PDA

View Full Version : Eelam Poetry from Kaasi Ananthan



Nedunchezhiyan
16th December 2005, 12:06 PM
தமிழ்மேல் ஆணை!


தாயே.. தமிழே!
தலை கவிழ்ந்த பொற்செல்வி!
நீ கலங்க வேண்டாம்..
வருங்காலம் நின் காலம்!

அன்னாய்.. இது கேள்!
அடுத்த பரம்பரையில்
பொன்னால் முடி நீ
புனை நாள் இவண் செய்வேன்!

எள்ளி நகைத்து
நினைப்பழிப்போன் செந்நீர்
வெள்ளம் குளித்து
விளையாடுவேன் தாயே!

சத்தை இழந்த தமிழ்ச்
சாதி பிழைக்க நான்
பத்தாயிரங் கவிதை
பாடாமல் போவேனோ?

தாயே! துயரம்
தவிர்த்திரடி.. மாற்றானை
நாயாய் அடித்து
நடுத்தெருவில் வைக்கின்றேன்!

என்னுயிரைத் தூக்கி
எறிந்து தமிழணங்கே
அன்னை நினதுயிராய்
ஆவேன் நான்... ஆணையடி!

KARTHIGAIPOO
16th December 2005, 12:16 PM
Hi Nedunchezhiyan,
I also like Kaasi Ananthans poems. Here is one.


பேயன்


அருவண்ணத் தமிழ் மண்ணில்

ஆரியனை முன்போர் நாள்

வருக என அழைத்திங்கே

வாழ்வித்த முதுதமிழன்

சுருள்குடுமி ஆரியனின்

சூழ்ச்சிக்கே பலியானான்....

பெருமனத்தால் கெட்ட

பேயனுக்குப் பேர்தமிழன்!

கருநெஞ்சன் வங்கத்தான்

கயவன் விசயனென்பான்

வருபோதில் இலங்கைமண்

வாசல் திறந்துவைத்த

உருகுவிழல் மனத்தமிழன்

ஒளிஈழம் பறிகொடுத்தான்....

பெருமனத்தால் கெட்ட

பேயனுக்குப் பேர்தமிழன்!

அரு ஞாலத் திசையெல்லாம்

அங்கெல்லாம் இங்கெல்லாம்

கருகி உழைத்து வளம்

கனிவித்த உயர் தமிழன்

எருவாகிப் பிறன்வாழ்வை

எழிலாக்கித் தான் மாய்ந்தான்....

பெருமனத்தால் கெட்ட

பேயனுக்குப் பேர்தமிழன்!

திருவோங்கு பாரதம்

தெய்வமென்றும் சிங்களம்

தருசுகமே சுகமென்றும்

தனை மறந்த பெருந்தமிழன்

ஒருநாடு தனக்கின்றி

ஊர் ஊராய் உதைபட்டான்....

பெருமனத்தால் கெட்ட

பேயனுக்குப் பேர் தமிழன்!

அருளாளன் எந்தமிழன்

அனைத்தூரும் ஊரென்றான்.....

எருமை இவனை ஒருவன்

ஏ! கள்ளத் தோணி|| என்றான்!

பொருமி எழா இழிதமிழன்

பொறுத்திருப்போம் என்றானே....

பெருமனத்தால் கெட்ட

பேயனுக்குப் பேர்தமிழன்

Nedunchezhiyan
16th December 2005, 12:25 PM
Hi Karthigaipoo, I think you'll also like the following poem by kaasi


தமிழன் முதுகெலும்பைக் காணவில்லை!


தமிழன் முதுகெலும்பைக் காணவில்லை!

தலை மீது சுமக்கின்றான்

அடிமை என்னும் சொல்லை!

தமிழன் முதுகெலும்பைக் காணவில்லை!

எதிரியைத் தலைவனாய் எண்ணுகின்றான்!

எச்சிலை அவன் போடத் தின்னுகின்றான்!

எதிரிக்கே மாலைகள் சூட்டுகின்றான்!

எவனுக்கும் பல்லையே காட்டுகின்றான்!

இசை தெலுங்கானது பாட்டினிலே!

இந்தி கோல் ஓச்சுது நாட்டினிலே!

திசைதோறும் ஆங்கிலம் வாயினிலே!

தீந்தமிழ் எரியுது தீயினிலே1

ஒடுங்கி ஒடுங்கி இவன் ஆமையானான்!

உதைத்தாலும் வதைத்தாலும் ஊமையானான்!

நடுங்கி நடுங்கி இவன் வாழ்ந்துவிட்டான்!

நாளுக்கு நாளிவன் தாழ்ந்துவிட்டான்!

உலகெல்லாம் நேற்றிவன் ஆண்டதென்ன?

ஊர் ஊராய் இன்றிவன் மாண்டதென்ன?

மலைபோல நேற்றிவன் எழுந்ததென்ன?

மரம்போல வீழ்ந்தானே வீழ்ந்ததென்ன?

KARTHIGAIPOO
16th December 2005, 12:27 PM
பெருமூச்சு



வலிபடைத்து முறமெடுத்துப்

புலியடித்த தமிழகம்

கிலிபிடித்த நிலைபடைத்து

வெலவெலத்து வாழ்வதோ?

பகையொதுங்கப் பறைமுழங்கிப்

புகழடைந்த தமிழகம்

கதிகலங்கி விழிபிதுங்கி

நடுநடுங்கி வாழ்வதோ?

படைநடத்தி மலைமுகத்தில்

கொடிபொறித்த தமிழகம்

துடிதுடித்து அடிபிடித்துத்

குடிகெடுத்து வாழ்வதோ?

கடல் கடந்த நிலமடைந்து

கதையளந்த தமிழகம்

உடல் வளைந்து நிலை தளர்ந்து

ஒளியிழந்து வாழ்வதோ?

மகனிறக்க முலையறுக்க

முடிவெடுத்த தமிழகம்

புகழிறக்க மொழியிறக்க

வெளிநகைக்க வாழ்வதோ? :)

KARTHIGAIPOO
17th December 2005, 07:18 AM
இருப்பாய் தமிழா நெருப்பாய்!


இருப்பாய் தமிழா நெருப்பாய்!
இருந்தது போதும் இதுவரை செருப்பாய்!
இருப்பாய் தமிழா நெருப்பாய்!

குட்டக் குட்ட நீ குனிந்தால் உலகத்தில்
குட்டிக் கொண்டேதானிருப்பான் - முரசு
கொட்டி எழடா உன் பகைவன் பிடரியில்
குதிகால் பட ஓடிப் பறப்பான்!

கைவிலங்கு நீ சுமந்தாய் இதற்கோடா
கருவில் உன்னைத் தாய் சுமந்தாள்! - இனப்போர்
செய்யக் களம்வாடா கொடுமை தூள்படும்
சிறுத்தை உன் கண்கள் சிவந்தால்!

வெல்லமோடா உயிர் உனக்கு? - புவிகாண
வீறுகொண்டு போர் இடடா! - தமிழர்
உள்ளம் மகிழ நீ களத்தில் நடடா
உயிரையும் தூக்கிக் கொடடா!

வஞ்சினம் முழக்கி எழடா! மானத்தின்
வல்லமை உன் பகை உடைக்கும்! - அட
நெஞ்சில் தமிழ்வீரம் பொங்க நில்லடா!
நிமிர்ந்த வரலாறு கிடைக்கும்!

Nedunchezhiyan
18th December 2005, 01:31 AM
"டாடி' என்றே அழைக்காதீர் இனிமை தோய
தண்டமிழில் "அப்பா' வென்றழைத்திடுங்கள்!
"மீடியா' என மொழிய வேண்டாம் நல்ல
மென்தமிழில் "ஊடகங்கள்' எனக் கூறுங்கள்
"பாடி' என்றே சொல்லாதீர் அழகாய் நந்தம்
பழந்தமிழில் "உடலம்' என்றே கூறிடுங்கள்!
"சூப்பர்' என்றே ஏன் பேச வேண்டும்? சொந்தச்
சுவைத்தமிழில் "மிகநன்றே' என்றால் என்ன?
"பேப்பர்' என்றே ஏன் மொழிய வேண்டும்? பேசும்
பேச்சினிலே "தாள்' என்றால் தவறா? நாம்
"சாஃப்ட்' என்றே ஏன் கூற வேண்டும்? தூய
தாய்த் தமிழில் "மென்மை' என்றால் புரிந்திடாதா?
"சேஃப்டியில்லை' எனப்புலம்பும் நீங்கள் நல்ல
தேன்தமிழில் "காப்பில்லை' என்றால் தப்பா?
"மம்மி' என்றே பெற்றவளைப் பிணமாக் காமால்
மதுத்தமிழில் "அம்மா' வென்றழைத்தால் என்ன?
"டம்மி' என்றே கூறுவதை மாற்றி, நந்தம்
தண்டமிழில் "போலி' என்றே சொலக்கூடாதா?
"செம்மொழி'யாய் நம்மொழியை அறிவித்தென்ன?
சேய்த்தமிழர் தாய்த்தமிழை மிதித்து விட்டுத்
தம்மொழியாய்த் "தேம்சுமொழி'யைத் தலையில் வைத்தால்
சாகாமல் தீந்தமிழும் தழைப்ப தெங்கே?

chidambaram
28th December 2005, 01:45 PM
Wow! Its great to read Kaasi Anandan's kavithai at one thread. Thanks guys for posting. If possible, please post more kavithai.

Thanks in advance