PDA

View Full Version : Singer Hariharan as MD



app_engine
11th June 2008, 01:39 AM
http://sify.com/movies/tamil/fullstory.php?id=14686444&cid=2363

Will he be able to do a "colonial cousins" here?:-)

R.Latha
18th November 2008, 01:29 PM
`கலோனியல் கஸின்ஸ்' ஹரிஹரனும் லெஸ்லியும் `மோதி விளையாடு' படம் மூலம் இசையமைப்பாளர்களாக அறிமுகமாகிறார்கள். ஏ.ஆர்.ரஹ்மானின் ஹைடெக் ஸ்டுடியோவில் அவர்களைச் சந்தித்தோம்.

`நிறைய புது இசையமைப்பாளர்கள் வந்து கொண்டே இருக்கிறார்கள். உங்கள் இசையில் என்ன புதுமை செய்யப்போகிறீர்கள்?'

``எங்களுடைய இசை படத்தின் தனித்துவத்திற்கு இசைந்து போவதாக இருக்கும். கதையையும், கதாபாத்திரங்களையும் மனதில் கொண்டுதான் அதற்கு என்ன தேவையோ அந்த இசையைக் கொடுப்போம். இன்றைய புத்தம் புதிய ஒலிகளுடன் வந்திருக்கிறோம். இது எங்களுடைய தனித்துவமாக இருக்கும்.''

`ஏ.ஆர்.ரஹ்மான், ஹாரிஸ் ஜெயராஜ் இவர்களின் வருகைக்குப் பிறகு தமிழ்ப் பாடல்களில் உலகிலேயே இல்லாத ஒரு மொழியில் `மொஹயா ஸீயா மோசியாஹா மோசியாஹா' போன்ற வினோத வார்த்தைகள் இசையாய் வருகின்றன. நீங்களும் அப்படித்தான் செய்வீர்களா?'

``நீங்கள் சொல்லும் சமாசாரம் ஒரு இசைக் கருவியைப் பயன்படுத்துவது போலதான். வாத்தியத்துக்கு பதில் அந்த இடத்தில் வார்த்தைகளையும் குரல்களையும் பயன்படுத்தியிருக்கிறார்கள். ஒரே விஷயம், ஹாரிஸ் ஜெயராஜ் ஏன் இன்றைக்கு ரொம்ப பாப்புலராக இருக்கிறார்? நீங்க சொல்கிற அந்தப் புதுமையால்தான். எப்பொழுதெல்லாம் நீங்கள் புதுமையாகக் கொண்டு வருகிறீர்களோ அப்பொழுதெல்லாம் நீங்கள் மக்களால் அதிகம் கவனிக்கப்படுகிறீர்கள். எல்லோரும் ஒரே பாதையில் போனால் புதுமை வராதே. இந்த வகையில் எங்களுடைய இசையில் ஒலி நிச்சயமாக வித்தியாசமாக இருக்கும்.''

தமிழ் சினிமாவின் தற்போதைய இசை எப்படியிருப்பதாக உணர்கிறீர்கள்?

``மிகச் சிறந்த இசையமைப்பாளர்கள் இங்கு இருக்கிறார்கள். கூடவே தொழில் நுட்பமும் இருக்கிறது. அதேநேரம் கதைக்குத் தேவையான, படத்திற்குத் தேவையான தொழில்நுட்பத்தை சிலர் மிகச் சரியாக பயன்படுத்துவதில்லை. இதனால் தொழில் நுட்பம் நம்மை ஆள ஆரம்பித்திருக்கிறது. அதனால்தான் பல நேரங்களில் பலரும் ஒரே மாதிரியான இசையைக் கொடுக்கிறார்கள். எலக்ட்ரானிக் சாம்பிள்களை எல்லோரும் பயன்படுத்தும்போது எல்லோருடைய இசையும் ஒரே மாதிரியாகத்தான் இருக்கும்.''

ரீமிக்ஸ் என்று பழைய பாடல்களை படுத்தி எடுத்துவிடுகிறார்கள். இந்த விஷயத் தில் உங்கள் எண்ணம் என்ன?

``ரீ-மிக்ஸ் விஷயத்தில் அதன் சுவை கொஞ்சமும் குறையாமல் கொடுக்க விரும்புகிறோம். லெஸ்லிதான் ரீ-மிக்ஸ் நிறைய பண்ணியிருக்கார். லெஸ் நீயே சொல்லேன்'' என்று ஹரிஹரன், லெஸ்லியை நோக்க...

``இந்தியாவில் ரீ-மிக்ஸை நான்தான் தொடங்கினேன். ஒவ்வொரு முறை ரீ-மிக்ஸ் செய்யும் போதும், என்னுடைய கவனம் முழுவதும் அப்பாடலின் ஒரிஜினல் இசையமைப்பாளர் மீதுதான் இருக்கும். நான் அந்தப் பாடலை எப்படிப் பண்ணினால் அவருக்குப் பிடிக்கும் என்பதில்தான் என் எண்ணம் இருக்கும். ரீ-மிக்ஸை பொறுத்தவரை ஸ்டைல் மாறலாம். ஆனால் அதில் உள்ள உணர்வுகள் மாறவே கூடாது. சந்தோஷமான பாடலை சோகமானதாக மாற்றினால், கம்போஸருக்கும் பிடிக்காது. மக்களுக்கும் பிடிக்காது.''

பழைய குற்றச்சாட்டு ஒன்று. இப்போதுள்ள இசையில் பாடல் வரிகள் அமுங்கிப் போய்விடுகின்றன என்பது. உங்களுக்கு வரிகள் முக்கியமா, வாத்தியங்கள் முக்கியமா?'

``முதலில் மெலடி, பின் அதற்கேற்ற குரல், பிறகு இடைப்பட்ட இடங்களில் இதமான இசை - இதுதான் எங்கள் ஸ்டைல். பாடல்களைக் கேளுங்கள். மீண்டும் இந்தக் கேள்வியை எங்களிடம் கேட்கமாட்டீர்கள்.''

பார்ப்போம்!.

Kumudam 19.11.08