PDA

View Full Version : Vasanth TV



aanaa
22nd June 2008, 08:06 PM
[tscii:ac435f297a]
PARASAKTHI NEW SOAP IN VASANTH TV CHANNEL

A Ladies sentimental story of Parasakthi that is going to be aired in Vasanth tv channel very soon. The story line is Ganesan-Lakshmi couple have two sons and two daughters. Ganesan has faith with his sons, but he has more faith on one of his daughters, Shanthi. Shanthi is a different character her boldness and truthfulness liked by Ganesan and he keeps confidence with his daughter.

Shanthi expects her life partner should also be a good character. But this Gautham is opposite to the character of Shanthis. Shanthi doesn’t know about Gautham’s mind and she is married to him. Once she comes to know of Gautham. She becomes wild and takes avatar of Shakthi..

Sithara, ShyamGanesh,Vijay Babu, Rajasekar,Aishwarya,Allaigal Rani, Dev, Murali,V.R.Thilagam and others.

Screen play Dialague; K.Parthiban, Camera; P.V.Vijaya Raja, Music; A.Johnson and Story and Direction by Raja Pandy. [/tscii:ac435f297a]

aanaa
22nd June 2008, 08:07 PM
[tscii:a0e5028021]KUNGUMACHIMIZH’ FOR VASANTH TV CHANNEL

Dream merchant company is producing a serial for Vasanth TV Channel “KUNGUMACHIMIZH”.
M.R.Ravichandran. is the producer
.Abishek, Deepa Venkat, Delhi Kumar, SriKumar, Pallavi and others are acting,
EaswaraMurthi who has already directed Ganga Yamuna and Saraswathi is directing this new serial..
Music by Adhithyan and
dialague by M.Balu and
camera by R.M,Anandh.

The shooting of the serial is taking place in Kerala.. Soon we can expect this mega soap in Vasanth Tv Channel.
[/tscii:a0e5028021]

thriinone
23rd June 2008, 09:40 PM
irukira alaivarisaigaL pothathena innondru serndhu kondu vittathu.

sagadharminigaL samaikka veedu periyavargal siriyavargal velai parka endru sila manithuli ella alaivarisaiyum niruthi vaithaal kudumbathil nalam soozhum

aanaa
17th August 2008, 12:19 AM
"என்னோடு ஒரு பாட்டு''



இசைப் பிரியர்களுக்காக வசந்த் டிவி வழங்கும் நிகழ்ச்சி "என்னோடு ஒரு பாட்டு'', பிரபலமான திரைப்பட பின்னணி பாடகர்கள் பலரும் இதில் பங்கு கொண்டு பாடுகிறார்கள். இவர்களுடன், புதியதாக அறிமுகமாகும் புதிய பாடகரை பாடச் சொல்லியும் வாழ்த்துகிறார்கள்.

இன்று தொடங்கும் இந்த நிகழ்ச்சி வாரம் தோறும் சனி, ஞாயிறுகளில் ஒளிபரப்பாக இருக்கிறது.

நிகழ்ச்சியில் உன்னிமேனன், க்ரஷ் ராகுல் நம்பியார், பென்னி, ரோஷினி, டாக்டர் லாவண்யா, சின்னப் பொண்ணு, சத்யன், அஸ்லாம், பிரசன்னா, ரீட்டா, ஹாரிஸ் ராகவேந்திரா, நரேஷ் அய்யர், அனுராதா என ஏராளமான பின்னணி பாடகர்கள் பங்கு கொண்டு ஒவ்வொரு வாரமும், பாடல்களை பாடி ரசிகர்களை மகிழ்விக்க இருக்கிறார்கள்.

நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார் மாலினி யுகேந்திரன். சனிக்கிழமை இரவு 7.30 மணிக்கும், ஞாயிற்றுக்கிழமை மதியம் 1 மணிக்கும் இந்த இசை நிகழ்ச்சியை காணலாம்.

aanaa
30th September 2008, 10:41 PM
சிரிப்பு மனிதனுக்கு மட்டுமே அமைந்த ஒன்று. வெளிப்படையாகவும் அது பலரை மகிழச்செய்யும். அதை மையமாகக் கொண்டு வரும் நிகழ்ச்சிதான் ``ஆடு''.

மறைத்து வைக்கப்பட்ட கேமராவில், மறைந்து இருக்கும் மனிதர்களின் ஆச்சரியம், குழப்பம், நகைச்சுவை, கோபம், புத்திசாலித்தனம் ஆகிய விஷயங்களை படம் பிடிக்கும் நிகழ்ச்சி, ``ஆடு''.

மனிதர்களுடைய திடீர் நிகழ்வும், செயல்களும், சிரிப்பையும், மகிழ்ச்சியையும் கொடுக்கும் வகையில் அமைந்த நிகழ்ச்சி இது.

சனி மற்றும் ஞாயிறு இரவு 7 மணிக்கு வசந்த் டிவியில் ஒளிபரப்பாகிறது, இந்த நிகழ்ச்சி.

aanaa
30th September 2008, 10:50 PM
ஆயா வித் பாயா'




வசந்த் டி.வி.யில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு 9 மணிக்கு ``ஆயா வித் பாயா'' என்ற நகைச்சுவை நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது. நடிகர்கள் சாய்ராம், ஈஸ்டர், சங்கீதா பாலன் நடிக்கிறார்கள். இது ஒரு காமெடி நிகழ்ச்சி. ச.பால கிருஷ்ணன் டைரக்ட் செய்கிறார். தயாரிப்பு: வசந்த் டிவி.

R.Latha
22nd October 2008, 01:29 PM
`லவகுசா'



`சித்தி' தொடரில் நடித்து சின்னத்திரை ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் யுவராணி. அவர் பெரிய திரையில் நடித்தபோது கூட கிடைத்திராத பெயரை `சித்தி' பெற்றுத்தந்தது.

சித்திக்குப்பிறகு லவகுசா புராணத் தொடர் மூலம் மீண்டும் சின்னத்திரைக்கு வருகிறார், யுவராணி. இந்தத் தொடரில் அவர் சீதையாக வருகிறார். ராமராக ஜிதேந்திராவும், மாஸ்டர் கிரண் லவன்-குசனாகவும் நடிக்கிறார்கள்.

தொடருக்கு பாடல்கள், கதை, வசனம்: தேவ நாராயணன், இசை: ஜானகிராஜ். ஒளிப்பதிவு: தயாளன். இணை இயக்கம்: பாலு, தயாரிப்பு: சேதுராமன் - சத்யா.

கவுரி மனோகர் டைரக்டு செய்கிறார்.

வசந்த் டிவியில் அடுத்த மாதம் இரண்டாவது வாரத்தில் இருந்து `லவகுசா' ஒளிபரப்பாகிறது. தொடருக்கான படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடந்து வருகிறது.

R.Latha
22nd October 2008, 01:44 PM
வசந்த் மியுசிக்



இசை ஆல்பம், அதிரடி இசை, இளைய தலைமுறைக்கு ஏற்ற பாடல்கள் என்று இசைப் பிரியர்களின் ரகங்களுக்கு ஏற்றவாறு ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி, `வசந்த் மியுசிக்'.

இது இந்திய, மேற்கத்திய பாடல்கள், கர்நாடக சங்கீதம், குத்துப் பாடல்கள் போன்ற பலதரப்பட்ட இசை வகைகளின் தொகுப்பு.. நிகழ்ச்சியில் இடம்பெறும் பாடல்களின் வகை, அவை பற்றிய விவரங்கள் என பலதரப்பட்ட தகவல்கள் பகிர்ந்து கொள்ளப்படுகிறது. நாள்தோறும் திங்கள் முதல் ஞாயிறு வரை மாலை 4.30 மணிக்கு வசந்த் டி.வி.யில் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது.

R.Latha
22nd October 2008, 02:20 PM
நளின நடனம்



வசந்த் டி.வி.யில் சூப்பர் மூவ்மெண்ட்ஸ் என்ற `டான்ஸ் புரோகிராம்' வர இருக்கிறது. பள்ளி, கல்லூரிகளில் பயிலும் நடன ஆர்வம் உள்ள ஆண்கள் பெண்கள் கலந்து கொண்டு ஆட்டம் போடுகிறார்கள்.

டான்ஸ் மாஸ்டர் பாலா மற்றும் நடிகை சுஜிபாலா நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்க, ஒவ்வொரு எபிசோடு முடிவிலும் சிறப்பாக செயல்பட்ட குழுவிற்கு சிறப்பு பரிசை திரைப்பட நட்சத்திரங்கள் வழங்குகிறார்கள்.

இந்த நிகழ்ச்சியை எஸ்.ஏ. விஜயகுமார் இயக்குகிறார்.

aanaa
22nd October 2008, 07:01 PM
நன்றி, லதா
இடையிடையே தொடரவும்.

aanaa
1st November 2008, 07:58 PM
சேலன்ச்''




வசந்த் தொலைக்காட்சியில் ``சேலன்ச்'' என்ற வீர விளையாட்டு ஒளிபரப்பாகி வருகிறது. சிறுவர் முதல் பெரியவர்கள் வரை கலந்து கொள்ளும் இந்த வீர விளையாட்டில் வென்றவர்களுக்கு பல பரிசுகள் வழங்கப்படுகின்றன.

`சவால்' ராம் இயக்கி தொகுத்து வழங்குகிறார்.

ஞாயிறு தோறும் காலை 8.30 மணிக்கு ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி இது.

aanaa
1st November 2008, 07:59 PM
டிரெய்லர் டைம்''


வசந்த் டி.வி.யில் திரைக்கு வரத் தயாராக இருக்கும் புதிய திரைப்படங்களின் டிரெய்லர், `புத்தம் புது வரவு' என்ற பெயரில் தினமும் இருமுறை ஒளிபரப்பாகி வருகிறது.

இதில் தற்போது நேரமாற்றம் ஏற்பட்டுள்ளது. தினமும் காலை 8.30 மணிக்கும், மற்றும் இரவு 11 மணிக்கும், சினிமா படங்களின் டிரெய்லர் `புத்தம் புது வரவு' என்ற பெயரில் தினமும் ஒளிபரப்பாகி வருகிறது.



நிகழ்ச்சி பொறுப்பு வி.பால்ராஜ்.

aanaa
8th November 2008, 08:12 PM
ஆளுக்கு ஆயிரம் ஆசைகள்



வசந்த் டி.வி.யில் ஒளிபரப்பாகும் காமெடித் தொடர் ``ஆளுக்கு ஆயிரம் ஆசைகள்''. கணேஷ்கர், ஆர்த்தி, சுலக்ஷனா, அனுமோகன், டெல்லி குமார், குயிலி நடித்து உள்ளனர்.

தொடரை இயக்குபவர் கணேஷ் ராஜேந்திரன். இசை: தேவா. தயாரிப்பு: திருவள்ளுவர் கலைக்குடும்பம்.

ஞாயிறுதோறும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது, இந்த காமெடித் தொடர்.

aanaa
15th November 2008, 06:42 AM
சாந்தியின் திருமணம் நடந்ததா?


தன் குடும்பத்தின் எதிர்கால நலனையும், தன் பெற்றோர்களின் சந்தோஷத்தையும் மனதில் கொண்டு வாழ்ந்து வரும் சாந்தி ஒரு பள்ளியில் டீச்சராக வேலை செய்கிறாள். பல பெண்களை திருமணம் செய்து கொள்வதாக காதலித்து ஏமாற்றி வரும் பணக்கார இளைஞன் கவுதம் பார்வையில் படுகிறாள், சாந்தி. கவுதம் சாந்தியை அடைய விரும்பி பல முயற்சிகளை மேற்கொள்கிறான். இந்த சூழ்நிலையில் காவல் துறையில் பணிபுரியும் நேர்மையான அதிகாரி ராம் என்பவருக்கு சாந்தியை திருமணம் செய்து வைக்க நிச்சயதார்த்த ஏற்பாடு நடக்கிறது. அந்த சமயம் சாந்தியின் தம்பி ராஜாவின் காதலால் அந்த திருமணம் தடைபடுகிறது.

எதிர்பாராத விபத்தில் தன் உயிரை காப்பாற்றிய சாந்தியின் குடும்ப சூழ்நிலையை அறிந்த கவுதமின் தந்தை தொழிலதிபர் விஸ்வநாத், சாந்தியை, கவுதமிற்கு திருமணம் செய்து வைக்க திட்டமிடுகிறார்.

அதே நேரத்தில் ராமின் தாய், மகனின் சந்தோஷத்திற்காக தடைப்பட்ட சாந்தி - ராம் திருமணத்தை நடத்த ஆசைப்படுகிறாள்.

தன் மகன் கவுதமின் நடவடிக்கைகளை அறியாத விஸ்வநாத்தின் தீவிர முயற்சியால் சாந்தி - கவுதம் திருமணம் நிச்சயிக்கப்படுகிறது. இப்போது சிங்கப்பூரில் கவுதமால் காதலித்து ஏமாற்றப்பட்ட மீரா என்றபெண், கவுதமை தேடி வருகிறாள். கவுதம் தனக்கு மட்டும்தான் சொந்தம் என்று உரிமை கொண்டாடுகிறாள்.

சாந்தி -கவுதம் திருமணம் நடந்ததா?

வசந்த் டிவியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி கொண்டிருக்கிறது, பராசக்தி தொடர்.

சாந்தியாக சித்தாரா, கவுதமாக ஷ்யாம் கணேஷ், மீராவாக பிருந்தாதாஸ் மற்றும் ராஜசேகர், விஜய், பாபு, ஈரமான ரோஜாவே, சிவா, வி.ஆர்.திலகம், ஐஸ்வரியா, எஸ்.பிரியா, சண்முகசுந்தரம், அலைகள் ராணி, வத்சலா ராஜகோபால், கிட்டி லட்சுமி, விக்கி, முரளி, தேவ் ஆனந்த், புவனா, பேபி மோனிகா, சுதா, ரம்யா, `சவால்'ராம், சசி, கே.பசந்த் நடிக்கின்றனர்.

மீடியா அஸோசியேட்ஸ் தயாரிக்க, கதை, திரைக்கதை எழுதி இயக்குகிறார், பி.ராஜபாண்டி.

R.Latha
5th January 2009, 01:07 PM
``காசு மேல காசு''



வசந்த் டிவியின் புதிய நேரடி ஒளிபரப்பு போட்டி நிகழ்ச்சி ``காசு மேல காசு'' இந்த நிகழ்ச்சிகள் மொத்தம் 4 ரவுண்டுகள் உண்டு.

முதல் ரவுண்டில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு ரூ.1,000. இரண்டாம் ரவுண்டில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு ரூ.2,000. மூன்றாம் ரவுண்டில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு ரூ.4,000. நான்காம் ரவுண்டில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு ரூ.10,000. போட்டியில் முதல் மூன்று ரவுண்டுகளில் வெற்றி பெற்று பரிசுகளை வென்றவர், நான்காவது ரவுண்டில் தோற்றுப்போய்
விட்டால், அவருக்கு முதல் மூன்று ரவுண்டுகளில் வெற்றி பெற்றதற்கான எந்த பரிசும் வழங்கப்பட மாட்டாது.

முதல் ரவுண்டிலோ, இரண்டாவது ரவுண்டிலோ அல்லது மூன்றாவது ரவுண்டிலோ வெற்றி பெற்றவர் மேற்கொண்டு அடுத்த ரவுண்டை தொடர விரும்பவில்லை என்றால், கடைசியாக எந்த ரவுண்டில் வெற்றி பெற்றாரோ அந்த ரவுண்டிற்கான பரிசு தொகையை பெற்றுக் கொண்டு போட்டியிலிருந்து அவர் விலகிக் கொள்ளாம்.

நேரடி ஒளிபரப்பு நிகழ்ச்சியான இது திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாக இருக்கிறது.

R.Latha
9th January 2009, 12:34 PM
[tscii:a3e6aca539]ரகசிய கேள்விகள்

வசந்த் டி.வி.யில் ஒளிபரப்பாகும் புதிய நிகழ்ச்சி ‘ரகசிய கேள்வி கள்'. இதில் வயதிற்கு வந்த ஆண்-பெண் அனைவருக்கும் தங்க ளது உடல் அமைப்பு, அதன் தன்மை, திருமண உறவுக்கான பொருத்தம், முறையான செக்ஸ் பற்றிய விழிப்புணர்வு போன் றவை நேயர்களுக்கு விளக்கப்படுகின்றன

ஆண்-பெண் உடல் கூறு, தாம்பத்ய உறவு, ஆண்களுக்கும் பெண்களுக்கும் திருமணத்துக்கு முந்தைய உடல் பரிசோதனை, அதில் உள்ள சிக்கல்கள், அவற்றுக்கான தீர்வுகள் போன்றவற் றுக்கு பாலியல் மருத்துவ நிபுணர் விளக்கம் அளிப்பார்

உடல் அமைப்பு பற்றி தாங்கள் அறிந்து கொள்ள விரும்பும் விஷ யங்களை நேயர்கள், கேள்விகளாகத் தொகுத்து வசந்த் டி.வி.க்கு (முகவரி: 27 / 37, ரயில்வே பார்டர் முதல் தெரு, காவிரி நகர், சைதாப் பேட்டை, சென்னை-600 015.) அனுப்பலாம். அவற்றை நேயர்கள் சார்பாக ஒரு மருத்துவக் கல்லூரி மாணவி கேட்க, பாலியல் நிபு ணர் பதில் அளிப்பார். வசந்த் டி.வி.யில் இந்த நிகழ்ச்சி விரைவில் இடம்பெறுகிறது. வாரந்தோறும் சனிக்கிழமை இரவு 10.30 மணிக்கு இந்த நிகழ்ச்சியை ஒளிபரப்ப திட்டமிடப்பட்டுள்ளது.
Dinamani 9.1.09[/tscii:a3e6aca539]

aanaa
17th January 2009, 09:45 PM
நெற்றிக்கண்



வசந்த் டிவியில் சனிக்கிழமை தோறும் மாலை 6 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி, நெற்றிக்கண். அரசியல், மற்றும் சமூக நிகழ்வுகள், சமுதாய பிரச்சினைகளை இந்த நிகழ்ச்சியில் விவாதத்துக்கு எடுத்துக் கொள்கிறார்கள். வாரம் ஒரு பிரச்சினையை இப்படி 3 பல்கலை நிபுணர்குழு கூடி விவாதிக்கிறார்கள். தீர்வும் சொல்கிறார்கள்.

aanaa
24th January 2009, 09:41 PM
லைவ் சாய்ஸ்


வசந்த் டிவியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் மதியம் 12 மணிக்கு ஒளிபரப்பாகும் நேரடி ஒளிபரப்பு நிகழ்ச்சி, `லைவ் சாய்ஸ்' இந்த நிகழ்ச்சியில் தினமும் ஒரு தலைப்பு விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டு நிகழ்ச்சியில் தொடர்பு கொள்ளும் நேயர்களிடம் அந்த விவாதம் பற்றிய அவர்களின் கருத்து கேட்கப்படுகிறது. சமுதாய பழக்க வழக்கங்கள், போக்குவரத்து விதிகள், திருமணத்திற்கு முந்தைய உடல்பரிசோதனை, தினசரி திட்டமிடுதல் என தினமும் ஏதாவது ஒரு தலைப்பு பற்றி அலசப்படுகிறது. இந்த நிகழ்ச்சியின் இடையே நேயர்களுக்கு பிடித்த பாடல்கள் ஒளிபரப்பப்படுகிறது. சாதனா தொகுத்து வழங்குகிறார்.


நன்றி -- தினதந்தி

aanaa
24th January 2009, 09:42 PM
24 பிரேம்ஸ்



வசந்த் டிவியில் ஒளிபரப்பாகி வரும் புதிய நிகழ்ச்சி `24 பிரேம்ஸ்.' இந்த நிகழ்ச்சியில் ஹாலிவுட் படக் காட்சிகள் ஒளிபரப்பப்படுகின்றன. ஹாலிவுட் படங்களைப் பற்றிய திரை விமர்சனமும் இதில் உண்டு.

ஹாலிவுட் படங்களின் சுவாரஸ்யமான காட்சிகள் பொதுவாக பயம், திகில், உருக்கம், காதல், உணர்ச்சிமயம், ஆக்ஷன், கிரைம், திரில்லர் போன்றவற்றை மையமாகக் கொண்டு வருகின்றன. இவை பெரும்பாலும் நேரத்தை அடிப்படையாகக் கொண்டு அரை மணி நேரத்தில் வெடிக்கிற பாம், 10 நிமிடத்தில் ஒரு கொலை என்று கதை சொல்லப்படுகின்றன. நேரத்திற்கான மதிப்பு இதில் காட்டப்படுகிறது. எனவே தான் இந்தக் காட்சிகள் ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சியின் பெயர் `24 பிரேம்ஸ்.'



நன்றி -- தினதந்தி

aanaa
31st January 2009, 06:14 AM
[tscii:963573888d]

திருப்பங்களுடன் பராசக்தி



வசந்த் டி.வி.யில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் `பராசக்தி' தொடர் ஐம்பது எபிசோடை தாண்டியிருக்கிறது.

சாந்தி என்ற பெண் கதாபாத்திரத்தை சுற்றி பின்னப்பட்டுள்ள இந்த குடும்பக் கதையில், சாந்தியாக சித்தாரா நடித்து வருகிறார். சாந்தியின் திருமணத்தை நிறுத்த பல முயற்சிகள் நடைபெறுகின்றன. சொந்த தம்பியே அக்காவின் திருமணத்தை நிறுத்த நினைக்கிறான். அது ஏன்?

தனியார் சேனலில் ரிப்போர்ட்டராக பணிபுரியும் சாந்தியின் தங்கை பூஜா தனது செயல்பாடுகளால் விரோதிகளை ஏற்படுத்திக் கொள்கிறாள். அந்த சமூக விரோதிகள், சாந்தியின் திருமணத்தை தடை செய்யவும், அவளை குடும்பத்தோடு கொலை செய்யவும் முயற்சிக்கிறார்கள். அவர்கள் முயற்சி வெற்றி பெற்றதா?

இதற்கிடையே சாந்தியை திருமணம் செய்து கொள்ளப் போகும் மணமகனான கவுதம் அவனே திருமணத்தை நிறுத்த முயற்சிக்கிறான். அது ஏன்?

சிங்கப்பூரிலிருந்து வரும் மீரா, சாந்தியின் திருமணத்தை தடுக்கவும், கவுதம் குடும்பத்தை கூண்டோடு அழிக்கவும் திட்டமிடுகிறாள். அவளின் இந்த பழிவாங்கும் உணர்ச்சிக்கு காரணம்தான் என்ன?

ïகிக்க முடியாத திருப்பங்களுடன் திரைக்கதை அமைத்து இயக்கி வருகிறார், பி.ராஜபாண்டி.

பராசக்தி சீரியல் பார்த்துக் கொண்டிருக்கும் வீடுகளுக்கு வசந்த் டி.வி. குழுவினர் திடீர் விசிட் செய்து, எதிர்பாராத பரிசுப் பார்சல் ஒன்றை கையில் கொடுத்து ஆச்சரியப்படுத்தி வருகின்றனர்.

இந்த பரிசை பெற விரும்பும் நேயர்கள், வசந்த் டி.வி.யின் குழுவினர் நேரடி விசிட் செய்யும் அந்த நேரத்தில், பராசக்தி சீரியல் பார்த்துக் கொண்டிருக்க வேண்டும் என்பது மட்டுமே பரிசுக்கான தகுதி.

நன்றி - தினதந்தி[/tscii:963573888d]

aanaa
31st January 2009, 06:16 AM
தற்காப்புக்கலை



வசந்த் டி.வி.யில் ஒளிபரப்பாகவிருக்கும் புதிய நிகழ்ச்சி `தற்காப்பு கலைகள்'. இந்த நிகழ்ச்சியில் ஆண்கள், பெண்கள், சிறுவர், சிறுமியர் அனைவரும் தங்களை பாதுகாத்து கொள்ள தேவைப்படும் தற்காப்பு பயிற்சிகள் கற்றுத்தரப்படுகிறது. காவல்துறையில் பணியாற்றும் போலீசாருக்கு குங்பூ பயிற்சி அளித்த குங்பூ மாஸ்டர் சஞ்சீவி பயிற்சியளிக்கிறார்.

நன்றி - தினதந்தி

aanaa
7th February 2009, 06:26 AM
வெற்றிக்கு வழி



வசந்த் டிவியில் வியாழன் தோறும் காலை 10.30 மணிக்கு ஒளிபரப்பாகும் நேரடி நிகழ்ச்சி, வெற்றிக்கு வழி. இந்த நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற வியாபார பிரமுகர்கள் கலந்து கொண்டு, வெற்றி பெற ஆலோசனை வழங்குகிறார்கள்.

ஒவ்வொரு வாரமும் பல்துறை சார்ந்த வியாபார பிரமுகர்கள் பங்கு பெற்று வருகிறார்கள். ஆரம்ப நிலையில் வியாபாரத்தை எப்படி எடுத்து நடத்திச் செல்ல வேண்டும்; பணத்தை எவ்வாறு கையாள வேண்டும் என பல பயனுள்ள நடைமுறை ஆலோசனைகள், புதிய தொழில், வியாபாரம் முயல்வோருக்கு வழங்கப்படுகின்றன.

உற்பத்தி தொழில், வாங்கி விற்கும் வியாபாரம், சேவை அடிப்படையிலான தொழில் என பிரிக்கப்பட்டு, தனித்தனியாக பிரமுகர்கள், ஆலோசனைகள் வழங்குகிறார்கள்.

நிகழ்ச்சியில் பிரபலங்களை சந்தித்து உரையாடுபவர் ஆர்.கார்த்திக்.

நன்றி: தினதந்தி

aanaa
7th February 2009, 06:27 AM
நீங்கள் கேட்டவை



வசந்த் டிவியில் ஞாயிறுதோறும் காலை 10.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் இசை நிகழ்ச்சி, நீங்கள் கேட்டவை'. சின்னத்திரை ரசிகர்கள் விரும்பிக் கேட்கும் பாடல்கள், மற்றும் நகைச்சுவைக் காட்சிகள் இந்த நிகழ்ச்சியில் ஒளிபரப்பப்படும். இதற்காக ரசிகர்கள் இருக்கும் இடத்திற்கே நேரில் சென்று, அவர்களை நேரில் சந்தித்து உரையாடுகிறார்,வசந்த் டி.வி.யின் தொகுப்பாளினி பத்மப்பிரியா. வி.கார்த்திகேயன் இயக்கும் இந்த நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பு வி.பால்ராஜ்.

நன்றி: தினதந்தி

aanaa
7th February 2009, 06:27 AM
வரம் - சுயம்வரம்

வசந்த் டிவி விரைவில் வழங்க விருக்கும் புதிய நேரடி ஒளிபரப்பு நிகழ்ச்சி, `வரம் - சுயம் வரம்.' இந்த நிகழ்ச்சியில் திருமணமாகாத பெண்கள், ஆண்கள், அவர்களின் பெற்றோரும் தொடர்பு கொண்டு பேசலாம்.



நன்றி: தினதந்தி

aanaa
7th February 2009, 06:28 AM
சாப்பிடலாம் வாங்க

வசந்த் டிவியில் 200-வது எபிசோடை நெருங்கும் நிகழ்ச்சி, `சாப்பிடலாம் வாங்க' இன்றைய வேகமான வாழ்க்கை சூழலில் ஆரோக்கிய உணவிற்கு முன்னுரிமை கொடுக்க வேண்டியது மிக மிக அவசியமாகிறது. அந்த ஆரோக்கிய உணவை ருசியாக தயாரிக்க, பெண்களுக்கும், தாய்மார்களுக்கும் கற்றுக் கொடுக்கும் நிகழ்ச்சியே, `சாப்பிடலாம் வாங்க.'

விதவிதமான சுவையான உணவுப் பொருட்களை தயாரிக்கும் விதம் பற்றி, செய்முறை விளக்கத்தோடு விவரிக்கிறார்கள், சமையல் கலையில் வல்லுனர்களான குடும்பத் தலைவிகள்.

வசந்த் டிவியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் மதியம் 12.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது இந்த நிகழ்ச்சி.

நன்றி: தினதந்தி

aanaa
15th February 2009, 05:44 AM
[tscii:d33bf5ca2e]

குத்துப்பாட்டு!



வசந்த் டிவியில் டான்ஸ் போட்டியை மையமாகக் கொண்ட புதிய நிகழ்ச்சி, `பேட்டராப் ரிப்பீட்டு'. இது குத்து டான்ஸ் ஆடுபவர்களுக்கான போட்டி.

குத்து டான்ஸ் போட்டிக்கு மொத்தம் மூன்று ரவுண்டுகள் உண்டு. முதல் ரவுண்டில் 3 பேர் கலந்து கொள்வார்கள். முதல் ரவுண்டில், தமிழ் குத்துப்பாட்டுக்கு அவர்கள் ஆடி ஜெயிக்க வேண்டும். 2-வது ரவுண்டு வெஸ்டர்ன் மிïசிக்கை அடிப்படையாக கொண்டது. 3-வது ரவுண்ட் `ராப்' பாடல்களுக்கான குத்தாட்ட ரவுண்டு.

மூன்று ரவுண்டுகளையும் தாண்டி வெற்றி பெறுபவர்களுக்கு தமிழ்நாட்டின் குத்தாட்ட ராஜா, தமிழ்நாட்டின் குத்தாட்ட ராணி வெற்றி மகுடங்கள் விருதுடன் வழங்கப்படும்.

டான்ஸ் போட்டியில் கலந்து கொள்ள, வயதோ அனுபவமோ தேவையில்லை என்பது குறிப்பிடத்தக்கது.




நன்றி: தினதந்தி[/tscii:d33bf5ca2e]

aanaa
15th February 2009, 05:45 AM
அம்மன்



வசந்த் டிவியில் 125 எபிசோடுகளை தாண்டி ஒளிபரப்பாகி வரும், பக்தி கலந்த சமூகத் தொடர், `அம்மன்.'

அம்மனின் அருளால் கதாநாயகிக்கு ஆண் குழந்தை பிறக்கிறது. மந்திரவாதி கும்பல் அந்த குழந்தையை கண்டுபிடித்து பலிகொடுக்க வேலைக்காரன், வேலைக்காரி வேடத்தில் கதாநாயகி வீட்டுக்கு போகிறார்கள்.

இதற்கிடையில் வேலு குடும்பத்திற்கு ஏற்பட்ட சாபம் குறித்த காட்சிகள் வரும் வாரங்களில் வருகிறது. எதற்காக அந்த குடும்பத்திற்கு சாபம் ஏற்பட்டது? அதற்கு தீர்வு என்ன? விவரங்கள் காட்சியாக விரிகிறது.

திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7 மணிக்கு வசந்த் டிவியில் அம்மன் தொடரை காணலாம்.

அம்மன் தொடர் பார்த்துவிட்டு நேயர்கள் அனுப்பும் சிறந்த விமர்சன கடிதங்களுக்கு வாரம் ஒரு பட்டுப்புடவையை அம்மன் தொடரின் தயாரிப்பு நிறுவனம் பரிசாக வழங்குகிறது.


நன்றி: தினதந்தி

aanaa
15th February 2009, 05:45 AM
தேனருவி'



நெஞ்சை அள்ளும் பழைய திரைப்படப் பாடல்கள் `தேனருவி' என்ற பெயரில் வசந்த் டிவியில் ஒளிபரப்பாகிறது.

இந்த நிகழ்ச்சியில் எம்.ஜி.ஆர், சிவாஜிகணேசன், எஸ்.எஸ்.ராஜேந்திரன், ஜெமினி கணேசன், முத்துராமன், ஏவி.எம்.ராஜன், ஜெய்சங்கர், ரவிச்சந்திரன் போன்ற `எவர்கிரீன்' ஹீரோக்கள் நடித்த படங்களிலிருந்து தேன் சிந்தும் பாடல்கள் ஒளிபரப்பாகின்றன.

தினமும் இரவு 10.30 மணி முதல் 12 மணி வரையிலும், காலை 9.30 மணிக்கும் இது ஒளிபரப்பாகிறது.நிகழ்ச்சி தயாரிப்பு: எஸ்.ஏ.விஜயகுமார்.



நன்றி: தினதந்தி

aanaa
22nd February 2009, 04:10 AM
ஸ்டார் ஹிட்ஸ்
பிரபல கதாநாயகர்கள் நடித்த படப் பாடல்கள் இடம் பெறும் நிகழ்ச்சி `ஸ்டார் ஹிட்ஸ்.' இதில் கமலஹாசன், ரஜினிகாந்த், அஜித், விக்ரம், விஜய், பிரசாந்த், மாதவன், சூர்யா, தனுஷ், சிம்பு, ஜெயம் ரவி என ஹீரோக்கள் நடித்த படப் பாடல்கள் ஒளிபரப்பப்படுகின்றன.

திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு வசந்த் டிவியில் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது.


நன்றி: தினதந்தி

aanaa
22nd February 2009, 04:10 AM
வி.ஐ.பி. வீட்டு விழாக்கள்

வசந்த் டி.வி.யில் ஞாயிறு தோறும் மதியம் 12 மணிக்கு ஒளிபரப்பாகிவரும் நிகழ்ச்சி `வி.ஐ.பி.' வீட்டு விழாக்கள். இந்த நிகழ்ச்சியில் வி.ஐ.பி.க்களின் வீட்டில் கொண்டாடப்படும் பிறந்தநாள் விழா, திருமண விழா கொண்டாட்டங்கள் போன்ற முக்கிய நிகழ்வுகள் ஒளிபரப்பப்படுகின்றன.



நன்றி: தினதந்தி

aanaa
22nd February 2009, 04:11 AM
திக்கற்ற தேவதைகள்

திருநங்கைகள் எனப்படும் அரவாணிகளுக்கு இன்றும் நமது சமூகத்தில் உரிய அங்கீகாரம் கிடைக்காமலேயே இருந்து வருகிறது. சமூகத்தால் புறக்கணிக்கப்பட்ட திருநங்கைகளின் கண்ணீர் கதைகள் `திக்கற்ற தேவதைகள்' என்ற பெயரில் வசந்த் டி.வி.யில் ஒளிபரப்பாகி வருகிறது.

நிகழ்ச்சியில் வாரந்தோறும் இரண்டு திருநங்கைகள் கலந்து கொண்டு தங்கள் கதைகளை கூறுகிறார்கள்.

வியாழக்கிழமை தோறும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் இந்த நிகழ்ச்சி, மறு ஒளிபரப்பாக புதன்கிழமை காலை 10 மணிக்கும் ஒளிபரப்பாகிறது.


நன்றி: தினதந்தி

R.Latha
23rd March 2009, 12:45 PM
தமிழ் அரங்கம்

வசந்த் தொலைக்காட்சியில் ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு தமிழ் அரங்கம் எனும் புதிய நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. ஒவ்வொரு வாரமும் ஒரு அரங்கம் என, இலக்கிய ரசிகர்களுக்கு விருந்து படைக்கும் வகையில் நிகழ்ச்சி இடம் பெறுகிறது.

சுவாரஸ்யமான தலைப்புகளில் `பட்டிமன்றம்', கல்லூரிப் பேராசிரியர்கள், நல்ல தமிழ் பேச்சாளர்கள் வழங்கும் `இலக்கியச்சுவை', பயனுள்ள தலைப்பில் கலந்துரையாடும் `கருத்தரங்கம்', விறுவிறுப்பான `வழக்காடு மன்றம்', கவிஞர்கள் கலக்கும் `கவியரங்கம்', என ஒளிபரப்பாகி வருகிறது இந்த தமிழ் அரங்கம். நிகழ்ச்சி இயக்கம் இ.மணிபாரதி.

தயாரிப்பு: வசந்த் டிவி.

R.Latha
23rd March 2009, 12:48 PM
ஆலய தரிசனம்

வசந்த் டி.வியில் வெள்ளி தோறும் காலை 6.15 மணிக்கு ஒளிபரப்பாகிறது, ஆலய தரிசனம் நிகழ்ச்சி. வசந்த் டி.வி தயாரித்து வழங்கும் இந்த நிகழ்ச்சியை இ.மணிபாரதி இயக்குகிறார்.

ஒவ்வொரு ஆலயத்தின் வரலாறு, உருவான பின்னணி, மகிமைகள், அருள் பாலிக்கும் கடவுளின் தோற்றம், பக்தர்களின் பக்தி பரவசம் மற்றும் திருவிழா கொண்டாட்டங்களை இந்த நிகழ்ச்சியில் காணலாம்.

R.Latha
24th March 2009, 01:13 PM
[tscii:92fa03b725]தாயில்லாமல் நானில்லை

வசந்த் டி.வி.யில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி ‘தாயில்லாமல் நானில்லை'.

இதில், பிரபலங்கள் கலந்து கொண்டு தங்கள் தாயின் பெருமைகளை உணர்வுபூர்வமாக கூறுகிறார்கள்.

குழந்தைப் பருவத்திலிருந்து மனிதனாக சிறகுகள் விரிக்கும் காலம் வரை தாயின் அர்ப்பணிப்பு பற்றியும், வளர்ந்த பிறகு தாயைப் போற்றும் தங்கள் குணத்தையும் பிரபலங்கள் சுவைபட கூறும் இந்த நிகழ்ச்சி சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மதியம் 12.30 மணிக்கும், செவ்வாய்க்கிழமை காலை 10 மணிக்கும் ஒளிபரப்பாகிறது.[/tscii:92fa03b725]

R.Latha
30th March 2009, 12:02 PM
அகிலமே போற்றும் அன்னை சோனியா

வசந்த் தொலைக்காட்சியில் ஞாயிறு தோறும் பகல் 12 மணிக்கு ``அகிலமே போற்றும் அன்னை சோனியா'' என்ற வரலாற்றுத் தொடர் ஒளிபரப்பாகிறது.

காங்கிரஸ் தலைவி சோனியா காந்தியின் பொதுவாழ்வு தியாகங்களையும், பொது நலன் காத்திடும் மனிதநேய குணத்தையும், நிர்வாக திறமையையும் வெளிப்படுத்தும் வகையில் இந்த தொடர் அமைந்துள்ளது.

பிரபல அரசியல் தலைவர்களும், சினிமா கலைஞர்களும், இயக்கவாதிகளும் இந்த தொடரில் பங்கேற்று சோனியா காந்தியுடன் தங்களுக்குள் ஏற்பட்ட அனுபவங்களை பகிர்ந்து கொள்கிறார்கள்.

R.Latha
30th March 2009, 12:15 PM
திரை முத்துக்கள்

வசந்த் டிவியில் ``திரைமுத்துக்கள்'' என்ற புதிய நிகழ்ச்சி விரைவில் வர இருக்கிறது. ஒவ்வொரு கதாநாயகனின் நடிப்பிலும் வெளிவந்த முத்தான இரண்டு படங்களில் இருந்து அதிரடியான காட்சிகளை கொண்டு இந்த நிகழ்ச்சி வரவிருக்கிறது.

R.Latha
6th April 2009, 02:05 PM
கும்பாபிஷேகம் நேரடி ஒளிபரப்பு

இந்திய அளவில் பிரசித்தி பெற்ற கோயில்களில் ஒன்று மதுரை மீனாட்சி அம்மன் கோவில். இந்த கோயிலின் கும்பாபிஷேகம் வரும் 7 மற்றும் 8-ம் தேதிகளில் நடைபெறவிருக்கிறது. கும்பாபிஷேக நிகழ்ச்சியை வசந்த் டிவி இரண்டு நாட்களும் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

R.Latha
15th April 2009, 11:36 AM
"என்ன செய்தார் எம்.பி?''



வரவிருக்கும் தேர்தலை முன்னிட்டு வசந்த் டிவி வழங்கவிருக்கும் புதிய நிகழ்ச்சி, "என்ன செய்தார் எம்.பி?.''

இந்த நிகழ்ச்சியில் வசந்த் டிவி, நேயர்களிடமிருந்து பதிலைப் பெற்று ஒளிபரப்பவிருக்கிறது.

உங்கள் தொகுதியில் உள்ள எம்.பி.யின் செயல்பாடு எப்படி இருக்கிறது என இந்த நிகழ்ச்சியில் கேட்கப்படுகிறது. தொகுதி வாரியாக இந்த கேள்விகள் கேட்கப்பட்டு மக்களின் கருத்துகள் சேகரிக்கப்படுகின்றன.

ஒவ்வொரு தொகுதியில் உள்ள எம்.பி.யின் செயல்பாடும் திருப்தியாக இருக்கிறதா, இல்லையா?'' ஆம் அல்லது இல்லை என இரண்டில் ஏதாவது ஒரு பதில் எஸ்.எம்.எஸ். மூலம் பெறப்படுகிறது.

காரசாரமான அனல் பறக்கும் இந்த நிகழ்ச்சி வசந்த் டிவியில் விரைவில் வரவிருக்கிறது.

R.Latha
20th April 2009, 12:41 PM
பெய்யெனப் பெய்யும் மழை

வசந்த் டி.வி.யின் இசை சார்ந்த புதிய நிகழ்ச்சி `பெய்யெனப் பெய்யும் மழை'

இசைக்கருவிகள் இசைப்பதில் கைதேர்ந்த நிபுணர்கள், பலதரப்பட்ட இசைக்கருவிகளின் வேறுபாடு, இசைக்கருவிகள் சிறப்பு என்னென்ன? எப்படி இசைக்க வைக்கப்படுகிறது? எந்த ராகத்தில் இசைக்க எப்படி பயன்படுத்த வேண்டும்? திரைப்பாடல்களில் அது பயன்படுத்தப்பட்ட விதம் போன்றவற்றை மேற்கோள் காட்டி, இசைக்கருவியை இசைத்து, விளக்கி கூறுகிறார்கள். தொகுப்பாளர்கள் இதுதொடர்பாக கேட்கும் கேள்விகளுக்கு பிரபல இசைவல்லுனர் பதில் கூறுகிறார். இதற்கான படப்பிடிப்பு பிரமாண்ட அரங்கில் நடைபெற இருக்கிறது.

R.Latha
20th April 2009, 12:52 PM
நகைச்சுவை புதுசு



வசந்த் டி.வி.யின் விரைவில் வரவிருக்கும் புதிய அரசியல், சினிமா மற்றும் சமூக பிரச்சினைகளை நகைச்சுவையாக அலசும் நிகழ்ச்சி `டீக்கடை பெஞ்ச்.'

நாட்டில் அன்றாடம் நடக்கும் சமீப கால சம்பவங்களையும், நிகழ்ச்சிகளையும் காமெடிக் கோணத்தில் அணுகும் நிகழ்ச்சி இது. டீக்கடை பெண், மூன்று டீக்கடை வாடிக்கையாளர்கள் என நான்கு பேர் நிகழ்ச்சியில் காமெடி வழங்குகிறார்கள்.

R.Latha
4th May 2009, 03:46 PM
பேய் பங்களா மர்மங்கள்



வசந்த் டி.வி.யில் சனிக்கிழமை தோறும் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் விறுவிறுப்பான நிகழ்ச்சி புலன் விசாரணை.

இதில் அமானுஷ்யமான நிகழ்வுகள், மர்மக் கொலை மற்றும் சமூகத்தை பாதிக்கும் அதிர்ச்சியான சம்பவங்கள், வினோதமான பழக்க வழக்கங்கள் கொண்ட கிராமங்கள் போன்றவை குறித்து விறுவிறுப்பாக அலசப்படுகிறது.

இன்று இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகும் புலன் விசாரணை நிகழ்ச்சியில் 40 வருடங்களுக்கும் மேலாக பூட்டிக் கிடக்கும் பேய் பங்களா மர்மங்கள் குறித்தும் ஆவிகள் இருப்பது உண்மையா பொய்யா என்பது குறித்தும் அறிவியல் பூர்வமாகவும், உளவியல் ரீதியாகவும் அலசப்படுகிறது.

நிகழ்ச்சி தயாரிப்பு: வசந்த் டி.வி.

R.Latha
4th May 2009, 03:48 PM
தினம் ஒரு தலைப்பில்!



வசந்த் டிவியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் மதியம் 12 மணிக்கு ஒளிபரப்பாகும் `லைவ் சாய்ஸ்' நிகழ்ச்சியை தொகுத்தளித்து வழங்குகிறார், சாதனா சங்கர். இதில் தினமும் ஒரு தலைப்பு எடுத்துக்கொள்ளப்பட்டு விவாதிக்கப்படுகிறது. சினிமா, சமுதாயப் பழக்கவழக்கங்கள், போக்குவரத்து விதிகள், பண்டிகை தின அனுபவ ஆலோசனை, அதோடு உலக சிறப்பு தினங்களையும், அவற்றின் தகவல்கள் விழிப்புணர்வுகளைப் பற்றியும் ஆலோசிக்கப்படுகிறது.

R.Latha
4th May 2009, 03:58 PM
[tscii:8586896933]உன்னால் முடியும் கண்ணே

First Published : 04 May 2009 11:02:00 AM IST

Last Updated :

வசந்த் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவுள்ள பெண்களுக்கான புதிய நிகழ்ச்சி ‘உன்னால் முடியும் கண்ணே'.

இதில், பொருளாதார ரீதியாகவும், குடும்ப ரீதியாகவும் நலிவுற்ற பெண்கள் எப்படியெல்லாம் வாழ்க்கையை எதிர்கொள்கிறார்கள் என்பதும் கடும் சிரமத்தினூடே உழைத்து வாழ்க்கையில் தலைநிமிர்கிறார்கள் என்பதும் பாதிக்கப்பட்ட பெண்களைக் கொண்டே விவரிக்கப்படுகிறது.

பெண்களுக்கு தன்னம்பிக்கையூட்டி, அவர்களைத் தங்கள் சொந்தக் காலில் நிற்கச் செய்யும் இந்த நிகழ்ச்சி, வசந்த் டி.வி.யில் மே இரண்டாம் வாரம் முதல் ஒளிபரப்பாகிறது.[/tscii:8586896933]

R.Latha
11th May 2009, 12:15 PM
புலன் விசாரணை

வசந்த் தொலைக்காட்சியில் சனிக்கிழமை தோறும் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி புலன் விசாரணை. அமானுஷ்யமான நிகழ்வுகள், மர்மமான பின்னணிகள், சமூகத்தை பாதிக்கும் சம்பவங்கள் போன்றவற்றை விறுவிறுப்பாக அலசும் நிகழ்ச்சி இது.

இன்று இரவு 9.30 மணிக்கு குழந்தைகளை காப்பாற்றுவதற்காக பாலியல் தொழிலில் ஈடுபட்டு வரும் குடும்பப் பெண்கள் குறித்தும், பாலியல் தொழிலில் ஈடுபடுத்துவதற்காக குழந்தைகள் கடத்தப்படுவது பற்றியும் அதிர்ச்சிகரமான தகவல்களோடு அலசும் நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது. இதில் பாலியல் தொழிலில் ஈடுபடும் பெண்களே நேரடியாக தங்கள்சோகங்களை விவரிக்கிறார்கள். என்பது குறிப்பிடத்தக்கது.

aanaa
12th May 2009, 07:52 PM
புலன் விசாரணை


. இதில் பாலியல் தொழிலில் ஈடுபடும் பெண்களே நேரடியாக தங்கள்சோகங்களை விவரிக்கிறார்கள். என்பது குறிப்பிடத்தக்கது.

கொடுமை

aanaa
17th May 2009, 06:09 PM
திருநங்கைகள் - திரைமங்கைகள் நடன போட்டி



திருநங்கைகளை கவுரவப்படுத்த, ஏற்கனவே வசந்த் டிவி "திக்கற்ற தேவதைகள்'' என்ற பெயரில் அவர்களின் கண்ணீர் கதைகளை ஒளிபரப்பி வருகிறது.

தற்போது திருநங்கைகளுக்கு சமூக சம அந்தஸ்து கிடைக்கச் செய்யும் அடுத்த முயற்சியாக திருநங்கைகளுக்கும் - திரைமங்கைகளுக்கும் இடையே நடனப்போட்டியை வசந்த் டிவி ஒளிபரப்ப உள்ளது. இந்த போட்டியில் வெற்றி பெறப்போவது அரவாணிகளா? கலைவாணிகளா?

ஒவ்வொரு வாரமும் நடன காட்சியில் சிறந்த ஆட்ட நாயகியை நேயர்களே தேர்ந்தெடுக்கலாம். எஸ்.எம்.எஸ்.மூலமாகவோ, அல்லது தபால் மூலமாகவோ, ஒளிபரப்பான 5 தினங்களுக்குள் தகவல் அனுப்பி சிறந்த ஆட்ட நாயகியை தேர்வு செய்யும் நேயருக்கு தங்க நாணயம் பரிசு வழங்கப்படுகிறது.

ஞாயிறு பகல் 12 மணிக்கும், வெள்ளி இரவு 9 மணிக்கும் வசந்த் டிவியில் இந்த நிகழ்ச்சியை காணலாம். நிகழ்ச்சியை இயக்குபவர் ஜெயமணி.

தயாரிப்பு: வசந்த் டிவி.


நன்றி: தினதந்தி

aanaa
17th May 2009, 06:10 PM
மெய்யா? - பொய்யா?



வசந்த் தொலைக்காட்சியில் இரவு 8.30 மணி முதல் 9 மணி வரை "மெய்யா ... பொய்யா...'' என்ற காரசார விவாத நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது. நிகழ்ச்சியில் தலைசிறந்த தமிழ் அறிஞர்கள் கலந்து கொண்டு சிறப்பிக்க இருக்கின்றனர். விறுவிறுப்பான இந்த நிகழ்ச்சியை எஸ்.ஏ.விஜயகுமார் இயக்குகிறார். படத்தொகுப்பை பி.எம்.எழிலரசன் கவனிக்க, ஒளிப்பதிவு செய்கிறார், பவன்.

இதில் "ஜோதிடம் மெய்யா? பொய்யா?'' தனியார் கல்வி நிறுவனங்களில் அதிக கட்டணம் வசூலிப்பது மெய்யா? பொய்யா? "காதல் மெய்யா? பொய்யா?'' என பல்வேறு தலைப்புகளில் விவாத அரங்கம் நடைபெறுகிறது. நிகழ்ச்சியை தொகுத்து வழங்குபவர் பத்மாவதி.


நன்றி: தினதந்தி

aanaa
17th May 2009, 06:11 PM
கலக்கல் காமெடி



திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் காலை 9 மணிக்கு வசந்த் டிவியில் "கலக்கல் காமெடி'' நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது. இதில் புதிய திரைப்படங்களின் கலக்கலான காமெடிக் காட்சிகள் இடம் பெறுகின்றன..

நிகழ்ச்சியை தொகுத்து வழங்குபவர் ரமணி. கார்த்திகேயன் டைரக்ட் செய்கிறார். நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு வி.பால்ராஜ்.




நன்றி: தினதந்தி

aanaa
23rd May 2009, 06:28 AM
ரகசிய கேள்விகள்


வயதிற்கு வந்த ஆண்கள்-பெண்கள் தங்கள் உடலமைப்பு பற்றியும், திருமண உறவுக்கான பொருத்தம் குறித்தும், முழுமையான செக்ஸ் உறவு குறித்த அறிவை பெறும் முயற்சியாக, வசந்த் டிவி தரும் நிகழ்ச்சி ``ரகசிய கேள்விகள்''.

இனி வரும் எபிசோடுகளில் சம்பந்தப்பட்ட கேள்விக்கான சம்பவங்கள், காட்சியாக படம்பிடித்து காட்டப்பட இருக்கிறது.


நன்றி: தினதந்தி

aanaa
23rd May 2009, 06:44 PM
வீ(வசந்த்) டீவியில் ஒளிபரப்பாகும் திருந*ங்கைக*ளி*ன் "தி*க்க*ற்ற தேவதைக*ள்" காண்போரின் நெஞ்சை உருகச் செய்கிறது.இன்றைய சமூகத்தில்
அ*ங்*கிகார*ம் *கிடை*க்காம*ல் புற*க்க**ணி*க்க*ப்ப*ட்டு வரு*ம் *திருந*ங்கைக*ளி*ன் கண்ணிர் சித்தரம் தான் தி*க்க*ற்ற தேவதைக*ள்.

சமூகம் மட்டுமல்ல பெற்றோர்களே புறக்கணிக்கும் *திருந*ங்கைகளை வைத்து அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து எடுக்கப்படும் இந்த
தி*க்க*ற்ற தேவதைக*ள்-நிகழ்ச்சியை பாராட்டாமல் இருக்கமுடியாது. இவர்களுக்கும் சமூகத்தில் அ*ங்*கீகார*ம் அ*ளி*க்க*ப்பட வேண்டும்.

வியாழ*க் *கிழமை இரவு 9 ம*ணி*க்கு*ம், புத*ன்*கிழமை காலை 10 ம*ணி*க்கு*ம் ஒ*ளிபர*ப்பாகும் இந்நிகழ்ச்சியில் வாரம் தோறும் இரண்டு *திருந*ங்கைக*ள் தங்களது உண்மை நிலவரத்தை கண்ணீருடன் கதறும் போது நம் வயிற்றில் ஏதோ செய்வது மட்டும் உண்மை>

aanaa
30th May 2009, 08:26 PM
புத்தம் புது வரவு



வசந்த் டி.வி.யில் திரைக்கு வர தயாராக இருக்கும் புதிய திரைப்படங்களின் டிரெய்லர், `புத்தம் புது வரவு' என்ற பெயரில் தினமும் இருமுறையாக காலை 8.30 மணிக்கும், இரவு 12.30 மணிக்கும், ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியில் பெரிய ஹீரோ, சிறிய ஹீரோ வேறுபாடின்றி, படங்களின் டிரெய்லர்கள் ஒளிபரப்பாகின்றன. நிகழ்ச்சிப்பொறுப்பு வி.பால்ராஜ்.



நன்றி: தினதந்தி

aanaa
30th May 2009, 08:27 PM
நேர மாற்றம்

வசந்த் டிவியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு எட்டரை மணிக்கு ஒளிபரப்பாகி வந்த பராசக்தி தொடர், வரும் திங்கள் முதல் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகும். வாரத்தில் 5 நாட்கள் ஒளிபரப்பாகி வந்த அம்மன் தொடர் இனி வாரம் ஒருமுறை வெள்ளி தோறும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகிறது.



நன்றி: தினதந்தி

aanaa
6th June 2009, 07:35 PM
நடனப் போட்டி



வசந்த் டி.வி.யில் டான்ஸ் பார்ட்டி லீக் (டி.பி.எல்) என்ற பெயரில் நடன போட்டி நடக்கவிருக்கிறது. தமிழகமெங்கிலுமுள்ள மேடை நடனக் குழுவினருக்கிடையில் நடைபெறும் இந்த போட்டியில் வெற்றி பெறும் குழுவிற்கு ரூ.1 லட்சம் பரிசு உண்டு.

அதோடு சிறந்த ஆட்ட நாயகன், ஆட்ட நாயகி ஆகியோருக்கு தலா ரூ.25 ஆயிரமும் சிறந்த நடனஜோடிக்கு ரூ 25 ஆயிரமும்

வழங்கப்படுகிறது.சென்னை, மதுரை ஆகிய நகரங்களில் இதற்கான படப்பிடிப்பு நடந்து வருகிறது. நடனப் போட்டியை இயக்குபவர் கே.ஜெயமணி.

நன்றி: தினதந்தி

aanaa
6th June 2009, 07:36 PM
இம்சை அரசன் 23-ம் எலிகேசி



``இம்சை அரசன் 23-ம் எலிகேசி'' என்ற பெயரில் ஒரு புதிய நகைச்சுவை தொடர் வசந்த் டிவியில் வரவிருக்கிறது.

நாட்டு நடப்பை நகைச்சுவையாக வெளிப்படுத்துகிற இந்த தொடரில், வடிவேல் சேகர், அந்தோணி, சுருளி மனோகர், கலைவாணி, ஜெனிப்பிரியா, சத்யா, ரீனா, மாலா, கலாரஞ்சினி ஆகியோர் நடிக்கிறார்கள். ஒவ்வொரு வாரமும் பிரபல நகைச்சுவை நடிகர் ஒருவர் இந்த தொடரில் கலந்து கொண்டு நகைச்சுவை வழங்குகிறார். கதை-வசனம் எழுதி இயக்குபவர் கே.ஜெயமணி

நன்றி: தினதந்தி

aanaa
6th June 2009, 07:36 PM
மெய்யா, பொய்யா!



வசந்த் டி.வி.யில் சனி மற்றும் ஞாயிறு இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி; `மெய்யா, பொய்யா.' சமூகப் பிரச்சினைகளை முன்னிறுத்தி ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சியில் தமிழ் அறிஞர்கள், வழக்கறிஞர்கள், மருத்துவர்கள், அரசு அதிகாரிகள், கல்லூரி மாணவ - மாணவிகள், சமூக சேவகர்கள், மனித உரிமை கழக பிரதிநிதிகள், தனியார் நிறுவன அலுவலர்கள் என பல்துறை அறிஞர் பெருமக்களும், பெண்களின் பிரதிநிதிகளும் கலந்து கொள்கிறார்கள்.

இந்த நிகழ்ச்சி பற்றிய சிறந்த விமர்சனங்களை எழுதுவோருக்கு `மெய்யா பொய்யா' நிகழ்ச்சி நடைபெறும் மேடையிலேயே பரிசுப் பொருட்களை வழங்குகிறார்கள். இயக்கம்: எஸ்.ஏ.விஜயகுமார்.



நன்றி: தினதந்தி

aanaa
5th July 2009, 06:14 PM
ஆச்சியுடன் பேச்சு



வசந்த் டி.வியில் ஞாயிறு தோறும் காலை 9 மணிக்கு நடிகை மனோரமா ரசிகர்களுடன் நேரடியாக உரையாடுகிறார். சின்னத்திரை வரலாற்றில் முதன் முறையாக நேயர்களின் கேள்விகளுக்கு மனோரமா நேரலையில் பதில் அளிக்கிறார். அவரிடம் சினிமா பற்றி, பொதுவான விஷயங்கள் பற்றி பேசலாம்,

ஒவ்வொரு வாரமும் சிறப்பு விருந்தினர்களாக வெள்ளித்திரை நட்சத்திரங்கள் பங்கேற்கிறார்கள்.

aanaa
5th July 2009, 06:26 PM
வசந்த் "டிவி'யில், சரிகமபதநி நிகழ்ச்சியில், திருச்சூர் சகோதரர் கள் பாடல் பாடிய விதமும், பேட்டி அளித்த நயமும் அருமை. சினிமா பாடல் பாடினால் போதும் என்று நினைக்கும் இளைஞர் கள், கண்டிப்பாக இவர்கள் பேட்டியை பார்த்திருந்தால் மனம் மாறியிருப்பர்.

aanaa
12th July 2009, 05:19 PM
[tscii:35974b76ef]

ஆலய தரிசனம்



வசந்த் டி.வி.யில் காலை 7.05 மணிக்கும், மாலை 6.30 மணிக்கும் ஒளிபரப்பாகி வரும் `ஆலய தரிசனம்' நிகழ்ச்சி 100 எபிëசோடை எட்டியிருக்கிறது.

ஆலயத்தின் வரலாறு, உருவான பின்னணி, மகிமைகள், அருள் பாலிக்கும் கடவுளின் தோற்றம் மற்றும் திருவிழா கொண்டாட்டங்களை இந்த நிகழ்ச்சியில் காணலாம்.

இயக்கம்: இ.மணிபாரதி.



நன்றி: தினதந்தி [/tscii:35974b76ef]

aanaa
12th July 2009, 05:24 PM
தமிழ் முழக்கம்



தமிழ் இலக்கிய வளத்தை மக்களிடம் கொண்டு செல்லும் ஒரு வித்தியாசமான நிகழ்ச்சி `தமிழ் முழக்கம்'. இலக்கியச் செல்வர் குமரி அனந்தன் தொடக்க உரை நிகழ்த்தி துவக்கி வைக்கும் இந்த நிகழ்ச்சியில் கவிக்கோ அப்துல் ரகுமான், பெரியார்தாசன், வாணியம்பாடி அப்துல் காதர், திருச்சி கல்யாண ராமன்உள்ளிட்ட பல்வேறு தமிழறிஞர்கள் கலந்து கொண்டு இலக்கியச் சொற்பொழிவு நிகழ்த்துகிறார்கள்.

ஞாயிறு தோறும் காலை 11.30 மணிக்கு வசந்த் டிவியில் தமிழ் முழக்கம் நிகழ்ச்சியை காணலாம்.



நன்றி: தினதந்தி

aanaa
12th July 2009, 05:25 PM
தமிழுக்கு மரியாதை



வசந்த் தொலைக்காட்சியில் வர இருக்கும் ``தமிழுக்கு மரியாதை'' என்னும் புதிய அறிவுத்திறன் போட்டி நிகழ்ச்சி, பிற மொழிகள் கொஞ்சமும் கலப்படம் இல்லாமல் தயாராகிறது.

தமிழ் இலக்கண, இலக்கியங்களிலிருந்து கேட்கப்படும் கேள்விகளுக்கு சரியான பதில் சொல்லி, பரிசு பெறலாம்.

எஸ்.ஏ. விஜயகுமார் எழுதி இயக்குகிறார். தயாரிப்பு: வசந்த் தொலைக்காட்சி.



நன்றி: தினதந்தி

aanaa
19th July 2009, 01:20 AM
லவகுசா



வசந்த் டிவியில் நாளை முதல் ஞாயிறு தோறும் காலை 10 மணிக்கு ஒளிபரப்பாகவிருக்கிறது. `லவகுசா' புராணத் தொடர்.

ராமாயணத்தில் சுந்தரகாண்டத்திற்கு பிறகு வரும் காண்டம் உத்திரகாண்டம். இது சிறப்பானதொரு காண்டமாகும். இந்த காண்டத்தின் நிகழ்வுகள் லவகுசாவில் இடம் பெறுகின்றன. ராமனின் மகன்கள் லவன், குகன் போன்றோரின் கதைகளையும், சீதையின் பெருமைகளையும், சீதையின் வாழ்க்கைப் பாதையின் பெருமைகளையும் சொல்லும் தொடர் இந்த லவகுசா.

தொடரில் சீதா பிராட்டியாக யுவராணி நடிக்கிறார். கவுரிமனோகர் தொடரை இயக்குகிறார். தேவநாராயணன் கதை, வசனம் எழுதுகிறார். தயாரிப்பு: டி.எஸ்.சேதுராமன்.

நன்றி: தினதந்தி

aanaa
25th July 2009, 08:12 PM
பெண்கள் அரங்கம்



ஞாயிறு தோறும் வசந்த் டிவியில் மாலை 5 மணிக்கு ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி `பெண்கள் அரங்கம்'. பெண்களின் பிரச்சனைகளை அலசும் இந்த நிகழ்ச்சியில் வாரம் ஒரு தலைப்பை எடுத்துக் கொண்டு பெண்கள் விவாதிக்கிறார்கள்.

இயக்கம் இ.மணிபாரதி.

நன்றி: தினதந்தி

R.Latha
11th November 2009, 01:16 PM
அசலா! நகலா!



வசந்த் டிவியில் விரைவில் ஒளிபரப்பாகவிருக்கும் புதிய நிகழ்ச்சி, `அசலா நகலா.' இந்த நிகழ்ச்சியில் பிரபல நடிகர்கள் சாயலில் உள்ளவர்கள் கலந்து கொண்டு தங்கள் கலைத்திறமை, நடிப்பு, நடனம் போன்றவற்றை வெளிப்படுத்துகிறார்கள்.

வழக்கமாக நகல் நடிகர்களின் நடனத்தை மட்டும் பார்த்து ரசித்து வந்த ரசிகர்களுக்கு, முற்றிலும் வித்தியாசமாக அமைகிறது இந்த நிகழ்ச்சி. அசல் நடிகர்கள் போல பேசியும் நடித்தும் இவர்கள் வெளிப்படுத்தும் திறமையில் அசல் நடிகர்கள் தான் இதைச் செய்கிறார்களோ என்ற பிரமிப்பு கூட ஒருகணம் மனதில் வந்து போகும்.

இந்த நிகழ்ச்சியில் `தினம் ஒரு நடிகர்' என்ற கணக்கில் பிரபல நடிகர் சாயலில் உள்ள நடிகர்கள் தங்கள் திறமையை அரங்கேற்றுகிறார்கள்.

lotus_303
16th February 2010, 05:57 PM
Vasanth tv now become popular please broadcast this as a special channel

also visit this web for good articles

http://www.manuneethi.net/