PDA

View Full Version : Vaazha Ninaithaal Vaazhalam (TAMIL)



rsubras
30th October 2005, 10:49 AM
Hi, my first attempt in Tamil writing...... Posting a story i had written when i was 15 years old :) Reason for me posting in two parts is laziness :) coz itz a tuf job re writing the stuff in Tamil font ... Kindly bear... "C"- Mukhi will take a break for now

வாழ நினைத்தால் வாழலாம்

பின் குறிப்பு : இது நான் 11ம் வகுப்பில் படித்துக் கொண்டிருந்த போது எழுதியது (அவ்வப்போது கொஞ்சம் மாற்றங்களுடன்). அதனால கொஞ்சம் சுட்ட வசனங்கள் அங்கங்கே இருக்கலாம். கண்டுக்காதீங்க :)

கோபால் நமது கதையின் நாயகன். வாழ்க்கையில் தோல்வியைத் தவிர வேறு எதையும் சந்தித்திராதவன்.அம்மா ஆசை போல் பிள்ளையாய் பிறந்தாலும் அம்மாவாசையில் பிறந்தவனாயிற்றே!! அவன் வாழ்வில் எல்லாமே கோளாறுதான். கோபாலது ஆசிரியர் 'கூழானாலும் குளித்து குடி என்பார்', ஆனால் கோபால் குளித்து விட்டு வருவதற்குள் அவன் கூழை வேறு யாராவது குடித்து விடுவார்கள். அவனது ஆசிரியர் 'குரைக்கிற நாய் கடிக்காது என்பார். சரி ஆசிரியரே சொல்லிட்டாரே என ஆசிரியரை நம்பி இவன் குரைத்துக் கொண்டிருந்த நாய் மீது கல்லைத் தூக்கி போட, அந்த நாய் இவன் உடம்பில் ஒரு கால் கிலோவை குரைத்துவிட்டது. அவன் படித்ததெல்லாம் சரிதான், ஆனால் அதுதான் படிக்காத நாய் போலும். எல்லாம் அவனது தலைவிதி. இந்த சம்பவஙளுக்குப் பிறகு ஆசிரியர் சொல்வது எதையும் கேட்கக்கூடாது என்ட்று தீர்மானித்து விட்டான்.ஆனாலும் அவனது விதி அவனை விடாது துரத்திக்கொண்டிருந்தது. வகுப்பறையில் ஆசிரியர் கரும்பலகையில் ஏதேனும் ஒரு திருக்குறளை எழுதி விட்டு, கோபாலிடம் இதை எழுதியவர் யாரென கேட்பார்.கோபாலும், 'அடடா, நம்ம சார் கஜினி சூர்யா போல Short Term Memory Loss உள்ளவர் போல இருக்கே' என்று பரிவுடன், 'நீங்கதான் சார் கொஞ்ச நேரம் முன்னாடி எழுதினீங்க' என்று அன்புடன் கூறுவான். இவனது பரிவை புரிந்து கொள்ள முடியாத ஆசிரியரோ , இந்த பையன் நம்மை நக்கலடிக்கிறான் என்றென்ணி இவனை வகுப்புக்கு வெளியே துரத்தி விடுவார்.இது போல ஏதாவது ஒரு பிரச்சினை இவனை வாட்டிக்கொண்டே இருந்தது. ஒவ்வொரு முறையும் தேர்வு மதிப்பெண் வாங்கிச் செல்லும்போதும் வீட்டில் யுத்தமே நடக்கும்.கோபாலது பெற்றோரோ தங்கள் பையன் அனைத்திலும் முதலாவதாக வரவேண்டும் என்று விரும்புவர். ஆனால் கோபால், பள்ளியில் இருந்து வெளியே வருவதில் வேண்டுமானால் முதலில் இருப்பானே தவிர, மற்றபடி பாடங்களில் எல்லாம் கடைசியில் இருந்து பார்த்தால்தான் இவன் முதல் நிலைக்கு வர வாய்ப்பு இருக்கிறது.

இறுதி தேர்வில் மட்டும் எப்படியாவது திக்கித் திணறி தேறி விடுவான். அதுவும் அவனது அப்பா 'நீ பரிட்சையில் பாஸ் பண்ணலேனா உன்னை மாடு மேய்க்க அனுப்பி விடுவேன்' என்ற மிரட்டலுக்கு பயந்துதான்.

இப்படி நாளொரு மேனியாவுடனும் பொழுதொரு வருத்ததுடனும் கோபாலது வாழ்க்கை ஓடிக் கொண்டிருந்தது.இல்லை..இல்லை..அவனை பொருத்தவரை நொண்டி நொண்டி போய்க்கொண்டிருந்தது. தற்பொழுது பத்தாம் வகுப்பு முடிவுகளை எதிர்ப்பார்த்துக் கொண்டிருந்தான். அன்றுதான் தேர்வு முடிவுகள் வெளியாகின்றன. காலயில் இருந்து ரிசல்ட் பயத்திலேயே உலாவிக் கொண்டிருந்தான். அவன் தந்தை வேறு 'ஒழுங்கா மதிப்பெண் வாங்கலைனா தொலைச்சிடுவேன்' என்று மிரட்டி உள்ளார். அதனால் கவலையுடனே பள்ளிக்கு அருகில் உள்ள பேப்பர் கடைக்கு சென்றான். அங்கு அவனது நண்பர்கள் அரட்டையடித்துக் கொண்டிருந்தனர்.யாரையும் கண்டுகொள்ளாமல் மெதுவாக ஒரு பேப்பரை வாங்கி கொண்டு தனது பதிவு எண்ணைத் தேடினான். அட ! இதோ இருக்குதே... ஆனா அவன் நண்பர்கள் பலரோட பேர் தான் விடுப்பட்டு போயிருந்தது. "பாவம் அவர்கள்" என்றபடி அவர்களருகே சென்று "என்னங்கடா, பாஸான என்னை விட பெயிலான நீங்க ஜாலியா இருக்கீங்க" என்றான். அனைவரும் இவனை பார்த்து நக்கல் சிரிப்பு சிரித்தனர். பாலாஜி "போய் மறுபடி சரியா பாருடா என்றான்".ஒரு கணம் திடுக்கிட்ட கோபால் மறுபடி சென்று செய்திதாளைப் பார்த்தான். அவனது எண்தான், சரியாகத்தான் இருந்தது. கம்பீரமாக தலை நிமிர்ந்த கோபாலுக்கு அதிர்ச்சிக் காத்திருந்தது. "தேர்வில் தவறியவர்கள் எண் என்ற தலைப்பில் இவனது எண் இருந்தது.ஒரு கணம் முறுக்கிய மீசையுடன் மிரட்டிய அப்பாவை எண்ணிப் பார்த்தான். ஒரு Full பாட்டில் விஸ்கி அடித்தமாதிரி இருந்தது.


தொடரும்

Shakthiprabha.
30th October 2005, 02:35 PM
hmmmm.... APRAM?

rsubras
1st November 2005, 12:44 AM
தடுமாறியபடியே வீட்டிற்க்கு வெகு தொலைவில் உள்ள பூங்கா ஒன்றிற்கு சென்றான். தனது நிலையை எண்ணிப் பார்த்தான். அப்பா எப்படியும் செம காரமா திட்டித் தீர்த்திடுவார். அதுவானா பரவல்ல.. இந்த அம்மா மெகா சீரியல் மாதிரி சென்டிமென்டலா பேசியே ஒரு வழி பண்ணிடுவாங்க. அக்கம் பக்கத்துல என்னமோ அவங்கதான் என்னை படிக்க வைத்த மாதிரி துக்கம் விசாரிப்பாங்க. இதெல்லாம் தேவையா... அதுக்கு பேசாம தற்கொலைப் பண்ணிக்கலாம். வாழ்ந்தால் மானத்தோட வாழனும்னு வள்ளுவர் ஏதோ ஒரு குறள்ல சொல்வாரே....அது என்ன?? ம்ம்.....'தோன்றின் புகழோடு..' அப்புறம் ஏதோ வருமே...''அடச்சே... இப்போ அதுதான் ரொம்ப முக்கியம்.... வாடா மச்சான் வயசுக்கு வந்துட்டே...கோட்டு அடிச்சு Suicide பண்ணிகிட்டே'....ஒரு புதிய தைரியத்துடன் மனம் அழைத்தது.. 'அதுதான் சரி...உதவாக்கரை என ஊரின் பழிச்சொல் கேட்பதற்க்கு தற்கொலையே மேல் - முடிவு செய்தான் கோபால். சரி எப்படி தற்கொலைப் பண்ணிக்கலாம் என்று யோசிக்க தொடங்கினான். 'பேசாம பேன்ல தூக்கு போட்டுக்கலாமா?' 'வேண்டாம்..வேண்டாம்.. நம்ம வெயிட் தாங்காம பேன் விழுந்துடுச்சுன்னா அப்பா கொன்னுடுவாரு'..'அப்போ பால்ல விஷத்தை கலந்து குடிக்கலாமா?'...'அய்யோ வேணவே வேணாம்..தப்பித் தவறி வேறு யாராவது அந்த பாலை குடிச்சிட்டாங்கன்னா முன்னே சொன்ன தூக்கை அரசே நமக்கு போட்டு விட்டுடும்..' 'கிணத்துல விழலாம்னா நமக்கு வேற நீச்சல் தெரியாது...'...'இவ்வாறு பலவறாக யோசித்த கோபாலது கண்ணில் தூரத்தில் தண்டவாளம் தெரிந்தது. காசு செலவழிக்காம இலவச தற்கொலைக்கு இரயில் தான் ஒரே வழி' என்று ஒரு வழியாக முடிவுக்கு வந்தான்.

மாலை ஆறு மணியாதலால் வானம் இருட்டத் தொடங்கியது. ஊருக்கு ஒதுக்குப்புறமாக இருந்ததால் அந்நேரம் அங்கு யாருமில்லை. இதுதான் சரியான சூழ்நிலை என்று கோபால் முடிவுக்கு வந்தான். சரியாக மணி 6:30 க்கு அந்த வழியாக திருச்சி ரெயில் வருவதை தினம் பார்த்து இருக்கிறான். 'நடடா தன்மான சிங்கமே! உன்னை உதாசீனபடுத்திய உலகை நீ உதாசீனபடுத்து" என்று மனம் ஊக்கமளிக்க தண்டவாளம் இருக்குமிடத்தை இருபது நிமிடங்களில் அடைந்தான்.

மணி 6:20. தண்டவாளத்தில் தலையை வைத்து உடலை குறுக்க கிடத்தி படுத்துக்கொண்டான். மனதுக்குள் எல்லா கடவுளையும் வேண்டிக்கொண்டான். இன்னும் 10 நிமிடம் தான். பின்னர் எல்லா தொல்லையில் இருந்தும் விடுதலை.'ம்ம்ம்... எமலோகம் போன உடனே நமக்கு சொர்க்கம் கொடுப்பாங்களா இல்லை நரகம் கொடுப்பாங்களா?...சொர்க்கம் போனா அங்கே ரம்பை ஊர்வசி நாட்டியம் பார்க்க முடியுமா?"..."அது சரி, இப்போ ஏன் ரம்பா தமிழ் படத்திலே நடிக்கிறதில்லை??'......
'ரொம்ப முக்கியம்..போடாங்க.... கம்முன்னு கிட..யாரு நடிச்சா என்ன நடிக்கலைனா நமக்கென்ன?'...

மணி 6:21.. வெகு தொலைவில் இரயில் கடக்..கடக்..என்ற சத்தத்தோடு வருவதை உணர்ந்தான்.கோபாலது மனம் லேசாக படக்..படக்..கென்று அடித்துக் கொண்டது. ' இந்நேரம் நம்மளை காணாம அப்பாவும் அம்மாவும் கவலைப்படுவாங்களோ' ..'நல்லாக் கவலைப்படட்டும்...எவ்வளவு திட்டிருப்பாங்க....நல்லா வேணும்.' என நினைத்துக் கொண்டான். ' இன்னிக்கு என்ன கிழமை...அட இன்னிக்கு புதன் கிழமை..இன்றைய மெனு இட்லி சாம்பார் ஆச்சே...அம்மா நல்லா பூ போல இட்லி சுட்டு நெய் கலந்து தருவாங்களே..' நினைக்கும்பொதே நாவில் எச்சில் ஊறியது. 'ரிசல்ட் பயத்தில் காலையில் இருந்து ஒன்றும் சாப்பிடாததை வயிறு நினைவூட்டியது. 'அடப் போடா, மானஸ்தனுக்கு பசி எம்மாத்திரம்?' என சமாதானப்படு த்திக் கொண்டான். என்னதான் திட்டினாலும் பல நாள் அம்மா பாசத்துடன் ருசியாக ஊட்டியது ஞாபகத்திற்க்கு வந்து கண் லேசாக கலங்கியது. உடனே சுதாரித்துகொண்டான். 'டேய் கோபால், நீ இப்போ சாதாரண மனிதன் இல்லை, பொது வாழ்க்கைனு வந்துட்டா நோ சென்டிமென்ட்ஸ்..."


மணி இப்பொது 6:25... இரயிலின் கடக்..கடக் சத்தம் கொஞ்சம் அருகில் கேட்டது. கோபாலது மனம் படக்..படக்..கென்று அடித்தது. இரயில் தன் மேல் ஏறும்போது எப்படி இருக்கும் என்று நினைத்து பார்த்தான். ரொம்ப பயமாக இருந்தது. கண்களை இறுக மூடிக் கொண்டான். ஒரு முறை கதவிடுக்கில் தெரியாமல் அப்பா கதவை சாத்த தன் கை நசுங்கியது ஞாபகத்திற்கு வந்தது. அந்த ஒரு வாரம் அப்பா சரியாக சாப்பிடாமல் வருத்தப்பட்டுக் கொண்டிருந்ததும் நினைவிற்கு வந்தது. விரலுக்கே அப்படின்னா, இப்போ என்னாகுமோ..என்று நினைத்துக் கொண்டான். 'அது சரி...ஆனா அளவுக்கு மீறி திட்டுறதுனால தானே இந்த கோளாறு..' உடனே அவன் மனம், 'அட பைத்தியக்காரா, நீ நல்லாப் படிச்சா உங்கப்பாவிற்கா பணம் கொட்டப் போகுது..உன் நல்லதுக்குத் தானேடா எல்லாம்' என்றது.

மணி 6:28. இரயிலின் படக்..படக் ஓசை அருகாமையில் கேட்டது. 'என்ன இந்த்த மனசு இப்படி மாத்தி சொல்லுது..ஒரு வேளை நாம எடுத்த முடிவு தப்போ!.. சேச்சே...இருக்காது...அப்படியே அப்பா அம்மா திட்டறது பரவால்லேன்னாக் கூட, பத்தாவது பெயிலானதுக்கப்புறம் வாழ்ந்த நம்ம கவுரவம் என்னாகிறது. ஊர் உலகம் என்ன் சொல்லும்...இது மானம் காக்கும் செயலல்லவா'... 'மண்ணாங்கட்டி...' அவன் மனம் திட்டியது..'ஏன்டா புண்ணக்கு, இப்போ நீ செத்தா என்ன உடனே 'GOPAL PASSED 10th STANDARD'னு சொல்லிடுவாங்களா 'GOPAL PASSED AWAY'னு தான் சொல்வாங்கடா லூசு...தொடர்ந்து வாழ்ந்தாலாவது எப்படியாவது ஜெயிச்சு பேர் வாங்கலாம். செத்தா ஜென்மத்துக்கும் நீ பத்தாவது பெயில் தானேடா...' மனசு குத்தி காட்டியது. 'அடப் படுபாவி மனமே! பயந்தாங்கொள்ளியான என்னை ரேக்கி விட்டுட்டு இப்போ தத்துவம் பேசறியா...ம்ம்..ம்ம்..என் வாழ்க்கையிலே எல்லாமே எனக்கு கோளாறுதான்..' ' கோளாறு உன் வாழ்க்கைல இல்லேடா மரமண்டை..எண்ணத்துலேதான். எத்தனையோ பேரால் சாதிக்க முடியும்போது உன்னால மட்டும் ஏன் முடியாது?'... கோபால் 'ம்ம் ம்ம் இப்போ நல்லா அட்வைஸ் பண்ணு...புத்தருக்கு ஒரு போதி மரம் மாதிரி நமக்கு இந்த தண்டவாளம் போல..' மணி 6:29 இரயிலின் கடக்..கடக்..ஓசை வெகு அருகில் கேட்டது.. கோபால் எழுந்திருக்க யத்தனித்தான். ஆனால் பயத்தில் அவன் கை கால்கள் அனைத்தும் அசைக்க முடியாமல் ஒட்டிக்கொண்டது. 'ஆண்டவா! இதற்குப் பெயர்தான் மரண பயமா? என்னை மன்னிச்சிடு இறைவா...என்னை காப்பாத்திட்டா கண்டிப்பாக உன் துணையுடன் வாழ்ந்து காட்டுவேன்.' என்று வேண்டிக் கொண்டான். ஆனால் என்ன செய்வது?. இரயில் கடக்..கடக்..என்றபடியே வேகமாக வெகு அருகில் வந்து கொண்டிருந்தது. அதை விட வேகமாக கோபாலது மனம் படக்..படக்..என்று அடித்தது.

இன்னும் சில நொடிகள் தான். 'கடக்..கடக்.கடக்...கடக்.கடக்..கடக்.....' எதன் மீதோ மோதுவது போன்ற உணர்வு கோபாலுக்கு ஏற்பட்டது. 'அட இவ்வளவு லேசா இருக்கே...நாம் இப்போ செத்துட்டோமா..... இல்ல நான் காண்பதென்ன கனவா...' குழம்பினான் கோபால்.... தனது பலத்தையெல்லாம் திரட்டி தலையை தூக்கிப் பார்த்தான். பக்கத்து தண்டவளத்தில் இரயில் வேகமாக திருச்சியை நோக்கிப் போய்க்கொண்டிருந்தது.... கடக்..கடக்..கடக்...கடக்...கடக்....

pavalamani pragasam
7th November 2005, 12:05 PM
[tscii:2df3fc48e3]Á¢¸×õ «Õ¨Á :D Áɧšð¼ò¾¢ý ¦ÅÌ Â¾¡÷ò¾Á¡É Å÷½¨ÉÔõ ºÃ¢, ÝôÀÃ¡É ÓÊ×õ ºÃ¢ :D [/tscii:2df3fc48e3]

pavalamani pragasam
7th November 2005, 06:21 PM
Transliteration:
mikavum arumai :D manavOttaththin veku yathaarththamaana varNanaiyum sari, sooperaana mudivum sari :D

rsubras
7th November 2005, 09:00 PM
thangal paaratukku migavum nandri pavalamani avarglae...enakku oru doubt..when u can read my tamil which is in UNICODE, why am i not able to read yours.........

Shakthiprabha.
8th November 2005, 02:24 PM
நல்ல கதை. தண்டவாளம் மாறி ரயில் போய்டும்ன்னு முதலிலேயே யூகிக்க முடிந்தது. கதையின் நடையும், ஹாஸ்யமும் நன்று.

நல்ல திறமை இருக்கு. வாழ்த்துக்கள்

பி.பி மேடம், திஸ்கி எழுத்துருவில் எழுதுவதால் உங்களால் படிக்க முடியவில்லை. அது யூனிகோட் அல்ல.

shylaja
11th February 2006, 05:56 PM
good story..saralamaana yedhaarththamaana nadai
vaazththukkaL
anbudan shylaja