PDA

View Full Version : Simran Thirai



gta129
2nd March 2008, 03:47 AM
Simran is set to conquer Television. The legendary actress is making her way to television just as Radhika, Kushboo, Devayani and Mena did.

But will she be able to secure a position with the audiences.



Simran Thirai - Title Song (http://raretfm.mayyam.com/stream//tvserial/Simranthirai.rm)

Online videos (http://www.viluthu.com/teledramas/?id=74&programme=Simran%20Thirai)


download and enjoy!!!!

aanaa
2nd March 2008, 06:47 AM
added


After her marriage and becomes mother of a child, Simran tried in films for heroine role. But the producers are prepared to offer her other than heroine roles. Immediately after her marriage she tried some roles for her husband, in which she did not succeed. Recently, she refused to act as the mother of three children in the film Kuselan with Pasupathy. Meena who is an intelligent and who also acted in the Malayalam version of the Kuselan with Srinivasan has decided to act with Pasupathy.

Simran though she has the charms of being an ever-green heroine in Tamil films, she could not find a berth. Now she is going to act in a serial to be produced for the Jaya TV Channel, according to latest information reaching our blog.

Soon, like Devayani, Kushboo and Banu Priay who have been doing roles in small screen soaps, Simran too well entrench in serials with good pay.

aanaa
4th March 2008, 06:58 PM
gta
do you have title song for this?

sarna_blr
4th March 2008, 06:59 PM
censored ...

aanaa
4th March 2008, 07:23 PM
ஜெயா "டிவி' சேனலில் நாளை முதல் கலக்க வருகிறது சிம்ரன் திரை; பிரமிட் சாய்மீராவின் புதுமையான நிகழ்ச்சி இது. ஒவ் வொரு மாதமும் ஒரு கதை தேர்வு செய்யப்பட்டு, அதில் சிம்ரன் நடிக்கிறார். ஓராண்டில் 12 கதைகள், தொடராக வரும். சினிமாவின் பிரமாண் டத்தை இதில் உணரலாம்.

சிம்ரன் ஏற்றிருக்கும் கதாபாத்திரங்கள், நவீன பெண்களின் வெவ்வேறு பரிமாணங்களை கொண்டிருக்கும். மறைந்த எழுத்தாளர் சுஜாதா எழுதிய வண்ணத்துப்பூச்சிகள் கதை தொடராக வருகிறது. இயக்குனர் பிரபல நடிகை ஸ்ரீப்ரியா.

aanaa
5th March 2008, 10:41 PM
[tscii:a928fe66c2]

‘Super Stars’ TV show, produced by ‘Silverline Film Factory’ and telecasted by Sun TV, aims to identify the potential heroes and heroines.

The performances of the participants will be assessed by the judge and the final winners will be the lead pair of the movie to be produced by ‘Silverline Film Factory’.

While Simran will be the judge of the show, the small screen star Vijay Aadhiraj will host the show.

Both of them met the media persons to explain the concept and the process of the talent hunt.

We present here the exclusive visuals from the press meet.
[/tscii:a928fe66c2]

gta129
6th March 2008, 07:11 AM
gta
do you have title song for this?

Not Yet

priya_2008
7th March 2008, 05:18 PM
Simran Thirai , 4 episodes over......

Simran as Heroine, Raaghav as Hero, Sripriya as Director and from Pyramid saimira.....

Hope it wud b intresting.....

As ususual simran acting was just superb.....Raaghav , Acting was so equivalent to Simran in acting...He was looking great.....

I heard tht it will be a onemonth story, I don knw hw thy wil complete an whole story in 25 days.....Let us wait n see....

Raghav_Preetha
9th March 2008, 10:06 AM
Priya... Thank u, thank u, thank u :)

Roshan
9th March 2008, 12:23 PM
Che.. I am going to miss this :( :sigh2:

mr_karthik
9th March 2008, 06:46 PM
I am watching from episode 1.

Simran & Raghav doing well.

A theme different from usual serial track.

Director Sreepriya... Good.

one moth one story is a good idea. No dragging business.

aanaa
10th March 2008, 03:25 AM
I do watch sometimes but not all episode/ continuously

Simran/Ragav acting is good to watch

kavi85
10th March 2008, 01:43 PM
Is Raghav_Preetha is really raghav or somebody else in that name?

sarna_blr
10th March 2008, 01:52 PM
Advertisement for superstar program is good...especially the own voice of SIMRAN....

she is good at her own voice

Arthi
10th March 2008, 02:23 PM
I dnt like the program and dnt have patience/interest to see the full show :twisted:
After seeing the intro of first dance, we switched off the TV :evil:

saradhaa_sn
10th March 2008, 03:08 PM
Is Raghav_Preetha is really raghav or somebody else in that name?
சந்தேகம் வேண்டாம், இவர் உண்மையான ராகவ்தான். (200%)

saradhaa_sn
10th March 2008, 03:29 PM
I dnt like the program and dnt have patience/interest to see the full show :twisted:
After seeing the intro of first dance, we switched off the TV :evil:

ஆர்த்தி, நீங்க சொவது 'சிம்ரன் திரை' பற்றியா?.
அல்லது 'சூப்பர் ஸ்டார்ஸ்' பற்றியா?.

ஏனென்றால் சிம்ரன் திரையில் டான்ஸ் கிடையாது.
சூப்பர் ஸ்டார்ஸ் என்றால் நீங்க சொல்வது சரிதான். இன்ட்ரொடக்ஷன் டான்ஸ் படு ஆபாசம். மூவ்மெண்ட்டுகள் வேகமாக இருந்தன என்பதற்காக உடையில் இவ்வளவு ஆபாசம் தேவையா?. கூட ஆடிய ஆண் நன்றாக முழுசாக ட்ரெஸ் பண்ணியிருந்தாரே, இந்தப்பெண்ணுக்கு மட்டும் என்ன வந்தது?. குடும்பத்தோடு பார்க்க கூசியது.

சன் டி.வி, ஏன் இப்படி..?

Raghav_Preetha
10th March 2008, 11:50 PM
Feel funny sayin' this... But ya... This really really is ME, Raaghav :)... next episode-la enna varum sollanumaa? Appo nambuveengala?:)... Nethu thaan dubbing pannitu vandhen :)

hehe... don't wanna give away any of the suspense... :)

Arthi
11th March 2008, 08:43 AM
I dnt like the program and dnt have patience/interest to see the full show :twisted:
After seeing the intro of first dance, we switched off the TV :evil:

ஆர்த்தி, நீங்க சொவது 'சிம்ரன் திரை' பற்றியா?.
அல்லது 'சூப்பர் ஸ்டார்ஸ்' பற்றியா?.

ஏனென்றால் சிம்ரன் திரையில் டான்ஸ் கிடையாது.
சூப்பர் ஸ்டார்ஸ் என்றால் நீங்க சொல்வது சரிதான். இன்ட்ரொடக்ஷன் டான்ஸ் படு ஆபாசம். மூவ்மெண்ட்டுகள் வேகமாக இருந்தன என்பதற்காக உடையில் இவ்வளவு ஆபாசம் தேவையா?. கூட ஆடிய ஆண் நன்றாக முழுசாக ட்ரெஸ் பண்ணியிருந்தாரே, இந்தப்பெண்ணுக்கு மட்டும் என்ன வந்தது?. குடும்பத்தோடு பார்க்க கூசியது.

சன் டி.வி, ஏன் இப்படி..?

aamaam, naan sOnnadhu 'சூப்பர் ஸ்டார்ஸ்' patRidhan :oops:

Arthi
11th March 2008, 08:53 AM
Feel funny sayin' this... But ya... This really really is ME, Raaghav :)... next episode-la enna varum sollanumaa? Appo nambuveengala?:)... Nethu thaan dubbing pannitu vandhen :)

hehe... don't wanna give away any of the suspense... :)


hey Raghav :redjump: this is youuuuuuuuu, wow nice to see you here :D
I liked ur character in "alaigaL" serial :clap:
All the best :thumbsup:

aanaa
11th March 2008, 06:24 PM
actually there is another thread for super dancers
pl post your comments in future

R.Latha
12th March 2008, 12:40 PM
[tscii:816482c3bc]PREETHA Interview

http://mayyam.com/hub/viewtopic.php?p=1315750#1315750

Says

அவர் `பிளஸ்-டூ'வில் மாநில சாதனை படைத்தவர். அண்ணா பல்கலைக்கழகத்தில் கம்ப்ïட்டர் சயின்ஸ் பாடத்தில் தங்கப் பதக்கம் பெற்ற வர். அவரும் வெளிநாட்டில் படித்தவர்.

Ragav :clap: :clap:[/tscii:816482c3bc]

mgb
12th March 2008, 12:47 PM
I dont reach home before 8:30pm, so i saw this serial yesterday only. Despite the limited dialogues and number of actors, the sequences just zips past you :thumbsup:

Good show by Raghav.. despite acting with an opposite number who is erstwhile no.1, he was equally good :thumbsup:
But got a feeling Raghav and Simran were keeping a distance between themselves.. may be because of the star value gap between them :?

priya_2008
22nd March 2008, 12:59 PM
I have been watching Sim's thirai right from episode 1....Its been very interesting.....especially Raaghav's acting was mind blowing.... :roll: Even George was good..Simran as usual rocks....But i was gone mad with Raagav's acting....He has a better future...But a complaint from everyone , he needs to put on weight!!!!! :)

saradhaa_sn
29th March 2008, 02:02 PM
'சிம்ரன் திரை'யில் முதல் குறுங்கதை 'வண்ணத்துப்பூச்சிகள்' நேற்று முடிந்து விட்டது. அதிசயமாக, அற்புதமாக எதுவும் இல்லை. 'வழக்கமான சின்னத்திரை நட்சத்திரங்களுக்கு பதிலாக சிம்ரன் நடித்திருக்கிறார்' என்பதைத்தவிர.

கதை வழக்கம்போலத்தான். வழக்கம்போல புகுந்த வீட்டுக்கு வரும் அவளைக்கொடுமைப்படுத்தும் கணவன், வழக்கம்போல அதற்கு துணை போகும் அவளது புகுந்த வீட்டார், வழக்கம்போல செய்வதறியாது நிற்கும் அவளது தாய் தந்தையர், வழக்கம்போல கோர்ட்டில் கேஸ், வழக்கம்போல ஒட்டுமொத்த பெண்குலத்துக்கு வாதாடும் நாயகி. வழக்கம்போல மீண்டும் சேர்ந்து வாழ அட்வைஸ் பண்ணும் கோர்ட், வழக்கம்போல மன்னிப்பு கேட்கும் கணவன், வழக்கம்போல அவனைத்துறந்து விட்டு வெற்றி நடைபோடும் நாயகி, வழக்கம்போலவே என்னவோ அவள் போய்விட்டதால் உலகமே இடிந்து விட்டது போல் நிற்கும் நாயகன். ஆகக்கூடி வழக்கம்போல 'ஆண் அயோக்கியன், பெண் உத்தமி' என்ற, (சீரியல் கண்டுபிடிக்கப்பட்ட காலத்திலிருந்து சொல்லப்படும்) முடிவு. இதற்கு ஏன் இத்தனை வெட்டி பந்தா?.

சிம்ரன் அலட்டலோ அலட்டல், என்னவோ வானத்தில் இருந்து தொபுக்கடீர்னு குதித்து விட்டதுபோல ஒரு சூப்ப்ர்லேட்டிவ் தனம். (வழக்கமான டிவி நாயகிகளை விட்டால் பின்னியெடுத்திருப்பார்கள். தீபா வெங்கட் இது மாதிரி எத்தனை பண்ணியிருப்பார்?)

நாயகனாக ராகவ் நடிப்பு கனகச்சிதம். ரோலுக்கு பொருத்தமான தேர்வு, அழகான அளவான நடிப்பு. ரசிக்கும்படியாக இருந்தது.

அதுபோலவே சப்போர்ட் ரோலில் வந்த மோகன்ராம், ஒய்.விஜயா, ஜார்ஜ், பூஜா லோகேஷ் யாவரிடமும் அருமையான வெளிப்பாடு.

டைட்டில் பாடல் வைரமுத்து எழுதியிருந்தார். 'மாறும் உலகங்கள் மாறுகின்றன.. மாறும் பெண்ணே மாறிவிடு' நல்ல அருமையான வார்த்தைகளைத்தான் போட்டு எழுதியிருந்தார். ஆனால் அதைப்பாடிய சின்மயி ஏன் இத்தனை முக்கல் முனகலோடு பாடினார்?. அப்படிப் பாட வேண்டிய பாடலா இது?. ('சூப்பர் சிங்கர்' ஷோவில் சின்மயி பண்ணும் அலம்பல் தாங்கவில்லை).

எப்படியோ முதல் குறுங்கதை முடிந்து விட்டது. அடுத்தது எப்படீன்னு பார்ப்போம்.

sudha india
2nd April 2008, 12:45 PM
Nice update saradha,
Simran was just so so.. and nothing special about the story too.

George was depicted as a villain but in the end his character was just nothing.

There is no depth in the story. The parents of Simran, Mohanram and Meera acted very well as loving parents. But in the end simran showed no response to them, even to the love of her sister.

Such a blunt story but a great build up for Simran.

R.Latha
7th April 2008, 08:16 AM
னசின்னத்திரை வரலாற்றில் `சிம்ரன் திரை' ஒரு மாறுதலை ஏற்படுத்தியிருக்கிறது. வருடக் கணக்கில் மெகா தொடர்களை பார்த்துக் கொண்டிருக்கும் ரசிகர்களுக்கு `ஒரு மாதத்திற்கு ஒரு கதை' என்று வந்திருக்கும் சிம்ரன் தொடர்கள் உற்சாகம் தந்திருக்கின்றன.

கடந்த மாதம் சுஜாதாவின் வண்ணத்துப்பூச்சி தொடர் ஒளிபரப்பானது. அடுத்து இப்போது அகத்தியன் இயக்கும் `அனுவும் நானும்' தொடர் ஒளிபரப்பாகத் தொடங்கியிருக்கிறது.

அலுவலகத்தில் வேலை பார்க்கும் அப்பாவுக்கு தனது மகள் என்றால் உயிர். பள்ளியில் படிப்பைத் தொடரும் மகளுக்கும் அப்பா மீது அப்படியொரு பாசம்.

மனைவி இறந்து விட்ட நிலையில் மகளே உலகம் என வாழ்ந்து வரும் அந்த அப்பாவையும், அலுவலகத்தில் புதிதாக வேலை பார்க்க வரும் இளம் பெண்ணின் சினேகம் அசைத்துப் பார்க்கிறது.

அப்பாவின் இந்த நட்பு, பெண்ணுக்குத் தெரிய வர, அவள் அப்பாவின் அலுவலக சினேகிதியை `தன் அம்மா ஸ்தானத்தில்' வைத்துப் பார்க்க விரும்பவில்லை. அந்த நட்பு தொடரக் கூடாது என எண்ணுகிறாள்.

மகளின் எதிர்ப்பில் அப்பாவின் `பெண் நட்பு' பதுங்கியதா? பொசுங்கியதா? வரும் காட்சிகளில் தெரிந்து கொள்ள முடியும் என்கிறார், ஸ்ரீபிரியா. கதையும் இவரே.

தொடரில் பிரேம்சாய், சிம்ரன், டெல்லி கணேஷ், சத்யபிரியா நட்சத்திரங்கள்.

ஜெயா டிவியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 8.30 மணிக்கு சிம்ரன்திரை ஒளிபரப்பாகி வருகிறது.

----
KATHAI ULTA OF ----> Keladi Kanmani movie!!

Raghav_Preetha
9th April 2008, 10:39 AM
Saradhaa,
Glad u liked my performance :)... See you guys around :)

-Raaghav

kavis
16th April 2008, 09:52 AM
Ragav ..unggalin nadipai muthal muthalil "alaigal" serial parthu viyarthuirukiren.. yetharthemaneh nadipu...

Valthukkal Ragav..

Raghav_Preetha
18th April 2008, 11:57 AM
Thanks a lot Kavis... Hope to entertain u more in the future :)

ShereneAndrew
20th April 2008, 11:56 PM
Wow.. munadi mohanram sir.. ippa raghav..

namma hub romba famous ayiduchu.. :thumbsup: :thumbsup: :clap: :yes: :cool2:

this is a gud way of interacting as stars wld also see their flaws and wld improve(enna solreenga.. correct thane).. :D

kavis
22nd April 2008, 07:40 AM
Thanks a lot Kavis... Hope to entertain u more in the future :)

Valthukkal... here in malaysia there just showing little master sesson 2.. super ragav..interesting ah judge pannurigeh..send my regards to Preetha

R.Latha
28th April 2008, 07:50 AM
SIMRAN THIRAI THIRD STORY - NERUKKU NER !

சின்னத்திரை ரசிகர்களை வெகுவாக கவர்ந்திழுத்திருக்கும் சிம்ரன் திரையின் 3-வது குறுந்தொடர் `நேருக்கு நேர்.' இத்தொடர் வரும் திங்கட்கிழமை முதல் ஜெயா டிவியில் தொடங்குகிறது.

இரண்டாவதான `அனுவும் நானும்' கதையில் மெல்லிய தாய்மையுணர்வோடு வெற்றி கண்ட சிம்ரன், மூன்றாம் கதையில் இன்னும் ஒரு வித்தியாசமான கதாபாத்திரத்தில் கலக்கவிருக்கிறார்.

எப்பொழுதோ தனது தாய்க்கும் தனக்கும் இழைக்கப்பட்ட கொடுமைகளுக்காக இத்தனை நாட்கள் காத்திருந்து அதற்கான பதிலடியாக எதிரிகளின் வாழ்க்கையில் அவர்களுக்குத் தெரியாமலேயே விளையாட்டு காட்டும் ஹீரோயின் சிம்ரனை இந்த `நேருக்கு நேர்' கதையில் காணலாம்.

அண்ணன் - தம்பிகள் என்ற இருவரின் வாழ்க்கையில் குறுக்கிடும் இரட்டை கதாபாத்திரத்தின் மூலம் தனது நடிப்பின் இன்னொரு பரிமாணத்தை சின்னத்திரையில் அளிக்கவுள்ளார் சிம்ரன்.

பழி வாங்கும் கதைப் போக்கில், நிஜத்தில் நடக்கும் சம்பவங்களை நம் கண் முன்னே கொண்டு வந்துள்ளது இக்கதை.

இத்தொடரில் சிம்ரனுடன் சுபலேகா சுதாகர், ரிஷி, சீனிவாஸ், ஐஸ்வர்யா, லதாராவ், அழகு நடிக்கிறார்கள்.

கதை: சுபா வெங்கட். திரைக்கதை, வசனம்: குமரேசன், ஒளிப்பதிவு: கோபால், இயக்கம்: அழகர், கிரியேட்டிவ் ஹெட்: சுபாவெங்கட். தயாரிப்பு: பிரமிட் சாய்மீரா.

aanaa
5th May 2008, 06:40 PM
ஜெயா டி.வி.யில் தினமும் இரவு 8.50 மணிக்கு ஒளிபரப்பாகும் சிம்ரன் திரையின் 3-வது குறுந்தொடர் நேருக்கு நேர். எப்பொழுதோ தனது தாய்க்கும் தனக்கும் இழைக்கப்பட்ட கொடுமைகளுக்காக எதிரிகளின் வாழ்க்கையில் அவர்களுக்குத் தெரியாமலேயே விளையாட்டு காட்டும் ஹீரோயின் சிம்ரனை இந்த நேருக்குநேர் கதையில் காணலாம். அண்ணன்- தம்பிகள் என்ற இருவரின் வாழ்க்கையில் குறுக்கிடும் இரட்டை கதாபாத் திரத்தின் மூலம் தனது நடிப்பின் இன்னொரு பரிமாணத்தை சின்னத் திரையில் அளிக்கவுள்ளார் சிம்ரன்.

இத்தொடரில் சிம்ரனுடன் சுபலேகா சுதாகர், ரிஷி, சீனிவாஸ், ஐஸ்வர்யா, லதாராவ், அழகு போன்றோர் நடிக்கிறார்கள்.

aanaa
22nd May 2008, 11:57 PM
ஜெயா டி.வி.யில் தினமும் இரவு 8.50 மணிக்கு ஒளிபரப்பாகும் சிம்ரன் திரையின் 3-வது குறுந்தொடர் நேருக்கு நேர். எப்பொழுதோ தனது தாய்க்கும் தனக்கும் இழைக்கப்பட்ட கொடுமைகளுக்காக எதிரிகளின் வாழ்க்கையில் அவர்களுக்குத் தெரியாமலேயே விளையாட்டு காட்டும் ஹீரோயின் சிம்ரனை இந்த நேருக்குநேர் கதையில் காணலாம். அண்ணன்- தம்பிகள் என்ற இருவரின் வாழ்க்கையில் குறுக்கிடும் இரட்டை கதாபாத் திரத்தின் மூலம் தனது நடிப்பின் இன்னொரு பரிமாணத்தை சின்னத் திரையில் அளிக்கவுள்ளார் சிம்ரன்.

இத்தொடரில் சிம்ரனுடன் சுபலேகா சுதாகர், ரிஷி, சீனிவாஸ், ஐஸ்வர்யா, லதாராவ், அழகு போன்றோர் நடிக்கிறார்கள்.

aanaa
1st June 2008, 06:45 PM
சிம்ரனின் தர்மயுத்தம்
ஜெயா டிவியில், நடிகை சிம்ரன் நடித்து வெளிவந்துகொண்டிருக்கும் ஒரு மாதத்தொடர் வரிசையில், நான்காவது தொடர் தர்மயுத்தம்.

ஆராய்ச்சியில் கண்டுபிடித்த அரிய மருந்து பார்முலாவை விஞ்ஞானி மறுக்க, அவரை சதிகார கும்பல், பெரும் வழக்கில் சிக்க வைக்கிறது. விஞ்ஞானியை காக்க மகள் தர்மயுத்தம் நடத்துகிறாள். சிம்ரன்தான் அந்த மகள்! அவருடன் ஒய்.ஜி.மகேந்திரன், சுலக்ஷணா, மோகன் சர்மா, சியாம் கணேஷ், அகிலா ஆகியோர் நடித்துள்ளனர். திங்கள் - வெள்ளி இரவு 8.30. சுவையான சுற்றுலா: ஜெயா சேனலில் ஞாயிறுதோறும் நண்பகல் 12 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது,"சுவையான சுற்றுலா' புது நிகழ்ச்சி. இந்தியா, மலேசியா ஆகியவற்றின் சுற்றுலா இடங்கள், அங்கு பாரம்பரிய உணவு வகைகள் பற்றி தகவல்கள் தரப்படுகிறது இதில். இன்று ஆரம்பம்.

tamilsaran
27th June 2008, 05:01 PM
தமிழ் சின்னத்திரை ரசிகர்களை வெகுவாக கவர்ந்து இழுத்திருக்கும் 'சிம்ரன் திரை'யின் 5ஆவது குறுந்தொடர் 'நவவெள்ளி'.

இத்தொடர் வரும் ஜூன் 30-ஆம் தேதி முதல் ஜெயா டிவியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது.

உலகில் வாழும் மனிதர்களுக்குத் தன் மேல் நம்பிக்கையையும் பக்தியையும் கொடுத்து, கெடுதல் செய்யும் தீயவர்களுக்குத் தண்டனை கொடுத்து அதன் மூலம் மக்களுக்கு நம்பிக்கை அளிக்க அம்மன் ஆதிபராசக்தி நடத்தும் திருவிளையாடல்களில் ஒன்றே இந்த 'நவவெள்ளி'.

இறையாளும் ஆதிபராசக்தியைப் போலவே தானும் உலகை ஆளும் சக்தியாக அவதாரம் எடுக்க நினைத்த ஒரு அற்ப மனிதனின் கதை இது. ஒரு சாதாரண மனிதன் தெய்வ ரகசியத்தைத் தெரிந்துகொண்டு உலகை ஆளும் சக்தியைத் தன் வசமாக்கிக்கொள்ள நினைக்கிறான். அம்மன் தனது தீவிர பக்தையான உமா மகேஸ்வரியின் மூலமும், அவளுடைய மகளான காயத்ரி தேவியின் அம்சமாக வெளிப்பட்டும் தனது சக்தியை நிரூபித்து மமதை பிடித்த அந்த மனிதனை எப்படி அடக்குகிறாள் என்பதைப் புதுமையாகச் சொல்கிறது 'நவவெள்ளி' தொடர்.

இதுவரையிலும் இல்லாத புதுமையாக, புது சிம்ரனை இக்கதையில் நேயர்கள் காணவிருக்கிறார்கள். சிம்ரன் சினிமாவில்கூட இதுவரை தான் செய்திராத 'அம்மன்' வேடத்தில் சின்னத்திரை ரசிகர்களுக்கு தரிசனம் தரவிருக்கிறார். கூடுதலாக, 'தசாவதாரத்தையும்' மிஞ்சி 14 வேடங்களில் அசத்தியிருக்கிறார். இத்தொடர் சிம்ரனின் நடிப்பு கேரியரில், ஒரு முக்கிய இடத்தைப் பிடிக்கும் என்பதில் சிறிதும் ஐயமில்லை.

இத்தொடரில் சிம்ரனுடன், 'பூவிலங்கு' மோகன், O.A.K.சுந்தர், அனுராதா கிருஷ்ணமூர்த்தி, சுப்புலட்சுமி மற்றும் பலர் நடித்துள்ளனர். கதை, திரைக்கதை, வசனம் ஆகியவற்றைச் செல்வபாண்டி எழுதியுள்ளார். ஆசாத் ஒளிப்பதிவு செய்ய, அரவிந்த்ராஜ் இயக்கியுள்ளார். பிரமிட் சாய்மிரா தயாரித்துள்ளது.

14 வேடங்களில் சிம்ரனைப் பார்க்க நீங்கள் தயாரா?

thriinone
24th September 2008, 08:43 AM
sila kathaigal nalla poitu irukku.
intha thodar yaarachum parkareengala?

aanaa
30th September 2008, 11:04 PM
ஜெயா "டிவி'யில் , திங்கள் முதல் வெள்ளி தோறும் இரவு 8.30க்கு ஒளிரப்பாகும் சிம்ரன் திரையில், இம்மாத குறுந்தொடர் நெற்றிக்கண். ஏழாவது தொடரான இதில், காதலன் கணவனுக்கு இடையே ஏற்படும் ஒரு பெண்ணின் மனப்போராட்டம் தான் கதை.

சிம்ரனுடன் அபிஷேக், சாக்ஷி சிவா, சிவன் சீனிவாசன், நித்யா,காவேரி, ஷில்பா, ராஜஸ்ரீ, விஜயலட்சுமி, வைஜெயந்தி ஆகியோர் நடிக்கின்றனர். .