PDA

View Full Version : SUNTV



aanaa
1st September 2006, 10:00 PM
sun tv has changing the program without any notice
no body complain?
yesterday they had their news at 19.35 hrs instead 20.00 hrs.
whats their email ? has to express our concerns

laddu
1st September 2006, 10:59 PM
http://www.sunnetwork.org/contactus/default.htm

you'll find the address. i couldn't find their email address ...

aanaa
2nd September 2006, 01:42 AM
http://www.sunnetwork.org/contactus/default.htm

you'll find the address. i couldn't find their email address ...
thanks

phmaideen
21st September 2006, 11:51 AM
it's a private network so no one can ask them why?.

Querida
30th April 2007, 08:02 AM
(i couldn't find where to convey this so did it here)

Yesterday I watched "Thiruvalar Thirumathi" while I thought it was a cute show (except for the contrived argument drama part of the show) what I really was impressed about is the sheer amount of prizes that both couples can win even if theydo not "win" the challenge put infront of them...not only money but products and trips as well....very impressive...

I like how one team does not lose everything in the end and can leave the show atleast happy about their experience....i know many american game shows where even if playing to the very end you can lose everything...or build up your score and end up with nothing...I'm thinking for the young couples that are participating in this show this will be a big plus...(atleast hopefully no arguments about losing totally)....

aanaa
30th April 2007, 08:05 PM
I do watch this episode.
its good.
a dance / questions about understanding
I like the show
the amount of money - is it real money???

aanaa
30th April 2007, 08:14 PM
Incase if you need email address:

SunTV:
shammi@sunnetwork.in

dishnet - sunTV
farook.shamsudeen@echostar.com

amj
30th June 2007, 04:55 AM
hello post all tv serials online to watch please post it thank you

mokshani
2nd August 2007, 07:11 PM
(i couldn't find where to convey this so did it here)

Yesterday I watched "Thiruvalar Thirumathi" while I thought it was a cute show (except for the contrived argument drama part of the show) what I really was impressed about is the sheer amount of prizes that both couples can win even if theydo not "win" the challenge put infront of them...not only money but products and trips as well....very impressive...

I like how one team does not lose everything in the end and can leave the show atleast happy about their experience....i know many american game shows where even if playing to the very end you can lose everything...or build up your score and end up with nothing...I'm thinking for the young couples that are participating in this show this will be a big plus...(atleast hopefully no arguments about losing totally)....

yes its a nice show, good 1 hour entertainment. Its fun to watch couple dancing and fighting at the situation round.

azhagi
3rd August 2007, 12:47 AM
Are you all serious? Do you really like 'Thiruvalar Thirumathi'? :shock: :roll: :(

mokshani
3rd August 2007, 07:17 PM
Are you all serious? Do you really like 'Thiruvalar Thirumathi'? :shock: :roll: :(
yes i like the show except one of the rounds where men dress like women and women dress like men; makes me get so annoyed!!!

R.Latha
15th October 2007, 04:21 PM
சன் டிவியில் ஒளிபரப்பான சூர்யா தொடரைத் தொடர்ந்து `மகள்' என்னும் புதிய மெகா தொடரை தயாரித்திருக்கிறது, நிம்பஸ் டெலிவிஷன் நிறுவனம்.

இத்தொடர் திங்கள் முதல் வெள்ளி வரை காலை 11 மணிக்கு சன் டிவியில் ஒளிபரப்பப்படுகிறது.

வரும் திங்கட்கிழமை தொடங்கும் இந்தத் தொடரின் கதைச்சுருக்கம்:-

ஒவ்வொரு குடும்பத்திலும் மகள் எனப்படுபவள் எவ்வளவு முக்கியமானவள்; குடும்பத்தின் பெருமையையும், கவுரவத்தையும் மகள் எப்படி காப்பாற்றுகிறாள்... குடும்பத்தின் குத்துவிளக்காக போற்றப்படும் இந்த மகள், தன் உறவுகளுக்காக எத்தனை தியாகங்கள் செய்கிறாள்? எவ்வளவோ சுமைகளை சுமந்து, முடிவில் அவள் அடைந்த சுகம்தான் என்ன? இதுவே கதையின் கரு.

அம்மன் படத்தில் வில்லனாக நடித்த ராமி ரெட்டி இத்தொடரில் வில்லனாக நடித்துள்ளார். தமிழில் சின்னத்திரையில் அவர் நடிப்பது இதுவே முதல் முறை.

மற்றும் நடிகர் - நடிகைகள்: மீனாகுமாரி, வரலட்சுமி, சுலக்ஷனா, காவ்யா, சந்தானம், ரிஷி, ஸ்வேதா, ஸ்ரீதர், கோவை பாபு, தியாகராஜன், பிந்து மாதவி, சுந்தரி, முரளி, அர்விந்த், கவுசல்யா, செந்தாமரை, அமிர்தகடேசன், பக்தவச்சலம், தனலட்சுமி, மாஸ்டர் அபிலாஷ்.

பாடல்: பழனி பாரதி. பாடல் இசை: ராஜேஷ் வைத்யா. திரைக்கதை: ஜோதி அருணாச்சலம். வசனம்: எம்.கே.மணி. இயக்கம்: பிரான்சிஸ் பாப்பு. கிரியேட்டிவ் டைரக்டர்: ஆர்.நாராயணன், கே.ஆர்.சுப்புரத்தினம். ஒளிப்பதிவு: ஆர்.பி.எஸ்.சூரியன், எடிட்டிங்: பிஜ×. தயாரிப்பு மேற்பார்வை: ஆர்.ஐயப்பன். தயாரிப்பு: ஆகாஷ் குரானா.[tscii:3f1cb8a3c6][/tscii:3f1cb8a3c6]

saradhaa_sn
15th October 2007, 05:51 PM
அம்மன் படத்தில் வில்லனாக நடித்த ராமி ரெட்டி இத்தொடரில் வில்லனாக நடித்துள்ளார். தமிழில் சின்னத்திரையில் அவர் நடிப்பது இதுவே முதல் முறை.

மற்றும் நடிகர் - நடிகைகள்: மீனாகுமாரி, வரலட்சுமி, சுலக்ஷனா, காவ்யா, சந்தானம், ரிஷி, ஸ்வேதா, ஸ்ரீதர், கோவை பாபு, தியாகராஜன், பிந்து மாதவி, சுந்தரி, முரளி, அர்விந்த், கவுசல்யா, செந்தாமரை, அமிர்தகடேசன், பக்தவச்சலம், தனலட்சுமி, மாஸ்டர் அபிலாஷ்.

பாடல்: பழனி பாரதி. பாடல் இசை: ராஜேஷ் வைத்யா. திரைக்கதை: ஜோதி அருணாச்சலம். வசனம்: எம்.கே.மணி. இயக்கம்: பிரான்சிஸ் பாப்பு. கிரியேட்டிவ் டைரக்டர்: ஆர்.நாராயணன், கே.ஆர்.சுப்புரத்தினம். ஒளிப்பதிவு: ஆர்.பி.எஸ்.சூரியன், எடிட்டிங்: பிஜ×. தயாரிப்பு மேற்பார்வை: ஆர்.ஐயப்பன். தயாரிப்பு: ஆகாஷ் குரானா.[tscii:7dc571bf6d][/tscii:7dc571bf6d]

சீரியலின் டைட்டில் சீனை ஓட விட்டு பார்த்தது போலிருக்கிறது. தகவலுக்கு நன்றி.


சன் டிவியில் ஒளிபரப்பான சூர்யா தொடரைத் தொடர்ந்து `மகள்' என்னும் புதிய மெகா தொடரை தயாரித்திருக்கிறது, நிம்பஸ் டெலிவிஷன் நிறுவனம்.

இத்தொடர் திங்கள் முதல் வெள்ளி வரை காலை 11 மணிக்கு சன் டிவியில் ஒளிபரப்பப்படுகிறது.

வரும் திங்கட்கிழமை தொடங்கும் இந்தத் தொடரின் கதைச்சுருக்கம்:-

ஒவ்வொரு குடும்பத்திலும் மகள் எனப்படுபவள் எவ்வளவு முக்கியமானவள்; குடும்பத்தின் பெருமையையும், கவுரவத்தையும் மகள் எப்படி காப்பாற்றுகிறாள்... குடும்பத்தின் குத்துவிளக்காக போற்றப்படும் இந்த மகள், தன் உறவுகளுக்காக எத்தனை தியாகங்கள் செய்கிறாள்? எவ்வளவோ சுமைகளை சுமந்து, முடிவில் அவள் அடைந்த சுகம்தான் என்ன? இதுவே கதையின் கரு.

அட.... இதுவரை எந்த சீரியலிலும் வராத (அதாவது 95 சதவீத சீரியல்களில் மட்டும் வந்த) கதையாக இருக்கிறதே.

குடும்பத்துக்காக ஓடாக தேயும் பெண்களின் கதையை விட்டு இந்த சீரியல்காரர்கள் வெளிவரப்போவது எப்போது..?.

Dhesh
12th November 2007, 02:17 AM
The show is Ok cos y'day's episode was funny bcos the dances were funny by the lady in the pink clothes. I think her name was Nishanthi, she was dancing with her husband with a suit.
Y'day, sun tv wasn't very clear for me. I think their on strike. Half the episode kept cumin on and off.

R.Latha
26th December 2007, 10:40 AM
[tscii:771f2a25fb]`அபிநயா கிரியேஷன்ஸ்' நிறுவனம் தற்போது சன் டி.வி.க்காக `செல்லமடி நீ எனக்கு' என்கிற மெகா தொடரினை தயாரித்து வழங்கி வருகிறது. இத்
தொடர் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் பகல் 12.30 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது.

இத்தொடரினை அடுத்து `அழகம்மை' என்கிற புதிய மெகா தொடரை தயாரித்து வழங்க உள்ளது, அபிநயா கிரியேஷன்ஸ்.

இது குறித்து தொடரின் தயாரிப்பாளர் ஜே.கே. கூறியதாவது:-

``æÖஸ்ட்லிமாப்பிள்ளை தொடங்கி `செல்லமடி நீ எனக்கு' வரையில் சன் டி.வி.க்காக நாங்கள் தயாரித்து வழங்கிய தொடர்கள் அனைத்தும் ரசிகர்களிடம் பெரியளவில் வரவேற்பினை பெற்று உள்ளது.

அந்த வரிசையில் நாங்கள் அடுத்து தயாரித்து வழங்க உள்ள `அழகம்மை' தொடரும் இடம் பெறும். அந்த அளவிற்கு மிக வித்தியாசமான கதைக்களத்தினை கொண்டதாக இத்தொடர் உருவாக உள்ளது.

தன் வாழ்க்கையில் முன்னேற உதவி செய்தவனையே அவன்தான் தனக்கு உதவியவன் என தெரியாமல் ஒருவன் பழி வாங்கி விடுகின்றான். உதவி செய்தவன் அனைத்தையும் இழந்து நடுத்தெருவில் நிற்கையில், தனக்கு உதவியவனே அவன்தான் என்கிற உண்மை புரிந்து... அவனுக்கு உதவுவதும், அவனை வாழ்க்கையில் வெற்றி பெற செய்ய போராடுவதும்தான் இத்தொடரின் மையமுடிச்சு. இது, குடும்ப பின்னணியுடன் மிக சுவாரசியமாக சொல்லப்பட உள்ளது''

அழகம்மை தொடரை ஏ.ஆர்.மனோ இயக்குகிறார், இவர் டைரக்டர்கள் பத்ரி, சுந்தர் சி. பூபதிபாண்டியன் ஆகியோரிடம் உதவி இயக்குனராக இருந்தவர்.[/tscii:771f2a25fb]

R.Latha
26th December 2007, 11:02 AM
[tscii:3f1377483f]
தொலைக்காட்சி வரலாற்றில் முதல் முறையாக சினிமாவை மக்களிடம் கொண்டு செல்லும் ஒரு புதுமையான நிகழ்ச்சி "சூப்பர் ஸ்டார்ஸ்.''

இந்நிகழ்ச்சியின் நோக்கம், நடிக்கும் ஆர்வம் உள்ளவர்களை தேர்ந்தெடுத்து சினிமாவிற்கு தேவையான நடிப்பு, நடனம், ஸ்டண்ட், டப்பிங் பேசுவது என சினிமா சார்ந்த துறைகளில் பயிற்சி கொடுத்து அவர்களை சிறந்த கலைஞர்கள் ஆக்குவதே!

அவர்களில் சிறந்த ஹீரோ, ஹீரோயினைத் தேர்ந்தெடுத்து சில்வர் லைன் பிலிம் பேக்டரி நìறுவனம் தயாரிக்கும் புதிய திரைப்படத்தில் அறிமுகப்படுத்தி நடிக்க வைக்க உள்ளனர்.

மேலும், நிகழ்ச்சியில் பங்கு பெறும் மற்ற நடிகர், நடிகைகள், தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளராகவும், மாடலிங் துறையிலும் மற்றும் சின்னத்திரை, பெரியத்திரை நடிகர்களாக பிரகாசிக்க வாய்ப்புகள் உண்டு.

விரைவில் சன் டிவியில் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ளது. [/tscii:3f1377483f]

saradhaa_sn
27th April 2008, 06:12 PM
சன் டி.வி.யில் புதிதாக சனிக்கிழமை இரவு 9.30க்கு ஒளிபரப்பாகும் கேம் ஷோ "ஜோடிப்பொருத்தம்". தம்பதிகள் கலந்துகொண்டு போட்டியிட்டு பரிசு பெறும் நிகழ்ச்சி. (பழைய 'திருவாளர் திருமதி', மற்றும் 'தங்க வேட்டை' நிகழ்ச்சிகள் நினைவிருக்கிறதா?. அதனுடைய புதிய வடிவம்தான் இது).

அதன் முதல் போட்டிநிகழ்ச்சி நேற்றிரவு ஒளிபரப்பானது. ஆனந்தக்கண்ணன் மற்றும் அனிஷா தொகுத்து வழங்குகிறார்கள்.

கடைசி வரை சென்று வெற்றி பெறுபவர்களுக்குத்தான் பரிசு என்றில்லை. கலந்துகொண்டாலே கூட எக்கச்சக்க பரிசுகள். இதில் பல சுற்றுக்கள். கேள்வி நேரம், மௌனமொழி, மின்னல் சுற்று, விலையைச் சொல்லுங்கள்..... இப்படி. (எல்லாம் 'புதிய மொந்தையில் பழைய ......' கதைதான்). கலந்துகொள்பவர்களுக்கு கேஸ்ஸ்டவ், கம்ப்யூட்டர், மிக்ஸி அது இது என்று ஏகமான பரிசுகள். விலையைச்சொல்லுங்கள் போட்டியில் ஒரு குறிப்பிட்ட பொருளைக்காட்டும்போது நான்கு ஜோடிகளும் அதற்கு விலையை எழுதிக்காட்ட வேண்டுமாம். யார் அதுக்கு நெருக்கமாக விலையைச்சொல்கிறார்களோ அவர்களுக்கு அந்த பொருள். ரொம்ப நெருக்கமாக இருக்க வேண்டுமென்று கூட இல்லை. மலைக்கும் மடுவுக்கும் இடையே உள்ள நெருக்கமாக இருந்தாலும் போதும். மற்றவர்களை விட நெருக்கமாக இருக்க வேண்டும், அவ்வளவுதான்.

நேற்று கூட ஒரு கேஸ் ஸ்டவ் விலையைக்கேட்டபோது, மற்றவர்கள் 3500, 4000, 4200 என்று சொல்லியிருக்க ஒரு தம்பதி மட்டும் 7,000 சொன்னார்கள். உண்மையில் அதன் விலை 14,000 ரூபாய். ஆனால் 7000 தான் நெருக்கமாக இருக்கிறது என்று அவர்களுக்கே கொடுத்து விட்டனர். (அப்போ ஏன் இதுல கலந்துக்க அடிச்சுக்க மாட்டாங்க?). ஒரே தம்பதி, சோபா செட் உள்பட பல பரிசுகளை அள்ளிச்சென்றனர். அதிலும் ஒவ்வொரு வார நிகழ்ச்சியிலும் கடைசி இரண்டு இடம் வருபவர்களுக்கு லட்சரூபாய் மதிப்புள்ள தங்க நகைகளும் பரிசு கொடுக்கிறார்கள்.

இது ஒரு வாரத்தோடு முடிவதல்ல, வெற்றி பெற்றவர்கள் இவ்வளவையும் வாங்கிக்கொண்டு அடுத்த சுற்றுக்கும் போகிறர்களாம். அள்ளுங்கோ...!!!!.

R.Latha
5th May 2008, 08:03 AM
சன் டி.வி.யில் திங்கள் முதல் வெள்ளிவரை தினமும் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் புராணத் தொடர் திருவிளையாடல்.

சிவபெருமான், பல்வேறு காரணங்களின் அடிப்படையில் தன்னை வழிபடும் பக்தர்களிடத்தில் நிகழ்த்திய சம்பவங்களே திருவிளையாடல் என்று அழைக்கப்படுகிறது.

இத்தகைய திருவிளையாடல்கள் திருவிளையாடற்புராணம், சிவபுராணம், சிவமகாபுராணம், பெரியபுராணம், கந்தபுராணம் முதலான நூல்களில் இடம் பெற்றிருக்கின்றன. இவற்றிலிருந்து தேர்வு செய்யப்பட்ட சுவாரஸ்யமான கதைகளின் தொகுப்பே இந்த திருவிளையாடல். தொடரில் இடம் பெறும் மாயாஜாலக் காட்சிகளை திரையில் கொண்டு வருவதற்கென்று சுமார் ஐம்பது பேர் கொண்ட கிராபிக்ஸ் குழு பணியாற்றி வருகிறது.

சிவபெருமானாக ஸ்ரீதரும், உமாமகேஸ்வரியாக யமுனாவும், அவ்வையாராக மனோரமாவும், நாரதராக ராதாரவியும், இந்திரனாக ப்ரித்விராஜனும், இந்திராணியாக யுவராணியும், தொடக்க கதையில் முக்கிய கதாபாத்திரங்களாக நடித்திருக்கிறார்கள்.

இசை:கங்கை அமரன், ஒளிப்பதிவு:சரவணபாண்டியன், எபிசோட் டைரக்டர்:செல்வபாண்டியன், திரைக்கதை வசனம்: ஸ்ரீமான் கவிச்செல்வர். இயக்கம்: ராகேஷ், சின்ஹா.

ரேடன் மீடியா ஒர்க்ஸ் நிறுவனம் தொடரை தயாரிக்கிறது.

################################
WHO ACT AS VINAYAGAR?

R.Latha
15th May 2008, 12:30 PM
பாண்டவர் பூமி படத்தில் நடித்த நடிகை சமீதா இப்போது சின்னத்திரைக்கு வந்து விட்டார். இவர் நாயகியாக நடிக்கும் சிவசக்தி தொடர் விரைவில் சன் டிவியில் ஒளிபரப்பாகிறது. இந்தத் தொடரை இயக்கும் சுந்தரமூர்த்தி டைரக்டர் திருமுருகனிடம் மெட்டிஒலி தொடரில் பணியாற்றியவர்.

littlemaster1982
22nd May 2008, 12:37 PM
Arattai Arangam - Behind the screen.

http : // jazeela. blogspot. com/2008/02/blog-post.html

saradhaa_sn
22nd May 2008, 06:01 PM
Arattai Arangam - Behind the screen.

http : // jazeela. blogspot. com/2008/02/blog-post.html

படித்தேன், லிட்டில் மாஸ்ட்டர் ஜி,

இதென்ன பிரமாதம்... பட்டிமன்றத்தில் பேசும் பாரதிபாஸ்கர், ராஜா, சாலமன் பாப்பையா ஆகியோர்கூட தாங்கள் என்ன பேசப்போகிறோம் என்பதை ஏற்கெனவே ஒருவருக்கொருவர் குறிப்புகளை அனுப்பி, எதிர் அணி அதற்கேற்றாற்போல பதில் தயார் செய்து, அதையும் ஒருவருக்கொருவர் பரிமாறிக்கொண்டு அப்புறம்தான் மேடையேறுகின்றனர்.

ஆனால், மேடையில் பேசும்போது, ஏதோ அப்போதுதான் கேட்டு அதற்கு உடனே மேடையிலேயே பதில் உடனுக்குடன் சொல்வது போல ராஜா, பாரதி பாஸ்கர் போன்றோர் நடிப்பதுதான் சூப்பர்.

இந்த நாடக ஒத்திகை, லியோனி பட்டிமன்றம் உள்பட, பெரும்பாலான பட்டிமன்றங்களில் நடக்கிறது.

aanaa
22nd May 2008, 06:29 PM
US/ஐரோப்பா TVயில் ஒரு wrestilng program
அந்தக் காலத்தில் அதை உண்மையென் நம்பி பார்த்தவர்கள் ஏராளம்.
பின்புதான் புரிந்தது அது நடிப்பென

உலகமே இப்படித்தான்..

R.Latha
25th May 2008, 11:00 AM
திருமணத்துக்குப் பிறகு நடிப்பில் இருந்து விலகியிருந்த நடிகை நந்திதா இப்போது சின்னத்தரையில் நடிக்க வந்துவிட்டார். சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் புவனேஸ்வரி சீரியலில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

HOW IS BUVANESWARI SERIAL?

aanaa
21st June 2008, 06:44 PM
சனிக்கிழமை தோறும் இரவு 9.30 மணிக்கு சன் டி.வி.யில் சூப்பர் டான்டர்-2 ஒளிபரப்பாகிறது. பார்வையாளர்கள் வாக்களிப்பு மட்டுமே போட்டியாளர்களை அடுத்தடுத்த சுற்றுக்கு தகுதி பெறச் செய்கிறது. அபூர்வா, மைக்கேல், சுனில்குமார், வந்திதா, ப்ரீத்தி, அபிராமி, ஆண்டனி ஆகிய ஏழு பேர் தனிநபர் நடன போட்டியாளர்களாக காலிறுதிச் சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளனர். ஜீவன்-சவிதா, அஷ்வின்- மாதுர்யா, ஹரி-ஸ்வேதா, தமிழ்வேந்தன்-தன்யா, தயாநிதி-ஜெஸ்லீன், ஜேசுப்ரவீன்-டயானா, விஜய்-மௌ லிகா ஆகிய ஏழு ஜோடிகளும் காலிறுதிச் சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளனர்.

சூப்பர் டான்சர்-2ல் தங்களுக்குப் பிடித்தமான போட்டி யாளரை வெற்றி யாளர்களாக தேர்வு செய்வதற்கு தங்களின் வாக்குகளை உடனே பதிவு செய்யலாம். அதிக வாக்குகளை அனுப்பும் பார்வை யாளர்களில் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட 6 நபர்களுக்கு மட்டும் நடிகை மாளவிகாவைச் சந்திக்கும் ஓர் பொன்னான வாய்ப்பு காத்திருக்கிறது.

aanaa
11th July 2008, 07:06 PM
Bad news for Shipping Balu & company? The NDTV Imagine serial Ramayan is a super duper hit in South India especially Tamilnadu.

The Tamil version of the serial went on air on Sun TV in March. It beams Sundays, 10.30 am to 11.30 am. Seeing the instant success and response it received, in early May, it began to be aired also on Gemini TV and Surya TV, Monday to Friday, 7 pm to 7.30 pm.

As per the TAM Peoplemeter, On Sun TV, Ramayan has grown the time slot by over 86%, making it the No. 1 weekend show. The show on Gemini TV has managed to grow the slot by 14%, while on Surya TV, it is pitted against the top show in the Kerala market, but it still helped the channel slot grow by 47%.

On Sun TV, Ramayan averages in excess of 9 TVR since it launched on March 16. On Gemini TV, it averages close to 4.5 TVR and on Surya TV the show averages in excess of 4 TVR.

Gaurav Gandhi, EVP, business operations and ancillary revenues, NDTV Imagine, said, " Ramayan, besides being an instant hit on our own channel, has found tremendous success in the 3 southern markets as well."

"The Sun Network, with their wide reach, and UTV, who are marketing the show for us on these 3 channels, have been instrumental in this success. In the coming months Ramayan will be also be available across several other markets and platforms in India & Overseas."

aanaa
11th July 2008, 07:07 PM
Another disturbing news for the First Son of Tamilnadu. THE SUN DIRECT SUBSCRIPTION HAS CROSSED ONE MILLION IN THE FIRST 200 DAYS OF ITS OPERATION. The one million-subscriber base comes from only 4 southern states - Tamil Nadu, Karnataka, Kerala, Andhra Pradesh and the union territory of Pondicherry. The company will be soon spreading its wings across the country.

Among the other first's are:

Sun Direct DTH launched 4 regional basic tiers consisting of over 100 plus channels specific to each southern state (Tamil basic, Telugu Basic, Kannada Basic and Kerala basic) at the rate of Rs. 75/- per month with the consumer premises equipment (set top box, Dish, LNB etc.. ) being given free for viewing.


Sun Direct DTH is also the first DTH platform in India which provides to their customers with the latest MPEG 4 technology.


Sun Direct DTH provides in addition to regular audio/video outputs, Digital Optical audio outputs for crystal clear audio quality and component video output to get the best picture quality for plasma, LCD and other High end TV's.

Sun Direct DTH is the only existing DTH platform to provide High Definition TV (HDTV) in India and will shortly launch a few HD channels.

Source: Sun Direct press release, television point.

aanaa
23rd August 2008, 08:31 AM
மீண்டும் மெட்டி ஒலி
பகல் 11.00

sarna_blr
29th August 2008, 11:29 AM
http://selvaspeaking.blogspot.com/2008/08/blog-post_25.html

கடைசியாக ஒரு வரி - முதுமை வந்து விட்டால், எப்போதோ நடந்த நல்லதுகளை அசைபோடுவோம். சன் டிவி இப்போது அப்படி ஒரு அசைபோடும் நிலைக்கு வந்துவிட்டது. சமீபத்திய உதாரணம் - மெட்டிஒலி ரிப்பீட்.

MEDIA ASIA
29th August 2008, 03:32 PM
hello post all tv serials online to watch please post it thank you

You can watch almost all serials from Sun TV for free on:

www.londontamilvideo.com

and


www.isaitamil.net

aanaa
30th September 2008, 05:09 PM
பாவம் சன் TV

ஐரோப்பாவ்வில் கலைஞரின் TV தான் எல்லா இடமும் மின்னுகின்றது

சந்தாவோ மிகக் குறைவு

பாலசந்தர்
பாரதிராஜா
என பெரிய திலகங்களின் நாடகங்கள்

சன் TV யோ
பழையானவற்றை மீண்டும் போடுவதும்
கோலங்கள், ஆனந்தம் இரண்டையும் இன்னும் ஒரு 5 வருடமாவது இழுக்க வைப்பதும் என மிகப் பாடுபடுகின்ரது
பரிதாபமாக உள்ளது.

aanaa
30th September 2008, 10:46 PM
பந்தம்-500



சன் டிவியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் காலை 11.30 மணிக்கு ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பந்தம் தொடர் 500 எபிசோடுகளை கடந்து இருக்கிறது.

இந்த தொடரில் சக்தி என்ற கதாபாத்திரத்தில் மனநலம் பாதிக்கப்பட்டவராக அப்சர் நடித்து வருகிறார். கோமா நிலையில் இருந்து குணமாகிய செல்வாவின் மனைவி நித்திலா, தான் யார் என்று மறந்த நிலையில் அம்னீஷியா பேஷண்டாக சக்தியிடம் வந்து சேர்கிறாள்.

செல்வாவின் மனைவிதான் நித்திலா என்று தெரிந்தும், சக்தி அவளை காதலிக்கிறான். இதை தடுக்க நினைக்கும் சக்தியின் அக்கா காயத்ரியின் எச்சரிக்கையையும் மீறி சக்தி நித்திலாவை தன் மனைவியாக்கி கொள்ள முயல்கிறான்.

நீலாம்பரி என்ற கதாபாத்திரத்தில் நடிக்கும் தேவிபிரியா, ஆதிலட்சுமியின் குடும்ப பிரச்சினைகளை தீர்த்து வைத்து ஆதிலட்சுமியையும் திருத்த முயல்கிறார். நீலாம்பரிக்கும் ஆதிலட்சுமிக்கும் என்ன உறவு, செல்வா எப்படி நித்தியாவை மீட்கிறார் என்ற கேள்விகளோடு பந்தம் தொடரை விறுவிறுப்புடன் கொண்டு போகிறோம் என்கிறார், தொடரின் இயக்குனர் ஹரிபாபு.

தொடரில் இரட்டை வேடங்களில் நித்யா நடிக்கிறார். மற்றும் நளினி, தீபக், ராஜசேகர், ஷில்பா, மனோகர், ஸ்ரீகுமார், யுவஸ்ரீ, கன்யா ஆகியோரும் நடிக்கின்றனர்.

இசை: ரேஹான்; திரைக்கதை, வசனம்: குமரேசன்; இயக்கம்: ஹரிபாபு; தயாரிப்பு: சேன் மீடியா.

aanaa
30th September 2008, 10:48 PM
ராணி மகா ராணி




சன் டி.வி.யில் சனிக்கிழமை தோறும் ஒளிபரப்பாகும் `கேம்ஷோ' `ராணி மகாராணி' முழுக்க முழுக்க பெண்களே கலந்து கொள்ளும் இந்த நிகழ்ச்சி, ஓர் சுவாரஸ்யமான அதிர்ஷ்ட விளையாட்டை மையமாக கொண்டது. திரையில் மறைந்திருக்கும் பிரபலம் யார்? என்பதே இந்த விளையாட்டின் பிரதானம். கொடுக்கப்பட்ட நாலு வாய்ப்புகளில் முதல் வாய்ப்பிலேயே அந்த பிரபலம் யார் என்று சரியாகச் சொன்னால் 1 லட்சம் பரிசு.

இரண்டாவது வாய்ப்பில் கண்டு பிடித்தால் ரூபாய் 50 ஆயிரம் பரிசு, மூன்றாவது வாய்ப்பில் கண்டு பிடித்தால் ரூபாய் 25 ஆயிரம், நாலாவது வாய்ப்பில் கண்டு பிடித்தால் ரூபாய் 12,500. இத்தோடு வார்த்தை விளையாட்டில் வெற்றி பெறுபவர்களுக்கு தங்க நாணயமும் பரிசாக காத்திருக்கிறது.

நடன நிகழ்ச்சி வரிசையில் `ராணி மகாராணி' நிகழ்ச்சியும் மக்களின் வரவேற்பை பெறும் என்று சரிகம நிறுவனத்தின் பி.ஆர்.விஜயலட்சுமி தெரிவித்தார். பெண்கள் மட்டுமே கலந்து கொள்ளும் இந்த நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குகிறார், மமதி அஞ்சன். ஒளிப்பதிவு- உதயசங்கர். இசை: பால்ராஜ், இயக்கம்: பிரின்ஸ்- வெங்கட்.ஜி.

Nerd
29th October 2008, 09:24 AM
Not sure where to post this...
Watched Vivek interviewing Abdul Kalam. It was very good. Kalam's answers were simply superb and made heck a lot of sense. The way he put forth his opinions was very loveable. Vivek started off with stupid questions like sinna vayasula pattam vittrukkIngaLA, deevali rocket vitturukkeengala etc., :banghead: The questions that followed were good. I thought the whole thing was not spontaneous though - as in Kalam already knew what the questions were going to be and he had already prepared the answers. He was looking at a TV screen which was in front of him the whole time. Whatever it is, it was an excellent watch.

saradhaa_sn
30th October 2008, 07:42 PM
Not sure where to post this...
Watched Vivek interviewing Abdul Kalam. It was very good. Kalam's answers were simply superb and made heck a lot of sense. The way he put forth his opinions was very loveable. Vivek started off with stupid questions like sinna vayasula pattam vittrukkIngaLA, deevali rocket vitturukkeengala etc., :banghead: The questions that followed were good. I thought the whole thing was not spontaneous though. Whatever it is, it was an excellent watch.
சும்மா ஒண்ணே முக்கால் படங்களில் மட்டுமே நடித்திருக்கும் நடிகைகளின் திரையுலக அனுபவங்களை (??) பேட்டி காண்பதைவிட, அறிவியல் விஞ்ஞானி அப்துல் கலாம் அவர்களுடைய பேட்டி உருப்படியாகவும் சுவாரஸ்யமாகவும் இருந்தது.

சன் டிவி இனிமேலும் இதுபோன்ற உருப்படியான நிகழ்ச்சிகளைத்தொடர வேண்டும்.

aanaa
30th October 2008, 08:22 PM
சன் டிவி இனிமேலும் இதுபோன்ற உருப்படியான நிகழ்ச்சிகளைத்தொடர வேண்டும். :goodidea:
மக்களை வளர விடுவாங்களா ஆ

aanaa
17th November 2008, 07:16 AM
Abhinaya creations Mega Serial Thiruppavai being telecast in Sun Tv channel at 12.30 noon on all Mondays to Fridays is the story of a family subject. Many viewers initially thought that the serial speaks about the Love of Andal with Lord Perumal. But it is entirely different. As per the story line the Vedas do not belonged to one particular community or religion alone. People who have faith in them will reap the benefit.

The story of the Thiruppavai, Screenplay and direction are all done by J.K. Balamurugan. Manibharathi is writing the dialogues, and is produced by Radha Krishnaswamy for Abhinaya creations.

Delhi Ganesh, Anuradha Krishnamoorthy, Sivan Srinivasan, Shobana, Sangeetha, Nithya,Shravani and other leading artistes are acting.

aanaa
28th November 2008, 08:59 PM
"திருப்பாவை'.


நல்ல தொடர்களை கொடுப்பதுதான் நோக்கம்: ஜே.கே.



அபிநயா கிரியேஷன்ஸ் சார்பில் பத்துக்கும் மேற்பட்ட மெகா தொடர்களை தயாரித்த ஜே.கே. முதன் முதலாக சன் டி.வியில் ஓளிபரப்பாகி வரும் திருப்பாவை சீரியலைத் தயாரித்து இயக்கி வருகிறார். இதுகுறித்து அவர் கூறியதாவது.

இதுவரை மாங்கல்யம், ஆடுகிறான் கண்ணண், தீர்க்க சுமங்கலி, செல்லமடி நீ எனக்கு, தெலுங்கில் காஸ்ட்லி அல்லுலு, வம்ச வருஷம் உள்ளிட்ட பல தொடர்களை தயாரித்து இருக்கிறேன்.

தற்போது இயக்கி வரும் திருப்பாவை என்னுடைய கதை என்பதால், அதனை மற்ற யாரும் சொன்னால் நன்றாக இருக்காது என்பதற்காகவே, நான் இயக்கும் பணியில் இறங்கினேன். மாமியார், மருமகள் சண்டை, இரண்டு, மூன்று பெண்களைத் திருமணம் செய்து கொண்டு அல்லல்படுவது போன்ற வழக்கமான சீரியல் கதைகளைப் போல் இல்லாமல் முற்றிலும் மாறுபட்ட கதையைக் கொண்டதுதான் திருப்பாவை.

இந்தக் கதை வேதத்தை பற்றியது, நல்ல விஷயங்களை செய்யும் போது வேதத்தை மீறுவதில் தப்பில்லை, எதுவாக இருந்தாலும் வேதம் சொல்லுகிற படிதான் நடக்க வேண்டும் என இந்த இரண்டு கருத்துகளுக்கிடையே நடக்கும் மோதல்தான் "திருப்பாவை'.

கண்ணால் காண்பதும், காதால் கேட்பதும் நிஜம் மாதிரி தெரியும் ஆனால் நிஜமாக இருக்காது. விசாரித்தால்தான் உண்மை தெரியவரும். மனம் விட்டு பேசாத எதுவுமே பிரச்னைதான்; அதை பேசி தீர்த்து விட்டால் முடிந்து விடும்.

நகர வாழ்க்கையில் மனைவிக்கு வாங்கி போகிற மல்லிகை பூ கூட டீசல் புகையில் கருகி விடுகிறது. கிராமத்தை விட்டு பிழைப்பு தேடி நகரத்துக்கு வந்த ஒவ்வொருவரும் ரசனையை தொலைத்துவிட்டுதான் வாழ்கின்றனர்.

ஆகவே டி.வி.யில் கிராமத்தை காட்டுவோம் என்பதற்காகதான் இந்த சீரியலை நகரங்களை விட்டு விட்டு கும்பகோணம் அருகிலுள்ள உப்பிலியப்பன் கோவில் கிராமத்தில் எடுத்திருக்கிறோம். இனி வரும் காட்சிகளையும் அங்கேயே எடுக்க முடிவு செய்துள்ளேன். சீரியலை கிராமத்தில் எடுப்பது அதிக செலவுதான். ஆனாலும் நல்ல சீரியலை மக்களுக்கு கொடுப்பதுதான் நோக்கம் என்றார் ஜே.கே.

aanaa
30th November 2008, 04:39 AM
[tscii:b2bcc29ae5] [/tscii:b2bcc29ae5]

செந்தூரப்பூவே




சன் டி.வி.யில் மதியம் 1.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் தொடர், `செந்தூரப்பூவே'.

மக்கள் அரங்கம் தவிர வேறு எந்த சின்னத்திரை நிகழ்ச்சியிலும் பங்கேற்காத விசுவுக்கு இந்த கதை பிடித்துப் போகவே உடனே டபுள் ஒ.கே. சொன்னார். விசுவின் நண்பராக தொடரில் வரும் நரசிம்மராஜ×ம் ஒரு திரைப்பட பிரபலம்தான். விட்டாலச்சாரியின் ஆஸ்தான ஹீரோ! தமிழ் நாட்டில் சக்கை போடு போட்ட `ஜெகன் மோகினி' திரைப்படத்தின் ஹீரோவும் இவரே.

கதாநாயகி ரஞ்சினி கிருஷ்ணன் கேரள அரசின் மாநில விருதை பெற்றவர். சித்தி தொடருக்குப் பிறகு சின்னத்திரைப் பக்கம் வராமல் இருந்த யுவராணி, இத்தொடரின் வில்லி கதாபாத்திரம் பற்றி தெரிந்ததும் உடனே மேக்கப் போட்டுக் கொண்டிருக்கிறார்.

`மெட்டிஒலி' தொடருக்கு திரைக்கதை எழுதிய முத்துச்செல்வன் தொடருக்கு திரைக்கதை எழுத, பரமேஷ்வர் இயக்கி வருகிறார்.

saradhaa_sn
7th December 2008, 01:22 PM
'ராணி மகாராணி' நிகழ்ச்சியில் வழக்கத்துக்கு மாறாக அல்ல, வழக்கத்துக்கு கூடுதலாக சில சுவாரஸ்யங்களைச் சேர்த்திருக்கிறார்கள். அதை அறிமுகப்படுத்தும் முகமாக, முதல் ஷோவுக்கு இரண்டு தெரிந்த முகங்களை போட்டியாளர்களாக அழைத்திருந்தனர்.

ஒருவர் சின்னத்திரை நட்சத்திரம் 'அலைகள்' ராணி.

இன்னொருவர் சின்னத்திரை நட்சத்திரம் புவனேஸ்வரி.

இருவருமே எந்த பந்தாவும் இல்லாமல் ரொம்ப சாதாரணமாக இருந்தனர் என்பதுடன், வழக்கமாகக் கலந்துகொள்ளும் குடும்ப பெண்களைப்போல, ஆரம்பத்திலேயே 'நான் பாரதி கண்ட புதுமைப்பெண்ணாக்கும்', 'அசத்துவோம்', 'நொறுக்குவோம்' என்றெல்லாம் வெட்டி பந்தா பண்ணாமல், திரையில் மறைந்திருக்கும் நட்சத்திரத்தைக் கண்டுபிடிக்க நிஜமான பரபரப்புடனும், பதட்டத்துடனும் காணப்பட்டனர். கண்டுபிடித்ததும், சின்னக்குழந்தைகளைப்போல குதூகலித்ததும் ரசிக்கும்படியாக இருந்தது.

நடிகை ராணி, தான் இந்தப்போட்டியில் பங்குபெற தன் மகன்தான் ட்ரைனிங் பண்ணினான் என்று சொன்னது ஆச்சரியமாக இருந்தது. அவருக்கு திருமணம் ஆகிவிட்டது என்பது தெரியும். ஆனால் இவ்வளவு பெரிய மகன் இருப்பது ஆச்சரியம்தான். (சமீப காலம் வரை இவருக்கு இன்னும் திருமணமே ஆகவில்லை என்று நினைத்திருந்தேன். காரணம், அவ்வளவு இளமையாக இருக்கிறார்).

இருவருமே முதல் பரிசை வெல்லவில்லை. ராணி மூன்றாவது சுற்றிலும் (25 ஆயிரம்) , புவனேஸ்வரி இரண்டாவது சுற்றிலும் (50 ஆயிரம்) வென்றனர். ராணியை வெல்ல வைத்தது ஸ்னேகா என்றால், புவனேஸ்வரியை வெல்ல வைத்தவர் பார்த்திபன். இருவரையும் தங்கக்காசு வெல்ல வைத்தவர் ஜோதிகா.

நிகழ்ச்சி நடத்தும் மமதி அஞ்சன், அடிக்கடி 'இது 100% லேடீஸ் ஷோ' என்கிறார். டைட்டிலிலும் 'ராணி மகாராணி' என்ற டைட்டிலின் கீழே 100% லேடீஸ் ஷோ என்று போடுகிறார்கள். ஆனால் நிகழ்ச்சி முடிவில், டெக்னீஷியன்கள் பெயர்ப்பட்டியல் காண்பிக்கப்படும்போது முழுக்க முழுக்க ஆண்கள் பெயர்களாகவே வருகிறது. அப்புறம் என்ன 100%...??. (இந்த சாரதாவை முதலில் அடிச்சு விரட்டணும். ஸேம்சைட் கோல் போடுவதே இவ்ளுக்கு வேலையா போச்சு).

aanaa
7th December 2008, 09:19 PM
நிகழ்ச்சி நடத்தும் மமதி அஞ்சன், அடிக்கடி 'இது 100% லேடீஸ் ஷோ' என்கிறார். டைட்டிலிலும் 'ராணி மகாராணி' என்ற டைட்டிலின் கீழே 100% லேடீஸ் ஷோ என்று போடுகிறார்கள். ஆனால் நிகழ்ச்சி முடிவில், டெக்னீஷியன்கள் பெயர்ப்பட்டியல் காண்பிக்கப்படும்போது முழுக்க முழுக்க ஆண்கள் பெயர்களாகவே வருகிறது. அப்புறம் என்ன 100%...??.
:rotfl:
:rotfl:


(இந்த சாரதாவை முதலில் அடிச்சு விரட்டணும். ஸேம்சைட் கோல் போடுவதே இவ்ளுக்கு வேலையா போச்சு).

:rotfl2:

R.Latha
15th December 2008, 12:57 PM
கண்மணியே!



திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் மதியம் 12 மணிக்கு சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் புதிய தொடர் "கண்மணியே.''

தங்கள் குடும்பத்துக்கு உரித்தான பூர்வீக சொத்து எதுவும் பிரச்சினைக்குரியதாக இருந்தால், அதை ஆண் பிள்ளைகள்தான் மீட்கப் போராடுவார்கள். ஆனால் இப்படியொரு நிலை தங்கள் குடும்பத்துக்கு நேர்ந்தபோது அக்கா - தங்கைகளான மூன்று பெண்கள் பூர்வீக சொத்தை மீட்கப் போராடும் கதைதான் தொடர் வடிவம் பெற்றிருக்கிறது.

தந்தை இல்லாத அந்த குடும்பத்தில் தாயாரின் விருப்பத்தை நிறைவேற்ற மூன்று பெண்களும் போராடும் காட்சிகள், பெண்களுக்கே தன்னம்பிக்கை தரும் விதத்தில் அமைந்துள்ளது என்கிறார், தொடரின் கதை, கிரியேட்டிவ் ஹெட் சந்திரமோகன் நாக். நடந்த ஒரு உண்மை சம்பவத்தின் அடிப்படையில் இந்த கதை உருவாக்கப்பட்டுள்ளது என்கிறார் அவர்.

தொடருக்கு திரைக்கதை: பி.என்.சி.கிருஷ்ணா. வசனம்: சி.எஸ்.ராஜேந்திரன். டைரக்ஷன்: ஷாஜி பிலால். தயாரிப்பு: பாலாஜி டெலிபிலிம்ஸ் ஷோபா கபூர், ஏக்தா கபூர்.

நட்சத்திரங்கள்: இளவரசன், `சங்கராபரணம்' ராஜலட்சுமி, சாதனா, பாவனா, ஸ்ரேஷா, ஷில்பா, நளினிகாந்த், நாஞ்சில் நளினி. `ஈரமான ரோஜாவே' சிவா முக்கிய கேரக்டரில் வருகிறார்.

saradhaa_sn
21st December 2008, 01:07 PM
நேற்றிரவு 'ராணி மகாராணி' நிகழ்ச்சியில் நடிகை ஐஸ்வர்யா (லட்சுமியின் மகள்) பங்கேற்றார். (பல ஐஸ்வர்யாக்கள் இருப்பதால் அடையாளம் சொல்ல வேண்டியே லட்சுமி பெயர்). நடிகை என்ற பந்தாவெல்லாம் கொஞ்சமுமில்லாமல், ரொம்ப உற்சாகத்துடன் கண்டுபிக்கப் போராடினார்.

இரண்டு பாகங்கள் கொண்ட இப்போட்டியில் முதல் பாகத்தில் 'மறைந்திருந்த பிரபலத்தை'க் கண்டுபிடிக்க முடியவில்லை. (பின் என்ன, முகத்தின் கண், மூக்கு, வாய் உள்ள பகுதிகளில் உள்ள சில்லுகளை அகற்றாமல், செண்டிமெண்ட், ராசி அது இதுன்னு சொல்லிக்கிட்டு, மூலைக்கு மூலை உள்ள சில்லுகளை அகற்றினால் என்ன தெரியும்?. அதனால் 'ஜெயம்' ரவியை அப்பாஸ் என்று சொல்லி தோற்றுப்போனார்).

ஆனால், இரண்டாவது பகுதியில் சுதாரித்துக்கொண்டு, மூன்றாவது அகற்றலிலேயே 'த்ரிஷா' என்று சொல்லி 25,000 பரிசு பெற்றார். தோற்றபோது சின்னக்குழந்தைகள் போல அடம் பிடித்ததும், வெற்றி பெற்றபோது குதூகலித்ததும், அவருக்குள் இருக்கும் குழந்தைத்தனம் இன்னும் போகவில்லையென்பதைக் காட்டியது.

ஐஸும், மமதியும் ரொம்ப பெஸ்ட் ஃப்ரண்ட்ஸ் போலும். ரொம்ப சகஜமாக 'வா, போ' என்று பேசிக்கொண்டனர். 'என்ன நீ, ரூல்ஸையெல்லாம் அடிக்கடி மாத்துறே', '45 செகண்ட் முடிஞ்சதும் பஸ்ஸரை அழுத்தறது யாரு?. அவர் கையைக் கொஞ்சம் கட்டிப்போடேன்' என்றெல்லாம் பொய்க்கோபத்துடன் கடிந்துகொண்டார். உண்மையிலேயே பார்க்க ரொம்ப தமாஷாக இருந்தது.

கடைசியில் தங்கக்காசு பெறுவதற்கான, 'தமிழ்சொல்லாடல்' போட்டியில், வாசகத்தைச்சொல்ல முடியாமல் திணறிய ஐஸு, தங்கநாணயம் வழங்கப்பட்டபோது, 'இல்லே, நான் ஜெயிக்கலை. அதுனால இது எனக்கு வேண்டாம். நான் ரொம்ப HONEST PERSON' என்று மறுத்தார். 'இல்லே ஐஸு, இது இங்கு கலந்துகொள்ளும் எல்லோருக்குமே வழங்கப்படுவது' என்று சொன்ன பிறகே வாங்கிக்கொண்டார்.

இனிமேலும் ஐஸ்வர்யாவைப்போன்ற ஜோவியலான பெண்களை அழைச்சிக்கிட்டு வாங்க மமதி (அஞ்சன்).

'நான் பாரதி கண்ட புதுமைப்பெண்ணாக்கும்', 'பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும்....' என்று வெட்டி பந்தாக்கள் பண்ணும் பெண்களை தவிருங்கள்.

aanaa
11th January 2009, 11:58 PM
Raj Tv , Sun News are screening live from Srirangam from 3 and 4 am respectively.

Vaikuntha Ekadasi is celebrated for 20 days in Srirangam on the Sukla Ekadasi day of the Tamil month of Margazhi. On Vaikuntha Ekadasi day, Lord Ranganatha, wearing a garment of rubies, goes out of the temple in a magnificent procession through the Parampada Vasal gate (gateway to salvation) and goes to the 1000-pillar hall.
The program in Parthasarathy temple today is as follows.

2.00 - Moolavar dharsanam
4.00 - ul purapadu
4.30- paramapatha vasal thirapu
10.00- urchavar thirumanjanam
12.00 - periya veedhi purapadu

The sorka vaasal will open every day till 15th from 6.00 PM and from 11th to 16th from 9.30 am.


The most important festival celebrated for full twenty one days during Tamil month Margazhi (December-January), is divided to two ten days as pagal pathu and ra pathu, with all pomp and pageantry.On Vaikunta Ekadesi day, Lord Ranganatha, attired in splendid garment, proceeds in a magnificient procession through Paramapada Vasal, arrives at Thirumamani Mandapam in the Thousand in a pillared hall to the thrill and joy of the devotees gathered in lakhs who have come from all over India and abroad. This occasion is the peak point of all festivals conducted in the Temple, on this day of days; Sri Ranganatha becomes a virtual king and is known as Sri Rangaraja. He holds his Divine Durbar in that huge hall which is further extended by a specially erected and tastefully decorated pandal, throughout the day Nalayira Dhivyaprabandham is recieted, and gets back to the Temple only late in the night. Milling crowds of devotees constantly keep moving from dawn to midnight. Teams of devotees, engaged in non-stop bhajans, fast throughout the day and keep endless vigil during the whole night, singing and dancing to the beat of cymbals. Verily, it is the sight for the gods to see. A paradise on Earth indeed!

chennai television

aanaa
31st January 2009, 06:28 AM
நாகவல்லி



சன் டிவியில் ஞாயிறு தோறும் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் தொடர், நாகவல்லி.

தன் மகளின் நாகதோஷம் நீங்க மயானம் நடுவில் உள்ள கல்வெட்டை தேடிப்போன பாகீரதியின் கணவன் கணபதி சித்தபிரமை அடைகிறார். ``நாகம்மாவின் பக்தையான பாகீரதியின் குடும்பத்துக்கு இப்படி ஒரு சோதனை தேவைதானா?'' என்று நாகவல்லியிடம் கேட்கிறான், மாயன்'' எது எப்படி நடக்க வேண்டுமோ அப்படியே நடக்கிறது, பொறுத்திருந்து பார்'' என்று நாகவல்லி கூறுகிறாள்.

அழிக்கப்பட்ட 96 கிராமத்தில் ஒரு குடும்பமான சுசிலா குடும்பமும், பாகிரதியின் குடும்பமும் திருமண சம்பந்தம் பேசுகிறது. அதில் மூன்றாவது குடும்பத்தின் தலையீட்டால் இந்த திருமணம் நடைபெறாது என்று பதறுகிறது, சுசிலா குடும்பம்.

கோமேதகக் கல்லை தேடிப்போன வக்கீல் வாசு என்னவானான்? நாகலோகத்துக்குச் சென்று நவரத்தின நாகத்தை சந்திக்க போன புரபசர் திருமூர்த்தியின் கதி என்ன?

நாகவல்லியை பழிவாங்கி, நாகலோகத்தை கைப்பற்றத் துடிக்கும் கார்க்கோடனின் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன? பாம்புகளின் அரசியான நாகவல்லியை பழிதீர்க்கவும், அழிக்கவும் பட்சிகளின் அரசனான நடராஜனின் நாடகம் முடிவுக்கு வருமா?.

இப்படி பல்வேறு முடிச்சுகளுக்கு விடை சொல்லும் விதமாக, பிரம்மாண்ட செட்டுகளில் ``நாகவல்லி'' வளர்கிறாள்.

தொடரின் ஒளிப்பதிவு- இயக்கம்: பி.எஸ்.தரன்.

நன்றி - தினதந்தி

aanaa
7th February 2009, 06:23 AM
அதிரடி அத்தை



சன் டிவியில் திங்கள் முதல் வெள்ளிவரை தினமும் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகிவரும் மேகலா தொடரில் மேகலாவின் தம்பி செரியன் தொடர்பான காட்சிகள் இப்போது பற்றிப்பிடிக்க ஆரம்பித்திருக்கிறது.

விரக்தியின் எல்லைக்கே போய்விட்ட செரியன் தன் இயலாமையின் கடைசி ஆயுதமாக தற்கொலையை தேர்ந்தெடுக்க, அதிலும் உடனடி சிகிச்சையில் பிழைத்துக் கொள்கிறான். மருமகனின் இந்த முடிவால் பாதிக்கப்பட்ட மாமனார், செரியனை இனி வீட்டோடு மாப்பிள்ளையாக இருந்துவிடகேட்டுக் கொள்கிறார். அதே நேரம் ஒரு கண்டிஷனும் போடுகிறார். மருமகன் பேரைச்சொல்லிக் கொண்டு எந்த உறவுக்காரர்களும் வீட்டுப் பக்கம்கூட எட்டிப் பார்க்கக்கூடாது என்பது தான்அந்த கண்டிஷன். இதற்குசெரியனும் ஒப்புக்கொண்டு வீட்டோடு மாப்பிள்ளையாகி விடுகிறான்.

ஆனால் செரியனின் அத்தையும் தன் சாமர்த்தியத்தால் அந்த வீட்டில் டேரா போட்டுவிடுகிறாள். அவள் தன்தம்பி மகனின் மனதில் ஒரு திட்டம் விதைக்கிறாள். அதன்படி செரியனின் மனைவி பெயரில் அவளுக்கான சொத்துக்களை அவள்அப்பாவிடம் கேட்டு வாங்குவது. அதன்பிறகு அந்த வீட்டில் இருந்து தனிக்குடித்தனத்துக்கு செரியனையும் அவன் மனைவியையும் அழைத்துச் சென்று விடுவது. இந்த திட்டத்தை செரியனின் அத்தை ஆரம்பிக்கும்போது ஏற்படும் திருப்பங்கள் ரசிகர்களை பரபரப்பாக வைத்திருக்கும் என்கிறார், தொடரின் இயக்குனர் விக்ரமாதித்தன்.

செரியனாக நடிப்பவர் நடிகர் சரவணன். அத்தை கேரக்டரில் வடிவுக்கரசி நடிக்கிறார். தயாரிப்பு: `மெட்டிஒலி' சித்திக்.



நன்றி: தினதந்தி

R.Latha
19th February 2009, 12:07 PM
காமெடி சேனல்கள்!
சன் நெட்ஒர்க் நகைச்சுவைக்கென்று ஆரம்பித்
துள்ள சேனல் "ஆதித்யா'. இருபத்தி நான்கு மணி
நேரமும் ஒளிபரப்பாகும் இதில் திரைப்படங்களில்
இடம் பெறுகிற நகைச்சுவை காட்சிகளை
தொகுத்து ஒளிபரப்புகின்றனர். அத்துடன் திரைப்
பட நட்சத்திரங்களும் பங்கேற்று பேசி வருகின்ற
னர்.
இதே போன்றதொரு நகைச்சுவை சேனலை
கலைஞர் தொலைக்காட்சியும் ஆரம்பித்துள்ளது.
இதற்கு "சிரிப்பொலி' என பெயர் வைத்துள்ளனர்.
இதன் தொடக்க விழா சென்ற 14-ஆம் தேதி நடை
பெற்றது. நகைச்சுவை பிரியர்களுக்கு கொண்டாட்
டம்தான்.

R.Latha
19th February 2009, 12:12 PM
கலக்கும் "கலசம்'
கஸ்டம்ஸ் ஆபிஸராக இருக்கும்
ரஞ்சனியை பலவித சூழ்ச்சி வலை
களை பின்னி சஸ்பென்ட் செய்து விடு
கிறாள் சந்திரமதி. எதிரியின் குகைக்
குள்ளேயே தந்திரக்கார நரியைப்
போல உலவுகிறாள் ரஞ்சனி. இதற்கி
டையில் சொத்து வாங்குவதில் சந்திர
மதிக்கும் அவளோட இன்னொரு எதி
ரிக்கும் பிரச்சினை ஏற்படுகிறது.
அதை தனக்கு சாதகமாக பயன்படுத்
திக் கொள்கிறாள் ரஞ்சனி.
சந்திரமதியின் எதிரி கடத்தல்காரர்.
அவன் கடத்தலில் ஈடுபடும்போது
ரஞ்சனி கஸ்டம்ஸில் இல்லாவிட்டா
லும் கஸ்டம்ஸ் துறைக்கு உதவிகள்
செய்து வருகிறாள். இப்படி தினம்,
தினம் பரபரப்பான காட்சிகளுடன்
ஒளிபரப்பாகி வருகிறது "கலசம்'
தொடர்.
இதில் ரஞ்சனியாக வரும் ரம்யா
கிருஷ்ணனின் பாசமும், தந்திரமும்
கலந்த நடிப்பு ரசிகர்களிடையே
பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியி
ருக்கிறது. அதே போல சந்திரமதியாக
வரும் சுதா சந்திரன் உடை, நடை,
பாவனையில் "ஜாக்பாட்' குஷ்பு
யே மிஞ்சி விடுகிறார்.
இந்தத் தொடரை ரசிக்கும்படி
விறுவிறுப்பாக இயக்கி வருபவர்
அப்துல்லா. கிரியேட்டிவ்
ஹெட்: ரம்யாகிருஷ்ணன்.


http://www.cinemaexpress.com/Pdf/1622009/63.pdf

aanaa
20th February 2009, 03:49 AM
:ty: Latha

aanaa
22nd February 2009, 04:16 AM
செந்தூரப்பூவே



சன் டி.வி.யில் திங்கள் முதல் வெள்ளிவரை தினமும் மதியம் 1.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் `செந்தூரப்பூவே' தொடர் நூறு எபிசோடுகளை கடந்திருக்கிறது. கதையின் நாயகி புனிதா தன் வாழ்வில் பலவிதமான போராட்டங்களை சந்தித்தபோதிலும் துணிச்சலுடன் அதை எதிர்கொண்டு தனது தங்கைகளை எப்படி கரை சேர்க்கிறாள் என்பதே கதையின் கரு.

"கிராமத்தை விட்டு நகரத்திற்கு வில்லன்களால் துரத்தப்படும் புனிதாவும் தங்கைகளும் வரும் வழியிலேயே தங்கள் தாயை இழக்கிறார்கள். பெரியவர் ரத்னவேல் அவளுக்கு உதவுகிறார். புனிதாவுக்கு தெரிந்த ஒரே நகரவாசி அவளது குடும்பத்தோழர் பாலு. இவர்களுக்கு இடையே நடக்கவிருந்த திருமணம் தடைபட்டதால் பாலு சங்கீதாவை மணந்து கொண்டான்.

இப்போது ரத்னவேலின் உதவியோடு நகரத்தில் வேரூன்றும் புனிதா, தன்னை முன்னாளில் காதலித்த பாலுவை கண்டுபிடித்தாளா? பாலு-ரஞ்சனி சந்திப்பை பாலுவின் மனைவி சங்கீதா அங்கீகரித்தாளா? கேள்விகளுக்கு பதில் தருகிறது தொடர்'' என்கிறார், தொடரின் தயாரிப்பாளர் ஆர்.ராதிகா சரத்குமார். தொடருக்கு கிரியேட்டிவ் ஹெட்டும் இவரே.

முத்துச்செல்வம் திரைக்கதைக்கு வசுபாரதி வசனம் எழுத, பரமேஷ்வரர் இயக்கி வருகிறார்.


நன்றி: தினதந்தி

R.Latha
2nd March 2009, 02:14 PM
[tscii:1149826b89]நடிக்கிறோம்னு தெரிஞ்சா போரடிச்சிடும்!



சென்னை, வளசரவாக்கத்திலிருக்கும் ஒயிட் ஹவுஸ். கண்களில் பொறி பறக்க ஆக்ரோஷமாக நடித்துக் கொண்டிருந்தார் ரம்யா கிருஷ்ணன். வெள்ளித் திரையில் நீலாம்பரியாக கோலோச்சிய ரம்யா கிருஷ்ணனின் நடிப்புத் திறனை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளும் அளவுக்கு சின்னத் திரையில் வாய்ப்பு இருக்கிறதா? ‘கலசம்' மெகாத் தொடரின் படப்பிடிப்பிலிருந்த ரம்யா கிருஷ்ணனிடமே கேட்டோம்.

‘கலசம்' அனுபவம் எப்படி இருக்கிறது?

மிகவும் சுவாரஸ்யாக இருக்கிறது. ஒவ்வொரு காட்சியும், ‘அடுத்து என்ன நடக்கும்?' என்று ஆவலைத் தூண்டும் விதத்தில் இருக்கின்றது. தினம் தினம் புதிய ரசிகர்கள் தங்களின் தொடரைப் பார்க்கும் விதத்தில் பார்த்து பார்த்து காட்சியை மெருகேற்றி வருகின்றனர். அதனால்தான் ‘கலசம்' தொடருக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கின்றது.

கஸ்டம்ஸ் டிபார்ட்மென்ட்டை கதையில் எடுத்திருக்கிறீர்கள்? அது மக்களை சென்றடையும்னு நினைத்தீர்களா?

எந்தக் கதையாக இருந்தாலும் அதில் சென்டிமென்ட் இருக்கவேண்டும். அதோடு காட்சிகள் இழுவையாக இல்லாமல், விறுவிறுப்பாக இருக்கவேண்டும். கதையில் வசுந்தரா, நீலாம்பரி என்று பல பாத்திரங்களுக்கு மக்களிடம் நல்ல வரவேற்பு இருக்கின்றது. தமிழில் இந்த மெகாத் தொடருக்கு கிடைத்திருக்கும் வரவேற்பைப் பார்த்து இதைத் தெலுங்கிலும் கொண்டு செல்லும் யோசனை இருக்கிறது.

திடீரென்று தயாரிப்புப் பணியிலும் இறங்கிவிட்டீர்களே?

நான் எதையும் திட்டமிட்டு செய்வதில்லை. அததற்கான வாய்ப்புகள் தானாக அமையும்போது, அதை மிகச் சரியாக நான் பயன்படுத்திக் கொள்வேன்.

என்னை மெகாத் தொடரில் நடிப்பதற்கு, ராடான் டிவி சார்பாக ராதிகா கேட்டார்கள். அப்போது நான், ‘‘மெகா தொடரில் நடிப்பதாக இருந்தால் அது என்னுடைய சொந்தத் தயாரிப்பாகத்தான் இருக்கும்'' என்று சொன்னேன். அப்போதுதான் இந்த ஃபீல்டில் என்ன நடக்குது. ஸ்பான்சர்கள் எப்படி.. என்பதைப் பற்றியெல்லாம் நான் யோசித்தேன். இதன்பிறகு, மீண்டும் ராதிகா ‘தங்கவேட்டை' கேம் ஷோ தயாரித்த போது என்னை கூப்பிட்டார்கள். அப்போது அதில் பங்கேற்று இந்தத் துறையில் கவனம் செலுத்த ஆரம்பித்தேன். தெலுங்கில் ஒரு டாக் ஷோவை நானே தயாரித்தேன். அது ஜெமினி டிவியில் வெளிவந்தது. அந்த அனுபவம் இந்த மெகாத் தொடரை தயாரிப்பதற்கு உதவியாக இருக்கிறது. உண்மையில் சொல்லப் போனால், என்னோட தங்கை வினயாவும், விஷன் டைம் ராமமூர்த்தியின் மனைவி வைதேகியும்தான் இந்த ‘கலசம்' தொடரை தயாரிக்கிறாங்க. தெலுங்கில் மட்டும்தான் நான் சொந்தமாகத் தயாரித்தேன்.

இப்போது சினிமாவில் நடிக்கிறீர்களா?

அதுக்கு நேரம் அமையல. சீரியலில் நடிப்பதற்கே நேரம் சரியாக இருக்கிறது. நல்ல படங்கள், எனக்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரங்களாக இருந்தால், சினிமாவில் நடிப்பதைப் பற்றி யோசிக்கலாம். இப்போதைக்கு இதில் நடித்துக் கொண்டிருக்கிறேன். என் மகனைக் கொஞ்சுவதற்குக் கூட நேரமில்லாமல் இருக்கிறேன்.

உங்களின் மகனுக்கு என்ன பெயர் வைத்திருக்கிறீர்கள்? உங்களை பிரிந்து எப்படி இருக்கிறான்?

ரித்விக் என்று பெயர் வைத்திருக்கிறோம். இப்போது அவருக்கு 4 வயது. நர்சரி போய்க்கொண்டிருக்கிறார்.

உங்கள் கணவர் கிருஷ்ணவம்சி தெலுங்கில் முன்னணி இயக்குநர். அவருக்கு உங்களின் ஆலோசனைகளைச் சொல்வீர்களா?

இந்த ஆலோசனை சொல்றதெல்லாம் எனக்கு ஒத்து வராது. நான் யாருக்கும் ஆலோசனைகள் சொல்ல மாட்டேன். புதுசா எப்படி சொல்றது? நான் அப்படியே சொன்னாலும், அதற்கு அவர் அப்போதைக்குத் தலையாட்டுவார். அதோடு சரி. அதை செயல்படுத்தறதும், செயல்படுத்தாம இருக்கறதும் அவருடைய விருப்பம்தான். அவர் நிறைய படிக்கிறார். நிறையச் சிந்திக்கிறார். அதனால நான் என்ன அவருக்குப் பெரியதாகச் சொல்லி விட முடியும்?

‘கலசம்' தொடரில் நடிப்பு தவிர உங்களின் பங்களிப்பு வேறு துறைகளில் ஏதாவது இருக்கின்றதா?

கதை, வசன விவாதங்களில் ஈடுபடுகிறேன். நடிக்கிற நேரம் தவிர்த்து மற்ற நேரங்களில் இந்தத் தொடரை நன்றாகக் கொண்டு வருவதற்கு நிறையச் சிந்திக்கிறோம். நான் இப்போதெல்லாம் சராசரி மக்களின் வாழ்க்கையை கூர்ந்து கவனிக்கிறேன். அன்றாட வாழ்க்கையில் அவர்களின் நடை, உடை, பாவனை, பேச்சு, கோபம்.. போன்ற உணர்ச்சிகளை அவர்கள் வெளிப்படுத்தும் முறைகளைக் கூர்ந்து கவனித்து வருகிறேன். அந்த உணர்ச்சிகள்தான் நான் நடிக்கும் சீரியலில் என்னுடைய கதாபாத்திரங்களில் பிரதிபலிக்கின்றன. சும்மா... நடிக்கிறோம்னு தெரிந்தால் எனக்கே போரடித்துவிடும்!

- அவருக்கே உரித்தான கன்னக் குழி சிரிப்பை உதிர்க்கிறார் ரம்யா.

http://www.dinamani.com/sunday/sundayitems.asp?ID=DS120090226225434&Title=Sunday+%2D+Cinema&lTitle=Ni%FAP+%A3%B2U%F4

[/tscii:1149826b89]

aanaa
14th March 2009, 07:07 PM
[tscii:03d58c0eba]
மீண்டும் நீலாம்பரி!

.


சன் டி.வி.யில் ஒளிபரப்பாகும் "கலசம்' மெகா தொடர் நேயர்களின் ஆதரவோடு 150 எபிúஸôடுகளைக் கடந்துள்ளது.

ரம்யாகிருஷ்ணன், "சாக்ஷி' சிவா, சஞ்ஜீவ், ரஞ்சனி, குயிலி, முரளிகுமார், யுவஸ்ரீ உள்ளிட்ட பலர் நடித்து வரும் இந்தத் தொடரை அப்துல்லா இயக்கியுள்ளார்.

சிறு வயதில் உயிர்த் தோழியால் வஞ்சிக்கப்பட்டவள் எப்படி தோழியை பழி வாங்குகிறாள் என்பதுதான் "கலசம்' தொடரின் கதை.

இத்தொடரில் ஏற்கெனவே ரஞ்சனி என்ற கேரக்டரில் நடித்து வந்த ரம்யாகிருஷ்ணன், தற்போது கதையில் செய்யப்பட்டுள்ள மாற்றத்தால் நீலாம்பரி என்ற மற்றுமொரு புதிய கேரக்டரிலும் வருகிறார். இதுவரை உணர்ச்சிப் போராட்டமாக சென்றுகொண்டிருந்த கதை, வரும் நாள்களில் இருந்து பழி தீர்க்கும் போராட்டமாக விறுவிறுப்பாகத் தொடர்கிறது. இத்தொடர் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 8.30 மணிக்கு சன் டி.வி.யில் ஒளிபரப்பாகிறது.

திரைக்கதை, வசனம் -ஜெகன்மோகன். ஒளிப்பதிவு -செல்லபாண்டியன். கிரியேட்டிவ் ஹெட் -ரம்யாகிருஷ்ணன்.


நன்றி -- தினமணி

[/tscii:03d58c0eba]

aanaa
14th March 2009, 07:31 PM
கோபி குடும்பம்



டைரக்டர் திருமுருகன் இயக்கிய மெட்டிஒலி தொடரின் மறுஒளிபரப்பு நூறு எபிசோடைத் தாண்டிவிட்டது. சன் டிவியில் பகல்நேரத் தொடராக இடம் பெறும் இதில், இயக்குனர் திருமுருகன் சம்பந்தப்பட்ட எபிசோடு முக்கியமானது.

திருமுருகன் இந்த தொடரில் கோபி என்ற கேரக்டரில் நடித்திருந்தார். கோபி கேரக்டர் தொடரில் எப்போது முதல் வரவிருக்கிறது என்று இவரை சந்திக்கும் ரசிகர்கள், நட்புவட்டங்கள் என ஆளுக்காள் கேட்டுக் கொண்டிருக்க, இயக்குனருக்கும் வந்துவிட்டது ஆர்வம். தொடரின் தயாரிப்பாளர் சித்திக்கை தொடர்புகொண்டவர், வரும் புதன்முதல் கோபி குடும்பம் தொடரில் இடம்பிடிக்கிற தகவலை உறுதிப்படுத்திக் கொண்டிருக்கிறார்.

"நேரம் கிடைக்கும்போது ஒரு ரசிகனாக நானும் மெட்டி ஒலி தொடரைப் பார்த்துக் கொண்டுதான்இருக்கிறேன். என்றாலும் ரசிகர்கள் வெளிப்படுத்திய ஆர்வத்தில், இப்போது நான் நடித்த காட்சிகளை பார்க்க எப்போதுவரும் புதன்கிழமை என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்'' என்கிறார், திருமுருகன்.


நன்றி -- தினதந்தி

R.Latha
23rd March 2009, 12:47 PM
மிஸ் சவுத் இண்டியா 2009

சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் மிஸ் சவுத் இண்டியா 2009 அழகிப் போட்டி சமீபத்தில் நடந்து முடிந்தது.

முதல் இடம் பெற்று கிரீடம் சூடிக்கொண்டவர் பெங்களூரைச் சேர்ந்த தீபிகா. ஜாஸ்மின், சவுமியாவுக்கு அடுத்தடுத்த இடம். நடிகை ரம்யா கிருஷ்ணன் மூவருக்கும் கிரீடம் சூட்டி வாழ்த்தினார்.

கோயமுத்தூர், ஹைதராபாத், கோழிக்கோடு, பெங்களூர் ஆகிய நகரங்களில் 16 வயது முதல் 25 வயதுக்குள் உள்ள மாடல் பெண்களில் 16 பேரை தேர்வு செய்து, அவர்களில் `மிஸ் சவுத் இண்டியா 2009' அழகியை தேர்வு செய்தனர். மிஸ் தமிழ்நாடாக அனுஷாவும், மிஸ் ஆந்திராவாக ஸ்வேதாவும், மிஸ் கேரளாவாக அகான்ஷாவும், மிஸ் கர்நாடகாவாக ஜாஸ்மினும் தேர்வு செய்யப்பட்டனர்.

இந்த அழகிப் போட்டி விரைவில் சன் டிவியில் ஒளிபரப்பாகவிருக்கிறது.

aanaa
28th March 2009, 05:03 AM
நாகவல்லி



சன் டி.வி.யில் ஒளிபரப்பாகி வரும் திகில் தொடர் `நாகவல்லி.'

ஐந்து வருடங்களுக்குப் பின் ராஜநாகம் பழிவாங்குமா? என்ற கவலையில் இந்திரா பயந்து கொண்டிருக்க, ஆறுதல் சொல்லி தைரியப்படுத்துகிறான் நடராஜன். கார்கோடன் தன் வாரிசுமேல் வைத்திருக்கும் பாசத்தை கேலி செய்து, பின் நாம் இருவரும் ஒன்றாக சேர்ந்தால் நாகவல்லியை விரைவில் அழித்து விடலாம் என்று நடராஜன் கூற, கார்கோடன் சம்மதிக்கிறான். இருவரும் சேர்ந்து மிக கொடூரமான தீ நாக்கு மிருகத்தை உருவாக்கி அனுப்புகின்றனர்.

இதற்கிடையில் தன் கதையை ஊமை மொழியில், பாகிரதியிடமும் கணபதியிடமும் ராஜா கூற, பாகிரதியும், கணபதியும் ராஜாவின் துயரம் தீர திருநாகேஸ்வர கோவில் பரிகார பூஜைகளை செய்கிறார்கள். பூஜையைத் தொடர்ந்து அந்த தீ நாக்கு மிருகம் நாகவல்லி கோவிலுக்கு சென்று ஐஸ்வர்யாவையும் பாலநாகம்மாவையும் அழிக்க முயல... இருவரும் என்ன ஆனார்கள் என்பது தொடரும் அடுத்தகட்ட பரபரப்பு காட்சிகள் என்கிறார், டைரக்டர் பி.எஸ்.தரன். தொடருக்கான திரைக்கதை, வசனம், ஒளிப்பதிவும் இவரே.


நன்றி: தினதந்தி

R.Latha
6th April 2009, 01:52 PM
நல்லவர்கள் ஜெயிப்பார்கள்

"ஒரு தாய்க்கும், மகளுக்கும் இடையே நடந்து கொண்டிருக்கும் உணர்வுபூர்வமான போராட்டத்தை படம்பிடித்துக் காட்டி வரும் "அரசி'' தொடர், சன் டிவியில் 550 எபிசோடுகளைக் கடந்திருக்கிறது..

எப்போதும் கெட்டவர்கள் ஜெயித்துக்கொண்டே இருக்கிறார்கள் என்று நினைக்கும் நேயர்களுக்கு நல்ல தம்பியின் கைது ஒரு பெரிய திருப்புமுனையாக அமைந்திருக்கிறது. நல்லதம்பி கைதான பிறகுவிளைவுகள் எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு ஒருபுறமிருக்க, மறுபக்கம் சரோஜினி எந்த கெட்டவரிடமும் சிக்கிக் கொள்ளாமல், செல்வியின் பாதுகாப்பு வளையத்திற்குள் வந்ததன் மூலம் நல்லவர்கள் தான் வாழ்வில் ஜெயிக்கிறார்கள் என்பது மீண்டும் நிரூபணம் ஆகியிருக்கிறது.

இந்த பரபரப்பான சம்பவங்களுக்கு நடுவே அரசி மூலம் அரசாங்கத்திடம் சரணடைந்த தீவிரவாதிகளுக்கு பொதுமன்னிப்பு கிடைத்ததா... அல்லது புதிய சிக்கல் அதில் முளைத்ததா போன்றவற்றிற்கும் விரைவில் `அரசி' தொடரில் விடை கிடைக்கும்'' என்கிறார், தொடரின் கிரியேட்டிவ் ஹெட் ராதிகா சரத்குமார்.

அவர் மேலும் கூறும்போது, `அரசி' புதிய பாணியில் அமைக்கப்பட்டிருக்கும் ஒரு குடும்பத் தொடர். பொது வாழ்க்கை, தனிப்பட்ட குடும்ப வாழ்க்கை என இரண்டு தரப்பிலும் `அரசி' கதாபாத்திரம் கோலோச்சுவதைக் காண முடியும். `அரசி'க்கு நெருக்கடி தரக்கூடிய விதத்தில் சில புதிய கேரக்டர்களும் தொடரில் இனி இடம் பெறப்போகிறார்கள். இவர்கள் இன்றைய உலகப் பொருளாதார சரிவில் சிக்கிக் கொண்ட நிஜ கதாபாத்திரங்களின் குணாதிசயத்துடன் அட்டகாசமாகப் பொருந்தி வருவர். இப்படி, சுவாரஸ்யமான புது கேரக்டர்களின் வரவால் `அரசி' இன்னும் மெருகேறி, கூடுதல் பொலிவுடன் வலம் வருவாள்!'' என்கிறார்.

திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 9.30 மணிக்கு `அரசி'யை காணலாம்.

கதை: ஆர்.ராதிகா சரத்குமார். திரைக்கதை: ராஜ்பிரபு. வசனம்: லியாகத் அலிகான். இயக்கம்: பாலாஜி யாதவ்.

aanaa
13th April 2009, 10:56 PM
செந்தூரப்பூவே...



திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் மதியம் 1.30 மணிக்கு சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ``செந்தூரப்பூவே'' தொடர் 150 எபிசோடுகளைக் கடந்து தொடர்ந்து கொண்டிருக்கிறது.

"பாசப்போராட்டத்திற்கு புதிய பரிமாணம் தரும் தொடர் இது. கதையின் நாயகியான புனிதா முதலாளி துரைராஜின் தொழில் ரீதியான தில்லுமுல்லுகளை அவரது பார்ட்னர் சூர்யாவிடம் தெரிவிக்கிறாள். இதனால் துரைராஜின் மாமியாரும் சூர்யாவின் அம்மாவுமான பொன்னம்மாளின் கோபத்திற்கு ஆளாகிறாள். இதையே காரணமாக வைத்து இனி வீட்டு சொந்தக்காரி பொன்னம்மாள் புனிதாவிற்கு என்னென்ன பிரச்சினைகளை ஏற்படுத்தப்போகிறாளோ என்பது ஒருபுறமிருக்க, சபலபுத்தியில் இருக்கும் துரைராஜிடம் இருந்து புனிதா எப்படி மீளப் போகிறாள் என்பது மறுபுறம்.

புதிதாக அறிமுகமாகியிருக்கும் தொழிலதிபர் கருணாகரன் குடும்பத்தைச் சுற்றியுள்ள பின்னணி என்ன? ஏற்கனவே மன உளைச்சலில் இருக்கும் வளர்மதிக்கு இன்னொரு சோதனை. கருணாகரனின் மகன் விவேக்கிற்கு பெண்பார்க்கும் படலம் அவளால் தடைபட்டுப் போகிறது. அதற்கு பரிகாரம் செய்ய வளர்மதி நினைக்கிறாள். அது அவளுக்கு வெற்றியாய் அமைகிறதா? அல்லது அதுவே அவளுக்கு பெரும் பாதகமாய் அமையப்போகிறதா?இதற்கிடையில் ஈஸ்வரியின் அரசியல் பிரவேச வெற்றிக்கு பிறகு தாதா தீனதயாளன் அவளை எதிர்கொள்ள முடியாமல் தன்னிடம் வேலைக்காரனாக இருந்த அவளது தம்பிக்கு தன் மகளை மணமுடித்து வைக்கப்போகிறானா? அல்லது ஈஸ்வரியின் சதித்திட்டங்களை முறியடிக்கப்போகிறானா?

யதார்த்தமான கதையமைப்பு, இயல்பான கதாபாத்திரங்கள், விறுவிறுப்பான காட்சிப்படுத்தல் இவையே தொடரின் சுவாரஸ்யத்திற்கு காரணம்'' என்கிறார் ராடன் நிறுவனத்தின் தயாரிப்பாளரும் ஹெட் ஆப் கிரியேட்டிவ்சுமான ராதிகா சரத்குமார்.

திரைக்கதை: முத்துச்செல்வம். வசனம்: வசுபாரதி. இயக்கம்: சக்தி பரமேஸ்வர்.



நன்றி: தினதந்தி

R.Latha
4th May 2009, 03:43 PM
மேகலாவுக்கு திருமணம் நடக்குமா?



சன் டிவியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் மாலை 6 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் "மேகலா'' தொடர் 500-வது எபிசோடை நெருங்கிக் கொண்டிருக்கிறது.

தொடரின் நாயகி மேகலாவின் திருமணம் பற்றிய காட்சிகள் சுழலத் தொடங்கியிருக்கின்றன. இதுபற்றி தொடரின் இயக்குனர் விக்ரமாதித்தன் கூறியதாவது:-

"மேகலாவை திருமணம் செய்து கொள்ளும் முடிவுடன் திட்டமிட்டு காய்களை நகர்த்துகிறான் அன்பு. அதற்காக அவன் தேர்ந்தெடுத்த நாடகம், மேகலாவின் காதலன் விஸ்வத்தின் விடுதலை. ஜெயிலில் இருக்கும் விஸ்வத்தை எப்படியாவது வெளியே கொண்டு வந்து அதன் மூலம் மேகலாவின் நல்லெண்ணத்தைப் பெறுவது அவன் நோக்கம். ஒருவேளை மேகலா - விஸ்வம் திருமணம் மணமேடை வரை வந்துவிட்டாலும், அங்கும் ஏதாவது குழப்பம் ஏற்படுத்தி திருமணத்தை நிறுத்தி மேகலாவுக்கு திடீர் மாப்பிள்ளை ஆகிவிட வேண்டும் என்பது அவன் திட்டம்.

அதோடு நில்லாமல் விஸ்வம் வெளிவந்த பிறகு அந்த ஒற்றுமைக் குடும்பத்துக்குள் பிளவு ஏற்படுத்தும் விதத்திலும் அவன் செயல்பாடுகள் தொடர்கின்றன.

ஒரு கட்டத்தில் அன்புவின் இந்த நாடகம் ஜெயிலில் இருந்து வந்த விஸ்வத்துக்கு தெரிய வருகிறது. இப்போது அவன் நடவடிக்கை என்னவாக இருக்கப் போகிறது?

பூபதி தனது தந்தையின் சின்ன வீட்டுப் பெண்ணை கொன்றதாக ஒரு பிரச்சினை பூகம்பம் கிளம்புகிறது. தங்கையை அவன் கோபத்தில் அடித்தபோது வாசலில் அடிபட்டு பேச்சு மூச்சற்றுப் போகிறாள். அதன் பிறகு அவள் இறந்ததாக பூபதி எண்ணி கலங்கிக் கொண்டிருக்க, அவள் இறக்கவில்லை. வேறொரு நோக்கத்தில் தலைமறைவாக இருக்கிறாள் என்பது பூபதியின் மனைவி கண்மணிக்கு தெரிகிறது. அவளை கண்டுபிடிக்கும் கண்மணி எடுக்கும் முடிவு என்ன?

வடிவின் தம்பி ஜெயிலில் இருந்து தப்பி விடுகிறான். அவன் வந்ததும் அவனை வைத்து பல விஷயங்களை முடிவெடுக்கத் துடிக்கும் வடிவு, அடுத்தகட்டமாக என்ன செய்யப்போகிறாள்?

இப்படி முடிச்சுகளுடன் தொடர்ந்து கொண்டிருக்கும் தொடரில் திடுக்கிடும் திருப்பங்கள் தொடர இருக்கின்றன.''

மேகலாவாக காயத்ரி, வடிவாக வடிவுக்கரசி நடிக்கிறார்கள். மற்றும் ராஜலட்சுமி, ராஜ்காந்த், ஸ்ரீவித்யா, ஸ்ரீ, பாவனா, வின்சென்ட்ராய், கவுதமி, எஸ்.ஐ.பாபு, ஸ்ரீலேகா ஆகியோரும் நடிக்கிறார்கள்.

தயாரிப்பு: `மெட்டிஒலி' சித்திக். இயக்கம்: விக்ரமாதித்த

aanaa
17th May 2009, 06:03 PM
ஆவியை துரத்தப்போய்...



சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மேகலா தொடரில் சமீபத்தில் போலி சாமியார்பற்றிய காட்சி ஒளிபரப்பானது. அதில் செத்துப்போன விஜியின் ஆவி இருப்பதாக பயந்த வீட்டுக்காரர்கள் ஆவியை துரத்த மந்திரவாதி ஒருவரை அழைத்து வருகிறார்கள்.

வந்தவர் போலி ஆசாமி என்பது தெரியாமல் "ஆவியை என்ன பரிகாரம் செய்தால் விரட்டலாம்?''என்று கேட்கிறார்கள். அவரோ தனது வீட்டுக்குத் தேவையான அந்த மாத மளிகை ஜாமான்களை வாங்கிக்கொண்டு எஸ்கேப் ஆகிவிடுகிறார். ரசிகர்களிடம் பெருவாரியான வரவேற்பைப்பெற்ற இந்த காட்சி நல்லதொரு விழிப்புணர்வு பிரசாரமாகவும் அமைந்தது.

இதுபற்றி தொடரின் இயக்குனர் விக்ரமாதித்தனிடம் கேட்டால், "மக்கள் தங்களுக்கு ஒரு பிரச்சினை வரும்போது யார் என்ன சொன்னாலும் அப்படியே நம்பி விடுகிறார்கள். ஆவிகள் விஷயத்தில் இன்னும் நம்பி ஏமாந்து போகிறார்கள். இல்லாத ஆவியை இருப்பதாக நம்பும் மக்கள்இருப்பதுதான் தொடர்ந்து ஏமாற்றுபவர்களுக்கு கொண்டாட்டமாகி விடுகிறது. தொடரை பார்த்த பிறகாவது இதுமாதிரியானவர்கள் திருந்தினால் சரி'' என்கிறார்.



நன்றி: தினதந்தி

aanaa
22nd June 2009, 03:04 AM
[tscii:d00d3150ea]
200TH EPISODE OF SENTHURAPOOVAE



It is the story of love between four sisters. Punitha comes to city and she gets Rathnavel’s support and she stays in Ponnatha’s house. Punitha always expects good things to happen in her life but Ponnatha’s son-in-law Durai Raj madly falls in love with Punitha.
Surya who comes from Singapore comes to know through Punitha about Durairaj swindling money from the business runs by Surya. In the meanwhile Surya decides to marry Punitha. On coming to know the decision of Suseela decides to commit suicide because she loves him.
On knowing this, Punitha takes a vow to stay in a temple till the problems are settled down.The story goes around whether Punitha and Surya unites together.

The Story and direction are done by Sakthi Manohar. The serial is being telecast on all Mondays to Fridays at 1.30 PM through Sun TV Channel.

http://1.bp.blogspot.com/_zxFZ5P8Mv-E/Sjm2gk1n3iI/AAAAAAAADAQ/iCt-smuwjh0/s1600-h/senthoorapoove.jpg

[/tscii:d00d3150ea]

aanaa
5th July 2009, 06:04 PM
நாகவல்லி



ஞாயிறு தோறும் இரவு 9.30 மணிக்கு சன் டி.வி.யில் ஒளிபரப்பாகி வரும் பக்தி தொடர், `நாகவல்லி'.

நடராஜனுக்கு உதவி செய்ய பத்மாசூரனால் அனுப்பப்பட்ட அசுரனை அழிக்க நாகவல்லி இரு நாக கன்னிகளுக்கு உத்திரவிடுகிறாள்.

அசுரன் உண்ட களைப்பில் படுத்திருக்கிறான். விழித்தெழுந்தவனுக்கு மீண்டும் பசி ஏற்பட உண்பதற்கு ஏதாவது கிடைக்குமா என்று பார்க்க, நாக கன்னிகள் முயல்களாய் மாறி அவன் முன் வர, அவற்றை பிடித்து உண்கிறான். அவன் வயிற்றில் சென்ற நாக கன்னிகள் மீண்டும் தங்கள் சுய உருவை அடைந்து அவன் வயிற்றை கிழித்துக் கொண்டு வெளியில் வர, அசுரன் இறந்து போகிறான். நாக கன்னிகள் வெற்றியுடன் திரும்புகின்றனர்.

ஹேமாவை அழைத்துக் கொண்டு ஆதிசேஷன் நாகவல்லியின் கோவிலிருந்து புறப்படுகின்றான். அப்பொழுது ஹேமா மயங்கி விழ, நாகவல்லி கிழவியின் உருவில் வந்து அவளை பரிசோதித்து, ஹேமா தாய்மையடைந்திருப்பதாக கூறிச் செல்கிறாள்.

வீட்டில் நாகவல்லியின் சிலையில் பாம்பு வந்ததைக் கேள்விப்பட்ட அக்கம் பக்கத்தினர், இந்திராவின் வீட்டில் இருக்கும் நாகவல்லியின் சிலையை தரிசிக்க கூட்டம் கூடுகின்றனர். இதைக் கண்டு வேலு ஆத்திரம் கொண்டு அவர்களைத் துரத்துகின்றான்.

தொடருக்கு கதை,வசனம் எழுதி இயக்குபவர் பி.எஸ்.தரன். தயாரிப்பு: யு.டி.வி.

R.Latha
21st October 2009, 03:06 PM
[tscii:e559e8090f]புனிதாவின் புதிய போராட்டம்



ராடன் டிவியின் தயாரிப்பில் ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்ட தொடராக சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது "செந்தூரப்பூவே.'' கடந்த வெள்ளிக்கிழமையுடன் இது 304-வது எபிசோடை கடந்து இருக்கிறது!

"வரப்போகும் நாட்களில் இத்தொடரில் பரபரப்பான திருப்பங்கள் இடம் பெற இருக்கிறது'' என்கிறார் தொடரின் கிரியேட்டிவ் ஹெட்டான ராதிகா சரத்குமார்.

பெரும் போராட்டத்துக்கு இடையில் தனது தங்கை வளர்மதிக்கு திருமணம் செய்து வைக்கிறாள் புனிதா. வளர்மதி வாழ்விலும் பிரச்சினை எழுகிறது. அவள் கிராமத்தில் இளைஞன் ஒருவனிடம் நெருங்கிப் பழகி தனது வாழ்க்கையை தொலைத்து விட்டதை, வளர்மதியின் கணவனிடம் சொல்லிவிடப் போவதாக புனிதாவை மிரட்டுகிறான் உமாபதி என்ற கேடி.

சூர்யாவிடம் இருந்து புனிதாவைப் பிரித்துவிட துடிக்கும் சுசிலா, அவளது தந்தை துரையுடன் சேர்ந்து உறவாடிக் கெடுக்கத் திட்டமிடுகிறாள். திருந்தி விட்டது போல நடிக்கிறாள். புனிதாவை மாமியார் வீட்டுக்கு குடித்தனம் வர அழைக்கிறாள். சூர்யாவும் தாய் வீடு செல்ல விரும்புகிறான். சூர்யாவுக்காக மாமியார் வீடு செல்ல வேண்டிய நிலை ஏற்பட, மீண்டும் தனது தங்கைகளுக்கு ஆதரவு இல்லாமல் போய்விடுமோ? எனத் தவிக்கிறாள் புனிதா.

தன்னைப் பழி வாங்கத் துடித்த மாமியார் வீட்டிலேயே காலடி எடுத்து வைக்க வேண்டிய சூழ்நிலையில் புனிதா சந்திக்கப்போகும் புதிய போராட்டங்கள் என்ன?

புனிதாவை குறி வைக்கும் சுசிலா தனது நயவஞ்சக நாடகத்தில் புனிதாவை எப்படியெல்லாம் சிக்க வைத்தாள்?

இவர்களது சதித்திட்டத்தால் சூர்யா புனிதா வாழ்க்கை என்னவாயிற்று?

இத்தனை கேள்விகளுக்கும் வரும் நாட்களில் விடை கிடைக்கும்.

இத்தொடரில் விசு, நரசிம்மராஜ×, மனோகர், ஷ்ரவன், வின்சென்ட்ராய், ரஞ்சனி, கிருஷ்ணன், யுவராணி, ரவீந்திரா, ஜானகி ஆகியோர் நடிக்கின்றனர்.

திரைக்கதை: முத்துச்செல்வன், வசனம்: வசுபாரதி, ஒளிப்பதிவு: அனில்ஹாஸ். இயக்கம்: பரமேஷ்வர்.

தயாரிப்பு: ராடன் மீடியா ஒர்க்ஸ் இந்தியா லிமிடெட்.

புனிதாவின் புதிய போராட்டம்



ராடன் டிவியின் தயாரிப்பில் ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்ட தொடராக சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது "செந்தூரப்பூவே.'' கடந்த வெள்ளிக்கிழமையுடன் இது 304-வது எபிசோடை கடந்து இருக்கிறது!

"வரப்போகும் நாட்களில் இத்தொடரில் பரபரப்பான திருப்பங்கள் இடம் பெற இருக்கிறது'' என்கிறார் தொடரின் கிரியேட்டிவ் ஹெட்டான ராதிகா சரத்குமார்.

பெரும் போராட்டத்துக்கு இடையில் தனது தங்கை வளர்மதிக்கு திருமணம் செய்து வைக்கிறாள் புனிதா. வளர்மதி வாழ்விலும் பிரச்சினை எழுகிறது. அவள் கிராமத்தில் இளைஞன் ஒருவனிடம் நெருங்கிப் பழகி தனது வாழ்க்கையை தொலைத்து விட்டதை, வளர்மதியின் கணவனிடம் சொல்லிவிடப் போவதாக புனிதாவை மிரட்டுகிறான் உமாபதி என்ற கேடி.

சூர்யாவிடம் இருந்து புனிதாவைப் பிரித்துவிட துடிக்கும் சுசிலா, அவளது தந்தை துரையுடன் சேர்ந்து உறவாடிக் கெடுக்கத் திட்டமிடுகிறாள். திருந்தி விட்டது போல நடிக்கிறாள். புனிதாவை மாமியார் வீட்டுக்கு குடித்தனம் வர அழைக்கிறாள். சூர்யாவும் தாய் வீடு செல்ல விரும்புகிறான். சூர்யாவுக்காக மாமியார் வீடு செல்ல வேண்டிய நிலை ஏற்பட, மீண்டும் தனது தங்கைகளுக்கு ஆதரவு இல்லாமல் போய்விடுமோ? எனத் தவிக்கிறாள் புனிதா.

தன்னைப் பழி வாங்கத் துடித்த மாமியார் வீட்டிலேயே காலடி எடுத்து வைக்க வேண்டிய சூழ்நிலையில் புனிதா சந்திக்கப்போகும் புதிய போராட்டங்கள் என்ன?

புனிதாவை குறி வைக்கும் சுசிலா தனது நயவஞ்சக நாடகத்தில் புனிதாவை எப்படியெல்லாம் சிக்க வைத்தாள்?

இவர்களது சதித்திட்டத்தால் சூர்யா புனிதா வாழ்க்கை என்னவாயிற்று?

இத்தனை கேள்விகளுக்கும் வரும் நாட்களில் விடை கிடைக்கும்.

இத்தொடரில் விசு, நரசிம்மராஜ×, மனோகர், ஷ்ரவன், வின்சென்ட்ராய், ரஞ்சனி, கிருஷ்ணன், யுவராணி, ரவீந்திரா, ஜானகி ஆகியோர் நடிக்கின்றனர்.

திரைக்கதை: முத்துச்செல்வன், வசனம்: வசுபாரதி, ஒளிப்பதிவு: அனில்ஹாஸ். இயக்கம்: பரமேஷ்வர்.

தயாரிப்பு: ராடன் மீடியா ஒர்க்ஸ் இந்தியா லிமிடெட்.



கஹசூஞ் க்க்ஷகூஞ்க்க்ஷ ஸட் த.கஹஞ்குஹ ச்ஙூ ஙச்ஙூ சச்ஞீ 02, 2009 3:15 சிஙு; க்க்ஷகூஞ்க்க்ஷ 1 ஞ்கூஙுக் கூஙூ ஞ்ச்ஞ்ஹஙீ[/tscii:e559e8090f]

R.Latha
2nd November 2009, 12:43 PM
``உறவுகள்-100''



சன் டிவியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் மதியம் 12 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் `உறவுகள்' தொடர் நூறு எபிசோடுகளை தாண்டியிருக்கிறது. கூட்டுக்குடும்பத்தின் அவசியத்தை உணர்த்தும் வகையில் அமைந்திருக்கும் இந்தக்கதையின் போக்கு, ரசிகர்களிடையே ஏகோபித்த வரவேற்பை தொடருக்கு பெற்றுத் தந்திருக்கிறது.

இத்தொடருக்காக புதிய பாடல் ஒன்று சமீபத்தில் பதிவு செய்யப்பட்டு உள்ளது. இது பற்றி தொடரின் இயக்குனர் ஹரிபாபுவிடம் கேட்டபோது... "உண்மைதான்... உறவுகள் தொடரின் மிக முக்கியமான கதாபாத்திரம் அண்ணாமலை. எந்த சக்தியாலும் தன் கூட்டுக் குடும்பம் உடைக்கப்பட்டு விடக்கூடாது என்பதில் மிக உறுதியாய் இருப்பவர். இதுவரை வந்த பல சோதனைகளையும் தாண்டி அமைதியாய் தன் கூட்டுக்குடும்பத்தை வழி நடத்தி சென்று கொண்டு இருக்கிறார். அப்படிப்பட்டவருக்கு தன் குடும்பத்தை விட்டு வெளியேறும் கட்டாயம் ஒன்று உருவாகிறது. அதை இன்முகத்தோடு ஏற்றுக்கொண்டு அவர் வீட்டை விட்டு வெளியேறும் காட்சியில் வசனங்களை மீறி அவர் உணர்வை வெளிப்படுத்த எங்களுக்கு இந்த பாடல் தேவையாய் இருந்தது. இதுவரை திரைப்படங்களில் மட்டும் சோகப் பாடலை பார்த்து நெஞ்சம் நெக்குருகிய ரசிகர்களை இந்த பாடலும் அதன் இசையும் மிகவும் நிச்சயம் உருக்கும். விஜய் ஜேசுதாஸின் குரலில், ரமேஷின் இசையில் பதிவு செய்யப்பட்ட இந்தப்பாடல் ஏற்கனவே நித்யஸ்ரீ பாடி டைட்டில் பாடலாகஅமைந்த பாடலின் இன்னொரு பதிப்பு என்றும் சொல்லலாம். அது கலகலப்பு என்றால் இது சோக மெலடி'' என்கிறார் இயக்குனர்.

உறவுகள் தொடரில் பீலிசிவம், அமரசிகாமணி, ஸ்ரீகுமார், ராஜ்காந்த், ராமச்சந்திரன், வின்சென்ட்ராய், அர்ச்சனா கிருஷ்ணப்பா, துர்க்கா, ராஜேஸ்வரி, ரேவதிசங்கர், நித்யா, சிவகவிதா, சுதா, ஆர்த்தி, கல்பனா, ஜெ.லலிதா, ஜெயந்த் மற்றும் பலர் நடித்து உள்ளனர்.

திரைக்கதை - குமரேசன். வசனம்-பாலசூர்யா. ஒளிப்பதிவு: தண்டபாணி. இயக்கம்: ஹரிபாபு.

தயாரிப்பு: சேன் மீடியா.

R.Latha
2nd November 2009, 12:46 PM
[tscii:2023523a31]டைட்டில் பாடலுக்குத்தான் அதிக உழைப்பு!



சின்னத்திரையில் `ஆளவந்தார் கொலைவழக்கு,' `வசந்தம் காலனி, புனிதபூமி, தர்மயுத்தம், துப்பறியும் சோழன், நிறங்கள், வண்ணவண்ணபூக்கள், காவ்யா, குல விளக்கு, ஜென்மம் எக்ஸ், ஷியாமளா, குடும்பம் ஒரு கோயில் என்று 75-க்கும் மேற்பட்ட மெகா சீரியல்களுக்கு இசை யமைத்தவர் `கலைமாமணி' அரவிந்த் சித்தார்த்தா. பெரிய
திரையிலும் காவியத்தலைவன், முற்றுகை, வள்ளிவரப்போறா, ராஜாளி, எங்கிருந்தாலும் வாழ்க, பயம் போன்ற எண்ணற்ற திரைப்படங்களுக்கு இசையமைத்தவர். இப்போதும் 5 படங் களில் இசையமைப்பைத் தொடர்ந்து கொண்டிருப்பவர்.

"பெரியதிரை, சின்னத்திரை இசையமைப்பில் என்ன வித்தியாசம்?''

இசையமைப்பாளர் அரவிந்த் சித்தார்த்தாவைக் கேட்டால்...

"திரைப்படங்களுக்கு இசையமைக்கும் போது இயக்குநர், கதாசிரியர், பாடலாசிரியர் ஆகியோருடன் படத்தின் கதையையும், காட்சிகளின் அமைப்புகளையும் நன்கு கலந்தாலோசிப்பேன்.

மெகா சீரியல்களுக்கு இசையமைக்கும் வாய்ப்புகள் கிடைக்கும் போது முதலில் `டைட்டில் பாடல்' கம்போசிங்கின் போது மண்டையை உடைத்துக் கொள்ளாத குறையாக பலநாட்கள் செயல்படுவேன்.

ஏகப்பட்ட டிïன்களை கம்போஸ் செய்து தயாரிப்பாளர்கள், இயக்குநர், பாடலாசிரியர் என்று எல்லோருக்கும் பிடிக்கும் வண்ணம் முடிவாக ஒரு டிïனில் பாட்டை கம்போஸ் செய்து கொடுப்பேன்.

மெகாசீரியலுக்கு டைட்டில் பாடல் மிக முக்கியமாச்சே. அதன் பிறகு தினமும் சுடச்சுட ஷூட்டிங் முடிந்த கையோடு எடுக்கப்பட்ட காட்சிகளுக்கு ரீ-ரிக்கார்டிங் செய்வேன். இந்த அனுபவம் கொஞ்சம் திரில்லிங்காகவே இருக்கும்.''

அரசியல் கட்சிகளின் கொள்கைப் பாடல்களுக்கும் இசையமைத்திருக்கிறீர்களே?''

"தேர்தல் சமயத்தில் முதல்வர் கலைஞர் எழுதிய `தீட்டிய வாளை ஒத்த மீசை கொண்ட திராவிட காளையே புறப்படுக' என்ற பாடலை எடுத்துக் கொண்டு இயக்குனர் அமிர்தம் என்னை சந்தித்தார்.

தேர்தல் கால அவசரத்தை புரிந்து கொண்டு உடனடியாக புஷ்பவனம் குப்புசாமியை வரவழைத்தேன். காலையில் ஆரம்பித்து இரவு 9 மணிக்கு பாடலை கம்போஸ் செய்து முடித்தேன்.

அப்போது கலைஞரிடமிருந்து போன் வந்தது. பாட்டை கேட்க வேண்டும் என்று கூறிவிட்டார். அமிர்தம் சாரும், நானும் இரவு ஒரு மணிக்கு கலைஞரிடம் கேசட்டை எடுத்துச் சென்று போட்டுக் காட்டினோம். உற்சாகமாய்க் கேட்டு ரசித்து பாராட்டினார்.

இரவு ஒரு மணிக்கு தான் எழுதிய பாட்டிற்கு இசையமைப்பும், பாடகரின் வார்த்தை உச்சரிப்புகளும் சரியாக இனிமையாக இருக்கிறதா என்று கேட்டுவிட்டு தூங்கச் சென்ற கலைஞர் அவர்களின் ஆர்வத்தையும், என் இசையமைப்பை அவர் பாராட்டியதையும் என் வாழ்நாளில் மறக்கவே முடியாது.''

பத்தாவது ஆண்டில் `கல்யாண மாலை'



ஞாயிறுதோறும் சன் டி.வியில் காலை 8 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் `கல்யாணமாலை' நிகழ்ச்சியின் 10-வது வருட துவக்கம், கல்யாண மாலை மூலம் நடந்தேறிய 1 லட்சம் சாதனைத்திருமணங்கள் இந்த இரண்டுக்குமான கொண்டாட்டம் சென்னையில் நடந்தது.

சென்னை காமராஜர் அரங்கில் நடந்த இந்த விழாவுக்கு மத்திய ஒலிபரப்புத்துறை இணை அமைச்சர் ஜெகத்ரட்சகன் தலைமையேற்றார். ஆர்.எம்.கே.வி. நிர்வாக இயக்குநர் சிவகுமார் குத்து விளக்கேற்றி விழாவினைத் துவக்கி வைத்தார்.

எம்.சரவணன், பேராசிரியர் சாலமன் பாப்பையா, ராஜா, சென்னை துணைமேயர் சத்யபாமா வாழ்த்திப் பேசினார்கள். பிரமிட் நடராஜன் வரவேற்று பேசினார்.

நிகழ்ச்சியின் இயக்குநர் மீரா நாகராஜன் `கல்யாணமாலை 10 வருடங்கள்' என்ற தலைப்பில் பேசினார். `கல்யாணமாலை' மோகன் நன்றி கூறினார். கல்யாணமாலை மூலம் நிச்சயமான ஒரு லட்சமாவது திருமணஜோடி புனிதா-உதயகுமார். இதற்காக புனிதாவின் பெற்றோருக்கு நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன.

தொடர்ந்து கங்கை அமரன் தலைமையில் மாணிக்க விநாயகம், மாலதி உள்ளிட்ட பிரபல பின்னணி பாடகர்கள் கலந்துகொண்ட பட்டிமன்றம் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சி நாளை முதல் தொடர்ந்து 7 வாரங்கள் ஞாயிறுதோறும் சன் டிவியில்
ஒளிபரப்பாக இருக்கிறது.

http://www.dailythanthi.com/muthucharam/home/second_page.asp?issuedate=10/31/2009&secid=9[/tscii:2023523a31]

R.Latha
11th November 2009, 01:18 PM
டீலா நோ டீலா



சன் டிவியில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி, `டீலா நோ டீலா.'

மொத்தம் 26 வாரங்கள் ஒளிபரப்பாகவிருக்கும் இந்த நிகழ்ச்சியில் 26 சூட்கேஸ்களை 26 மாடல்கள் வைத்திருப்பர்.அந்த சூட்கேஸ்களில் ரூ.1 தொடங்கி 50 லட்சம் வரை வைக்கப்பட்டிருக்கும். எந்த சூட்கேசில் எவ்வளவு என்பது தெரியாத நிலையில் ,போட்டியில் கேட்கப்படும் கேள்விக்கு சரியான பதில் சொல்பவர் இந்த 26 சூட்கேஸ்களில் ஒன்றைத் தேர்வு செய்ய வேண்டும். அப்படி தேர்ந்தெடுக்கும் பெட்டியில் எவ்வளவு பணம் இருக்கிறது என்பது நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போட்டியாளருக்குத் தெரியாது. அதனால் போட்டியின் சுவாரசியம் இங்கே ஆரம்பம்.

முதல் சுற்றில் 6 சூட்கேஸ்கள் திறக்கப்படும். தான் தேர்ந்தெடுத்த சூட்கேசில் எவ்வளவு தொகை இருக்கும் என்பது தெரியாத போட்டியாளர்களிடம் இப்போது நடுவர் தனது பேரத்தை தொடங்குவார். "இந்த சூட்கேசில் உள்ள தொகைக்கு பதிலாக இவ்வளவு தொகையை வாங்கிக்கொண்டு விலகிக் கொள்கிறீர்களா?'' என்று அவர் போட்டியாளரிடம் கேட்பார். ஒருவேளை சூட்கேசில் இருப்பது ஒரு ரூபாயாக இருந்தால் என்ன செய்வது என்று யோசிக்கும் போட்டியாளர், நடுவர் தருவதாக சொல்லும் அதிக பட்ச தொகையை ஏற்றுக் கொள்வதாக அறிவித்துவிட்டு போட்டியில் இருந்து விலகிக் கொள்வார். இல்லையேல் ஆட்டத்தை தொடர்வார்.

கலந்துரையாடல், நாடகம், பஞ்ச் டயலாக் என போட்டியாளர்களின் திறமையை வெளிக்கொணரும் விதத்தில் போட்டிகள் நடக்கும். நிகழ்ச்சியை தொகுத்து வழங்குபவர் நடிகர் ரிஷி. இவர் ஆனந்த தாண்டவம் படத்தில் இரண்டு நாயகர்களில் ஒருவராக நடித்தவர்.

R.Latha
13th January 2010, 12:25 PM
[tscii:1c785bf802]உணர்வுகளின் சங்கமம் `உறவுகள்'

திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் மதியம் 12 மணிக்கு சன் டி.வி.யில் ஒளிபரப்பாகும் `உறவுகள்' தொடர் ரசிகர்களின் வரவேற்பை பெற்ற தொடராகியிருக்கிறது. உணர்வுகளின் சங்கமமாக கூடிக்கலக்கும் குடும்பப் பிரச்சினைகள் நெகிழவைக்கும் விதத்தில் அமைந்திருப்பதுவே இதற்கு காரணம் என்கிறார், இத்தொடரின் இயக்குநர் ஹரிபாபு. கூட்டுக் குடும்பமாய் இருந்த அண்ணாமலை, அழகேசன் குடும்பம் தேவி என்ற பெண்ணின் வரவால் இன்று இரண்டாக பிரிந்து கிடக்கிறது. குடும்பப் பிரிவை தாங்கமுடியாமல் அண்ணாமலை தன் உயிரையே, விட்டுவிட, கிருஷ்ணனின் குடும்பம் அனாதையாய் நிற்கிறது.

இந்நிலையில் மனம் திருந்தி வந்த கிருஷ்ணனìன் மனைவி காயத்ரியை கிருஷ்ணனின் அம்மா ஏற்க மறுக்கிறாள். கிருஷ்ணனுக்கு தன் மனைவியுடன் சேர்ந்து வாழ ஆசை. இருந்தாலும் அம்மாவிற்காக அமைதியாய் இருக்கிறான். இதை அறிந்த கிருஷ்ணனின் அக்கா ரஞ்சனி தம்பியை அவன் மனைவி காயத்ரிìயுடன் சேர்த்து வைக்க பெரும் முயற்சி எடுக்கிறாள். அதே சமயம் கிருஷ்ணனின் அண்ணன் முகுந்தனின் கள்ளத்தனம் தெரிந்த மனைவி சித்ரா அவனை விட்டுப் பிரிகிறாள். அழகேசன் குடும்பத்தில் அடுக்கடுக்காய் வரும் பிரச்சினைகளால் முகுந்தனும் திருந்துகிறான். தன்னால் பிரிந்த குடும்பங்கள் ஒன்று சேர முகுந்தன் முயற்சிக்கிறான்.

முகுந்தனின் எண்ணப்படி இரண்டு குடும்பங்களும் ரஞ்சனியின் குழந்தைக்கு பெயர் சூட்டும் விழாவில் ஒன்று கூடுகிறது. அப்போது நடக்கப் போகும் விஷயம் தான் தொடரின் மிக முக்கியமான அடுத்த திருப்பம்'' என்று சஸ்பென்ஸ் வைக்கிறார், திரைக்கதையாசிரியர் குமரேசன்.

குடும்பத்தில் அன்றாடம் நிகழும் பிரச்சினைகளை மையப்படுத்தி காட்சிகள் வருவதால் உறவுகளுக்கு ரசிகர்களிடம் மரியாதை அதிகம் என்கிறார் இவர்.

தொடரில் பீலிசிவம், அமரசிகாமணி, ஸ்ரீகுமார், ராஜ்காந்த், ராமச்சந்திரன், வின்சென்ட்ராய், அர்ச்சனா கிருஷ்ணப்பா, துர்கா, ராஜேஸ்வரி, ரேவதிசங்கர், நித்யா, சிவகவிதா, கிச்சா, பரத், சுதா, ஆர்த்தி, கல்பனா நடித்து உள்ளனர்.

திரைக்கதை: குமரேசன். வசனம்: பாலசூர்யன். ஒளிப்பதிவு: தண்டபாணி. இயக்கம்: ஹரிபாபு, தயாரிப்பு: சேன் மீடியா.

http://dailythanthi.com/muthucharam/home/second_page.asp?issuedate=1/9/2010&secid=9
[/tscii:1c785bf802]

aanaa
15th January 2012, 08:27 PM
you love it!
Sun Tv Natchathira Kondattom 15-01-12


http://www.youtube.com/watch?feature=player_embedded&v=ZEcCbE3q8Rg



http://www.youtube.com/watch?feature=player_embedded&v=ilDY93pZGaY



http://www.youtube.com/watch?v=dJrMMRFg2Oo&feature=player_embedded



http://www.youtube.com/watch?v=70e92kW-U5A&feature=player_embedded

aanaa
28th January 2013, 11:26 PM
சன் டிவியில் இது ரேவதி வாரம்...!!


lஜனவரி 28 திங்கள்கிழமை முதல் பிப்ரவரி 1 வெள்ளிகிழமை வரை தினசரி இரவு 11 மணிக்கு நடிகை ரேவதி நடித்த அருமையான திரைப்படங்களை ஒளிபரப்புகின்றனர். பெருவாரியான ரசிகர்களைக் கவர்ந்த 80களில் வெளியான திரைப்படங்கள் ஒரு வாரத்திற்கு ஒளிபரப்பாகிறது.

otuziosoqu
18th March 2013, 04:53 PM
complained done :)

R.Latha
28th August 2013, 11:57 AM
திருமுருகனின் புதிய தொடர் தேன்நிலவு

திரு பிக்சர்ஸ் திருமுருகனின் தயாரிப்பு இயக்கத்தில் சன் டி.வி.யில் வரும் திங்கள் இரவு 10 மணிக்கு தொடங்கவிருக்கும் புதிய தொடர் ‘தேன்நிலவு’

வாழ்க்கையில் திருமணம் என்பது மறக்க முடியாத ஒரு நிகழ்வு. திருமணத்தை தொடர்ந்து வரும் சில மாதங்கள் கணவன் மனைவியும் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு தங்களது துணையின் ரசனைகளையும் விருப்பங்களையும் அறிந்து கொள்ளும் காலம். ஒவ்வொரு ஆணுக்கும் பெண்ணுக்கும் திருமணத்தை அடுத்து வருகின்ற சில மாதங்கள் வாழ்நாள் முழுவதும் எண்ணி மகிழும் அனுபவங்களையும், எல்லையற்ற சந்தோஷத்தையும் தருகின்ற ஒரு காலகட்டமாகும். பிரச்சினைகளோ சங்கடங்களோ இன்றி முழுக்க முழுக்க மகிழ்ச்சி மட்டுமே நிரம்பியது இந்த தேன் நிலவு காலகட்டம்.

இப்படிப்பட்ட தேன் நிலவை கொண்டாட மலை வாசஸ்தலமே ஏற்றது என்று அங்கே தங்களது தேன்நிலவைக் கொண்டாட நான்கு ஜோடிகள் கிளம்பி வருகின்றனர். ராம்– ரேவதி, கல்யாண்– மீனா, சுரேஷ்– வினோதினி ஆகிய ஜோடிகளுடன் வித்தியாசமான இன்னொரு ஜோடியும் கிளம்பி வருகின்றனர். அனைவரது மனதிலும் கனவுகளும் எதிர்பார்ப்பும் சந்தோஷமும் நிரம்பி வழிகின்றன.

ஆனால் தேன் நிலவு வந்த இடத்தில் நிகழும் சம்பவங்கள் அவர்கள் எதிர்பார்ப்பிற்கு மாறாக இருக்கின்றன. அந்த தம்பதிகள் எதிர்கொள்கிற பிரச்சினைகள், ஏற்படுகிற வித்தியாசமான அனுபவங்கள் ஆகியவற்றை நகைச்சுவை, மர்மம் மற்றும் சென்டிமென்ட் கலந்து விறுவிறுப்பாகவும் சுவாரஸ்யமாகவும் சித்தரிக்கும் தொடரே தேன்நிலவு.

தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் டெல்லிகணேஷ் நடிக்கிறார்.

திரைக்கதை, வசனம்: பாஸ்கர்சக்தி. ஒளிப்பதிவு: சரத்சந்தர். இசை: சஞ்சீவ் ரத்தன். பாடல்: யுகபாரதி. படத்தொகுப்பு: பிரேம். கதை, தயாரிப்பு: திருமுருகன். இயக்கம். ஈ. விக்ரமாதித்தன்.

Nandri.Daily thanthi

R.Latha
28th August 2013, 12:23 PM
மகாபாரதம்

தமிழ் தொலைக்காட்சி வரலாற்றில் முதன் முறையாக தமிழிலேயே, தமிழ் நடிகர்களைக் கொண்டு, மிக பிரமாண்டமாக உருவாக்கப்பட்ட புராண காவியமான மகாபாரதம், ஞாயிறு தோறும் காலை 10 மணிக்கு சன் டி.வியில் ஒளிபரப்பாகி வருகிறது.

இத்தொடர், ஆதிபர்வத்தில் தொடங்கி, வியத்தகு பல புதிய தகவல்கள் அடங்கிய தொடராக வந்து கொண்டிருக்கிறது. இதுவரை 25 எபிசோடுகளை தாண்டி தொடரும் இந்த தொடரில், பாண்டவர்கள், கவுரவர்கள், கர்ணன் ஆகியோர் அறிமுகமாகிறார்கள். கூடவே அவர்கள் செய்யும் சாகசப்பகுதியும் ஒளிபரப்பாக உள்ளது. இதைத் தொடர்ந்து வரும் காட்சிகள் அனைத்தும் சூடும் சுவையுமானவை.

தொடரை சினிவிஷ்டா நிறுவனம் சார்பில் சுனில்மேத்தா தயாரிக்கிறார். எபிசோட் டைரக்டர்: செங்கோட்டை சி.வி.சசிகுமார், கதை ஆக்கம்: பிரபஞ்சன். திரைக்கதை: கண்ணன். வசனம்: வேட்டை பெருமாள். இசை: தேவா. திரைக்கதை, டைரக்ஷன் மேற்பார்வை: சுரேஷ்கிருஷ்ணா.

R.Latha
2nd September 2013, 01:53 PM
indru mudhal suntvyil new serial varugiradhu. vision times Thirumathi selvam nayagi archanathaan( Abitha) heroin, vanaja. matrum palar