PDA

View Full Version : Poonguzhali (Kaaviyam) - munaivar Ilamaran



thamizhvaanan
17th April 2007, 09:11 AM
1. தென்றல் வகிர்ந்த கூந்தல்

மேற்றிசையின் அடிவானில் மேகப் பஞ்சை
மெருகேற்றிக் கொண்டிருந்தான் கதிர்ரோன் மெல்ல!
காற்றசைந்து செடிகொடிகள் சிலிர்க்க வைத்துக்
கதிருமிழ்ந்த இளஞ்சூட்டைத் தணிக்கத் தென்னங்
கீற்றசைந்து வரவேற்க, இரவு மங்கை
கீழ்த்திசையில் நிலாமுகத்தை நீட்டும் நேரம்!
நாற்றசைதல் போலசைந்து நங்கை யர்கள்
நலங்கூட்ட விளக்கேற்றும் வசந்த மாலை!

சந்தடிகள் மிகநிறைந்த கம்பர் வீதிச்
சந்திப்பில் மூன்றடுக்கு மாடி மேலே
நந்தவன வணிகவியல் பயிற்சிக் கூடம்
நகையணிந்து கொண்டதன்று மின்வி ளக்கால்!
அந்திமலர் மொட்டவிழ்ந்து வாசம் வீச
அய்ம்புலனும் ஒருசேரச் சொக்கு தல்போல்
வந்திருந்தோர் ஆண்டுவிழாக் கொண்டாட் டத்தின்
வயப்பட்டிப் புதுத்தெம்பில் மகிழ்ந்தி ருந்தார்!

உருவத்தில் பருவத்தைத் தாங்கிக் கொண்ட
உயிர்ச்சிலைகள் ஒருபுறத்தில் கொலுவி ருக்கப்
பருவத்தின் கோளாறால் இளைஞ ரெல்லாம்
பார்வையினை மேயவிட்டு மறந்தார் மீட்க!
சிறுபுத்திச் சில்லறைகள் சிலபேர் சேர்ந்து
சில்லுண்டித் தனமாகப் பெண்கள் மீது
குறிவைத்துக் காகித்த்தால் அம்பு விட்டும்
கூந்தலினைப் பிடித்திழுத்தும் கிண்டல் செய்தார்!

thamizhvaanan
17th April 2007, 09:43 AM
சுடிதாரும், சல்வாரும், ஜீன்சும், பெல்சும்,
சுண்டியீர்க்கும் மிடி, டைட்சும் அணிந்த தாலே
இடிதாங்கி யானார்கள் பெண்க ளங்கே!
இளவட்டப் பரிவட்ட உரச லாலே!
கடிவாளம் போட்டாற்போல் இவற்றைச் சற்றும்
காணாமல் அடக்கத்தின் வடிவாய்க் கண்கள்
தொடுத்திருந்தார் சிலர்மட்டும் நிகழ்ச்சி யின்பால்!
தொடங்கிற்றே ஆண்டுவிழா தமிழ்த்தாய் வாழ்த்தில்!

செம்பருத்திப் பூப்போன்ற சிவந்த மேனி!
சிற்பியினால் செதுக்காத கலையின் வாணி!
அம்பெடுத்து வில்புருவம் தொடுத்த கண்கள்!
அந்திதந்த தென்றலாலே வகிர்ந்த கூந்தல்!
செம்பழத்துக் கன்னங்கள் குமுதச் செவ்வாய்!
சீரணிக்க முடியாத அழகின் வீச்சு!
வம்படித்தோர் வாய்மூடித் திகைப்பில் மூழ்க,
வளைகுலுங்கப் பூங்குழலி பாட வந்தாள்!

pavalamani pragasam
17th April 2007, 11:05 AM
[tscii:a2779916fb] :clap:

þó¾ «Æ¸¡É ¸Å¢¨¾ Ó¸ò¨¾ þò¾¨É ¿¡Ç¡ö ²ý ´Ç¢òÐ ¨Åò¾¢Õó¾£÷¸û? ¾¨Ä¨Â Á½ÖìÌû Ò¨¾òÐ즸¡ûÙõ þÉò¨¾ §º÷󾾡ġ ?
:D [/tscii:a2779916fb]

crazy
17th April 2007, 12:52 PM
Thamizh :shock: ...................:clap:

VENKIRAJA
17th April 2007, 01:48 PM
அந்திதந்த தென்றலாலே வகிர்ந்த கூந்தல்!
[/list]

:clap: :thumbsup:

enya 3597 post anuppunathukkapuram thaan gnanodhyam vanthucha?arumaiyaa irukku!

madhu
17th April 2007, 02:19 PM
ஈமூ.................

இதுக்காகவே ஒரு தனி treat கொடுத்தே தீரணும்.. அதாவது நீங்க எனக்கு.. :mrgreen:

இப்படி ஒரு கவியை :notthatway: ( அதாவது காளமேகப் புலவர் சொன்ன கவிராயர் அல்ல ) எப்டி எப்டி எப்டி ஒளிச்சு வச்சிருந்தீங்க ?

thamizhvaanan
19th April 2007, 11:24 AM
தென்றலிடம் உயிரொலியைக் கடனாய் வாங்கித்
தேங்குழரின் மெய்யொலியில் இழைய விட்டுத்
தென்னகத்தின் இசைப்பண்ணில், இனிய நாதத்
தேன்மழையை பூங்குழலி பொழிய லானாள்!
மண்ணகத்தை மறந்திட்டார் அவையோர் ஆங்கே!
மாங்குயிலின் குரலசைவில் சொக்கிப் போனார்!
தன்னகத்தில் உயிரிருக்கும் உணர்வே யின்றித்
தரைதழுவும் சருகானார் இசையில் தோய்ந்தார்!

பசுந்தோகை மயில்போன்று மேடை ஏறிப்
பாவையவள் பார்வையினால் வென்ற தாலோ,
அசையாமல் ஆடாமல் அடக்க மாக
அமுதகானம் பூங்குழலி இசைத்த தாலோ,
அசைவற்றுப் போயிருந்த அவையில்; தென்னன்
அணுவணுவாய் அவளழகைச் சுவைத்தி ருந்தான்!
இசைக்குயிலின் வசம்மனத்தைத் தூத னுப்பி
இமைகொட்ட மறந்ததனால் சிலைபோல் ஆனான்!

வானத்தின் வென்மதியே நேரில் வந்து
வாழ்த்துப்பாப் பாடுதல்போல், தமிழின் மங்கை
நானத்தால் குனிந்த்தலை நிமிரா மல்தன்
நாதத்தால் அரங்கத்தை அடக்கி வைத்தாள்!
ஞானத்தின் சூனியமாம் மாலன் என்பான்
நங்கையின்மேல் கல்லெரிந்து கனிந்து கொண்டான்!
மானொத்த விழிக்கருகிர் ஏறிகல் தாக்க,
மலர்முகத்தில் கைபொத்திக் கீழே சாய்ந்தாள்!

பதைபதைத்தார் அருகிருந்தோர்; பதறி யோடிப்
பாவைதன்ப் பரிவோடு சூழ்ந்தனர்; தென்னன்
அதிரடியாய் ஆனைவரையும் விலக்கி விட்டே
அல்லிவிழி முகம்பார்த்தான்; குருதி கொட்ட
கதிகலங்கிக் கடிதோடி வண்டி பேசிக்
கைதாங்கிகச் சிகிச்சைக்குக் கூட்டிச் சென்றான்!
விதிர்விதர்த்துப் போயிருந்த மால னுக்கோ
விரும்பினவர் தருமஅடி கொடுத்தே ஓய்ந்தார்!

thamizhvaanan
19th April 2007, 11:32 AM
:omg: anaivarukkum nandri :ty: idhu naan ezhudhinadhu kidaiyadhu :ashamed: ennoda appa'ku sera vendiya paraatugalai rendu nalaikku iraval vaanginen :mrgreen: i will make a reference in the title :P

avaru 1994la veliyitta poonguzhali'nra kaviyathulerndhu eduthu pottirukken. When it was released, he got the state award for the year 1994 :D. Hopefully i am vetti enuf and patient enuf in future to post the entire book.

pavalamani pragasam
19th April 2007, 06:40 PM
April maasam mudiyumattum muttaaLakkalaamO? :roll:

Anyway convey our congrats to your father! And I am eager to know the full kalladiththavan story! :D

madhu
19th April 2007, 07:26 PM
EMU...

benfit of doubt-ai ungaLukku koduthAchu :lol:

crazy
19th April 2007, 08:58 PM
:) :roll: