PDA

View Full Version : Mohan - Kavithai Thokuppu



leomohan
28th October 2006, 11:06 PM
போர் வெறி ________________________________________
எழுத்து: மோகன் கிருட்டிணமூர்த்தி

பிணம் தின்னி கழுகுளாக மாறிய மனிதர்கள்
மதம் என்ற மதம் பிடித்த மடையர்கள்
நிலம் கேட்காத நிலத்திற்கு நீட்டிய வாள்கள்
தன்னவரையும் எதிரியையும் துளைக்கும் குண்டுகள்
கொன்று கூவித்துவிட்டு கூச்சலிடும் பீரங்கிகள்
அலைந்து பறந்து மரணத்தை அடித்த உலோகப் பறவைகள்
கால்களை காகிதமாய் துண்டித்த கண்ணி வெடிகள்
ஆடவரை இழந்து விதவையான பெண்களின் ஒப்பாரிகள்
தந்தையை இழந்து அனாதையான பிஞ்சுகளின் கூக்குரல்கள்
காதலியை தொலைத்து நாட்டிற்காக உயிர்தொலைத்த வீரர்கள்
மரணத்தை விட கொடுமையான ஊனங்கள்
அந்த ஊனத்தை குறைக்க மருந்தை விற்கும் வியாபாரிகள்
நீர் போல ஓடிய ரத்த ஆறுகள்
குருதியை குடித்து குளித்த மானிட ராட்சதர்கள்
கன்னிகளின் கற்பை சூறையாடிய கயவர்கள்
தாயின் பாலை வற்ற வைத்த நயவஞ்சகர்கள்
தாயையும் சேயையும் பிரித்த பித்தர்கள்
மண்ணிற்காக மனதை அடகு வைத்த வீணர்கள்
வெறுப்பை வளர்த்து அதில் குளிர்காணும் கோழைகள்
பெற்றவளுக்கும் மத்தவளுக்கும் வித்தியாசமறியாத கடயர்கள்
சினத்திற்கு மடை வைக்க அறியாத சிறியர்கள்
தீவுக்கும் தீர்வுக்கும் பேதம் அறியாத பேடிகள்
காட்டுக்கும் நாட்டுக்கும் நன்மை செய்யாத துரோகிகள்
வீட்;டிற்கும் வீதிக்கும் உண்மையில்லா உலோபிகள்
கண்ணீரை காசாக்கி மனித தோலையும் செருப்பாக்கும் சொறிநாய்கள்
ஓதுவரையும் ஆண்டவனைத் தேடுபவரையும் வதைக்கும் ஓநாய்கள்
செத்தவரின் சிதையிலிருந்து வரும் புகைகள்
அந்த புகை எடுத்து வரும் துர்நாற்றங்கள்
செங்குத்தாய் வெட்டுப்பட்டு கிடக்கும் மனித உடல்கள்
அதிலிருந்த கொட்டி தீர்த்த ரத்தங்கள்
குடல்களை மாலையாய் திரித்த தீயவர்கள்
அவர் மேல் வீசும் மந்த வாசனைகள்
பயத்தால் பறவைகள் செய்த இடமாற்றங்கள்
விலங்குகள் தன்னிடத்தைவிட்டு எடுத்த ஓட்டங்கள்
சிகையெரிந்து புன்னகையெரிந்து கிடந்த நேற்றைய மனிதர்கள்
அறிவிழந்து அறிவு தரும் ஆற்றல் இழந்த அயோக்கியர்கள்
சோறிழந்து சொந்தம் இழந்து போர்முனையில் தவிக்கும் ஆடவர்கள்
அவர் தரும் சுகத்தை இழந்து பரிதவிக்கும் பெண்கள்
தமக்கை இழந்த தமையன்கள் தமையனை இழந்த தமக்கைகள்
பொட்டிழந்து பூவிழந்த மங்கையர்கள்
பூ தரும் வாசம் மறந்த அவர் கேசங்கள்
அலட்ச்சியப்படுத்தப்பட்ட 'போர்வேண்டாம்" எனும் கோ~ங்கள்
"போர் அவசியம்" என்று அரசியல்வாதிகள் போடும் வே~ங்கள்
அதனால் பொய்யால் அவர் பரப்பும் துவே~ங்கள்
பலர் பல நாட்களாய் அறியாத பாசங்கள்
போர் முடிந்தும் போர் செய்யும் சிலரின் வீண் ரோ~ங்கள்
அவர் மறந்துவிட்ட மனித நேசங்கள்
கட்டிவைத்திருக்கும் மனித நேய கரங்கள்
கடவுள் இந்த ஈனப்பிறப்பிற்கு தர மறுத்த வரங்கள்
இன்று முடிந்துவிடும் போர் என்ற பொய் "இன்னும் பொறுங்கள்"
தீபாவளியைப் போல போர்முனையில் வெடிக்கும் ஆயிரம் சரங்கள்
வீடு திரும்பும் நாள் வருமா என்று வீரர்களின் ஏக்கங்கள்
நாட்டில் அவர் செய்ய காத்திருக்கும் பல ஆக்கங்கள்
எப்போது வெடிக்குமோ என்று விழித்திருந்து விட்ட தூக்கங்கள்
அதனால் அவர் உடலில் ஏற்பட்ட பல தாக்கங்கள்
நிறைவேறாமல் போன பல நல்ல உள்ளங்களின் நோக்கங்கள்
அதற்காக ஏங்கித் தவிக்கும் உள்ளங்கள்
உள்ளக் கூக்குரல் கேட்காமல் சண்டையிடும் செவுடுகள்
கத்திப் பேசினாலும் யாரும் கேட்காமல் காய்ந்த உதடுகள்
இனிமேலும் அழ சக்தியில்லாமல் ஓய்ந்து கண்கள்
அந்த கண்களின் தாரையால் தடித்த தாடைகள்
கணவனுக்காக கதவைநோக்கி காத்திருந்து சுளக்கெடுத்த கழுத்துகள்
சுவாசம் மறந்த சம்பிரதாயத்திற்கு காற்றை விட்ட மூக்குகள்
சேதி கேட்டு ஊர் மத்திக்கு ஓடி தேய்ந்த கால்கள்
நல்ல செய்தி சொல்லுங்கள் என்று ஏங்கி கைகூப்பிய கைகள்
வீரர்களின் தந்தையர் ஒடுங்கின போன முதுகுகள்
விரல் விட்டு எண்ணக் கூடிய எலும்புகள்
ஏழ்மையில் சுருங்கிப் போன தோல்கள்
இருந்தும் ஓயவில்லை சண்டையிடும் செங்கோல்கள்!

leomohan
28th October 2006, 11:07 PM
போர் முடிந்ததின் அறிகுறி ________________________________________
கவிதை: மோகன் கிருட்டிணமூர்த்தி

கருணையுள்ளம் கொண்ட மானிடர்
மதத்தை மனித வாழ்வின் மார்க்கமாக ஏற்றவர்
கானி நிலத்தில் கடமை காணும் உழவர்
எதிரியையும் நட்புடன் அணைக்கும் நல்லவர்
பீரங்கிகளை வரலாற்று பாடத்தில் மட்டும் காணும் மாணவர்

விமானங்கள் கடல் கடந்து மனதிர்களை இணைக்க
கப்பல்கள் களிப்போடு வாணிகத்தை பெருக்க
ஆடவரும் அவர் மனையுடன் சுற்றுலா செல்ல
தந்தைகளிடமிருந்து பிள்ளைகள் மகிச்சியுடன் களிக்க
காதலில் உயிர்விடுவோரே ஓழிய போரில் காதலர் உயிர் விடாமல் இருக்க

ஊனங்கள் உடலிலோ உள்ளத்திலோ இல்லாத மக்கள்
மருந்தை மருந்துக்காகவே பயன்படுத்தும் ஆரோக்கியர்கள்
ஆறுகளில் பாலும் தேனும் ஓடாவிட்டாலும் நீர் ஓட தடைபோடாதவர்கள்
ராட்சதன் என்றொருவர் உண்டென்று கதைகளில் மட்டுமே கேட்பவர்கள்
கன்னிகளின் மதிப்பை அறிந்து பாதுகாக்கும் பொதுமக்கள்

தாய்க்கு தனி இடம் அவளுக்கு ஓர் உயர்விடம்
சேய் பாதுப்பாக இருக்கும் அதன் பிறப்பிடம்
மண்ணில் மனிதனுக்கு ஒரு தனியிடம்
வெறுப்பறியாத வாழ்கையில் அனைவருக்கும் சிறப்பிடம்
பெற்றவளையும் மற்றவளையும் இவ்வுலகம் கும்பிடும்

சினத்தை சிறிதே பயன்படுத்தும் பக்குவம்
பேச்சால் பிரச்சனைகளை தீர்க்கும் தீர்க்கம்
காட்டை அழிக்காமல் நாட்டை வளர்க்கும் நோக்கம்
வீட்டை வாழவைத்து வீதிக்கும் மானிடம் உழைக்கும்
கண்ணீர் சொட்டுகள் காண்பதே ஒருநாள் அறிதாகும்

திருவாசகமும் தேவாரமும் தேனாய் கோவில்களில் ஓலிக்கும்
செத்தவரின் ஆன்மா முறையுடன் ஆசீர்வதிக்கும்
மானிடர் செய்யும் யாகத்திலிருந்தே புகை வளர்க்கும்
மறைந்த மனிதனுக்கும் மரியாதை கிடைக்கும்
ரத்தங்கள் தானம் செய்யவே கொட்டித் தீர்க்கும்

மலர்களால் மாலை அணிந்து அணிவித்து
குளித்து முடித்து தினமும் எளிமையாய் அலங்கரித்து
காக்கை குருவி எங்கள் ஜாதி என்று எண்ணவைத்து
விலங்குகளாய் மாறாமல் விலங்கை நண்பனாக வளர்த்து
புன்னகை என்றும் எல்லோர் வாழ்விலும் நிலைத்து

அறிவைத்தேடி அது அளிக்கும் சுகத்தைத் தேடி
போர்முனை எனும் ஓர் முனை அறியாமல் அமைதியை நாடி
பெண்களும் துணையோடு அவர் வாழ்வில் இன்பம் புறையோடி
தமக்கையரும் தமையரும் மகிழ்ந்து விளையாடி

எதுவும் வேண்டும் நிலை இங்கு இல்லையே
பொதுவாழ்வே என்றதனால் அரசியல்வாதிகளால் இல்லை தொல்லையே
உண்மையும் அதன் உயர்வையும் பேசுவதில் இல்லை எல்லையே
இனி ஒருவரும் ஒருவரையும் பிரியவில்லையே

மனித நேசத்தை யாரும் இங்கு மறக்கவில்லை
தந்தையறியா குழந்தைகள் இனி பிறப்பதில்லை
கடவுள் விண்னைவிட்டு மண்ணிற்கு வந்ததில்லை
ஆனாலும் அமைதியெனும் வடிவில் பிறந்த நல்ல பிள்ளை
அதனால் தினமும் இப்புவியில் தீபாவளியின் இன்பக் கொள்ளை

போர்முனைகள் உடைந்துவிட்டன எல்லைகள் அகன்றுவிட்டன
துப்பாக்கிகள் தொலைந்துவிட்டன குண்டுகள் நொறுங்கிவிட்டன
ஒப்பந்தமில்லாமல் வார்த்தைகளுக்கு மதிப்பு வரும் நாள் வந்தன
ராணுவம் எனும் ஸ்தாபனம் சம்பிரதாயமாயின
உடலும் உள்ளமும் நிம்மதியில் ஆரோக்கியமாயின

இனி யாருக்கும் இல்லை ஏது தவிப்பு
உள்ளம் கேட்டு நடக்கும் மனிதரின் துடிப்பு
காயவில்லை உதடுகள் இங்கு ஏதும் இல்லை நடிப்பு
கண்கள் கருணையால் மட்டுமே நீர் கொள்வது இயல்பு
மதங்களுக்கும் இனங்களுக்கும் காணலாம் அதில் சகிப்பு

இந்த அமைதிப்பூங்காவில் இல்லை கழுத்தின் சுளுக்கு
சுவாசம் நேர்மையில் நாணயத்தில் அதனால் இல்லை இழுக்கு
நல்ல சேதி மட்டுமே கொண்டுவரும் தபால்காரனின் வழக்கு
நன்றிக்கு மட்டுமே சொல்ல தூக்கும் வேலை கைகளுக்கு
உயர்ந்தன முதுகுகள் உயர்ந்து நிற்கும் பணி தோள்களுக்கு

போர் முடிந்து ஆகிவிட்டது பல காலம்
ஓய்ந்துவிட்டது வலியில் மக்கள் எடுத்த ஓலம்
எலும்புகளில் தேசப்பற்று எனும் இரும்பு பலம்
ஏழ்மை தோற்றுவிட்டு விட்டது இக்களம்
செங்கோல்கள் இனி காக்கும் மக்களின் நலம்

gragavan
12th November 2006, 11:14 PM
[tscii:d871f4845a]¿øÄ ¸Å¢¨¾¸û §Á¡¸ý. º¡ð¨¼ÂÊÂ¡É ¸Õòиû.[/tscii:d871f4845a]

leomohan
17th November 2006, 03:06 PM
அந்தோ இந்த பெண்ணின் காதல்

Shakespeare ---
What it is this? Is it a Prologue?
No. It is a brief My Lord.
Like a Woman's Love
----

ஒரு சிறந்த மேடை பேச்சு நிற்கும் நினைவில்
சில நாட்கள் மட்டும்
ஒரு மாசற்ற புன்னகை நினைவில்
சில நாட்கள் மட்டும்
ஒரு பாசமான கரிசனை வார்த்தை
சில நாட்கள் மட்டும்
ஒரு சிறந்த நட்பு
சில நாட்கள் மட்டும்
வெற்றி அடையும் குறிக்கோள்
சில நாட்கள் மட்டும்
ரோஜாப்பூவின் வாசம்
ஒரு நாள் மட்டும்
மழை கடவுளின் பன்னீர் தூவல்
சில மணி நேரம் மட்டும்
உயிரை கலக்கும் பூகம்பம்
சில நொடி மட்டும்
அந்தோ! வியந்தேன்
இந்த பெண்ணின் காதல்
இவை அனைத்தையும் விட சிறியதா
அறிகிலேன் நான்!

leomohan
17th November 2006, 03:06 PM
இடையில் வந்து நான் மெல்ல சொல்லும் வல்லிய கருத்து

வல்லினம்

கடவுளை நான் கண்டதும் இல்லை கேட்டுதும் இல்லை

சாமி "யார்" என்று கேட்டால்

"டான்" என்று என் முன் நிற்ப்பானா?

தப்பு கடவுள் இல்லை என்று சொல்வதும்

பழிக்கு பிறகு ஆளாவதும் ஆனால் நான்

கற்றவை என்னை கேள்வி கேட்க தூண்டுகின்றனவே?

மெல்லினம்

"யான்" என்ற கர்வம் எனக்கு இல்லை

ராமனையும் கிருஷ்ணனையும் வேண்டுவதில் தவறொன்றும் இல்லை

லிங்கத்தையும் திருமாலையும் நான் வணங்குவேன்

வணங்க மறுப்பேன் நான் எந்த மனிதனையும்

வழக்கத்தை மாற்ற நினைப்பது தான் புரட்சியென்றால்

களிப்புடன் அப்புரட்சியை பல முறை செய்வேன்
இடையினம்

கங்கையில் குளித்தால் மட்டும் பாவம் தீராதே

ஞானியிடன் போனாலும் உன் சோகம் மாறாதே

கண் போனபின் தான் சூரிய நமஸ்காரம் செய்வீரோ

நல் வழியில் சென்றால் நீயும் ஆவாய் கடவுளாய்

மறக்காதே நான் சொல்லும் இச்கருத்தை

மனதாலே தினம் நினை தினம் செய் நல்லவை மட்டும்!!

sundararaj
26th November 2006, 10:06 PM
[tscii:a7627393a6]«Õ¨ÁÂ¡É ¸ÕòÐì¸û. Á¢ì¸ ¿ýÈ¢. :clap: [/tscii:a7627393a6]

leomohan
8th December 2006, 12:22 AM
[tscii:4e60971a09]«Õ¨ÁÂ¡É ¸ÕòÐì¸û. Á¢ì¸ ¿ýÈ¢. :clap: [/tscii:4e60971a09]

நன்றி சுந்தரராஜ்