PDA

View Full Version : Vairamuthu badhilkaL in kumudham...



app_engine
5th May 2007, 12:21 AM
http://www.kumudam.com/magazine/Kumudam/2007-05-09/pg8.php

இந்தப்பகுதியைப்படித்து வருபவர்களின் கருத்துக்களுக்காக...

மிக அழகாக எழுதுகிறார்...துடைப்பம் (அது தாங்க வெளக்கமாறு) பற்றிய அவரது பதில் அருமை...

app_engine
5th May 2007, 12:26 AM
OK, this issue has more relevance to TFM...look at his nice comparison of KJY & SPB...
http://www.kumudam.com/magazine/Kumudam/2007-05-02/pg10.php

tfmlover
26th October 2007, 09:09 AM
[tscii:e4499bd94b]கவிஞர் வைரமுத்து பதில்கள்

உங்கள் பார்வையில் டி.எம்.எஸ்.?

கடந்த அரை நூற்றாண்டு காலமாகத் தமிழ்நாட்டுக் கலை இலக்கிய அரசியலில் தவிர்க்க முடியாத குரல்! வெண்கலத் தாம்பாளத்தில் தங்கப்பழம் வைத்துத் தந்ததுமாதிரி தன் வெண்கலக்குரலில் தங்கத்தமிழ் கொடுத்தவர் டி.எம்.எஸ். இத்தனைக்கும் அவர் தாய் மொழி தமிழ் இல்லை.

மதுரையை ஆண்ட திருமலைநாயக்க மன்னருக்குப் பட்டு அங்கவஸ்திரம் அணிந்து கொள்வதில் மட்டுப்படாத ஆசை. அதனால் பட்டு நெசவு செய்யும் தேர்ந்த குடும்பங்களைக் கூர்ஜரத்திலிருந்து (குஜராத்) கொண்டு வந்து கோயிலைச் சுற்றிக் குடியமர்த்தினார்.

அவர்கள் சௌராஷ்ட்ர சமூகத்துப் பெருமக்கள். அப்படிப் பட்டுநெசவு செய்யும் கூட்டத்திலிருந்து பாட்டு நெசவு செய்ய வந்தவர் டி.எம்.எஸ்.

அன்று கொடிகட்டிப் பறந்த தியாகராஜ பாகவதரின் தீவிர பக்தர் சௌந்தரராஜன். அவரது தொடக்ககாலப் பாடல்களில் தியாகராஜபாகவதர் பாணியை விட்டு முற்றும் விடுதலையாக முடியவில்லை அவரால். ‘தூக்கு தூக்கி’, ‘மந்திரிகுமாரி’ _ ‘மலைக்கள்ளன்’ _ ‘மதுரை வீரன்’ வரைக்கும் பாகவதரின் நகலாகவே பாடினார் டி.எம்.எஸ். அதில் வியப்புமில்லை; பிழையுமில்லை. தியாகராஜ பாகவதரைப் போல முன் நெற்றியில் முடி ஏறி இருக்க வேண்டும் என்பதற்காக அந்தக்கால ரசிகர்கள் சுவரில் உரசித் தலையைத் தேய்ப்பார்களாம். பாகவதரைப் போலப் பாடவேண்டுமென்று தன் இயல்பான கம்பீரக்குரலில் மூக்கொலி கலந்து பாடிய டி.எம்.எஸ். ஐம்பதுகளின் இறுதியில் அதிலிருந்து விடுபட்ட போது அசல் டி.எம்.எஸ். அவதரித்தார்.

எம்.ஜி.ஆர். _ சிவாஜி என்ற இரு துருவ நட்சத்திரங்களுக்கும் தன் குரலை அவர் பொருத்திக் காட்டியபோது இவரும் ஒரு நட்சத்திரமானார்.

மனிதக்கூட்டம் கடந்துபோகும் சகல உணர்ச்சிகளின் மீதும் டி.எம்.எஸ்.ஸின் அடர்ந்த குரல் ஆளுமை செய்திருக்கிறது.

‘பாவாடை தாவணியில் பார்த்த உருவமா’ இப்போது கேட்டாலும் மனசு பதினாறு வயது நோக்கிப் பயணம் போகிறது. ‘அச்சம் என்பது மடமையடா’ போருக்குப் போ மகனே என்று புலன்களைத் திருகிவிடுகிறது. ‘உள்ளம் என்பது ஆமை _ மயக்கம் எனது தாயகம் _ அண்ணன் காட்டிய வழியம்மா _ போன்ற பாடல்களில் தண்ணீரில் மிதக்கும் தாமரைகளைப் போல டி.எம்.எஸ்.ஸின் கண்ணீரில் மிதக்கின்றன வார்த்தைகள். ‘உலகம் பிறந்தது எனக்காக’ நலிந்த மனதுக்கு நம்பிக்கையூட்டுகிறது.

ஆரபி _ கானடா _ சாருகேசி மோகனம், கல்யாணி, சிந்துபைரவி போன்ற ராகங்களை உழைக்கும் மக்களின் வயல்வெளிக்கு அழைத்துச் சென்றது அவர் குரல்.

தமிழில் அரைமாத்திரைகூட தேயாத உச்சரிப்பு _ நடிகர்களின் பாவனைக்கு ஏதுவாக ஏற்பாடு செய்து கொடுக்கும் பாவம் _ தனக்குள்ளிருக்கும் நடிகனைக் குரலுக்குள் கொண்டுவரும் ரசவாதம் _ நடிகர்களின் உடலுக்கும் முகத்துக்கும் ஏற்பத் தன் குரலின் அலைவரிசையை மாற்றிக் கொள்ளும் அற்புதம் _ இப்படிச் சொல்லிக் கொண்டே போகலாம்.

உலகியல் அறியாத குழந்தை அவர் என்பதால் அவரைக் கண்டு சற்றே ஒதுங்குதல் சரியாகாது.

இப்படியரு கலைஞன் அமைவது மீண்டும் அரிது. காது படைத்தவர்களே! வாழும்போதே கொண்டாடுங்கள் அந்த ஆலய மணிக்குரல் நாயகனை ![/tscii:e4499bd94b]

R.Latha
12th February 2008, 08:46 AM
திரையுலகில் நீங்கள் எதிர்கொண்ட பெரிய சவால்கள் என்னென்ன?
மூடநம்பிக்கையும், சினிமாவின் ராசிபலன்களும் தொடக்க ஆண்டுகளில் ஒரு படத்துக்கு ஒரு பாட்டு இரண்டு பாட்டுகள் என்று எழுதி வந்த நாள் முழுப்பாடல்கள் எழுதும் வாய்ப்பைப் பெற்றேன்."புதுக்கவிதை அம்மா= நினைவெல்லாம் நித்யா' என்று நான் மொத்தப் பாடல்கள் எழுதிய மூன்று படங்களும் எதிர்பார்த்த வெற்றியை எட்டவில்லை. உடனே வைரமுத்து முழுப்பாட்டு எழுதினால் அந்தப் படம் ஓடாது என்று திரையுலகெங்கும் ஒரு செய்தி விஷயம் போல் பரப்பப்பட்டது. படபடவென்று எனக்குப் பாடல்கள் குறைந்து போயின. சில ஆண்டுகளில் இடைவெளிக்குப் பிறகு "முதல் மரியாதை, சிந்துபைரவி, பூவே பூச்சூடவா' என்று மூன்று படங்களுக்கும் முழுப்பாடல்கள் எழுதினேன். மூன்ற படங்களும் பெருவெற்றி கண்டன. உடனே வைரமுத்து முழுப்பாடல்கள் எழுதினால்தான் படங்கள் ஓடும் என்று இன்னொரு மூடநம்பிக்கை பரப்பப்பட்டது. முந்தைய படங்களின் தோல்விக்கும், நான் காரணமல்ல, பிந்தைய படங்களின் வெற்றிக்கும் நான் காரணம் அல்ல என்பது எனக்குத்தானே தெரியும்
--
Paarkadal finished. Arumayana thodar.

Sanjeevi
12th February 2008, 11:34 AM
I like VM's Answers and somehow I feel it is better than Hi Mathan's Answers

R.Latha
12th February 2008, 03:46 PM
[tscii:dc2eaa8e70]பாடல் ஒலிப்பதிவில் உங்களால் மறக்க முடியாத ஒரு சம்பவம்?

1981. ‘பாலைவனச்சோலை’ படத்தின் பாடல் பதிவு மாலை 6 மணிக்கு. அரசினர் தோட்டத்தில் அமைந்திருந்த ஆட்சிமொழி ஆணையத்தில் அப்போது நான் அரசு ஊழியன். அலுவலகம் முடிந்து, கலைவாணர் அரங்கம் பேருந்து நிறுத்தத்தில் 25பி பிடித்து ஒலிப்பதிவுக்குப் பயணமாகிறேன். பேருந்து வள்ளுவர் கோட்டத்தைத் தொட்டுக் கொண்டிருந்தபோது காற்றில் கரைந்து வருகிறது கண்ணதாசன் பாடல் ஒன்று. ‘நட்சத்திரம்’ படத்தில் ‘அவள் ஒரு மேனகை’ என்ற பாட்டில் _ ‘தாமரைப் பூவின் சூரியதாகம்’ என்ற வரி காதில் நுழைந்து என் இதயத்தை அறைகிறது.

எந்தப் பாடலின் ஒலிப்பதிவுக்காக ஓடிக்கொண்டிருக்கிறேனோ அந்த ‘மேகமே மேகமே’ பாடலில் அது போன்றதொரு வரியை நானும் எழுதியிருக்கிறேன்.

‘‘பாவையின் ராகம் சோகங்களோ?

தாமரைப் பூவின் தாகங்களோ?’’

_என்பது நான் எழுதியிருந்த வரி. ‘பகீர்’ என்றது; கண்ணதாசனின் காப்பி என்றல்லவா என்னைச் சொல்வார்கள்?

வள்ளுவர் கோட்டத்தில் பேருந்தைவிட்டு சிக்னலில் குதித்தேன். ஆபத்துக்கு உதவும் ஆட்டோ பிடித்தேன். ‘விரைந்து செல்லப்பா’. இதயம் படபடத்தது. ஒலிப்பதிவு முடிந்திருக்கக் கூடாதே. சென்றுசேரும் நேரத்திற்கு மாற்றுவரி ஒன்றை எழுதியாக வேண்டுமே. வடபழனி கோயிலைத் தாண்டும்போது சட்டென்று மின்னி விழுந்தது ஒரு வரி.

‘‘பாவையின் ராகம் சோகங்களோ?

நீரலை போடும் கோலங்களோ?’’

ஏவி.எம்.மின் ஒலிப்பதிவுக் கூடக் கதவுகளை ஓசையோடு திறந்துகொண்டு ஓடிநுழைந்தபோது பல்லவியை மட்டும் பாடி முடித்திருந்தார் வாணி ஜெயராம். நல்லவேளை; திருத்தம் சரணத்தில்தான். சங்கர் கணேஷை வேண்டி, ஒலிப்பதிவை நிறுத்தி உள்ளே ஓடிச்சென்று வாணிஜெயராமின் பாட்டுப்பிரதியில் வரியை மாற்றிய பிறகுதான் இருந்த இடத்திற்குத் திரும்பி வந்தது இருதயம். அந்தப் பாடலைக் கேட்கும்போதெல்லாம் நான் பட்ட சிரமம் மீண்டும் வந்து சிரித்துவிட்டுப் போகும்.
[/tscii:dc2eaa8e70]

R.Latha
12th February 2008, 03:49 PM
[tscii:6e9dc750c9]
பெரியதிரைப் பாடல்களை விட சின்னத்திரைப் பாடல்கள் பல நேரங்களில் அழுத்தமாய் இருப்பது ஏன்?

கதை.

கேளிக்கையைப் புறந்தள்ளிக் கருத்து பெறும் முன்னுரிமை.

பாடலின் உள்ளடக்கத்தைத் தீர்மானித்துக் கொள்ள கவிஞனுக்குள்ள சுதந்திரம்.

சாய்மீராவின் ‘சிம்ரன் சின்னத்திரை’க்காக நேற்றொரு பாடல் எழுதினேன்.

‘‘மாறும் யுகங்கள் மாறுகின்றன

மாறிடு பெண்ணே மாறிவிடு

உடையும் பிம்பங்கள் உடைகின்றன

உன்னை நீயும் மாற்றிவிடு!

சிற்றுண்டி செய்தவளும் பெண்தான் _ இன்று

செயற்கைக் கோள் செய்பவளும் பெண்தான்

அரசமரம் சுற்றியதும் பெண்தான் _ இன்று

அண்டவெளி சுற்றுவதும் பெண்தான்’’

என்று தொடங்குகிறது பாடல்

“ஆண்மகன் ஒருவன் கல்விகொண்டால் அது

அவனுக்கான தனியுடைமை

பெண்மகள் ஒருத்தி கல்விகொண்டால் அது

பெற்றவர்க்கெல்லாம் பொதுவுடைமை’’

_என்று வளர்கிறது.

இன்னொன்று, சின்னத்திரையில் பெரும்பாலும் மெட்டுக்கு எழுதுவதில்லை; எழுதித்தந்தே இசையமைக்கச் சொல்கிறேன். கனத்திற்கு, அதுவும் ஒரு காரணமாகலாம்.[/tscii:6e9dc750c9]

Sanjeevi
12th February 2008, 03:54 PM
[tscii:2a012aaf34]
பெரியதிரைப் பாடல்களை விட சின்னத்திரைப் பாடல்கள் பல நேரங்களில் அழுத்தமாய் இருப்பது ஏன்?

கதை.

கேளிக்கையைப் புறந்தள்ளிக் கருத்து பெறும் முன்னுரிமை.

பாடலின் உள்ளடக்கத்தைத் தீர்மானித்துக் கொள்ள கவிஞனுக்குள்ள சுதந்திரம்.

சாய்மீராவின் ‘சிம்ரன் சின்னத்திரை’க்காக நேற்றொரு பாடல் எழுதினேன்.

‘‘மாறும் யுகங்கள் மாறுகின்றன

மாறிடு பெண்ணே மாறிவிடு

உடையும் பிம்பங்கள் உடைகின்றன

உன்னை நீயும் மாற்றிவிடு!

சிற்றுண்டி செய்தவளும் பெண்தான் _ இன்று

செயற்கைக் கோள் செய்பவளும் பெண்தான்

அரசமரம் சுற்றியதும் பெண்தான் _ இன்று

அண்டவெளி சுற்றுவதும் பெண்தான்’’

என்று தொடங்குகிறது பாடல்

“ஆண்மகன் ஒருவன் கல்விகொண்டால் அது

அவனுக்கான தனியுடைமை

பெண்மகள் ஒருத்தி கல்விகொண்டால் அது

பெற்றவர்க்கெல்லாம் பொதுவுடைமை’’

_என்று வளர்கிறது.

இன்னொன்று, சின்னத்திரையில் பெரும்பாலும் மெட்டுக்கு எழுதுவதில்லை; எழுதித்தந்தே இசையமைக்கச் சொல்கிறேன். கனத்திற்கு, அதுவும் ஒரு காரணமாகலாம்.[/tscii:2a012aaf34]

:banghead:

கேள்வியும் பதிலும்

Shakthiprabha.
12th February 2008, 04:06 PM
[tscii:d23d8e5bdf]


‘‘பாவையின் ராகம் சோகங்களோ?

நீரலை போடும் கோலங்களோ?’’

ஏவி.எம்.மின் ஒலிப்பதிவுக் கூடக் கதவுகளை ஓசையோடு திறந்துகொண்டு ஓடிநுழைந்தபோது பல்லவியை மட்டும் பாடி முடித்திருந்தார் வாணி ஜெயராம். நல்லவேளை; திருத்தம் சரணத்தில்தான். சங்கர் கணேஷை வேண்டி, ஒலிப்பதிவை நிறுத்தி உள்ளே ஓடிச்சென்று வாணிஜெயராமின் பாட்டுப்பிரதியில் வரியை மாற்றிய பிறகுதான் இருந்த இடத்திற்குத் திரும்பி வந்தது இருதயம். அந்தப் பாடலைக் கேட்கும்போதெல்லாம் நான் பட்ட சிரமம் மீண்டும் வந்து சிரித்துவிட்டுப் போகும்.
[/tscii:d23d8e5bdf]

சில நேரங்களில் சொந்த கற்பனைகள் கூட, இன்னொருத்தரின் சாயலில் இருந்து விடக்கூடாது என்பதில் கவனம் வேண்டியிருக்கிறது, பிரபலங்களுக்கு!

:)