PDA

View Full Version : Nadigar Thilagam Sivaji Ganesan - Part 22



Pages : 1 2 3 [4] 5

sivaa
31st December 2020, 09:24 AM
பெயருக்கு கொடுக்காமல் தேவை அறிந்து கொடை கொடுத்த
நிஜவள்ளல் கர்ண பிரபு வள்ளல் சிவாஜி கணேசன் ஒருவர் மட்டுமே.


(நன்றி மதி ஒளி 1969)

சிவாஜி கணேசன் ரூபாய் 10 ஆயிரம் நன்கொடை!

ஆந்திர வெள்ள சேதத்திற்கு உதவி!

ஆந்திராவில் வெள்ள சேதத்திற்கு நடிகர் திலகம் சிவாஜி கணேசன்
ரூபாய் 10,000 ஆயிரம் நன்கொடை அளித்திருக்கிறார்.

ஆந்திராவில் பேய் மழை பெய்து பெரு வெள்ளம் ஏற்பட்டதால்
ஆயிரம் பேர் வரை செத்தும்,கோடிக் கணக்கான ரூபாய்
மதிப்புள்ள பயிர்கள் நாசமானதும் தெரிந்ததே!

இந்த வெள்ள சேதத்திற்கு ஆந்திர முதல் மந்திரி
நிவாரண நிதி திரட்டுகிறார்.
அதற்கு நடிகர் திலகம் சிவாஜி கணேசன்
ரூ 10,000 நன்கொடை அளித்திருக்கிறார்.

இந்த கொடைக்கான செக் ஆந்திர முதல் மந்திரி
பிரம்மானந்த ரெட்டியின் பெயருக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.

(இமேஜில் உள்ளவை)

நன்றி மதி ஒளி 1969.

https://scontent.fybz2-2.fna.fbcdn.net/v/t1.15752-9/134644060_466285757703758_2456300010906708558_n.pn g?_nc_cat=102&ccb=2&_nc_sid=ae9488&_nc_ohc=rTuSR5MHIDYAX-9vbyl&_nc_oc=AQnDVj_mX_0oxqDuRdcch2wXiFiUAse1GsZ0SUCXyaQ glO_JyCS50v-h5oHC-DE89Ko&_nc_ht=scontent.fybz2-2.fna&oh=cf28a7f7c635a31aae136bc9f2e9d07d&oe=60121728

sivaa
1st January 2021, 09:56 AM
மய்யம் இணைய உறவுகள் அனைவருக்கும் இனிய ஆங்கில புது வருடவாழ்த்துக்கள்.
2021ஆம் ஆண்டு அனைவருக்கும் இனியதாக அமைந்திட வாழ்த்துக்கள்.

https://scontent.fybz2-1.fna.fbcdn.net/v/t1.0-9/135048569_3661379767275312_8971895873027989398_n.j pg?_nc_cat=108&ccb=2&_nc_sid=8bfeb9&_nc_ohc=x0mRGrMbnfsAX_zQYvY&_nc_ht=scontent.fybz2-1.fna&oh=697130b04e2b60312b11d6f923c8a728&oe=60128212

sivaa
1st January 2021, 09:57 AM
2021 புத்தாண்டு முன்னிட்டு நடிகர் திலகத்தின் சூப்பர் ஹிட் திரைக்காவியங்கள்!!

சரஸ்வதி சபதம்- 2pm பாலிமர் சேனலில்,

சிவந்த மண் - 4 pm சன் லைப் சேனலில்,

உயர்ந்த மனிதன் - 7 pm ஜீ திரை சேனலில்,

கௌரவம் - 10 pm ஜெயா மூவி சேனலில்,

https://scontent.fybz2-1.fna.fbcdn.net/v/t1.0-9/133506325_3674753022641561_6300572810318142582_o.j pg?_nc_cat=108&ccb=2&_nc_sid=730e14&_nc_ohc=foSJTfO2DjQAX9NnseC&_nc_ht=scontent.fybz2-1.fna&oh=37b88bb03c546d151336e56c46422128&oe=60161A44

Thanks Sekar Parasuram

sivaa
1st January 2021, 10:01 AM
அன்பளிப்பு 1/01/1969 .இன்று 51 ஆண்டுகள் நிறைவு.

https://scontent.fybz2-1.fna.fbcdn.net/v/t1.0-9/133792083_2817323125149164_7107250755713281837_o.j pg?_nc_cat=108&ccb=2&_nc_sid=730e14&_nc_ohc=m82wTeGJFtoAX-XrQ5s&_nc_ht=scontent.fybz2-1.fna&oh=cb6c78a56238a77753a8541e33ff187c&oe=60125545


Thanks Vcg Thiruppathi

sivaa
1st January 2021, 11:04 PM
இன்று மதுரை சக்தி திரையரங்குக்கு வருகை தந்த பிரஸ்டிஜ் பத்மனாப ஐயர்--- சாவித்திரி மாமிக்கு அமோக வரவேற்பு அளிக்கப்பட்டது..

அனைவரும் வாருங்கள் ஐயனை தரிசனம் செய்யுங்கள்...

புத்தாண்டில் மக்களைனைவரும் நல்வாழ்வுக்கு ஆசி பெறுங்கள்.....
https://scontent.fybz2-2.fna.fbcdn.net/v/t1.0-9/133224494_1361261920888549_5243270091948614874_n.j pg?_nc_cat=103&ccb=2&_nc_sid=b9115d&_nc_ohc=Nvg1sxvHYgUAX-ocG7r&_nc_ht=scontent.fybz2-2.fna&oh=c822377546a01f48a1426045764580c8&oe=6015110A

https://scontent.fybz2-1.fna.fbcdn.net/v/t1.0-9/134731868_1361261960888545_3804734133060544463_n.j pg?_nc_cat=101&ccb=2&_nc_sid=b9115d&_nc_ohc=Z_eh9KoaM80AX9l7Fof&_nc_ht=scontent.fybz2-1.fna&oh=526918e00d8af59e43d14501561ce393&oe=60133C2D
https://scontent.fybz2-1.fna.fbcdn.net/v/t1.0-9/133515480_1361262114221863_3540650591763077716_n.j pg?_nc_cat=101&ccb=2&_nc_sid=b9115d&_nc_ohc=-kPmYbvc_lUAX-ppPxk&_nc_ht=scontent.fybz2-1.fna&oh=fd35516574601298b36ac63ebad69ea4&oe=6013B939

https://scontent.fybz2-2.fna.fbcdn.net/v/t1.0-9/134644902_1361262274221847_4413264747363060365_n.j pg?_nc_cat=102&ccb=2&_nc_sid=b9115d&_nc_ohc=swUxW3QjJQoAX9WNAnR&_nc_ht=scontent.fybz2-2.fna&oh=ce9d25486b33eb5e5c41eeed18432dc4&oe=60148B5A

https://scontent.fybz2-1.fna.fbcdn.net/v/t1.0-9/133802078_1361262617555146_1522519042907510623_n.j pg?_nc_cat=100&ccb=2&_nc_sid=b9115d&_nc_ohc=lsUUB3l3aNoAX9KuB87&_nc_ht=scontent.fybz2-1.fna&oh=bd47a24acd41be97cd292f2ab0ecb22e&oe=601630AB

https://scontent.fybz2-1.fna.fbcdn.net/v/t1.0-9/133607645_1361262837555124_8329801572271229386_n.j pg?_nc_cat=100&ccb=2&_nc_sid=b9115d&_nc_ohc=skdXpCkOF-EAX_gR4ks&_nc_ht=scontent.fybz2-1.fna&oh=525ee53c4c9241f710b7ddf83a025403&oe=6015B1E3



Thanks Lakshmanan Lakshmanan

sivaa
2nd January 2021, 09:01 AM
திருச்சி LA சினிமா AlC திரை அரங்கத்தில் வியட்நாம் விடுதிரையிட அனுமதி வழங்கியLA சினிமா பங்குதாரர் உயர்திரு பிரான்சிஸ் அவர் களுக்கும MAசிட்பண்ட்ஸ் அருணாசலம் அவர்களுக்கும்இந்த படத்தை டிஜிட்டல் தயாரித்த சென்னை சுப்பு. மற்றும் மதுரை திருச்சி விநியோகஸ்தர் மதுரை பாண்டி அவர்களுக்கும் தில்லைநகர் பாஸ்கர் புத்தூர் ராமச்சந்திரன் ஜெயபிரகாஷ் பிம நகர் RC பிரபு R C ராஜா R C ராமன் பிம ந கா நாரயாண சாமி ஆண்டர்ர் வீதி வெங்கட்ராமன் சுதர்சன் பிலிம்ஸ் கல்யாணம் ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் நன்றி நன்றி நன்றி

https://scontent.fybz2-1.fna.fbcdn.net/v/t1.0-9/134964646_1092422227864393_8825751738390060595_o.j pg?_nc_cat=100&ccb=2&_nc_sid=730e14&_nc_ohc=HxsXq-w0OGoAX9n-XnX&_nc_ht=scontent.fybz2-1.fna&oh=d821ba8de4f10dc59e268d81c485d8f8&oe=6016BD1C

Thanks Sivaji Annadurai Sivaji Annadurai

sivaa
2nd January 2021, 09:21 AM
https://scontent-ort2-2.xx.fbcdn.net/v/t1.0-9/133737877_10214291011828931_4899217478781396750_o. jpg?_nc_cat=111&ccb=2&_nc_sid=825194&_nc_ohc=cLfrVG5leAoAX-34EQj&_nc_ht=scontent-ort2-2.xx&oh=fc260703917cee535622c904a4c38582&oe=60153988

sivaa
3rd January 2021, 06:20 AM
1978 களில் பைலட் பிரேம்நாத் இலங்கையில் படப்பிடிப்பு
நடைபெற்ற வேளைகளில் பைலட் பிரேம்நாத் படப்பிடிப்பு ,
படக்கலைஞர்கள் பற்றிய செய்திகள்,
மற்றும் இலங்கை ரசிகர்களின் மகிழ்ச்சி நிகழ்வுகள் போன்றவற்ரை
தமிழ் பத்திரிகைகளில் வெளிவரவிடாமல்
சிவாஜி கணேசனை கனவிலும் நினைவிலும்
எதிரியாக பார்க்கும் கும்பல் தமிழ் நாட்டில், பத்திரிகைகளை
விலைக்கு வாங்கி தடுத்துவிட்டன. அப்படி பார்க்கமுடியாமல்போன
பைலட் பிரேம்நாத் படக்குழுவினர் சம்மந்தமான
இலங்கை பத்திரிகைகளில் வெளிவந்த
ஒரு சில செய்திகள் நம் தமிழ் நாட்டு நண்பர்கள் பார்வைக்காக.
.................................................. ...................................
நன்றி மித்திரன் .

பைலட் பிரேம்நாத் கலைக்குழுவினரைப்பற்றி ஒரு விமர்சனக் கண்ணோட்டம்!
திரைக்குப்பின் நடந்த சம்பவக் கோர்வை!

பைலட் பிரேம்நாத் கிசு.. கிசு...


சிவாஜிக்கு சபாஷ்!

பைலட் பிரேம்நாத் படக் குழுவிலேயே ரசிகர்களால்
மிகவும் கவரப்பட்டவர்கள் சிவாஜி கணேசன், மனோரமா,
ஜெய்கணேஷ், சத்தியப்பிரியா, பிரேமானந்த்!

பார்க்க வந்த பார்வையாளர்கள் அனைவருடனும்
மகிழ்வோடு சிரித்துப் பழகியவர்கள் இவர்கள்தான்.

சிவாஜியை காண பல கெடுபிடிகள் இருந்தாலும்,
அவரை நேரில் கண்டவர்களுக்கு அவர் தந்த வரவேற்பு மறக்கவேமுடியாது.
மிகவும் அடக்கத்துடன் ,மகிழ்வுடன் உள்ளம் திறந்து உரையாடினார்.

இரவில் கதவைத்தட்டிய ரசிகர்களிடம் தன் சினத்தை காட்டாது ஜெய்கணேஷ் உரையாடினார்.
என்னோடு படம் பிடித்துக்கொள்ள வேண்டுமா? வாங்க...வாங்க... என்று சொல்லி
சளைக்காமல் போஸ் தந்தவர் ஜெய்கணேஷ்.! நகைச்சுவையாகப்பேசி
அனைவரையும் சிரிக்க வைத்தார்.

பிரேமானந்தை சுற்றி இளம் ரசிகைகள் கூட்டம்! கமலஹாசனுக்கு
இத்தனை கூட்டம் இருக்குமோ என்னவோ
பிரேமானந்துக்கு இருந்தது!

நான் நீ என்று அவருக்கு ஏராளமான பரிசுகளை
ரசிகர்கள் அளித்தார்கள்.

மனோரமா ஒவ்வொருவரையும் குசலம் விசாரித்தார்.
மிகவும் சிம்பிளாக பழகினார். சத்தியப்பிரியா பத்திரிகையாளர்களுடன்
மட்டுமன்றி தன்னை காணவந்தவர்களிடம் எல்லாம்
கல கலப்பாக பழகினார்.

ஶ்ரீதேவி முன்னேறி வரும் இளம் நடிகை!
இவரை காணப் போனவர்கள் எல்லோருக்குமே ஏமாற்றம்தான்.
யாருடனும் முகம் கொடுத்துப் பழகவில்லை.

மூன்று முடிச்சு படத்தை பார்த்துவிட்டு ,
இவரைக்காணப்போனவர்களுக்கு பெரும் ஏமாற்றம்.
ரூமை விட்டு தலை காட்டவே மறுக்கிறார்.
பத்திரிகையாளர்களிம் பேச நடுங்குகிறார்.
ஆட்டோகிராப் போடுவது இவருக்கு ஒரு அலர்ஜி!

பல படங்களில் நடித்துவரும் ஶ்ரீதேவி இப்படி இருக்கலாமா?
ஜெய்சங்கருடன் பல படங்களில் நடித்தால் மட்டும் போதுமா?
அவரிடம் இருந்து பழகக்கற்கவேண்டாமா?

(இமேஜில் உள்ளவை)

நன்றி மித்திரன்

https://scontent-ort2-2.xx.fbcdn.net/v/t1.15752-9/135377328_388643955564058_1750633701756832488_n.pn g?_nc_cat=106&ccb=2&_nc_sid=ae9488&_nc_ohc=o3sues0yUlMAX-JlZ5H&_nc_ht=scontent-ort2-2.xx&oh=8c0b589c959cb2eea1bb72b00c5753d0&oe=6014D15C

sivaa
3rd January 2021, 08:20 PM
வியட்நாம் வீடு திரைப்படம் பிளக்ஸ் பேனர்கள் வேலூர், காட்பாடி ஸ்ரீவிஷ்னு திரையரங்க வாசலில் காட்பாடி சிவாஜி மன்றத்தினரால் வைக்கப்பட்டது.

காட்பாடி ஸ்ரீவிஷ்னு திரையங்க வாசலில் 01.01. 2021 அன்று மாலை 5.00 மணிக்கு மேளதாளத்துடன், பட்டாசுகள் வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும், பிரிஷ்டீஜ் பத்தமநாபரையும் வரவேற்ற தருணம்.

வேலூர் மாவட்ட சிவாஜி, பிரபு, விக்ரம் பிரபு ரசிகர்கள் அனைவருக்கும் கலந்து கொண்டார்கள்.

.விழா ஏற்பாடு செய்தவர்கள்.
திரு.V.சிவாஜிரவி. மாவட்ட தலைவர்.
வேலூர் சிவாஜி மன்றம்.

திரு.D.சிவாஜிரவி. நகரத்தலைவர். காட்பாடி சிவாஜி மன்றம்

விழாவில் சென்னை. திரு.M.L.கான், நேஷ்னல் பிச்சர்ஸ், திரு.R.கார்த்திகேயன்,
வேலூர் சிவாஜி மன்ற மாவட்ட செயலாளர் திரு.லோகநாதன், பிரபு மன்ற மாவட்ட தலைவர்.திரு.அன்பழகன், திரு.வீரமணி, திரு.குமார், ஆம்பூர். திரு. சிவாஜிபழனி. குடியாத்தம் திரு.சங்கர், திருபாலு, ராணிப்பேட்டை திரு.ஆனந்தன் BHEL,
பனப்பாக்கம் திரு.எல்லப்பன், திரு.ராமன். ஆற்காடு திரு.பாபு, வேலூர்.திரு.C.சிவாஜி செல்வம், திரு.சிவாஜிஜெகதீசன், திரு.ஏழுமலை திரு.பாலாஜி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.

ச.அமரன்.வேலூர்.
https://scontent.fybz2-1.fna.fbcdn.net/v/t1.15752-9/135472176_1059257324540995_7028838981913381991_n.p ng?_nc_cat=101&ccb=2&_nc_sid=ae9488&_nc_ohc=31inLTLIZLMAX-eWVom&_nc_ht=scontent.fybz2-1.fna&oh=9f7a2ec72d4fa1aa93a9958a631c5477&oe=6018E41E

https://scontent-ort2-2.xx.fbcdn.net/v/t1.15752-9/136104803_401049377847275_3611856027006501283_n.pn g?_nc_cat=111&ccb=2&_nc_sid=ae9488&_nc_ohc=gyHWfmX2CdIAX-Bg15J&_nc_ht=scontent-ort2-2.xx&oh=d2529f79262806ff2377547fa87685fd&oe=6017DEDD


https://scontent-ort2-2.xx.fbcdn.net/v/t1.15752-9/135479412_447742946249368_6842639409067149536_n.pn g?_nc_cat=107&ccb=2&_nc_sid=ae9488&_nc_ohc=iuU2K9s-S54AX9pvyw1&_nc_ht=scontent-ort2-2.xx&oh=08d490b39ccd7888129e8c610de5d958&oe=60166DC7

https://scontent.fybz2-1.fna.fbcdn.net/v/t1.15752-9/135317696_509356303381738_1754096055962458331_n.pn g?_nc_cat=109&ccb=2&_nc_sid=ae9488&_nc_ohc=i2jNJVbzofAAX8-0-1N&_nc_ht=scontent.fybz2-1.fna&oh=6317fe8817ce1c36e5f2136d0ce41067&oe=60168064

https://scontent-ort2-2.xx.fbcdn.net/v/t1.15752-9/135485783_2594510130849047_8742246087282225605_n.p ng?_nc_cat=110&ccb=2&_nc_sid=ae9488&_nc_ohc=Hvwb_cdmltwAX8d_u_4&_nc_ht=scontent-ort2-2.xx&oh=64b5db2cf89b7ec653cd257b87cf6151&oe=6016B9BF


Thanks Amaran Amaran

sivaa
4th January 2021, 01:37 AM
https://scontent.fybz2-2.fna.fbcdn.net/v/t1.15752-9/134959176_416198606196056_3299863230225961819_n.jp g?_nc_cat=105&ccb=2&_nc_sid=ae9488&_nc_ohc=itk1SIlyzrUAX-vLPRh&_nc_ht=scontent.fybz2-2.fna&oh=b7e800cb982e742d8f8e50deed7b188a&oe=60175F03

Russelldwp
5th January 2021, 08:19 PM
தலை நிமிர்ந்து சொல்வோம் சிங்கத்தமிழன் சிவாஜி ரசிகன் என்று --ஏவிஎம் நிறுவனத்தின் தயாரிப்பான எங்கள் எதிரி நடிகரின் நடிப்பில் கலர் படமான அன்பே வா திருச்சி எல்.ஏ சினிமாவில் முதல் காட்சியிலேயே 7 நபர் வந்ததால் அசிங்கப்பட்டு அந்த காட்சியோடு தூக்கி எறியப்பட்ட அவலம் --கட்சி போஸ்ட்டர்ல் தான் ஸ்டாம்ப் ஸைசுக்கு தள்ளப்பட்ட இவர் படத்துக்கு எனோ ரூபாய் 110 கொடுக்க ஒரு ரசிகருக்கு கூட திராணி இல்லை --எங்கள் தெய்வத்தின் வியட்நாம் வீடு கருப்பு வெள்ளை படம் தான் முழுக்க முழுக்க குடும்ப படம் போஸ்டர் நகரில் எங்கும் இல்லை --ஆனாலும் வெள்ளி அன்று மாலை காட்சி ஹவுஸ் புல் --ஞாயிறு மாலை காட்சி ஹவுஸ்புல் --ஞாயிறு மாலை காட்சியில் திரையரங்கு நிர்வாகத்தினர் பகிர்ந்து கொண்டது mgr படங்கள் முருகன் பேலஸ் கெயிட்டி முதலிய மூன்றாம் தர அரங்குகளில் தான் அவர் ரசிகர்களே சென்று பார்க்கிறார்கள் மற்றபடி ஏசி அரங்குகளில் இவர் படங்களை பார்ப்பதை மக்களும் அவர் ரசிகர்களும் விரும்பவில்லை என்றார் குறிப்பு --சென்ற வருடம் வெளியான வசந்த மாளிகை சோனா திரையில் ஞாயிறு மாலை காட்சி ஹவுஸ் புல் தற்போது வியட்நாம் வீடு வெள்ளி மாலை மற்றும் ஞாயிறு மாலை ஹவுஸ் புல் எந்த நிலையிலும் எங்கள் சிவாஜி அவர்களோடு திரை பயணம் செய்த போதும் இறந்த பின்பு சரி எங்களிடம் தோல்வி ஒன்றே எதிரி நடிகருக்கு மக்கள் கொடுக்கிறார்கள்

sivaa
5th January 2021, 10:30 PM
Dindigul Ganesh sunday evening Vietnam veedu movie
https://scontent.fybz2-2.fna.fbcdn.net/v/t1.0-9/134993391_2850748481874629_5645548987561198581_n.j pg?_nc_cat=106&ccb=2&_nc_sid=730e14&_nc_ohc=l-DDAGC6QK0AX_dusCK&_nc_ht=scontent.fybz2-2.fna&oh=de2ac5a933aad32095008eb8c8696032&oe=601A9ECD

https://scontent.fybz2-2.fna.fbcdn.net/v/t1.0-9/135584979_2850748615207949_6922119738288045477_n.j pg?_nc_cat=102&ccb=2&_nc_sid=730e14&_nc_ohc=O-ZdOZ2QELMAX_zCQvD&_nc_ht=scontent.fybz2-2.fna&oh=8a0a0bc055c9626da504b62d3eaa0518&oe=601BED86

https://scontent.fybz2-1.fna.fbcdn.net/v/t1.0-9/135005324_2850748681874609_7178077249497781379_n.j pg?_nc_cat=108&ccb=2&_nc_sid=730e14&_nc_ohc=D5nWNfcVJeoAX-pnTCH&_nc_ht=scontent.fybz2-1.fna&oh=664b908a581df9cd47adcf5e87746b64&oe=601990EC



Thanks Venkatesh Waran

sivaa
5th January 2021, 10:31 PM
பொன்னியின் செல்வன் தொடரில் குந்தவை,நந்தினி மோதலை கல்கி அழகாய் விவரித்திருந்தார் இரண்டாம் பாகத்தில்...
தஞ்சை அரண்மனையில் நவராத்திரி விழாவில் ஒவ்வொரு நாளும் இருவருக்கும் இடையே ஏற்படும் மோதலை இப்படி விவரித்திருந்தார் கல்கி...
இருவரும்மே அந்த போராட்டங்களில் கடும் வேதனையை அனுபவித்தார்கள்..
இரு பெண் புலிகள் போல் ஒருவரை ஒருவர் காய படுத்தி கொண்டார்கள்.
ஆனால் அதிலும் ஒரு உற்சாக வெறி அடைந்தார்கள் என்று....

அது போல தான் இரு திலகங்களின் ரசிகர்களும் மல்லு கட்டி கொள்கிறார்கள்.
வேதனை அடைக்கிறார்கள்.இருந்தும் ஒரு உற்சாக வெறியும் அவர்கள் பெறுகிறார்கள்...

மீண்டும் ஒரு பூதத்தை கிளப்பி விட்டிருந்தார்கள் சில தினங்களுக்கு முன்னர்...
கொடுத்து சிவந்த கரங்கள் கர்ணனுக்கா?
வேட்டைக்காரனுக்கா? என்று...
இந்த விவாதத்தில் நடிகர் திலகத்திற்கு அநீதி இழைக்க பட்டது என்பதே மெய்..

நூற்றுக்கு நூறு படத்தில் ஒரு நாடகம் போடுவார் நாகேஷ்.
மாணவர் தலைவர்,நாரதர்,சாவித்திரி என்று மூன்று வேடங்கள் அவருக்கு..
ராமனை போல் ஒருவர் உண்டா உங்களிடம் என்பார் நாரத நாகேஷ்...
ராமன் எத்தனை ராமன் உண்டோ அத்தனை ராமனும் உண்டு என்பார் மாணவர் நாகேஷ்.

அடுத்து நாரதர் ராமனுக்கு பிறகு இன்னொரு இதிகாச பாத்திரமான கர்ணனை குறிப்பிடாமல் பறம்புமலை வள்ளல் பாரி போல் உண்டா? என்பார்.
மாணவர் உடனே பராங்கிமலை வள்ளல் உண்டு இங்கு உண்டு என்பார்...
நான் கூட நம்பி கைத்தட்டி மகிழ்ந்திருக்கிறேன் அந்த காட்சிக்கு...
இப்படியாக வள்ளல் என்றால் mgr தான் என்று ஒரு பிம்பம் வலுவாக கட்டமைக்க பட்டு வந்தது அன்று தொட்டு....
நடிகர் திலகம் இந்த வள்ளல் பட்டம் என்கிற மணிமுடிக்கு உரிமை கொண்டாட முனைந்ததே இல்லை,அதற்கான தகுதி தனக்கு இருந்தும்.. தனக்கு மட்டுமே இருந்தும்...

நான் இப்படி சொல்கிறேன்,பாருங்களேன் சரியா என்று?
ஒரு உயர்ந்த மனிதர் நிலம் வாங்கி கோயில் எழுப்பி, பிரகாரம், கோபுரம்,கலசம் அமைத்து நித்திய பூஜைகள் நடத்த நிவந்தமும் விட்டு....தன்னுடைய பெயரை மறைத்து கொள்கிறார்...

இன்னொரு விளம்பர பிரியர் அதே கோயிலில் மார்க்கழி மாதத்தில் பொங்கல்,சுண்டல் பிரசாத உபயம் செய்கிறார்.....உபயம் இன்னார் என்று ஒலிபெருக்கியில் அறிவித்து விட்டு...
கோயிலில் இருண்ட பகுதிகளில் tube light அமைக்கிறார்.அத்தனையிலும் அடியேன் தாசன் என்று தான் பெயரை பொறித்து வைக்கிறார்..

மக்களே!வள்ளல் என்று யாரை சொல்வீர்?
பொங்கல் சுண்டலை விழுங்கி விட்டு பிரசாத விநியோகஸ்தரை தானே வள்ளல் என்று வாழ்த்த தோன்றும்!

போகட்டும் விடுங்கள்!
நடிகர் திலகத்தின் வள்ளல் தன்மைக்கு சில சம்பவங்களை சொல்கிறேன்.....
பார்த்து பாராட்டுங்கள்.பகிருங்கள்...

1952 ஆம் ஆண்டு,ஜூனியர் விம்பிள்டனில் கலந்து கொள்ள திரு.R.கிருஷ்ணன் லண்டன் செல்ல வேண்டும்.அவரது தந்தை ராமநாதன் டென்னிஸ் விளையாடும் தன் நண்பர்கள் சிலரிடம் உதவி கேட்கிறார்.
அங்கே திரு.T.K.சண்முகம் டென்னிஸ் விளையாடுவதை வேடிக்கை பார்க்க வந்திருந்த கணேசன் என்கிற புது நடிகர்,பராசக்தி படத்தில் மாத சம்பளத்தில் நடிப்பவர் அவர்,தன்னுடைய ஒரு மாத சம்பளமான,250 ரூபாயையை கொடுக்கிறார்.R.ராமநாதன் திகைத்து மகிழ்ந்து அந்த கணேசனை தழுவி கொள்கிறார்...

1961 ஆம் ஆண்டு...அந்த கணேசன் இப்போது சிவாஜி கணேசன் என்று புகழ் பெற்று விட்டார்.
மராத்தியத்தில் koyna dam உடைந்து பெரும் சேதம்.
அணை உடனே சீரமைக்க பட வேண்டும்.
முதல்வர் Y.B.சவாண் தேசத்திற்கே வேண்டுகோள் வைக்கிறார் உருக்கமுடன்..
தெற்கே தமிழ் நாட்டில் அந்த சிவாஜி கணேசன் 11,00,000 ரூபாயை உடனே நிதியாக கொடுக்கிறார்.
1961 ஆம் ஆண்டில்..

அன்று 1951 ஆம் ஆண்டில் R.கிருஷ்ணனுக்கு கொடுத்தது போல ஒரு மாத ஊதியம் அல்ல இந்த 11,00,000 ரூபாய்.
ஏறத்தாழ பன்னிரண்டு படங்களில் நடித்தால் தான் அந்த தொகை ஊதியமாக கிடைக்கும்.அப்படி பன்னிரண்டு படங்களில் நடிக்க வேறு நடிகருக்கோ எனில் மூன்று,நான்கு ஆண்டுகள் ஆகும்.
நம் நடிகர் திலகத்திற்கே கூட 18 மாதங்களாவது ஆகும்..
ஒரு நொடியில் அறிவித்து கொடுத்தார் சிவாஜி அவர்கள்..அந்த 11,00,000ரூபாயை..
பம்பாயில் சிவாஜி பார்க்,இன்னும் சில இடங்களில் அமைந்துள்ள சத்திரபதி சிவாஜியின் சிலைகளுக்கு பெரும் நிதி கொடுத்திருக்கிறார் நம் சிவாஜி கணேசன்.
மராட்டியத்தின் மீது ஏன் பாசம்? தன் உடன்பிறவா சகோதரி லதா மங்கேஷ்கர் அந்த மாநிலத்து மகள் என்பதால் பாசம் என்கிறார் சிவாஜி கணேசன்..

இங்கே இரண்டாம் உலக தமிழ் மாநாட்டின் போது அமைக்க பட்ட சிலைகளில் வள்ளுவர் சிலைக்கு
பொறுப்பேற்று நிதி கொடுத்தவர் அறிவுக்கு விருந்தாகும் திருக்குறளே
வள்ளுவன் ஆக்கி நமக்களித்த அரும்பொருளே!
என்று திரையில் பாடி நடித்த நம் திலகமே.

பள்ளியில் தமிழ் பாடத்தில் ஒருபாடல்.
பெரும்பாணாற்று படையில் இருந்து...
வள்ளல் ஒருவரிடம் யானை ஒன்றை பரிசாக பெற்று வந்த பானன் ஒருவன் தான் பெற்று வந்த பரிசு எதுவென குறிப்பால் சொல்ல பானனின் மனைவி அதை யூகிக்கும் பாடல் ஒன்று..

படித்திருப்பீர்கள் நண்பர்கள் யாவரும்...
யானையை குறிக்கும் ஒவ்வொரு சொல்லாக பானன் சொல்ல,அந்த சொல்லுக்கு வேறு ஒரு பொருளை பானனின் மனைவி தவறாக புரிந்து கொண்டு சொல்ல...
மாதங்கம் என்பான்.அவள் மிகுந்த பொன் என்பாள்.
இறுதியாக கைமா என்பான் சும்மா கலங்கினாளே என்று முடியும் பாடல்..

வேடிக்கையான பாடல் அது.
ஆனால் வேடிக்கையாகவே பல யானைகளை கொடையாக கொடுத்தவர் நடிகர் திலகம்...
காஞ்சி காமாட்சி அம்மனுக்கு ஒன்று..
திருவானைக்கா அகிலாண்டஸ்வரிக்கு ஒன்று..
இன்னும் சில கோயில்களுக்கு கூட ... மட்டும் அல்ல,அமெரிக்காவில் இந்தியானா பொலிஸ் என்னும் நகரத்து சிறு பிள்ளைகள் மகிழ அங்குள்ள காட்சி சாலை ஒன்றிற்கு ஒரு யானை.....
கணேசன் என்ற தன்னுடைய பெயரால் கொடுத்தாரா,தங்க மலை ரகசியம் படத்தில் யானைகள் வளர்த்த taarzan ஆக நடித்ததால் கொடுத்தாரா?

நடித்த படங்கள் ஏழு தருகிறேன்.வைத்து சிவாஜி வாரம் நடத்தி கொள்ளுங்கள்.
வசூல் ஆனதில் தியேட்டர் வாடகை,கேளிக்கை வரி போக மீதத்தை யுத்த நிதியாக வைத்து கொள்ளுங்கள் என்று சொன்ன வள்ளல் இல்லை நடிகர் திலகம்.
School Master படத்தில் கவுரவ வேடத்தில் நடித்ததற்காக பந்துலு அவர்கள் கொடுத்த 100பவுன் எடையுள்ள தங்க பேனா,மனைவியின் ஏராள ஆபரணங்கள் ஆகியவற்றை யுத்த நிதியாக பிரதமர் சாஸ்திரி அவர்களிடம் கொடுத்து மகிழ்ந்தவர் நடிகர் திலகம்.

பிரான்ஸ்,பிரிட்டன் ஆகிய இரு வல்லரசுகளை சூயஸ் கால்வாய் விவகாரத்தில் கண்களில் விரல் விட்டு ஆட்டிய எகிப்து அதிபர் நாசருக்கு 3.5 லட்சம் ரூபாயில் நினைவு பரிசு அமைத்து கொடுத்தவர் அவர்...
அரசு செய்ய வேண்டிய கடமை அது.
காங்கிரஸ் அரசு செய்ய தவறியது.
கட்டபொம்மன் தூக்கில் இடப்பட்ட இடத்தை வாங்கி நினைவு சின்னம் அமைத்து அரசிடம் கொடுத்தவர் நம் வீரபாண்டிய கட்ட பொம்மன்.

1967 ஆம் ஆண்டு தோல்விக்கு பிறகு சத்தியமூர்த்தி பவனை நடத்த கூட 10,000 ரூபாய் இல்லாமல் நடிகர் திலகத்திடம் வந்து நின்றார் காமராஜர்.
கண்ணீருடன் வந்தவர் களிப்புடன் திரும்பினார்.
காரணம் நடிகர் திலகம் கொடுத்த தொகை மூன்று லட்சம்...

முதலிலேயே நான் சொன்னபடி கோயில் அமைத்து கோபுரம் எழுப்பி கலசம் அமைத்து கூடமுழுக்கு நடத்தியவர் அமைதியாக இருக்க....
மார்க்கழிபஜனையில் சுண்டல் கொடுத்தவர் கொடை வள்ளல் என்றால்....

யாரை எள்ளி நகையாடுவது!

அன்புடன் V.Vino Mohan...


Thanks Vino Mohan

sivaa
6th January 2021, 03:19 AM
சிவாஜி அவர்களின் வியட்நாம் வீடு
மறுவெளியீடு கொண்டாட்டங்கள்.




https://external.fybz2-2.fna.fbcdn.net/safe_image.php?d=AQG52_Rp3gx7b09P&w=500&h=261&url=https%3A%2F%2Fi.ytimg.com%2Fvi%2Fw3I3W952d2M%2 Fmaxresdefault.jpg&cfs=1&ext=jpg&_nc_cb=1&_nc_hash=AQF5gHgmXd1OgSIt


https://youtu.be/w3I3W952d2M

sivaa
6th January 2021, 04:25 AM
திருப்பூரில் வியட்நாம் வீடு கொண்டாட்டம்!!
https://scontent.fybz2-1.fna.fbcdn.net/v/t1.0-9/135505870_707675509731233_5271216598449967276_o.jp g?_nc_cat=101&ccb=2&_nc_sid=730e14&_nc_ohc=geKpxY_qNnMAX_6RSRZ&_nc_ht=scontent.fybz2-1.fna&oh=7b0a9b0e1cdee9cf84c3a1592bfffcbe&oe=601B5A24

https://scontent.fybz2-1.fna.fbcdn.net/v/t1.0-9/134790296_707675573064560_6446487851572068001_o.jp g?_nc_cat=108&ccb=2&_nc_sid=730e14&_nc_ohc=V_NMt2NQoSoAX8Z9P50&_nc_ht=scontent.fybz2-1.fna&oh=ce88e0dbd223638255ec6c68da7acd98&oe=601B0E8F

https://scontent-ort2-1.xx.fbcdn.net/v/t1.0-9/133790609_707675843064533_7062923108955816080_o.jp g?_nc_cat=107&ccb=2&_nc_sid=730e14&_nc_ohc=UKDXYSTm9kUAX_3j-pl&_nc_ht=scontent-ort2-1.xx&oh=fa1902646c4ba4dd51c8a649929d7271&oe=60195AC8




Thanks Sivaji Palanikumar

sivaa
6th January 2021, 04:45 AM
திருப்பூரில் வியட்நாம் வீடு கொண்டாட்டம்!!
https://scontent.fybz2-1.fna.fbcdn.net/v/t1.0-9/135505870_707675509731233_5271216598449967276_o.jp g?_nc_cat=101&ccb=2&_nc_sid=730e14&_nc_ohc=geKpxY_qNnMAX_6RSRZ&_nc_ht=scontent.fybz2-1.fna&oh=7b0a9b0e1cdee9cf84c3a1592bfffcbe&oe=601B5A24

https://scontent.fybz2-1.fna.fbcdn.net/v/t1.0-9/134790296_707675573064560_6446487851572068001_o.jp g?_nc_cat=108&ccb=2&_nc_sid=730e14&_nc_ohc=V_NMt2NQoSoAX8Z9P50&_nc_ht=scontent.fybz2-1.fna&oh=ce88e0dbd223638255ec6c68da7acd98&oe=601B0E8F

https://scontent-ort2-1.xx.fbcdn.net/v/t1.0-9/133790609_707675843064533_7062923108955816080_o.jp g?_nc_cat=107&ccb=2&_nc_sid=730e14&_nc_ohc=UKDXYSTm9kUAX_3j-pl&_nc_ht=scontent-ort2-1.xx&oh=fa1902646c4ba4dd51c8a649929d7271&oe=60195AC8




Thanks Sivaji Palanikumar

sivaa
6th January 2021, 04:49 AM
https://scontent-ort2-1.xx.fbcdn.net/v/t1.15752-9/136652510_229420218654523_3433642948808505369_n.jp g?_nc_cat=106&ccb=2&_nc_sid=ae9488&_nc_ohc=cmLU8P8s5SUAX_C6GJS&_nc_ht=scontent-ort2-1.xx&oh=88e6d248ae8a264d99c95122c8d98426&oe=601B473F

https://scontent.fybz2-2.fna.fbcdn.net/v/t1.15752-9/136339618_750188935907955_3869034148667494936_n.jp g?_nc_cat=105&ccb=2&_nc_sid=ae9488&_nc_ohc=xxw8b8_EVWMAX8hBaMF&_nc_ht=scontent.fybz2-2.fna&oh=957f212a5a8ea7428a07cb3ff3401204&oe=601BDB19
https://scontent.fybz2-2.fna.fbcdn.net/v/t1.15752-9/136147531_397811504616159_3962132730963191944_n.jp g?_nc_cat=105&ccb=2&_nc_sid=ae9488&_nc_ohc=TtDItyrkmloAX8QZ2Mm&_nc_ht=scontent.fybz2-2.fna&oh=a0fe09a48e842286d0fd36acd768aa2e&oe=601AF434



Thanks Venkatesh Waran

sivaa
6th January 2021, 04:50 AM
எதற்காக அழுகிறார்கள்?
இதில் என்ன இருக்கு அழ
என என் சிறு வயதில் இந்த படத்தை சகோதரியுடன் பார்த்தபோது கேள்வி வருவதுண்டு.
அதிலும் குறிப்பாக பெண்கள் இருப்பிடத்தில் அமர்ந்து படங்களை பார்ப்பதால்
பல இடங்களில் இருந்து அழுகை சத்தம் வரும்.
பின்னாளில் விபரம் தெரிந்த வயதில் இந்த படத்தை பார்க்கும் போது,
அழுகைக்காக காரணம் தெரிந்தது.
பலமுறை பாத்தாலும் கண்ணீர் வராமல் இருக்காது.https://static.xx.fbcdn.net/images/emoji.php/v9/td9/1.5/16/1f64f.png.
நல்ல கதை வேண்டுமா சிவாஜி படம் பாக்கலாம் என சொல்லும் அளவுக்கு பல்வேறு வகையான கதைகள் இவர் படங்களில் கிடைக்கும்.

திரையில் இவரை தன் குடும்பத்தில் ஒருவராக ஏற்றுக் கொண்ட காரணத்தாலேயே இந்த கண்ணீர் வருவதுண்டு.

மறுநாள் அக்கம்பக்கத்து வீட்டாரிடமும்
இதை சொல்லி தன் ஆதங்கத்தை தீர்த்துக்கொள்வார்கள் பெண்கள்.

தன் ஒவ்வொரு படத்தையும் பெண்களுக்கு
உண்டான அற்புதமான கதைக்கரு கண்டிப்பாக சிவாஜி கணேசன் படத்தில் இருக்கும்.
பல குடும்பங்கள் இவரை இன்றும் கொண்டாட காரணம் இதுவே என்பது என் கருத்து.

நல்ல படங்கள் சிலது சொல்லுங்க
என என் பாட்டியிடம் கேட்டால்,
அதில் முதலில் வருவது இந்த படம் தான்.
பாலும் பழமும்,
படிக்காத மேதை,
பாகப்பிரிவினை,
பார் மகளே பார்,
என பட்டியல் நீளும்.
எதை கொண்டு இவர் பெண்களை தன் பக்கம் திருப்பினார்?
என்று இன்றும் வியப்பது உண்டு.
இன்று டூரிங் டாக்கீஸ் இல்லாததால்
இந்த மாதிரி கதைகளை கொண்ட படங்களை மிகவும் தவறவிடுகிறோம்.
நன்றி

Thanks Siva Sri Kumar

sivaa
9th January 2021, 11:26 AM
நடிகர் திலகம் சிவாஜியின் 100 நாட்களுக்கும் மேலாக ஒடிய அதிகப்படியான திரைப்பட வெற்றிகளை மறைத்து விட்டு எண்ணிக்கையில் குறைந்த அளவிலான வெற்றிகளை பெற்ற பிற நடிகர்களை செய்திகளில் முன்னிறுத்தி வருகிறார்களே ஏன் எனக் கேட்டுவிட்டார் நண்பர் ஒருவர்,

அரசியலில் அதிக ஈடுபாடு கொண்ட நண்பருக்கு அரசியல் நிகழ்வுகள் கொண்டே விளக்கம் கொடுத்தேன்,

கடந்த 2019 ல் பாராளுமன்ற தேர்தலோடு சட்டமன்றத்தின் 22 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெற்றது தானே,

பாராளுமன்ற தேர்தலில் திமுக காங்கிரஸ் கூட்டணி 39 தொகுதிகளிலும்
அதிமுக கூட்டணி 1 இடத்திலும் வெற்றி பெற்றதல்லவா,

சட்டசபை இடைத்தேர்தலைப் பார்த்தால்
திமுக 13 இடங்களிலும்
அதிமுக 9 இடங்களிலும் வெற்றி பெற்றன,

எப்படி பார்த்தாலுமே திமுக அதிக இடங்களில் வெற்றி பெற்று இருக்கிறது

ஆனால் செய்தி ஊடகங்களைப் பொறுத்த அளவில் அதிமுக பெற்ற வெற்றியை திரும்ப திரும்ப சொல்லி பெரிய வெற்றியை போலக் காட்டினர்

அப்படித்தான் ஊடகங்கள் பலம் நிறைந்தவை,
பொய்யை மெய்யாக்க முடியும்,
மெய்யை பொய்யாக்க முடியும்,

Thanks Sekar Parasuram

sivaa
9th January 2021, 11:32 AM
14/01/2021 பொங்கல் முதல்
மதுரை சென்ட்ரல் மற்றும்
தூத்தக்குடி சத்யா

நடிகர் திலகத்தின்
சிவகாமியின் செல்வன்

https://scontent.fybz2-2.fna.fbcdn.net/v/t1.15752-9/137234200_242916440560591_6623463666450523181_n.jp g?_nc_cat=105&ccb=2&_nc_sid=ae9488&_nc_ohc=Eqf0YnCyvBgAX_PSVt_&_nc_ht=scontent.fybz2-2.fna&oh=b784b0b051868d572a9f43adf7dfc621&oe=601E027A

sivaa
10th January 2021, 11:31 AM
தங்கப்பதுமை 10/01/1959 . இன்று 62 ஆண்டுகள் நிறைவு.

https://scontent.fybz2-1.fna.fbcdn.net/v/t1.0-9/136423352_2824332407781569_7393063327584065200_o.j pg?_nc_cat=110&ccb=2&_nc_sid=730e14&_nc_ohc=POoO_z__XwQAX--vMzC&_nc_oc=AQm7xex8W9OXEwGHPvkTmdtcMrjSqd4TwqzGX21oqPx DblHYwbIqevooFmf7dBbCP58&_nc_ht=scontent.fybz2-1.fna&oh=45556cd11fac2facffbf795649ba6e68&oe=6021D94A

https://scontent.fybz2-1.fna.fbcdn.net/v/t1.0-9/136401666_2824313787783431_4796060789805259006_o.j pg?_nc_cat=111&ccb=2&_nc_sid=730e14&_nc_ohc=potBqOCs9dAAX_6eSHs&_nc_ht=scontent.fybz2-1.fna&oh=3248da2a2e3dc17e138a2759f81fa844&oe=60220EF0



Thanks Vcg Thiruppathi

sivaa
11th January 2021, 06:09 AM
சாதனை 10/01/1986. 34 ஆண்டுகள் நிறைவு.


https://scontent-ort2-2.xx.fbcdn.net/v/t1.0-9/135778184_2824313351116808_4892131173528256034_o.j pg?_nc_cat=106&ccb=2&_nc_sid=b9115d&_nc_ohc=JxDOqB5h3FgAX_5guhG&_nc_ht=scontent-ort2-2.xx&oh=1e4c31452f914a85cf7e060504ee448a&oe=60205FD2

Thanks Vcg Thiruppathi

Russellxor
12th January 2021, 12:34 AM
எங்கே தேடி அலைவது நல்ல விஷயங்களை பார்க்க! அது தானே மனதை செம்மைபடுத்துகிறது.மனிதன் வாழ்வு தடம் புரளாமல் இருக்க.அங்கே தான் கலைகள் கை கொடுக்கின்றன! கலை என்றவுடன் சுலபமாக்குகிறது சினிமா! சினிமா என்றவுடன் நூறு சதவீதத்திற்கும் மேலே நடிகர்திலகம் சிம்மாசனமாய் வந்து அமர்ந்து விடுகிறார்.
கை நீட்டியவுடன் காசு போடு.அது இயலாதவர்க்கு செய்யும் உதவி.தமிழ் மண்ணில் கால் வைத்த குணசேகரனாய் முதல் படத்திலேயே செய்தார்.அந்த உதவும் குணம் சிவாஜி ரசிகனின் மனதில் படிந்து விட்டது.அதுவே இன்று வரை அன்னை இல்லத்தின் வாசலில் வருடக் கணக்கில் அன்னதானமாய் செய்ய வைத்து விட்டது.அந்த நல்ல விஷயம்தான் கலைஞன் விதைக்க வேண்டும்.சிவாஜியின் மாபெரும் ஆளுமை செய்தது அதுதான்.
தமிழ் மக்கள் பாசக்கார மக்களாம்.குடும்ப உறவுகளை கொண்டாடி தீர்த்து விடுவார்கள்..ராஜசேகரனாய் தங்கை மேல் பாசம் காட்டி நடித்தாலும் நடித்தார்.எத்தனையோ அண்ணன்கள் தங்கைகள் மேல் பாசம் பொழிந்து தள்ளி விட்டார்கள்.அது சினிமாவையே ஆட்டிப் படைத்து விட்டதுதானே! நிறைய குடும்பத்தில் இவை நடந்ததுதான்.அவையெல்லாம் மவுனமாக, மறைமுகமாக நடந்த புரட்சிதான் அது.சொந்த பாசத்தில் என்ன புரட்சி என்ற கேள்வி வேண்டாம்.அது இருப்பதை அதிகமாக்கிய ,உண்மையை சொன்ன ஒரு தூண்டுகோல் தான் பாசமலர் ராஜசேகரன்.
மூச்சுக்காற்றை தவிர வேறு ஒன்றுமே இல்லையென்று போனாலும் உழும் நிலத்தை விடக் கூடாது. உழவனின் தெய்வம் அது.அதைச் சொல்லவும் ஒரு பழனி வந்தார்.இன்று நடக்கும் விவசாயிகளின் போராட்டங்கள் எல்லாம் என்ன? தனி மனிதராய் கசங்கிய பழனியை பார்த்தால் தெரியும், ஒரு வேளை அரசுக்கு?
ஆயிரம் போராட்டங்களை ஒரு நல்ல சினிமா சொல்லி விடும்.ஆழ உள்ளிருந்து பார்த்த மனிதன் கையில் அதிகாரம் இருந்தால் ஒரு வேளை நல்ல பலன் கொடுக்கும்.ரசனையே இல்லாதவன் நாற்காலியில் இருந்தால் நல்ல பலனுக்கு எங்கே போக? ஆனாலும் விவசாயிகளின் ஆயிரம் கஷ்டங்களை அந்த ஒரு நல்ல படம் சொன்னது .
உளௌ நாட்டில் ஆயிரம் பிரச்சினைகள்...ஆனாலும்,எல்லை புரட்சியா, அண்டை நாட்டு யுத்தமா? மக்களெல்லாம் கொடி தூக்கி தேசபக்தியை நிலை நிறுத்துவார்கள்.
தமிழனின் ஒவ்வொருவரின் மனதிலும் ஓரமாய் திருப்பூர் குமரனும், பகத்சிங்கும், வஉசியும் குடி கொண்டிருப்பார்கள்.இந்த நல்ல விஷயங்கள் எல்லாம் எப்படி வந்தன? அவர் நடித்ததை பார்த்ததும் ஒரு காரணம் தானே! தமிழன் ஒவ்வொரு வீட்டிலும் தேசபக்தி இருக்கிறது! அங்கேயெல்லாம் நடிகர்திலகம் மவுனமாயும், நிழலாயும் வாழ்ந்து வழி காட்டிக் கொண்டிருப்பார்!
நல்ல விஷயங்களை தேட சிவாஜி டிகௌஷனரி போதும்.ஆனால் அதை அகத்திலிருந்து உண்மையாக பாருங்கள்!https://uploads.tapatalk-cdn.com/20210111/342df2200e3a9733097f9e78e8c3e6f8.jpg

Sent from my vivo 1920 using Tapatalk

Russellxor
12th January 2021, 12:38 AM
சிவாஜி முரசு
யூடியூப் சேனல்
பாருங்கள்! https://uploads.tapatalk-cdn.com/20210111/783ec53bfd74141f09b8acf5d18a1f7e.jpg

Sent from my vivo 1920 using Tapatalk

Russellxor
12th January 2021, 12:45 AM
ஒரு நீண்ட இடைவெளி......https://uploads.tapatalk-cdn.com/20210111/c9714ea8703e457cc58eee1f82ca08ea.jpg

Sent from my vivo 1920 using Tapatalk

Russellxor
12th January 2021, 12:48 AM
https://youtu.be/gVtCBACPoLw

Sent from my vivo 1920 using Tapatalk

Russellxor
12th January 2021, 01:01 AM
https://youtu.be/HaAy8QsdqG4

sivaa
14th January 2021, 05:20 AM
அனைத்து உறவுகளுக்கும் வணக்கம்!

பல காலமாக இந்தியாவில் சுலபமாக பார்வையிட முடியாமல் முடக்கிவைக்கப்பட்டிருந்த
ஹப் (hub) இணையம் , ஹப் நிர்வாகத்தினரின் பெருமுயற்சியால் இந்தியா உட்பட அனைத்து
நாடுகளிலும் வாழும் உறவுகளால் பார்வையிடவும், பங்குகொள்ளவும் ஏற்றவிதமாக
திருத்தி அமைக்கப் பட்டிருப்பது என்பது அனைத்து உறவுகளுக்கும் மகிழ்ச்சியான செய்தி.

சிவாஜி ரசிக உறவுகளே இதுகாலவரையும் பதிவிடமுடியாமல் முடங்கி இருந்த உங்களனைவருக்கும்
கதவு திறக்கப்பட்டுவிட்டது ,எனவே இவ் இணையத்தில் ஏற்கனவே உறுப்பினராக இருக்கும் நீங்கள் ,
அனைவரும் முன்னர்போல் உங்கள் கை வண்ணத்தை காட்டும் படிஅன்புடன் வேண்டுகின்றேன்.
நன்றி.

இங்கு முன்னர் உறுப்பினராக இருந்து பதிவுகள் இட்டு மகிழ்ந்த நமது சிவாஜி ரசிக உறவுகள்.



இந்த இணையத்தில் பதிவிட்டுவந்த

சிவாஜி ரசிக நண்பர்கள்
joe
kalnayak
saradha.n.a
mr.karthik
sankar1970
mahendraraj
tacinema
groucho070
murali srinivas
chinnakannan
adiram
ragavendra
harish2619
pammalaar
Krishna
j.radhakrishnan
mahesh.k
gold star(sathish)
k.s.shekar
parthasarathy
vasudevan31355
anm(anand)
subramaniam ramanujam
sivaji dhasan
ragulram11
gopal.s
balaa
sunildurai
ganpat
sivaji senthil
uthamaputhiran
vankv
g94127302(ravi)
vcs2107
s.vasudevan
barani
senthivel sivaraj
n j raghavan
spchowthryram
ponravichandran
kiruba
ravikiransuriya
gopu1954
ramdos
P_R
abkhiabhi
plum
tamiz
rangan_08

sivaa
14th January 2021, 05:22 AM
எங்கே தேடி அலைவது நல்ல விஷயங்களை பார்க்க! அது தானே மனதை செம்மைபடுத்துகிறது.மனிதன் வாழ்வு தடம் புரளாமல் இருக்க.அங்கே தான் கலைகள் கை கொடுக்கின்றன! கலை என்றவுடன் சுலபமாக்குகிறது சினிமா! சினிமா என்றவுடன் நூறு சதவீதத்திற்கும் மேலே நடிகர்திலகம் சிம்மாசனமாய் வந்து அமர்ந்து விடுகிறார்.
கை நீட்டியவுடன் காசு போடு.அது இயலாதவர்க்கு செய்யும் உதவி.தமிழ் மண்ணில் கால் வைத்த குணசேகரனாய் முதல் படத்திலேயே செய்தார்.அந்த உதவும் குணம் சிவாஜி ரசிகனின் மனதில் படிந்து விட்டது.அதுவே இன்று வரை அன்னை இல்லத்தின் வாசலில் வருடக் கணக்கில் அன்னதானமாய் செய்ய வைத்து விட்டது.அந்த நல்ல விஷயம்தான் கலைஞன் விதைக்க வேண்டும்.சிவாஜியின் மாபெரும் ஆளுமை செய்தது அதுதான்.
தமிழ் மக்கள் பாசக்கார மக்களாம்.குடும்ப உறவுகளை கொண்டாடி தீர்த்து விடுவார்கள்..ராஜசேகரனாய் தங்கை மேல் பாசம் காட்டி நடித்தாலும் நடித்தார்.எத்தனையோ அண்ணன்கள் தங்கைகள் மேல் பாசம் பொழிந்து தள்ளி விட்டார்கள்.அது சினிமாவையே ஆட்டிப் படைத்து விட்டதுதானே! நிறைய குடும்பத்தில் இவை நடந்ததுதான்.அவையெல்லாம் மவுனமாக, மறைமுகமாக நடந்த புரட்சிதான் அது.சொந்த பாசத்தில் என்ன புரட்சி என்ற கேள்வி வேண்டாம்.அது இருப்பதை அதிகமாக்கிய ,உண்மையை சொன்ன ஒரு தூண்டுகோல் தான் பாசமலர் ராஜசேகரன்.
மூச்சுக்காற்றை தவிர வேறு ஒன்றுமே இல்லையென்று போனாலும் உழும் நிலத்தை விடக் கூடாது. உழவனின் தெய்வம் அது.அதைச் சொல்லவும் ஒரு பழனி வந்தார்.இன்று நடக்கும் விவசாயிகளின் போராட்டங்கள் எல்லாம் என்ன? தனி மனிதராய் கசங்கிய பழனியை பார்த்தால் தெரியும், ஒரு வேளை அரசுக்கு?
ஆயிரம் போராட்டங்களை ஒரு நல்ல சினிமா சொல்லி விடும்.ஆழ உள்ளிருந்து பார்த்த மனிதன் கையில் அதிகாரம் இருந்தால் ஒரு வேளை நல்ல பலன் கொடுக்கும்.ரசனையே இல்லாதவன் நாற்காலியில் இருந்தால் நல்ல பலனுக்கு எங்கே போக? ஆனாலும் விவசாயிகளின் ஆயிரம் கஷ்டங்களை அந்த ஒரு நல்ல படம் சொன்னது .
உளௌ நாட்டில் ஆயிரம் பிரச்சினைகள்...ஆனாலும்,எல்லை புரட்சியா, அண்டை நாட்டு யுத்தமா? மக்களெல்லாம் கொடி தூக்கி தேசபக்தியை நிலை நிறுத்துவார்கள்.
தமிழனின் ஒவ்வொருவரின் மனதிலும் ஓரமாய் திருப்பூர் குமரனும், பகத்சிங்கும், வஉசியும் குடி கொண்டிருப்பார்கள்.இந்த நல்ல விஷயங்கள் எல்லாம் எப்படி வந்தன? அவர் நடித்ததை பார்த்ததும் ஒரு காரணம் தானே! தமிழன் ஒவ்வொரு வீட்டிலும் தேசபக்தி இருக்கிறது! அங்கேயெல்லாம் நடிகர்திலகம் மவுனமாயும், நிழலாயும் வாழ்ந்து வழி காட்டிக் கொண்டிருப்பார்!
நல்ல விஷயங்களை தேட சிவாஜி டிகௌஷனரி போதும்.ஆனால் அதை அகத்திலிருந்து உண்மையாக பாருங்கள்!https://uploads.tapatalk-cdn.com/20210111/342df2200e3a9733097f9e78e8c3e6f8.jpg

Sent from my vivo 1920 using Tapatalk

வணக்கம் செந்தில்
உங்கள் மீள்வரவுக்கு நன்றி . தொடர்ந்து வாருங்கள்.

Russellxor
14th January 2021, 03:35 PM
https://youtu.be/UAp4i5-UU-U

அவன் தான் மனிதன் டிஜிட்டல் ரிலீஸ் விரைவில்..
இங்கே அதன் கிரிஸ்டல் கிளியர் டிரெயிலர்...

sivaa
15th January 2021, 07:21 AM
மதுரைக்கு ஒரு யோகம் உண்டு....

சிவாஜி படம் திரையிட்டாலோ அல்லது
சிவாஜி நிகழ்ச்சி என்றாலோ...
மழை நிச்சயம் வந்து விடும்...

ஒருவாரமாக மதுரையை
மிரட்டிக் கொண்டிருக்கும் மழை...

சிவாஜி சிலை முன்பு சிவாஜி பொங்கல்....

காலை முதல் எந்நேரமும் கனத்த மழை பெய்யும் நிலையில் வானமூட்டம்...

இருந்தாலும்... ரசிகர்கள் காலை முதலே வரத்துவங்கிவிட்டனர்.

ரசிகர்களின் வருகையை கண்டு மழையும் மிரண்டு விட்டது போலும்...

நிகழ்ச்சி முடியும் வரையில் மழையை காணோம்...

காசு கொடுத்து வா என்று சொன்னாலும்,
பொங்கலன்று யாரும் வரமாட்டார்கள்... ஆனால்,

தலைவரின் சிலை முன்பு பொங்கல் விழா கொண்டாட, அன்பு இதயங்கள் மழையையும் பொருட்படுத்தாமல் குவிந்தனர்.

ரசிகர்களின் வருகையால் சிவாஜி பொங்கல் விழா இனிதே நடைபெற்று முடிந்தது.

விழாவில் கலந்து கொண்ட,
அகிலஇந்திய சிவாஜி மன்றம், நகர் சிவாஜி மன்றம், சிவாஜி காமராஜ் கல்வி அறக்கட்டளை,
மதுரை சிவாஜி ஃபைன் ஆரட்ஸ்,
ரத்தபாசம் சிவாஜி குரூப்ஸ்,மதுரை,
மாவட்ட பிரபு மன்ற நிர்வாகிகள் மற்றும்

இந்த அருமையான விழாவினை ஏற்பாடு செய்த,
அன்பு அண்ணன் முருகவிலாஸ் நாகராஜன் அவர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்,

https://scontent-ort2-2.xx.fbcdn.net/v/t1.0-9/137608108_3615668435184401_2963662211736858443_o.j pg?_nc_cat=110&ccb=2&_nc_sid=730e14&_nc_ohc=wiUpyhr2pFkAX-FN2JM&_nc_ht=scontent-ort2-2.xx&oh=be9879182c6ed07e3aaa59fddaae5a31&oe=6024F3EA

Thanks Sundar Rajan

sivaa
15th January 2021, 07:25 AM
பொங்கல் திருநாளில் மதுரை சென்ட்ரலில் இன்று மகத்தான வசூல் சாதனை படைத்து விட்டார் நம் நடிகர் திலகம்.கொரானா கால கட்டத்தில் மூன்றுகாட்சிகளுக்கும் சேர்த்து 525 ரசிகர்கள் கண்டு களித்துள்ளார்கள்.புதுப்படங்களுக்கு இல்லாத வரவேற்பை பெற்றுள்ளார் நம் திலகம்.மழை காரணமாக தூத்துக்குடியில் இன்று வெளியாகவில்லை.

https://scontent-ort2-2.xx.fbcdn.net/v/t1.0-9/138771668_2884726698483295_9126495838223520113_o.j pg?_nc_cat=110&ccb=2&_nc_sid=825194&_nc_ohc=u6rnPo4A81wAX_0yiC0&_nc_ht=scontent-ort2-2.xx&oh=7ad478924fe4aeb75b65df220e4b2a4f&oe=60269C7F

Thanks Vasudevan Srirangarajan

sivaa
15th January 2021, 07:28 AM
பல்வேறு வருடங்களில் பொங்கலுக்கு வெளிவந்த நடிகர் திலகம் படங்கள்

விசிறிகள் அனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்.


https://scontent.fybz2-1.fna.fbcdn.net/v/t1.0-9/137587392_1294855020915431_1200129524382744795_o.j pg?_nc_cat=100&ccb=2&_nc_sid=825194&_nc_ohc=lvevnuF2OWYAX-eCXi1&_nc_ht=scontent.fybz2-1.fna&oh=9a3191031e2116256e935d18be85fde9&oe=6026834A




Thanks Raja Lakshmi

sivaa
16th January 2021, 03:52 AM
Thanks to ntfans

நேற்றைய சாதனையை முறியடித்த அசோக்கும் ஆனந்தும். நேற்றைய தினம் 525 டிக்கெட்டுகள் என்றால் இன்று மதுரை சென்ட்ரலில் 555 டிக்கெட்டுகள் விற்பனையாகி புதிய சாதனை படைத்திருக்கிறது. மழை, கோவிட், புதிய படங்கள், டிவி சிறப்பு நிகழ்ச்சிகள் அனைத்தையும் தாண்டி சாதித்திருக்கிறார் சாதனைக்கென்றே பிறந்த நடிகர் திலகம்!

https://scontent.fybz2-1.fna.fbcdn.net/v/t1.0-9/138697688_2885715221717776_6124771181260283396_n.j pg?_nc_cat=110&ccb=2&_nc_sid=825194&_nc_ohc=hCvIxD7RjhUAX-qKcVi&_nc_ht=scontent.fybz2-1.fna&oh=7aa794ef0f0a0ccb20215abe6ac927ae&oe=60295A7E

Thanks Vasudevan Srirangarajan

sivaa
18th January 2021, 01:05 AM
மதுரை சென்ட்ரலில்...
சிவகாமியின் செல்வன்...

ரசிகர்கள் சிறப்பு காட்சியில்,
அலைகடலென திரண்ட,

நடிகர்திலகத்தின்
அன்பு இதயங்கள்....

https://scontent.fybz2-2.fna.fbcdn.net/v/t1.0-9/138824219_3623944117690166_7713128433693029825_o.j pg?_nc_cat=102&ccb=2&_nc_sid=730e14&_nc_ohc=GiTuI8U_JhUAX8-bBPD&_nc_ht=scontent.fybz2-2.fna&oh=e83c377b646019710ba7c0ae7beb4296&oe=602BB40A
Thanks Sundar Rajan

sivaa
18th January 2021, 01:17 AM
சிவாஜி பற்றிய விகடன் கட்டுரை........!!!

அமெரிக்காவை அடுத்து சிவாஜிக்கு மிகப்பெரிய மரியாதையை தந்த நாடு பிரான்ஸ் என்று கூறலாம். பிரான்ஸ் நாடு சிவாஜிக்கு வழங்கிய ‘செவாலியே விருது’ மதிப்பில் மிக உயர்ந்தது. அதாவது ஆஸ்கர் விருதுக்கு இணையான மதிப்பு கொண்ட விருது. இந்த விருதை இதுவரை உலகில் நான்கு நடிகர்களுக்கே பிரான்ஸ் வழங்கியுள்ளது.

சிவாஜி நடித்த ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’ திரைப்படம் கெய்ரோவில் நடந்த ஆசிய, ஆப்பிரிக்கப் படவிழாவில் கலந்து கொண்டது. அந்த படவிழாவில் பங்கேற்க சிவாஜி, பத்மினி எல்லோரும் போயிருந்தார்கள்.

அந்தப் படவிழாவில் சிவாஜி ஆசிய, ஆப்பிரிக்க அளவில் சிறந்த நடிகராக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆசிய, ஆப்பிரிக்க கண்டங்கள் என எடுத்துக்கொள்ளும்பொழுது உலக மக்கள் தொகையில் முக்கால் பகுதி மக்கள் தொகை இந்த இரு கண்டங்களிலேயே அடங்கும்!

இந்தியாவும், சீனாவும் மட்டுமே பெரும் மக்கள் தொகையைக் கொண்ட நாடுகள், ஜப்பான், ரஷ்யா, ஹாங்காங்... போன்ற ஏராளமான நாடுகளுடன் ஆப்பிரிக்கா கண்டம் முழுவதும் உள்ள ஏராளமான நாடுகளும் இந்தப் படவிழாவில் பங்கு பெற்றவையாகும்.

இவ்வளவு பெரிய படவிழாவில் சிவாஜியை சிறந்த நடிகராக தேர்ந்தெடுத்தப் பின்னும் இந்திய அரசு வழங்கும் சிறந்த நடிகர் விருதை சிவாஜிக்கு தராமலேயே இருந்துவிட்டார்கள். காரணம் இந்திய அரசு சார்பான இந்த விருதில் அவ்வப்போது செல்வாக்கான மனிதர்களின் குறுக்கீடு இருந்து வந்ததேயாகும். ஆசிய, ஆப்பிரிக்க அளவில் சிறந்த நடிகர் விருது பெற்ற ஒருவருக்கு இதற்கு மேலும் நாம் விருது கொடுக்காமல் தாமதித்தால் அதனால் இந்திய விருதின் மரியாதை குறையும் என்பதையும் சம்பந்தப்பட்டவர்கள் யோசிக்கவேயில்லை.

ஆனால், சிவாஜியைப் பொருத்தவரையில் அவர் நடிப்புத் துறையில் நிறைகுடமாக இருந்ததால் விருதுகளைப் பற்றி எப்போதுமே கவலைப்பட்டதில்லை. அத்துடன் தனக்கு விருது தரப்படவில்லை என்பதை மனதில் குறையாக வைத்து பேசுவதுமில்லை. யாராவது வலிய அவரிடம் இது சம்பந்தமாக பேசி ‘‘உங்களுக்கு ஏன் இந்திய அரசின் விருது தராமலே இருந்துவிட்டார்கள்?’’ என கேட்கும்பொழுது அதற்கு சிவாஜி மிகப்பெருந்தன்மையாக பதில் கூறுயிருக்கிறார்.

‘‘விருது தருபவர்கள் அந்த விருதுக்கென்று எதிர்ப்பார்க்கும் தகுதிகள் நம்மிடம் இல்லாது இருக்கலாம்’’ என்றே சிவாஜி பதில் அளித்திருக்கிறார்.

ஆசிய, ஆப்பிரிக்க சிறந்த நடிகர் விருது சிவாஜிக்கு கிடைத்தபின் அமெரிக்க அரசு சிவாஜியை தங்கள் நாட்டிற்கு அழைத்து கவுரவிக்க விரும்பியது. எனவே ‘சிவாஜி தங்கள் நாட்டிற்கு வருகை தர வேண்டும்’ என அமெரிக்க அரசு அழைப்பு விடுத்தது. இதுபோன்ற ஒரு அழைப்பு அதுவரை இந்திய நடிகர்கள் யாருக்கும் கிடைத்ததில்லை.

சிவாஜியும் அந்த அழைப்பை கவுரவித்து அமெரிக்கா புறப்பட்டார். அமெரிக்காவில் அவருக்கு என்னென்ன நிகழ்ச்சிகள் இருக்கும். அங்கே முக்கியமானவர்கள் யார் யாரைச் சந்திக்க வேண்டியதிருக்கும் என்பதையெல்லாம் முன்கூட்டி அவர் தெரிந்து கொண்டதால் அதற்கேற்ப தயாராக அமெரிக்கா புறப்பட்டார்.

அமெரிக்காவில் சந்திக்கும் முக்கிய மனிதர்களுக்கு நமது நாட்டு சார்பாக கொடுக்க வேண்டிய பரிசுப் பொருட்கள் எல்லாம் எடுத்துச் சென்றதுடன் அங்கே குறிப்பிட்ட நிகழ்ச்சிகளில் திரையிட்டுக் காட்டுவதற்காக தான் நடித்த பல படங்களில் இருந்து முக்கியக் காட்சிகளின் தொகுப்பையும் கையில் கொண்டு சென்றார்.

ஆனால் இதற்குக் கூட யாரும் குறுக்கீடாக இருந்தார்களோ என்னவோ? சிவாஜி அமெரிக்கா போய் இறங்கியதும் அங்கே திரையிட கையில் தன்னுடன் எடுத்துவந்த அந்தப் படப்பெட்டி மட்டும் காணாமல் போய்விட்டது. அந்த சமயத்தில் வீடியோ கேசட்டில் பதிவு செய்து எடுத்துச் செல்லும் வசதி வரவில்லை. அல்லது மூன்று நான்கு கேசட்டுகளை தன் கைப்பெட்டியிலேயே எடுத்துச் சென்றிருப்பார்.

சிவாஜி திட்டமிட்டபடி அமெரிக்காவில் முக்கிய பிரமுகர்களுக்கு தான் நடித்தப் படத்திலுள்ள அந்தக் குறிப்பிட்ட காட்சிகளை திரையிட்டுக் காட்டியிருந்திருப்பாரேயானால் அவருக்கு மேலும் வரவேற்பு கிடைத்திருந்திருக்கும். அமெரிக்கா போன்ற மேலை நாட்டினர் ஒருவருடைய திறமையை கண்டறியும்பொழுது, அதை இருட்டடிப்பு செய்ய வேண்டும் என எண்ணமாட்டார்கள். திறமையை மனதார பாராட்டுவதை தங்களுக்கு பெருமை என எண்ணுவார்கள்.

ஆனாலும் சிவாஜியின் நடிப்புத் திறமையை அங்கே உள்ளவர்கள் பார்க்கிற வாய்ப்பு கிடைக்காவிட்டாலும் அவர்கள் கேள்விப்பட்ட செய்திகளை வைத்து சிவாஜியின் மிகப்பெரிய ஆற்றலை நன்றாகவே புரிந்திருந்தார்கள். அதனால் அவர் கலந்துகொண்ட நிகழ்ச்சிகளில் எல்லாம் அவருக்கு சிறப்பான மரியாதை தந்தார்கள். சிவாஜி அமெரிக்கா சென்ற காலகட்டத்தில் அங்கே புகழ்பெற்ற நடிகர்களாக விளங்கிய மார்லன் பிராண்டோ, யூல் பிரின்னர், சார்லஸ் ஹாஸ்டன்... போன்ற பெரிய பெரிய நடிகர்கள் எல்லாம் சிவாஜியை வரவேற்கிற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அவரை கவுரவித்தார்கள்.

அப்போது ஹாலிவுட்டின் மிகப்பெரிய நடிகர்களாக இருந்த ஐந்து நடிகர்கள் சிவாஜியோடு படம் எடுக்க விரும்பி சிவாஜியை நடுவே அமரச்செய்து மற்றவர்கள் அவர் அருகே நின்று கொண்டும் சிவாஜி அமர்ந்திருந்த நாற்காலியில் கைப்பிடிகளில் அமர்ந்து கொண்டும் படம் எடுத்துக் கொண்டார்கள். சிவாஜி சில பெரிய நடிகர்களின் தனிப்பட்ட அழைப்பின் பெயரில் அவர்கள் இல்லங்களுக்கும் சென்றார். அவர்களில் குறிப்பிடத்தக்கவர் சார்லஸ் ஹாஸ்டன். இவர் உலக அளவில் பிரம்மாண்டமாக தயாரிக்கப்பட்ட ‘டென் கமான்மெண்ட்ஸ்’ படத்திலும் ‘பென்ஹர்’ படத்திலும் நடித்து ஆஸ்கர் விருது பெற்றவர்.

இவருடைய இல்லத்திற்கு சிவாஜி சென்றபொழுது சார்லஸ் ஹாஸ்டன் தம்பதிகள் அவரை வரவேற்றார்கள். சிவாஜி அப்போது சார்லஸ் ஹாஸ்டனின் துணைவியாருக்கு தமிழ்நாட்டுப் பட்டுப் புடவையை பரிசாகத் தந்தார். திருமதி சார்லஸ் ஹாஸ்டனுக்கு அந்தப் பரிசைப் பெற்றுக் கொண்டதில் பெரிய மகிழ்ச்சி! எனவே தங்கள் இல்லத்திற்கு வந்த விருந்திருனரான சிவாஜியை கவுரவிக்க அந்தப் பட்டுப் புடவையை அப்போதே உடுத்திக்கொள்ள விரும்பினார்.

ஆனால் அமெரிக்கப் பெண்மணியான அவருக்கு புடவைக் கட்டிய பழக்கமேயில்லை. எனவே இதை எப்படி உடுத்திக் கொள்வது என அவர் கேட்டபொழுது சிவாஜி புடவையின் முனையை இப்படி மடித்து இடுப்பில் சொருகி புடவையை சுற்றிக்கொள்ள வேண்டும் என்பதை நடித்துக் காட்டினார். ஆனால் திருமதி சார்லஸ் ஹாஸ்டனுக்கு அதைப் புரிந்துகொள்ள முடியவில்லை. எனவே சிவாஜியிடம், ‘‘இதை நான் உடுத்திக் கொள்ள எனக்கு உதவி செய்யுங்கள்’’ எனக் கேட்டுக் கொண்டார்.

சிவாஜிக்கு இதைக் கேட்டு சற்று திகைப்பு! ஒரு பெண்மணி புடவையை உடுத்திக் கொள்ள நாம் எப்படி உதவ முடியும்? என்று தாமதித்தார். ஆனால் சார்லஸ் ஹாஸ்ட்அனோ ‘‘என் மனைவிக்கு நீங்கள் உதவ வேண்டும்’’ என வற்புறுத்தி கேட்கலானார். அதன்பிறகு சிவாஜி திருமதி சார்லஸ் ஹாஸ்டன் புடவை அணிந்து கொள்ள உதவினார்.. இந்த நிகழ்ச்சிகள் எல்லாம் சிவாஜி என்ற மாபெரும் கலைஞரிடம் அவர்களுக்கிருந்த மரியாதையை வெளிப்படுத்துவதாக அமைந்தது.

அமெரிக்காவில் கலையுலகம் சம்பந்தப்பட்டவர்கள் மட்டுமல்லாமல் மற்றும் உள்ள முக்கிய மனிதர்களும் சிவாஜியை தங்கள் விருந்தினராக அழைத்துப் பெருமைப்பட்டார்கள். அவர்களில் ஒரு சீமாட்டி சிவாஜிக்கு மிக உயர்ந்த பொருளைத் தரப்போவதாக கூறிக்கொண்டு ஒரு விலையுயர்ந்த சுருட்டை புகைப்பதற்கு தந்தார்.

சிவாஜி அந்த சுருட்டை கையிலே வாங்கிப் பார்த்துவிட்டு அந்தப் பெண்மணியிடம் கூறினார், ‘‘அம்மா இது உங்களுக்கு அபூர்வப் பொருளாக இருக்கலாம். ஆனால் இந்தச் சுருட்டு நான் இருக்கிற நாட்டிலே உற்பத்தியாகிற சுருட்டு, அதுவும் என் சொந்த ஊரான திருச்சி அருகிலுள்ள உறையூரில் தயாராகிற சுருட்டு’’ என விளக்கினார். அதைக்கேட்டு அந்தப் பெண்மணி பெரிதாக நகைத்தார்.

சிவாஜிக்கு அங்கே இன்னொரு மரியாதையும் கிடைத்தது. அமெரிக்காவிலுள்ள ஒரு நகரத்தின் மேயர் சிவாஜியை வரவேற்று ஒருநாள் மேயராக சிவாஜியை கவுரவப் பதவி ஏற்க வைத்தார். அதற்கு அடையாளமாக தங்கச் சாவி ஒன்றை அன்று முழுவதும் சிவாஜி கையிலே வைத்திருக்க வேண்டும் என அவரிடம் ஒப்படைத்தார்.

அமெரிக்காவில் சிவாஜிக்கு மகத்தான வரவேற்பு கிடைத்தது என்ற செய்தி தமிழகத்திற்கு எட்டிய நிலையில் தமிழக கலைஞர்கள் எல்லாம் சிவாஜியை சிறப்பாக வரவேற்க வேண்டும் என புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். தலைமையிலே முடிவு செய்தார்கள். அவ்விதம் சிவாஜிக்கு அவர் சென்னையில் வந்து இறங்கியபொழுது கலைஞர்கள் எம்.ஜி.ஆர். தலைமையில் சிறந்த வரவேற்பை அளித்து கவுரவித்தார்கள்.

சிவாஜி அமெரிக்காவில் இருந்த சமயம் அவ்வை டி.கே.சண்முகம் அவர்கள் சிவாஜிக்கு வாழ்த்துக் கூறி ஒரு கடிதத்துக்கு சிவாஜி உடனே பதில் எழுதி தனது நன்றியை அவ்வை டி.கே.சண்முகத்திற்கு தெரிவித்தார்.

அவ்வை டி.கே.சண்முகம் இந்தப் பதில் கடிதத்தை எதிர்ப்பார்க்காததால் மிக மகிழ்ச்சியோடு அந்தக் கடிதத்தை பத்திரிகையில் வெளியிட்டார்.

அமெரிக்காவை அடுத்து சிவாஜிக்கு மிகப்பெரிய மரியாதையை தந்த நாடு பிரான்ஸ் என்று கூறலாம். பிரான்ஸ் நாடு சிவாஜிக்கு வழங்கிய ‘செவாலியே விருது’ மதிப்பில் மிக உயர்ந்தது. அதாவது ஆஸ்கர் விருதுக்கு இணையான மதிப்பு கொண்ட விருது. இந்ஹ விருதை இதுவரை உலகில் நான்கு நடிகர்களுக்கே பிரான்ஸ் வழங்கியுள்ளது.

கிளிண்ட் ஈஸ்ட் வுட், டஸ்ட் டின் ஹாப்மேன் ஆகிய ஹாலிவுட் நடிகர்களுடன் இன்னொருவருக்கும் பிரான்ஸ் அந்த விருதை வழங்கியிருந்தது. அதற்குமேல் இப்போது சிவாஜிக்கு அந்த விருதை வழங்கி கவுரவப்படுத்தியுள்ளது.

சிவாஜி நடித்த ‘நவராத்திரி’ படத்தைப் பார்த்துவிட்டு சிவாஜிக்கு ‘செவாலிய விருது’ அளிக்க பிரான்ஸ் நாடு முன் வந்தது. அந்தப் படத்தைப் பார்த்து உடனே பிரான்ஸ் தேர்வு கமிட்டி ‘செவாலிய விருது’ கொடுக்க முடிவு செய்துவிட வில்லை.

ஒன்பது வேடங்களில் சிவாஜி வித்தியாசமான ஒன்பது மனிதர்கள்போல் நடித்திருக்கும் அந்த அற்புதமான நடிப்பில் முதலில் அவர்களுக்கு நிறைய சந்தேகம் இருந்தது. இது ஒரே நடிகராக இருக்க முடியுமா? என்ற சந்தேகத்தின் பெயரில் பலவித பரிசோதனைகள் செய்து கடைசியில்தான் அவர் ஒரே நடிகர்தான் என்பதை கண்டுபிடித்தார்கள்.

புகழ்பெற்ற பல இயக்குனர்கள் அமர்ந்து அந்தப் படத்தைப் போட்டுப்பார்த்து செவாலியே விருது வழங்குவது பற்றி முடிவு செய்தார்கள். இந்த விருதை சிவாஜிக்கு அளிப்பதற்கு முன் உலக அளவில் புகழ்பெற்ற நடிகர்கள் பட்டியலை வைத்துக் கொண்டு அவர்கள் நடித்த படங்களையெல்லாம் திரும்பத் திரும்ப போட்டுப் பார்த்தார்கள். அதன் இறுதியிலேதான் சிவாஜி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

சிவாஜியைப் பற்றி இந்தியாவிலே உள்ள ஒரு கலை மேதையிடம் கருத்தறிய அவர்கள் பிரபல வங்க இயக்குனர் சத்யஜித்ரேயை அணிகினார்கள். அவரோ, ‘சிவாஜி செவாலியே விருதுக்கு மிக தகுதியான கலைஞர்’ எனக் கருத்து தெரிவித்தார்.

சிவாஜியின் நடிப்பைப் பார்த்த ஒரு பிரான்ஸ் இயக்குனர் ‘‘இவருக்கு ஏன் இதுவரை ஆஸ்கர் விருது கொடுக்கப்பட வில்லை?ÔÔ என்ற சந்தேகத்தை கேட்டார்.

அவருக்கு இன்னொரு இயக்குனர் பதில் கூறும்பொழுது, ‘‘ஆஸ்கர் விருது இதுவரை வழங்கப்படாததற்கு சேர்த்துதானே இந்த செவாலியே விருதை வாங்குகிறோம்’’ எனக் கூறினார்.

இந்த ‘நவராத்திரி’ படத்தை அது வெளியான சமயத்தில் தியேட்டரில் பார்த்த தனது அனுபவத்தை நடிகரும், இயக்குனருமான விசு தொலைக்காட்சிப் பேட்டியில் கூறினார்.

விசு வெளிநாட்டினர் சிலருடன் நவராத்திரி படம் பார்க்கச் சென்றிருந்தாராம். இடைவேளை வரை படத்தை அந்த வெளிநாட்டினர் மிக அமைதியாக ரசித்துக் கொண்டிருந்தார்களாம். இடைவேளையின்போது விசு அவர்களைப் பார்த்து, ‘‘இப்போது நான் உங்களுக்கு ஒரு செய்தியை கூறப்போகிறேன். இது மிகவும் ஆச்சரியமாகவும் இருக்கலாம்’’ என்று கூறிவிட்டு அந்தச் செய்தியை கூறியிருக்கிறார்.

‘‘அதாவது இப்போது நாம் பார்த்தப் படத்தில் கிணற்றில் விழப்போகிற கதாநாயகியை காப்பாற்றுகிற பணக்காரரும், அடுத்து வருகிற குடிகார வாலிபனும், மூன்றாவதாக வருகிற டாக்டரும், நான்காவதாக வருகிற பயங்கரவாதியும் நான்கு வெவ்வேறு நடிகர்கள் அல்ல; ஒரே நடிகர்தான் அந்த நான்கு வேடங்களிலும் வருகிறார்’’ என விசு குறிப்பிட்டிருக்கிறார்.

இதைக் கேட்டு அந்த வெளிநாட்டினர் பெரிதும் வியந்து போனார்களாம், ‘‘ஒரே மனிதரா இவ்வளவு வித்தியாசமாக தோன்றி நடிக்கிறார்? இதை முதலிலேயே சொல்லியிருந்தால் ஆரம்பத்திலேயே கூர்ந்து கவனித்திருப்போமே’’ என குறைபட்டுக் கொண்டார்களாம்.

பின்னர் இடைவேளைக்குப் பின்னர் மேலும் ஐந்து வேடங்களில் வரும் சிவாஜியைக் கண்டு பெரிதும் வியந்து பாராட்டினார்கள் என விசு அந்தப் பேட்டியிலே குறிப்பிட்டார்.


சிவாஜி பற்றிய விகடன் கட்டுரை........!!!

அமெரிக்காவை அடுத்து சிவாஜிக்கு மிகப்பெரிய மரியாதையை தந்த நாடு பிரான்ஸ் என்று கூறலாம். பிரான்ஸ் நாடு சிவாஜிக்கு வழங்கிய ‘செவாலியே விருது’ மதிப்பில் மிக உயர்ந்தது. அதாவது ஆஸ்கர் விருதுக்கு இணையான மதிப்பு கொண்ட விருது. இந்த விருதை இதுவரை உலகில் நான்கு நடிகர்களுக்கே பிரான்ஸ் வழங்கியுள்ளது.

சிவாஜி நடித்த ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’ திரைப்படம் கெய்ரோவில் நடந்த ஆசிய, ஆப்பிரிக்கப் படவிழாவில் கலந்து கொண்டது. அந்த படவிழாவில் பங்கேற்க சிவாஜி, பத்மினி எல்லோரும் போயிருந்தார்கள்.

அந்தப் படவிழாவில் சிவாஜி ஆசிய, ஆப்பிரிக்க அளவில் சிறந்த நடிகராக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆசிய, ஆப்பிரிக்க கண்டங்கள் என எடுத்துக்கொள்ளும்பொழுது உலக மக்கள் தொகையில் முக்கால் பகுதி மக்கள் தொகை இந்த இரு கண்டங்களிலேயே அடங்கும்!

இந்தியாவும், சீனாவும் மட்டுமே பெரும் மக்கள் தொகையைக் கொண்ட நாடுகள், ஜப்பான், ரஷ்யா, ஹாங்காங்... போன்ற ஏராளமான நாடுகளுடன் ஆப்பிரிக்கா கண்டம் முழுவதும் உள்ள ஏராளமான நாடுகளும் இந்தப் படவிழாவில் பங்கு பெற்றவையாகும்.

இவ்வளவு பெரிய படவிழாவில் சிவாஜியை சிறந்த நடிகராக தேர்ந்தெடுத்தப் பின்னும் இந்திய அரசு வழங்கும் சிறந்த நடிகர் விருதை சிவாஜிக்கு தராமலேயே இருந்துவிட்டார்கள். காரணம் இந்திய அரசு சார்பான இந்த விருதில் அவ்வப்போது செல்வாக்கான மனிதர்களின் குறுக்கீடு இருந்து வந்ததேயாகும். ஆசிய, ஆப்பிரிக்க அளவில் சிறந்த நடிகர் விருது பெற்ற ஒருவருக்கு இதற்கு மேலும் நாம் விருது கொடுக்காமல் தாமதித்தால் அதனால் இந்திய விருதின் மரியாதை குறையும் என்பதையும் சம்பந்தப்பட்டவர்கள் யோசிக்கவேயில்லை.

ஆனால், சிவாஜியைப் பொருத்தவரையில் அவர் நடிப்புத் துறையில் நிறைகுடமாக இருந்ததால் விருதுகளைப் பற்றி எப்போதுமே கவலைப்பட்டதில்லை. அத்துடன் தனக்கு விருது தரப்படவில்லை என்பதை மனதில் குறையாக வைத்து பேசுவதுமில்லை. யாராவது வலிய அவரிடம் இது சம்பந்தமாக பேசி ‘‘உங்களுக்கு ஏன் இந்திய அரசின் விருது தராமலே இருந்துவிட்டார்கள்?’’ என கேட்கும்பொழுது அதற்கு சிவாஜி மிகப்பெருந்தன்மையாக பதில் கூறுயிருக்கிறார்.

‘‘விருது தருபவர்கள் அந்த விருதுக்கென்று எதிர்ப்பார்க்கும் தகுதிகள் நம்மிடம் இல்லாது இருக்கலாம்’’ என்றே சிவாஜி பதில் அளித்திருக்கிறார்.

ஆசிய, ஆப்பிரிக்க சிறந்த நடிகர் விருது சிவாஜிக்கு கிடைத்தபின் அமெரிக்க அரசு சிவாஜியை தங்கள் நாட்டிற்கு அழைத்து கவுரவிக்க விரும்பியது. எனவே ‘சிவாஜி தங்கள் நாட்டிற்கு வருகை தர வேண்டும்’ என அமெரிக்க அரசு அழைப்பு விடுத்தது. இதுபோன்ற ஒரு அழைப்பு அதுவரை இந்திய நடிகர்கள் யாருக்கும் கிடைத்ததில்லை.

சிவாஜியும் அந்த அழைப்பை கவுரவித்து அமெரிக்கா புறப்பட்டார். அமெரிக்காவில் அவருக்கு என்னென்ன நிகழ்ச்சிகள் இருக்கும். அங்கே முக்கியமானவர்கள் யார் யாரைச் சந்திக்க வேண்டியதிருக்கும் என்பதையெல்லாம் முன்கூட்டி அவர் தெரிந்து கொண்டதால் அதற்கேற்ப தயாராக அமெரிக்கா புறப்பட்டார்.

அமெரிக்காவில் சந்திக்கும் முக்கிய மனிதர்களுக்கு நமது நாட்டு சார்பாக கொடுக்க வேண்டிய பரிசுப் பொருட்கள் எல்லாம் எடுத்துச் சென்றதுடன் அங்கே குறிப்பிட்ட நிகழ்ச்சிகளில் திரையிட்டுக் காட்டுவதற்காக தான் நடித்த பல படங்களில் இருந்து முக்கியக் காட்சிகளின் தொகுப்பையும் கையில் கொண்டு சென்றார்.

ஆனால் இதற்குக் கூட யாரும் குறுக்கீடாக இருந்தார்களோ என்னவோ? சிவாஜி அமெரிக்கா போய் இறங்கியதும் அங்கே திரையிட கையில் தன்னுடன் எடுத்துவந்த அந்தப் படப்பெட்டி மட்டும் காணாமல் போய்விட்டது. அந்த சமயத்தில் வீடியோ கேசட்டில் பதிவு செய்து எடுத்துச் செல்லும் வசதி வரவில்லை. அல்லது மூன்று நான்கு கேசட்டுகளை தன் கைப்பெட்டியிலேயே எடுத்துச் சென்றிருப்பார்.

சிவாஜி திட்டமிட்டபடி அமெரிக்காவில் முக்கிய பிரமுகர்களுக்கு தான் நடித்தப் படத்திலுள்ள அந்தக் குறிப்பிட்ட காட்சிகளை திரையிட்டுக் காட்டியிருந்திருப்பாரேயானால் அவருக்கு மேலும் வரவேற்பு கிடைத்திருந்திருக்கும். அமெரிக்கா போன்ற மேலை நாட்டினர் ஒருவருடைய திறமையை கண்டறியும்பொழுது, அதை இருட்டடிப்பு செய்ய வேண்டும் என எண்ணமாட்டார்கள். திறமையை மனதார பாராட்டுவதை தங்களுக்கு பெருமை என எண்ணுவார்கள்.

ஆனாலும் சிவாஜியின் நடிப்புத் திறமையை அங்கே உள்ளவர்கள் பார்க்கிற வாய்ப்பு கிடைக்காவிட்டாலும் அவர்கள் கேள்விப்பட்ட செய்திகளை வைத்து சிவாஜியின் மிகப்பெரிய ஆற்றலை நன்றாகவே புரிந்திருந்தார்கள். அதனால் அவர் கலந்துகொண்ட நிகழ்ச்சிகளில் எல்லாம் அவருக்கு சிறப்பான மரியாதை தந்தார்கள். சிவாஜி அமெரிக்கா சென்ற காலகட்டத்தில் அங்கே புகழ்பெற்ற நடிகர்களாக விளங்கிய மார்லன் பிராண்டோ, யூல் பிரின்னர், சார்லஸ் ஹாஸ்டன்... போன்ற பெரிய பெரிய நடிகர்கள் எல்லாம் சிவாஜியை வரவேற்கிற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அவரை கவுரவித்தார்கள்.

அப்போது ஹாலிவுட்டின் மிகப்பெரிய நடிகர்களாக இருந்த ஐந்து நடிகர்கள் சிவாஜியோடு படம் எடுக்க விரும்பி சிவாஜியை நடுவே அமரச்செய்து மற்றவர்கள் அவர் அருகே நின்று கொண்டும் சிவாஜி அமர்ந்திருந்த நாற்காலியில் கைப்பிடிகளில் அமர்ந்து கொண்டும் படம் எடுத்துக் கொண்டார்கள். சிவாஜி சில பெரிய நடிகர்களின் தனிப்பட்ட அழைப்பின் பெயரில் அவர்கள் இல்லங்களுக்கும் சென்றார். அவர்களில் குறிப்பிடத்தக்கவர் சார்லஸ் ஹாஸ்டன். இவர் உலக அளவில் பிரம்மாண்டமாக தயாரிக்கப்பட்ட ‘டென் கமான்மெண்ட்ஸ்’ படத்திலும் ‘பென்ஹர்’ படத்திலும் நடித்து ஆஸ்கர் விருது பெற்றவர்.

இவருடைய இல்லத்திற்கு சிவாஜி சென்றபொழுது சார்லஸ் ஹாஸ்டன் தம்பதிகள் அவரை வரவேற்றார்கள். சிவாஜி அப்போது சார்லஸ் ஹாஸ்டனின் துணைவியாருக்கு தமிழ்நாட்டுப் பட்டுப் புடவையை பரிசாகத் தந்தார். திருமதி சார்லஸ் ஹாஸ்டனுக்கு அந்தப் பரிசைப் பெற்றுக் கொண்டதில் பெரிய மகிழ்ச்சி! எனவே தங்கள் இல்லத்திற்கு வந்த விருந்திருனரான சிவாஜியை கவுரவிக்க அந்தப் பட்டுப் புடவையை அப்போதே உடுத்திக்கொள்ள விரும்பினார்.

ஆனால் அமெரிக்கப் பெண்மணியான அவருக்கு புடவைக் கட்டிய பழக்கமேயில்லை. எனவே இதை எப்படி உடுத்திக் கொள்வது என அவர் கேட்டபொழுது சிவாஜி புடவையின் முனையை இப்படி மடித்து இடுப்பில் சொருகி புடவையை சுற்றிக்கொள்ள வேண்டும் என்பதை நடித்துக் காட்டினார். ஆனால் திருமதி சார்லஸ் ஹாஸ்டனுக்கு அதைப் புரிந்துகொள்ள முடியவில்லை. எனவே சிவாஜியிடம், ‘‘இதை நான் உடுத்திக் கொள்ள எனக்கு உதவி செய்யுங்கள்’’ எனக் கேட்டுக் கொண்டார்.

சிவாஜிக்கு இதைக் கேட்டு சற்று திகைப்பு! ஒரு பெண்மணி புடவையை உடுத்திக் கொள்ள நாம் எப்படி உதவ முடியும்? என்று தாமதித்தார். ஆனால் சார்லஸ் ஹாஸ்ட்அனோ ‘‘என் மனைவிக்கு நீங்கள் உதவ வேண்டும்’’ என வற்புறுத்தி கேட்கலானார். அதன்பிறகு சிவாஜி திருமதி சார்லஸ் ஹாஸ்டன் புடவை அணிந்து கொள்ள உதவினார்.. இந்த நிகழ்ச்சிகள் எல்லாம் சிவாஜி என்ற மாபெரும் கலைஞரிடம் அவர்களுக்கிருந்த மரியாதையை வெளிப்படுத்துவதாக அமைந்தது.

அமெரிக்காவில் கலையுலகம் சம்பந்தப்பட்டவர்கள் மட்டுமல்லாமல் மற்றும் உள்ள முக்கிய மனிதர்களும் சிவாஜியை தங்கள் விருந்தினராக அழைத்துப் பெருமைப்பட்டார்கள். அவர்களில் ஒரு சீமாட்டி சிவாஜிக்கு மிக உயர்ந்த பொருளைத் தரப்போவதாக கூறிக்கொண்டு ஒரு விலையுயர்ந்த சுருட்டை புகைப்பதற்கு தந்தார்.

சிவாஜி அந்த சுருட்டை கையிலே வாங்கிப் பார்த்துவிட்டு அந்தப் பெண்மணியிடம் கூறினார், ‘‘அம்மா இது உங்களுக்கு அபூர்வப் பொருளாக இருக்கலாம். ஆனால் இந்தச் சுருட்டு நான் இருக்கிற நாட்டிலே உற்பத்தியாகிற சுருட்டு, அதுவும் என் சொந்த ஊரான திருச்சி அருகிலுள்ள உறையூரில் தயாராகிற சுருட்டு’’ என விளக்கினார். அதைக்கேட்டு அந்தப் பெண்மணி பெரிதாக நகைத்தார்.

சிவாஜிக்கு அங்கே இன்னொரு மரியாதையும் கிடைத்தது. அமெரிக்காவிலுள்ள ஒரு நகரத்தின் மேயர் சிவாஜியை வரவேற்று ஒருநாள் மேயராக சிவாஜியை கவுரவப் பதவி ஏற்க வைத்தார். அதற்கு அடையாளமாக தங்கச் சாவி ஒன்றை அன்று முழுவதும் சிவாஜி கையிலே வைத்திருக்க வேண்டும் என அவரிடம் ஒப்படைத்தார்.

அமெரிக்காவில் சிவாஜிக்கு மகத்தான வரவேற்பு கிடைத்தது என்ற செய்தி தமிழகத்திற்கு எட்டிய நிலையில் தமிழக கலைஞர்கள் எல்லாம் சிவாஜியை சிறப்பாக வரவேற்க வேண்டும் என புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். தலைமையிலே முடிவு செய்தார்கள். அவ்விதம் சிவாஜிக்கு அவர் சென்னையில் வந்து இறங்கியபொழுது கலைஞர்கள் எம்.ஜி.ஆர். தலைமையில் சிறந்த வரவேற்பை அளித்து கவுரவித்தார்கள்.

சிவாஜி அமெரிக்காவில் இருந்த சமயம் அவ்வை டி.கே.சண்முகம் அவர்கள் சிவாஜிக்கு வாழ்த்துக் கூறி ஒரு கடிதத்துக்கு சிவாஜி உடனே பதில் எழுதி தனது நன்றியை அவ்வை டி.கே.சண்முகத்திற்கு தெரிவித்தார்.

அவ்வை டி.கே.சண்முகம் இந்தப் பதில் கடிதத்தை எதிர்ப்பார்க்காததால் மிக மகிழ்ச்சியோடு அந்தக் கடிதத்தை பத்திரிகையில் வெளியிட்டார்.

அமெரிக்காவை அடுத்து சிவாஜிக்கு மிகப்பெரிய மரியாதையை தந்த நாடு பிரான்ஸ் என்று கூறலாம். பிரான்ஸ் நாடு சிவாஜிக்கு வழங்கிய ‘செவாலியே விருது’ மதிப்பில் மிக உயர்ந்தது. அதாவது ஆஸ்கர் விருதுக்கு இணையான மதிப்பு கொண்ட விருது. இந்ஹ விருதை இதுவரை உலகில் நான்கு நடிகர்களுக்கே பிரான்ஸ் வழங்கியுள்ளது.

கிளிண்ட் ஈஸ்ட் வுட், டஸ்ட் டின் ஹாப்மேன் ஆகிய ஹாலிவுட் நடிகர்களுடன் இன்னொருவருக்கும் பிரான்ஸ் அந்த விருதை வழங்கியிருந்தது. அதற்குமேல் இப்போது சிவாஜிக்கு அந்த விருதை வழங்கி கவுரவப்படுத்தியுள்ளது.

சிவாஜி நடித்த ‘நவராத்திரி’ படத்தைப் பார்த்துவிட்டு சிவாஜிக்கு ‘செவாலிய விருது’ அளிக்க பிரான்ஸ் நாடு முன் வந்தது. அந்தப் படத்தைப் பார்த்து உடனே பிரான்ஸ் தேர்வு கமிட்டி ‘செவாலிய விருது’ கொடுக்க முடிவு செய்துவிட வில்லை.

ஒன்பது வேடங்களில் சிவாஜி வித்தியாசமான ஒன்பது மனிதர்கள்போல் நடித்திருக்கும் அந்த அற்புதமான நடிப்பில் முதலில் அவர்களுக்கு நிறைய சந்தேகம் இருந்தது. இது ஒரே நடிகராக இருக்க முடியுமா? என்ற சந்தேகத்தின் பெயரில் பலவித பரிசோதனைகள் செய்து கடைசியில்தான் அவர் ஒரே நடிகர்தான் என்பதை கண்டுபிடித்தார்கள்.

புகழ்பெற்ற பல இயக்குனர்கள் அமர்ந்து அந்தப் படத்தைப் போட்டுப்பார்த்து செவாலியே விருது வழங்குவது பற்றி முடிவு செய்தார்கள். இந்த விருதை சிவாஜிக்கு அளிப்பதற்கு முன் உலக அளவில் புகழ்பெற்ற நடிகர்கள் பட்டியலை வைத்துக் கொண்டு அவர்கள் நடித்த படங்களையெல்லாம் திரும்பத் திரும்ப போட்டுப் பார்த்தார்கள். அதன் இறுதியிலேதான் சிவாஜி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

சிவாஜியைப் பற்றி இந்தியாவிலே உள்ள ஒரு கலை மேதையிடம் கருத்தறிய அவர்கள் பிரபல வங்க இயக்குனர் சத்யஜித்ரேயை அணிகினார்கள். அவரோ, ‘சிவாஜி செவாலியே விருதுக்கு மிக தகுதியான கலைஞர்’ எனக் கருத்து தெரிவித்தார்.

சிவாஜியின் நடிப்பைப் பார்த்த ஒரு பிரான்ஸ் இயக்குனர் ‘‘இவருக்கு ஏன் இதுவரை ஆஸ்கர் விருது கொடுக்கப்பட வில்லை?ÔÔ என்ற சந்தேகத்தை கேட்டார்.

அவருக்கு இன்னொரு இயக்குனர் பதில் கூறும்பொழுது, ‘‘ஆஸ்கர் விருது இதுவரை வழங்கப்படாததற்கு சேர்த்துதானே இந்த செவாலியே விருதை வாங்குகிறோம்’’ எனக் கூறினார்.

இந்த ‘நவராத்திரி’ படத்தை அது வெளியான சமயத்தில் தியேட்டரில் பார்த்த தனது அனுபவத்தை நடிகரும், இயக்குனருமான விசு தொலைக்காட்சிப் பேட்டியில் கூறினார்.

விசு வெளிநாட்டினர் சிலருடன் நவராத்திரி படம் பார்க்கச் சென்றிருந்தாராம். இடைவேளை வரை படத்தை அந்த வெளிநாட்டினர் மிக அமைதியாக ரசித்துக் கொண்டிருந்தார்களாம். இடைவேளையின்போது விசு அவர்களைப் பார்த்து, ‘‘இப்போது நான் உங்களுக்கு ஒரு செய்தியை கூறப்போகிறேன். இது மிகவும் ஆச்சரியமாகவும் இருக்கலாம்’’ என்று கூறிவிட்டு அந்தச் செய்தியை கூறியிருக்கிறார்.

‘‘அதாவது இப்போது நாம் பார்த்தப் படத்தில் கிணற்றில் விழப்போகிற கதாநாயகியை காப்பாற்றுகிற பணக்காரரும், அடுத்து வருகிற குடிகார வாலிபனும், மூன்றாவதாக வருகிற டாக்டரும், நான்காவதாக வருகிற பயங்கரவாதியும் நான்கு வெவ்வேறு நடிகர்கள் அல்ல; ஒரே நடிகர்தான் அந்த நான்கு வேடங்களிலும் வருகிறார்’’ என விசு குறிப்பிட்டிருக்கிறார்.

இதைக் கேட்டு அந்த வெளிநாட்டினர் பெரிதும் வியந்து போனார்களாம், ‘‘ஒரே மனிதரா இவ்வளவு வித்தியாசமாக தோன்றி நடிக்கிறார்? இதை முதலிலேயே சொல்லியிருந்தால் ஆரம்பத்திலேயே கூர்ந்து கவனித்திருப்போமே’’ என குறைபட்டுக் கொண்டார்களாம்.

பின்னர் இடைவேளைக்குப் பின்னர் மேலும் ஐந்து வேடங்களில் வரும் சிவாஜியைக் கண்டு பெரிதும் வியந்து பாராட்டினார்கள் என விசு அந்தப் பேட்டியிலே குறிப்பிட்டார்.

Thanks Ganapathi Iyar

Russellxor
22nd January 2021, 07:58 PM
[emoji93][emoji93][emoji93][emoji93]https://uploads.tapatalk-cdn.com/20210122/30bac50b3ffcea47008754766e0d3f1d.jpg

Russellxor
22nd January 2021, 07:58 PM
[emoji260][emoji260][emoji260]https://uploads.tapatalk-cdn.com/20210122/77d7f2d6e382459ae6eb8c38bcbb9931.jpg

sivaa
23rd January 2021, 06:19 AM
அனைவருக்கும் வணக்கம் !

கடந்த சில நாட்களாக நேரமின்மையால் பல விடயங்களை பதிவிடமுடியவில்லை.
கணணியிலும் சிறிய தடங்கல். சில பதிவுகளை கட் அன்ட் பேஸ்ருடன் சுருக்கிக்கொண்டேன்.
இனி (நேரத்தை பொறுத்து) பதிவுகள் தொடரும்.

sivaa
23rd January 2021, 06:20 AM
இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவிடம் பள்ளிக் குழந்தைகள் மதிய உணவு திட்டத்திற்காக 1957 ஆம் ஆண்டின் போது ரூ ஒரு லட்சம்( இன்றைய நாளில் 100 கோடி) ரூபாய்க்கான காசோலையை வெள்ளிப் பேழையில் வைத்து நன்கொடையாக வழங்கினார் நடிகர் திலகம் சிவாஜி,
அதனை தொடர்ந்து அடுத்த ஆண்டே பிரதமரின் காச நோய் ஒழிப்பு திட்டத்திற்காக சென்னையில் நெஞ்சக காச நோய் மருத்துவமனை அமைய ஒரு லட்சம் ரூபாயை ( மீண்டும் 100 கோடி ரூபாய்) அளித்தார்,

இந்தியாவின் இரண்டாவது பிரதமர் லால்பகதூர் சாஸ்திரி அவர்களிடம் 1965 ஆம் ஆண்டின் போது யுத்த காலத்தில் தனது முதல் தவனை நிதியாக ரூ 40 ஆயிரமும்( இன்றைய மதிப்பில் ரூ 40 கோடி) கமலா அம்மையாரின் தங்க ஆபரணங்கள் என 400 சவரன் நகைகளையும் வழங்கி இருந்தார், மேலும் தனக்கு பரிசாக கிடைத்து இருந்த 100 சவரன் எடை கொண்ட தங்கப் பேனாவையும் சேர்த்து மொத்தம் 500 சவரன் தங்க நகைகளையும்( ரூ 20 கோடி மதிப்புள்ள) நன்கொடையாக நாட்டிற்கு கொடுத்தார் நடிகர் திலகம் சிவாஜி,

இது போல மூன்றாவது பிரதமர், நான்காவது பிரதமர், ஐந்தாவது பிரதமர் என தனது வாழ்நாளில் கண்ட கடைசி பிரதமரான வாஜ்பாய் அவர்கள் வரை கொடுத்த கார்கில் யுத்த நிதி என நீண்ட பட்டியல் இருக்கிறது,


சாமான்ய தமிழனால் இது போன்ற வரலாற்று தேச நலன் உதவிகளை இது வரையிலும் புரிந்து கொள்ள முடியவில்லை,

அதே போல படித்து பட்டம் பெற்ற தமிழக வரலாற்று சுவடுகளைப் பற்றி விவாதித்து வரும் ஊடகவியலாளர்கள் பத்திரிக்கை ஆசிரியர்கள் ஆகியோருக்கும் நினைவில் வருவதில்லை,

அசல் தமிழனின் பெருமையை பேசுவதில் அவ்வளவு தயக்கம்,

Thanks Sekar Parasuram

sivaa
26th January 2021, 08:33 AM
இந்திய உறவுகள் அனைவருக்கும் ,
72 வது குடியரசு தின வாழ்த்துகள்.

https://scontent.fybz2-2.fna.fbcdn.net/v/t1.0-9/142164852_856068208515720_2300939026850943613_o.jp g?_nc_cat=102&ccb=2&_nc_sid=730e14&_nc_ohc=QZa2xNcJV9gAX9TB6_F&_nc_ht=scontent.fybz2-2.fna&oh=c9a82ee7d01fa572883a92425edf76e9&oe=60339F5F

sivaa
26th January 2021, 08:38 AM
குடியரசு தினத்தில் வெளியான கொடைவள்ளலின் திரைகாவியங்கள்.

குடும்பம் ஒரு கோயில் 26/01/1987

https://scontent.fybz2-1.fna.fbcdn.net/v/t1.0-9/141739850_2836083093273167_4501769666640177423_o.j pg?_nc_cat=100&ccb=2&_nc_sid=730e14&_nc_ohc=zd2RuzmoKLoAX8hlneN&_nc_ht=scontent.fybz2-1.fna&oh=1578d25b5047382dc961119dc2cfd11d&oe=6036D339
Thanks Vcg Thiruppathi

sivaa
26th January 2021, 08:40 AM
ரிஷிமூலம் 26/01/1980

https://scontent.fybz2-2.fna.fbcdn.net/v/t1.0-9/142004928_2836056013275875_2933407139268365006_o.j pg?_nc_cat=103&ccb=2&_nc_sid=730e14&_nc_ohc=h6_K372JcNkAX8dYbf1&_nc_ht=scontent.fybz2-2.fna&oh=89d7463bcd25d7b539b2f2f989442e25&oe=60353951
Thanks Vcg Thiruppathi

sivaa
26th January 2021, 08:41 AM
மருமகள் 26/01/1986

https://scontent-ort2-2.xx.fbcdn.net/v/t1.0-9/142111406_2836078293273647_7442150136792792868_o.j pg?_nc_cat=109&ccb=2&_nc_sid=730e14&_nc_ohc=wtoved4EgT8AX_rzAqg&_nc_ht=scontent-ort2-2.xx&oh=eaf0bb0335c019ba21d9aae59abcb5c9&oe=6035F884
Thanks Vcg Thiruppathi

sivaa
26th January 2021, 08:42 AM
ராஜா 26/01/1972

https://scontent-ort2-2.xx.fbcdn.net/v/t1.0-9/141019285_2836095346605275_2327493033841626426_o.j pg?_nc_cat=105&ccb=2&_nc_sid=730e14&_nc_ohc=K-pZqrMOIsYAX-oXPjb&_nc_ht=scontent-ort2-2.xx&oh=069acc508727fe3508bf283facc0a00a&oe=6035A824
Thanks Vcg Thiruppathi

sivaa
26th January 2021, 08:44 AM
நீதிபதி 26/01/1983

https://scontent.fybz2-1.fna.fbcdn.net/v/t1.0-9/142170281_2836067556608054_4319806884322861789_o.j pg?_nc_cat=108&ccb=2&_nc_sid=730e14&_nc_ohc=OmRDHbKDu4EAX8TbdxE&_nc_ht=scontent.fybz2-1.fna&oh=102118d9175b8116f5c2b8bb004fc6d6&oe=6034EB05

Thanks Vcg Thiruppathi

sivaa
26th January 2021, 08:45 AM
மோட்டார் சுந்தரம்பிள்ளை 26/01/1966

https://scontent-ort2-2.xx.fbcdn.net/v/t1.0-9/142361571_2836089466605863_5527999023320808855_o.j pg?_nc_cat=105&ccb=2&_nc_sid=730e14&_nc_ohc=CVzjFWJFBvUAX-qS0CF&_nc_ht=scontent-ort2-2.xx&oh=55ed830b7e37c26a140ffe4abc57f939&oe=6035D7A7


Thanks Vcg Thiruppathi

sivaa
26th January 2021, 08:46 AM
பந்தம் 26/01/1985

https://scontent-ort2-2.xx.fbcdn.net/v/t1.0-9/140780044_2836073149940828_5619256862241389242_o.j pg?_nc_cat=105&ccb=2&_nc_sid=730e14&_nc_ohc=Ym-WYW8FJysAX-ckrjb&_nc_ht=scontent-ort2-2.xx&oh=b41b318d758a705ad80203d03b42553b&oe=60354A43

Thanks Vcg Thiruppathi

sivaa
26th January 2021, 08:48 AM
ஹிட்ர் உமாநாத் 26/01/1982

https://scontent.fybz2-1.fna.fbcdn.net/v/t1.0-9/141982188_2836062263275250_6596721821915619848_o.j pg?_nc_cat=108&ccb=2&_nc_sid=730e14&_nc_ohc=bYEnL2JA7acAX_4vZR8&_nc_ht=scontent.fybz2-1.fna&oh=01bf7a5edd0bd273b2fecb4c71e0116c&oe=60346D50
Thanks Vcg Thiruppathi

sivaa
26th January 2021, 08:50 AM
சிவகாமியின் செல்வன் 26/01/1974

https://scontent-ort2-2.xx.fbcdn.net/v/t1.0-9/142686782_2836101423271334_542081886520555304_o.jp g?_nc_cat=110&ccb=2&_nc_sid=730e14&_nc_ohc=a6XExLunD8EAX-9ZKzw&_nc_ht=scontent-ort2-2.xx&oh=2038174705af2814ab305b53ebd01585&oe=6035F77B



Thanks Vcg Thiruppathi

sivaa
26th January 2021, 08:54 AM
அந்தமான் காதலி 26/01/1978

https://scontent-ort2-2.xx.fbcdn.net/v/t1.0-9/141542861_2836051286609681_7577743581831397303_o.j pg?_nc_cat=108&ccb=2&_nc_sid=b9115d&_nc_ohc=1wSsGSWEWn4AX_My7nS&_nc_ht=scontent-ort2-2.xx&oh=8e568a6a6a038c50b7f8890b218a3526&oe=6037109E


Thanks Vcg Thiruppathi

sivaa
26th January 2021, 08:59 AM
தீபம் 26/01/1977

https://scontent.fybz2-2.fna.fbcdn.net/v/t1.0-9/140651313_2836113076603502_7710629591561706156_o.j pg?_nc_cat=103&ccb=2&_nc_sid=730e14&_nc_ohc=NmgUWY2JDgcAX8STmxx&_nc_ht=scontent.fybz2-2.fna&oh=a1d8240b81975f2981101eda9df62316&oe=6034E90E


Thanks Vcg Thiruppathi

sivaa
27th January 2021, 06:00 AM
26.1.21 குடியரசுதினத்தை முன்னிட்டு,

முதன்முறையாக
மதுரையில் உள்ள சிவாஜி சிலை பீடத்தில்
தேசிய கொடி ஏற்றப்பட்டது.

காலையில இருந்தே நடிகர்திலகத்தின் அன்பு இதயங்கள் குவிய தொடங்கினர்....

காலை 10.30 மணிக்கு, மதுரையில் சிலை வைத்த,
ஐயா வி.என்.சிதம்பரம் அவர்களின் அருந்தவப்புதல்வன் வி.என்.சித.வள்ளியப்பன் அவர்கள்
தேசியக் கொடியை ஏற்றினார்.

மதுரை சிவாஜி ஃபைன் ஆர்ட்ஸ் சாா்பாக,
ரசிகர் ஒருவருக்கு நான்கு சக்கர வண்டி வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் அகிலஇந்திய சிவாஜி மன்றம்,
நகர் சிவாஜி மன்றம்,
புறநகர் சிவாஜி மன்றம்,
சிவாஜி காமராஜ் கல்வி அறக்கட்டளை,
சிவாஜி சமூகநல பேரவை,
சிவாஜி ஃபைன் ஆரட்ஸ்,
ரத்தபாசம் சிவாஜி குரூப்ஸ்,
மாவட்ட பிரபு மன்ற நிர்வாகிகள் கலந்து சிறப்பித்தனர்.

சமீபத்தில் சிலை முன்பு,
சிவாஜி பொங்கல் கொண்டாடப்பட்டது.

தற்போது, சிவாஜியின் குடியரசு தின விழா...

என தொடர்ந்து மதுரையை கலக்கி வரும்

சிவாஜியின் அன்பு இதயங்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

https://scontent-ort2-2.xx.fbcdn.net/v/t1.0-9/141380738_3649193925165185_1049663511711182950_o.j pg?_nc_cat=106&ccb=2&_nc_sid=730e14&_nc_ohc=80KDvlguHuYAX_LwIyU&_nc_ht=scontent-ort2-2.xx&oh=471f7102e4dc8635b750e8887f39b3bd&oe=6035A074

Thanks Sundar Rajan

sivaa
27th January 2021, 08:47 AM
27/01/1979 ல் வெளிவந்த வசூல் காவியம் திரிசூலம்

27/01/2021 ல் 42 ஆண்டுகள் நிறைவு.

இதற்குமுன்னர் வந்த அனைத்து தமிழ் படங்களின் வசூல்சாதனைகயும் தவிடுபொடியாக்கி
முதல் வெளியீட்டில் பல கோடிகளை வசூலாகப்பெற்று சினிமா உலகை உலுக்கி
தமிழ்நாட்டையே திரும்பிப்பார்க்க வைத்த மாபெரும் வெற்றிக்காவியம் திரிசூலம்.

http://uploads.tapatalk-cdn.com/20160906/e44107516eb9f2e2552337329228c7c8.jpg


திரிசூலம்

சென்னை..............................சாந்தி... ..... ............175 ..நாட்கள்....16.13.648-90
சென்னை..............................கிரவுண்.. ..... ..........175...நாட்கள்..... 8.59.663-45
சென்னை..............................புவனேஸ்வரி.... ..... .175....நாட்கள்.......8.47.818-20

சென்னை நகர் 3தியேட்டர்கள் மொத்த வசூல்...................................33.21 .130-55

கோவை.................................கீதாலயா. ..... .........175...நாட்கள்.......12.38.284-90
மதுரை....................................சிந் தாமணி ..........200..நாட்கள்.........10.28.819-55
திரிச்சி..................................... பிரபா த்..................175...நாட்கள்......8.39.7 85-80
சேலம்.....................................ஒரி யண்டல ்........195...நாட்கள்..........7.12.329-14
வேலூர்....................................அப் சரா.. ................175...நாட்கள்.......6.39.949-25
திருப்புர்................................... டைமன் ட்..............142ஈநாட்கள்.........4.62.612-55
ஈரோடு..ராயல்..103+ஸ்டார்..13..+ஶ்ரீகிருஸ்ணா 8..124..நாட்கள்......4.59.649-68
தஞ்சை...................................அருள் ..... ............153..நாட்கள்.............4.09.768-65
குடந்தை................................தேவி.. ..... ............139..நாட்கள்..............3.99.123-25
பொள்ளாச்சி..........................துரைஸ்... ..... ........125..நாட்கள்............3.88.184-75
பாண்டி....................................ஜெய ராம். ...........151...நாட்கள்...........3.56.366-55
நெல்லை..............சென்ட்ரல்..105+பாபுலர்..1 0-...115..நாட்கள்...........3.53.710-00
நாகர்கோவில்................ராஜேஸ்..77+..யுவரா ஜ்..2 8-.105..நாட்கள்.....3.05.270-85
திருவண்ணாமலை...........பாலசுப்பிரமணி......... 143.. நாட்கள்..........3.03.952-95
மாயுரம்................................பியர்ல ஸ்... ...............125..நாட்கள்.........2.58.112-10
காஞ்சி..................................லட்சு மி... ...................77..நாட்கள்..........2.46.734-45
தாம்பரம்..............................ஶ்ரீவித ்தியா .................69..நாட்கள்.........2.40.000-00
திருவாரூர்.........................தையலம்மை.. ..... ..........80..நாட்கள்.........2.12.303-65
ஊட்டி..................................ஶ்ரீகண ேஷ்.. ..................60..நாட்கள்.........1.90.092-15
தூத்துகுடி...........................காரனேசன் ..... ................50...நாட்கள்.......1.84.642-50

விழும்புரம் .......................சாந்தி..................... .........64..நாட்கள்.........1.79.248-30

அரக்கோணம்...................கற்பகம்.......... ..... ............60...நாட்கள்.........1.70.000-00

சிதம்பரம்...........................வடுகநாதன் ..... ..............64...நாட்கள்.........1.67.164-74

பழநி...................................வள்ளுவ ர்... .................50...நாட்கள்............1.67.153-70

மூன்று தியேட்டர்களில் ஷிப்டிங்கில் ஓடியது உட்பட மொத்தம்

11 தியேட்டர்களில் வெள்ளிவிழா.

http://uploads.tapatalk-cdn.com/20160906/2d3db8f0e69fd967cac73ba8c249a2ae.jpg

sivaa
27th January 2021, 08:53 AM
YouTube ல் புகழ்பெற்ற கதாநாயகர்களின் Top 25 movies என வீடியோ தொகுப்பை வெளியிட்ட்டு வருகிறார்கள்,
அதில் நடிகர் திலகத்தின் Top 25 movies என தேர்வு செய்வதில் அவர்களுக்கு எந்த சிரமும் இல்லை போல, ஏனெனில் நடிகர் திலகத்தின் சில்வர் ஜூப்ளி திரைப்படங்கள் என ஒரு சில நிமிடங்களில் தேர்வு செய்து விடுகிறார்கள், அதையும் தாண்டி ஒன்றிரண்டு திரைப்படங்கள் பட்டியலில் இடம் பிடித்திருந்தாலும் அவையும் சாதனைக் காவியங்களாவே அமைந்து இருக்கிறது, உதாரணத்திற்கு நவராத்திரி, தெய்வமகன்,தில்லானா மோகனாம்பாள், கர்ணன்,புதிய பறவை போல,

அதே தருணத்தில் பிற நடிகர்களின் top 25 movies என தேடிப்பிடிப்பதில் அவர்களுக்கு உண்டாகியிருக்கும் சிரமங்களை சொல்ல வேண்டுமானால் தேர்வு செய்த திரைப்படங்களைப் பார்த்தாலே தெரிந்து கொள்ளலாம்,
ஓடாத டப்பாப் படங்களை சூப்பர் ஹிட் , பாக்ஸ் ஆபிஸ், சிலவர் ஜூப்ளி என சொல்லி சமாளிக்கிறார்கள்,

அவற்றை வேண்டுமானால் விருப்பமானவர்கள் பார்த்து சிரித்து மகிழலாம்
அவ்வளவு காமெடி நிறைந்து இருக்கிறது,


Thanks Sekar Parasuram

sivaa
31st January 2021, 06:22 AM
நடிகர்திலகத்தின் ஹை- லைட்ஸ்
'புதியபறவை'யின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடந்து கொண்டிருந்த நேரம்.
நடிகர்திலகம் அங்கேயே தங்கி, நடித்துக் கொண்டிருந்தார்.
ஒருநாள், அவருடைய விலை உயர்ந்த கடிகாரம்திருட்டுப் போய் விட்டது. கடிகாரம் போய்விட்டதே என்று அவர் வருந்தவில்லை; நண்பர் ஒருவரின் நினைவாக அணிந்திருந்த பொருளை இழந்துவிட்டோமே என்று வருந்தினார்....
சில மணி நேரங்களில் அந்த கடிகாரம் கிடைத்துவிட்டது! அதை எடுத்து ஒளித்து வைத்திருந்தவர் ஸ்டூடியோவைச் சேர்ந்த ஒரு தொழிலாளி.
அவனை மற்ற தொழிலாளர்கள் கையும்-களவுமாகப் பிடித்து, நடிகர்திலகத்தின் முன் கொண்டு வந்து நிறுத்தினார்கள். அவர் ஏதோ பெரிய தண்டனை கொடுக்கப் போகிறார், அல்லது போலிசாரிடம் ஒப்படைக்கப் போகிறார் என்று எல்லோரும் நினைத்தார்கள். பிடிபட்ட தொழிலாளியும் அவ்வாறுதான் நினைத்தான். அவன் உடல் பயத்தால் வெடவெட என்று நடுங்கிக் கொண்டிருந்தது.
அவனை நடிகர்திலகம் தன்னருகே அழைத்தார். " ஏம்பா இப்படி செய்தே! பணக் கஷ்டம்னா என்னிடம் சொல்லி யிருக்கலாமே!" என்று கூறியபடி, தன் சட்டைப் பைக்குள் கையைவிட்டு 2 ஆயிரம் ரூபாயை எடுத்தார். " இந்தா... இதை வைத்துக் கொள். இனி திருட மாட்டேல்ல!" என்று கூறியவாறு, அந்தப் பணத்தை தொழிலாளியிடம் கொடுத்தார்.
தன்னைப் போலீசில் ஒப்படைக்கப் போகிறார்கள் என்று அஞ்சி நடுங்கிக் கொண்டிருந்த அந்தத் தொழிலாளி, நடிகர்திலகம் 2 ஆயிரம் ரூபாயைக் கொடுத்து பரிவுடன் பேசியதைக் கண்டு திகைத்து, அவர் கால்களில் விழுந்தான். "இனி செத்தாலும் சரி! நான் திருட மாட்டேன். இது சத்தியம்" என்று கண்ணீர் வடித்தபடி தழுதழுத்தக் குரலில் கூறினான். கூடியிருந்தவர்கள் இக்காட்சியைக் கண்டு மெய் சிலிர்த்துப் போனார்கள்.
தினத்தந்தியின் மூத்த ஊழியர் மூலம் இந்த நிகழ்ச்சியை அறிந்த நானும் உள்ளம் நெகிழ்ந்தேன்.
நடிகர் திலகத்தின் இளகிய நெஞ்சத்தை- மனித நேயத்தை உணர்த்த இந்த ஒரு நிகழ்ச்சியே போதுமானதாகும்.
- டாக்டர். பா. சிவந்தி ஆதித்தன்
தினத்தந்தி அதிபர்.
செவாலியர் சிவாஜி சிறப்பு மலரிலிருந்து
இன்னா செய்தாரை ஒறுத்து, நன்னயம் செய்த அய்யனின் புகழ் என்றென்றும் புவியாளும் என்பதில் சந்தேகமில்லை.


https://scontent.fyto1-1.fna.fbcdn.net/v/t1.0-9/28168389_434141093688858_760383631421453509_n.jpg? oh=b5c5e372ef72ba3181b67cf3b93bf022&oe=5B14E5C3
vaannila v
courtesy net

sivaa
31st January 2021, 06:25 AM
நடிகர்திலகத்தின் ஹை-லைட்
30000 உணவுப் பொட்டலங்கள் சிவாஜிகணேசன் அளித்தார்.
இதுவரை ரூ.40000 உதவி
1000 பவுண்டு பால் பவுடரும் வழங்கினார்...
இது 1960 நவம்பர் 13, கழக ஆதரவுப் பத்திரிகையான தனிஅரசு வில் வெளியான செய்தி.
சென்னை, நவ. 13-
நடிகர்திலகம் சிவாஜி கணேசன் இன்று 30000 உணவுப் பொட்டலங்களை மழையால் பாதிக்கப்பட்ட ஏழை மக்களுக்கு வழங்கினார். பல பகுதிகளில் பாதிக்ககப்பட்ட மக்ககளுக்கு கார்கள் மூலம் உணவுப் பொட்டலங்கள் விநியோகிக்க ஏற்பாடுகள் செய்து வருகிறார்.
ரூபாய் 40,000
தமிழ் நாட்டில் பெய்த பெருமழையினால் அவதிப்பட்டுக் கொண்டிருக்கும் தமிழ் மக்களின் துயரைப் போக்க நடிகர்திலகம் சிவாஜி கணேசன் இதுவரை 40000 ரூபாய் வரை பணமாகவும், அரிசியாகவும், உணவாகவும் வழங்கியிருக்கிறார்.
பால் பவுடர்
தமது வெள்ள நிவாரணக் குழு மூலம் தனது சொந்த மேற்பார்வையில் நடத்திக் கொண்டிருக்கும் இந்தப் பணியின் நான்காவது நாளாக 30,000 க்கும் மேலான உணவுப் பொட்டலங்களும் , 1000 பவுண்டு பால் பவுடரும் விநியோகிக்கப் பட்டது.
கவுன்சிலர்கள்
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு மேற்படி உதவி அந்தந்த கவுன்சிலர்கள் மூலமும், ஆட்டோ ரிக்ஷாக்கள் மூலமும் சரியான நேரத்திற்கு முன்னால் ஒவ்வோர் இடத்திற்கும் அனுப்பி வைக்கப்பட்டு அவை சரியான முறையில் விநியோகிக்கப் படுவதற்கும் தகுந்த ஏற்பாடுகள் செய்யப் பட்டுள்ளது.
( தனிஅரசு, நவம்பர் 1960)
நடிகர்திலகத்தின் ஹை-லைட்ஸ் :6
தென்னிந்திய திரைப்பட டெக்னீஷியன்ஸ் சங்க கட்டிட நிதிக்காக சிவாஜி நாடக மன்றத்தாரின் ' வியட்நாம் வீடு ' நாடகம் மியூசிக் அகாடமி ஹாலில் அக்டோபர் 18ம் தேதி சனிக்கிழமை மாலை நடை பெற்றது. இந்த நாடகத்தில் ரூ. 30,000 வசூலாயிற்று.
வசூலான தொகை நடிகர்திலகத்தின் சார்பாக நன் கொடையாக வழங்கப்பட்டது.
இலவசமாக நாடகத்தை நடத்தித் தந்த நடிகர் திலகத்துக்கு சங்கச் செயலாளர் என்.கிருஷ்ணசாமி மாலை அணிவித்தார்.
(சினிமா ஸ்டார், நவம்பர் 1969)
-வசந்தமாளிகை மாத இதழிலிருந்து தகவல் திரட்டப்பட்டது.
அள்ளிக் கொடுத்தவரும் தன்னை விளம்பரப்படுத்திக் கொள்ளவில்லை. வாங்கிக் கொண்டோரும் கடைசிவரை வாய்த் திறக்கவில்லை.
என்றாலும்,
எல்லாப் புகழும் அய்யன் ஒருவருக்கே.

Vaannila Vijayakumaran‎

courtesy net

sivaa
31st January 2021, 10:17 AM
ஸ்கூல் மாஸ்டர் (கன்னடம்) 31/01/1958 . இன்று 63 வருடங்கள் நிறைவு.

https://scontent.fybz2-1.fna.fbcdn.net/v/t1.0-9/142333629_2839711766243633_455193234345688998_o.jp g?_nc_cat=101&ccb=2&_nc_sid=730e14&_nc_ohc=HbbrUcyqnNwAX_LPjE5&_nc_ht=scontent.fybz2-1.fna&oh=2f3fb225f5f4ce67befe2e1c9a47f41c&oe=603CBBDA

Thanks Vcg Thiruppathi

sivaa
31st January 2021, 09:31 PM
1952 ம் வருடம் அக்டோபர் 17ந் தேதிதீபாவளி திருநாளில் வெளியானது பராசக்தி படம்
வெளியானது . அதுவரை யாரிடமும் இல்லாத காந்த சக்தி சிவாஜியின் கண்களுக்கு இருந்ததை கண்டு மொத்தமாக அவர்பால் ஈர்க்கப்பட்டனர் .அவர் வசனம் பேசிய முறை உடல் மொழி பிரமிக்க வைத்தது .உச்ச கட்ட காட்சியில் வசனத்தை ஒரு ஜல்லிக்கட்டு காளை யை போல சிவாஜி திமிறிக்கொண்டு பேசியதை பார்த்த போது ,ஒவ்வொரு ரசிகனும் தன்னுடுய உடம்பில் மின்சாரம் பாய்வதை போல் உணர்ந்தனர் .பராசக்தி பார்த்த ரசிகர்கள் மனதில் தனக்கென ஒரு சிம்மாசனம் ப...ோட்டு அமர்ந்தார் .படம் வெளியான அன்று ரசிகர்கள் எப்படி படத்தை ரசிக்கிறார்கள் என்பதை பார்க்க சிவாஜி பெருமாள் முதலியார் கிருஷ்ணன் பஞ்சு ஆகியோர் பாரகன் தியேட்டருக்கு சென்றார்கள் .அவர்கள் உற்கார்ந்த வரிசைக்கு முன் உற்கார்ந்து இருந்த ஒரு சிறுவன் படத்தையும் சிவாஜியையும் மாறி மாறி பார்த்து கொண்டு இருந்தான் .தனக்கு பின்னால் பட்டு வேஷ்டி சட்டையில் வந்து அமர்ந்து இருப்பது சிவாஜிதான் என்று தெரிந்து கொண்டான் .நீதி மன்ற காட்சி முடிந்ததும் அந்த சிறுவன் ஓடி வந்து பலம் கொண்ட மட்டும் சிவாஜியின் கையை பிடித்து குலுக்கினான் .அந்த சிறுவன்தான் நல்லி குப்புசாமி செட்டியார் .சிவாஜி வந்ததை அறிந்த ரசிகர்கள் அவரை தலையில் தூக்கிவைத்து கொண்டு கொண்டாட துவங்கினார்கள் .பராசக்தி திரையிடப்பட்ட எல்லா தியேட்டர்களில் எல்லாம் திருவிலாகோலம் போல மக்கள் கூட்டம் கூட்டமாக குவியதொடங்கினார்கள் .பாடல்களை பதிவு செய்து வெளியிட்ட கிராமபோன் நிறுவனம் பராசக்தி படத்தின் வசனத்தை பதிவு செய்து வெளியிட்டது .விற்பனையிலும் அந்த ரேக்காட்கள் சாதனை புரிந்தது . வெள்ளிவிழா கண்டு வெற்றிக் கொடி நாட்டியது பராசக்தி படம்.

courtesy net

sivaa
31st January 2021, 09:34 PM
பராசக்தி - சிவாஜி ஜாலம்
சிறந்த தயாரிப்பாளரான ஏ.வி.எம். செட்டியார் கலைஞரின் வசனங்களைத்தான் இந்த படத்தின் துருப்பு சீட்டாக நினைத்திருப்பார்.
அவரே எதிர்பார்க்காத திருப்பம் சிவாஜி.
... இத்தனைக்கும் அவருக்கு கடுமையான போட்டி – எஸ்.எஸ்.ஆர், ஸஹஸ்ரனாமம் ஆகியவர்கள் நடிப்பில் இளைத்தவர்கள் இல்லை. சிவாஜி காட்டிய வேகம், உணர்ச்சிக் கொந்தளிப்பு, குரல் மாடுலேஷன், சிம்மக் குரல், நடனம் (ஆரியக் கூத்தாடினாலும் தாண்டவக் கோனே பாட்டை பாருங்கள்) முதல் படத்திலேயே சென்சுரி!
இந்த நீதிமன்றம் பல விசித்திரமான வழக்குகளை சந்தித்திருக்கிறது என்று வசனம் பேசி பார்க்காத தமிழ் நடிகர் இல்லை. ஓடப்பராய் இருக்கும் ஏழையப்பர் உதையப்பர் ஆகிவிட்டால் என்றும் ஓடினாள் ஓடினாள் வாழ்க்கையின் ஓரத்துக்கே ஓடினாள் என்றும் பேசுவதை மறக்க முடியாது. அனல் பறக்கும் வசனங்கள், அந்த வசனங்களையும் விஞ்சிய நடிப்பு.
செட்டியாரின் தயக்கத்தை மீறி சிவாஜிதான் நடிக்க வேண்டும் என்று வற்புறுத்திய பெருமாளுக்கு தமிழ் சினிமா உலகம் கடமைப்பட்டிருக்கிறது.
நினைவில் நிற்கும் சில வசனங்கள்.
கல்யாணி: இட்லிக் கடையா?
பக்கத்து வீட்டு அக்கா: தமிழ்நாட்டில் தாலி அறுத்தவர்களுக்கு அதுதானே தாசில் உத்யோகம்!
குணசேகரன்: மெட்ராஸ்ல மனுஷன் மிருகமாகத்தானிருக்கான்
போலீஸ்காரன்: ஏய்
குணசேகரன்: உங்களை சொல்லலைங்க. முதுகெலும்பு உடைய மூட்டை வண்டியை இழுக்கிறானே, குதிரைக்கு பதிலாக நரம்பு தெறிக்க தெறிக்க ரிக்ஷா இழுத்து கூனிப்போயிருக்கிறானே, நாயை போல சுருண்டு நடைப்பாதையில் தூங்குகிறானே அந்த நல்லவனை, நாதியற்றவனை, நாலு கால் பிராணியாய் ஆக்கப்பட்ட மனிதனை சொன்னேன். சென்னை புனிதமான நகரம். இங்கே மனித மிருகம்
போலீஸ்காரன்: சரிதான் போடா. மெட்ராஸுக்கு நீ மேயராகற காலத்துல மிருகத்தை எல்லாம் மனுஷனாக்கலாம்.
பார்க்கில் தூங்கும் குணசேகரனை எழுப்பும் ஆள்: என்னடா? முழிக்கிறே?
குணசேகரன்: பின்ன, தூங்கினவன எழுப்பினா, முழிக்காம என்ன செய்வான்?
பாரதிதாசனின் வசனம் என்று நினைக்கிறேன் – ஓடப்பர் இருக்கும் ஏழையப்பர் உதையப்பர் ஆகிவிட்டால் ஓடப்பர் உதையப்பர் எல்லாம் மாறி ஒப்பொப்பர் ஆகிடுவார் உணரப்பா நீ!
சிவாஜி ஒரு புயல்தான். அந்த மாதிரி வேகம் உள்ள நடிகரை தமிழ் சினிமா உலகம் அது வரை பார்த்ததில்லை.
இதற்கு முன் எனக்கு தெரிந்து ஓரளவாவது வேகம் உள்ள பாத்திரங்கள் அபூர்வம்தான் – சந்திரலேகா ரஞ்சன், வேலைக்காரி கே.ஆர். ராமசாமி, மந்திரி குமாரி எஸ்.ஏ. நடராஜன் மாதிரி. ஹீரோக்கள் எல்லாம் வேறு மாதிரி – ஒவ்வொரு வார்த்தைக்கும் நடுவில் இரண்டு நிமிஷம் gap விடும் பாகவதர், மென்மையாக பேசும் டி.ஆர். மகாலிங்கம், எம்.கே. ராதா, எம்ஜிஆர் மாதிரி கத்தி சண்டை வீரர்கள், இவர்கள் நடுவில் ஸ்டைலாக கலைந்த தலையோடும், கவர்ச்சியான புன்னகையோடும், சிம்மக் குரலோடும் அவர் நுழைந்து நேராக டாப்புக்கு போய்விட்டார்.
அத்துடன் திராவிட இயக்கப் படங்களுக்கு, உணர்ச்சிகரமான வசனம் பேசுவதற்கு, intense நடிப்புக்கு அவர்தான் சரி என்றாகிவிட்டது. டி.ஆர். மகாலிங்கம், கே.ஆர். ராமசாமியின் குறுகிய திரை உலக வாழ்க்கை சடாலென்று இறங்கி விட்டது.
ஏன், நன்றாக நடித்த எஸ்.எஸ்.ஆர். சஹஸ்ரனாமம் ஆகியோரையே இந்த படத்தில் நமக்கு ஞாபகம் இருப்பதில்லை.
இதுதான் முதல் படத்திலேயே ஐயன் செய்த ஜாலம்!
-RV

courtesy net

sivaa
31st January 2021, 09:38 PM
உத்தமபுத்திரன் தொடர்ந்து பீம்சிங் இயக்கத்தில் பதி பக்தி படத்தில் நடித்தார் . அம்மையப்பன் படம் தோல்வி கண்டதால் ராசி இல்லாத இயக்குனர் என்ற பெயர் பீம்சிங்குக்கு வந்தது .அந்த விமர்சனங்களை ஒதுக்கி தள்ளிவிட்டு சொந்தமாக படம் எடுக்கும்படி கலைவாணர் யோசனை சொன்னதன் பேரில் சோலைமலை வேலுமணி எம் எஸ் விஸ்வநாதன்ராமமூர்த்தி சேர்ந்து புத்தா பிக்சர்ஸ் தொடங்கி பராசக்தி முதல் சிவாஜியை நன்கு அறிந்தவர் என்பதால் சிவாஜி நடிக்கவேண்டும் என்று கேட்டவுடன் நீங்கள் தைரியமாக ஆரம்பியுங்கள் நான் உங்களு...க்கு பக்க பலமாக இருக்கிறேன் என்று உறுதி கூறினார் .புத்தா நிறுவனம் தரமானவெற்றி படங்களை தயாரித்தது என்றால் அதற்க்கு ஆரம்ப காலத்தில்அதற்கு உரம் இட்ட சிவாஜிதான் காரணம் என்று பீம்சிங் கூறியிருக்கிறார் . சிவாஜி உருவாக்கிய தயாரிப்பாளர் எண்ணிக்கை மிக நீளமானது ,பந்துலு ஶ்ரீதர் பீம்சிங் பாலாஜி சந்தானம் குகநாதன் மோகன் ஆர்ட்ஸ் மோகன் ,ராம அரங்கண்ணல் என்று பட்டியல் நீண்டுகொண்டே இருக்கிறது .மிக சாமான்யர் பலரை தயாரிப்பாளர் ஆக்கிய பெருமை சிவாஜிக்கு உண்டு .குடும்ப சிக்கல்கள் நிறைந்த கதையை 1958ம் ஆண்டு மார்ச் மாதம்14 ந்தேதி பதி பக்தி படம் மிக பெரிய வெற்றி படமாக அமைந்து ராசியான இயக்குனர் ஆனார் .அந்த வருடம் துவக்கத்தில் வந்த படங்கள் அனைத்தும் ஓடாத நிலையில் இந்த படமாவது ஒடி தமிழ் திரையுலகை காப்பாற்றியது என்று வாகினி அதிபர் நாகி ரெட்டி கூறினாராம் .

courtesy net

sivaa
31st January 2021, 09:41 PM
உங்களுக்குத் தெரியுமா?
டிஜிட்டல் கர்ணன் 2012 சாதனைகள்...
மார்ச் 16, 2012- ல் டிஜிட்டலில் திரையிடப்பட்ட...
நடிகர்திலகத்தின் கர்ணன் அதே வருடம் ஆகஸ்ட் 15 க்குள், 5 மாத காலத்தில், அதாவது 150 நாட்களுக்குள் மொத்தம் 304 அரங்குகளில் திரையிடப்பட்டு, இணைந்து 510 வாரங்கள் ஓடி, 5 கோடி ரூபாய்க்கும்மேல்
வசூலை வாரிக் குவித்தது.
அதாவது,
சென்னையில் திரையிடப்பட்ட 14 அரங்குகளில் இணைந்து 70 வாரங்களும்,
செங்கை மாவட்டத்தில் திரையிட்ட 25 அரங்குகளில் இணைந்து 36 வாரங்களும்,
வட ஆற்காட்டில் திரையிட்ட 25 அரங்குகளில்,
இணைந்து 49 வாரங்களும்,
தென்னாற்காடு, பாண்டி பகுதிகளில் 25 அரங்குகளில் இணைந்து 33 வாரங்களும்,
கோவை, ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் திரையிட்ட 53 அரங்குகளில், இணைந்து 79 வாரங்களும்,
திருச்சி, தஞ்சை மாவட்டங்களில் திரையிட்ட 38 அரங்குகளில் இணைந்து 61 வாரங்களும்,
நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில், 29 அரங்குகளில், இணைந்து 54 வாரங்களும்
மதுரை, இராமநாதபுரம் பகுதிகளில் திரையிட்ட 39 அரங்குகளில் 53 வாரங்களும்,
சேலம், தருமபுரி மாவட்டங்களில் திரையிட்ட 47 அரங்குகளில் இணைந்து 66 வாரங்களும்,
பெங்களூர் மற்றும் கோலாரில் 8 அரங்குகளில் இணைந்து 9 வாரங்களும் ஓடி மகத்தான வசூல் சாதனைப் படைத்தது.
இது வெறும் 5 மாதங்களில் நிகழ்த்தப்பட்ட வரலாற்றுச் சாதனையாகும். அதுவும் தமிழகம் முழுதும் ஒரே நேரத்தில் நிழ்ந்த அதிசயம்.
நடிகர்திலகத்தை நடிப்பில் மட்டுமல்ல... இது போன்ற திரையுலகச் சாதனைகளையும் வென்று விடலாம் என்பது பகலில் தோன்றும் கனவு. கல்லில் நார் உறிக்கும் செயல்.
நடிகர்திலகம் நிஜத்தில் மட்டுமல்ல...
மின்பிம்பங்களிலும் அவரே ஒரிஜினல் கர்ணன்.
சிவாஜியும் சினிமாவும் ஒன்னு!
இதை அறியாதவன் வாயில் மண்ணு!!

Thanks Vaannilaa

courtesy net

sivaa
4th February 2021, 07:15 AM
உங்களுக்குத் தெரியுமா ...?
1956 ல் சென்னை மாநகரில் இருந்த திரையரங்குகளின் எண்ணிக்கை சுமார் 34.
அதில் 22 திரைகளில் இரண்டுமாத காலத்திற்கு அய்யனின் திரைப்படங்களே ஓடிக்கொண்டிருந்தது என்று சொன்னால் நம்புவீர்களா....
உண்மைதான்.
சென்னையின் எப்பகுதிக்குச் சென்றாலும் அவரின் திருமுகமே அரங்குகளில் நிழலாக இருந்தது. மிச்சமிருந்த இடங்களில்தான் மற்றவர்களின் படங்கள் ஓடின....
அந்த வரலாற்றுப் பட்டியல் உங்கள் பார்வைக்காக...
1. 14:01:1956 நான் பெற்ற செல்வம்
பாரகன் / உமா/ ராஜகுமாரி/ கிருஷ்ணா
2. 14:01:1956 நல்லவீடு
கெயிட்டி / காமதேனு / மகாலட்சுமி/
மகாராணி
3. 25:01:1956 நானேராஜா
அசோக்/ சன் / கபாலி / முருகன் /
பிரைட்டன் / நூர்ஜகான்
4. 03:02:1956 தெனாலி ராமன்
நியூகுளோப் / ஸ்டார் / ராக்ஸி / கிரவுன்
5. 17:02:1956 பெண்ணின் பெருமை
காசினோ/ பிராட்வே / மகாலட்சுமி
6. 25:02:1956 ராஜா ராணி
வெலிங்டன் / உமா / கிருஷ்ணா
இவற்றில் எல்லா திரைப்படங்களும் அன்றைக்கு 5 வாரங்களுக்குக் குறையாமல்
ஓடியது என்பதே வசூலுக்கான சாட்சி.
இதில் அதிசயம் என்னவெனில், அய்யனின் இந்த ஆறு படங்களும் 1956 ஜனவரி 14 ல் இருந்து 1956 பிப்ரவரி 25க்குள்,
வெறும் 41 நாட்களில் வெளியாகி உள்ளன என்பதுதான்.
மேலும், 1956 ல் தமிழ் சினிமாவில் வெளியான மொத்த நேரடித் திரைப்படங்கள் 33. அதில் நடிகர்திலகம் நடித்தவை 9. கிட்டதட்ட நான்கில் ஒரு பங்கு.
இதையெல்லாம் படித்தப்பின்பு உங்களுக்கு ஒன்று புரிந்திருக்குமே...!?
அன்றைக்கு நடிகர்திலகத்தைத் திரையுலகிலிருந்து ஒழித்தேத் தீரவேண்டும் என்று எதிரிகள் ஏன் வரிந்துகட்டிக் கொண்டு நின்றார்கள் என்ற ரகசியம்.
இத்தகைய அளப்பரிய சாதனைகளை யெல்லாம் இன்றைய மீடியாக்களின் காதுகளில் யார் போய் சொல்வது?

Thanks Vaannilaa

courtesy net

sivaa
6th February 2021, 07:20 AM
ஊருக்கு ஒரு பிள்ளை 5/02/1982 --- 39 ஆண்டுகள் நிறைவு.

https://scontent-ort2-2.xx.fbcdn.net/v/t1.0-9/146725864_2843174035897406_6454174357367842958_n.j pg?_nc_cat=109&ccb=2&_nc_sid=730e14&_nc_ohc=IH422Jw_OIkAX8SmoRn&_nc_ht=scontent-ort2-2.xx&oh=155993bf5bed34ffecdb75a4598ddbac&oe=6043AFBF
Thanks Vcg Thiruppathi

sivaa
6th February 2021, 07:23 AM
தங்கைக்காக 6/02/1971----இன்று 50 ஆண்டுகள் நிறைவு

https://scontent-ort2-2.xx.fbcdn.net/v/t1.0-9/145156174_2843881482493328_4724822536804279842_o.j pg?_nc_cat=105&ccb=2&_nc_sid=730e14&_nc_ohc=ccizia5gfggAX9ylH75&_nc_ht=scontent-ort2-2.xx&oh=85485992293fefe96a4100e45d5c6a07&oe=60437CF9

Thanks Vcg Thiruppathi

sivaa
6th February 2021, 07:26 AM
வா கண்ணா வா 6/02/1982---இன்று 39 ஆண்டுகள் நிறைவு.


https://scontent.fybz2-1.fna.fbcdn.net/v/t1.0-9/144928273_2843881445826665_7984096367611848152_o.j pg?_nc_cat=101&ccb=2&_nc_sid=730e14&_nc_ohc=8PgVaSP11CgAX8-TgS4&_nc_ht=scontent.fybz2-1.fna&oh=79c7ee185107845110aa79556d94c8ce&oe=60454DF3

Thanks Vcg Thiruppathi

sivaa
6th February 2021, 07:33 AM
தர்த்தி (ஹிந்தி) 6/02/1970 ----இன்று 51 ஆண்டுகள் நிறைவு.

https://scontent-ort2-2.xx.fbcdn.net/v/t1.0-9/146771544_2843881515826658_8248372566062158538_o.j pg?_nc_cat=104&ccb=2&_nc_sid=730e14&_nc_ohc=1dNh5tkLzHMAX_XD9VK&_nc_ht=scontent-ort2-2.xx&oh=7f635fdc122bafcf354e32cefac3518d&oe=6042BF6F


Thanks Vcg Thiruppathi

sivaa
6th February 2021, 07:36 AM
இன்று ( 06-02-21)
ஜெயா டிவி நெட்வொர்க்கில் குதூகலமான திரைப்படங்கள் ஒளி பரப்பாகிறது,

ஜெயா டிவியில் பிற்பகல் 2:30 க்கு புதிய பறவை அதற்கு முன்பாக காலை 11:30 க்கு பரம்பரை

ஜெயா மூவியில் பிற்பகல் 1:00 மணிக்கு முதல் மரியாதை தொடர்ந்து 4 மணிக்கு அரிமா நம்பி,

மேலும் தீர்ப்பு பகல் 12 மனிக்கும் இரவு 7 மனிக்கும் முரசு டிவியில்

ராஜ் டிஜிட்டலில் இரவு 10:30 க்கு லாரி டிரைவர் ராஜாகண்ணு,

https://scontent-ort2-2.xx.fbcdn.net/v/t1.0-9/144779208_3767228166727379_8221587029845844340_o.j pg?_nc_cat=110&ccb=2&_nc_sid=8bfeb9&_nc_ohc=FHutOl5ByaIAX9yNkTT&_nc_ht=scontent-ort2-2.xx&oh=7f564348a1344605354f533148dd2565&oe=6041DC6F



Thanks Sekar Parasuram

sivaa
6th February 2021, 07:38 AM
மக்கள்தலைவரின் அன்பு இதயங்களே,

கோவையில் நமது நடிகர்திலகத்தின் திரைப்படம் தொடர்ந்து வெளியாகி வெற்றிநடை போட்டது.

சில காலமாக நடிகர்திலகத்தின் திரைப்படம் கோவையில் வெளியாகவில்லை.

லேட்டா வந்தாலும், லேட்டஸ்டா வருகிறது...

கோவை டிலைட் தியேட்டரில்,
பிப்ரவரி 6 முதல்,

நடிகர்திலகம் இருவேடங்களில் கலக்கும், அட்டகாசமான திரைப்படமான

என்னைப் போல் ஒருவன்...

கொரோனாவிற்கு பின்,
கோவையில் வெளிவரும் நடிகர்திலகத்தின்
முதல் படம் என்னை போல் ஒருவன்.

மதுரை சிவாஜி கோட்டை என்பதை, மதுரை வாழ் நடிகர்திலகத்தின் அன்பு இதயங்கள், நிரூபித்து வருகிறார்கள்.

அதே போல், கோவையும் சிவாஜி கோட்டை தான் என்பதை, கோவை வாழ் நடிகர்திலகத்தின் அன்பு இதயங்கள் நிரூபிப்பார்கள்.....

மதுரையை போல், கோவையிலும்,
வருடத்திற்கு 5 அல்லது 6 நடிகர்திலகத்தின் திரைப்படங்கள் திரையிடப்பட வேண்டும்...

ரசிகர்களின் வேண்டுகோளை ஏற்று,
என்னை போல் ஒருவன் திரைப்படத்தை திரையிடும், முரளி பிலிம்ஸ், முரளி அவர்களுக்கு, நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

கோவை அன்பு இதயங்களின் அலப்பறை ஆரம்பமாகட்டும்...

https://scontent.fybz2-2.fna.fbcdn.net/v/t1.0-9/147181237_3674667529284491_7426311316093310644_n.j pg?_nc_cat=102&ccb=2&_nc_sid=730e14&_nc_ohc=RJVXTXtEJTsAX946H7c&_nc_ht=scontent.fybz2-2.fna&oh=f6ccf2c1d61d310ad710d1477b3c7861&oe=6044A300

Thanks Sundar Rajan

sivaa
6th February 2021, 08:04 AM
தமிழ்த்திரை உலகம் மட்டுமல்ல, இந்தியத் திரை உலகமே கொண்டாடும் அதி அற்புதமான நடிகர்.
சர்வதேசத் திரை உலகில் சிறந்த நடிகர்கள் என்று அறியப்பட்ட அனைவருமே வியந்து பார்த்த, உன்னதமான ஒரே நடிகர்.

நடிகர் என்பதைத் தாண்டி, மிக உயர்ந்த மனிதர். சிறந்த தேச பக்தர், தெய்வ பக்தர்.

கேமராவுக்கு முன்பு தவிர, வேறெந்த இடத்திலும் வேசம் போடத் தெரியாதவர்..

தனி மனித வாழ்விலும் ஒழுக்கத்தைக் கடைப் பிடித்ததோடல்லாமல், தனக்கென வாழாத தகைமையாளர்.

தன் படங்களின் மூலம், அருமையான வாழ்வியல் தத்துவங்களை மட்டுமல்ல, அன்பு, பாசம், நேர்மை, கடமை, ஒழுக்கம், வீரம், தெய்வ பக்தி, தேச பக்தி, காதல், சகோதரத்துவம், மத நல்லிணக்கம் போன்ற எண்ணற்ற சிறந்த கருத்துக்களைப் பரப்பியவர்...

அன்றும் இன்றும்.. ஏன், என்றும் பல கோடி மக்களின் இதயங்களில் வாழ்ந்து கொண்டிருப்பவர்..

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள்.

அவருடைய புகழையும், சிறப்புக்களையும் இன்னும் உயர உயரக் கொண்டு செல்லும் உயரிய நோக்கத்துடன்... குறிப்பாக, இளைய தலைமுறையினர் அவருடைய சிறப்புகளை இன்னும் நன்கு அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகத் துவங்கப்பட்ட You Tube சேனல்தான்,

'என்றென்றும் சிவாஜி'.

நடிகர்திலகத்தின் அருமைப் பிள்ளைகள் அனைவரும் இந்தச் சேனலுக்கு சப்ஸ்கிரைப் செய்து, ஆதரவு தருமாறு அன்புடன் வேண்டுகிறோம்.

உங்கள் ஆதரவு, இந்தச் சேனல் மேன்மேலும் வளர்வதற்கு மட்டுமல்ல, நடிகர் திலகத்தின் புகழை மேன்மேலும் பரப்பும் எங்கள் முயற்சிக்கு இன்னும் ஊக்கத்தையும் உற்சாகத்தையும் அளிக்கும்.

சேனலுக்கான கீழ்க்கண்ட லிங்க்கைக் கிளிக் செய்து, சப்ஸ்கிரைப் செய்யுமாறு வேண்டுகிறோம்.

https://youtube.com/channel/UCjXJshADoeVEdCcgcHTBHVw (https://youtube.com/channel/UCjXJshADoeVEdCcgcHTBHVw?fbclid=IwAR2FDtAYTjrFUit7 DU0HIxrs6u-Sv9_tWpbHl2bU8ePpZOczeM19YUICyv8)
https://scontent.fybz2-1.fna.fbcdn.net/v/t1.0-9/144704807_2890693277881302_1468155878932072104_o.j pg?_nc_cat=100&ccb=2&_nc_sid=825194&_nc_ohc=eTalL3MZG-IAX-c3OsA&_nc_ht=scontent.fybz2-1.fna&oh=8d68dfbea342ea3804e88bc808818f94&oe=6042C721

Thanks Nagarajan Velliangiri

sivaa
6th February 2021, 11:19 PM
மக்கள்தலைவரின் அன்பு இதயங்களே....

எங்கும் நடிகர்திலகத்திற்கு வெற்றியே...

6.2.21 முதல் கோவை டிலைட் தியேட்டரில், நடிகர்திலகம் இருவேடங்களில் கலக்கும், என்னை போல் ஒருவன் திரைப்படம் வெளியாகி மாபெரும் சாதனை படைத்துள்ளது.

முதல் நாளே
மாபெரும் வசூல் சாதனை செய்துள்ளது..

இம்மாபெரும் வெற்றியை தந்த
கோவை வாழ், நடிகர்திலகத்தின்
அன்பு இதயங்களுக்கும்,

கோவை மக்களுக்கும் மாபெரும் நன்றியை
தெரிவித்துக் கொள்கிறோம்.

அன்பு இதயங்களே,
நாளை மாலை ரசிகர்கள் சிறப்பு காட்சி நடைபெற உள்ளது...

கோவை மற்றும் கோவை சுற்றியுள்ள
நடிகர்திலகத்தின் அன்பு இதயங்கள்,,,
அனைவரும் தவறாமல் நடிகர்திலகத்தை
தரிசிக்க வருகை தாருங்கள்..

அன்றும் இன்றும் என்றும்,
கலையுலகில் சிவாஜியை மிஞ்ச எவருமில்லை என்பதை எதிரிகள் உணரட்டும்...

நாளை அரங்கு நிறைந்தது என்ற செய்தி...... தமிழகத்தையே அதிர செய்யட்டும்.

https://scontent-ort2-2.xx.fbcdn.net/v/t1.0-9/146014297_3677174552367122_5090216532522804023_n.j pg?_nc_cat=107&ccb=2&_nc_sid=730e14&_nc_ohc=zK4KHcDUI6EAX_YvcMU&_nc_ht=scontent-ort2-2.xx&oh=70719fa64f5fa3e7e47404b0e773969f&oe=60464B2F

Thanks Sundar Rajan

sivaa
7th February 2021, 09:43 AM
கொடைவள்ளல் ,கலைக்குரிசில், சிவாஜி கணேசனின்,
45 வது வெற்றிச்சித்திரம்.

உத்தம புத்திரன் வெளியான நாள் இன்று.
உத்தம புத்திரன் 7 பெப்ரவரி 1958.

உத்தம புத்திரன்.
https://scontent-ort2-2.xx.fbcdn.net/v/t1.15752-9/146419679_760090344884103_7401518807878323590_n.jp g?_nc_cat=109&ccb=2&_nc_sid=ae9488&_nc_ohc=0OX5mBdMT_IAX9ce-fv&_nc_ht=scontent-ort2-2.xx&oh=4f56dbfb415bc1144ae5bff9748ac235&oe=6043B5B9https://i.ytimg.com/vi/lXmYgQdeZSU/maxresdefault.jpg

https://scontent-ort2-2.xx.fbcdn.net/v/t1.15752-9/147420810_341069887050621_4554519220339675021_n.jp g?_nc_cat=111&ccb=2&_nc_sid=ae9488&_nc_ohc=-vbrRXr2ddIAX_jsRbE&_nc_ht=scontent-ort2-2.xx&oh=43d659e54df9d16b6857bcc7e063e0fe&oe=6043B0D5

https://scontent.fybz2-1.fna.fbcdn.net/v/t1.15752-9/146961796_1144086386004630_7358866701865402364_n.j pg?_nc_cat=100&ccb=2&_nc_sid=ae9488&_nc_ohc=WV81tBYHbrkAX9Uf0EU&_nc_ht=scontent.fybz2-1.fna&oh=6e65bae2b2d9664dc6167609a2a5f256&oe=6043FBD4

https://scontent-ort2-2.xx.fbcdn.net/v/t1.15752-9/147175494_469044680796674_278011749678654198_n.png ?_nc_cat=109&ccb=2&_nc_sid=ae9488&_nc_ohc=UYCMfEP2-EcAX-sEOm6&_nc_ht=scontent-ort2-2.xx&oh=81c2840f19ec31fea19f582ff3f01b16&oe=6043BE3C


உத்தம பத்திரன் 7/02/58
பதிபக்தி 14/03/58
சம்பூர்ண ராமாயணம் 14/04/58
பொம்மை கல்யாணம் 3/05/58

3 மாதத்திற்குள் 4 படங்கள் திரையிட்டு வெற்றிக்கொடி நாட்டியவர்
அகில உலக தமிழ்த்திரைப்பட வசூல் சக்கரவர்த்தி சிவாஜி கணேசன் அவர்கள்.
நெஞ்சில் துணிவில்லாமல் 1 படத்தை மட்டும் திரையிட்டுவிட்டு பதுங்கிக்கொள்ளவில்லை.

sivaa
7th February 2021, 09:53 AM
சாதனையில் மன்னவன் அண்ணன் சிவாஜி கணேசன்.
முதன் முதலாக-தொடர்ந்து 3 படங்கள் வெளிவந்து 3 படங்களும் 100 நாட்கள் ஓடியது.

ஆண்டு 1958.

உத்தம புத்திரன் 7/02/1958
பதிபக்தி 14/03/1958
சம்பூர்ண ராமாயணம் 14/04 /1958


https://scontent-ort2-2.xx.fbcdn.net/v/t1.15752-9/135199590_403525127598068_7008815624281791427_n.pn g?_nc_cat=107&ccb=2&_nc_sid=ae9488&_nc_ohc=fpzUoHzC1KAAX_99FSo&_nc_ht=scontent-ort2-2.xx&oh=e728d4bdd94d7f45bbbd184468ef38f0&oe=60439060
https://scontent-ort2-2.xx.fbcdn.net/v/t1.15752-9/145415655_2853946831547110_3168931097077241897_n.p ng?_nc_cat=111&ccb=2&_nc_sid=ae9488&_nc_ohc=90V8ZxI59S4AX-2vwc_&_nc_ht=scontent-ort2-2.xx&oh=3c5e5790c916afcfb0542d1d5da9cac9&oe=60461EB5

sivaa
7th February 2021, 08:51 PM
பூங்கோதை 7/02/1953----இன்று 68 ஆண்டுகள் நிறைவு.

https://scontent.fybz2-1.fna.fbcdn.net/v/t1.0-9/145944654_2844883319059811_6301528316204354059_o.j pg?_nc_cat=101&ccb=2&_nc_sid=730e14&_nc_ohc=RItT3WbNOsAAX92R6BM&_nc_ht=scontent.fybz2-1.fna&oh=f81e4a0a282d0ab10f9ba3dc8fdb6320&oe=60457B3C

Thanks Vcg Thiruppathi

sivaa
7th February 2021, 09:19 PM
வீரபாண்டிய கட்டபொம்மன்

மதுரையில் முதன்முதலாக 2 லட்சத்துக்குமேல் வசூல் தந்த படம் இதுதான் (வீரபாண்டிய கட்டபொம்மன்)

மதுரை -நியூ சினிமா 181 நாட்கள் வசூல் 2,77,365.71
..................................வரி நீக்கிய வசூல் 2,08,113.44
.........................விநியோகிஸ்த்தர் பங்கு 1,13,583.55

முதன் முதலாக கேரளா-திருவனந்தபுரத்தில் 100 நாட்கள் ஓடிய படம் வீ கட்டபொம்மன்.

தமிழகத்தில் பல வெளியீடுகளுக்குப் பிறகு 17.09.1984 அன்று திரையிடப்பட்டபொழுது
சென்னையில் ஷிப்டிங்கில் வெள்ளிவிழா, மதுரையில் 49 நாட்கள்.

சிவாஜி மறைந்த பின் 4/03/2002 ல் திரையிடப்பட்டபோது
மதுரரு சிந்தாமணியில் 2 வாரங்களும் தொடர்ந்து மதுரை சுற்றிலும்
143 நாட்கள் ஓடியது.

இதே ஆண்டில் (1959) பாகப் பிரிவினை மதுரை சிந்தாமணியில்
216 நாட்கள் ஓடி முதன் முதலாக ஒரே ஆண்டில் 2 வெள்ளி விழா படங்கள்
என்ற சரித்தரத்தை உருவாக்கியது.

முதன் முதலாக இந்திய அரசின் வெள்ளிப்பதக்கத்தை பெற்றது.



முதன் முதலாக மதுரையில் 3 லட்சத்துக்குமேல் வசூல் செய்து தந்த படம் இதுதான்.
மதுரை சிந்தாமணி 216 நாட்கள் வசூல்-3,36,180.54

(இமேஜில் உள்ளவை)

https://scontent.fybz2-1.fna.fbcdn.net/v/t1.15752-9/146383242_119724343370733_2323778434432724505_n.pn g?_nc_cat=101&ccb=2&_nc_sid=ae9488&_nc_ohc=QLvutWNNlsAAX9BbN1X&_nc_ht=scontent.fybz2-1.fna&oh=3510939560d37c0a289dd03053c70721&oe=60446450

sivaa
9th February 2021, 11:51 PM
நிச்சய தாம்பூலம் 9/02/1962 ----59 ஆண்டுகள் நிறைவு

https://scontent-ort2-2.xx.fbcdn.net/v/t1.15752-9/146281251_2217255775073119_881573909866523077_n.jp g?_nc_cat=111&ccb=3&_nc_sid=ae9488&_nc_ohc=hSr7SO6e04YAX_aeWKa&_nc_ht=scontent-ort2-2.xx&oh=e99a12e0990c31fa6e8baa12ad798ada&oe=6047E3D8

sivaa
9th February 2021, 11:53 PM
சித்தூர் ராணி பத்மினி 9/02/1963 ----58 ஆண்டுகள் நிறைவு

https://scontent.fybz2-1.fna.fbcdn.net/v/t1.0-9/147382500_2846203838927759_9092492801166294973_o.j pg?_nc_cat=108&ccb=3&_nc_sid=730e14&_nc_ohc=Ie4xDdF9Jr4AX88iM3A&_nc_ht=scontent.fybz2-1.fna&oh=e5a7b3355c73e209dd43612732546853&oe=6049B804

Thanks Vcg Thiruppathi

sivaa
15th February 2021, 07:54 AM
வணக்கம் உறவுகளே!
கடந்த சில நாட்களாக இங்கு வந்து பதிவுகள் இட முடியவில்லை.
பல காரணங்கள், தொடர்ந்தும் அதே நிலைதான்.

நேரம் கிடைக்கும்பொழுது முடிந்தவரை அவ்வப்போது வந்து
விடயங்களை பதிவிட முயற்சிக்கின்றேன்.

நன்றி.

sivaa
15th February 2021, 08:27 AM
இது சத்திய யுகம்!. இனி உண்மைகள் மட்டுமே இங்கு கோலேச்சும்.

நடிகர் திலகம் அவர்கள் செய்த பல உதவிகள் வெளியே தெரியாமல் உள்ளது. அதில் இதுவும் ஒன்று.

காரைக்குடி செஞ்சை பகுதியை சேர்ந்த வீடற்ற ஆதி திராவிடர்களுக்கு உதவும் வகையில் காரைக்குடியில் தேன்கூடு என்ற நாடகம் நடத்தி அதில் வசூலான தொகையில் இடம் வாங்கி கொடுத்துள்ளார். அது தற்போதும் சிவாஜி கணேசன் காலனி என்று அழைக்கப்படுகிறது.

https://scontent.fybz2-1.fna.fbcdn.net/v/t1.0-9/150060539_968916936975479_7026880011212045956_n.jp g?_nc_cat=101&ccb=3&_nc_sid=b9115d&_nc_ohc=H7WI_xh7oMIAX9BxmZg&_nc_ht=scontent.fybz2-1.fna&oh=805a2a274ce638ec8d24e2c08a9ba7b0&oe=604F3E87

https://scontent.fybz2-1.fna.fbcdn.net/v/t1.15752-9/150885969_1651738408370681_4988488315663754772_n.p ng?_nc_cat=100&ccb=3&_nc_sid=ae9488&_nc_ohc=J9SlsdVe6akAX9XRIF5&_nc_ht=scontent.fybz2-1.fna&oh=a9cd46278270468b680160c0229b83d1&oe=605107E6

Thanks RSundaram RSundaram

sivaa
15th February 2021, 08:36 AM
நடிகர்திலகம்......
ஆரம்ப கல்வி கற்ற பள்ளிக்கூடம்.
யதுகுல சங்கம். நடுநிலைப்பள்ளி.
https://scontent-ort2-2.xx.fbcdn.net/v/t1.0-9/144803043_721994992040460_1369590687610546525_n.jp g?_nc_cat=104&ccb=3&_nc_sid=825194&_nc_ohc=pKf49iDb70UAX-J2Dto&_nc_ht=scontent-ort2-2.xx&oh=0b97d9c8d450c91efb7ec8bdd9f83f9f&oe=604DD194
Thanks Sivaji Palanikumar

sivaa
18th February 2021, 09:59 PM
கொடை வள்ளல் !

ஞான ஒளி படப்பிடிப்பில் சிறிது ஓய்வு நேரம் .தனது நண்பர்களிடம் உற்சாகமாக தெரிவித்தார் இதை.

"வரும் 23ம் தேதி எனக்கு முக்கியமான நாள். அன்று நான் நடித்த ராஜா படம் விமான படை வீரர்களின் துனைவியரின் ஷேம நிதிக்காக தேவி பாரடைசில் திரையிடப்படுகிறது.

முதலில் பாலாஜி இச்செய்தியை என்னிடம் தெரிவித்த போது மிகவும் பெருமைப்பட்டேன். " 23 ம் தேதியன்று என்னை மேடைக்கு வரும்படி அழைத்தனர்.எனக்கு வெளியூரில் அன்று படப்பிடிப்பு இருந்தது.அதற்கு மறுநாள் "ராமன் எத்தனை ராமனடி படத்திற்காக பரிசு வாங்க பம்பாய் செல்ல வேண்டும். ஆனால் எப்படியாவது நிகழ்ச்சியில் பங்கு கொள்ள வேண்டும் என தீர்மானித்தேன். அதற்காக வெளியூர் படப்பிடிப்பு தேதியை தள்ளி வைத்து சென்னைக்கு வந்து மேடையில் தோன்றுவது என்று முடிவு செய்தேன்.

விமான படையில் கணவனை இழந்து கணணீரும் கம்பலையுமாக தவிக்கும் பெண்களுக்கும் , அவர்களது குழந்தைகளுக்கும் உதவி செய்வது என் கடமை. ஒவ்வொருவருடைய கடமையும் அது தான் நாட்டுக்காக அந்த வீரர்கள் ஆற்றியுள்ள பணி மலை போன்று உயர்ந்தது.அவர்களின் குடும்ப இன்னல்களை நாம் முழுமையாக துடைக்க முடியாது. ஆனால் நமது நன்றிக்கு சிறு அடையாளமாக இந்த நிதி வசூல் அமையட்டும்.

இவ்வாறு உணர்ச்சி வசப்பட்டு கூறினார் சிவாஜி கணேசன்.

நன்றி ! பத்திரிக்கை பதிப்பில் இருந்து

https://scontent.fybz2-1.fna.fbcdn.net/v/t1.0-9/150795259_749338586015015_2591449039057821659_o.jp g?_nc_cat=100&ccb=3&_nc_sid=825194&_nc_ohc=zQfVnm4lspAAX8mye7f&_nc_oc=AQmVvtkj2HNywRbSZsQTrjoks8iiQWEYBqiskgdRhOw s4SS2DxXa7Ph4Q1xRbmGJffs&_nc_ht=scontent.fybz2-1.fna&oh=c9eb28612400099b780551c4965ee05f&oe=6053D191
Thanks Gansesh Pandian

sivaa
24th February 2021, 06:56 AM
நடிகர்திலகத்தின் ஹை- லைட்ஸ் : 4

'புதியபறவை'யின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடந்து கொண்டிருந்த நேரம்.
நடிகர்திலகம் அங்கேயே தங்கி, நடித்துக் கொண்டிருந்தார்.
ஒருநாள், அவருடைய விலை உயர்ந்த கடிகாரம்திருட்டுப் போய் விட்டது. கடிகாரம் போய்விட்டதே என்று அவர் வருந்தவில்லை; நண்பர் ஒருவரின் நினைவாக அணிந்திருந்த பொருளை இழந்துவிட்டோமே என்று வருந்தினார்.
சில மணி நேரங்களில் அந்த கடிகாரம் கிடைத்துவிட்டது! அதை எடுத்து ஒளித்து வைத்திருந்தவர் ஸ்டூடியோவைச் சேர்ந்த ஒரு தொழிலாளி.
அவனை மற்ற தொழிலாளர்கள் கையும்-களவுமாகப் பிடித்து, நடிகர்திலகத்தின் முன் கொண்டு வந்து நிறுத்தினார்கள். அவர் ஏதோ பெரிய தண்டனை கொடுக்கப் போகிறார், அல்லது போலிசாரிடம் ஒப்படைக்கப் போகிறார் என்று எல்லோரும் நினைத்தார்கள். பிடிபட்ட தொழிலாளியும் அவ்வாறுதான் நினைத்தான். அவன் உடல் பயத்தால் வெடவெட என்று நடுங்கிக் கொண்டிருந்தது.
அவனை நடிகர்திலகம் தன்னருகே அழைத்தார். " ஏம்பா இப்படி செய்தே! பணக் கஷ்டம்னா என்னிடம் சொல்லி யிருக்கலாமே!" என்று கூறியபடி, தன் சட்டைப் பைக்குள் கையைவிட்டு 2 ஆயிரம் ரூபாயை எடுத்தார். " இந்தா... இதை வைத்துக் கொள். இனி திருட மாட்டேல்ல!" என்று கூறியவாறு, அந்தப் பணத்தை தொழிலாளியிடம் கொடுத்தார்.
தன்னைப் போலீசில் ஒப்படைக்கப் போகிறார்கள் என்று அஞ்சி நடுங்கிக் கொண்டிருந்த அந்தத் தொழிலாளி, நடிகர்திலகம் 2 ஆயிரம் ரூபாயைக் கொடுத்து பரிவுடன் பேசியதைக் கண்டு திகைத்து, அவர் கால்களில் விழுந்தான். "இனி செத்தாலும் சரி! நான் திருட மாட்டேன். இது சத்தியம்" என்று கண்ணீர் வடித்தபடி தழுதழுத்தக் குரலில் கூறினான். கூடியிருந்தவர்கள் இக்காட்சியைக் கண்டு மெய் சிலிர்த்துப் போனார்கள்.
தினத்தந்தியின் மூத்த ஊழியர் மூலம் இந்த நிகழ்ச்சியை அறிந்த நானும் உள்ளம் நெகிழ்ந்தேன்.
நடிகர் திலகத்தின் இளகிய நெஞ்சத்தை- மனித நேயத்தை உணர்த்த இந்த ஒரு நிகழ்ச்சியே போதுமானதாகும்.
- டாக்டர். பா. சிவந்தி ஆதித்தன்
தினத்தந்தி அதிபர்.
செவாலியர் சிவாஜி சிறப்பு மலரிலிருந்து

இன்னா செய்தாரை ஒறுத்து, நன்னயம் செய்த அய்யனின் புகழ் என்றென்றும் புவியாளும் என்பதில் சந்தேகமில்லை.
https://scontent.fybz2-1.fna.fbcdn.net/v/t1.0-9/152256676_1186127325156894_7550655600523787205_o.j pg?_nc_cat=101&ccb=3&_nc_sid=825194&_nc_ohc=mKGDdjqYzl8AX8DsDy8&_nc_ht=scontent.fybz2-1.fna&oh=ac6c24eb6cd688501bae8f7d612688b6&oe=6059EB37

Thanks Vaannilaa Vijayakumaran

sivaa
24th February 2021, 07:01 AM
தமிழகத்திலேயே ....
இல்லை இல்லை
உலகத்திலேயே ......
முதல் சிவாஜி சிலை இதுதான்

தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் இருந்து மயிலாடுதுறை செல்லும் வழியில் திருபுவனம் என்ற ஊரில் மெயின் ரோட்டில் அமைந்துள்ளது இந்த சிலை

அண்ணன் சிவாஜி இறந்து 30 நாள் அன்று நிறுவபட்டது இந்த சிலையை வைத்தவர்கள் பெரிய செல்வந்தர்கள் அல்ல...

அன்றாடும் கூலி வேலை நெசவு தொழில் பட்டுப்புடவை நெசவு செய்யும் சாமனியவர்கள் நிறைந்த நல்ல மனசு நிறைந்த எளியவர்கள் செளராஷ்டிரா இனத்தை சேர்ந்த
தேச பக்தி தெய்வ பக்தி நிறைந்தவர்கள்

இவர்களது ஆர்வமிகுதி அண்ணன் சிவாஜி மீது கொண்ட பக்தி அண்ணன் சிவாஜி அவர்கள் இறந்து 30 ம் நாளிளேயே சிலை வைத்து வழிபாடு செய்ய துவங்கியவர்கள் என்றால் பார்த்து கொள்ளுங்களேன்

அதே போல் அவர்கள் சிலை வைத்துள்ள இடம் மகாத்மா காந்தி சிலைக்கும் பெருந்தலைவர் காமராஜர் சிலைக்கும் இடையில் வைத்துள்ளனர்

இது சிமென்டால் ஆன சிலை இதை விரைவில் வெங்கல சிலையாக மாற்றும் முயற்சியிலும் ஈடுபட்டு உள்ளனர் இதே போல் தான் தஞ்சையிலும் இதே செளராஷ்டிரா இன சகோதரர்கள் உலகத்திலேயே மார்பளவு சிமெண்டால் ஆன அண்ணன் சிவாஜிக்கு சிலை வைத்தனர் என்பது குறிப்பிடதக்கது

என்றும் பிரியருடன்
சதா. வெங்கட்ராமன்
தஞ்சாவூர்


தமிழகத்திலேயே ....
இல்லை இல்லை
உலகத்திலேயே ......
முதல் சிவாஜி சிலை இதுதான்

தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் இருந்து மயிலாடுதுறை செல்லும் வழியில் திருபுவனம் என்ற ஊரில் மெயின் ரோட்டில் அமைந்துள்ளது இந்த சிலை

அண்ணன் சிவாஜி இறந்து 30 நாள் அன்று நிறுவபட்டது இந்த சிலையை வைத்தவர்கள் பெரிய செல்வந்தர்கள் அல்ல...

அன்றாடும் கூலி வேலை நெசவு தொழில் பட்டுப்புடவை நெசவு செய்யும் சாமனியவர்கள் நிறைந்த நல்ல மனசு நிறைந்த எளியவர்கள் செளராஷ்டிரா இனத்தை சேர்ந்த
தேச பக்தி தெய்வ பக்தி நிறைந்தவர்கள்

இவர்களது ஆர்வமிகுதி அண்ணன் சிவாஜி மீது கொண்ட பக்தி அண்ணன் சிவாஜி அவர்கள் இறந்து 30 ம் நாளிளேயே சிலை வைத்து வழிபாடு செய்ய துவங்கியவர்கள் என்றால் பார்த்து கொள்ளுங்களேன்

அதே போல் அவர்கள் சிலை வைத்துள்ள இடம் மகாத்மா காந்தி சிலைக்கும் பெருந்தலைவர் காமராஜர் சிலைக்கும் இடையில் வைத்துள்ளனர்

இது சிமென்டால் ஆன சிலை இதை விரைவில் வெங்கல சிலையாக மாற்றும் முயற்சியிலும் ஈடுபட்டு உள்ளனர் இதே போல் தான் தஞ்சையிலும் இதே செளராஷ்டிரா இன சகோதரர்கள் உலகத்திலேயே மார்பளவு சிமெண்டால் ஆன அண்ணன் சிவாஜிக்கு சிலை வைத்தனர் என்பது குறிப்பிடதக்கது

என்றும் பிரியருடன்
சதா. வெங்கட்ராமன்
தஞ்சாவூர்

https://scontent-ort2-1.xx.fbcdn.net/v/t1.0-9/152041971_1850614698428121_8776226034474678200_o.j pg?_nc_cat=108&ccb=3&_nc_sid=825194&_nc_ohc=AStVDk4RMBwAX8r2Xhx&_nc_ht=scontent-ort2-1.xx&oh=c19d73719e51f3089390d38e6a7d0db4&oe=605A7D79

Thanks Senthilvel Sivaraj Sivaji Group

sivaa
26th February 2021, 05:13 AM
வட சென்னை என்பது சென்னை மாநகரம் உருவான காலந்தொட்டு மக்கள் தொகை மிகுந்த, பழைமை வாய்ந்த கோயில்கள், வரலாற்றுப் புராதானச் சின்னங்கள், கட்டடங்கள் நிறைந்த, குறுகலான ஆனால் நீண்ட சாலை வசதிகளைக் கொண்ட பகுதியாகும்.
இங்கு பிராட்வே, கிரௌன்,கிருஷ்ணா, பிரபாத், பாரத், பத்மநாபா, மகாராணி, அகஸ்தியா, தங்கம், பிரைட்டன், முருகன்,பாண்டியன் மினர்வா,தமிழ்நாடு என்று ஏராளமான திரையரங்குகள் அமைந்திருந்தன. தற்போது இருப்பது விரல்விட்டு எண்ணும் அளவிற்கு வெறும் 5 மட்டுமே.
தமிழகத்தில் சினிமா தோன்றிய காலத்தில் பெரும்பாலான திரைப்படங்கள்
இப்பகுதியை மையமாக வைத்தே திரையிடப்பட்டன.
தமிழின் முதல் பேசும்படமான 'காளிதாஸ்' முதன்முதலாக வெளியானதும் இதேப்பகுதியில்தான்.
எல்லா நடிகரின் திரைப்படங்களும், இப்பகுதியில் திரையிடப்பட்டு வெற்றிவிழா கண்டிருக்கின்றன. ஆனால் எல்லா காலங்களிலும் வெற்றி பெற்றிருக்குமா என்பது கேள்விக்குறி!
அய்யன் நடிகர் திலகத்தைத் தவிர.
ஆம்.
நடிகர்திலகம் நடித்து 53 திரைப்படங்கள் இப்பகுதியில், பராசக்தி தொடங்கி படையப்பா வரை நூறு நாள் முதல் வெள்ளிவிழா வரை ஓடி அசத்தியிருக்கின்றன.
அதிலும், கிரௌன் திரையரங்கில் மட்டும் 3 படங்கள் வெள்ளி விழாவும், 30 படங்கள் 100 நாட்களைக் கடந்து ஓடியிருப்பது வரலாற்றுச் சாதனையாகும்.
காலங்கள் தோறும் ஆக்சன் பட நாயகர்கள் மட்டுமே சாதனையாளர்கள் என்று சொல்லப்பட்டுக் கொண்டிருக்கும் தமிழ்த்திரையில் எந்தவொரு நாயகர்களுக்காவது, வட சென்னையில் இந்த எண்ணிக்கையில் படம் ஓடியிருக்குமா என்பது சந்தேகமே.
விவவரம் தெரிந்தோர் பதிவிடலாம்.
அய்யனின் வெற்றிப்படப் பட்டியல் உங்கள் பார்வைக்காக ...

1. பிராட்வே தியேட்டர்
பெண்ணின் பெருமை 105 நாள்
தெய்வப்பிறவி 107
படித்தால் மட்டும் போதுமா 104

2. கிருஷ்ணா தியேட்டர்
பாவ மன்னிப்பு 127
பாலும் பழமும் 127
ஆலயமணி 105
வாழ்க்கை 117

3. பிரபாத் தியேட்டர்
கை கொடுத்த தெய்வம் 100
கர்ணன் 100

4. மகாராணி தியேட்டர்
பச்சை விளக்கு 105
நவராத்திரி 101
அந்தமான் காதலி 100
மருமகள் 117

5. பாரத் தியேட்டர்
பராசக்தி 100
படையப்பா 126

6. அகஸ்தியா தியேட்டர்
சிவந்தமண் 117
நீதிபதி 125
படிக்காதவன் 123
தேவர் மகன் 103

7. எம்.எம். தியேட்டர்
ஒன்ஸ் மோர் 133

8. கிரவுன் தியேட்டர்
அமரதீபம் 125
வணங்காமுடி 100
வீரபாண்டிய கட்டபொம்மன் 111
பாகப்பிரிவினை 104
படிக்காத மேதை 116
விடிவெள்ளி 104
பாசமலர் 133
திருவிளையாடல் 179
சரஸ்வதி சபதம் 133
கலாட்டா கல்யாணம் 106
தில்லானா மோகானாம்பாள் 111
தெய்வமகன் 100
வியட்நாம் வீடு 103
எங்கிருந்தோ வந்தாள் 100
சவாலே சமாளி 107
பாபு 102
பட்டிக்காடா பட்டணமா 111
வசந்தமாளிகை 140
பாரதவிலாஸ் 100
எங்கள் தங்க ராஜா 102
கௌரவம் 102
தங்கப்பதக்கம் 176
அவன்தான் மனிதன் 113
மன்னவன் வந்தானடி 100
தீபம் 106
அண்ணன் ஒரு கோயில் 114
தியாகம் 111
திரிசூலம் 175
ரிஷிமூலம் 104
வா கண்ணா வா 100
தீர்ப்பு 105
சந்திப்பு 100
வெள்ளை ரோஜா 104
தொகுப்பு : வான்நிலா விஜயகுமாரன்



Thanks Thoppumani Thoppiah--(One and only sivaji)

sivaa
3rd March 2021, 09:16 PM
மனோகரா வெளியான நாள் 3/03/1954 .---இன்று 67 ஆண்டுகள் நிறைவு.

https://scontent.fybz2-1.fna.fbcdn.net/v/t1.0-9/156461352_3930415313689984_1329966506361209318_o.j pg?_nc_cat=111&ccb=3&_nc_sid=b9115d&_nc_ohc=Cf5r1R2SxrcAX-oYuOW&_nc_ht=scontent.fybz2-1.fna&oh=e4d1697aa580cca9d8c9779ac6cee72a&oe=6065B28A

sivaa
3rd March 2021, 09:19 PM
மதுரை சென்ரலில் 19/03/1921 முதல்

நடிகர் திலகத்தின் முன்று தெய்வங்கள்.

https://scontent.fybz2-2.fna.fbcdn.net/v/t1.0-9/155486110_3839892382794290_5021653991851769130_n.j pg?_nc_cat=102&ccb=3&_nc_sid=730e14&_nc_ohc=IReLULiV0-gAX9C2CkQ&_nc_ht=scontent.fybz2-2.fna&oh=b37684350517aec6d315bbe015295ebd&oe=60647616

நன்றி சேகர் பரசுராம்

sivaa
3rd March 2021, 09:22 PM
நவராத்திரி- 1964.

அதிசயம், ஆனாலும் உண்மை. ஒரு நடிகர் ஒரே படத்தில் ஒன்பது ஒன்றுக்கொன்று சம்பந்தமில்லாத வேடத்தில் நடித்து அசத்தியுள்ளார் என்ற செய்தி எனக்கு ஆறு வயதாய் இருக்கும் போது பெரியவர்கள் உரையாடலில், சீனா போரை விட மிகவும் சிலாகிக்க பட்டது.

எல்லோரும் மாய்ந்து மாய்ந்து அவர் அற்புதம்,பயம்,கருணை ,கோபம்,சாந்தம்,அருவருப்பு,,சிங்காரம்,வீரம்,ஆனந ்தம் ஆகிய குணங்களையே பாத்திரங்களாக்கி உள்ளார் என்று எழுதினர்.சில பாத்திரங்கள் தாங்கள் அந்த குணங்களை பிரதிபலிப்பதை விட மற்றோர்க்கு அந்த உணர்வை (குடிகாரன்,தொழுநோயாளி)தருவதாக விமர்சித்தனர். ஆனால் அந்த குடிகாரனின் ,கடைசி நேர பய உணர்வை,மனசாட்சி உந்துதலை ,தொழுநோயாளியின் தன் வெறுப்பை ,சுய அருவருப்பை கணக்கில் கொள்ள தவறினர்.

ஆனால் நான் பார்ப்பது என்னவென்றால், சிவாஜியின் அத்தனை படங்களையும் பார்த்து ரசித்த ரசிகர்களுக்கு மட்டும் தெரிந்து உணர்ந்த ,sampling முறையில் அளக்க இயலா நடிப்பின் வேறுபாடுகளை,ஒரே படத்தில் showcasing the talent என்ற முறையில் நவராத்திரியின் வீச்சை மதிப்பிடுகிறேன். அவர் அற்புத ராஜாக பாசமலரில் துவங்கி பார் மகளே பார் வரை அற்புதம் நிகழ்த்தினார்.குடிமகனாக புனர் ஜென்மம்,கருணை நிறைந்த majesty என்று பாலும் பழமும்,கோபம் நிறைந்த வன்மத்துடன் வாழ்விலே ஒருநாள் முதல் ஆலய மணி வரை,சாந்தம் நிறை வெகுளி மனிதராக மக்களை பெற்ற மகராசி ,படிக்காத மேதை என்று ,அருவருப்பான தோற்றத்தில் குழந்தைகள் கண்ட குடியரசு,பாவ மன்னிப்பு,நான் வணங்கும் தெய்வம் படங்களிலும் ,சிங்காரமாக பல கூத்து கலை படங்களிலும்(தூக்கு தூக்கி) ,வீரமாக கணக்கற்ற படங்களில் (உத்தம புத்திரன் விக்ரம்),ஆனந்தனாக ராஜாராணி ,இருவர் உள்ளம்,குலமகள் ராதை ,கல்யாணியின் கணவன் என்று பல படங்களிலும் நடித்த அனைத்து பாத்திரங்களையும் ஒன்றாக தொகுத்து, ஒரே படமானதால் வித்தியாசம் தெளிவாக, சில நடை உடை ஒப்பனை மாற்றங்கள்,mannerism என்று மெருகேற்றி ஒளி ஊற்றிய படமே நவராத்ரி.இதே போல அவர் நடிகராக பாத்திரமேற்ற ராமன் எத்தனை ராமனடியில் ,ஒரே காட்சியில் அவர் ஏற்ற பல வேறு பட்ட பாத்திரங்களை காட்டி அவரின் பல்முனை நடிப்பு அழகாக ஒரே படத்தில் காட்ட படும்.

என்னிடம் ஒரு நண்பர் ,தசாவதாரம் என்னை கவரவில்லை ,என்று சொன்ன போது நவராத்திரியை நாடகம் என்றும் தசாவதாரம் சினிமா என்றும் சொன்னதும் நான் சிரித்தேன். சினிமாவின் இலக்கணம் தெரியுமா என்று கேட்டேன். பிறகு , அவரிடம் என்ன genre என்ற தெளிவு ,சீரான திரைக்கதை,படத்துடன் இணையும் பாத்திரங்கள்,தெளிவான முகபாவங்கள் கொண்ட close up காட்சிகள், இவை எந்த படத்தில் உள்ளதோ அதுவே திரை படம் என்று சொன்னேன். நண்பர் முகம் போன போக்கு. ஓட்ட வைத்த குடுகுடுப்பாண்டி சட்டை போல மோசமான திரைக்கதை, பத்து வர வேண்டும் என்று அனாவசிய திணிப்பில் கதாபாத்திரங்கள், பெயிண்ட் பூசி ,முகமூடி அணிந்து(அந்த கால கூத்து நாடகங்கள் போல) வரும் கேவலமான தோற்றம் கொண்ட மாறுவேடம் இவை கொண்ட தசாவதாரம் நாடகம் என்றாலும் கூட நாடக கலைக்கே கேவலம். அற்புதமான ஒரு வரி knot ,அதனுடன் பயணிக்கும் திரைக்கதை, அதனூடாக பயணிக்கும் நகைச்சுவை, பாத்திரங்களின் நடை உடை பாவனை தெளிவாக காட்டும் படமாக்கும் இவற்றில் நவராத்திரியை உயரிய திரைப்பட உத்தியின் உச்சமாகவே கருத வேண்டும்.

ஏதோ திணித்தது போல இல்லாமல் அழகான திரைக்கதை. அப்பா பார்த்த மாப்பிள்ளை தான் காதலித்த ஆனந்தன் என்று உணராத
நளினா , வீட்டை விட்டு விரக்தியுடன் வெளியேறி தற்கொலைக்கு முயல ,அற்புதராஜ் என்ற பணக்கார ,மனைவியை இழந்து,ஒரே பெண்குழந்தையுடன் வசிக்கும் கனவானால் காப்பாற்ற பட்டு,அங்கிருந்து வெளியேறி ஒரு விபசார விடுதியில் சிக்கி ஒரு குடிகார காமுகனால் (மனைவியின் நோயால் உறவு வேட்கையில் வாடும் ஒரு பூஞ்சை மனம் கொண்டவன்)வல்லுறவிற்கு உந்த பட்டு, அங்கிருந்தும் தப்பியோடி ,பைத்தியமாய் நடித்து, பைத்தியக்கார ஆஸ்பத்தரியில் அடைக்க பட்டு, Dr .கருணாகரன் என்பவரால் புரிந்து கொள்ள பட்டு, அங்கிருந்தும் தப்பி, சந்தர்ப்பவசத்தால் கொலை செய்ய நேரும் ஒரு ஏழை மனிதனின் உணர்ச்சிகளை உணர்ந்து அவன் கொலை செய்ய படுவதை பார்த்து அங்கிருந்தும் ஓடி , விரக்தியில் ஓடும் ரயில் முன் உயிரை மாய்க்க முடிவெடுக்கிறாள். ஆனால் ஒரு நல்ல அப்பாவி விவசாயி சாந்தப்பனால் காப்பாற்றப்பட்டு ,அங்கிருந்து ஓடி , ஒரு நல்லிதயம் கொண்ட செல்வராஜ் என்ற தொழுநோயாளிக்கு உதவி, அங்கிருந்து வெளியேறி , ஒரு கூத்து நாடக குழுவிடம் அவர்களுக்கு ஒரு கூத்தில் நடித்து உதவ கோரப்பட்டு உதவ, கடைசியில் மாறுவேடம் போட்டு ,வீரப்பன் என்ற உயர் காவல் அதிகாரியிடம் அழைத்து வர பட, வீரப்பன்,ஆனந்தனின் சித்தப்பா என்ற உண்மை வெளியாகி ஆனந்தனிடன் சென்று சேர்ந்து கல்யாணம் நிறைவேறுகிறது. நவராத்திரி நாட்களில் நளினா கடந்து வந்த ,மனிதர்கள் கல்யாண விருந்தினர்களாக ஒரு சேர வந்து வாழ்த்த , சுபம். இயல்பான நகைசுவை பைத்தியக்கார விடுதியில், சாந்தப்பனின் வீட்டில், கூத்து நாடகத்தில்,உச்ச காட்சியில் என்று ஜனரஞ்சகமாக போவதே தெரியாமல் பொழுது போகும். சிந்தியுங்கள் ,கேவலமான தசாவதார அலுப்பூட்டும் திரைக்கதை,வலுவில் திணிக்க பட்ட ஒட்டாத பாத்திரங்கள் ,கொடூரமான ஒப்பனை ,உலகநாயகன் என்ற கேவலமான சுய தம்பட்டம் என்ற கொடூர சித்திரவதை நாடகமா? சினிமாவா?சிஷ்யன் என்று சொல்லி கமல் அடித்த கூத்து சகிக்க இயலாத சித்திரவதை.நவராத்திரிதான் உண்மை சினிமா.உண்மை திறமை காட்டும் நடிப்பு.

இதில் ஒரு விஷயம்.

எல்லோருமே ஏதோ ஒரு ரசத்தைத்தான் ஒவ்வொரு பாத்திரங்களும் பிரதிபலிப்பதாக ஏ.பீ.என் அவர்களில் டைட்டில் பேச்சு கேட்டு உளறி கொண்டிருந்தனர்.

அற்புதராஜ் ஒரு அற்புத கனவான் மட்டுமல்ல, பாசம்,கண்ணியம், உள்ளோடிய சோகம் கொண்டவன்.

குடிகாரன் பயந்தவன் மட்டுமல்ல. காம தீயின் தகிக்கும் தாபம் சுமந்தவன்,மனசாட்சியின் நச்சரிப்பு தாங்கியவன்.

டாக்டர் கருணாகரன் கருணை மட்டுமல்ல, கடமை,புத்தி கூர்மை ,எடை போடும் திறமை கொண்ட முதியவர்.

கொலைகாரன் ஆத்திரம் மட்டும் கொண்டவனல்ல, தம்பியை இழந்த உள்ளாடிய சோகம்,துயர், கொண்ட பழி வாங்கும் வெறியுணர்வு, ஒரு அடிப்படை மனிதனுக்குள்ள செயலுக்கு நியாயம் தேடும் விழைவு,சவால் விட்டு எதிரிகளை சாய்க்கும் ஒரு குழந்தைமை ,போனால் போகட்டும் என்ற விரக்தி அத்தனையும் பிரதிபலிப்பான்.

சாத்தப்பன், அப்பாவி நம்பிக்கைவாதி,நல்லவன் தாண்டி, குறும்பும் பிரதி பலிக்கும்.ஆற்றாமை கொண்ட நல்லமனம்.

செல்வராஜ், சுயவெறுப்பு,விரக்தி,நம்பிக்கையின்மை , குதற பட்ட வலி ,நன்றியின் அணைப்பில் ஆசுவாசம் என்று அனைத்தும்.

வீரப்பன் ஆண்மை நிறை கம்பீரம்,வீரம், குறும்பான அட்டகாசம் என்ற குணங்களின் கலவையாய்

ஆனந்தன் காதலி சார்ந்த விரக்தி, தோல்வி மனம்,காதல்,ஆனந்தம்,அவசரம் அனைத்தின் கலவை.

உணருங்கள் ,ஒரு பாத்திரத்துக்கு கிட்டத்தட்ட 13 நிமிடங்கள் மட்டுமே நேரம்.பாடல்களை கழித்தால் 11 நிமிடங்கள் மட்டுமே.

இந்த மேதை பாத்திர வார்ப்புகளுக்கு எந்த நடிப்பு முறைமையும் சாராத ,தன்வயப்பட்ட கற்பனை ஒன்றை மட்டுமே சார்ந்து இதனை சாதித்துள்ளார்.

பாமர மக்களுக்கு மனதில் பதியன் போட mannerism என்ற ஆயுதம்.

அற்புத ராஜுக்கு தோள் குலுக்கல் , குடிகாரனுக்கு பார்வை ,கருணாகரனுக்கு நடை -இள முறுவல்,கொலைகாரனுக்கு குரலின் தன்மை, சாந்தப்பனுக்கு வலிய கைகால் உடல் மொழி, தொழுநோயாளிக்கு உடல் குறுக்கல் -இறைஞ்சும் குரல்-பார்வை குறைவுக்கு கையின் உபயோகம் ,வீரப்பனுக்கு நடை-சிரிப்பு, ஆனந்தனுக்கு விழிகளின் கூர்மை என்று பாத்திரங்களின் வசியத்தை ,வீச்சை நெஞ்சுக்குள் ஆழமாய் குறுகிய நேரத்தில் ஆழமாய் ஊன்றுவார்.

இனி இந்த படத்தின் ,நடிப்பின் நுண்ணிய தருணங்களை மேலும் அலசுவோம்.

இந்த படம் ரியலிசம் என்ற பெயரில் ,சலிப்பான ஒரே வித நடிப்பை தருவதற்கு வந்த வழக்கமான ஜல்லியடிக்கும் சராசரி படமல்ல.ஆஸ்கார் வைல்ட் சொன்னது போல கலையின் தரத்தை,படிமத்தை உயர்த்தி ரசனையை மேலெழுப்பும் ஒன்று. ஒரு உலகத்தின் உயர்ந்த கலைஞனின் திறமைகளின் அணிவகுப்பை தரும் ஒன்று. இந்த நடிகன் நடிக்க வாகாக , திறமைக்கு தீனி போடும் ஒன்று.

உதாரணமாக ,ஒவ்வொரு மனிதர்களின் பழக்க வழக்கம் ஒவ்வொரு விதம். ரஜினிகாந்த் என்ற மனிதர்(பின்னால் வந்த நடிகர்) பழக்க வழக்கம் காணும் வாய்ப்பின்றியே, அவரின் பாணியில் எங்கள் தங்க ராஜாவில் நடிகர்திலகம் நடித்து காட்டவில்லையா? அதை அப்போது ஓவர் என்றவர்கள் ,அவர் நடித்து காட்டிய பாத்திரம் போலவே ஒரு நடிகர் வந்ததில் அதிசயித்து நின்றோமே? நடிகர்திலகம் நரம்பும் சதையுமாக ,ஆத்மாவில் புகுத்தி பண்ணிய ஒவ்வொரு பாத்திரமும் சத்திய நிதர்சம். அதனால்தான் sampling முறையில் அளந்து விட முடியாத இமயம் அவர் என்று திருப்பி திருப்பி சொல்கிறேன்.

மற்ற படங்களில் ஒவ்வொரு பாத்திரத்துக்கு கிடைக்கும் அவகாசம் இந்த படத்தில் கிடையாது. ஆனாலும் ஒவ்வொரு பாத்திரமும் இன்று கண்டது போல மனத்தில் நிலைக்க அந்த மேதை பண்ணிய மாயம் என்ன சொல்ல?பாருங்கள் ,பாத்திரத்துடன் அவர் நடிப்பில் காட்டிய விந்தையை விவரிக்கிறேன்.

1)அற்புதராஜ்- கண்ணிய கனவான். ஆனால் அந்த பார்வையை கவனியுங்கள். கண்டிப்பு,கலக்கம், கடமை,குழப்பம் என்று பல கலவைகள் நிறைந்த eccentricity தன்மை இருக்கும். தோள் குலுக்கும் mannerism ,ஸ்டைல் உடன் பாத்திரத்தையும் பதியன் போட்டு விடுமே?(நலீனா என்றழைக்கும் நயம்)

2)குடிகாரன்- காம விழைவு நிறைந்த கலக்க பார்வை. சிறிதே முரண்டு காட்டியதும் வன்விழைவு பின் பயம் கலந்த குழப்பத்துடன் சரண் என்று தன கதை விவரிக்கும் பாணி வசன முறையிலே ஒரு முத்திரை. தன்னிரக்கம், தடுமாற்றம், தன்னுடைய முடிவு சரிதான் என்று சொல்ல விழையும் வாலிபனை தடுமாற்றத்துடன் கூடிய அழுத்தம்.

3)கருணாகரன்- நடையில்,பார்வையில், எனக்கு தெரியும்,புரியும் ,உனக்கு அனுசரணையாக இப்போது உன்னை இங்கு அனுமதிக்கிறேன் என்று பேச்சு எந்த திசையில் திரும்பினாலும்,வேடிக்கையுடன் கூடிய மனோதத்துவ அழுத்தம்.பர பரப்புடன் ஆண்டனி இங்க நின்னுட்டிருந்த பொண்ணு என்று காட்டும் பாத்திரத்துடன் ஒட்டிய ஸ்டைல்.

4)கொலையாளி- போலீஸ் தன்னை கண்டு வந்ததாக நம்பும்
நளினாவை அந்த சந்தர்ப்பத்திலும் நக்கலாக தன்னை கண்டே வந்ததாக நெஞ்சு நிமிர்த்தி கடமையை நிறைவேற்றிய திருப்தியுடன், ஒரு அப்பாவி தனம் கலந்த நகைசுவை தெறிக்கும் பயப்படாதே,நான் ஒரு கொலை பண்ணினேன் என்று தம்பியின் பரிதாப கதை சொல்லும் ஒரு அடிப்படை மனித தனம், அதில் தன் செயலை நியாய படுத்தும் தொனி,எதிராளியை கொக்கி போட்டு அதற்கு அனுசரணையான பதிலை விழையும் தொனி(சொல்லும்மா யார்தான் என்ன பண்ண முடியும், ) சுட்டேன் சும்மா சுட்டேன் என்று சொல்லும் பழி வாங்கிய திருப்தி வெறி, மோதும் கட்டத்தில் காட்டும் எச்சரிக்கையான மூர்க்கம், கத்தி குத்தில் துடிக்கும் கவன ஈர்ப்பு என்று ஒரு நொடி கண்ணிமைக்க விடாமல் செய்யும் உன்னதம்.

5)சாந்தப்பன்- சாந்தமான விவசாயி. அப்பாவி என்பதை விட கிராமம் மட்டும் அறிந்த பாமரன். தன்னுடைய தங்கையின் கதையை சொல்லி நளினாவின் தற்கொலையை உரிமையுடன் இடிப்பது, பூசாரியுடன் விவாதிப்பது, பூசாரி ஆத்தா அவ்வப்போது அஞ்சு பத்து கொடுப்பதாக சொல்லியதை சொல்லி காட்ட ,அவ்வப்போதுதானே என்று சொல்லும் நகைசுவை, உன்மேலே ஆத்தா வந்துச்சுய்யா என்று சொல்லும் அப்பாவி பரவசம்,பூசாரி சொன்ன படி விபூதியடித்து மந்திரம் சொல்லி பயம் காட்டும் பாவம், கடைசியில் கட்டுப்படுத்த முடியாமல் போவது என்று அதகள இயல்பு காட்சி நகைசுவை.(situational Comedy )

6)செல்வராஜ்- சுயவெறுப்புடன் கூடிய அவநம்பிக்கை, நளினா உதவியால் சரியான இடத்திற்கு வந்த ஆசுவாசம் தரும் அடைக்கல நம்பிக்கை, அந்த ஆசுவாசத்தில் தன்னுடைய பழைய உருவ படத்தை கை குவித்து அரைகுறை பார்வையில் காண விரும்பும் விழைவு,அந்த தொழுநோயாளியின் நரம்பு பாதிப்பில் உணர்வற்ற காலை தூக்கி வைக்கும் நடை என்று எம்.ஆர்.ராதாவின் அரைகுறை நடிப்பை ஒன்றுமில்லாமல் ஆக்குவார்.

7)சிங்காரம்- சிவாஜி-ஏ.பீ.என் -கே.வீ.எம் இணையில் கூத்து காட்சிகள் என்றால் மீன்குஞ்சுகளுக்கு நீச்சலாயிற்றே? இந்த படத்தில் சோபித்த அளவு கூத்து காட்சிகள் எந்தவொரு தமிழ் படத்திலும் இது நாள் வரை சோபித்ததில்லை.சிங்காரமாக ஒரு சற்றே பெண்மை மிளிரும் மைய நடை (கூத்து கலைஞர்களுக்கே உரித்தான),செயற்கையான ஒரு ஓங்கு தாங்கான பாவனைகள்-உடல்மொழி , இயல்பான பணிவு(மக்களிடம்,புரவலர்களிடம் அண்டி பிழைப்பு நடத்துவதால்),தன்னுடைய சகாக்களிடம் கிண்டல் கேலி உரிமை, தொழில் நேர்மை,வாக்கு சுத்தம், இயல்பான நகைச்சுவை உணர்வு என்று இந்த பாத்திரம் நான் விளக்கியா புரிய வேண்டும்?

8)வீரப்பன்- கம்பீரமான,அடாவடியாக,கண்டிப்பான, ஆர்ப்பாட்டமான வீரம் நிறைந்த இந்த பாத்திரம் எங்கள் தங்க ராஜா பைரவனுக்கு, தங்கப்பதக்கம் சௌத்திரிக்கு என்று பல நடிகர்திலக வெற்றி பாத்திரங்களுக்கு முன்னோடி. சரளமான கடகடவென உருளும் சிம்ம சிரிப்புக்கு ,அந்த சாப்பாட்டு மேஜை அதகலத்துக்கு, நளினாவை ஆண் வேடத்திலும் அடையாளம் புரிந்து கலாய்க்கும் அட்டகாச கேலி என்று நம் மனதிலும் ஆண்மை கலந்த அடாவடி உணர்வை மிக செய்யும். ஆனந்தன்-நளினா ஜோடி பொருத்தத்தை கூட போலீஸ் சித்தப்பாவாகவே ரசித்து சிரிக்கும் அடாவடி பாணி.

9)ஆனந்தன்- சோகனாக தலைகாட்டும் விரக்தியாளன், எதிர்பாரா தருணத்தில் காதலி வந்ததும், வெறுமையான புரிதலில்லா
வெற்றுணர்வு,நிதர்சம் உணரும் சுதாரித்து, சிறிதே தெறிக்கும் கோபம்,படிப்படியாக உணரும் காதல் பரவசம், என்ன வா இப்படி, அட சும்மா வாங்கிறேன் என்ற கண்ணின் ஜாடை, கூந்தலை இழுத்து கட்டிலில் சரியும் உன்மத்தம் என்று அய்யோடா, அவரின் சிறந்த காதல் காட்சிகளில் தலையாயதாயிற்றே? கடைசியில் மணமேடையில் சத்தமாக அமங்கல சொல்லை உதிர்க்கும் ஆனந்தனை கண்டிக்கும் நளினாவும் , செல்ல கோபத்ததுடன் பம்மும் ஆனந்தனும், என்ன சொல்ல?

இத்தனையும் ஒரே படத்தில் . சவால் விட்டு வெல்ல கடவுளே போட்டி போட்டாலும் சத்தியமாக முடியாது

By Gopal
https://scontent.fybz2-1.fna.fbcdn.net/v/t1.0-9/150579273_4004185432954668_4798452245789137526_n.j pg?_nc_cat=110&ccb=3&_nc_sid=825194&_nc_ohc=AcAHiHQjJJIAX_0BKAr&_nc_ht=scontent.fybz2-1.fna&oh=d1e89a4e61f06ec8d2a6fb37f4da36e4&oe=60667B5D


நன்றி கோபலகிருஷ்ணன் சுந்தரராமன்

sivaa
3rd March 2021, 09:39 PM
கெத்து இல்லை

சிவாஜிக்கு இமேஜ் பற்றியெல்லாம் கவலையெல்லாம் கிடையாது.
இப்போதுள்ள ஹீரோக்களைபோல ரசிகர்களிடம் நல்ல பெயர் வாங்கவும்,
சாகஷங்கள் செய்து ஒரு ஆல் டைம் ஹீரோவாக உலா வரவேண்டும் ,
கெத்து காட்டவேண்டும், இப்படியெல்லாம் யோசித்ததே கிடையாது.
அப்படி கேரக்டடர்கள்தான் வேண்டுமென்று அடம் பிடித்ததும் கிடையாது.
நல்வனோ ,கெட்டவனோ, கூனோ ,குருடோ, நொண்டியோ, முடமோ,
பொலிநோ , திருடனோ எதுவானாலும் என்ன தயங்காமல் ஏற்று ,
நிறைவாக நடித்துத் தந்த அசாத்திய கலைஞன்.




https://scontent.fybz2-1.fna.fbcdn.net/v/t1.0-9/156214077_888517272060562_6310332979163186789_o.jp g?_nc_cat=101&ccb=3&_nc_sid=825194&_nc_ohc=z2wLMLRrnmcAX8uRnVX&_nc_ht=scontent.fybz2-1.fna&oh=a757536856978939e934adc3107cc9e0&oe=60637710

Thanks Kb Murugan

sivaa
3rd March 2021, 09:48 PM
கொடை வள்ளல் " சிவாஜி கணேசன் "

​*திருச்சி திருவானைக்கால் கோயில், தஞ்சை பெரிய கோயில், தஞ்சை முத்து மாரியம்மன் கோயில், மதுரை மீனாட்சியம்மன் கோயில்களுக்கு யானைகளை வழங்கியுள்ளார்

*கயத்தாரில் கட்டபொம்மன் தூக்கிலப்பட்ட இடத்தை ( 47 சென்ட்) வாங்கி தனது சொந்த செலவில் கட்டபொம்மனுக்கு சிலை வைத்து அது நினைவு சின்னமாக திகழ்கிறது.

* பள்ளிகளுக்கு பகலுணவு நிதியாக ரூ 1 லட்சம் இன்றைய மதிப்பில்
பல லட்சங்கள்

*மதுரையில் சரஸ்வதி பள்ளிக்கட்டிடம் இடிந்து விழுந்த பொழுது பாதிக்கப்பட்ட மாணவியருக்கு ரூ 1 லட்சம் அளித்தார்.
இன்றைய மதிப்பில் பல லட்சங்கள்

*கோயில் திருப்பணிகளுக்காக கிருபானந்த வாரியாரிடம் பல்லாயிரம் ரூபாய்களை நன்கொடையாக வழங்கினார்.

*தமிழக வெள்ள நிவாரண நிதியாக முதல்வர் எம்ஜிஆரிடம் நாடக வசூல் மூலம் ரூ 1 கோடிக்கு மேல் அளித்தார்.இன்றைய மதிப்பில் பல கோடிகள்

*1962-ம் ஆண்டில் சென்னையில் வெள்ளம் வந்தபோது உறைவிடத்தையும் உடமைகளையும் இழந்துத் தவித்த குடிசைவாழ் மக்களுக்கு உணவுப் பொட்டலங்களும் பண உதவியும் செய்தார்.

*சென்னை கோடம்பாக்கம் பவர் ஹவுஸ் பகுதியில் அண்ணல் அம்பேத்காருக்கு சிலை அமைத்தார்.தமிழகத்தில் பல பகுதிகளில் அம்பேத்கார் சிலை அமைய தாராளமாக நிதியுதவி செய்துள்ளார்.

*சென்னை பெசன்ட் நகரிலுள்ள மங்கையர்கரசி மகளிர் மன்றக் கட்டிடத்திற்காக தங்கப்பதக்கம் நாடகத்தின் ஒரு நாள் வசூலை அளித்தார்.

*தேசப்பாதுகாப்பு நிதிக்காக தமிழகத்தின் சார்பில் ரூ 5 லட்சம் வசூலித்து கொடுத்தார்.இன்றைய மதிப்பில் கோடிகள்

*தமிழகமெங்கும் நாடகங்கள் நடத்தி தன்னுடைய 17 லட்சம் இன்றைய மதிப்பில் பல கோடி வாரி வழங்கி தேசம் வெற்றிபெற துணை நின்றவர் சிவாஜி.

*சேலத்தில் தங்கப்பதக்கம் நாடகம் நடத்தி அதன்மூலம் வசூலான தொகையில் சேலம் முள்ளுவாடி கேட் அருகில் உள்ள மாவட்ட காங்கரஸ் கமிட்டி கட்டிடத்தை வாங்கிக் கொடுத்தார்.

*1962 ல் இந்தியா சீனா போரின் போது பிரதமர் நேருவை சந்தித்து ரூ 40 ஆயிரம் யுத்த நிதியாக கொடுத்தவர்.
இன்றைய மதிப்பில் பல லட்சங்கள்

*1962 ல் இந்தியா சீனா போரின் போது டெல்லியில் நடந்த பொதுக்கூட்டத்தில் மீண்டும் ரூ 25000 த்தைபோர் நிதியாக கொடுத்தார்
இன்றைய மதிப்பு பல லட்சங்கள்

* 1962ல் சிவாஜி பிலிம்ஸ் தயாரித்து வெளியிட்ட ராக்கி திரைப்படத்தின் அகில இந்திய ஒரு நாள் வசூல் முழுவதையும் யுத்த நிதியாக அளித்தார்.

*1960 களில் வீரபாண்டிய கட்டபொம்மன் நாடகத்தை 112 முறை தொடர்ந்து நடத்தி அதன் மூலம் வசூலான 32 லட்சத்தை
பல கல்லூரிகளுக்கு வாரி வழங்கி கல்வியின்சிறப்பைஉலகிற்கு
உணர்த்தினார்.இன்றைய மதிப்பில்
சில கோடிகள்

*பாகிஸ்தான் ஆக்கிரமிப்பின் போது அப்போதைய குடியரசு தலைவர் ஜாகிர் உசேனை சந்தித்து ரூ 50 ஆயிரத்தை யுத்த நிதியாக அளித்தார்.
இன்றைய மதிப்பில் பல லட்சங்கள்

* பெங்களூர் நாடக அரங்கம் கட்ட" கட்ட பொம்மன்" நாடகம் மூலம் ரூ 2 லட்சம் இன்றைய மதிப்பில் கோடி நன்கொடையாக அளித்தார்.

*பெங்களூர் மக்கள் நலனுக்காக ரூ 15 லட்சம்( இன்றைய மதிப்பு 10 கோடி) நிதியினை வழங்கினார்.

*கம்யூனிஸ்ட் கட்சிக்காக கட்டபொம்மன் நாடகம் நடத்தி தோழர் ஜீவாவிடம் நிதி உதவி அளித்துள்ளார்.

*வேலூர் பென்லன்ட் மருத்துவமனை கட்டிட நிதிக்காக வியட்நாம் வீடு நாடகத்தின் மூலம் ரூ 2 லட்சம் நிதி அளித்தார்.

*நாகை மாவட்டம் அன்னை வேளாங்கண்ணி ஆலயத்திற்கு கோவில் மணி அமைக்கும் முழுச்செலவையும் ஏற்றார்.

*சென்னை கொசப்பேட்டை கந்தசாமி கோயில் தெப்பக்குளத்தில் செய்த திருப்பணி செலவை முழுமையாக ஏற்றார்.

*1953 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் புயல் நிவாரண நிதிக்காக விருது நகரில் தெருத்தெருவாக சென்று பராசக்தி வசனங்களைப் பேசி ரூ 12 ஆயிரம்( இன்றைய மதிப்பில் லட்சம்) வசூலித்துக் கொடுத்தார்.

* 1957ல் இருந்து 1961 வரை பம்பாயில் நாடகங்கள் நடத்தி குழந்தைகளின் கல்விச் செலவுக்காக ரூ 5 லட்சத்தை இன்றைய மதிப்பில் கோடிகள்

*1960ல் தமிழகம் பெரும்புயல் மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட போது, சிவாஜி கணேசன் 1 லட்சம் உணவுப் பொட்டலங்களையும், 800 மூட்டை அரிசியையும் தானமாகக் கொடுத்தார்.

*1961 ல் பிரதமர் நேருவிடம் கிழக்கு தாம்பரத்தில் காசநோய் மருத்துவமனை கட்டுவதற்கு ரூ 1 லட்சம் கொடையாக அளித்தார். இன்றைய மதிப்பில் பல லட்சம்

*1964 ல் விருதுநகர் மாவட்டம் மம்சாபுரத்தில் ஒரு பெரிய கால்நடை மருத்துவமனையை அமைத்துக் கொடுத்து வாயில்லா ஜீவன்கள் மீதான தனது பாசத்தை வெளிப்படுத்தினார்.

*1967 ஆம் ஆண்டு உலக தமிழ் மாநாடு சிறக்க வள்ளுவர் சிலை அமைத்ததுடன் முதலமைச்சர் அண்ணா அவர்களிடம்
ரூ 5 லட்சம் வழங்கினார்.இன்றைய மதிப்பு பல கோடி


*1968 ஆம் ஆண்டு திருச்சியில் உள்ள ஜமால் முகமது கல்லூரி கட்டிட நிதிக்காக ரூ 1,30,000 அளித்தார். இன்றைய மதிப்பில் பல லட்சம்

*1999 ஆம் ஆண்டு கார்கில் போர் நிதியாக கலைஞரிடம் ரூ 1 லட்சம் கொடுத்தார் இன்றைய மதிப்பு பல லட்சம்

*திருப்பூர் தென்னம்பாளையம் சந்தையில் நடிகர் சிவாஜி, ‘வியட்நாம் வீடு’ நாடகத்தில் நடித்தார். அப்போது கிடைத்த வருவாய் ரூ.1 லட்சத்தை, திருப்பூர் வீரராகவப் பெருமாள் கோயிலுக்கு கட்டிடம் கட்ட நன்கொடையாக வழங்கினார்.



https://scontent-ort2-1.xx.fbcdn.net/v/t1.0-9/154762078_717258542296350_8366508589635893817_n.jp g?_nc_cat=107&ccb=3&_nc_sid=825194&_nc_ohc=UaRrWaSN8_sAX9S2zZe&_nc_ht=scontent-ort2-1.xx&oh=d5b940beb3abab6089c564d8fcbbc0f6&oe=60654389நன்றி வள்ளியம்மை

sivaa
3rd March 2021, 09:51 PM
எல்லாம் இருக்கணும்.எதுவும் மிச்சம் இருக்கக் கூடாது.இப்படி செய்த படமே ராஜா! ராஜாவின் ஆட்சியில் குறை இருக்கலாமோ?
ராஜான்னா ராஜாதான்..
முன்னோடிகள் எல்லாம் பிழியோ பிழியென்று சாரெடுத்து விட்டார்கள்
ராஜாவை.நான் புதிதாக எழுத என்ன இருக்கிறது ?யாருடைய பார்வையிலும் ராஜா அழகோ அழகு.
ஒரு புதிய பட டிரெயிலரில் தண்ணீரில் இருந்து வில்லை எடுக்கும் காட்சி வரும்.வில்லை எடுக்கும் போது தண்ணீரும் கனமாக மொந்தமாக வில்லுடன் சேர்ந்து வரும்.ஸ்லோமோஷனில் க்ராபிக்ஸ் டெக்னிகல் உத்திகளில் ஷாட் அமைக்கப்பட்டு பார்ப்பவரை ஈர்க்கும்.ராஜாவை பாருங்கள்...ஒரு பொருளை எடுப்பதாகட்டும், கையாள்வதாக ஆகட்டும், கைகளை விரிப்பதில் ,கால்களை வைத்திருப்பதில் வார்னிஷ் முடிந்த வேலைபோல் பளீர்! பளீர்!
நடிகர்திலகத்துக்கு உவமை என்று எதைக் கூற முடியும்? ராஜாவில் நடிகர்திலகத்தின் பிரசன்டேசனை விக்கிரமாதித்தன் வேதாளம் போல் விடுகதை கதைப் புதிர்களாக ஒரு புத்தகம் போடலாம்.
சிகரெட் பற்றவைக்கும் காட்சி. சிறையில்.லைட்டர் நீட்டுவார் மனோகர் ..ஆரம்ப அறிமுகமாக காட்சி இது.எவ்வளவு சாதாரணமான காட்சி தான் இது என்பதைத் தவிர வேறு என்ன சொல்ல முடியும்? ஆனால், ஸ்கிரீனில் காண்பிக்கும் போது அதிரி புதிரி அமர்க்களம் தான்! ரசிகர்களின் கூட்டமிருக்கும் போது, இந்த காட்சியை பெரும்பாலும் சரியாகவே பார்க்க முடியாது.அந்தளவுக்கு சிகரெட் லைட்டருக்கே விசில் பறக்கும், கை தட்டலில் அதிரும்.அலட்டிக் கொள்ளாத நடிப்பு பாணி இதில் முழுதும் ..பளஸ் அட்ரா விசில் ஸ்டைல்..ஸ்டைல்..ஸ்டைல்..
நின்றால் ஒரு ஸ்டைல்
நடந்தால் ஒருஸ்டைல்
பார்த்தால் ஒரு ஸ்டைல் ...
என்று ஏகத்துக்கும் சர்வ சாதாரணமாய் அள்ளி வீசியிருப்பார்.
போலீஸ்காரனை விரோதம் பண்ணிக்காதே, நண்பனாகவும் பழகாதே, பொதுவா இரு! ஆர் எஸ் மனோகரிடம் சொல்வார்..முதல் டயலாக் இது, படத்தில் நடிகர்திலகத்துக்கு..
அது என்ன அப்படியொரு வாய்ஸ்..ரொம்ப ரொம்ப கவர்ச்சி, காந்தம் அதில்...ரீவைண்ட் பண்ணி பண்ணி கேட்டுக் கொண்டே இருக்க வேண்டும் என்றிருக்கும்.ஆராய்ச்சி செய்தால் ஆயுள்தான் முடியும். அந்தக் குரல் ஒரு ஹிப்னாடிசக் குரல் .

நீ வரவேண்டும் என காத்திருந்தேன்....
வந்தார். வென்றார்.காத்திருக்க வைக்கவில்லை.பாலாஜி படமாச்சே.டாண் என்று ரிலீஸ் ஆகி விட்டது.இதற்கு முன் வந்த பாபுவில் நடித்தவரா? பாபுவில் ,கலர் கலராய் ரசிக்க முடியவில்லையே என நினைத்த ரசிகர்களுக்கு ராஜா ஒட்டு மொத்த திருப்தி செய்து விட்டது.ராஜாவின் டை பறப்பது போல ரசிகர்களுக்கும் உற்சாகம் பறந்தது.
பாயிண்ட் டூ பாயிண்ட் நான் ஸ்டாப் ரன்னிங் வேக காட்சிகள் தான் படத்தில்.அந்த வேகம் ஆரம்ப காட்சிகளில் இருந்தேதான்.ராஜாவின் என்ட்ரியே 16.30 நிமிடங்கள் கடந்துதான்.
மனோகரின் தகவல்,ஜெ,வை பார்ப்பது ,தன்னை எடை போடும்படி நடித்தல் ,அடுத்து பாலாஜி கும்பல், அதில் இணைதல், பாலாஜி விசாரணை, சேரில் கட்டி வைத்து அடித்தல் ...பாலாஜிக்கு நம்பிக்கை வரும்படியான செட்டப்புகள்,தொடர்ந்து பாலாஜியின் சந்தேகம் தீரல்......
இதற்கு பின் இப்படியொரு காட்சி அமைப்பு தான் வருமென்று யார் தான் நினைத்திருப்பார்கள்? புலியை கட்டிவைத்து அடித்து பட்டினி போட்டு சில நேரம் கழித்து அப்புலியை விடுவிக்கலாம் என்று பக்கத்தில் போனால், ஆனால் அது அடிபட்ட புலியாயிற்றே? என்ன நடக்குமோ, அது நடக்கும் .நான்கு முனை தாக்குதல், கை வீச்சு ,ஜூடோ கட் ,உதை என்று அதிரடியோ அதிரடி தான்..உத்திகளில் ,அசைவுகளில்
ஸ்பீடில் அமைக்கப்பட்ட காட்சியமைப்பு அது.ரொம்பவே பெர்பெக்டாக ,அதிரடியில் மாஸ் காட்டியிருப்பார் நடிகர்திலகம்.
இந்த உருவல்தானே 2013 விஸ்வரூபம்...
ரந்தாவிடம் பந்தாவாக பைட் செய்யும் காட்சிகள் வரும் போதுதான் ஜேம்ஸ்பாண்ட் பாணி படம் பார்க்கிறோம் என்று ஞாபகம் வரும்.சண்டைக்காட்சி என்பதாலும் அந்த பாணி படம் என்று சொல்லப்பட்டதாலும் தான் அது.அதுவரை ராஜாவின் ஸ்டைல்களால் அரண்ட மனம் வேறு எதையும் நினைக்க தோணவேயில்லை.ஜேம்பாண்டாவது ஒண்ணாவது! ராஜாவுக்கு முன்னே!

எல்லா படங்களையும் ஒன்றுக்கொன்று வித்தியாசமாய் செய்வதில்தான் நடிகர்திலகம் விரும்பினார்.அதனால் தான் ராஜாவை போல் அடுத்தது செய்யவில்லை.இதே மற்ற நடிகர்கள் செய்திருந்தால் ராஜா போலவே பத்து படங்கள் வந்திருக்கும்.ஒரு ராஜா! ஒரு அரியாசனம்!!.இது நடிகர்திலகத்தின் கொள்கை ..
கோயில் நகை கொள்ளை பிளான்,அதில் கோகுலத்தில் கண்ணன் இல்லையோ பாடல், நாகையாவின் தவிப்பு, என செல்லும் திரைக்கதையின் முடிவில் தங்கப்பதக்கம் இளமை சௌத்ரீயாக வத்து நிற்பார் ராஜா! புல் போலீஸ் யூனிபார்மோடு.இத்தனை நேரம் ஸ்டைல் காட்டிய ராஜாவா அது! செம அதிர்ச்சி பாலாஜி கூட்டத்திற்கு மட்டுமல்ல.ரசிகர்களாகிய நமக்கும் தான்.ஆனால் அது நமக்கு இன்ப அதிர்ச்சி!
பின் ரங்காராவை சந்திப்பது,
நம்பிக்கை பெறுவது என முக்கிய கட்டங்களாய் காட்சிகள் ஒவ்வொன்றும் ஆவலை தூண்டிக் கொண்டேயிருக்கும்.திரைக்கதை ஸ்பீடில் க்ளைமாக்ஸ் வந்து நிற்பதே
தெரியாது.நீண்ட க்ளைமாக்ஸ் கொண்ட தமிழ் சினிமாக்களில் ஒன்று .எத்தனை ரசனையானது என்பதில் டாப் என சொல்லலாம்.அதிக ஆக்ஷன் இல்லாமல் பேசி பேசியே பல்ஸை எகிற வைப்பார்கள் அத்துணை நடிகர்களும்.தேர்ந்த நடிகர்கள் ...
ஆர் எஸ் மனோகரின் அலறல்
ரங்காராவின் மிரட்டல்
பண்டரிபாயின் கதறல்
என்று தியேட்டரே அதிறும்.
ராஜாவின் சிரிப்பை என்னவென்று சொல்வது? சொல்லாதவர்கள் தான் யார்? இது போன்ற காட்சிகளில் நடிகர்திலகத்தை தவிர யாரும் நினைவுக்கு வர மாட்டார்கள்.மற்ற காட்சிகள் மட்டும் என்ன? மஞ்சள் கலர் உடைகளை ஆண்கள் அதிகம் விரும்ப மாட்டார்கள். உடுத்தவும் மாட்டார்கள்.ஆனால், நடிகர்திலகத்துக்கு மட்டும் எப்படி அப்படி அந்த உடை பிரமாதப்படுத்துகிறதோ?
பண்டரிபாயை அடிக்கையில் ,நடிகர்திலகம் நடிப்பால் மொத்த க்ளைமாக்ஸையும்
தன் பக்கம் இழுத்து விடுவார்.
ராஜா தீபாவளி படமல்ல.
ஆனால் ரசிகர்களுக்கு அன்றுதான் தீபாவளி!
https://static.xx.fbcdn.net/images/emoji.php/v9/t80/1/16/1f64f.pnghttps://static.xx.fbcdn.net/images/emoji.php/v9/t80/1/16/1f64f.pnghttps://static.xx.fbcdn.net/images/emoji.php/v9/t80/1/16/1f64f.png
செந்தில்வேல் சிவராஜ்

https://scontent-ort2-1.xx.fbcdn.net/v/t1.0-9/153646215_1855249501297974_7019291365466032265_o.j pg?_nc_cat=107&ccb=3&_nc_sid=825194&_nc_ohc=fD5QDFzw64YAX8ff_XJ&_nc_ht=scontent-ort2-1.xx&oh=dd75d18a61efe4135468368183e675be&oe=60635EF4

நன்றி செந்தில்வேல் சிவராஜ் --சிவாஜி குறூப்

sivaa
3rd March 2021, 09:55 PM
நடிகர் திலகம் நடித்து மார்ச் மாதம் வெளியான திரைப்படங்களின் பட்டியல்.

https://scontent.fybz2-1.fna.fbcdn.net/v/t1.0-9/153742942_1189964591439834_668650538890519086_o.jp g?_nc_cat=109&ccb=3&_nc_sid=825194&_nc_ohc=_mrbyMUpmNcAX945S2T&_nc_oc=AQmpWVc-sGwkxeG74kOiAB814O5IOPhpA2f36ZZcQ6BKPbAX1KjMSAcV0X jQ0bKyOco&_nc_ht=scontent.fybz2-1.fna&oh=b2e8ee22aba550c4c1d64acd41dacc56&oe=60659403

Thanks Vaan nilaa

sivaa
4th March 2021, 08:17 AM
குறவஞ்சி 4/03/1960---இன்று 61 ஆண்டுகள் நிறைவு.

https://scontent-ort2-1.xx.fbcdn.net/v/t1.0-9/155118974_2390687967743104_4096200101187933908_n.j pg?_nc_cat=107&ccb=3&_nc_sid=825194&_nc_ohc=qhkN9EEqGrAAX-YvBXI&_nc_ht=scontent-ort2-1.xx&oh=2c37140bb3ab1022f4a95cfecaf16f51&oe=60671D51

Thanks Petchimuthu Sudalaimuthu

sivaa
4th March 2021, 08:22 AM
தியாகம் 4/03/1978 --இன்று 43 ஆண்டுகள் நிறைவு .
https://scontent-ort2-1.xx.fbcdn.net/v/t1.15752-9/157109205_273705210788471_2064773928128625377_n.jp g?_nc_cat=107&ccb=3&_nc_sid=ae9488&_nc_ohc=8KQHsy-HNPAAX8dbH7Z&_nc_ht=scontent-ort2-1.xx&oh=bb7558a488ec564faa5f2cea5522df09&oe=6067886Ahttps://scontent.fybz2-2.fna.fbcdn.net/v/t1.15752-9/156775319_810795329786767_1912733087992358119_n.jp g?_nc_cat=102&ccb=3&_nc_sid=ae9488&_nc_ohc=CfHZfWEQhw0AX_pdKLV&_nc_ht=scontent.fybz2-2.fna&oh=68f25572c39d6afa33d7d2d924e2ea00&oe=606577FE

https://scontent-ort2-1.xx.fbcdn.net/v/t1.15752-9/156704908_4088744117803048_6519755012368020914_n.j pg?_nc_cat=104&ccb=3&_nc_sid=ae9488&_nc_ohc=ihG6YHN5goAAX_MLTDh&_nc_ht=scontent-ort2-1.xx&oh=b7972947726ae3550ecccdb43ee6a8fd&oe=606565AE

sivaa
6th March 2021, 12:20 AM
மனித வளம் பெற நடிகர் திலகம் வழங்கியது.
உன்னை மிஞ்சும் நடிகன் உலகில் தோன்றவில்லை.

https://scontent.fybz2-2.fna.fbcdn.net/v/t1.0-9/156210388_1689850277864054_3946485332621410849_o.j pg?_nc_cat=102&ccb=1-3&_nc_sid=730e14&_nc_ohc=zgJauNy31fcAX8715N8&_nc_ht=scontent.fybz2-2.fna&oh=f1582ac5791e2facd70f8ca60937d6a3&oe=606646BD


Thanks Vijaya Rai Kumar

sivaa
7th March 2021, 10:32 PM
ஒரு நாட்டின் அதிபர் இந்திய விஜயம் மேற்கொண்டு பிரதமரை பார்த்த பிறகு,
உங்கள் நாட்டு நடிகர் சிவாஜி அவர்களை பார்க்கவேண்டும் என்று கூறி,
சிறப்பு protocal (நெறிமுறை) அடிப்படையில் சென்னையில் வந்து அவரை கண்டது,
உலகளலில் திரு சிவாஜி அவர்களை மட்டுமே.
கண்டவர் எகிப்து அதிபர் திரு நாசர் அவர்கள்.

https://scontent-ort2-1.xx.fbcdn.net/v/t1.0-9/156738691_866849077222299_1271473679582169215_n.jp g?_nc_cat=110&ccb=1-3&_nc_sid=825194&_nc_ohc=8Pd_a4S4kLUAX9MsE9D&_nc_ht=scontent-ort2-1.xx&oh=a2c157ea5dbb18990c5353db786132bb&oe=606AD3A6

Thanks K V Senthil Nathan

sivaa
8th March 2021, 08:14 PM
நடிகர்.திரு.M.N. நம்பியார் அவர்கள்.

உலகின் தலைசிறந்த நடிகர்களில் எல்லாம் அவர் தலை சிறந்தவர். எந்த வேடமாக இருந்தாலும் மற்றவர்களைவிட திறமையாக செய்யக்கூடியவர். உத்தமபுத்திரன் படத்தில் ஹீரோவாகவும் வில்லனாகவும் இரட்டை வேடங்களில் நடித்திருப்பார். வில்லன் சிவாஜிக்கு துணை நின்று ஆலோசனை கூறும் பாத்திரத்தில் நான் நடித்திருப்பேன். அந்தப் படத்துக்குப் பிறகும் சிவாஜி வில்லனாக நடித்திருந்தால், எனக்கெல்லாம் வேலை இல்லாமல் போயிருக்கும்.

யயாதி மகாராஜா, இந்திரலோகத்திலிருக்கும் தேவர்கள் போல் இளமையாகவே வாழ விரும்பினார். அதற்கு அவரது பிள்ளைகளில் எவராவது தனது இளமையைத் தந்தால் அவர் இளைமையுடன் வாழலாமென ரிஷி ஒருவர் வரம் தந்தார். ஆனால் எந்தப் பிள்ளையும் தங்களது இளமையைத் தர முன் வர வில்லை. அவர் பெற்ற பிள்ளைகளில் அரூபியாக இருந்த ஒரு பிள்ளையை மட்டும் அவர் வெறுத்து ஒதுக்கினார். (கிட்டத்தட்ட தெய்வ மகன் கதை போல் இருக்கிறதே)அந்தப்பிள்ளை தனது இளைமையை தன் தந்தைக்கு தந்ததாக புராணக் கதையொன்று உண்டு. யயாதியின் நிலையில் சிவாஜி இருந்திருந்தால், நான் என் இளமையைத் தந்திருப்பேன்.
https://scontent.fybz2-1.fna.fbcdn.net/v/t1.0-9/158774705_760038804944993_6045217548706895674_o.jp g?_nc_cat=110&ccb=1-3&_nc_sid=825194&_nc_ohc=jMvVFXGuzSIAX-P_DrC&_nc_ht=scontent.fybz2-1.fna&oh=1d6a4e80ebc31391ab7f0262c374ca0e&oe=606D6A93


Thanks Ganesh Pandian (Nadigar thilagam sivaji visirigal)

sivaa
12th March 2021, 04:56 AM
இன்று முதல்(மார்ச் 12 )
சேலம் கீதாலயா,
நெல்லிக்குப்பம் விஜயா&
நடுவீரப்பட்டு ராஜா. நடிகர் திலகத்தின் "கர்ணன்"குதூகல ஆரம்பம்.

Thanks Divyafilms Chokkalingam

sivaa
25th March 2021, 08:04 AM
வணக்கம் மய்யம் இணைய உறவுகளே!

கடந்த 10 நாட்களுக்குமேலாக இணையத்தில் உள்நுழைந்து பதிவுகள் இடமுடியாமல் இருந்தது.
அட்மின் RR அவர்களுடன் தொடர்பு கொண்டதில் அவர் மூலம் பிரச்சினைக்கு தீர்வு கிடைத்தது.
RR அவர்களுக்கு மிகவும் நன்றி.

பலருக்கும் உள்நுழைவதில் பிரச்சினை இருப்பது தெரிகிறது எனவே உறுப்பினராக இருந்தும்
உள் நுழைவதில் தடங்கல் உள்ளவர்கள் கீழ்க்காணும்
ஈ மெயிலில் RR அவர்களுடன் தொடர்பு கொண்டு உங்கள் உங்கள் தடங்கல்களை
நிவர்த்தி செய்து கொள்ளுங்கள்.
நன்றி.

rrprivate-hubadmin@yahoo.com

sivaa
25th March 2021, 08:26 AM
அட்மின் அவர்களுக்கு வணக்கம்!

எனது hub i d யில் பல தவறுகள் காணப்படுகின்றது.

நான் புதிய உறுப்பினர் என காட்டுகிறது.

இருப்பிடம் தவறாக காட்டுகிறது;

பழைய பதிவுகள் 0 என காட்டுகிறது.

தயவு செய்து இவற்றை கவனித்து நிவர்த்தி செய்யுங்கள் நன்றி.

sivaa
27th March 2021, 04:31 AM
குலமா குணமா? வெளியான நாள் 26/03/1971

50 ஆண்டுகள் நிறைவு5770

sivaa
27th March 2021, 04:54 AM
·
இன்று முதல்(19-3-2021) திருச்சி தஞ்சை மாவட்ட 21திரை அரங்குகளில் நடிகர் திலகத்தின்" கர்ணன் ".குதூகல ஆரம்பம்.
1. திருச்சி- ரம்பா La cinima.
2,திருச்சி- சோ னா மீனா,
3.தஞ்சை -ஜுபிட்டர்,
4. மாயவரம்-கோமதி,
5. பெரம்பலூர் -கிருஷ்ணா
6. புதுக்கோட்டை -வெஸ்ட்,
7. காரைக்கால் -La-cinima,
8.கரூர் -கவிதாலாய,
9.திருவாரூர் -சோழா,
10. மன்னர்குடி-சாமி,
11. சீர்காழி -OSM,
12.பட்டுக்கோட்டை -ராஜாமணி,
13. ஆலங்குடி V.C. cinemas,
14.முசிறி -ஸ்ரீராம்,
15. T T பூண்டி -AM delux,
16. ஜெயகொண்டான் -ஜநகர்,
17. துறையூர் -லட்சுமி,
18. மணப்பாறை -உதயம்,
19. குளித்தலை -சாண்முகா,
20. அருவம்பூர் -அருணா,
21. செந்துறை -ராமசாமி.

Thanks Divyafilms Chokkalingam

sivaa
2nd April 2021, 05:12 AM
தூத்துக்குடி சத்யாவில்

2/04/2021 முதல்

ராஜபார்ட் ரங்கதுரை5771

sivaa
2nd April 2021, 05:16 AM
நடிகர் திலகம் நடித்து ஏப்ரல் மாதத்தில் வெளியான படங்கள்:-
11.இல்லறஜோதி-09/04/54
12 அந்த நாள்-13/4/54
13.கல்யாணம் பண்ணியும்
பிரம்மசாரி-13/4/54
22. உலகம் பலவிதம்-14/4/55.
37..வணங்காமுடி-12/4/57
47.சம்பூர்ண ராமாயணம்-14/4/58
61.தெய்வப்பிறவி-13/4/60
68.புனர்ஜென்மம்-21/4/61
78.படித்தால் மட்டும் போதுமா-14/4/62
87 நான் வணங்கும் தெய்வம்-12/4/63.
95.பச்சை விளக்கு-03/04/64
103.சாந்தி-22/4/65
112.பேசும் தெய்வம்-14/4/67
119.ஹரிசந்திரா-11/4/68
120.கலாட்டா கல்யாணம்-12/4/68.
138. வியட்நாம் வீடு-11/4/70
148.பிராப்தம்-14/4/71.
149.சுமதிஎன் சுந்தரி-14/4/71
170.வாணி ராணி-12/4/74
175. அவன்தான் மனிதன்-11/4/75
182.கிரகபிரவேசம்-10/4/76
201.கவரிமான்-6/04/79
208.தர்மராஜா-26/4/80
214.அமரகாவியம்-24/4/81
223.சங்கிலி-14/4/82.
234.இமைகள்-14/4/83
242.வாழ்க்கை-14/4/84
252. நீதியின் நிழல்-13/4/85
260. விடுதலை-11/4/86.
267. வீரபாண்டியன்-14/4/87
282.பசும்பொன்-14/4/95
287. படையப்பா-10/4/89
கெளரவ வேடத்தில் நடித்த படங்கள்;-
4. ஸ்கூல் மாஸ்டர் (இந்தி)-14/4/59
8. ஸ்கூல் மாஸ்டர் ( ம)-3/4/64.
16. நட்சத்திரம்-12/4/80.

(whatsapp ல் வந்தவை)

sivaa
2nd April 2021, 06:02 AM
தேர்தல் நேரத்தில் தினமலரில் நடிகர் திலகத்தை பற்றி ஒரு நல்ல செய்தி...
(ஆச்சரியமாக உள்ளது..தினமலரா இப்படி என்று) உண்மைகள் நீண்ட நாட்களுக்கு உறங்காது.......🙏🙏🙏
தஞ்சை சதா. வெங்கட்ராமன் அவர்கள் பதிவிலிருந்து......நன்றி🙏🙏🙏

5772

sivaa
12th April 2021, 07:22 AM
46வது ஆண்டுகள் நிறைவு,

அவன்தான் மனிதன்.

11/04/1975 to 11/04/2021

5773

sivaa
12th April 2021, 07:34 AM
53 வது ஆண்டு நிறைவு ஹரிச்சந்திரா. 11/04/1968.

51 வது ஆண்டு நிறைவு வியட்நாம் வீடு.11/04/1970.

46 வது ஆண்டு நிறைவு அவன்தான் மனிதன்.11/04/1975.

35 வது ஆண்டு நிறைவு விடுதலை.11/04/1986.


5774

(புகைப்படம் உதவி நன்றி முரளி சிறினிவாசன்)

sivaa
12th April 2021, 07:43 AM
இன்று 11/04/2021 நடிகர் திலகத்தின் படங்கள். ¶
==================================
1.) நடிகர் திலகம் + ஸ்ரீப்ரியா நடித்த
" வசந்தத்தில் ஒரு நாள் " மதியம் 01.05 p.m. மணிக்கு பாலிமர் டிவி. யிலும்...
2.) நடிகர் திலகம் + சாவித்திரி நடித்த
" பாச மலர் " இரவு 10.00 p.m. மணிக்கு ஜெயா டிவி யிலும்...
3.) நடிகர்திலகம் + கே.ஆர். விஜயா நடித்த " கிருஷ்ணன் வந்தான் " இரவு 10.30 p.m. மணிக்கும் ராஜ் டிவி. யிலும்...
4.) நடிகர் திலகம் + ஜெய லலிதா நடித்த
" பட்டிக்காடா பட்டணமா " மதியம் 02.30 p.m. மெகா 24 மணிக்கும்...
கண்டு களிக்கலாம். ¶

sivaa
12th April 2021, 07:46 AM
எஸ்.எஸ். ராஜேந்திரனுக்கும் சிவாஜிக்கும் மிகுந்த நெருக்கம் உண்டு. அதை அவரே சொல்கிறார்:
'1942ம் வருஷம். ஒரு நாள் டி.கே.எஸ். சகோதரர்களின் நாடகக்குழுவில 'மகாபாரதம்' நாடகம். நான் சகாதேவனா நடிக்கிறேன். நாடகம் பார்க்க நடிகவேள் எம்.ஆர். ராதா வந்திருந்தார். அவரோடு பதினைந்து வயது மதிக்கத்தக்க ஒரு பையனும் வந்திருந்தார். யதார்த்தம் பொன்னுசாமி பிள்ளையின் நாடக சபாவில பெண் வேடங்களிலே அந்தப் பையன் நடிப்பதாகச் சொன்னார்கள். பெண் வேடமிடும் அந்த பையனை இரவு மட்டும் எங்களோடு இருக்கச் சொல்லிவிட்டு எம்.ஆர். ராதா போய்விட்டார். மறுநாள் காலை வரை அவர் எங்களோடு தங்கினார். தன் பெயர் கணேசன் என்றார். அவர்தான் அழியாப் புகழ் பெற்ற நடிப்புலக இமயம் சிவாஜி கணேசன்.
நாங்கள் சந்தித்த அந்த ஜூன் இரவின் முதல் நிமிடத்திலிருந்து அவர் மறைந்ததாகத் தகவல் வந்த அந்த கடைசி நிமிடம் வரை சிவாஜி எனக்கு மிகவும் நெருக்கமான சகோதரராகவே விளங்கினார். 'பராசக்தி' படத்தில் வாய்ப்பு வந்த போதும் என்னிடம் சொல்லிவிட்டுத்தான் சென்றார்.
பிறகு கதாநாயகன் வேடத்திற்கு தனக்கு மேக்கப் டெஸ்ட் எடுத்தார்கள் என்று எனக்கு கடிதம் எழுதினார். பிறகு 'பராசக்தி'யில் சிவாஜிக்கு அண்ணன் வேடத்தில் நடிக்க எனக்கும் அழைப்பு வந்தது. நானும் சென்னைக்கு வந்தேன். 'பராசக்தி' படப்பிடிப்பு நடந்தது. சிவாஜி படத்தில் குணசேகரன் ஆனார். நான் ஞானசேகரன் ஆனேன். 'பராசக்தி' ரிலீசானது. தமிழ் திரையுலகில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது. 'பராசக்தி'யை தொடர்ந்து சிவாஜியோடு மிக அதிக படங்களில் நடிக்கும் வாய்ப்புக்கள் எனக்கு கிடைத்தன.
தமிழ் திரையுலகம் அதுவரை காணாத மிகச்சிறந்த படங்களில், உணர்ச்சிகரமான வேடங்களில், சிவாஜியோடு நானும் நடித்தேன். 'பராசக்தி'க்குப் பிறகு 'பணம்', 'மனோகரா', 'ராஜா ராணி', 'ரங்கோன்ராதா', 'தெய்வப்பிறவி', 'செந்தாமரை', 'ஆலயமணி', 'குங்குமம்', 'பச்சைவிளக்கு', 'கைகொடுத்த தெய்வம்', 'சாந்தி', 'பழநி' என்று பல படங்களில் பெரும்பாலும் அதிக வசூலைக் குவித்து மிகப்பெரிய வெற்றியை சிவாஜியால் நான் அடைந்தேன்.
இந்த தருணத்தில் என்னை விட்டு சிவாஜியை பிரிக்கும் முயற்சியும் நடந்தது. நீ ஏன் சிவாஜியுடன் நடிக்க வேண்டும், சிவாஜியோடு நடிப்பதால் உனக்கு என்ன லாபம் என்றெல்லாம் கேள்விகள் எழுந்தன. அதற்கு நான் நல்ல பதிலை தந்தேன்.
சிவாஜியும், நானும் சேர்ந்து நடிக்கும் படங்கள் மிக அதிக வரவேற்பை பெறுகின்றன. அதிக வசூல் கிடைக்கிறது. எதுவுமே தோல்வி அடைவதில்லை. தோல்வி அடைந்ததாகக் கூறப்பட்ட 'பழநி' போன்ற படங்களில் கூட போட்ட பணம் கிடைத்துவிட்டது. அதிக லாபம்தான் கிடைக்கவில்லை. எல்லாவற்றுக்கும் மேலாக எனக்கு மிக அதிக சம்பளம், விநியோக உரிமையில் நிகர லாபம் கிடைப்பதெல்லாம் சிவாஜியோடு நடிக்கும் படங்களில் மட்டும்தான்’ என்றேன்.
சிவாஜியும் நானும் சேர்ந்து நடித்த படங்களிலேயே சிவாஜிக்கு மிகவும் பிடித்த படம் 'கைகொடுத்த தெய்வம்' தான். அதன் வெற்றி விழாவில் 'கைகொடுத்த தெய்வம்' படத்தில் என்னை விட சிறப்பாக நடித்தவர் எஸ்.எஸ்.ஆர்.தான்’ என்று பாராட்டி பேசினார். இத்தகைய மனமார்ந்த பாராட்டுக்களை வேறு யாரும் சொல்லவே மாட்டார்கள்.
நன்றி ! சுதாங்கன் செல்லூலாய்டு சோழன் தொடரிலிருந்து ...

sivaa
14th April 2021, 11:14 PM
மய்யம் இணையம் உறவுகள் அனைவருக்கும்

இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்.5775

sivaa
14th April 2021, 11:21 PM
கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி 67 ஆண்டுகள் நிறைவு. 13/04/1954.

அந்தநாள் 67 ஆண்டுகள் நிறைவு. 13/04/1954.

தெய்வப்பிறவி 61 ஆண்டுகள் நிறைவு. 13/04/1960.

நீதியின் நிழல் 36 ஆண்டுகள் நிறைவு. 13/04/1985.

5776

sivaa
14th April 2021, 11:45 PM
உலகம் பலவிதம்.=14/4/55. 66 ஆண்டுகள் நிறைவு.

சம்பூர்ணராமாயணம்=14/4/58. 63 ஆண்டுகள் நிறைவு.

படித்தால் மட்டும்போதுமா=14/4/62. 59 ஆண்டுகள் நிறைவு.

பேசும்தெய்வம்=14/4/68. 53 ஆண்டுகள் நிறைவு.

பிராப்தம்=14/4/71. 50 ஆண்டுகள் நிறைவு.

சுமதி என் சுந்தரி=14/4/71. 50 ஆண்டுகள் நிறைவு.

சங்கிலி=14/4/82. 39 ஆண்டுகள் நிறைவு.

வாழ்க்கை=14/4/84. 37 ஆண்டுகள் நிறைவு.

வீரபாண்டியன்=14/4/87. 34 ஆண்டுகள் நிறைவு.

பசும்பொன்=14/4/95. 26 ஆண்டுகள் நிறைவு.

கெளரவதோற்றம்:-

4. ஸ்கூல் மாஸ்டர்( இந்தி)=14/4/59. 62 ஆண்டுகள் நிறைவு.

sivaa
19th April 2021, 02:11 PM
1)எகிப்து நாட்டின் தலைநகர் கெய்ரோவில் 1960 -ல் ஆசிய - ஆப்ரிக்கா பட விழா நடந்தது. அதில் ‘நடிகர் திலகம்’ சிவாஜிக்கு ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’ படத்துக்காகச் சிறந்த நடிகர் விருது வழங்கப்பட்டது அனைவரும்அறிந்த விஷயம். அந்தப் படவிழாவின் இறுதி நாள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு எகிப்து அதிபர் நாசர் விருதுகளை வழங்க ஒப்புக்கொண்டிருந்தார். ஆனால் சர்வதேச மாநாடு ஒன்றுக்கு அவர் செல்லவேண்டி வந்ததால் படவிழா நிறைவு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள முடியவில்லை. அடுத்து வந்த ஆண்டில் இந்தியா வந்த அதிபர் நாசர் சென்னைக்கு வந்து சிவாஜியை சந்திக்க விரும்பினார். இதை அறிந்த சிவாஜி அதிபரை வரவேற்று விருந்தளிக்க விரும்பினார் .மத்திய அரசு சிவாஜியின் கோரிக்கையை ஏற்று அனுமதி அளிக்க சென்னை பாலர் அரங்கில் (இன்றைய கலைவாணர் அரங்கம்) அந்த விழா நடைபெற்றது. இந்தியாவிற்கு வருகை தந்த அயல்நாட்டு அதிபர் ஒருவருக்கு எந்த அரசு பதவியிலும் இல்லாத நடிகர் ஒருவர் விருந்தளிக்க அனுமதிக்கப்பட்டார் என்றால் அவர் சிவாஜி ஒருவர்தான்.
2)‘புரோட்டோகால்’ எனப்படும் அரசு மரபுகளை மீறி, பிரதமராக இருந்த வி.பி.சிங், மேற்கு வங்க முதல்வராக இருந்த ஜோதிபாசு ஆகிய இருவரும் சென்னை வந்தபோது சிவாஜியின் ‘அன்னை இல்லம்’ வீட்டுக்கு வருகை தந்து கவுரவம் செய்தனர்.
3)நாடுகடந்த அரசு என்ற முறையில் செயல்பட்டுக்கொண்டிருக்கும் திபெத்தின் தலைவர் தலாய்லாமா சென்னை வந்தார். அப்போது அன்றைய தமிழக முதல்வர் பெருந்தலைவர் காமராஜருடன் சிவாஜியின் ‘உத்தம புத்திரன்’ படப்பிடிப்புத் தளத்துக்குச் சென்று அவரைச் சந்தித்து வாழ்த்தினார்.
நன்றி ! இந்து தமிழ் திசை இணையத்திலிருந்து ...



5777

Thanks Ganesh Pandian

sivaa
20th April 2021, 06:59 AM
எனது ஊர் செய்யார் தாலுகா திருமனி ம்துரா வெங்கிடேசன் பட்டி அது திருவண்ணாமலை மாவட்டத்தில்.உள்ளது.
சிறிய வயதில் நான் வசிக்கும்.போது சினிமா பார்க்க் வேண்டுமென்றால். எங்கள் பக்கத்து ஊர் முனுக்ப்பட்டு வழியாக வாழப்ப்ந்தல் என்ற ஊரில் கீத்து கொட்டகையில்தான் படம்.பார்க்க முடியும்
பெரும் பாலும் நடிகர் திலகத்தின் படம் எம் ஜி ஆரின்.படம் அதிகமாக திரையிடுவார்கள்
7 கிலோ மீட்டர் நடந்து சென்று படம் பார்ப்பார்ப்போம்
என்னுடைய தாய் மாமன் திரும்னியை சேர்ந்தவர் அவர் அடிக்கடி படத்துக்கு செல்வார் எப்போதாவது ஒரு முறை என் அம்மா அதாவது அவர் தங்கையை பார்க்க வருவார் ஏதோ.அண்ணன் என்ற முறையில்
-அவர் எம் ஜி ஆர் ரசிகர் ஜாலியான சிவாஜி படங்களை பார்பார்
ஒரு முறை பாச மலர் படத்தை பார்க்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது அவர் நண்பர்களுடன்
பல நாட்கள் அடிககடி அந்த படத்தையே பார்த்தாராம். எப்போதாவது எங்கள் வீட்டுக்கு வருபவர் அடிக்கடி வருவார் பாசமலர் படம்பார்த்தேன் குடும்பம்ன்னா என்ன.பாசம் என்ன இவ்வளவு நாள் குடுபத்த உணராமல் இருந்திட்டேன்னுன்னு தோன்றுகின்ற மாதிரி இருக்கிறது என்று வருத்தபப்டும்படி என் அம்மாவிடம் சொன்னாராம்
அதற்க்கு பின் தங்கச்சியும் தன்னுடைய மகளுக்கு சமம் என்று சிவாஜியின் படத்தை பார்த்து பாசம் குடுமப உறவுகளுக்கு முக்கியம் கொடுத்தத நான் வாழ்வது அவர்தான் காரணம் என்று -அடிக்கடி என் அம்மாவிடம் சொன்னதாக என் அம்மா என்னிடம் சொல்வார்
என்னுடைய தாய் மாமன் மாதிரி பாசமலர் போன்ற படங்களை பார்த்து எத்தனைஅன்னன்கள் தங்கைகள் மீது பாசம் கொண்டவர் இருந்திருந்தார்கள்
இன்று இருக்கின்ற இனிமேலும் இருக்க. சிவாஜியின் படங்கள் பாடமாக எப்போதும் இருக்கும்
கீதம் சங்கீதம்
இசைக்குழு
வெங்கிடேசன் பட்டி
P s முனியாண்டி
அனுபவம் இல்லாதவர்கள் கூட நடிகர் திலகத்தின் படத்தை பார்த்தால் அனுபவசாலியாகிவிடுவார்கள்

Thanks Muniyandi Saminathan

sivaa
20th April 2021, 07:09 AM
நடிகத் திலகம் எப்பொழுதும் கம்பீரம்் நேர்மை தன் நம்பிக்கை கடைபிடித்தார்
உலகை ்.எங்கும் தன் நடிப்பால். கவர்ந்தா காலக்கட்டத்தில் தன்னுடன் நடிக்கும நடிகருக்கு கொடுத்து இருக்கும் பாத்திரம் படம். வெளியே வந்தவுடன் தன்னைவிட அந்த நடிகர் அதிகமாக புகழப்படுவார் என்று தெரிந்தும் அந்த கதாபாத்திரத்தை தனக்கு கேட்காமல். வளர்ந்து வரும் நடிகர்களுக்கு கொடுங்கள் என்று சொல்வாரம்
மனிதரில் மாணிக்கம் படத்தில் ஏ வி எம் ராஜனை கதாநாயகன் அந்த படத்தில் கொளரவ வேடம் நடிக்ர் திலகம்
பச்சை விளக்கு படத்தில சிவாஜிக்கு மைத்துனனாக நடிப்பார் எஸ் எஸ் ராஜேந்திரன்
குத்து விளக்கே்றிய கூடமெங்கும்.பூ மனக்கும் என்ற டி எம் எஸ் சுசிலா பாடிய.பாடலை எஸ் எஸ் ராஜேந்திரனுக்கு கொடுக்க சம்மதித்தார் நடிகர் திலகம்
வேறு எந்த நடிகராக இருந்தால் அந்த பாட்டு தனக்கு வரும்படி காட்சி அனமயுங்கள் அந்த டியூன் எனக்கு வருமபடி செய்யுங்கள் இல்லையென்ரால் அந்த பாடலஅந்த படத்தில் ் வேண்டாம் என்று சொல்லியிருப்பார்கல்
மூன்று தெய்வங்கள் படத்தில் சிவகுமார் கதானாயகன் போன்று கதையை கொண்டு செல்வார்கள் சிவகுமார் காதலுக்கு உதவி செய்வது போல் நடிகர் திலகத்துக்கு கதைப்படி வரும் இதில் அவருக்கு ஜோடி இல்லை
கே ஆர் விஜயா சிவாஜிக்கு காதலியாக ந்டிக்க வேண்டியவர் முத்துராமனுக்கு காதலியாக ந்டிக்க சம்மதித்தார்
இன்னும்.ஏராளமாக அடிக்கிக்கொண்டே போகலாம் பல படங்களில் ஜோடி இல்லாமல் மேக்கப் இல்லாமல் நடித்தார்
பாடலே இல்லாதே படமும்.வில்லனாக ந்டித்த படமும் உண்டு
திரை உலகத்தில் ஈடு இணையற்ற ஜோடி என்று அந்த காலத்தில் சிவாஜி பதமினி வலம் வந்தார்கள் குரு ந்தட்சனை படத்தில் மான்சீக குருவாக பதமினியை ஏற்று கொண்டு பள்ளி ஆசிரியராக இருக்கும் பதமினி காலில் நம் சிவாஜி .வீழ்ந்து ஆசீர் வாதம் வாங்கு வது போல் இருக்கும். கதைப்படி அதனால் நம் தலைவருடைய இமேஜ் கெடும் பலர் அறிவுரை கூறினார்கள் ஆனால் கதைப்படி அப்படி செய்யவேண்டும் என்றால் நடித்துதான் ஆக வேண்டும் என்று தன் நடிபபு தொழில் மீது நம்பிக்கை வைத்தார்
கடைசிக்காலக்கட்டத்தில் நான் வாழ்வைப்பேன் படத்தில ரஜினிக்கு அசத்தலான கதாபாத்திரத்தை கொடுக்க செய்தார் தேவர் மகன் கமல் கதா பாத்திரத்தை பேசும் படி செய்தார்
திருவிளையாடல் படத்தில் நாகேஷ் பற்றி சொல்ல தேவையில்லை மற்றவர்களுக்கு உதவு மட்டுமல்லாமல் பிறரை புகழ் அடையவும் செய்தார் அவருக்கு தன் நம்பிக்கை அதிகம்
தன் நம்பிக்கைக்கு இவர் உதாரனம் வாழ்க எங்கள் நடிகர் திலகத்தின் புகழ்

Thanks Muniyandi Saminathan

sivaa
24th April 2021, 08:43 AM
அனைவருக்கும் வணக்கம். ஒரு சிவாஜி ரசிகனின் சினிமா டைரி தொடர்கிறது.
அந்த நாள் ஞாபகம் - பார்ட் 48
சென்ற ஒரு வாரமாக எனது டெஸ்க்டாப் கணினி சில தொழில் நுட்ப கோளாறு காரணமாக இயங்கவில்லை. அதன் காரணமாகவே சென்ற வார பதிவை போஸ்ட் பண்ண முடியவில்லை இப்போதுதான் சரியானது.
ஒரு வார இடைவேளைக்கு Sorry இந்த தொடரில் அரசியல் பற்றி எழுத நேர்ந்தால் கூடுமானவரை நடிகர் திலகம் சார்ந்த அரசியல் சூழல்கள் பற்றி மட்டுமே எழுதி வர முயற்சித்திருக்கிறேன். தவிர்க்க முடியாத நேரங்களில் மட்டுமே மாற்று கட்சி அரசியலைப் பற்றிய குறிப்புகள் கொடுக்கப்பட்டிருக்கிறது. அக்டோபர் இரண்டாம் வாரம் நடைபெற்ற அரசியல் நிகழ்வு அதன் எதிரொலியாக நடந்த சம்பவங்களை இங்கே குறிப்பிட காரணம் இருக்கிறது
1972 அக்டோபர் 10 செவ்வாய்க்கிழமை என்று பார்த்தோம். .அந்த வார இறுதியில் 13-ந் தேதி வசந்த மாளிகை மூன்றாவது வாரத்தில் அடியெடுத்து வைக்கிறது. அதாவது 15-வது நாள். படம் வெளியான முதல் நாள் முதல் அந்த 15-வது நாளோடு அன்று வரை மதுரை நியூசினிமாவில் நடைபெற்ற 50-க்கும் மேற்பட்ட காட்சிகள் தொடர்ந்து அரங்கம் நிறைந்தது. 50 CHF Shows இதை குறிப்பிட காரணம் அன்றைய பதட்ட சூழலிலும் கூட அசம்பாவித வன்முறை சம்பவங்கள் நடைபெற்றபோதும் வசந்த மாளிகை அதனால் எந்தவித பாதிப்பும் அடையாமல் அரங்கு நிறைந்ததை பதிவு செய்யவே. . .
படத்தின் இமாலய வெற்றியை அன்றே உறுதி செய்யும் வண்ணம் மக்கள் ஆதரவு வசந்த மாளிகைக்கு இருந்தது. பதட்ட சூழலிலும் குறிப்பாக பெண்கள் பெருமளவில் திரண்டு வந்தது குறிப்பிட்டதக்கது. அந்த நேரத்தில் வசந்த மாளிகை மட்டுமா எதிர்மறை சூழலை கடந்து வெற்றிப் பெற்றது? அதனுடன் பட்டிக்டா பட்டணமாவும் தன பங்கிற்கு வெற்றி சூறாவளியாய் தொடர்ந்துக் கொண்டிருந்தது. வசந்த மாளிகை 50 காட்சிகளுக்கு மேல் தொடர்ந்து அரங்கம் நிறைந்து ஓடிக் கொண்டிருந்த அதே நாளில் அதாவது 1972 அக்டோபர் 13 அன்று மதுரை சென்ட்ரலில் பட்டிக்காடா பட்டணமா 23 வாரங்களை அதாவது 161 நாட்களை நிறைவு செய்தது. அது மட்டுமா மொத்த வசூலில் 5-1/4 [ஐந்தே கால்] லட்சத்தையும் தாண்டி புதிய வரலாறு படைத்துக் கொண்டிருந்தது. 23 வாரங்களில் மதுரை சென்ட்ரலில் 5,35,000/- [ஐந்து லட்சத்து முப்பத்தி ஐயாயிரத்தையும்] தாண்டிய வசூல் செய்தது.
இந்த நேரத்தில் மற்றொன்றையும் குறிப்பிட விரும்புகிறேன். மூக்கையாவும் ஆனந்த்-தும் அந்த சூழலில் வெற்றி தேரோட்டத்தில் முன்னோடிகளாக திகழ்ந்தார்கள் என்றால் அவர்கள் இருவருக்கும் சற்றும் சளைக்காமல் வெற்றியோட்டதில் முன்னோடியாக நிர்மலும் விளங்கினார் என்பதைத்தான் இங்கே பதிவு செய்ய விரும்புகிறேன். ஆம் நண்பர்களே நாம் குறிப்பிடும் அதே 1972 அக்டோபர் 13 வெள்ளியன்று 7 வாரங்களை நிறைவு செய்த தவப்புதல்வன் நிர்மல் அதற்கு அடுத்த் நாள் [அக்டோபர் 14 சனிக்கிழமை] 50-வது நாளை மதுரை சிந்தாமணியிலும் மற்றும் தமிழகமெங்கும் கொண்டாடினார்.
இரண்டு இமயங்களுக்கு இடையில் சிக்கினாலும் கூட இந்த பதட்ட சூழலை கடந்து வர வேண்டியிருந்தபோதும் கூட அதற்கு அடுத்து குறுக்கிட்ட தீபாவளி திரைப்படங்களின் போட்டியையும் சமாளிக்க வேண்டி வந்தும் கூட நிர்மல் 100 நாள் வெற்றிக் கோட்டை தொட்டது, கடந்தது அனைத்தும் நடிகர் திலகத்தின் பாக்ஸ் ஆபிஸ் ஆளுமைக்கு சான்று.
வசந்த மாளிகையின் வெற்றி நிலை அடுத்தடுத்த வாரங்களிலும் தொடர்ந்தது. இங்கே வசந்த மாளிகை எதிர்கொண்ட மற்றொரு எதிர்மறை சூழல் பருவ மழை. திடீரென்று திடீரென்று மழை பெய்யும் ஒரு அக்டோபர் மாதமாக இருந்தது அந்த வருடம். அதையும் எதிர்கொண்டு தொடர் ஹவுஸ்ஃபுல் காட்சிகளாக வெற்றி நடைப் போட்டுக் கொண்டிருந்தது வசந்த மாளிகை.
இப்படியாக பட்டிக்காடா பட்டணமாவின் வெள்ளிவிழாவை நோக்கிய பவனி, வசந்த மாளிகையின் 100 தொடர் அரங்கு நிறைந்த காட்சிகள் காணப் போகும் களிப்பு, தவப்புதல்வன் 100 நாட்கள் ஓடி விடும் என்று கிடைத்த உறுதி, பல புதிய பழைய தயாரிப்பு நிறுவனத்தினர் நடிகர் திலகத்தின் கால்ஷீட் வேண்டி முற்றுகையிடுகிறார்கள் என்ற மகிழ்வு இவற்றுக்கெல்லாம் சிகரம் வைத்தாற்போல் தித்திக்கும் செய்தி ஒன்று வந்தது
தித்திக்கும் செய்தி என்று குறிப்பிட்டேன். அதற்கு முன்பே கூட பல தித்திப்பான தருணங்களை நடிகர் திலகம் எங்களுக்கு வழங்கிக் கொண்டிருந்தார். பட்டிக்காடா பட்டணமா வெள்ளி விழா வாரத்தில் அடியெடுத்து வைத்து, 1972 அக்டோபர் 27 அன்று 175-வது நாள்ளை நிறைவு செய்கின்றது. எனக்கு நினைவு தெரிந்து நான் மற்றும் என் வயதையொத்த மதுரை வாழ் ரசிகர்கள் பலரும் ஒரு வெள்ளி விழா வாரத்தை முதன் முறையாக பார்க்கிறோம். மற்றொரு தித்திப்பாக வசந்த மாளிகை 100 தொடர்ந்து அரங்கு நிறைந்த காட்சிகளை காண்கிறது. அது மறுநாள் அதாவது அக்டோபர் 28 சனிக்கிழமை காலைக்காட்சி 100-வது காட்சியாக வந்தது
தொடர்ந்த வரும் இரண்டு நாட்களில் இரண்டு முக்கிய நிகழ்வுகள். இதை நேரில் காண்பதற்கு வசதியாக ஸ்கூல் வேறு லீவ் [அன்றைய பதட்ட சூழல் காரணமாக]. இந்த தொடரை படிப்பவர்கள் பலருக்கும் நான் அன்றைய நாட்களின் பதட்ட சூழலை அடிக்கடி குறிப்பிடுவது ஏன் என்று யோசிக்கலாம். காரணம் இருக்கிறது. ஆளும் கட்சியில் ஏற்பட்ட ஒரு நிகழ்வு அதன் காரணமாக ஏற்பட்ட பதட்ட நிலை என்று தள்ளி விட முடியாமல் பல்வேறு பிரச்சனைகள் அதன் காரணமாக spill over என்று சொல்வார்களே அதே போன்று தொடர்ந்து வன்முறை நிகழ்வகள் நடந்துக் கொண்டிருந்தன..
நான் குறிப்பிடும் வாரத்திலும் மதுரையில் ஒரு பதட்ட சூழல் ஏற்பட்டு வன்முறை வெடித்தது. என்னவென்றால் அக்டோபர் 20 வெள்ளியன்று எம்ஜிஆரின் இதய வீணை மதுரை ஸ்ரீதேவியில் வெளியானது. அதே நேரத்தில் திமுகவின் செயற்குழு பொதுக்குழு விளக்கப் பொதுக்கூட்டம் [எப்போதும் நடப்பது போல்] ஏற்பாடு செய்யப்பட்டு அந்த கூட்டம் அக்டோபர் 22 ஞாயிறன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இடமோ தேவி தியேட்டருக்கு அருகில் உள்ள ஞாயிற்றுக்கிழமை சந்தை நடக்கும் மைதானம். சிறப்பு பேச்சாளரோ மதுரை முத்து. அனைவரும் அச்சப்பட்டது போலவே முத்துவின் பேச்சினால் பதட்டம் உண்டாகி வன்முறை சம்பவங்கள் நடந்தேறின. இப்படியெல்லாம் நடந்தும் கூட நடிகர் திலகத்தின் படங்கள் எந்த பாதிப்பும் இல்லாமல் வெற்றி நடை போட்டது என்ற உண்மையை மீண்டும் பதிவு செய்யவே அந்த சூழலை பற்றி குறிப்பிட நேர்கிறது..
பட்டிக்காடா பட்டணமா வெள்ளி விழா நாளன்று [1972 அக்டோபர் 27] சென்ட்ரல் திரையரங்கில் உள்ளேயும் வெளியேயும் கோலாகல கொண்டாட்டங்கள் நடந்தன. நான் போகவில்லை. வெளியிலிருந்து பார்த்ததுடன் சரி. ஆனால் மறுநாள் சனிக்கிழமை காலைக்காட்சி வசந்த மாளிகை பார்க்க நியூசினிமாவிற்கு நானுன் என் நண்பனும் என் கஸினுடன் போனோம் .
அதற்கு ஒரு காரணம் இருந்தது. பெரும்பாலும் நடிகர் திலகத்தின் படங்கள் சனிக்கிழமை வெளியாகும். ஒரு வாரத்திற்கு 23 காட்சிகள். 4 வாரத்திற்கு 92 காட்சிகள். 5-வது வார சனிக்கிழமை ஞாயிறு 4 காட்சிகள் வீதம் நடந்து பெரும்பாலும் ஞாயிறு இரவுக் காட்சி 100-வது காட்சியாக வரும். வெள்ளியன்று ரிலீஸ் ஆகியிருந்தால் பெரும்பாலும் வெளியான அன்று ஒரு எக்ஸ்ட்ரா காட்சி நடைபெற்று சனிக்கிழமை இரவுக் காட்சியாக வரும். எனவே அந்த தொடர்ந்து ஹவுஸ் புல் ஆகின்ற 100-வது காட்சியை பார்க்க முடியாமலே இருந்தது. .
வசந்த மாளிகையைப் பொறுத்தவரை 4 வாரத்தில் 96 காட்சிகள் நடைபெற்று அவை அனைத்தும் அரங்கு நிறைந்தது. ரீலிஸான செப்டம்பர் 30 வெள்ளியன்று ஒரு எக்ஸ்ட்ரா காட்சி. 4-வது நாள் திங்கள்கிழமை அக்டோபர் 2 காந்தி ஜெயந்தி அன்று ஒரு எக்ஸ்ட்ரா காட்சி. நவராத்திரியின்போது ஆயுத பூஜை விஜயதசமியின் போது மேலும் 2 எக்ஸ்ட்ரா காட்சிகள் நடைபெற்றதால் 28 நாட்களிலேயே 96 காட்சிகள் ஹவுஸ் புல் ஆகி விட்டது. இன்னும் ஒரு எக்ஸ்ட்ரா காட்சி நடைபெற்றிருந்தால் பட்டிக்காடா பட்டணமா வெள்ளி விழா கொண்டாடிய அதே அக்டோபர் 27 வெள்ளியன்றே வசந்த மாளிகையும் 100 தொடர் அரங்கு நிறைந்த காட்சிகளை நிறைவு செய்திருக்கும். அப்படி நடக்காததனால் சனிக்கிழமை காலைக் காட்சி பார்க்க போக எனக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது.
நான் முன்பே சொல்லியிருக்கிறேன். சனிக்கிழமை காலைக்காட்சி எப்போதும் சற்று டல்லடிக்கும். காரணம் அன்றைய நாட்களில் பள்ளிக்கூடங்கள், கல்லூர்ரி மற்றும் அலுவலகங்கள் அனைத்திற்கும் மதியம் வரை வேலை நாள் என்பதால் ஏற்படும் டல்னஸ். அப்படியிருந்தும் அன்று நியூசினிமா தியேட்டர் முன்பு ஏராளமானோர் கூடி நின்றனர். கீழ் வகுப்பு டிக்கெட்டுகள் மடமடவென்று விற்று தீர்ந்தது. பால்கனி டிக்கெட்டுகள் சற்றே நிதானமாக விற்றது என்றாலும் படம் தொடங்கும் 10.45 மணி நேரத்தில் ஹவுஸ் புஃல் போர்ட் மாட்டப்பட்டது. 1000 வாலா சரம் வெடித்து சிதற கைதட்டல் விசில் பறந்தது.. தியேட்டருக்கு உள்ளே வழக்கம் போல் அலப்பரை தூள் பறந்தது.
படம் முடிந்து வெளியே வருகிறோம். அப்போது தொடர்ந்து 100 காட்சிகள் அரங்கம் நிறைந்ததை ஒரு தட்டியில் பேப்பர் ஒட்டி அதில் விவரங்களை எல்லாம் எழுதி தியேட்டருக்கு எதிரே இருக்கும் ஜான்சி ராணி பூங்காவின் சுற்றுப்புற இரும்புக் கம்பிகளோடு சேர்ந்து இருக்கும் விளக்கு கம்பத்தில் கட்டிக் கொண்டிருந்தனர். அப்போதுதான் நான் சென்ற பதிவில் குறிப்பிட்ட தித்திப்பு செய்தி சொன்னார்கள். அதாவது மறுநாள் 1972 அக்டோபர் 29 ஞாயிறன்று பட்டிக்காடா பட்டணமாவின் வெள்ளி விழா கொண்டாட்டத்தை முன்னிட்டு மதுரை சென்ட்ரல் திரையரங்கிற்கு நடிகர் திலகம் நேரில் விஜயம் செய்கிறார் என்பதுதான் அந்த தித்திப்பு செய்தி. .மறு நாள் அக்டோபர் 29 நடிகர் திலகம் வரப் போகிறார் என்று தெரிந்ததும் அவரை நேரில் பார்க்க வேண்டும் என்ற ஆவல் அதிகரிக்க ஆராம்பித்தது அதற்கு முன்பு அவரை நேரில் பார்த்த அனுபவங்கள் மனதில் நிழலாட தொடங்கின.
நினைவு தெரிந்த பிறகு 1966-ல் அவருக்கு பத்மஸ்ரீ விருது கிடைத்தபோது மதுரையின் நான்கு மாசி வீதிகளில் ஊரவலமாக அழைத்து வரப்பட்டார் அப்போதுதான் அவரை முதன் முறையாக பார்த்தேன்.
1970- நவம்பரில் ராமன் எத்தனை ராமனடி 100-வது நாள் விழாவிற்கு நியூசினிமா வந்தபோது அந்த காட்சிக்கு போய் அவரைப் பார்த்தது இரண்டாம் முறை
1971- பொது தேர்தல் பிரசாரத்திற்கு வந்தபோது பார்த்தது மூன்றாம் முறை.
அதன் பிறகு அவர் பலமுறை மதுரை வந்திருந்தாலும் இப்போதுதான் அவரை பார்க்கும் வாய்ப்பு அமைகிறது. அதற்கு ஒரு முக்கிய காரணம் பல முறை அவர் வந்தபோதும் அவர் தங்கியிருந்த இடமோ அல்லது அவர் கலந்து கொள்ளும் நிகழ்வோ நடைபெற்றது நகரின் வேறு இடத்தில. ஆனால் இப்போது எங்கள் வீட்டிற்கு வெகு அருகே அமைந்திருக்கக் கூடிய சென்ட்ரல் சினிமாவிற்கு வருகிறார். ஆகவே வாய்ப்பு கூடுதல் ஆனால் மனதில் ஒரு சந்தேகம். அவர் மதியக் காட்சிக்கு மட்டும் வருகிறாரா அல்லது மூன்று காட்சிகளுக்கும் வருகிறாரா என்பது குழப்பமாக இருந்தது பலரிடம் கேட்டும் யாருக்கும் சரியாக தெரியவில்லை. மாட்னி ஷோவிற்கு உறுதியாக வருகிறார் என்பது மட்டுமே சொன்னார்கள். விழா முதலில் தமுக்கம் மைதானத்தில்தான் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அங்கிருந்து திரையரங்கிற்கு படத்தில் வருவது போல் மாட்டு வண்டி ஊர்வலமும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால் நான் குறிப்பிட்ட அக்டோபர் 22 பொதுக்கூட்டத்திற்கு பின் நடந்த வன்முறையால் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட காரணத்தினால் ஊர்வலத்திற்கான அனுமதி ரத்து செய்யப்பட்டது.
எப்படி போவது? எப்படி டிக்கெட் வாங்குவது போன்ற கேள்விகள் மனதில் வட்டமிட ஆரம்பித்தன. கஸினிடம் கேட்டதற்கு பார்ப்போம் என்று சொன்னார். அதைப் பற்றியே நினைத்து நினைத்து பேசிக் கொண்டிருந்தோம். எங்கள் வீட்டருகே குடியிருந்த சக வயது நண்பன் ஒருவனும் [வசந்த மாளிகை 100-வது காட்சி பார்க்க என்னுடன் வந்தவன்] தானும் வருவதாக சொன்னான்.
மறுநாள் விடிந்தது. காலை தினத்தந்தி விளம்பரத்தில் மதியக் காட்சிக்கு சென்ட்ரல் திரையரங்கிற்கு விஜயம் செய்கிறார் நடிகர் திலகம் என்பதை குறிப்பிட்டிருந்தார்கள். நடிகர் திலகத்தோடு மற்ற நட்சத்திரங்களும் மேடையில் தோன்றும் அந்த வெள்ளி விழா கொண்டாட்ட நிகழ்வு வெற்றி பெற வாழ்த்து தெரிவித்து வசந்த மாளிகையின் மதுரை விநியோகஸ்தரும் விளம்பரம் கொடுத்திருந்தார். மட்டுமல்ல, முதல் நாள் இரவு வரை நடைபெற்ற 103 காட்சிகளும் அரங்கு நிறைந்ததையும் குறிப்பிட்டு வெள்ளிவிழாவை நோக்கி வெற்றி நடை போடுகிறது என்ற வாக்கியத்தையும் கொடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது. படம் வெளியான 31-வது நாளன்றே வெள்ளி விழா என்று கொடுக்கபப்ட்டது என்று சொன்னால் வசந்த மாளிகை படத்தின் வெற்றி பற்றி எந்தளவிற்கு நம்பிக்கையாக இருந்தார்கள் என்பது புரியும். அன்றைய நாட்களில் நகரில் ஓடும் அனைத்துப் படங்களின் விளம்பரமும் தினசரி தினத்தந்தியில் வெளியாகும். மதுரை பதிப்பில் வெளியாகும் விளம்பரம் மதுரை ராமநாதபுரம் ஏரியாவில் படங்கள் ஓடும் பட்டியலை கொண்டிருக்கும். இந்த விளம்பர செலவு அந்தந்த ஏரியா விநியோகஸ்தரை சார்ந்தது.
இரண்டு மூன்று முறை தியேட்டர் பக்கம் போய் வந்தாகி விட்டது. தியேட்டர் வாசலில் பரபரப்பான சூழலும் ரசிகர்கள் கூடி நிற்பதையும் பார்க்க முடிந்தது. டிக்கெட் பற்றி கஸினிடம் கேட்டால் சொல்லியிருக்கேன். இன்னும் கிடைக்கலை என்றார். காலை முடிந்து பகல் வந்தது. ஆனாலும் ஒன்றும் தெரியவில்லை. தியேட்டர் பக்கம் போய் பார்த்துவிட்டு வருகிறேன் என்று சொல்லி சென்ற கஸினையும் காணவில்லை.
பகல் காட்சி ஆரம்பிக்கும் நேரம் கடந்து சென்றவுடன் புரிந்து விட்டது டிக்கெட் கிடைக்கவில்லை என்று. மூன்று மூன்றரை மணி சுமார் நானும் பக்கத்து வீட்டு நண்பனும் அப்படியே சென்ட்ரல் தியேட்டர் பக்கம் போகிறோம். ஹவுஸ் புல் போர்டு மாட்டப்பட்டிருக்கிறது. தியேட்டர் வாசலில் பெருங்கூட்டம். இன்னமும் நடிகர் திலகமும் ஏனைய நட்சத்திரங்களும் வரவில்லை என்பது புரிந்தது. ரேஸ் கோர்ஸ் அருகே அமைந்திருக்க கூடிய பாண்டியன் ஹோட்டலில் தங்கியிருந்த நடிகர் திலகமும் மற்றவர்களும் தியேட்டரின் முன்புற வாசல் வழியாகத்தான் உள்ளே செல்ல வேண்டும் என்பதால் அப்போது பார்த்து விடலாம் என்று பெரும்பாலானோர் அங்கே நிற்பது தெரிந்தது.
10,15 நிமிடம் அங்கேயே உலாத்தினோம். திடீரென்று பயங்கரமான கைதட்டலும் வாழ்க கோஷங்களும் கேட்க மேல மாசி வீதியிலிருந்து தியேட்டர் அமைந்திருக்கூடிய டவுன் ஹால் ரோடில் இடது பக்கமாக திரும்பி கார்கள் வருவது தெரிந்தது. ஆனால் அந்த கார்களை பார்த்தவுடன் கூட்டம் முன்னோக்கி பாய்ந்ததில் சிறுவர்களான நாங்கள் நிலைகுலைந்து போனோம். எங்களுக்கு முன்னால் எங்களை விட உயரம் கூடிய மனிதர்கள் நிற்க எத்தனை எம்பி எம்பி குதித்தும் யாரையும் பார்க்க முடியவில்லை என்பது மிகுந்த ஏமாற்றமாய் போனது.
அங்கே கூடியிருந்தவர்களில் ஒருவர் தன் அருகில் இருந்தவரிடம் நாம் மேல மாசி வீதி போய் விடலாம். காரணம் இந்த விழா முடிந்து திரும்ப நடிகர் திலகம் பாண்டியன் ஹோட்டல் போகும்போது மேல மாசி வீதி வழியாகத்தானே போக வேண்டும். அப்போது பார்த்து விடலாம் என சொல்லிக் கொண்டிருந்ததை கேட்ட நாங்கள் இருவரும் தியேட்டர் எதிரே அமைந்திருக்க கூடிய கோபால கொத்தன் தெரு தட்டார சந்து வழியாக மேல மாசி வீதி சென்றடைந்தோம்.
மேல மாசி வீதி போய் விட்டோம். நாங்கள் சென்ற அந்த தட்டார சந்து சென்று சேரும் இடத்தில இடது புறம் ஒரு நடைமேடை கோவிலும் வலது புறத்தில் White Taylor என்ற கடையும் அமைந்திருக்கும். நாங்கள் கடையின் முன்புறத்தில் போய் நின்றோம். அப்போது கூட்டம் குறைவாகத்தான் இருந்தது. அங்கே நிற்கும்போது ஒரு சந்தேகம் எழுந்தது. நாம் இந்த வழியாக போவார் என்று நம்பி இப்படி வந்து நிற்கிறோம். ஒரு வேளை இந்த வழியாக வரவில்லையென்றால் என்ன செய்வது? அபப்டியே வந்தாலும் காருக்குள்ளே இருப்பவரை எப்படி பார்க்க முடியும் என்றெல்லாம் நானும் என் நண்பனும் பேசிக் கொண்டேயிருக்கிறோம். இத்தனை பேர் நிற்கிறார்களே எனவே இந்த வழியாக வருவார் என்று சமாதானப்படுத்திக் கொண்டோம்.
நேரம் ஆக ஆக கூட்டம் கூடிக் கொண்டே போனது. மக்கள் அடுத்தடுத்து வந்து நிற்க எங்களுக்கு மறைக்க ஆரம்பித்தது. White Taylor கடையின் உரிமையாளருக்கு [அவர் பெயர் ராஜாராம் என்று நினைவு] என்னை நன்றாக தெரியும் என்பதனால் என்னையும் நண்பனையும் அழைத்து ஒரு ஸ்டூலை கொடுத்து கடையின் முன் அமைந்திருந்த ஒரு விளக்கு கம்பத்திற்கு அருகில் போட்டுக் கொள்ள சொன்னார். விளக்கு கம்பத்திற்கு அடியில் இருக்கக் கூடிய சதுரமான இடமும் அவர் கொடுத்த ஸ்டூலும் சேர்ந்து எங்கள் இருவருக்கும் முதலில் அமரவும் பிறகு ஏறி நிற்கவும் பயன்பட்டது.
வெகு நேரம் ஆனது போல் தோன்றியது. ஆனால் மணி பார்த்தால் 4.30 தான் ஆகியிருந்தது. கூட்டம் அதிகமாகிறது. 10 நிமிடம் ஆகியிருக்கும் சட்டென்று ஒரு ஆரவாரம். சத்தம் அதிகமாகி அதிகமாகி வந்து காதை அடைக்கும் அளவிற்கு போகிறது. ஏறி நின்று எட்டிப் பார்க்கிறோம். முன்னால் ஒரு திறந்த ஜீப் வருவது தெரிந்தது. அருகில் வர வர நமது ஆருயிர் நாயகன் தெரிந்தார் அன்றைய காலகட்டத்திலே அவர் பொது நிகழ்ச்சிகளுக்கு அணியக் கூடிய வெள்ளை/கிரீம் நிற ஜிப்பா மற்றும் டைட் பைஜாமா அணிந்து வலது கையை வீசியபடியே வருகிறார்.
[எங்கள் எதிர்பார்ப்பு அவர் காரில் வருவார் என்பது. ஆனால் அவர் வந்ததோ திறந்த ஜீப்பில். அரங்கத்தினுள்ளில் நடைபெற்ற விழாவில் அவர் கலந்துக் கொண்டபோது அரங்கிற்கு வெளியேயும் தெருக்களிலும் ஏராளமான மக்கள் கூடி நிற்கிறார்கள் என்ற தகவல் தெரிந்தவுடன் திறந்த ஜீப் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டு அதில் நின்று கொண்டே நடிகர் திலகம் அவர் தங்கியிருந்த ஹோட்டலுக்கு பயணம் செய்யுமாறு அமைக்கப்பட்டது என்பது பின்னர் தெரிய வந்தது].
சுருள் சுருளான கேசம், அன்றைய காலகட்டத்தில் அனைவரின் மனதையும் கொள்ளையடித்த அந்த கிருதா, அந்த டிரேட் மார்க் குர்தா பைஜாமா எவரையும் வசீகரிக்கும் அந்த மலர்ந்த முக புன்னகையை ஆபரணமாக அணிந்து நடிகர் திலகம் வந்தபோது அணையை உடைத்துக் கொண்டு பாயும் வெள்ளம் போல் மக்கள் அவர் ஜீப்பை நோக்கி பாய்ந்தனர்.
எங்கிருந்துதான் வந்ததோ அந்த மக்கள் வெள்ளம் என தோன்றும் வண்ணம் ஆயிரக்கணக்கில் மக்கள் கூடிவிட அந்த மக்கள் வெள்ளத்தில் ஜீப் மெதுவாக நீந்தி செல்ல அந்த மெதுவான ஓட்டத்தின் காரணமாக நாங்கள் சற்று அதிக நேரம் நடிகர் திலகத்தை பார்க்கக் கூடிய வாய்ப்பு கிடைத்தது
உணர்ச்சிவசப்பட்டு ஆர்வக் கோளாறால் நடிகர் திலகத்தை தொட்டு பார்க்க ஜீப்பில் ஏற முயற்சித்தவர்கள், முடியாமல் ஜீப் பின்னால் ஓடியவர்கள் போலீஸாரின் லாத்தி வீச்சையும் பொருட்படுத்தாமல் பாய்ந்தவர்கள் என்று செயல்பட்ட வெறித்தனமான ரசிகர் கூட்டத்தை நேரில் பார்த்தவர எவரும் அந்த காட்சியை வாழ்நாளில் மறக்க மாட்டார்கள். அது மட்டுமல்ல நடிகர் திலகத்தின் ரசிகர் படை என்பது எத்தனை வலிமையும் தீவிரமும் வாய்ந்தது என்பதற்கு அது ஒரு கண் கண்ட சாட்சி.
நாங்கள் நின்றிருந்த பக்கமும் அவர் கைவீசி விட்டு போக அவர் என்னவோ எங்களுக்கு தனிப்பட்ட முறையில் கைவீசியது போன்ற சந்தோஷம் எங்கள் மனதில். ஜீப் எங்களை தாண்டி சென்றாலும் கண்ணிலிருந்து மறையும் வரை பார்த்துக் கொண்டு நின்றோம். அதையே நினைத்து அதையே பேசி வீட்டிற்கு வந்த பிறகும் அனைவரிடமும் அதைப் பற்றி விவரித்து ஏகத்திற்கும் சந்தோஷப்பட்டது இப்போதும் மனதில் பசுமையாக நிற்கிறது.
ஆக சனிக்கிழமை வசந்த மாளிகை 100-வது தொடர் ஹவுஸ் புல் காட்சி பார்த்த சந்தோஷம் மறுநாள் நடிகர் திலகத்தையே நேரில் பார்த்துவிட்ட இரட்டிப்பு சந்தோஷம் இவை இரண்டும் சேர்ந்து அந்த வார இறுதியில் வர இருந்த தீபாவளி சந்தோஷத்தை விட அதிகமாக இருந்தது. நடிகர் திலகத்தை நேரில் பார்த்தது அக்டோபர் 29 ஞாயிறு. நவம்பர் 4-ந் தேதி சனிக்கிழமையன்று தீபாவளி. 1965-ற்கு பிறகு நடிகர் திலகத்தின் திரைப்படம் வெளிவராத தீபாவளி 1972-ல் தான் வந்தது. [இதற்கு பிறகு அவர் active -ஆக நடித்துக் கொண்டிருந்த 1987-ம் ஆண்டு வரை எடுத்துக் கொண்டோமோனால் 1987 தீபாவளிக்குதான் நடிகர் திலகத்தின் படம் வெளிவரவில்லை]. இதனால் ஏற்பட்ட ஏமாற்றத்தை ஈடுகட்டும் அளவிற்கு இந்த இரட்டிப்பு சந்தோஷம் அமைந்தது என்றே சொல்ல வேண்டும்
இப்படியாக பல மகிழ்ச்சியான நினைவுகளை விதைத்து விட்டு அந்த 1972 அக்டோபர் மாதம் விடைபெற்றது.
(தொடரும்)
அன்புடன்
5779
நன்றி முரளி சிறினிவாசன் ( நடிகர் திலகம் சிவாஜி ரசிக நந்தவனப்பூக்கள் )

sivaa
24th April 2021, 08:56 AM
அமரகாவியம் 24/04/1981. 40 ஆண்டுகள் நிறைவு.

5780

Thanks Vcg Thiruppathi

sivaa
24th April 2021, 07:01 PM
சில வருடங்களுக்கு முன் சென்னை ஸ்ரீ நிவாசா திரையரங்கில் சிவகாமியின் செல்வன் டிஜிட்டலில் வெளியாகி வெற்றிகரமாக ஓடியது, அனைத்து வார இறுதி நாட்களிலும் அரங்கு நிறைந்து விடும்,
அப்படி ஒரு ஞாயிறு அன்று மாலைக் காட்சிக்கு நடிகர் திலகம் சிவாஜி ரசிகர்கள் பெருமளவு குவிந்து டிக்கெட் கவுண்டரில் நீண்ட கியூவில் நின்றுக் கொண்டிருந்தோம்
அப்போது இரண்டு நபர்கள் குடித்தார்களா இல்லையா எனத் தெரியவில்லை போதையில் இருப்பது போல கலாட்டா செய்தனர் அவர்கள் கியூவில் நின்றவர்கள் மேலே விழுவதும் படம் நல்லாயில்ல டிக்கெட் வாங்காதீங்க என உளருவதுமாக இருந்தார்கள், வழக்கம் போல நடிகர் திலகம் ரசிகர்கள் அந்த மர்ம நபர்களைக் கண்டு கொள்ளாமல் நான் உட்பட டிக்கெட் கவுண்டரில் முன்னேறிக் கொண்டிருந்தோம், வெறுப்பான மர்ம நபர்கள் டிக்கெட் கவுண்டரில் உரக்க சத்தமிட்டு ரகளை செய்தனர், தியேட்டர் ஊழியர்கள் அவர்களிடம் "நீங்கள் யார் உங்களை யார் அனுப்பி சிவாஜி படம் போட்டா கலாட்டா செய்ய சொல்லி வருகிறார்கள் என்ற விபரமெல்லாம் தெரியும் அமைதியா கெளம்புங்க'" எனச் சொல்லியவாறு ஹவுஸ்புல் அறிவிப்பை தொங்கவிட்டு மர்மநபர்கள் முகத்தில் கரியைப் பூசி தியேட்டர் வளாகத்தில் இருந்து வெளியேற்றி கேட்டை இழுத்துப் பூட்டினார்கள்,
நடிகர் திலகம் திரைப்படங்கள் திரையிடும் போதெல்லாம். இது போன்ற சம்பவங்கள் பல திரையரங்குகளில் நடந்ததுண்டு,

5781

5782

Thanks Sekar

sivaa
25th April 2021, 09:10 AM
நடிகர் சங்க கட்டிடத்தின் அடிக்கல் நாட்டு விழாவுக்கு வந்த எம்.ஜி.ஆரை, அப்போதைய நடிகர் சங்கத் தலைவரான சிவாஜி அழைத்து வரும் காட்சிதான் இது.
பின்னால் வரும் நாகேஷ், அப்போது செயற்குழு உறுப்பினராக இருந்தார். அடிக்கல் நாட்டும்போது நடிகராக இருந்த எம்.ஜி.ஆர், பத்து வருடங்கள் கழித்து நடந்த திறப்பு விழாவின்போது முதல்வராகி விழாவில் கலந்துகொண்டார்.
திறப்பு விழா அன்று ‘சாம்ராட் அசோகன்’ என்ற சிவாஜியின் நாடகம் நடந்தது. போர்க்களத்தில் அசோகரின் மனசாட்சி பேசுவது போன்ற காட்சியில் வேறு எந்த கேரக்டர்களும் இல்லாமல் சிவாஜி மட்டும் தனியாக 20 நிமிடங்கள் நடித்தார்.
அசரீரி குரலுக்காக மனோரமா வாய்ஸ் கொடுத்தார். மேடைக்கு கீழே அமர்ந்தபடி நாடகம் பார்த்த எம்.ஜி.ஆர், சிவாஜியின் பாவனைகளில் நெகிழ்ந்து போய், ‘அற்புதமான நடிப்பு’ எனப் பாராட்டினார்.
5783

Thanks Gaesh Pandian

sivaa
26th April 2021, 05:51 AM
கீழ் அடியில் அகழ்வாராய்ச்சியில் தமிழனின் கலாச்சாரத்தோடு எப்படி வாழ்ந்தான் என்னன்ன வாழ்க்கை நடத்துவதற்கு என்ன பழமை வாழ்ந்த பொருள்கள் பயன் படுத்தினான் என்று தெரிகிறது
அதுபோல்
நடிகர் திலகத்தின் படங்கள் பாது காக்க வேண்டிய படங்கள் தமிழ் மொழி உச்சரிப்பது மனிதனுடைய வாழ்க்கை முறை மன்னர்காலத்து கலாச்சார முறை புராண காலத்து கலாச்சாரத்தின் முறை வாழ்க்கைக்கு தேவையான அத்துனையும் வரும் காலம் அறிய உதவும்
திருக்குறள் படித்து வாழ்க்கையின் நெரி முறைகளை தெரிந்து கொள்ளலாம்
ஆனால்
நடிகர் திலகத்தின் படம் பார்த்து வாழ்க்கை முறைகளை அறிந்த மனதில் பதிய வைக்கலாம் , வரும் தலைமுறையும்
உலகம் அறிந்த மெரினா பீச்சில இருந்த் நடிகர் திலகத்தின் சிலை மனிமண்டபத்தில் வைத்தால் நடிகர் திலகத்தின் படங்கள் தொலைக்காட்சி பெட்டிகளிலும் திரையருங்கலிலும் திரையிட மாட்டார்கள் என்ற அர்த்தமாகாது
மக்கள் மனத்திரையில் நடிகர் திலகம் எப்பொதும் அவர் திரைப்படங்கள் ஒடிகொண்டுதான் இருக்கிறது
ஏனென்றால். தமிழ் கலாச்சாரதோடு உலகம் போற்றிய ஒரே நடிகன்.நடிகர் திலகம்
சிவாஜி ரசிகன்
P s முனியாண்டி
வெங்கிடேசன் பட்டி கிராமம்

Thanks Muniyandi Saminathan

sivaa
26th April 2021, 06:04 AM
நடிகர்கள் பல பேர் சமுதாயத்திலிருந்து கற்றுகொண்டு நடிப்பார்கள்
ஆனால்
நடிகர் திலகம் மட்டும்தான் அவருடை நடிப்பால் சமுதாயம் கற்று கொண்டது.
ஒவ்வொரு பதவியில் இருப்பவ்ரும் இவர் ஏற்ற..கதாபாத்திரங்கள் போல் வாழ நினைத்தார்கள் உதாரனமாக
தங்க பதக்க்ம் சொளத்திரியை போல் எத்தனையோ பேர் வாழ்க்கையில் காவல் துறையை சேர்ந்தவர்கள் பின் பற்றினார்கள்
இது போன்ற ஒவ்வொரு துரையிலும் அடிக்கிக்கொண்ட சொல்லலாம்
இவர் நடித்த ஒவ்வொரு படமும கலைத்துறை சேர்ந்தவர்களுக்கு நூறு படத்திற்கு சமமாகும்
சமூதாய கருத்துக்களை வாழ்க்கையின் கலாச்சர்த்தையும் தமிழகத்தின் அடையாளமாக இருந்த நம்முடைய நடிகர் திலகத்தை பெயரை கெடுக்க எத்தனையோ சதிகள் சூழ்ச்சிகள்.
அத்தனையும் முறியடித்து கொண்டுதான் இருக்கிறது
அவரின் நடிப்பினாலும் பொது வாழ்க்கையிலும் சமூதாயத்திலும் நல்ல மனிதன் என்பதாலும்
நல்லவர்கள் ஒன்று நினைப்பதுதான் நடப்ப்தில்லை தமிழகத்தில் அன்றே சொன்னார் நடிகர் திலகம்
சிவாஜி ரசிகன்
வெங்கிடேசன் பட்டி
P s முனியாண்டி

Thanks Muniyandi Saminathan

sivaa
29th April 2021, 07:35 AM
சமீபத்தில் 1976-ம் ஆண்டின் 'பொம்மை' மாத இதழொன்றைக் காண வாய்ப்புக்கிடைத்தது. அப்போது அந்தப்பத்திரிகையில் 'மாதம் ஒரு நடிகர் பதில்கள்' என்ற வரிசையில் நான் பார்த்த இதழில், மக்கள் கலைஞர் ஜெய்சங்கர் பதிலளித்திருந்தார்...
ஒரு வாசகரின் கேள்வி:
"சமீபகாலமாக சிவாஜியின் படங்கள் சரியாக அமையவில்லையே. அவர் திறமை குறைந்துவிட்டதா?"
திரு. ஜெய்சங்கர் பதில்:
"தங்கத்தின் விலை ஏறலாம் இறங்கலாம். அது தங்கத்தின் குற்றமல்ல. தரத்தில் தங்கம் என்றைக்கும் தங்கம்தான். அதுபோலத்தான் நம் நடிகர் திலகமும். அவர் திறமை என்றைக்கும் குறையாது. புகழ் என்றைக்கும் சரியாது".
என்ன ஒரு அருமையான பதில்...

Thanks Ganeisan Maniam

sivaa
29th April 2021, 07:38 AM
1980 சட்டமன்ற தேர்தலில் கோவை மாவட்டம் சூலூரில் பிரச்சார மேடையில் அதிமுக குண்டர்களால் தாக்குதலுக்கு உள்ளான நடிகர் திலகம் சிவாஜியிடம் நலம் விசாரிக்கும் அகல இந்திய சிவாஜி மன்றத்தின் தலைவரும் சுதந்திர போராட்ட தியாகியுமான திரு சின்ன அண்ணாமலை அவர்கள்

5784

Thanks Sekar Parasuram

senthilvel
29th April 2021, 09:38 AM
Picture
https://uploads.tapatalk-cdn.com/20210429/41536e7ae4b6b1ef5dfcde15f8b41d02.jpg

senthilvel
29th April 2021, 09:41 AM
Recordhttps://uploads.tapatalk-cdn.com/20210429/8e67f716ce438280a3111eeca883585f.jpg

sivaa
1st May 2021, 10:21 AM
அனைவருக்கும் வணக்கம். ஒரு சிவாஜி ரசிகனின் சினிமா டைரி தொடர்கிறது.
அந்த நாள் ஞாபகம் - பார்ட் 49
அக்டோபர் விடைபெற்று நவம்பர் மாதம் துவங்கியது. அனால் நவம்பர் 1 அன்றே ஒரு வருத்தம் ஏற்பட்டது. வசந்த மாளிகை செப்டம்பர் 29 வெளியாகி அக்டோபர் 31 வரை 33 நாட்களில் மதுரை நியூசினிமாவில் நடைபெற்ற 113 காட்சிகளும் தொடர் அரங்கு நிறைந்திருக்க நவம்பர் 1 புதன் மாட்னி 114வது காட்சி. அன்றைய தினம் 3 காட்சிகளும் அரங்கு நிறைந்து விட்டால் 116 ஆகி விடும். மீண்டும் ஒரு சாதனை படைக்கப்படும் என நினைத்திருக்கிறோம். மாட்னி ஷோ நேரத்திற்கு தியேட்டர் பக்கம் போகிறோம் (ஸ்கூல் லீவு). கூட்டம் வரிசை எல்லாம் இருக்கிறது. ஆனால் அரங்கு நிறையும் அளவிற்கு இல்லை. மழை வேறு. அதுவும் எப்படி என்றால் ஒரேடியாக பெய்து விட்டாலும் பரவாயில்லை. இது நச நசவென்று பெய்து கொண்டிருக்கிறது. 3 மணி வரை காத்திருந்தோம். ரசிகர் மன்ற ஆட்களெல்லாம் வந்து தியேட்டருக்குள் போய் பேசுகின்றனர். ஆனால் மழை விடாமல் தொடரவே தொடர் ஹவுஸ் புல் விட்டுப் போனது. ஆனால் ஈவினிங் மற்றும் நைட் ஷோ புல். மறுநாள் மாட்னியும் புல்லானது என்று பார்த்தபோது ஆஹா புதன் மாட்னி மட்டும் ஹவுஸ் புல் ஆகியிருந்தால் ஞாயிறு வரை அனைத்து காட்சிகளும் அரங்கு நிறைந்திருக்கும். (உண்மையிலே அரங்கு நிறைந்தது) அப்படி நடந்திருந்தால் 130 காட்சிகள் தொடர் அரங்கு நிறைந்து பட்டிக்காடா பட்டணமாவின் 129 காட்சிகள் தொடர் ஹவுஸ் புல் ரிகார்டை முறியடித்திருக்கும். இதை வெகு நாட்கள் நாங்கள் பேசி ஆதங்கப்பட்டிருக்கிறோம்.
1965 தீபாவளிக்கு பிறகு அந்த 1972 தீபாவளிக்குதான் நடிகர் திலகம் படம் வராமல் போனது. ஆகவே பெரும்பாலான ரசிகர்கள் தீபாவளியை வசந்த மாளிகையில்தான் கொண்டாடினார்கள். பட்டிக்காடா பட்டணமாவும் தீபாவளியோடு 182 நாட்களை நிறைவு செய்து சென்ட்ரலிலிருந்து எடுக்கப்பட்டு மற்றொரு அரங்கிற்கு ஷிபிட் செய்யப்பட்டுவிட்டது. சிந்தாமணியில் 70 நாட்களை நிறைவு செய்திருந்த தவப்புதல்வன் மற்றொரு அரங்கிற்கு மாற்றப்பட்டது. நீதி டிசம்பர் மாதம் வந்து விடும் என பேச்சு அடிப்பட்டுக் கொண்டிருக்கிறது.
நீதி என்றவுடன் invariably நம் நினைவுக்கு வருவது 1972-ம் வருடத்தின் ஆரம்பமும் பாலாஜி,முடிவும் பாலாஜி. 1972-ம் ஆண்டு ஜனவரி 26-ந் தேதி ராஜா வெளியாகி அந்த வருடத்தின் Box Office ராஜா நடிகர் திலகம் எனபதற்கு கட்டியம் கூறியது என்றால் நீதி 72ம் ஆண்டிற்கு நிறைவாக நிறைவு செய்ய வந்தது.
ராஜா வெளியாகி ஓடிக் கொண்டிருக்கும் போதே பாலாஜியின் அடுத்த படம் என்ன என்பதை பற்றிய யூகங்களும், சர்ச்சைகளும் ரசிகர்கள் மத்தியில் உலா வந்து கொண்டிருந்த நேரம். அந்த நேரத்தில் சித்ராலயா வார இதழுக்கு அளித்த பேட்டி ஒன்றில் பாலாஜி தான் இந்திபடங்களை அல்லது பிறமொழி படங்களை தமிழில் ரீமேக் செய்வது பற்றி விமர்சித்த பலரும் இப்போது தன் படங்கள் அடையும் வெற்றியை பார்த்து மலைத்து போய் இருப்பதாக குறிப்பிட்டார். அடுத்தப் படமும் இந்தி படத்தின் தழுவலாகதான் இருக்கும் என்றும் அதில் மேலும் அவர் சொல்லியிருந்தார். ஆனால் என்ன படம் என்று தெரியாமலே இருந்தது.
1972-ம் ஆண்டு மே 4-ந் தேதி அன்று ராஜா திரைபடத்தின் 100 வது நாள். அன்றைய தினம் வெளியான தினத்தந்தி நாளிதழில் முதல் பக்கத்தில் கீழே இடது கை ஓரத்தில் ராஜா 100-வது நாள் விளம்பரம். வலது கை ஓரத்தில் நீதி விளம்பரம். ராஜாவின் அதே யூனிட் என்பது விளம்பரத்தை பார்த்தாலே தெரிந்தது. மறுபடியும் எந்த இந்திப்படத்தின் தமிழாக்கம் என்று அந்நேரம் தெரியவில்லை. விளம்பரம் வந்த மறுநாள் தந்தி வெள்ளிகிழமை சினிமா செய்திகளில் பாலாஜி நீதி என்ற படத்தை தயாரிக்கிறார். சிவாஜி ஜெயலலிதா ஆகியோர் நடிக்கிறார்கள். சி.வி.ஆர்.இயக்குகிறார் என்று வந்திருந்தது. இதை ஏற்கனவே இந்த தொடரில் நாம் பேசியிருக்கிறோம்.
நாட்கள் செல்ல செல்ல துஷ்மன் என்ற இந்திப்படத்தின் ரீமேக் தான் நீதி எனபதும் ஒரிஜினலில் ராஜேஷ் கன்னாவும் மும்தாஜும் ஜோடி எனபதும் தெரிய வந்தது. படம் சென்னையில் ரிலீஸ் ஆகி விட்டது என்றும் கேள்விப்பட்டோம். ஆனால் படம் எந்த வகையை சார்ந்தது என்பதைப் பற்றிய ஐடியா இல்லாமலே இருந்தது. ராஜா போன்ற மாடர்ன் ட்ரண்டுக்கு ஏற்றவாறு இருக்குமா இல்லை வேறு மாதிரியா என்பது பற்றி யோசனை. இதனிடையே அன்றைய நாட்களில் படப்பிடிப்பு நடைபெறும் படங்களைப் பற்றிய செய்திகள் நாளிதழ்களிலும் பருவ இதழ்களிலும் தொடர்ந்து வரும். அது போன்ற ஒரு செய்தியாக மாப்பிளையை பாத்துகடி மைனா குட்டி பாடலும் நாளை முதல் குடிக்க மாட்டேன் பாடலும் இசையமைக்கப்பட்டு ஒலிப்பதிவு செய்யப்பட்டதாக செய்திகள் வந்தன.
நடிகர் திலகம் ஓய்வு ஒழிச்சல் இல்லாமல் ஒரு நாளைக்கு 24 மணி நேரம் போதாமல் அவ்வளவு பிஸியாக இருந்த காலம். படங்களின் தொடர் வெற்றியில் ஏற்கனவே உயரத்தில் இருக்கும் அவரின் மார்கெட் உச்சாணி கொம்பில் ஏறி விட்டது. அவர் 22 மணி நேரம் மூன்று ஷிப்ட்களில் நடித்துக் கொண்டிருந்தார். அக்டோபர் 1 அவரின் பிறந்த நாள் அன்று மைசூர் பக்கத்தில் உள்ள ஒரு ஊரில் அவர் நீதி படப்பிடிப்பில் கலந்துக் கொண்டிருந்தார். அங்கேயே பிறந்த நாள் கொண்டாடப்பட்டது என்பதையும் பார்த்தோம்.
இந்த நேரத்தில் மற்றொரு செய்தியும் வந்தது. ஒய்வு ஒழிச்சல் இல்லாமல் நடிகர் திலகம் சினிமா படப்பிடிப்பில் காங்கிரஸ் கட்சி கூட்டங்களில், நடிகர் சங்க வேலைகளில் மூழ்கி இருக்கும் நேரம், அது அவரது உடல்நிலையை பாதித்து ஒரு நாள் படப்பிடிப்பு முடிந்து வீட்டிற்கு வந்தவர் vomit செய்ய அதில் ரத்தம் கலந்திருந்ததைப் பார்த்துவிட்டு வீட்டில் இருந்தவர்கள் பயந்துபோய் டாக்டரை கூப்பிட, டாக்டர் BP சற்று அதிகமாக இருக்கிறது அதனால் ஒய்வு எடுக்கவேண்டும் என்று கூற நாளை காலை எனக்காக செங்கல்பட்டு பக்கத்தில் எல்லா ஆர்டிஸ்ட்ம் காத்திருப்பார்கள். பாலாஜியும் சிவிஆரும் காத்திருப்பார்கள். அவ்வளவு பேர் கால்ஷீட்டும் வேஸ்ட் ஆகிவிடும். நான் போகவேண்டும் என்று கிளம்பி போய்விட்டாராம்.
அன்றைக்குத்தான் கிளைமாக்ஸ்-ற்கு முந்தைய அனைவரும் பாடும் பாடல் காட்சியான எங்களது பூமி பாடல் படமாக்கப்பட்ட தினம். படத்தில் இந்த பாடல்காட்சியில் மட்டும்தான் அந்த கருநீல டிரைவர் யுனிபார்ம் தவிர்த்து வொயிட் அண்ட் வொயிட் ஷெர்வானி அணிந்திருப்பார் நடிகர் திலகம். ஒரு துப்பட்டாவும் அணிந்திருப்பார். அது சிவப்பு கலரில் இருக்கும். முதல் நாள் இரவு ஏற்பட்டது போல ரத்த வாந்தி வந்தால் அதை அடக்குவதற்கும் மீறி வந்தால் மற்றவர்களுக்கு தெரியாமல் இருப்பதற்கும்தான் சிவப்பு கலர் துப்பட்டாவை பயன்படுத்தினார் என்று ரசிகர்கள் சொல்லி கேள்விபட்டிருக்கிறேன். அது எந்தளவிற்கு உண்மை என்று தெரியாது. ஆனால் இப்போதும் அந்த பாடல் காட்சியை பார்த்தோம் என்றால் இரண்டு மூன்று ஷாட்களில் அந்த துப்பட்டாவை அவர் வாயின் மேல் பொத்தி பிடிப்பதை கவனிக்கலாம். தன்னால் தயாரிப்பாளருக்கோ மற்றவர்களுக்கோ எந்தவித பாதிப்பும் வந்துவிடக் கூடாது என்ற அந்த பெரிய மனதிற்கு தலை தாழ்ந்த வணக்கம்!
இந்த நேரத்தில் தீபாவளி வருகிறது. அந்த வருடம் நவம்பர் 4 சனிக்கிழமை அன்று தீபாவளி. சென்ட்ரலில் ராமண்ணாவின் சக்தி லீலை தீபாவளி அன்று வெளியாகுவதாக இருந்தது. ஆனால் படம் அன்று வெளிவராது என்று தீபாவளிக்கு ஒரு வாரம் முன்னர் செய்தி வந்தது. படத்தின் வேலைகள் முடியவில்லை என்பதால் வரவில்லை என்று ஒரு செய்தியும் அன்றைய தீபாவளி தினமே மற்றொரு பக்தி படமான தெய்வம் வெளியானதால் போட்டி வேண்டாம் என்று முடிவு மேற்கொள்ளப்பட்டதாகவும் மற்றொரு தகவல் வந்தது. இந்த முடிவிற்கு பின்னால் அன்றைய நாட்களில் ஆக்டிவாக செயல்பட்டுக் கொண்டிருந்த மூவி மேக்கர்ஸ் கவுன்சில் குழுவும் ஒரு காரணம் என சொல்லப்பட்டது. சக்தி லீலை தீபாவளியன்று வெளியாகவில்லை என்றதும் பட்டிக்காடா பட்டணமாவே தொடர்ந்து ஓடப் போகிறது என்ற செய்தியும் பரபரப்பாக ரசிகர்களுக்கிடையே பேசப்பட்டது. ஆனால் சக்தி லீலை நவம்பர் 10-ந் தேதி வெளி வரும் என்ற உறுதியான அறிவிப்பு வந்ததால் 6 நாட்களுக்கு துஷ்மன் படம் சென்ட்ரலில் வெளியிடப்பட்டது.
நடிகர் திலகம் படம் தீபாவளிக்கு வரவில்லை என்பதால் மாலைக் காட்சி துஷ்மன் படம் காண சென்றோம். படம் பார்ப்பதற்கு முன்பே படத்தின் கதையம்சதைப் பற்றி ஓரளவு தெரிந்திருந்தது. படம் பார்த்த போது முழு கதையும் புரிந்தது. ஆனால் ஒரு ஏமாற்றம். ராஜா போன்ற ஸ்டைலிஷ் படமாக இது வராது என்பது தெரிந்தது. ரசிகர்களும் பொது மக்களும் இதை எப்படி எடுத்துக் கொள்வார்கள் என்பது பற்றிய ஒரு நெருடல் இருந்தது என்றே சொல்ல வேண்டும். ஆனால் என்னுடன் வந்திருந்த என்னுடைய கஸின் வேறொரு விஷயத்தை குறிப்பிட்டார்."உனக்கு நினைவு இருக்கிறதா? சென்ற தீபாவளி [1971 தீபாவளி] அன்றுதான் ராஜாவின் ஒரிஜினலான ஜானி மேரா நாம் பார்த்தோம். ராஜா சூப்பர் ஹிட். அது போல் இந்த தீபாவளி துஷ்மன் பார்க்கிறோம். நிச்சயம் நீதி சூப்பர் ஹிட்" என்றார். பாலாஜியும் சிவிஆரும் படத்தை பார்த்து கொள்வார்கள் என்ற நம்பிக்கையும் இருந்தது.
நான் ஏற்கனவே குறிப்பிட்டிருந்தபடி அரசியல் குழப்பங்கள் தொடர்ந்தன. தினந்தோறும் ஊர்வலங்கள் போராட்டங்கள் என்ற பதட்ட சூழல் அதில் அப்பாவி மாணவர்கள் சிக்கி கொள்வது, வன்முறை சம்பவங்கள் அரேங்கேறுவது என்று இருந்ததால் கல்வி நிறுவனங்கள் தொடர் விடுமுறை அறிவித்து விட்டன. தனி கட்சி ஆரம்பித்த எம்ஜிஆர் இந்திய (வலது) கம்யூனிஸ்ட் தலைவர் கல்யாணசுந்தரம் அவர்களோடு டெல்லி சென்று அன்றைய ஆளும் திமுக அரசுக்கு எதிராக ஊழல் புகார் பட்டியலை பிரதமரிடம் கொடுக்க சென்றார். ஆனால் இது போன்ற புகார்களெல்லாம் குடியரசு தலைவரிடம்தான் கொடுக்க வேண்டும் என்று சொல்லப்படவே அவர்கள் அன்றைய ஜனாதிபதி வி வி கிரி அவர்களை சந்தித்து புகார் அளித்தனர். பின் பிரதமரையும் சந்தித்து அதன் ஒரு நகலை வழங்கியதாக செய்தி வந்தது. அது தமிழக ஆளுநருக்கு அனுப்பப்பட அவர் அதை தமிழக முதல்வருக்கு அனுப்பினார். அதை படித்துவிட்டுதான் அன்றைய முதல்வர் மு.க., "பார்த்தேன் படித்தேன் ரசித்தேன்" என்று கமென்ட் அடித்தார். இவை நடந்து கொண்டிருக்கும் அதே நேரத்தில் (நவம்பர் 15/16) பாளையங்கோட்டை கல்லூரி பேராசிரியர் சீனிவாசன் தாக்கப்பட்டார். இது சற்றே தணிந்திருந்த பதட்டத்தை மேலும் அதிகரித்தது.
பதட்ட சூழ்நிலை ஒரு பக்கம் என்றால் மழை மற்றொரு பக்கம். மற்ற ஊர்களில் எப்படியோ மதுரையில் அந்த சீசனில் நல்ல மழை. [இதை சொல்ல காரணம் 1973-ல் தமிழகத்திலே வறட்சியும் மின்வெட்டும் கடுமையாக இருந்தன]. இருப்பினும் வசந்த மாளிகை மட்டுமல்ல ஷிப்டிங் செய்யப்பட்ட பட்டிக்காடா பட்டணமாவும் சரி தவப்புதல்வனும் [மதுரை விஜயலட்சுமியில்] சரி பிரமாதமாக ஓடிக் கொண்டிருந்தது. பட்டிக்காடா பட்டணமாவின் வெள்ளிவிழாக் கொண்டாட்டம் சேலத்தில் நவம்பர் 5 ஞாயிறன்று நடைபெற்றது. மிக பிரம்மாண்டமான கூட்டம் நடிகர் திலகத்தை காண கூடவே சேலம் நகரே திணறியது என செய்திகள் வெளிவந்தன. சென்னையில் வெள்ளிவிழா கொண்டாட்டம் அதற்கு அடுத்த ஞாயிற்றுக்கிழமை நவம்பர் 12 அன்று சென்னை உட்லண்டஸ் ஹோட்டலில் நடைபெற்றது. பெருந்தலைவர் விழாவிற்கு தலைமை தாங்கி கலைஞர்களுக்கும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் கேடயம் வழங்கினார். தலைமை தாங்கிய பெருந்தலைவருக்கு ஏர் கலப்பை ஒன்றை நடிகர் திலகம் நினைவு பரிசாக வழங்கினார். அந்த விழாவில்தான் பெருந்தலைவர் நடிகர் திலகத்திற்கு ஒரு அழைப்பு விடுக்கிறார்.
1969ம் ஆண்டு காங்கிரஸ் பேரியக்கம் பிளவுப்பட்டபின் தமிழகத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் காரிய கமிட்டி புனரமைக்கப்படுகிறது. 1969 டிசம்பரில் பதவியேற்ற அந்த குழுவிற்கும் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவராகவும் கக்கன்ஜி பொறுப்பேற்கிறார். அந்த கமிட்டியின் ஆயுள் மூன்று வருடங்கள். கட்சியின் அமைப்பு சட்டப்படி மூன்று வருடங்களுக்கு ஒரு முறை காரிய கமிட்டி புனரமைக்கப்பட வேண்டும். ஆகவே 1972 டிசம்பரில் புனரமைக்கப்பட போகும் காரிய கமிட்டியில் நடிகர் திலகமும் இடம் பெற வேண்டும் என பெருந்தலைவர் விரும்புகிறார். அதை அவரிடம் தனிப்பட்ட முறையில் சொல்லியிருக்கிறார். ஆனால் நடிகர் திலகம் அதை ஏற்றுக்கொள்ள மறுக்கிறார். ஆகவே இதை பொது மேடையில் சொன்னால்தான் நடிகர் திலகத்தை ஒப்புக் கொள்ள வைக்க முடியும் என நினைத்த பெருந்தலைவர் அந்த வெள்ளிவிழா கூட்டத்தில் பேசும்போது சிவாஜி ஏற்கனவே நமது கட்சிக்காக நிறைய செய்து கொண்டிருக்கிறார். அவருக்கு இப்போது கட்சியில் ஒரு பொறுப்பு கொடுக்கலாம் என இருக்கிறேன் என்று சொல்கிறார். கூட்டம் அதை ஆரவாரத்துடன் வரவேற்கிறது. ஆனால் நடிகர் திலகம் ஏற்புரை நிகழ்த்தும்போது அதை பணிவாக மறுக்கிறார். தான் சார்ந்த தொழிலில் இப்போது முழு மூச்சாக ஈடுபட்டுக் கொண்டிருப்பதாகவும் பல தயாரிப்பாளர்கள் தன்னை வைத்து படம் எடுத்துக் கொண்டிருப்பதாகவும் அதுவும் தவிர நடிகர் சங்க தலைவராக பணியாற்றிக் கொண்டிருப்பதால் அங்கும் ஏராளமான வேலைகள் இருக்கின்றன என்றும் ஆகவே இந்த நேரத்தில் கட்சியில் ஒரு பொறுப்பை ஏற்க நேர்ந்தால் அதற்கு நியாயம் செய்ய முடியாது என்றும் சொல்கிறார். தன் மீது வைத்திருக்கும் நம்பிக்கைக்கும் அன்பிற்கும் நன்றி சொன்ன நடிகர் திலகம், எனது பிள்ளைகள் உங்கள் கட்டளையை சிரமேற்கொண்டு செயல் படுவார்கள். கட்சியின் தற்கொலை படையாக களத்தில் நிற்பார்கள் எனவும் கூறிவிட்டு போராட்டக்களத்தில் நானே வரவேண்டும் என்ற சூழலில் நிச்சயமாக கலந்து கொள்வேன் என்று சொல்லி முடித்தார். [பெருந்தலைவர் நடிகர் திலகத்திற்கு ஒன்றுமே செய்யவில்லை என விஷயம் தெரியாமல் சொல்லி வருபவர்களுக்கு இதை சமர்ப்பிக்கிறேன். இது 1975 வரை உள்ள நிலை. அதன் பிறகு அந்த கட்சி நடிகர் திலகத்திற்கு என்ன செய்தது என்பது அனைவருக்கும் தெரியும்]. அந்த 1972 டிசம்பரில் புனரமைக்கப்பட்ட கமிட்டி பதவியேற்க தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக பா.ரா. பொறுப்பேற்றார்.
அந்த சமயத்தில் மதுரையில் ஷிப்டிங் செய்யப்பட்ட பட்டிக்காடா பட்டணமா 200-வது நாளை நிறைவு செய்தது. மாளிகை 50 நிறைவு செய்தது. நீதி டிசம்பர் 7 அன்று வெளியாவதாக தகவல் வந்தது. சென்னையை பொறுத்தவரை ராஜா வெளியானது போல் மூன்று அரங்குகளில்தான் [பாரடைஸ் பிரபாத்,சரவணா] நீதியும் வெளியாகிறது என்ற செய்தி வந்த அதே நேரத்தில் மதுரையில் தங்கம் தியேட்டரில் ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாயின. தங்கம் தியேட்டரா என்ற கேள்வி ரசிகர்கள் மனதில் எழுந்தது. காரணம் வேறொன்றுமில்லை. பொதுவாக சென்ட்ரல், நியூசினிமா, ஸ்ரீதேவி மற்றும் சிந்தாமணி ஆகியவைதான் முதல் சாய்ஸ். அந்த நேரத்தில் நியூசினிமாவில் வசந்த மாளிகை, ஸ்ரீதேவியில் இதய வீணை, சிந்தாமணியில் தெய்வம் [நீதியின் விநியோகஸ்தரான சேது பிலிம்ஸ்தான் தெய்வதிற்கும் விநியோகம்] ஆகியவை ஓடிக் கொண்டிருந்த காரணத்தினால் சென்ட்ரல் மட்டுமே இருந்தது. ஆனால் என்ன காரணத்தினாலோ சென்ட்ரலில் படம் ஒப்பந்தம் செய்யப்படவில்லை. அந்த நேரத்திலும் சரி அதற்கு பிறகும் சரி அடுத்து வெளியாகும் புதுப் படங்கள் எதுவும் ஒப்பந்தம் செய்யப்பட்டதாக தகவல் வரவில்லை. அப்படியிருக்க ஏன் சென்ட்ரல் சினிமா ஒப்பந்தம் செய்யப்படவில்லை என்பது கேள்விக்குறியாகவே இருந்தது. 1973 பொங்கலுக்கு சென்ட்ரலில் கங்கா கௌரி வெளியானது என்று சொன்னால் கூட அதனால் நீதி அங்கே வெளியாகவில்லை என்பதை ஏற்றுக் கொள்ள முடியாமலே இருந்தது. இத்தனை விளக்கமாக சொல்ல காரணம் அதன் பிறகு பெரிய படமாக மார்ச் 24-ந் தேதி சென்ட்ரலில் பாரத விலாஸ் வெளியானது, எனவே நீதி சென்ட்ரலில் வெளியாகியிருந்தால் 107 நாட்கள் ஓடியிருக்குமே என்ற ஆதங்கம்தான்
இதற்கு நடுவே நடிகர் திலகத்தின் பல புதிய படங்களும் வேகமாக வளர்ந்து வரும் செய்திகள் வந்துக் கொண்டேயிருந்தன. ஹீரோ 72 ஷூட்டிங் ஆரம்பமாகிவிட்டது. என்னைப் போல் ஒருவன், ரோஜாவின் ராஜா, கெளரவம், ராஜபார்ட், சித்ரா பௌர்ணமி, மன்னவன் வந்தானடி, ஜெயந்தி பிலிம்ஸ் படம், குகநாதனின் அன்னை பூமி, முக்தா பிலிம்ஸ் படம், கிழக்கும் மேற்கும், புனித பயணம் கருப்பு வெள்ளை படங்களான பொன்னுஞ்சல், தாய் முதலிய படங்கள் பற்றிய செய்திகள் பரவலாக வெளிவந்துக் கொண்டிருந்தது.. நீதி வெளியாவதை ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கும்போது டிசம்பர் முதல் வாரத்தில் நடந்த இரண்டு அரசியல் நிகழ்வுகள் மீண்டும் தமிழகத்தில் பதட்ட நிலையை உருவாக்கின.
திருச்சியில் இருக்கும் செயின்ட் ஜோசப் கல்லூரியின் ஹாஸ்டல்களில் ஒன்றாக விளங்கியது கிளைவ் ஹாஸ்டல். திருச்சி மலைக்கோட்டை கோவில் மெயின் கார்டு கேட் இவைக்கு இடைப்பட்ட இடத்தில அமைந்த தெப்பக்குளத்திற்கு அருகில் இயங்கி வந்த விடுதி. அங்கே தங்கி படித்துக் கொண்டிருந்த மாணவர்கள்மீது தான் தாக்குதல் நடைபெற்றது. ஏன் அந்தத் நிகழ்வு அங்கே நடந்தது என்பது பற்றி எழுதுவது நமது தரத்திற்கு குறைவு என்பதனால் நான் அதை குறிப்பிட விரும்பவில்லை. ஆனால் அன்றைய நாளில் ஆளும் கட்சியில் இருந்த முக்கிய பிரமுகர் [அமைச்சரைவையில் ஒரு அங்கம்] சில தனிப்பட்ட காரணங்களுக்காக கோபம் கொண்டு காவல்துறையை மாணவர்கள் மீது ஏவி விட்டார். நாம் ஏற்கனவே பேசியிருக்கிறோம் அந்த வருடம் கல்லூரி மாணவர் பேரவை தேர்தலில் ஸ்தாபன காங்கிரஸ் மாணவர்கள் 146 கல்லூரிகளில் வெற்றி பெற்றார்கள் என்று. அந்த கோபமும் சேர்ந்து கொள்ள 1972 டிசம்பர் 1, 2 [வெள்ளி சனி] இரவுகளில் ஹாஸ்டலில் போலீசார் புகுந்து வெறியாட்டம் ஆடினார்கள். ஏராளமான மாணவர்கள் மிருகத்தனமாக தாக்கப்பட்டு ரத்தம் வழிய வழிய ஓட ஓட விரட்டப்பட்டனர். அன்றைய மாணவர் காங்கிரஸ் தலைவராக இருந்த நேதாஜி மிக தீரமாக ஹாஸ்டலுக்கு உள்ளே சென்று மாணவர்களை காப்பாற்றினார். நேதாஜி உள்ளே இருக்கிறார் என்று தெரிந்து போலீசார் அவரை எப்படியும் கைது செய்து விட வேண்டும் என்று முயற்சிக்க ஆளும் கட்சியினரும் இதை பயன்படுத்திக் கொண்டு நேதாஜியை தாக்க முயற்சி எடுக்க மாணவர்கள் அரண் போல் நின்று நேதாஜியை நெருங்க விடாமல் செய்தனர். அதற்குள் இந்த கொலை வெறி தாக்குதல் ஊரெங்கும் பரவி விடவே நிலைமையை சமாளிக்க அன்றைய அரசு ஒரு மாவட்ட நீதிபதியை நியமித்து விசாரணை நடத்த உத்தரவிட்டது.
டிசம்பர் 2 சனிக்கிழமை அன்று தமிழக சட்டசபை கூடுகிறது என அறிவிக்கப்பட்டது. ஆளும் கட்சியில் பிளவு ஏற்பட்டபிறகு நடைபெறும் முதல் கூட்ட தொடர் என்பதால் பரபரப்பு நிலவியது. அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்போவதாக அதிமுக அறிவிக்கிறது. இந்த நேரத்தில் மற்றொரு திருப்பம் நிகழ்கிறது. புதிதாக தொடங்கப்பட்ட அதிமுகவில் 13 எம்எல்ஏக்கள் சேர்ந்திருந்தனர். எம்ஜிஆருடன் சேர்ந்து வெளியேறிய முதல் எம்எல்ஏ கேஏகே என்ற கே ஏ கிருஷ்ணசாமி. அவரின் அண்ணன் கே ஏ மதியழகன் அப்போது பேரவை தலைவராக இருக்கிறார். 1970ல் ஊழல் குற்றச்சாட்டின் காரணமாக பதவி விலகிய மதியழகன் 71 தேர்தலுக்கு பிறகு சபாநாயகராக ஆக்கப்பட்டார். அமைச்சர் பதவி கிடைக்காததன் காரணமாகவே சற்று வருத்தத்திலும் கோபத்திலும் இருந்த மதியழகன் அதிமுகவிற்கு போகப் போகிறார் என்று செய்திகள் அடிப்பட்டுக் கொண்டிருந்தது. சட்டப்பேரவையை பொறுத்தவரை பேரவை தலைவர் எடுக்கும் தீர்மானம்தான் இறுதி என்பதால் அதிமுக கொண்டு வரும் நம்பிக்கையில்லா தீர்மானம் எடுத்து கொள்ளப்படும் என மதியழகன் அறிவிக்கவே ஆளும் கட்சியில் ஒரு கிலி படர்ந்தது. 170 எம்எல்ஏக்கள் இருந்தாலும் நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி பெற்றது என பேரவை தலைவர் அறிவித்து விட்டால் என்ன செய்வது என்று யோசித்த கருணாநிதி அன்றைய துணை சபாநாயகர் விருதுநகர் சீனிவாசனை சபாநாயகராக்க முடிவு எடுத்தார். சபை கூடியதும் பேரவை தலைவர் மேல் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரப்பட, மதியழகனோ அரசின் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் விவாதத்திற்கு எடுத்து கொள்ளப்படும் என அறிவிக்க, ஒரே நேரத்தில் மதியழகனும் சீனிவாசனும் சபையை நடத்த, மதியழகனால் பேச அழைக்கப்பட்ட எம்ஜிஆர் பேசிக் கொண்டிருக்கும்போதே அவருக்கான நேரம் முடிந்து விட்டது என்று சீனிவாசன் கூறி அவரை உட்கார சொல்ல, அவர் தொடர்ந்து பேச அவருக்கு கொடுக்கப்பட்ட மைக் அணைக்கப்பட்டு அவர் பேசுவது யாருக்கும் கேட்காமல் போக, ஆளும் கட்சி வரிசையிலிருந்து பல்வேறு பொருட்கள் வீசப்பட்டு ஒரே களேபரமாக, சட்டசபை செத்துவிட்டது என கூறி எம்ஜிஆர் வெளியேறினார். 1967 முதல் 1971 ஜனவரி வரையும் பின் 1971 மார்ச் முதல் 1972 டிசம்பர் வரைக்கும் எனக்கு தெரிந்து எம்ஜிஆர் பதவி பிரமாணத்தை தவிர வேறு ஏதும் சபையில் பேசியதாக தெரியவில்லை. அவர் முதன் முதலாக பேச வந்த அந்த டிசம்பர் 2லும் இது போல் நடக்க அந்த சட்டசபை கலைக்கப்பட்ட 1976 ஜனவரி 31 வரை அவர் பேசவேயில்லை. ஆனால் அந்த சட்டசபை இயங்கிய காலம் முழுக்க அவர் சட்டசபை லாபிக்கு வந்து கையெழுத்து மட்டும் போட்டு உறுப்பினர் அனுகூலங்களை பெற்றுக் கொண்டிருந்தார்.
இந்த கிளைவ் ஹாஸ்டல் மற்றும் சட்டசபை நிகழ்வு தமிழகத்தில் மீண்டும் பதட்ட நிலையை உருவாக்க டிசம்பர் 4 திங்களன்று மீண்டும் துவங்குவதாக இருந்த கலவி நிலையங்கள் அனைத்தும் காலவரையின்றி மூடப்பட்டன.
இந்த சூழலில்தான் நீதி டிசம்பர் 7 அன்று வெளியாகிறது. அந்த லாரி டிரைவர் ராஜாவை பார்த்த மகிழ்ந்த கொண்டாடிய நினைவுகள் அடுத்த வாரம்
(தொடரும்)
அன்புடன்


Thanks Murali Srinivasan

sivaa
1st May 2021, 10:28 AM
கல்தூண் 1/05/1981 .இன்று 40 ஆண்டுகள் நிறைவு.

5785

sivaa
1st May 2021, 06:07 PM
மே தின வாழ்த்துகள்
இந்த மூன்று பேரும் சகோதரர்கள்
இவர்கள் மூன்று பெரும் சிவாஜி ரசிகர்கள்
இந்த காலத்தில் அன்னன் தம்பிகள் வெவ்வேறு கட்சி வெவ்வேறு நடிகரின் ரசிகர்கள் ஆக இருப்பார்கள் ஆனால் இவர்கள் மூன்று பேரும் சிவாஜி ரசிகர்கள் ஆக இருக்கிறார்கள் என்பதுதான் ஆச்சரியம்
இதில் என்ன விசேஷம் என்றால் மூன்று போருக்கும் முன்னால் சிவாஜி என்கின்ற பெயர் சேர்த்து அழைக்கப்படுவது
சிவாஜி என்றாலே நாட்டுப்பற்றுக்கு உதாரனம் மட்டுமல்ல குடும்ப ஒற்றுமைக்கும்
என்பது
இந்த மூன்று சகோதரர்கள் அதற்கு உதாரணம்
வாழ்க சிவாஜிகள்.(சங்கர் ,சீனிவாசன் ,பாலு )
சிவாஜிக்காக வாழ்நாளை அற்பனிப்பவர்களை வாழ்த்த வேண்டியது ஒவ்வொரு சிவாஜி ரசிகனின் கடமையாகும்



5786

Thanks Muniyandi Saminathan

sivaa
5th May 2021, 08:21 AM
நன்றி விசுவாசத்திற்கு எடுத்துக்காட்டு நடிகர் திலகம் சிவாஜி கணேசன்.
"சினிமாத்துறையில் நன்றி என்ற ஒன்றை லென்ஸ் வைத்து தேடினாலும் பார்க்க முடியாது. நூறு பேரில் ஒருவரிடம் நன்றி, விஸ்வாசம் இருந்தாலே பெரிய விஷயம் என்பார்கள்.
சிவாஜி கணேசன் நடித்த முதல் திரைப்படம் 1952இல் வெளியான ‘பராசக்தி’ திரைப்படம். அந்தப் படத்தின் தயாரிப்பாளர் வேலூரைச் சேர்ந்த பி.ஏ.பெருமாள் முதலியார். அந்தப் படத்திற்கு ஃபைனாஸ் செய்தது ஏ.வி.மெய்யப்பச் செட்டியார். படத்திற்கு கலைஞர் வசனம் எழுதியதும், படம் வெளியானபோது மிகப்பெரிய வெற்றி பெற்றதும் நமக்குத் தெரிந்த விஷயம்தான். அந்த வெற்றி சிவாஜி கணேசனை மிகப்பெரிய உயரத்தில் கொண்டுபோய் வைத்ததும், அதன்மூலம் பெரிய கதாநாயகன் தமிழ்நாட்டில் உருவானதும் வரலாறு.
அதன் பிறகு பல வருடங்கள் கடந்துவிட்டன. சிவாஜி 300 படங்களுக்கு மேலாக நடித்து, புகழ் குன்றின் உட்சத்தில் இருக்கிறார். நான் கூறும் இந்த சம்பவம் ஒரு தீபாவளி நேரத்தில் நடந்தது. இது பொம்மை பத்திரிகையில் ஆசிரியராக இருந்த என் நண்பர் வீரபத்திரன் என்னிடம் பகிர்ந்துகொண்டது. அவர் சிவாஜி கணேசனுக்கும் நெருங்கிய நண்பர். ஒருநாள் வீரபத்திரனை அழைத்த சிவாஜி, “நாளை எந்த வேலையும் வச்சுக்காதீங்க... நாம் ஓர் இடத்திற்குப் போக வேண்டும்” எனக் கூறியுள்ளார். வீரபத்திரனும் மறுநாள் காலையிலேயே சிவாஜி வீட்டிற்குச் சென்றுள்ளார். சிவாஜி வீட்டில் காலை உணவை முடித்துவிட்டு இருவரும் காரில் ஏறி அமர்கின்றனர். நாம் ஓர் இடத்திற்குப் போக வேண்டும் என்றுதான் சிவாஜி கூறினாரேயொழிய எந்த இடத்திற்குப் போகிறோம் எனக் கூறவில்லை. வீரபத்திரனுக்கும் அவரிடம் கேட்கத் தயக்கம். அதனால் எதுவும் கேட்காமல் காரில் ஏறிவிடுகிறார். கார் சென்னையைத் தாண்டுகிறது... காஞ்சிபுரத்தை தாண்டுகிறது... வீரபத்திரன் அப்போதும் கேட்கவில்லை. கடைசியாகக் கார் வேலூருக்குச் சென்று, அங்கு ஒரு வீட்டின் முன்னால் போய் நிற்கிறது. அந்த வீடு சிவாஜி கணேசனை வைத்து படம் எடுத்த பி.ஏ.பெருமாள் முதலியாருடையது. அவர் முன்னரே மரணமடைந்துவிட்டார். அவர் குடும்பம் மட்டும் அங்கே வசித்துவருகிறது. தீபாவளி வருவதால் அந்தக் குடும்பத்தினர் அனைவருக்கும் புத்தாடைகள் எடுத்துக்கொண்டு சிவாஜி கணேசன் சந்திக்க வந்துள்ளார். அந்த வருடம் மட்டுமல்ல; ஒவ்வொரு வருடமும் சிவாஜி கணேசன் இதேபோல நேரடியாக சென்று சந்திப்பாராம். அப்போது, பெருமாள் முதலியார் மனைவி காலில் நெடுஞ்சாண்கிடையாக விழுந்து ஆசீர்வாதம் வாங்கிவிட்டுத்தான் சிவாஜி கணேசன் கிளம்புவாராம். தன்னுடைய 60 வயதிலும் அவருடைய காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கியுள்ளார்.
பின், வேலூரில் இருந்து சென்னை திரும்புகையில் இருவரும் இதுபற்றி காரில் பேசிக்கொண்டு வந்துள்ளனர். அப்போது சிவாஜி, "இவர்தான் என்னை வச்சு ‘பராசக்தி’ படம் எடுத்தார். 2000 அடி படம் எடுத்திருந்தபோதே நான் ரொம்ப ஒல்லியா இருக்கேன்; வசனம் பேசுனா மீன் வாயைத் திறந்து பேசுவது மாதிரி இருக்கு என்றெல்லாம் சொல்லி என்னை படத்திலிருந்து நீக்க முயற்சித்தார்கள். எனக்குப் பதிலாக கே.ஆர்.ராமசாமியைக் கதாநாயகனாக வைத்து எடுக்க வேண்டும் என நினைத்தார்கள். அப்போது நான்தான் படத்தில் நடிக்க வேண்டும் என்பதில் பெருமாள் முதலியார் உறுதியாக இருந்தார். நான் இவ்வளவு பெரிய நடிகரானதற்கு காரணம் பெருமாள் முதலியார்தான். இன்று அவர் இல்லை. ஆனால், இந்தியா முழுக்க தெரிந்த நடிகராக நான் இருப்பதும், உலகெங்கும் வாழும் தமிழர்கள் மத்தியில் பிரபலமான நடிகராக இருப்பதும் அவர் போட்ட பிச்சை. அன்று பெருமாள் முதலியார் இல்லையென்றால் இன்று சிவாஜி கணேசன் இல்லை" என உருக்கமாகக் கூறியுள்ளார். சிவாஜி கணேசன் நினைத்தால் இதை யாரிடமாவது கொடுத்துவிடலாம். அப்படியெல்லாம் இல்லாமல், ஒவ்வொரு வருடமும் அவரே நேரில் சென்று அவர்களைச் சந்தித்து, வாங்கி வந்துள்ளதை அவர் கையால் கொடுத்து, அவர்களிடம் ஆசீர்வாதம் பெற்றுவருவதெல்லாம் எவ்வளவு பெரிய விஷயம்.
அன்று இரவு 10 மணிக்கு அவர்கள் வந்த கார் வடபழனி அருகே வருகிறது. இப்போதைய கமலா தியேட்டர் அருகே உள்ள விநாயகர் கோவில் தெருவில்தான் வீரபத்திரன் வீடு உள்ளது. அவர், இங்கே நிறுத்துங்கள்... என் வீடு இங்கேதான் உள்ளது... நான் இறங்கிக்கொள்கிறேன் எனக் கூற, இந்த நேரத்தில் நடந்து போவீர்களா எனக் கேட்ட சிவாஜி, அவர் வீட்டிற்கே சென்று இறக்கிவிட்டுள்ளார். நான் முன்னரே கூறியதுதான்... சினிமாவில் நன்றி, விஸ்வாசம் என்பது சுட்டுப்போட்டால்கூட பார்க்க முடியாது. இன்றைய தலைமுறையைச் சேர்ந்த கலைஞர்கள், நடிகர்கள், நடிகைகள், தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள் என யாராக இருந்தாலும் உங்களை அறிமுகப்படுத்தி நீங்கள் புகழ்பெறுவதற்கு மூலகாரணமாக இருந்த உன்னதமான மனிதர்களைக் கைக்கூப்பி வணங்குங்கள் - எழுத்தாளர் சுரா.

Thanks Subbiah

sivaa
6th May 2021, 07:59 AM
பட்டிக்காடா பட்டணமா? வெளியான நாள் 6/05/1972 . இன்று 49 ஆண்டுகள் நிறைவு.

வெள்ளிவிழா கண்ட வெற்றிச்சித்திரம்.

இதுவரை வெளிவந்த கறுப்பு வெள்ளை தமிழ் திரைப்படங்களில்,
ஒரு கோடி ரூபாய்களுக்கு மேல் வசூல் சாதனை ஏற்படுத்தி இன்றுவரை முறியடிக்கப்படாத,
சாதனை படமாக திகழ்கிறது பட்டிக்காடா பட்டணமா?.

5787

sivaa
6th May 2021, 08:01 AM
சத்யம் வெளியான நாள் 6/05/1976 . இன்று 45 ஆண்டுகள் நிறைவு.

5788

sivaa
7th May 2021, 08:50 PM
அனைவருக்கும் வணக்கம். ஒரு சிவாஜி ரசிகனின் சினிமா டைரி தொடர்கிறது.
அந்த நாள் ஞாபகம் - பார்ட் 50
அனைத்து கல்வி நிலையங்களும் மீண்டும் மூடப்பட, நான் படித்த பள்ளி மட்டும் டிசம்பர் 4 திறக்கப்பட்டு வகுப்புகள் ஆரம்பித்து விட்டன. பள்ளி விடுமுறையாக இருக்கும், ஆகவே நீதி ஓபனிங் ஷோ போகலாம் என்று நினைத்திருந்த வேளையில் அது நடக்காமல் போனது. அதே நேரத்தில் என் கஸின் படித்த கல்லூரியும் மூடப்பட்டிருக்க அவர் எந்த சிக்கலுமில்லாமல் (அதுவும் தங்கம் என்பதனால் டிக்கெட் பற்றிகவலைப்பட வேண்டிய அவசியமும் ஏற்படவில்லை) ஓபனிங் ஷோ சென்று விட்டார். ஏற்கனவே அறிவித்தபடி டிசம்பர் 7 வியாழன் அன்று படம் ரிலீஸானது எப்போதும் தனது படம் ரிலீஸ் தேதியை அறிவித்து விட்டால் அதற்குண்டான அனைத்து வேலைகளையும் கச்சிதமாக செய்து முடிக்கும் பாலாஜி இந்த நீதி படத்தின் அனைத்து வேலைகளை முடித்து நவம்பர் 30 அன்று சென்சார் அதிகாரிகளுக்கு படத்தை போட்டுக்காட்டி தணிக்கை சான்றிதழ் பெற்று விட்டார். 1972ல் முதன் முறையாக வியாழக்கிழமை படம் வெளியானது மட்டுமல்லாமல் முதல் நாள் காலைக்காட்சி இல்லாமல் மாட்னி ஓபனிங் ஷோவாக ஆரம்பித்தது.
மாட்னிதான் ஓபனிங் ஷோ என்பதால் அவர் படம் முடிந்து வருவதற்குள் நான் ஸ்கூலிலிருந்து வந்து விட்டேன். கஸின் வரவை எதிர்பார்த்து காத்திருக்க அவர் மாலை ஐந்தரை மணி சுமாருக்கு வீட்டுக்கு வந்தார். என் ஆவல் அவருக்கு தெரியும் என்றாலும் அனைவருக்கும் முன்பாக வைத்து படம் பார்த்துவிட்டு வந்ததை சொல்ல முடியாது என்பதால் என்னை தனியே அழைத்து போய் படம் நன்றாக இருக்கிறது. நாம் ஹிந்தி துஷ்மன் பார்த்துவிட்டு எப்படியிருக்குமோ என்று பயந்ததற்கு படம் நன்றாக வந்திருக்கிறது. நடிகர் திலகம் இறங்கி அடித்திருக்கிறார் என்று சொன்னார். ரொம்ப சந்தோஷமாக இருந்தது. வியாழன் படம் ரிலீஸ். வெள்ளி சனி இரண்டு நாட்களும் ஸ்கூல் இருந்ததால் சனிக்கிழமை ஈவினிங் ஷோதான் போக முடிந்தது. தங்கம் தியேட்டரில் நல்ல கூட்டம். இந்த முறை பால்கனி டிக்கெட் வாங்கி படம் பார்க்க உள்ளே நுழைகிறோம்.
வழக்கம் போல் சுஜாதா சினி ஆர்ட்ஸின் லோகோ அந்த பரபரப்பான பின்னணி இசையுடன் பல வண்ணங்களில் பளிச்சிட தியேட்டரில் ஆரவாரம். அன்றைய நாட்களின் வழக்கப்படி இது ஒரு மூவி மேக்கர்ஸ் கவுன்சில் சித்திரம் என்ற கார்டு முதலில் வருகிறது. படத்தின் கதையை பற்றிய ஒரு முன்னோட்ட வரிகள் மேஜர் குரலில் ஒலிக்க அடுத்த காட்சி ஹைவேஸில் வரும் லாரியை காண்பித்து உள்ளே காமிராவை காண்பிக்க நடிகர் திலகம் கருநீல ஷர்ட் அணிந்து லாரி ஓட்டிக் கொண்டிருக்க செம கைதட்டல்கள். சுஜாதா சினி ஆர்ட்ஸ் அளிக்கும் நீதி என்று காண்பித்து விட்டு அடுத்த கார்டு திரைக்கதை வசனம் ஏ எல் நாராயணன் என்று வர தியேட்டரில் ஒரு சின்ன சலசலப்பு. எந்த நடிகர் நடிகை பெயரையும் போடவில்லை என்பதை கஸின் என்னிடம் ஏற்கனவே சொல்லியிருந்ததால் எனக்கு அது ஏமாற்றமாக தெரியவில்லை. சௌகாருக்கும் ஜெயலலிதாவுக்கும் பல வருடங்களாக இருந்த ஒரு கோல்ட் வார் காரணமாகத்தான் யார் பெயரும் போடாமல் டைட்டில்ஸ் காட்டப்பட்டது ஏற்கனவே திருடன் படத்தில் பெயர் போடுவதில் ஏற்பட்ட ஒரு கசப்பான அனுபவம் (சுதர்சன் சிட்ஸ் வேலாயுதன் நாயர் கோபித்துக் கொண்டு இனிமேல் உன் படங்களுக்கு பைனான்ஸ் பண்ண முடியாது என்று சொன்னதை இந்த தொடரில் நாம் பார்த்திருக்கிறோம்) பாலாஜிக்கு நினைவிருந்ததால் இப்படி ஒரு முடிவு எடுத்து வி சி சண்முகத்திடம் அனுமதி வாங்கி செய்தார் என்று ரசிகர்கள் பேசிக்கொண்டார்கள் (படம் வெளியான பிறகு தெரிய வந்த விஷயம்). டைட்டில் போடும்போதே நடிகர் திலகம் பாட்டிலில் இருப்பதை போட்டுக் கொண்டே வருவார். அவரை வேண்டாம் வேண்டாம் என்று கிளீனர் ஐ எஸ் ஆர்,கெஞ்சுவதும் (வாத்யாரே வண்டி புல் லோடிலே இருக்கு., வண்டி மட்டும் இல்லைடா. உன் வாத்தியாரும் புல் லோடுதான்) நடிகர் திலகம் கொடுக்கும் பதிலும் படத்தை ஆரம்பத்திலேயே விறுவிறுப்பாக்கிறது. வண்டியை நிறுத்தி விட்டு இது உளுந்தூர்பேட்டைதானே என்று நடிகர் திலகம் கேட்க ஆம் என்ற பதில் வந்ததவுடன் நான் அந்த ராணியை பார்த்து விட்டு வந்திறேன் என்று நடிகர் திலகம் இறங்கி செல்ல அங்கே ஒரு வீடு. பலர் படுக்கை திண்டில் சாய்ந்திருக்க ஏ சகுந்தலா ஆட தயாராக நிற்க நடிகர் திலகம் என்ட்ரி. அந்த கருநீல பான்ட் அதே கலரில் புல் ஸ்லீவ் ஷர்ட் அணிந்து நடிகர் திலகம் அந்த தூணில் சாய்ந்து நிற்க கைதட்டல் அள்ளுகிறது.
நடிகர் திலகம் எல்லோரையும் போக சொல்லு என்று சொன்னவுடன் அனைவரும் சென்று விட கே கண்ணன் மட்டும் போகாமல் முரண்டு பிடிக்க நடிகர் திலகம் கிண்டல் மரியாதையாக போங்க சார் என்று சொல்ல கண்ணன் நடிகர் திலகத்தை தாக்க அத்தேரி கழுத, என்கிட்டே அடிவாங்கிறதுக்குன்னே இவன் பிறந்திருக்கான் என்று கண்ணனை அடி பின்ன சண்டைக்காட்சியை சிவிஆர் நன்றாக எடுத்திருப்பார். அடி வாங்கி தபலா வாசிப்பவரின் மேல் கண்ணன் விழ ஸ்வரம் சொல்லி அடிப்பது, ஆர்மேனிய பெட்டிக்கருகில் ஆலாபனை போல் பாடி அடிப்பது என்று நடிகர் திலகம் அமர்க்களம் செய்வார். படம் ஆரம்பித்தவுடனே சண்டை அதுவும் கண்ணனை வெளுக்கிறார் என்றதும் தியேட்டரில் அதிலும் குறிப்பாக கீழே செம கைதட்டல் விசில். அந்த 1972ல் மட்டும் ராஜா தவப்புதல்வன் அப்புறம் நீதி என்று மூன்று படங்களில் கண்ணன் சண்டைக்காட்சியில் அடி வாங்குவதை ரசிகர்கள் ஓஹோவென்று ரசிக்கிறார்கள். சண்டை முடிந்தவுடன் மாப்பிளையை பார்த்துக்கடி மைனாக்குட்டி பாடல். சண்டை ஒரு ட்ரீட் என்றால் இந்த பாடலும் ஆடலும் வேறு வகை விருந்து. அதை ஒரு கிளப் டான்ஸ் பாடலாக மட்டுமல்லாமல் ஒரு கஸல் பாணியில் மெல்லிசை மன்னர் இசையமைத்திருக்க தனது பங்கிற்கு டிஎம்எஸ் ஆலாபனையில் அசத்த நடிகர் திலகம் திரையில் அனைவரையும் தூக்கி சாப்பிடுவார். பாட்டு முடியும்போது செம கிளாப்ஸ். காலையில் தூக்கம் விழிக்கும் நடிகர் திலகத்தை எழ விடாமல் சகுந்தலா தடுக்க அத்தேரி கழுத காலங்கார்த்தாலே என்ன லவ்வு என்று நடிகர் திலகம் எழுந்து போக மூன்றாவது காட்சியிலேயே கதைக்குள் வந்து விடுவார்கள்.
வண்டி கொஞ்சம் ஆட ரொம்ப பனியா இருக்கு, ரோடே சரியாக தெரியலை, கொஞ்சம் வண்டியை ஓரமா நிறுத்திட்டு அப்புறம் போகலாம் என்று நடிகர் திலகத்திடம், ஐ எஸ் ஆர் கெஞ்ச, அத்தேரி கழுத பேசாம வாடா என்று நடிகர் திலகம் சொல்லிக் கொண்டிருக்கும்போதே ரோட்டின் ஓரத்திலிருந்து மாடுகளை ஒட்டி வரும் ஒரு மனிதன் தெரிய ஐயோ என்று பிரேக் அடிப்பதற்குள் மோதி விட கீழே இறங்கி பார்த்தால் முதலில் ஒரு மாடும் சக்கரத்திற்கு அடியில் ஒரு மனிதனும் சிக்கிக்கொண்டு இறந்திருப்பார்கள். மனிதனை வெளியிலே இழுத்து பரிசோதிக்கும்போது அவன் குடும்பத்தினர் வந்து விட நடிகர் திலகம் கைது செய்யப்படுவார். நீதிமன்றத்தில் வழக்கு நடக்க மேஜர் நீதிபதியாக இருப்பார். குடிச்சிருந்தேன், ஆனா நிதானத்தை இழக்கலே பனி அதிகமாக இருந்ததாலே ரோடு சரியா தெரியலே என்று வாதிடுவார் நடிகர் திலகம். இல்லை இவரின் அஜாக்கிரதையினாலும் அலட்சியத்தினாலும் இந்த விபத்து நடந்தது என்று அரசாங்க வக்கீல் வாதிட, நான் வேணுமின்னே செய்யல. எனக்கும் அவருக்கும் என்ன பகை? நான் வேணுமினே செஞ்சிருந்தா அங்கே ஏன் நிக்க போறேன்? வண்டி எடுத்து போயிருக்க மாட்டேன்? அத்தேரி கழுத நான் போற ஸ்பீடுக்கு எந்த பய என்னை பிடிக்க முடியும் என்று சத்தம் போட்டு பேச மேஜர் கண்டித்தவுடன் அதே வசனத்தை லோ வாய்ஸில் சொல்லுவார். தியேட்டரில் செம ரெஸ்பான்ஸ். வழக்கை ஒத்தி வைத்துவிட்டு மேஜர் போக அடுத்த காட்சியில் சௌகார் கால் இல்லாமல் கட்டை வைத்து நடக்கும் அவரின் மாமனார் எஸ் வி சுப்பையாவை கூட்டிக் கொண்டு மேஜர் வீட்டிற்கு வர இங்கே நீங்க வரக்கூடாது. ஏதாவது சொல்லனுமுன்னா கோர்ட்டில சொல்லுங்க என்பார். சௌகார் தங்கள் நிலைமையை விளக்குவார். கால் இல்லாத மாமனார், கண் தெரியாத மாமியார், கல்யாணத்திற்கு நிற்கும் நாத்தனார் பள்ளியில் படிக்கும் தனது இரண்டு குழந்தைகள் இவர்களை எப்படி காப்பாற்றுவது? கொலைக்கு காரணமாக இருந்தவனை தண்டித்து விட்டால் என் கணவர் திரும்பி வருவாரா? உங்கள் தீர்ப்பு எங்கள் வாழ்விற்கு வழி செய்யுமா என்று கேட்டு விட்டு போக மேஜர் மனதில் சிந்தனைகள்.
அடுத்து constituional bench போல அதாவது முக்கியமான ஒரு விஷயத்தை முடிவு செய்வதற்கு 5 அங்க அமர்வாக நீதிபதிகள் இருக்க அவர்களுக்கு முன்னால் மேஜர் காலத்திற்கேற்ப தீர்ப்பில் சில மாற்றங்களை கொடு வர அனுமதி வேண்டி நிற்க அந்த அமர்வு அதற்கு அனுமதி கொடுக்க இங்கே கீழமை நீதிமன்றத்தில் நடிகர் திலகத்திற்கு இரண்டு ஆண்டு தணடனை விதித்து அந்த இரண்டு ஆண்டுகளும் இறந்து போன குடும்பத்திற்காக உழைக்க வேண்டும் என மேஜர் தீர்ப்பு சொல்ல நடிகர் திலகம் வேண்டாம் வேண்டாம் என்பார். ஆனால் அந்த தீர்ப்பின்படி அந்த கிராமத்திற்கு அவர் கொண்டு வரப்பட ஊர்க்காரர்கள் அவரை தடுக்க முயற்சிக்க கான்ஸ்டபிள் சந்திரபாபு அனைவரையும் விரட்டி அவரை இறந்து போனவரின் வீட்டிற்கு கூட்டி செல்ல அங்கே அவருக்கு கடுமையான எதிர்ப்பு. சுப்பையா கட்டையால் தலையிலே அடித்து விடுவார். அந்த வீட்டின் கடைக்குட்டி பெண் மட்டும் வந்து ரத்தம் வழிய உட்கார்ந்திருக்கும் நடிகர் திலகத்திடம் பேச சௌகார் பெண்ணை மிரட்டி கூட்டி செல்வார். அவன் கொலைகாரன் என்று அந்த பெண்ணிடம் சொல்லப்பட கொலைகார மாமாவா என்று அந்த குட்டி பெண் அப்பாவியாக கேட்கும். கடைசி வரை அந்த பெண்ணிற்கும் அவள் அண்ணனுக்கும் நடிகர் திலகம் கொலைகார மாமாவாகவே இருப்பார். வருமானம் இல்லாமல் வறுமையில் வாடும் குடுமபத்தில் பெண் குழந்தை கஞ்சி சாப்பிடாமல் சோறு வேணும் என்று அழும். கிளீனர் ஐ எஸ் ஆர், ராத்திரி வந்து தப்பித்து போய்விடலாம் என கூட்டிக் கொண்டு போக ஊர் எல்லையில் காவல் நிற்கும் சந்திரபாபு தடுத்து இன்ஸ்பெக்டர் பாலாஜியிடம் கூட்டி செல்வார்.
பாலாஜி சத்தம் போட தண்ணி குடிக்கிறியான்னு கூட ஒருத்தனும் கேட்க மாட்டேங்கிறான். பசியால நான் துடிக்கிறேன் என்று நடிகர் திலகம் சொல்ல பாலாஜி ஒரு டிபன் காரியரில் சாப்பாடு கொண்டு கொடுக்க அவசர அவசரமாக ஒரு கவளம் சோறு எடுத்து சாப்பிட போகும்போது குழந்தை பசியால் அழுதது ஞாபகம் வர கையை உதறி விட்டு எழுந்து போய் விடுவார். இதற்கிடையில் ஊரில் பண்ணையார் மனோகர். பணக்காரர். சில பல தொழில்களை செய்து கொண்டிருப்பவர் கிராமத்து மக்களுக்கு கடனை கொடுத்து அவர்களின் நிலத்தை அபகரிக்கும் டிபிக்கல் தமிழ் சினிமா வில்லன். அவரது கணக்கு பிள்ளையாக எம் ஆர் ஆர் வாசு. சௌகாருக்கும் ஜெயகௌசல்யாவிற்கும் வேலை கொடுக்கிறேன் வர சொல் என்று சொல்ல சௌகார் மட்டுமே வேலைக்கு செல்வார்.அங்கே மனோரமா அறிமுகம். ட்ராக்டர் பொன்னம்மா என்ற பாத்திரத்தை (சற்றே பிசகினாலும் விரசமாகி விடக்கூடிய ஆபத்து) ஆச்சி நன்றாகவே செய்திருப்பார்.(உண்மையை சொல்ல போனால் படத்தில் நாயகி ஜெயா வரும் நேரத்தை விட மனோரமாவுக்கு ஸ்கிரீன் டைம் அதிகம்) மனோரமாவின் டிராக்டரை நடிகர் திலகம் ரிப்பேரை சரி செய்து தர அவருக்கு கூலியாக மனோரமா 30 ரூபாய் கொடுப்பார். குழந்தைகளுக்கு ஜாங்கிரியும் வீட்டிற்கு தேவையான அரிசி பருப்பும் நடிகர் திலகம் வாங்கி கொண்டு வர ஆசையோடு சாப்பிடும் குழந்தையின் கையிலிருந்து பறித்து கீழே வீசும் சௌகார், ஜெயகௌசல்யாவிடம் அரிசி பருப்பையும் தூக்கி எறிய சொல்ல அவர் அப்படியே செய்வார். நடிகர் திலகம் ஏதும் பேசாமல் விலகி நடக்க கீழே விழுந்த ஜாங்கிரியை குழந்தை பொறுக்கி எடுத்து சாப்பிட முயற்சிக்க சௌகார் அந்த பெண்ணை அடித்து எங்கியாவது போய் செத்து தொலை என ஆத்திரத்தில் கத்த அந்த குழந்தை அழுது கொண்டே ஆற்று பக்கம் போவதை பார்த்து நடிகர் திலகம் நிறுத்தி அந்த பொண்ணை கூட்டிக் கொண்டு போய் சாப்பிட வாங்கி கொடுப்பார். அவளின் அண்ணனையும் வரவழைத்து சாப்பிட கொடுக்க முதலில் மறுக்கும் அந்த சிறுவனிடம் தனது மனதில் இருப்பதை நடிகர் திலகம் ஆற்றாமையோடு வெளிப்படுத்த (நான் படிக்காதவன்ப்பா, எப்படி உனக்கு புரிய வைக்கிறதுன்னு தெரியலே. லாரியில் பாரத்தை ஏத்தினா அது தாங்கும். ஆனா பாவத்தை மனசில் ஏத்தின்னா என்னாலே தாங்க முடியாதுப்பா - ஏ எல் நாராயணன்) அந்த பையனும் சாப்பிடுவான்.
இப்படி இருக்க ஒரு நாள் காலையில் தனது இரு குழந்தைகளை காணவில்லை என்று சௌகார் பதற அனைவரும் சென்று பார்த்தால் வயலில் ஏரில் ஒரு மாட்டை பூட்டி மற்றொரு பக்கம் தான் நின்று நடிகர் திலகம் அந்த குழந்தைகளின் உதவியோடு நிலத்தை சமன்படுத்த முயற்சி செய்து கொண்டிருப்பார். அது சரியாக வராது. சுப்பையா நடிகர் திலகத்தை கண்டபடி திட்டுவார். குடிகார பயலே என்று இரண்டு முறை சொல்ல நடிகர் திலகம் வெகுவாக கோபப்படுவார். (உன் காசிலேயே குடிச்சேன்? நான் சம்பாதிக்கிறேன் குடிப்பேன். ஆடுவேன் பாடுவேன். அந்த கோபத்தை அருமையாக வெளிப்படுத்துவார்). கிராமத்தில் ஒரு சாராய கடைக்கு முன்னால் நடிகர் திலகம் நின்று கொண்டிருக்க ஒரு பெண் தனது கணவனிடம் குடிக்காதே என்று கெஞ்ச நாளையிலிருந்து குடிக்க மாட்டேன். இன்னிக்கு மட்டும் என்று பதில் சொல்ல நடிகர் திலகம் ஒரு பஞ்ச் அடிப்பார். தெருவுக்கு நாலு சாராய கடையை திறந்து வச்