PDA

View Full Version : Vaira Nenjam



R.Latha
9th June 2008, 10:15 AM
கலைஞர் டி.வி.யில் ஒளிபரப்பாகி வரும் வைரநெஞ்சம் தொடர், 200-வது எபிசோடை எட்டிப் பிடிக்க இருக்கிறது.

கலைஞர் டி.வி.யில் ஒளிபரப்பாகி வரும் தொடர்களில், தொடர்ந்து முதலிடத்தில் இருக்கும் இந்த தொடரில் போராட்ட குணம் நிறைந்த ஒரு இளம் பெண்ணின் வாழ்க்கை சுவாரசியத் தொகுப்பாகி இருக்கிறது. இதனால் குடும்பமாய் விரும்பிப் பார்க்கும் தொடராகியிருக்கிறது வைரநெஞ்சம்.

சதா அழுது வடியாமல், எதிர்ப்பை சவாலாக எடுத்துக் கொண்டு ஜெயிக்கும் பெண்ணின் கதை என்றளவிலும் தொடருக்கு ரசிகர்கள் அதிகம்.

சமீபத்தில் இந்த தொடர் தொடர்பாக ஒரு போட்டியை தொடரை தயாரிக்கும் ஏவி.எம். நிறுவனம் அறிவித்தது.

வைரத்தை கடத்தியது யார்? என்று கேள்வி கேட்டு சரியான பதில் எழுதுபவர்க்கு ஒரு புடவை பரிசு வழங்கப்படும் என்றும், குலுக்கல் முறையில் ஒரு நபரை தேர்ந்தெடுத்து அவருக்கு டிவிடி பிளேயருடன் ஒரு புடவை பரிசாக வழங்கப்படும் என்றும் அறிவித்திருந்தது. இதற்காக வந்தவை மொத்தம் 18,254 கடிதங்கள். இதில் சரியான விடை எழுதியது 702 பேர். அத்தனை பேருக்கும் புடவை பரிசு வழங்கப்பட்டதோடு, குலுக்கல் முறையில் ஒருவரை தேர்ந்தெடுத்து அவருக்கு டி.வி.டி. பிளேயருடன் ஒரு புடவையும் பரிசாக வழங்கப்பட்டது.

வைரநெஞ்சம் தொடரில் அடுத்து வரப் போகும் கதை என்ன என்று கேட்கும் ஆவலில் கதாசிரியர் சேக்கிழாரையும் இயக்குனர் ஆர்.கே.யையும் அணுகினோம். இருவரும் சேர்ந்தாற்போல் `அது சஸ்பென்ஸ்' என்று கூறி நிறுத்திக் கொண்டார்கள். மீண்டும் கேட்டபோது ``கதையில் நிறைய மாற்றங்கள் செய்துள்ளோம். தன் தங்கை திருந்தணும். ஆனந்த்தும் அத்தையும் திருந்தணும் என்பதற்காக சக்தி ஒரு சூப்பரான புத்திசாலித்தனமான முடிவு எடுத்தாள். அதற்கு வைரமும் சம்மதித்தான். அந்த முடிவினால் தங்கை நந்தினியின் நிலை என்ன ஆனது? இதனால் ஆனந்த்- நந்தினிக்குள் பிரச்சினை வந்ததா? திருப்பங்களுடன் கூடிய திரைக்கதை பதில் சொல்லும்'' என முடித்துக் கொண்டனர்.

தயாரிப்பு ஏவி.எம்.சரவணன்,எம்.எஸ்.குகன். இணைதயாரிப்பு அருணாகுகன், அபர்ணா குகன்.

R.Latha
9th June 2008, 10:17 AM
சதா அழுது வடியாமல், எதிர்ப்பை சவாலாக எடுத்துக் கொண்டு ஜெயிக்கும் பெண்ணின் கதை

APPADIYA?

mohanraman
20th June 2008, 01:13 AM
Idhil nadiththavan enbathaal perumai padigiraen.

aanaa
20th June 2008, 05:49 PM
Idhil nadiththavan enbathaal perumai padigiraen.
வாழ்த்துகள்.

thriinone
23rd June 2008, 09:44 PM
indha kadhai nalla poitu irukku.

sudha india
23rd July 2008, 03:17 PM
Idhil nadiththavan enbathaal perumai padigiraen.

Endha kadhapathirathil nadithavar neengal ?

Anyone watching this serial ? I saw some episodes. No one cried in the few episodes I saw :lol:

aanaa
17th August 2008, 12:20 AM
வைர நெஞ்சம் தரும் பரிசு





கலைஞர் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஏவி.எம்.மின் வைரநெஞ்சம் தொடர் இப்போது 250-வது எபிசோடை நெருங்கியிருக்கிறது. இந்த தொடரில் சமீபத்தில் இடம் பெற்ற ஒரு கொலையை பின்னணியாகக் கொண்டு ஒரு கேள்வி கேட்டனர். தொடரில் வரும் சங்கர் திடீரென கொலை செய்யப்பட்டு விடுகிறான்.அவனைக் கொன்றது யார்? இதுதான் கேள்வி. இந்த கேள்விக்கு தொடரை தொடர்ந்து பார்ப்பவர்களால் மட்டுமே சரியான பதில் தரமுடியும்.

கேள்வி கேட்கப்பட்ட பிறகே தொடரின் ரசிகர்கள் எத்தனை வேகம் கொண்டவர்கள் என்பது தெரிந்தது. ஒரு வாரத்துக்குள் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடிதங்கள் மூட்டையாக குவிந்து விட்டன. கடித மலைகளைப் புரட்டி சரியான விடை எழுதியவர்களை தேடிப்பிடித்ததில் நூற்றுக்கணக்கானோர் சங்கரை கொலை செய்தது அசிஸ்டென்ட் கமிஷனர் லட்சுமி என்ற சரியான பதிலை எழுதி தங்கள் துப்பறியும் திறனை நிரூபித்திருக்கிறார்கள்.

வெற்றி பெற்றவர்களை சென்னைக்கே வரவழைத்து பரிசுகளை வழங்க இருக்கிறார்கள். இதுபற்றி தொடரின் தயாரிப்பாளர் ஏவி.எம்.சரவணன் கூறியதாவது:

"இது எஸ்.எம்.எஸ் யுகமாயிற்றே! தபால்மூலம் ரசிகர்கள் எந்த அளவுக்கு தொடர்பு கொள்ளப் போகிறார்களோ என்ற கேள்வி எங்களுக்குள் தோன்றியது. ஆனால் எங்கள் எதிர்பார்ப்பையும் தாண்டி ஒரே வாரத்தில் 50 ஆயிரம் கடிதங்கள் வந்து குவிந்த போதுதான் தொடரை ரசிக்கும் ரசிகர்களின் வேகம் தெரிந்தது. போட்டியில் வெற்றிபெற்ற ரசிகர்களை சென்னைக்கு வரவழைத்து அவர்களுக்கான பரிசுகளை வழங்க இருக்கிறோம்.

ஏவி.எம். தயாரித்த சில படங்களுக்கு இதுமாதிரி போட்டிகளை வைத்திருக்கிறோம். அதில் 1961-ல் வெளியான எங்கள் பாவமன்னிப்பு படத்தின் பாடல்களை வரிசைப்படுத்தும் போட்டிக்கு வந்த கடிதங்கள் தான் இதுவரை `ரெக்கார்டு பிரேக்'காக இருந்தது. வைர நெஞ்சம் தொடருக்கு வந்த கடிதங்கள் அந்த ரெக்கார்டை முறியடித்திருக்கிறது. தொடரை ரசிக்கும் சின்னத்திரை ரசிகர்களின் விஸ்வரூபத்தையும் இதன்மூலம் உணர்ந்து கொள்ள முடிந்தது.''

தொடர் இனி எப்படிப் போகும்? என்று தொடரின் கதைவசனகர்த்தா சேக்கிழாரிடம் கேட்டபோது...

"அப்பாவி கணவன் வைரத்தை திறன் வாய்ந்தவனாக மாற்றிக் காட்டிய சக்தி, இன்றைய பெண்களுக்கு ரோல்மாடலாகி இருக்கிறாள்.அவளை தவறாகப் புரிந்து கொண்டு மல்லுக்கு நிற்கும் தங்கையின் எதிர்ப்பை பக்குவமாக கையாள வேண்டிய கட்டாயத்திலும் இருக்கிறாள். இதற்கிடையே கொலைப்பழியில் சிக்கிய தம்பி விஜியையும் தனது சாமர்த்தியத்தில் நல்லவன் என்று நிரூபிக்கிறாள். அடுத்து தங்கை தன்னைப் புரிந்து கொள்ளவேண்டும் என்பது தான் அவளது அடுத்த கட்ட முயற்சியாக இருக்கிறது. சக்திக்கு எதிராக அவளது தங்கையைத் தூண்டிவிடும் மாமியார் வைத்தீஸ்வரி இனி மவுசு இழந்துபோகிற மாதிரியான சம்பவங்கள் கதையில் அடுக்கடுக்காக நிகழும். அப்போது அவளை பவுர்ணமிக்கு பவுர்ணமி மிரட்டி பணம் கறக்கும் பவானி யார் என்ற சஸ்பென்ஸ் முடிச்சும் அவிழத் தொடங்கி கதையின் விறுவிறுப்பை இன்னும் அதிகமாக்கும்'' என்கிறார்.

தொடரை இயக்குவது ஆர்.கே. தயாரிப்பு: ஏவி.எம்.சரவணன், எம்.எஸ்.குகன். இணை தயாரிப்பு:அருணா குகன், அபர்ணா குகன்.

R.Latha
22nd October 2008, 01:21 PM
வைர நெஞ்சம்' பரிசு



கலைஞர் டி.வி.யில் ஒளிபரப்பாகும் ஏவி.எம்.மின். வைரநெஞ்சம் தொடர் தொடர்பான கேள்விகள் கொடுத்து அதற்கு சரியான பதில் தருபவர்களுக்கு பரிசு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி சரியான விடைகளை எழுதிய 101 பேர் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு சேலையும், கடிகாரமும் பரிசாக அனுப்பி வைக்கப்பட்டது. பரிசு பெற்றவர்களில் 3 பேர் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டு நேரில் வரவழைக்கப்பட்டனர். அவர்களுக்கான பரிசுப் பொருட்களை வைர நெஞ்சம் தொடரில் நடித்த மீனாகுமாரி, விஷ்வா, கீதா ரவிசங்கர் வழங்கினர்.

250 எபிசோடுகளைத் தாண்டி தொடர்ந்து ஒளிபரப்

aanaa
28th March 2009, 05:06 AM
திருப்பங்களுடன் `வைர நெஞ்சம்'



கலைஞர் டிவியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகும் "வைர நெஞ்சம்'' தொடர், இதுவரை 375 எபிசோடுகளைக் கடந்திருக்கிறது.

கலைஞர் தொலைக்காட்சிக்காக ஏவி.எம். நிறுவனம் தயாரித்து வழங்கும் இந்த தொடர், பல புதிய திருப்பங்களுடன் தொடர்கிறது.

ஆர்.கே. இயக்கத்தில் நடிகர்கள் விஷ்வா, பரத் கல்யாண், அமரசிகாமணி, பானுபிரகாஷ் மற்றும் நடிகைகள் மீனாகுமாரி, சாந்தி வில்லியம்ஸ், எஸ்.என்.லட்சுமி, `பசி' சத்யா, பிரீத்தி சீனிவாசன், புஷ்பலதா நடிக்கிறார்கள்.

முக்கிய கதாபாத்திரத்தில் வில்லனாக வேடமேற்று நடிக்கிறார், தீபக்.

தொடரில் அநீதிக்குத் தலைவணங்காத ஷக்தி என்ற துணிச்சல் மிக்க பெண் கேரக்டரில் மீனாகுமாரி நடிக்கிறார். பெண்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற தொடர் இது.



நன்றி: தினதந்தி