PDA

View Full Version : ilaiyudhir kAlathil sila iravugaL



madhu
17th April 2007, 07:20 PM
விரைவில் எதிர்பாருங்கள்..

டொட்டொடய்ங்................

இலையுதிர் காலத்தில் சில இரவுகள்


( தலைப்பு நல்லா இருக்கா ? ) :P


இதோ டிரெயிலர்....

.................................................. .................................................. .........

"சுனீல்...... " கார்த்திக் கூவினான்.. காற்றின் சீற்றம் காதுகளுக்குள் கோஷமிட அவன் குரல் அவன் வாய்க்குள்ளேயே எதிரொலித்தது.

முன் நெற்றியில் விழுந்து கண்ணிமைகளின் மேல் திரையாக வழிந்த மழை நீரைத் துடைத்துக் கொண்டு கார்த்திக் நிமிர்ந்த போது மூங்கில் பாலத்தின் மீது ஓடத்துவங்கி இருந்த சுனில் கையை ஆட்டி வாவென்று சைகை செய்தான்.

"சுனில்.... கொஞ்சம் நிதானமா போ... அங்கே ந்டுவில் ஒரு இடத்தில் பிளத்து இருக்....." கார்த்திக் முடிக்கும் வானையும் மண்ணையும் ஒளிவெள்ளத்தில் குளிப்பாட்டியபடி ஒரு மின்னல் மின்னியது. அடுத்த நொடியே அண்டகடாகங்கள் வெடித்துச் சிதறும்படி ஒரு இடி இடிக்க...

அவன் நிமிர்ந்தபோது... சுனில் பாலத்தில் இல்லை.. நடுவில் அறுந்து தொங்கிக் கொண்டிருந்த கயிறுகளும், மண்ணைக் கரைத்துக் கொண்டு சுழித்தோடிக் கொண்டிருந்த காட்டாற்று வெள்ளமும் மட்டுமே இருந்தன.

......................................

வராந்தா சுவரின் வெளிப்புறம் ஓரமாக இருந்த கனகாம்பரச் செடிகள் மண்ணில் தலையைப் புத்தைத்துக் கொண்டு இருந்தன. சுமதி "அடடா" என்றபடி சாரலில் இறங்கி சிறிய குச்சி ஒன்றை எடுத்து அதன் அருகில் மண்ணில் செருகி கையிலிருந்த வாழை நாரால் கட்டி வைத்தாள். அவள் நிமிரவும், ஏதோ ஒன்று அவள் தலைக்கு மேல் "விர்"ரென்று பறந்து வீட்டின் மேல் படர்ந்திருந்த மல்லிகைக் கொடிக்குள் புகுந்து மறைந்தது.

வேகமாக திரும்பிப் பார்த்தபோது அடுத்த வீட்டு வராந்தாவில் இருந்த அஞ்சலியைக் காணவில்லை. தெருப் பக்கம் திரும்பியபோது காம்பவுண்டு சுவருக்கு வெளியே இருந்து கிளம்பிய சைக்கிளில் கறுப்பும் வெளுப்புமாக கட்டம் போட்ட் சட்டை அணிந்த ஒரு வாலிபனின் முதுகு மட்டும் தெரிந்தது.

.................................................. ...

venkathoney
17th April 2007, 09:44 PM
Super...............

crazy
17th April 2007, 10:06 PM
title nalla irukku :)

pavalamani pragasam
17th April 2007, 10:07 PM
:slurp:

madhu
17th April 2007, 10:22 PM
:slurp:

PP akka ! enna innum sAppidalaiya ? :lol:

pavalamani pragasam
18th April 2007, 07:52 AM
ilai pOttuttu kaaththirukka vaikkalaamaa? :D

madhu
18th April 2007, 09:54 AM
konjam sumptuous-a kodukka Asai.. adhAn lAte.:noteeth:

crazy
18th April 2007, 12:33 PM
madhu anna
avatarla irukka kuzhandai yaar?

madhu
18th April 2007, 12:57 PM
madhu anna
avatarla irukka kuzhandai yaar?

avan pEru prasanna.. venkathoney friend :P

TamilMoon
18th April 2007, 01:05 PM
Madhu anna intro super :)

venkathoney
21st April 2007, 05:16 AM
( தலைப்பு நல்லா இருக்கா ? ) :P


.

Nalla irruku.........

Kadhaiyai viraivil edhirparkiroom aavalaa :o

madhu
21st April 2007, 07:12 AM
idhu oru nedunkathai... every week oru episode... nALaikku mudhal episode post seyyaren :P

crazy
21st April 2007, 09:46 AM
anna :)

madhu
21st April 2007, 01:05 PM
vaasi..

idhu konjam periya story. adhunAla every week saturday / sunday oru episode post seiven. ( inimEl naanum konjam bujy aayiduvenla.. :P )

anyway... adhai reNdu part-a post seyyaren.. first part of episode 1 is here...

madhu
21st April 2007, 01:06 PM
1. இது வசந்த காலம்


முன்னொரு காலத்தில் வீரமகேந்திரபுரம் என்ற நாட்டின் தலைநகராம் குமுதபுரியில் இந்திரசேனன் என்ற அரசன்
ஆண்டு வந்தான். அவனுக்கு குமுதவல்லி என்ற பெண் பிறந்து இளவரசியாக வளர்ந்து வந்தாள், தக்க பருவத்தில்
அவளுக்கு ஏற்ற துணையைத் தேடி மணமுடிக்க எண்ணிய அரசன், தன் பட்டத்து ராணியாகிய உலகமாதேவியுடன்
ஆலோசனை செய்தான்.

உலகமாதேவியின் அண்ணன் காலபுரத்தை ஆண்ட கனகவர்மன். அவனுக்கு விஜயவர்மன் என்ற மகன் இருந்தான்.
அவன் கல்வி, கேள்விகளில் சிறந்து விளங்கியதுடன் வீர தீர பராக்கிரமங்களிலும் மேம்பட்டு இருந்தான். அதே போல
இந்திரசேனனின் உடன் பிறந்த மோகனவல்லியை கதம்பகிரி மன்னன் காடவர்மனுக்கு மணமுடித்துக் கொடுத்திருந்தார்கள்.
அவர்கள் மகன் ஆதித்தனும் கட்டிளங்காளையாய் வளர்ந்து பல கலைகளிலும் தேர்ச்சி பெற்றிருந்தான்.

தற்போது நிலாமுற்றத்தில் அமர்ந்து அளவளாவிக் கொண்டிருந்த அரசனும் அரசியும் இந்த இருவரில் யார் தங்கள்
மகளுக்கு ஏற்றவன் என்று தேர்வு செய்து கொண்டிருந்தனர்.

"தேவி... இருவருமே மிகுந்த திறமை உள்ளவர்களாகத் திகழ்வதால் இதில் நம் அன்பு மகளுக்கு வாழ்க்கைத் துணையாக
யாரைத் தெரிந்தெடுப்பது ? நமது அமைச்சரோ விஜயவர்மன் சிறந்தவன் என்கிறார். ராஜகுருவோ ஆதித்தன் சரியான
இணை என்கிறார்" என்று அரசன் கேட்க அரண்மனை நந்தவனத்தை நோக்கிய அரசி உலகமகாதேவி "அரசே.. இவர்களில்
யார் நம் மகளை மணக்க தகுதி வாய்ந்தவர் என்று ஒரு சோதனை செய்து பார்த்துவிடலாம்" என்றாள்.

"அதுவும் சரிதான்.. இருவருமே வில்வித்தை, வாட்பயிற்சி, யானையேற்றம், குதிரையேற்றம் மட்டுமின்றி கல்வி, கேள்விகளிலும்
சிறந்து விளங்குகிறார்கள் என்று கேள்விப்பட்டேன்"

அரசி புன்னகைத்தாள். "நான் சொல்லும் பரீட்சை அவற்றுக்கு எல்லாம் அப்பாற்பட்டது அரசே... நமது நாட்டில்
அடுத்த இரு திங்கள் கடந்ததும் பருவ மழைக்காலம். இதோ இந்த பூங்காற்று இன்னும் சில தினங்களில் சுழிக்காற்றாக
மாறி வீசத்துவங்கும். நமது அரண்மனை நந்தவனத்தில் இருக்கும் விருட்சங்கள் எல்லாம் இலைகளை உதிர்த்து விட்டு
இப்போது இளம்தளிர்களோடு விளங்குகின்றன. மீண்டும் அவை இது போல ஆக ஒரு ஆண்டு ஆகும். ஆனால்.."
அரசி நிறுத்தினாள்.

"சொல் தேவி..." இந்திரசேனர் ஆவலுடன் கேட்க....

"சுமதி....."

சுமதி படித்துக் கொண்டிருந்த கதைப் புத்தகத்தை சட்டென்று மூடினாள்.

"சுமதி.. சுமதி",,,

"இதோ வரேன் அத்தை"

"படுத்துண்டு இருக்கியா ?.. அப்படின்னா பரவாயில்ல... நான் பாத்துக்கறேன்"

சுமதி கொல்லை நிலைப்படியில் இருந்து எழுந்து உள்ளே போனாள். சமையல் அறையில் கல்யாணி அடுப்பில் பால் குக்கரை
வைத்து விட்டு ஃப்ரிட்ஜ் உள்ளே எதையோ தேடிக்கொண்டிருந்தாள்.

"அத்தை.. என்ன தேடறீங்க ?"

"இந்த பால் பாக்கெட்ல எது புதுசு, எது பழசுன்னு தெரியல. நீதான் அடுக்கி வச்சே.. சொல்லு"

"வரிசையா இடது பக்கத்துலேருந்து எடுத்துக்கோங்கோ அத்தை. அது சரி.. என்னைக் கூப்பிடறதுதானே. நான் வந்து
காபி போடமாட்டேனா. மணி மத்யானம் ரெண்டரைதான் ஆறது. அதுக்குள்ள பால் காய்ச்ச வந்தாச்சா?"

"இன்னிக்கு சனிக்கிழமை இல்லியா.. மறந்து போச்சா.. கார்த்தி வந்துடுவான். சாயந்தரம் மாதவன் டில்லிலேருந்து
வரான். நல்ல வேளையா உனக்கு காலேஜ் இல்ல.."

"அச்சச்சோ.. சரி அத்தை.. நான் காபி போட்டு வைக்கிறேன். நீங்க போய் ஒரு அரை மணி ரெஸ்ட் எடுங்கோ"

"வேணாம்.. நான் டிகாஷனை இறக்கி வைக்கிறேன். நீ வாசல்ல மரகதம் போனா அவளைக் கூப்பிட்டு நாளைக்குக்
காலையிலே முளைக்கீரை இளசா வேணும்னு சொல்லு."

கல்யாணி சொல்லச் சொல்ல சுமதி புன்னகையுடன் அத்தையைக் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு போய்
பெட்ரூமில் விட்டுவிட்டு "இப்போ சமத்தா இங்கேயே இருங்கோ.. நான் எல்லா வேலையையும் கால் மணில முடிச்சுட்டு
கூப்பிடுவேனாம். அப்போதான் வெளில வரணும். புரிஞ்சுதா"

கண்களில் மெல்லிய நீர்த்திரையிட சுமதி சுறுசுறுப்பாக ஓடுவதைப் பார்த்தபடி நின்றாள் கல்யாணி.

crazy
21st April 2007, 01:10 PM
ilavarasi .........sumathi.......... :D

madhu
21st April 2007, 01:24 PM
ilavarasi .........sumathi.......... :D

:notthatway: :lol:

crazy
21st April 2007, 01:26 PM
enakku onnume puriyal..........athaan
eagerly waiting for the next part :)

Anoushka
21st April 2007, 05:57 PM
madhu: interesting-ah irukku :) regular-ah update paNNuveenga illaya?

madhu
21st April 2007, 06:25 PM
madhu: interesting-ah irukku :) regular-ah update paNNuveenga illaya?

inimEl apeez irukkum enbadhAl daily updates mudiyAdhu..

adhunAlathAn weekly update :P

pavalamani pragasam
21st April 2007, 08:56 PM
[tscii:fccbd5096e]¸¡Äí¸û Á¡È¢É¡Öõ Ó¨È Á¡ôÀ¢û¨Ç À¢Ã¨É ÓÊÅ¢øÄ¡Áø ¦¾¡¼÷¸¢È§¾¡? :roll: [/tscii:fccbd5096e]

madhu
30th April 2007, 05:15 PM
கார்த்திக் படுக்கையை விட்டு எழுந்தபோது கடிகாரத்தின் சின்ன முள் எட்டிலும், பெரிய முள் பனிரெண்டிலும்
இருந்தன. ஜன்னலுக்கும் வெளியே இருந்த வேப்ப மரத்துக் கிளையில் இருந்த காகம் ஒன்று அதன் குரலைக்
கேட்டுதான் அவன் எழுந்து கொண்டான் என்ற மகிழ்ச்சியுடன் தன் இறகுகளை மாறி மாறி விசிறிக்கொண்டது.

இன்னும் கொஞ்ச நேரம் கீழ் இமையுடன் சேர்ந்து இருக்கவேண்டும் என்று மேல் இமை கேட்டுக் கொண்டது.
ஆனாலும் அதற்கு சமயம் இல்லை என்பது போல காகம் குரலெழுப்பியது. கண்ணைக் கசக்கிக் கொண்டு
அவன் எழுந்து கொண்டான்.

"கார்த்தி இன்னுமா தூங்கறான்?" என்று வெளியே கல்யாணி கேட்பது அவன் காதில் விழுந்தது.

"மூஞ்சியிலே வெய்யில் அடிச்சாத்தான் இவன் எழுந்திருப்பான். நம்ம துரதிருஷ்டம் இவன் ரூம் ஜன்னல்
மேற்கு பாத்து இருக்கு" என்று சொன்னபடி கல்யாணி உள்ளே வந்தாள்.

"இன்னும் என்ன கும்பகர்ண தூக்கம் ? ஞாயித்துக் கிழமை அப்படின்னு சொல்லுவே.. அது சரிதான்..
இருந்தாலும் ஒரு நேரம் காலம் கிடையாதா ?"

"அதான் எழுந்துட்டேனில்லையா.. மாது என்ன செய்யறான் ?"

"அவன் எழுந்து குளிச்சு, டிபன் சாப்டு பேப்பர் படிச்சுண்டு இருக்கான். அவன் உன்ன மாதிரி சோம்பேறியா?"

"போறும் போறும்.. காலம்பர எழுந்ததும் திட்ட ஆரம்பிச்சாச்சு"

"போர்வையை மடிச்சு வச்சுட்டு, ஃபேனை ஆஃப் செய்ய தனி ஆள் போடவேண்டியதுதான்"

"ம்ம்ம்.. அதுக்குத்தான் அம்மா அம்மா அப்படின்னு ஒருத்தி இருக்காளே !"

கல்யாணி முறைத்தபடி படுக்கையைச் சரி செய்ய கார்த்தி கொல்லைப் பக்கம் விரைந்தான்.

சுமதி சமையலறையில் மிக்சியில் சட்னி அரைத்துக் கொண்டிருக்க, அடுப்பில் இட்லி குக்கர் ஏறியிருந்தது.

"வாவ்... இட்லிக்கு இன்னைக்கு தேங்காய், புதினா சட்னியா ?" கார்த்தி சமையல் அறைக்குள்
நுழையும் முன்பே பின்னாலிருந்து வந்த கல்யாணி "டேய்.. முதல்ல போய் பல்லைத் தேச்சுட்டு உள்ளே வா.
காபி ஆறிண்டிருக்கு" என்றாள்.

"ஏன்.. நான் எழுந்த அப்புறம் சூடா பாலைக் காய்ச்சினா குறைஞ்சு போயிடுமோ ... " கார்த்திக் ஒரு
துள்ளலுடன் பின்னால் போக..

"ஈஸ்வரா... பெத்தது ரெண்டும் ரெண்டு துருவமா இருக்கு.. என்னத்த சொல்லுவேன் ? இவர் எங்கே காணும் ?
காலங்காத்தால தோட்டத்தை சுத்தப் போயிட்டாரா ?" என்றபடி கல்யாணி நகர்ந்தாள்.

சுமதி புன்னகையுடன் சத்தமாய் ஓடிக்கொண்டிருந்த மிக்சியை நிறுத்தினாள்.

..................................................

கடிகாரம் காலை பத்து மணியைக் காட்டியபோது கார்த்திக் மெதுவாக சமையலறைக்குள் மறுபடி
பூனை போல நுழைந்தான். கல்யாணியைக் காணவில்லை. சுமதி கத்திரிக்காயை நறுக்கிக் கொண்டு
இருந்தாள்.

"உஷ்... "

சுமதி தலையை நிமிர்த்தி புருவங்களால் என்ன என்று கேட்டாள்.

"அம்மா எங்கே ? "

"அத்தை வாசல்ல இருப்பா.. என்ன விஷயம் ?"

கார்த்திக் ஒரு தட்டை எடுத்துக் கொண்டான்.

"ஏய்.. சுமி.. எனக்கு வயித்துல என்ன்வோ செய்யறது. அதுனால இப்போ நீ என்ன செய்யறே அப்படின்னா
ரெண்டு கரண்டி சாதத்துல ரெண்டு கரண்டி ரசம் மட்டும் விட்டு என் கிட்டே கொடுத்துடணும். அதுக்கு
ஜஸ்ட் ஒரு சுட்ட அப்பளம் தொட்டுக்க இருந்தா போறும். அப்பாவும், மாதுவும் நிதானமா சாப்பிட வரதுக்குள்ள
என்னோட சிறுகுடலை பெருங்குடல் தின்னுடும்."

சுமதி தலையைக் கவிழ்ந்து கொண்டு சிரிப்பை மறைக்க முயன்றாள்.

கார்த்திக் கோபமாக முறைத்தான். "இப்ப எதுக்காக இப்படி இளிக்கிறே?" என்று அழுத்தமாகக் கேட்டு முடிக்குமுன்
கல்யாணி உள்ளே வந்தாள்.

"என்னடா இங்கே வந்து கத்திண்டிருக்கே ?"

சுமதி திரும்பிக் கொண்டு "அத்தை.. கார்த்தியோட சிறுகுடலை பெருங்குடல் தின்ன ஆரம்பிச்சுடுத்தாம்" என்றாள்.

கல்யாணி கண்களை விரித்து "பசிக்கறதா.. மாதவனுக்கு வச்சிருந்த இட்லியையும் உனக்கு சேர்த்து போட்டுட்டேன்.
அதுனால அவனுக்கு உப்புமா கிளறிக் கொடுத்தேன். இன்னிக்கும் ஆபீஸ் கூட கிடையாது. அதுக்குள்ளே
சாப்பாட்டுக் கடையை திறக்க வந்துட்டியா ? கொஞ்சம் பொறுத்துக்கோ.. எல்லாரும் சேர்ந்து சாப்பிடலாம்.
ஈஸ்வரா.... பெத்தது ரெண்டும்.... "

"அம்மா.. ஸ்டாப்..ஸ்டாப்... மிச்ச டயலாக் எல்லாம் நானே சொல்லிக்கறேன்" என்று கார்த்திக் வெளியே ஓட
சுமதி சமையல் மேடையில் சாய்ந்து கொண்டு சிரித்தாள்.

அவள் சிரிப்பதைப் பார்த்துக் கொண்டு கல்யாணி நிற்பதைப் பார்த்தவுடன் "என்ன அத்தை ? என்னாச்சு ?" என்றாள்

"ஒண்ணும் இல்லேம்மா... உன்னை பாக்கறப்போ உன் அம்மாவைப் பாக்கற மாதிரி இருக்கு"

சுமதி புன்னகையுடன் கல்யாணியை நெருங்கி "அதனால் என்ன அத்தை ? அம்மா இல்லாம போனா என்ன ?
நான் இருக்கேனே.. என்னிக்கும் உங்களுடன் இருப்பேன்"

கல்யாணி புடவைத் தலைப்பால் முகத்தைத் துடைத்துக் கொண்டு "மாதவனுக்கு பச்சடி போறும். இந்த சின்னக்
கடங்காரனுக்கு புடலங்காய் கூட்டு வேணுமாம். நேத்திக்கே சொல்லிட்டான். கத்திரிக்காயை வதக்கிட்டு
அதையும் நான் செஞ்சுடறேன். நீ மிஷின்ல போட்ட துணியை எல்லாம் கொண்டு போய் உலர்த்திட்டு
வந்துடு.."

"சரி அத்தை"

சுமதி போவதைப் பார்த்தபடி கல்யாணி நின்று கொண்டிருந்தாள்.

.................................................. ............................

crazy
30th April 2007, 10:21 PM
8-)

madhu
1st May 2007, 04:48 AM
vaasi..

idhellam characterisation... appdithAn irukkum :P

Priyankak
31st May 2007, 09:25 PM
:shock: avlo thaana story? :evil:

madhu
7th June 2007, 10:42 AM
:shock: avlo thaana story? :evil:

wow !

padikkaravanga irukkAngaLA ? :shock:

appO continue seyya vENdiyathuthAn ! :cool:`

madhu
28th January 2008, 07:36 PM
" ஒரு கதை நாடகமாக்கப் படுகிறது " :redjump:

Shakthiprabha.
28th January 2008, 07:43 PM
:D

pavalamani pragasam
28th January 2008, 08:06 PM
paravaayilla! enakku innum njaapaga sakthi konjamaavathu micham irukku! :lol:
thambi kathai sollum paaNiyE vegu jOr! ippo piLLaiyaar pidikka kurangaakaamal irukkaNumE! :shaking: Too many hands spoil the broth enbathai eppadi poyyaakkapOkiROm? :sigh2:

Shakthiprabha.
28th January 2008, 08:09 PM
paravaayilla! enakku innum njaapaga sakthi konjamaavathu micham irukku! :lol:
thambi kathai sollum paaNiyE vegu jOr! ippo piLLaiyaar pidikka kurangaakaamal irukkaNumE! :shaking: Too many hands spoil the broth enbathai eppadi poyyaakkapOkiROm? :sigh2:

sathyama kathai kandal thaan :shaking:
onnum seyya mudiyathu, since script is left to the imagination of all

madhu
28th January 2008, 08:28 PM
indha kadhaiyai naan ungaLukku thathu koduthuttEn :P

priya32
28th January 2008, 08:32 PM
உருப்படாத தத்துப் பிள்ளையாக வளர்க்க எங்களுக்கு பரிபூரண சம்மதம்! :P

madhu
28th January 2008, 08:34 PM
உங்கள் கையில் பிள்ளை.. உங்களுக்கே அடைக்கலம் :cry2: