PDA

View Full Version : Makkal Thilagam MGR Part 26



Pages : 1 [2] 3 4 5 6 7 8 9

orodizli
14th May 2020, 08:49 PM
புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் பற்றியத் தமிழ் நூல்கள்...!!!

முதலமைச்சர் எம்.ஜி.ஆர் (ஆசிரியர் - டி.வி.சிவப்பிரகாசம்,வெளியீடு - கல்வி உலகம், இளந்தேரி (1977))

புரட்சித்தலைவரின் பொன்மொழிகள் (ஆசிரியர் – சாலி.இக்பால், வெளியீடு – நூர் பதிப்பகம், சென்னை (1980))

மக்கள் திலகம் இருவரலாற்றுப்படை (ஆசிரியர் – புலவர்.கே.பெரு.திருவரங்கன்,வெளியீடு - இராமலட்சுமி பதிப்பகம் , சென்னை (1980))

அண்ணனுக்குப் பின் மன்னன்,(ஆசிரியர் – அடியார்,வெளியீடு - மல்லி பதிப்பகம், சென்னை (1978))

மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் (ஆசிரியர் – வித்துவான் வே.லட்சுமணன்,வெளியீடு – வானதி பதிப்பகம், சென்னை (1985))

புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர் (ஆசிரியர் – லேனா தமிழ்வாணன்,வெளியீடு – மணிமேகலை பிரசுரம், சென்னை (1983))

புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் (ஆசிரியர் – நாகை தருமன், வெளியீடு - அறிஞர் அண்ணா பதிப்பகம், சென்னை (1979))

வரலாற்று நாயகன் (ஆசிரியர் – திருமூலன்,வெளியீடு – கவிதா பப்ளிகேசன்ஸ் , சென்னை (1978))

காலத்தை வென்றவர் (ஆசிரியர் – மணியன்,வெளியீடு - இதயம் பப்ளிகேசன்ஸ் , சென்னை (1985))

எம்.ஜி.ஆர். என் இதயக்கனி (ஆசிரியர் – அறிஞர் அண்ணா, தொகுப்பு- ஆர்.சீனிவாசன்,வெளியீடு – சத்தியத்தாய் பதிப்பகம் , சென்னை (1984))

புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். பிள்ளைத்தமிழ் (ஆசிரியர் – கவிஞர் முத்துலிங்கம்,வெளியீடு – நீரோட்டம் வெளியீடு , சென்னை (1981))

அண்ணா தி.மு.க. வரலாறு (ஆசிரியர் – ஆர்.ரெங்காராவ்,வெளியீடு – செவ்வாய் வெளியீடு , சென்னை (1986))

நெஞ்சில் ஆடும் தீபம் (கவிதை) (ஆசிரியர் – கவிஞர் டி.கே.மதியானந்தம்,வெளியீடு – கவிதாபானு, சென்னை (1983))

சத்துணவும் சத்துணர்வும் (ஆசிரியர் – கிருஷ்ணகாந்தன்,வெளியீடு – வள்ளி புத்தக நிலையம், சென்னை (1984))

அறிஞர் அண்ணா நமக்கு அறிவூட்டுகிற கடவுள் ( எம்.ஜி.ஆர். சொற்பொழிவுகள்) (ஆசிரியர் – தொகுப்பு-கழஞ்சூர் சொ.செல்வராஜ்,வெளியீடு – குத்தூசி குருசாமி பதிப்பகம், சென்னை (1985))

தங்கத்தமிழர் எம்.ஜி.ஆர். ஓர் ஆய்வு (ஆசிரியர் – மாணிக்கம்-சீனிவாசன், வெளியீடு – வெல்கம் பப்ளிகேஷன்ஸ் , சென்னை (1986))

எம் தலைவன் (கவிதை) (ஆசிரியர் – கவிஞர் வாழை வளவன்,வெளியீடு – தில்லை நாயகி பதிப்பகம், சேலம் (1987))

அமெரிக்காவில் அண்ணா, எம்.ஜி.ஆர் (ஆசிரியர் – டாக்டர்.எம்.எஸ்.உதயமூர்த்தி,வெளியீடு – வித்வான் பதிப்பகம், சென்னை (1975))

பொன்மனமே நீடு வாழ்க (கவிதை) (ஆசிரியர் – ராஜவர்மன், வெளியீடு – ஏ.எஸ்.ஆர்.பப்ளிகேசன்ஸ், சென்னை (1984))

மக்கள் தலைவருக்கு மன்றத்தலைவர் டாக்டர் பட்டம்- சேலத்தில் எடுத்த விழா மலர் (ஆசிரியர் – தஞ்சை வி.எஸ்.இராசு, வெளியீடு – புரட்சிக்குயில் பப்ளிகேசன்ஸ், சென்னை (1983))

சரித்திரத்தை மாற்றிய சத்புருஷர் (ஆசிரியர் – டாக்டர் கோ.சமரசம், வெளியீடு – கோணப்பர் பதிப்பகம், சென்னை (1986))

நினைவுகளின் ஊர்வலம் (ஆசிரியர் – கவிஞர் புலமைப்பித்தன், வெளியீடு – திருமகள் நிலையம், சென்னை (1986))

எமனை வென்ற எம்.ஜி.ஆர் (ஆசிரியர் – தஞ்சை தமிழழகன், வெளியீடு - மக்கள் பதிப்பகம், சென்னை (1985))

டாக்டர் எம்.ஜி.ஆர் ஒரு பொருளாதார வல்லுநர் (ஆசிரியர் – அ.வசந்தகுமார், வெளியீடு – கண்ணம்மாள் பதிப்பகம், சென்னை (1985))

பொன்மனச் செமமலும், புன்னகை மலர்களும் (ஆசிரியர் – எஸ்.குலசேகரன், வெளியீடு - அமிழ்தம் பதிப்பகம், சென்னை (1985))

தெற்கு என்பது திசை அல்ல (கவிதை) (ஆசிரியர் – வலம்புரிஜான், வெளியீடு – கவிதாபானு, சென்னை (1984))

சரித்திர நாயகன் எம்.ஜி.ஆர் (ஆசிரியர் – பாலாஜி, வெளியீடு – கீதா பிரசுரம், சென்னை (1987))

டாக்டர். எம்.ஜி.ஆர் வீரக்காவியம் (ஆசிரியர் – ஜெயா பொன்முடி, வெளியீடு - ஸ்ரீ லட்சுமி பதிப்பகம், சென்னை (1988))

அப்பலோ டு அமெரிக்கா (ஆசிரியர் – பா.ஜீவகன், வெளியீடு – மேத்தா பிரசுரம், சிவகாசி (1985))

சத்துணவு பாடல்கள் (ஆசிரியர் – புலவர்.பி.வெங்கடேசன், வெளியீடு - அறிவரசி பதிப்பகம், தருமபுரி (1984))

இந்தி ஆதிக்கப் போரில் புரட்சித்தலைவர் (ஆசிரியர் – கவிஞர் மணிமொழி-நாஞ்சில் நீ.மணிமாறன், வெளியீடு – புதியபூமி பதிப்பகம், சென்னை (1987))

நான் ஏன் பிறந்தேன்? (ஆசிரியர் – வேலன், வெளியீடு – வேல் பாண்டியன் பிரசுரம், சென்னை (1988))

புரட்சித்தலைவர் அரசின் சமதர்மச் சட்டங்கள், (ஆசிரியர் – கா.சுப்பு, வெளியீடு - அண்ணா தொழிற்சங்கப் பேரவை, சென்னை (1984))

நான் கண்ட எம்.ஜி.ஆர் (ஆசிரியர் – மணியன், வெளியீடு - இதயம் பப்ளிகேசன்ஸ், சென்னை (1985))

எம்.ஜி.ஆர் ஒரு குமணன் (ஆசிரியர் – கவிஞர் வாழை வளவன், வெளியீடு – தில்லை நாயகி பதிப்பகம், சேலம் (1988))

முப்பிறவி எடுத்த முதல்வர் (ஆசிரியர் – திருப்பூர் வெ.சம்பத்குமார், வெளியீடு - சாயிகீதா பதிப்பகம், சென்னை (1985))

சொல்லும் செயலும் (ஆசிரியர் – ஆ.அசோக்குமார், வெளியீடு – நியூ ஸ்டார் பப்ளிகேசன்ஸ், சென்னை (1985))

செந்தமிழ் வேளீர் எம்.ஜி.ஆர் (ஆசிரியர் – புலவர்.செ.இராசு, வெளியீடு – கொங்கு ஆய்வு மையம், ஈரோடு (1985))

எம்.ஜி.ஆர் சரணம் (ஆசிரியர் – ஜெ.பாலன், வெளியீடு - நெய்தல் பதிப்பகம், சென்னை (1988))

எம்.ஜி.ஆர். ஒரு சகாப்தம் (ஆசிரியர் – நியூஸ் ஆனந்தன், வெளியீடு – தனலட்சுமி பதிப்பகம், சென்னை (1981))

1980-85 சட்டமன்ற நாடாளுமன்ற வேட்பாளர்கள் (ஆசிரியர் – எம்.சுப்பிரமணியம், வெளியீடு – சித்ரா பப்ளிகேசன்ஸ், சென்னை (1986))

சாதனைப்பூவின் சரித்திர வசந்தம் (ஆசிரியர் – டாக்டர் ஜெகத்ரட்சகன், வெளியீடு – அப்போலா வெளியீடு, சென்னை (1988))

முப்பிறவி கண்ட முதல்வர் (ஆசிரியர் – டி.எம்.சௌந்திரராஜன், வெளியீடு - ரேவதி பதிப்பகம், சென்னை (1985))

செம்மலின் பொன்மனம் (ஆசிரியர் – கவிஞர்.ச.பஞ்சநாதன், வெளியீடு – என்.எஸ்.பப்ளிகேசன்ஸ், மதுரை (1988))

புரட்சியார் ஒரு காவியம், (ஆசிரியர் – கவிஞர்.தெ.பெ.கோ.சாமி, வெளியீடு - சித்ரா பதிப்பகம், வேலூர் (1987))

எம்.ஜி.ஆர்.உயில்களும் உயில் சாசன சட்டங்களும் (ஆசிரியர் – வை.சண்முகசுந்தரம், வெளியீடு – கலைக்கருவூலம், சென்னை (1988))

புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்.உலா (ஆசிரியர் – கவிஞர் முத்துலிங்கம், வெளியீடு – பூம்புகார் பிரசுரம், சென்னை (1983))

மக்கள் திலகம் பற்றிய மாணவராற்றுப்படை (ஆசிரியர் – மாருதிதாசன், வெளியீடு - அருள்ஜோதிப் பதிப்பகம், நாமக்கல் (1981))

உலா வரும் உருவங்கள் (கவிதை) (ஆசிரியர் – கவிஞர் இளந்தேவன், வெளியீடு – கவிதாபானு, சென்னை (1984))

அ.இ.அ.தி.மு.க வின் தோற்றமும் வளர்ச்சியும் (ஆசிரியர் – லேனா தமிழ்வாணன், வெளியீடு – மணிமேகலை பிரசுரம், சென்னை (1985))

சந்திரனைப் போற்றும் நட்சத்திரங்கள் (ஆசிரியர் – நாகை தருமன், வெளியீடு – புதியபூமி பதிப்பகம், சென்னை (1987))

புரட்சித்தலைவர் அவர்களுக்கு அறிஞர்கள் புகழ் மாலை (ஆசிரியர் – கழஞ்சூர் சொ.செல்வராஜி, வெளியீடு – குத்தூசி குருசாமி பதிப்பகம், வேலூர் (1985))

வெற்றித்தலைவர் வீர வரலாறு (ஆசிரியர் – ஜெயா பொன்முடி, வெளியீடு - ஸ்ரீ லட்சுமி பதிப்பகம், சென்னை (1988))

எம்.ஜி.ஆர். ஒரு காவியம் (ஆசிரியர் – கவிஞர் வாழை வளவன், வெளியீடு - தில்லை பதிப்பகம், சேலம் (1987))

ஜீவ நதிகள் (ஆசிரியர் – கலைமாமணி மா.லட்சுமணன், வெளியீடு - அன்னை ஜே.ஆர். பதிப்பகம், சென்னை (1988))

புரட்சித்தலைவர் புகழ் அந்தாதி, (ஆசிரியர் – மலேசியக் கவிஞர் ஐ.உலகநாதன், வெளியீடு - தாமரைப் பதிப்பகம், சென்னை (1985))

தந்தை பெரியார் முதல் புரட்சித்தலைவர் வரை (ஆசிரியர் – ஏ.கே.வில்வம், வெளியீடு - ரோமா பதிப்பகம், சென்னை (1985))

வள்ளலும் உள்ளமும் (ஆசிரியர் – டாக்டர்.எஸ்.தங்கமணி, வெளியீடு - ஆரோம் பதிப்பகம், குமரி (1987))

நடிகர் திலகமும் புரட்சித்தலைவரும் (ஆசிரியர் – ரசிகன் அருணன், வெளியீடு - அருணா பப்ளிசிட்டி, சென்னை (1987))

திருக்குறள் பாதையில் எம்.ஜி.ஆர் (ஆசிரியர் – ஜெ.பாலன், வெளியீடு – நெய்தல் வெளியீடு, சென்னை (1984))

எம்.ஜி.ஆர் பெயரில் மன்றம் தேவையா? (ஆசிரியர் – திருவை ஆ.அண்ணாமலை, வெளியீடு – நெல்சன் பதிப்பகம், சென்னை (1961))

தர்மம் வென்றது (ஆசிரியர் – ஜெ.பாலன், வெளியீடு – நெய்தல் வெளியீடு, சென்னை (1987))

எம்.ஜி.ஆர் கதை பாகம்-1 (ஆசிரியர் – எஸ்.விஜயன், வெளியீடு – ஜியோ பப்ளிகேசன்ஸ், சென்னை (1989))

மறு பிறவி கண்ட மக்கள் திலகம் (ஆசிரியர் – எம்.ஜி.ஆர் தாசன், வெளியீடு – கன்னி பதிப்பகம், சென்னை (1985))

சத்தியா மைந்தன் சாதனை (ஆசிரியர் – ஜெயா பொன்முடி, வெளியீடு - ஸ்ரீ லட்சுமி பதிப்பகம், சென்னை (1988))

தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர் (ஆசிரியர் – கவிஞர் வாழை வளவன், வெளியீடு – மறைதிரு எம்.ஏ.கோலாஸ், சேலம் (1978))

சத்துணவு நாயகன் (ஆசிரியர் – கவிஞர் வாழை வளவன், வெளியீடு - தில்லைநாயகி பதிப்பகம், சேலம் (1987))

இதயவானில் உதய நிலவு (ஆசிரியர் – தண்டு குன்னத்தூர் தமிழன், வெளியீடு - இளவளகி பதிப்பகம், வேலூர் (1985))

பரிபூரண அவதாரம் (நாடகம்) (ஆசிரியர் – டாக்டர் கோ.சமரசம், வெளியீடு – கோணப்பர் பதிப்பகம், சென்னை (1985))

எம்.ஜி.ஆர் கதை பாகம்-2 (ஆசிரியர் – எஸ்.விஜயன், வெளியீடு - அருள்மொழி பதிப்பகம், சென்னை (1991))

எம்.ஜி.ஆர் பொருளாதார அடிப்படை சரிதானா? (ஆசிரியர் – கி.வீரமணி, வெளியீடு – திராவிடர் கழக வெளியீடு, சென்னை (1982))

நிலவை நேசிக்கும் நெஞ்சங்கள் (ஆசிரியர் – இனியவன், வெளியீடு – அவ்வை மன்றம், சென்னை (1986))

புரட்சித்தலைவர் பிள்ளைத் தமிழ் (ஆசிரியர் – கவிஞர் அக்கினிப்புத்திரன், வெளியீடு - குறளகம், பழனி (1988))

புரட்சித்லைவர் எம்.ஜி.ஆர். வீர வரலாறு (ஆசிரியர் – ஜோதிமணவாளன், வெளியீடு – ஜோதி பப்ளிகேசன்ஸ், சிவகாசி (1993))

எம்.ஜி.ஆர் நிழலும் நிஜமும் (ஆசிரியர் – மோகன்தாஸ், வெளியீடு – பந்தர் பப்ளிகேசன்ஸ், பெங்களுர் (1993))

காலத்தை வென்றவர் (ஆசிரியர் – மணியன், வெளியீடு - இதயம் பதிப்பகம், நாகப்பட்டினம் (1991))

சரித்திர நாயகர் எம்.ஜி.ஆர். சாதனைகள் (ஆசிரியர் – லேனா தமிழ்வாணன், வெளியீடு – மணிமேகலை பிரசுரம், சென்னை (1991))

சரித்திரம் படைத்த எம்.ஜி.ஆர் (ஆசிரியர் – ஏ.கே.சேஷய்யா, வெளியீடு – மயிலவன் பதிப்பகம், சென்னை (1993))

மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர் (ஆசிரியர் – கு.சண்முகசந்தரம், வெளியீடு – குமரன் பதிப்பகம், சென்னை (1992))

எம்.ஜி.ஆர். ஓர் ஆய்வு (ஆசிரியர் – மு.தம்பித்துரை எம்.ஏ, வெளியீடு – ஞானச்சுடர் பதிப்பகம், சென்னை)

தலைவனே எங்களுக்குத் தத்துவம் (ஆசிரியர் – மெய்க்கீர்த்தி, வெளியீடு - அன்னை சத்யா புத்தகப்பண்ணை, சென்னை (1978))

எம்.ஜி.ஆர் ஆட்சியும் சிவாஜி ரசிகர்களும் (ஆசிரியர் – எஸ்.வீரபத்திரன், வெளியீடு – புரட்சியார் ரசிகன், சென்னை (1985))

அண்ணா கொள்கைக்கு நாமம் (ஆசிரியர் – விடுதலை தலையங்கங்கள், வெளியீடு – திராவிடக்கழக வெளியீடு, சென்னை)

வெற்றி நமதே (ஆசிரியர் – ஜோதி மணவாளன், வெளியீடு – ஜோதி பப்ளிகேசன்ஸ், சென்னை (1991))

அரசும் தமிழும் (ஆசிரியர் – ஒப்பிலா மதிவாணன், வெளியீடு - தமிழ்ச்சுரங்கம், மதுரை (1986))

தன்னிறைவுத் திட்டத்தில் தமிழகம் (ஆசிரியர் – குமரிச் செல்வன், வெளியீடு - நாகர்கோவில் (1982))

காலத்தை வென்ற காவிய நாயகன் எம்.ஜி.ஆர் (ஆசிரியர் – தேனி ராஜதாசன், வெளியீடு - மணிமேகலைப் பிரசுரம், சென்னை (2010))

எம். ஜி. ஆர். கொலை வழக்கு: சிறுகதைகள்- ஷோபாசக்தி - 2016

எம். ஜி. ஆர். ஓரு சகாப்தம் கே. பி ராமகிருஷ்ணன் - 2007

பொன்மனச் செம்மல் எம். ஜி. ஆர் கீர்த்தி - 2007

நான் கண்ட எம். ஜி. ஆர் நவீனன் - 2009

எம். ஜி. ஆர். ஒரு சகாப்தம் நியூஸ் ஆனந்தன் - 1987

எங்கள் தங்கம் எம்.ஜி.ஆர் S. தேவாதிராஜன் - 2011

விழா நாயகன் எம். ஜி. ஆர் கலைமாமணி கே ரவீந்தர் - 2009

காலத்தை வென்ற புரட்சித் தலைவர் எம். ஜி. ஆர் நாஞ்சில் ஸ்ரீவிஷ்ணு – 2004

எம். ஜி. ஆர்: அதிகம் வெளிவராத தகவல்கள். ஆனால், அத்தனையும் பா தீனதயாளன் - 2015

பொன்மனச் செம்மல் எம். ஜி. ஆர் கே ரவீந்தர் - 2009 - ‎

செந்தமிழ் வேளிர் எம். ஜி. ஆர்: ஒரு வரலாற்று ஆய்வு செ இராசு - 1985

8-வது வள்ளல் எம்.ஜி.ஆர் முரு. சொ. நாச்சியப்பன் - 1969 - ‎

எம். ஜி. ஆர். திரைப்படங்களில் காணப்படும் திராவிடர் இயக்கச் ...கோகிலவாணி கோவிந்தராஜன் - 2010

எம். ஜி. ஆர் ஒரு சகாப்தம் Rajasekaran - 2007 - ‎

புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் என் ரமேஷ் - 2011

மக்கள் ஆசான் எம். ஜி. ஆர் ரங்கவாசன் - 2011 –

எனக்குள் எம்.ஜி.ஆர், காவியக் கவிஞர் வாலி வாலி - 2013

எம். ஜி. ஆர் கதை, திருத்தப்பட்ட பதிப்பு எஸ் விஜயன் - 2016

எல்லாம் அறிந்த எம். ஜி. ஆர் எஸ் விஜயன், விகடன் பிரசுரம் – 2008

எம்.ஜி.ஆர். பேட்டிகள்: மக்கள் திலகத்தின் அரிய பேட்டிகள் மற்றும் ...2013

புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் எம். ஆர் ரகுநாதன் – 2015

பாரத ரத்னா: எம். ஜி. ஆர் சௌந்தர் - 2016

மக்கள் திலகம் புரட்சித் தலைவர் எம். ஜி. ஆர்

நம்மோடு வாழும் மக்கள் திலகம் எம். ஜி. ஆர் டி. எம் சண்முகவடிவேல் - 2010 - ‎

வாழ்ந்து காட்டிய வள்ளல் எம்.ஜி.ஆர் சாரதி - 2011

எட்டாவது வள்ளல் எம். ஜி. ஆர் மணவை பொன்மாணிக்கம் - 2000

வாத்யார்: எம். ஜி. ஆரின் வாழ்க்கை ஆர் முத்துக்குமார் - 2009

எம். ஜி. ஆர். ஓர் சகாப்தம் Kē. Pi Rāmakiruṣṇan̲, ‎Es Rajat - 2007

வாழ்க புரட்சித் தலைவர் நாமம்
வளர்க அவர் புகழ்......

orodizli
16th May 2020, 08:48 AM
விவரம் தெரியாத குழந்தை முன்னால் பல தலைவர்களின் படங்களை போட்டு பாருங்கள்....

அந்த குழந்தை சிரித்து கொண்டே இருக்கும் எம்ஜிஆர் புகைப்படத்தை மட்டுமே தன் கையில் எடுக்கும்.

அத்துணை வசீகர சக்தி உலக தலைவர்களில் எம்ஜிஆர் அவர்களுக்கு மட்டுமே உண்டு என்றார் மறைந்த பிரபல உளவியல் பத்திரிகை ஆசிரியர் தமிழ்வாணன்...

சத்தியமான உண்மை...
வாழ்க எம்ஜியார் புகழ். நன்றி.........

fidowag
16th May 2020, 08:36 PM
பாட்டாலே புத்தி சொன்ன*வாத்தியார் எம்.ஜி.ஆர். - வின்*டிவியில்*திரு.துரை பாரதி* 12/05/20* *அன்று*அளித்த*தகவல்கள்*
-------------------------------------------------------------------------------------------------------------------------------
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்கள் உலகம் சுற்றும் வாலிபன் படத்தில் கிளைமாக்ஸ் சண்டை காட்சியில் நடிப்பதற்கு , ராமாவரம் தோட்டத்தில் , தன்*வீட்டு மொட்டை மாடியில் கால்களில் ஸ்கெட்டிங்* சக்கரங்களை கட்டிக் கொண்டு பயிற்சி எடுத்துள்ளார் . தொடர்ந்து பயிற்சி எடுத்துக் கொண்டதன் விளைவாக கிளைமாக்ஸ் காட்சியில் அவரால் திறமையாக ஸ்டண்ட் நடிகர்களுடன் சண்டை போடுவதற்கு ஏதுவாக இருந்தது .* மெல்லிசை மன்னர் எம்.எஸ். விஸ்வநாதனின் பின்னணி இசையில் அந்த சண்டை காட்சி மிக பிரமாண்டமாக அமைந்தது*



பொதுவாக எம்.ஜி.ஆர். தன் எதிரிகளுடன் மோதும் சண்டை காட்சிகளில் மிகுந்த*ஆர்வத்துடன் நடிப்பது வழக்கம் . நீரும் நெருப்பும் படத்தில் பிரபல வில்லன் நடிகர் ஆனந்தன் உடைகளை தன் வாளால் சண்டையிட்டு கிழித்து எறியும் போது ரசிகர்கள் மிகுந்த ஆரவாரம் செய்தனர் .* காவல்காரன் படத்தின் ஆரம்பத்தில் பிரபல வில்லன் நடிகர் மனோகருடன் மோதும் குத்து சண்டை காட்சியும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது . எம்.ஜி.ஆர். குண்டடி பட்டு , உயிர் பிழைத்தபின் இந்த காட்சிகளில் அசல் குத்து சண்டை வீரர் சண்டையிடுவது போல் நடித்து பாராட்டை பெற்றார் .* காவல்காரன் படத்தின் இடையில் வரும் மற்றொரு சண்டை காட்சியின்போது வில்லன் நடிகர் கே. கண்ணனை தாக்கும்போது குறி தவறி, கை மர பீரோவை உடைத்துக் கொண்டு உள்ளே போகும் . உடனே அந்த வலது* கையை மீட்டெடுத்து* கையில் உள்ள கடிகாரம் ஓடுகிறதா என்று காதருகில் வைத்து பார்ப்பார் சில வினாடிகள் .* அந்த காட்சியை பலத்த ஆரவாரத்துடன் ரசிகர்கள் கைதட்டி வரவேற்றனர் , இப்படி சண்டை காட்சிகளில் கூட* தன் ரசிகர்கள் பாராட்டும் வகையில் கலை நுணுக்கம், புதிய அணுகுமுறையோடு அமைத்திருப்பார் .தான் மட்டுமில்லாமல், தன்னுடன் நடிக்கும் கதாநாயகிகளும் சூழ்நிலைக்கு ஏற்றவாறு எதிரிகளை சந்திக்கும் வகையில் சண்டை காட்சிகளில்* நடிப்பதற்கு பயிற்சி அளித்திருப்பார் .* நடிகைகளும் சண்டை காட்சிகளில் நடிப்பதற்கு சளைத்தவர்கள் அல்ல என்பது பல படங்களில் நிரூபிக்கும் வகையில் எம்.ஜி.ஆர். காட்சிகளை அமைத்து ரசிகர்களின் பாராட்டை பெற்றார் .



மருத நாட்டு இளவரசி படத்தில் எம்.ஜி.ஆரின் மனைவி திருமதி வி.என்.ஜானகி*எம்.ஜி.ஆருக்கு வாள் சண்டை கற்று கொடுக்கும் காட்சி உண்டு. அடிமை பெண் படத்தில் எம்.ஜி.ஆருக்கு ,தண்ணீரில் எல்லாவித சண்டை கலைகளை கற்றுக் கொடுத்து எதிரிகளை எப்படி வீழ்த்துவது என்கிற நுணுக்கங்களை ஜெயலலிதா*சொல்லி கொடுக்கும் காட்சி ரசிக்க தகுந்த வகையில் அமைந்தது .முகராசி படத்தில் ஜெயலலிதாவிற்கு எம்.ஜி.ஆர். கம்பு சண்டை, சிலம்பம் ஆகியன கற்று கொடுக்கும் காட்சி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது .



பறக்கும் பாவை படத்தில் புலியை விரட்டி சென்று கூண்டில் அடைக்கும் காட்சி*அந்த காலத்தில் பரபரப்பான காட்சியாக பேசப்பட்டது . பொதுவாக இந்த மாதிரி காட்சிகள் தன்னுடைய நேரடி பார்வையில் இயக்குனர் அனுமதியோடு படம் ஆக்கப்படுவதைத்தான் பெரிதும் விரும்புவார் .* யாருக்கும் எந்த ஆபத்தும் நேரக்கூடாது என்பதில் கண்ணும் கருத்துமாக இருப்பார் .* படகோட்டி படத்தில்*படகு போட்டி நடைபெறும் சமயம் , தான் ஒரு படகிலும் , நடிகர் அசோகன் ஒரு படகிலும்* நின்றவாறு சண்டையிடும் காட்சிகள்* சுவாரசியமாக இருக்கும் .மீனவ நண்பன் படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் எம்.ஜி.ஆரும் , நம்பியாரும்*மோட்டார் படகுகளில் செல்லும்போது , புயல், காற்று, மழை சூழ்ந்த நிலையில்*சண்டையிடும் காட்சிகள்,யதார்த்தமாக** நன்றாக அமைந்தன . இந்த காட்சி எம்.ஜி.ஆர். தேர்தலில் வெற்றி பெற்று* முதல்வராகும் முன்பு எடுக்கப்பட்டது .



பொதுவாக சண்டை காட்சிகளில் நடிக்கும்போது அதிகம் வன்முறை மிகுந்த காட்சிகள் அமைவதை தவிர்ப்பார். சண்டையிடும்,போது , ஆயுதங்களால் எதிரிகளுக்கு பலத்த காயம் ஏற்படக் கூடாது, ஊனம் அடைந்து விடக் கூடாது .அடிபட்டு அடுத்த காட்சிகளிலோ , அடுத்த படத்திலோ நடிக்க முடியாமல் போய் வீடாக கூடாது ,அது மட்டுமின்றி , அவர்களின் குடும்பம் இதனால் பாதிப்பு அடையக் கூடாது என்பதில் கண்ணும் கருத்துமாக இருப்பார் . ஒருவேளை ஏதாவது அசம்பாவிதங்கள் நடந்தால் , தனது சொந்த செலவில் அவர்களுக்கு தகுந்த சிகிச்சை அளித்து , படப்பிடிப்பின் செட் கலையாமல் இருக்க வைத்து*அவர்கள் குணமான பின்பு மீண்டும் அதே காட்சியில் நடிக்க வைப்பார் .*இப்படி பல விஷயங்களை சொல்லிக் கொண்டே போகலாம் .


நிகழ்ச்சியில் ஒளிபரப்பான பாடல்கள்/காட்சிகள்* விவரம் :

1.ஸ்கேட்டிங் சண்டை காட்சி - உலகம் சுற்றும் வாலிபன்*
2.நடிகர் ஆனந்தனுடன் மோதும் காட்சி - நீரும் நெருப்பும்*
3.ஜெயலலிதாவுடன் சண்டை காட்சி* - முகராசி*
4.வீரப்பாவுடன் மோதும் காட்சி* - மகாதேவி*
5.ஜெயலலிதாவுடன் சண்டை காட்சி - அடிமைப்பெண்*
6.புலியுடன் மோதும் காட்சி* - பறக்கும் பாவை*
7.சர்க்கஸ் கூடாரத்தில் சண்டை காட்சி - பறக்கும் பாவை*
8.அன்பிலார் எல்லாம் தமக்குரியர் - பல்லாண்டு வாழ்க .

fidowag
16th May 2020, 10:10 PM
தனியார் தொலைக்காட்சிகளில் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். திரைப்படங்கள் ஒளிபரப்பான*விவரம்*
-------------------------------------------------------------------------------------------------------------------------
13/05/20* -ஜெயா மூவிஸ் -காலை 7 மணி -பட்டிக்காட்டு பொன்னையா*

* * * * * * * * *சன் லைப்* - காலை 11 மணி* - தேடி வந்த மாப்பிள்ளை*

* * * * * * * * மெகா 24 டிவி -பிற்பகல் 2.30 மணி* -தாய் சொல்லை தட்டாதே*

* * * * * * * * எம்.எம்.டிவி -பிற்பகல் 2 மணி* *- பறக்கும் பாவை*

* * * * * * * *கிங்* டிவி* *- இரவு* 9 மணி* -* *நீரும் நெருப்பும்*

* * * * * * * * *பாலிமர் டிவி -இரவு 11 மணி -சங்கே முழங்கு*

14/05/20* -மெகா டிவி* - மதியம் 12 மணி* - சந்திரோதயம்*

* * * * * * * *மீனாட்சி டிவி -பிற்பகல் 1.30 மணி* - வேட்டைக்காரன்*

15/05/20-சன் லைப்* - காலை* 11 மணி* - நினைத்ததை முடிப்பவன்*

* * * * * * *புது யுகம் டிவி - இரவு 7 மணி* -தேர் திருவிழா*

* * * * * * *பாலிமர் டிவி* - இரவு 11 மணி -நீரும் நெருப்பும்*

16/05/20 -வசந்த் டிவி* - காலை 9.30 மணி - அன்னமிட்ட கை*

* * * * * * * மீனாட்சி* டிவி* - பிற்பகல் 1.30 மணி* - நல்ல நேரம்*

* * * * * * * பூட்டோ டிவி* -* பிற்பகல் 2 மணி* - எங்க வீட்டு பிள்ளை*

* * * * * * *பாலிமர் டிவி* - இரவு* 11 மணி* * - புதிய பூமி*

orodizli
17th May 2020, 08:13 AM
வரும் வாரம் சன் லைப் சேனலில் பகல் 11 மணிக்கு மக்கள் திலகத்தின் ஒளிபரப்பாக உள்ள காவியங்கள் :
18 -05- 2020 திங்கட்கிழமை: "கண்ணன் என் காதலன்"
21-05-2020 புதன்கிழமை "புதிய பூமி"
23-05-2020 வெள்ளிக்கிழமை - "அரசிளங் குமரி" ஆகிய திரைப்படங்களை கண்டு மகிழுங்கள்.........

siqutacelufuw
17th May 2020, 06:21 PM
ரசிகர் மன்றம்

முதல் எம்.ஜி.ஆர் ரசிகர் மன்றம் தமிழ் பிராமணரான கல்யாண சுந்தரம் என்பவரால் 1954-ஆம் வருடம் துவக்கப்பட்டது.

தன்னுடைய வாழ்க்கையின் ஆரம்பத்தில் சினிமா பாடல் புத்தகங்களை திரையரங்குகளுக்கு முன்னால் விற்றுக் கொண்டு, சிறு, சிறு வேலைகளைச் செய்து வந்தவர் எம்ஜிஆர். பின்னர் 136 திரைப்படங்களில் நடித்து உலகத்தில் அதிக எண்ணிக்கையிலான ரசிகர்களை பெற்றவர்களுள் ஒருவராக ஆனார். அகில உலக எம்ஜிஆர் ரசிகர் மன்றத்திற்கு 10,000 கிளைகள் தமிழகம் முழுவதிலுமாக இருந்து செயல்பட்டன. கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன், செங்கோட்டையன், அண்ணா நம்பி, திருச்சி சௌந்தரராஜன் முதலிய அ.இ.அ.தி.மு.க தலைவர்கள் தங்களுக்கென அரசியல் முக்கியத்துவத்தை ரசிகர் மன்றம் மூலமே பெற்றார்கள். எம்.ஜி.ஆரே பொது வெளியில் தோன்றுகையில் “ரசிகர் மன்றங்களும் , கட்சியும் வேறு வேறு அல்ல! என்றார்.

orodizli
18th May 2020, 08:51 AM
மூத்த சகோதரர் திரு. செல்வகுமார் அவர்களின் பதிவு கண்டு மிக்க மகிழ்ச்சி... எவராலும் நெருங்க முடியாத இறைவன் கொடுத்த பேரற்புதம் கொண்ட மக்கள் திலகம் பல்வேறு வகையான புகழ் பக்கங்களை தொடர்ந்து பதிவிட்டு புரட்சி நடிகர், புரட்சி தலைவர் அவர்களுக்கு நம்மால் இயன்ற சேவையாற்றுவோம்...........

fidowag
18th May 2020, 06:03 PM
தினமலர் -18/05/20
----------------------------------
மறக்க முடியுமா*-மதுரையை மீட்ட சுந்தர*பாண்டியன்*
-----------------------------------------------------------------------------------

வெளியான நாள் :14/01/1978
நடிப்பு : எம்.ஜி.ஆர். லதா, பத்மப்ரியா, பி.எஸ். வீரப்பா, எம்.என்.நம்பியார், வி.எஸ். ராகவன், சகஸ்ரநாமம், தேங்காய் ஸ்ரீநிவாசன், இசரிவேலன், மற்றும் பலர்*
இசை:எம்.எஸ். விஸ்வநாதன்* * இயக்கம் : எம்.ஜி.ஆர்.*
தயாரிப்பு : சோளீஸ்வர* கம்பைன்ஸ்*

தமிழ் சினிமாவில் கமல், ரஜினி, சிவகுமார் என இளம் குதிரைகள் பாய்ந்தோடிய காலத்தில் தமிழக அரசியலில் அ .தி.மு.க. புயல் மையம் கொண்டிருந்த சூழலில், எம்.ஜி.ஆர். மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன் படத்தை உருவாக்கினார் .


மூன்றாம் ராஜராஜ* சோழனிடம் இருந்து , மதுரையை முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் மீட்ட வரலாற்றை மையப்படுத்தி* எழுத்தாளர் அகிலன் எழுதிய கயல்விழி என்ற புதினத்தின் அடிப்படையில் உருவானது , மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன் .*


இப்படத்தை பி.ஆர். பந்துலு இயக்கி முடிப்பதற்கு முன், மரணமடைந்தார் .அதனால் இயக்குனர் பணியையும் எம்.ஜி.ஆர். ஏற்றார் .


படத்தில் இடம் பெற்ற* பிரமாண்ட போர்க்காட்சி, ஜெய்ப்பூரில் படம்மாக்கப்பட்டது அதற்காக, ஒரே நேரத்தில் , வெவ்வேறு கோணங்களில் , ஒன்பது கேமிராக்கள்*பயன்படுத்தப்பட்டன .* எம்.ஜி.ஆர். தொழில்நுட்பத்திலும் , தேர்ச்சி பெற்றிருந்தார் என்பது, இந்த படப்பிடிப்பு ஒரு சான்று .


படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தில் இருக்கும்போதே , அப்போது நடந்த சட்டசபை தேர்தலில் வென்று* அ.தி.மு.க. பெரும்பான்மை பெற்றது ..* முதல்வராக எம்.ஜி.ஆர். பதவியேற்க வேண்டிய நிலை. இக்கட்டான சூழ்நிலையில் முதல்வர் பதவி ஏற்பு விழாவை 10* நாட்கள் தள்ளி வைத்து இரவு பகலாக நடித்து படத்தை முடித்தார் .**


எம்.ஜி.ஆர். முதல்வராகி, ஆறு மாதங்களுக்கு பின்னர் இந்த படம் வெளியானது .மெல்லிசை மன்னர் எம்.எஸ். விஸ்வநாதன் இசையில் பாடல்கள் இனிமையாக இருந்தன .* சண்டை காட்சிகள் குறிப்பாக வீரப்பா, நம்பியார் ,ஜஸ்டின் ஆகியோருடன் மோதும் காட்சிகள் பரபரப்பாக , சுறுசுறுப்பாக இருந்தன . மைசூர் அரண்மனை காட்சிகள் படத்திற்கு கூடுதல் பலம் .* எம்.ஜி.ஆர். ரசிகர்கள் பார்க்க வேண்டிய படம் .**

எம்.ஜி.ஆர். முதல்வரான பின் , வெளியான படம் என்பதோடு, அவர் கடைசியாக நடித்து இயக்கிய படம் என்பதாலும், மறக்க முடியாத படமாக திகழ்கிறது*மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன் .

fidowag
18th May 2020, 09:59 PM
பாட்டாலே புத்தி சொன்ன வாத்தியார் எம்.ஜி.ஆர். - வின்*டிவியில்*14/05/20 அன்று*வெளியான*தகவல்கள்*- தொகுப்பாளர் திரு.துரை பாரதி .
--------------------------------------------------------------------------------------------------------------------------------

அன்பே வா* காதல் காவியத்தில் , கனவு பாடலான ராஜாவின் பார்வை ராணியின் பக்கம் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் பட்டி தொட்டியெல்லாம் அந்த காலத்தில் பிரபலமான பாடல். இசை மேடைகளில், இன்னிசை கச்சேரிகளில் அந்த காலம் முதல் இந்த காலம் வரையில் இடம் பெறாத நாளே இல்லை என்று சொல்லலாம். அந்த அளவிற்கு உணர்ச்சி பெருக்கோடு, உற்சாக வெள்ளத்தோடு டி.எம்.எஸ்./பி.சுசீலா இருவரும் பாடியிருப்பார்கள் .எம்.ஜி.ஆர். சரோஜாதேவி இருவரின் அழகு, கவர்ச்சி, வசீகரம் , அபிநயம் எல்லாம் ஒருங்கிணைந்து அந்த பாடல் காட்சிக்கு மெருகேற்றியது .காலத்தால் அழியாத காவிய காதல் பாடல் .* இந்த காட்சி படமாக்கப்படும்போது சாரட் வண்டியில் எம்.ஜி.ஆரும் , சரோஜாதேவியும் அமர்ந்து நடித்திருப்பார்கள்.* முதல் நாள் குதிரை வரவில்லை. இரண்டாம்நாள் தான் வந்தது. எனவே முதல் நாள் காட்சியில் இருவரும் சாரட் வண்டியில் வருவது போலும், பின்னர் குதிரையை தனியாக காண்பித்து பாடலை எடிட் செய்தார்கள்.* பாடல் நன்றாக அமைந்தது குறித்தும், பாடலின் பிரம்மாண்டம் , காட்சியில் உள்ள ரொமான்ஸ் , அபிநயம் ஆகியவற்றால்** ஏவி.எம்.நிறுவனத்தார்* பெரு*மகிழ்ச்சி அடைந்தனர்*



ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்தை முதன் முதலாக எம்.ஜி.ஆரை வைத்து இயக்குனர் பி.ஆர். பந்துலு தயாரிக்க, முதன் முதலாக எம்.ஜி.ஆருக்கு கதாநாயகியாக ஜெயலலிதா நடித்தார் . இந்த படத்தில் வரும் பாடல்கள்,*நம்பியாருடன் எம்.ஜி.ஆர். மோதும் வாள் சண்டை காட்சிகள், குறிப்பாக வசன ஆசிரியர் ஆர்.கே.சண்முகம் அவர்களின் வசனம் மிக சிறப்பாகவும், பரபரப்பாகவும் பேசப்பட்டது . தமிழ் திரையுலகின் முதல் கடற் கொள்ளையர் பற்றிய பிரம்மாண்ட* திரைப்படம் .அரபிக் கடலோரம் உள்ள கார்வார் தீவு அருகில் சுமார் 2 மாதங்கள் தொடர்ந்து படப்பிடிப்பு நடைபெற்றது .இதில் வரும் கவிஞர் வாலியின் நாணமோ இன்னும் நாணமோஎன்கிற முதலிரவு காட்சியின்* காதல் பாடல், காதல் கனிரசம் சொட்டும் வகையில் தத்துவங்களுடன்* கூடிய ரசனைமிக்க ரொமான்ஸ் பாடலாக*வடிவமைக்கப்பட்டது .இந்த பாடலும் இன்னிசை நிகழ்ச்சிகளில் இந்த காலத்திலும் தவறாமல் இடம் பெறும் பாடலாக திகழ்கிறது .

நிகழ்ச்சியில் இடம் பெற்ற பாடல்கள் விவரம் :
1.ராஜாவின் பார்வை ராணியின் பக்கம் - அன்பே*வா*
2.ஒரு பெண்ணை பார்த்து - தெய்வத்தாய்*
3.நாணமோ*இன்னும் நாணமோ*- ஆயிரத்தில் ஒருவன்*
4.நினைத்தேன் வந்தாய்*நூறு வயது* - காவல்காரன்*
5.ஒரே முறைதான்*உன்னோடு* பேசி பார்ப்பேன்*-தனிப்பிறவி*
6.நல்லது கண்ணே*கனவு*கனிந்தது*-ராமன் தேடிய சீதை*.**

orodizli
19th May 2020, 08:32 AM
சிவகுமார் நல்ல மனிதர் என்று ஏன் சொல்கிறேன்?
- எம்.ஜி.ஆர் சொன்ன விளக்கம்
https://www.thaaii.com/?p=37617

“ஈன்ற பொழுதினும் பெரிதுவக்கும் தன் மகனைச் சான்றோன் எனக் கேட்ட தாய் என்று சொல்வார்கள். தாய் பக்கத்தில் இருக்கும்போது, மகன் இந்தப் பேறு பெறுவது மிகமிக அரிது. அந்தப் புண்ணித்தைச் செய்திருக்கிற சிவகுமார் பாராட்டுக்குரியவர்”

- நடிகர் சிவகுமார் நடித்த ‘ரோஜாப்பூ ரவிக்கைக்காரி’ பட வெளியீட்டு விழாவில் பேசியபோது, இப்படிச் சொன்னவர் தமிழக முதல்வரான ‘மக்கள் திலகம்’ எம்.ஜி.ஆர்.

அதே விழாவில் இன்னொன்றையும் சொன்னார் எம்.ஜி.ஆர்.

“சிவகுமாரை நல்ல மனிதர் என்று சொல்வதற்குக் காரணம் உண்டு. எல்லோரும் மனிதர்கள் தான். ஆனால் நல்லதைச் செய்து, மக்கள் அதைப் புரிந்து கொள்ளுமாறு, அது தெளிவாக விளக்கப்படும்போது தான் அந்த மனிதரை ‘நல்ல மனிதர்’ என்று நாம் குறிப்பிடுகின்றோம்.

தான் சம்பாதித்த பொருளை வேண்டாத விஷயத்துக்குச் செலவழித்து விரயமாக்காமல், அதைச் சேர்த்து வைப்பதில் ஓரளவுக்கு அக்கறை காட்டி, உதவி செய்வதிலும் நல்ல தன்மையைக் காட்டி இங்கே 25,000 ரூபாயைப் படிக்கின்ற குழந்தைகளுக்கு அதன் வட்டியிலிருந்து உதவி செய்ய, உருவாக்கித் தந்திருக்கின்ற அந்த நல்ல உள்ளத்தை அவர் பெற்றிருக்கும்போது, நல்ல மனிதர் என்று சொல்லாமலே அந்த அடைமொழி அவருக்குச் சொந்தமாகி விடுகிறது.”

எம்.ஜி.ஆரிடம் மனம் திறந்த பாராட்டைப் பெற்ற நடிகர் சிவகுமார் விழா நடந்த (1979 மே 26 ஆம் தேதி) அன்று – வழக்கமாக எழுதும் டைரிக் குறிப்பில் எழுதியிருக்கிறார்.

“ 25,000 ரூபாயில் ஒரு டிரஸ்ட் அமைத்து பட்டப் படிப்புக்குச் செல்லும் மாணவர்களில் முதல் மூன்று இடங்களைப் பிடிப்பவர்களுக்கு உபகாரச் சம்பளம் கொடுக்கும் திட்டத்தை எனது தாயார் முன்னிலையில் திரு.எம்.ஜி.ஆர் துவக்கி வைத்தார்.

சிறுவயதில் திரைப்படங்களும், நாடகமும் பார்க்க வாய்ப்பின்றி வளர்ந்த நான், 14 வருடங்களில் 100 படங்களில் நடித்துள்ளேன்.

பள்ளிக்கூட வசதி, குடி தண்ணீர் வசதி எதுவுமே இல்லாத சிறு கிராமத்தில் பிறந்து எஸ்.எஸ்.எல்.சி படித்துத் தேறிய முதல் மாணவன் நான். ஏதோ ஒரு வெறியில் சென்னைக்கு வந்து ஆறு ஆண்டுகள் ஓவியக்கலை பயின்று முதல் மாணவனாகத் தேறினேன்.

கத்துக்குட்டியாக நடிப்புலகில் நுழைந்த எனக்கு ஆசானாகவும், வழிகாட்டியாகவும் விளங்கியவர்கள் திரு.எம்.ஜி.ஆரும், திரு.சிவாஜியும்.

அவர்களின் வாழ்க்கைப் பாதையும், கலையுலகச் சாதனைகளுமே எனக்குப் பாடப் புத்தகங்கள்” என்று விழாவில் நன்றி தெரிவித்துப் பேசினேன்.”

கிட்டத்தட்ட 190 க்கும் மேற்பட்ட திரைப்படங்களிலும், தொலைக் காட்சித் தொடர்களிலும் நடித்திருக்கிற நடிகர் சிவகுமார் தன்னுடைய பெயரில் அறக்கட்டளையைத் துவக்கியது 1979 ஆம் ஆண்டில்.

அன்றிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் இதுவரை அந்த அறக்கட்டளையால் நிதியுதவி கிடைக்கப் பெற்றவர்களில் பலர் கிராமப்புறம் சார்ந்தவர்கள்.

ஏழ்மை நிலையில் இருப்பவர்கள். ஆரம்பத்தில் கொடுத்த தொகையைத் தற்போது விரிவுபடுத்தியிருக்கிறார் சிவகுமார்.

முதலில் +2 தேர்வில் முதல், இரண்டாவது, மூன்றாவது இடம் வந்தவர்களுக்கு ஆயிரம் ரூபாய் வரை கொடுத்தவர், தற்போது ஐயாயிரம் ருபாய் வரை முதலில் வந்து பத்து மாணவ, மாணவியிருக்குப் பகிர்ந்து அளிக்கிறார்.

அவருடைய வழியில் மகன் சூர்யா “அகரம் ஃபவுண்டேஷன்” தொண்டு நிறுவனத்தைத் துவக்கியவர், தான் சம்பாதிப்பதில் கணிசமான தொகையை திறமையும், கல்வி கற்கும் வேட்கையும் இருந்தும், ஏழ்மையினால் தவிக்கும் மாணவ, மாணவியரைக் கண்டறிந்து உதவி வருகிறார்.

இதுவரை பல்லாயிரக்கணக்கானவர்கள் உயர்கல்வியும், தொழில்நுட்பக் கல்வியும் கற்க வழிகாட்டி வருகிறார். அவருடன் தன்னார்வலர்களைக் கொண்ட குழுவும் சேவையுள்ளத்துடன் உதவி வருகிறது.

அகரம் துவக்கப்பட்ட பதினான்கு ஆண்டுகளில் அந்த அமைப்பினால் பலன் அடைந்தவர்களின் எண்ணிக்கை பல ஆயிரம். இலங்கை அகதிகள் குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகளுக்கும் கல்வி உதவி செய்கிறார்கள்.

‘நமது பள்ளி’ சிறப்புத் திட்டம் மூலம் தமிழகம் முழுக்க இருக்கும் சுமார் நானூறு அரசுப் பள்ளிகளைச் சீரமைத்து, கழிப்பிடம் உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளையும் செய்து கொண்டிருக்கிறது அகரம் அமைப்பு.

இன்னொரு மகனான கார்த்தி ‘விதை’, ‘வழிகாட்டிகள்’ என்ற அமைப்புகளை உருவாக்கி விவசாயிகளுக்கும், மாணவர்களுக்கும் உதவுகிறார்.

தமிழ் வழியில் படித்த மூவாயிரம் மாணவர்கள் கல்லூரிகளில் படிக்க இவர்கள் உதவுகிறார்கள். கல்வியை முடித்து அவர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கவும் வழி செய்கிறார்கள்.

இப்படி 1300 மாணவர்கள் வேலை வாய்ப்பைப் பெற்றிருக்கிறார்கள். ‘சிகரம்’ என்ற திட்டத்தின் கீழ் ஐ.ஏ.எஸ் தேர்வுக்கான பயிற்சியையும் அளித்து மாணவர்களை எந்தப் பணிக்கும் ஏற்றவர்களாக உயர்த்தியிருக்கிறார்கள்.

அரசுப் பணித் தேர்வுகளில் வெற்றி பெற்று 50 பேர் வரை அரசுப் பணிகளில் சேர்ந்திருக்கிறார்கள்.

‘இணை’ என்ற திட்டத்தின் மூலம் கல்விக்கான மேம்பாட்டுப் பணிகளைச் செய்கிறார்கள்.

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள மூன்று கிராமங்களில் ‘நமது கிராமம்’ என்ற திட்டத்தைத் துவக்கி வாழ்வியல் மேம்பாட்டுப் பணிகளைச் செய்கிறார்கள்.

அரசின் கல்வித்துறை அதிகாரிகள் மற்றும் ஆசிரியர்கள் என்று சமூக அக்கறை கொண்டவர்களின் ஒருங்கிணைப்பினால் தான் இந்தத் திட்டங்கள் வளர்ச்சி பெற்றிருக்கின்றன என்றாலும், இதற்கான துவக்க ‘விதை’ நடிகர் சிவகுமாரின் தனிப்பட்ட பண்பும், சமூக அக்கறையும் தான்.

சில ஆண்டுகளுக்கு முன்பு கல்வி தொடர்பான விழாவில் பேசும்போது இப்படிக் குறிப்பிட்டார் சிவகுமார்.

“ஒழுக்கம் மற்றும் கல்வி இரண்டும் இருந்தால், எங்கிருந்தாலும் ஜெயித்து விடலாம்.

தமிழக மக்கள் கடவுள். அந்த மக்களுக்கு நாம் ஏதாவது பண்ணனும் இல்லையா? ஒரு குழந்தையின் கல்விக்கு உதவி செய்யும்போது, அது பலருக்கும் உதவியாக இருக்கும். அதனால் தான் கல்வி அறக்கட்டளையைத் துவக்கினேன்” என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், “என்னைப் போல் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து, நன்றாகப் படிக்கிற பிள்ளைகளுக்கு என்னால் முடிந்த உதவியைச் செய்வதில் மிகுந்த மன நிறைவு அடைகிறேன்.”

அவருடைய கனவு மெய்ப்பட்டிருக்கிறது. மேலும் அவருடைய குடும்பத்தினர் மூலம் மேலும் விரிந்து வேர் விட்டுக் கிளை பரப்பியிருக்கிறது. திறமையும், படிக்கும் வேகமுள்ளவர்களுக்குக் கனிகளைக் கொடுத்துக் கொண்டிருக்கிறது.

“அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல், ஆலயம் பதினாயிரம் நாட்டல், பின்னருள்ள தருமங்கள் யாவும், பெயர் விளங்கி ஒளிர நிறுத்தல், அன்ன யாவினும் புண்ணியம் கோடி ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்” என்று கல்வியை ஏழ்மையானவர்களுக்கு அளிப்பதைப் பற்றிச் சொல்லியிருப்பார் பாரதி.

அந்த மகாகவியின் வரிகளை விட, மூத்த நடிகரும், பேச்சாளருமான சிவகுமாரின் செயல்பாட்டை உணர்ந்து, வேறென்ன மேன்மையான சொல் சொல்லிவிட முடியும்?

“பத்து மாதம் என்னைத் தாங்கிப் பெற்று வளர்த்து ஆளாக்கி வளர்த்த தெய்வம் என்னோடு இருப்பதைத் தவிரப் பெரிது வேறொன்றுமில்லை என்று கருதும் சிவகுமார் என்றுமே மகிழ்வோடு இருப்பார். என்றுமே மன நிறைவோடு வாழ்வார்.

என்றுமே புகழுக்குச் சொந்தக்காரராக இருப்பார்” என்று அன்று சிவகுமாருக்கு முன்னால், மக்கள் திலகம் வாழ்த்தியதை விட, வேறு எந்த விதத்தில் உயர்வாக வாழ்த்திவிட முடியும்?...

orodizli
19th May 2020, 08:15 PM
தற்போது புதுயுகம் தொலைக்காட்சியில் "அரசகட்டளை" ஒளிபரப்பாகிறது.....இன்று இரவு 7.30 மணி முதல் மூன் டிவியில்
"தாய்க்கு தலை மகன்" திரைப்படம் ஒளிபரப்பாகி றது....

இன்று இரவு 11 மணிக்கு பாலிமர் தொலைக்காட்சியில்
"நல்ல நேரம்" திரைப்படம் ஒளிபரப்பாகிறது...

நாளை(20/05/2020) காலை 11 மணிக்கு சன் லைஃப் சானலில் "கண்ணன் என் காதலன் " திரைப்படம் ஒளிபரப்பாகிறது...


நாளை பிற்பகல் (20/05/2020) 2.30 மணிக்கு
மெகா 24 டிவியில் "தாய்க்கு தலை மகன்" திரைப்படம் ஒளிபரப்பாகிறது.......

fidowag
20th May 2020, 08:26 PM
தனியார் தொலைக்காட்சிகளில் நடிக மன்னன் எம்.ஜி.ஆர். திரைப்படங்கள்*ஒளிபரப்பான*விவரம்*
---------------------------------------------------------------------------------------------------------------------
17/05/20* -ஜெயா மூவிஸ் - காலை 7 மணி -* இதய வீணை*

* * * * * * * * booto* tv* - காலை 9 மணி* *-அன்பே வா*

* * * * * * * * ஜெயா டிவி* - மாலை 6 மணி -ஆயிரத்தில் ஒருவன்*

* * * * * * * * பாலிமர் -* *இரவு 11 மணி* - ராமன் தேடிய சீதை*

18/05/20* *ஜெயா மூவிஸ் - காலை 7 மணி* - குமரிக்கோட்டம்*

* * * * * * * *சன் லைப்* -காலை* 11 மணி* - ரிக்ஷாக்காரன்*

* * * * * * * *வானவில் டிவி* - பிற்பகல் 2 மணி - குமரிக்கோட்டம்*

* * * * * * * முரசு டிவி* - பிற்பகல் 2 மணி* - மருத நாட்டு இளவரசி*

* * * * * * * *மெகா டிவி* - இரவு 8 மாய்* *- படகோட்டி*

19/05/20* ஜீ தமிழ்* * - மதியம் 12 மணி* - பறக்கும் பாவை*

* * * * * * * * *புதுயுகம் டிவி - இரவு 7 மணி - அரச கட்டளை*

* * * * * * * * *மூன் டிவி* * *-இரவு 7.30 மணி -தாய்க்கு தலைமகன்*

* * * * * * * * பாலிமர் டிவி* -இரவு 11 மணி - நல்ல நேரம்*

20/05/20 -* சன் லைப்* - காலை 11 மணி* - கண்ணன் என் காதலன்*

* * * * * * * * முரசு* டிவி* - காலை 11 மணி -தாய் சொல்லை தட்டாதே*

* * * * * * * * *வசந்த் டிவி - பிற்பகல் 1.30 மணி - வேட்டைக்காரன்*

* * * * * * * * மெகா 24 டிவி -பிற்பகல் 2.30 மணி -தாய்க்கு தலை மகன்**

* * * * * * * *முரசு டிவி* - இரவு 7 மணி - தாய் சொல்லை தட்டாதே*

* * * * * * * வசந்த் டிவி* -இரவு 7.30மணி* -நான் ஏன் பிறந்தேன்*

ஷாலினி டிவி* - இரவு* 10.30 மணி - பறக்கும் பாவை*

orodizli
18th June 2020, 10:04 AM
மக்கள் திலகம் எம்ஜிஆர் குழுவின் பெயரில் கோவை நகரம் இடம் பெற்றுள்ளதால் எம்ஜிஆரின் திரை உலகம் மற்றும் அரசியல் நிகழ்வுகள் பற்றிய ஒரு சிறு தொகுப்பு .

1. மக்கள் திலகத்தின் ஆரம்ப கால திரைப்படங்கள் மற்றும் ராஜகுமாரி , மலைக்கள்ளன் போன்ற படங்கள் கோவை நகரில் படப்பிடிப்புகள் நடந்தது

2. 1950 துவக்கத்தில் இருந்தே எம்ஜிஆருக்கு கோவை மாவட்டத்தில் ஏராளமான ரசிகர்கள் இருந்தார்கள் .

3. எம்ஜிஆர் திமுகவில் இணைந்த பின்னர் கோவை மாவட்டத்தில் எம்ஜிஆர் ரசிகர்கள் தங்களை திமுகவில் இணைத்து கொண்டார்கள் .

4, 1958ல் கோவை ராஜா அரங்கில் நாடோடிமன்னன் 20 வாரங்கள் வெற்றிகரமாக ஓடி வசூலில் சாதனை படைத்தது .

5. 1958ல் நாடோடிமன்னன் வெற்றி விழா கோவை நகரில் பிரமாண்டமாக நடந்தது .

6. கோவை நகரில் முதல் முறையாக ராயல் அரங்கில் எம்ஜிஆரின் எங்கவீட்டுப்பிள்ளை - 1965ல் வெள்ளிவிழா கொண்டாடியது

7. 1967ல் நடந்த சட்ட மன்ற தேர்தலில் திமுக பெரும்பாலான தொகுதிகளை இம் மாவட்டத்தில் கைப்பற்றியது

8. 1971ல் .நடந்த சட்ட மன்ற தேர்தலில் திமுக பெரும்பாலான தொகுதிகளை இம் மாவட்டத்தில் மீண்டும் கைப்பற்றியது

9 1972ல் எம்ஜிஆரை கட்சியை விட்டு நீக்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாபெரும் ஆர்ப்பாட்டங்கள் நடந்தது .

10. 1972 முதல் கோவை மாநகரமும் மாவட்டமும் எம்ஜிஆர் ரசிகர்களின் கோட்டையானது ,

11. 1974ல் அதிமுக விற்கு முதல் சட்ட மன்ற உறுப்பினராக அரங்கநாயகம் கோவை மேற்கில் வெற்றி கண்டார் .

12. 1973ல் உலகம் சுற்றும் வாலிபனும் , 1974ல் உரிமைக்குரலும் ,1975ல் இதயக்கனியும் வசூலில் சாதனை .

13. 1977 பாராளுமன்றத்தேர்தலில் கோவை மாவட்டம் எம்ஜிஆர் கோட்டையானது .

14. 1977 / 1980 1984ல் நடந்த சட்டமன்ற தேர்தல்களில் கோவை மாவட்டம் ஹாட்ரிக் கோட்டையானது .

15. 1991/ 2001/ 2011/ 2016 நடந்த சட்ட மன்ற தேர்தல்களில் கோவை மாவட்டம் மீண்டும் அதிமுக கோட்டை யானது .

16. எம்ஜிஆரின் படங்கள் 73 வருடங்கள் தொடர்ந்து இன்னமும் கோவை மற்றும் கோவை மாவட்டத்தில் ஓடிக்கொண்டு இருக்கிறது .

மறக்க முடியாத கோவை மாவட்ட எம்ஜிஆர் ரசிகர்கள் ............

fidowag
21st June 2020, 09:36 PM
தனியார் தொலைக்காட்சிகளில் கலை வேந்தன்*எம்.ஜி.ஆர். திரைப்படங்கள்*ஒளிபரப்பான*விவரம்*
------------------------------------------------------------------------------------------------------------------------------
21/05/20* -ஜெயா மூவிஸ் -காலை 7 மணி -பட்டிக்காட்டு பொன்னையா*

* * * * * * * * *மெகா டிவி* *- இரவு 8 மணி* - குடியிருந்த கோயில்*

* * * * * * * * *பாலிமர் டிவி - இரவு 11 மணி* - வேட்டைக்காரன்*

22/05/20* -சன் லைப் - காலை* 11 மணி* - புதிய பூமி*

* * * * * * * *புது யுகம் டிவி -பிற்பகல் 1.30 மணி - நீரும் நெருப்பும்*

* * * * * * * *வசந்த் டிவி* - இரவு 7.30 மணி -ராமன் தேடிய சீதை*

23/05/20* வசந்த் டிவி* -பிற்பகல் 1.30 மணி - ஒரு தாய் மக்கள்*

* * * * * * * * மெகா 24* = பிற்பகல் 2.30 மணி -தனிப்பிறவி*

* * * * * * * *பாலிமர் டிவி -இரவு* 11 மணி - அரச கட்டளை*

24/05/20 சன் லைப்* -காலை 11 மணி - அரசிளங்குமரி*

* * * * * * * மீனாட்சி* டிவி -இரவு 9 மணி - நல்லநேரம்*

25/05/20-சன் லைப் - காலை 11 மணி - குடியிருந்த கோயில்*

* * * * * * * மெகா 24 டிவி - பிற்பகல் 2.30 மணி - கன்னித்தாய்*

* * * * * * * புதுயுகம் டிவி - இரவு 7 மணி* -தனிப்பிறவி*

26/05/20* வசந்த் டிவி - பிற்பகல் 1.30 மணி -குடும்ப தலைவன்*

27/05/20 - ஜெயா மூவிஸ் - காலை 7 மணி - குலேபகாவலி*

* * * * * * * *சன் லைப்* - காலை 11 மணி* * - நம் நாடு*

* * * * * * * *மெகா டிவி* -மதியம் 12 மணி - பணத்தோட்டம்*

* * * * * * * *வானவில் டிவி - பிற்பகல் 2 மணி - மாடப்புறா*

* * * * * * * மெகா 24 டிவி -பிற்பகல் 2.30 மணி - தேர் திருவிழா*

fidowag
21st June 2020, 09:37 PM
.தனியார் தொலைக்காட்சிகளில் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். திரைப்படங்கள்*ஒளிபரப்பான விவரம்*
--------------------------------------------------------------------------------------------------------------------------
28/05/20 -* வசந்த் டிவி - பிற்பகல் 1.30 மணி - தாயின் மடியில்*

* * * * * * * * * புதுயுகம் டிவி -இரவு 7 மணி -ராமன் தேடிய சீதை*


29/05/20 சன் லைப் - காலை 11 மணி - நல்ல நேரம்*

30/05/20* மெகா 24 டிவி - பிற்பகல் 2.30 மணி - விவசாயி*

31/05/20* *முரசு டிவி - மதியம் 12 மணி & இரவு 7 மணி* - பெற்றால்தான் பிள்ளையா*

* * * * * * * * * ** * * * * * **வசந்த் டிவி - பிற்பகல் 1.30 மணி - கணவன்*


01/06/20 -* மெகா 24 டிவி - காலை 8.30 மணி -* * காலத்தை வென்றவன்*
* * * * * * *** * * * * * * *வேந்தர்*டிவி* - காலை*10 மணி* - நல்ல நேரம்*

* * * * * * * * * பாலிமர்*டிவி*-பிற்பகல் 2 மணி -சக்கரவர்த்தி திருமகள்*

* * * * * * * புது யுகம் டிவி*- இரவு 7 மணி* - வேட்டைக்காரன்*

02/06/20* *- ஜெயா*டிவி* - காலை*10 மணி - சிரித்து வாழ வேண்டும்*

* * * * * * * * *சன்*லைப்*- காலை*11 மணி - சந்திரோதயம்*

* * * * * * * * *முரசு டிவி*- காலை*11 மணி* _& இரவு 7 மணி* * - ஆனந்த*ஜோதி*

* * * * * * * * * மீனாட்சி*டிவி* - பிற்பகல் 1 மணி - வேட்டைக்காரன்*

03/06/20* * ஜீ* திரை* - காலை*6 மணி* - பறக்கும் பாவை*

* * * * * * * * *ஜெயா மூவிஸ்*- காலை*7 மணி - விக்கிரமாதித்தன்*

* * * * ** * * * * * * * *சன்*லைப்* *- காலை*11 மணி* - என் அண்ணன்*

* * * * * * * * * ** * * * * **மூன்*டிவி* *- பிற்பகல் 12.30 மணி - ஆனந்த ஜோதி*


* * * * * * * * *மெகா*டிவி* - இரவு 8 மணி* - படகோட்டி*


04/06/20* வசந்த்*டிவி* - காலை*10 மணி - சங்கே*முழங்கு*

* * * * * * * * * * * * * * * * * * * *பிற்பகல் 1.30மணி* - என் கடமை*

* * * * * * * * *சன்*லைப்* -காலை*11 மணி - காவல் காரன்*

* * * * * * * *புது யுகம் டிவி* - இரவு 7 மணி* - நவரத்தினம்*

05/06/20* * சன்*லைப்* - காலை* 11 மணி - எங்கள் தங்கம்*

* * * * * * * * வசந்த்*டிவி* - பிற்பகல் 1.30 மணி - புதிய பூமி*

06/06/20* ஜெயா மூவிஸ்*- காலை*7 மணி - குமரிக்கோட்டம்*

* * * * * * * * வசந்த் டிவி* *- காலை*10 மணி - நவரத்தினம்*

* * * * * * * *சன்*லைப்* - காலை*11 மணி - மந்திரி குமாரி*

* * * * * * * *மெகா*டிவி*- மதியம் 12 மணி - வேட்டைக்காரன்*

* * * * * * * *ராஜ்*டிஜிட்டல் ப்ளஸ்*-இரவு 7.30 மணி -ரகசிய*போலீஸ் 115


7/6/20* * * முரசு டிவி*- மதியம் 12 மணி & இரவு* 7 மணி** தொழிலாளி*

* * * * * * * * வசந்த்*டிவி*- பிற்பகல் 1.30 மணி -தாயை காத்த*தனயன்*

* * * * * * * * சன் லைப்* - மாலை 4 மணி* - நல்லவன் வாழ்வான்*

8/6/20* * *ஜெயா மூவிஸ்*- காலை*7 மணி -*பட்டிக்காட்டு*பொன்னையா*



* * * * * * *சன்*லைப்*- காலை*11 மணி - உரிமைக்குரல்*

* * * * * * *king* டிவி* - பிற்பகல் 1.30 மணி* - வேட்டைக்காரன்*

* * * * * * * வானவில் டிவி*- பிற்பகல் 3.30 மணி -வேட்டைக்காரன்*

* * * * * * *புதுயுகம் டிவி* - இரவு 7 மணி* - தர்மம் தலை காக்கும்*

* * * * * * மெகா*24 டிவி* - இரவு 9 மணி* - காலத்தை வென்றவன்* **

fidowag
22nd June 2020, 11:19 PM
பாட்டாலே புத்தி சொன்ன வாத்தியார் எம்.ஜி.ஆர்.-வின்* டிவியில் 18/05/20அன்று திரு.துரை பாரதி சொன்ன தகவல்கள்*
---------------------------------------------------------------------------------------------------------------------

1963ல் வெளியான* காஞ்சி தலைவன் படத்தில் தயாரிப்பாளர் நடிகை விஜயகுமாரியை நன்றாக தமிழில் வசனம் பேசக்கூடிய நடிகை என்றுஎம்.ஜி.ஆருக்கு ஜோடியாக நடிக்க* ஒப்பந்தம் செய்தார் . விஷயம் அறிந்த எம்.ஜி.ஆர். நடிகை விஜயகுமாரியை அழைத்து ,**நீங்கள் எனது தம்பி எஸ்.எஸ்.ஆரின் மனைவி . ஆகவே உங்களோடு ஜோடியாக நடிப்பதற்கு மனம் இடம் தரவில்லை .* தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம் .எனது தங்கையாக இந்த படத்தில் நடிக்க வாய்ப்பு தரப்படும்* என்று சமாதானம் சொல்லி நடிக்க வைத்தார் . பின்னர் வெளிவந்த*தேர் திருவிழா, கணவன்*ஆகிய படங்களிலும் நடிகை விஜயகுமாரி தங்கையாக*நடித்துள்ளார் . காஞ்சி தலைவனில்*எம்.ஜி.ஆருக்கு ஜோடியாக*பானுமதி*நடித்தார் .

நடிகை லட்சுமி மக்கள் திலகம் எம்.ஜி.ஆருடன், மாட்டுக்கார வேலன், குமரிக்கோட்டம் ,சங்கே முழங்கு ஆகிய படங்களில் நடித்துள்ளார். மாட்டுக்கார வேலன்*படத்தில்*எம்.ஜி.ஆருடன் நடிக்கும்போது முதன் முதலில் அறிமுகம் ஆகும்போது குட்*மார்னிங்*அங்குள்*என்று சொன்னாராம். எம்.ஜி.ஆர். பொதுவாக படப்பிடிப்பு தளத்தில்*யாராவது*தவறு செய்தால்*அனைவர்*மத்தியில் கண்டிக்காமல்* தன*ஒப்பனை அறைக்கு*அழைத்து அறிவுரை சொல்வது வழக்கம். அந்த வகையில்*நடிகை லட்சுமியை அழைத்து*, நீ ஆங்கிலம் நன்றாக படித்து இருக்கலாம்*கான்வென்ட் மாணவியாக*கூட இருந்திருக்கலாம். உன்னை*வாழ வைப்பது*தமிழ் மொழி, தமிழ் மக்கள், தமிழ் ரசிகர்கள்தான் . எனவே* தமிழ்நாட்டில் யாரை*பார்த்தாலும்*வணக்கம் சொல்ல*பழகிக் கொள் .அதுதான் உனக்கு நல்லது .தமிழ் திரையுலகில் உனக்கு*நல்ல எதிர்காலம் அமையட்டும் என்று வாத்தியார் போல அறிவுரை சொல்லி*வாழ்த்தினார் .**

மாட்டுக்கார வேலன்*படப்பிடிப்பு பாடல் காட்சிக்காக மதுரை அடுத்த ஆண்டிபட்டி அருகில் உள்ள வைகை அணையில்*தொடங்குகிறது. விவரம் அறிந்து*சுற்றுவட்டார மக்கள் ஆயிரக்கணக்கில் எம்.ஜி.ஆரை*பார்ப்பதற்கு*திரண்டு வருகின்றனர் .* கடும் வெயில் சமயம் ஆதலால், தன்னை*பார்க்க வந்திருந்த மக்களுக்கு*இரண்டு லாரி*தண்ணீரும், அனைவரும் பருகும் வகையில்*மோரும்*ஏற்பாடு செய்து தந்தார் எம்.ஜி.ஆர். ஒரு வயதான*மூதாட்டியை*அழைத்து*, நீங்கள் ஏன் இந்த கடும் வெயிலில்*படப்பிடிப்பை*பார்க்க வந்தீர்கள். உங்களுக்கு எத்தனை குழந்தைகள் .என்று கேட்கிறார்.* பதிலுக்கு அந்த மூதாட்டி, எனக்கு*இரண்டு மகன்கள்*. என்கிறார். அப்படியா .அவர்கள் என்ன தொழில் செய்கிறார்கள் என்று எம்.ஜி.ஆர். கேட்க , இளைய மகன் ராணுவத்தில் பணிபுரிகிறார் , மூத்த மகன் சினிமாவில் நடிக்கிறார் . அது யார் என்று எம்.ஜி.ஆர்.கேட்க . அந்த மூதாட்டி ராமச்சந்திரன்*என்கிறார். எம்.ஜி.ஆர். உடனே நெகிழ்ந்து போகிறார் . தன் உதவியாளரை அழைத்து*அந்த மூதாட்டியின் முகவரியை*குறிப்பு*எடுக்க சொல்கிறார் .**படப்பிடிப்புக்கு அழைப்பு வரவே*எம்.ஜி.ஆர். மூதாட்டியிடம் விடை பெறுகிறார் .**பின்னர் தன் உதவியாளரிடம் , என் மீது எந்தவித*பிரதிபலனும் இல்லாமல்* இவ்வளவு அன்பு , பாசம் வைத்திருக்கிறார்களே . இவர்களுக்கு நான் என்ன கைம்மாறு எப்படி* செய்ய போகிறேன்*என்று தெரியவில்லை* என்று கூறி*அந்த மூதாட்டியிடம்* படப்பிடிப்பு முடிந்ததும்*நான் அளிக்கும்*பணத்தை உங்கள் மூத்தமகன்*கொடுத்தது* என்று* சொல்லி*கொடுத்துவிட்டு வாருங்கள் என்றார் .ஆகவே, தமிழ்நாட்டு மக்கள் எம்.ஜி.ஆரை எங்க வீட்டு பிள்ளை என்று சொந்தம்*கொண்டாடுகிறார்கள் என்பதற்கு இந்த சம்பவம்*ஒரு உதாரணம் .மாட்டுக்கார வேலன்*1970 பொங்கல் திருநாளில் வெளியாகி 12 அரங்குகளில் 100 நாட்களும், சென்னை*,மதுரை*நகரங்களில் வெள்ளிவிழா வும் கொண்டாடியது .


எம்.ஜி.ஆர். 1975ல் இந்தி திரையுலகில் நடித்து வந்த*நடிகை ராதா சலூஜாவை தன் இதயக்கனி திரைப்படத்தில் அறிமுகம் செய்தார் .* அதில் வரும் காதல்*பாடலான*இன்பமே உந்தன் பேர் வள்ளலோ*என்கிற பாடல் பட்டி, தொட்டியெல்லாம் ஒலித்தது .* அன்று முதல் இன்று வரையில் திருமணம், மற்றும் இன்னிசை நிகழ்ச்சிகளில் நிச்சயமாக இடம் பெறும்*ஒரு துள்ளலான,*வசீகரமான பாடல்.* திரைப்படத்தில் இந்த பாடலுக்கு*, இன்றைய இளைய ஹீரோக்களுக்கு சவாலாக*ராதா சலூஜாவுக்கு ஈடு கொடுத்து*ஓடியாடி*, காதல்*களியாட்டத்துடன் நடித்து தன் ரசிகர்கள் மத்தியில் பலத்த கைதட்டல்கள்களால் அரங்குகள் அதிர்ந்தன* என்று பேசப்பட்டது .இதயக்கனி திரைப்படம் 10 அரங்குகளில் 100 நாட்கள்*கடந்தது*. இதயக்கனியின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து, ராதா சலூஜா*, எம்.ஜி.ஆருடன்*இன்று போல் என்றும் வாழ்க என்ற மற்றும் ஒரு வெற்றிப்படத்தில் நடித்திருந்தார் .* 1977ல் எம்.ஜி.ஆர். சட்டசபை தேர்தல் சந்திக்கும் சமயத்தில் வெளிவந்த படம் . இந்த படத்தில் வரும் பாடல்களான இது நாட்டை காக்கும் கை, அன்புக்கு நான் அடிமை ஆகிய கவிஞர் முத்துலிங்கத்தின் பாடல்கள்*அ. தி.மு.க. கட்சி*யின்*கொள்கை பாடல்களாக*தேர்தல் பிரச்சாரத்தில் பட்டி தொட்டியெங்கும் முழங்கி எம்.ஜி.ஆர். 1977 சட்ட மன்ற தேர்தலில்*தனி பெரும்பான்மையுடன்*முதல்வராக ஆட்சி பீடத்தில் அமர வித்திட்டது .* அனைத்து பாடல்களும் மெல்லிசை மன்னர் எம்.எஸ். விஸ்வநாதன் இசையில்*ரசிகர்கள் காதில்*ரீங்காரமிட்டன . குறிப்பாக*கடைசி பாடலான*என் யோக ஜாதகம் நான் உன்னை சேர்ந்தது என்ற பாடலுக்கு*நல்ல வரவேற்பு ரசிகர்களால் கிடைத்தது .எம்.ஜி.ஆர். முதல்வரானபின் 100 நாள் கொண்டாடிய முதல் படம் .* எம்.ஜி.ஆர். முதல்வரான பிறகு*வாஷிங்டன் போஸ்ட்*என்கிற நாளிதழ் அமெரிக்காவில் இது நாட்டை காக்கும் கை, அன்புக்கு நான் அடிமை ஆகிய இரு பாடல்கள்*எம்.ஜி.ஆரின்*தேர்தல் வெற்றிக்கு*அடித்தளம் அமைக்க* பல* காரணங்களில் ஒன்று* என்று செய்தி வெளியிட்டு இருந்தது .

நிகழ்ச்சியில் ஒளிபரப்பான*பாடல்கள் விவரம்*
--------------------------------------------------------------------------
1.ஒரு* கொடியில்**இரு மலர்கள்* - காஞ்சி தலைவன்*

2.பட்டிக்காடா*பட்டணமா* - மாட்டுக்கார வேலன்*

3. பூ வைத்த பூவைக்கு*பூக்கள் சொந்தமா*- மாட்டுக்கார வேலன்*

4.இன்பமே*உந்தன்*பேர் பெண்மையோ* - இதயக்கனி*

fidowag
22nd June 2020, 11:20 PM
பாட்டாலே புத்தி சொன்ன வாத்தியார் எம்.ஜி.ஆர். -வின்*டிவியில்*20/05/20அன்று திரு.துரை பாரதி*அளித்த*தகவல்கள்*
-------------------------------------------------------------------------------------------------------------------
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். பற்றிய நூல்கள் நூற்றுக்கணக்கில் வெளிவந்துவிட்டது .அவரை பற்றி புதிய தகவல்களும், புதிய பரிமாணங்களும் நமக்கு கிடைத்த வண்ணம் இருக்கின்றன .* அப்படியானவற்றை இந்த சகாப்தம் நிகழ்ச்சியில்*தெரிந்து கொள்வோமாக .எம்.ஜி.ஆருக்கு ஜாதகம், ஜோதிடம், நியூமராலஜி போன்றவற்றில் நம்பிக்கை* உண்டா* இல்லையா என்று பலர் கேட்பார்கள்*ஆனால் எம்.ஜி.ஆர். நமக்கு மேல் சக்தி ஒன்று இருக்கிறது. அதுதான் நம்மை வழி நடத்துகிறது . என்னை வழி நடத்துவது என் தாய்தான் என்று ஆழமாக நம்பினார்*

..நாடோடி மன்னன் படத்தில் கதை ஆசிரியராக திரு.ரவீந்திரன் என்பவரை எம்.ஜி.ஆர். அறிமுகம் செய்தார். திரு.ரவீந்திரன் என்பவர் உண்மையில் ஒரு இஸ்லாமியர் .* நடிகர் கே.ஏ.தங்கவேலுவின் சிபாரிசின் பேரில் எம்.ஜி.ஆரிடம் அறிமுகம் ஆகிறார் . ரவீந்திரன் என்று பெயர் வைத்ததே எம்.ஜி.ஆர். தான் . எம்.ஜி.ஆர். அவரிடம் கேட்கிறார் உங்களுக்கு மிகவும் பிடித்த நபர் யார் என்று .அவர் கவிஞர்* ரவீந்திர நாத் தாகூர் எனக்கு பிடித்தமானவர் என்கிறார் .*அந்த கவிஞரின் பெயரை புனைபெயராக வைத்து ரவீந்திரன் என்று பெயரிடுகிறார்*.**

எம்.ஜி.ஆர். ஒரு முறை ரவீந்திரனுடன் சக்கரவர்த்தி திருமகள் படத்திற்காக மைசூருக்கு செல்கிறார் . அங்கு ஒரு ஓட்டலில் ரவீந்திரனுடன் எம்.ஜி.ஆர். தங்குகிறார் . ஒரு நாள் படப்பிடிப்பு முடிந்து எம்.ஜி.ஆர். ஓட்டலுக்கு திரும்பியதும் ஓட்டலில் அதிபர் உறவுக்கார* இளம் பெண்கள் இருவர் அவரை பார்க்க வருகின்றனர் .ஆனால் எம்.ஜி.ஆர். அவர்களை சந்திக்க மறுக்கிறார். இரவு 7 மணிக்கு மேல் ஆகிவிட்டது .* யாராவது பார்த்தால்* அவர்கள் மீது சந்தேகப்படுவார்கள்.ஏனென்றால் அவர்கள் திருமணம் ஆகாதவர்கள்* அவர்கள் பெயர், இமேஜ் கெட்டுவிடும் என்று திருப்பி அனுப்பி விடுகிறார் .


எம்.ஜி.ஆர். தன் நடிப்பிற்கு, வாள் வீச்சிற்கு பிரபல ஹாலிவுட் நடிகர் ஏரா ல்* பிளைன் என்பவரை தான் முன்னோடியாக கருதினார் .ஏனென்றால் எம்.ஜி.ஆரைப் போலவே* ஏரா ல் பிளைன் என்ற நடிகருக்கும்* ரசிகர்கள் பட்டாளம் மிக பெரிய அளவில் இருந்தது .பிரபல இந்தி பட இயக்குனர் சாந்தாராம் இயக்கிய*இந்தி படங்களை எம்.ஜி.ஆர். விரும்பி பார்ப்பார் . சாந்தாராம் படங்களின் தாக்கம் எம்.ஜி.ஆர். நடித்த பல படங்களில் காணலாம் .* அது மட்டுமல்ல .**இயக்குனர் சாந்தாராம்* தோ ஆங்கே பாரா ஹாத் என்ற இந்தி* படத்தில் தானே நடித்து இயக்கி இருப்பார் . 1975ல் எம்.ஜி.ஆர். அந்த கதையை தழுவி தமிழில் பல்லாண்டு வாழ்க என்ற படத்தில் கொடூரமான 6 வகையான சிறை கைதிகளை தனியொரு கிராமத்தில் மேலதிகாரியின் அனுமதி பெற்று அவர்களை திருந்திய மனிதர்களாக மாற்றும் ஜெயிலராக மிக சிறப்பாக நடித்திருப்பார் .* இந்த படம். சென்னை மட்டுமின்றி, மதுரை,திருச்சி, சேலம் ,திருநெல்வேலி ஆகிய ஊர்களில் 100 நாட்கள் கடந்து ஓடியது*


ஒருமுறை எம்.ஜி.ஆர். காரில் பயணம் செய்யும்போது குழந்தைகள் பயணம் செய்யும் பள்ளி வேன்* ஒன்று எம்.ஜி.ஆர். காரை முந்தி வேகமாக செல்கிறது .எம்.ஜி.ஆருக்கு கடும் கோபம். குழந்தைகளுக்கு வைத்துக் கொண்டு ஓவர் டேக்*செய்து ஓட்டுகிறான் என்று . சிறிது நேரம் கழித்து அந்த வேன் எம்.ஜி.ஆர். காரை மறித்து நின்று விடுகிறது .* வேனில் இருந்து இறங்கி குழந்தைகள் எம்.ஜி.ஆர். காரை நோக்கி ஓடி வருகிறார்கள் . உடனே எம்.ஜி.ஆர். காரில் இருந்து இறங்கி உதவியாளரிடம் காரில் உள்ள டின்னில் இருந்து பிஸ்கட் பாக்கெட்டுகளை கொண்டுவர செய்கிறார் .வேன் டிரைவரை எம்.ஜி.ஆர். கண்டிக்கிறார். பிறகு** எம்.ஜி.ஆர். எல்லா குழந்தைகளுக்கும் திண் பண்டங்கள் வழங்குகிறார் . அதில் ஒரு இளம்பெண் எம்.ஜி.ஆரை இனம் கண்டு நான் உங்களோடு சினிமாவில் நடிக்க ஆசைப்படுகிறேன் என்றார் . எம்.ஜி.ஆர். அந்த பெண்ணுக்கு ,உன் பெற்றோர்கள் விருப்பப்படி முதலில்* நன்றாக படித்து ஒரு நிலையை அடைந்த பின்னர் , பெற்றோர்களின் சம்மதத்தின் பேரில் சினிமாவில் நடிக்கலாம் என்று அறிவுரை கூறுகிறார் .* எம்.ஜி.ஆரிடம் பேசிய அந்த பெண்தான் பின்னாளில் எம்.ஜி.ஆருடன், நாடோடி, சந்திரோதயம், அன்னமிட்டகை ஆகிய படங்களில் நடித்தார் . கன்னட நடிகர் விஷ்ணு வர்த்தனை பின்னாளில் மணந்தார் ..


எம்.ஜி.ஆர். ஆரம்ப காலங்களில் இருந்தே, சர்வாதிகாரி, மர்மயோகி, மந்திரிகுமாரி,மலைக்கள்ளன் போன்ற அனைத்து* படங்களில் பாட்டாளி வர்க்கத்தின் பிரதிநிதியாக, உழைக்கும் வர்க்கத்திற்காக, சமுதாய சீரழிவை எதிர்த்து,பாடுபடும் மக்களுக்காக , அரசை எதிர்த்து, அரசை விமர்சித்து , குரல் கொடுக்கும் புரட்சிக்காரராக* நடித்ததால் என்னவோ, புரட்சி நடிகர் என்ற பட்டம் பெற்று, அரசியலில் புரட்சி தலைவர் ஆனார் . வாழ்க்கையின் அடித்தளத்தில் உள்ளவர்கள், வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளவர்கள், அன்றாட வேலைக்கு சென்ற அடியாட்கள் போன்றவர்களின் துன்பங்கள், பிரச்னைகள்* அடக்கு முறை, ஒடுக்கு முறைகளுக்கு எதிராக குரல் கொடுக்கும் நாயகனாக திகழ்ந்தார் எம்.ஜி.ஆர். அதனால்தான் அவரது படங்கள் மற்ற நடிகர்கள் படங்கள் போல் இல்லாமல் நகரங்கள் மட்டுமின்றி, புற நகரங்கள், கிராமங்கள், பட்டி , தொட்டியெல்லாம் ஓடி வசூலை வாரி குவித்தன .* நாடோடி மன்னனில் ஒரு வசனம் . மன்னராவதற்கு முன்பு அமைச்சர்களிடம் பேசும்போது* நான் மக்களோடு இருந்து மாளிகையை கவனிக்கிறவன் . நீங்கள் மாளிகையில் இருந்து மக்களை பார்க்கிறீர்கள் ..ஆயிரம் ஆடைகளில் எதை அணிவது என்பது*உங்கள் பிரச்னை. இருந்த , கிழிந்த ஆடையை வைத்து மானத்தை மறைக்கலாமே என்பது மக்கள் பிரச்னை . இங்கே தாதிகள் பட்டு விரிக்கிறார்கள்*நீங்கள் நடந்து செல்கிறீர்கள். அங்கே மக்கள் காலில் குத்திய முள்ளை பாதி உடைத்து எறிந்து விட்டு மீதியுடன் செருப்பில்லாமல் நடக்கிறார்கள். உங்களை அவர்களோடு ஒப்பிட முடியுமா என்று கேட்பார் .* இப்படி சினிமாவில் பேசியதோடு எம்.ஜி.ஆர். இருந்து விடவில்லை. ஏழை எளியோருக்கு, பாதுகாவலனாக தான் சம்பாதித்த பணத்தில் இருந்து எண்ணற்ற அளவில் வாரி வழங்கி உள்ளார் .* விளம்பரமின்றி பலருக்கு தான தருமங்கள், உதவிகள்*செய்துள்ளார் .* இந்திய சீன* போரின் போதும், தேசிய பேரிடர் காலங்களிலும்,*ஈழ தமிழர்களுக்காகவும் வாரி வழங்கியவர் எம்.ஜி.ஆர். முதல்வராகிய பின்பு*பல நல திட்டங்கள், ஏழைகள் , பொதுமக்களுக்கு பயனளிக்கும் வகையில்*பல மாற்றங்கள், சட்டங்கள் கொண்டு வந்தார் .வாழ்ந்தவர் கோடி, மறைந்தவர் கோடி மக்களின் மனதில் நிற்பவர் என்றும் எம்.ஜி.ஆர். என்பது இந்த மாதிரி செயல்களால்தான் என்றால் மிகையாகாது .* *
.
நிகழ்ச்சியில் ஒளிபரப்பான பாடல்கள் விவரம்*
------------------------------------------------------------------------
1.நான் பார்த்ததிலே அவள் ஒருத்தியை தான் - அன்பே வா*

2.யானையை பிடித்து (டேப் பாடல் ) -சக்கரவர்த்தி திருமகள்*

3.என்ன சுகம், என்ன சுகம், - பல்லாண்டு வாழ்க .

4.அன்றொரு நாள் இதே நிலவில் - நாடோடி*

5.புத்தன் இயேசு காந்தி பிறந்தது -சந்திரோதயம்*

*

fidowag
22nd June 2020, 11:20 PM
தனியார் டிவிக்களில் கலை*மன்னன் எம்.ஜி.ஆர். திரைப்படங்கள் ஒளிபரப்பாகிய* விவரம்*
--------------------------------------------------------------------------------------------------------------------------
*09/06/20 - முரசு - மதியம் 12 மணி / இரவு 7 மணி - வேட்டைக்காரன்*

* * * * * * * * ஷாலினி டிவி - பிற்பகல் 3 மணி - தேடி வந்த மாப்பிள்ளை*

10/06/20 -சன் லைப் - காலை 11 மணி - பல்லாண்டு வாழ்க*

11/06/20 -பாலிமர் - பிற்பகல் 2 மணி* - இன்றுபோல் என்றும் வாழ்க*

* * * * * * * *புதுயுகம் டிவி - இரவு 7 மணி - மாட்டுக்கார வேலன்*

12/06/20- சன் லைப் - காலை 11 மணி* - நான் ஏன் பிறந்தேன்*

13/06/20 - மெகா 24 டிவி - காலை 8.30 மணி - காதல் வாகனம்*

* * * * * * * *ராஜ் டிஜிட்டல் ப்ளஸ் - இரவு 7 மணி - மாட்டுக்கார வேலன்*

14/06/20-முரசு - மதியம் 12 மணி / இரவு 7 மணி - நீதிக்கு பின் பாசம்*

* * * * * * * *வசந்த் டிவி - பிற்பகல் 1.30 மணி - கலையரசி*

15/06/20- சன் லைப் - காலை 11 மணி - நாளை நமதே*

* * * * * * * வசந்த் டிவி - பிற்பகல் 1.30 மணி - தாய் சொல்லை தட்டாதே*

* * * * * * புதுயுகம் டிவி* - இரவு 7 மணி - தாயை காத்த தனயன்*

* * * * * *மூன் டிவி* - இரவு 7.30 மணி - ஆனந்த ஜோதி*

* * * * * * பாலிமர் டிவி - இரவு 11 மணி - அரச கட்டளை*

16/06/20 - ஜெயா மூவிஸ் - காலை 7 மணி - பாசம்*

* * * * * * *சன் லைப் - காலை 11* மணி - திருடாதே*

* * * * * * முரசு - மதியம் 12 மணி / இரவு 7 மணி -நான் ஏன் பிறந்தேன்*

17/06/20-ஜெயா மூவிஸ் - காலை 7 மணி - தாய்க்கு பின் தாரம்*

* * * * * * *சன் லைப்* - காலை 11 மணி* - நீரும் நெருப்பும்*

* * * * * * *வசந்த் டிவி -பிற்பகல் 1.30 மணி -பெற்றால்தான் பிள்ளையா*

18/06/20-சன் லைப்* -காலை 11 மணி - ஒரு தாய் மக்கள்*

* * * * * * *புதுயுகம் டிவி - இரவு 7 மணி - சங்கே முழங்கு*

19/06/20-சன் லைப் - காலை 11 மணி -நீதிக்கு தலைவணங்கு*

20/06/20 - மெகா 24 டிவி -காலை 8.30 மணி -நீதிக்கு பின் பாசம்*

* * * * * * * *ராஜ் டிஜிட்டல் -காலை 9.30 மணி - மதுரை வீரன்*

* * * * * * * சன் லைப் - காலை 11 மணி - நினைத்ததை முடிப்பவன்*

* * * * * * * மெகா டிவி* -மதியம் 12 மணி -கலங்கரை விளக்கம்*

* * * * * * *முரசு டிவி - மதியம் 12 மணி / இரவு 7 மணி -நீதிக்கு தலைவணங்கு*

* * * * * * *ராஜ் டிஜிட்டல் - இரவு 7.30 மணி - உலகம் சுற்றும் வாலிபன்*

* * * * * * மெகா 24 டிவி - இரவு 9 மணி* - காதல் வாகனம்*

21/06/20 -சன் லைப் - காலை**11 மணி - நவரத்தினம்*

* * * * * * * * மெகா 24 டிவி - பிற்பகல் 2.30 மணி - தாயின் மடியில்*

orodizli
23rd June 2020, 08:47 AM
( நாடோடி மன்னன் )

நடிப்பு –

எம். ஜி. ராமச்சந்திரன்,எம். என். நம்பியார், சக்கரபாணி, சந்திரபாபு, வீரப்பா, பானுமதி, ஜி. சகுந்தலா, பி. சரோஜாதேவி, எம். என். ராஜம்.

தயாரிப்பாளர் –

எம். ஜி. ராமச்சந்திரன் – எம். ஜி. ஆர். பிக்சர்ஸ்.

இயக்குனர் –
எம். ஜி. ராமச்சந்திரன்

இசையமைப்பு –
எஸ். எம். சுப்பைய்யா நாயுடு, என். எஸ். பாலகிருஷ்ணன், ஆத்மானந்தன்

வெளியீடு நாட்கள் –
ஆகஸ்ட் 22, 1958.

புரட்சி நடிகர் முதன் முதலில் இரட்டை வேடம் ஏற்று நடித்து வெளிவந்த படைப்பு வெள்ளி விழா காவியம்.

1958-ம் ஆண்டு தீபாவளி அன்று சிங்கப்பூர் நகரங்களில் திரையிடப்பட்டு மாபெரும் சாதனை படைத்த படம் நாடோடி மன்னன். தமிழ் படங்களில் அன்றைய சிங்கப்பூர் மிகப்பெரிய திரையரங்கில் அதிக வசூல் சாதனை செய்த காவியம்.

1958 – ல் 50 திரையரங்கில் 50 நாள் ஓடி அதிக வசூல் பெற்று(1 கோடியே 10 லட்சம் ) சாதனைபுரிந்த காவியம் (50 திரையரங்கு என்பது இரண்டாம் வெளியீட்டும் சேர்த்து).

“முதன் முதலில் தலைநகர் சென்னையில் மூன்று அரங்கில் 100′ காட்சி மேல் தொடர்ந்து ஹவுஸ்ஃபுல் ஆன காவியம்.

சேலம் சித்தேஸ்வரா அரங்கில் வெள்ளிவிழா கண்ட ஒரே படம் இது. புரட்சி நடிகர் கலையுலகில் நடிக்கும் வரை சேலம் நகரில் வெள்ளி விழா கண்ட ஒரே காவியமும் நாடோடி மன்னன் ஒன்றே !

“திருவண்ணமலையில் 100 நாள் கண்ட படமும் ! (இரண்டாம் வெளியீட்டில் முதல் முதலில் 100நாள் கண்ட முதல் காவியமும் இதுவே ! அரங்கு கிருஷ்ணா 113நாள்.

சென்னை கிருஷ்ணா அரங்கில் அதிக நாள் ஓடிய ஒரே காவியம் ( 3காட்சியில்) 161 நாள்.

இலங்கை மாநகரில் 6 அரங்குகளில் 100 நாள் கண்ட ஒரே காவியம் இது ஒன்றே !

“சிறந்த இயக்குநர் விருது “சினிமாகதிர் ” புரட்சி நடிகருக்கு வழங்கியது.

“லண்டன் ‘ தமிழ் சங்கத்தில் கலந்து கொண்ட முதல் தமிழ் காவியம்.

“சிறந்த இயக்குநர் விருது சிங்கப்பூர் பத்திரிக்கையும் மக்கள் திலகத்திற்கு வழங்கியது.

மும்பை, கல்கத்தா ஆகிய வட இந்தியாவிலும் முதன் முதலில் 50 நாட்களுக்கு மேல் ஓடி சாதனை படைத்த காவியம் நாடோடி மன்னன்.

1958-ல் சிறந்த படமாக தேர்ந்து எடுக்கப்பட்ட காவியம்.

“லண்டன்” மாநகர் திரையரங்கு ஒன்றில் சுமார் 8 வாரம் ஒடிய ஒரே தமிழ் காவியம் இது ஒன்றே !

ஆந்திர மாநிலமான “சித்தூரில் ” 100 நாள் கண்ட ஒரே தமிழ் காவியம் இது ஒன்றே !

முதன் முதலில் ஒரு படத்தின் வெற்றி விழாவை பொது மக்கள் பார்வையில் ( தமிழகம் முழுவதும்) கொண்டாடிய முதல் காவியம் ! நாடோடி மன்னனே !

“இவர் காவியத்திற்காக புரட்சி நடிகருக்கு 110 “சவரன்” தங்க வாள் பேரறிஞர் அண்ணா அவர்களால் வழங்கப்பட்டு, பின் புரட்சி நடிகர் அந்த தங்க வாளை…. சாமுண்டீஸ்வரி கோயிலுக்கு இலவசமாக வழங்கினார்.

சீர்காழியில் “இன்பக்கனவு “நாடகத்தில் புரட்சி நடிகர் நடித்த போது, கால் உடைந்து பல மாதங்கள் ஓய்வு எடுக்க டாக்டர்கள் சொன்னதால் 31.12.1959 அன்று தான் புரட்சி நடிகர் நடித்த ‘தாய் மகளுக்கு கட்டிய தாலி’ படம் வெளிவந்தது. ஆகையால் 1959-ம் ஆண்டும் ‘நாடோடி மன்னன்’ தமிழகம் முழுவதும் வசூலை வாரி தந்தது.

“ஒரு முன்னணி (கதாநாயகன்) நடிகராக யிருந்து முதன் முதலில் தயாரித்து இயக்கிய வெற்றி படமாகக் தந்தவர் புரட்சி நடிகரே.

“நடிகை அபிநய சரஸ்வதி B.சரோஜாதேவி அறிமுகமான முதல் படம். B. சரோஜாதேவி பின் நாளில் 26 படங்களில் மக்கள் திலகத்துடன் கதாநாயகியாக நடித்தார்.

“பாதி கறுப்பு வெள்ளை, பாதி கலர் படமாக முதல் முதலில் வெளிவந்த படம்.

“அதிக நேரம் (நான்கு மணி நேரம்) ஓடிய படம் இன்று வரை நாடோடி மன்னன் மட்டுமே.

“தமிழ் மொழியின் சிறப்பை உணர்த்தும் பாடல் டைட்டில் சாங்ஸ், (செந்தமிழே வணக்கம்) உழைப்பை உணர்த்தும் பாடல் (உழைப்பதிலா), சோம்பேறி தனத்தை சாடும் பாடல்(தூங்காதே தம்பி) ஆக மூன்று கருத்துகள் உணர்த்தும் பாடல்கள் அமைந்தஒரே காவியம்.

“அரண்மனை சிறைசாலையில் கீழ் தளத்திலிருந்து மேல் தளத்திற்கு ஒரு பெரிய குழாயின் மூலமாக இரு புரட்சிகாரர்கள் (புரட்சி நடிகரும் -பானுமதியும்) தொடர்பு கொள்வது எப்படி என்பது பற்றி புதுமையான முறையில் அன்றைக்கு கேமராவில் எடுத்துக் காட்டிய காவியம் நாடோடி மன்னன்.

“ஒரே நடிகர் இரு வேடங்களில் நடித்து படங்களின் இடம் பெறும் ஒரே காட்சியில் இருவரும் கை கொடுப்பது முகத்தை தொட்டு பேசுவதும் போன்ற புதுமையான காட்சிகள் இடம் பெற்ற முதல் தமிழ் காவியம்.

“10- க்கும் மேற்பட்ட பாடல்கள் (ஹிட் சாங்ஸ்) அனைத்தும் இன்றைக்கும் ரசிகர்கள் மத்தியில் ஒலித்து கொண்டிருக்கும் சாதனை காவியம் நாடோடி மன்னன்.

“கண்ணாடி மாளிகை சண்டை காட்சியில் கண்ணாடி முழுவதும் தூள் தூள்ளாக உடைந்து சிதறுவது போல் ஆங்கில படத்துக்கு இணையாக (அதிக செலவு) எடுத்த காவியம்.

“அரண்மனையில் மன்னர்கள் ரகசிய வழியில் (சுரங்கப் பாதை) செல்வது எப்படி என்பதை பிரமிக்க கூடிய அளவுக்கு காண்பித்த காவியம்.

“கதாநாயகி (பானுமதி) இறந்துவிட்ட செய்தி படத்தில் காண்பிக்கும் பாணி ; ஒரு பணி பெண் பால் பாத்திரத்தை கொண்டு வரும் போது, கதாநாயகன் எதிரே ஓடி வந்ததால் அந்த பால் கீழே கொட்டிவிடுகிறது. மேலே ஒரு வரைபடத்தில் அம்பு பட்ட மான் இறந்து கிடப்பது போல் காண்பிப்பார்கள். புதுமையான முறையில் காட்சியை உருவாக்கும் முறையில் முழு வெற்றியை தந்த காவியம். இன்றைக்கும் இந்த காட்சி திரையரங்கில் கைதட்டல் பெறும்.

தமிழகத்தில் வெளிவந்த ஒரு திரைப்படத்திற்கு சிங்கப்பூரில் வெளிவரும் ‘இந்தியன் மூவி நீயூஸ்’ என்ற இதழ் முதல் முதலில் நாடோடி மன்னனுக்கு சிறப்பு மலர் வெளியிட்டது.

தமிழகத்தில் நாடோடி மன்னன் காவியத்திற்கு 10 க்கும் மேற்பட்ட பத்திரிகைகள் சிறப்பு மலர் வெளியிட்டன.

தமிழகத்தில் வெளிவந்த அனைத்து பத்திரிகைகளில் நாடோடி மன்னன் காவியத்திற்கு அதிக விமர்சனம் (பாராட்டு) கிடைத்தது.

“4 மணி நேரம் ஓடுகின்ற திரைப்படத்தில் சிக்கலே இல்லாத கதை அமைப்பு கொண்டது. ஒரு பாமரனுக்கும் புரிகின்ற அளவுக்கு எளிமையான முறையில் வலுவான கருத்துகளோடு அமைத்து திறமையாக இயற்றி வெற்றி வாகை சூடிய காவியம்.

“வசனத்தில் புதுமை புரட்சி கருத்துகள், சிறை அனுபவங்கள், ராஜ தந்திரங்கள், நகைச்சுவை, காதல்,அன்பு,சகோதரி, சகோதரன் போன்ற பல விதமான பாத்திரங்களுக்கு சிறப்பாக வசனங்கள் அமைந்த காவியம் நாடோடி மன்னன்.

Thanks Google..........

fidowag
24th June 2020, 07:56 PM
இன்று (24/06/20) கவிஞர் கண்ணதாசன் பிறந்த நாள்*
-----------------------------------------------------------------------------------------
பழம்பெரும் நடிகை சரோஜாதேவி முன்பு பத்திரிகைக்கு அளித்த பேட்டி*
-------------------------------------------------------------------------------------------------------------------
கவிஞர் கண்ணதாசன் விருது வாங்குவதற்கு ஒரு முறை சென்னை வந்திருந்த*நடிகை சரோஜாதேவி , வார்த்தைக்கு, வார்த்தை மக்கள் திலகம் எம்.ஜி.ஆரை*புகழ்ந்து பேசினார் .

என் அன்பு தெய்வம், என் மானசீக குரு , எம்.ஜி.ஆர். மட்டும் அன்று இல்லாமல் போயிருந்தால் கவிஞர் கண்ணதாசன் முகத்தை , அவர் மறைந்த பிறகு 1981ல்*தமிழ்நாட்டு மக்கள் பார்த்திருக்க முடியாது ., என்று மேடையிலேயே பேசினார் . அமெரிக்காவில் இறந்து போன கவிஞர் கண்ணதாசன் உடலை விமானம் மூலம்*கொண்டுவர ஏற்பாடு செய்திருந்தார் எம்.ஜி.ஆர். அவர்கள்

fidowag
25th June 2020, 10:04 PM
தனியார் தொலைக்காட்சிகளில் நடிக*பேரரசர் எம்.ஜி.ஆர். திரைக்காவியங்கள்*ஒளிபரப்பாகிய /ஒளிபரப்பாகும் விவரம்*
-------------------------------------------------------------------------------------------------------------------------------
22/06/20* - புது யுகம் டிவி - இரவு 7 மணி* - குடும்ப தலைவன்*

* * * * * * * * *பாலிமர் டிவி - இரவு* 11 மணி* - நீரும் நெருப்பும்*

23/06/20* *முரசு டிவி - மதியம் 12 மணி /இரவு 7 மணி - விவசாயி*

* * * * * * * * சன் லைப் - மாலை 4 மணி* - நல்ல நேரம்*

24/06/20 - வேந்தர் டிவி - காலை 10 மணி - தாய் சொல்லை தட்டாதே*

* * * * * * * * சன் லைப் - காலை 11* மணி - இதயக்கனி*

* * * * * * * * மீனாட்சி டிவி - மதியம் 12 மணி - வேட்டைக்காரன்*

* * * * * * * மெகா டிவி* - இரவு 8 மணி* - குடியிருந்த கோயில்*

25/06/20 -புது யுகம் டிவி - இரவு 7 மணி - பெற்றால்தான் பிள்ளையா*

* * * * * * * மூன் டிவி* - இரவு* 7.30 மணி* - முகராசி*

* * * * * * *பாலிமர் டிவி* - இரவு 11 மணி - நீதிக்கு பின் பாசம்*

26/06/20- ஜெயா மூவிஸ் - காலை 7 மணி -குமரிக் கோட்டம்*

* * * * * * * மெகா 24 டிவி* - காலை 8.30 மணி -தாயை காத்த தனயன்*

orodizli
30th June 2020, 11:54 AM
1977 ஜூன் 30 #மக்கள்திலகம் முதன் முதலாக தமிழகத்தின் 6-ஆவது முதல்வராக பதவியேற்ற நாள் இன்று..

பதவியேற்ற பின் முதன் முதலாக அலுவலகம் செல்கிறார். அங்கு அரசு உயர் அலுவலர்களின் ஆலோசனை கூட்டதிற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

காலை பத்து மணி, கோட், சூட் சகிதமாய் அரசு உயர் அலுவலர்கள், மாவட்ட ஆட்சியாளர்கள் அலோசனை அரங்கத்துக்குள் குழுமியிருந்தனர்.

சிறிது நேரத்தில் tmx 4777 பதிவு எண் கொண்ட அவரின் பச்சை நிற அம்பாசடர் கார் விரென்று அங்கு நுழைகிறது.

காலத்தை வென்ற காவிய நாயகன் கார் கதவை திறந்து முதன் முறையாக அலுவல வாசலில் கால் பதிக்கிறார்.

காத்திருந்த காவல் உயர் அலுவலர்கள் விரைப்புடன் சல்யூட் வைக்க... அரசு உயர் அலுவலர்கள் பூங்கொத்து கொடுத்து வரவேற்க..

பாதுகாவலர்கள் புடைசூழ விடுவிடு என ஆலோசனை அரங்கத்திற்குள் நுழைகிறார்.

"ஆட்சியை மக்கள் என்னிடம் நம்பி ஒப்படைத்து இருக்கிறார்கள். உடனடியாக அவர்களுக்கு செய்ய வேண்டிய நல்ல திட்டங்களை சொல்லுங்கள். ஆக வேண்டியதை நான் பார்த்து கொள்கிறேன்"

-என்று மாவட்ட ஆட்சியர்களிடமும், உயர் அலுவலர்களிடமும், ஆலோசனை கேட்கிறார்.

அப்பொழுது அந்த நேரத்தில், அந்த அந்த அரங்கு ஓரத்தில் வண்ணம் பூசிக் கொண்டிருந்த ஒரு இளைஞர், எவரையும் அனுமதிக்காத அந்த கூட்ட வளாகத்துக்குள் தடையை மீறி நுழைந்து விடுகிறார்.

காவலர்களின் கட்டுப்பாட்டை மீறினாலும் அந்த மக்கள் தலைவர், அந்த மனிதரை அருகில் அழைத்து, வந்த நோக்கத்தை சொல்ல சொல்கிறார்..

"எனக்கென்று எதுவும் கேட்க வரவில்லை. தலைவா! கிராமங்களில் இன்னமும் பாமர மக்கள் மக்கி போன சோளக் கூழைத்தான் சாப்பிட்டு வருகிறார்கள்.

நெல்லுச்சோறு என்பது மாசத்துல ஒருநாள் அல்லது வாரத்துல ஒருநாள், இல்லாட்டி நல்ல நாள் பெரிய நாளைக்குத்தான் நெல்லு சோற்றை பார்க்க முடியுது.

இது நமக்கு ஆண்டவன் விதித்த விதி என்றே மக்கள் நம்பி கொண்டிருக்கிறார்கள். அந்த அளவுக்கு வறுமையை பழகிக்கொண்டு, சகித்துவாழ முன்பிருந்த ஆட்சியாளர்களால் பழக்கப்படுத்த விடப்பட்டிருக்கிறார்கள்.

அதை மட்டும் போக்கி காட்டுங்கள். உங்கள் ஆட்சியை பொற்கால ஆட்சி என்று போற்றப்படும்." என்கிறார்.

'கூறியவன் ஒரு எளியவன்தானே' என்று நினைக்காமல், "அந்த குடிமகனின் கோரிக்கையை குறித்து கொள்ளுங்கள்" என்று அங்கிருந்த அலுவலகளிடம் ஆணையிடுகிறார்.

"கொடுமையிலும் கொடுமையான பசியை போக்க வேண்டும். உங்களுக்கு தெரியமோ? தெரியாதோ? ஆனால், எனக்கு தெரியும் பசியின் கொடுமை.

என் ஆட்சியில் 'பாலாறு தேனாறு ஓடும்' என்றெல்லாம் சொல்ல மாட்டேன். ஆனால் மக்கள் பசிக் கொடுமையை அனுபவிக்க ஒருக்காலும் விட மாட்டேன்.

என் மக்கள், தினமும் அரிசி சோறு சாப்பிடுவதற்கான திட்டத்தை சொல்லுங்கள். அதற்கு ஆகும் செலவை சொல்லுங்கள். நிதி ஒதுக்கி தருகிறேன்.

என் மக்கள் பசி போக்க அரிசி எங்கிருந்து கிடைத்தாலும் எப்பாடு பட்டாவது,வாங்கி வருகிறேன்.

உங்களுக்கு அரைமணி நேரம் அவகாசம் தருகிறேன். திட்டமிட்டு சொல்லுங்கள்"

-என்று மேசை மீது கிடந்த நாளிதழை எடுத்து புரட்ட ஆரம்பிக்கிறார் புரட்சித்தலைவர்.

அரைமணி நேரத்திற்கு பிறகு 'அந்த திட்டத்திற்கு ஆகும் செலவு' என்று ஒரு தொகையை சொல்கின்றார்கள் அலுவலர்கள்.

உடனே புரட்சித்தலைவர் அவர்கள் "இரண்டு மடங்காக்கி தருகிறேன்" என்று அந்த இடத்திலேயே ஆணையிட்டார்..

ஒரு எளிய குடிமகன் வைத்த கோரிக்கையை வேதமாக எடுத்து செயல்பட்டிருக்கிறார் மக்கள் திலகம்!

புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் ஆட்சிக் காலத்தில் தான் கிராமங்களில் இதுவரை சோளக்கூழை சாப்பிட்டு வந்த மக்களுக்கு மூன்று வேலையும் அரிசி சோறு சாப்பிடும் வாய்ப்பு கிடைத்தது............

orodizli
30th June 2020, 11:56 AM
30.6.1977

புரட்சித்தலைவர் எம்ஜிஆர் தமிழக முதல்வராக பதவி ஏற்ற தினம் ,
************************************************** *****************************************
43 ஆண்டுகள் முன்பு இதே நாளில் மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்கள் தமிழக முதல்வராக பதவி ஏற்று சென்னை அண்ணா சாலையில் 20 லட்சம் மக்கள் முன்னிலையில் உரையாற்றிய வரலாற்று சிறப்பு மிக்க தினம்

1954ல் மலைக்கள்ளனில் திமுக அரசியல் கொள்கைகளை பாடல்கள் மற்றும் காட்சிகள் மூலம் மக்களுக்கு அறிமுகம் செய்தார் .1956ல் மதுரை வீரனில் தாழ்த்தப்பட்ட மக்களுக்காக போராடிய காட்சிகளை மறக்க முடியாது .

1957ல் வெளிவந்த சக்கரவர்த்தி திருமகள் படத்தில் எம்ஜிஆர் பெயர் உதய சூரியன் .

1958ல் வெளிவந்த நாடோடிமன்னன் - 100 சதவீத திமுகவின் லட்சிய காவியம்

1959- 1977 வரை வெளிவந்த அவருடைய எல்லா படங்களிலும் கட்சியின் சின்னம் ,கொடி
கொள்கை பாடல்கள் இடம் பெற்று இருந்தது .

1967ல் திமுக கட்சியை ஆட்சியில் அமர்த்தினார் .

1971 ல் மீண்டும் திமுக கட்சியை ஆட்சியில் அமர்த்தினார் .

1977ல் அதிமுகவின் தலைவராக தமிழக முதல்வராக பதவி ஏற்று உலக அரசியல் அரங்கில் தனக்கென்று ஒரு முத்திரையை பதித்தார் .

கோடிக்கணக்கான எம்ஜிஆர் ரசிகர்கள் கொண்டாடும் இனிய திரு நாள் இன்று ...........

orodizli
30th June 2020, 11:57 AM
#நிழலும் #நிஜமும்

#வாத்தியார்

தனது வெற்றிக்குக் காரணமான பிம்பங்களைத் தானே உருவாக்கினார். பிறகு அவற்றுக்கு இசைவான, அவற்றை நிஜம் என நம்ப வைக்கும் ஒரு வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்தார். #சிக்கலான, #சவாலான #காரியம் #இது. #அதை #நிறைவேற்றுவதற்கு #அவர் #படாதபாடுபட #வேண்டியிருந்தது. தனது நாற்தாண்டுகாலப் பொது வாழ்வில் சில அவமானங்களைக்கூடச் சந்திக்க வேண்டியிருந்தது, கேலிக்கிடமான சமரசங்களுக்குட்பட வேண்டியிருந்தது. ஆனால் இறுதியில் பல நம்ப முடியாத வெற்றிகளைக் குவிப்பதற்கு ஈடுஇணையற்ற அந்தத் திரைப்பட நாயகனால் முடிந்தது.

உலகில் எம்ஜிஆரைப் போல ஈடுஇணையற்ற வெற்றிகளையும், மக்களின் இதயசிம்மாசனங்களில் நிரந்தமாக அமர்ந்திருப்பதையும் இதுவரை யாரும் பெற்றதுமில்லை. இனி பெறப்போவதுமில்லை. இது சத்தியம் ...

நான் ஆணையிட்டால் அது நடந்துவிட்டால் இங்கு ஏழைகள் வேதனைப்பட மாட்டார் என சவுக்கைச் சுழற்றிக்கொண்டு அவர் பாடி வருவது ஒரு திரைப்படக் காட்சி மட்டுமேதான்.
#ஏழைப்பங்காளனாக #மக்கள் #மனதில் #நிரந்தரமாகப் #பதிந்தேவிட்டார்.

நம்ப முடியாத அளவுக்கு வசீகரமான அந்த பிம்பங்கள் உருவாக்கப்பட்ட விதம் முக்கியமானது. அவரது நடிப்பில் உருவான நூற்றுக்கணக்கான திரைப்படங்களுக்கும், பாடல்களுக்கும் அதில் பெரும் பங்கு உண்டு.

பொதுக்கூட்டங்களில் பங்கேற்க காரிலிருந்து இறங்கித் திரண்டிருக்கும் மக்கள் வெள்ளத்தைக் கடந்து அவர் நடந்து வரும்போது

"காலத்தை வென்றவன் நீ,
காவியமானவன் நீ,
வேதனை தீர்ப்பவன்,
விழிகளில் நிறைந்தவன்,
வெற்றித் திருமகன் நீ நீ"

என முழங்கும் இசைத்தட்டுக்கு அவரை, அவரது பிம்பங்களை உருவாக்கியதில் என்ன பங்கு? இசைத்தட்டை ஒலிக்கவிடும் தருணமேகூட மிகத் துல்லியமாய் முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்டது போல் தோன்றும். காரிலிருந்து இறங்கி அவர் தன் பாதங்களைத் தரையில் ஊன்றி நடக்கத் தொடங்கும்போது,

"நடந்தால் அதிரும் ராஜநடை,
நாற்புறம் தொடரும் உனது படை"

என்னும் வரிகள் ஒலிக்கத் தொடங்கியிருக்கும். பாதுகாவலர்களும் அமைச்சர்களும் தொண்டர்களும் நிஜமாகவே நாற்புறமும் அவரைத் தொடர்வார்கள்.

#தனது #கதாபாத்திரங்களின் #அத்துணை #தன்மைகளையும் #தன் #நிஜவாழ்விலும் #சிறிதும் #பிசகாது #கடைபிடித்ததால் #இன்றும் #இறைவனாக #வணங்கப்படுகிறார்.

fidowag
30th June 2020, 09:03 PM
தனியார் தொலைக்காட்சிகளில் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். திரைப்படங்கள் ஒளிபரப்பு விவரம் .
--------------------------------------------------------------------------------------------------------------------------
27/06/20 -சன் லைப் - காலை 11 மணி - தேடி வந்த மாப்பிள்ளை*

* * * * * * * மெகா டிவி* - மதியம் 12 மணி - ஆனந்த ஜோதி*

* * * * * * *மூன் டிவி* - பிற்பகல் 12.30 மணி - வேட்டைக்காரன்*

* * * * * * *மீனாட்சி டிவி - மதியம் 12 மணி - நல்ல நேரம்*

* * * * * * வெளிச்சம் டிவி - பிற்பகல் 2 மணி - குடும்ப தலைவன்*

* * * * * * *ராஜ் டிஜிட்டல் ப்ளஸ் -இரவு 7.30 மணி -அடிமைப்பெண்*

* * * * * * பூட்டோ டிவி - இரவு 7.30 மணி - குடியிருந்த கோயில்*

* * * * * *ஷாலினி டிவி - இரவு 8 மணி* - குடியிருந்த கோயில்*

* * * * * மெகா 24 டிவி - இரவு 9 மணி* - நீதிக்கு பின் பாசம்*


28/06/20-பூட்டோ டிவி - பிற்பகல் 2 மணி* - நம் நாடு*

* * * * * * *- மெகா 24* டிவி - பிற்பகல் 2.30 மணி - முகராசி*


* * * * * * * *முரசு டிவி - பிற்பகல் 3.30 மணி - கொடுத்து வைத்தவள்*

29/06/20 -சன்* லைப் - காலை 11 மணி - வேட்டைக்காரன்*

* * * * * * * * புது யுகம் டிவி - இரவு 7 மணி - நீதிக்கு தலைவணங்கு*

30/06/20* -ஜெயா மூவிஸ் -காலை 7 மணி - விக்கிரமாதித்தன்*

* * * * * * * *மூன் டிவி* - பிற்பகல் 12.30 மணி - குடும்ப தலைவன்*

* * * * * * * சன் லைப்* - மாலை 4 மணி* - எங்கள் தங்கம்*

orodizli
1st July 2020, 10:22 AM
மக்கள் திலகம் எம்.ஜி.ஆரி.,ன் சத்துணவு தொடங்கப்பட்ட பொன்நாள இன்று ...01-07-1982...

ஐக்கிய நாடுகள் சபை பாராட்டிய ஒரே முதல்வர் எம்.ஜி.ஆர் .,
சீருடையுடன் ஆண்டான் அடிமை செருப்பை கையில் துக்கி நடத்த வீதிகளில் செருப்பு அணிந்து வீரநடை போட்டு குழந்தைகள் பள்ளி சென்று பசி ஆற உண்டு நல்ல பாடம் படித்து வாழ்வு பெற்ற நாள் இன்று...

எம்ஜிஆர் தமிழகத்திற்க்கு உலகதர அண்ணா பல்கலை கழகம் முதல் எட்டு அரசு பல்கலை கழகம் தந்து தமிழகத்ததை இந்தியாவிலே முதல் மாநிலமாக மாற்றினார்...

தமிழகத்தின் கல்வி ஆண்கடவுள் எம்ஜிஆர்

எம்ஜிஆர் புகழ் வளர்க...வாழ்க ...

orodizli
1st July 2020, 10:24 AM
காட்சிக்கு எளியவனாய் இருந்து இன்சொல்லால் இனிமையாகப் பேசுவது :

புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரைவிட எளிமையான ஒரு மனிதரைப் பார்க்க இயலுமா ? திரைப்படத்துறையில் முடிசூடா மன்னன். அரசியலில் முடிசூடிய முதல்வர். ஆனாலும் காட்சிக்கு எளியவர். மிகவும் ஆடம்பரமான உடைகளை படப்பிடிப்புகளில் மட்டுமே அணியும் அவர், விரும்புவது வெள்ளை நிற வேட்டிகளும், வெள்ளை நிற முழுக்கை சட்டை களையும் தான் 120ம் எண்ணுள்ள அந்த வேட்டியை மல்லிகை பூ வேட்டி என்பார்கள். இடுப்பில் இருப்பதே தெரியாமல் பூ போன்று இருக்குமாம். இந்த ரக வேட்டிகள் ஸ்பெஷலாக 48 குஞ்சம் வைத்து நெய்திருப்பார்கள்.

அவரைப் பார்த்து அந்த நாளில் அரசியல்வாதிகள் பலர் இந்த வேட்டிகளை அணிந்திருக்கிறார்கள். ஆனால் இப்போது இந்த ரக வேட்டிகள் கடைகளில் கிடைப்பதில்லை. 120ம் நம்பர் மல்லிகை பூ வேட்டி புரட்சித் தலைவரோடு மறைந்து போய்விட்டது என்று சொல்கிறார்கள்.

புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரை யார் வேண்டுமானாலும் எளிமையாக சந்தித்துப் பேசலாம். சென்னையில் அவர் இருக்கும்போது காலையில் ராமாவரம் தோட்டத்தில் அடையா நெடுங்கதவு தாண்டி பார்வையாளர்கள் இருக்கும் இடத்தில் நின்றால் போதும். திருக்கோயிலின் தலை வாசல் தாண்டி வெள்ளை உடையில் ரோஜா வண்ண தேவனாய் எதிரில் காட்சி கொடுப்பார். அவரிடம் குறைகளைச் சொல்லி முறையிடலாம்.

தேவைகளை அழுது கேட்கலாம். வேண்டியவர் - வேண்டாதவர் ஏழை, பணக்காரர், படித்தவர் ,படிக்காதவர் என்னும் பேதம் பார்க்காத மனம் அது . தெய்வம் எப்படி தனக்கு பத்து பைசா கற்பூரம் கொளுத்தும் பக்தனையும் 10 லட்சம் செலவு செய்து தங்க கிரீடமும் கவசமும் அணிவிக்கும் பக்தனை யும் ஒன்றாய் நினைத்து பக்திக்கு ஏற்ப அருளுகிறதோ அதைப்போலவே தன்னை நாடி வருபவர்களின் தேவையறிந்து வாரிக் கொடுக்கும் வள்ளல் அவர். காட்சிக்கு எளியவர் எம்ஜிஆர் என்பதை உலகமே அறியும்.

இன்சொல்லைத் தவிர வேறு பேசி அறியாதவர் புரட்சித் தலைவர். நிஜவாழ்வில் மட்டுமல்ல திரைப்படத்தில் கூட கடுஞ்சொல் சொல்லி யாரும் கேட்டிருக்க முடியாது. கடுஞ்சொல் பேசியிருந்தால் இத்தனை கோடி மக்களை அவர் மீது அன்பாய் இருக்க கட்டிப்போட்டு இருக்க முடியாது. எப்போதும் சிரித்த முகமும் அன்பான இன்சொல்லுமே அவருடைய அடையாளம் என்று சொல்லலாம். அரசியல் ரீதியாக அவரை குற்றம் குறை சொல்லி எதிர்ப்பவர்கள் கூட அவரை அன்பு மனதை மலர்ந்து சிரிக்கும் ரோஜா பூ முகத்தை ... இனிமையே நிறைந்த பேச்சை குற்றம் சொல்லவே மாட்டார்கள்.

மேடையில் அவர் என் ரத்தத்தின் ரத்தமான உடன்பிறப்புகளே என்று ஒரே ஒரு சொல் சொன்ன மாத்திரத்தில் மக்கள் தரும் கையொலியும் விசில் சத்தமும் நிற்க குறைந்தது பத்து நிமிடங்களாவது ஆகும் . துப்பாக்கியால் சுடப்பட்டு பழைய கம்பீரக் குரலை அவர் இழந்த போதும் மக்கள் அவருடைய புது குரலையும் ரசித்தார்கள். ஏனென்றால் சத்தம் மாறினாலும் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் இன்சொல் மாறவில்லையே. அவரது பாசத்தின் வெளிப்பாடு தடங்கலாகவில்லையே... அவருடைய ஆதரவு எப்போதும் தடைபடவில்லையே ... அந்தக் குரல் மாற்றத்திற்குக் பிறகுதான் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் தங்கத் தமிழ்நாட்டின் முதல்வரானார். மக்கள் அவரை தெய்வத்துக்கு இணையாக கொண்டாடினார்கள் ஏனென்றால் அவருடைய இன்சொல்லும் காட்சிக்கு எளியவராக இருந்து அவர் செயல்பட்டதும்தான் .

அமெரிக்காவில் சிகிச்சை பெற்று அவர் திரும்பியபோது பேசமுடியாத நிலையிலும் பொதுக்கூட்டத்திற்கு சென்றார். மக்கள் கூட்டத்தைப் பார்த்ததும் பேச முயற்சித்தவரை மக்களே தடுத்த நிகழ்வுகள் உண்டு . #உங்களைப் #பார்த்ததே #போதும் #தலைவா ... நீங்கள் பேசவேண்டாம் என்று மக்கள் கூறியதெல்லாம் வரலாறு.

புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரிடம் மக்களுக்கு எந்தவிதமான பயமோ தள்ளி நிற்க வேண்டும் என்னும் தயக்கமோ கிடையாது. ஏனென்றால் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் அவர்களுடைய மகன், அவர்களுடன் பிறந்த அண்ணன் , நன்மை மட்டுமே செய்யும் தெய்வம் , அறிவு போதித்த வாத்தியார் , வீரம் தந்த தந்தை , உணவிட்ட அன்னை ...

எப்படி ஒரு நாட்டின் மன்னன் தன் குடிமக்களுக்கு எல்லாமுமாக இருந்தானோ. அதைப்போலவே மக்கள் தலைவர். எம்.ஜி.ஆரும் தமிழக மக்களுக்கு எல்லாமுமாகவே இருந்தார்.

கொடை வள்ளல் எம்ஜி.ஆர் புகழ் வாழ்க...

orodizli
1st July 2020, 10:26 AM
திரைப்பட வரலாற்றில் ஒரு சில நிகழ்வுகள் அதிசயமாக நிகழ்கின்றன. உதாரணம்

மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரித்த தமிழின் முதல் வண்ணப்படம் ‘அலிபாபாவும் 40 திருடர்களும்’.

எம்.ஜி.ஆர். பிக்சர்ஸ் சார்பில் முதன்முதலில் பகுதி கலரில் தயாரிக்கப்பட்ட படம் ‘நாடோடி மன்னன்.’

சரவணா ஃபிலிம்ஸ் பட நிறுவனம் தயாரித்த முதல் வண்ணப்படம் ‘படகோட்டி.

’ விஜயா கம்பைன்ஸ் தயாரித்த தமிழின் முதல் வண்ணப்படம் ‘எங்க வீட்டுப் பிள்ளை.’

ஏவி.எம் சார்பில் தயாரிக்கப்பட்ட
‘அன்பே வா’ படம்தான் அந்நிறுவனத்தின் முதல் வண்ணப்படம்.

ராமண்ணாவின் r.r.பிக்சர்ஸ்நிறுவனத்தின் சார்பில் தயாரிக்கப்பட்ட முதல் தமிழ் வண்ணப்படம் பறக்கும் பாவை.

சத்யா மூவிஸ் பேனரில் தயாரான முதல் வண்ணப்படம் ‘ரிக்ஷாக்காரன்’.

தேவர் ஃபிலிம்ஸ் முதல் வண்ணப்படம் ‘நல்ல நேரம்’.

பெரும் பட நிறுவனமான ஜெமினி தயாரித்த முதல் வண்ணப் படமும்
'ஒளி விளக்கு '

இதில் என்ன ஒரு விசேஷம் எனில், எல்லா படங்களிலும் கதாநாயகன் #மக்கள் #திலகம் #எம்ஜிஆர்.

இதில் எம் ஜி ஆர் அவர்களின் முதல் படத்தின் கதையை எழுதியவர் s. S.வாசன் . வாசன் அவர்களின் படத்தயாரிப்பு நிறுவனமான ஜெமினியின் 100வது படம் ஒளி விளக்கு.

மது, புகைப்பழக்கம் இல்லாத புரட்சி நடிகர் எம் ஜி ஆர் அவர்கள் இந்தப் படத்தில் மதுவின் தீமையை உணர்த்த ஒரு பாடலில் மது அருந்தியது போல நடித்திருப்பார்.

இந்த பட குழுவுடன் நடந்த கலந்துரையாடலில் எம்ஜிஆர்

"ஒரு குடிகாரனாக நான் எப்படி நடிப்பது? மக்கள் ஒத்துக்கொள்ள மாட்டார்கள் "

என்று மறுத்து விட்டார். ஆனால் கதைப்படி (இது தர்மேந்திரா நடித்த ஒரு ஹிந்தி பட தழுவல், ) மாற்ற முடியாத சூழ்நிலை. அப்போது வாலி சொன்ன யோசனை தான் இந்த பாடலுக்கு திருப்புமுனை.

குடிப்பது போன்ற எம்ஜிஆரை பார்த்து இன்னும் நான்கு எம்ஜிஆர்கள் வந்து புத்திமதி சொல்வது போல படம் எடுத்தால் ஒத்துக்கொள்வார்கள் என்று

" இது சாத்தியமா? "

என்று எம்ஜிஆர் கேட்க அந்த காலத்தில் வந்த ஆர்யமாலா படத்தில் பி.யூ. சின்னப்பா ஐந்து இசை கலைஞர்களாக ஒரே காட்சியில் வருவதை சுட்டி காட்டி அதை எடிட்டிங் செய்த அதே டெக்னீஷியனை வர வழைத்து அந்த பாடல் காட்சியை படமாக்கினார்கள் என்று வாலி ஒரு பத்திரிகை பேட்டியில் கூறி உள்ளார்.

ஐந்து தோற்றங்களில் அவர் தோன்றிய இந்தப் பாடல் டெக்னாலஜி வளராத
1968 களில் மிக நேர்த்தியாக படமாக்கப்பட்டிருந்தது. .இந்த பாடல் காட்சியில் காலை முதல் இரவு வரை சிரமப்பட்டு நடித்த எம் ஜி ஆர் களைப்பாக இருந்ததால்,

"ரஷ் பார்த்து சொல்லுங்கள், குறை இருந்தால் வந்து நடித்து கொடுக்கிறேன்"

என்று சொல்லி வீடு திரும்பி விட்டாராம்.
இரவு ரஷ் பார்ந்த படக்குழுவினர் காட்சி நன்றாக வந்துள்ளதாக எம் ஜி ஆர் வீட்டுக்கு போன் செய்து சொன்ன போது, அங்கேயே வீட்டுக்கு செல்லாமல் பின் வரிசையில் அமர்ந்திருந்தாராம் எம் ஜி ஆர்.

அவ்வளவு ஆர்வத்துடன் இப்படத்தில் நடித்திருந்தார் எம் ஜி ஆர். இப்படத்தில் தான் நடிகர் வி.எஸ்.ராகவன் எம் ஜி ஆருடன் முதன் முதல் இணைந்து நடித்திருந்தார்.

ஒளி விளக்கு படத்திலிருந்து டி.எம்.செளந்திரராஜன் குரலில், விஸ்வநாதன் இசை அமைக்க பாடலை எழுதியவர் வாலி.

தைரியமாகச் சொல் நீ மனிதன் தானா மனிதன் தானா
இல்லை, நீ தான் ஒரு மிருகம். இந்த மதுவில் விழும் நேரம்.
மனமும் நல்ல குணமும் உன் நினைவை விட்டு விலகும்...........

orodizli
1st July 2020, 05:25 PM
#எங்க #வீட்டுப்பிள்ளை...

நாம் போற்றுபவர்களை, வேறு யாராவது புகழ்ந்தால் எவ்வளவு சந்தோஷப்படுவோம்...!!!
அந்த மகிழ்ச்சியே மிக அலாதியானது...சரிதானே!

அதிலும் நம்ம வாத்தியாரை மற்றவர்கள் புகழ்ந்தால் நமக்கு ஏற்படும் மகிழ்ச்சிக்கு எல்லையேது!!!

இந்தக் காட்சியைப் பாருங்கள்.

பட்டணத்தில் பூதம் திரைப்படத்தில் ... பூதமானது நியூஸ்பேப்பரில் நாகேஷ் & ஜெய்சங்கருக்கு திருவிளையாடல் படத்தைக் காண்பிக்கும்.
பிறகு நாகேஷ், 'எங்க வீட்டுப்பிள்ளை' படத்தைக் காண்பிக்க சொல்வார்.

அதில் 'நான் ஆணையிட்டால்' பாடல் ஓடிக்கொண்டிருக்கும். அதைப் பார்க்கும் போது அந்த மூவரின் 'Expressions' ரொம்ப பிரமாதமாயிருக்கும். அதில் நாகேஷோட ரியாக்ஷன் சூப்பராயிருக்கும்.

அந்த பூதம் கடைசியாகக் கேட்கும்.....

"இவ்வளவு வீரமா நடிக்கிறாரே! யாரிவர்?"

அதற்கு நாகேஷ்,
'இவர் தான் மக்கள்திலகம் எம்ஜிஆர்' னு ரொம்ப சந்தோஷமா சொல்வார்.

இந்த ஒரு சீனுக்காகவே இந்தப் படத்தை மிகவும் பிடிக்கும்....

orodizli
1st July 2020, 05:25 PM
#அறிவுடைமை :

அறிவென்பது ஏட்டுக் கல்விக்கு அப்பாற்பட்டது. உலக வாழ்வியலின் வெளிப்பாடு என்று போற்றப்படுவது. புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் அறிவுடைமை எல்லோராலும் பாராட்டப்பட்ட விஷயம். அறிவுடைமை என்பதே சமயோஜிதம் என்பதுதான். புரட்சித்தலைவரின் சமயோஜிதம் மிகவும் பிரசித்தமானது. இல்லையென்றால் அவரால் கலைத்துறை , அரசியல் , பொது வாழ்வு என்ற மூன்றிலும் சரியான முறையில் "பேலன்ஸ் " செய்திருக்க முடியாது.

கலைத்துறையில் பல இடங்களில் பல நேரங்களில் அவருடைய அறிவுடைமை அதாவது சமயோஜித புத்தி வெளிப்பட்டு எல்லோரையும் வியப்புக்குள்ளாக்கியது. எங்க வீட்டு பிள்ளை திரைக்காவியத்தின் வெள்ளி விழா தமிழ் நாடெங்கும் நடைபெற்றது. அப்போது புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் தன்னோடு நடித்த நடிக நடிகை மற்றும் பலருடன் தமிழகமெங்கும் சுற்றுப்பயணம் செய்தார். திரைப்படத் திரையரங்குகளில் மக்கள் முன்னால் தோன்றினார். ஊரெல்லாம் திருவிழாக்கோலம் தான் குதூகலம். ரசிகர்களின் கும்மாளம்தான். அப்போது ஒரு மேடையில் நடிகர்கள் பேசி முடித்ததும் பொன்மனச் செம்மல் எம்.ஜி.ஆர் பேசினார். மைக் செட் ஏற்பாடு செய்திருந்தவர் இன்னொரு மைக்கையும் அவரருகில் வைத்தார். புரட்சித்தலைவர் எம்ஜிஆர் பேச ஆரம்பித்தபோது நம்பியார் குறிப்பிட்டு, எங்களுக்கெல்லாம் ஒருமைக் உனக்கு மட்டும் ரெண்டா ? என்று கேட்டார் . உடனே ஒரு வினாடி கூட தாமதிக்காமல் எம்ஜிஆர் சொன்னார், படத்தில் நான் ரெட்டை வேடம் போட்டு இருக்கேன் இல்லே ? அதான் ரெண்டு மைக்.

அதைக்கேட்டு நம்பியார் மட்டுமில்லை. அவையோரும் வியந்து போனார்கள். அடுத்த கணம் கைதட்டலால் அரங்கம் அதிர்ந்தது. புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் திரை உலக பேரதிசயங்கள் சொல்லிமாளாது.

அவரது அரசியல் சமயோஜிதம் பல பிரச்சனைகளைத் தீர்த்து விண் கலவரங்கள் நடக்காமல் தடுத்திருக்கிறது. துணிவுடன் அவர் எடுத்த முடிவுகள் அவருடைய அறிவுடமையை வெளிக்காட்டும். அவர் முதல்வராக இருந்தபோது ' மதுரை பல்கலைக்கழகம் ' என்ற பெயரை மாற்றிவிட்டு ' காமராஜர் பல்கலைக்கழகம் ' என்று பெயர் வைக்க வேண்டும். தாங்கள் கோரிக்கையை ஏற்கவில்லை என்றால் போராட்டம் நடக்கும் என்று ஒரு கூட்டம் சொன்னது. அவர்களுக்கு எதிராக மற்றொரு கூட்டம் பெயரை ' மதுரை பல்கலைக்கழகம் ' என்றே இருக்கவேண்டும் மாற்றினால் போராட்டம் தான் என்று பயம் காட்டியது.

பெயரை மாற்றினாலும் எதிர்ப்பு அதே பெயரை வைத்தாலும் எதிர்ப்பு. எம்.ஜி.ஆரிடமா அவர்களின் போராட்ட பயம் காட்டல்கள் எடுபடும் ? உடனே " மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் " என்று பெயரை அறிவித்தார் அதன்பிறகு எந்த சத்தமும் அங்கே இல்லை. அவருடைய ராஜதந்திர நடவடிக்கையை நாட்டு மக்களும் நடுநிலையாளர்களும் வெகுவாகப் பாராட்டினார்கள்.

தான் முதல்வராக பதவியேற்றபோது புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். ஒரு அற்புதமான அறிவுடமை காரியத்தை செய்து எல்லோரையும் வியப்பில் ஆழ்த்தினார். அவர் பதவியேற்க மாடமாளிகைகளும், பெரிய இடங்களும் தயாராக இருந்தன. ஆனால் மக்கள் திலகம் எம்.ஜி.ஆரோ தன் பதவியேற்பு வைபவம் மக்கள் முன்னிலையில் பேரறிஞர் அண்ணாவின் சிலை அருகில் நடைபெற தான் விரும்புவதாகவும் மக்களை அங்கே வரும்படியும் அன்பு வேண்டுகோள் விடுத்தார். இதுவரை முதலமைச்சர் பதவி ஏற்பு நிகழ்வுகளை செய்தித்தாள்களில் புகைப்படங்களில் மட்டும் பார்த்திருந்த மக்கள் அதை நேரிலேயே கண்ணெதிரில் கண்டு களித்தார்கள். இந்த சமயோஜிதம் எந்த முதல்வருக்கும் வந்ததில்லை. 1977 - ம் ஆண்டு ஜூன் மாதம் 30ஆம் தேதி பதவியேற்பு நடைபெற்றது. புரட்சித் தலைவருக்கு மக்களே குடும்பம் என்பது இதன் மூலம் தெளிவாக புரிந்தது.

பொது வாழ்வில் அவர் சந்தித்த பல இக்கட்டான நேரங்களில் அவருடைய அறிவுடமையால் வென்றிருக்கிறார். தேர்தல் காலங்களில் அவர் பொதுக் கூட்டங்களில் பேசுவதற்காக வெகு தூரம் பயணப்பட வேண்டியிருக்கும். பலதரப்பட்ட மக்களை சந்திக்க நேரும். அப்போதெல்லாம் திமுகவில் எம்ஜிஆர் தான் பிரச்சாரத்திற்கு அதிகம் போவார். தன்னுடைய தொழிலையும் மறந்து கட்சிப் பணிக்காக அவர் ஓடோடியும் செல்வார். அந்த நேரங்களில் அவரை கொலை செய்யவும் அயோக்கியர்கள் கூட்டம் ஒன்று சுற்றி வரும். புரட்சித் தலைவரை சுற்றி பாதுகாப்புக்காக உதவியாளர்கள் இருந்தாலும் அவர் மிகவும் கண்காணிப்பாக இருப்பார். அவருக்கு மாலைகள் அணிவிக்க வருபவர்களை அவர் கவனிப்பது வழக்கம். தன்னுடைய ரசிகர்களையும் பொதுமக்களையும் சுலபமாக அடையாளம் கண்டு கொள்வார். தொல்லைத் கொடுக்க வருபவர்களை மாலை போட அவர் அனுமதிக்க மாட்டார். ஏனென்றால் அந்த மாலைகளில் பூக்களுக்கு நடுவே கூரான புதுபிளேடுகள் வைத்து கட்டப்பட்டிருக்கும். அதை கழுத்தில் போட்டால் ஒரே வினாடியில் பிளேடுகள் உடலை காயமாக்கிவிடும். கண்ணிமைக்கும் நேரத்தில் அவர்களை இனம் கண்டு தள்ளிவிட்டு விடுவார். அதைப்போலவே நடக்கும் பாதையில் கண்ணாடித் துண்டுகள் முட்கள் என்று போட்டு வைத்திருப்பார்கள். காலில் அவர் போட்டிருக்கும் ' கட் ஷூ ' அவற்றிலிருந்து அவரைக் காக்கும்.

பொது வாழ்வில் அவருடைய மனத்தூய்மையை பலப்பல நல்லவர்களை இழுத்தது. இன்றும்கூட மாற்றுக் கட்சியினர் கூட புரட்சித் தலைவரைப் பற்றி குற்றமாக எதையும் சொல்ல முடிவதில்லை பொது இடங்களில் சுலபமாக மக்கள் கூட்டத்தில் போகும் மன உறுதியும் அதற்கான கண்காணிப்பு கவனிப்பும் நிறைய இருந்த ஒரே தலைவர் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் தான். அதையும் அறிவுடைமையோடு செய்தவரும் அவர்தான்.


கொடை வள்ளல் எம்.ஜி.ஆர் புகழ் வாழ்க...

orodizli
1st July 2020, 05:26 PM
அரிதாரம் பூசியவனுக்கு அரசியல் பற்றி என்ன தெரியும்?

அரைக்கால் ட்ரொசர்களை நம்பி ஆட்சி நடத்த முடியாது தம்பி...

இது என்ன எம்ஜியார் நடித்த படமா 100 நாட்கள் ஓட.

விசில் அடிச்சான் குஞ்சுகளா...விரைவில் வெம்பி பழுத்த பிஞ்சுகளா.

இவை எல்லாம் ரசிகர்கள் மன்றம் கண்ட தோழர்களுக்கு வழங்க பட்ட சர்டிபிகேட்கள்.

அந்த பொன்மன செம்மல் ஆட்சியில்.

1.முதன் முதலாக வரி இல்லாத பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.

2....விவசாய விளைநிலங்கள் பரப்பளவு 17 லட்சம் ஹெக்டேரில் இருந்து 70 லட்சம் ஹெக்டேர் ஆக 10 ஆண்டுகளில் உயர்ந்தது.

3....கரும்பு விளைச்சலில் இந்தியாவில் 10 ஆண்டுகள் முதல் இடம்.

4...நெல் உற்பத்தியில் 2 ஆம் இடம்.

5....மின் உற்பத்தியில் 3 ஆம் இடம்.

6....ஆலயங்கள் தோறும் விளக்கேற்றி வைக்கும் திட்டம் இந்தியாவில் முதன் முதலாக இங்கே தமிழகத்தில்.

7....விளைச்சல் இல்லாத நேரங்களில் விவசாயிகளின் சொத்துக்கள், வீடுகள் ஆகியவற்றை கடனுக்கு பதில் பறிமுதல் செய்யக்கூடாது என்ற சட்டம் முதலில் இந்தியாவில் இங்கே.

8....குடிசை வீடுகளுக்கு குண்டு பல்பு இப்ப இருந்தா எல்.ஈ.டி.. போட்டு இலவச மின்சாரம்.

9....முதன் முதலாக விவசாய பம்பு செட்டுகளுக்கு மும்முனை மின்சாரம்.

10....அரசு சார் ஓட்டுனர்களுக்கு உணவு படி.

11....முதன் முதலில் குடும்ப ரேஷன் அட்டைகள் வழங்க பட்டது தலைவர் ஆட்சியில்.

12..காவலர் உடை சீர்திருத்தம், மகளிர் காவல் துறை....கொண்டு வந்தார்.

13....அறநிலையத்துறை மூலம் சிறப்பு திருமணம்..வசதி இல்லா ஜோடிகளுக்கு சீரவேட்டி, புடவை, தாலி மற்ற சீர்பொருள்கள் வழங்க பட்டு திருமணம்

இன்னும் இருக்கு ஏராளம்....தொடரும்...

வாழ்க எம்ஜியார் புகழ்.

நன்றி...உங்களில் ஒருவன்..

இந்திய அளவில் எந்த லஞ்ச ஊழல் வழக்குகளில் சிக்காத ஒரு சில முதல்வர்களில் ஒருவர் நம் தலைவர்...

orodizli
1st July 2020, 05:27 PM
#நெஞ்சமுண்டு #நேர்மையுண்டு

1969 ஆம் ஆண்டு பிப்ரவரித் திங்கள் மூன்றாம் நாளில்அமரராகிவிட்ட அந்த அண்ணாவை நினைத்து,சிலையைப் பார்த்து, குதிரை வண்டியை ஓட்டிக் கொண்டே வணக்கம் செய்து, எம்.ஜி.ஆர்.பாடிவரும் பாடல் காட்சிக்கான பாடலாக அப்பாடல் திகழ்ந்தது.

எம்.ஜி.ஆருக்காக, கண்ணதாசன் வீரநடை போட்டு எழுதிய விவேகம் செறிந்தவேகப்பாடலே அது…! எது என்பீர்! கேளுங்களேன்!

“நெஞ்சம் உண்டு! நேர்மை உண்டு!
ஓடு ராஜா!
நேரம் வரும் காத்திருந்து பாரு ராஜா!
அஞ்சி அஞ்சி வாழ்ந்தது போதும் ராஜா! – நீ
ஆற்றுவெள்ளம் போல் எழுந்து ஓடு ராஜா!”

எப்படி இருக்கிறது. தொடக்கமே? கேட்டீர்களா?

‘நெஞ்சம் இருக்கிறது! அதிலே நேர்மையும்இருக்கிறது! வெற்றிக்கு உரிய நேரமோகாத்திருக்கிறது! அப்புறம் ஏன் பிறர் பால் அஞ்சி அஞ்சி,கெஞ்சி கெஞ்சி வாழ வேண்டும்? அஞ்சி வாழ்ந்ததும்போதும்! ராஜா! நீ காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டுஓடுவதுபோல் எழுந்து ஓடு!’

என்றல்லவா எம்ஜிஆர் வீர முழக்கமிடுகிறார்.

அற்புதமான புரட்சிப் பாடலின் அடுத்த வரிகள்!….இதோ!

“அடிமையின் உடம்பில் ரத்தம் எதற்கு? – தினம் அச்சப்பட்ட கோழைக்கு இல்லம் எதற்கு?

கொடுமையைக் கண்டுகண்டு பயம் எதற்கு? – நீ கொண்டு வந்ததென்னடா மீசை முறுக்கு….

எப்படிப்பட்ட வினாக்கள்? எம்.ஜி.ஆர்.. எழுப்புவன?நியாயந்தானே!

‘அடிமைப்பட்டு உயிர் சுமக்கும் உடம்பிற்கு இரத்தமும்;நாளும் அச்சப்பட்டு வாழும் கோழைக்குக் குடும்பவாழ்க்கையும் எதற்காம்? கொடுஞ்செயல்களைக்கண்டு கண்டு பயப்படுதலும் எதற்காம்?'

மனிதா! நீ பிறக்கும்போது கொண்டு வந்ததுதான்என்ன? தொலைந்து போவதற்கு என்ன இருக்கிறது? நீ தைரியமாக மீசையை முறுக்கு!’ இத்தகு புரட்சிவினாக்களை எழுப்பி,வீரம் விளைவிக்கும்விதைகளை யாரால் தூவ முடியும்? எம்.ஜி.ஆரால் தான்முடியும்! அதைப் பார்வையிட்டுப் பக்குவமாய்ப் பாடல் எழுதித்தரக் கண்ணதாசனால்தான் முடியும்!அப்படித்தானே!

இன்னும் வேக வெடிகளின் ஓசைகளைக் கேளீர்!

“அண்ணாந்து பார்க்கின்ற மாளிகை கட்டி – அதன்அருகினில் ஓலை குடிசை கட்டி,

பொன்னான உலகென்று பெயருமிட்டால் – இந்தபூமி சிரிக்கும்! அந்த சாமி சிரிக்கும்!”

அதிரும் வேக வெடிகளின் ஓசைகளைக் கேட்டீர்களா?

‘உயர்ந்து நிற்கும் வானளாவிய மாளிகைகள்! அதன்ஓரங்களில் ஓசை குடிசைகள்! இப்படி இருப்பதுதானாபொன்னான உலகம்? இப்படிப் பெயரிட்டு அழைத்தால்இந்த பூமி மக்கள் சிரிக்க மாட்டார்களா? பூமியைப்படைத்த அந்த ஆண்டவனாம் சாமி சிரிக்கமாட்டானா?’

இவற்றிற்கெல்லாம் விடைகள்! யார் தருவது?

விடைகள் தரப் புறப்பட்டு வரும் கண்ணதாசன்வரிகள்இதோ!
எம்.ஜி.ஆர். என்ற புரட்சித் தலைவர் மூலம் புவிவாழ் மக்களுக்குப் புலப்படுத்தப் படுவதைக்காணீர்!

“உண்டு உண்டு என்று நம்பிக் காலை எடு! – இங்கு

உன்னைவிட்டால் பூமி ஏது? கவலை விடு!

ரெண்டில் ஒன்று பார்ப்பதற்குத் தோளை நிமிர்த்து! –அதில்

நீதி உன்னைத் தேடிவரும் மாலை தொடுத்து!

விடைகளைக் கண்டீர்களா?

‘உறுதிகொண்ட நெஞ்சம் உள்ள இளைஞனே!
உன்நாட்டில் எல்லாம் உண்டு என்ற நம்பிக்கையில் உன்காலை முன்வைத்து முன்னேறு! நீதானே இந்தபூமியின் ராஜா!
உன்னைப் போன்ற இளைஞர்களைவிட்டு விட்டு இந்த பூமி இயங்க முடியுமா?
எனவேகவலையை விட்டுவிடு!

வெற்றியா? தோல்வியா? இந்த இரண்டில் ஒன்றைப்பார்ப்பதற்கு நீ தோளை நிமிர்த்து! நீதியே உன்னைத்தேடி வந்து வெற்றி மாலையைச்சூட்டும்!’

எல்லாம் சரிதான்! கண்ணதாசன், புரட்சித்தலைவர் இருவரும்கூடி, இறுதியில் சொல்லும் விடை எங்கோஇடிப்பதுபோல் உள்ளதே? என்பீர்கள்!

ஆமாம்! கண்ணதாசன் ஆவேசமுடன் தீட்டிய வரி, சென்சாரில்மாட்டி, படத்தில் எம்.ஜி.ஆரால் எடுத்துச் சொல்லமுடியாமல் மாற்றம் பெற்றுவிட்டதுதான் உண்மை.

அந்த ஈற்றடி இதுதான்….!

“நீதி வரவில்லை எனில் வாளை உயர்த்து! ” என்பதே.

இப்போது சரிதானே! உண்மை உழைப்பு! உயர்தியாகம்! இவற்றிற்கெல்லாம் நீதி கிட்டாவிடில் வாளைஉயர்த்த வேண்டியது தானே! வெட்ட வேண்டியதீமைகளை வேரறுக்க வேண்டியது தானே! இப்போது விடை சரிதானே!

#மக்கள்திலகம் #மந்திரச்சொற்களுக்குக் #கட்டுப்பட்டமக்கள் #தானே, #பலரது #மனக்கோட்டைகளுயும் #தகர்த்தெறிந்து #விட்டு #அவரை #செயின்ட்ஜார்ஜ் #கோட்டையிலே #முதல்வர் #ஆசனத்தில் #அமரவைத்தனர்....

fidowag
1st July 2020, 08:33 PM
பாட்டாலே புத்தி சொன்ன வாத்தியார் எம்.ஜி.ஆர். - சகாப்தம் நிகழ்ச்சியில் வின் டிவியில்*திரு.துரை பாரதி*15/06/20* அன்று அளித்த*தகவல்கள்*
-----------------------------------------------------------------------------------------------------------------------------

*மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். இரு வேடங்களில்* நடித்து, இயக்கி, தயாரித்த*உலகம் சுற்றும் வாலிபன் 1973 மே மாதம் வெளியாகி 25 அரங்குகளில் 100 நாட்கள் ,சென்னையில் 2 அரங்குகள், மதுரை, திருச்சி, கொழும்பு நகரங்களில்**வெள்ளிவிழா கண்டது .அதிகபட்சமாக மதுரையில் 217 நாட்களும், திருச்சியில் 203 நாட்களும் கொழும்புவில் 201 நாட்களும் ஓடியது . தமிழ் திரையுலகில் ,தமிழ்நாட்டில் எங்கும் சுவரொட்டி விளம்பரம் இல்லாமல், அன்றைய ஆளும் கட்சியின் எதிர்ப்புகளை முறியடித்து ,சுவரொட்டிக்காக அதிக வரி விதிக்கப்பட்ட மாநகராட்சிகள் முடிவை பொருட்படுத்தாது* 1973 வரை வெளியான அனைத்து தமிழ் படங்களின் சாதனையை முறியடித்து முதலிடம் பெற்றது .எப்போது வெளியிட்டாலும் மறுவெளியீடுகளில் நல்ல வரவேற்பை பெற்று வசூலை குவிக்கிறது . விரைவில் டிஜிட்டல் வெளியீடாக வெள்ளித்திரைக்கு*வர உள்ளது .

உலகம் சுற்றும் வாலிபன் திரைப்படத்தை பல சிரமங்களுக்கு இடையே , மிக உன்னதமாக தயாரித்தார் .படத்தில் நடித்த கலைஞர்களுக்கு கதை பற்றி ஒன்றும் தெரியாது இயக்குனர் எம்.ஜி.ஆர். அமைக்கும் காட்சிகளின்படி அவர்கள் நடிக்க வேண்டும்*.ஜப்பான், சிங்கப்பூர், மலேசியா, தாய்லாந்து [போன்ற நாடுகளில் படப்பிடிப்பு* நடத்திவிட்டு ,அதை சத்யா ஸ்டுடியோவில் படத்தொகுப்பாளர் உமாநாத் உதவியுடன்* அதை படமாக தொகுத்தார் வெள்ளித்திரையில் முழு படத்தையும் படத்தில் நடித்த கலைஞர்கள் பார்த்து பிரமித்து விட்டார்கள் . படம் வெளியான பின்புதான் இயக்குனர் எம்.ஜி.ஆரின் திறமை வெகுவாக பேசப்பட்டது இந்த திரைப்படத்தை தயாரித்தது பற்றி பொம்மை சினிமா மாத இதழில் , திரைகடலோடி திரைப்படம் எடுத்தோம் என்ற தொடரை எம்.ஜி.ஆர். வெளியிட்டு இருந்தார் ... சிங்கப்பூரில் டைகர் பாம் பூங்காவில் சிரித்து வாழ வேண்டும் என்கிற* பாடல் படப்பிடிப்பு நடந்தது . உள்ளூர் குழந்தைகள் கணிசமான அளவில்*காட்சியில் பங்கேற்றனர் . அந்த குழந்தைகளின் முகவரியை எம்.ஜி.ஆர். பெற்றுக் கொண்டு , படப்பிடிப்பு முடிந்து ஒய்வு நேரத்தில், ஒவ்வொரு குழந்தை வீட்டிற்கும் தன்* உதவியாளருடன்* சென்று* *விலையுர்ந்த பொம்மைகளை பரிசாக வழங்கி அவர்களின் அன்பை பெற்றார் .இதுதான் எம்.ஜி.ஆரின் சிறந்த குணம் .


ஜப்பானில் எக்ஸ்போ 70 பொருட்காட்சியானது பல மைல் தூரம் விரிவாக்கம் உடையது .அந்த பொருட்காட்சியில் ,யாரவது தவறி போனால், யார் எங்கே இருப்பார்கள், எப்படி சந்திப்பது என்பது அந்த ஜனக்கடலில் தெரியாது* *அந்த சூழ்நிலையில் படத்தின் ஸ்டில் போட்டோகிராபர் சங்கர் ராவ் ஒரு இடத்தில போய் கொண்டிருக்கிறார் . அங்கே பள்ளி குழந்தைகள் வரிசையாக சென்று கொண்டிருக்கிறார்கள் . அதே இடத்தில நடிகர் சிவாஜி கணேசனின் மகன்கள் ராம்குமார், பிரபு ,உறவினர் மனோகர் ஆகிய மூவரும் ஒரே சீருடையில்* எதிரே தென்பட்டார்கள் . அவர்களை சங்கர் ராவ் சந்தித்து நலம் விசாரிக்கிறார் . அவர்கள் பதிலுக்கு, எங்கள் பள்ளி மூலமாக* எக்ஸ்போ 70 பார்க்க வந்துள்ளோம் .மற்ற மாணவர்கள் வேறு இடத்தில உள்ளார்கள் ., நாங்கள் பொருட்காட்சியை சுற்றி பார்ப்பதுடன் , பெரியப்பா படம் படப்பிடிப்பு சிறிது நேரம் பார்க்க ஆசைப்படுகிறோம் என்று* சொன்னார்கள் , உடனே அவர்களை சங்கர் ராவ், அருகில் இருந்த எம்.ஜி.ஆரிடம் அழைத்து செல்கிறார் . எம்.ஜி.ஆர். அவர்களை பார்த்ததும் ,உற்சாகம் அடைந்து , நலம் விசாரித்து, எப்படி, யாருடன் வந்தீர்கள் .என்னென்ன பார்த்தீர்கள் . உணவருந்தாகி விட்டதா ,என்று கேட்டுவிட்டு, அவர்களை அருகில் உள்ள உணவகத்திற்கு அழைத்து சென்று சாப்பிட வைத்து,*பின்னர் படப்பிடிப்பு குழுவினரிடம் மேற்கொண்டு பணிகளை கவனிக்கும்படி சொல்லிவிட்டு,அவர்கள் மூவரையும்* பள்ளி ஆசிரியர் மற்றும் மற்ற மாணவர்கள் இருக்குமிடம் அறிந்து அவர்களை பத்திரமாக கொண்டு போய்* சேர்த்துவிட்டு வந்தார் . இந்த செய்கைக்கு காரணம், நடிகர் சிவாஜி கணேசனுடன் தொழில் ரீதியாக நட்பும், நல்லுறவும் ,பொதுவாக குழந்தைகளின் மீது உள்ள அபரிமிதமான அன்பும் ,** ஆரம்ப காலங்களில் நல்ல நண்பராகவும் பழகியதே .*


பொதுவாக எம்.ஜி.ஆர்.* படப்பிடிப்புகளில் . நான்* குறிப்பிட்ட ஸ்டெப்புகளில் இடது புறத்தில் இருந்து வலது புறம் திரும்பி* *கையை தொட்டு* சிலம்பத்தில்*எட்டாவது அடி உனக்கு விழும் என்று ஸ்டண்ட் மாஸ்டருக்கு சொன்னார் என்றால் சரியாக எட்டாவது அடியில் அந்த ஸ்டண்ட்* மாஸ்டருக்கு அடி விழும்இது எம்.ஜி.ஆரின் கணித கணக்கு . இந்த விஷயத்தில் அலட்சியமாக இருந்தால் என்னவாகும் என்றால்உதாரணத்திற்கு ,ஒருமுறை அன்னமிட்டகை படத்தில் சிலம்பம் சுற்றும்போது பத்தாவது ஸ்டெப்பில் உனக்கு ஆடி விழும் என்று ஸ்டண்ட் நடிகருக்கு சொன்னதில்* பத்தாவது அடிதானே என்று அலட்சியமாக நடித்தபோது , பத்தாவது அடியில் ஸ்டண்ட் நடிகரின் சுண்டு விரல் அடிபட்டு ரத்தம் கொட்டியது . உடனே படப்பிடிப்பை எம்.ஜி.ஆர்.நிறுத்திவிட்டு, சிகிச்சைக்கான ஏற்பாடுகளை தன் சொந்த செலவில் செய்து**, எந்த தொழிலாக இருந்தாலும் அதில் கவனம் தவறினால் இப்படித்தான் காயப்பட்டு அவதிப்பட நேரிடும் , எனவே இனிமேல் சண்டை காட்சிகளில் மிகவும் எச்சரிக்கையாக நடிக்க வேண்டும் என்று அவருக்கு அறிவுருத்தினார் எம்.ஜி.ஆர்.*.


ஒருமுறை சத்யா ஸ்டுடியோவில் எம்.ஜி.ஆர். படப்பிடிப்பில் இருக்கும்போது ,சத்யா ஸ்டூடியோ மேலாளர் பத்மநாபன் எம்.ஜி.ஆர். காதில் ஏதோ விஷயம் ஒன்றை சொல்ல, எம்.ஜி.ஆர். படப்பிடிப்பை நிறுத்திவிட்டு ஒப்பனை அறைக்கு செல்கிறார் . ஸ்டூடியோ வாசலில் எண்ணற்ற மக்கள் கூட்டமாக கூடியுள்ளனர் .அவருக்கு தி.மு.க. விலிருந்து எம்.ஜி.ஆர். நீக்கப்பட்ட செய்தி சொல்லப்படுகிறது .உடனடியாக எம்.ஜி.ஆர். கருணாநிதியின் உறவினர்களான ஒளிப்பதிவாளர் அமிர்தம் , வசன ஆசிரியர் சொர்ணம் ஆகிய இருவரையும் படப்பிடிப்பு குழுவில் இருந்து விலகி தங்கள் வீட்டிற்கு அவசரமாக திரும்பும்படி, தன் உதவியாளர்கள் மூலம் சொல்லி அனுப்புவதோடு , அவர்களை பாதுகாப்பாக காரில் அனுப்பி வையுங்கள் என்று உதவியாளர்களிடம் கேட்டுக்கொண்டார் .**.தனக்கு எந்த பாதிப்பு வந்தாலும் பரவாயில்லை, தன்னை நம்பி வந்தவர்களுக்கு எந்த ஆபத்தும், எந்த பிரச்னையும் நேரக்கூடாது என்பதில் எம்.ஜி.ஆர். மிகுந்த அக்கறை எடுத்துக்* கொண்டார் என்பதே எம்.ஜி.ஆரின் உயர்ந்த குணத்திற்கு சான்று .


மேலும் தகவல்களுக்கு அடுத்த அத்தியாயத்தில் பார்ப்போம்*

நிகழ்ச்சியில் ஒளிபரப்பான காட்சிகள் / பாடல்கள் விவரம்*
-----------------------------------------------------------------------------------------
1.பச்சைக்கிளி முத்துச்சரம் - உலகம் சுற்றும் வாலிபன்*

2.சிரித்து வாழ வேண்டும்* - உலகம் சுற்றும் வாலிபன்*

3.நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே - நம் நாடு*

4.சண்டை காட்சிகள் - நினைத்ததை முடிப்பவன்*

5. இரண்டு* எம்.ஜி.ஆர்.கள்* சந்திப்பு - குடியிருந்த கோயில்*

fidowag
2nd July 2020, 05:14 PM
பாட்டாலே புத்தி சொன்ன வாத்தியார் எம்.ஜி.ஆர். - சகாப்தம்*நிகழ்ச்சியில் வின்*டிவியில்*16/06/20 அன்று திரு.துரை பாரதி*அளித்த*தகவல்கள்*
-----------------------------------------------------------------------------------------------------------------------
பெங்களுருவில் ஒரு படப்பிடிப்பில் எம்.ஜி.ஆரும், வெண்ணிற ஆடை நிர்மலாவும் கலந்து கொள்ளும் பாடல் காட்சி. காட்சியை காண வந்த கன்னட ரசிகர்கள் சிலர் நிர்மலாவை சீண்டுவதும், கிண்டல் அடிப்பதுமாக இருந்தனர் .* எம்.ஜி.ஆர். தன்* கருப்பு கண்ணாடியால் அதை கவனித்து விடுகிறார் .பாடல் காட்சி முடிந்ததும் அந்த இளைஞர்களை அழைத்து தன் காரில் ஏற்றிக்* கொள்கிறார் .* கார் மெதுவாக செல்லும்போது ஓரிடத்தில் தன் புறங்கையால் இளைஞர்களை அடித்து விடுகிறார் .அதில் மூவருக்கு முகத்தில் சரியான அடி. சிறிய ரத்த காயங்கள் . அடிபட்டதும் ,அந்த இளைஞர்கள் எம்.ஜி.ஆரிடம் மன்னிப்பு கேட்கிறார்கள் . உடனே அவர்களுக்கு தலா ரூ.500/- கொடுத்து* தனது*டாக்டரின்*உதவியால் முதலுதவி பெற செய்து ,*இது உங்கள் ஊர் , நீங்கள் கண்ணியமாக நடந்து கொள்வீர்கள் என்று* நம்பித்தான்**படப்பிடிப்பை நாங்கள் இங்கு நடத்துகிறோம் .குறிப்பாக ஒரு பெண்ணிடம் நீங்கள் இப்படி நடந்து கொள்ளலாமா , இதுபோன்று இனி எந்த படப்பிடிப்பிலும் நடந்து கொள்ளாதீர்கள் என்று எச்சரித்து அனுப்பி வைத்தாராம் .



நவரத்தினம் என்கிற படத்தில் ஒரு சண்டை காட்சியில் எம்.ஜி.ஆரும், மும்பையில் இருந்து வந்திருந்த ஸ்டண்ட் நடிகர் ஷெட்டி என்பவரும் மோதும் காட்சி அமைப்பு . *ஸ்டண்ட் மாஸ்டராக சியாம் சுந்தர் அருகில் இருந்தார் . எம்.ஜி.ஆரை பார்த்துவிட்டு, இவர் பெரிய ஸ்டண்ட் நடிகர், மாஸ்டர், வீரர், சூரர் என்று சொல்கிறார்களே ஆனால் தோற்றத்தில் அப்படி ஒன்றும் தெரியவில்லையே, சண்டை காட்சியை வேடிக்கை பார்ப்பவர் போல் உள்ளாரே* என்று ஷெட்டி சொல்லிக் கொண்டிருந்தாராம் .அதை கேட்டு,பெரிதாக* காட்டிக் கொள்ளாத எம்.ஜி.ஆர். காட்சி ஆரம்பிக்கும்போது , ஷெட்டியை அழைத்து ,காட்சியில் நான் இரண்டு முறை என் கைகளால்**உங்களை தூக்குவேன் . மூன்றாவது முறை உயர* தூக்கி கீழே வீசும்போது நீங்கள் உங்கள் உடம்பை பேலன்ஸ் செய்து கொள்ள வேண்டும். அப்போதுதான்** உங்களுக்கு காயம் ஏற்படாது .கொஞ்சம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்று சொல்கிறார் எம்.ஜி.ஆர். பதிலுக்கு ஷெட்டி, நான் பார்க்காத , செய்யாத சண்டை காட்சிகளா .பரவாயில்லை நான் பார்த்துக் கொள்கிறேன் என்றார் அலட்சியமாக , ஸ்டண்ட் மாஸ்டர் சியாம் சுந்தரும் ஷெட்டியிடம் காட்சியை பற்றி விளக்கினார் . பிறகு*நடிக்கும்போது ஷெட்டியின் அலட்சியத்தால் எம்.ஜி.ஆர். உயர தூக்கி கீழே போடும்போது விழுந்து ஷெட்டியின் விழா எலும்புகள் அடிபட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சுமார் ஆறு மாத காலம் சிகிச்சையில் இருந்தார் .சிகிச்சைக்கான செலவு முழுவதையும் எம்.ஜி.ஆர். ஏற்றுக் கொண்டார்இனிமேலும் சண்டை காட்சியில் நடிக்கும்போது அலட்சியமாக இருக்க வேண்டாம் என்று அறிவுரையும் சொன்னார் . .



அன்பே வா திரைப்படத்தில் ,நெல்லூர் காந்தாராவ் என்று ஒரு ஸ்டண்ட் நடிகர் எம்.ஜி.ஆருடன் மோதும் சண்டை காட்சி . காட்சியின் முடிவில் எம்.ஜி.ஆர். அவரை அலாக்காக தூக்கி, தன் தோளில் சில வினாடிகள் சுமத்தி , பிறகு கீழே போட வைக்கும் காட்சி .* 1959ல் ஒரு நாடக காட்சியில் குண்டுமணி என்கிற ஸ்டண்ட் நடிகரை இதே போல உயர தூக்கி கீழே போடும்போது , அவர் தவறி எம்.ஜி.ஆர். காலின் மீது விழுந்து* எலும்பு முறிவு ஏற்பட்டு** சில மாதங்கள் எம்.ஜி.ஆர். சிகிச்சையில் இருந்தார் . அவர் குணமானதும் முன்போல் சண்டை காட்சிகளில் வழக்கமாக நடிக்க முடியாது , ஸ்டண்ட் நடிகர்களை உயர தூக்கி கீழே போட முடியாது என்று சிலர்* சினிமா உலகில் பேசிக் கொண்டிருந்தனர் .இந்த கிசுகிசு, வதந்தி, கருத்துக்களை எல்லாம் முறியடிப்பது போல தன்* உடல் வலிமையையும் மற்றவர்களுக்கு தெரிவிக்கும் பொருட்டு அன்பே வா படத்தில்*நெல்லூர் காந்தாராவை* இலகுவாக தூக்கி ,கீழே போடுவார் எம்.ஜி.ஆர்.*இந்த காட்சியை கண்டதும் ,எதிர்மாறாக பேசியவர்கள் அனைவரும் வாயடைத்து போனார்கள் என்று பேசப்பட்டது .இதற்கு பின்னால் வந்த படங்களிலும் பல்வேறு விதமான சண்டை காட்சிகளில் புதுமையை புகுத்தி, முன்பை விட, வேகமாகவும், சுறுசுறுப்பாகவும் விறுவிறுப்பாகவும் நடித்து ரசிகர்களிடம்*நல்ல வரவேற்பை பெற்றார் .



பொதுவாக எம்.ஜி.ஆர். படப்பிடிப்பு தளமாக இருந்தாலும் சரி , அல்லது வெளிப்புற படப்பிடிப்பு நடந்தாலும் சரி, சக கலைஞர்கள் கண்ணியம், பாதுக்காப்பு ஆகியவற்றிற்கு எந்த பிரச்னையும் நேராமல் காப்பதில் வல்லவர்* ஒரு முறை உலகம் சுற்றும் வாலிபன் படப்பிடிப்பு தளத்திற்கு வெளியே, எக்ஸ்போ 70ல்* சுற்றி வந்தபோது*,எம்.ஜி.ஆரும், சந்திரகலாவும் மஞ்சுளாவும்**சுமார்*10 அடி**தூரத்தில் இருக்கிறார்கள் .நடிகர் நாகேஷும்* சற்று அருகில் இருக்கிறார் . அந்த நேரத்தில் சுற்றுலா வேன்* அருகில் வந்து நிற்கிறது . அந்த வேனில் இருந்து இறங்கிய ஒருவர் நன்றாக குடித்து இருக்கிறார் . அவர் மஞ்சுளா*, சந்திரகலா இருவர் இருக்குமிடத்திற்கு* நெருங்கி**வந்து ஏதோ பேசுகிறார் . திடீரென்று சந்திரகலா தோளின் மீது கை வைக்கிறார் . இதை* கவனித்த எம்.ஜி.ஆர். மின்னலென பாய்ந்து வந்து அந்த நபரை*ஓங்கி அடித்து கீழே தள்ளி விடுகிறார் . இதை*எதிர்பாராமல் பார்த்த நாகேஷ,வியந்து** இதனால் என்ன விளைவுகள் வருமோ என்று பதறி போகிறார் .* அடிபட்ட நபர் தன் தவறை உணர்ந்து*ஜப்பானிய மொழியில் தலை குனிந்து*மன்னிப்பு கேட்டுக் கொண்டு விலகி செல்கிறார் .* தன்னை நம்பி* நடிக்க வந்திருந்த கலைஞர்களுக்கு உரிய பாதுகாப்பு தருவது, அவர்களுக்கு எந்த ஆபத்தும், துன்பங்களும் நேராமல்*தானே தலையிட்டு பிரச்னைகளை தீர்த்து வைப்பது* என்பதில்**எம்.ஜி.ஆருக்கு நிகர் ஒருவருமில்லை .இதுபோல*பல சம்பவங்களில் தன் திரையுலக*வாழ்க்கையில்*பலருக்கு எம்.ஜி.ஆர். உதவியதுண்டு .


மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். ஆரம்ப காலத்தில், திரையுலகில் பல ஏற்றங்களையும், சரிவுகளையும் சந்தித்த அனுபவம் வாய்ந்த , பல பாடங்களை*கற்பிக்க கூடிய ஆசான் .* வாழ்வில்*பிடிப்பு இழந்தவர்களை ,எதிர்காலம் உங்கள் கையில்*இருக்கிறது. நம்பிக்கையோடு முன்னேறுங்கள், வெற்றி நிச்சயம் என்று அறிவுரை கூறும் ஒரு பல்கலை கழகம்*,* இந்த பல்கலை கழகத்தை பற்றி , பல அறிஞர்கள், ஆசிரியர்கள்* எழுதிய*சுமார்*470* நூல்களை தமிழிலும், ஆங்கிலத்திலும் இதுவரை வெளிவந்துள்ளது என்றால் தமிழக தலைவர்களில் எம்.ஜி.ஆர். ஒருவருக்குத்தான் .* அவரை பற்றிய பல நூல்களும் , பல அரிய*தகவல்களும்* இன்னும்**வெளிவந்த வண்ணம் உள்ளன . இந்த அரிய தகவல்கள்*நாம் அர்த்தம் உள்ளதாக* வாழ்வதற்கான பாடங்களாக உள்ளன .


தொடர்ந்து அடுத்த அத்தியாயத்தில் சந்திப்போம்*

நிகழ்ச்சியில் ஒளிபரப்பான பாடல்கள்*/காட்சிகள் விவரம்*
--------------------------------------------------------------------------------------------------
1.கண்ணில் தெரிகின்ற வானம் - ரகசிய போலீஸ் 115

2.உலகம் அழகு கலைகளின் சுரங்கம்*-உலகம் சுற்றும் வாலிபன்*

3. எம்.ஜி.ஆர். -நெல்லூர் காந்தாராவ்*சண்டை காட்சி*- அன்பே வா*

4.தங்க தோணியிலே*தவழும் பெண்ணழகே*-உலகம் சுற்றும் வாலிபன்*

fidowag
2nd July 2020, 08:23 PM
பாட்டாலே புத்தி சொன்ன வாத்தியார் எம்.ஜி.ஆர். - சகாப்தம்*நிகழ்ச்சியில் வின்*டிவியில்* *17/06/20 அன்று திரு.துரை பாரதி*அளித்த*தகவல்கள்*
---------------------------------------------------------------------------------------------------------------------
மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் ரசிகர்கள் சிலர் அவரது படம் பார்ப்பதற்கு பணம் இல்லாத காரணத்தால், ரத்தம் கொடுத்து பணம் வாங்கி பார்ப்பதாக எம்.ஜி.ஆருக்கு புகார்கள் வந்த வண்ணம் இருந்தன . இதை அறிந்த எம். ஜி.ஆர். எனது ரசிகர்கள் எனது படத்தை பார்ப்பது மகிழ்ச்சிதான் .ஆனால் ரத்தம் கொடுத்து என் படம் பார்ப்பதை நான் எப்போதும் விரும்ப மாட்டேன் . ஏனென்றால் அவர்களது உடல்நலம் முக்கியம் . அவர்களை நம்பி குடும்பம் இருக்கிறது . அப்படி எனது படம் அவசியம் பார்த்துதான் ஆகவேண்டும் என்கிற முடிவில் இருந்தால் அவர்கள் என்னிடம் தங்கள்* முகவரியை அனுப்பி வைக்கலாம்* . நான் மாதா மாதம் பணம் அனுப்புகிறேன் எனவே , அவர்கள் தங்களின் உடல்நலம், குடும்ப நலம் கருதி அந்த தவறை இனியும் செய்யாமல், மேற்கொண்டு இதுபற்றி எந்தவித புகாரும் எனக்கு வராத அளவில் நடந்து கொள்ள வேண்டும் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் என்று பத்திரிகைகளில் அறிக்கை வெளியிட்டார் .தான் அறிவித்தபடி சிலருக்கு பணம் அனுப்பியதாக வெளிவந்த தகவல்கள் உறுதி செய்தன .



எம்.ஜி.ஆர். படப்பிடிப்பில் இருந்தாலும், கலந்து கொள்ளாவிட்டாலும் அரசியலில் ஒவ்வொரு நாளும் நடைபெறுகின்ற விஷயங்களை**,நுட்பமாகவும் ,உன்னிப்பாகவும் கவனித்து* செயல்பட்டு**வந்தார் . அதனால்தான் திராவிட முன்னேற்ற கழகத்தில் , பொருளாளர், சிறுசேமிப்பு துணை தலைவர் போன்ற பதவிகளில்* எல்லாம் அவர்* சிறப்பாக செயல்பட முடிந்தது .தி.மு.க. சார்பில்*பொதுக்கூட்டங்களில், தேர்தல் பிரச்சாரங்களில் துரிதமாகவும், நடப்பு விஷயங்களை கருத்தில் கொண்டு மக்களிடம் , கட்சியின் கொள்கைகளை, அரசின் திட்டங்களை எளிதில் சேர்க்க முனைப்புடன் செயல்பட முடிந்தது .இந்த செயல்கள்தான்* தி.மு.க.விற்கு* வெற்றியை தேடித்தர உதவியது .எம்.ஜி.ஆரால்தான் தி.மு.கவின் கட்சி, கொடி, சின்னம் ஆகியவை பட்டி, தொட்டியெல்லாம்* சினிமா மூலம் பரவியது .



எம்.ஜி.ஆர். தன்னை திட்டியவர்கள், எதிர்த்தவர்களை எல்லாம் அவர்கள் சொல்லாமலேயே வெற்றியடைய செய்தவர் . தேர்தல் பிரச்சாரங்களில் நடிகர் சிவாஜி கணேசன் எம்.ஜி.ஆரை பற்றி விமர்சனம் செய்யும்போது, நிருபர்கள் கேட்ட கேள்விகளுக்கு,சிரித்துக் கொண்டே* தம்பி, சிவாஜி கணேசனுக்கு அரசியலில் போதிய அனுபவம் இல்லை .அரசியல் அவ்வளவாக தெரியாது என்று கருத்து தெரிவித்தார் .பதிலுக்கு சிவாஜி கணேசன் நான் காங்கிரஸ் கட்சியில் பல ஆண்டுகளாக உள்ளேன் . எனக்கும் ஓரளவு அரசியல் தெரியும் என்றார் . ஆனால், எம்.ஜி.ஆருக்கு அரசியலில் இருந்த ஈடுபாடு, செயல்படும் விதம் , நடப்பு விஷயங்கள் பற்றி கருத்து கூறுவது , பொது காரியங்களில்*உதவுவது, காய் நகர்த்தும் திறமை போன்றவற்றில் சிவாஜி கணேசனுக்கு*அந்த அளவில் ஈடுபாடோ, அனுபவமோ கிடையாது என்பது உலகறிந்த விஷயம்அதனால்தான் சிவாஜி கணேசனால் ஒரு சட்ட மன்ற உறுப்பினர் பதவியை கூட* .பெற முடியாமல் போனது .



எம்.ஜி.ஆர். தனது வாழ்நாளில் குடிப்பது என்பதை அனுபவிக்கவில்லை* . திரைப்படங்களில் குடிப்பது போல் நடித்ததுமில்லை .குடித்துவிட்டு வருபவர்களை தன்னுடன் சேர்த்துக் கொள்வதில்லை . அவர்களுடன் பழக்கம் வைத்துக் கொள்வதுமில்லை .எம்.ஜி.ஆர். தனது 100 வது படமான ஒளிவிளக்கு*படத்தில் குடிப்பது போல ஒரு காட்சி இருந்தது . ஒளி விளக்கு படம் இந்தியில் தர்மேந்திரா நடித்த பூல் அவுர் பத்தர் என்கிற படத்தின் தழுவல் . ஜெமினி அதிபர் வாசன் கதைப்படி அந்த காட்சி அமைய வேண்டும் என்று விருப்பப்பட்டார் .ஆனால் எம்.ஜி.ஆருக்கு அதில் விருப்பமில்லை . குடிப்பது போல்* நடிப்பதை என் ரசிகர்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் . எனக்கு தர்மசங்கடமாக உள்ளது* என்று*கவிஞர் வாலியிடம் ஆலோசனை கேட்டாராம் .* கவிஞர் வாலி, அந்த காலத்தில் நடிகர் பி.யு. சின்னப்பா ஒரு வேடத்தில் குடிப்பது போல நடிப்பார் . இன்னொரு வேடத்தில் குடிப்பதை விமர்சனம் செய்து பாடல் காட்சியில் நடித்துள்ளார் . அதுபோல நீங்கள் குடிப்பது போல ஒரு வேடத்தில் நடியுங்கள் . இன்னொரு வேடத்தில் குடிப்பதனால் விளையும் தீமைகள் குறித்து ஒரு பாடல் காட்சி அமைத்து முடிக்கலாம் .என்று யோசனை சொன்னார் . அதை பலமுறை யோசித்து அரை மனதுடன் சம்மதித்து எம்.ஜி.ஆர். அந்த பாடல் காட்சியில்*ஒரு வேடத்தில் குடிப்பதுபோல் நடித்து , மற்ற நான்கு வேடங்களில் குடிப்பதன்*தீமைகளை விமர்சிக்கும் பாடல் பாடி, அசத்தியிருப்பார் . அந்த பாடல் வெள்ளித்திரையில் ரசிகர்களால் பெரிதும் வரவேற்கப்பட்டது . தனது இமேஜ்*பற்றி மிகவும் கவலை கொண்டிருந்த எம்.ஜி.ஆர். படம் வெளியானதற்கு* பிறகு*எதிர்மறை கருத்துக்களோ, எந்த பிரச்சனைகளோ வராததால் மிகவும் மகிழ்ச்சி அடைந்து கவிஞர் வாலிக்கு நன்றி தெரிவித்தார் .


மேலும் தகவல்களுக்கு அடுத்த அத்தியாயத்தில் சந்திப்போம்*


நிகழ்ச்சியில் ஒளிபரப்பான பாடல்கள் /காட்சிகள் விவரம்*
-----------------------------------------------------------------------------------------
1.ஒரு தாய் மக்கள் நாமென்போம்* - ஆனந்த ஜோதி*

2.நான் ஆணையிட்டால் - எங்க வீட்டு பிள்ளை*

3.புதிய வானம் புதிய பூமி* - அன்பே வா*

4.ஏன் என்ற கேள்வி* - ஆயிரத்தில் ஒருவன்*

5.தைரியமாக சொல் நீ மனிதன்தானா - ஒளி விளக்கு*

fidowag
5th July 2020, 04:03 PM
பாட்டாலே*புத்தி சொன்ன வாத்தியார் எம்.ஜி.ஆர்.- சகாப்தம்*நிகழ்ச்சியில் வின்*டிவியில்*18/06/20 அன்று திரு.துரை பாரதி*அளித்த*தகவல்கள்*
-----------------------------------------------------------------------------------------------------------------------
சகாப்தம் நிகழ்ச்சி* சரித்திர சாதனை படைக்கும் வகையில் இன்றைக்கு ஆண்டு கொண்டிருக்கிற**செயலாளர்கள் , அமைச்சர்கள் ,கல்வி வள்ளல்கள், கல்வி தந்தைகள் பலரையும் கவர்ந்துள்ளது . இவர்கள்* எல்லாம்* எம்.ஜி.ஆர். எனும்* ஒரு இமயமலை, மாமலையின் ஈகை தன்மையால் விளைந்த பயிர்கள் என்பதை தமிழகம் பறை சாற்றிக் கொண்டிருக்கிறது .. இன்றைக்கு இந்த மாமலையின் சிறப்புகளை பற்றி அறிந்து கொள்வோம்*


திரையுலகிலும்,அரசியல் உலகிலும் ,பல ஜாம்பவான்கள், சாதனையாளர்கள் உருவாகி இருந்தார்கள் . ஆனால் எம்.ஜி.ஆர். ஒரு சாமான்ய மனிதராக இருந்து*சரித்திரம், சாதனை, சகாப்தம் படைத்த ,மாமனிதராக* உருவானது ஒரு வரலாறு .ராமச்சந்திரன் எனும் இந்த சந்திரன் ஒரே நாளில் உச்சத்திற்கு சென்று வானில் ஜொலிக்கவில்லை .அந்த சிகரத்தை அடைய அவருக்கு ஏற்பட்ட இன்னல்கள், துன்பங்கள், சரிவுகள் , அனைத்தையும் வெற்றிபடிக்கட்டுகளாக மாற்றி, படிப்படியாக உயர்ந்து உச்சாணி கொம்பில் ஏறினார் .உலக அளவில் ஒரு நடிகர் அரசியல், சினிமா என்கிற இரண்டு குதிரைகளை ஒரே சமயத்தில் சவாரி செய்து*வெற்றி எனும் சிகரத்தை அடைந்ததாக சரித்திரம் இல்லை . இவருக்கு பின்னால் அரசியலில் ஈடுபட்டு ஆட்சியை பிடித்த ரொனால்டு ரீகன், என்.டி.ராமராவ்*போன்றவர்களுக்கு எம்.ஜி.ஆர். தான் முன்னோடி .



மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்களை பற்றி அறிஞர் பெருமக்கள் எழுதிய சுமார்*160க்கு மேற்பட்ட புத்தகங்கள் தமிழிலும், சுமார் 10 புத்தகங்கள் ஆங்கிலத்திலும் வெளியாகியுள்ளன , இன்னும் வெளிவந்த வண்ணம் உள்ளன . எம்.ஜி.ஆரின்*புகழ் பாடும் புத்தகங்கள் மாதந்தோறும் , உரிமைக்குரல், இதயக்கனி* ஆகிய*பெயர்களில் வெளியாகி வருகின்றன .* கடந்த காலத்தில் மன்னாதி மன்னன், ஒளி விளக்கு என்கிற பெயரிலும் புத்தகங்கள் மாதந்தோறும் வெளியாகி வந்தன .எம்.ஜி.ஆர். திரையுலகில் இருந்தபோது, திரை உலகம், திரை செய்தி போன்ற இதழ்களில் சினிமா செய்திகள் படங்களுடன் வெளியாகி இருந்தன .எம்.ஜி.ஆர். தன் வாழ்நாளில் பிறந்த நாளை கொண்டாடியதில்லை . ஆனால் அவர் மறைந்த பிறகு, அவரது ரசிகர்கள் /பக்தர்கள் கடந்த 33 ஆண்டுகளாக நினைவு நாள், பிறந்த நாள் நிகழ்ச்சிகள் கொண்டாடி, பல்வேறு எம்.ஜி.ஆர். மன்ற அமைப்புகள் மூலம் அன்னதானம் , சமூக நல திட்டங்கள் செயல்படுத்தி எம்.ஜி.ஆர். புகழுக்கு பெருமை சேர்த்து,அவரது மங்கா புகழை, மாண்பை**போற்றி வருகின்றனர் .



புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். வெளிநாடுகளில் சுற்று பயணம் செய்யும்போதும், வெளிப்புற படப்பிடிப்பில் இருந்தபோதும்,பல்வேறு வகையான* விலையுர்ந்த காமிராக்கள் வாங்குவது வழக்கம். பல சமயங்களில் தானே* இயற்கை காட்சிகள், சுற்றுலா தளங்கள் ஆகியவற்றை புகைப்படம் எடுப்பது வாடிக்கை . உலகம் சுற்றும் வாலிபன் படத்திற்கு* * பல**வெளிநாடுகளில் சுற்றுப்பயணம் செய்தபோதும்* ஏராளமான காமிராக்கள் வாங்கினார் .* பயண முடிவில் தன் அண்ணன் சக்கரபாணி, நடிகர்கள் நாகேஷ், அசோகன், ஸ்டில்ஸ் போட்டோகிராபர் சங்கர் ராவ் ஆகியோருக்கு விலை உயர்ந்த காமிராக்களை பரிசளித்தார் . தான்* முதல்வரான பிறகு , சினிமாவில் தொடர்ந்து நடிக்க முடியாததால், தன்னிடம் இருப்பில் இருந்த பலவகையான காமிராக்களை , தன் வீட்டிற்கு விஜயம் செய்த பல புகைப்பட வல்லுனர்களுக்கு பரிசாக அளித்துள்ளார் .**



புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர். தான் சொந்தமாக தயாரித்து, நடித்து , இயக்கிய நாடோடி மன்னன் காலத்திலேயே, காமிரா கோணங்கள் வைப்பது பற்றி அறிந்து வைத்திருந்தார் . சில முக்கிய காட்சிகளுக்கு ஒளிப்பதிவாளர்களுக்கு காமிரா கோணங்கள்* பற்றி* விளக்கி சொல்வதோடு, சில சமயங்களில் அவரே* காமிராக்களை இயக்கவும் செய்தார் .* பொதுவாக எம்.ஜி.ஆர். நாடோடி மன்னன்*படத்திற்கு பிறகு , தான் நினைத்தபடி பாடல்கள் அமையவேண்டும் என்பதில் முனைப்பு காட்டினார் .* அதன்படி பாடலாசிரியர்கள் எழுதும் பாடலை தனக்கு*திருப்தி வரும் வரை* தொடர்ந்து திருத்தங்கள் செய்து* தனது இமேஜ், கொள்கைகள் ,பாதிக்காத வகையில்,மக்களுக்கான சமுதாய சீர்திருத்த கருத்துக்கள் அவர்கள் மனதில் எளிதில் படியும்படி** எழுத வைத்தார் . இப்படி பல* பாடல்கள் சில நாட்களிலும் , சில பாடல்கள்* பல வாரங்களும் ஆகியுள்ளன ,*இப்படி பாடல்கள்மீது தனி அக்கறை கொண்டு பாடலாசிரியர்களை வேலை வாங்கியதன் பலன் திரைப்படம் வெளியான பின் தெரிந்துவிடும் . கவிஞர்களுக்கும் பேரும்* புகழும் கிடைத்துவிடும் . தொடர்ந்து பல படங்கள்*பாடல் எழுத வாய்ப்பும்* கிடைக்கும் . எம்.ஜி.ஆரின் . ஒரு படத்திற்கு பாடல் எழுதுவது மற்ற 10 படங்களுக்கு பாடல் எழுதுவதற்கு சமம் . இதே போலத்தான்*எம்.ஜி.ஆரை புகைப்படம் எடுப்பது அவ்வளவு சுலபமான காரியம் அல்ல .காமிரா கோணம், லைட்டிங் , இடம் , போன்றவை அவருக்கு திருப்தியாக இருக்க வேண்டும் .*எம்.ஜி. ஆரே ஒரு புகைப்பட வல்லுனர் .* ஆகவே, ஒழுங்காக, நல்லவிதமாக புகைப்படம் எடுப்பவர்க்கே, தொடர்ந்து வாய்ப்பு கிடைக்கும் .*அதனால்தான் சில ஒளிப்பதிவாளர்கள் தொடர்ந்து எம்.ஜி.ஆர். படங்களில் பணிபுரிய வாய்ப்பு கிட்டியது .* ஒளிப்பதிவாளர்களுக்கும்,பாடலாசிரியர்களுக்கும்*எம்.ஜ ி.ஆர். வேலை வாங்கும் விதம் சற்று கடினமாகத்தான் ஆரம்பத்தில் தோன்றும் . ஆனால் அந்த பணி, முழுமை பெறும்போது அதன் பலன் இரட்டிப்பு ஆகும் . அதனால்தான் எம்.ஜி.ஆர். பாடல்கள் காலத்தை வென்று ரசிக்கப்படுகின்றன . படங்களின் காமிரா கோணங்கள் ,ஒளிப்பதிவு* இன்றும் பாராட்டப்படுகிறது .


பொதுவாக பொன்மன செம்மல் எம்.ஜி.ஆருக்கு குடிப்பவர்களை கண்டால் பிடிக்காது .எம்.ஜி.ஆருக்கு எதிராக ஆக்கபூர்வமான விமர்சனங்கள் பத்திரிகைகளில் எழுதி வந்தவர் இடதுசாரி சிந்தனையாளரான கார்த்தி என்பவர் .அவர் இயல்பிலேயே தொழிற்சங்க நிர்வாகி. காலப்போக்கில் குடிப்பழக்கத்திற்கு ஆளாகி உடல்நலம் பாதிக்கப்படுகிறது . ஒருநாள் எம்.ஜி.ஆர். சத்யா ஸ்டுடியோவிற்கு செல்லும்போது அருகில் உள்ள நடைமேடையில் வேட்டி சட்டையுடன் அலங்கோலமாக குடித்துவிட்டு ,படுத்துக் கிடக்கிறார் . அதை கவனித்த* எம்.ஜி.ஆர். காரை நிறுத்தி, தன்* உதவியாளரை அனுப்பி, தன சந்தேகத்தை உறுதி செய்கிறார் .* அது கார்த்திதான் என தெரிந்ததும் ,அவரை தன்* காரிலேயே ஏற்றி, கல்யாணி மருத்துவமனையில் அனுமதித்து , அங்குள்ள மருத்துவரிடம் இவர் என்னுடைய நண்பர் ,இவரை நல்லமுறையில் சிகிச்சை அளித்து குணப்படுத்துங்கள். அதற்கான செலவை நான் ஏற்றுக் கொள்கிறேன் என்று சொன்னார் . அவரது வீட்டிற்கும் தகவல் அளிக்க சொன்னார் . அவர் சிகிச்சையில் உள்ள காலம் வரை சில மாதங்களுக்கு , குடும்ப* செலவிற்கான*மளிகை பொருட்கள், காய்கறிகள் போன்றவற்றை வாங்கி தருவதற்கு உரிய ஏற்பாடுகளை செய்து தரும்படி தன் அண்ணன் சக்கரபாணி அவர்களை கேட்டுக்*கொண்டார் . இந்த கார்த்தி குணமாகி வந்த பிறகு பத்திரிகையாளர் சோலையிடம் சேர்ந்து பணி புரிந்து வந்தார் . கார்த்தி* தோற்றத்தில் எடுப்பானவர் .பெரிய மீசை வைத்திருப்பார் . எப்போதும் முழுக்கை சட்டை அணிவார் . இடதுகை சட்டையை மடித்து பார்த்தால், இந்த உயிர் எனக்கு எம்.ஜி.ஆர். அளித்தது என்று பச்சை குத்தி இருக்கும் .தொடர்ந்து ஜர்னலிஸம் படித்த அவர், எம்.ஜி.ஆருக்கு ஆதரவாக*விமர்சனங்கள் எழுத ஆரம்பித்தார் .* தன்னை எதிர்த்தவர்களையம் விமர்சனம் செய்பவர்களையும்* தனது ஆதரவாளர்களாக மாற்றும் திறமை, வல்லமை படைத்தவர்தான் எம்.ஜி.ஆர். அதனால்தான் காலம்கடந்து மக்கள் மனதில் வாழ்கிறார் எம்.ஜி.ஆர்.*


மேலும் தகவல்களை அடுத்த அத்தியாயத்தில் சந்திப்போம்*


நிகழ்ச்சியில் ஒளிபரப்பான பாடல்கள் /காட்சிகள் விவரம்*
------------------------------------------------------------------------------------------
1.பூமழை தூவி வசந்தங்கள் வாழ்த்த -நினைத்ததை முடிப்பவன்*

2.எம்.ஜி.ஆர்.- அசோகன் உரையாடல் - ரிக்ஷாக்காரன்*

3.காஷ்மீர் பியுட்டிபுல்* காஷ்மீர் - இதய வீணை*

4.நீங்க நல்லா இருக்கோணும் நாடு முன்னேற - இதயக்கனி*

5.எம்.ஜி.ஆர். - நாகேஷ் உரையாடல் - அன்பே வா*

6.எங்கே, என் இன்பம் எங்கே - நாடோடி மன்னன்*

7.எம்.ஜி.ஆர்.-மஞ்சுளா-லதா -உரையாடல் -உலகம் சுற்றும் வாலிபன்*

8.ஜவ்வாது மேடையிட்டு - பணத்தோட்டம்*

9.சிலர் குடிப்பது போலெ நடிப்பார் -சங்கே முழங்கு*

10.கடவுள் செய்த பாவம்* - நாடோடி*

*
*

fidowag
5th July 2020, 08:18 PM
பாட்டாலே புத்தி சொன்ன வாத்தியார் எம்.ஜி.ஆர். -சகாப்தம்*நிகழ்ச்சியில்*வின்*டிவியில்* 19/06/20 அன்று திரு.துரை பாரதி*அளித்த*தகவல்கள்*
------------------------------------------------------------------------------------------------------------------

பொன்மன செம்மல் எம்.ஜி.ஆர். அவர்கள் பிரபல பின்னணி பாடகியும், நடிகையுமான திருமதி கே.பி.சுந்தராம்பாள் அவர்களை தனது தாயை போல மதித்து வந்தார் . ஒருமுறை கே.பி.எஸ்.அவர்கள்* தொலைபேசியில் எம்.ஜி.ஆரிடம்* தொடர்பு கொண்டு உனக்கு உடல்நலம் இல்லை என்று கேள்விப்பட்டேன் என்று நலம் விசாரித்தார் . அதன் பிறகு எம்.ஜி.ஆர். திருமதி கே.பி.எஸ்.அவர்களை நேரில் சென்று பார்த்தார் . அப்போது தி.மு.க. ஆட்சியில் கோவை அருகில்,திருமதி கே.பி.எஸ்.அவர்களின் சொந்த ஊரான* கொடுமுடி அருகில் ஒரு கல்லூரி திறப்பதற்கு ,அப்போதைய முதல்வர் கருணாநிதி மூலம் எம்.ஜி.ஆர். ஏற்பாடு செய்திருந்தார் . அதே சமயத்தில் கொடுமுடியில் ,திருமதி கே.பி.எஸ்.அவர்கள் ஒரு திரையரங்கை கட்டி முடித்திருந்தார் . அந்த திரை அரங்கை அப்போதைய முதல்வர் கருணாநிதி, தி.மு.க. பொருளாளர் எம்.ஜி.ஆர்., நடிகை ஜெயலலிதா மூவரும் ஒரே ஜீப்பில் தங்குமிடத்தில் இருந்து* **பயணம் செய்து** விழாவில் கலந்து கொண்டனர் .ஆக, மூன்று முதல்வர்கள் சேர்ந்து கலந்து கொண்ட நிகழ்ச்சியாக அந்த சம்பவம் பதிவானது .



மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். முன்கூட்டியே திருமதி கே.பி.எஸ். அவர்களிடம் அவரது பெயரில் கல்லூரி திறப்பதற்கான யோசனையை தெரிவித்திருந்தார் . அதன்படி* கொடுமுடியில் அவரது திரை அரங்க திறப்பு விழா நிகழ்ச்சியில் அப்போதைய முதல்வர் கருணாநிதி திருமதி கே.பி.எஸ். அவர்களிடம் நீங்கள் சேமித்து வைத்துள்ள பணத்துடன்* அரசு சார்பாக ஒரு நிதியளித்து உங்கள் பெயரிலேயே கல்லூரி ஒன்று திறப்பதற்கு நண்பர் எம்.ஜி.ஆரும் ஆலோசனை கூறியபடி ஒரு திட்டம் இருக்கிறது என்று அறிவித்தார் .அதற்கு திருமதி கே.பி.எஸ்.உறுதி அளித்தார் .கருணாநிதி, எம்.ஜி.ஆர். ஜெயலலிதா ஆகிய மூவரையும் ஒரு சேர நிகழ்ச்சிக்கு ஒன்று கூட்டி**வரவழைத்தவர்**வசியக் குரலுக்கு சொந்தமான , நாம் வாழும் காலத்தில் அவ்வையாராக திரைப்படங்களில் வாழ்ந்த திருமதி கே.பி.எஸ். அவர்கள் பாராட்டுக்குரியவர்*திருமதி கே.பி.எஸ்.அவர்களுக்கும், மூன்று முதல்வர்களுக்கும் இந்த நிகழ்ச்சி* ஒரு மறக்க முடியாத பசுமையான நிகழ்வு .



புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர். அவர்கள் 1969ல் வெள்ளிவிழா படமாக தன் சொந்த தயாரிப்பில் அடிமைப்பெண் படத்தை ராஜஸ்தான் பாலைவனம், ஜெய்ப்பூர் அரண்மனை* போன்ற முக்கிய இடங்களில் படமாக்கி ,தொழில்நுட்ப* வளர்ச்சி ,*நவீன வசதிகள் இல்லாத காலத்தில் ஒருவித பிரமிப்பை படம் பார்க்கும்போது உண்டாக்கி இருந்தார் . அடிமைப்பெண் சிறந்த படமாக, மும்பையில்* பிலிம்பேர் விருது பெற்றது .இந்த படம் வெளியான காலத்தில் ஆயிரம் நிலவே வா என்ற பாடல் நடிகர் சிவாஜி கணேசன் காரில் அடிக்கடி ஒலித்ததாக அப்போது பேசப்பட்டது .அடிமைப்பெண் படத்தை பார்த்திருந்த நடிகர் சிவாஜி கணேசன் தமிழ் திரையுலகம் மட்டுமல்ல, இந்தியாவில்* எந்த திரையுலகிலும்*எந்த ஒரு தனி மனிதருக்கும்,நடிகருக்கும் இதுபோல காட்சிகள் அமைத்து, ரிஸ்க் எடுத்து நடிக்கும் தைரியம் கிடையாது என்று கருத்து தெரிவித்தாராம் .பாலைவன காட்சிகள், அரண்மனை காட்சிகள் , நீர்வீழ்ச்சி காட்சிகள்* படமாக்கம்**சிங்கத்தை தானே சுயமாக வளர்த்து ,திரைப்படத்தில் அதனுடன் சண்டை போடுவது , இவையெல்லாம் அண்ணன் எம்.ஜி.ஆரால்தான் முடியும். அதற்கு தனித்திறமை தேவை. வேறு யாராலும் இது* சாத்தியம் இல்லை என்று மனம் திறந்து பாராட்டியுள்ளார் .


அடிமைப்பெண் படம் பூஜையுடன் 1966ல் ஆரம்பிக்கப்பட்டது . ஆரம்பத்தில் எம்.ஜி.ஆருடன், சரோஜாதேவி, கே.ஆர். விஜயா இருவரும் நடிப்பதாக இருந்தது .1967ல் எம்.ஜி.ஆர். குண்டடி பட்டதும், ஒய்வு பெற்று* படத்தை மீண்டும் துவங்கியபோது* இருவரும் மாற்றப்பட்டனர் . அவர்களுக்கு பதிலாக ஜெயலலிதா இரட்டை வேடம் ஏற்று நடித்தார் .1966ல் வெளியான நான் ஆணையிட்டால் படத்தில் வரும் நல்ல வேளை நான் பிழைத்துக் கொண்டேன் என்கிற பாடலில் விரைவில் வருகிறது அடிமைப்பெண் என்று விளம்பரப்படுத்தி இருந்தார்கள் .எம்.ஆர். ராதாவால் எம்.ஜி.ஆர். சுடப்பட்டதும் 1967க்க பிறகு சில மாற்றங்களுடன் படத்தை துவக்கி 1969* மே மாதம் முதல் தேதியில் எம்.ஜி.ஆர். வெளியிட்டார் .தமிழகத்தில் முதன் முதலாக சென்னையில் 4 அரங்குகளில்*கொளுத்தும் வெயிலில் 400* கொட்டகை நிறைந்த காட்சிகள் என்று தினத்தந்தியில் முழுப்பக்கம்* .விளம்பரம் வந்தது* தமிழகத்தில் 14 அரங்குகளில்*100 நாட்களும் , மதுரையில் வெள்ளிவிழாவும் கண்டது .1969ம்* ஆண்டில் வசூலில் சாதனை புரிந்ததில் முதல் படமாகவும், 1965ல் வெளியான எங்க வீட்டு பிள்ளை படத்தின் வசூலை முறியடித்தும்* சாதனை புரிந்தது .



பெங்களுருவில் எம்.ஜி.ஆர். கன்னட நடிகர் ராஜ்குமாருடன் பார்வையற்றோர் பள்ளி விழா ஒன்றில் கலந்து கொள்ள அழைக்கப்பட்டார் . விழாவில் நடிகர் ராஜ்குமார் பேசியபின் எம்.ஜி.ஆர். பேசுகிறார். எம்.ஜி.ஆர். பேசும்போது, இந்த பார்வையற்றோர்* பள்ளியின் வளர்ச்சிக்காக ரூ.50,000/- நிதி அளிப்பதாக அறிவித்தார் .* . மாணவ மாணவியர் , பள்ளி ஆசிரியர்கள் அனைவரும்,கண்ணீர் மல்க* கைதட்டி எம்.ஜி.ஆருக்கு பாராட்டுக்கள் தெரிவிக்கின்றனர் .நடிகர் ராஜ்குமார் அசந்து போகிறார் . ஏனென்றால் அந்த காலத்தில் இந்த பள்ளிக்கு இப்படிப்பட்ட ஒரு தொகையை யாரும் அளித்ததில்லை .நிகழ்ச்சிக்கு பிறகு நடிகர் ராஜ்குமார் ,எம்.ஜி.ஆரிடம் எப்படி இவ்வளவு பெரிய தொகையை இந்த பள்ளிக்கு*அளிக்க முன்வந்தீர்கள் .என்று கேட்டார் .அதற்கு பதில் சொன்ன எம்.ஜி.ஆர்., நான் குண்டடிபட்டு சென்னை அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தபோது , பூந்தமல்லி பார்வையற்றோர் பள்ளியில் இருந்து இரண்டு மாணவர்கள் என்னை பார்க்க முற்பட்டனர் . ஆனால் அவர்களுக்கு முறையான அனுமதி கிடைக்கவில்லை .எப்படியோ, தட்டுத்தடுமாறி, யாரையோ பிடித்து,அவர்களின் சிபாரிசின் பேரில் அனுமதி கிடைத்து என்னை பார்க்க வந்தார்கள் .அவர்களை உள்ளே அனுமதிக்கும்படி கேட்டுக் கொண்டேன் .அவர்கள் என்னை பார்த்துவிட்டு, என் கைகளை தொட்டு வணக்கம் தெரிவித்தார்கள்,கண் கலங்கினார்கள்* .உங்களால் என்னை பார்க்க முடியாது . நீங்கள் ஏன் இவ்வளவு கஷ்டப்பட்டு , பூந்தமல்லியில் இருந்து வந்தீர்கள் என கேட்டேன் . நீங்கள் இருக்கும் நிலையில் எதற்கு இவ்வளவு சிரமப்பட வேண்டும் என்றேன் பதிலுக்கு அவர்கள் நாங்கள் உங்களை பார்த்ததில்லை. வானொலி மூலம் உங்கள் குரலை கேட்டிருக்கிறோம் .*.திரைப்படங்களில் உங்கள் நடிப்பில் நீங்கள் பேசும் வசனங்களை நாங்கள் கேட்டு மகிழ்ந்துள்ளோம் .எங்கள் மனங்களில் நீங்கள் வாழ்கிறீர்கள் என்று சொன்னதும் எம்.ஜி.ஆர். மெய் சிலிர்த்து போனாராம் .இந்த நிகழ்வு, எம்.ஜி.ஆர். மனதை நெகிழ செய்தது* மட்டுமல்லாமல் , நீங்காத நினைவாக* மனதில் பதிந்தது . அந்த பார்வையற்றோர் நினைவாகத்தான் இந்த பள்ளிக்கு உதவ என்மனம் முன்வந்தது .என்று எம்.ஜி.ஆர். நடிகர் ராஜ்குமாரிடம் சொன்னதும் ராஜ்குமார் கண் கலங்க நன்றி சொன்னாராம் .


தி.நகர் ,ஆற்காடு சாலையில் தனி அலுவலகம் ஒன்று இருக்கிறது . அங்குதான்*கட்சி பிரமுகர்கள், திரையுலகை சார்ந்தவர்கள் எல்லாம் சந்திப்பது* எம்.ஜி.ஆருக்கு* வழக்கம் . அலுவலகத்தில் இருந்து எம்.ஜி.ஆர். புறப்படும்போது, போக் ரோட்டில் உள்ள பள்ளி ஒன்றின் மாணவர்கள் அங்குள்ள ஒரு பள்ளத்தில்*உணவருந்திய தட்டுக்களை கழுவுவது, அதிலேயே தண்ணீர் பிடித்து குடிப்பது*என்று செய்வார்கள் .எம்.ஜி.ஆர். கார் வரும்போது சில மாணவர்கள்* காரை மறித்து எம்.ஜி.ஆரை பார்க்க வருவார்கள் உங்களுக்கு என்ன வேண்டும் என்று எம்.ஜி.ஆர். கேட்க, ஒன்றுமில்லை* உங்களை பார்க்க ஆசைப்பட்டோம் என்று கூறுவார்கள் .சில நொடிகளில் கார் அங்கிருந்து புறப்பட்டுவிடும் , இந்த செய்கை சில நாட்கள் தொடர்ந்தது . இந்த பிரச்னையில் இருந்து விடுபட, எம்.ஜி.ஆரின் கார் டிரைவர் எம்.ஜி.ஆருக்கு தெரியாமல் ,உள்ளூர் தி.மு.க. கவுன்சிலரிடம் இதுபற்றி முறையிட்டார் .உடனே அந்த கவுன்சிலர் , பள்ளி தலைமை ஆசிரியரிடம் , தலைவர் காரில் செல்லும்போது, உங்கள் பள்ளி மாணவர்கள் காரை மறிக்கிறார்கள் .கூச்சலிடுகிறார்கள் . என்று புகார் தெரிவிக்கிறார் .ஆசிரியர் அந்த மாணவர்களை அழைத்து, கண்டித்து ,பிரம்பால் அடித்துவிடுகிறார் . அதன்பின் எம்.ஜி.ஆர். கார் செல்லும்போது சாலையில் காரை மறிக்க மாணவர்கள் வருவதில்லை என்பதை அறிந்த எம்.ஜி.ஆர். என்ன ஆயிற்று மாணவர்களுக்கு, யாரையும் காணோமே என்று சொல்லியபடி, காரை நிறுத்தச்சொல்லி , மாணவர்கள் கூடுமிடத்திற்கு* கார் வந்து நிற்கிறது .மாணவர்கள் உணவருந்திய தட்டிலேயே* தண்ணீர் பிடித்து குடிப்பதை எம்.ஜி.ஆர். கவனித்து விடுகிறார் .அவர்களில் ஒரு சிலரை அழைத்து, உங்களுக்கு தண்ணீர் குடிப்பதற்கு டம்ளர் இல்லையா .ஏன் தட்டிலே பிடித்து குடிக்கிறீர்கள் என்று கேட்டதற்கு ,எங்களிடம் டம்ளர் இல்லை என்று சொன்னார்கள் .சரி, ஏன் என்னை பார்க்க வருவதில்லை .என்று எம்.ஜி.ஆர். கேட்டதற்கு ,நீங்கள்தான் எங்கள் ஆசிரியரிடம் புகார் சொல்லி எங்களை அடிக்கவைத்து விட்டீர்களே* என்று சொன்னார்கள் .அப்போது எம்.ஜி.ஆர். சொன்னதாவது,நீங்கள் எப்போதும் என்னை பார்க்க அலுவலகத்திற்கு* வரலாம்*ஆனால் வகுப்பு நேரத்தில் அல்ல* உணவு இடைவேளையின்போது ,அல்லது*.வகுப்புகள்* முடிந்தபின் சந்திக்கலாம் என்று சொல்லிவிட்டு புறப்பட்டார் . மறுநாள்*.அந்த பள்ளி மாணவர்களுக்காக சுமார் 50 எவர்சில்வர் தட்டுகள், 50 சில்வர் டம்ளர்கள் ,ஒரு எவர்சில்வர் டிரம் ஆகியன எம்.ஜி.ஆரால்* கவுன்சிலர் மூலம் பள்ளி தலைமை ஆசிரியரிடம்* வழங்கப்பட்டது .* பள்ளி மாணவர்களும், ஆசிரியரும் கவுன்சிலர் மூலம் எம்.ஜி.ஆருக்கு நன்றி தெரிவித்தனர் .


மேலும் தகவல்களுக்கு அடுத்த அத்தியாயத்தில் அறிந்து கொள்வோம்*


நிகழ்ச்சியில் ஒலித்த பாடல்கள் /காட்சிகள் விவரம்*
----------------------------------------------------------------------------------
1.பொன்னந்தி மாலை பொழுது - இதய வீணை*

2.இந்த பச்சைக்கிளிக்கொரு செவ்வந்தி -நீதிக்கு தலைவணங்கு*

3.எம்.ஜி.ஆர். சிங்கத்துடன் மோதவுள்ள காட்சி** *எம்.ஜி.ஆர்.-சந்திரபாபு உரையாடல்* * - அடிமைப்பெண்*

4.நல்லவேளை நான் பிழைத்துக்கொண்டேன் -நான் ஆணையிட்டால்*

5.ஏமாற்றாதே ஏமாற்றாதே - அடிமைப்பெண்*

6.நாடு அதை நாடு - நாடோடி*

7.நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி -பெற்றால்தான் பிள்ளையா*


8.ஆயிரம் நிலவே வா - அடிமைப்பெண்*

fidowag
7th July 2020, 09:23 PM
தனியார் தொலைக்காட்சிகளில் நடிக*மன்னன் எம்.ஜி.ஆர். திரைப்படங்கள்*ஒளிபரப்பான விவரம்*
---------------------------------------------------------------------------------------------------------------------
01/07/20 - சன் லைப்* - காலை 11 மணி - உழைக்கும் கரங்கள்*

* * * * * * * * முரசு டிவி -மதியம் 12 மணி /இரவு 7 மணி -தாயை காத்த தனயன்*

* * * * * * * * *பாலிமர் டிவி -இரவு 11 மணி - தாய் சொல்லை தட்டாதே*

02/07/20* - சன் லைப் - மாலை 4 மணி - புதிய பூமி*

03/07/20 - வசந்த் டிவி - காலை 10 மணி - நீரும் நெருப்பும்*

* * * * * * * *சன் லைப் - மாலை 4 மணி - நான் ஆணையிட்டால்*

* * * * * * * *புது யுகம் டிவி -இரவு 7 மணி - நீரும் நெருப்பும்*

* * * * * * *மெகா 24 டிவி - இரவு 9 மணி - தாயை காத்த தனயன்*

04/07/20 முரசு டிவி - மதியம் 12 மணி /இரவு 7 மணி--அலிபாபாவும்* 40திருடர்களும்**

06/07/20 - சன் லைப் - காலை 11 மணி - தெய்வத்தாய்*

* * * * * * * * *ராஜ் டிவி* - பிற்பகல் 1.30 மணி - ரகசிய போலீஸ் 115

* * * * * * * * வசந்த் டிவி -பிற்பகல் 1.30 மணி -தாய் சொல்லை தட்டாதே*

07/07/20* முரசு டிவி - மதியம் 12மணி /இரவு 7மணி - நல்ல நேரம்*

* * * * * * * *கே டிவி* * -பிற்பகல் 1 மணி - அவசர போலீஸ் 100

* * * * * * * *ராஜ் டிவி - பிற்பகல் 1.30 மணி - அடிமைப்பெண்*

* * * * * * * வெளிச்சம் டிவி -பிற்பகல் 2 மணி -கலங்கரை விளக்கம்*

* * * * * * *சன் லைப்* - மாலை 4 மணி - மன்னாதி மன்னன்*

* * * * * * *ஜெயா மூவிஸ் - இரவு 10 மணி - தாயின் மடியில்*

fidowag
8th July 2020, 08:07 PM
பாட்டாலே புத்தி சொன்ன வாத்தியார் எம்.ஜி.ஆர். - சகாப்தம்*நிகழ்ச்சியில்*வின் டிவியில்*20/06/20 அன்று திரு.துரை பாரதி*அளித்த*தகவல்கள்*
----------------------------------------------------------------------------------------------------------------------
பிரபல இயக்குனர் ஒருவரிடம் உதவியாளராக பணிபுரிந்த திரு.கோபாலகிருஷ்ணன் என்பவர் சென்னை நங்கநல்லூரில் வசித்து வந்தார் . வீட்டு வாடகை சில மாதங்கள் தர முடியவில்லை .பலரிடம் உதவி கேட்டு பலனில்லை .ஒரு நாள் வீட்டு உரிமையாளர் வீட்டில் உள்ள பாத்திரங்கள் பொருட்களை எல்லாம் தனது ஆட்கள் மூலமாக வெளியே வீசி எறிகிறார்*அவருடைய மனைவி, குழந்தைகளை வீட்டை விட்டு விரட்டுகிறார் . என்ன செய்வது என்று தெரியாமல் , வாகினி ஸ்டுடியோவில் பட்டிக்காட்டு பொன்னையா படத்திற்காக படப்பிடிப்பில் இருந்த மக்கள் திலகம் எம்.ஜி.ஆரை சந்திக்க வருகிறார் .படப்பிடிப்பு இடைவேளையில் எம்.ஜி.ஆர். அவரை பார்த்துவிட்டு என்ன விஷயம் இவ்வளவு தூரம் வந்திருக்கிறீர்கள் என்று கேட்க ,கோபாலகிருஷ்ணன் அழுது விடுகிறார் . அவரை சமாதானப்படுத்திய எம்.ஜி.ஆர். ,உங்களுக்கு என்ன உதவி வேண்டும் சொல்லுங்கள் என்கிறார் . வீட்டு வாடகை பணம் ரூ.3,000/- தரவில்லை என்பதற்காக உரிமையாளர் என்னை* அவமானப்படுத்தி விட்டார் . மனைவி, குழந்தைகள் எல்லாம் தெருவில் நிற்கிறார்கள் என்று சொல்கிறார் .* அதை கேட்ட எம்.ஜி.ஆர். முதலில் நீங்கள் உணவருந்தி விட்டு வீட்டிற்கு செல்லுங்கள்*. மற்றவைகளை* நான் பார்த்துக் கொள்கிறேன்* என்று கூறி* அனுப்பிவிட்டார் . அவர் வீட்டுக்கு திரும்பியதும் ,வீட்டு உரிமையாளர் உங்கள் பணம் வந்து சேர்ந்துவிட்டது என்று கூறி, வீட்டில் அவர்களை தங்க வைக்கிறார் . பின்னர் இரவு 9 மணியளவில் எம்.ஜி.ஆர். தனது உதவியாளர் மூலம் ரூ.10,000,-* இதர செலவுகளுக்காக கொடுத்தனுப்புகிறார் .கோபாலகிருஷ்ணனுக்கு இன்ப அதிர்ச்சி .,ஆனந்த கண்ணீர் சிந்துகிறார் .அந்த உதவியாளர் கோபாலகிருஷ்ணனுக்கு பணம் கொடுத்துவிட்டு** எம்.ஜி.ஆரிடம்* திரும்பி வந்து சொன்ன*பிறகுதான் எம்.ஜி.ஆர். இரவு உணவருந்த சென்றார் . அதாவது தான் செய்த உதவி ,அந்த நபரை சென்று அடைந்துவிட்டது என்று உறுதி செய்த பின்னர்தான் சாப்பிட சென்றார் ..இப்படி பசியோடு காத்திருந்து மற்றவர்களுக்கு உதவுகிற செய்கைகளால்தான் எம்.ஜி.ஆர். மறைந்தும் மறையாமல் மக்கள் மனதில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்*.


மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். எவ்வளவு பெரிய திறமைசாலி என்பதற்கு திண்டுக்கல் தேர்தல் ஒரு உதாரணம் .* திண்டுக்கல்லில் இடைத்தேர்தல் அறிவிப்பு வந்ததும் கட்சி ஆரம்பித்த 7 மாதங்களில் அ.தி.மு.க. போட்டியிடுகிறது மாயத்தேவர் வேட்பாளராக அறிமுகமாகிறார் .* ஆளும் கட்சியான தி.மு.க. அதிகாரம், பணம், படை பலத்துடன் போட்டியிடுகிறது . இந்திரா காங்கிரஸ், பழைய காங்கிரஸ் காமராஜர் தலைமையில் களம் காண்கிறது .* பார்வார்டு பிளாக் கட்சி தனித்து நிற்கிறது .* எம்.ஜி.ஆருக்கு பலத்த எதிர்ப்புகள், நான்குமுனை போட்டி ..இந்த சூழலில்* முதல் முறையாக எம்.ஜி.ஆர். தலைமையில் அ.தி.மு.க.தேர்தலில் போட்டி . தேர்தல் பிரச்சாரத்தின்போது*நள்ளிரவில் பொதுக்கூட்டம் முடிந்ததும் , நடுக்காட்டில் வேனை நிறுத்தி,*ஒரு துண்டை விரித்து படுத்து இளைப்பாறுவாராம் . அருகில் துணைக்கு பாதுகாவலர்கள் இருப்பார்கள் . சற்று நேரம் கழித்து எழுந்ததும் ,தனது துண்டை இரு கைகளால் மார்புக்கு நேராக இறுக்கி பிடித்தவண்ணம் ஏதாவது தாக்குதல்கள் வந்தால் எதிர்த்து தாக்குவதற்காகவு, தடுப்பதற்காகவும்* விறுவிறுப்புடன் நடந்து செல்வாராம் .* இப்படி ஒரு புது வியூகத்தை எம்.ஜி.ஆர்.வகுத்தார் .



ஒரு நாள் எம்.ஜி.ஆர். பார்வார்டு பிளாக் கட்சி தலைவர் மூக்கையா தேவர் வீட்டுக்கு விஜயம் செய்கிறார் . அவரை வரவேற்ற மூக்கையா தேவரின் மனைவி பதற்றத்துடன், தேவர் ஐயா வெளியில் சென்றுள்ளார் .முன்கூட்டி தகவல் சொல்லாமல் வந்து விட்டீர்களே ..பரவாயில்லை. அமருங்கள். அவருக்கு தகவல் அனுப்பி விடுகிறேன் . விரைவில் வந்துவிடுவார்என்று சொல்கிறார். ஒன்றும் அவசரமில்லை .நான் காத்திருக்கிறேன் . இந்த பக்கமாக பிரச்சாரத்திற்கு வந்தேன் . அப்படியே தேவர் ஐயாவை பார்த்துவிட்டு செல்லலாம் என்று முடிவு .என்று சொன்னார் . தேவரின் மனைவி எம்.ஜி.ஆரிடம்* .கொஞ்சம் கஞ்சி சாப்பிடுங்கள் என்று சொல்லி அதற்கான ஏற்பாடுகளை செய்கிறார் . அதற்குள் தகவல் கிடைத்து மூக்கையா தேவர் வீட்டுக்கு திரும்புகிறார் .* வீட்டு வாசலில் கட்டுக்கடங்காத கூட்டத்தை பார்த்துவிட்டு பதற்றத்துடன் உள்ள நுழைந்தவர் ,எம்.ஜி.ஆரை பார்த்ததும் கட்டி தழுவி வரவேற்கிறார் . பின்னர் எம்.ஜி.ஆர். தேவரிடம் பேசும்போது,உங்கள் வேட்பாளரை நீங்கள் இங்கு நிறுத்தி இருந்தாலும்* அ.தி.மு.க. முதல் முறையாக தேர்தலில் போட்டியிடுகிறது .அதற்கு உங்கள் ஆதரவு தேவை. இந்த தேர்தலில் வெற்றிக்கனியை பறிக்க ஆசைப்படுகிறேன் என்று* எம்.ஜி.ஆர். கூறி தேர்தல் களத்தில் இறங்கினார் .


எம்.ஜி.ஆர். என்ற பெயர் தமிழா, ஆங்கிலமா ,எந்த மொழி என்றே தெரியாமல் மக்கள் மனதில் இன்றைக்கும் ஆழ பதிந்துள்ளது .சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள், முதியவர்கள்* நெஞ்சில் உள்ளே இருக்கும் இன்னொரு பெயர் , சொல்லும் எம்.ஜி.ஆர். தான் . அந்த பெயரின் வீரியமும், சக்தியும் எவ்வளவு பலம் வாய்ந்தது என்பதை* தொடர்ந்து பல ஆண்டுகளாக கேள்விப்பட்டிருக்கிறேன் .பல்வேறு தரப்பினரின்* எம்.ஜி.ஆர். பற்றிய ஆலோசனைகள், அருமை பெருமைகள் கூறுபவர்கள், சம்பந்தப்பட்டவர்களின்* தொடர்புகள்* இருந்து கொண்டே இருக்கின்றன . எம்.ஜி.ஆர். பலரது வாழ்க்கையில் பல்வேறு விதமான* எழுச்சியை உருவாக்கி இருக்கிறார் . உண்மையிலேயே, பலரது வாழ்க்கையில் நம்பிக்கை பெறுவதற்கு எம்.ஜி.ஆர். என்கிற சொல் ஒரு வித்தாகும் ,வேராகும், கிளைகள் நிறைந்த ஒரு பெரிய மரமாகும் என்கிற வகையில் தமிழகத்தின் பெருமைகளாக திகழ்கின்றன .என்று சொன்னால் யாராலும் மறுக்க முடியாது .


தொடர்ந்து அடுத்த அத்தியாயத்தில் சந்திப்போம்*

நிகழ்ச்சியில் ஒலித்த பாடல்கள் /காட்சிகள் விவரம்*
-----------------------------------------------------------------------------------
1.மனுஷனை மனுஷன் சாப்பிடுறாண்டா -தாய்க்கு பின் தாரம்*

2.அச்சம் என்பது மடமையடா*- மன்னாதி மன்னன்*

3.பிறந்த இடம் தேடி நடந்த*தென்றலே -நான் ஆணையிட்டால்*

4.உலகம் பிறந்தது எனக்காக - பாசம்*

fidowag
8th July 2020, 10:07 PM
"ஆயிரத்தில் ஒருவன்" பிறந்த நாள் ஜூலை 9 . இந்த படத்தின் பெருமைகளை ஒரு பக்கத்தில் எழுதிவிட முடியாமா என்றால் எப்படி முடியும்.தமிழ் படத்தை ஹாலிவுட் உயரத்துக்கு எடுத்து சென்ற படம்.
நமது தொழில் நுட்பக் கலைஞர்களுக்கு எல்லையில்லா திறமை இருப்பதை அறிந்த எம்ஜிஆர் அவர்களின் சீரிய உழைப்பால் அதை வெளிச்சத்துக்கு கொண்டு வந்த படம்.

பத்மினி பிக்சர்ஸ் எம்ஜிஆரை வைத்து எடுத்த முதல் படம். சில நாடக சினிமாக்களை நிறைய செலவு செய்து எடுத்து நொந்து போன நிலையில் முதல் முதலாக நல்லதொரு சினிமாவை எடுக்க தலைவர் மூலம் கற்றுக்கொண்டு
அதில் வெற்றியும் பெற்று சூழ்ந்த கடனில் இருந்து மீண்டு வந்த படம்.
அதன்பிறகு தலைவர் கால்ஷீட் கிடைத்தால் போதும் எத்தனை படம் வேண்டுமானாலும் எடுப்பேன் என்று தலைவருடன் பணியாற்றுவதில் பெரு மகிழ்ச்சி கொண்டார் பந்துலு.

"மதம் கொண்ட யானை என்ன செய்யும் தெரியுமா? சினம் கொண்ட சிங்கத்திடம் தோற்று ஓடும்". "வெற்றி தேவதையே உன் வீட்டு வேலைக்காரிதானே". "உங்கள் அதிகாரம் என்ன சிலப்பதிகாரமா?
என்றென்றும் நிலைத்து நிற்க!"
என்பது போன்ற இந்தக்கால இளைஞர்களையும் கவர்ந்த r k சண்முகத்தின் வசனம் படத்தின் கூடுதல் சிறப்பு. அதனால்தான் 2014 ல் மீண்டும் வெளியாகி வெள்ளிவிழா கொண்டாடி ஒரு புதிய சாதனையை ஏற்படுத்தியது.

நம்பியாரிடம் ஒருசிலர் ஹாலிவுட் படங்களை பார்ப்பீர்களா? என்ற கேள்விக்கு அவர் அளித்த பதில் "ஆயிரத்தில் ஒருவனை" பாருங்கள். ஹாலிவுட் படம் பார்த்த உணர்வு ஏற்படும்.
"ஆயிரத்தில் ஒருவன்" வந்த பிறகு வந்த "கரீபியன் சீ" படம் கடல் கொள்ளை சம்பந்தப்பட்ட படம்தான்
சக்கை போடு போட்டது.

அந்தக் காலத்திலே எவ்வித வசதியும் இல்லாத காலத்தில் இப்படி ஒரு படம் வந்ததென்றால் அது நிச்சயம் ஆச்சர்யத்துக்குரியது. அந்த படம் சற்று தாமதித்து வந்திருந்தால் இன்னும் நிகரற்ற வெற்றியை பதிவு செய்திருக்கும் என்பது என் கணிப்பு. ரீ மாஸ்டர் செய்து 2014 ல் வெளியிட்ட போது வெள்ளிவிழாவையும் தாண்டி 190
நாட்கள் ஓடி பெரிய வெற்றியை பதிவு செய்தது நினைவிருக்கலாம். படம் வெளியான 1965 ல் இருந்து நிற்காமல் தொடர்ச்சியாக ஓடிக்கொண்டிருக்கும் படம்
"ஆயிரத்தில் ஒருவன்" மட்டும்தான்.

பந்துலுவுக்கு "ஆயிரத்தில் ஒருவன்" ஒரு பொன் முட்டையிடும் வாத்து என்றே சொல்லலாம்.
1965 ல் வெளியான போது சென்னையில் மூன்று திரையரங்கம், கோவை,திருச்சி மற்றும் சேலத்தில் 100 நாட்கள் ஓடியது.
மதுரையில் ஷிப்டிங் முறையில் 100
நாட்களை பதிவு செய்தது.இலங்கையில் இரண்டு தியேட்டர்களில் 100 நாட்கள் ஓடியது.

தூத்துக்குடி துறைமுகம் சார்ந்த பகுதி என்பதால் முதல் 10 தினங்கள் 4 காட்சிகள் நடைபெற்று பாலகிருஷ்ணாவில் புதிய சாதனையை ஏற்படுத்தியது. தொடர்ந்து 63 நாட்கள் ஓடி சாதனை படைத்தது. படகோட்டியும், ஆயிரத்தில் ஒருவனும் எத்தனை முறை திரையிட்டாலும் 10 தினங்களுக்கு மேல் ஓடி வெற்றியை பதிவு செய்ய தவறுவதில்லை.

fidowag
8th July 2020, 10:14 PM
"உண்மையை வாங்கி பொய்களை விற்று உருப்பட வாருங்கள்" என்ற கண்ணதாசனின் பாடல் வரிகள் அற்புதமானது. இந்த வரிகளை போல நாம் வாழ வேண்டும் என்றால் உண்மையை தெரிந்து கொண்டு
பொய்களை சொல்லி பிழைக்க வேண்டும் என்ற பொருள் கொள்ளலாம். மீடியா என்று சொல்லக்கூடிய செய்தி ஸ்தாபனங்கள் அதைதான் செய்து கொண்டிருக்கின்றன. செய்தி ஒன்றுதான். ஆனால் அதை ஆளும் கட்சி செய்தி ஸ்தாபனங்கள் அந்த செய்திக்கு கட்சியின் கலர் அடித்து அவர்கள் மக்களுக்கு விநியோகம் செய்வார்கள்.

அதே செய்தியை எதிர்க்கட்சி அவர்கள் கட்சியின் வர்ணம் பூசி மக்களுக்கு விநியோகிப்பார்கள். ஆக மக்கள்தான் உண்மை எது? பொய் எது?ன்னு ஒண்ணும் புரியலை நம்ம கண்ணை நம்மாலே நம்ப முடியலை,
என்ற பாடலுக்கு ஏற்ப குழப்ப நிலைக்கு தள்ளப்படுகிறார்கள்.
காரணம் சுய நலம்.

ஆளுங்கட்சி
தங்கள் நாற்காலியை கெட்டியாக பிடித்து கொள்ள அந்த செய்தியை
அவர்களுக்கேற்ற மாதிரி வாசிப்பார்கள். எதிர்க்கட்சி அதே நாற்காலியை குறி வைத்து அந்த செய்தியை வேற கலரில் வாசிப்பது இப்போதெல்லாம் வாடிக்கையாகி விட்டது. நான்தான் மக்களுக்கு சேவை செய்வேன் என்று அவர்கள் அடம் பிடிப்பது உண்மையான மக்கள் சேவைக்காகவா?
இல்லை அந்த நாற்காலி தரும் எல்லையில்லா செல்வமும் புகழுமா?
என்று யோசிப்போமானால் நம் அறிவுக்கு தட்டுப்படுவது என்ன என்று நமக்கே நன்றாகவே தெரிகிறது.

பலமுறை அனுபவித்த கட்சி அந்த
பதவியின் ருசி அறிந்தவர்கள். தேனை எடுப்பவன் கைகளை வாயில் வைக்காமல் கழுவி விடுவானா? அதே நேரம் மக்களில் சுமார் 60 சதவீதத்தினர் செய்திகளை உண்மை நிலையில் படிக்க விரும்புகின்றனர். மீதம் உள்ளவர்கள்தான் உண்மை எது பொய்மை எது என்ற தடுமாற்றத்தில் இருப்பவர்கள்.

ஒரு காலத்தில் மக்களுக்கு உண்மையான செய்திதான் விநியோகிக்கப்பட்டது.
ஆனால் இப்போது அது சாத்யமில்லை. இந்த ரெண்டும் கெட்டான் நடுநிலை செய்தி நிறுவனங்கள் உண்மையை சொல்ல
தைரியமின்றி அதே நேரம் மக்களுக்கு எப்படியாவது உண்மை செய்தியை சேர்ப்பதற்காக "கிசுகிசு"வை பயன்படுத்தினார்கள்.

உதாரணமாக ஒன்றை மட்டும் சொல்கிறேன். ஏனென்றால் நேரடியாக உண்மையை சொல்லி விட்டால் அந்த செய்தி நிறுவனத்துக்கே கலர் பூசி விடுவார்கள். அதுமட்டுமல்ல அடுத்தாற்போல் இவர் உண்மையை
சொல்லி விடுகிறார், எனவே இவரிடமிருந்து விலகி இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள்.
எனவே உண்மை அவர்களுக்கு மறைக்கப்படுகிறது.

"நாம்தான் எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் அப் பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு" என்ற வள்ளுவப் பெருந்தகையின் வாக்கிற்கிணங்க உண்மை தன்மையை கண்டுபிடிக்க வேண்டும்.
அந்த நேரத்தில் வந்த ஒரு கிசுகிசு.
புராண பிரமாண்ட படங்களை எடுக்கும் ஒரு தயாரிப்பாளர் பல இடங்களில் கடன்பெற்று கிளைமாக்ஸ் காட்சிக்காக போடப்பட்ட 1 லட்ச ரூபாய் மதிப்புள்ள
செட் அடித்த சமீபத்தில் அடித்த சூறைக்காற்றில் சிதைந்து போனதை கண்டு செய்யவதறியாது திகைத்து கை பிசைந்து நிற்கிறார். குறிப்பிட்ட காலத்தில் படத்தை வெளியிட முடியாமலும்
வாங்கிய பணத்திற்கு வட்டி கட்ட முடியாமலும் தவித்து வருகிறார்.
சம்பந்த பட்டவர்கள் கை கொடுப்பார்களா?. என்று தெரியவில்லை
என்று முடித்திருப்பார்கள்.

என்ன இப்படி எழுதிட்டீங்க! இனிமே உங்களுக்கு செய்தி தரமாட்டோம் என்று சொல்லி விட்டால் அடுத்த வாரம் அதை திரித்து தெலுங்கில் புராணப் படத்தை எடுப்பவர்கள் என்று மாற்றி சொல்லுவார்கள். 70 களில் நிறைய சினிமா பத்திரிக்கைகள் சினிமா வில் எம்ஜிஆர் ஆதரவு சிவாஜி ஆதரவு என்று கணக்கற்ற பத்திரிக்கைகள் வெளிவந்தது. அதில் சிவாஜிக்கு ஆதரவாக முழு பொய்களை மட்டுமே. எழுதிக்கொண்டிருந்த 'திரை மன்னன்" மற்றும் "மதிஒளி" போன்ற பத்திரிகைகள் சிவாஜி ரசிகர்களின் சந்தோஷத்துக்காக அவர்களுக்கு கற்பனையில் உதிக்கின்ற அத்தனையையும் அவரின் ரசிகர்களுக்கு விற்பனை செய்வார்கள்.

1968 ல் சிவாஜிக்கு மொத்தம் 8 படங்களும் எம்ஜிஆருக்கு 8 படங்களும் வந்தது. எம்ஜிஆரின் 8 படங்களுக்கும் நாயகி ஜெயலலிதா தான். மதிஒளி எழுதுகிறது "ரகசிய போலீஸ் 115." தோல்வி அடைந்து விட்டது. "குடியிருந்த கோயில்" இடி விழுந்த கோயில் ஆனது. "ஒளிவிளக்கு" ப்யூஸ் ஆன பல்பாகி விட்டது என்று கூசாமல் பொய்களை கட்டவிழ்த்து விட்டது. அதனால் எம்ஜிஆர் "அடிமைப்பெண்ணை" மட்டும்தான் நம்பியிருக்கிறார் என்று.

இது அந்த பத்திரிகையின் தவறாக இருந்தாலும் அப்படி அவர்கள் எழுதாவிட்டால் அதே மாதிரி எழுத. இன்னெரு பத்திரிக்கையை சிவாஜி ரசிகர்கள் உருவாக்கி அதை எழுத வைப்பார்கள் என்பதே உண்மை.ஆனால் எம்ஜிஆர் ஆதரவு பத்திரிக்கைகளுக்கு பொய் சொல்ல வேண்டிய அவசியம் கிடையாது.
எம்ஜிஆர் படங்கள் இயல்பாகவே சாதனைகள் செய்வதால் அதை பொய் என்று சொல்லி சிவாஜி ரசிகர்களுக்கு உற்சாகமூட்டுவதுதான் இந்த பத்திரிகைகளின் வேலை. இந்த பத்திரிகை ரிக்ஷாக்காரன் வசூலை ராஜா முறியடித்ததாக போட்டிருக்கிறார்கள்.

அதற்கு காரணம் "ரிக்ஷாக்காரன்" திரையிட்ட பின் தேவிபாரடைஸில் டிக்கெட் கட்டணங்களை கூட்டினார்கள். 1 ஷோ ஹவுஸ்புல்லுக்கு 2722 ரு இருந்ததை ஏறக்குறைய 3600 ரு ஆக்கி விட்டார்கள்.. அப்படியானால் முதல் 10 நாளும் ஹவுஸ்புல் காட்சிகளாக நடைபெறும் போது கட்டணம் உயரத்தானே செய்யும். அதன்பின் வந்த "ரிக்ஷாக்காரன்" வசூலை முறியடிக்க முடிந்ததா?
இல்லையே, கிருஷ்ணா வசூலையாவது நெருங்கினார்களா? என்றால் இல்லை.

அதேபோல் "சொர்க்கம்" படத்தின் இரண்டு வார. திருச்சி ஏரியா வசூலை வெளியிட்டிருக்கிறார்கள். தீபாவளிக்கு வெளியான படங்களல்லவா, ஒரளவு கூட்டம் வந்தவுடன் குதிப்பார்கள்.
ஆனால் அதற்குமேல் வசூலை வெளியிட மாட்டார்கள். அதற்கு மேல் தியேட்டருக்கு ஆள் வந்தால்தானே வெளியிடுவார்கள். இப்படி முட்டாள்தனமாக ரசிகர்களை ஏமாற்றி குறுகிய காலத்துக்கு மனம்
குதூகலிக்க வைப்பதில் அவர்களுக்கு ஆத்ம திருப்தி.

சிவாஜி ரசிகர்கள் எம்ஜிஆரை எதிரியாகத்தான் பார்த்தார்கள். திமுக விரும்பிகள் கூட எம்ஜிஆரின் படத்தை ரசிப்பார்கள். ஆனால் ஐயனின் பிள்ளைகள் சிவாஜியே அதிமுகவுடன் கூட்டணி வைத்தாலும் ஐயனை மதிக்காமல் எதிரியான திமுகவுக்கு வாக்களித்து தங்கள் பழியுணர்ச்சியை தீர்த்து கொள்வதுடன் தங்கள் ஐயனை படுகுழியில் தள்ளி விட்டு இந்த பையன்கள் திமுகவின் வெற்றியில்
புளகாங்கிதம் அடைவார்கள்... நடிப்பில் நேரடி எதிரியான எம்ஜிஆரை எதிர்ப்பது ஒன்றுதான் தங்களது உறுதியான
கொள்கையாய் வைத்திருக்கிறார்கள்.

எம்ஜிஆரை எந்தவிதத்திலும் தோற்கடிக்க முடியாத அவர்களது வெறி ரத்தத்தில் கலந்து விட்டது. ஐயனை நம்பி கூட போகலாம் இந்த பையன்களை நம்பி போக முடியவில்லை, இல்லை, இல்லை.
இதை முன்கூட்டியே உணர்ந்த "ஞானப்பறவை" சிவாஜி "ஜீலியஸ் சீசர்" வேடத்தில் திரைநாடகத்தில் தோன்றி "you too brutus" என்று யாரை பார்த்து கேட்கிறார் என்று நினைக்கிறீர்கள். ஐயனின் பேச்சை கேட்டு அவர் கட்சி கூட்டணிக்கு வாக்களித்த எங்களையா? ஐயனுக்கு துரோகம் செய்து விட்டு திமுக வுக்கு வாக்களித்த புள்ளைங்களையா?

இவ்வளவுக்கும் 1968 ல் அந்த ஆண்டின் "பிளாக்பஸ்டர்" படமே
"குடியிருந்த கோயில்தா"ன். சிவாஜிக்கு. B,C யை தவிர A சென்ட்டரில் ஓரளவு நன்றாக ஓடிய படம்தான் "தில்லானா மோகனாம்பாள்". ஆனால் வசூலில் முதன்மை பெற்றது 'குடியிருந்த கோயில்" 2வது "ஒளிவிளக்கு" 3வது "ரகசிய போலீஸ் 115" அதன்பின் தான் மற்ற படங்கள். இது சிவாஜி ரசிகர்களுக்கும் நன்றாகவே தெரியும் அதனால் அவர்கள் வசூலை விட்டு சிவாஜியின் நடிப்பை பிடித்து கொண்டு சிலாகித்து பேசுவார்கள்.

fidowag
8th July 2020, 10:16 PM
திண்டுக்கல் பாராளுமன்ற இடைத்தேர்தலில் முதன்முதலாக அதிமுக போட்டியிட்டது. கட்சி தோன்றி 7 மாதங்களுக்குள் நடைபெற்ற முதல் தேர்தல். இந்தியா முழுவதும் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது. அதிமுகவின் எதிர்காலம் அந்த தேர்தல் முடிவை பொருத்துதான் அமையும் என்பதால் எம்ஜிஆர் ரசிகர்கள் பரபரப்புடனும் பதைபதைப்புடனும் காணப்பட்டார்கள். முதலில் தலைவர் "உலகம் சுற்றும் வாலிபன்" வெளியிடுவதில் பிசியாக இருந்தார் படம் மே 11 ல் வெளியான பின்பு தேர்தல் களத்தில் இறங்கினார்.

படம் வெளியாகி 10 நாட்களில் இடைத்தேர்தல். கருணாநிதியோ தேர்தலுக்கு பல மாதங்கள் முன்னாடியே தேர்தல் வேலையை தொடங்கி விட்டார். அவரின் மந்திரிகள் அத்தனை பேரும் திண்டுக்கல்லில் டேரா போட்டிருந்தனர். எதற்கு! தர்மதேவனை தோற்கடிப்பதற்கு. பல தேர்தலை கண்டவர் கருணாநிதி. சகல யுக்திகளையும் அறிந்தவர். மாநில ஆட்சி அதிகாரம் அத்தனையும் கையில் வைத்திருக்கிறார்.

இன்னொரு பக்கம் மத்தியில் ஆட்சி அதிகாரத்துடன் இ.காங்கிரஸ் மூணாவது அணியாக காமராஜ் தலைமையில் இயங்கும் ஸ்தாபன காங்கிரஸ் என்று மூன்று அணியாக
தேர்தல் களத்தில் மோதியது.அதிமுக வேட்பாளராக மாயத்தேவரை எம்ஜிஆர் அறிமுகப் படுத்தினார் திமுக சார்பில் பொன்முத்துராமலிங்கமும் இ.காங்கிரஸ் சார்பில் n s v சித்தனும் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்கள்.
புரட்சி தலைவரின் அதிமுகவுக்கு முதல் தேர்தல். ரசிகர்களுக்கு அரசியல் அனுபவம் எதுவும் கிடையாது. திமுகவின் பொன்முத்துராமலிங்கம் பழுத்த அரசியல்வாதி.

தேர்தல் பிரசாரத்தின் போதே திண்டுக்கல் அருகே ஒரு பாலத்தை கடக்கும் போது எம்ஜிஆர் பிரசார வாகனத்தை எதிர்பார்த்து குண்டு வைத்து விட்டனர். எம்ஜிஆர் சமயோசிதமாக வேறு வாகனத்தில் வந்ததால் உயிர் தப்பினார். உடனேஅவர் கலந்து கொண்ட தேர்தல் பிரசார மேடையில் மைக்கை கையில் வைத்துக் கொண்டு அங்குமிங்கும் நடந்த படியே சிங்கத்தின் சீற்றத்துடன் இந்த காரியத்தை செய்தவர்கள் தைரியமிருந்தால் மேடைக்கு வாருங்கள் நேருக்கு நேராக மோதலாம், கோழைத்தனமாக மறைந்து கொண்டு தாக்குவதை விட்டு விட்டு நேரடியாக வாருங்கள் இங்கேயே வைத்துக் கொள்ளலாம் நான் தயார் என்று அறைகூவல் விடுத்தார்.

கூட்டம் ஆவேசத்துடன் கொந்தளித்தது. காமராஜர் ஒரு பக்கம் திமுக,அதிமுக இரண்டுமே
ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் என்று தாக்கி பேசினார்.
தேர்தலில் திமுக ஜெயிப்பது கடினம்
என்று தெரிந்தவுடன் பெண்கள் ஓட்டை செல்லாத ஓட்டாக மாற்றும் நோக்கத்தில் இரட்டை இலையில் இரண்டு இலைகளிலும் முத்திரை குத்துங்கள் என்று தவறான பிரசாரம் செய்தார்கள்.

ஆனால் பெண்களோ மிகத்தெளிவாக ஓட்டு போடும் நாளான 20-5-1973 அன்று காலையிலேயே
வாசலிலே இரட்டை இலை கோலம் போட்டது மட்டுமின்றி அவர்கள் இரட்டை இலை சின்னத்தையும் தலையிலே சூடி கூட்டம் கூட்டமாக
வாக்களித்து விட்டு வந்தனர்.மறுநாள் காலை வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.
வாக்குகள் எண்ணும் நாளன்று ஆங்காங்கே வதந்திகள் தலைவிரித்தாடின.

ரேடியோவை சுற்றி கூட்டம் அதிகமாக காணப்பட்டது.
முதல் அறிவிப்பில் அதிமுக முன்னணி நிலவரம் வெளியான உடன் மகிழ்ச்சி ஆரவாரத்துடன் புரட்சி தலைவர் வாழ்க கோஷம் ஆங்காங்கே காணப்பட்டது. வெடிச்சத்தம் தொடர்ந்து ஒலித்து கொண்டே. இருந்தது. அன்று நாங்கள் கொண்ட மகழ்ச்சி விவரிக்க முடியாதது. வெற்றி வித்தியாசம் கிட்டத்தட்ட 142000 வாக்குகள். தேர்தலில் இரண்டாவதாக வந்தது காமராஜரின் ஸ்தாபன காங்கிரஸ்.
அதுவும் மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கியது.

கள்ள ஓட்டுகளை மட்டும் கட்டுப்படுத்தியிருந்தால் பிரதான கட்சி தனது டெப்பாசிட்டை இழந்திருக்கும் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி. அதுவரை திமுக பெற்ற வெற்றிக்கு புரட்சி தலைவர் தான் காரணம் என்பதை ஆணித்தரமாக நிரூபித்தார்.
செல்லாத வாக்குகள் அளவுக்கு அதிகமாக சுமார் 8000க்கும் அதிகமாக காணப்பட்டது அவர்கள் முயற்சி ஓரளவு பயனளித்தது என்றே சொல்லலாம்.ராஜதந்திரி என்று அழைத்துக் கொண்டவர்களின் ராஜதந்திரம் தர்மத்தின் முன்னே வெட்கித் தலை குனிந்ததை மக்கள் மகிழ்ச்சியுடன் கண்டு ரசித்தார்கள்.

எங்கள் காதுகளில் "நம்நாடு" படப்பாடல் "பொய்யும்,புரட்டும் துணையாய் கொண்டு பிழைத்தவரெல்லாம் போனாங்க மூலைக்கு மூலை தூக்கி எறிந்தோம் தலைகுனிவாக ஆனாங்க" பாடலும் "நீதிக்கு இது ஒரு போராட்டம் நிச்சயம் உலகம் பாராட்டும்" என்ற "உலகம் சுற்றும் வாலிபனி"ன் டைட்டில் பாடலும் ஒலித்து கொண்டிருந்தது.

"நம்மை ஏய்ப்பவர் கைகளில் இருந்து
அதிகாரம்" நழுவும் காட்சி நம் மனக்கண்ணுக்குள் தெரிய ஆரம்பித்தது. ஆண்டவன் மீது எங்களுக்கு இருந்த நம்பிக்கை மென்மேலும் வளர ஆரம்பித்தது. இருண்டிருந்த தமிழகத்தின் வானில் ஒரு விடிவெள்ளி தோன்றி விடியலை நோக்கி சென்று கொண்டிருந்தது.

fidowag
8th July 2020, 10:20 PM
சிவாஜி ரசிகர்கள் "சிவந்த மண்" ஒரு லாபகரமான படமாகவும் கூட வந்த சிவாஜி முக்கிய வேடத்தில் நடித்த "தர்த்தி" இந்தி படம் தான் தோல்வி படம் என்று வாதாடுகிறார்கள். அதனால் ஒன்றிரண்டு கேள்விகளை மட்டும் முன் வைக்கிறேன். "சிவந்த மண்ணி"ன் பட்ஜெட் அத்தனையும் இந்தி படத்தின் மீது போட்டு விட்டு எங்கள் படம் லாபம் வந்தது என்று
கூறுகிறார்கள்.

படத்தின் பட்ஜெட் சுமார் 85 லட்சம் என்பது பத்திரிகையில் வந்த செய்தி. அந்த படத்திக்கு செய்த அதீதமான செலவை பட்டியல் போட்டு அவர்களே பதிவிட்டிருக்கிறார்கள். அதையே உங்கள் பார்வைக்கு வைக்கிறேன்.
ஆனால் நடிகர் நடிகைகள், டெக்னீசியன்ஸ் சம்பளம் இதில் சேர்க்கப்படவில்லை. ஸ்ரீதர் உற்ற நண்பராக இருந்தும் என்னுடைய வியாபார விஸ்தீரணம்
இவ்வளவுதான். இதற்கு மேல் நீ செலவு செய்தால் உன் முதலுக்கு மோசமாகி விடும் என்று எச்சரிக்கை செய்ய வேண்டாமா?

ஸ்ரீதர் வட்டிக்கு வாங்கிய பணத்தில் நன்றாக பிரமாண்ட படம் எடுத்து அனுபவித்தார்கள். படம் மொத்தம் 38 தியேட்டரில் 50 நாட்கள்
ஓடியதாக விளம்பரத்தை சாட்சியாக காட்டுகிறார்கள். ஒரு படம் 50 நாட்கள் ஓடினாலே லாபம் வந்து விடுமா? அதுவும் மிகுந்த செலவு செய்து வெளிநாட்டில் எடுக்கப்பட்ட படம். சரி அதை விடுவோம்.

100 நாட்கள் எத்தனை தியேட்டர்களில் ஓடியது. விளம்பரத்தில் 9 தியேட்டர் என்று போட்டிருந்தார்கள். அப்படியானால் படம் 50 நாளிலே" பணால்" ஆகிவிட்டதென்ற அர்த்தமா?
அதுவும் தூத்துக்குடியை கழித்து விட்டு பார்த்தால் 8 தியேட்டர் தான் வருகிறது. தூத்துக்குடியில் சிவாஜி படங்கள் 3 வாரமே ஓடாது. அதை 100
நாட்கள் ஓட்டிய திறமை ஹாலிவுட் நடிகர் ரசிகர்களுக்கு கூட கிடையாது.

சிவாஜி ரசிகர்கள் பிரமாண்ட வெற்றி எனக்கூறும் "தங்கப்பதக்கம்" தங்களுடைய 51 வது நாள் விளம்பரத்தில் 35 தியேட்டர்களை கொடுத்திருக்கிறார்கள். அதில் ரிலீஸ் தேதிக்கு பின்னாடி ஒரு தியேட்டரிலிருந்து எடுத்து அடுத்த தியேட்டரில் 3 வாரம், 4 வாரம் ஓடிக்கொண்டிருந்த படங்களையும் இணைத்து விளம்பரத்தில் சேர்த்து வெளியிட்டிருக்கிறார்கள்.

தூத்துக்குடியில் "தங்கப்பதக்கம்" 50 நாள் கூட ஓட முடியாமல் 41 நாள்தான் ஓடியது. அப்படிப்பட்ட ஊரில் "சிவந்த மண்ணை" 100 நாள் ஓட்டியது உலக அதிசயங்களில் ஒன்றாக பேசப்படுகிறது.
இது போல சிவந்த மண் 50 நாள் விளம்பரத்திலும் நிறைய செகண்ட் ரிலீஸ் தியேட்டரும் கேரளாவில் சொல்லியிருக்கும் தியேட்டர் 50 நாட்கள் ஓடாத தியேட்டரையும் இணைத்து விளம்பரம் தரப்பட்டிருக்கிறது.

பொதுவாக எம்ஜிஆர் படங்களுக்கு 50 நாள் விளம்பரம் சென்னை தியேட்டரும் மற்றும் தென்னகமெங்கும் என்ற விளம்பரம் தான் வரும். எம்ஜிஆர் படங்கள் பொதுவாக திரையிட்ட அத்தனையிலும் 50 நாட்கள் ஓடுவதால் இது போன்ற சின்ன விஷயங்களில் கவனம் செலுத்துவது கிடையாது. மதுரை வீரன் 100 நாட்களே 33 திரையரங்குகளிலும், உலகம் சுற்றும் வாலிபன் 100 நாட்கள் 20 தியேட்டர்களிலும், எங்க வீட்டு பிள்ளை 18 தியேட்டர்களிலும் ஓடியதால் நாங்கள் 50 நாட்களை பற்றி கவலை கொள்வது கிடையாது.

இது ஒரு படு தோல்வி படம்தான். வெற்றி படம் என்றாலே போட்ட முதல் கைக்கு வந்து அதற்கு மேலும் வசூல் வந்தால்தான் வெற்றிப்
படம். எம்ஜிஆருக்கு "தாய் சொல்லை தட்டாதே" "தாயை காத்த தனயன்" "பணக்கார குடும்பம்" "திருடாதே" போன்ற படங்களின் அளவே ஓடியிருக்கிறது.ஆனால் எம்ஜிஆர் படங்கள் எல்லாம் வெற்றிப் படங்கள்.
குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு நிறைவான வசூலை பெற்ற படம்.

1972 ல் வெளி வந்து வசூல் சாதனை என்று பேப்பரில் விளம்பரம் வந்த
"பட்டிக்காடா பட்டணமா" 6 வாரத்தில் பெற்ற மொத்த வசூல் 30 லட்சம்தான். மீதமுள்ள காலங்களையும் சேர்த்தால் மொத்தம் 40 லட்சம் தான் வருகிறது. வரி நீக்கி பார்த்தால் நெட் கலெக்ஷன் அதிக பட்சம் 23 லட்சம் வரலாம். இதில் தியேட்டர்காரங்க பங்கு சுமார் 8 லட்சத்தை கழித்து பார்த்தால் மிஞ்சுவது 15 லட்சம் மட்டும்தான்.

"பட்டிக்காடா பட்டணமா" தயாரிப்பு செலவு 7 லட்சம் என்று வைத்துக் கொண்டால் லாபம் சுமார் 8 லட்சம் இருக்கலாம். "சிவந்த மண்ணை" விட அதிகம் வசூல் செய்த "பட்டிக்காடா பட்டணமா" படத்துக்கே மொத்த வரவு இவ்வளவுதான். அப்படியானால் "சிவந்த மண்ணை" தயாரித்த ஸ்ரீதருக்கு 15 லட்சம் என்று வைத்துக் கொண்டாலும் மீதம் உள்ள 70 லட்சத்தை யார் தருவார்கள்.

பாதிதான் எங்களுடைய செலவு என்றாலும் 42 லட்சத்தில் 15 லட்சத்தை கழித்து பார்த்தால் நிகர நஷ்டம் 27 லட்சம் தமிழில் மட்டும்.
"சிவந்த மண்" தயாரிப்பு செலவு 42 லட்சம் என்று வைத்துக் கொண்டால்
₹ 1 கோடி வசூல் ஆனால்தான் போட்ட காசு கைக்கு வரும். எம்ஜிஆருக்கு இந்த விவரங்கள் நல்ல அத்துபடி. அதனால் படத்தின் பட்ஜெட்டுக்கு தகுந்த படிதான் செலவு பண்ண வைப்பார். அதனால்தான் எம்ஜிஆரின் எந்த
ஒரு படமும் தோல்வியை தழுவிபது கிடையாது. "நவரத்தினத்தை" தோல்வி படம் என்பவர்கள் வாயை அடைக்க திருa p நாகராஜன் அவர்கள் அவர் வாயாலே சொன்னதை இதில் பதிவு செய்திருக்கிறேன். பார்த்து புரிந்து கொள்ளவும்.

அப்பாவி தயாரிப்பாளர்கள் தலையில் கல்லை தூக்கி போடமாட்டார். ஒரு பொருளை₹10 க்கு வாங்கினால் குறைந்த பட்சம்₹11க்காவது விற்றால்தான் லாபம் ₹1 கிடைக்கும். ₹ 42 க்கு வாங்கிய பொருளை₹15 க்கு விற்று விட்டு, போன பொருளை விட அதிகம் விற்று விட்டோம் என்று வாதிடும் அறிவுக் கொழுந்துகளை நாம் எப்படி பார்ப்பது.

அதைத் தெரிந்து கொண்ட சிவாஜி தன்னுடைய ரசிகர்களை பிள்ளைகள் (ஒன்றும் தெரியாததால்)
என்று அழைத்திருக்கலாம். அதனால் தான் அப்பாவி கணேசனின் பிள்ளைகள் சிவாஜியை ஐயன் என்று அழைக்கிறார்கள் என்பது இப்போதுதான் புரிகிறது.



நன்றி* திரு.சங்கர்*

fidowag
8th July 2020, 11:21 PM
குமுதம் வார இதழ் -15/07/20
------------------------------------------------
செருப்பும் பொறுப்பும்*
------------------------------------

தட்சயக்ஞம் ,மாயா மசீந்திரா* படங்களின் தயாரிப்பு பணிகள் கல்கத்தாவில் நடந்தன .**

ஒருநாள் வெளிப்புற படப்பிடிப்பு நடிகர்களும் ,தொழில்நுட்ப கலைஞர்களும் ,*சென்றனர் .* வழியில் தண்ணீரில் இறங்கி செல்ல வேண்டிய இடத்தில , ஆறு அடி அகலமுள்ள வாய்க்காலை எம்.ஜி.ஆர். ஒரே தாண்டாக தாண்டிக் குதித்தார் .தாண்டிய வேகத்தில் அவரது செருப்பு ஒன்றின் வார் அறுந்துவிட்டது . குனிந்து பார்த்து, காலைத் தூக்கி வேகமாக உதறி , அந்த செருப்பை தூர* விழ**செய்தார் .இன்னொரு செருப்பையும் உதறி எறிந்தார் .* செருப்பில்லாமலேயே நடந்து சென்றார் ,

பிற்பகலில் தங்கியிருந்த வீட்டிற்கு எல்லோரும் திரும்பி வந்தனர் .* புதிதாக செருப்பு வாங்க வேண்டும் . கடைக்குப் போகலாம் வாங்க என்று கலைவாணரை* அழைத்தார் .எம்.ஜி.ஆர்.* அதற்கு கலைவாணர் , நாளைக்கு ஷூட்டிங் இருக்காது . அதனால் நாளைக்கு போகலாம் என்றார் .

மறுநாள் காலை 10 மணிக்கு எம்.ஜி.ஆர். வந்தார் .கலைவாணரிடம் வாங்க கடைக்கு போகலாம் என்றார் . போகலாமா, பணம் எடுத்துகிட்டியா , இரு,சட்டையை மாட்டிகிட்டு வருகிறேன் என்று கூறிய கலைவாணர் உள்ளே போய் ராமச்சந்திரா என்று குரல் கொடுத்தார் .* எம்.ஜி.ஆர். உள்ளே போனார் .அந்த நாற்காலியில் உட்கார் என்று சொல்லிய கலைவாணர் , கீழே கிடந்த ஒரு பொட்டலத்தை காட்டி,இந்த செருப்பு உன் காலுக்கு சரியா இருக்கா பாரு என்றார் .பொட்டலத்தை பிரிந்ததும் எம்.ஜி.ஆர். திகைத்தார் .

உன்னுடைய பழைய செருப்புதான், நீ வீசி எறிந்து விட்டு போனதை , பின்னால் வந்து கொண்டிருந்த நான் பார்த்தேன் . அப்பொழுதே பத்திரமாக எடுத்து வந்துவிட்டேன் .* ஆணி அடித்து, தைத்து சரி பண்ணிவிட்டேன் .இப்போது இதற்கு என்ன குறை . இன்னும் ஆறுமாத காலம் பயன்படுத்தலாம் .முடிஞ்ச வரை எதையும் முழுசா பயன்படுத்தி பழகணும் என்று அறிவுரை சொன்னார் கலைவாணர் .

தமிழ் சினிமாவின் கதை,அறந்தை நாராயணன் .

fidowag
9th July 2020, 09:50 PM
பாட்டாலே* புத்தி சொன்ன வாத்தியார் எம்.ஜி.ஆர். - சகாப்தம் நிகழ்ச்சியில் வின் டிவியில்*21/06/20 அன்று திரு.துரை பாரதி அளித்த தகவல்கள்*
------------------------------------------------------------------------------------------------------------------------------

பல்வேறு துறையில் உள்ள அறிஞர் பெருமக்கள், அரசு அதிகாரிகள், கல்வி வள்ளல்கள், கல்வி தந்தைகள் ஆகியோரை வரலாறு குறித்து வைத்திருக்கிறது .இவர்களெல்லாம், எம்.ஜி.ஆர். என்கிற பெருமழை, மாமழையின் ஈகை தன்மையால் விளைந்த பயிர்கள் என்பதை இன்றைக்கும் தமிழகம் பறை சாற்றிக் கொண்டிருக்கிறது .அந்த மாமழையின் துளிகள் பற்றி சிலவற்றை இந்த நாளில்*அறிந்து கொள்வோமாக .


மக்கள் திலகம் எம்.ஜி.ஆருக்கும் பத்திரிகையாளருக்கும் உள்ள நட்பு உள்ளதே*அது மிகவும் சுவாரசியமானது . நான் சுதேசமித்திரன் பத்திரிகையில்* நிருபராக*பணியில்*சேர்ந்தேன் . முதல் நாளே, முதல் பணியாக**அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் எம்.ஜி.ஆர்* அவர்களை சந்தித்து*பேட்டி* காண சென்றேன் .அன்று பிரபல*பேச்சாளர், முன்னாள் அமைச்சர் பி.டி.சரஸ்வதி மற்றும் சிலர்* அ.தி.மு.க.வில் சேர்ந்திருந்தனர் .தலைமை அலுவலகமே விழா கோலம்*பூண்டிருந்தது*. கட்சி*பிரமுகர்கள்*கூட்டம்*அதிக அளவில் இருந்தது .அலுவலக*நுழைவு வாயிலில்*ஒரு வரவேற்பு அறை இருந்தது*.எம்.ஜி.ஆரின் இருக்கை*யை* சுற்றி சில*நாற்காலிகள் போடப்பட்டன . அதில்*சுமார்* நிருபர்கள் 10 பேர் மட்டும் அமர்ந்திருந்தனர் . நான் தாமதமாக வந்திருந்ததால் உட்கார இடமில்லாமல் எம்.ஜி.ஆருக்கு*மிக அருகில் நின்று கொண்டிருந்தேன் .உடனே எம்.ஜி.ஆர். அருகில் உள்ள ஸ்டூலின் மீது இருந்த*பொருட்களை*தன் மேஜை மீது வைத்துவிட்டு*அந்த ஸ்டூலில் என்னை அமர்த்தினார் . கிட்டத்தட்ட எம்.ஜி.ஆரின் தோளை* உரசியபடி அமர்ந்து இருந்தேன் . மேஜையின்*மீது இருந்த* பிஸ்கட்டுகளை* அனைவருக்கும் பகிர்ந்து அளித்தார் .சிறிது*நேர மௌனத்திற்கு பிறகு* மேஜையின் மீது உள்ள சில*பத்திரிகைகளை புரட்டி பார்த்த பின்பு நிருபர்கள் கேட்ட*கேள்விகளுக்கு மிக சாதுர்யமாக*பதிலளித்தார் .**


எம்.ஜி.ஆருக்கும், பட தயாரிப்பாளர் மணியன்*அவர்களுக்கும் இருந்த*நட்பு*மிகவும் நெருக்கமானது .எம்.ஜி.ஆர். எழுதிய*நான் ஏன் பிறந்தேன்*என்கிற*தொடர் உருவான*சமயத்தில் எம்.ஜி.ஆருக்கு உதவியாக மணியன்* இருந்து , ஆனந்த*விகடன்*வார இதழில்*வெளிவர செய்தார் . தி.நகரில்*ஒரு வாடகை வீட்டில்* *மணியன்* குடியிருந்தார் .*. அதை பார்வையிட*எம்.ஜி.ஆர். ஒருமுறை விஜயம் செய்தார்*ஒருநாள்*மாலையில்*சூரியனை*போல*எம்.ஜி. ஆர். காட்சியளித்து வருகிறார் . அவரின் தோற்றத்தை*,மணியனும், அந்த வீட்டில்*உள்ளவர்களும் பார்த்து, பரவசமும், அதிர்ச்சியும், பதற்றமும்*அடைகின்றனர் .வீட்டில்*நுழைந்த*எம்.ஜி.ஆர். உட்காரும்*முன்பு*இந்த வீட்டில் எந்த பக்கம் கிழக்கு*என*கேட்டு அந்த பக்கம் நாற்காலியை போட்டு உட்காருகிறார் .* மணியனிடம் நீங்கள் ஒரு படம்* எடுங்கள் .குறுகிய காலத்தில் நான் நடித்து தருகிறேன் என்கிறார் எம்.ஜி.ஆர். நீங்கள் வித்வான் லட்சுமணனுடன் இணைந்து*செயல்படுங்கள்* என்றவுடன், மணியனுக்கு ஆச்சர்யம்*. தமிழ் திரையுலகில் எம்.ஜி.ஆர். முடிசூடா மன்னன் எம்.ஜி.ஆர்.*அவரது*கால்ஷீட்டுக்காக தயாரிப்பாளர்கள் தவம் கிடக்கும்*காலமாயிற்றே . நம்மிடம்*வலிய வந்து படம் தயாரிக்க சொல்லி கேட்டுக் கொள்கிறாரே* என்று*விந்தையுடன்*யோசிக்கும்போது , என்ன சிந்தனை,என்று சொல்லியவாறு, அருகில் உள்ள லெட்டர்*பேடை*எடுத்து, தாயே துணை என்று பிள்ளையார் சுழி போட்டு ,தயாரிப்பு நிறுவனத்தின் பெயர் உதயம் புரொடக்ஷன்ஸ் ,படத்தின் பெயர் இதய வீணை என்று எழுதி தருகிறார் . மணியன் சில வினாடிகள்* இன்ப**அதிர்ச்சியில் உறைந்து*போகிறார் .மணியனை*மிக பெரிய இடத்திற்கு உயர்த்தியது எம்.ஜி.ஆருக்கு இருந்த*பண்பு . மணியன்*எம்.ஜி.ஆருக்கு*சிறு உதவிகள்*செய்து வந்தார் . ஒருமுறை பாரத பிரதமர் இந்திரா*காந்திக்கு*ஒரு காரியத்திற்காக எம்.ஜி.ஆர். நன்றி தெரிவிக்க இருந்தார் . எம்.ஜி.ஆரின் நம்பிக்கைக்கு பாத்திரமாக*மணியன்*எம்.ஜி.ஆர். அளித்த*பூங்கொத்து*, நன்றி கடிதம் இரண்டையும்*இந்திரா காந்திக்கு*அளித்துவிட்டு வந்தார்*. அந்தநன்றி*விசுவாசத்தின் அடிப்படையில் எம்.ஜி.ஆர். மணியனுக்கும், வித்வான் லட்சுமணனுக்கும்* உதயம் புரொடக்ஷன்ஸ் என்ற நிறுவனத்தின் பெயரில் இதய வீணை படத்தை*எடுக்கும்படி வலிய சென்று*யோசனை தெரிவித்து குறுகிய காலத்தில் நடித்து , வெளியிட்டு ,வெற்றி படமாக்கினார்*


எம்.ஜி.ஆர். பத்திரிகை நிருபர்களுக்கு பேட்டி அளித்தபின், அவர்கள் கேட்ட கேள்விகள் ,அதற்கு*இவர் அளித்த பதில்கள்*எல்லாம் பத்திரிகையில் பிரசுரம்* ஆகுவதற்கு முன்பு ஒரு பிரதியை* எம்.ஜி.ஆரிடம்*காட்டிய*பின்புதான்*பிரசுரம் ஆகவேண்டும் என்பதில்*எம்.ஜி.ஆர். மிகவும் உறுதியாக இருந்தார் .காரணம் அவர் சார்ந்திருந்த கட்சிக்கோ, தனக்கோ* இந்த பேட்டிகளினால் எந்த கருத்து மாறுபாடுகளும், இடையூறும்* வந்துவிடக் கூடாது* என்பதில் கவனமாக இருப்பார் . அப்படிதான்* யார் பேட்டி எடுத்திருந்தாலும் , விமர்சனங்கள் எழுதி இருந்தாலும் ,அவற்றை படித்துப்பார்த்துதான்* பிரசுரம் ஆக அனுமதிப்பார் .எம்.ஜி.ஆர்* சமநீதி*என்ற* பத்திரிகையில் பொறுப்பு ஆசிரியராகவும், அண்ணா*பத்திரிகையின் நிறுவனராகவும், நடிகன் குரல் என்ற பத்திரிகையின் ஆசிரியராகவும் இருந்தவர் . தலை சிறந்த பத்திரிகையாளராக தானே*விளங்கியதோடு , சந்திரோதயம் திரைப்படத்தில்*தேர்ந்த பத்திரிகையாளராக திறம்பட நடித்து* மிளிர்ந்தவர் .*.*


பொதுவாக எம்.ஜி.ஆர். நிகழ்ச்சிகளில், விழாக்களில்*கலந்து கொள்ளும்போது, தனக்கு*மாலையிட வருபவர்களின் இரு கைகளை*இறுக பற்றிக்*கொள்வார்*. காரணம்* புகைப்படம் எடுக்கும்போது, மாலையிடுபவர் முகமும், மாலையை*பெறும்* தனது முகமும் தெளிவாக புகைப்படத்தில் தெரிய வேண்டும் என்பது* எம்.ஜி.ஆரின் கணக்கு* . அந்த புகைப்படத்தை*, மாலையிடுபவர் வாங்கி பார்க்கும்போது எல்லையில்லா மகிழ்ச்சி அடைவார்*என்பது எம்.ஜி.ஆருக்கும்*தெரியும். அதுவும் ஒரு காரணம் . மேலும் தனக்கு*எத்தனை பேர் மாலை அணிவித்தாலும், ஆளுயர*மாலை அணிவித்தாலும் , அவர்கள் முகமெல்லாம் புகைப்படத்தில் தெள்ள தெளிவாக தெரியும்படியும்,அவர்கள் தன்னுடன் இருக்கிறார்கள்* என்ற வகையில்*அனைவரையும் அரவணைத்தபடி*போஸ் கொடுப்பது எம்.ஜி.ஆரின்*வழக்கம் .*


எம்.ஜி.ஆர். ,சினிமா, அரசியல், மனிதநேயம் ,பொது தொண்டு, கொடை*உள்ளம் ஆகிய* துறைகளில்* அனுபவம் வாய்ந்த ஒரு பல்கலை கழகம் .அவரை பற்றிய வியப்புக்குரிய சம்பவங்கள், வியப்புரிய செய்திகள் ,தொடர்ந்து வந்து கொண்டே இருக்கிறது . அவற்றை*இந்த நிகழ்ச்சியின் மூலம் அள்ளி* *அள்ளி வழங்கி கொண்டே இருக்கிறோம் . அதில்*எம்.ஜி.ஆர். என்கிற*மகோன்னதமான ஒளிவிளக்கு சுடர்விட்டு பிரகாசித்து கொண்டே இருக்கும்*.நன்றி ,வணக்கம்*


தொடர்ந்து அடுத்த அத்தியாயத்தில் சந்திப்போம்*

நிகழ்ச்சியில் ஒலித்த பாடல்கள்*/காட்சிகள் விவரம்*
--------------------------------------------------------------------------------
1.பாடும்போது*நான் தென்றல் காற்று*- நேற்று இன்று நாளை*

2.எம்.ஜி.ஆர். - எம்.ஆர். ராதா*உரையாடல் - சந்திரோதயம்*

3.நீதிமன்ற காட்சியில் எம்.ஜி.ஆர். -சங்கே முழங்கு*

4.ஒரே முறைதான்*உன்னோடு*பேசி பார்ப்பேன்*- தனிப்பிறவி*

5.ஆனந்தம் இன்று ஆரம்பம் - இதய வீணை*

6. நான் ஏன் பிறந்தேன்*- நான் ஏன் பிறந்தேன்*

7. ஒரு வாலுமில்லே* நாலு காலுமில்லே - இதய வீணை*

8.வாங்கய்யா*, வாத்தியாரய்யா* - நம் நாடு*

fidowag
11th July 2020, 09:03 PM
பாட்டாலே புத்தி சொன்ன*வாத்தியார் எம்.ஜி.ஆர்.- சகாப்தம் நிகழ்ச்சியில்*வின்*டிவியில்*திரு.துரை பாரதி*22/06/20 அன்று அளித்த*தகவல்கள்*
-----------------------------------------------------------------------------------------------------------------------
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். சொந்தமாக தயாரித்து, நடித்து, இயக்கிய அடிமைப்பெண்* திரைப்படம்* 1966ல் ஆரம்பிக்கப்பட்டது . அப்போது இரண்டு கதாநாயாகிகளாக சரோஜாதேவியும், கே.ஆர். விஜயாவும் ஒப்பந்தம் செய்யப்பட்டனர் . 1967ல் எம்.ஜி.ஆர். எம்.ஆர். ராதாவால் சுடப்பட்டு , குணமாகி வந்த பிறகு ,கதாநாயகிகள் மாற்றப்பட்டு, ஜெயலலிதாவுக்கு இரட்டை வேடம் தரப்பட்டது .ஒன்று ஜீவா, இன்னொன்று பவளவல்லி ராணி . இந்த படத்தில் ஜெயலலிதாவுக்கு பிரத்யேக உடைகள், அணிகலன்கள் அளிக்கப்பட்டன .பவளவல்லி வேடத்தில் அறிமுகம் ஆகும் காட்சியில் எம்.ஜி.ஆர். அவருக்கு*எதிராக* கைதியை போல் இரு கைகளை கட்டி, இரு பக்கமும் இரண்டு வீரர்கள் அவரை சித்திரவதை செய்யும் காட்சி .அந்த காட்சியில் எம்.ஜி.ஆர். கட்டு குலையாத தன் உடல் தோற்றத்தை , வலிமையை , காட்டும் விதத்தில் ,தன் இரு பக்கமும் உள்ள வீரர்களை நிலை குலைய* செய்து , ராணியே* அவரது உடல் வலிமையை கண்டு வியந்து, தனது மெய்காப்பாளராக அறிவிக்கும் அளவிற்கு*அற்புதமாக நடிப்பு திறமையை வெளிப்படுத்தி இருப்பார் .* அந்த காட்சியில் அரங்கமே அதிரும் வகையில் கைதட்டல்களும், விசில் சத்தமும் இருந்தது .தமிழ் திரையுலகில் , எந்த நடிகரும் தன் உடல் வலிமையை, தோற்றத்தை இப்படி வெளிப்படுத்தி நடித்தது இல்லை .படத்தின் விமர்சனம் விவரிக்கும்போது பத்திரிகைகள் இந்த காட்சியை வெகுவாக பாராட்டின .* அடிமைப்பெண் படம் சிறந்த படத்திற்கான*பிலிம்பேர்* விருது பெறும்போது , மும்பையில் உள்ள ஒரு பத்திரிகை எம்.ஜி.ஆரின் உடல் வலிமை, தோற்றம் பொருந்திய இந்த காட்சியை பிரசுரம் செய்து* பிரமாதப்படுத்தியது .* எம்.ஜி.ஆர். வெகு சுலபமாக இந்த உடல் வலிமையை, தோற்றத்தை பெறவில்லை .நாள்தோறும்** அதிகாலை 4 மணியளவில் எழுந்து சுமார் இரண்டு மணி நேரம் உடற்பயிற்சி செய்து இந்த உடல் பொலிவை, தோற்றத்தை, வலிமையை பெற்றார் . இந்த உடல் வலிமை, தோற்றம் ஆகியதுதான் அவர் தொடர்ந்து படங்களில் சண்டைக்காட்சிகளில் மிடுக்காகவும், சுறுசுறுப்பாகவும், விறுவிறுப்பாகவும் , நடித்து, பேரும் , புகழும் பெற காரணமாக இருந்தது .


உடற்பயிற்சி செய்வது என்பது எம்.ஜி.ஆருக்கு சினிமாவில் ஆரம்ப காலத்தில்*இருந்தே தொன்று தொட்டு வந்த பழக்கம் . இதற்கு பக்க பலமாக தயாரிப்பாளர் சின்னப்பா தேவரும் உறுதுணையாக இருந்தார் .* திரையுலகில் எம்.ஜி.ஆர்.*நுழைந்த காலத்தில் பட வாய்ப்புகள் அவ்வளவாக கிடைக்காத நேரம் . ஆகவே, ஒருவேளை சினிமாவில் போதிய வாய்ப்புகள் கிடைக்காமல் போனால் , ராணுவத்தில் சேர்ந்து பணியாற்றலாம் என்ற எண்ணமும் அவருக்கு இருந்தது .ராணுவத்தில் சேருவதற்கும் , உடல் வலிமை, பொலிவான தோற்றம், ஆகியவை அவசியம் என்பதால் தொடர்ந்து உடற்பயிற்சி செய்து ,தன் உடலை கட்டுக் கோப்பாக வைத்துக் கொண்டார் . அத்துடன், குதிரை ஏற்றம், சவாரி, சிலம்பம், கம்பு சண்டை, வாள், சண்டை ஆகியற்றிலும் போதிய பயிற்சி எடுத்துக் கொண்டு வந்தார் .


சினிமா வாய்ப்புகள் தேடி வந்த நிலையில், ராணுவத்தில் இணைந்து , நாட்டிற்கும், தேசத்திற்கும் சேவை செய்ய வேண்டும்* என்ற எண்ணமும்*அவர் மனதில் உதித்தது .அந்த வேளையில் தான் சாயா என்ற படத்தில் கதாநாயகன் வாய்ப்பு கிட்டியது .


மேஜர் சுந்தரராஜன் ஒருமுறை எம்.ஜி.ஆரை சந்திக்க வீட்டுக்கு செல்கிறார் .அப்போது காலையில் உடற்பயிற்சி முடித்துவிட்டு,எம்.ஜி.ஆர். சிற்றுண்டி சாப்பிடும் நேரம் . மேஜரையும் அழைத்து சாப்பிட சொல்கிறார் . அப்போது எம்.ஜி.ஆர். மிளகாய் பொடியில் ,நிறைய நெய் ஊற்றி, இட்லீ , தோசை போன்றவற்றை உண்கிறார் .மேஜர் சுந்தரராஜன் இவ்வளவு நெய் ஊற்றி சாப்பிட்டால்* உடம்புக்கு கெடுதல் வராதா என்று கேட்க , எம்.ஜி.ஆர்.*உடல் களைப்படையும் வரையில்,, நல்ல பலத்தை பெறும் வகையில்**கடின உடற்பயிற்சி* செய்தால், எவ்வளவு நெய் வேண்டுமானாலும் ஊற்றிக் கொள்ளலாம் ,சில சமயம் அளவுக்கு அதிகமாக எந்த உணவையும் சாப்பிடலாம்*அந்த அளவிற்கு உடல் பக்குவம் அடைந்துவிடும் .நீங்கள் உங்கள் இஷ்டம் போல சாப்பிடுவதற்கு* கொஞ்சம்**கஷ்டப்பட்டு* உடற்பயிற்சி செய்து , உடலை வருத்திக் கொண்டால்தான் இவையெல்லாம் சாத்தியம் என்று எம்.ஜி.ஆர்.*கூறியதாக மேஜர் சுந்தரராஜன் பேட்டி அளித்திருக்கிறார் .



சத்யா மூவிஸ் தயாரிப்பான ரிக்ஷாக்காரன் படத்தில் நடிப்பதற்காக, சத்யா ஸ்டுடியோவில் சைக்கிள் ரிக்ஷா ஒன்றில் ஓட்டி பயிற்சி மேற்கொண்டார் .*சில நாட்கள், தினமும் சில மணி நேரம் ஒட்டி வந்தார் .அப்போது ஒருநாள்,படத்தின் இயக்குனர் . எம்.கிருஷ்ணனையும், ஒப்பனையாளர் பீதாம்பரத்தையும்*ரிக்ஷாவில்* அமர்த்தி* வலம் வந்தார் . இப்போது படப்பிடிப்பு நடக்கவில்லை*ஆனாலும் உங்களை வைத்து ஓட்ட முடியுமா என்று பார்க்கிறேன் . ஒரு ரவுண்டு வந்த பிறகு , நான் ரிக்ஷா ஒட்டியதற்கு நீங்கள் பணம் தர வேண்டும் என்று கூறி*இருவரிடமும் தலா ரூ.1/- பெற்றுக் கொண்டார் . பிறகு சிரித்துக் கொண்டே திருப்பி தந்து விடுகிறார் . நான் ஆட்டோகிராஃபில் உழைப்பவரே உயர்ந்தவர் என்று எழுதுவது வெறும் வார்த்தையல்ல .நீங்கள் கொடுத்தது ரூ.1/-தான் என்றாலும்* அந்த உழைப்பை மதித்துக் கொடுத்தது .*ஆகவே அனைவரும்*உழைப்பின் உயர்வை மதித்து நடத்தல் நல்லது .என்று கூறினார் எம்.ஜி.ஆர்.*உழைப்பை மதிக்க தெரிந்தவர் எம்.ஜி.ஆர். அதனால்தான் ,நாடோடி மன்னன் படத்தில் உழைப்பதிலா உழைப்பை பெறுவதிலா இன்பம் உண்டாவதெங்கே சொல் என் தோழா என்ற பாடலை பாடினார் .



அடிமைப்பெண் படத்திற்காக ஒகேனக்கல் நீர்வீழ்ச்சி பகுதியில் படப்பிடிப்பு நடந்த சமயம் எம்.ஜி.ஆருக்கு, சண்டை காட்சிகள், நீச்சல் காட்சிகள் , டைவ் அடிக்கும் காட்சிகள் போன்றவற்றில் எம்.ஜி.ஆருக்கு உதவியாகவும், உறுதுணையாகவும்*ஒருவர் இருந்தார் . எம்.ஜி.ஆர். முதல்வரானதும், அவரை தேடி கண்டுபிடித்து ,ஒகேனக்கல் பகுதியில், சுற்றுலா துறை வளர்ச்சி அடைய ,அவரை முக்கிய பதவியில் அமர்த்தினார் .*



ஒருநாள் ராமாவரம் தோட்டத்தில் இருந்து எம்.ஜி.ஆர். தன் காரில் புறப்படும்போது ,உதவியாளர் ரவீந்திரனிடம் ,நமது வீட்டை ஒருமுறை நன்றாக பார்த்து கொள். நாம் மாலையில் திரும்பி வரும்போது, நம் கையில் வீடு இருக்காது .ஏனென்றால் ஜப்தி யாளர்கள் கையில் இருக்கும் என்று சொல்கிறார் .அதை கேட்டு அதிர்ச்சியடைந்த* ரவீந்திரன் ஊரில் உள்ளவர்களுக்கெல்லாம் வீடு வாங்கி தருகிறீர்கள், வீடு வாங்க பணம் உதவி செய்கிறீர்கள்**, உங்கள் வீடு ஜப்தி ஆகிவிடுமா,எனக்கு ஒன்றும் புரியவில்லை என்கிறார் . அப்போது எம்.ஜி.ஆர்.*நமது வீட்டின் பெயரில் ஜப்தி நோட்டிஸ் வந்துள்ளது . ஒருவேளை மாலை ஜப்தி ஆகிவிட்டால் நாம் சத்யா ஸ்டுடியோவில் தங்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும் .நான் வாடகை வீட்டில் இருந்துள்ளேன் . இரண்டு அணாவில் வாழ்ந்துள்ளேன் .இப்போதைக்கு இரண்டு ருபாய் இருந்தால் கூட போதும், என்னால் சமாளிக்க முடியும் என்று கூறினாராம் . ஆனால் நல்ல வேளையாக , மாலையில்* நீதிமன்ற தீர்ப்பு எம்.ஜி.ஆருக்கு சாதகமாக வந்ததால் வீடு தப்பித்தது .



எம்.ஜி.ஆர். வீடு ஜப்தி ஆகும் என்ற செய்தியை பத்திரிகையில் படித்த, திண்டிவனம் பகுதியை சார்ந்த ஒரு இஸ்லாமிய தாய், தன் மகனிடம் தன்*வீட்டு பத்திரத்தை கொடுத்து, உடனடியாக எம்.ஜி.ஆரை சந்தித்து , எங்களுக்கு வேறு சொத்து, நிலம் உள்ளது, எனக்கு ஒரே மகன்தான்*. இப்போதைக்கு இந்த பத்திரத்தின் மூலம் உங்கள் வீட்டை மீட்டெடுத்து, கொள்ளுங்கள் என்று சொல்ல வைத்தார் . அந்த நபர் விரைந்து வந்து* எம்.ஜி.ஆரை சந்தித்து* தன் தாயின் விருப்பத்தை சொன்னார் . உடனே எம்.ஜி.ஆர். வீடு ஜப்தி ஆகவில்லை . நல்லவேளையாக தீர்ப்பு எங்களுக்கு சாதகமாக வந்துவிட்டது . உங்கள் உதவும் மனப்பான்மைக்கு என் கனிவான நன்றி என்று சொல்லி அனுப்பி வைத்தார் .பின்னர் ஒருநாள் திண்டிவனம்* வழியே செல்லும்போது, அந்த தாயாரை எம்.ஜி.ஆர்.சந்தித்து, உங்களுக்கு ஏன் இந்த வீண் சிரமம் என்றார் .அந்த தாயார், நீ எனக்கு ஒரு பிள்ளை மாதிரி .என் பிள்ளைக்கு நான் செய்யும் கடமைதான்* இது .என்றாராம் .உடனே எம்.ஜி.ஆர். அந்த தாயின் இரு கரங்களை பற்றி ,என்மீது இவ்வளவு அன்பு வைத்திருக்கிறீர்களே , நான் உங்களுக்கு என்ன கைம்மாறு செய்ய போகிறேன் என்று கண்களில் கண்ணீருடன்* ஒற்றிக் கொண்டாராம் . பின்பு* எம்.ஜி.ஆர்.*அந்த தாய்க்கு சிறிது பணம் செலவிற்காக தந்தபோது ,வாங்க மறுத்துவிட்டார் .அந்த தாய் அளித்த பாலை பருகிவிட்டு எம்.ஜி.ஆர். விடை பெற்றார் .சென்னை திரும்பிய பிறகு சில மாதங்கள் கழித்து, அந்த தாய் இறந்து போன செய்தி எம்.ஜி.ஆருக்கு கிடைத்ததும், படப்பிடிப்பை ரத்து செய்துவிட்டு, அந்த தாயின் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டு நடந்தே சென்றாராம் ,


மேலும் செய்திகளுக்கு அடுத்த அத்தியாயத்தில் சந்திப்போம்*

நிகழ்ச்சியில் ஒலித்த பாடல்கள் /காட்சிகள் விவரம் .
------------------------------------------------------------------------------
1.எம்.ஜி.ஆர். உடல் வலிமையை காட்டும் காட்சி -அடிமைப்பெண்*

2.எம்.ஜி.ஆர்.-மஞ்சுளா- மேஜர் சுந்தரராஜன் உரையாடல் -ரிக்ஷாக்காரன்*

3பெண் வேடத்தில் பாடல் காட்சியில் எம்.ஜி.ஆர். -காதல் வாகனம்*

4.எம்.ஜி.ஆர்.-ஜெயலலிதா உரையாடல் -ஆயிரத்தில் ஒருவன்*

5.எம்.ஜி.ஆர். -மஞ்சுளா உரையாடல் - ரிக்ஷாக்காரன்*

6.உழைக்கும் கைகளே - தனிப்பிறவி*

7.எம்.ஜி.ஆர்.* ஜெயலலிதா சண்டை பயிற்சி -அடிமைப்பெண்*

8.எம்.ஜி.ஆர். பத்திரம் படிக்க வரும் காட்சி -எங்க வீட்டு பிள்ளை*

9.நாலு பேருக்கு நன்றி - சங்கே முழங்கு*

fidowag
12th July 2020, 12:34 PM
பாட்டாலே* புத்தி சொன்ன*வாத்தியார் எம்.ஜி.ஆர். - சகாப்தம் நிகழ்ச்சியில்* 23/06/20 அன்று வின்*டிவியில்*திரு.துரை பாரதி சொன்ன*செய்திகள்*
-----------------------------------------------------------------------------------------------------------------------------
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். ஒரு பாடலையோ, படத்தின் தலைப்பையோ தேர்ந்தெடுப்பதில் மிகவும் கவனமாக இருப்பார் . திருடாதே என்கிற படத்திற்கு*எதிர்மறையான, நெகடிவ் தலைப்புகள் முதலில் பரிந்துரைக்கப்பட்டன ,ஆனால் எம்.ஜி.ஆர். நாம் பல லட்சம் செலவு செய்து படத்தை தயாரிக்கிறோம். அதை கண்டுகளிக்கும் மக்களுக்கு பாசிட்டிவ் ஆன கருத்துக்கள், செய்திகள் அளித்தால்தான் மக்கள் மனதில் பதியும் . படத்தை மீண்டும் பார்க்க ஆவலை தூண்டும் . எனவே நல்ல தலைப்பை தேர்ந்தெடுப்பவர்களுக்கு உடனடி பரிசு உண்டு என்று அறிவித்ததன் பலனாக உருவான தலைப்பு தான் திருடாதே . இந்த தலைப்பை ஒரு போட்டியின் மூலம் தேர்ந்தெடுத்தார் . அந்த போட்டியில் நல்லதுக்கு காலமில்லை என்ற தலைப்பும் அறிமுகம் செய்யப்பட்டது . அதை எம்.ஜி.ஆர். நிராகரித்துவிட்டார் . நல்லது என்பதற்கு இணையாக பாசிட்டிவ் வார்த்தைதான் வரவேண்டும் ,நெகட்டிவ் வார்த்தைகள் இணைத்தால் நாம் சொல்லுகிற கருத்துக்கள், செய்திகள் மக்களை சென்றடையாமல் போய்விடும்*என்பதே காரணம் .


இயல்பாகவே , எம்.ஜி.ஆர். அவர்கள் சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ் ஸ்டூடியோ , கோவை சென்ட்ரல் ஸ்டூடியோ ஆகியவற்றில் படப்பிடிப்பு நடைபெறும் காலங்களில் காலை, மாலை வேளைகளில் உடற்பயிற்சி கூடத்திற்கு செல்வதுண்டு . அவருடன் சாண்டோ, சின்னப்பா தேவரும் இணைந்து செல்வார் .*அப்போது எம்.ஜி.ஆர். பயிற்சியாளராக, பயிற்சி கொடுப்பவராக இருந்ததுண்டு .யாரிடமும் பயிற்சி பெற்றதில்லை .ஏனென்றால் அவர் சினிமாவில் நுழைவதற்கு முன்பே, நாடக துறையில் இருக்கும்போதே, சிலம்பம், கம்பு சண்டை, குத்து சண்டை, வாள் சண்டை போன்றவற்றில் நல்ல பயிற்சி பெற்றவர் மேலும் ராணுவத்தில் சேரக்கூடிய வாய்ப்பு வந்தால் அதற்கு உடல் வலிமை, தோற்றப்பொலிவு* ஆகியன அவசியம் என்பதும் ஒரு காரணம் .அதனால்தான் ஆரம்பத்தில் இருந்தே எம்.ஜி.ஆரை பலர் வாத்தியார் என்று அழைக்க ஆரம்பித்தனர் ..இந்தியில் வாத்தியார் என்பதற்கு உஸ்தாத் என்று ஒரு பெயர் உண்டு . சிரித்து வாழ வேண்டும் படத்தில் அப்துல் ரஹ்மான் பாத்திரம் ஏற்று நடிக்கும்போது , இன்ஸ்பெக்டர் வேடத்தில் ராமுவாக வரும் எம்.ஜி.ஆர். உண்மையிலேயே நீங்கள் உஸ்தாத் க்கி* உஸ்தாத் என்று சுட்டி காட்டும் காட்சி உண்டு . அதற்கு அர்த்தம் வாத்தியாருக்கெல்லாம்* வாத்தியார் என்பதுதான்*திரையுலகில் பல்வேறு துறைகளில் அனுபவம் பெற்ற ஒரு நல்ல வாத்தியாராக தான் திகழ்ந்தார் எம்.ஜி.ஆர் .*



எம்.ஜி.ஆர். தனக்கென ஒரு பாணியை கடைபிடித்து நடித்தார் . அந்த பாணியை யாரும் காப்பி அடிக்காமல் இருக்கும்படியும் பார்த்துக் கொண்டார் பொதுவாக*எம்.ஜி.ஆர். தனியாக நடித்தாலும், இரட்டை வேடம் ஏற்று நடித்தாலும் தனக்கென ஒரு பார்முலாவை வைத்து , பிரதான பாத்திரங்களை தன் கைவசம் கொண்டு நடிப்பது வழக்கம் ,அந்த பார்முலாவை மற்ற நடிகர்கள் சில படங்களில் பயன்படுத்தினாலும், எம்.ஜி.ஆர். அளவிற்கு முழு வெற்றியை பெறமுடியவில்லை பெரும்பாலான படங்களில் அந்த ஒரே பார்முலாவில் நடித்து பல வெற்றிப்படங்களை அளித்தவர் எம்.ஜி.ஆர். ஒருவரே .. அந்த காலத்தில் சிவாஜியுடன், ஜெமினி, எஸ்.எஸ்.ஆர், முத்துராமன் ,ஜெய்சங்கர் , ஏ.வி.எம்.ராஜன் ,சிவகுமார் என்று பலர் பல படங்களில் இணைந்து நடித்துள்ளனர் .எம்.ஜி.ஆருடன், ஜெமினி, முகராசியிலும் ,எஸ்.எஸ்.ஆர். ராஜா தேசிங்கு, காஞ்சி தலைவன் போன்ற படங்களிலும் ,முத்துராமன், அரசிளங்குமரி* என் அண்ணன், ஒரு தாய் மக்கள் தேர்த்திருவிழா, கண்ணன் என் காதலன்* ஆகிய படங்களிலும் , ஏ.வி.எம்.ராஜன், எங்கள் தங்கத்திலும் ,சிவகுமார் காவல்காரன், இதயவீணை படங்களிலும் நடித்துள்ளனர் .ஜெமினி மற்ற நடிகர்களுடன் நடிக்கும்போது , உங்கள் தனித்தன்மை தெரியாது .ஆகவே கூடுமானவரை இணைந்து நடிப்பதை தவிர்த்து விடுங்கள் என்று ஒரு கட்டத்தில் ஜெமினிக்கு , எம்.ஜி.ஆர். அறிவுரை கூறியிருந்தார் .



முகராசி படத்தில்*எம்.ஜி.ஆருடன் ஜெமினி கணேசன் நடிக்க ஒப்பந்தம் ஆனார் .அப்போது எம்.ஜி.ஆர். ஜெமினியிடம் இந்த படத்தின்*கதையை*தயாரிப்பாளர் தேவரிடம்*கேட்டு தெரிந்து கொள்ளுங்கள் .உங்களுக்கு கதை*பிடித்தபின்* நடிக்க*சம்மதம்* என்று சொல்லுங்கள்* என்று கூறியிருந்தார் . அதன்படி இருவரும் இணைந்து*நடித்து* மிக குறுகிய நாட்களில்*(14 நாட்கள்*) தேவர் படத்தை முடித்து 1966 பிப்ரவரி*மாதம் 18ம் தேதி**வெளியிட்டார் . அப்போது* 1966 பொங்கல் திருநாளில் வெளிவந்து அன்பே*வா வெற்றிகரமாக ஓடி கொண்டிருந்த நேரம் . இடையில் சத்யா மூவிஸின் நான் ஆணையிட்டால்* அதே*பிப்ரவரி மாதம் 4ம் தேதி வெளியாகி இருந்தது . இந்த சூழலில் முகராசி கெயிட்டி அரங்கில்*வெற்றிகரமாக* 100 நாட்களை கடந்தது*.100 வது*நாள் விழாவின்போது*ஜெமினிகணேசன், இந்த படம் 100 நாட்கள் ஓடி வெற்றி பெற வேண்டும் என்பதற்காக நான் ஒற்றைக்காலில் நடந்தேன்,**நடித்தேன் என்று பேசினார் .விழா முடிவில்*ஜெமினியின் இரண்டு கால்களும்*தரையில்*படாதவாறு, எம்.ஜி.ஆர். அவரை*தூக்கி வந்து காரில் அமர்த்தினார் .


எம்.ஜி.ஆர்., படகோட்டி*,மீனவ*நண்பன் ஆகிய படங்களில் நடித்தவர் . மீனவர்கள் பிரச்னையை*நன்கு அறிந்தவர் . இரண்டு படங்களிலும் மீனவ சமுதாயத்தில் நிகழும் பிரச்னைகள், துன்பங்கள் ஆகியவற்றை* தனக்கே உரிய பாணியில்*அற்புதமாக*நடித்து வெளிப்படுத்தினார் .* படகோட்டி*படம் கேரளாவில் படமாக்கப்பட்டது . திருக்கைமீன் குப்பம், சுறா*மீன் குழப்பம் ஆகிய இரண்டு குப்பங்களுக்கு நடுவே நிகழும் மோதல்கள், சண்டைகள், திருப்பங்கள் ஆகியவை*முடிந்து இறுதியில் இரண்டு குப்பங்களும் சமாதானமாக இணைவதுதான் கதை .இந்த படத்தில்*படகோட்டியாகவே வாழ்ந்திருப்பார் எம்.ஜி.ஆர். .


மேலும் செய்திகளுக்கு அடுத்த அத்தியாயத்தில் தொடருவோம்*

நிகழ்ச்சியில் ஒலித்த*பாடல்கள் / காட்சிகள் விவரம்*
----------------------------------------------------------------------------------
1.திருடாதே*பாப்பா திருடாதே* - திருடாதே*

2.ஒரு தாய் வயிற்றில்*வந்த உடன்பிறப்பில்*- உரிமைக்குரல்*

3.ராமு*- அப்துல்*ரஹ்மான்*சந்திப்பு*- சிரித்து வாழ வேண்டும்*

4.எம்.ஜி.ஆர். -லட்சுமி உரையாடல் - சங்கே முழங்கு*

5.எம்.ஜி.ஆர். - ஜெமினி*உரையாடல்* - முகராசி*

6.எம்.ஜி.ஆர். சிலம்ப*சண்டை காட்சி*- படகோட்டி*

fidowag
12th July 2020, 05:24 PM
ஒரு சிவாஜி ரசிகர் குள்ளநரி தந்திரத்துடன் சிவனடியார் போர்வையில் என்னை பார்த்து ஒரு கேள்வி கேட்டார். . சிவாஜி உங்க சாப்பாட்டில மண் அள்ளி போட்டாரா? ஏன் அவரின் நடிப்பை சாடுகிறீர்கள் என்று கேட்டார். மேலும் நான் mgr, சிவாஜி ரசிகன் அவர்களை பற்றி யார் குறை சொன்னாலும் நான் பாய்ந்து தடுப்பேன் என்றும் கதைத்தது.
அவருக்காகதான் இந்த பதில். "திருவிளையாடல்" படத்தில் தருமி தவறான பாடல் எழுதிக்கொண்டு வந்து மன்னனின் பரிசுக்காக நிற்கும் போது அதை தடுப்பாரே!
நக்கீரர், அப்போது சொல்வதை கவனிக்க வேண்டும்.

மன்னன் தவறான பாடலுக்கு பரிசினை கொடுத்தால் முதலில் வருத்தப்படுவது நான்தான்! என்பார்.
அதை போலதான், தவறான, மிகையான நடிப்புக்கு ஏமாந்து மக்கள் அங்கீகாரம் கொடுத்தால் முதலில் வருத்தப்படுவது கலா ரசிகர்களான நாங்கள்தான்..
அதனால்தான் அவருடைய மிகை நடிப்பை பற்றி உங்களுக்கு எடுத்துரைக்கிறேன். அதற்கு மற்றொரு உதாரணமாக ஒன்றை
குறிப்பிடுகிறேன்.

"பழநி" என்றொரு பீம்சிங்கின் திரைப்படம். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட "ப" வரிசை படம்.
வெள்ளி விழா காணும் என எதிர்பார்ப்போடு வந்த திரைப்படம்.
தோற்றுப் போனது எதனாலே?
மிகை நடிப்பின் உச்சக்கட்டமே பழநி திரைப்படம். முதல் பாடல் "ஆறோடும் மண்ணில்" என்று தொடங்கும் பாடலில் அண்ணன் தம்பி மூவரும் விவசாயம் செய்யும் போது பாடுவது
போன்ற காட்சியமைப்பு.

அதில் s.s r ம், முத்துராமனும் பாடும் போது இயற்கையான விவசாயிகள் பாடுவது போல இருக்கும். அண்ணன் விவசாயியாக வரும் சிவாஜியின் நடிப்பை பாருங்கள். இவர் விவசாயியா,இல்லை, கொத்தடிமை விவசாயியா என்பது போல தோன்றும். எண்சாண் உடம்பையும் குழைவுடன் ஒரு சாணாக்கி, இரு கைகளையும்
தோளில் வைத்துக் கொண்டு அவர் குழைந்து கூழை கும்பிடு போட்டு நடிப்பதை பாருங்கள், என்ன தெரிகிறது?

S s r ம் , முத்துராமனும்
நடித்ததை விட தன் நடிப்பு எல்லோரையும் கவரவேண்டும் என்பதற்காகவே மிகை நடிப்பை அங்கே திணிக்கிறார். இதனால் இயற்கையான நடிப்பை வழங்குபவர்களும் தங்களை நிலை தடுமாற வைக்கிறாரே என்ற அங்கலாய்ப்பு அவர்களை ஆட்கொள்கிறது. எங்கெல்லாம் அவருக்கு நடிப்பில் தடுமாற்றம் ஏற்படுகிறதோ, அங்கெல்லாம் மிகை நடிப்பை தொடங்கி விடுவார்.

ஏனென்றால் அவர்களின் இயல்பான நடிப்புக்கு போட்டி போட இயலாமையால் அவர் கையாண்டது மிகை நடிப்பு. படத்தில் ஒவ்வொரு காட்சியிலும் அவர் காட்டுகின்ற மிகை நடிப்பு படத்தின்
வேகத்தை கட்டுப்படுத்தி பீம்சிங்கை புதைகுழியில் தள்ளியது. அந்த படத்தின் மிகப் பெரிய தோல்விக்கு காரணம் அதோடு சேர்ந்து திரைக்கு வந்த "எங்க வீட்டு பிள்ளை"யும் ஒரு காரணம் என்று சொன்னால் அதுவும் மிகையாகாது.

சிவாஜியின் மிகை நடிப்பை கண்டு மனம் வெறுத்த சினிமா ரசிகர்கள் எம்ஜிஆரின் இயல்பான நடிப்பில் மனம் மயங்கி திரும்ப திரும்ப பார்த்து நடிப்பென்றால் எம்ஜிஆர்தான் என்பதை புரிந்து கொண்டு, படத்தை மாபெரும் வெற்றி படமாக்கிய கதை நாம் அறிந்த ஒன்றுதான். இதே விவசாயி வேடத்தில் மக்கள் திலகமும் வருவார் "பெரிய இடத்துப் பெண்" படத்தில்.
"வள்ளி மனம் நீராட! தில்லை மனம் போராட!. ரெண்டு பக்கம் நானாட! சொந்தமே நீ ஆடு!" என்ற பாடலில்

உழவு மாடுகளை குளிப்பாட்ட தலையில் தலைப்பாகையோட வரும் போது எத்தனை மகிழ்ச்சி அந்த காட்சியில்தான் எத்தனை குளிர்ச்சி. அதை பார்க்கும் போது நமக்கும் எத்தனை எழுச்சி. மக்கள் நன்றாக புரிந்ததால்தான் "பழநி"க்கு படுதோல்வியையும், இயல்பான விவசாயியாக தோன்றிய எம்ஜிஆரின் "பெரிய இடத்து பெண்ணு"க்கு மாபெரும் வெற்றியையும் பரிசாக கொடுத்தார்கள்.

விளையாட்டு போட்டிகளிலும், ஒலிம்பிக்கிலும்
மேலும் பல போட்டிகளில் பங்கெடுப்போர் ஊக்க மருந்து சாப்பிட்டால் போட்டியில் பங்கு கொள்ள முடியாமல் தகுதி இழப்பு செய்யப்படுவர்.. ஆனால் சிவாஜியின் கண்களை உற்று நோக்கினால் அவர் இயல்பான நிலையிலேயே நடித்த மாதிரி தெரியவில்லையே. நடிப்புக்கே ஊக்க மருந்து பயன்படுத்தும் அவருக்கு எங்ஙனம் இயல்பு நடிப்பு வரும்?.

இயல்பான நடிப்புக்கு இது ஒரு நல்ல உதாரணம். காசுக்காக நடிப்பவரை கலைக்காக நடித்தது போல பில்ட்அப் கொடுக்கும் சிவாஜி ரசிகர்களே! அவர் முதல் படமான "பராசக்தி" யிலேயே ஆரியக்கூத்தாடி, நானும் தாண்டவக்கோனே! காசு காரியத்தில் கண் வையடா தாண்டவக்கோனே!
என்று கருணாநிதியும் கணேசனும்
தங்கள் காசு கொள்கையை முதல் படத்திலேயே சொல்லி விட்டார்கள்.

சிவாஜியின் இந்த கொள்கையை கருத்தில் கொண்டுதான் ஸ்ரீதர் தன்னுடைய "காதலிக்க நேரமில்லை" படத்தில் ஒரு வசனத்தை வைத்திருப்பார். சச்சுவை பார்த்து ஏம்மா? அடுத்த படத்தில் நடிப்பதற்கு காசு ரோம்ப கேப்பியா?
என்றவுடன் காசு கிடக்கட்டும்! சார், காசு!, நான் கலைக்கு சேவை செய்ய ஆசைப்படுகிறேன் என்பார்.

உடனே நாகேஷ் இது உன்னை வச்சு படம் எடுத்து நொந்து போய் அடுத்த படத்துக்கு வரும் போது இதை சொல்! என்பார். சிவாஜியிடம் பெற்ற அனுபவத்தில் இதை வசனமாக வைத்தாரா? இல்லை இந்த அனுபவத்தை இறுதியில் சிவாஜியிடம் பெற்றாரா? என்பது அவருக்கே வெளிச்சம். வருஷத்துக்கு 9 படங்கள் என்று எண்ணி நடித்து, காசை வாங்கி கல்லாவை நிறைக்கும் கணேசனை ஏதோ கலைக்கு சேவை செய்ததை போல சிவாஜி ரசிகர்கள் கூடி கும்மி அடிப்பது விந்தையிலும் விந்தை.

நான் சிறுவனாக இருந்த போது ஒருநாள் என் நண்பனின் தாயார் "படிக்காத மேதை" படத்தில் வரும் ஒரு பாடலை பாடிக்கொண்டிருந்தார். "ஒரே ஒரு ஊரிலே" பாடல். அதில் வரும் ஒரு வரியை திரும்பத்திரும்ப பாடிக்கொண்டிருந்தார். "ஒரே ஒரு ராணி பெற்றாள் ஒன்பது பிள்ளை அந்த ஒன்பதிலே ஒன்று கூட உருப்படி இல்லை". அம்மா இதையே ஏன் திரும்ப திரும்ப பாடுகிறீர்கள் உங்கள் பிள்ளைகளை நினைத்தா? என்று கேட்டதும் என் பிள்ளைகளுக்கு என்ன எல்லாம் ராசாகுட்டிகள். நான் நம்ம
சிவாசியை மனசில வைச்சுக்சிட்டுதான் பாடறேன்! என்றார்.

அப்போது பக்கத்தில் இருந்த அடுத்த வீட்டுக்காரர் சிவாஜிக்கு அவ்வளவு பிள்ளைகள் கிடையாதே! இரண்டோ மூணோன்னுதான் கேள்விப்பட்டிருக்கேன். என்றதும் அந்தம்மா உடனே ஐயோ! அவரு பிள்ளையை பத்தியெல்லாம் இல்லை, அவரு நடிக்கிற படத்தை பத்திதான்சொல்றேன். வருஷத்துக்கு 8,9 படம் வருதில்ல! எல்லாம் ஒண்ணு,இரண்டு வாரத்தில நாம பாக்கிறதுக்குள்ள ஓடிப்போயிருதில்ல! அத நினைச்சுதான் சும்மா பாடிக்கிட்டிருந்தேன்.

மத்தபடி ஒண்ணுமில்லப்பா? னு சொன்னதும்தான் தெரிந்தது அந்தம்மா சிவாஜி படத்தை விரும்பி பாப்பாங்க. ஆனால் காசு சேருவதற்குள்ளே படத்தை தூக்கிட்டு வேற படத்தை போடாறாங்களேங்கிற ஆதங்கத்தில் அந்தம்மா பாடிச்சின்னு அப்பதான் எனக்கு புரிஞ்சுது.

மீதி அடுத்த பதிவில்.


நன்றி : திரு.கிருஷ்ணமூர்த்தி*

fidowag
12th July 2020, 05:26 PM
எம்ஜிஆர் போல் பட்டம் கௌருவம் பெற்ற எவரும் இல்லை

தமிழில் முதல் தேசியவிருது எம்ஜஆரின் படத்திற்க்கு

தென் இந்தியாவின் முதல் பாரத் பட்டம் பெற்றவர் எம்ஜிஆர்

பத்மஸ்ரீ பட்டம் கொடுத்த போது வாங்க எம்ஜிஆர் மறுப்பு

இந்தியாவின் மிக உயர்ந்த பட்டம் பாரத்ரத்னா எம்ஜிஆருக்கு

எந்த முதல்வருக்கும் செய்யாத மரியாதை எம்ஜிஆர் மறைவிற்க்கு டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடி அரைகம்பத்தில் பறக்க விட்டு இந்தியா முழுவதும் விடுமுறை அறிவிக்க பட்டது

அமேரிக்கா கனடா நாடுகளில் எம்ஜிஆருக்காக மரியாதை செலுத்த பட்டது பாரளுமன்றங்களில் ஒரு சரித்திரம்

மத்தியரசு இரு முறை எம்ஜிஆர் ஸ்டாம்பு வெளியிட்டது

எம்ஜிஆர் நாணயம் இந்தியா வெளியிட்டது

இந்திய பாராளுமன்றத்தில் எம்ஜிஆர் சிலை நிறுவப்பட்டது

எம்ஜிஆர் ரயில் நிலயைம் அமைத்தது இந்திய அரசு

மத்திய சாரணர் வெள்ளி யானை பரிசு பெற்ற ஒரே முதல்வர் எம்ஜிஆர்

எம்ஜிஆர் சிகிட்சைக்காக இந்தியா தனி விமானத்தையே ஆஸ்பத்திரி ஆக்கி எம்ஜிஆரை அமேரிக்கா அனுப்பிவைத்தது

ப்ரூக்கிளின் மருத்துவனையில் எம்ஜிஆருக்காக பிராத்தனை செய்து அனுப்பிய பொருட்களை வைக்க தனி பிளாக் கட்டப்பட்டது ஒரு சரித்திரம் அது சுற்றுலா பயணிகளிடம் எடுத்து உரைக்கிறது அமேரிக்கா சுற்றுலா துறை தகவல் ராதாரவி அனுபவம்

எம் ஜிஆர் சாதனை எவராலும் அடைய முடியாத சாதனைகள்

வாழ்க எம்ஜிஆர் புகழ்

oygateedat
12th July 2020, 06:49 PM
ஒளிவிளக்கு
இதழ் ஆசிரியரும் -
மூத்த பத்திரிக்கையாளரும் -
எனது அன்பு நண்பருமான -
திரு மேஜர் தாசன் அவர்களின் மறைவிற்கு
ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

- எஸ் ரவிச்சந்திரன்

fidowag
12th July 2020, 08:29 PM
தனியார் தொலைக்காட்சிகளில் பொன்மன செம்மல் எம்.ஜி.ஆர். திரைக்காவியங்கள் ஒளிபரப்பான விவரம்*
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

08/07/20* சன் லைப் - காலை 11 மணி - எங்க வீட்டு பிள்ளை*

* * * * * * * ராஜ் டிவி* - பிற்பகல் 1.30 மணி - பறக்கும் பாவை*

09/07/20 - வேந்தர் டிவி - காலை 10* மணி - வேட்டைக்காரன்*

* * * * * * மூன் டிவி - பிற்பகல் 12.30 மணி - தேர் திருவிழா*

* * * * * *ராஜ் டிவி - பிற்பகல் 1.30 மணி - காலிபாபாவும்* 40* திருடர்களும்*

* * * * *வசந்த் டிவி - பிற்பகல் 1.30 மணி - தாய்க்கு தலைமகன்*

* * * * முரசு டிவி - பிற்பகல் 3.30 மணி - மருத நாட்டு இளவரசி*

10/07/20 - சன்* லைப்- காலை 11 மணி - ஒரு தாய் மக்கள்*

* * * * * * *ராஜ் டிவி - பிற்பகல் 1.30 மணி - தேடி வந்த மாப்பிள்ளை*

* * * * * *புதுயுகம் டிவி -இரவு 7 மணி - அரச கட்டளை*

* * * * * எம்.எம்.டிவி* - இரவு 8 மணி - குடியிருந்த கோயில்*

11/07/20- சன் லைப் - காலை 11 மணி* - ஆசைமுகம்*

* * * * * * *ராஜ் டிவி - பிற்பகல் 1.30 மணி -குடியிருந்த கோயில்*

* * * * * * வசந்த் டிவி - பிற்பகல் 1.30 மணி - நீதிக்கு பின் பாசம்*

* * * * * *எம்.எம்..டிவி - பிற்பகல் 2 மணி - மாட்டுக்கார வேலன்*

12/07/20-தமிழ் மீடியா டிவி - காலை 9 மணி - தர்மம் தலைகாக்கும்*

* * * * * * * * -வேந்தர் டிவி - பிற்பகல் 1.30 மணி /இரவு* 10.30 மணி**அவசர போலீஸ் 100

* * * * * * * * வெளிச்சம் டிவி - பிற்பகல் 2 மணி - நல்ல நேரம்*


புதுயுகம் டிவி*- இரவு 10 மணி - காதல் வாகனம்*

fidowag
12th July 2020, 11:11 PM
பாட்டாலே புத்தி சொன்ன வாத்தியார் எம்.ஜி.ஆர்.- சகாப்தம்*நிகழ்ச்சியில்*வின் டிவியில்* 24/06/20 அன்று**திரு.துரை பாரதி*சொன்ன*செய்திகள்*
--------------------------------------------------------------------------------------------------------------------

மக்கள் தலைவர் எம்.ஜி.ஆரின் சகாப்தம், சாதனை, சரித்திரம் எட்டு திக்கிலும் வெற்றிகரமாக* எதிரொலியை உருவாக்கி வருகிறது . எங்கே, எந்த பக்கம் பார்த்தாலும், புன்முறுவலோடு, எம்.ஜி.ஆரின் சகாப்த செய்திகளை பகிர்ந்து கொள்கிற ஒரு நேசம் பிறந்திருக்கிறது .அந்த கொடை வள்ளலின் ஈகை தன்மைக்கு வெளிப்பாடாகத்தான் இன்றைக்கு, இத்தனை தூரம் இவ்வளவு மக்களிடையே, முகம் தெரியாத பலர் , உருகி, உருகி, தொலைபேசியில் பேசும்போது மிகவும் நெகிழ்வாக இருக்கிறது .அந்த சாதனையாளரின் சரித்திர பக்கங்கள் சிலவற்றை இன்று புரட்டுவோம் .


புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். குறிப்பாக ,நடை, உடை, பாவனை போன்றவற்றில்*எப்படியெல்லாம் மாற்றங்கள் கொண்டு வருவார் என்பது குறித்து எனது அன்பு நண்பர், என் வகுப்பு தோழர்* திரு.நெல்லை வசந்தன்,* விலாவாரியாக பேசுவார் .ஏன் இந்த படங்களில் இந்த வேடம் ஏற்றார் , அந்த படங்களில் முக பாவனைகளை மாற்றினார் .என்று . இரட்டை வேடங்களில் இரண்டு விதமாக தோன்றுவது மட்டுமல்ல .இரண்டு வேடங்களிலும்* எப்படி**உணர்ச்சி ,முக பாவங்கள் காட்டுவது ,எப்படி வெளிப்படுத்துவது என்பதற்கு பல உதாரணங்கள் காட்டுவார் .* எங்க வீட்டு பிள்ளை திரைப்படம் இந்தியில் வெளியான ராம் அவுர் ஷியாம் என்பதன் தழுவல் .இந்தியில் திலீப்குமார் கதாநாயகனாக நடித்தார் .படத்தில் வில்லனை கதாநாயகன் சவுக்கால் அடிக்கும் காட்சியானது இந்தியில் திலீப்குமார் காட்டிய உணர்ச்சிகள், நடிப்பில் முக பாவனைகள், வேகம், சுறுசுறுப்பு, லாவகம்**அனைத்தையும் பன்மடங்கு* வித்தியாசமாக , மிக சிறப்பாக எம்.ஜி.ஆர். எங்க வீட்டு பிள்ளையில் காட்டியிருப்பார் . நம்பியார் , எம்.ஜி.ஆரை ஆரம்பத்தில் சவுக்கால் அடிக்கும் காட்சியில் நம்பியாரை தீட்டாத, வசை பாடாத ரசிகர்களே இல்லை .ஆனால், எம்.ஜி.ஆர். நம்பியாரை அடிக்கும்போது, அரங்கத்தில் ரசிகர்கள் ஆனந்த கூத்தாடினார்கள் . திரை அரங்குகள் அதிர்ந்தன . எங்க வீட்டு பிள்ளை வெளியான பிறகு பல இடங்களில் நம்பியாரை வழி மறித்து, எங்கள் அண்ணனை, எப்படி அடிக்கலாம் என்று கேள்வி கேட்டு துளைத்துவிட்டனர் ரசிகர்கள் .அதற்கு சாமர்த்தியமாக பதில் சொல்லி தப்பித்துவிடுவார் நம்பியார் என்று ஒரு பேட்டியில் தெரிவித்து இருக்கிறார் .*


மன்னர்கள் அந்த காலத்தில் , புலவர்கள், கவிஞர்களை ,தங்களை பாராட்டி பாடல் எழுதிவைத்து,மகிழ்ந்து பரிசளித்தார்கள். ஆனால் மன்னாதி மன்னன் எம்.ஜி.ஆர்.அவர்களுக்கு, அவர் சொல்லாமலேயே, போற்றி* பாடல்கள் எழுதிய கவிஞர்கள் ஏராளம் .உண்டு . அவரை போற்றி புகழ்ந்து, காலத்தை வென்றவன் நீ, காவியமானவன் நீ , வேதனை தீர்த்தவன் , விழிகளில் நிறைந்தவன், வெற்றி திருமகன் நீ என்றும், என்னை பாட வைத்தவன் ஒருவன், என் பாட்டுக்கு அவன்தான் தலைவன் ,ஒரு குற்றமில்லாத மனிதன், அவன் கோயில் இல்லாத இறைவன் என்றும், மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும் ,அது முடிந்த பின்னாலும் என் பேச்சிருக்கும்* *என்று பல பாடல்களை கவிஞர்கள் போட்டி போட்டு எழுதினார்கள் . இன்னும் ஏராளமான பாடல்களை சொல்லிக் கொண்டே போகலாம் .


எம்.ஜி.ஆர்.அவர்களுக்கு நவீன தொழில்நுட்ப விஷயங்களில் ஒரு தொலை நோக்கு பார்வை எப்போதும் உண்டு . அதனால்தான் 1958ல் வெளியான நாடோடி மன்னன் படத்தை ,இடைவேளைக்கு பிறகு,பரீட்சார்த்தமாக* வண்ணத்தில் , கோவா கலரில் உருவாக்கினார் .1972ல் திரையுலகம் பற்றி ஒரு பேட்டி அளிக்கும்போது , காலப்போக்கில்* தொலைகாட்சி கருவி என்று ஒன்று எதிர்காலத்தில் உருவாகும் இதன் வருகை ,சினிமா உலகை மிக பெரிய அளவில் பாதிக்கும் என்று சொன்னார் .நம் நாடு மட்டுமல்ல, இன்று உலகமே கொரோனா நோய் பாதிப்பால் தலைகீழாக புரண்டு கிடக்கிறது . பொது இடங்களில் மக்கள் அச்சத்துடன் நடமாடும் சூழல் . உலகம் முழுவதும், மால்கள், திரை அரங்குகள், பல மாதங்களாக*மூடப்பட்டுள்ளன . படப்பிடிப்புகள் நடைபெறவில்லை . இந்த சூழலில் அரங்குகள் நாளடைவில் திறக்கப்பட்டாலும், மக்கள் முன்பு போல்*எளிதாக வருகை தரமுடியுமா, சினிமா உலகம் புத்துயிர் பெறுமா என்பது மிக பெரிய கேள்விக்குறி. காலம்தான் இவற்றிற்கு பதில் சொல்ல வேண்டும் .இனிமேல் ஓ.டி.பி.யில்தான் படம் பார்க்க முடியுமா என்பது தெரியவில்லை .இதை 1972லேயே* ஒரு தீர்க்கதரிசியாக சிந்தித்து சொன்னவர் எம்.ஜி.ஆர்.*



மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். 1959ல் நாடகத்தில் நடிக்கும்போது, நடிகர் குண்டுமணியை தூக்கும்போது கை நழுவி அவரது காலிலேயே விழுந்து, எலும்பு முறிவு ஏற்பட்டு பல மாதங்கள் சிகிச்சையில் இருந்து குணமானார் .அப்போது அவரது சகாப்தம் முடிந்தது. இனி எம்.ஜி.ஆர். நடிக்க முடியாது என்றெல்லாம் பரபரப்பாக பேசப்பட்டது . இந்த சரிவில் இருந்து எம்.ஜி.ஆர். மீண்டார் .1967ல்*எம்.ஆர். ராதாவால் சுடப்பட்டதும் , எம்.ஜி.ஆர். கதை முடிந்துவிட்டது. இனி,படங்களில் நடிப்பதோ, பழையபடி பேசுவதோ முடியாத காரியம் என்று* அவரது சரிவை எதிர்பார்த்தவர்கள் பேசிக் கொண்டிருந்தனர் .* இந்த பிரச்னையில் இருந்தும் மீண்டு, வெகுண்டு எழுந்தார் எம்.ஜி.ஆர். குரல் மட்டும் சற்று பாதிப்பு அடைந்தது .பின்னணி குரல் வைத்துக் கொள்ளலாம் என்று சொன்னவர்கள் கருத்தை ஏற்காமல் ,சொந்த குரலில் பேசுவேன், நடிப்பேன், மக்கள் விரும்பாவிட்டால் நடிப்பதை விட்டுவிடுகிறேன் என்று பேசினார் . பாதிப்படைந்த குரலை வைத்து ,படங்களில் நடித்து இதிகாசம் படைத்தார் . பல சாதனை படங்களை உருவாக்கினார் .வசூல் சக்கரவர்த்தியாக திகழ்ந்தார் . அவரது உயர்வை கண்டு எதிரிகள் ஏமாந்து போனார்கள் .**



1984ல்* மீண்டும் உயிர் போராட்டம் . மாற்று சிறுநீரக அறுவை சிகிச்சைக்காக அமெரிக்காவிற்கு சென்று, வெற்றிகரமாக மீண்டும் முதல்வராக திரும்பினார் .எதிர்க்கட்சிகள் ஏளனம் செய்தன . எம்.ஜி.ஆர். உயிருடன் இல்லை என்று .தி.மு.க. தலைவர் கருணாநிதி,, எம்.ஜி.ஆர்* எனது 40 ஆண்டுகால நண்பர் . ஒருவேளை எம்.ஜி.ஆர். உயிருடன் திரும்பி வந்தால் அவர் முதல்வர் பதவியில் அமரட்டும் . அதுவரையில் நான் முதல்வராக இருக்கிறேன்* எனக்கு ஆதரவாக வாக்களியுங்கள் என்று பிரச்சாரம் செய்தார் . அ .தி.மு.க.வினரும், அமைச்சர்களும் இணைந்து எம்.ஜி.ஆர். உயிருடன் இருப்பது, உணவருந்துவது , முக்கிய நபர்களை சந்திப்பது , மருத்துவர்களுடன் சில வார்த்தைகள் பேசுவது போன்ற வீடியோக்கள் தமிழகம் முழுவதும் பொதுமக்கள்* காணும் வகையில் ஏற்பாடு செய்தார்கள் .அதில் வெற்றி கண்டார்கள் . கருணாநிதியின் பொய் பிரச்சாரம் முறியடிக்கப்பட்டது .அமெரிக்காவில் இருந்து 1985* பிப்ரவரி மாதம் எம்.ஜி.ஆர். திரும்பியபோது,*பரங்கிமலை ராணுவ மைதானத்தில் பொதுமக்கள் முன்னிலையில் பெரும் வரவேற்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது .விமான நிலையத்தில் இருந்து வரும் எம்.ஜி.ஆரின் கார் மேடை அருகில் வந்து நிற்பது போலவும் , சக்கர நாற்காலியில் அவரை மேடைக்கு அழைத்து வருவது போல ஏற்பாடுகள் தயார் .ஆனால் மேடை அருகில் காரில் இருந்து இறங்கி, மேடைக்கு நடந்து சென்று ,லட்சக்கணக்கான மக்கள் முன்னிலையில் கையசைத்து ,நான்கு புறமும் இருகரம் கூப்பி தனது வணக்கத்தையும், மகிழ்ச்சியையும் தெரிவித்துக் கொண்டார் .அதைக் கண்ட மக்கள் எழுப்பிய குரல், கைதட்டல்கள், விசில் சத்தம் விண்ணை பிளந்தவாறு இருந்தது .முப்பிறவி கண்ட முதல்வர் எம்.ஜி.ஆர். என்று வாழ்த்தொலி எழுப்பினார்கள் .



எம்.ஜி.ஆர். தங்க பஸ்பம் சாப்பிடுவதாக சிலர் பிரச்சாரம் செய்ததுண்டு. பொது கூட்டங்களில் எதிர் கட்சியினர் பேசியதுண்டு . அவர் ஆசிரியராக இருந்த நடிகன் குரல் பத்திரிகையில் கூட கேள்விகள் எழுப்பியதுண்டு .* அதற்கு பதிலளித்த எம்.ஜி.ஆர். நான் சாப்பிடுவதாக பலர் சொல்வதுண்டு . ஆனால் அரசர்கள் காலத்தில் இந்த நடைமுறை இருந்ததாக பேசப்பட்டது அது ஒரு பக்குவப்பட்ட ,நல்ல தேர்ந்த சித்தர்களுடைய ஆலோசனைப்படி ஒரு குண்டூசி* நுனி அளவுதான் சாப்பிட முடியும் .அப்போதுதான் உயிர் வாழ முடியும் அது ரத்தத்தில் கலந்து உடல் நிறம் கூடும்* அந்த அள்வு தவறி கொஞ்சம் அதிகமானால்* கூட**உயிர் போய்விடும் அபாயம் உள்ளது என்று சொல்லப்பட்டிருக்கிறது . இப்படி இருக்கும்போது எதற்கு இந்த விஷ பரீட்சையில் நான் இறங்க வேண்டும் என்று எம்.ஜி.ஆர். பதில் அளித்திருக்கிறார் .**



1972ல் எம்.ஜி.ஆர். மன்ற சிறப்பு மாநாடு ஒன்றை சென்னையில் முன்னாள் அமைச்சர் ஆர்.எம்.வீரப்பன் ஏற்பாடு செய்திருந்தார் . அந்த மாநாட்டில் கலந்து கொள்ள அப்போதைய முதல்வர் கருணாநிதிக்கு அழைப்பு விடுக்கப்பட்டது .அனால் கருணாநிதி மாநாட்டில் கலந்து கொள்ளவில்லை .அதற்கு சில வாரங்களுக்கு பின்னர் எம்.ஜி.ஆர். தி.மு.க. கட்சியில் பொருளாளராக இருந்ததால் அனைவரையும் கணக்கு கேட்பேன், கட்சியில் ஊழல் மலிந்துவிட்டது* என்று தனது நியாய கோரிக்கைகளை முதன் முதலாக திருக்கழுக்குன்றம் பொது கூட்டத்தில் மக்கள் முன் வைத்து பேசினார் .தி.மு.க.கட்சியின் பொதுக்குழு கூடி எம்.ஜி.ஆரை தி.மு.க.வில் இருந்து நீக்கம்*செய்கின்றனர் . தொண்டர்கள் பேராதரவு, சில முக்கிய நபர்களின் ஆலோசனைப்படி அண்ணா தி.மு.க.வை அக்டொபர்* 17ல் எம்.ஜி.ஆர். துவக்குகிறார் . 29ந்தேதி சென்னை கடற்கரையில் நடைபெறும் மாபெரும் பொது கூட்டத்தில் புரட்சி நடிகர் இன்று முதல் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். என்று*அழைக்கப்படுவார் என்று முன்னாள் அமைச்சர் திரு.கே.ஏ.கிருஷ்ணசாமி மேடையில் அறிவித்தார் . திரையுலகில் புரட்சி நடிகராக உதயமாகி சாதனைகள் படைத்த எம்.ஜி.ஆர். அரசியல் உலகிலும் பல புரட்சிகள், சாதனைகள் படைத்து*மறைந்தும் மறையாமல் புரட்சி தலைவராக மக்கள் இதயங்களில் வாழ்ந்து கொண்டிருக்கிறார் .


மேலும் தகவல்களுக்கு அடுத்த அத்தியாயத்தில் சந்திப்போம்*

நிகழ்ச்சியில் ஒலித்த பாடல்கள் /காட்சிகள் விவரம்*
--------------------------------------------------------------------------------------
1.முதல்வர் எம்.ஜி.ஆர். புகைப்படங்கள்*

2.எம்.ஜி.ஆர். பண்டரிபாய்* உரையாடல் - எங்க வீட்டு பிள்ளை*

3.உன்னை அறிந்தால் உலகத்தில் போராடலாம் -வேட்டைக்காரன்*

4.கண்ணில் வந்து மின்னல் போல் காணுதே - நாடோடி மன்னன்*

5.கட்டித்தங்கம் வெட்டியெடுத்து -தாயை காத்த தனயன்*

6. மெல்லப்போ மெல்லப்போ* - காவல்காரன்*

7.கடவுள் இருக்கின்றார்* - ஆனந்த ஜோதி*

8.கட்டண கட்டழகு கண்ணா - குடும்ப தலைவன்*

9.எம்.ஜி.ஆர். அசோகன், திருப்பதிசாமி* உரையாடல் - நம் நாடு*

10.நான் படித்தேன் காஞ்சியிலே நேத்து - நேற்று இன்று நாளை*

fidowag
14th July 2020, 08:58 PM
பாட்டாலே*புத்தி சொன்ன வாத்தியார் எம்.ஜி.ஆர். - சகாப்தம் நிகழ்ச்சியில்*வின் டிவியில்*25/06/20 அன்று திரு.துரை பாரதி*சொன்ன*தகவல்கள்*
------------------------------------------------------------------------------------------------------------------

மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். தன் வீடு ஜப்தியாக போகிறது என்று உதவியாளர் ரவீந்திரனிடம் கூறும்போது, ரவீந்திரன் இதற்கு மாற்று வழியே இல்லையா என்று கேட்கிறார் . அதற்கு பதிலளித்த எம்.ஜி.ஆர். யாராயிருந்தாலும், தவறு செய்திருந்தால் நீதிக்கு தலைவணங்கியே ஆகவேண்டும் என்றார் . ஆனால் மாலையில் வந்த* நீதிமன்ற**தீர்ப்பு சாதகமாக வந்ததால் வீடு ஜப்தியாகவில்லை .எனவே எம்.ஜி.ஆர். மகிழ்ச்சி அடைந்து , ரவீந்திரனிடம் நீதிக்கு தலைவணங்கு*என்கிற தலைப்பு பிரமாதமாக உள்ளது .அந்த தலைப்பில் ஒரு படத்தில் நடிக்கலாம் என்று இருக்கிறேன் . அதாவது எந்த விஷயத்தில் ஈடுபட்டாலும் எப்போதும் தொழில் சிந்தனையுடன் இருப்பார் . பின்னாளில் அவர் நடித்த நீதிக்கு தலை வணங்கு மார்ச் 1976ல் வெளியாகி , வெற்றிகரமாக 100 நாட்களை கடந்தது .


எம்.ஜி.ஆர். அவர்களுக்கு தர்மசிந்தனை* இருந்தது என்பதற்கு உதாரணமாக இந்த நிகழ்வை சொல்லலாம் .* ராமாவரம் தோட்டத்தில் எம்.ஆர். ராதாவால் சுடப்பட்ட எம்.ஜி.ஆர். கழுத்தில் குண்டு பாய்ந்து ரத்தம் வழியும் நிலையில், அவரை அவசரமாக காரில் ஏற்றி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முயன்ற சமயம் ,அண்ணன் ராதாவையும் கவனியுங்கள், அவரையும் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லுங்கள் என்றார் . தான் சுடப்பட்டிருந்த அந்த சூழலிலும் அடுத்தவருக்கும் உதவ வேண்டும் என்ற தர்மசிந்தனை எம்.ஜி.ஆருக்கு இருந்தது . அதனால்தான்* அந்த தர்ம சிந்தனை அவர் தலையை காப்பாற்றியது என்று பேசப்பட்டது அதற்கு* 4 ஆண்டுகள் முன்பே, 1963ல்* வெளியான தர்மம் தலை காக்கும் என்ற* கண்ணதாசன் எழுதிய*பாடலை எம்.ஜி.ஆர். பாடி நடித்திருந்தார் .


1977ல் ஜூன் மாதம் இறுதியில் எம்.ஜி.ஆர். முதல்வராகிறார் . 1980ல் பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. வுடன் இ .காங்கிரஸ் கூட்டணி அமைத்து*37 இடங்களை வென்றது . இதனால்* தி.மு.க. தலைவர் கருணாநிதி , பிரதமர் இந்திரா காந்தியிடம் , எம்.ஜி.ஆர். இரு தொகுதிகளில் மட்டுமே பாராளுமன்ற தேர்தலில் வென்றதால் மக்கள் ஆதரவை இழந்துவிட்டார் . ஆகவே எம்.ஜி.ஆர்.*ஆட்சி கலைக்கப்படவேண்டும் என்று கோரிக்கை வைத்தார் .அதன்படி 1980ல்*எம்.ஜி.ஆர். கட்சி கலைக்கப்பட்டது . விவரம் அறிந்த எம்.ஜி.ஆர். ராமாவரம் தோட்டத்தில் அதுபற்றி கவலை கொள்ளாமல் அரசு அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகளை முதலில் இனிப்பு சாப்பிடுங்கள் என்று சொல்லி , பின்னர் அவர்களை*அனுப்பிவிட்டு , சிவகவி திரைப்படம் தொலைக்காட்சியில் பார்த்துக் கொண்டிருந்தார் . பின்னாளில் நிருபர்களிடம் பேட்டி அளிக்கும்போது*இது குறித்து என் கோரிக்கைகளை மக்களிடம் முன்வைப்பேன் .அவர்கள் முடிவு செய்யட்டும் என்றார் .வெகு விரைவில் சட்டமன்ற தேர்தல் அறிவிப்பு வருகிறது .தேர்தல் பிரச்சாரத்தின்போது அவரது உள்மனதில் இருந்து வெளியாகும் நியாயமான கேள்விகள், கோரிக்கைகளை மக்கள் முன்வைத்து பேசுகிறார் .*நான் யாருக்கேனும்* வேண்டாதவர்களுக்கு***உதவினேனா , எனக்கு விருப்பமானவர்களுக்கு உதவிகள், பதவிகள்* அளித்தேனா , எந்தவிதமான அராஜகம் செய்தேன், எப்படிப்பட்ட துஷ்பிரயோகம் செய்தேன் ,என் குடும்பத்தில் உள்ளவர்களுக்கு எந்தவகையிலாவது உதவினேனா , அ.தி.மு.க. ஆட்சியில்*ஊழல் பிரச்னை ஏதாவது இருக்கிறதா , எதற்காக எங்களை 5 ஆண்டுகாலம் முழுமையாக ஆள விடாமல் ஆட்சியை கலைத்தார்கள் .என்ன குற்றம் கண்டார்கள் சொல்ல முடியுமா என்று அடுக்கடுக்காக கேள்விகளை எழுப்பினார் .இந்த கேள்விகளுக்கு விடைதரும் வகையில், நான் குற்றமற்றவன், ஆட்சியில் குற்றங்கள் அறவே இல்லை* என்று நீங்கள் எண்ணினால் , தேர்தலில் எங்களுக்கு ஆதரவாக வாக்களியுங்கள் என்றார் . அதன்படி மக்கள் அமோக ஆதரவு அளித்தனர் .மீண்டும் எம்.ஜி.ஆர். முதல்வரானார் . கருணாநிதியின் சதி திட்டம் முறியடிக்கப்பட்டது .


சட்ட பேரவையில் , எதிர்க்கட்சியான தி.மு.க.வின்* உறுப்பினர் துரை முருகன்* அரசின் சத்துணவு திட்டத்தை குறை கூறி பேசினார் .* குழந்தைகளுக்கு உணவு வழங்கப்படும் உணவுத்தட்டிலே ஒரு நடிகையின் படம் உள்ளது என்று சில குறைகளை மிக ஆவேசமாக சில நிமிடங்கள்* பேசிவிட்டு , தன இருக்கைக்கு திரும்பி அமரும் நேரத்தில் மயக்கம் அடைந்து கீழே சரிந்தார் . அதை கவனித்த முதல்வர் எம்.ஜி.ஆர். உடனே விரைந்து வந்து அவரை தாங்கி பிடித்து,தன் மடியிலே கிடத்தி, பணியாட்களை கொஞ்சம் தண்ணீர் கொண்டுவர சொல்லி,*அவர் முகத்திலே தெளித்து, கண்களை வருடி, கன்னத்தில் லேசாக தட்டி ,துரை*கொஞ்சம் கண்விழித்து பாருங்கள் என்று எழுப்பினாராம் .சட்டமன்றத்தில் அப்போது ஆளும் கட்சி, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பல இருக்க , எம்.ஜி.ஆர். தான் முதலில் வந்து அவரை ஆசுவாசப்படுத்தினார் . இத்தனைக்கும் துரை முருகன்*எம்.ஜி.ஆர். ஆட்சியையும், சத்துணவு திட்டத்தையும் குறைகூறி பேசி வந்தார் என்பது அனைவருக்கும் தெரியும் .* துரை முருகனுக்கு எம்.ஜி.ஆர். ஆரம்ப காலத்தில் படிப்பதற்கு உதவினார் . அவரது திருமணத்திற்கு மும்பையில் இருந்து தனி விமானத்தில் வந்து* தங்க சங்கிலி திருமண பரிசாக* அளித்தார் .துரை முருகன்மீது எப்போதும்* எம்.ஜி.ஆருக்கு தனி அன்பு, அக்கறை இருந்ததுண்டு .இந்த நேரத்தில் அவரது* தாய்மை பண்பை* வெளிப்படுத்தும் விதத்தில் உதவியது* அனைவரையும் வியப்பு கலந்த மகிழ்ச்சியில் ஆழ்த்தியது .



புரட்சி தலைவர் எம்.ஜி.ஆருக்கு வாத்தியார் என்கிற பட்டம் அவ்வளவு சுலபமாக*வந்துவிடவில்லை . கவிஞர்கள் எழுதிய பாடலை உரிய திருத்தங்கள் செய்வதில், பாடல்களில் எந்த இடங்களில் எந்த இசைக்கருவிகள் பயன்படுத்தினால் பொருத்தமாக இருக்கும் ,என்பதில், காமிரா கோணங்கள்*அமைப்பதில், படத்தொகுப்பில் எந்த காட்சிகள் எப்படி அமைக்க வேண்டும் என்பதில்* பின்னணி இசை சேர்ப்பு விஷயங்களில்* லைட்டிங் அளவு தேர்வு செய்வதில், சண்டை காட்சிகளை அமைப்பதில் ,கலைஅரங்கங்கள் அமைப்பதில் யோசனைகள் *இப்படி சினிமா துறையில் அனைத்து விஷயங்களையும் கற்று அறிந்தவர் என்பதனால் வாத்தியார் என்று அழைக்கப்பட்டார் என்று பேசப்பட்டது* மேலும் அவரது படங்கள் ,மக்களுக்கு பாடங்களாக அமைய வேண்டும் என்பதில் கவனமாக இருப்பார் . ஒவ்வொரு பாடலிலும், பாடலின் ஓசை நயத்தை விட ,மக்களுக்கு சொல்ல வேண்டிய கருத்துக்கள் எளிதாக இருக்க வேண்டும் என்பதில் முனைப்பு காட்டுவார் .பாடலில் எந்த வார்த்தைக்கு பக்கத்தில்* *எந்த**இசைக்கருவி இருந்தால் *வார்த்தைகள்* அழுத்தாமல் இருக்கும் ,**தெளிவாக பதிவாகும் என்ற நுட்பம் அறிந்தவர் . இப்படி ஒவ்வொரு விஷயத்திலும் கவனமாக செயல்பட்டதால்தான் இன்றைக்கும் அவரது பாடல்கள் மக்களுக்கு புத்துணர்ச்சியையும், புதிய நம்பிக்கையையும் பெறுகிற*உணர்வை விதைக்கிறது .* அதனால்தான் கவிஞர் கண்ணதாசனே ,என் பாடல்களை கூட திருத்தம் செய்கிற வாத்தியார் என்று குறிப்பிட்டதுண்டு .தெய்வத்தாய் படத்திற்கு முதன் முதலாக வசனம் எழுதிய கே.பாலச்சந்தரின்*வசன வரிகளையே எம்.ஜி. ஆர். திருத்தியுள்ளார் என்று பாலசந்தரே ஒரு* பேட்டியில்**தெரிவித்து இருந்தார் .* இப்படித்தான் எம்.ஜி.ஆர். வாத்தியாரானார்*


திரைப்படங்களில் எந்த இடத்தில பாடல்கள் அமைய வேண்டும், எந்த இடத்தில அழுத்தமான வசனங்கள் இடம் பெற வேண்டும், திரைக்கதை எப்படி அமைக்க வேண்டும் , எந்த இடங்களில் சண்டை காட்சிகள் அமைய வேண்டும், கலை* அரங்கங்கள் எப்படி இருக்க வேண்டும்* போன்ற பல விஷயங்களில் அத்துப்படியான ஒரே நடிகர் எம்.ஜி.ஆர். மட்டுமே என்று கவிஞர் கண்ணதாசன்*எம்.ஜி.ஆரை புகழ்ந்து பேசியுள்ளார் .**


கவிஞர் புலமைப்பித்தன் குடியிருந்த கோயில் படத்தில் நான் யார், நான் யார்*நீ யார் என்கிற பாடலை எழுதி எம்.ஜி.ஆரிடம் ஒப்புதல் வாங்கிவிட்டு சற்று சிந்தனையில் இருந்தார் . அப்போது எம்.ஜி.ஆர். என்ன விஷயம் , ஒரே சிந்தனையில் உள்ளீர்கள் என்று கேட்க , உங்களிடம் மனம் விட்டு சொல்கிறேன்.என் வீடு அடமானத்தில் இருக்கிறது . நீங்கள் கொஞ்சம் கூடுதல் பாடல்கள் எழுத வாய்ப்பு அளித்தால் , அதன் மூலம் எனது வீட்டை மீட்பதற்கு உதவியாக இருக்கும் என்று கவலை தோய்ந்த முகத்துடன் தெரிவித்தார் . அதை கேட்டதும் ,கவலைப்படாதீர்கள். உங்களுக்கு போதிய வாய்ப்பும் கிடைக்கும் .வீட்டை மீட்பதற்கு பணமும் தருகிறேன் என்றார் . புலமைப்பித்தன் அதன்பின் எம்.ஜி.ஆருக்கு பல பாடல்கள் எழுதினார் . எம்.ஜி.ஆரின் உதவியால் வீட்டையும் மீட்டெடுத்தார் .எம்.ஜி.ஆரின் உதவியை பல பேட்டிகளில் புலமைப்பித்தன் நன்றி பெருக்குடன் கூறியுள்ளார் . பின்னாளில் எம்.ஜி.ஆரால் அரசவை கவிஞர் ஆக்கப்பட்டார் .**அரசவை கவிஞரானதும், குழந்தையின் பல்பட்ட இடத்தில,*பால் மட்டுமே சுரக்கும் அன்னை இதயம் எம்.ஜி.ஆருக்கு என்று புகழுரைத்தார் .



ஒருமுறை ,எம்.ஜி.ஆர். புதுடெல்லிக்கு விமானத்தில் பயணம் செய்ய புறப்படுகிறார் .காரில் ஏறும் முன்பு ,தன்* தாயாரின்* சமாதி அருகே சென்று ஒரு நிமிடம் கும்பிட்டுவிட்டு புறப்படும் சமயம் காலில் ஏதோ துண்டு ஒன்று* தட்டுப்படுகிறது . உடனே ,ஜானகி அம்மையார் குடிக்க தண்ணீர் கொண்டுவந்து தருகிறார் .* தண்ணீர் வாங்கி குடித்துவிட்டு, சில நிமிடங்கள் நின்று யோசிக்கிறார் இன்று விமான பயணத்தை ரத்து செய்துவிடலாம் என்று திடீர் முடிவு எடுத்து தன்* அறைக்கு திரும்புகிறார் . சுமார் ஒரு மணி நேரம் கழித்து ஒரு தகவல் வருகிறது ..அதாவது எம்.ஜி.ஆர். புதுடெல்லிக்கு பயணம் செய்ய இருந்த விமானம் விபத்துக்குள்ளாகி சுமார் 60 நபர்கள் இறந்துவிடுகிறார்கள் . அவர்களில் பாராளுமன்ற உறுப்பினர் திரு.மோகன் குமாரமங்கலமும் ஒருவர் . இந்த செய்தி அறிந்து எம்.ஜி.ஆர். மட்டுமல்ல ,அவர் உடனிருந்தவர்களும் அதிர்ந்து போனார்கள் .எம்.ஜி.ஆரின் தான, தருமங்களும் , தர்ம சிந்தனைகளும்தான்*அவர் உயிரை காப்பாற்றியது என்று* அப்போது பேசப்பட்டது .



நாடக துறையிலும் சரி, திரை துறையிலும் சரி, எம்.ஜி.ஆருக்கு உதவியாக ,ஆதரவாக*இருந்தவர் பழம்பெரும் நடிகர் எம்.கே.ராதாவின்*தந்தை .*எம்.ஜி.ஆர். முதல்வரானதும், எம்.கே. ராதாவின் வீடு தேடி சென்று*அவரது காலில் விழுந்து ஆசீர்வாதம் பெற்றார் .* அதே போல பொது மேடையில், எம்.ஜி.ஆர். பாரத் விருது பெற்றபோது , திரையுலகை சார்ந்த நடிகர் நடிகைகள்*பாராட்டுவிழா*நடத்தியபோது , அனைவரின் முன்னிலையில் மீண்டும் நடிகர் எம்.கே. ராதா அவர்களது காலில் விழுந்து நன்றியை தெரிவித்துக் கொண்டார் .அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் அனைத்து பத்திரிகைகளிலும் பிரசுரம் ஆகியது*.ஆகவே , வாழ்க்கையில் தன் உயர்வுக்கும், முன்னேற்றத்திற்கும் காரணமாக திகழ்ந்தவர்கள், தன்னை*ஏணியில்*ஏற்றி விட்டவர்களுக்கு* ஒரு காலத்திலும் நன்றி மறக்காதவர் எம்.ஜி.ஆர். என்பதற்கு அந்த புகைப்படமே சான்று .

மேலும் செய்திகளுக்கு அடுத்த அத்தியாயத்தில் தொடருவோம்*


நிகழ்ச்சியில் ஒலித்த பாடல்கள் / காட்சிகள் விவரம்*
--------------------------------------------------------------------------------------
1.1.கனவுகளே ஆயிரம் கனவுகளே - நீதிக்கு*தலைவணங்கு*

2.தர்மம் தலை காக்கும்*பாடல் - தர்மம் தலை காக்கும்*

3.முதல்வர் எம்.ஜி.ஆர். புகைப்படங்கள்*

4.அன்புக்கு நான் அடிமை - இன்றுபோல் என்றும் வாழ்க .

5.ஏமாற்றாதே ஏமாற்றாதே - அடிமைப்பெண்*

6.நீதிமன்ற காட்சியில் எம்.ஜி.ஆர். - ரிக்ஷாக்காரன்*

7.எம்.ஜி.ஆர்.-மேஜர் சுந்தரராஜன் உரையாடல் -குடியிருந்த கோயில்*

8.நான் உங்கள் வீட்டு பிள்ளை - புதிய பூமி*

9.ஏன் என்ற கேள்வி - ஆயிரத்தில் ஒருவன்*

10.என்னம்மா ராணி* - குமரிக்கோட்டம்*

orodizli
15th July 2020, 10:00 PM
செடிக்குச்சி, கோபுடா, சிலம்பு... எம்.ஜி.ஆரின் இந்தச் சாகசங்களைக் கண்டிருக்கிறீர்களா..! - ஒப்பனையும் ஒரிஜினலும்! எம்.ஜி.ஆர்...
எம்.ஜி.ஆரின் சண்டைக் காட்சிகள்

’நல்லவர்களைக் காக்கவும் தீயவர்களை அழிக்கவும் இறைவன் அவதாரம் எடுப்பான்’ என்கிற கருத்து காலங்காலமாக தெய்வ நம்பிக்கை உள்ளவர்களிடமிருந்து வருகிறது. ஆனால், எம்.ஜி.ஆர் படங்களில் அதைவிட ஒரு படி மேலான மனித நேயத்துடன் தீயவன் அழிக்கப்படாமல் அவனது தீய பண்புகள் மட்டும் அழிக்கப்பட்டு அவன் மனம் திருந்தி மன்னிப்பு கேட்டு நல்லவன் ஆவான். தீயவன் திருத்தப்படுவான், மனமாற்றம் அடைவான், இந்நோக்கில் எம்.ஜி.ஆர் ரசிகர்கள் அவரை வாத்தியார் என்று அழைத்தது மிகவும் பொருத்தமானது.

வாத்தியார்

ஆங்கிலேயர் வந்து பள்ளிக்கூடங்கள் ஆரம்பிக்கும் முன்பு, வாத்தியார் என்ற சொல் குஸ்தி வாத்தியார், சிலம்பு வாத்தியார் என்று வீர விளையாட்டுகளைக் கற்றுத் தரும் வாத்தியாரையே குறித்தது. இதற்கென்று ஊர்தோறும் திடல்கள் இருந்தன. இங்கு வந்து ஊர் இளைஞர்கள் வீரப் பயிற்சி பெறுவர். எம்.ஜி.ஆரும் இது போன்ற பயிற்சிகளைக் கோவையிலும் சென்னையிலும் பெற்றிருக்கிறார். கோவையில் சாண்டோ சின்னப்பா தேவர் நம்பியார் ஆகியோருடன் எம்.ஜி.ஆர் இந்த வீர பயிற்சிகளில் ஈடுபடும்போது பெரும்பாலும் எம்.ஜி.ஆரே முதலிடத்தில் இருப்பார். அங்கு சின்னப்பா தேவர் மாருதி தேகப் பயிற்சி சாலை என்று ஓர் உடற்பயிற்சி கூடம் வைத்திருந்தார். எம்.ஜி.ஆர் பெரிய நடிகர் ஆனதும் சென்னையில் வட பழனியில் ஓர் இடம் வாங்கி அதில் ஸ்டண்ட் நடிகர்களைப் பயிற்சி பெறும்படி ஊக்கமளித்தார். இன்று அந்த இடம் ஜானகி ராமச்சந்திரா கலாலயம் என்ற பெயரில் ஜே.ஆர்.கே பள்ளிக்கூடமாக உள்ளது.

உளவியல் கருத்து

ஏழை ரசிகர் தன் கொடுமைக்கார முதலாளியை அடித்து உதைக்க வேண்டும் என்ற உள்மன ஆசை எம்.ஜி.ஆரின் சண்டைக் காட்சிகளை காண்பதன் மூலம் நிறைவேறுகிறது. உளவியல் அணுகுமுறையில் ஆராய்ந்தால் ஒருவர் கனவில் எலி, பூனையைத் துரத்தினால் அவர் கடுமையான அடக்குமுறைக்கு உள்ளாகியிருக்கிறார். அதிலிருந்து விடுபட அவர் உள்மனம் விரும்புகிறது. எனவே, அவர் கனவில் வலிமை குறைந்த எலி, வலிமையான பூனையைத் துரத்துகிறது. இது அவரது ஒடுக்கப்பட்ட ஆசையின் [oppressed wishes] வெளிப்பாடு ஆகும். இதுபோன்ற ஆசை இருப்பவர் எம்.ஜி.ஆரின் சண்டைக் காட்சியைப் பார்க்கும்போது மன அமைதி பெறுகிறார். ஒடுக்குதலிலிருந்து விடுபட்ட உணர்வைப் பெறுகிறார். இதை [vicarious suffering] என்பர். அதாவது படம் பார்ப்பவர் தன் துக்கத்தையும் ஆற்றாமையையும் படத்தில் வரும் நடிகர்களின் இன்ப துன்பங்களோடு இணைத்து பார்த்து இன்பமோ துன்பமோ அடைவதாகும்.

ரசிகர் வகைகள்

சண்டைக் காட்சிகளை ரசிப்பவரில் இரண்டு வகையினர் உண்டு. ஒருவர் நேரடியாக மனதளவில் சண்டைப் போட்டு மகிழ்வார். இன்னொருவர் அவ்வாறு சண்டையிடாமல் முதல் பிரிவினரை வேடிக்கை பார்த்து மகிழ்வார். முதல் பிரிவைச் சேர்ந்த ஒடுக்கப்பட்ட ஏழை தொழிலாளி ஒருவர் எம்.ஜி.ஆர் படத்தில் சண்டைக் காட்சியைப் பார்க்கும்போது எம்.ஜி.ஆருக்குள் மனதளவில் கூடு விட்டு கூடு பாய்கிறார். அவரே கெட்டவனை அடித்து உதைக்கும் உணர்வைப் பெற்று அமைதியடைகிறார். இரண்டாவது பிரிவைச் சேர்ந்தவர்கள், நமக்காகவே எம்.ஜி.ஆர் கெட்டவனை அடித்துத் திருத்துகிறார் என்று நம்பி அமைதி பெறுகின்றனர். இவர்கள் எந்தச் சமூக மாற்றத்துக்கும் ஒத்துழைக்க மாட்டார்கள். எந்தப் போராட்டத்திலும் கலந்துகொள்ள மாட்டார்கள். இவர்களுக்கு யாராவது ஒருவர் தானாக வந்து நல்லது செய்ய வேண்டும். அதன் பலனை மட்டும் இவர்கள் அடைய வேண்டும். எம்.ஜி.ஆர் படம் பார்த்துவிட்டு வரும் கூட்டத்தினரில் முதல் வகையினர் வழியில் இருக்கும் தட்டி போர்டுகளை உதைத்து கீழே தட்டிவிட்டு அழிச்சாட்டியம் செய்த படி வருவர். இந்த இரண்டாவது பிரிவினர் அவர்களை ஊக்கப்படுத்தி ரசித்துச் சிரித்தபடி நடந்துவருவர்.

சண்டையின் பாரம்பர்யம்

ராமாயணம் மகாபாரதம் கந்த புராணம் என நம் பாரம்பர்ய நூல்கள் அனைத்தும் இறுதியில் பெரிய சண்டையின் மூலமாகவே நீதியை, நன்மையை நிலைநாட்டுகின்றன. அதன் வழியில் திரைப்படத்திலும் பெண், நிலம், பொருள் எனப் பல்வேறு காரணங்களுக்காகக் கடைசியில் ஒரு க்ளைமாக்ஸ் சண்டைக் காட்சியும் இடையில் சிறு சிறு சண்டைக் காட்சிகளும் இடம்பெறுகின்றன. வெளிநாட்டு இலக்கியங்களிலும் திரைப்படங்களிலும் இது போன்ற சண்டைகள் இடம்பெறுகின்றன. ஆக மனித சமுதாயம் தோன்றிய காலம் தொட்டு தன் தேவை அதிகரிக்கும்போது போட்டிகளும் பொறாமையும் பேராசையும் உருவாகி சண்டைகள் வருகின்றன. இது நபர் அளவில் வந்தால் வாய்ச்சண்டை என்றால் தகராறு என்றும் கைகலப்பு ஏற்பட்டால் சண்டை என்றும் நாடு அல்லது சமூகம் என்றளவில் ஏற்படும்போது அதைப் போர் என்றும் அழைக்கிறோம்.

எம்.ஜி.ஆர் படத்தில் சண்டைக் காட்சி அமைப்பு

தர்ம யுத்த முறைகளின் அடிப்படையில் எம்.ஜி.ஆரின் சண்டைக் காட்சிகள் அமைக்கப்படும்.
1.எம்.ஜி.ஆர் யாரிடமும் வம்புச் சண்டைக்குப் போவதோ தன் பலத்தைக் காட்டுவதற்காக யாரையும் முதலில் அடிப்பதோ கிடையாது.
2. கெட்டவனின் தீய செயலைத் தடுக்கவே அவர் அவனைத் தாக்குகிறார்.
3. கெட்டவன் தன்னைத் தாக்க வரும்போது தற்காப்புக்காக அவனை அவர் எதிர்க்கிறார்.
4. ஏழை, மூதியவர் பெண்கள் குழந்தைகள் என உடல் பலமற்றவர் , கெட்டவனை எதிர்க்க வலுவற்றவர் அவனின் பிடியில் சிக்கித் தவிக்கும்போது அவர்களை அவனிடமிருந்து மீட்க அவனுடன் சண்டைப் போடுகிறார்.

சண்டைப் போடும்போது

எம்.ஜி.ஆர் சண்டையிடும் போது வில்லனை முதுகில் குத்துவதோ அல்லது அவன் ஆயுதம் இல்லாமல் நிராயுதபாணியாக இருக்கும்போது தாக்குவதோ கிடையாது. ஆயிரத்தில் ஒருவன் படத்தில் நம்பியார் எம்.ஜி.ஆரின் குத்துவாளை அவர் இடுப்பிலிருந்து பிடுங்கிக்கொண்டு சண்டை செய்யும் போது எம்.ஜி.ஆர் அதை நம்பியாரிடமிருந்து தன் நீண்ட வாளால் தட்டிப் பறித்துவிட்டு ‘நீ உன் குத்துவாளை எடுத்துக்கொள் இது என்னுடையது’ என்பார். அதன் பின்பு அச்சண்டை ஒரு பெரிய வாள் ஒரு குத்து வாள் எனச் சம பலத்துடன் தொடரும். படகில் மனோகருடன் எம்.ஜி.ஆர் சண்டையிடும்போது நம்பியார் விஷம் தோய்ந்த கத்தியை மனோகரின் முதுகில் விடுவார். அப்போது முதுகில் தாக்குகிறாயே நீயெல்லாம் ஓர் ஆண்மகனா என்று நம்பியாரைக் கண்டிப்பார்.

வில்லிகளுடன் சண்டை

எம்.ஜி.ஆர் படங்களில் பெண்கள் வில்லன் கூட்டத்திலிருந்து தொல்லை கொடுத்தாலும் அவர்களுடன் அவர் நேரடியாக மோதுவது இல்லை. மகாபாரதத்தில் சிகண்டி பீஷ்மர் கதையின் சாராம்சமே இதுதானே. பெண்ணை அடிப்பது தவறு என்பதால் நவரத்தினம் படத்தில் குமாரி பத்மினி எம்.ஜி.ஆருடன் மோதும் போது அவர் விலகிக் கொள்வார் குமாரி பத்மினி பொத் பொத்தென்று கீழே விழுந்து அடிபட்டு சோர்வடைவார். பிறகு எம்.ஜி.ஆர் அவரைக் கட்டிப்போட்டுவிடுவார். அது போல இதயக்கனியில் மெயின் வில்லி ராஜசுலோசனாவிடம் இருந்து உண்மைகளை வரவழைக்க பெண் போலீஸ்களைப் பயன்படுத்துவார். எம்.ஜி.ஆர் வில்லியின் அடியாட்களுடன் நேருக்கு நேர் மோத சிதம்பரம் அருகே உள்ள ஒரு மண் திட்டையில் கப்பல் போல செட் அமைத்து சண்டைக் காட்சிகளை எடுத்தார். அந்த மேடு இன்றும் எம்.ஜி.ஆர் மேடு என்று அழைக்கப்படுகிறது.

சண்டைக்குப் பின்

எம்.ஜி.ஆர் தன் படங்களில் வில்லன் நடிகருடன் சண்டை முடிந்த பிறகு ஓரிரு படங்கள் தவிர மற்றவற்றில் அவர் அவனைக் கொல்வது கிடையாது. அவனை ஊனப்படுத்துவதும் இல்லை. அவன் செயல்பாட்டை மட்டும் முடக்குவார். பல படங்களில் கட்டிப்போட்டு விட்டு போலீஸுக்குத் தகவல் கொடுப்பார் அல்லது அந்த நேரத்தில் போலீஸே வந்துவிடும். புத்திமதி கூறுவதாகவும் வில்லன் திருந்தி மன்னிப்புக் கேட்பதாகவும் சண்டையின் முடிவு அமையும். பல படங்களில் வினை விதைத்தவன் வினை அறுப்பான் என்ற சொல்லுக்கேற்ப வில்லன் அவன் செய்த தீய செயல்களுக்கு அவனே பலியாகிவிடுவான்.

வில்லனும் இதர ஸ்டண்ட் நடிகர்களும்

எம்.ஜி.ஆருடன் அதிகப் படங்களில் [88] வில்லனாக நடித்தவர் அசோகன். ஆனால், எம்.ஜி.ஆர் என்றாலே அவரது பரம விரோதி என்று கருதுவது நம்பியாரை மட்டுமே. பி. எஸ் வீரப்பா மஹாதேவி சக்கரவர்த்தி திருமகள் ஆனந்த ஜோதி போன்ற படங்களில் வில்லனாக நடித்தார். இவர்களுடன் துணை வில்லனாக ஆர்.எஸ். மனோகர் நடிப்பதுண்டு. இந்த வில்லன்களின் அடியாட்களாக எம்.ஜி.ஆரின் ஸ்டண்ட் குழுவைச் சேர்ந்த ஜஸ்டின் , ராமகிருஷ்ணன், நடராஜன், காமாட்சி, தர்மலிங்கம் போன்றோர் இடம்பெறுவர். இதயக்கனி, அடிமைப்பெண் போன்ற படங்களில் ஜஸ்டினுடன் தனிச் சண்டையும் இருந்தது. ஆனால், அவர் முக்கிய வில்லன் கிடையாது. புத்தூர் நடராஜன் சியாம் சுந்தர் ஆர்.என்.நம்பியார் சங்கர் போன்றோர் எம்.ஜி.ஆரின் சண்டைக் காட்சிகளை வடிவமைப்பர்.

வாள் சண்டை

வாள் சண்டையில் எம்.ஜி.ஆர் வல்லவர் என்பது எல்லோருக்கும் தெரியும். அவர் அந்த வாள் வித்தையை மேடை நாடகங்களில் கூட நடித்துக்காட்டினார். பி.யு.சின்னப்பாவைப் போல வாள் சுழற்றத் தெரிந்திருக்க வேண்டும் என்று அசுரப் பயிற்சி பெற்றார். அவர் நாடக மன்றத்தின் முதல் நாடகமான இடிந்த கோபுரம் நாடக மேடையில் குண்டுக் கருப்பையாவுடன் சண்டைக் காட்சியில் நடித்தபோது எம்.ஜி.ஆரின் கால் முறிந்தது. வாள் மட்டும் அல்லாது குறுவாள் அல்லது குத்துவாள். பிச்சுவா போன்றவற்றையும் வைத்து சண்டைப் போடுவதையும் நாம் வாள் சண்டை என்ற பிரிவிலேயே சேர்த்துவிடுவோம்
எம்.ஜி.ஆருக்குச் சமமாக வாள் சண்டைப் போடுவதில் நம்பியார் கெட்டிக்காரர். அரச கட்டளையில் சரோஜா தேவியின் காதல் பரிசுக்காக இவர்களின் சண்டை சுவாரஸ்யமாக இருக்கும். வசனமும் இடம்பெறும். முதலில் எம்.ஜி.ஆர் சிரித்தபடி சண்டைப் போடுவார். தன் கையில் இருந்த மாலையை நம்பியார் பறித்துவிடவும் அதைத் திரும்பப் பெறுவதற்காக பின்பு கோபமாகச் சண்டை போடுவார். ஆயிரத்தில் ஒருவன் படத்தில் மதம் கொண்ட யானை என்ன செய்யும் தெரியுமா என்று நம்பியார் கேட்க சினம் கொண்ட சிங்கத்திடம் தோற்று ஓடும் என்று எம்.ஜி.ஆர் பதிலளிக்க ஒரு விவாதத்துடன் தொடங்கிய பிரச்னை இறுதியில் வாள் சண்டையில் முடியும். அதன் பின்பு கடற்கரையில் எம்.ஜி.ஆர் ஜெயலலிதாவிடம் ’’இரு பூங்கொடி சற்று விளையாடி விட்டு வருகிறேன் என்று சொல்லிவிட்டு நம்பியாருடன் சரிவுப் பாறையிலும் கடல் தண்ணீரிலும் வாள் சண்டை இடுவது இன்றும் ரசிக்கப்படுகின்றது. அதனால்தான் இன்றும் இப்படம் கோவாவில் நடைபெறும் சர்வதேச விழாவில் இடம்பெற்றுள்ளது. எம்.ஜி.ஆர் மகாதேவி, அரசக் கட்டளை போன்ற படங்களில் பி.எஸ். வீரப்பாவுடன் போடும் வாள் சண்டைகளும் சிறப்பாக இருக்கும்.

எம்.ஜி.ஆர் இரண்டு கையாலும் வாள் சுழற்றத் தெரிந்தவர். மாயா மச்சீந்திரா படத்தில் இரண்டு கையாலும் வாள் சுழற்றி சண்டைப் போட்டார். மருத நாட்டு இளவரசி முதலான சில படங்களில் எம்.ஜி.ஆர் பத்துப் பேர் வந்து சுற்றி நின்று சண்டைப் போட்டாலும் தன் கை வாளை கொண்டு சுழன்று சுழன்று உட்கார்ந்து எழுந்து குதித்து தாவிச் சண்டைப் போடும் காட்சிகள் ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்டிருக்கும். இதைப் போல கம்புச் சண்டையும் பல பேருடன் மோதுவதாக அமையும்

எம்.ஜி.ஆர் மணிமாறன், கரிகாலன் என இரண்டு வேடங்களில் நடித்த நீரும் நெருப்பும் படத்தில் வாள் சண்டையில் ஒருவர் வலது கை பயிற்சி உள்ளவர்; அடுத்தவர் இடது கை பயிற்சி உள்ளவர். இருவரும் மோதும் காட்சியில் டூப் போட்டு எடுத்திருந்தாலும் எம்.ஜி.ஆர் முகம் தெரியும் காட்சிகளில் கதாபாத்திரத்துக்கு ஏற்ப இரண்டு கைகளிலும் வாளை மாற்றி அனாயசமாக சண்டையிடுவார். இதே படத்தில் பிச்சுவா சண்டை ஷூட்டிங் நடக்கும்போது வந்த தர்மேந்திராவும் ஹேமாமாலினியும் இவர் நிஜ பிச்சுவா வைத்து சண்டைப் போடுவதை பார்த்து வியந்தனர்.

ஒரு படத்தில் நம்பியார் வீசிய கத்தி எம்.ஜி.ஆரின் கண் புருவத்தை வெட்டிவிட்டது. அதன் தழும்பு கடைசி வரை மாறவில்லை. புருவம் வரையப்படாத அவர் படங்களில் இந்தத் தழும்பைக் காணலாம். எம்.ஜி.ஆர் வால் வீசிய வேகத்தில் எதிரே சண்டையிட்ட ஸ்டன்ட் நடிகரின் வாள் நுனி உடைந்து பறந்தது. அதை எம்.ஜி.ஆர் தன் கையால் லாகவமாகப் பிடித்து ‘இந்தா இதை என் நினைவாக வைத்துக்கொள்’ என்றார்.

மீனவநண்பன் படத்தில் வாள் சண்டையில் வெற்றி பெற்றவருக்கே தன் மகள் லதா சொந்தம் என்று வி.ஆர்.ராமசாமி சொன்னதால் எம்.ஜி.ஆரும் நம்பியாரும் வாள் சண்டைப் போடுவார்கள். இது காலத்துக்கும் கதைக்கும் பொருந்தவில்லை என்றாலும் சண்டை ரசிக்கும்படியாக இருந்ததால் ரசிகர்கள் ஏற்றுக்கொண்டனர். இச்சண்டைக் காட்சியில் எம்.ஜி.ஆர் பெல்பாட்டம்ஸ் போட்டு நடித்திருப்பார். மற்ற காட்சிகளில் கட்டம் போட்ட சங்கு மார்க் லுங்கி கட்டி வருவார். இந்தப் படப்பிடிப்பின்போது எம்.ஜி.ஆருக்கு மூச்சு வாங்குவதை யாரும் பார்த்துவிடக் கூடாது என்பதறகாக அவர் ஒரு பக்கமாகப் போய் சில நிமிடங்கள் யாருடனும் பேசாமல் நிற்பார் என்று ஸ்ரீதர் தன் பேட்டி ஒன்றில் குறிப்பிட்டிருந்தார்.

எம்.ஜி.ஆரும் நம்பியாரும் ஒரு கையில் பெரிய வாள் மறு கையில் சிறு குத்துவாள் வைத்து சண்டைப் போடுவதாகவும் காட்சிகள் உண்டு. அடிமைப்பெண் படத்தில் அப்பா எம்.ஜி.ஆர் சூரக்காட்டின் தலைவனான அசோகனுடன் வலை கட்டி அதில் சண்டையிடும் காட்சியில் அசோகனுக்கு ஒரு காள் ஊனம் என்பதால் எம்.ஜி.ஆரும் ஒரு காலை மடித்துக்கட்டி அவருடன் மோதுவார். இது ஒரு புதுமையான சண்டைக் காட்சி. எதிரி தனக்குச் சம பலம் உள்ளவனாக இருக்க வேண்டுமே தவிர நம்மை விட குறைந்த பலம் உள்ளவனுடன் மோதுவது ஆண்மை ஆகாது அது வீரம் எனப் போற்றப்பட மாட்டாது என்பதால் சவால் விட்டு ஒற்றைக் காலுடன் மோதினார். இதில் அசோகனுக்கு டூப் போட்டவர் சங்கர்.

எம்.ஜி.ஆர் சட்டமன்ற தேர்தலில் ஜெயித்து முதல்வராகும் நாள் நெருங்கிவிட்டதால் அவசரம் அவசரமாக மைசூரில் மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன் படப்பிடிப்பு நடந்தது. அதில் எம்.ஜி.ஆருடன் சண்டைக் காட்சியில் நடித்த கடைசி ஆள் இந்த சங்கர். இவர் நம்பியாருக்கு டூப் போட்டு இருந்தார்.

சண்டைக் கருவிகள்

வாள் சண்டை என்பது அரச குடும்பம் மற்றும் படை வீரர்களுக்கு உரியது. அது தவிர சாமன்ய மக்களுக்குத் தெரிந்த கிராமங்களில் அதிகமாகப் புழங்குகின்ற சிலம்பம், சுருள் வாள், செடிக் குச்சி, மான் கொம்பு போன்ற கருவிகளைக் கொண்டும் சண்டைக் காட்சிகளை எம்.ஜி.ஆர் தன் படங்களில் வைத்தார்.

சிலம்பு

சிலம்பாட்டம் பல படங்களில் இடம்பெற்றாலும் பெரிய இடத்துப் பெண் படத்தில் வரும் சிலம்புச் சண்டை மறக்க முடியாதது. மயக்க மருந்து கலந்த சோடாவைக் குடித்ததால் எம்.ஜி.ஆர் போட்டியில் தோற்றுப் போய் ஊரை விட்டே வெளியேறிவிடுவார். தான் கல்யாணம் செய்ய ஆசைப்பட்ட பெண்ணையும் இப்போட்டியின் தோல்வியால் இழந்துவிடுவார். ஆனால், ரிக்*ஷாக்காரன் படத்தில் சுற்றி நின்று தன்னைத் தாக்கும் மூன்று பேருடன் ரிக்*ஷா சீட்டில் உட்கார்ந்தபடியே கையில் சிலம்பு வைத்து எம்.ஜி.ஆர் சண்டைப் போட்டு மஞ்சுளாவைக் காப்பற்றுவார். இக்காட்சியில் சர்க்கஸில் வருவது போல ரிக்*ஷாவை வட்டப் பாதையில் சுற்றிச் சுற்றி வரும்படி அமைத்திருந்தனர். தாயைக் காத்த தனயன் படத்தில் எம்.ஜி.ஆர் கம்பு சுற்றி வெற்றி பெற்றதைப் பாராட்டும் எம்.ஆர்.ராதா தன் கந்த விலாஸ் டீக்கடையில் வந்து ஒரு கப் டீ குடிக்க வேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்வார்.

எங்க வீட்டு பிள்ளை படத்தில் வரும் நான் ஆணையிட்டல் பாட்டில் எம்.ஜி.ஆர் சவுக்கை சுழற்றியபடி படிக்கட்டுகளில் ஓடி ஆடிப் பாடும் காட்சிகளில் அவர் சிலம்பு சுற்றுவதில் பின்பற்றும் காலடி வைப்பு முறைகளையே பயன்படுத்தியிருப்பார்.

செடிக்குச்சி

செடிக்குச்சி என்பது சிலம்புக் குச்சியைப் போலவே அளவில் சிறியது. எம்.ஜி.ஆர் ஒருவருக்கே திரையுலகில் இந்தச் செடிக்குச்சி சுற்றத் தெரியும். மாட்டுக்கார வேலன் படத்தில் எம்.ஜி.ஆர் சிறிய பைப்புகளை வைத்து செடிக்குச்சி விளையாட்டை நிகழ்த்துவார். திரையரங்கில் இந்தக் காட்சியை நம் ரசிகர்கள் ரசித்தது போல அமெரிக்க மாணவர்களும் ரசித்தனர்.

கோபுடா

கோபுடா என்பது கையில் மாட்டும் ஒரு முள் கவசம் அகும். அரசிளங்குமரி ஆரம்பிக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆகிவிட்ட சூழ்நிலையில் அதில் க்ளைமாக்ஸ் சண்டையில் ஒரு மாற்றத்தைக் கொண்டுவர கருதிய எம்.ஜி.ஆர் இந்தக் கோபுடா சண்டையை வைத்தார். இதில் கெட்டிக்காரரான சின்னப்பா தேவரை ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு சந்தித்து அரை மணி நேரத்தில் சமாதானமாகி செட்டுக்கு அழைத்து வந்தார். ஆக்ரோஷமான இந்தக் கோபுடா சண்டைக் காட்சி ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது.

மான் கொம்பு

மான் கொம்பு சண்டையை உழைக்கும் கரங்கள் படத்தில் சங்கர் அருமையாக வடிவமைத்திருப்பார். கால் சவடு [ஸ்டெப்] வைத்து எம்.ஜி.ஆர் இந்தச் சண்டையைப் போடும்போது ஒரு நேர்த்தியான கலை வடிவத்தைக் காணலாம்.

மல்யுத்தம்

எம்.ஜி.ஆர் பளு தூக்கும் போட்டியில் நம்பியார் சின்னப்பா தேவர் தோற்கடித்து விடுவார். மல் யுத்தம் குஸ்தி போன்றவற்றையும் முறைப்படி கற்றிருந்தார். காஞ்சித் தலைவன் படத்தில் அவர் மல்யுத்தத்தில் வல்லவனான மாமல்லன் நரசிம்ம பல்லவன் வேடத்தில் நடித்ததால் ஒரு தனி மல்யுத்தக் காட்சி வைக்க திட்டமிட்டனர். அப்போது ஆந்திராவில் காவல் துறையில் பணியாற்றிய பஜ்ஜையா என்பவர் மல்யுத்தப் போட்டிகளில் பதக்கங்களையும் பரிசுகளையும் பெற்றிருந்தார். நல்ல உயரமும் கம்பீரமான தோற்றமும் கொண்டிருந்தார். அவரை அழைத்து காட்சியை விளக்கி நடிக்கவைத்தனர். எம்.ஜி.ஆரை அவர் சரியாக மதிப்பிடாததால் சொன்ன படி கேட்காமல் நடித்துவந்தார். மறுநாள் படப்பிடிப்பில் எம்.ஜி.ஆர் அவரை தலைக்கு மேலே தூக்கிக் கீழே போட்டார். பஜ்ஜையா எழுந்து வந்து எம்.ஜி.ஆர் காலைப் பிடித்து அழுதுவிட்டார். இதுவரை யாரும் அவரை அப்படித் தூக்கி எறிந்ததில்லை அது ஒரு மல்யுத்த வீரனுக்குப் பெருத்த அவமானம். எம்.ஜி.ஆருக்கு மல்யுத்தம் தெரியும் என்பதை நம்பாமல் அலட்சியமாக நடந்துகொண்டதற்கு மன்னிப்பு கேட்டு கண்ணீர் விட்டார்.

காவல்காரன் படத்தில் எம்.ஜி.ஆரும் ஆர்.எஸ்.மனோகரும் மல்யுத்தம் செய்வர். ஆர்.எஸ்.மனோகர் மல்யுத்தம் கற்றவர். பட்டிக்காட்டு பொன்னையா படத்திலும் மல்யுத்தக் காட்சிகள் இடம்பெறும். அன்பே வா படத்தில் வரும் சிட்டிங் புல் கர்நாடகக் காவல் துறையில் பணியாற்றி வந்தார். அவருக்கு எம்.ஜி.ஆருடன் ஒரு படத்திலாவது ஃபைட் சீனில் நடிக்க ஆசை. இவர் அன்பே வா படத்தில் இரண்டு சண்டைக் காட்சிகளில் எம்.ஜி.ஆருடன் மோதினார். அவரையும் எம்.ஜி.ஆர் அப்படத்தில் தோளுக்கு மேலே தூக்கி வைத்திருந்து கீழே போடுவார்..........

orodizli
15th July 2020, 10:01 PM
வள்ளலே ..
எங்கள் வாழ்வின் ...
இதயக்கனி ..
--------------------------------
காமராஜர்-
தன் உதவியாளர் வைரவனுடன் .. வாழ்ந்து கொண்டிருந்த காலம்!!

ஒரு நாள் ....
ஒரு நண்பர் ...
காமராஜ் அவர்களளை
சந்திக்க வந்திருந்தார்....

பெருந்தலைவரும் ..
அவருடன் உரையாடி விட்டு அவரைத் தம்முடன் உணவருந்துமாறு அழைக்க அந்த நண்பரும் ஒப்புக் கொள்கிறார்!!

வைரவனோ தனக்கும் ... காமராஜருக்கும் மட்டுமே உணவு தயாரிப்பது வழக்கம்!!

அமைதியாக இருவருக்கும் --தான் சமைத்ததை பரிமாறி விட்டு--தான்-வெறும் வயிற்றோடு அந்த இரவைக் கழிக்கிறார்!!

இது காமராஜருக்குத் தெரிய வருகிறது!!

வருத்தத்தையும் கொடுக்கிறது!!

சரி!!
இனி தம் இருவருக்கும் மேல் உபரியாக ஒருவருக்கு உணவு தயாரிக்க சொல்லலாம் என்றால்--
யாரும் வராத நிலையில் அந்த உணவு வீணாகி விடும்!!

குளிர்ப் பெட்டி போன்ற உணவு பாதுகாப்பு வசதிகளும் இல்லை??

எப்போதாவது தான் நண்பர்கள் வருவார்கள்!!

அதுவும் இரவு உணவு உண்ணும் நேரத்தில் அனேகமாக யாரும் வரமாட்டார்கள்!!-

-இத்தகைய காரணங்களால்--
வரும் விருந்தினர்களை உணவு அருந்தச் சொல்லும் பழக்கத்தையே அடியோடு விட்டுவிட்டார் பெருந்தலைவர் ...

ஒரு நாள்_-
காமராஜரை சந்திக்க வருகிறார்
ராம ராஜர் எம்.ஜி.ஆர் ...

காமராஜர் --எம்.ஜி.ஆரிடம் அன்று அதிசயமாக
உணவருந்தச் சொல்லி வற்புறுத்துகிறார்??

எம்.ஜி.ஆரோ நாகரீகமாக மறுத்து விட்டு விடை பெறுகிறார்!!

திரு வைரவனும் ஆச்சர்யம் கொண்டு அது பற்றி காமராஜரிடம் கேட்கிறார்??

யாரையும் சாப்பிட--கூப்பிட பழக்கம் இல்லாத உங்களுக்கு எம்.ஜி.ஆர் மட்டும் அதுவும் வற்புறுத்தி--

என்ன விலக்கு??
சற்றே விளக்கு ..

அமைதியாக பதில் சொன்னாராம் அந்த படிக்காத மேதை!!

ஊருக்கே உணவிடும் ... எம்.ஜி.ஆருக்கு ...
ஒரு வேளை உணவிட்ட புண்ணியம் எனக்குக் கிடைக்கட்டுமே ...

என்பது தான் காரணம்..............

orodizli
15th July 2020, 10:03 PM
"ஆயிரத்தில் ஒருவனி"ன் மகத்தான வெற்றிக்கு பின்னர் வந்த பத்மினி பிக்சர்ஸின் குறுகிய கால தயாரிப்பில் வெளியான கலர் படம்தான் "ரகசிய போலீஸ் 115"
புதுமையான கவர்ச்சிகரமான
தலைப்பு. தலைப்பே ரசிகர்கள் மனதில் ஒரு பெரிய எதிர்பார்ப்பை
ஏற்படுத்தியது. அதுவும் 1968 ம் ஆண்டு பொங்கலையொட்டி வெளியானது மேலும் எதிர்பார்ப்பை எகிற வைத்தது. வால்போஸ்டரை பார்க்கவே கூட்டம் அலைமோதியது.

எனக்கு தெரிந்து தூத்துக்குடியில் ஒரு டிக்கெட்டின் பிளாக் மார்க்கெட் விலை 1ரு44 பைசா டிக்கெட் 20 ரூக்கு விலைக்கு போனது இந்த படத்துக்கு மட்டும்தான். தூத்துக்குடியில் முதன்முறையாக 30 நாட்களை கடந்து 33 நாட்கள் மேட்னி ஷோ நடைபெற்று 53 நாட்கள் ஓடி புதிய சாதனையை தொடங்கி வைத்தது. மேலும் ஒரு அதிசயம் இந்த படத்துக்கு நிகழ்ந்தது. சென்னையில் 10 நாட்களில் ரூ 2,37,000 வசூலாக பெற்றது யாரும் நினைத்து கூட பார்க்க முடியாத ஒன்று. "ரிக்ஷாக்காரன்" படம்
கூட இந்த வசூலை முறியடிக்க முடியவில்லை என்பதே உண்மை.

இவ்வளவுக்கும் பெரிய வசூல் கொடுக்கும் ஏர்கண்டிஷன் தியேட்டர் கிடையாது. சாதாரண தியேட்டர்கள்தான். 5 தியேட்டர் ரிலீஸ் அதனால்தான் என்பார்கள் எதிர்முகாம் அணியினர். நீங்களும் திரையிட்டு பாருங்கள். மூன்று தியேட்டருக்கே ஆட்களை தேடிப்பிடிக்கும் அவலநிலை. இதில் 5 தியேட்டருக்கு ஆள் பிடிக்க வேண்டுமென்றால் நினைத்தே பார்க்க முடியாது கணேசன் ரசிகர்களுக்கு. பந்துலுவின் தயாரிப்பில் வெளியான வேறு எந்த படமும் இந்த சாதனையை செய்யவில்லை.

இத்தனைக்கும் பிரம்மாண்ட செட்டிங்ஸ் கிடையாது. நிறைய ஆட்களை திரட்டி நடிக்க வேண்டிய காட்சி அமைப்பு கிடையாது.நட்சத்திர பட்டாளங்கள் கிடையாது வெற்றியை பங்கு போடுவதற்கு. ஆனாலும் பாண்டவர்கள் வெற்றிக்கு துணை நின்ற பரந்தாமன் போல படத்தின்
வெற்றிக்கு வித்திட்ட ஒரே நட்சத்திரம் புரட்சி நடிகர் மட்டுமே.
படத்தில் யார் இருந்தாலும் இல்லாவிட்டாலும் எம்ஜிஆர் என்ற மூன்றெழுத்து இருந்தால் போதும் வெற்றி என்ற மூன்றெழுத்து தன்னால் வந்து சேரும் என்பதை மீண்டும் நிரூபித்த வெற்றி காவியம்தான் "ரகசிய போலீஸ் 115."

படம் சென்னையில் 100 நாட்கள் ஓடவில்லை என்றாலும் வெள்ளிவிழா ஓடிய கணேசன் படங்கள் கூட பெற முடியாத வசூலை "ரகசிய போலீஸ்115" பெற்றது. ஓடி முடிய
சுமார் ரூ 9,23,000 ஐ வசூலாக பெற்றது.."கட்டபொம்மனோ","கப்பலோட்டிய தமிழனோ", பல லட்சம் செலவு செய்து பந்துலுவை கடனாளி ஆக்கிய "கர்ணனோ" போன்ற
பந்துலுவின் பிரமாண்ட படங்கள் பெற முடியாத வசூலை எம்ஜிஆரின்
சாதாரண ஒரு கலர் படம் பெறுகிறது என்றால் அந்த மூன்றெழுத்தின் மகிமையை நினைத்து பலருக்கு அடிவயிறு ஏன் கலங்குகிறது என்பதற்கான காரணம் புரிகிறதா?

நெல்லையில் இரண்டு தியேட்டர்களில் வெளியாகி 52 நாட்கள் ஓடி சுமார் ரு89000 வசூலாக பெற்றது. 100 நாட்கள் திருச்சி மற்றும் சேலத்தில் ஓடியது. மதுரையில் பிரமாண்ட தியேட்டர் தங்கத்தில் 100 நாட்கள் ஓடிய "கர்ணன்" பட வசூல் ரூ 186000ஐ ஆர்ப்பாட்டம் இல்லாமலே 100 நாட்கள் ஓடாமலே 92 நாட்களில் ரூ228000 வசூலாக பெற்று அசுர சாதனை படைத்தது பந்துலுக்கு ஆச்சர்யத்தை மூட்டியதுடன் முன்பே வந்திருந்தால் அனாவசியமாக பணத்தையும்,வீணான உழைப்பையும் இழக்க வேண்டிய அவசியம் இல்லாமல் போயிருக்குமே! என்று மனத்தெளிவு பெற்றதாக சொல்வார்கள்.

பொறாமை பட்டது கணேசன் ரசிகர்கள் மட்டுமல்ல அநேக தினசரி, வார பத்திரிக்கைகளும்தான். "ஆயிரம் கைகள் மறைத்தாலும் ஆதவன் மறைவதில்லை. ஆணைகள் இட்டே யார் தடுத்தாலும் அலைகடல் ஓய்வதில்லை" என்ற பாடலின் பொருள் விளங்கியிருக்கும் அவர்களுக்கு. ஓய்வில்லாமல் பத்திரிக்கையில் விமர்சனம் என்ற பெயரில் மிகை நடிப்பை போற்றியும்,
புரட்சி நடிகரின் திறமைகளை மறைத்து எழுதியும் மக்கள் மனம் மயங்காமல் வெற்றியை
மக்கள் திலகத்தின் படங்களுக்கு தாரை வார்த்தது விந்தையிலும் விந்தை.

அன்று வெளியான படம் இன்று வரை ரீ மாஸ்டர் பண்ணியும் ஓடுகிறது என்றால் அந்த வெற்றியின் மகிமையை அறிய முடிகிறதா?.
அந்த வெற்றியை முறியடிக்க சில நடிகர்கள் கத்திப்பேசி, விசித்திரமான ஒலிகளை எழுப்பி,
விதவிதமான நடை நடந்து, உடை பல அணிந்து, புதுமையான முறையில் அழுது, ரத்த வாந்தி எடுத்து, துணைக்கு பல நட்சத்திரங்களை சேர்த்தாலும் மக்கள் திலகத்தை வெற்றி கொள்ள முடியவில்லை என்பதே எல்லோரும் ஏற்றுக் கொண்ட உண்மை............

fidowag
15th July 2020, 11:48 PM
பாட்டாலே*புத்தி சொன்ன*வாத்தியார் எம்.ஜி.ஆர். - சகாப்தம்*நிகழ்ச்சியில் வின்*டிவியில்*திரு.துரை பாரதி அவர்கள் 27/06/20 அன்று சொன்ன*செய்திகள்*
-------------------------------------------------------------------------------------------------------------------------
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். படகோட்டி படத்தில் இரண்டு குப்பங்களுக்கு இடையே நடைபெறும் மோதல்களை தடுப்பது, பிரச்னைகளை சமாளிப்பது, குப்பங்களின் ஏழ்மையை பயன்படுத்தி அவர்களை முதலாளிகள் சுரண்டுவதை எதிர்ப்பது , படகு போட்டியில் மாறு வேடத்தில்* தன் குப்பத்திற்காக தலைவர் பொறுப்பில் இருந்து வெற்றி பெறுவது ,இறுதியில் வில்லனின் சதி திட்டங்களை முறியடித்து இரு குப்பங்களின் ஒற்றுமையை நிலைநாட்டி, அரசு உதவிகள் பெறுவது என்கிற கதையமைப்பில் மீனவர்கள் நண்பனாக நடித்து , அந்த படம் சென்னையில் 100 நாட்கள் ஓடி வெற்றி கண்டது . இயக்குனர் ஸ்ரீதர் இயக்கத்தில் ,உரிமைக்குரலுக்கு பிறகு* மீனவ நண்பன் படத்தில் எம்.ஜி.ஆர். நடித்தார் இந்த படத்திலும் மீனவ சமுதாயத்திற்கு உதவும் வேடம் .ஆனால் சற்று வித்தியாசமான கதை .*.படம் முடிவடைவதற்கு முன்பு முதல்வராகிவிட்டார் . அதனால் பதவி ஏற்பதற்கு முன்பு சில நாட்கள் நடித்து முடித்தபின் படம் 14/08/1977ல்* வெளியானது . எம்.ஜி.ஆர். முதல்வராகுவதற்கு முன்பு வெளியான இன்று போல் என்றும் வாழ்க , முதல்வரான பின்* 100 நாட்கள் ஓடி வெற்றி கண்டது . முதல்வரான பின் வெளியான மீனவ நண்பன் சென்னை, மதுரை,சேலம் ஆகிய நகரங்களில் 100 நாட்கள் மேல் ஓடியது .ஒரு நடிகர் முதல்வராக பதவியில் இருக்கும்போது இரண்டு படங்கள் 100 நாட்கள் ஓடி வெற்றி கண்டன* அந்த வகையில் , எம்.ஜி.ஆர். புரிந்த இந்த அரிய சாதனை சினிமா உலகில் வேறு எவரும் செய்ததில்லை .



ஒரு அரசு அதிகாரி மீது தொடர்ந்து புகார் வருகிறது . எம்.ஜி.ஆர். ஒரு நாள் அவரை பதவி இடைநீக்கம் செய்து உத்தரவிடுகிறார் .விவரம் அறிந்த அதிகாரி, ராமாவரம் தோட்டத்திற்கு வந்து எம்.ஜி.ஆரை பார்க்கிறார் . தகுந்த விளக்கம் அளிக்கத்தான் வந்திருக்கிறார் என்று எம்.ஜி.ஆர். கருதி, முதலில் சாப்பிட்டு வாருங்கள் என்கிறார் .உணவருந்தி முடித்ததும் எம்.ஜி.ஆர். பதவி இடைநீக்க உத்தரவு கடிதம் அளிக்கிறார் .நீங்கள் எந்த விளக்கம் சொன்னாலும் ஏற்க கூடிய நிலையில் நானில்லை . நான் பலமுறை உங்களை மறைமுகமாக எச்சரிக்கை செய்தும் நீங்கள் திருந்தவில்லை ,எனக்கு தயக்கமாகத்தான் இருக்கிறது .இருந்தாலும் வேறு வழியில்லை என்கிறார் . அதிகாரி, சோகத்துடன் வீட்டில் உள்ளவர்கள் என்ன நினைப்பார்களோ என்கிற* வேதனையுடன் செல்கிறார் .வீடு போய் சேர்ந்ததும் அவருக்கு இன்ப அதிர்ச்சி. அதாவது மூன்று மாதங்களுக்கு தேவையான மளிகை சாமான்கள்,,துணிமணிகள் இதர பொருட்கள்* அவர் வீட்டில் குவிந்து கிடக்கின்றன .அத்துடன் வீட்டு செலவிற்கு ரூ.10,000/-* கொடுத்து அனுப்பியிருந்தார் .அதுதான் எம்.ஜி.ஆரின் குணாதிசயம் . தண்டனையும் உண்டு. அதே நேரத்தில் நிவாரணமும் உண்டு .ஒரு முதல்வராக இருந்து எம்.ஜி.ஆர். தவறு செய்த அதிகாரிக்கு தண்டனை அளிக்கிறார்.அதிகாரி செய்த தவறுக்கு குடும்பம் பாதிக்க கூடாது என்று கருதி*.அதே நேரத்தில் ஒரு குடும்பஸ்தனாக , மனிதாபிமானியாக*
அந்த குடும்பத்திற்கு பல உதவிகளை செய்தார் .



எம்.ஜி.ஆருக்கு மருத்துவர்கள் மீது* தனி மரியாதை உண்டு.* **தர்மம் தலை காக்கும் , புதிய பூமி* போன்ற ப*டங்களில் எம்.ஜி.ஆர். மருத்துவராக நடித்திருந்தார் தர்மம் தலை காக்கும் படத்தில் இருப்பவர்களிடம் இருந்து பணம் வாங்கி , ஏழைகள், வசதியற்றவர்களுக்கு**இலவச வைத்தியம் செய்வார் . புதிய பூமி படத்தில்**கொரோனா நோய், போன்று பல கொடிய,தொற்று நோய்**வந்தாலும் அதற்கான ஆராய்ச்சிகள் செய்து மருந்துகள் தயார் செய்து வைத்தியம் செய்வார் .கொடிய நச்சு பாம்புகள் கடித்தாலும்,அந்த விஷக்கடியில் இருந்து,மாற்று மருந்துகள் கண்டுபிடித்து நோயாளிகளை**காப்பாற்றும் வகையில், பச்சிலை, மூலிகை பொருட்கள்* கொண்டு குணமாக்கும் வைத்தியராக ஆயிரத்தில் ஒருவன் படத்தில் நடித்திருப்பார் .ஆயிரத்தில் ஒருவன் படத்தில் இறுதியில் அனைவரும் எம்.ஜி.ஆரை தலைவன் பதவி ஏற்று கொள்ளும்படி வற்புறுத்துவார்கள் . அவர் அதை மறுத்து ,நம்மில் மனமாற்றம் ஏற்பட்ட பிறகு யார் தலைவனாக இருந்தால் என்ன, என்னை வற்புறுத்தாதீர்கள் .பலகாலம் கற்றறிந்து நோய் பிணியை நீக்க மருத்துவ தொழிலை நடத்தி வருகிறேன் .இந்த தொழில் மூலம் மக்களுக்கு தொண்டாற்றவே விரும்புகிறேன் என்று கூறி மருந்து பெட்டியுடன் புறப்பட்டுவிடுவார் .மக்களின் நல்வாழ்வு, சுகாதாரம் ஆகியவற்றில் எம்.ஜி.ஆருக்கு தனி அக்கறை உண்டு . அதனால்தான்*தி.மு.க. ஆட்சியில் சுகாதார அமைச்சர் பதவி கேட்டார் என்று சொல்லப்படுவதுண்டு .


எம்.ஜி.ஆர்.முதல்வரான பின்பு 1978 ஏப்ரலில்* உன்னைவிட மாட்டேன் என்கிற படத்திற்கு பூஜை போடப்பட்டு தான் மீண்டும்*, நடிக்க போவதாக அறிவித்தார் அதற்கான* விளம்பரங்கள், ஏற்பாடுகள் எல்லாம் செய்தார் .. அப்போதைய பிரதமர் மொரார்ஜி தேசாயிடம் கேட்டதற்கு*,* முதல்வர் பதவிக்கு எந்த பங்கமும் வராமல் நடந்து கொள்வதாக இருந்தால் ,எம்.ஜி.ஆர் சினிமாவில் நடிப்பதற்கு எந்த ஆட்செபனையும் இல்லை என்று அறிவித்தார் இதுதான் எம்.ஜி.ஆர்.எதிர்பார்த்த* பதில் /அறிவிப்பு . அதில் வெற்றி பெற்று ,நிரூபித்தும் காட்டினார் .*.பூஜைக்கு ஆளுனர் வருவதாக இருந்தது .இறுதி கட்டத்தில் ஆளுனர் வரவில்லை .* *முதல்வர் பதவிக்கு எந்த இடையூறும் ஏற்படாது என்று உத்தரவாதம் தரும் வகையில் அவரது செயல்பாடு இருந்தது . ஆனால் என்ன காரணமோ, தொடர்ந்து ஏற்பட்ட அரசியல் மாற்றங்கள் காரணமாக படம் தொடங்க படவில்லை . எம்.ஜி.ஆர். சினிமாவில் நடிக்க முடியாமல் போனது .



சிவந்த மண் படத்திற்கு கதை வசனம் எழுத , முதலில் கருணாநிதியிடம் எம்.ஜி.ஆர். மூலம் ஆலோசனை கேட்கபட்டது* .சட்டத்தில் அதற்கு இடம் உண்டா தெரியவில்லை .யோசித்து சொல்கிறேன் என்று கருணாநிதி சொன்னார் பின்னர் மறுத்துவிட்டார் .ஸ்ரீதரும் அவரிடம் கேட்கவில்லை .அதன்பிறகு கருணாநிதி முதல்வராகிவிட்டார் ..காலம் கடந்ததால் , இயக்குனர் ஸ்ரீதர் , நடிகர் சிவாஜி கணேசனை வைத்து படத்தை முடித்து வெளியிட்டு விட்டார் . ஸ்ரீதர் நேரடியாக என்னிடம் கேட்காமல் படத்தை எடுத்து வெளியிட்டுவிட்டார் என்றுசுட்டிக்காட்டி* அவர் மனம் புண்படும்படி கருணாநிதி பேசினார் .என்று சொல்லப்பட்டது .



எம்.ஜி.ஆர். சினிமாவில் நடித்திருந்த காலத்தில், ஸ்டுடியோக்களில் பொதுவாக நாங்கள் சாப்பிடுகிற சாப்பாடு எம்.ஜி.ஆர். சாப்பாடு என்று திரையுலகில் பெருமையாக சொல்லுகிற அளவிற்கு* மிக* பிரபலம் .ஏனென்றா ல்***எம்.ஜி.ஆர். உணவருந்தும் போது , தன்னை சுற்றியுள்ள நடிகர் , நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள், பலரையும் வைத்துதான் சாப்பிடுவார் .அவருடைய சாப்பாட்டில் உள்ள வகை வகையான உணவு பொருட்களை பற்றி புகழ்ந்து பேசாத நடிகர், நடிகைகள், திரைப்பட கலைஞர்களே இல்லை எனலாம் . எம்.ஜி.ஆர். பற்றி பேசுகிறவர்கள், அவரை அறிந்தவர்கள் ,அவர் வீட்டிலோ, அல்லது ஸ்டுடியோவிலோ* சாப்பிட்டு*மகிழ்ந்ததை சொல்லாமல் இருந்த வரலாறில்லை .ஏனென்றால் தன்* சிறுவயதில் இருந்தே பசி கொடுமையை எம்.ஜி.ஆர். அறிந்து இருந்தவர் .எனவே மற்றவர் பசிப்பிணியை நீக்கினார் .பலருக்கு பசியாறுதல் செய்த, பசி அறிந்த* வள்ளல் .


தொடர்ந்து பல செய்திகளுக்கு அடுத்த அத்தியாயத்தில் பார்ப்போம்*

நிகழ்ச்சியில் ஒலித்த பாடல்கள் /காட்சிகள் விவரம்*
--------------------------------------------------------------------------------
1.எம்.ஜி.ஆர். -வில்லன் கண்ணன் உரையாடல் -மீனவ நண்பன்*

2.எம்.ஜி.ஆர்.-நாகேஷ் உரையாடல் - நம் நாடு*

3.சிரித்து வாழ வேண்டும் - உலகம் சுற்றும் வாலிபன்*

4.மருத்துவராக எம்.ஜி.ஆர். -புதிய பூமி*

5.எம்.ஜி.ஆர்.-நாகேஷ* உரையாடல்* -ஆயிரத்தில் ஒருவன்*

6.எம்.ஜி.ஆர். ஜெயலலிதா - ஆயிரத்தில் ஒருவன்*

7.ஹலோ ஹலோ சுகமா -தாமிரம் தலை காக்கும்*

8.எத்தனை பெரிய மனிதனுக்கு - ஆசைமுகம்*

9.நினைத்ததை நடத்தியே முடிப்பவன் - நம் நாடு*

10.சித்திர சோலைகள்,- நான் ஏன் பிறந்தேன்*

11.கண் போன போக்கிலே - பணம் படைத்தவன்*

orodizli
16th July 2020, 09:36 PM
புரட்சிதலைவர் நடித்து ஒப்பந்தம் போட்டு நாம் காண கிடைக்காத படங்களின் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா எம்ஜிஆர் நெஞ்சங்களே..

57 தவிர. இன்னும் 6 படங்கள்...நம்ம முடியவில்லையா... ஆம்.

இதோ.. இதுவரை வெளிவராத முழு பட்டியல்...

1...சாயா..( தலைவர் கதாநாயகன் ஆக நடித்த முதல் படம்...பக்ஷிராஜா நிறுவனம்...கதாநாயகி குமுதினி)..

2....அதி ரூப அமராவதி.
(தலைவர்..பானுமதி)

3....குமாரதேவன்...
(ஜமுனா கதாநாயகி)

4 ...பவானி....
(பானுமதி...ஸ்வஸ்திக் வெளியீட்டில்..வசனம் கண்ண தாசன்..)

5...வெள்ளிக்கிழமை.
(தீயசக்திப்படம்)

6....இணைந்த கைகள்.
(எம்ஜிஆர் நிறுவனம்)

7.....தபால்காரன் தங்கை...
(தேவிகா உடன்)

8....மாடி வீட்டு ஏழை.
(சாவித்திரி. )

9....கேரள கன்னி.
( பால சூரியா நிறுவனம்)

10...கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜு.

11...முசிறி அவர்களின் மக்கள் என் பக்கம்.

12....தாமஸ் இயக்கத்தில். மர்ம பெண்களிடம்..c.i.d..

13..... ராஜ சுலோச்சனா உடன்...மலை நாட்டு இளவரசன்..

14 ....கங்கை முதல் க்ரமளின் வரை...1974 இல்...தலைவர் இயக்கத்தில்.

15...பரமபிதா.

16....தலைவர் தயாரிப்பில் நாடோடியின் மகன்..

17...நானும் ஒரு தொழிலாளி...ஸ்ரீதர்..

18...கண்ண தாசனின்
ஊமையன் கோட்டை.

19...பாகன் மகள்..

20...தலைவர் இயக்கத்தில் பொன்னியின் செல்வன்..
21 ....ரிகஷாரங்கன்.

22....அஞ்சலிதேவி உடன்...சிலம்பு குகை.

23....ஸ்ரீதர் இயக்கத்தில்... பானுமதி உடன்..சிரிக்கும் சிலை.

24......தந்தையும் மகனும்...தேவர் பிலிம்ஸ்.

25......தேனாற்றங்கரை..
26...உடன்பிறப்பு.

27...புரட்சி பித்தன்.

28....வேலுத்தேவன்..

29...ஏசுநாதர்..

30....மண்ணில் தெரியுது வானம்.

31...சமூகமே நான் உனக்கே சொந்தம்.

32..உன்னை விட மாட்டேன்.

33...எல்லை காவலன்.

35...கேப்டன் ராஜு.

36....தியாகத்தின் வெற்றி..

37...இதுதான் பதில்.

38.....வேலு தம்பி...

39.. ஊரே என் உறவு.

40..உதயம் நிறுவனம் .
போட்டோகிராபர்..

41..கே.பாலச்சந்தர் வசனம்...பெயர் மெழுகு வர்த்தி...

43...இன்ப நிலா.

44.. வாழ்வே வா..

45...காணிக்கை.

46....அண்ணா பிறந்தநாடு.

47....அண்ணா நீ என் தெய்வம்..

48...நல்லதை நாடு கேட்கும்..

49....நம்மை பிரிக்க முடியாது.. அம்மையார் ஜெயலலிதா அவர்களுடன்.

50....மரகத சிலை.

51..லதா மஞ்சுளா தலைவர் இயக்கத்தில் வாழு.. வாழவிடு..

52....ஆண்டவன் கட்டிய ஆலயம்..

53...லதா மஞ்சுளா உடன்..கொடை வள்ளல்..

54....உங்களுக்காக நான்...

55...வீனஸ் நிறுவனம்.
எங்கள் வாத்தியார்.

56...எம்.ஜி.சக்ரபாணி அவர்கள் தயாரிப்பில்.
ஆளப்பிறந்தவன்..

57.....இமயத்தின் உச்சியிலே..

வாழ்க எம்ஜிஆர் புகழ்.

நன்றி..உங்களில் ஒருவன்.......தொடரும்.

பின் குறிப்பு.

வெளிவராத படங்களில் ஸ்டில்கள்... நாளை வெளியிடப்படும்............

orodizli
16th July 2020, 09:38 PM
அனைவருக்கும் இனிய காலை வணக்கங்கள்.
ஆஹா...
தலைவன் என்றால் இவரல்லவா??
புரட்சித்தலைவர் திரு.எம்.ஜி.ஆர் அவர்கள் பூமியிலிருந்து வானத்துக்கு விடைபெற்று முப்பது வருடங்கள் ஆகியும் இன்றும் .....
"ஜவ்வாது மலை" வாழ் மகாஜனங்களைப் பொறுத்தவரை அவர்தான் ஒரே ஹூரோ...
வணங்குகிறேன்
சரித்திரம் படைத்த
சகாப்த நாயகனை!!!
அன்றும்
இன்றும்
என்றும்
ஒரே புரட்சித்தலைவர்!!!

அவர் ஒரு சித்தர் !
கலையுலக சித்தர்!!
தான் செய்யப் போவதையும்
வாழப் போவதையம்
முன்கூட்டியே பாடலாக முன்மொழிந்த
கலை ஞானி!!!!

"இருந்தாலும் மறைந்தாலும்
பேர் சொல்ல வேண்டும்
இவர் போல யாரென்று
ஊர் சொல்ல வேண்டும்""

சொல்கிறார்களே!!!!
சொல்கிறோமே!!!

"டைம்ஸ் ஆஃப் இந்தியா"வின் பதிவில் இருந்து ஜவ்வாதுமலையில் வாழும் மக்களுக்கு இன்றும் ஒரே ஹூரோ புரட்சித்தலைவர்தான் என்ற செய்தியை படித்து....
மீண்டும் ஒரு முறை...
என் மானசீக குருவை வியந்து வணங்குகிறேன்!!!

வாழ்க்கைக்கான மானசீக குரு! "டைம்ஸ் ஆஃப் இந்தியா" பதிவிற்கு நன்றி.........

orodizli
16th July 2020, 09:39 PM
#ஆல் #இன் #ஆல்

தன்னுடைய திரைப்படங்களால் யாரும் நஷ்டப்பட்டுவிடக் கூடாது என்பதில் அதிக அக்கறை காட்டினார். அதனால்தான் ஒரு படத்துக்கும் மற்றொரு படத்துக்கும் குறைந்த பட்சம் 3 மாத இடைவெளியை அமைத்து வெளியிடச் செய்தார்.

இடைவெளி அதிகரித்து ரசிகனும் ஏமாந்துவிடக் கூடாது, இடைவெளி குறைவதால், தயாரிப்பாளரும் நஷ்டமடைந்துவிடக் கூடாது என்று சரியான தெளிவான திட்டமிட்டுத் தன் தொழிலை அர்ப்பணிப்புடன் செய்தார்.

வீரம் பாசம் விவேகம் மட்டுமின்றி நகைச்சுவையிலும் எம்ஜிஆர் அவர்கள் குறை வைத்ததில்லை. அலிபாபாவும் 40 திருடர்களும், சபாஷ் மாப்பிளே, மாட்டுக்கார வேலன், பெரிய இடத்துப் பெண், குடியிருந்த கோயில் என்று பல படங்களில் நகைச்சுவைக்குப் பஞ்சமேயில்லை.

உருக்கமான நடிப்புக்கு உதாரணங்களாய் பெற்றால்தான் பிள்ளையா, பணம் படைத்தவன், எங்க வீட்டுப் பிள்ளை என்றும், வீரத்துக்கு அடிமைப்பெண், அரச கட்டளை, மதுரை வீரன், மன்னாதி மன்னன், மகாதேவி என்றும் ஏராளமாய்! இப்படி நவரசங்களையும் வெளிப்படுத்தும் நயமான கதாபாத்திரங்களிலெல்லாம் நடித்து தான் ஒரு சிறந்த நடிகன் என்பதை நிரூபித்து, ரிக்சாக்காரன் திரைப்படத்துக்காக இந்திய அளவில் சிறந்த நடிகருக்கான ‘பாரத்’ விருதும் பெற்றார்.

திரைப்பட வாய்ப்புகளுக்காக எந்தக் கொள்கையையும் கட்டுப்பாட்டையும் விட்டுக் கொடுக்கும் மனிதர்களுக்கிடையில், தன் இறுதி மூச்சு வரை எதற்காகவும் தன் கொள்கைகளை மாற்றிக் கொள்வதில்லை, கட்டுப்பாடுகளை விட்டுக்கொடுப்பதில்லை என்கிற அசைக்க முடியா உறுதியுடன் வாழ்ந்து காட்டியவர் இந்தப் பொன்மனச் செம்மல்

தமிழ் சினிமா வரலாற்றில் அவர் ஒரு முக்கியமான பகுதி. அவர் வழியில்தான் ரஜினி, விஜயகாந்த், விஜய் போன்றவர்கள் செல்கிறார்கள். #அவரது #பாதிப்பு #இல்லாத #ஹீரோ #தமிழ்சினிமாவில் #இல்லை. #ஏன் #சிவாஜி #கூட #அவரது #பாணியில் #நடிக்க #முயன்றிருக்கிறார்.

நாடோடி மன்னனில் பி.எஸ். வீரப்பா “#சரிதான்! #நாட்டில் #பணக்காரர்களே #இருக்கக்கூடாது #போலிருக்கிறது” என்பார்... அதற்கு #எம்ஜிஆரின் #பதில் : “#இல்லை #ஏழைகளே #இருக்கக்கூடாது”.........

orodizli
18th July 2020, 05:39 PM
வாலி’ ஞாபகம்! - இன்று கவிஞரின் நினைவு நாள்.����������

’நான் ஆணையிட்டால்.. அது நடந்துவிட்டால்’ பாடலைக் கேட்கும் போதே ஓர் உற்சாகம் தொற்றிக்கொள்ளுமே... அது யார் எழுதிய பாடல் தெரியுமா என்று கேட்டால் கண்ணதாசன் என்பீர்கள்....
������������������������������
‘என்ன ஆண்டவரே...’ என்று எம்.ஜி.ஆர். வாலியை அழைப்பார். அதேபோல, ‘வாங்க வாத்தியாரே...’ என்று வாலியை சிவாஜி கூப்பிடுவார். அந்த அளவுக்கு வாலிக்கு மரியாதை தந்தார்கள். அந்த அளவுக்கு வாலியின் எழுத்துகள், அவருக்கு மரியாதையைப் பெற்றுத் தந்தன....
����������������������������
எம்.ஜி.ஆரின் படகோட்டிக்கு வாலிதான் எல்லாப்பாடல்களும்! தொட்டால் பூ மலரும் பாடல், ஆகச்சிறந்த காதல் பாடலாக இன்று வரைக்கும் பேசப்படுகிறது; பாடப்படுகிறது.மேலும், எம்.ஜி.ஆருக்கு இவர் எழுதிய பாடல்கள் பலவும், எம்.ஜி.ஆரின் அரசியல் எதிர்காலத்துக்கு விதைகளாகவும் உரங்களாகவும் இருந்தன. இந்தப் பாடல்களைக் கொண்டே பின்னாளில் நல்ல அறுவடையென மக்கள் ஆதரவு எனும் மகசூல் கிடைத்தது எம்.ஜி.ஆருக்கு
������������������������������

தெய்வத்தாய் படம்தான் எம்ஜிஆருக்காக வாலி எல்லாப்பாடல்களும் எழுதிய முதல் படம். இந்தப் படத்தில் மற்ற பாடல்களும் பெரிதாக ஹிட் ஆனவைதாம் என்றபோதிலும் ‘மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்’ என்ற பாடல்தான் எம்ஜிஆர் பிராண்ட் பாடலாக பெரிதும் விரும்பப்பட்டு ரசிக்கப்பட்டு தமிழகத்தின் பட்டிதொட்டியெங்கும் பரவியது. அதற்கு முன்னரேகூட எம்ஜிஆருக்காக அவருடைய பிராண்ட் பாடலை வாலி எழுதியிருந்தபோதும் மிக மிக அதிகமாக சிலாகிக்கப்பட்ட பாடலாக இதைத்தான் சொல்லவேண்டும். ‘மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்’ என்றால் அந்த மூன்றெழுத்து என்ன என்ற விவாதம் சாமான்ய மக்களிடையே எல்லாம் நடந்தது. ‘கடமை அது கடமை’ என்றே பாடல் பதில் சொன்னபோதும், கொள்கை என்று சிலர் அர்த்தம் கற்பித்தனர். இல்லை, திமுக என்பதைத்தான் எம்ஜிஆர் இப்படிப் பாடியிருக்கிறார் என்றனர் சிலர். எம்ஜிஆர் அண்ணாவைத்தான் சொல்கிறார் என்றனர் சிலர். ‘தமிழ்’ என்றனர் சிலர். எம்ஜிஆரைக் கொண்டாடிய ரசிகர்கள் அந்த மூன்றெழுத்து எம்ஜிஆர் என்றனர். இப்படிப்பட்ட விவாதங்கள் ஒருபுறம் நடைபெற்றுக்கொண்டிருக்க அந்த மூன்றெழுத்து என்ன என்பதற்குத் தன்னுடைய பாணியில் விளக்கம் சொன்னார் சோ.

மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும் என்று பாடுகிறாரே எம்ஜிஆர் அந்த மூன்றெழுத்து என்ன? என்பது சோவிடம் கேட்கப்பட்ட கேள்வி.

‘அந்த மூன்றெழுத்து மூக்கு’- என்பது சோ சொன்ன பதில்....
����������������
ரசிகர்களின் மனதில் என்றென்றும் வாழ்பவர் எம்ஜிஆர்
அந்த மூன்றெழூத்து. அர்த்தம்புரிந்து
m.g.r. .மூன்றெழூத்து...✌
மூச்சி... மூன்றெழூத்து..��
அண்ணா...மூன்றெழூத்து..��
அர்த்தம் ....
கடமை..கண்ணியம்...கட்டுப்பாடு
இதுதான்..தலைவரின்.கொள்கை............

orodizli
18th July 2020, 05:40 PM
சத்துணவு திட்டம் கவர்ச்சிகர திட்டம் அல்ல தமிழக குழந்தைகளின் மீது எம்ஜிஆர் வைத்திருந்த பாசத்தின் அடையாளம்.

#மதிய உணவு திட்டத்தில் போடப்படும் உணவை குழந்தைகள் சாப்பிட முடியாமல் #குப்பையில் கொட்டுகிறார்கள் என்று கல்வி அமைச்சர் #அரங்கநாயகம் எம்ஜிஆரிடம் சொல்ல #அய்யய்யோ சாப்பாட நிருத்திடாதீங்க என பதட்டத்துடன். #சாப்பாட்டை பள்ளிகளிலேயே சுடச்சுட சமைத்துபோட்டால் என்ன என்று கேட்க்கிறார்.. #நம்மகிட்ட சமையல் தெரிந்த ஆட்கள் அதிகம் இல்லை,நிதியும் நம்மிடம் இல்லை திட்டம்
சாத்தியமில்லை என்கிறார்கள்.
அதிகாரிகள்..

#எம்ஜிஆர் விடுவதாக இல்லை. ஒருதிட்டத்தை தயார் பண்ணுங்க என்று #திரு.அரங்கநாயகத்திடம் உத்தரவிட ஏற்கனவே கோவையை சேர்ந்த #பேராசிரியை ஒருவர்கொடுத்த குழந்தைகளுக்கு கொடுக்கவேண்டிய நியூட்ரிஷியன் புஃட் என்கிற பைல் இருக்கு என்கிற செய்தி சொல்லப்பட, எம்ஜிஆர் அந்த பைலை கேட்டு அதை படித்தபிறகு
#அந்த அம்மாவை கூப்பிடுங்க என உத்தவிட
#கோவையை சேர்ந்த #ராஜம்மாள் தேவதாஸ் #மனையியல் கல்லாரியில் வேலை பார்த்தவங்களை அழைத்து நீங்க இருந்து திட்டத்தை நடைமுறை படுத்துங்க என்று அவரை திட்டத்தில் இணையச்செய்தார்கள்.
#அவங்க கொடுத்த ப்ராஜக்டின் தலைப்பான ""நியூட்ரிஷியன் புஃட் " ஐ #சத்துணவாக மொழிமாற்றம் செய்தவர் எம்ஜிஆர்.

தமிழக #குழந்தைகளின் மீது எம்ஜிஆருக்கு இருந்த #பாசத்தாலும், #பசியின் கொடுமையை அனுபவித்தவர் வேகமாக நடைமுறைப்படுத்தினார்.

#சத்துணவு திட்டத்திற்கு இந்திராகாந்தியின் #மத்தியஅரசு பணம் ஒதுக்க மறுத்தது. அத்துடன்

#ஆர்.பி.ஐ தமிழ்நாட்டு அரசு வங்கிகளில் வாங்கிய #ஓ.டி யின் தொகைக்கு கட்டுப்பாடு விதித்தது. அதை செய்தது #பிரனாப் முகர்ஜி.

#ஏழைக்குழந்தைகளின் வயிறு நிரம்பி மகிழ்ச்சியாக பள்ளிகளுக்கு போவதை கொச்சை படுத்தின
#தமிழகத்தின் எதிர்கட்சிகள் ..
யாரைப்பற்றியும் கவலைப்படவில்லை குழந்தைகளின் மகிழ்ச்சி முக்கியம் என தனது திரையுலக #நட்ப்பை பயன்படுத்தி தமிழகத்தில் பல இடங்களில் #நட்சத்திர இரவுகளை நடத்தி #சத்துணவிற்காக நிதி திரட்டி வெற்றிகரமாக குழந்தைகளின் நலன் முக்கியம் என்பதில் பிடிவாதமாக இருந்தார்.

#நடிகராக இருந்த காலங்களில் மற்றவர்களுக்கு #கொடுத்து பழக்கப்பட்ட அவர் தமிழக குழந்தைகளுக்காக தன்னை சந்தித்தவர்களிடமெல்லாம் சத்துணவு திட்டத்தை சிறப்பாக செய்ய உதவி செய்யுங்கள் என மகிழ்ச்சியாக
#கையேந்த தொடங்கினார் என்பதுதான் சத்துணவின் வரலாறு..
#சத்துணவு என்பது கவர்ச்சி திட்டமல்ல அது அவரது #ஆன்மா சந்தோஷப்பட்டுக்கொண்டிருக்கும் இடம்.

#சத்துணவை சாப்பிட்ட குழந்தைகளின் வளர்ச்சி இந்தியாவில் மற்ற மாநில #குழந்தைகளைவிட ஒரு மடங்கு கூடுதலாக இருந்த தால் 3 வருடங்களுக்குப்பிறகு #சத்துணவு திட்டத்தை இந்திய அரசு ஒரு திட்டமாக ஒத்துக்கொண்டது.

#சத்துணவு திட்டத்தால் ஒரு லட்சம் பேர் வேலைவாய்பின் மூலம்...........

orodizli
18th July 2020, 05:41 PM
மக்கள் திலகத்தின் படங்களை பார்க்கும்போது கிடைக்கும் பேரின்பம் .

படத்தின் தலைப்பு -எளிமையாக , இனிமையாக இருக்கும் .

கதா பாத்திரங்களின் பெயர்கள் தூய தமிழில் இருக்கும் .

மக்கள் திலகம் அறிமுகமாகும் காட்சியில் பெரும்பாலும் '' வெற்றி'' என்ற வார்த்தையுடன்

தோன்றுவார் .

படத்தில் மிகவும் கண்ணியமாக பேசி நடிப்பார் .

எதிரிகளிடமும் முதலில் மரியாதை தந்து திருந்த வாய்ப்பு தருவார் .

வன்முறை காட்சிகள் அறவே இருக்காது .

தத்துவ பாடல்கள்

கொள்கை பாடல்கள்

காதல் பாடல்கள்

ரசிகர்களுக்கு விருந்தாக அமைத்திருப்பார் .

சண்டை காட்சிகள் கேட்கவே வேண்டாம் .

காதல் - வீரம் - கொள்கை பிடிப்பு - சமுதாய சீர்திருத்தம் - என்றெல்லாம் சம விகித்ததில் கலந்து

ஒரு ரசிகனை சிந்திக்க வைத்து , சிரித்த முகத்துடன் மீண்டும் மீண்டும் பார்க்க தூண்டும்

விதத்தில் படங்களை மக்களுக்கு தந்தவர் மக்கள் திலகம் .

மொத்தத்தில் மக்கள் திலகம் எம்ஜிஆர் படங்கள்

நல்ல பொழுது போக்கு சித்திரம்

இனியமையான பாடல்கள்

சீர் திருத்த கருத்துக்கள்

புதுமையான காட்சிகள்

மக்களின் மனதில் நிரந்தர கதாநாயகனாக என்றென்றும் குடியிருக்கும்

''புரட்சி தலைவர் எம்ஜிஆர் ''.படங்கள் என்றால் அது மிகையல்ல...........

orodizli
18th July 2020, 05:46 PM
#அதான் #எம்ஜிஆர்

பட்டுக்கோட்டை குமாரவேல் என்பவர் சென்னை வானொலியில் பணிபுரிந்து கொண்டிருந்தார். வானொலிக்காக நாடகக் கதை வசனத்தை எழுதுபவர்...இவர் எழுதிய 1000 க்கும் மேற்பட்ட நாடகங்கள் வானொலியில் ஒலிபரப்பாகியுள்ளன.

ஒரு முறை அவருக்கு போன் கால் வந்தது...அதில்...
"நான் எம்ஜிஆர் பேசறேன்" ன்னு சொல்ல, யாரோ தமாஷ் பண்றாங்கன்னு நினைத்து, 'சாரி, நான் இப்ப ரெகார்டிங்ல இருக்கேன், அப்புறமா பேசுங்கனன்னு" சொன்னதும், "சரி, நீங்க ஃப்ரீயானதும் என் செக்ரட்டரி கிட்டப் பேசுங்க" என்று சொல்லி போனை வைத்தார் முதல்வர் எம்ஜிஆர்...

உடனே குமாரவேலுவுக்கு டவுட். உடனே ராமாவரத்துக்கு போன் பண்ணினதும், நிஜமாகவே எம்ஜிஆர் தான் பேசியிருக்கார்னு தெரிஞ்சுது. மனுஷன் பதறிட்டார்.

அடுத்த நாள் நேரில் சென்றார் குமாரவேல்...
எம்ஜிஆர் அவரை வரவேற்று, "ஒண்ணுமில்லே...! நேத்து ரேடியோவுல உங்க நாடகம் கேட்டேன்...
"ஒரு நல்ல ஆட்சி எப்படி இருக்கணுங்கிற கருத்துள்ள நாடகம் அது. என்னை க்ராஸ் செக் பண்ணிக்க ரொம்ப உபயோகமாக இருந்தது. அதான் உங்களைப் பாராட்டிடலாம்னு கூப்பிட்டேன்..." என்றாராம் எம்ஜிஆர்.
ஆச்சரியத்தில் வாயடைத்து சிலையா நின்னுட்டார் குமாரவேல்...

இந்த கண்ணியமும் பெருந்தன்மையும் வேறு யாருக்கு வரும்...???...

orodizli
18th July 2020, 05:47 PM
மக்கள் திலகத்தை கௌரவித்த உலகின் முதல் தன்னார்வத் தொண்டு நிறுவனம்!
https://www.thaaii.com/?p=43329

ரோட்டரி ஃபால் ஹாரிஸ் அங்கீகாரம் (PAUL HARRIS FELLOW)

உலகில் தோற்றுவிக்கப்பட்ட முதல் தன்னார்வத் தொண்டு நிறுவனம் ரோட்டரி அமைப்பு.

1905 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 23ஆம் நாள் அமெரிக்காவில் சிக்காகோ நகரில் பால் ஹாரிஸ் மற்றும் அவருடைய மூன்று நண்பர்களும் இணைந்து இந்த அமைப்பைத் தொடங்கினர்.


கிராமச் சூழ்நிலையில் வளர்ந்த பால் அவர்களுக்கு சிக்காகோ நகரத்தின் நெரிசல், பரபரப்பான வாழ்க்கை சலிப்படைய செய்தது.

நல்ல நண்பர்கள் வட்டத்தை உருவாக்கி நட்புறவாடலை பெருக்கிக்கொள்ள இவ்வமைப்பைத் தொடங்கினார்.

காலப்போக்கில் ரோட்டரி பல்வேறு சமூக பணிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டது.

இன்றைக்கு உலகம் முழுக்க 200க்கும் மேற்பட்ட நாடுகளில் 34 ஆயிரம் ரோட்டரி சங்கங்கள், 12 இலட்சம் ரொட்டேரியன்கள் என ஒரு பெரிய குடும்பமாக தங்கள் பகுதியில் மற்றும் உலகின் பிற பகுதியில் உள்ள சமூகத்தினர் மேம்பாட்டிற்காக திட்ட பணிகளைச் செய்து வருகிறார்கள்.

உலக வரலாற்றில் கடந்த 100 ஆண்டுகளாக பல வகையான சமூக நலத் திட்டங்களை செயல்படுத்தி இருந்தாலும் ரோட்டரி அமைப்பின் இரு மாபெரும் சாதனைகள் என்று சொன்னால் இரண்டாம் உலகப்போரின் இறுதியில் அய்க்கிய நாட்டு சபை அமைப்பதற்கு தங்கள் பங்கினை அளித்தது மற்றும் உலகத்தில் போலியோ என்ற கொடிய நோயை அழிப்பதற்காக தன்னை முழுவதும் அர்ப்பணித்துக் கொண்டதும் ஆகும்.


ரோட்டரி அமைப்பு தொடங்கி 12 ஆண்டுகள் கழித்துதான் ரோட்டரி அறக்கட்டளை நிறுவப்பட்டது.

இன்றைக்கு உலக அரங்கில் நம்பகத் தன்மையும் நலப்பணிகள் செயல்படுத்துவதில் முன்னணியிலும் உள்ள அறக்கட்டளைகளில்* ரோட்டரி பன்னாட்டு அறக்கட்டளை உன்னத இடத்தில் உள்ளது.

உலகிலுள்ள பல இலட்சக்கணக்கான ரோட்டரி உறுப்பினர்களும், சமூக நலப் பணிகளில் ரோட்டரியோடு இணைந்து செயல்பட வேண்டும் என்கிற நோக்கத்தில் செயல்படும் பெரும் நிறுவனங்களும் இந்த அறக்கட்டளைக்கு நிதி வழங்கி வருகின்றன.

எண்ணற்ற அத்தகைய நிறுவனங்களில் இரண்டு உதாரணங்கள், பில்கேட்ஸ் அவர்களின் மைக்ரோசாப்ட் நிறுவனம் மற்றும் பிர்லா நிறுவனம். (இதற்கு மிக முக்கிய காரணம் குழுமத்தைச் சார்ந்த ராஜேஸ்வரி பிர்லா ஆவார்கள்).

ரோட்டரி உறுப்பினர்கள் மட்டுமின்றி* இவ்வமைப்பபில் இல்லாதவர்களும், ஆயிரம் அமெரிக்க டாலர்களை அறக்கட்டளைக்கு அளிக்கும்போது அவர்களை “பால் ஹாரிஸ் தகையாளர்” என்று அங்கீகரித்து கௌரவிக்கிறது. சான்றிதழும், பதக்கமும் அளிக்கப்படுகிறது.


கொடையாளிகள் யார் பெயரை குறிப்பிடுகிறார்களோ அவர்கள் பெயரில் அங்கீகாரத்தை பன்னாட்டு ரோட்டரி அறக்கட்டளை அளிக்கிறது.

கொடையாளிகள் தனி நபராகவோ, ரோட்டரி சங்கமாகவோ அல்லது ரோட்டரி மாவட்டமாகவோ இருக்கலாம். அவர்கள் தக்கார் பெயர்களைப் பரிந்துரைக்கலாம்.

ரோட்டரியைச் சார்ந்த கொடையாளர்கள், பல நேரங்களில், அத்தகைய அங்கீகாரத்தை சமூகத்தில் பல அரும் பணிகளை செய்துவரும் மாமனிதர்கள், தங்கள் மனம் கவர்ந்தவர்கள், பல்வேறு அமைப்புகள் என அலங்கரித்து அழகுப் பார்த்துள்ளனர்.

உலக அளவில் ‘பால் ஹாரிஸ் தகையாளர்’ விருது வழங்கப்பட்ட சில முக்கிய நபர்கள் மேனாள் அமெரிக்க அதிபர் ஜிம்மி காட்டர், மேனாள் ரஷ்ய அதிபர் போரிஸ் எல்ட்சின், அமெரிக்க விண்வெளி வீரர் ஜேம்ஸ் லோவல், பன்னாட்டு ஐக்கிய நாட்டுக் கூட்டுச் சபையின் மேனாள் பொதுச் செயலாளர் ஜாவீர் பெரேஸ் தே க்யூலர் மற்றும் போலியோ தடுப்பு மருந்தை கண்டுபிடித்த ஜோன்ஸ் ஸ்டாக் என பலருக்கு வழங்கப்பட்டுள்ளது.


அந்த வகையில் எண்பதுகளின் தொடக்கத்தில் அன்றைய முதலமைச்சர் எம்.ஜி.ஆர் அவர்கள் பள்ளிகளில் சத்துணவு திட்டத்தை தமிழகத்தில் நடைமுறைப்படுத்தினார்.

படிக்கும் மாணவர்கள் பசி காரணமாக பள்ளிக்கு வராமல் இருந்துவிடக் கூடாது என்பதற்காக, ஒரு வேளையாவது அவர்களுக்கு நல்ல உணவு கிடைக்கட்டும் என்கின்ற உன்னத எண்ணத்தில் இத்திட்டம் தொடங்கப்பட்டது.

வரலாற்றுச் சிறப்புமிக்க இத்திட்டத்தை கொண்டுவந்த முதலமைச்சர் எம்.ஜி.ஆர் அவர்களை அங்கீகரிக்கும் வகையில் சென்னையில் உள்ள பாரம்பரியமிக்க ரோட்டரி சங்கம் அவருக்கு ‘பால் ஹாரிஸ் தகையாளர்’ என்கிற அங்கீகாரம் அளித்து கௌரவித்தது.

நாற்பது ஆண்டுகளுக்கு முன்னால் வழங்கப்பட்ட அதற்கான சான்றிதழை அவருடைய வாரிசுதாரரான பெயரன் குமார் ராஜேந்திரன் அவர்கள் அதனை பத்திரமாக வைத்துள்ளார்.

மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்களின் அருங்காட்சியகத்தில் இச்சான்றிதழ் பொது மக்கள் காண்பதற்காக வைக்கப்பட்டுள்ளது.

குமார் அவர்கள் என் இனிய நண்பரும் அன்புத் தம்பியும் ஆவார். இருபது ஆண்டுகளுக்கு மேலாக அவரை நன்கு அறிவேன். அவர்கள் குடும்பம் முழுவதுமே ரோட்டரி அமைப்பிலே தங்களை இணைத்துக் கொண்டுள்ளது.

குமாரும் அவரது அன்புச் சகோதரி செல்வியும் எங்கள் சென்னை வடக்கு ரோட்டரி சங்கத்தில் உறுப்பினர்களாக உள்ளனர்.

கோ.*ஒளிவண்ணன்
மேனாள்* ஆளுநர்
ரோட்டரி மாவட்டம் 3232...

orodizli
19th July 2020, 07:05 AM
படங்களில் தந்த நம்பிக்கை !

எம்.ஜி.ஆர். மிகவும் அழகானவர், செக்கச் செவேலென்று நிறம் அவருடையது. ஆனால், அவர் திரைப்படங்களில், தாழ்த்தப்பட்ட மக்கள், ஒடுக்கப்பட்ட மக்கள் வாழும் பகுதிகளில் போய் வாழ்வதாகக் காட்சிகள் இருக்கும், அவர் ரிக்க்ஷா ஓட்டுவார். கைவண்டி இழுப்பார், ஆனாலும் உழைப்பால் பிறகு படிப்படியாக உயர்வது போலவே காட்டுவார், அது ஏழை மக்களுக்கு ‘நம்மாலும் வாழ்வில் உயர முடியும்’ என்கிற நம்பிக்கையை விதைப்பதாக அமையும்.

அதுமட்டுமல்ல, கறுப்பு நிற மனிதன் எவ்விதத் தாழ்வு மனப்பான்மையும் கொள்ளக்கூடாது என்று அறிவுறுத்துவது போன்ற பாடல்களைப் பாடுவார் அவர்.

''உயர்ந்தவரென்ன, தாழ்ந்தவரென்ன
உடல் மட்டுமே கறுப்பு - அவர்
உதிரம் என்றும் சிவப்பு''
என்று பாடும்போது, கறுப்பு மனிதனின் இதயத்தில் நிச்சயம் ஒரு துணிவு பிறக்கும்.
''ஒன்றே குலம் என்று பாடுவோம்
ஒருவனே தெவன் என்று போற்றுவோம்''
''ஒன்று எங்கள் ஜாதியே
ஒன்று எங்கள் நீதியே
உழைக்கும் மக்கள் யாவரும்
ஒருவர் பெற்ற மக்களே''
என்றெல்லாம் பரந்துபட்ட கருத்துக்களை
முழக்கமிடுவார்.
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பாடல் எழுதினாலும் சரி.
கண்ணதாசன் எழுதினாலும் சரி.
மருதகாசி எழுதினாலும், வாலி எழுதினாலும் சரி.
எம்.ஜி.ஆர். திரைப்படங்களில் அவருடைய கொள்கையைப் பிரதிபலிக்கும் கருத்துக்கள் நிறைந்த பாடல் வரிகளாகவே அது அமையும் என்பது அனைவரும் அறிந்த உண்மை.
''கண்போன போக்கிலே கால் போகலாமா?
கால்போன போக்கிலே மனம் போகலாமா?
மனம் போன போக்கிலே மனிதன் போகலாமா?
மனிதன் போன பாதையை மறந்து போகலாமா?''
என்று எம்.ஜி.ஆர். பாடும் அந்த காட்சியில் மகாத்மா காந்தி படம் காட்டப்படும், பொழுதுபோக்குச் சினிமா தானே மக்களை மகிழ்விக்கத்தானே பாடல்கள் என்று எண்ணாமல், அதிலும் ஒரு வாழ்வியல் நெறியை வகுத்துக் காட்டியவர் எம்.ஜி.ஆர்.

சமுதாய ஒற்றுமை, பொதுவுடைமைக் கொள்கை, கூட்டுறவே நாட்டுயர்வு, போன்ற கருத்துக்களை எம்.ஜி.ஆர். திரைப்படங்களில் சொல்லியது போல், வேறு யாரும் எளிமையாகவும், அழுத்தம் திருத்த-மாகவும் கூறியதில்லை என்றே சொல்லலாம்.

(வெரித்தாஸ் வானொலியில் எழுத்தாளர் கௌதம நீலாம்பரன் அவர்கள் ‘தமிழ்ச் சினிமாவின் தற்காலப் போக்கு’ என்ற தலைப்பில் பேசியதிலிருந்து... )

எம்.ஜி.ஆர். வெற்றி ரகசியம் :

''காதல், வீரம், பண்பு, மனிதநேயம் போன்றவற்றை எம்.ஜி.ஆர். கையாண்டவிதம் தனிச்சிறப்பு உடையது, இயல்பான குணங்களாக அவருக்கு இவை பொருந்தி நின்றன. நடிக்கிறார் என்கிற உணர்வை ஏற்படுத்தாமல், அந்த பாத்திரமாகவே அவரை எண்ண வைத்தன. மக்கள் அவர்மீது ஒரு வித மோகம் கொண்டு நேசித்தனர் என்பது மறுக்க முடியாத உண்மை'' என்கிறார் எழுத்தாளர் கவுதம் நீலாம்பரன்.
......... Thanks...
நன்றி : தினமலர்] .........

fidowag
19th July 2020, 03:20 PM
தனியார் தொலைக்காட்சிகளில் கலைவேந்தன் எம்.ஜி.ஆர்.திரைப்படங்கள்*ஒளிபரப்பான விவரம்*
---------------------------------------------------------------------------------------------------------------------
13/07/20 -தமிழ் மீடியா டிவி - காலை 10 மணி - என் அண்ணன்*

* * * * * * * *எம்.எம்.டிவி* *-* பிற்பகல் 2 மணி - ஆயிரத்தில் ஒருவன்*

* * * * * * * *சன் லைஃப் - மாலை 4 மணி* - தனிப்பிறவி*

* * * * * * * *ஜெயாமூவிஸ் - இரவு 10 மணி - குலேபகாவலி*

* * * * * * * *பாலிமர் டிவி - இரவு 11 மணி -விவசாயி*

14/07/20 - சன் லைஃப் - காலை 11 மணி - ஆனந்த ஜோதி*

* * * * * * * முரசு டிவி -மதியம் 12 மணி /இரவு 7 மணி -தாயின் மடியில்*

* * * * * * * தமிழ் மீடியா டிவி - காலை 10 மணி - அடிமைப்பெண்*

* * * * * * *கிங் டிவி* * * *-பிற்பகல் 2 மணி* - அடிமைப்பெண்*

* * * * * *புதுயுகம் டிவி -இரவு 7 மணி -ராமன் தேடிய சீதை*

15/07/20- மெகா 24 டிவி - காலை 9 மணி - தர்மம் தலை காக்கும்*

* * * * * * * *மூன் டிவி* - இரவு 8 மணி - கன்னித்தாய்*

* * * * * * *ஜெயா மூவிஸ் - இரவு 10 மணி -* பாசம்*

16/07/20* பூட்டோ டிவி - காலை 9 மணி - உலகம் சுற்றும் வாலிபன்*

* * * * * * * தமிழ் மீடியா டிவி - பிற்பகல் 2 மணி -* மகாதேவி*

* * * * * * * சித்திரம் டிவி* - பிற்பகல் 3 மணி - அபிமன்யு*

* * * * * * *ஜெயா டிவி* - இரவு 9 மணி - சிரித்து வாழ வேண்டும்*

* * * * * * ஜெயா மூவிஸ் - இரவு 10 மணி - இதய வீணை*

* * * * * * பாலிமர் டிவி - இரவு 11 மணி - வேட்டைக்காரன்*

17/07/20* *சன் லைஃப்* -காலை 11 மணி -நான் ஏன் பிறந்தேன்**

* * * * * * * * மெகா 24 டிவி* - பிற்பகல் 2.30 மணி - ராஜராஜன்*

fidowag
19th July 2020, 10:59 PM
பாட்டாலே புத்தி சொன்ன வாத்தியார் எம்.ஜி.ஆர். -சகாப்தம்*நிகழ்ச்சியில்*வின்*டிவியில்*திரு.துர ை பாரதி*30/06/20 அன்று சொன்ன*தகவல்கள்*
--------------------------------------------------------------------------------------------------------------------
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். படங்களை அன்றைக்கு பார்த்திருந்த ரசிகர்களாக இருந்தவர்கள் சத்திய சாட்சியாக* இன்றைக்கும் பார்க்கும் ரசிகர்கள்** இந்த கொரோனா என்கிற கொடிய நோய் அச்சுறுத்தும் காலத்தில் தனியார் தொலைக்காட்சிகளில் வெளியிடப்படும் படங்களில் 100க்கு 60% எம்.ஜி.ஆர். படங்களாகத்தான் இருக்கிறது .போட்டி போட்டுக் கொண்டு, ஒவ்வொரு சேனலும் தேடி தேடி கண்டுபிடித்து எம்.ஜி.ஆர். படங்களை* ஒளிபரப்பும் நிலைதான் இருக்கிறது . அத்தனை படங்களையும் அவரது ரசிகர்கள் /பக்தர்கள் பார்த்து ரசித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள் .என்பது அவரது கடின உழைப்பு, திறமை, மக்கள் அவர்மீது வைத்திருந்த அன்பு ஆகியவற்றிற்கு சாட்சியாக இருக்கிறது ..



புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். தான் வாழும் காலத்தில் வள்ளலாக மட்டும் இருந்ததில்லை .ஈகை, பிறர் மீது உள்ள அக்கறை கொண்ட சமூக நல ஈடுபாடு*சமூக ஈடுபாடு என்பது என்ன பிறர் மீதுள்ள அக்கறைதான் . பிறர் மீது எப்போதும் அக்கறை கொண்டிருந்தார் என்பது மிக முக்கியத்துவம்* வாய்ந்த ஒரு குணம் .*அந்த குணம்தான் இவ்வளவு பேரை அவரது அன்பின்பால்** ஈர்க்க செய்தது .அந்த ஈர்ப்பு என்பது எல்லோரும் செய்யமுடியும் . எல்லோராலும் செய்து காட்ட முடியும் என்பதற்கு வாழும் உதாரணமாக திகழ்ந்தார் .



மக்கள் எதிர்பார்ப்பது எல்லாம் தங்கள்மீது பிறர் அக்கறை கொள்ள வேண்டும் என்பது .சக மனிதன் மீது அக்கறை இல்லாதவர்கள்தான் அலட்சியம் காட்டுவார்கள் ஆணவம், அகந்தை காட்டுவார்கள் . தங்களுடைய சாதாரண அந்த அதிகபட்ச ஆறடி உயரத்திற்கு விஸ்வரூபம் எடுத்து***வியப்பு காட்டுவார்கள்* இப்படிப்பட்ட மனிதர்கள் இடையே , ஒரு மகோன்னதமான மனிதராக எம்.ஜி.ஆர். திகழ காரணம் அவர் பிற உயிர்கள் மீதும், மனிதர்கள் மீதும் காட்டிய அளவில்லா அன்பு, அக்கறை ஆகியவைதான் .



வேட்டைக்காரன் படத்தில் கிளைமாக்ஸ் காட்சியில் ஒரு பள்ளத்தில் 10க்கு மேற்பட்ட பாம்புகள் நெளிய, மேலே உள்ள* ஒரு சிறிய குன்றின்மீது இருந்து வில்லனுக்கு டூப்பாக நடிக்கும் ஸ்டண்ட் நடிகர் குதிக்க வேண்டும் . கீழே பள்ளத்தில் வாய்கள் தைக்கப்பட்டு உள்ள நிலையில் பாம்புகள் நெளிய வேண்டும் .அதன்மீது குன்றில் இருந்து விழுந்து அவர் புரள வேண்டும். இதுதான் காட்சி .அந்த காட்சிக்கு தயாராகும்படி ஸ்டண்ட் நடிகரை தயாரிப்பாளர் தேவர் கேட்டுக் கொள்கிறார் . ஆனால் அந்த நேரத்தில் எம்.ஜி.ஆர். அந்த ஸ்டண்ட் நடிகரை அழைத்து நீங்கள் குதிக்கும்போது* கவனமாக குதிக்க வேண்டும் . கால்கள் பிசகிவிடக் கூடாது* அதே சமயத்தில் நீங்கள் விழும்போது அந்த பாம்புகள் மீது தவறி விழுந்து அவை செத்துவிடக் கூடாது ஆகவே கவனமாக இருங்கள்.வேண்டுமானால் கீழே மெத்தை போட சொல்லட்டுமா என்று கேட்டார் .அதெல்லாம் வேண்டாம். படப்பிடிப்பு மிகவும் தாமதமாகிவிட்டது . சீக்கிரம் காட்சியை படமாக்க வேண்டும் என்று தேவர் அவசரப்படுத்துகிறார் .தேவரின் அவசரத்தை எம்.ஜி.ஆர். பொருட்படுத்தாமல் ,எந்த அசம்பாதவிதமும் நடைபெற்று விடக் கூடாது, அந்த வாயற்ற ஜீவன்களுக்கு எந்த ஆபத்தும் நிகழக்கூடாது என்று மீண்டும் மீண்டும் எச்சரித்து ,கூடவே இருந்து அந்த காட்சியை மிக கவனமாக, பாதுகாப்பாக படமாக்கும் வரை கண்காணித்தார் .முதலில் காட்சியை படமாக்க* அவசரப்படுத்திய தேவர் , எம்.ஜி.ஆரின் பொறுமை,கவனிப்பு, பாம்புகள், ஸ்டண்ட் நடிகர் மீது செலுத்திய தனிப்பட்ட அக்கறை அவர்களின் பாதுகாப்பு ஆகியன குறித்து ,படமாக்கிய பின்பு*எம்.ஜி.ஆரை பெரிதும் பாராட்டினார் .



1980பொது தேர்தலில் பிரச்சாரம் செய்ய எம்.ஜி.ஆர். சுற்றுப்பயணம் செல்கிறார் .எப்போதும் அவருக்கு பாதுகாப்பாக செல்லும் பாதுகாவலர்கள், உதவியாளர்கள்*கூட செல்கிறார்கள். அவர்களுக்குத்தான் தெரியும் . எந்த இடங்களில் கூட்ட நெரிசல் ஏற்படும் . எம்.ஜி.ஆரின் திறந்த வெளி வேன் செல்லும்போது,தொப்பியை தட்டிவிடாமல், மேலே கட்டியுள்ள கட்சி தோரணங்களை தூக்கி விடவேண்டும்*எந்த இடத்தில மக்கள் கூட்டமாக வரும்போது அவர்களை எப்படி தடுத்து நிறுத்த வேண்டும் . பிறகு அவர்களை விலக்க வேண்டும் யாரை தலைவரிடம் நெருங்க அனுமதிக்க வேண்டும் என்பதெல்லாம் போய் கொண்டிருக்கும்போது ,திருச்சியில் பொதுக்கூட்டத்தை முடித்துவிட்டு விடுதியில் தங்குகிறார் . மறுநாள் காலையில் மதுரைக்கு புறப்பட வேண்டும் .அப்போது எம்.ஜி.ஆர். முதல்வராக* இருந்த நிலையில் அவருக்கு பாதுகாப்பாக இருந்த காவல்துறை அதிகாரிகளும்,மாவட்ட ஆட்சியரோ, அரசு அதிகாரிகளும் ,அவரது பாதுகாவலர்கள், உதவியாளர்களை சட்டை செய்யவில்லை .அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில வேறு சில நபர்களை தங்க வைத்து விட்டு , சற்று தூரத்தில் உள்ள வேறு விடுதியில் அவர்களை தங்க வைத்தனர் .மறுநாள் காலையில் எம்.ஜி.ஆர். எழுந்து குளித்துவிட்டு பிரச்சாரத்திற்கு புறப்பட தயாராகி விடுகிறார் .* வேன்* புறப்பட்டுவிட்டது . ஆனால் உதவியாளர்கள் வேறு காரில்*பயணிக்கிறார்கள் .அவர்கள் எம்.ஜி.ஆர். காரை நெருங்கமுடியவில்லை** வேன்* சுமார் 20கி.மீ. சென்றதும் உதவியாளர்கள் உடன் வரவில்லை என்று அறிந்ததும்*என்ன செய்வது என்று யோசித்தார் .காரணம் அதிகாரிகள் செய்த குளறுபடியால் ஏற்பட்ட குழப்பம் . எம்.ஜி.ஆர். அவர்களை தன் அருகிலேயே தங்க வைக்க வேண்டும் என்பது திட்டம். அதிகாரிகளின் குளறுபடியால் அவர்கள் பின்தங்கி விட்டு தாமதமாக வந்து கொண்டிருக்கிறார்கள் .



*உதவியாளர்களை காணவில்லை .அவர்கள் எங்கே போனார்கள் என்று காவல்துறை அதிகாரிகளிடம் எம்.ஜி.ஆர். கேட்கிறார் .அவர்கள் சற்று அயர்ந்து தூங்கிவிட்டார்கள் . சற்று தாமதமாக வந்து கொண்டிருக்கிறார்கள் என்று பதில் அளித்தனர் .அப்படி இருக்காது* சரி பரவாயில்லை ,* அவர்கள் வரட்டும் என்று சொல்லி ,வேனை சாலையில் ஒரு மரத்தடியில்* நிறுத்த வைத்து ஒரு நாற்காலியை போட்டு அமர்ந்து இளைப்பாறினார் . அவர்கள் வந்தபிறகு நாம் பயணத்தை தொடரலாம் என்று அதிகாரிகளிடம் கூறுகிறார் எம்.ஜி.ஆர். அடுத்த சில நிமிடங்களில் அவர்கள் வந்து விடுகிறார்கள் .உதவியாளர்கள் வந்ததும் வேனில் ஏற சொல்லி ,பயணித்து பிரச்சாரத்தை முடிக்கிறார் . பிரச்சாரத்தை முடித்தபிறகு தங்கும் விடுதிக்கு வந்த பிறகு ,அவர்களிடம் ஏன் காலையில் தாமதமாக புறப்பட்டு வந்தீர்கள் என்று கேட்கிறார் .* அதிகாரிகள் எங்களுக்கு ஒதுக்கப்பட்ட அறைகளுக்கு பதிலாக வேறு சிலருக்கு கொடுத்துவிட்டு சற்று தொலைவில் உள்ள விடுதியில் எங்களை தங்க வைத்ததால் ஏற்பட்ட குழப்பங்கள் .அதனால்தான் தாமதமாகிவிட்டது என்றனர்* விவரங்கள் அறிந்த எம்.ஜி.ஆர். உடனே,மாவட்ட ஆட்சியரை அழைத்து ,உதவியாளர்களை பற்றி உங்களுக்கு தெரியாது .இவர்கள் என்னுடைய நிழலாக எத்தனையோ ஆண்டுகள்*பின் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறார்கள் .என் தேவை என்ன .எனக்கு என்ன பாதுகாப்பு கொடுக்க வேண்டும்* எந்த வகையில் கொடுக்க வேண்டும் என்பதெல்லாம் இவர்களுக்குத்தான் தெரியும்.* இவையெல்லாம் உங்களுக்கு தெரிய வாய்ப்பில்லை . ஆகவே அவர்கள் எப்போதும் என்னுடனே இருக்க வேண்டும் என்பது போல கூடுதல் சலுகைகள் அளித்து உதவ வேண்டும்*இது எனது வேண்டுகோள் என்று சொன்னார் .பின்பு உதவியாளர்களிடம் தனியாக நீங்கள் எப்போதும் உங்களுடைய மிடுக்கையோ,கோபத்தையோ அதிகாரிகளிடம் காண்பிக்க கூடாது .நாம் இருக்க போவது இந்த ஆட்சியில் 5 ஆண்டுகள்தான் .ஆனால் அவர்களோ அரசு பணியில் 58 வயது வரை நீடிப்பார்கள் .அவர்களை நாம் மரியாதை குறைவாகவோ,கவன குறைவாகவோ நடத்தக் கூடாது என்று எச்சரிக்கையுடன் இருக்கும்படி அறிவுரை சொன்னார் .



தேர்தல் பிரச்சாரத்தில் எம்.ஜி.ஆர். ஒருபுறம், சிவாஜி கணேசன் ஒரு புறமாக*சென்று கூட்டங்களில் கலந்து கொண்டு மக்களை சந்தித்து வருகின்றனர் .வாடிப்பட்டி அருகில் ஒரு வளைவில் திரும்பும்போது பொதுமக்கள் எம்.ஜி.ஆரின் காரை வழி மறித்து , அழுது கொண்டு நிற்கிறார்கள் . எம்.ஜி.ஆர். என்ன விஷயம் .என்ன நடந்தது என்று விசாரிக்க, சற்று நேரத்திற்கு முன்பு ,நடிகர் சிவாஜி கணேசன் காரும்* அவருடன் சில கார்களும் சென்றன . அதில்* ஒரு கார் சிறுவன் ஒருவன் மீது மோதி அவன் இறந்துவிட்டான் .ஆனால் ஒருவரும் அதை கண்டுகொள்ளாமல் சென்றுவிட்டார்கள் என்று புலம்புகிறார்கள் .எம்.ஜி.ஆர்.*காரில் இருந்து இறங்கி, அந்த சிறுவனின் பெற்றோர்களை அழைத்து, ஏதோ கவனக்குறைவாக விபத்து நடந்துள்ளது தயவுசெய்து இதை பெரிதுபடுத்தவேண்டாம்* அவர்களை தகுந்தவகையில் சந்தித்து எச்சரிக்கிறேன் என்று சமாதானம் சொல்லி தன்* கையில் இருந்து ரூ.25,000/- அந்த பெற்றோர்களுக்கு கொடுத்து உதவினார் .உங்கள் மகன் இழப்பிற்கு நான் மிகவும் வருத்தப்படுகிறேன் .அதை ஈடு செய்ய முடியாது .அவர்களை சந்தித்து,இனிமேல் இந்த மாதிரி சம்பவம் நடக்காமல் இருக்கும்படி* மிகவும் கவனமாக பயணிக்கும்படி எச்சரிக்கிறேன் என்று கூறி விடைபெற்றார்.



அன்று இரவு தங்கும் இடத்திற்கு சென்றபிறகு ,சிவாஜி கணேசன் தங்கும் விடுதிக்கு போன் செய்து நடந்த விவரங்களை எம்.ஜி.ஆர். சோகத்துடன் சொல்கிறார் .நான் எப்படியோ ஒருவழியாக அவர்களிடம் பேசி, சமாதானம் சொல்லி, நிதி அளித்து* சமாளித்துவிட்டேன் .ஆகவே நீங்களும் சரி, உங்களுடன் வருபவர்களும் சரி , பயணிக்கும்போது, மிகவும், கவனமாக, எச்சரிக்கையாக*இருக்கவேண்டும் . பொதுமக்களுக்கு எந்த ஆபத்தும் நாம் விளைவிக்காமல்**பார்த்துக் கொள்ளுங்கள் என்று ஆலோசனை கூறினார் .பிறர் மீது அவர் கொண்ட*அக்கறைதான் இன்றும் அவரை இந்த உன்னதமான, உயரமான இடத்தில நிலை*நிறுத்தி வைத்துள்ளது .அதுதான் எம்.ஜி.ஆர்.*


இனி மற்ற தகவல்களை அடுத்த அத்தியாயத்தில் சந்திப்போம்*

நிகழ்ச்சியில் ஒலிபரப்பான* பாடல்கள் /காட்சிகள் விவரம்*
-----------------------------------------------------------------------------------------------
1.மூடி திறந்த இமை இரண்டும் பார் பார் என்றது -தாயை காத்த தனயன்*

2.காலத்தை வென்றவன் நீ. காவியமானவன் நீ - அடிமைப்பெண்*

3.எம்.ஜி.ஆர்.- நம்பியார் உரையாடல் - தொழிலாளி*

4.ஒன்றே குலம் என்று பாடுவோம் - பல்லாண்டு வாழ்க*

5.நான் யார் தெரியுமா* - கொடுத்து வைத்தவள்*

6.என்னதான் நடக்கும் நடக்கட்டுமே - பணத்தோட்டம்*

7.நம்நாடு படத்தில் எம்.ஜி.ஆர்.*

8.செல்லக்கிளியே மெல்ல பேசு -பெற்றால்தான் பிள்ளையா*

9.எம்.ஜி.ஆர்.-சிவாஜி கணேசன் உரையாடல் -கூண்டுக்கிளி*

fidowag
19th July 2020, 11:29 PM
இந்திய சினிமாவின் கலை*களஞ்சியம்*
-------------------------------------------------------------
உலக புகழ் பெற்ற* ஆக்ஸ்போர்டு* யுனிவர்சிட்டி பிரஸ் பிரிட்டிஷ் பிலிம் இன்ஸ்டிட்யூட்டுடன்* இணைந்து வெளியிட்டுள்ள இந்திய* சினிமாவின்* *கலைக்களஞ்சியம்* என்ற நூலின் அட்டை முகப்பில் சத்யஜித்ரே , நர்கீஸ் , அமிதாப் பச்சன் , தேவ் ஆனந்த் ,ஷபனா* ஆஸ்மி , ஆகியோரோடு தென்னக கலைஞர்களில்*எம்.ஜி.ஆரின் படம் மட்டுமே பிரசுரிக்கப்பட்டுள்ளது. இதன் விலை ஆயிரம் ருபாய்

orodizli
21st July 2020, 08:06 AM
மக்கள் திலகம் ஒருவருக்கு மட்டுமே உள்ள தனிச் சிறப்பு
அவர் நடித்த படங்கள் எல்லாமே
"எம் ஜி ஆர் படம்"
என்பதே.
இந்தச் சிறப்பு உலகில் வேறு எந்த நடிகருக்கும் இருப்பதாகத் தெரியவில்லை.
மற்றய நடிகர்கள் யார் நடித்தாலும் சில படங்கள் நடிகர் பெயரையும் சில படங்கள் நடிகையின் பெயரையும் சில படங்கள் இயக்குனர் பெயரையும் சில படங்கள் தயாரிப்பு நிறுவனம் பெயரையும் தான் சொல்லும் மக்களும் அப்படித்தான் சொல்வார்கள்.
ஆனால் மக்கள் திலகம் எந்த நிறுவனத் தயாரிப்பில் நடித்தாலும் யார் அதை இயக்கினாலும் யார் அவருடன் நடித்தாலும் அது
"எம் ஜி ஆர் படம்தான்".........

orodizli
21st July 2020, 08:07 AM
#வாத்தியாரின் #உயரம்

தூரத்தில் இருந்து பார்க்கும்போது உயரமாகத் தெரியும் பலர், அருகில் செல்லும்போது உயரம் குறைந்துவிடுவார்கள்...

#அருகில் #சென்று #பழகியபோது #ஒருவரின் #உயரம் #என் #மனதில் #அதிகரித்தது #என்றால் #அது #எம்ஜிஆர் #தான்.

அதற்குக் காரணம், கஷ்டப்படும் மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணம் உண்மையிலேயே அவருக்கு இருந்தது. அவரோடு பழகியபோது இதை என்னால் உணரமுடிந்தது.

எம்ஜிஆர் முதல்வராக இருந்தபோது, ஒருநாள் மாலை 7.30 மணிக்கு பத்திரிகையாளர்களை ராமாவரம் தோட்டத்தில் சந்திக்கிறார் என திடீரென்று அழைப்பு வந்தது. அவசரம் அவசரமாக் போனோம்.

ஹாலில் சோஃபாவில் எங்களோடு அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார் எம்ஜிஆர். 8 மணி ஆனது. ’எல்லா பத்திரிகையில் இருந்தும் நிருபர்கள் வந்தாச்சு. பேட்டியை ஆரம்பிக்கலாமே’ என்றோம்.

எம்ஜிஆர் உடனே ’பேட்டியெல்லாம் ஒண்ணுமில்லை. வாங்க எல்லாரும் சாப்பிடலாம்” என்றார்.

’பேட்டி இல்லையா?’ என்று கேட்டோம்.

‘செய்தி சொல்ல அழைக்கவில்லை. சும்மா சாப்பிடத்தான் உங்களையெல்லாம் அழைத்தேன்’ என்றார் எம்ஜிஆர்.

ஆங்கிலப்பத்திரிகை நிருபர் ஒருவர் கொஞ்சம் கோபமாக, ‘சாப்பிடுறதுக்கா வந்தோம்?’ என்று கேட்டார்.

எம்ஜிஆர் உடனே அருகில் சென்று, அவர் தோளில் கை போட்டு, ‘#ஒருநாள் #உங்களோடு #சாப்பிடணும்ன்னு #ஆசைப்பட்டு #வரச்சொன்னேன். #தப்பா? #வாங்க..#உங்களுக்கு #தனி #டேபிளில் #வெஜிடெரியன் #ஏற்பாடு #பண்ணியிருக்கேன்” எனறார். அவ்வளவுதான். நிருபர் கூல் ஆகிவிட்டார்.

பெரிய டைனிங் டேபிள். சிக்கன், மட்டன், மீன் என ஒவ்வொன்றிலும் பல ஐட்டங்கள். 20 பேர் உட்கார்ந்து சாப்பிட்டோம். எம்ஜிஆரும் சாப்பிட்டுக் கொண்டே, யார் எதை விரும்பி சாப்பிடுகிறார்கள் என்று கவனித்து ’அவருக்கு சிக்கன் வை, இவருக்கு மீன் வை’ என்று சொல்லி உபசரித்தார். வியப்பாக இருந்தது. என்னா ஷார்ப். அவருடைய வெற்றியின் ரகசியம் புரிந்தது.

---இரா.குமார் எழுதிய ‘நனவோடை நினைவுகள்’ நூலில் இருந்து............

orodizli
21st July 2020, 08:10 AM
ஈழ விடுதலைக்கு என் தலைவன் mgr எவ்வாறெல்லாம் உதவினார் என்பதைப்பற்றிய கட்டுரை இது. கட்டுமர கைக்கூலிகளே உங்களுக்கும் தெரியவேன்டும் என்பதலால்தான் இந்த பதிவு.

ஈழ விடுதலையில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் மகத்தான பங்களிப்பு

• விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு இரண்டு தவணைகளில் பல கோடி ரூபாய் நிதியை வழங்கியவர் - மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். தான். இரண்டாவது முறை - அரசு நிதியிலிருந்து வழங்கிய காசோலைக்கு ராஜீவ் ஆட்சி எதிர்ப்பு தெரிவித்ததால் “அந்தக் காசோலையைக் கிழித்தெறியுங்கள்; எனது சொந்தப் பணத்தைத் தருகிறேன்” என்று கூறி, சொந்தப் பணத்தை எடுத்துத் தந்தவர் அவர்தான்.

• சென்னை துறைமுகத்தில் விடுதலைப் புலிகளுக்கு ஆயுதங்கள் வந்து இறங்கியபோது அதை துறைமுகத்திலிருந்து வெளியே எடுப்பதற்கு தடைகள் வந்தபோது, முதல்வர் என்ற முறையில் தனது செல்வாக்கைப் பயன்படுத்தி, ஆயுதங்களைக் கிடைக்கச் செய்தவர் எம்.ஜி.ஆர். தான்.

• ஈழத் தமிழர்களுக்காக தான் கருப்புச் சட்டை அணிந்ததோடு, தனது சக அமைச்சர்களையும் கருப்புச் சட்டை அணியச் செய்தவர் எம்.ஜி.ஆர். தான்.

• இந்தியாவின் ராணுவம் ஈழத்துக்குப் போக வேண்டும் என்ற ஒரு கருத்து தமிழகத்தில் சிலரால் முன் வைக்கப்பட்டபோது முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர். தமிழக சட்டமன்றத்திலேயே, “ஈழத் தமிழர்களோ, விடுதலைப் புலிகளோ, தங்கள் நாட்டுக்கு ராணுவம் அனுப்புமாறு கேட்கவில்லை” என்று சட்டமன்றத்தில் கூறி ராணுவத்தை அனுப்புவதையே எதிர்த்தவர் எம்.ஜி.ஆர்.

• ராஜீவ் காந்தி - ஜெயவர்த்தனாவுடன் ஒப்பந்தம் செய்து கொண்டு அதை புலிகள் ஏற்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தினார்கள். டெல்லி அசோகா ஓட்டலிலே பிரபாகரனை சிறைபிடித்து வைத்துக் கொண்டு முதல்வர் எம்.ஜி.ஆரை. சென்னையிலிருந்து அழைத்து வந்து பிரபாகரனிடம் ஒப்பந்தத்தை ஏற்க வைக்குமாறு நிர்ப்பந்தித்தார்கள். எம்.ஜி.ஆர். அப்போதும், பிரபாகரனை கட்டாயப்படுத்தி ஏற்கச் செய்து, ராஜீவ் ஆட்சியிடம் நற்சான்றிதழ் பெற விரும்பவில்லை. “உங்களுக்கு எது சரி என்று தோன்றுகிறதோ அதன்படி முடிவு எடுங்கள்” என்று பிரபாகரனிடம் கூறியவர் - எம்.ஜி.ஆர். தான்!

• ராஜீவ் - ஜெயவர்த்தனா ஒப்பந்தத்தைப் பாராட்டி சென்னையில் ராஜீவ் காந்திக்கு பாராட்டு விழா ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டது. அந்த விழாவில் பங்கேற்க விரும்பாத முதல்வர் எம்.ஜி.ஆர்., தனது சிகிச்சைக்காக முதல் நாளே அமெரிக்கப் பயணத்துக்கு ஏற்பாடு செய்து விட்டார். இந்த செய்தியறிந்து டெல்லியிலிருந்து ‘ஹாட் லைனில்’ தொடர்பு கொண்டு எம்.ஜி.ஆரிடம் ராஜீவ் காந்தியே, ‘நீங்கள் அந்த தேதியில் அமெரிக்கா போகக் கூடாது; பயணத்தை தள்ளிப் போட்டுவிட்டு, பாராட்டு விழாவில் பங்கேற்க வேண்டும்’ என்று கட்டாயப்படுத்தினார். தனக்கு உடன்பாடு இல்லாமலே ‘வேண்டா வெறுப்போடு’ அந்த விழாவிலே எம்.ஜி.ஆர். கலந்து கொண்டார். ஒப்பந்தத்தைப் பற்றி எதுவும் பேசவில்லை.

• உடல் நல சிகிச்சைக்காக அமெரிக்க மருத்துவமனையிலே இருந்த நிலையில் கூட எம்.ஜி.ஆர்., ஈழப் பிரச்சினைகளை உன்னிப்பாக கவனித்து வந்தார். இந்திய அரசின் துரோகத்துக்கு எதிராக நீதி கேட்டு, ஒரு சொட்டு தண்ணீர்கூட அருந்தாமல் திலீபன் வீரமரணமடைந்த செய்தியால் கலங்கிப் போன எம்.ஜி.ஆர். திலீபன் உண்ணாவிரதம் - இந்திய அரசுக்கு எதிரானது என்ற நிலையிலும், திலீபன் மறைவுக்கு அமெரிக்காவிலிருந்து இரங்கல் செய்தி அனுப்பினார்.

• “திலீபன் அவர்கள் இந்திய அரசுக்கு அய்ந்து கோரிக்கைகளை முன்வைத்து பட்டினிப் போர் தொடங்கி, 12 நாட்கள் ஒரு சொட்டு நீர்கூட குடிக்காமல் 26.9.87 இல் மடிந்து போனார் என்பதை அறிந்து வருந்துகிறேன். எனது சார்பிலும் தமிழக மக்கள் சார்பிலும் - தமிழக அரசு சார்பிலும் ஆழ்ந்த அஞ்சலியை தெரிவிக்கிறேன்” என்று தமிழக அரசின் ‘அஞ்சலி’யை திலீபனுக்கு காணிக்கையாக்கியவர் எம்.ஜி.ஆர்.

• அது மட்டுமல்ல; புலேந்திரன், குமரப்பா உள்ளிட்ட 17 விடுதலைப் புலிகளை போர் நிறுத்த ஒப்பந்தம் அமுலுக்கு வந்த பிறகு ஒப்பந்தங்களுக்கு எதிராக, அவர்களைக் கைது செய்து, அவர்களை சிங்கள ராணுவம் கொழும்புக்கு விசாரணைக்கு அழைத்துப் போனது; நியாயமாக, ஒப்பந்தத்துக்கு எதிரான இந்த செயலை ஈழத்தில் நிலை கொண்டிருந்த இந்திய ராணுவம் தடுத்து நிறுத்தியிருக்க வேண்டும்; வேண்டுமென்றே அதை செய்யவில்லை. புலேந்திரன், குமரப்பா உள்ளிட்ட 12 புலிகள் இயக்கத்தின் மரபுக்கேற்ப, ராணுவத்திடம் உயிருடன் பிடிபடக் கூடாது என்று ‘சைனைடு’ அருந்தி பலியானார்கள். அமெரிக்க மருத்துவமனையிலிருந்து இந்த செய்தி அறிந்து துடித்த எம்.ஜி.ஆர். அங்கிருந்து - உயிரிழந்த மாவீரர்களுக்கு இரங்கல் செய்தியையும், இந்தியாவின் அலட்சியத்தையும் சுட்டிக் காட்டியும் செய்தி அனுப்பினார். “தங்களால் கைது செய்யப்பட்ட 17 விடுதலைப் புலிகளையும், இலங்கை கடற்படை இந்திய அமைதிப் படையிடம் ஒப்படைத்திருக்குமானால், அவர்களுள் 12 பேர் ஒட்டு மொத்தமாக தற்கொலை செய்து கொண்டிருக்க மாட்டார்கள். வன்முறைகளும் வெடித்திருக்காது. இந்திய இலங்கை உடன்படிக்கையின் அடிப்படையில் இடைக்கால அரசு ஒன்று ஏற்பட வேண்டிய நேரத்தில், வன்முறைகள் வெடித்ததும், அதில் இந்திய அமைதிப் படையும் விடுதலைப் புலிகளும் இறங்க வேண்டிய நிலைமை ஏற்பட்டதும் கவலைக்குரியது. இந்தக் கடினமான பிரச்சினைக்கு நிரந்தரமான தீர்வுகளைத் தொடர்ந்து முயற்சிப்பேன். தமிழக அரசு இது பற்றி எடுக்கும் முடிவுகளுக்கு ஆதரவு தருமாறு தமிழக மக்களைக் கேட்டுக் கொள்கிறேன்” (11.10.1987 நாளேடுகள்) - என்று அறிக்கை விட்டு, மத்திய அரசின் நடவடிக்கைக்கு கண்மூடித்தனமான ஆதரவைக் காட்ட மாட்டேன் என்று வெளிப்படுத்தியவர் எம்.ஜி.ஆர்.

• புலேந்திரன், குமரப்பா உள்ளிட்ட 12 போராளிகள் வீரமரணமடைந்ததைத் தொடர்ந்து பிரபாகரனைக் கைது செய்ய இந்திய ராணுவம் திட்டமிட்டது. ‘பிரபாகரன் கைது’ என்று ஊடகங்கள் வழியாக செய்திகளைப் பரப்பினார்கள். இத்தகவல் அமெரிக்காவில் சிகிச்சை பெறும் முதல்வர் எம்.ஜி.ஆருக்கு தரப்பட்டது. விடுதலைப்புலிகளுடன் இந்திய ராணுவம் மோதலுக்கு தயாராகி வந்தது. இந்த நிலையில் இந்திய ராணுவம் அப்படி ஒரு போரை நடத்தக் கூடாது என்று தமிழகத்தில் ஈழ விடுதலை ஆதரவாளர்கள் அனைத்து கட்சிக் கூட்டம் ஒன்றை கூட்டினர். அதில் அ.தி.மு.க. சார்பில், பிரதிநிதியைப் பங்கேற்கச் செய்து எம்.ஜி.ஆர். அமெரிக்காவிலிருந்து செய்தி அனுப்பினார்.

• விடுதலைப் புலிகளும் இந்திய ராணுவமும் மோதுவதை நிறுத்திவிட்டு மீண்டும் பேச்சுவார்த்தை தொடங்க வேண்டும்என்று தமிழ்நாட்டில் 17.10.1987 அன்று கடையடைப்பு, முழு வேலை நிறுத்தம் நடத்துவது என பழ.நெடுமாறன அவர்கள் முயற்சியால் கூட்டப்பட்ட அனைத்துக் கட்சி கூட்டம் முடிவு செய்தது. அப்போது அமெரிக்காவிலிருந்து முதல்வர் எம்.ஜி.ஆர். முழு அடைப்புக்கு ஆதரவு தெரிவித்து அறிக்கை வெளியிட்டார். “சிங்கள அரசிடமிருந்து 12 பேர்களை மீட்க வாய்ப்பு இருந்தும் இந்திய அமைதிப் படை முயற்சி எடுக்கவில்லை. மாறாக ஈழத் தமிழர்களுக்குப் பல வழிகளில் தொல்லை கொடுக்க ஆரம்பித்துவிட்டது. வன்முறையும் பெருமளவில் வெடித்தது. இந்திய ராணுவம் நடத்தி வரும் தாக்குதலை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று வற்புறுத்தி தமிழகம் முழுதும் 17.10.1987 அன்று முழு அடைப்புக்கு ஆதரவு அளித்து, தமிழக மக்கள் கடைகளை அடைத்து, தமிழக மக்களின் ஒருமித்த உணர்வை உலகுக்குத் தெரிவிக்க வேண்டும்” (16.10.1987 நாளேடு செய்திகள்) என்று இந்திய அரசின் துரோகத்துக்கு எதிராக துணிந்து குரல் கொடுத்தவர் எம்.ஜி.ஆர்.

• 31.10.1987 இல் தமிழகம் திரும்பிய எம்.ஜி.ஆர். அடுத்த நான்கு நாட்களிலேயே விடுதலைப் புலிகள் பிரதிநிதிகளை சந்தித்துப் பேசினார். இந்திய ராணுவம் போரை நிறுத்த வேண்டும் என்று தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டு வரும் முயற்சிகளில் இறங்கினார். பதறிப் போன இந்திய ஆட்சி, உடனே அப்படி ஒரு தீர்மானம் கொண்டு வராமல் தடுப்பதற்கு வெளிநாட்டுத் துறை அமைச்சர் நட்வர்சிங்கை சென்னைக்கு அனுப்பி, எம்.ஜி.ஆரை சந்திக்க வைத்தது. எம்.ஜி.ஆர். தமது எதிர்ப்பு உணர்வுகளை நட்வர்சிங்கிடம் வெளிப்படுத்தினார்.

• உடல்நலம் குன்றிய நிலையிலும் தொடர்ந்து தமது ஆதரவை விடுதலைப்புலிகளுக்கு வழங்கியே வந்தவர் எம்.ஜி.ஆர். அதன் பிறகு, அவர் வாழ்ந்த காலம் மிகக் குறுகியது. மரணம் - அவரை தழுவிக் கொண்டது. தமிழ் ஈழத் தேசியத் தலைவர் பிரபாகரன்தனது இரங்கல் செய்தியில் கூறினார்:

“ஈழத் தமிழினம் அநாதையாக ஆதரவின்றித் தவித்துக் கொண்டிருக்கையில் உதவிக்கரம் நீட்டி உறுதியாகத் துணை நின்ற புரட்சித் தலைவரே! தமிழீழப் போராட்டத்துக்கு ஆதரவும், ஊக்கமும் கொடுத்த செயல் வீரரே! தங்களது இழப்பு என்பது வேதனைச் சகதியில் சிக்கிக் கிடக்கும் தமிழீழ மக்கள் மார்பில் தீ மூட்டுவது போலுள்ளது. என்மீது கொண்டிருந்த அன்பையும், ஈழ இயக்கத்தின் மீது தாங்கள் கொண்டிருந்த ஈடுபாட்டையும் எம்மால் மறக்க முடியாது. தமிழீழப் போராட்டத்தின் வெற்றிக்காக எம்.ஜி.ஆர். அவர்கள் மறைமுகமாக எமக்குச் செய்த உதவிகள் தமிழீழ மக்கள் மனதில் என்றும் நிலைத்திருக்கும்” - என்று கூறி இயக்கத்தின் சார்பில் பிரபாகரன் கண்ணீர் அஞ்சலி செலுத்தினார்.

ஒரு முதல்வராக இருந்து ஈழ விடுதலைப் போராட்டத்திற்கு மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். செய்த பேருதவிகளை - வெளிப்படுத்திய கொள்கை உறுதியை - அவர் கலைஞரைப் பட்டியல் போட்டுக் காட்டியதில்லை. ஆனால் நன்றியுள்ள தமிழினம் இதை வெளிப்படுத்த வேண்டும்.

ஈழத் தமிழினம் கடும் நெருக்கடியை சந்தித்த காலத்தில் முதல்வராக இருந்த கலைஞர் செயல்பட்டதையும், இழைத்த துரோகத்தையும் மறைந்த எம்.ஜி.ஆர். அவர்களோடு ஒப்பிட்டுப் பார்க்கிறோம். ஆம்; அப்போதுதான் எம்.ஜி.ஆர். பெருமை - அருமை புரிகிறது. ஈழத் தமிழர் விடுதலைப் போராட்ட வரலாற்றில் எம்.ஜி.ஆர். அவர்களின் பங்களிப்பு பிரிக்க முடியாத பக்கங்களாகவே இருக்கும்.........

orodizli
22nd July 2020, 10:30 PM
எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே!’ - எம்ஜிஆர் எனும் முதல் ஆக்*ஷன் ஹீரோ, முதல் ஆக்*ஷன் படம்; - ‘மலைக்கள்ளன்’ வெளியாகி 66 ஆண்டுகள்.........




தமிழில் முதல் ஆக்*ஷன் ஹீரோ யார் என்பது தெரியும்தானே? முதல் மாஸ் ஹீரோ யார் என்று அறிவீர்கள்தானே. தமிழ்த்திரையுலகின் சூப்பர் ஹீரோ யாராக இருக்கும் என்பதை தெரிந்துகொண்டிருக்கிறீர்களே..! இந்த மூன்றுக்குமான பதில் மூன்றெழுத்துதான். எம்.ஜி.ஆர்.



பணக்காரர்களிடம் கொள்ளையடித்து ஏழைகளுக்கு வழங்கும் ஹீரோவின் கதை என்றால் ‘அட ராபின்ஹூட் கதை’ என்று இன்றைக்குச் சொல்லுவோம். அப்படியொரு கதையில் எம்ஜிஆர் நடித்துத்தான் மாஸ் அந்தஸ்தைப் பெற்றார். பட்டிதொட்டியெங்கும், எம்ஜிஆரைக் கொண்டு சென்றது அந்தத் திரைப்படம். அதுதான் ‘மலைக்கள்ளன்’. திரையுலகிலும் ரசிகர்களிடமும் ‘மலைக்கள்ளன்’ ஏற்படுத்திய தாக்கம் அசாதாரணம். அதற்கு முன்பு ஆக்*ஷன் படங்கள் வந்திருந்தாலும் ‘மலைக்கள்ளன்’ மலைப்பை ஏற்படுத்திய அளவுக்கு அதுவரை எந்தப் படமும் ஏற்படுத்தவில்லை.

Amp

நாமக்கல் ராமலிங்கம் எழுதிய கதை. திரைக்கதை, வசனம் எழுதியவர் மு.கருணாநிதி. படத்தைத் தயாரித்தது பக்ஷிராஜா ஸ்டூடியோஸ் எனும் பிரமாண்டமான நிறுவனம். இந்தப் படத்தை இயக்கியவர் ஸ்ரீராமுலு நாயுடு. இவர்தான் படத்தைத் தயாரித்து இயக்கினார். இந்தப் படம் வருவதற்கு முன்பு ‘சந்திரலேகா’ பிரமாண்டப் படம் என்று பேரெடுத்தது. பின்னர், அந்தப் பட்டியலில் பிரமாண்டமாக இணைந்துகொண்டான் ‘மலைக்கள்ளன்’.

இந்தப் படத்துக்கு ஏகப்பட்ட பெருமைகள் உண்டு. முதல் பெருமை... தமிழில் முதன்முதலாக ஜனாதிபதி விருது பெற்ற முதல் படம் எனும் கெளரவத்தை ‘மலைக்கள்ளன்’ அடைந்தது. அந்த வருடத்தில், தமிழக அரசும் சிறந்த படமாக அங்கீகரித்து, விருது கொடுத்தது.


மிகப்பெரிய பொருட்செலவில் எடுக்கப்பட்ட படம். ஊர் செட் போட்டிருப்பார்கள். காடு செட் போட்டிருப்பார்கள். காட்டில் மலை செட் போட்டிருப்பார்கள். ஒரு மலையில் இருந்து இன்னொரு மலைக்குச் செல்ல ‘விஞ்ச்’ இருக்கும். அதில் சண்டையும் இருக்கும். ரசிகர்கள், வாய்பிளந்து சண்டைக்காட்சிகளை அதிர்ந்து பார்த்து வியந்தான். மலைத்துப்போனான். திரும்பத் திரும்பப் பார்த்தான்.

எம்ஜிஆருக்கு இது மிக மிக மிக முக்கியமான படம். அதுவரை அரச கதைகளில் நடித்துக் கொண்டிருந்தவர், இந்தப் படத்தில் சமூகக் கதையில் முதன் முதலாக நடித்தார். அதேபோல், கருணாநிதி, அரசியல் அதிகமில்லாமல், சமூக அவலங்களையும் ஏற்றதாழ்வுகளையும் தோலுரிக்கிற வசனங்களை பொளேர் சுளீரென எழுதியிருந்தார். இவையும் ரசிகர்களால் பெரிதும் வரவேற்கப்பட்டது.


இந்தப் படத்தின் வெற்றியையும் தாக்கத்தையும் தொடர்ந்து, இதில் இருந்து ஒவ்வொன்றாக உருவி, ஏராளமான கதைகள் இன்று வரைக்கும் வந்துகொண்டுதான் இருக்கின்றன. படம் தொடங்கும் போது ஹீரோ குடும்பத்தைவிட்டுப் பிரிந்து, பிறகு படம் முடியும்போது சேருவான் என்பது மாதிரியான முடிச்சுகள், ‘மலைக்கள்ளன்’ படத்திலிருந்துதான் ஆரம்பித்தன. ’ராபின்ஹூட்’ கதையைச் சொல்லவே வேண்டாம்.

படத்தின் ஒளிப்பதிவு சைலன் போஸ். அந்தக் காலத்தில் மிகப்பெரிய ஒளிப்பதிவாளர். அதேபோல், எஸ்.எம்.சுப்பையா நாயுடு. இவருக்கு அடுத்து ஜி.ஆர்.ராமநாதன். பிறகு கே.வி.மகாதேவன். அடுத்து மெல்லிசை மன்னர்கள்... என்று பட்டியல் வரும். இதன் ஆரம்பகர்த்தாக்களில் முக்கியமானவர் எஸ்.எம்.சுப்பையா நாயுடு. படத்தில் ஏகப்பட்ட பாடல்கள். எல்லாமே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றன.

நாயகன் எம்ஜிஆர். நாயகி பானுமதி. எம்ஜிஆருக்கு இணையான கேரக்டர். நடிப்பில் வெளுத்துவாங்கியிருப்பார். பல பாடல்களை இவரே பாடியிருப்பார். அஷ்டாவதானி பானுமதியின் நடிப்பும் மிகப்பெரிய பலம். அதேபோல், எம்ஜி.சக்ரபாணி போலீஸ் அதிகாரியாக நடித்திருப்பார். இவரும் தன் பங்குக்கு சிறப்பாகவே நடித்திருந்தார். ரஞ்சன் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தார்கள்.


எம்ஜிஆர், அதற்கு முன்பு வரை இப்படியும் அப்படியுமாக நடித்துக்கொண்டிருந்தார். இந்தப் படம் வந்த பிறகும் கூட சென்டிமெண்ட், குடும்பக் கதைகளில் நடித்திருந்தார். ஆனால், கொஞ்சம் கொஞ்சமாக, மாஸ் ஹீரோ சப்ஜெக்ட் எனும் பாதைக்குள் நுழைந்தார். அப்படிப் புதியபாதை வகுத்துக் கொடுத்தது ’மலைக்கள்ளன்’ என்றுதான் சொல்லவேண்டும்.

இதைக் கொண்டுதான், எம்ஜிஆர் ஃபார்முலா எனும் விஷயத்தை உருவாக்கினார் எம்ஜிஆர். சமூகக் கதைதான் என்றாலும் எம்ஜிஆர் மட்டும் ராஜா காலத்து ஆடைகளை அணிந்திருந்தார் என்பது ஆச்சரியம்தான். அதேபோல, படத்தின் வசனங்களுக்காக தியேட்டர்களில் கைதட்டல்கள் கேட்டுக்கொண்டே இருந்தன. ’மலைக்கள்ளன்’ குறித்து சொல்லும்போது ஒரு தகவல் சொல்லுவார்கள். ஒன்று... இந்தப் படத்தில் முதலில் சிவாஜிதான் நடிக்க வேண்டியிருந்தது. அப்போது இரண்டு படங்களில் நடிக்க ஒத்துக்கொண்டிருந்ததால், அவரால் நடிக்க முடியவில்லை. பிறகு எம்ஜிஆர்தான் நடித்தார். அப்படி ’எம்ஜிஆரைப் போடுங்களேன். நல்லாருக்கும்’ என்று சொன்னவர்... சிவாஜி கணேசன்.


அதேபோல், கருணாநிதி, இந்தப் படத்துக்கு வசனம் எழுத சம்மதிக்கவில்லையாம். காரணம்... எம்ஜிஆர்தான். அப்போது அவர் காங்கிரஸ் அபிமானியாக இருந்தாராம். பிறகுதான் சம்மதித்தார் என்றொரு தகவல் சொல்லுவார்கள்.

முதல் ஜனாதிபதி விருது பெற்ற இந்த ‘மலைக்கள்ளன்’ திரைப்படம், 1954ம் ஆண்டு வெளியானது. இதே ஆண்டில் வேறொரு வகையில், சிறந்த படங்கள் என்று இரண்டு விருதுகள் இரண்டு படங்களுக்குக் கிடைத்தன. ஒன்று... ‘எதிர்பாராதது’. இன்னொன்று... ‘அந்தநாள்’. இரண்டுமே சிவாஜி நடித்த படங்கள்.

‘மலைக்கள்ளன்’ திரைப்படம் மிகப்பிரமாண்டமான வெற்றியைப் பெற்றது. இந்தப் படம் வெளியான கையுடன், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் என்று நான்கு மொழிகளிலும் தயாரித்து இயக்கினார் ஸ்ரீராமுலு நாயுடு. ஆக, ஐந்து மொழிகளிலுமே வெற்றியைத் திருடிக் கொடுத்தான் ‘மலைக்கள்ளன்’.

’தமிழன் என்றொரு இனமுண்டு’ என்பது உள்ளிட்ட பல பாடல்கள் உள்ளன. முக்கியமாக, இத்தனை காலங்கள் கடந்தும் கூட, இன்றைக்கும் பொருந்துகிற பாடல்... மிகப்பெரிய ஹிட்டடித்த பாடல்... ‘எத்தனைக் காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே...’ பாடல்! படம் திரையிட்ட தியேட்டர்களிலெல்லாம் 100 நாள், 140 நாள் என ஓடியது.


1954ம் ஆண்டு, ஜூலை மாதம் 22ம் தேதி வெளியானது ‘மலைக்கள்ளன்’. வெளியாகி 66 ஆண்டுகளாகிவிட்டன. ஆனாலும், இன்றைக்கும் மலைக்க வைத்துக் கொண்டிருக்கிறான் ‘மலைக்கள்ளன்’.

முதல் ஆக்*ஷன் படம், முதல் ஆக்*ஷன் ஹீரோ, முதல் ஜனாதிபதி விருது... எல்லாவற்றுக்கும் மேலாக எம்ஜிஆர் எனும் முதல் ஆக்*ஷன் ஹீரோவின் முதல் ஆக்*ஷன் படமான ‘மலைக்கள்ளன்’ படத்தை, தமிழ் சினிமா என்றைக்குமே மறக்காது!...

orodizli
22nd July 2020, 10:31 PM
*
ஈ.வெ.ரா. சிலை எதிர்த்த எம்ஜிஆர்
*
காஞ்சியில் சங்கரர் மடத்துக்கு அருகே ஈ.வெ.ரா. சிலையை வைக்க திராவிடர் கழகத்தினர் முயற்சித்தனர்.
முதல்வராக இருந்த எம்ஜிஆர், அதற்கு அனுமதி வழங்க மறுத்துவிட்டார்.
‘அரசின் அனுமதியின்றி சிலையை வைத்தால் என்ன செய்வீர்கள்?’ என்று சட்டப்பேரவையில் வினா எழுந்தபோது, ‘அந்த சிலை, அங்கிருந்து அகற்றப்படும்’ என்று உறுதி தோய்ந்த குரலில் பதிலளித்தார் எம்ஜிஆர். அவரது எதிர்ப்பு காரணமாக, காஞ்சி மடத்தருகே ஈ.வெ.ரா. சிலை வைப்பது தவிர்க்கப்பட்டது.
- இது, ‘எம்ஜிஆரும் நானும்’ கட்டுரையில் சிலம்புச்செல்வர் ம.பொ.சி. குறிப்பிட்டுள்ள தகவல்.
(கட்டுரை இடம்பெற்றுள்ள நூல் : வரலாற்றில் எம்ஜிஆர்; தொகுப்பாசிரியர் வே.குமரவேல்; முல்லை பதிப்பகம் வெளியீடு: பக்கம் 442-443)....

orodizli
22nd July 2020, 10:32 PM
#என் #கடமை

முதல்வர் எம்ஜிஆர் அவர்கள் தலைமைச்செயலகம் செல்லும் வழியில் 'சென்னை பல்கலைக்கழக கட்டிடத்தில் உள்ள மணிக்கூண்டில் உள்ள கடிகாரம் தவறான நேரத்தைக் காட்டுவதைக் கண்டார். தொடர்ந்து இரு நாட்கள் அதைக் கவனித்தார். நேரம் சரிப்படுத்தப்படாமல் தவறான நேரத்தையே காண்பித்துக் கொண்டிருந்தது.

மூன்றாம் நாள் முதல்வர் நேராக பல்கலைக்கழகத்திற்குள் நுழைந்தது. அங்குள்ள அலுவலர்கள் அதிர்ச்சியடைந்து காரருகே ஓடி வந்தனர்...

அப்போது புரட்சித்தலைவர், 'மணிக்கூண்டில் உள்ள கடிகாரம் கடந்த சில நாட்களாக தவறான நேரம் காட்டுவதை சுட்டிக்காண்பித்தார்.

மேலும், "வருங்கால சமுதாயத்திற்கு நல்வழி காட்டும் பல்கலைக்கழகத்திலேயே இப்படி தவறு நடந்தால் எப்படி? உடனே நேரத்தை சரிசெய்யுங்கள்..."

தான் செல்லும் வழியில் காணும் சிறுதவறைக்கூட கண்டுபிடித்து கண்ணியமாகத் திருத்தும் கடமை உணர்வு எம்ஜிஆர் அவர்களுக்கு இருந்தது.

இந்த விஷயத்தை தனது உதவியாளர் மூலம் போனில் சொல்லியிருக்கலாம்...!!!
ஏன் செய்யவில்லை...???

தான் ஒரு மாநிலத்தின் முதல்வர் என்பதையும் மறந்து தன்னை ஒரு சராசரி பிரஜையாகவும், காணும் தவறை சுட்டுவது ஒரு பிரஜையின் தலையாய கடமை என்றும் கருதியதன் நிகழ்வு தான் இச்சம்பவம்......

orodizli
22nd July 2020, 10:33 PM
"ஆசைமுகம்" புரட்சி நடிகரின் வெற்றிப் படங்களில் ஒன்று. 1965
டிச 10 ம்தேதி வெளியான ஆசைமுகம் மிகவும் வித்தியாசமான புதுமைப்படைப்பு. அருமையான பாடல்களும்,புதுமையான கதையமைப்பும் கொண்ட படம். எம்ஜிஆர் படத்துக்கு கதை tn பாலு இந்தப்படம் மட்டும் தான் என்று நினைக்கிறேன். படம் வெளியான நாள்தான் சரியில்லை.

டிசம்பர் மாதம் வெளியான படங்கள் முழு வெற்றியை பெறுவது மிகவும் கடினம். ஏனென்றால் அடுத்து வரக்கூடிய பொங்கல் பண்டிகையில்
வெளியாகக் கூடிய படங்களை எதிர்த்து 100 நாட்கள் ஓடுவது சற்று கடினமான காரியம்தான்.. மேலும் பொங்கலன்று
வெளியான "அன்பேவா" ஒரு பிளாக் பஸ்டர் படம். சென்னை காஸினோவில் கூட்டத்தை கட்டுப்படுத்த குதிரை போலீஸ் வரவழைக்கப்பட்ட படம்
"அன்பேவா".

அதையும் தாண்டி "ஆசைமுகம்" வெற்றிநடை போட்டது.
அதற்கடுத்து வந்த "நான் ஆணையிட்டால்" பிப் 4 ந் தேதி வெளியான போது நிறைய இடங்களில் படத்தை தூக்கி விட்டார்கள். சென்னை பாரகனில் 50 நாட்களும் பிரபாத்தில் 56 நாட்களும் சரஸ்வதி நூர்ஜகானில் 49 நாட்களும்.ஓடியது "ஆசைமுகம்". சேலம் சாந்தியில் 63 நாட்கள் வரை ஓடியது.

மதுரை தங்கத்தில் வெளியாகி 56 நாட்கள் ஓடியது.
56 நாட்களில் பெற்ற வசூல் சுமார்
1,81,000 ரூபாய். பிரமாண்ட படமான கலர் "கர்ணன்" தங்கத்தில் 100 நாளில் பெற்ற வசூல் 1,86,000 ரூபாய். கர்ணன் 56 நாளில் பெற்ற வசூல் 160000 தான்.இதிலிருந்து தெரிந்து கொள்ளலாம். பிரமாண்ட கலர் கர்ணனை கால்பந்தாடிய "ஆசைமுக"த்தின் வெற்றியை கண்டு சிவாஜி ரசிகர்கள் வயிற்றில் புளியை கரைத்திருக்கும் என்று நினைக்கிறேன்.

இவ்வளவுக்கும் "ஆசைமுகம்" சாதாரண வெள்ளிக்கிழமை வெளியீடு. கலர் "கர்ணனோ" பொங்கல் பண்டிகை வெளியீடு. சாதாரண நாட்களில் வெளியாகி இருந்தால் முதல் வார வசூலில். 20000 ரூ காணாமல் போயிருக்கும். ஏகப்பட்ட செலவு செய்து எடுத்த "கர்ணனை" எந்த செலவும் இல்லாமல் குறைந்த பட்ஜெட்டில் உருவான "ஆசைமுகம்" எளிதில் வென்றதால் தயாரிப்பாளர்கள் மத்தியில் எம்ஜிஆருக்கு பெரும்பெயரை பெற்று தந்தது.

இரட்டை வேடத்தை எந்த கத்தல், கரைச்சல் இல்லாமல் அமைதியாக வெளிப்படுத்தியிருந்த லாவகம் வெகுஜன மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்று தந்தது. படத்தில் டாக்டராக வருபவர் "துணிவே துணை"யில் மாட்டு வண்டிக்காரராக வந்து மிரட்டுவார். படத்தை முதல் தடவை சிறுவனாக இருந்த போது பார்த்தேன். அதில் எம்ஜிஆர் வாசிக்கும் மவுத் ஆர்கன் எனக்கு மிகவும் பிடித்து. போயிற்று. பொருட்காட்சியில் மவுத் ஆர்கனையும் எம்ஜிஆர் அணிந்திருந்த அந்த பெரிய, என் கைவிரல்களுக்கு பொருந்தாத மோதிரத்தையும் அடம் பிடித்து கேட்டு வாங்கி விட்டேன்.

அப்புறம் என்ன சும்மா இருப்பேனா? தலைவர் வாசிப்பதை போல் வாசிப்பதாக நினைத்து கொண்டு பலருடைய தூக்கத்தை கெடுத்ததோடு சரி. சுட்டுப் போட்டாலும் எனக்கு வராது என்று தெரிந்தும். பலரை தூங்க விடவில்லை. அந்த மோதிரத்தை வைத்துக் கொண்டு சகோதரர்களிடம் சண்டை வேறு. நீயா? இல்லை நானா? பாடலுக்கு எம்ஜிஆர் பயன்படுத்தும் அந்த கை பிரம்பையும் அதே போல் செய்து வைத்துக் கொண்டு வருவோர் போவோரிடம் வம்பு வளர்த்து பின் கம்பு சண்டையாகி மகிழ்ந்த காலம்!.
ஆகா அற்புதமான நினைவுகள்..........

fidowag
23rd July 2020, 06:14 PM
பாட்டாலே புத்தி சொன்ன வாத்தியார் எம்.ஜி.ஆர். -சகாப்தம் நிகழ்ச்சியில்*வின்*டிவியில்*திரு.துரை பாரதி*2/07/20 அன்று அளித்த*தகவல்கள்*
--------------------------------------------------------------------------------------------------------------------
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். புகழுக்கு காரணம் ,அவர் ஒரு சினிமா நடிகர் என்பதாலா, கொடை தன்மை கொண்டவர் என்பதாலா, பத்தாண்டு காலம் முதல்வர்* என்பதாலா,ஒரு அரசியல் கட்சி தலைவர் என்பதாலா ,என்று ஆய்வுகள் நடந்த வண்ணம் இருக்கின்றன .பலர் பலவாறு கருத்துக்கள் கூறிய வண்ணம் உள்ளனர் .ஆனால் எல்லாவற்றிற்கும் மேலாக அவர் மனிதநேயம் மிக்க மனிதாபிமானியாக இருந்தார் என்பதே தலையாய சிறப்பு எனலாம் .


மனிதநேயம், மனிதாபிமானம் என்பதெல்லாம் இன்றைக்கு இருக்கிறதா என்றால் குறைந்து, மங்கி போய் கொண்டே இருக்கிறது .ஏனெனில் ,இன்றைக்கு ஏதாவது விபத்து நேர்ந்தால், அடிபட்டவரின் அல்லது இறந்தவரின் கைபேசி, கைக்கடிகாரம், மணிபர்ஸ் ஆகியன திருடப்படுகின்றன . இந்த கால கட்டத்தில்தான் நாம் மனிதாபிமானம், மனிதநேயம் ஆகியவை பற்றி அதிகம் பேச வேண்டி இருக்கிறது*


பொதுவாக ஓடோடி சென்று உதவி செய்வது போல் நடித்தவர்கள்*, ஓடோடி சென்று புகைப்படம் எடுத்துக் கொண்டவர்கள் ,.வீடு வீடாக சென்று தேர்தல் காலத்தில் வாக்குகள் கேட்டு , பொய் வாக்குறுதிகள் அளித்தவர்கள்,பொது காரியங்களில் ஈடுபடுபவர்கள்* இவர்களுடைய மனிதாபிமானம் எல்லாம் சீசனுக்கு தகுந்தாற்போல் மாறும் ஒரு நாடகம் .இந்த நாடகங்களைத்தான் சினிமாவில் எம்.ஜி.ஆர். சாடி* இருக்கிறார் ,பாடல்களாக பாடியும் இருக்கிறார் .


எம்.ஜி.ஆரை பொறுத்தவரையில், மனிதநேயம், மனிதாபிமானம் என்பது அவர்*உடன்பிறந்த ஒரு நற்குணம் .* உள்மனதில் ஆழமாக பதிந்த விஷயம் . அதுதான் அவரை ஒளிவிளக்காக இந்த காலம்வரையில்* ஒளிர செய்கிறது .அப்படி ஒளிரச்*செய்வதற்கான பல்வேறு விஷயங்களை இன்று நாம் அறிந்து கொள்வோம் .


நான் ஏன் பிறந்தேன் படப்பிடிப்பின் உணவு இடைவேளையில் எம்.ஜி.ஆருடன் அன்று மேஜர் சுந்தரராஜன் உணவருந்துகிறார் . 16 வகையான உணவுகள் பரிமாறப்படுகின்றன . மேஜர், எம்.ஜி.ஆரை ,சாப்பிடும்போது கேட்கிறார். தாங்கள் தினசரி இப்படித்தான்* வழக்கமாக**சாப்பிடுவீர்களா என்று .பதிலுக்கு எம்.ஜி.ஆர்., எனக்கு இப்படியும் சாப்பிட தெரியும் . இரண்டு நாட்கள் சாப்பிடாமல் வயிற்றில் ஈரத்துணி போட்டுக் கொண்டு* பட்டினியாக**இருக்கவும் முடியும் என்றார் .நான் சினிமா வாய்ப்புக்காக ஒவ்வொரு ஸ்டுடியோவிற்கும் கால் கடக்க நடந்தே சென்றிருக்கிறேன் .அப்போதெல்லாம் இரண்டு அல்லது ஐந்து ருபாய் தான் கைவசம் இருக்கும் . அந்த நிலையிலும் வாய்ப்புகள் தொடர்ந்து கிடைக்குமா என்பது கேள்விக்குறியாக இருந்த சமயத்திலும் ,மனிதநேயத்துடன், மனிதாபிமானத்துடன் பலருக்கு உதவிகள் செய்துள்ளேன் .அந்த உதவிகளும்**என்னுடைய முன்னேற்றத்திற்கும், இந்த நிலையை அடைவதற்கும் ஒரு காரணமாக அமைந்தது .ஆனால் நான் எதையும், எதற்காகவும் திட்டமிட்டு செய்யவில்லை .பிறருக்கு உதவுதல் என்பது என் ஆழ்மனதில் உதித்த விஷயம்*


ஒருமுறை ஸ்டூடியோ, ஸ்டுடியோவாக அலையும்போது மதிய நேரம், வயிற்றுப்பசி ஒருபக்கம் . கையில் இருப்பதோ பத்து ருபாய். அந்த சமயத்தில் ஒரு நாடக நடிகர் எதிரே வந்து, அண்ணே, மிகவும் பசியாக இருக்கிறது . ஏதாவது உதவி செய்ய முடியுமா என்று கேட்க, தன்னிடம் இருந்த சாப்பாடை கொடுத்து,*அவரது செலவிற்கு மூன்று ருபாய் அளித்து அவரை பசியாற்றினார் . நாளைக்கு வாய்ப்பு கிடைக்குமா என்பதற்கு உத்தரவாதம் இல்லாத நிலையில்,போதுமான வருமானம் இல்லையென்றாலும் அடுத்தவருக்கு உதவுகின்ற மனப்பான்மை அவருக்கு இருந்தது .இந்த மனிதநேயமும், மனிதாபிமானமும்தான் அவரை இன்றும் மக்கள் மனதில் மறைந்தும் மறையாதவராக ஒளிர செய்துள்ளது .


நடிகர் சங்கத்திற்கு ,தென்னிந்திய நடிகர் சங்கம் என்ற அமைப்பை உருவாக்குவதில் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனுக்கும், எம்.ஜி.ஆருக்கும் பெரும் பங்குண்டு .நடிகர் சங்கத்திற்கு கட்டிடம் கட்ட வேண்டும் என்று மேஜர் சுந்தர்ராஜனும், சிவாஜி கணேசனும்* முற்பட்டபோது, தமிழக அரசு மூலம் ரூ.25 லட்சம் வங்கியில் டெபாசிட் செய்து, வங்கி கடன் உருவாக்கி உதவிகள் செய்தவர் முதல்வர் எம்.ஜி.ஆர்.* *இந்த நடிகர்*சங்கத்தால் ஒருபோதும்*ஒரு ரூபாய் அளவிற்கு கூட*தான் பிரயோஜனம் அடைந்ததில்லை . ஆனால் அள்ளி அள்ளி கொடுத்திருக்கிறார் .* ஆனால் ,இப்படி நடிகர் சங்கம் என்பதனால்தான் அள்ளி அள்ளி கொடுக்கிறார் என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டக்*கூடாது*என்பதற்காக , அதற்கான பிரச்னைகள் ஏற்பட்டால் சந்திக்கும் பொருட்டு , அரசு அதிகாரிகளை வைத்து,காரண*காரியங்களை ஆராய்ந்து , முறையாக ஆலோசனைகள் செய்து திட்டமிட்டு* உதவிகள் செய்தார் .இதுபற்றி*பின்னாளில்*நடிகர் சங்க நிர்வாகிகளாக* இருந்தவர்கள் விவரமாக தகவல்கள் அளித்துள்ளனர்


எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்தபோது, கவிஞர் கண்ணதாசன் அமெரிக்காவில்* இருந்தபோது இறந்ததும்,அவர் உடலை*அங்கிருந்து விமானத்தில் சென்னைக்கு*கொண்டு வர ஏற்பாடுகளை செய்தார் . அவரது உடல் நடிகர்*சங்கத்தில் வைத்து அனைத்து நடிகர் நடிகைகள்*இறுதி மரியாதை செய்வதற்கு வழி வகுத்தார் .* அவரது*உடல் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் இறுதி ஊர்வலமாக*எடுத்து செல்ல தயாராக இருந்த நிலையில்*முதல்வர் எம்.ஜி.ஆர். வருவாரா*மாட்டாரா*என்று தகவல் தெரியாதநிலை . கடைசி நிமிடத்தில் எம்.ஜி.ஆர். வந்துவிடுகிறார் . ஆனால் கவிஞரின் உடல் வைக்கப்பட்டிருந்த விதம் சரியில்லை என்று சொல்லி ,அதில்**சிறிய மாற்றங்கள் செய்ய உத்தரவிட்டார் ..நாம் வாழும் காலத்தில் கவிஞர் வாழ்வாங்கு வாழ்ந்தவர் .அவரின் முகம் அனைவருக்கும் எளிதில்*தெரியும்படி வைக்க வேண்டும் என்று சொல்லி* .அலங்காரங்கள் முற்றிலும் மாற்ற செய்து* பொதுமக்கள் அனைவருக்கும் அவர் முகம் தெரியும்படி வைக்க செய்தார். மேஜர்*சுந்தர்ராஜனை அழைத்து , தம்பி சிவாஜி கணேசன் எங்கே , அவரை*வர சொல்லுங்கள் என்றார் . ஆனால் மேஜர்*,சிவாஜி கணேசனுக்கு உடல்நலம் சரியில்லை என்கிறார் .உடனே எம்.ஜி.ஆர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு*கவிஞருக்கு இறுதி மரியாதை செய்ய அவசியம் வர வேண்டும் என்று வற்புறுத்தி சொல்லி ,வரவழைத்தார் . பின்னர் இருவரும் மயானத்திற்கு ஊர்வலமாக நடந்து சென்றனர் . பின்னர் வீடு திரும்பிய எம்.ஜி.ஆர். மேஜர் சுந்தர்ராஜனுக்கு போனில் தொடர்பு கொண்டு இறுதி ஊர்வலத்திற்கு என்ன செலவாயிற்று .என்று கேட்கிறார் .அப்போதெல்லாம் இந்த மாதிரி செலவுகளுக்கு நடிகர் சங்கத்தில் இருந்து செலவு செய்ய முடியாத நிலை என்பதை அறிந்திருந்த எம்.ஜி.ஆர். தன்*சொந்த பணத்தில் இருந்து ரூ.10,000/- காசோலையாக அனுப்பி வைத்தார் .*


மேலும் தகவல்களுக்கு அடுத்த அத்தியாயத்தில் சந்திப்போம்*

நிகழ்ச்சியில் ஒலித்த பாடல்கள்/காட்சிகள் விவரம்*
-------------------------------------------------------------------------------
1.குமரி பெண்ணின் உள்ளத்திலே - எங்க வீட்டு பிள்ளை*

2.எம்.ஜி.ஆர். -எம்.என்.ராஜத்திடம் பேசும் காட்சி -நாடோடி மன்னன்*

3.எம்.ஜி.ஆர். -நிர்மலா உரையாடல் - ஊருக்கு உழைப்பவன்*

4.நான் படித்தேன் காஞ்சியிலே நேத்து -நேற்று இன்று நாளை*

5.எம்.ஜி.ஆர். சாப்பிடும் காட்சி - மாட்டுக்கார வேலன்*

6.நாளொரு மேடை, பொழுதொரு நடிப்பு - ஆசைமுகம்*

7.எம்.ஜி.ஆர்.-தேங்காய் ஸ்ரீநிவாசன் உரையாடல் -ரிக்ஷாக்காரன்*

8.கொடுத்ததெல்லாம் கொடுத்தான் - படகோட்டி*

9.மானல்லவோ கண்கள் தந்தது - நீதிக்கு பின் பாசம்*

10.எம்.ஜி.ஆர்.-மேஜர் சுந்தரராஜன் உரையாடல் -நான் ஏன் பிறந்தேன்*



.*

orodizli
24th July 2020, 02:39 PM
��"தலைவன்" பொன்விழா ஆண்டு.........
(24.07.1970-----24.07.2020)
��இதே தேதி இதே மாதம் 50ஆண்டுகளுக்கு முன் தலைவரின் "தலைவன்" படம் வெளியானது.இன்று தலைவனுக்கு பொன்விழா ஆண்டு.��

��எம்.ஜி.ஆர் ஜேம்ஸ்பாண்டாக நடித்த படம் தலைவன்.

எம்.ஜி.ஆர் வெளிநாட்டில் துப்பறியும் கலையை படித்து விட்டு இந்தியா வரும் ஒரு டிடெக்டிவ் ஏஜண்ட். அவரிடம் அபாரமான யோகா சக்தி இருக்கும். அதாவது தரையில் இருந்து பல அடி உயரத்தில் அந்தரத்தில் யோகா செய்வார். பெரும் பணக்காரர்களை பெண்களை வைத்து மயக்கி பின்பு அவர்களை கடத்தி பணம் பறிக்கும் வில்லன் நம்பியாருக்கு எம்.ஜி.ஆரிடம் இருக்கும் இந்த சக்தியை வைத்து பணம் சம்பாதிக்க ஆசை. ஆனால் எம்.ஜி.ஆரோ நம்பியாரை உரிய ஆதாரத்துடன் கைது செய்ய வந்திருக்கிறவர். இந்த இருவருக்கும் இடையிலான பரபரப்பான மோதல்தான் படம்.����

��எம்.ஜி.ஆர் ஜேம்ஸ்பாண்ட் போன்றே படம் முழுக்க கோட்சூட், கருப்பு கண்ணாடி, கையில் ஒரு சூட்கேசுடன் வருவர். இந்த படத்தில் எம்.ஜி.ஆருடன் நம்பியார், அசோகன், நாகேஷ், வாணிஸ்ரீ, ஜோதிலட்சுமி, மனோரமா, சகுந்தலா நடித்திருந்தார்கள். பிரபல மலையாள இயக்குனர் பி.ஏ.தோமஸ் தயாரித்து இயக்கி இருந்தார். எஸ்.எம்.சுப்பையா நாயுடு இசை அமைத்திருந்தார்��

��.இதில் மிகப்பெரிய ஆச்சரியம் என்னவென்றால் தற்சமயம் உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவியிருக்கும் இந்த நேரத்தில் தமிழகத்தில் சித்த மருத்துவம் மூலம் நோயாளிகள் குணமாகும் நேரத்தில் தலைவர்50 ஆண்டுகளுக்கு முன்பு சித்த மருத்துவம் பற்றியும் யோகா பற்றியும் புகழ்ந்து கூறியிருப்பது ஆச்சரியம் தருகிறது. சித்த மருத்துவம் பற்றி பேசும் இதே காலத்தில் இந்த படத்தின் பொன்விழா ஆண்டு வருவதும் தலைவர் ஒரு தீர்க்கதரிசி மட்டும் அல்ல, சைதையார் அடிக்கடி சொல்லி வருவது போல தலைவரே ஒரு சித்தர் தான் என்பது புலப்படுகிறது.������.........

orodizli
24th July 2020, 02:39 PM
லண்டனில் நாடோடி மன்னன்!

1966 ஆம் ஆண்டு நாவலர் நெடுஞ்செழியன் லண்டன் சென்றார். அப்போது லண்டன் தமிழ் சங்கத்தினர் புரட்சி நடிகரிடம் ஒப்படைக்க இரண்டு போர் வீரர்கள் சில்ககளை கொடுத்து அனுப்பினார். இதை ஒப்படைக்கும் லண்டன் தமிழர்கள் சொன்னது:

தமிழ்ச் சங்கத்திற்கு என்று ஒரு கட்டிடம் இருந்தால் லண்டன் வரும் லாகின் பேராசிரியர்கள் தலைவர்கள் எல்லாம் தமிழனின் பெருமையை பற்றி அறிந்துகொள்வார்கள் என்ற நோக்கத்துடன் நிதி திரட்டினார்கள். அப்போது அங்கே உள்ள பெரிய நடிகர்களுக்கெல்லாம், "அகில இந்திய புகழ், அகில உலக புகழ்பெற்ற நடிகர்க்கெல்லாம் கடிதம் எழுதினோம். ஏதும் பதில் இல்லை!!!

ஆனால் புரட்சித் நடிகர் எம்.ஜி.ஆர் மட்டும் தான் கடிதம் கிடைத்தவுண்டன் "நாடோடி மன்னன்" படத்தை லண்டனுக்கு அனுப்பி வைத்தார். அதன் மூலம் வந்த தொகையை கட்டிட நிதிக்கு கொடுத்தார் [ நீங்கள் நினைப்பது போல தினமும் காட்சி என்று அந்த காலத்தில் கிடையாது என்பதை நினைவில் வைத்துக்கொள்ளவும், சொசைட்டி போன்ற இடங்களில் காண்பிக்க படும்].

தனக்குப் பதிலாக " நாடோடி மன்னனை" அனுப்பி தமிழர்கள் மட்டுமின்றி ஆங்கிலேயர்களும் கண்டு மஃகிழும்படி செய்தார். அதன் மூலம் வசூலான பவுண்ட் [ இன்றைய மதிப்பு ரூ.1,536,660/=] அந்த சங்கத்துக்கு அளிக்கப்பட்டது.

அந்த கொடைக்கு அவர்கள் செலுத்தும் அன்பின் காணிக்கையாக ஆவர் எப்படி திரையில் வாள் தூக்கிப் போராடுகிறாரோ ....எப்படி ஒரு படத்திலாவது அவர் நம்மை செய்யாமல் முடிவதில்லையோ..... அதைப்போல நாட்டில் அநியாயக்கார்கள், அக்கிரமக்காரர்களை வீழ்த்தி நேர்மையும் , நிதியையும் நிலைநாட்ட பாடுபடும் புரட்சி நடிகருக்கு எங்கள் அனுப்பின காணிக்கையாக 13ஆம் நூற்றாண்டின் ஆங்கிலேய வீரர்களின் சிலைகளை ஏற்க ஏற்றவர் புரட்சி நடிகர் தான் என்று கருதி அனுப்புகிறோம்.

இந்த செய்தியை ஜூலை 1966 ஆம் ஆண்டு சென்னையில் நடந்த "தங்கவாள் கொடையளிப்பு விழாவில்" நாவலர் தங்கள்வாள் தெரிவித்தார்...

orodizli
24th July 2020, 02:40 PM
மக்கள் திலகத்தின் அசுர சாதனை பட்டியல்
1970 ம் ஆண்டு வரை...
அகில இந்தியாவில்
வசூலில்...
முதல் இடம் ...
இந்தி படமான
சங்கம்
2 வது..
பூலர் அவுர் பத்தர்
3 வது
எங்கவீட்டுப்பிள்ளை

அடுத்து...
இந்தியாவில்
2 வார வசூலில்
கோவையில் மட்டும்
ரகசியபோலிஸ் 115
சாதனை.
டைமண்ட்
கர்னாடிக்
இரண்டு வார வசூவ்
ரூ. 1,73,071,43
பார்த்தவர்கள் : 1,61,234
அரங்கில் 5 காட்சி
4 காட்சி ஒடியுள்ளது.

அடுத்து...
மலேசியாவில்
அதிக நாள் ஒடிய
இந்திய படங்களில்...
சங்கம் 58 நாள்
நாடோடி மன்னன் 52
எங்கவீட்டுப்பிள்ளை 48
ஆங்கில படம்
சவுண்ட் ஆப் மீயூசிக்
40 நாள்.

அடுத்து
தஞ்சாவூரில்
முதன் முதலில் 2 மிகப்பெரிய அரங்கில்
வெளியிடப்பட்ட
அடிமைப்பெண்
யாகப்பா 12 நாள்
ஞானம் 12 நாள்
பார்த்த மக்கள் : 88,865
வசூல் : 56,844.15

அடுத்து
கடலூர்
அடிமைப்பெண்
2 மிகப்பெரிய அரங்கில்
வெளிவந்து...
நீயுசினிமா 10 நாள்
கமர் 10 நாள்
கண்டு களித்தவர்கள்
1,23,472 பேர்.
4,5 காட்சிகள் ஒடியது.

கேரளா
பாலக்காடு
கவுடர் அரங்கில்
குடியிருந்த கோயில் 42
அடிமப்பெண் 36
ஒளிவிளக்கு 33
நம்நாடு 32
சி.மண் 21

கேரளா
திருவனந்தபுரம்
நீயூ தியேட்டர்
அடிமைப்பெண்
50 நாள் ஒடியது.

அடுத்து...
பெங்களுரில்
3 அரங்கில் 11 வாரம்
நடைபெற்ற முதல் தமிழ்படம் அடிமைப்பெண்
அபேரா 77. நாள்
மெஜஸ்டிக் 77 நாள்
சாரதா 77 நாள்

முதன் முதலில்
தமிழகத்தில்
46 தியேட்டரில் மட்டும்
ஒடி முடிய வசூலை அதிகம் கொடுத்த முதல் படம் : அடிமைப்பெண்
ரூ. 66, 01,191.68. ஆகும்.
(66 லட்சம்)

தகவல் தொடரும்
உரிமைக்குரல் ராஜு...........

orodizli
24th July 2020, 02:43 PM
"ஒளி விளக்கு" மக்கள் திலகத்தின் 100 வது படம். வானவில்லின் ஏழு வர்ணங்களை இணைத்து. வரும் வர்ண ஜாலங்களை திரையில் ஜொலிக்க செய்த ஜெமினியின் வண்ணக்காவியம்தான் "ஒளிவிளக்கு". ரசிகர்களின் கனவுப்படம் என்று சொன்னால் அது மிகையாகாது.

1968 செப் 20 ந்தேதி தீபாவளிக்கு முந்தைய மாதத்தில் வெளியான ஒரு அற்புதமான ரசனை மிகுந்த காவியம். எம்ஜிஆரின் ஸ்டைலுக்கும் அழகுக்கும் வண்ணமிகு நேர்த்தியான ஆடை வடிவமைப்புக்கும், அலங்காரத்துக்கும்
எத்தனை முறை பார்த்தாலும் இன்னெரு சொர்க்கம் போல கண்ணுக்குள் நிழலாடிக் கொண்டிருக்கும் எழில்மிகு ஓவியம்.

எம்ஜிஆரின். ஸ்டைலோடு கலந்த சுறுசுறுப்பை படத்தில் காணலாம். தீபாவளி ஒரு மாதத்திற்கு முன்பே வந்தது போல தமிழ் நாட்டில் "ஒளிவிளக்கு" திரையிடப்பட்ட திரையரங்குகள் விழாக்கோலம் பூண்டது. கிராமத்திலுள்ள மக்கள் அனைவரும் முந்தைய நாளே திரையரங்கின் முன் குவிந்ததால்
ஊரில் ஜனநடமாட்டம் அதிகம் காணப்பட்டது.

தூத்துக்குடியில்
தியேட்டர் வாசலில் டெலிவிஷன் மாடலில் செய்யப்பட்ட பெட்டியில் எம்ஜிஆரின் திரு உருவத்துடன் "ஒளிவிளக்கு" எம்ஜிஆரின் 100 வது
படம் என்ற வாசகத்துடன் கலர் விளக்குகளை சுழல விட்டு எம்ஜிஆர் ரசிகர்களின் கண்களுக்கு விருந்தளித்தனர் எம்ஜிஆர் மன்றத்தினர். அதை பார்க்க மக்கள் கூட்டம் முண்டியடித்து தியேட்டர் வாசலை நிரப்பி விடுவார்கள்.

"ஒளிவிளக்கு" படத்தின் வால் போஸ்டர் புதுமையான முறையில் கறுப்பு பார்டர் வைத்து மிக உயர்ந்த பேப்பரில் அடித்திருப்பார்கள். அதை எவ்வளவு நேரம் பார்த்தாலும் அலுப்பு தெரியாது. அதை பார்க்க எத்தனை கூட்டம் டிராபிக் ஜாம் ஆகிவிடும் அளவுக்கு. முதல் மூன்று நாள் தியேட்டர் முன்பு டிராபிக் தடை செய்யப்பட்டது.

சிலர் புலம்பிக் கொண்டே செல்வதை பார்த்திருக்கிறேன் சே! இந்த எம்ஜிஆர் படம் போட்டால் இந்த வழியில் வரவே முடியவில்லை.சிவாஜி படம் போட்டா எந்த பிரச்னையும் கிடையாது. இனிமேல் இந்த மாதிரி தியேட்டரில் எம்ஜிஆர் படம் போட அனுமதிக்க கூடாது என்று "பாலகிருஷ்ணா" தியேட்டரை வசை பாடிச் சென்ற அந்த பகுதி மக்களின் கஷ்டம் சிவாஜி ரசிகர்களுக்கு மட்டும் நன்றாகவே புரிந்திருக்கிறது. ஏனென்றால் எந்தச் சூழ்நிலையிலும் அவர்கள் மக்களுக்கு இப்படி ஒரு கஷ்டம் கொடுத்ததில்லை என்பதை நினைக்கும் போது அவர்களின் சமூக சேவை வெகுஜன பாராட்டுதலுக்கு உரியது.

சென்னையில் 5 தியேட்டரில் வெளியாகி 100 நாட்கள் ஓடாமலேயே 9,28,171.28. ரூ வசூலாக பெற்று சாதனை செய்தது. தமிழகத்திலும் கர்நாடகாவிலும் மொத்தம் 64 தியேட்டரில் வெளியாகி 63 திரையரங்குகளில் 50 நாட்கள் ஓடிய ஒரே தமிழ் படம் "ஒளிவிளக்கு"தான். இதை நாங்கள் ஒரு நாளும் சொல்லி தம்பட்டம் அடித்ததில்லை. ஆனால் சிவாஜி ரசிகர்கள் சில நாட்களுக்கு முன்
"சிவந்த மண்" 37 தியேட்டரில் 50 நாட்கள் ஓடியதாக விளம்பர பேப்பரை காட்டி இணையத்தில் சவால் விட்டதை பார்த்துதான் இந்த பதிவை நான் உங்கள் பார்வைக்கு வைக்கிறேன். சிவாஜி ரசிகர்களை கேட்கிறேன், உங்களின் எந்த படமாவது 50 தியேட்டரிலாவது வெளியாகி இருக்கிறதா? இருந்தால் வெளியிடுங்கள். அதன் பிறகு 50 நாளை பற்றி பார்க்கலாம்.

அந்த மாதிரி பிரமாண்ட செயல்களை செய்யக்கூடிய "ஜெமினி" நிறுவனத்தையே
"விளையாட்டு பிள்ளை"யால் மூட வைத்த பெருமை பெற்றவர்களே
இனி ஒரு சாதனை இதைப்போல் கிட்டுமோ?. அரிச்சந்திரா வில் ஒரு வசனம் சிவாஜி பேசுவார் முடி சூடிய மன்னனும் முடிவில் பிடி சாம்பலாவார் என்று. அது அவரை வைத்து படம் எடுத்துதான் என்பதை உணர்ந்தோம்.

நம்ம வடிவேலு பாணியில் சொல்வதானால் அய்யா! அய்யா! "எமனுக்கு எமன்" படம் நடிச்சீங்களே அய்யா! அந்த எமன் யாருன்னு தெரியாம உங்களை வைச்சு படமெடுத்து அழிஞ்சுட்டாங்களே அய்யா! இன்னும் உங்க கண்ணுல படாம நிறைய பேர் தப்பிச்சு இப்ப எங்க கழுத்தை அறுக்கிறானுவளே அய்யா!. நீங்கதான்யா நம்ம ரசிகனுவளை காப்பாத்தணுமய்யா. அவனுவளை அன்றே நீங்க கவனித்திருந்தால் இன்றைக்கு எங்களுக்கு இந்த நிலை வருமா அய்யா? சரி விஷயத்துக்கு வருவோம். இன்று வரை அதிக தியேட்டரில் 100 நாட்கள் ஓடிய சாதனை "மதுரை வீரனு"க்கே. அதேபோல் அதிக தியேட்டரில் 50 நாட்கள் ஓடிய சாதனை "ஒளி விளக்கு" படத்துக்குக்குதான் என்பதை உணருங்கள்.

எல்லா சாதனையும் தன்னலம் கருதாத எங்கள் தலைவனுக்கே எனும்போது மட்டற்ற மகிழ்ச்சியாக இருக்கிறது. இலங்கையில் முதல் வெளியீட்டில் மட்டும் 8 தியேட்டரில் 50 நாட்கள் ஓடியதை நாங்கள் கணக்கில் சேர்க்கவில்லை. அடுத்தடுத்து பலமுறை 50 நாட்களும் 100 நாட்களும் ஓடியதை கணக்கில் சேர்க்கவில்லை. "ஒளிவிளக்கு" Houseful போர்டை பார்த்தே மிரண்டு நம்ப மறுக்கும் நீங்கள் உண்மை என்பது கபசுர குடிநீர் போல மிகவும் கசப்பானது என்பதை உணர்ந்து அதை குடித்து உங்கள் எதிர்ப்பு நோயை தீர்த்துக் கொள்ளுங்கள்.

"ஒளிவிளக்கி"ன் மறு வெளியீட்டு சாதனையை அவ்வளவு எளிதில் சொல்லிவிட முடியாது என்பதால் உங்கள் நோய் தீர வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டு மீண்டும் அடுத்த பதிவில் சந்திக்க விழைகிறேன்..........

orodizli
24th July 2020, 02:50 PM
தூத்துக்குடி எம்.ஜி.ஆர் மன்றம் சார்பாக இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்ட பாரத ரத்னா டாக்டர் எம்.ஜி.ஆர் உருவம்பொறித்த ரூ100, ரூ 5 நாணயங்களை தூத்துக்குடியில் எம்.ஜி.ஆர். ரசிகர்களுக்கு வழங்கல்!!!
by thoothukudileaks on 01:21 in News, thoothukudinews
தூத்துக்குடி எம்.ஜி.ஆர் மன்றம் சார்பாக
இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்ட
பாரத ரத்னா டாக்டர் எம்.ஜி.ஆர் உருவம்பொறித்த
ரூ100, ரூ 5 நாணயங்களை தூத்துக்குடியில் எம்.ஜி.ஆர். ரசிகர்களுக்கு வழங்கல்!!!


தூத்துக்குடி புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர் மன்றம் சார்பில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு பிறந்தநாளை முன்னிட்டு இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டது.
2020 July 24 இன்று அந்த நாணயங்களைதூத்துக்குடி புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர் மன்றம் சார்பில் எம்.ஜி.ஆர் உருவம் பொறித்த ரூ 100, ரூ 5 நாணயங்களை தீவிர ரசிகர்களுக்கு வழங்கி மகிழ்ச்சி தெரிவித்தார்கள்.thoothukudileaks
தூத்துக்குடி புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர் மன்றம் சார்பில் அவரது உருவம் பொறித்த நாணயம் வழங்க மத்திய அரசை வற்புறுத்திவந்தது. அது போல் எம்.ஜி.ஆர் 100வது பிறந்தநாளில் அவரது உருவம் பொறித்த தபால் தலை வெளியிடவும் மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆர் ரசிகர்கள் தொடர்ந்து வற்புறுத்தி வந்தார்கள். மத்திய அரசு எம்.ஜி.ஆர் உருவம் பொறித்த நாணயம் வெளியிட நிதி அமைச்சகம்தான் முடிவு எடுக்க முடியும் என்று அறிவித்தது. தூத்துக்குடி எம்.ஜி.ஆர் மன்றம் தொடர்ந்து நிதி அமைச்சகத்தை வற்புறுத்தி கோரிக்கை மனு அனுப்பியது குறிப்பிடத்தக்கது.
தூத்துக்குடி எம்.ஜி.ஆர் மன்றம் கோரிக்கையை இந்திய ரிசர்வ வங்கி ஏற்றுக்கொண்டு எம்.ஜி.ஆர் உருவம் பொறித்த ரூ 100, ரூ5 நாணயங்கள் பெற ரூ 3055 கட்டணம் நிர்ணயம் செய்தது.
தமிழக முழுவதும் எம்.ஜி.ஆர் மன்ற நிர்வாகிகள் ரிசர்வ் வங்கிக்கு கட்டணம் அனுப்பிவைத்தனர்.
தூத்துக்குடி எம்.ஜி.ஆர் மன்றத்தினர் பணம் செலுத்தினர்
இதற்காக முதற்கட்டமாக 25 பேருக்கு இந்திய ரிசர்வ் வங்கி எம்.ஜி.ஆர் உருவம் பொறித்த நாணயம் அனுப்பிவைத்தது.
நாணயத்தில் வெள்ளி, காப்பர், நிக்கல், சினிக் போன்ற உலோகங்கள் கலந்து உள்ளது.
எம்.ஜி.ஆர் உருவம் பொறித்த நாணயங்கள் வழங்கும் விழா



தூத்துக்குடி புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர் மன்றம் சார்பில் தூத்துக்குடி பழைய மாநகராட்சி எம்.ஜி.ஆர் சிலை க்கு மன்றத்தினர்
மாலை அணிவித்து அதன்அருகே நடத்தினர். முன்னாள் நெல்லை, தூத்துக்குடி மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் மு.பாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார்.
இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்ட எம்.ஜி.ஆர் உருவம் பொறித்த ரூ100, ரூ 5 உருவநாணயங்களை தூத்துக்குடி புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் எஸ்.மோகன் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் தூத்துக்குடி நகராட்சி முன்னாள் துணை தலைவர் ரத்னம், தூத்துக்குடி நகர எம்.ஜி.ஆர் மன்ற தலைவர் எஸ்.சாமுவேல், தூத்துக்குடி மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற இணை செயலாளர் சத்யா இலட்சுமணன், தூத்துக்குடி வழக்கறிஞர் சங்க முன்னாள் தலைவர் வக்கீல் செங்குட்டுபவன், மின்சார வாரிய முன்னாள் அலுவலர் பால்ராஜ், முன்னாள் கோஆப்டெக்ஸ் அலுவலர் அய்யம்பெருமாள், கருங்குளம் எம்.ஜி.ஆர் இளைஞர் அணி தலைவர் சேரந்தையன், ஆசைத்தம்பி, உட்பட பலர் பங்கேற்றனர்.


இதற்கான ஏற்பாடுகளை எஸ்.மோகன், எஸ்.சாமுவேல் ஆகியோர் சிறப்பாக செய்து இருந்தனர்.
thoothukudileaks
thoothukudileaks
Date 24.07 - 2020
time 1.30 pm
Tags # News # thoothukudinews

Author Image
About thoothukudileaks
Soratemplates is a blogger resources site is a provider of high quality blogger template with premium looking layout and robust design. The main mission of templatesyard is to provide the best quality blogger templates.

YOU MAY ALSO LIKE:.........

fidowag
24th July 2020, 08:46 PM
பாட்டாலே புத்தி சொன்ன*வாத்தியார் எம்.ஜி.ஆர். -சகாப்தம்*நிகழ்ச்சியில் வின்*டிவியில்*03/07/20 அன்று திரு.துரை பாரதி*அளித்த*தகவல்கள்*
--------------------------------------------------------------------------------------------------------------------
சகாப்தம் நிகழ்ச்சி பல்வேறு திசைகளில் தகவல்களை பரவச்செய்து ,நம்மை பரவசம் அடைய செய்வதில் பெருமகிழ்ச்சி . பல அரிய தகவல்களோடு, பல*நண்பர்கள்* மற்றும் தொலைகாட்சி தொழில்நுட்பம் மூலமாகவும், பல்வேறு குறுஞ்செய்திகள் மூலமாகவும்* தகவல்கள் தந்த வண்ணம் இருக்கிறார்கள் .இந்த மாற்றத்திற்கு* உரியவர்**நமது மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள் .மறைந்தும் மறையாமல் மக்கள் மனதில் மக்கள் திலகமாக* நிறைந்து இருப்பதே.அந்த விளைவுக்கு பெரும் காரணம் .மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். மீதுள்ள நேசம் , இன்னும் தீராத பாசமாக , பாச பெருவெள்ளமாக ஓடிக் கொண்டே இருக்கிறது*என்பதற்கு சகாப்தம் நிகழ்ச்சி நாம் வாழும் காலத்தில் சரித்திர* சாதனையாக விளங்கி வருகிறது .


விவசாயி திரைப்படத்தில் எம்.ஜி.ஆர் கூழ் குடிக்கும் காட்சி படமாக்கப்பட இருந்தது .அன்று ,ராமாவரம் தோட்டத்தில் இருந்து கல்கண்டு பாத் எனும் இனிப்பு நிறைந்த கூழ் தயாரிக்கப்பட்டு,அதில் ஐஸ் கலந்து* சுமார் 20 பிளாஸ்க்குகளில் நிரப்பப்பட்டு , படப்பிடிப்பில் கலந்து கொண்ட கலைஞர்கள், தொழிலாளர்கள் உள்பட* 100க்கு மேற்பட்டவர்களுக்கு எம்.ஜி.ஆர். வழங்கினார் . மற்றவர்களை உண்ணவைத்து, அதை ரசித்து பார்க்கும் மனோபாவம் எம்.ஜி.ஆருக்கு இருந்தது என்று வியந்து எழுதி இருக்கிறார் நடிகர் மேஜர் சுந்தர்ராஜன் .


ஒரு நாள் மேஜர் சுந்தரராஜன் நடித்த நாடகம் எம்.ஜி.ஆர். தலைமையில் நடக்கிறது . நாடகம் முடிந்த பிறகு டாக்சி ஒன்றும் கிடைக்காததால் அவதிப்பட்ட*மேஜர் சுந்தர்ராஜனை ,எம்.ஜி.ஆர். தனது காரில் ஏற்றிக்* கொண்டு* திருவல்லிக்கேணியில் உள்ள மேஜரின் வீட்டில் இறக்கி விடுகிறார் . அப்போது மேஜர் ,நீங்கள் தவறாக நினைக்க வேண்டாம். நான் வசிப்பது ஒரு சிறிய வீட்டில் .உங்களுக்கு போதுமான அளவு வசதியாக இருக்காது . அதனால்தான் நான் வீட்டிற்கு அழைக்கவில்லை . நீங்கள் இப்படியே உங்கள் வீட்டுக்கு செல்லுங்கள் என்றார் .பதிலுக்கு எம்.ஜி.ஆர். இதைவிட சிறிய வீட்டில் , காற்று வசதி , மின்விசிறி கூட இல்லாமல் , வாடகை வீட்டில் நான் வசித்துள்ளேன்,பரவாயில்லை ஒன்றும் பிரச்னை இல்லை என்றார் .* எம்.ஜி.ஆர். மேஜரின் வீட்டில் நுழைந்த பின்னர் , உங்களிடம் ஆட்டோகிராப் வாங்குவதற்கு என்னிடம் நோட்டு புத்தகம் ஒன்றுமில்லை என்ன செய்வது என்று கேட்டபோது ,சற்றும் தாமதிக்காமல் ,எம்.ஜி.ஆர். தன் சட்டை பாக்கெட்டில் இருந்த பேட்ஜை*கழற்றி , அதன் பின் பக்கத்தில் உழைப்பே உயர்வை தரும், வாழ்க வளமுடன் என்று எழுதி கையெழுத்து போட்டு கொடுத்தார் என்று மேஜர் சுந்தரராஜன் ஒரு*பேட்டியில்* கூறியிருக்கிறார் .


நல்ல நேரம் படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் எம்.ஜி.ஆரை ,மேஜர் சுந்தரராஜன் துப்பாக்கியை திருப்பி ,எம்.ஜி.ஆர். வயிற்றில் குத்துவது போல நூலிழையில் நிறுத்த வேண்டும் . மேஜர் சுந்தரராஜன் சற்று தயங்கினார் . உடனே எம்ஜி.ஆர்.*இது நடிப்புதான் .என்னை எம்.ஜி.ஆர். என்று பார்க்க கூடாது . நான் கதாநாயகன், நீங்கள் வில்லன் என்ற நினைப்போடு நடியுங்கள் என்று கூறி , அவருக்கு போதுமான அளவு பயிற்சி அளித்து, ஒத்திகை பார்த்த* பின்னர் அந்த காட்சி படமாக்கப்பட்டது . .


காதல் வாகனம் திரைப்படத்தில் ஒரு காட்சியில் எம்.ஜி.ஆர். கைது செய்யப்படுகிறார் .அப்போது தந்தையாக உள்ள மேஜர் சுந்தரராஜன் காலில் எம்.ஜி.ஆர் கைகளில் விலங்குடன்*. திடீரென விழுந்து வணங்கி* எழும் காட்சியில் மேஜர் பதறிப்போய்* சற்று பின்வாங்கி விடுகிறார் . அந்த காட்சி சரியாக அமையவில்லை என்று இயக்குனர் சொல்கிறார் . உடனே எம்.ஜி.ஆர். மேஜரை அழைத்து ஒரு நடிகன் காமிராவுக்கு முன்பு நடிக்கும்போது நடிகன்தான் .நீங்கள் ஏன் என்னை எம்.ஜி.ஆர். என்று பார்க்கிறீர்கள் .படத்தில் நான் உங்களுக்கு மகன் .எந்த காட்சிக்கும், எப்போதும் தயாராக இருக்க வேண்டும் . இப்படித்தான் நாங்கள் நாடகத்திலும், சினிமாவிலும்* *பழகி இருக்கிறோம்* என்று சொல்லி ,மீண்டும் ஒத்திகை பார்த்து ,அந்த காட்சியை ஓ.கே. செய்தார்கள் .


எம்.ஜி.ஆர். தன்னுடைய படப்பிடிப்பில் நடிக்கும் நடிகர் நடிகைகள் யாருக்காவது அன்றைக்கு மாலையில் நாடகம் இருந்தால் முன்கூட்டியே அவர்களது காட்சிகளை எடுத்து முடிக்க சொல்லி ,உரிய நேரத்தில் அனுப்புவது வழக்கம் .ஒரு நாள் மேஜர் சுந்தரராஜன் படப்பிடிப்பில் இருக்கும்போது , இயக்குனர் திருமுகத்திடம் எனக்கு மாலையில் நாடகம் இருக்கிறது .அதனால் என்னுடைய*காட்சிகளை கொஞ்சம் சீக்கிரம் முடி த்துவிடுங்கள் என்று கூறி இருக்கிறார் .ஆனால் எம்.ஜி.ஆருக்கு இந்த விஷயம் தெரியாது .ஒரு கட்டத்தில் பொறுமை இழந்த மேஜர் சுந்தரராஜன் ,நேரடியாக எம்.ஜி.ஆரிடம் எனக்கு இன்று மாலை 6 மணிக்கு நாடகம் இருக்கிறது . நான் இயக்குனரிடம் பலமுறை* சொல்லியும்* உரிய நேரத்தில் காட்சிகளை எடுத்து முடிக்காமல் தாமதம் செய்கிறார்கள் என்று சொன்னார் . உடனே எம்.ஜி.ஆர். இயக்குனர் திருமுகத்தை அழைத்து,உனக்கு நாடகம் நடத்துவது பற்றி அவ்வளவாக விஷயங்கள் தெரிய வாய்ப்பில்லை.*நாடகம் என்பது மேடையில் நடிக்கும்போது பொதுமக்களின் நேரடி பார்வை, ரசிப்பு தன்மை, பாராட்டு, விமர்சனம் ஆகியவை அடங்கியது .ஆகவே,இனியும் தாமதிக்காமல் மேஜரின் காட்சிகளை சீக்கிரம் முடித்து உடனே அனுப்புங்கள் .தாமதாவதாக இருந்தால் இன்னொரு நாள் கூட காட்சிகளை வைத்துக் கொள்ளலாம் .என்னுடைய காட்சிகள் ஏதேனும் இருந்தால் நான் எவ்வளவு நேரமானாலும் நடித்து விட்டு போகிறேன் .இனிமேல் இந்தமாதிரி தவறுகள் நடக்காமல் பார்த்து கொள்ளுங்கள் என்று அறிவுரை சொன்னார் .அந்த அளவிற்கு எம்.ஜி.ஆருக்கு நாடகங்கள் மீது ஒருவித ஈர்ப்பு உண்டு .*


பொதுவாக, நாடகங்களுக்கு தலைமை தாங்க எம்.ஜி.ஆர். அவர்களை அழைக்கும்போது , நாடகங்களை அரை குறையாக பார்ப்பது, பாதியில் எழுந்து போவது , அல்லது தலைமை தாங்கியவுடன் புறப்பட்டுவிடுவது போன்ற விஷயங்களில் எம்.ஜி.ஆருக்கு உடன்பாடு இல்லை . தலைமை தாங்கியபின்*நாடகங்களை முழுமையாக பார்த்தபின் , மேடையில் ஒவ்வொரு நாடக கலைஞரின் பெயரை சொல்லி , நடிப்பை ரசித்து,விமர்சித்து பாராட்டுவார் .சில நேரங்களில் தன் சொந்த செலவில் பரிசுகளும் வழங்கியதுண்டு .சினிமாவில் நடித்து வரும்போது ஆரம்ப காலங்களில் நாடகங்களில் நடிப்பது, நடத்துவது என்பது எம்.ஜி.ஆருக்கு* மிகவும்**பிடித்தமான விஷயம் .



சென்னை வள்ளுவர் கோட்டத்தில் அன்னை தெரசா முன்னிலையில், எம்.ஜி.ஆர். தலைமையில் ஒரு நிகழ்ச்சி நடைபெறுகிறது . பல முக்கிய விருந்தினர்கள்* பல்வேறு தலைவர்கள்*கலந்து கொண்டனர் சுமார் 3 மணி நேரம் நிகழ்ச்சி நடைபெறுகிறது .. நிகழ்ச்சி நடக்கும்போது* இடையே சிலர் எழுந்து செல்வது ,வருவது என்று இருந்தார்கள் . ஆனால் அந்த 3 மணி நேரமும் எம்.ஜி.ஆர். மட்டும் தான் உட்கார்ந்த இடத்தில இருந்து நகரவே இல்லை .நிகழ்ச்சி முடிந்ததும் ,அன்னை தெரசா, எம்.ஜி.ஆரின் கைகளை பற்றிக் கொண்டு, எப்படி நீங்கள் மட்டும் இருக்கையை விட்டு நகராமல் எல்லோருடைய பேச்சையும் கேட்டீர்கள்,எல்லோருக்கும் பதில் சொன்னீர்கள் ,எப்படி நீங்கள் ஒருவர் மட்டும்* பொறுமை காத்தீர்கள் என்று கேட்டார் . பதிலுக்கு எம்.ஜி.ஆர். எல்லாமே,உங்களை போன்ற சேவை மனப்பான்மை உடைய தலைவர்களிடம் இருந்து கற்றுக் கொண்டதுதான் . நான் இந்த நிகழ்ச்சிக்கு தலைமை தாங்குகிறேன் , நானே தவறு செய்தால், விழாவிற்கு வந்துள்ள பொதுமக்கள் என்ன நினைப்பார்கள் , நீங்கள் என்ன நினைப்பீர்கள், விழா குழுவினரோ , கூட்டத்தில் கலந்து கொண்டவர்களோ* இனிவரும் நிகழ்ச்சிகளிலாவது இப்படி*ஒழுங்கீனமாக நடக்க கூடாது என்பதற்கு உதாரணமாக இருக்க வேண்டும் என்பதற்காக த்தான்* ஒழுக்கத்தை கடைபிடித்து இருக்கையில் அமர்ந்து எல்லாவற்றையும் கவனித்தேன் என்று சொன்னார் .*



எம்.ஜி.ஆர். என்கிற அரிய மாமனிதரின் ,வரலாற்றை, அரிய* வாழ்க்கையை ,ஏழை எளியவரின் நம்பிக்கை நட்சத்திரமாக திகழ்ந்தவரின் பல்வேறு வகையான வாழ்க்கை எடுத்துக் காட்டுக்களை தொடர்ந்து மக்களுடன்* அடுத்த*அத்தியாயத்தில் பகிர்ந்து கொள்வோம் .


நிகழ்ச்சியில் ஒலித்த பாடல்கள் /காட்சிகள் விவரம் .
-------------------------------------------------------------------------------
1.தாய் மேல் ஆணை* - நான் ஆணையிட்டால்*

2.பிறந்த இடம் தேடி நடந்த தென்றலே - நான் ஆணையிட்டால்*

3.புத்தன் இயேசு, காந்தி பிறந்தது - சந்திரோதயம்*

4.பார்க்க பார்க்க சிரிப்பு வருது - நீதிக்கு தலைவணங்கு*

5.மேடையில் எம்.ஜி.ஆர் .- தேர்த்திருவிழா*

6. நான் யார் நான் யார் நீ யார் -குடியிருந்த கோயில்*

7.கிளைமாக்ஸ் காட்சியில் எம்.ஜி.ஆர்.-நல்ல நேரம்*

8.எம்.ஜி.ஆர். -மஞ்சுளா -லதா உரையாடல் - நேற்று இன்று நாளை*

9.இன்னொரு வானம் , இன்னொரு நிலவு - நேற்று இன்று நாளை*

10.எம்.ஜி.ஆர்.-மஞ்சுளா உரையாடல் - இதயவீணை*

11.நாடு அதை நாடு - நாடோடி*



















*

orodizli
25th July 2020, 01:25 PM
#கடைக்கோடி #ரசிகனுக்கும் #மதிப்பளித்த #வாத்தியார்

மக்கள்திலகம் தனது திரைப்படங்களைக் காணவரும் ரசிகர்களை ஏமாற்றியதில்லை. உழைத்துக் களைத்து படம் பார்க்க வரும் மக்கள், படத்தைப் பார்த்துவிட்டு திருப்தியாக செல்லும் வகையிலேயே அவரது படங்கள் இருக்கும். பொழுதுபோக்கோடு நல்ல கருத்துக்களும் இருக்கும். படங்களில் மட்டுமின்றி; நிஜவாழ்விலும் தன்னைக் காணவரும் ரசிர்களுக்கு மதிப்பளித்து அவர்களை மகிழ்ச்சிப்படுத்தியவர் அவர்!

சாண்டோ சின்னப்பா தேவர் தயாரித்த ‘தேர்த் திருவிழா’ படத்தின் படப்பிடிப்பு கும்பகோணம் அருகே ஏழு மைல் தொலைவில் காவிரி ஆற்றில் நடந்தது. படப் பிடிப்பு நடந்த சமயம் கோடைக்காலம். எம்.ஜி.ஆர். வந்திருப்பதை அறிந்து ஏராளமான மக்கள் கூடிவிட்டனர். ‘‘படப்பிடிப்பு நடக்கும் இடத்துக்கு வந்து யாரும் தொல்லை செய்யக் கூடாது’’ என்று ஒலிப்பெருக்கி மூலம் எம்.ஜி.ஆர். அன்புக் கட்டளையிட்டார்.

அவர் வார்த்தைக்கு மதிப்பளித்து ஒருவர்கூட படப்பிடிப்பு நடக்கும் இடத்தின் அருகே செல்லவில்லை. கொதிக்கும் மணலில் நின்றபடியே தூரத்தில் இருந்து எம்.ஜி.ஆரைப் பார்த்து ரசித்தனர்.

வெயிலில் நிற்கும் மக்களுக்கு உணவுப் பொட்டலங்கள், மோர், தண்ணீர் கொடுக்க எம்.ஜி.ஆர். ஏற்பாடு செய்தார்.

பத்து நாட்களுக்கு மேல் படப்பிடிப்பு நடந்தது. தினமும் படப்பிடிப்பு முடிந்து கும்பகோணம் திரும்பும் வழியில் சாலையின் இரு புறமும் மக்கள் கூடி நின்று எம்.ஜி.ஆரை வாழ்த்தினர். மாலை அணிவித்தும் ஆரத்தி எடுத்தும் அன்பை வெளிப்படுத்தினர்.

படப்பிடிப்பு குழுவினர் கும்பகோணம் டி.எஸ்.ஆர். இல்லத்தில் தங்கியிருந்த னர். அங்கும் தினமும் வாசலில் ரசிகர்கள் திரண்டனர். அவர்களின் விருப்பத்தை நிறைவேற்ற எம்.ஜி.ஆர். முடிவு செய்தார்.

படப்பிடிப்பின் கடைசி நாளன்று திறந்த வேனில் ஏறி நின்று ரசிகர்களின் வாழ்த்துக்களை ஏற்றுக் கொண்டார். சக கலைஞர்களையும் கவுரவிக்கும் வகையில் அவர்களையும் வேனில் ஏறச் சொல்லி மக்களின் வாழ்த்துக்களை ஏற்கச் செய்தார்.

ஒரு ரசிகர் கூட்டத்தில் முண்டியடித்து முன்னேறினார். அவரை எம்.ஜி.ஆரின் உதவியாளர்கள் தடுத்தனர்.

அதை கவனித்த எம்.ஜி.ஆர்., அந்த ரசிகரை அருகில் வரும்படி சைகை செய்தார். சின்னப்பா தேவர் அந்த ரசிகரை ‘அலாக்’காக தூக்கி வேன் மேலே ஏற்றினார். தன் கையில் வைத்திருந்த கடலைப் பொட்ட லத்தை எம்.ஜி.ஆரிடம் கொடுத்தார் அந்த ரசிகர். உடனேயே, ஒவ்வொரு கடலையாக வாயில் போட்டுக் கொள்ள ஆரம்பித் தார் எம்.ஜி.ஆர்.!

உலகையே ஜெயித்துவிட்ட திருப்தி அந்த ரசிகரின் முகத்தில் ஜொலித்தது. இந்தக் காட்சிகளைப் பார்த்துக் கொண்டிருந்த கூட்டம் ஆர்ப்பரித்தது!.................

orodizli
25th July 2020, 01:26 PM
விவசாயி திரைப்படத்தில் எம்.ஜி.ஆர் கூழ் குடிக்கும் காட்சி படமாக்கப்பட இருந்தது .அன்று ,ராமாவரம் தோட்டத்தில் இருந்து கல்கண்டு பாத் எனும் இனிப்பு நிறைந்த கூழ் தயாரிக்கப்பட்டு,அதில் ஐஸ் கலந்து சுமார் 20 பிளாஸ்க்குகளில் நிரப்பப்பட்டு , படப்பிடிப்பில் கலந்து கொண்ட கலைஞர்கள், தொழிலாளர்கள் உள்பட 100க்கு மேற்பட்டவர்களுக்கு எம்.ஜி.ஆர். வழங்கினார் . மற்றவர்களை உண்ணவைத்து, அதை ரசித்து பார்க்கும் மனோபாவம் எம்.ஜி.ஆருக்கு இருந்தது என்று வியந்து எழுதி இருக்கிறார் நடிகர் மேஜர் சுந்தர்ராஜன் .

ஒரு நாள் மேஜர் சுந்தரராஜன் நடித்த நாடகம் எம்.ஜி.ஆர். தலைமையில் நடக்கிறது . நாடகம் முடிந்த பிறகு டாக்சி ஒன்றும் கிடைக்காததால் அவதிப்பட்ட மேஜர் சுந்தர்ராஜனை ,எம்.ஜி.ஆர். தனது காரில் ஏற்றிக் கொண்டு திருவல்லிக்கேணியில் உள்ள மேஜரின் வீட்டில் இறக்கி விடுகிறார் . அப்போது மேஜர் ,நீங்கள் தவறாக நினைக்க வேண்டாம். நான் வசிப்பது ஒரு சிறிய வீட்டில் .உங்களுக்கு போதுமான அளவு வசதியாக இருக்காது . அதனால்தான் நான் வீட்டிற்கு அழைக்கவில்லை . நீங்கள் இப்படியே உங்கள் வீட்டுக்கு செல்லுங்கள் என்றார் .பதிலுக்கு எம்.ஜி.ஆர். இதைவிட சிறிய வீட்டில் , காற்று வசதி , மின்விசிறி கூட இல்லாமல் , வாடகை வீட்டில் நான் வசித்துள்ளேன்,பரவாயில்லை ஒன்றும் பிரச்னை இல்லை என்றார் . எம்.ஜி.ஆர். மேஜரின் வீட்டில் நுழைந்த பின்னர் , உங்களிடம் ஆட்டோகிராப் வாங்குவதற்கு என்னிடம் நோட்டு புத்தகம் ஒன்றுமில்லை என்ன செய்வது என்று கேட்டபோது ,சற்றும் தாமதிக்காமல் ,எம்.ஜி.ஆர். தன் சட்டை பாக்கெட்டில் இருந்த பேட்ஜை கழற்றி , அதன் பின் பக்கத்தில் உழைப்பே உயர்வை தரும், வாழ்க வளமுடன் என்று எழுதி கையெழுத்து போட்டு கொடுத்தார் என்று மேஜர் சுந்தரராஜன் ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார் .

நல்ல நேரம் படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் எம்.ஜி.ஆரை ,மேஜர் சுந்தரராஜன் துப்பாக்கியை திருப்பி ,எம்.ஜி.ஆர். வயிற்றில் குத்துவது போல நூலிழையில் நிறுத்த வேண்டும் . மேஜர் சுந்தரராஜன் சற்று தயங்கினார் . உடனே எம்ஜி.ஆர். இது நடிப்புதான் .என்னை எம்.ஜி.ஆர். என்று பார்க்க கூடாது . நான் கதாநாயகன், நீங்கள் வில்லன் என்ற நினைப்போடு நடியுங்கள் என்று கூறி , அவருக்கு போதுமான அளவு பயிற்சி அளித்து, ஒத்திகை பார்த்த பின்னர் அந்த காட்சி படமாக்கப்பட்டது . .

காதல் வாகனம் திரைப்படத்தில் ஒரு காட்சியில் எம்.ஜி.ஆர். கைது செய்யப்படுகிறார் .அப்போது தந்தையாக உள்ள மேஜர் சுந்தரராஜன் காலில் எம்.ஜி.ஆர் கைகளில் விலங்குடன் . திடீரென விழுந்து வணங்கி எழும் காட்சியில் மேஜர் பதறிப்போய் சற்று பின்வாங்கி விடுகிறார் . அந்த காட்சி சரியாக அமையவில்லை என்று இயக்குனர் சொல்கிறார் . உடனே எம்.ஜி.ஆர். மேஜரை அழைத்து ஒரு நடிகன் காமிராவுக்கு முன்பு நடிக்கும்போது நடிகன்தான் .நீங்கள் ஏன் என்னை எம்.ஜி.ஆர். என்று பார்க்கிறீர்கள் .படத்தில் நான் உங்களுக்கு மகன் .எந்த காட்சிக்கும், எப்போதும் தயாராக இருக்க வேண்டும் . இப்படித்தான் நாங்கள் நாடகத்திலும், சினிமாவிலும் பழகி இருக்கிறோம் என்று சொல்லி ,மீண்டும் ஒத்திகை பார்த்து ,அந்த காட்சியை ஓ.கே. செய்தார்கள் .

எம்.ஜி.ஆர். தன்னுடைய படப்பிடிப்பில் நடிக்கும் நடிகர் நடிகைகள் யாருக்காவது அன்றைக்கு மாலையில் நாடகம் இருந்தால் முன்கூட்டியே அவர்களது காட்சிகளை எடுத்து முடிக்க சொல்லி ,உரிய நேரத்தில் அனுப்புவது வழக்கம் .ஒரு நாள் மேஜர் சுந்தரராஜன் படப்பிடிப்பில் இருக்கும்போது , இயக்குனர் திருமுகத்திடம் எனக்கு மாலையில் நாடகம் இருக்கிறது .அதனால் என்னுடைய காட்சிகளை கொஞ்சம் சீக்கிரம் முடி த்துவிடுங்கள் என்று கூறி இருக்கிறார் .ஆனால் எம்.ஜி.ஆருக்கு இந்த விஷயம் தெரியாது .ஒரு கட்டத்தில் பொறுமை இழந்த மேஜர் சுந்தரராஜன் ,நேரடியாக எம்.ஜி.ஆரிடம் எனக்கு இன்று மாலை 6 மணிக்கு நாடகம் இருக்கிறது . நான் இயக்குனரிடம் பலமுறை சொல்லியும் உரிய நேரத்தில் காட்சிகளை எடுத்து முடிக்காமல் தாமதம் செய்கிறார்கள் என்று சொன்னார் . உடனே எம்.ஜி.ஆர். இயக்குனர் திருமுகத்தை அழைத்து,உனக்கு நாடகம் நடத்துவது பற்றி அவ்வளவாக விஷயங்கள் தெரிய வாய்ப்பில்லை. நாடகம் என்பது மேடையில் நடிக்கும்போது பொதுமக்களின் நேரடி பார்வை, ரசிப்பு தன்மை, பாராட்டு, விமர்சனம் ஆகியவை அடங்கியது .ஆகவே,இனியும் தாமதிக்காமல் மேஜரின் காட்சிகளை சீக்கிரம் முடித்து உடனே அனுப்புங்கள் .தாமதாவதாக இருந்தால் இன்னொரு நாள் கூட காட்சிகளை வைத்துக் கொள்ளலாம் .என்னுடைய காட்சிகள் ஏதேனும் இருந்தால் நான் எவ்வளவு நேரமானாலும் நடித்து விட்டு போகிறேன் .இனிமேல் இந்தமாதிரி தவறுகள் நடக்காமல் பார்த்து கொள்ளுங்கள் என்று அறிவுரை சொன்னார் .அந்த அளவிற்கு எம்.ஜி.ஆருக்கு நாடகங்கள் மீது ஒருவித ஈர்ப்பு உண்டு .

பொதுவாக, நாடகங்களுக்கு தலைமை தாங்க எம்.ஜி.ஆர். அவர்களை அழைக்கும்போது , நாடகங்களை அரை குறையாக பார்ப்பது, பாதியில் எழுந்து போவது , அல்லது தலைமை தாங்கியவுடன் புறப்பட்டுவிடுவது போன்ற விஷயங்களில் எம்.ஜி.ஆருக்கு உடன்பாடு இல்லை . தலைமை தாங்கியபின் நாடகங்களை முழுமையாக பார்த்தபின் , மேடையில் ஒவ்வொரு நாடக கலைஞரின் பெயரை சொல்லி , நடிப்பை ரசித்து,விமர்சித்து பாராட்டுவார் .சில நேரங்களில் தன் சொந்த செலவில் பரிசுகளும் வழங்கியதுண்டு .சினிமாவில் நடித்து வரும்போது ஆரம்ப காலங்களில் நாடகங்களில் நடிப்பது, நடத்துவது என்பது எம்.ஜி.ஆருக்கு மிகவும் பிடித்தமான விஷயம் ..........

orodizli
25th July 2020, 01:33 PM
#எம்ஜிஆர்_ரசிகர்களுக்கு_மதிப்பளித்து_மகிழ்ச்சிப்பட ுத்தியவர்!

M.g.r. தனது திரைப்படங்களைக் காணவரும் ரசிகர்களை ஏமாற்றியதில்லை. உழைத்துக் களைத்து படம் பார்க்க வரும் மக்கள், படத்தைப் பார்த்துவிட்டு திருப்தியாக செல்லும் வகையிலேயே அவரது படங்கள் இருக்கும். பொழுதுபோக்கோடு நல்ல கருத்துக்களும் இருக்கும். படங்களில் மட்டுமின்றி; நிஜவாழ்விலும் தன்னைக் காணவரும் ரசிர்களுக்கு மதிப்பளித்து அவர்களை மகிழ்ச்சிப்படுத்தியவர் அவர்!

சாண்டோ சின்னப்பா தேவர் தயாரித்த ‘தேர்த் திருவிழா’ படத்தின் படப்பிடிப்பு கும்ப கோணம் அருகே ஏழு மைல் தொலை வில் காவிரி ஆற்றில் நடந்தது. படப் பிடிப்பு நடந்த சமயம் கோடைக்காலம். எம்.ஜி.ஆர். வந்திருப்பதை அறிந்து ஏராளமான மக்கள் கூடிவிட்டனர். ‘‘படப்பிடிப்பு நடக்கும் இடத்துக்கு வந்து யாரும் தொல்லை செய்யக் கூடாது’’ என்று ஒலிப்பெருக்கி மூலம் எம்.ஜி.ஆர். அன்புக் கட்டளையிட்டார்.


அவர் வார்த்தைக்கு மதிப்பளித்து ஒருவர்கூட படப்பிடிப்பு நடக்கும் இடத்தின் அருகே செல்லவில்லை. கொதிக்கும் மணலில் நின்றபடியே தூரத்தில் இருந்து எம்.ஜி.ஆரைப் பார்த்து ரசித்தனர். வெயிலில் நிற்கும் மக்களுக்கு உணவுப் பொட்டலங்கள், மோர், தண்ணீர் கொடுக்க எம்.ஜி.ஆர். ஏற்பாடு செய்தார். பத்து நாட்களுக்கு மேல் படப்பிடிப்பு நடந்தது. தினமும் படப்பிடிப்பு முடிந்து கும்பகோணம் திரும்பும் வழியில் சாலையின் இரு புறமும் மக்கள் கூடி நின்று எம்.ஜி.ஆரை வாழ்த்தினர். மாலை அணிவித்தும் ஆரத்தி எடுத்தும் அன்பை வெளிப் படுத்தினர்.

படப்பிடிப்பு குழுவினர் கும்பகோணம் டி.எஸ்.ஆர். இல்லத்தில் தங்கியிருந்த னர். அங்கும் தினமும் வாசலில் ரசிகர்கள் திரண்டனர். அவர்களின் விருப்பத்தை நிறைவேற்ற எம்.ஜி.ஆர். முடிவு செய்தார். படப்பிடிப்பின் கடைசி நாளன்று திறந்த வேனில் ஏறி நின்று ரசிகர்களின் வாழ்த்துக்களை ஏற்றுக் கொண்டார். சக கலைஞர்களையும் கவுரவிக்கும் வகையில் அவர்களையும் வேனில் ஏறச் சொல்லி மக்களின் வாழ்த்துக்களை ஏற்கச் செய்தார்.

ஒரு ரசிகர் கூட்டத்தில் முண்டியடித்து முன்னேறினார். அவரை எம்.ஜி.ஆரின் உதவியாளர்கள் தடுத்தனர். அதை கவனித்த எம்.ஜி.ஆர்., அந்த ரசிகரை அருகில் வரும்படி சைகை செய்தார். சின்னப்பா தேவர் அந்த ரசிகரை ‘அலாக்’காக தூக்கி வேன் மேலே ஏற்றினார். தன் கையில் வைத்திருந்த கடலைப் பொட்ட லத்தை எம்.ஜி.ஆரிடம் கொடுத் தார் அந்த ரசிகர். உடனேயே, ஒவ்வொரு கடலையாக வாயில் போட்டுக் கொள்ள ஆரம்பித் தார் எம்.ஜி.ஆர்.! உலகையே ஜெயித்துவிட்ட திருப்தி அந்த ரசிகரின் முகத்தில் ஜொலித்தது. இந்தக் காட்சிகளைப் பார்த்துக் கொண்டிருந்த கூட்டம் ஆர்ப்பரித்தது!

எம்.ஜி.ஆர். சொந்தமாக தயாரித்து, நடித்த ‘அடிமைப் பெண்’ திரைப்படம் 1969-ம் ஆண்டின் பிரம்மாண்டமான வெற்றிப் படம். மதுரை சிந்தாமணி திரையரங்கில் வெள்ளி விழா கொண்டாடியது. அந்த திரையரங்கில் நடந்த வெற்றி விழாவில் எம்.ஜி.ஆரும் சக கலைஞர்களும் கலந்து கொண்டனர். விழாவில் கலந்துகொள்வதற்காக மதுரை வந்த எம்.ஜி.ஆர்., பாண்டியன் ஓட்டலில் தங்கியிருந்தார். காலையில் இருந்தே ஓட்டல் முன் மக்கள் திரள ஆரம்பித்தனர்.

விழாவுக்கு எம்.ஜி.ஆர். புறப்பட்ட போது, பாண்டியன் ஓட்டலில் இருந்து சிந்தாமணி டாக்கீஸ் வரை இருபுறமும் மக்கள் திரண்டு நின்று வாழ்த்துக் கோஷங்களை எழுப்பினர். அதற்குமுன் தியேட்டர்களில் நடந்த நூறாவது நாள் விழாக்களில் நடிகர், நடிகைகள் கருப்பு கண்ணாடி ஏற்றிய காரில் செல்வார்கள். தியேட்டரில் இருப்பவர்கள் மட்டுமே அவர்களைப் பார்க்க முடியும்.

ஆனால், ‘அடிமைப் பெண்’ வெற்றி விழாவின்போது, பொதுமக்களும் பார்க்க வசதியாக எம்.ஜி.ஆர். திறந்த வேனில் வந்தார். தேர்தல் பிரசாரத் துக்கு தான் பயன்படுத்தும் வேனில் ஜெயலலிதா, பண்டரிபாய் ஆகியோரு டன் நின்று கொண்டே வந்தார். வழிநெடுக மக்களின் ஆர்ப்பாட்டமான வரவேற்பை கையசைத்தும், கும்பிட்டபடியும் ஏற்றுக் கொண்டார். ‘அடிமைப் பெண்’ படப்பிடிப் புக்காக ராஜஸ்தானுக்கு எம்.ஜி.ஆர். சென்றபோதுதான் அவருக்குத் தொப்பி அணியும் பழக்கம் ஏற்பட்டது. திரை யரங்குக்கு தொப்பி, கண்ணாடியுடன் வந்த எம்.ஜி.ஆரைப் பார்த்த ரசிகர்கள் எழுப்பிய கரவொலியிலும் உற்சாக ஆரவாரத்திலும் மதுரையே குலுங்கியது!

திரையரங்கில் மதியக் காட்சியிலும் பின்னர் மாலைக் காட்சியிலும் இடை வேளையின்போது மேடையில் எம்.ஜி.ஆர். தோன்றி நன்றி தெரிவித்துப் பேசினார். அவருடன் கைகுலுக்க போட்டியிட்ட ரசிகர்களுடன் கைகுலுக்கி அவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தினார். இதற்கு நடுவே, திரையரங்கு அலு வலகத்தில் அமர்ந்து ஊழியர்கள், பார்வையாளர்களை சந்தித்துப் பேசினார்.

தமிழ் திரையுலகின் தன்னிகரில்லா சூப்பர் ஸ்டார், செல்வாக்கு மிக்க அரசியல் தலைவர் என்பதையெல்லாம் தாண்டி எம்.ஜி.ஆரிடம் தூக்கலாக இருந்த குணம் மனிதாபிமானம்.

ஒவ்வொருவரையும் மகிழ்ச்சிப்படுத்த வேண்டும் என்பதில் எம்.ஜி.ஆர். எப்போதும் உறுதியாக இருப்பார். சிந்தாமணி திரையரங்கிலும் அவரது மனிதநேயம் வெளிப்பட்டது. தியேட்டர் அலுவலகத்தில் அவர் அமர்ந்திருந்த போது, கடமையே கண்ணாக பாதுகாப்புக்கு நின்றுகொண்டிருந்த போலீஸாரை எம்.ஜி.ஆர். அழைத்தார். அவர்களுடைய பணி மற்றும் குடும்ப விவரங்களை அன்போடு கேட்டறிந்து கைகுலுக்கி வாழ்த்தினார். போலீஸாரின் முகங்கள் ஆயிரம் வாட்ஸ் விளக்காய் பிரகாசித்தது!

எம்.ஜி.ஆருக்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் உண்டு. ஆனால், பல தளங்களிலும் உள்ள விதவிதமான தனது ரசிகர்களை நேசித்து ரசித்தவர் எம்.ஜி.ஆர்.!

‘குடியிருந்த கோயில்’ படத்தில் எம்.ஜி.ஆருக்கு இரட்டை வேடங்கள். ஓட்டலில் நடனமாடி பாடும் கலைஞராக ஒரு பாத்திரம். அறிமுகக் காட்சியில் ‘என்னைத் தெரியுமா?...’ பாடலில் திரையரங்கில் இருக்கும் ரசிகர்களைப் பார்த்தபடி திரையில் எம்.ஜி.ஆர். பாடி நடிக்கும் வரிகள்...

‘ஆஹா ரசிகன்... ஆஹா ரசிகன்,

நல்ல ரசிகன்... நல்ல ரசிகன்

உங்கள் ரசிகன்... உங்கள் ரசிகன்...!’......

fidowag
25th July 2020, 11:07 PM
பாட்டாலே புத்தி சொன்ன*வாத்தியார் எம்.ஜி.ஆர்.-சகாப்தம் நிகழ்ச்சியில் வின்*டிவியில்* 04/07/20 அன்று திரு.துரை பாரதி*அளித்த*தகவல்கள்*
---------------------------------------------------------------------------------------------------------------------
தமிழர்களின் உள்ளங்களில் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களை இதய தெய்வமாக கொண்டாடுகிற கோடிக்கணக்கானவர்கள் இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் . தமிழர்கள் எங்கெல்லாம் வாழ்கிறார்களோ , அங்கெல்லாம்அவர்களது மரியாதைக்குரிய தலைவராக அவர்களது நெஞ்சங்களில் எம்.ஜி.ஆர்.* நிறைந்து இருக்கிறார் . அவர்களது இதயங்களில் வைத்து பூஜிக்கப்படுகிறார் என்பதற்கு பல்வேறு உதாரணங்கள் கூறலாம் .குறிப்பாக எம்.ஜி.ஆருக்கும் ,முருகனுக்குமான** முருக பக்தி எப்படி தமிழர்களிடம் இருந்து பிரிக்க முடியாதோ ,அதே போல எம்.ஜி.ஆருக்கும் முருக கடவுள் மீது பக்தி எப்படி இருந்தது என்று இன்றைக்கு பார்க்கலாம் .மோசமான காட்சிகளாக இருந்தாலும் , துயரமான காட்சிகளாக இருந்தாலும் எம்.ஜி.ஆர். தன்* வாயில் இருந்து* தன்னிலை அறியாமல் முருகா என்று சொல்வது வழக்கம் . குறிப்பாக தேவர் பிலிம்ஸ் படங்களில் பணியாற்றும்போது எம்.ஜி.ஆர். தேவரை முருகா என்று அழைப்பது, தேவர் எம்.ஜி.ஆரை முருகா என்றும் அழைப்பது வழக்கம் .


எம்.ஜி.ஆர். உடல்நலம் குன்றி இருந்தபோது, அவர் மறைவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பு* எம்.என்.நம்பியாரை அழைத்து , முருக பக்தர் கிருபானந்த வாரியாரை அழைத்து வர சொல்லி, அவரை கந்த சஷ்டி கவசம் பாடும்படி கேட்டுக் கொண்டார் கிருபானந்த வாரியார் வரி வரியாக கந்த* சஷ்டி கவசத்தை ,நம்பியார், எம்.ஜி.ஆர். மனைவி வி.என்.ஜானகி முன்னிலையில் மனம் உருக பாடும்போது கண்களில் கண்ணீர் மல்க எம்.ஜி.ஆர். நெகிழ்ச்சியுடன் கேட்டார் .


உலகம் சுற்றும் வாலிபன் திரைப்படத்தில் விஞ்ஞானி வேடத்தில் நடித்த எம்.ஜி.ஆரின் பெயர் முருகன் . , தமிழக, இந்திய , உலக வரலாற்றிலேயே*விஞ்ஞானிக்கு தமிழ் கடவுள் முருகன் பெயர் முதன் முதலாக வைக்கப்பட்டது .அதற்கு பின்னால் பல்வேறு விதமான நுண் அரசியல் இருக்கிறது .இந்த அரசியல்களை எல்லாம் தெரிந்து கொண்டேதான் அந்த விஞ்ஞானி பாத்திரத்திற்கு முருகன் என்று பெயர் வைத்தார் .தாலி பாக்கியம் என்ற படத்தில்*முருகன் என்ற பெயர் கொண்ட வேடத்தில் நடித்தார் .மாட்டுக்கார வேலன் படத்தில் வேலன் என்கிற கதாபாத்திரத்திலும், மீனவ நண்பனில் குமரன் என்ற*பெயரிலும் நடித்தார் சங்கே முழங்கு ,. இன்று போல் என்றும் வாழ்க படங்களில்* முருகன் என்ற பெயர் கொண்ட வேடம், மதுரையை மீட்ட சுந்தர பாண்டியனில் பைந்தமிழ் குமரன் என்ற முருகனின் அழகு சொல்லின் பெயரில் நடித்தார் .அந்த அளவிற்கு எம்.ஜி.ஆருக்கு முருக கடவுள் மீது ஈர்ப்பு உண்டு .


விவசாயி படத்தில் நடித்துக் கொண்டிருக்கும்போத கோவையில் படப்பிடிப்பு நடந்தது .அப்போது முருக பக்தரான , பட தயாரிப்பாளர் தேவர் மருதமலை கோவில் செல்லும் பாதையில் மின் விளக்குகள் அமைத்து , அதை எம்.ஜி.ஆரை வைத்து திறந்து வைக்க முடிவு செய்தார் .தேவரின் வேண்டுகோளை ஏற்கும்* பொருட்டு, எம்.ஜி.ஆர். ,தி.மு.க. வில் இருந்ததால், அப்போதைய முதல்வர் பேரறிஞர் அண்ணாவிடம்* விஷயத்தை சொல்லி ,முன் அனுமதி கேட்டார் .கோயிலுக்கு செல்லும் பாதையில் மின்விளக்கு திறந்து வைக்கும் வைபவம்*நல்ல காரியம்தான் . இது கட்சிக்கு எதிரான கொள்கை அல்ல .ஆயிரக்கணக்கான மக்கள் பயன்படுத்தும் பாதைக்கு வெளிச்சம் தருவது நல்ல விஷயம் . தாங்கள்*தாராளமாக சென்று அந்த திட்டத்தை நிறைவேற்றலாம் என்று பேரறிஞர் அண்ணா* வாழ்த்தி அருளினார் . அதன்படி அந்த விளக்கேற்றும் வைபவத்தை**எம்.ஜி.ஆர். தொடங்கி வைத்து தேவரின் வேண்டுகோளை நிறைவேற்றி வரலாறு படைத்தார் .


பிரபல பின்னணி பாடகியும், நடிகையுமான கே.பி.சுந்தராம்பாள் அவர்களை எம்.ஜி.ஆர். தன் தாய்க்கு அடுத்த இடத்தில வைத்து மரியாதை கொடுத்து வந்தார் .திருமதி கே.பி.எஸ். அவர்கள் தன் சொந்த ஊரான கொடுமுடியில் ஒரு திரை அரங்கை கட்டி, திறப்பு விழாவிற்கு அப்போதைய முதல்வர் கருணாநிதி, எம்.ஜி.ஆர்.,ஜெயலலிதா ஆகிய முன்னாள் முதல்வர்கள் மூவரையும் அழைத்து இருந்தார் . எம்.ஜி.ஆருக்கு உடல்நலம் சரியில்லாதபோது தொலைபேசியில் நலம் விசாரித்த திருமதி கே.பி.எஸ். அவர்கள் இல்லத்திற்கு சென்று வணக்கம் சொல்லி மரியாதை செலுத்தியவர் எம்.ஜி.ஆர். திருமதி கே பி.எஸ். அவர்களின் முருகபக்தி மீது பலத்த ஈடுபாடு உண்டு .


தேவரின் வேண்டுகோளுக்கு இணங்க, தனிப்பிறவி திரைப்படத்தில் எம்.ஜி.ஆர்.*முருக கடவுளாக* தோன்றினார் .* இன்றைக்கும் அந்த முருகன் வேடத்தில் உள்ள எம்.ஜி.ஆர். படம் ஒரு வழிபாட்டு தலமாக சென்னையில் இருந்து தென்கோடி குமரிமுனை வரையில் உள்ள பல்வேறு ரிக்ஷாக்களிலும் ,பலரது இல்லங்களிலும் பார்க்க கூடிய நிலை உள்ளது .சந்திரோதயம் படத்தில் ஓவர் கோட்டுடன் மலர் மாலையணிந்து,கையில் பூச்செண்டுடன் காட்சியளிக்கும் எம்.ஜி.ஆர். படம் வீட்டில் வைத்திருந்தால் பண தட்டுப்பாடு ஏற்படாது என்ற நம்பிக்கை உதவி இயக்குனர்கள், திரைப்பட கலைஞர்கள்,தொழிலாளர்கள், நண்பர்கள் வீட்டிலும் இருக்கிறது .


முருகன் கோயில்களுக்கு புனரமைப்பு செய்வது, நிதி உதவி அளிப்பது* முருகன் வழிபாட்டு தலங்களுக்கு விஜயம் செய்து பூஜைகளில் கலந்து கொள்வது ,சொற்பொழிவுகளில் கலந்து கொள்வது என்று முருகனுக்கென்றே தன்*வாழ்க்கையை அர்ப்பணித்து வாழ்ந்த திரு.கிருபானந்த வாரியார் ,முருகன் கோயில்களுக்காக ,எப்போது கேட்டாலும் அள்ளி அள்ளி கொடுத்தவர் எம்.ஜி.ஆர். என்பதனால்* அவருக்கு பொன்மன செம்மல் என்கிற பட்டம் வழங்கினார் .*

மேலும் தகவல்களுக்கு அடுத்த அத்தியாயத்தில் சந்திப்போம்*

நிகழ்ச்சியில் ஒலித்த பாடல்கள் /காட்சிகள் விவரம்*
---------------------------------------------------------------------------------
1.நான் ஆணையிட்டால்* - எங்க வீட்டு பிள்ளை*

2.நம் நாடு* படத்தில் எம்.ஜி.ஆர்.*

3.ஆண்டவனே உன் பாதங்களை- ஒளி விளக்கு*

4.பாரப்பா , பழனியப்பா பட்டணமாம் - பெரிய இடத்து பெண்*

5.விஞ்ஞானிகள் கூட்டத்தில் எம்.ஜி.ஆர்.-உலகம் சுற்றும் வாலிபன்*

6.முருகன் வேடத்தில் எம்.ஜி.ஆர். - தனிப்பிறவி*

7.உள்ளம் ஒரு கோயில் - தாலி பாக்கியம்*

8.எதிர்பாராமல் நடந்ததடி - தனிப்பிறவி*

9.சந்திரோதயம் ஒரு பெண்ணானதோ - சந்திரோதயம்*

10.பொன்மன செம்மலை புண்பட செய்தது யாரோ -சிரித்து வாழ வேண்டும்*



..**

fidowag
25th July 2020, 11:08 PM
பாட்டாலே புத்தி சொன்ன வாத்தியார் எம்.ஜி.ஆர். -சகாப்தம்*நிகழ்ச்சியில்*வின்*டிவியில்* 05/07/20 அன்று திரு.துரை பாரதி*அவர்கள் அளித்த*தகவல்கள்*
------------------------------------------------------------------------------------------------------------------------
திரைப்பட விழாக்கள் பலவற்றில் பல்வேறு சம்பவங்கள் நடந்துள்ளன .யார் யாரை முன்வரிசையில் உட்கார வைப்பது, யார் யாரை பின்வரிசையில் உட்கார வைப்பது மற்ற இடங்களில் யார் யாரை அமர வைப்பது, கூட்டத்தின் கடைசி பகுதியில் யார் யாரை அமர வைப்பது என்று சில திட்டங்கள் அமைத்து அதை கடைபிடிப்பார்கள் .சிலரை அழைத்து இருப்பார்கள் ,ஆனால் விழாவுக்கு வந்த பின்னர் கண்டுகொள்ளவே மாட்டார்கள் .இப்படியெல்லாம் நடக்கும் . ஒரு நிறுவனம் நடத்தும் விழா என்றால் ,அந்த நிறுவன ஊழியர்களுக்கே சமயத்தில் நல்ல வரவேற்பு இருக்காது ,அந்த விழா மண்டப காவலாளியை விட கேவலமாக நடத்துவார்கள் .இப்படியெல்லாம் காட்சிகள் அரங்கேறி உள்ளன. ஆனால் எம்.ஜி.ஆர். தன் பட விழாக்களில், தன்னுடன் பணிபுரிந்த ஊழியர்கள், தொழிலாளர்கள் ஆகியோரை அவர்களது குடும்பத்துடன்* முன்வரிசையில் அமரவைப்பார் .விழாவுக்கு வருகைதரும் முக்கிய விருந்தினர்களுக்கு பின்வரிசைதான் .அப்படி தன் படத்திற்காக உழைத்த தொழிலாளர்களை எம்.ஜி.ஆர். ஒருபோதும் விட்டு கொடுக்கவில்லை விழாவின் முடிவில்*.அந்த தொழிலாளர்களுக்கு ,அவர்களது குடும்பத்தினருக்கு*மதிய உணவு,அல்லது மாலை சிற்றுண்டி தேனீர் என்று வேளைக்கு தகுந்தாற்போல தகுந்த நபர்களை வைத்து உபசரிப்பார்* இப்படி .உழைக்கும் தொழிலாளர்களை மதிக்கும் பண்பாளராக திகழ்ந்தார்* எம்.ஜி.ஆர். .


திரைப்படத்தில் கதாநாயகன் அறிமுக காட்சிக்கு முன்னுரிமையும், அதிக முக்கியத்துவமும்* எம்.ஜி.ஆர். அளித்திருந்தார் . அந்த காட்சியில் ரசிகர்கள் /பக்தர்கள் ஆரவாரம் ,அலப்பரை* அதிகமாக இருக்கும் .அந்த எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் கட்டாயத்தில், தயாரிப்பாளரும், இயக்குனரும் நெருக்கடிக்கு தள்ளப்படுவார்கள் .ஏ.வி.எம்.தயாரித்த அன்பே வா படத்திற்காக விமான நிலையத்தில் முன் அனுமதி வாங்கி, விமானத்தை வாடகைக்கு எடுத்து ,அதற்கான செலவினங்களை செய்து , வெளிநாட்டில் இருந்து எம்.ஜி.ஆர். சென்னைக்கு வந்து இறங்கும் அறிமுக காட்சி ரசிகர்களை திக்கு முக்காட செய்தது .ரசிகர்கள் /பக்தர்கள் கைதட்டல்கள்,ஆரவாரங்கள் நெடுநேரம் நீடித்தது .கோடி மாலைகள் தாங்கிய தோள்கள் எம்.ஜி.ஆருடையது என்று அந்த காலத்தில் சொல்வதுண்டு .அந்த மாலைகளை தாங்கிய வண்ணம் பேட்டி அளித்துக் கொண்டே இருப்பார் . ,அதே சமயத்தில் மாலைகளை ஒவ்வொன்றாக கழற்றும்போது , மாலைகள் மீண்டும், மீண்டும் விழுந்த வண்ணம் இருக்கும் . அப்போது அரங்கத்தில் ஒரே பரபரப்பாக* கூச்சல், கும்மாளம் கூட்டமுமாக இருக்கும் .இந்த மாதிரியான அறிமுக காட்சிகளுக்கு , ரசிகர்களும், பொதுமக்களும் நல்ல வரவேற்பை தருகிறார்கள் என்பதை அறிந்து கொண்ட எம்.ஜி.ஆர். பின்வரும் படங்களில் தயாரிப்பாளர் ,இயக்குனர்களுடன் கலந்து ஆலோசித்து* காட்சிகளை அமைப்பதில் கவனம் செலுத்தினார் .


மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். முதல்வரான பிறகு பேசும்போது ,தன்னுடைய ஆட்சியில் நீதி, நேர்மை, நியாயம் இருக்கும் என்று மக்களுக்கு உறுதி அளித்தார் .அதை செய்தும் காட்டினார் .* ஒரு நாள் கோட்டைக்கு செல்வதற்காக எம்.ஜி.ஆர். வீட்டில் இருந்து புறப்பட தயாராகிறார் . அப்போது முதியவர் ஒருவர் ,ஐயா ,என்று எம்.ஜி.ஆர். காலில் விழுந்த வண்ணம் உங்கள் உதவியாளர் ஒருவர் கல்லூரியில் பொறியாளர் சீட் வாங்கி தருகிறேன் என்று சொல்லி ரூ.45,000/- வாங்கி கொண்டு ஏமாற்றி விட்டார் என்று அழுதுகொண்டே சொன்னார் . எம்.ஜி.ஆர். உடனே அவரிடம் அந்த நபர் இங்கு இருக்கிறாரா ,யார் சொல்லுங்கள் என்று கேட்க, ஒருவர் அங்கே கூடியிருந்த கூட்டத்தில் இருந்து நழுவ பார்த்தார் .உடனே அந்த முதியவர் அவரை சுட்டிக்காட்டியதும் , எம்.ஜி.ஆர். அவரை அழைத்து* கன்னத்தில் ஒரு அறைவிட்டார் .அந்த முதியவரின் ,முகவரி,எந்த கல்லூரியில்*இடம் வேண்டும் என்கிற விவரங்களை* தன் உதவியாளரை வைத்து குறிப்பு எடுத்துக் கொண்டு ,நீங்கள் வீடு போய் சேருங்கள், உங்கள் பணம் வந்து சேரும்* .உங்களுக்கு தகுந்த தகவல்கள் அனுப்ப ஏற்பாடு செய்கிறேன் என்று முதியவரை ஆசுவாசப்படுத்தி அனுப்பினார் .பின்பு கோட்டைக்கு தன்* உதவியாளர் செய்த செயலை எண்ணி வருத்தத்துடன்* செல்கிறார் .*


மறுநாள் சட்டப்பேரவையில் ,எதிர்கட்சி தலைவர் கருணாநிதி ,முதல்வர் எம்.ஜி.ஆரின் உதவியாளர் ஒருவர் ஒரு முதியவர் மகனுக்கு கல்லூரியில் பொறியாளர்* சீட் வாங்கி தருவதாக உறுதியளித்து பணம் வாங்கி ஏமாற்றிவிட்டாராமே என்று பேசினார் .* பதிலுக்கு எம்.ஜி.ஆர். உண்மைதான்,எனக்கு கிடைத்த தகவலின்படி, அந்த உதவியாளரை பணி நீக்கம் செய்துவிட்டேன் .பணம் கொடுத்தவருக்கு திரும்ப கிடைக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்துவிட்டேன் .என்றார் .* மாலையில் எம்.ஜி.ஆரை சந்தித்த மற்ற உதவியாளர்கள் இது எப்படி கருணாநிதிக்கு தெரிந்தது என்று கேட்டனர் .ஏன்,எப்படி,எதற்காக,யார் மூலமாக* அவருக்கு தெரிந்தது என்று கேட்பதைவிட , அந்த விஷயத்தின் உண்மை தன்மையை அறிந்து அதற்கான பரிகாரம் செய்வதோ,நீதி, நியாயம் வழங்குவதுதான் முறை. தவறு நடந்திருந்தால் ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் வேண்டும் . அவர் கேட்ட கேள்வியில் தவறு ஒன்றுமில்லை .அதற்கான பதிலையும் நான் அளித்துவிட்டேன் .அது என் கடமையும் கூட. ஆனால் மற்ற அரசியல்வாதிகளாக இருந்தால் எப்படி நினைப்பார்கள் என்றால் நம் வீட்டில் நடந்த விஷயம் எப்படி கருணாநிதிக்கு தெரிந்தது என்றுதான் யோசிப்பார்கள் தன் உதவியாளர்கள், உடன் இருந்தவர்களை சந்தேகப்பட்டு ,அந்த விஷயத்தில் உள்ள நியாயத்தை விட்டு விடுவார்கள் .எனவே, நியாயத்திற்கு உட்பட்டு எந்த விஷயமாக இருந்தாலும்*தீர்க்கமான முடிவு எடுத்தால் எதற்கும் கவலைப்பட வேண்டிய அவசியம் இருக்காது என்றார் எம்.ஜி.ஆர். இங்கேதான் உயர்ந்து நிற்கிறார் எம்.ஜி.ஆர்.*


எம்.ஜி.ஆர்.தன்* வீட்டில்* விசேஷமாகவும்,சிறப்பாகவும் பொங்கல் விழாவை கொண்டாடுவார் . பொங்கல் திருநாளன்று நடிகர், நடிகைகள், பட தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள், கட்சி பிரமுகர்கள், அமைச்சர்கள், சட்ட மன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசு அதிகாரிகள்* ,பல முக்கிய விருந்தினர்கள் பலரும் எம்.ஜி.ஆர். வீட்டுக்கு விஜயம் செய்வது வழக்கம் . அத்துடன் ,ஏராளமான ரசிகர்கள், பக்தர்கள், கட்சி தொண்டர்கள், தாய்மார்கள் பெருந்திரளாக வந்திருந்து எம்.ஜி.ஆரை சந்தித்து, வாழ்த்துக்கள் பெறுவது ,வழக்கமாக இருந்தது அனைவருக்கும் பொங்கல் விருந்தாக காலை சிற்றுண்டி, மதிய உணவு வழங்கப்படுவதும் வழக்கம் ..ஒரு முறை பொங்கல் விழாவிற்கு அரசு அதிகாரிகள் அதிகம் பேர் வந்திருந்தனர் . அப்போது காவல்துறை ஆணையராக இருந்த திரு.ஸ்ரீபால் வருவதாக இருந்தது .அவர் வந்ததும் காலை 9.30க்கு அனைவரும் சிற்றுண்டி சாப்பிடலாம் என்று சொன்னார் எம்.ஜி.ஆர். ஆனால் போக்குவரத்து நெருக்கடி காரணமாக ஸ்ரீபால் வருவதற்கு சற்று தாமதமாகிவிட்டது .இருந்தாலும் ,அவர் வருகைக்காக காத்திருந்து ,பின்னர் அவர் வந்ததும் தன்னுடன் உட்கார வைத்து ,அதிகாரிகள்,அமைச்சர்கள் ஆகியோருடன் காலை சிற்றுண்டி அருந்தினார் . இப்படி உயர் அதிகாரிகளுக்கு*உகந்த மரியாதை அளித்து மதிக்கும் பண்பாளர் எம்.ஜி.ஆர். .


மேலும் விஷயங்களுக்கு அடுத்த அத்தியாயத்தில் அறிந்து கொள்வோம்*

நிகழ்ச்சியில் ஒலித்த பாடல்கள் /காட்சிகள் விவரம்*
-------------------------------------------------------------------------------
1.தொட்டு விட தொட்டு விட தொடரும் -தர்மம் தலை காக்கும்*

2.உழைக்கும் கைகளே ,உருவாக்கும் கைகளே -தனிப்பிறவி*

3.என்னம்மா ராணி, பொன்னான மேனி - குமரிக்கோட்டம்*

4.இது நாட்டை காக்கும் காய் - இன்றுபோல் என்றும் வாழ்க*

5.அறிமுக காட்சியில் எம்.ஜி.ஆர். - அன்பே வா*

6.அங்கே சிரிப்பவர்கள் சிரிக்கட்டும் - ரிக்ஷாக்காரன்*

7.எம்.ஜி.ஆர்.-எஸ்.வி.ரங்காராவ் உரையாடல் - நம் நாடு*

8.கட்டோடு குழலாட ஆட* ,கண்ணென்ற மீனாட ஆட -பெரிய இடத்து பெண்*

9.அன்னமிட்டகை பாடல் காட்சி - அன்னமிட்டகை*
*.*

fidowag
25th July 2020, 11:09 PM
தனியார் டிவிக்களில் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். திரைக்காவியங்கள்*ஒளிபரப்பான விவரம் .
--------------------------------------------------------------------------------------------------------------------------------------

19/07/20* *-சன் லைப் -* மாலை 4 மணி -* தாழம்பூ*

20/07/20* -மெகா 24 -* காலை 8.30 மணி* - குடும்ப தலைவன்*

* * * * * * * * * சன் லைஃப் - காலை 11 மணி* - அன்பே வா*

* * * * * * * *முரசு டிவி - மதியம் 12 மணி /இரவு 7 மணி -தாய் சொல்லை தட்டாதே*

* * * * * * * * ஜெயா டிவி -* இரவு 9 மணி* - ஆயிரத்தில் ஒருவன்*

* * * * * * * * சன் டிவி* - இரவு 9.30 மணி - குடியிருந்த கோயில்*

21/07/20 -மூன் டிவி - பிற்பகல் 12.30 மணி -* விவசாயி*

* * * * * * * *சன்* லைஃப் - மாலை 4 மணி* - தாய் சொல்லை தட்டாதே*

* * * * * * * *ஜெயா டிவி* - இரவு 9 மணி - இதய வீணை*

22/07/20 -வேந்தர் டிவி - காலை 10.30 மணி - நீதிக்கு பின் பாசம்*

* * * * * * * *சன் லைஃப்* - காலை 11 மணி* - உரிமைக்குரல்*

* * * * * * *புதுயுகம்* *-* இரவு* 7 மணி* - தனிப்பிறவி*

* * * * * * * ஜெயா டிவி* - இரவு 9 மணி* - குமரிக்கோட்டம்*

* * * * * * * மெகா 24* - இரவு 9 மணி* - தர்மம் தலை காக்கும்*

* * * * * * * சன் டிவி* - இரவு 9.30 மணி* - ராமன் தேடிய சீதை*

* * * * * * * பாலிமர் டிவி - இரவு 11* மணி - நவரத்தினம்*

23/07/20 =சன் லைஃப் - மாலை 4 மணி - மகாதேவி*

* * * * * * * *ஜெயா டிவி - இரவு 9 மணி - ஊருக்கு உழைப்பவன்*

24/07/20* - வசந்த் டிவி* -பிற்பகல் 1.30 மணி - பரிசு*

* * * * * * * * *புதுயுகம் டிவி -இரவு 7 மணி - வேட்டைக்காரன்*

* * * * * * * * ஜெயா டிவி* - இரவு 9 மணி* - மீனவ நண்பன்*

* * * * * * * *சன் டிவி* * - இரவு* 9.45 மணி* - ரிக்ஷாக்காரன்*

25/07/20 - தமிழ் மீடியா டிவி - காலை 10 மணி - மந்திரி குமாரி*

* * * * * * * * மூன் டிவி* - பிற்பகல் 12.30 மணி -* முகராசி*

* * * * * * * *சன் லைஃப்* - மாலை 4 மணி - மந்திரி குமாரி*
** * **

fidowag
26th July 2020, 08:46 PM
பாட்டாலே புத்தி சொன்ன*வாத்தியார் எம்.ஜி.ஆர்.-சகாப்தம் நிகழ்ச்சியில் வின்*டிவியில்* 06/07/20 அன்று திரு.துரை பாரதி அளித்த*தகவல்கள்*
-----------------------------------------------------------------------------------------------------------------
சகாப்தம் நிகழ்ச்சியில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். புகழ் பாடும் செய்திகள் நிறைந்த தொடருக்கு எட்டு திக்கிலும் நல்ல வரவேற்பை தந்து வருகிறது .எம்.ஜி.ஆர். அவர்கள் காலை சிற்றுண்டிக்கு பின்னர்* மதிய உணவிற்கு முன்பாக காரட், தக்காளி, வெள்ளரிக்காய் போன்றவற்றை அதிக அளவில் எடுத்துக் கொள்வார் .இரவு படுக்கைக்கு முன்பு ஒரு டம்ளர் ஓவல் குடித்துவிட்டு, வாழைப்பழங்கள் 2 சாப்பிடுவது வழக்கம் .அவ்வப்போது வெளியே ஒரு கனம்* சென்றால் மதியம் வடித்த சோறை , அந்த பழையதை ,வத்த குழம்புடன் கலந்து சாப்பிடுவார் .காரணம் கேட்டால் ,கடுமையான உடற்பயிற்சி, வேலை பளு காரணமாக ஏற்படும் உடல் சூட்டை தணிக்க இது உதவுகிறது என்பார் .எம்.ஜி.ஆர். காரில் பயணிக்கும்போது ஒரு மூட்டை அளவு சாத்துக்குடி பழங்கள் எப்போதும் இருப்பு இருக்கும் .சாத்துக்குடி ஜூஸ் அருந்தினால் உடல் சூட்டை தணிக்கும், ரத்தம் சுத்திகரிக்க உதவும் என்பது அவரின் கணிப்பு. எனவே தானும், தன்னுடைய உதவியாளர்கள்* அருந்தும் வகையில்**பழங்கள் காரில் வைத்திருப்பார் .எம்.ஜி.ஆர். தன் உடலை வருத்தி, எல்லாவிதமான உடற்பயிற்சி கருவிகள் கொண்டு கடுமையான பயிற்சி எடுத்து , அதற்கான உணவுகளை வேண்டியபோதெல்லாம், தேவைக்கேற்றார் போல அருந்தி உடலை பாதுகாத்தார் ஒரு நடிகனுக்கு உடல்நலம், உடல் அமைப்பு, தோற்றம், பொலிவு* ஆகியன இன்றியமையாதது என்பதை உணர்ந்திருந்ததால்* உடல்நலம், உடற்பயிற்சி ஆகியவற்றில் மிகுந்த கவனம் செலுத்தி உடலை கட்டுக்கோப்பாக வைத்திருந்தார் .


சென்னை தி.நகர் , ஆற்காடு சாலையில்* மதிய நேரத்தில் வந்து இளைப்பாறுவது வழக்கம் . அந்த இடைவேளை நேரத்தில் கட்சி பிரமுகர்கள், அதிகாரிகள், முக்கிய விருந்தினர்கள் சிலரை சந்திப்பது வழக்கம். அது மட்டுமின்றி பல பேர் உதவிகள் கேட்டு அவரை பார்க்க வருவதுண்டு .ஒருமுறை நடிகை சாவித்திரி எம்.ஜி.ஆரை பார்க்க அங்குள்ள உதவியாளரை அணுகி அனுமதி கேட்கிறார் .எம்.ஜி.ஆர். சாவித்திரியின் அலங்கோல நிலையை கண்டதும் அதிர்ச்சி அடைந்து ,உங்களுக்கு என்ன உதவி வேண்டும் என்று கேட்கிறார் .அதை கேட்டதும் சாவித்திரி கண் கலங்குகிறார் .மீண்டும் எம்.ஜி.ஆர். நான் என்ன செய்ய வேண்டும் என்ன உங்கள் பிரச்னை என்று கேட்கிறார் . நான் தங்குவதற்கு ஒரு வீடு கூட இல்லை..சொத்து, பணம், சுகம் எல்லாவற்றையும் இழந்து நிற்கிறேன் . தாங்கள்தான் ஏதாவது உதவி செய்ய வேண்*டும் என்கிறார் சாவித்திரி .அப்போது முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர்., வீட்டு வசதி வாரிய தலைவர் மணிமாறனுடன் தொடர்பு* கொண்டு நேரில் வரவழைத்த பின்னர்***நடிகை சாவித்திரிக்கு அண்ணா நகரில் வீடு ஒன்று ஒதுக்கி தரும்படி உத்தரவிடுகிறார் .பின்னர் ஒரு அறைக்கு சென்று ஒரு பையில் ஒரு லட்சம் பணம் வைத்து , சாவித்திரிக்கு அளித்து ,**இதை உங்கள் மருத்துவ செலவிற்கு பயன்படுத்திக் கொள்ளுங்கள் என்று சொல்லி அனுப்புகிறார் . எம்.ஜி.ஆர். செய்த உதவிகளை*பலரிடம் சொல்லி மகிழ்ந்துள்ளார் நடிகை சாவித்திரி . நடிகை சாவித்திரி எம்.ஜி.ஆருடன் மகாதேவி, பரிசு, வேட்டைக்காரன் ஆகிய மூன்று படங்களில் நடித்திருந்தார் .


புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர். சினிமாவில் வாய்ப்புகள் தேடி வரும் காலத்தில் வட சென்னை வால்டாக்ஸ் சாலையில் ஒற்றைவாடை தியேட்டர் அருகில் மாதம்*15 ருபாய் வாடகைக்கு குடியிருந்தார் . அப்போது அந்த பகுதியில் குடியிருந்த*ஒரு ஜப்பானிய குடும்பத்தினருக்கு சமையல்காரராக ராமன் நாயர் என்பவர் இருந்தார் . போதிய வருமானம் இல்லாமல் வறுமையில் தவித்த எம்.ஜி.ஆருக்கு ராமன் நாயர் அரிசி, பருப்பு போன்ற உணவு பொருட்களை**அவ்வப்போது உதவி வந்தார் .ஒருமுறை ஸ்டுடியோவிற்கு அவரசமாக புறப்பட வேண்டிய நேரத்தில்*பேருந்தில் செல்வதற்கு பணம் இல்லாததால், உதவி வேண்டி ராமன் நாயரை அணுகியபோது, ராமன் நாயர் 5 ருபாய் கொடுத்து உதவியுள்ளார் .அப்போது அது மிக பெரிய தொகை .


1970ல் ஜப்பானில் நடைபெற்ற உலக பொருட்காட்சியான எக்ஸ்போ 70யை படமாக்க உலகம் சுற்றும் வாலிபன் படத்திற்காக தன் குழுவினருடன் ஜப்பான் சென்றார் .டோக்கியோவில் ஒரு இடத்தில ஜப்பானிய மொழியிலும், ஆங்கில மொழியிலும் நாயர் டீ ஸ்டால் என்று ஒரு கடையை பார்த்து அதன் உரிமையாளர்* முகவரியை வாங்கி கொண்டு காரில் சென்று பார்த்தார் .தன்னை தேடி வந்து உதவியவர்களை ,தானே தேடி போய் உதவுவது எம்.ஜி.ஆரின் வழக்கம் .


ஒரு நாள் முதல்வர் எம்.ஜி.ஆர் .டி.எம்.எக்ஸ் 4777 என்கிற காரில், கோட்டைக்கு செல்லும் வழியில்* அண்ணா சாலையில் செல்கிறார் .* அப்போது இப்போது இருப்பது போல போக்குவரத்து நெருக்கடி அவ்வளவாக இல்லாத நேரம் .காவலர்கள் ஆங்காங்கே போக்குவரத்தை ஒழுங்குபடுத்தி முதல்வர் காருக்கு வழி விடுகிறார்கள் .அதையும் மீறி ஒரு ஆட்டோக்காரர் ,தேனாம்பேட்டை சிக்னல் அருகில்* முதல்வர் காரின்மீது மோதிவிடுகிறார் . உடனே அருகில் இருந்த காவலர்கள் ஓடிவந்து ,அந்த ஆட்டோவை ஓரமாக நிறுத்தி, ஆட்டோ டிரைவரை திட்டி தீர்க்கிறார்கள் . எம்.ஜி.ஆர். உடனே காரை நிறுத்த சொல்லி , ஆட்டோ டிரைவரை தன்னருகில் அழைத்து*, ஏன் வேகமாக வண்டி ஒட்டுகிறீர்கள், ஏன் மோதிவிட்டீர்கள் , என்ன ஆயிற்று என்று கேட்கிறார் . பதட்டத்தில் இருந்த ஆட்டோ டிரைவர் ,மன்னிக்க வேண்டும் ஐயா, வண்டியில் பிரேக் சரியாக பிடிக்கவில்லை .பிரேக் பழுதுபார்க்க என்னிடம் தற்சமயம் பணமில்லை என்றார் .பதிலுக்கு எம்.ஜி.ஆர். வண்டியில் எப்போதும் பிரேக் சரியாக இருக்க வேண்டும் . இல்லையென்றால் இப்படித்தான் விபத்துக்களை சந்திக்க நேரிடும் . உயிருக்கு ஆபத்து ஏற்படும் . மேலும் பல பிரச்னைகள் வரும் .என்று சொல்லி , 1500 ருபாய் கொடுத்து உதவினார் .**


மேலும் பல செய்திகளுக்கு அடுத்த அத்தியாயத்தில் அறிந்து கொள்வோம்*


நிகழ்ச்சியில் ஒலித்த பாடல்கள் /காட்சிகள் விவரம்*
-------------------------------------------------------------------------------------
1.விழியே. விழியே உனக்கென்ன வேலை - புதிய பூமி*

2.எம்.ஜி.ஆர். உணவருந்தும் காட்சி - எங்க வீட்டு பிள்ளை*

3.எம்.ஜி.ஆர். ஜெயலலிதா உரையாடல் - நம் நாடு*

4.பச்சைக்கிளி முத்துச்சரம் முல்லைக்கொடி -உலகம் சுற்றும் வாலிபன்*

5.எண்ண* எண்ண* இனிக்குது ,ஏதேதோ நினைக்குது - பரிசு*

6.வேட்டையாடு விளையாடு, விருப்பம் போல உறவாடு -அரச கட்டளை*

7.உலகம் அழகு கலைகளின் சுரங்கம் - உலகம் சுற்றும் வாலிபன்*

8.எம்.ஜி.ஆர். உணவருந்தும் காட்சி -உலகம் சுற்றும் வாலிபன்*

9.ஓடி ஓடி உழைக்கணும் ,ஊருக்கெல்லாம் கொடுக்கணும் -நல்ல நேரம்*

10. எம்.ஜி.ஆர். லதா -தேங்காய் ஸ்ரீனிவாசன்* - நினைத்ததை முடிப்பவன்*

fidowag
26th July 2020, 09:52 PM
"எங்கள் தங்கம்" மக்கள் திலகத்தின் வெற்றிப் படங்களில் இதுவும் ஒன்று.. 1970 அக் 9 ல் வெளிவந்து
மகத்தான வெற்றி பெற்று 100 நாட்கள் 4 திரையரங்குகளில் ஓடிய படம். படத்தை வேறொரு நல்ல கம்பெனி தயாரித்திருந்தால் இதைவிட மாபெரும் வெற்றியை பெற்றிருக்கும்.

மேகலா பிக்சர்ஸ்
என்ற கடனில் மூழ்கிக் கொண்டிருந்த கம்பெனியின் தயாரிப்பாகும். இதன் முக்கியமான பங்குதாரர் முரசொலி மாறனின் தயாரிப்பில் வெளிவந்த ஒரு சில படங்களின் கதையை கேட்டால் தெரியும் ஏன் இத்தனை தோல்வியென்று. அந்த படங்கள் தான் "மறக்க முடியுமா"? "வாலிப விருந்து" போன்றவை. . அவர்கள் மாமாவின் மனதில் என்ன தோன்றுகிறதோ அதுதான் கதை. மாமாவின் கற்பனையை விற்பனை செய்ய முடியாததால் கடன் பெருகியது.

முரசொலி மாறனின் படிப்பு செலவோடு, அவர்களது முட்டாள்தனமான வியாபாரத்தால் பெருத்த நஷ்டமடைந்திருந்த அவரை கை தூக்கி விடுவதற்காக மக்கள் திலகம் சிரத்தை எடுத்து இலவசமாக நடித்து கொடுத்த படம் தான் "எங்கள் தங்கம்". அதன்பிறகு மந்திரி பதவி கிடைத்தவுடன் அவர்கள் ஊரை அடித்து உலையில் போட்டதுடன் பெரிய 100 ,200 கோடி பட்ஜெட் படங்கள் எடுக்கும் அளவுக்கு வளர்ந்த கதை அனைவரும் அறிந்த ஒன்றுதான்.

எல்லா கலைஞர்களிடமும் தங்களது வறுமை நிலையை சொல்லி மிக குறைந்த சம்பளத்துடன் நடிக்க வைத்து படத்தயாரிப்பிலும் பணத்தை செலவு செய்யாமல் கஞ்சத்தனமாக எடுத்த படம். அதனாலே படம் பலமுறை தேதி தள்ளி வைக்கப்பட்டு வெளியான படம். படத்தின் ஆரம்ப காட்சியில் தலைவர் சிறு சேமிப்பு திட்ட துணை தலைவராக உண்மையான முகப் பொலிவுடன் வந்து ரசிகர்களை மகிழ்ச்சிக். கடலில் ஆழ்த்தினார்.

எம்ஜிஆர் படத்தின் வெற்றிக்கு க்ளைமாக்ஸில் இடம் பெறும் சண்டை காட்சி முக்கிய பங்கு வகிக்கும். ஆனால் அதைக்கூட சிறப்பாக எடுக்காமல் ஒரு கிணத்துக்குள்ளே கலர் புகையை விட்டு, AVM ராஜனை தோளில் சுமந்தபடி வெளியேறுவது போன்ற காட்சியை வைத்து படத்தை சுலபத்தில் முடித்து விட்டார்கள். எப்போதுமே கிளைமாக்ஸ் காட்சியில் வரும் சண்டை காட்சிக்கு மிகவும் செலவு செய்து செட்டிங்ஸ் போட்டு ஸ்டண்ட் மாஸ்டர் அருமையான புதுபுது
யோசனைகளை
அரங்கேற்றுவார்கள்.

தலைவரின் பெரிய வெற்றிப்படங்களான "நாடோடி மன்னன்" "அடிமைப்பெண்" "மாட்டுக்கார வேலன்" "ரிக்ஷாக்காரன்" "உரிமைக்குரல்" "எங்க வீட்டு பிள்ளை" "உலகம் சுற்றும் வாலிபன்" போன்ற படங்களில் கிளைமாக்ஸ் சண்டை காட்சியை புதுப்புது முறைகளில் மக்கள் வியக்கும் வண்ணம் உருவாக்கி தந்ததால் படம் முடிந்தவுடன் மக்கள் பெரு மகிழ்ச்சியில் வெற்றி சேதியை வெளியில் சொல்வார்கள்.

ஆனால் "எங்கள் தங்கத்தி"ல் கடைசி ஸ்டண்ட் நடக்கும் போது மக்களுக்கு அவ்வளவாக திருப்தி ஏற்படவில்லை. அதனால் படத்தின் வெற்றியின் அளவு சற்று குறைந்தது என்றே சொல்லலாம். படத்தின் வெற்றிக்கு தலைவரின் கதாகாலேட்சபம் ஒரு முக்கியமான காரணம் "எங்கள் தங்கம்" படத்துக்கு ஒரு பத்திரிகை எழுதிய விமர்சனம்
இது.

அடேயப்பா! அந்த சிறிய உருவத்துக்குள் இத்தனை சுறுசுறுப்பு, கண்களில் கொப்பளிக்கும் குறும்பு கதாகாலேட்சபம் செய்யும் பாங்கு அசத்திட்டார் போங்க!. இந்த ஒரு காட்சிக்காக படத்தை எத்தனை முறை வேண்டுமானாலும் பார்க்கலாம் என்று மனம் திறந்து பாராட்டியிருந்தார்கள். தான்தான் "நடிகப்பேரரசர்" என்பதை மிகை நடிப்பில்லாமல் அருமையாக நிரூபித்து விட்டார் அந்த காட்சியின் மூலம்.

தலைவர் படம் வெளியாகி 20 நாட்களில் வந்த தீபாவளிக்கு வெளியான மாற்று நடிகரின் இரண்டு படங்களை 100 நாள் ஓட்டி
.அதையும் ஆளில்லாமல் இருந்த தியேட்டரை நிரப்ப அழகான கலரில் எடுத்த அவரின் பிறந்தநாள் காட்சிகளை 2 ரீலுக்கு காண்பித்த பரிதாபநிலையை வேறு என்னவென்று சொல்வது.

தூத்துக்குடியில் அப்படி. சைடு ரீல் ஓட்டியும் 6 வாரங்களை தாண்ட முடியவில்லை. உடன் வந்த பொன்மகள் படமோ 3 வாரம் கூட ஓட முடியவில்லை. ஆனால் திருநெல்வேலி பாப்புலரில் 100 நாள் ஓட்டியதற்காக தியேட்டருக்கு தான் ஷீல்டு கொடுக்க வேண்டும்.

படம் வெளியான நேரம் மழை காலமாக இருந்ததால் பாலகிருஷ்ணா தியேட்டருக்குள் தண்ணீர் புகுந்து கொண்டது. மோட்டார் போட்டு அடித்தாலும் ஷோ ஆரம்பிக்கும் போது தண்ணீர் கரண்டைக்கு பெருகி விடும். படம் பார்ப்பவர்கள் கால்களை தொங்கவிட முடியாது.மேலும் கொசுக்கடி காரணமாக 2nd ஷோ கூட்டம் பாதிக்கப் பட்டதால் 50 நாட்கள் ஓட வேண்டிய படத்தை 40 நாட்களில் தூக்கி விட்டார்கள்.

சென்னையில் ஏசி தியேட்டரில் வெளியாகாமல் சாதா தியேட்டரில் வெளியான தலைவர் படங்களில் "நம்நாட்டு"க்கு பிறகு 10 லட்சம்
தாண்டிய படம் "எங்கள் தங்கம்" தான். ஓடி முடிய 10,01,765.96 ரூ வசூலாக பெற்று சாதனை படைத்தது. திருநெல்வேலியிலும் 66
நாட்களில் 1,01,802.77 ரூ வசூலாக பெற்றது. மதுரையில் 100 நாட்களில்
2, 75,920.91 ரூ வசூலாக
பெற்று அசத்தியது. "குமரிக்கோட்டம்" (ஜன 26) வரும்வரை 109 நாட்கள் ஓடியது.

மீண்டும் அடுத்த பதிவில்.

fidowag
26th July 2020, 10:02 PM
1972 ம் வருடம் சிவாஜி ரசிகர்கள் ஏதோ பெரிய சாதனை படைத்தது
போல பிதற்றுவது, மிகுந்த ஆச்சரியத்தை தருகிறது. அப்படி என்ன பெரிய சாதனை என்று கேட்டால் வெளியான 7 படங்களில் தங்களது 5 படங்களை வெற்றி கோட்டுக்கு இழுத்து சென்று விட்ட பெருமிதத்தில் புளகாங்கிதம் அடைகிறார்கள். ஆனால் அங்கேதான் தர்மம் வீழ்ந்து எங்கே என்று தேடினாலும் கிடைக்கவில்லை.

இரண்டு கார்கள் இஞ்சின் சக்தியை தெரியவேண்டி மதுரையில் இருந்து சென்னை நோக்கி புறப்பட்டது. ஒருகார் திருச்சி வருவதற்குள் அதன் சக்தியை இழந்து நின்று விட்டது. இன்னெரு கார் விழுப்புரம் தாண்டி செங்கல்பட்டு வரை வந்து இன்ஜின் சக்தியை இழந்து நின்று விட்டது. இதில் ஆச்சர்யம் என்னவென்றால் திருச்சியில் நின்ற காரில் வந்தவர்கள் அந்த காரை தள்ளியே சென்னை வரை கொண்டு சேர்த்து விட்டார்கள்.

சென்னை வந்து சேர்ந்த அந்த மாவீரர்கள் தங்கள் கார் ஜெயித்ததாக அறிவிக்க வேண்டும் என்றார்கள். இன்னெரு காரில் வந்தவர்கள் காரை செங்கல்பட்டில் விட்டு விட்டு வேறோரு காரிலே சென்னை வந்து சேர்ந்தார்கள். இதில் வெற்றி பெற்றது யார? என்றால் என்ன பதில் சொல்வீர்கள். அது போலதான் 1972 லும் நடந்தது.

5 படங்களில் மூன்று படங்களை 100 நாட்களும் 2 படங்களை வெள்ளிவிழாவுக்கும் இழுத்து சென்ற பெருமிதத்தோடு சிவாஜி ரசிகர்கள் மகிழ்ச்சி கொள்கின்றனர்.உழைத்தவனுக்கு அல்லவா தெரியும் வருத்தம், என்பதை உணர்ந்து பெருமை கொள்வதில் அர்த்தம் இருக்கிறது.
ஆனால் அவர்கள் அடித்த தம்பட்டத்தில் உண்மையான வெற்றி பெற்ற "நல்ல நேரம்" படத்தின் வெற்றி நமக்கு பெரிதாக தெரியவில்லை.

அந்த வெற்றியின் வீரியத்தை உணர்த்ததான் இந்த பதிவு.
1972 எம்ஜிஆருக்கு ஒரு மறக்கமுடியாத ஆண்டு. புரட்சி நடிகராக இருந்த வள்ளல் புரட்சி தலைவராக சிறப்பு அந்தஸ்து பெற்று உயர்ந்த ஆண்டு. ஆனால் சினிமாவில் மட்டும் அவரது இடத்தை வேறு யாராவது பிடிக்க முடியுமா? என்றால் முடியாது. இந்த கருணாநிதியும் கணேசனும் சென்னை சிட்டியை மட்டும் எடுத்துக் கொண்டு தாங்கள் தான் வெற்றி பெற்றதாக பெருமிதம் கொள்வதை பார்க்கிறோம்.

தமிழகத்தில் மொத்தம் 234 தொகுதி இருக்கிறது.
மொத்தம் பாதிக்கு மேல் ஜெயித்தால் தான் ஆட்சியை பிடிக்க முடியும். ஆனாலும் தாங்கள் முயற்சி செய்து பெற்ற ஒன்றிரண்டு வெற்றியை வைத்துக் கொண்டு தாம்தூம் என்று குதிப்பதை பார்த்தால் உப்பில்லாத பத்தியக்காரன் ஊறுகாயை பார்த்த மாதிரி அவர்கள் குதிப்பது நமக்கு வேடிக்கையாக இருக்கிறது.

சரி, இனி விஷயத்துக்கு வருவோம்."தர்மம் எங்கே?" பெற்ற தோல்வி அளவுக்கு நம்முடைய எந்த படமும் தோல்வியை அடையவில்லை. "சங்கே முழங்கு" "ராமன் தேடிய சீதை" "நான் ஏன் பிறந்தேன்" "அன்னமிட்ட கை" உட்பட அனைத்து படங்களும் 50 நாட்களை கடந்து75 நாட்கள் வரை ஓடியது.. "நான் ஏன் பிறந்தேன்" 80 நாட்களை கடந்தும் சராசரிக்கும் மேலான வெற்றியை பதிவு செய்தன. எல்லா படங்களுமே முதல் சுற்றில் 50 லட்சத்தை வசூல் செய்து வெற்றி பெற்றது.

ஆனால் "பட்டிக்காடா பட்டணமா" "வசந்த மாளிகை" தவிர வேறெந்த படங்களும் 35 லட்சத்தை
தாண்டவில்லை. "தர்மம் எங்கே" 20
லட்சம் கூட தாண்டவில்லை."இதய வீணை" 100 நாட்களை கடந்தும் "நல்ல நேரம் 100 நாட்கள் சென்னையில் 4 தியேட்டர்களிலும் மேலும் பல ஊர்களில் 100 நாட்களை
கடந்தும் இலங்கையில் 2 திரையரங்கில் 100நாட்களை கடந்தும் 1972 ல் "பிளாக்பஸ்டர்" தான்தான் என்பதை நிரூபித்த படம்.

ஒரு படத்தின் வசூல் என்பது அதிக பட்சம் 50 நாட்களுக்குள் தெரிந்து விடும். அதன் பிறகு ஓடும் படங்கள் ஒரு சில ஊர்களில் 100 நாட்களும்
175 நாட்களும் நடைபெற்றாலும் வசூலில் பெரிய மாற்றங்கள் செய்வதில்லை. "நல்ல நேரம்" திரையிடப்பட்ட 40 சென்டரில் 39 சென்டர்களில் 50
நாட்களை கடந்து பிரமாண்ட வெற்றி முத்திரையை பதித்தது.

ஆனால் "வசந்த மாளிகை" 26 சென்டரில்தான்
50 நாட்களை கடந்து 12 தியேட்டரில் 100 நாட்கள் ஓட்டிய களைப்புடன் 175 நாட்கள் சாந்தியில் ஓட்டிய இரைப்புடன் மூச்சு நின்றது.
"நல்ல நேரம்" 17 தியேட்டர்களில் 10 வாரங்களை அனாயசமாக கடந்து100நாட்களை 9 திரையரங்கில் கடந்தது. முதல் 6 மாதத்திலேயே 1 கோடியை தாண்டி வசூல் பெற்றது தேவரின் படம் இந்தி படங்களுக்கு இணையான வசூலை பெற்றது ஒரு மிகப் பெரும் ஆச்சர்யம்.

ஆனால் "பட்டிக்காடா பட்டணமா" படத்தை 18 தியேட்டரில் தான் 50 நாட்கள் ஓட்ட முடிந்தது.
சென்னையை பொருத்தவரை 4 ஏசி
இல்லாத சாதாரண திரையரங்கில் "நல்ல நேரம்" வெளியாகி 100 நாட்களை கடந்து
12 லட்சத்து 67000 க்கும் அதிகமான வசூலை பெற்று அந்த ஆண்டு வெளியான படங்களில் முதல் இடத்தை பிடித்தது. எப்படி என்கிறீர்களா?

சாந்தியில் "வசந்த மாளிகை" மற்றும் "பட்டிக்காடா பட்டணமா" பெற்ற வசூலை 3 ல் வகுத்து வரும் வசூல் தான் சித்ராவின் வசூலுடன் ஒப்பிட்டுப் பார்க்க முடியும். ஏனென்றால் சாந்தியில் ஒரு டிக்கெட்டின் விலை சராசரி ரூ 3 என்றால் சித்ராவில் அது ரூ1 தான். அதை வைத்து சமன் செய்து பார்த்த ரசிகர்களின் அடிப்படையில் வெற்றி நிர்ணயிக்கப் படுவதுதான் நியாயம் என்று உணர வேண்டும்.

சாந்தியில் மட்டுமே d c r சிவாஜி ரசிகர்களின் கையில். வசூலை எப்படி வேண்டுமானாலும் காட்ட முடியும். அதனால்தான் "திருவிளையாடல்" "தங்கப்பதக்கம்". வசூல் விளையாட்டு நடந்தது. 2004 சந்திரமுகி வரை (ஆளே இல்லாமல் 800 நாட்கள்) ஓட்டிய இந்த கூத்தும் நடந்தது. தர்மத்தை மறைத்து அவர்கள் நடத்திய "திருவிளையாடல்" இன்று(மன) சாந்தியை இல்லாமல் செய்து விட்டது.

ஆனால் தர்மத்தை எங்கோ தொலைத்து விட்டு "தர்மம் எங்கே"? என்று தேடுபவர்களுக்கு எங்கே தெரியும் தர்மம். செஞ்சோற்று கடன் தீர்க்க சேராத இடம் சேர்ந்து தர்மத்துக்கு எதிரான யுத்தத்தில் இறங்கி தோற்றதை போல் தலைவருக்கு செய்ய வேண்டிய செஞ்சோற்று கடனை மீறி எங்கோ சேர்ந்து படுதோல்வி அடைந்த கணேசனின் நிலை? பரிதாபம்தான்.

"நல்ல நேரம்" மதுரை மாவட்டத்தில் மதுரையை தவிர 8 ஊர்களில் 50 நாட்கள் ஓடியது.மதுரையில் அலங்கார் மற்றும் மூவிலேண்டில் வெளியாகி அலங்காரில் 112 நாட்களும் மூவியில் 5 வாரமும் ஓடி 4 லட்சம் வசூலை கடந்தது. சென்னை சித்ராவில் தொடர்ந்து 116 காட்சிகளும் மகாராணியில் தொடர்ந்து 121 காட்சிகளும் அரங்கு நிறைந்து சாதனை செய்தது.

நெல்லையில் 84 நாட்களில் 161000 வசூலாக பெற்று "வசந்த மாளிகை"யை வெற்றி பெற்றது. நெல்லையில் "வசந்த மாளிகை" ஓடியதே 69 நாட்கள்தான். உயர உயர பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாக முடியாது. இன்னும் பல்வேறு சாதனைகளை இன்று வரை செய்து கொண்டிருக்கும் "நல்ல நேரம்" தலைவர் ரசிகர்களுக்கு ஒரு சூப்பர் நேரம்தான் என்று இதைவிட தெளிவாக சொல்ல முடியாது.

orodizli
28th July 2020, 07:09 AM
#ஆச்சரியம் #ஆனால் #உண்மை...

படித்ததைப் பகிர்கிறேன்.

தீவிர திமுக அனுதாபியான முத்துக்குமார் என்பவரின் எம்ஜிஆரைப் பற்றிய வெளிப்படையான கருத்து.

எம்ஜிஆர் ஒரு விசித்திர மனிதர். நாகப்பட்டினத்தில் என் வீட்டுச் சுவரில் யாரோ ஒட்டிவிட்டுப் போயிருந்த எம்ஜிஆர் போஸ்டர்களை நான் கிழித்து எறிய, அதனால் கடும் ஆவேசம் கொண்ட சில ரசிகர்களின் கெட்ட பேச்சுகளுக்கு ஆளாகியிருக்கிறேன்.

ஐந்தாம் வகுப்பு வரை நான் படித்த பள்ளியில் கருணாநிதி, கலியமூர்த்தி என்று இரு தீவிர எம்ஜிஆர் ரசிகர்கள் என் வகுப்பில் இருந்தனர். தினம் தினம் கலைஞர் கருணாநிதியையும் நடிகர் சிவாஜி கணேசனையும் திட்டித் தீர்ப்பதுதான் அவர்கள் வேலை. அவர்கள் இன்றும் எம்ஜிஆரை வழிபடும் பக்தர்களாகவே இருப்பார்கள் என்று நினைக்கிறேன்.

தமிழ்சினிமாக்களில் எம்ஜிஆர்தான் முதல் கமர்ஷியல் ஹீரோ. அவரைப் போட்டுப் படம் எடுத்தால் வெற்றி நிச்சயம். ஆனால் அவர் ஆரம்பத்தில் ஒரு ஹீரோவாக நடிப்பதற்கே எண்ணற்ற ஆண்டுகள் ஆயின என்பது எனக்கு ஆச்சரியத்தைக் கொடுத்தது.

இன்றைக்கு முதல் படத்திலிருந்தே தாங்கள்தான் உலக மகா ஹீரோ என்ற நினைப்புடன் நடிக்கும் அரை வேக்காட்டு அபத்த நடிகர்களை எம்ஜிஆருடன் ஒப்பிட்டால் மலைப்பே ஏற்படுகிறது.

தனிப்பட்ட முறையில் எந்த எம்ஜிஆர் படத்தையும் முழுதாக உட்கார்ந்து என்னால் பார்க்க முடிந்ததில்லை. அவர் படங்கள் வேறு யாருக்காகவோ எடுக்கப்பட்டுள்ளன என்று விட்டுவிடுவேன். அதேநேரத்தில் முழுவதும் பிடிக்காது என்று சொல்வதற்குமில்லை.

அரசியல் தளத்தில் எம்ஜிஆர் எனக்குத் தனித்துத் தெரிந்தார். அவரால் எப்படி அந்தக் கட்டத்தில் ஒரு கட்சியை உருவாக்க முடிந்தது என்பதில் எனக்குப் பெருத்த ஆச்சரியம். கருணாநிதி தீவிரமான கட்சி அரசியலில் ஈடுபட்டு, கட்சியில் அமைப்புரீதியாக ஆதிக்கம் செலுத்தினார்.

ஆனால் எம்.ஜி.ஆர் நிதி திரட்டுவது, பிரசாரங்களில் ஈடுபடுவது, சினிமாவில் திமுக கொடி, சின்னம், கருத்து ஆகியவற்றைப் புகுத்துவது என்ற அளவில்மட்டுமே இருந்து வந்தார்.

திமுகவிலிருந்து நீக்கப்பட்டதும், கட்சியில் செல்வாக்குள்ள யாருமே எம்ஜிஆர் தரப்புக்கு வரவில்லை. நாஞ்சில் மனோகரன், கே.ஏ.மதியழகன் தவிர. இவர்களுடனும் தன் கூடவே இருக்கும் ஆர்.எம்.வீரப்பனுடனும் சேர்ந்து எம்ஜிஆர் ஒரு முழு அரசியல் கட்சியை உருவாக்கியிருந்தார். அது மாபெரும் வரலாற்று ஆச்சரியம்தான்.

எம்.ஜி.ஆர் ஒரு முதலமைச்சராக எப்படிப் பணியாற்றினார் என்று தெளிவான பதிவுகள் இல்லை. ஆனால் என் சிறு வயதில், எம்ஜிஆருக்கு எதிராக மக்கள் பேசி நான் கேட்டதே இல்லை. ஊழல் குற்றச்சாட்டுகள் ஏதும் அவர் மேல் ஒட்டியதே இல்லை. பாராட்டுகள் எல்லாம் எம்ஜிஆருக்குப் போகும்; இழிசொற்கள் எல்லாம் பிற அதிமுகவினருக்கும் அதிகாரிகளுக்கும் போகும். எப்படி அப்படி ஒரு தெய்வம் போன்ற இமேஜை அவரால் உருவாக்க முடிந்தது என்பது மாபெரும் ஆச்சரியம்தான்.

என்றாவது, யாராவது ஒருவர் எம்ஜிஆரின் நிர்வாகத்திறன் பற்றி ஒரு புத்தகம் எழுதக்கூடும். தமிழகத்தில் பெரும்பாலான இடங்களுக்கு நல்ல சாலை வசதிகளை ஏற்படுத்திக்கொடுத்தது எம்ஜிஆர்தான் என்று ஏதோ காரணத்தால் நான் நினைத்துக் கொண்டிருக்கிறேன். அது உண்மையா என்று தெரியவில்லை. எம்.ஜி.ஆர் அவ்வப்போது ‘அண்ணாயிசம்’ என்று தன் ‘கொள்கை’களை விளக்க முற்பட்டாலும், அடிமனத்தில் மக்கள் வாழ்வில் மலர்ச்சி ஏற்படவேண்டும் என்று நினைத்த ஒரு "மக்கள் தலைவர்" என்ற எண்ணமும் என் மனத்தில் ஏற்பட்டுள்ளது.

அவர் தன் வாழ்நாளில், ஏதோ ஒருவிதத்தில் பெரும்பான்மையான தமிழர்களைப் பாதித்திருந்தார். அவர் நோயில் படுத்திருந்த காலத்தில், அந்த உடல்நிலையில் அவர் நிர்வாகத்துக்குச் சற்றும் செயல்படமுடியாதவர் என்பதைச் சிறிதும் உணராமல் மக்கள் அவருக்கு வாக்களித்தனர்.

"சாதாரண ஏழை மக்களின் நெஞ்சத்தை அவர் தொட்டிருக்காவிட்டால் இதைச் சாதித்திருக்கமுடியாது..."

அவரது மறைவின்போது சென்னையில் நடந்த கலாட்டாக்களை நான் நேரில் பார்த்தேன். (அப்போது நான் சென்னை ஐஐடியில் படித்துக் கொண்டிருந்தேன். சைக்கிளை எடுத்துக்கொண்டு அண்ணா சாலையில் முட்டாள்தனமாக சுற்றினேன். ரசிகர்கள் யாராவது என்னை நையப் புடைத்திருக்கக்கூடும்! நல்லவேளையாக எந்தச் சேதாரமும் இன்றி ஹாஸ்டலுக்குத் திரும்பி வந்துவிட்டேன்!)

அவர் மறைந்து பல ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் இன்றும் அவரது நினைவு நாள் அன்று போஸ்டர்கள் ஒட்டப்பட்டு, துக்கம் அனுஷ்டிக்கப்படுகிறது...!!! ������

எப்பேர்ப்பட்ட மக்கள் தலைவராக எம்ஜிஆர் வாழ்ந்திருக்கிறார்...!.........

orodizli
28th July 2020, 07:10 AM
#கடைக்கோடி #ரசிகனுக்கும் #மதிப்பளித்த #வாத்தியார்

மக்கள்திலகம் தனது திரைப்படங்களைக் காணவரும் ரசிகர்களை ஏமாற்றியதில்லை. உழைத்துக் களைத்து படம் பார்க்க வரும் மக்கள், படத்தைப் பார்த்துவிட்டு திருப்தியாக செல்லும் வகையிலேயே அவரது படங்கள் இருக்கும். பொழுதுபோக்கோடு நல்ல கருத்துக்களும் இருக்கும். படங்களில் மட்டுமின்றி; நிஜவாழ்விலும் தன்னைக் காணவரும் ரசிர்களுக்கு மதிப்பளித்து அவர்களை மகிழ்ச்சிப்படுத்தியவர் அவர்!

சாண்டோ சின்னப்பா தேவர் தயாரித்த ‘தேர்த் திருவிழா’ படத்தின் படப்பிடிப்பு கும்பகோணம் அருகே ஏழு மைல் தொலைவில் காவிரி ஆற்றில் நடந்தது. படப் பிடிப்பு நடந்த சமயம் கோடைக்காலம். எம்.ஜி.ஆர். வந்திருப்பதை அறிந்து ஏராளமான மக்கள் கூடிவிட்டனர். ‘‘படப்பிடிப்பு நடக்கும் இடத்துக்கு வந்து யாரும் தொல்லை செய்யக் கூடாது’’ என்று ஒலிப்பெருக்கி மூலம் எம்.ஜி.ஆர். அன்புக் கட்டளையிட்டார்.

அவர் வார்த்தைக்கு மதிப்பளித்து ஒருவர்கூட படப்பிடிப்பு நடக்கும் இடத்தின் அருகே செல்லவில்லை. கொதிக்கும் மணலில் நின்றபடியே தூரத்தில் இருந்து எம்.ஜி.ஆரைப் பார்த்து ரசித்தனர்.

வெயிலில் நிற்கும் மக்களுக்கு உணவுப் பொட்டலங்கள், மோர், தண்ணீர் கொடுக்க எம்.ஜி.ஆர். ஏற்பாடு செய்தார்.

பத்து நாட்களுக்கு மேல் படப்பிடிப்பு நடந்தது. தினமும் படப்பிடிப்பு முடிந்து கும்பகோணம் திரும்பும் வழியில் சாலையின் இரு புறமும் மக்கள் கூடி நின்று எம்.ஜி.ஆரை வாழ்த்தினர். மாலை அணிவித்தும் ஆரத்தி எடுத்தும் அன்பை வெளிப்படுத்தினர்.

படப்பிடிப்பு குழுவினர் கும்பகோணம் டி.எஸ்.ஆர். இல்லத்தில் தங்கியிருந்த னர். அங்கும் தினமும் வாசலில் ரசிகர்கள் திரண்டனர். அவர்களின் விருப்பத்தை நிறைவேற்ற எம்.ஜி.ஆர். முடிவு செய்தார்.

படப்பிடிப்பின் கடைசி நாளன்று திறந்த வேனில் ஏறி நின்று ரசிகர்களின் வாழ்த்துக்களை ஏற்றுக் கொண்டார். சக கலைஞர்களையும் கவுரவிக்கும் வகையில் அவர்களையும் வேனில் ஏறச் சொல்லி மக்களின் வாழ்த்துக்களை ஏற்கச் செய்தார்.

ஒரு ரசிகர் கூட்டத்தில் முண்டியடித்து முன்னேறினார். அவரை எம்.ஜி.ஆரின் உதவியாளர்கள் தடுத்தனர்.

அதை கவனித்த எம்.ஜி.ஆர்., அந்த ரசிகரை அருகில் வரும்படி சைகை செய்தார். சின்னப்பா தேவர் அந்த ரசிகரை ‘அலாக்’காக தூக்கி வேன் மேலே ஏற்றினார். தன் கையில் வைத்திருந்த கடலைப் பொட்ட லத்தை எம்.ஜி.ஆரிடம் கொடுத்தார் அந்த ரசிகர். உடனேயே, ஒவ்வொரு கடலையாக வாயில் போட்டுக் கொள்ள ஆரம்பித் தார் எம்.ஜி.ஆர்.!

உலகையே ஜெயித்துவிட்ட திருப்தி அந்த ரசிகரின் முகத்தில் ஜொலித்தது. இந்தக் காட்சிகளைப் பார்த்துக் கொண்டிருந்த கூட்டம் ஆர்ப்பரித்தது!...

orodizli
28th July 2020, 07:11 AM
படத்துறையில் மட்டுமல்ல கொடை துறையிலும் புரட்சி செய்தவர் புரட்சித் தலைவர்.

மக்கள் சேவைக்கு "டிரஸ்ட்" அமைத்து ரூபாய் மூன்று லட்சம் ஒப்படைத்த வள்ளலுக்கும் வள்ளல் ஏழை பங்காளன் புரட்சித் தலைவர். இது நடந்தது ஏப்ரல் 1959 ஆம் வருடம். இந்த மூன்று லட்சம் இன்றைய முன்னூறு கோடி ரூபாய்க்கு சமம்

இதற்கு அய்யனின் "பொய்யன்கள்" என்ன சொல்லப்போகிறார்கள். இதை எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்..........

fidowag
28th July 2020, 04:59 PM
மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்கள் தன்னுடைய படத்துக்கு பெயர் வைக்கும் போது நம்பர் ஜோதிடம் பார்ப்பதில்லை.
அந்தக்காலத்தில் படத்துக்கு பெயர் வைக்கும் போது கூட்டுத்தொகை 8
வராமல் பார்த்துக் கொள்வது வழக்கம். அதையும் மீறி வைத்த
ஒன்றிரண்டு படங்களும் ஓடாமல் படுதோல்வி அடைந்ததால் எல்லோரும் படத்தின் பெயருக்கு 8 என்கிற கூட்டுத்தொகை வராமல் பார்த்துக் கொண்டனர்.

புதுமை இயக்குநர் ஸ்ரீதர் தன்னுடைய கனவுப்படம் "மீண்ட சொர்க்கம்" படுதோல்வி அடைந்த பிறகு அவரும் அதை
தவிர்த்து வந்தார். ஆனால் எம்ஜிஆர் இந்த சென்டிமென்ட் பார்க்க மாட்டார்.
சில கட்சி தலைவர்கள் வேட்பாளர்களின் ஜாதகங்களை அலசி ஆராய்ந்து தேர்தல் சமயத்தில் கிரகநிலைமை, ஜாதி இத்தனையும் அலசிப்பார்த்துதான் சீட் கொடுப்பார்கள்.

ஆனால் தலைவரோ எல்லா இடத்திலேயும் நான்தான் நிற்கிறேன் என்று நினைத்து கொள்ளுங்கள் என்று சொல்லி யாரை வேண்டுமானாலும் நிறுத்துவார். அவரும் வெற்றி பெறுவார். அதேபோல் சினிமாவிலும் 8 எழுத்து சென்டிமென்ட் பார்க்க மாட்டார். 8 எழுத்தில் வைத்த அநேக படங்கள் தலைவருக்கு வெற்றியை பெற்று தந்திருக்கின்றன.

உதாரணமாக "பல்லாண்டு வாழ்க" "எங்கள் தங்கம்" "குமரிக்கோட்டம்"
"நேற்று இன்று நாளை" போன்ற படங்கள் பெரு வெற்றியை பெற்றன. "நான் ஆணையிட்டால்" "நீரும் நெருப்பும்" "ராமன் தேடிய சீதை" "ஒரு தாய் மக்கள்"
"பாக்தாத் திருடன்" "மன்னாதி மன்னன்" போன்ற படங்கள் சுமாரான வெற்றியையும் பெற்றன.

இருந்தாலும் எம்ஜிஆருக்கு எப்போதுமே 7 அதிர்ஷ்ட எண் என்று எல்லோரும் அறிவார்கள். அதற்கு காரணம் எம்ஜிஆர் முதல்வராக பொறுப்பேற்றபின் முதல் சட்டமன்றம் கூடியது 4-7-77 அன்றுதான்..அந்த நாள் தலைவரின் ராசிநாளாக பார்க்கப்பட்டது. அதை நினைவு படுத்தும் வகையில் அவரது கார் நம்பராக 4777 என்ற எண்ணை எம்ஜிஆர் தேர்ந்தெடுத்தார்.

அதன்பிறகு 7 என்ற எண் எம்ஜிஆர் வாழ்க்கையில் பலமுறை பல முக்கியமான நிகழ்வுகளுக்கு காரணமாக அமைந்ததை நாம் பார்த்திருக்கிறோம். ஏழு எழுத்துக்களில் வெளியான அநேக படங்கள் பிளாக்பஸ்டர் வெற்றியை
பதிவு செய்தது என்றே சொல்லலாம்.
"மலைக்கள்ளன்" "நாடோடி மன்னன்" "வேட்டைக்காரன்"
"ரிக் ஷாக்காரன்" "உரிமைக்குரல்" "மீனவ நண்பன்" போன்ற 7 எழுத்தில் முடியும் படங்களை சொல்லலாம்.

அதேபோல் mgr என்ற எழுத்துக்கு நம்பர் ஜோதிடம் பார்த்தால் 4+3+2=9
வருகிறது. அதனால் 9ம் எம்ஜிஆருக்கு ராசியான ஒரு நம்பராக எடுத்துக் கொள்ளலாம்.
9 எழுத்துக்களில் வெளியான படங்கள் எல்லாம் பெரிய வெற்றியை
பதிவு செய்திருக்கின்றன. அவைகள் என்னவென்று பார்க்கலாம். "எங்க வீட்டு பிள்ளை" "குடியிருந்த கோயில்"
"மாட்டுக்கார வேலன்" போன்ற பெரிய வெற்றி பெற்ற படங்களை சொல்லலாம்.

இருப்பினும் எம்ஜிஆர் என்ற மூன்றெழுத்தே வெற்றிக்கு காரணம் என்பதால் தலைவரின் ரசிகர்கள் எதையும் கருத்தில் கொள்வதில்லை.
இதையே "பல்லாண்டு வாழ்க" திரைப்படத்தில் தலைவர் சொல்லுவார், 'நீங்களெல்லாம் வெறும் நம்பர்கள் அல்ல, என் நெருங்கிய நண்பர்கள்' என்று. அதுவே என்றும் எப்போதும் தலைவரின் நம்பிக்கையாக இருந்தது எனலாம்.

fidowag
28th July 2020, 09:43 PM
பாட்டாலே புத்தி சொன்ன*வாத்தியார் எம்.ஜி.ஆர். -வின்*டிவியில் சகாப்தம்*நிகழ்ச்சியில்* 07/07/2 0* *அன்று**திரு.துரை பாரதி*அளித்த*தகவல்கள்*
-------------------------------------------------------------------------------------------------------
மக்கள் தலைவர் எம்.ஜி.ஆருக்கு பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரிஸில் சிலை வைக்கப்பட்டுள்ளது . இந்தியத்தலைவர்களில் எம்.ஜி.ஆருக்கு மட்டுமே அங்கு சிலை உள்ளது . இலங்கையில் கொழும்பிலும் எம்.ஜி.ஆருக்கு சிலை இருக்கிறது*மொரீஷியஸ் நாட்டில் ஒருமுறை அவர்களது சுதந்திர தினத்தன்று ,அந்நாட்டின் பிரதமரின் அழைப்பின் பேரில் எம்.ஜி.ஆர். அங்கு சென்று அந்த நாட்டின் தேசிய கொடி* ஏற்றி வைத்து உரையாற்றிய சம்பவம் நிகழ்ந்துள்ளது . மக்கள் திலகம் எம்.ஜி.ஆருக்கு உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் ரசிகர் மன்றங்கள் உண்டு .அந்தமானில் போர்ட் பிளேயரில்* பாரத பிரதமர் லால்பகதூர் சாஸ்திரி* 1965ல் பணத்தோட்டம் எம்.ஜி.ஆர். ரசிகர் மன்றத்தை திறந்து வைத்துள்ளார் . ஒரு தென்னிந்திய நடிகருக்கு இந்திய பிரதமர் ஒருவர் ரசிகர் மன்றம் திறந்து வைத்திருப்பது முதலும் கடைசியுமாகும் என்பது சிறப்பு அம்சம் .



அமெரிக்காவில் ப்ரூக்ளின் மருத்துவமனையில் சிகிச்சைக்கு பின் உடல்நலம் தேறி வந்த எம்.ஜி.ஆருக்கு பிரத்யேகமாக பழங்கள், ஹார்லிக்ஸ் போன்ற இதர பானங்கள் ,ஏராளமான ரசிகர்கள் , முக்கிய விருந்தினர்கள், நடிகர் நடிகைகள், பட தயாரிப்பாளர்கள் , அமைச்சர்கள் , கட்சி பிரமுகர்கள் பலர் அனுப்பிய வண்ணம் இருந்தனர் . பக்தர்கள்* மற்றும் முக்கியஸ்தர்கள் பலர் பலவேறு வகையான**கோயில் பிரசாதங்கள்* நேரில் வந்து வழங்கினர் . பலர் வெளிநாடுகளில் இருந்து பார்சலில் அனுப்பி இருந்தனர் . இவையெல்லாம் வைப்பதற்கு ப்ரூக்ளின் நகரில் பிரத்யேகமாக ஒரு கட்டிடம் வாடகைக்கு எடுக்கப்பட்டு பாதுக்காப்பாக வைக்கப்பட்டிருந்தது என்பது சிறப்பான செய்தி*இந்த அதிசயங்கள் வேறு எந்த நடிகருக்கோ, தலைவருக்கோ நடந்ததாக சரித்திரம் இல்லை .அந்த வகையில் சாதனை படைத்தவர் எம்.ஜி.ஆர்..


மலேசியா நாட்டில் மிகவும் பிரசித்தி பெற்ற எம்.ஜி.ஆர். கோயில் ஒன்று உள்ளது .அந்த கோயில் உள்ள இடத்தை மலேசியா நாடு சுற்றுலா தலமாக அமைத்துள்ளது .பிரான்ஸ், கனடா, மலேசியா ஆகிய நாடுகள் எம்.ஜி.ஆருக்காக*பிரத்யேக தபால் தலைகள் வெளியிட்டுள்ளன . எம்.ஜி.ஆரின் மறைவிற்கு அமெரிக்க நாடாளுமன்றத்தின் அவையில்* இரங்கல் கூட்டம் நடத்தி, அனுதாபங்கள் தெரிவிக்கப்பட்டது .


எம்.ஜி.ஆர். சமூக படங்களில் வேரூன்றி நடித்து பல வெற்றிப்படங்கள் அளித்து வந்தபோது , ஒவ்வொரு படத்திலும், ஒவ்வொரு கால கட்டத்திலும் எந்தெந்த*படங்களுக்கு எப்படி பெயர் வைப்பது, எந்தெந்த கதாபாத்திரங்களுக்கு எந்த பெயர் சூட்டுவது என்பதில் மிகுந்த கவனம் செலுத்தி வந்தார் . உதாரணமாக பெரிய இடத்துப் பெண் படத்தில் கவிஞர் கண்ணதாசன் கட்டோடு குழலாட ஆட ,கண்ணென்ற மீனாட ஆட என்ற குற்றால குறவஞ்சி பாடலை புகுத்தி இருப்பார் .அந்த பாடலில் எம்.ஜி.ஆருக்கு இணையாக தில்லை, வள்ளியம்மை என்ற இரு கதாபாத்திரங்களில் நடித்த நடிகைகள் மணிமாலா, ஜோதிலட்சுமி .*சுதந்திர*போராட்ட தியாகியான தில்லையாடி வள்ளியம்மையின் பெயர் அந்த கதாபாத்திரங்களுக்கு சூட்டி தன்னுடைய தேசப்பற்றை* முடிந்த அளவிற்கு திரைப்படங்களில் வெளிப்படுத்தி ,போதித்தவர்*எம்.ஜி.ஆர்.*


பெரிய இடத்து பெண் படத்தில் , பொதுஜன சேவகராக பல இடங்களில் பரிமளித்திருப்பார் . கோயிலில் பண்ணையார்கள், முக்கியஸ்தர்கள்* சுயநலமாக தங்கள் குடும்பத்துடன் தரிசனம் செய்து கொண்டிருப்பார்கள் . பொதுமக்கள்*அவர்கள் வெளிவரும்வரை வாயிலில் காத்திருப்பார்கள் . அதை கண்ட எம்.ஜி.ஆர். கோயில் எல்லோருக்கும் பொதுவானது . ஒரு சிலருக்காக பொதுமக்கள் வாயிலில் காத்திருக்க வேண்டிய அவசியமில்லை என்று கூறி எல்லோரையும் உள்ளே அழைத்து சென்று பண்ணையாரிடம், சம தர்மம் ,*பொது தரிசனம் ,பற்றி விவரமாக எடுத்துரைத்து பொதுமக்கள் எப்போது வேண்டுமானாலும் கோயிலில் நுழையலாம் . அதற்கு கால நிர்ணயம் கிடையாது*,பொதுஜன சேவையை அனைவரும் மதிக்க வேண்டும் , கோயில் தனிப்பட்ட மனிதருக்கு என்றுமே, எப்போதுமே சொந்தம் கிடையாது என்று வலியுறுத்தி பேசுவார் .*இது காலத்தின் கட்டாயம் என்பது போல திரைப்படங்களில் காட்சிகளை அமைத்தார் .


தி .மு.க. தலைவர் கருணாநிதி முதல்வராக இருந்தபோது ஒருமுறை திரை அரங்குகளில் கேளிக்கை வரியை உயர்த்தினார் . அதற்கு பலத்த எதிர்ப்பு இருந்தது திரை அரங்கு உரிமையாளர்கள் போராட்டம் நடத்தினர் .திரை அரங்குகள் சில நாட்கள் மூடப்பட்டன . சில நாட்கள் கழித்து நடிகர் சிவாஜி கணேசன் தலைமையில் பேச்சு வார்த்தை நடைபெற்று உடன்பாடு ஏற்பட்டது .அப்போது தி.மு.க. வில் இருந்து எம்.ஜி.ஆர். நீக்கப்பட்டிருந்த நேரம் .எம்.ஜி.ஆர். தன்னுடைய*ஆதிக்கம் திரை உலகில்தான் பிரதானம் என்று முடிசூடா*மன்னனாக*, வசூல் சக்கரவர்த்தியாக ,இதயக்கனி, பல்லாண்டு வாழ்க, நாளை நமதே,நீதிக்கு*தலைவணங்கு* ஊருக்கு உழைப்பவன் , உழைக்கும் கரங்கள் என்று பல படங்களில்தொடர்ந்து முழுமூச்சாக திரைத்துறையை தன் வசப்படுத்தி* , நடித்து கொண்டிருந்த பிஸியான*நேரம் .அந்த படங்களில் தனது*கட்சியின்*கொடி*, கொள்கைகள், திட்டங்கள், செயல்பாடுகள் அனைத்தையும்*பல காட்சிகளில் வெளிப்படுத்தி ரசிகர்கள் , தொண்டர்கள் கவனத்தை கவர்ந்தார் .வெற்றியும் பெற்றார் .


எம்.ஜி.ஆர். ஒருமுறை பரங்கிமலை*தொகுதியில்*தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு கொண்டிருக்கும்போது ஒரு வயதான*மூதாட்டி எம்.ஜி.ஆரை*நெருங்கி காபி*கொண்டு வருகிறார் . எம்.ஜி.ஆர். நான் காப்பி*குடிப்பதில்லை என்றதும் ஓடிப்*போய் கடையில் சோடா வாங்கி வந்து தருகிறார்*.எம்.ஜி.ஆர். அதை வாங்கி கொஞ்சம் குடிக்கிறார் . பின்னர் அந்த மூதாட்டி எம்.ஜி.ஆரிடம் ,நான் ஒரு விஷயம் உங்களுக்கு சொல்லலாமா*என்று கேட்கிறார் .பரவாயில்லை சொல்லுங்கள் என்கிறார் . அந்த மூதாட்டி, நீங்கள் எப்போதும்*திரைப்படங்களில் நடிக்கும்போது நம்பியாரிடம் மட்டும் கொஞ்சம்*ஜாக்கிரதையாக இருங்கள்*.அவர் ஏதாவது தொல்லைகள் கொடுப்பார் .உங்களை*அடிக்க வருவார் . உங்கள்* உடம்பை*நன்றாக* வைத்துக் கொள்ளுங்கள் .இது எனது வேண்டுகோள் என்றதும் ,அந்த மூதாட்டியை எம்.ஜி.ஆர். கட்டிப்பிடித்து ,அவருடைய முகத்துடன்* தன்*கன்னத்தை*ஒட்டினாற்போல் பாசத்தை, அன்பை*வெளிப்படுத்தினார் .அதை புகைப்படமாக எடுத்தவர் சுபாஷ் சுந்தரம் என்கிற புகைப்படக்காரர்,.இந்த புகைப்படம் பின்னாளில் வந்த பொது தேர்தல்களில் ,பேனர்கள், சுவரொட்டிகளாக, தினசரிகளில் புகைப்படங்களாக வெளிவந்தன .* பிறகு தன்* உதவியாளர்களிடம் , திரைப்படங்களில் நடிப்பதை*நிஜம் என்று கருதி என்னிடம் அன்பை, பாசத்தை*இந்த முதியவர்கள் பொழிகிறார்களே, இவர்களுக்கு* நான் என்ன கைம்மாறு, எப்படி செய்ய போகிறேன்*என்று தெரியவில்லை என்றுசொல்லி நெகிழ்ந்து போனாராம் .



உரிமைக்குரல் படத்தில்*எம்.ஜி.ஆர். புதுமையான வடிவில்*கீழ்ப்பாசை வேட்டி* கட்டி நடித்தார் .இந்த படத்தின் வெற்றியை*தொடர்ந்து பல படங்களில் இந்த மாதிரி வேட்டி அணிந்து நடித்தார் .எம்.ஜி.ஆரின்*உடை தயாரிப்பு நிபுணராக*திரு.எம்.ஏ.முத்துவும் அவருக்கு*உதவியாளராக*காதர் என்பவரும் இருந்தனர்*.எம்.ஜி.ஆர். எப்போதும் வயிற்று பகுதியில்தெரிவது போல்**கரை* வரக்கூடாது*அதற்கு*கீழே*சிவப்பு, மேலே கருப்பு வருவது*போலவும் , இடையில் வெள்ளை வருவது போல* .தனது கட்சி கொடி, ,கொள்கைகள் விளக்குவது போல் அந்த வடிவம் அமைய வேண்டும் என்பதில் எம்.ஜி.ஆர். உறுதியாக இருந்தார் .அதன்படி*அந்த வேட்டியின் வடிவத்தை*அமைத்து தந்தஎம்.ஏ.முத்துவையும், உதவியாளர் காதரையும்*எம்.ஜி.ஆர். வெகுவாக பாராட்டினார் .*அந்த வடிவம்தான்*எம்.ஜி.ஆரின் இரு கால்கள்* பகுதியில்*பார்டராக அ .தி.மு.க. கட்சி வேட்டியாக ,கருப்பு,வெள்ளை, சிவப்பு*நிறங்கள்*கொண்ட வண்ணத்தில் உருவானது .



எம்.ஜி.ஆர். சினிமா, அரசியல் இரண்டிலும் எந்த முடிவு எடுப்பதாக இருந்தாலும்*தன் தாயை வணங்கி, வழிபட்டு ,தாயே துணை என்று சுழி போட்டு தான் ,தாயின் கட்டளையை ஏற்று வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும்*ஆரம்பிப்பது வழக்கம் . அதன்படி நடந்தார் .நடந்து கொண்டிருந்தார் இறுதி வரை. அதற்கு பல்வேறு உதாரணங்கள் குறிப்பிடலாம் எம்.ஜி.ஆர். 1977 சட்டமன்ற தேர்தலில் அமோக வெற்றி பெற்று முதல்வராகிறார் .* ஆனால் அவர் உடனடியாக பதவி ஏற்க முயலவில்லை . காலையில் வெற்றி செய்தி வந்ததும் கோட்டை வாயிலில் அவரை வரவேற்க லட்சக்கணக்கான மக்கள் குவியும் சூழ்நிலையில்*எம்.ஜி.ஆர். வெற்றி பெற்றுவிட்டார் .அவர்தான் முதல்வர் என்று தீர்மானம் ஆகிவிட்டது உடனே பதவி ஏற்க கோட்டைக்கு செல்லாமல் ,தனக்காக காத்திருந்த பட தயாரிப்பாளர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வண்ணம் எஞ்சி இருந்த மீனவ நண்பன் படப்பிடிப்பு வேலைகள், படத்தொகுப்பு, டப்பிங் ,பின்னணி இசை வேலைகளுக்காகவும், தொடர்ந்து மறைந்த இயக்குனர் பந்துலுவின் படமான மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன் படத்தின் வேலைகள்*முடிக்க ஆயத்தமாகவும் செயல்பட்டார் .இடைப்பட்ட நேரத்தில் ஆளுநர் மாளிகையில் இருந்து எம்.ஜி.ஆர். எப்போது பதவி ஏற்க உள்ளார் என்பதில் மிகவும் ஆர்வமாக இருந்த நேரம் .ஆனால் அவர் பதவி ஏற்பதில் அவசரம் காட்டாமல் பட தயாரிப்பாளர்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை முதலில் நிறைவேற்றினார் .முதல்வர் பதவிக்காக சண்டை, சச்சரவு, அடித்துக் கொள்ளும் இந்த காலத்தில் எம்.ஜி.ஆர். பொறுமை காத்து ,தான் அபரிமிதமான வெற்றியை பெற்றுவிட்டாலும், பதவிக்காக ஓடோடி சென்று கோட்டையில் சென்று முதல்வர் இருக்கையில் அமருவதில்* முனைப்பு காட்டாமல் தன்னுடைய திரை துறை வேலைகளை முழுமையாக முடித்துவிட்டு , நிதானமாக மக்கள் முன்னிலையில் பதவியேற்று , பத்தாண்டுகள் மேலாக* தொடர்ந்து மூன்று முறை* முதல்வராக நீடித்தார் .


இந்த சகாப்தம் நிகழ்ச்சிக்கு ரசிகர்கள், பொதுமக்கள் தந்து கொண்டிருக்கிற ஆதரவு மிக பெரிய உற்சாகத்தை தருகிறது .* எங்கு எப்போது யார் பார்த்தாலும், நேரிலோ, தொலைபேசியிலோ, கைபேசியிலோ இந்த நிகழ்ச்சியை பற்றி பேசுவது நெகிழ்ச்சியாக உள்ளது .இந்த கொரோனா கொடிய நோய்* பரவல் காலத்தில், மிகவும், நம்பிக்கையாகவும், மாமருந்தாகவும் , ஆறுதலாகவும் இருக்கிறது மனிதநேயம், மனிதாபிமானம் கொண்ட எம்.ஜி.ஆரின் திருமுகத்தை மீண்டும் மீண்டும் பார்த்துக் கொண்டே இருந்தாலும் சலிப்பு தோன்றுவதில்லைஎன்று பலரும் வியந்து எம்.ஜி.ஆரை ,அவரின் செயல்பாடுகளை போற்றுகிறார்கள் .இந்த போற்றுதல் தொடர்ந்து கொண்டே இருக்க, இந்த கொரோனா நோய் பரவும் காலத்தில் ஆறுதலாக**இருக்க, சகாப்தம் நிகழ்ச்சியை*எம்.ஜி.ஆர் .என்கிற அரிய மனிதரின் அரிய வாழ்க்கையை, ஏழை மக்களின் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கிய பல்வேறு வாழ்க்கை எடுத்து காட்டுக்களை தொடர்ந்து அறிந்து கொள்வோம் .


நிகழ்ச்சியில் ஒலித்த பாடல்கள் /காட்சிகள் விவரம்*
---------------------------------------------------------------------------------
1.துள்ளுவதோ இளமை - குடியிருந்த கோயில்*

2.நீல நிறம் , வானுக்கும் கடலுக்கும் நீல நிறம் - என் அண்ணன்*

3.பன்சாயி, காதல் பறவைகள்* *- உலகம் சுற்றும் வாலிபன்*

4.ஒரே முறைதான் உன்னோடு பேசிப்பார்ப்பேன் - தனிப்பிறவி*

5.கண் போன போக்கிலே கால் போகலாமா - பணம் படைத்தவன்*

6.பெரிய இடத்து பெண் படத்தில் எம்.ஜி.ஆர்.*

7.எம்.ஜி.ஆர். - எம்.ஆர். ராதா உரையாடல் -பெரிய இடத்து பெண்*

8.இது நாட்டை காக்கும் கை - இன்று போல் என்றும் வாழ்க*

9.எம்.ஜி.ஆர். -நம்பியார் மோதல் - எங்க வீட்டு பிள்ளை*

10.நேத்து பூத்தாலே* ரோஜா மொட்டு -* உரிமைக்குரல்*

11.எம்.ஜி.ஆர். - ஜெயலலிதா உரையாடல் - அடிமைப்பெண்*

orodizli
29th July 2020, 07:16 AM
பெங்களுரில்�� நட்ராஜ் திரையரங்கில்
மக்கள் திலகம் எம்ஜிஆர் படம்
ஒளி விளக்கு படத்தின் கோலகலமாகன
மலைபோல் மாலைகள்.23-12-2016..அன்று...

மக்கள் திலகத்தின் ஒளிவிளக்கு - 1968 முதல் 2013 இன்று வரை 45 ஆண்டுகளாக தொடர்ந்து
தமிழ் நாடு - கேரளா - ஆந்திரா - கர்நாடகம் - இலங்கை போன்ற இடங்களில் பல முறை
திரையிடப்பட்டு சாதனை புரிந்துள்ளது .
1984 - நவம்பர் மாதம் பெங்களுர் நகரில் 7 அரங்கில் தினசரி 4 காட்சிகள் திரையிடப்பட்டது .

தேவி - 21 நாட்கள்
சிவாஜி - 14 நாட்கள்
நாகா - 14 நாட்கள்
ஜெயஸ்ரீ - 7 நாட்கள்
பாலாஜி - 7 நாட்கள்
கோபால் -7 நாட்கள்
மாருதி - 7 நாட்கள் - ஓடி வசூலில் சாதனை புரிந்தது

அசத்தலான படத்தின் தலைப்பு
ஆரம்பத்தில் மக்கள் திலகம் ஓடி வரும் அற்புத காட்சி.
தேன்சொட்டும் பாடல்கள்
வண்ண வண்ண உடைகளில் மக்கள் திலகம் தோன்றும் காட்சிகள். அவரின் நவரச நடிப்பு.
சுறுசுறுப்பான சண்டைக்காட்சிகள்.
சிறந்த கதை
உன்னத உரையாடல்கள்.
பொன்மனச்செம்மலின் 100-வது படமான ஒளி விளக்கு அவரின் அனைத்து ரசிகர்களையும் கவர்ந்த படம்.....

நான் கெட்டவன்தான் - அனால் கேவலமானவன் இல்லை - இது போன்ற ஆழ்ந்த பொருள் பொதிந்த வசனங்கள் படம் பூராவும் விரவியிருக்கும்... பட்டன் கத்தியை எவ்வளவோ பெயர் கையாண்டிருக்கிறார்கள் !!! அனால் இந்த படத்தில் mgr அவர்கள் பட்டனை முடிக்கி நீட்டி பின் திரும்பவும் மடக்கும் லாவகம் இருக்கிறதே! அப்பப்பா !!! அதற்கு எவ்வளவு முறையான பயிற்சி எடுத்திருந்தால் காட்சியில் சிறப்புற பரிணமளிக்கும் என்பதை அச்செயலை செய்து பார்த்தவர்களுக்கே விளங்கும்...

1984 அக்டோபரில், எம்.ஜி.ஆர். உடல் நலம் பாதிக்கப்பட்டு, ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இருந்தபோது, அவர் குணம் அடைய தமிழகம் முழுவதும் பிரார்த்தனைகள் நடந்தன.
அப்போது “ஒளிவிளக்கு” படத்தில் வாலி எழுதியிருந்த “இறைவா, உன் மாளிகையில் எத்தனையோ திருவிளக்கு! தலைவா, உன் காலடியில் என் நம்பிக்கையின் ஒளிவிளக்கு” என்ற பாடல்தான் பிரார்த்தனை கீதமாக ஒலிபரப்பப்பட்டது.
எம்.ஜி.ஆர். உடல் நலம் பாதிக்கப்பட்டு, அப்பல்லோ மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தபொழுது, மிகுந்த மனச்சுமையோடு அவரைப் பார்ப்பதற்காக ஆஸ்பத்திரிக்குச் சென்றிருக்கிறார் கவிஞர் வாலி. திருமதி ஜானகி அம்மாளும், சத்தியவாணிமுத்து அம்மையாரும் கண் கலங்க நின்று கொண்டிருக்க, ஆறுதல் சொன்னார் கவிஞர்.
“உங்கள் ஒளிவிளக்கு படத்து பாடலைத்தான், நாடே பாடி உங்கள் அண்ணனுக்காகப் பிரார்த்தனை செய்து கொண்டு இருக்கிறது. அந்த பிரார்த்தனையின் பலனாகத்தான், அவர் ஆபத்தான கட்டத்தை தாண்டிவிட்டார் என்று டாக்டர்கள் கூறியிருக்கிறார்கள். இனிமேல் அவருக்கு ஆபத்து இலலை” என்று திருமதி ஜானகி அம்மையார் கண்கள் பனிக்க வாலியிடம் கூறினாராம்.
“என் பாட்டுடைத் தலைவனுக்கு என் பாட்டே பிரார்த்தனை கீதமாக ஆனது குறித்து, நான் அளவில்லாத ஆனந்தம் அடைந்தேன். இருந்தாலும், அம்மா! இது வாலி பாக்கியம் அல்ல; உங்கள் தாலி பாக்கியம்” என்று சமயோசிதமாக பதில் கூறினாராம் நம் கவிஞர்....
✌✌✌��������✌✌✌✌✌
வாழ்க தலைவரின் புகழ் என்றுமே.........

fidowag
29th July 2020, 08:00 PM
பாட்டாலே புத்தி சொன்ன*வாத்தியார் எம்.ஜி.ஆர்.-வின் டிவியில்*சகாப்தம்*நிகழ்ச்சியில் 08/07/20* அன்று திரு.துரை பாரதி*அளித்த தகவல்கள்*
-----------------------------------------------------------------------------------------------------------
சகாப்தம் நிகழ்ச்சியில் எம்.ஜி.ஆரின் வாழ்க்கை வரலாறை ஒரு ஆராய்ச்சியாளனாக, வரலாற்று ஆசிரியராக இருந்து இந்த தொடரில் பல்வேறு விதமான தகவல்களை அளித்து வருகிறேன் .*


புரட்சி தலைவர் எம்.ஜி .ஆர். அவர்கள் சினிமாவில் வாய்ப்புகள் தேடி வந்த காலத்தில், சென்னையில், வால்டாக்ஸ் சாலை அருகில், ஒற்றைவாடை அரங்கு அருகாமையில் தன் தாயார், அண்ணன் , அண்ணியுடன் மாதம் ரூ.15/- வாடகைக்கு வசதியற்ற வீட்டில் குடி இருந்தவர் ,*இந்த தமிழ்நாட்டை , ஆளும் வல்லமையை எப்படி பெற்றார் என்பதற்கு நீண்ட வரலாறு உண்டு . ஒரு சாமான்ய மனிதர், மிக பெரிய ஆட்கள் பலமில்லை, பெரிய படிப்பு அறிவு இல்லை . பெரும் பணக்காரர் இல்லை ,ஆனாலும் இத்தனை கோடி தமிழர்களின் நெஞ்சங்களில், இதயங்களில் இடம் பிடித்து , பல எதிர்ப்புகளை வென்று, எப்படி ஆட்சியை பிடித்தார் ,அதற்கான வழிகளை எவ்வாறு கண்டறிந்தார் எங்ஙனம் வாழ்ந்து காட்டினார் என்ற தகவல்களை தான் நாம் ஆராய்ந்து வருகிறோம் .



பேரறிஞர் அண்ணாவின் பொன்மொழிகளை, வழிகளை, பல்வேறு வகைகளில் எம்.ஜி.ஆர். பின்பற்றி நடந்து வந்தார் .* திரைப்படங்களில், நான் படித்தேன் காஞ்சியிலே நேத்து, சத்தியம்தான் நான் படித்த புத்தகம் அம்மா .சமத்துவம்தான் நான் அறிந்த தத்துவம் அம்மா, எல்லோருக்கும் வழி காட்ட நானிருக்கிறேன் , வந்தாரை வரவேற்க காத்திருக்கிறேன் , அண்ணாவின் பேர் சொல்லும் காஞ்சியை போல் நேருவின் புகழ் சொல்லும் பூமி இது, விழிபோல் எண்ணி நம் மொழி காக்க வேண்டும், தவறான பேர்க்கு நேர்வழி காட்ட வேண்டும் , ஜனநாயகத்தில் நாம் எல்லோரும் மன்னர் , தென்னாட்டு காந்தி அந்நாளில் சொன்னார் என்று பாடி நடித்தார் ..இன்னும் எவ்வளவோ பாடல்கள் உள்ளன .


கடவுள் நம்பிக்கையை பற்றி அண்ணா , ஏழையின் சிரிப்பில் இறைவன் இருக்கின்றான் என்று சொன்னார் . எம்.ஜி.ஆர். அடிமைப்பெண் படத்தில்*இறைவன் ஒருவன் இருக்கின்றான் ,அவன் கருப்பா, சிவப்பா தெரியாது ,*ஏழைகள் உழைப்பில் சிரிக்கின்றான் .ஆனந்த ஜோதி படத்தில் கடவுள் இருக்கின்றான் ,அது உன் கண்ணுக்கு தெரிகின்றதா என்று பாடி நடித்துள்ளார் .அண்ணாவின் கனவுகளை, பொன்மொழிகளை,நினைவுகளை* தனது திரைப்படங்களின் மூலம் நகரங்கள், கிராமங்கள், பட்டி, தொட்டியெல்லாம் கொண்டு சென்று பேரறிஞர் அண்ணாவுக்கு பெரும் புகழ் சேர்த்த பெருமை மக்கள் திலகம் எம்.ஜி.ஆருக்கு மட்டுமே உண்டு .*



ஒருமுறை பேரறிஞர் அண்ணா சக தலைவர்களுடன் வெளியூரில் காரில் பயணம் செய்யும்போது கார் டயர் பஞ்சர் ஆகி பழுது பார்க்கும் நேரம் . காரில் உள்ள தி.மு.க. கொடியை பார்த்து அண்ணாவிடம் அந்த ஊர் கிராமத்தினர்*நீங்கள் எம்.ஜி.ஆர். கட்சியை சார்ந்தவரா என்று கேட்கிறார்கள். அப்போது அண்ணா பெருந்தன்மையுடன் ஆமாம் என்று சொன்னாராம் . எம்.ஜி.ஆர். கட்சி என்றாலே தி.மு.,க. தான் என்று புற நகரங்களிலும், கிராமங்களிலும் மக்கள் கருதி வந்த காலம் அது .தன்னுடைய உழைப்பு, அறிவு, ஆற்றல் ,அழகு , அனைத்தையும் தி.மு.க.வுக்கு அர்ப்பணித்து கட்சியை வளர்த்த எம்.ஜி.ஆரை*1972ல் தி.மு.க.வில் இருந்து தூக்கி எறிந்தனர் .**



மதுரையில் நடந்த தி.மு.க. மாநில மாநாட்டை முரசொலி மாறன் தலைமையில் கருணாநிதியின் மகன் மு.க முத்து ஊர்வலத்தை துவக்கி வைத்தார் . 1972ல் பிள்ளையோ பிள்ளை மு.க.முத்து நடிப்பில் வெளியானது .அந்த நேரத்தில் பிள்ளை இல்லை என்று ஏங்குவோர் பலரிருக்க , இங்கு வந்திருக்கிறார் பிள்ளையோ பிள்ளை என்று எம்.ஜி.ஆரை ஏளனம் செய்து பேசினார்கள் .* இந்த பேச்சுக்களை கேட்டு கொதிப்படைந்த எம்.ஜி.ஆர். ரசிகர் மன்றத்தினர் கருப்பு சிவப்பு* நிறம் கொண்ட தி.மு.க. கொடியில் தாமரை சின்னத்தை வரைந்து உருவாக்கினார்கள் . அப்போது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் திரு. தாமரைக்கனி (முன்னாள் எம்.எல்.ஏ.)தலைமையிலும் மாவட்டத்தில் திரு. எஸ்.டி.எம்.சந்திரன் என்பவர் தலைமையிலும் கொடி ஏற்றி வைக்கப்பட்டது .அங்கு நடந்த முதல் கூட்டத்தில் தேரடி அருகில் திரு.சைதை துரைசாமி அவர்கள் பேசினார்கள் .நீங்கள் எல்லாம் எம்.ஜி.ஆர் அவர்களின் கொள்கை காக்கும் பொறுமையாளர்கள்*என்றபோது , கூட்டத்தினர் நீங்கள் பொறுமை காக்க சொல்கிறீர்கள். ஆனால் எங்கு பார்த்தாலும் எம்.ஜி.ஆர். மன்றங்கள் கலைக்கப்படுகின்றன . மு.க. முத்து*மன்றங்கள்* ஆரம்பிக்க சொல்லி வற்புறுத்துகிறார்கள் எம்.ஜி.ஆர். மன்றங்களை எல்லாம் கலைத்தால் நாங்கள் எங்கு செல்வது என்று வருத்தப்பட்டார்கள்*அவர்களது வருத்தத்தில் நியாயம் இருந்தது .ஏனென்றால் , ஆட்சி அதிகாரத்தில் இருந்ததால், தன்னை எதிர்ப்பவர்களை, முறியடிப்பதில், அடிப்பதில் வல்லவர்* என்கிற கருணாநிதியின் வல்லமையை அறிந்து இருந்தவர் எம்.ஜி.ஆர்.*



ஆரம்பத்தில் கட்சி ஆரம்பிப்பதில் எம்.ஜி.ஆர். மிகவும் தயக்கம் காட்டினார் .அப்போது கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் திரு.கல்யாணசுந்தரத்துடன் தொடர்பு கொள்ள விரும்பினார் . எந்த இடத்தில, எந்த நேரத்தில் சந்திப்பது ,யாருடைய காரில் செல்வது எப்படி பார்ப்பது என்று சில தயக்கங்கள்* இருந்தன* காரணம்*கருணாநிதியின் உளவாளிகள் ஆங்காங்கு உளவு பார்த்து தகவல்கள் சொல்வதற்கு நியமிக்கப்பட்டார்கள் .* எனவே மிகவும் ரகசியமாக வேறு ஒருவர் காரில் எம்.ஜி.ஆர். சென்று கல்யாணசுந்தரம் அவர்களுடன் பேசினார் .இருவரும் கலந்து பேசியபின் கட்சி ஆரம்பிக்க முடிவு செய்த எம்.ஜி.ஆர். ,நான் தனி மனிதன்**,என்னை யார் தாக்கினாலும் தாங்கி கொள்ளும் தைரியமும், எதிர்க்கும் மனோபாவமும் உள்ளது .***ஆனால் ,என்னால் என் அப்பாவி, ரசிகர்கள், தொண்டர்கள் அடிபடுவதை, காயப்படுவதை, உயிர் இழப்பதை எப்படி தாங்க முடியும் . எத்தனை குடும்பங்களை என்னால் காப்பாற்ற முடியும் . இதற்கு ஒரு முடிவு வேண்டும் அதனால்தான் கட்சி ஆரம்பிக்க முடிவு எடுத்துள்ளேன் என்று வெளிப்படையாக பேசினார் . எம்.ஜி.ஆர். மற்றவர்களை போல ஆட்சி, அதிகாரம், பதவி என்ற நோக்கத்தில் முடிவு எடுக்கவில்லை, தன்னை நம்பி இருப்பவர்கள் யாரும் காயப்பட்டு விடக் கூடாது , உயிர் இழந்து விடக்கூடாது , அதனால் அவர்களுடைய குடும்பங்கள் நிர்க்கதியாக தெருவில் நிற்க கூடாது என்று மனதார விரும்பினார் . அதனால் ஆரம்பத்தில் இருந்த தயக்கங்கள், இந்த பேச்சு வார்த்தைகளின் மூலம் நீங்கி கட்சி ஆரம்பிக்க தீர்க்கமான முடிவு எடுத்தார் எம்.ஜி.ஆர்.*

மேலும் பல தகவல்களை அடுத்த அத்தியாயத்தில் பார்ப்போம்*

நிகழ்ச்சியில் ஒலித்த பாடல்கள் /காட்சிகள் விவரம்*
--------------------------------------------------------------------------------
1.புதிய வானம், புதிய பூமி,* - அன்பே வா*

2.உன்னை அறிந்தால் உலகத்தில் போராடலாம் - வேட்டைக்காரன்*

3.உங்களில் நம் அண்ணாவை பார்க்கிறேன் -நவரத்தினம்*

4.உன்னை பார்த்து இந்த உலகம் சிரிக்கிறது - அடிமைப்பெண்*

5.நான் உங்கள் வீட்டு பிள்ளை - புதிய பூமி*

6.மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்* - தெய்வத்தாய்*

7.ஒரு தாய் வயிற்றில் வந்த உடன்பிறப்பில் - உரிமைக்குரல்*

8.எத்தனை* பெரிய மனிதனுக்கு எத்தனை சிறிய மனமிருக்கு -ஆசைமுகம்*

9.ஏமாற்றாதே, ஏமாற்றாதே - அடிமைப்பெண்*

10.மக்களாட்சிக்காக போராடும் எம்.ஜி.ஆர். -நாடோடி மன்னன்*

fidowag
30th July 2020, 11:48 PM
பாட்டாலே*புத்தி சொன்ன வாத்தியார் எம்.ஜி.ஆர். -வின் டிவியில்*சகாப்தம்*நிகழ்ச்சியில் திரு.துரை பாரதி*அவர்கள்* 10/07/20அன்று சொன்ன*தகவல்கள்*
-------------------------------------------------------------------------------------------------------------

சகாப்தம் நிகழ்ச்சியை கண்டு களித்து ,ரசித்து வரும் பக்தர்கள் யாராவது சிலர்*ஒவ்வொரு நாளும் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். பற்றிய தகவல்கள் அறிந்து ,நெகிழ்ந்து புகழ்ந்த வண்ணம் உள்ளார்கள் என்பது மனதிற்கு தெம்பை தருகிறது .அவரை பற்றி நம்முடன் பகிர்ந்து கொள்ளும் பல்வேறு* விஷயங்கள் ஆச்சரியப்படத்தக்க வை . அதிசயிக்கத்தக்கவை* ஆகும்*

வாழ்க்கையில் ஒரு சொல், இசை, ஒரு ,வார்த்தை, ஒரு மனிதனின் சந்திப்பு எவ்வளவு பெரிய மாற்றங்கள் ஏற்படுத்தியுள்ளது என்பதற்கு எம்.ஜி.ஆர்.என்கிற ஒரு மாமனிதரின் பங்களிப்பு ஒரு உதாரணம் . மனிதநேய மிக்க மாமனிதரான எம்.ஜி.ஆர் என்கிற அற்புத மனிதரின் செய்கைகள், செயல்பாடுகள் ,உதவிகள் ,கொடைத்தன்மைகள், பல லட்சக்கணக்கான மக்களிடையே பல அற்புதங்கள்*நிகழ்த்தியுள்ளது என்று அவரது வாழ்க்கை வரலாற்று செய்திகள் ,சம்பவங்கள்*பல நூல்களில் அறிஞர்களால் எழுதப்பட்டுள்ளன . இதற்கு பல உதாரணங்கள் கூறலாம் .மும்பையில் தாராவி பகுதியில் புலவர் ராமச்சந்திரன் என்பவர் எம்.ஜி.ஆர். நினைவாக பல நல்ல சமூகநல திட்டங்கள் செயல்படுத்தி வருகிறார் .பல ஊர்களில், பல நகரங்களில்,ஏன் வெளிநாட்டில் கூட எம்.ஜி.ஆர். நினைவாக இன்றும் பல நல்ல சமூக நல திட்டங்கள் பலரால்* செயல்படுத்தபடுகிறது என்று செய்திகள் வந்த வண்ணம் உள்ளன .திலகம் என்றாலே நெற்றியில் இட்டுக் கொள்வது .மறைந்தும் மறையாத மக்கள் திலகமாகிய எம்.ஜி.ஆர். மக்களின் நெஞ்சங்களில் இட்டுக் கொண்ட* திலகமாக திகழ்கிறார் என்பதற்கு* இந்த சகாப்தம் நிகழ்ச்சிக்கு தொடர்ந்து பெருகி வரும் ஆதரவு, பாராட்டு, வாழ்த்து செய்தி நம்மை ஊக்குவித்து வருகிறது என்று பெருமையுடன் கூறிக் கொள்கிறேன் .


சென்னை தி.நகர் ஆற்காடு சாலையில் உள்ள எம்.ஜி.ஆர். அலுவலகத்தில் சுமார் 15 வயதுள்ள சிறுவன் ஒருவன் பணியாற்றி வந்தான் . அலுவலகத்திற்கு வருபவர்களை கவனிப்பது , இருக்கையில் அமர செய்வது ,நாற்காலிகளை ஒழுங்கு படுத்துவது .போன்ற சிறுசிறு வேலைகள் செய்து வந்தான் .ஒரு நாள் ஏதோ கோபத்தில் எம்.ஜி.ஆர். அந்த சிறுவனை வேலையை விட்டு நீக்கி வெளியே அனுப்பி விடுகிறார் .* பத்திரிகையாளர் கார்த்தி என்பவர் அந்த சிறுவனை ஒரு டீக்கடையில் பார்த்துவிட்டு, ஏன் தலைவர் அலுவலகத்திற்கு வரவில்லை இங்கு என்ன வேலை உனக்கு என்று கேட்க, அந்த சிறுவன் தலைவர் என்னை வரவேண்டாம் என்று சொல்லிவிட்டார் என்று கூறுகிறான் .அப்படியென்றால் எங்கு சாப்பிடுகிறாய், எங்கே தங்குகிறாய் என்று கேட்க*ஏதோ கிடைத்ததை சாப்பிடுகிறேன் .சில சமயம் ஏதாவது பிளாட்பாரத்தில் தூங்கிவிடுவேன் என்கிறான் . என்ன செய்வது என்று புரியவில்லை, எங்கே போவது என்று தெரியவில்லை என்று புலம்பி அழுதான் .* அதன் பிறகு எம்.ஜி.ஆரை சந்தித்த கார்த்தி எங்கே அந்த சிறுவனை காணோம் என்று கேட்க ,அவன் செய்த தவறுகளால் வெளியே அனுப்பிவிட்டேன் . என் பெயரை சொல்லி சிலரிடம் பணம் வாங்கியுள்ளான் செய்யத்தகாத செயல்களை செய்துள்ளான்*என்று கூறினார் .எம்.ஜி.ஆர். பதிலுக்கு கார்த்தி, அவன் எங்கே போவான், அவனுக்கு உற்றார், உறவினர் கிடையாது, சாப்பாட்டுக்கு வழியில்லை . ஏதோ பிளாட்பாரத்தில்தான் தங்குவான் போலிருக்கிறது . நான் ஒரு டீக்கடையில் அவனை பார்த்தேன் .விசாரித்ததில் தலைவர்தான்* என்னை வெளியே அனுப்பி விட்டார் என்று* வருத்தப்பட்டு சொன்னான் என்பதற்கு எம்.ஜி.ஆர். நான் முடிவெடுத்துவிட்டால் அதை மாற்ற முடியாது என்றார் .சிறிது நேரத்திற்கு பிறகு மீண்டும் கார்த்தி எம்.ஜி.ஆரிடம் அவனுடைய பிரச்சனைகளான,உணவு, உடைகள் உறைவிடம், உறவினர் எவரும் கிடையாது என்று மீண்டும் சொல்லி*அவன் மிகவும் கஷ்டப்படுகிறான் , மீண்டும் தவறு செய்யமாட்டான் என்று தோன்றுகிறது என்று கூறினார் கார்த்தி. சில நிமிடங்கள் கழித்து, எம்.ஜி.ஆர். கார்த்தியிடம் நான் அவனை கூப்பிடும் நிலையில் இல்லை . வேண்டுமானால் நீங்கள் சென்று அவனிடம் பேசி , வேலையில் வந்து மீண்டும் சேர சொல்லுங்கள்*மீண்டும் தவறுகள் நடக்காத வண்ணம் அவனுக்கு அறிவுரை கூறுங்கள் என்றார் எம்.ஜி.ஆர். எந்த பிரச்னையாக இருந்தாலும் , சொல்கிறவர் சின்னவரா, பெரியவரா , முக்கியஸ்தரா என்று பார்க்காமல் பிரச்னையின் சூழ்நிலையை கருதி , மனம் இரங்கி , மீண்டும் அந்த சிறுவனை மன்னித்து* வேலையில் சேர்த்துக் கொண்டாராம் எம்.ஜி.ஆர்.*


கார்த்தி என்பவர் சென்னை டீக்கடை உரிமையாளர் சங்கத்தின் தலைவராக* சில காலம்*இருந்தார்.* *டீக்கடை உரிமையாளர் சங்கத்திற்கான வித்து, விதை என்பது*எம்.ஜி.ஆர். என்கிற மாமனிதரின் பேராதரவால் உருவானது .என்பது பலரும் அறியாத விஷயம் .ராயப்பேட்டையில் சென்னை பெருநகர டீக்கடை உரிமையாளர் சங்க அலுவலகம் மறைந்த கார்த்தி வைத்திருந்தார் .அவருக்கு சொந்த வீடு கிடையாது . எம்.ஜி.ஆர். முதல்வராக பக்கத்தில்* இருந்தபோது வீட்டு வசதி வாரியத்தின் மூலம் ஒரு வீடுகூட வாங்கியிருக்கலாம் .ஆனால் வாங்கவில்லை .தான் எந்த வசதியும் பெற்றுக் கொள்ளாதவர் , தனக்கென்று*எதையும் வாங்கி கொள்ளாமல் ஒரு அர்ப்பணிப்போடு பணியாற்றியவர் .பல அமைச்சர்கள் அவரை பார்ப்பதற்காக, அமைச்சராவதற்கு முன்னால்** நெல்சன் மாணிக்கம் சாலையில் உள்ள அண்ணா பத்திரிகை அலுவலகத்தில் மணிக்கணக்காக காத்திருந்த காலம் உண்டு .அந்த* காட்சியை நானே பலமுறை*பார்த்திருக்கிறேன் .நான்* கார்த்தியை பார்க்க செல்லும்போது ,ஒரு சில முன்னாள் அமைச்சர்கள் அவரை பார்க்க காத்திருந்த காட்சி என் நினைவில் பசுமையாக உள்ளது .தான் மறையும் தருவாயில் கூட எந்தவிதமான அரசு வீடோ, உதவியோ* பெறுவதில் முனைப்பு காட்டாத அப்பழுக்கற்ற பத்திரிக்கையாளர் என்பது* ஊடக துறையில் குறிப்பிடபட* வேண்டிய விஷயம் .


கார்த்தி என்பவர் எதற்காக இந்த சென்னை பெருநகர டீக்கடை உரிமையாளர் சங்கத்தை உருவாக்க நேர்ந்தது* என்பது பலரும் அறிந்து கொள்ள வேண்டிய* சுவையான விஷயம்* . தி.மு.க. ஆட்சியில் ,ஒரு கட்டத்தில் எம்.ஜி.ஆருக்கு எதிரான போக்கை கருணாநிதி கடைபிடித்தார் . தன் மகன் மு.க. முத்து சினிமாவில் வேரூன்றும் வகையில் எம்.ஜி.ஆர். மன்றங்களை* * முற்றிலும்**கலைப்பது , மு.க. முத்து மன்றங்களை தோற்றுவிக்க ஊக்குவிப்பது , அது குறித்து நிருபர்களுக்கு உரிய தகவல்கள் அளிப்பது* பிள்ளையோ பிள்ளை படத்திற்கு போதிய விளம்பரம் தருவது , திரை அரங்கு உரிமையாளர்களுக்கு*மு.க. முத்து படம் ஓட்டுவதற்கு மிரட்டல் விடுவது ,என்று பல செயல்களில்*அன்றைய முதல்வர் கருணாநிதி மும்முரமாக ஈடுபட்டார் .அதே சமயத்தில் எம்.ஜி.ஆர். ஒரு மலையாளி என்ற விவகாரத்தை கையில் எடுத்து ,டீக்கடை வைத்திருந்தவர்களுக்கு தி.மு.க. ஆட்சியில் ,அரசு மூலமும், மாநகராட்சி மூலமாகவும் நெருக்கடிகள், தொல்லைகள்** அளிக்கப்பட்டது .டீக்கடை பணியாளர்கள் இரவில் நேரம் கழித்து வீடு திரும்பினாலோ, வெளியில் சென்றாலோ,சந்தேக வழக்கு காவல்துறை பதிவு செய்யும் .* கடைக்கு வெளியே விளம்பர பலகை, தட்டிகள் வைத்திருந்தால் மாநகராட்சி பணியாளர்கள் பறிமுதல் செய்வார்கள் .இந்த துன்பங்கள், தொந்தரவுகள் மிக அதிகம் பெருகி வந்த காலத்தில்தான் கம்யூனிஸ்ட் கட்சியை சார்ந்த திரு.பக்தவச்சலம் என்பவர்*டீக்கடை உரிமையாளர் சங்கம் தோற்றுவிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் பணியாற்றி வந்தார் . அவருடன் இருந்த கார்த்தி ,எம்.ஜி.ஆரை சந்தித்து ஆலோசனைகள் கேட்க, எம்.ஜி.ஆர். அதன் அவசியத்தை வலியுறுத்தி கண்டிப்பாக தொடங்க வேண்டி* தன்னுடைய மேலான ஆதரவை தெரிவித்தார்*எம்.ஜி.ஆரின் வற்புறுத்தலின்பேரில் கார்த்தி சென்னை பெருநகர டீக்கடை உரிமையாளர் சங்கத்தை தோற்றுவித்தார் . இந்த சங்கம் இன்றைக்கும் இவர்களுக்கு பாதுகாப்பு அரணாக இருக்கிறதென்றால் இதற்கு முதலில் வித்திட்டவர் திரு.பக்தவச்சலம் என்கிற தீவிர கம்யூனிஸ்ட் என்றால் அதை, வற்புறுத்தி, வலியுறுத்தி ஆரம்பிக்க தூண்டியவர் எம்.ஜி.ஆர்.தான் என்று சொன்னால் மிகையாகாது .**


மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். ராஜராஜன் படத்தில் சோழ மன்னனாகவும், மகாதேவியில் சோழ மன்னன் வல்லபனாகவும் , மன்னாதி மன்னனில் சேர மன்னனாகவும், ராணி சம்யுக்தாவில் ராஜபுத்திர மன்னனாகவும் ,காஞ்சி தலைவனில்* பல்லவ மன்னனாகவும் , கலங்கரை விளக்கத்தில் நரசிம்மவர்ம பல்லவனாகவும் , மதுரையை மீட்ட சுந்தர பாண்டியனில் , பாண்டிய மன்னனாகவும் இப்படி எல்லா மன்னர்களாகவும், தன்னை உருவாக்கி மக்கள் மனதில் மன்னாதி மன்னனாக இன்றும் நிலைத்து நீடித்து நிற்கிறார்.அதனால்தான் எந்த கால கட்டத்திலும் எந்த ஆட்சியில் இருந்தும்* மக்களை மறவாத மன்னனாக தன்னைக் காட்டிக்கொண்டு படத்தில் நடித்ததால்தான் மக்கள் அவரை ஆட்சி பீடத்தில் தொடர்ந்து பத்தாண்டுகள் அமர வைத்தனர் .


எம்.ஜி.ஆர். அவர்கள் பொது வாழ்விலும், அரசியல் வாழ்விலும் எந்த அளவிற்கு மற்ற தலைவர்களும் மதிக்கத்தக்க பண்பாளர் என்பதற்கு உதாரணம் .ஒருமுறை முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி ஆளுநர் மாளிகைக்கு வருகை தந்தார் .அவர் பிரதமராக இல்லாதபோதும் வருகை தந்துள்ளார் .அவர் பதவியில் இருந்தாலும் , இல்லாவிட்டாலும் ,அவருக்கு மரியாதை தரும் வகையில் அவர் அருகில் எம்.ஜி.ஆர். அமராமல் நின்று கொண்டிருப்பார் .* எம்.ஜி.ஆர். முதல்வரான பிறகும் கூட ஒருமுறை இந்த சந்திப்பின்போது இந்திரா* காந்தி மிஸ்டர் எம்.ஜி.ஆர். நீங்கள் அமரவில்லை என்றால் நானும் அமர மாட்டேன் என்று சொல்லி உட்கார வைத்தார் . தன்னைவிட உயர் பதவியில் உள்ளவர்களை என்றும் மதிக்கும் பண்பாளர் எம்.ஜி.ஆர். என்பதற்கு இது ஒரு சிறந்த உதாரணம் .

மேலும் தகவல்களை அடுத்த அத்தியாயத்தில் அறிந்து கொள்வோம்*

நிகழ்ச்சியில் ஒலித்த பாடல்கள் /காட்சிகள் விவரம்*
------------------------------------------------------------------------------------
1.என்றும் பதினாறு, வயது பதினாறு - கன்னித்தாய்*

2.எம்.ஜி.ஆர். =டி.கே.பகவதி உரையாடல் - நம் நாடு*

3.எம்.ஜி.ஆர்.-தேங்காய் ஸ்ரீநிவாசன் உரையாடல் -ரிக்ஷாக்காரன்*

4.எம்.ஜி.ஆர்.-எஸ்.வி.ரெங்கராவ்* உரையாடல் -நம் நாடு*

5.எம்.ஜி.ஆர்.-தேங்காய் ஸ்ரீநிவாசன் உரையாடல் -நினைத்ததை முடிப்பவன்*

6.இது நாட்டை காக்கும் கை - இன்று போல் என்றும் வாழ்க*




.

fidowag
31st July 2020, 11:12 PM
1966 நவ 11 ல் வெளிவந்த மகத்தான வெற்றிப் படம் "பறக்கும் பாவை" r r பிக்சர்ஸின் முதல் வண்ணப்படம். அதேபோல் r r பிக்சர்ஸுடன் எம்ஜிஆர் இணைந்து பணியாற்றிய கடைசி திரைப்படமும் இதுதான் அழகான வண்ணக்காட்சிகளையும் அருமையான பாடல்களையும் அற்புதமான சண்டை காட்சிகளையும் வியத்தகு சர்க்கஸ் காட்சிகளையும் எதிர்பாராத சஸ்பென்ஸ் காட்சிகளையும் உள்ளடக்கிய "பறக்கும் பாவை" வெளியான காலச்சூழல் சரியில்லை என்று நினைக்கிறேன்.

இப்போது பார்த்தாலும் படம் ஒரு காட்சி கூட தளர்வில்லாமல் விறுவிறுப்பாக செல்லும். சர்க்கஸில் மிருகங்களை தடை செய்தவுடன் மெல்ல மெல்ல சர்க்கஸ் அழிந்து போவதை நாம் கண்கூடாக காண்கிறோம். நல்லவேளை "பறக்கும் பாவை" அதற்கு முன்பே எடுக்கப் பட்டதால் சில அபூர்வமான சர்க்கஸ் காட்சிகளை நாம் காண முடிகிறது. .1966 தீபாவளிக்கு மிகவும் எதிர்பார்க்கப்பட்ட கலர் படம்.
"பறக்கும் பாவை"யோட "செல்வம்," "வல்லவன் ஒருவன்" போன்ற படங்கள் வந்தாலும் வசூலில் தூள் கிளப்பிய படம் "பறக்கும் பாவை"தான்.

எம்ஜிஆர் படங்களை பொறுத்தவரை முதல் 4 வாரங்களுக்கு வசூலில் அதிக வித்தியாசம் இருக்காது. ஏனென்றால் முதல் 4 வாரங்கள் எல்லா எம்ஜிஆர் படங்களுமே ஹவுஸ்புல்லாகத்தான் செல்லும். 4 வாரங்களுக்கு பிறகு படம் சுமாரான வெற்றியடைந்தால் அப்போதுதான் சிறிது ஏற்றம், இறக்கம் காணப்படும்.
"பறக்கும் பாவை"யை அடுத்து டிசம்பர் 9 ல் வெளியான "பெற்றால் தான் பிள்ளையா"? பெரிய வெற்றியை பெற்றதால் பிற்பகுதியில் வசூலில் சற்று தளர்வு ஏற்பட்டது உண்மைதான்.

இருப்பினும் முதல் 4 வாரங்களில் மிகப்பெரிய வெற்றி பெற்றதாக சொல்லப்படும் கணேசனின் "திருவிளையாடல்" "சரஸ்வதி சபதம்" போன்ற படங்கள் திருவண்ணாமலையில்
"பறக்கும் பாவை"யிடம்
பட்ட பாட்டை பாருங்கள் .
தீபாவளிக்கு "பறக்கும் பாவை"யுடன் வந்த "செல்வம்" முதல் வாரவசூலில் முக்கிய நகரங்களில் மிகவும் பின்தங்கியிருப்பதையும் பார்க்கலாம்.
அங்கு மட்டுமல்ல எல்லா ஊர்களிலும் இதுதான் கதை.

அதையடுத்து 67 ஜன 13 ல் வெளியான தாய்க்குத் தலைமகன் .வரும் வரை சென்னையில் 63 நாட்கள் ஓடியது.
மற்ற நகரங்களில் அதிகபட்சமாக
77 நாட்கள் வரை ஓடியது. மறு வெளியீட்டிலும் தொடர் ஓட்டம் ஓடி
வெற்றியை தக்க வைத்துக் கொண்டது.

"பறக்கும் பாவை" பட வெளியீட்டை ஒட்டி வேலூர் எம்ஜிஆர் மன்றத்தினர் ஒரு சிறப்பு மலரை வெளியிட்டது கூடுதல் சிறப்பு. அதுவரை வெளியான எம்ஜிஆரின் சாதனை படங்களின்
முழு விபரங்களை பதிவு செய்திருந்தார்கள். அந்த மலரின் முகப்பு தோற்றத்தை உங்கள் பார்வைக்கு வைக்கிறேன்.

எம்ஜிஆரின் பழைய படங்களின் லாபத்தை வைத்தே. T r ராமண்ணா வேறு நடிகர்களை வைத்து பல புதிய படங்களை தயாரித்தார். அதில் முக்கியமான "நான்", வெள்ளிவிழா கண்ட படம். "தங்க சுரங்கத்தி"ல் தடுக்கி விழுந்த பின்னும் "மாட்டுக்கார வேலனை" இயக்கும் வாய்ப்பை மக்கள் திலகம்
நட்புக்காக கொடுத்தாலும் அதை மறுத்ததால் ப.நீலகண்டனுக்கு அந்த வாய்ப்பு கிடைத்தது. அதன்பின் அவர் எடுத்த படங்கள் எல்லாமே சறுக்கல்கள்தான்.

fidowag
31st July 2020, 11:13 PM
"அடிமைப்பெண்" பிரமாண்ட படத்தின் செலவு சுமார் 40 லட்சம் என்று படம் வெளியாகும் நேரத்தில் சொல்லப்பட்டது. இதில் எம்ஜிஆர் சம்பளம் சேர்க்கப்படவில்லை. கோடியை தாண்டி வசூல் செய்தாலுமே போட்ட முதலை எடுக்க சுமார் 6 மாத காலம் தேவைப்பட்டது "அடிமைப்பெண்ணு"க்கு. அதன்பின்பு வெளியான "சிவந்த மண்ணி"ன் தயாரிப்பு செலவு தமிழுக்கு மட்டுமே சுமார் 42 லட்சத்தை தாண்டியது.
ஆனால் வசூல் அந்த அளவுக்கு எட்டிப்பிடிக்க முடியவில்லை. இரண்டு மொழிகளிலும் சேர்த்து சுமார் 50 லட்சத்திற்கும் மேல் கடனை பெற்றது ஸ்ரீதரின் சித்ராலயா நிறுவனம்.

இவ்வளவு நடந்த பின்னும் பெரியண்ணன் என்றொரு தயாரிப்பாளர் சிவாஜியை வைத்து பெரும் பொருட்செலவில் உருவாக்கிய படம்தான் "தர்மம் எங்கே?" சிவாஜியின் அருமை டைரக்டர் A C திருலோகச்சந்தர் அவர்களின் பராமரிப்பில் வளர்ந்த படம்தான் தர்மம் எங்கே? தயாரிப்பு செலவு 50 லட்சம் என்றும் பிரமாண்ட படம் என்றும் சொல்லப்பட்டது.

சிவாஜியை பொருத்தவரை பிரமாண்ட படங்கள் எதுவும் ஓடியதாக என் நினைவில் இல்லை.
புதிய பறவை, கர்ணன், சிவந்த மண், ராஜ ராஜ சோழன் இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். படம் பெரிய ஊர்களில் கூட 5 வாரம் தாண்டவில்லை. படத்தை முதலில் பார்த்தவர்கள் மிகவும் நல்லவர்கள். "யாம் பெற்ற துன்பம் வையகம் பெறாமலிருக்க" தியேட்டரை விட்டு வெளியே வந்தவுடன் அலறியபடியே ஓடினார்கள். எங்கள் ஊரில் முதல் நாள் மாலை 6 மணிக்காட்சிக்கு படம் வாய் பிளந்து நிற்பதை பார்த்தோம்.

இழுத்து பிடித்து ஓட்டினாலும் ஒரு வாரம் கூட ஓட்ட முடியாது என்று நினைத்த படத்தை 11 நாள் ஓட்டி 1972 ல் மிகப் பெரும் சாதனை புரிந்ததை அவர்கள் வாய் திறக்கவே இல்லை. மிகப் பெரிய நட்சத்திர பட்டாளம், திறமையான டைரக்டர் இருந்தும் படத்தை சிவாஜியிடம் இருந்து காப்பாற்ற முடியாமல் அனைவரும் தோல்வியடைந்தனர். சிவாஜியின் மிகை நடிப்பைக்கண்டு. புலியின் பள்ளியறைக்குள் வந்த புள்ளிமானைப்போல் பதறி, சிதறி, பின் கதறி சென்ற மக்களை கண்டு நெஞ்சம் உதறல் எடுத்ததை மறவேன்.

வாணிஸ்ரீயால் வாழ்ந்த வசந்த மண்டபத்தையும் ஜெயாவால் வாழ்க்கை பெற்ற மூக்கையா தேவரையும் மறந்து நீங்க பேசுவதில் தர்மம் எங்கே? என்று தேடினாலும் கிடைக்காது. 1972ல் நடந்த இத்தனை பெரும் தோல்வியை மறைத்து மற்ற நடிகர் நடிகைகளால் வெற்றி பெற்ற வேறு சில படங்களை சொல்லி பெருமை கொள்வதை என்னவென்று நினைப்பது. ஒரு நடிகரின் நட்சத்திர மதிப்பு என்பது அவர் நடித்த படுதோல்வி படங்களின் ஓட்டத்தில் இருந்து தெரிந்து கொள்ளலாம். தர்மம் எங்கே? மூலம் நாம் தெரிந்து கொள்வதென்ன? நீங்களே சொல்லுங்கள்.

போட்ட பணத்தில் 15 லட்சம் கூட திரும்பியிருக்க வாய்ப்பில்லை.
மொத்தம் 35 லட்சத்துக்கு மேல் தயாரிப்பாளருக்கு நஷ்டம்.
தயாரிப்பாளர் 'பெரியண்ணன்' படம் வெளிவந்த பின்பு 'சின்னத்தம்பி' ஆகியிருப்பார் என்றே நினைக்கிறேன். மிகை நடிப்பு என்று நான் சொல்லவில்லை அந்தப்படத்தின் விமர்சனத்தை எழுதிய அறந்தை நாறாயணன் அங்கலாய்ப்பதை பாருங்கள். அதேபோல் ராஜ ராஜ சோழன் மூலம் ஜி.உமாபதி, ஜீரோ உப்புமாபதி ஆனதையும் மறக்க முடியுமா?

எம்ஜிஆரை வைத்து கோடி ரூபாய் செலவில் 70 mm படம் எடுக்க போட்டிருந்த திட்டமும் பணால் ஆகிவிட்டதை நாங்கள் மறவோம். அறந்தை நாறாயணனும் சாதாரணமாக அந்த படத்தை பார்த்துவிடவில்லை. அந்த படத்தை பார்ப்பதென்பது பாலைவனத்தில் தண்ணீரும் ஒட்டகமும் இல்லாமல் அலைவதற்கு ஒப்பானது என்பது
அவர் எழுதிய விமர்சனத்தில் இருந்து தெரிந்து கொள்ளலாம்.

என்னை பொறுத்தவரை வழக்கமான சிவாஜி படங்களில் காணப்படும் மிகை நடிப்பு நட்சத்திர பட்டாளங்களின் அணிவகுப்பு, சிறந்த டைரக்டர், சிறந்த இசையமைப்பாளர், அருமையான வண்ணம், காஸ்ட்லி படப்பிடிப்பு இத்தனை சாதகமான அம்சங்கள் இருந்தும் படம் தோல்வியடைய காரணம் என்ன? உங்களுக்கு ஏதாவது தோணுகிறதா? ஒரு குடம் பாலுக்கு ஒரு துளி விஷம் என்பார்கள். அது எது? சிவாஜியின் அளவு கடந்த அலறல் மற்றும் மிகைக்கும் மிகையான நடிப்பே?
என்றால் அது மிகையாகாது.

fidowag
1st August 2020, 09:37 PM
பாட்டாலே புத்தி சொன்ன*வாத்தியார் எம்.ஜி.ஆர். - வின்*டிவியில் சகாப்தம்*நிகழ்ச்சியில் 12/07/20 அன்று திரு.துரை பாரதி*அளித்த*தகவல்கள்*
--------------------------------------------------------------------------------------------------------------------------
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். என்கிற மூன்றெழுத்திற்கு சமமாக பல மூன்றெழுத்துக்கள் உள்ளன கடமை எனும் மூன்றெழுத்தை உயிர் மூச்சாக கடைபிடித்தார் .கடமை, கண்ணியம் , கட்டுப்பாடு எனும் மூன்று கோட்பாடுகள்*அடங்கிய அவர் ஆரம்பத்தில் இருந்த கட்சியான* தி.மு.க. மற்றும் அதன் தலைவர் அண்ணா மூன்றெழுத்து அன்பு, பாசம்,,நேசம் ,, அறம், பண்பு, வீரம் ,, அழகு ,பொறுமை , வாய்மை,தலைமை ,கொடைமை* புதுமை, திறமை ,இளமை ,பணிவு , புகழ் ,**உதவி ,ஆகிய மூன்றெழுத்துக்களையும் வாழ்க்கையில் கடை பிடித்ததால் புகழின் சிகரத்தில் குடிகொண்டார் .* எம்.ஜி.ஆர். எனும் மூன்றெழுத்துதான் பலருடைய இதயங்களில் இன்று வீற்றிருப்பதோடு ,பலருக்கு சுவாசக்காற்றாக நிறைந்திருக்கிறது ..*


இதயவீணை படத்தில் வரும் திருநீறை செல்வி மங்கையற்கரசி என்ற பாடலும் ,நினைத்ததை முடிப்பவன் படத்தில் உள்ள பூமழை தூவி வசந்தங்கள் வாழ்த்த எனும் பாடலும்* எம்.ஜி.ஆரின் ரசிகர்கள் /பக்தர்கள் இல்ல திருமணங்களில் தவறாமல் இடம் பெறும்* பாடல்களாகும் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் நேரில் வந்து மணமக்களை வாழ்த்தி பாடுவதாக ரசிகர்களும், பக்தர்களும் கருதுவதே*இதற்கு*காரணம்*


பொதுவாக எம்.ஜி.ஆர். ஒரு நுட்பமான கவனிப்பாளர் என்பதற்கு பல உதாரணங்களை சுட்டிக் காட்டலாம் .**.அவற்றில் ஒன்று . பெங்களூரில் இடை தேர்தல் ஒன்றில் கர்நாடக மாநில முன்னாள் முதல்வர் குண்டுராவ் போட்டியிடுகிறார் . குண்டுராவ் எம்.ஜி.ஆரின் பரம ரசிகர் .* எனவே குண்டுராவ்*எம்.ஜி.ஆரிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு , தாங்கள் அவசியம் எனக்காக தேர்தல் பிரச்சாரம் செய்ய வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கிறார் . அதன்படி எம்.ஜி.ஆர்.* தனது சக* அமைச்சர் எச். வி.ஹண்டேவை உடன் அழைத்து செல்கிறார் . குண்டுராவ்* குறிப்பிட்ட நேரத்தைவிட சுமார் 4 மணி நேரம்**தாமதமாக* எம்.ஜி.ஆர். சென்றடைகிறார் .* ஆனாலும் சுமார்*25000 பேர் அங்கு திரண்டு இருந்தனர் ..அந்த கூட்டத்தை பார்த்ததும் ,கண்டிப்பாக குண்டுராவ் ஜெயித்துவிடுவார் அன்று ஹண்டே*ஆருடம் சொன்னார் . குண்டுராவை எதிர்த்து போட்டியிடுபவர் ராமகிருஷ்ண ஹெக்டே*. எம்.ஜி.ஆர். அதை மறுத்து , இங்கு ஹெக்டேதான் ஜெயிப்பார் என்றவுடன் ஹண்டே*எதை வைத்து சொல்கிறீர்கள் . குண்டுராவுக்கு நல்ல கூட்டம் கூடியிருக்கிறதே என்றார்*எம்.ஜி.ஆர்.சொன்னது என்னவென்றால் அப்படி இல்லை , பொதுவாக நான் எங்கு பொது கூட்டத்திற்கு சென்றாலும் முதலில் ரசிகர்கள், கட்சி*தொண்டர்கள் எனக்கு வணக்கம் சொல்வது வழக்கம் . அதன்பின்தான் அவர்களுக்கு நான் வணக்கம் சொல்வேன்*. இங்கு நேர்மாறாக நடக்கிறது . நான் வணக்கம் சொன்னபிறகு தான் கூட்டத்தினர் எனக்கு*வணக்கம் தெரிவித்தார்கள்*என்று தன்* நுட்பமான ஆய்வை,*விஷயத்தை*வைத்து தேர்தல் முடிவின்*எதிர்பார்ப்பை**தெளிவாக சொன்னார் .*.



எங்க வீட்டு*பிள்ளை திரைப்படத்தில்*எம்.ஜி.ஆர். இரட்டை வேடங்கள்*ஏற்று நடித்தார் .இரண்டு கதாபாத்திரங்களுக்கு இடையேயான வித்தியாசத்தை, நடை, உடை, பாவனை, முகத்தில் உணர்ச்சி , சோகம், வீரம் ,கோழைத்தனம் ,மிரட்டல் ,பணிவு , துணிவு* என்று பலவிதங்களில் நடிப்பில்*மெருகேற்றி*நடித்திருந்தார் .1965ம் ஆண்டின் சிறந்த நடிகராக*சினிமா*ரசிகர்கள் சங்கம்*எம்.ஜி.ஆரை*தேர்ந்தெடுத்தது .குறிப்பாக*கோழை எம்.ஜி.ஆர். ஓட்டலில் இரண்டு இட்லி தட்டில் வைத்து சாப்பிடும்போது* அப்பாவித்தனத்தை காட்டி*ரசிகர்களை நெகிழவைப்பார் .* அதற்குமுன்பு வரும் வீரன் எம்.ஜி.ஆர். இட்லி ,4 மசாலா* தோசை 3, ஊத்தப்பம் 3, பொங்கல் 4 என்று கேட்டு வாங்கி சாப்பிடும்போது அசத்தலாக இருக்கும்*. சப்ளையர்* மீண்டும்**இவர் அளிக்கும்*ஆர்டரை*பார்த்து மலைத்து போய் , வடை கேட்கும்போது இல்லை என்று சொல்லிவிடுவான் .* அதற்கு*எம்.ஜி.ஆர்.திட்டியவாறு சிற்றுண்டியை வாயில் திணிக்கும்*காட்சி, நகைச்சுவையாகவும், ஆர்ப்பாட்டமாகவும் இருக்கும் .அந்த காட்சியில் அரங்கமே*அதிரும் .வீரன் எம்.ஜி.ஆர். சந்தர்ப்ப சூழ்நிலையால்*மாமனார் வீட்டுக்கு சென்று*அங்கு பெரிய விருந்தே*சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது ,விவரம் அறிந்து அங்கு வரும் வில்லன் நம்பியார்*எம்.ஜி.ஆர். சாப்பிடும் ,வேகம், லாவகம், வாயில் திணிக்கும்*பாங்கு.உணவை*அசை போடும் விதம் எல்லாவற்றையும் பார்த்து, அரண்டு , மிரண்டு ,மலைத்து போய்விடுவார் இந்த காட்சியிலும் எம்.ஜி.ஆரின்*நடிப்பை வரவேற்று ரசிகர்கள் அலப்பரையும் கைதட்டல்களும் , விசில் சத்தமும் அடங்க வெகுநேரமாகும்*.பொதுவாக எம்.ஜி.ஆர். சாப்பாட்டு**பிரியர்*. அசைவ*உணவுகளை விரும்பி சாப்பிடுவார் . அதிலும்*மற்றவர்களை உண்ணவைத்து ,அவர்களுக்கு வேண்டியதை*,விரும்பியதை தானே*பரிமாறி ,ரசித்து,,சாப்பிட வைத்து**பார்ப்பது*அவரது*குணாதிசயங்களில் ஒன்று . *



கோடிக்கணக்கான மாலைகள்*தாங்கிய*வை* எம்.ஜி.ஆரின் தோள்கள்*என்று சொல்வார்கள் .* அவருக்கு*மாலைகள்*விழாத*நாட்களே*இல்லை எனலாம் .மாலைகள்*எப்போதும்*ஏதாவது ஒரு நிகழ்ச்சியிலோ , வீட்டிலோ, அரசு விழாக்களிலோ, கட்சி*கூட்டங்களிலோ* விழுந்தவாறு*இருக்கும் . எங்க வீட்டு*பிள்ளை படத்தில்*நான் ஆணையிட்டால் பாடல் துவங்கும்*முன்பு , எம்.ஜி.ஆரை*,பத்திரத்தை*படித்து கையெழுத்து*இடுவதற்கு அழைக்கும் காட்சி .பத்திரத்தை*படித்து முடித்து கையெழுத்து*போட விருப்பமில்லை என்றதும் சார்பதிவாளர் சென்றபின் நம்பியார்*எம்.ஜி.ஆர். கன்னத்தில் அறைவார்* . பின்பு எம்.ஜி.ஆர். நம்பியார் கன்னத்தில் அறைவார்*. அதை கண்ட*குடும்பத்தினர் ,சுற்றியுள்ள அனைவ்ரும்* வெலவெலத்து போய்விடுவார்கள் . நம்பியார்*சவுக்கால்*எம்.ஜி.ஆரை*அடிக்க முயல , எம்.ஜி.ஆர். அதை பிடுங்கி*சிலம்பத்தில் 5ம் வீடு என்பார்களே அதன்படி*ஸ்டெப்*வைத்து சவுக்கால் அடிக்க ஆரம்பிப்பார் . இந்தியில் திலீப் குமாரும் , தெலுங்கில்*என்.டி.ராமாராவும் நடித்ததைவிட இந்த காட்சியில் எம்.ஜி.ஆருக்கு*ரசிகர்கள் மத்தியில் மிக நல்ல வரவேற்பும் , பாராட்டுக்களும் , வாழ்த்துக்களும் குவிந்தன . ரசிகர்கள் இந்த காட்சியில் கொண்டாட்டம், கூத்தும்*கும்மாளமாக இருக்கையை*விட்டு குதித்து*ஆடிய*விதம் கண்கொள்ளாக்காட்சி . இந்த காட்சி மிகவும் சிறப்பாக அமைந்ததற்கு காரணம்*எம்.ஜி.ஆருக்கு சிலம்பம் தெரிந்ததுதான் . அதனால்*மிக எளிதாக, ஸ்டைலாக, அழகாக, மிடுக்காக , லாவகமாக சாட்டையை*சுழற்றி*ரசிகர்கள் உள்ளங்களை கொள்ளை கொண்டார் . தொடர்ந்து* அடுத்து* வந்த*பாடலான*நான் ஆணையிட்டால் பாடலில்*அசத்தியிருப்பார் . இந்தியிலும், தெலுங்கிலும்*மற்ற ஹீரோக்கள் எம்.ஜி.ஆர். அளவிற்கு*இந்த காட்சிகளில் சோபிக்கவில்லை என்பதே*ரசிகர்களின் விமர்சனம் .


கோழை எம்.ஜி.ஆரை வில்லன்நம்பியார்* சவுக்கால் அடித்த*பின்பு ,எம்.ஜி.ஆருடன் பண்டரிபாய், பேபி ஷகீலா* ஆகியோர்* இப்படி துன்பப்படுவதைவிட மூவரும்*இறந்துவிடலாம் என்று முடிவெடுக்க, எங்களை* காப்பாற்ற யாருமே இல்லையா*என்ற கூக்குரலுக்கு வீரன் எம்.ஜி.ஆர். அறிமுக காட்சியில்*. உடனே அடுத்த காட்சியில் நான் இருக்கிறேன் என்று ஸ்டுடியோவில் படப்பிடிப்பில்*அனைவரையும் அடித்து வெளுத்து கட்டுவார்* இந்த காட்சியும் ரசிகர்கள் தரப்பில் நல்ல வரவேற்பை*பெற்றது .* ஒரு திரைப்படத்தில்*காட்சி*எப்படி அமைய வேண்டும் , எந்த காட்சி, முன்னரும் , எந்த காட்சி*பின்னரும்*இருக்க வேண்டும் , எந்த காட்சிக்கு*அதிக* முக்கியத்துவம் தரவேண்டும்*, வசனங்கள் எப்படி அமைய வேண்டும் , எந்த கோணங்களில் காமிராவை வைக்க வேண்டும் , படத்தொகுப்பில்*எந்தெந்த காட்சிகளை நீக்கவேண்டும்*, பாடல்கள் எப்படி அமையவேண்டும் , நடிகர் நடிகைகளை*தேர்ந்தெடுக்கும்*விதம் என்று தீர்மானிக்கும்* , ஒரு கதாசிரியராக, இயக்குனராக, புகைப்பட வல்லுனராக, தொழில்நுட்ப வல்லுனராக, இசை அமைப்பாளராக, வசனகர்த்தாவாக , பன்முக தன்மை கொண்ட சகலகலா வல்லவனாக*திகழ்ந்ததால்தான்* திரையுலகில் முடிசூடா*மன்னனாகவும், வசூல் சக்கரவர்தியாகவும் பல ஆண்டுகள்*முன்னணியில், முதலிடத்தில் இருந்தார் .*


மேலும் தகவல்கள் அறிய*அடுத்த* அத்தியாயத்தில் சந்திப்போம்*

நிகழ்ச்சியில் ஒலித்த* பாடல்கள் /காட்சிகள் விவரம்*
--------------------------------------------------------------------------------------
1.நான் பாடும் பாடல் நலமாக வேண்டும் - நான் ஏன் பிறந்தேன்*

2.உனது விழியில் எனது*பார்வை* - நான் ஏன் பிறந்தேன்*

3.திருநீறை*செல்வி*மங்கையற்கரசி - இதய வீணை*

4..பூமழை தூவி வசந்தங்கள் வாழ்த்த - நினைத்தை முடிப்பவன்*

5.எம்.ஜி.ஆர். - டி.கே. பகவதி உரையாடல் - நம் நாடு*

6.வீரன் - கோழை எம்.ஜி.ஆர். ஓட்டலில் சாப்பிடும் காட்சி-எங்க வீட்டு பிள்ளை*

7.நகரசபை தலைவராக எம்.ஜி.ஆர். தேர்வு - நம் நாடு*

8.ஆடி வா , ஆடி வா* ஆட பிறந்தவளே ஆடி வா -அரச கட்டளை*

9.கோழை*எம்.ஜி.ஆர். - பண்டரிபாய் -உரையாடல்* - எங்க வீட்டு பிள்ளை*

10.என்னை தெரியுமா*,நான் சிரித்து* பழகி - குடியிருந்த கோயில்*

fidowag
2nd August 2020, 11:04 PM
பாட்டாலே புத்தி சொன்ன வாத்தியார் எம்.ஜி.ஆர். -வின்*டிவியில்*சகாப்தம்*நிகழ்ச்சியில் 14/07/20 அன்று திரு.துரை பாரதி*அளித்த தகவல்கள்*----------------------------------------------------------------------------------------------------------------------------
இடது சாரி இயக்கத்தில் மிகவும் பற்றுள்ளவர் திரு.கார்த்தி என்னும் பத்திரிகையாளர் .தொழிற்சங்கத்திலும் நல்ல ஈடுபாடு உள்ளவர் ..அவர் பல்வேறு இலக்கியத்துறையில் பணியாற்றியவர் .அவரை பற்றி அறிந்த எம்.ஜி.ஆர். அவருடன் தொடர்பு கொள்கிறார் . ஒரு சமயம் மக்கள் குரல் பத்திரிகையில் கார்த்தி பணியாற்றி வரும்போது அவருக்கும், நிர்வாகத்தினருக்கும்* சரியான புரிந்துணர்வு இல்லை . அதனால் மக்கள் குரல் நிறுவனத்திடம் இருந்து விலக* முடிவு எடுத்து எம்.ஜி.ஆரிடம் சொல்கிறார் . கொஞ்சம் பொறுங்கள் .விரைவில் உங்களுக்கு வேறு வேலை காத்திருக்கிறது .நானே அழைக்கிறேன் என்கிறார் . ஆனால் எம்.ஜி.ஆரிடம் சொல்லாமலேயே சில நாட்களுக்கு பிறகு மக்கள் குரல் பத்திரிகையில்* இருந்து விலகுகிறார் .,அந்த தகவலை எம்.ஜி.ஆர். அறிந்து கொள்கிறார் . அ .தி.மு.க. தலைமை அலுவலகம் அமைந்துள்ள அவ்வை சண்முகம் சாலையில் உள்ள ஒரு பகுதியில் அவர் வீடு அமைந்துள்ளது .அவர்* அருகே உள்ள ஒரு விறகு கடையில் இருந்து எம்.ஜி.ஆருடன் தொடர்பு கொள்கிறார் .அப்போது எம்.ஜி.ஆர்.தலைமை அலுவலகத்தில் இல்லாததால் விறகு கடையின் தொலைபேசி எண்ணை குறித்து கொள்ளும்படியும், எம்.ஜி.ஆருக்கு தெரிவித்து விடுங்கள் என்று சொல்லிவிடுகிறார் அதன்பின் எம்.ஜி ஆர் 3 முறை தொடர்பு கொள்ள முயற்சித்தும் பலனில்லை . கார்த்தியும் சில நாட்கள் தொடர்பில் இல்லாமல் இருக்கிறார் . ஒரு நாள் விறகுக்கடை உரிமையாளர் கார்த்தியிடம் எம்.ஜி.ஆர். மிக முக்கியமான மனிதர் அவர் பலமுறை தொடர்பு கொண்டு உங்களிடம் பேசவேண்டும் என்று கேட்டுக்கொண்டார் . முடிந்தால் நேரில் வர சொல்லுங்கள் என்றார் .அவ்வளவு பெரிய தலைவர் , முக்கிய மனிதர் மீண்டும் மீண்டும் தொடர்பு கொள்ளும்போது எனக்கே மிகவும் கவலையாகவும், சங்கடமாகவும் உள்ளது .இதனால் எனக்கு ஏதாவது சிக்கல் வரலாம் .நான் வேண்டுமென்றே உங்களுக்கு தகவல் தரவில்லை என்று அவர் தவறாக நினைக்கலாம்*. நீங்கள் முதல் வேலையாக அவரை போய் பாருங்கள் என்றவுடன் எம்.ஜி.ஆரை நேரில் சென்று சந்திக்கிறார் . கொஞ்ச நாட்களாக உங்களோடு நான் தொடர்பில் இல்லை .மன்னிக்கவும் என்கிறார் விறகு கடை தொலைபேசி எண்ணில் இருந்து கார்த்தி . .* உடனே எம்.ஜி.ஆர். அதெல்லாம் பரவாயில்லை .இப்போதாவது உங்களுடைய தொடர்பு கிடைத்ததே அதுவரையில் மகிழ்ச்சி.,நீங்கள் ஒன்றும் யோசிக்காதீர்கள் .உடனே நேரில் வந்து பாருங்கள் என்றார் .நேரில் வந்ததும்*..நீங்களும் சோலை அவர்களும் சேர்ந்து நான் தொடங்கும் அண்ணா தினசரி பத்திரிகையை செவ்வனே நடத்த வேண்டும். இது என் அன்புக்கட்டளை .அதற்கான ஆயத்த வேலைகளை உடனே ஆரம்பியுங்கள்* என்று சொல்லி தனக்கு மிகவும் பிடித்தமான நண்பர்களான திரு.சோலை , திரு.கார்த்தி அவர்களுக்காகவே இந்த அண்ணா நாளிதழை எம்.ஜி.ஆர். தொடங்கி வைத்தார் .கார்த்தி என்பவர் ஊடகத்துறையில் அப்பழுக்கற்றவர் . ஊடகத்துறை நல்ல* எழுச்சியுடன் வளர்ச்சி பெற முக்கியமான நபர்களில் ஒருவர் என்பதை எம்.ஜி.ஆர். நன்கு அறிந்து இருந்தார் .அண்ணா பத்திரிகையை இளைஞர்கள் அதிகம் படிக்கும் பத்திரிகையாக நிறைய சில மாற்றங்கள் கொண்டுவர வேண்டும் அதற்கு இளைஞர்களான உங்களுக்கு உற்ற துணையாக, உறுதுணையாக நான் இருப்பேன் என்று எம்.ஜி.ஆர். கார்த்தியிடம் சொல்லியிருந்தார் .


பல்வேறு விஷயங்களில் எம்.ஜி.ஆருடன் கலந்து பேசி முடிவு எடுப்பார் கார்த்தி .ஒருமுறை கவிஞர் கண்ணதாசனிடம் இருந்து கடிதம் ஒன்று வந்துள்ளது என்று துணை ஆசிரியர் ராமன் என்பவர் தகவல் அளித்தார் . அப்போது கார்த்திக்கு திருமணம் ஆகியிருந்த நேரம் . சில நாட்களுக்கு பிறகு மனைவியை ஊரில் இருக்க சொல்லிவிட்டு ஊடகத்துறையில் பணியாற்றி வந்தார் . அப்போது கண்ணதாசன் அலுவலகத்தில் இரவில் தங்குவார் . அப்போதுதான் அவருக்கு குடிப்பழக்கம்* ,யார் மூலமோ*ஆரம்பம் ஆனது .சில நாட்களுக்கு பிறகு இவருடைய குடி பழக்கத்தை அறிந்து, கண்ணதாசனின் மனைவி ,கார்த்தியிடம்*ஏன் நீங்கள் குடித்துவிட்டு வருகிறீர்கள் . திருமணம் ஆன புதிதில் அவரைவிட்டு பிரிந்து ஏன் இங்கு வந்துள்ளீர்கள்* உங்கள் மனைவியை ஊரில் இருந்து அழைத்து வந்து ,சென்னையில் தயங்கியபடியே மனைவியுடன் சந்தோஷமாக இருக்கலாம் .ஓட்டலில் சாப்பிடாமல் வீட்டில்*சாப்பிட்டு உடல்நலத்தில் அக்கறை காட்டலாம் .மன்னிக்க வேண்டும் . ஊருக்கு போய் வருவதற்கு கையில் பணமில்லை . சென்னையில் மனைவியுடன் தங்குவதற்கு வீடு பார்க்கும் அளவிற்கு பணவசதியும் இல்லை. கவிஞரிடம் கேட்கலாம் .* ஆனால் கேட்பதற்கு கவலையாகவும் சங்கடமாகவும் உள்ளது என்றவுடன் ,கவிஞரின் மனைவி தன்* கழுத்தில் இருந்த தங்க சங்கிலியை கழற்றி கார்த்தியிடம் கொடுத்து , நீங்கள் இந்த சங்கிலியை அடகு வைத்து, நல்லபடியாக உங்கள் மனைவியை ஊரில் இருந்து அழைத்து வந்து சென்னையில் வீடு பார்த்து* ஆண்டவன் ஆசியுடன்**குடும்பம் நடத்துங்கள் .எனக்கு இதற்கான பணம் கிடைத்ததும் தரலாம் ஒன்றும் பிரச்னையில்லை ,அவசரமுமில்லை . ஆனால் இந்த விஷயம் வேறு யாருக்கும் தெரியவும் வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார் .


ஒருமுறை எம்.ஜி.ஆரும், அண்ணா பத்திரிகையில் உதவியாளராகிய கார்த்தியும் கண்ணதாசன் வீட்டு திருமணத்திற்கு செல்கிறார்கள் . திருமணத்தில் மணமக்களை எம்.ஜி.ஆர். வாழ்த்தி பேசிவிட்டு புறப்பட்டு வெளியே வரும்போது*எம்.ஜி.ஆருடன் இருந்த கார்த்தி , திடீரென்று ஓடிப் போய் கண்ணதாசனின் மனைவி காலை தொட்டு கும்பிட்டுவிட்டு வந்துவிடுகிறார் . .இதை எம்.ஜி.ஆர். பார்த்துவிடுகிறார் . காரில் பயணிக்கும்போது எம்.ஜி.ஆர். கார்த்தியிடம் கவிஞரின் குடும்பத்துடன் உங்களுக்கு நெருங்கிய தொடர்பு உண்டா என்று கேட்கிறார் .உடனே கார்த்தி , நான் இன்று என் மனைவியுடன் குடும்பம் நடத்திக்கொண்டு மகிழ்ச்சியாக இருப்பதற்கு காரணம் கண்ணதாசனின் மனைவிதான் . அவர்தான் எனக்கு அறிவுரைகள் சொல்லி ,சில உதவிகள் செய்தார் .அந்த நன்றிக்காகத்தான் அவர் காலை தொட்டு கும்பிட்டேன் என்றார் .ஒரு கணம் யோசித்த எம்.ஜி.ஆர். கார்த்தியை திரும்பி பார்த்து, கண் கலங்கி , தன் கண்ணாடியை கழற்றி ,கண்களை துடைத்துக் கொண்டார் .* அப்படி, ஈர மனதுக்கும், இரக்கத்தன்மைக்கும் சொந்தக்காரர் எம்.ஜி.ஆர். .


சென்னை தி.நகர் , ஆற்காடு சாலையில் உள்ள எம்.ஜி.ஆர். அலுவலகத்தில் ஒருநாள் மாலை வேளையில் கட்சி பிரமுகர்களுடன் எம்.ஜி.ஆர். பேசிக் கொண்டிருந்த நேரம் .* அப்போது நாஞ்சில் மனோகரனின் குரல் சற்று கனத்தும்*வழக்கத்திற்கு மாறாகவும் இருந்தது .நேற்று நான் குளிர்ந்த நீரை கொஞ்சம் அதிகம் குடித்துவிட்டேன் . அதனால்தான் அவதிப்படுகிறேன் .பரவாயில்லை என்கிறார் மனோகரன் . இப்படி பேசிக் கொண்டிருக்கும்போதே, சுமார் 20 நிமிடங்களில் மூன்று மருத்துவர்கள் ,மயிலை,* கே.கே.நகர், புரசைவாக்கம் பகுதிகளில் இருந்து அந்த அறைக்கு வந்துவிடுகிறார்கள் .இதைக் கண்ட மனோகரன் , பதற்றத்துடன்* .*என்ன இது,ஏன் இத்தனை மருத்துவர்கள் .எனக்கு ஒன்றும் அவ்வளவு* பிரச்னை இல்லையே* என்கிறார் . உடனே எம்.ஜி.ஆர். நீங்கள் எனக்கு முக்கியமானவர் .உங்களுக்கு உடல்நலம் சரியில்லை என்றால் எப்படி பார்த்துக்கொண்டிருக்க முடியும் .என்று கூறி அவருக்கு தகுந்த சிகிச்சை அளிக்க சொன்னார் .* அதாவது ,தன்னுடைய தொடர்பில் உள்ளவர்கள், நெருக்கமானவர்கள் ,நண்பர்கள் யாருக்காவது உடல்நலமில்லை என்றால் முதலுதவி செய்ய வேண்டும் என்பது எம்.ஜி.ஆர். உடம்பில் ஊறி போன விஷயம் .

மியூசிக்* அகாடமி அரங்கில் ஒரு நாட்டிய* நிகழ்ச்சி**நடைபெறுகிறது .அந்த நிகழ்ச்சிக்கு எம்.ஜி.ஆர். தலைமை தாங்கி பேச வேண்டும் .அதுபற்றி கார்த்தியிடம் பேசும்போது ,இந்த நாட்டியத்தை பற்றி நான் பேசுவதற்கு ஒரு உரை தயார் செய்து கொடுங்கள் . இதற்காக கவலை வேண்டாம். நமது வீட்டு நூலகத்தில் 2 வது அறையில் 18 வது சுவடில்* பதஞ்சலி நாட்டிய சாஸ்திரம் என்று இருக்கும் அந்த புத்தகத்தில் 64 வது பக்கத்தில் 2 வது* பாராவில் நாட்டிய சாஸ்திரம் பற்றி சொல்லப்பட்டுள்ளது அவ்வளவு ஞாபகமாக ,சரியான குறிப்புகளுடன் குறித்து சொன்னார் . ஏனென்றால் இன்றைக்கும் பலர் தவறாக சொல்லிக் கொண்டிருக்கிறார்கள் .அதாவது எம்.ஜி.ஆர். என்றால்,படிக்காத , பாமரர் , சினிமா நடிகர் நடிக்கத்தான் தெரியும் . பல்வேறு விஷயங்கள் அவருக்கு தெரியாது என்று .அவர் எழுத்து பத்திரிகைகளோடு தொடர்பு வைத்திருந்தார் .மணிப்பூரி எழுத்தாளர்கள் பற்றி அறிந்து வைத்திருந்தார் .பதஞ்சலி நாட்டிய சாஸ்திரம் பற்றி தெரிந்து வைத்திருந்தார் .***இன்னும் சொல்லப்போனால் நாட்டிய கலைஞர் பத்மா சுப்பிரமணியம்ஆராய்ந்து* அவர்கள் குறிப்பிட்டு ,சிபாரிசு சொன்ன பல புத்தகங்களை தன்னுடைய நூலகத்தில் இடம் பெற செய்தார் .தமிழகத்திலே பல இடங்களில் தேடி பிடித்து , காண கிடைக்காத புத்தகங்களை எல்லாம் தன்னுடைய நூலகத்தில் இடம் பெற செய்ததோடு அவற்றை அவ்வப்போது படித்து தன் அறிவு பசியை போக்கிக் கொண்டார் இந்த நூலகத்தை எம்.ஜி.ஆர். ராமாவரம் தோட்டத்தில் உள்ள தன் வீட்டில் கீழ் தளத்தில் பொக்கிஷம் போல தன் இறுதிக்காலம் வரை காத்து வந்தார் ..அதனால்தான் எந்த நிகழ்ச்சிக்கு சென்றாலும் , எந்த துறை குறித்து என்றாலும் ,எந்த விஷயம் பற்றி பேசுவதாக இருந்தாலும் மணிக்கணக்கில் பேசும் அளவிற்கு எம்.ஜி.ஆருக்கு அறிவாற்றல் இருந்தது .பொது கூட்டங்களிலும், இதர நிகழ்ச்சிகள் மற்றும் அரசு விழாக்களில் எம்.ஜி.ஆருக்கு அவ்வளவாக விஷயங்கள் பேச தெரியாது என்று சொல்லி பிதற்றி வந்தவர்கள் ,அவருடைய பேச்சுகளை கேட்டபின் வியந்தும், ஆச்சர்யமும் அடைந்தார்கள் .


சகாப்தம் நிகழ்ச்சி பல இனங்கள், மொழிகள் , மதங்களுக்கான வழிகாட்டியாகவும், ஒளி விளக்காகவும் திகழ்கிறது என்பதனால் நாம் கூடுமான அளவிற்கு கூடுதல் தகவல்கள் அளித்துக் கொண்டிருக்கிறோம் .இந்த தொடரின் அத்தியாயங்கள் நீண்டுகொண்டு போவதற்கு இதுவும் ஒரு காரணம் . ஒவ்வொரு அத்தியாய முடிவிலும் பல நண்பர்களாக சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட நண்பர்கள் தொடர்பில் உள்ளார்கள் . அவர்கள் எல்லாம் பல்வேறு கருத்துக்களை எம்.ஜி.ஆர். பற்றி நம்மிடம் பகிர்ந்து கொள்கிறார்கள் என்பது மகிழ்ச்சியான விஷயம் .அந்த வெற்றி பயணம் உங்களோடும் எம்.ஜி.ஆரும், நம்மோடும் மீண்டும் தொடரும் .*

நிகழ்ச்சியில் ஒலித்த பாடல்கள் /காட்சிகள் விவரம்*
--------------------------------------------------------------------------------
1.எம்.ஜி.ஆர். -பாரதி உரையாடல் - சந்திரோதயம்*

2.சந்திரோதயம் ஒரு பெண்ணானதோ - சந்திரோதயம்*

3.தூவானம் இது தூவானம் - தாழம்பூ*

4.கடவுள் இருக்கின்றார் அதுவுன் கண்ணுக்கு தெரிகின்றதா -ஆனந்தஜோதி*

5.நீதி மன்ற காட்சியில் எம்.ஜி.ஆர்.- சங்கே முழங்கு*

6.எம்.ஜி.ஆர்.- பாரதி உரையாடல் - சந்திரோதயம் .

7.ஆடாத மனமும் உண்டோ - மன்னாதி மன்னன்*

8.இதுவரை நீங்கள் பார்த்த பார்வை - பணக்கார குடும்பம்*






.

fidowag
3rd August 2020, 09:00 PM
பாட்டாலே*புத்தி சொன்ன*வாத்தியார் எம்.ஜி.ஆர்.-வின் டிவியில்*சகாப்தம்*நிகழ்ச்சியில் திரு.துரை பாரதி*15/07/20 அன்று சொன்ன*தகவல்கள்*
-------------------------------------------------------------------------------------------------------
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். இஸ்லாமிய வேடத்தில் நடித்த படங்களும், அந்த படங்களில் உள்ள சில பாடல்களும் எதிர்வரும் பக்ரீத் பண்டிகையை கருத்தில் கொண்டு* இன்று பார்ப்போம் .மத நல்லிணக்கம் என்பது பல படங்களில் படமாக்கப்பட்டுள்ளது . குறிப்பாக சொல்ல போனால்* எம்.ஜி.ஆர். அவர்கள் நடித்த ஒவ்வொரு* பாடல்களிழும்* இறைவன் இல்லையென்று மறுத்த பாடல்கள் வரிகளே இல்லை .* இறைவன் இருக்கின்றான் அவன் எப்படி, எந்த உருவில் இருக்கின்றான் .அவனுக்கு உருவம் கிடையாது என்று பல படங்களிலே பாடி நடித்துள்ளார் மலைக்கள்ளன் , அலிபாபாவும் 40 திருடர்களும்**.பாக்தாத் திருடன், ராஜா தேசிங்கு,சங்கே முழங்கு , சிரித்து வாழ வேண்டும்* போன்று அடுத்தடுத்து வந்த படங்களில் அவர் இஸ்லாமியர் வேடம் ஏற்று இஸ்லாமியர்களின் பண்பாடுகள், கலாச்சாரம் ,வாழ்க்கை நெறிமுறைகள் பற்றி கருத்துக்கள் சொல்லியிருப்பார் .அரேபிய இரவுக் கதைகளில் பெரும்பாலும் எம்.ஜி.ஆர்.தான் நடித்திருக்கிறார் என்பது* குறிப்பிடத்தக்கது .**


சிரித்து வாழ வேண்டும் படத்தில் உள்ள* மேரா நாம் அப்துல் ரஹ்மான் என்கிற பாடல்* பல இஸ்லாமியர் வீடுகளிலும், இஸ்லாமியர் விழாக்கள், நிகழ்ச்சிகளில்*இடம் பெறக்கூடிய, அழகான , அருமையான* பாடல் .* இந்த படத்தில் எம்.ஜி.ஆர் உஸ்தாத் என்று சில காட்சிகளில் அழைக்கப்படுவார் . உஸ்தாத் என்றால் வாத்தியார் என்று அர்த்தம் .அந்த வாத்தியாராக வருகிற எம்.ஜி.ஆர். நடத்தி வரும் சூதாட்ட கிளப்பை மூடவைத்து, ,அவரை* திருத்தி ஒரு நல்ல வாத்தியாராக மாற்றும் இன்ஸ்பெக்டர் ராமு வேடத்தில் மற்றொரு எம்.ஜி.ஆர்.நடித்திருப்பார் .ராஜா தேசிங்கு படத்தில் வரும் ஆதி கடவுள் ஒன்றேதான் அதில் பேதம் கிடையாது* என்ற பாடலில் இறைவனை பற்றி மிக விளக்கமாக பாடி நடித்திருப்பார் .மலைக்கள்ளன் படத்தில் உருது பேசும் பாங்கு*கையில் பைப் பிடித்து புகைக்கும்* அந்த ஸ்டைலுக்கும் , சிரித்து வாழ வேண்டும் படத்தில் வரும் அப்துல் ரஹ்மான் வேடத்திற்கும் நல்ல வேறுபாடுகள், வித்தியாசங்கள் காட்டி நடித்திருப்பார் . மலைக்கள்ளன் படத்தில் பூங்கோதை பாத்திரத்தில் வரும் பானுமதியை காதலிக்கும் காட்சியிலும் , என்னை மணந்து கொள்ள தயாரா என்று கேட்கும் காட்சியில் நகைச்சுவையாகவும், அவருக்கே உரித்தான ஹீரோ அம்சங்கள் பொருந்திய பாணியில் கெத்தாகவும் நடித்து மிரள செய்வார் .


எம்.ஜி.ஆருக்கு பல படங்களில் வசன ஆசிரியராகவும், உதவியாளராகவும் இருந்த ரவீந்தர் என்பவர் உண்மையில் ஒரு இஸ்லாமியர் . அவர் பெயரை மாற்றி வைத்தவர் எம்.ஜி.ஆர்தான் .. ரவீந்தர் எம்.ஜி.ஆரின் சிறப்புகள் பற்றி பல புத்தகங்கள் வெளியிட்டுள்ளார் .* கோடி மாலைகள் தாங்கிய தோள்கள் எம்.ஜி.ஆருடையது என்ற புத்தகத்தையும்* எழுதியுள்ளார்* எம்.ஜி.ஆர். இஸ்லாமியர் வேடம் ஏற்று நடிக்கும் தருவாயில் உள்ள படங்களுக்கு நடிக்கும் முன்பு ரவீந்தரிடம் இஸ்லாமியர் பற்றிய* வாழ்வியல்கள் , பண்பாடுகள், கலாச்சாரம் , நடைமுறை பழக்க வழக்கங்கள் ஆகியவற்றை படிக்க சொல்லி ,ஏன் இப்படி சொல்லப்பட்டுள்ளது என்று* தெள்ள தெளிவாக கேட்டு அறிந்து கொள்வார் என்று ரவீந்தரே குறிப்பிட்டுள்ளார் .


ரவீந்தருக்கு திருமணம் நிச்சயம் ஆனவுடன் பத்திரிகை தயார் செய்து எம்.ஜி.ஆரிடம் முறைப்படி வழங்கி ,ஆசி பெறுகிறார் .* எம்.ஜி.ஆரும் அவரை வாழ்த்தியபின் , உனக்கு என்ன வேண்டும் கேள் , நான் என்ன செய்ய வேண்டும் என்று வெளிப்படையாக சொல் என்றாராம் .எனக்கு ரூ.16/- மட்டும்* தாலி வாங்குவதற்கு**தந்தால் போதும் .என்றவுடன் எம்.ஜி.ஆர்.,பத்திரிகையை வாங்கி கொண்டு* அறைக்குள் சென்று தன் அண்ணன்* சக்கரபாணியிடம் பணம் கொடுத்து அனுப்புகிறார் .பணம்* வாங்கிய* ரவீந்தர் நான் வரட்டுமா என்று எம்.ஜி.ஆரை எதிர்பார்த்து காத்திருக்கும்போது சில நிமிடங்களில் எம்.ஜி.ஆர். வெளியே வருகிறார் .* ரவீந்தர் தலைவரே நான் புறப்படுகிறேன் .நீங்கள் தவறாக நினைக்கவில்லை என்றால் ஒன்றை சொல்கிறேன் .நீங்களே அந்த பணத்தை கொடுத்திருக்கலாம் . உங்கள் அண்ணன் மூலம் கொடுத்தனுப்பியது எனக்கு* அவ்வளவு**திருப்தியாக இல்லை என்றார் .**பதிலுக்கு எம்.ஜி.ஆர். புரியாமல் பேசக்கூடாது . என் அண்ணன் குடும்பஸ்தர் .
குழந்தைகளோடு வாழ்கிறார் .* அவருக்கு வாரிசுகள் உருவாகியுள்ளனர் .நீயும் அவரைப்போல் குடும்பஸ்தனாக ,குழந்தைகளோடு, வாரிசுகள் கண்டு*மகிழ்ச்சியுடன் சீரும் சிறப்பாக வாழவேண்டும் . நான் திருமணம் ஆனவன்தான்*ஆனால் குழந்தை பாக்கியமில்லை . மனைவிகள் பாக்கியமும் சரியாக அமையவில்லை .அதனால்தான் அண்ணன் மூலம் வழங்க சொல்லி , நீ நன்றாக வாழ வேண்டும் என்கிற நினைப்பில் செய்தேன் என்றார் . அது சரி, உனக்கு இந்த ரூ.16/- போதுமா என்று எம்.ஜி.ஆர். கேட்டதற்கு , இது தாலிக்கான செலவுதான் என்று ரவீந்தர் பதிலளிக்க , மேலும் ஆயிரக்கணக்கில் கல்யாண செலவுக்காக*எம்.ஜி.ஆர். பணம் கொடுத்ததாக ரவீந்தர் குறிப்பிட்டு எழுதியுள்ளார் .**


மேலும் தகவல்களுக்கு அடுத்த அத்தியாயத்தில் அறிந்து கொள்வோம்*


நிகழ்ச்சியில் ஒலித்த பாடல்கள் /காட்சிகள் விவரம்*
----------------------------------------------------------------------------------
1.ஒன்றே சொல்வான், நன்றே செய்வான் - சிரித்து வாழ வேண்டும்*

2.ஆதி கடவுள் ஒன்றேதான் ,அதில் பேதம் கிடையாது - ராஜா தேசிங்கு*

3.உன்னை பார்த்து இந்த உலகம் சிரிக்கிறது - அடிமைப்பெண்*

4.எம்.ஜி.ஆர்.-சாரங்கபாணி உரையாடல் -அலிபாபாவும் 40 திருடர்களும்*

5.அப்துல் ரஹ்மான் -இன்ஸ்பெக்டர் ராமு மோதல் -சிரித்து வாழ வேண்டும்*

6.நாலு பேருக்கு நன்றி - சங்கே முழங்கு*

7.உன்னைவிட மாட்டேன் உண்மையில் நானே -அலிபாபாவும் 40 திருடர்களும்*

8.எம்.ஜி.ஆர். - பானுமதி உரையாடல் - மலைக்கள்ளன்*

9.ஏமாற்றாதே , ஏமாற்றாதே - அடிமைப்பெண்*

10.மாசில்லா உண்மை காதலே - அலிபாபாவும்* 40* *திருடர்களும்*

fidowag
3rd August 2020, 11:53 PM
தனியார் தொலைக்காட்சிகளில் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். திரைக்காவியங்கள் ஒளிபரப்பான*விவரம்*
-------------------------------------------------------------------------------------------------------------------------------
26/07/20* *- சன் லைப்- காலை 11 மணி -* என் அண்ணன்*

* * * * * * * * ஜெயா மூவிஸ் - இரவு 10 மணி - விக்கிரமாதித்தன்*

* * * * * * * தமிழ் மீடியா டிவி - இரவு 8 மணி - என் கடமை*

27/07/20 - சன் லைப் - காலை 11 மணி -* நம் நாடு*

* * * * * * * * *மெகா 24 டிவி - இரவு 9 மணி - குடும்ப தலைவன்*

28/07/20 - சன் லைப் - மாலை 4 மணி - பல்லாண்டு வாழ்க*

* * * * * * * * *புதுயுகம் டிவி - இரவு 7 மணி - நீதிக்கு பின் பாசம்*

29/07/20 - மெகா 24 டிவி - காலை 8.30 மணி - தாய்க்கு பின் தாரம்*

* * * * * * * *வேந்தர் டிவி - காலை 10.30 மணி - தனிப்பிறவி*

* * * * * * * சன் லைப் - காலை 11 மணி - நினைத்ததை முடிப்பவன்*

* * * * * * *மூன் டிவி* - இரவு 8 மணி* -நீதிக்கு பின் பாசம்*

* * * * * * * வேந்தர் டிவி - இரவு 10.30 மணி - நீதிக்கு பின் பாசம்*

* * * * * * *ஜெயா மூவிஸ் - இரவு 10 மணி - பணம் படைத்தவன்*

30/07/20- சன் லைப்* - மாலை 4 மணி - நீரும் நெருப்பும்*

* * * * * * * * *புதுயுகம் டிவி - இரவு 7 மணி - நவரத்தினம்*

* * * * * * * *பாலிமர் டிவி - இரவு 11 மணி -சக்கரவர்த்தி திருமகள்*

31/07/20* சன் லைப் - காலை 11 மணி - நாளை நமதே*

* * * * * * * * வேந்தர் டிவி - இரவு 8 மணி - அவசர போலீஸ் 100**

fidowag
4th August 2020, 07:37 PM
பாட்டாலே புத்தி சொன்ன வாத்தியார் எம்.ஜி.ஆர். - வின்*டிவியில் சகாப்தம்*நிகழ்ச்சியில் 16/07/20 அன்று திரு.துரை பாரதி*அளித்த*தகவல்கள்*
--------------------------------------------------------------------------------------------------------------------------
சகாப்தம் நிகழ்ச்சி தொடர்ந்து ஏகோபித்த ரசிகர்கள்,பக்தர்கள் ஆதரவால் பலத்த வரவேற்பை பெற்றுள்ளது . குறிப்பாக மும்பையில் தாராவி பகுதியில் இருந்து புலவர் ராமச்சந்திரன் மற்றும் பலர் இந்த நிகழ்ச்சியை வாழ்த்தி ,தொடர்பில் இருக்கிறார்கள் . அடிக்கடி தொலைபேசியில் தொடர்பு கொண்டு தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்துகிறார்கள் .* அதே போல சென்னை பெருநகர முன்னாள் மேயர் திரு.சைதை துரைசாமி* அவர்களும் அடிக்கடி தொடர்பு கொண்டு நிகழ்ச்சியை பற்றி அற்புதமாக பாராட்டி உற்சாகப்படுத்துகிறார் .நிகழ்ச்சியில் உள்ள சிறு குறைகளான .நாள், ஆண்டு ஆகியவற்றில் உள்ள மாறுபாடுகளை* திருத்தம் செய்யும்படி சில யோசனைகள் தெரிவித்தார் .*


பாக்தாத் திருடன் படத்தில் எம்.ஜி.ஆருடன் ஒரே படத்தில் நடித்தார் வைஜயந்திமாலா . இருவரும் நடித்த பாடல் காட்சிகள், காதல் காட்சிகளில் கெமிஸ்ட்ரி நன்றாக இருந்தது என்று அப்போது பேசப்பட்டது .இந்த படத்தில் அரபு கதை தொடர்பான காட்சிகள் , சம்பவங்கள் படமாக்கப்பட்டன . எம்.ஜி.ஆர். புல்புல்தாரா, மற்றும் பல்வேறு இசைக்கருவிகளை வாசிப்பதுபோன்று ஒரு முழு* ,இஸ்லாமியராக இந்த படத்தில் நடித்து ரசிகர்களுக்கு அறுசுவை விருந்து படைத்தார் .


1956ல் வெளியான அலிபாபாவும்* 40* திருடர்களும் தமிழில் வெளியான முதல் முழு நீள வண்ணப்படம் . கோவா கலரில் எடுக்கப்பட்ட* பிரம்மாண்ட வெற்றிப்படம் .கர்நாடகாவில்* மைசூர் அருகில் ஒரு மலைக்குகை அரங்கம்* அமைக்கப்பட்டது .குகையின் கதவு திறப்பதற்கு அண்டாக்கா கசம், அபுக்கா உஹும் ,திறந்திடு சீசேம் என்று குரல் எழுப்பவேண்டும் . உள்ளே சென்றதும்*அண்டாக்கா கசம், அபுக்கா உஹும் ,மூடிடு* சீசேம் என்றவுடன் கதவு மூடப்படும் .குகையின் உள்ளே, தங்கம் ,வெள்ளி, வைர நகைகள் குவியல் குவியலாக கஜானா போல காட்சியளிக்கும் . எம்.ஜி.ஆரும், சாரங்கபாணியும் இந்த மந்திர சொல்லை அறிந்து கொண்டு , உள்ளே சென்று இந்த நகை குவியல்களை மூட்டை ,மூட்டையாக அள்ளிக்கொண்டு வந்து,பின்னர் அலிபாபா வேடத்தில் உள்ள எம்.ஜி.ஆர். ஏழைகளுக்கு இலவசமாக தானம் செய்வார் . இந்த விஷயங்களை அறிந்து எம்.ஜி.ஆரின் அண்ணன் சக்கரபாணி தந்திரமாக எம்.ஜி.ஆரை அழைத்து , விருந்து வைப்பது போல தகவல்களை கேட்டறிந்து*எம்.ஜி.ஆரை கைது செய்துவிடுவார் .* *பானுமதியின் தந்திர மூளையால் எம்.ஜி.ஆர். காப்பாற்றப்படுவார் .* *இடையில் சக்கரபாணி அந்த குகைக்கு உள்ளே சென்று நகை குவியல்களை மூட்டை ,மூட்டையாக கட்டிக்* கொண்டு எல்லையில்லா மகிழ்ச்சியுடன் வெளியே வர முற்படும்போது அந்த மந்திர சொல்லை சரியாக சொல்லாமல், மறந்துபோய் பிதற்றி , சொல்ல தெரியாமல், குகையில் அகப்பட்டுக் கொள்வார் . திருடர்கள் வரும் சமயம் ஒளிந்து கொள்வார் .ஆனால் நகைகள் ஆங்காங்கே சிதறியுள்ளதை கண்ட வில்லன் வீரப்பா , சக்கரபாணியை கண்டுபிடித்து கொன்று ,தலைகீழாக தொங்கவிட்டுவிடுவான் .இந்த காட்சியில் சக்கரபாணியின் நடிப்பு, நகைச்சுவையாகவும், திகிலுடன்,*பயங்கரம் நிறைந்ததாக இருக்கும் .


தாங்கள்* திருடிக் கொண்டுவந்த நகைகளை கொண்டு சென்ற திருடனை கண்டுபிடிக்க ஒரு நடன விருந்தில் வில்லன் கலந்து கொண்டு விசாரிக்க ,இதற்கெல்லாம் காரணம் அலிபாபா என்று அறிந்து கொள்கிறான் .அலிபாபாவின் வீட்டில் பெருக்கல் குறி போடப்பட்டிருக்கும் இரவில் சென்றால்* பிரச்னை ஏற்படும் என்று பகலில் வந்து பார்த்தால், அந்த பகுதியில் உள்ள அனைத்து வீடுகளிலும் இந்த குறி இருக்கும் .திருடர்கள் அலிபாபா வீட்டிற்கு முற்றுகையிட வர போவதை முன்னரே* அறிந்த பானுமதி செய்த உபாயம் இது .இப்படி ரசிகர்கள் வரவேற்க தகுந்த பல நுட்பமான காட்சிகள் பலவற்றை இந்த படத்தில் காணலாம் .கிளைமாக்ஸ் காட்சியில் வில்லன் வீரப்பா , எம்.ஜி.ஆரை சிறை பிடிக்க 40 பீப்பாய்களில் வீரர்களை அடைத்து ,தான் எண்ணெய் வியாபாரி என்றும் ,பீப்பாய்களில் எண்ணெய்கள் உள்ளன என்றும் பொய் சொல்லுவான் .அவன் சொன்னதை பொய் என்று தந்திரமாக அறிந்து கொண்ட பானுமதி ,வில்லன் அபுஹூசேன் என்று தெரிந்து* எம்.ஜி.ஆரின் அனுமதி பெற்று ,ஆனால் அவர் விருப்பத்திற்கு மாறாக**நடனமாடி , சாரங்கபாணி ,எம்.என்.ராஜம் மூலம்*பீப்பாய்களை மாளிகையின் பின்புறம் ஆற்றில் தள்ளி விடுவார் .* இடையிலே பானுமதியின் நடனத்துடன் கூடிய*இந்த விறுவிறுப்பான* பாடல் இந்த காட்சிக்கு மெருகேற்றியது பரபரப்பான கிளைமாக்ஸ் காட்சிகளில் பானுமதியை குதிரையில் கடத்தி சென்று மலைக்குகையில் அடைத்து*வைக்க வீரப்பா*முயலுவதும்*தொடர்ந்து குதிரையில் எம்.ஜி.ஆர் விரட்டி பிடித்து வில்லனை வீழ்த்தி பானுமதியை காப்பாற்றுவதும் புதுமையாகவும், ரசிகர்களிடம் நல்ல வரவேற்பையும் பெற்றன*...


தேசிய நீரோட்டத்தில் ஈடுபாடு கொண்ட எம்.ஜி.ஆர்* மகாத்மா காந்தி மீது மிகவும் பற்று கொண்டவர் .* அதனால்தான் பூஜை அறையில் தன்* தாய் ,தந்தையர் படத்திற்கு அருகில் காந்தியின் படத்தையும் எம்.ஜி.ஆர். வைத்து வணங்கி வந்தார் .தேசியம் என்பதை வலியுறுத்தி எடுக்கப்பட்ட படம் சங்கே முழங்கு*இந்த படத்தில் எம்.ஜி.ஆர். ஒரு சீக்கியராகவும் ,இஸ்லாமியராகவும் வருவார் .எம்.ஜி.ஆரின் மாமனாராக வரும் டி.கே. பகவதி ஒரு பஞ்சாபியாகவும் ,அவரது வளர்ப்பு மகள் லட்சுமி வேற்று மொழியை சார்ந்தவராகவும் இருப்பார் .இப்படி பல்வேறு மொழிகள், பல்வேறு மாநிலங்களை ஒன்று சேர்க்கும் விதமாக கதை அமைப்பு இருக்கும் இந்த படத்தில் எம்.ஜி.ஆர். இஸ்லாமியராக தோன்றும் காட்சியில் நாலு பேருக்கு நன்றி என்ற விறுவிறுப்பான தத்துவ பாடல் அமைக்கப்பட்டிருக்கும் .


எம்.ஜி.ஆருடைய* வீடு ஜப்தி செய்யப்படுகிற தகவல் அவருக்கு கிடைக்கிறதுஇந்த தகவலை எப்படியோ அறிந்த திண்டிவனத்தை சேர்ந்த ஒரு இஸ்லாமிய தாயார் அவரது வீட்டு சொத்து பத்திரத்தை தன் மகனிடம் கொடுத்து ,இதை எம்.ஜி.ஆரிடம்* விரைவாக கொண்டுபோய் சேர்த்துவிடு என்கிறார் .* அனால் நல்லவேளையாக நீதிமன்ற தீர்ப்பு* எம்.ஜி.ஆருக்கு சாதகமாக**.வெளியானதால்*வீடு ஜப்தியாகவில்லை .உடனே எம்.ஜி.ஆர். திண்டிவனம் சென்று அந்த இஸ்லாமிய தாயாரை பார்த்து வணங்கி ,நீதிமன்ற தீர்ப்பு விவரம் சொல்லி வீடு ஜப்தியாகவில்லை . இருப்பினும் என்மீது அன்புகாட்டி உதவ முன்வந்ததற்கு* மிகவும் நன்றி என்றார் அவருக்கு பணம் கொடுக்க எம்.ஜி.ஆர். முன்வந்தபோது அந்த தாய் மறுத்துவிட்டார் . .அந்த இஸ்லாமிய தாய் அளித்த சூடான பாலை குடித்துவிட்டு வணக்கம் சொல்லிவிட்டு வந்தார் .*.இந்த இஸ்லாமியர் தொடர்பு என்பது அந்த இன மக்களின் மத்தியில் எம்.ஜி.ஆருக்கு இருந்த செல்வாக்கை*உறுதிப்படுத்தியது .**


எங்க வீட்டு பிள்ளை இந்தியில் ராம் அவுர் ஷ்யாம் என்ற பெயரில் எடுத்தபோது ஹீரோவாக நடித்தவர் திலீப்குமார் .* தமிழகத்தில் எங்க வீட்டு பிள்ளை வெளியாகி வரலாறு காணாத வசூல்மழை பொழிந்த விவரங்கள் அறிந்த திலீப்குமார் சென்னைக்கு விஜயம் செய்வதை அறிந்த எம்.ஜி.ஆர். தன்* வீட்டிற்கு அழைத்து விருந்து வைத்தார் .* அப்போது திலீப்குமார் ,உங்களை போல வில்லனை சவுக்கால்* அடிக்கும் காட்சியில் அவ்வளவு தத்ரூபமாக* உண்மையில்**என்னால் நடிக்க முடியவில்லை நீங்கள் மிகவும் அபாரமாக சாட்டையை சுழற்றி விளையாடி விட்டீர்கள் . நான் ஆணையிட்டால் பாடல் காட்சியும் மிகவும் பிரமாதம் .உங்களுக்கு என் வாழ்த்துக்கள் என்றார் .அதற்கு நன்றி சொன்ன எம்.ஜி.ஆர். சிலம்பம் செய்வது கற்றிருந்தால்* சாட்டையை சுழற்றுவது வெகு சுலபம் . அந்த சிலம்பத்தில் சில ஸ்டெப்புகள் உண்டு .அதை முறையாக பயின்றால் எல்லாமே நமக்கு கைவந்த கலையாகிவிடும் என்றார் .சங்கே முழங்கு படத்தில் ஒரு சண்டை காட்சியில் சாட்டையை சுழற்றும்போது ஒவ்வொரு சாட்டையடிக்கும்*,k,s,x,y.z* என்று* அடி**விழுவதுபோல படமாக்கி இருப்பார்கள் .அப்படி சுளிவு, நெளிவுகளை சாட்டை வீசுவதில் கற்றுக் கொண்ட ஜாம்பவான் எம்.ஜி.ஆர்.*


ஒருமுறை ,பாரிமுனை, பூக்கடை பகுதியில் தேர்தல் பிரச்சாரத்தின்போது ,தேர்தல் நிதிக்காக வேனில் எம்.ஜி.ஆர். வருகிறார் . காய்கறி விற்பவர்கள், பூ வியாபாரம் செய்பவர்கள் ,என்று பல வியாபாரிகள், தொழில் செய்பவர்கள் ,போட்டி போட்டுக் கொண்டு நிதி ,காய்கறிகள் , பொருட்களை குவிக்கிறார்கள் .இவர்களுக்கு மத்தியில்தொப்பி விற்கும்* ஒரு இஸ்லாமியர் ஓடி வந்து ஒரு தொப்பியை எம்.ஜி.ஆருக்கு அணிவிக்கிறார் .இதை எப்போதும் நீங்கள் அணிந்து கொண்டிருக்க வேண்டும் என்கிறார் . அது போன்ற தொப்பிகளை எம்.ஜி.ஆர்.தன்*வாழ்நாள் முழுவதும் அணிந்து இருந்தார் . அவர் மறைந்தபோதும் அந்த புஷ் குல்லா தொப்பியுடன்தான் நல்லடக்கம் செய்யப்பட்டார் .* தொப்பி அளித்தவர் எந்த மதத்தை சார்ந்தவர் என்று ஆராயவில்லை . எம்மதமும் அவருக்கு சம்மதம் .ஜாதி,இன, மொழி, மத வேறுபாட்டிற்கு அப்பாற்பட்டவர் எம்.ஜி.ஆர்.*

மேலும் தகவல்களுக்கு அடுத்த அத்தியாயத்தில் நாம் அறிந்து கொள்வோம்*

நிகழ்ச்சியில் ஒலித்த பாடல்கள் /காட்சிகள் விவரம்*
----------------------------------------------------------------------------------
1.ஆடலுடன் பாடலைக் கேட்டு ரசிப்பதிலேதான் சுகம் -குடியிருந்த கோயில்*

2.மலைக்கள்ளன் படத்தில் எம்.ஜி.ஆர்.*

3.பாக்தாத் திருடன் படத்தில் எம்.ஜி.ஆர்.*

4.ராஜா தேசிங்கு படத்தில் எம்.ஜி.ஆர்.*

5.எம்.ஜி.ஆர். -பானுமதி உரையாடல் -அலிபாபாவும்* 40 திருடர்களும்*

6.மாசில்லா உண்மை காதலே - அலிபாபாவும்* 40 திருடர்களும்*

7.எம்.ஜி.ஆர். -லட்சுமி -டி.கே.பகவதி உரையாடல் - சங்கே முழங்கு*

8.எம்.ஜி.ஆர்.- பண்டரிபாய் உரையாடல் - எங்க வீட்டு பிள்ளை*

9.முதல்வராக எம்.ஜி.ஆர்.-புகைப்படங்கள்*

fidowag
4th August 2020, 10:15 PM
பாட்டாலே புத்தி சொன்ன*வாத்தியார் எம்.ஜி.ஆர்.- வின் டிவியில் சகாப்தம்*நிகழ்ச்சியில் 17/07/20 அன்று திரு.துரை பாரதி*அளித்த*தகவல்கள்*
-----------------------------------------------------------------------------------------------------------------------
மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். என்கிற மந்திர சொல் பல சாமானியர்களை மாமனிதர்களாக , பல்வேறு உயர் பதவிகளுக்கு உயர தூக்கி விட்ட ஒரு உந்து சக்தியாகும் .அந்த மந்திர சொல்லை அவர் வாழ்ந்த காலத்தில் மட்டுமின்றி இன்றைக்கும் பலரும் அந்த சொல்லை வைத்து கொண்டாடி வருகிறார்கள் என்பதற்கு பல்வேறு உதாரணங்கள் கூறலாம் .சென்னை பெருநகர முன்னாள் மேயர் திரு.சைதை துரைசாமி அவர்கள் கடந்த காலத்தில் *எம்.ஜி.ஆருடன் பழகிய அனுபவங்களை நம்முடன் பகிர்ந்துள்ளார் .குறிப்பாக அ .தி.மு.க. கட்சி உதயமாவதற்கு முன்பு தாமரைக் கொடி எப்படி, எவ்விதம் உருவானது என்று ஒரு தொகுப்பாக அவர் வெளியிட்டுள்ளார் .எந்த லட்சியத்திற்காக தன்னுடைய எம்.ஜி.ஆர். பிக்ச்சர்ஸ் லோகோவிற்கு கருப்பு, சிவப்பு வடிவம் கொண்ட கொடி வைத்திருந்தாரோ , காரில் தி.மு.க. கொடியைப்பார்த்து ,அண்ணாவிடம் நீங்கள் எம்.ஜி.ஆர். கட்சியா என்று கேட்டார்களோ ,அந்த தி.மு.க. கட்சியில் எம்.ஜி.ஆருக்கு நெருக்கடி ஏற்படுகிறது .

1972ல் மு.க. முத்து நடித்த பிள்ளையோ பிள்ளை படம் வெளியாகிறது . அந்த* சமயத்தில் பெரும்பாலான எம்.ஜி.ஆர். மன்றங்கள் கலைக்கப்பட்டு மு.க. முத்து ரசிகர் மன்றங்களாக* தி.மு.க. மேலிடத்தின் உத்தரவால் மாற்றப்படுகின்றன*இதனால் எம்.ஜி.ஆர். மன்ற நிர்வாகிகள் இடையே பெரும் கொந்தளிப்பு ஏற்படுகிறது .01/10/1972ல்* சென்னை ராயப்பேட்டையில் உள்ள சத்யா திருமண மண்டபத்தில் அனைத்து எம்.ஜி.ஆர். மன்ற நிர்வாகிகள் கலந்து கொள்ளும் சிறப்பு கூட்டம் நடைபெறுகிறது .கூட்டத்திற்கு எம்.ஜி.ஆர். அவர்கள்* தலைமை தாங்குகிறார் .மேலும் திரு.*.ஆர்.எம்.வீரப்பன் ,திரு.சைதை துரைசாமி ஆகியோரும் கூட்டத்தில் பங்கேற்றனர் .* திரு.சைதை துரைசாமி அவர்கள் அந்த காலத்திலேயே புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர். கலைக்குழு என்கிற அமைப்பை நடத்தி வந்தார் .நமக்கு ஒரு விடிவுகாலம் பிறந்துவிட்டது , தலைவர் எம..ஜி.ஆருக்கென்று* ஒரு அமைப்பு ,**தனிக்கட்சி, தனிக்கொடி, தனி சின்னம் உருவாக போகிறது என்ற ஆர்வத்தில் அனைவரும் பூரிப்பு அடைந்து இருந்தனர்*


தலைவர் எம்.ஜி.ஆர். பேசும்போது , தாய் கட்சியில் இருந்து ஒருபோதும் பிரிந்து செல்ல மாட்டேன் . தாயிலிருந்து சேய் உருவாகலாம் . ஆனால் சேயிடம் இருந்து ஒருபோதும் தாய் உருவாக முடியாது என்கிறார் . கூட்டத்தினர் இனி தலைவர் அனுமதியுடன் தாமரைக்கொடி உருவாக்கலாம், ஏற்றலாம் என்று மனக்கோட்டை கட்டியவர்களுக்கு பெருத்த ஏமாற்றமாக இருந்தது .அதே சமயத்தில் தலைவரின் அனுமதி இல்லாமலேயே, மதுரையில் ஜான்சி பூங்காவில் தாமரைக்கொடி ஏற்றப்பட்டுவிட்டது . ஸ்ரீவில்லிபுத்தூரில் தாமரைக்கனி தாமரைக் கொடி ஏற்றினார் .* இப்படி*..தி.மு.க.மேலிடத்தின் உத்தரவால் எம்.ஜி.ஆர். மன்றங்களை கலைக்க சொன்னதற்கு நெருக்கடி காரணமாக* பல்வேறு இடங்களில் எம்.ஜி.ஆர். மன்ற நிர்வாகிகள் தாமரைக்கொடிதான் நமது கொடி என்று தீர்மானித்து* ஆங்காங்கே ஏற்றிய வண்ணம் இருந்தனர் .அந்த நேரத்தில் நமக்கென்று* தனிக்கட்சியோ, தனிக்கொடியோ காண போவதில்லை என்று எம்.ஜி.ஆர். அறிவிப்பு ஒன்று வெளியிடுகிறார் .


கூட்டத்தின் முடிவில் திரு.சைதை துரைசாமி, தலைவர் எம்.ஜி.ஆரை பார்த்து ,அண்ணே, ஒருவிதமாக எம்.ஜி.ஆர். மன்றங்களை நீங்களே மூட செய்துவிட்டீர்கள் என்றார் ,உடனே திரும்பி பார்த்து ,.என்ன சொல்கிறாய் என்று எம்.ஜி.ஆர். கேட்க ,நாங்களெல்லாம் ஒரு கட்சிக்கு கட்டுப்பட்டவர்கள் நாங்கள் போய் கிளை கழக செயலாளர்கள் ,வட்ட செயலாளர்கள்* ஆகியோரை**அணுகி எம்.ஜி.ஆர்.மன்றங்கள் துவக்க வேண்டும் என்று கேட்டால் ,அதற்கு அனுமதியில்லை* அவற்றை கலைத்துவிடுங்கள் . .நீங்கள் மு.க.முத்து ரசிகர் மன்றங்கள் ஆரம்பியுங்கள் என்கிறார்கள் அதற்குத்தான் அனுமதி கிடைக்கும் என்று சொல்கிறார்கள் ,அவர்களின் ஒப்புதல் இல்லாமல் எதுவும் செய்ய இயலாத நிலை உள்ளது .* இது யாருடைய உத்தரவு என்று ரசிகர்கள், தொண்டர்கள் கேட்டால் இது மேலிடத்து உத்தரவு என்கிறார்கள். எங்களுக்கு தெரிந்தவரையில் மேலிடம் என்பது நீங்கள்தான் .உங்களுக்கு மேலாக மேலிடம் எங்கு உள்ளது .இதற்கு நீங்கள்தான்* எங்களுக்கு சரியான விளக்கமும் வழிகாட்டுதலும் சொல்ல வேண்டும் என்று திரு.சைதை துரைசாமி கேட்டார் .இவற்றையெல்லாம் கேட்டுக்கொண்ட தலைவர் எம்.ஜி.ஆர். சரி, எல்லாவற்றையும் நான் பார்த்துக் கொள்கிறேன் . நீங்கள் எல்லாம் கொஞ்சம் பொறுமையாக இருங்கள் . விரைவில் இதற்கெல்லாம் தகுந்த பதில் கிடைக்கும் என்று சொல்லிவிட்டு புறப்படுகிறார் .இந்த கூட்டத்தின் வாயிலாக திரு.சைதை துரைசாமி பற்ற வைத்த கனல் என்பது தலைவர் எம்.ஜி.ஆர். மனதில் நெருப்பாக எரிய ஆரம்பித்தது .


சில நாட்கள் கழித்து ,திருக்கழுக்குன்றம் பொதுக்கூட்டத்தில் எம்.ஜி.ஆர். பேசும்போது கிளை கழக செயலாளர்கள் முதல் அமைச்சர்கள் வரை* தங்கள் சொத்து என்ன, எப்படி வந்தது ,கட்சியில் சேருவதற்கு முன்பு எவ்வளவு சொத்து , பொறுப்புக்கு வருவதற்கு முன்பு* எவ்வளவு சொத்து உள்ளது . தற்போதைய சொத்தின் நிலவரம் என்ன என்பதைக் கணக்கு காட்ட வேண்டும் .* இந்த ராமச்சந்திரன் நடிப்பதற்கு முன்பு இருந்த சொத்து என்ன , நடித்து வாங்கிய சொத்துக்கள் விவரம் என்ன, என் மனைவியின் பெயரில் உள்ள சொத்துக்கள் என்ன என்று எல்லாவற்றையும் கணக்கு காட்ட நான் தயார் .* ஆனால் கட்சியில் உள்ள கிளை கழக செயலாளர்கள் முதல் அமைச்சர்கள் வரையில் பொறுப்பில் உள்ளவர்கள் சொத்து கணக்கு* விவரம் காட்டுவதற்கு தயாராக உள்ளார்களா என்று கேட்டார் . தி.மு.க. பொருளாளர் எம்.ஜி.ஆரின் கேள்விக்கணைகளை கேட்டறிந்த அன்றைய முதல்வர் கருணாநிதி பதறிப்போய் ,புதுவை மாநில முதல்வர் பரூக் மரைக்காயரிடம் பேசினார் . சொத்து கணக்கு விவரத்தை முதலில் அமைச்சர்கள், என்று ஆரம்பித்து,சட்டமன்ற உறுப்பினர்கள் ,கிளை கழக செயலாளர்கள் வரையில் அனைவரும் காட்ட வேண்டும் என்று சொல்கிறார் .கட்சி பொருளாளராக இருந்து கொண்டு ,இப்படியா வெளிப்படையாக பேசுவது , இவருடைய கேள்விகள் கட்சிக்கு ,பாதகமாகவும், பெரிய குந்தகத்தை விளைவிக்கும் போல் தெரிகிறது என்கிறார் .தயவு செய்து எம்.ஜி.ஆரிடம் நீங்கள் பேசுங்கள். அவர் என்ன சொன்னாலும் நான் ஏற்றுக்கொள்ள தயார் . எப்படிப்பட்ட கட்டுப்பாடுகள் கட்சியில் கொண்டுவரவேண்டும் என்று விரும்புகிறாரோ அதையும் செய்ய தயார் . ஆனால் கட்சிக்கு குந்தகம் விளைவிக்கும்படி நடந்து கொள்ளக் கூடாது என்று கேட்டுக் கொள்ளுங்கள் என்றார் . தலைவர் எம்.ஜி.ஆரிடம் பேசுவதற்கு பரூக் மரைக்காயர் தூது அனுப்பப்படுகிறார் .சுமார் 2 மணி நேரம் பேச்சு வார்த்தை நீடிக்கிறது .நீங்கள் உருவாக்கிய முதல்வர் கருணாநிதி, நீங்கள் என்ன கட்டுப்பாடுகள் கொண்டுவரலாம் என்று நினைக்கிறீர்களோ அதற்கு அவர் சம்மதிக்க தயார்* நீங்கள் சொன்னபடி கட்சியை நடத்தலாம் என்கிறார் .இந்த சமாதான பேச்சுக்கள் விளைவுதான்* முன்கூட்டியே அவசரப்பட்டு எந்த முடிவும் எடுக்க வேண்டாம்* தனிக்கட்சி, தனிக்கொடி, தனி சின்னம் இப்போதைக்கு வேண்டாம்*என்ற நிலை*எடுத்திருந்தது பின்னால் தெரியவந்தது .


எம்.ஜி.ஆர்.பிக்ச்சர்ஸ் லோகோவில் தி.மு.க. கட்சி கொடி , திரைப்படங்களில் உதயசூரியன், கதிரவன் என்ற பெயர்களில் கதாபாத்திரங்கள் , நெற்றியில் உதயசூரியன் , சட்டையில் உதயசூரியன் ,உடைகளில் கருப்பு, சிவப்பு வண்ணங்கள்* காட்சி அரங்கங்களில் உதயசூரியன்*வசனங்களில், பாடல்களில் உதயசூரியன் என்று நகரங்கள், கிராமங்கள், பட்டி தொட்டியெல்லாம் தி.மு.க கட்சியை, சின்னத்தை கொடியை* கொண்டு சென்றவர் தலைவர் எம்.ஜி.ஆர். அவரது உழைப்பையும், விளம்பரத்தையும் பயன்படுத்தி* நம்பி வளர்ந்த அதே தி.மு.க. கட்சியில் இருந்து,சொத்து கணக்கு கேட்டார் என்ற காரணத்திற்காக* 10/10/1972ல்* தலைவர் எம்.ஜி.ஆரை கட்சியில் இருந்து நீக்கம் செய்தார்கள் .பின்னர்* 17/10/1972அன்று அ.தி.மு.க. கட்சி உதயமானது .*அண்ணாவின் உருவம் பொருந்திய கொடி , இரட்டை இலை சின்னம் அறிமுகப்படுத்தப்பட்டது .


மேலும் தகவல்களுக்கு அடுத்த அத்தியாயத்தில் அறிந்து கொள்வோம்*

நிகழ்ச்சியில் ஒலித்த பாடல்கள் /காட்சிகள் விவரம்*
------------------------------------------------------------------------------------
1.நாளை நமதே நாளை நமதே* *- நாளை நமதே*

2.என்னதான் நடக்கும் நடக்கட்டுமே - பணத்தோட்டம்*

3.எத்தனை பெரிய மனிதனுக்கு - ஆசைமுகம்*

4.ஒரு தாய் வயிற்றில் வந்த உடன்பிறப்பில் - உரிமைக்குரல்*

5.சித்திர சோலைகளே* உமை நன்கு திருத்த - நான் ஏன் பிறந்தேன்*

6.நான் யார் நான் யார் நீ யார்* - குடியிருந்த கோயில்*

7.எம்.ஜி.ஆர். எஸ்.வி.ரங்காராவ் உரையாடல் - நம் நாடு*

8. நேருக்கு நேராய் வரட்டும் நெஞ்சில் துணிவிருந்தால் -மீனவ நண்பன்*

9. எம்.ஜி.ஆர். மன்னனாக திட்டங்கள் அறிவித்தல் -நாடோடி மன்னன்*

fidowag
4th August 2020, 10:19 PM
மக்கள் திலகத்தின் மகத்தான சாதனை குக்கிராமங்களிலும் செல்வாக்கை வளர்த்து மக்கள் உள்ளங்களில் நீங்கா இடம் பிடித்ததுதான். 1960-80 காலகட்டத்தில்தான் டூரிங் சினிமா முழு வளர்ச்சியடைந்தது எனலாம். ஆயிரக்கணக்கான டூரிங் தியேட்டர்கள் பெருகி மக்களுக்கு முக்கியமான பொழுதுபோக்கு சாதனமாக விளங்கியது இந்த காலகட்டத்தில்தான்.

எல்லா குக்கிராமங்களிலும் டூரிங் தியேட்டர்கள் பெருகி ஒரு காலகட்டத்தில் டூரிங் தியேட்டரே இல்லாத ஊரே கிடையாது என்று சொல்லுமளவுக்கு பெருகியது.
திரைப்பட விநியோகம் தழைத்தோங்கியது. அதற்கு முக்கியமான காரணகர்த்தா எம்ஜிஆர் எனலாம். எம்ஜிஆர் படங்களின் விநியோகஸ்தர்கள் தென் மாவட்டங்களில் சேது பிலிம்ஸ், சுப்பு, சுவாமி மற்றும் St அந்தோனி பிக்சர்ஸ் இவர்களே படங்களை அதிகம் விநியோகம் செய்தனர்.

ஆனால் மற்ற படங்களுக்கு வெவ்வேறு விநியோகஸ்தர்கள் வருவார்கள் போவார்கள். 4 படங்களில் முதலீடு கரைந்ததும் விவசாயத்தை பார்க்க
கிளம்பி விடுவார்கள். எம்ஜிஆர் படங்கள் நிலையான வருமானத்தை
கொடுப்பதால் முக்கியமான 4 எம்ஜிஆர் படங்கள் மட்டுமே இருந்தால் போதும் எப்போதுமே வருமானத்தை
கொடுத்து கொண்டேயிருக்கும்.
சாதாரண தலைவன், காதல் வாகனம், தேர்த்திருவிழா போன்ற படங்கள் T K
ஏரியாவுக்கு சுமார் 2 லட்சம் அளவுக்கு போகும்.

அதேநேரம் நிறைகுடம் அஞ்சல் பெட்டி 520
அன்பளிப்பு போன்ற படங்கள் 60-70
ஆயிரம் ரேஞ்சுக்கும் சுமாரான ஜெய்சங்கர் படங்கள் சுமார் 40-50
ஆயிரம் ரேஞ்சுக்கும் விற்பனையாகும். எம்ஜிஆரின் கலர் படங்கள் சுமார் 4 லட்சம் அளவுக்கு போகும். தமிழகத்தில் மொத்தம் 7 விநியோக மையங்கள் உண்டு. அவை சென்னை மதுரை கோவை திருச்சி சேலம் NSC மற்றும் T K . இவற்றில் NSC தான் மிகப்பெரிய ஏரியா. அதற்குத்தான் விலையும் அதிகம். இது போக கேரளா, கர்நாடகா, இந்தி மாநிலம் என்று இத்தனை ஏரியா உண்டு. NSC ஏரியா மட்டும் TK போல மூன்று மடங்குக்கும் அதிகம் போகும்.

ஜெய்சங்கர் படம் தயாரிப்பு செலவு 3-4 லட்சத்தில் முடிந்து 5 லட்சத்தில் விநியோகம் நடக்கும். சிவாஜி படங்கள் 6-7 லட்சத்தில் தயாரிக்கப்பட்டு அதற்கு மேல் லாபம் கிடைத்தால் விற்று விடுவார்கள்.
தயாரிப்பு செலவு கூடும் பட்சத்தில் கையை கடித்து விட வாய்ப்பிருக்கிறது. எம்ஜிஆர் படங்கள். ஏறக்குறைய15 லட்சத்தில் முடிவதால் விற்பனை 20 லட்சத்தில் நடைபெறும்.

எம்ஜிஆரின் கலர் படங்கள் 1965 களில் சுமார் 25 லட்சமும் 70 களில் சுமார் 40 லட்சமும் 75 களில் சுமார் 60 லட்சமும் செலவு பிடிக்கும்.
இதெல்லாம் விநியோகஸ்தர்களிடம் பழகியதால் எனக்கு கிடைத்த தகவல்கள். இதில் தவறு இருந்தால் என் கருத்தை ஏற்றுக் கொள்ள வேண்டாம். எம்ஜிஆர் படத்துக்கு மட்டும் ஏன் இந்த விலை? என்று கேட்கலாம். அதற்கான பதிலைதான் இப்போது சொல்லப் போகிறேன். நகரங்களை ஒட்டி அமைந்திருக்கும் கிராமங்களில் ஒரளவு எல்லா நடிகர்களின் படங்களும் அவர்களுக்கு தெரிந்திருக்கும். அவர்கள் அடிக்கடி டவுனுக்கு வந்து போவதால் இருக்கலாம்.

ஆனால் குக்கிராமங்களில் தலைவரின் படங்கள்தான் பிரதானமாக இருக்கும். மற்ற நடிகர்களின் படங்கள் 1அல்லது 2 நாட்கள்தான் ஓடும். ஆனால் தலைவர் படமோ குறைந்தது 5 நாட்கள் ஓடும். அதுவும் 6 மாதத்திற்கு ஒருமுறை. 5 ஆண்டுகளில் விநியோகஸ்தர்கள் குறைந்த பட்சம் 10 முறை திரையிட்டு கிட்டத்தட்ட 50 நாட்கள் ஓட்டி விடுவார்கள். அப்படி ஒவ்வொரு கிராமத்திலும் படம் நிற்காமல் ஓடினால் வசூல் வந்து கொண்டே இருக்கும்.

எம்ஜிஆரின்
பழைய படங்கள் செய்கின்ற ஒரு சில சாதனைகளை இங்கு பதிவு செய்திருக்கிறேன். அதில் காதல் வாகனம் 1980 மே 9 ம்தேதி மகாலட்சுமியில் வெளியாகி 7 நாட்கள் நடைபெற்றது. அந்த 7 நாட்களிலும் நடைபெற்ற 21 காட்சிகளும் அரங்கு நிறைந்து சாதனை ஏற்படுத்தியது ஒரு ஆச்சர்யமான நிகழ்வே. நாகர்கோவிலில் முதல் தடவை 1969 ல் வெளியான அடிமைப்பெண் 100 நாட்களில் பெற்ற வசூல் சுமார் 1,30,000 ரூ. அதன்பின் பலதடவை வெளியான பின் நாகர்கோவில் கார்த்திகையில் வெளியான போது 18 நாட்களில் சுமார் 1,00,000 ரூ வசூலாக பெற்று 20 நாட்களை கடந்து ஓடியது விந்தையிலும் விந்தை அல்லவா?

இது போல ஒவ்வொரு ஊரிலும் இது போன்ற அபரிமிதமான சாதனைகள் தொடர்ந்து நடைபெறுவது உலகத்திலேயே MGR படத்துக்கு மட்டும்தான் என்பது ஒரு அற்புதமான செய்தி. இதெற்கெல்லாம் என்ன ஆதாரம் என்று கேட்பீர்கள். அதையும் இத்துடன் இணைத்திருக்கிறேன். அன்று வந்த புது படங்கள் கூட இந்த வெற்றியை பெற்றதில்லை என்பது
கூடுதல் தகவல்.

fidowag
4th August 2020, 10:26 PM
இந்த அகிலமே சொல்லும் நீ "ஆயிரத்தில் ஒருவனெ"ன்று. இது "ஆயிரத்தில் ஒருவன்" படத்தில் மனேகர் சொல்லும் வசனம். ஆனால் உண்மையில் ஆயிரத்தில் ஒருவரை எம்ஜிஆரைபோல் பார்க்க முடியுமா?
கோடியில் ஒருவரை கூட பார்க்க முடியாது. ஏன் கோடியில்? இந்த அகிலமெல்லாம் தேடினாலும் கிடைக்குமா, இந்த மாசற்ற மாணிக்கம் போல் வேறோருவரை?.

அப்பேர்ப்பட்ட "ஆயிரத்தில் ஒருவனின்" வசூல் விபரங்கள் யாரும் அறியாவண்ணம் இருப்பதால் இந்த பதிவில் அதை பற்றி சற்று காண்போம். சென்னையில் மிட்லண்ட் கிருஷ்ணா மேகலா என்ற மூன்று திரையரங்குகளில் தலா 106
நாட்கள் ஓடி
மொத்தம் 318 நாட்களை
பதிவு செய்து மொத்தம் ரூ8,69,711.15 வசூலானது.
"எங்க வீட்டு பிள்ளை" 100 நாட்களில் காஸினோ பிராட்வே மேகலாவில் மொத்தம் ரூ 9,23,519.40 வசூல் செய்தது குறிப்பிட தக்கது.

நெல்லையில் "ஆயிரத்தில் ஒருவன்" 50 நாட்களில் ரு 77,504.42 வசூலானது.
கோவை கர்னாடிக்கில் 115 நாட்கள் ஓடி ரூ 221,246.37 வசூல் செய்தது. "எங்க வீட்டு பிள்ளை" கோவை ராயலில் ரூ. 2,64,847.83 வசூலானது.
மதுரையில் "ஆயிரத்தில் ஒருவன்" 28 நாளில்
ரூ1,12,232.53 ம் "திருவிளையாடல்" 28 நாளில் ரூ 1,07,452.37, 50 ம் வசூலாக பெற்று தோல்வியடைந்தது. 50 நாளில் "ஆயிரத்தில் ஒருவன்" பெற்ற வசூல் ரூ 174411.66 ம். அதே பந்துலுவின் பிரமாண்ட படமான "கர்ணனின்". 77 நாள். வசூல் ரூ 1,75,026.16 ஐ பெற்று தோல்வியை பரிசாக பெற்றது.

அதுபோல் திருச்சியிலும் 50 நாட்களில் "எங்க வீட்டு பிள்ளை"க்கு அடுத்த படியாக "ஆயிரத்தில் ஒருவன்" தான் அதிக வசூல் பெற்ற படம். 50 நாட்களில்
ரூ 1,35,287.00 வசூலானது.
தூத்துக்குடியில்
"மதுரை வீரனு"க்கு பிறகு அதிக வசூலை தந்த படம்
"ஆயிரத்தில் ஒருவன்" தான்.
10 நாட்கள் தொடர்ந்து 4 காட்சிகள் நடந்த ஒரே படம். நகரில் அதிக வசூல் பெற்ற படமும் "ஆயிரத்தில் ஒருவன்" தான்.

சேலம் ஓரியண்டல் திரையரங்கில் 125 நாட்கள் ஓடி சாதனை செய்தது.
திண்டுக்கல்லில் 4 வாரத்தில் "ஆயிரத்தில் ஒருவன்" பெற்ற வசூல் ரூ 54,699.87.
"திருவிளையாடல்" 4 வாரத்தில் ரூ52,187.16 வசூலாக பெற்று "ஆயிரத்தில் ஒருவனி"ன் வானளாவிய வெற்றிக்கு முன் மண்டியிட்டது குறிப்பிடதக்கது.

வேலுரில் தாஜ் திரையரங்கில் 46
நாட்களில் பார்த்தவர்கள் எண்ணிக்கை சுமார் 1,50,000 பேர்.
46 நாட்களில் பெற்ற சாதனை வசூல்
ரூ 74,210.48. இதைப்போல் ஒவ்வொரு ஊரிலும் மகத்தான சாதனை புரிந்த படம்தான் பத்மினி பிக்சர்ஸின் "ஆயிரத்தில் ஒருவன்".

திக்கெட்டும் உரைக்கும் "ஆயிரத்தில் ஒருவனின்" வெற்றி சேதியை,
கண்டு மாற்றலர் மனம் வெந்து நொந்த வேதனை என்ன?
வந்து சேர்ந்த சோதனை மேல் சோதனைதான் என்ன?
போதுமடா சாமி யென்ற போதிலும்
மெய்ப்பொருள் கண்டு மீளாதிருப்பதென்ன?

orodizli
6th August 2020, 07:30 PM
#சரித்திரத்தில் #ஒரு #சரித்திரம்

எம்ஜிஆர் என்ற மனிதர், நடிகராகி, புரட்சி நடிகராக,மக்கள் திலகமாக, நடிக மன்னராக, வசூல்சக்கரவர்த்தியாக, மூன்றெழுத்து மந்திரமாக, எங்கவீட்டுப் பிள்ளையாக, தாய்க்குலத்தின் தாரகமந்திரமாக, #புவி #போற்றிடும் #புரட்சித்தலைவராகப் படிப்படியாகத் தனது புகழ் எனும் ஏணிப்படிகளில் ஏறி,தனது நிலைகளை மெல்ல மெல்ல உயர்த்தி, இன்றுவரை இந்தியத் துணைக் கண்டத்திலேயே எந்தநடிகராலும் பெற இயலாத மக்கள் செல்வாக்கைப் பெற்று உயர்ந்தார்.

115 படங்களில் மட்டுமே ஹீரோவாக நடித்த எம்ஜிஆரால் எப்படி மக்கள் இதயங்களைக் கவரமுடிந்தது ? மக்கள் எங்ஙனம் அவரை ஆளும் அரியாசனத்தில் ஏற்றி வைத்தார்கள்? எனறெல்லாம் வினாக்கள் எழும்!

எம்ஜிஆர் காலத்திலும், அவரது காலத்திற்குப்பின்னும் திரையுலகில் புகுந்து ஏராளமான படங்களில் நடித்த சிவாஜிகணேசனும்; காதல் மன்னன் ஜெமினி கணேசனும், இலட்சிய நடிகர்எஸ்.எஸ். ராஜேந்திரனும் பெறமுடியாத, ஈட்ட முடியாத மக்கள் செல்வாக்கை எம்.ஜி.ஆர் எட்டிப்பிடிக்கக் காரணங்கள் என்ன?

இடைப்பட்ட காலத்தில் திரையுலகையே திக்குமுக்காடச் செய்த ஜெய்சங்கர், ரவிச்சந்திரன், முத்துராமன், ஏவி.எம்.ராஜன்போன்றோர் காணமுடியாத மக்கள் ஆதரவைஎம்.ஜி.ஆர். மட்டும் கண்டது எப்படி?

கால மாற்றங்களில், தங்களது கலை நுட்பங்களை,அனுபவங்களைத் தெளிவாகப் பதிவு செய்துகொண்ட கமல்ஹாசன், ரஜினிகாந்தும் கண்டிட முடியாத மக்கள் சக்தியை எம்.ஜி.ஆர் என்ற மூன்றெழுத்து மந்திரம் கைப்பற்றியது எங்ஙனம்?

இவற்றையெல்லாம் சிந்திக்கும் வேளையில்தான், எம்ஜிஆர் என்ற மாமேதையின் மகத்தான மகத்துவம் நமக்குப் புரியும்.

எம்.ஜி.ஆர். ஒரு நடிகர் மட்டுமல்லர். அவர் அனைத்துக்கலைநுட்பங்களையும் நுணுக்கமாக அறிந்த கலைவித்தகர். நாட்டு மக்களின் இரசனைகளை நாடிபிடித்து அறிந்தவர். எனவேதான், அவரதுபடங்களில் வரும் பாடல்களை ஒலிப்பதிவு அறைகளில் அமர்ந்து, சொல்லுக்குச் சொல் கேட்டே, பதிவு செய்திடஅனுமதிப்பார். அதேபோல், படங்களில் இடம்பெறும் வசனங்களையும் வார்த்தைக்கு வார்த்தை ஆராய்ந்தே இடம்பெறச் செய்வார். இவையே அவரது வெற்றியின்மூல இரகசியமாகும்.

நாட்டு மக்களுக்குச் சொல்லவேண்டிய,செய்யவேண்டிய நல்ல கருத்துகளையும், செயல்களையுமே தனது படங்களின் பாடல்கள்,வசனங்களில் எம்ஜிஆர் இடம்பெறச் செய்தார்.அவ்வாறு செய்த காரணத்தால் தான், #எம்ஜிஆர் #என்ற #மந்திரசக்தி இன்றளவும் மக்களின் இதயங்களில் மாமகுடம் தாங்கி வீற்றிருக்கிறது.

சத்யா எனும் தாய், கருவினிலே வளர்ந்த போதே தனது அன்பு மழலையாம், எம்ஜிஆர் என்றமகனுக்குத் தைரியத்தை ஊட்டி வளர்த்த தாயல்லவா!

பெற்ற தாயின்மீது பெறுதற்கரிய பாசத்தைச்செலுத்தியதோடு, நாட்டிலுள்ள தாய்மார்களின் மீதெல்லாம் அளவிடற்கரிய பாசத்தைச் செலுத்தி, அவர்களது மானம் காக்க, களங்கத்தைப் போக்கக்காலமெல்லாம் துணையாய் நின்ற காவல்தெய்வமல்லவா எம்.ஜி.ஆர்! அதனாலன்றோ இன்றும்தாய்க்குலத்தின் தணியாத செல்வாக்கோடு,மறைந்தும் இம்மண்ணில் மங்காத புகழோடு எம்.ஜி.ஆர் வாழ்கின்றார்.

#கோடிமக்கள் #இம்மண்ணில் #வாழ்ந்ததுண்டு. #வாழ்ந்தசுவடுகள் #தெரியாமல் #மறைந்ததும் #உண்டு. #ஆனால்மக்களின் #மனங்களில் #நிலைத்து #நிற்பவர் #யாவர்?

#மாபெரும் #வீரர்! #மானத்தைக்காப்போர்!

இவர்கள் மக்கள் மனங்களில் மட்டும் அல்ல….#வருங்காலச்சரித்திரத்திலும் #சாய்ந்துவிடாது #நிலைத்து #நிற்பர்.

உண்மைதானா? உண்மையே! உதாரணம்.....#நம் #பொன்மனச்செம்மல் #புரட்சித்தலைவரே!!!.........

orodizli
6th August 2020, 07:31 PM
"மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன்" புரட்சி தலைவரின் கடைசி படம். 1978
ஜன 14 பொங்கல் திருநாளுக்கு வெளிவந்த வெற்றிப் படம். இந்த படத்தின் வெற்றியில் எதிர்முகாமை சேர்ந்தவர்களுக்கு சிறிது சந்தேகம் இருப்பதால் இந்தப்படம் அடைந்த வெற்றியை பற்றி பேசலாம். முதலில் இந்த படமே எம்ஜிஆரின் முழு கைவண்ணத்தில் வந்த படமல்ல.
தலைவர் முதலமைச்சர் ஆகி விட்ட
படியால் அவசரமாக முடித்து கொடுத்த படம். அவருக்கு நேரம் இருந்திருந்தால் இன்னும் டச்அப் காட்சிகளை எடுத்து படத்துக்கு இன்னும் மெருகேற்றியிருப்பார்.
படமும் முழு வளர்ச்சி பெற்றிருக்கும்.

சரித்திர படம் இவ்வளவு குறைந்த நீளத்தில் வந்ததை வைத்து தெரிந்து கொள்ளலாம். இருந்தாலும் எம்ஜிஆர் படமல்லவா? சிங்கத்தின் கால்கள் பழுது பட்டாலும் அதன் சீற்றம் குறையுமா? அப்படி சீற்றத்துடன் வந்த சிங்கத்தின் வெற்றியை பற்றி பார்ப்போம்.

சென்னையில் தேவிபாரடைஸ், அகஸ்தியர, உமா, கமலாவில் திரையிடப்பட்டு மொத்தம் 186 நாட்களில் வசூலாக பெற்ற தொகை ரூபாய்11,56,560-62
ஆனால் எங்கும் 100 நாட்கள் ஓட்டப்படவே இல்லை. ஆனால்
"அந்தமான் காதலி" என்ற சிவாஜி நடித்த முக்தாவின் படம், முக்தாவின் படங்களிலேயே அதிக வசூலை பெற்றதே இந்தப்படம் தான். அந்தப்படம்
சென்னையில் 100 நாட்கள் ஓடியதாக விளம்பரம் செய்திருந்தனர். சென்னையில் மொத்தம் 243 நாட்களில் பெற்ற வசூல் ரூ 9,69,715.20 தான்.

ஆனாலும் தமிழ்நாட்டில் சுமார் 5 திரையரங்குகளில் 100 நாட்கள் ஓட்டி விட்டார்கள். "ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்" என்பதை போல
ஒவ்வொரு படத்துக்கும் இதையே திருப்பி திருப்பி செய்து தங்கள் தோல்வியை மறைக்க அரும்பாடு படுவதை பார்க்கும் போது சற்று பரிதாபமாகத்தான் இருக்கிறது. மேலும்

சிவாஜியின் 100 நாட்கள் படங்களான "சொர்க்கம்" "எ.வந்தாள்"
"வி.வீடு" "சவாலே சமாளி" "பாபு" "பா.விலாஸ்" "எ.த.ராஜா" "கெளரவம்"
"ம.வந்தானடி" போன்ற நிறையபடங்கள்
100 நாட்கள் ஓட்டப்பட்டதே தவிர அனைத்தும் ம.மீ.சு.பாண்டியனிடம் வசூலில் மண்டியிட்ட படங்கள்தான்.
ஆனால் வாய் கூசாமல் ம.மீ.சு.பாண்டியனை தோல்வி படம் என்று கூறுகிறீர்களே
தைரியமிருந்தால் உங்கள் பட வசூலை வெளியிட்டு நிரூபித்து காட்டுங்கள்.

நெல்லையில் "ம.மீ.சு.பாண்டியன்" பெரிய திரையரங்கமான சென்ட்ரலில் வெளியாகி 55 நாட்கள் ஓடி சிவாஜியின் வெள்ளிவிழா படங்களான "ப.பட்டணமா"? "வசந்த மாளிகை" வசூலை அநாயசமாக தூக்கி எறிந்ததை கண்ணுற்றால் சிங்கத்தின் சீற்றத்தை நாம் புரிந்து கொள்ளலாம். "ம.மீ.சு.பாண்டியன்" நெல்லையில் 55 நாட்களில் பெற்ற வசூல் ரூ 1,50,009.45 .

சிவாஜியின் வெற்றிப் படங்கள் ஏதாவது இந்த சாதனையை சமன் செய்திருக்கிறீர்களா? வசூலை ஆராய்ச்சி செய்து சொல்லுங்கள். மதுரை சென்ட்ரலில் 76 நாட்கள் ஓடி வெற்றியை பதிவு செய்தது. கோவை கர்னாட்டிக் 41 நாட்கள் காலைக்காட்சி 7 நாட்கள் என மொத்தம் 48 நாட்கள் ஓடியது. தொடர்ச்சியாக கோவை ஸ்ரீபதியில் 7 நாட்கள் 3 காட்சி வீதம் ஓடியது. சேலம் சங்கீத்தில் 55 நாட்களும் srvயில் 6 நாட்களும், நாகர்கோவில் தங்கத்தில் 63 நாட்களும் ஓடி வெற்றிக்கொடி நாட்டியது குறிப்பிடத்தக்கது. திருச்சி கலையரங்கத்தில் 48 நாட்கள் ஓடி சுமார் ரூ 3,00,000 தாண்டி வசூல் செய்தது.

இதை விட முக்கியமான ஒரு சாதனை பட்டுக்கோட்டையில் நடத்தியிருக்கிறார் சுந்தர பாண்டியனார். இதுவரை வெளிவந்த எந்த ஒரு படமும் செய்யாத சரித்திர சாதனையாக தொடர்ந்து 101 காட்சிகள் ஹவுஸ்புல்லாகி வசூலிலும் புரட்சி செய்திருக்கிறார்.. இந்த சாதனையை யாராலும் இதுவரை முறியடிக்க முடியவில்லை.

அரசியலிலும் சினிமாவிலும் வெற்றி வாகை சூடியவர் புரட்சித் தலைவர். அரசியலிலும் சினிமாவிலும் தோற்று புறமுதுகு காட்டி ஓடியவர்களை நாம் மன்னித்து ஏற்றுக் கொண்டாலும் குள்ளநரிகள் போல ஒரு சிலதுகள் ஊளையிட்டு என்ன பயன்?. திருந்தினால் தலைவரைப் போல் மன்னிப்போம்! மறப்போம்! என்று அவர்களை ஏற்றுக் கொள்ள நாங்கள் தயார்..........

fidowag
6th August 2020, 09:20 PM
பாட்டாலே புத்தி சொன்ன வாத்தியார் எம்.ஜி.ஆர்.-வின் டிவியில் சகாப்தம் நிகழ்ச்சியில் திரு.துரை பாரதி*18/07/20 அன்று அளித்த*தகவல்கள்*
---------------------------------------------------------------------------------------------------------------------
மக்கள் திலகம் எம்.ஜி.ஆரை பற்றி நாம் பகிர்ந்து கொள்கின்ற பல்வேறு விஷயங்கள் ஆச்சர்யப்படத்தக்கவை .அதிசயிக்கத்தக்கவை .மக்கள் தலைவர் எம்.ஜி.ஆருக்கு சென்னை பல்கலை கழகமும், அமெரிக்காவின் அரிசோனா பல்கலை கழகமும் டாக்டர் பட்டங்கள் வழங்கின .அவரை புரட்சி நடிகர் என்று கலைஞர் கருணாநிதி வாழ்த்தினார் . கிருபானந்த வாரியார் பொன்மன செம்மல் என்று போற்றினார் .அவரை மக்கள் திலகம் என்று கல்கண்டு இதழ் ஆசிரியர் தமிழ்வாணன் புகழ்மாலை சூட்டினார் . எந்தெந்த பட்டங்கள் ,விருதுகள்* எப்படி வழங்கப்பெற்றாரோ* அதற்கு தகுந்தபடி*, சினிமா, அரசியல் , பொது வாழ்க்கை அனைத்திலும் அனைவரும் போற்றும்படி, பாராட்டும்படி , வாழ்த்தும்படியான*செயல்களை*,காரியங்களை அவர் செய்ய மறக்கவில்லை .


தன்னுடைய*தானை தலைவர் பேரறிஞர் அண்ணா*தோற்றுவித்த தி.மு.க. கட்சியை*, அண்ணா அவர்கள் வாழ்ந்த*போதும் , மறைந்த*பின்னரும்*அந்த கட்சிக்கு*தன்னுடைய*உடல், பொருள், உழைப்பு , திறமை, ஆற்றல் , கொடை*உதவி அனைத்தும் அளித்து , பல்வேறு வகைகளில்*திரைப்படங்களில் கட்சியை*சின்னத்தை*விளம்பரப்படுத்தி , நாடு, நகரங்கள் ,பட்டி ,தொட்டியெல்லாம் கட்சியை, சின்னத்தை கொண்டுபோய் சேர்த்து , அந்த* க*ட்சி*ஆலமரமாக*வேரூன்றி ,பரந்து*விரிந்து வளர்ந்த*பின்னர் , அதே கட்சியால் பதவி நீக்கம் ,அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கம் பெற்றவர் , அந்த பெரிய கட்சியை எதிர்த்து*தானே*அண்ணா*திராவிட முன்னேற்ற கழகம் என்ற கட்சியை*துவக்கி , மக்களுக்கு*தன் கொள்கைகளை திட்டங்களை*தெளிவாக சொல்லி , எதிர்க்கட்சியின் ஊழல்கள் , அராஜகங்கள் ,குறைகள் ஆகியவற்றை* *எடுத்துரைத்து* மக்களின்*ஏகோபித்த ஆதரவை*பெற்று ஒரு முறை அல்ல தொடர்ந்து மூன்று முறை முதல்வராக ஆட்சி நடத்தி ,முதல்வராகவே மறைந்தார்* என்பது*எம்.ஜி.ஆரால்*மட்டுமே*முடிந்த காரியம் .வேறு எவராலும் சாத்தியம்*இல்லாத விஷயம் .


மக்கள் திலகம் எம்.ஜி.ஆருக்கு நடிக்க தெரியாது*என்று பரவலாக பேசப்பட்டது .நடிக்க தெரியாமலா*அவரது*படங்களை*மக்கள் ரசித்தார்கள் . ஒரு சில*ஆண்டுகள்*தவிர ,ஏறத்தாழ 30 ஆண்டுகள்*வசூல் சக்கரவர்தியாகவும் ,*முடிசூடா மன்னனாகவும் திகழ்ந்தார் என்றால் எப்படி சாத்தியம் . இந்த சாதனைகளை*பொறுக்காத*பொறாமைக்காரர்களின் விமர்சனம்தான்*அது .அவற்றை*எம்.ஜி.ஆர். பொருட்படுத்தவேயில்லை .தனித்தன்மை என்று ஒன்று இல்லாவிட்டால் வாழ்க்கையில்*எந்த விஷயத்திலும் தனி மனிதன் , நடிகன் வெற்றிபெற*முடியாது என்பது எம்.ஜி.ஆருக்கு*நன்றாக தெரிந்து இருந்தது .அனுபவபூர்வமாக நாடக காலத்தில் சிவாஜி*கணேசன் மனோகரா*படத்தில் நடித்தது போல நாடகத்தில் மனோகரா*வேடத்தில்*நடித்துள்ளார் .தனக்கு*என்று ஒரு* தனி பாணி வேண்டும் .* அந்த பாணியை*யாரும் பின்பற்றல் ஆகாது*என்பதில்*உறுதியாக இருந்தார் .


நடிப்பு என்றால் என்ன , நடிப்பின் இலக்கணம் என்ன என்பதை அறிந்தவர் .ஒரு நடிகன் காமிராவின் முன்பு நிற்கும்போது இடதுபுறம்* உள்ள அவனுடைய**தோற்றம் ,வலதுபுறம்* உள்ள**தோற்றத்துடன் ஒப்பிடும்போது வெவ்வேறாக இருக்கும் .* எந்த தோற்றம் உகந்ததாக இருக்கும் .எந்த தோற்றம் சரியாக*காமிராவில்* அமையாது*என்பதையெல்லாம் நுட்பமாக அறிந்தவர் .பொதுவாக இரட்டை வேடங்கள்*ஏற்று நடிக்கும்போது ,எந்த வேடத்தில்*, குரல், முக பாவம் மட்டுமல்ல , மனோபாவமும்* எப்படி இருக்க வேண்டும் ,மனோரீதியான நடை, உடை, பாவனை போன்ற எல்லாவற்றையும் கொண்டு வருவதில்*எம்.ஜி.ஆர். வல்லவராக இருந்தார்*என்பதை*உதாரணமாக* .எங்க வீட்டு*பிள்ளை படத்தின்*இமாலய வெற்றிக்கு*காரணமாக* ,கோழை*,வீரன் என்ற இரண்டு பாத்திரங்களிலும் நல்ல வித்தியாசம் காட்டி அசத்தியிருப்பதை காணலாம் . . அதை தொடர்ந்து வந்த* பல**இரட்டை வேட*படங்களில் அதே முறையை கையாண்டார் . இரட்டை வேட*படங்களில் நடிக்கும்போது சிரிப்பு ,புருவத்தை*உயர்த்துதல் , தாழ்த்துதல், புன்னகை வரவழைத்தல்*, பாசம், அன்பு, வீரம் , துணிவு, காதல், கனிவு, கோபம்*என்று பலவிதமான*உணர்ச்சிமிக்க* காட்சிகளில் நடிப்பு என்பது எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு பல்வேறு கருத்துக்கள் வெளியிட்டுள்ளார் .


நடிப்பின்*பல்வேறு விதமான கலைகளையும், பல்வேறு அம்சங்களையும் தெரிந்து வைத்திருந்தார் . நடிப்பு பற்றி சிலர் சொல்வது*போல அறியாதவரல்ல*தனக்கென்று ஒரு**பாணியை கடைபிடித்தார் .* அதைத்தான் ரசிகர்கள் விரும்புகிறார்கள் .அதைத்தான் செய்ய முடியும்* ,பட தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், திரை அரங்கு உரிமையாளர்கள் அனைவரின்*நிதி நிலைமை , வருமானம்* பராமரிப்பு, செலவினம்*ஆகியவற்றை கருத்தில் கொண்டு*அவ்வாறு செய்தால்தான் திரைப்படத்துறை வளர்ச்சி பெறும், படங்கள்*வியாபார*ரீதியில்* நல்ல* விற்பனை ஆகும்**அரசுக்கும்*கணிசமான வரி என்கிற வகையில் வருமானம் பெருகும்*என்ற*நடைமுறையில் உள்ள செயல்பாடுகளை , பயனுள்ளதாக செயல்படுத்தினார் .*



தன்னுடைய வழக்கமான*பார்முலாவில் இருந்து சற்று விலகி, வித்தியாசமான பாத்திரத்தில்*உணர்ச்சிகளை கொட்டி*நடித்த*படம் பெற்றால்தான் பிள்ளையா*.இந்தப்படத்திற்கு பல சிறப்புகள் உண்டு . எம்.ஜி.ஆர். தான் நடித்த*மிக சிறந்த ,பிடித்த*படங்களில் ஒன்று . நடிகர் சிவாஜி கணேசன் இந்த கதையில் நடிப்பதாக இருந்தது*என்று பேசப்பட்டது . அவரும்*வசன ஆசிரியர் ஆரூர்தாஸிடம் இந்த காதையை*என்னிடம் சொல்லியிருந்தால் நான் நடித்திருப்பேன் என்று சொன்னதாக தகவல்கள் வெளியாகின .. எம்.ஜி.ஆர். சரோஜாதேவி ஜோடி கடைசியாக* நடித்து வெற்றிகரமாக 100 நாட்கள்*ஸ்டார், மகாராணி அரங்குகளில்**கடந்த படம் .எல்லாவற்றிற்கு மேலாக இந்த படம் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும்போது தான் ராமாவரம் தோட்டத்திற்கு பட தயாரிப்பாளர் வாசுவுடன் வந்த*எம்.ஆர். ராதா , எம்.ஜி.ஆரிடம்*பேசிக் கொண்டிருந்தபோதே வாக்குவாதம் ஏற்பட்டு*துப்பாக்கியால் சுட்டு, தானும் சுட்டுக் கொண்டார் .இந்த படத்தில்*நான்* குணச்சித்திர வேடத்தில்*நடிப்பது*போல ஒரு உணர்வு உள்ளது . அதனால்*சண்டை காட்சிகள் அமைப்பதை தவிர்க்கலாமே என்று இயக்குனருக்கு யோசனை தெரிவித்தார் .எம்.ஜி.ஆர்.*ஒரு சில*சண்டை காட்சிகள் கூட இல்லையென்றால் உங்கள் ரசிகர்களின் விமர்சனத்தை எதிர்நோக்குவது மிகவும் கடினம்*. உங்கள் ரசிகர்கள் அதை எதிர்பார்ப்பார்கள் , நிச்சயம் வரவேற்பார்கள் .அவசியமான*கட்டத்தில் வைத்துக் கொள்ளலாம் என்று இயக்குனர்கள் சமாதானம்*சொன்னார்கள் .இதற்காக*எம்.ஜி.ஆர். அரை மனதுடன்*, வருத்தத்துடன் சம்மதித்து இருக்கிறார் .படத்தின்*வெற்றி செய்தி வந்த பிறகு அனைவரும் மகிழ்ச்சியுற்றனர் .படங்களிலே காதல்*காட்சிகள் எப்படி இருக்க வேண்டும் . எந்த அளவுக்கு நளினமாக, அதே சமயத்தில் மிகவும்**தூக்கலாக* இருக்கக் கூடாது .ஒரு வரைமுறை , வரம்பு இருக்கவேண்டும் என்று விலாவாரியாக இயக்குனர்களிடம் விளக்குவார் .எம்.ஜி.ஆர். ஒரு கதாசிரியர், எடிட்டர்,காமிராமேன் , சவுண்ட்*பொறியாளர் ,என்று* பல்வேறு துறைகளிலும் நுட்பங்களை அறிந்தவர் .*திரைப்படத்துறையில் எந்த இடத்தில,பகுதியில் தவறுகள் நிகழ்ந்தாலும் அதை எளிதில்*கண்டுபிடித்து*நீக்குவதற்கு யோசனை தெரிவித்து உதவுவார் .



பிரபல*நகைச்சுவை நடிகர்*சார்லி*சாப்ளின் பாதிப்பு இல்லாமல் நடித்த*நடிகர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம் . எம்.ஜி.ஆர். அவர்கள்*பெற்றால்தான் பிள்ளையா படத்தில்*கால்களை அகற்றியவாறு வித்தியாசமான நடையை காட்டியிருப்பார் . தேடி வந்த*மாப்பிள்ளை படத்தில் சார்லி சாப்ளினை போல நடை, உடை , பாவனைகள் ,கையில்*வாக்கிங் ஸ்டிக்*, தலையில் குல்லா*,கருப்பு*கண்ணாடி*;அணிந்து*பாட்டு வாத்தியாராக வந்து மேலைநாட்டு*பாடலான, தொட்டு காட்டவா, மேலை நாட்டு சங்கீதத்தை தொட்டு காட்டவா* என்று**பாடி, ஆடி , அசத்தியிருப்பார் .*


அடிமைப்பெண் படத்தில் ஏமாற்றாதே, ஏமாற்றாதே ,பாடலை*டி.எம்.சௌந்தரராஜன் பாடுகிறார் .எம்.ஜி.ஆருக்கு திருப்தியில்லை .இரண்டு, மூன்று முறை பாடியும்* நான் நினைத்த அளவிற்கு சரியாக வரவில்லை என்றார் எம்.ஜி.ஆர். அதாவது பொது நீதிக்கும்*நேர்மைக்கும் பயந்துவிடு ,*நல்ல அன்புக்கும் , பண்புக்கும்*வளைந்து கொடு*என்ற இடத்தில* இன்னும்* தெளிவான**உணர்ச்சிகளும் , பாவங்களும் கொஞ்சம் அழுத்தமாக இருக்க வேண்டும் என்கிறார் .ஒரு கட்டத்தில் டி.எம்.எஸ். ஏன் நம்மை*இத்தனை முறை பயிற்சி எடுக்க வைக்கிறார்கள் . வேண்டுமானால் வேறு பாடகரை வைத்து பாட வைத்துக் கொள்ளுங்கள் என்று இசை அமைப்பாளர் கே.வி. மகாதேவனிடம் குறைபட்டுக் கொண்டாராம் . கடைசி முறையாக பாடும்போது*பாடல் நன்றாக அமைந்ததும்*எம்.ஜி.ஆர். டி.எம்.எஸ்.ஸை* கட்டி பிடித்து* இதைத்தான்*நான் எதிர்பார்த்தேன் என்று பாராட்டினாராம் ..எம்.ஜி.ஆருக்கு இசை ஞானம் இருந்ததால்தான் , அவர் எதிர்பார்க்கிற அளவிற்கு , பாடலில் , அழுத்தம், ஆழம் ,*உணர்ச்சிகள், பாவங்கள்*, ஆகியவற்றை நுட்பமாக பின்னணி பாடகர்கள், பாடகிகளிடம் இருந்து வற்புறுத்தி* வழங்கப்பெற்று , பாடல்களை பதிவு செய்தார் .* அதனால்தான் அன்றும், இன்றும் , என்றும் எம்.ஜி.ஆர் அவர்களின்*பாடல்கள்*காலத்தை வென்று , கடந்து நிற்கின்றன .*


தனது பாணி இதுதான் என்று மக்களுக்கு அறிமுகம் செய்தார்*, கடை பிடித்தார் , மக்களின் நம்பிக்கையை பெற்றார் .,அதில்*வெற்றியும்* பெற்றார் .அந்த மக்கள் நம்பிக்கைதான்*இன்று நாடாள வைக்கும்*அளவிற்கு அவரை கொண்டு போய்*நிறுத்தியது .மற்ற விஷயங்கள்*அடுத்த அத்தியாயத்தில் தொடரும் ......

நிகழ்ச்சியில் ஒலித்த பாடல்கள் /காட்சிகள் விவரம்*
------------------------------------------------------------------------------------
1.பாட்டு ஒரு பாட்டு - தாய் சொல்லை தட்டாதே*

2. தர்மம் தலை காக்கும் பாடல் - தர்மம் தலை காக்கும்*

3.எம்.ஜி.ஆர். -எம்.ஆர்.ராதா உரையாடல் - தர்மம் தலை காக்கும்*

4.உன்னை*அறிந்தால்*உலகத்தில் போராடலாம்*- வேட்டைக்காரன்*

5.ஒரு பக்கம்* பாக்குறா* - மாட்டுக்கார வேலன்*

6.நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி - பெற்றால்தான் பிள்ளையா*

7.தொட்டு காட்டவா,மேலை நாட்டு சங்கீதத்தை -தேடி வந்த மாப்பிள்ளை*

8.ஏமாற்றாதே, ஏமாற்றாதே - அடிமை பெண்*

orodizli
7th August 2020, 06:59 AM
.மக்கள் தலைவர் எம்.ஜி.ஆருக்கு சென்னை பல்கலை கழகமும், அமெரிக்காவின் அரிசோனா பல்கலை கழகமும் டாக்டர் பட்டங்கள் வழங்கின .அவரை புரட்சி நடிகர் என்று கலைஞர் கருணாநிதி வாழ்த்தினார் . கிருபானந்த வாரியார் பொன்மன செம்மல் என்று போற்றினார் .அவரை மக்கள் திலகம் என்று கல்கண்டு இதழ் ஆசிரியர் தமிழ்வாணன் புகழ்மாலை சூட்டினார் . எந்தெந்த பட்டங்கள் ,விருதுகள் எப்படி வழங்கப்பெற்றாரோ அதற்கு தகுந்தபடி , சினிமா, அரசியல் , பொது வாழ்க்கை அனைத்திலும் அனைவரும் போற்றும்படி, பாராட்டும்படி , வாழ்த்தும்படியான செயல்களை ,காரியங்களை அவர் செய்ய மறக்கவில்லை .

தன்னுடைய தானை தலைவர் பேரறிஞர் அண்ணா தோற்றுவித்த தி.மு.க. கட்சியை , அண்ணா அவர்கள் வாழ்ந்த போதும் , மறைந்த பின்னரும் அந்த கட்சிக்கு தன்னுடைய உடல், பொருள், உழைப்பு , திறமை, ஆற்றல் , கொடை உதவி அனைத்தும் அளித்து , பல்வேறு வகைகளில் திரைப்படங்களில் கட்சியை சின்னத்தை விளம்பரப்படுத்தி , நாடு, நகரங்கள் ,பட்டி ,தொட்டியெல்லாம் கட்சியை, சின்னத்தை கொண்டுபோய் சேர்த்து , அந்த க ட்சி ஆலமரமாக வேரூன்றி ,பரந்து விரிந்து வளர்ந்த பின்னர் , அதே கட்சியால் பதவி நீக்கம் ,அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கம் பெற்றவர் , அந்த பெரிய கட்சியை எதிர்த்து தானே அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் என்ற கட்சியை துவக்கி , மக்களுக்கு தன் கொள்கைகளை திட்டங்களை தெளிவாக சொல்லி , எதிர்க்கட்சியின் ஊழல்கள் , அராஜகங்கள் ,குறைகள் ஆகியவற்றை எடுத்துரைத்து மக்களின் ஏகோபித்த ஆதரவை பெற்று ஒரு முறை அல்ல தொடர்ந்து மூன்று முறை முதல்வராக ஆட்சி நடத்தி ,முதல்வராகவே மறைந்தார் என்பது எம்.ஜி.ஆரால் மட்டுமே முடிந்த காரியம் .வேறு எவராலும் சாத்தியம் இல்லாத விஷயம் .

மக்கள் திலகம் எம்.ஜி.ஆருக்கு நடிக்க தெரியாது என்று பரவலாக பேசப்பட்டது .நடிக்க தெரியாமலா அவரது படங்களை மக்கள் ரசித்தார்கள் . ஒரு சில ஆண்டுகள் தவிர ,ஏறத்தாழ 30 ஆண்டுகள் வசூல் சக்கரவர்தியாகவும் , முடிசூடா மன்னனாகவும் திகழ்ந்தார் என்றால் எப்படி சாத்தியம் . இந்த சாதனைகளை பொறுக்காத பொறாமைக்காரர்களின் விமர்சனம்தான் அது .அவற்றை எம்.ஜி.ஆர். பொருட்படுத்தவேயில்லை .தனித்தன்மை என்று ஒன்று இல்லாவிட்டால் வாழ்க்கையில் எந்த விஷயத்திலும் தனி மனிதன் , நடிகன் வெற்றிபெற முடியாது என்பது எம்.ஜி.ஆருக்கு நன்றாக தெரிந்து இருந்தது .அனுபவபூர்வமாக நாடக காலத்தில் சிவாஜி கணேசன் மனோகரா படத்தில் நடித்தது போல நாடகத்தில் மனோகரா வேடத்தில் நடித்துள்ளார் .தனக்கு என்று ஒரு தனி பாணி வேண்டும் . அந்த பாணியை யாரும் பின்பற்றல் ஆகாது என்பதில் உறுதியாக இருந்தார் .

நடிப்பு என்றால் என்ன , நடிப்பின் இலக்கணம் என்ன என்பதை அறிந்தவர் .ஒரு நடிகன் காமிராவின் முன்பு நிற்கும்போது இடதுபுறம் உள்ள அவனுடைய தோற்றம் ,வலதுபுறம் உள்ள தோற்றத்துடன் ஒப்பிடும்போது வெவ்வேறாக இருக்கும் . எந்த தோற்றம் உகந்ததாக இருக்கும் .எந்த தோற்றம் சரியாக காமிராவில் அமையாது என்பதையெல்லாம் நுட்பமாக அறிந்தவர் .பொதுவாக இரட்டை வேடங்கள் ஏற்று நடிக்கும்போது ,எந்த வேடத்தில் , குரல், முக பாவம் மட்டுமல்ல , மனோபாவமும் எப்படி இருக்க வேண்டும் ,மனோரீதியான நடை, உடை, பாவனை போன்ற எல்லாவற்றையும் கொண்டு வருவதில் எம்.ஜி.ஆர். வல்லவராக இருந்தார் என்பதை உதாரணமாக .எங்க வீட்டு பிள்ளை படத்தின் இமாலய வெற்றிக்கு காரணமாக ,கோழை ,வீரன் என்ற இரண்டு பாத்திரங்களிலும் நல்ல வித்தியாசம் காட்டி அசத்தியிருப்பதை காணலாம் . . அதை தொடர்ந்து வந்த பல இரட்டை வேட படங்களில் அதே முறையை கையாண்டார் . இரட்டை வேட படங்களில் நடிக்கும்போது சிரிப்பு ,புருவத்தை உயர்த்துதல் , தாழ்த்துதல், புன்னகை வரவழைத்தல் , பாசம், அன்பு, வீரம் , துணிவு, காதல், கனிவு, கோபம் என்று பலவிதமான உணர்ச்சிமிக்க காட்சிகளில் நடிப்பு என்பது எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு பல்வேறு கருத்துக்கள் வெளியிட்டுள்ளார் .

நடிப்பின் பல்வேறு விதமான கலைகளையும், பல்வேறு அம்சங்களையும் தெரிந்து வைத்திருந்தார் . நடிப்பு பற்றி சிலர் சொல்வது போல அறியாதவரல்ல தனக்கென்று ஒரு பாணியை கடைபிடித்தார் . அதைத்தான் ரசிகர்கள் விரும்புகிறார்கள் .அதைத்தான் செய்ய முடியும் ,பட தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், திரை அரங்கு உரிமையாளர்கள் அனைவரின் நிதி நிலைமை , வருமானம் பராமரிப்பு, செலவினம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு அவ்வாறு செய்தால்தான் திரைப்படத்துறை வளர்ச்சி பெறும், படங்கள் வியாபார ரீதியில் நல்ல விற்பனை ஆகும் அரசுக்கும் கணிசமான வரி என்கிற வகையில் வருமானம் பெருகும் என்ற நடைமுறையில் உள்ள செயல்பாடுகளை , பயனுள்ளதாக செயல்படுத்தினார் .

தன்னுடைய வழக்கமான பார்முலாவில் இருந்து சற்று விலகி, வித்தியாசமான பாத்திரத்தில் உணர்ச்சிகளை கொட்டி நடித்த படம் பெற்றால்தான் பிள்ளையா .இந்தப்படத்திற்கு பல சிறப்புகள் உண்டு . எம்.ஜி.ஆர். தான் நடித்த மிக சிறந்த ,பிடித்த படங்களில் ஒன்று . நடிகர் சிவாஜி கணேசன் இந்த கதையில் நடிப்பதாக இருந்தது என்று பேசப்பட்டது . அவரும் வசன ஆசிரியர் ஆரூர்தாஸிடம் இந்த காதையை என்னிடம் சொல்லியிருந்தால் நான் நடித்திருப்பேன் என்று சொன்னதாக தகவல்கள் வெளியாகின .. எம்.ஜி.ஆர். சரோஜாதேவி ஜோடி கடைசியாக நடித்து வெற்றிகரமாக 100 நாட்கள் ஸ்டார், மகாராணி அரங்குகளில் கடந்த படம் .எல்லாவற்றிற்கு மேலாக இந்த படம் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும்போது தான் ராமாவரம் தோட்டத்திற்கு பட தயாரிப்பாளர் வாசுவுடன் வந்த எம்.ஆர். ராதா , எம்.ஜி.ஆரிடம் பேசிக் கொண்டிருந்தபோதே வாக்குவாதம் ஏற்பட்டு துப்பாக்கியால் சுட்டு, தானும் சுட்டுக் கொண்டார் .இந்த படத்தில் நான் குணச்சித்திர வேடத்தில் நடிப்பது போல ஒரு உணர்வு உள்ளது . அதனால் சண்டை காட்சிகள் அமைப்பதை தவிர்க்கலாமே என்று இயக்குனருக்கு யோசனை தெரிவித்தார் .எம்.ஜி.ஆர்.

ஒரு சில சண்டை காட்சிகள் கூட இல்லையென்றால் உங்கள் ரசிகர்களின் விமர்சனத்தை எதிர்நோக்குவது மிகவும் கடினம் . உங்கள் ரசிகர்கள் அதை எதிர்பார்ப்பார்கள் , நிச்சயம் வரவேற்பார்கள் .அவசியமான கட்டத்தில் வைத்துக் கொள்ளலாம் என்று இயக்குனர்கள் சமாதானம் சொன்னார்கள் .இதற்காக எம்.ஜி.ஆர். அரை மனதுடன் , வருத்தத்துடன் சம்மதித்து இருக்கிறார் .படத்தின் வெற்றி செய்தி வந்த பிறகு அனைவரும் மகிழ்ச்சியுற்றனர் .படங்களிலே காதல் காட்சிகள் எப்படி இருக்க வேண்டும் . எந்த அளவுக்கு நளினமாக, அதே சமயத்தில் மிகவும் தூக்கலாக இருக்கக் கூடாது .ஒரு வரைமுறை , வரம்பு இருக்கவேண்டும் என்று விலாவாரியாக இயக்குனர்களிடம் விளக்குவார் .எம்.ஜி.ஆர். ஒரு கதாசிரியர், எடிட்டர்,காமிராமேன் , சவுண்ட் பொறியாளர் ,என்று பல்வேறு துறைகளிலும் நுட்பங்களை அறிந்தவர் . திரைப்படத்துறையில் எந்த இடத்தில,பகுதியில் தவறுகள் நிகழ்ந்தாலும் அதை எளிதில் கண்டுபிடித்து நீக்குவதற்கு யோசனை தெரிவித்து உதவுவார் .

பிரபல நகைச்சுவை நடிகர் சார்லி சாப்ளின் பாதிப்பு இல்லாமல் நடித்த நடிகர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம் . எம்.ஜி.ஆர். அவர்கள் பெற்றால்தான் பிள்ளையா படத்தில் கால்களை அகற்றியவாறு வித்தியாசமான நடையை காட்டியிருப்பார் . தேடி வந்த மாப்பிள்ளை படத்தில் சார்லி சாப்ளினை போல நடை, உடை , பாவனைகள் ,கையில் வாக்கிங் ஸ்டிக் , தலையில் குல்லா ,கருப்பு கண்ணாடி ;அணிந்து பாட்டு வாத்தியாராக வந்து மேலைநாட்டு பாடலான, தொட்டு காட்டவா, மேலை நாட்டு சங்கீதத்தை தொட்டு காட்டவா என்று பாடி, ஆடி , அசத்தியிருப்பார் .

அடிமைப்பெண் படத்தில் ஏமாற்றாதே, ஏமாற்றாதே ,பாடலை டி.எம்.சௌந்தரராஜன் பாடுகிறார் .எம்.ஜி.ஆருக்கு திருப்தியில்லை .இரண்டு, மூன்று முறை பாடியும் நான் நினைத்த அளவிற்கு சரியாக வரவில்லை என்றார் எம்.ஜி.ஆர். அதாவது பொது நீதிக்கும் நேர்மைக்கும் பயந்துவிடு , நல்ல அன்புக்கும் , பண்புக்கும் வளைந்து கொடு என்ற இடத்தில இன்னும் தெளிவான உணர்ச்சிகளும் , பாவங்களும் கொஞ்சம் அழுத்தமாக இருக்க வேண்டும் என்கிறார் .ஒரு கட்டத்தில் டி.எம்.எஸ். ஏன் நம்மை இத்தனை முறை பயிற்சி எடுக்க வைக்கிறார்கள் . வேண்டுமானால் வேறு பாடகரை வைத்து பாட வைத்துக் கொள்ளுங்கள் என்று இசை அமைப்பாளர் கே.வி. மகாதேவனிடம் குறைபட்டுக் கொண்டாராம் . கடைசி முறையாக பாடும்போது பாடல் நன்றாக அமைந்ததும் எம்.ஜி.ஆர். டி.எம்.எஸ்.ஸை கட்டி பிடித்து இதைத்தான் நான் எதிர்பார்த்தேன் என்று பாராட்டினாராம் ..எம்.ஜி.ஆருக்கு இசை ஞானம் இருந்ததால்தான் , அவர் எதிர்பார்க்கிற அளவிற்கு , பாடலில் , அழுத்தம், ஆழம் , உணர்ச்சிகள், பாவங்கள் , ஆகியவற்றை நுட்பமாக பின்னணி பாடகர்கள், பாடகிகளிடம் இருந்து வற்புறுத்தி வழங்கப்பெற்று , பாடல்களை பதிவு செய்தார் . அதனால்தான் அன்றும், இன்றும் , என்றும் எம்.ஜி.ஆர் அவர்களின் பாடல்கள் காலத்தை வென்று , கடந்து நிற்கின்றன .

தனது பாணி இதுதான் என்று மக்களுக்கு அறிமுகம் செய்தார் , கடை பிடித்தார் , மக்களின் நம்பிக்கையை பெற்றார் .,அதில் வெற்றியும் பெற்றார்.........

fidowag
7th August 2020, 08:46 PM
பாட்டாலே புத்தி சொன்ன*வாத்தியார் எம்.ஜி.ஆர். - வின்*டிவியில்*சகாப்தம்*நிகழ்ச்சியில் 20/07/20 அன்று திரு.துரை பாரதி*அளித்த*தகவல்கள்*
-----------------------------------------------------------------------------------------------------
மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர்.என்கிற சொல் பல சாமானியர்களை மாமனிதர்களாக பல்வேறு பதவிகளுக்கு உயர தூக்கிவிட்ட ஒரு மந்திரச்சொல் .* அந்த மந்திர சொல்லை பலரும் கொண்டாடி கொண்டிருக்கும் காலம் இன்றைக்கும் இருந்து கொண்டிருக்கிறது என்பதற்கு பல உதாரணங்கள் உள்ளன .அன்றைக்கு அந்த மலர்ச்சிக்கான ஒரு விதையாக, வித்தாக தான் இருந்ததாக சென்னை பெருநகர முன்னாள் மேயர் திரு.சைதை துரைசாமி பெருமை பட்டுக் கொள்கிறார் . அதில் நியாயம் இருக்கிறது .ஏனென்றால் , எங்கேயாவது ஒரு சிறு துளியில்தான்* பெருவெள்ளம் காத்திருக்கிறது என்பதற்கு அன்றைக்கு* ஆட்சியை அலங்கரித்து பல நல்ல திட்டங்களை செயல்படுத்தி வந்த* அ .தி.மு.க.தலைவர் எம்.ஜி.ஆரின் செயல்பாடுகளே காரணம் .


அப்படியான தொண்டர்களின் குரலை பொறுமையாக கேட்பதில் மிகவும் ஆர்வம் காட்டினார் எம்.ஜி.ஆர். ஒருமுறை* இரண்டு எம்.ஜி.ஆர். மன்ற அமைப்புகளில்*தலைமை பொறுப்பை யார் ஏற்றுக் கொள்வது , பொறுப்புகளை யார் பகிர்ந்து கொள்வது என்பதில் ,பிரச்னைகள், குழப்பங்கள் ஏற்பட்டு , இரண்டு அமைப்பினரும் ராமாவரம் தோட்டத்தில் எம்.ஜி.ஆரை சந்திக்க சென்றனர் . உங்களுக்குள் சமாதானம் ஏற்பட்டு பொறுப்புகளை பகிர்வதில் தொடர்ந்து சண்டை சச்சரவுகள் செய்தால் அந்த மன்றங்களை கலைப்பதை தவிர வேறு வழியில்லை என்றார் எம்.ஜி.ஆர். அதை கேட்ட ஒருவர் உரிமையுடன்* ,தலைவரே உங்களுக்காக தான் மன்றங்கள் செயல்படுகின்றன . நாங்கள்தான் மன்றங்களை உருவாக்கினோம் . நாங்களே பிரச்னைகளை தீர்த்து கொள்கிறோம் . மன்றங்களை நீங்கள் கலைக்கும் அளவிற்கு நிலைமை நீடிக்காது என்றார் .அதன்பிறகு அவர்கள் கலைந்து சென்றனர் .மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என்ற வாசகத்தை எம்.ஜி.ஆர். மதித்தார் .அவரே சொல்லியிருக்கிறார் என்னவென்றால் ஆலந்தூர் மோகனரங்கம் துவக்கிய அ.தி.மு.க .வில் நானும் ஒரு தொண்டனாக* என்னை இணைத்துக் கொண்டேன் என்று .ஒருபோதும்* . தான் ஒரு தலைவன் என்ற மமதையில் எப்போதும் தொண்டர்களிடம் எம்.ஜி.ஆர். பேசியதில்லை .*தொண்டர்கள்தான் அவரை தலைவர் என்று அழைப்பார்கள் .பல ஊர்களுக்கு ,நகரங்களுக்கு, கிராமங்களுக்கு எம்.ஜி.ஆர். தேர்தல்* பிரச்சாரத்திற்காகவும் , கட்சி பொது கூட்டத்திற்காகவும் , அரசு சார்பில் நடக்கும் விழாக்களுக்கும் செல்லும்போது முதலமைச்சர் வருகிறார் என்பதைவிட ,எம்.ஜி.ஆர். வருகிறார் என்று சொல்லப்படுவதைத்தான் பெரிதும் விரும்புவார் .காரணம் அரசு பதவி, முதல்வர் பதவி என்பது 5 ஆண்டுகள் மட்டுமே , எம்.ஜி.ஆர். என்ற சொல்தான் எப்போதும் நிரந்தரம் என்று பல இடங்களில் சொல்லியிருக்கிறார் .



ஒருமுறை சிலம்பு செல்வர் ம .பொ.சிவஞானம் அவர்கள் வரவேற்று* பேசும்போது எங்கள் முதலமைச்சரே வருக என்று* சேலம் அருகே உள்ள ஒரு ஊரில் பல்லாயிரக்கணக்கான மக்கள் மத்தியில்* பேசினார் . மேடையில் இருக்கும் ஒருவர் அப்போது எப்படி எம்.ஜி.ஆர். அவர்களை எங்கள் முதலமைச்சரே வருக என்று அழைக்கலாம் . அவர் அனைவருக்கும் பொதுவானவர் , ஒரு மாநிலத்தின் முதல்வர் ,எப்படி நீங்கள் சொந்தம் கொண்டாடலாம் என்றார் .பதிலுக்கு ம.பொ.சி.அவர்கள் நாம் ஒரு பிறந்த நாள் நிகழ்ச்சிக்கு செல்லும்போது குழந்தையிடம் பரிசு பொருள் கொடுத்தபின்**தூக்கி கொஞ்சும்போது ,என் செல்லமே, என் தங்கமே என்று கொஞ்சவில்லையா அதுபோலத்தான் என்று நினைத்துக் கொள்ளுங்கள் அந்த* கண**நேரத்தில் அந்த குழந்தை நமக்கு சொந்தம் என்பது போலஒரு பாவனையில் கொண்டாடி*மகிழ்ச்சி அடைகிறோம் இல்லையா* அது போலத்தான் எம்.ஜி.ஆர். அவர்கள் தமிழகத்தின் முதல்வராக இருந்தாலும்கூட , மாநிலத்தின் எந்த பகுதிக்கு செல்கிறாரோ, அந்த மண்ணின் மக்கள் அவரை சொந்தம் கொண்டாடுவதை*யாரால் தடுக்கமுடியும் என்றார் .**



ஒரு மாநிலத்தில் மக்கள் தங்கள் பிரச்னைகளுக்காக உரிமையோடு மாநில முதல்வரை அணுகி கோரிக்கைகள் வைக்கலாம்* கோரிக்கைகள் நிறைவேறாத பட்சத்தில் போராடலாம் . ஆனால் ஒரு மாநில முதல்வரே மக்களின் பிரச்னைக்காக* மத்திய அரசு போதிய அளவு அரிசி* வழங்க மறுத்ததற்காக*சென்னை கடற்கரையில் எம்.ஜி.ஆர். ஒருநாள் முழுதும் உண்ணாவிரதம் கடைபிடித்தார் . அந்த நிகழ்ச்சியில் பல தாய்மார்கள் எம்.ஜி.ஆர். அவர்கள் இடையில்* ஒரு டம்ளர் தண்ணீராவது குடிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்ததை சைகை மூலம் மறுத்து , மத்திய அரசின்* ஒப்புதல் கிடைத்ததும்*உண்ணாவிரதத்தை* முடித்துக் கொண்டு இறுதியில் கொஞ்சம் பழச்சாறு சாப்பிட்டார் .அதாவது மக்கள் பிரச்னையை மத்திய அரசின் முன்வைத்து போராடும்போது* அந்த பிரச்னைகள் சுமுகமாக முடியவேண்டும் என்பதில்தான்*தீர்மானமாக இருந்தார் எம்.ஜி.ஆர். என்பதற்கு இது ஒரு உதாரணம் .



எம்.ஜி.ஆர். அவர்களின் படங்களை பார்க்கும் ரசிகர்கள் பலர், திரைப்படங்களில் அவர் போதித்த பல நல்ல குணங்களை பின்பற்றி நடந்து வருகிறார்கள் .உதாரணமாக உலகம் சுற்றும் வாலிபன் படத்தில் அவருடன் நடித்த தாய்லாந்து நடிகை மேத்தா ரூங் ராத் (பச்சைக்கிளி முத்துச்சரம் என்கிற புகழ் பெற்ற பாடலில் நடித்தவர் ) இப்போது அவர் முதிய பெண்மணி ..இந்த முதுமையான வயதிலும் ,அவர் தாய்லாந்தில் உள்ள மருத்துவமனைகளில் மது அருந்துவது, புகை பிடிப்பது ஆகியவற்றிற்கு எதிராக* பிரச்சாரம் செய்துகொண்டு வருகிறாராம் .இதுதான் எம்.ஜி.ஆர். விதைத்துவிட்டு போன விதையின் ,விருட்சத்தின் நிழல்*


எம்.ஜி.ஆர். பள்ளி படிப்பு அதிகம் படிக்காதவர் என்றாலும் ,அவரது வீட்டு நூலகத்தில் தமிழகத்தில் வந்த*, இலக்கியத்தில் மிகப்பெரிய பேர் வாங்கிய ஜாம்பவான்கள் அடங்கிய மணிக்கொடி புத்தகங்களின் தொகுப்பு கைவசம்* இருந்தது .இவை ஒரு அரிய தகவல்கள் அடங்கிய பொக்கிஷங்கள் .எம்.ஜி.ஆர். என்கிற பெயர் ஒரு தன்னம்பிக்கை,ஒரு மந்திரச்சொல், ஒரு உற்சாகம் .ஒரு உந்துசக்தி .இந்த மந்திர சொல்லை பூஜித்து கொண்டிருப்பவர்கள் ஏராளம், ஏராளம் .அவர்களெல்லாம் இந்த சகாப்தம் நிகழ்ச்சியை தொடர்ந்து பார்த்து ஊக்கமும், உற்சாகமும் தந்து வருகிறார்கள் .* தொடர்ந்து நாம் அந்த மாமனிதரின் வாழ்க்கை கனவுகளை , நனவாக்க, பயணப்பட்டு , சிந்திப்போம், பேசுவோம், செயல்படுவோம் .மேலும் தகவல்கள் அறிய அடுத்த அத்தியாயத்தில் பார்ப்போம்*

நிகழ்ச்சியில் ஒலித்த பாடல்கள் /காட்சிகள் விவரம்*
-----------------------------------------------------------------------------------
1. என்னை தெரியுமா, நான் சிரித்து பழகி* *- குடியிருந்த கோயில்*

2.நீங்க நல்லா இருக்கோணும் இந்த நாடு முன்னேற - இதயக்கனி*

3.நான் உங்கள் வீட்டுப்பிள்ளை - புதிய பூமி*

4.நகரசபை கூட்டத்தில் எம்.ஜி.ஆர். - நம் நாடு*

5.வீராங்கன் - மார்த்தாண்டன் சந்திப்பு - நாடோடி மன்னன்*

6.பச்சைக்கிளி முத்துச்சரம் ,முல்லைக்கொடி -உலகம் சுற்றும் வாலிபன்*

7.காஷ்மீர் பியூட்டி புல் காஷ்மீர்* *- இதய வீணை*

8.விழியே, விழியே உனக்கென்ன வேலை - புதிய பூமி*

fidowag
7th August 2020, 09:08 PM
தனியார் டிவிக்களில் நடிக*மன்னன் எம்.ஜி.ஆர். திரைக்காவியங்கள்* 01/08/20*முதல் 07/08/20 வரை ஒளிபரப்பான*விவரங்கள்*
--------------------------------------------------------------------------------------------------------------------------
01/08/20* - முரசு டிவி - மதியம் 12 மணி /இரவு 7 மணி - பெற்றால்தான் பிள்ளையா*

02/08/20* -மெகா 24 - பிற்பகல் 2.30 மணி - தாய் சொல்லை தட்டாதே*

03/08/20 - சன் லைப் - காலை 11 மணி - இதயக்கனி*

* * * * * * * * * *முரசு டிவி -மதியம் 12மணி/இரவு 7 மணி -ஆனந்த ஜோதி*

* * * * * * * * *கிங் டிவி* - பிற்பகல்* 2 மணி* - அன்பே வா*

* * * * * * * *பாலிமர் டிவி - பிற்பகல் 2 மணி - இன்றுபோல் என்றும் வாழ்க*

* * * * * * * *பாலிமர் டிவி -இரவு 11 மணி - தனிப்பிறவி*

04/08/20* -சன் லைப் - மாலை 4 மணி - உழைக்கும் கரங்கள்*

* * * * * * * *புதுயுகம் டிவி* -இரவு 7 மணி - சங்கே முழங்கு*

*05/08/20- சன் லைப் -காலை 11 மணி - தேடி வந்த மாப்பிள்ளை*

* * * * * * *தமிழ் மீடியா* - பிற்பகல் 2 மணி - மதுரை வீரன்*

* * * * * * *மெகா 24 -* இரவு 9 மணி - தாய்க்கு பின் தாரம்*

* * * * * * * வேந்தர் டிவி - இரவு 10.30 மணி - தனிப்பிறவி*

06/08/20 - ஜீ திரை - அதிகாலை 4.30 மணி - பறக்கும் பாவை*

* * * * * * * * முரசு டிவி - மதியம் 12 மணி /இரவு 7 மணி - தொழிலாளி*
** * * * * * * புதுயுகம் டிவி - இரவு 7 மணி - தர்மம் தலைகாக்கும்*

07/08/20 - சன்* லைப் - காலை 11 மணி* - எங்கள் தங்கம்*

* * * * * * * * *சித்திரம் டிவி -காலை 11 மணி /மாலை 6 மணி - அபிமன்யு*

* * * * * * * *மீனாட்சி* டிவி- மதியம் 12 மணி - நல்ல நேரம்*

* * * * * * * *விஷ்ணு டிவி* - பிற்பகல் 2.30 மணி - படகோட்டி**

orodizli
8th August 2020, 10:12 AM
திமுகவை போல அலட்டிக் கொள்ளாமல் சரித்திர சாதனை படைத்த எம்.ஜி.ஆர்..!



'இதில் வேடிக்கை என்னவென்றால், இடையில் அவ்வப்போது ஆட்சிக்கு வந்து போன தி.மு.க.வால் எம்.ஜி.ஆர். கொண்டு வந்த திட்டங்கள் எதிலும் கைவைக்க முடியவில்லை.*



சாமான்யருக்கான சமூகத் திட்டங்கள். எம் ஜி ஆர் கொண்டு வந்த நலத் திட்டங்கள் குறித்து எதிர்க்கட்சிகள், கடுமையான விமர்சனங்கள், கண்டனங்களை முன்வைத்தன. எல்லாரும் சொன்ன பொதுவான குற்றச்சாட்டு - 'அரசுப் பணம் வீணாகிறது'. 'இலவசங்கள் கொடுத்து அரசுக் கருவூலத்தைக் காலி செய்கிறார்'!*
இந்தப் புகார்களுக்கு எல்லாம், பல்லாண்டுகளுக்கு முன்பே பதில் கூறி விட்டார் எம்.ஜி.ஆர். தனது சொந்தத் தயாரிப்பான 'நாடோடி மன்னன்' படத்தில் கூறுவார்:'மக்களிடம் இருந்து பெற்ற வரிப் பணத்தை மக்களுக்காகச் செலவிடுகிறோம்.'இதில் வேடிக்கை என்னவென்றால், இடையில் அவ்வப்போது ஆட்சிக்கு வந்து போன தி.மு.க.வால் எம்.ஜி.ஆர். கொண்டு வந்த திட்டங்கள் எதிலும் கைவைக்க முடியவில்லை. காரணம், இவற்றால் தமிழ்நாட்டுக்கு ஏற்பட்ட நற்பயன்கள். உதாரணத்துக்கு, சத்துணவுத் திட்டம். சத்துணவு சாப்பிட்ட குழந்தைகள் இரத்த வாந்தி எடுத்தனர் என்றெல்லாம், தனது ஆதரவு நாளிதழ் மூலம், பீதியைப் பரப்பியவர்கள், ஆட்சிக்கு வந்து ஏன் அந்தத் திட்டத்தைக் கைவிடவில்லை..? வலுவான காரணம் இருந்தது.*

சத்துணவுத் திட்டம் அமலாக்கப்பட்ட முதல் ஆண்டில், சுமார் 2,63,000 குழந்தைகள் புதிதாக பள்ளிகளில் சேர்ந்தனர். அடுத்த ஆண்டில், 2,68,000 பேர் சேர்ந்தனர். எம்.ஜி.ஆர். மறைந்த 1987இல், தொடக்கப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை 100% என்று உச்சத்தைத் தொட்டு இருந்தது. 'பள்ளிக் கூடத்தின் பக்கம்' போகாதவர்களே இல்லை என்கிற நிலையை ஏற்படுத்தியது எம்.ஜி.ஆர். ஆட்சி. இந்தச் சாதனையில், சத்துணவுத் திட்டம் மிக முக்கிய பங்கு வகித்தது.*
இதேபோன்று, மேலும் பல திட்டங்களும் காரணம் ஆகும்.
அவற்றில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியது - பள்ளிக் குழந்தைகளுக்கு இலவச காலணி திட்டம். தமிழ்நாட்டில் பல ஊர்களில் பல பகுதிகளில் சாதிய அடக்குமுறை மேலோங்கி இருந்தது.காலில் செருப்பு அணிந்து கொண்டு ஊருக்குள் நடந்து செல்ல முடியாத அவலநிலை இருந்தது. மாற்றி அமைக்க எண்ணினார் எம்.ஜி.ஆர். பள்ளி மாணவ மாணவிகளுக்கு இலவசக் காலணி வழங்கினார். அதனை அணிந்து கொண்டு,'எம்.ஜி.ஆரு குடுத்தது' என்று ஆனந்தமாய்க் கூறியபடி ஊருக்குள் சுற்றி வர முடிந்தது. மௌனமாய் ஒரு மிகப் பெரிய சமுதாயப் புரட்சியை நடத்திக் காட்டினார் மக்கள் திலகம்.*
சாதிக்கு எதிராகப் போராடுவதாக சொல்லிக் கொல்லும்... மன்னிக்கவும், சொல்லிக் கொள்ளும் கட்சி, தான் ஆட்சியில் இருந்த போது செய்யத் துணியாத காரியத்தை, எந்தவித ஆர்ப்பாட்டமும் இன்றி, எவருடைய எதிர்ப்பும் இல்லாமல், அமைதியாக செய்து முடித்தார் எம்.ஜி.ஆர். சாதிகளை மறந்து அ.தி.மு.க. பக்கம் மக்கள் நிற்பதற்கு முழுமுதற் காரணமே சாதிகளைக் கடந்த அதன் பார்வைதான். எம்.ஜி.ஆர். இட்ட அடித்தளம், ஜெயலலிதா எழுப்பிய கற்கோட்டை, மக்களின் பேராதரவு பெற்று விளங்குவதற்குக் காரணமே சாதிகளுக்கு அப்பாற்பட்டு எல்லாருக்கும் பொதுவான இயக்கமாக அது இருப்பதுதான்.*
இந்தச் சமயத்தில் சத்துணவு திட்டம் குறித்த இன்னொரு தகவலையும் குறிப்பிட வேண்டும். *இந்தத் திட்டம் அறிமுகமான ஆண்டிலேயே, 17.4 லட்சம் (13.7%) *எஸ்.சி., எஸ்.டி. பிள்ளைகள், இதனால் பயன் பெற்றனர்; ஒரு மிகப் பெரிய சமூக, பொருளாதார பிரசினைக்கு சுமுகமான நிரந்தரத் தீர்வு கண்டார் எம்.ஜி.ஆர்.
சாதிய ஏற்றத் தாழ்வுகளை முற்றிலுமாகக் களைந்து சமதர்ம சமுதாயமாகத் தமிழ்நாடு மலர வேண்டும் என்பதில், உண்மையான அக்கறை கொண்ட இயக்கமாக அதிமுக இருப்பதால், அனைத்து சாதிப் பிள்ளைகளும் ஆரோக்கியத்துடன், தரமான கல்வி பெற்று வாழ்க்கையில் உயர்வதற்கான*திட்டங்களை அடுக்கடுக்காய் நிறைவேற்றி வருகிறது.
பெருந்தலைவர் காமராஜர் ஆற்றிய அரும் பணியால் 1976-77இல், ஆதி திராவிடர் நலப் பள்ளிகள் 942 இருந்தன. இவற்றில் உயர்நிலைப் பள்ளிகள் (High Schools) 21; நடுநிலைப் பள்ளிகள் - 80; தொடக்கப் பள்ளிகள் - 841. *இந்தச் சிறப்புப் பள்ளிகளில் படித்த மாணவர்கள் 1,65,822 பேர். எம்.ஜி.ஆர். அமரரான போது என்ன நிலைமை..? எந்த அளவுக்குத் தரம் உயர்த்தப் பட்டன பாருங்கள்: மேல்நிலைப் பள்ளிகள் - 963; உயர்நிலைப் பள்ளிகள் - 51; தொடக்கப் பள்ளிகள் - 844. மொத்தம் - 963. பயன் பெற்றவர்கள் - ஆண் பிள்ளைகள் - 124503; பெண் பிள்ளைகள் - 104018. மொத்தம் - 2,28,521.*
இப்பள்ளிகளில் 1 - 8ஆம் வகுப்பு படித்த அத்தனை பேருக்கும், ஆண்டுதோறும் இலவச சீருடைகள், இரண்டு வழங்கப்பட்டன. அரசு நடத்திய விடுதிகளில் ('ஹாஸ்டல்') தங்கிப் படித்த அனைவருக்கும் கூட இலவச சீருடை வழங்கப் பட்டது. இலவச புத்தகங்கள், நோட்டுகள் வழங்கும் திட்டம் அமலாக்கப் பட்டது.
தொழிற் பயிற்சி பெறுவோருக்கு தொழிர்கல்வி உபகரணங்கள் இலவசமாக வழங்கப்பட்டன. கல்வி உதவித் தொகை (ஸ்காலர்ஷிப்) திட்டமும் அறிமுகப் படுத்தப் பட்டு, 5,50,000 பேருக்கு உதவி தரப் பட்டது.*
ஆதி திராவிட மாணவர் விடுதிகள் 743 இயங்கின; இவற்றில் கல்லூரி மாணவர்களுக்கு- 48; தொழிற் பயிற்சி பெற்ற மாணவர்களுக்கு 8. இங்கே மொத்தம் 47,040 பேர் தங்கிப் படித்து, தமது அறிவாற்றலால் வாழ்க்கையில் உயர்ந்தனர்.1977 தொடங்கி 1987 வரை ஒவ்வோர் ஆண்டும் புதிதாக 15 விடுதிகள் கட்டப்பட்டன. ஆதி திராவிடர் நலனுக்காக வீடுகள் கட்டித் தரப் பட்டன. ஒரு அலகுக்குக் கட்டிட செலவு ரூ 4000 என்று முந்தைய அரசு வைத்து இருந்தது.*எம்.ஜி.ஆர். அதனை ரூ 10,000 என்று கணிசமாக உயர்த்தினார். இதன் மூலம் தரமான உறுதியான வீடுகள் கட்டித் தர முடிந்தது. எம்.ஜி.ஆர் ஆண்ட 10 ஆண்டுகளில், 61,000 வீடுகள் கட்டி முடித்து பயன்பாட்டுக்கும் வந்தன.*
நிறைவாக, ஆதி திராவிடர் குடியிருந்த பகுதிகளில் தரமான குடிநீர் வசதி செய்து தருவதிலும் எம்.ஜி.ஆர். தனிக் கவனம் செலுத்தினார். அப்போதைய கணக்குப்படி, தமிழ்நாட்டில் 25000 குடியிருப்புகள் இருந்தன; இவற்றில், 23,311 பகுதிகளில் குடிநீர்க் கிணறுகள், மேல்நிலைத் தொட்டிகள் அரசால் நிறுவப் பட்டன. இதுவும் எம்.ஜி.ஆர். ஆட்சியின் மிகச் சிறந்த மக்கள் நலத் திட்டமாகும். *
*

இத்தொடரை வாசிப்பவர் யாரும் தயவு கூர்ந்து, சாதி அடிப்படையிலான தகவலாக இதனைப் பார்க்க வேண்டாம். சமூகத்தில் தாழ்த்தப்பட்ட பகுதிகள், தாழ்த்தப்பட்ட மக்கள் நோக்கிய எம்.ஜி.ஆர். பார்வையும் செயல்பாடுகளும் எப்படி இருந்தன என்பதைப் பதிவு செய்யவே இந்த விளக்கங்கள். எல்லாப் பிரிவினருக்கும் பொதுவான தலைவராக விளங்கும் எம்.ஜி.ஆர். கடைப்பிடித்த அரசியல் நாகரிகம் குறித்தும் பார்த்து விடலாமா..? *

orodizli
8th August 2020, 10:14 AM
மக்கள் திலகம் எம்ஜிஆர் தமிழ் நாட்டில் மட்டுமல்ல உலகம் முழுவதும் ரசிகப்பெருமக்களை கொண்டிருந்தார். அவர் வேற்று மொழிப்படங்களில் நடிப்பதில்லை என்றாலும் அவருடைய படங்களை மொழிமாற்றம் செய்து வெளியிட்டார்கள். தமிழில் இருந்து
தெலுங்கு மற்றும் இந்தி மொழியில்
டப் செய்து வெளியிட்டார்கள்.

எல்லா மொழிகளிலும் அவர் படங்கள் இணையற்ற வெற்றியை பதிவு செய்தது. உதாரணமாக சொல்ல வேண்டும் என்றால் "அடிமைப்பெண்" ஹிந்தியில் "கோயி குலாம் நயி". என்ற பெயரில் டப் செய்து கல்கத்தா, மும்பை போன்ற நகரங்களில் 10 க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியிட்டார்கள் படம் 50 நாட்களை தாண்டி ஓடி
ஒரிஜினல் ஹிந்தி படங்களை காட்டிலும் நல்ல வெற்றியை பதிவு செய்தது. ஆனால் "தர்த்தி" என்ற நேரடி ஹிந்தி படம் பார்க்க ஆளில்லாமல் பரிதவித்த கதை அனைவரும் அறிந்த ஒன்றுதான்.

"நாடோடி மன்னன்".
வெற்றி காவியத்தை ஆங்கில விளக்கத்துடன் லண்டனில் திரையிட்டு சுமார் 8 வாரங்களுக்கு மேல் ஓடி வெற்றியை பதிவு செய்து
வெற்றி விருதையும் பெற்று தந்தது. அவர்கள் கொடுத்த விருதை வாங்க மக்கள் திலகம் லண்டன் சென்று தம்பட்டம் அடிக்கவில்லை. பல ஆண்டுகள் கழித்து பெற்ற விருதினை நாவலர் நெடுஞ்செழியனிடமிருந்து எந்தவித ஆர்ப்பாட்டமும்
இல்லாமல் தலைவர் பெற்றுக் கொண்டது அவரது தன்னடக்கத்தை
காட்டுகிறது.

இலங்கை, சிங்கப்பூர், பர்மா, ரஷ்யா முதலான நாடுகளிலும் மக்கள் திலகத்தின் படங்கள் பல வெற்றிகளை குவித்துள்ளது. சிலர் நேரடி இந்தி தெலுங்கு மலையாளம் என மாற்று மொழிப்படங்களில்
நடித்தும் அந்தந்த மாநில மக்களால் நிராகரிக்கப்பட்டு தாய்மொழிக்கே திரும்பி வந்து உலகப்பெரும் நடிகன் என்று தற்பெருமை பேசுபவர்கள் மத்தியில் எந்த தற்பெருமையும் கொள்ளாமல் மாற்று மொழியில் மதிப்பிருந்தும் தமிழுக்கே தன்னை அர்ப்பணித்து கொண்டது தமிழ் மக்கள் செய்த பாக்கியமே. மற்ற எல்லா மொழிகளிலும் உலகப் பெரும் நடிகனின் நடிப்பை உதாசீனப்படுத்தியது மிகுந்த கண்டனத்துக்குரியது. இவரைவிட அவர்கள் மொழியில் சிறந்த நடிகர்கள் இருந்தார்களோ? என்னவோ? நமக்கேன் அடுத்த மாநில வம்பு.

தனக்கு வந்த பத்ம விருதையும் பாரத் விருதையும் மறுத்து திருப்பி அனுப்பியவர் அல்லவா? "அடிமைப்பெண்" படத்துக்காக பிலிம்பேர் அவார்டும் கிடைத்தது. விருதுகள்தான் மக்கள் திலகத்தை தேடிவருமே தவிர விருதுகளை தேடி அவர் என்றுமே போனதில்லை.

உதாரணமாக சொல்ல வேண்டும் என்றால் வெளிநாட்டில் எடுக்கப்பட்ட இந்தி படமொன்று வடக்கில் படுதோல்வி அடைந்ததுடன் பெரும் நஷ்டத்தை உண்டு பண்ணியது அதன் தயாரிப்பாளருக்கு. இதைத்தான் குதிரை கீழே விழுந்ததுடன் நில்லாமல் குழியையும் பறித்தது என்பார்கள்.ஆனால் தமிழகத்தில் மட்டுமல்லாமல் கேரளா, கர்நாடகா, ஆந்திரம், மகாராஷ்டிரா, வங்கம் போன்ற மாநிலங்களிலும் வெற்றி கொடி நாட்டியதுடன் அங்கும் தமிழ்படத்துக்கு நல்ல மார்க்கெட்டை ஏற்படுத்திக் கொடுத்தவர் மக்கள் திலகம் எனலாம்.

இலங்கையில் மக்கள் திலகத்தின் படங்களுக்கு தனி மரியாதை உண்டு. ரஷ்யாவில் "ரகசிய போலீஸ் 115" படத்தில் வரும் சண்டை காட்சிகளை பார்த்து விட்டு ஒன்ஸ்மோர் கேட்டதாக செய்தி ஒன்று தெரிவிக்கிறது. இப்படி கடல்கடந்தும் தன்னுடைய வெற்றி கொடியை பறக்கவிட்ட மக்கள் திலகம் என்றுமே அகந்தை கொண்டதில்லை.

சிலர் வெளிநாட்டில் வற்புறுத்தி வாங்கிய விருதை
வைத்துக்கொண்டு
தம்பட்டம் அடிப்பதை பார்த்து நாடே கைகொட்டி சிரிக்கிறது என்கிறார்கள். காரணம் என்னவென்றால் அதன்பிறகும் அதற்கு முன்பும் இப்படிப்பட்ட ஒரு விருதை யாரும் கேள்விபட்டதில்லை.
தெரிந்தால் சொல்லவும் அதற்கு முன்பு யார் யார் வாங்கினார்கள்? பின்பு யார் யார் வாங்கினார்கள்? என்று. அப்படியானால் தான் விருதின் தரத்தை நாம் புரிந்து கொள்ள முடியும்.

இல்லை, அந்த ஆண்டு மட்டும்தான் பிரத்யேகமாக விருது கொடுக்கப்பட்டதா? என்ற விபரங்கள் தெரிய வரும். நாசர் எகிப்தின் அதிபராக இருக்கும் போது எகிப்திந்திய உறவுக்காக காங்கிரஸில் இருந்த ஒருவருக்கு கலாசார விருதாக கொடுக்கப்பட்டதா? அந்த ஆண்டோட அவருடைய நடிப்பு நின்று போய் விட்டதா? ஏன் அடுத்தடுத்து ஆண்டுகளில் அவருக்கு கிடைக்கவில்லை?

இல்லை, இவரை விட சிறந்த நடிகர் கிடையாது என்பதற்காக விருது கொடுப்பதை நிறுத்தி விட்டார்களா? அதுவும் ஒரு நாடக சினிமாவுக்கு வெளிநாட்டில் விருது
கொடுக்கிறார்களா? அப்படியானால்
ஆஸ்கர் விருது ஏன் அந்த படத்துக்கு கொடுக்கப்படவில்லை என்ற காரணமும் புலப்படும். ஒரு தமிழனுக்கு உலகப்பெரும் விருது கிடைத்தால் மகிழ்ச்சி அடையும் முதல் தமிழன் நாமாகத்தான் இருக்க முடியும்.

இது நமக்கே தெரியவில்லை, அப்பாவி தமிழர்களால் எப்படி புரிந்து கொள்ள முடியும்.? இதை பார்த்து விட்டு ஆத்திரம் அடைவதை விடுத்து தகுந்த விபரங்களை. ஆதாரங்களுடன் அளித்தால் நமக்கும் புரிந்து கொள்ள ஏதுவாக இருக்கும். இல்லையென்றால் கல்யாண பரிசு தங்கவேல் m சரோஜாவின் "உங்களை யாரோ பூக்கடையில் பார்த்ததாக சொன்னாங்களே". காமெடி காட்சி தான் ஞாபகத்துக்கு வரும்..........

orodizli
8th August 2020, 06:20 PM
கிறிஸ்தவ மதமும் மக்களும்!*

எம்.ஜி.ஆர் தன் படங்களில்
சிலுவையில் அறைந்த இயேசு
கிறிஸ்துவைப் பல காட்சிகளில்
காட்டியிருக்கிறார். எங்கள் தங்கம்
படத்தில் அவர் ஒரு கம்பை குறுக்கே
பிடித்துக்கொண்டு நிற்பது கூட நிழல் காட்சியாக சிலுவை இயேசு போல காட்டப்படும்.
ரிக் ஷாக்காரன்
படத்தில் அங்கே சிரிப்பவர்கள்
சிரிக்கட்டும் அது ஆணவச் சிரிப்பு
என்ற பாட்டில் அவர் சிலுவை இயேசு சிலையைக் கட்டிப்
பிடித்து நிற்கும் காட்சி வரும்.
எம்.ஜி.ஆர் தான் நடித்த ஜெனோவா
படத்தில் சிப்ரஸ் நாடு மன்னனாக
நடித்திருப்பார். அந்தப் படத்தில் மட்டும் அவர் முழங்காலிட்டு பைபிள் வாசிப்பது போன்ற காட்சி உண்டு.

பரமபிதா என்ற பெயரில் அவரை
இயேசுவாக நடிக்கவைத்து ஒரு படம் எடுக்க திட்டமிட்டனர். ஆனால், அவரை
சவுக்கால் அடித்து அவர் தலையில்
முள்கிரீடம் வைத்து அழுத்துவதை
ரசிகர்கள் காணப் பொறுக்க
மாட்டார்கள். திரையைக் கிழித்து
விடுவர் என்று திரையரங்க
உரிமையாளர்கள் தெரிவித்ததால் படம் எடுக்கும் முயற்சி கை விடப்பட்டது.

ஷூட்டில் எடுக்கப்பட்ட
எம்.ஜி.ஆர் இயேசுவாக தோற்றம் தரும்
படம் கேரளாவில் பலர் வீடுகளில்
மாட்டப்பட்டிருந்தது. இதைக் கேள்விப்பட்ட எம்.ஜி.ஆர் ‘என்னப்பா
உயிரோடு இருக்கும்போதே என் படத்துக்கு பத்தி
கொளுத்துகிறார்களா’ என்று
சிரித்தாராம்.

எம்.ஜி.ஆர் சினிமாவில் ஏழ்மையான
சூழ்நிலையில் இருக்கும் தன் வீட்டை காட்டும் போது அந்த வீட்டில்
திருவள்ளுவர் பாரதியார் அறிஞர்
அண்ணா ஆகியோர் படங்களோடு
இயேசு கிறிஸ்து படத்தையும்
மாட்டியிருப்பார். இதனால்
கிறிஸ்தவர்கள் அவரை சீக்ரெட்
கிறிஸ்ட்டியன் என்றே சொல்ல
ஆரம்பித்துவிட்டனர்.

அவர் தனிக் கட்சி
ஆரம்பித்ததும் கிறிஸ்தவர்கள் பலரும் அவரது ஆதரவாளர்கள் ஆகிவிட்டனர்.
எம்.ஜி.ஆர் முதல்வரானதும்
அமெரிக்கன கல்லூரி தமிழ்த் துறை பேராசிரியர் நோவா அவரைப்
பார்த்து சிறைகளில் ஊழியம் செய்ய
அனுமதி கேட்டார். எம்.ஜி.ஆரும்
சம்மதித்தார்.

அப்போது நோவா
அவர்கள் சிறைகளில் கழிப்பறை வசதி
தேவை என்று கேட்டதும் எம்.ஜி.ஆர்
உடனே செய்து தருவதாக
ஒப்புக்கொண்டார்.

எம்.ஜி.ஆர்
காலத்தில்தான் சிறை கைதிகளின்
அறைகளுக்குக் கழிப்பறை வசதி
கிடைத்தது. அதுவரை அறையில்
வைக்கப்பட்ட சட்டிகளில்தான் அவர்கள்
இரவில் சிறுநீர் மலம் கழித்தனர்.
மறுநாள் அதை கொண்டு போய்
கொட்டிவிட்டு சுத்தம் செய்து
கொண்டு வந்து வைத்துக் கொண்டனர்.

எம்.ஜி.ஆர் டிசம்பர் 24 நாளன்று இரவில்
ஒரு மணி வரை உயிரோடு
இருந்ததாக சில செய்திகள் வந்த
போது கிறிஸ்தவர்கள் பலர் அவர்
கிறிஸ்துமஸ் அன்று மறைந்ததாகவே
கருதினர்.

எம்.ஜி.ஆர் மீதிருந்த
நன்மதிப்பு காரணமாக அவர்
கிறிஸ்தவர் அதிகமாக வாழும்
சாத்தான் குளம் தொகுதியில்
நீலமேகம் என்ற இந்துவை
நிறுத்தியபோதும் அங்கு வாழ்ந்த
கிறிஸ்தவர்கள் இரட்டை இலைக்கு
வாக்களித்து அவரை வெற்றி பெறச்
செய்தனர். .........

fidowag
9th August 2020, 10:54 AM
பாட்டாலே புத்தி சொன்ன*வாத்தியார் எம்.ஜி.ஆர். - வின் டிவியில்*சகாப்தம்*நிகழ்ச்சியில் 21/07/20 அன்று திரு.துரை பாரதி*அளித்த*தகவல்கள்*
---------------------------------------------------------------------------------------------
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அவர்களை பற்றி அவரது ரசிக பெருமக்களும் , பக்தர்களும் அன்றாடம் அவரை போற்றி புகழ்ந்து* பேசிக்கொண்டுதான் இருக்கிறார்கள் .சகாப்தம் நிகழ்ச்சியில் அவரது அரிய தகவல்கள் பற்றி அறிந்து ,வாழ்த்து செய்திகளும், நெகிழ்வான பாராட்டுக்களும் வந்த வண்ணம் உள்ளன*இன்றைய அத்தியாயம் 90 வது* நிகழ்ச்சி .விரைவில் இந்த நிகழ்ச்சி சதம் ,/100 வது நாளை (அத்தியாயத்தை ) உங்களது பேராதரவுடன்* காண போகிறது*


1982ல் தமிழக முன்னாள் முதல்வர் அறிமுகப்படுத்திய சத்துணவு திட்டத்தின்*வெற்றி, வளர்ச்சியைக் கண்டு உலக நாடுகள் பெரிதும் பாராட்டின .இந்த மாபெரும் திட்டம்* மனிதாபிமான மிக்க**எம்.ஜி.ஆர். அவர்களுக்கு* சிறு வயதிலேயே* பசி கொடுமையை அனுபவித்ததன் காரணமாக ஆட்சிக்கு வந்ததும் எந்த குழந்தையும் தன்னைப்போல பசி கொடுமையை சிறு வயதில்* அறியக்கூடாது என்று திட்டமிட்டு ஆரம்பிக்கப்பட்டது . எத்தனை முறை பசி எடுத்தாலும் ,, அத்தனை* முறை அந்த பந்தியில் உட்கார்ந்த பிறகு ,எழுப்பி வெளியே அனுப்புகின்ற அவமானத்தை சிறு வயதிலேயே அனுபவிக்கும்போது தன் மனம் என்ன பாடுபட்டது என்பதை அறிந்தவர்*எம்.ஜி.ஆர். நாடகத்தில்தான் உனக்கு இன்று வேடம் இல்லையே, வேடம் போடுபவர்களுக்குத்தான் இன்று* முதலில்**சாப்பாடு . இன்று உனக்கு வேடமில்லை. எனவே* உனக்கு கடைசியில்தான் சாப்பாடு என்று பரிகசிக்கப்பட்டவர் , வெளியேற்றப்பட்டவர் என்கிற வருத்தம் நாடகத்துறையில்* எம்.ஜி.ஆருக்கு உண்டு .பசி கொடுமையை உணர்ந்தவர் எம்.ஜி.ஆர். என்பதால்தான்**குழந்தைகள் பசியை போக்கும் இந்த மாபெரும் திட்டத்தை தாரக* மந்திரமாக செயல்படுத்தினார் .**


1973ல் கட்சி ஆரம்பித்த புதிதில் ,ஒரு இடத்தில மதிய உணவு திட்டத்தை துவக்கி வைத்தார் என்பது பலரும் அறியாத விஷயம் .அப்போது லயோலா கல்லூரியில்*முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு.ஜெ.சி.டி.பிரபாகரன் படித்து வந்தார் .அவருடன் படித்த தாம்பரத்தில் இருந்து வரும்* மாணவர் ஒருவர்* மதிய உணவு பெரும்பாலும்* சாப்பிடுவதில்லை என்று அறிந்தார் .இதுபற்றி அந்த மாணவரிடம் கேட்டபோது , என் தாயார் வீட்டு வேலைகள் செய்வதற்காக காலையில் புறப்பட்டு சென்று மாலையில்தான் வீடு திரும்புவது வழக்கம் . எனவே மதிய உணவு அவரால் தயார் செய்து தரமுடியாததால் நான் சாப்பிட முடியவில்லை என்றார் .இதே போன்ற நிலை மேலும் பல மாணவர்களுக்கு உண்டு என்பதை அறிந்ததும் ,இதற்கு* நல்லதொரு தீர்வு காணவேண்டும் என்று விழைகிறார் .சுமார் 16 மாணவர்களுக்கு இந்த நிலைமை உள்ளது என்று தெரிந்து இவர்களுக்கு*நிரந்தரமாக மதிய உணவு அளிக்க வழிவகை செய்ய வேண்டும் . அதற்கான நிதி திரட்ட வேண்டும் என்று முடிவு செய்து, தான்* பற்றுக் கொண்டிருந்த தானை தலைவர் எம்.ஜி.ஆரை சந்திக்க சென்னை தி.நகர் , ஆற்காடு சாலையில் உள்ள அலுவலகத்திற்கு செல்கிறார் . அங்கு தலைவர் எம்.ஜி.ஆர்.அவர்களை காண, பேச பெரும் கூட்டம் கூடியுள்ளது .கட்சி ஆரம்பித்திருந்த நேரம் என்பதால் எம்.ஜி.ஆர். படப்பிடிப்பு, அரசியல் , கட்சி கூட்டங்கள் ,கட்சி பிரமுகர்களுடன்*ஆலோசனைகள் என்று மிகவும் பிசியாக இருந்த நேரம் . அப்போது தரை தளத்தில்* டேப் பக்தன் என்பவர் ,திரு.பிரபாகரனை பார்த்து, நீங்கள் லயோலா கல்லூரி மாணவர்கள்* என்று அறிமுகப்படுத்தி கொள்ளுங்கள் ,தலைவர் உங்களிடம் நிச்சயம் உடனே* அழைத்து**பேசுவார் என்று யோசனை தெரிவித்தார்அதன்படி பிரபாகரன் சுய அறிமுகம் செய்து கொண்டதும் ,எம்.ஜி.ஆர். உடனே அழைத்து பேசுகிறார் நீங்கள் எல்லாம் உணவருந்தி விட்டீர்களா என்று கேட்கிறார் .அவர்கள் அருந்திவிட்டோம் என்றவுடன்*. பிரபாகரன் தனது திட்டத்தை தெளிவாக எடுத்துரைத்தார் .


என்னுடன் படிக்கும் மாணவர்கள் பலர் மதிய உணவு அருந்துவதில்லை .அவர்களுக்கு நிரந்தரமாக மதிய உணவு அளிப்பதற்காக வைப்பு நிதி திரட்டி*அதன்மூலம் அவர்களது மதிய உணவு பிரச்னையை தீர்க்கலாம் என்று முடிவு எடுத்துள்ளோம். அதற்கு நடிகர் நடிகைகளை வைத்து கலை நிகழ்ச்சிகள் நடத்தினால் ஓரளவு நிதி திரட்டலாம் என்று யோசனை தெரிவித்தார் பிரபாகரன் .எம்.ஜி.ஆர். நல்ல திட்டம், உடனே ஏற்பாடு செய்யுங்கள் என்று சம்மதம் தெரிவித்து*. என்றைக்கு நிகழ்ச்சி வைத்துள்ளீர்கள் என்று கேட்டதற்கு அக்டொபர் 22 ம் தேதி என்று சொன்னார்கள் .விரைந்து ஏற்பாடுகளை செய்யுங்கள் .அந்த தேதியில் நிகழ்ச்சியில் அவசியம் கலந்து கொள்கிறேன் என்றார் எம்.ஜி.ஆர். மாணவர்களுக்கு எல்லையில்லா மகிழ்ச்சி .நிகழ்ச்சிக்கு எம்.ஜி.ஆர். வருகை தருகிறார் என்று சொன்னாலேயே , மாணவர்கள் மத்தியில் கணிசமான அளவு நிதி திரட்ட முடியும், அத்துடன் இதற்கு நிரந்தர தீர்வு கிடைக்கும்* என்று திட்டமிடுகிறார்கள் .


அ .தி.மு.க. ஆதரவு பத்திரிகையான தென்னகத்தில் எம்.ஜி.ஆர். கர்நாடக மாநிலம்,ஷிமோகாவில் படப்பிடிப்பில் உள்ளார் .எனவே சென்னைக்கு 22ம் தேதிக்கு பின்னர்தான் திரும்புகிறார் என்று செய்தி பிரசுரம் ஆகியிருந்தது என்பது அறிந்ததும் பிரபாகரன் உள்பட அனைத்து மாணவர்களும் பதறிவிட்டனர் .சென்னை பல்கலை கழக நூற்றாண்டு மண்டபத்தில் நிகழ்ச்சி ஒப்பந்தம் ஆகிவிட்டது .என்ன செய்வது என்ற குழப்பத்தில் ,எம்.ஜி.ஆர். எண்ணை* தேடிப்பிடித்து பிரபாகரன் ஷிமோகாவில் உள்ள எம்.ஜி.ஆர். தாங்கும் விடுதிக்கு போனில் தொடர்பு கொள்கிறார் . பத்திரிகை செய்தி பற்றி சொன்னதும் ,நான் ஏற்கனவே ஒத்துக்* கொண்டபடி கண்டிப்பாக 22ம் தேதி மாலை நிகழ்ச்சியில் கலந்து கொள்வேன் . உங்களுக்கு எந்த சந்தேகமும் வேண்டாம் என்று உறுதி அளித்தார் .மாணவர்கள் இதைக் கேட்டு ஜரூராக மற்ற பணிகளை கவனிக்கிறார்கள் .நடிகர் சங்கத்திடம் தொடர்பு கொள்ளும்போது ரூ.10,000/-கொடுத்தால்தான் நடிகர் நடிகைகள் கலந்து கொள்வார்கள் என்று நிர்பந்திக்கவே*ஒரு வழியாக நிதி திரட்டி பணம் கட்டுகிறார்கள் .* நிகழ்ச்சிக்கு மாலை 6 மணிக்கு எம்.ஜி.ஆர். சரியாக வந்துவிடுகிறார் . இந்த மதிய உணவிற்கான நிதி திரட்டும் ,பசியை போக்கும் திட்டத்திற்கு எப்போதும் எனது ஆதரவு உண்டு .என்கிறார் .மாணவர்களிடம் இருந்து நடிகர் சங்க நிர்வாகிகள் ரூ.10,000/- வாங்கியது தவறு .அதற்கு காசோலையாக என் சொந்த பணத்தில் இருந்து நான் தருகிறேன் என்று*நடிகர் சங்கத்திற்கு அளித்து, மாணவர்களின் பணத்தை திரும்ப பெற செய்தார் .இவ்வாறு* 1973ல்* லயோலா கல்லூரியில் மாணவர்களுக்கான மதிய உணவு திட்டத்தை எம்.ஜி.ஆர். துவக்கி வைத்தார் என்பது வரலாறு .

மேலும் தகவல்களுக்கு அடுத்த அத்தியாயத்தில் சந்திப்போம்*

நிகழ்ச்சியில் ஒலித்த பாடல்கள் /காட்சிகள் விவரம்*
-------------------------------------------------------------------------------------
1.அதோ அந்த பறவை போல - ஆயிரத்தில் ஒருவன்*

2.எம்.ஜி.ஆர்.-தேங்காய் ஸ்ரீனிவாசன் உரையாடல் -ரிக் ஷாக்காரன்*

3.மனுஷனை மனுஷன் சாப்பிடுறாண்டா - தாய்க்கு பின் தாரம்*

4.எம்.ஜி.ஆர்.- நாகையா உரையாடல் -நம் நாடு*

5.அன்னமிட்டகை பாடல்* - அன்னமிட்டகை*

6.எம்.ஜி.ஆர்.- அசோகன் உரையாடல் - தொழிலாளி*

7.எங்கே, என் இன்பம் எங்கே - நாடோடி மன்னன்*

8.ஆண்டவன் உலகத்தின் முதலாளி - தொழிலாளி* .*

fidowag
9th August 2020, 10:56 PM
பாட்டாலே புத்தி சொன்ன*வாத்தியார் எம்.ஜி.ஆர்.- வின்டிவியில்*சகாப்தம்*நிகழ்ச்சியில் திரு.துரை பாரதி*22/07/20 அன்று*அளித்த*தகவல்கள்*
---------------------------------------------------------------------------------------------------------------
காலத்தை வென்ற காவிய நாயகன்,மன்னாதி மன்னன், ராஜராஜன் எம்.ஜி.ஆர். அவர்கள் என்பது சகாப்தம் நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் /பக்தர்கள் தரும் நல்ல வரவேற்பிற்கு அத்தாட்சி ஆகும் .

நடிகர் சங்கத்தேர்தலில் எம்.ஜி.ஆர். வெற்றி பெற்று தலைவராக தேர்ந்தெடுக்க படுகிறார் . முதல் கூட்டத்திற்கு எம்.ஜி.ஆர். வருகை தருகிறார் . சங்க உறுப்பினர்கள் மட்டுமே கலந்து கொள்ளும் கூட்டம் அது . அந்த கூட்டத்தில் பிலிம் நியூஸ் ஆனந்தன்காமிராவுடன்* வந்து* கலந்து கொள்கிறார் . அவரை பார்த்ததும் ,நீங்கள் ஏன் வந்தீர்கள்.தயவுசெய்துவெளியே செல்லுங்கள் .சங்க உறுப்பினர்களுக்கு மட்டுமே இந்த கூட்டத்தில் அனுமதி என்கிறார் எம்.ஜி.ஆர்.*நடிகன் குரல் என்கிற பத்திரிகைக்கு* எம்.ஜி.ஆர். ஆசிரியராக இருந்தும், பொறுப்பு ஆசிரியராக பிலிம் நியூஸ் ஆனந்தனும் செயல்படுகிறார்கள். எம்.ஜி.ஆரின் ஆலோசனையின் பேரில் அந்த இதழ் கூட்டத்தில் உறுப்பினர்களுக்கு தரப்படுகிறது .நடிகன் குரலுக்காக பல கட்டுரைகள் எடுத்துக் கொண்டு, ராயப்பேட்டையில் உள்ள எம்.ஜி.ஆர். இல்லத்திற்கு பலமுறை பிலிம் நியூஸ் ஆனந்தன் சென்றுள்ளார் .இருப்பினும் இந்த நடிகர் சங்க கூட்டத்தில் இருந்து வெளியே அனுப்பப்படுகிறார் .உடனே சிலர்,எம்.ஜி.ஆரிடம் அவரும் இந்த சங்கத்தின் உறுப்பினர்தான் என்று வலியுறுத்தி சொன்னதும் , அவரை அழைத்து வரச்சொல்லி ,கூட்டத்தில் கலந்து கொள்ள அனுமதிக்கிறார் . விவரம் அறிந்த எம்.ஜி.ஆர். விஷயம் தெரியாமல் உங்களை வெளியே அனுப்பிவிட்டேன்,.நீங்கள் உறுப்பினர்தான் என்பது இப்போதுதான் தெரிந்தது. தாங்கள் தவறாக நினைத்துக் கொள்ளாதீர்கள் . அதற்காக நான் மிகுந்த வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன் என்று பிலிம் நியூஸ் ஆனந்தனுக்கு அனைவரின் முன்னிலையில் எம்.ஜி.ஆர்* எந்தவித . சங்கோஜமும்* இல்லாமல் தெரிவித்தார் .


நாடோடி மன்னன் படத்தின் 100 வது நாள் வெற்றிவிழா பேரறிஞர் அண்ணா தலைமையில் நடைபெற்றது . விழாவில் அண்ணா அவர்கள் அனைத்து நடிகர் நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் சுமார் 60 பேர்களுக்கு பரிசுப்பொருட்களுடன் கேடயமும் வழங்கினார் . நாடோடி மன்னன் படத்தின்*பொதுமக்கள் தொடர்பாளராக பிலிம் நியூஸ் ஆனந்தனை முதன் முதலாக* எம்.ஜி.ஆர். நியமித்திருந்தார் . நாடோடிமன்னன் படத்தின் வெற்றிவிழா குறித்து*பத்திரிகையாளர் சங்கம் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அனைவருக்கும் விருதுகள் வழங்கப்பட்டன . ஆனால் நிகழ்ச்சிக்காக பாடுபட்ட பிலிம் நியூஸ் ஆனந்தனுக்கு விருது வழங்கப்படவில்லை . இதை கேள்விப்பட்டவுடன் எம்.ஜி.ஆர். முதல் விருது நியாயமாக அவருக்குத்தான் வழங்கப்பட்டிருக்க வேண்டும் என்று கூறி வருத்தப்பட்டு, பின்னர் , அவருக்கென்றே பிரத்யேகமாக ஒரு கேடயத்தை தயார் செய்து ,ஒரு படப்பிடிப்பில் பல நடிகர் நடிகைகள் முன்னிலையில் கொடுத்து பாராட்டினார் .


கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் அவர்கள்மீது எம்.ஜி.ஆர். மிகவும் பற்றுக் கொண்டவர் என்பதற்கு உதாரணம் , ஒருமுறை ஒரு கூட்டத்தில் பேசும்போது*கலைவாணர் மட்டும் உயிருடன் இருந்திருந்தால் அவர்தான் தமிழகத்தின் முதல்வராக இருந்திருப்பார் . நான் அவரது சகாவாக இருந்திருப்பேன் என்று*கூறினார் . ஒருமுறை கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் அவர்கள் உடல்நல குறைவால் அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கும்போது*எம்.ஜி.ஆர். அவரை பார்க்க சென்றார். அவர் தூங்குவதால் தொந்தரவு செய்யாமல் அடுத்த முறை வந்து பார்க்கலாம் என்று புறப்பட்டு சென்றார் .சிறிது நேரம் கழித்து கண்விழித்த கலைவாணர்*.* தனது தலையணையின் அடியில் கட்டுக்கட்டாக பணம் வைக்கப்பட்டுள்ளதை அறிந்து* நடிகர் ராமச்சந்திரன் வந்து போனாரா என்று சிஷ்யர்களாக இருந்த நடிகர்கள் காக்கா ராதாகிருஷ்ணன் மற்றும் கே.ஏ. தங்கவேல் ஆகியோரை பார்த்து கேட்டார் .உங்களுக்கு எப்படி தெரியும் என்று அவர்கள் கேட்க, பதிலுக்கு கலைவாணர் வேறு யாருக்கு கட்டு கட்டாக பணம் உதவி தேவைப்படுபவர்களுக்கு**கொடுத்துவிட்டு போகவேண்டும் என்ற எண்ணம் இருக்கும்.என்று தலையணையின் கீழே இருந்த பண கட்டுகளை காட்டினாராம்*எனவே ..எம்.ஜி.ஆர். கேட்டாலும், கேட்காவிட்டாலும் உதவி தேவைப்பட்டவர்களுக்கு தாமாக மனமுவந்து உதவகிறவர் என்பது*கலைவாணர் காலத்திலேயே உருவான விஷயம் என்பது சிலர் அறியாதது .


முன்னாள் காங்கிரஸ் அமைச்சர் திரு.கக்கன் அவர்கள் ஒய்வு பெற்று அரசு* வீட்டில் இருக்கும்போது மாத வாடகை கூட செலுத்தமுடியாமல் அவதிப்பட்டவர்* என்று சொல்லப்பட்டதுண்டு . எம்.ஜி.ஆர். முதல்வரான பின்பு விவரம் அறிந்து , கக்கன் அவர்கள் ஒரு நேர்மையான, எளிமையான ,நாட்டுக்கு*மக்களுக்காக உழைத்த உண்மையான தியாகி. அவருக்கு இந்த நிலை ஏற்பட்டு இருக்கக்கூடாது என்று கூறி ,அவருடைய வாடகை பாக்கியை சரி செய்து ,அரசு சார்பில் ஒரு வீட்டை இலவசமாக ஒதுக்கீடு செய்தார் .* ஒருமுறை மதுரைக்கு அரசு விழா குறித்த நிகழ்ச்சிக்கு சென்ற எம்.ஜி.ஆர். மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் கக்கன் அவர்கள்பொது வார்டில்* சிகிச்சையில் உள்ளார் என்று செய்தி அறிந்து ,அதிகாரிகளை ஏன் முன்னமே தெரிவிக்கவில்லை என்று கடிந்து கொண்டாராம் . பிறகு மருத்துவமனைக்கு சென்று மருத்துவ அதிகாரியை அழைத்து ,கக்கன் அவர்கள் இந்த நாட்டிற்காக உழைத்த உத்தமர், நேர்மையான,*எளிமையான தேசத்தியாகி .எனவே அவருக்கு உயர்தர சிகிச்சையை எனக்கு அளிப்பதாக கருதி தாங்கள் சிறப்பாக அளித்து அவர் உடல்நலம் தேறி நல்லமுறையில் குணமடைந்து வீடு திரும்ப* உதவ வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார் . அதுமட்டுமின்றி, கக்கன் அவர்களின் குடும்பத்தினருக்கும் ,அவரது வாரிசுதாரர்களுக்கும் வேண்டிய நிரந்தர உதவிகள்*செய்து,நல்ல வழி காட்டியுள்ளார் எம்.ஜிஆர் .



எதிர்க்கட்சி முகாமில் உள்ள ஒருவர் எம்.ஜி.ஆரை கடுமையாக குறை சொல்லி,*விமர்சித்து கூட்டங்களில் பேசுவது, பத்திரிகைகளில் எழுதுவது என்பதை வாடிக்கையையாக கடைபிடித்தார் .* ஒருநாள் அவரது மனைவி திடீரென்று நோய்வாய் படுகிறார் .* உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய ரூ.10,000/- தேவைப்படுகிறது என்கிற நிலை .* அவர் செய்வதறியாமல் ,பணமில்லாமல் தவிக்கிறார் .அவர் பணியாற்றுகின்ற கட்சி பத்திரிகை நிறுவனத்தில்* உடனடியாக பணம் பத்தாயிரம் அட்வான்ஸ் கேட்டால் தரமாட்டார்கள் என்று மனம் புழுங்கியபடி இருக்க, அவரது நண்பர் ஒருவர் நீங்கள் உடனே சென்று*எம்.ஜி.ஆரை பாருங்கள் என்கிறார் . அது எப்படி முடியும். காலம் முழுவதிலும்*நான் அவரை குறை சொல்லி, விமர்சித்து, திட்டி பேசிவிட்டேன் .* அவர் முகத்தை எப்படி சென்று பார்ப்பேன் என்கிறார் .பரவாயில்லை நீங்கள் அவசியம் சென்று பாருங்கள் என்று நண்பர் வற்புறுத்தி சொல்கிறார் . அதன்படி ராமாவரம் தோட்டத்திற்கு செல்கிறார் . அங்கு கட்சி பிரமுகர்கள், தொண்டர்கள், முக்கிய விருந்தினர்கள் பலர் புடைசூழ எம்.ஜி.ஆர். பேசிவிட்டு புறப்படும்போது* . இவரை*பார்த்ததும் நீங்கள் ஏன் இங்கு வந்தீர்கள் . என்ன விஷயம் பரவாயில்லை சொல்லுங்கள் என்று தனியாக அழைத்து* கேட்கிறார் . முதலில் உங்களை விமர்சித்து பேசுவதற்காக என்னை மன்னியுங்கள், என் மனைவிக்கு அவசரமாக மருத்துவ சிகிச்சைக்காக* ரூ.10,000/- உதவி தேவைப்படுகிறது உங்கள் உதவி நாடி வந்துள்ளேன் என்றதும் ,*கவலைப்படாதீர்கள் . என்று கூறி அவர் எதிர்பார்த்த பணத்திற்கு மேலாக ரூ.5,000/- கொடுத்து நல்லபடியாக சிகிச்சை அளித்து பார்த்துக் கொள்ளுங்கள் என்று சொல்லி, நீங்கள் எங்கு வேலை பார்க்கிறீர்கள், என்ன சம்பளம் வாங்குகிறீர்கள் என்று கேட்டு , இந்த மாதத்துடன் வேலையை விட்டு ராஜினாமா செய்துவிட்டு, அ.தி.மு.க. கட்சி தலைமை அலுவலகத்தில்*தொலைபேசி அழைப்பாளராக பணியில் சேருங்கள் .பழைய நிறுவனத்தில் வாங்கிய சம்பளத்தைவிட , நல்ல சம்பளம் தரும்படி ஏற்பாடு செய்கிறேன் என்று*காலமெல்லாம் தன்னை திட்டி தீர்த்த, விமர்சித்த, குறைசொல்லி பேசிய நபரின்*வாழ்க்கை தரத்தை மாற்றியமைத்தவர் மட்டுமல்ல ,தன்னை எதிர்ப்பவர்களை*தன் வசப்படுத்துவதிலும் வல்லவர் எம்.ஜி.ஆர்.


எம்.ஜி.ஆர். அவர்களை பற்றிய இலக்கிய இலக்கணங்கள் சொல்லிக்கொண்டே போகலாம் .* அந்த மன்னாதி, மன்னன், ராஜ ராஜனின் இலக்கிய பயணம் ,நமது வாழ்க்கைக்கு வழிகாட்டியாக தொடர்வது பற்றி அடுத்த அத்தியாயத்தில் காண்போம் .

நிகழ்ச்சியில் ஒலித்த* பாடல்கள் /காட்சிகள் விவரம்*
-------------------------------------------------------------------------------------
1.அவள் ஒரு நவரச நாடகம் - உலகம் சுற்றும் வாலிபன்*

2.பெண் பார்க்க வரும் காட்சியில் எம்.ஜி.ஆர்.-நல்ல நேரம்*

3.கண்ணில் வந்து மின்னல் போல் காணுதே - நாடோடி மன்னன்*

4.உழைப்பதிலா உழைப்பை பெறுவதிலா இன்பம் -நாடோடி மன்னன்*

5.எம்.ஜி.ஆர்.-என்.எஸ்.கிருஷ்ணன்-டி.ஏ.மதுரம் - மதுரை வீரன்*

6.அன்புக்கு நான் அடிமை - இன்றுபோல் என்றும் வாழ்க*

6.ஒன்றே குலமென்று பாடுவோம் - பல்லாண்டு வாழ்க*

7.கொடுத்ததெல்லாம் கொடுத்தான் - படகோட்டி*

8.எம்.ஜி.ஆர் .- நாகேஷ் உரையாடல் - அன்பே வா*

orodizli
10th August 2020, 04:58 PM
மக்கள் திலகத்தின் ரசிகர்களின் '' நினைவலைகள்''
104/2020
எங்களுக்கு விபரம் தெரிந்த ''நாடோடிமன்னன்'' 1958 முதல் மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்'' 1978 வரை
மக்கள் திலகம் எம்ஜிஆரின் படங்களை கண்டு களித்த அந்த இனிய நாட்களை மறக்க முடியாது . மக்கள் திலகம் எம்ஜிஆர் படங்கள் திரை அரங்குகளில் வெளியான நேரத்தில் வண்ண தோரணங்களை கட்டியது
எம்ஜிஆரின் புதுமையான ஸ்டார்களை அலங்கரித்து வைத்தது. .
திரை அரங்கு முன்பு வைத்த பதாகைகளுக்கு மாலை அணிவித்தது ..
நகரம் முழுவதும் ஒட்டப்பட்ட''' வருகிறது'' போஸ்டர்களை கண்டு மகிழ்ந்தது .
''இன்று முதல்'' விளம்பரத்தை கண்டு ஆனந்தமடைந்தது .
ஷோ கேசில் வைக்கப்பட்ட எம்ஜிஆரின் ஸ்டில்களை கண்டு பரவசமடைந்தது .
முன்பதிவு அன்று திரை அரங்குகளில் அலை மோதிய எம்ஜிஆர் ரசிகர்களின் கூட்டத்தை கண்டு ஆர்ப்பரித்தது .
முதல் நாள் , முதல் காட்சியில் எம்ஜிஆர் ரசிகர்களின் அலப்பறையில் ஆனந்தமடைந்தது .
தொடர்ந்து 100 காட்சிகள் அரங்கம் நிறைந்த கண்கொள்ளா காட்சியை கண்டு வியப்படைந்தது .
50,75,100,125,150,175,200,225 நாட்கள் என்று வெற்றி நாட்களை பார்த்து ரசித்தது
சில படங்கள் வெற்றி இலக்கை தொடமுடியாமல் போனது கண்டு வருந்தியது .
படம் காண வரும் மக்களை வரவேற்பு நோட்டீஸ் தந்து வரவேற்றது .
வசூலை வாரி குவித்த விபரங்களை நன்றி நோட்டீஸ் மூலம் வெளியிட்டு உற்சாகமடைந்தது .
வெற்றிவிழாவில் மக்கள் திலகம் எம்ஜிஆர்
கலந்து கொண்ட திரை அரங்கை அமர்க்களப்படுத்தியது .
எம்ஜிஆர் சிறப்பு மலர்கள் வெளியிட்டது .

30வருடங்கள் தொடர்ந்து எம்ஜிஆரின் படங்கள் திரைக்கு வந்த நாளை ஒரு திருவிழாவாக கொண்டாடி போற்றியது .
நாடெங்கும் எம்ஜிஆர் மன்ற தோழர்களின் நட்பு வட்டம் இணைத்தது
வாலிப வயதில் துவங்கிய எம்ஜிஆர் நட்பு முதுமையிலும் தொடர்வது
1978க்கு பிறகு 2020 வரை எம்ஜிஆரின் 100 படங்களுக்கு மேல் மறு வெளியீடு மூலம் இன்னமும் எம்ஜிஆர் நம்மோடு வாழ்வது .
மக்கள் திலகம் எம்ஜிஆர் 104 வது பிறந்த நாள் காணும் 2020 லும் எம்ஜிஆர் சாதனைகளை எண்ணி ஆனந்த வெள்ளத்தில்
கடந்த காலத்தின் வெற்றிகளை நினவு கொண்டு எல்லோரும் எம்ஜிஆரின் நினைவுகளோடு வலம் வருவோம் ..........

orodizli
10th August 2020, 04:59 PM
அடுத்து நாம் பார்க்கப் போகிற படம்தான் "ஊருக்கு உழைப்பவன்".
இதையும் கணேசன் ரசிகர்கள் தோல்வி படம் என்று சொல்லுவதால்
"ஊருக்கு உழைப்பவனி"ன் வசூல் விபரங்களோடு உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சியடைகிறேன்.
1976 ம் ஆண்டு நவ 12 ம் தேதி தீபாவளிக்கு வந்த படம்தான் "ஊருக்கு உழைப்பவன்."

வீனஸ் பிக்சர்ஸ் தயாரித்த என் அண்ணன் வெற்றிப் படத்தை அடுத்து தயாரித்த படம். சென்னையில் பைலட், மகாராணி, அபிராமி, கமலா ஆகிய திரையரங்குகளில் திரையிடப்பட்டு அதிக பட்சமாக மகாராணியில் 63
நாட்கள் நடைபெற்றது. மொத்தம் 190
நாட்களில் பெற்ற வசூல் ரூ913395.88. இதுவும் தேவி பாரடைஸ் போன்ற பெரிய தியேட்டரில் வெளியாகமலே இந்த வசூல். வெளியாகியிருந்தால் 10 லட்சத்தை தாண்டி வசூல் செய்து எதிரணியை இன்னும் கலங்கடித்திருக்கும். .

இந்த வசூல் 100 நாட்கள் ஓடி வெற்றி பெற்றதாக சொல்லப்படும் சிவாஜி படங்களைக்காட்டிலும் அதிகம். குறிப்பாக ராமன் எத்தனை ராமனடி,
தவப்புதல்வன், குலமா குணமா
ராஜபார்ட் ரங்கதுரை,
என்மகன்,உத்தமன்,தெய்வமகன் ஞானஒளி,நீதி,மன்னவன் வந்தானடி
ஆகிய படங்களை காட்டிலும் மிக அதிகமான வசூலாகும்.

அப்படியானால் இந்த சிவாஜி படங்களெல்லாம் படுதோல்வி படங்களா?. இதையும் 100 நாட்கள் ஓட்டுவதற்கு நிறைய செலவு செய்திருப்பார்கள்.. அதையெல்லாம் கழித்துப் பார்த்தால் "உறித்துப் பார்த்தால் வெங்காயத்தில் ஒன்றும் இருக்காது" கதைதான். "ஊருக்கு உழைப்பவன்" மதுரை சென்ட்ரலில் 70 நாட்கள் ஓடி முடிய பெற்ற வசூல்
ரூ 2,76,896 ம், நெல்லை சென்ட்ரலில்
50 நாட்களில் ஓடி முடிய ரூ 1,12,414 ம், நாகர்கோவில் பயோனியர் முத்துவில் 38 நாட்களில் ரூ 86,131 ம் வசூலாக பெற்று சாதனை படைத்தது.

நாம் பார்த்தது அத்தனையும் 'a' சென்டர்
என்றழைக்கப்படும் முக்கியமான நகரங்களின் வசூல்தான். இதற்கப்புறம். 'b' & 'c' சென்டரில் கேட்கவே வேண்டாம்.
அங்கே மக்கள் திலகம்தான் சக்கரவர்த்தி. இதை நம்மவர்களை விட இலங்கை தமிழர்கள் நன்றாக புரிந்து கொண்டு தலைவருக்கு 'நிருத்திய சக்கரவர்த்தி'
என்ற பட்டத்தை அளித்தார்கள். சிவாஜியின் படங்கள் அங்கே வசூலில் விரிசல் காண்பதால் 'கலைக்குரிசில்' என்ற
பெயரில்தான் அழைப்பார்கள்.

'பைலட் பிரேம்நாத்' என்றொரு படத்தை இந்திய இலங்கை கூட்டுத் தயாரிப்பில் எடுத்து விட்டு இங்கே இந்தியாவில் திரையிட்ட வேகத்தில் திரும்பி விநியோகஸ்தர் மடியில் தஞ்சமடைந்த படத்தை இலங்கையில் இந்திய துணைகண்டத்தில் எங்கு தேடினாலும் கிடைக்காத ஜ...வ்....வு.. மிட்டாய் போல இழுத்து ஓட்டிய கதை யாரும் அறியாததா? அதையும் சாதனை என்று சொல்ல வெட்கம் சிறிதளவாவது வேண்டாமா?

இங்கேயாவது வாணிஸ்ரீ போன்ற நடிகைகளின் தயவால் பெற்ற வெற்றியை வைத்து கூத்தாடினார்கள். அங்கே "மாலினி பொன் சேகா" என்ற
இலங்கை நடிகையின் துணை கொண்டு ஓட்டிய படத்தை பெருமையோடு சொல்வதை கேட்டால் நாடு விட்டு நாடு தாவும் பச்சைத்தமிழனின் மானம் காற்றில் பறக்காதா?. இதை எண்ணிப் பார்த்து மனம் தெளிவு பெறுங்கள்.

நெல்லையில் திரையிட்ட சிவாஜியின் 10 படங்கள் கூட இந்த "ஊருக்கு உழைப்பவனி"ன் வசூலை பெற்றிருக்க வாய்ப்பே இல்லை. அப்படியானால் மீதி அனைத்தும் படுதோல்வி படங்களா?வேண்டுமானால் உங்கள் படங்களின் உண்மையான வசூலை வெளியிடுங்கள், புரிந்து கொள்ளட்டும் மக்கள் யார் 'வெற்றித்திருமகன்' என்று.

மீண்டும் அடுத்த பதிவில்..........

orodizli
10th August 2020, 05:00 PM
கருணாநிதி சட்டசபை தேர்தல்களில் தோற்றதே இல்லை என்பது உபிஸ் கூட்டத்தின் பெரிய உருட்டு என்பது தெரியுமா..

இவரிடம் கலைஞர் தோற்றார் என்பதை எத்தனை பேர் அறிவீர்கள்..?

எம்ஜீஆரின் தயவால் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார் என்பது தெரியுமா... ?

இவர் டாக்டர் ஹெச்.வி. ஹண்டே.

மு.க வை சட்ட சபையில் கதற விட்டவர்.

இவரை, ஹண்டே சபையில் எழுந்தால் சண்டே என்பார், மு.க....

1980ம் ஆண்டு தேர்தலில் வாக்கு எண்ணிக்கை நடந்து கொண்டிருந்தது.கருணா 250 வாக்கு பின்தங்கினார். ஹன்டேவை எம்ஜிஆர் அழைத்தார். என்ன நடந்ததோ தெரியாது .. “சில பல டீல்களுக்கு” பிறகு ஹண்டே தோற்றதாக அறிவிக்கப்பட்டது.

அந்த டீலுக்கான விலை அடுத்து வரும் mlc தேர்தலில்ஹண்டேவை mlcயாக்கி சுகாதரத்துறை அமைச்சராக அமரவைத்தார் எம்ஜீஆர்...

1980 ம் ஆண்டு சென்னை அண்ணா நகர் தொகுதியில் நின்ற கலைஞர் பெற்ற வாக்குகள் 51290 ...இவரை எதிர்த்து அதிமுகவின் எச். வி. ஹண்டே பெற்ற வாக்குகள் 50591 இருவருக்குமான வாக்கு வித்தியாசம். 699..

அதற்கு பிறகு கருணா அண்ணா நகரில் நிற்கவே இல்லை.இது சரித்திரம்.எதிலும் தோற்காதவரே தோற்காத வெண்ணை என கூவாதிங்க உபிஸ்..

சுதந்திரா கட்சிக்கு போனதும் ஹன்டே கருணாவுக்கு பார்ப்பனர் ஆனார். அந்த ஹன்டேயைத்தான் ஆத்திரத்தில் பார்ப்பனன் என்பார் கருணா.

கடைசி பஞ்ச்...

காவேரி மருத்துவமனையில் உயிருக்கு போராடிய கடைசி காலங்களில் கருணாநிதிக்கு எட்டு மருத்துவர்கள் கொண்ட குழு தீவிர சிகிச்சை அளித்து வந்தது . அந்த எட்டு பேர் குழுவில் இதில் இவர் யாரை பார்ப்பான் என திட்டினாரோ அந்த பார்ப்பனான எச்.வி.ஹண்டேயும் ஒருவர்..........

orodizli
10th August 2020, 05:01 PM
உங்களுக்கு பத்துகோடி டாலர் பெரிசு...இந்த உலகத்திலுள்ள தனி ஜீவன் எனக்கு அதைவிட பெரிது... வர்ர்ரே வாவ்...!!!

மிஸ்டர் பைரவன் ...! நீங்க சாதாரண வியாபாரின்னு நெனச்சேன்...ஆனா இப்ப தான் புரியது நீங்க சந்தைல ஏலம் போடுற வியாபாரி ...

ஆராய்ச்சிக்காக Demo காண்பிக்க, லதாவை ஒரு அடரந்த காட்டுப்பகுதிக்குள் துப்பாக்கியால் சுடச்சொல்வார். அதனால்...நெருப்பு கொழுந்துவிட்டு எரியும்...அதைக்கண்டு பயப்படும் லதாவிடம்,
அந்த தீயை அணைப்பதற்கான எல்லா ஏற்பாட்டையும் செய்திருப்பதாகக் கூறுவார். அந்த அளவு சமூக அக்கறை கொண்டவர்...நிரூபித்தவர்... மக்கள்திலகம்...

இப்படி...இந்த தனது ஒரு திரைப்படத்தில் மட்டுமல்ல...தனது எல்லாப் படங்களிலும் ஒவ்வொரு காட்சியிலும் ஏதாவது ஒரு நீதியைப் புகுத்தியிருப்பார்.

புரட்சித்தலைவர் பற்றி எழுத எழுத நீண்டுகொண்டே தான் போகும்...
நமக்கு ஆயுள் பத்தாது...

#கெத்தான
#உலகம் #சுற்றும் #வாலிபன்.............

orodizli
10th August 2020, 05:01 PM
நெஞ்சில் நிற்கும் வரிகள்

சினிமா என்பது ஐயோ குய்யோ என்று மட்டும் அழுது வழியும் ஒன்றல்ல / காதல் வீரம் புரட்சி உண்மை நேர்மை தாய்மை பாசம் எழுச்சி என்று மக்கள் மேன்மைக்கு பயன் செய்யும் சாதனம், அதனை சரியாக பயன்படுத்திய ஒரே உலக நடிகர் அமரர் எம்ஜிஆர் அவர்கள் மட்டுமே, அவர் திரை வாயிலாக இரண்டடியில் கூறிய பெரிய சிந்தனைகள் பாடங்கள் காண்க .

இஞ்சினியருக்கும் டாக்டருக்கும் அட்வகேட்டுக்கும் ஏன் இந்த உலகத்துக்கே சோறு போடுபவன் யாரு ? விவசாயி விவசாயி - (விவசாயி )

அழுபவர்கள் சிரிக்க வேண்டும், சிரிப்பவர்கள் சிந்திக்க வேண்டும் - (நான் ஏன் பிறந்தேன் )

நாய்க்கு வீசியெறியும் எச்சில் இலையின் மிச்ச சோறுகூட என் உடன்பிறப்புகளுக்கு கிடைக்கவில்லை என்றால் நான் வாழ்வது மனிதர்கள் மத்தியில் அல்ல அரக்கர்கள் நடுவில் - (மீனவ நண்பன் )

நாம் நாக்குக்கு அடிமையாக இருக்கக் கூடாது நாக்குத்தான் நமக்கு அடிமையாக இருக்க வேண்டும் - (பல்லாண்டு வாழ்க )

தனக்கு தனக்கு என்று சேர்த்து வைத்துக்கொள்ளும் ஆசையை வளர்த்தால் நம்மால் பிறருக்கு எதுவுமே
செய்ய முடியாது (ஆயிரத்தில் ஒருவன்)

பத்துக்கோடி டாலர் உங்களுக்கு பெரிசு அதைவிட இந்த உலகில் உள்ள தனி ஜீவன் எனக்குப் பெரிசு - (உலகம் சுற்றும் வாலிபன்)

பலம் உள்ளவனால்த்தான் சமாதானத்தைப்பற்றிப் பேச முடியும் - (படகோட்டி)

வலிமை உள்ளவன் வைத்ததெல்லாம் சட்டமாகாது பிறர் வாழ உழைப்பவர் சொல்லுவதெல்லாம் சட்டமாக்க வேண்டும். - (நல்ல நேரம்)

உதவி என்று வருபவர்களை பணம் பதவி என்ற பெயரால் உயிருடன் விழுங்கும்
திமிங்கிலம் நீ ( படகோட்டி)

கோடி செல்வம் இருந்தும், தாயன்பில்லாத மாளிகை வாசியை விட, குடிசையில் இருந்தாலும்
தாயின் கையால் உண்ணும் நான் பாக்கியசாலி - (தொழிலாளி )

இப்படி அவரின் பல படங்களில் சிந்தையை தொடும் வரிகள் வசனங்களாக பாடல்களாக நிறையவுண்டு, 5 எம் ஜி ஆர் படங்கள் பார்த்தால் ஒரு குட்டிப் பல்கலைக்கழகம் சென்று படித்த அறிவைப் பெறலாம் ..........

orodizli
10th August 2020, 05:02 PM
MGRamachandiran
INAINDHA KAÏGAL
இணைந்த கைகள்

(photo courtesy
of MGR Peran,
JaïShankar
and
Sailesh Basu,
thanks for them)

MGR's
Unfinished movies II
By the end of 1969,

MGR went on to make a movie under the Banner, MGR Productions “INAINDHA KAÏGAL”.

The story was inspired from a Hindi film Prithiviraj Kapoor's “DAKTHA MANSOOR”.

The story is real one from the life of Muslim Chief Mansoor who lived in Iran.

Arrangements were made the story draft was changed 3 times before it went on to shooting stage.

N.T.Ramarav was booked for the Telugu version of this movie.

A grand function was held in Sathya studios on the first day shooting of the movie, presided by "Kalaignar” Karunanidhi.

The crew involved in this movie are M.S.Visuwanadhan – Music,

Lyrics by Vâli and Pulavar Vedha,

Camera by V.Ramamurthy,

Story – Syed Hajah Mohideen alias Ravindran,

Dialogues by Sornam,

Jambu for Editing,

Stunts by Shiyam Sundhar,

Arts by Anga Muthu

and Direction by Chanakya.

The Ad placed in Daily Thanthi...

Story : Mansoor was born in Royal family, circumstances make Mansoor and his mother get separated from the family.

Mansoor was raised by a Poor man named Moosa. Mansoor becomes a thief for living. Years roll by, Mansoor helps the poor and needy by giving them food, care and money, and stand for their cause and against the reigning King.

An incident happens that he becomes changed man when he falls in Love with a girl who is a princess.

Her father is Harun Al Rashid.

Mansoor gets to know his birth mystery.

He get assisted by his Lover.

A greater task was kept in front of Mansoor to provide water to her Kingdom.

He triumphantly performs the task by breaking the mountain with that he gets to know about his Mother and finds her and finally the throne he rightly owned.

MGR planned to introduce Iranian Actress as the heroine for this movie.

Four songs were recorded three usual movie songs and one lengthy Kavali type song. The songs such as

a.”Nilavu Oru Pennagi..." (the song was used in ULAGAM SUTRUM VALIBAN – MGR and Manjula)

b."Aval Oru Navarasa Nadagam..." (this song also used in ULAGAM SUTRUM VALIBAN – MGR and Latha the one with water ballad)

c."Konjam Neram Ennai Marenthan...” (this song was used in SIRITHU VAZHA VENDUM – MGR and Latha, remember both of them in lots of costumes for that song)

A forest set was made in Sathiya Studio and shots were taken as MGR saving four girls and some dialogue scene between MGR and orphan children.

MGR and Geethanjali in INAINDHA KAÏGAL.

When the shots in studio were completed MGR asked Chitra Krishnasamy to get the permission from the Iran Government to shoot the movie in their country.

The situation changed when Chitra Krishnasamy went to meet the Government they asked the story, after reading the story they denied permission.

The reason the then Iran country was ruled by a King, it is capital punishment to mock a King or telling a story a thief becoming a King.

King and Queen are highly placed and they do not want such a story to be shot in their country.

Chitra Krishnasamy returned home and he told the sad story.

Story writer had a chance meeting Fartheen an International actor who is also one of the member from the Royal Family and asked can he do any help regarding picturising the movie.

He firmly said you can ask the King to give the greatest treasures from his kingdom but not this kind of story.

We are very strict we did not like disrespecting the King and Queen.

You might have seen that all the foreign movies running in Iran are dubbed and released in Persian language. The Censor board is very powerful than our Police.

I cannot help regarding this movie.

Then MGR made a 4th draft changing the back drop to India. Some characters are to be deleted and new ones to be created.

When M.G.Chakrapani was asked to take the role of the King Rashid he did not accept and went on to take the role of Poor Moosa.

He acted in the role of raising the child character Mansoor because he desired to raise MGR's son in real life but that did not happen for that he wanted to act as Poor Moosa to raise MGR's son in reel life.

5th draft was made and Actress Geethanjali acted with MGR for some scenes.

The movie was dropped the reason unknown then MGR went on to make “ULAGAM SUTRUM VALIBAN”.

MGR asked the story department for lavishness in the movie. Imagine the scene of breaking the mountain and the rushing water in those days.

3 Dream songs in Iranian back drop.

The sets are inspired from Arabian Nights story.

Costumes that MGR used is very different and shows individuality.

Apart from the head dress MGR keeps the knife in his throat.

Excerpts
from Nenjil Neraiantha Ponmanachemmal
and image
from
Ithayakani magazine
November 2003 issue.
Roop

(photo courtesy
of MGR Peran, JaïShankar and Sailesh Basu,
thanks for them).........

orodizli
10th August 2020, 05:04 PM
கோட்டையை பிடித்தது ' கோடம்பாக்கம் ' !

இத்தனை அரசியல் பரபரப்புக்கு மத்தியிலும், 1977ல் தனது 136வது படமான ' மதுரை

மீட்ட சுந்தர பாண்டியன்' படத்தில் நடித்து வந்தார் எம்ஜிஆர். அப்படத்தில்" தாயகத்தின் சுதந்திரமே எங்கள் கொள்கை.." என்று பிரகடனப்படுத்தியபடி ஒரு பாடல்.

அதில்:

" ஒற்றுமையாய் பகைவர்களை ஓட வைப்போம்

உழைப்பாலே நம் நாட்டை உயர்த்தி வைப்போம்

கோட்டையிலே நமது கொடி பறந்திடவேண்டும்

கொள்கை வீரர் தியாகங்களை ஏற்றிட வேண்டும்.

புரட்சியிலே சரித்திரத்தை மாற்றிட வேண்டும்

வீரமுண்டு வெற்றி உண்டு ; விளையாடும் களமும் உண்டு

வா.. வா.. என் தோழா ! "

- தலைவன் சொன்னதெல்லாம் வேத வாக்காக போற்றிக் கொண்டிருந்த அதிமுக கட்சி தொண்டர்களுக்கு, ரசிகர்களுக்கு இது போதாதா ! இதை விட வேறென்ன அழைப்பு வேண்டியிருக்கப் போகிறது ?..............

orodizli
10th August 2020, 05:05 PM
எத்தனையோ நடிகர்கள் வந்தாச்சு இன்னும் வர இருக்கிறார்கள் எவர் வந்தாலும் தமிழுக்கு ஒரே தனி மகுட நடிகன் எம் ஜி ஆர் மட்டுமே அவரின் சிறப்புக்கு கிட்ட எவரும் நெருங்க முடியாது வெறும் நடிகனாக இல்லாமல் மக்களின் உணர்வுகளை புரிந்துகொண்ட அவர்

ஏழை எளிய மக்களின் இன்னல்கள் தீர தன்னால் முடிந்த உதவிகளை செய்து வாழ்ந்தார் எம்ஜிஆர் பற்றி அதிகமாக தமிழர்கள் அறிவார்கள்.

சிலருக்கு எம்ஜிஆர் என்றால் கசக்கும் காரணம் அவர்கள் மனித நேயமின்றி வாழ்வதே நல்லது ஒன்று இருந்தால் அதற்கு சாத்தானாக கொடியது ஒன்று இருக்கும் என்பதே உலக நியதி புத்தருக்கும் யேசுவுக்கும்க் காந்திக்கும் எதிரிகள் இருந்தனரே.

உலகின் கணக்கில் மேற்குறிப்பிட்டவர்கள் உத்தமர்கள் நேர்மையானவர்கள் என்று போற்றப்படுகின்றார்கள் அவர்கள் போல நல்வழியில் வாழ்ந்தவர் எம்ஜிஆர் .

தான் யார் எப்படிப்பட்ட மக்கள் சமுதாயத்தில் வாழ்கின்றேன் என்று உணர்ந்து தனது தேவைகளுக்கு மேலே வந்த செல்வத்தை சமூகத்துக்கு செலவிட்டார் அந்தளவுக்கு அவரிடம் அறிவு பக்குவம் குடிகொண்டிருந்தது.

அதை அவர் பெறுவதற்கு அவரின் அன்னையே காரணமாக இருந்திருகின்றார்.

இரசிகர்களே உண்மையில் எமக்கு சம்பளம் தரும் முதலாளிகள் என்று கூறியவர் மக்கள் திலகம், புரட்சி என்றால் என்ன என்பதற்கு எம்ஜிஆர் தந்த வரைவிலக்கணம் ஒருவன் தனது உழைப்பினால் ஈட்டிய செல்வத்தை இல்லாதவருக்கும் கொடுத்து தானும் வாழ்வதே புரட்சி என்பது அவரின் கருத்து.

அழுபவர்கள் சிரிக்க வேண்டும் சிரிப்பவர்கள் சிந்திக்க வேண்டும் என்பதே அவரின் அடிப்படை குறிக்கோளாக இருந்தது நொந்தவர்கள் நோவை துடைக்கும் நல்லெண்ணம்

அவரிடம் நிறைந்திருந்ததே அவரை இன்றுவரை மக்கள் நேசிக்க காரணம் வாழ்க எம்ஜிஆர் புகழ்.....

orodizli
10th August 2020, 05:10 PM
புரட்சி தலைவர் மறைந்த அன்று மறுநாள் நடந்த ஊர்வல நிகழ்வுகள் 25.12.1987 கிறிஸ்மஸ் தினத்தில் 32 மணி நேரத்தில் 75 லட்சம் பேர் அஞ்சலி. நினைவு ஊர்வலம் 5மணி நேரம். 7 கிலோ மீட்டர் நீளம். இந்தியா முழுவதும் அரசு விடுமுறை. 22 நாட்டு தூதர்கள் அஞ்சலி. அமெரிக்க பாராளுமன்றத்தில் அஞ்சலி. உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் துக்கம் கடைப்பிடிக்கப்பட்ட தலைவர். காஞ்சி திருப்பதி சென்னை பார்த்தசாரதி கோயில்களில் மோட்சதீபம் ஏற்றப்பட்டது. 5 லட்சம் தொண்டர்கள் மொட்டை போட்டனர். ரயில் பயணம் 2 நாள் இலவசம். இப்படி பல்வேறு சாதனையில் புரட்சித்தலைவரின் நினைவு ஊர்வலம். அன்று தமிழகமெங்கும் சென்னை தொலைக்காட்சி நேரலை ஒளிபரப்பு..........

orodizli
10th August 2020, 05:18 PM
உலகிலேயே சிறந்த நடிகர் எம் ஜி ஆர் .
________________________
சிரித்து வாழவேண்டும் .
________________________
நாம் வெற்றிகரமாக இயங்க கவலை கொள்ளா மனது வேண்டும்

நம் அவயங்களை செயலிழக்க செய்வதும் கவலை தான்

வெள்ளைத்தாளில் சிற்பம் வரைவது சுலபம்
எழுத்துக்களால் நிறைந்த செய்திதாளில் சிற்பம் வரைவது சாத்தியமா ?

ஆம் நடிப்பு தொழிலும் அப்படியே

பரந்து விரிந்த நிறுவனத்திற்கு தகுந்த ஆட்களை நியமித்து வியபாரத்தை வெற்றிகரமாக நடத்திட முடியும்

ஆனால் கலை அப்படி அல்லவே

ஓய்வை ஒட்டு மொத்த குத்தகைக்கு எடுத்து சிறதும் கவலை இன்றி முகத்தில் நவரசத்தை காட்ட இயலும்

இப்பாடலை படம் பிடிக்கும் நேரம் இராணுவத்தையே சந்திப்பேன் என்ற பலம்
பொருந்திய அரசால்

வான் மழை போல் கொட்டும் பிரச்சனைகள்

இடி முழக்கம் போல் வன்முறைகள்

போதாக்குறைக்கு புதுவையில் தேர்தல்

தாங்கியதே என் தலைவனின் உள்ளம்

சிறிதும் சலனமின்றி கவலை ரேகைகள் முகத்தில் படியாமல் பாடல் காட்சியில் நடித்துள்ளார் பாருங்கள்

இப்பொழுது விளங்கியிருக்குமே

இவர் தான் திரை உலகில் சிறந்த நடிகர் என்று .?...............

fidowag
11th August 2020, 03:59 PM
பாட்டாலே புத்தி சொன்ன*வாத்தியார் எம்.ஜி.ஆர்.-வின் டிவியில்*சகாப்தம்*நிகழ்ச்சியில் திரு.துரை பாரதி*23/07/20 அன்று அளித்த*தகவல்கள்*
---------------------------------------------------------------------------------------------------------
திரைப்பட துறையில் எம்.ஜி.ஆர். பார்முலா என்பது இன்றைக்கும் வெற்றிகரமாக*பின்பற்றப்படுகிறது .* உதாரணமாக, ஜாக்கி சான் நடித்த டிராகன் பிளேட் என்கிற படத்தில் அடிமைப்பட்ட மக்களை* மீட்டு அவர்களுக்கு விடுதலை பெற்று தருவதுதான் கதையமைப்பு . ஆயிரத்தில் ஒருவன் படத்தில் மருத்துவராக இருக்கும் எம்.ஜி.ஆர். சந்தர்ப்ப சூழ்நிலையால் அடிமையாக்கப்பட்டு கன்னித்தீவில் கூட்டத்தினரோடு விற்கப்பட்டு விடுவார் . அவர்களுடன் சர்வாதிகாரியை எதிர்த்து போராடி வெற்றி பெற்று அடிமை விலங்கினை உடைத்து தன் இன மக்களுக்கு விடுதலை வாங்கி தந்து வெற்றி பெறுவார் . அதேபோன்ற கதை தான் டிராகன் பிளேட் என்பது .


ஜாக்கி சான் நடித்த மற்றொரு படம் 2008ல் வெளியாகியுள்ளது . எம்.ஜி.ஆர். நடித்து வெளியான பெற்றால்தான் பிள்ளையா படத்தின் தழுவல்* தான் அது .எம்.ஜி.ஆர். தான் நடித்த படங்களிலே முற்றிலும் மாறுபட்ட கதை, கதாபாத்திரம் , விரும்பி நடித்த படமும் கூட. தனக்கு பிடித்த ஒரு சில* படங்களில்*.ஒன்று .* இந்த கதையில்தான் ஜாக்கி சான் ராபின் ஹூட் என்ற* படத்தில் நடித்து வெற்றிகரமாக ஓடியது . எம்.ஜி.ஆர். தனக்கென உருவாக்கிய எல்லா கதைகளும், கதாபாத்திரங்களும் இன்றைக்கும் பல இளைய நடிகர்களுக்கு பொருத்தமாக*அமைந்து வருகிறது என்பது விந்தையிலும் விந்தை . விஜய், அஜீத் போன்ற நடிகர்களின் படங்களில் எம்.ஜி.ஆர். நடித்த பல படங்களின் காட்சிகள் உல்டாவாக்கி படமாக்கப்படுகின்றன .


மறைந்த கவிஞர் கண்ணதாசனின் இயேசு காவியம் என்கிற நூலை எம்.ஜி.ஆர். வெளியிடுகிறார் .* அப்போது பத்திரிகை நிருபர்கள் எம்.ஜி.ஆரை பார்த்து , நீங்கள் இயேசு வேடத்தில் ஒரு படத்தில் நடித்தீர்களே,அந்த படம் ஏன் வெளியாகவில்லை என்று கேட்கிறார்கள் . அதற்கு ஒரு காரணம் இருக்கிறது .இயேசுநாதர் தனது தேவாலயத்தில் ஒரு பகுதியை வியாபாரஸ்தலமாக மாற்றப்பட்டதை அறிந்து சாட்டை எடுத்து அடித்தார் என்று* ஒரு கதை உள்ளது .அது உண்மைதானா என்று பலரிடம் விசாரித்தேன் .* இப்படி விசாரணைகள் நடத்தும்போது ,இயேசுவின் நியாயமான, அலட்சியத்தனமான வேடங்கள் எனக்கு பொருந்தி வருமே என்றுதான்**உடைகள் அணிந்து,* சில புகைப்படங்கள்**எடுக்கப்பட்டதுஆனால் அதற்கு பின்பு எனக்கு தெரிந்த தகவலின்படிவந்த செய்திகள் மிகுந்த மன* வருத்தத்தை அளித்தது .அதாவதுஇயேசுநாதர் வேடத்தில் இரு கைகளை பின்புறம் கட்டி, தோளில் ஒரு அங்கியுடன்* இருந்த**புகைப்படங்களை சிலர் தங்களது வீட்டு பூஜை அறையில் வைத்து பூஜிப்பதாக அறிந்தேன் .அது மிகவும்வருத்தத்துக்குரிய செயல் . இது என் மனதை பாதித்தது .அப்படி* மேலும்**ஒரு விபரீதம் நடக்க கூடாது என்பதனால் அந்த படத்தில் நடிப்பதை அடியோடு நிறுத்திவிட்டேன் .*அந்த படம் தாமஸ் பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பதாக இருந்தது . அவர்களுக்கு பாதிப்பு* /நஷ்டம் ஏற்படக்கூடாது என்பதற்காகவே*அதே நிறுவனத்திற்கு தலைவன் என்ற படத்தில் நடித்துக் கொடுத்தேன் .*



இரட்டை வேடங்களில் நடிப்பது என்பது ஏதோ ஹேர் ஸ்டைலை மாற்றிக் கொள்வது மட்டுமல்ல .* நடை, உடை, முகபாவங்கள் ஆகியவற்றில் எல்லாம் மாறுபாடுகள், வித்தியாசங்கள் இருக்க வேண்டும் என்று எம்.ஜி.ஆர். விரும்பி செய்வார் . இதை பல படங்களிலே பார்க்கலாம் . குறிப்பாக இரட்டை வேட படங்களில் சிகரெட் பிடிப்பது, மது அருந்துவது போன்ற காட்சிகளில் தவிர்த்துவிடுவது அல்லது ரசிகர்கள் விருப்பம்போல மாற்றி அமைப்பது என்பதில் உறுதியாக இருப்பார்* . நினைத்ததை முடிப்பவன் படத்தில் ஒரு கட்டத்தில் வில்லன் ரஞ்சித் சிகரெட் பிடிக்க முயலும்போது ,சுந்தரம் அதை தட்டிவிட்டு ,எனக்கு முன்பு எவரும் சிகரெட் பிடிக்கக்கூடாது என்று கூறுவார் .அதாவது எந்த பாத்திரத்தில் நடித்தாலும், தான் எம்.ஜி.ஆர். தனது இமேஜ் கெட கூடாது . மக்களுக்கு தன்னை பற்றி தவறான அபிப்பிராயம் வந்துவிடக்கூடாது என்பதில் எம்.ஜி.ஆர். மிகுந்த அக்கறையும், கவனமும் செலுத்தினார் .


அடிமைப்பெண் படத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா எவ்வளவு ஆற்றல், திறமை மிக்கவர் என்பதை மக்களுக்கு தெரிய படுத்தவே , அவருக்கு இரட்டை வேடமளித்து, அம்மா என்றால் அன்பு என்று சொந்த குரலில் பாடவும் வைத்தார்* படத்தின் நாயகனும், தயாரிப்பாளரும் ஆகிய எம்.ஜி.ஆர். அடிமைப்பெண் படத்தில்1966ல் ஆரம்பிக்கப்பட்டபோது* முதலில்**கதாநாயகியராக* நடித்தவர்கள் சரோஜாதேவி, கே.ஆர். விஜயா .* 1967ல் எம்.ஜி.ஆர். சுடப்பட்டு ,குணமாகி* மீண்டும்* படத்தை ஆரம்பிக்கும்போது ,இருவரும் நீக்கப்பட்டு ,ஜெயலலிதாவிற்கு முக்கியத்துவம் தரப்பட்டு இரட்டை வேடங்கள் அளிக்கப்பட்டன .ஒன்று ஜீவா, இன்னொன்று* பவளவல்லி ராணி .* பவளவல்லி வேடத்திற்கு என்று தனி மேனரிசம் இருக்கவேண்டும் என்பதற்கு நடை, உடை, பாவனைகளில் மாற்றங்கள் செய்யப்பட்டன . வீரமாகவும், உணர்ச்சிகரமாகவும் பேசும்போது ராணி தன் உதட்டை* இடதுபுறம் இழுத்து ,சுழிப்பது போல அவருக்கு பயிற்சிகள் தரப்பட்டன .குறிப்பாக வேங்கையன் எனும் எம்.ஜி.ஆர்.சிறை பிடிக்கப்பட்டு, விலங்கிட்டு இருகைகளை* கட்டி சித்திரவதை செய்யப்படும்போது* அவரது உடல் திறன் , மன வலிமை,**கைகளின் பலம், ஆகியவற்றையம் வீர சாகசத்தையும்**கண்டு மெய்சிலிர்த்து ராணி, இன்றுமுதல் இவர் என் மெய்காப்பாளன் ,இத்தகைய மாவீரனை என் ஆயுட்காலத்தில் நான் பார்த்ததே இல்லை என்று புகழாரம் சூட்டுவார் . இந்த வசனம் பேசுவதற்கு முன்பு நடந்து வரும் காட்சியில் நடை, உடை, பாவனை, உணர்ச்சிகள் ஆகியவற்றில் ஜெயலலிதாவின் நடிப்பில் வித்தியாசமில்லை என்பதை உணர்ந்த எம்.ஜி.ஆர். ,ஜீவா பாத்திரத்திற்கு வித்தியாசமாக ராணியின் வேடம் இருக்கவேண்டும் என்கிற வகையில் தொடர்ந்து**பல்வேறு வகையான பயிற்சிகள் அளித்து ,ராணி கம்பீரமாக, அலட்சியமான* பார்வையோடு* நடந்து வருவது போல* பல டேக்குகள்* எடுத்த**பின்புதான் திருப்தி அடைந்து படமாக்கினார் . இதே மேனரிஸத்தை இந்த படம் முழுவதும் ஒரே சீராக கையாண்டு நடித்தால் சிறப்பாக இருக்கும் என்று பாராட்டி உற்சாகப்படுத்தினார் எம்.ஜி.ஆர்.*


ஜெயலலிதாவின் நடிப்பு ஆற்றலை எப்படி வெளிப்படுத்தவேண்டும் என்று பயிற்சி அளித்து , கற்று கொடுத்தவர் எம்.ஜி.ஆர்.* இப்படி பலருக்கு கற்று கொடுத்ததனால்தான் அவரை வாத்தியார் என்று அழைக்கிறார்கள் .எந்த இடத்தில எப்படி நடித்தால் கைதட்டல்கள் பெறுவார்கள் என்பதை அறிந்து வைத்திருந்தவர் எம்.ஜி.ஆர்.* *மற்ற தகவல்கள் அடுத்த அத்தியாயத்தில்*


நிகழ்ச்சியில் ஒலித்த பாடல்கள் /காட்சிகள் விவரம்*
-----------------------------------------------------------------------------------
1.புதிய வானம் , புதிய பூமி* - அன்பே வா*

2.எம்.ஜி.ஆர். -நம்பியார் உரையாடல் - ஆயிரத்தில் ஒருவன்*

3.பெற்றால்தான் பிள்ளையா படத்தில் ஒரு காட்சியில் எம்.ஜி.ஆர்.*

4.நான் செத்து பிழைச்சவன்டா* - எங்கள் தங்கம்*

5.அறிவுக்கு வேலை கொடு ,பகுத்தறிவுக்கு வேலை கொடு - தலைவன்*

6.வில்லன் ரஞ்சித் - சுந்தரம் மோதல் காட்சிகள் - நினைத்ததை முடிப்பவன்*

7.அம்மா என்றால் அன்பு - அடிமைப்பெண்*

8.எம்.ஜி.ஆர். வீர சாகசம் காட்சி - அடிமைப்பெண்*

9.எம்.ஜி.ஆர். -ஜெயலலிதா உரையாடல் - அடிமைப்பெண்*

10.வாங்கய்யா* வாத்தியாரய்யா* - நம் நாடு*



.**

orodizli
11th August 2020, 07:42 PM
அவன் தலைவன்!!
-------------------------------
எம்.ஜி.ஆர் ஒன்றை ஒருவரிடம் கேட்டுக் கொண்டு அவர் அதை செய்து கொடுக்க மறுத்திருப்பாரா?
சரி,,,எம்.ஜி.ஆரிடம் ஒருவர் ஒரு உதவியைக் கேட்டு அதை செய்ய இயலாது என்று எம்.ஜி.ஆர் மறுத்திருப்பாரா??--
நடப்பதற்கு சாத்தியம் இல்லாத இந்த இரண்டு விஷயங்களையும் இப்போதைக்கு ஒதுக்கி வைத்துவிட்டுப் பதிவுக்குள் சென்றோம் எனில்---
அது எம்.ஜி.ஆர் கட்சி தோன்றிய நேரம்!
திண்டுக்கல் வெற்றியைத் தொடர்ந்து பாண்டிச்சேரியில் ஆட்சியைப் பிடிக்கிறார்!
அப்போது எம்.ஜி.ஆர் செய்த ஒரு செயற்கரிய செயலை வேறு எந்தத் தலைவனும் இனியும் செய்வதற்கு வாய்ப்பில்லை எனலாம்!
பாண்டிச்சேரியில் ஆட்சியைப் பிடிக்கும் எம்.ஜி.ஆர்,,அங்கேத் தன் கட்சியைச் சேர்ந்த ராமசாமி என்பவரை முதல்வராக்கி அழகு பார்க்கிறார்!!
எம்.ஜி.ஆர் நிலையில் எவர் இருந்திருந்தாலும்,,தாம் கட்சியைத் துவக்கிய குறைந்த கால இடை வெளியில் இப்படி ஒரு வாய்ப்பு வந்தால் தாமே முதல்வராக ஆங்கே அரியணையில் அமர ஆசைப் பட்டிருப்பார்!!
ஆனாலும் தர்ம தேவதை எம்.ஜி.ஆரை விடுவதாயில்லை-
தமிழகத்து அரியணையின் தூங்கா விளக்காகத் தொடர்ந்து மும்முறை அவரையே பிரகாசமாக எரியச் செய்தது! ஒளி விளக்கு அல்லவா அவர்??
எம்.ஜி.ஆருக்கு --ஒருவருக்கு--
கல்வித் தீயை எரிய வைக்கவும்--
பசித் தீயை அணைய வைக்கவும் தீராத வேட்கை இருந்த அதே நேரத்தில்--
அரை சாண் வயிறை எரிக்கும் அமிலத் தீயாம் குடியைக் கொளுத்த இருந்தக் கொள்கை மிக அதிகமாக இருந்தது!
எந்தத் தலைவனுமே செய்வதற்கு அச்சப் படும் ஒரு காரியத்தை அவர் சர்வ சாதாரணமாகச் செய்தார்--
குடிக்குப் பிரசித்தமான புதுவையில் பூரண மதுவிலக்கைக் கொண்டு வந்த மகோன்னதம் மூலம்,, ,,தம் மனோரதத்தை நிறை வேற்றினார்!
பிறகு தமிழ் நாட்டிலும் அதைச் செய்து காட்டினார்!
இந்த இடத்தில் எம்.ஜி.ஆர்,,தம்மைத் தாமே சுருக்கிக் கொண்டு ஆற்றிய ஒரு அரும்பணியைக் குறிப்பிட்டே ஆக வேண்டும்--
அதுவரை பர்மிட் முறை அமலில் இருந்த காரணத்தால் தமக்குத் தொடர்புடைய தமக்கு அறிமுகமுள்ள அத்தனை பேர்களையும் தாமே தொடர்பு கொண்டு,,அவர்களின் பர்மிட் உரிமத்தைத் தாங்களே அரசிடம் ஒப்படைக்கச் சொல்லி வேண்டுகோள் விடுத்தார்!
இந்த விஷயத்தில் ஒருவரிடம் கேட்கிறோமே என்றுக் கொஞ்சமும் எண்ணாமல்,,மது விலக்கு வேண்டி தமது சுய கௌரவத்தைத் தியாகம் செய்தார் எம்.ஜி.ஆர் என்றே சொல்லலாம் அல்லவா???
அட! பதிவின் துவக்கத்தில் இரண்டு விஷயங்களைக் குறிப்பிட்டிருந்தோம் இல்லை??
ஆம்! பர்மிட் முறையை ரத்து செய்யச் சொல்லி எம்.ஜி.ஆர்,,அந்த நேரத்தில் சிவாஜியைக் கேட்டார்--தம் உடல் நிலைக்கே அது ஆபத்தாய் முடியும் என்ற மருத்துவ காரணத்தைக் காட்டி சிவாஜி கழன்று கொண்டார்--
நடிகர் கமல்,,ஒரு உதவி கேட்டு எம்.ஜி.ஆரை அணுகினார்--
பெரிய தொழில் அதிபர் ஒருவருக்கு,,பர்மிட் பெற்றுத் தரும்படியும்,,பதிலுக்கு அவர் மூலம் அ.தி.மு.கவுக்குக் கணிசமான அளவு கட்சி நிதி தரப்படும் என்றும் அவர் கேட்ட உதவியை செய்ய முடியாது என்று நிர் தாட்சண்யமாக மறுத்து விட்டார் மக்கள் திலகம்!!
அவரது கொள்கை அன்று எப்படியிருந்தது எனில்--
வறுமையில் சிக்கிய-- அடி மகன்--
ஆக வேண்டும் நல்லதொரு குடி மகன்!
ஆகக் கூடாதே குடி மகன்???!!!.........

orodizli
11th August 2020, 07:44 PM
மக்கள் திலகம் கலந்து கொள்ளும் படப்பிடிப்பு என்றால் அதில் கலந்து கொள்ளும் தொழிலாளர்கள் அனைவருக்கும் உற்சாகம் தொற்றிக் கொள்ளும். படப்பிடிப்பில் உற்சாகமாக கலந்து கொண்டு அவரவர் பணிகளை எம்ஜிஆர் புகழும் வண்ணம் சிறப்பாக செய்வார்கள். மக்கள் திலகமும் எத்தனை பேர் படப்பிடிப்பில் கலந்து கொண்டாலும் அத்தனை பேரையும் தெரிந்து வைத்துக் கொள்வார்.

புதிதாக ஒருவர் வந்திருந்தாலும்
உன்னை நான் இதற்கு முன்னால் பார்க்கவில்லையே என்று விசாரித்து தெரிந்து கொள்வார். அவர்களுக்கு நன்றாக ஊக்கம் கொடுத்து சிறப்பாக பணியாற்ற வைப்பார்.
படப்பிடிப்பில் உற்சாகமாக பணியாற்றிய அவர்கள் படப்பிடிப்பு முடிந்தவுடன் தலைவரிடம் சொல்லி விட்டு போக யூனிட் தொழிலாளர்கள் அத்தனை பேரும் காத்திருப்பார்கள்.

தலைவரும் ஷூட்டிங் முடிந்ததும் தயாரிப்பு நிர்வாகியை வரவழைத்து ஒருசில 10 ரூ. புது பணக்கட்டுகளை பெற்றுக்கொண்டு என் கணக்கில் வரவு வைத்துக் கொள்ளுங்கள் என்பார். பின்பு அந்த கட்டுகளில் உள்ள நோட்டுக்களில் நான்கைந்தை
உருவி எடுத்து கொண்டு அதை யாரும் அறியாவண்ணம் உள்ளங்கையில் சுருட்டி வைத்துக் கொண்டு ஒவ்வொரு தொழிலாளிகள் கையிலும் அடுத்தவர் அறியாத வண்ணம் வைத்து திணிப்பார்.

யார் யாருக்கு எவ்வளவு கிடைத்ததோ? அது அவரவர் யோகத்தை பொறுத்தது. அனைவரும் பணத்தை பெற்றுக்கொண்டு தலைவரிடம் விடை பெற்றுச் செல்வார்கள். அவர்களுடைய மகிழ்ச்சியை கண்டு தலைவர் பூரிப்புடன் அன்றைய ஷூட்டிங்கை முடித்துக் கொண்டு உற்சாகமாக அடுத்த வேலைக்கு கிளம்புவார். தொழிலாளர்களும் அடுத்த எம்ஜிஆர் ஷூட்டிங்கிற்காக காத்துக் கொண்டிருப்பார்கள்.

அன்றைய சூழ்நிலையில் மூன்று 10
ரூ நோட்டுக்கள் கிடைத்தாலும் அது அன்றைய நாள் சம்பளத்தை விட அதிகமானதாக இருக்கும். 'ஏழையின் சிரிப்பில் இறைவனை கண்டவர்' புரட்சி தலைவர். இறைவனை ஒரு தடவை பார்த்தாலும் ஆசை தீராமல் அடிக்கடி பார்க்க கோயிலுக்கு செல்வோம் இல்லையா? அதுபோல் புரட்சி தலைவரும் நாள் தவறாமல் ஏழையின் சிரிப்பில் இறைவனை காண தவறுவதில்லை.

மற்ற ஒருசில நடிகர்கள் ஒரு ஷூட்டிங்கை முடித்து விட்டு அரக்க பரக்க அடுத்த ஷூட்டிங்குக்கு பணம் பார்க்க ஓடுபவர்கள் மத்தியில் புரட்சி தலைவர் ஒரு அபூர்வமான பிறவியல்லவா? அதனால்தான் குண்டு துளைத்தும், நோய் தாக்கியும் முப்பிறவி எடுத்து, மூன்று முறை ஆட்சி கட்டிலில் அமர்ந்து மக்களுக்கெல்லாம் அரும் பெரும் பொக்கிஷமாக விளங்கினார் என்றால் அது வியப்புக்குரியதல்லவா?..........

orodizli
12th August 2020, 08:09 AM
சென்னை சித்ரா திரையரங்கில் சிவாஜியின் 208 திரைப்படங்களில் சுமார் 168 படங்கள் வெளியானதாக ஒரு பொய்யான தகவலை சித்ரா தியேட்டர் ஊழியர் ஒருவர் சொன்னதாக வந்த செய்தியில் எள்முனையளவு கூட உண்மை இருப்பதாக தோணவில்லை. ஏனென்றால் சிவாஜி வருடத்துக்கு
8 படங்கள் நடித்தால் அதில் குறைந்த பட்சம் 4 படத்துக்கு மேல் சாந்தியில்தான் வெளியாகும்.

மிச்சம் இருக்கின்ற படங்கள் வெவ்வேறு தியேட்டர்களில்
வெளியானது போக ஒரு 60-70 படங்களாவது சித்ராவில் வெளியாகி இருக்குமா? என்பது சந்தேகமே.
எதற்காக இந்த அப்பட்டமான பொய் செய்தியை போடுகிறார்களோ தெரியவில்லை. சரி அதை விடுவோம். இத்தனை படங்கள் வெளியாகி அதில் "பாசமலரை" மட்டும் வெள்ளிவிழா ஓட்டினார்கள்.
மீதமுள்ள படங்களும் வசூலில் பெரிய அளவு சாதனை செய்த மாதிரி தெரியவில்லை.

1967 ல் வெளியான ரவிச்சந்திரனின் "நான்"
அதுவரை வெளியான அத்தனை படங்களையும் ஓரங்கட்டி வெள்ளிவிழா ஓடி வசூலில் சாதனை செய்தது. அதை அடுத்து வந்த "நம்நாடு" நவ 1ம் தேதி தொடங்கிய அட்வான்ஸ் புக்கிங் வெறும் ஒன்னே முக்கால் மணி நேரத்தில் 4 சிறப்பு காட்சிகள் உட்பட 10 நாட்கள் எல்லா காட்சிகளும் ஹவுஸ்புல் ஆனது சித்ரா தியேட்டர் சரித்திரத்தில் புதுமையானது. ஏனென்றால் சிவாஜி படங்கள்தான் அதிகமாக வெளியாகியிருப்பதால் இத்தகைய கூட்டத்தை கண்டிருக்க மாட்டார்கள்.

அட்வான்ஸ் புக்கிங்கில் அசுர சாதனை செய்ததோடு 100 நாள் வசூலிலும் புதிய ரிக்கார்டு வைத்தது. அதையும் தகர்த்து 1972 ல் வெளியான பிளாக்பஸ்டர் படமான "நல்லநேரம்" தொடர்ந்து 116 காட்சிகள் அரங்கு நிறைந்து வசூலில் உச்சநிலையை அடைந்தது. சித்ராவில் "நல்ல நேரம்" 105 நாட்கள் ஓடி வசூலாக ரூ
3,21,931.00. பெற்றதுதான் அதிகபட்ச வசூல்.

"எத்தனை காலம் மனிதன் வாழ்ந்தான் என்பது கேள்வியில்லை, அவன் எப்படி வாழ்ந்தான் என்பதை உணர்ந்தால் வாழ்க்கையில் தோல்வி இல்லை". என்ற புரட்சி தலைவரின் பாடல் வரிகளுக்கு ஏற்ப, சொற்ப படங்கள் சித்ராவில் வந்தாலும் அதில் செயற்கரிய சாதனை படைப்பது தலைவர் படங்களே என்பது உள்ளங்கை நெல்லிக்கனி..........

orodizli
12th August 2020, 09:58 AM
#வாத்தியார் #எனும் #தெய்வம்



1968இல் திரைக்கு வந்த #புரட்சித்தலைவரின் #"ஒளிவிளக்கு"#
திரைப் படத்தில் கவிஞர் வாலி எழுதிய ஆண்டவனே உன் பாதங்களை நான் கண்ணீரால் நீராட்டினேன் எனத் தொடங்கும் பாடல். படத்தில் திருடனாக வேடமேற்ற எம்.ஜி.ஆர்., தீ விபத்தில் சிக்கிய ஒரு குழந்தையைக் காப்பாற்றுவதற்கான முயற்சியில் காயமடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பார். அப்போது அவரைக் காப்பாற்றும்படி முருகனிடம் மனமுருக வேண்டி படத்தின் முக்கியப் பாத்திரங்களில் ஒன்றான சௌகார் ஜானகி பாடுவதாக அமைக்கப்பட்டது.

எம்.ஜி.ஆரின் வேறு பல திரைப்பாடல்களில் உள்ளதைப் போன்ற நேரடியான அரசியல் எதுவும் இல்லாத அந்தப் பாடல் எம்.ஜி.ஆரைப் பற்றிக் கட்டமைத்த பிம்பம்தான் #அவரை #மற்றவர்களோடு #ஒப்பிடப்படமுடியாதவராக #மாற்றியது.

1984இல் புரட்சித்தலைவர் , உடல் நலம் பாதிக்கப்பட்டு அமெரிக்க மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டிருந்த தருணத்தில் நடைபெற்ற பொதுத்தேர்தலில் அவரது கட்சிக்கு மகத்தான வெற்றியைப் பெற்றுத் தந்த பாடல் அது.

"கடவுள் நம்பிக்கையற்ற, பகுத்தறிவுக் கொள்கையில் தீவிரமான நம்பிக்கை கொண்ட ஒரு கட்சியின் முக்கியமான தலைவர்களில் ஒருவரான #எம்ஜிஆரையே #தெய்வமாக்கியது..."

உள்ளமதில் உள்ளவரை அள்ளித் தரும் நல்லவரை
விண்ணுலகம் வா என்றால் மண்ணுலகம் என்னாகும்?
உன்னுடனே வருகின்றேன் என்னுயிரைத் தருகின்றேன்
மன்னனுயிர் போகாமல் இறைவா நீ ஆணையிடு

படுக்கையில் கிடத்தப்பட்டிருக்கும் எம்.ஜி.ஆருக்குப் பக்கத்தில் நேர்த்தியற்ற முறையில் உருவாக்கப்பட்ட முருகனின் உருவ பொம்மை ஒன்றின் முன்னால் நின்று உள்ளம் உருகும் குரலில் சௌகார் ஜானகி பாடுவதை இப்போது கேட்டாலும் கண்கள் சுரக்கும்.

சௌகாரின் குளமான கண்களில் நிழலாடும் சோகத்தையும் எம்ஜிஆரின் மார்பின் மீது முகம் புதைத்து அவர் பரிதவிப்பதையும் கவனியுங்கள். அது தமிழக மக்களின் சோகம், அவர்களது பரிதவிப்பு. அந்தப் பாடலில் இடம் பெற்றிருக்கும் மற்ற சில வரிகளைக் கவனியுங்கள். #அவர் #தெய்வமாக்கப்பட்டிருப்பது #தெரியும்.

அந்த தெய்வம்தான் 1968 தேர்தலில் போட்டியிட்டது; திமுகவுக்காகப் பிரச்சாரம் செய்தது; 1972இல் அக்கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டு அதிமுகவைத் தொடங்கியது. மக்கள் #எம்ஜிஆர் #என்ற #அந்த #தெய்வத்தை #தரிசிக்க முண்டியடித்தார்கள்; அதற்கு வாக்களித்தார்கள்; அதிகாரத்தைக் கொடுத்து முதலமைச்சராக்கினார்கள்.

1984இல் அந்த தெய்வத்துக்கு உடல் நலம் குன்றி அமெரிக்க மருத்துவமனையில் அனுமதிக்கப்படட்போது மக்கள் இந்தப் பாடலை அவர் குணமடைந்து மீண்டு வருவதற்கான #பிரார்த்தனைப் #பாடலாகப் பயன்படுத்தினார்கள். அவர் மீண்டு வந்தார்.

1987இல் மறையும்வரை தமிழகத்தின் அசைக்க முடியாத சக்தியாகத் திகழ்ந்தார். மறைந்த பிறகும் இன்னமும் மக்கள் அவரைத் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள்.

இன்றும்கூட அவருடன் புதைக்கப்பட்ட, இன்னும் தன் இயக்கத்தை நிறுத்திக்கொள்ளாத அவரது கைக்கடிகாரத்தின் டிக் டிக் ஒலியைக் கேட்பதற்காக கடற்கரையில் உள்ள அவரது சமாதியின் வழவழப்பான மேற்பரப்பின் மீது சாய்ந்தபடி தம் ஒரு காதை அதன் மீது வைத்துக் காத்திருக்கும் #மக்களுக்கு #அவர் #தெய்வமாகவேதான் #தென்படுகிறார். #அவர் #மக்களின் #இதயதெய்வம்.

கேட்கும் சத்தம் இன்னும் அடங்கியிராத #அவரது #இதயத்தின் #துடிப்பு. அவர்களையெல்லாம் பார்க்கும்போது இன்னும் பல நூற்றாண்டுகளுக்கு அது தன் துடிப்பை நிறுத்திக்கொள்ளப் போவதில்லை என்று தோன்றும்...என்பது திண்ணம்..........

orodizli
12th August 2020, 06:30 PM
Denmark --
டென்மார்கிலிருந்து ✍️

����������������������
*Makkal Thilagam MGR* fan
- article about mgr
����������������������

" *எங்கள் எம்ஜிஆர்* "
����������������������

*கலைஞனாய்*– *வள்ளலாய்* – *அரசியலாளராய்* நமது நெஞ்சங்களில் நிறைந்திருக்கும் *சத்தியதாய்* பெற்றெடுத்த *உத்தமர் பொன்மனசெம்மலை* அடியேன் தொற்றிக்கொண்டதை நினைத்து மகிழ்ந்து ரசிகர்களுடன் பகிர்ந்துகொள்ளும் எழுத்து மாலையை படிக்கும் ஒவ்வொருவருக்கம் சூடி மகிழ்கிறேன்.

✍️

ஈழத்தின் வடவளைவுகளை முத்தமிட்டுக்கொண்டிருக்கும் ”அராலி” எனது ஊராகும் குடும்பத்தினருக்கும் எம்ஜிஆருக்கும் நெருக்கம் இல்லை ஆக சிவாஜியின் கண்ணீர்காவியங்களுடன் எனது வளரும் பருவமும் கரைகிறது எனது மாமாவும் அவரின் நண்பரும் திடீர்மழையென ”சந்திரோதயம்” படம் பார்க்க என்னை கூட்டிசென்று எம்ஜிஆரின் அழகை முதன்முதலில் திரையில் காண வழிசெய்தார்கள் சந்திரபிம்பத்துள் சிரித்தமுகத்துடன் எம்ஜிஆர்
தோன்றி தனது இரசிகர்களைபார்த்து கண்சிமிட்டி தலையசைத்து செல்வார் இன்று நினைத்தாலும் மனம் உவகைபடுகின்றது.

காலங்கள் கரைந்து அடியேன் 17 வயதை தொட்டிருக்கும் காலத்தில் ஒரு நாள் தெற்குராலியில் பாட்டியாச்சிவீட்டில் 3ரூபாய்க்கு 2படம் காண்டினார்கள் முதலாவதாக சிவாஜியின் ”ரத்தபாசம்” பின்னர் புரட்சிநடிகரின் ”பாசம்” அன்று பாசம் படத்தின் கதையுடன் நன்றாய் ஒட்டிப்போன என்னால் இன்றுவரை அந்தப்படத்தின் நியாயக்கேள்வியில் இருந்து வெளிவரமுடியவில்லை

அந்தப்படத்தின் ஈர்ப்பே என்னை எம்ஜிஆரின் இரசிகனாக்கியது பின்னர் யாழ் வெலிங்டன் திரையில் ”நாடோடி” பார்க்கின்றேன் மனம் மேலும் எம்ஜிஆரை விரும்பச்செய்கின்றது காரணம் படத்தின் கதையும் அலட்டிக் கொள்ளாத இயல்பான நடிப்பும் பிறகு யாழ் ராஜா திரையில்”ஒளிவிளக்கு” காலை காட்சி 10:30 க்கு 8:30க்கே முதல் வகுப்பு சீட்டை வாங்க வரிசையில் நிற்கின்றேன் நீண்டநேர வரிசைகாத்திருப்பில் பின்னால் நின்ற எனது வயதை ஒத்தவரும் அவரின் தம்பியும் எனக்கு நட்பு முகம் காட்ட மகிழ்ச்சியுடன் மக்கள் திலகத்தை தரிசிக்கும் நினைப்பில் இருக்கும் போது தீடிரென என்னை நோக்கி கதைக்கின்றான்

நாங்கள் வல்வெட்டிதுறையிலிருந்து வந்திருக்கின்றோம் நீ? என என்னை மரியாதைகுறையாக கேட்க உடனே அண்ணன் தம்பியை அதட்டி அடக்க மீண்டும் விட்டான் சிறுவன் யாழ்ப்பாணத்து மக்களின் பொதுக்கேள்வியை அதுதான் நீ என்ன சாதி- நான் கேள்வியில் சற்றே உதறி விடை சொல்
வதற்குள் அண்ணன் ஒரு குட்டு போட்டு தம்பியாரை ஒட்டு மொத்தமாய் அமுக்கிவிட்டார் இச் சம்பவம் எனக்குள் இனிய நினைவாக என்றுமே படர்ந்திருக்கின்றது. ”ஒளிவிளக்கு” திரையரங்கினுள் இரசிகர்கள் உற்சாக மழையில் நடமாடியதைப்போல் வேறெங்கும் திரையரங்கத்துள் அதீத உற்சாகத்துடன் நடமாடியதை யான் கண்டதில்லை ”தைரியமாக சொல் நீ மனிதன் தானா” பாடல் காட்சியில் 6 எம்ஜிஆரை அழகிய உடைகளில் பார்த்து இரசிக பித்து பிடித்தது உண்மை இரசிகர்களின் சீட்டி அடிப்புகள் அபாரம் உள்ளங்களை எம்ஜிஆர் தனது உற்சாக நடிப்பாலும் விறுவிறுப்பான சண்டை காட்சிகளாலும் கட்டிப்போட்டிருந்தார்.

அடுத்து வெலிங்டன் திரையில் ”அன்பேவா” ஒரு இளந்தென்றலை சுகித்து மகிழ்ந்த இன்பத்தை தந்த படம் ”புதியவானம் புதிய…” பாடல் காட்சி என்றும் மறக்கமுடியாதது ”அன்பேவா” இரம்மியமான எம்ஜிஆர் படம் அடுத்து தனபாலண்ணை வீட்டில் தொலைகாட்சி காண்பிப்பாக காட்டப்பட்ட ஊர்மக்கள் ஒன்றாக கூடி பார்த்து இரசித்த ”குடியிருந்தகோயில்” என்னென்று சொல்வது படத்தின் விறுவிறுப்பு எழுத்தோட்டம் அற்புதம் சாதாரண பழிக்கு பழி வாங்கும் கதை ஆனால் தன்னிகரற்ற விதத்தில் படத்தை எடுத்து இரசிகர்களை முழுத்திருப்திக்குள் ஆக்கியிருந்தார்கள் முதலாவது சண்டை காட்சியே படத்தின் பெருமைக்கு சான்றுபகர்க்கும் 51வயதினில் எம்ஜிஆர் ஆடிய வேகம் ”ஆடலுடன்பாடல்”காட்சியில் அற்புதம் வேறுயாரும் நினைத்து பார்க்கமுடியாது.

மேற்கொண்டு மணியக்கா வீட்டில் ”மாட்டுக்காரவேலன்” எம்ஜிஆர் படங்களில் கலகலப்புக்கு முத்தாய்ப்பான படம் நல்லதொரு பாடலான ”சத்தியம் நீயே” பாடலை எழுத்தோட்டத்துக்குள் போட்டு சாம்பாராக்கி விட்டார்கள் என்று நான் வருத்தப்படுவதுண்டு எழுத்தோட்டம் முடியவிட்டு எடுத்திருந்தால் இன்னும் சிறப்பாயிருந்திருக்கும் என்று நினைப்பதுண்டு இனி ஒன்றுமே செய்யமுடியாது இருப்பதை இரசிக்க வேண்டியதே ”மாட்டுக்காரவேலன்” மாபெரும் மணிப்படம்.

வழியே ”படகோட்டி” கறுப்பு சிவப்பு ஆடையில் முதல் காட்சியிலே தோன்றி சிலம்பாடும் காட்சியுடன் எம்ஜிஆர் குதிப்பார் அழகும் விறுவிறுப்பும் நானா நீயா என போட்டி போடும் சிலம்பாடும் வேகம் அபாரம் வண்ணத்தில் வள்ளலை வைத்து சரவணாபடக்குழு எடுத்து வெற்றியீட்டியது பாட்டுக்கொரு படகோட்டியென புகழ்க்கொடி பறக்கவிட்ட ”படகோட்டி” வெற்றிவாகை சூடி நின்றது.

குலனையில் தொலைகாட்சி காண்பிப்பாக தர்மயுத்தம் வேறொரு படம் காண்பிப்பதாக சொல்லியிருந்தார்கள் முதலாவதாக தர்மயுத்தம் காண்பித்த கையுடன் ஒரு படத்தை இரண்டாவதாக போட்டார்கள் இரவின் சோம்பல்கொள்ள அங்கும் இங்குமாய் இருந்தோம் திடீரென முதியவர்கள் சிலர் அடிமைப்பெண்ணடா என்று சத்தமாய் கூவியபடி தொலைகாட்சி பெட்டியை நோக்கி முன்னேறினார்கள் உடன் நானும் சோம்பலை நீக்கி முன்னேறி நோக்கினேன் அடடா எதிர்பார மகிழ்வு

”அடிமைப்பெண்” 3மணி நேரம் படத்துடன் ஐக்கியம் இப்படியும் ஒரு வீரகாவியம் தமிழ்ப்படவுலகில் என எண்ணி பேருவகைப்படவைத்த மாபெரும் எம்ஜிஆர் சொந்தப்படம். ”தாயில்லாமல் நானில்லை” பாடல் காட்சியில் எம்ஜிஆர் வித்தியாசமான ஆடையில் புரட்சி கட்டுடன் தோன்றி இரசிகர்களை பேரானந்தப்படுத்தியிருப்பார் அதேபோல் ”உன்னைபார்த்து உலகம் சிரிக்கிறது” பாடல் காட்சியில் புரட்சி பு£வாய் மலர்ந்து இறுதியில் வீரக்கனலாவார் நடிப்பால் அதிரடியான எம்ஜிஆர் படம் என்றால் நன்றாய் பொருந்தும் அடிமைப்பெண்.

அராலி பாரதி சனசமுக நிலையத்தினர் தொலைகாட்சியில் காண்பித்த இன்னொரு பெருமைக்குரிய எம்ஜிஆர் படம் “எங்கவீட்டுபிள்ளை” இந்தப்படம் பின்னர் யாழ் புதிய றீகல் திரையில் இரண்டாம் தடவையாக வந்த பொழுது கரையுர் – பாசையுர் – நாவாந்துறை மக்களின் அன்புதொல்லை படையலுக்குள் இருந்து பார்த்து பரவசப்பட்ட படம் “நான் ஆணையிட்டால் பாடல் வருவதற்கு 3 நிமிடங்களுக்கு முன்னரே சீட்டியடிப்பும் குதூகலமும் இரசிகர்களிடமிருந்து பறியும் படமெண்டா படம்தான் என எண்ணிக்கொண்டு வெளியில்; வந்தது “எங்கவீட்டுபிள்ளை”யை பார்த்தவிட்டு.

மழையோ மழை அப்படியொரு மழையன்று யாழ் மனோகராவிலும் ஸ்ரீதர் திரையிலுமாய் மக்கள் திலகத்தின் “உலகம் சுற்றும் வாலிபன்” நனைந்தபடி இரசிகர்கள் சீட்டுக்காய் ஸ்ரீதரில் சனத்திரளுக்குள் காக்குளிருக்குள் வெளிநாட்டு அழகை 3ரூபாயுடன் நான் பார்த்து இரசித்த படம் மஞ்சுளாவை அசோகன் தொல்லை பண்ண தொடங்க எம்ஜிஆர் சப்பாத்துகயிறுகளை கட்ட யாழ்ப்பாணத்து இரசிகன்; சீட்டியொலியெழுப்ப ஆகா என்ன´மகா எதிர்பார்ப்பு கொடுக்கப்போகிறார் வாத்தியார் அசோகனுக்கென்று அருமையோ அருமை இன்று கேட்டாலும் நேற்று வந்த பாடலைப்போல் தரம் கொண்ட பாடல்களை கொண்ட படம் “உலகம் சுற்றும் வாலிபன்” புத்தர் கோயில் காட்சியமைப்பு மகா பிரமிப்பை தந்தது ஊசிக்குத்து சண்டை ஆ போட வைத்தது இன்று நடக்கும் ஆயுதமோக அழிவுகலாச்சாரத்தை எம்ஜிஆர் அன்றே தனது படக்கதையில் சொல்லியிருந்தார் எம்ஜிஆரின் சொந்தப்படமான “உலகம் சுற்றும் வாலிபன்” என்றும் மக்கள் பார்த்து பயனடைய வேண்டிய படமென்பேன்.

யேர்மனில் முன்சன் அகதிகள் விடுதியில் “குலேபகாவலி” படத்தைப் பார்த்து இரசிக்கின்றோம் திடீரென அறைக்குள் நுழைந்த மரியதாசு சொல்லுகிறார் கேலியாக உங்கா வாத்தி கிழட்டுபுலியோடை சண்டைபிடிக்குதென்று உடனே கடுப்பான இரசிகர் யோகநாதன் மரியதாசை கேட்டார் சரி எம்ஜிஆர் கிழட்டுபுலியுடன் சண்டை பிடிக்கிறார் நீ கிழட்டுபுலிக்கு முன்னால் நிப்பாயாவென்று- வெட்கித்த மரியதாசு தலையை திருப்பி அறையைவிட்ட நீங்கினார் “குலேபகாவலி” நாடறிந்த நல்ல படம்.

எம்ஜிஆர் சண்டைகளில் எனக்கு மிகவும் பிடித்தது அவரின் சிலம்பாட்டமே அற்புதமான படமாயிருந்தும் இரசிகர்களின் பேராதரவை பெறாத படம் “நீரும் நெருப்பும்” காரணம் இறுதியில் நெருப்புஎம்ஜிஆர் இறப்பதாக காண்பித்தமையாகலாம் திரைப்படத்து கதையில்கூட எம்ஜிஆர் இறப்பதை இரசிகர்கள் விரும்புவதில்லை இதுவரையில் வணக்கம் சொல்லி முடித்துக்கொள்ளுகின்றேன்.

ம.இரமேசு.........

orodizli
12th August 2020, 06:32 PM
"அடிமைப்பெண்" படத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா எவ்வளவு ஆற்றல், திறமை மிக்கவர் என்பதை மக்களுக்கு தெரிய படுத்தவே , அவருக்கு இரட்டை வேடமளித்து, அம்மா என்றால் அன்பு என்று சொந்த குரலில் பாடவும் வைத்தார் படத்தின் நாயகனும், தயாரிப்பாளரும் ஆகிய எம்.ஜி.ஆர். "அடிமைப்பெண்" படத்தில்1965ல் ஆரம்பிக்கப்பட்டபோது முதலில் கதாநாயகியராக நடித்தவர்கள் சரோஜாதேவி, கே.ஆர். விஜயா . 1967ல் எம்.ஜி.ஆர். சுடப்பட்டு ,குணமாகி மீண்டும் படத்தை ஆரம்பிக்கும்போது ,இருவரும் நீக்கப்பட்டு ,ஜெயலலிதாவிற்கு முக்கியத்துவம் தரப்பட்டு இரட்டை வேடங்கள் அளிக்கப்பட்டன .

ஒன்று ஜீவா, இன்னொன்று பவளவல்லி ராணி . பவளவல்லி வேடத்திற்கு என்று தனி மேனரிசம் இருக்கவேண்டும் என்பதற்கு நடை, உடை, பாவனைகளில் மாற்றங்கள் செய்யப்பட்டன . வீரமாகவும், உணர்ச்சிகரமாகவும் பேசும்போது ராணி தன் உதட்டை இடதுபுறம் இழுத்து ,சுழிப்பது போல அவருக்கு பயிற்சிகள் தரப்பட்டன .குறிப்பாக வேங்கையன் எனும் எம்.ஜி.ஆர்.சிறை பிடிக்கப்பட்டு, விலங்கிட்டு இருகைகளை கட்டி சித்திரவதை செய்யப்படும்போது அவரது உடல் திறன் , மன வலிமை, கைகளின் பலம், ஆகியவற்றையம் வீர சாகசத்தையும் கண்டு மெய்சிலிர்த்து ராணி, இன்றுமுதல் இவர் என் மெய்காப்பாளன் ,இத்தகைய மாவீரனை என் ஆயுட்காலத்தில் நான் பார்த்ததே இல்லை என்று புகழாரம் சூட்டுவார் .

இந்த வசனம் பேசுவதற்கு முன்பு நடந்து வரும் காட்சியில் நடை, உடை, பாவனை, உணர்ச்சிகள் ஆகியவற்றில் ஜெயலலிதாவின் நடிப்பில் வித்தியாசமில்லை என்பதை உணர்ந்த எம்.ஜி.ஆர். ,ஜீவா பாத்திரத்திற்கு வித்தியாசமாக ராணியின் வேடம் இருக்கவேண்டும் என்கிற வகையில் தொடர்ந்து பல்வேறு வகையான பயிற்சிகள் அளித்து ,ராணி கம்பீரமாக, அலட்சியமான பார்வையோடு நடந்து வருவது போல பல டேக்குகள் எடுத்த பின்புதான் திருப்தி அடைந்து படமாக்கினார் . இதே மேனரிஸத்தை இந்த படம் முழுவதும் ஒரே சீராக கையாண்டு நடித்தால் சிறப்பாக இருக்கும் என்று பாராட்டி உற்சாகப்படுத்தினார் எம்.ஜி.ஆர்.

ஜெயலலிதாவின் நடிப்பு ஆற்றலை எப்படி வெளிப்படுத்தவேண்டும் என்று பயிற்சி அளித்து , கற்று கொடுத்தவர் எம்.ஜி.ஆர். இப்படி பலருக்கு கற்று கொடுத்ததனால்தான் அவரை வாத்தியார் என்று அழைக்கிறார்கள் .எந்த இடத்தில எப்படி நடித்தால் கைதட்டல்கள் பெறுவார்கள் என்பதை அறிந்து வைத்திருந்தவர் எம்.ஜி.ஆர். .........

.

orodizli
12th August 2020, 06:35 PM
மூன்று எழுத்து
மந்திரச் சொல்....
நிலைத்து நிற்கும்
தெய்வீகச் சொல்.....

1947 ல் இந்திய சுதந்திரம்....
அதே 1947 ல்
திரையுலகம் மூலம்
தமிழக மக்களின்
உண்மையான பிரதிநிதி
கலையுலகில்
கதாநாயகனாக
மலர்ந்த வருடம்....

1948....
1949....
இரண்டு ஆண்டுகள்
கலையுலகில்
போராடி
மீண்டும்
கதாநாயகனாக பவனி...

ஆம்.....
1950 ம் ஆண்டில்
திரையில் மிகப்பெரிய
விஸ்வரூபம் எடுத்த பெயர் எம்.ஜி.ஆர்....

1951 ம் ஆண்டு வெளியான
மர்மயோகி
திரைப்படத்தில்...
தென்னகமெங்கும்
மக்களிடம் வரவேற்பு பெற்ற புரட்சிப்பெயர்
எம்.ஜி.ஆர்.....

1953 ம் ஆண்டில்...
மேலும் மூன்றெழுத்து மந்திரம் வலுப்பெற்று...
அரசியல் என்னும்
துறை மூலம் அவதாரமெடுத்தது....

1954 ம் ஆண்டு
தென்னிந்திய திரைவானில்.....
நிலையான
மக்கள் செல்வாக்கு
பெற்ற திருமகனாக
மலைக்கள்ளன்
திரைக்காவியம் மூலம்
உயர்ந்து நின்றது....

1955 ம் ஆண்டு...
எம்.ஜி.ஆர். திருப்பெயர் தினமும் சொல்லாத
மனிதர்களே இல்லை என நிகழ்ந்த காலமாக
தமிழகம் திகழ்ந்தது...

1956 ம் ஆண்டு...
மதுரை வீரன் திரைக்காவியம் மூலம்
4 வயது குழந்தை முதல்
பல் போன....
வயோதியர் வரை
மட்டுமின்றி
எல்லா துறைகளிலும்
எம்.ஜி.ஆர் திருநாமம்
ஒவ்வொரு நிமிடத்திலும் ஒலித்தது.

1957 ம் ஆண்டு...
அன்றைய ஆளும் காங்கிரஸ்காரர் முதல்
டெல்லி வரை எம்.ஜி.ஆர் திருமந்திரத்தின்
மக்கள் செல்வாக்கு
பற்றி பேசப்பட்டது.

1958 ம் ஆண்டு...
நாடோடி மன்னன்
மூலம் உலகமெங்கும்
எம்.ஜி.ஆர் என்ற
திரு மந்திரம்
விண்னைத்தொட்டது...

எங்கும் எம்.ஜி.ஆர்....
எதிலும் எம்.ஜி.ஆர்....
சட்டமன்றத்தில் எம்.ஜி.ஆர்....
எதிரிகளின் கூடாரத்தில் எம்.ஜி.ஆர்....
ஏழைகளின் இரட்சகராக வலம்
வரும் எம்.ஜி.ஆர்....
அனாதை இல்லங்களுக்கு
உதவிகரம் நீட்டும்
எம்.ஜி.ஆர்...
பரிதவிக்கும்
ஏழை வாழ் மக்களுக்கு
ஒடோடி சென்று உதவும் எம்.ஜி.ஆர்.....
திரையுலகில்
மகிழ்ச்சி தரும் எம்.ஜி.ஆர்....
எந்த துறையை பற்றியும் கருத்து
சொல்லும்....
பேசும் ......
உன்னத மனிதர் எம்.ஜி.ஆர்.....

இப்படி தமிழ்நாடு
செழிக்க தான் உழைத்த பணத்தை ஒவ்வொரு
நிகழ்ச்சிக்கும்....
கொடுத்த ஒரே
வள்ளல் எம்.ஜி.ஆர்....

கடையெழு வள்ளல்களை மிஞ்சிய
கருணை வள்ளல்
எம்.ஜி.ஆர் என்ற
மூன்றெழுத்து மந்திரத்தை அறியாத சில பித்தர்களே....
ஏதும் அறியாது, தெரியாத சிலர்......
எம்.ஜி.ஆர்
என்ற மூன்றெழுத்தின்
புகழை
பொய் விமர்சனம் செய்து விளம்பரம் தேடும் புல்லருவிகளே.

கடந்த 60 ஆண்டுகள் வீசிய விமர்சனங்களை
இன்று வரை
வென்று வரும்
ஒரே ரசிகன்
ஒரே தொண்டன்
ஒரே பக்தன்
நாங்கள்...

எம்.ஜி.ஆர்.
என்ற
மூன்றெழுத்தை
நித்தம்
வணங்குபவர்கள் நாங்கள்.

தினமும் .....
ஒவ்வொரு வினாடியும் .....
உலகில்
கோடி மனிதர்கள்
உச்சரிக்கும்
ஒரு சொல்
உயிர் வாழ்கின்றது
என்றால் ....அது எம்.ஜி.ஆர் என்ற புனிதபெயர்
மட்டும்தான்...
மாமனிதர்
எம்.ஜி.ஆர். என்ற
மூன்றெழுத்து
மனித சக்தியே...

பொன்மனத்தலைவர்
மறைந்து...
33 ஆண்டை
கடந்தும்....
ஒரு கோடிபேர்கள்
ஒரு தலைவரை தினமும் நினைத்து .....
அந்த புனிதபெயர் சொல்லி வாழ்கின்றார்கள் என்றால்...
மாமனிதர்
எம்.ஜி.ஆர்
அவர்களின்
மனித சக்தியின்
பிறப்பு என்பது
சாதாரணமானதல்ல...இயற்கையின்
தெய்வசக்தியாகும்.

என்றும்....
எப்பொழும்....
என்றைக்கும்....
எங்களின்....
ஒரே சொல் எம்.ஜி.ஆர்...

அத்தெய்வத்தின்
புகழைப்பாடும்
கோடிகளில்...
நானும் ஒருவன்!
பாடுவதை
நித்தம் பெருமை
கொள்கிறோம்...........r...

orodizli
12th August 2020, 06:37 PM
மறைந்த கவிஞர் கண்ணதாசனின் 'இயேசு காவியம்' என்கிற நூலை எம்.ஜி.ஆர். வெளியிடுகிறார் . அப்போது பத்திரிகை நிருபர்கள் எம்.ஜி.ஆரை பார்த்து , நீங்கள் இயேசு வேடத்தில் ஒரு படத்தில் நடித்தீர்களே,அந்த படம் ஏன் வெளியாகவில்லை என்று கேட்கிறார்கள் . அதற்கு ஒரு காரணம் இருக்கிறது .இயேசுநாதர் தனது தேவாலயத்தில் ஒரு பகுதியை வியாபாரஸ்தலமாக மாற்றப்பட்டதை அறிந்து சாட்டை எடுத்து அடித்தார் என்று ஒரு கதை உள்ளது .அது உண்மைதானா என்று பலரிடம் விசாரித்தேன் .

இப்படி விசாரணைகள் நடத்தும்போது ,இயேசுவின் நியாயமான, அலட்சியத்தனமான வேடங்கள் எனக்கு பொருந்தி வருமே என்றுதான் உடைகள் அணிந்து, சில புகைப்படங்கள் எடுக்கப்பட்டதுஆனால் அதற்கு பின்பு எனக்கு தெரிந்த தகவலின்படிவந்த செய்திகள் மிகுந்த மன வருத்தத்தை அளித்தது .அதாவதுஇயேசுநாதர் வேடத்தில் இரு கைகளை பின்புறம் கட்டி, தோளில் ஒரு அங்கியுடன் இருந்த புகைப்படங்களை சிலர் தங்களது வீட்டு பூஜை அறையில் வைத்து பூஜிப்பதாக அறிந்தேன் .அது மிகவும்வருத்தத்துக்குரிய செயல் .

இது என் மனதை பாதித்தது .அப்படி மேலும் ஒரு விபரீதம் நடக்க கூடாது என்பதனால் அந்த படத்தில் நடிப்பதை அடியோடு நிறுத்திவிட்டேன் . அந்த படம் தாமஸ் பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பதாக இருந்தது . அவர்களுக்கு பாதிப்பு /நஷ்டம் ஏற்படக்கூடாது என்பதற்காகவே அதே நிறுவனத்திற்கு "தலைவன்" என்ற படத்தில் நடித்துக் கொடுத்தேன். .........

.

fidowag
12th August 2020, 09:27 PM
பாட்டாலே புத்தி சொன்ன*வாத்தியார் எம்.ஜி.ஆர்.-வின் டிவியில் சகாப்தம்*நிகழ்ச்சியில் திரு.துரை பாரதி*25/07/20 அன்று தெரிவித்த*தகவல்கள்*
------------------------------------------------------------------------------------------------------------------------------
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். காலத்தை வென்ற காவிய நாயகன் , மன்னாதி மன்னன் என்பதற்கு**ஒரு அத்தாட்சியாக இருந்து கொண்டிருக்கிறார் என்பது* , சகாப்தம் நிகழ்ச்சிக்கு தரும்* நல்ல வரவேற்பை காட்டுகிறது .


1977ல் சட்ட மன்ற பொது தேர்தல் வருகிறது . அ .தி.மு.க .கட்சி ஆரம்பித்த பின் வரும் முதல் தேர்தல் என்பதால் எம்.ஜி.ஆர். வேட்பாளர்கள் தேர்வில் மும்முரமாக ஈடுபட்டு தேர்வு செய்கிறார் .* தேர்தலுக்கு முன்பு மதுரை மாவட்டம் அருப்புக்கோட்டையில் கஞ்சி தொட்டி திறந்து வைக்கும் நிகழ்ச்சிக்கு மாவட்ட தேர்தல் பொறுப்பாளர்கள் அழைப்பின் பேரில் எம்.ஜி.ஆர். சென்று திறந்து வைக்கிறார் . அருப்புக்கோட்டையில் அ.தி.மு.க. கட்சி பிரமுகராக உள்ள பஞ்சவர்ணம்**மற்ற இடங்களில் கஞ்சி தொட்டி திறந்து வைக்கிறார் . இந்த நிகழ்ச்சிக்கான உதவிகள் , செலவினங்கள் தொடர்பாக உதவிட எம்.ஜி.ஆர். தன்*அண்ணன் சக்கரபாணி அவர்களை அனுப்புகிறார் . எம்.ஜி.சக்கரபாணி அவரகள் மதுரையில் தங்கியிருந்து அருப்புக்கோட்டை தொகுதிக்கு சென்று , தேர்தல் நிலவரம் பற்றி அறிய தொகுதியில் சுற்று* பயணம் செய்து தகவல்களை சேகரிக்கிறார் .* அந்த தொகுதி மக்கள் , எம்.ஜி.ஆர். மீது வைத்துள்ள அபரிமிதமான அன்பு , பற்று ,பாசம் ,விசுவாசம் ஆகியவற்றை அறிந்து நெகிழ்ந்து போகிறார் .அருப்புக்கோட்டையில் முக்கிய அ.தி.மு.க. பிரமுகரான ,எம்.ஜி.ஆரால் அடையாளம் காணப்பட்ட அந்த பஞ்சவர்ணம் வீட்டில் எம்.ஜி.சக்கரபாணி அவர்கள் தங்கி கட்சியின் நிலவரம், செல்வாக்கு ,முக்கிய பிரமுகர்களின் ஆதரவு, பொதுமக்கள் எதிர்பார்ப்பு , தேர்தல் முடிவுகள் ஆகியன பற்றி தெளிவாக ஆலோசனைகள் நடத்திவிட்டு சென்னை திரும்புகிறார் . இந்த தொகுதியில் எம்.ஜி.ஆர். போட்டியிட்டால் அதிகபட்ச வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என்று கணித்து , எம்.ஜி.ஆரிடம் தான் சேகரித்த தகவல்களை பகிர்ந்து கொள்கிறார் .* ஒரு சில மாதங்களில் அ.தி.மு.க. முக்கிய பிரமுகர் ஜேப்பியார் அந்த தொகுதிக்கு சென்று தேர்தல் நிலவரம், கட்சி நிலவரம் , மக்களுக்கு எம்.ஜி.ஆருக்கு இருக்கும் செல்வாக்கு ஆகியவற்றை ஆராய்ந்து*சென்னைக்கு திரும்பி எம்.ஜி.ஆரிடம்* தான் சுற்றி பார்த்து சேகரித்த விஷயங்களை தெரிவிக்கிறார் . அதன்பின் அருப்புக்கோட்டையில் எம்.ஜி.ஆர். போட்டியிடுவதாக அறிவிப்பு வெளியாகிறது .தேர்தலில் எம்.ஜி.ஆர். அமோக வெற்றி பெற்று* முதல்வராவதற்கு அச்சாரமாக அருப்புக்கோட்டை தொகுதி திகழ்ந்தது .அருப்புக்கோட்டை தொகுதியில் போட்டியிட எம்.ஜி.ஆர். தேர்ந்தெடுத்தது எப்படி, காரணங்கள் என்ன என்று ,கட்சியின் முக்கிய பிரமுகரான திரு.பஞ்சவர்ணம் வின் டிவிக்கு பேட்டி அளிக்க முன் வந்துள்ளார் .கூடிய விரைவில் அவருடைய பேட்டியை* பதிவு செய்து , எம்.ஜி.ஆர். பற்றிய பல அரிய தகவல்கள் ரசிகர்கள் /பக்தர்களுக்கு பகிர்ந்து கொள்ள ஆவலாக இருக்கிறேன் .


பூக்களை தேடி வண்டுகள் வருவது போல, பூக்களின் நறுமணம் ,வாசம் எங்கும் பரவுவது போல அந்த வாசத்தை எப்படி மறைக்க முடியாதோ , அதுபோல எட்டு திக்கிலும் ,திசையிலும் எம்.ஜி.ஆரின் புகழ் பரவிக் கொண்டே இருக்கிறது .எம்.ஜி.ஆருடைய ஆற்றல், திறமை, கொடை தன்மை,தன்னலமற்ற உதவிகள் ,பண்புகள் ஆகியன பற்றிய தகவல்கள்* சொல்வதற்கு பல்வேறு வகைகளில்*நம்மை தொடர்பு கொண்டு ஆர்வம் செலுத்துகிறார்கள் .சகாப்தம் நிகழ்ச்சியில் ஒளிபரப்பாகும் காட்சிகள், பாடல்கள் பற்றிய தங்கள் சுய அனுபவங்கள், நினைவுகள் அந்த காலத்தில் படங்களை எப்படி பார்த்து ரசித்தோம், சைக்கிளில் சென்றோம் , பல மைல்கள் நடந்தே* சென்றோம், மாட்டு வண்டியில் கூட்டம் கூட்டமாக சென்று பார்த்தோம் என்று வியப்புடன்* பகிர்ந்து கொள்கிறார்கள்*ஒவ்வொரு படத்தையும் பார்ப்பதற்கு எப்படி சூழ்நிலைகளை எதிர்கொண்டோம் .*கஷ்டத்தில், பிரச்னையில், சோகத்தில்,தோல்வியில்* இருக்கும்போது கூட அவர் படங்கள் பார்த்தால் துவண்டு* எழுந்து வழக்கமான பணிகளை பார்க்கலாம் .தற்கொலை எல்லைக்கு போனவன் கூட எம்.ஜி.ஆர். பாடல்களை கேட்டால்*வாழ்க்கையில் தன்னம்பிக்கை பிறக்கும், வெற்றி தன் வசப்படும் என்ற தாரக மந்திரம் எம்.ஜி.ஆரின் படப்பாடல்கள் . அதனால்தான் அவர் வாத்தியார் என்று அழைக்கப்படுகிறார் .


எம்.ஜி.ஆருடைய* பாடல்கள், படங்கள் இன்றைக்கும்* வாழ்க்கையில் துளிர்த்து எழுப்பும் வழிகாட்டியாக* ஒரு நெம்புகோலாக இருக்கிறது* என்பதற்கு காரணம்*பாடலின் ஒவ்வொரு,எழுத்து,* வார்த்தை, வரிகள் ஆகியவற்றை கவிஞர்களை வைத்து செதுக்கியுள்ளார்* அந்தப்பாடல்கள்* ஒவ்வொரு மனிதனின் கவனத்தை ஈர்க்க வேண்டும் என்பதில் தீவிரம் காட்டினார் . 1961ல் ஒரு படத்திற்கு நல்லதுக்கு காலமில்லை என்ற தலைப்பை வைப்பதற்கு யோசனை சொன்னதற்கு , எப்போதும் நாம் எதிர்மறை தலைப்பு, கருத்துக்கள் ஆகியவற்றை அறவே தவிர்ப்பது நல்லது . பல லட்சங்கள் செலவு செய்து வருமானத்தை பெருக்குவதில் நாட்டம் காட்டாமல் நமக்கென்று சில லட்சியங்களோடு படம் எடுத்தோமானால் மக்கள் மனதில் நாம் நீங்கா இடத்தை பெற முடியும் என்று சொல்லி அந்த படத்திற்கு திருடாதே என்கிற நேரடியான பாசிட்டிவ் கருத்தான தலைப்பை சூட்டினார் . படமும் சென்னையில் பிளாசா, பாரத், மகாலட்சுமி* மற்றும் தென்னகத்தில் பல நகரங்களில் 100 நாட்கள் மேல் ஓடி மகத்தான வெற்றி பெற்றது .இந்த படத்தில் இடம் பெற்ற பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரத்தின்*திருடாதே , பாப்பா திருடாதே, வறுமை நிலைக்கு பயந்து விடாதே, திறமை* இருக்கு மறந்து விடாதே பாடல் காலத்தை வென்று ரசிக்கப்படுகிறது .இன்றைக்கும் லட்சோப லட்சம் மக்களின் அடி நாதமாக இருக்கிற ஒரு நம்பிக்கை கோட்பாடு,மிக பெரிய தத்துவங்கள் கொண்டது. வாழ்க்கையில் மிக எளிமையான* மனிதனுக்கு , எளிமையாக வாழ்வதற்கு ஒரு நெம்புகோல் தத்துவமாக விளங்கிக் கொண்டிருக்கிறது .


எம்.ஜி.ஆர். என்றால், அழகு, கொடை வள்ளல், மற்றவர்க்கு உதவும் பண்பாளர் ,வசீகரமானவர் , பிறர் துன்பம் அறிந்து உதவுபவர் , வீரம், தமிழ் பற்றுடையவர் , தமிழின் அகமும், புறமும்* என்று அவரை பற்றி பலவேறு வகைகளில் இலக்கண இலக்கியங்கள் சொல்லிக்கொண்டே இருக்கலாம் .அவருடைய வாழ்க்கையின் வெற்றி பயணம் , நமது வாழ்க்கைக்கு வழிகாட்டியாக தொடரும் என்று கூறி மற்ற தகவல்கள் அடுத்த அத்தியாயத்தில் பார்ப்போம் .

நிகழ்ச்சியில் ஒளிபரப்பான பாடல்கள் /காட்சிகள் விவரம்*
--------------------------------------------------------------------------------------------
1.புதியதோர் உலகம் செய்வோம்* -பல்லாண்டு வாழ்க*

2.காலத்தை வென்றவன் நீ .காவியமானவன் நீ - அடிமைப்பெண்*

3.இதயவீணை படத்தில் ஒரு காட்சி யில் எம்.ஜி.ஆர்.*

4.நல்ல நல்ல நிலம் பார்த்து நாமும் விதை விதைக்கணும் -விவசாயி*

5.ஏத்தமுன்னா ஏத்தம் -அரசிளங்குமரி*

6.நீ என்னென்ன சொன்னாலும் கவிதை - நேற்று இன்று நாளை*

7.நீங்க நல்லா இருக்கோணும் இந்த நாடு முன்னேற - இதயக்கனி*

8.சின்னவளை, முகம் சிவந்தவளை* - புதிய பூமி*

9.என்னதான் நடக்கும் நடக்கட்டுமே - பணத்தோட்டம்*

10.நாளை உலகை ஆள வேண்டும்* - உழைக்கும் கரங்கள்*

11.பேசுவது கிளியா ,இல்லை பெண்ணரசி மொழியா -பணத்தோட்டம்*

orodizli
13th August 2020, 07:15 AM
1978-1979-ம் ஆண்டுகளில் புயல், மழை காரணமாக தமிழகத்தின் பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

அதில் கோவை மண்டலமும் தப்பவில்லை. நொய்யல் பொங்கிப் பிரவாகமெடுத்திருந்தது.

இந்த ஆறு சார்ந்த 100-க்கும் மேற்பட்ட நீரோடைகள், ஆறுகள்போல மாறின.

அணைகள், தடுப்புச் சுவர்கள், வாய்க்கால் மதகுகள் தெரியாத அளவுக்கு தண்ணீர் பெருக்கெடுத்தது.

ஏறத்தாழ 32 குளங்களின் மதகுகள் உடைந்து, பல குடியிருப்புகளில் வெள்ளம் புகுந்தது.

கோவை நகருக்கு 2 கிலோமீட்டர் மேற்கே உள்ள செல்வசிந்தாமணி குளம் கரை உடைந்ததால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, செட்டிவீதி, சுண்டக்காமுத்தூர் பிரிவு பகுதிகளில் குடியிருப்புகளை தண்ணீர் சூழ்ந்தது.

அதேபோல நகருக்கு 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சிங்காநல்லூர் குளத்தில் உடைப்பெடுத்து, உபரி நீர் ஒண்டிப்புதூர் ரயில்வே பள்ளம், ஆணைவாரி பள்ளம் வழியாக பெருக்கெடுத்தது

செட்டி வீதி, ஸ்டேன்ஸ் காலனி, காமாட்சிபுரம், நெசவாளர் காலனி பகுதிகளைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான மக்களும் அவதிப்பட்டனர்.

அதே போல குனியமுத்தூர் செங்குளத்தில் உடைப்பு ஏற்பட்டு குனியமுத்தூர் பகுதிக்குள்ளும் வெள்ளநீர் புகுந்தது...

தமிழக முதல்வர் #மக்கள்திலகம் அவர்கள் உடனடியாக பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு வந்த அவர் வேஷ்டியை மடித்துக்கட்டிக் கொண்டு வெள்ளத்தில் இறங்கி பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறி, நிவாரண உதவிகளை வழங்கினார்...

நீங்கள் பார்க்கும் இந்த காணொளியில் ஆரம்ப காட்சிகள் மற்றும் நடுவே ஒரு சிலகாட்சிகள் கோவை செல்வபுரத்தில் பொன்மனச்செம்மல் வெள்ள பாதிப்பை பார்வையிட்ட காட்சிகளே...

அப்போது புரட்சித்தலைவருடன் இருந்தவர்களில் ஒருவரான முன்னாள் அமைச்சர் அரங்கநாயகம் கூறியது:

"கோவையில் வெள்ளம் வந்தபோது, ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக வந்திருந்த தலைவரிடம், செட்டிவீதி, செல்வபுரம், சுண்டக்காமுத்தூர் பகுதிகளில் வெள்ளம் புகுந்து விட்டதை தெரிவித்தேன்.

உடனே அவர் காரிலேயே என்னையும் அழைத்துக்கொண்டு வந்தார். குடியிருப்புகளில் தேங்கி நின்ற தண்ணீருக்குள் வேஷ்டியை மடித்துக் கட்டிக்கொண்டு நடந்தபோது, ஓரிடத்தில் தலைவருக்கு முள்குத்திவிட்டது.

மக்களின் துயரத்தையும், வெள்ளத்தில் தத்தளித்த குடியிருப்புகளையும் பார்த்த நம் பாரி வள்ளல்
உணர்ச்சிவசப்பட்டு, செருப்பை காரிலேயே விட்டுவிட்டு வந்திருந்தது அப்போதுதான் தெரிந்தது.

எனது செருப்பை அவரை அணியும்படி கேட்டுக்கொண்டேன்.

“நீ என்ன செய்வே?“ என்று வள்ளல் கேட்க,

“நான் சமாளிச்சுக்குவேன்” என்று கூறினேன்.

அன்று என் செருப்பை அணிந்து கொண்டுதான் #மக்கள்திலகம் தண்ணீருக்குள் நடந்தார் என்பது என்றும் என்னால் மறக்க முடியாதது.

அப்போது செல்வ சிந்தாமணி குளத்தின் கரையும், ஒரு பக்க மதகும் உடைந்ததால் ஏற்பட்ட வெள்ளம், பக்கத்தில் இருந்த பிரதான தார் சாலையை மூழ்கடித்து, அடுத்ததாக இருந்த செட்டி வீதி மற்றும் சுண்டக்காமுத்தூர் குடியிருப்புப் பகுதிகளில் புகுந்திருந்தது.

கரை உடைந்த பகுதியில் ஒரு மதகு கட்டி, அதில் திறக்கப்படும் நீர் அங்கிருந்த வாய்க்கால் மூலம் உக்கடம் பெரியகுளத்துக்கு செல்லவேண்டும்.

அங்கேயே பாலம் கட்டித் தடுப்புச் சுவர் ஏற்படுத்துமாறும் அதிகாரிகளுக்கு #புரட்சித்தலைவர் ஆணை பிறப்பித்தார்
.

அதன் பின்னர் புதிய மதகும், தடுப்புச் சுவரும் அமைக்கப்பட்டது. தற்போதும் அந்த மதகை எம்.ஜி.ஆர். மதகு என்றே மக்கள் அழைக்கிறார்கள்.".........

orodizli
13th August 2020, 01:12 PM
பாரத ரத்னா டாக்டர் எம்.ஜி.ஆரின் சிறப்புகள்
---------------------------------------------------------------------
உலக சினிமா சரித்திரத்தில் , 1995ம் ஆண்டு இடம் பெற்ற மூன்று இந்தியர்களில் முதல்வர் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்..

புரட்சி நடிகர் , மக்கள் திலகம் , பொன்மன செம்மல் , கொடை வள்ளல், எட்டாவது வள்ளல் ,வாத்தியார் , கொள்கை வேந்தன், கலை வேந்தன், கலைச்சுடர், நிருத்திய சக்கரவர்த்தி, வசூல் சக்கரவர்த்தி, ஏழை பங்காளன் , கலைக்காவலன் , விநியோகஸ்தர்களின் அமுதசுரபி , நடிக மன்னன் , மக்கள் தலைவர் , பேரறிஞர் அண்ணாவின் இதயக்கனி ,ஏழைகளின் இதயதெய்வம் , போன்ற எண்ணற்ற பட்ட பெயர்களை பெற்றவர் எம்.ஜி.ஆர். அவர்கள் .

நடிகர்களில் தேசிய அளவில் பாரத் விருது பெற்றதில் முதல்வர் .

மூன்றுமுறை தொடர்ந்து முதல்வராக 10 ஆண்டுகளுக்கு மேலாக தமிழகத்தை ஆண்டவர் .முப்பிறவி கண்ட முதல்வர் .

1967ல் குண்டடிபட்டு , அரசு மருத்துவமனையில் அமர்ந்து கொண்டே தேர்தல் பிரச்சாரத்திற்கு செல்லாமலேயே சட்ட மன்ற உறுப்பினராக ஆனதோடு , தி.மு.க. அரசு கட்டிலில் அமர முழுமுதல் காரணமாக திகழ்ந்தவர் .- பேரறிஞர் அண்ணா குறிப்பிட்டது .

1984ல் அமெரிக்காவில் படுத்துக் கொண்டே பத்தாயிரம் மைல்களுக்கு அப்பால் இருந்து தேர்தல் பிரச்சாரத்திற்கு செல்லாமலேயே மீண்டும் வெற்றி பெற்று ,
தமிழக முதல்வராக ,எதிரிகளின் பொய் பிரச்சாரத்தை முறியடித்து பதவி ஏற்றவர் .

1987ல் மறைந்த பின்னர்,மறைந்தும் மறையாது தமிழர்கள் நெஞ்சங்களில் வாழும் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆருக்கு பாரத ரத்னா என்கிற உயரிய விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது .

1972ல் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். உருவாக்கிய இயக்கம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் 2022ல் பொன்விழா காண உள்ளது .
இந்த தருணத்தில் அ. தி.மு.க. தொடர்ந்து ஆட்சியில் பயணிப்பது சிறப்பான
விஷயம் என்பது குறிப்பிடத்தக்கது .

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர்.
பெயர் - மத்திய அரசு செயலாக்கம் .

சென்னை கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையத்திற்கு புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். பேருந்து நிலையம் என்று பெயர் மாற்றம் - சில மாதங்களுக்கு முன்பு தமிழ்நாடு அரசு அறிவிப்பு .

மதுரை மாட்டுத்தாவணியில் பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆர். பேருந்து நிலையம் செயல்பாடு - தமிழக அரசு அறிவிப்பு .

சேலம் புதிய பேருந்து நிலையம் -பாரத ரத்னா டாக்டர் எம்.ஜிஆர். பேருந்து நிலையம் என சில வருடங்களுக்கு முன்பு பெயர் மாற்றம் - தமிழக அரசு அறிவிப்பு .

திருநெல்வேலியில் புதிய பேருந்து நிலையம் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். பேருந்து நிலையமாக செயல்பாடு - சில வருடங்களுக்கு முன்பு தமிழா அரசு அறிவிப்பு

சென்னை போரூர் மேம்பாலத்திற்கு பாரத ரத்னா டாக்டர் எம்.ஜி.ஆர். மேம்பாலம் என்று பெயர் அமைப்பு - சில மாதங்களுக்கு முன்பு தமிழக அரசு அறிவிப்பு

சென்னை நுங்கம்பாக்கத்தில் டாக்டர் எம்.ஜி.ஆர். சாலை உருவாக்கம் .

சென்னை கே.கே.நகருக்கு அருகில் எம்.ஜிஆர். நகர் .

தமிழ்நாட்டில் உள்ள முக்கிய நகரங்கள், துணை நகரங்களில் எம்.ஜி.ஆர்.நகர் , எம்.ஜி.ஆர். தெரு உருவாக்கம் .

பாராளுமன்றத்தில் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். முழு உருவச்சிலை .

மலேசியாவில் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். முழு உருவ சிலை .

சமீபத்தில் மலேசியாவில் மக்கள் தலைவர் எம்.ஜி..ஆர். மையம் திறப்பு .

1970ல் ஜப்பானில் நடைபெற்ற எக்ஸ்போ 70ல் படமாக்கப்பட்டு , 1973 ல் வெளியாகி வசூலிலும், சாதனைகளிலும் தமிழ் திரையுலகை புரட்டிபோட்டதோடு ,மறுவெளியீடுகளில் அவ்வப்போது வெளியாகி விநியோகஸ்தர்களின் அமுதசுரபியாக திகழ்வதோடு , விரைவில் டிஜிட்டல் தொழில்நுடபத்தில் வெளிவந்து அசுர சாதனை நிகழ்த்த உள்ள ஒரே திரைக்காவியம் உலகம் சுற்றும் வாலிபன்

1978ல் சினிமாவில் நடிப்புத்துறையில் இருந்து விலகி 41 வருடங்கள் , 1987ல் உடலால் மறைந்து , உள்ளத்தால் தமிழர்களின் இதயங்களில் 32 ஆண்டுகளாக
வாழ்ந்து வரும் நேரத்தில் , சென்னை, மதுரை, கோவை, வேலூர், சேலம், நெல்லை, திருச்சி , தூத்துக்குடி, மற்றும் துணை நகரங்கள், சிற்றூர்களில்
மறுவெளியீடுகளில் முதல்வராக இன்னும் பவனி வரும் ஒரே நடிகர் எங்கள்
மக்கள் திலகம் மட்டுமே .

தமிழ்நாட்டில் முக்கிய நகரங்கள், துணை நகரங்கள், மூலை முடுக்கெல்லாம் மக்கள் தலைவரின் மார்பளவு, மற்றும் முழு உருவ சிலைகள்.

சென்னை திருநின்றவூர் அருகில் நத்தமேடு கிராமத்திலும், பொதட்டூர்பேட்டை அருகில் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களுக்கு கோவில்கள் .

கடந்த 13/06/2019 & 14/06/2019 நாட்களில் சென்னை தரமணியில் உள்ள மைய தொழில்நுட்ப பயிலாக வளாகத்தில் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். கலை மற்றும் சமூகவியல் மேம்பாட்டு ஆய்வு இருக்கையின் அகில இந்திய கருத்தரங்கம்
நடைபெற உள்ளது .நிகழ்ச்சியில் கலை, பண்பாடு , மொழி, சமூகம் ஆகியவற்றில் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆரின் பங்களிப்பு பற்றி முனைவர்கள், சான்றோர்கள், கவிஞர்கள், எழுத்தாளர்கள் பங்கேற்று சிறப்பிக்க உள்ளார்கள்.
முன்னாள் அமைச்சர் திரு.சி.பொன்னையன் ,அமைச்சர் திரு.பாண்டியராஜன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொள்வர் .

வெளிநாடுகளில், சிங்கப்பூர், மலேசியா, துபாய், லண்டன்,(பாரிஸ் ) பிரான்ஸ், பர்மா ,இலங்கை (கொழும்பு ), மொரீஷியஸ் , ஆகிய வற்றில்
அவ்வப்போது புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். பற்றிய விழாக்கள், நிகழ்ச்சிகள் நடந்த வண்ணம் உள்ளன .

இந்த சிறப்புகள், இந்திய துணை கண்டத்தில் வேறு எந்த ஒரு நடிகருக்கும் ,மாநில தலைவருக்கும் கிடைத்திராதவை என்பது குறிப்பிடத்தக்கது .
அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்றத்தினரும், பக்தர்களும், ரசிகர்களும் ,விசுவாசிகளும், அபிமானிகளும் அ .தி.மு.க. தொண்டர்களும் பெருமையாக கருதவேண்டிய விஷயங்கள்.........

fidowag
13th August 2020, 05:24 PM
பாட்டாலே புத்தி சொன்ன வாத்தியார் எம்.ஜி.ஆர் .-வின்*டிவியில் சகாப்தம்*நிகழ்ச்சியில் திரு.துரைபாரதி*26/07/20 அன்று அளித்த*தகவல்கள்*
-------------------------------------------------------------------------------------------------------------------
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் பற்றி* பல்வேறு**சமூக வலைத்தளங்களில்* இன்றைக்கும்**பரவலாக பேசப்படுவது அவருடைய புகழை பாடும் பாடல்கள் ,திரைப்படங்களின் முக்கிய காட்சிகள்* ஆகியன . அவருடைய ஒவ்வொரு படங்களும் பாடத்திட்டங்களாக மக்களுக்கு போதனைகள் அளித்துள்ளன .இப்படியெல்லாம் விளக்கிக்* கொண்டிருக்கிறார்கள் .* அப்படியான விளக்கங்களுடன்* அவருடைய வாழ்க்கை*எப்படி நம்பிக்கையூட்டும்* விதமாக*இருந்திருக்கிறது என்பதை பலரும் ரசித்து,ரசித்து* சகாப்தம் நிகழ்ச்சியின் தகவல்களாக பரிமாறிக் கொள்கிறார்கள் .* தொடர்ந்து எம்.ஜி.ஆரின் தேசிய பயணம் எப்படி இருந்தது என்பதை இந்த அத்தியாயத்தில் பார்ப்போம் .


எம்.ஜி.ஆர். - சரோஜாதேவி ஜோடியின் கெமிஸ்ட்ரி அந்த காலத்தில் பரபரப்பாக பேசப்பட்டது .வெற்றி ஜோடியாக கணிக்கப்பட்டது . லட்சிய ஜோடி என்றும்*அழைக்கப்பட்டது . எம்.ஜி.ஆருக்கு ஜோடியாக அதிகமாக 28 படங்களில் நடித்தவர் ஜெயலலிதா . அவருக்கு அடுத்தபடியாக சரோஜாதேவி 26 படங்களில் எம்.ஜி.ஆருடன்* ஜோடி சேர்ந்தார் . ஆனால் பூஜை போடப்பட்ட , சில காட்சிகள் ,சில ஆயிரம் அடிகள்* எடுக்கப்பட்ட படங்கள் சேர்த்தால் எண்ணிக்கை இன்னும் அதிகமாகும் . பல்வேறு காரணங்களுக்காக பல படங்கள் ரத்தானது .தமிழ் திரையுலகிற்கு சரோஜாதேவியை திருடாதே படம் மூலம் எம்.ஜி.ஆர். அறிமுகம் செய்தார் . ஆனால் முதலில் வெளியானது எம்.ஜி.ஆர். இரட்டை வேடங்களில் நடித்து இயக்கி பிரம்மாண்ட வெற்றி பெற்ற நாடோடி மன்னன் நாடோடி மன்னன் மூலம் அறிமுகம் ,மற்றும் படத்தின் இமாலய வெற்றி காரணமாக சரோஜாதேவி*புகழின் சிகரத்திற்கு சென்றார் . சுமார் 30 படங்கள் ஒப்பந்தம் ஆகி கைவசம் இருந்தன .சரோஜாதேவி, முன்னாள் பாரத பிரதமர் இந்திராவின் மீது பற்றும் பாசமும் வைத்திருந்தவர் . அவர் மறைவிற்கு பின்னர் ,எம்.ஜி.ஆர். சரோஜாதேவியிடம் ,நீங்கள் விரும்பினால் பிரதமர் ராஜீவ் காந்தியிடம் பேசி , காங்கிரஸ் கட்சியின் மேலவை உறுப்பினர் பதவி வாங்கி தருகிறேன் என்றார் .இதை எம்.ஜி.ஆர். வற்புறுத்தி சொன்னதாக சரோஜாதேவி ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார் .* மற்றவர்களின் மாற்றுக்கொள்கையை மதிக்கும் தன்மை*உடையவர் எம்.ஜி.ஆர். என்பதை* இது காட்டுகிறது .


அதே நேரத்தில் காங்கிரஸ் கட்சியோடு எம்.ஜி.ஆருக்கு கருத்து வேறுபாடு இருந்ததா என்றால் இருந்தது . எப்போது என்றால் காங்கிரஸ் கட்சி தலைமைக்கு*மகாத்மா காந்திக்கும் , சுபாஷ் சந்திர போஸுக்கும் போட்டியிடுவதில் கருத்து வேறுபாடு ஏற்பட்டது . பட்டாபி சீதாராமைய்யா என்பவர் தோற்றபோது காந்தி*இது நானே தோற்றது போன்றது என்று கருத்து வெளியிட்டார் . அந்த நேரத்தில் சுபாஷ் சந்திர போஸ் காங்கிரசில் இருந்து வெளியேற்றப்பட்டார் .* நேதாஜியின் வெளியேற்றம் எம்.ஜி.ஆருக்கு மிகுந்த மன வருத்தத்தை அளித்தது .எனவே*காங்கிரஸ் கட்சியின் மீது இருந்த பற்றுதலை* துறந்தார் . கதர் ஆடைகள் அணிவதை தவிர்த்தார் .மற்ற உடைகள் அணிய ஆரம்பித்தார் . இருந்தாலும் ,மகாத்மா காந்தி மீது அவர் கொண்டிருந்த விசுவாசம் ,பற்றுதல் ஒருபோதும்* கொஞ்சம் கூட மாறவில்லை . நேதாஜியின் வீரத்தை மதித்தார் .* இலங்கையில்*தமிழ் இயக்கத்தை சார்ந்த விடுதலைப்புலி வீரர்கள் சிங்கள அரசுக்கு எதிராக போரிட்டபோது , அவர்களுக்கு, பணம், பொருள், ஆயுதங்கள், போர் கருவிகள் என்று பல்வேறு வகைகளில் உதவினார் எம்.ஜி.ஆர். .


முன்னாள் பாரத பிரதமர் இந்திரா காந்தி சென்னைக்கு விஜயம் செய்தபோதெல்லாம் ராஜ்பவனில் சந்திக்கும்போது , அவர் பிரதமராக இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி , அவர்முன்பு அமருவதை எம்.ஜி.ஆர். தவிர்த்தார் . ஒரு கட்டத்தில் இந்திரா அவர்கள் ,திரு.முதல்வர் அவர்களே*நீங்கள் அமரவில்லையென்றால் நானும் எழுந்து நிற்க வேண்டி வரும் என்று சொன்ன பிறகுதான் உட்கார்ந்தார் . அந்த அளவிற்கு காங்கிரசின் உயர்மட்ட தலைவர்கள் மீது அளவற்ற அன்பு, பாசம், மரியாதை வைத்திருந்தார் எம்.ஜி.ஆர்.*தனது திரைப்படங்களில் காந்தியின் புகைப்படங்கள், அவரை பற்றிய வசனங்கள் , பாடல்கள்* அதிகம் இடம் பெறும்படி பார்த்துக் கொண்டார் .* எனவே தேசியக்கொள்கைக்கு எதிராக , குந்தகம் விளைவிக்கும் வகையிலோ , பிரிவினை வாதங்களை ஆதரிக்கும் செயலிலோ எம்.ஜி.ஆர். எப்போதும் ஈடுபட்டதில்லை .


மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன் படத்தில் வரும் பாடலில் தாயகத்தின் சுதந்திரமே எங்கள் கொள்கை , தன்மானம் ஒன்றேதான் எங்கள் செல்வம்*சுதந்திரம் என்பது தாய்நாட்டின் மீதுள்ள நேசம்,பாசம், பற்று ,மதிப்பு, மரியாதை*என்பதுதான் . பல்லாண்டு வாழ்க படத்தில் ஒரு காட்சியில் கல்லூரி மாணவிகளை சந்திக்கும்போது ஒரு இந்தியா வரைபடத்தின் பின்னால் ஒரு மனிதனின் உருவம் வரைந்து கொண்டிருப்பார் . பின்பு அந்த வரைபடத்தை பல துண்டுகளாக கிழித்துவிட்டு இப்போது இந்தியா வரைபடத்தை ஒன்று சேருங்கள் என்று சொல்லுவார் .அவர்கள் ஒன்றுசேர்க்க முடியாமல் திண்டாடுவார்கள் .அப்போது மனிதனின் உருவத்தை ஒன்று சேருங்கள் என்பார் .அவர்கள் மனிதனின் அங்க அடையாளங்கள், உறுப்புகள் வைத்து வெகு சுலபமாக ஒன்று சேர்த்துவிடுவார்கள் .* அப்போது எம்.ஜி.ஆர். இப்படி மனிதனின் உருவத்தை ஒன்று சேர்த்துவிட்டால் அதை அப்படியே திருப்பி பார்க்கும்போது , இந்தியா வரைபடமும் சரியாக வந்துவிடும் இல்லையா . அப்படி ஒவ்வொரு தனி மனிதனும் சரியாக இருந்தால் , ஒட்டு மொத்த இந்தியாவே சரியாகிவிடும் இல்லையா என்று மாணவிகளுக்கு அறிவுரை கூறுவார் .* இதயவீணை படத்தில் வரும் காஷ்மீர் பியுட்டிபுல் பாடலில் , தாய் நாட்டிற்காக எல்லையில் காவல் காக்கும் படைவீரர்கள் பற்றி சில வரிகள் இருக்கும்* அதாவது எல்லைக்கு காவல் நிற்கும் வீரர்கள், அன்னைக்கு தொண்டு செய்யும் பிள்ளைகள் என்று .இப்படி பல படங்களில் , பாடல்களில், காட்சிகளில், வசனங்களில், தேச பக்தி, நாட்டுப்பற்று,*தேசிய ஒற்றுமையை* வலியுறுத்தி எம்.ஜி.ஆர். நடித்து தன் தேசபற்றை,தேசத்தொண்டை* வெளிப்படுத்தி* தேசத்தை நேசித்தவர் எம்.ஜி.ஆர்.*


திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்த காலத்தில் ராணுவத்தில் சேர்வது என்று ஒரு திட்டம் இருந்தது .* தமிழக முதலவர் ஆனபின்பு ஒரு கட்டத்தில்* *ராணுவத்தையே சந்திக்க தயார் என்று அறிவிப்பும் வெளியிட்டுள்ளார் .*அப்படி ஒரு சரித்திரத்தை உருவாக்கிய எம்.ஜி.ஆர். அவர்களுக்கு தேசத்தின் மீதும் , தேச தியாகிகள் மீதும் இருந்த பற்று, பாசம், நேசம் , மதிப்பு, மரியாதை ஆகியன ஒருபோதும் குறைந்ததில்லை* மற்ற தகவல்கள் அடுத்த அத்தியாயத்தில் .தொடரும்*


நிகழ்ச்சியில் ஒளிபரப்பான பாடல்கள் /காட்சிகள் விவரம்*
---------------------------------------------------------------------------------------------
1.கடவுள் வாழ்த்து பாடும்* - நீரும் நெருப்பும்*

2. நாடு அதை நாடு - நாடோடி*

3..அச்சம் என்பது மடமையடா* - மன்னாதி மன்னன்*

4.எம்.ஜி.ஆர். -எம்.என்.ராஜம் உரையாடல் -நாடோடி மன்னன்*

5.இது நாட்டை காக்கும்* கை - இன்றுபோல் என்றும் வாழ்க*

6.பட்டத்து* ராஜாவும் , பட்டாள சிப்பாயும் - மீனவ நண்பன்*

7.நான் படித்தேன் காஞ்சியிலே நேத்து* = நேற்று இன்று நாளை*

orodizli
13th August 2020, 07:26 PM
இந்தப் பேச்சாளர்கள் அனைவருக்கும் 'எம்.ஜி.ஆர்.' மட்டுமே இலக்கு; அவருக்குப் பெண்கள் மத்தியில் இருந்த அபரிமிதமான செல்வாக்கு, அவர்களைப் பாடாய்ப் படுத்தியது. ஆபாசப் பேச்சால் பெண்களிடம் செல்வாக்கை இழந்த திமுக... எம்.ஜி.ஆர். காட்டிய பொது நாகரிகம்..!
.................................................. .........
1970களின் தொடக்கம். தமிழக அரசியல் மேடைகளில், அவதூறுகளும் ஆபாசங்களும் மிகுந்து இருந்த காலம். ஒரு குறிப்பிட்ட கட்சி, ஆபாசப் பேச்சாளர்களை அடுக்கடுக்காய் களம் இறக்கியது. இவர்களின் பேச்சுகளைக் கேட்டு ரசிப்பதற்கு என்றே ஒரு பட்டாளம் எல்லா ஊர்களிலும் இருந்தது.
என்ன ஒன்று... இவ்வகைப் பேச்சாளர்கள் வருகிறார்கள் என்றால், அன்றைக்கு, ஊரில் ஒரு பெண்மணி வீட்டை விட்டு வெளீயில் தலைகாட்ட முடியாது. முழுக்கவும் ஆண்களுக்கான அதிலும் ஆபாசத்தை ரசிக்கிற ஆண்களுக்கான கும்பல் மட்டும் மேடையைச் சுற்றி இருக்கும். இந்தப் பேச்சாளர்கள் அனைவருக்கும் 'எம்.ஜி.ஆர்.' மட்டுமே இலக்கு; அவருக்குப் பெண்கள் மத்தியில் இருந்த அபரிமிதமான செல்வாக்கு, அவர்களைப் பாடாய்ப் படுத்தியது. தங்களது ஆற்றாமையை ஆத்திரத்தை, கொச்சைப் பேச்சாக கூச்சம் இன்றிப் பரப்பினார்கள்.
தாய்க்குலத்துக்கு எம்.ஜி.ஆர். மீது இருந்த அளவிட முடியாத பாசம் ஒருபுறம்; அவருக்கு எதிராக இறக்கி விடப்பட்ட சிறப்புப் பேச்சாளர்களின் ஆபாசம் மறுபுறம். இந்த 'யுக்தி' (குயுக்தி) எம்.ஜி.ஆர். காலத்துக்குப் பிறகு, ஜெயலலிதா காலத்திலும் தொடர்ந்தது. இதனால் பெண்களின் ஓட்டு என்றைக்குமே 'எதிர்க் கட்சிக்கு' கிட்டாமலே போனது. இது ஒரு வகையில், அதிமுகவுக்கு எதிர்பாராமல் கிடைத்த 'போனஸ்'! இன்றளவும் அதிமுகவின் தீவிர ஆதரவாளர்களாகப்
பெண்கள் இருப்பதற்கு எதிர் முகாமின் ஆபாசப் பிரச்சாரமும் ஒரு காரணம்.
சரி.. இத்தனை பேர் எம்.ஜி.ஆர். என்கிற தனி மனிதரைக் குறி வைத்துத் தாக்கினார்களே... இதற்கு எம்.ஜி.ஆர். தந்த பதில் என்ன..? ''பெயத்தக்க நஞ்சுண் டமைவர் நயத்தக்க நாகரிகம் வேண்டு பவர்'' என்கிறது உலகப் பொதுமறை. இதனை அப்படியே தனது வாழ்க்கையில் கடைப்பிடித்தார் மக்கள் திலகம்.
1972 அக்டோபர் 17 - அதிமுக தோன்றிய நாள் தொட்டு, 1987 டிசம்பர் 24 அன்று அமரர் ஆன நாள் வரையில், யாரைப் பற்றியும் அநாகரிகமாக ஒரு வார்த்தை கூட ஒரு நாளும் எம்.ஜி.ஆர். பேசியதே இல்லை. 1977 தமிழக சட்டசபைக்கான பொதுத் தேர்தலின் போது எம்.ஜி.ஆர். பேசிய பரப்புரை / விளக்கவுரை குறித்து ஏற்கனவே குறிப்பிட்டு இருந்தோம். அதற்கு இணையான தேர்தல் பிரச்சாரப் பேச்சு இன்றுவரை இல்லை. இது குறித்து விரிவாகப் பிறகு பார்ப்போம்.
தனக்கு எதிராக அவதூறுப் பிரச்சாரம் செய்த கட்சித் தலைமை குறித்து தனது இந்த உரையில் எம்.ஜி.ஆர். கூறியது இவ்வளவுதான். 'நாநயம் இருந்தால் மட்டும் போதாது; நாணயம் கொண்டவர்களாகவும் இருத்தல் வேண்டும்'. பெயரைக் கூடக் குறிப்பிடவில்லை; 'நாநயம்', 'நாணயம்' என்று இரண்டு சொற்களை மட்டும் சொல்லி இருப்பார். எம்.ஜி.ஆர். யாரைக் குறித்து என்ன சொன்னார் என்று தமிழகத்தின் அடித்தட்டு மக்களுக்கு நன்றாகப் புரிந்து போனது.
1977இல் அமோக வெற்றி பெற்று அரியணை ஏறினார் எம்.ஜி.ஆர். பதவி ஏற்பு முடிந்து, முதல் முறையாக முதல்வராக மக்கள் முன் உரையற்றினார்.சென்னையில் அண்ணா சிலை மேடையில் இருந்து அவர் பேசியதை மக்கள் திரண்டு வந்து கேட்டனர். அடுத்ததாக, 1980ஆம் ஆண்டு. எந்தவொரு நியாயமான காரணமும் இன்றி, ஜனநாயக நெறிமுறைகளுக்கு முற்றிலும் விரோதமாக, எம்.ஜி.ஆர். ஆட்சி, பிரிவு 356இன் கீழ் நீக்கப் பட்டது.
இன்று ஜனநாயகக் காவலர்களாக வேடம் போடுகிறவர்கள், மாநில உரிமை பற்றி மூச்சு விடாமல் முழங்குகிறவர்கள், மக்கள் தேர்ந்து எடுத்த மக்கள் திலகத்தின் ஆட்சியை 'டிஸ்மிஸ்' செய்தார்கள்.1977ஐ விடவும் மோசமாக, எம்.ஜி.ஆர். மீது, தனிப்பட்ட அவதுறுப் பிரச்சாரத்தை அள்ளி வீசியது பிரதான எதிர்க் கட்சி. எம்.ஜி.ஆர். சற்றும் கலங்கவில்லை. மக்களைச் சந்தித்து நியாயம் கேட்கிறேன் என்று கிளம்பி விட்டார். அப்போதும் தனக்கு எதிராக செயல்பட்ட சதிகாரர்களைக் குறித்து ஒரு வார்த்தை பேசவில்லை.
'நான் செய்த தவறு என்ன..?' என் மீது தவறு இருந்தால் தண்டியுங்கள்... இல்லையேல், என்னை வெற்றி பெறச் செய்யுங்கள்'' என்று மட்டுமே சொல்லிச் சென்றார். மதுரை மேற்கு தொகுதியில் ஒரு பிரமாண்டமான 'போஸ்டர்'. 'என்ன தவறு செய்தேன்..?' என்கிற கேள்வியுடன், 'கொடுத்துச் சிவந்த கரம் கும்பிட்டுக் கேட்கிறது. வாக்களியுங்கள் இரட்டை இலைக்கே..' என்று கேட்டது. தமிழ்நாடு முழுக்க இதுதான் அதிமுகவின் பிரச்சாரமாக இருந்தது.
அராஜகமாக ஆட்சியில் இருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்ட போதும் கூட, தனது பேச்சில் நாகரிகத்தையும் கண்ணியத்தையும் கடைப்பிடித்தார் எம்.ஜி.ஆர். மனம் நெகிழ்ந்து போன மக்கள் அமோக ஆதரவு நல்கி, முன்னினும் அதிக இடங்களைத் தந்து மகிழ்ந்தனர், இரண்டாவது முறையாக முதல்வர் ஆனார் பொறுப்பு ஏற்ற கையோடு, சென்னை அண்ணா சிலை அருகில் இருந்து உரையாற்றினார் எம்.ஜி.ஆர். பல லட்சம் மக்கள் திரண்டு வந்து கேட்டனர். அந்த மக்கள் கடலில் நானும் ஒருவன்!
காலத்தின் கோர விளையாட்டில், எம்.ஜி.ஆர். உடல் நலம் பாதிக்கப் பட்டார். சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றார். 1984 அக்டோபர் 31. அப்போது இந்தியப் பிரதமராக இருந்த திருமதி இந்திரா காந்தி, தனது மெய்க் காப்பாளர்களால் சுடப்பட்டு மரணம் அடைந்தார். அதனைத் தொடர்ந்து அவரது மகன் ராஜிவ் காந்தி பிரதமர் பொறுப்பு ஏற்றுக் கொண்டார். உடனடியாக, மக்களைவைக்குப் பொதுத் தேர்தலும் அறிவித்தார். அது சமயம் அதிமுகவும் முன்னதாகவே பொதுத் தேர்தலைச் சந்திக்க விரும்பி, தனது ஆட்சிக் காலத்தைக் குறுக்கிக் கொண்டு, மக்களவையுடன் மாநில சட்டசபைக்கும் தேர்தல் நடத்த வழி விட்டது.
அமெரிக்காவின் ப்ரூக்ளின் மருத்துவ மனையில் படுத்து இருந்தார் எம்.ஜி.ஆர். இங்கே தமிழகத்தில் சட்டசபைக்கான பொதுத் தேர்தல்! அப்போதும் பிரதான எதிர்க் கட்சி நேர்மறை அரசியல் செய்ய முன் வரவில்லை. 'எம்.ஜி.ஆர். இறந்து விட்டார்' என்று பொய்ப் பிரச்சாரம் செய்தது. அதுமட்டுமல்ல; 'ஒருவேளை எம்.ஜி.ஆர். திரும்ப வந்தால், அவரிடமே ஆட்சியை ஒப்படைப்பேன்' என்றெல்லாம் 'வீர வசனம்' பேசினார்கள். இந்தியத் தேர்தல் வரலாற்றில் முதல் முறையாக, 'எதிரணி வேட்பாளர் வந்து விட்டால், அவரிடமே ஆட்சியைத் தந்து விடுவேன்' என்று வெட்கமே இல்லாமல் ஓட்டு கேட்ட கேலிக் கூத்து அரங்கேறியது
இதனை முறியடிக்க, மருத்துவ மனையில் இருந்தபடி, வீடியோவில் தோன்றினார் எம்.ஜி.ஆர் 'தலைவர் உடல் நலம் தேறி வருகிறார்; விரைவில் தமிழகம் திரும்பி முதல்வர் பொறுப்பு ஏற்பார்' என்று அப்போதைய கொள்கைப் பரப்புச் செயலாளர் ஜெயலலிதா ஊர்ஊராகச் சென்று தீவிரப் பிரச்சாரம் செய்தார். மீண்டும் ஒருமுறை எதிர்க்கட்சியின் அவதூறுப் பொய்ப் பிரச்சாரம் முறியடிக்கப் பட்டது. மீண்டும் ஒருமுறை, முன்னை விடவும் அதிக இடங்கள் பெற்றது அதிமுக. மூன்றாவது முறையாக முதல்வர் ஆனார் எம்.ஜி.ஆர்.
சிகிச்சை முடிந்து சென்னை திரும்பிய எம்.ஜி.ஆர்., பரங்கிமலை மைதானத்தில் பேசினார். இப்போதும், தலைவரைக் காண்பதற்காக மக்கள் வெள்ளம். அவர்களில் நானும் ஒருவன். தமிழ்நாட்டு மக்கள் தன் மீது வைத்த அபரிமிதமான அன்புக்கு கன்ணீர் மல்க நன்றி கூறினார், மற்றபடி, ஒரு வார்த்தை கூட யாரையும் சாடிப் பேசவில்லை. அதுதான் எம்.ஜி.ஆர். அரசியல் நாகரிகத்தில் உச்சம் தொட்டவர் அவர். தனது திரையுலக வாழ்க்கையின் பிற்காலத்தில், அவரைக் கடுமையாக எதிர்த்துப் பேசியவர்களில் ஒருவர் - கண்ணதாசன். மகாகவி பாரதிக்குப் பிறகு, தமிழ் மொழிக்கு மகுடம் சூட்டி மகிழ்ந்த மாபெரும் மக்கள் கவிஞன். 'கவியரசு' என்ற சொல்லுக்கு முற்றிலும் தகுதி வாய்ந்த தன்னிகரில்லாக் கவிஞன்.
தமிழக முதல்வராக எம்.ஜி.ஆர். பொறுப்பு ஏற்ற பிறகு, அரசவைக் கவிஞராக யாரை நியமிக்கலாம் என்கிற கேள்வி எழுந்த போது, சற்றும் யோசிக்காமல் கவியரசர் கன்ணதாசன் மட்டுமே பொருத்தம் ஆனவர் என்று தீர்மானித்தார். அப்போது, பாடலாசிரியர் வாலி, தலைவருக்கு மிகவும் நெருக்கமாக இருந்தார். தனது காரில் அவரை அழைத்துக் கொண்டு போன எம்.ஜி.ஆர். அவரிடமே இந்த யோசனையை சொன்னார். உடனடியாக முழு மனதுடன் ஆமோதித்தார் கவிஞர் வாலி.
நன்றாகப் பாருங்கள். கண்ணதாசனுக்குப் பதவி தருவது மட்டுமல்ல; தன்னை நம்பி, தன்னுடன் நெருங்கி இருக்கிற கவிஞனுக்கும் மனவருத்தம் இருக்கக் கூடாது என்று எண்ணியவர் எம்.ஜி.ஆர். கவியரசு கன்ணதாசன் போன்ற ஒரு மாபெரும் யுகக் கவிஞனுக்கு அரசவைக் கவிஞர் என்கிற பதவி மிகச் சாதாரணம்தான். ஆனால் அன்னாருக்கு அப்பதவியை வழங்கியதன் மூலம், தமிழ் மொழியின் மீது தலைவருக்கு இருந்த தனியார்வம் நன்கு வெளிப்பட்டது. கூடவே அவரின் நாகரிக அணுகுமுறையும் நமக்குப் புரிந்தது. பொது மேடையில் கடுஞ்சொல் உதிர்க்காத, புன்னகையை மட்டுமே வீசிச் சென்ற அந்த சரித்திரத் தலைவன், நிகழ்த்திக் காட்டிய மற்றொரு சாதனை - இந்திய ஜனநாயகத்தில் ஒரு முக்கிய மைல் கல். அது என்ன..?
(வளரும்.....).........

orodizli
13th August 2020, 07:28 PM
எம்ஜிஆர் - திரையுலகில்
முடிசூடா மன்னர். !m.g.r.

எப்போதுமே எடுத்தேன், கவிழ்த்தேன் என்று செயல்பட்டவர் அல்ல. திரையுலகில் முடிசூடா மன்னராக இருந்தபோதும் சரி; அரசியலில் கட்சியின் தலைமைப் பொறுப்பில் இருந்தபோதும் சரி, அவரை யாரும் கேள்வி கேட்க முடியாது என்ற நிலை இருந்தபோதிலும் எதிர் கருத்துக்களுக்கும் மதிப்பளித்தவர் அவர். அதை விட முக்கியம், தனது கருத்தை செயல்படுத்துவதில் தானே முதலில் நிற்பார்.

திமுகவில் இருந்து எம்.ஜி.ஆர். நீக்கப்பட்ட பிறகு, அதிமுக கொடியிலேயே தனது தலைவரான அண்ணாவின் உருவத்தை பொறித்தார். 1976-ம் ஆண்டு கட்சியினருக்கு முக்கிய அறிவிப்பு ஒன்றை எம்.ஜி.ஆர். வெளி யிட்டார். அதிமுகவின் ‘தென்னகம்’ நாளிதழில் அந்த அறிவிப்பு வெளி யானது. ‘எனது ரத்தத்தின் ரத்தமான உடன்பிறப்புக்கள் அண்ணா உருவம் பொறித்த நமது கட்சியின் கொடியை பச்சை குத்திக் கொள்ள வேண்டும்’ என்பதுதான் அந்த அறிவிப்பு. ‘பச்சை குத்திக் கொள்ள வேண்டும்’ என்று கட்சியினருக்கு எம்.ஜி.ஆர். கூறியிருந்தாரே தவிர, அது கட்டாயம் என்று அதில் சொல்லவில்லை.

‘‘ஒருவரை ஒருவர் முன்பின் தெரியா விட்டாலும், கட்சிக் கொடியை பச்சை குத்திக் கொள்வதன் மூலம் அதைப் பார்த்ததும் ‘இவர் நம்ம ஆள்’ என்று அடையாளம் கண்டுகொண்டு கட்சியினரிடையே ஒற்றுமை மனப் பான்மை ஏற்படும், ஒருங்கிணைந்து செயல்பட உதவும்’’ என்று எம்.ஜி.ஆர். கூறினார். இதை ஏற்று லட்சக்கணக்கான தொண்டர்கள் கட்சிக் கொடியை பச்சை குத்திக் கொண்டனர்.

எம்.ஜி.ஆரின் இந்த அறிவிப்புக்கு கட்சியிலேயே எதிர்ப்பும் எழுந்தது. படத் தயாரிப்பாளரான கோவை செழியன், விருதுநகர் சீனிவாசன் போன்றவர்கள் பகிரங்கமாக எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்நிலையில், ‘‘கட்சியினர் பச்சை குத்திக் கொள்ள வேண்டும் என்பது எனது விருப்பம். இதை ஏற்பவர்கள் செய்யலாம். பச்சை குத்திக் கொள் ளாதவர்கள் அண்ணாவின் கொள் கையை விரும்பாதவர்கள் என்றோ, கட்சியில் இருக்க தகுதியில்லாதவர்கள் என்றோ கூற முடியாது’’ என்று எம்.ஜி.ஆர். விளக்கம் அளித்தார்.

இப்படி, மாற்றுக் கருத்துக்களுக்கும் ஜனநாயகரீதியில் எம்.ஜி.ஆர். மதிப்பு அளித்தார் என்பது மட்டுமல்ல; கட்சியையும் தன்னையும் கடுமையாக விமர்சித்ததால் நீக்கப்பட்ட கோவை செழியன் போன்றவர்கள் வருத்தம் தெரிவித்ததையடுத்து, அவர்களை மீண்டும் கட்சியில் சேர்த்துக் கொண்டார். தனது வழக்கமான இயல்புப்படி, தன்னை விமர்சித்தவர்களுக்கும் பின்னர் கட்சியிலும் ஆட்சியிலும் பதவிகள் கொடுத்தார்.

எல்லாவற்றையும் விட முக்கியமான விஷயம். ‘ஊருக்குத்தான் உபதேசம் எனக்கோ, என் குடும்பத்துக்கோ அல்ல’ என்று எம்.ஜி.ஆர். எப்போதுமே செயல்பட்டதில்லை. கட்சியினர் பச்சை குத்திக் கொள்ள வேண்டும் என்று அறிக்கை வெளியான உடனே அதை செயல்படுத்திய முதல் நபர் எம்.ஜி.ஆரேதான். சென்னை மாம்பலம் ஆற்காடு தெருவில் உள்ள அலுவலகத்துக்கு (இப்போது அந்த இடம்தான் நினைவு இல்லமாக உள்ளது) பச்சை குத்துபவரை வரவழைத்து தனது கையில் பச்சை குத்திக் கொண்டார் எம்.ஜி.ஆர்.

இதில் சுவாரசியமான ஒரு விஷயம், அதிமுகவில் சேர்ந்து பிறகு கட்சி மாறிய நாஞ்சில் மனோகரன் போன்றவர்கள் கையில் கடைசி வரை பச்சை குத்தப்பட்ட அதிமுக கொடி இருந்தது. இரண்டு நாட்களுக்கு முன் பா.ஜ.க-வில் சேர்ந்த நடிகர் விஜயகுமார் கையிலும் அந்தப் பச்சை உள்ளது.

எம்.ஜி.ஆர். நடித்த ‘பல்லாண்டு வாழ்க’ திரைப்படத்தின் பல காட்சிகள் கர்நாடக மாநிலம் கலசபுரா என்ற இடத் தில் படமாக்கப்பட்டன. அங்கு கதைக்கு ஏற்றபடி பாழடைந்த கட்டிடம் போல ‘செட்’ போட வேண்டும். இரண்டு, மூன்று முறை அமைத்தும் பலத்த காற்று அடித்து ‘செட்’ வீணாகிவிட்டது. காற்று சுழன்றடிக்காத இடமாக பார்த்து ‘செட் ’அமைக்குபடி எம்.ஜி.ஆர். சொல்லிவிட்டார். காற்று அடிக்காத பகுதியாக பார்த்த இடம் ஒரு குன்று பகுதி. அந்த இடத்தில் ‘செட்’ போட வேண்டும் என்றால் அங்கு பொருட்கள் வந்து சேர ஆகும் செலவும் அதிகமாகும். எம்.ஜி.ஆர். ஆலோசித்தார்.

அந்த ஊர் மக்களின் பிரதான தொழில் கல் உடைப்பது. அங்குள்ள மக்களையும் படப்பிடிப்புக்கு வந்த தொழிலாளர்களையும் கொண்டே சிறு குன்றை உடைக்கச் செய்து, பெருங் கற்களை கொண்டு பலமான காற்றடித்தா லும் அசைக்க முடியாதபடி, பாழடைந்த வீடு போன்ற கட்டிடம் கட்டப்பட்டது. இதில் ஒரே கல்லில் மூன்று மாங்காய் அடித்துவிட்டார் எம்.ஜி.ஆர்.!

படப்பிடிப்புக்குக் குறைந்த செலவில் ‘செட்’ தயாரானது. குன்று உடைக்கப்பட்டதால் குன்றை சுற்றி ஊருக்கு வராமல் நேர்வழியில் செல்ல மக்களுக்கு பாதை கிடைத்தது. முக்கியமாக, கல் உடைப்பதன் மூலம் ஊர் மக்களுக்கு ஒரு மாதத்துக்கு வேலை கிடைத்தது.

அப்போது, நெகிழச் செய்யும் ஒரு சம்பவம். குன்றை உடைக்கச் சொன்ன எம்.ஜி.ஆர்., வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கவில்லை. பலர் தடுத்தும், ‘‘விரைவில் வேலை ஆக வேண்டும், எல்லாரும் சேர்ந்து செய்தால்தான் முடியும்’’ என்று கூறி மக்களுடன் சேர்ந்து தானும் கல் உடைத்தார்.

தான் சொன்னதற்கு, தானே முன்னுதாரணமாக வாழ்ந்தவர் எம்.ஜி.ஆர்.

கூட்டங்களில் எம்.ஜி.ஆர். பேசும்போது ‘‘என் ரத்தத்தின் ரத்தமான உடன்பிறப்புக்களே’’ என்று கூறி மக்களின் ஆரவாரத்துக் கிடையேதான் பேச்சைத் தொடங்குவார். இது குறித்து அவரிடம் கேட்கப்பட்டது. துப்பாக்கிச் சூடு சம்பவத் தால் சிகிச்சை பெற்றபோது, எம்.ஜி.ஆருக்கு ஏராளமான ரத்தம் செலுத்தப்பட்டது.

‘‘எனக்கு ரத்தம் அளித் தவர்கள் யார் என்று தெரி யாது; ரத்தம் கொடுத்தவர் களுக்கே கூட அது எனக்குத் தான் அளிக்கப்பட்டது என்று தெரிந்திருக்காது. யார், யார் ரத்தம் என் உடலில் கலந்திருக்கிறதோ? அதனால்தான் ‘ரத்தத்தின் ரத்த மான’ என்று குறிப்பிடுகிறேன்.........’’ என்று விளக்கம் அளித்தார் எம்.ஜி.ஆர்.

orodizli
13th August 2020, 07:28 PM
எம்.ஜி.ஆர் புகழ் இன்றும் நிலைத்திருக்க காரணம் என்ன?

Mgr முதல்வர் ஆன பின் ஒரு நாள் கோட்டைக்கு புறப்படும் முன் மலை என குவிந்து இருந்த அவருக்கு வந்த கடிதங்களில் கிளி ஜோசியர் எடுப்பதை போல ஒரு கடிதத்தை எடுக்கிறார்.காரில் கோட்டைக்கு போய் கொண்டே படிக்கிறார். அது ஒரு திருமண பத்திரிகை. அந்த திருமண பத்திரிகையில் எந்த ஒரு இடத்திலும் புரட்சிதலைவர் பேரோ அல்லது கட்சிக்காரர் பேரோ அல்லது தான் யார் என்ன விவரம் என்று இணைப்பு கடிதம் கூட இல்லாமல் வந்த திருமண பத்திரிகை மட்டும் இருந்தது. உதவி கேட்க வில்லை கலந்து கொள்ள கோரிக்கை இல்லை. மனதில் ஏதோ தோன்றிய எம்ஜியார் ,பிறகு தன் ரகசிய காவல் நண்பர் மற்றும் ஒரு கட்சிக்காரரை வர சொல்லி இந்த பத்திரிகை அனுப்பியது யார், அவர் எங்கு இருக்கிறார் என்ற விவரம் சேகரிக்க சொல்கிறார்.
பத்திரிகையில் இருந்த முகவரி கொண்டு பார்த்ததில் அது சென்னை வடபழனி ராம் திரையரங்கம் அருகில் சென்று பார்க்கும் போது அந்த அரங்கத்தின் முன்னால் இருந்த பிளாட்பாரத்தில் ஒரு செருப்பு தெய்க்கும் தொழிலாளி உள்ள இடம் என்று தெரிகிறது. அவர் செருப்பு தைக்கும் உபகரணங்களுடன் சாமி படங்கள் கூட இல்லாமல் அந்த பெட்டியின் மேல நம் இதய தெய்வம் படம் மட்டும் ஒட்ட பட்டு இருந்தது விவரங்களை கேட்ட தன் மகள் திருமணம் நடக்கும் விஷயம் தனக்கு தெரிய வேண்டும் ஆனால் அதற்கு எந்த உதவியும் கேட்காத அந்த உண்மை தொண்டனை நினைத்து உருகுகிறார்.
நாளும் வந்து விட்டது. காலை 9.00 மணிக்கு முகூர்த்தம். 8.45 மணி அளவில் காவல் துறை அணிவகுப்பு அந்த ஏழை தொழிலாளி வீட்டு முன்னால் காரணம் தெரியாமல் விழிக்கும் திருமண வீட்டார். மணமகன் தாலி கையில் எடுக்கும் நேரத்துக்கு சில நிமிடங்கள் முன்னால் வந்து இறங்குகிறார் வாத்தியார். 4777 வாகனம் அந்த எளியவன் வீட்டு முன்னால் வந்து நிற்பதை அந்த பகுதி மக்கள் மற்றும் பத்திரிகை அனுப்பிய அந்த தொண்டன் எதிர்பார்க்கவில்லை. கண்கள் கலங்கி இதயம் நொறுங்கி நின்ற தொண்டனுக்கு அள்ளி கொடுத்து விட்டு "நீ மட்டும்தான் சொல்லாமல் கொள்ளாமல் செய்வாயா நானும் கூட தான்" என்று சொன்னவர் , காலை உணவை அங்கே முடித்து கொண்டு புறப்படுகிறார் எட்டாவது அதிசயம் எம்ஜியார். செருப்பு தெய்க்கும் தொழிலாளி குடும்பத்தில் பிறந்தது போல மதுரைவீரனில் நடித்து மட்டும் வாழ வில்லை நடைமுறை வாழ்விலும் வாழ்ந்தார் வாத்தியார்...
இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்
இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும்...
பல்லாண்டு, பசுமையுடன் நம் மனத்தில் நேசப்புன்னகையுடன், நம்மை அன்புடன் அரவணைத்து, இளமை மாறா முகத்துடன் என்றும் உற்சாகப்படுத்திக்கொண்டே இருக்கிறார்.............

orodizli
13th August 2020, 07:29 PM
பாடல் பிறந்த கதை.
மக்கள்திலகம் எம்ஜிஆருக்கும், கவியரசர் கண்ணதாசனுக்கும் கருத்து வேறுபாடுகள் இருந்த காலம் அது.. இந்த நேரத்தில் எம்ஜிஆர் உறுதியாச் சொன்னார்.
“இந்தக் காட்சிக்கான பாடலை கண்ணதாசன்தான் எழுத வேண்டும். அவரால் மட்டுமே நான் நினைப்பதை வரிகளாகக் கொண்டு வர முடியும்.” – எம்.ஜி.ஆரின் இந்த திடமான வார்த்தைகளைக் கேட்டு சுற்றி இருந்த படக் குழுவினர் திகைத்துப் போனார்கள் .
“சங்கே முழங்கு” என்ற படத்திற்கான பாடல் அது..!
மதுவின் தீமைகளை விளக்கி கதாநாயகன் எம்.ஜி.ஆர். பாடுவதாக வரும் பாடல் ;
அதை , மதுவிலேயே வாழ்ந்து கொண்டிருக்கும் கண்ணதாசனைக் கொண்டு எழுதச் சொன்னால் எப்படி ..?
சரி .. எம்.ஜி.ஆர். சொன்னால் சொன்னதுதான்..!
வேறு வழி இல்லை..! படக் குழுவினர் கண்ணதாசனிடம் சென்று சொன்னார்கள் . ஒரு நிமிடம் ஆச்சரியப்பட்ட கண்ணதாசன் பின்பு பலமாகச்
சிரித்தார் .
சில காலம் முன் அவர் எழுதி இருந்த ஒரு கவிதை :
“ஒரு கையில் மதுவும் ஒரு கையில் மாதுவும்
சேர்ந்திருக்கின்ற வேளையிலே என்
ஜீவன் பிரிய வேண்டும் – இல்லையென்றால்
என்ன வாழ்க்கை நீ வாழ்ந்தாயென்றே
எனை படைத்த இறைவன் கேட்பான்..”
கண்ணதாசன் எழுதிய இந்தக் கவிதை , எம்.ஜி.ஆருக்கும் தெரியும்..!
அப்படி இருந்தும் தன்னை எம்.ஜி.ஆர் அழைக்கிறார். மதுவின் தீமைகளை விளக்கி பாடல் எழுதச் சொல்கிறார் என்றால்…?
புரிந்து கொண்டார் கண்ணதாசன்... !
மதுவினால் ஒரு மனிதன் படும் அவஸ்தைகளை மதுப் பழக்கம் இல்லாத ஒருவனால் , அனுபவித்து எழுத முடியாது .
எனவேதான் மதுக் கோப்பைக்குள் குடி இருக்கும் தன்னை தேர்ந்தெடுத்து இந்தப் பாடலை எழுத அழைக்கிறார் எம்.ஜி.ஆர்.
கண்ணதாசனுக்கு தெளிவாக தெரிந்தது..
உடனே 'சங்கே முழங்கு' படப்பிடிப்புத் தளத்திற்குப் புறப்பட்டார். அங்கே எம்ஜிஆர் கவிஞரை வரவேற்றார். பாடல் எழுத தயாரானார்..! கண்ணதாசன்.
“சிலர் குடிப்பது போலே நடிப்பார்
சிலர் நடிப்பது போலே குடிப்பார்” பாடலுக்கான பல்லவியில்...
கோப்பையிலிருந்து வழியும் மதுவாக ,
பொங்கி வந்து விழுந்தன வார்த்தைகள் ..!
“மதுவுக்கு ஏது ரகசியம் ?
அந்த மயக்கத்தில் எல்லாம் அவசரம்
மதுவில் விழுந்தவன் வார்த்தையை
மறுநாள் கேட்பது அவசியம் !”
“ஆஹா..” என்றார் எம்.ஜி.ஆர்.
அடுத்து கண்ணதாசனிடமிருந்து வழிந்த வார்த்தைகள் :
“அவர் இவர் எனும் மொழி
அவன் இவன் என வருமே”
கூர்ந்து கவனித்தார் எம்.ஜி.ஆர்.
கண்ணதாசன் அடுத்து சொன்ன வரிகள் :
“நாணமில்லை வெட்கமில்லை
போதை ஏறும் போது
ந*ல்ல*வ*னும் தீய*வ*னே
கோப்பை ஏந்தும் போது”
“சபாஷ்..!”-பரவசப்பட்டுப் போனார் எம்.ஜி.ஆர். இதை விட மதுவின் தீமைகளை எவரால் சொல்ல இயலும்..?
கண்களை மூடியபடி கண்ணதாசன் யோசித்தார்..மதுவின் தீமைகளை சொல்லி விட்டோம். எம்.ஜி.ஆருக்கு ஏற்றபடி சில முற்போக்கான விஷயங்களை சொல்ல வேண்டாமா..?
“எழுதிக் கொள்ளுங்கள்” என்ற கண்ணதாசன் உதடுகளிலிருந்து உதிர்ந்த வார்த்தைகள்...
“புகழிலும் போதை இல்லையோ..
பிள்ளை மழலையில் போதை இல்லையோ..
காதலில் போதை இல்லையோ..
நெஞ்சின் கருணையில் போதை இல்லையோ..!
மனம் மதி அறம் நெறி தரும் சுகம் மது தருமோ..?
நீ நினைக்கும் போதை வரும்
நன்மை செய்து பாரு..
நிம்மதியை தேடி நின்றால்
உண்மை சொல்லிப் பாரு.. !”
சொல்லி முடித்து விட்டுப் புறப்பட்டுப் போய் விட்டார் கண்ணதாசன்.
படக் குழுவினரை ஏறிட்டுப் பார்த்தார் எம்.ஜி.ஆர். “என்ன..? கவிஞரை நான் ஏன் அழைத்தேன் என்று இப்போது தெரிகிறதா..?”
ஆம்...!
யாரிடம் எதை எப்படி கேட்டு வாங்க வேண்டும் என்ற வித்தை எம்.ஜி.ஆருக்கு தெரிந்திருந்தது ;
சரி .. இப்படி எந்தச் சூழ்நிலையானாலும் அதற்கேற்ற பாடல் எழுதும் வித்தை ..
கவிஞருக்கு எங்கிருந்து வந்தது ..?
இதோ.. அதை கண்ணதாசனே சொல்லி இருக்கிறார் :
“வட்டிக் கணக்கே
வாழ்வென் றமைந்திருந்த
செட்டி மகனுக்கும்
சீர்கொடுத்த சீமாட்டி..!
தோண்டுகின்ற போதெல்லாம்
சுரக்கின்ற செந்தமிழே..
வேண்டுகின்ற போதெல்லாம்
விளைகின்ற நித்திலமே..
உன்னைத் தவிர
உலகில் எனைக் காக்க
பொன்னோ பொருளோ
போற்றிவைக்க வில்லையம்மா..!
என்னைக் கரையேற்று
ஏழை வணங்குகின்றேன்!”
ஆஹா..!.........

orodizli
14th August 2020, 10:58 AM
மக்கள் திலகத்தின் ''மீனவ நண்பன் '' 14.8.1977
43 ஆண்டுகள் நிறைவு ..........
மக்கள் திலகம் தமிழக முதல்வராக பதவி ஏற்ற பின் வெளிவந்து மாபெரும் வெற்றி அடைந்த படம்
1947ல் ராஜகுமாரி படத்தில் கதாநாயகனாக ஆரம்பித்து ,30 வருடங்கள் தொடர்ந்து தமிழ் படங்களில் கதாநாயகனாக நடித்து மாபெரும் சாதனைகள் பெற்றார் . தென்னிந்திய நடிகர்களில் அதிக சம்பளம் வாங்கிய நடிகர் என்று பெயர்
பெற்றார். உலகிலயே அதிகமான ரசிகர்களை பெற்றவர் எம்ஜிஆர் .

இன்றும் அவருடைய ரசிகர்கள் உலகமெங்கும் அவர் நினைவாகவே வாழ்ந்து கொண்டு வருகிறார்கள் . வசூல் சக்கரவர்த்தி என்று மலைக்கள்ளன் -1954 படத்திற்கு புகழ் கிடைத்தது .1977 வரை தொடர்ந்து நிரந்தர வசூல் மன்னன், ஏக வசூல் சக்கரவர்த்தி என்ற பட்டத்தை தக்க வைத்து கொண்டார் .

1977 மக்கள் திலகம் எம்ஜிஆர் தமிழக முதல்வராக பதவி ஏற்ற பின்னர் அவர் வாழ்ந்த 1987 வரை 11 ஆண்டுகளில் அவருடைய 90 படங்கள் தொடரந்து தென்னகமெங்கும் பவனி வந்தது . வசூலை வாரி கொட்டியது. 1987 முதல் 2020 இன்று வரை 33 ஆண்டுகளாக மக்கள் திலகத்தின் பல படங்கள் புத்தம் புதிய பிரதிகளாகவும் , டிஜிட்டல் வடிவிலும் தொடர்ந்து ஓடிக்கொண்டு வருவது உலகில் எந்த ஒரு நடிகருக்கும் கிடைக்காத பெருமை . சாதனை .2005 முதல் பல ஊடகங்களில் மக்கள் திலகத்தின் படங்கள் தொடர்ந்து காண்பித்து வருகிறார்கள் . மக்கள் திலகத்தை பற்றிய நூற்றுக்கணக்கான புத்தகங்கள் வெளிவந்தன . பல்வேறு அமைப்பினர் நடத்திய எம்ஜிஆர் பட விழாக்கள் ஏராளம் ..........

orodizli
14th August 2020, 11:00 AM
#எம்ஜிஆர்_மற்றவர்களுக்கும்_மதிப்பளித்தவர்!

M.g.r. என்னதான் மக்கள் செல்வாக்கு பெற்றவராக இருந்தபோதும் மற்றவர்களுக்கு மதிப்பளிக்க தவறியதில்லை. முதல்வராக இருந்தபோது அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் ஆகியோருக்கு உரிய மரியாதை அளித்தார். நிர்வாக விஷயங்களில் கட்சியினர் தலையீட்டையும் ஒருபோதும் அவர் அனுமதித்தது இல்லை.

முதல்வர்கள் முன்னிலையில் அமைச்சர்கள் பணிவும் பவ்யமும் காட்டுவது நாம் பார்த்து பழகிப்போன ஒன்று. திருச்சி சவுந்தர ராஜன் எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகர். அவரோடு பல படங்களில் நடித்தவர். எம்.ஜி.ஆர். மன்றத்தின் பொருளாளராகவும் பணியாற்றிவர். அவரை தனது அமைச்சரவையில் எம்.ஜி.ஆர். சேர்த்துக் கொண்டார். தனது ரசிகர் மன்றத்தில் இருந்தவர் தானே என்று நினைக்காமல், அமைச்சருக்கு உரிய மரியாதையை அவருக்கு அளித்தார்.

1978-ல் அமைச்சராக நியமிக்கப்பட்ட திருச்சி சவுந்தரராஜன், ஆளுநர் மாளிகையில் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டபின், பொறுப்பேற்க கோட்டைக்கு வந்தார். முதல்வர் எம்.ஜி.ஆரும் உடன் வந்து, புதிய அமைச்சரின் அறைக்கு அழைத்துச் சென்று மாலை அணிவித்து வாழ்த்தி அமைச்சருக்கான இருக்கையில் அமரச் செய்தார். அதோடு மட்டுமல்ல; வழக்கமாக முதல்வர்கள் அமர்ந்திருக்க அவர் பின்னால் மற்றவர்கள் நிற் பதை பார்த்திருப்போம். ஆனால், அமைச்சர் நாற் காலியில் திருச்சி சவுந்தரராஜன் அமர்ந்திருக்க, அவர் அருகே தானும் மற்ற அமைச்சர்களோடு நின்று புகைப்படம் எடுத்துக்கொண்டார் எம்.ஜி.ஆர்.!

இதேபோன்று, அவரோடு பதவியேற்ற கே.ஏ.கிருஷ்ணசாமி உள்ளிட்ட அமைச்சர்களை யும் வாழ்த்தி அவர்களுக்கு அருகே நின்று எம்.ஜி.ஆர். படம் எடுத்துக் கொண்டார். அமைச்சருக் குரிய நாற்காலியில் சம்பந்தப்பட்ட அமைச்சர் கள் அமர்ந்திருக்க, பக்கத்தில் நின்று கொண்டிருந்த முதல்வர் அநேகமாக எம்.ஜி.ஆராகத்தான் இருக்கும். 1983-ம் ஆண்டு எஸ்.ஆர்.ராதா அமைச்சராக பதவியேற்றபோதும் இதே மரபை எம்.ஜி.ஆர். கடைபிடித்தார். முதல்வர் அமைச்சர் என்பதைத் தாண்டி, தம்பி கள் பொறுப்புக்கு வருவதைப் பார்த்து மகிழ்ச்சியடையும் ஒரு மூத்த சகோ தரனின் பாசமும் அதில் தெரிந்தது.

எம்.ஜி.ஆர். எப்போதுமே நாட்டு நடப் பிலும் தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதிலும் விழிப்புடன் இருப்பார். அதுவும் முதல்வர் பொறுப்பில் இருந்தபோது மிகவும் கூர்மையாக இருந்தார். இப்போது போல அப்போதெல்லாம் தனியார் தொலைக்காட்சி கள், ஃபிளாஷ் நியூஸ், வாட்ஸ் அப் இத்யாதிகள் கிடையாது. இருந்தாலும் தமிழகத்தின் மூலை முடுக்கிலும்கூட என்ன நடந்தாலும் உடனடியாக அறிந்துகொள்வதற்காக, முதல்வர் என்ற முறையில் சில ஏற்பாடுகளை எம்.ஜி.ஆர். செய்து வைத்திருந்தார்.

ஒருமுறை, முதல்வர் எம்.ஜி.ஆரைப் பார்ப்பதற்காக சென்னையைச் சேர்ந்த அதிமுக வினர் கூட்டமாக ராமாவரம் தோட்டத்துக்குச் சென்றனர். அவர்களிடம் எம்.ஜி.ஆர். ‘‘என்ன விஷயம்?’’ என்று விசாரித்தார்.

‘‘தலைவரே, எங்க ஏரியாவுக்கு புது போலீஸ் இன்ஸ்பெக்டர் வந்திருக்காரு. அவருக்கு நம்ப கட்சிக்காரங்களைக் கண்டாலே வெறுப்பு. அதிமுக வினர் என்று தெரிந்தாலே அடிக்கிறாரு. வேண்டு மென்றே எங்கள் மீது பொய் வழக்குகள் போடறாரு’’ என்று கோரஸாக குற்றப்பட்டியல் வாசித்தனர்.

‘‘ஏன்? நீங்க என்ன பண்ணிணீங்க?’’ என்று அவர்களை ஆழம் பார்த்தார் எம்.ஜி.ஆர்.!

‘‘நாங்க ஒண்ணுமே பண்ணலை தலைவரே’’... பம்மியது கூட்டம்.

‘‘அப்படியா? ’’ என்று கேட்டு சில விநாடிகள் நிறுத்திய எம்.ஜி.ஆர்., ‘‘ ஆமா, உங்க ஏரியா ஸ்டே ஷன்லே ஹெட் கான்ஸ்டபிளை அடிச்சது யாரு? ’’ என்று கூட்டத்தினரை கூர்மையாக பார்த்தவாறே கேட்டார்.

கூட்டத்தில் இருந்த ஒருவருக்கும் பேச்சு மட்டுமல்ல; சில விநாடிகள் மூச்சும் வரவில்லை. பதில் சொல்ல முடியாத மவுனமே அவர்களின் தவறை வெளிக்காட்டியதை புரிந்து கொண்ட எம்.ஜி.ஆரின் முகத்தில் கோபக் கனல் வீசியது.

‘‘நான் ஒரு முதல் அமைச்சர். எனக்கு எல்லா தகவல்களும் செய்திகளும் உட னுக்குடன் வந்துவிடும். நீங்க தப்பு பண் ணிட்டு போலீஸ் மீது பழியைப் போடறீங்க. போலீஸ்காரங்களும் மனுஷங்கதானே? போலீஸைக் கடமையை செய்ய விடாம நீங்க போய் தொந்தரவு கொடுக்கிறீங்க. அப்புறம் போலீஸ்காரங்க நம்ம கட்சியினரை பழிவாங் கறாங்கன்னு எங்கிட்டயே வந்து சொல்றீங்க.

நாம ஆளும் கட்சியா இருக்கலாம். நிர்வாகம் எல்லோருக்கும் பொதுவானது. அரசு அதிகாரி களை அவங்க எந்த துறையை சேர்ந்தவங்களா இருந்தாலும் மதிக்கணும். அவங்க பணிகளில் நாம குறுக்கிடக் கூடாது. தப்பு பண்ணிட்டு யாரா வது எங்கிட்ட சிபாரிசுக்கு வந்தீங்கண்ணா, நான் பாத்துக்கிட்டு சும்மா இருக்க மாட்டேன். ஜாக் கிரதையா இருங்க’’ என்று வந்திருந்தவர்களை வார்த்தைகளால் புரட்டி எடுத்தார்.

அரண்டுபோன கட்சியினர், எம்.ஜி.ஆரைப் பார்த்து பெரிய கும்பிடாகப் போட்டுவிட்டு நான்கு அடிகள் பின்வாங்கி பதிலேதும் பேசாமல் திரும்பி நடந்தனர்.

‘‘நில்லுங்க’’… எம்.ஜி.ஆரிடம் இருந்து அதட்ட லாய் உத்தரவு பிறந்தது. எதற்கு என்று புரியாமல் மந்திரத்துக்கு கட்டுப்பட்டதுபோல கூட்டத்தினர் நின்றனர்.

தந்தை பெரியாரின் கண்டிப்பும் பேரறிஞர் அண்ணாவின் கனிவும் கலந்து ஒலித்தது எம்.ஜி.ஆரின் குரல் …

‘‘எல்லோரும் சாப்பிட்டுட்டு போங்க!’’

#சிறு_குறிப்பு

மத்தியில் பிரதமராக இருந்த மொரார்ஜி தேசாய் தலைமையிலான அரசு கவிழ்ந்த தைத் தொடர்ந்து, சரண்சிங் பிரதமராக பதவியேற்றார். அவரது அமைச்சரவையில் அதிமுகவைச் சேர்ந்த பாலா பழனூர், சத்திய வாணி முத்து ஆகியோர் அமைச்சர்களாக பதவி வகித்தனர். தமிழகத்தின் ஒரு மாநிலக் கட்சியைச் சேர்ந்தவர்களை முதன்முதலில் மத்திய அமைச்சர்களாக்கிய பெருமை எம்.ஜி.ஆரையே சேரும்..........

orodizli
14th August 2020, 11:02 AM
எம் ஜி ஆர் குறள்
எம் ஜி ஆர் வாத்தியாராய் தன் தத்துவபாடல் வழி கூறாத கருத்தே இல்லை எனலாம்

தெய்வம்
பெற்று எடுத்து பெயர் கொடுத்த அன்னை அல்லவா அவள் பேசுகின்ற தெய்வம் அல்லவா

வளர்ப்பு
எந்த குழந்தையும் நல்ல குழந்தை தான் மண்ணில் பிறக்கையிலே அவர் நல்லவர் ஆவதும் தீயவன் ஆவதும் அன்னை வளர்பதிலே

கல்வி
கற்றவர் சபையில் உனக்காக தனி இடம் தரவேண்டும்
உன்னை பெற்றதினால் மற்றவராலே போற்றி புகழ வேண்டும்

உழைப்பு
உழைத்து வாழவேண்டும் பிறர் உழைப்பில் வாழ்ந்திடாதே

வாழும் முறை
ஓடி ஓடி உழைக்கணும் ஊருக்கெல்லாம் கொடுக்கணும் ஆடிபாடி நடக்கணும் அன்பை நாளும் வளர்க்கணும்

உண்மை
உண்மை என்பது தெய்வத்தின் மொழி ஆகும்

நாடு
நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி இந்த நாடே இருக்குது தம்பி

கடவுள்
ஒன்றே குலம் என்று பாடுவோம் ஒருவனே கடவுள் என்று கூறுவோம்

ஜாதி
ஒரு தாய் மக்கள் நாம் என்போம் ஒன்றே எங்கள் குலம் என்போம்

தலைவன்
என்னதான் நடக்கும் நடக்கட்டுமே
இருட்டில் நீதி மறையட்டுமே தன்னால வெளிவரும் தயங்காதே தலைவன் இருக்கிறான் கலங்காதே

திருட்டு
திருடாதே பாப்பா திருடாதே சிறுசா இருக்கையில் திருத்திக்கோ தெரிந்து தெரியாமலும் மீண்டும் வராமல் பார்த்துக்கோ

பெண்கள்
இப்படி தான் இருக்கணும் பெண்கள்
இங்கிலீஸ் படிச்சாலும் இன்ப தமிழ் நாட்டிலே

தவறான ஆட்சிக்கு
ஒரு நாள் இந்த நிலைமைக்கு மாறுதல் வரும் அதை மாற்ற தேர்தல் வரும்

புகழ்
இருந்தாலும் மறைந்தாலும் இவர்போல் யார் என்று ஊர் சொல்ல வேண்டும்

இன்னும் மனித வாழ்வின் அத்தனை கட்டங்களிலும் வாழ பாமரனின் குறளாக எம் ஜி ஆர் பாட்டு உள்ளது பக்தி பாடலாய் தினம் காலை இல்லங்கள் தோறும் ஒலிக்கட்டும் நல்ல சமூகம் உருவாகட்டும்

வாழ்க எம் .ஜி .ஆர் ., புகழ்.........

orodizli
14th August 2020, 11:04 AM
#இன்றைய #திரைப்பட #இயக்குநர்களுக்கு #ஒரு #வேண்டுகோள்



"இந்த தப்பை நான் பண்ணவே மாட்டேன்... ஏன்னா ! நான் இன்னிக்கே செத்து நாளைக்கே உங்க வயித்துல பிறக்கமாட்டேன்னு என்ன நிச்சயம் ... தாய்க்குலமல்லவோ! எங்க அண்ணன் (வாத்தியார்) எனக்கு சொல்லித்தந்த முதல் பாடமே இது தானே ...! "

என்று இந்த சண்டைக்காட்சியின் இடையே அரைகுறை உடையுடன் காணப்படும் நடனப்பெண்மணிகளைப் பார்த்து நாகேஷ் கூறுவார்...!!!

இந்த சிந்தனை மக்கள்திலகத்தைத் தவிர வேறு யாருக்கு வரும்???

சண்டையின் முடிவில் அடிபட்டு விழுந்த ஜஸ்டினை தண்ணீர் தெளித்து எழுப்புவார்.

சண்டையில் வீரத்தைக் காண்பிப்பதிலும் சரி... அடிபட்டுக்கிடக்கும் வில்லனை மன்னிக்கும் கண்ணியத்திலும் சரி... வாத்தியார்னா ... வாத்தியார் தான்...

கராத்தே மிக்ஸிங் ஸ்டைலில் வித்தியாசமாக அமைத்துள்ள வாத்தியாரின் சண்டைக்காட்சியைக் கண்டுகளியுங்கள்.

உ.சு.வா...படத்தைப் பற்றி ஒரு சரித்திரமே எழுதிவிடலாம்...

இன்றைய கதாநாயகர்கள்/காமெடி நடிகர்கள் தாம் நடிக்கும் திரைப்படங்களில் தாய் தந்தையை மரியாதையில்லாமல் கேவலமாக நக்கலடிப்பது ( அதிலும் தந்தையை தரக்குறைவாக நக்கலடிப்பது தான் அதிகம்) .....

இதெல்லாம் யாருடைய குற்றம்? நடிகருடையதா ? இயக்குநருடையதா ? கதாசிரியருடையதா ? அல்லது மக்களின் ரசனை தரம் தாழ்ந்துவிட்டதா !!!

வாத்தியார் மாதிரிக்கூட படம் எடுக்கவேண்டாம்...இளம் தலைமுறையின் மனதில் திரைப்படக் கதாசிரியர்கள்/ இயக்குநர்கள் நஞ்சை விதைக்காமலிருந்தாலே போதுமானது............

orodizli
14th August 2020, 02:20 PM
மிக நீண்ட நாள் கழித்து தலைவரின் பதிவு :-

மக்கள் வெள்ளத்தில் எம்.ஜி.ஆர்..

திமுக-வில் இருந்து எம்.ஜி.ஆர். நீக்கப்பட்டதால், தமிழகம் முழுவதும் இருந்து அவரது ரசிகர்கள் சென்னைக்கு வந்து சத்யா ஸ்டூடியோ முன் குவிந்தனர்.

“இன்னும் அரை மணி நேரத்திற்குள் தலைவர் இங்கே வந்து சேரவில்லை என்றால் அவர்கள் சத்யா ஸ்டுடியோவுக்குள் புகுந்துவிடுவார்கள் தலைவரை உடனே வரச்சொல்லுங்கள்!” என்ற தொலைபேசியில் சத்யா ஸ்டூடியோ நிர்வாகி பத்மநாபன் கூறினார். செய்தியறிந்ததும் புரட்சித் தலைவர் சில நண்பர்களுடன் புறப்பட்டு காரில் விரைந்து வந்தார்.

புரட்சித்தலைவர் கிண்டி கவர்னர் மாளிகையை நெருங்கும்பொழுதே வழியெல்லாம் தோழர்கள் கூட்டம் நிரம்பி வழிந்து. அவருடைய காரைக் கண்டதும் புரட்சித்தலைவர் வாழ்க! பொன்மனச்செம்மல் வாழ்க! என்று விண்ணதிரத் தோழர்கள் முழங்கினர்.
புரட்சித் தலைவர், அந்தத் தோழர்களைக் கடந்து அடையாறு முனைக்கு வந்து சேருவதற்குள் பெரும்பாடாகிவிட்டது. தேர் அசைவது போல அவருடைய கார் மிக மெதுவாகவே ஊர்ந்து செல்ல நேரிட்டது.

அடையாறு சந்திப்பை அடைந்தபோதே, அதற்கு மேல் எம்.ஜி.ஆர் கார் போகவே முடியாது என்னும் நிலை ஏற்பட்டதால், மக்கள் வெள்ளத்திற்குள் போய் நின்றார். அப்பொழுது அங்கே கூடியிருந்த தொண்டர்களின் உணர்ச்சியும், உற்சாகமும் கட்டு மீறின. எழுச்சி கொண்ட தொண்டர்கள் தங்கள் தலைவரைத் தூக்கித் தோளில் வைத்துக் கொண்டு கூத்தாடினார்கள்.
ஏக காலத்தில் தங்கள் அன்புத் தலைவரின் பொன்னுடலைத் தொட்டுப் பார்க்கவும், அவரோடு கைகுலுக்கவும், எல்லாரும் முண்டியடித்துக் கொண்டு முன்னேறினர். அப்படி முன்னேறிய தோழர்கள் எல்லாரும் சேர்ந்து நெருக்கித் துன்புறச் செய்து விடுவார்களோ? என்று அவரோடு வந்த நண்பர்கள் அஞ்சி நடுங்கினார்கள்.

ஆனால், புரட்சித் தலைவரோ, சற்றும் அஞ்சாமல் தொண்டர்களின் அன்பினில் திளைத்தார். தமக்கே உரிய வீரசாகசங்களைப் புரிந்து கீழே இறங்கி நின்றார். தம்மை நெருங்கிய தொண்டர்களைப் பார்த்து, “இனிமேல் நானும் உங்களோடு நடந்தே வருகிறேன்.

வாருங்கள் போகலாம்!” என்றூ கூறி விட்டுப் புறப்பட்டார். ஆனால், எம்.ஜி.ஆர் மீது தங்கள் உயிரையே வைத்திருந்த தொண்டர்கள் அவரை நடக்க விடுவார்களா? அவரைத் தம் தோளில் தூக்கிக்கொண்டனர்.
அதற்குப் பின்னர் அடையாறு சந்திப்பிலிருந்து சத்யா ஸ்டுடியோ வாசல் வரை இலட்சக்கணக்கான தம் தம்பிகளின் தலையிலும் தோளிலும் அமர்ந்து ஊர்வலமாய்ப் போய்ச் சேர்ந்தார், எம்.ஜி.ஆர்.

அடையாறு சந்திப்புக்கும், சத்யா ஸ்டுடியோவுக்கும் இடையே உள்ள தூரம் அரை கிலோமீட்டர்தான். ஆனால் அந்தத் தூரத்தைக் கடந்து செல்ல அன்று புரட்சித் தலைவருக்கு இரண்டு மணி நேரம் ஆனது; ஆம்; செல்லும் வழியெல்லாம் மக்கள்.
கால் வைக்ககூட இடமில்லாத அளவுக்கு எல்லாத் திக்குகளிலும் மக்கள். எள் விழவும் இடமற்ற அந்த மக்கள் கூட்டத்திற்கு மத்தியில் புகுந்து செல்வது இயலாத காரியமாகவே இருந்தது.
எம்.ஜி.ஆரைத் தொண்டர்கள் தூக்கிக் கொண்டுதான் சென்றார்கள் என்றாலும் அவர்கள் முன்னேறிச் செல்லவும் இடம் வேண்டுமல்லவா? நெருக்கியடித்து நின்ற தொண்டர்கள் வழிவிட்டால்தானே? அவர்கள் வழிவிட அங்கே துளி இடமாவது காலியாக இருந்தால்தானே? எப்படியோ ஒரு வழியாக புரட்சித்தலைவர் சத்யா ஸ்டுடியோ வாசலை அடைந்தார்.

தொண்டர்களின் உணர்வுகள் வடியட்டும் என்று காத்திருந்த புரட்சித்தலைவர் பின்னர் அவர்களை ஒரு வழியாகச் சமாதானப் படுத்தினார்.
மக்கள் யார் பக்கம்’ என்று அதுவரை மருகிக் கொண்டிருந்த அந்த மக்கள் திலகம், தாம் அழைக்காமலே வந்து திரண்டு நின்று, அன்பைச் சொரிந்து, ஆதரவு முழக்கம் எழுப்பிய அந்தமக்கள் கடலைப் பார்த்து ஆனந்தக் கண்ணீர் உகுத்தார்.

அவர்களிடையே சில நிமிடங்கள் பேசிய அவர் அடுத்து தாம் என்ன செய்யவிருக்கிறார் என்று ஒரு கோடு காட்டிவிட்டு மக்கள் கூட்டத்தைப் பார்த்து, ”நீங்கள் என்ன செய்யச் சொல்கிறீர்கள்?” என்று ஒரு கேள்வியை எழுப்பினார்.

அப்பொழுதும் அங்கே கூடியிருந்த பல்லாயிரக்கணக்கான மன்ற மறவர்களும், பொதுமக்களும், ”தனிக்கட்சி அமையுங்கள்! தமிழகத்தை காப்பாற்றுங்கள்!” என்று குரல் கொடுத்தனர்.
அவர்கள் கோரிக்கையை புன்னகைத்ததும்ப வரவேற்றார், புரட்சித் தலைவர். பின்பு அவர் , ”ஓரிரு நாள்களில் தமிழகம் முழுவதிலும் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருக்கிறேன். மக்கள் கருத்தை அறிந்து கொண்டு உங்கள் கருத்துப்படி செயல்படுவேன்” என்று உறுதியளித்தார்............

orodizli
14th August 2020, 02:22 PM
மக்கள் திலகத்தின் படங்கள் பற்றிய சில் நினைவலைகள்.........
************************************************** ********************

குடும்பத்தலைவன் . 15.8.1962
****************************
மக்கள் திலகத்தின் சிறப்பான நடிப்பில் வந்த குடும்ப படம் . இனிமயான பாடல்கள் . மாறாதய்யா மாறாது மனிதன்

குணமும் மாறது -பாடலில் இயற்கையாக மனிதரிடம் உள்ள குணங்கள் பற்றி பாடும் காட்சி அருமை .

எதோ எதோ ஒரு மயக்கம் --காதல் பாடல் இனிமை .நல்ல பொழுது போக்கு படம் .

நீதிக்கு பின் பாசம் - 15.8.1963
**************************

மக்கள் திலகம் வக்கீலாக நடித்த படம் .ஏராளமான நட்சத்திர கூட்டம் .இனிமையான பாடல்கள் .சரோவிற்கு
சைக்கிள் கற்று கொடுக்கும் காட்சி பாடலுடன் சூப்பர் . போனாளே ...சொக்ஸ் பாடலில் மக்கள் திலகத்தின் நடிப்பு பிரமாதம் 1963. ல் வந்த எம்ஜிஆரின் 9 படங்களில் 100 நாட்கள் ஓடிய படங்கள் -3 பெரிய இடத்து பெண் -2. நீதிக்கு பின் பாசம் .3-பரிசு .

கணவன் -15.8.1968
******************

மக்கள் திலகம் கதை எழுதிய ஒரே படம் . பணக்கார பெண்ணின் ஆணவத்தை அடக்கும் ஆணழகனாக - கணவனாக
மக்கள் திலகம் நடித்த படம் .எல்லா பாடல்களும் சூப்பர் ஹிட் .1968ல் மக்கள் திலகம் நடித்த 8 படங்களிலும் ஜெயா
ஜோடி குறிப்பிடத்தக்கது .

orodizli
14th August 2020, 02:45 PM
"கல்யாண பொண்ணு கண்ணான கண்ணு
கொண்டாடி வரும் வளையல் - அம்மா
பூவோடு வருமே பொட்டோடு வருமே
சிங்காரத் தங்கவளையல்"

என்ற கவிஞர் வாலியின் வரிகளில் மின்னும் இந்த பாடல் ‘படகோட்டி’யில் வருவதாகும். படத்தின் கிளைமாக்ஸீக்கு (உச்சகட்ட காட்சிக்கு) முன்னதாக வரும் இதில் எம்.ஜி.ஆர் வளையல்காரராக மாறுவேடமிட்டு நடிப்பார். விதம் விதமான வளையல்களை தோளில் சுமந்து அந்தக்கால வளையல்காரரை அட்சர சுத்தமாக பிரதிபலிப்பார். மனித வாழ்வில் வளையல்களின் பங்கு என்னவென்பதும் அதில் வெளிப்படும். தொந்தியும், தொப்பையுமாக இடுப்பில் கனத்த பெல்ட் அணிந்து, கனமான மீசை, விக் என்று ஏராளமான உபரியான ஒப்பனை சாதனங்களை அணிந்து தன்னை வருத்திக் கொண்டு நடித்திருப்பார் எம்.ஜி.ஆர்.

அதனால் தானோ என்னவோ இந்தப் பாடல் சாதி வேறுபாடின்றி ரசிகர் வேறுபாடின்றி எல்லா கல்யாண வீடுகளிலும் ஒலித்தது, ஒலிக்கிறது. எம்.ஜி.ஆரின் தத்துவ பாடல்களில் இதுவும் முக்கிய இடம் வகிக்கிறது.

இந்தப்பாடலில், "மாமியாரை மாமனாரை சாமியாரா மாத்திவிட
மந்திரிச்சுத் தந்த வளையல் - இளங்
காளையர்கள் கெஞ்சி வர கன்னியர்கள்
கொஞ்சி வர தோதாக வந்த வளையல்"

என்ற வரிகள் வரும் போது, அதில் நம்பியார் வீட்டு பணிப்பெண், கன்னிப்பெண்ணாக எம்.ஜிஆர் நடிப்புக்கு எதிர் நடிப்பைத் தந்தவர் துளசி எனப்படும் துளசியம்மாள். இந்தக் காட்சியில் துளசி எப்படி நடிக்க வேண்டுமென்று எடுத்துச் சொல்லி, நடித்துக் காட்டியவர் எம்.ஜி.ஆர்.

எம்.ஜி.ஆரைப் பார்த்தாலே மரியாதை, நடுக்கத்தோடு ஒதுங்கி நின்று விடுவார் துளசி. எம்.ஜி.ஆர் அதைப் புரிந்து கொண்டு, "என்ன ஆச்சு- என்னைக்கண்டால் பயமா? அப்படியெல்லாம் ஒதுங்கி நிற்காதே.
சகஜமா இரு" என்று தைரியப்படுத்துவாராம்.

துளசியம்மாள் ஒளிப்பதிவாளர்
திரு. ரவீந்தரின் தாயார். சின்னதம்பி வேலை கிடைச்சிடுச்சு, மிஸ்டர் மெட்ராஸ், கிழக்குகரை ஆகிய பி. வாசு இயக்கிய படங்களின் ஒளிப்பதிவாளர். கே. பாலசந்தரின் தொலைக்காட்சித் தொடர்களையும் ஒளிப்பதிவு செய்தவர். இயக்குநராக, பின் நடிகராக சில படங்களில் நடித்துமிருக்கிறார்.

ரவீந்தர் குழந்தை நட்சத்திரமாக ‘அரசிளங்குமரி’யில் ‘சின்னப்பயலே சின்னபயலே சேதி கேளடா’ பாடலில் எம்.ஜி.ஆரின் கரங்களில் தவழ்ந்தும், ‘பாவமன்னிப்பு’ படத்தில் ‘அந்த நாள் முதல் இந்த நாள் வரை’ பாடலில் சிவாஜியுடன், ‘காஞ்சித்தலைவன்’ படத்தில் எம். ஆர். ராதா தூக்கிச் செல்லும் குழந்தையாக, "நீ தான் காஞ்சித்தலைவன்" என்று ராதாவால் சொல்லப்படுபவராக நடித்தவர்.

எம்.ஜிஆரது பல படங்களில் சிறு வேடங்களில் நடித்தவர் துளசியம்மா. சத்யா ஸ்டியோவில் ஒரு நாள் படப்பிடிப்பிற்கு வந்த போது எம்.ஜி.ஆரைக் கண்டதும் ஒதுங்கி நின்றார். வணக்கம் சொன்ன போது எம்.ஜி.ஆர். அவரிடம், "என்ன துளசி, நீ ‘நினைத்ததை முடிப்பவன்’ படத்திற்காக காஷ்மீர் வர்றீல்ல?" என்று கேட்டார்.

"இல்லங்க ஐயா, என்னைக் கூப்பிடல. அந்த கம்பெனிக்காரர் (தயாரிப்பு நிர்வாகி) என்னைக் கூப்பிடவும் மாட்டார்" என்றார், ‘துளசி’.

"அப்படியா?, ...சரி" என்ற எம்.ஜி.ஆர்., "நீ உடனே நம்ம ஸ்டுடியோவில் பத்மநாபனைப் போய்ப்பார். நான் சொன்னேன்னு சொல்லு" என்று கூறிவிட்டு நகர்ந்தார்.

திரு. பத்மநாபனை சந்தித்து துளசி, "சின்னவர் ஐயா உங்களை பார்க்க சொன்னார்" என்றதும், "ஆமாம், உங்க முகவரி மற்ற விபரங்களைத் தந்து விட்டு போங்க - நான் தகவல் அனுப்பறேன்" என்றவர், "சின்னவரை பார்த்ததும் நான் சொன்னதைச் சொல்லிடுங்க" என்று கேட்டுக் கொண்டார்.

"குறிப்பிட்ட சில தினங்களில் காஷ்மீருக்கு புறப்பட தகவல் வந்தது. புதுடெல்லி வரை ரயிலில் சென்று, அங்கிருந்து எங்களுடன் வந்த அனைவருக்கும் ஏற்பாடு செய்யப்பட்ட பேருந்தில் காஷ்மீர் சென்றோம்.

எம்.ஜி.ஆர் படமல்லவா, எங்களுக்கு நல்ல உபசரிப்பு, எம்.ஜி. ஆர்., காஷ்மீருக்கு வந்த அனைத்து பெண்களுக்கும் உயர்தர புடவை பரிசளித்தார். கடைசி நாளில் அவரோடு படமெடுத்துக் கொண்டோம்" என்றார் துளசியம்மாள்.

(இதன் தொடர்ச்சி வரவிருக்கும் ஆகஸ்ட் 'இதயக்கனி' யில் 'எல்லாம் அறிந்த
எம்.ஜி. ஆர்.' தொடரில் இடம்பெறுகிறது).

Ithayakkani S Vijayan.........

orodizli
14th August 2020, 07:45 PM
அகில இந்திய அளவில் சிறந்த நடிகர் பட்டம் "ரிக்ஷாக்காரன்" படத்துக்கு எப்படி கிடைத்தது என்பதை பற்றி திரு இராம. வீரப்பன்
விளக்கி சொல்கிறார். எம்ஜிஆர் எப்போதுமே பட்டங்களை தேடி அலைவதில்லை. அவருடைய படங்கள் விருதுக்கு சென்றதே இரண்டே இரண்டு படங்கள்தான்.
ஒன்று "மலைக்கள்ளன்" 16 வருடங்கள் கழித்து இன்னொன்று "ரிக்ஷாக்காரன்".

விருதுக்கு அனுப்புவதை எம்ஜிஆர்
அவ்வளவாக விரும்ப மாட்டார்.
"ரிக்ஷாக்காரன்" படமும் சிறந்த நடிகர் தேர்வுக்காக அனுப்பபடவில்லை.
சிறந்த ஒளிப்பதிவாளர் தேர்வுக்காகவும், "சவாலே சமாளி" சிறந்த இசையமைப்பாளர் தேர்வுக்காகவும் அனுப்ப பட்டதில்
எம்ஜிஆரின் இயல்பான நடிப்பால் "ரிக்ஷாக்காரன்" சிறந்த நடிகர் தேர்வில் பாஸாகி சிறந்த நடிகர் பட்டத்தை வென்றது.

"சவாலே சமாளி"
படத்தின் பாடலுக்கு பின்னணி இசை பாடிய p.சுசீலாவுக்கு அகில இந்திய சிறந்த பாடகி விருது கிடைத்தது. சிறந்த பிராந்திய படவிருது தமிழுக்கு "வெகுளிப்பெண்" படத்துக்கு கிடைத்தது. எம்ஜிஆருக்கு அனுப்பிய இரண்டு படங்களில் மலைக்கள்ளன் படத்துக்கு அகில இந்திய சிறந்த படத்துக்கான வெள்ளி பதக்கமும்
16 வருடங்கள் கழித்து அனுப்பப்பட்ட
"ரிக்ஷாக்காரனு"க்கு சிறந்த நடிகர்
'பாரத்' பட்டமும் கிடைத்தது. "ரிக்ஷாக்காரன்" படத்துக்கு 'பாரத்' பட்டம் கிடைத்தது, சிவாஜிக்கும் அவரது ரசிகர்களுக்கும் பொறுக்கவில்லை.

எம்ஜிஆருக்கு கொடுக்காமல் வேறு யாருக்கு கொடுத்திருந்தாலும் ஏற்றுக் கொள்வார்கள். அத்தனை வருடமாக பட்டம் கிடைக்கவில்லை என்று கவலைப்படுவதைவிட அந்த வருடம் எம்ஜிஆருக்கு கிடைத்தது அவர்களுக்கு மிக கவலை அளித்து விட்டது. அதிலும் கூட உள்ள ஜால்ராக்களும் சிவாஜியை
தூண்டி விட நடிகர் சங்க பாராட்டு விழாவில் சிவாஜியின் முகத்தை பாருங்கள் நன்றாக தெரியும், வாடிய முகத்துடனும் இறுகிய முகத்துடனும் ஏதோ அவருடைய கையிலிருந்த விருதை யாரோ பறித்த தோற்றத்தில் வலம் வருவதை நாம் பார்க்கலாம்.

இதில் 'சோ' வேறு 'பாரத்' பரிசுக்கு இவர்தான் தேர்வாளர் மாதிரி கார்ட்டூனெல்லாம் போட்டு. சிவாஜியை வெறுப்பேற்றி கடுப்பேற்றினார். "அடுத்தது காட்டும் பளிங்கு போல் நெஞ்சம் கடுத்தது காட்டும் முகம்" என்ற வள்ளுவரின் வாக்கு அங்கு பலித்து விட்டதை நாம் பார்க்கலாம்.
சிவாஜி விஷயத்தில் எல்லோருமே தேர்வாளர்கள் போல ஆளுக்கொரு கருத்தை சொல்லி திரிந்தார்கள். வாத்தியாருக்கு தெரியாதா எந்த பிள்ளை காப்பி அடிக்காமல் பரீட்சை எழுதியது என்று.

அதன்பிறகும் எவ்வளவோ கஜகர்ணமடித்து நடிப்பு வித்தைகளை காண்பித்தும் யாரும் ஏற்றுக் கொள்வதாக இல்லை.அதற்கு முன்பும் பின்பும் எம்ஜிஆரின் எந்த படமும் அனுப்பியதில்லை
என்பதை இராம.வீரப்பன் சுட்டிக் காட்டியுள்ளார். சில நடிகர்கள் தங்களுடைய நடிப்பை உயர்வாக எண்ணி 'ஆஸ்கர்' வரைக்கும் அனுப்பி பார்த்து விட்டார்கள். ஆனால் எங்கும் தேர்வாளர்கள் மிகை நடிப்பை ஏற்றுக் கொள்ளவில்லை.

"அடிமைப்பெண்" படத்தை விருதுக்கு அனுப்ப எம்ஜிஆர் அவ்வளவாக ஆர்வம் காட்டவில்லை என்பதையும் ஆர்எம்வீ குறிப்பிட்டுள்ளார். தலைவர் எதையும் கண்டு கொள்வதில்லை. நம்மால் முடிந்தவரை மக்களுக்கு என்ன செய்ய முடியும் என்பதிலே தன்னுடைய முழு கவனத்தையும் செலுத்தினார்..........

orodizli
14th August 2020, 09:45 PM
#இதயக்கனி (1975)

சினிமாவில் வெற்றிக்கென சில ஃபார்முலாக்கள் உண்டு, அந்த ஃபார்முலாவில் மிக மிக முக்கியமானதொரு ஃபார்முலா தயாரிப்பாளர்களுக்கும் விநியோகஸ்தர்களுக்கும் தியேட்டர் உரிமையாளர்களுக்கும் முக்கியமாக ரசிகர்களுக்கும் மிகப்பெரிய சந்தோஷத்தை, பன்மடங்கு லாபத்தைக் கொடுத்தது. சந்தோஷம், வெற்றி என்பதையெல்லாம் தாண்டி, படத்தின் நடிகருக்கு மிகப்பெரிய இமேஜை உருவாக்கிக் கொடுத்தது. அந்த ஃபார்முலா... எம்ஜிஆர் ஃபார்முலா. அதனால் அவருக்குக் கிடைத்த வரவேற்பும், மரியாதையும் இமேஜும் நாம் அறியாதது அல்ல. இப்படியான ஃபார்முலாவுடன் வந்து, வெற்றிக்கனியைக் கொடுத்த படம்தான்... ‘இதயக்கனி’.

திமுகவில் இருந்து வெளியேற்றப்பட்ட பிறகு, எம்ஜிஆர், தன் படங்களில் இன்னும் வசனங்களில் கவனம் செலுத்தினார். தன் கட்சிக் கொடியை திரையில் காட்டினார். கொடியைப் பார்த்ததுமே கைத்தட்டிய ரசிகர்கள், வசனம் பேசும் போது ஆர்ப்பரித்துத் தெறித்தனர். சத்யா மூவீஸ் தயாரிப்பான ‘இதயக்கனி’ பிரமாண்டமான படமாக உருவாக்கப்பட்டது. இந்தி நடிகை ராதாசலூஜா, வெண்ணிற ஆடை நிர்மலா, ராஜசுலோசனா, பண்டரிபாய், தேங்காய் சீனிவாசன், வி.கோபாலகிருஷ்ணன், மனோகர், பி.எஸ்.வீரப்பா, எஸ்.வி.சுப்பையா, ஐசரி வேலன் என ஏராளமான நட்சத்திரங்கள் நடித்தனர்.

மிகப்பெரிய எஸ்டேட் முதலாளி மோகன், தொழிலாளர்களுக்கு அள்ளியள்ளிக் கொடுப்பவர். அவர் ஒரு பெண்ணைக் காப்பாற்றுகிறார். ஆதரவில்லாத அந்தப் பெண்ணுக்கு அடைக்கலம் கொடுக்கிறார். ஊர்மக்கள் ஒருமாதிரியாகப் பேச, அவளைத் திருமணம் செய்கிறார். இந்த நிலையில், போலீஸ் அதிகாரியைப் பார்க்க மோகன் செல்கிறார். அப்போதுதான், அவர் ரகசிய போலீஸ் என்பது ஆடியன்ஸூக்குத் தெரிகிறது. பெங்களூரில் நடந்த ஒரு கொலைவழக்கைக் கண்டறியும் பணி மோகனிடம் ஒப்படைக்கப்படுகிறது. அதுகுறித்த பணியில் இறங்கும் போது அவருக்கு ஓர் அதிர்ச்சி... கொலை செய்தவள் ஒரு பெண். அதுமட்டும் அல்ல... அவள் மோகனின் மனைவி.

அதிர்ந்த மோகன், அடுத்தடுத்து பெங்களூர் செல்கிறார். அங்கே ஒரு கூட்டத்தைச் சந்திக்கிறார். மனைவியையே கைது செய்கிறார். அந்தக் கூட்டத்துக்கும் கொலைக்கும் உள்ள தொடர்பையும் அவர்களின் செயல்களையும் கண்டுபிடிக்கிறார். தன் மனைவி குற்றவாளி அல்ல எனும் உண்மையை உணர்த்துகிறார்.

1975ம் ஆண்டு வெளியானது ‘இதயக்கனி’ திரைப்படம். ஆர்.எம்.வீரப்பனின் திரைக்கதையிலும் தயாரிப்பிலும் உருவானது இந்தப் படம். அறுபதுகளிலும் எழுபதுகளின் தொடக்கத்திலும் கூட, தன் படங்களில் கொள்கைகளைப் பரப்பிக் கொண்டிருந்த எம்ஜிஆர், தானே கட்சி ஆரம்பித்ததும் இன்னும் கவனம் செலுத்தி, காட்சிகளைப் புகுத்தினார்.

படம் போட்டதுமே அறிஞர் அண்ணாவின் ஓவியம். பின்னணியில் அண்ணாவின் குரல். ‘மரத்தில் ஒரு கனி பழுத்துத் தொங்கிக் கொண்டிருந்தது. அது யாருடைய மடியில் விழுமோ என்று நான் பார்த்துக்கொண்டிருந்தேன். நல்லவேளையாக அந்தக் கனி, என் மடியிலேயே விழுந்துவிட்டது. விழுந்த கனியை எடுத்து பத்திரமாக நான் என் இதயத்தில் வைத்துக்கொண்டேன்’ என்று ஒலிக்க, அப்போது ரசிகர்களை எகிறடித்தது பலருக்கும் நினைவிருக்கலாம்.

அண்ணாவின் ‘இதயக்கனி’ மேட்டர் முடிந்ததும்தான் ‘இதயக்கனி’ என்றே டைட்டில் போடப்படும். டைட்டில் முடிந்ததும், ‘நீங்க நல்லா இருக்கணும் நாடு முன்னேற... இந்த நாட்டில் உள்ள ஏழைகளின் வாழ்வு முன்னேற...’ என்று எம்ஜிஆர் புகழ் பாடும் பாடல். எம்ஜிஆரின் ஓபனிங் சீன். பிறகு இந்தப் பாடல் ஹிட்டானதும் அரசியல் கூட்டங்களில் பேச்சாளர்கள் வருவதற்கு முன்னால், ஒலிப்பெருக்கியில் இந்தப் பாடலை ஒலிபரப்பி, மக்களை உசுப்பிவிட்டதெல்லாம் தமிழகத்தால் மறக்கவே முடியாத எபிஸோடுகள்.

எஸ்.ஜெகதீசனின் வசனங்கள் எம்ஜிஆரின் இமேஜை உயர்த்திக்கொண்டே இருக்கும் வகையில் எழுதப்பட்டன. ‘நான் எப்பவுமே என் மருமக கட்சிதான்’ என்று பண்டரிபாய் சொல்லுவார். ‘நான் உங்க கட்சி’ என்பார் ராதாசலூஜா. ‘எதுக்கு சண்டை. நாம மூணு பேருமே ஒரே கட்சிதான்’ என்பார் எம்ஜிஆர். உடனே தேங்காய் சீனிவாசன், ‘எல்லாருமே உங்க கட்சிதான்’ என்பார். உடனே ஐசரிவேலன், ‘இப்ப எல்லாரும் அண்ணா கட்சிதான்’ என்று சொல்லுவார்.

எழுபதுகளில் வந்த எம்ஜிஆர் படங்கள், கொஞ்சம் கிளாமர் தூக்கலாகத்தான் இருந்தன. ராதாசலூஜா, ராஜசுலோசனா, வெண்ணிற ஆடை நிர்மலா என நடிகைகளின் கவர்ச்சி ஆடையும் கேமிரா ஆங்கிளும் பேசப்பட்டன. மிகப்பெரிய ஹிட்டடித்த ‘இன்பமே...’ பாட்டு ஒரு ரகம். ‘இதழே இதழே தேன் வேண்டும்’ என்கிற பாடலை எஸ்பிபி பாடியிருப்பார். ‘தொட்ட இடமெல்லாம்’ என்றொரு பாடலுக்கு ராதாசலூஜாவும் வெண்ணிற ஆடை நிர்மலாவும் ஆடியிருப்பார்கள். டான்ஸ் மூவ்மெண்ட்டுகள் அப்பவே வேற லெவல்தான்.

ராதாசலூஜா டபுள் ஆக்ட் போல் காட்சிப் படுத்திவிட்டு, திரைக்கதை விறுவிறுப்பாகும். ஆனால், கொலை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட மாலாவும் எம்ஜிஆரின் மனைவி லக்ஷ்மியும் ஒருவரே என்பதை க்ளைமாக்ஸில் விவரிக்கும் போது, ஸ்கிரிப்டின் நுட்பம் வியக்கச் செய்தது. ஒகேனக்கல், பெர்க்காரா, சிதம்பரம் பிச்சாவரம் என எல்லா இடங்களிலும் அழகு கொஞ்ச விட்டிருப்பார் ஒளிப்பதிவாளர் பாலகிருஷ்ணன். படத்துக்கு வில்லன் இல்லை. வில்லி. இதுவும் பேசப்பட்டது. மேலும் படத்தில், ஒரு ஆங்கிலப்பாடல். இதை உஷா உதூப் பாடியிருப்பார். எம்.எஸ்.விஸ்வநாதன் தன் இசையாலும் மெட்டுக்களாலும் படத்துக்கு பிரமாண்டம் கூட்டியிருப்பார்.

வாலி, புலமைப்பித்தன், நா.காமராசன்,ராண்டார்கை ஆகியோர் பாடல்களை எழுதியிருப்பார்கள். என் பேர் பிளாக் . அவர் பேரு ரெட்.எம்.ஜி. ரெட்’ என்பார் தேங்காய் சீனிவாசன். இந்தப் படத்துக்கு ராதாசலூஜாவின் மழலைக் குரலும் அவரின் கிளாமரும் மிகப்பெரிய பிளஸ்ஸாக அமைந்தன. ஏ.ஜெகநாதனின் இயக்கம் படு கச்சிதம். பின்னாளில், வெள்ளைரோஜா, மூன்று முகம், காதல் பரிசு என ஏராளமான ஹிட் படங்களைக் கொடுத்தார் ஜெகநாதன்.

’தோட்டாவுக்கே டாட்டா காட்டினவர் எங்க பாஸ்’, எல்லாரும் ஒரு இலைலதான் விருந்து போடுவாங்க. நீங்க ரெட்டை இலைல விருந்து போட்டுட்டீங்க’ என்றெல்லாம் வசனம் வரும்.

1975ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 22ம் தேதி ரிலீசானது ‘இதயக்கனி’. படம் வெளியாகி, 45 வருடங்களாகிவிட்டன. இன்றைக்கும் மக்கள் மனங்களில், நிரந்தரமாகவே இருக்கிறது... இருக்கிறார்... இதயக்கனியும் இதயக்கனியான எம்ஜிஆரும்!

வசூலிலும் வெற்றி... படத்துக்கும் நல்லபெயர்... எம்ஜிஆரின் இமேஜையும் உயர்த்தியது... என எம்ஜிஆரின் மறக்க முடியாத படங்களில் ‘இதயக்கனி’யும் மிக முக்கியமானதொரு இடத்தைப் பிடித்துவிட்டது.

பட்டி தொட்டியெல்லாம் பட்டையைக் கிளப்பிய... நீங்க நல்ல இருக்கனும் இந்த நாடு முன்னேற.. பாடல்

https://youtu.be/1aSvXescnQ0.........

fidowag
14th August 2020, 10:08 PM
பாட்டாலே புத்தி சொன்ன வாத்தியார் எம்.ஜி.ஆர். -வின்*டிவியில்*சகாப்தம்*நிகழ்ச்சியில்* திரு.துரை பாரதி*27/07/20 அன்று அளித்த*தகவல்கள்*
------------------------------------------------------------------------------------------------------------------
உலகம் சுற்றும் வாலிபன் திரைப்படத்தில் ஆரம்ப காட்சியில் மின்னலில் இருந்து மின்சாரத்தை சேமித்து ஆக்க சக்திக்கு பயன்படுத்துவது குறித்து விஞ்ஞானி முருகன் ஆராய்ச்சி செய்து வெற்றி பெற்று சக விஞ்ஞானிகள் கூட்டத்தில் அறிவிப்பு செய்வார் .இந்த ஆராய்ச்சியின் பார்முலாவை பற்றி கூறும்போது*முதல் காட்சியிலேயே ஜவஹர்லால் நேரு,மூதறிஞர் ராஜாஜி, லால்பகதூர் சாஸ்திரி போன்ற பெரும் தலைவர்கள், இறுதியில் பேரறிஞர் அண்ணா ஆகியோரது புகைப்படங்கள் காண்பிக்கப்படும் . விஞ்ஞானத்தை பற்றி பேரறிஞர் அண்ணா பேசும் சில வார்த்தைகள்* சில நிமிடங்கள் வெளிப்படும் . இப்படி தேசிய தலைவர்கள், மாநில தலைவர்களை போற்றி சில வார்த்தைகளும், அதன் மூலம் நாட்டின் பெருமையை பறை சாற்றுவது போல காட்சிகள் அமைத்து படத்தை துவக்கி தனது தேச பக்தியை வெளிப்படுத்தி* இருப்பார் படத்தின் நடிகரும், தயாரிப்பாளரும், இயக்குனருமான எம்.ஜி.ஆர்.*


மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். தனக்கு குழந்தை பாக்கியம் இல்லை என்று மன*வருத்தம் இருந்தாலும் ,வெளிக்காட்டி கொள்வதில்லை .காரணம் தன் அண்ணன்*சக்கரபாணிக்கு 10 குழந்தைகள் இருந்தார்கள் . அவர்களை தன் குழந்தைகள் போல் எம்.ஜி.ஆர். பாவித்தார் .* பாசத்தை பொழிந்தார் . அவர்களும் சித்தப்பா எம்.ஜி.ஆர்.மீது மிகவும் அன்பாக, பாசமாக இருந்தனர் . அவர்களை படிக்க வைப்பது, பிறந்த நாள் நிகழ்ச்சிகள் , திருமண நிகழ்ச்சிகள் ஆகியவற்றிற்கு முன்னின்று நடத்துவது, செலவினங்கள் மற்ற பொறுப்புகளை ஏற்றுக் கொள்வது* என்று ஆர்வம் காட்டினார் எம்.ஜி.ஆர். எம்.ஜி.சக்கரபாணி அவர்கள்* அ .தி.மு.க. கட்சி , திரைப்படத்துறை , பட தயாரிப்பு* போன்ற எம்.ஜி.ஆர்* சம்பந்தப்பட்ட பணிகளில் தானும் பங்கு கொண்டு தனது சகோதரனுக்கு உகந்த உதவிகள் பலவற்றை செய்து வந்துள்ளார் . ஆனால் எம்.ஜி.ஆர். முதல்வரான பின்பு ,கட்சியிலோ,ஆட்சியிலோ ,தன் குடும்பத்தை சார்ந்தவர்கள் , உற்றார் உறவினர்கள் எவருக்கும் பொறுப்பு, பதவி ,எதுவும் தரவில்லை . இதுபற்றி ,விவரமாக, தெளிவாக , என் மனைவி, சகோதரர், உறவினர்கள் யாருக்கும் ஆட்சியிலோ, அரசு அதிகாரத்திலோ தலையிட உரிமை கிடையாது . என்*அனுமதியின்றி யாரும் அவர்களை இது விஷயமாக தொடர்பு கொள்ள*கூடாது என்று பகிரங்கமாக அறிக்கை வெளியிட்டு இருந்தார் . இந்தியாவில் எந்த மாநில முதல்வரும் இதுபோன்ற அறிக்கை வெளியிட்ட வரலாறில்லை .ஆனால் இன்றைக்கு பல மாநிலங்களிலும், தேசிய அளவிலும் வாரிசு அரசியல், குடும்ப அரசியல் சர்வ சாதாரணமாக, வெகு சகஜமாக புழக்கத்தில் உள்ளது என்பதை பார்த்து வருகிறோம் .


குழந்தைகள் அக்கறையாக, கவனமாக* படிக்க வேண்டும் ,வீரமாக வளர வேண்டும். தற்போதைய சூழ்நிலையில் உலகத்தின் பொருளாதார நிலையை*மாணவ மாணவிகள் பருவத்தினர் அறிந்து ,அவர்களின் பெற்றோர்கள் அவற்றிற்கு எதிராக போராடுவதற்கு தங்களை தயார் செய்துகொண்டு ,படித்து*முன்னேறி உலகத்தை தெரிந்து கொள்ள வேண்டும்* இந்த வேட்கை எம்.ஜி.ஆருக்கு இருந்ததால் , ஒவ்வொரு படத்திலும் குழந்தைகளுக்காக*பிரத்யேகமாக பாடலை இடம் பெறச்செய்தார் .* அரசிளங்குமரியில் சின்ன பயலே, சின்ன பயலே என்ற பாடல் , திருடாதே படத்தில் ,திருடாதே பாப்பா திருடாதே , பெற்றால்தான் பிள்ளையா படத்தில் நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி, நம் நாடு படத்தில் நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே, உலகம் சுற்றும் வாலிபனில்* சிரித்து வாழ வேண்டும் , நான் ஏன் பிறந்தேன் படத்தில் தம்பிக்கு ஒரு பாட்டு ,ஊருக்கு உழைப்பவன் படத்தில் பிள்ளைத்தமிழ் பாடுகிறேன்* என்று பல பாடல்களை சொல்லிக்கொண்டே போகலாம்*



தனது ஒவ்வொரு செயலிலும் அடுத்த தலைமுறைக்கு என்ன செய்ய வேண்டும்*என்ன சொல்ல போகிறோம் என்பதை சிந்தித்துக் கொண்டே இருந்தார் .நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி பாடலில், யார் யார் எப்படி நடந்துகொள்ள வேண்டும், யாரைப்போல்* பேச வேண்டும், யாரைப்போல் வாழ்க்கையில் படித்து முன்னேற வேண்டும் ,பெற்றோர்களிடம் எப்படி பழகுவது, மரியாதை தருவது*பற்றியெல்லாம் குறிப்பிட்டு சொல்லுவார் .சிரித்துவாழ வேண்டும்* பாடலில்*வரும் சிக்கு மங்கு சிக்கு மங்கு சாச்சா பாப்பா என்ற வரிகள் யாருக்கு எப்படி சொல்ல வேண்டும் ,குழந்தைகளுக்கு சொற்களை எப்படி அமைக்க வேண்டும் என்பதில் கவனமாக உரிய கவிஞர்களிடம் கேட்டு பெறுவதில், தேர்ந்த நிபுணராகவும், வல்லுனராகவும் திகழ்ந்தார் எம்.ஜி.ஆர். மற்ற தகவல்கள் அடுத்த அத்தியாயத்தில் தொடரும் .


நிகழ்ச்சியில் ஒலித்த பாடல்கள் /காட்சிகள் விவரம்*
-------------------------------------------------------------------------------
1.பிள்ளைத்தமிழ் பாடுகிறேன் - ஊருக்கு உழைப்பவன்*

2.விஞ்ஞானி முருகன் ஒரு காட்சியில் - உலகம் சுற்றும் வாலிபன்*

3.நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே - நம் நாடு*

4.சின்ன பயலே, சின்ன பயலே* - அரசிளங்குமரி*

5.திருடாதே பாப்பா திருடாதே - திருடாதே*

6.நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி - பெற்றால்தான் பிள்ளையா*

7.சிரித்து வாழ வேண்டும் - உலகம் சுற்றும் வாலிபன்*

orodizli
15th August 2020, 10:00 AM
#தேசியத்தலைவர்

#சுதந்திரதின #வாழ்த்துக்கள்!!! ������������

நாட்டின் சுதந்திரத்துக்காக தியாகங்கள் செய்த தலைவர்கள் மீதான பக்தியும் தேசப்பற்றும் வெகுஜனங்கள் மனதில் அழிக்க முடியாத கல்வெட்டாக பதிய நினைத்தார் நம்ம வாத்தியார். மற்ற நடிகர்களிடமிருந்து வேறுபட்டு தேசிய முகத்தை சினிமாவில் வெளிப்படுத்தத் தொடங்கினார்...பல படங்களில்...

இதற்கு உதாரணமாக, நாடோடி (1966) படத்தில் இடம் பெறும்
” நாடு அதை நாடு – அதை நாடாவிட்டால் ஏது வீடு ?
பாடும் பொழுதெல்லாம் அதையே பாடு.

பாலைவனம் என்ற போதும் நம்நாடு
பாறை மலைக் கூட நம் எல்லைக் கோடு
ஆறு நிலம் பாய்ந்து விளையாடும் தோட்டம் ”
-என்று #தேசப்பற்றை ஊட்டி பாடிய இந்த பாடலில் ” வீரர் சமுதாயமே எங்கள் கூட்டம் ” என்ற வரிகளில் தேசிய உணர்வைத் தூண்டியிருப்பார்.

இதயவீணை’ படத்தில் வரும் ‘காஷ்மீர் பியூட்டி·புல் காஷ்மீர்’ பாடலிலும் காண்பித்தார். அப்பாடலில்,
” என் தாய் திருநாட்டுக்கு வாசலிது
என்னாட்டவருக்கும் கலை கோவிலிது.
அண்ணாவின் பேர் சொல்லும் காஞ்சியைப் போல்
நேருவின் புகழ் சொல்லும் பூமியிது ”
– என்றவர், இதே பாடலில்
” யாரும் வந்து சொந்தம் கொள்ளக் கூடுமோ ?
வீரம் மானம் நம்மை விட்டுப் போகுமோ? ”
என்று காஷ்மீர் பிரச்னையையும் லேசாக தொட்டுப் போவார் நம்ம வாத்தியார்.

அடிப்படையில் மகாத்மாகாந்தியின் தீவிரபக்தரான எம்ஜிஆர் தனது பக்தியை திரையில் வெளிப்படுத்தவும் தயங்கிடவில்லை. எப்படி தனது ஒவ்வொரு படத்திலும் அறிஞர்அண்ணாவின் படம் அல்லது சிலை இடம் பெற்று வந்ததோ அதற்கிணையாக காந்தியும் அங்கம் வகித்து வந்தார்.

‘பணம் படைத்தவன்’ (1965) படத்தில் வரும் ” கண் போன போக்கிலே” பாடலில் ” மனிதன் போன பாதையை மறந்து போகலாமா ” என்ற வரிகள் வரும் போது காந்தி தடியூன்றி நடந்து போகும் ஓவியப்படத்தை குளோசபில் காண்பிப்பார்
எம்ஜிஆர்.

இதே படத்தில் ” எனக்கொரு மகன் பிறப்பான்..” பாடலில்
” சாந்தி வழியென்று #காந்தி வழிச் சென்று
கருணைத் தேன் கொண்டு தருவான் ”
– என்று ஆசைப்பட்டார்.

‘ எங்க வீட்டுப் பிள்ளை’யில் (1965) ” நான் ஆணையிட்டால்…” பாடலில்,
” முன்பு ஏசு வந்தார்; பின்பு காந்தி வந்தார் – இந்த
மானிடர் திருந்திடப் பிறந்தார் – இவர்
திருந்தவில்லை; மனம் வருந்தவில்லை.
அந்த மேலோர் சொன்னதை மறந்தார் ”
– என்று வருத்தப்பட்டார்.

” புத்தன் ஏசு காந்தி பிறந்தது
பூமியில் எதற்காக தோழா
#ஏழை #நமக்காக ”
– என்று ‘சந்திரோதயம்’ (1966) படத்தில் பாடலாக சொன்னார்.

நம்நாடு (1969) படத்தில் வில்லன்களால் பலமாக அடிபட்ட நிலையில் #காந்தியடிகள் சிலைக்கடியில் தான் எம்ஜிஆர் ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்து கிடப்பார். அந்த கோலத்தைக் கண்டு நாயகி (ஜெயலலிதா) காந்தி சிலையை பார்த்து ஆதங்கத்தோடு பேசும் வசனம்:
” பார்த்தீங்களாய்யா.. உங்க வழியே உயர்ந்த வழி ; உன்னத வழின்னு சொல்லிகிட்டிருந்த இவரோட நிலையை ? அடிச்சி உங்க காலடி யிலேயே போட்டுட்டு போயிட்டாங்க ”

அதே படத்தில் ” வாங்கையா வாத்தியாரய்யா…” பாடலில்,
” தியாகிகளான தலைவர்களாலே
சுதந்திரமென்பதை அடைந்தோமே
ஒரு சிலர் மட்டும் அனுபவிக்காமல்
பலருக்கும் பயன் பெறச் செய்வோமே..”
– என பாடல் வரிகளின் போது காந்தி, நேரு ஆகியோரின் படத்துணுக்குகள் (கிளிப்பிங்ஸ்) காண்பிக்கப்படும்.

தேசியக்கவி பாரதிக்கு முக்கியத்துவம் கொடுத்தார். இவரது படங்களில் முக்காலே முழுவீசம் #பாரதியார் புகைப்படங்கள் இடம் பெற்றிருந்ததே இதற்கு சான்று.
பெற்றால் தான் பிள்ளையா படத்தில் ‘நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி..’ பாடலில்
” கவிதைகள் வழங்கு #பாரதியைப் போல் ” என்று குழந்தைகளுக்கு அறிவுரையே செய்வார்
தம்ம வாத்தியார்..........

fidowag
15th August 2020, 10:41 PM
இன்று (15/08/20) 74 வது* சுதந்திர*தினத்தை*முன்னிட்டு*காலை*9 மணியளவில்** சென்னை*,சைதை*ஜோன்ஸ்*சாலையில் உள்ள பிள்ளையார் கோயில் அருகில் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள் நல்லாசியுடன்* ,ஆயிரத்தில் ஒருவன் இறைவன் எம்.ஜி.ஆர். பக்தர்கள் குழு, நிர்வாகிகள் திரு.பாண்டியராஜ்,திரு.லோகநாதன்,திரு.ஜி.வெங்கட ேச பெருமாள்* திரு.முருகன் ,திரு.கணேசன் ஆகியோர்* *சார்பில்*பொது மக்கள் சுமார்*100 பேர்களுக்கு*இலவச*முக கவசம், சுண்டல் , கபசுர*குடிநீர்* ஆகியன* வழங்கப்பட்டன; நிகழ்ச்சிக்கு ஆதரவு தெரிவித்து நன்கொடை அளித்த*பாசத்திற்குரிய இனிய நண்பர் திரு.ராஜா (ஈரோடு*) அவர்களுக்கு எங்கள்*நெஞ்சார்ந்த நன்றி . . நிகழ்ச்சியில்அமைப்பின் நிர்வாகிகளுடன்* உரிமைக்குரல் ஆசிரியர் திரு.பி.எஸ். ராஜு, பொன்மன*செம்மல்*எம்.ஜி.ஆர். நற்பணி*சங்கத்தை சார்ந்த*திரு.இளங்கோவன், திரு.எம்.எஸ். மணியன்*ஆகியோரும்*பங்கேற்று சிறப்பித்தனர் . .நிகழ்ச்சியின் புகைப்படங்கள் நண்பர்களின் பார்வைக்கு .

orodizli
16th August 2020, 07:42 AM
MGR Filmography Film 41 (Poster)

1957ஆம் ஆண்டின் முதல் படத்தைப் போல, அந்த ஆண்டின் இறுதிப் படமும் எம்ஜியாருக்கு வெற்றிப்படமாக அமைந்தது. ஊமைப்படங்களின் காலத்தில் நடிகனாக, இயக்குனராகத் துவங்கிய சுந்தர் ராவ் நட்கர்னியின் இயக்கத்தில் சாவித்ரி எம்ஜியாருக்கு முதல் முறையாக ஜோடியாகச் சேர்ந்தார்.

மதுரை வீரனுக்குப் பிறகு கண்ணதாசனின் அழகான வசனங்களைத் தாங்கி விஸ்வநாதன் ராமமூர்த்தியின் இனிய பாடல்களுடன் வெளியான இப்படம் ஓரு வகையில் ஜெனோவா படத்தின் மற்றொரு பதிப்பு என்றே இதைச் சொல்லலாம்; நண்பனின் மனைவியின் மீது ஆசை கொள்ளும் ஒரு காமுகன் அதை எதிர்த்துப் போராடி வெல்லும் ஒரு கற்புக்கரசி என்பதாகத்தான் இந்தப் படத்தின் கதையும்; ராமண்ணாவின் தயாரிப்பு இயக்கத்தில் தோல்வி அடைந்த கூண்டுக்கிளியின் கதையும் இதுவே! ஆனால், அந்த சோஷியல் தோல்வி அடைந்தாலும் இந்த இரண்டு காஸ்ட்யூம் ட்ராமாக்களும் வெற்றி பெற்றன. அதிலும் மகாதேவி பெரும் வெற்றி பெற்றது. அதற்கு ஒரு காரணம், முதலிரண்டில் இல்லாத ஒரு விஷயம்: சாவித்ரியின் ஹை பவர் பர்ஃபாமன்ஸ்.

உண்மையில், இந்த படத்தில் சாவித்ரி - பிஎஸ் வீரப்பா நடிப்பு அபாரம் என்று சொல்ல வேண்டும்.சாவித்ரிக்கு ஈடாக கொடுஞ்சிரிப்பு வில்லன் வீரப்பா படம் முழுதும் விரவியிருப்பார். 'அடைந்தால் மகாதேவி! இல்லையேல் மரணதேவி!' என்ற அவரது பஞ்ச் டயலாக் சாகாவரம் பெற்று விட்டது!

ஆனாலும், தன் பாத்திரத்தை மிக அழகாகத் தெளிவாகச் செய்திருந்தார் எம்ஜியார்.நாகம் தீண்டி மயங்கிக் கிடக்கும் இளவரசனை அதே பாம்பு தீண்டி விஷத்தை உறிஞ்சினால்தான் பிழைப்பான் என்று பாம்பாட்டிகள் முயன்று தோற்று இனிமேல் முடியாது என்று கை விரிக்க, அடிபட்டு கட்டுகளோடு இருக்கும் எம்ஜியார் ஒரு வார்த்தை பேசாது எழுந்து வந்து அந்தப் பாம்பாட்டியின் கையில் இருக்கும் மகுடியை வாங்கித் தான் ஊதத்துவங்குவாரே, அப்போது அந்த நடையிலும், கண்களிலும் வெளிப்படும் உறுதி - certainly a piece of classic acting. யூ ட்யூபில் படம் இருக்கிறது. பாருங்கள்..........

orodizli
16th August 2020, 08:25 AM
வரும் வாரம் மக்கள் திலகத்தின் திரைப்படங்கள்
1) 17-08-2020 பாலிமர் tv பகல் 2 மணிக்கு - நல்ல நேரம்
2) 19-08-2020- ராஜ் டிவி- இரவு 8 மணிக்கு - புதுமைப்பித்தன்
3) 19-08-2020-ராஜ் டிஜிட்டல் பிளஸ்-இரவு 7 மணிக்கு உலகம் சுற்றும் வாலிபன்
4) 20-08-2020- வசந்த். Tvயில் பகல் 1.30 மணிக்கு - ராமன் தேடிய சீதை
5)21-08-2020, ஜெயா மூவிஸ் இரவு 10 மணிக்கு - ஒரு தாய் மக்கள் ஆகிய திரைப்படங்களை கண்டு மகிழவும்- இன்று மெகா 24 tv யில் மதியம் 2.30 மணிக்கு "தொழிலாளி" காவியம் காண தவறாதீர்கள்.........முதல் தகவல் மதுரை ராமகிருஷ்ணன்

orodizli
16th August 2020, 08:27 AM
#எம்ஜிஆர்_கேட்காதவர்களுக்கும்_உதவியவர்!

M.g.r. தன்னிடம் உதவி கேட்பவர்களுக்கு மட்டுமின்றி, கேட்காதவர்களுக்கும் அவர்களுடைய நிலையை அறிந்து உதவிகள் செய்யக் கூடியவர். இதற்கு உதாரணமாக எத்தனையோ சம்பவங்கள் உண்டு.

இசை நிகழ்ச்சிகள், நாடகங்கள், கலை நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு 50 ஆண்டுகளுக்கு முன்பு சென்னையில் அவ்வளவாக அரங்குகள் கிடையாது. மயிலாப்பூரில் ரசிக ரஞ்சனி சபாவுக்கு சொந்தமான சுந்தரேஸ்வரர் அரங்கு, எழும்பூரில் அரசுக்கு சொந்த மான மியூஸியம் தியேட்டர், வால்டாக்ஸ் சாலையில் அமைந்திருந்த ஒற்றை வாடை தியேட்டர், மாநகராட்சி அலுவல கத்தை ஒட்டிய வி.பி.ஹால், அண்ணா மலை மன்றம் போன்ற ஒருசில அரங்குகள்தான் இருந்தன.

இந்த அரங்குகளில் நடந்த பல கலை நிகழ்ச்சிகளுக்கு எம்.ஜி.ஆர். வருகை தந்து தலைமை தாங்கியிருக்கிறார். மாநகராட்சி அலுவலகம் அருகே இருந்த வி.பி.ஹாலில் ஒரு கலை நிகழ்ச்சியில் கலந்து கொள்ள எம்.ஜி.ஆர். சென்றார். நிகழ்ச்சி முடிந்து கலைஞர்களை பாராட்டிவிட்டு காரில் வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்தார். அந்தக் கால கட்டத்தில் அவர் ராயப்பேட்டை லாயிட்ஸ் சாலையில் வசித்து வந்தார். சென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டிடத்துக்கு எதிரே ஒரு ரயில்வே கேட் உண்டு. இப்போது அந்த பகுதியில் மேம்பாலம் உள்ளது. பூந்தமல்லி நெடுஞ்சாலையில் இருந்து ரயில்வே கேட்டைக் கடந்து சிந்தாதிரிப்பேட்டை வழியாக ராயப்பேட் டைக்கு எம்.ஜி.ஆர். செல்ல வேண்டும்.

எம்.ஜி.ஆரின் கார் வந்து கொண் டிருந்தபோது ரயில்வே கேட் மூடப் பட்டிருந்தது. அது திறப்பதற்காக கார் காத்திருந்தது. ரயில்வே கேட் அருகே ஒரு குதிரை லாயம். காரில் எம்.ஜி.ஆர். செல்லும்போது, சுற்றும்முற்றும் கூர்ந்து கவனித்தபடி இருப்பார். அவர் பார்த்த போது குதிரை லாயம் அருகே சிறு கூட்டம். கூடவே அழுகை சத்தமும் கேட்டது. என்ன வென்று விசாரித்து வருமாறு காரில் இருந்த தனது மேனேஜர் சாமியிடம் எம்.ஜி.ஆர். சொல்ல, அவரும் விசாரித்து வந்தார்.

அங்கிருந்த ஒரு குதிரை வண்டிக்கார ருக்கு சொந்தமான குதிரை திடீரென இறந்துவிட்டது. வண்டிக்காரரின் குடும் பமே குதிரை சவாரியை நம்பித்தான் இருந்தது. திடீரென குதிரை இறந்த அதிர்ச்சி, துக்கம், இனி பிழைப்புக்கு என்ன செய்வது என்ற கவலை எல்லாம் சேர, அவரது குடும்பமே இறந்த குதிரையின் அருகில் அமர்ந்து கதறியது. அதைவிடக் கொடுமை, அந்தக் குதிரையை அடக்கம் செய்யக்கூட அவர்களிடம் பணம் இல்லை.

இந்த விவரங்களை எம்.ஜி.ஆரிடம் மேனேஜர் சாமி தெரிவித்தார். பொறுமையாகக் கேட்ட எம்.ஜி.ஆர்., ‘‘புதுக் குதிரை வாங்க எவ்வளவு பணம் தேவைப்படும்?’’ என்றார். ‘‘600 ரூபாய் தேவைப்படலாம்’’ என்றார் சாமி. ஒரு பொருளின் விலையை கடைக்காரர் அதிகமாக சொன்னால், ‘‘என்னய்யா... யானை விலை, குதிரை விலை சொல்ற?’’ என்ற வசனத்தை முன்பெல்லாம் கேட்டிருப்போம். 50 ஆண்டுகளுக்கு முன் குதிரை விலை 600 ரூபாய் என்பது அதிகம்.

சாமி சொன்னதைக் கேட்ட எம்.ஜி.ஆர்., ‘‘புதுக்குதிரை வாங்கி வந்து வண்டியில் பூட்டி ஓட்ட வேண்டும். இதற்கு சில நாட் கள் ஆகலாம். அதுவரை அந்த வண்டிக் காரரின் குடும்பம் கஷ்டப்படக் கூடாது. இறந்த குதிரையையும் அடக்கம் செய்ய வேண்டும். எனவே, குதிரை விலையோடு சேர்த்து தேவை யான பணத்தை வண்டிக்கார ரிடம் கொடுத்துவிடுங்கள்’’ என் றார். பணத்தோடு சென்ற சாமி, வண்டிக்காரரிடம் விவரங்களைச் சொல்லி பணத்தைக் கொடுத்தார்.

வண்டிக்காரருக்கு இன்ப அதிர்ச்சி. நம்ப முடியாமல் கூட்டத்தை விலக்கி எம்.ஜி.ஆர். வந்த காரைப் பார்த்தார். காரில் எம்.ஜி.ஆர். இருப்பதை கவனித்துவிட்டு இரு கைகளையும் தலைக்கு மேல் உயர்த்தி கும்பிட்டபடி, கண் ணீருடன் காரை நோக்கி ஓடிவந்து அப்படியே தரையில் விழுந்து வணங்கி னார். காரில் இருந்து இறங்கிய எம்.ஜி.ஆர்., அவரை தூக்கி ஆறுதல் சொன்னார். ‘‘இறந்த குதிரையை அடக் கம் செய்துவிட்டு, புதுக் குதிரை வாங்கி தொழிலை கவனியுங்கள்’’ என்றார். அதற் குள், விஷயம் பரவி அங்கு பெரும் கூட்டம் சேர்த்துவிட்டது. அந்த நேரத்தில், ரயில்வே கேட் திறக்கப்பட, மக்களைப் பார்த்து கையசைத்து விடைபெற்றபடி எம்.ஜி.ஆர். புறப்பட்டார்.

அந்தக் குதிரை வண்டிக்காரர் நன்றி மறக்காதவர். அடுத்த சில நாட்களில் ராயப்பேட்டை லாயிட்ஸ் சாலையில் உள்ள எம்.ஜி.ஆர். வீட்டுக்கு புதிய குதிரை பூட்டிய வண்டியை ஓட்டிக் கொண்டு வந்துவிட்டார். எம்.ஜி.ஆரை சந்தித்து அவரது காலில் விழுந்து நன்றி சொன்னார். அவரை வாழ்த்தி குதிரையையும் பார்த்து மகிழ்ச்சியுடன் அதைத் தட்டிக் கொடுத்தார் எம்.ஜி.ஆர்.!

‘பல்லாண்டு வாழ்க’ படத்தில் ஜெயிலர் ராஜன் என்ற பாத்திரத்தில் எம்.ஜி.ஆர். நடித்திருப்பார். கொடிய குற்றங்கள் செய்த சிறைக் கைதிகள் 6 பேரை தனது பொறுப்பில் அழைத்துவந்து, அவர்களோடு தானும் வாழ்ந்து கைதிகளை திருத்தும் முயற்சியில் ஈடுபடுவார். குற்றவாளி களில் ஒருவராக நடிக்கும் ஆர்.எஸ். மனோகர், கதைப்படி தனது மனைவியை கொன்றுவிட்டதால் சிறை தண்டனை அடைந்திருப்பார். அவரைப் பார்க்க மனோகரின் இரண்டு குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு அவரது தாயார் வருவார்.

தனது தள்ளாத வயதில், வீடுகளில் வேலைசெய்து குழந்தைகளைக் காப்பாற்றி வருவதாகவும் தானும் இறந்துவிட்டால் இந்தக் குழந்தைகளின் கதி என்ன என்று மனோகரிடம் கூறி அவரது தாயார் கலங்குவார். என்ன செய்வதென்று புரியாமல் மனோகரும் கண் கலங்கும் கட்டம் பார்ப்பவர் மனதை உருக்கும்.

இதைக் கேட்டுக் கொண்டிருக்கும் எம்.ஜி.ஆர்., இரு குழந்தைகளையும் தான் பார்த்துக் கொள்வதாகக் கூறுவார். அந்தத் தாய், நன்றியும் மகிழ்ச்சியும் போட்டிபோட, உணர்ச்சிப் பெருக்கோடு எம்.ஜி.ஆரைப் பார்த்துச் சொல்வார்…

‘‘இந்த உலகத்துலே ஏழைங்களோட கஷ்டத்தைப் புரிஞ்சவங்க உன்னை மாதிரி வேற யாரும் இல்லப்பா!’’

#சிறு_குறிப்பு :

எம்.ஜி.ஆர். குதிரையேற்றம் அறிந்தவர். மாடர்ன் தியேட்டர்ஸ் அதிபர் டி.ஆர்.சுந்தரமும் குதிரை சவாரியில் விருப்பம் உள்ளவர். பல குதிரைகளை வளர்த்து வந்தார். மாடர்ன் தியேட்டர்ஸின் ‘அலிபாபாவும் 40 திருடர்களும்’ படத்தில் குதிரை சவாரி காட்சியில் எம்.ஜி.ஆர். ஓட்டியது, டி.ஆர். சுந்தரத்துக்கு சொந்தமான குதிரை. பெரியகுளம் எம்ஜிஆர் மன்ற நகரச் செயலாளர் வி.டி.எஸ். இராஜ்வேலு பெரியகுளம்.........

orodizli
16th August 2020, 08:28 AM
தமிழ் சினிமா வரலாற்றில் 1931 ஆம் ஆண்டு முதல் 1960 ஆம் ஆண்டுவரை எந்த நடிகரின் திரைப்படங்களும் சாதிக்காத வெற்றிகளை புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்கள் தனிப்பெரும் கதா நாயகனாக தமிழ் சினிமாவில் வலம் வந்து வரலாற்று சிறப்பு மிகு வெற்றிகளை படைத்துள்ளார்.

புரட்சி நடிகரின் மலைக்கள்ளன் 50 திரையரங்கில் 50 நாட்களை கடந்து சாதனை.*
குலேபகாவலி திரைப்படம் 50க்கும் மேற்பட்ட அரங்கில் 50 நாட்களை கடந்து வெற்றி முரசு கொட்டியது.
*மக்கள் திலகத்தின் அலிபாபாவும் நாற்பது திருடர்களும் திரைப்படம் தென்னக மெங்கும் எழுபத்தைந்து திரையரங்கில் 50 நாட்களை கடந்து முரசு கொட்டியது.

1956ஆம் ஆண்டில் வெளியான மூன்று திரைப்படங்களும் வெவ்வேறு பற்பல சாதனைகளை தமிழ்சினிமாவில் படைத்துள்ளது.

மதுரை வீரன் திரைப்படம்*
35 அரங்கில் 100 நாட்களும்*
75 அரங்கில் 75நாட்களும்*
110 அரங்கில் 50 நாட்களும் ஓடி தமிழ் சினிமா சரித்திரத்தில் அசைக்க முடியாத வெற்றியை படைத்தார் மதுரைவீரன்.
தாய்க்குப்பின் தாரம்*
சக்கரவர்த்தி திருமகள் திரைப்படங்களும்*
40க்கும் மேற்பட்ட அரங்குகளில்*
50 நாட்களை கடந்து வெற்றி முரசு கொட்டி சாதனை படைத்தது..........

orodizli
16th August 2020, 01:04 PM
#எம்ஜிஆர்_விளம்பரத்தை_விரும்பாத_உள்ளம்!

M.g.r. ஜாதி, மத, இன, மொழி, மாநில எல்லைகளை எல்லாம் தாண்டி, பாதிக்கப்பட்ட மக்கள் யாராக இருந்தாலும் உதவுவார். அதேநேரம் தமிழர்களையும் அவர்களது கலாசாரத்தையும் மற்ற மாநிலத்தவர் இழிவுபடுத்துவதை அனுமதிக்க மாட்டார். பாதிக்கப் பட்டவர்களுக்கு செய்யும் உதவியைவிட, தனது எதிர்ப்பையே முன்னிலைப்படுத்துவார்.

ஒருமுறை ஒடிசா மாநிலத்தில் (அப் போது ஒரிசா) பெரும் வெள்ளம் ஏற் பட்டது. ஏராளமானோர் உயிரிழந்த னர். ஆயிரக்கணக்கான மக்கள் வீடு, வாசல்களை இழந்து தவித்தனர். சென்னையில் தங்கியிருந்து மருத்துவக் கல்லூரியில் படித்துவந்த ஒடிசா மாணவர்கள், தங்கள் மாநிலத்துக்கு நிவாரண நிதி திரட்டித் தர விரும்பினர்.

அதற்காக, நடிகை வைஜெயந்தி மாலாவும், நடிகர் கிஷோர் குமாரும் நடித்து அப்போது வட மாநிலங்களில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருந்த ‘நியூ டெல்லி’ என்ற இந்திப் படத்தை சென்னை அசோக் திரையரங்கில் (இந்த திரை யரங்குதான் பின்னர் சிவசக்தி என்று பெயர் மாற்றப்பட்டது) காலைக் காட்சி யாக திரையிட முடிவு செய்தனர். அது 1956-ம் ஆண்டு. அப்போதே திமுகவில் எம்.ஜி.ஆர். முக்கிய பிரமுகராகவும் திரை உலகில் சூப்பர் ஸ்டாராகவும் இருந்தார்.

இந்த நிகழ்ச்சிக்கு எம்.ஜி.ஆர். தலைமை தாங்க வேண்டுமென்றும் அவர் வந்தால் வசூல் அதிகமாக கிடைக்கும் என்றும் ஒடிசா மாணவர்கள் கருதினர். திரையிடப்படுவதோ இந்திப் படம். திமுகவோ இந்தி திணிப்புக்கு எதிரான இயக்கம். இதனால், எம்.ஜி.ஆரை அழைத்தால் அவர் நிகழ்ச்சிக்கு வரு வாரா என்று மாணவர்களுக்கு சந்தேகம். இருந்தாலும் கேட்டுப் பார்க்கலாம் என்று எம்.ஜி.ஆரை தொடர்புகொண்டு தங்கள் விருப்பத்தைத் தெரிவித்தனர்.

ஒருவர் துன்பப்படுகிறார் என்றால், அவர்கள் தன்னை எதிரியாக நினைப்பவர் களாக இருந்தாலும் உதவி செய்பவர் எம்.ஜி.ஆர்.! நிகழ்ச்சிக்கு வர சம்மதித் தார். ஒடிசாவைச் சேர்ந்த மாணவர் களுக்கு மட்டற்ற மகிழ்ச்சி. அந்த சமயத் தில் திடீரென ஒரு சிக்கல் முளைத்தது.

வட மாநிலங்களில் ஓடிக்கொண்டி ருந்த ‘நியூ டெல்லி’ திரைப்படம் சென்னை யிலும் வெளியானது. படத்தில் ஒரு காட்சியில் தமிழர் ஒருவரின் தலையில் செருப்பை வைத்து கதாநாயகன் கிஷோர் குமார் ஆடிப் பாடி வருவார். அருகே கதாநாயகி வைஜெயந்தி மாலாவும் இருப்பார். இந்தக் காட்சி சர்ச்சையை ஏற்படுத்தியது.

‘‘ஒரு தமிழ் நடிகை கதாநாயகியாக நடித்துள்ள படத்தில் தமிழர்களை இழிவு படுத்துவது போன்ற காட்சி எப்படி இடம் பெற்றது? இது தமிழர்களை அவமதிக்கும் செயல். இந்தப் படத்தை தமிழகத்தில் திரையிட அனுமதிக்கலாமா?’’ என்று கண்டனக் குரல்கள் கிளம்பின. ‘நியூ டெல்லி’ படத்தை திரையிட ஏற்பாடு செய் திருந்த மாணவர்களுக்கு பயத்தோடு கவலையும் சேர்ந்துகொண்டது. விழாவுக்கு எம்.ஜி.ஆர். வருவாரா? என்று கவலைப்பட்டனர்.

படத்துக்கு எழுந்த எதிர்ப்பு எம்.ஜி.ஆரின் கவனத்துக்கு சென்றது. அவருக்கும் தர்மசங்கடம். ‘‘தமிழர்களை இழிவு செய்யும் காட்சியைக் கொண்ட படத் துக்கு நான் எப்படி தலைமை வகித்து வசூலுக்கு உதவ முடியும்? இதுபோன்ற காட்சி படத்தில் உள்ளது என்று என்னிடம் முன்பே ஏன் தெரிவிக்கவில்லை?’’ என்று விழா ஏற் பாட்டாளர்களிடம் கடிந்துகொண்டார். தாங்கள் அந்தப் படத்தை பார்க்கவில்லை என்றும் தெரிந்திருந்தால் இதுபோன்று நடந்திருக்காது என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

சிறிதுநேரம் நிதானமாக யோசித்த எம்.ஜி.ஆர்., ‘‘நிகழ்ச்சிக்கு வருகிறேன். ஆனால், எனது எதிர்ப்பைத் தெரிவிப் பேன்’’ என்று உறுதியாகக் கூறிவிட்டார். இதற்கிடையே, எம்.ஜி.ஆரை விமர்சிப் பவர்கள் ஒருபக்கம், ‘‘தமிழர்களை இழிவு படுத்தும் படம் திரையிடும் நிகழ்ச்சியில் எம்.ஜி.ஆர். எப்படி கலந்துகொள்ள லாம்?’’ என்று கேள்வி எழுப்பினர்.

இந்த அமர்க்களங்களுக்கிடையே, குறிப்பிட்ட நாளில் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள எம்.ஜி.ஆர். சென்றார். திரை யரங்கம் இருந்த பகுதியில் நுழையவே முடியாதபடி மக்கள் வெள்ளம். மாண வர்கள் எதிர்பார்த்ததற்கும் அதிகமாகவே வசூல் கிடைத்தது. படம் திரையிடப்பட்டு இடைவேளையின்போது, எம்.ஜி.ஆர். பேச அழைக்கப்பட்டார்.

‘‘திரைப்படம் என்பது சக்தி வாய்ந் தது. பார்ப்பவர்கள் மனதில் ஆழமாகப் பதியக்கூடியது. மக்களிடம் ஒற்றுமையை ஏற்படுத்த வேண்டுமே தவிர, வெறுப்பை யும் வேற்றுமையையும் ஏற்படுத்தக் கூடாது. இந்தப் படத்தில் ஒரு தமிழரின் தலையில் செருப்பு வைக்கும் காட்சி இடம் பெற்றுள்ளது. அந்தக் காட்சியைப் பார்த்து நான் மிகவும் வேதனைப்பட் டேன். என்னைப் போலவே தமிழ் மக் களும் வேதனை அடைந்துள்ளனர். நாட் டின் எந்த பகுதி மக்களின் உணர்வுகளை யும் பாதிக்கும் காட்சிகள் படத்தில் இடம் பெறச் செய்யக் கூடாது.’’ என்று தனது எதிர்ப்பை எம்.ஜி.ஆர். தெரிவித்தார்.

அதேநேரம், மாணவர்களின் நாட்டுப் பற்றையும் நல்ல நோக்கத்தையும் பாராட்டுவதாகவும் அதற்காகவே இந்த நிகழ்ச்சிக்கு வந்ததாகவும் கூறினார். அவரது பேச்சை ஆமோதித்து கூட்டத் தினர் பலத்த கரகோஷம் செய்தனர்.

நிகழ்ச்சி முடிந்து காரில் ஏறும்போது, ‘‘நாளை என்னை வந்து சந்தியுங்கள்’’ என்று நிகழ்ச்சி அமைப்பாளர்களிடம் கூறிவிட்டு எம்.ஜி.ஆர். புறப்பட்டார். மறுநாள் அவரது வீட்டுக்குச் சென்று மாணவர்கள் சந்தித்தனர். அவர்களை வரவேற்று உபசரித்தார் எம்.ஜி.ஆர்.! ‘‘உங்கள் நோக்கம் உயர்வானது. ஆனால், நீங்கள் திரையிட தேர்ந்தெடுத்த படம் பற்றி என்னால் அப்படி சொல்ல முடி யாது. உங்களின் நற்பணிக்கு எனது சிறிய காணிக்கை’’ என்று கூறி, மாணவர்களிடம் ஒரு பெரும் தொகையை நன் கொடையாக அளித்தார்.

இதை எதிர்பார்க்காத மாணவர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர். தன்னை வந்து சந்திக்குமாறு எம்.ஜி.ஆர். கூறியது இதற்குத்தான் என்பதையும் புரிந்து கொண்டனர். ‘இந்த நன்கொடையை நேற்று மேடையிலேயே கொடுத்திருக்க லாமே?’ என்று மாணவர்களுக்கு சந் தேகம். அதற்கு விடையளிப்பதுபோல எம்.ஜி.ஆர். சொன்னார்…‘‘நேற்று நான் நன்கொடை கொடுத்திருந்தால் அதற்குத் தான் முக்கியத்துவம் கிடைத்திருக்கும். என் எதிர்ப்பின் வலிமை குறைந்து போயிருக்கும்’’ என்றார்.

ஒடிசா வெள்ள நிவாரணத்துக்கு எம்.ஜி.ஆரின் உதவி வெளியே தெரிய வில்லை. ஆனாலும், விளம்பரத்தை விரும்பாத அவரது உதவும் உள்ளம் ஒடிசா மாணவர்களுக்குத் தெரிந்தது!

#சிறுகுறிப்பு:

‘நவரத்தினம்’ படத்தில், ‘லடுக்கே ஸே மிலீ லடுக்கி’ என்ற இந்திப் பாடல் இடம் பெற்றது. இந்தப் பாடல் காட்சியில் எம்.ஜி.ஆருடன் நடிகை ஜரீனா வஹாப் நடித்திருந்தார். தமிழ் படம் ஒன்றில் முழுமையாக இந்திப் பாடல் இடம் பெற்றது அப்போது புதுமை!.........

orodizli
16th August 2020, 01:05 PM
"#புரட்சித்தலைவர் அவர்களின் முதல் ரசிகன் நான்தான்... அப்போது எனக்கு 13 வயது. எம்ஜிஆருக்கு 16 வயது."

"#எம்ஜிஆர் திரையுலகிலும், அரசியலிலும் கொடி கட்டி வாழ்ந்த காலத்தில் அவருக்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் இருந்தார்கள்.

ஆனால், எம்ஜிஆரின் முதல் ரசிகன் நான்தான் எனச் சொல்லிக் கொள்கிற பெரும் பாக்கியமும் உரிமையும் எனக்கு உண்டு.

அப்போது எனக்கு 13 வயது. எம்ஜிஆருக்கு 16 வயது.

கும்பகோணம் பாணாதுறை ஏரியாவில் இருந்த ஒரு பெட்டிக்கடைக்காரர்தான் எம்ஜிஆரைத் தத்தெடுத்து வளர்த்தார்.

அப்போதெல்லாம் எம்ஜிஆர் துளியளவும் பெயர் பெற்றிருக்கவில்லை. ஆனால், பார்ப்பவர்களை நின்று நிலைத்துத் திரும்பிப் பார்க்கிற அளவுக்கு
எம்ஜிஆர் பேரழகுடன் இருந்தார்.

செக்கச் சிவந்தவரான எம்ஜிஆரை எப்படியும் சினிமாவில் சேர்த்துப் பெரிய ஆளாக்கிவிட வேண்டும் என்ற நோக்கில் அவருக்கு குஸ்தி விளையாட்டு கற்றுக் கொடுத்தார்கள்.

பாணாதுறையில் இருந்த அசேன்- உசேன் என்கிற பிரசித்தி பெற்ற குஸ்தி வாத்தியார்தான் எம்.ஜி.ஆருக்குப் பயிற்சி கொடுத்து வந்தார்.

எம்.ஜி.ஆர். கம்பு சுற்றும் அழகை தினமும் வேடிக்கை பார்ப்பேன். என்னோடு இன்னும் சிலரும் எம்.ஜி.ஆர். கம்பு சுற்றும் வேகத்தைக் கண்டு வியந்து பேசுவார்கள்.

குஸ்தி கற்க வரும் எம்.ஜி.ஆரிடம் பல முறை வலியப் போய் பேசியிருக்கிறேன்.

நான் மட்டுமல்ல, எம்.ஜி.ஆர். சினிமாவுக்குப் போகப் போகிறார் என்பதாலேயே பலரும் அவரோடு நெருங்கி வந்து பேசுவார்கள்.

அப்போதெல்லாம் எம்.ஜி.ஆர். அதிகம் பேச மாட்டார். அவராக நம்மைப் பார்த்து ஒரு வார்த்தை கேட்க மாட்டாரா? எனப் பல முறை ஏங்கி இருக்கிறேன்.

பல வருடங்களுக்குப் பிறகு அவரே வாய் குளிர என்னையும், எனது சமையலையும் பாராட்டுகிற நேரம் எனக்கு வாய்த்தது.

எம்.ஜி.ஆர். அமெரிக்காவுக்குப் போய் தன் உடல்நிலையைச் சரிசெய்து கொண்டு திரும்பி வந்த நேரம். அவர் குணமடைந்ததற்காக இறைவனுக்கு நன்றி சொல்லும் விதமாக அன்னதான விருந்து ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதற்கான முழுப் பொறுப்பும் என்னிடம் கொடுக்கப்பட்டிருந்தது.

எம்.ஜி.ஆர். மீது பேரபிமானம் கொண்டிருந்த எனக்கு சொல்ல வேண்டுமா என்ன? சாதத்தை மலை போல் சமைத்து ஆயிரக்கணக்கானோருக்கு அன்னதானம் வழங்க கடகடவென ஏற்பாடு செய்தேன்.

அண்ணாமலையாரின் திருவுருவத்தை சாப்பாட்டாலேயே ஜோடித்து வைத்திருந்தேன்.

ஆனால் அந்த அன்னதான விழாவுக்கு எம்.ஜி.ஆரால் வர முடியாத சூழல்.

இருந்தாலும் விழாவுக்கு ஏற்பாடு செய்திருந்த நண்பர்கள் சாதத்தாலேயே வடிவமைக்கப்பட்ட அண்ணாமலையாரின் திருவுருவத்தைப் பற்றிய விஷயங்களை எல்லாம் எடுத்து சொல்லி எம்.ஜி.ஆரை அந்த அன்னதான விழாவுக்கு அழைத்து வந்து விட்டனர்.

ஜானகி அம்மையாருடன் எம்.ஜி.ஆர். அந்த அன்னதான விழாவுக்கு வந்தார். சாதத்தால் உருவாக்கப்பட்ட அண்ணாமலையாரின் உருவத்தைக் கண்டார். அவர் என்ன சொல்லிப்போகிறாரோ எனப் புரியாமல் படபடப்புடன் நின்று கொண்டிருந்தேன்.

‘இந்த ஏற்பாட்டை யார் செய்தது?’ எனக் கேட்டார். அருகே நின்ற அனைவரும் என்னைக் கைகாட்டினார்கள்.

சட்டென என் கையைப் பிடித்தவர், ‘இது அண்ணாமலையா…. இல்லை அன்னமலையா!’ எனக் கவிதை பாணியில் பாராட்ட, நான் புல்லரித்துப் போனேன்.

அவரது சாதாரண வார்த்தைகளைக் கேட்கவே ஏங்கிய எனக்கு, அவர் வாஞ்சையோடு வாரியணைத்து வாழ்த்துச் சொனனபோது என்னையும் மீறி ஆனந்த அழுகை வந்துவிட்டது."

‘ஞானாம்பிகா’ ஜெயராமன் அவர்களின் நினைவுகளில் இருந்து...........

orodizli
16th August 2020, 01:08 PM
தமிழ் சினிமா வரலாற்றில் மக்கள் திலகத்தின் பொன்னான காவியம் சகோதர பாசத்திற்கு மகுடம் பதித்த திரைப்படம் "என் தங்கை ", காவியம் ஆகும். இத்திரைப்படத்தில் புரட்சி நடிகருக்கு கதாநாயகி கிடையாது .டூயட் பாடல்கள் கிடையாது .எந்த பாடலும் கிடையாது. சண்டைக் காட்சிகள் கிடையாது. இயற்கையாக நடித்து புகழ் பெற்ற முதல் நடிகர் என்ற பெருமையை பெற்றவர் புரட்சி நடிகர் எம் ஜி ஆர் அவர்கள்.

என் தங்கை திரைக்காவியம் 1952 ஆம் ஆண்டு வெளிவந்தது.*
அதற்கு முன் சகோதர பாசத்திற்கு இப்படிப்பட்ட கதை அமைப்புடன் கூடிய திரைப்படம் வெளிவந்ததில்லை .எவரும் சிறப்புடன் நடித்ததில்லை.

மக்கள் திலகம் அவர்கள் வேஷ்டி சட்டையுடன் தன் நடிப்பை இயற்கையாக பிரதிபலித்த ஒப்பற்ற காவியம். சகோதர பாசத்திற்கு முதன்முதலாக அச்சாரம் போட்ட திரைப்படம் என் தங்கை ஆகும்.

என் தங்கை திரைப்படம் போல் பல திரைப்படங்கள் பின்னாளில் சகோதர பாசத்துடன் எடுக்கப்பட்டாலும் வெளிவந்தாலும் அதற்கு முன்னுதாரணமாக திகழ்ந்த வெற்றி பெற்ற மகத்தான சாதனையை கடந்த காவியம்.*

புரட்சி நடிகரின் மென்மையான நடிப்பில் புரட்சிகரமான முகபாவனையில் வெளிவந்த காவியம் என் தங்கை ஆகும்.

என் தங்கை திரைப்படம் தமிழகத்திலும், இலங்கையிலும் மகத்தான சாதனைகளை படைத்துள்ளது.*

அதன் பின்பு பாசம் காட்டிய* திரைப்படங்கள் எல்லாம் இன்றுவரை பெட்டியில் தூங்கினாலும்.....*
என் தங்கை திரைப்படம் எல்லோர் மனதிலும் நிலைத்த மகத்தான காவியமாக என் தங்கை*
திரைப்படம் திகழ்கிறது.
சகோதர பாசத்திற்கு இமயமாக திகழ்ந்து கொண்டுவருகிறது..........

orodizli
16th August 2020, 01:10 PM
தமிழ் சினிமா வரலாற்றில் ஏன் இந்திய சினிமா வரலாற்றில் கூட மக்கள் திலகத்தின் சரித்திரப் படங்கள் போல் எந்த நடிகரும் பின்னாளில் அப்படங்கள் மூலம் சாதித்த சாதனைகள் ஒன்றுகூட கிடையாது.
*ஆனால் மக்கள் திலகம் ஒருவர்தான் சரித்திரப் படங்களுக்கு ஏற்ற*
கதாநாயகனாக*
இன்றுவரை*
வெள்ளித்திரையில்*
மின்னுகிறார்.

ராஜகுமாரி முதல் மர்மயோகி சர்வாதிகாரி திரைப்படம் முதல் குலேபகாவலி வந்தது... அலிபாபாவும் வந்தது....
மதுரை வீரனும் இன்று வரை வெள்ளித்திரையில் ஓடுகிறது. புதுமைப்பித்தனும் புரட்சிகரமாக நடைபெறுகிறது.*
நாடோடி மன்னனும்* வெள்ளித்திரையில் ஆண்டுதோறும் வருகிறது. ஆனால் மற்ற நடிகர்களின் சரித்திரப் படங்கள் மண்ணோடு மண்ணாக வீழ்ந்தது என்பதுதான் திரையுலக வரலாறு ஆகும்.

சரித்திரப் படங்களுக்கு ஏற்ற ஒரே வீரமிகு கதாநாயகன், தனிப்பெரும் கதாநாயகன், மக்கள் திலகம், புரட்சி நடிகர் எம் ஜி ஆர் ஒருவர்தான் என்பது அன்று அல்ல இன்று வரை பேசப்பட்டு வரும் ஒரு உன்னதமான புகழ் மிகுந்த பேச்சாகும்.

புரட்சி நடிகர் சமூகப் படங்களிலும் நடித்து வெற்றி பெற்றார்.*
என் தங்கை, அந்தமான் கைதி மலைக்கள்ளன்,*
தாய்க்கு பின் தாரம் திரைப்படங்கள்*
வெற்றி பெற்றது .
அதன்பின்பு*
சரித்திர படங்களான குலேபகாவலி,
அலிபாபா, மதுரைவீரன், சக்கரவர்த்தி திருமகள், புதுமைப்பித்தன்,*
நாடோடிமன்னன்,*
பாக்தாத் திருடன் திரைப்படங்களும்*
வெற்றிமுரசு கொட்டி*
இன்றுவரை வெளிவந்து வெள்ளித்திரையை*
ஆக்கிரமித்துக் கொண்டு வருகிறது என்பது தான் கடந்த கால வரலாறும்.....
இன்றைய வரலாறும்...
தொடர்ந்த வண்ணம் இருக்கிறது.

ஆனால் சில நடிகர்கள் அன்று ஓடிய ஓட்டத்தை வைத்தும், கணக்கை வைத்தும் பதிவுசெய்து வருகின்றார்கள். அப்படங்கள் யாவும் திரைக்கு வருவதேயில்லை. பொய்யும் புரட்டும் கொண்டு போலியான எண்ணத்தை விதைக்கின்றார்கள்
அந்நடிகரின் ரசிகர்கள்..........

orodizli
16th August 2020, 01:12 PM
இந்திய சினிமா வரலாற்றில் மட்டுமல்ல ...உலக சினிமா வரலாற்றில் மக்கள் திலகத்தின் புதிய படங்கள் ஆனாலும் சரி....
மக்கள் திலகத்தின் ஓல்ட் இஸ் கோல்ட்... திரைப்படங்களான பழைய திரைப்படங்கள் ஆனாலும் சரி....
இன்றுவரை பல வெளியீடுகளை நூற்றுக்கணக்கான வெளியீடுகளை....
சந்தித்து சிறப்புமிகு சாதனைகளை செய்து வருகிறது.

புரட்சி நடிகர் சினிமா உலகில் தடம் பதித்த வெற்றிகளில் முக்கியமான திரைப்படமான எம் ஜி ஆர் பிக்சர்ஸ் தயாரித்த*
மக்கள்திலகம் இருவேடங்களில் வலம் வந்த....
இயக்குனராக சிறப்புமிகு காவியத்தை தந்த....
பொன்மனச் செம்மலின்*
"நாடோடி மன்னன்" காவியம் திரைப்படம் போல் எந்த நடிகரின்*
திரைப்படமும் இதுவரை*
சாதித்த வரலாறு*
சினிமா உலகில் கிடையாது.

1958 ஆம் ஆண்டு முதல்*
2019 ஆம் ஆண்டுவரை இத்திரைப்படம்*
பற்பல ஊர்களில்*
மூன்று வாரம் 5 வாரம் கடந்துள்ளது.
இப்படி பல வாரங்கள் ஓடி*
பல வெளியீடுகளை சந்தித்து... மாற்றான் படங்களின் பல
புதிய வரவுகளை வென்று*
புதிய சாதனையை....*
வசூலை....*
ஆண்டுதோறும் படைத்து வந்துள்ளது.*
62 ஆண்டு காலம் இத்திரைப்படத்தின்*
வரலாறு எல்லோராலும் புகழப்படும்.... போற்றப்படும்*
சரித்திரமாகும்.*

புரட்சி நடிகரின்*
நாடோடிமன்னன்*
வரவால் தமிழ் திரையுலகம் வளர்ந்தது. உலக நாடுகளில் பல வெற்றிகளை பதித்துள்ளது..........

fidowag
16th August 2020, 09:34 PM
"குமரிக்கோட்டம்" k c பிலிம்ஸ் கோவை செழியனின் படம் . ஊட்டி வரை உறவு படத்தின் வசூல் தோல்விக்கு பின்னர் வந்த வெற்றிப் படம். "ஊட்டி வரை உறவு" படத்தை வசூலில் தோல்வி என்று நான் சொல்லவில்லை. சிவாஜியே அவருடைய படத்தை ஒரு வரி விமர்சனம் செய்யும் போது குறிப்பிட்டதுதான்.

100 நாள் ஓடியும் தயாரிப்பாளர் நஷ்டம் என்று கூறுகிறார் என்று குறிப்பிட்டிருக்கிறார். அதற்கு காரணம் நிறைய உண்டு. முதலில் வைத்த பெயர் "காலமெல்லாம் காத்திருப்பேன்". அதன்பின் "வயது 18 ஜாக்கிரதை" என்று பெயர் மாற்றம் செய்து படப்பிடிப்பு துவங்கியது. கதை திருப்தி இல்லாததால் அதுவரை எடுத்த காட்சியில் ஒன்றிரண்டை தவிர அனைத்தையும் தூக்கி போட்டு விட்டு தற்போது உள்ளதுபோல் படமாக்கினார்கள்.

கால தாமதம், வீண் விரயம் போன்றவற்றால் செலவு எகிறிவிட்டது. சிவாஜிக்கு அந்தளவு வியாபார மார்க்கெட் இல்லாததால் படம் நஷ்டத்தை ஏற்படுத்தியது. அதன்பின் நெடுநாள் படம் எடுக்காமல் இருந்தவர் பின் தலைவரின் கண்பார்வை கிடைத்தவுடன் ஆரம்பிக்க பட்ட படம்தான் "குமரிக்கோட்டம்". அறிஞர் அண்ணா எழுதிய "குமரிக்கோட்டம்" என்ற சிறுகதையின் தலைப்பை படத்தின் பெயராக வைத்தார்கள். பெயரும் கவர்ச்சியாக இருந்ததால் எதிர்பார்ப்பும் எகிறி இருந்தது. இந்தப்படமும் சற்று கால தாமதமாகத்தான் வெளிவந்தது.

படத்தின் ஹைலைட்டே பாடல்கள்தான் என சொல்லலாம். அந்த காலத்தில் ரேடியோ நிகழ்ச்சியில் ரசிகர்களால் தேர்ந்தெடுக்கப்படும் விவித்பாரதியின் "தேன் கிண்ணம்" நிகழ்ச்சியில் "நாம் ஒருவரை ஒருவர் சந்திப்போம்" பாடல் தொடர்ந்து பல வாரங்கள் முதலிடம் பெற்றிருந்தது பாடலின் சிறப்பை குறிப்பிடுகிறது.

அந்தப்பாடல் மட்டுமல்ல 'எங்கே அவள்' பாடலும் சூப்பர்ஹிட். அந்தப்பாடலில் தலைவரின் அழகில் மன்மதனே மயங்கி விடுவான் என்று சொல்லும் அளவுக்கு மிகவும் எழிலாக தோன்றுவார். 1971 பொங்கலுக்கு வந்து விடும் என்று நினைத்து ஏமாந்தோம். ஜன 26 அன்று வெளியானது. பொங்கலுக்கு வெளியாகி இருந்தால் வெற்றியின் அளவு கூடியிருக்கும்.

படம் வெற்றி பெற்று 100 நாட்கள் 4 திரையரங்குகளில் ஓடியது.
மதுரை சிந்தாமணியில் 100 நாட்கள் ஓடி 2,51,903.08 வசூல் செய்தது. சேலம் பேலஸில் 118 நாட்கள் ஓடி
2,29,396.96 வசூல் செய்தது. சென்னையில் மொத்தம் 9,01,411.27 ரூ. வசூலாக பெற்றது. "குமரிக்கோட்டம்" வெற்றியை தொடர்ந்து k.c பிலிம்ஸின் அடுத்த படமாக "உழைக்கும் கரங்கள்" தயாரிக்கப் பட்டது குறிப்பிடத்தக்கது.

fidowag
16th August 2020, 09:35 PM
தனியார் டிவிக்களில் நடிக பேரரசர்*எம்.ஜி.ஆர். திரைக்காவியங்கள்*ஒளிபரப்பான*விவரம் 08/08/20* முதல் 15/08/20* வரை*
----------------------------------------------------------------------------------------------------------------
08/08/20* - சன்* லைப்* *- காலை 11 மணி* *- விவசாயி*

* * * * * * * * * சன் லைஃப் - மாலை 4 மணி* - என் தங்கை*

09/08/20* - சன்* லைஃப் - காலை 11 மணி - அன்னமிட்டகை*

* * * * * * * * *மெகா 24* * - பிற்பகல் 2.30 மணி* - விவசாயி*

10/08/20 -மெகா 24- அதிகாலை 2 மணி - தாய் சொல்லை தட்டாதே*

* * * * * *- முரசு டிவி - மதியம் 12 மணி / இரவு 7 மணி - வேட்டைக்காரன்*

* * * * * * * * வசந்த் டிவி - பிற்பகல் 1.30 மணி - சங்கே முழங்கு*

* * * * * * * சன்* லைஃப்* - மாலை 4 மணி - நீதிக்கு தலை வணங்கு*

* * * * * * * பூட்டோ டிவி - இரவு 8.30 மணி -அன்பே வா*

11/08/20-* சன் லைஃப்* - காலை 11 மணி - எங்க வீட்டு பிள்ளை*

* * * * * * * *புதுயுகம் டிவி - இரவு 7 மணி - தாய்க்கு தலைமகன்*

12/08/20 -சன் லைஃப்* - மாலை 4 மணி - நவரத்தினம்*

* * * * * * * *மீனாட்சி டிவி -இரவு 7 மணி - வேட்டைக்காரன்*

* * * * * * * *தமிழ் மீடியா டிவி - இரவு 8 மணி - பட்டிக்காட்டு பொன்னையா*

13/08/20 சன் லைஃப் - காலை 11 மணி - நல்ல நேரம்*

* * * * * * * புதுயுகம் டிவி - இரவு 7 மணி - பெற்றால்தான் பிள்ளையா*

14/08/20- மெகா 24 -. பிற்பகல் 2.30 மணி - தனிப்பிறவி*

* * * * * * * *மீனாட்சி டிவி - இரவு 7 மணி -நல்ல நேரம்*

* * * * * * * *எம்.எம்.டிவி - இரவு 8 மணி* - ரிக் ஷாக் காரன்*

15/08/20 -சன்* லைஃப்* - காலை 11 மணி - வேட்டைக்காரன்*

* * * * * * * *முரசு டிவி* - மதியம் 12 மணி / இரவு 7 மணி - நீதிக்கு பின் பாசம்*



*

fidowag
16th August 2020, 09:55 PM
அரசியல் உலகை*போல தமிழ் சினிமா உலகிலும் இன்று கட்சி*போட்டிகள்* மிக வேகமாக வளர்ந்து வருகின்றன* பல நடிகர்களுக்கு கட்சிகள் இருந்த*போதிலும்*இரண்டு கட்சிகள்தான் முக்கியமானவை . எம்.ஜி.ஆர். கட்சி ஒன்று , மற்றொன்று சிவாஜி*கணேசன் கட்சி .

அரசியல் கட்சி*ஆதரவாளர்களின் ஆரவாரங்களை விட இந்த சினிமா*கட்சி*ஆதரவாளர்களின் ஆரவாரம் மிக மிக அதிகம் . இவர்களெல்லாரும் இளைஞர்களாய்* இருப்பதே*இதற்கு காரணம்*.

யாருடைய* படம் அதிகநாள் ஓடுகிறது என்பன*போன்ற விஷயங்களை*எல்லாம்*இந்த இளைஞர்கள் மிகுந்த* அக்கறையோடு விவாதிக்கிறார்கள் .* தங்கள் கட்சி*நடிகர்தான் அதிகம் சம்பாதிக்கிறார் .என்பதும் பெருமைக்குரிய ஒரு விஷயமாக இருக்கிறது .**

தமிழ் சினிமா*உலகில்*இன்று தனது* நடிப்பு கூலியாக*பெருந்தொகை*பணத்தை*பெறுபவர் எம்.ஜி.ஆர். தான் , இவருக்கு*அடுத்தபடியாக இருப்பவரே சிவாஜிகணேசன் .* சிவாஜிகணேசன் வாங்குகிற தொகையைவிட* ஏழு, எட்டு மடங்கு அதிக தொகை வாங்குகிறார்* எம்.ஜி.ஆர். .*

fidowag
16th August 2020, 09:56 PM
கேள்வி*: நன்கொடை மிக அதிகமாக கொடுத்திருப்பவர் எம்.ஜி.ஆரா, சிவாஜி*கணேசனா*

பதில் : பிள்ளைக்குட்டிக்காரன் என்று தன்னை*சொல்லிவரும் சிவாஜி*கணேசனை விட* எம்.ஜி.ஆர். பல மடங்கு உதவி செய்தும், நன்கொடை கொடுத்ததும் வருகிறார் .*

கேள்வி*: நடிகர்களில் கோடை வள்ளல் இப்போது யார் ?

பதில் : சந்தேகமில்லாமல் எம்.ஜி.ஆர். தான் .* ஒவ்வொரு நடிகரும்*பல பெரிய**வீடுகள்* கட்டிக்* கொள்ளும் இந்த நேரத்தில் தனக்கென்று புது வீடு* கூட*கட்டி கொள்ளாமல் இருக்கிறாரே எம்.ஜி.ஆர்.*

கேள்வி*; இப்போது நடிக்கும் நடிகர்களில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்*யார் ?

பதில் : எம்.ஜி.ஆர். மட்டுமே .* அவர் நடிக்கின்ற*படத்திற்கு*தென்னிந்தியாவில்*அதிக தொகை கொடுக்கிறார்கள் .* சமீபத்தில் வெளிவந்த*பாக்தாத் திருடன் , மன்னாதி மன்னன்* படங்களில் இரண்டரை*லட்ச,ம்* வாங்கினார் . இதுமேலும்*கூடும்*வாய்ப்பு உள்ளது .

orodizli
17th August 2020, 06:58 AM
"உலகம் சுற்றும் வாலிபன்" .........
___________________
இசை மேதை எம் எஸ் வி அய்யா அவர்கள் மிகுந்த உற்சாகத்துடன்
மக்கள் திலகம் எம் ஜி ஆர் வீட்டிற்கு பயணம்

ஆவலுடன் எதிர் கொண்ட எம் ஜி ஆர் பிறரை உண்ணவைத்து மகிழும் இயல்பு கொண்ட அவர் எம் எஸ் வி அவர்களை உபசரிக்கிறார்

எம் எஸ் வி அவர்கள் தான் கையோடு கொண்டு வந்த அக்காலத்தில் விலை உயர்ந்த Panasonic stereo set ஒன்றை எம் ஜி ஆரின் எதிரில்வைக்கிறார்

ரிகாடிங் முடிந்த உலகம் சுற்றும் வாலிபன் பாடல் கேசட்டை அதில் இயக்கச் செய்கிறார்.

பொறுமையுடன் கேட்ட மக்கள் திலகத்தின் முகத்தை கவனிக்கிறார்
எம் எஸ் வி

அவர் முகத்தில் எந்த சலனமும் இல்லை எம் எஸ் வி முகத்தில் ஏமாற்றத்தின் சாயல்

எம் ஜி ஆர் அவர்கள் தன் உதவியுள்ளாரிடம் அந்த Delphi set கொண்டு வரச்செய்து
அதில் இந்த கேசட்டை சுழலவிட்டு கவனமாக கேட்கிறார்

எம் ஜி ஆர் முகத்தில் திருப்தியை கண்ட எம் எஸ் வியின் முகத்தில் நிம்மதி படர்ந்தது

உடன் அவர் புருவங்களில் கேள்விக் குறியை கண்டு கொண்ட எம் ஜி ஆர் ஏழ்மையில் உள்ள என் கடைக்கோடி ரசிகனால் இது போன்ற விலையுயர்ந்த செட்டை வாங்க முடியாது

இது போன்ற மிகவும் விலை குறைந்த செட்களில் தான்பாடலை கேட்க முடியும் இதில் பாடலின் தன்மை குறைகிறதா என்று கணிக்கத்தான் இதில் பாடலை கேட்டேன் என்று விளக்கி தன் திருப்தியையும் விளங்கச் செய்தார்

நாடி ஜோசியம்
நாடி வைத்தியம்
கேட்டறிந்துள்ளேன் ஆனால் இந்த மனிதர்
ரசிகர்களின் நாடி பிடித்து அவர்களின் உணர்வுகளை துல்லியமாக கண்க்கிட்டதை அறிந்து
வியந்தபடி எம் எஸ் வி அவர்கள் அங்கிருந்து நகரந்தார் ..........

orodizli
17th August 2020, 06:59 AM
வெல்ல முடியாத*
சாதனைகளை வென்றவர்*...
தான் பொன்மனச்செம்மல்*
எம்.ஜி.ஆர் அவர்கள்.*

மக்கள் திலகம்*
வென்ற சாதனைகளை...
மாற்று நடிகர் வென்றதாக சரித்திரம் இல்லை...*

போட்டி என்றால் வெளி தியேட்டரில்*
வைத்து உமது படமா.....*
மக்கள் திலகத்தின் படமா.....
அதிக வசூல் பெற்றது என்பதை கணக்கெடுத்தால்*
சாந்தியை தவிர வேறு எங்கும் இந்நடிகரின் படங்கள் யாவும் தோல்வியைத் தான் தழுவி இருக்கும்.

வெற்றியின் சின்னம் எம்.ஜி.ஆர்! வசூலின் சின்னம் எம்.ஜி.ஆர் !

சாதனைகளின் சின்னம்*
எம்.ஜி.ஆர் !
நிரந்தர திரைப்படங்களின் சின்னம் எம்.ஜி.ஆர் !

தொடர் வெளியீடுகளின்*
சங்கமம் எம்.ஜி.ஆர் !
காலம் கடந்தும் சாதனை*
செய்வது எம்.ஜி.ஆர்!*

என்றும் எம்.ஜி.ஆர்*
திரையிலும் எம்.ஜி.ஆர்!*

வெள்ளித்திரையிலும்*
மக்கள் உள்ளத்திலும் சின்னத்திரையிலும்*
வாழும் ஒரே சின்னம்*
எம்.ஜி.ஆர்.

நூறு திரைப்படங்களில்*
ஒரே கருத்தை விதைத்த*
கோமான் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் !

அவரே சிறந்த நடிகர்!*
தமிழகத்தை ஆண்ட முதல்வர்!*

மறைந்தும் மறையாமல் மக்களுடன் மக்களாக*
மனதில் வாழும்*
முதல்வர்* எம்.ஜி.ஆர்.!
மாமனிதர் எம்.ஜி.ஆர் !.

தொடரும் ............

orodizli
17th August 2020, 07:00 AM
எவரும் நெருங்க முடியாத வெற்றியாகும.

மக்கள் திலகத்தின் வெற்றி என்பது ஒரு வயலில் இருந்து இன்னொரு வயலுக்கு தண்ணீரை இறைத்து அடுத்தடுத்து வயல்களில் தண்ணீரை தேக்கிவைத்து பயிர்களை வளர விட்டு அறுவடை செய்வது போல் தான்.. மக்கள் திலகத்தின் திரைப்படங்களும் ஒரே ஏரியாவில் பல திரையரங்குகளில் மீண்டும் மீண்டும் திரையிடப்பட்டு*
வாரம் வாரம் ஒடி ஒடி...
மாதக்கணக்கில் ஒடி.......
ஆண்டு தோறும் ஒடி.....
பல ஆண்டுகள் கடந்தும் ஒடி....
பல திரையரங்குகள்*
கடந்தும்....*
பல வெற்றிகளை,*
படத்தின் வசூலை கொண்டும் இன்று வரை முதலிடத்தை*
தக்க வைத்துக் கொண்டு வருகிறது.

திரை உலக வரலாற்றில் மக்கள் திலகத்தின் பழைய திரைப்படங்களை கடந்த 50 ஆண்டு காலமாக வெற்றிநடை போட்டு வருகிறது.*

புரட்சிநடிகரின்* புதிய திரைப்படங்கள் வந்த நேரத்திலும்..... ஏற்கனவே அவர் நடித்த திரைப்படங்கள் வசூலைப் பெற்று வந்தது.*

அந்த சாதனை 1954 ஆம் ஆண்டு முதல் இன்று 2019 வரை .....
இன்னும் வெள்ளித்திரையில் வளர்ந்து வருகிறது ....
தொடர்ந்து திரையிடப்படுகிறது என்றால்,.......*

திரை உலக வரலாற்றில்*
மக்கள் திலகத்தின் காவியமே முதன்மை சாதனையாக..... சிகரமாக விளங்குகிறது..........

orodizli
17th August 2020, 07:03 AM
முதல் வெளியீட்டில் பல நடிகர்களின் கலர் படங்கள் ஆனாலும் சரி.....
*கருப்பு-வெள்ளை படங்கள் ஆனாலும் சரி*
முதல் வெளியீட்டில் 100 நாட்கள்*
175 நாட்கள் ஒடிய திரைப்படங்களின்**
முதல் வெளியீட்டை மற்றும் வைத்துக்கொண்டு*
ஆடும் ஆட்டம் மொத்தமாக* அடங்கிப் போய் விடுகிறது தொடர்ந்து வந்ததுமில்லை... தமிழகத்தில் திரையிட்ட வரலாறுமில்லை...
அப்படியே வந்தாலும்*
ஒரு சில படங்கள்.....

மற்ற நடிகர்களின் 100நாள்*
175 நாள் படங்களான பாவமன்னிப்பு, பாசமலர் கட்டபொம்மன்,*
பாகப்பிரிவினை
படிக்காத மேதை
கைகொடுத்த தெய்வம்
நவராத்திரி*
ப. பட்டணமா போன்ற
படங்கள் எல்லாம் பின்னாளில் எந்த ஒரு சாதனையையும்**
தமிழக திரையரங்குகளில் செய்தது கிடையாது. ஆனால் மக்கள் திலகத்தின் சாதாரண திரைப்படங்கள் கூட பின்னாளில் எத்தனையோ வெளியீடுகளை கணக்கிட முடியாத திரையரங்குகளில் வெளிவந்து பல விநியோகஸ்தர்களையும், திரையரங்கு உரிமையாளர்களையும்*
வாழ வைத்துள்ளது.

மக்கள் திலகத்தின் சாதாரண கருப்பு-வெள்ளை படங்களான நாடோடி , தனிப்பிறவி சந்திரோதயம், அன்னமிட்டகை*
ஒரு தாய் மக்கள், விவசாயி அரசகட்டளை, புதியபூமி
கணவன் போன்ற பல* திரைப்படங்கள் எல்லாம் பல வெளியீடுகளில் வெளிவந்து வெற்றிநடை போட்டு வசூலை*
வாரி கொடுத்துள்ளது..........

orodizli
17th August 2020, 11:28 AM
"எம்.ஜி.ஆர். அவர்களின் மூத்த சகோதரர் பெரியவர் சக்கரபாணி.

தம்பியை கலைத் துறைக்குத் தயார் செய்தவர்.

அ.தி.மு.க. துவங்கிய காலத்தில் அவரும் பல பொதுக் கூட்டங்களுக்குச் சென்றார்.

அ.தி.மு.க.விற்கு அரசியல் திருப்பு முனை ஏற்படுத்தியது திண்டுக்கல் நாடாளுமன்றத் தொகுதி இடைத் தேர்தல்தான். அதன் பிரச்சாரப் பணியிலும் பங்கு பெற்றார்.

மறைந்த பாலகுருவா ரெட்டியாரும், பரமனும்தான் அவரைப் பொதுக் கூட்டங்களுக்கு அழைத்துச் சென்றனர்.

தற்போது சென்னை லாயிட்ஸ் சாலையில் செயல்படும் அ.தி.மு.கழகத் தலைமைக் கட்டிடம் வி.என். ஜானகிக்குச் சொந்தம். அதனைக் கழகத்திற்காக எம்.ஜி.ஆர். எழுதி வாங்கினார்.

அந்தக் கட்டிடத்தின் பின் பகுதியில்தான் ஆரம் பத்தில் அண்ணா நாளேட்டின் அலுவலகமும் அச்சகமும் செயல்பட்டன.

அந்தக் கட்டிடத்திலிருந்து சில கட்டிடங்கள் தள்ளி எம்.ஜி. சக்கரபாணியின் இல்லம்.

ஒரு நாள் அவருடைய பணியாளர் வந்தார். அய்யா அழைக்கிறார் என்றார். 'அண்ணா’ அலுவலகத்திலிருந்து சென்றோம். தமது அருகிலிருந்தவர்களைப் பெரியவர் போகச் சொன்னார். எதிரே நாற்காலியில் அமரச் சொன்னார்.

'தம்பியிடம் நீங்கள் பேசவேண்டும்'

'ஏன்? உங்கள் மீது உங்கள் தம்பி மிகுந்த மரியாதை வைத்திருக்கிறார். நீங்களே பேசலாமே?' என்று சிரித்துக்கொண்டே சொன்னேன்.

'இந்த விஷயத்தை நான் பேச முடியாது. நீங்கள்தான் பேசவேண்டும்' என்றார்.

'சரி' என்றேன்..

சுற்றும் முற்றும் பார்த்தார். சற்று குரலை இறக்கி,

'என்னை கழகப் பொதுக்குழு உறுப்பினராக நியமிக்கச் சொல்லுங்கள்' என்றார்.

அப்போதைக்கு அவருடைய கோரிக்கை நியாயமானதாகத்தான் தெரிந்தது. தம்பியிடம் அண்ணன் இமாலய வரம் கேட்டு விட்டாரா?

சரி என கூறிவிட்டு விடைபெற்றேன். அறை வாசல்வரை வந்தார்.

'சோலை, தம்பி நல்ல மூடில் இருக்கும்போது பார்த்துப் பேசுங்கள்' என்றார். ஒரு வெண்கலச் சிரிப்பு.

கழகத்தில் அவர் மாநில அளவில் ஒரு பதவி கேட்கவில்லை.

செயலாளர் பதவி கேட்கவில்லை.

கழகத்தை மண்டலங்களாகப் பிரிக்கச் சொல்லவில்லை. அதில் தன்னை ஒரு மண்டலத்திற்கு அதிபதியாக நியமிக்கச் சொல்லவில்லை.

ஐநூறுக்கு மேற்பட்டோர் இடம் பெறும் மாநிலப் பொதுக்குழுவில் தன்னையும் ஒரு உறுப்பினராக நியமிக்கச் சொன்னார்.

அடுத்த சில தினங்களில் ஆற்காடு சாலை அலுவலகத்தில் எம்.ஜி.ஆரை சந்தித்தோம். உற்சாகத்தின் உச்சத்தில் இருந்தார். உரையாடலுக்கு நடுவே,

'பெரியவர் அழைத்தார்' என்றோம்.

'என்ன?'

'அவருக்கு ஒரு பெரிய ஆசை'

'என்ன?'

சற்றுத் தயங்கினேன். துணிச்சலை வரவழைத்துக்கொண்டு..

'அவரும் கழகப் பணி செய்ய விரும்புகிறார். அதற்கு அங்கீகாரமாக பொதுக்குழு உறுப்பினர் பதவி மீது அவருக்கு ஆர்வம்' என்றேன்.

அவரது பொன்மேனியில் நூறு மைல் வேக ரத்த ஓட்டம். முகம் சிவந்தது.

'இல்லை. அதாவது… வந்து…' என்று இழுத்தேன். அதற்கு மேல் நா அசையவில்லை. சத்தியாக்கிரகம் செய்தது.

'சும்மா இருக்கமாட்டீர்களா?' -கோபத்தோடு கேட்டார்.

நமக்கு சப்தநாடியும் தந்தி அடித்து அடங்கிவிட்டது.

எம்.ஜி.ஆருக்கு இயற்கை அளித்தது கொடுத்துச் சிவந்த கரங்கள். உண்மை.

ஆனால் உடன்பிறந்த அண்ணனை கழகப் பொதுக்குழுவில் ஒரு உறுப்பினராகக் கூட நியமிக்க மறுத்துவிட்டார்.

அண்ணனுக்குக் கனவில் பூத்த மலரும் கருகிப் போய்விட்டது.

'துரைக்கு ஒரு தகவல் சொல்லியிருக்கிறேன். கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.' என்றார் எம்ஜிஆர்.

நான் விடைபெறும்போது எம்.ஜி.ஆர். இப்படிச் சொன்னார்.

துரை அ.தி.மு.கவின் தலைமைக் கழக நிர்வாகி. எம்.ஜி.ஆரின் நம்பிக்கைக்குரிய விசுவாசி.

துரையும் நாமும் ஒரே கட்டிடத்தில் வெவ்வேறு பிரிவில் பணி செய்து கொண்டிருந்தோம்.

அடுத்த நாள் எம்மை துரையே அழைத்தார்.

"தலைவர் தங்களிடம் தனியாக ஒரு தகவல் சொல்லச் சொன்னார்' என்றார்.

ஏறிட்டுப் பார்த்தோம்.

'இனிமேல் பெரியவரை யாரும் பொதுக்கூட்டத்திற்கு அழைத்தால் அவருக்கு உடல்நிலை சரியில்லை' என்று தலைவர் சொல்லச் சொன்னார்.

'இது தங்களுக்கு மட்டும் தெரிந்த தகவலாக இருக்க வேண்டும் என்றும் தலைவர் சொல்லச் சொன்னார்' என்றார் துரை.

அடுத்த சில தினங்களில் எம்.ஜி.ஆர். அழைத்தார். நீண்ட கலந்துரையாடல். விடை பெறும்போது அவர் சொன்னார்.

'சோலை… நான் அரசியலில் இருக்கும்போது அவரும் இருக்க வேண்டுமா? உலகம் என்ன சொல்லும்? அண்ணனும் தம்பியும் சேர்ந்து கூத்தடிக்கிறார்கள் என்று சொல்லமாட்டார்களா?' என்றார்.

மெய்சிலிர்த்துப் போனோம். அவர் அரசியலில் அடியெடுத்து வைத்த பின்னர் மிகுந்த எச்சரிக்கையாக இருந்தார்.

அரசியல் சதுரங்கத்தில் நாம் ஒரு காய் நகர்த்தினால் எதிரி எப்படி காய் நகர்த்துவார் என்பதனை அவர் சிந்தித்தே ஒவ்வொரு முடிவையும் எடுத்தார்.

'அண்ணா விரும்பியிருந்தால் தனது வளர்ப்பு மகனை அரசியலில் அறிமுகம் செய்திருக்க முடியாதா? அந்தப் பையன்கள் உழைத்து முன்னேறுவது வேறு. திணிப்பது வேறு' என்று விளக்கம் தந்தார்.

அவரது துணைவியார் வி.என்.ஜானகி அரசியலிலிருந்து வெகுதூரம் விலகியே இருந்தார். நிர்வாகத்தில் தலையிட்டார், பரிந்துரை செய்தார் என்ற குற்றச் சாட்டே எழுந்ததில்லை.

அதே சமயத்தில் மதிக்கத் தெரிந்த இன்னொரு எம்.ஜி.ஆரையும் பார்த்தோம். அவர் முதல்வராகப் பதவியேற்றார். அண்ணாவிற்கு அஞ்சலி செலுத்தினார். அங்கிருந்து அண்ணன் சக்கரபாணியிடம் ஆசிர்வாதம் வாங்க அனைத்து அமைச்சர்களுடன் வந்தார்!"

-எழுத்தாளர் சோலை.........

orodizli
17th August 2020, 11:35 AM
#தனித்துவம்



தமிழக சரித்திரத்தில் அழிக்க முடியாத ஒரு சக்தியாக பொன்மனச்செம்மல் இருந்துவருகிறார் என்பதை யாரும் மறுக்க இயலாது. அன்னாரின் புகழை மறைத்து ஒருவரும் ஆட்சிபீடம் ஏறிவிடவும் முடியாது. எங்களின் இதயதெய்வம் அவர்.

அவர் பூத உடல் நீத்து முப்பது
ஆண்டுகளுக்குப் பின்னும், இன்றும் தமிழகத்திலுள்ள குக்கிராமம் முதல் மாநகரம் வரைஎல்லாப் பகுதிகளிலும் தனக்கென ஒரு வாக்கு வங்கியை அவர் இன்னமும் தக்க வைத்துக்
கொண்டிருப்பது என்பது மிகப்பெரிய ஆச்சரியம்.

இரட்டைஇலைச் சின்னத்தில் நில்லாது வேறு எந்தச்சின்னத்தில் போட்டியிட்டாலும் தோற்பது உறுதி என்பதை நேற்று பிறந்த குழந்தை கூட அறியும்.

மூத்தவர்களுக்கு மரியாதை தருபவர். இது நமக்கு அரிச்சுவடி பாடமாகும்.

வேறு எந்த நடிகருக்கும்
இல்லாத அளவுக்கு, இன்னும் அவரது திரைப்படங்கள், பல நூறு தடவைகள்
திரையிடப்பட்ட பின்னும், ரசிகர்களின் ஆதரவைப் பெறுகின்றன என்றால் அதற்கு என்ன காரணம் என்பது விளக்கவே முடியாத புதிராகத்தான் இருக்கிறது.

நடிகனாக, அரசியல்வாதியாக எம்.ஜி.ஆர். தன்னை அடையாளம் காட்டிக் கொண்டதைவிட
ஒரு சமுதாய சிந்தனாவாதியாக, மனிதாபிமானமுள்ள மனிதனாக, தனிமனித நாகரிகத்துக்கு எடுத்துக்காட்டாக விளங்கியவர் என்பதுதான் அவரது தனிச்சிறப்பு. "கலைவாணர்' என்.எஸ். கிருஷ்ணனின் அடிச்சுவட்டில், சமுதாயசிந்தனையுடன் தனது கலைப்பயணத்தையும், #மனித #நேயத்துடன் #தனது #தனிமனித
#வாழ்க்கையையும் #அமைத்துக் #கொண்டவர் #என்பதுதான் #எம்ஜிஆரின் #தனித்துவம்!

#பொன்மனச்செம்மலின் இன்னொரு பெருமைக்குரிய, சமுதாயத்துக்கு வழிகாட்டும் #அற்புதப்பண்பு எது என்று கேட்டால், #தெய்வத்தைக் #காணமுடியாத #மனிதப்பிறவிகளுக்கு #வாழும் #தெய்வமாகப் #பெற்றதாயையே #சுட்டிக்காட்டி, #ஏற்று
#வணங்கி, #அதன்மூலம் #மற்றவர்களையும் #தாயை #வணங்கிப் #போற்றவைத்தது எனலாம்...

அப்பேர்ப்பட்ட தெய்வத்தின் பக்தர்கள் நாம் என்பதில் பெருமை கொள்வோம்...............

fidowag
17th August 2020, 03:58 PM
பாட்டாலே புத்தி சொன்ன*வாத்தியார் எம்.ஜி.ஆர்.- வின்*டிவியில்*சகாப்தம்*நிகழ்ச்சியில் திரு.துரை பாரதி* 28/07/20 அன்று அளித்த தகவல்கள்*
------------------------------------------------------------------------------------------------------------------------------
பல்வேறு* *சமூக வலை தளங்களில் இன்றைக்கும் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். புகழ் பாடுவது குறித்து ,பரவலாக பேசப்பட்டு வருகிறது குறிப்பாக அவரது திரைப்பட பாடல்கள், திரைப்படங்களில் அவர்* தோன்றும் முக்கிய காட்சிகள்* ஆகிய* ஒவ்வொன்றும்* ஒரு பாடத்திட்டம் போல* மக்களுக்கு படிப்பினை,மற்றும் போதனைகள் தருவதாக உள்ளன என்று விளக்கிக் கொண்டே இருக்கிறார்கள் .இப்படிப்பட்ட விளக்கங்களோடு அவரது வாழ்க்கை எப்படி நம்பிக்கை ஊட்டுவதாக இருக்கின்றது என்று ரசித்து, ரசித்து, பலரும் தகவல்களை* இந்த சகாப்தம் நிகழ்ச்சிக்கு**பரிமாறிக் கொள்கிறார்கள் . தொடர்ந்து எம்.ஜி.ஆர். அவர்களின் தேசிய பயணம் எப்படி இருந்தது என்பதை இந்த அத்தியாயத்தில் பார்ப்போம் .


ராணுவத்தில் சேருவது என்று ஒரு கட்டத்தில் முடிவு எடுத்து இருந்தார் . அதற்காக உடல் கட்டு மஸ்தானாக இருக்க ,உடற்பயிற்சி அவசியம் என்று கருதி தினசரி செய்து வந்தார் .ராணுவத்தில் சேர்வதற்காக எல்லாவிதமான பயிற்சிகளையும் முறையாக கையாண்டார் .* ஆங்கிலம் கற்று கொள்ள தனி ஆசிரியர் வைத்திருந்தார் .ஏனென்றால் ஒருவேளை சினிமா உலகம் தனக்கு போதிய ஆதரவு தரவில்லை என்று ஒரு நிலை வந்தால் , ராணுவம் கை கொடுக்கும். அதன் மூலம் குடும்பத்திற்கு வருமானம் கிடைக்கும் . உடலையும் கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ளலாம், தேசப்பற்று,நாட்டுப்பற்றுடன் ஒரு பணியில் ஈடுபட்ட திருப்தி ஏற்படும் என்று நினைத்து ,குடும்பத்தினருக்கு கூட தெரியாமல் ரகசியமாக ராணுவத்தில் சேருவதுஎன்ற நோக்கத்தில் பல பயிற்சிகளை எடுத்துக் கொண்டு* அதற்கான உகந்த நேரத்தை எதிர்பார்த்து காத்திருந்தார் .


தேசிய அரசியலில் , தேசப்பற்றில் எந்த அளவிற்கு நாட்டம் வைத்திருந்தார் என்றால் நாலணா ( 25 பைசா ) விற்கு காங்கிரஸ் கட்சியில் சேருவதற்கு உறுப்பினர் படிவம் வாங்கி , பூர்த்தி செய்து, கையொப்பம் இட்டு கட்சியில் சேர்ந்தார் .* காந்தீயத்தின் மீது இருந்த மிகுந்த ஈடுபாடே இதற்கு காரணம் .மகாத்மா காந்தி அவர்கள் ஒருமுறை காரைக்குடிக்கு விஜயம் செய்தார் .அவரது வருகையை அறிந்த எம்.ஜி.ஆர். ,அவரை தரிசிப்பதே தனது பாக்கியம் என கருதி ,ஆயிரக்கணக்கான மக்கள் கூட்டத்தின் மத்தியில் கூட்டத்தோடு கூட்டமாய் சென்று தரிசித்தார் . அந்த அளவிற்கு காந்தியின் மீது அளவற்ற மரியாதை, பற்றுதல் , நேசம் ஆகியன இருந்தன . அதனால்தான் அவரது பூஜை அறையில் தன் தாயாருக்கு அருகில் காந்தியின் படத்தையும்* வைத்து வழிபட்டு*உள்ளார் என்பதை பல மேடைகளில் எம்.ஜி.ஆர். பேசியுள்ளார் . அந்த காலம் முதல் தன்* இறுதி கால படங்கள் வரையில் பாடல் காட்சியிலோ, அல்லது வேறு ஏதாவது வசன காட்சியிலோ* தவறாமல் மகாத்மா காந்தியின் புகைப்படம் இடம் பெறுவதை வழிவழியாக கடைபிடித்து வந்தார் எம்.ஜி.ஆர். தனது தேசப்பற்றை*விளக்கும் வகையில் நம் நாடு திரைப்படத்தில் , வாங்கய்யா வாத்தியாரய்யா பாடலில் தியாகிகளான தலைவர்களாலே சுதந்திரம் என்பதை அடைந்தோமே*ஒரு சிலர் மட்டும் அனுபவிக்காமல் பலருக்கும் பயன்பட செய்தோமே*என்று பாடி உணர்த்தியிருப்பார் .


தேசத்தின் சுதந்திரம், விடுதலை வேட்கையை பற்றி பல படங்களில் காட்சிகளில் நடித்து தன் பற்றுதலை தெரிவித்து இருப்பார் . தான் கடைசியாக நடித்த மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன் படத்தில் தாயகத்தின் சுதந்திரமே எங்கள் கொள்கை, தன்மானம் ஒன்றேதான் எங்கள் செல்வம் ,ஒற்றுமையால் பகைவரை ஓடவைப்போம் , உழைப்பாலே நம் நாட்டை உயர்த்தி வைப்போம் என்று உணர்ச்சி பொங்க பாடி அசத்தியிருப்பார் .* வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம்*பல படங்களில், பல காட்சிகளில் , தேசபக்திக்கும், தேச பற்றுதலுக்கும் எந்தவித இடையூறும் இல்லாமல் காட்சிகள் அமையும்படி பார்த்துக் கொண்டார் .*ஒருமுறை முன்னாள் பாரத பிரதமர் ஜவஹர்லால் நேரு அவர்கள் ,சீனாவிற்கு எதிராக போர் தொடுக்கும் நிலையில் நாட்டில் நிதி பற்றாக்குறை உள்ளதாகவம்,*தாராள மனப்பான்மை உள்ளவர்கள் தங்களால் இயன்ற அளவில் நிதி தருமாறு*கேட்டு கொண்டவுடன் , மனிதநேய மிக்க முதல் மனிதனாக 1962ல்* ரூ.75,000/-நிதி தருவதாகவும் , முதல் தவணையாக ரூ.25,000/- க்கான காசோலையை*அன்றைய தமிழக முதல்வர் காமராஜ் அவர்களிடம் அளித்தார்* எம்.ஜி.ஆர்.*என்பது நாடறிந்த உண்மை. அந்த அளவிற்கு தேசப்பற்று மிக்கவராக திகழ்ந்தார்


சினிமா*வாய்ப்புக்காக ஒவ்வொரு ஸ்டுடியோவிற்கும் தேடி அலைந்த காலத்தில்*கதர்*வேட்டியும்* கதர்* ஜிப்பாவும்* உள்**பனியனும், இடுப்பில்*ஒரு பெல்ட்டும் ,கழுத்தில்*ருத்திராட்ச மாலையும்*அணிந்திருப்பார் . இதுதான்*அப்போதைய எம்.ஜி.ஆரின்*அடையாளம் .* சினிமாவில் சுமார்*15 படங்களில் சிறு*வேடங்கள்*துணை வேடங்கள்* ஏற்று நடித்தும்*, ஒரு அங்கீகாரம் , ஒரு நிலையான இடம்*இல்லாமல் தவிக்கும் நிலையிலும் அவரது*தாயார் திருமண*ஏற்பாடுகளை துரிதமாக செய்து வந்தார் .* கேரளாவில் ஒரு ஊரில்*பெண் பார்த்து நிச்சயம் செய்துவிட்டு*எம்.ஜி.ஆரை*அவசியம் உடனே வர வேண்டும் என்று அன்பு கட்டளை*இடுகிறார் .* இது ஒரு காந்தீய*திருமணம் . காரணம்*எம்.ஜி.ஆர். ஒரு நிபந்தனையுடன் கலந்து கொள்கிறார் . அதாவது நான் பட்டு வேட்டி, பட்டு சட்டை அணியமாட்டேன் . கதர் வேட்டியும்*, கதர் சட்டை அணிந்துதான் வருவேன் .*நம் குடும்பத்தினரில் தாய், அண்ணன் சக்கரபாணி, அண்ணியார் ,உறவினரில் மாமா ஒருவர்** தவிர வேறு யாரும்*பங்கேற்க கூடாது .திருமணம் மிக எளிமையாக நடக்க வேண்டி விரும்பினார் .அதே*போல கதர் வேட்டி* கதர்* சட்டை* அணிந்துதான் திருமணத்தில் பங்கேற்றார் . இதன் மூலம் காந்தீயத்தின் மீதும், தேசத்தின்*மீதும்*எவ்வளவு பற்றுடன் எம்.ஜி.ஆர். இருந்துள்ளார் என்பதை*நாம் அறிந்து கொள்ளலாம் .மற்ற தகவல்கள் அடுத்த அத்தியாயத்தில்*பார்க்கலாம்*


நிகழ்ச்சியில் ஒலித்த*பாடல்கள்*/ காட்சிகள் விவரம்*
-----------------------------------------------------------------------------------
1.தாயகத்தின் சுதந்திரமே* - மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்*

2.கல்லூரி மாணவிகளுடன் எம்.ஜி.ஆர்.**பேசும்*காட்சி*-பல்லாண்டு வாழ்க*

3.புத்தன்*இயேசு, காந்தி*பிறந்தது*- சந்திரோதயம்*

4.வாங்கய்யா* வாத்தியாரய்யா* - நம் நாடு*

5.அதோ அந்த பறவை போல வாழவேண்டும்*-ஆயிரத்தில் ஒருவன்*

6.தாயில்லாமல் நானில்லை* - அடிமைப்பெண்**



*.*

orodizli
17th August 2020, 06:31 PM
#கொள்கையைத் #திணிக்காத #மக்கள்திலகம்

செஞ்சி நகரச் செயலாளராக இருந்த கு. கண்ணனின் திருமண விழா.
செஞ்சி சந்தை மேடு மைதானத்தில் திருமணப் பந்தல் போடப்பட்டிருந்தது. அன்று
திங்கள்கிழமை. மேடையில் மணமகன் கண்ணனுடன், செஞ்சித் தொகுதி அமைப்பாளர்
கோ. கிருஷ்ணசாமி, மாவட்ட அமைப்பாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான
அமரர் சி. வேணுகோபால் (முன்னாள் அமைச்சர் சி.வே. சண்முகத்தின் தந்தை)
ஆகியோர் இருந்தனர்.

முகூர்த்த வேளை முடியும் நேரம் நெருங்கிக் கொண்டிருந்தது. சரியாக 7.20
மணிக்கு எம்.ஜி.ஆர். மேடைக்கு வந்தார். ஒலிபெருக்கியில் இந்தத்
திருமணத்தை தலைவர் எம்.ஜி.ஆர். தலைமையேற்று நடத்தித்தர வேண்டுமென அறிவிக்கப்பட்டது.

எம்.ஜி.ஆர். உடனே இடைமறித்து,

"பேச்செல்லாம் இப்போது வேண்டாம். எங்கே
மணமாலை எடுங்கள்''! என்று மாலையை வாங்கிக்கொண்டு உடனடியாக மாலையை
மாற்றித் தாலியைக் கட்டச் சொல்லி திருமணத்தை நடத்தி வைத்தார்.

""இன்று திங்கள்கிழமை, காலை 7.30 மணிக்கு ராகு காலம் தொடங்குகிறது.
அதற்குமுன் திருமணத்தை நடத்தி முடிக்க வேண்டும் என்ற அவசரத்தில்தான்
ஓடோடி வந்தேன்...என்றவர் மேலும்...

எனக்கு இந்த ராகுகாலத்தின்மீது நம்பிக்கை கிடையாது. நாடோடி மன்னன்
படத்திற்கு ராகுகாலத்தில்தான் பூஜை போட்டேன். என் சொத்தையெல்லாம் அடமானம்
வைத்துப் படத்தை எடுத்தேன். இதோடு இந்த இராமச்சந்திரன் தொலைந்தான் என்று
திரையுலகைச் சேர்ந்த அனைவருமே என் காதுபடவே பேசினார்கள். ஆனால், நானோ என்
உழைப்பின் மீதும் தமிழக மக்களின் மீதும் நம்பிக்கை வைத்து, ""படம் வெற்றி
பெற்றால் நான் மன்னன் - தோற்றால் நாடோடி, அவ்வளவுதானே!'' என்று சொன்னேன்.
நாடோடி மன்னன் வெற்றி பெற்றது. உழைப்பும் நம்பிக்கையும் என்னை வாழ
வைத்தது.

#என்னைப்போலவே #என் #தம்பி #கண்ணனும் #ராகுகாலத்தில்
#நம்பிக்கையில்லாதவர்தான். #ஆனால், #அவருக்கு #பெண் #கொடுக்கும் #பெற்றோர்களும்
#எங்களைப்போலவே #இருக்கவேண்டும் #என்று #நாங்கள் #எப்படி #எதிர்பார்க்கமுடியும்? தாம் பெற்றெடுத்து, பாராட்டி, சீராட்டி வளர்த்த தன் பெண்ணையே
என் தம்பிக்கு தாரைவார்த்து கொடுக்கும் அந்த பெற்றோர்களும் அவர்களின்
உறவினர்களும் அணு அளவும் #மனம் #சஞ்சலமடைய #நானோ, #என் #தம்பி #கண்ணனோ #காரணமாக
#இருக்கலாமா? ஆதலால்தான் அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து
இத்திருமணத்தை முகூர்த்தவேளை முடிவதற்கு முன்னமேயே விரைவாக நடத்தினேன்''
என்று விரிவாகப் பேசி மணமக்களை வாழ்த்தினார்.

#தன்னுடைய #கொள்கையை மற்றவர்கள் மீது திணிப்பது மாபெரும் தவறு என்பதனை
உணர்ந்திருந்த அவரது மனிதநேயம்தான் இன்றுவரை அவரை போற்றி புகழவைத்துக்
கொண்டிருக்கிறது என்றால் அதுதான் மறுக்கமுடியாத உண்மை..........

orodizli
17th August 2020, 06:32 PM
#கொள்கையைத் #திணிக்காத #மக்கள்திலகம்

செஞ்சி நகரச் செயலாளராக இருந்த கு. கண்ணனின் திருமண விழா.
செஞ்சி சந்தை மேடு மைதானத்தில் திருமணப் பந்தல் போடப்பட்டிருந்தது. அன்று
திங்கள்கிழமை. மேடையில் மணமகன் கண்ணனுடன், செஞ்சித் தொகுதி அமைப்பாளர்
கோ. கிருஷ்ணசாமி, மாவட்ட அமைப்பாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான
அமரர் சி. வேணுகோபால் (முன்னாள் அமைச்சர் சி.வே. சண்முகத்தின் தந்தை)
ஆகியோர் இருந்தனர்.

முகூர்த்த வேளை முடியும் நேரம் நெருங்கிக் கொண்டிருந்தது. சரியாக 7.20
மணிக்கு எம்.ஜி.ஆர். மேடைக்கு வந்தார். ஒலிபெருக்கியில் இந்தத்
திருமணத்தை தலைவர் எம்.ஜி.ஆர். தலைமையேற்று நடத்தித்தர வேண்டுமென அறிவிக்கப்பட்டது.

எம்.ஜி.ஆர். உடனே இடைமறித்து,

"பேச்செல்லாம் இப்போது வேண்டாம். எங்கே
மணமாலை எடுங்கள்''! என்று மாலையை வாங்கிக்கொண்டு உடனடியாக மாலையை
மாற்றித் தாலியைக் கட்டச் சொல்லி திருமணத்தை நடத்தி வைத்தார்.

""இன்று திங்கள்கிழமை, காலை 7.30 மணிக்கு ராகு காலம் தொடங்குகிறது.
அதற்குமுன் திருமணத்தை நடத்தி முடிக்க வேண்டும் என்ற அவசரத்தில்தான்
ஓடோடி வந்தேன்...என்றவர் மேலும்...

எனக்கு இந்த ராகுகாலத்தின்மீது நம்பிக்கை கிடையாது. நாடோடி மன்னன்
படத்திற்கு ராகுகாலத்தில்தான் பூஜை போட்டேன். என் சொத்தையெல்லாம் அடமானம்
வைத்துப் படத்தை எடுத்தேன். இதோடு இந்த இராமச்சந்திரன் தொலைந்தான் என்று
திரையுலகைச் சேர்ந்த அனைவருமே என் காதுபடவே பேசினார்கள். ஆனால், நானோ என்
உழைப்பின் மீதும் தமிழக மக்களின் மீதும் நம்பிக்கை வைத்து, ""படம் வெற்றி
பெற்றால் நான் மன்னன் - தோற்றால் நாடோடி, அவ்வளவுதானே!'' என்று சொன்னேன்.
நாடோடி மன்னன் வெற்றி பெற்றது. உழைப்பும் நம்பிக்கையும் என்னை வாழ
வைத்தது.

#என்னைப்போலவே #என் #தம்பி #கண்ணனும் #ராகுகாலத்தில்
#நம்பிக்கையில்லாதவர்தான். #ஆனால், #அவருக்கு #பெண் #கொடுக்கும் #பெற்றோர்களும்
#எங்களைப்போலவே #இருக்கவேண்டும் #என்று #நாங்கள் #எப்படி #எதிர்பார்க்கமுடியும்? தாம் பெற்றெடுத்து, பாராட்டி, சீராட்டி வளர்த்த தன் பெண்ணையே
என் தம்பிக்கு தாரைவார்த்து கொடுக்கும் அந்த பெற்றோர்களும் அவர்களின்
உறவினர்களும் அணு அளவும் #மனம் #சஞ்சலமடைய #நானோ, #என் #தம்பி #கண்ணனோ #காரணமாக
#இருக்கலாமா? ஆதலால்தான் அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து
இத்திருமணத்தை முகூர்த்தவேளை முடிவதற்கு முன்னமேயே விரைவாக நடத்தினேன்''
என்று விரிவாகப் பேசி மணமக்களை வாழ்த்தினார்.

#தன்னுடைய #கொள்கையை மற்றவர்கள் மீது திணிப்பது மாபெரும் தவறு என்பதனை
உணர்ந்திருந்த அவரது மனிதநேயம்தான் இன்றுவரை அவரை போற்றி புகழவைத்துக்
கொண்டிருக்கிறது என்றால் அதுதான் மறுக்கமுடியாத உண்மை..........

orodizli
17th August 2020, 06:34 PM
1976ம் ஆண்டு சென்னையின் மிகப் பெரிய அழகான ஸ்ரீகிருஷ்ணா அரங்கில்" உழைக்கும் கரங்கள்" திரைப்படம் 100 காட்சிகள் அரங்கு நிறைந்து வசூலில் மாபெரும் சாதனை. மதுரை சினிப்ரியா
மினிப்பிரியா 2 அரங்கிலும் வெளியிடப்பட்டு 85 காட்சிகள் அரங்கு நிறைந்து சாதனையாகும் சேலத்தில் அலங்கார் திரையரங்கில் 96 நாட்களில்*
125 காட்சிகள் அரங்கு நிறைந்து சாதனையாகும்.

1977ஆம் ஆண்டு வெளியான இன்று போல் என்றும் வாழ்க திரைப்படம் திருச்சி பேலஸ் திரையரங்கில் 100 காட்சிகளும் மதுரை சேலத்தில் 100 காட்சிகள் அரங்கு நிறைந்து வெற்றிநடை போட்டது.

மீண்டும் அதே ஆண்டில் வெளியான மீனவ நண்பன் திரைக்காவியம் மதுரை சிந்தாமணி திரையரங்கில் 150 காட்சிகள் அரங்கு நிறைந்து சேலத்திலும் 100 காட்சிகள் அரங்கு நிறைந்து.... மகத்தான சாதனையை புரிந்தது.*
வசூலில் மாபெரும்*
வெற்றியை தந்தது.

புரட்சித்தலைவரின் புரட்சிகரமான மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன் திரைப்படம் 1978-ஆம் ஆண்டு வெளிவந்தது. இக்காவியம் தமிழகத்தில் பட்டுக்கோட்டை நகரில் 100 காட்சிகள் அரங்கு நிறைந்து சாதனையாகும்.*
உலகம் சுற்றும் வாலிபன் உரிமைக்குரல்*
மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் திரைக்காவியங்கள்*
நகரில் 100 காட்சிகள் அரங்கு நிறைந்து சாதனையாகும்.

1974 ல் உரிமைக்குரல் திரைப்படம் கோவை சேலம் ஈரோடு பட்டுக்கோட்டை கும்பகோணம் நகரங்களில் தொடர்ந்து 100 காட்சிகள் அரங்கு நிறைந்து*
100 நாட்களை கடந்து வசூலில் மகத்தான புரட்சியை ஏற்படுத்தியது..........

orodizli
17th August 2020, 06:34 PM
1974 ஆம் ஆண்டு வெளியான மூன்று திரைப்படங்களும் மதுரை மாநகரில் 100 காட்சிகள் அரங்கு நிறைந்து.*

உரிமைகுரல் காவியம் சினிப்பிரியா அரங்கில்*
200 காட்சிகளும்*
நேற்று இன்று நாளை திரைக்காவியம் சிந்தாமணி திரையரங்கில் 140 காட்சிகளும் சிரித்து வாழவேண்டும் திரைக்காவியம் நியூ சினிமா அரங்கில் 125 காட்சிகளும் அரங்கு நிறைந்து சாதனை.

1975 ல் மக்கள் திலகத்தின் இதயக்கனி திரைப்படம் மதுரை சிந்தாமணி அரங்கில் 201 காட்சிகள் அரங்கு நிறைந்தது. சென்னை சத்யம் மகாராணி அரங்கில் நூறு காட்சிகளுக்கு மேல் வெற்றி நடை போட்டது.*
திருச்சி சேலம் கோவை நகரங்களில் தொடர்ந்து 100 காட்சிகள் அரங்கு நிறைந்தது இதயக்கனி திரைக்காவியம்.

1975 ஆம் ஆண்டு மக்கள் திலகத்தின் நினைத்ததை முடிப்பவன் திரைப்படம் சென்னை தேவி பாரடைஸ் உமா திரையரங்கில் 105 காட்சிகள் அரங்கு நிறைந்து மதுரை மீனாட்சி அரங்கில் 130 காட்சிகள் அரங்கு நிறைந்து மேலும் சேலம் ஜெயா திரையரங்கில் 100 காட்சிகள் அரங்கு நிறைந்து வெற்றி சாதனையாகும்.

1976ம் ஆண்டு வெளியான நீதிக்கு தலைவணங்கு திரைக்காவியம் சென்னை தேவிகலா திரையரங்கில் 266 காட்சிகள் தொடர்ந்து அரங்கு நிறைந்து சாதனை மதுரை சென்ட்ரல் திரையரங்கில் 126 காட்சிகள் அரங்கு நிறைந்து வசூலுடன் மகத்தான சாதனையாகும்.

1976ம் ஆண்டு சென்னையின் மிகப் பெரிய அழகான ஸ்ரீகிருஷ்ணா அரங்கில் உழைக்கும் கரங்கள் திரைப்படம் 100 காட்சிகள் அரங்கு நிறைந்து வசூலில் மாபெரும் சாதனை. மதுரை சினிப்ரியா
மினிப்பிரியா 2 அரங்கிலும் வெளியிடப்பட்டு 85 காட்சிகள் அரங்கு நிறைந்து சாதனையாகும் சேலத்தில் அலங்கார் திரையரங்கில் 96 நாட்களில்*
125 காட்சிகள் அரங்கு நிறைந்து சாதனையாகும்..........

orodizli
17th August 2020, 06:35 PM
சென்னை உமா திரையரங்கில் 127 காட்சிகளும் காஞ்சிபுரத்தில் நூறு காட்சிகளுக்கு மேலும் பல்லாவரத்தில் 100 காட்சிகளும் வில்லிவாக்கம் ராயல் திரையரங்கில் 100 காட்சிகள் அரங்கு நிறைந்து வெற்றி சாதனையாகும்.

உலகம் சுற்றும் வாலிபன் திரைப்படம் மேலும் கடலூர் வேலூர் சேலம் ஈரோடு திண்டுக்கல் விழுப்புரம் திருப்பூர் பாண்டிச்சேரி பொள்ளாச்சி போன்ற நகரங்களில் எல்லாம் நூறு காட்சிகளுக்கு மேல் அரங்கு நிறைந்து வெற்றிநடை போட்டது. மேலும் தஞ்சை குடந்தை கரூர் பட்டுக்கோட்டை மாயூரம் நகரங்களிலும் சாதனை.

தமிழ் திரைப்பட வரலாற்றில் 25 திரையரங்குகளுக்கு மேல் தொடர்ந்து 100 காட்சிகள் அரங்கு நிறைந்து 33 திரையரங்கில் 75 நாட்களை கடந்து 23 திரையரங்கில் 100 நாட்களை வெற்றிகொண்ட காவியம் தென்னக திரையுலக வானில் மக்கள் திலகத்தின் உலகம் சுற்றும் வாலிபன் ஆகும்.

தமிழகத்தில் முதல் வெளியீட்டில் 44 திரையரங்கில் 50 நாட்களும் பெங்களூர் நகரத்தில் 3 திரையரங்கில் 100 நாட்களை கடந்து 5 திரையரங்கில் 50 நாட்களை வெற்றி கொண்டது மற்றும் கேரளாவிலும் ஆந்திராவிலும் சாதனை படைத்த இக்காவியம் இலங்கையிலும் கேப்பிட்டல் திரையரங்கில் 203 நாட்கள் ஒடி வெற்றி நடை போட்டது.

இலங்கை மாநகரில் மகத்தான சாதனையை படைத்த காவியம் உலகம் சுற்றும் வாலிபன்*
ஆறு திரையரங்கில் திரையிடப்பட்டு மூன்று ஏரியாக்களில் 100 நாட்களை கடந்து சாதனை படைத்த முதல் காவியம் 200 நாட்களில் பத்து லட்சத்தை நெருங்கிய முதல் காவியம் உலகம் சுற்றும் வாலிபன்.*

இலங்கை நாட்டில் 40க்கும் மேற்பட்ட அரங்கில் ஏ பி சி சென்டர்களில் திரையிடப்பட்டு சாதனையை ஏற்படுத்திய முதல் காவியம்" உலகம் சுற்றும் வாலிபன்".........

orodizli
17th August 2020, 06:36 PM
சென்னையில் ரிக்க்ஷாக்காரன் ஏற்படுத்திய சாதனைகள்... கிருஷ்ணா திரையரங்கிலும்*
100 காட்சிகள் அரங்கு நிறைந்து வெற்றிக் கொடி நாட்டியது.*
மதுரை நியூ சினிமா*
சேலம் திருச்சி நகரங்களிலும் ரிக்க்ஷாக்காரன் திரைப்படம் தொடர்ந்து 100 காட்சிகள் அரங்கு நிறைந்தது.

1972 ஆம் ஆண்டு மக்கள் திலகத்தின் வெற்றி காவியமான தேவர் பிலிம்ஸ் தயாரிப்பில் உருவான நல்ல நேரம் காவியம் சென்னையில் 4 திரையரங்கில் திரையிடப்பட்டு சென்னை மகாராணி சித்ரா திரையரங்குகளில்*
தொடர்ந்து 116 காட்சிகள்அரங்கு நிறைந்து சாதனை.*
மேகலா திரையரங்கில்*
90 காட்சிகளும் ராம் திரையரங்கில் 82 காட்சிகளும் தொடர்ந்து அரங்கு நிறைந்து சாதனை மற்றும் திருச்சி சேலம் நகரங்களில் 100 காட்சிகள் அரங்கு நிறைந்தது.

1972* இதயவீணை திரைக்காவியம் சென்னை குளோப் திரையரங்கில் 100 காட்சிகளும் மதுரை தேவி அரங்கில் 116 காட்சிகளும் அரங்கு நிறைந்து அவ்ஆண்டில் சாதனையாக திகழ்ந்தது.

1973 ஆம் ஆண்டு புரட்சித்தலைவரின் மூன்றாவது வெற்றி படைப்பான எம்ஜிஆர் பிக்சர்ஸின் பிரமாண்டமான தயாரிப்பில் வெளிநாடுகளில் படம் பிடிக்கப்பட்ட வெற்றிக் காவியம் உலகம் சுற்றும் வாலிபன்.

தென்னக திரைவானில் எந்த ஒரு* போஸ்டர் பேப்பர் விளம்பரங்கள் இன்றி மாபெரும் வெற்றியை அதிகமான திரையரங்குகளில் 100 காட்சிகளுக்கு மேல் அரங்கு நிறைந்து வெற்றிக் கொடியை நாட்டிய தென்னிந்திய திரைவானில் முதல் காவியம் .

25 ஊர்களில் நூறு காட்சிகளுக்கு மேல் அரங்கு நிறைந்து சென்னை தேவி பாரடைஸ் அரங்கில் தொடர்ந்து 227 காட்சிகள் அரங்கு நிறைந்து மதுரை மீனாட்சியில் 258 காட்சிகள் அரங்கு நிறைந்து தொடர் சாதனையாகும்.

கோவை மாநகரில் 178 காட்சிகளும் சென்னை அகஸ்தியாவில் 156 காட்சிகளும் திருச்சி பேலஸில் 155 காட்சிகளும் அரங்கு நிறைந்து சாதனையோ சாதனை.........

orodizli
18th August 2020, 09:39 AM
சென்னை நகரில் 1951 ஆம் ஆண்டு வெளியான மர்மயோகி திரைப்படம் முதன்முறையாக மகத்தான வசூலை உருவாக்கியது அதன்பிறகு 1954 ஆம் ஆண்டு வெளியான மலைக்கள்ளன் வசூலை வென்று முதலிடத்தை தக்க வைத்தது.

மலைக்கள்ளன் திரைப்படத்தின் வசூலை வென்று மதுரைவீரன் புதிய வசூலை ஏற்படுத்தி சினிமா உலகில் முதல் வெற்றியைப் படைத்தது.

புரட்சி நடிகரின் தயாரிப்பான நாடோடி மன்னன் காவியத்தின் வசூல் மகத்தானது. சென்னை நகரில் மதுரைவீரன் பெற்ற வசூலை நாடோடிமன்னன் வெளிவந்து வெற்றி கண்டது.

தலைநகர் சென்னையில் நாடோடிமன்னன் பெற்ற வசூலை 1965 ஆம் ஆண்டு வெளியான*
எங்க வீட்டு பிள்ளை திரைப்படம் வென்று புதிய சாதனையை படைத்தது.*

முதன் முறையாக ஒரே நிறுவனத்தில் மக்கள்திலகம் பவனி வந்த திரைக்காவியங்கள் வெற்றி படைத்தது.*

சென்னை நகரில்*
தாய்க்குப்பின் தாரம்*
தாய் சொல்லைத் தட்டாதே தாயைக் காத்த தனயன் வேட்டைக்காரன் திரைப்படங்கள்* 100 நாட்களை கடந்து வெற்றி கண்டது.
மேலும் சாதனைகள் தொடரும்..........



*

orodizli
18th August 2020, 09:40 AM
சென்னை நகரில் 1954 ஆம் ஆண்டிலிருந்து 1958 ஆம் ஆண்டு வரை வெளியான மக்கள் திலகத்தின் நூறு நாள் கடந்த காவியங்கள்....*
மலைக்கள்ளன் மதுரைவீரன் சக்கரவர்த்தி திருமகள் குலேபகாவலி தாய்க்குப்பின் தாரம் புதுமைப்பித்தன்*
நாடோடி மன்னன்
வேறு எந்த நடிகர்களுக்கும் இது போன்ற தொடர் சாதனைகள் சென்னை நகரில் ஆரம்ப காலகட்டத்தில் கிடையாது. என்பதை தெரிவித்துக் கொள்கின்றோம்.

மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அவர்கள் தனிப்பெரும் கதாநாயகனாக நடித்து வெளிவந்த காவியங்களே அதிகமாக 100 நாட்களை கடந்து வெற்றி முரசு கொட்டி உள்ளது.

சென்னை நகரில் 6 திரைப்பட அரங்கில் முதன் முறையாக வெளியான காவியம்*
மகாதேவி ஆகும்.

1961 ஆம் ஆண்டு வெளியான புரட்சி நடிகரின் 2 சமூகப் படங்களான திருடாதே**
தாய் சொல்லைத் தட்டாதே இரண்டு காவியங்களும் சென்னை நகரில் மூன்று திரையரங்குகளில் 100 நாட்களை கடந்து சாதனை.* தனிப்பெரும் நாயகனின் வெற்றியாகும்.

தமிழ் திரை உலகில் மற்றுமொரு சாதனையில் மக்கள் திலகம்..........

orodizli
18th August 2020, 09:40 AM
சென்னை மாநகரில் மக்கள் திலகத்தின் வெற்றிப்பட சாதனைகளில் சிலவற்றை முன்
வைக்கின்றேன்.

சென்னை நகரில் நான்கு திரைப்பட அரங்கில் 100 நாட்களை கடந்த முதல் காவியம்*
1956 ல் வெளியான*
மக்கள் திலகத்தின்*
மதுரைவீரன் ஆகும்.*
ஒடிய திரையரங்குகள்*
பிரபாத் ௪ித்ரா* சரஸ்வதி காமதேனு நான்கு அரங்கில் முதன் முறையாக* 100 நாட்களை*
கடந்து சாதனையை படைத்தது.

சென்னை காமதேனு திரையரங்கில்100 நாளை வெற்றி கொண்ட முதல் காவியம்*
மதுரை வீரன் ஆகும்.

1957 ல் சென்னை மிட்லண்ட் திரையரங்கில் முதன்முறையாக 100 நாட்களை கடந்த திரைப்படம் புரட்சி நடிகரின்*
புதுமைப்பித்தன் ஆகும்.

சென்னை காசினோ திரையரங்கில் 1954 ஆம் ஆண்டு வெளியான மலைக்கள்ளன் திரைப்படம் முதன்முறையாக 100 நாட்களை கடந்து சாதனையாகும்.

சென்னை நகரில் மூன்று திரையரங்கில் திரையிடப்பட்டு கிருஷ்ணாவில் 21 வாரங்களும், பாரகனில் 19 வாரங்களும், உமா திரையரங்கில் 17வாரங்களும் ஓடி சாதனை பெற்ற காவியம்*
நாடோடி மன்னன்.

1958 வரை தமிழ் சினிமாவில் இரண்டு திரைப்படங்கள் மட்டுமே*
சாதனையில்.....
நான்கு திரையரங்கில்
மதுரைவீரன் திரைப்படம்
100 நாட்களும்....
மூன்று திரையரங்குகளில்*
100 நாட்களை கடந்த
நாடோடி மன்னன் திரைப்படமும் சாதனை ஆகும்.

சென்னை நகரில் முதன் முறையாக 100 காட்சிகள் அரங்கு நிறைந்த திரைப்படம் நடிகப்பேரரசின் நாடோடி மன்னன் திரைப்படம் ஆகும்.*
*பாரகன் கிருஷ்ணா உமா திரையரங்கில் 100 காட்சிகள் அரங்கு நிறைந்து சாதனை.

சென்னை நகரில் தொடர்ந்து வெளியான நான்கு கருப்பு-வெள்ளை படங்கள் 100 நாட்களை வெற்றிகொண்டு சாதனையாகும். மதுரை வீரன் தாய்க்குப்பின் தாரம் சக்கரவர்த்தி திருமகள் புதுமைப்பித்தன் ஆகிய திரைப்படங்கள் நூறு நாட்கள் கடந்து ஓடி சாதனை ஆகும்..........

orodizli
18th August 2020, 10:38 AM
பொன்மனம் கொண்ட புரட்சித் தலைவர் மனித பண்பாளர். அவர் திரையில் பாடியது போல் 'மாங்குயில் பாட கோட்டான்கள் குறை சொல்வதோ?,
முயற்கூட்டம் சிங்கத்தின் எதிர்நிற்பதோ? அந்த முறையற்ற செயலை நாம் வரவேற்பதோ'? என்ற
பாடலின் கருத்துபடி வாழ்ந்தவர்.
எதிரி கூட தனக்கு சமமாக இருக்க வேண்டும் என்று நினைப்பவர்.

திரையில் ஒவ்வொரு படத்திலும் எம்ஜிஆரை தாக்கி பேசுவதை வாடிக்கையாக வைத்திருந்தார் சிவாஜி. அவரது கிண்டலுக்கும் கேலிக்கும் எம்ஜிஆர் பதில் சொல்லுவது கிடையாது. எம்ஜிஆரிடம் நடித்து விட்டு சிவாஜியிடம் சென்ற நடிகர்களாகட்டும், இல்லை, சிவாஜியின் ஆஸ்தான நடிகர்களாகட்டும், அவர்களை வைத்து எம்ஜிஆரை தாக்குவதற்கு பயன்படுத்திக் கொள்வார்.

அதிலும் முரட்டுத்தனமாக தாக்குபவர்களை
தனது பக்கத்திலேயே வைத்து கொள்வது அவர் வழக்கம். Mrr வாசு, சசிகுமார், சந்திரபாபு, ஜெயலலிதா, 'சோ" மேலும் பலர் இதில் அடங்குவர். அதிலும் 'சோ'வை வைத்து தன்னுடைய சொந்தப்படமான "தங்கப்பதக்க"த்தில் சிவாஜி செய்த காமெடி யாராலும் மறக்க முடியுமா?

அதிமுகவை கிண்டல் செய்து 'அண்ணாயிஸ'த்தை 'அப்பாயிஸ'ம் என ஏளனம் செய்துவிட்டு பின்னாளில் அந்தக் கட்சியுடனே கூட்டணி வைத்தால் ஐயனின் பிள்ளைகள் கூட ஓட்டுப் போடாமல் சிவாஜியின் முதல்வர் கனவையும், அவர் இளவல் சண்முகத்தின், உள்துறை கனவையும் தகர்த்து விட்டார்களே! என் சொல்வது!. ஆனாலும் அவர்கள் செய்த கிண்டலைப்பற்றி எள்முனையளவு கூட எம்ஜிஆர் கவலைப்படவில்லை. அவர்களுக்கு பதில் சொல்லவும் மாட்டார்.

நாங்கள் திரையில் பார்த்து விட்டு கொதித்து போய் சிவாஜியை திட்டி நோட்டீஸ் போடுவதோடு சரி. பின்னர் அடுத்த படத்திலும் இதே வேலையை செய்வார். எம்ஜிஆரின் வெற்றியை தாங்க முடியாமல் எம்ஜிஆர் வெளிமாநிலத்தவர் என்பதை சுட்டிக்காட்டும் வகையில் நான் பச்சைத் தமிழன் என்று மார் தட்டுவார். பிறகு ஜாதியின் பேரை சொல்லி மீசையை முறுக்குவார். என்ன செய்து என்ன பலன்? புரட்சி நடிகரின் சம்பளத்தில் பத்தில் ஒரு பங்குக்கு மேல் யாரும் தருவதாக இல்லை.

சரி, நடிப்பிலாவது சிறந்து விளங்கலாம் என்று நினைத்து 'மிகை நடிப்பை' கையில் எடுத்ததால் கொஞ்சம் கொஞ்சமாக மக்களின் மனதை விட்டு நீங்க ஆரம்பித்தார். அவர் நினைத்தால் கொடையிலாவது எம்ஜிஆரை முந்தியிருக்கலாம். ஆனால் என்ன செய்வது கஞ்சத்தனம், சுயநலம் அவரை தடுத்தது. ஆனாலும் பாடலில் 'விளம்பரத்தாலே உயர்ந்தவன் வாழ்வு நிரந்தரம் ஆகாது' என்று காழ்ப்புணர்ச்சியை காட்ட தவறவில்லை.

எம்ஜிஆர் அதிக சம்பளம் வாங்குவதை குறி வைத்து 'கொள்ளையடிப்பவன் வள்ளலைப்போல ஊரை ஏய்ப்பவன் உத்தமன்போல' என்று வயிற்றெரிச்சலை கொட்டி பாடி காட்டினார். அவர் அந்த பாடல் வரிகளை உச்சரிக்கும் போது அவரது முகபாவம் அவரது பொறாமை உணர்வை வலுப்படுத்துவது போல இருக்கும். இயற்கையான நடிப்பிலும்,
கொடைத்தன்மையிலும், வாங்கும் சம்பளத்திலும், செல்வாக்கிலும் தனக்கு நிகரானவர் சிவாஜி இல்லை என்பதால் அவரது சாடல்களை ஏதோ வயித்தெரிச்சல் கலைஞனின் உள்ளக்கொதிப்பாக நினைத்து அதற்கு பதிலுரைக்காமல்
சென்று விடுவார் புரட்சி நடிகர்.

அதன்பிறகு எம்ஜிஆர் முதல்வர் ஆனபின்பு அவரிடம் நெருங்கி வந்து அவரின் தீர்க்க முடியாத குடும்பப் பிரச்சனைகளுக்கும், வியாபார பிரச்னைகளுக்கும் தீர்வு கண்ட விஷயம் அனைவரும் அறிந்த ஒன்றுதான். 'சிலர் ஆசைக்கும் தேவைக்கும் வாழ்வுக்கும் வசதிக்கும் வாத்தியார் கால் பிடிப்பார்' என்ற பாடல் வரிகள் நினைவுக்கு வந்தால் அவர்கள் ஞாபகசக்தி அபாரமானது என்றே கூறலாம்.

அகில இந்தியாவிலும் அதிக சம்பளம் பெரும் நடிகராக இருந்தவர் எம்ஜிஆர். அது மட்டுமல்ல அவரை வைத்து ஒரு படமெடுத்தால் போதும் வாழ்நாள் முழுவதும் குடும்பமே நிம்மதியாக வாழலாம் என்ற நம்பிக்கையை பெற்றிருந்தார்.
ஹிந்தி நடிகர்கள் கூட ஸ்ரீதர் படத்தயாரிப்பில் ஏற்பட்ட இழப்புகளை சரி செய்ய நீங்கள் எம்ஜிஆரை வைத்து படமெடுப்பது ஒன்றுதான் சரியான வழி என்று அவருக்கு தீர்வு சொன்னார்கள்.

ஏனென்றால் ஹிந்தி படம் கூட அவர்களை மீட்க முடியாது என்பதை உணர்ந்து இவ்வாறு சொன்னார்கள்.
எம்ஜிஆர் யாரையுமே தன்னுடைய எதிரியாக பார்க்கவில்லை. அரசியலில் மட்டும் தீயசக்தியை தீவிரமாக எதிர்த்தார். அதனால்தான் தலைவர் புகழ் இன்று இமயம் அளவுக்கு உயர்ந்திருக்கிறது. இந்தியாவின் உயர்ந்த விருதான 'பாரத ரத்னா' விருதும் அவரை நாடி வந்தது எனலாம்..........

orodizli
19th August 2020, 07:10 AM
பொன்மனச் செம்மல் எம் .ஜி .ஆர்

தனித்தமிழ் ஈழத்தை ஆதரித்த
தனிப்பெரும் தலைவர் எம் .ஜி .ஆர்

ஈழத்திற்கு நிதி உதவி தந்து வளர்த்தவர்
ஈழத்தமிழரின் நெஞ்சம் நிறைந்தவர்

சிங்களக் கொடுமை உணர்ந்தவர்
சிங்களம் வீழ்ந்திட விரும்பியவர்

மதிய உணவை சத்துணவாக விரிவாக்கியவர்
மாணவர்கள் பள்ளி வரக் காரணமானவர்

கோடிகளைக் கொள்ளை அடிக்காதவர்
குடும்பத்திற்குச் சொத்துச் சேர்க்காதவர்

திரையில் மட்டுமே நடித்தவர்
நிஜத்தில் என்றுமே நடிக்காதவர்

விலைவாசியை கட்டுப்பாட்டில் வைத்தவர்
விவேகமாகச் சிந்தித்துச் செயல்படுத்தியவர்

அவரால் வாழ்ந்தவர்கள் கோடி
அவரால் வீழ்ந்தவர்கள் மிகச் சிலர்
உலகம் வியக்கும் வண்ணம் மதுரையில்
உலகத் தமிழ் மாநாட்டை நடத்தியவர்

உயிருள்ளவரை முதல்வராய் இருந்தவர்
உன்னத ஏழைகளின் இதயத்தில் வாழ்பவர்

--
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி.........

orodizli
19th August 2020, 07:12 AM
வணக்கம்!*
1967-ம் ஆண்டு ஒரு புத்தகத்தில் இருந்து சில பகுதிகளை வெளியிடுகின்றோம்.*
அதன் தலைப்பு*
"எம்.ஜி.ஆர். காட்டும் பாதை"*
என்பது ஆகும்.

புத்தகத்தில் பொன்மனச் செம்மலின் புகழாரம் சூட்டும் வார்த்தைகள்.

தனி ஒரு மனிதன் எல்லா சிறப்புகளையும் ஒருங்கே பெற்றிருப்பது மிகவும் ஆச்சரியமான ஒன்றாகும். ஒருவர் கல்வியில் புலமை உடையவனாக இருப்பார். இன்னொருவர் செல்வத்தில் பிரபுவாக இருப்பார். வேறொருவர் சிறந்த வீரனாக இருப்பார்.

கல்வி, செல்வம், வீரம் மூன்றையும் தன்னிடம் உடைய ஒரு மனிதன் இருந்தால் அவனிடம் வேறு ஏதாவது ஒரு சிறப்பில்லாத குணம் குடிகொண்டிருக்கும். ஒன்று இருந்தால் ஒன்று இல்லை என்பதற்கு இணங்க....

எல்லா சிறப்பையும் ஓர் அங்கே பெற்ற மனிதர்கள் அரசியலில் இருக்கிறார்கள்.....
*கலைஞர்களில் இருக்கிறார்களா?*

யாரை கேட்டாலும் உடனே கூறிவிடுவார்கள் .....
குணம், கலை, வீரம், அறிவு, செல்வம் எல்லாம் உடைய ஒருவர் என்றால் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் என்று கூறுவார்கள்.

காரணம் எம்.ஜி.ஆர் பிற கலைஞர்களை மதிக்கிறார். ஆதரிக்கிறார். போற்றுகிறார். ஏழை மக்களின் கண்ணீரைத் துடைக்கிறார்.
நாட்டின் பாதுகாப்புக்கு உதவுகிறார். பொது வாழ்வின் நலனுக்கு எப்போதும் சுறுசுறுப்பாக பணியாற்றுகிறார்.
பத்திரிகையாளர்களை மதிக்கிறார்.*

இவரை யாரும் தங்குதடையின்றி சந்திக்கலாம். தங்கள் குறைகளை கூறலாம்.*

வீண் ஆடம்பரம், மமதை, கர்வம் இவற்றை இவரிடம் அறவே காணவே முடியாது.

யாராக இருந்தாலும் அவரிடம் பேசும் பொழுது அதை கூறும் பொழுது மிக கவனமாக கேட்பார். அரை மயக்க நிலையில் செவிடன் காதில் ஊதிய சங்காக இருக்கமாட்டார்.*

இவரிடம் பணியாற்றும் ஒவ்வொருவரும் குணம், செய்கை, பழக்கம் எல்லாவற்றிலும் உயர்ந்தவர்கள். மற்றும் பண்பு அன்பு கொண்ட இதயம் உடையவர்கள்.

மக்கள் திலகத்தின் வாழ்வில் இன்னும் பல நெறிமுறைகளை காணலாம்.
தொடரும் பதிவுகள்.........

orodizli
19th August 2020, 07:16 AM
1966ம் ஆண்டு வந்த ஒரு நாளிதழில் புரட்சித் தலைவரைப் பற்றிய ஒரு கவிதையும் அவரைப் பற்றிய சிறப்புகள் உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன்.

வெற்றிப்படிகள் எம்.ஜி.ஆர்.*
என்ற தலைப்பில் ஒரு கவிதை!*

அன்பு உள்ளம் படைத்தவர் எம்.ஜி.ஆர் !
ஆடி வரும் தென்றல் எம்.ஜி.ஆர்! இன்பக் கனவு தந்த எம்.ஜி.ஆர்! ஈகையில் நிகரற்ற எம்.ஜி.ஆர்!
உழைப்பால் உயர்ந்தவர் எம்.ஜி.ஆர்!*
ஊக்கம் உள்ள சிங்கம் எம்.ஜி.ஆர்! எதிரிகளை வென்றவர் எம்.ஜி.ஆர் ஏழைப்பங்காளர் எம்.ஜி.ஆர் !ஐவர்களையும் ஆதரிக்கும் எம்.ஜி.ஆர்!*
ஒழுக்கத்தின் உறைவிடம் எம்.ஜி.ஆர்!*
ஓங்கு புகழ் கொண்டவர் எம்.ஜி.ஆர்!*
ஔடதம் அருந்தாதவர் எம்.ஜி.ஆர்! எஃகு மனிதர் எம்.ஜி.ஆர்.!

எம்.ஜி.ஆர். நடிக்கும் படத்தை மக்கள் விரும்பி பார்க்கிறார்கள் என்றால் அதில் நவரசத்துடன் கூடிய நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கும் தேவையான கருத்துள்ள வசனங்கள் நறுக்குத் தெரிவது போல் இருக்கும் என்ற உண்மையை மக்கள் உணர்ந்து இருப்பதால் தான்.*
அவரது திரைப்படங்களை எல்லாம் மக்கள் ஆர்வத்துடன் சென்று பார்க்கிறார்கள். அவரது திரைப்படங்கள் எப்போது வரும் என்று ஆவலுடன் காத்து நிற்பவர்கள் லட்சோப லட்சம், கோடான கோடிக்கணக்கான தமிழ் மக்கள்கள்.

எம்.ஜி.ஆரை ஏன் மக்கள் சுற்றிக்கொண்டே.....
புகழ் பாடித் திரிந்து கொண்டே வருகிறார்கள் என்றால்....*
அவர் மக்களுக்காக வாழ்கின்றார்.*

தான் நடிக்கும் திரைத்துறையில் சம்பாதிக்கிற பணத்தை எல்லாம் நாட்டு மக்களுக்கு நன்கொடையாக கொடுகின்றார் என்பதால்தான் அவரது புகழ் திரையைத் தாண்டி அரசியலைத் தாண்டி எங்கும் அவர் பெயர் நிலைத்துக் கொண்டு வருகிறது.

தமிழகத்தில் எந்த நிகழ்ச்சி*
ஆனாலும்.....எங்கு நடந்தாலும் சரி பள்ளியிலும், கல்லூரியிலும், அரசியல் வானிலும், திரையுலகிலும் இப்படி எல்லா துறையிலுமே தினமும் பேசப்படுகின்ற ஒரு வார்த்தை தான் எம்.ஜி.ஆர்.*
அவரது பெயரை சொல்லும் பொழுதே மக்களுக்கெல்லாம் உள்ளமெல்லாம் ஒரு சிலிர்ப்பை உண்டாக்குகிறது.

புகழ் படைத்த எம்ஜிஆர் அவர்களை விரும்புபவர்களை விட அதிகமாக எதிரிகளே அவரது பெயரை உச்சரிக்கிறார்கள். அப்படியிருந்தும் அவரது பெயர் மேலும் மேலும் புகழுடன் வளர்ந்து வருகிறது அவரது பெயர் தமிழ்* நாட்டில்....
நாடும் ஏடும் மக்களும் மன்றங்களும் குறிப்பாக எதிர்க்கட்சியைச் சேர்ந்தவர்கள் அத்தனை பேரும் போற்றிப் புகழும் ஒரு அற்புத மனிதர் இன்றைய தினத்தில் எம்.ஜி.ஆர் ஒருவர் மட்டுமே நிரந்தரமாக வாழ்ந்து கொண்டிருக்கின்றார்.

நித்தம் பத்திரிக்கைகளிலும், போஸ்டர்களிலும், யார் வாயிலில் இருந்து வரும் சொல் எம்.ஜி.ஆர் எம்.ஜி.ஆர் எம்.ஜி.ஆர் என்றே பிரதி பலித்துக் கொண்டிருக்கின்றது.*

பொழுது விடிந்தால் ஒரு புது செய்தியும் பல புகழ் மாலையும் வெளியாகிக் கொண்டே இருக்கின்றன எம்ஜிஆர் அவர்களுக்கு.

வீதிகளில் ஒவ்வொருவரும் எம்.ஜி.ஆர் அவர்களின் திரை பாடல்களையே முணுமுணுத்து பாடி செல்கின்றார்கள்.*
ஹலோ ஹலோ சுகமா*
தாய் மேல் ஆணை*
தமிழ் மேல் ஆணை*
புதிய வானம் புதிய பூமி*
இப்படி எங்கு பார்த்தாலும் எம்.ஜி.ஆரின் பாடல்களே மக்கள் முணுமுணுத்த வண்ணம் சென்று கொண்டிருக்கிறார்கள்.

இன்னும் புதிய திரைப்படங்களில் எம்.ஜி.ஆர் நடிக்கிறார் என்றதும் அத்திரைப்படத்தைப் பற்றிய நான்கு பக்கமும் பேசப்பட்டு வருகிறது.*
எந்த ஒரு நிகழ்ச்சியானாலும் எந்த ஒரு செய்தி ஆனாலும் எம்.ஜி.ஆர் அவர்களின் பெயர் இன்று பேசப்படுகிறது.*

நாடகம் ஆனாலும் சரி, திரைப்படம் ஆனாலும் சரி, நன்கொடை ஆனாலும் சரி, எங்கும் எம்.ஜி.ஆரின் பெயரை உச்சரித்து புகழ்பாடி வருகின்றார்கள் பொதுமக்கள்.

தன் உழைப்பால் உயர்ந்த எம்.ஜி.ஆர் அவர்கள் அதன் மூலம் கிடைக்கின்ற செல்வங்களை பல்வேறான நல்ல காரியங்களுக்கு இன்று நாட்டில் கொடுத்துக் கொண்டு வருகின்றார்.*

இப்பேர்ப்பட்ட ஒரு எம்.ஜி.ஆர் என்ற பெயரை, புகழ் பெற்ற ஒரு மனிதரை தமிழகம் இதற்கு முன்னாலும் இதற்குப் பின்னாலும் காண முடியாது என்பது தான் மக்களின் கருத்தாகும்.

புகழுக்கு மேல் புகழ் சேர்த்த பொன்மனச்செம்மல் எம் ஜி ஆர் அவர்களைப்பற்றி 1966 ஆம் ஆண்டு ஆண்டில் வெளியான ஒரு பத்திரிகையில் இருந்து கிடைத்த செய்திகள் தான்* மேலே குறிப்பிட்ட புகழ் மாலைகள் ஆகும்.*

மேலும் இன்னும் பல புத்தகங்களில் புரட்சித் தலைவருக்கு புகழ் பாடி உள்ளார்கள் அன்றைய தினம்.* மேலும் பதிவிடுகிறோம்... நன்றி! வணக்கம் !.........

orodizli
19th August 2020, 07:17 AM
வணக்கம்*...
1965 ஆம் ஆண்டு வெளியான "ஆயிரத்தில் ஒருவன் " காவிய திரைப்படம் பற்றி அன்றைய ஒரு சிறப்புக் கட்டுரையில் வெளியான நிகழ்ச்சியை இப்பொழுது முன் வைக்கின்றோம்....

ஆயிரத்தில் ஒருவன் எம்ஜிஆர் என்ற தலைப்பில் வெளியான இந்த தகவலை இப்பொழுது மேற்கோள் காட்டுகிறேன்-. மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் நடிக்கும் படங்கள் எல்லாமே வெற்றியடைய சாதனையாக நிற்கின்றது என்பது எது காரணம் என்பதை விளக்குகிறோம்.

எம்.ஜி.ஆர் நடிக்கும் படங்களை பார்க்கும் போது முழு மனநிறைவு உண்டாகிறது. வீர உணர்வு மனதில் வளருகிறது.* அன்பு ,பண்பு இனிமை போன்ற நல்ல எண்ணங்களை வளர்க்கக்கூடிய படங்களாக எம்.ஜி.ஆர் நடிக்கும் பெரும்பாலான படங்கள் இருக்கின்றன.

சமீபத்தில் வந்தபடங்களில் ஆயிரத்தில் ஒருவன் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அவர்களுடைய குணங்களை பிரதிபலித்து காண்பிக்க கூடியதாக இருக்கிறது*

இந்த படத்தில் கடைசி வரையிலும் நியாயத்திற்கும், நேர்மைக்கும் போராடுகிறார். இடையில் துன்பங்கள் ஏற்பட்டாலும் கடைசியில் வெற்றி பெறுகிறார்.*

சத்தியமே வெல்லும் என்பதை ஆயிரத்தில் ஒருவன் பட கதை மட்டும் விளக்கவில்லை....*
மக்கள் திலகத்தின் வாழ்க்கையே காண்பிக்கிறது. சத்தியசீலர் ஆக நல்ல எண்ணங்களுக்கும் தூய்மையான செயல்களுக்கும் மதிப்பு கொடுத்து எம்.ஜி.ஆர் நடந்து கொண்டு வரும் காரணத்தால் தான் இன்று அவர் புகழ் ஏணியின் உச்சியில் இருக்கிறார்.

திரைப்படங்களில் மட்டுமல்ல நடைமுறை வாழ்க்கையிலும் கூட சிறப்பான கொள்கையுடைய வேற எந்த நடிகரையும் இன்றைய சினிமா உலகில் பார்க்க முடியாது.

வீர சாகசங்களும், சண்டைகளும் நிறைந்த படம் ஒன்றை தயாரிக்க பத்மினி பிக்சர்சார் திட்டமிட்டனர் திரு. கே. ஜே. மகாதேவன் அவர்கள் எழுதிய கதையான ஆயிரத்தில் ஒருவனை படமாக்க தேர்ந்தெடுத்தனர்..........

orodizli
19th August 2020, 12:17 PM
"நவரத்தினம்" 1977 மார்ச் மாதம் 5 ம் தேதி வெளிவந்து வெற்றியை பெற்ற படம். சென்னையில் சாதாரண திரையரங்குகளில் வெளியாகி வியத்தகு வெற்றியை பெற்ற படம்.
சென்னையில் மொத்தம் 198 நாட்களிலே மொத்த வசூலாக ரூ 9,07,260.20. பெற்ற வெற்றிப் படம்.

சென்னை வெலிங்டன், மகாராணி, அபிராமி, ராம் தியேட்டர்களில் வெளியாகி அதிக பட்சமாக 56 நாட்களும், மொத்தம் 198 நாட்களும், தமிழகத்தில் மதுரை தங்கத்தில் 62 நாட்களும் ஓடி குறுகிய காலத்தில் அதிக வசூலை பெற்ற படமாக திகழ்கிறது. சென்னையில் பெரிய ஏசி திரையரங்கில் வெளியாகி இருந்தால் சென்னை வசூல் மட்டுமே 12 லட்சத்தை தொட்டிருக்கும்.
ஆனாலும் a p நாகராஜன் தயாரித்த படங்களிலே அதிக வசூல் பெற்ற படமாக திகழ்கிறது.

சங்கம் வளர்த்த மதுரையில் திராவிட சிங்கத்தின் கர்ஜனை தங்கம் திரையரங்கில் ஒலிக்கிறது என்றால் சிவாஜி ரசிகர்களுக்கு அங்கம் பதறி நம்ம வசூலுக்கு இனி பங்கம் வருமே நாம் இனி எங்கும் தலைகாட்ட முடியாதே! என தலைவரின் வெற்றி சங்கொலி கேட்டு துவண்டு விடுவார்கள். அதிலும் முதல் வார வசூல் அவர்களுக்கு சிம்ம சொப்பனமாக இருக்கும். தலைவரின் படங்களின் முதல் வார வசூலையே. சிவாஜியின் பல படங்கள் மொத்த வசூலில்
நெருங்க முடிவதில்லை.

"தலைவன்" படத்தின் முதல் வார வசூலையே அநேக சிவாஜியின் வெள்ளி விழா படங்கள் கூட நெருங்க முடியவில்லை. தங்கத்தில் ஜீலை 24 ல் வெளியாகி ஆக 28 வரை ஓடிய "தலைவன்" வசூல் லட்சத்தை எளிதில் கடந்தது. ஆக 29 ல் "தேடிவந்த மாப்பிள்ளை" வரவில்லையென்றால் 50 நாட்களை கடந்து கணேசனின் "கர்ணன்" வசூலை ஏப்பமிட்டிருக்கும்.
"தேடி வந்த மாப்பிள்ளை" தங்கத்தில் வெளியாகி 69 நாட்கள் ஓடி ரூ 2,27,000 வசூலாக பெற்று "கர்ணன்"
100 நாட்கள் வசூலை பந்தாடியது.

இதே அரங்கில் வெளியான "எதிரொலி" முதல் நாள்
6 மணிக்காட்சிக்கு பார்ப்பதற்கு ஆளின்றி சுமார் 30 சதமான ஆட்கள் தியேட்டருக்குள் வேடிக்கை பார்க்க சென்றதாக எங்களுக்கு மதுரையில் இருந்து தகவல் வந்தவுடன் இங்குள்ள தலைவர் ரசிகர்கள் குஷியாக இருந்தது என் ஞாபகத்திற்கு வருகிறது. "தலைவன்" ரிலீஸ் தேதி தள்ளி வைத்ததால், மொத்தம் 4 வாரம் சிரமப்பட்டு ஓட்டி ரூ 60000 வசூலை கூட எட்ட முடியாமல் தவித்த கதை சுவாரஸ்யமானது.

உதாரணமாக, "நவரத்தினம்" மதுரை தங்கத்தில் 62 நாட்களில் பெற்ற வசூலை சிவாஜியின் எந்த படமுமே நெருங்கவில்லை.
மதுரை தங்கத்தில் 62 நாள் வசூல்
ரூ. 3,34,497.86 . "உத்தமன்" 100 நாள் வசூல் நியூசினிமாவில் ரூ327000 தான். "நவரத்தினம்" 62 நாளில் பெற்ற வசூலை 100 நாட்களில் கூட பெற முடியாத "உத்தமன்" வெற்றி படம், அப்படித்தானே. ஏபிஎன்னின் "திருவிளையாடல்" 100 நாள் வசூல்
ரூ 2,86,000 தான். "தில்லானா மோகனாம்பாள்" 50 நாளில்
ரூ2,04,000 தான் பெற்றது. 132 நாளில்தான் ரூ 3,47,000 வசூலாக பெற்றது.

ஆக a p நாகராஜன் தயாரித்த அத்தனை படங்களிலும் குறுகிய காலத்தில் அதிக வசூலை பெற்ற படம் ஜொலிக்கும் "நவரத்தினம்" தான் என்பது உறுதியாகிறது. "பட்டிக்காடா பட்டணமா" 42 நாளில் சென்ட்ரலில்
பெற்றதோ ரூ 2,14,000 தான்.
சிவாஜியின் அத்தனை வெள்ளி விழா, வெற்றி விழா படங்களின் 62 நாட்கள் வசூல் அத்தனையும் "நவரத்தினம்" படத்தின் 62 நாள் வசூலுக்குள் அடக்கமாகி விட்டது.

அது மட்டுமா? தமிழகத்தையே கலக்கிய "ஆட்டுக்கார அலமேலு" படத்தின் 70 நாள் வசூலும் நவரத்தினத்தை விட குறைவுதான்.
"அண்ணன் ஒரு கோயில்" கேட்கவே வேண்டாம். வசந்த மாளிகை 55 நாட்களில் பெற்ற வசூல் ரூ2,40,.229.10. நெருங்க முடியுமா நவரத்தினத்தை. வாய்கூசாமல் தோல்வி படம் என்கிறீர்களே?, அப்படியானால் சிவாஜி நடித்த அத்தனையுமே தோல்வி படங்கள்தான்.

சும்மாவா தலைவருக்கு சிவாஜியைப் போல் பல மடங்கு சம்பளம் கொடுக்கிறார்கள். யானை அமர்ந்தால் கூட அதன் மீது உங்களால் ஏறி அமர முடியாது. இனி உங்கள் வசூல் விபரங்களை ஜெய்சங்கர், ரவிச்சந்திரன் படங்களோடு ஒப்பீடு செய்து திருப்தி பட்டுக் கொள்ளுங்கள். அதிலும் 'c' சென்ட்டரில் அவர்கள் வசூலை நெருங்குவது கடினம்தான். தலைவர் படத்தின் வசூல் அகில இந்திய அளவுக்கு பேசப்படும் போது நீங்கள் இனி வீண் முயற்சி செய்து பலனில்லை..........

orodizli
19th August 2020, 01:12 PM
எம்.ஜி.ஆர் திரைப்படங்களில் போர்க்கலைகள்

'விசாரணை' படத்தின் மூலக்கதை வடிவமான 'லாக்கப்' நாவல் மூலம் கவனத்தை ஈர்த்த மு.சந்திரகுமார் எழுதியுள்ள நூல் எம்.ஜி.ஆர் திரைப்படங்களில் போர்க்கலைகள். டிஸ்கவரி புக் பேலஸ் பதிப்பகம் சார்பில் வேடியப்பன் பதிப்பித்துள்ளார்.

புரூஸ்லி, ஜாக்கிசான், ஜெட்லி, டோனிஜா போன்ற கலைஞர்கள் குங்ஃபூ கலைக்கும் சீனத் திரைப்படக் கலைக்கும் செய்திருக்கும் பங்களிப்புக்குச் சமமாக தமிழ் சினிமாவில் பங்களிப்பு செய்த கலைஞர் யார்? தமிழர்களின் போர்க்கலைகளை தமிழ்த் திரைப்படம் எந்த அளவு பதிவு செய்துள்ளது? என்ற இரண்டு கேள்விகளுக்கும் எம்.ஜி.ஆர். என்பது மட்டுமே பதிலாக உள்ளது.

நூற்றாண்டு கண்ட தமிழ் சினிமாவில் சண்டைக்கலை குறித்து ஆய்வு செய்தால் மரபார்ந்த போர்க்கலையை ஆகச் சிறப்பாகப் பயன்படுத்திய ஒப்பற்ற கலைஞராக எம்.ஜி.ஆர்.திகழ்கிறார் என்பதை மு.சந்திரகுமார் சான்றுகளுடன் நிறுவும் விதம் மலைக்க வைக்கிறது. எம்.ஜி.ஆர் நடிப்பில் அதிகம் பார்த்து ரசித்த படங்களில் பயன்படுத்தப்பட்ட சண்டைக் காட்சிகளின் நுட்பம் வியக்க வைக்கிறது. அதனால்தான் 'மலைக்கள்ளன்' படத்தின் கலை கலாச்சாரத்துக்காக குடியரசுத் தலைவர் விருது கிடைத்துள்ளது.
உண்மையில் எம்.ஜி.ஆர் நடிப்புலகில் ஒரு மேடை நாடகத்தில் அழும் சிறுவனாகத்தான் அறிமுகம் ஆனார். அடித்ததால் அழுது நடிக்க வேண்டிய சூழலுக்குத் தள்ளப்பட்டார். நடனமே வராது போய்விடு என்று விரட்டியடிக்கப்பட்ட பிறகு, நடிப்பு, வசனம், போர்க்கலையில் கவனம் செலுத்தி தனித்த ஆளுமையாக தன்னை வளர்த்தெடுத்துக் கொண்டார். நடித்த நேரங்கள் போக மீதமுள்ள நேரங்களில் ஆயுதக் கலைகளைப் பயின்றதன் மூலம் போர்க் கலைஞராக எம்.ஜி.ஆர் ஜொலித்த ரகசியத்தையும் இந்நூல் விவரிக்கிறது.
சாகச நாயகனாக எம்.ஜி.ஆர் தன்னை முன்னிறுத்தும் தருணங்களில் கூட நம்பமுடியாத சண்டைக்காட்சிகளில் நடிக்க ஒப்புக்கொண்டதே இல்லை என்பதையும், என்னால் செய்ய முடியாத காட்சிக்கு டூப் போடலாம். செய்ய முடிந்த காட்சிக்கு ஏன் டூப் போட வேண்டும் என்று கேள்வி எழுப்பியவர் எம்.ஜி.ஆர் என்பதையும் இந்த நூலைப் படிக்கும்போது தெரிந்துகொள்ள முடிகிறது.
120க்கும் மேற்பட்ட படங்களில் நாயகனாக நடித்த எம்.ஜி.ஆர் ஒரு படத்தில் கூட ஆயுதமற்ற எதிரியை ஆயுதத்துடன் எதிர்கொண்டதில்லை, எந்த எதிரியையும் பின்புறம் இருந்து அவர் தாக்கியதில்லை, பெண்களை வாடி போடி என்று விளித்தது இல்லை என்று படிக்கிற போது அவர் பிம்பத்தின் மீதான மரியாதை கூடுகிறது. எதிரி ஆயுதத்தை இழந்துவிட்டால் தன் ஆயுதத்தை விட்டெறிந்துவிட்டும் அல்லது எதிரிக்கு ஒரு ஆயுதத்தைக் கொடுத்தும் சண்டை செய்யும் தமிழ் மரபுப் போர் புரிந்த வீரன் எம்.ஜி.ஆர் என்பதை திரைப்படங்களின் காட்சி ரீதியாக விளக்கும் விதம் நெகிழ வைக்கிறது.
எம்.ஜி.ஆர் திரைப்படங்களில் இருக்கும் சண்டைக்காட்சிகள் தனித்துவமானவை. சிலம்பு, மாடி, இரட்டைக் கம்பு, அலுமினியப் பைப்பில் சண்டை என தமிழர்களின் பாரம்பரியக் கலைகளை சினிமாவில் பயன்படுத்திய பெருமை எம்.ஜி.ஆரையே சாரும்.

பெரிய இடத்துப் பெண் திரைப்படத்தில் இரட்டைக் கம்பு (ஆஃப் ஸ்டிக்) சண்டைக் காட்சி, தாய்க்குப் பின் தாரம் படத்தில் உழவுக்காட்டில் எம்.ஜி.ஆர் போடும் நீள் அடிக்கம்பு சண்டைக் காட்சி, மாட்டுக்கார வேலன் படத்தில் மாட்டுக்குக் கட்டும் பித்தளை சலங்கைகள் கோர்த்திருக்கும் எடை மிக்க பெல்ட்டை லாவகமாகச் சுழற்றும் சண்டைக் காட்சி, அதே படத்தின் இறுதிக் காட்சியில் இரும்புக் குழாய்களைப் பயன்படுத்திப் போடும் சண்டைக் காட்சி, விவசாயி திரைப்படத்தில் மூங்கில் கழிகொண்டு எம்.ஜி.ஆரும்- நம்பியாரும் போடும் சண்டைக் காட்சி, உரிமைக்குரல் படத்தில் ஏர் கலப்பையைக் கொண்டு எதிரிகளைப் பந்தாடும் சண்டைக் காட்சி, உழைக்கும் கரங்கள் படத்தில் கம்பு சுழற்றும் காட்சி, சக்கரவர்த்தி திருமகள் மல்யுத்தக் காட்சி, ஆயிரத்தில் ஒருவன், மீனவ நண்பன், மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன், நாடோடி மன்னன் என்று ஏராளமான படங்களில் நீள் கத்தி சண்டைக் காட்சி என 20க்கும் மேற்பட்ட படங்களில் எம்.ஜி.ஆரின் சண்டைக்காட்சிகளை ஆய்வுப்பூர்வமாகவும் நுட்பமாகவும் அணுகி அலசி இருக்கிறார் மு.சந்திரகுமார்.
தமிழ் திரைப்படங்களில் சண்டைக் கலையின் மகத்துவம் குறித்து அறிந்துகொள்ள நினைப்பவர்கள், சண்டைக் கலைஞர்களின் உன்னதத்தை தெரிந்துகொள்ள விரும்புபவர்கள், வாசகர்கள் என யாவரும் எம்.ஜி.ஆர் திரைப்படங்களில் போர்க்கலைகள் நூலை விரும்பி வாசிக்கலாம்.
நூல்: எம்.ஜி.ஆர் திரைப்படங்களில் போர்க்கலைகள்
ஆசிரியர்: மு.சந்திரகுமார்.........

orodizli
19th August 2020, 02:42 PM
அவர் ஒரு புதிர்
திரைப்படத் துறையிலும் சரி, அரசியலிலும் சரி எம்.ஜி.ஆர் தனது பாணி என்று ஒரு தனி முத்திரையைப் பதித்தவர்.

சினிமாவை எடுத்துக் கொண்டால், அவர் நடித்த படங்களில் ஆரம்பத்தில் பல இன்னல்களுக்கும் சோதனைகளுக்கம் ஆளாவார். ஆனால் கடைசியில் அவரே வெற்றி பெறுவார்.

அரசியலிலும் எம்.ஜி.ஆர். சாதனை இதுவே. தி.மு.கழகம் அவரைத் தூக்கி எறிந்த போது நடிகராவது அரசியல் கட்சி நடத்துவதாவது என்று கேலி பேசப்பட்டது. வீழ்ந்துவிடவில்லை அவர். சில ஆண்டுகளிலேயே தி.மு.கவைத் தூக்கி அடித்து தமிழக ஆட்சியைக் கைப்பற்றி முதலமைச்சராகிவிட்டார்.

பிறகு இந்திரா காந்தி அவருடைய ஆட்சியை டிஸ்மிஸ் செய்தபோது எம்.ஜி.ஆரின் அரசியல் அத்யாயம் முடிந்துவிட்டது என்று தப்புக் கணக்கு போடப்பட்டது. ஆனால் எம்.ஜி.ஆரோ தி.மு.க. இ.காங்கிரஸ் கூட்டணியை வெற்றி கண்டு மீண்டும் முதலமைச்சரானார். இப்படி தோல்விகளையும், தொய்வுகளையும் தாங்கிக் கொண்டு வாகை சூடியவர் அவர்.

ஆட்சிப் பொறுப்புக்கு வந்த பின்னும் அவருக்குப் பிரச்னைகள் ஏற்படாமலில்லை. கட்சிக்குள் கோஷ்டிப் பூசல் வெடித்ததையும் எதிர்கோண்டார். தன் கண் எதிரே கோஷ்டி சேர்த்த அமைச்சர்களையும் கட்சித் தலைவர்களையும் பதவி நீக்கம் செய்து, அவர்களது அகம்பாவத்தை மட்டம் தட்டி மக்கள் முன் வெறும் செல்லாக்காசாக்கிக் காட்டினார்.

அதே சமயம் கட்டாயங்கள் ஏற்பட்ட போதும் தமது அரசியல் வாரிசு யார் என்பதை சொல்ல மறுத்தார். தலைமைப் பதவி தானாகக் கனிந்து உருவாக வேண்டிய ஒரு விஷயம். நான் யார் வாரிசை நியமிக்க என்பதைச் சொல்லாமல் சொன்னார்.
இதையெல்லாம் பார்க்கும் போது அவர் ஒரு புதிர். அவர் ஒரு தனி சாதனையார். அவர் ஒர் அதிசயம் என்று தான் எடைபோட முடிகிறது.

எம்.ஜி.ஆரின் வெற்றிக்குக் காரணம் என்ன? உண்மையில் யுகப் புரட்சியை உண்டாக்கிய பல தலைவர்களைப் போல அடித்தள மக்களை வசப்படுத்தி வைத்திருந்ததே எம்.ஜி.ஆரின் மாபெரும் வெற்றி ரகசியம்.

உலக சரித்திரத்தில் இன்னொரு எம்.ஜி.ஆர் தோன்ற முடியாது.
ஆனந்த விகடன் தலையங்கத்திலிருந்து.........

orodizli
19th August 2020, 04:47 PM
#கேள்வி : புது வழி காணும் புரட்சித் தலைவரே ! மார்க்ஸின் சித்தாந்தங்கள் இன்றைய உலக நடைமுறைக்கு ஒத்துவராது என்கிறார்களே சிலர். உங்கள் கணிப்பு ?

#புரட்சித்தலைவரின் #பதில் : எந்த மேதையினுடைய சித்தாந்தங்களும் அடிப்படையை மாற்றாமல் , அதே சமயத்தில் காலமாற்றத்திற்கு ஏற்ற வகையில் நடைமுறைகளை அவ்வப்போது ஒரு சிறிதாவது மாற்றவேண்டிய அவசியம் ஏற்படுவது தவிர்க்க முடியாததாகும் !

எந்தவொரு கொள்கையின் அடிப்படையும் நிலையானது ! வழிமுறைகள் மாறுபாடுகள் அடையலாம். சில சித்தாந்தங்கள் ( தத்துவங்கள் ) காலத்தின் வற்புறுத்தலால் மக்கள் மீது திணிக்கப்படுமாயின் அவை நிலைத்து நிற்பது சந்தேகத்துக்குரியதாகும் !

ஆனால் , மக்கள் சமூகத்தின் மறுமலர்ச்சியை மனித வாழ்வின் தனித்தன்மையை உள்ளடக்கி உருவாகும் உயிர் கொள்கைகள் சாகாவரம் பெற்றவையாகும் !

மார்க்ஸியம் என்று சொல்லப்படுகிற மனித உரிமைகளின் விளக்கக் கொள்கைகளின் மறுமலர்ச்சியே இன்றைய தினம் பேசப்படுகிற சோஷலிஸம் ஆகும் !

ஆனால், திருக்குறளை எடுத்துப் பார்த்தால் பெரும்பாலும் அதிலே சொல்லப்படுகின்ற மனித பண்புகள் எல்லைக்கோடுகள் அபேதவாதத்தினுடைய பகுத்தறிவு சித்தாந்தங்களை விளக்கம் கருத்துக் கருவூலமாக இருக்கும் !

மன்னர்களே இல்லாது போன இந்த நேரத்தில் மன்னர்கள் எவ்வாறு இருக்க வேண்டும் என்று திருக்குறளிலே சொல்லியிருக்கிறதே, அது இந்தக் காலத்திற்கு எப்படி பொருந்தும் என்று கேட்பதற்கு பதிலாக மன்னர்களுக்குச் சொல்லப்பட்ட. மக்களின் பிரதிநிதிகளாக அமைச்சர் பதவியில் அவருகின்றவர்கள் விஞ்ஞான ரீதியிலே பயன்படுத்திக் கொள்வார்களானால் இந்தக் காலத்திற்குப் பொருந்தும். இதுபோல் பயன்படுத்தினால் அது எந்தக் காலத்திற்கும் பொருந்தும்

- நாடோடி மன்னன், மே 1975

கொடை வள்ளல் எம்.ஜி.ஆர் புகழ் வாழ்க.........

orodizli
19th August 2020, 05:09 PM
எங்கள் வாத்தியார் :
🌺🌺🌺🌺🌺🌺🌺
பொன்மனச் செம்மல் எம்.ஜி.ஆர் தான் நடித்த
திரைப்படங்களின் மூலம் நல்ல கருத்துகளை
மட்டுமே எடுத்துரைத்து நடிப்பார். அவசகுணமான வார்த்தைகளையோ அல்லது
அவ நம்பிக்கை வார்த்தைகளையோ பேச
மாட்டார்.தன்னம்பிக்கை வளர்க்கும் வார்த்தைகளையே பயன்படுத்துவார்.
எதிரிகளுக்கும் திருந்த வாய்ப்பு தரும் காட்சிகளையே வைப்பார்.எதிரிகளையும் மரரியாதை குறைவான வார்த்தைகளால்
திட்ட மாட்டார்.ஆனால் அவருடைய சமகால
நடிகர்களின் படங்களை பார்த்தால் அவர்கள்
பயன்படுத்தும் வார்த்தைகள் டேய்" கம்மநாட்டி, நாதாரி,சோம்பேரிநாயே,தண்டம்"
இந்தமாதிரி பல வார்த்தைகள் கூறி திரைப்படங்களில் அழைப்பதை பார்த்திருக்கிறோம்.ஆனால் புரட்சித் தலைவர் படங்களில் அவர் பேசும் மரியாதையான வார்த்தைகள் எதிரிகளும் மதித்துபேசும் பாங்கு போன்ற தன்னிகரற்ற மனிதநேயசெயல்களை திரைப்படங்களில்
மட்டுமல்ல நேரடியான வாழ்க்கை முறையிலும் சிறியவர்களைக்கூட வணங்கியே பேசுவார்.இப்பேர்ப்பட்ட
எங்கள் மனிதநேய திலகத்தை இந்த
மனிதநேய தினத்தில் வணங்குகிறோம்...

அன்புடன் பாரதரத்னா எம்.ஜி.ஆர் பக்தர்கள் ..
🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺.........

orodizli
19th August 2020, 05:14 PM
"நாடோடி மன்னன்" காவியத்தை நாட்டுக்கு தந்த புரட்சி நடிகர்*...
எம்.ஜி. ஆர் அவர்களுக்கு பேரறிஞர் அண்ணா அவர்கள்*
110 சவரன் கொண்ட தங்க வாளை 5 லட்சம் மக்கள் முன்னிலையில் கரகோஷமும் , வாழ்த்தொலியும் முழங்க வழங்கினார்.

இது போன்ற ஒரு மகத்தான விழா
நாடோடி மன்னன் காவியத்திற்கு
மட்டுமே பெருமையை பெற்று தந்துள்ளது.

நாடோடி மன்னன் திரைப்படத்திற்கு பல ஊர்களில் விழா கொண்டாடப்பட்டது. பல ஊர்களிலும் இத்திரைப்படத்தின் நூறாவது வெற்றி விழாவிற்கு புரட்சி நடிகர் அவர்களும் அத்திரைப்படத்தில் பங்குகொண்ட திரைப்பட கலைஞர்கள் மற்றும் திரைப்பட டெக்னீஷியன்கள் பலர் கலந்து கொண்ட முதல் நிகழ்ச்சியும் நாடோடி மன்னனுக்கு அரங்கேறியது.

சென்னை நகரில் புரட்சி நடிகரின் நாடோடி மன்னன் வெற்றி விழா பிரம்மாண்டமாக எம்.ஜி.யார் பிக்சர்ஸ் சார்பாக* அரங்கேறியது. பேரறிஞர் அண்ணா அவர்கள் தலைமை ஏற்று திரைப்படத்தில் பங்கு கொண்ட 150 பேர்களுக்கு ஒரு பவுன் மோதிரம் மற்றும் கேடயங்கள் பரிசாக வழங்கினார்கள்.

ஒரு திரைப்படத்தில் பங்குகொண்ட அனைவருக்கும் சிறப்பு செய்யப்பட்ட முதல் திரைப்படமாக நாடோடிமன்னன் திகழ்ந்தது.*

சென்னையில் நடைபெற்ற நாடோடிமன்னன் வெற்றி விழாவிற்கு சுமார் இரண்டு லட்சம் மக்கள் பங்கெடுத்தனர்.*

பொதுமக்கள் பார்வையில் மிகப் பெரிய அளவில் நடைபெற்ற முதல் வெற்றி விழா நாடோடி மன்னன் திரைப்படம் ஆகும்.

நாடோடி மன்னன் திரைப்படம் முதல் வெளியீட்டில்*
46 அரங்குகளில் திரையிடப்பட்டது .

13 திரையரங்குகளில் 100 வது* நாள் வெற்றி விழா முதன் முறையாக கொண்டாடப்பட்ட செய்தி விளம்பரத்தில் அறிவிக்கப்பட்டது.*
புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் வெற்றி காவியங்கள் 100 வது நாள் வெற்றி விழா!*

வெற்றி விழா...
கொண்டாடிய காவியங்களில்*
பேரறிஞர் அண்ணா அவர்கள் தலைமை தாங்கிய திரைப்படங்கள் பற்றிய செய்திகள்.....

1958 ஆம் ஆண்டு நாடோடி மன்னன் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. பேரறிஞர் அண்ணாவின் திராவிட முன்னேற்ற கழகத்தின் கொள்கைகளை பிரதி பலித்த காவியமாக நாடோடிமன்னன் திகழ்ந்தது.**

பேரறிஞர் அண்ணா அவர்களின் தலைமையில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் மதுரை மாநகரில் மிகப்பிரமாண்டமான ஊர்வலமும் நாடோடிமன்னன் திரைப்படத்தை தயாரித்து, நடித்து, இயக்கிய புரட்சி நடிகர் எம்ஜிஆர் அவர்களுக்கு பாராட்டு விழாவும்...

மதுரை தமுக்கம் மைதானத்தில் பேரறிஞர் அண்ணா அவர்களின் தலைமையில் சிறப்புற நடைபெற்றது.

மதுரை ரயில்வே நிலையத்தில் இருந்து மதுரை தமுக்கம் மைதானம் வரை பிரம்மாண்டமான ஊர்வலம். யானை மீது புரட்சித் தலைவர் அவர்கள் அமர்ந்து வர 110 சவரன் கொண்ட தங்க வாள் மேடையிலேயே சுற்றிவர ஊர்வலமாக சுமார் 5 லட்சம் பேருக்கு மேல் கலந்து கொண்ட இந்த மாபெரும் நிகழ்ச்சி கலைத்துறையில் வரலாற்று சிறப்பு மிகு நிகழ்ச்சியாகும்.
இரண்டாம் வெளியீட்டில் திருவண்ணாமலை நகரிலும்*
100 நாட்களை கடந்து வெற்றி கண்ட காவியமாக நாடோடிமன்னன் திகழ்ந்தது.

நாடோடி மன்னன் வெற்றிவிழா* நடைபெற்ற ஊர்கள் விபரம்.... மதுரை தங்கம் திரையரங்கம் சேலம் நியூ சினிமா திரையரங்கம் கோவை ராஜா திரையரங்கம் திருச்சி* ராக்ஸி திரையரங்கம்*
நெல்லை பாப்புலர் திரையரங்கம்* ஈரோடு கிருஷ்ணா திரையரங்கம்
திண்டுக்கல் சென்ட்ரல் திபேட்டர்
தஞ்சாவூர் யாகப்பா தியேட்டர்
வேலூர் தாஜ் தியேட்டர்

சென்னை*
பாரகன் ,கிருஷ்ணா , உமா
மூன்று திரையரங்குகளிலும் திரைப்படத்தின் நூறாவது வெற்றி விழா சிறப்புடன் 1958 ஆம் ஆண்டு நடைபெற்றது.

75 ஊர்களில் 75 நாட்களையும்
மொத்தம் 125 அரங்குகளுக்கு மேல் 50 நாட்களையும் கடந்தது.

இந்திய திரையுலகில்*
நாடோடி மன்னன் வெற்றியே
இன்று வரை முதன்மை பெறுகிறது. மறுவெளியீட்டில் அதிகமான ஊர்களில் அதிக நாட்களை கடந்த திரைப்படமாகவும் இன்று வரை திகழ்கிறது.

தொடரும் பதிவுகள்.........

orodizli
20th August 2020, 07:43 AM
மக்கள் திலகம் அவர்களுக்கு

உங்களின் கோடிக்கணக்கான ரசிகர்களின் ஒருவன் ..........

அன்பு தெய்வமே

உண்மையான உங்களது அன்பு உள்ளங்கள் எந்த பிரதிபலன் பாராமல் உங்களது பிறந்த நாளை தங்களின் குடும்பத்தில் ஒருவராக எண்ணி வெகு சிறப்பாக கொண்டாடி வருகின்றனர் .

உங்களால் பயன் அடைந்தவர்கள் , உங்கள் பெயரை சொல்லி ஆட்சிக்கு வந்தவர்கள் , உங்கள் திருமுகத்தை
stamp அளவில் போடவும் மனமில்லாமல் ,அரசியல் சுய லாபத்துக்கு ,உங்கள் பெயரை - திருமுகத்தை மறைத்து , மறந்து ,வாழும் உள்ளங்களை ...

நீங்கள் பாடிய வரிகள் நினைவுக்கு வருகின்றது

பொன் பொருளை கண்டவுடன் .. வந்த வழி மறந்துவிட்டு கண் மூடி போகிறவர்கள் போகட்டுமே .

என் மனதை நானறிவேன் . என் உறவை நானறிவேன்

நன்றி மறவாத நல்ல மனம் போதும்

என்றும் அதுவே என் மூலதனம் ஆகும் .

எங்கள் இல்லங்களில் என்றென்றும் நீங்கள் விருந்தாளி .
நித்தமும் உங்கள் படங்கள் , உங்கள் பாடல்கள் எல்லா ஊடகங்கள் தொடர்ந்து ஒளி பரப்பி கொண்டு வரு கின்றனர் .

எங்கள் அலை பேசியில் உங்கள் .. பாடல் -- திருமுகம்

எங்கள் மடி கணினியில் DESKTOP

உங்கள் பாடல்கள் -- உங்களின் திரைப்படங்கள் .

COMPUTER - DESKTOP -உங்கள் பாடல்கள் -- உங்களின் திரைப்படங்கள் .

அன்பு தலைவா

உங்களது புன்சிரிப்பு

உங்களது அழகு முகம்

உங்களது கம்பீர அலங்காரம்

உங்களது கண் அசைவுகள்

உங்களது காதல் பார்வை

உங்களது வாள் வீச்சு

உங்களது சிலம்பாட்டம்

உங்களது ராஜ நடை

உங்களது வெண் கலகுரல் வசனம்

உங்களது கனிவான பார்வை

உங்களது பொன்மனம்

உங்களது வீரமான நடிப்பு

உங்களது SHORT & SWEET பட காட்சிகள்

உங்களது லட்சிய வேடங்கள்

உங்களது நேர் மறையான சிந்தனைகள்

இன்னும் சொல்லி கொண்டே போகலாம் .

எங்களது நிரந்தர சொத்து - நீங்கள்தான் .

உங்களை வழி படும் எல்லோருமே எங்கள் சொந்தம்தான் ..........

orodizli
20th August 2020, 07:45 AM
உலகில் எந்த ஒரு தனி மனிதனுக்கும் கிடைக்காத புகழ் மக்கள் திலகம் m.g.r என்ற மாமனிதருக்கு கிடைத்திருப்பது ஒரு வரலாற்று சாதனை ..

பசி என்ற கொடுமை யான ஏழ்மையின் தாக்கம் அவரது இளம் வயதில் பாதிக்க பட்டதின் விளைவுதான் 1982 ஆண்டில் சத்துணவு திட்டமாக தமிழ் நாட்டில் அறிமுகபடுத்தபட்டது .
இந்த திட்டத்தின் மூலம் பலன் அடைந்த பல லட்சகணக்கான மாணவர்கள் இன்று சமுதயாத்தில் நல்ல நிலைமையில் வாழ்ந்து வருகின்றனர் .

ஒரு தனி மனிதன் தனது வாழ் நாளில் தினமும் சந்திக்கும்
ஏமாற்றம் - கவலை - வறுமை - துரோகம் - நம்பிக்கை -ஆனந்தம் - என்று பல கோணங்களில் வெளிப்படும் செய்லகளுக்கு மருந்தாய் இருப்பது மக்கள் திலகத்தின் பட பாடல்கள் .

அந்த பாடல்களை கேட்பதின் மூலம் நமது மனதுக்கு புத்துணர்வும் ,நேர்மறை எண்ணங்களும் அலை மோதும் .

மக்கள் திலகம் மறைந்து 32 ஆண்டுகள் ஆன பின்னரும்
உலகமெங்கிலும் உள்ள அவரது ரசிகர்கள் வீட்டிலும் , தெருவிலும் அவரது படத்தை வைத்து மாலை இட்டு பூஜை செய்வது நமது இதய தெய்வம் எங்க வீட்டு பிள்ளை
ஒருவருக்குதான் என்பது உலக சாதனை .

மக்கள் திலகம் [1947-1977.] முப்பது வருடங்களில் நமக்கு தந்த காவியங்கள் 115.

சரித்திர படங்கள் - சமுதாய படங்கள் என்று பலவேறு பாத்திர படைப்புக்கள் . இனிமையான பாடல்கள் இயல்பான நடிப்பு .சமுதாய சீர் திருத்த கொள்கை பாடல்கள் -வீரமான சண்டை காட்சிகள் . இதுதான் நம்முடைய மக்கள் திலகத்தின் ரசிகர்கள் அனைவருக்கும் அழியா சொத்து .

நமக்கு மட்டுமல்ல . இந்த சொத்து அவர் பெயர் மட்டும் கூறி அனுபவிக்கும் கட்சிக்காரர்கள் - திரை அரங்கு உரிமையாளர்கள் - விநியோகஸ்தர்கள் - ஊடகங்கள் உரிமையாளர்கள் -குறுந்தகடு விற்பனையாளர்கள் - தயாரிப்பாளர்கள் - என்று இன்றும் அவர்கள் வாழ்க்கையில் வருமானத்தை அள்ளி தரும் அமுத சுரபியாக நமது மக்கள் திலகம் வாழ்ந்து கொண்டு வருகிறார் .

இந்த சாதனை படைக்கும் உலகில் ஒரே தனி மனிதர்

எங்கள் அமுத சுரபி மக்கள் திலகம் .

அவர் புகழ் வளர்க...வாழ்க... என்றும்...

orodizli
20th August 2020, 07:45 AM
வாழ்ந்தவர் கோடி, மறைந்தவர் கோடி, மக்களின் மனதில் நிற்பவர் யார்?

இந்த கேள்விக்கு பதில் காண சரித்திர புத்தகத்தை புரட்டினால் கிடைக்கும் அனைத்து பெயர்களும் வரலாறாக அறிந்தவை மட்டுமே. நம்முடைய சமகாலத்தில் வாழ்ந்து, மறைந்து 30 ஆண்டுகள் கடந்தும் ஒருவரை மக்கள் மறக்காமல் தாமாகவே முன் வந்து நினைவை போற்றுகின்றார்கள் என்றால் அந்த பெருமைக்கு சொந்தக்காரர், எம்ஜிஆர்.

கொடிது கொடிது இளமையில் வறுமை. அந்த வறுமையின் கொடூரம் தாங்காமல் இலங்கை, பாலக்காடு, சேலம், கோவை என குடும்பத்துடன் புலம் பெயர நேரிட்ட அவலத்தை சந்தித்தவர். அந்த துயர வடுக்களை அனுபவித்த காரணத்தாலேயே வாடிய மக்களை கண்ட போதெல்லாம் துயர் துடைக்க கரம் நீட்டியவர். தமிழக ஜனநாயகத்தின் வரலாற்றை எழுதினால் அவருடைய பெயரை நிச்சயமாக தவிர்க்க முடியாது. சினிமா கவர்ச்சியால் ஆட்சியை பிடித்தவர், அட்டை கத்தி வீரர் என வசைமாரி பொழிந்தவர்கள் தங்கள் உள்மனதை தொட்டுப் பார்த்தால், அவரது நீடித்த புகழுக்கு அது மட்டுமே காரணமல்ல என்ற உண்மை புரியும்.

மனித நேயம் என்பது எம்ஜிஆரின் ரத்தத்தில் ஊறிய குணம். 1940களில் சாதாரண நாடக நடிகராக இருந்தபோது நடந்த ஒரு நிகழ்ச்சியே அதற்கு உதாரணம். நாடக கம்பெனியில் இருந்தபோது தேநீர் அருந்தும் வேளைகளில் தினமும் எம்ஜிஆரே தேநீருக்கு பணம் அளிப்பதை பார்த்த வி.கே.ராமசாமி, ‘ஏம்பா, தினமும் நீயே கொடுக்கிறாய்..?’ என்று கேட்டபோது, ‘எங்கள் வீட்டில் நானும் என் அண்ணனும் சம்பாதிக்கிறோம். ஆனால், நம்முடன் இருப்பவர்களுக்கு அவர்கள் சம்பாத்தியம் மட்டுமே. அவர்கள் கொண்டு செல்லும் பணத்தை எதிர்பார்த்து குடும்பமே காத்திருக்கும்’ என்று பதிலளித்தவர், எம்ஜிஆர். நாடக கம்பெனியில் 4 ரூபாய் சம்பாதித்தபோது இருந்த மனித நேயத்தை லட்சங்களில் சம்பாதித்தபோதும் பட்டுப்போகாமல் காப்பாற்றியதால் தான் கோடிக்கணக்கான மக்களின் நாயகராக உயர்ந்து நிற்கிறார்.

திரை உலகிலும் தன்னால் யாருக்கும் எந்தவித நட்டமும் ஏற்படக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தவர். அதனால் தான், தனது முயற்சிகளை ‘நாடோடி மன்னன், உலகம் சுற்றும் வாலிபன்’ என சொந்த பணத்தைக் கொண்டே செய்து பார்த்தவர். மேலும், தனக்கு சேர வேண்டிய பணம் வந்தால் போதும் என கருதாமல் தன்னுடன் திரைப்படத்தில் பணியாற்றிய கடைக்கோடி தொழிலாளி வரை சம்பளம் பட்டுவாடா ஆகி விட்டதா என்பதை உறுதி செய்யும் குணம் தான் அரசியல் வரை அவரை அழைத்து வந்தது.
திரைப்படம் என்பது மக்களின் மத்தியில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை அறிந்ததாலேயே புகைப் பிடிப்பது, குடிப்பது போன்ற காட்சிகளை அறவே தவிர்த்தவர். வில்லனை கை, கால்களை வெட்டி திருத்தாமல் அடி, உதையிலேயே திருத்துவது அவரது பாணி. இது என்ன சினிமாத்தனம் என்று கேட்கலாம். நிஜத்தில் எவ்வளவோ நடந்தாலும், எதிரியாக இருந்தாலும் ஒரு மனிதனை திருத்துவதற்கு அதுவே சிறந்த வழி என்பது அவரது கருத்து. ஆரம்பத்தில் தனது கதாநாயகியாக நடித்த பெண்களுக்கு மகனாக நடிக்க வேண்டிய சூழல் பின்னாளில் ஏற்பட்டபோது, அவர்களின் கதாபாத்திரத்தை அண்ணி கதாபாத்திரமாக மாற்றியவர். (உதாரணம்=உரிமைக் குரல்)

திரைப்படத்தில் தனக்கென இப்படி சில கொள்கைகளை பின்பற்றியது மட்டுன்றி, 1952ல் தான் இணைந்த திமுகவின் கொள்கைகளையும் படங்களில் புகுத்தினார், அந்த சமயத்தில் ஆளுங்கட்சியாக காங்கிரஸ் இருந்தும் கூட. அந்த துணிச்சல், வேறு எந்த நடிகருக்காவது இருக்குமா? அச்சம் என்பது மடமையடா.. நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு..., உன்னை அறிந்தால்... தூங்காதே தம்பி தூங்காதே... புதியதோர் உலகம் செய்வோம்... இப்படி அவரது பாடல்களை கேட்டால் போதும் ஆயிரம் தன்னம்பிக்கை புத்தகங்களை படித்து முடித்த உற்சாகம் மனதில் ஊற்றெடுக்கும்.

எம்ஜிஆரின் இந்த குணங்கள் தான், அரசியலிலும் அவரை உச்ச நிலைக்கு கொண்டு சென்றது. தமிழகத்தில் இருந்து மாநில கட்சியை சேர்ந்தவர்கள் மத்திய அரசில் அங்கம் வகிக்கும் வாய்ப்புக்கு 1977ம் ஆண்டிலேயே பிள்ளையார் சுழி போட்டு வைத்தவர் எம்ஜிஆர். மத்தியில் மொரார்ஜி தேசாயின் ஜனதா ஆட்சிக்கும் ஆதரவு அளித்தார். காங்கிரஸ் ஆட்சிக்கும் ஆதரவு அளித்தார். இது முரண்பாடாக தெரியவில்லையா? என்று கேட்டபோது, ‘நான் தனி ஆள் அல்ல. எனது விருப்பு வெறுப்பை பார்க்க. ஒரு மாநில முதலமைச்சர். எனவே, மாநிலத்துக்கு தேவையான உதவிகளை எப்படி பெற முடியுமோ அதை எப்படியும் பெறுவேன்’ என்பது அவரது பதிலாக இருந்தது. அந்த எண்ணம் தான் தமிழக மக்களிடம் இன்னமும் நிரந்தர முதல்வராக எம்ஜிஆரை அமர்த்தி வைத்திருக்கிறது.

அதேநேரத்தில், மத்திய அரசுக்கு வளைந்து கொடுப்பவரா? என்ற சந்தேகத்தை எழுப்பியவர்களுக்கு, ‘ராணுவம் வந்தாலும் எதிர்கொள்ள தயார்’ என மத்திய அரசுக்கு துணிச்சலாக சவால் விடுத்து மறைமுகமாக பதிலளித்தவர். இலங்கையில் உச்சகட்ட இனக்கலவரம் நடைபெற்றபோது போராளிகளுக்கு வெளிப்படையான ஆதரவு அளித்ததோடு விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனை சென்னைக்கு அழைத்து தனது சொந்த பணம் ரூ.5 கோடியை வழங்கியவர். பின்னாளில், இந்திரா காந்தி மூலமாக புலிகளுக்கு இந்தியாவில் பயிற்சி அளிக்க உதவியவர்.

அரிசி, உணவு, போக்குவரத்து என சாதாரண ஏழை மக்களுக்கு தேவையான அனைத்தையும் மிக நிறைவாகவே பூர்த்தி செய்தது, எம்ஜிஆரின் 10 ஆண்டு கால தொடர்ச்சியான ஆட்சி. எம்ஜிஆர் போலவே திரையுலகில் இருந்து அரசியலுக்கு வந்து கோலோச்சி விடலாம் என பலரும் கருதுகின்றனர். சிலர் முயற்சித்தும் பார்க்கின்றனர். அவர்கள் எல்லாம், ‘மனித நேயம், ஏழைகளின் மீதான அன்பு, எதிரியாக இருந்தாலும் அரவணைக்கும் குணம், தன்னம்பிக்கை, நாடி வந்தோருக்கு வாரி வழங்குதல், தேடி வந்தோருக்கு பசிப்பிணி போக்குதல் என நினைத்து பார்க்க முடியாத மாபெரும் குணங்களே அவரது நிரந்தர வெற்றிக்கு காரணம் என்பதை அறியாதவர்கள்.

இன்றளவும் தமிழக அரசியல் அரங்கில் எம்ஜிஆர் என்ற மூன்றெழுத்து மந்திரத்துக்கு இருக்கும் மரியாதை அளவிட முடியாதது. அவரது சமாதியை தினந்தோறும் சுற்றி வணங்கிச் செல்லும் மக்களே அதற்கு சாட்சி. .........

orodizli
20th August 2020, 07:46 AM
" வெற்றியையும் தோல்வியையும் எப்படி
எடுத்துக்கொள்ள வேண்டும்? "

" எம்.ஜி.ஆர் இதுபற்றிச் சொல்லியிருக்கிறார். தொடர்ந்து இரண்டு படங்கள் அவருக்கு வெள்ளிவிழா கண்டன. அப்போது நிருபர் ஒருவர், 'இதனை எப்படி எடுத்துக்கொள்கிறீர்கள்?’ என்று கேட்டார்.

அதற்கு எம்.ஜி.ஆர்., 'என்னைப் போன்றவர்களுக்கு வெற்றியும் தோல்வியும் ஒன்றுதான். வெற்றியைக் கண்டு கொஞ்ச நேரமாவது அசந்து நின்றுவிட்டோமானால், பெரிய தோல்வி ஒன்று பின்னால் காத்திருக்கிறது என்று பொருள். அதேபோல், தோல்வியைக் கண்டு மலைத்து நின்றுவிட்டோமானால், எனக்காகக் காத்திருக்கும் வெற்றியையும் இழந்துவிடுவேன். வெற்றியையும் தோல்வியையும் உருவாக்கிக்கொள்பவன் நான் அல்ல. எனவே, அதில் பங்கு கேட்கவும் எனக்கு உரிமை இல்லை’ என்று சொன்னார்.
இந்த வாத்தியார் பாடம் போதுமே! "

- விகடன் ..........

orodizli
20th August 2020, 07:48 AM
திருடாதே முதலிடத்தையும்,*
தாய் சொல்லை தட்டாதே இரண்டாம் இடத்தையும்,*
நல்லவன் வாழ்வான் திரைப்படம் மூன்றாவது இடத்தையும், அரசிளங்குமரி திரைப்படம் நான்காவது இடத்தையும்,*
சபாஷ் மாப்பிள்ளை திரைக்காவியம் ஐந்தாவது இடத்தையும் பெற்று வசூலில் அடுக்கடுக்கான சாதனைகளை படைத்தது.

1961 ஆம் ஆண்டு வெளியான மற்ற படங்களை விட மிகப் பெரிய ஒரு வெற்றியையும் பல இடங்களில் அதாவது ஏ.பி.சி. என சொல்லப்படும் அத்தனை சென்டர்களிலும் திருடாதே*
தாய் சொல்லை தட்டாதே*
நல்லவன் வாழ்வான் அரசிளங்குமரி* உட்பட அத்தனை படங்களுமே பல இடங்களில்*
50 நாட்களையும், 75 நாட்களையும் கடந்து ஒரு வெற்றி புரட்சியை பல ஊர் அரங்குகளில் படைத்தது.

திருடாதே காவியம் ஒரு புதுமையான காவியம். சமூக திரைப்படத்திலேயே ஒரு கிளைமாக்ஸ் காட்சி அதிக நேரம் மக்கள் விறுவிறுப்புடன் அரை மணி நேரத்திற்கு மேல் ரசித்த காட்சி முதல் முறையாக தமிழ் சினிமாவில் புரட்சி நடிகர் எம் ஜி ஆர் அவர்களால் திருடாதே காவியத்தில் காட்சி அமைக்கப்பட்டு...... அக்காட்சி மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றதாகும்.

நல்லவன் வாழ்வான் திரைக்காவியம் பேரறிஞர் அண்ணா அவர்களின் கதை அமைப்பில் உருவாகி வெற்றிகண்டது. இத் திரைப்படமும் 1961ம் ஆண்டு பல இடங்களில்*
12 வாரங்களையும், 50 நாட்களையும் கடந்து பல ஊர்களில் சாதனையாகும். நல்லவன் வாழ்வான் காவியம் மக்கள் திலகத்தின் மூன்றாவது வெற்றி காவியமாக வசூலில் அனைத்து ஊர்களிலும்* நின்று விளையாடியது.........

orodizli
20th August 2020, 12:50 PM
என்னைய்யா பெரிய ஸ்டார்னு சொல்றீங்க , ஹீரோன்னு சொல்றீங்க , மாஸ்னு சொல்றீங்க .... அதை எல்லாம் அனாயிசமாக கடந்தவர் இருந்தார் என்பதையே தெரியாம ஆடறீங்க ....

ஜெயந்தி பிக்ச்சர்சின் உரிமையாளர் கனக சபைச் செட்டியார் தயாரிப்பில் உருவானது தான் மாட்டுக்கார வேலன் திரைப் படம் . அந்தப் படத்தின் 100 வது நாள் விழா சேலத்தில் நடந்தது , மக்கள் திலகமும் வந்திருந்தார் . சேலத்தில் விழா நடந்த திரையரங்கத்தின் முதலாளி , ஒரு மூதாட்டியை அழைத்து வந்தார் மேடையருகே மக்கள் திலகத்திடம் ....

" படம் ஓடிய நூறு நாட்களும் விடாமல் இந்தம்மா டிக்கெட் வாங்கி வந்து பார்த்தார்கள் அவர் உங்களை நேர்ல பாக்கணுமாம் " என்று சொல்ல ... மக்கள் திலகம் எழுந்து கை கொடுத்து அவரை மேடையில் ஏற்றி தன் அருகில் உட்கார வைத்தார் ....

வந்திருந்தவர்களை எல்லாம் கண்டுக் கொள்ளாமல் , அந்த மூதாட்டியிடம் குசலம் விசாரிக்கத் துவங்கினார் ,

" விதவையாகி 30 வருஷம் ஆச்சு , பிள்ளைங்க இருந்தும் , இல்லை . கீரை வித்து வித்தை களுவரேன் . அந்த கூடையைச் சுமந்தால் ஒரு நாளைக்கு மூணு ரூபாய் கிடைக்கும் அதிலே ஒரு ரூபாய் உங்க படம் பார்க்க செலவழிச்சேன் " என்றார்

எதுக்கும்மா 100 தடவை பார்க்கணும் ? என்று மக்கள் திலகம் வினவ ...

" உன் பால் முகத்தை எத்தனை தடவை பார்த்தாலும் ஆவல் அடங்காதுப்பா , அதோடு உன்னை பெத்த புண்ணியவதி எப்படி அதிர்ஷ்டமானவள்னு நினைச்சுப் பார்கிறேன் அது மட்டுமல்ல எங்க சேரியிலே ஆணும் பெண்ணும் வேதனை நீங்குறதா சொல்லி கண்டப் படி ஆடுவாங்க , எனக்கு அந்தப் பழக்கமெல்லாம் இல்லே என் வேதனை மறக்க நான் படம் பார்க்குறேன்பா " என்றார் .

" அம்மா என்னைப் பார்க்க நீங்க நூறு நாட்கள் என்று நூறு ரூபாய் செலவழிச்சீங்க இல்லியா ? நான் அதுக்கு ஆயிரம் ரூபாய் தரேன் வாங்கிக்குங்க , " என்றார் மக்கள் திலகம்

" யப்பா , உனக்கு அம்மான்னா உசிராமே , தாய் , தன் பிள்ளையைப் பார்க்க கூலி வாங்கனுமா என்ன ? வச்சுக்கோ , ஆண்டவன் கொடுக்குறது போதும் " என்றார் அந்த மூதாட்டி ...

சுருக்கம் மிகுந்த அந்தக் கையை மக்கள் திலகம் முத்தமிட்டப் பொழுது அரங்கமே அதிர்ந்தது ....

அவர் தானைய்யா எவர்க்ரீன் ஹீரோ...............

orodizli
20th August 2020, 12:51 PM
1972......

மலரும் நினைவுகள் .

மக்கள் திலகத்தின் சங்கே முழங்கு , நல்ல நேரம் , ராமன் தேடிய சீதை , நான் ஏன் பிறந்தேன் முற்பகுதியில் வெளிவந்தது .-[ பிப் -ஜூன்]
மக்கள் திலகம் எம்ஜிஆர் சிங்கப்பூரில் நடந்த கலை நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நாடகத்தில் நடித்தார் .
மக்கள் திலகம் எம்ஜிஆருக்கு ''பாரத் '' பட்டம் .... மே
எம்ஜிஆருக்கு பாராட்டு விழாக்கள் தொடர்ந்து நடந்தது . மே - ஆகஸ்ட்
எம்ஜிஆர் கலந்து கொண்ட கடைசி திமுக - மதுரை மாநாடு - ஆகஸ்ட்
எம்ஜிஆர் பற்றிய செய்திகள் இருட்டடிப்பு தொடங்கியது . செப்டம்பர்
எம்ஜிஆரின் அன்னமிட்ட கை - செப்டம்பர் .
எம்ஜிஆர் நீக்கம் - அக்டோபர்
அதிமுக உதயம் - அக்டோபர்
எம்ஜிஆரின் இதய வீணை - அக்டோபர்
மக்கள் வெள்ளத்தில் ரயில் பயணம் சென்னை - மதுரை நவம்பர்
சென்னை நகரில் மாபெரும் பேரணி - டிசம்பர்.

சினிமா சாதனைகள் - 1972

சென்னை நகரில் 4 திரை அரங்கில் வெளிவந்து 4 அரங்கிலும் 100 நாட்கள் ஓடிய படம் நல்ல நேரம் ..

நல்ல நேரம் , இதயவீணை 100 நாட்களுக்கு மேல் வெற்றிகரமாக ஓடியது .
இலங்கையில் நல்ல நேரம் மற்றும் ராமன் தேடிய சீதை 100 நாட்கள் ஓடியது .
சங்கே முழங்கு , ராமன் தேடிய சீதை , நான் ஏன் பிறந்தேன் தமிழகத்தில் 12 வாரங்கள் ஓடியது .
அன்னமிட்ட கை சுமாராக ஓடியது .
1972ல் மக்கள் திலகம் 10 படங்களில் நடிக்க ஒப்பந்தமானார் .
அனைத்து எம்ஜிஆர் மன்றங்களும் மிகவும் சுறு சுறுப்பாக இயங்கி கொண்டு வந்தது .

ரசிகர்களுக்கு எம்ஜிஆர் தந்த விருந்து .

சங்கே முழங்கு

எம்ஜிஆரின் ஸ்டைல் ரசிகர்களுக்கு விருந்து . குறிப்பாக கிருபால் சிங் வேடம் கச்சிதமாக அமைந்து விட்டது .எல்லா பாடல்களும் சூப்பர் ஹிட் . மெல்லிசை மன்னரையும் , கண்ணதாசன் - டிஎம் எஸ் - சுசீலா - ஈஸ்வரி பாராட்ட வேண்டும் . நீதி மன்றத்தில் குறுக்கு விசாரணை காட்சியில் எம்ஜிஆர் நடிப்பு பிரமாதம் . சிலர் குடிப்பது போலே நடிப்பார் ,,,பாடல் காட்சியில் அருமையான நடனமும் முக பாவங்களும் , உடை அலங்காரமும் கண்களுக்கு விருந்து .

நல்ல நேரம்

தேவரின் முதல் வண்ண படைப்பு . எம்ஜிஆர் அறிமுகமாகி யானையுடன் கால் பந்து விளையாடும் காட்சியில் டைட்டில் இசை ஒன்றே போதும் படத்தின் பிரமாண்ட வெற்றிக்கு . படம் முழுவதும் எம்ஜிஆரின் இளமை , சுறுசுறுப்பு அட்டகாசம் . நல்ல கருத்துடன் பொழுது போக்கு அம்சங்களுடன் ரசிகர்களுக்கும் மக்களுக்கும் விருந்து படைத்த காவியம் .

ராமன் தேடிய சீதை
.
நல்ல நேரம் வெளிவந்து சக்கை போடு போட்டு கொண்டிருந்த நேரத்தில் 33 நாட்கள் இடை வெளியில் இப்படம் வெளிவந்தது .எம்ஜிஆரின் ஜாலியான படம் . எல்லா பாடல்களும் சூப்பர் ஹிட் . சண்டைகாட்சிகள் அனைத்தும் அருமை . சிறந்த ஒளிப்பதிவு .மெல்லிசை மன்னரின் இனிய இசை. .காஷ்மீர் காட்சிகள் கண்களுக்கு விருந்து .இந்த இடத்தில் 43 வகையான டிரஸில் எம்ஜிஆர் இளமையுடன் தோன்றும் காட்சிகள் சூப்பர்,
மொத்தத்தில் ரசிகர்களின் படம் .

நான் ஏன் பிறந்தேன்

குடும்ப பாங்கான கதையில் குடும்ப தலைவராக எம்ஜிஆர் இயல்பாக நடித்து அனைவரின் உள்ளங்களையும் கொள்ளை அடித்த காவியம் .எல்லா பாடல்களும் சூப்பர் ஹிட் .எம்ஜிஆரின் வசனங்கள் ....மிகவும் யதார்த்தம் . மறக்க முடியாத காவியம் .

அன்னமிட்ட கை

டைட்டில் காட்சியில் '' முதல் முறையாக பாரத் எம்ஜிஆர்'' என்று திரையில் காணும்போது ரசிகர்களின் கைதட்டலும் விசில் சத்தமும் இன்னமும் காதில் எதிரொலிக்கிறது .1966ல் எடுக்கப்பட்ட காட்சிகளில் எம்ஜிஆரின் கணீர் குரல்; காட்சிகளை காணும் வாய்ப்பு கிடைத்தது
எம்ஜிஆரின் பாசமிகு நடிப்பு . இனிமையான பாடல்கள் , பிரமிக்க வைக்கும் கம்பு சண்டை காட்சிகள் . நம் கண்களுக்கு விருந்து .

இதய வீணை

ராமன் தேடிய சீதை படத்திற்கு பின்னர் மீண்டும் காஷ்மீர் காட்சிகளுடன் வந்த மணியனின் காவியம்
இனிமையான பாடல்கள் , எம்ஜிஆரின் சிறந்த நடிப்பு , குடும்ப கதை . சூப்பர் காவியம் .
எழுத்தாளர் மணியன் மூலம் நமக்கு கிடைத்த வரப்பிரசாதம்
ஆனந்தவிகடனில் ''நான் ஏன் பிறந்தேன் '' - எம்ஜிஆரின் தொடர் கட்டுரை
உலகம் சுற்றும் வாலிபன் - படப்பிடிப்பிற்கு உதவி
இதயவீணை
சிரித்து வாழவேண்டும்
பல்லாண்டு வாழ்க
மூன்று மெகா ஹிட் மூவிஸ்
மணியனை மறக்க முடியுமா ?.

குறிப்பாக அரசியல் மற்றும் சினிமா இரண்டு துறையிலும் எம்ஜிஆரின் இமாலய வெற்றிகள் துவங்கப்பட்ட ஆண்டு 1972 என்றால் அது மிகையல்ல .எம்ஜிஆரின் வெற்றிகளும் எம்ஜிஆர் ரசிகர்களின் உண்மையான பேராதரவும் மக்கள் மன்றமும் சரித்திரத்தில் இடம் பெற்றுள்ளது என்றால் அது மக்கள் திலகம் எம்ஜிஆர் என்ற நடிகருக்கும் , புரட்சித்தலைவர் எம்ஜிஆர் என்ற அரசியல் தலைவருக்கும் கிடைத்த வெற்றிகள் .
எம்ஜிஆர் ரசிகர்களாகிய நாமும் இந்த 1972 முதல் தொடர் வெற்றிகளை 48 ஆண்டுகளாக நினைவு கூறும் நாம் கொடுத்து வைத்தவர்கள் ..........

fidowag
20th August 2020, 08:55 PM
பாட்டாலே புத்தி சொன்ன*வாத்தியார் எம்.ஜி.ஆர். -வின் டிவியில் சகாப்தம்*நிகழ்ச்சியில் திரு.துரை பாரதி*30/07/20 அன்று அளித்த*தகவல்கள்*
---------------------------------------------------------------------------------------------------------------------
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். வேட்டைக்காரன் படத்தில், வெள்ளிநிலா முற்றத்திலே* என்ற பாடலில்* ஒரு குழந்தைக்கு என்னென்ன அறிவுரைகள் சொல்ல வேண்டுமோ அவற்றை அழகாக, தெளிவாக,சொல்லியிருப்பார் . இதே போல பல படங்களில் குழந்தைகளுக்கு அறிவுரையுடன் கூடிய பாடல்கள் பாடியுள்ளார் .* இந்த காலத்தில் இளைஞர்கள் வருங்காலத்தை எப்படி பார்க்க வேண்டும் . எப்படி நடந்துகொள்ள வேண்டும் . எப்படியான வாழ்க்கையை அமைத்துக் கொள்ள வேண்டும் பொது வாழ்க்கையில் எப்படிப்பட்ட பிரச்னைகளை நாம் சந்திக்க உள்ளோம் என்பதை மகாதேவி படத்தில் குறுக்கு வழியில் வாழ்வு தேடிடும் குருட்டு உலகமடா, தினம் கொள்ளையடிப்பதில் வல்லமை காட்டும் திருட்டு உலகமடா, தம்பி தெரிந்து நடந்து கொள்ளடா என்ற பாடலில் எப்படி கட்சியில் அண்ணா தம்பிக்கு* கடிதங்கள்**எழுதியதில் பிரபலம் ஆகியதோ , அதுபோல எம்.ஜி.ஆர். அவர்கள் திரைப்படங்களில் தன்* பாடல்கள் மூலம் மக்களுக்கு , இளைய தலைமுறைக்கு போதனைகள் அறிவுறுத்தி வந்தார் . அதனால்தான் அன்றைக்கு* இருந்த எம்.ஜி.ஆர். ரசிகர்கள் இன்றைக்கு அவர் மறைந்த பின்னர் பக்தர்களாக உருமாறியிருக்கிறார்கள் .எம்.ஜி.ஆர். அவர்கள் தன் பாடல்களில் சொன்ன பாடங்களை ,கற்று , படிக்காத மேதைகளாக மக்கள் மத்தியில் இன்று நற்பணி ஆற்றிக்கொண்டு இருக்கிறார்கள் .என்பதை பல நகரங்களில், ஊர்களில் கண்கூடாக பார்க்கலாம் .தமிழ்நாட்டில் பல இடங்களில் எம்.ஜி.ஆர். மாதிரி வேடமிட்டு கலை நிகழ்ச்சிகள் நடத்துவது ,திருமணங்களில் தாலி எடுத்து கொடுப்பது, பிறந்த நாள் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு ஆசி கூறுவது , குழந்தைகளுக்கு பெயர் சூட்டுவது , சமூக நல திட்டங்களில் ஈடுபடுவது, அன்ன தானம் செய்வது பொது ஜன சேவை செய்வது*என்று பல நல்ல காரியங்களில் ஈடுபட்டு வருகிறார்கள் .*


நான் ஏன் பிறந்தேன் படத்தில் தம்பிக்கு ஒரு பாட்டு, அன்பு தங்கைக்கு ஒரு பாட்டு, வாழ்வில் நம்பிக்கை வளர்வதற்கு உதவும் நான் சொல்லும் கதைப்பாட்டு*என்று இளைய தலைமுறைக்கும் , குழந்தைகளுக்கும் எதிர்காலத்தில் நம்பிக்கை ஒளி தரும் ஒரு மகா சக்தியாக இருந்துள்ளார் . அதே போல நாளை நமதே படத்தில் அன்பு மலர்களே, நம்பி இருங்களேன் , நாளை நமதே என்று* நம்பிக்கை*தரும் பாடலில்* மிக அழகாக கருத்துக்களை சொல்லியிருப்பார் .நவரத்தினம் படத்தில் உங்களில் நம் அண்ணாவை பார்க்கிறேன் , நல்ல* உத்தமர் காந்தியையும் பார்க்கிறேன் என்று சிறுவர்கள், இளையதலைமுறையினர் எப்படி*வளர வேண்டும், வாழ வேண்டும் என்று கனவு கண்டாரோ, அதை நனவாக்க*படங்களிலே பாடல்கள் பாடி அவர்களை உருவாக்குவதில் பெரும் அக்கறை கொண்டிருந்தார் .அதில் வெற்றியும் கண்டார் . ஆனந்த ஜோதி படத்தில்*ஒரு தாய் மக்கள் நாமென்போம் என்ற பாடலிலும் தேசபக்தி, நாட்டுப்பற்று கொண்ட கருத்துக்கள் இருந்தன என்பதை அறியலாம் .நீரும் நெருப்பும் படத்தில் கடவுள் வாழ்த்து பாடும் இளங்காலை நேர காற்று ,என் கைகள் வணக்கம் சொல்லும் செங்கதிரவனை பார்த்து என்ற பாடலில் கூட குழந்தைகளுக்கு ,*அன்பு,பண்பு, ஈகை , வீரம் , உழைப்பு ஆகியன பற்றிய போதனைகள் இருக்கும் .ஏனென்றால் குழந்தைகள் நாளை மலரப்போகும்* மிக பெரிய**நிழல் தரும் மரங்களின் நாற்றங்கால்கள் . அவர்களின் எதிர்கால வாழ்க்கை சிறப்பாக அமைய பார்ப்பதில் ஒரு கலைஞனுக்கும் சமூக பொறுப்பு உள்ளது என்பதை எம்.ஜி.ஆர். மிக நன்றாக உணர்ந்திருந்தார் . அதனால் தான் திரைப்படத்துறையில் தனது பாணியில் அதை திறம்பட செய்து காட்டினார் .*


ஒரு கலைஞன் என்பவன் சமூகத்திலிருந்து ,தனக்குரிய சன்மானம்*புகழ் ஆகியவற்றை பெறுகிறான் .அவன் இந்த சமூகத்திற்கு அளிக்கக்கூடிய பங்களிப்பு மிக பெரியது .அவன் தனக்கு கிடைத்த சன்மானத்திற்கும், புகழுக்கும், கிடைத்த வாழ்க்கைக்கும் நன்றிக்கடன் பட்டிருக்கிறான்* இந்த மனிதகுலத்திற்கு என்பதற்காகத்தான் எம்.ஜி.ஆர். ஒவ்வொரு திரைப்படத்திலும் படத்தின்*தலைப்பு தேர்வு செய்வதில் இருந்து ,ஒவ்வொரு காட்சியிலும் மக்களுக்கு*உகந்த பல நல்ல செய்திகள் அறிவிக்க வேண்டும் , தன்னுடைய*உழைப்பிலே வருகிற*வியர்வை சிந்தி*சம்பாதிக்கிற பணத்திற்கு பயனுள்ளதாக அந்த 3 மணி நேர திரைப்படத்தில்*ஏதாவது நல்ல விஷயங்கள்*தெரிவிக்க வேண்டும் என்பதில்*முனைப்புடன் இருந்தார் .எந்த விஷயத்திலும் நேர்மையை*காட்ட வேண்டும் ,அநியாயத்தை தட்டிக் கேட்கவேண்டும்*,பெண்களிடத்தில் மரியாதை உள்ளவராக இருக்க வேண்டும் , குடும்பத்தில் முதியவர்களை மதிப்பவர்களாக இருக்க வேண்டும் . குழந்தைகளிடத்தில் அன்பு செலுத்த*வேண்டும் சக*மனிதர்களிடம் இரக்கம் உள்ளவனாக இருக்க வேண்டும் , ஆபத்து காலத்தில் உதவிக்கரம்*நீட்ட* ஒவ்வொரு தனிமனிதனும்*தயாராக இருக்க வேண்டும் என்று எம்.ஜி.ஆர். தன்னுடைய*படங்களில் ,பாடல்கள், காட்சிகள் மூலம் அறிவுறுத்தி வந்தார் .


தன்னுடைய*படங்களில் ,பாடங்கள் இல்லாமல், பரீட்சை இல்லாமல், நுழைவு தேர்வு இல்லாமல், ஆசிரியர் இல்லாமல், யாருமே இல்லாமல் அந்த ஆசான்*பாடல்கள், காட்சிகள் ,பதியவைத்து*கருத்துக்கள்*மூலமாக*பட்டங்கள் பெற்றவர்கள் கோடி*பேர் .* அந்த கோடி*பேரும்*அவர் தோளில்*தாங்கிய*மாலைகள் ஆனார்கள் .அதனால்தான் அவரது தோள்களை*கோடி*மாலைகள்*தாங்கியவை*என்று* சொல்லப்பட்டது . அப்படிப்பட்ட மன்னாதிமன்னன், ராஜராஜனின் சரித்திரம், வரலாறு, சாதனை*பட்டியல் அடுத்த அத்தியாயத்தில் தொடரும்*.


நிகழ்ச்சியில் ஒலித்த*பாடல்கள்*/காட்சிகள் விவரம்*
----------------------------------------------------------------------------------
1.நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு ஓடு ராஜா - என் அண்ணன்*

2.வெள்ளிநிலா முற்றத்திலே விளக்கெரிய -வேட்டைக்காரன்*

3.குறுக்கு வழியில் வாழ்வு தேடிடும்*குருட்டு*உலகமடா*- மகாதேவி*

4.உங்களில்*நம் அண்ணாவை பார்க்கிறேன் - நவரத்தினம்*

5.அன்பு மலர்களே,நம்பி இருங்களேன்,நாளை நமதே*- நாளை நமதே*

6.ஒரு தாய் மக்கள் நாமென்போம் - ஆனந்த ஜோதி*

7.தம்பிக்கு ஒரு பாட்டு - நான் ஏன் பிறந்தேன்*

8.ஓடி*ஓடி*உழைக்கணும் ,ஊருக்கெல்லாம் கொடுக்கணும் -நல்ல நேரம்*

9.எம்.ஜி.ஆர். -மஞ்சுளா*-லட்சுமி உரையாடல் -இதயவீணை*

orodizli
20th August 2020, 10:10 PM
22.8.1958
Historical Day
19,830 அடி நீளமுள்ள “நாடோடி மன்னன்” திரைப்படம் 22-8-1958-ல் வெளியானது. திரையிடப்பட்ட தியேட்டர்களில் எல்லாம் காலையிலேயே ரசிகர்கள் நீண்ட `கியூ’ வரிசையில் நின்றனர்.

படம் “மெகா ஹிட்” என்பது, திரையிடப்பட்ட முதல் நாள் -முதல் காட்சியிலேயே தெரிந்து விட்டது. இரட்டை வேடங்களில் எம்.ஜி.ஆர். சிறப்பாக நடித்திருந்தார். இரட்டை வேடக்காட்சிகளை ஒளிப்பதிவாளர் ஜி.கே.ராமு அருமையாகப் படமாக்கியிருந்தார்.

பாடல்களை பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், சுரதா உள்பட பலர் எழுதியிருந்தார்கள். எஸ்.எம்.சுப்பையா நாயுடு இசை அமைத்திருந்தார். “தூங்காதே தம்பி தூங்காதே”, “சம்மதமா, நான் உங்கள் கூடவர சம்மதமா?” உள்ளிட்ட பாடல்கள் தமிழ்நாட்டின் மூலை முடுக்கெல்லாம் எதிரொலித்தன.

ஏற்கனவே “வசூல் சக்ரவர்த்தி” என்று பெயர் பெற்றிருந்த எம்.ஜி.ஆர். இப்படத்தின் மூலம் “தமிழ்த்திரை உலகின் முடிசூடா மன்னன்” என்று புகழ் பெற்றார்.

“நாடோடி மன்னன்” படத்தின் வெற்றி விழா மதுரையில் நடந்தது. இந்த விழாவை, மதுரை முத்து ஏற்பாடு செய்திருந்தார். தமிழ்நாடு சட்டசபையின் அன்றைய சபாநாயகர் யு.கிருஷ்ணாராவ், எதிர்க்கட்சித் தலைவர் வி.கே.ராமசாமி முதலியார், பி.டி.ராஜன், நடிகர்கள் கே.ஆர்.ராமசாமி, எஸ்.எஸ்.ராஜேந்திரன், டி.வி.நாராயணசாமி, டி.கே.பகவதி, கவிஞர் கண்ணதாசன், டைரக்டர் ஏ.எஸ்.ஏ.சாமி ஆகியோர் விழாவில் கலந்து கொண்டு பேசினர்.

4 குதிரைகள் பூட்டிய அலங்கார ரதத்தில் எம்.ஜி.ஆர். ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டார். ஊர்வலத்தின் முன்னால் கொண்டு செல்லப்பட்ட உலக உருண்டை மீது, 110 பவுனில் தயாரிக்கப்பட்ட தங்க வாள் மின்னியது.

ஊர்வலம் முடிந்தபின், தமுக்கம் மைதானத்தில் நடந்த பிரமாண்டமான வெற்றி விழாவில் அந்த வீரவாளை நாவலர் நெடுஞ்செழியன் எம்.ஜி.ஆருக்கு பரிசாக வழங்கினார் ..........

orodizli
20th August 2020, 10:13 PM
நடிப்புக்கு #மட்டுத்தான் #சம்பளம்

#அன்பே #வா படப்பிடிப்பிற்காக மக்கள்திலகம் கோவை செல்வதற்காக, சென்னை விமானநிலையத்திற்கு வருகிறார். அங்குள்ள விமானநிலைய அதிகாரி ஜெயக்குமார் என்பவர் எம்ஜிஆர் அவர்களின் நண்பர்...

அவர் எம்ஜிஆர் வைத்திருந்த சூட்கேஸை எடைபோட்டு அதற்கு ரூ.7000/- பணம் கட்டச்சொன்னார்...

அதற்கு எம்ஜிஆர் ..."பெட்டிக்குத் தான் மதிப்பா ? அதிலிருக்கும் 40000/- ரூபாய்க்கு மதிப்பில்லையா ? எனக்கேட்டார்...

அதற்கு ஜெயக்குமார்..."நீங்கள் பணத்தை சூட்கேஸில் வைக்கவேண்டாம். கையிலுள்ள "பேக்" ல் வைத்துக்கொள்ளுங்கள்...என்று பணத்தை எடுத்துக்கொடுத்து ... அது சரி, "ஷூட்டிங்கிற்குத் தானே போகிறீங்க.? அதுக்கு இவ்வளவு பணம் எதுக்குக் கொண்டு போகணும் ? " என்று கேட்டார்.

அதற்கு எம்ஜிஆர் ... "நான் ஊட்டி, கொடைக்கானல் போனால் அங்கு உடன் வரக்கூடிய அலுவலர்களுக்கும், நான் தங்குகிற இடத்தில் வேலை செய்யறவங்களுக்கும் மப்ளர், ஸ்வெட்டர் வாங்கித் தருவேன். அப்புறம் கொஞ்சம் பணம் என் சொந்த தேவைகளுக்காகவும் " என்று சொன்னார்...

அதற்கு ஜெயக்குமார்..."#அதெல்லாம் #புரொட்யூஸர் #தானே #பாத்துக்குவாங்க..#நீங்க #ஏன் #கொடுக்கணும் ? "
எனக்கேட்டார்.

"#அவங்க #என் #நடிப்புக்கு #மட்டும்தான் #கொடுப்பாங்க...#என் #சௌகர்யத்துக்கெல்லாமா #கொடுக்கச்சொல்லணும்...? #நான் #கொடுப்பதற்காகத்தான் #சம்பாதிக்கிறேன், #சேர்த்துவைக்க #அல்ல..."
என்றார் நம் வள்ளல்பெருந்தகை

ஆனால் இன்றைக்கு... ............

orodizli
20th August 2020, 10:16 PM
*தலைவர் ஒரு தனிப்பிறவி*

0
ஆரம்பகாலத்தில் எம்.ஜி.ஆர் தனது பெயரை எம்.ஜி.ராம்சந்தர் என்றே எழுதிவந்தார். இந்தப் பெயர் வட இந்தியர் பெயரைப் போல் இருக்கிறது எம்.ஜி.ராமச்சந்திரன் என மாற்றிக் கொள்ளுங்கள் என நடிப்பிசைத் திலகம் கே.ஆர்.ராமசாமி யோசனை கூறியிருக்கிறார் , அதன் பிறகே எம்.ஜி.ஆர் தனது பெயரை எம்.ஜி.ராமச்சந்திரன் என மாற்றிக் கொண்டார்.
0
சக்கரவத்தித் திருமகள் படத்தில் பாட்டுக் கோட்டையார் எழுதிய பொறக்கும் போது பொறந்த குணம் போகப் போக மாறுது என்ற பாடலில் இடம்பெற்ற வரிகளை
எம்.ஜி.ஆர் அடிக்கடி சிலாகித்துக் கொள்வாராம்.
வாழ்வின் கணக்குப் புரியாம ஒண்ணு
காசைத் தேடிப் பூட்டுது - ஆனால்
காதோரம் நரைச்ச முடி
கதை முடிவைக் காட்டுது
0
"வசதியும் புகழும் உள்ள பொழுது வராதவர்களெல்லாம் வருவார்கள் நம்மிடம் வரவு இல்லையென்றால் அவர்கள் வரவும் இல்லை என்றாகி விடும் . ஒருவன் கஷ்டப் படும் பொழுது தேடிப் போய் உதவி செய்கின்ற பெருங்குணம் ராமச்சந்திரனிடம் இருக்கிறது " - என்.எஸ்.கிருஷ்ணன்
0
ஊருக்கு உழைப்பவன் படத்தில் நாகேஷ் நடிப்பதாகத் தான் இருந்தது . ஆனால் அவர் கால்ஷீட் கிடைக்கவில்லை , உடனே எம்.ஜி.ஆர் தேங்காய் சீன்வாசனை நடிக்க வைத்தார் . அந்தப் படத்திற்குப் பிறகு நிறைய படங்களில் தேங்காய் சீனிவாசனுக்கு வாய்ப்பு கிடைத்தது.
பொங்கலன்று எம்.ஜி.ஆர் வீட்டிற்குச் சென்ற முத்துலிங்கத்திற்கு ஊருக்கு உழைப்பவன் படத்திற்காக நீங்கள் எழுதப் போகும் பாடலுக்காக வீனஸ் பிக்ஸர்ஸ் உங்களுக்கு 1000 ரூபாய் கொடுத்திருக்கிறார்கள் என்று கூறி தனது 1000 ரூபாயை எடுத்துக் கொடுத்திருக்கிறார் எம்.ஜி.ஆர்.
0
எம்.ஜி.ஆரை வைத்து ஒரு படம் கூட எடுக்காத பாலாஜிக்குக் கூட வருடம் பிறந்தால் 100 ரூபாயும் பொங்கலுக்கு கதர் வேட்டியும் சட்டையும் அளிப்பாராம் எம்.ஜி.ஆர். அந்நேரம் பாலாஜியிடம் "ஏம்பா பணத்தை இங்க வாங்கி அங்க(சிவாஜியிடம்) கொடுக்குற" என்று தமாஷாகப் பேசுவாராம் எம்.ஜி.ஆர்
0
எம்.ஜி.ஆர். வாலியிடம் நீங்கள் எழுதிக்கொடுத்த வரிகள் எல்லாம் என் வாழ்வில் பலித்து விட்டது. ஆனால் இந்த ஒரு வரிமட்டும் பலிக்கவில்லை என்று வருத்தமாகச் சொல்வாராம்.
எனக்கொரு மகன் பிறப்பான் அவன் என்னைப் போலவே இருப்பான்
0
தயாரிப்பாளர் ஆர்.எம்.வீரப்பன் ஒரு படக் கதையை எம்.ஜி.ஆருக்காக எழுதினார்.ஆனால் எம்.ஜி.ஆர் அரசியலுக்கு திரும்பி விட்டமையால் இந்தப் படத்தில் நடிக்கவில்லை.சிறிது காலம் கழித்து இநதக் கதை படமாகும் பொழுது ரஜினிக்கு அதில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.அந்தப் படம் தான் ராணுவ வீரன்.
0
சிவாஜி நடித்த பைலட் பிரேம்நாத் படக்காட்சி ஒன்றை இலங்கை கண்டி நகரில் உள்ள ஒரு தேயிலைத் தோட்டத்தில் படமெடுத்திருக்கிறார்கள். பைலட் பிரேம்நாத் படத்தின் வசனகர்த்தா ஆரூர்தாஸ் கண்டியிலிருந்து ஒரு பிடி மண்ணை எடுத்துக்கொண்டு சென்னை திரும்பியதும் எம்.ஜி.ஆருக்குக் கொடுத்திருக்கிறார்.
தான் பிறந்த மண்ணைக் கையில் வாங்கிய எம்.ஜி.ஆர் கண்ணில் ஒற்றிக் கொண்டு வாயிலும் சிறிது அள்ளிப் போட்டுக்கொண்டாராம்

உலகம் சுற்றும் வாலிபன் படத்திற்கு குன்னக்குடி வைத்தியநாதனைத் தான் முதலில் இசையமைப்பளராக புக் செய்தாராம் எம்.ஜி.ஆர். உடனே எம்.ஜி.ஆரின் நண்பர்கள் " பாரின் போய் படம் எடுக்கப் போறேங்குற , பக்திப் படத்துக்கு இசையமைக்குறவறப் போயி ... " என்று கிலியூட்டியிருக்கிறார்கள் . அதன்பிறகு தான் எம்.எஸ்.வியைப் பிடித்திருக்கிறார் எம்.ஜி.ஆர். இந்தப்படத்துப் பாடல்கள் சிறப்பாக வரவேண்டுமென பல மெட்டுக்கள் போட வைத்து எம்.எஸ்.வியை ரொம்ப வறுத்தெடுத்திருக்கிறார் எம்.ஜி.யார். 9 பாடல்கள் ..அனைத்தும் ஹிட். கட்டுக் கட்டாக பணத்தை அள்ளி எம்.எஸ்.விக்கு வாரியிறைத்திருக்கிறார் உலகம் சுற்றும் வாலிபன் படத்தில் இசையமைக்கும் வாய்ப்பை இழந்த குன்னக்குடிக்கு பின்னாளில் நவரத்னம் என்றொரு படத்தில் இசையமைக்கும் வாய்ப்பை வழங்கினார் எம்.ஜி.ஆர்.
0
கே.வி.மகாதேவன் அடிமைப் பெண் படத்திற்காக ஒரு பாடலுக்கு 52 விதமான மெட்டுகள் போட்டும் எம்.ஜி.ஆருக்கு பிடிக்கவில்லையாம் , இறுதியாக அமைந்த 53 வது மெட்டு எம்.ஜி.ஆருக்கு பிடித்துப் போய்விட்டதாம். அது ஆலங்குடி-சோமு எழுதிய தாயில்லாமல் நானில்லை என்ற பாடலாம்
0
நீரும் நெருப்பும் பட சண்டைக் காட்சியின் சூட்டிங்கை நேரில் கண்டு ரசித்து விட்டு , பின்னர் எம்.ஜி,ஆர் பயன்படுத்திய வாளை தொட்டுப் பார்த்த இந்தி நடிகர் தர்மேந்திராவிற்கு ஆச்சர்யம் ! எம்.ஜி.ஆர் பயன்படுத்தியது உண்மையான வாள் !
0
சின்னப்பா தேவரின் படங்களில் நடிக்கும் பொழுது அசோகன் சூட்டிங்கிற்கு ஒரு மணி நேரம் முன்பே வந்துவிடுவாராம். எம்.ஜி.ஆர் தாமதாமாக வந்தால் , எம்.ஜி.ஆரைத் திட்டாமல் அசோகனைத் திட்டுவது போல் ஜாடை மாடையாக எம்.ஜி.ஆரைத் திட்டுவாராம் தேவர். அந்தத் திட்டு தனக்கு இல்லை எம்.ஜி.ஆருக்குத் தான் என அறிந்தும் எம்.ஜி.ஆருக்காக பொறுத்துக் கொள்வாராம் அசோகன். எம்.ஜி.ஆருடன் மட்டும் 88 படங்களில் சேர்ந்து நடித்தவர் அசோகன்.
0
சூலமங்கலம் சகோதரிகள் (ஜெயலட்சுமி & ராஜ லட்சுமி), தரிசனம் , டைகர் தாத்தாச்சாரி , கற்பூரம் , தேரோட்டம் , பிள்ளையார் ,மகிழம்பூ போன்ற படங்களுக்கு இசையமைத்திருக்கிறார்கள். சூலமங்கலம் சகோதரிகளின் திறமையைக்கண்ட எம்.ஜி.ஆர் அவர்கள் இசையில் ஒரு படம் நடிக்க வேண்டுமென ஆசைப்பட்டிருக்கிறார். அந்தப் படத்திற்கு உங்களுக்காக நான் என்ற பெயரும் வைக்கப்பட்டு மூன்று பாடல்களும் பதிவாகி விட்டது. அதன் பிறகு எம்.ஜி.ஆர் அரசியலில் குதித்து விட்டதால் அந்தப் படத்தில் அவரால் நடிக்கமுடியவில்லை
0
மிருதங்க சக்கரவர்த்தி படத்தைக் கண்ட எம்.ஜி.ஆர், சிவாஜி நடிப்பில் பிரமித்துப் போய் இருக்கையிலேயே சில நேரம் உறைந்துவிட்டு பக்கத்தில் அமர்ந்திருந்த இயக்குனர் கே.சங்கரிடம் " நடிகன்னு சொன்னா சிவாஜி ஒருத்தர்தான்யா" என உணர்ச்சி மேலிடக் கூறினாராம்.
0
சின்னப்பா தேவர் தயாரித்த ஒரு படத்திற்கு அதிசய ஆடு என்று பெயர் வைத்தார்கள் , இந்தப் பெயர் ஏனோ தேவருக்குப் பிடிக்க வில்லை. அந்நேரம் எம்.ஜி.ஆர் நடித்த மாட்டுக்கார வேலன் சுவரொட்டி ஒன்றைப் பார்த்தும் அதிசய ஆடு என்ற தலைப்பை நீக்கிவிட்டு ஆட்டுக்கார அலமேலு என்று வைத்தார். தொடர் தோல்வியை சந்தித்து வந்த தேவர் அவர்களுக்கு மீண்டும் ஒரு பெரிய வெற்றியை தேடி தந்த படம் "ஆட்டுக்கார அலமேலு " .
0
மாட்டுக்கார வேலன் படத்தில் வி.கே ராமசாமி எம்.ஜி.ஆருக்கு மாமானாராக நடித்திருப்பார், ஒரு காட்சியில் எம்.ஜி.ஆர் வி.கே ராமசாமியின் காலில் விழுவதைப் போல் நடிக்க வேண்டும் , எம்.ஜி.ஆர் என் காலில் விழுவதா ? ஊகூம் .. மாட்டேன்.. என்று அடம் பிடித்திருக்கிறார் வி.கே ராமசாமி .
எம்.ஜி.ஆரோ " கதைப்படி எனக்கு மாமனார் தானே சும்மா நடியுங்கள் " எனக் கூறி சம்மதிக்க வைத்திருக்கிறார். எனினும் எம்.ஜி.ஆர் , வி.கே ராமசாமியின் காலில் விழும் காட்சியின் சூட்டிங் நடந்த பொழுது வி.கே ராமசாமி சற்று தயக்கத்துடன் சாய்ந்தபடியே தான் நின்றாராம் !
0
புதிய பூமி படத்தில் பூவை செங்குட்டுவன் எழுதிய நான் உங்கள் வீட்டுப் பிள்ளை இது ஊரறிந்த உண்மை பாடலைக் கேட்டுவிட்டு எம்.ஜி.ஆர் , பூவை செங்குட்டுவனை மிகவும் பாராட்டினார்.
0
மீனவ நண்பன் படக்காட்சிகள் முடிந்து விட்ட தருவாயில் முத்துலிங்கத்திற்கு இந்தப் படத்தில் பாடல் எழுத வாய்ப்பு கொடுக்கவில்லையே என்று எம்.ஜி.ஆர் வருத்தப்பட்டிருக்கிறார்.உடனே இயக்குநர் ஸ்ரீதரை அழைத்து முத்துலிங்கத்திற்கு இந்தப் படத்தில் ஒரு பாடல் கொடுங்கள் எனக் கூறியிருக்கிறார்.அதற்கு ஸ்ரீதரோ " எந்த சூழலில் அவருடைய பாடலைச் சேர்க்கமுடியும் ? " எனக் கேட்டிருக்கிறார். : உங்களுக்குத் தெரியாதா ஒரு கனவுப் பாட்டா சேர்த்துக்கோங்க " என்று எம்.ஜி.ஆர் கூறியிருக்கிறார். அந்தப் பாடல் தான் தங்கத்தில் முகமெடுத்து சந்தனத்தில் உடலெடுத்து பாடல்..........

orodizli
20th August 2020, 10:18 PM
பேரறிஞர் அண்ணா அவர்கள் புரட்சித்தலைவரின் திரைப்படங்களில் தலைமை யேற்று நடத்திய விழாக்கள்*
பட்டியல்....

1965 ஆம் ஆண்டு புரட்சி நடிகர் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் இரு வேடங்களில் பவனி வந்த மகத்தான வெள்ளிவிழா சித்திரம்*
சென்னை மாநகரில் முதன் முறையாக மூன்று திரையரங்கில் 25 வாரங்கள் ஓடி வெற்றி கண்ட எங்க விட்டுப்பிள்ளை திரைப்படத்தின் 25 வது வார வெற்றி விழா சென்னையில் நடைபெற்றது.

எங்க வீட்டுப் பிள்ளை திரைப்படத்தின் வெற்றி விழா நிகழ்ச்சி எம்.ஜி.யார் பிச்சர்ஸ் சார்பாக சென்னையில்*
கேஸினோ, பிராட்வே, மேகலா திரையரங்குகளில் சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பேரறிஞர் அண்ணா அவர்கள் கலந்து கொண்டு விழாவிற்கு தலைமை தாங்கி.... திரைப் படத்தில் பங்குகொண்ட கலைஞர்களுக்கு கேடயங்கள் பரிசாக வழங்கி எங்க விட்டுப்
பிள்ளை திரைப் படத்தின் கதாநாயகரான மக்கள் திலகத்திற்கு புகழாரம் சூட்டி மகிழ்ந்தார்.

1967 ல் பேரறிஞர் அண்ணா அவர்கள் முதல்வரான பிறகு முதன் முறையாக நடந்த நூறாவது வெற்றி விழா. மக்கள் திலகத்தின் ஒப்பற்ற இயற்கை நடிப்பின் மூலம் வெளியான பெற்றால் தான் பிள்ளையா திரைக்காவியத்தின் நூறாவது நாள் நிகழ்ச்சி ஆகும்.* சென்னை மயிலாப்பூரில் உள்ள ஏவி.எம் ராஜேஸ்வரி திருமண மண்டபத்தில் நடைபெற்ற பெற்றால் தான் பிள்ளையா திரைப்படத்தின் 100 வது நாள் விழாவுக்கு* தலைமை ஏற்று திரைப்பட கலைஞர்களுக்கு அறிஞர் அண்ணா அவர்கள் கேடயங்களை வழங்கினார்கள்.

1967 ஆம் ஆண்டு மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற காவல்காரன் திரைப்படத்தின் 100வது நாள் வெற்றி விழா சென்னையில் குளோப் திரையரங்கில் சிறப்பாக செந்தில் பிக்சர்ஸ் சார்பாக நடைபெற்றது.* இவ்விழாவிற்கு பேரறிஞர் அண்ணா அவர்கள் தலைமையேற்று திரைப்படத்தில் பங்கு கொண்ட மக்கள் திலகத்திற்கும் மற்ற பிற கலைஞர்களுக்கும் கேடயங்களை வழங்கினார்.
பேரறிஞர் அண்ணா அவர்கள் தலைமை ஏற்ற திரைப்பட விழாக்கள்.*

1958 ல் நாடோடி மன்னன்*
100 வது வெற்றி விழா.*

1965 ல் எங்க விட்டுப்பிள்ளை திரைப்படத்தின் வெள்ளிவிழா !*

1967ம் ஆண்டு நடைபெற்ற பெற்றால் தான் பிள்ளையா*
100 வது நாள் திரைப்பட விழா.*

1967 ல் காவல்காரன் திரைப்படத்தின் நூறாவது வெற்றி விழா!*

ஆகிய திரைப்பட விழாவில் பேரறிஞர் அண்ணா அவர்கள் கலந்து கொண்டார்கள்.........

orodizli
20th August 2020, 10:19 PM
மதுரை மாநகரில் மக்கள் திலகத்தின் மகத்தான சாதனைகள் சில....

நகரில் 2 திரையரங்கில் திரையிடப்பட்டு வெற்றிக்கொடி நாட்டிய காவியம் தாய்க்குப்பின் தாரம் சந்திரா திரையரங்கில் 98 நாட்களும், மீனாட்சி அரங்கில்*
66 நாட்களும் ஓடிய முதல் காவியம் தாய்க்குப்பின் தாரம் ஆகும்.

நகரில் மக்கள் திலகத்தின் முதல் வெள்ளி விழா திரைப்படமாக மதுரைவீரன் திகழ்ந்தது. இக்காவியம் மதுரை சென்ட்ரல் திரையரங்கில் 180 நாட்கள் ஓடியது. திரையரங்கிற்கு...... மதுரைவீரன்* வெள்ளி விழா நிகழ்ச்சிக்கு மக்கள் திலகம் வருகை புரிந்தார்.*

நகரில் சிந்தாமணி திரையரங்கில் புரட்சித் தலைவர் அவர்கள் கதாநாயகனாக பவனி வந்த வெற்றி திரைப்படமான ராஜகுமாரி 112 நாட்கள் ஓடியது.

மதுரை மாநகரில் ஆசியாவின் மிகப்பெரிய அரங்குகளில் ஒன்றான தங்கம் திரையரங்கில் நாடோடி மன்னன் திரைக்காவியம் 19 வாரங்கள் ஓடி 3 லட்ச ரூபாய்க்கு மேல் வசூலை பெற்று மதுரை வீரன் திரைப்படத்திற்கு அடுத்தபடியாக மதுரையில் வெற்றிவாகை சூடிய காவியம் ஆகும்-

மதுரை மாநகரில் 1947 ஆம் ஆண்டு முதல் 1960 ஆம் ஆண்டு வரை வெளியான மக்கள் திலகத்தின் திரைப்படங்கள் பல.......
நூறு நாட்களை கடந்து வெற்றி சாதனை புரிந்துள்ளது..........

orodizli
20th August 2020, 10:19 PM
ராஜகுமாரி*
மந்திரிகுமாரி*
மர்மயோகி*
சர்வாதிகாரி*
மலைக்கள்ளன்*
குலேபகாவலி*
அலிபாபாவும் 40 திருடர்களும் மதுரைவீரன்*
தாய்க்குப்பின் தாரம்*
சக்கரவர்த்தி திருமகள்*
நாடோடி மன்னன்*
பாக்தாத் திருடன்*

ஆகிய திரைப்படங்கள்*
100 நாட்களை கடந்து வெற்றி நடைபோட்டு..... அதிகப்படியான காவியங்கள்* குறிப்பிட்ட ஆண்டுகளில் ஓடியது மக்கள் திலகத்திற்கு மட்டுமே!

மதுரை மாநகரில் தொடர்ந்து வெளியான மக்கள் திலகத்தின் திரைப் படங்கள் 100 நாட்களை கடந்து சாதனை புரிந்தது போல் வேறு எந்த நடிகருக்கும் சாதனை கிடையாது.*

தொடர்ந்து வெளியான மலைக்கள்ளன்*
குலேபகாவலி*
அலிபாபாவும் 40 திருடர்களும் மதுரைவீரன்*
தாய்க்குப்பின் தாரம்*
சக்கரவர்த்தி திருமகள்.

மக்கள்ததிலகத்தின்*
6 திரைப் படங்கள் 100 நாட்களை கடந்து ஓடி சாதனை ஆகும்.
மதுரை மாநகரில் வசூல் சக்கரவர்த்தி புரட்சி நடிகர்*
எம் ஜி ஆர் ஒருவருக்கு மட்டுமே உகந்த சாதனையாகும்.

1961 ஆம் ஆண்டு வெளியான மக்கள் திலகத்தின் 5 திரைப்படங்களில்*
திருடாதே,*
தாய் சொல்லை தட்டாதே திரைக்காவியங்கள் 100 நாட்களை கடந்தும்.... நல்லவன் வாழ்வான் அரசிளங்குமரி திரைப்படங்கள்*
84 நாட்கள் ஓடியது.*
சபாஷ் மாப்பிள்ளை*
திரைப்படம் 60 நாட்கள் ஓடி சாதனை பெற்றது..............

orodizli
20th August 2020, 10:20 PM
1962 ல் மதுரை மாநகரில் ஒரே திரையரங்கில் 100 நாட்களை கடந்து ஓடிய மகத்தான காவியம் தாயை காத்த தனயன் மட்டுமே ஆகும்.

மதுரை சிந்தாமணி திரையரங்கில் குடும்பத் தலைவன்*
திரைப்படம் 86 நாட்கள் ஓடியது.

1963 ஆம் ஆண்டு மதுரை மாநகரில் நூறு நாட்கள் ஓடிய மக்கள் திலகத்தின் காவியமே சாதனையாகும்.*
நியூ சினிமா திரையரங்கில் நீதிக்கு பின் பாசம்*
திரைப்படம் 100 நாட்கள் ஓடி சாதனை புரிந்தது.

1964 ஆம் ஆண்டு மதுரை மாநகரில் மக்கள் திலகத்தின் வெற்றி காவியமான பணக்கார குடும்பம் திரைப்படம் 126 நாட்கள் ஓடி முரசு கொட்டி முதலிடம் கண்டது.

1965 ஆம் ஆண்டு வெளியான நடிகப் பேரரசு எம்ஜிஆர் அவர்கள் பவனி வந்த மாபெரும் காவியம்*
எங்க வீட்டுப்பிள்ளை திரைப்படம் மதுரை வீரன் திரைப்படத்திற்கு பின்* சென்ட்ரல் சினிமா திரையரங்கில் வெள்ளி விழாவை கொண்டாடி 2 வது திரைப்படமாக சிறப்பு செய்தது.

சென்ட்ரல் சினிமா அரங்கில்*
எங்க வீட்டு பிள்ளை திரைப்படம்*
25 வாரம் ஓடி பின் தொடர்ந்து ஆயிரத்தில் ஒருவன் காவியம் திரையிடப்பட்டு 85 நாட்கள் திரையரங்கில் ஓடி மகத்தான வசூலை படைத்தது..........

orodizli
20th August 2020, 10:21 PM
1966 ஆம் ஆண்டு மதுரை சிந்தாமணி திரையரங்கில்*
புரட்சி நடிகரின் வண்ணக் காவியமான அன்பே வா திரைப்படம் 21 வாரங்கள்,*
147 நாட்கள் ஒடி வெற்றி முரசு கொட்டி அதிக வசூலை உருவாக்கித் தந்தது.

1967 ஆம் ஆண்டு பொன்மனச்செம்மல் எம் ஜி ஆரின் மறுபிறவி திரைக்காவியமான காவல்காரன் திரைப்படம்* சிந்தாமணி திரையரங்கில்*
126 நாட்கள் ஓடி மூன்று லட்சத்தை கடந்து...... அதிக வசூலை தந்து மிகப்பெரிய வெற்றியை பதித்தது.

1968 ஆம் ஆண்டு மக்கள் திலகத்திற்கு புகழ் குவித்த*
மதுரை மாநகரில்**
ஒளிவிளக்கு திரைப்படம் முதன் முறையாக 100 காட்சிகள் அரங்கு நிறைந்து சாதனை.
மதுரை மீனாட்சி அரங்கில்*
147 நாட்கள் ஓடி புதிய சாதனையை படைத்த நூறாவது வெற்றிக் காவியம் ஒளிவிளக்கு ஆகும்.

குடியிருந்த கோயில் திரைக்காவியம் நியூ சினிமா திரையரங்கில் 133 நாட்கள் ஓடி மகத்தான வசூலை தந்து வெற்றி நடை போட்டது.

மதுரை சிந்தாமணி திரையரங்கில் ரகசியபோலிஸ்115 காவியம்*
92 நாட்கள் ஓடி இரண்டு லட்சத்தி*
50 ஆயிரத்திற்கு மேல் வசூலை குவித்தது. தொடர்ந்து கருப்பு வெள்ளை திரைப்படமான கண்ணன் என் காதலன் திரைப்படமும் சிந்தாமணி திரையரங்கில் 93 நாட்கள் ஓடி வெற்றிக்காண வசூலை தந்தது..........

orodizli
20th August 2020, 10:22 PM
1969 ஆம் ஆண்டு புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் இரண்டு வண்ண காவியங்கள் படைத்த வரலாற்று சிறப்பு மிகுந்த வெற்றியாகும்.*

எம் ஜி ஆர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்த அடிமைப்பெண் திரைக்காவியம் சிந்தாமணி திரையரங்கில் 25 வாரங்கள் ஓடி 100 காட்சிகள் அரங்கு நிறைந்து அதிகமான வசூலை 4 லட்சத்திற்கு மேல் கொடுத்த முதல் காவியமாக* திகழ்ந்தது.

1969ஆம் ஆண்டு புரட்சித்தலைவரின் நம்நாடு திரைக்காவியம் நூறு காட்சி
களுக்கு மேல் மீனாட்சி அரங்கில் அரங்கு நிறைந்து 133 நாட்கள்
*ஓடி மகத்தான வசூலை தந்தது.

1970 ஆம் ஆண்டு வெளியான மக்கள் திலகத்தின் மகத்தான வெற்றி படைப்பு மாட்டுக்கார வேலன் திரைப்படம் ஆகும். இக்காவியம் சிந்தாமணி திரையரங்கில் 25 வாரங்கள் ஓடி அதிகபட்சமான வசூலை ஈட்டி தந்தது.*

அரங்கில் 1969 ல் அடிமைப்பெண் 1970 ல் மாட்டுக்கார வேலன் தொடர்ந்து இரண்டு காவியங்கள் வெள்ளிவிழாவை கடந்து சாதனை ஆகும்.

1954 ல் இருந்து 1957 வரை மக்கள் திலகத்தின் காவியங்கள் எப்படி ஆரம்பத்தில் சாதனை புரிந்ததோ....அதே போல தொடர்ந்து வெளியான பல காவியங்கள் மதுரை*
மாநகரில் 100 நாட்களை கடந்து வெள்ளிவிழாவை கடந்து சாதனையை அரங்கேற்றியது.

அடிமைப்பெண், நம்நாடு மாட்டுக்காரவேலன், என் அண்ணன் ஆகிய நான்கு திரைப்படங்களும் தொடர்ந்து மதுரை மாநகரில் ஓடிய சாதனையில் முதலிடம் பெறுகிறது மகத்தான வசூலையும் ஓடிய நாட்களையும் வெற்றி கொள்கிறது..........

orodizli
20th August 2020, 10:23 PM
1970 ல் மாட்டுக்கார வேலன் சிந்தாமணி அரங்கில் வெள்ளிவிழா....**

என் அண்ணன் சென்ட்ரல் திரையரங்கில் வெற்றி விழா.....*

சிந்தாமணி திரையரங்கில் எங்கள்தங்கம் நூறாவது நாள்* சாதனை......

இப்படி தனிப்பெரும் நாயகனின் வெற்றியை பதித்த ஆண்டு*
1970 ஆம் ஆண்டு ஆகும்.

1971ம் ஆண்டில் மக்கள் திலகத்தின் மகத்தான காவியங்களான குமரிக்கோட்டம் திரைப்படம் சிந்தாமணி திரையரங்கில் 100 நாட்களை கடந்து வெற்றி கண்டது.*

அதன்பின் மதுரை நியூ சினிமா திரையரங்கில் புரட்சித் தலைவரின் வெற்றி திரை காவியமான ரிக்க்ஷாக்காரன்*
163 நாட்கள் ஓடி வெள்ளி விழா நாட்களை நெருங்கியது.*
4 லட்சத்திற்கு மேல் வசூலை* கொடுத்த முதல் காவியமாக ரிக்க்ஷாக்காரன் திகழ்ந்தது..

அதே ஆண்டில் புரட்சி நடிகரின் இரு வேட நடிப்பில் வெளியான நீரும் நெருப்பும் திரைக்காவியம் சென்ட்ரல் சினிமா திரையரங்கில் 12 வாரங்கள் ஓடி அதிகபட்சமான வசூலை திரையரங்கில் தந்தது.

1972 ஆம் ஆண்டு மதுரை மாநகரில் புரட்சித்தலைவரின் காவியங்கள் படைத்த வெற்றி மிகு சாதனைகள்*..........

orodizli
20th August 2020, 10:24 PM
நகரில் இரண்டு திரையரங்கில் திரையிடப்பட்டு 100 நாட்களை கடந்த காவியம் நல்ல நேரம் ஆகும் அலங்கார் ..... மூவிலேண்ட்* திரையரங்குகளில் மொத்தம் 142 நாட்கள் ஓடி நாலு லட்ச ரூபாய்க்கு மேல் வசூலை அள்ளிக் கொடுத்தது.*
அதன்பின் இதயவீணை திரைப்படம் தேவி திரையரங்கில் 110 நாட்கள் ஓடி மூன்று லட்ச ரூபாய்க்கு மேல் வசூலை தந்தது.

சங்கே முழங்கு திரைப்படம் மீனாட்சி திரையரங்கிலும்
ராமன் தேடிய சீதை திரைப்படம் சிந்தாமணி திரையரங்கில்*
12 வாரங்களும், அன்னமிட்டகை திரைப்படம் 9 வாரங்கள் ஓடி வெற்றியை தந்தது*

நான் ஏன் பிறந்தேன் திரைக்காவியம் தங்கம் திரையரங்கில் 10 வாரங்களைக் கடந்து இரண்டு லட்ச ரூபாய்க்கு மேல் வசூலை அள்ளி தந்த காவியமாக திகழ்கின்றது.

மேலும் மதுரை மாநகரில் மக்கள் திலகத்தின் சாதனைகள் 1973-ஆம் ஆண்டில் இருந்து 1978 ஆம் ஆண்டு வரை மீண்டும் தொடரும் என்பதை தெரிவித்துக் கொள்கின்றோம்...

orodizli
20th August 2020, 10:30 PM
புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்., அவர்களின் புனிதமான ஆட்சியை அமைக்க வேண்டும்.... அவரது திருப்பெயரை மாநிலம் முழுவதும் சொல்ல வேண்டும்.....*

புரட்சித் தலைவர் பாரத ரத்னா எம்.ஜி.ஆர் அவர்கள் மறைந்த பின் தலைவரின் பெயரில் பல திட்டங்கள் உருவாகவேண்டும்* என்றெல்லாம் நாம் ஆரம்ப காலத்தில் நினைத்தோம்.* ஆனால் நினைத்தது ஒன்று நடந்தது ஒன்று.

1972 ஆம் ஆண்டு இதய தெய்வம் எம்ஜிஆர் அவர்கள் தொடங்கிய அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் எதற்காக தொடங்கப்பட்டது.*

புரட்சித் தலைவர்* நம்மிடம் இருந்த* (1987ம் ஆண்டு) வரை அந்த கழகம் எப்படியெல்லாம் புரட்சித் தலைவரால் வளர்க்கப்பட்டது. ஆட்சியில் மக்களுக்காக பல திட்டங்களை செயல் வடிவம் தந்தார் என்பதை நாம்* தலைவர்* வாழ்ந்த காலத்தில் பார்த்தோம். அந்த மாபெரும் தலைவரின்* புகழ் பாடி மகிழ்ந்தோம்.பொற்கால ஆட்சியில் சிறப்புடன் வாழ்ந்தோம்.
*
புரட்சித் தலைவர் மறைந்த பிறகு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் சிலரின் கையில் போனது. இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு ஆட்சியை இழந்தார்கள்.*
மீண்டும் கழகம் ஒன்றிணைந்தது
1991 ல் புரட்சித்தலைவரின் ஆட்சி என்று சொல்லி அனைத்து புரட்சித்தலைவரின் அன்பு உள்ளங்களும் வாக்களித்தார்கள். அதன் பிறகு என்ன நடந்தது என்பதை.....
1991 ,2001 ,2011 ,2016,
ஆகிய ஆண்டுகளில் பார்த்ததோம்.*
ஆனால் இன்று ஒரு அரசு விளம்பரத்தில் கூட. அண்ணாவும் புரட்சித்தலைவரின் திருவுருவ படங்களை கண்பதில்லை.*
தலைவரின்* ஆட்சி என்று ஆட்சியாளர்கள் சொல்லுவதும் கிடையாது.*
எங்கும் வேறு புராணம் பாடுகிறார்கள்.*
ஜெ....ஆட்சி என்றே சொல்லிக் கொண்டிருக்கின்றார்கள்.

திராவிட முன்னேற்றக் கழகம் கருணாநிதியை எதிர்ப்பதற்காக அவர் வரக்கூடாது என்பதற்காக அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை கடந்த காலதேர்தலில் வாக்களித்தோம். ஆதரித்தோம்.*

ஆனால் புரட்சித்தலைவரின் புகழ் கடந்த காலத்தில் மறைக்கப்பட்டு விட்டது. தமிழகத்தில் அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் ஆட்சிக்கு 4 முறை வந்தும் புரட்சித் தலைவரின் பெயரை சொல்லாது அவர் பெயரை இருட்டடிப்பு செய்த நிகழ்ச்சிகள் நாம் கண் கூடாக பார்த்ததோம்.

புரட்சித்தலைவரின் ஆட்சியை புனிதமான ஆட்சியை இனிமேல் யார் கொண்டு வருவார் என்பது தான் நமக்கு கவலையாக இருக்கிறது.

கட்சி மேடையிலும், அரசியல் கூட்டங்களிலும்,* தமிழக அரசு சார்பாக நடைபெறும் விழாக்களிலும் புரட்சித்தலைவரின் திருவுருவப்படத்தை மேடையில் வைப்பதே கிடையாது.*
அதற்கு பதிலாக*
ஜெ.... போட்டோவை தான் வைத்துக் கொண்டு.....*
ஜெ.... ஆட்சி என்று சொல்லி
கொண்டு.....
ஜெ..... என்ற பெயரிலேயே பல திட்டங்களை தீட்டி வருகிறார்கள்.*

நமது புரட்சித்தலைவரின் பக்தர்கள் எதற்காக அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு வாக்களிக்கிறார்கள்.....

திமுக வை எதிர்ப்பதற்காக சிலர் வாக்களிக்கிறார்கள்.*

சிலர் புரட்சித்தலைவர் ஆரம்பித்த கட்சி இருக்க வேண்டும் என்று வாக்களிக்கிறார்கள்.*

சிலர்* கட்சியின் மூலம் ஏதாவது பலன் கிடைக்குமா என்று வாக்களிக்கிறார்கள்.*

இன்னும் சிலர் கட்சி எப்படி இருந்தால் என்ன அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்ற கட்சியை இருக்கிறது அது மட்டும் போதும் என்று நினைக்கிறார்கள்.

லட்சக்கணக்கான, கோடிக்கணக்கான எம்.ஜி.ஆர் தொண்டர்கள்.... பக்தர்கள்* இருக்கின்ற இந்த தமிழகத்திலேயே நம்மை வைத்து பகடைக்காய் ஆடிய வருடங்கள் பல.......*

மேலும் நம்மைப் போன்ற உண்மையான புரட்சித்தலைவர் மேல் பற்றுக் கொண்ட. நாம் ..... தலைவரை* தெய்வமாக நினைக்கின்ற.....
கோடிக்கணக்கான புரட்சித்தலைவரின் பக்தர்கள்**...
ஒன்று கூடி தலைவரின் ......* நல்ல முடிவை எடுத்து புரட்சித் தலைவருக்கு எதிர்காலத்தில் வரும் தலைமுறைகளில் அவரது பெயரும் புகழும் காப்பாற்றப்பட வேண்டும்.*

இன்றைய அரசிடம் அனைத்து எம்.ஜி.ஆர் பக்தர்கள் சார்பாக தலைவரின் புகழை பாட*
அறிக்கை ஒன்றை தயார் செய்து* கொடுத்தால் தான் நல்லது என்று நினைக்கின்றேன்.*
இன்றைய அரசு செய்கிறார்களோ இல்லையோ அது நமக்கு தெரியாது..... ஆனால் புரட்சித் தலைவரின் பெயரை நம்மைப் போன்றவர்கள் எதிர்காலத்தில் புகழ் பாட வேண்டும்....... வரும் தலைமுறைக்கு கொண்டு*
செல்ல...... எம்.ஜி.ஆர். பக்தர்கள் வலுவாக ஒன்றிணைத்து ஒரே குடையின் கீழ் இருந்தால் தான்* எதையும் சாதித்து காண்பிக்க முடியும்... தலைவரின் புனித புகழை பாடமுடியும்.*

புரட்சித் தலைவரை உண்மையாக நேசிப்பவர்கள் மட்டுமே..... புரட்சித்தலைவரின் புகழைப் பாட முடியும்....

புரட்சித்தலைவர் புகழையும் அவரது பெருமைகளையும் அவரது சாதனைகளையும் அவரது மனிதநேயத்தையும் பரப்ப உண்மையான புரட்சித் தலைவரின் பக்தர்கள் தமிழகமெங்கும் தென்னக மெங்கும் உலகமெங்கும் ஒன்று கூடினால் தான் இனி வருங்காலத்தில் புரட்சித்தலைவரின் புனித பெயர் தமிழகத்திலும் தமிழக மக்களின் உள்ளத்திலும் வாழும் என்பதை இந்த நேரம் திட்டவட்டமாக சொல்லிக் கொள்ள கடமைபட்டுள்ளேன். சமுதாயத்தில் எம்.ஜி.ஆர். பக்தருக்கும்*
சம உரிமை கிடைக்க பாடுபட...
ஒத்துழைப்பு நிலைக்க...
ஒன்றிணைந்தால்* நன்று என நினைக்கும்...........

orodizli
20th August 2020, 10:38 PM
கலைவாணர் வார்த்தைக்கு மறுவார்த்தை சொல்லமாட்டார் மக்கள் திலகம் "எம்.ஜி.ஆர்" அவர்கள்.
சிவாஜிகணேசன்
அவர்கள் இரட்டை வேடத்தில் நடிக்கும் உத்தமபுத்திரன்.. என்ற அரைப்பக்க விளம்பரம் பிரசுரமான அதே நாளில்,
"எம்.ஜி.ஆர். இரட்டை வேடத்தில் நடிக்கும் உத்தமபுத்திரன்" என்ற அரைப்பக்க விளம்பரம் வேறு பக்கத்தில் பிரசுரமாகியது! இந்தப் படத்தை "எம்.ஜி.ஆர். பிக்சர்ஸ்" தயாரிக்கப் போவதாகவும் அந்த விளம்பரம் கூறியது. அதாவது எம்.ஜி.ஆரின் சொந்தப்படம்!
இதைப் பார்த்த ரசிகர்கள் வியப்பும், திகைப்பும் அடைந்தனர். திரை உலகில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. "சிவாஜி, எம்.ஜி.ஆர். இடையே பெரும் மோதல் உருவாகி விட்டது" என்று எல்லோரும் நினைத்தனர். ஏற்கனவே இருதரப்பு ரசிகர்களும் மோதிக்கொண்டிருந்த நேரம் அது.
இந்த விவகாரத்தில் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் தலையிட்டார். எம்.ஜி.ஆருக்கு போன் செய்து, "நீங்கள் ஏற்கனவே நாடோடி மன்னன் படத்தை தயாரித்து வருகிறீர்கள். அதில் இரட்டை வேடத்தில் நடித்துக்கொண்டிருக்கிறீர்கள். சிவாஜி கணேசன் வளர்ந்து கொண்டிருக்கும் பிள்ளை. உத்தமபுத்திரனை சிவாஜிக்கு விட்டுக்கொடுங்கள்" என்று கூறினார்.
கலைவாணரிடம் அளவு கடந்த மதிப்பும், மரியாதையும் உடையவர் எம்.ஜி.ஆர். கலைவாணர் வார்த்தைக்கு மறுவார்த்தை சொல்லமாட்டார். எனவே, போட்டியில் இருந்து அவர் விலகிக் கொண்டதாக, அதிகாரபூர்வமாக அறிவித்தார்.
[நன்றி :மாலைமலர்]
Thank you Anna .........
Nallathambi Nsk

orodizli
20th August 2020, 10:42 PM
#எம்ஜிஆர்.பெயர் தமிழில் இல்லையா ?

"சென்னை எம்.ஜி.ஆர். சென்ட்ரல் ரயில் நிலைய முகப்பில் தமிழ் எழுத்துக்களைக் காணோம். இந்தி எழுத்துக்கள் மட்டுமே உள்ளன" என்று சமூக வலைதளங்களில் பரவிக்கொண்டிருந்தன. அது தவறான தகவல் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

"#புரட்சி_தலைவர்_டாக்டர்
#எம்_ஜி_ராமச்சந்திரன்_மத்திய_ரயில் #நிலையம்' பெயர் பலகையில் ஏதும் மாற்றம் செய்யப்படவில்லை.
நிலையத்தின் முகப்பில் முதலில்
தமிழிலும், அடுத்து இந்தியிலும்,
கடைசியில் ஆங்கிலத்திலும் பெயர்
பலகைகள் முன்பே வைக்கப்பட்டுள்ளன.

தமிழ் பெயர் பலகை நீக்கப்படவில்லை.
நிலைய கட்டிடத்தின் பாதி படத்தை
மட்டும் எடுத்து சமூக வலைதளங்களில்
பதிவிட்டு தவறான செய்தி பரப்புவது
கண்டனத்திற்குரியது" என்று தெரிவித்துள்ளது ரயில் நிலைய செய்திக்குறிப்பு. நாமும் உண்மை
என்னவென்பதை நேரில் தெரிந்து
கொண்டோம்.

"ஆத்திரக்காரனுக்கு புத்திமட்டு - இனி
அவசரக்காரனுக்கு முகநூல் மட்டும்"
என்று புதுமொழி படைத்திடலாமோ ?

செய்தியை முந்தித்தருவது தவறில்லை.
ஆனால் உண்மை பிந்திப் போய்விடக்கூடாது.

Ithayakkani S Vijayan with Plato Rajagopalan & Sakthi Flowers Decorations.........

orodizli
21st August 2020, 07:44 AM
மக்கள் திலகம் என்ற அந்த மகா நடிகன் கண்ட " ஹீரோயிசம்" என்பது காலவரையறுகளுக்கு உட்பட்டது.

பள்ளியில் சென்று ஆத்திச்சூடி பயிலும் பாலகனாக இருக்கும்போதே வறுமையை நீக்க, வயிற்றுப்பசியைப்போக்க நாடக கொட்டாய்களில் திரை இழுக்கும் வேலைக்கு வந்து விட்டார்...

அந்தக்காலம் மிகக்கொடியது... சின்னக்குழந்தை அல்லவா??? சமயத்தில் திரையை ஏற்றவும், இறக்கவும் மறந்து தூங்கிப்போய் விடும். அதற்கு அந்தக்கால "பாய்ஸ்" நாடகக்கம்பெனியில் இந்த பாய்சுகளுக்கு தண்டனை கிடைக்கும்...

ஐந்து வயதில் வயிற்றுப்பசியை போக்க அரும்பாடு படுவது என்பது அந்தக்காலத்தில் future என்னும் எதிர்காலத்தை ஏற்படுத்தி பின்னர் நல்வாழ்வு பெறவே...

1917 ல் பிறந்தவர் 1937 ல் திரையில் முதலில் தோன்றி, 1947 ல் நாயகனாக மாறி, 1957 ல் கதாநாயகனாக கோலோச்சி, 1967 ல் தென்னிந்திய திரையின் ஏகபோக அரசனாக, அதிக ஊதியம் பெறும் பெரும் நடிகனாக வலம் வந்து அந்தப்பதவியை மீண்டும் பத்தாண்டு காலம் தன்னில் தக்க வைத்து , 1977 ல் தமிழகத்தையே ஆளும் மன்னாதி மன்னனாய் 1987 ல் தன் இறுதி மூச்சு வரை அந்த முதல்வர் பதவியை அலங்கரித்தார்...

அன்றெல்லாம் இன்றைய ஒப்பனை மற்றும் ஒளிப்பதிவு சாகசங்கள் இல்லை, இருந்திருந்தால் இவரின் பெரும்பாலான படங்கள் தொழில்நுட்பத்தின் உச்சத்தையே தொட்டிருக்கும் உலக ஆச்சர்யங்களாக வீற்றிருக்கும்...

விருப்பு, வெறுப்புகளுக்கெல்லாம் அப்பாற்பட்டு, எம்ஜியார் என்ற அந்த பிம்பம் எல்லோரும் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டிய ஒரு எட்டாவது அதிசயம்...

ஆனந்த் ...........

orodizli
21st August 2020, 07:45 AM
தமிழ்நாடு வரலாறு தெரியாதவர்கள் பல செய்திகளை சொல்கிறார்கள். திராவிடம், திராவிட கொள்கை, திராவிடத்தை வளர்த்தவர் யார்? என்பதை எடுத்துக் கூறுவது என் கடமை. 1952-ம் ஆண்டு mgr தி.மு.க.வில் தன்னை இணைத்துக் கொண்டார். அவர் இணைந்த பிறகுதான், தி.மு.க. வளர்ச்சி பாதையை நோக்கி பயணித்தது.

1952-ம் ஆண்டு mgr தி.மு.க.வில் இணையும் வரை தேர்தலில் போட்டியிடவில்லை. 1957-ம் ஆண்டு தேர்தலில் போட்டியிட்டது. அந்த தேர்தலின் போது mgr குறிப்பிட்ட தலைவர்களுக்காக பிரசாரம் செய்தார். அப்போது 15 இடங்களில் தி.மு.க. வெற்றிபெற்றது.

தி.மு.க. என்ற கொடி பாமர மக்களிடம் சென்றடைவதற்கு காரணம், ‘நாடோடி மன்னன்’ திரைப்படம் தான். Mgr படத்தயாரிப்பு நிறுவனத்தை உருவாக்கிய போது, அந்த நிறுவனத்தின் ‘லோகோ’வில் தி.மு.க.வின் இருவர்ண கொடியை இடம்பெற செய்தார். அந்த லோகோவை வெளியிட தணிக்கைத்துறை தடைசெய்தது. அந்த தடையை mgr தகர்த்து எறிந்தார்.

60 ஆண்டுகளுக்கு முன்பு தி.மு.க.வின் இருவர்ண கொடியை அடையாளப்படுத்தி பட்டித்தொட்டி எங்கும் mgr கொடி என்று அறிமுகப்படுத்தப்பட்டதுஅந்த இருவர்ணத்திலான 1¼ அடி துண்டை அப்போது கழுத்தில் போடுவதில் பெருமை அடைந்தோம். Mgr ரின் திரைப்பட பாடலில் இருவர்ண கொடி, உதயசூரியன் பற்றி எழுதப்பட்டது.

1962-ம் ஆண்டு தேர்தலில் 50 இடங்களில் தி.மு.க. வெற்றி பெற்றது. 1967-ம் ஆண்டில் ஆட்சி கட்டிலில் ஏறியது. 1967-ல் ஆட்சி பிடித்ததும் பேரறிஞர் அண்ணாவுக்கு மாலை அணிவிக்க எல்லோரும் சென்றனர்.அப்போது பேரறிஞர் அண்ணா அந்த மாலையை வாங்க மறுத்துவிட்டார். இந்த வெற்றிக்கு காரணமானவர் ராயப்பேட்டை மருத்துவமனையில் இருக்கிறார். அவருக்கு சென்று மாலை அணிவியுங்கள் என்று பேரறிஞர் அண்ணா சொன்னார்.

பேரறிஞர் அண்ணாவே 1967-ம் ஆண்டு தேர்தல் வெற்றிக்கு காரணமானவர் mgr தான் என்று சொன்னதற்கு அடிப்படை காரணம், அவர் துப்பாக்கியால் சுடப்பட்ட கட்டுடல் போடப்பட்ட படம்தான் நாட்டு மக்கள் மத்தியில் அனுதாபத்தை பெற்று வெற்றிக்கு வித்திட்டது. பெரும்பான்மையை பெறுவதற்கு மூலக்காரணமாக mgr இருந்தார்.

பேரறிஞர் அண்ணா தான் mgr ரை சரியான முறையில் அடையாளம் கண்டவர். Mgr ரை இதயக்கனி என்று அழைத்தார். ஒருமுறை தேர்தலுக்காக mgr நிதி கொடுக்க வந்த போது, உன்னுடைய நிதி வேண்டாம், உன் முகத்தை மட்டும் காட்டு, 30 லட்சம் வாக்குகள் கிடைக்கும் என்று பேரறிஞர் அண்ணா சொன்னார்.

பேரறிஞர் அண்ணா பொதுக்கூட்டங்களுக்கு சென்றுவரும் நேரங்களில், அவருடைய காரில் இருக்கும் கொடியை அங்குள்ள பாமர மக்கள் பார்த்து, அண்ணாவிடம், mgr கட்சியா? என்று கேட்கும் அளவுக்கு mgr மக்கள் மத்தியில் பிரபலமாக இருந்தார். அதை பேரறிஞர் அண்ணா பெருமையாகவே கருதினார்.

படித்தவர்கள் மத்தியில் என் எழுத்தும், பேச்சும், கருத்தும் சென்றடைகிறது என்றால், படிக்காத பாமர மக்களிடம் என்னுடைய கருத்தை, சிந்தனையை கொண்டு சென்றவர் என்னுடைய தம்பி mgr என்று அண்ணா சொல்வார். தி.மு.க. வளர்ச்சிக்கு அடித்தளமாக விளங்குகிறவர் mgr என்றும் அண்ணா சொல்வார். அவரால் திராவிட இயக்கம் வளர்ந்தது என்று பேரறிஞர் அண்ணா மிகத்தெளிவாக பதிவு செய்தார்.

1971-ல் கருணாநிதி தலைமையில் ஆட்சி நடந்தபோது, அப்போது தேர்தல் வருகிறது. அவர்களுக்கு ஆதரவாக பட்டித்தொட்டி எங்கும் பிரசாரம் செய்தார். இந்த ஆட்சிக்கு உத்தரவாதம் தருகிறேன், தவறு நடந்திருந்தால் அதை திருத்தியமைக்க போராடுவேன் என்று சொன்னார். என்னை நம்பி வாக்களியுங்கள் என்றும் கேட்டார். அதை தமிழக மக்கள் ஏற்றார்கள் என்பதற்கு வெளிப்பாடு, 183 இடங்களில் தி.மு.க. வெற்றிபெற்றது. அதன்பின்னர், தி.மு.க.வை விட்டு mgr வெளியேறி, 1972-ம் ஆண்டு அ.தி.மு.க.வை தொடங்கினார்.

அதன்பிறகு, 1972-ம் ஆண்டு முதல் 1987 வரை mgr ரை யாராலும் வெற்றிபெற முடியவில்லை. எத்தனை சூழ்ச்சிகள், சதிகள் செய்தாலும் mgr உயிரோடு இருக்கும் வரை தமிழக மக்கள் தலைவர் mgr தான் என்று நாட்டு மக்கள் நிரூபித்தனர். திராவிட இயக்கத்தை வளர்த்தவர் mgr தான்.

பேரறிஞர் அண்ணாவை நாட்டின் முதலமைச்சராக உட்காருவதற்கு காரணமாக இருந்தார். அதன்பிறகு கருணாநிதி ஜெயலலிதா ஆட்சியில் அமருவதற்கு காரணம் mgr தான். இப்போது தமிழ்நாடு முதலமைச்சராக
எடப்பாடி.k.பழனிச்சாமி இருப்பதற்கும் mgr தான் காரணம். Mgr இல்லை என்றால் திராவிடம் என்ற பேச்சு தமிழகத்தில் இருந்திருக்காது.........

orodizli
21st August 2020, 07:46 AM
இளம் வயதில் காந்தீய கொள்கைகள் மீது புரட்சிதலைவருக்கு அப்படி ஒரு ஈடுபாடு இருந்துள்ளது...

கதர் சட்டை கழுத்தில் உத்திராட்சம் அணிந்து எப்போதும் வெளியில் சென்ற காலங்கள் உண்டு...

ஒரு முறை வால்டாக்ஸ் சாலைக்கு அருகில் மாலையில் நாடகம் நடிக்க போகணும்.....
மதிய வேளைக்கு முன் இப்போ பக்கத்தில் போய் விட்டு வருகிறேன் என்று பெரியவரிடம் சொல்லி விட்டு போன தலைவரை ரொம்ப நேரம் காணவில்லை.

பதறி போன பெரியவர் அவரை தேடி கொண்டு போக.....ஒருவர் மட்டும் யானைகவுனி காவல் நிலையத்தில் அவரை போல பார்த்தேன் என்று சொல்ல அங்கே ஓடுகிறார் பெரியவர்.

பார்த்தால் அங்கே ஒரு பெரிய கூட்டத்தின் நடுவில் நம்ம நாயகன்.

காவல் அதிகாரியிடம் பெரியவர் விசாரிக்க இன்று மதியம் காங்கிரஸ் கட்சி சார்பில் கள்ளு கடை மறியல்...அதில் கலந்து கொண்டவர்களை இங்கே வைத்து இருக்கிறோம்..

மாலையில் விட்டு விடுவோம்...என்று சொல்ல ஐயா மாலை எங்களுக்கு நாடகம் இருக்கு உடனே தம்பியை மட்டும் விடுங்க என்று சொல்ல.

சரி நல்ல நோக்கத்தில் கலந்து கொண்டு இருக்கிறார்...சரி அவர் தொழில் பாதிக்க கூடாது என்று வெளியில் விட..வெளியில் வந்த பெரியவர் என்னப்பா இப்படி அண்ணா வரும் வழியில் இந்த அறப்போர் எனக்கு மிகவும் பிடிக்க நானும் உள்ளே போய் கோஷம் போட்டேன்...என்று வெகுளியாக சொன்னார் நம் இதய தெய்வம்...

நல்ல கொள்கைகள் அவர் ரத்தத்தில் ஊரியவை என்பதற்கு இந்த சம்பவம் ஒரு சான்று.

காரைகுடிக்கு அண்ணல் மகாத்மா அவர்கள் வரும் போது அங்கே அப்போது இருந்த பெரும் பணம் படைத்தவர்கள் தங்கம் வெள்ளி பணம் என்று அண்ணல் அவர்களிடம் அள்ளி கொடுக்க.

அப்போது வறுமை தலைவர் இடம் அண்ணன் அவர்களுடன் எட்டனா வாங்கி ஆளுக்கு நாலு அனா என மஹாத்மா அவர்கள் கையில் கொடுத்து அவரை ஒரே முறை சந்தித்து உள்ளார் நம் காவிய நாயகன்...

அடுத்து வந்த நாட்களில் அவரை நேரில் பார்த்ததை பற்றியே பலரிடம் சொல்லி மகிழ்ந்து இருக்கிறார் நம் பொன்மனம்..

அவர் படங்களில் காந்தியின் படங்களை காட்டி மகிழ்வார் தலைவர்.

வாழ்க அவர் புகழ்.
நன்றி...தொடரும்.
உங்களில் ஒருவன் .........

orodizli
21st August 2020, 11:52 AM
ஏவி.எம். நிறுவனத்துக்காக "அன்பே வா' படத்தை இயக்கியது ஒரு மறக்க முடியாத அனுபவமாக இருந்தது. எம்.ஜி.ஆருக்கென்று ஒரு பார்முலா உண்டு. அவர் ஏழையாக இருப்பார். ஏழைகளுக்கு நிறைய உதவிகள் செய்வார். நிறைய சண்டைக் காட்சிகளும் படத்தில் இருக்கும். ஆனால் இப்படிப்பட்ட எம்.ஜி.ஆர். பார்முலாவுக்குள் அடங்காத படம் "அன்பே வா'. அப்படத்தின் கதையை எம்.ஜி.ஆரிடம் கூறிய போது, இந்தப் படத்தில் நடிக்கும் எல்லோருமே பொம்மைகள், நீங்கள்தான் அவர்களை ஆட்டுவிக்க வேண்டும் என்று சிரித்துக் கொண்டே கூறினார். "அன்பே வா' வெற்றிவிழாவின் போது ரசிகர்களின் முன்னிலையிலேயே இந்த விஷயத்தைச் சொன்னார்.

"அன்பே வா' படப்பிடிப்பு நடக்கும் போது சென்னையில் கிங்காங், தாராசிங் போன்ற புகழ்பெற்ற மல்யுத்த வீரர்கள் பங்கு பெற்ற போட்டிகள் நடந்து வந்தன. அதில் பங்கு பெற வந்திருந்த ஆந்திரத்தைச் சேர்ந்த மல்யுத்த வீரர் ஒருவரை எம்.ஜி.ஆருடன் மோத வைத்து படமாக்கிய சண்டைக் காட்சி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. அதை விட முக்கியமான விஷயம் "அன்பே வா' படம் முடிந்த பிறகு ஒரு முழுப் பாடலும் நடனக் காட்சியும் வரும். அதையும் முழுமையாக பார்த்து ரசித்தார்கள். "அன்பே வா' படத்துக்கு முன்பும், பின்பும் இப்படி படம் முடிவடைந்து ஒரு பாடல் மற்றும் நடன காட்சி எந்த படத்திலும் இடம் பெற்றதேயில்லை !

- இயக்குனர் ஏ.சி.திருலோகச்சந்தர்.........

orodizli
21st August 2020, 11:53 AM
நாம் அடுத்து "நேற்று இன்று நாளை" திரைப்படத்தின் வெற்றியை பற்றி பார்க்கலாம். சிவாஜி ரசிகர்கள் தோல்விப்படம் என்று சொன்ன "நவரத்தினம்" மற்றும் "ஊருக்கு உழைப்பவன்" வசூல் விபரங்களை பார்த்தோம். அவைகளும் வெற்றி படங்கள்தான் என்பதை வசூல் விபரங்கள் மூலம் நிரூபித்தோம். அவர்கள் "நேற்று இன்று நாளை"யை தோல்விப் படம் என்றும் அசோகன் ஐயோ பாவம் என்றும் சொல்கிறார்கள். அது சிவாஜியின் வெள்ளிவிழா படங்களை எப்படி புரட்டி எடுத்தது என்பதை பார்க்கலாம்.

முதலில் "நேற்று இன்று நாளை" படத்தை தயாரிக்க அசோகன் எவ்வளவு தன் சொந்தப்பணத்தை போட்டார் என்று தெரியுமா?. தம்பிடி காசு கூட போடவில்லை. அத்தனையும் பைனான்சியர் கொடுத்த பணம். "ஆயிரத்தில் ஒருவன்" படமெடுக்க பந்துலுவுக்கு கொடுத்தது எல்லாமே பைனான்சியர் காசுதான். எம்ஜிஆர் நடிக்கிறேன் என்று கடிதம் கொடுத்தால் போதும். பணம்தர பைனான்சியர்கள் தயாராக இருக்கிறார்கள்.

சிலர் பைனான்சியர் கொடுக்கும் பணத்தில் தங்கள் சொந்த செலவுக்கும் எடுத்துக் கொள்வார்கள். அப்புறம் படம் அவர்கள் எதிர்பார்த்தபடி முடியாமல் கோஞ்சம் லேட் ஆனாலும் வட்டி அதிகம் வந்து விடுமே என்று தலைவருக்கு நெருக்கடி கொடுக்க தொடங்கி விடுவார்கள். தலைவருக்கு உடனே தெரிந்து விடும் எங்கே தவறு நடந்திருக்கிறது என்று. அதனால் கோபத்துடன் சென்று விடுவார்.

இவர்கள் ஏதோ இவர்கள் முதலில் வட்டி போகிறதே என்று கவலை கொண்டு பிதற்றி திரிவார்கள். லாபத்தில் ஒரு பங்கை வட்டிக்கு செலவழிக்க போகிறார்கள் அவ்வளவுதான். இதுதான் "நேற்று இன்று நாளை" படத்துக்கும் நடந்தது.
படத்துக்கு பைனான்ஸ் கிடைப்பது எம்ஜிஆர் நடிப்பதனால்தான். ஆனால் பைனான்சியர் ஏதோ தனக்கு கடன் கொடுத்ததை போலவும் தான் அந்த கடனிலிருந்து வெளியே வர எம்ஜிஆர் சீக்கிரம் நடித்து கொடுக்க வேண்டும் என்று பிறரிடம் புலம்பித் திரிவதுதான்.

சில தயாரிப்பாளர்கள் தலைவருக்கே ஆலோசனை வழங்குவது, தான் ஒரு தயாரிப்பாளர் போல நடந்து கொள்வது போன்ற ஆணவம்தான் படம் லேட் ஆக காரணம். அப்படி ஆணவம் பிடித்து அழிந்து போனவர்தான் சந்திரபாபு. உனக்கு திறமையிருந்தால் நீ வேறு நடிகர்களை போட்டு அடுத்த படத்தை எடுத்து உன் திறமையை காட்டலாமே? ஒரே படத்தில் பல சொத்துக்களை இழந்து சொந்த ஊருக்காவது போகலாம்.

இனாமாக கொடுத்த மாட்டை பல்லை பிடித்து பார்த்த கதையாக ஆக்கி விடுகிறார்கள். சரி, "நேற்று இன்று நாளை" படத்தின் வசூலை பார்க்கலாம். சென்னையில் பிளாசா மகாராணி யில் 105 நாட்களும் கிருஷ்ணவேணியில் 72 நாட்களும் சயானியில் 66 நாட்களும் சேர்த்து
மொத்தம் 348 நாட்கள் ஓடி வசூலாக ரூ 10,65,105.45 ம் பெற்றது. சாதாரண திரையரங்குகளில் வெளியாகி வசூலில் சாதித்து காட்டியது.
மதுரை சிந்தாமணி யில் வெளியாகி
119 நாட்கள் ஓடி வசூல் ரூ 405964.78
ஐ எட்டியது.

நெல்லை பார்வதியில்
வெளியாகி 119 நாட்கள் ஓடி ரூ
238097.25 வசூல் பிரளயம் செய்தது.
வெள்ளி விழா ஓட்டிய "பட்டிக்காடா பட்டணமா" நெல்லையில் அதே பார்வதி தியேட்டரில் பெற்ற வசூல்
எவ்வளவு தெரியுமா?. 100 நாட்களில்
ரூ 1,59,982.65 வசூலாக பெற்று "நேற்று இன்று நாளை" யிடம் படுதோல்வி கண்டது.

நாகர்கோவிலில் "நேற்று இன்று நாளை" 50 நாள் வசூலுடன் மோதி படுதோல்வி கண்ட கணேசனின் வெள்ளி விழா படங்கள் ஒன்றா இரண்டா எடுத்துச் சொல்ல.
நாகர்கோவிலில் நே.இ.நா.
50 நாள் வசூல் ரூ 1,16,709.75.
"தங்கப்பதக்கம்" "எங்கள் தங்க ராஜா" "ராஜராஜசோழன்" "வசந்த மாளிகை" ஆகிய கணேசனின் படங்கள் கதறுவதை காணலாம்.

தமிழகத்தில் 44 அரங்கில் வெளியாகி 38 அரங்குகளில் 50 நாட்களை கடந்த அற்புதம். முதலில் திரையிட்ட 44 அரங்குகளில் 75 லட்ச ரூபாய் வசூலாக பெற்று, முதல் ரவுண்டில் 85 லட்சம் பெற்று மிகப் பெரிய சாதனை செய்தது.. எல்லா மாநிலங்களிலும் ஓடியதை சேர்த்தால் கோடியை தாண்டி ஜெயக்கொடியை ஓங்கி உயர்த்தி காட்டிய படம். சிவாஜிக்கு எம்ஜிஆர் சினிமாவில் இருக்கும் வரை அவர் நடித்த வேறு எந்த படமும் இந்த சாதனையை நினைத்து கூட பார்க்க
முடியவில்லை.

அசோகனுக்கு புது வாழ்வு தந்ததோடு அவருடைய குடும்பம் இன்று வரை வசதியாக வாழ வழிவகை செய்து கொடுத்ததை அவரது மகன் வின்சென்ட் அசோகன் பேட்டி கொடுத்திருக்கிறாரே?. அதை சிவாஜி ரசிகர்கள் பார்த்து விட்டு மெளனமாக இருப்பது ஏன்?. நீங்கள் தயாரிப்பாளர்களை தெருவில் விட்டதை போல் எங்களையும் நினைக்க வேண்டாம். தலைவரை நம்பி கெட்டவர்கள் இன்று வரை யாரும் கிடையாது.

நெல்லை பார்வதியில் வாழ்நாள் சாதனை.
-----------------------------------'----------'-----------
திருநெல்வேலி பார்வதி தியேட்டர் தொடங்கி தியேட்டர் பணி நிறைவடையும் (மூடும்)காலம் வரை
அந்த தியேட்டரில் ரூ 2 லட்சம் வசூல் பெற்ற ஒரே படம் தலைவரின் "நேற்று இன்று நாளை" தான். சிவாஜி படங்கள் அதிகமாக திரையிட்ட தியேட்டர் பார்வதிதான். அந்த குகைக்குள்ளே நுழைந்த சிங்கத்தை கண்டவுடன் ஆட்டுக்குட்டிகள் அலறிப்புடைத்து
ஓடி விட்டன.

நெல்லையை பொறுத்தவரை மிகப்பெரிய தியேட்டர் என்றால் அது சென்ட்ரலும்
பூர்ணகலாவும் தான். அங்கு சிவாஜி படங்கள் சொற்பமாகத்தான் வெளியாகும். அங்கு சிவாஜி படம் திரையிட்டால் அலிபாபாவின் குகைக்குள் ஆட்டுக்குட்டி நுழைந்தது
போலிருக்கும்.

அங்கெல்லாம் தலைவர் படங்கள்தான் சாதனை செய்யும். சிவாஜி படங்கள் வேதனையை தான் தரும். மற்ற இடங்களில் வெள்ளி விழா ஓட்டிய "வசந்த மாளிகை" இங்கு சென்ட்ரலில் 69 நாட்கள் ஓட்டுவதற்குள் நெல்லையப்பர் கோவில் தேரின் வடக்கயிறு கொண்டு வர வேண்டியதாயிற்று. ஊர் ஊருக்கு ஒரு சின்ன தியேட்டர் வைத்துக் கொண்டு அதில் 100 நாட்கள் ஓட்டுவதுதான் அவர்கள் வாடிக்கை.

இந்த ஒரே படம் அசோகனின் இழந்த சோகத்தை மீட்டுத் தந்ததோடு கடனையும் அடைத்து கையில் ஒரு பெருந்தொகையையும் கொடுத்தது.
எஞ்சிய காலங்களில் நிம்மதியாக கழிக்க "நேற்று இன்று நாளை" அசோகனுக்கு பேருதவி செய்தது..........

orodizli
21st August 2020, 11:54 AM
கே.சுந்தரராஜனின் பதிவு.
1.எம்ஜிஆர் அவர்கள்
ஜாதி மதம் இனம்
மொழிகளுக்கெல்லாம்
அப்பாற்பட்ட மனிதர்
2.மனித நேயத்தின்
உச்சக்கட்டம்
3.வள்ளல் தன்மை
4.தாயை வணங்குதல்.
5.உடற்கட்டுக்கோப்பாக
வைப்பதில் கவனம்.
6.எந்த நிலையிலும்
தன் கொள்கையை
விட்டுக் கொடுக்காதிருத்தல்.
7.நல்லது மட்டுமே
குறிக்கோள்.
8.தமிழ்மீதும் தமிழக மக்கள் மீதும் மிகுந்த
அன்பு.
9.பெண்களை தெய்வமாக நினைப்பவர்.
10.எந்த கெட்ட பழக்கத்துக்கும் அடி
பணியாதவர்.
11.கெட்ட வார்த்தைகள்
வாழ்நாளில் பேசியதும்
கிடையாது.
12.குழந்தைகளிடம் அன்பு நேருவைப் போல
13.தொண்டு செய்வதில்
அப்துல்கலாம் போல
14.ஒன்றே குலம்
ஒருவனே தேவன்
என உரைப்பதில்
அண்ணாவைப்போல
15.இலவச கல்வி
இலவச உணவு
தருவதில் காமராஜரைப்போல
16.தமிழ் மொழி
எழுத்துவடிவம்
சிலைகள் அமைத்தல்
வழிபடுதல்
பெண்களின் வாழ்விற்கு அரும்பாடுபட்ட பெரியாரைப் போல
17.சுதந்தரமாக வாழவேண்டும் மக்கள்
எனப் பாடுபட்ட காந்தியைப் போல
18. அரசியலில் வெற்றி
ஒன்றே குறிக்கோள்
என வாழ்ந்த பசும்பொன் முத்துராமலிங்க தேவர்
போல
19.சமூக தொண்டு பரிவதில் அன்னை தெரசா போல
20.நல்வழிப்படுத்த நம்நாடு காக்க
கம்னியூஸ்டு தலைவர்
ஜூவானந்தம் போல
21.தேவைப்பட்டால்
நம் நாட்டைக் காப்பாற்ற
எதிரிகளிடம் அகப்படமால் எமர்ஜென்சி கொண்டு
வந்த இந்திராவைப்போல
மொத்தத்தில்
இன்று நம் எம்ஜி ஆர்
இதய தெய்வமாக.........
காட்சி அளிக்கிறார்.

orodizli
21st August 2020, 06:53 PM
அதற்கொரு நேரம்!
----------------------------------
கவிஞர் உடுமலை நாராயணகவி!
தமிழன்னையின் செல்லப் பிள்ளைகளில் ஒருவர்!
தஞ்சை ராமையா தாஸ்,,உடுமலைப் போன்றவர்கள் தாம் கவியரசருக்கும் முன்னர் திரையுலகின் தமிழ் ஜாம்பவாங்கள்!
மனிதர் மகா வம்பு பிடித்தவர்!
இவரிடம் எவரேனும் வாய் கொடுத்தால் போச்சு-அவரை-
வலிக்காமலேயே வானகம் அனுப்பி விடுவார்!!
தர்க்கம்--குதர்க்கம்-இரண்டுமே நிரம்பிய வர்க்கம்!
மெல்லிசை மன்னரும் வாலியும் ஒரு பாடல் கம்போஸிங்கில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் ஒரு காலைப் பொழுது!
மெல்லிசை மன்னரின் முகம் திடீரென்று-
மின்சாரத்தை சாப்பிட்டது போல் ஆகிறது?
அவசரமாக வாலியிடம் சொல்கிறார்--
வாலி,,உடுமலை வருகிறார்,நீங்க அவர்க்கிட்ட வாய்க் கொடுத்து மாட்டிக்காதீங்க. மனுஷர் மகா வம்பு பிடிச்சவர்--
இதற்குள் அவர்கள் அருகே வந்துவிட்ட உடுமலையார் வாலியிடம் கேட்கிறார்--
என்ன வாலி,,சமீபத்துல நீங்க எழுதின பாட்டு ஒண்ணுல இலக்கணப் பிழை இருக்கே?
வாலியின் புருவங்கள் கேள்விக் குறியாக--
உடுமலையாரே தொடர்கிறார்--
எம்.ஜி.ஆருக்கு ஒரு பாட்டு எழுதியிருந்தீங்களே அதைக் கேக்கறேன்--
நான் ஆணையிட்டால் அது நடந்துவிட்டால்னு எழுதியிருக்கீங்களே? எம்.ஜி.ஆர் எப்படி அதை ஒத்துண்டார்?
நான் ஆணையிட்டால் அது நடக்கும்ன்னு தானே ஒரு ஹீரோ அழுத்தமாகச் சொல்லணும்?
நடந்துவிட்டால் என்று சந்தேகமா அர்த்தம் வரும்படி எழுதினது தப்பில்லையா??
உடுமலையாரின் அஸ்திரத்தால் சலனமடைந்த வாலி வஸ்திரத்தால் முகத்தைத் துடைத்தபடி சொல்கிறார்-ஏதோ எழுதிட்டேன். அதை விடுங்க. உங்கப் பையன் சந்தானகிருஷ்ணன் எப்படி இருக்கார்?
உடுமலையார் உதட்டில் சலிப்பைக் காட்டுகிறார்-
என்னமோ இருக்கான். சரியான வேலைக் கிடைக்கலே. நான் சொல்லற அட்வைஸ்களையும் கேக்காமல் ஊர் சுத்திண்டிருக்கான்-
இந்த பதிலுக்காகவேக் காத்திருந்தாற் போல் வாலி உடுமலையாரை மடக்குகிறார்--
தந்தை சொன்னால் மகன் கேட்டே ஆகணும் அல்லவா? நீங்க சொன்னதை அவர் கேக்கறதில்லேன்னு சொல்றீங்க. அதே மாதிரி தான்--ஒரு தலைவன் ஆணையிட மட்டும் தான் முடியும். அது நடக்கக் கூடியக் காலச் சூழல் அவன் கையில் இல்லையே??
நீங்க சொல்றதும் சரி தான் வாலி!--பலகீனமாக ஒப்புக் கொண்டு வாயடைக்கிறார் உடுமலையார்!
இல்லான் இரப்பதும்-
நல்லான் தவிப்பதும்
வல்லான் விதித்த வேடிக்கைச் சூழல் தானே!
வாலியின் பதிலை ஆமோதிப்பது உடுமலையார் மட்டுமல்ல நாமும் தானே???!!!.........

orodizli
21st August 2020, 06:54 PM
எனக்கு ஏன் எம்ஜியாரின் நடிப்பு பிடிக்கும்

சினிமா என்ற ஒரு கற்பனை உலகில் நான் பலதரப்பட்ட நடிகர்களின் அற்புதமான பல்வேறு நடிப்பு திறன்களை பார்த்து வியந்து இருக்கிறேன் .

என்னுடைய பார்வையில் தமிழ் நடிகர் திரு எம்ஜியார் அவர்களின்

30 வயதில் கதாநாயகன் - ராஜகுமாரி

37 வயதில் மலைக்கள்ளன் படத்தில் சிறப்பான நடிப்பு

41 வயதில் நாடே போற்றிய நாடோடி மன்னன் - இமாலய புகழ்

47 வயதில் எங்க வீட்டு பிள்ளை - ஆயிரத்தில் ஒருவன் சூப்பர் ஹிட்

50 வயதில் மரணத்தை வென்று - குரல் பாதிக்க பட்டு காவல்காரன் - மாபெரும் வெற்றி

50 வயதுக்கு பிறகு

ஒளிவிளக்கு

குடியிருந்த கோயில்

ரகசிய போலீஸ் 115

அடிமைப்பெண் - நம்நாடு - மாட்டுக்காரவேலன் - ரிக்ஷாக்காரன் - நல்லநேரம் - உலகம் சுற்றும் வாலிபன் - உரிமைக்குரல் - இதயக்கனி

நீதிக்குதலை வணங்கு - மீனவநண்பன் - மதுரையை மீட்டசுந்தரபாண்டியன் வந்த படங்கள் ஒரு சரித்திர சாதனை படைத்தது .

இனி நடிப்புக்கு வருகிறேன்

நாடகத்தில் அவருக்கு ஏற்பட்ட அனுபவம் நடிப்பு துறையில் ஒருவகையில் உதவியது .

அவரது நடிப்பில் மிளிரும்

இயற்கையான முக பாவங்கள்

குரலில் சம சீரான வெண் குரல்

பல மாறுபட்ட வித்தியாசமான நடிப்பு .

எல்லாவற்றிகும் மேலாக

ரசிகனை ஆனந்த வெள்ளத்தில் மிதக்க விட்ட

அவரின் சுறுசுறுப்பான சண்டை காட்சிகள்

short & sweet காதல் - வீரம் - - காட்சிகள்

ரசிகனை 3 மணி நேரம் மகிழ்ச்ச்சியில் திளைக்க வைத்து மீண்டும் மீண்டும் அவரின் படத்தை பார்க்க வாய்த்த சாதுரியம் .

இந்த நிலையான புகழ் பெற்ற முதல் நடிகர் எம்ஜியார்
.
Uncomparabale Hero in the World Films History.........

orodizli
21st August 2020, 06:58 PM
பொதுவாக புரட்சித்தலைவர் நடித்த எந்தப் படமும் தோல்வி அடைந்தது கிடையாது ... தன்னை நம்பியவர்களை புரட்சித்தலைவர் ஒருபோதும் கைவிட்டது கிடையாது புகழ்பெற்ற பின்னணிப் பாடகர் டி எம் சௌந்தரராஜன் அவர்கள் திடீரென்று வித்யா கர்வம் தலைக்கேறி நான் பாடுவதால் தான் எம்ஜிஆர் படமே ஓடுகிறது என்றெல்லாம் பொதுமேடைகளில் கூறியிருந்தார் அதனாலேயே அவருக்கு வாய்ப்புகள் பறிபோனது பிற்பாடு தன் தவறை உணர்ந்து புரட்சித் தலைவருடன் சமாதானம் ஆனார் புரட்சித் தலைவரும் பெருந்தன்மையுடன் மன்னித்து அவருக்கு மீண்டும் தன் படத்தில் பாடுவதற்கு வாய்ப்புகள் கொடுத்தருளினார் பொதுவாக எம்ஜிஆர் அவர்கள் மக்கள் திலகம் என்ற சொல்லுக்கு பொருத்தமானவர் அவரை நம்பி படம் எடுத்த யாரும் வீன் போனது கிடையாது அவரை நன்றாக புரிந்து கொண்டு படம் எடுக்கும் பொழுது காட்சிகளின் பின்னணி மற்றும் டைரக்ஷனில் அவர் கொஞ்சம் குறுக்கீடு செய்வார் டைரக்டர் சொல்வதை கூட மீறி இந்த காட்சியை இவ்வாறு நடித்தால் நன்றாக இருக்கும் என்று கூறுவார் அவர் கூறியது நூற்றுக்கு நூறு சரியாக பலிக்கும் அவர் சொன்ன மாதிரி காட்சியை மாற்றி அமைத்தால் அந்த படம் நூறு நாட்கள் கண்டிப்பாக ஓடியே தீரும் புரட்சித்தலைவர் சாதாரண நடிகர் மட்டுமல்ல மிகச் சிறந்த கலைஞானி மிகச் சிறந்த சினிமா டைரக்டர் ஆவார் தலைவரை நன்றாக புரிந்து கொண்டவர் சினிமா டைரக்டர் பா நீலகண்டன் ஆவார் டைரக்ஷன் பண்ணும்போதே எம்ஜிஆரிடம் கருத்து கேட்பார் பெரும்பாலும் புரட்சித் தலைவரின் ஆலோசனைகளின் படியே டைரக்ட் பண்ணுவார்.........

orodizli
21st August 2020, 07:00 PM
கலை எம்ஜிஆரின் பிறப்போடும் வறுமையை விரட்டவும் தேவை ஆனது
ஆனால்
நாட்டு பற்று எம்ஜிஆரின் மனதின் அடிதட்டானது சினிமா வாய்ப்பு கிடைப்பது சிரமம் ஆனபோது இந்திய ராணுவத்தில் சேர துணிந்தார் எம்ஜிஆர் வேறு ஏதாவது தொழில் செய்ய விரும்பவில்ல எம்ஜிஆர்

சினிமாவில் பிரபலமானபோதும் நடிப்பதே தன் உண்மை வாழ்வாக்கினார்
திரையில் தீயோரை அடக்கினார் எம்ஜிஆர்
நிஜத்திலும் தீயோரை அடக்கினார்

திரையில் வள்ளலாக நடித்தார் எம்ஜிஆர்
நிஜத்தில் வள்ளலாக வாழ்ந்தார் எம்ஜிஆர்

திரையில் எதிலும் வெற்றி காணும் நாயகனாக நடித்தார் எம்ஜிஆர்
நிஜத்தில் எங்கும் எதிலும் வெற்றி தலைவர் ஆனார் எம்ஜிஆர்

திரையில் எம்ஜிஆர் படம் காண கூட்டமோ கூட்டம்
நிஜத்தில் எம்ஜிஆரை காண நாள் கணக்காக தவம் கிடந்தது மக்கள் கூட்டம்

திரையில தொழில்் அனைத்தையும் தொழிலாழர்களுக்கே கொடுப்பதாக இதயக்கனி படத்தில் நடித்தார் எம்ஜிஆர்
நிஜத்தில் தன் சொந்த சத்தியா ஸ்டுடியோவை தொழிலாளர்களே முதல்லாளி ஆக்கினார் எம்ஜிஆர்

திரையில் கடைசியில் அனைத்தையும் நல்லதாக முடித்து எல்லோரையும் வாழவைப்பார் எம்ஜிஆர்
நிஜத்தில் தன் உடைமைகளை அனைத்தையும் நாட்டுக்கே எழுதிவைத்து கடவுள் ஆனார் தமிழர்களுக்கு

சினிமா எம்ஜிஆர்
நிஜ எம்ஜிஆர் இரணடையும் ஒன்றாக கொண்டு அன்பு வீரம் கொடை திறமை மனிதநேயத்தோடு வாழ்ந்ததாலே மக்கள் எம்ஜிஆரை மட்டும் இதயக்கனி தலைவராக கொணடனர்

ஒரு சூரியன்
ஒரு சந்திரன்
ஒரு எம்ஜிஆர்

வளர்க...வாழ்க ...எம்.ஜி.ஆர் .,புகழ்.........

orodizli
21st August 2020, 07:02 PM
#மக்கள் திலகத்தின் அர்ப்ப*ணிப்பு..

மக்கள் திலகம் முத*ல்வராக அரியணையில் அமரும் வரை அவர்தான் தமிழ் திரையுலகின் வசூல் சக்கரவர்த்தியாகவும்; அதிக சம்பளம் வாங்கும் நடிகராகவும்; நம்பர் 1 ஹீரோவாகவும் இருந்தார். நாடகத்தில் நடித்து, சினிமாவில் வாய்ப்பு தேடி அலைந்து, சாதாரண நடிகராக அறிமுகமாகி, துணை பாத்திரங்களில் நடித்து, பின்னர் கதாநாயகனாக உயர்ந்து நம்பர் 1 இடத்தை அவர் பிடித்தது ஏதோ குருட்டு அதிர்ஷ்டத்தால் அல்ல. அதற்கு பின்னால் இருந்தது அவருடைய ஈடுபாடு மிகுந்த திட்டமிட்ட கடும் உழைப்பு.

எம்.ஜி.ஆரின் 100-வது படம் ஜெமினியின் ‘ஒளிவிளக்கு’. எஸ்.எஸ்.வாசன் தயாரித்தார். எம்.ஜி.ஆரின் முதல் படமான ‘சதிலீலாவதி' கதையை எழுதியவர் வாசன். ஜெமினி பேனரில் அவர் தயாரித்த படமே எம்.ஜி.ஆரின் 100வது படமாகவும் அமைந்தது சிறப்பு. இந்தியில் நடிகர் தர்மேந்திரா நடித்த ‘பூல் அவுர் பத்தர்’ என்ற படமே தமிழில் ‘ஒளிவிளக்கு’ ஆக மாறியது.

படத்தில் ஒரு காட்சியில் தீ பிடித்து எரியும் வீட்டில் சிக்கிக் கொண்டு தவிக்கும் குழந்தையை எம்.ஜி.ஆர். காப்பாற்றுவார். இதில் அவருக்கு தீக்காயம் ஏற்பட்டு உயிருக்குப் போராடும் நிலை யில், அவரை காப்பாற்ற இறைவனிடம் மன்றாடி சவுகார் ஜானகி பாடும்

‘ஆண்டவனே உன் பாதங் களை நான் கண்ணீரில் நீராட்டினேன்...’

பாடல் 1984-ல் எம்.ஜி.ஆர். உடல் நலம் பாதிக்கப்பட்டு அமெரிக்காவில் சிகிச்சை பெற்றபோது, தமிழகத்தில் பட்டிதொட்டியெங்கும் ஒலித்தது.

‘ஒளிவிளக்கு' படத்தில் இன்னொரு விசேஷம். எம்.ஜி.ஆர். மது குடிப்பது போன்ற காட்சி அமைப்பு. படங்களில் கூட சிகரெட், மதுவை தொடாத எம்.ஜி.ஆர். குடியின் தீமையை உணர்த்துவதற் காக, தானே குடிப்பது போல நடித்த ஒரே படம். குடியின் தீமையை உணர்த்தும் வகையில்

‘தைரிய மாக சொல் நீ மனிதன்தானா? நீ தான் ஒரு மிருகம். இந்த மதுவில் விழும் நேரம்...’

பாடலில் எம்.ஜி.ஆரின் மனசாட்சி அவர் வடிவில் மேலும் 4 பேராக; மொத்தம் 5 எம்.ஜி.ஆர்கள் பல வண்ண உடைகளில் திரையில் தோன்றும் காட்சியில் தியேட்டர் இரண்டுபடும். ஹிந்தி ப*ட*த்தில் த*ர்மேந்திரா குடிப்ப*வ*ராக*வே இருந்த*தால் இந்த* அறிவுரை பாட*ல்காட்சி இல்லை.. மேலும் புதுசா க*ட்டிக்கிட்ட*..பாட*லும் அவை தொட*ர்பான
காட்சிக*ளும் இல்லை..எம்.ஜி.ஆரின் ஆலோச*னைப்ப*டி இவை சேர்க்க*ப்ப*ட்ட*து..

இப்போது போல எல்லாம் அப்போது சினிமாவில் தொழில்நுட்பம் முன்னேறவில்லை. ‘மாஸ்க்' முறையில் ஒவ்வொரு எம்.ஜி.ஆராக இந்தக் காட்சியை எடுத்திருப்பார்கள். காட்சி சிறப்பாக வரவேண்டும் என்பதற்காக, காலையில் இருந்து இரவு முதல் பல நாட்கள் இந்தப் பாடல் காட்சிக்காக எம்.ஜி.ஆர். மெனக்கெட்டார்.

பாடல் காட்சி முழுவதும் படமாக்கப்பட்டது. ஜெமினி ஸ்டுடியோவிலேயே ரஷ் போட்டு பார்க்க வேண்டும். படத்தின் தயாரிப்பு வேலை களை எஸ்.எஸ்.வாசனின் மகனும் ‘ஆனந்த விகடன்’ ஆசிரியராக இருந்தவரும் ஊழியர்களால் மரியாதையாக ‘எம்.டி’ என்று அழைக்கப்பட்டவரு மான எஸ்.பாலசுப்ரமணியன் கவனித்து வந்தார். பின்னர், எம்.ஜி.ஆர். நடித்த ‘சிரித்து வாழ வேண்டும்' படத்தையும் இவர்தான் இயக்கினார்.

பாடல் காட்சிக்காக காலையில் இருந்து இரவு வெகு நேரமாகியும் நடித்துக் கொடுத்த எம்.ஜி.ஆர். களைப்பு காரணமாக, பாடல் காட்சியின் ரஷ் பார்க்காமலேயே நள்ளிரவில் வீட்டுக்குப் புறப்பட்டார். ‘‘ரஷ் பார்த்துவிட்டு எப்படி வந்திருக்கிறது என்று எனக்கு போன் பண்ணி சொல்லுங்கள்’’ என்று சொல்லிவிட்டு வீட்டுக்குக் கிளம்பினார்.

சிறிய அரங்கில் ரஷ் பார்த்தபோது ‘தைரியமாக சொல் நீ... ’

பாடல் காட்சி சிறப்பாக வந்திருந்தது. உடனே, ‘‘எம்.ஜி.ஆருக்கு போன் செய்து நல்லா வந்திருக்குன்னு சொல்லிடுப்பா..’’ என்று உதவியாளரிடம் கூறினார் பாலசுப்ரமணியன். அப்போது, பின்னாலிருந்து அவரது தோள் மீது ஒரு கை விழுந்தது. திரும்பிப் பார்த்தபோது புன்னகையுடன் நின்றிருந்தார் எம்.ஜி.ஆர்.

விஷயம் என்னவென்றால், களைப்பால் வீட்டுக்குக் கிளம்பிய எம்.ஜி.ஆருக்கும் பாடல் காட்சி எப்படி வந்திருக்கிறது என்று பார்க்க ஆசை. அதனால், களைப்பை உதறிவிட்டு ரஷ் திரையிடும் அரங்குக்குள் வந்து, படம் பார்த்துக் கொண்டிருந்தவர்களைத் தொந்தரவு செய்யாமல் அமைதியாக பின்னால் அமர்ந்திருக்கிறார். தொழிலில் அவ்வளவு ஆர்வம். அர்ப்பணிப்புடன் கூடிய உழைப்பு!

மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரித்த தமிழின் முதல் வண்ணப்படம் ‘அலிபாபாவும் 40 திருடர்களும்’. எம்.ஜி.ஆர். பிக்சர்ஸ் சார்பில் முதன்முதலில் பகுதி கலரில் தயாரிக்கப்பட்ட படம் ‘நாடோடி மன்னன்.’ சரவணா ஃபிலிம்ஸ் பட நிறுவனம் தயாரித்த முதல் வண்ணப்படம் ‘படகோட்டி.’ விஜயா கம்பைன்ஸ் தயாரித்த தமிழின் முதல் வண்ணப்படம் ‘எங்க வீட்டுப் பிள்ளை.’ ஏவி.எம் சார்பில் தயாரிக்கப்பட்ட ‘அன்பே வா’ படம்தான் அந்நிறுவனத்தின் முதல் வண்ணப்படம். ஜெமினி நிறுவனத்தின் சார்பில் தயாரிக்கப்பட்ட முதல் தமிழ் வண்ணப்படம் ‘ஒளிவிளக்கு’. சத்யா மூவிஸ் பேனரில் தயாரான முதல் வண்ணப்படம் ‘ரிக் ஷாக்காரன்’. தேவர் ஃபிலிம்ஸ் முதல் வண்ணப்படம் ‘நல்ல நேரம்’. இந்த எல்லா படங்களிலும் கதாநாயகன் வண்ணமிகு நாயகன் மக்கள் திலகம்
எம்.ஜி.ஆர்...........

orodizli
21st August 2020, 07:05 PM
*காண கிடைக்காதவை:*
����������������������
*01 / 11 / 1988* ஆம் ஆண்டு வெளிவந்த *சினிமா எக்ஸ்பிரஸ்* இதழில்....
*ஆர். எம். வீரப்பன்* அவர்களை நடிகர் *விஜயகாந்த்* சந்தித்து கேட்ட கேள்விகளின் தொகுப்புகள் மட்டும் :
1 - எம்ஜிஆர் நாடக மன்றம் தோன்றியது எப்போது ?

2 - முதன் முதலில் *திரு. எம்ஜிஆர்* அவர்களை எப்போது சந்தித்தீர்கள் ?

3 - *திரு. எம்ஜிஆர்* அவர்களை நீங்கள் சந்தித்த போது , *திரு. எம்ஜிஆர்* அவர்கள் *திருமதி. ஜானகி* அம்மையார் அவர்களை திருமணம் புரிந்திருந்தாரா ?

4 - பட உலகில் *திரு. எம்ஜிஆர்* அவர்களின் வெற்றிக்கு முக்கிய காரணம் என்ன ?

5 - *சத்யா மூவிஸ்* நிறுவனத்திற்கும் , *திரு. எம்ஜிஆர்* அவர்களுக்கும் என்ன தொடர்பு ? , அந்த நிறுவனத்தில் அவரது பங்கு என்ன ?

6 - *சத்யா மூவிஸ்* வெள்ளிவிழா கண்ட நிறுவனம்... ஆனால் *திரு. எம்ஜிஆர்* அவர்கள் ,
*தெய்வத்தாய்*
*நான் ஆணையிட்டால்*
*காவல்காரன்*
*கண்ணன் என் காதலன்*
*ரிக்ஷாக்காரன்*
*இதயக்கனி*
என 6 படங்களில் மட்டுமே நடித்துள்ளார்.
நீங்கள் அவருக்கு மிகவும் நெருக்கமானவராக இருந்தும்... ஏன் *சத்யா மூவிஸ்* தயாரிப்பில் *திரு. எம்ஜிஆர்* அவர்கள் அதிகமான படங்களில் நடிக்கவில்லை ?

7 - *திரு. எம்ஜிஆர்* அவர்கள் மிக நன்றாக நடிக்கக் கூடியவர் என்பதற்கு உதாரணமாக , *என் தங்கை* , *நாம்* , *நான் ஏன் பிறந்தேன்* போன்ற படங்களை கூறலாம்.
தொடர்ந்து அப்படிப்பட்ட நடிப்பாற்றலை வெளிப்படுத்தக் கூடிய பாத்திரங்களை ஏன் ஏற்று நடிக்கவில்லை ?

8 - *சத்யா மூவிஸ்* படங்களில்... *கண்ணன் என் காதலன்*, *நான் ஆணையிட்டால்* இரண்டு படங்களும் மற்ற படங்கள் வெற்றி பெற்ற அளவுக்கு வெற்றி பெற வில்லை என்பது உண்மையா ?

9 - அண்ணே !
பொதுவாக *எம்ஜிஆர்* அவர்களது படங்களில் காதல் நெருக்க காட்சிகள் இராது ! , ஆனால் வீரப்பன் அவர்களின் படங்களில் மட்டும் அது இருக்கும் என்று கூறியிருந்தார் ! *சத்யா மூவிஸ்* படங்களில் காதல் நெருக்கக் காட்சிகள் அதிகமாக இடம்பெறக் காரணம் என்ன ?

10 - *திரு. எம்ஜிஆர்* அவர்களின் படங்கள் கொடுத்த பெரிய வெற்றிகளை போல் , *சத்யா மூவிஸ்* அன்மையில் தயாரித்த மற்ற படங்கள் அந்த அளவுக்கு அளிக்கவில்லை என்று நினைக்கிறேன் , அதற்கு காரணம் என்ன ?

11 - *புரட்சித்தலைவர் எம்ஜிஆர்* அவர்களை வைத்து படமெடுத்த நீங்கள் இதுவரை *சிவாஜி* அவர்களை வைத்து படம் எடுக்க வில்லை ! ஆனால் ? *திரு. எம்ஜிஆர்* அவர்கள் மறைந்த பிறகு *சத்யா மூவிஸ் தயாரிப்பில் புதிய வானம்* படத்தில் சிவாஜி நடிக்கிறார்... இதைப் பற்றி சிலர் , *ஆர். எம். வீ.* அவர்கள் சிவாஜியை வைத்து படம் எடுக்கலாமா ? என்று கேட்டால் தங்களது பதில் என்ன ?

*இவ்வாறாக பல கேள்விகளை திரு. ஆர். எம். வீரப்பன் அவர்களிடம் திரு. விஜயகாந்த் அவர்கள் கேட்டார்*
நன்றி :

அன்பன் ,
*எம்ஜிஆரின் காலடி நிழல்*


*உழைக்கும் குரல் தளம்*

Special thanks to ,
*Makkal Thilagam MGR*.........
��

fidowag
21st August 2020, 11:33 PM
பாட்டாலே புத்தி சொன்ன வாத்தியார் எம்.ஜி.ஆர்.-வின் டிவியில் சகாப்தம்*நிகழ்ச்சியில் 01/08/20/அன்று திரு.துரை பாரதி*அளித்த*தகவல்கள்*
-----------------------------------------------------------------------------------------------------------------------
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். எனும் மாபெரும்* சரித்திரத்தில் பல்வேறு பக்கங்களை நாம் பார்த்து வருகிறோம்* அந்த பக்கங்களை புரட்ட புரட்ட அதிசயங்கள் தோன்றிக் கொண்டே இருக்கிறது .* அலிபாபாவும் 40 திருடர்களும் படத்தில் குகையில் கிடைக்கும் புதையல் போல, ஜீபூம்பா விளக்கை தேய்த்தால் நடக்கும் அதிசயங்கள் போல எம்.ஜி.ஆர். என்கிற ரகசிய* புதையல், அற்புத புதையல் மானுட உலகம் எப்படி வாழ வேண்டும் ,எப்படி வாழ்ந்தால் எப்படி ஜெயிக்கலாம் என்பதற்கு நன்னம்பிக்கை விதை எம்.ஜி.ஆர். அவர் அதிசயிக்கத்தக்க மந்திரங்களோ, மாயமோ செய்யவில்லை .* ஆனாலும் பல கோடி மக்களின் உள்ளங்களை வென்றார். அது எப்படி .அவர் தமிழ்நாட்டு அரசியல் களத்தில் ,போட்டியில் வென்றார் .உலகிலேயே ஒரு நடிகர் கட்சியை தொடங்கினார்* என்ற சாதனையை படைத்தார் .குறுகிய காலத்தில் ஆட்சியை பிடித்தார் என்ற வரலாறு படைத்தார் . இப்படி பல்வேறு விஷயங்களில் அவரது சாதனைகளை அடுக்கிக் கொண்டே போகலாம் .அப்படிப்பட்ட சாதனை நாயகன், நம்மை போலவே ஒரு எளிய குடும்பத்தில் பிறந்து , தமிழகத்தில் பெரும்பான்மையான ஜாதி பலமோ, பண பலமோ, பெரிய படிப்பறிவோ ,அதிகார பலமோ இல்லாமல் கோடிக்கணக்கான இதயங்களை ஆட்கொண்டார் என்றால் எப்படி .அப்படியான செய்திகளைத்தான் நாம் பார்த்து வருகிறோம் .அப்படியான வகுப்பறைகளில் பாடங்கள் கற்பது போல அவருடைய வாழ்க்கையின் ஒவ்வொரு பக்கத்திலும் ஒவ்வொரு நாளும் பாடங்களை கண்டு வியக்கிறோம் .அந்த பாடங்கள் வாழ்க்கையில் முன்னேறுவதற்கான படிக்கட்டுகளாக அமைந்துள்ளது என்பதை சகாப்தம் நிகழ்ச்சியில் பார்க்கிறோம் .


*எம்.ஜி.ஆர். அவர்கள் நாராயணன் என்பவருடன் நட்பு வைத்திருந்தார் .* அவரை நட்புக்கு இலக்கணமாக அண்ணா பத்திரிகையில் பணிபுரிய வைத்தார் .அதில் தனக்கு தெரிந்த பத்திரிகையாளர்களை எல்லாம் அழைத்து வந்து வேலைக்கு*அமர்த்தினார் .* அவர்களில் சோலை, கார்த்தி ,அண்ணா நாராயணன் போன்றவர்கள் முக்கியமானவர்கள் .அண்ணா நாராயணன் அவர்கள் எம்.ஜி.ஆரிடம் சில விஷயங்களை சொல்லியிருக்கிறார் .* அதாவது அண்ணா பத்திரிகையில் சேருவதற்கு முன்பாக ஒருமுறை மாலைமுரசு பத்திரிகை அலுவலகத்தில் சினிமா தொடர்பாளராக இருந்த ஜெயபாண்டியன் என்பவருடன் ஊட்டியில் நடைபெறும் நல்ல நேரம் படப்பிடிப்புக்கு வருமாறு அழைத்தார் .அவர்கள் ரயில் மூலம் கோவைக்கு வந்து , அங்கிருந்து காரில் புறப்பட்டு மாலையில் ஊட்டி சென்று சேருகிறார்கள் . எம்.ஜி.ஆர். தேநீர் இடைவேளையில்*இவர்களை சந்தித்து ,பத்திரிகையாளர்களாகிய உங்களுக்கு தெரியுமா பாகிஸ்தானில் ஆட்சி மாற்றம் என்று செய்தி வந்துள்ளது உண்மையா என்று .இவர்கள் மாலை பத்திரிகையில் பணியாற்றுகிறவர்கள் .எம்.ஜி.ஆரை பார்க்க வந்த ஆசையில் மாலை செய்திகள் பற்றிக்கூட கேட்டு தெரிந்து கொள்ளாமல் உள்ளார்கள் .எம்.ஜி.ஆர்.கேட்ட இந்த கேள்வி அவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது . வியந்தும் போனார்கள் . எம்.ஜி.ஆர். தன் தொழில் மீது மிகுந்த அக்கறை கொண்டது போலவே ,உலக நடப்பு, நாட்டின் நடப்புகள் ஆகியவற்றை அன்றாடம் ,அவ்வப்போது அறிந்து கொள்வதிலும் மிகவும் ஆர்வமாக இருந்துள்ளார்* என்பதை அறிந்த அவர்கள் மிகவும் ஆச்சரியப்பட்டார்கள் .ஏனென்றால் அந்த காலத்தில் செல்போன் வசதிகள் இல்லாத நேரம் என்பதுதான் .


ஒருநாள் எம்.ஜி.ஆர். நாத்திகம் பத்திரிகையில் பணிபுரிந்த நாராயணனிடம்*இன்றைக்கு மெயில் பத்திரிகை பாத்தீர்களா என்று கேட்டார் .மெயில் பத்திரிகை மாலை தினசரியாக அண்ணா சாலையில் இருந்து வந்து கொண்டிருந்தது .மெயில் பத்திரிகை வாங்கி முதல் பக்கத்தில் 8 வது பத்தியில் பாருங்கள் . படித்துவிட்டு என்னை தொடர்பு கொள்ளுங்கள் என்றார் . அப்போதுதான் தெரிகிறது .மேற்கு வங்காளத்தின் முதல்வர் சித்தார்த்த சங்கர் ரே ,ஊழல் அமைச்சர்களை தூக்கிலிட வேண்டும் என்று கருத்து வெளியிட்டுள்ளார் .**அப்போது எம்.ஜி.ஆர். தி.மு.க. ஆட்சியில் நடைபெறும் கணக்குகளை* ஊழல்களை தட்டி கேட்டு* போராட்டம் நடத்திக்**கொண்டிருந்த நேரம் .நாராயணனிடம் இந்த செய்தியை உங்கள் பத்திரிகையில் முதல் பக்கத்தில் போடுங்கள்* நான் ஒரு பேட்டி அளிக்கிறேன் ,அதை உள்பக்கத்தில் போடுங்கள் என்றார் .பத்திரிகைகளில் எது தலைப்பு செய்தியாக வர வேண்டும் . எப்படி வரவேண்டும் ,எந்த நேரத்தில், எந்த பக்கத்தில் வரவேண்டும் என்கிற நுட்பங்கள் அறிந்தவர் எம்.ஜி.ஆர்.*


பத்திரிகை துறையில் இப்போது போல அட்வான்ஸான தொழில்நுட்ப வசதிகள் இல்லாத நேரம் ..அந்த நேரத்தில் பிரின்டிங் பிளாக்கை மாற்றி வைத்துவிட்டனர் .எம்.ஜி.ஆர்.வழக்கமாக* எப்போதும் வலதுகையில் கடிகாரம் கட்டுவார் . ஆனால் இதில் இடது கரத்தில் உள்ளது போலுள்ளது .அதை கண்டுபிடித்து பத்திரிகை ஆசியரை தொடர்பு கொண்டு இப்படியெல்லாம் பிரசுரம் செய்யக்கூடாது என்று*கேட்டுக் கொண்டாராம் . இப்படி எந்த விஷயத்திலும் நுட்பத்தை கடைபிடிப்பவராக இருந்துள்ளார் எம்.ஜி.ஆர்.*



ஆரம்ப காலத்தில் வெள்ளை ஜிப்பா, வெள்ளை வேட்டி,வெள்ளை பனியன் ஆகியவைதான் அணிந்து வந்தார் .இரண்டுசெட் வைத்திருந்தார் .அவற்றை தினசரி தானே இரவில் துவைத்து ,காயவைத்து* அதிகாலையில் எழுந்ததும்*இஸ்திரி போட்டு அணிவாராம் . குறைந்த அளவில் துணிகள் இருந்ததால் ஆரம்பத்தில் சற்று நீல நிறமாக இருந்தவை ,தொடர்ந்து துவைத்து அணிவதால் லேசான வெளிர் மஞ்சள் நிறத்தில் ஆகிவிட்டன .* அந்த காலத்தில் சில ரூட்டுகளில் , ரோடுகளில் டிராம் வண்டிகள் செல்லும் . அந்த டிராம் வண்டி புறப்பட்டதும் ,இந்த கால இளைஞர்களை போல அப்படியே தாவி குதித்து ஏறுவாராம் .* பார்ப்பதற்கு, தோற்றத்தில் பெரிய வசதியான, பணக்கார வீட்டு பிள்ளை போல இருப்பாராம் . தினசரி செலவிற்கு தன் தாயார் கொடுத்த இரண்டணாதான் வைத்திருப்பாராம் . அவருடைய தோற்றத்திற்கும், உடைகளுக்கும் சம்பந்தமே இருக்காதாம் .அப்படி ஒரு ஏழ்மையில் இருந்ததை*பலமுறை பேட்டிகளில் சொல்லியிருக்கிறார் .



ஒரு திருமணத்திற்கு அழைப்பு வருகிறது . எம்.ஜி.ஆர். செல்கிறார் . ஆயிரக்கணக்கில் கூட்டம் சேருகிறது .பட்டு வேட்டி, பட்டு ஜிப்பாவுடன் நடிகர் பி.யு.சின்னப்பா வருகிறார் .அவரை காணவும், அவரது பாடல்களை கேட்கவும் கூட்டம் சேருகிறது .* அவர் பாடல்களை பாடப்பாட கைதட்டி ரசிக்கிறார்கள் .எம்.ஜி.ஆரால் வேடிக்கை மட்டும்தான் பார்க்க முடிகிறது .அப்போது யோசனை செய்கிறார் . நமக்கும் இதுபோல கூட்டம் சேருமா .நம்மை அங்கீகரிப்பார்களா*என்று . இருளில் இருந்து வெளிச்சத்திற்கு வரும் காலம் எப்போது என்று ஏங்கிய காலம் .* ஆக.ஒரே நாளில் எம்.ஜி.ஆர். சிகரத்தை அடைந்து கொடி கட்டி பற க்கவில்லை .கோட்டைக்கு வந்துவிடவில்லை. உயரமான இடத்திற்கு செல்லவில்லை . கிட்டத்தட்ட 14 படங்களில் சிறு வேடங்கள், துணை வேடங்கள்* சொன்னால்கூட தெரியாது. அந்த படத்தில் நான் நடித்திருக்கிறேன் என்று*அவ்வளவு சிரமப்பட்ட* காலம் .அன்றைக்கு மிக பிரபலமாக இருந்த நடிகர் டி.ஆர். ராமச்சந்திரன் சபாபதி படத்தில் கதாநாயகனாக நடித்தார் .* அவருக்காக தன் பெயரை எம்.ஜி.ராமச்சந்தர் என்று சுருக்கிக் கொண்டார்* பெயர் குழப்பம் வராமலிருக்க .* பிறகு சில நண்பர்களின் யோசனையின்படி அருமையான பெயரை ஏன் சுருக்கி கொண்டீர்கள் .உங்களுக்கு நல்ல எதிர்காலம்* இருக்கிறது*என்று சொன்னதன்* பிறகு எம்.ஜி..ராமச்சந்திரன் என்று பெயரை மாற்றிக்கொண்டார் . டி.ஆர். ராமச்சந்திரன் கதாநாயகனாக நடித்தபோது பெயர் குழப்பம் வந்துவிடுமோ என்று கவலைப்பட்ட எம்.ஜி.ஆர். சிகரத்தின் உச்சிக்கு சென்றபிறகு* எம்.ஜி.ஆருக்கு மாமனாராக, சரோஜாதேவியின் தந்தையாக குணச்சித்திர வேடத்தில் அதே டி.ஆர். ராமச்சந்திரன்* அன்பே வா படத்தில் நடித்தார் .** மற்ற தகவல்கள் அடுத்த அத்தியாயத்தில் தொடரும்*

நிகழ்ச்சியில் ஒலித்த பாடல்கள் /காட்சிகள் விவரம்*
-----------------------------------------------------------------------------------
1.புத்தம் புதிய புத்தகமே - அரச கட்டளை*

2.ஒன்று எங்கள் ஜாதியே ,ஒன்று எங்கள் நீதியே - பணக்கார குடும்பம்*

3.உன்னை அறிந்தால் -வேட்டைக்காரன்*

4.எம்.ஜி.ஆர். - அசோகன் உரையாடல் - ரிக்ஷாக் காரன்*

5.எம்.ஜி.ஆர். - கெம்பைய்யா உரையாடல் -உலகம் சுற்றும் வாலிபன்*

6.எம்.ஜி.ஆர்.-லதா - நாகேஷ் உரையாடல் -உலகம் சுற்றும் வாலிபன்*

7.எம்.ஜி.ஆர். -தேங்காய் ஸ்ரீநிவாசன் - இன்றுபோல் என்றும் வாழ்க .

8.எம்.ஜி.ஆர். -சரோஜாதேவி உரையாடல் - அன்பே வா*


*




0

orodizli
22nd August 2020, 07:43 AM
பிரான்சு எம் ஜி ஆர் விழாவுக்கு 2014 இல் பாரிஸ் வந்த அசோகன் மகனும் நடிகருமான வின்சென்ட் அசோகன் அருமையாக தலைவர் புகழ் போற்றி உரையாற்றினார் ! நேற்று இன்று நாளை படம் தங்கள் குடும்பத்துக்கு வெற்றி மட்டுமல்ல வருமானத்தையும் தந்தது என்றும் அசோகனுக்கும் தலைவருக்கு இருந்த நெருக்கமான நட்பையும் விளக்கி பேசினார் ! அந்த படம் எடுக்கும் போது தீயச் சக்திக்கும் - தலைவருக்கும் இடையே உறவில் விரிசல் ஏற்படவே அந்த படத்தை முடிக்காமல் அப்படியே வாங்கி அழித்துவிடலாம் என்று அதிக தொகை பேசியுள்ளது கருணா ! ஆனாலும் அசோகன் மறுத்துவிட்டுள்ளார் ! பணப் பற்றாக்குறையில் நின்று இருந்த படத்தை தலைவர் பண உதவியால் முடித்து வெளியிட்டு வெற்றி பெற்ற மனிதராக அசோகன் நிமிர்ந்ததாக நன்றியுடன் வின்சென்ட் கூறினார் ! உண்மையிலேயே உயரத்தில் மட்டுமல்ல உள்ளத்தாலும் உயர்ந்த மனிதர்தான் நண்பர் வின்சென்ட் அசோகன் அவர்கள் ! இன்றும் நட்புடன் பேசுவார் ! நல்ல பதிவுக்கு வாழ்த்துகள் ! நன்றி ! .........

orodizli
22nd August 2020, 07:44 AM
நெல்லை மாநகரில் முழுமையாக ஓடி வெள்ளி விழா கொண்டாடி 180 நாட்களை கடந்து மூன்று லட்சத்து 75 ஆயிரத்து வசூலாக கொடுத்து லட்சுமி திரையரங்கில் வெற்றி வாகை சூடிய காவியம் "உரிமைக் குரல்" ஆகும்........

பட்டுக்கோட்டை நகரில் அதிக வசூலைக் கொடுத்த திரைக்காவியம் பல ஆனாலும் முதலிடம் பெற்றது உரிமைக்குரல் திரைக்காவியம் ஆகும்.

தஞ்சைத் தரணியில் மக்கள் திலகத்தின் உரிமைக்குரல் திரைக்காவியம் அதிக வசூலைப் பெற்று முதலிடம் பெற்று 1978 வரை எந்த திரைப்படமும் முறியடிக்க முடியாத வெற்றியாகும்.

கும்பகோணம் நகரில் அதிக வசூலை உருவாக்கி வெற்றி கண்ட திரைக்காவியம் உரிமைக்குரல் இக்காவியத்தின் வசூல் 1978 வரை பேசப்பட்டது-

வேலூர் மாநகரில் அதிக வசூலை உருவாக்கி 100 நாட்களைக் கடந்து ஓடி 1978 வரை முதன்மை பெற்ற காவியம் இதயக்கனி திரைப்படம் ஆகும் 4 லட்சத்தை வசூலாக கொடுத்தது.

புதுச்சேரி நகரில் அதிக வசூலைப் பெற்று மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய உலகம் சுற்றும் வாலிபன் காவியத்தின் வசூலை 1978 வரை எந்த திரைப்படத்தாலும் முறியடிக்க முடியவில்லை.

நாகர்கோவில் ராஜேஷ் திரையரங்கில் குறைந்த நாளில்*
83 நாட்களில் உரிமைக்குரல் பெற்ற வசூல் 2 லட்சத்திற்கு மேல் ஆகும். இத்திரைப்படத்தின் வசூலை 1978 வரை எந்த திரைப்படமும் முறியடிக்கப்படவில்லை..........

orodizli
22nd August 2020, 07:49 AM
மக்கள் திலகத்தின் சாதனைகள் பல...... "ஏ" சென்டர்களில் கிட்டத்தட்ட 40 சென்டர்களில் 38 ஏரியாக்களில் புரட்சித் தலைவர் அவர்களின் உலகம் சுற்றும் வாலிபன், உரிமைக்குரல், இதயக்கனி, நேற்று இன்று நாளை, பல்லாண்டு வாழ்க, மீனவ நண்பன் திரைப்படங்கள் வரிசையாக சாதனையைப் படைத்துள்ளது. நான்காவது ஐந்தாவது இடத்தில் தான் மற்ற நடிகர்களின் படங்கள் ஆகும்.

கடைசியாக 1977 வரை தமிழகத்தில் அதிக வசூலைப் பெற்ற திரைப்படங்கள் வரிசையில் முதலிடம் காண்பது உலகம் சுற்றும் வாலிபன்.*
2 கோடிக்கு மேல் வசூல்*
அடுத்து உரிமைக்குரல் ஒரு கோடியே 70 லட்சம் வசூல். மூன்றாவது இதயக்கனி திரைப்படம் ஒரு கோடியே 50 லட்சத்தை வசூலாக கொடுத்தது. நான்காவது மீனவ நண்பன் திரைப்படம் ஒரு கோடியே 35 லட்சத்தை வசூலாக கொடுத்தது.*
எல்லா திரைப்படங்களும் ஆறுமாத காலத்திலேயே வசூலை படைத்து உள்ளது என்பதை தெரிவித்துக் கொள்கின்றோம்.

நடிகர் சிவாஜி கணேசனின் திரைப்படங்கள் தங்கப்பதக்கம் மட்டும் சென்னை சாந்தி திரையரங்கிலும், திருச்சியில் பிரபாத் திரையரங்கிலும் அதிக வசூலைப் பெற்றது. வேறு எந்த ஊரிலும் கிடையாது.**
மற்றும் " பி .சி." செண்டர்களில் மக்கள் திலகத்தின் திரைக்காவியங்கள் முதன்மை பெற்று சாதனை படைத்துள்ளது.

சென்னை நகரில் மக்கள் திலகத்தின் உலகம் சுற்றும் வாலிபன் திரைக்காவியம் குறைந்த நாளில் மிகப்பெரிய வசூலை அதாவது 23 லட்ச ரூபாய்க்கு மேல் வசூலை கொடுத்து. அதன் பின்பு இரண்டாம் வெளியீட்டில் 7 லட்ச ரூபாயை வசூல் ஆக கொடுத்து மொத்தம்
30 லட்ச ரூபாய்க்கு மேல் வசூலைக் கொடுத்து திரைப்பட உலகில் மிகப்பெரிய சாதனையை சென்னை நகரில் தக்கவைத்து இக்காவியத்தின் வசூலை 1978 வரை எந்த திரைப்படமும் முறியடிக்கப்படவில்லை........(1978, 1979... உட்பட்ட தொடர்ந்து பல வருடங்களுக்கு புரட்சி தலைவர் வகுத்து அளித்த தியேட்டர்கள் புதிய அனுகூலமான சட்டங்கள் கருணையோடு தான் வெளியான படங்கள் சகாயங்கள் பெற்றது அனைவரும் அறிந்ததே).........

orodizli
22nd August 2020, 07:50 AM
1977ஆம் ஆண்டு வரை தமிழ் திரைப்பட உலகின் சக்கரவர்த்தியாக இருந்து* ..-அரசியல் வானில் சக்கரவர்த்தியாக முதல்வராக வீற்றிருந்த புரட்சித்தலைவர் அவர்கள்...--திரையுலகில் பதித்த முறியடிக்காத சாதனைகளின் வெற்றிகள்.... வரலாறுகள்.

தென்னிந்திய வரலாற்றில் தனி ஒரு அரங்கில் அதிக வசூலை உருவாக்கிக் கொடுத்த திரைக்காவியம்*
உலகம் சுற்றும் வாலிபன்*
திரையரங்கு*
சென்னை தேவி பாரடைஸ்
182 நாட்கள் ஓடி 13 லட்சத்தை வசூலாக கொடுத்தது ஒரு மிகப்பெரிய சாதனையாகும்.

மதுரை மாநகரில் மிகப்பெரிய சரித்திரத்தை வசூலைப் பெற்று தந்த காவியம் உரிமைக்குரல் திரைப்படம் 200 நாட்களில் 7 லட்சத்தை கடந்து முறியடிக்க முடியாத சாதனையாகும்.

கோவை மாநகரில் உரிமைக்குரல் 150 நாட்களில் கீதாலயா அரங்கில் ஏற்படுத்திய சாதனையை 1978 வரை எந்த திரைப்படமும் முறியடிக்க முடியவில்லை.

ஈரோடு மாநகர் சரித்திரத்தில் உரிமைக்குரல் திரைக்காவியம் ராயல் திரையரங்கில் 155 நாட்கள் ஓடி 4 லட்சத்து 50 ஆயிரத்தை கடந்து முறியடிக்க முடியாத சாதனையில் முதலிடம்.

நெல்லை மாநகரில் முழுமையாக ஓடி வெள்ளி விழா கொண்டாடி 180 நாட்களை கடந்து மூன்று லட்சத்து 75 ஆயிரத்து வசூலாக கொடுத்த கொடுத்து..... லட்சுமி திரையரங்கில் வெற்றி வாகை சூடிய காவியம் உரிமைக்குரல்..........

orodizli
22nd August 2020, 07:51 AM
1977 ஆம் ஆண்டு வெளியான பொன்மனச் செம்மலின் புரட்சி காவியங்கள் இரண்டு*
மீனவ நண்பன் திரைப்படம்*
முதல் வெளியீட்டில் 38 திரையரங்குகளில் 50 நாட்களை கடந்து சென்னை மதுரை சேலம் நகரங்களில் 100 நாட்கள் ஓடி சாதனை படைத்தது. முதல் வெளியீட்டில் ஒரு கோடியை கடந்து வெற்றி நடை போட்டது.

இரண்டாவது*
இன்று போல் என்றும் வாழ்க திரைக்காவியம்*
42 திரையரங்குகளில் வெளியிடப்பட்டு 26 திரையரங்குகளில் 50 நாட்களை வெற்றிகொண்டு முதல் வெளியீட்டில் மட்டும் 85 லட்சத்தை வசூலாக கொடுத்தது. சென்னையிலும், மதுரையிலும்*
100 நாட்கள் கண்டது. சேலத்தில் இரண்டு திரையரங்குகளிலும் தொடர்ந்து திரையிடப்பட்டு 100 நாட்களை வெற்றி கொண்டது.

நவரத்தினம் திரைக்காவியம் சென்னையில் 4 திரையரங்குகளில் திரையிடப்பட்டு ஒன்பது லட்ச ரூபாய்க்கு மேல் வசூலை கொடுத்தது*
8 வாரங்களில் இந்த வசூலைக் கொடுத்த வெற்றிக் காவியம் நவரத்தினம். அதேபோல தமிழகத்தில் 44 திரையரங்குகளில் வெளிவந்து முதல் வெளியீட்டில்*
70 லட்சத்தை வசூலாக கொடுத்த காவியம் நவரத்தினம்.*
மதுரை திருச்சி சேலம் கோவை நகரங்களில் அதிகபட்ச வசூலை படைத்த திரை காவியம் ஆகும்-

நம்முடைய தலைவரின் திரை உலக சாதனைகள் இப்படி இருக்க........ அதே ஆண்டில் வெளியான இன்னொரு நடிகரின் திரைப்படங்கள் பல வெளிவந்தது. ஆனாலும் அத்திரைப்படங்கள் சில இடங்களில் மட்டும் நின்றது. சில ஊரில் 100 நாள் ஓட்டப்பட்டது.*

இந் நடிகரின் 5 படங்கள்*
தீபம், அவன் ஒரு சரித்திரம், இளைய தலைமுறை,*
நாம் பிறந்த மண்,*
அண்ணன் ஒரு கோயில்*
5 திரைப்படங்கள் வெளி வந்தது.*.........

orodizli
22nd August 2020, 10:36 AM
இன்று "நாடோடி மன்னனி"ன் பிறந்த நாள். படம் வெளியான நாள் 1958 ஆக 22 . இன்றுடன் 62 ஆண்டுகள் நிறைவு பெற்றது. அதன்பிறகு இன்று வரை அதற்கு இணையான தரத்தில் படங்கள் வரவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். "நாடோடி மன்னன்" எம்ஜிஆர் பிக்சர்ஸாரின் சொந்த படம். ஆங்கில படத்துக்கு நிகராக எடுக்கப்பட்ட தமிழ் படம். க்ளைமாக்ஸ் காட்சியில் போடப்பட்ட செட் தமிழ்பட உலகுக்கு புதிதானது. எம்ஜிஆரை ஒரு மிகச்சிறந்த இயக்குநராக தமிழ் பட உலகுக்கு அறிமுக படுத்திய ஒப்பற்ற திரைக்காவியம்.

திரையிட்ட இடங்களில் எல்லாம் திருவிழா கோலம்தான். "மதுரை வீரனு"க்கு பிறகு மீண்டும் ஒரு பிரமாண்ட வெற்றியை எம்ஜிஆருக்கு கொடுத்த படம். "முயற்சி திருவினையாக்கும்" என்பதற்கு உதாரணமாக விளங்கிய படம். நாடோடி மன்னன் வெற்றி விழாவை நம்மில் பலர் கண்டிருக்க வாய்ப்பில்லை. ஆனால் கேள்விப்பட்டிருக்கிறோம்.

1957 சட்டமன்ற தேர்தல் தான் திமுகவின் முதல் தேர்தல். அதற்கும் எம்ஜிஆரின் "தாய்க்குப்பின்தாரம்" படத்தின் காளை சண்டையை பிரதானப்படுத்தி கட்சியை பிரபலப்படுத்தினார்கள். அதன் பின்பு 1958 ல் வெளியான "நாடோடி மன்னன்" மூலமாக கட்சியை வேகமாக வளர்த்தார்கள். "மனேகரா","கட்டபொம்மன்", "பராசக்தி" போன்ற நாடக சினிமாக்கள் வெளிவந்த நேரத்தில் ஆங்கில படங்களுக்கு இணையான ஒரு தமிழ் சினிமாவை கண்டு உள்ளம் மகழ்ந்தார்கள்.

"நாடோடி மன்னன்" வெற்றி விழாவை ஊர்ஊருக்கு பிரமாண்ட விழாவாக்கி திமுக வை வளர்த்தார்கள். 10 திமுக மகாநாடு நடத்தி கட்சியை வளர்ப்பதை காட்டிலும் ஒரு "நாடோடி மன்னன்" வெற்றி விழா கட்சிக்கு பேரும் புகழும் தேடித்தந்தது. தமிழ் நாடெங்கும் "நாடோடி மன்னன்" விழாவை பற்றிதான் பேச்சு. வெகு எளிதில் திமுக வளர்வதற்கு "நாடோடி மன்னனி"ன் வெற்றி கை கொடுத்தது.

பத்திரிக்கைகளிலும் "நாடோடி மன்னன்" விழாவை முன்னிலை படுத்தினார்கள். அப்படி விழா கொண்டாடிய ஊர்களில் கோவை பிரதானமானது. தியேட்டரை அலங்கரித்து மிகப்பெரிய அளவில் விழாவை நடத்தி பரிசு வழங்கும் காட்சியை பார்க்க முடியாதவர்கள் இப்போது காணுங்கள் இந்த அரிய படத் தொகுப்பை.

மேலும் "நாடோடி மன்னன்" படத்தின் வெற்றி விழா படக்காட்சிகள் இரண்டாம் தொகுப்பு உங்கள் பார்வைக்கு..........

orodizli
22nd August 2020, 10:38 AM
புரட்சித்தலைவரின் மாபெரும் சாதனை படங்களில் "நாடோடி மன்னன் "ஒன்றாகும்... அந்தப் படம் மிகப் பிரமாண்டமான அளவில் புரட்சித் தலைவர் தனது தகுதிக்கு மீறி படம் எடுத்தார் இடையிடையே நொந்து கண்ணீர் விட்டார் இந்தப்படம் எவ்வாறு வெளியிட போகிறேனோ தெரியவில்லை இது வெற்றி பெற்றாள் நான் மன்னன் இது தோல்வி அடைந்தால் நான் நாடோடி என்று அவர் கூறினார் கடவுளாகிய பரம்பொருளாகிய இறைவன் அவரை கைவிடவில்லை அவரை படைத்ததே தமிழக மக்களின் இதயத்தை ஆட்சி செய்வதற்காக தானே எப்படி இறைவன் கைவிடுவார் படம் வெளியாகி சக்கைபோடு போட்டது பிரம்மாண்டமான காட்சிகள் கொண்ட கொண்ட அந்தப்படம் ஒரு காலத்தில் மாட்டு வண்டிகளில் கட்டை வண்டி என்று கூறுவார்கள் மரத்தால் செய்யப்பட்ட சக்கரங்களைக் கொண்ட அந்த மாட்டு வண்டிகளில் கிராமப்புறத்தில் உள்ளவர்கள் எல்லோரும் கூட்டம் கூட்டமாக திருவிழாவிற்கு செல்வதுபோல சென்று அந்த படத்தை பார்த்து மகிழ்ந்தார்கள் கிராமங்கள் பட்டி தொட்டிகளில் எல்லாம் இதே பேச்சு அந்த படத்தின் காட்சிகள் மிக மிகப் பிரமாண்டமானவை நான் என் இளவயதில் அந்த படத்தை பல முறை பார்த்திருக்கிறேன் டிக்கெட் எடுப்பதற்காக நடந்த போட்டியில் என் சட்டை எல்லாம் கிழிந்து போனது இன்னமும் பசுமையாக நினைவில் உள்ளது வாழ்க புரட்சித் தலைவர் புரட்சித்தலைவர் உயிரற்ற உடலாக மண்ணுக்குள் மறையவில்லை மக்களின் மனதில் அவர் சிரஞ்சீவியாக வாழ்ந்து கொண்டே இருக்கிறார் அவருடைய நினைவுகள் பசுமையானவை.........

orodizli
22nd August 2020, 12:46 PM
"இதயக்கனி" ஆமாம், நம் "இதயக்கனி" நடித்த "இதயக்கனி"க்கு இன்று 45 வது பிறந்த நாள். 1975 ஆக 22 ம் தேதி வெளிவந்து வியத்தகு சாதனைகள் செய்த புரட்சித் தலைவரின் மாபெரும் வெற்றிப் படம். அந்த ஆண்டு வெளியான படங்களில் 10 திரையரங்குகளில் 100 நாட்கள் ஓடி வெற்றி பெற்ற படம்.

100 நாட்கள் வசூலில் "உலகம் சுற்றும் வாலிபனை" தாண்டிய படம். ஆண்டுக்கு ஆண்டு அவர் சாதனைகளை அவரே தாண்டி உச்சபட்ச சாதனையை உருவாக்கிய படம். இதன்பிறகு வந்த படங்களை காட்டிலும் அதிக வசூலை பெற்று
இதுதான் இமாலய வெற்றி என்று உலகுக்கு பறை சாற்றிய
செம்மலின் இதயக்கனி பிறந்த நாளை வரவேற்போம். மேலும் வசூல் விபரங்களை மற்றொரு பதிவில் பார்ப்போம்..........

orodizli
22nd August 2020, 08:55 PM
வாகை சூடு!!
------------------
எம்.ஜி.ஆரை விட பாராட்டத் தக்கவர் யாரெனில்-
எம்.ஜி.ஆர் ரசிகன்!
நீ போதித்தக் கொள்கைகளையும் குணாதிசயங்களையும் உனக்கேக் கற்றுத் தரும் அளவுக்குக் கொண்டுள்ளேன் என்று உலகில் ஒரு ரசிகன் முழங்குவார் ஆயின்-
அவர் எம்.ஜி.ஆர் ரசிகனாக மட்டும் தான் இருக்க முடியும்!
எம்.ஜி.ஆர் ரசிகருக்கென்று தனிப்பட்ட பழக்கம் ஒன்று உண்டு
எம்.ஜி.ஆர் ரசிகர்களுக்கு மட்டுமே தாம் எம்.ஜி.ஆர் ரசிகராக இருக்க நேர்வதில் ஒரு கர்வமே உண்டு!
ஒருவருக்கு ரசிகராக இருக்க தகுதி ஏதும் தேவையில்லை. ஆனால் எம்.ஜி.ஆர் ரசிகனாக இருக்கக் கண்டிப்பாக சில தகுதிகள் தேவை என்று புதிய இலக்கணம் வகுத்து,,அதில் பொருதியும் இருப்பவர்கள் எம்.ஜி.ஆர் ரசிகர்கள் மட்டுமே!!
அந்த வகையில்-- அந்த விதத்தில்-
எம்.ஜி.ஆர் ரசிகர்களின் திலகமாக மிளிர்பவர் எனக்குத் தெரிந்து ஹயாத் பாஷா என்னும் ஹயாத்!
இவரது எம்.ஜி.ஆர் பக்திக்கான அங்கீகாரம் இவரைத் தேடி வந்திருக்கிறது என்பதே இன்றையப் பதிவின் சாரம்!
சிரஞ்சீவி அனீஸ்!
எம்.ஜி.ஆரை இதயத்தில் வைத்துள்ள இளவல்களில் ஒருவர். பத்திரிகைத் துறையைச் சேர்ந்தவர்!
முக நூலில் எம்.ஜி.ஆர் புகழ் பாடுபவர்!
இவர் எம்.ஜி.ஆருக்கு என்று தமிழ் மலர் என்னும், யூ டியூப் சேனலைத் தொடங்கியுள்ளார்!
இரவு பகல் எப்பொழுதும்
எம்.ஜி.ஆர் அஞ்சல் சேர்ந்திடும்!!
அந்த வகையில் 24 மணி நேர எம்.ஜி.ஆர் சேனலே சிரஞ்சீவி அனீஸின் தமிழ் மலர் சேனல்!
எம்.ஜி.ஆரின் சிறப்புக்களைப் பகிர்ந்தால் மட்டும் போதுமா?? சிறப்பாகப் பகிர வேண்டாமா என்ற சித்தாந்தம் கொண்ட ஹயாத்தின் எம்.ஜி.ஆர்ப் பற்றிய பதிவுகள் தமிழ் மலர் யூ டியூப்பில் இடம் பெறத் துவங்கியுள்ளன!
ஹயாத் என்னும் விளக்கின், திறமை என்னும் திரியை ,,இழுத்துவிட்டு -அவரது எம்.ஜி.ஆர்ப் பதிவு -என்னும் வெளிச்சத்தைத் தம் சேனலில் எரியச் செய்திருக்கிறது சிரஞ்சீவி அனீஸின் ஊக்கம் என்னும் கரம்!
இயல்பிலேயே கவிஞரான ஹயாத்தின் பதிவு நேர்த்தி நம்மைப் பிரமிப்படையச் செய்யும் ஒன்றாக இருந்தாலும்-
உலகிலேயே சிறந்த நடிகர் எம்.ஜி.ஆர் என்னும் இவரது வர்ணனைப் பதிவு நம்மை வாய் பிளக்க வைக்கிறது!
சிரித்து வாழ வேண்டும் என்ற எம்.ஜி.ஆரின் திரைப்படத்தைக் குறித்தும்,,அந்தக் காலக் கட்டத்தில் எம்.ஜி.ஆரின் நடிப்பின் பின்னணியில் இருந்த சூழல்கள் குறித்தும் இவர் விளக்கியிருப்பதை ஒவ்வொரு எம்.ஜி.ஆர் ரசிகரும் உள் வாங்க வேண்டிய உளவியல் நூலாகவே நமக்குப் படுகிறது!
வான் மழை போல் பிரச்சனைகள்--
ராணுவத்தையே சந்திப்பேன் என்று சொல்லிக் கொண்ட கருணா நிதியின் களங்கமுள்ள தாக்குதல்கள்--
உயிரைக் குறி பார்த்து கருணா ஏவி விட்டக் கொலை முயற்சிகள்--
புதுச்சேரி சட்டமன்றப் பொதுத் தேர்தல்--இப்படி அன்று எம்.ஜி.ஆர் சந்தித்தப் பிரச்சனைகள் ஒன்றா இரண்டா?? இவை எல்லாவற்றையும் அடவி அவர் ஒருமுகமாக நடித்தப் பாங்கை இதில் சகோதரர் ஹயாத் மிக நுணுக்கமாகவும்,,மிக எளிமை எனும் அணுக்கமாகவும் ஆராதித்திருக்கிறார்!
சிரஞ்சீவி அனீஸின் இந்தப் பணி மிகவும் போற்றத் தகுந்தது!
தமிழ் மலர் யூ டியூப் சேனலுக்கு நாம் தராத ஊக்கத்தை வேறு எவரால் தர இயலும் என்ற வகையில் நம் ஒத்துழைப்பை நல்க வேண்டியக் கடமையை உணர்த்தும் அதே நேரத்தில்--
ஹயாத் என்னும்--
நம்மில் ஒருவருக்குக் கிடைத்திருக்கும் அரிய வாய்ப்புக்காக அவருக்கு வாழ்த்து மழைப் பெய்வோமே!
ஹயாத்--
வா! கைக் கொடு!
வாகை சூடு!!!.........

orodizli
22nd August 2020, 08:59 PM
#கேள்வி : ஊழலற்ற அரசாங்கத்தை எப்படி நீங்கள் நிறுவ முடியும் ? உங்கள் திட்டம் என்ன ?

#புரட்சித்தலைவரின் #பதில் : எந்தப் பதவிக்கு யாரை நியமிக்கும் முன்னும் அவர்களது விவகாரங்களை ஆராய ஒரு பாரபட்சமற்ற கமிஷனை நிறுவுவோம். அது ஒரு நீதிபதியின் தலைமையில் இயங்கும். அவர்கள் மீது எந்த குற்றங்களும் இல்லை என்று நிரூபிக்கப்பட்ட பின் அவர்கள் பதவியல் நியமிக்கப்படுவார்கள். குற்றவாளி என சந்தேகம் இருக்குமானால் வழக்கு நீதிமன்றம் செல்லும். குறிப்பிட்ட மனிதர் குற்றவாளியானால் பதவியேற்புக்கு பதில் , சிறை செல்ல நேரும். அதேபோல் அமைச்சரோ, மற்ற தேர்ந்தெடுத்த உறுப்பினர்களோ தங்கள் வேலையை சரியாக செய்யாதபோது மக்களுக்கு அவர்களை நீக்கும் உரிமை இருக்க வேண்டும் என திட்டம் வகுத்திருக்கிறோம். மக்கள் வரிப்பணத்தை பொதுப் பணத்தை சூறையாடும் கொடுமை இனியும் நடக்க அனுமதிக்க முடியாது. இது நிறுத்தப்பட வேண்டும் உடனடியாக நாட்டில் நல்ல அரசு உருவாக வேண்டும்.

- அண்ணா நாளிதழ் 5 - 12 - 1976

கொடை வள்ளல் எம்.ஜி.ஆர் புகழ் வாழ்க .........

orodizli
23rd August 2020, 01:38 PM
புர*ட்சித்த*லைவ*ரைப்ப*ற்றி அவ*ர் வாழ்ந்த* கால*த்திலும் அத*ற்குப்பின்னும் அவ*ரைப்ப*ற்றி ஆயிர*க்க*ண*க்கான
புத்த*க*ங்க*ள் வெளிவ*ந்துள்ளன. இன்ன*மும் வ*ந்துகொண்டிருக்கின்ற*ன*..அவ*ற்றின் ஒரு சிறு தொகுப்பே இது..விடுப*ட்ட* அல்ல*து இதில் குறிப்பிட*ப்ப*டாத* நூல்க*ளை க*மெண்ட்டுக*ளில் தெரிவியுங்க*ள்.. இது ஒரு ப*கிர*ப்ப*ட்ட ப*திவு..

புர*ட்சித்த*லைவ*ர் பார*த*ர*த்னா டாக்ட*ர் எம்.ஜி.ஆர் அவ*ர்க*ள் மறைந்து விட்டாலும், இன்னும் மக்கள் மனதில் நீங்காத இடம் பெற்று வாழ்ந்து கொண்டு தான் இருக்கின்றார். அவரைப் பற்றி வெளியாகியுள்ள பல நூல்கள் இன்னும் அவரை ஞாபகப்படுத்திக் கொண்டு தான் இருக்கின்றன. எம்ஜிஆர் ரசிகர்கள் பலருக்கு அவரைப் பற்றி வெளியான அரிய நூல்களின் ப*ட்டிய*ல்க*ளில் சில் இதோ..

எம்.ஜி. ஆரைப் பற்றித் தமிழில் மட்டுமல்ல ஆங்கிலத்திலும் பல நூல்கள் வெளிவந்துள்ளன,

முதலமைச்சர் எம்.ஜி.ஆர் (ஆசிரியர் - டி.வி.சிவப்பிரகாசம்,வெளியீடு - கல்வி உலகம், இளந்தேரி (1977))

புரட்சித்தலைவரின் பொன்மொழிகள் (ஆசிரியர் – சாலி.இக்பால், வெளியீடு – நூர் பதிப்பகம், சென்னை (1980))

மக்கள் திலகம் இருவரலாற்றுப்படை (ஆசிரியர் – புலவர்.கே.பெரு.திருவரங்கன்,வெளியீடு - இராமலட்சுமி பதிப்பகம் , சென்னை (1980))

அண்ணனுக்குப் பின் மன்னன்,(ஆசிரியர் – அடியார்,வெளியீடு - மல்லி பதிப்பகம், சென்னை (1978))

மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் (ஆசிரியர் – வித்துவான் வே.லட்சுமணன்,வெளியீடு – வானதி பதிப்பகம், சென்னை (1985))

புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர் (ஆசிரியர் – லேனா தமிழ்வாணன்,வெளியீடு – மணிமேகலை பிரசுரம், சென்னை (1983))

புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் (ஆசிரியர் – நாகை தருமன், வெளியீடு - அறிஞர் அண்ணா பதிப்பகம், சென்னை (1979))

வரலாற்று நாயகன் (ஆசிரியர் – திருமூலன்,வெளியீடு – கவிதா பப்ளிகேசன்ஸ் , சென்னை (1978))

காலத்தை வென்றவர் (ஆசிரியர் – மணியன்,வெளியீடு - இதயம் பப்ளிகேசன்ஸ் , சென்னை (1985))

எம்.ஜி.ஆர். என் இதயக்கனி (ஆசிரியர் – அறிஞர் அண்ணா, தொகுப்பு- ஆர்.சீனிவாசன்,வெளியீடு – சத்தியத்தாய் பதிப்பகம் , சென்னை (1984))

புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். பிள்ளைத்தமிழ் (ஆசிரியர் – கவிஞர் முத்துலிங்கம்,வெளியீடு – நீரோட்டம் வெளியீடு , சென்னை (1981))

அண்ணா தி.மு.க. வரலாறு (ஆசிரியர் – ஆர்.ரெங்காராவ்,வெளியீடு – செவ்வாய் வெளியீடு , சென்னை (1986))

நெஞ்சில் ஆடும் தீபம் (கவிதை) (ஆசிரியர் – கவிஞர் டி.கே.மதியானந்தம்,வெளியீடு – கவிதாபானு, சென்னை (1983))

சத்துணவும் சத்துணர்வும் (ஆசிரியர் – கிருஷ்ணகாந்தன்,வெளியீடு – வள்ளி புத்தக நிலையம், சென்னை (1984))

அறிஞர் அண்ணா நமக்கு அறிவூட்டுகிற கடவுள் ( எம்.ஜி.ஆர். சொற்பொழிவுகள்) (ஆசிரியர் – தொகுப்பு-கழஞ்சூர் சொ.செல்வராஜ்,வெளியீடு – குத்தூசி குருசாமி பதிப்பகம், சென்னை (1985))

தங்கத்தமிழர் எம்.ஜி.ஆர். ஓர் ஆய்வு (ஆசிரியர் – மாணிக்கம்-சீனிவாசன், வெளியீடு – வெல்கம் பப்ளிகேஷன்ஸ் , சென்னை (1986))

எம் தலைவன் (கவிதை) (ஆசிரியர் – கவிஞர் வாழை வளவன்,வெளியீடு – தில்லை நாயகி பதிப்பகம், சேலம் (1987))

அமெரிக்காவில் அண்ணா, எம்.ஜி.ஆர் (ஆசிரியர் – டாக்டர்.எம்.எஸ்.உதயமூர்த்தி,வெளியீடு – வித்வான் பதிப்பகம், சென்னை (1975))

பொன்மனமே நீடு வாழ்க (கவிதை) (ஆசிரியர் – ராஜவர்மன், வெளியீடு – ஏ.எஸ்.ஆர்.பப்ளிகேசன்ஸ், சென்னை (1984))

மக்கள் தலைவருக்கு மன்றத்தலைவர் டாக்டர் பட்டம்- சேலத்தில் எடுத்த விழா மலர் (ஆசிரியர் – தஞ்சை வி.எஸ்.இராசு, வெளியீடு – புரட்சிக்குயில் பப்ளிகேசன்ஸ், சென்னை (1983))

சரித்திரத்தை மாற்றிய சத்புருஷர் (ஆசிரியர் – டாக்டர் கோ.சமரசம், வெளியீடு – கோணப்பர் பதிப்பகம், சென்னை (1986))

நினைவுகளின் ஊர்வலம் (ஆசிரியர் – கவிஞர் புலமைப்பித்தன், வெளியீடு – திருமகள் நிலையம், சென்னை (1986))

எமனை வென்ற எம்.ஜி.ஆர் (ஆசிரியர் – தஞ்சை தமிழழகன், வெளியீடு - மக்கள் பதிப்பகம், சென்னை (1985))

டாக்டர் எம்.ஜி.ஆர் ஒரு பொருளாதார வல்லுநர் (ஆசிரியர் – அ.வசந்தகுமார், வெளியீடு – கண்ணம்மாள் பதிப்பகம், சென்னை (1985))

பொன்மனச் செமமலும், புன்னகை மலர்களும் (ஆசிரியர் – எஸ்.குலசேகரன், வெளியீடு - அமிழ்தம் பதிப்பகம், சென்னை (1985))

தெற்கு என்பது திசை அல்ல (கவிதை) (ஆசிரியர் – வலம்புரிஜான், வெளியீடு – கவிதாபானு, சென்னை (1984))

சரித்திர நாயகன் எம்.ஜி.ஆர் (ஆசிரியர் – பாலாஜி, வெளியீடு – கீதா பிரசுரம், சென்னை (1987))

டாக்டர். எம்.ஜி.ஆர் வீரக்காவியம் (ஆசிரியர் – ஜெயா பொன்முடி, வெளியீடு - ஸ்ரீ லட்சுமி பதிப்பகம், சென்னை (1988))

அப்பலோ டு அமெரிக்கா (ஆசிரியர் – பா.ஜீவகன், வெளியீடு – மேத்தா பிரசுரம், சிவகாசி (1985))

சத்துணவு பாடல்கள் (ஆசிரியர் – புலவர்.பி.வெங்கடேசன், வெளியீடு - அறிவரசி பதிப்பகம், தருமபுரி (1984))

இந்தி ஆதிக்கப் போரில் புரட்சித்தலைவர் (ஆசிரியர் – கவிஞர் மணிமொழி-நாஞ்சில் நீ.மணிமாறன், வெளியீடு – புதியபூமி பதிப்பகம், சென்னை (1987))

நான் ஏன் பிறந்தேன்? (ஆசிரியர் – வேலன், வெளியீடு – வேல் பாண்டியன் பிரசுரம், சென்னை (1988))

புரட்சித்தலைவர் அரசின் சமதர்மச் சட்டங்கள், (ஆசிரியர் – கா.சுப்பு, வெளியீடு - அண்ணா தொழிற்சங்கப் பேரவை, சென்னை (1984))

நான் கண்ட எம்.ஜி.ஆர் (ஆசிரியர் – மணியன், வெளியீடு - இதயம் பப்ளிகேசன்ஸ், சென்னை (1985))

எம்.ஜி.ஆர் ஒரு குமணன் (ஆசிரியர் – கவிஞர் வாழை வளவன், வெளியீடு – தில்லை நாயகி பதிப்பகம், சேலம் (1988))

முப்பிறவி எடுத்த முதல்வர் (ஆசிரியர் – திருப்பூர் வெ.சம்பத்குமார், வெளியீடு - சாயிகீதா பதிப்பகம், சென்னை (1985))

சொல்லும் செயலும் (ஆசிரியர் – ஆ.அசோக்குமார், வெளியீடு – நியூ ஸ்டார் பப்ளிகேசன்ஸ், சென்னை (1985))

செந்தமிழ் வேளீர் எம்.ஜி.ஆர் (ஆசிரியர் – புலவர்.செ.இராசு, வெளியீடு – கொங்கு ஆய்வு மையம், ஈரோடு (1985))

எம்.ஜி.ஆர் சரணம் (ஆசிரியர் – ஜெ.பாலன், வெளியீடு - நெய்தல் பதிப்பகம், சென்னை (1988))

எம்.ஜி.ஆர். ஒரு சகாப்தம் (ஆசிரியர் – நியூஸ் ஆனந்தன், வெளியீடு – தனலட்சுமி பதிப்பகம், சென்னை (1981))

1980-85 சட்டமன்ற நாடாளுமன்ற வேட்பாளர்கள் (ஆசிரியர் – எம்.சுப்பிரமணியம், வெளியீடு – சித்ரா பப்ளிகேசன்ஸ், சென்னை (1986))

சாதனைப்பூவின் சரித்திர வசந்தம் (ஆசிரியர் – டாக்டர் ஜெகத்ரட்சகன், வெளியீடு – அப்போலா வெளியீடு, சென்னை (1988))

முப்பிறவி கண்ட முதல்வர் (ஆசிரியர் – டி.எம்.சௌந்திரராஜன், வெளியீடு - ரேவதி பதிப்பகம், சென்னை (1985))

செம்மலின் பொன்மனம் (ஆசிரியர் – கவிஞர்.ச.பஞ்சநாதன், வெளியீடு – என்.எஸ்.பப்ளிகேசன்ஸ், மதுரை (1988))

புரட்சியார் ஒரு காவியம், (ஆசிரியர் – கவிஞர்.தெ.பெ.கோ.சாமி, வெளியீடு - சித்ரா பதிப்பகம், வேலூர் (1987))

எம்.ஜி.ஆர்.உயில்களும் உயில் சாசன சட்டங்களும் (ஆசிரியர் – வை.சண்முகசுந்தரம், வெளியீடு – கலைக்கருவூலம், சென்னை (1988))

புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்.உலா (ஆசிரியர் – கவிஞர் முத்துலிங்கம், வெளியீடு – பூம்புகார் பிரசுரம், சென்னை (1983))

மக்கள் திலகம் பற்றிய மாணவராற்றுப்படை (ஆசிரியர் – மாருதிதாசன், வெளியீடு - அருள்ஜோதிப் பதிப்பகம், நாமக்கல் (1981))

உலா வரும் உருவங்கள் (கவிதை) (ஆசிரியர் – கவிஞர் இளந்தேவன், வெளியீடு – கவிதாபானு, சென்னை (1984))

அ.இ.அ.தி.மு.க வின் தோற்றமும் வளர்ச்சியும் (ஆசிரியர் – லேனா தமிழ்வாணன், வெளியீடு – மணிமேகலை பிரசுரம், சென்னை (1985))

சந்திரனைப் போற்றும் நட்சத்திரங்கள் (ஆசிரியர் – நாகை தருமன், வெளியீடு – புதியபூமி பதிப்பகம், சென்னை (1987))

புரட்சித்தலைவர் அவர்களுக்கு அறிஞர்கள் புகழ் மாலை (ஆசிரியர் – கழஞ்சூர் சொ.செல்வராஜி, வெளியீடு – குத்தூசி குருசாமி பதிப்பகம், வேலூர் (1985))

வெற்றித்தலைவர் வீர வரலாறு (ஆசிரியர் – ஜெயா பொன்முடி, வெளியீடு - ஸ்ரீ லட்சுமி பதிப்பகம், சென்னை (1988))

எம்.ஜி.ஆர். ஒரு காவியம் (ஆசிரியர் – கவிஞர் வாழை வளவன், வெளியீடு - தில்லை பதிப்பகம், சேலம் (1987))

ஜீவ நதிகள் (ஆசிரியர் – கலைமாமணி மா.லட்சுமணன், வெளியீடு - அன்னை ஜே.ஆர். பதிப்பகம், சென்னை (1988))

புரட்சித்தலைவர் புகழ் அந்தாதி, (ஆசிரியர் – மலேசியக் கவிஞர் ஐ.உலகநாதன், வெளியீடு - தாமரைப் பதிப்பகம், சென்னை (1985))

தந்தை பெரியார் முதல் புரட்சித்தலைவர் வரை (ஆசிரியர் – ஏ.கே.வில்வம், வெளியீடு - ரோமா பதிப்பகம், சென்னை (1985))

வள்ளலும் உள்ளமும் (ஆசிரியர் – டாக்டர்.எஸ்.தங்கமணி, வெளியீடு - ஆரோம் பதிப்பகம், குமரி (1987))

நடிகர் திலகமும் புரட்சித்தலைவரும் (ஆசிரியர் – ரசிகன் அருணன், வெளியீடு - அருணா பப்ளிசிட்டி, சென்னை (1987))

திருக்குறள் பாதையில் எம்.ஜி.ஆர் (ஆசிரியர் – ஜெ.பாலன், வெளியீடு – நெய்தல் வெளியீடு, சென்னை (1984))

எம்.ஜி.ஆர் பெயரில் மன்றம் தேவையா? (ஆசிரியர் – திருவை ஆ.அண்ணாமலை, வெளியீடு – நெல்சன் பதிப்பகம், சென்னை (1961))

தர்மம் வென்றது (ஆசிரியர் – ஜெ.பாலன், வெளியீடு – நெய்தல் வெளியீடு, சென்னை (1987))

எம்.ஜி.ஆர் கதை பாகம்-1 (ஆசிரியர் – எஸ்.விஜயன், வெளியீடு – ஜியோ பப்ளிகேசன்ஸ், சென்னை (1989))

மறு பிறவி கண்ட மக்கள் திலகம் (ஆசிரியர் – எம்.ஜி.ஆர் தாசன், வெளியீடு – கன்னி பதிப்பகம், சென்னை (1985))

சத்தியா மைந்தன் சாதனை (ஆசிரியர் – ஜெயா பொன்முடி, வெளியீடு - ஸ்ரீ லட்சுமி பதிப்பகம், சென்னை (1988))

தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர் (ஆசிரியர் – கவிஞர் வாழை வளவன், வெளியீடு – மறைதிரு எம்.ஏ.கோலாஸ், சேலம் (1978))

சத்துணவு நாயகன் (ஆசிரியர் – கவிஞர் வாழை வளவன், வெளியீடு - தில்லைநாயகி பதிப்பகம், சேலம் (1987))

இதயவானில் உதய நிலவு (ஆசிரியர் – தண்டு குன்னத்தூர் தமிழன், வெளியீடு - இளவளகி பதிப்பகம், வேலூர் (1985))

பரிபூரண அவதாரம் (நாடகம்) (ஆசிரியர் – டாக்டர் கோ.சமரசம், வெளியீடு – கோணப்பர் பதிப்பகம், சென்னை (1985))

எம்.ஜி.ஆர் கதை பாகம்-2 (ஆசிரியர் – எஸ்.விஜயன், வெளியீடு - அருள்மொழி பதிப்பகம், சென்னை (1991))

எம்.ஜி.ஆர் பொருளாதார அடிப்படை சரிதானா? (ஆசிரியர் – கி.வீரமணி, வெளியீடு – திராவிடர் கழக வெளியீடு, சென்னை (1982))

நிலவை நேசிக்கும் நெஞ்சங்கள் (ஆசிரியர் – இனியவன், வெளியீடு – அவ்வை மன்றம், சென்னை (1986))

புரட்சித்தலைவர் பிள்ளைத் தமிழ் (ஆசிரியர் – கவிஞர் அக்கினிப்புத்திரன், வெளியீடு - குறளகம், பழனி (1988))

புரட்சித்லைவர் எம்.ஜி.ஆர். வீர வரலாறு (ஆசிரியர் – ஜோதிமணவாளன், வெளியீடு – ஜோதி பப்ளிகேசன்ஸ், சிவகாசி (1993))

எம்.ஜி.ஆர் நிழலும் நிஜமும் (ஆசிரியர் – மோகன்தாஸ், வெளியீடு – பந்தர் பப்ளிகேசன்ஸ், பெங்களுர் (1993))

காலத்தை வென்றவர் (ஆசிரியர் – மணியன், வெளியீடு - இதயம் பதிப்பகம், நாகப்பட்டினம் (1991))

சரித்திர நாயகர் எம்.ஜி.ஆர். சாதனைகள் (ஆசிரியர் – லேனா தமிழ்வாணன், வெளியீடு – மணிமேகலை பிரசுரம், சென்னை (1991))

சரித்திரம் படைத்த எம்.ஜி.ஆர் (ஆசிரியர் – ஏ.கே.சேஷய்யா, வெளியீடு – மயிலவன் பதிப்பகம், சென்னை (1993))

மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர் (ஆசிரியர் – கு.சண்முகசந்தரம், வெளியீடு – குமரன் பதிப்பகம், சென்னை (1992))

எம்.ஜி.ஆர். ஓர் ஆய்வு (ஆசிரியர் – மு.தம்பித்துரை எம்.ஏ, வெளியீடு – ஞானச்சுடர் பதிப்பகம், சென்னை)

தலைவனே எங்களுக்குத் தத்துவம் (ஆசிரியர் – மெய்க்கீர்த்தி, வெளியீடு - அன்னை சத்யா புத்தகப்பண்ணை, சென்னை (1978))

எம்.ஜி.ஆர் ஆட்சியும் சிவாஜி ரசிகர்களும் (ஆசிரியர் – எஸ்.வீரபத்திரன், வெளியீடு – புரட்சியார் ரசிகன், சென்னை (1985))

அண்ணா கொள்கைக்கு நாமம் (ஆசிரியர் – விடுதலை தலையங்கங்கள், வெளியீடு – திராவிடக்கழக வெளியீடு, சென்னை)

வெற்றி நமதே (ஆசிரியர் – ஜோதி மணவாளன், வெளியீடு – ஜோதி பப்ளிகேசன்ஸ், சென்னை (1991))

அரசும் தமிழும் (ஆசிரியர் – ஒப்பிலா மதிவாணன், வெளியீடு - தமிழ்ச்சுரங்கம், மதுரை (1986))

தன்னிறைவுத் திட்டத்தில் தமிழகம் (ஆசிரியர் – குமரிச் செல்வன், வெளியீடு - நாகர்கோவில் (1982))

காலத்தை வென்ற காவிய நாயகன் எம்.ஜி.ஆர் (ஆசிரியர் – தேனி ராஜதாசன், வெளியீடு - மணிமேகலைப் பிரசுரம், சென்னை (2010))

எம். ஜி. ஆர். கொலை வழக்கு: சிறுகதைகள்- ஷோபாசக்தி - 2016

எம். ஜி. ஆர். ஓரு சகாப்தம் கே. பி ராமகிருஷ்ணன் - 2007

பொன்மனச் செம்மல் எம். ஜி. ஆர் கீர்த்தி - 2007

நான் கண்ட எம். ஜி. ஆர் நவீனன் - 2009

எம். ஜி. ஆர். ஒரு சகாப்தம் நியூஸ் ஆனந்தன் - 1987

எங்கள் தங்கம் எம்.ஜி.ஆர் S. தேவாதிராஜன் - 2011

விழா நாயகன் எம். ஜி. ஆர் கலைமாமணி கே ரவீந்தர் - 2009

காலத்தை வென்ற புரட்சித் தலைவர் எம். ஜி. ஆர் நாஞ்சில் ஸ்ரீவிஷ்ணு – 2004

எம். ஜி. ஆர்: அதிகம் வெளிவராத தகவல்கள். ஆனால், அத்தனையும் பா தீனதயாளன் - 2015

பொன்மனச் செம்மல் எம். ஜி. ஆர் கே ரவீந்தர் - 2009 - ‎

செந்தமிழ் வேளிர் எம். ஜி. ஆர்: ஒரு வரலாற்று ஆய்வு செ இராசு - 1985

8-வது வள்ளல் எம்.ஜி.ஆர் முரு. சொ. நாச்சியப்பன் - 1969 - ‎

எம். ஜி. ஆர். திரைப்படங்களில் காணப்படும் திராவிடர் இயக்கச் ...கோகிலவாணி கோவிந்தராஜன் - 2010

எம். ஜி. ஆர் ஒரு சகாப்தம் Rajasekaran - 2007 - ‎

புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் என் ரமேஷ் - 2011

மக்கள் ஆசான் எம். ஜி. ஆர் ரங்கவாசன் - 2011 –

எனக்குள் எம்.ஜி.ஆர், காவியக் கவிஞர் வாலி வாலி - 2013

எம். ஜி. ஆர் கதை, திருத்தப்பட்ட பதிப்பு எஸ் விஜயன் - 2016

எல்லாம் அறிந்த எம். ஜி. ஆர் எஸ் விஜயன், விகடன் பிரசுரம் – 2008

எம்.ஜி.ஆர். பேட்டிகள்: மக்கள் திலகத்தின் அரிய பேட்டிகள் மற்றும் ...2013

புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் எம். ஆர் ரகுநாதன் – 2015

பாரத ரத்னா: எம். ஜி. ஆர் சௌந்தர் - 2016 -

மக்கள் திலகம் புரட்சித் தலைவர் எம். ஜி. ஆர்

நம்மோடு வாழும் மக்கள் திலகம் எம். ஜி. ஆர் டி. எம் சண்முகவடிவேல் - 2010 - ‎

வாழ்ந்து காட்டிய வள்ளல் எம்.ஜி.ஆர் சாரதி - 2011 - ‎No preview - ‎

எட்டாவது வள்ளல் எம். ஜி. ஆர் மணவை பொன்மாணிக்கம் - 2000

வாத்யார்: எம். ஜி. ஆரின் வாழ்க்கை ஆர் முத்துக்குமார் - 2009

எம். ஜி. ஆர். ஓர் சகாப்தம் Kē. Pi Rāmakiruṣṇan̲, ‎Es Rajat - 2007 –

மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் ஆசிரியர்: மேகலா சித்ரவேல் சேகர் பதிப்பகம்

ஆங்கில நூல்கள் (English Books)

Dr.M.G.R.A.Phenomenon (Author- Dr.Jagathrakshakan, Publisher- Appolo Publications, Chennai (1984))

All India Anna Diravida Munnetra Kazhagam (Author- Dr.R.Thandavan, Publisher- T.N.Academy of Political Science, Chennai (1984))

Poems- I Call M.G.R an Angel (Author- S.Yesupatham, Publisher- Packiam Publications, Chennai (1984))

Impact M.G.R.Films (Author- V.Kesavalu, Publisher- Movie Appreciation Society, Chennai (1990))

The Dynamic M.G.R (Author- A.P.Janarthanam M.P., Publisher- Chennai (1978))

M.G.R.-The Man and Myth (Author- K.Mohndass, Publisher- Panther Publishers, Chennai (1992))

The Image Trap (M.G.R Film & Politics) (Author- M.S.S.Pandian, Publisher- Sage Publications India, New Delhi (1992))

On the life and achievements of Marudur Gopalan Ramachandran, 1917-1987, Tamil film actor and former chief minister of Tamil Nadu, India.

Biography of Em. Ji. Rāmaccantiran̲, 1917-1987, actor and former chief minister of Tamil Nadu.

Biography of Em. Ji. Rāmaccantiran̲, 1917-1987, actor and former chief minister of Tamil Nadu.

முழு விபரங்கள் கிடைக்கப் பெறாத நூல்கள்

வேதநாயகன் (ஆசிரியர் – ரவீந்திரன், வெளியீடு - சென்னை (1993))

தர்மதேவன் எம்.ஜி.ஆர் வீரவரலாறு காவியம், வெற்றிச் செல்வர் எம்.ஜி.ஆர் வீர வரலாறு (வெளியீடு - ஸ்ரீ தனலட்சுமி பதிப்பகம், சென்னை)

குண்டுக்கும் அஞ்சாத எம்.ஜி.ஆர் (ஆசிரியர் – கலைமணி, வெளியீடு – தமிழ் நிலையம், சென்னை (1967))

ஆயுள் பரிசு (ஆசிரியர் – கவிஞர் முத்துலிங்கம், வெளியீடு - கவிப்பிரியா பதிப்பகம், சென்னை)

இதயத்தில் எம்.ஜி.ஆர் (ஆசிரியர் – மா.செங்குட்டுவன், வெளியீடு – வண்ணக் களஞ்சியம், சென்னை (1967))

தமிழக முதல்வர் (ஆசிரியர் – சிவாஜி, வெளியீடு - அசோகன் பதிப்பகம், சென்னை)

எம்.ஜி.ஆர் இதழியல் நோக்கு (வெளியீடு - சேகர் பதிப்பகம், சென்னை)

அண்ணாவின் அரசு (வெளியீடு - அன்பு நிலையம், சென்னை)

அண்ணாவின் பாதை (வெளியீடு – ராஜா பதிப்பகம், அருப்புக்கோட்டை)

அண்ணா வழியில் எம்.ஜி.ஆர் (வெளியீடு – ஜெயா பப்ளிகேசன்ஸ், சென்னை)

எதிர்ப்பில் வளர்ந்த எம்.ஜி.ஆர் (வெளியீடு – எம்.ஆர்.வி. பப்ளிகேசன்ஸ், சென்னை)

எம்.ஜி.ஆர்.ஆட்சியில் அண்ணா அறிவாலயத்திற்குத் தடையா?

வெற்றித்திருமகன் எம்.ஜி.ஆர்.(ஆசிரியர் – நியூஸ் ஆனந்தன்)

வரலாற்று நாயகன் (ஆசிரியர் – கரு.கருப்பையா)

புரட்சித்தலைவர் (ஆசிரியர் – தேவிப்பிரியன்)

யுக வள்ளல் எம்.ஜி.ஆர் (ஆசிரியர் – சக்கரைப்புலவர்)

தலைவா உன்னை யாசிக்கிறேன் (ஆசிரியர் – அடியார்)

இதயதெய்வம் எம்.ஜி.ஆர் in Indian News Papers(Author- Dr. Mohanrajan)

சி.எம். Speech's
தொகுப்பு - மல்லிகா பிரபாகரன்.........

orodizli
23rd August 2020, 01:40 PM
எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்கள் முதன்முதலாக எம்.ஜி.ஆருக்காகப் பாடி வெளிவந்த பாடல் ஆயிரம் நிலவே வா என தொடங்கும் பாடல். பதிவு அன்று spb அவர்களுக்கு கடுமையான காய்ச்சல் காரணமாக ஒலிப்பதிவு ரத்தாகிவிட்டது. வேறு யாரையாவது பாட வைக்கலாம் என்று சொன்னபோது mgr மறுத்துவிட்டாராம்.

"புதுப் பையன் mgr படத்தில் பாடப் போகிறேன் என்று எல்லோரிடமும் பெருமையாக சொல்லி இருப்பார். இப்போது பாட முடியாமல் போய்விட்டால் மிகுந்த ஏமாற்றம் ஆகிவிடும். பிறகு ராசி இல்லாதவன் என்று முத்திரை குத்திவிடுவார்கள். அவர் குணமாகி வந்து பாடட்டும்." என்று கூறிவிட்டார் எம்.ஜி.ஆர்.
பின்னர் உடல்நிலை சரியான பின் பாடினார் எஸ்.பி.பி.

அடுத்தவரின் வாழ்க்கை வரலாற்றிலும் முக்கிய கதாபாத்திரமாக இருப்பதுதான் எம்.ஜி.ஆரின் பெருமை....
🌟🌟🌟🌟🌟🌟.........

orodizli
23rd August 2020, 01:41 PM
டி.எஸ்.பாலையா....
�� தமிழ்த் திரையுலகின் பழம்பெரும் நடிகர் டி.எஸ்.பாலையா 1914ஆம் ஆண்டு ஆகஸ்ட் 23ஆம் தேதி தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள சுண்டங்கோட்டை என்ற ஊரில் பிறந்தார். இவர் திருநெல்வேலியைச் சேர்ந்தவர்.

�� இவர் இளம் வயதிலேயே நடிப்பின் மீது அதிக ஆர்வம் கொண்டிருந்தார். அதனால், பல நாடக கம்பெனிகளில் சேர்ந்து, பல்வேறு வேடங்களில் நடித்து, சிறந்த நடிகராக உருவானார். 1936ஆம் ஆண்டு சதிலீலாவதி என்ற திரைப்படத்தில் வில்லனாக அறிமுகமானார்.

�� இவர் துவக்க காலங்களில் வில்லன் வேடங்களில் முத்திரை பதித்திருந்தார். பிற்காலங்களில் இவர் நகைச்சுவை வேடங்களிலும் புகழ் பெற்றார். காதலிக்க நேரமில்லை, ஊட்டி வரை உறவு இவை இவரது நகைச்சுவை நடிப்பிற்கு மகுடங்களாக அமைந்தன.

�� கதாநாயகனாகவும், வில்லனாகவும், குணச்சித்திர வேடங்களிலும் தமிழ்ப்பட உலகை கலக்கிய டி.எஸ்.பாலையா 1972ஆம் ஆண்டு ஜுலை 22ஆம் தேதி மறைந்தார்....

ஜூபிடர் பிலிம்ஸ் தயாரித்த 'மோகினி' படத்தில் எம்.ஜி.ஆரும், டி.எஸ்.பாலையாவும் இரண்டு நாயகர்களாக இணைந்து நடித்தார்கள். இதில்முதல் நாயகன் அதாவது படத்தின் கதாநாயகன் யார்? என்ற பிரச்சனை வந்தபோது டி.எஸ்.பாலையா, எம்.ஜி.ஆர். கதாநாயகனாக இருக்கட்டும் நான்துணை நாயகனாக இருக்கிறேன் என்று விட்டுக் கொடுத்தார்.
அந்த நன்றிக்காக எம்.ஜி.ஆர். ஒரு படத்தையே விட்டுக் கொடுத்தார். 'கற்பகம்' படத்தில் கதாநாயகனாக நடிக்க வேண்டும் என்று டைரக்டர் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் எம்ஜிஆரிடம் கேட்டார். அதற்கு எம்.ஜி.ஆர், கதையில் வரும் மாமனார் வேடத்தில் டி.எஸ்.பாலையா நடிப்பதாயிருந்தால் நான் நடித்து தருகிறேன் என்றார். ஆனால் கதைக்கு எஸ்.வி.ரங்காராவ்தான் பொருத்தமாக இருப்பார் என்றார் டைரக்டர். கே.எஸ்.ஜி. அப்படியானால் வேறு யாரையாவது நடிக்க வைத்து எடுத்துக் கொள்ளுங்கள் என்றார் எம்.ஜி.ஆர். அதன்பிறகுதான் ஜெமினி நடித்தார்.
எம்.ஜி.ஆர்.நடித்த 'ராஜகுமாரி', 'மதுரைவீரன்', 'அந்தமான் கைதி', 'தாய்க்குப்பின் தாரம்', 'புதுமைப்பித்தன்', 'பாக்தாத் திருடன்', 'ராஜா தேசிங்கு', 'பணம் படைத்தவன்', 'பெற்றால்தான் பிள்ளையா' போனற் படங்களில் சிறப்பாக நடித்தார் பாலையா..........

orodizli
23rd August 2020, 01:45 PM
1958 ஆம் ஆண்டு வெளியான புரட்சி நடிகர் எம். ஜி. ஆர்., அவர்களின் தயாரிப்பில் இயக்கத்தில் இரு வேட பவனியில் உருவாகி தென்னக மெங்கும் மட்டுமல்லாது.... உலகமெங்கும் திரையிடப்பட்ட முதல் வெற்றி காவியமாக திகழ்ந்தது...*
"நாடோடி மன்னன்" திரை(பட)க்காவியம்.

22 .08 .1958 ல் இத்திரைக்காவியம் வெளியாகி இன்றுடன் 62 ஆண்டுகள் (22.08.2020) நிறைவு பெறுகிறது, வெற்றிகரமாக 63 ம் வருடம் தொடங்குகிறது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கின்றோம். 62 ஆண்டு காலத்தில் ஒரு திரைப்படம் இன்றும் ஒரு மகத்தான வசூலை படைத்துக் கொண்டிருக்கிறது வெள்ளித்திரையில் வலம் வந்து கொண்டிருக்கிறது என்றால்.....
பெரும் சாதனையாகும்.
*
1931 ஆம் ஆண்டில் இருந்து இன்று (2020 ஆம் ஆண்டு) மார்ச் வரை வெளியான திரைப்படங்களிலேயே அதிகப்படியான வெளியீடுகளில் அதிகப்படியான நாட்கள் வாரங்களைக் கடந்து பல கோடிக்கணக்கான வசூலை பெற்றுத் தந்த காவியம்*
நாடோடி மன்னன் மட்டுமே.

நாடோடி மன்னன் திரைக்காவியத்தின் ஐம்பதாவது ஆண்டு பொன்விழாவை ஒலிக்கிறது உரிமைக்குரல் மாத இதழ் 2009 ஆம் ஆண்டு சென்னை ராணி சீதை மன்றத்தில் சிறப்பாக கொண்டாடி மகிழ்ந்தது. கிட்டத்தட்ட அதிகப்படியான நட்சத்திரங்கள் கலைஞர்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.

16 .08 .2009 ஆம் ஆண்டு சென்னை ராணி சீதை ஹாலில் அனைத்து புரட்சித்தலைவரின் அமைப்புகள் எல்லாம் ஒன்று கூடி மதியம் 2 மணி முதல் இரவு 9 மணி வரை சிறப்பான முறையில் நடைபெற்ற நாடோடி மன்னன் திரைப்படத்தில் 50 வது பொன்விழா ஆண்டு மட்டுமல்லாது..... அதே சமயம் 1947 ஆம் ஆண்டு முதல1960* ஆண்டு வெளியான திரைப்படங்கள் அனைத்திற்கும் பொன்விழாவைக் கொண்டாடி மகிழ்ந்தோம்.*
சிறப்பு திரைப்பட கண்காட்சி நடைபெற்றது. காலையில் கிட்டத்தட்ட ஒரு 300 எம்ஜிஆர் பக்தர்கள் ஒன்று கூடி நடத்திய ஆலோசனைக் கூட்டம் சென்னை ராயப்பேட்டை சமூக நலக் கூடத்தில் நடைபெற்றது..........

orodizli
23rd August 2020, 01:46 PM
புரட்சித்தலைவரின் 50 ஆண்டுகால திரைப்படங்களை போற்றும் பொன்விழா மலர் வெளியிடப்பட்டது.

விழாவில் புலவர் புலமைப்பித்தன் அவர்கள் தலைமை தாங்க*
நாகை தருமன் அய்யா அவர்கள் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க இவ்விழாவில் கலந்து கொண்ட திரைப்பட கலைஞர்கள்**
பி.எஸ். சரோஜா அவர்கள், ராஜசுலோச்சனா அவர்கள், வெண்ணிற ஆடை நிர்மலா அவர்கள், ராஜஸ்ரீ அவர்கள்,
சச்சு அவர்கள, கவிஞர்கள் முத்துலிங்கம் அவர்கள்,.பூவை செங்குட்டுவன் அவர்கள், மற்றும் இந்த நிகழ்ச்சிக்கு ஒருங்கிணைப்பாளராக இருந்தவர் கவிஞர் பிறைசூடன் அவர்கள் மற்றும் ஒளிப்பதிவாளர்கள் மற்றும் டெக்னீஷியன்கள் இயக்குனர்கள் என பலரும் கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சியில் அருமையான இசை நிகழ்ச்சியும் நடைபெற்றது.*
இந்த நிகழ்ச்சியை முதன் முதலில் தலைநகர் சென்னையில் நடத்திய பெருமை நமது ஒலிக்கிறது உரிமைக்குரல் மாத இதழை சாரும்.

இதற்கு நாடோடி மன்னன் திரைக்காவியம் 2006ம் ஆண்டு சென்னையில் பல திரையரங்குகளில் வெளியிடப்பட்டது. பாரத் திரையரங்கில் ஒரு வாரத்தில் மட்டும் இரண்டு லட்சத்து 85 ஆயிரத்தை வசூலாக கொடுத்து.... தொடர்ந்து சென்னை ஆல்பர்ட் திரையரங்கில் மூன்று வாரங்கள் ஓடி அங்கும் நாடோடி மன்னன் திரைப்படத்தி 48வது ஆண்டு விழா அரங்கேறியது.

2018 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் சென்னையில் நாடோடி மன்னன் திரைக்காவியத்தின் அறுபதாவது ஆண்டு வைர விழா சீரும் சிறப்புமாக ஒலிக்கிறது உரிமைக்குரல் மாத இதழ் சார்பாக காலை 10 மணி முதல் இரவு 9 மணி வரை அனைத்து கலைஞர்கள் பங்கு கொண்ட இந்நிகழ்ச்சி ஒரு வெற்றித் திருவிழாவாக திகழ்ந்தது.

அதே 2018 ஆம் ஆண்டு சென்னை ஆல்பட் திரையரங்கில் 35 நாட்கள் ஓடி மிகப்பெரிய வெற்றியைப் படைத்தது நாடோடி மன்னன் திரைக்காவியம். அத்திரைப்படத்தின் 25-வது நாள் விழா பல அமைப்புகள் சார்பில்* நடந்தது..........