PDA

View Full Version : Enna Pooo



Pages : [1] 2 3

kirukan
24th March 2008, 04:29 PM
மனம் வெதும்பும் நேரம்
மரிக்கும் பூ சிரிப்பு
மௌனமாய் இருந்தே
மலரும் பூ வெறுப்பு
மகிழ்ச்சியை மங்கவைக்க
மிரட்டும் பூ மறுப்பு
மணவாழ்வில் நான்
பெற்ற பூ பொறுப்பு
விட்ட பூ எதிர்பார்ப்பு
கற்ற பூ பண்பு
கிடைக்காத பூ மதிப்பு
----
Kirukan

pavalamani pragasam
24th March 2008, 04:33 PM
:clap: கடைசியை வரியை பொய்யாக்கும் என் கைதட்டல்!

crazy
24th March 2008, 04:42 PM
mine too :clap:

Aravind_06
24th March 2008, 10:07 PM
[tscii:424242c7a3]¿ýÚ!! :clap: [/tscii:424242c7a3]

kirukan
25th March 2008, 03:26 PM
மெல்லிய பனிப்புகை உரசிச்செல்ல
மனதிற்க்கு மகிழ்ச்சியை கொடுத்தது-அதுவே
மகிழுந்துக்களுக்கு முடிவை தந்தது.
-Abudhabi 250 cars pileup

-Kirukan

kirukan
27th March 2008, 12:35 PM
இருள் அடர்ந்த காட்டினில் வெள்ளி மின்னல்
மீசையில் வெள்ளை முடி.
-கிறுக்கன்

pavalamani pragasam
27th March 2008, 07:55 PM
ஆஹா!

crazy
28th March 2008, 12:07 AM
:P

kirukan
30th March 2008, 07:52 PM
இல்லாமல்(not having) இல்லாமல்(not using) இல்லாமல்(not being) -இருந்தும்
இல்லாமல் இருப்பதே எளிமையாம்.
-கிறுக்கன்

pavalamani pragasam
30th March 2008, 08:15 PM
தலை சுத்திவிட்டது! :D

crazy
31st March 2008, 12:33 AM
i reading it for nth time to understand :P

kirukan
2nd April 2008, 04:33 PM
சுகமாய் இருந்த தென்றல் சூடாய் ஆனது
பனியில் விடிந்த பொழுது புழுதியாய் விடிந்தது
-பாலைவன வெய்யில்


-கிறுக்கன்

VENKIRAJA
2nd April 2008, 07:14 PM
Ayya.....
padithen,paravasamadainthen!
Vegu naal kazhithu oru kuzhappa kavithai! ;)
Pls continue your good work.2004?

Inru ezhuthiya en kaviye Ithanai naalai engirunthaay?

kirukan
3rd April 2008, 12:27 PM
அமைதியாய் இருக்கும் நேரம்
அமைவதில்லை கவிகள்
அமைதி இழக்கும் நேரம்
அருவியாய் அவிழ்கின்றன
அடியேனின் கிறுக்கல்கள்

-நன்றி வெங்கியாரே


-கிறுக்கன்

crazy
3rd April 2008, 12:32 PM
அமைதியாய் இருக்கும் நேரம்
அமைவதில்லை கவிகள்
அமைதி இழக்கும் நேரம்
அருவியாய் அவிழ்கின்றன
அடியேனின் கிறுக்கல்கள்

-நன்றி வெங்கியாரே


-கிறுக்கன்

Things will get better. Good luck :thumbsup:

kirukan
3rd April 2008, 01:20 PM
மனம் வெதும்பி வந்த என்னை
மனம் மலர செய்தது இம்மன்றம்

கரம் தேடி அலைந்த என்னை
அன்புக்கரம் கொண்டு கவர்ந்தது இக்குழு

நன்றி நவிழ்கிறேன் நல்ல உள்ளங்களுக்கு

--கிறுக்கன்

pavalamani pragasam
3rd April 2008, 06:33 PM
நட்பை பெருக்கி
துன்பம் வகுத்து
மகிழ்வை கூட்டி
சோர்வை கழித்து
புது கணக்கு போட
உகந்த இடமிது
தேனுண்ணும் வண்டாக
கிடக்கிறோம் இங்கு
ரீங்கார கவிதைகள்
கேட்கும் தொடர்ந்து

kirukan
8th April 2008, 01:10 PM
குடிபோதையில் நின் வழி-உன்
குடி வீழ வெட்டும் குழி

--கிறுக்கன்

kavis
8th April 2008, 02:03 PM
nalleh muyarchee...paraddukkal

kirukan
16th April 2008, 08:18 PM
நிழலை நிஜமென நினைக்கும் அடியார்
நிஜமே நிழலென அறியார்
--நிலாவில் ...............

--கிறுக்கன்

kirukan
16th April 2008, 08:28 PM
புசிக்க மனமில்லை
படுத்துறங்க முடியவில்லை
பகலும் இரவும் அதே நினைவு
--பரிட்சை பயம்



--கிறுக்கன்

pavalamani pragasam
16th April 2008, 08:34 PM
:notthatway:

kirukan
19th April 2008, 12:16 AM
தப்பு செய்தாலும் தண்டனை இல்லை
கடிந்து பேசினாலும் கலக்கம் இல்லை
மறுத்து பேசினாலும் மருட்சி இல்லை
சர்ச்சை செய்தாலும் சினம் இல்லை
-அன்பு மகளின் மழலை செயலின் முன்.

--கிறுக்கன்

pavalamani pragasam
19th April 2008, 08:43 AM
Yes, the kids are real 'dictators'! :D

kirukan
30th April 2008, 12:30 PM
பணம் பத்தும் செயும்-இங்கு
பணம் பதினொன்று செய்தது.

-தேசிய விளையாட்டு அணி.



-கிறுக்கன்

Shakthiprabha.
30th April 2008, 12:39 PM
நீண்ட நாட்கள் கழித்து நறுக் கென்று நல்ல கவிதைகளை ரசிக்கிறேன். நன்றி.


அருமையாய் எழுதுகிறீர்கள் கிறுக்கன்! வாழ்த்துக்கள்.

கிறுக்கன், எழுத்துப்பிழைகளில் கவனம் வைய்யுங்கள் !


//பதிணொன்று//

பதினொன்று!

kirukan
30th April 2008, 12:59 PM
நன்றி சக்தி

crazy
30th April 2008, 01:44 PM
:)

Sanguine Sridhar
30th April 2008, 03:16 PM
Kirukkan.... 8-) superb :notworthy:

btw are you Actor Parthiban? :wink:

pavalamani pragasam
30th April 2008, 04:18 PM
:roll: UAE?

Shakthiprabha.
30th April 2008, 05:34 PM
Kirukkan.... 8-) superb :notworthy:

btw are you Actor Parthiban? :wink:

DONT TELL ME :shock:

I am his fan :shock: :oops:

Sanguine Sridhar
30th April 2008, 05:53 PM
Kirukkan.... 8-) superb :notworthy:

btw are you Actor Parthiban? :wink:

DONT TELL ME :shock:

I am his fan :shock: :oops:

ok :shock: :o

End digression

kirukan
5th June 2008, 01:24 PM
பார்திபன் அளவு பா புனைய
பெறவேண்டும் பயிற்ச்சி பல.
பாராட்டுக்களுக்கு என் பணிவான நன்றி.

பாலைவனத்தில்(Sharjah) பணி
ஆண்டு விடுமுறையில் தற்போது பாரதத்தில்.

மாற்றம்

காசை காகிதமாய் காண்கின்றனர்
கனிப்பொறி கண்மனியினர்

crazy
5th June 2008, 01:25 PM
kakidham'na enna paper? :oops:

pavalamani pragasam
5th June 2008, 01:29 PM
காகிதத்தை ஒழிக்க வந்த கணிப்பொறியால் இப்படி ஒரு விளைவா?!

kirukan
11th June 2008, 01:56 PM
அங்கு(இந்தியா-விடுமுறை) இங்கு(துபாய்-வேலை)

அங்கு யுகங்களும் கணங்களாய் ஆனது
இங்கு கணங்களும் யுகங்களாய் ஆனது

அங்கு சோகமும் சுகமாய் ஆனது
இங்கு சுகமும் சோகமாய் ஆனது

அங்கு ருசியே பசி ஆனது
இங்கு பசியே ருசி ஆனது

அங்கு மகிழ்வே பேச்சாய் ஆனது
இங்கு பேச்சுமட்டுமே மகிழ்வாய் ஆனது

அங்கு ஓய்வு தூக்கம் ஆனது
இங்கு தூக்கம்மட்டுமே ஓய்வாய் ஆனது
...

கிறுக்கன்

pavalamani pragasam
11th June 2008, 05:09 PM
:sigh2:

sarna_blr
11th June 2008, 05:22 PM
அங்கு(இந்தியா-விடுமுறை) இங்கு(துபாய்-வேலை)

அங்கு கணங்களும் நிமிடமாய் ஆனது
இங்கு நிமிடமும் கணங்களாய் ஆனது

அங்கு சோகமும் சுகமாய் ஆனது
இங்கு சுகமும் சோகமாய் ஆனது

அங்கு ருசியே பசி ஆனது
இங்கு பசியே ருசி ஆனது

அங்கு மகிழ்வே பேச்சாய் ஆனது
இங்கு பேச்சுமட்டுமே மகிழ்வாய் ஆனது

அங்கு ஓய்வு தூக்கம் ஆனது
இங்கு தூக்கம்மட்டுமே ஓய்வாய் ஆனது
...

கிறுக்கன்

ivlavu kashttangal irundhum yEn nam makkal dubai endraal, parakkiraargal... :roll:

sarna_blr
11th June 2008, 05:22 PM
Kirukkan.... ungal kirukkalgal ( kavidhaigal) pramaadham :clap:

crazy
11th June 2008, 10:30 PM
அங்கு(இந்தியா-விடுமுறை) இங்கு(துபாய்-வேலை)

அங்கு கணங்களும் நிமிடமாய் ஆனது
இங்கு நிமிடமும் கணங்களாய் ஆனது

அங்கு சோகமும் சுகமாய் ஆனது
இங்கு சுகமும் சோகமாய் ஆனது

அங்கு ருசியே பசி ஆனது
இங்கு பசியே ருசி ஆனது

அங்கு மகிழ்வே பேச்சாய் ஆனது
இங்கு பேச்சுமட்டுமே மகிழ்வாய் ஆனது

அங்கு ஓய்வு தூக்கம் ஆனது
இங்கு தூக்கம்மட்டுமே ஓய்வாய் ஆனது
...

கிறுக்கன்

enakkum serthu ezhuthina maari irukku :(

eli valaiyaanalum thani valaiye sirandhadhu(thaaththa adikkadi sollvaaru) :sigh2:

kirukan
12th June 2008, 10:08 AM
அங்கு(இந்தியா-விடுமுறை) இங்கு(துபாய்-வேலை)

அங்கு யுகங்களும் கணங்களாய் ஆனது
இங்கு ்கணங்களும் யுகங்களாய் ஆனது

அங்கு சோகமும் சுகமாய் ஆனது
இங்கு சுகமும் சோகமாய் ஆனது

அங்கு ருசியே பசி ஆனது
இங்கு பசியே ருசி ஆனது

அங்கு மகிழ்வே பேச்சாய் ஆனது
இங்கு பேச்சுமட்டுமே மகிழ்வாய் ஆனது

அங்கு ஓய்வு தூக்கம் ஆனது
இங்கு தூக்கம்மட்டுமே ஓய்வாய் ஆனது
...

கிறுக்கன்

ivlavu kashttangal irundhum yEn nam makkal dubai endraal, parakkiraargal... :roll:

இங்கு ஒருவரின் கண்ணீர் ஆனது
அங்கு ஒரு குடும்பத்தின் கண்ணீரை துடைக்கிறது
இங்கு அவர் உழைக்கும் நேரம்
அங்கு அவர் குடும்பதிற்க்கு நல்ல நேரம்
இங்கு அவர் இழக்கும் மகிழ்ச்சி
அங்கு அவர் குடும்பதிற்க்கு கிடைக்கும்.

--கிறுக்கன்

crazy
12th June 2008, 12:28 PM
:( :clap:

kirukan
12th June 2008, 01:17 PM
இயற்க்கைக்கு இன்னல் செய்யீர்-இல்லேல்
இயற்க்கை நம்மை இல்லாதாக்கும்

--
சிறிதும் எதிர்பார
சீன பயங்கரம்

மலை அடியில் வசித்தவர்கள்
மண்ணின் அடியில் புதைந்தார்கள்
துயர் துடைக்க சென்றவர்கள்
துடி துடித்து இறந்தார்கள்

கண்ணீர் சிந்த ஆளில்லா
கல்லறைகள் பல
குடும்பத்தை இழந்த
குழந்தைகள் பல

முதுகையே முகிலாக்கி முட்டியிட்டு-தன்னடியில்
மழலையை காத்த மாதாவை என் சொல்ல
தோளோடு தோள் சேர்த்து நின்று-தம்
பிள்ளையை பாதுகாத்த பெற்றோர் பல

கண்டதை பதிவு செய்யும் கணிப்பொறியே
கண்கலங்கும் காட்சிகள் பல

உருகுலைந்த உறவுகளுக்கு இக்கவி
ஒரு காணிக்கை.
இது கவி அல்ல கண்ணீர் துளி
--
கிறுக்கன்

Thamizh_Thondan
12th June 2008, 01:29 PM
உலகில் நடு மூலயில் இருந்து தமிழில் கவி பாடி தமிழுக்கு தொண்டாட்டும் வலை நண்பர் கிறுக்கன் அவர்களுக்கு தமிழ் தொண்டன் ஸ்வி யின் வாழ்த்துக்கள்...

kirukan
12th June 2008, 02:03 PM
உலகில் நடு மூலயில் இருந்து தமிழில் கவி பாடி தமிழுக்கு தொண்டாட்டும் வலை நண்பர் கிறுக்கன் அவர்களுக்கு தமிழ் தொண்டன் ஸ்வி யின் வாழ்த்துக்கள்...

நன்றி ஸ்வி.
கவியரங்கம் உங்களை அன்போடு வரவேற்கிற்து.

crazy
12th June 2008, 02:06 PM
இது கவி அல்ல கண்ணீர் துளி
--

:(

kirukan
12th June 2008, 02:11 PM
இது கவி அல்ல கண்ணீர் துளி
--

:(

Ungal mugabaavathin artham purivathillai silaneram.

Shakthiprabha.
12th June 2008, 02:18 PM
கண்ணீர் சிந்த ஆளில்லா
கல்லரைகள் பல


அதில் துவங்காத கதைகளும்
புனையாத கவிதைகளும்
புதைந்து போன கனவுகளும் அடக்கம் :(

crazy
12th June 2008, 02:27 PM
இது கவி அல்ல கண்ணீர் துளி
--

:(

Ungal mugabaavathin artham purivathillai silaneram.

varudha pattu kaneer viduren :cry:

kirukan
14th June 2008, 01:20 PM
ஏறும்போது இறங்குவதும் இறங்கும்போது ஏறுவதும்
பங்குசந்தைக்கும் ரத்தக்கொதிப்பிற்கான உறவு.
-கிறுக்கன்

suvai
15th June 2008, 08:01 AM
kirukan.........romba pramaadhamaaga ezhuthareenga kavithaigalai.....

thodarnthu ezhuthi....pugazhum perumaiyum mana neeraivum ongalai thedi vara en vaazhthukal....

kirukan
17th June 2008, 09:42 AM
kirukan.........romba pramaadhamaaga ezhuthareenga kavithaigalai.....

thodarnthu ezhuthi....pugazhum perumaiyum mana neeraivum ongalai thedi vara en vaazhthukal....

Nanri suvai...

kirukan
17th June 2008, 09:47 AM
எண்ணெய் எண்ணில் ஏற- தன்னால்
இறங்குமென எத்தனால்(ETHANOL) எண்ணியது

-கிறுக்கன்

kirukan
1st July 2008, 11:34 AM
அணுவை அணுஅணுவாய் ஆராய்ந்தாலும் - அணுவால்
அமைதியைவிட ஆபத்தே அதிகம்.

--கிறுக்கன்

pavalamani pragasam
1st July 2008, 11:55 AM
அறிந்து செய்கிறாரோ
அறியாமல் தொடர்கிறாரோ
ஆண்டவனே எமை காப்பாற்றும்

crazy
1st July 2008, 08:57 PM
PP amma & kirukan :clap:

kirukan
9th July 2008, 01:34 PM
என்ன நடக்குதிங்கே

கூட்டணியில் இருந்தவர்
குழப்பங்கள் வந்ததினால்
கும்பிடுபோட்டு நடந்திட்டார்

வெளியில் இருந்தவர்
வெள்ளிபணம் வந்ததினால்
வெளியிலிருந்து ஆதரவென்றார்

வேண்டும் என்போரும்
ஏனென்று சொல்லவில்லை
வேண்டாம் என்போரும்
ஏனென்று சொல்லவில்லை

படித்தவனும் பாமரனும்
பைத்தியகாரனாகிறான் இங்கே

ஆட்சி நடத்த ஒருகூட்டம்
ஆட்சி கலைக்க ஒருகூட்டம்
அல்லும் பகலும் அலையுது

வறட்சியில் வாடும் கூட்டம்
வழி தெரியாமல்-நித்தம்
வறுமையில் வாடுது

பட்டினி போட்டு
பங்கு சந்தையில்
பணம் சேர்க்கும்
வல்லரசு வேண்டாம் நமக்கு
பட்டினி போக்கும்
புவிவெப்பம் நீக்கும்
பண்பாடு காக்கும்
நல்லரசே வேண்டும்

--கிறுக்கன்

crazy
9th July 2008, 09:09 PM
பட்டினி போட்டு
பங்கு சந்தையில்
பணம் சேர்க்கும்
வல்லரசு வேண்டாம் நமக்கு
பட்டினி போக்கும்
புவிவெப்பம் நீக்கும்
பண்பாடு காக்கும்
நல்லரசே வேண்டும

:clap:

kirukan
17th July 2008, 10:53 AM
நம்பியவர் நமை நம்பாதிருந்தால்-நாம்
நம்பியவரை நம்பாதிருத்தல் நலமாகும்

--கிறுக்கன்

kirukan
23rd July 2008, 12:20 PM
பார் ஆளும் மன்றத்தை
பாராளுமன்றம் பணமாளுமன்றமானது
நாட்டு நல செயலில் பற்றாக்குறை-அமைச்சர்க்கு
வீட்டு நல செல்வத்தில் மட்டுமே அக்கரை

நெஞ்சு பொறுக்குதில்லயே இந்த
நிலை கெட்ட அமைச்சரை நினைத்துவிடால்
லஞ்சம் வாங்கி வாங்கி வாழ்வார்-இவர்
வாங்காத ஆளில்லை அவணியிலே

--கிறுக்கன்

pavalamani pragasam
24th July 2008, 07:46 PM
கையறுநிலை பாரதிகள் நாம்!!!

crazy
24th July 2008, 10:23 PM
avani'na enna?

and

kaiyarunilai'na enna?

kirukan
24th July 2008, 11:45 PM
avani'na enna?

and

kaiyarunilai'na enna?

Avani na ulagam. AM I wrong?

kaiyarunilai'na helpless
i am handicaped to help u in this situation.

PP Madam correc t me if I am wrong.

--Kirukkan

pavalamani pragasam
25th July 2008, 10:33 AM
Yes, those are the meanings!

crazy
25th July 2008, 11:37 AM
kaiyaahadhu nilai ....got it :)


nandri kirukkan :ty:

kirukan
25th July 2008, 08:39 PM
லஞ்சம் பஞ்சமானால் பஞ்சம் பஞ்சமாகும்
மக்களிடம் மகிழ்ச்சி தஞ்சமாகும்.
--கிறுக்கன்

kirukan
2nd August 2008, 02:38 PM
சினங்கொண்டு சீறுமுன் சிறிதேனும் சிந்தித்தால்
சீறிய சிரமமும் சிறிதாகும்.

--கிறுக்கன்

crazy
2nd August 2008, 02:41 PM
:clap:

kirukan
8th August 2008, 10:12 PM
ஓருலகம் ஓர்கனவு ஒலிம்பிக் தத்துவம்
உலகொற்றுமை அதன் மகத்துவம்
-கிறுக்கன்

kirukan
13th August 2008, 08:16 PM
துப்பாக்கி தூக்கி துல்லியமாய் துளையிட்டதால்
முதல்தங்கம் நமை முத்தமிட்டது
-கிறுக்கன்

aanaa
13th August 2008, 10:08 PM
நமை - நமைத்தல் - தினவு

நம்மை = எம்மை

kirukan
14th August 2008, 12:09 AM
நமை - நமைத்தல் - தினவு

நம்மை

நமை=நம்மை is this wrong???

kirukan
14th August 2008, 10:04 PM
துன்பத்தால் துவளாமல் துன்பத்தை துன்புறுத்தல்
துயர் துடைக்கும் திறனாம்.

-கிறுக்கன்

kirukan
5th October 2008, 12:08 PM
மரணத்தை மயக்கும் மாரடைப்பு
மௌனமாயும் வருவதுண்டு
மிரட்சியாயும் வருவதுண்டு
மீண்டும் மீண்டும் வந்தால்
மீட்டு வருவது கடினம்
மருத்துவர் கூட மேலே கைகாட்டிடுவார்
மனித நேயம் காக்கும் ரத்த தானம்
மாரடைப்பின் முக்கிய எதிரியாம்.

--கிறுக்கன்

aanaa
11th November 2008, 08:41 PM
மரணத்தை மயக்கும் மாரடைப்பு
மௌனமாயும் வருவதுண்டு
மிரட்சியாயும் வருவதுண்டு
மீண்டும் மீண்டும் வந்தால்
மீட்டு வருவது கடினம்
மருத்துவர் கூட மேலே கைகாட்டிடுவார்
மனித நேயம் காக்கும் ரத்த தானம்
மாரடைப்பின் முக்கிய எதிரியாம்.

--கிறுக்கன்
:clap:

நன்றாகவே கிறுக்கின்றீர்கள்

kirukan
3rd December 2008, 03:28 PM
பயங்கரவாதம்

பயங்கரவாத படுகொலை
பல நாளாய் நடக்க
பம்பாய் பயங்கரம்
பெரிதாயானது ஏன்?

இங்கு
பிற தாக்குதலில் பிணமானோர்
நடுத்தரவாசி மற்றும் நடைமேடைவாசி
ஆனால் இன்றோ பிணமானோர் -பலர்
பணக்காரவர்கம் மற்றும் பிரபலங்கள்

இங்கு உயிர்க்கு கூட விலையுண்டு
உடமை பார்த்துதான் உயிருக்கு உத்திரவாதம் தருவர்.

அங்கு(அமெரிக்கா)

பயங்கரவாத படுகொலையின்
பின்னனி பாக்கிஸ்த்தானென தெரிந்தும்
அமைதி காக்க சொல்கிறது அமெரிக்கா
இந்நாட்டு உயிரென்பதால்
அந்நாட்டு உயிரென்ருந்தால்
பாக்கிஸ்த்தான் வரைபடம்
பாட புத்தகத்தில் மட்டும் இருந்திருக்கும்



மனித உயிரில் பேதம் பார்த்தால்
மனித இனமே விரைவில் மண்ணோடு போகும்.

--கிறுக்கன்

kirukan
28th January 2009, 01:19 PM
வார்த்தையால் வதைத்தாய்- எனை
வேதனையில் விதைத்தாய்
அகம் குளிரவைத்த- எனை
அழுதுளர வைத்தாய்
சிறப்பிக்க நினைத்த -எனை
சின்னாபின்னம் ஆக்கினாய்

என் வேதனைதான் உனக்கு
சுகம் என்றால்
வேதனையே எனது வாழ்வாகட்டும்.

--கிறுக்கன்

kirukan
11th March 2009, 07:53 PM
உன்னை நினைத்திட்டால்
உதிரம் சிலிர்க்குது
உற்சாகம் பெருகுது
உன்னிரு கரங்களிலே
உறங்க நினைக்குது

உயிர் உனதாக
உள்ளம் எனதாக
உன்னுள் உறைய நினைக்கிறேன்
உன்னிதயம் தருவாயா..

thriinone
11th March 2009, 07:57 PM
வார்த்தையால் வதைத்தாய்- எனை
வேதனையில் விதைத்தாய்
அகம் குளிரவைத்த- எனை
அழுதுளர வைத்தாய்
சிறப்பிக்க நினைத்த -எனை
சின்னாபின்னம் ஆக்கினாய்

என் வேதனைதான் உனக்கு
சுகம் என்றால்
வேதனையே எனது வாழ்வாகட்டும்.

--கிறுக்கன்

வேதனையின் ஆழம் ரசிகர்களையும் தாக்குகிறது.

- ரசிகன்.

suba
17th March 2009, 07:09 PM
[tscii:10f199ee77] :)

wow.... kirukkan.... «Õ¨Á¡¸ þÕó¾Ð ¸¨¼º¢ þÃñÎ ¸Å¢¨¾¸Ùõ. ÁüÈÅü¨ÈÔõ ÀÊòÐÅ¢ðÎ ±Øи¢§Èý...

:)
[/tscii:10f199ee77]

kirukan
21st March 2009, 12:11 AM
nanri rasigan & suba
-kirukkan

kirukan
28th March 2009, 10:49 PM
நீரூற்றி நெடுவயல் நட்டாலும் நெற்மணி
கிட்டாது நட்டது புல்லென்றால்

--
கிறுக்கன்

kirukan
28th March 2009, 11:12 PM
காணாத காட்சியெல்லாம் கண்முன்னே நடந்தாலும்
கண்டுகளிக்க இயலாது கண்மூடியிருந்தால்.

--
கிறுக்கன்

pavalamani pragasam
29th March 2009, 08:57 AM
மிகவும் சரியே!

suvai
30th March 2009, 05:18 AM
:clap: :clap: romba azhaga ezhuthareenga kirukan.....pramatham....niruthi vidaatheenga continue pannunga....ullangal magizha

kirukan
17th April 2009, 01:21 PM
துன்பம் கண்டு துன்பம் கண்டு
துவண்டு வீழ்வதேனடா
இன்பம் உண்டு இன்பம் உண்டு
எழுந்து நீயும் பாரடா

துன்பம் தந்த தீயில் நீயும்
தீந்து போனது ஏனடா
துன்பத்தில் இன்பமென
தீயில் மின்னி நகையடா

கண்களிரண்டு படைத்தது
கண்ணீர் சிந்த அல்லடா
கருணை கொண்டு இவ்வுலகை
கண்கள் கொண்டு காணடா

பூட்டி இருக்கும் மனைதனில்(மனதினில்)
புகுந்து விடும் இருளடா
பூட்டை நீயும் உடைத்திட்டால்
பிரகாசிக்கும் மனையடா(மனதடா)

-கிறுக்கன்

kirukan
21st April 2009, 02:33 PM
இருக்கிறது என்றிருந்து ஏமாறும் இன்னலினும்
இல்லை என்றிருத்தல் நலமாம்.

-கிறுக்கன்

bingleguy
21st April 2009, 02:36 PM
இருக்கிறது என்றிருந்து ஏமாறும் இன்னலினும்
இல்லை என்றிருத்தல் நலமாம்.

-கிறுக்கன்

aha ... oru kural padicha anubavam :-)

kirukan
22nd April 2009, 11:54 AM
களவாடும் கள்வர் கூட்டம் கைதொழுதிடும்
காரியம் கூடியதும் கழுத்தறுக்க

-கிறுக்கன்

kirukan
28th April 2009, 01:10 PM
பகுத்தறிவும் பேச்சறிவும் புன்சிரிப்பும் யாதெனில்
ஆறாம் அறிவின் முப்பகுதியாம்.

-
கிறுக்கன்

kirukan
29th April 2009, 12:53 PM
பலமுடன் பலநாள் இருந்தாலும் பழுதானால்
பல்லை பிடுங்கத்தான் வேண்டும்
-
கிறுக்கன்

kirukan
6th May 2009, 04:06 PM
உண்மையும் நேர்மையும் உறவாடும் உத்தமரை
பிழைக்க தெரியாதவரெனும் உலகு.
-
கிறுக்கன்

kirukan
8th May 2009, 02:07 PM
வீழ்தலும் விழுதலும் வித்தியாசப் பட்டாலும்
எழுதல் என்றும் உன்கையில்

-கிறுக்கன்

Shakthiprabha.
8th May 2009, 02:08 PM
நன்றாக எழுதுகிறீர்கள். :bow:

kirukan
8th May 2009, 03:35 PM
கனியாத கனியும் பணியாத மனதும்
புவியில் பயன்படல் ஆகாது

-
கிறுக்கன்

kirukan
8th May 2009, 04:34 PM
இன்பம் இனிக்கும் வேளை பரவசப்படு
இடுக்கண் கண்டு பக்குவப்படு

-
கிறுக்கன்

crazy
8th May 2009, 04:37 PM
பயங்கரவாதம்

பயங்கரவாத படுகொலை
பல நாளாய் நடக்க
பம்பாய் பயங்கரம்
பெரிதாயானது ஏன்?

இங்கு
பிற தாக்குதலில் பிணமானோர்
நடுத்தரவாசி மற்றும் நடைமேடைவாசி
ஆனால் இன்றோ பிணமானோர் -பலர்
பணக்காரவர்கம் மற்றும் பிரபலங்கள்

இங்கு உயிர்க்கு கூட விலையுண்டு
உடமை பார்த்துதான் உயிருக்கு உத்திரவாதம் தருவர்.

அங்கு(அமெரிக்கா)

பயங்கரவாத படுகொலையின்
பின்னனி பாக்கிஸ்த்தானென தெரிந்தும்
அமைதி காக்க சொல்கிறது அமெரிக்கா
இந்நாட்டு உயிரென்பதால்
அந்நாட்டு உயிரென்ருந்தால்
பாக்கிஸ்த்தான் வரைபடம்
பாட புத்தகத்தில் மட்டும் இருந்திருக்கும்



மனித உயிரில் பேதம் பார்த்தால்
மனித இனமே விரைவில் மண்ணோடு போகும்.

--கிறுக்கன்

:clap:

Shakthiprabha.
8th May 2009, 04:41 PM
கனியாத கனியும் பனியாத மனதும்
புவியில் பயன்படல் ஆகாது

-
கிறுக்கன்

பணியாத மனம் என்று இருக்க வேண்டுமா?
இல்லை பனியாத (வேறு வகையில் அர்த்தம் கொள்ளலாம்) மனம் தானா?

இப்படி எல்லாம் கேள்வி கேட்டால் கோபிக்க மாட்டீர்கள் என்ற எண்ணத்துடன்...

kirukan
8th May 2009, 04:57 PM
கனியாத கனியும் பனியாத மனதும்
புவியில் பயன்படல் ஆகாது

-
கிறுக்கன்

பணியாத மனம் என்று இருக்க வேண்டுமா?
இல்லை பனியாத (வேறு வகையில் அர்த்தம் கொள்ளலாம்) மனம் தானா?

இப்படி எல்லாம் கேள்வி கேட்டால் கோபிக்க மாட்டீர்கள் என்ற எண்ணத்துடன்...
நன்றி சக்தி பிரபா
திருத்தி கொண்டேன்

கற்றுணர்ந்த கவிஞனல்ல நான் வெறும்
கிறுக்கல்களின் கிறுக்கன்

kirukan
10th May 2009, 11:02 AM
(நல்)உணர்வுள்ள உள்ளங்கள் ஊமையானதால் இங்கே
ஊழல்கள் உத்தமமாய் உலவுகின்றன

-கிறுக்கன்

kirukan
10th May 2009, 11:07 AM
கள்ளமில்லா கல்லார் கூட்டம் மேல்
கற்றுணர்ந்த கள்வர் கூட்டத்தினும்

-கிறுக்கன்

kirukan
11th May 2009, 11:46 AM
நிறை நிறைந்திருக்க குறை மட்டும்
காணின் நிறை குறைந்திடும்

-
கிறுக்கன்

kirukan
15th May 2009, 11:42 AM
தழைத்த பயிர்களில் நரைத்தது இரண்டு
தாடியிலும் வெள்ளை முடி.

--கிறுக்கன்

VENKIRAJA
15th May 2009, 12:03 PM
தொடர்க... தொடர்க...

kirukan
17th May 2009, 03:24 PM
எடுபடா உடையை உடுத்திவிட்டு - ஊரார்
சிரிக்க உடுத்திவிட்டாரும் சிரித்தனரே

-
கிறுக்கன்

kirukan
20th May 2009, 07:55 PM
வீழ்ந்து மடிவதில்லை விதைகள் -வீரிட்டு
எழுந்திடும் வானுயர் விருட்ச்சமாய்

--கிறுக்கன்

VENKIRAJA
20th May 2009, 10:48 PM
வீழ்ந்து மடிவதில்லை வானுயர மீண்டும்
விருட்சமாய் மாறும் விதைகள்

--
கிறுக்கன்

வார்த்தைகளை இன்னும் அழகாக அடுக்கியிருக்கலாம். எனினும், வாழ்த்துக்கள். தொடர்ந்து எழுதி வருகிறீர்கள். மேன்மேலும் எழுதவும். நன்று.

kirukan
21st May 2009, 11:48 AM
வீழ்ந்து மடிவதில்லை வானுயர மீண்டும்
விருட்சமாய் மாறும் விதைகள்

--
கிறுக்கன்

வார்த்தைகளை இன்னும் அழகாக அடுக்கியிருக்கலாம். எனினும், வாழ்த்துக்கள். தொடர்ந்து எழுதி வருகிறீர்கள். மேன்மேலும் எழுதவும். நன்று.

நன்றி வெங்கிராஜா உங்கள் பாராட்டுக்கும் விமர்சனதுக்கும்.மாற்றி அமைத்திருக்கிறேன் வாற்த்தைகளை.

--
கிறுக்கன்

Shakthiprabha.
21st May 2009, 06:38 PM
உங்கள் கவிதைகளை நானும் தொடர்ந்து வாசித்து வருகிறேன். தொடர்ந்து எழுதுங்கள். ஒவ்வொரு கவிதையும் வாசகர்களின் மனதுக்கும் அறிவுக்கும் விருந்து.

kirukan
22nd May 2009, 05:21 PM
கருத்து கூறும் கனவான்கள் கண்டிலார் (எம்மக்கள்)
களத்தில் காணும் கஷ்டங்கள்.

--
கிறுக்கன்

kirukan
23rd May 2009, 01:22 PM
அழுகை ஆனந்தமோ ஆற்றாமையோ அயர்ச்சியோ
அதனாழம் அழுவாரே அறிவார்

--
கிறுக்கன்

suvai
23rd May 2009, 06:35 PM
அழுகை ஆனந்தமோ ஆற்றாமையோ அயர்ச்சியோ
அதனாழம் அழுவாரே அறிவார்

--
கிறுக்கன்


absolutely true nga !!! well said!!

kirukan
24th May 2009, 10:23 PM
தவறும் சரியாகும் முதலாளியெனில் மாறாக
சரியும் தவறாகும் தொழிலாளிடத்து.

--
கிறுக்கன்

kirukan
27th May 2009, 10:44 AM
பாசப்பேச்சோ ஏச்சு பேச்சோ பொருளில்லையெனில்
பேச்சால் ஏதும் பயனில்லை.

--
கிறுக்கன்

kirukan
28th May 2009, 11:58 AM
தெருவிலிருந்து தேரோ தேரிலிருந்து தெருவோயென
தீர்மானிக்கும் தருணம் திருமணம்.

--
கிறுக்கன்

kirukan
30th May 2009, 11:44 AM
சுடு சொற்கள் சொலல் சுலபமாம்
சிரமமாம் சொல்லியன அள்ளல்

-கிறுக்கன்

VENKIRAJA
30th May 2009, 09:37 PM
Open a new site sir! Wishes...! Nice work here!

kirukan
31st May 2009, 07:15 PM
Open a new site sir! Wishes...! Nice work here!

Enna solla varugireergal endru puriyavilai.Intha thread continue pana vendam endru solgireergala?

BTW I have voted for your story...

-
kirukan

VENKIRAJA
31st May 2009, 08:15 PM
Open a new site sir! Wishes...! Nice work here!

Enna solla varugireergal endru puriyavilai.Intha thread continue pana vendam endru solgireergala?


Not at all... I meant to say that besides continuing your writings here, you can open a site (weblog). You can write a professional (or amateur) Thamiz blog on Blogger and Wordpress. Other services like Typepad, Livejournal, etc. also offer writing spaces on the internet. Please do google about them and start one!



BTW I have voted for your story...

-
kirukan

Wow! Thanks.. Do post in your valuable comments and suggestion in the blog / stories section.

suvai
31st May 2009, 10:35 PM
kirukan avargaley!!
ungaludaiya kavithagal irendu variyaaanaalum...karuthu romba aazham.....continue yr good work nga!!

kirukan
2nd June 2009, 10:36 AM
kirukan avargaley!!
ungaludaiya kavithagal irendu variyaaanaalum...karuthu romba aazham.....continue yr good work nga!!

Nanri Suvai.

Immandrathil vazhthukalum vazhinadathalume ennai menmelum ezhutha thoondukinrana.

--
kirukkan

kirukan
2nd June 2009, 10:39 AM
தெளிந்த நீராயினும் நிறமாறித் தெரியும்
கருந்திரை கண்கொண்டு கண்டால்

-
கிறுக்கன்

kirukan
4th June 2009, 11:08 AM
சுகமாய் சுமந்தவை சுமையாய் ஆனாலும்
சுமத்தலே சுகமென கொள்.

--
கிறுக்கன்

kirukan
5th June 2009, 07:43 PM
Hi all,

As per Mr. venki's advice I have created a blog for me.Kindly visit and comment on my new blog.
www.kirukkural.blogspot.com

kirukkan.

kirukan
6th June 2009, 12:23 AM
மறுமை மறக்கவைக்கும் எளிமை எடுத்துரைக்கும்
வெறுமை விரும்பவைக்கும் வறுமை.

--
கிறுக்கன்

VENKIRAJA
6th June 2009, 01:30 AM
தெளிந்த நீராயினும் நிறமாறித் தெரியும்
கருந்திரை கண்கொண்டு கண்டால்

-
கிறுக்கன்

Very impressive! :D

suvai
6th June 2009, 07:00 PM
மறுமை மறக்கவைக்கும் எளிமை எடுத்துரைக்கும்
வெறுமை விரும்பவைக்கும் வறுமை.

--
கிறுக்கன்


:clap: :clap: good one nga k!!

kirukan
9th June 2009, 12:59 PM
பிரிதல் கூட்டும் புரிதல் அதுபோல்
நல்லறிதல் கூட்டும் காதல்.
-
கிறுக்கன்

kirukan
9th June 2009, 01:06 PM
கனியான பின்னாலும் இனிவில்லை என்றால்
தரமில்லை என்றே தள்ளிவைப்பர்.

-
கிறுக்கன்

kirukan
13th June 2009, 04:47 PM
உண்மைகள் உறங்கும் இறக்காது -பொய்கள்
உண்மையென உலவும் நிலைக்காது.

-
கிறுக்கன்

suvai
13th June 2009, 04:58 PM
பிரிதல் கூட்டும் புரிதல் அதுபோல்
நல்லறிதல் கூட்டும் காதல்.
-
கிறுக்கன்


:clap: :clap:

kirukan
14th June 2009, 02:42 PM
நிம்மதி என்பது விண்ணிலில்லை -நினைத்து
நிகழ்த்தும் நின்மதியின் எல்லை.

-
கிறுக்கன்

suvai
15th June 2009, 04:43 AM
hi K!!
ovondrum muthukal!!
hope u r keeping a record of all your writings nga!
:-)

kirukan
15th June 2009, 10:17 AM
hi K!!
ovondrum muthukal!!
hope u r keeping a record of all your writings nga!
:-)
Nanri suvai.
I dont have any records other than this forum and my blogspot.

kirukkan.

kirukan
15th June 2009, 10:50 AM
தூற்றலால் துவளாமையும் போற்றலால் தற்பெருமையும்
தீண்டா வாழ்வே தெளிவுறும்.

-
கிறுக்கன்

kirukan
17th June 2009, 02:03 PM
காரியத்தில் வீரியம் இருந்தால் காணும்
கஷ்டங்களும் இஷ்டமாய் கனியும்.

-
கிறுக்கன்.

kirukan
18th June 2009, 10:27 AM
வீதியில்(வாழ்கை) சில விபத்தை கண்டு
ஊர்தியை(உழைப்பு) தவிர்ப்பது மடமையாம்.

-
கிறுக்கன்

kirukan
20th June 2009, 12:43 PM
தீதெது நன்றெது என தெளிந்தறிதல்
திடமான தீர்வுக்கான தேர்வாம்.

-
கிறுக்கன்

suvai
20th June 2009, 08:14 PM
வீதியில்(வாழ்கை) சில விபத்தை கண்டு
ஊர்தியை(உழைப்பு) தவிர்ப்பது மடமையாம்.

-
கிறுக்கன்

Good one nga K :thumbsup:

kirukan
21st June 2009, 11:59 AM
திமிராகி தனியாகி துயராகி வாழ்வில்
தோல்வியுறச் செய்யும் தற்பெருமை.

-
கிறுக்கன்

kirukan
22nd June 2009, 08:29 PM
எண்ணத்தில் ஏமாற்று எண்ணம் கீழிறங்க
சுற்றத்தில் சந்தோஷம் மேலோங்கும்.

-
கிறுக்கன்.

kirukan
23rd June 2009, 11:34 AM
நல்லதை செய்த உடனே மறந்துவிடு
கெட்டதை மறந்தும் செய்துவிடாதே.

-
கிறுக்கன்

suvai
24th June 2009, 07:48 AM
திமிராகி தனியாகி துயராகி வாழ்வில்
தோல்வியுறச் செய்யும் தற்பெருமை.

-
கிறுக்கன்


superrrrr o superrrrrrr!!!

suvai
24th June 2009, 07:49 AM
நல்லதை செய்த உடனே மறந்துவிடு
கெட்டதை மறந்தும் செய்துவிடாதே.

-
கிறுக்கன்

good one!!!! :thumbsup:

pavalamani pragasam
24th June 2009, 06:46 PM
நளினமாய், நிதானமாய், நில்லாமல் ஓடும் நீரோடையாய் நெஞ்சை அள்ளும் நவீன குறள்கள்!

kirukan
24th June 2009, 10:59 PM
இலக்கணமாய் இருந்துக்காட்டி அன்பால் இளையோரை
வழிநடத்தல் சான்றோர் செயல்.

-
கிறுக்கன்

suvai
25th June 2009, 05:55 AM
நளினமாய், நிதானமாய், நில்லாமல் ஓடும் நீரோடையாய் நெஞ்சை அள்ளும் நவீன குறள்கள்!

pp maaam evolo azhagaa ezhuthi irukeenga neenga..............athuku thuguntha mariyathaiyudan kirukan avargalin bathil ...

ahaaa ahaaa arputham!!!!

:clap: :clap:

suvai
25th June 2009, 06:00 AM
absolute joy reading this thread ;-)

pavalamani pragasam
25th June 2009, 09:11 AM
:oops: romba over!!! :D

kirukan
25th June 2009, 03:40 PM
இல்லதில் இல்லாள் இனியவளாய் இருந்திட்டால்
இல்லறம் இனித்திடும் இன்பத்தில்.

-
கிறுக்கன்

kirukan
26th June 2009, 02:42 PM
உடற்பிணி வந்து
உன்னை அணைத்தால்
உடற்பொருள் ஆவி
வலியில் நிறைந்தால்

கிறுக்கல் கூட
இறுக்கமாய் மாறிடும்
உணர்ச்சிகள் அதிலே
உறுக்கம் நிறைந்திடும்

முகமதில் மின்னும்
மலர்ச்சி மறைந்திடும்
அதற்க்குச் சான்றாய்
முடிகள் முளைத்திடும்


உறக்கம் கூட
உறங்க மறுத்திடும்
உடலும் அதனால்
மெல்ல இளைத்திடும்

நோய்கள் இல்லா
வாழ்வை போல்
நிகரான செல்வம்
வாழ்வில் உண்டோ...

-

கிறுக்கன்

suvai
27th June 2009, 08:00 AM
:clap: amaam K.. the best wealth one can wish for is Health!!

pavalamani pragasam
27th June 2009, 10:03 AM
:yes:

kirukan
28th June 2009, 12:50 AM
உளமாற பாராட்டும் உள்ளங்கள் உள்ளவரை
வளமோடு வாழும் கலை.

-
கிறுக்கன்

kirukan
28th June 2009, 01:00 AM
நடுநிலை நழுவாது நன்றும் தீதும்
நயம்பட நவிலும் நட்பு.

-
கிறுக்கன்

pavalamani pragasam
28th June 2009, 08:07 AM
நிஜம்!

suvai
28th June 2009, 08:20 AM
thayavu seithu.....meaning podungalen plz!
நன்றும் தீதும்
நயம்பட நவிலும்

thank u thank u

kirukan
28th June 2009, 11:48 AM
thayavu seithu.....meaning podungalen plz!
நன்றும் தீதும்
நயம்பட நவிலும்

thank u thank u

ஒரு விஷயத்தில் நல்லது எது கெட்டது எது என்றும் செய்யலமா வேண்டாமா என்று நடுநிலையில் இருந்து மனது புண்படாவண்ணம் கூறுவது நட்பு.

நயம்பட- தெளிவாக,மென்மையாக
நவில்தல்- கூறுதல்,சொல்லுதல்.

-
கிறுக்கன்

kirukan
28th June 2009, 11:54 PM
உயிர்வலி உன்னுள் உணர்த்தும் உண்மை
உணரவேயன்றி உரைத்திடல் ஆகாது.

-
கிறுக்கன்

suvai
29th June 2009, 05:26 AM
thayavu seithu.....meaning podungalen plz!
நன்றும் தீதும்
நயம்பட நவிலும்

thank u thank u

ஒரு விஷயத்தில் நல்லது எது கெட்டது எது என்றும் செய்யலமா வேண்டாமா என்று நடுநிலையில் இருந்து மனது புண்படாவண்ணம் கூறுவது நட்பு.

நயம்பட- தெளிவாக,மென்மையாக
நவில்தல்- கூறுதல்,சொல்லுதல்.

-
கிறுக்கன்


awesome......thank u K....:-)

pavalamani pragasam
29th June 2009, 06:52 AM
உயிர்வலி உன்னுள் உணர்த்தும் உண்மை
உணரவேயன்றி உரைத்திடல் ஆகாது.

-
கிறுக்கன்

:yes: கண்டவர் விண்டிலர்! :)

kirukan
29th June 2009, 10:13 PM
சும்மா இருத்தல் சுகம் எதுவரையெனில்
சும்மா இருத்தல் சுமையாகும்வரை.

-
கிறுக்கன்

kirukan
30th June 2009, 12:05 PM
உன் உடமை கண்டு உறவாடும்
உறவு உப்பற்ற உணவு.

-
கிறுக்கன்

suvai
1st July 2009, 05:23 AM
:thumbsup: :thumbsup:

kirukan
2nd July 2009, 11:08 AM
பிடித்தப்பிடியில் பலனில்லை என்றாலும் பித்தராய்
பிடிக்க வைக்கும் பிடிவாதம்.

-
கிறுக்கன்

kirukan
2nd July 2009, 11:11 AM
முதிர்ச்சியை கூட்டும் முன்யோசனை மாறாய்
முட்டாள் ஆக்கும் பின்யோசனை.

-
கிறுக்கன்

kirukan
3rd July 2009, 02:10 PM
பிறப்பால் பெரும்பேறு பெறுவதில்லை யாரும்
இருப்பால் இருவினைச் சேரும்.

-
கிறுக்கன்

kirukan
4th July 2009, 04:48 PM
கொண்ட கருமத்தை கண்ணாய் கண்டிட
குழப்பங்கள் குன்றி கலைந்தோடும்.

-
கிறுக்கன்

kirukan
9th July 2009, 01:33 AM
ருசிக்க புசிக்காமல் பசித்து புசித்தல்
ருசித்து ரசிக்க வைக்கும்.

-
கிறுக்கன்

pavalamani pragasam
9th July 2009, 10:56 AM
Yes, eat to live and not live to eat as the saying goes!

kirukan
10th July 2009, 09:01 PM
எதிராய்காணும் எண்ணமில்லாது எதிரணி சென்றால்
எளித்தாய்விளங்கும் இருபுற உண்மை .

-
கிறுக்கன்.

kirukan
14th July 2009, 06:38 PM
விடையறியா விடயங்களுக்கு விடையில்லை எனல்
விழியில்லார் விடியலில்லை என்பதுபோல்.

-
கிறுக்கன்

pavalamani pragasam
15th July 2009, 08:02 AM
:exactly:

kirukan
16th July 2009, 11:37 PM
வாழ்வில் வரும்வலி வலுவின் விளிவு
வீழாவன்மை வேதனையின் விடிவு.


விளிவு=கேடு

வீழா+வன்மை= தளரா வல்லமை

-
கிறுக்கன்

kirukan
17th July 2009, 01:01 PM
தடுமாறும் நிலையதில் தாங்கிட தோளில்லையெனில்
தன்கையே தனக்கு உதவி.

-
கிறுக்கன்

kirukan
19th July 2009, 11:55 AM
புகை புகைத்து உடற்பகை போற்றாது
புகை பகைத்து பழகு.

-
கிறுக்கன்

kirukan
19th July 2009, 01:05 PM
யாருக்கு என்னை
பிடித்ததோ இல்லையோ
உனக்கு என்னை
மிகவும் பிடித்துள்ளது
ஆகவே தான்
இரவும்பகலும் என்னை
அரவணைத்தே இருக்கிறாய்
பாவம் நீ
உன்னை விரும்புவோர்
யாரும் இல்லை
என் செய்வாய்
என்னருமை (உடற்)வலியே!!!


-
கிறுக்கன்

pavalamani pragasam
19th July 2009, 05:27 PM
:)

suvai
20th July 2009, 06:26 AM
புகை புகைத்து உடற்பகை போற்றாது
புகை பகைத்து பழகு.

-
கிறுக்கன்

:clap: good one!

kirukan
21st July 2009, 09:56 PM
அலர்தல் ஆவேசம் ஆத்திரம் இல்லா
ஆற்றலுள்ள அனுபவமே அறிவு.

அலர்தல் - புறங்கூறல்

-
கிறுக்கன்

pavalamani pragasam
22nd July 2009, 07:46 AM
:yes:

kirukan
24th July 2009, 12:37 PM
நம்பிய நம்பிக்கை நமக்கு நம்பும்கை
நம்பாத நடவடிக்கை மூடநம்பிக்கை.

-
கிறுக்கன்

suvai
25th July 2009, 06:20 AM
அலர்தல் ஆவேசம் ஆத்திரம் இல்லா
ஆற்றலுள்ள அனுபவமே அறிவு.

அலர்தல் - புறங்கூறல்

-
கிறுக்கன்

Good one nga K!...:-)

kirukan
27th July 2009, 01:07 AM
செல்வந்தராக செல்வம் சேர்த்தல் ஒருவழி
செலவு சிறுத்தல் மறுவழி.

-
கிறுக்கன்

kirukan
27th July 2009, 02:43 PM
குறைகூறல் குறைய குணம் கூடும்
காணும் கவலை கலைந்தோடும்.

-
கிறுக்கன்

suvai
28th July 2009, 04:56 AM
:clap: K

kirukan
30th July 2009, 11:55 PM
நீ காணாததை உன் பிள்ளைக்காண
நீ கண்டதை காணாதாக்காதே.

-
கிறுக்கன்

kirukan
31st July 2009, 03:21 PM
செய்யும் செயல் சரியாவதும் தவறாவதும்
சுற்றத்தின் சிந்தை வெளிப்பாடே.

-
கிறுக்கன்

suvai
1st August 2009, 06:28 AM
நீ காணாததை உன் பிள்ளைக்காண
நீ கண்டதை காணாதாக்காதே.

-
கிறுக்கன்

:thumbsup:

kirukan
2nd August 2009, 08:09 PM
புறத்தோற்றம் பார்த்து பிரிவினை போற்றாது
அகத்தோற்றம் பகுத்து பழகு.

-
கிறுக்கன்

suvai
2nd August 2009, 09:47 PM
mudhal vari vilakunga plz...:-)
thank u

kirukan
3rd August 2009, 11:07 AM
mudhal vari vilakunga plz...:-)
thank u

ஒருவருடைய உருவ அமைப்பை வைத்து உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்று பிரிக்காது உள்ளத்தை வைத்து பிரித்தலே உலகமைதிக்கு வழிவகுக்கும்.


பிரிவினை-secession

-
கிறுக்கன்

suvai
3rd August 2009, 11:49 PM
:clap: :clap:

thank u K :-)

kirukan
6th August 2009, 01:23 PM
துடுப்பு இல்லா படகு போன்றது
பிடிப்பு இல்லா படிப்பு.

-
கிறுக்கன்

kirukan
9th August 2009, 09:06 PM
மகிழ்ந்து மகிழ்தலினும் மகிழ்வித்து மகிழும்
மனமே மனமாற மகிழ்வுறும்.

-
கிறுக்கன்

suvai
10th August 2009, 01:34 AM
:thumbsup: nice one k

kirukan
13th August 2009, 04:26 PM
மலராய் மலர்வாய் கனியாய் கனிவாய்
அன்பே அணியாய் அணிவாய்.

-
கிறுக்கன்

kirukan
14th August 2009, 05:50 PM
அறிவும் செறிவும் ஒளிரும் உள்ளம்
பணிந்து கனிந்து மிளிரும்.

-
கிறுக்கன்

pavalamani pragasam
14th August 2009, 07:34 PM
எதுகையும், மோனையும் அலங்கரிக்கும் அறிவுச் சிதறல்கள்! அமுதனைய தேன் துளிகள்!

kirukan
17th August 2009, 10:38 AM
இரை குறை கண்டு இறைமாறும்
இனம் இறை காணா.

-
கிறுக்கன்

kirukan
17th August 2009, 12:45 PM
ஈரமில்லா நிலம் உழுதிடவும்- ஈரமில்லா
மனம் பழகிடவும் பயன்படா.

-
கிறுக்கன்

kirukan
18th August 2009, 10:00 PM
வார்த்தையின் வீரியம் வாழவும் வைக்கும்
வரம்புமீறினால் வீழவும் வைக்கும்.

-
கிறுக்கன்.

kirukan
18th August 2009, 10:04 PM
வாழ்க்கையில் செல்வம் மட்டும் தேடி
வாழ்வை தொலைத்து விடாதே.

-
கிறுக்கன்

suvai
19th August 2009, 09:26 AM
ஈரமில்லா நிலம் உழுதிடவும்- ஈரமில்லா
மனம் பழகிடவும் பயன்படா.

-
கிறுக்கன்

:thumbsup: K

kirukan
19th August 2009, 01:31 PM
இருப்போர் இல்லாராய் இருந்து வந்தால்
இல்லாதோர் இருப்பவர் ஆவர்.

-
கிறுக்கன்

suvai
20th August 2009, 04:36 AM
எதுகையும், மோனையும் அலங்கரிக்கும் அறிவுச் சிதறல்கள்! அமுதனைய தேன் துளிகள்!

pp maam - ethugaiyum monaiyum meaning sollunga please & thank you nga

kirukan
20th August 2009, 11:01 AM
எதுகையும், மோனையும் அலங்கரிக்கும் அறிவுச் சிதறல்கள்! அமுதனைய தேன் துளிகள்!

pp maam - ethugaiyum monaiyum meaning sollunga please & thank you nga

மோனை என்பது 'இரு சீர்களின் முதல் எழுத்துகள் ஓசையில் ஒன்றுவது' . எதுகை என்பது ' இரு சீர்களின் இரண்டாம் எழுத்து ஒன்றுவது'
என்று சொல்லலாம். காட்டுகள்: கற்று, பெற்று ; பாடம், மாடம் ; கண்ணன்,
வண்ணன்.


எதுகைக்கு இரண்டாம் எழுத்து மட்டும் ஒன்றினால் போதாது. முதல்
எழுத்துகள் அளவில் ஒத்துப் போகவேண்டும். அதாவது, முதல் எழுத்துக்
குறிலானால் (நெடிலானால்), எதுகைச் சீரிலும் முதல் எழுத்துக்
குறிலாக(நெடிலாக) இருக்கவேண்டும். (இது பலரும் செய்யும் தவறு) .தட்டு,
பட்டு..எதுகை; ஆனால், தட்டு, பாட்டு ..எதுகை அல்ல.


சிலசமயம் , மூன்றாம் எழுத்தும் ஒன்றினால் தான் ஒத்த ஓசை கிடைக்கும்.
(உ-ம்) பண்டு, உண்ண ..ஓசை இனிமை இல்லை. பண்டு, உண்டு, கண்டு... இவை
இன்னும் சரியான எதுகைகள். அதனால், முதல் எழுத்து அளவில் ஒன்றி,
முடிந்தவரை மற்ற எழுத்துகள் ஒன்றுவது சிறப்பு. குறைந்த பட்சம் இரண்டாவது
எழுத்தாவது ஒன்ற வேண்டும்!

[Thanks to Prof.Pasupathi]


-
கிறுக்கன்

suvai
29th August 2009, 05:38 AM
thank u or giving the meaning K...:-)


aduthu enna poo?? ;-)

kirukan
1st September 2009, 04:26 PM
உதவிய உதவி உதவாது உய்த்திடும்
உதவியதை ஓயாது உரைத்திட்டால்.

-
கிறுக்கன்

kirukan
4th September 2009, 01:23 PM
சோர்ந்த சோம்பேறியுடன் சேர்ந்து செய்தால்
சிறிய செயலும் சிரமமாம்.

-
கிறுக்கன்

suvai
5th September 2009, 03:16 AM
சோர்ந்த சோம்பேரியுடன் சேர்ந்து செய்தால்
சிறிய செயலும் சிரமமாம்.

-
கிறுக்கன்


so true nga k!/// :clap:

kirukan
8th September 2009, 08:59 PM
வாழ்வில் வேலையால் நல்வேளையும் வரும்
வேளையால் நல்வேலையும் வரும்.

-
கிறுக்கன்

suvai
9th September 2009, 01:38 AM
வாழ்வில் வேலையால் நல்வேளையும் வரும்
வேளையால் நல்வேலையும் வரும்.

-
கிறுக்கன் :thumbsup: :clap: :thumbsup: :clap: awesome! K

kirukan
11th September 2009, 01:09 PM
மெய் மெலியும் மறைந்திடாது மாறாய்
பொய் பெருத்தாலும் பொசிந்திடும்.

-
கிறுக்கன்

kirukan
12th September 2009, 03:11 PM
அகவை அடியேற அடியிறங்கும் புறஅழகு
அகலாது அழகாகும் அகஅழகு.

-
கிறுக்கன்

suvai
12th September 2009, 06:46 PM
beautiful k.....

kirukan
17th September 2009, 11:35 PM
அறிவு செறிவாக அன்பு அரிதானால்
வாழ்வு கரிந்து சரிந்திடும்.

-
கிறுக்கன்

suvai
18th September 2009, 06:01 AM
:clap: good one nga k...:-)

kirukan
19th September 2009, 06:20 PM
முயற்சி முதலில் தோல்வி தொட்டாலும்
வெற்றிக்கு வித்திடும் விடாமுயற்சி.

-
கிறுக்கன்

suvai
19th September 2009, 07:21 PM
one can sense the competition between tholvi & vetri....awesome nga k!!!

sundararaj
19th September 2009, 09:42 PM
kirukkan kirukkitum kirukkalaal inthak
kirukkalaik kirukkiyathen karam :D
:clap: :clap:

suvai
20th September 2009, 04:25 AM
sundararaj nga................:thumbsup:

kirukan
20th September 2009, 12:22 PM
kirukkan kirukkia kirukkalaal inthak
kirukkalaik kirukkiya thenkaram
:clap: :clap:

Nanri Sundararaj.Welcome back.

kirukan
25th September 2009, 02:17 PM
குயவரால் களிமண்ணும் கலையாகும் நல்
குருவால் அறிவிலிகளும் அறிஞராவர் .

-
கிறுக்கன்

kirukan
26th September 2009, 10:03 PM
எதனை இழந்தாலும் என்றும் உயிர்த்திடும்
எதிர்பார்ப்பு இல்லா அன்பு.

-
கிறுக்கன்

kirukan
26th September 2009, 11:05 PM
எளியோரை வலியோராக்கி இன்னல் நீக்கி
பேரின்பம் பகரும் பக்தி.

-
கிறுக்கன்

kirukan
26th September 2009, 11:13 PM
இன்பம் பெருக்கி துன்பம் வகுக்கும்
தன்னலம் இல்லா நல்லுறவு.

-
கிறுக்கன்

suvai
26th September 2009, 11:57 PM
எளியோரை வலியோராக்கி இன்னல் நீக்கி
பேரின்பம் பகரும் பக்தி.

-
கிறுக்கன்

apadinaa k?

suvai
26th September 2009, 11:59 PM
இன்பம் பெருக்கி துன்பம் வகுக்கும்
தன்னலம் இல்லா நல்லுறவு.

-
கிறுக்கன்

I agree :-) :clap:

kirukan
27th September 2009, 12:14 AM
எளியோரை வலியோராக்கி இன்னல் நீக்கி
பேரின்பம் பகரும் பக்தி.

-
கிறுக்கன்

apadinaa k?

பகரும்= அளிக்கும், விளக்கும்

suvai
27th September 2009, 12:23 AM
thank u K..:-)

kirukan
2nd October 2009, 03:24 PM
அடிமை வாழ்வின் செழுமையினும் சுதந்திர
வாழ்வின் வறுமை உயர்ந்தது.

-
கிறுக்கன்

kirukan
7th October 2009, 10:34 PM
இல்லா இடுக்கண் இருப்பதாய் நினைந்தால்
இருக்கும் இன்பம் இல்லாதாகும்.

-
கிறுக்கன்.

suvai
8th October 2009, 05:10 AM
:thumbsup: :thumbsup:

kirukan
24th October 2009, 03:41 PM
அறிவை அருளாய் அன்பை அமுதாய்
அறமாய் அளிப்பவள் அன்னை.

-
கிறுக்கன்

suvai
24th October 2009, 07:22 PM
அறிவை அருளாய் அன்பை அமுதாய்
அறமாய் அளிப்பாள் நல்தாய்.

-
கிறுக்கன்


:clap: K

suvai
24th October 2009, 07:22 PM
Thanthai pathi rendu vari..plz!?

kirukan
27th October 2009, 11:01 PM
விந்தை விளக்க சிந்தை செழிக்க
விழியாகி வழியாவான் தந்தை.

-
கிறுக்கன்

pavalamani pragasam
28th October 2009, 07:21 AM
:yes:

suvai
29th October 2009, 04:26 AM
விந்தை விளக்க சிந்தை செழிக்க
விழியாகி வழியாவான் தந்தை.

-
கிறுக்கன்


:clap: :clap: thank u K...:-)

kirukan
30th October 2009, 06:21 PM
மருந்தாய் மிடுக்காய் மதிப்பாய் மிளிர்வாள்
மருமகளாகி மாமியாரானதை மறவாதவள்.

-
கிறுக்கன்

pavalamani pragasam
30th October 2009, 07:11 PM
:P

suvai
31st October 2009, 08:13 AM
:thumbsup: K

kirukan
9th November 2009, 03:09 PM
சோதனையை வினையாய் வேதனையாய் நினையாது
சாதனையாய் புனையும் துணிவு.

-
கிறுக்கன்

kirukan
26th November 2009, 06:11 PM
செய்யும் செயலில் சிரத்தை சீராக
செயலின் சிரமம் சிறிதாகும்.

-
கிறுக்கன்

suvai
27th November 2009, 06:49 AM
vanakam nga K....:-)
hope all is well.....
kunathai patri rendu vari plz!!!!

kirukan
29th November 2009, 11:32 AM
நாளும் நெஞ்சில் நஞ்சை நட்டாலும்
நன்மை நவிலும் நற்குணம்.

-
கிறுக்கன்

kirukan
29th November 2009, 11:35 AM
குன்றா குன்றாய் கூடும் குணம்
கொடுத்து காக்கும் கொடை.

-
கிறுக்கன்

kirukan
29th November 2009, 11:41 AM
இல்லாமை இயலாமை இதயத்தில் வளர
சொல்லாமல் வளரும் பொறாமை.

-
கிறுக்கன்

suvai
30th November 2009, 02:44 AM
awesome K.....thank u !! :clap: :clap: :clap: