View Full Version : Nadigar Thilagam Sivaji Ganesan - Part 22
sivaa
31st March 2022, 07:51 AM
ஒரு முறை தர்மர்.
கண்ணனிடம் சென்று கண்ணா.
நானும் இல்லையென்று வந்தவர்கெல்லாம் அள்ளி அள்ளி
கொடுத்திருக்கிறேன்.
ஆனால் கர்ணனையே!
கொடை வள்ளல் என புகழ்கிறார்கள்....
அப்படி என்னையும் புகழாமல்
கர்ணனை புகழ காரணம் என்ன
என கேட்டுள்ளார். தர்மர்.
அதற்கு கண்ணன் பரிசித்து
பார்த்துவிடலாம் என கூறி
தர்மரிடம் ஒரு தங்க மலையும்
கர்ணனிடம் ஒரு தங்கமலையும்
கொடுத்து மாலைக்குள் யார்?
கொடைவள்ளல் .
என தீர்மானிப்போம்.
என்றாராம்....
தர்மரோ?மலையை வெட்டி வெட்டி
தர்மம் செய்தபோது பாதி மலைதான்
மாலை வரை தர்மம் செய்தாராம்.
கண்ணன்பார்த்தபோது!
சரி கர்ணன் என்ன செய்துள்ளான்.
என பார்ப்போம் என்று சென்றால்
கர்ணன் ஒரு அரியணையில் அமர்ந்து
மலையை பார்த்து கொண்டிருந்தாராம்..
கண்ணனுக்கு ஆச்சரியம் கொடுத்தமலை அப்படியே உள்ளது
மாலை ஆகிவிட்டது ...
தீர்ப்பை கேட்டு கொடுத்துவிடலாம்
என கர்ணன் அருகே சென்று
வினாவினார்....
கர்ணன் பதில்கூறாமல் மலையை
பார்த்து கொண்டிருந்தார்.
அப்போது தர்மரும் வந்து பார்த்து விட்டு
இனி கொடைவள்ளல் நானே!
என தற்பெருமை கொண்டிருந்த வேலையில் ஒருவந்து என்வேலை
முடிந்தது எங்கள் மலையை
எடுத்து கொள்கிறோம்.
என்றாராம்.
கர்ணன் புறப்படும் வேலையில்
கண்ணன் என்ன நடக்கிறது என்று?
அதற்கு ஒருவர் கூறினாராம் நீங்கள்
தங்கமலையை கொடுத்த மறு நிமிடமே!
என்னை அழைத்து இந்தமலையை
உன்னிடம் கொடுக்கிறேன்.
நமது நாட்டு மக்களுக்கு பிரித்து
கொடுத்து விடு!
என்று காலையிலே கொடுத்து விட்டார்.
அனைவரும் வேலைக்கு சென்றுவிட்டனர்.
மாலை வந்து எடுத்து கொள்கிறேன்
கொடுத்ததை பார்த்து கொள்ளுங்கள்.
என்றேன்.
அவரும் பார்த்து கொண்டு நான் வந்ததும்
ஒப்படைத்து செல்கிறார்.
என்றாராம்.
அதற்கு கண்ணன் பார்த்தீரா?
தர்மரே?
நீர் கொடுக்க போவதை ஊரெங்கும்
சொல்லி கொடுத்தும்
பாதி புண்ணியம் தான் சேர்த்தீர்.
ஆனால் சொல்லாமல் கொடுத்து
முழு புண்ணியம் மட்டுமல்ல?
வள்ளல் தன்மை பெருக்கி கொண்ட
கர்ணன் பெயர் என்றும்நிலைத்திருக்கும்....
சொல்லி கொடுத்த தர்மம் அள்ளி
தின்றவுடன் மறைந்து விடும்....
என்றாராம்.
கண்ணன்.
அப்படி சொல்லாமல் செய்த நடிகர்திலகம் புகழ் இன்றும் முதலாவதாக நிற்கிறது...
சொல்லி கொடுத்த தர்மம்.
புதிதாக வந்தவர் கடைசியில்
காலுக்கு கீழே!
5859
Thanks Sivaji Palanikumar (Nadigar thilagam Sivaji Visirikal)
sivaa
5th May 2022, 06:15 AM
மதுரையில் மட்டும் சுமார் பத்து லட்சம் மக்கள் தொகை இருந்த காலத்தில் மதுரை சென்ட்ரல் திரையரங்கில் மட்டுமே 6.50 லட்சம் பேர் இந்த படத்தை கண்டு களித்து இருக்கின்றனர். அதன் பின்னும் 183 நாட்கள் பல திரை அரங்கு களில் ஓடி இருக்கின்றது. சுமார் ஒரு வருடம் வரை தொடர்ந்து ஓடி இருக்கின்றது.
சென்ட்ரல் திரையரங்கில் மட்டும் பார்த்த 6.5 லட்சம் மக்கள் இன்றைய கட்டணமான ரூபாய் 100 - 150 என்று கணக்கிட்டு பார்த்தால் ரூபாய் 6.50 கோடி முதல் 9.75 கோடி வரை வருகிறது.அதன் பின்பு 183 நாட்கள் ஓடி இருக்கின்றது. கிட்டத்தட்ட மதுரை நகரில் மட்டுமே இன்றைய கட்டணத்தில் கணக்கிட்டால் சுமார் 12 to 13 கோடிகள் வரை வர வாய்ப்பு உள்ளது.
கோடிக்கணக்கான பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படங்களின் வசூலை காட்டிலும் இந்த படம் மிகப்பெரிய வரவேற்பை 1970 களில் பெற்று இருந்தது என்று நாம் அறியலாம்
5860
Thanks Chandrasekaran Veerachinnu
sivaa
5th May 2022, 06:20 AM
இன்றோடு தனது 50 வது ஆண்டை நிறைவு செய்யும் பட்டிக்காடா பட்டணமா படத்தை பற்றி சில வரிகள்....
1972ம் ஆண்டு மே மாதம் 6ந் தேதி வெளியாகி தமிழகமெங்கும் மற்றும் கடல் கடந்த இலங்கையிலும் சக்கைப்போடு போட்ட ஒரு மாபெரும் ப்ளாக் பஸ்டர் படம்....
அது வரை வெளிவந்த கறுப்பு வெள்ளை படங்களை வசூலில் முறியடித்த படம்.....
அதன் பிறகு எத்தனையோ கருப்பு வெள்ளை படங்கள் வெளி வந்தும் இதன் சாதனை முறியடிக்கபடாமலே கருப்பு வெள்ளை படங்களின் சகாப்தம் முடிந்து விட்டது.....
திரையிட்ட இடங்களிலெல்லாம் நூறு நாட்கள் ஓடிய படம். முக்கிய நகரங்களில் வெள்ளி விழா கொண்டாடிய படம்....அதிக செலவில்லாமல் குறைந்த செலவில் எடுக்கப்பட்ட திரைப்படம்.......
தயாரிப்பாளருக்கும் வினியோகஸ்தர்களுக்கும் திரையரங்க உரிமையாளர்களுக்கும் பணத்தை வாரி வாரி வழங்கிய படம்.......
இசைத் தட்டு , வசனத் தட்டு விற்பனையில் சாதனை படைத்த படம்
மதுரை சோழவந்தானிலும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களிலும் 15 நாட்கள் தொடர் படப்பிடிப்பில் வெளிப்புற படப்பிடிப்பு நிறைவடைந்தது...........
படத்தின் நாயகி மதுரையில் ஸ்டார் ஓட்டலில் தங்கிக் கொண்டு தினசரி படப்பிடிப்பில் கலந்து கொண்டாலும் படத்தின் நாயகன் நடிகர் திலகம் சோழவந்தானில் பழம் பெரும் நடிகர் டி ஆர் மகாலிங்கம் அவர்களின் பங்களாவிலேயே தங்கிக் கொண்டார்...
இயக்கம் பி மாதவன் அவர்கள்
கதை வசனம் பாலமுருகன் அவர்கள்
இசை மெல்லிசை மன்னர் அவர்கள்
பாடல்கள் கவியரசர் அவர்கள்
ஒளிப்பதிவு பி என் சுந்தரம் அவர்கள்
தயாரிப்பு பி மாதவன்..........
நடிகர்கள் நடிகர் திலகம் விகே ராமசாமி எம்ஆர்ஆர் வாசு சதன் மற்றும் பக்கோடா காதர் ....நடிகைகள் கலைச்செல்வி ஜெயலலிதா மனோரமா சுகுமாரி புதுமுகம் சுபா மற்றும் எஸ்என் பார்வதி.......
கலைச்செல்வி ஜெயலலிதா அவர்களுக்கு சிறந்த நடிகை விருதையும், சிறந்த படம் விருதையும் பிலிம்பேர் வழங்கியது....தேசிய அளவில் தமிழில் சிறந்த விருதை பெற்ற படம்
இந்த படத்தை பற்றிய தங்களின் மேலான கருத்துக்களை பகிர்ந்து கொள்ளலாமே...
5861
Thanks Lakshmanan Lakshmanan (Nadigarthilagakm Fans)
senthilvel
10th May 2022, 05:04 PM
பொதுவா யார் நடிகர்திலகத்தை பத்தி தப்பா பேசுனாலும் அதுக்கு நாம பதில் சொல்ல வேண்டியது அவசியமில்லே.ஏன்னா எதுக்குறது யாருங்கறது முக்கியம்.நடிகர்திலகம் அப்பிடின்னா அது ஒரு மலை.இமயமலைக்கு மேலே.ஏன்னா இமயமலை வளருதோ இல்லையோ சிவாஜி புகழ் நாளுக்கு நாள் வளந்துகிட்டேதான் இருக்கு.அதை அசைக்க முடியாது.
போனவாரம் பயில்வான் ரங்கநாதன் நடிகர்திலகத்தை பத்திஒரு வீடியோ போட்டிருந்தாரு.இதுக்கெல்லாம் பதில் சொல்ல வேண்டியதில்லே.சாதாரணமா இந்த மாதிரி நபர்களுக்கெல்லாம் பதில் சொல்லித்தா சிவாஜி புகழ் வளருப் போகுதுன்னும் அர்த்தமில்லே! நடிகர்திலகத்தோட பாணி என்னன்னா இதையெல்லாம் சட்டை செய்யாம போறதுதா அவரோட வழக்கம் .அதே கருத்துதா நம்மதும்.ரங்கநாதன் இதே வேலையா வெச்சிருக்காருன்னோ இல்லையா? ஏன்? சிவாஜியப் பத்தி பேசுன்னத்தா எல்லோரும் பாக்கறாங்க அப்பிடிங்கறதாலே!
அவரோட அந்த பப்ளிசிட்டிக்கு கூட நடிகர்திலகந்தா தேவைப்படுகிறார்.
நாம பதிலுக்கு பதில் அவர பத்தி பேசி நம்ம தகுதிய குறைச்சுக்க விரும்பல.
அவரு என்ன வீடியோவில சொல்லியிருந்தாரோ அவரு சொன்ன வரிகளுக்கு தான் இந்த பதில் வீடியோ.
அவர் சொன்ன பாயிண்டுகளை பாப்போம் வரிசையா...
முதல்ல ....
சிவாஜிக்கும் இந்திரா அம்மையாருக்கும் பிடிக்காம போயிருச்சுன்னு சொல்லியிருக்காரு .
இதுல என்ன விஷயம்னா ,சிவாஜிய பிடிக்காம போனதுக்குத்தா இந்திரா அம்மா கௌரவ m.p.பதவி கொடுத்தாங்களா ?
அடுத்ததா பயில்வான் சொல்றாரு.
எம்.ஜி.ஆரே கட்சி ஆரம்பிச்சுட்டார்.சிவாஜி ஆரம்பிச்சுதுலே என்ன தப்பு? அப்பிடீன்னு சொல்லியிருக்காரு .
இதுக்கு விளக்கம் சொல்ல வேண்டிய அவசியம் இல்லே.அதுலேயே அந்த வரியிலேயே இருக்கே !
அப்ப அவர விட இவருக்குத்தா தகுதி இருக்குதுன்னு அர்த்தம் ஆயிடறதா இல்லையா ?
மன்ற தலைவர் ராஜசேகர் mla ஆனார் என்று சொல்கிறார் அடுத்ததாக.ஆக மன்ற தலைவரையே mla ஆக்கிய பெருமை சிவாஜிக்கு இருக்கிறதல்லவா ?
சிவாஜிக்கு அரசியல் ஆசையே கிடையாது.கூட இருந்தவங்க தான் ஆரம்பிக்க வெச்சாங்க அப்பிடின்னு அடுத்த பாயிண்டை சொல்லறார் பயில்வான்.அப்ப அரசியல் ஆசையே இல்லாத மனிதர்தான் சிவாஜி அப்பிடிங்கற
அர்த்தம் தானே !.கட்சின்னு ஆரம்பிச்சா அது அரசியல் ஆசை தானே! அது சிவாஜிகிட்டே இல்லேன்னு இவர் சொல்றப்போ அத விட நல்ல தகுதி என்ன வேணும் ?
ரங்கநாதன் அடுத்ததா சொல்றப்போ ,சிவாஜி மக்களோட நல்லா கலந்து பழக மாட்டாருன்னு சொல்றாரு.நம்ம அரசியல் இங்க எப்படி இருக்குன்னு முதல்ல நாம பாக்கனும்.ஒரு வார்டு கவுன்சிலரா நிக்கறவங்க கூட பாக்கற மக்களை கையெடுத்து கும்பிடறதும் ,கை அசைக்கறதையும் சளைக்காம செய்யறான்.ஆனா அவன் கை அசைக்கறதுக்கு பின்னாடி, அவன் யாரு ?அவன்குணம் என்னானும் யாராச்சும் யோசிக்கறாங்களா ?
வெறுமனே கை அசைச்சா போதும் ?அவன் பெரிய தலைவன் ஆயிடறான் இங்கே ?
தமிழ்நாட்டுல கல்யாணம் காதுகுத்து கலா நிகழ்ச்சிகள் மத்த விசேஷங்கன்னு நெறய நிகழ்ச்சிகளில் மனைவியோடு வந்து கலந்துகிட்ட எந்த நடிகனாவது சிவாஜிக்கு இணையா இருக்காங்களா ?
காங்கிரஸ் கட்சி வளந்ததுக்கு காரணமே சிவாஜிதான் .மக்களோட கலந்துக்காம இத செஞ்சிருக்க முடியுமா ?ஆனா மத்த தலைவருங்க செஞ்சமாதிரி சுயநலமாவோ தன் புகழ் வளத்துக்கனும் அப்பிடிங்கறதுக்காகவோ செய்யாமயும் ,
தான் தலைவனாக நினைக்காமயும் ஒரு நல்ல தலைவனுக்காக செஞ்சார்.இதை மறுக்கறதுக்கு யாராச்சும் இருக்காங்களா? இல்லையே!
அப்புறம் சாப்பாட்டு விஷயம்.
சிவாஜி தனியாத்தான் சாப்பிடுவாராம்.
சாப்பாட்டு விஷயம்கறதாலே ஒரு சாப்பாட்டு பழமொழிதான் நினைவுக்கு வருது.
முழுப் பூசணிக்காயை சோத்துல மறச்ச மாதிரின்னுட்டு.இதுக்கு பதிலே சொல்ல வேண்டியதில்லே!
சாப்பாட்டு விஷயத்துலே உலகத்திலேயே ரொம்ப பெரிய ஃபேமஸான விஷயம் அன்னை இல்ல சாப்பாட்டு விஷயம் தான் .
இப்பவும் இளையதிலகம் பிரபு ,விக்ரம் பிரபு நடிக்கற படங்களில் நடிக்கற நடிகர்கள் ரொம்ப பெருமையா பேசற விஷயம் அன்னை இல்லத்து சாப்பாட்டு விஷயம் தான்.இது யார் சொல்லிக் கொடுத்த வழி?
உலகத்துல எந்த நடிகன் வீட்டுல இது மாதிரி விஷயம் இத்தன காலமா நடக்குது?
இந்த வீடியோல சில கேள்விய இவரே கேட்டுக்கறார் அதுக்குஅவரே பதிலும் சொல்லிக்கிறாரு.
அந்த நடிகர்படம் தோத்தா ஏன்னு டூர் அடிப்பாராம் .சிவாஜி தானுன்டு தன் வேலையுண்டுன்னு இருப்பாராம்.
டூர் அடிச்சா நல்ல நடிகன்னு பேர் வந்துருமா? வித்தை தெரியாதவன் தான் ஆயிரம் தில்லுமுள்ளு செய்வான்.
இவர் சொன்ன இன்னொரு தவறான தகவல் என்னான்னா, கட்சி ஆரம்பிச்சா அந்த தலைவன்தான் செலவு பண்ணனும் சொல்லிட்டு சிவாஜியை குறிப்பிடுகிறார்.தமிழ்நாட்டுல சிவாஜிய தவிர எந்த தலைவனும் சொந்த காசுல கட்சிய நடத்துலே.சுவத்துல சின்னம் வரைஞ்சத கூட அழிக்கச் சொன்ன தலைவனும் சிவாஜி ஒருத்தர்தான்.இது தினமலர் நாளிதழே போன எலெக்ஷன்லே ஒரு செய்தியாவே போட்டிருக்கு.
ரங்கநாதன் சொல்ற விஷயங்களிலேயே சில குழப்பமா தகவல்களை மாறிமாறி சொல்றாரு.அத நாம எப்படி புரிஞ்சு பதில் சொல்றதுன்னே தெரியலே.அந்த வீடியோலேயே ஒரு கமெண்ட் இருக்கு.நீங்க என்ன சொல்றீங்க! ஒரே குழப்பமா இருக்குன்னு.
இந்த வீடியோல பயில்வான் சொன்ன உண்மை விஷயங்களையும் பாக்கலாம்.
சிவாஜி தானுன்டு தன் வேலையுண்டுன்னு இருப்பாராம்.வீணாக எந்த விஷயத்திலேயும் தலையிட மாட்டாராம்.இதச் சொன்ன பயில்வான்,
அடுத்ததா சொன்ன ஒரு விஷயம்,
சிவாஜி தான் மட்டும் நடிச்சா போதாதுன்னு நினைக்கிற மனிதர்.தன் கூட நடிக்கிறவங்களும் நல்லா நடிக்கனும்னு நினைக்கறவர்னும் சொல்லியிருக்கார்.
இதெல்லாம் தான் உலகத்துக்கு தெரிஞ்ச விஷயமாச்சே.
அப்புறமா இன்னொரு விஷயத்தையும் சொல்றாரு.
சிவாஜி எந்த நடிகையையும் அடிமையா நினைக்கல, வாழ்ந்ததில்லேன்னும் சொல்லியிருக்கார்.
இந்த மாதிரி விஷயங்கள் எல்லாம் மனசுக்குள்ள இருக்கு.ஆனா பரபரப்புக்காக பய்ளிசிட்டிக்காகவும்தான் அவர் இப்படி செய்கிறார்னு பேசறதிலிருந்து தெரியுது.
ரங்கநாதன் குழப்பமாத்தான் பேசறாரு.ரொம்ப முரண் இருக்கு.
தெளிவா திடமா பேசற ஆளுகளுக்குத்தா பதில் சொல்லனும்.
sivaa
14th May 2022, 06:25 PM
திருடனுக்கு சிவாஜி கொடுத்த பரிசு |Sivaji Life History |Writer M.G.S.Inba | Part-54
https://youtu.be/DQZ8_QUi49M
Thanks Thirai chirpi
sivaa
9th September 2022, 06:57 AM
“சிவாஜிக்கு நிஜமாகவே ரத்தத் திலகமிட்ட பெண்”
- கவிஞர் வாலி
ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் கூடியிருந்த பிரம்மாண்டமான அரங்கில், என் இடப்புறம் சிவாஜி அவர்களும், வலப்புறம் திரு.துளசி வாண்டையார் அவர்களும் அமர்ந்திருக்க நான் கவியரங்கத்தைத் தொடங்கினேன்.
என் தலைமைக் கவிதை இதுதான்.
‘ஓ !
அர்த்தமுள்ள நடிகனே!
அவதார புருஷனே!
நீ
அஜந்தா எல்லோரா போல்-
அபூர்வமானவன்.
நீ-
பெரியாருக்குப்
பிரியமானவன்;
இருப்பினும்-
பெருமாள்தான்
உன்னைப்-
பெரும் ஆள் ஆக்கினார்.
நாங்களெல்லாம்-
பிறந்ததால் நடிக்கிறோம்;
நீ-
நடிக்கவே பிறந்தவன்.
உன்-
நிஜத்தில் நடிப்பில்லை;
உன்-
நடிப்பில் நிஜமிருக்கிறது.
நீ-
அழுதாலும், சிரித்தாலும்
மெய்யென எண்ணுகிறோம்;
காரணம்-
அதில் உயிர் இருக்கிறது;
ஆயினும்-
நீ
அக்கான்னா போல்
தனித்து நிற்கும்
அற்புதக் கலைஞன்!
பால்ய வயதில்
கல்வி கற்க
வாய்ப்பில்லாத நீ-
பிறகு ஒரு
கல்லூரியாகவே
மாறியிருக்கிறாய்!
அன்று நீ-
நாடகத்திலிருந்து
வந்திருக்கலாம்;
இன்று-
உன்னிடமிருந்துதான்
நாடகங்கள்
உற்பத்தியாகின்றன.
உன்
விழிகளைக் காட்டிலும்
அதிக
மொழிகள் தெரிந்தவன்
மாநிலத்தில் இல்லை!’
‘பதவி பழம் வேண்டி
பாரெல்லாம் சுற்றிய
பழனியாண்டி அல்ல நீ;
அன்னையை மட்டுமே
வலம் வந்து
அருட்கனி வாங்கிய
கணேசன்!’
– இப்படி நான் பாடியவுடன் அரங்கம் கைதட்டலால் அதிர்ந்தது. உடனே, கூட்டத்திலிருந்து ஒரு நடுவயதுப் பெண்மணி மேடைக்கு ஓடி வந்தார்.
முற்றிலும் யாரும் எதிர்பாராத வண்ணம், அந்தப் பெண்மணி ஒரு சிறிய பேனாக் கத்தியால் தன் இடது கையைக் கீறி, அதில் வெளிப்போந்த உதிரத்தை வழித்தெடுத்து சிவாஜியின் நெற்றியில் திலகமிட்டார்.
‘ரத்தத் திலக’த்தில் நடித்த நடிகனின் நெற்றியில் ரத்தத்திலகம் இடப்பெற்று, உதிரம் சிவாஜியின் நீண்ட நாசி வழியே வழிந்தது.
– வாலியின் ‘நானும் இந்த நூற்றாண்டும்’ நூலிலிருந்து…
Ithayakkani Cinema Special
sivaa
2nd October 2022, 03:05 PM
நடிகர் திலகம், நடிப்புச் சக்கரவர்த்தி, சிம்மக்குரலோன் என்று மக்களால் அழைக்கப்படும்
விழுப்புரம் சின்னையா மன்ராயா் கணேசமூர்த்தி எனும் சிவாஜி கணேசன் அவர்களின் பிறந்த நாளில் அவரை நினைவு கூர்ந்து வணங்கி
மகிழ்கின்றது நம் குழு
சிவாஜி கணேசன் அவர்கள்,
சின்னையா மன்றாயருக்கும்,
ராஜாமணி அம்மாளுக்கும் 4 வது மகனாக விழுப்புரத்தில் 1928 ஆம் ஆண்டு அக்டோபர் 1 ஆம் தேதி பிறந்தார்.
சிவாஜி கணேசனின் பூர்வீகம் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள வேட்டைத்திடல் என்ற கிராமம். ராஜாமணி அம்மாளின் பூர்வீகம் விழுப்புரம். அங்குதான் 1928 இல் சிவாஜிகணேசன் பிறந்தார். சிவாஜியின் தந்தை சின்னையா மன்றாயர் இரயில்வே துறையில் பணியாற்றிக் கொண்டிருந்தார் மேலும் அவர் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபாடு கொண்டவர். ஒருமுறை வெள்ளைக்கார சிப்பாய்கள் செல்லும் இரயிலுக்கு சின்னையா வெடி வைத்ததற்காக அவருக்கு ஆங்கிலேய அரசால் 7 வருடம் சிறை தண்டனை வழங்கப்பட்டது. சின்னையா மன்றாயர் கைது செய்யப்பட்ட அதே நாளில்தான்
சிவாஜி பிறந்தார்.
மேடை நாடக வாழ்க்கை :
சிறுவயதில் வீரபாண்டிய கட்டபொம்மன் நாடகத்தைப் பார்க்க தந்தையுடன் சென்றபோது தானும் நடிகனாக வேண்டும். கட்டபொம்மனாக நடிக்க வேண்டும் என்ற எண்ணம், சிவாஜி கணேசன் மனதில் ஆழமாகப் பதிந்தது. நடிப்பின் மீது எற்பட்ட ஈர்ப்பின் காரணமாக தனது ஏழு வயதில் பெற்றோருக்கு தெரியாமல் திருச்சியில் முகாமிட்டு இருந்த மதுரை ஸ்ரீபாலகான சபா என்ற நாடகக்குழுவில் சேர்ந்தார். அந்த நாடகக் குழுவில் இருந்த சின்ன பொன்னுசாமி படையாச்சி என்பவர் தான் சிவாஜி கணேசனுக்கு நடிப்புப் பயிற்சி அளித்தார்.
ஏழு வயது சிறுவனாக சிவாஜி கணேசன் நடித்த முதல் மேடை நாடகம் ராமாயணம் அதில் அவர் போட்ட வேடம் சீதை. ஆரம்பத்தில் பெண் வேடங்களில் நடித்த இவருக்கு பிறகு பரதன், சூர்ப்பனகை, இந்திரஜித்
என பல வேடங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. சிறுவனாக நாடகங்களில் நடித்த போதே, மாறுபட்ட வேடங்களில் நடிக்கும் ஆற்றலைப் பெற்ற்றிருந்தார்.
திராவிட கழக மாநாட்டில் (1946), பேரறிஞர் அண்ணா எழுதிய சிவாஜி கண்ட இந்து ராஜ்யம் என்ற நாடகத்தில் பேரரசர் சிவாஜியாக நடித்த கணேசனின் நடிப்புத்திறனை மெச்சிய தந்தை பெரியார், அவரை 'சிவாஜி' கணேசன் என்று அழைத்தார். அன்றிலிருந்து அந்த பெயரே நிலைத்தது.
செய்த உதவிகள் :
கல்வி கூடங்கள் கட்டுவதற்கும், இயற்கை சீற்றங்களின் போதும்,போர் கால சமயங்களிலும் பல நிதி உதவிகளை சிவாஜி கணேசன் செய்துள்ளார். 1959ல் மதிய உணவு திட்டத்திற்கு அன்றைய பாரத பிரதமர் ஜவஹர்லால் நேரு அவர்களிடம் ரூபாய் ஒரு லட்சம் (இன்றைய மதிப்பில் ஒரு கோடி) வழங்கியுள்ளார். அது மட்டுமின்றி , 1961ல் தாம்பரத்தில் காசநோய் மருத்துவமனை கட்டுவதற்காக ரூபாய் ஒரு லட்சம் வழங்கி உள்ளார். 1960ல் பெருவெள்ளம் சென்னையை சூழ்ந்தபோது காமராஜர் முன்னிலையில் 1 லட்சம் உணவு பொட்டலங்களை அவரது இல்லத்தில் தயாரித்து கொடுத்ததோடு 800 மூட்டை அரிசியும் கொடுத்துள்ளார்.
1965ல் இந்தியா-பாகிஸ்தான் போரின் போது அன்றைய பிரதமர் லால்பகதூர் சாஸ்திரியிடம், திருமதி. கமலா அம்மையாரின் 400 பவுன் தங்க நகைகளையும், பெங்களூரில் தனக்கு பரிசாக கிடைத்த 100 பவுன் தங்க பேனாவையும், மொத்தம் 500 சவரன் போர் நிதியாக கொடுத்தார். கயத்தாரில் கட்டபொம்மன்
தூக்கிலிடப்பட்ட இடத்தை விலைக்கு வாங்கி, அதில் தனது செலவில் கட்டபொம்மனுக்கு சிலை வைத்தார் அது இப்போதும் நினைவு சின்னமாக திகழ்கின்றது.
1968-ல் உலகத்தமிழ்மாநாடு பேரறிஞர் அண்ணா தலைமையில் நடைபெற்றபோது சென்னை கடற்கரையில் திருவள்ளுவருக்கு தானே முன்மாதிரியாக நின்று சிலை அமைத்து கொடுத்தார். மேலும் உலக தமிழ் மாநாட்டிற்கு நிதியாக ரூபாய் 5 லட்சம் நிதியாக அளித்தார். தனக்கு சொந்தமான கோடம்பாக்கம் நிலத்தை நலிந்த நடிகர் நடிகைகள் வீடு கட்டிக்கொள்ள இலவசமாக வழங்கினார்.
திரைப்பட வாழ்க்கை :
சிவாஜி கணேசன் 1952 இல்
பி. ஏ. பெருமாள் முதலியார்
என்பவர் தயாரித்த பராசக்தி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானார். இது கிருஷ்ணன்-பஞ்சு என்ற இரட்டையரால் இயக்கப்பட்டது. இந்த திரைப்படம் வணிக ரீதியாக பெரிய வெற்றியைப் பெற்றது, பல திரையரங்குகளில் 175 நாட்களுக்கு மேல் ஓடியது, மேலும் அது வெளியிடப்பட்ட 62 மையங்களிலும் 50 நாட்களுக்கு மேல் ஓடி வெற்றி பெற்றது.
சக்தி நாடகசபா நடத்திய நூர்ஜஹான் என்ற நாடகத்தில், நூர்ஜஹானாக நடித்த சிவாஜியின் நடிப்பு நேஷனல் பிக்சர்ஸ் பி.ஏ.பெருமாள் அவர்களை வெகுவாகக் கவர்ந்தது. எனவே பராசக்தி திரைப்படத்தில் சிவாஜி கணேசனை கதாநாயகனாக நடிக்க வைக்க வேண்டும் என்று தீர்மானித்தார். இதற்காக திருச்சியிலிருந்து சென்னைக்கு விமானத்தில் அழைத்து வரப்பட்ட கணேசனைப் புகைப்படமெடுத்து வசனம் பேசச் செய்தனர். அவர் திரைப்படத்தில் வரும் "சக்ஸஸ்" என்ற வசனத்தைப் முதல் முதலாக பேசி நடித்தார்.
இதற்குப் பல வித எதிர்ப்புகள் கிளம்பின. படத்துக்குப் பண உதவி செய்த ஏ.வி.எம். செட்டியாரும், புதுமுகத்தை வைத்துப் படமெடுப்பதை விரும்பவில்லை. ஆனால் பி.ஏ. பெருமாள் மட்டும் கணேசன் தான் நடிக்க வேண்டும் என்று உறுதியாக இருந்ததால் பராசக்தி படத்தில் சிவாஜி நடித்தார். இப்படத்தில் நடித்ததற்காக கணேசனுக்கு மாத சம்பளமாக ₹250 வழங்கப்பட்டது. தமிழ்நாட்டின் பிற்கால முதல்வர் மு. கருணாநிதி இப்படத்திற்கு திரைக்கதை, வசனம் எழுதினார்.
நீளமான மற்றும் ஆழமான வசனங்களும் சிவாஜி கணேசனின் ஒப்பற்ற நடிப்பும் ஒரே படத்தில் இவருக்கு மாபெரும் கலைஞன் அந்தஸ்து கொடுத்தது. 'சிவாஜி' கணேசன் 275 தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார். ஒன்பது தெலுங்குத் திரைப்படங்கள், இரண்டு ஹிந்தித் திரைப்படங்கள் மற்றும் இரண்டு மலையாளத் திரைப்படத்திலும் நடித்துள்ளார்.
சரித்திர மற்றும் புராண படங்கள் :
இவர் நடித்த சரித்திர வீரா்களின் கதாபத்திரங்களான மனோகரா, ராஜ ராஜ சோழன், வீரபாண்டிய கட்டபொம்மன், கர்ணன் போன்ற திரைப்படங்கள் வசனத்திற்காகப் பெயர் பெற்றவை.
விடுதலைப் போராட்ட வீரர்களின் வேடங்கள்
அதே போல் சுதந்திரத்திற்காக பாடுபட்ட கட்டபொம்மன், வ. உ. சி போன்ற தேச தலைவர்களின் பாத்திரங்களை ஏற்றுத் திறம்பட நடிக்க செய்தார். 1959 ஆம் ஆண்டு வெளியான வீரபாண்டிய கட்டபொம்மன் படத்தில் நடித்ததிற்காக ஆப்பிரிக்க - ஆசியத் திரைப்பட விழாவில் (கெய்ரோ,1960), சிறந்த நடிகருக்கான விருது வழங்கப்பட்டது. கப்பலோட்டிய தமிழன் திரைப்படத்தில் வ. உ. சிதம்பரம் பிள்ளையாகவும் , ராஜபார்ட் ரங்கதுரை படத்தில் பகத்சிங், திருப்பூர் குமரன் போன்றோரின் வேடங்களிலும் , சினிமா பைத்தியம் படத்தில் வாஞ்சிநாதனாகவும் நடித்து திரைப்படங்களின் மூலம் சுதந்திர போராட்ட வீரர்களின் தியாகத்தை மக்களுக்கு உணர்த்தினார்.
புராண படங்கள் :
மேலும் சிவாஜி கணேசன் பல புராண கதாபாத்திரங்கள் மற்றும் கடவுளின் கதாபாத்திரங்களில் தோன்றி நடித்துள்ளார். திருவிளையாடல் திரைப்படத்தில் சிவபெருமானாக நடித்தபோது சிவபெருமானுக்கே உருவம் கொடுத்தவர் சிவாஜி கணேசன் என்று மக்களால்
புகழ பெற்றவர்.
சரஸ்வதி சபதம் திரைப்படத்தில்
நாரதராகவும் ,
திருவருட்செல்வர் திரைப்படத்தில்
சேக்கிழார், சுந்தரமூர்த்தி நாயனார், திருநாவுக்கரசு நாயனார், திருக்குறிப்புத் தொண்ட நாயனார் போன்ற நாயன்மார்களின் வேடங்களிலும் நடித்து புகழ் பெற்றார். மேலும் கந்தன் கருணை திரைப்படத்தில்
வீரபாகுவாகவும் , திருமால் பெருமை திரைப்படத்தில் பெரியாழ்வார், தொண்டரடிப்பொடி ஆழ்வார், திருமங்கை ஆழ்வார் போன்ற ஆழ்வார்களின் கதாபாத்திரங்களில் தத்ரூபமாக தனது நடிப்பை வெளிப்படுத்தினார். சம்பூர்ண ராமாயணம் படத்தில் பரதனாக நடித்தார். அத்திரைப்படத்தைப் பார்த்த மூதறிஞர் ராஜாஜி அவர்கள் 'நான் பரதனைக் கண்டேன்' என்று பாராட்டினார்.
குடும்ப மற்றும் சமூக திரைப்படங்கள்
’பா’ வரிசைப் படங்கள் :
’பா’ வரிசைப் படங்கள் எடுப்பவர் என்று பேரெடுத்தவர் இயக்குநர் ஏ. பீம்சிங். சிவாஜியை வைத்து இவர் இயக்கிய பல படங்களின் முதல் எழுத்து ‘பா’ என்றே ஆரம்பிக்கும். இவர்கள் கூட்டணியில் வந்த முதல் திரைப்படம் ராஜா ராணி. பின்னர் பதிபக்தி, பெற்ற மனம், படிக்காத மேதை போன்ற பல படங்களை ஏ. பீம்சிங் இயக்கினார். இவரது இயக்கத்தில் வெளிவந்த பாகப்பிரிவினை திரைப்படம் 1960 இல் சிறந்த தமிழ்த் திரைப்படத்துக்கான தேசிய விருது பெற்றது.
1961ம் ஆண்டு வெளியான பாசமலர், பாவ மன்னிப்பு, பாலும் பழமும் என மூன்று படங்களும் ‘பா’ வரிசைப் படங்களாக, சிவாஜி - பீம்சிங் கூட்டணியில் அமைந்தன. மூன்று படங்களும் ஒன்றுக்கொன்று சம்பந்தமில்லாமல் வெவ்வேறு கதைக்களத்துடன் வந்து ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பைப் பெற்றன. அண்ணன் தங்கை பாசத்திற்கு உதாரணமாக இன்றும் பாசமலர் திரைப்படம் திகழ்கின்றது.
பாவ மன்னிப்பு திரைப்படத்தில் இஸ்லாமிய இளைஞராகவும், பாலும் பழமும் திரைப்படத்தில் மருத்துவராகவும் தனது சிறந்த நடிப்பு திறனை சிவாஜி கணேசன் வெளிப்படுத்தி இருப்பார். மேலும் சிவாஜி-பீம்சிங் கூட்டணியில் வெளிவந்த பார்த்தால் பசி தீரும், படித்தால் மட்டும் போதுமா, பந்த பாசம், பார் மகளே பார், பச்சை விளக்கு போன்ற படங்கள் பெரிய வெற்றியை பெற்றன.
வித்யாசமான கதாபாத்திரங்கள் :
ஒவ்வொரு படத்திலும் தன்னுடைய கதாபாத்திரம் வித்யாசமாக இருக்க வேண்டும் என்பதில் சிவாஜி கணேசன் தனி கவனம் செலுத்தினார். அதற்கேற்றவாறு உடல்மொழி, ஒப்பனை, நடை, நடிப்பு போன்றவற்றை மாற்றியமைத்து கொள்வது இவரின் தனிச்சிறப்பாகும். பலே பாண்டியா, ஆலயமணி, குலமகள் ராதை, இருவர் உள்ளம், புதிய பறவை, ஆண்டவன் கட்டளை, சாந்தி, பழநி, மோட்டார் சுந்தரம் பிள்ளை, செல்வம், நெஞ்சிருக்கும் வரை, தில்லானா மோகனாம்பாள், உயர்ந்த மனிதன், தங்கச் சுரங்கம், தெய்வமகன், சிவந்த மண், எங்க மாமா,
வியட்நாம் வீடு, எங்கிருந்தோ வந்தாள், சொர்க்கம், சவாலே சமாளி, ஞான ஒளி , பட்டிக்காடா பட்டணமா, வசந்த மாளிகை, பாரத விலாஸ், கௌரவம் , ராஜபார்ட் ரங்கதுரை போன்ற திரைப்படங்கள் மற்றும் பல படங்கள் இவரது உணர்ச்சிப்பூர்வமான நடிப்புக்காகப் பேசப்பட்டவை.
நகைச்சுவை திரைப்படங்கள்
கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி, சபாஷ் மீனா, பலே பாண்டியா, ஊட்டி வரை உறவு, கலாட்டா கல்யாணம், மூன்று தெய்வங்கள், சுமதி என் சுந்தரி, எமனுக்கு எமன் போன்ற திரைப்படங்கள் இவரின் நகைச்சுவை நடிப்புக்காக போற்றப்பட்டவை.
பிற நட்சத்திரங்களுடன் இணைந்த படங்கள் :
கூண்டுக்கிளி திரைப்படத்தில் சிவாஜி மற்றும் எம் ஜி ஆர்
தாம் ஒரு முன்னணிக் கதாநாயகனாக இருந்தபோதும், பிற நட்சத்திரங்களுடன் இணைந்து நடிக்க சிவாஜி தயங்கியவர் அல்லர். சிவாஜி கணேசன் முதன்மைப் பாத்திரம் ஏற்றிருந்த பல படங்களில் "பாசமலர்", "பாவ மன்னிப்பு", "பார்த்தால் பசி தீரும்", "வீரபாண்டியக் கட்டபொம்மன்" போன்ற பல படங்களில் ஜெமினி கணேசன் நடித்துள்ளார். மேலும் சிவாஜியுடன் மேஜர் சுந்தரராஜன் பல குணசித்திர வேடங்களில் நடித்துள்ளார். சிவாஜி கணேசன் கூண்டுக்கிளி எனும் ஒரு திரைப்படத்தில் மட்டுமே எம்ஜிஆருடன் இணைந்து நடித்துள்ளார்..
புகழ் :
எகிப்து அதிபர் கமால் அப்தெல்நாசர் இந்தியாவிற்கு வருகை தந்த போது, அவர் வீரபாண்டிய கட்டபொம்மன் படத்தில் ஆங்கிலேயர்களை விரட்டி அடிக்கும் ஆவேசமான கதாபாத்திரத்தில் நடித்த சிவாஜி கணேசனை நேரில் காண வேண்டும் என்பதற்காக அப்போதைய இந்திய பிரதமர் ஜவகர்லால் நேரு அனுமதி வழங்கப்பட்ட தனி நபர் சிவாஜி கணேசன் ஆவார். 1962 ஆம் ஆண்டு சிவாஜி கணேசன் அமெரிக்க அரசாங்கத்தின் கலாச்சார பரிமாற்றம் திட்டத்தின் கீழ் அமெரிக்காவுக்கு இந்தியாவில் இருந்து சென்ற முதல் நடிகர் என்ற பெருமைக்கு உரியவர் சிவாஜி கணேசன், இந்திய கலாச்சார தூதர் பாத்திரத்தில் அங்கு அப்போதைய அமெரிக்க ஜனாதிபதி ஜான் எப் கென்னடியை சந்தித்தார். அப்போது அவரை கவுரவப்படுத்தும் விதமாக அவரை ஒரு நாள் நயாகரா நீர்வீழ்ச்சியின் கௌரவ மேயராக நியமித்து அவரிடம் அதற்கான சாவியையும் கொடுத்தனர்.
பெற்ற விருதுகளும், சிறப்புகளும் :
சர்வதேச விருதுகள் :
ஆப்பிரிக்க - ஆசியத் திரைப்பட விழாவில் (கெய்ரோ,1960), சிறந்த நடிகருக்கான விருது.
செவாலியர் விருது, 1995
இந்திய விருதுகள் :
பத்ம ஸ்ரீ விருது, 1966
பத்ம பூஷன் விருது, 1984
தாதாசாகெப் பால்கே விருது, 1996
தமிழக விருதுகள் :
கலைமாமணி விருது, 1962
சிறந்த நடிகருக்கான தமிழக அரசு திரைப்பட விருது 1969. (தெய்வமகன்)
சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருது – தமிழ், 1972. (ஞான ஒளி)
சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருது – தமிழ், 1973. (கௌரவம்)
சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருது – தமிழ், 1985. (முதல் மரியாதை)
மற்ற விருதுகள் :
அண்ணாமலை பல்கலைக்கழகத்தின கௌரவ டாக்டர் பட்டம் 1986
என். டி. ஆர் தேசிய விருது (1998)
சிறப்புகள் :
1962 இல் அமெரிக்கா நாட்டின் சிறப்பு விருந்தினராக சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது, நயாகரா மாநகரின் 'ஒரு நாள் நகரத்தந்தையாகக்' கௌரவிக்கப்பட்டார்.
தியாகராய நகரில் சிவாஜி கணேசனின் வீடான ‘அன்னை இல்லம்’ இருக்கும் சாலைக்கு 1995 ஆம் ஆண்டு தமிழக அரசு செவாலியே சிவாஜி கணேசன் சாலை என்று பெயரிட்டது.
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் கலைத்துறைக்கு ஆற்றிய சேவையை போற்றும் வகையில் அவரது பிறந்த தினமான அக்டோபர் 1 ஆம் தேதி அரசு விழாவாக கொண்டாடப்படும் என்று 2018 ஆம் ஆண்டு தமிழக சட்டப்பேரவையில் விதி 110ன் கீழ் அறிவிக்கப்பட்டது.
சிவாஜி கணேசனின் 93வது பிறந்தநாளான அக்டோபர் 1 2021 இல் கூகுள் தனது தேடுபொறியின் முகப்பு பக்கத்தின் அவரின் டூடுலை (Doodle) வெளியிட்டு சிறப்பு செய்தது..
வாழ்த்த வயதில்லை
வணங்குகின்றோம் ஐயா
நன்றி Prabu llaya ( Dr சிவாஐி கணேசன் சுயசரிதை.)
sivaa
3rd October 2022, 02:04 AM
ஒரு வசனத்தாலோ,
ஒரு காட்சி அமைப்பாலோ கதாநாயகனின் பிம்பம் விழுந்துவிடும்னு எழுத்தாளன் நினைக்கக் கூடாது.
அப்படி வசனத்தை மாத்தச் சொல்றவன் நடிகனாக இருக்க முடியாது.
"அம்மா தாயே பிச்சை போடு" ன்னு வசனம் எழுதினாக் கூட, கதாபாத்திரத்துக்கா அதை உணர்ச்யோடு சொல்லி பெயரை வாங்கிட்டுப் போறவன்தான் உண்மையான நடிகன்." ஒரு நேர்காணலில் சிவாஜி கணேசன் சொன்னது.
இந்தக் கருத்தும், எண்ணவோட்டமும் தான்
V.C. சி. கணேசன் என்ற சாமானியரை
நடிகர் திலகமாக உயர்த்தி வைத்தது.
நானெல்லாம் சிறுவயதில் தீவிரமான MGR ரசிகன்.
சும்மா டிக்கெட் குடுத்தா கூட சிவாஜி படத்தைப் பார்க்கமாட்டேன், காரணம் சண்டைக்காட்சி இருக்காது ஒரே அழுகாச்சியாஇருக்குங்குறது தான்.
அப்படி இருந்த நான் சிவாஜி கணேசன் படங்களைத் தேடித் தேடிப் பார்க்கக் காரணம் "கர்ணன்"
நான் முதன்முதலில் ரசித்துப் பார்த்த கணேசன் படம்
1982ல். நான் +1படித்த காலகட்டத்தில் பார்த்தது.
அதில் ஒரு காட்சியில்
இந்திரன்,தன் மகன்அர்ஜுனனுக்காக கர்ணனின் கவச, குண்டலங்களை யாசகம் கேட்க மாறுவேடத்தில் வருவார்.
சூரியனுக்கு கர்ணன் பூஜை செய்துகொண்டிருப்பார்.
பூஜை முடிந்துகர்ணன் புறப்பட யத்தனிக்கையில் சூரியன் அசரீரியாக வந்து எச்சரிக்கை செய்வார், யாசகனாக வந்திருப்பது இந்திரன் என்று.
வெளியே வரும் கர்ணணனைப் பார்த்து
"என்ன கொடுப்பான்எவை கொடுப்பான்
என்றிவர்கள் எண்ணும் முன்னே பொன்னும் கொடுப்பான்
பொருளும் கொடுப்பான்
போதாது போதாதென்றால் தன்னைக் குடுப்பான் தன் உயிரும் தான் கொடுப்பான் தயாநிதியே"
என்றுபோற்றிப் புகழ்ந்து பாடும் இந்திரனைப் பார்த்து,
"இவ்வளவு தானா நீ" அப்படிங்கிற மாதிரி முகத்தில் ஒரு பா(b)வம் காட்டியபடி நடந்து வருவார் பாருங்கள்,அப்படி இருக்கும் அந்தக்காட்சிக்காகவே அந்தப்படத்தை ஒட்டன்சத்திரம் சண்முகாத் தியேட்டரிலிருந்து
(இப்போது இந்தியன்) எடுக்கும் வரை தினமும் பார்த்தேன்.
அவரது கதாபாத்திரங்கள் கதாநாயகனைப் புனிதனாகக் காட்டாமல் பெரும்பாலும் சாமான்யனின் பலவீனங்களுடன்தான் கட்டமைக்கப்பட்டிருக்கும்,
(தில்லானா மோகானாம்பாள் சிக்கல் சண்முக சுந்தரத்தின் கதாபாத்திரம் சிறந்த உதாரணம்)
அப்படியே MGR ன் கதாபாத்திரங்களுக்கு நேரெதிர். இருந்தாலும் அவரை ரசித்துக் கொண்டாடினோம்.
கருப்பு வெள்ளை சகாப்தம் முடிந்து முழுவதும் கலர்ப் படங்களாக மாறிய காலகட்டங்களில் வெளியான முதல் மரியாதை தேவர் மகன், தாவனிக் கனவுகள் போன்ற சில படங்களைத் தவிர
அவரது வயதுக்கும் உடலமைப்பிற்கும் பொருந்தாமல் நடித்த அவரின் படங்கள்மீது எனக்குப் பெரிய ஈர்ப்பு இல்லை.
சிவாஜி கணேசன் தமிழ்ப்படங்களில் நடித்தது தமிழுக்கு அதிர்ஷ்டமாகவும், அவருக்கு துரதிருஷ்டமாகவும் போனது.
அவருக்கு சரியான மரியாதையை, அங்கீகாரத்தை நம் அரசாங்கங்கள் தரவில்லை.
அவரின்நடிப்புத் திறமையை சரியான முறையில் பயன்படுத்தவே இல்லை என்பது எனது கருத்து, - அழுக வெச்சே சோலிய முடிச்சிட்டானுக.
கமல்ஹாசனின் வார்த்தையில் கூற வேண்டுமென்றால், "சிவாஜி கணேசன் என்ற சிங்கத்திற்கு நாம் தயிர்சாதம் போட்டு வைத்திருந்தோம்".
#அன்புக்குமரன்
இன்று சிவாஜி கணேசன் பிறந்தநாள்
Thanks A.Anbukumaran
sivaa
9th October 2022, 09:40 PM
சிவாஜி படம் ஓடிய தியேட்டரில் பாம்பை விட்டார்கள்!
https://youtu.be/_7vnoSWQ6iQ
Thanks Inpa (Thirai chirpi)
sivaa
10th October 2022, 09:23 PM
தற்போதைய பேச்சு ராஜ ராஜ சோழன் பற்றியது தான்
1973 ல் ராஜ ராஜ சோழன் வெளியான போது அப்போதைய அரசியல் காரணமாக எதிர் தரப்பினரின் பொய் பிரச்சாரம் மிகப்பெரிய அளவில் மேற்கொள்ளப்பட்ட போதிலும் மிகச்சிறந்த வெற்றியை அடைந்தது,
ராஜ ராஜ சோழன் முதல் இரண்டு வாரங்களில் மட்டுமே மின்சார தடை இருந்தும் கூட ரூ 25 லட்சம் வசூலைக் குவித்திருக்கிறது அது அதுவரை வேறு எந்தத் தமிழ் திரைப்படமும்.வசூலிக்காத வசூலாகும்,
இதை சரியாகப் புரிந்து கொள்ள வேண்டும் என்றால்
சமீபத்தில் பொன்னியின் செல்வன் திரைப்படம். வசூல் சாதனையை செய்து வருகிறது என்ற செய்தியை பார்க்க முடிகிறது
பொன்னியின் செல்வன் தமிழகம் முழுவதும் சுமார் 700 திரையரங்குகளில் வெளியிடப்பட்டது, ஆனால் அப்போது ராஜ ராஜ சோழன் 35 திரையரங்குகளில் மட்டுமே வெளியிடப்பட்டது,
35 திரையரங்குகளில் வெளியான ராஜ ராஜ சோழன் முதல் இரண்டு வாரத்தில் 25 லட்சம் ரூபாயை வசூலித்து சாதனை படைத்தது, அதாவது ஏறக்குறைய ஒரு திரையரங்கு 75 ஆயிரம் ரூபாயை வசூலித்தது எனக் கணக்கில் கொண்டு பார்த்தால் அந்த சாதனையை பொன்னியின் செல்வன் சாதனை பெற வேண்டும் எனில் 700 க்கும் அதிகமான திரையரங்குகளில் வெளியாகியிருக்கும் பொன்னியின் செல்வன் இன்றைய ரூபாய் மதிப்பின்படி ஒரு திரையரங்கில் 75 லட்ச ரூபாய் வசூலித்து ஒட்டுமொத்தமாக ப்சுமார் 500 கோடி ரூபாயாவது வசூலித்தால் மட்டுமே ராஜ ராஜ சோழன் வசூலை நெருங்க முடியும் ஆனால் அதற்கான வாய்ப்பு இல்லை, 4000 க்கும் அதிகமான திரையரங்குகளில் உலகம் முழுவதுமாக வெளியான போதிலும் வசூல் ராஜ ராஜ சோழனை நெருங்கவில்லை,
ராஜ ராஜ சோழன் நடிப்பில் மட்டுமே உயர்ந்து நிற்கவில்லை
வசூலிலும் மிகப்பெரிய உயரத்தில் தான் நிற்கிறது,
அது காலம் கடந்து தெரிய வருகிறது,
5863
Thanks Sekar parasuram
sivaa
30th October 2022, 07:07 AM
புரசை பாலாஜியில் 28 முதல் தினசரி 3 காட்சிகளாக நடிகர் திலகத்தின் பச்சை விளக்கு
தகவல் நன்றி வான்நிலா விஜயகுமார்
5865
sivaa
5th November 2022, 11:59 PM
சென்னை மாநகரில் 80 களில் சாதனைச் சக்கரவர்த்தி சிவாஜி கணேசன் இரட்டை வேடங்களில் நடித்து அசத்திய உத்தம புத்திரன் மறு வெளியீடாக பல திரைகளில் திரையிடப்பட்டபொழுது வெளிவந்த பத்திரிகை விளம்பரம். சித்திரா, ஶ்ரீ கிருஷ்ணா,ஸ்டார், கமலா, நடராஜ் ,பழநியப்பா ,வீனஸ் /பகல் காட்சி, தங்கம், பாலாஜி, கபாலி, நெஷனல் திரைகளில் தினசரி 3 காட்சிகள், மொத்தமாக 11 திரைகளில் திரையிடப்பட்டு காட்சியளித்திருக்கின்றது.
5866
sivaa
6th November 2022, 12:11 AM
நடிகர் திலகத்தின் திரிசூலம்,
மூன்று வேடங்களை ஏற்று நடிப்பில் அசத்தலான வித்தியாசங்களை காட்டி தமிழக மக்களுக்கு விருந்து அளித்தார் நடிகர் திலகம்
, கன்னடத்தில் டாக்டர் ராஜ்குமார் அவர்கள் நடித்த சங்கர் குரு திரைப்படத்தின் தமிழ் பதிப்பு தான் திரிசூலம்
டாக்டர் ராஜ்குமார் அவர்கள் மதுரையில் நடைபெற்ற திரிசூலம் வெற்றி விழாவில் கலந்து கொண்டு பேசும்போது "கன்னடத்தில் சங்கர் குரு பெற்ற வெற்றியை விட பல மடங்கு வெற்றியை திரிசூலம் பெற்றிருப்பது எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி" எனப் பேசி பெருமைபடுத்தினார்,
ஒரு ஹீரோ நடிகரின் 200 படம் 200 நாட்கள் ஓடியது என்பதும் நடிகர் திலகத்தின் வரலாற்றில் மட்டுமே இடம் பெற்று இருக்கிறது,
அதே போல ஒரு மாநிலத்தின் மக்கள் தொகையில் 75% அளவிலான டிக்கெட்டுகள் விற்று தீர்ந்ததும் திரிசூலம் படத்திற்காக மட்டுமே, அதாவது 1979 ஆம் ஆண்டின் தமிழக மக்கள் தொகையான 4.2 கோடியில் திரிசூலம் படம் பார்த்தவர்களின் எண்ணிக்கை என்பது 3.4 கோடியாகும்
திரிசூலம் வசூல் சாதனைகளை தொகுத்து இப்போதிருக்கும் டிவி சேனல்களுக்கு கொடுக்க வேண்டும், பின்னர் தான் டிவி சேனல்களில் பங்கு பெரும் நெறியாளர்களாகட்டும் அதன் சினிமா சம்பந்தமான நிகழ்ச்சிகளில் கருத்தை பதிவு செய்யும் பார்வையாளர்களாகட்டும் அவர்களுக்கு உண்மையான வெற்றி, வசூல் சாதனை என்றால் என்ன என்பதை புரிய வைக்க முடியும்,
திரிசூலம் 1979 ல் ரிலீஸான போது சென்னை சாந்தியில் மட்டுமே 272 காட்சிகள் அட்வான்ஸ் புக்கிங் முறையே முன் பதிவிட்டவர்களுக்கு அதிர்ஸ்டம் அடித்தது அதாவது ஏறக்குறைய மூன்று மாதங்களுக்கு டிக்கெட் இல்லை,
இப்போது உள்ளது போல 100 இருக்கைகளை கொண்ட மல்டிபிளக்ஸ் தியேட்டர்கள் போன்ற ஹவுஸ்புள் காட்சிகள் இல்லை 1200 இருக்கைகளை கொண்டிருந்த திரையரங்குகளில் சாதனையை நிகழ்த்திய காவியம் திரிசூலம்
சென்னை சாந்தி திரையரங்கில் மட்டுமே 175 நாட்கள் ஓடி அன்றைய மதிப்பில் ரூபாய் 16,85,000 வசூலித்து சாதனை படைத்தது,
அதாவது 8 லட்சம் பார்வையாளர்கள் வரை ஒரு திரையரங்கில் மட்டுமே கண்டு மகிழ்ந்த அபூர்வம்,
இப்போது வெளியாகும் பிரபலமான ஹீரோக்களான அஜித் மற்றும் விஜய் போன்றோரின் திரைப்படங்களை எட்டு லட்சம் பார்வையாளர்கள் கண்டுகளிக்க வேண்டுமெனில் அவர்களின் திரைப்படம் குறைந்த பட்சம் 2000 திரையரங்குகளில் வெளியாகி தொடர்ந்து ஓடவும் வேண்டும்,
இந்த ஒப்பீடு தலையை சுற்ற வைக்கிறது ஏறக்குறைய திரிசூலம் ஒரு திரையரங்கில் மட்டுமே 100 கோடியைக் குவித்து இருக்கிறது.
நடிகர் திலகம் ஒருவரே ரியல் வசூல் சக்கரவர்த்தி!!
திரிசூலம் தமிழகம், பாண்டிச்சேரி, உட்பட 11 திரையரங்குகளில் வெள்ளி விழா கொண்டாடியது
இதுவரையிலும் திரைப்பட வரலாற்றில் இத்தனை ஊரில் அத்தனை எண்ணிக்கையில் வெள்ளி விழா கொண்டாடப்பட்டது திரிசூலம் மட்டுமே,
நன்றி (வாடஸ்அப் நண்பர்கள்)
5867
மேலே உள்ள பத்திரிகை செய்தியில் குறிப்பிட்டதுபோல் 11 திரைகளில் நேரடியாக வெள்ளிவிழா ஓடவில்லை. 8 திரைகளில் நேரடியாகவும்
3 தியெட்டர்களில் ஷிப்டிங்கிலும் வெள்ளிவிழா கண்டது.
sivaa
6th November 2022, 12:37 AM
நடிகர் திலகத்தை அமெரிக்க அரசாங்கம் தன் நாட்டிற்கு வருகை தரும்படி முறைப்படி அழைத்தபொழுது அதனை ஏற்றுக்கொண்டு நடிகர் திலகம் அழைப்பிதழில் கையொப்பம் இடும் அரிய ஆவணப்புகைப்படம்.
5868
sivaa
6th November 2022, 04:24 PM
ஞான ஒளி ரிலீஸ் ஆன பிறகு சென்னை நகரில் ஏறக்குறைய 80 % தியேட்டர்களில் நடிகர் திலகத்தின் 20 க்கும் மேற்பட்ட படங்கள்புதிய முறையில் விளம்பரம் செய்யப்பட்டு திரையிடப்பட்ட போதிலும்நகரில் எல்லைக்கு அருகில் சுற்றுப்புறங்களில் உள்ள "டூரிங்" சிமனிமாக்களிலெல்லாம் திரையிடப்பட்டும், சென்னையில் 5 தியேட்டர்களில் ரிலீஸ் செய்தும், 30 க்கு மேற்பட்ட சங்கீத சபாக்கள் மூலமாக இரண்டே நாட்களில் 36000 ரசிகர்கள் கண்டுகளித்தும், சகலவிதமான எதிர்ப்புகளையும் தகர்த்தெறிந்து பிளாசா தியேட்டரில் இன்றுவரை 140 காட்சிகளில் 136 காட்சிகள் தியேட்டர் நிரம்பி வழிந்திருக்கிறது.
மனோகரா
குலமகள் ராதை ( 4தியேட்டர்)
பாலும் பழமும் ( 2 தியேட்டர்)
உயர்ந்த மனிதன்.
பாசமலர் (2 தியேட்டர்)
பாகப்பிரிவினை.
உத்தம புத்திரன் (6 தியேட்டர்)
தூக்குத்தூக்கி.
குங்குமம்.
வணங்காமுடி'
வளர்பிறை.
இருவர் உள்ளம்.
ராஜா( 5 தியேட்டர்)
மக்களைபெற்ற மகராசி.
தங்கைக்காக.
சொர்க்கம்.
தேனும் பாலும்.
காவேரி.
பாபு.
ஞான ஒளி பிளாசா ,பிராட்வே, சயானி, கமலா.
5869
sivaa
12th November 2022, 04:21 AM
வசூலில் மலைக்கவைக்கும் சிவாஜியின் சாதனைகள் 1952 முதலே ! விநியோகஸ்தர்கள் விளம்பர ஆதாரங்கள் - PROOF !
https://youtu.be/OqITQo1_MjY
Thanks Nadigarthilgamtv
sivaa
12th November 2022, 04:23 AM
சிவாஜி என்றால் வசூல் சாதனை, வசூல் சாதனை என்றால் சிவாஜி படமே !(Part 2)
https://youtu.be/Av2r5Z3HJqo
Thanks Nadigarthilgamtv
sivaa
14th November 2022, 01:08 AM
எப்படி எல்லாம் குற்றம் கண்டுபிடிக்கலாம் என்று ஆராய்பவர்களுக்கு.
எங்களுக்கு சிவாஜி பிடித்திருக்கிறார். நல்ல விஷயங்களை எப்படி சொல்கிறார். அம்மாவை பூஜிக்கிறார். அண்ணனிடம் எப்படி பழக வேண்டும் தம்பியிடம் எப்படி பாசம் காட்ட வேண்டும் என்று சொல்லித் தருகிறார் ,படக் காட்சிகளில். அந்த நல்ல விஷயங்கள் மனதில் ஆழமாக இறங்குகின்றன. அடடே !
இது நன்றாக இருக்கிறதே என்று வியப்பதோடு நின்று விடுவதில்லை மனம்.அவர் சொன்னதை நாமும் நம் குடும்பத்தாரிடம் செய்து காண்பிக்க வேண்டும் என்ற எண்ணம் மேலோங்குகிறது. அம்மாவை வணங்க தோன்றுகிறது .அண்ணனை நேசிக்க தோன்றுகிறது. குடும்பத்தை அரவணைத்து செல்ல தூண்டுகிறது.
அட இது நல்ல விஷயங்கள் தானே! அவருடைய நடிப்பும் படக் காட்சிகளும் இதைத்தானே சொல்கின்றன. அதை தானே நம்மை செய்ய தூண்டுகின்றன. நல்ல விஷயம் தானே!இந்த நல்ல விஷயங்களை சொல்லும்போது தான் இதை மனதில் வைக்காமல் எடக்காக ஒரு கேள்வி வருகின்றது.
ஏன் சிவாஜி குடிப்பது போல் நடிக்கிறாரே ,அப்படி செய்கிறாரே இப்படி செய்கிறார் என்று ..
குடிப்பதாக நடித்தாலும் சரி, வேறு பல நடிப்பாக இருந்தாலும் அப்படி செய்வதால் ஏற்படும் வினைகளையும் அவர் சொல்லத்தானே செய்கிறார்.
சமூகம் தன்னிலை பிறழாமல் இருக்கத்தான் கலைகள் உருவாகின .அந்தக் கலைகளின் மூலம் நல்ல விஷயங்களை சொல்லி சமூகத்தை செழுமையாக்குகின்றான் ஒரு கலைஞன். இதற்காக
பிறந்தது தான் கலைகள் .
உருவாக்கப்பட்டது தான் கலைகள் .
அதைத்தான் செய்தார் சிவாஜி .அதனால் தான் எங்களுக்கு சிவாஜி பிடித்திருக்கிறது. மனதில் நல்ல விதைகளை விதைத்த மாமனிதர் சிவாஜி. அதை நாமும் பிறருக்கு சொல்லலாமே என்று சொல்லும்போது தான் இடக்கான கேள்விகள் வந்து விழுகின்றன .நல்லதைக் கற்றுக் கொள்ள மாட்டோம் என்று உறுதியாக இருப்பவர்களிடம் இருந்துதான் இந்த மாதிரி கேள்விகள் பிறக்கின்றன ..
இவர்கள் எப்படி எல்லாம் குற்றம் கண்டுபிடிக்கிறார்கள் தெரியுமா?
எனது youtube சேனலில் சிவாஜி பற்றிய புகைப்படங்களை பதிவிட்டுள்ளேன். அந்த வீடியோவில் வரும் நூற்றுக்கணக்கான படங்களில் ஒன்று நடிகர் திலகம் ஜெமினி கணேசனுக்கு பின்னால் அமர்ந்திருப்பது போல ஒரு புகைப்படம்.அது பொதுவெளியில் பிடிக்கப்பட்ட ஒரு புகைப்படம்.
முன் சேரில் ஜெமினி கணேசன் அமர்ந்திருக்கிறார் .ஜெமினிக்கு பின்னால் நடிகர் திலகம் அமர்ந்திருக்கிறார்.
நடிகர் திலகத்தின் கால்கள் இரண்டும் நிலத்தை நோக்குவது போல் அந்த இணைப்பில் கால் வைத்தபடி இருக்கும் .அந்த வீடியோவில் இருக்கும் நூற்றுக்கணக்கான படங்களில் ஒன்று இது.இதைப் பார்த்து தான் கமெண்டில் ஒருவர் கேள்வி கேட்கிறார்? ஜெமினிகணேசனை பாருங்கள் எவ்வளவு அடக்கமாக அமைதியாக உட்கார்ந்து இருக்கிறார் பின்னால் உட்கார்ந்து இருக்கும் நடிகர் சிவாஜிக்கு மரியாதை தெரியவில்லையே ?
என்று கேள்வி கேட்டுவிட்டு அதற்கு ஒரு விளக்கமும் கொடுத்து இருக்கிறார். 20 வருடங்களுக்கு முன்பாக திரையரங்கில் ஒரு ஸ்லைடு போடுவார்கள் .முன்சீட்டில் கால் வைக்காதீர்கள் என்று? அதை குறிப்பிட்டு,
சிவாஜி பாருங்கள் மரியாதை இல்லாமல் முன்னால் உட்கார்ந்து இருக்கும் ஜெமினி கணேசன் நாற்காலியின் கீழே காலை வைத்திருக்கிறார் என்று கேள்வி கேட்டிருக்கிறார்? அட எப்படி எல்லாம் யோசிக்கிறார்கள் ? கேள்வி கேட்கிறார்கள்?
சிவாஜி எது செய்தாலும் குற்றமாக தான் இவர்களுக்கு தெரிகிறது ...அந்த புகைப்படங்களை பார்த்த ஆயிரக்கணக்கானவர்களில் யாருக்கும் தோன்றாத கேள்வி இது ?
சரி இவரை விடுங்கள் ஒரு பெரிய பிரபலமே கேள்வி கேட்ட விஷயத்துக்கு வருகிறேன்.
நடிகர் திலகத்தின் நாடகம் ஒன்று நடந்து கொண்டிருந்தது. பாதி நாடகம் நடந்த முடிந்த நிலையில் நடிகர் திலகத்தின் உணர்ச்சிமயமான நடிப்பை பார்த்து மெய் மறந்த வாலி அவர்கள் பக்கத்தில் பக்கத்தில் இருந்த பிரபலத்திடம் ஆகா! நடிகர் திலகத்தை பாருங்கள் எப்படி அற்புதமாக நடிக்கிறார்,அவர் ஒரு சிறந்த அற்புதமான நடிகர் என்று கூறி இருக்கிறார் ..
அதற்கு அந்த பிரபலம் எவ்வாறு பதிலளித்திருக்க வேண்டும்? கவிஞர் வாலி சொன்னதற்கு பதிலாக அந்த நடிப்பு சாதாரணம்தான் ,தன்னைக் கவரவில்லை என்று சொல்லி இருக்கலாம், ஏன் அந்த நடிப்பு பிடிக்கவில்லை என்று கூட சொல்லி இருக்கலாம். அது அவருடைய கருத்து. ஆனால் அந்த பிரபலம் அப்படி சொல்லாமல் ஏன் முத்துராமன் கூட சிறந்த நடிகர் தானே என்று பதில் சொல்லியிருக்கிறார். எந்தக் கருத்துக்கு எந்த பதில்? இதை என்னவென்று சொல்ல?
முத்துராமன் சிறந்த நடிகர் தான். ஆனால் அதை எங்கே எப்படி சொல்ல வேண்டும் என்று நியதி இருக்கிறதல்லவா ?
இந்த இடத்தில் ஒரு பத்திரிக்கை கேள்வி பதிலை உங்களுக்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
வாசகர் ஒருவர் கேள்வி கேட்டு இருந்தார் சிவாஜிக்கு இணையான நடிகர் என்று யாரைச் சொல்வீர்கள்?
இந்தக் கேள்விக்கு பத்திரிகை அளித்த பதில் என்னவென்று தெரியுமா?
சிவாஜிக்கு இணையாக மட்டுமல்ல அடுத்த இடத்தில் வைத்து பார்க்க கூட எந்த நடிகரும் இல்லை?
சினிமாவை அதிகம் நேசிக்காதவர்கள் கூட ஒப்புக் கொள்ளும் ஒரு விஷயம் தான் ..
இப்படிப்பட்ட கருத்து தான் உலகம் பூராவும் பரவி கிடக்கிறது. இப்படிப்பட்ட நிலையில் அந்தப் பிரபலம் சொன்ன பதில் வேடிக்கையாக இருக்கிறதல்லவா ?சிவாஜியை எப்படி தாக்கலாம்? சிவாஜி எப்படி குறை சொல்லலாம் ..என்று ஒரு கூட்டம் ஆராய்ச்சி செய்து கொண்டே தான் இருக்கிறது ..
நடிகர் திலகம் சிவாஜியே தான் நடித்த பல படங்களில் ஏற்கும் வேடங்களை பற்றி அவரே கூறுவார் ..
படத்தில் கதாநாயகனாக நான் இந்த வேடத்தை ஏற்றாலும் இந்த கதாநாயக வேடத்தை விட இந்த துணை பாத்திரம் தான் இவ்வளவு சிறப்பு பெறும் ,நன்றாக இருக்கிறது என்று படத்தின் கதையை கேட்கும் போதே கூறி இருக்கிறார் .
உதாரணம் உயர்ந்த மனிதன் நான் வாழவைப்பேன் போன்ற படங்கள். தயாரிப்பாளர்களின் வற்புறுத்தலால் அந்த பாத்திரத்தை தான் ஏற்று மிகச் சிறப்பான இடத்திற்கு கொண்டு சேர்த்து இருப்பார் நடிகர் திலகம்.
யாராவது சிவாஜி நடிப்பை இதைப் போற்றி புகழ்ந்தால்
இடைச்செருகலாக அங்கே கேள்விகள் வரும் .ஏன் படத்தில் சிவாஜியை விட அவர் சிறப்பாக செய்திருக்கிறாரே என்று?
இங்கே உண்மையைச் சொல்லவும் ஒருவர் தேவை இருக்கிறது. படத்தில் நடிக்க தெரியாத அவருக்கு நடிப்பைச் சொல்லிக் கொடுத்து நடிக்க வைத்ததே சிவாஜி தான் என்ற உண்மையை அவர் சொல்லுவார் .
அதைப் படித்து இருந்தாலும் தெரிந்து கொண்டாலும் இன்னமும் எதிர்மறை கேள்விகள் வந்து கொண்டே தான் இருக்கின்றன!
அப்புறம் இந்த நன்கொடை விஷயங்கள் ..பண விஷயங்கள்.
இவர்களுக்கு வள்ளல்கள் என்பவர்கள் யார்?
வள்ளல் முடிவெடுப்பார். பணம் கொடுக்க ...
பத்திரிக்கையாளர்களை அழைப்பார்.
சம்பந்தப்பட்டவர்களை அழைப்பார் கொடுப்பார். மறுநாள் பத்திரிகைகளில் வெளியாகும்.
சலாம் போடுகிறானா!
இந்தா! பணம் பிடித்துக்கொள்!!
என்று முதுகில் தட்டி கொடுத்து கொஞ்சம் பணம் கொடுத்து விட்டால் போதும் ..வள்ளலோ வள்ளல் என்று இங்கே பெயர் எடுத்து விடலாம் ..
கண்டிப்பாக இது சிவாஜி அவர்களுக்கு தெரியாது ஐயா ..
கொடையை கொடையாக செய்ய வேண்டுமே அன்றி ,அதை குடையாகப் பிடிக்கக் கூடாது.
இதுதான் வள்ளல் குணம் .அதுதான் சிவாஜிக்கு தெரிந்தது.
கொடுக்கும்போதே சொல்லிவிடுவார் யாருக்கும் தெரியக்கூடாது என்று.
பணம் கொடுத்ததை பத்திரிகைகளில் விளம்பரம் செய்ய பத்திரிக்கை காரனுக்கும் பணம் கொடுக்க வேண்டும்.
இது ஒரு தவறான வழிமுறை .அதை சிவாஜி செய்ய மாட்டார். பசியோடு இருப்பவனுக்கு மீனை கொடு என்பது ஒரு நாட்டு பழமொழி. அவனுக்கு மீன் பிடிக்க கற்றுக் கொடு என்பது இன்னொரு நாட்டு பழமொழி. சிவாஜியின் பாணி இரண்டாவது ...
ஒரு நாட்டுக்கு எது முக்கியமான தேவைகளோ சேவைகளோ அதை சிவாஜி செய்தார் ..அவர் அளவுக்கு எவர் செய்ததும் கிடையாது என்பது தான் உண்மை.
சிவாஜி செய்யாத நன்கொடைகளே இல்லை. தேச சேவைகளே இல்லை என்ற அளவுக்கு இப்பொழுதெல்லாம் அவரைப் பற்றிய ஏராளமான நன்கொடை செய்திகள் வெளி வந்து கொண்டே இருக்கின்றன ..
நடிகர் திலகம் மறைந்து 20 ஆண்டுகளுக்கும் மேலாகி விட்டன ..
நல்ல விஷயங்களை நாளானாலும் காலமே சொல்லும் ...
இன்னும் வரும்..
செந்தில்வேல் சிவராஜ்...
Thanks Sivajimurasu
sivaa
15th November 2022, 06:58 AM
சிவாஜியால் பயன் பெற்ற திராவிட தலைவர்கள்
https://youtu.be/y3qrhwTq-8g
thanks Sivaji Murasu.
sivaa
29th November 2022, 12:15 AM
எழுபதுகளின் நடுப்பகுதியில் மறு வெளியீட்டில் சென்னை மாநகரில் பல தியேட்டர்களில் அரங்கு மாறி அரங்காக தொடர்ந்து வெளியிடப்பட்டு வெள்ளிவிழா கண்ட படம் மனிதரில் மாணிக்கத்தின் கப்பல்லோட்டிய தமிழன்.
5870
5871
5872
5873
5874
sivaa
29th November 2022, 12:17 AM
எழுபதுகளின் நடுப்பகுதியில் மறு வெளியீட்டில் சென்னை மாநகரில் பல தியேட்டர்களில் அரங்கு மாறி அரங்காக தொடர்ந்து வெளியிடப்பட்டு வெள்ளிவிழா கண்ட படம் மனிதரில் மாணிக்கத்தின் கப்பல்லோட்டிய தமிழன்.
5875
sivaa
29th November 2022, 06:10 AM
தமிழ் திரைப்பட உலகை மறுமலர்ச்சி பாதைக்கு மாற்றிய பராசக்தி மறு வெளியீட்டில் ஏற்படுத்திய மாபெரும் சாதனை.
( விளம்பரத்தில் உள்ளவை)
வரலாறு காணாத பரபரப்பு சரித்திரம் கண்டிராத கூட்டம். சென்னை சித்திரா மற்றும் தென்னாடெங்கும்.
பராசக்தி
.................................................. .................................................. .....................................
தினசரி ஹவுஸ் புல் காட்சிகளாக வெற்றி நடைபோடும் பராசக்தி படம்
ஏன் நிறுத்தப்படுகிறது?
ஏன் நிறுத்தப்படுகிறது??
என ஏக்கத்துடன் வினாஎழுப்பும் பல்லாயிரக்கணக்கான ரசிகப் பெருமக்கழுக்கு ஓர் அறிவிப்பு.
சென்னை சித்திரா டாக்கீசில் திரையிடப்பட்ட நாளிலிருந்து இதுவரை நான்கு வாரங்கள் ஹவுஸ் புல் காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கும் இந்தப் படத்தை ஏற்கனவே செய்து கொண்டுள்ள ஒப்பந்தத்தின்படி இன்றுடன் கடைசி செய்யப்பட்டு நாளை முதல் கெயிட்டியில் திரையிடப்படுகிறது என்பதை ரசிகர்களுக்கு மகிழ்ச'சியுடன் தெரிவித்துக்கொள்கின்றோம்.
.................................................. .................................................. .....................................
நடிகர் திலகத்தின் 125 வது படம் வெளிவரும் இந்த சமயத்தில் அவரது முதல் படமான பராசக்தி இரண்டாவது வெள்ளிவிழாவை நோக்கி வீர நடை போடுகிறது.
1952 ம் ஆண்டு தயாரிக்கப்பட்டு வெள்ளிவிழா கொண்டாடிய பராசக்தி மீண்டும் 16 வருடங்களுக்குப் பிறகு கடந்த நான்கு மாதங்களாக சென்னை தமிழ் நாடு மற்றும் மைசூர்மாநிலங்களிலெல்லாம் பரபரப்பை ஏற்படுத்தி தமிழக தலைநகரில் 110 வது நாளாக வெற்றி முரசு கொட்டுகிறது.
5876
5877
5878
sivaa
4th December 2022, 07:10 PM
Hero 72
நடிகர் திலகத்தின் வெற்றித்திரைப்படங்களின்
50 ஆம் ஆண்டு பொன் விழா சென்னையில் டிசம்பர் 11 .2022 அன்று
.5879
sivaa
12th December 2022, 05:28 AM
நவராத்திரி படத்தின் போஸ்டர்
நவராத்திரி படத்தின் பத்திரிக்கை விளம்பரம்
நவராத்திரி படத்தின் DVD கவர் விளம்பரம்
இவை எதிலும் நவராத்திரி நடிகர் திலகத்தின்
100 வது படம் என்ற விளம்பரம் இல்லை
நடிகர் திலகம் நினைத்து இருந்தால் இந்த படங்களுக்கு 50 நாட்களுக்கு முன்பாக வெளிவந்த (செப்டம்பர் 12/1964)தனது சொந்த படமான புதிய பறவையை நிறுத்தி வைத்து 100 வது படமாக அறிவித்து இருக்கலாமே....
செய்யவில்லையே......
100 வது பட விஷயத்தில் நடிகர் திலகத்தை குறை கூறுபவர்களுக்காக இந்த விவரங்கள்......
சிறிது மனக் கலக்கத்தில் இருந்த பந்துலு அவர்களை சரியாக பயன்படுத்திக் கொண்டு போய் விட்டார்கள்..........
வீரபாண்டிய கட்டபொம்மன் படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்காக இரண்டு வைர மோதிரங்களை பந்துலு அவர்கள் வாங்கினார்கள் ஒன்றில் P என்ற எழுத்தையும் ஒன்றில் G என்ற எழுத்தையும் பொறித்து தனது பெயர் மோதிரத்தை நடிகர் திலகத்தின் விரலில் அணிவித்தார்.........
நடிகர் திலகத்தின் பெயர் மோதிரத்தை
நடிகர் திலகம் அணிவிக்க தன் விரலில் மாட்டிக் கொண்டார் பந்துலு......
இப்படிப்பட்ட பந்துலு மனம் மாறியது நடிகர் திலகத்திற்கு பெரும் வருத்தமாக இருந்தாலும் தன் வாழ் நாளில் எங்குமே பந்துலு வை பற்றி தவறாக பேசவில்லை...
.பந்துலு பேசியதாக வந்த செய்திகளும் உண்மை இல்லை.....
அது பரப்பப்பட்ட வதந்தி.......
பந்துலுவின் உடலை விட்டு உயிர் பிரியும் வரை நடிகர் திலகத்தின் இன்சியல் பொறிக்கபட்ட மோதிரம் அவரது விரலிலேயே இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது......
பந்துலுவுக்கு பிறகு அவருடைய குடும்பத்திற்கு மறைமுகமாக செய்த உதவிகள் ஏராளம்....ஏராளம்...
பந்துலு மறையும் போது அவரது மகளுக்கு 17 வயதுதான்....அவர் படித்து முடித்து ஒளிப்பதிவாளராக நடிகர் திலகத்தின் சொந்தபடமான அறுவடைநாளில்
அவர் தான் ஒளிப்பதிவாளர்......
.அப் படத்தில் பணிபுரியும் போது
அவருடைய வயது 30 தான்.......
இதற்கு முன்பு பாக்கியராஜின் சின்ன வீடு படத்திற்கும் ஒளிப்பதிவாளராக பணியாற்றியுள்ளார்....
இவையெல்லாம் நடிகர் திலகத்தின் நற்பண்புகளுக்கு சிறு உதாரணங்கள்யாருக்கும் எந்த தீங்கும் செய்யாதவர்......
ஏமாந்தவரே தவிர ஏமாற்றியவர் இல்லை.........
5880
5881
5882
Thanks Nadigarthilagam fans
sivaa
12th December 2022, 05:32 AM
அன்பு அண்ணன் #முனைவர்மருதுமோகன் அவர்கள் நமது ஐயன் நடிகர்திலகம் அவர்களைப்பற்றி ஆராய்ந்து எழுதிய #சிவாஜிகணேசன் என்ற சரித்திரச்சாதனை நூல் வெளியீட்டு விழா 18.12.2022 அன்று சென்னையில் நடைபெற உள்ளது... இந்த விழா மிகச்சிறப்பாக நடைபெற்று மகத்தான வெற்றியடைய மனதார வாழ்த்துகிறேன்..
5883
Thanks kannappan Vellayankiri
sivaa
12th December 2022, 05:37 AM
சொல்லாமல் மறைத்தார் Sivaji! | Sivaji Ganesan 92nd Birthday Specia
https://youtu.be/gv1LLBIZh58
Thanks Ungal Rasikan You Tube
sivaa
28th December 2022, 07:20 PM
கோலிவுட் சினிமா வரலாற்றில் சுமார் 40 வருடங்களில் 310 கோடிக்கும் மேலான தான தர்மங்களை செய்த ஒரே நடிகர் இவர்தான் என்று தற்போது சோஷியல் மீடியாவில் டிரெண்டாகிக் கொண்டிருக்கும் தகவல் ஒன்று ரசிகர்களின் மத்தியில் மிகவும் வைரலாக பார்க்கப்பட்டும் பேசப்பட்டும் வருகிறது...
யார் அவர்...???
வாருங்கள்... விரிவாக பார்க்கலாம்...
கடந்த 40 ஆண்டுகளில் மட்டும் 310 கோடிக்கும் மேலான தான தர்மம் செய்த ஒரே நடிகர் நமது உத்தம தலைவர் நடிகர் திலகம் செவாலியே சிவாஜி கணேசன் அவர்கள் மட்டுமே...
தமிழகத்தில் பல கோயில்களுக்கு யானைகளையே தானமாக வழங்கிய வள்ளல்...
சுமார் 40 ஆண்டுகளாக மன்னன் என்ற வார்த்தைக்கு அர்த்தமாகவே வாழ்ந்த ஒரே தமிழ் நடிகரான நமது இதய தெய்வத்தை இன்றைய இளைய தலைமுறையினர் ஆச்சரியத்துடன் பார்க்கின்றனர்...
ஆரம்பத்தில் மேடை நாடகங்களில் நடித்துக் கொண்டிருந்தவர் அதன் பிறகு 1952 ஆம் ஆண்டு பராசக்தி என்ற திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான நடிப்புச் சக்கரவர்த்திதான் சிவாஜி கணேசன் அவர்கள்...
இவர் தமிழ் மொழியில் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தது மட்டுமின்றி தமிழில் மட்டும் 250 படங்களுக்கு மேல் கதாநாயகனாக நடித்து அசத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது...
இப்போது வரை இளம் நடிகர்களின் இன்ஸ்பிரேஷனாக இருந்து வரும் சிவாஜி, நிஜ வாழ்க்கையில் மன்னன் என்ற வார்த்தைக்கு ஒரு உதாரணமாகவே வாழ்ந்திருக்கிறார்....
இவர் 1953 முதல் 1993 வரை செய்திருக்கும் தான தர்மத்தினை K.V.S.மருது மோகன் என்ற சினிமா பிரபலம் ஒருவர் பல ஆண்டுகளாக ஆய்வு செய்து அம்பலப்படுத்தி இருக்கிறார். தற்போது இத்தகவல் சோஷியல் மீடியாவில் வைரலாக பரவுவது மட்டுமின்றி சிவாஜியின் இமேஜை வேற லெவலுக்கு எடுத்து சென்று இருக்கிறது...
அத்துடன், சினிமாவிற்குள் என்ட்ரி ஆன அடுத்த வருடத்தில் தொடங்கி, சுமார் 40 வருடங்களில் சிவாஜி அவர்கள் செய்த தான தர்மங்கள் மட்டும் சுமார் 310 கோடியாம்...
இலங்கையில் ஒரு மருத்துவமனையையே கட்டி கொடுத்து இருக்கிறார். அத்துடன் பெருந்தலைவர் காமராஜர் துவக்கி வைத்த ஊட்டச்சத்து சத்துணவு திட்டங்கள் மற்றும் பண்டித ஜவஹர்லால் நேரு அவர்கள் அறிமுகம் செய்த பல நல்ல திட்டங்களுக்கு உடனடியாக ஒரு லட்சம் ரூபாயை நன்கொடையாக கொடுத்த முதல் நடிகர் சிவாஜி தான் என்பது இன்று பலரும் அறிந்திராத சத்தியமான உண்மை...
அதேபோல், இந்தியா பாகிஸ்தான் போர் நடைபெற்ற போதும் கூட அப்போதைய பிரதமர் லால் பகதூர் சாஸ்திரியை சந்தித்த சிவாஜி அவர்கள் தன்னிடம் இருந்த 100 பவுன் எடையுள்ள தங்கப்பேனாவை நன்கொடையாக கொடுத்ததோடு மட்டுமின்றி அவருடைய மனைவி கமலா அம்மையார் அணிந்து சென்றிருந்த 400 பவுன் நகைகளையும் கழட்டிக் கொடுக்குமாறு கூறியிருக்கிறார் என்றால் அவருடைய கொடைத் தன்மையையும் நாட்டுப் பற்றையும் என்னவென்று சொல்வது...???
அமெரிக்காவில் உள்ள குழந்தைகள் பூங்காவிற்கு யானைக்குட்டி ஒனறினை பரிசாக அளித்திருக்கிறார். மேலும், தமிழகத்தில் புகழ் வாய்ந்த பல கோயில்களுக்கு குறிப்பாக திருவானைக்காவல் மற்றும் தஞ்சாவூர் புண்ணைநல்லூர் மாரியம்மன் போன்ற புகழ்பெற்ற ஆலயங்களுக்கு யானைகளையே தானமாக வழங்கி இருக்கிறார்...
அச்சமயத்தில், யானைப்பாகன் ஒருவர் சிவாஜியிடம் வந்து யானையும் தானும் சரியாக சாப்பிட முடியவில்லை என்று உதவி கேட்ட போது இரண்டு ஏக்கர் நிலத்தை வாங்கி அதை பட்டா போட்டு அந்த பாகனிடம் கொடுத்து அதில் விவசாயம் செய்து நீயும் நல்லா சாப்பிடு அத்துடன் யானையையும் பட்டினி போட்டு விடாதே என்று சொல்லி அனுப்பி இருக்கிறார்...
தமிழகத்தில் பெருந்தலைவர் காமராஜரின் எண்ணற்ற முழுவுருவச் சிலைகளை தனது சொந்த செலவில் திறந்து வைத்திருக்கிறார்...
கயத்தாறில் வீரபாண்டிய கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்ட இடத்தை வாங்கி அவருக்கு சிலை நிறுவி நீண்ட காலம் பராமரித்து வந்ததுடன் பின்னாளில் அந்த இடத்தை தமிழக அரசிடமே சந்தோஷமாக ஒப்படைத்தார்...
சென்னை மெரினாவில் உள்ள திருவள்ளுவரின் சிலையை தனது சொந்த செலவில் நிறுவியதோடு மட்டுமின்றி அச்சிலைக்கு தானே முழு வடிவமும் தந்து இன்றும் வள்ளுவர் வடிவில் மெரினாவில் நின்று கொண்டிருக்கிறார்...
குழந்தைகளின் கல்விக்காகவும் அரசு பள்ளிகளின் சீரமைப்பு பணிகளுக்காகவும் பலமுறை நன்கொடை அளித்திருக்கிறார்...
சினிமாவில் நலிவடைந்து போன கலைஞர்கள் பலருக்கு கணக்கில் அடங்காத பல உதவிகளை செய்து அவர்களின் மனங்களில் இன்றளவும் தெய்வமாக வாழ்ந்து வருகிறார்...
இவ்வாறு சொல்லிக் கொண்டே போகலாம்...
செல்வம் படத்தில் வருகின்ற ''ஒன்றா இரண்டா எடுத்துச் சொல்ல'' என்ற பாடலின் அற்புதமான வரிகளைப் போலவே...
நமது கலியுக கர்ணன் சிவாஜி அவர்கள் செய்த தான தர்மங்களை சொல்ல ஆரம்பித்தால் இந்த ஒரு நாளும் இந்த ஒரு பதிவும் நிச்சயமாக போதவே போதாது...
ஆகவே, இந்த புத்தாண்டு முதல் நமது இதய தெய்வம் செய்த கொடைத்தன்மைகளை தனிப்பதிவாக ஆதாரமான புகைப்படங்களுடன் முகநூலில் ஒவ்வொரு நாளில் பதிவு செய்யலாம் என்று முடிவெடுத்து அதற்கு முன்னோட்டமாகவே வரலாற்று சிறப்பு வாய்ந்த இப்பதிவினை வழங்கி இருக்கிறேன்...
இனி வரும் காலங்களில் நடிகர் திலகத்தின் கொடைத்தன்மை என்ற தலைப்பில் இது போன்ற பதிவுகள் மென்மேலும் தொடரும்...
அவ்வாறு எண்ணிலடங்கா தான தர்மங்களை செய்த சிவாஜி அவர்கள் தன் வாழ்நாளில் ஒரு போதும் இதைப்பற்றியெல்லாம் எப்போதும் வெளிப்படுத்தியது கிடையாது...
ஏனெனில், தான தர்மம் செய்வதென்பது ஒரு மனிதனின் தவம் என்பதை ஆணித்தரமாக நம்பியவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் என்றால் அது மிகையாகாது...
வாழ்க பெருந்தலைவர் காமராஜரின் புகழ்...
வாழ்க உத்தமத் தலைவர் சிவாஜியின் புகழ்...
Thanks M V Ramkumar (face book)
5884
பின்நூட்டம்
ஆனால், அவருக்கு அதை விளம்பரம் செய்யத் தெரியாது, செய்ததுமில்லை. அவருடன் இருந்தவர்களாவது செய்திருக்கலாம், அவர்களுக்கும் தெரியவில்லை.
ஆனால் இன்னொரு தரப்பில் அந்த நடிகரும், அவருடைய ஜால்ராக்களும், அவர் அப்போது இருந்த கட்சியும் அந்த டெக்னிக்கை நன்றாகச் செய்து பத்திரிகைகளில் செய்திகள் வரச் செய்ததுடன், அவரது படத்தில் வரும் காமெடி நடிகர்களை வைத்து அவருடைய கொடைத்தன்மையை ஸீன் பை ஸீன் புகழச் செய்து, மேலும் அவர் படத்துக்கு பாட்டெழுதும் கவிஞர்களை வைத்து வள்ளலே, வள்ளலே என்று வருகிற மாதிரி பாடல்கள் புனைய வைத்து 'கொடை வள்ளல்' பட்டம் கொடுத்து அவரைப் பிரபலமாக்கி, அதே சமயத்தில் நடிகர் திலகத்தை கஞ்சர் என்று முத்திரையும் குத்தினார்கள்.
ஆனால் இப்போது அறிவார்ந்தோர் பலர் ஆராய்ந்து உண்மைகளை வெளிக்கொண்டு வந்ததால் நடிகர்திலகம் பற்றிய உண்மைகளை காலங்கடந்தாவது மக்கள் தெரிந்து கொண்டார்களே என்று ஒரு சிறு நிம்மதி கிட்டியது.
m n sakthivel
sivaa
29th December 2022, 06:07 PM
முனைவர் மருது மோகன் அவர்கள் சென்னை பல்கலைக் கழகத்தில் சிவாஜி கணேசன் பற்றிய ஆய்வு நூலை சமர்ப்பித்து, 2017ல்
அவருடைய ஆய்வறிக்கையை ஏற்றுக் கொண்டு சென்னை பல்கலைக் கழகம் அவருக்கு முனைவர் பட்டம் வழங்குகிறது......
பல்கலைக்கழகம் ஒரு ஆய்வறிக்கையை ஏற்றுக் கொள்வது என்பது மிகச் சாதாரணமான விஷயம் அல்ல....
அதற்கு முன்பு அந்த ஆய்வறிக்கை தகவல்கள், அதற்காக சமர்ப்பிக்கப்பட்ட ஆதாரங்கள் அனைத்தையும், அதன் உண்மைத் தன்மையை தெரிந்து கொண்ட பிறகு தான் அந்த ஆய்வறிக்கையை ஏற்றுக் கொள்வார்கள்......
சுமார் 7 ஆண்டுகளுக்கும் மேலாக மருது மோகன் அவர்கள் நடிகர் திலகத்தை பற்றிய தகவல்கள், அவர் பிறந்த இடம், நாடகங்களில் நடித்த காலங்கள், திரையுலக படங்கள், அவருடைய தனிப்பட்ட குணங்கள், அவரோடு பழகிய ஆயிரக்கணக்கானரோரை சந்தித்து, அவரால் அளிக்கப்பட்ட நன்கொடைகள் மற்றும் அவரால் பயன்பெற்றவர்களை சந்தித்து, அவர் திரட்டிய தகவல்களை ஆய்வறிக்கையாக சமர்பித்து முனைவர் பட்டம் பெற்றார்......
கடந்த ஐந்தாண்டுகளாக அந்த ஆய்வறிக்கையை நூலாக வெளியிடுவதற்கு முயற்சி செய்து, பொருளாதாரம், உடல் நலக் குறைவு போன்றவைகளை எதிர்த்து சென்ற வாரம் அந்த ஆய்வறிக்கை நூலாக வெளி வந்தது.....
அது கதைப் புத்தகம் அல்ல.கற்பனைகளை கலந்து கதை சொல்ல....
இது பல்கலைக்கழகத்தில் சமர்பிக்கபட்ட ஆய்வறிக்கை என்பதை நினைவில் கொள்க
இந்த நூலை வாங்கிய நடிகர் திலகத்தின் ரசிகர்கள், பல மூத்த ரசிகர்கள் கூட தாங்கள் அறியாத பல அரிய தகவல்கள் நூலில் இருப்பதைக் கண்டு மகிழ்ச்சியுறுகிறார்கள்.
நடிகர் திலகத்தின் கொடைத் தன்மை, அவர் வாரி வழங்கிய கொடைகளை பற்றி படித்து அறிந்து தாங்கள் சார்ந்திருக்கும் முகநூல் குழுக்களில் பதிவிடுகிறார்கள்......
அதனை பொறுக்க முடியாத சிலர் தேவையற்ற பின்னூட்டங்களை இட்டு பிரச்சனைகளை உருவாக்குகிறார்கள்.
அவர்களுக்கு உண்மையை ஜீரணிக்க முடியவில்லை.......
ஆய்வறிக்கைக்கும் கதை புத்தகத்திற்கும் வேறுபாடு தெரியாதவர்களாக இருக்கிறார்கள்.........
இன்றைய அரசியல் சட்டத்தின் படி தங்களுக்கு வேண்டிய தகவல்களை பெற்றுக் கொள்ள அனைவருக்கும் உரிமை உள்ளது..
வீணான வாதங்கள் செய்வதை விட சம்பந்தபட்ட விஷயங்களை பற்றி தகவல் அறியும் சட்டத்தின் மூலம் அறிந்து தெளிவடையுங்கள்..........
உங்கள் கூற்றுப்படி அரசியலில் ராசி இல்லாதவர், அரசியலுக்கு லாயக்கில்லாதவர். எந்த ஒரு அரசியல் செல்வாக்கும் இல்லாதவர்...
அவர் மறைந்து 21 ஆண்டுகளுக்கு பிறகும் நாங்கள் அவரை போற்றுகிறோம்...........
வணங்குகிறோம் என்றால் அதற்கு காரணம்
அவருடைய நடிப்பு மட்டுமல்ல.....
நற்குணங்களும் தான்.........
அவரை பற்றிய தகவல்கள் உங்களை எரிச்சலைடைய செய்தால் விலகிச் செல்லுங்கள்...
வீண் விவாதம் செய்யாதீர்கள்.........
இதே ஆய்வறிக்கையை முனைவர் மருது மோகன் அவர்கள் வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் சமர்ப்பிக்க இருக்கிறார்..........
அப்போது நடிகர் திலகத்தின் புகழ் வெளிநாடுகளில் பரவும்.....
( இன்றைய தலைமுறையினர்)வெளிநாட்டு மக்களும் நடிகர் திலகத்தை பற்றி அறிந்து கொள்வார்கள்......
அந்த நாள் விரைவில் வரும்.......
5885
thanks G.Laksman (நடிகர் திலகம் சிவாஜி ரசிக நந்தவனப்பூக்கள்)
sivaa
29th December 2022, 06:26 PM
அனைவருக்கும் இனிய காலை வணக்கம்...
நடிகர் திலகம் அள்ளித் தந்த கொடைகளை பற்றி தினம் ஒரு தகவலில் இன்று........
நடிகர் திலகம் தனக்கு கிடைக்காத கல்வி அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளவர்........
அதன் விளைவாகவே அன்னை இல்லத்தின் முகப்பில் ஒரு சிறுவன் அமர்ந்து புத்தகம் படிப்பது போல் அமைக்கப்பட்டிருக்கும்....
இதே போல் சூரக் கோட்டை பண்ணை வீட்டின் நுழைவு வாயிலிலும் அமைக்கப்பட்டிருக்கும்...
நினைத்ததை நிறைவேற்றும் வகையில் தனது உடன் பிறந்த தம்பியை வெளிநாட்டுக்கு அனுப்பி படிக்க வைத்தார்......
குடும்ப உறவுகள் அனைவரையும் நன்றாக படிக்க வைத்தார்.......
கல்விக்கென நிதி கேட்டு யார் வந்தாலும் வாரி வழங்குவதை வழக்கமாக வைத்திருந்தார்....
வீரபாண்டிய கட்டபொம்மன் நாடகத்தை நூற்றுக்கும் மேற்பட்ட தடவைகள் மேடையேற்றி அதில் வந்த வருமானம் ₹ 32 லட்சரூபாயை பல்வேறு கல்வி நிறுவனங்களுக்கு கொடையாக அளித்தார்....
அதில் ஒன்று தான் போடி தொழிற்பயிற்சி கல்லூரி......
கல்லூரி தொடங்க ₹ 2 லட்சத்தை அன்றைய அரசிடம் அளித்தார்.......
இன்றும் ஆண்டு தோறும் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு சிவாஜி--பிரபு சாரிட்டீஸ் டிரஸ்ட் மூலமாக கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது......
விளம்பரமில்லாமல்....
அன்றைய 24 கேரட் தங்கம் 1 கிராம்
விலை # 9.30 பைசா.....
இன்றைய 24 கேரட் தங்கத்தின் 1 கிராம்
விலை ₹ 5471/--
இன்று இரண்டு லட்சத்திற்கான மதிப்பை நீங்களே கணக்கிட்டு கொள்ளுங்கள்.......
கர்ணன் என்றும் கர்ணன்தான்.......
இன்றைய மதிப்பு ₹ 11,76,55,914/--
பதினோரு கோடியே எழுபத்தியாறு லட்சத்து
ஐம்பத்தைந்தாயிரத்து தொள்ளாயிரத்து பதினாங்கு ரூபாய் ....
5886
thanks G.Laksman (நடிகர் திலகம் சிவாஜி ரசிக நந்தவனப்பூக்கள்)
sivaa
30th December 2022, 09:39 AM
அனைவருக்கும் இனிய காலை வணக்கம்
நடிகர் திலகம் வழங்கிய கொடைகளை பற்றி தினம் ஒரு தகவல்*....
வேடிக்கை பார்க்க சென்ற இடத்தில்
தனது ஒரு மாத சம்பள பணத்தை
வழங்கிய நடிகர் திலகம்........
நடிகர் திலகம் தனது முதல் படமான பராசக்தி படத்தில் 1952ம் ஆண்டின் ஆரம்பத்தில் ஏவிஎம் ஸ்டுடியோவில் நடித்துக் கொண்டிருந்த போது, அருகில் உள்ள டென்னிஸ் கோர்ட்டுக்கு வேடிக்கை பார்க்க சகஸ்ரநாமம் அவர்களோடு செல்வார்......
அங்கு பிரபல டென்னிஸ் வீரர் ராமனாதன் அவர்கள் நண்பர்களோடு விளையாடிக் கொண்டிருப்பார்......
ஒரு நாள் விளையாடி முடித்த பிறகு தன் நண்பர்களிடம் ராமனாதன் அவர்கள் தன்னுடைய மகனை (ரமேஷ்) டென்னிஸ் பயிற்சிக்காகவும், டென்னிஸ் தொடர்களில் விளையாடுவதற்காகவும் வெளிநாட்டுக்கு அனுப்ப இருப்பதாகவும் அதற்கு அனைவரும் பண உதவி செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருந்தார்.......
அருகில் இருந்து இதனைக் கேட்டுக் கொண்டிருந்த நடிகர் திலகம் தனது சட்டை பையில் இருந்த ₹ 250/- ஐ எடுத்து ராமனாதன் கைகளில் தருகிறார்.........
ராமனாதனும் அவருடைய நண்பர்களும் திகைக்க, சகஸ்ரநாமம் அவர்கள் நடிகர் திலகத்தை அறிமுகம் செய்ய ராமனாதன் அவர்கள் நடிகர் திலகத்தை கட்டிப் பிடித்து நன்றி சொல்கிறார்...
அவருடைய நண்பர்களும் நடிகர் திலகத்தை பாராட்டுகின்றனர்.... ...
ராமனாதன் அவர்களிடமிருந்து விடைபெற்று வெளியே வந்தவுடன், சகஸ்ரநாமம் , கணேஷ் நேற்று தான் சம்பளம் வாங்கினாய்..... அதனைத் அப்படியே கொடுத்து விட்டாயே....
மாதம் முழுவதும் செலவுக்கு என்ன போகிறாய் என கேட்கிறார்.....
அதெல்லாம் பார்த்துக் கொள்ளலாம்
என்ற நடிகர் திலகம்....
அடுத்த சில வருடங்களில் டென்னிஸ் உலகில் இந்தியாவின் பெருமையை நிலை நாட்ட போகும் வீரனுக்கு என்னால் முடிந்த சிறு உதவி என்று சொல்லி விட்டு நகர்கிறார்........
பராசக்தி படத்தில் நடிக்க நடிகர் திலகம் வாங்கிய மாத சம்பளம் ₹ 250/- மட்டும்
அந்த ஒரு மாத சம்பளத்தைத்தான் ராமனாதன் அவர்கள் வசம் கொடுத்தார்........
1952ல் ₹250/- ன் இன்றைய மதிப்பு......
24 கேரட் 1 கிராம் தங்கத்தின் விலை
1952ல் ₹ 7.60 பைசா......
2022ல் ₹ 5471/---
இன்றைய மதிப்பு ₹ 1,80000/--
நாடக மேடைகளிலும், திரைப்படங்களிலும்
நன்றாக வேஷம் போட்டு நடித்த நடிகர் திலகம்
ஒரு நாளும் வாழ்க்கையில் வேஷம் போடாதவர்.......
வைரத்தை எத்தனை ஆண்டுகள் மண்ணுக்குள் புதைத்து வைத்தாலும்
வைரம் வைரம் தான்....
நாளாக நாளாக வைரத்தின் மதிப்பு கூடுமே தவிர என்றும் குறையாது...
5888
Thanks G Laksmanan (Muktha films 60)
sivaa
17th January 2023, 02:01 AM
இந்தியாவின் கிளார்க் கேபிள் என்று அமெரிக்க பத்திரிகைகள் 1962 இல் முதல் இந்திய நடிகராக சிவாஜி அவர்களை ஜான் கென்னடி யின் அமெரிக்க அரசாங்கம் அழைத்தது. பத்திரிகைகள் கௌரவித்தது இந்தியாவின் கிளார்க் கேபிள் என்று. திருமதி.தெரேசா என்ற மூத்த பத்திரிகையாளர் அமெரிக்க நடிகர்கள் தங்களை வருடத்தில் ஒரு படம் நடிப்பதற்குள் தாங்கள் தான் திரை உலகின் box office ஆளுமை என்று நினைத்து கர்வம் கொள்கின்றனர். ஆனால் இந்த இந்திய நடிகர் ஒரே சமயத்தில் 10 படங்களை நடித்து கொடுத்து அமைதியாக இருக்கிறார். இவர்தான் உண்மையான திரை உலக பாக்ஸ் ஆபீஸ் ஆளுமை உடையவர் என்று அமெரிக்க பத்திரிகையில் எழுதிய அந்த பக்கம். இதுதான் சிவாஜி சாதனை சரித்திர சாதனை. நடிக்க வந்த 10ஏ வருடத்தில் உலக ஆளுமை கொண்ட அமெரிக்க வல்லரசு முதல் இந்திய நடிகராக சிவாஜியை அழைத்து கௌரவித்தது. சிவாஜிக்கு பிறகே உலகளவில் இதர இந்திய நடிகர்கள் என்பது நிரூபணம்.
5894
5895
Thanks Nadigarthilagam sivaji tv
sivaa
23rd January 2023, 12:45 AM
சிவாஜிகணேசன் எனும் மகத்தான நடிகனின் மிக சிறந்த படங்கள் ஏராளம், ஆனால் அதிசிறந்த நடிப்பினைஅந்த மகா நடிகன் தேசாபிமான படங்களுக்கும், இந்து தெய்வ வேடங்களுக்கும், அடியார் வேடங்களுக்குமே கொடுத்திருந்தான்
தேசாபிமானிகளான கட்டபொம்மன், வ.உ.சிதம்பரம் போன்ற பெரும் அடையாளங்களை உணர்ச்சி பொங்க நம்முன் நிறுத்திவன் அவன்
சிவபெருமான் உருவம் முதல் வீரபாகு, நாரதர் உருவம் வரை தன் கணீர் குரலால் காட்டி தந்தவன் அவன்
கண்ணன், கர்ணன் முதல் ராமன் வரை இதிகாச பாத்திரங்களையெல்லாம் திரையில் நமக்கு சுமந்து காட்டியவன் அவன்
விசுவாமித்திரன் முதல் எத்தனையோ ரிஷிகளை நம் கண்ணில் காட்டிய வித்தகன் அவன்
ராஜராஜசோழன் எப்படி இருந்திருப்பான் எப்படி உறுமியிருப்பான் என்பதை திருநீறும் பட்டையுமாக வந்து காட்டி தந்தவன் அவன்
மகாகவி காளிதாஸ் எப்படி இருந்திருப்பான் என நம்முன் உருமாறி நின்றவன் அவன்
இந்து அவதாரங்கள், கவிஞர்கள், அடியார்கள், அவதார வேடங்கள், இந்து அரசர்கள், இந்து வேத ஞானிகள், ரிஷிகள், பக்தர்கள் என இந்துமததுக்கு திரையில் அவன் அற்றிய பணிகள் அதிகம்
இந்து வேடத்தில் நடிப்பதெல்லாம் பிற்போக்கு தனம் என்றும்,நாகரீகமில்லை என கருதப்பட்ட காலங்கள்
இதனாலே வீரபாண்டிய கட்டம்பொம்மன் படத்துக்கு டெல்லி முகத்தை திருப்பியபொழுதும் எகிப்து நாட்டு அதிபர் நாசர் விருது வழங்கினார்.
அந்த மகா நடிகன் வ.உ.சியாக ஜொலித்ததற்கு காங்கிரஸ் அரசு விருது கொடுக்கவில்லை, பாரத விலாசில் இந்தியனாக வந்ததற்கு இந்திய அரசு கண்டுகொள்ளவில்லை
மாறாக அமெரிக்க அரசுதான் "கவுரவ மேயராக" கொண்டாடியது. சிறப்பு விருந்தினராக வரவழைத்து பாராட்டி மகிழ்ந்தது.
ஆம், வரலாற்றில் மிகப்பெரிய அநீதி இந்தியாவில் சிவாஜிக்கு இழைக்கப்பட்டது.
ஆனால் எகிப்தும், பிரான்சும், அமெரிக்காவும், மலேசியாவும், சிங்கப்பூரும் இன்னும் பல நாடுகளும் ஏன் அன்றைய உலகில் சிறந்த நடிகன் பிராண்டோவே கொண்டாடிய பொழுதும் இந்திய அரசு தயங்கியது ஏன்?
அவனுக்குரிய அங்கீகாரம் கொடுக்கப்படவில்லையே ஏன்?
ஒரே ஒரு விஷயம்தான்.சிவாஜி திருநீறு பூசி நின்ற இந்து, தேசத்தை நேசித்த இந்து
ஆம், அந்த மகா நடிகனை இந்து என்பதற்காவும் அக்காலங்களில் திருநீறு பூசாமல் நடிப்பது நாகரீகம் என கருதப்பட்ட காலத்தில் இந்துவாகவும் புராண வேடங்களையும் தைரியமாக கொடுத்ததற்காக அவன் ஓரம்கட்டப்பட்டான்
தமிழக திரையுலகின் எப்பக்கம் திருப்பினாலும் காணப்படும் வஞ்சகம் இது.
சிவாஜி கணேசனின் அதி உச்ச நடிப்பு வெளிப்பட்ட படம் என ஒரு படத்தை சொல்ல முடியும், திருவருட்செல்வர் எனும் அந்த நாயன்மார் வாழ்க்கைப் படம்
அதில் சோழமன்னன், சேக்கிழார், சிறுத்தொண்ட நாயனார், சுந்தரர் என அழகாக உருக்கமாக நடித்திருந்தார் சிவாஜி கணேசன்..
ஆம் சுந்தரர் எப்படி இருந்தார், எப்படி வாழ்ந்தார்,எப்படி சிவ பக்தியில் உருகியிருந்தார் என்பதை அணு அணுவாக உருகி நடித்து உலகுக்கு காட்டினார் சிவாஜி கணேசன்
சிவாஜி கணேசன் ஆயிரம் வேடங்களில் நடித்திருந்தாலும் அவரின் ஒப்பற்ற நடிப்பும் உருக்கமும் பொருத்தமும் நிறைந்திருந்த பூரணத்துவ வேடம் என்பது அப்பர் சுவாமி வேடமே
நிச்சயம் அதற்கு விருது கொடுத்திருக்க வேண்டும், கொண்டாடியிருக்க வேண்டும் அந்த வேடம் வரலாற்றில் நின்றிருக்க வேண்டும்
ஆனால் இந்து அவதாரங்களையோ அடியார்களையோ மறைக்க வேண்டும் என்ற சிந்தனையுள்ள மாநிலத்தில் அதெல்லாம் சாத்தியமில்லை
அந்த படத்துக்கு விருதுமில்லை, பத்திரிகைகளில் பராசக்தி, கட்டபொம்மன் பாத்திரங்கள் வந்த அளவு அது வரவுமில்லை ,
ஒரே காரணம் அது நாயன்மார் கதை..
சிவாஜிகணேசனின் தனிச் சிறப்பும் ஒப்பற்ற நடிப்பும் கொண்ட படம் என்றால் அது திருவருட்செல்வர் படமே அதில் ஒரு காலமும் சந்தேகமே இல்லை..
திருவிளையாடல் முதல் ராஜரிஷி வரை சிவாஜி அந்த தெய்வீக வடிவங்களை நம் கண் முன் நிறுத்தியிருந்தார், ஆனால் அதற்காக அந்த நடிகன் கொண்டாடப்பட்டானா என்றால் இல்லை
ஒரு ஊடகம் அதை சொல்லியிருக்குமா என்றால் இல்லை
இந்திய நாடு என் வீடு" என பாடி நின்ற அவன் படத்தை விட
"இந்துஸ்தான் ஜிந்தாபாத்" என கொந்தளித்த அவன் படத்தை விட,
"சிந்து நதியின் இசை நிலவினிலே" என கண்களை பெருமையாக உருட்டி நின்ற அவன் படத்தைவிட ,
"வானம் பொழிகின்றது பூமி விளைகின்றது, மன்னவன் நாட்டில் அன்னியருக்கு இல்லை வரி" என முழங்கி நின்ற அவன் படத்தை விட தேசாபிமான படம் என எதை காட்டமுடியும்?
இந்நாட்டில் தேசாபிமான படங்களுக்கும், வேடங்களுக்கும் பிதாமகன் அவன்
சிவபெருமான் முதல் சிவனடியார் வரை, கண்ணன் முதல் காளிதாசன் வரை இந்து வேடங்களுக்கு அவனை விட்டால் யார் உண்டு?
இன்றும் என்றும் தேசாபிமான படங்களுக்கும், பக்தி படங்களுக்கும் அவன் நடிப்பே பிரதானம், அது ஒன்றே ஆறுதல்
அவ்வகையில் தேசம், இந்துமதம் என்ற உணர்வுக்கும் உயிருக்கும் அவன் செய்த சேவை மிகப் பெரிது, அதை இன்னொரு நடிகன் செய்ததுமில்லை செய்யப் போவதுமில்லை
கஞ்சன் என்றார்கள், மறைமுகமாக அவன் எவ்வளவு செய்தான் என்பதற்கு காஞ்சி பெரியவரே சாட்சி, அந்த செய்திகள் இங்கு அதிகம் தெரியபடுத்தப்படவில்லை
காஞ்சி பெரியவரிடம் ஆசிவாங்க சென்ற சிவாஜியிடம் சொல்கின்றார் அந்த மகான் "திருச்சி கோவில்ல ஒரு யானை நின்னுச்சி, யார் கொடுத்தான்னு கேட்டேன் உங்க பெயரை சொன்னாங்க*
சென்னையில சில கோவில்ல கேட்டேன் உங்க பேரதான் சொன்னா.. இன்னும் நிறைய கோவில்ல சொன்னாங்க, நிறைய தெய்வகாரியம் செய்றீங்க
நிறைய யானை கொடுக்குறீங்க, திருப்பணி நிறைய செய்றீங்க, ஆனா உங்க* பெயர் வராம பாத்துக்கிறீங்க
பகவான் உங்களுக்கு செஞ்சத மறக்காம திருப்பி செய்றீங்க.."
அது சத்தியமாக கடவுளின் வார்த்தை, சிவாஜி கணேசன் எனும் மகா நடிகனின் உள்ளகிடக்கியினை அறிந்த அந்த தெய்வத்தின் வார்த்தை.
சிவாஜி கணேசன் திரும்ப சொன்னார் "வெறும் நாடக நடிகனா ஒரு வேளை சோத்துக்கு நடிச்சிட்டு இருந்த எனக்கு எவ்வளவு பெரும் வாழ்க்கை கொடுத்திருக்கு அந்த தெய்வம்
படிக்காத என்னை, நடிப்பு தவிர தகுதி இல்லாத* என்னை டெல்லி அமெரிக்கா மலேஷியா இலங்கைன்னு உலகெமெல்லாம் கொண்டாட வச்ச சக்தி அது
அதுனாலதான் அந்த தெய்வத்தோட* கோவில் வாசல்ல நின்னு மக்களை நான் வரவேற்கிறதுக்கு பதிலா யானை கொடுத்தேன்.. இதுல என்ன சாமி இருக்கு?
திமுகவில் தொடக்கத்தில் இருந்தாலும், பின் வெளிவந்து இந்து தெய்வங்கள், இந்து அரசர்கள், தேசாபிமானிகள் வேடத்தில் மக்களுக்கு எவ்வளவோ உண்மைகளை சொன்னான்.
Thanks Rajan Psv (nadigarthilakam fans)
sivaa
23rd January 2023, 12:46 AM
நாங்கள் எவ்வளவுதான் பொறுமையாக இருந்தாலும் மாற்றுமுகாம் கூட்டம் எங்களை சீண்டிக்கொண்டே இருக்கிறது.
நடிகர் திலகத்தை இழுக்காமல் அவர்களால் ஒன்றுமே எழுதமுடிவதில்லை.காரணம் நடிகர் திலகம் பெற்ற வெற்றிகள் சாதனைகள் அவர்களது நடிகனை நித்திரையில்லாமல் தவிக்கவிட்டதோ அதேபோன்று இவர்களையும் தூங்கிடாமல் தவிக்கவிட்டு வாழ்நாள்முழுவதும் பிதற்றவைத்துவிட்டது. இவர்களுக்கு இனி விமோசனம் என்பது கிடையாது.வாழ்நாள் முழுவதும் பிதற்றிக்கொண்டு போய்ச்சேரவேண்டியதுதான்.
மேலும் தொடர்ந்து அவர்கள் பிதற்றுவதற்காக...
Paul Goseph Goebbels.
.ஒரு பொய்யை உணர்வுப்பூர்வமாக எடுத்துரைத்து அதை உண்மை என நம்பவைப்பதில் உலகத்தில் கோயபல்ஸை மிஞ்சிய ஆள் இல்லை.
கற்பனைக்கும் எட்டாத பல பொய்களை உண்மை என நம்ப வைத்த ஏமாற்றுப் பேர்வழி தான் இந்த கோயபல்ஸ்.
ஜெர்மனில் ஹிட்லரின் நாஜி கட்சியில் கொள்கை பரப்புச் செயலாளராக இருந்த கோயபல்ஸ், பொதுக்கூட்டங்களில் வாயை திறந்தாலே வண்டி வண்டியாக பொய்மூட்டைகளை அவிழ்த்து விடக்கூடியவர்.
ஒரு பொய்யை உண்மை என நம்பவைக்கும் வரை அதைப்பற்றி திரும்ப திரும்ப உரத்த குரலில் பேச வேண்டும் என்பது தான் கோயபல்ஸின் தத்துவம். இதைத் தான் ஹிட்லருக்காக செய்து வந்தார் அவர். யூதர்களுக்கு எதிராக ஹிட்லர் நிகழ்த்திய கொடுமைகளை நியாயப்படுத்தி பேசி அவருக்காக வாழ்நாள் முழுவதும் வக்காலத்து வாங்கி வந்தார் கோயபல்ஸ். தனது தந்திரமான பேச்சால் மக்களை ஏமாற்றியவர்.
கோயபல்ஸ் தாம் சொல்வது வடிகட்டிய பொய் தான் என்றாலும் அதை நயமாக எடுத்துரைத்து திரும்ப திரும்ப அதைப்பற்றி பேசி அதைக்கேட்டவர்கள் அனைவரையும் ''அட உண்மைதாம்பா'' என நினைக்க வைத்துவிடுவார். மக்களிடம் எந்த மாதிரி பேசினால் அவர்களுக்குள் தனது பொய்யை உண்மை என விதைக்க முடியும் என்ற வித்தையை கற்று வைத்திருந்தார் கோயபல்ஸ்.
பொய் பேசுவதில் தன்னை மிஞ்சி ஒருவர் உலகில் இருக்கக்கூடாது என்ற நிலையை ஏற்படுத்திவிட்டு விட்டுச்சென்றவர்.
"எவ்வளவு பெரிய பொய்யானாலும் திரும்பத்திரும்ப சொல்வதன் மூலம் மக்கள் நாளடைவில் நம்பத்தொடங்கி விடுவார்கள்.
கோயாபல்ஸ் மாதிரியே எம் ஜீ ஆர் ரசிகர்கள் பலர் கோயாபல் ஆக செயல்பட்டுக்கொண்டிருக்கிறார்கள்.
என்று பராசக்தி வெளிவந்து சிவாஜி அவர்கள் எடுத்த எடுப்பிலேயே முதல் படத்தில் சூப்பர் ஸ்ட்டார் ஆனாரோ அன்றே நடிகர் திலகத்திற்கு எதிரான சதி வேலைகள் ஆரம்பிக்கப்பட்டு தொடர்ந்து இன்றுவரை நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. பக்கத்து தெருவில் வசிப்பவன் ஏதாவது ஒரு விடயத்தில் வெற்றி பெற்றுவிட்டால் அதனை பொருட்படுத்ததாத ஒருவன் தன் பக்கத்துவீட்டுக்காரன் பெற்றுவிட்டால் பொறாமை பொச்செரிப்பு கொள்வான். அதேபோன்று
சிறிய பருவம் முதலே தன்னுடன் ஒன்றாக இருந்தவன் விளையாடியவன் உணவருந்தியவன் ஒரே துறையில் பயணித்தவன் தனக்குப்பின் சினிமாவிற்குள் நுழைந்தவன் எடுத்த எடுப்பிலேயே பெரும் புகழை பெற்றதும் பொறாமை குணம் தலை தூக்கியது செம்மலுக்கு.அன்றே ஏற்பாடு செய்யப்பட்டதுதான் இந்த கோயாபல்ஸ் கூட்டங்கள்.
சிவாஜி கணேசனின் பட விளம்பரங்கள் கிழிக்கப்பட்டன சாணம் வீசப்பட்டது படம் சரியில்லை என வாய்வழிப்பிரச்சாரம் பத்திரிகைகள் கையூட்டம் கொடுக்கப்பட்டு எதிர்மறை விமர்சனங்கள் நடிகர் திலகத்தின் படங்கள் ஓடும் தியேட்டர்களில் படத்தை தோடர்ந்து ஓடவிடாமல் இடையூ மற்றும் பல என ஏகப்பட்ட நிகழ்வுகள் இந்த கோயாபல்ஸ்களால் செயல்படுத்தப்பட்டன.
இயலாமை காரணமாக சொந்தத்தியேட்டர் குத்தகை தியேட்டர் என்ற புலம்பல்.
நடிகர் திலகத்தின் படங்கள் ஏற்படுத்திய சாதனைகள் மறைக்கப்பட்டு பொய்யான விபரங்கள் பரப்பப்பட்டன.
படங்கள் பெற்ற மாபெரும் வசூல்கள் குறைத்து வெளியிடுதல் கொடுத்த கொடைகளை தெரிந்தும் கஞ்சன் என்ற பிரச்சாரம். நடிகர் திலகம் சம்மந்தப்பட்ட நல்ல விடங்களை தங்கள் நடிகன் செய்யததுபோல் விடயத்தை திசை திருப்பல்.
தங்கள் விபரங்களை மிகைப்படுத்தி பிரச்சாரம் செய்தல். ஓடாத படங்களை ஓடியதாகவும் கிடைக்காத வசூல் கிடைத்ததாகவம் இட்டுக்கட்டுதல் போலி விளம்பரங்களை தயார் செய்து தயாரிப்பாளர் கொடுத்ததுபோல் உலவவிடுதல். இதுவும் இதற்குமேலும் இந்த கோயாபல்சுகளின் பொய்கள் சொல்லிமாளாது.
இவர்களின் பித்தலாட்டத்திற்கு ஒரு சில ஆதாரங்கள் இங்கே.மேலும் பல தொடர்ந்து வரும்.
5898
5900
sivaa
3rd February 2023, 07:01 AM
சிவாஜி என்ற சொல்லுக்கு ஒரு ஆகர்ஷண சக்தி உண்டு. அவரை பலமுறை சந்தித்து இருந்தாலும் எனது தந்தையுடன் சென்று சந்தித்த அந்த நினைவு மட்டும் பசுமரத்து ஆணி போல மனதில் என்றும் நிலைத்து இருக்கிறது.
அப்போது எனக்கு வயது 16 என்று நினைக்கிறேன். சில சுதந்திரப்போராட்ட வீரர்கள் மற்றும் காந்தீய சிந்தனை கொண்டவர்கள் திரு சோமையாஜுலு தலைமையில் சிவாஜியை சந்தித்து அவர் கண்டிப்பாக திப்புவின் கதையில் நடித்து அவருடைய பெருமையை உலகிற்கு எடுத்துரைக்க வேண்டும் என்று நிர்பந்திக்க அவருடைய இல்லத்துக்கு சென்றனர். எனது தந்தையுடன் நானும்.
( அந்த "கஞ்ச" நடிகர் வீட்டில் குளிர்பானம் கொடுத்து அனைவரையும் உபசரித்தார்கள்.)
சிவாஜி வந்ததும் பேச்சு வார்த்தைகள் நடந்து முடிந்தது. அவருடைய இயலாமையை எடுத்து கூறினார். உடன் வந்த முக்தா ஸ்ரீனிவாசன் அவர்கள் தானே அதை தயாரிக்க போவதாக கூறியும் அன்றைய அவருடைய அரசியல் நிலைப்பாடு அவரை செய்யவிடவில்லை.
அனைவருக்கும் சூடாக உப்புமாவும் இனிப்பும் பரிமாறப்பட்டது. ( கஞ்சன் வீட்டில் சுமார் முப்பது பேருக்கு உணவு ) கிளம்பும் நேரத்தில் அந்த மாபெரும் நடிகர் எனது தந்தையிடம் இருந்து கதையை பெற்றுக்கொண்டார். "தநாயக்கன் கோட்டை" என்று பெயரிடப்பட்டு இருந்த அந்த கதை பலரால் தொகுக்கப்பட்டு இருந்தது.
வேண்டாம் என்று கூறியவர் கதையை படித்து பார்ப்பதாக சொல்லி வாங்கிக்கொண்டது பலருக்கு ஆச்சர்யம்.
இரண்டு வாரங்கள் கழித்து அவரிடம் இருந்து எனது தந்தைக்கு அழைப்பு. நானும் ஒட்டிக்கொண்டேன். சுமார் ஒரு மணி நேரம் கதையை பற்றி பேசிவிட்டு அன்றைய சூழலில் அவரால் ஏன் அந்த கதையில் நடிக்க இயலாது என்பதையும் விளக்கமாக கூறி எங்களை திருப்பி அனுப்பினார். என் தந்தையின் கையின் ஒரு துணிப்பை திணிக்கப்பட்டது. இதை உங்களுடைய காத்தீய சிந்தனை இயக்கத்துக்காக வைத்துக்கொள்ளுங்கள். தொடர்ந்து காந்தி அண்ணலின் புகழ் பரப்ப ஆவன செய்யுங்கள். என்னுடைய உதவி எப்போது தேவைப்பட்டாலும் தயங்காமல் வந்து என்னை சந்தியுங்கள் என்று கூறி வழியனுப்பினார்.
அந்த ஒரு நடிகனை பற்றி எத்தனை விமர்சனங்கள். ஒட்டு மொத்த ஊடகங்களும் ( இன்று போல் ) ஒரு சாராருக்கே சரணம் போட்டு வந்த நிலை அன்று. சிவாஜியின் வெற்றி இத்தகைய அனைத்து இன்னல்களையும் தாண்டித்தான் என்று நினைத்தால் வியப்பாக இருக்கிறது. சுமார் நாற்பதாயிரம் நன்கொடை வழங்கியதை ( சுமார் 45 ஆண்டுகளுக்கு முன் ) எனது தந்தை அவருடைய கடைசி காலங்களிலும் சொல்லி சிலாகித்தார்.நன்றி திரு Belge Ravi
5902
Thanks Udha Kumar (நடிகர்திலகம் சிவாஜி ரசிக நந்தவனப்பூக்கள் One and only sivaji)
sivaa
8th February 2023, 08:52 AM
முன்னைய நண்பர்கள் தெரிந்தோ தெரியாமலோ சில தவறான விபரங்களை பதிவிட்டிருக்கலாம் வெளியிட்டிருக்கலாம்.அல்லது பொதுவான பத்திரிகையில் வெளிவந்த சில பிழையான தகவல்களை பத்ததிரிகையில் வெளிவந்ததுதானே என்ற எண்ணத்தில் விளம்பரத்தின் அடிப்படையில் சிலவற்றை சரியாக இருக்குமென நாம் எண்ணியிருக்கலாம். அதன் அடிப்படையில் அது சரியாகத்தான் இருக்குமென நினைத்து தொடர்ந்து நாமும் அதனை பரப்பி வருகின்றோம்.இது அனைவருக்குமே பொருந்தும்.தவறில்லை ஆனால் முன்னையவர்கள் வெளியிட்ட தகவல்கள் பிழை என தெரிந்த பின்னரும் அதனை தொடர்ந்து பரப்பி வருவோமேயானால் அது மாபெரும் தவறு.அதைவிடத் தவறு அது தவறென தெரிந்த பின்னும் அது சரிதான் என குதர்க்கமாக வாதிடுவது வாதிட்டு அதனை உண்மையாக்க பகிரத பிரயத்தனை செய்வது.இதைத்தான் வாத்தியின் கோயாபல்ஸ் கைகூலிகள் செய்து வருகின்றனர். சொந்தத் தியேட்டர் குத்தகை தியேட்டர் ஸ்ரெச்சர் வடகயிறு இவை எல்லாவற்றையும் அவர்களே செய்து கொண்டு தாங்கள் தப்பிப்பதற்காக அதை நாங்கள் செய்வதாக பழியை எங்கள்மேல் திசை திருப்பிவிடுகிறார்கள்.. சொந்தத் தியேட்டர் சாந்தியில் மக்களின் ஆதரவுடன் நல்ல வசூலுடன் ஓடிக்கொண்டிருந்த படம் பாலும் பழமும் ஆனால் அதனை 127 நாட்களுடன் நிறுத்திவிட்டு பார்த்தால் பசி தீரும் படத்தை திரையிட்டார்கள். பாலும் பழமும் பட தயாரிப்பளர் ஜீ என் வேலுமணி படம் நல்ல வசூலுடன் நன்கு போகின்றது படத்தை நிறுத்தாதீர்கள் தொடர்ந்து ஓடட்டும் என எவ்வளவோ கெஞ்சிக் கேட்டும் பாலும் பழமும் 127 நாட்களுடன் சாந்தியில் எடுக்கப்பட்டது. இதன்காரணமாக ஜீ என் வேலுமணி நடிகர் திலகத்துடன் கோவித்துக்கொண்டு வெளியேறி யது நடந்த தெரிந்த வரலாறு. வெள்ளிவிழா ஓடியிருக்கவேண்டிய படம் பாலும் பழமும் சொந்தத்தியேட்டரில் ஓட்டுபவர்களாக இருந்தால் இதனை வெள்ளிவிழா ஓட்டியிருக்கலாமே ஆனால் அப்படிச் செய்யவில்லை இதனை கோயாபல்சுகள் உணராமல் இல்லை ஆனால் சாந்தி தியேட்டரில் வெளிவரும் பெரும்பாலான படங்கள் வெற்றி பெறுவது பொறுக்கமுடியாமல் காழ்ப்புணர்சியில் இயலாமை ஆற்றாமை அவர்களை புலம்ப வைத்திருக்கிறது. சாந்தியில் திரையிடப்பட்ட எல்லா படங்களுமா நன்கு போயிருக்கின்றன இல்லையே 100 நாட்கள் ஓடியதா ?இல்லையே சொந்தத்தியேட்டரில் ஓட்டுபவர்களாக இருந்தால் எல்லா படங்களையும் ஓட்டியிருக்கலாமே லாஜிக் தெரியாத கோயாபல்சுகள். அரசியல் பின்புலம் ஆள் அம்பு சேனை இதனை வைத்துக் கொண்டு அனைத்து தியேட்டருமே அவர்களின் கட்டுப்பாட்டில்தான். ஓட்டென்றால் ஓட்டவேண்டியதுதான்.சொந்தத்தியேட்டர் அவர்களுக்கு தேவையில்லை . இப்படித்தான் 1965 ல் கோவை ராயல் தியேட்டரில் எங்கவீட்டுப் பிள்ளை திரையிட்டிருந்த வேளை தியேட்டர் நிர்வாகத்தை அன்பாக கேட;டு வெள்ளிவிழா வரை இழுத்தார்கள் இந்த கோயாபல்சுகள்.அந்த இம்சை காரணமாக 10 வருடங்களாக வாத்தி படத்தை தியேட்டர் பக்கமே அண்டவிடவில்லை நிர்வாகம்.இது வரலாறு ஒரு உதாரணம் மட்டுமே.தூத்துக்குடியில் தர்ணா இருந்து அடிமைப்பெண் படத்தை 100 நாட்கள் ஓட்டியது மதுரையில் 175 நாட்களுக்கப்பின் 2 காட்சிகள் வீதம் உ சு வாலிபனை 217 நாட்கள் ஓட்டி பாகப்பிரிவினை 216 நாட்கள் ஓட்டத்தை முறியடித்தது இப்படி பல இதைவீடவும் பல இந்த கோயாபல்ஸ்களின் லீலைகள் இருக்கின்றன. வாத்திக்கு வெள்ளி விழா படங்கள் அசோக்குமார் உட்பட 7 மட்டுமே.நடிகர் திலகத்திற்கு 15க்கு மேல் எனவே கூடுதல் எண்ணிக்கை காட்டுவதற்காக வெள்ளிவிழா படம் எதை கணக்கு காட்டலாம் என தேடிதேடி அலைகிறார்கள் வெள்ளிவிழா ஓடாத என் தங்கை ஒளிவிளக்கு இரண்டையும் தற்சமயம் சேர்த்து கணக்கு காட்டி தங்களை தாங்களே ஏமாற்றிக்கொண்டு அற்ப சந்தோஷம் அடைந்திருக்கிறார்கள்.............................. .................................................. ...........வாத்தியின் கள்ளக்கணக்குகளின் அம்பலம் தொடரும்........................
59035904
sivaa
10th February 2023, 09:22 AM
யாருடைய சாதனைகள் அதிகம்?
https://youtu.be/Tn31p7RW9Gg
Thanks Sivaji Murasu
sivaa
12th February 2023, 11:00 AM
இலங்கையில் யாழ்ப்பாணம் நகரில் வெள்ளி விழா ஓடியவை 3 படங்கள் மட்டுமே.
அவை (1) வசந்த மாளிகை (2) உத்தமன் (3) பைலட் பிரேம்நாத்
5905
5906
5907
sivaa
12th February 2023, 07:22 PM
தமிழ்நாட்டில் நடிகர் திலகத்தின் பெயரை பறை சாற்றும் நினைவிடங்களில் சுமார்
2.5 கோடி மதிப்புள்ள கட்டிடம் மதுரையில்
அமைந்துள்ளது.......
இதனை நிறுவியவர் வேலம்மாள் கல்வி நிறுவனங்களின் தலைவர்
எம் வி முத்துராமலிங்கம் அவர்கள்
2003ல் மதுரையிலிருந்து இராமேஸ்வரம் செல்லும் நெடுஞ்சாலையில் அமைந்துள்ள வேலம்மாள் பொறியியல் கல்லூரி உள்ள
ஒரு வளாகத்திற்கு நடிகர் திலகத்தின் பெயரை சூட்டி பெருமைப்படுத்தி உள்ளார்
வேலம்மாள் கல்வி நிறுவன குழுமங்களின் தலைவர்.....எம் வி முத்துராமலிங்கம் அவர்கள்.......
அவருக்கும் இப் பெயரை சூட்டுவதற்கு காரணமாக இருந்த முனைவர் மருது மோகன் அவர்களுக்கும் கோடானு கோடி நடிகர் திலகத்தின் சார்பில் நன்றி
5908
Thanks K.Laksmanan (Nadigarthlakam Fans)
sivaa
19th February 2023, 11:57 PM
தென்னாப்பிரிக்காவில் வெளியான சிவாஜி படம்!
Do the Shadow Kiss என்ற விளம்பரத்துடன் தென்னாப்பிரிக்காவில் கலாட்டா கல்யாணம் திரைப்படம் வெளியாகியிருக்கிறது.
நடிகர் திலகம் சிவாஜிகணேசன் - ஜெயலலிதா, நாகேஷ், மனோரமா என ஒவ்வொருவருக்கும் விதம்விதமான அடைமொழியுடன் போஸ்டர் அடித்திருக்கிறார்கள்.
ஆல்பர்ட் என்ற தியேட்டரில் படம் வெளியானதை இந்த போஸ்டர் தெரிவிக்கிறது.
நன்றி ISR Ventures
5909
Thanks Uthaya Kumar (நடிகர் திலகம் சிவாஜி நந்தவன பூக்கள்)
sivaa
20th February 2023, 12:09 AM
வேறொரு குழுவில், 1964 ல் நமது நடிகர் திலகத்தின் திரைப்பட சாதனைகளை மட்டம் தட்டி பதிவிட்டிருப்பதால், இப்பதிவை தற்போது மீள்பதிவு செய்வது அவசியமாகிறது.
1964 நடிகர் திலகத்தின் சாதனை ஆண்டு .
(பதிவிடுபவர் முகம்மது தமீம்)
1964 நடிகர் திலகத்தின் திரை வாழ்க்கையில் இன்னொரு பொற்கால ஆண்டு. இந்த ஆண்டு அவரது நடிப்பில் வெளியான படங்கள் ஏழு. அவற்றில் 100 நாட்களுக்கு மேல் ஓடிய படங்கள் ஐந்து . பதினோரு வாரங்கள் (77 நாட்கள்) ஓடிய படம் ஒன்று. ஒன்பது வாரங்கள் (63 நாட்கள்) ஓடிய படம் ஒன்று.
1) கர்ணன் (108 நாட்கள்)
2) பச்சை விளக்கு (105 நாட்கள்)
3) கை கொடுத்த தெய்வம் (101 நாட்கள்)
4) புதிய பறவை (135 நாட்கள்)
5) ஆண்டவன் கட்டளை (77 நாட்கள்)
6) முரடன் முத்து (63 நாட்கள்)
7) நவராத்திரி (106 நாட்கள்)
இவை சென்னை நகரத்தில்
25 திரையரங்குகளில் வெளியாகி, அவற்றில் 15 திரையரங்குகளில் 100 நாட்களுக்கு மேல் ஓடின, பெரிய அரங்குகளில் மூன்று காட்சிகளாக. (கர்ணன் 3, பச்சை விளக்கு 3, கை கொடுத்த தெய்வம் 4, புதிய பறவை 1, நவராத்திரி 4)
இவற்றோடு 1963-ம் ஆண்டு தீபாவளி வெளியீடான அன்னை இல்லம் படமும் இந்த ஆண்டின் துவக்கத்தில் ( பிப்ரவரி 22) 100 நாட்களைப் பூர்த்தி செய்தது.
இவற்றுள் சென்னை சாந்தியில் திரையிடப்பட்டது கர்ணன் படம் மட்டுமே. பின்னர் சாந்தியில் ராஜ்கபூரின் 'சங்கம்" (இந்தி) திரையிடப்பட்டு 200 நாட்களுக்கு மேல் ஓடியதால் வேறு படங்கள் திரையிடப்படவில்லை. குறிப்பாக சிவாஜி பிலிம்ஸ் முதல் சொந்தப் படம் மற்றும் வண்ணத்தில் முதல் சமூக திரைக்காவியம் புதிய பறவை கூட சாந்தியில் வெளியாகவில்லை. பாரகனில்தான் ரிலீஸானது.
இந்த ஆண்டு வந்தவற்றுள் இரண்டு வண்ணப் படங்கள். அவற்றில் கர்ணன் பம்பாய் பிலிம் சென்ட்டரிலும், புதிய பறவை சென்னை ஜெமினி ஸ்டுடியோவிலும் ப்ராசஸ் செய்யப்பட்டன. கர்ணன் மதுரையில் ஆசியாவிலேயே பெரிய அரங்கான தங்கம் தியேட்டரில் 100 நாட்களுக்கு மேல் ஓடியது.
ஐந்துuடங்களுக்கு விஸ்வநாதன் - ராமமூர்த்தியும். ஒரு படத்துக்கு கே.வி.மகாதேவனும் ஒரு படத்துக்கு டி.ஜி.லிங்கப்பாவும் இசையமைத்திருந்தனர்.
பி.ஆர்.பந்துலு, ஏ.பீம்சிங், கே.எஸ். கோபாலகிருஷ்ணன், தாதாமிராஸி, கே.சங்கர், ஏ.பி.நாகராஜன் ஆகிய ஆறு இயக்குனர்கள் இயக்கியிருந்தனர்.
தேவிகா மூன்று படங்களிலும், சாவித்திரி மூன்று படங்களிலும், செளகார் இரண்டு படங்களிலும், சரோஜாதேவி, விஜயகுமாரி மற்றும் புஷ்பலதா தலா ஒரு படத்திலும் நடித்திருந்தனர்.
எஸ்.எஸ்.ஆர். இரண்டு படங்களிலும் ஏவிஎம் ராஜன் இரண்டு படங்களிலும், அசோகன் மூன்று படங்களிலும். பிரேம்நஸீர் மற்றும் பாலாஜி தலா ஒரு படத்திலும் நடித்திருந்தனர்.
நவராத்திரி நடிகர் திலகத்தின் 100-வது படமாக அமைந்ததும் அதில் ஒன்பது வெவ்வேறு ரோல்கள் ஏற்றதும் தனிச்சிறப்பு. 1964-ம் ஆண்டு நடிகர் திலகத்தின் எந்தப் படமும் வெள்ளி விழா காணவில்லை என்பது குறையே. (இந்த ஆண்டு தமிழில் வெள்ளி விழா கண்ட ஒரே படம் ஸ்ரீதரின் காதலிக்க நேரமில்லை மட்டுமே)
கர்ணன் 2012-ல் டிஜிட்டலில் வெளியாகி 150 நாட்களுக்கு மேல் ஓடி பெரும் வெற்றி பெற்றது. (பதிவு மற்றும் செய்தித்தாள் விளம்பர ஆவணங்கள் தொகுப்பு முகம்மது தமீம்).
லைக் இடும் நண்பர்கள் பதிவுக்கு மட்டும் லைக் இட்டால் போதும். ஒவ்வொரு விளம்பர ஸ்டில்லுக்கும் தனியே லைக் இட அவசியமில்லை. கமெண்ட்கள் அன்புடன் வரவேற்கப்படுகின்றன.
5910
5911
5912
5913
5914
K. Sengottuvel (Face book)
sivaa
1st March 2023, 09:06 AM
நண்பர் சேகர் பரசுராம் அவர்கள் முக்தா பிலிம்ஸ் 60 முகநூலில் பதிவிட்ட விடயம் இது.
1972 ல் வெளியான பட்டிக்காடா பட்டணமா,
மதுரையில் செண்ட்ரல் திரையரங்கில் வெளியாகி முதல் 84 நாட்களில் மட்டுமே வசூலான தொகையை இன்றைய டிக்கெட் கட்டணத்தில் பார்த்தோமானால் 8 கோடி ரூபாய்,
இப்போதைக்கு. இந்த வசூல் சாதனைக்கு ஏற்ற ட்ரெண்டிங் வார்த்தை
எப்புட்றா??
5915
நன்றி சேகர் பரசுராம் (muktha films 60)
இதற்கு முகமது தமீம் அவர்கள் " கறுப்பு வெள்ளை படங்களில் அதிக வசூல் சாதனை செய்த படம் "
என பின்னூட்டம் இட்டிருந்தார்.
நானும் " மதுரையில் 5 லட்சம் வசூலாகப் பெற்ற முதல் படம்" என பின்னூட்டம் இட்டிருந்தேன்.
ஆனால் ராமசந்தரின் படத்தைவிட நடிகர் திலகத்தின் படமான பட்டிக்காடா பட்டணமா
சாதனை செய்த படமென மற்றவர்கள' தெரிந்து கொள்ளகூடாதென்ற எண்ணத்தில்
மா கோ ராவின் கோயாபல்ஸ் கும்பல் கைகூலிகள் அந்த இரண்டு பின்னூட்டங்களையும்
தூக்க வைத்துவிட்டார்கள்.
முக்தா பிலிம்ஸ் 60 நிர்வாகிகளும் எழுதியிருப்பது என்னவென சீர் தூக்கி பார்க்காமலே
அவற்றை நீக்கிவிட்டார்கள்.
மதுரையில் 5 லட்சம் வசூல் பெற்றதற்கான ஆதாரம்.
5916
ஆக மொத்தத்தில் வாத்தியின் கைகூலிகளது பித்தலாட்டங்கள் அனைத்தும் படிப்படியாக
பொது ரசிகர்களின் பார்வையில் அம்பலமாகிக்கொண்டு வருகின்றது.
sivaa
5th March 2023, 09:49 AM
sivajiganesan english interview
https://youtu.be/ZkBXS_YE7ws
Thanks Sivaji Murasu
sivaa
5th March 2023, 09:58 AM
வெளியிட்டு ஒரு நாள் கூட ஆகவில்லை அதற்குள் 2 லட்சம் பேர் கண்டு களித்துள்ளனர்.
நடிகர்திலகம் ஆங்கிலத்தில் பேட்டி கொடுத்துள்ள இந்த வீடியோவுக்கு
வெளியான 514 கருத்துக்களில் 90 சதவீத கமெண்ட்கள் ஆங்கிலத்திலேயே பதிவிடப்பட்டுள்ளன.
எந்தவித படாதோபமும் ஆடம்பரமும் இல்லாத நடிகர் திலகத்தின் எளிமையானதோற்றமும் பேட்டியும்...
ஒரு எளிமையான மனிதரின் பிரமாண்டமான சக்தி என்பது இதுதான் ...
பார்வை இட்டவர்களுக்கும் கருத்துரை இட்டவர்களுக்கும் எமது நன்றிகள் ...
Thanks Sivaji Murasu
பின்னூட்டம்
Ushadeepan Sruthi Ramani
எத்தனையெத்தனை பாவங்கள் அந்த முகத்தில்? பேட்டி எடுத்தவருக்கு அவர்மீது எவ்வளவு மரியாதை? சிம்மம் கர்ஜிக்கும் அழகு...To be or not to be....எப்படி வேறுபடுத்திக் காண்பிக்கும் அனுபவம்? தன்னடக்கம்..பெரியவர்கள் மீது கொண்ட மரியாதை...பக்தி..தன்னடக்கம்...முழுத் திறமை கொண்ட எந்தக் கலைஞன் இப்படி பக்தி சிரத்தையோடு இருந்திருக்கிறான்? எத்தனை வெள்ளை மனது? கல்மிஷம் இல்லாத மனிதன். இன்னொரு நடிகர்திலகம் நமக்குக் கிடைக்கவா போகிறார்? நடிக்காவிட்டாலும் இன்னும் கொஞ்ச காலம் நம்மோடு (ஒரு தொண்ணூறு வயசு வரையாவது) இருந்திருக்கலாம். இருக்கிறார் என்பதே சந்தோஷமாக..நிறைவாக இருந்திருக்கும். காலம் அநியாயமாய்ப் பறித்துக் கொண்டது. இறைவன் இரக்கமற்றவன். தனக்குப் பிடித்தவர்களை சீக்கிரம் அழைத்துக் கொள்கிறான். பிடிக்காத 'கலைஞர்'களை கிடக்கட்டும் என்று விட்டு விடுகிறான். நம் ஆயுசை பதிலாகக் கேட்டிருந்தாலும் கொடுத்திருக்கலாமே?
sivaa
5th March 2023, 10:11 AM
Nadigar thilagam english specch interview part-2
https://youtu.be/rfnn-qjamm8
Thanks ilayathilakam prabhu
sivaa
22nd April 2023, 08:31 AM
சில காரணங்களால் சில விடயங்களை உரிய நேரத்தில் பதிவிடமுடியவில்லை.
கால தாமதமாக பதிவிடவேண்டியதாகிவிட்டது.
...........................................
5918
sivaa
22nd April 2023, 08:33 AM
சில காரணங்களால் சில விடயங்களை உரிய நேரத்தில் பதிவிடமுடியவில்லை.
கால தாமதமாக பதிவிடவேண்டியதாகிவிட்டது.
...........................................
மதுரை ராம் தியேட்டரில்
17 ..03 ..2023 முதல்
கர்ணன்
5918
sivaa
22nd April 2023, 08:40 AM
டிஜிட்டல் வடிவமைப்பில் மார்ச் 24 . 2023 முதல்
முதல்மரியாதை
5925
sivaa
22nd April 2023, 08:47 AM
முதல் மரியாதை
5928
5929
sivaa
24th April 2023, 06:31 AM
தமிழர்கள் அதிகம் உள்ள தெற்கு ஆப்ரிக்காவில் நடிகர் திலகம் மற்றும் கலை செல்வி ஜெயலலிதா அவர்கள் நடிப்பில் வெளியான கலாட்டா கல்யாணம் திரைப்படம் வெளியாகி சக்கை போடு போட்டது. இணைய தளத்தில் தெற்கு ஆப்ரிக்கா நண்பர் ஒருவர் பகிர்ந்த விளம்பரம். பெரிய அரங்கம் ஆல்பர்ட் அரங்கில் 2ஆம் வாரம் ஓடிய விளம்பரம். தமிழகம், மலேயா, சிங்கப்பூர், குவைத், இலங்கை மட்டும் அல்ல இப்போது தெற்கு ஆப்ரிக்கா இந்த லிஸ்ட் இல் சேர்ந்துள்ளது. உலக நடிக சக்ரவர்த்தி நடிகர்திலகம் படங்கள் உலகெங்கும் வெற்றி நடை போட்டுள்ளது இதன் மூலம் நிரூபணம். Global Star Nadigar Thilagam.
5930
5931
Thanks Nadigar thilagam sivajitv
sivaa
24th April 2023, 06:57 AM
இலங்கை யாழ்ப்பாணத்தில் நடிகர் திலகத்தின்
புத்தகம் வெளியீடு. 23.04 .2023
5932
sivaa
26th April 2023, 04:27 AM
சிவாஜி கணேசன் மகன் யாழில் செய்தது!😯 Sivaji Ganesan Son Ramkumar Jaffna Visit | Alasteen Rock
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களது மகன் ராம்குமார் யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்ட போது நடந்ததை நீங்கள் இந்த காணொளியில் காணலாம்
https://youtu.be/WrkfRUa0bfQ
sivaa
26th April 2023, 05:03 AM
ஈழத்தில் சிவாஜிகணேஷன் செய்த வேலை; தந்தையின் தடங்களை தேடிவந்த மகன்!! || Ushanthan View
https://youtu.be/N7ZVAN1EZrA
sivaa
27th April 2023, 04:54 AM
சிவாஜி கணேசனின் மூத்த புதல்வர் ராம் குமார் இலங்கையில் நான் வாழ்ந்த மூளாய் கிராமத்திற்கு நேற்று ஏப்ரல் 24ந் திகதி வந்திருந்தார். காரணம்? தனது தந்தை 'நடிகர் திலகம்' சிவாஜி கணேசன் நிதி சேகரித்துத் தந்ததால் உருவான மூளாய் கூட்டுறவு வைத்தியசாலையைப் பார்க்க வேண்டும் என்ற ஆவலினால்....!
இன்றைக்கு 70 ஆண்டுகளுக்கு முன்னர் - 1953ம் ஆண்டு ஒக்டோபர் 28ந் தேதி, மூளாய் கூட்டுறவு வைத்தியசாலையின் அபிவிருத்திக்காக சிவாஜி கணேசன் யாழ்ப்பாணம் நகரசபை மண்டபத்தில் "என் தங்கை" என்ற நாடகத்தை நடத்தி நிதிசேகரித்துக் கொடுத்திருந்தார்! அதே நாடகம் கொழும்பிலும் நடத்தப்பட்டது. அந்த நேரத்தில் சிவாஜி ஒரு இளம் நடிகர். சிவாஜியின் முதல் படமான 'பராசக்தி ' 1952 ஒக்டோபரில் வெளியானது.
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் குறித்து முனைவர் மருதுமோகன் எழுதிய புத்தகத்தின் யாழ்ப்பாண வெளியீட்டுக்காக இங்கிலாந்தில் வசிக்கும் ஈழத்தமிழரான முனைவர் சிவா பிள்ளையின் அழைப்பின்பேரில் 'சென்னை-யாழ்ப்பாணம்' பயணிகள் விமானத்தில் பலாலிக்குப் பறந்து வந்த ராம் குமார், யாழ் பல்கலைக்கழகத்தில் நடந்த புத்தக வெளியீட்டில் கலந்து கொண்டார்.
சென்னை திரும்பமுன்னர் மூளாய் கூட்டுறவு வைத்தியசாலைக்கும் அவர் சென்றார். வைத்தியசாலையின் நிர்வாகிகள், வைத்தியர்கள், தாதிமார் இணைந்து அவரை, வரவேற்றிருக்கிறார்கள். அந்த அன்பான உபசரிப்புக் கண்டு மிகவும் நெகிழ்ந்து போயிருக்கிறார் 'சிவாஜியின் செல்வன்'. இவ்வாண்டு ஆரம்பத்தில் சென்னையிலிருந்தபோதும், யாழ்ப்பாணத்திலிருந்தபோதும் நான் கொடுத்த அன்பான தூண்டுதலும் அவரது மூளாய் வருகையை ஊக்குவித்தது என்றதில் எனக்கும் குட்டிப் பெருமை..
யாழ்ப்பாணத்தின் ஒரு சில பகுதிகளையும் என் தம்பியோடு சுற்றிப் பார்த்திருக்கிறார் ராம் குமார். நல்லூர் கந்தசாமி கோவிலுள் கண்கள் குளமாகி அழுதேவிட்டார் என்றான் தம்பி. தொல்புரம் மன்னதோட்டம் ஜெகஜோதி அம்பாள் ஆலயம், பொன்னாலை வரதராஜப் பெருமாள் ஆலயம், கீரிமலை.. செல்வச்சந்நதி.. மாவிட்டபுரம்.. வல்வெட்டித்துறைமுத்துமாரியம்மன் திருவிழாக் கோலாகலம்.. என ஒருபுறமும், யாழ் கோட்டை, இந்தியா அன்பளித்த கலாச்சார மண்டபம், யாழ் நூல்நிலையம்... பருத்தித்துறை முனை, சங்கிலியன்தோப்பு, மந்திரிமனை என பட்டியல் நீள்கிறது. தேசமும் தெய்வீகமும் அவரைக் கவர்ந்துவிட்டிருக்கின்றன.
தனது தந்தையின் கையால் மூளாய் கூட்டுறவு வைத்தியசாலையில் நட்டு வைக்கப்பட்டிருந்த மாமரத்தை கண்டபோது கடுமையாக உணர்ச்சி வசப்பட்டிருக்கிறார் ராம்குமார்!! 'தேவர் மகன்' அல்லவா..
"விதை நான் போட்டது.. இதெல்லாம் என்ன பெருமையா? கடமை..!"
5936
5934
5935
5937
Thanks Narayana Moorthy (Muktha films 60)
sivaa
27th April 2023, 04:56 AM
5938
5939
5940
5941
sivaa
27th April 2023, 05:03 AM
இன்னும் எத்தனை வருடமானாலும் நடிகர் திலகத்தின் பெயரை சொல்லிக்கொண்டே இருக்கும் மாமரம்....
இன்றைக்கு சரியாக 70 ஆண்டுகளுக்கு முன்னர், இலங்கை யாழ்ப்பாணம்
மூளாய் கூட்டுறவு வைத்தியசாலையின் அபிவிருத்திக்காக, சிவாஜி கணேசன் 1953ம் ஆண்டு அக்டோபர் 28ந் தேதி, யாழ்ப்பாணம் நகரசபை மண்டபத்தில் "என் தங்கை" என்ற நாடகத்தை நடத்தி நிதிசேகரித்துக் கொடுத்திருந்தார்.
அதே நாடகம் கொழும்பிலும் நடத்தப்பட்டது.
அவர் செய்த அந்த பெரும் உதவியால்,
இன்று அந்த வைத்தியசாலை மிகப் பிரபலமாக உருவாகியுள்ளது.
அந்த நேரத்தில் சிவாஜி ஒரு இளம் நடிகர்.
(சிவாஜியின் முதல் படமான 'பராசக்தி ' 1952 அக்டோபரில் வெளியானதுகுறிப்பிடத்தக்கது.)
தனது முதல் படம் வெளியான போதே
பொது நலப்பணிக்காக,அதுவும் கடல்கடந்து வாழும் தமிழர்களுக்காக உதவிய பெருந்தன்மை எப்படி பாராட்டினாலும் போறாது.
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் குறித்து முனைவர் மருதுமோகன் எழுதிய புத்தகத்தின் யாழ்ப்பாண வெளியீட்டுக்காக இங்கிலாந்தில் வசிக்கும் ஈழத்தமிழரான முனைவர் சிவா பிள்ளையின் அழைப்பின் பேரில் ராம் குமார்,
யாழ் பல்கலைக்கழகத்தில் நடந்த புத்தக வெளியீட்டில் கலந்து கொண்டார்
அதன் பின்னர் மூளாய் கூட்டுறவு வைத்தியசாலைக்கும் அவர் சென்றார். வைத்தியசாலையின் நிர்வாகிகள், வைத்தியர்கள், தாதிமார் இணைந்து அவரை வரவேற்றிருந்தனர்
அந்த அன்பான உபசரிப்புக் கண்டு மிகவும் நெகிழ்ந்து போயிருக்கிறார் 'சிவாஜியின் செல்வன்'.
தனது தந்தையின் கையால் 70 ஆண்டுகளுக்கு முன்பு,
மூளாய் கூட்டுறவு வைத்தியசாலையில் நட்டு வைக்கப்பட்டிருந்த மாமரத்தை கண்டபோது கடுமையாக உணர்ச்சி வசப்பட்டிருக்கிறார் ராம்குமார்.
இன்றைக்கு தமிழகத்தில்,
நடிகர் திலகத்தின் பல நினைவுகளை, "நாகரீக காலம்" என்ற பெயரைச்சொல்லி பல அடையாளங்களை அழித்துக் கொண்டிருக்கிறார்கள்.
ஆனால் அவர் கையால் விதைக்கப்பட்ட மாமரத்தை 70 ஆண்டுகளாக அவர் பெயரை சொல்லி பாதுகாத்து, நடிகர் திலகத்தை பெருமைப்படுத்தும் மூளாய் கூட்டுறவு வைத்தியசாலை நிர்வாகிகளையும், அங்குள்ள மக்களையும் நினைத்து பெருமைப்பட வேண்டும்.
5942
5943
Thanks Sri
sivaa
28th April 2023, 01:25 AM
சிவாஜி கணேசன் | புலிக்கொடி நாட்டிய இடம் | Eluthum Karankal | Interview with actor Ram Kumar Ganeshan
https://youtu.be/wtsSSOz7aB4
Thanks
IBC Tamil TV
sivaa
29th April 2023, 05:50 AM
In 1972 Sivaji Ganesan's VASANTHA MALIGAI broke box office records in South Africa,when it released at the Odeon Cinema...It ran for months with almost all shows sold out...All the songs were huge hits and even Vanishri's orange saree became popular among our local women.Pictured below is a South African newspaper advert for Vasantha Maligai
5944
Thanks Kesivan Govinder (Nadigarthilagak visirigal)
sivaa
4th May 2023, 06:26 AM
விடியலில் வாசித்தது... தற்செயலாக விரல் பட்டு, அசல் பதிவு எங்கோ சென்றுவிட்டது. ஆனால், நல்லவேளை எனக்குத் தெரியாமலேயே copy ஆகியிருந்ததை இங்கே share பண்ணுகிறேன். அனுப்பியவர் எவரோ, நன்றிகள்..
----------------------------»--»»»»»-------------------------------
60 வயதிலும் பெண்ணின் காலில் விழுந்த சிவாஜி... எழுத்தாளர் சுரா பகிர்ந்த நெகிழ்ச்சி சம்பவம்!
நக்கீரன் செய்திப்பிரிவு
எழுத்தாளரும் மூத்த பத்திரிகையாளருமான சுரா, தன்னுடைய திரையுல அனுபவங்களையும், நாம் பார்த்து ரசித்த நடிகர்களின் அறியாத பக்கங்கள் குறித்தும் நக்கீரன் ஸ்டூடியோவில் பகிர்ந்து வருகிறார். ‘திரைக்குப் பின்னால்’ நிகழ்ச்சியில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் குறித்து அவர் பகிர்ந்துகொண்டவை பின்வருமாறு...
"சினிமாத்துறையில் நன்றி என்ற ஒன்றை லென்ஸ் வைத்து தேடினாலும் பார்க்க முடியாது. நூறு பேரில் ஒருவரிடம் நன்றி, விஸ்வாசம் இருந்தாலே பெரிய விஷயம் என்பார்கள். சிவாஜி கணேசனின் நன்றி, விஸ்வாசம் பற்றி நான் ஒரு சம்பவத்தைக் கூறுகிறேன். இதைக் கேட்கும்போது சிவாஜி கணேசனின் மீது உங்களுக்கு மிகப்பெரிய மரியாதை வரும்.
சிவாஜி கணேசன் நடித்த முதல் திரைப்படம் 1952இல் வெளியான ‘பராசக்தி’ திரைப்படம். அந்தப் படத்தின் தயாரிப்பாளர் வேலூரைச் சேர்ந்த பி.ஏ.பெருமாள் முதலியார். அந்தப் படத்திற்கு ஃபைனாஸ் செய்தது ஏ.வி.மெய்யப்பச் செட்டியார். படத்திற்கு கலைஞர் வசனம் எழுதியதும், படம் வெளியானபோது மிகப்பெரிய வெற்றி பெற்றதும் நமக்குத் தெரிந்த விஷயம்தான். அந்த வெற்றி சிவாஜி கணேசனை மிகப்பெரிய உயரத்தில் கொண்டுபோய் வைத்ததும், அதன்மூலம் பெரிய கதாநாயகன் தமிழ்நாட்டில் உருவானதும் வரலாறு.
அதன் பிறகு பல வருடங்கள் கடந்துவிட்டன. சிவாஜி சார் 200 படங்களுக்கு மேலாக நடித்து, புகழ் குன்றின் உட்சத்தில் இருக்கிறார். நான் கூறும் இந்த சம்பவம் ஒரு தீபாவளி நேரத்தில் நடந்தது. இது பொம்மை பத்திரிகையில் ஆசிரியராக இருந்த என் நண்பர் வீரபத்திரன் என்னிடம் பகிர்ந்துகொண்டது. அவர் சிவாஜி கணேசனுக்கும் நெருங்கிய நண்பர். ஒருநாள் வீரபத்திரனை அழைத்த சிவாஜி, “நாளை எந்த வேலையும் வச்சுக்காதீங்க... நாம் ஓர் இடத்திற்குப் போக வேண்டும்” எனக் கூறியுள்ளார். வீரபத்திரனும் மறுநாள் காலையிலேயே சிவாஜி வீட்டிற்குச் சென்றுள்ளார். சிவாஜி வீட்டில் காலை உணவை முடித்துவிட்டு இருவரும் காரில் ஏறி அமர்கின்றனர். நாம் ஓர் இடத்திற்குப் போக வேண்டும் என்றுதான் சிவாஜி கூறினாரேயொழிய எந்த இடத்திற்குப் போகிறோம் எனக் கூறவில்லை. வீரபத்திரனுக்கும் அவரிடம் கேட்கத் தயக்கம். அதனால் எதுவும் கேட்காமல் காரில் ஏறிவிடுகிறார். கார் சென்னையைத் தாண்டுகிறது... காஞ்சிபுரத்தை தாண்டுகிறது... வீரபத்திரன் அப்போதும் கேட்கவில்லை. கடைசியாகக் கார் வேலூருக்குச் சென்று, அங்கு ஒரு வீட்டின் முன்னால் போய் நிற்கிறது. அந்த வீடு சிவாஜி கணேசனை வைத்து படம் எடுத்த பி.ஏ.பெருமாள் முதலியாருடையது. அவர் முன்னரே மரணமடைந்துவிட்டார். அவர் குடும்பம் மட்டும் அங்கே வசித்துவருகிறது. தீபாவளி வருவதால் அந்தக் குடும்பத்தினர் அனைவருக்கும் புத்தாடைகள் எடுத்துக்கொண்டு சிவாஜி கணேசன் சந்திக்க வந்துள்ளார். அந்த வருடம் மட்டுமல்ல; ஒவ்வொரு வருடமும் சிவாஜி கணேசன் இதேபோல நேரடியாக சென்று சந்திப்பாராம். அப்போது, பெருமாள் முதலியார் மனைவி காலில் நெடுஞ்சாண்கிடையாக விழுந்து ஆசீர்வாதம் வாங்கிவிட்டுத்தான் சிவாஜி கணேசன் கிளம்புவாராம். தன்னுடைய 60 வயதிலும் அவருடைய காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கியுள்ளார்.
பின், வேலூரில் இருந்து சென்னை திரும்புகையில் இருவரும் இதுபற்றி காரில் பேசிக்கொண்டு வந்துள்ளனர். அப்போது சிவாஜி, "இவர்தான் என்னை வச்சு ‘பராசக்தி’ படம் எடுத்தார். 2000 அடி படம் எடுத்திருந்தபோதே நான் ரொம்ப ஒல்லியா இருக்கேன்; வசனம் பேசுனா மீன் வாயைத் திறந்து பேசுவது மாதிரி இருக்கு என்றெல்லாம் சொல்லி என்னை படத்திலிருந்து நீக்க முயற்சித்தார்கள். எனக்குப் பதிலாக கே.ஆர்.ராமசாமியைக் கதாநாயகனாக வைத்து எடுக்க வேண்டும் என நினைத்தார்கள். அப்போது நான்தான் படத்தில் நடிக்க வேண்டும் என்பதில் பெருமாள் முதலியார் உறுதியாக இருந்தார். நான் இவ்வளவு பெரிய நடிகரானதற்கு காரணம் பெருமாள் முதலியார்தான். இன்று அவர் இல்லை. ஆனால், இந்தியா முழுக்க தெரிந்த நடிகராக நான் இருப்பதும், உலகெங்கும் வாழும் தமிழர்கள் மத்தியில் பிரபலமான நடிகராக இருப்பதும் அவர் போட்ட பிச்சை. அன்று பெருமாள் முதலியார் இல்லையென்றால் இன்று சிவாஜி கணேசன் இல்லை" என உருக்கமாகக் கூறியுள்ளார். சிவாஜி கணேசன் நினைத்தால் இதை யாரிடமாவது கொடுத்துவிடலாம். அப்படியெல்லாம் இல்லாமல், ஒவ்வொரு வருடமும் அவரே நேரில் சென்று அவர்களைச் சந்தித்து, வாங்கி வந்துள்ளதை அவர் கையால் கொடுத்து, அவர்களிடம் ஆசீர்வாதம் பெற்றுவருவதெல்லாம் எவ்வளவு பெரிய விஷயம்.
அன்று இரவு 10 மணிக்கு அவர்கள் வந்த கார் வடபழனி அருகே வருகிறது. இப்போதைய கமலா தியேட்டர் அருகே உள்ள விநாயகர் கோவில் தெருவில்தான் வீரபத்திரன் வீடு உள்ளது. அவர், இங்கே நிறுத்துங்கள்... என் வீடு இங்கேதான் உள்ளது... நான் இறங்கிக்கொள்கிறேன் எனக் கூற, இந்த நேரத்தில் நடந்து போவீர்களா எனக் கேட்ட சிவாஜி, அவர் வீட்டிற்கே சென்று இறக்கிவிட்டுள்ளார். நான் முன்னரே கூறியதுதான்... சினிமாவில் நன்றி, விஸ்வாசம் என்பது சுட்டுப்போட்டால்கூட பார்க்க முடியாது. இன்றைய தலைமுறையைச் சேர்ந்த கலைஞர்கள், நடிகர்கள், நடிகைகள், தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள் என யாராக இருந்தாலும் உங்களை அறிமுகப்படுத்தி நீங்கள் புகழ்பெறுவதற்கு மூலகாரணமாக இருந்த உன்னதமான மனிதர்களைக் கைக்கூப்பி வணங்குங்கள். இந்த சம்பவம் நம் அனைவருக்குமே ஒரு பாடம்".
நன்றி: நக்கீரன்
5945
Thanks Kouwshigan Ramiah (Face Book)
sivaa
5th May 2023, 07:07 AM
அடுத்தடுத்து படம் ரிலீஸ் செய்த சிவாஜி.. பிரமாண்டங்களுக்கு நடுவில் சிக்கிய ’பொம்மை கல்யாணம்’.. !
பொம்மை கல்யாணம்பொம்மை கல்யாணம்
சிறந்த நடிகர்கள், வரதட்சணை கொடுமை என்ற சிறந்த கருத்தாக்கம் என பல நேர்மறை விஷயங்கள் இருந்த போதிலும் பிற படங்களின் அழுத்தம் மற்றும் அதிகபட்ச சோகம் காரணமாக பொம்மை கல்யாணம் 50 நாள்களையே கடந்தது.
5946
1958 வெளியான சிவாஜி கணேசன் நடித்தப் படங்களில் ஒன்று பொம்மை கல்யாணம். ஆச்சார்யா ஆத்ரேயா எழுத்தில் ஆர்.எம்.கிருஷ்ணமூர்த்தி தமிழ், தெலுங்கு இரு மொழிகளில் இதனை இயக்கினார். தெலுங்குப் படம் 1958 ஜனவரி 11 ஆம் தேதி வெளியாகி வெற்றி பெற்றது. தமிழில் அதே வருடம் மே 3 ஆம் தேதி வெளியானது.
சிவாஜி வருடம் முழுவதும் நடித்துக் கொண்டிருப்பார். அதனால், வருடம் முழுக்க அவர் நடித்தப் படங்கள் வெளியாகிக் கொண்டிருக்கும். ஒரு படம் வெளியாகி அரங்கு நிறைந்த காட்சிகளாகப் போய்க்கொண்டிருக்கையில் அடுத்தப் படத்தை வெளியிடுவார்கள். ஒரே நேரத்தில் இரு படங்கள் ஓடிக்கொண்டிருக்கையில் மூன்றாவதாக ஒன்று வெளியாகும். இதன் காரணமாக வெள்ளிவிழா போக வேண்டிய படம் 100 நாள்கள் ஓடும். 100 நாள்கள் ஓட வேண்டியது 50 நாள்களில் தூக்கப்படும். அதற்காக கவலைப்பட முடியாது. கவலைப்படும் நேரத்தில் இன்னொரு படம் வெளிவரும்.
1958 லும் அப்படித்தான் நடந்தது. அந்த வருடத்தின் ஆரம்பத்தில் பொம்மல பெள்ளி - பொம்மை கல்யாணத்தின் தெலுங்குப் பதிப்பு - வெளியாகி வெற்றி பெற்றது. அது தெலுங்கு என்பதால் அதை பட்டியலில் இருந்து நீக்கிவிடலாம். 1958 இல் சிவாஜி நடிப்பில் தமிழில் வெளியான முதல் படம் உத்தம புத்திரன். பிப்ரவரி 7 ஆம் தேதி வெளியான அப்படம், 36 நாள்களை கடந்த நிலையில் மார்ச் 14 பதிபக்தி படத்தை வெளியிட்டனர். உத்தம புத்திரன், பதிபக்தி இரண்டும் ஒரே நேரத்தில் திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கையில் ஏப்ரல் 14 சம்பூர்ண ராமாயணத்தை வெளியிட்டனர். இதில் என்.டி.ராமராவுடன் சிவாஜியும் நடித்திருந்தார். சம்பூர்ண ராமாயணம் திரைக்கு வருகையில் உத்தம புத்திரன் ஐம்பது நாள்களையும், பதிபக்தி முப்பது நாள்களையும் கடந்திருந்தது. உத்தம புத்திரன், பதிபக்தி, சம்பூர்ண ராமாயணம் என மூன்று படங்கள் ஓடிக் கொண்டிருக்கையில் மே 3 ஆம் தேதி பொம்மை கல்யாணம் வெளியானது.
உத்தம புத்திரன் 100 நாள்களை நிறைவு செய்ய பதிபக்தி, சம்பூர்ண ராமாயணம் இரண்டும் பொம்மை கல்யாணத்துடன் அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடின. பொம்மை கல்யாணம் 50 தினங்களை கடந்த போது அன்னையின் ஆணை வெளியானது. பதிபக்தி, சம்பூர்ண ராமாயணம் ஆகிய படங்களுடன் அன்னையின் ஆணையும் சேர, பொம்மை கல்யாணம் தியேட்டரிலிருந்து தூக்கப்பட்டது. பதிபக்தி 100 நாள்களும், சம்பூர்ண ராமாயணம் 5 இடங்களில் 100 நாள்களும், மதுரையில் 165 நாள்கள் ஓடின. அன்னையின் ஆணை 100 நாள்கள் ஓடியது. அந்த வருடம் வெளியான சாரங்கதாரா, சபாஷ் மீனா, காத்தவாயராயன் ஆகிய படங்களும் 100 நாள்கள் ஓடின. நடுவில் பொம்மை கல்யாணம் மட்டும் 50 நாள்களுடன் பின்னடைவை சந்தித்தது. 100 நாள்கள் ஓடவில்லை என்றாலும் படம் லாபம்தான்.
பொம்மை கல்யாணம் ஒரு அக்மார்க் குடும்பப் படம். மாமியாரின் வரதட்சணை வெறியை விரிவாக கண்ணீர் ததும்ப காட்சிப்படுத்தியிருந்தது. சிவாஜி சுதந்திரப் போராட்ட தியாகி ரங்காராவின் மகள் ஜமுனாவை காதலிப்பார். வரதட்சணை பெயராது என்பதால் இந்தத் திருமணத்தை சிவாஜியின் தாய் சாந்தகுமாரி எதிர்ப்பார். அவருக்கு தனது சகோதாரனின் மகள் மைனாவதியை சிவாஜிக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என்ற விருப்பம் இருக்கும். அதற்கு மாறாக சிவாஜி, ஜமுனா திருமணம் நடக்கும். திருமணம் முடிந்தபின், மருமகளை மாமியார் வரதட்சணை கேட்டு கொடுமை செய்வார். சிவாஜி ஊரில் இல்லாத நேரம் மருமகளை வீட்டைவிட்டே துரத்திவிட்டு, பழியை மருமகள் மீது போடுவார். அத்துடன் மைனாவதியை மகன் சிவாஜிக்கு திருமணம் செய்ய சாந்தகுமாரி ஏற்பாடு செய்வார். சிவாஜியும், ஜமுனாவும் இறுதியில் இணைந்தார்களா, சாந்தகுமாரியின் வரதட்சணை வெறி தணிந்ததா என்பது கதை.
சிறந்த நடிகர்கள், வரதட்சணை கொடுமை என்ற சிறந்த கருத்தாக்கம் என பல நேர்மறை விஷயங்கள் இருந்த போதிலும் பிற படங்களின் அழுத்தம் மற்றும் அதிகபட்ச சோகம் காரணமாக பொம்மை கல்யாணம் 50 நாள்களையே கடந்தது. கே.வி.மகாதேவன் இசையில் படத்தில் 8 பாடல்கள் இடம்பெற்றிருந்தன.
வரதட்சணை கொடுமை குறித்த விழிப்பணர்வை ஏற்படுத்தியவகையில் இன்றும் பார்க்கக் கூடிய படமாகவே பொம்மை கல்யாணம் உள்ளது. 1958 மே 3 வெளியான பொம்மை கல்யாணம் இன்று 65 வது வருடத்தை நிறைவு செய்கிறது.
Thanks 5947 NEWS 18
sivaa
10th May 2023, 05:12 AM
எம்.ஜி.ஆரை விட பெரிய வள்ளல் சிவாஜிதான்! ஆராய்ச்சியாளர் சொல்வதென்ன?
https://youtu.be/hHW0cqWqodo
Thanks Valai Pechu Anthanan
sivaa
22nd May 2023, 08:36 AM
நேற்று தூத்துக்குடி சத்தியா திரையரங்கில் தலைவர் சிவாஜியின் சவாலே சமாளி திரைப்படத்தின் ரசிகர்கள் கொண்டாட்டம் கற்பூரமேற்றி இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டன இடைவேளையில் நான்கு நிகழும் சிவாஜி கணேசன் பாடல் ஒளிபரப்பப்பட்டது அதில் பட்டிக்காடா பட்டணமா அம்பிகையே ஈஸ்வரி புதிய பறவை ஊட்டி வரை உறவு பாடல்கள் வசந்த மாளிகை
5948
Thanks Kuddam Sivaji Muththukumar
sivaa
24th May 2023, 11:54 PM
திரு திருநாவக்கரசு வினாயகமூர்த்தி அவர்கள் சில மாதங்களுக்கு முன்னர் இலங்கையில் ஓடிய சில படங்கள் பற்றிய விபரங்கள் கேட்டிருந்தார். சில காரணங்களால் அந்த நேரத்தில் விபரமாக எழுத முடியவில்லை.அவர் கேட்ட விபரங்கள் உட்பட மேலும் பல தகவல்கள் இங்கே. மாற்றுக் குழு நண்பர்கள் தங்களால் முன்னர் சொல்லப்பட்ட பொய்களை உண்மையாக்க பல வழிகளிலும் மண்டையை உடைத்துக்கொண்டு ஊன் உறக்கமின்றி செயல்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். அவர்கள் எந்த வழியில் செயல்பட்டாலும் உண்மை என்பது அவர்களுக்குத் தெரியும், சிவாஜி ரசிகர்களுக்கும் தெரியும், புரியும். ஆனால் எம் ஜீ ஆர் ரசிகர்கள் புரிந்து கொள்ள மறந்தது பொது ரசிகர்களை, நேர்மையாளர்களை, உண்மையை தேடுபவர்களை. எங்களால் கொடுக்கப்படும் ஆதாரங்களை கண்டுகொள்ளாமல் உதாசீனம் செய்து தொடர்ந்து சொன்ன பொய்களையே சொல்லிக்கொண்டிருக்கிறார்கள் எம் ஜீ ஆர் ரசிகர்கள். நாங்கள் கொடுக்கும் ஆதாரங்களை பார்த்த பின்னரும் சொன்ன பொய்யையே மறுபடியும் அவர்கள் சொல்லும் பொழுது பொது ரசிகர்கள், நேர்மையாளர்கள் என்ன நினைப்பர்கள்? எம் ஜி ஆர் ரசிகர்கள் சொல்வது அனைத்தும் பொய் என்ற சிந்தனை அவர்கள் மனதில் தோன்றும் அல்லவா?முகநுல் நண்பர் வினோ, நண்பர் ஜீவா நந்தன் போன்ற பொது ரசிகர்கள் மற்றும் ஏனைய நேர்மையாளர்கள் அவர்களை எந்தக்கண்ணோட்டத்தில் பார்ப்பார்கள்.கடிவாளம் கட்டப்பட்ட குதிரைகளைப் போன்றவர்கள் எம் ஜீ ஆர் ரசிகர்கள். அக்கம் பக்கம் என்னநடக்கிறது என்பது தெரியாது. விடயத்திற்கு வருவோம் எம் ஜீ ஆர் படங்கள் பற்றி ஆரம்பத்தில் யார் தவறான தகவல்களை பரப்பினார்கள் என தெரியவில்லை ஆனால் அடுத்து மிகப்பொயளவில் தவறான தகவல்களை பரப்பிக்கொண்டிருந்தவர் உரிமைக்குரல் ஆசிரியர் காலம் சென்ற ராயு அவர்கள். தற்பொழுது எம் ஜி ஆர் கலைக் குழு என்ற பெயரில் சங்கர் என்பவர் தவறான தகவல்களை பரப்பிக்கொண்டிருக்கிறார். தவறான தகவல்கள் தெரிந்து செய்யப்பட்டதா? அல்லது தெரியாமல் தவறு நடந்ததா என்பது தெரியவில்லை.தெரியாமல் தவறு நடந்திருந்தால், அது தவறு என தெரிந்த பின்னரும் தொடர்து அதை எழுதிக்கொண்டிருந்தால் தெரிந்தே அந்தப்பொய்யை எழுதுகிறார்கள் என்பது நிஜமாகிறது. இது அனைவருக்கும் பொருந்தும். 14.01 1969 ஆண்டு ஒளி விளக்கு இலங்கையில் திரையிடப்பட்டது. 22.06 1969 வரை ஓடிய நாட்கள் 160 .ஆனால் எம் ஜீ ஆர் ரசிகர்கள் ஆதாரம் எதுவும் இல்லாமல் ஒளி விளக்கு இலங்கையில் வெள்ளி விழா ஓடியதாக கதை அளக்கிறார்கள்.160 நாட்கள் ஓட்டுவதற்கு மிகவும் கஷ்ட்டப்பட்டார்கள்.பல இரவுக்காட்சிகள் ரத்து செய்யப்பட்டன. பல காட்சிகள் நஷ்ட்டத்தில் ஓட்டினார்கள். காரணம்? யாழ் ராஜா தியேட்டர் மற்றும் பல தியேட்டர்களுக்கு சொந்தக்காரரும், S T R films நிர்வாகியுமான காலம் சென்ற எஸ் ரீ தியாகராஜா அவர்கள் மிகவும் தீவிர எம் ஜீ ஆர் ரசிகர். ஆர் எம் வீ அவர்கள் மூலம் காவல்காரன் திரைப்பட விநியோக உரிமையைப் பெற்றுக் கொண்டார் 100 நாட்கள் நிச்சயம் என்ற உறுதி மொழியோடு. அதன்படியே இலங்கையில் காவல்காரன் 2 தியேட்டர்களில் எம் ஜீ ஆர் ரசிகர்களது பாணியில் வடகயிறு ஸரெச்சர் எல்லாம பாவித்து 100 நாட்கள் ஓட்டினார்கள். காவல்காரன் ஓட்டப்பட்டது என்பதை சுலபமாக புரிந்து கொள்ள 113 நாட்கள் ஓட்டப்பட்ட காவல்காரன் யாழ் ராஜாவில் பெற்ற வசூல் சுமார் 167 000.00 .ஒரு வருட வித்தியாசத்தில் திரையிப்பட்ட அவர்களது குடியிருந்த கோயில் யாழ் வின்சர் 50 நாட்கள் + றீகல் 06 நாட்கள் பெற்ற வசூல் சுமார் 157 000.00 . காவல்காரன் 50 நாட்கள் அதிகம் ஓட்டப்பட்டு பெற்ற வசூல் 10 000.00 மடடுமே. காவல்காரன் படத்தை 100 நாட்கள் ஓட்டியதற்காக யாழ் எம ஜீ ஆர் ரசிகர்கள் அமரர் எஸ் ரீ தியாகராஜா அவர்களை யாழ் ராஜா அரங்கிலிருந்து ஊர்வலமாக அழைத்துச்சென்று யரழ் மத்தியில் தமிழ் அரசியல்வாதியான அமரர் அமிர்தலிங்கம் அவர்கள் தலைமையில் பாராட்டுவிழா நடாத்தி கௌரவித்ததார்கள்.காவல்காரன் மக்கள் ஆதரவுடன் ஓடவில்லை ஓட்டப்படதென்பதற்கு இதைவிட ஆதாரம் வேறு தேவையில்லை. காவல்காரன் 100 நாட்கள் ஓடடப்பட்டதால் போனஸ்சாக ஒளிவிளக்கு விநியோக உரிமையும் எஸ் ரீ ஆர் அவர்களுக்கு கிடைத்தது. காவல்காரன் 100 நாட்கள் ஓட்டப்பட்டதால் ஒளிவிளக்கு வெள்ளிவிழா கண்டால் அடிமைப் பெண் விநியோகம் எஸ் ரீ ஆர்க்கே என ஆசை தூண்டப்பட்டது.அடிமைப்பெண் கிடைக்குமென்ற கனவில் நஷ்ட்டம் பாராமல் கஷ்ட்டம் பாராமல் 100 நாட்களே ஓட முடியாத படத்தை இழு இழு வென ஜவ்வு மிட்டய போல இழுத்தார்கள். அடிமைப் பெண் தங்களுக்கென நினைத்து தியேட்டர் சுவரிலும் தங்களது அடுத்த வெளியீடு அடிமைப் பெண் என விளம்பரம் கீறியிருந்தார்கள். சில வாரங்களின் பின்னர் யாழ் ராணி அரங்கில் வருகிறாள் அடிமைப் பெண் விளம்பரம் மின்னியது. ஆடிப் போனார் எஸ் ரீ ஆர் தான் ஏமாற்றப்பட்டதை புரிந்து கொண்டார். இப்படி ஏமாற்றி விட்டர்களே என்ற மனக்கஷ்ட்டம் இருந்தாலம் ஆட்கள் வராமல் நஷ்ட்டத்தில் தொடர்ந்து படத்தை இழுக்கத்தேவையில்லை என சிறு மன நிம்மதியுடன் 160 நாட்களுடன் நிறுத்திவிட்டார். ஒளி விளக்கு 160 நாட்கள் ஓட்டிப் பெற்ற வசூல் சுமார் 2 03 000.00 மட்டுமே. அதே வருடம் கடைசியில் யாழ் ராணி மற்றும் மனோகரா அரங்குகளில் திரையிடப்பட்ட அடிமை பெண் பெற்ற வசூல் ராணி 77+மனோகரா 14 மொத்தம் 91 நாட்களில் பெற்ற வசூல் சுமார் 2 50 000.00.ஒளி விளக்கு 160 நாட்களில் 2 லட்சம் அடிமை பெண் 91 நாட்களில் 2 1/2 லட்சம். நேர்மையாளர்கள் சிந்திக்கட்டும். மற்றும் 2ஆம் வெளியீடு 3ஆம் வெளியீடு....(4ஆம் வெளியீடு)...... 5ஆம் வெளியீட்டிலெல்லாம் ஒளிவிளக்கு 100 நாட்கள் ஓடியதாக கதை பரப்புகிறார்கள் 4ஆம வெளியீட்டில் மட்டும் யாழ் ராஜாவில் 100 நாட்கள் ஓட்டினார்கள். இது பற்றி விவாதம் வந்த வேளை தமிழ் இமேஜ் இணையத்தில் எம் ஜீ ஆர் ரசிக நண்பர் சச்சி முருகேசு அவர்கள் விளக்கம் கொடுத்திருந்தார்.4ஆம் வெளியீட்டில் மட்டும் யாழ் ராஜாவில் 100 நாட்கள் ஓடியதென்றும் ஏனைய வெளியீடுகளில் 100 நாட்கள் ஓடவில்லையென்றும் அழுத்தம் திருத்தமாக எழுதியிருந்தார்.அந்த விவாதத்தில் பங்கெடுத்ததுக் கொண்ட எம் ஜீ ஆர் ரசிகர்கள் எல்லாம் அதன் பின்னர் எழுதும் பொழுது 5 வெளியீட்டிலும் 100 நாட்கள் ஓடியது என்றே எழுதுகிறார்கள். நண்பர் சச்சி அன்று எழுதியதை பார்த்தவர்கள் அதனை மறந்துவிடுவார்கள் என்ற எண்ணமா?
. ஒரு பொய்யை மீண்டும் மீண்டும் சொன்னால் அதனை உண்மையாக்கிவிடலாம் என்ற எண்ணமா அல்லது அவர்களது அறியாமையா என்பது தெரியவில்லை .தொழில் நுட்ப வளர்ச்சி கண்ட இந்நாட்களில் அனைவரது கை விரல் நுனியிலும் நொடிப்பொழுதில் எந்த விபரத்தையும் தெரிந்துகொள்ளும் கருவி உள்ள இந்தக்காலத்தில் தெரிந்துகொண்டே பொய்யை கூறி எவ்வளவு காலம்தான் மக்களை ஏமாற்ற முடியுமென இவர்கள் நினைக்கின்றார்கள். ஒளி விளக்கு முதல் வெளியிட்டில் 100 நாட்கள். பின்னர் 4வது வெளியீட்டில் யாழ் ராஜாவில் 100 நாட்கள் காட்டப்பட்டது என்பது மட்டுமே உண்மை. .வேறு எந்த வெளியீட்டிலும் எங்கும் 100 நாட்கள் இல்லை. யாழ் ராஜாவில் ஒளிவிளக்கு 100 நாள் வசூல் 3 52 648.00 அதே ராஜாவில் கர்ணன் 53 நாள் வசூல் ........3 16 560.25. 47 நாட்கள் அதிகம் ஓட்டப்பெற்ற ஒளி விளக்கு கர்ணனை விட அதிகம் பெற்ற வசூல் 36 ஆயிரம் மட்டுமே. கர்ணனை தொடர்ந்து ஓட விட்டிருந்தால் 100 நாட்கள்வரை ஓட்டப்பட்ட ஒளிவிளக்கின் வசூல் அம்பேல். இங்கே ஆதாரங்களை பார்த்தபின்னரும் எம் ஜீ ஆர் ரசிகர்கள் உண்மையை உணர்ந்து திருந்தமாட்டார்கள். ஆனால் பொது ரசிகர்கள் நேர்மையாளர்கள் அவர்களின் கயமையை தெரிந்து கொள்வார்கள் புரிந்து கொள்வார்கள்.
இலங்கையில் எம்ஜீ ஆர்க்கு வெள்ளிவிழா கண்டு 200 நாட்கள் ஓட்டிய ஒரே படம் உ சு வாலிபன் மட்டுமே.வாத்தி ரசிகர்கள் எழுதுவதுபோல் என் தங்கையோ ஒளிவிளக்கோ இதயக்கனியோ வெள்ளி விழா கிடையாது.உ சு வாலிபன் கொழும்பில் 150 நாட்களுக்குள்ளேயே அடங்கிப் போன படம் .200 நாட்கள் எப்படி? தலைநகர் கொழுப்பில் முதல் வெளியீட்டில் உ சு வாலிபன் ஒரு தியேட்டரில் ஏன் வெளியிடப்பட்டது?இலங்கையில் நாடோடி மன்னன் முதல் வெளியீட்டில் 16 பிரதிகள் எப்படி? ஏன்?விபரங்கள் அடுத்த பதிவில்......
5949
5950
5951
Powered by vBulletin® Version 4.2.5 Copyright © 2023 vBulletin Solutions, Inc. All rights reserved.