PDA

View Full Version : EN AARUYIR NANBAN



VENKIRAJA
3rd April 2006, 02:09 PM
[tscii:27ee7d7372]SANNAL

IMAIGALE
KANNAI KAPPADARKAAGA,
IMAYAIUM SERTHU KAPPANIVAN;
IMAIYATHAIYUM, AMERICAVAIYUM ENAKKU KAATIYA
NIRAMILLA COLUMBUS IVAN.
NAALU SUVARGALUKKUL
ENNAI POLEYE IVANUM,
SIMITTAMAL JANNALAI PAARPAAN.
VALLUVARAI KAATUVAN,
ANDAI VEETU VASUGIYAIYUM KAATUVAN!
IVANINDRI ORE ANUVUM ASAIYADHU,
ASANTHALUM ENAKKU THERIYATHU.
IVANAI ,
THOOKATHILUM MARAKKA MUDIVATHILAI
ENIL,IVANILLATHU KANAVIL THULLIYAMILLAI!
KEERALGAL PAARTHAVAN,
SAARALGAL KOTHAVAN,
EN THANGAIYINUM MOOTHAVAN,
PAZHAYA NINAIVUGALAI NOORTHAVAN.
IVANAAL ENAKKU THALAIYIL GANAM,
ALANTHUVIDUVANIVAN MANADHIN MANAM.
KANPORAIYIN KARPU KAKKUM AADAI IVAN,
SUTTUMVIZHICHUDARIN MUTTRAM IVAN,
AGGRINAI ENDRU YAARIVANAI SONNADHU?
UYARTHINAIYINUM UYARTHINAI IVAN!
ANINDHAL BUTTI ANIYAVIDIN VETTI:
EN KANNADI.

with thanks,translated by temporary sori:
ºýÉø

þ¨Á¸§Ç
¸ñ¨½ ¸¡ôÀ¾ü¸¡¸,
þ¨Á¨ÂÔõ §º÷òÐ ¸¡ôÀÅÉ¢Åý
þÁÂò¨¾Ôõ, «¦Áâ측¨ÅÔõ ±ÉìÌ ¸¡ðÊÂ
¿¢ÈÁ¢øÄ¡ ¦¸¡ÄõÀŠ þÅý.
¿¡Ö ÍÅÕìÌû
±ý¨É §À¡Ä§Å þÅÛõ,
º¢Á¢ð¼¡Áø ƒýÉ¨Ä À¡÷ôÀ¡ý.
ÅûÙŨà ¸¡ðÎÅ¡ý,
«ñ¨¼ Å£ðΠš͸¢¨ÂÔõ ¸¡ðÎÅ¡ý!
þÅÉ¢ýÈ¢ ´Õ «Ï×õ «¨ºÂ¡Ð,
«¨ºó¾¡Öõ ±ÉìÌ ¦¾Ã¢Â¡Ð.
þŨÉ,
àì¸ò¾¢Öõ ÁÈì¸ ÓÊž¢ø¨Ä
²¦ÉÉ¢ø, þÅÉ¢øÄ¡Ð ¸ÉÅ¢ø ÐøÄ¢ÂÁ¢ø¨Ä!
¸£Èø¸û À¡÷ò¾Åý,
º¡Ãø¸û §¸¡÷ò¾Åý,
±ý ¾í¨¸Â¢Ûõ ãò¾Åý,
À¨Æ ¿¢¨É׸¨Ç áüÈÅý.
þÅÉ¡ø ±ÉìÌ ¾¨Ä¢ø ¸Éõ,
«ÇóÐÅ¢ÎÅ¡ý Áɾ¢ý ÁÉõ.
¸ñ¦À¡¨È¢ý ¸üÒ ¸¡ìÌõ ¬¨¼ þÅý,
ÍðÎõŢƢîͼâý ÓüÈõ þÅý,
«·È¢¨½ ±ýÚ Â¡Ã¢Å¨É ¦º¡ýÉÐ?
¯Â÷¾¢¨½Â¢Ûõ ¯Â÷¾¢¨½ þÅý!

«½¢ó¾¡ø ÒðÊ «½¢Â¡¾Åý ¦ÅðÊ
±ý ¸ñ½¡Ê.


[/tscii:27ee7d7372]

VENKIRAJA
10th May 2006, 01:12 PM
ஆன்றோர்க்கும் அது போன்றோர்க்கும் முதற்கண் என் வணக்கம்.நம்மை நாமே உயர்திணை எனவும்,பிறவற்றை அஃறிணை எனவும் கூறிக்கொண்டு நம்மை நாமே ஏமாற்றி வருகிறோம்.இந்த வாசல் அதிலிருந்து விதிவிலக்கு.வெரூஉம் அஃறிணைகளை மூலக்கூற்றாய் அமைத்து இப்பகுதி உயிரற்றவற்றின் உயிர்வலியையும்,உயர்பாங்கையும் அலச விழைகிறது.இப்பதிவு எதற்கு?எனும் வினா எழலாம்,உங்களுடைய தாய்,தந்தை,குரு,ஏன் தெய்வம் கூட அழ வைதிருக்கக் கூடும்,ஆனால் அஃறிணைகள்....ம்ஹும்.அதற்கான முறையான முன்குறிப்பாகத்தான் என் ஆருயிர் நண்பண் எனும் தலைப்பில் ஒரு அறிமுகம் வழங்கப்பட்டது.வாசல் தாண்டி வாருங்கள்,இனி இல்லம் முழுவதையும் உங்களுக்கு சுற்றிக் காட்டுகிறேன். நெறியன்,
இரா.கு.வெங்கடேஷ்.

crazy
11th May 2006, 01:06 PM
venki very good, unga alavukkellam enakku tamil ezhudha theriyaadhu! thats why i dont come over this tread!

anyway :clap: :thumbsup:

VENKIRAJA
11th May 2006, 01:53 PM
வாசல்ரதம்

என்னால் இயன்றது
இந்த அசுரனை மிதிக்கத்தான்.
வெளியே வளி இருப்பினும்
இவனது சக்கரம்
என் மண்டை போல் காலி!
ஞாலம்-பகலவன் போல
இவனது செயின்
தற்சமயம் தற்காப்புந்தான்
இவனும் கண்ணாடி அண்ந்திருப்பான்,
நரம்புக்கு பதில் ஒயர்,
ஆயில் இவனுக்கு உயிர்.
கரப்பெடலும்,கால்டயரும்
உண்டெனினும் இவன் மூளை என்னுடையது!
இவனுக்கு ரோஜாக்களை வைத்ததிலை
எனில் அதன் முட்கள் ஒதுங்கிவிட
தாய்மடியை இவனிடம் உண்ர்ந்தேன்,
மனைவிபோல் கட்டித்தூக்கியிருக்கிறேன்
நானிறந்தால் என்னோடு
இவனைப்புதையுங்கள்.
அஃறிணை என்று யாரிவனை சொன்னது?
உயர்திணையினும் உயர்திணையிவன்!

ஓட்டினால் உயர்வு,
ஓட்டாவிடின் அயர்வு-
என் மிதிவண்டி

crazy
11th May 2006, 01:57 PM
venki :clap:

VENKIRAJA
11th May 2006, 02:01 PM
plz visit even crictionary,haikus.
is my tamil so tough to decipher,any suggestions?

crazy
11th May 2006, 02:29 PM
plz visit even crictionary,haikus.
is my tamil so tough to decipher,any suggestions?

NO MY TAMIL IS POOR, nothing with urs!

VENKIRAJA
12th May 2006, 11:28 AM
செயற்கை புஷ்பம்

தலைக்கு மேல்
சூடப்படும் செருப்பு இவன்.
மழைக்கு எதிரான முதல்
கருப்புக்கொடி இவன்.
இந்திரதனுசுவைக்கூட
சாயம் போகாமல் காப்பவனிவன்
தலை துவட்ட ஒருவனில்லாவிடினும்
பலர் உலை எரிய வைப்பவனிவன்.
தெய்வங்கள் கூட மார்கழியில்
இவன் தயவில்தான் தலைகாட்டுவர்!
ஆயிரம் கரங்களால் மறைக்க முடியா
சூரியனையும் சேர்த்து மறைக்கும்
கண்ணண் போன்ற கன்னன் இவன்.
அரும்பியரும்பிக் கூம்புகிறான்
கார்வண்ணத்தில் மலர் - இவனுண்டு!
வாள் போன்ற தோற்றதோடு
வருணனையெ எதிர்ப்பானிவன்.
அஃறினையென்று யாரிவனை சொன்னது?
உயர்தினையினும் உயர்தினை இவன்!

விரித்தால் வெல்லம்
விரிக்காவிடின் வெள்ளம்-
என் குடை

crazy
12th May 2006, 04:11 PM
செயற்கை புஷ்பம்

விரித்தால் வெல்லம்
விரிக்காவிடின் வெள்ளம்-
என் குடை

:thumbsup: :clap:

VENKIRAJA
13th May 2006, 01:12 PM
வாசல் தாண்டி திண்ணை வந்த நீங்கள் இப்போது வரவேற்பறையினுள் நுழைய அனுமதிக்கிறேன்.இஃது வரை வாசற்காலுக்கு வெளியே வீற்றிருந்தவைகளைப் பற்றி வருணித்த நான் இங்ங்கணமிருந்து சகல அறைகளினுள் துயிலும் அஃற்றிணைகளை ஆராய முனைகிறேன்.

VENKIRAJA
16th May 2006, 04:20 PM
பொய் உயிரினம்

கலீலியோ சொன்னாரா
உலகம் உருண்டையென?
மறுப்பு இதோ-
பாரது செவ்வகம்.
இன்றோ எலிக்கில்லை
பொறி,அதுவன்றோ
நமக்கு வைக்கிறது பொறி!
ஓடிவிடாது,நிற்கும்;
திட்டாது,சிரிக்கும்;
பகையகாது,தோழனாகும்;
எத்தனை முறையேனும்
குட்டுங்கள்,
அவன் ஏசாத ஏசு!
மீண்டும் மீண்டும்
திருகுங்கள்
அவன் சிரிக்கின்ற புத்தன்!
ஏனோ அவனிடம்
இச்சையை தேடுகிறோம்,
பிச்சையை தருவிக்கின்ற
சிந்தனைப்பெட்டகமவன்,
இவனின்றி ஓரணுவும் அசையாது!
அஃறிணையென்று யாரிவனை சொன்னது?
உயர்திணையினும் உயர்திணை இவன்!

அணைத்தால் உலகம்
அணைக்காவிடின் கலகம்-
என் கணிணி!

crazy
16th May 2006, 04:26 PM
very good!
keep it up :thumbsup:

VENKIRAJA
16th May 2006, 04:37 PM
check out these:
சந்திரனை தொட்டது யார்...(ரட்சகன்)
ஆயிரம் நிலவே வா...(spb)
நிலவை கொண்டு வா.......(வாலி)
நிலா காய்கிறது...(இந்திரா)
நிலாவெ வா....(மௌன ராகம்)

crazy, plz visit my other poems soon,forgot god,father?

crazy
16th May 2006, 04:39 PM
thanks!

ippove god father check pannuren!

VENKIRAJA
16th May 2006, 05:01 PM
i continue for u:
நிலவே என்னிடம் நெருங்காதே....
அந்த நிலாவத்தான் என் கையில.....(முதல் மரியாதை)
நிலா அது ஓடத்து மேல......(நாயகன்)
நிலாவெ வா வா வா.....(நிலாவே வா)

crazy
16th May 2006, 05:03 PM
i continue for u:
நிலவே என்னிடம் நெருங்காதே....
அந்த நிலாவத்தான் என் கையில.....(முதல் மரியாதை)
நிலா அது ஓடத்து மேல......(நாயகன்)
நிலாவெ வா வா வா.....(நிலாவே வா)

veni romba nandri.............naan nila song rendu naalukku munnaala collect panninen, ippo illa, anyway romba romba nandri!

Aravind_06
16th May 2006, 08:00 PM
[tscii:e9f2bef8cf]¸½¢½¢ ÀüȢ ¸Å¢¨¾ ¿ýÚ.[/tscii:e9f2bef8cf]

VENKIRAJA
18th May 2006, 12:35 PM
காகிதக்காலம்

பூப்போல் உதிரும்
காலமாங்கிழவனை
காகிதந்தோறும் நினைவூட்டுகிறான்,
சமர்பிக்கிறான் நன்நேரத்தை
தாங்கியிருக்கும் பொன்மொழியால்.
ஒவ்வொரு பண்டிகையன்றும்
முதல்வாழ்த்து தெரிவிக்கும்
ஊமைத்தோழனுமாவான்.
பேட்டரி இல்லாத
நடிகைப்படவுடையணிந்த கடிகாரமிவன்,
அனுதினமும் எடைகுறையும்
சூரியனின் சுவீகாரப்புத்திரனிவன்.
கோவில் சுவரிடுக்கில்
விபூதியேந்திய கால ஏடு
அடுத்த யுக மனிதனின்
படிமமாகக்கூட ஆகலாம்!
இதைக்கண்டுதான் உனக்கு
பெயர்சூட்டியிருப்பர்,
மணநாள் குறித்திருப்பர்,
திதியைக்கூட நடத்தியிருப்பர்.
உன் சமாதியில்
பொறித்திருக்கும் தேதியும்
இவன் சிபாரிசு செய்ததே.
அஃறிணையென்று யாரிவனை சொன்னது?
உயர்திணையினும் உயர்திணை இவன்!

கிழித்தால் மணம்
கிழிக்காவிடின் ரணம்-
என் நாள்காட்டி

crazy
18th May 2006, 12:49 PM
venki
keep going :thumbsup:

VENKIRAJA
18th May 2006, 01:06 PM
crazy,i even write haikus well.by the way,how do i attract many to my thread,why do most don't respond except u?

crazy
18th May 2006, 01:14 PM
crazy,i even write haikus well.by the way,how do i attract many to my thread,why do most don't respond except u?

oru puthisaaliya ennoru puthiusalikku thaan theriyum!

u know why i respond................u r so young...........u was born in 1990 isnt? i find it so amusing to see such a young lad writting so clearly in tamil.................i feel u like a younger bro(is it ok, calling u thambi) and just feel like i have to read and give respons!

VENKIRAJA
18th May 2006, 02:12 PM
no problem, anna.
en annangal moovarum en thiranai purinthukollavillai.intha puthu annan purinthukollattume.
today my dreamproject-kolai,koliyam karanamaam is gonna find its inception.beware!

crazy
18th May 2006, 04:14 PM
no problem, anna.
en annangal moovarum en thiranai purinthukollavillai.intha puthu annan purinthukollattume.
today my dreamproject-kolai,koliyam karanamaam is gonna find its inception.beware!

kanna kanna naan anna illa akka!

VENKIRAJA
18th May 2006, 04:34 PM
sorry akka thambinna udane madhavan ninaippil konjam emotion aayitten.unga avatar paarkum pothe ninaiththen...
visit !!!!!!haikus!!!!!!
-akkavoda kannu

VENKIRAJA
18th May 2006, 04:36 PM
thkz all

VENKIRAJA
20th May 2006, 08:24 PM
சூரியப்பிரதி

கோடையில்கூட
இவனிடம் மின்னல் தெரியும்,
நாராயணன் போல்
எத்தனையோ அவதாரம் இவனுக்கு.
இவனை அழைப்பது ஒத்து
என்னை திட்டுகிறார்கள்,
எவனோ கண்டறிந்தானாம்-
ஒளி மிகவேகமென-
என்வீட்டு சங்கதி தெரியாமல்.
யந்திரதின் அந்தரம்
கூர்க்காவின் கரத்தில்,
என் மண்டையில்,
சில பச்சையான இடங்களில்,
ஏன் சேட்டிலைட்டுகளில் கூடத்தான்.
தொங்கிக்கொண்டிருக்கிறான் -
ரசாயன ரசங்களின்
பசையான பசங்களாய்,
இவன் உசிர்கூட
ஆறு ஒயர்தாண்டி,ஆறு பைபர்தாண்டி
கண்ணாடிக்குடுவைக்குள் - மாயாவி போல!
இவனின்றி ஒரு வண்டியுமசையாது!
அஃறிணையென்று யாரிவனை சொன்னது?
உயர்திணையினும் உயர்தினையிவன்!

எரிந்தால் ஒளி
எரியாவிடின் வலி-
என் விளக்கு.

crazy
22nd May 2006, 04:05 PM
venki :clap:

krk64in
3rd June 2006, 10:45 AM
dear vengatesh

as your father, i m proud of u...........

keep it up...............

kumarvel kr

VENKIRAJA
3rd June 2006, 08:27 PM
thkz dad,read my stories too if u please.

gragavan
4th June 2006, 10:10 AM
[tscii:7641ffab78]¦Àü§È¡Ã¢¼ò¾¢ø À¡Ã¡ðÎ ±ýÀÐ þó¾ Å¢„Âò¾¢ø Á¢¸×õ «Ã¢§¾. «ó¾ Ũ¸Â¢ø ¾ýÛ¨¼Â Á¸¨É þÄ츢Âò¾¢Öõ °ìÌÅ¢ìÌõ ¾ó¨¾ ÌÁ¡Ã§Åø «Å÷¸ÙìÌ ±ÉÐ ¿ýÈ¢ ÀÄ.

¦Àü§È¡÷ °ìÌÅ¢ôÒ Á¢¸î º¢Èó¾ ÁÕóÐ. «Ð ¯í¸ÙìÌ ¿ýÈ¡¸§Å §Å¨Ä ¦ºö šúòиû.

«ýÒ¼ý,
§¸¡.þá¸Åý[/tscii:7641ffab78]

krk64in
5th June 2006, 09:55 AM
sure i read..........

crazy
5th June 2006, 03:53 PM
wow father and son :roll:

keep going :lol:

VENKIRAJA
11th June 2006, 01:15 PM
கவின் துப்பாக்கி

பூக்களை இவனால் உதிராது
காக்க முடியும்,
என்னை குழந்தையாய்
ஆக்க முடியும்.
ஊர்களில் ஆயுசைக் குறைக்கும்
கருவியாக பாவிக்குமிவன்
உண்மையிலேயெ ஆயுசை
மறக்கவைத்துவிடக்கூடியவன்.
சிலந்திவலையின்
மெல்லிய துளைகளினூடே
காற்று கரைந்தோடுவதைப்போல
உலகின் அனைத்து மூலைகளிலும்
பிர பலமானவன்,
புஜ பலமானவன்.
எம்.ஜி.ஆரை,
எலிசபத்து ராணியை,
எடிசனை
எஞ்சிய எக்காளமிட்டோரை
மெய்யில் கைக்குள் வைத்திருந்தவனிவன்.
அந்தந்த காலத்து
கண்ணாடியவன்.
வெண்ணிலவின் நிழல்கூட
இவனின்றி இருட்டுதான்:
எண்ணுராயிரம்
நிறம்பதிந்த நிழல் தருவிக்கும்
பிரம்மனின் பிரதியிவன்!
முதலில் மின்னல் வெட்டி
விஞ்ஞான இடி அதிர்ந்து
கொட்டும் இன்பவர்ஷம் இவன்!
அஃறினை என்று யாரிவனை சொன்னது?
உயர்திணையினும் உயர்திணையிவன்.

சொடுக்கினால் கலை
சொடுக்காவிடின் உலை-
என் புகைப்படங்கள்!

gragavan
13th June 2006, 10:33 PM
[tscii:121b5fc973]Á¢¸×õ «Õ¨Á¡¸ þÕ츢ÈÐ.

Ò¨¸ôÀ¼ì ¸ÕŢ¢ý Á£Ð ´Õ Ò¾¢Â §¿¡ìÌ. Á¢¸×õ «Õ¨Á. ú¢ò§¾ý.[/tscii:121b5fc973]

VENKIRAJA
14th June 2006, 06:32 PM
நன்றி.
ஏன் இராகவன் கதைகள்,திரைப்படங்கள் திரிகளில் நுழைவதிலை?

ஓர் வினா:என் கவிகள் ஏதேனும் பிரபல கவிஞர்களது சாயலில் உள்ளதா?

VENKIRAJA
22nd June 2006, 09:50 PM
வாசகர்கள் யாவரும் எனக்கு தலைப்பு தாருங்கள்.அஃதாவது அஃறிணைகளை குறிப்பிடுங்கள்.யாம் கவியியற்றுதும்.பார்ப்போம் சவாலில் வெல்கிறேனா என!ஆனால் அன்றாட உபயோக பொருட்கள் மட்டும்.

crazy
23rd June 2006, 12:29 PM
:idea: what about puttaham(book) isnt that aharthinai?
book is the one which gives us knowledge not necesserily, but .......................

venki try to write about "book" :)

VENKIRAJA
25th June 2006, 05:05 PM
[tscii:bcc45f3ac9]±ý §Á¡ð¼¡÷ ÅñÊ

Á¡¨Ä §¿Ãõ
º¡¨Ä ÓØÐõ Å¡¸Éí¸û.
ºò¾Óõ þ¨ÃîºÖÁ¡ö
«Åü¨È µðÎõ ÁÉ¢¾÷¸û.
´Õ Å¡¸É ¬Ú
µÊ즸¡ñÊÕì¸ ±ý
þÃñÎ ºì¸Ã §Á¡ð¼¡÷ ÅñÊÔõ
«¾Ûû§Ç.

Ò¨¸ Áñ¼ÖÓõ Òؾ¢ìÌõ ¿Î§Å
¦Á÷Ìâ ¿¢Â¡ý Å¢Çì̸Ǣý
¦ÅÇ¢îºò¨¾Ôõ Å¡¸Éí¸û
Å¢¾¢ Á£Úž¡ø ±Øõ ź׸¨ÇÔõ
Á£È¢ ¿¡ý §Â¡º¢ì¸¢§Èý.
«ÖÅĸ §Å¨Ä¸Ùõ Å£ðÎ
À¢Ã¨É¸Ùõ Áɨº ¬ì¸¢ÃÁ¢ì¸¢ýÈÐ.
§¿Ãõ §À¡ÉÐ ¦¾Ã¢Â¡Áø
Àò¾¢ÃÁ¡ö ţΠ§º÷òРŢð¼Ð
±ý §Á¡ð¼¡÷ ÅñÊ.
§Á¡ð¼¡÷ ÅñÊÔõ Å¡ú쨸Ôõ
«Ð À¡ðÎìÌ µÊ ¦¸¡ñÊÕ츢ÈÐ.
«Åü¨È µðÎÅÐ ¾¡ý
¡¦ÃýÚ ¦¾Ã¢ÂÅ¢ø¨Ä.

---

«ÃÅ¢ந்த்

ennai mikavum paathiththa kavithai ithu(en motor vandi)aanaal nanayirunthaal ippati mutithiruppen:

oottinaal neri
ootavitin mari
en motorvandi!
[/tscii:bcc45f3ac9]

crazy
25th June 2006, 05:06 PM
venki i couldnt read this font, sorry!

i will try reading later :)

pavalamani pragasam
25th June 2006, 07:36 PM
[tscii:46bf91b634]²ü¸É§Å µðÎÀÅ÷ ¯Èí¸¢Å¢ð¼¡Öõ Àò¾¢ÃÁ¡ö ţΠ§ºÕõ Á¡ðÎÅñʨÂô §À¡Ä¡¸¢Å¢ð¼§¾¡ §Á¡ð¼¡÷ ÅñÊÔõ ±ýÚ ¿¡ý Å¢Á÷ºÉõ ±Ø¾¢Â¾¡¸ »¡À¸õ???[/tscii:46bf91b634]

VENKIRAJA
25th June 2006, 09:45 PM
அதேதான்,இதுவும் relevant-ஆக இருந்ததே என போஸ்டினேன்.

VENKIRAJA
16th July 2006, 01:21 PM
crazy-யின் வேண்டுகோளுக்கு இணங்க:

செல்லுலோஸ் மிட்டாய்.
கடித்துண்ண முடியாவிடினும்
கடிநறை போல் தொனிக்கும்,
மொண்டுள்ளிழுக்க இயலாவிடினும்
நெஞ்சடைக்கும் ருசிபருகும்,
ஆனாலும் இருக்கும்வரை
தெரிவதில்லை அமுதச்சுவை
இரவல் தந்த லட்சுமியைவிட மலிவான சரஸ்வதியிவன்.
பலர் வாழ்வு
புரட்டிப்போட்டுள்ளதிவன்
புரட்டப்படும்
புரதப்பக்கங்கள்.
புரட்சி கொணர்ந்துள்ளதிவன்
புறங்கையின் மேல்விரிந்த மைத்துளிகள்.
கணிணியின் பாட்டனிவன்,
மனிதனின் குழந்தையிவன்,
தெய்வத்தின் தலைப்பிள்ளையிவன்.
அழிந்துபோன சாம்ராஜ்யத்தை
நாலு நொடியில் சிருஷ்டிப்பான்,
நடக்காத நவகற்பனையை
நிலவுலகில் சாத்தியப்படுத்துவான்.
மதக்கோட்பாடுகளையும்,
மானுட வழிப்படுகளையும்
சுமந்த சுகமான மாட்டுவண்டி,
சீறிப்பாயும் நடைவழக்கில்
கவிகதையுரை பயிற்றுவிக்கும் புல்லட்-டிரெயினானதின்று!
கிரீடத்தை இறக்கியவன்,
ஹிட்லரை ஏற்றியவன்,
காந்தியை பீற்றியவன்,
இப்போதோ
மலிந்துவிட்டான்.
பூசையறையில் இருக்கவேண்டியவன்
குப்பைக்குடையில் எச்சில்களுக்கிடையில்.
அஃறிணையென்று யாரிவனை சொன்னது?
உயர்திணையினும் உயர்திணையிவன்.

புரட்டினால் சுவர்க்கம்
புரட்டாவிடின் தர்க்கம்-
என் புத்தகம்!

crazy
18th July 2006, 03:24 PM
crazy-யின் வேண்டுகோளுக்கு இணங்க:

புரட்டினால் சுவர்க்கம்
புரட்டாவிடின் தர்க்கம்-
என் புத்தகம்!

:) :) nandri :)
:clap:

VENKIRAJA
18th July 2006, 06:52 PM
அடுத்தென்ன?நிச்சயமாக கவியியற்றுதும்:எனக்குப் புலப்பட்டிருந்தால்!

crazy
19th July 2006, 01:47 PM
venki kanna
why dont u write about this hub or mayyam or internet or computer?

is this possible :roll:

VENKIRAJA
19th July 2006, 07:03 PM
கணிணியைப் பற்றி ஏற்கனவே எழுதியாகிவிட்டதே!
மையம் எனக்கு அஃறிணையாகப் படவில்லை!
வேண்டுமானால்......ம்ம்ம்ம் சொல்லமாட்டேன்,எழுதுகிறேன்.

crazy
19th July 2006, 07:38 PM
கணிணியைப் பற்றி ஏற்கனவே எழுதியாகிவிட்டதே!
மையம் எனக்கு அஃறிணையாகப் படவில்லை!
வேண்டுமானால்......ம்ம்ம்ம் சொல்லமாட்டேன்,எழுதுகிறேன்.

kanna, enna paththi ezhuda poriyaa, ayyo naan ahardhinai illai :)
summa sonnen............... :D

VENKIRAJA
19th July 2006, 07:56 PM
பிரம்மனின் தாய்.

அவனை நீங்கள் பார்த்திருக்கக்கூடும்,
உங்கள் இதயத்தை அல்லது
மூளையைவிட சற்றே பெருத்தவன்.
எதையுந்தரும் அட்சயபாத்திரமவன்,
பாத்திரங்களை உண்டாக்குபவன்.
நிறங்கள் தாங்கிய
பொம்மையைப்போலில்லாமல்
நிறங்களையே உண்டாக்குபவன்.
சிறகணிந்து பறந்தவனை,
மூடிபோட்டு அடைத்துவிட்டோம்,
குருதிப்புரட்சி உருவாக்கினவனை
சுருதிகெட்டு கன்றாவியாக்கினோம்.
பெருமாளாய்
தங்கமணிந்த மேனியோன் இன்று
பங்கமுடையவானாய் ஆகிவிட்டான்.
என்னைப் போன்ற கிறுக்கர்கள்
கையாள்வதால் கிறுக்குமிவன்
உண்மையிலேயே பிரம்மனின் நகல்தான்;
அட-பிரம்மனென ஒருவனை
உருவாக்கியவனே இக்கர்த்தந்தான்!
அவனை மட்டுமல்ல
அரியபெரியவர்களையெல்லாம் கூடத்தான்.
தண்ணீராய் அன்றி பன்னீராய்
ருசிக்கும் இவன் புழுக்கை!
கடவுள்களே இவனால் ஜீவிக்கையில்
நாம் மட்டும் இவன் கொண்டிங்கு எழுதவிலையெனினும்
அஃறிணையென்று யாரிவனை சொன்னது?
உயர்திணையிணும் உயர்திணையிவன்.

எழுதினால் சொத்து
எழுதாவிடின் வெத்து-
என் எழுதுகோல்!

pavalamani pragasam
19th July 2006, 10:27 PM
[tscii:a74b7325b2]Å¢ò¾¢Â¡ºÁ¡É ¸üÀ¨É, ¯Å¨Á![/tscii:a74b7325b2]

crazy
20th July 2006, 04:54 PM
:)

VENKIRAJA
22nd July 2006, 06:31 PM
intha mail-udan "en aaruyir nanban" sticky aakiraan.ethavathu kashtama kavi ezuthalaamnu irukken,so kelunga+a surprise awaits:i have 10 poems in a single thread 2 delight u all.

crazy
23rd July 2006, 08:49 PM
intha mail-udan "en aaruyir nanban" sticky aakiraan.ethavathu kashtama kavi ezuthalaamnu irukken,so kelunga+a surprise awaits:i have 10 poems in a single thread 2 delight u all.

ok :)

vidhyavasi
10th August 2006, 06:13 PM
[tscii:f9bd34a4ad]¦¾¡¨ÄóÐ §À¡É ¿ñÀ¨É ¿¢ÉÉòÐ....

ÓýÒ ±ÄÄ¡õ, ±ô§À¡Ðõ ¿¢¨ÉòÐ ¦¸¡ñÊÕó¾Å¨É
þô§À¡Ð, ±ô§À¡¾ÅÐ ¿¢ÉÉ츢§Èý...±ý ¸ñ¸Ù¼ý §º÷òÐ...[/tscii:f9bd34a4ad]

VENKIRAJA
11th August 2006, 07:25 PM
நல்ல கவிதை.நன்றி உங்கள் வாழ்த்தை இவ்வாறாய்த் தெரிவித்தமைக்கு.கவிதைகளில் புழங்கும் பலர் ஏன் கதைகளுக்கு வருவதில்லை?

sundararaj
28th November 2006, 08:46 AM
[tscii:119e48b8a9]¿ýÈ¢ ÀÄ ÀÄ.[/tscii:119e48b8a9]

VENKIRAJA
13th January 2007, 05:26 PM
வாயுள்ள காற்றாடி

நரம்புகளில் மின்சாரம்
பாயும் நிஜமான நாயகன் இவன்.
காதலர்களின் காதலனான
மன்மதனின் நிழல்கணை இவன்.
கையில்லை காலில்லை
உடலுண்டு கண்ணுண்டு -
கண் மை மட்டும் நிறநிறமாய்.
கன்னத்தில் முத்தம் தராமல்
காதுகளில் முத்தம் சிந்தும்
கண்ணாடி போட்ட
சித்திரக்குள்ளன் இவன்.
கைகளில் தவழ்ந்துகொண்டிருக்கும்,
எந்நேரமும் சிணுங்கிக்கொண்டிருக்கும்
கரங்களின் புதுத் ததுப்பிள்ளையிவன்;
உள்ளங்கை ரேகைக்கே மாற்று இவன்.
சங்கீதம் பயிலாமல்
பாட்டுகளைப் பாடுமிவன்
குரல்களின் தரகனுமே,
மனங்களின் மொழிப்பெயர்ப்பனுமே.
பொத்தான்களால் நிரம்பிவிட்ட
தட்டாமல் சொல் கேட்கும்
செல்ல நண்பன் இவனே இவனே.
சகியென சிரித்துக்கொண்டு
புரளிகள் பேசாமல்,
ரகசியங்கள் காக்கும்
இறகுகள் உதிர்த்த புறாவுமிவன்
கடிவாளமற்ற புரவியிவன்.
அஃறிணையென்று யாரிவனை சொன்னது?
உயர்திணையிணும் உயர்திணையிவன்

சிரிப்பித்தால் பிள்ளை
சிரிப்பிக்காவிடின் தொல்லை-
என் அலைபேசி!

thimuru
13th January 2007, 05:51 PM
"பூக்களை இவனால் உதிராது
காக்க முடியும்"

I like these lines under "Photos"!

its similar to the lines of "Ode on a gracean urn"...where keats says

"heard music is sweet...those unheard is sweeter"

he says it when he explains the picture on the urn!

the picture would have a man who is abt to kiss a lady!...

keats would say that even if the have kissed the girl..the happiness will finish..but now his happiness is extended that he would ever have that pleasure of abt to kiss his girl"

crazy
18th January 2007, 02:09 PM
what is alaipesi?

VENKIRAJA
18th January 2007, 05:24 PM
tholaipesi:telephone.
alaipesi:cellphone.

ragav89
18th January 2007, 09:18 PM
superb da all were good da......keep it up....

sundararaj
20th January 2007, 03:33 PM
[tscii:cc0df81dc2]«¨Ä§Àº¢....¿øÄ ¦º¡ø..¿ýÈ¢ ¦Åí¸¢.[/tscii:cc0df81dc2]

crazy
20th January 2007, 08:20 PM
Thank u for explaining venki :)

VENKIRAJA
22nd January 2007, 06:14 PM
சவப்பெட்டி மனிதர்கள்.

அங்குல அளவு மட்டுமே உள்ள
ஓடாத இரயிலும் இவன்,
இசைக்காத புல்லாங்குழலும் இவன்.
இதழ்வரை வரும்
மனைவியை விடவும்
இதழுக்குள் எட்டிப்பார்க்கும்
ஆதர்சன் இவன்.
செத்தும் கெடுக்கும்
சட்டைப்பை சர்பம் இவன்.
நமனின் பாசவலையை இரவல் வாங்கி
நுரையீரலில் வீசும் இவனிடம்
படகில்லை,துடுப்பு தானுண்டு!
தாவரங்களை நாம் உண்ட பாவத்திற்கு
தாவரமே நம்மைத் தின்கிறது இவனுருவில்.
தேகத்தையே அணுகுண்டாக்கி
தன்னையே திரியாக்கிக்கொள்ளும்
உருளை எரிமலை இவன்;
இருண்ட நரகத்திற்கு இட்டுச்செல்லும்
தீப்பந்தமாய் இவனிருக்க
அஃறிணையென்று யாரிவனை சொன்னது?
உயர்திணையினும் உயர்திணை இவன்.
தீவைத்தால் புதைகுழி,
தீவைக்காவிடின் புதையல்குழி -
என் சிகரெட்டு.

madhu
22nd January 2007, 09:23 PM
wow .. :clap: venki !

:smokesmirk: :arrow: :notthatway:

crazy
26th January 2007, 01:28 AM
:clap:

VENKIRAJA
18th February 2007, 11:58 AM
# XII.வீட்டுக்காவல்.

வைரம் வைரத்தை அறுக்கும் தெரியும்
வலை வலையை அறுக்கும் தெரியுமோ?
இவன் கற்றது ஒரு கலை-அதுகொண்டு
அறுப்பது நமனின் பாசவலை!
போர்வைகளின் போர்வையான இவன்
கொஞ்சம் மாறுபட்ட தேன்கூடு;
இக்கூடிற்கு இயேசுபிரானைப் பிடிக்காது-
பின்னே குட்டியமதர்மர்கள் தட்டத்தட்ட
திறப்பதில்லை இவன் கதவு.
நம்மை அனுதினமும் அடைகாக்கும்
ஜன்னல்களுடைய முட்டையோடும் இவன்;
இரண்டாவது கருவறையும் இவன்.
இக்கால வேந்தர்களை பகையினின்று காத்தருளும்
நீர்வற்றிய அகழியுமிவன்;
படுக்கையறையுள் அனுமதிக்கப்படும்
ஒரேயொரு மெய்க்காவலாளியும் இவன்!
கத்தியின்றி இரத்தமின்றி
யுத்தம் நித்தம் வெல்லுவான்
அல்லியோடு மலருகின்ற அழகு அந்தி மலரிவன்.

அஃறிணையென்று யாரிவனைச் சொன்னது?
உயர்திணையினும் உயர்திணையிவன்
வீசினால் ரசம்
வீசாவிடின் விஷம்-
என் கொசுவலை!

pavalamani pragasam
18th February 2007, 12:01 PM
:clap:

VENKIRAJA
18th February 2007, 12:07 PM
அம்மையாரே,எனக்கு தலைப்புகள் வேண்டும் கவியியற்ற- தாருங்களேன்.கூடவே ஒரு நீண்ட விமர்சனமும்....

pavalamani pragasam
18th February 2007, 12:16 PM
[tscii:872a548b3d]Sailing in the same boat! :lol:
±ý ¿¢¨Ä¨ÁÔõ «Ð§Å¾¡ý '¸Å¢¨¾ìÌ ¸Å¢¨¾' ¾¢Ã¢Â¢ø ¾£É¢ þÕìÌ! ²§É¡ º£óКâø¨Ä!
:( [/tscii:872a548b3d]

crazy
18th February 2007, 04:12 PM
:clap:

VENKIRAJA
21st March 2007, 07:43 PM
சங்கேதப் புகலிடம்.

செல்லக் குயில்களுக்கு உற்ற ஆலமாய்
வாயாடி வீணைகளுக்கு வக்கனை மேடையாய்
தட்டச்சு தாரகைகளின் சுவடேந்தும் சத்திரமாய்
இலட்ச தீபங்களில் தனித்ததொரு சுடரே!
நீ சமயங்களில் வால்நாயாகிறாய்
தருணங்களில் ஞான ஆசானாகிறாய்!
கண்காணா சிநேகிதங்களுக்கு மத்தியஸ்தன் நீயா?
வினையாட்டுப் பூசல்கார இயந்திரத் தீயா?
ராகம் ததும்பும் கானகமே
மோகம் படரும் ஆலயமே
கலைகள் களிக்கும் அரங்கமே
உன் நாமத்தில் அத்தனையும் சங்கமமே.
நீ கருத்துகளின் கூடரமோ
வழக்காடுமன்ற வழித்தோன்றலோ
மௌன ஒலிப்பெருக்கியோ
கோடிப்பூ பூங்காவனமோ
ரீங்கார ரங்கராட்டினமோ
அதுஇதுவென வரையறுக்கா ஓரொளியோ
சகலத்தின் சம்பந்தமாகிவிட்ட பேரொளியா
கேள்விகளின் கட்டிடமா
விடைகளின் வெட்டி மடமா

அஃறிணையென்று யாரிவனை சொன்னது?
உயிர்திணையினும் உயர்திணை இவன்!
நுழைந்தால் அண்டம்
நுழையாவிடின் தண்டம்-
என் மையம்!

pavalamani pragasam
21st March 2007, 09:24 PM
:clap:

crazy
21st March 2007, 09:59 PM
அஃறிணையென்று யாரிவனை சொன்னது?
உயிர்திணையினும் உயர்திணை இவன்!
நுழைந்தால் அண்டம்
நுழையாவிடின் தண்டம்-
என் மையம்!


:clap: :clap: