PDA

View Full Version : thaRkkaala thamizh ilakkiyam



rajasaranam
24th January 2008, 06:05 PM
ஏண் இங்கு தற்க்கால தமிழ் இலக்கியம் குறித்து யாரும் விவாதிப்பதில்லை? எல்லாம் பழந்தமிழ் இலக்கியம் பற்றிய திரிகளாகவே உள்ளது. :(

rajasaranam
24th January 2008, 06:10 PM
தமிழில் தலைப்பு மற்றும் கேள்விகள் கூட நம்மால் இனையத்தில் புகுத்த முடியவில்லை என்றால், தமிழின் நிலை குறித்து நாம் கவலைபட்டே ஆக வேண்டும் போல் உள்ளது. :evil: :evil: :evil:

திரியின் தலைப்பு :
தற்க்கால தமிழ் இலக்கியம்

கேள்வி:
தற்க்கால தமிழ் இலக்கிய போக்கு எப்படி உள்ளது ?

பதில்கள்:
வள்ர்ச்சியடைந்துள்ளது
ஒன்றும் புரியவில்லை
வீழ்ச்சியடைந்துள்ளது

RR
25th January 2008, 07:54 AM
தமிழில் தலைப்பு மற்றும் கேள்விகள் கூட நம்மால் இனையத்தில் புகுத்த முடியவில்லை என்றால், தமிழின் நிலை குறித்து நாம் கவலைபட்டே ஆக வேண்டும் போல் உள்ளது.
Interesting logic there. I wish you took into account people's current-day tamil spellings and missing otru's, also as factors for state of tamil today. :)

To answer you question, unicode is not supported in titles not because of it cant be done, but rather to allow wide readability of topic list on all browsers by everyone. I've edited your poll. Pm me for any questions on such technical support.

pavalamani pragasam
25th January 2008, 08:32 AM
தரமான தனி நாவல்கள், கதைகள், கட்டுரைகள்,காரசாரமான விவாதங்கள், சுவையான அலசல்கள், பட்டிமன்றங்கள் இவையெல்லாம் எல்லா ஊடகங்களிலும் இணையதளங்களும் அருமையாக, ஆரோக்கியமாக பெருகியுள்ளன. மொழியின் புது பரிமானங்கள் அரங்கேறுகின்றன. ஆனால் வெகுஜன சஞ்சிகைகளின் சில கவர்ச்சியான வார்த்தை பிரயோகங்கள் அழகாயில்லை- என் கருத்தில், நாகரிகத்தின் எல்லைகள் மீறப்படுவதால். திரைப்பட பாடல்கள் இலக்கியமா என்று சந்தெகம் இன்றைய காலகட்டத்தில் எழும்புகிறது-வியக்கத்தக்க கற்பனைகளும், அருவருப்பான,அபத்தமான குப்பைகளும் கலந்து கிடக்கின்றன அவற்றிலே-இவ்வளவு ஆங்கில கலப்பும் அவசியமா என்றும் தோன்றுகிறது.சிறுபிள்ளைதனமாக, கோணங்கிதனமாக எழுத்தப்படுவதெல்லாம், மேடையில் முழங்கப்படுவதெல்லாம் கூட இலக்கியமாக சித்தரிக்கப்படும் அவலமும் காணப்படுகிறது. உமியை பிரித்து ஊதிவிட்டு அவலை மெல்ல வேண்டியுள்ளது.

rajasaranam
25th January 2008, 12:08 PM
தமிழில் தலைப்பு மற்றும் கேள்விகள் கூட நம்மால் இனையத்தில் புகுத்த முடியவில்லை என்றால், தமிழின் நிலை குறித்து நாம் கவலைபட்டே ஆக வேண்டும் போல் உள்ளது.
Interesting logic there. I wish you took into account people's current-day tamil spellings and missing otru's, also as factors for state of tamil today. :)

To answer you question, unicode is not supported in titles not because of it cant be done, but rather to allow wide readability of topic list on all browsers by everyone. I've edited your poll. Pm me for any questions on such technical support.

Thanks for the support :) Ok Agreed about readability part but this being a Tamil Literary section, I hope People having a comprehensive knowledge about Tamil writint/reading will only frequent here. So what will be the problem if topics here are in Tamil Fonts ???

Otru pizhai and spelling are truly a matter of concern.
But people like me who didnt have formal Schooling In Tamil (Studied Hindi & English in KV) should be excused, if any mistakes are found 8-)

app_engine
26th January 2008, 07:09 PM
ஆங்கிலக்கலப்புக்கு இவ்வளவு கவலைப்படுகிறீர்களே, அதற்கும் வடமொழிக்கலப்புக்கும் அப்படியென்ன வேற்றுமை?

எடுத்துக்காட்டாக, இலக்கியம் என்பதே வடமொழிச்சொல் தான் என்பதாக ரா.பி.சேதுப்பிள்ளை எழுதி இருக்கிறார்:-) (லக்ஷ்மி = இலக்குமி, லக்ஷ்யம் = இலக்கியம், லக்ஷணம் = இலக்கணம். குறிக்கோள் / நோக்கம் என்பதே இலக்கியத்தின் தமிழ்ச்சொல்; எத்தனை நூல்கள் இன்று உயர்ந்த குறிக்கோளுடன் உள்ளன?)

pavalamani pragasam
26th January 2008, 07:59 PM
வடமொழி கலப்பு சதவீதத்தைவிட ஆங்கில கலப்பு அதிக சதவீதம் ஆவது போல் தோன்றுவதே கவலைக்கான காரணம்! தமிழ் எழுத படிக்க தெரியாதோர் தொகை அதிகரித்துக்கொண்டே போகும் நிலையில் தமிழ் என்று அறியப்படும் மொழியில் பாதி அளவாவது தமிழாய் இருக்க வேண்டுமே என்பது என் ஆதங்கம். போலி நாகரிக உணர்வால் ஆங்கில கலப்படம் செய்வதை கண்டிக்காமல் இருக்கமுடியவில்லை!

Sudhaama
27th January 2008, 05:25 AM
ஏண் இங்கு தற்க்கால தமிழ் இலக்கியம் குறித்து யாரும் விவாதிப்பதில்லை? எல்லாம் பழந்தமிழ் இலக்கியம் பற்றிய திரிகளாகவே உள்ளது. :(

.
தமிழ் இலக்கியம்.. என்பது என்றைக்கும் இலக்கியம் தான். இதில் பழையது என்ன?... புதியது என்ன.?

சந்திரனில் பழைய சந்திரன், புதிய சந்திரன்.. என்று ஏதாவது சிந்தனை உள்ளதா.? என்றைக்கும் புதுமை தானே.?

முருகன் என்றும் புதியவன் என்று ஔவை கூறினாளே... அது போல.

அதே போல... ஐம்பெரும் காப்பியங்கள், கம்ப-ராமாயணம், வில்லி பாரதம், நள-வெண்பா போன்ற தரமான உயர் தமிழ் இலக்கியங்கள் யாவுமே...

...என்றைக்கும் அன்றலர்ந்த தாமரை போன்றவையே

இவ்வாறு நான் சொல்வதால்... தற்கால இலக்கியத்தை பழிப்பதாக பொருள் செய்யலாகாது.

தற்கால இலக்கியம் பற்றி சொல்ல வேண்டியவை ஏதேனும் இருந்தால்... தாராளமாக கூறலாமே.

அதை விடுத்து... பழையது புதியது என்று பாகம் பிரித்து எல்லைக்கோடு போடுவது ஏனோ.?
.

app_engine
27th January 2008, 07:33 PM
என் கருத்து அதற்கு மாறானது. மாற்று மொழிகள் கலக்க அனுமதிக்கும்போது தான் ஒரு மொழி உயிர் வாழும்:-) (ஆங்கிலம் போல், தமிழ் போல்)...காலத்துக்கேற்ப உரு மாறாவிட்டால் தான் மொழி சாகும்:-) மொழி மக்களுக்காகத்தான் - மொழிக்காக மக்கள் இல்லை! மக்களுக்கு அன்றாடம் பயனில்லா மொழி எளிதில் இறந்து போகும்!

pavalamani pragasam
27th January 2008, 08:10 PM
மாற்றம், உருமாற்றம் அவசியமானதே! தேவையில்லாமல் கனியிருப்ப காய் கவர்தலும் தமிழ் கொலையும் கணிடிக்கதக்கது! மாற்றுச்சொல் இல்லாத போது எளிமையான புரிதலுக்காக என்கிற சந்தர்ப்பங்களை தாண்டி கலப்படம் போலி நாகரிக மோகத்தால் நடப்பதை மறுக்க முடியுமா?

P_R
27th January 2008, 11:31 PM
ஏண் இங்கு தற்க்கால தமிழ் இலக்கியம் குறித்து யாரும் விவாதிப்பதில்லை? எல்லாம் பழந்தமிழ் இலக்கியம் பற்றிய திரிகளாகவே உள்ளது. :( பல காரணங்கள். காலத்தின் முத்திரை ஒரு வித தர முத்திரையாக ஏற்பதால் படிக்கும் சொற்பத்தை பழந்தமிழ் இலக்கியத்தோடு நிறுத்தியிருக்கலாம்.

இன்னோரு காரணம் ஒரு வித அபாயச்சுழல்: பரிச்சயமின்மை. அநேகம் பேருக்கு - என்னையும் சேர்த்தே சொல்கிறேன் - பாரதியோடு வாசிப்பு நின்றிருக்கலாம். அதையும் தாண்டி ஒன்றிரண்டு வாசித்திருந்தாலும் விவாதிக்கும் அளவுக்கு பரிச்சயம் இல்லாமல் இருக்கலாம். அதனாலேயே இது அதிகம் பேசப்பட, விவாதிக்கப்பட வேண்டிய ஒரு விஷயம்.

நீங்களே துவங்குங்களேன். சமீபத்தில் வெளிவந்ததில், நீங்கள் விரும்பிப் படித்த நாவல் பற்றி எழுதுங்களேன்.

app_engine
28th January 2008, 09:27 PM
>>கலப்படம் போலி நாகரிக மோகத்தால் நடப்பதை மறுக்க முடியுமா?<<

மறுக்க முடியாது:-) அது கண்டிக்கப்படத்தக்கது தான். என்ற போதிலும் அது நிலைக்காது என்பது என் கருத்து.

சில வரலாற்று உண்மைகள்:
-முற்காலங்களில் மணிப்பிரவாளம் தான் "பெருங்குடிகள்" என அடையாளங்காட்டியது, இப்போது இல்லை. மறைமலையடிகள், திரு வி க போல் பலர் இதற்குக்காரணர்.
-ஹிந்திப்பாட்டுக்கேட்பது தான் நவீன அடையாளம், அதாவது 70களில். ராசா வந்து அதை ஓட ஓட விரட்டினார்

அது போல் காலந்தோறும் தமிழ் காக்க ஆட்கள் வருவர்:-)

pavalamani pragasam
28th January 2008, 10:49 PM
தங்கள் நல்வாக்கு பலிக்கக் கடவ!

Sudhaama
28th January 2008, 11:52 PM
..Thisai maarhum Parhavaiyaa.?


>>கலப்படம் போலி நாகரிக மோகத்தால் நடப்பதை மறுக்க முடியுமா?<<

மறுக்க முடியாது:-) அது கண்டிக்கப்படத்தக்கது தான். என்ற போதிலும் அது நிலைக்காது என்பது என் கருத்து.

சில வரலாற்று உண்மைகள்:
-முற்காலங்களில் மணிப்பிரவாளம் தான் "பெருங்குடிகள்" என அடையாளங்காட்டியது, இப்போது இல்லை. மறைமலையடிகள், திரு வி க போல் பலர் இதற்குக்காரணர்.
-ஹிந்திப்பாட்டுக்கேட்பது தான் நவீன அடையாளம், அதாவது 70களில். ராசா வந்து அதை ஓட ஓட விரட்டினார்

அது போல் காலந்தோறும் தமிழ் காக்க ஆட்கள் வருவர்:-)

என் இனிய அன்பர்களே.!

இந்த இழையில்.. தற்கால இலக்கியம் பற்றி மட்டுமே உரையாடாலாமே.

எடுத்துக்கொண்ட தலப்புக்கு சிறிதும் தொடர்பு இல்லாது... உரையாடல் வேறெங்கோ திசை மாறிப்போய்க்கொண்டிருக்கிறதே.!

எனினும் உரிய இழையில்... Surivival & Advancement of Tamil Language.

இதோ விடை அளித்திருக்கிறேன்...

- MANHI PRAVAALHAM Tamil.. Background
http://forumhub.mayyam.com/hub/viewtopic.php?p=1266325#1266325.

மேலும் இது குறிந்து அங்கே உரையாட அழைக்கிறேன்.
.

app_engine
29th January 2008, 12:24 AM
தட மாற்றத்துக்கு மன்னிக்கவும்:-)

தற்கால நூல்கள் பற்றி அவற்றை வாசிப்பவர்கள் எழுதினால் நல்லது. அவற்றிலிருந்து இணைப்பு விட்டுப்போயிருக்கும் "புலம் பெயர்ந்த தமிழருக்கு" மீண்டும் ஆவல் உண்டாகலாம். வாசிப்போர் யார் இங்கு உள்ளனர்?

Sudhaama
29th January 2008, 01:15 AM
.

தட மாற்றத்துக்கு மன்னிக்கவும்:-)

தற்கால நூல்கள் பற்றி அவற்றை வாசிப்பவர்கள் எழுதினால் நல்லது. அவற்றிலிருந்து இணைப்பு விட்டுப்போயிருக்கும் "புலம் பெயர்ந்த தமிழருக்கு" மீண்டும் ஆவல் உண்டாகலாம். வாசிப்போர் யார் இங்கு உள்ளனர்?

.
என் கேள்வி ஒன்றே ஒன்று தான்.

இந்த இழையின் தலைப்பு என்ன? நீங்கள் விவாதிப்பது என்ன.? ஏதாவது தொடர்பு உள்ளதா.?

துவக்க தேர்தல்- பட்டியும் தமிழின் தற்கால இலக்கிய- தரம் பற்றியே கேள்வி கேட்கிறது.!

இது நமக்கு தேவையற்ற குழப்பம் அல்லவோ.?

நீங்கள் எல்லோரும் எதை பற்றி வேண்டுமானாலும் உரையாடுங்கள். உங்கள் விருப்பம் போல... வரவேற்கிறேன்.

அதாவது... தலைப்பிற்கு ஏற்றபடி... தற்கால தமிழ் இலக்கியம் பற்றி...

..நீங்கள் எவருமோ அல்லது மற்றவர்களோ ஏதாவது கூற வேண்டியிருந்தால் கூறுங்கள்... இங்கே.

மாறாக தற்போது மாறியுள்ள திசையானால்...

...இதோ ஏற்கனவே அந்த இழை இருக்கிறது...

அங்கே உங்கள் கருத்துக்களை அந்த இழை சம்பந்தப்பட்ட வகையிலே... கூறுங்கள்.

ஆனால் "கிளி" என்று தலைப்பிட்டு "மயிலை" காட்டாதீர்.

. கிளியா.? மயிலா.?
.

P_R
27th February 2008, 12:42 PM
இத்திரியில் நாம் சமீபத்தில் சாசித்த நூல்களைப் பற்றி உரையாடலாம். (Like the "What's your latest read" thread in the English Lit. forum)

P_R
27th February 2008, 01:15 PM
சுஜாதாவில் 'கடவுள்' கட்டுரைத் தொகுப்பு.

'கடவுள்' என்ற கான்செப்டை (இதற்கு தமிழ்சொல் என்ன ?) வரலாறு,மதம், இலக்கியம், இயற்பியல் என்ற பல கோணங்களில் இருந்து அலசி எழுதப்பட்ட கட்டுரைகள்.

80-90 களில் (சுஜாதாவின் பொற்காலம் ?) பல பத்திரிக்கைகளில் எழுதியவற்றின் தொகுப்பு. புரிவதற்கு கடினமானவற்றைக் கூட அணுகமுடியுமாறு எழுதப்பட்ட கட்டுர்ரைகள். வெவ்வேறு தொடர்களின் தொகுப்பு என்பது நன்றாகத் தெரிவது ஒரு குறை (திரும்பத் திரும்ப சொல்லப்பட்ட தகவல்கள், பாசுரங்கள்).

அப்பித்திரிக்கையின் சராசரி வாசகன் யார் என்பதை வைத்துக்கொண்டு எழுதுப்பட்டிருக்கிறது. சிலவற்றில் வெறும் தகவற்குவியல், சிலவற்றில் வியப்பான கேள்விகள், சற்று ஆழமான ஆராய்ச்சி, வாசகன் மீது எப்போதும் ஒரு கண்:

இதற்கு மேல் எழுதினால் மூடிவைத்துவிட்டு பெப்ஸி உங்கள் சாய்ஸ் பார்க்க சென்றுவிடுவீர்கள் :D

அதிகம் தலைமுடி உள்ளவர்கள் இக்கேள்வி பற்றி மேலும் யோசிக்கலாம் :lol:

கடினமானவற்றை விளக்கும்போதுகூட குன்றாத மொழிச்சரளத்துக்காகவே இதைப் படிக்கலாம்.

joe
27th February 2008, 02:39 PM
தமிழில் வாசிக்கும் பழக்கம் அதிகமாக இருப்பினும் நான் வாசிப்பது பெரும் பாலும் வரலாறு ,அரசியல் ,சமூகம் சார்ந்த கட்டுரைகள் தான் . நாவல்கள் வாசிக்கும் பழக்கம் அதிகம் இல்லை ..அதையும் மீறி சில நாவல்கள் என்னைக் கவர்ந்திருக்கின்றன.

கடைசியாக என்னை கவர்ந்த நாவல் சில ஆண்டுகளுக்கு முன் வெளிவந்து பரவலான வரவேற்பை பெற்று தமிழக அரசின் பரிசைப் பெற்ற திரு .ஜோ டி குரூஸ் எழுதிய 'ஆழி சூழ் உலகு' என்ற நாவல்.

தென் தமிழகத்தின் பரதவ (மீனவ) இன மக்களின் வாழ்க்கை பின்புலத்தை வைத்து அந்த இனத்திலேயே பிறந்த ஒருவரால் எழுதப்பட்ட நாவல்.

அதைப்பற்றிய என் நூல் அறிமுகத்தை இங்கு காணலாம்.

http://cdjm.blogspot.com/2006/02/blog-post_22.html

குறிப்பு : சிங்கையில் இருப்பவர்களுக்கு ,இந்த நூல் மத்திய நூலகத்தில் கடனுக்கு கிடைக்கும்

P_R
29th February 2008, 10:08 PM
அறிமுகத்துக்கு நன்றி ஜோ.

உங்கள் ப்ளாகில் பலர் சொன்னது போல, இந்த உலகத்தைப் பற்றிய வண்ணநிலவனின் "கடல்புரத்தில்" முக்கியமான நாவலாகக் கருதப்படும் ஒன்று. அந்த வண்ணநிலவன் தான் துக்ளக்'கில் துர்வாசர் என்ற பெயரில் எழுதுபவர் என்று நம்புவது மிக மிக கஷ்டம் ! அந்நாவலில் உங்கள் வட்டார வழக்கு அதிகம் இருந்ததாக ஞாபகம் இல்லை. சிரமப்படாமல் வாசித்ததாக ஞாபகம் :P

புத்தம் வீடு என்றொரு நாவல் - எழுத்தாளர்: ஹெப்சிபா ஜேசுதாசன். அதில் (கிட்டத்தட்ட) இந்த பேச்சுவழக்கு வரும். இதுவரை அதைப் படித்ததில்லையென்றால், நிச்சயம் அதை பரிந்துரைப்பேன்.

(ஜெயமோகனின்) ஓரிறு சிறுகதைகள் தவிற அந்தத் தமிழை படித்து - ஏன் கேட்டுக் கூட- பழக்கமில்லை. படிக்க கொஞ்சம் திணரியிருக்கிறேன்.

திரைப்படங்களில் கூட இது அதிகமாகப் பதிவாகவில்லை என்று நினைக்கிறேன் (சரியா?). சொல்லப்ப் மதுரைக்குத் தெற்கே யாரும் வந்ததில்லை - டும் டும் டும் அழகம்பெருமாள் தவிற ?


இந்த நாவலில் இம்மக்களில் கூட்டு வாழ்க்கையின் எழுதப்படாத சட்டங்கள் ,மதம் சார்ந்த மதிப்பீடுகள் ,வீரமும் வீம்பும் நிறைந்த செயல்பாடுகள்,திட்டமிடப்படாத எகத்தாளமான பொருளாதார வாழ்க்கை,அலைகளோடு அன்றாடம் அவர்கள் நடத்தும் போராட்டம் ,மதத்தோடு பின்னிப்பிணைந்த வாழ்க்கை,கத்தோலிக்க குருமார்களின் சமுதாயப் பங்கு ,பிரத்தியேகமான மொழிக்கூறுகள் ,தனிமனித உறவுகள்,இலங்கையோடு அவர்கள் கொண்டிருந்த தொடர்பு,அண்டைய நாடார் சமூகத்தோடு உள்ள உறவு இப்படி பல கோணங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இம்மாதிரி நாவல்கள் தான் 'நாவல்' என்ற வடிவத்தின் சிறப்பை உணர்த்துவதுவதாகப் படுகிறது. கதையை விட ஒரு உலகத்தையே படைத்து அதை நம்மை உணர வைக்கும் இவ்வகை நாவல்கள் எனக்கு மிகவும் பிடிக்கும்.
அறிமுகத்துக்கு நன்றி.

உங்கள் நாவல் படிக்கும் உந்துதல் இன்னும் பெருகுமாக !

P_R
15th September 2008, 06:31 PM
சா. கந்தசாமி'யின் தொலைந்து போனவர்கள்

இது தற்காலத்தது இல்லை என்றாலும் இத்திரியில் இடுகிறேன்.

சா.க'வின் ஒரு சில சிறுகதைகளை படித்திருக்கிறேன். மிக சாதாரணமானவையாகவே அவை எனக்குப் பட்டன. அவர் மீது வைத்திருந்த அபிப்ராயத்தை மாற்றியது நான் சமீபத்தில் படித்த "தொலைந்து போனவர்கள்" புதினம்.


சிறிய புதினம் தான். 200 பக்கம் கூட இல்லை - நத்தையான நானே 3 நாட்களில் படித்துவிட்டேன். மிக எளிதான கதை, சொல்லும் முறை. இன்றைய எழுத்தில் புத்திசாலித்தனம் வழியும் கதைகளிலிருந்து விலகி இப்புதினத்தை படிப்பதே இதமாக இருந்தது. இலக்கியத்தில் கூட இன்று சிடுக்கு விழுந்துவிட்டதே என்ற அங்கலாய்ப்பை தவிற்கமுடியவில்லை. இந்த புதினத்தின் கதையும் அது தான். எளிமையான நண்பர்கள் வாழ்வில் மேலும் மேலும் காலம் படிந்து முடிச்சுகள் விழுந்து, வாழ்க்கையை மாற்றி, ஆட்களை மாற்றி விடும் சுழல். வளர்ச்சி/வீழ்ச்சி போன்ற எளிமையான வகைபடுத்துதலுக்கு அப்பால் காலம் நகர்ந்துவிட்டது என்ற ஒரே உண்மையை, மிகையான சோகம் இல்லாமல், எளிமையாக, அழகாக படம்பிடித்திருக்கிறார் சா.கந்தசாமி.

தாமு என்கிற தாமோதரன் தான் பிரதான பாத்திரம். நடுவயது தாமு தனது பள்ளி நண்பர்களை தேடி பிடிப்பது தான் கதை.
அவன் வாழ்க்கையின் துண்டும், அவர்கள் வாழ்க்கையின் துகள்களும், நிலைகளும் நமக்குக் காணக்கிடைக்கின்றன.
தாமுவின் வசதி பற்றி, அவனுக்கு அதை எட்ட கிடைக்கும் தகுதி பற்றி, அவன் சமரசங்கள் பற்றி, 'சமரசம்' என்ற அளவிலெல்லாம் சிந்திக்கும் அளவு பிரக்ஞை இல்லாத அவன் எளிய மனது பற்றி, அது பிறருக்கு வாய்க்காதது பற்றி...என்று கதையை ஒட்டி நாமும் ஜ்ட்ஜ் செய்ய உந்தப்படுகிறோம். அதற்கெல்லாம் அப்பால் நின்று வாழ்க்கை நடந்துகொண்டே போகிறது.

புரிதல்/முயற்சி மூலம் வாழ்க்கையை வெல்லலாம் என்ற நிலைப்பாட்டை புதினம் நகையாடுகிறதா. இல்லை அவ்வாஅறு நினைப்பதே "வாழ்க்கையில் வெற்றி" பற்றி நாம் கொண்ட முன்தீர்மானங்கள் தான் காரணமா என்று சிந்திக்க வைத்து அலைக்கழிக்கிறது இப்புதினம். நிகழ்வுத்தோரணமும், அதன் ட்ராமாவும் இல்லாத நளினமான "ஸ்னாப்ஷாட்" வழங்கப்படுகிறது. அது நெகிழ்வாக வந்ததற்கு காரணம் எழுத்தாளரின் நுட்பமான பேனா.

rangan_08
16th September 2008, 03:50 PM
PR, " தொலைந்து போனவர்கள்" came as a weekly serial produced by Chola creations (ppl who made Thalai vaasal), directed by Selva. It was telecasted during the early 90's (or late 80's, not sure) in DD. It was a well made serial. Actor Rajesh played Damu character and "Thalaivasal" Vijai played as one of the friends. It was so engrossing that I used to be there punctually in front of my TV set every week.

I have not read the book though.

rangan_08
16th September 2008, 04:10 PM
Ever since its release, I've been hoping to buy Jeyamohan's " Vishnupuram ", but somehow I have refrained from doing so. Even during the Annual Book Fest, I used to pick it up but at the last moment will drop it and finally end up buying other books. So strange !

So much has been said and discussed about this book in various magazines but, would be glad if anybody here could throw some light on this. And, how strong would you recommend it to me ??

P_R
16th September 2008, 04:25 PM
PR, " தொலைந்து போனவர்கள்" came as a weekly serial produced by Chola creations (ppl who made Thalai vaasal), directed by Selva. It was telecasted during the early 90's (or late 80's, not sure) in DD. It was a well made serial. Actor Rajesh played Damu character and "Thalaivasal" Vijai played as one of the friends. It was so engrossing that I used to be there punctually in front of my TV set every week.

I have not read the book though.

Yeah I remember it came as a serial. I think early 90s only. Don't remember the serial itself though.

rangan_08
17th September 2008, 04:44 PM
Ever since its release, I've been hoping to buy Jeyamohan's " Vishnupuram ", but somehow I have refrained from doing so. Even during the Annual Book Fest, I used to pick it up but at the last moment will drop it and finally end up buying other books. So strange !

So much has been said and discussed about this book in various magazines but, would be glad if anybody here could throw some light on this. And, how strong would you recommend it to me ??

No recommendations ??? :roll:

sarna_blr
17th September 2008, 04:45 PM
Ever since its release, I've been hoping to buy Jeyamohan's " Vishnupuram ", but somehow I have refrained from doing so. Even during the Annual Book Fest, I used to pick it up but at the last moment will drop it and finally end up buying other books. So strange !

So much has been said and discussed about this book in various magazines but, would be glad if anybody here could throw some light on this. And, how strong would you recommend it to me ??

No recommendations ??? :roll:

" Changing the Face" can change nothing.
But, " Facing the Change" can change everything. :yessir:

rangan_08
17th September 2008, 05:04 PM
" Changing the Face" can change nothing.
But, " Facing the Change" can change everything. :yessir:

ippo edhukku idha solreenga ??? :huh:

sarna_blr
17th September 2008, 05:10 PM
" Changing the Face" can change nothing.
But, " Facing the Change" can change everything. :yessir:

ippo edhukku idha solreenga ??? :huh:

:lol2: idhukooda puriyalaayaa :poke: :yessir:

P_R
24th October 2008, 06:23 PM
ஒரு ஊரின் கதை - வலம்புரி ஜான்

சில மாதங்களுக்கு ஒரு முறை எனக்கு கொஞ்சம் ஒழுங்கு பிடித்து என் தந்தையின் புத்தக அலமாரியை அடுக்க முயல்வேன். அனேகமாக ஏதோ ஒரு புத்தகம் கிடைத்து, ஒழுங்குபடுத்தும் முனைப்பு மழுங்குவதோடு அது நின்றுபோய், மறுபடியும் புத்தகங்கள் கலைந்து கிடக்கும். இதை ஒரு சாரார் (அம்மா) 'திருப்பதி வேலை' என்றும் ஒரு சாரார் (அப்பா) 'அறிவுச்செறுக்கு' என்றும் சொல்வதுண்டு. அறிவுச்செறுக்கில் ஓரிரு மாதங்களில் தூசி படிந்து ஒழுக்கச்சக்கரம் மீண்டும் தொடங்கும்.

இந்தமுறை ஒரு இண்டு--இடுக்கிலிருந்து ஒரு ஒல்லி புத்தகம் கிடைத்தது. வலம்புரி ஜானின் 'ஒரு ஊரின் கதை' கிடைத்தது. இது புதினம் அல்ல. தனது சொந்த ஊர் (உவரி) பற்றியும், அதன் அருகில் உள்ள (தான் வளர்ந்த) தனக்குப் பழக்கப்பட்ட ராதாபுரம் போன்ற ஊர்களைப் பற்றி என்று. பதிவு போல ஊர்க்கதை, நையாண்டி, மனிதச் சித்திரங்கள், அரசியல், மதம் (தத்துவமாக அல்ல, வாழ்க்கை முறையாக) என்று எளிய நடையில் எழுதப்பட்டிருக்கிறது. குறிப்பிட்டு சொல்லவேண்டியது புத்தகம் நெடுக இருக்கும் ஒரு எள்ளல் தொனி. இதை ரசித்துப்படிக்கும் படி செய்வது அது தான்.

மற்றொரு விஷயம் பாதிரிமார்களையும், அம்மக்களின் மீது மத அமைப்புகள் செலுத்தும் அதிகாரத்தையும் கடுமையாக தாக்கி எழுதியிருக்கிறார். (நூலின் முன்குறிப்பு : இந்நூலில் வரும் இடங்களும் சம்பவங்கள் யாவும் கற்பனையல்ல, ஒரு சிலரையாவது புண்படுத்துவதற்காகவே எழுதப்படுகிறது :lol: ) .அதேபோல அவ்வூர் மக்களிடையே உள்சண்டையும், கலவரங்கள் வருவதையும் எழுதியிருக்கிறார். சில சமயம் கடிந்துகொள்ளும் தொனியில் , பல சமயம் அதையும நகைக்குரிய விஷயமாக்கும் ஒரு கீழ்நோக்குப் பார்வையில். அது அவ்வளவு உவப்பாக இல்லை.

ஊரை விட்டு ஓடிவிடும் இளசுகள் ஒருசில நாட்களில் திரும்பி வந்துவிடுவதை சொல்ல: "சில நாளில் குறுகுதும்" என்ற கம்பராமாயண வாக்கியத்தை சொல்கிறார்.இதை குகனிடம் சொன்ன ராமன் 'சில நாட்களில்' வரமுடியாமல் பல பிரச்சனைகளை எதிர்கொண்டான். இனி இங்கு வருவதில்லை என்று உதரிச்சென்ற சிறுசுகளும் அது போல எதிர்பாராத மாற்றங்களை தங்கள் வாழ்க்கையில் சந்தித்திருப்பார்கள் என்பதை அழகாக, கச்சிதமாக ஒரு எதிர்-உதாரணத்துடன் சொல்கிறார். இதைப்போல போகிறபோக்கில் அவர் புலமை வெளிபடுகிறது - பல சமயங்கள் இயல்பாகவே. தான் எம்.பி ஆன பின் நிகழும் ஒரு சில அரசியல் அனுபவங்களையும் சுவையாக எழுதியிருக்கிறார்.

கழுதைவாலை உள்ளூர் பையன்கள் தீவைப்பது அனுமன் வாலால் இலங்கைக்கு தீவைப்பதை நினைவுபடுத்துவது, "இலங்கைக்கு போன அனுமன் இடையே எங்கள் ஊரின் நின்று டீ குடித்ததாக நம்பப்படுகிறது" :lol2: என்றெல்லாம் மிக் சகஜமாக எழுதியிருக்கிறார். 70-80 களில் கூட இவ்வளவு சகஜமாக எழுத முடிந்திருக்கிறது. இன்று அப்படி பார்க்கப்படமாட்டாது. அந்தக்கதையாடல்கள் மிக இயல்பாக நாம் எல்லாரும் உள்வாங்கிக்கொண்டுள்ளோம். மதத்தைத் தாண்டிய பொது கலாசார விஷயங்கள் இவை.ஆனால் இன்று இப்படி ஒரு கிறுஸ்தவ பிரமுகர் எழுதினால் "காழ்ப்புணர்ச்சி" தெருப்புழுதி என்று குதிப்பார்கள். இவற்றையெல்லாம் அந்நியமாகப் பார்த்து, 'மரியாதை'யுடன் மிகுந்த பிரக்ஞையுடன், கவனமாக அணுக/எழுத நிர்பந்திக்கும் ஒரு 'நாகரிகத்துக்கு' இன்று வந்துவிட்டோம் என்பதே மிக மிக வருந்தத்தக்கது.

நூல் ஒரே சீராக இல்லை ஒரு சில இடங்களில் பாய்கிறது, தேங்குகிறது. கடைசியில,் படிப்பதற்கு பாளையங்கோட்டை வந்தது, திருச்சியில் வேலைசெய்தது பிறகு சென்னைக்கு வந்தது என்று ஓரிரு பத்திகளில் அவசரமாக முடித்தாற்போல இருந்தது. ஒட்டுமொத்தமாக ஜானின் மென்மையான எள்ளல் நடைக்காகவே ஒரு முறை படிக்கலாம்.வெறும் நாற்பத்திசொச்ச பக்கங்கள் தான் !

podalangai
24th October 2008, 08:55 PM
Ever since its release, I've been hoping to buy Jeyamohan's " Vishnupuram ", but somehow I have refrained from doing so. Even during the Annual Book Fest, I used to pick it up but at the last moment will drop it and finally end up buying other books. So strange !

So much has been said and discussed about this book in various magazines but, would be glad if anybody here could throw some light on this. And, how strong would you recommend it to me ??

No recommendations ??? :roll:

I've been hoping to buy the book for some time, but I am rarely in Tamil Nadu, and it's always been out of stock in the shops I visit. I did pick up a copy of Jeyamohan's "Kurunavalkal" - and I'm very pleased I did. :clap: On reflection, it's actually quite amazing how the Kurunaval has emerged as a literary form in Tamil - it is popular in some European languages as well, but it's quite marginal in English.

P_R
30th June 2009, 11:40 AM
பின் நவீனத்துவம், அது தொடர்பான சிலம்பாட்டங்களைப் பார்த்து மிரள்பவர்களுக்கென்று எம்.ஜி.சுரேஷ் சில புத்தகங்களை வெளியிட்டிருக்கிறார்.

மிஷெல் ஃபூக்கோ
ழாக் தெரிதா
ரோலண் பார்த்

ஆகிய பின்நவீனத்துவப் 'பெரியவர்'களைப் பற்றி தலா 64-ஏ பக்கங்களில் சிறு புத்தகங்கள். இயன்றவரை தெளிவாக எழுதப்பட்டதாகப் படுகிறது.

சிறந்த அறிமுகமா இல்லையா என்பதை இவற்றைத் தாண்டி ஆழ்ந்து படித்தால்தான் தெரியும். நிச்சயமாக ஆர்வமூட்டும் அறிமுகம் என்பதில் சந்தேகமில்லை.

P_R
3rd July 2009, 04:45 PM
திலீப் குமார் - குஜராத்தியை தாய்மொழியாகக் கொண்ட தமிழ் எழுத்தாளர்.

அவருடைய அக்ரகாரத்தில் பூனை (http://solvanam.com/?p=100) சிறுகதை

jaiganes
30th July 2009, 02:28 AM
thanks for the link PR
Amazing story indeed !!

P_R
23rd February 2010, 04:18 PM
டைரிக்குறிப்பாக ஒரு நூல் மதிப்புரை -பேயோன் (http://maiya.neerottam.com/2010/02/23/%e0%ae%9f%e0%af%88%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%95%e0%a f%8d-%e0%ae%95%e0%af%81%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%aa%e0%a f%8d%e0%ae%aa%e0%ae%be%e0%ae%95-%e0%ae%92%e0%ae%b0%e0%af%81-%e0%ae%a8%e0%af%82%e0%ae%b2/)

:rotfl:

app_engine
26th March 2010, 10:01 PM
இவரு அவ்வளவு பெரிய ஆளா?

http://www.jeyamohan.in/?p=6938



என்னுடைய கதைகள் எனக்கு இணையானவர்களுக்காக அல்லது என்னைவிட மேலானவர்களுக்காக எழுதப்படுபவை. மிகப்பெரும்பாலும் அவர்களே வாசிக்கிறார்கள். மற்றவர்கள் அதிகபட்சம் ஒரு அத்தியாயத்தில் குழப்பமும் எரிச்சலும் அடைந்து விலகி எதையாவது சொல்ல ஆரம்பிக்கிறார்கள்.
...
...
தமிழில் மிக அதிகமான தீவிர வாசகர்களால் ஒரு எழுத்துகூட தவறவிடப்படாமல் வாசிக்கப்படும் எழுத்தாளன் இன்று நானே. இதை எவரும் தங்கள் சுற்றத்தை கவனித்தாலே அறியலாம்.
...
...
பாரதியின் அளவு விகிதத்தை எந்த தமிழ் எழுத்தாளனும் இன்னமும் தொடவில்லை. அந்த தீவிரமில்லாவிட்டால் நம் காலகட்டத்தின் ஆகச்சிறந்த மனங்களுடன் உரையாட முடியாது.

அத்தகைய வாசகர்களுக்காகவே இவை எழுதப்படுகின்றன. சாதாரண அறிவுத்திறனும் சாதாரண கற்பனைத்திறனும் கொண்டவர்களுக்காக அல்ல.


:confused2:

joe
29th March 2010, 09:40 PM
ஒரு ஊரின் கதை - வலம்புரி ஜான்ங்கள் தான்

PR,
இந்த புத்தகத்தை எங்கே வாங்குவது? இது மட்டுமல்ல ,வலம்புரிஜான் எழுதிய புதினமல்லாத எந்த புத்தகமும் வாங்குவதற்கு ஆசை ..ஆனால் நான் தேடிப்பார்த்தவரை எங்கும் கண்ணில் படவில்லை[/img]

P_R
30th March 2010, 01:37 PM
ஒரு ஊரின் கதை - வலம்புரி ஜான்PR,
இந்த புத்தகத்தை எங்கே வாங்குவது? இது மட்டுமல்ல ,வலம்புரிஜான் எழுதிய புதினமல்லாத எந்த புத்தகமும் வாங்குவதற்கு ஆசை ..ஆனால் நான் தேடிப்பார்த்தவரை எங்கும் கண்ணில் படவில்லை[/img]
அடுத்த முறை New Book Lands போகும்போது கேட்டுப்பார்க்கிறேன்.
நான் படித்தது (படிப்பது பெரும்பாலும்) முன்னெப்போதோ என் அப்பா வாங்கியது.

P_R
21st April 2010, 04:28 PM
[tscii:4e8891cdcd]திலீப்குமாரைப் பற்றி ஜெயமோகன் (http://www.jeyamohan.in/?p=1173)


அப்புன்னகை எதைப்பற்றி?....... தன் சின்னஞ்சிறு உலகுக்குள்ளேயே தன் பிரபஞ்சத்தை சிருஷ்டிசெய்துகொள்ளும் எளிய மானுடனின் சித்திரம் அது. நாமும் அத்தகையவர்கள் தாம். ஆனால் கதையின் அந்த இடம், கலையின் அந்தத்தருணம், நம்மை மேலே தூக்கி அவர்களைக் குனிந்து பார்க்கச்செய்கிறது. அவர்களைப்பார்த்து நாம் புன்னகைசெய்கிறோம். நாமே நம்மைநோக்கிச்செய்யும் புன்னகை அது.

.........
ஒரு படைப்பாளியாக திலீப்குமார் அந்த அங்கதத்தையே தன் பங்களிப்பு என தமிழுக்கு அளித்திருக்கிறார். குஜராத்திகளின் காலனியில் பூனை கிணற்றில் விழுந்துவிடுகிறது. நீர் அசுத்தமாகிவிட்டிருக்கிறது. என்ன செய்யலாம்? காலனியே கொந்தளிக்கிறது. பாட்டி மெல்ல வருகிறாள். நிதானமாக வந்து கிணற்றில் ஒரு செம்பு கங்கை நீரை கொட்டுகிறாள். ‘இனிமேல் பிரச்சினை இல்லை தாராளமாகக் குடிக்கலாம்’ என்கிறாள். தீர்வு என்ற சிறுகதை இது.

இதைப்பற்றி பேசும்போது இளம் நண்பர் சொன்னார்– ”மூடநம்பிக்கைக்குச் சரியான சவுக்கடி இந்தக்கதை”. நான் கேட்டேன், அந்தப்பாட்டி வந்து ஒரு பாக்கெட் பிலீச்சிங் பௌடரை கிணற்றில் கொட்டிவிட்டு அப்படிச் சொல்லியிருந்தால் கதை அறிவியல் பூர்வமான கதையாக ஆகியிருக்குமா? அப்பொதுகூட அந்தக்கதையின் அங்கதம் பெரிதும் குறைவுபடாமல்தான் இருக்கும் என்றே நான் நினைக்கிறேன். மனிதர்கள் பலவகையான நம்பிக்கைகளைப் பற்றிக்கொன்டு வாழ்க்கையை வாழ்ந்து தீர்க்கும் பரிதாபத்தின் மீதான சிரிப்புதானே அந்தக்கதை? அது பிளீச்சிங் பௌடராக இருந்தால் என்ன கங்கா ஜலமாக இருந்தால் என்ன? நம் வீட்டைச்சுற்றி முனிசிப்பல் சிப்பந்தி கொசுமருந்து அடிக்கிறார். வருடம்தோறும். கொசுவுக்கும் அதற்கும் சம்பந்தமில்லை. நாம் என்ன விழுந்து விழுந்து சிரிக்கிறோமா அதைக்கண்டு? அந்த நம்பிக்கையில் ஒரு இரண்டுநாளை நீட்ட முடியுமா என்றுமட்டும்தானே பார்க்கிறோம்?

[/tscii:4e8891cdcd]

AravindMano
4th November 2010, 07:52 PM
[tscii:9ae8612885]இமையத்தின் ‘வீடியோ மாரியம்மன்’ (க்ரியா, 227 பக்கங்கள், ரூ. 150)

போன வருடம் வாங்கியது. எதனால் இந்த புத்தகத்தை தேர்ந்தெடுத்தேன் என்பதை மறந்தாயிற்று. மொத்தம் பதினோரு கதைகள். காலச்சுவடு, தீராநதி இத்யாதிகளில் வந்த சிலவும் அடங்கும். பெரிய அதிர்வுகள் இல்லையென்றாலும் முதலுக்கு மோசமில்லை. வாத்தியாரின் கள்ளத் தொடர்பு அம்பலமாகி நிற்பதை பார்க்க நேருடுகிற மாணவர்கள் வரும் ‘நல்ல சாவு’ம், ‘நாளை’யில் வருகிற செல்லாமாள் - உடையார் உறவும், சண்டைப் போட்டுக்கொண்டு மண்டை உருளும் ‘குடும்ப’மும் கவனத்தை ஈர்க்கின்றன. தலைப்பைத் தூக்கி புத்தக தலைப்பெனும் சிம்மாசனத்தில் அமர்த்தி வைத்திருந்தாலும், ‘வீடியோ மாரியம்மன்’ பெரிதாக ஈர்க்கவில்லை. கிராமத்து ‘அம்மா’, ‘எழுத்துக்காரன்’ ஆகியோரப்பற்றிய கதைகளும் உண்டு. ‘ஊர்வம்பு’ எழுதி முடிக்கும் முன்னரே பிடுங்கி பிரசுரித்து விட்டார்களா என்பதைப் பற்றி தகவலில்லை. திங்கட்கிழமை இன்னும் பத்து மணி நேரத்தில் வந்துவிடும் என்ற பயத்தால் ’சத்தியக்கட்டு’ என்கிற கதையை மட்டும் படிக்கவில்லை.

எளிய மாந்தர்கள், அடிப்படை பிரச்சனைகள் என்பதால் அலுங்காமல் படித்து முடிக்க முடிந்தது. வட்டார வழக்கில் இயல்பான உரையாடல்கள். உணர்ச்சிவசப்பட்டு பேசத் தெரியாத கிழவர் - ‘இப்ப வூட்டுக்கு வூடு டிவி பொட்டிய கொண்டாந்து கொடுத்துட்டான். சனங்க அந்த பொட்டில பேசுற மாதிரி தான் பேசுறாங்க. என்னால அப்பிடிப் பேச முடியாது’ என்று அங்கலாய்க்கிறார். அரளியைத் தின்ன முற்பட்டு மகனை பார்த்து மனம் மாறுகிற அம்மா ‘ அதெது புள்ள, அதெது தாயி. ஊருல ஆயிரம் பேர் இருந்து என்னாத்துக்கு ஆவும்’ என்கிறாள்


ரசித்த ஒரு கதை - கொஞ்சம் நீளம் -நிஜமும் பொய்யும் (http://azhiyasudargal.blogspot.com/2010/09/blog-post_16.html)

வீடியோ மாரியம்மன் (http://www.kalachuvadu.com/issue-87/sirukathai.htm)

எழுத்துக்காரன் (http://www.natpu.in/natpu/Pakudhikal/Ilakkiyam/yellutthukkaran.php) - நேரமில்லைனா இத தவிர்க்கலாம்.[/tscii:9ae8612885]

sathya_1979
20th December 2010, 05:43 PM
http://www.dinamalar.com/News_Detail.asp?Id=149691
எழுத்தாளர் நாஞ்சில்நாடனுக்கு சாகித்ய அகாடமி விருது

புதுடில்லி : இந்தியாவில் இலக்கியத்திற்காக வழங்கப்படும் மிக உயரிய விருதான சாகித்ய அகாடமி விருது, சிறந்த இலக்கிய படைப்பாளர்களை தேர்வு செய்து வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டிற்காக சாகித்ய அகாடமி விருதுக்காக தமிழ் எழுத்தாளர் நாஞ்சில்நாடன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

venkkiram
21st December 2010, 09:01 AM
[tscii:2a9b9df156]
http://www.dinamalar.com/News_Detail.asp?Id=149691
எழுத்தாளர் நாஞ்சில்நாடனுக்கு சாகித்ய அகாடமி விருது

புதுடில்லி : இந்தியாவில் இலக்கியத்திற்காக வழங்கப்படும் மிக உயரிய விருதான சாகித்ய அகாடமி விருது, சிறந்த இலக்கிய படைப்பாளர்களை தேர்வு செய்து வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டிற்காக சாகித்ய அகாடமி விருதுக்காக தமிழ் எழுத்தாளர் நாஞ்சில்நாடன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

http://www.hindu.com/2010/12/21/stories/2010122158460400.htm

Sahitya Akademi award for Nanjil Nadan

B. Kolappan

CHENNAI: Thirtyfive years after winning the Ilakkiya Chinthanai award for his first short story Viradham, Tamil writer Nanjil Nadan, has won the Sahitya Akademi award for 2010.

“I am happy. But I am not in a mood to celebrate. I have always been a critic of the Sahitya Akademi, because I strongly feel that it has neglected good writers. Still, I appreciate the gesture,” Nanjil Nadan told The Hindu from Coimbatore.

He has penned six novels, 112 short stories (now available in three volumes), several essays and poetry. The Sahitya Akademi award is for his short story collection, ‘Soodiya Poo Soodarka.' His novel ‘Thalaikeezh Vigithangal' was adapted and made into a Tamil film titled ‘Solla Marandha Kadhai.'

“I am of the opinion that awards should be given to a writer when he is at his peak. What is the point in giving the award as a retirement benefit,” he asked. In fact, one of his short stories ‘Kumbamuni' is about a writer who rejects the award.

Born as G. Subramaniam, he chose to write under the name Nanjil Nadan, asserting his pride in belonging to the fertile lands in Kanyakumari district.

If his earlier works eloquently captured the plight of people uprooted from their soil and forced to eke out a living as best as they can, the characters he came across during his travels across the country as a sales executive are featured in his subsequent works.

“Basically his writings vent anger against a society that leaves individuals hungry. He portrays the humiliations and sufferings of people who have had to leave their land and work somewhere,” says novelist M. Gopalakrishnan, who wrote the preface for Nanjil Nadan's short story collections. Mr. Gopalakrishnan says Nanjil Nadan's essays are an expression of anger and a criticism of society and the helplessness of the ordinary man. “His style is unique and always succeeds in retaining the reader's interest,” he says.

Humour and satire are the underlying aspects of his works.

He effortlessly brings in the style and references found in the Tamil classical literary tradition into his work.

:notworthy: :notworthy: :notworthy: [/tscii:2a9b9df156]

P_R
21st December 2010, 12:01 PM
நான் ஒரு நல்ல நாவலையும் (சதுரங்கக் குதிரை) சமீபத்தில் சில சுமாரான சிறுகதைகளையும் படித்திருக்கிறேன். இறங்குமுகம், உச்சம் என்றெல்லாம் பார்க்கத் தேவையில்லை. இதை ஒரு வாழ்நாள் சாதனையாளர் விருது போல தான் பாவித்து மகிழ்ச்சி கொள்ளவேண்டியது தான் :clap:

சதுரங்கக் குதிரையில் ஒரு காட்சி. நாயகன் நாராயணன் சோர்வுற்று மஹாராஷ்ட்ராவின் சிற்றூர்களில் ஒரு சாலையில் நடந்து கொண்டிருப்பான். அப்போது ஒரு மாட்டுவண்டி கரும்பு ஏற்றிக்கொண்டு அவனைக் கடக்கும். அதன் மேல் ஒரு சிறுமி அமர்ந்திருப்பாள். அவனைப் பார்த்து என்ன தோன்றியதோ ஒரு கறும்புத்துண்டை அவனிடம் வீசுவாள். வண்டி மறையும்.

The kindness of strangers, the goodness in this world என்பது போன்று வியாக்கியானங்களில் விரிக்கலாம். அதை அலட்டாமல், 'கவனத்தை இங்கே குவி' என்றெல்லாம் கூவாமல் இயல்பாகச் சொல்லிச்செல்லும் அவர் எழுத்து.

நந்தலாலா படம் நெடுக முக்கித் திணறி இது போன்ற ஒரு உணர்வை எழுப்ப முயன்றது ஞாபகத்துக்கு வருகிறது :lol2:

app_engine
22nd December 2010, 09:19 PM
பி_ஆர்,
இயக்குநர் பாலாவினை பாதித்ததாகச்சொல்லிய சிறுகதை படித்தீர்களா? ஜெயமோகன் கூட அதைப்பற்றி எழுதி இருந்தார்...

app_engine
22nd December 2010, 10:14 PM
[tscii:04c43e96c9]நாஞ்சில் நாடனுக்கு ஜெமோ வாழ்த்து (http://www.jeyamohan.in/?p=10874)

[html:04c43e96c9]
http://lh4.ggpht.com/_snC217tvBy0/TQ7hnlW_7VI/AAAAAAAAEZc/MzH6i0pdXyk/s512/DSC_0076.JPG
[/html:04c43e96c9]




மூன்று கார்களிலாக சென்றிறங்கினோம். இறங்கும்போது ‘புதினப்பேரரசு, சிறுகதைச் சக்ரவர்த்தி, விமர்சன வித்தகர்,குணக்குன்று கும்பமுனி நாஞ்சில்நாடன் வாழ்க ‘ என்று கூவி தமிழ்மரபை நிலைநாட்டலாமே என்றேன். ’இது கொங்குநாடு சார்’ என்று சொல்லிவிட்டார்கள்.


:lol: [/tscii:04c43e96c9]

venkkiram
27th April 2011, 08:37 AM
பெயரணிதல் -நாஞ்சில்நாடன் (http://nanjilnadan.wordpress.com/2011/04/26/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%A3%E0%A E%BF%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D1/)