட்டுக்கானப் பல்லவியையும் எழுதிக் கொடுத்துவிட்டு,,பாடலின் சரணங்களை மறு நாள் எழுதித் தருகிறேன் என்று ஸ்ரீதரிடம் சொல்லியிருக்கிறார்.
அதற்குள் தான் இவ்வளவு அமளிகள்??
கிராமிய மணம் தவழும் அந்தப் பல்லவியை இயக்குனர் ஸ்ரீதருக்கு இழக்க மனம் வரவில்லை?
என்ன செய்யலாம் என்று கவிஞரிடமே யோசனை கேட்க--
அதுக்கென்ன--சரணங்களை வாலியை வச்சு எழுதிக்கங்க என்று பிரச்சனைக்கு வழி சொல்ல--
அப்படி,,இருவராலும் உருவான அந்தப் பாடல் தான்--

கல்யாண வளையோசைக் கொண்டு
காற்றே நீ முன்னாடி செல்லு!
பின்னாடி நான் வாரேன் என்று
கண்ணாளன் காதோடு சொல்லு!!!
இந்த நிகழ்வில் கவனிக்க வேண்டியவை மூன்று--
கண்ணதாசனுக்கு வாலியின் திறமை மேல் எவ்வளவு நம்பிக்கை இருந்திருந்தால்,,தன் பல்லவியை வாலியைக் கொண்டு பூர்த்தி செய்யச் சொல்லியிருப்பார்?
வாலியிடம் எத்தனைத் திறமை இருந்திருந்தால் கண்ணதாசனது நம்பிக்கையைக் காப்பாற்றி இருப்பார்??
இரண்டுக்கும் மேலாக--
அன்றையக் கவிஞர்களிடையில் எவ்வளவு புரிதல் உணர்வு இருந்திருந்தால் இப்படி ஒரு பெரிய சிக்கலின் முடிச்சு சிக்கல் இல்லாமல் அவிழ்ந்திருக்கும்??
உண்மை தானே உறவுகளே???......... Thanks...

orodizli
14th April 2020, 09:07 PM
எழுகவே!!
----------------
முன்பே அறிவித்து விட்டேன்!
இன்றைய எம் எழுத்துப் போருக்கு-எமக்கு-
எம்.ஜி.ஆரே சாரதி!!
கொரானாவுடன் ஒரு குருஷேத்திரப் போர்!
குவலயம் முழுதும் ஒரே சமயத்தில்-
குறிப் பார்த்து நடத்தும் போர்!!
இங்கே நமது பெருமையைக் கொஞ்சம் பீற்றிக் கொள்ளலாமா?
உலகத்திலேயே வெறும் கவர்ச்சியாலோ,,டிஷ்யும் டிஷ்யும் சண்டையாலோ-ஓங்கி அழும் நடிப்பாலோ ஒருவருக்கு ரசிகர்கள் ஆகாதவர்கள்?
எம்.ஜி.ஆர் ரசிகர்களான நாம் தான்!!
எந்த அம்சத்தில் நாம் அவர் ரசிகர்களாகியிருந்தாலும்-
1977க்குப் பிறகோ அல்லது-
1987க்குப் பிறகோ நம் சிந்தையை வேறு திசை நோக்கிச் செலுத்தியிருப்போம்!!
கொள்கை சார்ந்த மாண்புகள் சார்ந்த மனிதம் சார்ந்த அவரது மகத்துவம் நமக்கு ஆனது மருத்துவம்!!
எம்.ஜி.ஆர் மூன்று முறை காலனை ஜெயித்தார்!!
ஒரு தடவை புதிய எம்.ஜி.ஆராக ஜனித்தார்?
அவரது பெருமையைப் பறை சாற்ற மட்டும் இல்லை அந்த நிகழ்வுகள்?
நம்மை நாமே செப்பனிட்டுக் கொள்ளவும் தான்??
1958இல் கால் முறிவு!
நாம் சமூகப் படம் கொடுத்த தோல்வியில் நாம் மீண்டும் ஜெயிப்போமா என்ற எண்ணச் சிதறலில் இருந்தவரது காலில் அடி?
எம்.ஜி.ஆருக்கு சரித்திரப் படங்கள் மட்டுமே சாத்தியமா? சமூகப் படங்களையும் சந்திப்பாரா என்ற கேள்வி ஒரு புறம் இருக்கும்போதே-
அவரது தனித்தன்மையாம்--சண்டை காட்சிகட்கும்,,
ஓடிப் பாடும் காதல் காட்சிகளுக்கும் உலை வைக்கிறது இந்த விபத்து?
ஓய்ந்தாரா இல்லை சாய்ந்தாரா?
வருடாதே துன்பமே என் சிந்தையை என-
திருடாதே படத்தின் வெற்றி மூலம் தீர்ப்பு சொன்னார்?
1967!
தொண்டையின் அண்டையில் ஒரு குண்டு?
தன் பிழைப்பு மட்டுமன்றி ஒரு கட்சியின் எதிர்காலத்தையே தம்முள் அவர் தேக்கிக் கொண்டிருந்த நிலை?
இத்தோடு தீர்ந்தான் ராமச்சந்திரன்?--இனி-
பத்தோடு ஒன்றாகும் அவன் கட்சி??
எதிரிகளின் ஏகடியம் இது என்றால்--
கணீர் குரல் போவது ஒரு புறமிருக்க--
இனி குரலே வருமா? என்ற நிலையல்லவா அன்று எம்.ஜி.ஆருக்கு??
கொஞ்சம் சோர்ந்திருந்தாலும் போதுமே அவர்?
வஞ்சம் கொண்டோரைத் தஞ்சம் கொண்டிருக்காதா வெற்றி??
நான் குணம் பெறுவேன் என்று--
சொல்லி எழுந்தார்1 முன்னைக் காட்டிலும் வேகமாய்-
துள்ளி எழுந்தார்!!
1972!
சினிமாவில் புதிதாக இளைய நடிகர்களின் இறக்குமதி. சிறக்கு மதி சிவாஜியின் போட்டி ஒரு புறம்--இடையில்-
கிறுக்கு மதி கருணாவால் தூக்கி வீசப்படுகிறார்?
நடித்தது போதும் நாடாள வா என்று காலம் தம்மை அழைப்பதை சூட்சுமமாக அவர் ஒருவரால் தானே அனுமானிக்க முடிந்தது??
1984!
அரசியல் உலகமே அன்று-
எம்./ஜி.ஆரை வைத்துத் தானே சொக்கட்டான் ஆடிக் கொண்டிருந்தது?
மாயம் என்ன செய்தாரோ,,இவர் கட்சிக்குத் தானே-
தாயம் விழுந்து கொண்டிருந்தது?
காயம் பட வைத்த காலனின்
சாயம் தானே வெளுத்தது?
ஆக--அவர் சந்தித்த விபத்துக்கள் எல்லாமே மிகக் கடுமையானவை மட்டுமல்ல--மிக இக்கட்டான சந்த்ர்ப்பங்களில் என்பது நமக்கு விளங்குகிறதல்லவா?
எம்.ஜி.ஆரின் இறவாப் புகழுக்கு இலக்கணமான அவரது அத்தனை சிறப்புக்களையும் விட-
மனோதைரியம் என்ற அவரது மா பெரும் தனித்தன்மை தானே இந்த ரயிலை தண்டவாளத்தில் இருந்து தடம் புரளாமல் காத்தது?
நாம் எம்.ஜி.ஆர் ரசிகர்கள்!
அவரது அடிச்சுவடை நமது அரிச்சுவடியாய் ஆக்கிக் கொள்ள என்ன தடை?
கொரானா--
வரவழைத்துக் கொண்டது நாம் தானே-அதை
வரவேற்று சமர் புரிந்து வெற்றி காண்பதைத் தானே சரித்திரம் விரும்புகிறது?
மரணம் எப்போது வரும்?--தெரியாது!
மரணத்துக்குப் பின் என்ன??--தெரியாது!
இடைப்பட்ட காலத்தில் ஏன் இந்த அவஸ்தை?
மரணத்தை எண்ணி மருகுவதை விட-
மரணத்தை மறுதலிக்க வேண்டிய மார்க்கத்தை சிந்திப்போமே??
விண் இரக்கம் கொண்டாலும்--
மண் இரக்கம் கொண்டாலும்-
மனித குலம் செழிக்கும்!--எப்போது தெரியுமா?
தன்னிரக்கம் என்னும் தற்கொலையை நம் உள்ளம் நாடாதிருந்தால்!!
உண்டு உண்டு என்று நம்பிக் காலை எடு--இங்கு-
உன்னைவிட்டால் பூமி ஏது கவலை விடு
ரெண்டில் ஒன்று பார்ப்பதற்கு தோளை நிமிர்த்து-அதில் நீதி உன்னைத் தேடிவரும் மாலைத் தொடுத்து!!!......... Thanks...

orodizli
14th April 2020, 09:12 PM
போட்டியிடு! தோற்கலாம்!!
--------------------------------------------
எம்.ஜி.ஆர் கொடையாளி!! என்று ஆரம்பித்தால்--யாருய்யா இல்லேன்னது என்று நீங்கள் சீறும் அபாயம் ஒரு புறம் இருந்தாலும்--
இன்றைய நமது பதிவின் சாராம்சமே--
அவர் கொடைத்தன்மை அன்றைய எதிர்க்கட்சியாளர்கள் மத்தியில் எப்படி பேசப்பட்டது என்பதே!!
அது அவ்வை இல்லம் கட்டிடம் கட்டும் விழா!!
சென்னையில் இன்று செம்மையான முறையில் இயங்கி வரும் அவ்வை இல்லத்துக்கு முதன் முதலில் கட்டிடம் கட்ட பெருத்ததொரு தொகையை தனி ஒரு நபராக அளித்தவர் எம்.ஜி.ஆர்!!
1960ஆம் ஆண்டிலேயே,,அப்போதிருந்த பண மதிப்பில் எம்.ஜி.ஆர் அன்று கொடுத்த நன்கொடை-- நாற்பதாயிரம் ரூபாய்! கணக்குப் போட்டுக்குங்க--
பலரின் நன் கொடை வேண்டியும்,,எம்.ஜி.ஆர் கொடுத்த நன்கொடையில் கட்டடம் கட்ட ஒரு விழா நடக்கிறது!
அண்ணா,,அப்போதைய நிதியமைச்சர் சி.சுப்ரமணியம்,,அப்போதைய சட்டப் பேரவைத் தலைவர் யு.கிருஷ்ணாராவ் உள்ளிட்ட சான்றோர்கள் கலந்து கொள்வதால் வேறு வழியின்றி எம்.ஜி.ஆரும் கலந்து கொள்கிறார்!
அன்று சி.எஸ் என்று அன்புடன் அழைக்கப்பட்ட திரு சி.எஸ் சுப்பிரமணி அவர்கள் பலத்தக் கரவொலியின் பின்னணியில் இப்படிப் பேசுகிறார்--
எம்.ஜி.ஆர் ஒரு விஷயத்துக்கு நன்கொடை தரார்னு சொன்னாலே அது கற்பனைக்கும் மிஞ்சியதாகத் தான் இருக்கும். அதுவும் பசிக்கு,,கல்விக்கு என்றால் பெரிய அளவிலே இருக்கும்! அதனால இந்தக் கட்டடத்துக்கு நன்கொடை தர விரும்பறவங்க எம்.ஜி.ஆரோடு போட்டி போட்டு அவர ஜெயிக்கணும்ன்னு நான் எதிர்பார்க்கறேன்??
அடுத்தது பேச எழுகிறார் யு.கிருஷ்ணா ராவ்!
காங்கிரஸ்கட்சியாளரும்,,அப்போதைய சட்டப்பேரவை தலைவருமான அவர் பேசியது--
எம்.ஜி.ஆரோடு நன்கொடை விஷயத்தில் போட்டியிடுமாறு சி.எஸ் சொன்னார். ஆனால்-?
எம்.ஜி.ஆரோடு இந்த விஷயத்துல யாரும் போட்டி போட முடியாதுங்கறது தான் உண்மை!
நாலுபேர் ஒண்ணா சேர்ந்து கொடுக்கற தொகையை அவர் ஒருத்தரே கொடுத்துடுவார்.
யாரேனும் அதிகமாக் கொடுக்கக் கூடியவங்க இருந்தாலும்,,அவுங்க கொடுக்கற தொகைக்கு மேல தான் எம்.ஜி.ஆர் பங்கு இருக்கும்??
அதனால வெற்றிகள வரிசையா அடைஞ்சிட்டு வரும் எம்.ஜி.ஆருக்கே இந்த விஷயத்திலும் வெற்றி தான் கிடைக்கும்???
நன்றாக கவனிக்கவும்!
நடந்தது அன்றைய தி.மு.க விழா அல்ல!
சொல்லப் போனால் தி.மு.கவின் நேர் விரோதியான காங்கிரஸ் ஆட்சியில் நடக்கும் விழா!
கிருஷ்ணா ராவ்,,சி.எஸ்-இருவருமே காங்கிரஸை சேர்ந்த பெரிய பதவியில் இருப்பவர்கள்!!
அவர்கள் இருவருமே,,பல நூறு பேர்கள் மத்தியில் எம்.ஜி.ஆரை இப்படிப் புகழ்கிறார்கள் என்றால்??
புகழ்ந்தது அவர்களல்ல??
எம்.ஜி.ஆரின் கொடை!!
மகிழ்ந்தது எம்.ஜி.ஆர் அல்ல??
தன் மகனை சான்றோன் எனக் கேட்ட தர்மதேவதை!!
உண்மைதானே உறவுகளே???!!!... Thanks.........

orodizli
14th April 2020, 09:17 PM
யார் தலைவன்?
----------------------------
ரஸமான பதிவு மட்டுமல்ல! மனதின்-
வசமான பதிவும் கூட!
சமர்க் களம் கண்டு எதிரியை வீழ்த்தி-மக்களிடம்-
அமர்க் களம் என்று பாராட்டு வாங்கித் தலைவனாகுதல் ஒரு வழி என்றால்-
கண்ணியத்தின் அடி தொட்டு-
விண்ணியத்தின் முடி தொடுதல் ஒரு வகை!!
மெய் வாய் அதன் மூலம், நல்லனவற்றை பரப்பி-
வாய் மை காத்தலின் மூலம் தலைவனாகுதல் ஒரு வழி என்றால்-
சொல்வாக்கு ஒன்றினாலேயே பல்லாக்கு ஏறியவன்-
மல்லாக்க விழுந்து மண் தொடலாம்!
செல்வாக்கு சீரிய முறையில் பெற்றவனோ-தம்-
உள்வாக்கு ஒன்றினாலேயே தலைவன் ஆவது ஒரு வகை!!
எம்.ஜி.ஆர் இதில் எதில் சேர்த்தி?
பதிவுக்குள் புகுவோமா??
பிச்சாண்டி ஐ.ஏ.எஸ்!!
எம்.ஜி.ஆரின் உள்ளம் தொட்ட அதிகாரிகளில்; ஒருவர்!
இவர்,,தம் வீட்டை விட ராமாவரம் தோட்டத்திலேயே அதிக நேரம் உலா வந்தவர்!
அது,,கொடைக்கானல் மலைப் பகுதிக்கு முதல்வர் எம்.ஜி.ஆரின் முறையான அரசு வருகை!!
முதல்வருடன் வழக்கம் போல் பிச்சாண்டி!!
இருவரையும் பார்த்த மலைவாழ் மக்கள்-
அரவம் கண்டது போல் அலறி ஓடுகிறார்கள்??
காவலர்களை அனுப்பி விஷயத்தை அறிகிறார் முதல்வர்!!
மலைவாழ் மக்கள்,,அங்கே சாலையில் விழும் சுள்ளிகளை மூட்டைக் கட்டி விற்பார்களாம்! வனத் துறையினர் அவர்களைத் தடை செய்வார்களாம்!
கேட்ட மாத்திரத்தில் அங்கேயேஅரசாணை பிறப்பிக்கிறார் எம்.ஜி.ஆர்--
இனி இந்த மக்களை வனத் துறையினர் தொல்லை செய்யக் கூடாது! அவர்கள் சுதந்திரமாக சுள்ளிகளைப் பொறுக்கிக் கொள்ளலாம்!!
கூடவே,,அவர்களது வேறு சில குறைபாடுகளையும் குறிப்பெடுத்துக் கொள்ள சொல்கிறார் பிச்சாண்டியிடம்!
அந்த நேரம் பார்த்து அணி திரண்ட மேகங்களின் அவசர கதி மழை!!
அடை மழைக்கு அறிகுறியெனக் கண்டு-அந்த மக்கள் குடை எடுத்துக் கொண்டு வந்து கொடுக்கிறார்கள்!
குளத்தில்--
சேறு தழுவிய நீர் செந்தாமரையை சீண்டும்!
இங்கோ--
செந்தாமரையை சிலுப்பிய மழை நீர்,,கீழே சேறைத் தொடுகிறது??
நனையும் எம்.ஜி.ஆரிடமிருந்து நிலமகள் நீர் வாங்குகிறாள்!
அப்போது எம்.ஜி.ஆர் செய்த அந்தக் காரியம்??
ஆம்! கொடுக்கப்பட்ட குடை,,
பிச்சாண்டி தலைக்கு விரித்தபடி!!
எம்.ஜி.ஆர் அதைப் பிடித்தபடி!!
பதறி நிமிர்கிறார் பிச்சாண்டி!
ஒரு முதலமைச்சர் இப்படி எல்லோர் முன்னாலும் தமக்கு ஊழியம் செய்வதா?
பரிவுடன் அவரை தேற்றுகிறார் எம்.ஜி.ஆர்--
நான் சும்மா தானே நிக்கறேன். நீங்களோ அவுங்க குறைகளை எழுதிக்கிட்டிருக்கீங்க! நீங்க நனைஞ்சா,,உங்களால கவனமா எழுத முடியாது. அப்படி எழுதினாலும் இந்தப் பேப்பர் நனைஞ்சா என்னாகறது???
வணக்கம் வைத்தால் வாங்கிக் கொள்வது மட்டும் தலைவன் வேலையல்ல!
இணக்கம் கொண்டோருக்கு ஒரு இடையூறு எனில்-சுணக்கம் காட்டுவதும் அவன் வேலையே என்பதை-மணக்கும் இந்த மனித நேயத்தினால் காட்டுவதாலோ-கனக்கும் புகழ் மாலைகள் தினக்கும் அவன் தோள்களைத் தீண்டிக் கொண்டிருக்கின்றன இன்று வரை???!!!... Thanks...

orodizli
14th April 2020, 09:21 PM
இது எம்.ஜி.ஆர் வழி!!
---------------------------------
அமானுஷ்ய செயல்களின் ஆன்மிக அதிர்வுகளை அனுபவித்தால் மட்டுமே அறிய முடியும். உணர இயலும்!! அதை,,இன்றையப் பதிவின் நிகழ்வு உறுதி செய்கிறது!
திண்டுக்கல் மலரவன்,,தழுதழுக்கும் குரலில் நம்மிடம் சொன்ன நிகழ்வு இதோ,,உங்களுக்காக!
பிப்ரவரி 9ஆம் தேதி திண்டுக்கல்லில் மலரவன் குழுவினர் நடத்தவிருக்கும் எம்.ஜி.ஆர்103 நிகழ்ச்சியைப் பற்றி ஏற்கனவே நாம் பதிவிட்டிருந்தது உங்களுக்கு நினைவிருக்கும்!
அந்த விழாவின் முக்கியஸ்தர்கள்--
வி.வி.ஐ.பி--எம்.ஜி.ஆர்!
வி.ஐ.பி--கலந்து கொள்ளும் அனைத்து எம்.ஜி.ஆர் ரசிகர்களும்!!
விழாவுக்கான ஏற்பாடுகள் வினயமாக நடந்து கொண்டிருக்கும் வேளையில்,,அன்பர்களுக்கு அழைப்பிதழ்கள் அனுப்பப் பட்டு கொண்டிருக்கும் தருணத்தில்--
சேலத்தில் ஒருவருக்கு அழைப்பு அனுப்பப் படுகிறது!
அழைப்பிதழைக் கண்ணுற்ற அந்த அன்பர் முகம் சுளிக்கிறார்??
எம்.ஜி.ஆர் நிகழ்ச்சிக்கும் எனக்கும் என்ன சம்பந்தம்?
எனக்கு எதற்கு அழைப்பிதழ் அனுப்பியிருக்காங்க?
வாய் விட்டே சலித்துக் கொள்கிறார்?
உண்மையில்,,முக நூல் மூலம் பெறப்பட்ட முகவரியில் அவர் முகவரிக்கு தவறாக அந்த அழைப்பிதழ் அனுப்பப் பட்டு இருக்கிறது!
சார் உங்களுக்கு வேணாம்ன்னா நான் எடுத்துக்கட்டுமா??
அந்த நபரிடம் இப்படிக் கேட்டது--
அதை அவரிடம் சேர்ப்பித்த தபால் ஊழியரே தான்??
தபால் ஊழியரின் ஆவலுக்கு முன்னே அந்த நபரின் சலிப்பு அடிபட்டுப் போக--
அந்த ஊழியர் வசமே அந்த அழைப்பிதழைக் கொடுக்கிறார் அந்த நபர்!!
மகிழ்ச்சியுடன் அந்த அழைப்பிதழை வாங்கிக் கொண்ட அந்தத் தபால் துறை ஊழியர்--கண்ணன்,, மிகத் தீவிரமான எம்.ஜி.ஆர் ரசிகராம்!!
அடுத்தது,,அந்தக் கண்ணன் செய்த காரியம் தான் ஹை லைட்??
அழைப்பிதழில் உள்ள மலரவனிடம் ஃபோனில் தொடர்பு கொண்டவர்--
அடக்கத்துடன் தம்மை அறிமுகப்படுத்திக் கொண்டு,,விபரங்கள் கூற--
உண்மையான ஒரு எம்.ஜி.ஆர் ரசிகரிடம் அந்த அழைப்பிதழ் சென்றிருப்பதை அறிந்த மலரவன் அகம் பூரிக்க--
மலரவனை மேலும் திகைக்க வைக்கிறார் கண்ணன்?
என்னோட சக்திக்கு இப்போ 500 ரூபாய் உங்களுக்கு மணியார்டர் செஞ்சுருக்கேன்
நிகழ்ச்சிக்கு வரும்போது இன்னமும் என்னால் முடிந்ததைத் தர்றேன்???
ஒரு அக்மார்க் ரசிகரை நமக்கு அடையாளம்` காட்டியதோடு,,`
அழைப்பிதழை அவர் பெற்றுக் கொண்ட முறையில் இருந்த நேர்மை--
அழைப்பிதழை கண்ணுற்ற மாத்திரத்தில் அவர் காட்டிய கொடைத் தன்மை--`
ஆனந்தக் கண்ணீரை அருவியென கொடுக்கிறது மலரவனுக்கு!!
என் பாலிஸி இது தான்!
உழைத்துப் பிழைக்கும் சராசரி மனிதர்கள் தான் எனக்கு எப்போதுமே வி.ஐ.பிக்கள்! அதனால் அப்படிப்பட்ட ஒருவரையே உனக்கும் கொடுத்திருக்கேன் என்று எம்.ஜி.ஆரே,,மலரவனுக்கு உரைப்பது போல் இருக்கிறது எனக்கு!
உங்களுக்கு?!......... Thanks.........

orodizli
14th April 2020, 09:26 PM
இங்கே தான் எம்.ஜி.ஆர்!!
------------------------------------
வரலாறு!
இது சாதனையாளர் எல்லோரையுமே உள் வாங்குகிறது!
சிலரை அழுத்தமாக அமர வைக்கிறது!
சிலரை முகமன் கூறி வரவேற்று--பின் மூலையில் உட்கார்த்தி வைக்கிறது!
சிலருக்கு மட்டுமே சிறப்பு அந்தஸ்தை அவர்களின் சாதனைகளின் அடிப்படையில் கொடுத்து மூச்சுக்கு முப்பது தடவை அவர்கள் பெயரை முழங்குகிறது!
சரி! பதிவுக்குள் செல்வோம்!
இந்தியாவில் இன்று பசியின்றி உண்டு ருசியோடு கல்வியை மாணவ சமுதாயம் கற்கிறது என்றால் அதற்கு முழு முதற் காரணம் எம்.ஜி.ஆர்!!
அவர் முதலமைச்சராக இருக்கும்போது அவரால் தான் சத்துணவு திட்டம் கொண்டுவரப் பட்டது!
மேற்கூறிய செய்தியை சொல்லி மகிழ்ந்திருப்பவர் ராகுல் காந்தி!!
அகில இந்திய காங்கிரஸ் தலைவர்!!
சமீபத்து எம்.ஜி.ஆர் பிறந்த நாளில் இந்த அறிக்கையை நாட்டு மக்களுக்கு தந்திருக்கிறார் ராகுல்!!
இது அரசியல் விளம்பரத்துக்கான அவரது உரை என்று நாம் எடுத்துக் கொள்ள முடியாது! அதே சமயம் அவரது தந்தை ராஜிவ் காந்தியின் எம்.ஜி.ஆர் பற்றையும் நாம் அறிவோம்!!
ஏற்கனவே திரு நரேந்திர மோடி எம்.ஜி.ஆரின் சிறப்புக்களை மக்களிடம் பகிர்ந்து மகிழ்ந்ததும்--எம்.ஜி.ஆருக்கு என்றே சில சாதனைகளை செயல்படுத்தி இருப்பதையும் நாம் அறிவோம்!
இந்த நிலையில் ---
ராகுல் காந்தியின் சமீபத்திய இந்த உரை நமக்கு சில தீர்மானமான தெளிவுகளை கொடுக்கிறது!!
1]--தனித் தமிழ் நாடு என்ற தி.மு.கவின் அன்றைய அர்த்தமற்ற கோரிக்கையை அன்று நிராகரித்த காலம்-
எம்.ஜி.ஆர் என்ற விஸ்வரூபத்தின் வாயிலாகவே-
தமிழ் நாட்டுக்குள் இந்தியா!!--என்ற கீர்த்தியை அளித்திருக்கிறது!
2]--இந்தியாவின் இரண்டு பெரிய தேசியக் கட்சிகள்-
காங்கிரஸ்--பி.ஜே.பி--இரண்டின் தலைவர்களுமே எம்.ஜி.ஆரை உள் வாங்கி உரைத்திருப்பவை இதுவரை எந்த தலைவருக்கும் கிட்டாத பேறு என்பதுடன் எட்டாத பேறு என்பதும் இங்கே கவனத்தில் கொள்ளத் தக்கதே!!
3]--பள்ளிக் குழந்தைகள் பசியாற வேண்டும் என்று துடித்த விருது நகர் தந்த விருது,,காமராஜர் நினைத்தாலும்--அன்றைய நிதிப் பற்றாக்குறை அவரது லட்சியத்தை நீதிப் பற்றாக்குறை ஆக்கி,,திட்டத்தை பாதியில் நிறுத்த நேர்ந்ததை மறந்து இன்றையக் காங்கிரஸ்காரர்கள்,,சத்துணவு திட்டத்தை எம்.ஜி.ஆரின் சாதனையாக பேசப் படுவதை ஏற்காத நிலையில்--
காங்கிரஸின் அகில இந்தியத் தலைவர் ராகுலே இன்று குறிப்பிட்டிருப்பது??
காலத்தில் தோன்றி கைகளை வீசிக்
காக்கவும் தயங்காது என்ற ஆனந்தஜோதியின் அமிர்த வரிகள்!!
இப்படி இன்னும் பல்வேறு ஆச்சரிய உண்மைகளை அணு அணுவாக நமக்கு தெரிய வைக்கும் வகையில் திரு ராகுல் காந்தியின் அறிக்கை அமைந்திருக்கிறது என்ற வகையில் நாம் அவரை பாராட்டி வாழ்த்துகிறோம்!!
சரித்திரம்--
சிலரை முழங்கும்
சிலரை முழுங்கும்!!
வெகு சிலரின் சாதனைகளை மட்டுமே
அனு தினமும் வழங்கும்!!
அந்த வகையில்--
எங்கே எம்.ஜி.ஆர்? என்ற கேள்விக்கு--
மீண்டும் பதிவின் தலைப்பு!! இடம் பெறுவதில் உடன்பாடு தானே உங்களுக்கு???........ Thanks...

orodizli
14th April 2020, 09:30 PM
தமிழை உயிராய் நேசிக்கும் அனைத்து தமிழ் உறவுகளே!
நம் அனைவரின் வாழ்விலும் அன்பையும் மகிழ்ச்சியையும் நோய் இல்லாத வாழ்வையும் குறைவில்லாத செல்வத்தையும் கொடுக்கும் ஒரு புதிய புத்தாண்டாக மலர
உங்கள் அனைவருக்கும் எங்களின்
இனிய சித்திரை தமிழ் புத்தாண்டு திருநாள் நல்வாழ்த்துக்கள்.

அன்புடன்,
எம்.ஜி.ஆர் கலைமகள்
டாக்டர் எம்.ஜி.ஆர் உலக ஆராய்ச்சி மையம்
Dr.MGR Global Research Centre
MGR Productions Resources......... Thanks.........

orodizli
14th April 2020, 09:34 PM
இனிய காலை வணக்கம்..!!

#எம்_ஜி_ஆர்_பற்றி_சுவையான_சிறு_குறிப்புகள்

சினிமா, அரசியல் தாண்டி ஓர் ஆளுமையாக எம்.ஜி.ஆர். அனைவருக்குமான ரோல் மாடல். இன்னமும் அவரைப் பற்றி சிலாகித்துச் சொல்ல ஆயிரம் சங்கதிகள் இருந்தாலும்... இன்று அவரை பற்றி பார்ப்போம்.

#திருமணம்_அழைப்பு

எம்.ஜி.ஆர் தன் அண்ணனுடன் வாழ்ந்தபோது யாராவது திருமணம் என்று அழைப்பு வைத்தால் அவர் தன் அண்ணனிடம் பணத்தைக் கொடுத்து அவர் கையால் பெற்றுக்கொள்ளுங்கள் என்பார். அவர் உள்ளேயே இருந்துவிடுவார். அண்ணன் சக்ரபாணி வந்து பணம் கொடுப்பார். நடிகர் சந்திர பாபு துணை இயக்குநர் இடிச்ச புளி செல்வராஜ் வசனகர்த்தா ரவீந்தர் போன்றோர் எம்.ஜி.ஆர் கையால் பெற முடியவில்லையே என்று வருந்தியதுண்டு. அதற்கு எம்.ஜி.ஆர் எனக்குப் பிள்ளையில்லை. என் அண்ணன் பிள்ளைகுட்டிக்காரர் அதனால் அவர் கையால் உனக்குத் தருகிறேன் என்று சமாதானம் சொல்வார். தனக்குப் பிள்ளையில்லாவிட்டாலும் தன்னைத் திருமணத்துக்கு அழைப்பவர்கள் பிள்ளை பாக்கியம் பெற்று சிறப்பாக வாழவேண்டும் என்ற நல்லெண்ணம் அவருக்கு இருந்தது.

நிஜத்திலும் படத்திலும் எம்.ஜி.ஆருக்கு நல்ல பழக்க வழக்கங்களும் நல்ல எண்ணமும் இருந்ததால் அவரை இன்று வரை மக்கள் மறக்காமல் நினைவில் வைத்துப் போற்றுகின்றனர்........ Thanks...

orodizli
14th April 2020, 09:38 PM
#புரட்சிதலைவர்
#இதய_தெய்வம்_எம்ஜிஆர்
#அவர்களின்_ஆசியோடு_நண்பர்கள் #அனைவருக்கும்_இனிய_காலை #வணக்கம்

#மனிதாபிமானத்தின்_மகாத்மா" #எம்_ஜி_ஆர்.

1917 ஆம் ஆண்டு ஜனவரி 17 ஆம் ஆண்டு இப்பூவுலகில் பிறந்த எம்.ஜி.ஆர் தனது தாய் சத்யபாமா மீது அளவற்ற அன்பு கொண்டவர். தனது தந்தையின் மரணத்திற்கு பின் மதுரையில் உள்ள நாடக கம்பெனி ஒன்றில் நாடக நடிகராக கலைத்துறையுடன் தன்னை இணைத்துக் கொண்டார்.

நாடகங்களில் நடித்து வந்த அவர், 1936 ஆம் ஆண்டு சதிலீலாவதி என்ற திரைப்படத்தின் மூலம் வெள்ளித்திரையில் அறிமுகமானார். பல தரப்பட்ட பாத்திரங்களில் நடித்த அவர் சினிமாவில் தனக்கெனி தனி பாணியை வகுத்துக்கொண்டார்.

#மக்கள்_திலகத்தின்_திரைத்துறை #வெற்றிக்கு_பிரபல_தயாரிப்பாளர் #தேவர்_பிலிம்ஸ்
#சாண்டோ_சின்னப்பதேவரும் #வசனர்த்தா_ஆரூர்தாசும்_முக்கிய #காரணம்_ஆவார்கள்.
#அவரது_உடன்_பிறந்த_சகோதரர்
#எம்_ஜி_சக்கரபாணி_என்றாலும்,
#தேவர்_அவர்களுக்கு_உடன்_பிறவா #சகோதரர்_என்ற_அந்தஸ்தை #கொடுத்திருந்தார்

குண்டடிபட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது தேவரண்ணன் வந்தால் மட்டும் உள்ளே அனுப்புங்கள் என்று எம்.ஜி.ஆர் கூறியதாக அண்ணன் ஆரூர்தாஸ் அவர்கள் தனது தினத்தந்தி கட்டுரையில் கூறியிருப்பதன் மூலம் தேவரின் மீது எம்.ஜி.ஆர் விலை உயர்ந்த பற்று கொண்டிருந்தார் என்பது தெளிவாகிறது.

சக கலைஞர்கள் நலனிலும் மக்கள் திலகம் பெருமளவு அக்கறை கொண்டிருந்தார் என்பதற்கு ஆரூர்தாஸ் அவர்களே முக்கிய சாட்சி. எம்.ஜி.ஆர் நடித்துக் கொண்டிருந்த படப்பிடிப்பின் இடைவேளையின் போது அவருக்கருகே உட்கார்ந்திருந்த ஆரூர்தாஸ், பெருமளவு வேலைப்பளு காரணமாக, அப்படியே எம்.ஜி.ஆரின் மடியில் சாய்ந்து உறங்கிய போது அவர் கண்விழிக்கும் வரை அவரை எழுப்பாமல் அன்போடு பார்த்துக்கொண்டது அவரின் உயர்வான குணத்தை காட்டுகிறது.

நாடக குழுவிலிருந்து திரைத்துறைக்கு வந்த பின் அவருக்கு தொடர்ந்து வெற்றி கிடைத்துக்கொண்டேயிருந்தது. இந்நிலையில் அண்ணாவின் எழுத்தால் கவரப்பட்ட மக்கள் திலகம் அவர்கள் திராவிட முன்னேற்ற கட்சியில் இணைந்தார்.

அண்ணாவின் மறைவிற்கு பின் திராவிட முன்னேற்ற கழகத்திலிருந்து வெளியேற்றப்பட்ட பின் 1972 ஆம் ஆண்டு அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தை துவக்கினார். கட்சி ஆரம்பித்த குறுகிய காலத்தில் 1973 ஆம் ஆண்டு நடந்த திண்டுக்கல் பாராளுமன்ற இடைத்தேர்தலில் மாயத்தேவரை நிற்க வைத்து வெற்றி பெற வைத்து அரசியலில் தனது சாதனை ஓட்டத்தை துவக்கினார்.

1977 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் 200 இடங்களில் போட்டியிட்ட அ.தி.மு.க 130 தொகுதிகளில் அமோக வெற்றி பெற்றது. அருப்புக்கோட்டை தொகுதியில் போட்டியிட்ட புரட்சித் தலைவர் அவர்கள் 43065 வாக்குகள் பெற்று அமோக வெற்றியடைந்தார்.

இத்தேர்தலில் கிட்டத்தட்ட 52 லட்சம் வாக்குகளை அ.தி.மு.க அறுவடை செய்தது அரசியல் வரலாற்றின் மிகப்பெரிய சாதனை. அக்கட்சியை சேர்ந்த ஆனூர் ஜெகதீசன், பண்ருட்டி ராமச்சந்திரன், எஸ்.செம்மலை, பி.தனபால், சி. பொன்னையன், கே. ஏ. செங்கோட்டையன் மற்றும் கா.காளிமுத்து ஆகியோர் தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை ஈட்டினர்.

1980ல் நடந்த பாராளுமன்ற தேர்தலில் திமுக-காங்கிரஸ் கூட்டணி அதிமுக-ஜனதா கூட்டணியை வீழ்த்தி மிகப்பெரிய வெற்றிபெற்றதையடுத்து புரட்சித்தலைவரின் ஆட்சி கலைக்கப்பட்டது. ஆனால் ஆட்சியை கலைத்த பின் நடந்த தேர்தலில் முன்னை காட்டிலும் அதிக வெற்றியை எம்.ஜி.ஆர் பெற்றார். அப்போது 177 இடங்களில் போட்டியிட்ட அதிமுக 129 இடங்களில் அமோக வெற்றி பெற்று சாதனை படைத்தது. இத்தேர்தலில் மதுரை மேற்கு தொகுதியில் போட்டியிட்ட எம்.ஜி.ஆர் அவர்கள் 21066 வாக்குகள் வித்தியாசத்தில் திமுகவின் பொன்.முத்துராமலிங்கத்தை தோற்கடித்தார்.

தமிழக அரசியல் வரலாற்றில் காமராஜருக்கு பிறகு தொடர்ந்து 2வது முறையாக முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்ட பெருமை எம்.ஜி.ஆருக்கு உண்டு.

1983 ஆம் ஆண்டு அதிமுக அரசியல் வரலாற்றில் முக்கிய நிகழ்வாக ஜெயலலிதா அவர்கள் அக்கட்சியின் கொள்கை பரப்பு செயலாளராக நியமிக்கப்பட்டார். பின்னர் 1984 ஆம் ஆண்டு நடந்த சட்டப்பேரவை தேர்தலில் எம்.ஜி.ஆர் நோய்வாய்ப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது ஜெயலலிதாவின் தீவிர பிரச்சாரத்தால் அதிமுக அமோக வெற்றி பெற்றது.

இத்தேர்தலில் ஆண்டிப்பட்டி தொகுதியில் போட்டியிட்ட எம்.ஜி.ஆர்., 60510 வாக்குகள் பெற்று அமோக வெற்றி பெற்றார். தொடர்ந்து 3வது முறையாக முதலமைச்சரான பெருமை புரட்சித்தலைவருக்கு கிடைத்தது.

தன்னுடைய ஆட்சிக்காலத்தில் அடித்தட்டு மக்களின் வாழ்க்கை முன்னேற்றுவதற்கு பல நல்ல திட்டங்களை கொண்டு வந்தார். குறிப்பாக கல்வித் துறையில் மிகப்பெரிய சீர்திருந்தங்களை கொண்டு வந்தார். 1982 ஆம் ஆண்டில் மாணவர்களுக்கு சத்துணவு திட்டத்தை அறிமுகப்படுத்தி அதை வெற்றிகரமாக நடத்திக்காட்டினார். மகளிருக்கு சிறப்பு பேருந்து திட்டத்தை அறிமுகப்படுத்தினார்.

தமிழக அரசியல் வரலாற்றில் மது விற்பனையை தடை செய்த மகத்தான தலைவர் புரட்சித்தலைவர் ஆவார். பழமையான கோவில்களுக்கு முக்கியத்துவம் தந்து அவற்றை புனரமைக்க வேண்டிய நடவடிக்கைகளை எடுத்தார். சுற்றுலாத் துறையில் தமிழகம் வளர்ச்சி அடைய நடவடிக்கை எடுத்தார்.

குறிப்பாக ஈழத்தமிழர் நலனில் உண்மையான அக்கறை கொண்டிருந்தார். பல்வேறு வகைளில் அவர்களுக்கு நிதியுதவியும், பொருளுதவியும் தந்த "வள்ளல்" அவர். 1987 ஆம் ஆண்டு டிசம்பர் 24 ந்தேதி #இப்பூவுலகை_விட்டு_மறையும்_வரை #ஏழைகளின்_நலனுக்கு_பெரும் #முக்கியத்துவம்_கொடுத்த_இந்த #பொன்மனச்_செம்மலை #மனிதாபிமானத்தின்_மகாத்மா_என்று #குறிப்பிடுவது_சாலச்சிறந்தது.


அன்புடன்
படப்பை
ஆர்.டி.பாபு........... Thanks.........

orodizli
14th April 2020, 09:42 PM
இனிய பிற்பகல் வணக்கம்..!!

#எம்_ஜி_ஆர்_பற்றி_சுவையான_சிறு_குறிப்புகள்

சினிமா, அரசியல் தாண்டி ஓர் ஆளுமையாக எம்.ஜி.ஆர். அனைவருக்குமான ரோல் மாடல். இன்னமும் அவரைப் பற்றி சிலாகித்துச் சொல்ல ஆயிரம் சங்கதிகள் இருந்தாலும்... இன்று அவரை பற்றி பார்ப்போம்.

#பண்டிகை

எம்.ஜி.ஆர் திராவிட இயக்கத்தைச் சேர்ந்தவர் என்பதாலும் ஆரம்பம் முதலே அவர் அம்மா தீபாவளியைக் கொண்டாடததாலும் அவர் தீபாவளி கொண்டாடுவதில்லை. பொதுவாக மலையாளிகள் தீபாவளி கொண்டாடமாட்டார்கள். இந்தியாவில் தீபாவளிக்கு விடுமுறை விடாத மாநிலமாகவே கேரளா சில ஆண்டுகளுக்கு முன்பு வரை இருந்தது. இப்போது ஊடகங்களின் செல்வக்கால் குறிப்பாக விளம்பரத்தின் ஆளுகையால் அங்கும் தீபாவளி கொண்டாடப்படுகிறது.

வேட்டைக்காரன் படத்தின் வெளிப்புற படப்பிடிப்பு ஊட்டியில் நடந்த போது தீபாவளிக்குச் சென்னை திரும்பிவிடலாம் என்று மற்றவர்கள் நினைத்தபோது எம்.ஜி.ஆர் ஷூட்டிங்கை தொடர்ந்து நடத்தலாம் என்று சொல்லிவிட்டார். அனைவருக்கும் வீட்டுக்கு அனுப்பப் பணம் தருமாறு இயக்குநர் திருமாறனிடம் சொல்லிய எம்.ஜி.ஆர் இங்கிருப்பவர்களுக்குப் புதுத்துணி எடுத்துத் தருவதும் உங்கள் செலவே என்றார். திருமாறன் தன் அண்ணன் தேவரை விட சிக்கனக்காரர் என்பதால் திணறிவிட்டார். இதுவும் முக்கியஸ்தர் பேர்களை சீட்டு எழுதி குலுக்கி போட்டதில் இவர் பெயர் வந்ததால் திருமாறனால் ஒன்றும் சொல்ல முடியவில்லை எடுத்த சீட்டில் எம்.ஜி.ஆர் பெயர் இருந்திருந்தால் எம்.ஜி.ஆர் செலவு செய்திருக்க வேண்டும். ஆனால் திருமாறன் பெயர் வந்ததால் அவர் சிக்கிக்கொண்டார். இந்தத் தகவல் அறிந்ததும் ஜெமினி சாவித்திரியுடன் தீபாவளி கொண்டாட அங்கேயே வந்துவிட்டார்.

எம்.ஜி.ஆர் பொங்கல் பண்டிகையை மட்டுமே சிறப்பாகக் கொண்டாடுவார். அன்று அனைவருக்கும் கை நிறைய ரூபாய் நோட்டுகளை வழங்குவார். அவரை வைத்து படம் எடுக்க மாட்டேன் என்று சிவாஜியிடம் சத்தியம் செய்து கொடுத்த பாலாஜி கூட எம்.ஜி.ஆரிடம் அன்று வந்து எம்.ஜி.ஆர் கையால் பணம் வாங்கிச் செல்வார்.

எம்.ஜி.ஆர் நாடக மன்றம் இருந்த போது மன்றத்தைச் சேர்ந்த அனைவருக்கும் ஒரே மாதிரி வேட்டி சேலை எடுத்து வழங்கி அன்று தன் அலுவலகத்துக்கு வரச் செய்து பல விளையாட்டுகள் நடத்தி கொண்டாடி மகிழ்வதுண்டு. பொங்கல் செலவுக்குப் பணம் வேண்டும் என்பதற்காகவே அவர் விவசாயி படத்தை ஒப்புக்கொண்டு தேவரிடம் பணம் பெற்றார் என்றும் தகவல் உண்டு. அந்தளவுக்கு அவர் பொங்கல் கொண்டாட பணம் செலவழிப்பதுண்டு....... Thanks...

orodizli
14th April 2020, 10:16 PM
சத்துணவுத் திட்டத்தை அறிமுகப்படுத்தியதில், தமிழ்நாடு, இந்தியாவிலேயே ஒரு முதன்மை மாநிலமாக திகழ்கிறது....

உணவளிப்பதன் மூலம் பள்ளிக்கு வரும் குழந்தைகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், மாணவர்கள் தொடர்ந்து பள்ளிக்கு வருவதை உறுதிசெய்திடவும், குழந்தைகளின் ஊட்டச்சத்தினை அதிகரிக்க வேண்டியும் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களால் சத்துணவுத் திட்டம் 1982ல் தொடங்கப்பட்டது...

பசியோடு உள்ள குழந்தையாலும், ஊட்டச்சத்து குறைபாடுடைய குழந்தையாலும் படிப்பின் மீது கவனம் செலுத்த இயலாது என்ற காரணியின் அடிப்படையில், அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், சர்வ சிக்ஷ அபியான் திட்டத்தின் கீழ் செயல்படும் சிறப்பு பயிற்சி மையங்கள், மதரசாக்கள் மற்றும் மக்தப்களில் பயிலும் துவக்கப்பள்ளி குழந்தைகளுக்கும், மற்றும் உயர் துவக்கப்பள்ளிகளில் 10ஆம் வகுப்பு வரை பயிலும் குழந்தைகளுக்கும் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். சத்துணவுத் திட்டத்தின் மூலம் சமைத்து சூடான இலவச மதிய உணவு வழங்கப்படுகிறது......... Thanks.........

fidowag
14th April 2020, 10:17 PM
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். சந்தித்த*சவால்கள் - 1 yes news tv*

-------------------------------------------------------------------------------------------------------

இன்று பிற்பகல் 2.30 மணி முதல் 3மணி வரையில் 1 yes news tv யில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். சந்தித்த சவால்கள் என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பானது .இந்த நிகழ்ச்சியில் திரு.இருகூர் இளவரசன் (எழுத்தாளர் ) அளித்த தகவல்கள்* விவரம் :


மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். 1936ல் சதி லீலாவதி என்கிற படத்தில் இன்ஸ்பெக்டர் கதாபாத்திரம் மூலம் அறிமுகம் ஆனார் என்பது அனைவரும் அறிந்த ஒன்று .அதன் பிறகு 10 ஆண்டுகளாக பல படங்களில் துணை நடிகராகவும், சிறிய பாத்திரங்களிலும் நடித்து வந்ததோடு , சில படங்களில் நடனமும் ஆடியுள்ளார் .அந்த காலத்தில் நடிகர் எம்.கே.தியாகராஜ பாகவதர் , நடிகர் பி.யு.சின்னப்பா , பிரபல கர்நாடக இசை பாடகி எம்.எஸ். சுப்புலட்சுமி, நடிகை டி.ஆர்.ராஜகுமாரி , ஆகியோருடன் ஒரு சில படங்களில் நடித்துள்ளார் . அந்த கால கட்டங்களில் நாடக துறையின் அனுபவம் காரணமாக* தனது நடிப்பில் மெருகேற்றி , வளர்ச்சி அடைந்து வந்தார் .* மேலும்* அப்போது சொந்த குரலில் பாடுபவர்களே கதாநாயகர்களாக நடிக்க முடியும் என்று ஒரு நிலை இருந்தது .* நாடகங்களில் நடித்துக் கொண்டும் ,வரும் சினிமா வாய்ப்புகளை பயன்படுத்திக் கொண்டும் , அவ்வப்போது நேரம் கிடைக்கும் போதெல்லாம் வாள்* சண்டை, கம்பு சண்டை, குத்து சண்டை , சிலம்பம் குதிரை சவாரி* ஆகியவற்றில் நல்ல பயிற்சி மேற்கொண்டார் .**


நடிகர்கள் தியாகராஜ பாகவதர், பி.யு.சின்னப்பா ஆகியோர் மிகவும் பிசியாக இருந்த சமயத்தில் ஜூபிடர் பிக்ச்சர்ஸ் உரிமையாளர் திரு.சோமு அவர்களுக்கு சினிமா படம் எடுக்க நல்ல கதை ஒன்று கிடைத்தது .* ஏற்கனவே பிரபலமாக இருந்த நடிகர்களிடம் கால்ஷீட் கிடைப்பதில் சிரமம் , அதிக சம்பளம் , தயாரிப்பு செலவு ஆகியவற்றை கருத்தில் கொண்டு புதிய நடிகர் , நடிகைகள்,அல்லது சினிமா கம்பெனியில் ஒப்பந்தத்தில் உள்ள நடிகர்கள் வைத்து படம் எடுக்க*இயக்குனர் ஏ.எஸ். ஏ.சாமியிடம் ஆலோசனை மேற்கொண்டார் .இயக்குனர் சாமி ஸ்ரீமுருகன் என்ற படத்தில் நடிகர் எம்.ஜி.ராமச்சந்திரன் பரமசிவனாகவும், மாலதி பார்வதி யாகவும் அருமையாக நடனமாடி உள்ளனர் .* மேலும் ராமச்சந்திரனுக்கு நாடக அனுபவமும் உள்ளது , கடந்த பல வருடங்களாக சினிமாவிலும் பல வேடங்களில் திறம்பட நடித்து வருகிறார்* *அவரது கால்ஷீட் எளிதில் கிடைக்கும் . வளர்ந்து வரும் நடிகர் . நமக்கு நல்ல ஒத்துழைப்பு தருவார் , சம்பளம் நாம் தருவதை வாங்கி கொள்வார் . தயாரிப்பு செலவும் குறைவு. நிறைவான படம் உருவாக்க வாய்ப்பு என்று பல யோசனைகளை சொன்னதும் , சிறிது தயக்கத்துடன்* தயாரிப்பாளர் சோமு , பதில் எதுவும் சொல்லாமல் வெளியேறினார் .இந்த விஷயங்கள் எம்.ஜி.ஆருக்கு சில நண்பர்கள் மூலம் தெரிய வர , உடன் இயக்குனர் சாமியிடம் தயக்கத்துடன் விசாரித்தார் .இயக்குனர் சாமி,, உனது நடிப்பு திறமை, நடன திறமை, சண்டை காட்சிகளில் வேகம், விறுவிறுப்பு ஆகியன பற்றி தயாரிப்பாளர் சோமுவிடம் சொல்லியிருக்கிறேன் . முடிவு அவர் கையில்தான் உள்ளது .என்றார் .*அதன்பின் எம்.ஜி.ஆர். தயாரிப்பாளர் சோமுவிடம் இயக்குனர் சாமி கூறிய யோசனைப்படி சந்தித்து பேசினார் .* தயாரிப்பாளர் சோமு , தான் இயக்குனர் சாமியிடம் பேசிவிட்டு இதுபற்றி சொல்லி அனுப்புகிறேன் என்று கூறினார் .


இதற்கு முன்பு சாயா என்ற படம் பாதி வளர்ந்த நிலையில் கைவிடப்பட்டு வெளியாகவில்லை .* அதே போல இந்த படமும் ஆகிவிடுமோ என்ற கவலை எம்.ஜி.ஆருக்கு இருந்தது . நிரபராதி ஆகிய நான் குற்றவாளி கூண்டில் நின்று ஒரு நீதிபதியின் தீர்ப்பை எதிர்பார்த்து காத்திருக்கும் நிலையில் என் மனம் அப்போது இருந்தது . மிகவும் பதட்டமாக இருந்தது . கதாநாயகன் வாய்ப்பு கைகூடுமா*என்ற சந்தேகம் , நல்ல வேளை , தயாரிப்பாளர் சோமுவும், இயக்குனர் சாமியின் சிபாரிசின் பேரில் எம்.ஜி.ஆரை கதாநாயகனாக அறிமுகம் செய்து முடிவெடுத்து*ஒப்பந்தம் செய்தார் . கதாநாயகி மாலதி . இந்த படத்தில் முதன் முதலாக எம்.ஜி.ஆருக்கு பின்னணி பாடியவர் எம்.எம்.மாரியப்பா .* எம்.என்.நம்பியார் நகைச்சுவை* வேடத்தில் நடித்தார்*

எம்.ஜி.ஆர். ஆத்திகராகவும், காங்கிரஸ் அனுதாபியாகவும் இருந்தார் .கழுத்தில் ருத்திராட்ச மாலை அணிந்திருப்பார் .இந்த கால கட்டத்தில் கோவை, மற்றும் ஈரோடு நகரங்களில் எம்.ஜி.ஆரும் கருணாநிதியும் சந்திக்கும் வாய்ப்பு கிட்டியது .எம்.ஜி.ஆர். காந்தியின் புத்தகங்களை கருணாநிதிக்கு பரிசளிப்பார் .* கருணாநிதி தந்தை பெரியாரின் புத்தகங்களை எம்.ஜி.ஆருக்கு தருவித்தார் நெருங்கிய நண்பர்களானார்கள் .* ராஜகுமாரி படத்திற்கு கருணாநிதி வசனம் எழுத வாய்ப்பு கிடைத்தது .* ஆனால் படத்தில் உதவி ஆசிரியர் என்று டைட்டில் வரும் .


படத்தின் வில்லியாக இலங்கை குயில் தவமணிதேவி மிகவும் கவர்ச்சியாக*ஜாக்கெட் அணிந்து கடைசி பட்டன் மட்டும் போட்டிருந்ததை கண்டு இயக்குனரும் தயாரிப்பாளரும் அசந்து போனார்கள். காரணம் ஹாலிவுட் நடிகை மார்லின் மன்றோ போல கவர்ச்சியாக தெரிந்ததுதான் .* கதாநாயகனை மயக்கும் பாத்திரம் என்பதால் இயற்கையாக இருக்கத்தான் இந்த உடை என்று தவமணி தேவி கூற , இயக்குனரின் யோசனைப்படி ஜாக்கெட்டுக்கு* நடுவில் பெரிய காகிதப்பூ**ஒன்றை வைத்து* படமாக்கினர் .* படத்தில் எம்.ஜி.ஆர். பெயர் எம்.ஜி.ராமச்சந்தர் என்று டைட்டிலில் இடம் பெற்றது .


எம்.ஜி.ஆரின் சிறப்பான நடிப்பு, டி.எஸ். பாலையாவுடன் போடும் கத்தி சண்டை, நம்பியாரின் நகைச்சுவை, தவமணிதேவியின் கவர்ச்சி நடனம் , கருணாதியின் வசனம் ஆகியன படத்திற்கு மெருகேற்றி , படத்தின் இமாலய வெற்றிக்கு வித்திட்டது .11/04/1947ல் ராஜகுமாரி வெளியானது . குறைந்த செலவில் நிறைந்த லாபத்தை தயாரிப்பாளர் ஜூபிடர் சோமு பெற்று , இயக்குனர் ,நடிகர் நடிகையரை பாராட்டினார் .* சென்னையில் ஸ்டார், கிரவுன் , மதுரை சிந்தாமணி, திருச்சி வெலிங்டன் , கோவை ராஜா ,சேலம் ஓரியண்டல் ஆகிய அரங்குகளில் 100 நாட்கள் மேல் ஓடி நல்ல வசூலை பெற்றது .* ராஜகுமாரியின் வெற்றிக்கு பிறகு*எம்.ஜி.ஆருக்கு பட வாய்ப்புகள் குவிந்தன .* எம்.ஜி.ஆர். கதாநாயகனாக நடிக்க கருணாநிதி வசன ஆசிரியராக சில படங்கள் ஒப்பந்தம் செய்யப்பட்டனர் .

orodizli
14th April 2020, 10:28 PM
#அனைவருக்கும் #இனிய #தமிழ்ப்புத்தாண்டு #வணக்கங்கள்

வாத்தியாரை வெறும் நடிகர் என்று பார்க்கும் பொது புத்தியில் இருந்து அவர் மீது வெற்று விமர்சனங்கள் வைக்கப் படுகின்றன. இவை பெரும்பாலும் பொறாமை விளைச்சல்களே.

வாத்தியாரை ஒட்டு மொத்தமாகப் பார்த்தால் மூன்றாவது இடத்தில் தான் நடிகன் என்கிற பிம்பம் தெரியும்.

சிறப்பு மிக்க இரண்டு பிம்பங்கள் அவர்க்கு உள்ளன . அவைதான் அவரை இன்னமும் நினைக்க, பேச வைக்கிறன.

அவை...
#மனிதநேயமும், #கொடைத்தன்மையும்

பிறப்பு முதல் நீங்காமல் நம்முடன் இன்னமும் கூடவே வருபவர் பெற்றோருக்கு நிகராக வாத்தியார் மட்டுமே...

வாத்தியாரின் நாமத்தை மேன்மேலும் போற்றுவோம்.......... Thanks.........

orodizli
14th April 2020, 10:31 PM
1966 பிப் 4 ல் வெளியான படம்தான் "நான் ஆணையிட்டால்." 1966 பொங்கலுக்கு வெளியாக எம்ஜிஆரிடம் சம்மதம் வாங்கி வைத்திருந்தார் R M வீரப்பன். ஆனால் ஏவிஎம்மின் 50வது படமும் அவர்கள் கம்பெனியின் முதல் வண்ணப்படமுமான"அன்பே வா"
ஒரு குறுகிய கால தயாரிப்பாக இருந்தாலும் செட்டியார் அவர்கள்"அன்பே வா" படத்தை பொங்கலுக்கு திரையிட விரும்பினார். எம்ஜிஆரிடம் செட்டியாரின் விருப்பத்தை சொன்னதும் உடனே அவர் அது என் கையில் இல்லை. வீரப்பனுக்கு ஏற்கனவே "நான் ஆணையிட்டால்" திரையிட சம்மதம் கொடுத்து விட்டேன்.இனி அவர்தான் முடிவு செய்ய வேண்டும் என்று வீரப்பனை போய் பாருங்கன்னு சொல்லிட்டார்.
உடனே வீரப்பனை அணுகி வேண்டுகோள் வைத்தவுடன் அவரும் அவரது பொங்கல் கனவை செட்டியாருக்கு விட்டு கொடுத்து விட்டு 3 வாரம் கழித்து என் படத்தை வெளியிடுகிறேனு சொல்லிட்டார்.

எங்க வீட்டு பிள்ளை பொங்கலுக்கு வெளியாகி மாபெரும் வெற்றி படமானதால் எல்லோரும் பொங்கலன்று எம்ஜிஆர் படத்தை வெளியிட ஆசைப்பட்டார்கள். நினைத்தது மாதிரியே'அன்பே வா" மாபெரும் வெற்றி படமானது.
1965 லேயே நான் ஆணையிட்டால் படப்பிடிப்பு நடக்கும் போதே"அடிமைப்பெண்" படப்பிடிப்பு துவங்கப் பட்டது. "நான் ஆணையிட்டால்" படத்தில் வரும் ஒரு பாடலில் "நானே எழுதி நானே நடித்த நாடகத்தில் நல்ல திருப்பம்" என்ற அடி வரும் போது"வருகிறது" "அடிமைப்பெண்" என்ற விளம்பரம்
சீரியல் பல்புகளால் அலங்கரிக்கபட்டு காட்டப்படும். அப்போது ரசிகர்களின் கரகோஷம் விண்ணை பிளக்கும்............. Thanks.........

orodizli
14th April 2020, 10:39 PM
#அதான் #வாத்தியாரு

பொதுவாக, கிருஷ்ணன் -பஞ்சு இயக்கும் படத்தின் 'செட்' இல் நுழைபவர்கள், இயக்குனர்கள் இல்லாமல், அவர்களுக்காக காத்திருப்
பவர்கள் உட்கார்ந்து அவர்களுக்காக காத்திருப்பர்.

ஆனால் அவர்கள் "செட்' க்குள் நுழைவதை கண்டால் எழுந்து நின்று அந்த இயக்குனர்களுக்கு மரியாதை செய்யும் பழக்கம் உண்டு !

ஆனால் "பெற்றால்தான் பிள்ளையா " படத்தின் "செட்'இல் இரட்டை இயக்குனர்களில் ஒருவரான கிருஷ்ணனுக்கு வித்தியாசமான அனுபவம் ஏற்பட்டது !

என்ன ஆச்சு ?

இயக்குனர் கிருஷ்ணன் வந்து படப்பிடிப்பை கவனித்துக் கொண்டிருக்கும்

சமயத்தில் .....அங்கே எம்ஜிஆர் உள்ளே நுழைந்தார் !

அவ்வளவுதான் !

எல்லோரும் எழுந்து நின்று மரியாதை செலுத்திவிட்டனர் !

இயக்குனர் கிருஷ்ணன் ?

அவருக்கு நிற்பதா அல்லது உட்கார்ந்து கொண்டே இருப்பதா என்று குழப்பம் !

என்ன பண்றது......

ஒன்றும் தோன்றாமல் மெதுவாக எழுந்து நின்றார் !

எம்ஜிஆர், கிருஷ்ணன் எழுந்து அவருக்கு மரியாதை செலுத்துவதைக் கண்டு , பெரும் சினம் கொண்டார் !

நேராக, அவர் கிருஷ்ணனை நோக்கி வந்தார்......கேட்டார் :

"நீங்கள் செய்த காரியம் உங்களுக்கே நல்லா இருக்கா? "
என்று கோபமாக கேட்டார் !

எல்லோருக்கும் எம்ஜிஆர் கோபம் கொண்டு பேசியதைப் பார்த்து "டென்ஷன்" ஆயினர் !

"என்ன நடக்குமோ?! "
என்கிற அச்சம் அங்கே நிலவியது !

உடனே கிருஷ்ணன் , எம்ஜிஆரிடம் ஏதோ காதில் சொல்ல, அதனைக் கேட்டு எம்ஜிஆர் பலமாக சிரித்து விட்டார்...... மீண்டும் சிரித்தார் !

எல்லோருக்கும் குழப்பம் !

அப்படி
என்ன தான் சொன்னார் கிருஷ்ணன், எம்ஜிஆரிடம் ?

இதுதான் :

"எனக்கு நானே மரியாதை கொடுக்கத்தான் எழுந்து நின்றேன் !"

#அதுதான் #எம்ஜிஆர் !........ Thanks.........

orodizli
14th April 2020, 10:46 PM
ஸ்ரீ MGR. வாழ்க

சித்திரை 1 செவ்வாய் கிழமை

இன்று தமிழ் புத்தாண்டு

இந்த உலகில் உள்ள அனைத்து மக்களுக்கும் பசி பட்டினி நோய் கடன் இல்லாத வாழ்க்கை அமைய வேண்டும் என்று

ஆண்டவனிடம் வேண்டிக் கொள்கிறேன்

/////////////////////?///////////////////////////////

எம்ஜிஆர் பக்தர்களே

1977 ஆண்டு அருமை தலைவன் எம்ஜிஆர் அவர்கள் முதலமை அமைச்சராக வந்தபிறகு

சினிமாவில் நடிப்பதற்காக பிரதமர் மொரார்ஜி தேசாய் அவர்களிடம் அனுமதி கேட்டார்

அவர்களும் அனுமதி அளித்து விட்டார்கள்

அப்பொழுது எம்ஜிஆர் நடிப்பதாக ஒரு படத்தின் விளம்பரம் கொடுத்திருந்தார்கள்

அந்தப் படத்தின் பெயர்

நான் உன்னை விடமாட்டேன்

அந்தப் படத்தின் தொடக்க விழாவின்போது இந்த போட்டோ எடுக்கப்பட்டது

எம்ஜிஆர் அவர்களுக்கு எதிர்ப்புறம் உயரமாக மீசையுடன் உள்ளவர் தான்

உன்னை விடமாட்டேன் படத்தின் தயாரிப்பாளர்

G.K.தர்மராஜ்

பக்கத்தில் இருப்பவர் இசையமைப்பாளர் இளையராஜா அவர்கள்

உன்னை விடமாட்டேன் படத்திற்கு இசை இளையராஜா

//////////////////////////////////////?///////?

அடுத்து எம்ஜிஆர் அவர்களுக்கு முன்பாக இரண்டு கைகளையும் பிணைந்து கொண்டிருப்பவர் பெயர்

சித்திர மஹால் கிருஷ்ணமூர்த்தி

இவரும் பல சினிமா படங்களை தயாரித்துள்ளார்

அடுத்து ஒரு மிக முக்கியமான செய்தி

1977 ஆண்டு எம்ஜிஆர் முதல் முதலாக சட்டசபை பொதுத் தேர்தலை சந்தித்தார்

அப்பொழுது

தியாகராய நகர் சட்டமன்ற வேட்பாளராக

சித்ரா மஹால் கிருஷ்ணமூர்த்தி அவர்களை

அண்ணா திமுக வேட்பாளராக எம்ஜிஆர் அறிவித்தார்........ Thanks fb

orodizli
14th April 2020, 11:03 PM
எம்.ஜி.ஆரின் மனிதநேயத்திற்கு எல்லையுண்டா ?

அந்த பத்திரிகையாளர் முதல்வர்
எம்ஜிஆரின் பல திட்டங்களை கிழித்து
எழுதியவர். எப்போதும் எதிர் விமர்சனம்தான்.
செய்தியாளர் சந்திப்பின் போதும்கூட நேருக்கு நேராக, முதல்வர் என்றும் பாராமல் விமர்சனங்களை முன்வைப்பார்.

அப்படியானவருக்கு குடிப்பழக்கம் எப்படியோ தொற்றிக்கொண்டது. பணி நேரம் போக அதில் மூழ்கிவிடுவார்.

ஒரு நாள் ராமாவரம் தோட்டத்திலிருந்து புறப்பட்ட #எம்ஜிஆரின் கார், அடையாறு பாலம் தாண்டினதும் உள்ள சத்யா ஸ்டுடியோ அருகே வந்து கொண்டிருந்தபோது, சட்டென்று வாகனத்தை நிறத்தச் சொல்கிறார். உடனிருந்தவர்களுக்கு ஒன்றும் புரியவில்லை.

"ரோட்டோரமா ஒரு ஆள் சாய்ந்து கிடக்கிறார். நம் ------மாதிரி தெரிகிறது. போய் அவரா என்று பாருங்கள்" என்கிறார். இறங்கி ஓடிச்சென்ற பாதுகாப்பு அதிகாரி, திரும்ப வந்து, ‘அது அவர்தான் ஐயா’ என்கிறார்.

"அப்படியா, தூக்கி வண்டியில் போடுங்கள்" என்கிறார்.

அதன்படி அவரைத் தூக்கி பின்னால் வந்த பாதுகாப்பு வாகனத்தில் கிடத்திக் கொள்கிறார்கள். மிதமீறிய குடியால் அவர் மயங்கி விழுந்து கிடந்துள்ளார்.

உடனிருந்தவர்களுக்கு ஒரு அச்சம். 'அவ்வளவுதான், இன்னைக்கு அந்த ஆளுக்கு #ராமாவரம் தோட்டத்தில் பூஜைதான்' என்ற நினைப்புக்கு வர, எம்ஜிஆரோ, "பத்திரிகையாளரின் வீடு எங்க இருக்கு? அங்க வண்டிய ஓட்டு" என்கிறார். யாருக்கும் ஒன்றும் புரியவில்லை. நல்லவேளையாக உடனிருந்த ஒரு உதவியாளருக்கு அவர் குடியிருக்கும் வீடு தெரிந்திருந்தது.

அதன்படி வாகனம் தியாகராயர் நகர் பகுதி குடிசைமாற்று வாரிய குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்தது. எல்லோருக்கும் ஆச்சரியம். கும்பல் கூடிவிட்டது. செய்தியாளரின் வீட்டம்மாவிடம், ‘ஏன் இப்படி இருக்கின்றார். இப்படியே ஏன் விட்டு வைத்துள்ளீர்கள்?’ என அக்கறையோடு விசாரிக்கின்றார்.

அவர்களோ, ‘கல்லீரல் முழுதும் கெட்டுப்போய்விட்டது. இதற்குமேலும் அவரை காப்பாற்ற முடியாது என்று மருத்துவர்கள் கைவிரித்து விட்டார்கள்" என்ற கதையைச் சொல்லி, நாங்களும் முடிந்த மட்டும் எச்சரிக்கையாக பார்த்துக் கொண்டாலும், இப்படி வெளியேறி விடுகின்றார்" எனக்கூறி வருந்தினார்கள்.

நிலையை புரிந்துகொண்ட #எம்ஜிஆர், வாகனத்தை #கல்யாணி #மருத்துவமனைக்கு ஓட்டச் சொன்னார். சென்றதும் அவரை அட்மிட் செய்து சீனியர் #மருத்துவர்களை அழைத்து, "எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை. இவருக்கு கொடுக்க வேண்டிய மருத்துவத்தைக் கொடுங்கள்" என்று கேட்டுக்கொண்டு, கோட்டைக்கு கிளம்பிச் சென்றார்.

அடுத்த சில மணி நேரத்தில், எம்.ஜி.ஆரின் அண்ணன் எம்.ஜி.சக்ரபாணி மருத்துவமனைக்கு வந்து, வேண்டிய பணத்தைக் கட்டினார். சில நாட்களில் அவருக்கான அறுவைச் சிகிச்சையும் நடந்தேறியது. தினமும் #மருத்துவமனைக்கு சென்றுவந்த எம்.ஜி.சக்ரபாணி, கடைசி நாளில் அவரை பொறுப்போடு வண்டியில் ஏற்றி வீட்டிற்கு அனுப்பியும் வைத்தார். எல்லாமும் எம்ஜிஆர் சொன்னதின் பேரில் நடந்து கொண்டிருந்தது-
எம்.ஜி.ஆரும் இடையில் ஓரிரு முறை நேரில் சென்று நலம் விசாரித்துவிட்டு போயிருக்கிறார்.

ஓரிரு மாதங்கள் ஓடியது. அந்த பத்திரிகையாளரின் #உடல்நிலை நன்றாக தேறி, மீண்டும் #நாளேட்டில் எழுதத் தொடங்கினார். மக்களின் நலனுக்காக வேண்டி, எம்ஜிஆரின் சில செயல்களை, திட்டங்களை எல்லாம் முன்பைவிட கடுமையாகவே விமர்சித்து எழுதி வந்தார்.

#கோட்டையில் எப்போதாவது நேரெதிர் பார்த்துக்கொண்டால், அவரை சிரித்தபடி நலன் விசாரிப்பார் எம்ஜிஆர் . பத்திரிகையாளரும் சிரித்தபடி பதிலளிப்பார். அவ்வளவுதான். மற்றபடி எந்த #சமரசமும் இருக்காது.

தொடக்கத்தில் முழுக்கைச் சட்டையை நன்றாக சுருட்டி மேலேற்றி விட்டுக்கொண்டிருந்த பழக்கத்தில் இருந்த பத்திரிகையாளர், (அப்போது அது ஒரு பேஷன்) மருத்துவமனை சிகிச்சைக்குப் பிறகு முழுக்கை சட்டையோடவே இருப்பார். மடித்து சுருட்டிக் கொள்வதுமில்லை. பேச்சிலும், செயலிலும் ஒரு நிதானம் மிக்கவராக இருந்தார்.

காலம் ஓடியது.

ஒரு நாள் அந்த பத்திரிகையாளர் இறந்து போகிறார். இறுதி சடங்கிற்காக அவரது சட்டையை கழட்டும்போதுதான் அவரது இடக்கையை பார்க்கிறார்கள்.

‘இது எம்ஜிஆர் கொடுத்த உயிர்’ என்று பச்சை குத்தப்பட்டிருந்தது. பார்த்தவர்களுக்கு வார்த்தைகள் எழவில்லை.

எம்.ஜி.ஆர். அவர்களுடன் இருந்த ‘#தென்னகம்’ மு.கோ. வசந்தன் அண்ணன் அவர்கள் இதை சொன்னபோது உடைந்து அழுதுவிட்டார். நானும்தான்.

மனிதர்கள் எப்படியெல்லாம் இருந்துள்ளார்கள்?

ஒத்த ரூபாய்க்கு உதவி செய்துவிட்டு, பத்து ரூபாய் கொடுத்து விளம்பரம் தேடிக்கொண்டிருந்த தலைவர்கள் மத்தியில்தான், தான் செய்த உதவிகளை சொல்லாமல் வாழ்ந்தார் எம்ஜிஆர்.

அந்த பத்திரிகையாளருக்கு, இப்படியாக செய்தேன் என்று எம்ஜிஆரும் சொல்லிக் கொண்டதில்லை. அதைச் சொல்லிக்காட்டி, ‘என்னை இப்படியெல்லாம் விமர்சிக்கின்றாயா”? என்று கேட்டதுகூட இல்லை. மருத்துவமனையில் சேர்த்ததோடு அந்த சம்பவத்தை மறந்து போனார் எம்ஜிஆர். சிலருக்கு மட்டுமே அது தெரிந்திருந்தது. அவ்வளவுதான்! (Edited version)
----------------------------------------------------------
இப்படி 'குமுதம்' இதழில் எழுதியதாக
திரு பா.ஏகலைவன் தன் முகநூலில்
பதிவு செய்துள்ளார். அந்த நான்கெழுத்து பத்திரிகையாளரை பற்றி 'தினமலர்'
திரு நூருல்லா எழுதி 'இதயக்கனி' இதழில் இரண்டு ஆண்டுகளுக்கு முன் வெளியிட்டுள்ளேன். அந்த பத்திரிகையாளர் 'அண்ணா' நாளிதழில்
எம்.ஜி.ஆரின் விருப்பத்தின் பேரில்
பணி செய்ததுமுண்டு.

Ithayakkani S Vijayan......... Thanks.........