PDA

View Full Version : TV tid bits



Pages : 1 2 [3]

aanaa
10th March 2015, 07:47 PM
விஜய் விருதுக்கு நீதிபதிகள் நியமனம்


விஜய் தொலைக்காட்சி ஆண்டு தோறும் சிறந்த சினிமா கலைஞர்களை தேர்வு செய்து விருது வழங்கி வருகிறது. 2014ம் ஆண்டுக்கான 9வது விஜய் விருது விழா வருகிற ஏப்ரல் மாதம் நடக்க இருக்கிறது. இதற்காக சிறந்த படங்களை, கலைஞர்களை தேர்வு செய்ய நீதிபதிகள் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். இயக்குனர் பால்கி, கே.பாக்யராஜ், கே.வி.ஆனந்த், நடிகை நதியா, யூகி சேது ஆகியோர் நீதிபதிகளாக நியமிக்கப்பட்டிருக்கிறார்கள்.


யூகி சேது கடந்த 7 ஆண்டுகளாக தொடர்ந்து நீதிபதியாக இருக்கிறார். கே.பாக்யராஜ் கடந்த 3 ஆண்டுகளான நீதிபதியாக இருக்கிறார். நதியாவும், கே.வி.ஆனந்தும் புதிய நீதிபதியாகி இருக்கிறார்கள். இயக்குனர் பால்கி முதன் முறையாக சின்னத்திரை நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். இந்த ஆண்டு விழாவில் சவுண்ட் என்ஜினீயரிங், விசுவல் எபெக்ட்ஸ், டப்பிங், போன்ற பிரிவின் கிழும் விருது வழங்க முடிவு செய்திருக்கிறார்கள்.



நன்றி: தினமலர்

aanaa
10th March 2015, 07:49 PM
சின்னத்திரையில் சித்தார்த்


இதுவரை சித்தார்த் சின்னத்திரை நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராகவும், பங்கேற்பாளராகவுமே கலந்து கொண்டிருக்கிறார். முதன் முறையாக ஒரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார்.


டிஸ்கவரி தமிழ் சேனலில் வேர் டைகர்ஸ் ரூல்ஸ் என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது. இதை முன்னணி நடிகர் நடிகைகள் தொகுத்து வழங்கி வருகிறார்கள். இதற்கு முன்பு அமீர்கான், ப்ரியங்கா சோப்ரா, ஸ்ருதி ஹாசன் தொகுத்து வழங்கி இருக்கிறார்கள். புலி இனத்தை காக்கும் நோக்கத்தில் அதன் பரிணாம வளர்ச்சி, குணநலன்கள், அவற்றின் வாழ்வியலை பாதிக்கும் காரணங்கள் அதனை தடுக்கும் முறைகள் பற்றி இந்த நிகழ்ச்சி சொல்கிறது. புலிகள் வாழும் பகுதியில் ரகசிய கேமராக்கள் வைத்து படம்பிடித்து இந்த நிகழ்ச்சியை தயாரித்து வழங்குகிறார்கள்.


இதில் உள்ள வனவிலங்கு சமூகத்தின் அக்கறையை புரிந்து கொண்டு நட்சத்திரங்கள் தொகுத்து வழங்குகிறார்கள். அந்த வரிசையில் இப்போது சித்தார்த் தொகுத்து வழங்குகிறார். தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சியின் மார்ச் மாத எபிசோட்களை சித்தார்த் தொகுத்து வழங்குகிறார்.



நன்றி: தினமலர்

aanaa
28th March 2015, 07:41 PM
தமிழுக்கு வருகிறார் தெலுங்கு தொகுப்பாளர் சுமா


ஜீ தமிழ் சேனல் முன்பு நீல நிறத்தில் இருந்த தனது லோகோவை மாற்றி தற்போது மஞ்சள் மற்றும் குங்குமத்தை குறிக்கும் மங்களகரமான புதிய லோகோவை அறிமுகப்படுத்தி உள்ளது. அதோடு பல புதிய நிகழ்ச்சிகளை புதுப் பொலிவுடன் துவக்க இருக்கிறது. தற்போது ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளிலும் மாற்றங்கள் செய்ய இருக்கிறார்கள். பொழுதுபோக்கு, விளையாட்டு நிகழ்ச்சிகள், ரியாலிட்டி ஷோக்கள், திரைப்படங்களுக்கு நிகரான தொடர்கள், திரைப்பட நட்சத்திரங்கள் பங்குபெறும் நிகழ்ச்சிகள் என புதிய நிகழ்ச்சிகளை தயாரித்து வருகிறார்கள்.


அவற்றில் முக்கியமானது ஜீன்ஸ் என்ற நிகழ்ச்சி. இது ஒரு கேம் ஷோ. இதில் திரைப்பட நட்சத்திரங்கள் தங்கள் குடும்பத்தினர், உறவினர்களுடன் கலந்து கொண்டு விளையாட இருக்கிறார்கள். இதனை தெலுங்கு தொலைக்காட்சி தொகுப்பாளர் உமா தொகுத்து வழங்குகிறார். தெலுங்கு சின்னத்திரை உலகின் முன்னணி தொகுப்பாளர் இவர். தமிழ்நாட்டில் திவ்யதர்ஷினி மாதிரி தெலுங்கில் சுமா.


கேரளாவைச் சேர்ந்த சுமா மலையாளத்தில் சில படங்களிலும் நடித்துள்ளார். மலையாள சேனல்களிலும் நிகழ்ச்சி தொகுத்து வழங்கி உள்ளார். மலையாளம், தெலுங்கு, தமிழ், ஆங்கிலம் நான்கு மொழியிலும் தெளிவாக பேசக்கூடியவர். சிறந்த தொகுப்பாளருக்கான பல விருகளையும் வென்றவர்.



நன்றி: தினமலர்

aanaa
28th March 2015, 07:43 PM
2014ம் ஆண்டில் சின்னத்திரையின் விளம்பர வருமானம் 47 ஆயிரம் கோடி


கடந்த 2014ம் ஆண்டு இந்திய சின்னத்திரை சேனல்களின் விளம்பர வருமானம் 47 ஆயிரத்து 500 கோடி ரூபாய். இது அதற்கு முந்தைய 2013ம் ஆண்டை ஒப்பிடும்போது 15 சதவிகிதம் கூடுதலாகும். இந்த தகவல் கே.பி.எம்.ஜி ஆண்டறிக்கையில் வெளியாகி உள்ளது. அதில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது


தொலைக்காட்சி வருமானத்தில் இந்தியா உலகில் 2வது இடத்தில் இருக்கிறது. முதலிடத்தில் இருப்பது சீனா. விளம்பர துறையின் வளர்ச்சிக்கு ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களில் பங்கு முக்கியமானது. இனிவரும் காலங்களில் ஊடகம் மற்றும் பொழுதுபோக்குதுறையின் வளர்ச்சிக்கு டிஜிட்டல் தொழில்நுட்பம் மிகப்பெரிய காரணமாக அமையும். சென்ற ஆண்டு தொலைக்காட்சி துறையின் ஊடுருவல் 61 சதவிகிதமாக இருந்தது. இனிவரும் ஆண்டுகளில் விளம்பர வருமானத்தின் வளர்ச்சி விகிதம் 15.6 சதவிகிதமாக இருக்கும். இந்த நிலை தொடர்ந்தால் 2019ம் ஆண்டில் தொலைக்காட்சிகளின் விளம்பர வருமானம் 97 ஆயிரத்து 500 கோடியாக அதிகரிக்கும். தொலைக்காட்சிகளில் சேனல் இணைப்பு வருவாயும் ஆண்டுக்கு 16 சதவிகிதம் உயரும்.


மத்திய அரசு பண்பலை வானொலி நிலையங்களை ஊக்குவித்து வருகிறது. புதிய வானொலி நிலையங்கள் அதிக அளவில் தொடங்கப்பட்டு வருகிறது. இனி வரும் காலங்களில் வானொலி விளம்பர வருவாயும் கணிசமாக உயரும். நடப்பு நிதி ஆண்டில் ஊடக துறையின் மொத்த வருமானம் ஒரு லட்சத்து 2 ஆயிரத்து 600 கோடியாக இருக்கும். இவ்வாறு கே.பி.எம்.ஜி அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.



நன்றி: தினமலர்

aanaa
28th March 2015, 07:46 PM
திரைப்பட கல்லூரி தொடங்குகிறார் ஜெயவேல்


சின்னத்திரையின் கிங் மேக்கர் என்று அழைக்கப்படுகிறவர் நாளை இயக்குனர் நிகழ்ச்சியின் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளரான கே.ஜி.ஜெயவேல். நாளைய இயக்குனர் நிகழ்ச்சியில் 6 வது சீசன் விரைவில் தொடங்க இருக்கிறது.


நாளைய இயக்குனர் நிகழ்ச்சி மூலம் கார்த்திக் சுப்புராஜ் (பீட்சா), பாலாஜி மோகன் (காதலில் சொதப்புவது எப்படி), நலன் குமாரசாமி (சூதுகவ்வும்), ராம் (முண்டாசுப்பட்டி), ரமேஷ் (தெகிடி) ஆகிய திறமையான இயக்குனர்களை ஜெயவேல் சினிமாவுக்கு அனுப்பி வைத்தார்.


விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா, கருணாகரன், ரெஜினா தாமஸ், செண்ட்ராயன், ஆகிய கலைஞர்களையும், அல்போன்ஸ் புத்ரன் (எடிட்டர்), கே.ஆர்.பிரதாப் (ஒளிப்பதிவாளர்), ஜஸ்டின் பிரபாகரன் (இசை அமைப்பாளர்), விஷால் சந்திரசேகர் (இசை அமைப்பாளர்) ஆகிய தொழில்நுட்ப கலைஞர்களையும் கண்டுபிடித்து சினிமாவுக்கு தந்தார்.


நாளை இயக்குனர் நிகழ்ச்சியில் கவனம் ஈர்த்த விழா என்ற குறும்படத்தை சினிமாவாக தயாரித்தார். ஆனால் அந்தப் படம் வெற்றி பெறவில்லை. என்றாலும் தற்போது நாளை இயக்குனரில் வெற்றி பெற்ற புது இயக்குனரை வைத்த அடுத்த படத்தை தயாரிக்க இருக்கிறார். விரைவில் திரைப்படக் கல்லூரி ஒன்றையும் தொடங்க இருக்கிறார்.



நன்றி: தினமலர்

aanaa
28th March 2015, 07:49 PM
ஏப்ரல் 25ந் தேதி விஜய் அவார்ட்ஸ் விழா: ஏற்பாடுகள் தீவிரம்


தமிழ் சினிமாவுக்கு அரசு விருது வழங்கி பல ஆண்டுகள் ஆகிவிட்டது. பல தனி அமைப்புகளும், தனியார் நிறுவனங்களும் தங்கள் விரும்பம் போல் விருது வழங்கி வருகிறார்கள். இந்த நிலையில் தமிழ் சினிமா கலைஞர்கள் பெரிதும் மதிக்கிற விருது விஜய் அவார்ட்ஸ்தான். ஃபிலிம் பேர் அவார்ட்ஸ் தென்னிந்திய சினிமாவுக்கு உரியது. விஜய் அவார்ட்ஸ் தமிழுக்கு மட்டும் உரியது.


2014ம் ஆண்டுக்கான விஜய் அவார்ட்ஸ் விழாவை வழக்கம்போல நேரு உள்விளையாட்டரங்கத்தில் பிரமாண்டமாக நடத்த உள்ளது விஜய் டி.வி. ஏப்ரல் 25ந் தேதி நடக்க இருப்பதாக தற்போது தேதியை அறிவித்துள்ளது. என்றாலும் கடந்த மாதமே அதன் பணிகளை துவக்கி விட்டது.


2014ம் ஆண்டுக்கான விஜய் அவார்ட்ஸ்சுக்கு தகுதியானவர்களை தேர்வு செய்ய இயக்குனர் கே.பாக்யராஜ், பால்கி, கே.வி.ஆனந்த், நடிகை நதியா, விமர்சகர் யூகி சேது ஆகியோர் ஜூரிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் ஒரு நாளைக்கு இரண்டு படங்கள் வீதம் தேர்வுக்கு வந்துள்ள படங்களை பார்த்து வருகிறார்கள்.


இந்த ஆண்டு முதல் டப்பிங் கலைஞர்க, ஒலிப்பதிவாளர் உள்ளிட்ட சில பிரிவுகளை விருதுக்கு சேர்த்திருக்கிறார்கள். பாலிவுட் நட்சத்திரம் ஒருவர் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார். நடிகர், நடிகைகள் பங்கேற்கும் பிரமாண்ட நடன கலை நிகழ்ச்சிக்கும் ஏற்பாடுகள் செய்து வருகிறார்கள். ஏப்ரலில் பதிவு செய்யப்படும் நிகழ்ச்சி, மே மாத்ததில் ஒளிபரப்பாகும்.



நன்றி: தினமலர்

aanaa
28th March 2015, 07:51 PM
மும்பைக்கே திரும்புகிறார் மனீஷா


முன்னணி சேனலில் ஒளிபரப்பாகி வரும் சக்தி தொடரில் ஹீரோயினாக நடித்து வருகிறார் மனீஷா. மும்பை நடிகையான இவர் சக்தி சீரியல் இந்தி சீரியலின் ரீமேக் என்பதால் நடிக்க ஒப்புக் கொண்டு நடிக்க வந்தார். எதற்கும் கோபப்படாத ஒரு அமைதியான பெண் கேரக்டரில் நடித்தார். நிஜத்தில் மனீஷா மார்டன் பொண்ணு. சக்தி சீரியலில் பிசியாக நடித்துக் கொண்டிருந்தபோது வந்த ஒரு மலையாள திரைப்பட வாய்ப்பையும் மறுத்தார்.


தற்போது சக்தி சீரியல் முடிவுக்கு வர இருக்கிறது. இன்னும் இரண்டு மாதங்களில் முடிந்து விடும். அதற்கு பிறகு தமிழ் சீரியல்களில் நடிக்கும் எண்ணம் இல்லாமல் இருக்கிறார் மனீஷா. அதற்கு காரணம் இந்தியில் தயாராகி வரும் மலையாள டிராபிக் படத்தின் ரீமேக்கில் நடிக்க வாய்ப்பு கிடைத்திருக்கிறது. தமிழில் சென்னையில் ஒரு நாள் என்ற பெயரில் ரீமேக் ஆனபோது இனியா நடித்த கேரக்டரில் மனீஷா நடிக்கிறார். தொடர்ந்து இந்தி படங்களிலும், இந்தி சீரியல்களிலும் நடிக்க முடிவு செய்திருக்கிறார் மனீஷா.



நன்றி: தினமலர்

aanaa
17th May 2015, 05:37 AM
சின்னத்திரை நடிகர் சங்கத்தில் குழப்பம்: தலைவர் நளினி திடீர் ராஜினாமா, திடீர் வாபஸ்


திரைப்பட நடிகர்களுக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் இருப்பதைப்போன்று சின்னத்திரை நடிகர்களுக்கும் தனியாக சங்கம் உள்ளது. இதன் தற்போதைய தலைவராக நளினி உள்ளார். கடந்த 6 மாதங்களுக்கு முன்பு நடந்த தேர்தலில் வெற்றி பெற்று நளினி தலைவர் ஆனார். ஆனால் நளினி தலைமையிலான நிர்வாகிகள் மீது சின்னத்திரை நடிகர்களுக்கு அதிருப்தி உள்ளது. நளினி நடிப்புக்குதான் முக்கியத்துவம் கொடுக்கிறார். சங்க பிரச்னைகளுக்கு முக்கியத்தும் தருவதில்லை என்றும், தன்னிச்சையாக முடிவெடுக்கிறார் என்றும் குற்றம் சாட்டுகிறார்கள். இதனை தேர்தலில் அவரை எதிர்த்து போட்டியிட்டு தோற்றவர்கள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள... சின்னத்திரை நடிகர் சங்கத்தில் தற்போது இரண்டு கோஷ்டிகள் உருவாகி உள்ளது


இந்த நிலையில் தலைவர் நளினி, துணை தலைவர் மனோபாலா, செயலாளர் பூவிலங்கு மோகன், இணை செயலாளர் பாவனா ஆகியோர் நேற்று (மே 10) திடீரென தங்கள் பதவியை ராஜினாமா செய்தார்கள். ராஜினிமா கடிதத்தை துணை தலைவர் ராஜ்காந்திடம் கொடுத்தனர். தற்போதுள்ள சூழ்நிலையில் எந்த பிரச்னையும் வேண்டாம் பதவியை தொடருங்கள் என்று பலரும் வற்புறுத்தியதை தொடர்ந்து ராஜினாமாவை வாபஸ் பெற்றனர்.


இதுகுறித்து நளினி கூறும்போது "எனக்கு தொடர்ந்து நடிக்கும் வாய்ப்புகள் அதிகரித்திருப்பால் என்னால் சங்க பணிகளை செய்ய நேரம் ஒதுக்க முடியவில்லை. அதனால் பதவியை ராஜினிமா செய்தேன். நான் நீடிக்க வேண்டும் என்று மூத்த உறுப்பினர்கள் கேட்டுக் கொண்டதால் ராஜினாமா முடிவை வாபஸ் பெற்றேன்" என்றார்.



நன்றி: தினமலர்

aanaa
30th May 2015, 06:44 PM
மறு ஒளிபரப்பாகும் டப்பிங் தொடர்


டப்பிங் தொடர்களால் எங்களது வேலை வாய்ப்பு பறிபோகிறது என்று சின்னத்திரை கலைஞர்கள் கூட்டமைப்பு போராட்டம் நடத்தி வருகிறது. என்றாலும் எல்லா சேனல்களுமே டப்பிங் தொடர்களை ஒளிபரப்பி வருகிறது. பொதுவாக புகழ்பெற்ற நேரடி தமிழ் தொடர்கள்தான் மறு ஒளிபரப்பாகும். அதுவும் ப்ரைம் டைமில் ஒளிபரப்பான தொடர் நான் பிரைம் டைமில் ஒளிபரப்பாகும்.
ஆனால் முதன் முறையாக ஒரு டப்பிங் தொடர் மறுஒளிபரப்பாகிறது. அதுவும் ப்ரைம் டைமான இரவு 7 மணிக்கு. திங்கள் முதல் வெள்ளி வரை ஒளிபரப்பாகிறது உள்ளம் கொள்ளை போகுதடா என்ற டப்பிங் தொடர். பாலிமர் தொலைக்காட்சியில் மிகுந்த வரவேற்புடன் ஒளிபரப்பான இந்த தொடர் 650 எபிசோட்களை கொண்டது. அத்தனை எபிசோடும் மறு ஒளிபரப்பாகிறது. ராம்கபூர், சாக்ஷி தன்வார், ஈவா க்ரோவர், ரேணுகா இஸ்ராணி நடித்துள்ளனர்.



நன்றி: தினமலர்

aanaa
30th May 2015, 06:46 PM
சின்னத்திரையிலும் காமெடிக்கே முதலிடம் கொடுக்கும் மதுமிதா!




ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தில் சந்தானத்துக்கு ஜோடியாக நடித்தவர் ஜாங்கிரி மதுமிதா. அதையடுத்து அட்டகத்தி, ராஜாராணி, ஜில்லா, தெனாலிராமன், காக்கி சட்டை, காஞ்சனா-2, டிமான்டி காலனி என பல படங்களில் நடித்து விட்டார்.


ஆனால், இவர் சினிமாவில் நடிப்பதற்கு முன்பே சின்னத்திரையில், மாமா மாப்ளே, பொண்டாட்டி தேவை, அதிதி பூக்கள் என சில சீரியல்களில் நடித்து நேயர்கள் மத்தியில் பேசப்படும் நடிகையாகவும் இருந்தார்.


ஆக, ஏற்கனவே டிவியில் வளர்ந்து கொண்டிருந்த மதுமிதா, இப்போது சினிமா மூலம் இன்னும் பெரிய அளவில் வளர்ந்து நிற்கிறார். தற்போது சினிமாவில் நடித்துக்கொண்டிருந்தாலும், சின்னத்திரையையும் அவர் விடவில்லை.


அழகி, மடிப்பாக்கம் மாதவன், சின்னப்பாப்பா பெரிய பாப்பா சீசன் 3யிலும் நடித்து வருகிறார். ஆனால் சினிமாவோ, சின்னத்திரையோ எதுவாக இருந்தாலும் காமெடி கேரக்டர்களுக்கு முதலிடம் கொடுத்து வருகிறார் மதுமிதா.


இதுபற்றி அவர் கூறுகையில், என்னைப்பொறுத்தவரை இரண்டு மீடியாக்களையும் ஒரே மாதிரியாகத்தான் நினைக்கிறேன். குறிப்பாக எனது கதாபாத்திரங்கள் ரசிகர்களை சந்தோசப்படுத்த வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறேன். அதனால்தான் காமெடி வேடங்களுக்கே முதலிடம் கொடுக்கிறேன்.


மேலும், அழுது வடியும் கேரக்டர்களை நான் விரும்புவதில்லை. டிவி சீரியல்களைப்பொறுத்தவரை பெரும்பாலும் சென்டிமென்ட் கதைகளாக இருப்பதால் ஒவ்வொரு கேரக்டர்களும் அழுது நடிக்க வேண்டியதிருக்கும்.


ஆனால் நான் காமெடி நடிகை என்பதால் என்னை இயக்குனர்கள் அழ விடுவதில்லை. அதுதான் எனக்கு பெரிய சந்தோசமே. என்னை புரிந்து கொண்டு கேரக்டர்கள் தருகிறார்கள். அதனால் என்னால் முடிந்தவரை ரசிகர்கள் எந்த அளவுக்கு மகிழ்ச்சிப்படுத்த முடியுமோ அதை செய்து கொண்டிருக்கிறேன் என்கிறார் மதுமிதா.



நன்றி: தினமலர்

aanaa
30th May 2015, 06:50 PM
இனியெல்லாம் சுகமே என்ற படத்தில் அப்பாஸூக்கு ஜோடியாக நடித்தவர்தான் தென்றல் சீரியல் மூலம் பிரபலமான நடிகை ஸ்ருதிராஜ். அப்படம் அவருக்கு கைகொடுக்கவில்லை. அதனால் தனது தாய்மொழியான மலையாளம் மற்றும் தெலுங்கு படங்களில் சில ஆண்டுகளாக நடித்து வந்த அவர், மறுபடியும் காதல் டாட் காம், மந்திரன், ஜெர்ரி ஆகிய படங்கள் மூலம் தமிழில் ரீ-என்ட்ரி ஆனார். ஆனால் அந்த படங்களும் வெற்றியை கொடுக்கவில்லை.


அதனால்தான் சினிமா தனக்கு ராசியில்லை என்று ஒரு மாற்று முயற்சியாக 2009ல் தென்றல் சீரியலில் நடித்தார். அந்த சீரியல் அவரை பெரிய அளவில் பேச வைத்தது. அதன்பிறகு விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ஆபீஸ் சீரியலில் நடித்து வரும் ராஜி கேரக்டர் பெண்கள் மனதில் அவருக்கு தனி இடத்தை பிடித்துக்கொடுத்தது.


இப்போது ஜீ டிவியில் வெளியாகும் அன்னக்கொடியும் ஐந்து பெண்களும் என்ற சீரியலிலும் நடித்து வரும் ஸ்ருதிராஜ், ரொம்ப பிசியாக இருக்கிறார். அதனால் கிட்டத்தட்ட சினிமாவை நினைத்துப்பார்க்ககூட அவருக்கு நேரம் இல்லையாம். ஆனால் இப்போது அவர் பேசப்படும் நடிகையாகி விட்டதால், சினிமாவில் இருந்து வெயிட்டான கதாபாத்திரங்களில் நடிக்க வாய்ப்புகள் செல்கிறதாம்.


ஆனால், அந்த வாய்ப்புகளை ஏற்கும் நிலையில் இப்போது ஸ்ருதிராஜ் இல்லையாம். காரணம், அவர் நடிப்பது தினசரி சீரியல்களாக இருப்பதால், ஓய்வு கிடைப்பதே அரியதாக உள்ளதாம். மேலும், அவர் எங்காவது ஷாப்பிங் செல்லும்போது அங்கே அவரை பார்க்கும் பெண்கள் ஓடிவந்து கட்டித்தழுவிக்கொள்கிறார்களாம். அவரது நடிப்பை ரொம்பவே புகழ்ந்து பேசுகிறார்களாம். இன்னும் சில பெண்கள் எங்கள் வீட்டுக்கு ஒருநாள் அவசியம் வர வேண்டும் என்று அன்புக்கட்டளை போடுகிறார்களாம்.


இந்த அளவுக்கு இல்லத்தரசிகள் தங்களது குடும்பத்தில் ஒருவராக தன்னை நினைப்பதை சொல்லி பெருமை கொள்ளும் ஸ்ருதிராஜ், இன்னும் அழுத்தமான குடும்பக்கதைகளில் நடிப்பதிலும் தனக்கு ஆர்வம் இருப்பதாகவும் சொல்கிறார்.



நன்றி: தினமலர்

aanaa
30th May 2015, 06:54 PM
ராதிகா தயாரித்து, நடிக்கும் வாணி ராணி தொடரில் கவுதம் என்ற முக்கியமான கேரக்டரில் நடித்து வருகிறார் விக்கி. தனது நேர்த்தியான நடிப்பால் சின்னத்திரை ரசிகர்களிடம் நல்ல இடத்த பிடித்திருக்கும் கவுதமிற்கு சினிமாதான் இலக்காம்.


"சொந்த ஊர் மதுரை. சினிமாவில் நடிக்க வேண்டும் என்பதுதான் வாழ்க்கையின் லட்சியம் இதற்காகத்தான் மதுரையிலிருந்து சென்னைக்கு வந்தேன். சினிமா வாய்ப்பு கிடைக்க தாமதமானது. அதுவரை சும்மா இருக்க வேண்டாமே என்று சீரியல் வாய்ப்பு தேடியபோது வாணி ராணியில் பெரிய வாய்ப்பு கிடைத்துது.
http://img1.dinamalar.com/cini//CNewsImages/NTLRG_150518101003000000.jpg
ராதிகா மேடத்தின் அறிமுகம், வழிகாட்டுதல் எனக்கு பெரிய உந்து சக்தியாக இருக்கிறது. அவர்களிடம் நடிப்பு, டிசிப்ளின், தொழில் பக்தி எல்லாவற்றையும் கற்று வருகிறேன். வாணி ராணி டீம் எனக்கு குருகுலம் மாதிரி இருக்கிறது. தற்போது தீவிரமாக சினிமா வாய்ப்பு தேடி வருகிறேன். விரைவில் என்னை பெரிய திரையில் காணலாம். அதற்கான நேரம் கைகூடி வந்து கொண்டிருக்கிறது" என்கிறார் விக்கி.



நன்றி: தினமலர்

aanaa
18th June 2015, 09:20 PM
மேடை நாடகத்தில் நடிக்கிறார் யுவஸ்ரீ


சின்னத்திரை நடிகைகளில் முக்கியமானவர் யுவஸ்ரீ. திரைப்படங்களிலும் குணசித்திர வேடங்களில் நடித்து வருகிறார். தற்போது அவர் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் எங்க வீட்டுப் பெண் என்ற தொடரில் நடித்து வருகிறார். தற்போது அவர் ஒய்.ஜி.மகேந்திரன் இயக்கி நடிக்கும் சொப்பன வாழ்வில் என்ற மேடை நாடகத்தில் நடிக்கிறார். யுனைடெட் அமெச்சூர்ட் ஆர்ட்டிஸ் தயாரிக்கும் இந்த நாடகத்தில் யுவஸ்ரீ ஒய்.ஜி.மகேந்திரனின் மனைவியாக நடிக்கிறார்.


இதுபற்றி யுவஸ்ரீ கூறியதாவது: நாடகம் எனக்கு புதில்லை. ஒய்.ஜி.மகேந்திரன் சார் குரூப்பில் நிறைய நாடகங்களில் நடித்திருக்கிறேன். சீரியல், சினிமாவில் நடித்ததால் நாடகத்துக்கு நேரம் ஒதுக்க முடியவில்லை. சொப்பன வாழ்வில் கேரக்டரில் நீதான் நடிக்க வேண்டும் என்று மகேந்திரன் சார் கேட்டுக் கொண்டதால் மறுக்க முடியாமல் நடிக்கிறேன். சில திரைப்பட வாய்ப்புகளும் வந்திருக்கிறது. என்றாலும் நாடகத்திற்கு தனியாக நேரம் ஒதுக்கி இருக்கிறேன். சீரியில், சினிமாவில் நடிப்பதை விட நாடகத்தில் நடிக்கும்போதுதான் ஆத்ம திருப்தி கிடைக்கிறது. அதற்காகவே நாடகத்தில் நடிக்கிறேன். என்றார்.
http://img1.dinamalar.com/cini//CNewsImages/NTLRG_150618165505000000.jpg



நன்றி: தினமலர்

aanaa
18th June 2015, 09:35 PM
சிறந்த வில்லன் நடிகருக்கான கின்னஸ் விருது பெற்ற கோபி!


அழகி, நாதஸ்வரம், பைரவி உள்பட பல மெகா தொடர்களில் நடித்திருப்பவர் கோபி. இதில் நாதஸ்வரம் தொடரில் அவர் நடித்த ராஜேஷ் என்கிற வில்லன் ரோல் அவரை மிகப்பெரிய அளவில் பேச வைத்தது. அதோடு, அந்த தொடரின் ஆயிரமாவது எபிசோடை கின்னஸ் சாதனைக்காக லைவாக படமாக்கினார்கள். மொத்தம் 23 நிமிடங்கள் படமான எந்த எபிசோடில், கோபியின் அதிரடியான நடிப்பை பாராட்டி அவருக்கு சிறந்த வில்லன் நடிகருக்கான விருது வழங்கப்பட்டது. அதையடுத்து இப்போது அந்த தொடரின் சிறந்த சின்னத்திரை வில்லன் நடிகருக்காக அவரை தேர்வு செய்ய வேண்டி அந்நிறுவனத்தின் சார்பில் தமிழக அரசிடமும் விண்ணப்பிக்கப்பட்டுள்ளதாம்.


இதுபற்றி கோபி மேலும் கூறும்போது, நான் இந்த சின்னத்திரை உலகில் நீண்ட காலம் நடிக்க வேண்டும் என்ற ஆசைப்படுகிறேன். அதனால்தான், கிடைக்கிற வாய்ப்புகளையெல்லாம் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்கிற நோக்கம் இல்லாமல், என்னைதேடி வரும் வாய்ப்புகளில் நல்லதை மட்டுமே ஓகே செய்து நடித்து வருகிறேன். அப்படி நடிப்பதால்தான் நான் நடிக்கிற ஒவ்வொரு கேரக்டருமே என்னை பேச வைத்து வருகிறது என்று கூறும் கோபி, நாதஸ்வரம் தொடரில் நடித்த ராஜேஷ் என்ற வில்லன் வேடத்திற்கு கின்னஸ் சாதனை விருது கிடைத்திருப்பதோடு, அடுத்து சிறந்த வில்லன் நடிகருக்கான தமிழக அரசின் விருதினையும் பெறுவேன் என்ற நம்பிக்கையும் எனக்கு இருக்கிறது என்கிறார்.
http://img1.dinamalar.com/cini//CNewsImages/NTLRG_150614102437000000.jpg



நன்றி: தினமலர்

aanaa
18th June 2015, 09:38 PM
குலதெய்வம் சீரியலில் மெட்டிஒலி திருமுருகன் நடிக்கவில்லை!


மெட்டி ஒலி மெகா தொடரை இயக்கி அதில் ஒரு கேரக்டரிலும் நடித்தவர் திருமுருகன். அதையடுத்து, தேனிலவு, நாதஸ்வரம் ஆகிய தொடர்களை இயக்கி நடித்தவர், தற்போது குலதெய்வம் என்ற சீரியலை இயக்கி வருகிறார்.


மேலும், பரத்தை நாயகனாக வைத்து எம்டன் மகன், முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு ஆகிய படங்களையும் இயக்கினார். பின்னர் மீண்டும் டிவிக்கே திரும்பி விட்ட திருமுருகன், தற்போது குலதெய்வம் சீரியலை இயக்கி வருகிறார். தான் இயக்கும் எல்லா சீரியல்களிலுமே திருமுருகனும் ஒரு கேரக்டரில் நடித்து வந்ததால், தற்போது ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியலிலும் அவர் ஒரு கேரக்டரில் எப்படியும் நடிப்பார் என்றுதான் நேயர்கள் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள்.


ஆனால், இந்த குலதெய்வம் தொடரில் திருமுருகன் நடிக்கவில்லையாம். தான் நடிக்க உருவாக்கியிருந்த ஒரு கேரக்டரில்கூட வேறொரு நடிகரை நடிக்க வைத்திருக்கிறாராம். காரணம், அடுத்தபடியாக அவர் ஒரு படம் இயக்க திட்டமிட்டுள்ளாராம். சீரியல் வேலைகள் நடந்து கொண்டிருக்க இன்னொரு பக்கம் படத்திற்கான ஸ்கிரிப்ட் வேலைகளும் நடந்து கொண்டிருக்கிறது. இந்த நேரத்தில் சீரியலில் நடிப்பதிலும் கவனம் செலுத்தினால் படம் இயக்க சிரமம் ஏற்படும் என்பதால் இந்த குலதெய்வம் சீரியலில் அவர் நடிக்கவில்லையாம்.


மேலும், தனது 3வது படத்தில் நடிக்க சில இளவட்ட ஹீரோக்களிடம் கால்சீட் கேட்டு வருகிறார் திருமுருகன்.







நன்றி: தினமலர்

aanaa
27th June 2015, 07:04 PM
அஜித் பட வாய்ப்பை மறுத்த சித்து


சின்ன பாப்பா பெரிய பாப்பா காமெடி தொடரில் சின்ன பாப்பாவாக நடித்து வருகிறார் சித்து. தொகுப்பாளினியாக இருந்து நடிகையாக வளர்ந்தவர். சமீபத்தில் அவருக்கு அஜீத் படத்தில் நடிக்கும் வாய்ப்பு வந்திருக்கிறது. அதை மறுத்து விட்டார். இதுபற்றி அவர் கூறியிருப்பதாவது: தொகுப்பாளினி நான் விரும்பி தேர்வு செய்த வேலை. நடிப்பு பொழுதுபோக்கிற்காக நான் தொடங்கியது. இப்போது அதுவே முழு நேர வேலையாகிவிட்டது. ஒரு நிகழ்ச்சியை தொகுக்கும்போதும், ஒரு சீரியலில் நடிக்கும்போது செய்யப்போகிற வேலையை தெளிவாக புரிந்து கொண்டு செய்ய வேண்டும் என்று நினைப்பேன். அப்படித்தான் இதுவரை செய்து வருகிறேன். இப்போது அனுபவம் வாய்ந்த நளினி, நிரோஷாவுடன் போட்டிபோட்டு நடிப்பதை பார்த்து சினிமாவிலும் நடிக்க அழைத்தார்கள். அஜீத் படத்தில்கூட நடிக்க கூப்பிட்டார்கள். ஆனால் சினிமாவில் நடிப்பதை என் பெற்றோர் விரும்பவில்லை. அவர்கள் விருப்பத்தை மீறி இதுவரை எதுவும் செய்ததில்லை. அதனால் நடிக்கவில்லை என்கிறார் சித்து



நன்றி: தினமலர்

aanaa
1st July 2015, 08:26 PM
விஜய் டிவியிலிருந்து நிகழ்ச்சி தொகுப்பாளினி டி.டி. வெளியேறிவிட்டதாக பல வதந்திகள் வெளிவந்தன. அவற்றுக்கெல்லாம் முற்றுப்புள்ளிவைத்துள்ளார் டி.டி.


டிடி என்கிற திவ்யதர்ஷினி சின்னத்திரையில் அதிகப்படியான ரசிகர்களைக் கொண்டவர். விஜய் டிவியில் காஃபி வித் டிடி என்ற நிகழ்சிக்கு தொகுப்பாளர். அவரின் நிகழ்ச்சிகளில் கலகல கலாய்ப்பும், டைமிங் காமெடிக்கும் பஞ்சமே இருக்காது. சமீபத்தில் விஜய் டிவியின் விருது வழங்கும் விழாவில் டிடியும், கோபிநாத்தும் இணைந்து நிகழ்சியை தொகுத்து வழங்கினர். அந்த நிகழ்சியில் டிடி சொதப்பியதாக கூறப்படுகிறது.


இதற்காக அவரை விஜய்டிவியிலிருந்து வெளியேற்றிவிட்டதாகவும், இவரே ராஜினாமா செய்துவிட்டதாகவும் வதந்திகள் கிளம்பின. இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக கடந்த ஞாயிறு அன்று “ எங்கள் வீட்டுச் செல்லம் “ என்ற நிகழ்ச்சியை ஒளிபரப்பியது விஜய்டிவி. ‘காபி வித் டிடி நிகழ்ச்சிக்கு ஒரு இடைவெளி தேவைப்படுவதால் சில வாரங்கள் அந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகவில்லை. மற்றபடி நான் விஜய் டிவியை விட்டுப் போகவில்லை. இந்த டிவியின் செல்லம் நான்மட்டும் தான்’ என்று அந்த நிகழ்ச்சியில் பேட்டியளித்தார் டிடி. இதன் மூலம் தன்னைப்பற்றிய வதந்திகளுக்கு ஃபுல் ஸ்டாப் வைத்தார் டி.டி.


தொடர்ந்து “ எங்க வீட்டுப் பிள்ளை சிவகார்த்திகேயன் போல எங்க வீட்டுச் செல்லம் டிடி என்று ஒருவர் ட்விட் செய்ததை டிடி ரீட்விட் செய்துள்ளார். மேலும் விஜய் டிவியின் தலைமை நிர்வாகி கே. ஸ்ரீராம் ட்விட்டரில், “ நம்ம வீட்டுச் செல்லம் நிகழ்ச்சி, டிடி பற்றிய வதந்திகளுக்கு ஒரு முற்றுப் புள்ளி வைத்திருக்கும் என்று நம்புகிறேன். டிடி சிறந்த தொகுப்பாளினி” என்று ட்விட் செய்தார். அதற்கு டிடியும் நன்றி தெரிவித்துள்ளார்



நன்றி: தினகரன்

aanaa
18th July 2015, 06:37 AM
பாசமலர் தொடரில் நடித்து வந்தவர் லட்சுமி விஸ்வநாத்.


பாசமலர் தொடரில் நடித்து வந்தவர் லட்சுமி விஸ்வநாத். அவரது நடிப்பும் கேரக்டரும் பேசப்பட்டுக் கொண்டிருந்த நேரத்தில் திடீரென்று அதிலிருந்து விலகி மலையாள சீரியலுக்கு சென்று விட்டார். இங்கு ஒளிபரப்பான திருமதி செல்வத்தின் மலையாள ரீமேக்கான நில விளக்கு தொடரில் நடித்தார்


தற்போது ஒரு சிறிய இடைவெளிக்கு பிறகு 7ம் உயிர் தொடரில் நடிக்க வந்திருக்கிறார். இதிலும் அவருக்கு முக்கிய கேரக்டர். "பாசமலர் தொடரில் இருந்து ஏன் விலகினேன் என்பது இப்போது தேவையில்லாதது. மலையாளத்தில் பிசியாக நடித்து கொண்டிருக்கிறேன். இயக்குனர் அழகர், 7ம் உயிர் திகில் தொடர் அதில் கட்டாயம் நடிக்க வேண்டும் என்று அழைத்ததால் மீண்டும் வந்திருக்கிறேன். மீண்டும் தமிழில் கவனம் செலுத்த இருக்கிறேன். இதற்காக தமிழ் கற்று வருகிறேன். கேரளாவில் பட்டப்படிப்பும் படித்து வருகிறேன். படித்துக் கொண்டே நடிக்க முடிவு செய்திருக்கிறேன். திகில் தொடரில் நடிப்பதால் இரவில் தூங்கும்போது பயமாகத்தான் இருக்கிறது. அந்த அளவிற்கு 7ம் உயிரில் காட்சி அமைப்புகள் இருக்கிறது" என்கிறார் லட்சுமி விஸ்வநாத்.



நன்றி: தினமலர்

aanaa
8th August 2015, 12:43 AM
ஆதிரா சீரியலுக்காக கேரளாவில் முகாமிட்ட சி.ஜே.பாஸ்கர்!


ராதிகா நடித்த அண்ணாமலை, சித்தி தொடர்களை இயக்கிய சி.ஜே.பாஸ்கர், அதையடுத்து மனைவி, பெண், அஞ்சலி, கோகுலத்தில் சீதை, சாவித்ரி போன்ற தொடர்களை இயக்கியுள்ளார். வம்சம் தொடரை முதலில் இயக்கினார். பின்னர் கதை விசயத்தில் ரம்யா கிருஷ்ணனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அதிலிருந்து விலகினார். அதையடுத்து, இனிமேல் சீரியலே இயக்கப்போவதில்லை என்றும் கூறி வந்தார். ஆனால் இப்போது மறுபடியும் அவர் சீரியல் பக்கம் வந்து விட்டார். தற்போது ஆதிரா என்ற தொடரை இயக்கி வருகிறார். சீரியல்கள் வழக்கம்போல் அதாவது அடுத்தவர்களின் குடும்பத்தை கெடுக்கும் கதைக்களத்தில் இருந்து மாறி புதிய பாணிக்கு வர வேண்டும் என்று கூறி வந்த சி.ஜே.பாஸ்கர், இந்த ஆதிரா சீரியலை, த்ரில்லர், ஹாரர் கதையில் இயக்கி வருகிறார். மேலும், பெரும்பாலும் மெகா சீரியல் குழுவினர் சென்னையை விட்டே வெளியேற தயங்கி வரும் நிலையில், இவரோ, ஆதிரா சீரியலை கேரளா சென்று படமாக்கி வருகிறார். ஹாரர் கதை என்பதால் அங்குள்ள அடர்ந்த காட்டுப்பகுதிகளில் முகாமிட்டு படப்பிடிப்பு நடத்தி வரும் சி.ஜே.பாஸ்கர், சினிமாவுக்கு இணையாக இந்த சீரியலின் காட்சிகளிலும், லொகேசன்களிலும் தனி கவனம் செலுத்தி வருகிறாராம்



நன்றி: தினமலர்

aanaa
26th November 2015, 09:20 PM
மீண்டும் சின்னத்திரைக்கு திரும்பினார் கணேஷ் பாபு


சின்னத்திரைக்கு பாலச்சந்தரால் அறிமுகப்படுத்தப்பட்ட கணேஷ் பாபு 25க்கும் மேற்பட்ட சீரியல்களில் நடித்துள்ளார், 40க்கும் மேற்பட்ட படங்களில் குணசித்திர வேடத்தில் நடித்துள்ளார். அதன் பிறகு சினிமா இயக்குனரானார். இவர் இயக்கிய யமுனா படம் பரவலான பாராட்டை பெற்றாலும் வணிகரீதியாக வெற்றிபெறவில்லை. அடுத்து ஒரு ஸ்கிரிப்ட் தயார்செய்து வைத்துக்கொண்டு தயாரிப்பாளர் தேடினார் யாரும் கிடைக்கவில்லை.
அதனால் இப்போது மீண்டும் சின்னத்திரைக்கே திரும்பி விட்டார். குலதெய்வம் தொடரில் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். "அடுத்த படம் இயக்கத் தயார் நிலையில் இருக்கிறேன். ஆக்ஷன் த்ரில்லருக்கான ஸ்கிரிப்ட் தயாராக இருக்கிறது. பெரிய ஹீரோ நடிக்க வேண்டிய பெரிய பட்ஜெட் படமாக அது இருக்கும். அந்தப் படம் ஆரம்பிக்கும் முன் சற்று நேரம் கிடைத்தது. திருமுருகன் சாரும் அழைத்தார் மீண்டும் சீரியலில் நடிக்க வந்துவிட்டேன். இயக்குனர் ஆகிவிட்டாலும் அவ்வப்போது படங்களில் நடித்து கொண்டுதான் இருக்கிறேன். விரைவில் அடுத்த படத்தை இயக்குவேன்" என்கிறார் கணேஷ் பாபு
http://img1.dinamalar.com/cini//CNewsImages/NTLRG_151111145301000000.jpg

நன்றி: தினமலர்

aanaa
26th November 2015, 09:22 PM
நிஜத்திலும் நான் பாசக்கார பெண்! - நடிகை சந்திரா லட்சுமண்


தேவயானி நடித்த கோலங்கள் தொடரில் முக்கிய வேடத்தில் நடித்தவர் சந்திரா லட்சுமண். அதன்பிறகு காதலிக்க நேரமில்லை, வசந்தம், மகள் போன்ற தொடர்களில் நடித்த அவர், தற்போது பாசமலர் தொடரில் நடித்து வருகிறார்.


இதுபற்றி சந்திரா லட்சுமண் கூறுகையில், தமிழ் சீரியல்களில் நடிப்பதற்கு முன்பே நான் பல மலையாள சீரியல்களில் நடித்திருக்கிறேன். அதோடு, பெரும்பாலும் செண்டிமென்டான வேடங்களாகவே நடித்தேன். அதனால் கேரளா பெண்கள் மத்தியில் எனக்கு ரொம்ப நல்ல பெயர் இருந்து வருகிறது. ஆனால் தமிழில் அறிமுகமான முதல் சீரியலிலேயே வில்லி போன்ற ஒரு வேடத்தில்தான நடித்தேன். அந்த வேடத்தில் என்னை ஓப்பன் செய்தபோது பெரிய பில்டப் கொடுத்து படமாக்கினார் இயக்குனர் திருச்செல்வம்.


ஆனபோதும், அந்த சமயத்தில் மலையாள சீரியல்களிலும் நான் பிசியாக நடித்துக்கொண்டிருந்ததால், தமிழில் அடுத்தடுத்து வந்த டைட்டில் வேடங்களில் உடனடியாக என்னால் கமிட்டாக முடியாதநிலை இருந்தது. ஆனால் அதன்பிறகு தமிழுக்கு வந்து விட்டேன். அதோடு, ஏப்ரல் மாதத்தில், தில்லாலங்கடி உள்பட சில படங்களிலும் நடித்திருக்கிறேன்.


மேலும், தற்போது நான் நடித்து வரும் பாசமலர் தொடரில் அண்ணன் - தங்கையை மையப்படுத்திய கதையில் ஒளிபரப்பாகிக்கொண்டிருக்கிறது. இந்த தொடரில் தங்கை வேடத்தில் நடிக்கும் நான் எனது செண்டிமென்டான நடிப்பினால் ஏராளமான குடும்பப் பெண்களை கவர்ந்துவருகிறேன். அதனால் சில சீரியல்களில் நெகடீவாக நடித்தபோது என்னை திட்டியவர்களே இப்போது பாராட்டுகிறார்கள். இதையடுத்து இனிமேல் தொடர்ந்து செண்டிமென்ட்டான வேடங்களுக்கு முதலிடம் கொடுக்க முடிவெடுத்திருக்கிறேன் என்று கூறும் சந்திரா லட்சுமண், நான் நிஜத்திலும ரொம்ப பாசக்கார பெண். அனைவரிடமும் பாசமாக பழகுவேன். அதைத்தான் இந்த சீரியலில் பிரதிபலித்திருக்கிறேன் என்கிறார்.



நன்றி: தினமலர்

aanaa
26th November 2015, 09:25 PM
ராதிகாவுடன் போட்டி போட்டு நடித்தேன்! - நீலிமா ராணி


சின்னத்திரையில் மெட்டி ஒலி, கோலங்கள், தென்றல், செல்லமே உள்பட பல தொடர்களில் நடித்து பிரபலமானவர் நீலிமா ராணி. இப்போது வாணி ராணி, தாமரை, பவானி ஆகிய தொடர்களில் நடித்துக்கொண்டிருக்கிறார். பாசிட்டீவான வேடங்களை விட நெகட்டீவான வேடங்களில் நடிப்பது தான் சவாலானது என்கிறார் அவர்.


மேலும், இதுவரை தான் நடித்துள்ள வேடங்கள் பற்றி நீலிமா ராணி கூறுகையில், நான் சினிமாவில்தான் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானேன். தேவர் மகன் தொடங்கி இதுவரை 25 படங்களுக்கு மேல் நடித்து விட்டேன். அந்த வகையில், நான் மகான் அல்ல, பண்ணையாரும் பத்மினியும் போன்ற படங்களில் கவனிக்கப்படும் வேடங்களில் நடித்தேன். இப்போதும் சில படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறேன்.


அதேசமயம், சின்னத்திரையில்தான் நான் அதிகப்படியான தொடர்களில் நடித்துள்ளேன். ஒவ்வொரு தொடரிலும் ஒவ்வொருவிதமான வேடங்கள். ஒரு தொடரில் அமைதியான கேரக்டர் என்றால் இன்னொரு படத்தில் அதிரடியான வேடம். மற்றொரு தொடரில் செண்டிமென்ட் வேடம். இப்படி சின்னத்திரையில் நான் ஏராளமான கேரக்டர்களில் நடித்து விட்டேன். அதனால் சின்னத்திரை என் பண்பட்ட நடிகையாக மாற்றி விட்டது. அதனால் இப்போது முன்பைவிட சவாலான வேடங்களாக தேடிப்பிடித்து நடிக்கிறேன்.


குறிப்பாக, வாணி ராணி தொடரில் எனக்கு நெகடீவ் ரோல். ராதிகா மேடத்தையே டென்சன் செய்யக்கூடிய வேடம். அதனால் அவருக்கு இணையாக அந்த வேடத்தில் நிமிர்ந்து நின்று போட்டி போட்டு நடித்தேன். அது எனக்கு பெரிய பெயரை வாங்கிக்கொடுத்து விட்டது. ராதிகா மேடம் உள்ளிட்ட சக கலைஞர்கள் கூட எனது நடிப்பை பாராட்டுகிறார்கள். அதனால், இன்னும் சவால் விடக்கூடிய நிறைய வேடங்களில் நடிக்க வேண்டும் என்கிற ஆர்வம் எனக்கு அதிகரித்துக்கொண்டேயிருக்கிறது என்கிறார் நீலிமாராணி.


நன்றி: தினமலர்

aanaa
15th December 2015, 01:00 AM
சின்னத்திரைக்கு குட் பை சொல்கிறார் ஓ.ஏ.கே.சுந்தர்


பழம்பெரும் நடிகர் ஓ.ஏ.கே தேவரின் மகன் ஓ.ஏ.கே.சுந்தர். தந்தையை போலவே சினிமாவில் அறிமுமாகி குணசித்திர வேடங்களில் நடித்து வந்தார். விருமாண்டி, குசேலன், பேராண்மை, வேல் உள்பட பல படங்களில் குணசித்திர வேடங்களிலும், வில்லன் வேடங்களிலும் நடித்து வந்தார்.


திடீரென சின்னத்திரைக்கு வந்தார். மகாபாரதம் தொடரில் பீஷ்மராக நடிக்க ஆரம்பித்தார். நீண்ட நெடிய தொடரான அதில் நடிக்க ஆரம்பித்த பிறகு அவரால் சினிமாவில் நடிக்க முடியவில்லை. தற்போது மகாபாரதம் தொடரில் இவரது போர்ஷன் முடிந்து விட்டதால் சின்னத்திரைக்கு குட்பை சொல்லிவிட்டு மீண்டும் சினிமாவில் நடிக்க முடிவெடுத்திருக்கிறார்.


தற்போது புத்தன் ஏசு காந்தி, ஜே உள்பட பல படங்களில் நடித்து வருகிறார். "வில்லன், குணசித்திரம், காமெடி என விதவிதமான கேரக்டர்களில் நடித்து சினிமாவில் நல்ல இடத்தை பிடிக்க வேண்டும் என்பதே என் விருப்பம் இனி திரைப்படங்களில் மட்டுமே கவனம் செலுத்த இருக்கிறேன்" என்கிறார் ஓ.ஏ.கே.சுந்தர்.



நன்றி: தினமலர்

aanaa
15th December 2015, 01:02 AM
நான் சென்னை தமிழச்சி- சந்திரா லட்சுமண்


தேவயானி நடித்த கோலங்கள் தொடரில் ஒரு முக்கியமான நெகடீவ் ரோலில் நடித்தவர் சந்திரா லட்சுமண். அதையடுத்து பல தொடர்களில் நடித்த அவர் தற்போது பாசமலர் தொடரில் நடித்து வருகிறார். மேலும், அவரது பேச்சில் மலையாள வாடை அடிப்பதால் சின்னத்திரை வட்டாரங்களில் அவரை மலையாள நடிகை என்றே நினைத்துக்கொள்கிறார்கள்.


இதுபற்றி சந்திரா கூறும்போது, நான் மலையாள சினிமாவில் 6 படங்களில் நடித்து விட்டுத்தான் தமிழுக்கு வந்தேன். ஸ்ரீகாந்த்-திரிஷா நடித்த மனசெல்லாம் என்ற படத்தில் தங்கை வேடத்தில் நடித்தேன். அதன்பிறகு திருச்செல்வம் இயக்கிய கோலங்கள் தொடரில் நடித்தேன். பின்னர் தமிழ், தெலுங்கு என பல சீரியல்களில் பிசியாகி விட்டேன். மேலும், என்னுடன் நடிப்பவர்கள் அனைவருமே எனது தமிழில் மலையாளம் வாடை இருப்பதால் என்னை மலையாளி என்றே நினைத்துக்கொள்கிறார்கள். சிலர் என்னிடம்கூட நீங்கள் மலையாளியா என்கிறார்கள்.


ஆனால், நிஜத்தில் நான் மலையாளி அல்ல. பாலக்காட்டு அய்யர் பெண் நான். எங்கள் வீட்டில்கூட அனைவருமே தமிழில்தான் பேசுவோம். சீரியல்களில் தமிழில் இருக்கும் டயலாக் பேப்பரைகூட படித்துதான் நடிக்கிறேன் என்று கூறும் சந்திரா லட்சுமண், நான் பிறந்து வளர்ந்தது என்னவோ பாலக்காடாக இருந்தாலும், பல ஆண்டுகளாக சென்னைவாசியாகி விட்டேன். ஆக, இப்போது நான் சென்னை தமிழச்சி என்கிறார்.





நன்றி: தினமலர்

aanaa
7th January 2016, 08:23 PM
தாரை தப்பட்டை மூலம் தமிழ் சினிமாவில் கால் பதிக்கிறது டி-ஸ்கவரி சேனல்


டிஸ்கவரி சேனலுக்கும், சினிமாவுக்கும் சம்பந்தமில்லைதான். ஆனால் பாலா இயக்கும் தாரை தப்பட்டை படத்தின் மூலம் டிஸ்கவரி தமிழ் சேனல் சினிமாவில் கால் பதிக்கிறது


பாலா இயக்கி உள்ள 'தாரை தப்பட்டை' படம் தஞ்சாவூரில் வாழும் கரகாட்ட கலைஞர்களின் வாழ்க்கையை பற்றியது. கதைப்படி டிஸ்கவரி தமிழ் சேனல் நிருபரும், கேமராமேனும் தஞ்சையில் உள்ள பிரபலமான கரகாட்ட கலைஞர் சாமி புலவரை பேட்டி எடுக்கச் செல்கிறார்கள். அவர் இறந்துவிட அவரது மகன் சன்னாசியிடம் (சசிகுமார்) கரகாட்டம் பற்றி கேட்கிறார்கள். அவர் சொல்லும்போது அது கதையாக விரிகிறது.


இதுபற்றி பாலா, டிஸ்கவரி சேனல் அதிகாரிகளிடம் சொன்னபோது அதை மனப்பூர்வமாக ஒப்புக்கொண்ட சேனல், அதையே தாங்களும் ஒரு டாக்குமெண்டரியாக தயாரித்துக் கொள்கிறோம் என்று கூறியிருக்கிறார்கள். அதற்கு பால ஒப்புக் கொள்ள தற்போது இரண்டு பணிகளும் முடிந்திருக்கறிது.


"தென்னிந்தியாவில் எங்கள் சேனலுக்கு நல்ல மதிப்பு உள்ளது. தென்னிந்திய கலைகளை பற்றி உலகிற்கு தொடர்ந்து சொல்கிறோம். தாரை தப்பட்டை மூலம் கரகாட்டக் கலையை ஆய்வு செய்து அதனையும் சொல்ல இருக்கிறோம். ஒரு நல்ல பணியில் பாலாவுடன் இணைந்தது மகிழ்ச்சியாக இருக்கிறது" என்கிறார் டிஸ்கவரி சேனலின் தென்னிந்திய பொது மேலாளர் ராகுல் ஜோரி.




நன்றி: தினமலர்

aanaa
7th January 2016, 08:29 PM
சினிமாவில் பிசியாகும் "அது இது எது" டைகர் தங்கதுரை!


விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'அது இது எது' நிகழ்ச்சியில் சுமார் 60 எபிசோடுகளில் நடித்திருப்பவர் டைகர் தங்கதுரை. சின்னத்திரையில் அவரது நடிப்புக்கு கிடைத்த வரவேற்பு காரணமாக தற்போது சினிமாவில் அரை டஜன் படங்களில் நடித்து வருகிறார் தங்கதுரை. தினமலர் இணையதளத்திற்காக அவரை பேட்டி கண்டபோது, அவர் அளித்த தகவல்கள் இங்கே இடம்பெறுகிறது...


2014-ல் நான் விஜய் டிவியில், 'அது இது எது' நிகழ்ச்சியில் என்ட்ரி ஆனேன். டைரக்டர் தாம்ஸன் கொடுத்த வாய்ப்பு காரணமாக ஒவ்வொரு எபிசோடுகளிலும் வித்தியாசமான கேரக்டர்களில் நடித்தேன். குறிப்பாக, எந்திரன் படத்தில் ரஜினி நடித்த சிட்டி கேரக்டரில் நான் நடித்ததற்கு ரொம்ப நல்ல பெயர் கிடைத்தது. அதேபோல் அரங்கநாதர் என்றொரு கேரக்டரில் நடித்தேன். அதில் நான் பேசவே மாட்டேன். எப்போதாவது பேசினாலும் பழைய ஜோக்குகளாகத்தான் சொல்வேன். அதனால் அதன்பிறகு எனக்கு பழைய ஜோக்கு தங்கதுரை என்ற பெயர் உருவானது. சில ஊர்களில் அந்த நிகழ்ச்சியை மேடைகளில் செய்கிறபோது பழைய ஜோக் தங்கதுரை புது ஜோக்காக சொல்லுங்கள் என்று ரசிகர்களே சொல்லும் அளவுக்கு அது பெரிய அளவில் ரீச் ஆனது.


ஆக, சின்னத்திரையில் தோன்றிய ஒரே வருடத்தில் நான் பெரிய அளவில் பிரபலமாகி விட்டேன். அதற்கு காரணம் டைரக்டர் தாம்ஸன் தான். அதனால் அவருக்கு நன்றிக்கடன் பட்டிருக்கிறேன். மேலும், எங்கேயும் எப்போதும், வாலு போன்ற படங்களில் ஏற்கனவே நடித்திருக்கிறேன். இப்போது மன்னர் வகையறா, அட்டி, வடசென்னை, சைனா உள்பட அரை டஜன் படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறேன். அந்த வகையில், சின்னத்திரை, சினிமா என்று இரண்டு மீடியாக்களிலும் தற்போது பிசியாக நடித்துக்கொண்டிருக்கிறேன் என்கிறார் டைகர் தங்கதுரை.


நன்றி: தினமலர்

aanaa
7th January 2016, 08:32 PM
சீரியல் இயக்குனராகிறார் பாத்திமா பாபு


சின்னத்திரையில் நட்சத்திர செய்தி வாசிப்பாளராக இருந்தவர் பாத்திமாபாபு. அதன் பிறகு சின்னத்திரை சீரியல்களில் நடிக்கத் தொடங்கினார். பின்னர் திரைப்படங்களிலும் குணசித்திர வேடங்களில் நடித்து வந்தார். தென்னிந்திய நடிகர் சங்கத்திலும் பொறுப்பு வகித்தார். அ.தி.மு.க.வின் நட்சத்திர பேச்சாளராகவும் இருந்து வருகிறார்


பாத்திமா பாபுவின் அடுத்த அவதாரமாக அவர், இப்போது நாடக இயக்குனராகியிருக்கிறார். அவ்வப்போது நாடகங்களிலும் நடித்து வந்த பாத்திமா, இப்போது தாலியா தகரமா என்ற காமெடி நாடகத்தை இயக்கி, அதில் ஹீரோயினாக நடித்தும் வருகிறார். இந்த நாடகத்தை சித்ராலயா ஸ்ரீராம் எழுதியுள்ளார்.


அடுத்து பாத்திமா சின்னத்திரையில் காமெடி சீரியல் ஒன்றை இயக்கும் திட்டத்தில் இருக்கிறார், சித்ராலயா ஸ்ரீராமுடன் சேர்ந்து இதற்காக கதையை உருவாக்கி வருகிறார். இதற்கு சரியான தயாரிப்பாளரையும் தேடிக் கொண்டிருக்கிறார். சினிமா காமெடி நடிகர்களுடன் சின்னத்திரை காமெடி நடிகர்களும் நடிக்கும் தொடராக இது இருக்கும் என்று தெரிகிறது.



நன்றி: தினமலர்

aanaa
7th January 2016, 08:34 PM
மீண்டும் சின்னத்திரைக்கு வர காத்திருக்கிறார் பெப்சி உமா


பெப்சி உமாவை அவ்வளவு சீக்கிரம் யாரும் மறந்து விட முடியாது. முதல் நட்சத்திர தொகுப்பாளினி அவர்தான். அவர் நடத்தியது ஒரு டெலிபோன் நிகழ்ச்சிதான். ஆனால் அவர் உடுத்தி வரும் பட்டுப்புடவைக்காக பெண்களும், அவரது சிரிப்புக்காக ஆண்களும் காத்துக் கிடந்தார்கள். பல வருடங்கள் ஒளிபரப்பானது அந்த நிகழ்ச்சி. பின்னர் அந்த நிகழ்ச்சி நிறுத்தப்பட்டது.


தற்போது பெப்சி உமா ஏற்றுமதி இறக்குமதி, மற்றும் கட்டிடத்துறை தொடர்பான ஒரு சர்வதேச நிறுவனத்தின் தமிழ்நாட்டு பிரிவுக்கு அதிகாரியாக இருக்கிறார். பல சேனல்கள் அவரை மீண்டும் நிகழ்ச்சி நடத்த அழைத்தபோது மறுத்துவிட்டார். சும்மா அரட்டை அடிக்கும் நிகழ்ச்சியில் தோன்ற விருப்பமில்லை என்று கூறிவிட்டார். ஆனாலும் தனக்கு புகழ்தேடிக்கொடுத்த சின்னத்திரையை மறந்து விடக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறார். புதிய கான்செப்ட்டோடு நல்ல நிகழ்ச்சி அமைந்தால் மீண்டும் சின்னத்திரைக்கு வரும் ஐடியாக இருக்கிறதாம் பெப்சி உமாவுக்கு.
http://img1.dinamalar.com/cini//CNewsImages/NTLRG_160104115949000000.jpg



நன்றி: தினமலர்

aanaa
19th January 2016, 11:24 PM
இரண்டு பதவி வகிக்கும் சோனியா!


செல்லமே, முகூர்த்தம், மாதவி உள்பட சில தொடர்களில் நடித்து வருபவர் சோனியா. சினிமா-சின்னத்திரை என இரண்டு துறைகளிலும் நடித்து வரும் இவர், மேற்படி இரண்டு துறைகளிலும் இரண்டு பதவி வகித்து வருகிறார். அதாவது, நடிகர் சங்க தேர்தல் நடைபெற்றபோது அதில் செயற்குழு உறுப்பினர் பதவிக்காக போட்டியிட்டு அதில் வென்றார் சோனியா. அதையடுத்து சமீபத்தில் சின்னத்திரை நடிகர் சங்க தேர்தல் நடைபெற்றபோதும் துணைத்தலைவர் பதவிக்கு போட்டியிட்டு வெற்றி பெற்றிருக்கிறார். ஆக, ஒரே நேரத்தில் இரண்டு பதவிகள் வகித்து வருகிறார் சோனியா.


இதுபற்றி அவர் கூறுகையில், ''நான் தென்னிந்திய சினிமாவில் ஏராளமான படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளேன். தமிழைப்பொறுத்தவரை ரஜினி நடித்த அன்புள்ள ரஜினிகாந்த், விஜயகாந்த் நடித்த புலன் விசாரணை தொடங்கி சமீபத்தில் வெளியான ஈட்டி வரை ஏராளமான படங்களில் நடித்துள்ளேன். அதேபோல் பல மெகா சீரியல்களில் நடித்திருக்கிறேன். அதனால் என்னை சினிமா-சின்னத்திரை என இரண்டு துறைகளிலும் எல்லோருக்குமே நன்றாக தெரியும். அதனால்தான் இரண்டு சங்க தேர்தல்களிலுமே போட்டியிட்டேன். அப்படி போட்டியிட்டு இரண்டு மீடியாக்களிலும் வெற்றி பெற்றேன். என்னதான், நடிப்பில் பிசியாக இருந்தாலும், பொறுப்பை உணர்ந்து சம்பந்தப்பட்ட பணிகளையும் செவ்வனே செய்து வருகிறேன்--; என்கிறார் சோனியா.



நன்றி: தினமலர்

aanaa
19th January 2016, 11:26 PM
ஆஸ்ரமத்தில் ஒய்வெடுத்த ரம்யா


சின்னத்திரை தொகுப்பாளினி, பண்பலை தொகுப்பாளினி மாடல் அழகி மற்றும் பெரியதிரை நடிகை இப்படி பன்முகங்களை கொண்டவர் ரம்யா. மிகவும் ஜாலியான டைப்பான ரம்யாவுக்கு சொந்த வாழ்க்கையில் சில பிரச்சினைகள். கருத்து வேறுபாடு காரணமாக கணவரைப் பிரிந்தார். இனி மாடலிங் மற்றும், சினிமாவில் தீவிரமா இறங்க முடிவு செய்தார். ஓகே கண்மணி படத்தில் நடித்த அவர் ஒரு ஸ்பா காலண்டருக்கு மாடலாக பணியாற்றி உள்ளார்.
புத்துணர்ச்சியோடு பணிகளை கவனிக்கவும், கவலைகளை மறக்கவும் நெல்லை மாவட்டம் ஆழ்வார்குறிச்சியில் உள்ள மலையடிவாரத்தில் இயங்கும் சித்த வைத்திய ஆஸ்ரமம் ஒன்றில் ஒரு வாரம் தங்கி விட்டு வந்திருக்கிறார். மனதுக்கும், உடலுக்கும் இதம் தரும் சிகிக்சைகள் எடுத்து திரும்பியிருக்கிறார். செல்போன், இண்டர்நெட் எந்த தொடர்பும் இல்லாமல், யாருடனும் பேசாமல் ஆசிரமத்தில் கொடுக்கும் உணவு, தரும் சிகிச்சையை பெற்றுக் கொண்டு திரும்பியிருக்கிறார். ரம்யா இப்போது புத்துணர்ச்சியுடன் தனது பணிகளை துவங்கி இருக்கிறார்.



நன்றி: தினமலர்

aanaa
20th February 2016, 09:06 PM
குறும்பட ஹீரோயின் ஆனார் திவ்யா


ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகும் கெஞ்சம் காபி நிறைய சினிமா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் தொகுப்பாளினி திவ்யா, தற்போது நடிகையாகிவிட்டார். மேஜிக் என்ற குறும்படத்தில் ஹீரோயினாக நடித்திருக்கிறார். அவருக்கு ஜோடியாக பானுஹாசன் என்பவர் நடித்திருக்கிறார். விஜயசுந்தர் என்பவர் இயக்கி உள்ளார். ஹேமந்த் ஒளிப்பதிவு செய்துள்ளார், ஷரன் சூர்யன் இசை அமைத்துள்ளார்.
வாழ்வில் எல்லா நிலைகளிலும் ஒரே பெண்ணை காதலித்து அவளுக்காகவே அவளுக்கு தெரியாமல் வாழ்ந்து கொண்டிருக்கும் ஒருவனின் கதை. இதில் காதலிக்கப்படுகிற பெண்ணாக திவ்யா நடித்திருக்கிறார். இது சினிமாவில் நடிப்பதற்கான முன்னோட்டமா? என்று கேட்டால் "பட யூனிட்டை சேர்ந்தவர்கள் என் நண்பர்கள். அவர்கள் சொன்ன கதை பிடித்திருந்தது. நடித்துக் கொடுத்தேன். சினிமா வாய்ப்புக்காக நடிக்கவில்லை. ஆனாலும் நாளை நடப்பது யாருக்குத் தெரியும்"" என்று சிரிக்கிறார் திவ்யா.



நன்றி: தினமலர்

aanaa
22nd February 2016, 08:56 PM
மீண்டும் சினிமாவில் நடிக்கிறார் குட்டிபத்மினி


1962ம் ஆண்டு வெளிவந்த 'நெஞ்சம் மறப்பதில்லை' படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுமான குட்டிபத்மினி, எம்.ஜி.ஆர், சிவாஜி உள்ளிட்ட அந்தக்கால நடிகர்களுடன் நடித்தவர். அதன் பிறகு நாயகியாக, குணசித்திர நடிகையாக பல படங்களில் நடித்தார். அதன் பிறகு சின்னத்திரை பக்கம் வந்தார். ஆரம்பத்தில் தொடர்களில் நடித்தவர், பின்னர் தயாரிப்பாளர் ஆனார். தற்போது ராமானுஜர், ரோமாபுரி பாண்டியன் தொடர்களை தயாரித்து வருகிறார்.
பல வருட இடைவெளிக்கு பிறகு இப்போது மீண்டும் சினிமாவில் நடிக்க ஆரம்பித்திருக்கிறார். விக்னேஷ் தயாரித்து நடிக்கும் 'அவன் அவள்' படத்தில் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது: தென்னிந்திய நடிகர் சங்கத்தில் நான் முழுமையாக ஈடுபட்டேன். விஷால் பக்கம் நியாயம் இருப்பதை உணர்ந்து அவர் பக்கம் நின்றேன். இப்போது அவர் அணியுடன் இணைந்து பணியாற்றி வருகிறேன். இதனால் எனக்கு நிறைய அன்பு உள்ளங்கள் கிடைத்திருக்கிறது. எனக்கு மூன்று பெண் குழந்தைகள், ஆண்குழந்தைகள் இல்லை. நடிகர் சங்கத்திற்கு வந்த பிறகு எனக்கு நிறைய மகன்கள் கிடைத்திருக்கிறார்கள். அவர்கள் என்மீதுள்ள அன்பால் நடிக்க அழைக்கிறார்கள். நானும் அவர்கள் அன்புக்கு கட்டுப்பட்டு நடிக்கிறேன். என்றார்.
நன்றி: தினமலர்

aanaa
22nd February 2016, 08:58 PM
இளையராஜா 1000: லோகோ வெளியீடு


விஜய் தொலைக்காட்சி ஆயிரம் படங்களுக்கு இசை அமைத்த இளைராஜாவுக்கு வருகிற 27ந் தேதி பிரமாண்ட பாராட்டு விழாவை நடத்துகிறது. இதில் ஒட்டுமொத்த திரையுலகமும் கலந்து கொள்கிறது. பிரமாண்ட இசை, நடன நிகழ்ச்சிகளுடன் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியின் லோகோவை இளையராஜா பிரசாத் ஸ்டூடியோவில் வெளியிட்டார். இதனை இளையராஜாவை அறிமுகப்படுத்திய தயாரிப்பாளர் பஞ்சு அருணாசலம் பெற்றுக் கொண்டார்
நிகழ்ச்சியில் தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் கலைப்புலி எஸ்.தாணு, செயலாளர் டி.சிவா, நடிகர் சங்கத் தலைவர் நாசர், நடிகர் பிரபு, பெப்சி தலைவர் ஜி.சிவா, விஜய் தொலைக்காட்சியின் பொதுமேலாளர் ஸ்ரீராம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
>இதுகுறித்து இளையராஜா கூறும்போது "ஆயிரம் படங்களுக்கு இசை அமைத்தது என்னை பொறுத்தவரை வெறும் எண்ணிக்கைதான். இதற்காக நான் கர்வப்பட முடியாது. இதை எனக்கு அளிக்கும் பாராட்டு விழாவாக கருதாமல் எனக்கு இசை கொடுத்த கடவுளுக்கு நடத்தும் பாராட்டு விழாவாக இதனை கருதுகிறேன். என் ரசிர்களின் கைதட்டல்தான் எனக்கு பாராட்டு" என்றார்.
http://img1.dinamalar.com/cini//CNewsImages/NTLRG_160221153208000000.jpg



நன்றி: தினமலர்

aanaa
27th February 2016, 01:58 AM
ஹீரோவானார் - ;ஆபீஸ்-; கார்த்தி


விஜய் டி.வியில் ஒளிபரப்பான -;ஆபீஸ்- ; தொடரில் நடித்தவர் கார்த்தி. ஏற்கெனவே சினிமாவில் கார்த்தி இருப்பதால் தனது இயற்பெயரான கார்த்திகேயன் என்ற பெயரில் சினிமாவில் அறிமுகமாகிறார். படத்தின் தலைப்பு, 'நாலு பேருக்கு நல்லதுன்னா எதுவும் தப்பில்ல- ;. நாயகன் படத்தில் கமல் பேசும் வசனம் இது. எல்லோரும் ரஜினி டயலாக்கில் படம் எடுக்கும்போது கமல் டயலாக்கில் படம் எடுக்கிறார் தினேஷ் செல்வராஜ்.
இவர் பிரபல கதாசிரியரும், இயக்குனருமான ஆர்.செல்வராஜின் மகன். அன்னக்கிளி, கிழக்கே போகும் ரயில், முதல் மரியாதை, சின்ன கவுண்டர், அலைபாயுதே உள்பட ஏராளமான பஙகளுக்கு கதை எழுதியவர். கார்த்திகேயனுடன் ஷரியா, யுவன்ஸ்ரீ, ஜெகதீஷ், அரவிந்த், அருள் ஜோதி நடித்துள்ளனர். நவின் மற்றும் பியோன் சுரா இசை அமைத்துள்ளனர். ஏ.டி.பகத்சிங் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
நேர்மையாக அப்பா சம்பாதித்த சொத்தை நண்பர்களுடன் சேர்ந்து தவறான வழியில் அழிக்கிறார் மகன். ஒரு கட்டத்தில் நண்பர்களை பற்றி தெரிந்தபோது விஷயம் எல்லை மீறிபோகிறது. அதிலிருந்து எப்படி மகன் மீள்கிறார் என்பது கதை. இந்தப் படத்தை தொடர்ந்து சினிமாவில் தொடர்ந்து நடிக்க முடிவு செய்திருக்கிறார் கார்த்திகேயன்.
நன்றி: தினமலர்

aanaa
27th February 2016, 02:00 AM
ராதிகாவிடம் சின்னத்திரை வாய்ப்பு கேட்ட எஸ்.ஏ.சி.,


70 படங்களை இயக்கியவர் எஸ்.ஏ.சந்திரசேகர், அதில் 7 இந்திப் படங்களும் அடங்கும். மகன் விஜய்யையும், விஜயகாந்தையும் உயரத்திற்கு கொண்டு வந்தவரும் அவர்தான். இயக்குனராக, தயாரிப்பாளராக இருந்த எஸ்.ஏ.சி சமீபகாலமாக நடிகராகிவிட்டார். தனது படங்களில் ஒரு சில காட்சியில் தோன்றும் எஸ்.ஏ.சி. டூரிங் டாக்கீஸ் படம் மூலம் முழு நடிகரானார். பிப்,26ம் தேதி அவர் ஹீரோவாக நடித்துள்ள நையப்புடை வெளிவர இருக்கிறது. கொடி படத்தில் தனுஷின் தந்தையாக நடித்து வருகிறார்.
சினிமாவில் மட்டுமல்ல சின்னத்திரையிலும் நடிக்க ஆர்வமாக இருப்பதாக கூறுகிறார் எஸ்.ஏ.சி.,. நையப்புடை படத்தின் டிரைய்லர் வெளியீட்டு விழாவிற்கு சிறப்பு அழைப்பாளராக வந்திருந்த ராதிகாவிடம் மேடையிலேயே நேரடியாக அவரது தொடர்களில் நடிக்க வாய்ப்புக் கேட்டார்
முழு நடிகனாகிறதுன்னு முடிவு பண்ணிட்டேன். ஏதாவது ஒன்றில் நடித்துக் கொண்டே இருக்க வேண்டும். சினிமாவில் நடித்தாலும் சின்னத்திரையிலும் நடிக்க ஆசையாக இருக்கிறது. அதனால் உங்கள் தொடரில் எனக்கு வாய்ப்பு தாருங்கள், என்ன வேடமாக இருந்தாலும் பரவாயில்லை" என்றார் எஸ்.ஏ.சந்திரசேகர். "எனக்கு ஜோடியாக நடிக்கிறீங்களா?" என்று சொல்லி அதிர வைத்தார் ராதிகா.
நன்றி: தினமலர்

aanaa
27th February 2016, 02:12 AM
சீரியல் வில்லி ரோஜாவுக்கும் வில்லன் ஈஸ்வருக்கும் திருமணம் நடந்தது
டிவி சீரியல் வில்லி ஜெயஸ்ரீ வில்லன் நடிகர் ஈஸ்வரை திருமணம் செய்துகொண்டுள்ளார். சொந்த பந்தங்கள் மட்டுமே இவர்கள் திருமணத்தில் பங்கெடுத்த நிலையில் ஜனவரி 30ம் தேதி மிக பிரம்மாண்டமாக நடைபெற உள்ளதாகவும் இதில் சின்னத்திரை நட்சத்திரங்கள் பங்கேற்க உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. சின்னத்திரை சீரியல்களில் நடிக்கும் நட்சத்திரங்கள் ஆண்டு கணக்கில் ஒரே சீரியலில் நடிப்பதால் காதல், கல்யாணம் என ஒரே குடும்பமாக மாறுவது சகஜமான விசயம்தான். வம்சம் தொடரில் ரோஜாவாக நடித்து கலெக்டர் அர்ச்சனாவிற்கு டார்ச்சர் கொடுக்கும் ஜெயஸ்ரீ சின்னத்திரை நடிகர் ஈஸ்வரை திருமணம் செய்து கொண்டுள்ளார். இவர்களின் திருமணம், காதல் திருமணம்தான் என்றாலும் பெற்றோர்களால் நிச்சயம் செய்யப்பட்ட திருமணம் என்றும் நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. http://cinema.dinakaran.com/Karan_img/gallery/Television-new-165.jpg

aanaa
10th April 2016, 03:44 AM
.......
பப்லுவை குறித்து இணையத்தில் வதந்தி
பப்லு தற்கொலை செய்து கொண்டார் என்ற அந்த வதந்தியுடன், அவர் பேசியதாக ஒரு ஆடியோவும் வெளியானது. அதில் பப்லு, "என் சாவுக்கு யாரும் காரணம் இல்லை. நான் பிறந்த பாவம். அழும்போது சுற்றி இருந்தவர்கள் சிரித்தார்கள். நான் சிரித்துக்கொண்டே சாகிறேன். சுற்றி இருப்பவர்கள் அழட்டும். என் சாவு இந்த உலகத்துக்கு ஒரு எடுத்துக்காட்டாக இருக்கட்டும். நான் வாழும்போது என்னுடைய அருமை தெரியல. நான் செத்ததுக்கு அப்புறம் தெரியட்டும்" என்று பேசியிருந்தார். இதனால் வதந்திக்கு வலு சேர்ந்தது.

ஆனால், அந்த அடியோ, அவர் குறும்படம் ஒன்றிற்காக பேசியது என்பது தெரிய வந்துள்ளது. இதுவரை பப்லுவை தொடர்பு கொள்ள முடியவில்லை. ஆனாலும், அவர் நலமாக உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

aanaa
10th April 2016, 03:48 AM
பாரதிராஜா - பாலா மோதிக் கொள்வது சரியா.?


குற்றப் பரம்பரை' பட விவகாரத்தில் தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்களான பாரதிராஜாவும், பாலாவும் மோதிக் கொண்டிருக்கும் விவகாரம்தான் தமிழ்த் திரையுலகத்தில் தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. 'குற்றப் பரம்பரை' என்பது ஒரு வரலாறு அதை யார் வேண்டுமானாலும் எடுக்கலாம். அதை விட்டுவிட்டு, அந்தக் கதையை படமாக எடுத்தால் வழக்கு தொடுப்பேன் என்று சொல்வது முட்டாள் தனம் என இயக்குனர் பாலா நேற்று காட்டமாகவே தெரிவித்திருந்தார். அதோடு, தான் எடுக்க உள்ள படம் 'குற்றப்பரம்பரை' கதையே அல்ல, அந்தக் காலக் கட்டத்தில் நடந்த வேறு ஒரு கதையை கற்பனை கலந்து எடுக்கப் போவதாகவும் தெரிவித்தார்.
பாலா எடுக்க உள்ள படத்தில் விஷால், ஆர்யா உள்ளிட்டவர்கள் நடிக்கப் போகிறார்கள். வெவ்வேறு தளத்தில் உள்ள நான்கைந்து இளைஞர்கள் ஒரே விஷயத்தால் பாதிக்கப்பட, அவர்கள் அந்த விவகாரத்தில் என்ன செய்கிறார்கள் என்பதுதான் பாலா எடுக்க உள்ள படத்தின் கதை என்றும் சொல்கிறார்கள். இந்தக் கதையைத்தான் எழுத்தாளர் வேல ராமமூர்த்தியுடன் இணைந்து பாலா படத்திற்காக எழுதி வைத்திருக்கிறார் என்கிறார்கள்.
இதனிடையே பாலாவின் பேச்சை ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளவில்லை என்றும், தான் 'குற்றப்பரம்பரை' படத்தை படமாக்குவதில் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருப்பதாகவும் பாரதிராஜா தெரிவித்துள்ளார்
தமிழ் சினிமாவில் திரையுலகத்தினரும், ரசிகர்களும் கொண்டாடிக் கொண்டிருக்கும் இரண்டு முக்கிய கலைஞர்கள் இப்படி மோதிக் கொள்வதை இயக்குனர்கள் சங்கம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காமல் உடனடியாகத் தலையிட்டு பிரச்சனையைத் தீர்த்து வைக்க வேண்டும் என்றே பல இயக்குனர்களும் விரும்புகிறார்கள்.



நன்றி: தினமலர்

aanaa
10th April 2016, 03:50 AM
தமிழ் புத்தாண்டில் ராஜ் டிவியில் அச்சாரம், எட்டுதிக்கும் மதயானை


வருகிற ஏப்ரல் 14ந் தேதி தமிழ் புத்தாண்டையொட்டி பல சிறப்பு நிகழ்ச்சிகளை சேனல்கள் போட்டி போட்டு தயாரித்து வருகிறது. புதிய படங்களையும் திரையிட இருக்கிறது. சேனல்கள் ஒளிபரப்ப போகும் படத்தை கடைசி நேரம் வரை ரகசியமாக வைத்திருக்கும். ராஜ் டி.வி. இப்போதே அறிவித்து விட்டது.
தமிழ் புத்தாண்டு சிறப்பு நிகழ்ச்சியாக உயிரே உயிரே படத்தில் நடித்த சித்து, ஹன்சிகாவில் கலகலப்பான உரையாடல், மதுரை முத்து தலைமையில் நடந்த காமெடி பட்டிமன்றம், என் இனிய தமிழ் மக்களே என்ற சிறப்பு நிகழ்ச்சி, நடிகை நிகிஷா பட்டேலின் சிறப்பு பேட்டி ஆகியவை ஒளிபரப்பாகிறது.
புத்தாண்டு சிறப்பு திரைப்படமாக எட்டுதிக்கும் மதயானை படம் பகல் 12 மணிக்கும், அச்சாரம் படம் மாலை 6.15 மணிக்கும் ஒளிபரப்பாகிறது. எட்டுதிக்கும் மதயானையில் ஆர்யாவின் தம்பி சத்யா, ஸ்ரீமுகி நடித்துள்ளனர், மனுரமேசன் இசை அமைத்துள்ளார், ஜெய் ஒளிப்பதிவு செய்துள்ளார். ராட்டினம் தங்கசாமி இயக்கி உள்ளார். அச்சாரம் படத்தில் கணேஷ் வெஙங்கட்ராம். முன்னா, பூனம் கவுர் நடித்துள்ளனர் ஸ்ரீகாந்த் தேவா இசை அமைத்துள்ளார், பிரதீப் ஒளிப்பதிவு செய்துள்ளார். மோகன் கிருஷ்ணா இயக்கி உள்ளார்.



நன்றி: தினமலர்

aanaa
10th April 2016, 03:52 AM
கேளடி கண்மணியின் சைலன்ட் கில்லர் நான்! - ஏகவள்ளி
சீரியல்களில் வரும் சம்பவங்கள், பிரச்சினைகள் அனைத்துமே நிஜ வாழ்க்கைளின் பிரதிபலிப்புகளே என்பதால், எந்தமாதிரியான சூழலாக இருந்தாலும் அதை என் வாழ்க்கையில் நடப்பதாக எண்ணிக்கொண்டு ரியலான நடிப்பை வெளிப்படுத்தி வருகிறேன் என்கிறார் சின்னத்திரை நடிகை ஏகவள்ளி. தினமலர் இணையதளத்திற்காக அவர் அளித்த பேட்டி...
>தற்போது நான் கேளடி கண்மணி, அபூர்வ ராகங்கள் என்ற இரண்டு தொடர்களில் நடித்து வருகிறேன். இரண்டிலுமே வெயிட்டான வேடங்கள். இதில் கேளடி கண்மணியைப் பற்றி சொல்ல வேண்டுமென்றால் சைலன்ட் கில்லராக நடிக்கிறேன். நெகடீவ் வேடம். நல்ல சஸ்பென்சாக போய்க்கொண்டிருக்கிறது. என்னை சாதாரணமாக பார்க்கையில் அப்பாவி பெண்ணாக தெரியும். ஆனால் நான் அந்த கேரக்டராக மாறி நடிப்பது அதிரடியாக இருக்கும்.
அதேபோல் அபூர்வ ராகங்களில் பாசிட்டிவான வேடம். இன்னும் ஒரு மாதத்திற்கு பிறகு எனது கேரக்டரில் சில ட்விஸ்ட்டுகள் வரும். அப்போது கதையில் ஏற்படும் எதிர்பாராத திருப்பங்கள், விறுவிறுப்பு என எனது கதாபாத்திரமே அபூர்வ ராகங்களை ஆக்ரமித்துக்கொள்ளும். நேயர்களுக்கு அது பெரிய இன்ப அதிர்ச்சியை கொடுக்கும் வகையில் இருக்கும் என்று கூறும் ஏகவள்ளி, சீரியல்களில் வரும் சம்பவங்கள், பிரச்சினைகள் அனைத்துமே நிஜ வாழ்க்கைளின் பிரதிபலிப்பே என்பதால், எந்தமாதிரியான சூழலாக இருந்தாலும் அதை என் வாழ்க்கையில் நடப்பதாக எண்ணிக்கொண்டு ரியலான நடிப்பை வெளிப்படுத்தி வருகிறேன் என்கிறார்.



நன்றி: தினமலர்

aanaa
6th May 2016, 06:43 PM
சாலக்குடியில் இருந்து திரும்பும் ஆதிரா சீரியல் யூனிட்!
சி.ஜே. பாஸ்கர் இயக்கத்தில் ஒளிபரப்பாகி வரும் ஹாரர் தொடர் ஆதிரா. ஸ்ரீவாணி, அஞ்சு அரவிந்த், ஜெய் தனுஷ் உள்பட பலர் முக்கிய வேடங்களில் நடிக்கும் இந்த சீரியல், ஆரம்பத்தில் இருந்தே கேரளாவில் உள்ள சாலக்குடியில்தான் படமாக்கப்பட்டு வருகிறது. காரணம், இந்த அமானுஷ்ய தொடருக்கு ஏற்ற அடர்ந்த காட்டுப்பகுதி லொகேசன்கள் அந்த பகுதியில் அதிகமாக உள்ளதாம். அதனால் வெகுதூரம் செல்லாமல் அடுத்தடுத்த பகுதிகளிலேயே தொடர்ந்து படப்பிடிப்பு நடத்தப்பட்டு வருகிறதாம்.
அதன்காரணமாக, இந்த சீரியலில் நடிக்கும் நடிகர்களை நடிகைகளை சினிமா படப்பிடிப்புகளுக்கு அவுட்டோருக்கு அழைத்து செல்வது போன்று கூட்டிச்சென்று அங்கு ஹோட்டல்களில் தங்க வைத்து ஷூட்டிங் நடத்தி வந்தனர். இதன்காரணமாக ஆதிரா சீரியல் பட்ஜெட்கூட எகிறிக்கொண்டே போகிறதாம். ஆனால் அடுத்தபடியாக கதையில் சில மாற்றங்கள் ஏற்படப் போகிறதாம். அதனால், இதுவரை சாலக்குடியில் முகாமிட்டு ஆதிரா சீரியலை படம் பிடித்து வந்த சி.ஜே.பாஸ்கர், யூனிட்டுடன் விரைவில் சென்னை திரும்புகிறாராம். இனிமேல் சென்னையில்தான் படப்பிடிப்பு தொடரப்போகிறதாம்.



நன்றி: தினமலர்

aanaa
11th May 2016, 06:35 PM
சமையல் நிகழ்ச்சியில் விதவிதமான ஆடையில் கலக்கும் பஃரீனா
பொதுவாக சமையல் நிகழ்ச்சியில் பங்கு கொள்கிறவர்களும் சரி, அதை தொகுத்து வழங்குகிறவர்களும் சரி எளிமையான ஹோம்லி ஆடையைத்தான் அணிந்து வருவார்கள். ஆனால் அதை உடைத்தெறிந்து முன்னணி சேனலில் ஒளிபரப்பாகும் கிச்சன் கலாட்டா என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் பஃரீனா ஆசாத் விதவிதமான ஆடையில் வந்து கலக்குகிறார் சமைப்பது எப்படி என்று பார்க்கிறவர்களை விட பஃரீனா இன்று எந்த உடை அணிந்து வருகிறார், அது எப்படி இருக்கிறது என்று பார்க்கிற பார்வையாளர்கள்தான் அதிகரித்து கொண்டிருக்கிறார்களாம். பஃரீனாவின் உடையை டிசைன் செய்வதற்கென்றே தனி காஸ்ட்யூம் டிசைனர்கள் இருக்கிறார்களாம்.
http://img1.dinamalar.com/cini//CNewsImages/NTLRG_160510101934000000.jpgஇதுவரை மூன்று சேனல்களில் பணியாற்றியுள்ள பஃரீனா மூன்றிலுமே சமையில் நிகழ்ச்சியைத்தான் தொகுத்து வழங்கிக் கொண்டிருக்கிறார். அவருக்கு சரியாக சமைக்கத் தெரியாது என்பது தனிக் கதை. “எந்த நிகழ்ச்சிக்குமே அழகுணர்ச்சி மிகவும் முக்கியம். விதவிதமாக உடை அணிந்து சமையல் நிகழ்ச்சி நடத்தினால் என்ன என்று தோன்றியது. முயற்சித்து பார்த்தோம். அது ஒர்க் அவுட்டாகி விட்டது. இப்போது நான் எங்கு சென்றாலும் சமையல் பற்றி கேட்பதில்லை. எனது உடைகள் பற்றித்தான் கேட்கிறார்கள்” என்கிறார் பஃரீனா. சமையல் நிகழ்ச்சியில் எதற்கு கண்ணை உறுத்துகிற உடை என்கிற விமர்சனமும் எழுந்துள்ளது.



நன்றி: தினமலர்

aanaa
11th May 2016, 06:37 PM
லட்சுமி ராமகிருஷ்ணன் திடீர் தேர்தல் பிரச்சாரம்
பெரிய திரையில் குணசித்திர நடிகையாக அறிமுகமான லட்சுமி ராமகிருஷ்ணன் இப்போது சின்னத்திரையின் நட்சத்திர தொகுப்பாளர். இடையில் மூன்று படங்களை இயக்கி இயக்குனராகவும் அவதாரம் எடுத்தவர் இப்போது மீண்டும் சின்னத்திரையில் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியை நடத்தி வருகிறார்.

அரசியலுக்கு அப்பாற்பட்ட லட்சுமி ராமகிருஷ்ணன் திரென்று தேர்தல் பிரச்சாரத்தில் குதித்துள்ளார். சென்னையை சேர்ந்த வானதி சீனிவாசன், லட்சுமி ராமகிருஷ்ணனின் நெருங்கிய தோழி. அவர் தற்போது கோவை தெற்கு தொகுதியில் பாரதிய ஜனதாக கட்சி சார்பில் போட்டியிடுகிறார். தனது தோழிக்கு ஆதரவாக களத்தில் குதித்த லட்சுமி ராமகிருஷ்ணன் அவருக்காக தீவிர பிரச்சாரத்தில் இறங்கி உள்ளார். தேர்தல் பிரச்சாரத்துடன் இணைந்த கருத்தரங்கில் பேசினார்.

“வானதி சீனிவாசன் எனது நெருங்கிய தோழி. சமூக அக்கறை மிக்கவர். தனியாக போராடி மதுக்கடைகளை மூடியவர். பெண்களின் நலனின் அக்கறை கொண்டவர். துணிச்சலானவர். அவரது செயல்பாடுகளும், எளிதில் பழகும் குணமும் எனக்கு பிடிக்கும் அதானல்தான் எந்த கட்சியையும் சாராத நான் அவருக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்கிறேன். என்று விளக்கம் அளித்துள்ளார்.
http://img1.dinamalar.com/cini//CNewsImages/NTLRG_160511125648000000.jpg


நன்றி: தினமலர்

aanaa
18th May 2016, 06:18 PM
"தலையணை பூக்கள்" தொடரில் நிஷா கிருஷ்ணன்
http://img1.dinamalar.com/cini//CNewsImages/NTLRG_160512113110000000.jpg
மகாபாரதம் தொடரில் திரவுபதியாக நடித்து புகழ்பெற்றவர் நிஷா கிருஷ்ணன். மகாபாரதம் தொடரின் இறுதி பகுதி எபிசோட்கள் ஒளிபரப்பாகி வருகிறது. விரைவில் மகாபாரம் தொடர் நிறைவடைகிறது. இந்த நிலையில் நிஷா கிருஷ்ணன் தலையணை பூக்கள் என்ற தொடரில் நடிக்க ஒப்பந்தமாகி தற்போது நடித்து வருகிறார்.
எழுத்தாளர் பாலகுமாரன் எழுதிய நாவலை அதே பெயரில் தொடராக உருவாக்குகிறார்கள். காஞ்சிபுரம் பின்னணயில் நடக்கிற கதை. பட்டு நெசவு தொழில், தங்க நகை தொழிலாளர்களின் பின்னணியில் காட்சிகள் வடிவமைக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரத்திலும், அதன் சுற்றுப்புற கிராமங்களிலும் படப்பிடிப்பு நடக்கிறது. ராம்குமார் இயக்குகிறார். நிஷா கிருஷ்ணன் சமீபத்தில் திரைப்பட நடிகர் கணேஷ் வெங்கட்ராமை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்துக்கு பிறகு அவர் நடிக்கும் தொடர் தலையணை பூக்கள்.



நன்றி: தினமலர்

aanaa
18th May 2016, 06:32 PM
சின்னத்திரைக்கு வருகிறார் அரவிந்த்சாமி
ஒரு காலத்தில் அழகு நடிகனாக கொண்டாடப்பட்ட அரவிந்த்சாமி, சினிமாவில் புகழின் உச்சியில் இருக்கும்போதே சினிமாவை விட்டு விலகி தொழில்துறையில் கவனம் செலுத்தினார். அதன் பிறகு பல ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு கடல் படத்தின் மூலம் மீண்டும் நடிக்க வந்தார். அந்த படம தோல்வி அடையவே மீண்டும் சினிமாவை விட்டு விலகி இருந்தார். தனி ஒருவன் படத்தில் வில்லனாக எண்ட்ரி கொடுத்து தனது இரண்டாவது ரவுண்டை துவக்கி விட்டார். தற்போது ஜெயம்ரவியுடன் போகன் படத்தில் வில்லனான நடித்து வருகிறார். டீயர் டேட் என்ற இந்திப் படத்திலும் நடித்து வருகிறார்.
அரவிந்த்சாமியின் அடுத்து அவதாரம் சின்னத்திரை தொகுப்பாளர். விஜய் டி.வியின் புகழ்பெற்ற நிகழ்ச்சியான நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி நிகழ்ச்சியின் 3வது சீசனை தொகுத்து வழங்க வருகிறார் அரவிந்த் சாமி. சூர்யா, பிரகாஷ்ராஜ் அமர்ந்த நாற்காலியில் உட்கார இருக்கிறார் அரவிந்த்சாமி. விரைவில் துவங்க இருக்கும் இந்த நிகழ்ச்சியின் தயாரிப்பு ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வருகிறது. பல புதிய அம்சங்களுடன் விரையில் ஒளிபரப்பாக இருக்கிறது.



நன்றி: தினமலர்

aanaa
25th May 2016, 06:40 PM
மே 30 முதல் அரவிந்த்சாமியின் ஆட்டம் ஆரம்பம்


விஜய் தொலைக்காட்சியின் புகழ்பெற்ற நிகழ்ச்சி 'நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி'. வினாடி வினா டைப்பிலான இந்த நிகழ்ச்சியில் வெற்றி பெற்றால் ஒரு கோடி வரை பரிசாக பெறலாம். பங்கேற்பவர்கள் குறைந்தது 10 ஆயிரம் ரூபாயாவது பரிசாக பெறுவார்கள். இதன் முதல் சீசனை சூர்யா தொகுத்து வழங்கினார், இரண்டாவது சீசனை பிரகாஷ்ராஜ் தொகுத்து வழங்கினார். 3வது சீசனை அரவிந்த்சாமி தொகுத்து வழங்குகிறார்.
இந்த நிகழ்ச்சி வருகிற 30ந் தேதி முதல் ஒளிபரப்பாகிறது. ஒவ்வொரு வாரமும் திங்கள் முதல் புதன் வரை 3 நாட்கள் இரவு 7 மணி முதல் 8 மணி வரை ஒளிபரப்பாகிறது. இந்த நிகழ்ச்சியின் புரமோவில் அரவிந்த்சாமி கூறியிருப்பதாவது: போட்டியென்றால் பயமா, கப்பலை ஏன் கரையில் கட்டி வைக்கிறோம் கண்காட்சிக்கா இல்லை. கடலை தாண்டுவதற்கு, இதுவா அதுவா என்ற குழப்பம் வாழ்க்கையில் எப்போதுமே வரக்கூடாது. வாங்க விளையாடலாம். போட்டி உங்களுக்கும் எனக்கும் இல்லை. நான் உங்க பக்கம்தான் என்கிறார் அரவிந்த்சாமி.



நன்றி: தினமலர்

aanaa
30th May 2016, 06:49 PM
விஜய் டிவியின் அதிரடி நிகழ்ச்சியில் திவ்யதர்ஷினி!
விஜய் டிவியின் நம்பர்-ஒன் தொகுப்பாளினி டிடி என்கிற திவ்யதர்ஷினி. இவர் தொகுத்து வழங்கிய, காபி வித் டிடி, ஜோடி நம்பர்-ஒன், விஜய் அவார்ட்ஸ் ஆகிய நிகழ்ச்சிகளில் நேயர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வந்தன. அந்த வகையில் 12 வருடங்களாக விஜய் டிவியின் பிரதான தொகுப்பாளினியாக இருந்த டிடியின் காபி வித் டிடி நிகழ்ச்சி தற்காலிகமாக நிறுத்தப்பட்டபோது, அவர் அந்த டிவியில் இருந்தே விலகி விட்டதாக பரபரப்பு செய்திகள் வெளியாகின.
ஆனால் அதற்கு மறுப்பு தெரிவித்த டிடி, மீண்டும் நான் விஜய் டிவியில் பிஸியாவேன் என்று கூறி வந்தார். அதற்கேற்ப தற்போது காபி வித் டிடி மட்டுமின்றி, அசத்தப்போவது யாரு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வரும் டிடி அடுத்தபடியாக அச்சம் தவிர் என்ற நிகழ்ச்சியை வழங்கப்போகிறார். ஜூன் 2-ந்தேதி முதல் ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சியில், சின்னத்திரை, சினிமா என இரண்டு மீடியாக்களில் உள்ள நட்சத்திரங்கள் கலந்து கொள்கிறார்களாம். டாஸ்க் அடிப்படையில் நடக்கும் இந்த நிகழ்ச்சி இதுவரை சேனல்களில் வெளியான ஷோக்களை விட அதிரடியாக இருக்கப்போகிறதாம். இந்நிகழ்ச்சி யில் நெஞ்சை பதபதக்க வைக்கும் போட்டிகளும், பார்வையாளர்களை அச்சுறுத்தும் மோதல்களும் இடம்பெறுகிறதாம். இந்நிகழ்ச்சி திவ்யதர் ஷினிக்கும் ஒரு சவாலான நிகழ்ச்சியாக இருக்கும் என்கிறார்கள்.



நன்றி: தினமலர்

aanaa
7th June 2016, 07:20 PM
சீரியல்களுக்கு குட்பை சொல்கிறார் குயிலி


பூவிலங்கு; படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் குயிலி. பல படங்களில் நடித்த பிறகு ;நாயகன்; படத்தில் “நிலா அது வானத்து மேலே... பாடலுக்கு கவர்ச்சி நடனம் ஆடி அதன்பிறகு குத்தாட்ட நடிகை ஆனார். அதுவும் ஒரு கட்டத்தில் சலித்து விட குணசித்ர நடிகையானார். சின்னத்திரையில் சீரியல்கள் புகழ்பெறவும் சின்னத்திரை சீரியல் நடிகையானர்.
குணத்சித்ர கேரக்டர் என்பதால் ஒரே நேரத்தில் பல சீரியல்களில் நடித்தார். சரவணன் மீனாட்சி தொடர் அவரது கேரியரில் முக்கியமான சீரியல். அதன் பிறகு அ.தி.மு.வில் இணைந்து அரசியல் பணியும் செய்தார். தற்போது தணிக்கை குழு உறுப்பினராக உள்ளார். அரசியலிலும் பிசியாக உள்ளார். சர்வதேச பட விழாக்களிலும் தீவிரமாக இருக்கிறார். அதை விட முக்கியமாக அவரது குழந்தைகள் மும்பையில் படித்து வருகிறார்கள். அவர்களையும் கவனித்துக் கொள்ள வேண்டியது இருக்கிறது. இப்படி வேலை பளுக்கள் அதிகமாகி விட்டதால் சின்னத்திரை சீரியல்களிலிருந்து விலகி வருகிறார் குயிலி. திரைப்படங்களில் நல்ல கேரக்டர் அமைந்தால் மட்டுமே நடிப்பது என்று முடிவு செய்திருக்கிறார். குழந்தைகள் படிப்பிற்காக மும்பையில் செட்டிலாக போகிறார் என்கிற தகவலும் உண்டு.



நன்றி: தினமலர்

aanaa
7th June 2016, 07:22 PM
ஜோடி நம்பர்-ஒன் சந்துருவும் ஹீரோவாகிறார்!
சிவகார்த்திகேயனைத் தொடர்ந்து பல நிகழ்ச்சி தொகுப்பாளர்கள் அடுத்தடுத்து சினிமாவில் ஹீரோவாகிக்கொண்டிருக்கிறார்கள். அந்த வரிசையில், சிவகார்த்திகேயனைத் தொடர்ந்து விஜய் டிவியில் இருந்து வானவராயன் வல்லவராயன் படத்தில் மா.கா.பா.ஆனந்த் ஹீரோவானார். சாரல் படத்தில் அசார் ஹீரோவாகியிருக்கிறார். இவர்களைத் தொடர்ந்து தற்போது காதல் காலம் என்ற படத்தில் சந்துரு என்ற ஜோடி நம்பர்-ஒன் டான்சரும் ஹீரோவாகியிருக்கிறார்.
இந்த சந்துரு, விஜய் டிவியில் ஒளிபரப்பான ஜோடி நம்பர்-1, உங்களில் யார் அடுத்த பிரபுதேவா உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்றவர். ஆக, நடனத்தில் வல்லவர் என்பதால் இந்த காதல் காலம் -படத்தில் சந்துருவுக்கு பாடல் காட்சிகளில் அதிரடி நடனம் கொடுக்கப்பட்டுள்ளதாம். தற்போது இந்த படம் ரிலீசுக்கு தயாராகி விட்டதால் அடுத்த படத்தை கைப்பற்றும் முயற்சியில் இறங்கியிருக்கிறார் சந்துரு.



நன்றி: தினமலர்

aanaa
7th June 2016, 07:35 PM
தென்னிந்திய தொலைக்காட்சிகளில் ஆதிக்கம் செலுத்தும் ஹனுமன்
தொலைக்காட்சி தொடர்களில் ராமாயணம், மகாபாரத்திற்கு பிறகு அதிகமான வரவேற்பை பெற்றிருப்பது ஹனுமன் கதைதான். தமிழ் தொலைக்காட்சிகளில் ஏதாவது ஒன்றில் ஹனுமன் கதை ஒளிபரப்பாகிக்கொண்டே இருக்கும். தற்போது ஜெயா தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கிறது. மலையாளம், தெலுங்கு, கன்னட சேனல்களிலும் ஹனுமன் கதை ஒளிபரப்பாகிறது.
இந்த நிலையில் சோனி டி.வி பிரமாண்டமாக தயாரித்து ஒளிபரப்பிய ஜெய் அனுமான் என்ற தொடரை தென்னிந்திய முன்னணி சேனல் ஒன்று வாங்கி உள்ளது. இந்த தொடரை அந்த சேனலுக்கு உட்பட்ட தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் ஒளிபரப்புகிறது. தமிழ் சேனலில் நாளை முதல் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் இரவு 10 மணி முதல் 11 மணி வரை ஒளிபரப்புகிறது. அதேபோல சோனி நிறுவனத்திடமிருந்து நாகின் என்ற இந்தி தொடரின் தமிழ் உரிமத்தையும் வாங்கி உள்ளனர். இந்த தொடர் நாக கண்ணி என்ற பெயரில் வருகிற 27ந் தேதி முதல் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 10 மணிக்கு ஒளிபரப்புகிறது.



நன்றி: தினமலர்

aanaa
14th June 2016, 06:00 PM
ஐதராபாத்தில் செட்டிலானர் நளினி.
திரைப்படங்களில் இருந்து ஒதுங்கி இருந்த நளினி. சின்னத்திரை சீரியல்கள் சீசன் தொடங்கியதும் அதற்கு தாவினார். வில்லியாக அறிமுகமான அவர் அதன் பிறகு தன்னை காமெடி நடிகையாக மாற்றிக் கொண்டார். அவர் நடித்த ஆல் இன் ஆல் அலமேலு, சின்ன பாப்பா பெரிய பாப்பா ,மடிப்பாக்கம் மாதவன் போன்ற சீரியல்கள் மிகவும் பிரபலம்.
நளினி தற்போது தெலுங்கு சீரியல்களில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார். இயற்கையாவே தெலுங்கு பெண்ணான நளினியின் தெலுங்கு முகத் தோற்றமும், அவரது உருட்டல் மிரட்டல் நடிப்பும் தெலுங்கு பெண்களை மிகவும் கவர்ந்துவிட்டது. அம்மன்னா கோடலா என்ற தொடரில் கஞ்சத்தனமான மாமியாராக கலக்கி வருகிறார். 450 எபிசோட்களை தாண்டி விட்டது இந்த சீரியல். சிறந்த சின்னத்திரை காமெடி நடிகைக்கான ஆந்திர அரசின் விருதையும் கடந்த ஆண்டு வாங்கிவிட்டார். இந்த சீரியலின் வெற்றியை தொடர்ந்து நளினிக்கு தெலுங்கில் அடுத்தடுத்து வாய்ப்புகள் குவிந்து வருகிறது.
தனது மகள்களுக்கு திருமணம் செய்து கொடுத்து விட்ட நளினி. தற்போது தெலுங்கு சீரியல்களில் பிசியாகிவிட்டதால் ஐதராபாத்திலேயே செட்டிலாகிவிட்டார். மாத்திற்கு மூன்று அல்லது நான்கு நட்கள் மட்டுமே சென்னை வருகிறார். சின்னத்திரை நடிகர் சங்கதிலிலிருந்தும் ஒதுங்கி இருக்கிறார்.



நன்றி: தினமலர்

aanaa
14th June 2016, 06:02 PM
கணவருடன் இணைந்து சினிமாவில் நடிக்க நிஷா திட்டம்


சின்னத்திரையில் தொகுப்பாளராக அறிமுகமான நிஷா கிருஷ்ணன் அதன் பிறகு சீரியல் நடிகையானார். தற்போது ஆண்டள் அழகர் தொடரின் இரண்டாம் பாகமான பகல்நிலவு தொடரில் நடித்து வருகிறார். இதற் கிடையில் அவர் சினிமா நடிகர் கணேஷ் வெங்கட்ராமை காதலித்து திருமணம் செய்து கொண்டார். நிஷா சின்னத்திரை தொடரில் நடித்தாலும் அவ்வப்போது சினிமாவிலும் நடித்து வருகிறார். விக்ரம் பிரபு நடித்த அரிமா நம்பி படத்தில் நிஷாவும், கணேஷ் வெங்கட்ராமும் நடித்துள்ளனர். ஆனால் ஜோடியாக அல்ல வெவ்வேறு கேரக்டர்களில்.
http://img1.dinamalar.com/cini//CNewsImages/NTLRG_20160612161848371269.jpg

திருமணத்திற்கு பிறகு இருவரும் ஜோடியாக சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்கள். நிஷாவும், கணேஷ் வெங்கட்ராமும் இணைந்து நடிக்கும் வகையில் சில சீரியல் வாய்ப்புகள் வந்தபோதும் தற்போது சினிமாவில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கும் கணேஷ் வெங்கட்ராம் இதற்கு சம்மதிக்கவில்லை. ஆனால் இருவரும் இணைந்து சினிமாவில் நடிக்க தயராக இருக்கிறார்கள். இதற்கான பேச்சு வார்த்தை நடந்து வருகிறது. புதுமண தம்பதிகளுக்கு இடையேயான் ஊடலை மையமாக வைத்து உருவாகியுள்ள திரைக்கதையாம். இயக்குனரும், கதையும் தயாராக இருக்கிறாம். தயாரிப்பாளர் தேடிக் கொண்டிருக்கிறார்கள். விரைவில் முறையான அறிவிப்பு வரும் என்கிறார்கள்.



நன்றி: தினமலர்

aanaa
14th June 2016, 06:04 PM
அபூர்வ ராகங்கள் பிரியங்காவை கவர்ந்த டப்பிங் ஆர்ட்டிஸ்ட் பாத்திமா!


பைரவி, சபீதா என்கிற சபாபதி, என் இனிய தோழியே என பல தொடர்களில் நடித்தவர் பிரியங்கா. தற்போது அபூர்வ ராகங்கள், வம்சம் தொடர்களில் பிசியாக நடித்துக்கொண்டிருக்கிறார். எனக்கு நானே டப்பிங் பேச வேண்டும் என்றுதான் முதலில் ஆசைப்பட்டேன். ஆனால் அபூர்வ ராகங்களில் எனக்கு டப்பிங் கொடுக்கும் பாத்திமாவின் குரலே நன்றாக இருப்பதால் இப்போது எனக்கு டப்பிங் பேச வேண்டும் என்ற ஆசையே இல்லை என்கிறார் பிரியங்கா.


இதுபற்றி அவர் கூறும்போது, அபூர்வ ராகங்கள் தொடரில் அனிதா என்ற பேய் கேரக்டரில் தற்போது நடித்து வருகிறேன். அதேபோல் வம்சம் தொடரில் ஜோதிகா என்ற ரோலில் நடிக்கிறேன். இந்த இரண்டு சீரியல்களிலும் தற்போது எனது ட்ரேக் தொடர்ந்து ஒளிபரப்பாகிக்கொண்டிருப்பதால் ரொம்ப பிசியாக இருக்கிறேன்.


மேலும், நான் நடிக்கும் வேடங்களில் எனக்கு நானே டப்பிங் பேச வேண்டும் என்கிற ஆசையும் எனக்கு உண்டு. ஆனால் சீரியல்களில் பிசியாக நடித்துக்கொண்டிருப்பதால் அது சாத்தியமில்லாமல் இருக்கிறது. என்றாலும், அபூர்வ ராகங் கள் தொடரில் எனக்கு டப்பிங் பேசும் பாத்திமாவின் குரல் ரொம்ப அருமையாக உள்ளது. எனக்கும் நன்றாக பொருந்தியிருக்கிறது. அவரது குரல் எனக்கு நன் றாக செட்டாகி விட்டதால், அடுத்தபடியான எனக்கு நானே டப்பிங் பேச வேண்டும் என்ற ஆசையே இல்லாமல் போய் விட்டது. தொடர்ந்து பாத்திமாவே பேச வேண்டும் என்று ஆசைப்படுகிறேன் என்கிறார் பிரியங்கா.



நன்றி: தினமலர்

aanaa
28th June 2016, 08:50 PM
சின்னத்திரையில் கலக்கும் சன்னி லியோன்

ஹாலிவுட் போர்னோகிராபிக் ஸ்டாரான சன்னி லியோன் எம்.டிவி நடத்திய ;ஸ்பிலிட்ஸ் வில்லா; நிகழ்ச்சியின் மூலமாக இந்தியா வந்தார். அதன் பிறகு பாலிவுட் படங்களில் நடித்து வருகிறார். எந்த நிகழ்ச்சி மூலம் இந்தியாவுக்குள் வந்தாரோ, தற்போது அதே நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார்.


ஸ்பிலிட்ஸ் வில்லா; நிகழ்ச்சியின் 9வது சீசன் இப்போது பரபரப்புடன் ஒளிப்பரப்பாகி வருகிறது. இந்தியாவில் இளைஞர்கள் அதிகம் பார்க்கும் நிகழ்ச்சியாக இது மாறியிருக்கிறது. அதற்கு சன்னி லியோனின் ஆடைகளும், கமெண்டுகளும் தான் என்கிறார்கள். அதோடு சக தொகுப்பாளரான ரான்விஜய் அழகை அவர் புகழ்வதும், அவரை கலாய்ப்பதும், நிகழ்ச்சியில் தவறு செய்கிறவர்களை கெட்ட வார்த்தை சொல்லி திட்டுவதுமாக நிகழ்ச்சியை கலகலப்பாக்கி விடுகிறார், நிகழ்சியில் ஏ ஜோக்குகளுக்கு பஞ்சம் இல்லை. தாராள கவர்ச்சி இருக்கு, கொஞ்சம் செண்டிமெண்டும் இருக்கு. இப்படி பலவித அம்சங்களோடு நிகழ்ச்சி களை கட்டி வருகிறது. இதனால் சன்னி லியோனின் சம்பளமும் எகிறி இருக்கிறது. 10 வது சீசனையும் சன்னியே தொகுத்து வழங்குவார் என்பது சேனல் வட்டாரத் தகவல்.



நன்றி: தினமலர்

aanaa
10th July 2016, 04:55 AM
டிவி ஷோக்களில் ஆர்வம் காட்டும் மதுமிலா!


விஜய் டிவியில் ஒளிபரப்பான ஆபீஸ் சீரியலில் லட்சுமி என்ற கேரக்டரில் நடித்த வர் மதுமிலா. அதைத்தொடர்ந்து தாயுமானவன், அக்னிப்பார்வை போன்ற தொடர்களில் நடித்த அவர் தற்போது விஜய் டிவியின் அச்சம் தவிர் நிகழ்ச்சியிலும் பங்கேற்று வருகிறார். அதேபோல், பூஜை, ரோமியோ ஜூலியட் , மாப்ள சிங்கம் படங்களில் சிறிய வேடங்களில் நடித்தவர் தற்போது சுந்தர மோகனா என்றொரு புதிய படத்தில் கதாநாயகியாக நடித்துக்கொண்டிருக்கிறார்.


இந்த நிலையில், தொடர்ந்து சினிமாவில் அதிகப்படியான படங்களில் நடிக்க ஆசைப்படும் மதுமிலா, அடுத்தடுத்து நல்ல கதைகளை எதிர்பார்க்கிறாராம். அதன்காரணமாக இந்த நேரத்தில் சீரியல்களில் கமிட்டானால் படங்களுக்கு கால்சீட்கொடுப்பதில் பிரச்சினை ஏற்படும் என்பதால், மெகா சீரியல்களை தவிர்த்து வரும் மதுமிலா, அச்சம் தவிர் மாதிரியான டிவி ஷோக்களில் பங்கேற்பதில் அதிக ஆர்வமாக இருக்கிறாராம்.

aanaa
29th July 2016, 10:46 PM
தெலுங்கு சேனலில் நிகழ்ச்சி நடத்தும் ரோஜா


நடிகை ரோஜா சினிமாவில் மார்க்கெட் குறைந்ததும், அப்படியே ஆந்திர அரசியலுக்குச் சென்று விட்டார். இப்போதும் ஆந்திராவில் பரபரப்பான அரசியல்வாதி. ஆனாலும் இடையிடையே தொலைக்காட்சி நிகழ்ச்சிகளும் நடத்துவார். தமிழில் ;லக்கா கிக்கா; என்ற கேம் ஷோ நிகழ்ச்சியை நடத்தினார். தற்போது ஜீன்ஸ் என்ற நிகழ்ச்சியை நடத்தி வருகிறார். தற்போது தெலுங்கில் ஒளிபரப்பாகும் ஜெமினி டி.வியில் ;ரக்சா பந்தா; என்ற நிகழ்ச்சியை நடத்துகிறார்.

இது லக்கா கிக்கா போன்ற கேம் ஷோ அல்ல. குடும்ப பிரச்னைகளில் எது தவறு எது சரி என்று ஆராயும் நிகழ்ச்சி. கிட்டத்தட்ட ;சொல்வதெல்லாம் உண்மை; நிகழ்ச்சி போன்றது. நாளை முதல் ஒளிபரப்பாகிறது. தெலுங்கை தாய்மொழியாக கொண்ட ரோஜாவின் சரளமான தெலுங்கு உச்சரிப்பு அங்கு பேமஸ் என்பதால் நிகழ்ச்சியும் களைகட்டத் தொடங்கியிருக்கிறது. ஒரு தமிழ் நிகழ்ச்சி நடத்தவும் பேச்சவார்த்தை நடந்து வருகிறது.



நன்றி: தினமலர்

aanaa
29th July 2016, 10:53 PM
நடன பள்ளியில் கவனம் செலுத்தும் சுதா சந்திரன்


விபத்தில் ஒரு காலை இழந்திருந்தாலும் தன்னம்பிக்கையோடும், தளராக உழைப்போடும் வாழ்க்கையில் வெற்றி பெற்றவர் சுதா சந்திரன். மயூரி என்ற படத்தின் மூலம் சினிமாவுக்கு வந்த அவர் அதில் தன் சொந்த வாழ்க்கை கதையிலேயே நடித்தார். பின்னர் இந்தி சீரியல்களில் பிசியான நடிகையானார். ;தெய்வம் தந்த வீடு; சீரியல் முலம் தமிழ் சீரியலுக்கும் வந்தார்.


லட்சுமி ராமகிருஷ்ணன் நடத்தி வந்த ;சொல்வதெல்லாம் உண்மை; நிகழ்ச்சியை சில காலம் நடத்தி வந்தார். சேனல் நிர்வாகத்துக்கும் அவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்படவே நிகழ்ச்சியிலிருந்து விலகினார். சுதா சந்திரன் கையில் இப்போது சீரியல்கள் எதுவும் இல்லை என்றாலும் அவர் இந்தியில் நடித்த பிரபலமான தொடரான ;நாகினி; தமிழில் டப் செய்யப்பட்டு ஒளிபரப்பாகி வருகிறது.


இந்த இடைவெளியில் தான் நடத்தி வரும் நடன பள்ளிகளில் கவனம் செலுத்த தொடங்கியிருக்கிறார். ;சுதாசந்திரன் டான்ஸ் அகாடமி; என்ற பெயரில் மும்பை அந்தேரி, நாக்பூர் மற்றும் சென்னை போரூரில் இந்த நடன பள்ளிகள் இயங்குகிறது. இங்கு பரதநாட்டியம் முதல் மேற்கத்திய நடனம் வரை கற்றுத் தரப்படுகிறது. 5வயது முதல் 50 வரையிலானவர்கள் நடனம் கற்று வருகிறார்கள். போரூர் தவிர்த்து சென்னையில் மற்றுமொரு இடத்தில் நடன பள்ளி துவங்கும் திட்டத்தில் இருக்கிறார். தற்போத நடன பள்ளிகளை மேம்படுத்த மும்பைக்கும், சென்னைக்கும் பறந்து கொண்டிருக்கிறார்.



நன்றி: தினமலர்

aanaa
18th August 2016, 12:49 AM
ஹீரோவாக நடிக்க பாடியை ஒர்க்அவுட் பண்ணும் தாடி பாலாஜி!


வடிவேலு, விவேக் போன்ற காமெடியன்களுடன் இணைந்து பல படங்களில் நடித்தவர் தாடி பாலாஜி. அதோடு சின்னத்திரையிலும் காமெடி நிகழ்ச்சிகளில் நடுவராக பங்கேற்று வரும் அவர், சில மாதங்களுக்கு முன்பு தற்கொலை வதந்தியிலும் சிக்கினார். பின்னர், வாயு தொல்லை காரணமாக மருத்துவமனைக்கு சென்ற என்னை தற்கொலை செய்ய முயற்சித்ததாக செய்தி பரப்பி விட்டார்களே என்று பீல் பண்ணி செய்தி வெளியிட்டார்.


தற்போது அவர் வடிவேலு நடித்து வரும் கத்திச்சண்டை படத்தில் அவருடன் இணைந்து நடித்துள்ளார். தன்னுடன் நீண்டகாலமாக நடித்த பல காமெடியன்கள் இருந்தும், தாடி பாலாஜிதான் இந்த படத்தில் தன்னுடன் நடிப்பதற்கு சரியான நடிகராக இருப்பார் என்று அவரை நடிக்க வைத்திருக்கிறார் வடிவேலு. கூடவே ஆர்த்தியும் இவர்களுடன் நடித்திருக்கிறார். இப்படி வடிவேலுவுடன் காமெடி கூட்டணி வைத்துள்ள தாடி பாலாஜி, தற்போது கோலிவுட்டில் பேசப்படும் காமெடியனாகியிருப்பதோடு, ஒரு படத்தில் ஹீரோவாகவும் நடிக்கப்போகிறாராம். அதனால் தினமும் காலை- மாலை வேளைகளில் ஜிம்முக்கு சென்று பாடியை ஒர்க்அவுட் பண்ணி வருகிறாராம் தாடி பாலாஜி.



நன்றி: தினமலர்

aanaa
18th August 2016, 12:52 AM
டப்பிங் சீரியலை எதிர்த்து தொடர்ந்து போராடணும்: ராதிகா பேச்சு




தமிழ் சேனல்களில் இந்தி டப்பிங் சீரியல்கள் அதிக அளவில் ஒளிபரப்பப்படுகிறது. இதனால் தமிழ் சீரியல்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது. தொடர்களில் நடிக்கும் நடிகர் நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்களின் வேலை வாய்ப்பு பாதிக்கப்பட்டுள்ளது.


இதனால் தமிழ் சேனல்கள் டப்பிங் சீரியல்களை ஒளிபரப்புவதை நிறுத்தக்கோரி சின்னத்திரை கலைஞர்கள் கூட்டமைப்பு சார்பில் நேற்று சென்னை வள்ளுவர்கோட்டம் அருகில் உண்ணாவிரதப் போராட்டம் நடந்தது. தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவர் நாசர் போராட்டத்தை தொடங்கி வைத்தார். பெப்சி தலைவர் சிவா. சின்னத்திரை தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் சுஜாதா விஜயகுமார், செயலாளர் குஷ்பு உள்ளபட பலர் கலந்து கொண்டனர். உண்ணாவிரதத்தில் நடிகை ராதிகா பேசியதாவது:


டப்பிங் சீரியல்களின் வளர்ச்சி ஒரு முக்கியமான விஷயமாகும்.. இதனை மேலும் வளரவிடக்கூடாது.இவ்வளவு பேர் உள்ளோம் நிச்சயம் இதை தடுக்க குரல் கொடுப்போம். நீங்கள் இதை இதோடு நிறுத்த வேண்டாம். மிகப்பெரிய அமைப்புகளான தென்னிந்திய நடிகர் சங்கம், பெப்சி போன்ற அமைப்புகள் உங்களோடு உள்ளது. நீங்கள் அனைவரும் இதை முதல் படியாக எடுத்துகொண்டு இன்னும் ஒவ்வொரு படியாக சென்று நீங்கள் போராட வேண்டும்.


கர்நாடகாவில் ஒரு டப்பிங் படமோ அல்லது தொலைக்காட்சி தொடரோ வெளியாவது கடினம். அந்த கட்டுப்பாடு நம்மிடம் இல்லை. வந்தாரை வாழவைக்கும் தமிழகம் தான், அதற்காக வீடு, சொத்து என எல்லாவற்றையும் எழுதி கொடுக்க சொன்னால் அது சரிபட்டு வராது. இது முதல் படி. முதலமைச்சர் கண்டிப்பாக இந்த விஷயத்தில் நடவடிக்கை எடுப்பார் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கு. உங்களின் சார்பாக இரண்டு முறை நான் அவரிடம் இதை பற்றி பேசியுள்ளேன். கண்டிப்பாக அவர் நடவடிக்கை எடுப்பார் என நம்புவோம். நாங்கள் இதை பற்றி பல முறை தொலைக்காட்சி நிறுவனங்களுக்கு கூறிவிட்டோம்.


மாற்று மொழி தொடர்களை எல்லா தொலைக்காட்சியிலும் ப்ரைம் டயமில் ஒளிபரப்புகிறார்கள். தொடரில் நடிக்கும் திறமை வாய்ந்த நடிகர்களுக்கு வாய்ப்பு அளிக்கும் வகையில் தமிழில் உருவாகும் தொடர்களை ப்ரைம் டைமில்ஒளிபரப்ப வேண்டும் . இவ்வாறு ராதிகா பேசினார். மாலையில் உண்ணாவிரத்தை நடிகர் நட்ராஜ் முடித்து வைத்தார்.





நன்றி: தினமலர்

aanaa
18th August 2016, 12:56 AM
மலையாள சேனல்களில் கவனம் செலுத்தும் தேவயானி


காதலுக்கு கோட்டை கட்டிய தேவயானி சினிமா மார்க்கெட் குறைந்ததும் சின்னத்திரை பக்கம் தாவினார். அவர் நடித்த கோலங்கள் தொடர், சின்னத்திரை வரலாற்றில் பல சரித்திர சாதனைகளை படைத்தது. அதன் பிறகும் பல சீரியல்களில் நடித்தார். சீரியலில் நடிக்க ஒரு நாளைக்கு ஒரு லட்சம் சம்பளம் வாங்கிய முதல் நடிகை தேவயானி தான்.


சீரியலில் நடித்தால் டைட்டில் கேரக்டரில் தான் நடிப்பேன் என்பதில் பிடிவாதமாக இருந்ததாலும் சம்பள விஷயத்தில் இறங்கி வராததாலும் அவருக்கு சீரியல் வாய்ப்புகள் குறைய ஆரம்பித்தது. சினிமாவில் கேரக்டர் ஆர்ட்டிஸ்டாக மாறினார். அதிலும் பெரிய வரவேற்பு இல்லை. தற்போது மலையாள சேனல்கள் பக்கம் தாவி உள்ளார். ஏற்கெனவே பல மலையாளப் படங்களில் நடித்து புகழ்பெற்ற தேவயானி, தற்போது அங்குள்ள சேனல்களின் லைவ் ஷோக்களில் சிறப்பு அழைப்பாளராகவும், நடுவராகவும் கலந்து கொள்கிறார். இதற்காக அடிக்கடி கேரளா பறந்து செல்கிறார்.


சொந்த தயாரிப்பில் ஒரு மலையாள சீரியல் தயாரித்து அதில் நடிக்கும் முடிவில் இருக்கிறார். இதற்காக அவர் அங்குள்ள பிரபல சேனலுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. விரைவில் மலையாள தொடரை தயாரித்து நடிப்பது உறுதி என்று தெரிகிறது.



நன்றி: தினமலர்

aanaa
18th August 2016, 12:59 AM
டப்பிங் சீரியல்களால் கலாச்சாரம் அழிகிறது: சின்னத்தரை கலைஞர்கள் போராட்ட அறிவிப்பு


தமிழ் சேனல்களில் கடந்த சில வருடங்களாகவே இந்தி சீரியல்கள் டப் செய்யப்பட்டு ஒளிபரப்பாகி வருகிறது. இந்தியிலும் சேனல் வைத்திருக்கும் விஜய், ஜீ தொலைக்காட்சிகள் இதனை ஆரம்பித்து வைத்தது, அதன் பிறகு பாலிமர், ராஜ், வசந்த், ஜெயா என அனைத்து சேனல்களும் டப்பிங் சீரியலுக்கு தாவியது. எந்தக் காலத்திலும் டப்பிங் சீரியலை ஒளிபரப்ப மாட்டோம் அது எங்கள் இமேஜை பாதிக்கும் என்று சொல்லிக் கொண்டிருந்த சேனல்கள்கூட இப்போது டப்பிங் சீரியலை ஒளிபரப்பிக் கொண்டிருக்கிறது.


இதனால் நேரடி தமிழ் சீரியல்கள் வெகுவாக குறைந்து நடிகர், நடிகைள், தொழில்நுட்ப கலைஞர்களுக்கு வேலை இழப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் டப்பிங் சீரியல்களுக்கு எதிராக போராட்டம் நடத்த சின்னத்திரை கலைஞர்கள் சங்க கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது.


இதுகுறித்து கூட்டமைப்பின் தலைவர் தளபதி கூறியதாவது: மொழிமாற்று தொடர்களால் தமிழ் தொலைக்காட்சியை நம்பி வாழும் சின்னத்திரை கலைஞர்கள் பெரிதும் பாதிக்கப்படுவதை தடுக்க அறவழி விழிப்புணர்ச்சி போராட்டம் வரும் ஆகஸ்ட் 14ம் தேதி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறவிருக்கிறது. இதில் சின்னத்தரையின் அனைத்து சங்கத்தினரும் திரளாக கலந்து கொள்கிறார்கள்.


அன்று முதல் இன்று வரை சின்னத்திரை சீரியல்களை விரும்பி பார்ப்பதே பெண்கள்தான் அவர்கள் தற்போது இந்தி சீரியல்களில் வரும் பெண்களின் ஆடைகள் முதல் அணிகலன்கள் வரை அனைத்தையும் ரசிக்க ஆரம்பித்துவிட்டார்கள். அவர்களின் ரசனை நம் கலாச்சாரத்தைவிட்டு எங்கேயோ சென்று கொண்டிருக்கிறது. நம் கலாச்சாரத்தை நாம் தான் காப்பாற்ற வேண்டும். இதனை வலியுறுத்தும் வகையில் கையெழுத்து வேட்டையும் நடத்தவிருக்கிறோம். சின்னத்திரை முதல் பெரிய திரை வரை உள்ள அனைத்து சங்கங்களில் உள்ள அனைத்து உறுப்பினர்கள் வரை அனைவரிடமும் கையெழுத்து வாங்கி அதை தமிழக முதல்வரிடம் கொடுக்க திட்டமிட்டுள்ளோம் . என்றார் தளபதி



நன்றி: தினமலர்

கலாச்சாரத்தை வளர்கிறவங்க கூறுகிறாங்க ;;
ஆடு நனைகிறதென்று ஓநாய் அழுகிறதாம்...

aanaa
24th August 2016, 06:40 AM
ராஜ் டி.வியில் ரஜினியின் வாழ்க்கை வரலாறு


சூப்பர் ஸ்டார் ரஜினியின் வாழ்க்கை வரலாற்றை பலர் புத்தகமாக எழுதியுள்ளனர். அவரது வாழ்க்கையை சினிமாவாக்கும் முயற்சிகள் அவரது குடும்பத்தினராலேயே மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ரஜினியின் வாழ்க்கை வரலாற்றை சிவாஜிராவ் டூ கபாலி என்ற தலைப்பில் ராஜ் டி.வி ஒளிபரப்புகிறது. ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் காலை 9 மணிக்கு ஒளிபரப்பாகிறது. பின்னர் வார நாட்களில் மறு ஒளிபரப்பாகிறது.


இதில் ரஜினியின் குழந்தை பருவம், அவர் மூட்டை தூக்கி சம்பாதித்தது, கண்டக்டராக இருந்தது என்பதில் தொடங்கி கபாலி வரையிலான அவரது வளர்ச்சி காட்சிகளாக சித்தரிக்கப்படுகிறது. ஒவ்வொரு படத்திலும் அவரது வளர்ச்சி, கடைபிடித்த ஸ்டைல், சந்தித்த வெற்றிகள், தோல்விகள் என அனைத்தும் இடம் பெறுகிறது. அதோடு ரஜினிக்கு நெருக்கமான எஸ்.பி.முத்துராமன், ஏவிஎம் சரவணன், கலைப்புலி தாணு, கே.எஸ்.ரவிகுமார், பி.வாசு உள்ளிட்ட அவரது சினிமா நண்பர்கள், தனிப்பட்ட நண்பர்களின் பேட்டிகளும் இதில் இடம்பெறுகிறது.



நன்றி: தினமலர்

aanaa
24th August 2016, 06:42 AM
கணவருடன் எந்த பிரச்னையும் இல்லை - திவ்யதர்ஷினி!


பெப்ஸி உமாவுக்கு பிறகு ஏராளமான தொகுப்பாளினிகள் சேனல்களுக்கு வந்த போதும், ஓரிருவர்தான் அதில் பேசப்பட்டு வருகிறார்கள். அந்த வரிசையில் சமீபகாலமாக முன்னணி வகித்து வருபவர் விஜய் டிவி திவ்யதர்ஷினி. காபி வித் டிடி நிகழ்ச்சி மூலம் பிரபலமான இவர், தனது கலகலப்பான தொகுப்புகள் மூலம் ஏராளமான ரசிகர்களை பெற்று வைத்திருக்கிறார்.


கடந்த ஆண்டு, விஜய் டிவியில் இருந்து டிடி வெளியேறி விட்டதாக ஒரு வதந்தி பரவியது. ஆனால் அதையடுத்து அவர் மீண்டும் விஜய் டிவி நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். இந்நிலையில், கடந்த 2014ம் ஆண்டு ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரன் என்பவரை திருமணம் செய்து கொண்டார் அவர். ஆனால் தற்போது திவ்யதர்ஷினி-ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரனுக்கிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு அவர்கள் பிரிந்து வாழ்ந்து வருவதாக இணையதளங்களில் செய்தி பரவியுள்ளது.


ஆனால் இதை திவ்யதர்ஷினிதரப்பு மறுத்துள்ளனர். திவ்யதர்ஷினி கணவருடன் சந்தோசமாக வாழ்ந்து கொண்டிருக்கிறார். அவர்களுக்கிடையே எந்தவித பிரச்சினையும் இல்லை. இந்த செய்தியை யாரோ வேண்டுமென்றே பரப்பி விட்டுள்ளனர் என்கிறார்கள்.

http://img1.dinamalar.com/cini//CNewsImages/NTLRG_20160820113418007854.jpg



நன்றி: தினமலர்

aanaa
24th August 2016, 06:48 AM
சரித்திர தொடர் தயாரிக்கும் நடிகை குஷ்பு


பிரபல சினிமா நடிகையான குஷ்பு, கோடீஸ்வரி நிகழ்ச்சி மூலம் சின்னத்திரைக்கு வந்தார். பின்னர், ஜாக்பாட், பூவா தலையா, சிம்ப்ளி குஷ்பூ, நினைத்தாலே இனிக்கும் போன்ற நிகழ்ச்சிகளில் சில சேனல்களுக்காக தொகுத்து வழங்கினார். அதோடு, மருமகள், ஜனனி, குங்குமம், கல்கி உள்பட பல தொடர்களிலும் நடித்தார்.


இந்நிலையில், அடுத்தபடியாக அவர் ஒரு சரித்திர தொடரை முன்னணி சேனல் ஒன்றுக்காக தயாரிக்கப்போகிறாராம். இந்த சேனலில் நீண்டகாலமாக முக்கிய அங்கம் வகித்து வருபவரான ராதிகா நடிப்பில் தற்போது வாணி ராணி என்ற தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. ஆனால், அடுத்தபடியாக ராதிகாவுக்கு கொடுக்கப்பட்டு வந்த நேரத்தில், குஷ்புவின் தொடரை ஒளிபரப்பு செய்து கொள்ள ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதாம். அப்படி தான் நடிக்கும் தொடரில் குஷ்பு, பர்ஸ்ட் காப்பி அடிப்படையில் தயாரிப்பாளராக மட்டும் செயல்படப்போகிறாராம்.



நன்றி: தினமலர்

aanaa
31st August 2016, 07:34 AM
லட்சுமி ராமகிருஷ்ணனுக்கு புதிய சிக்கல்..!


சொல்வதெல்லாம் உண்மை என்கிற நிகழ்ச்சியே அதை திறம்பட நடத்தி வரும் லட்சுமி ராமகிருஷ்ணனால் தான் பிரபலமானது என்பது உண்மை.. தவிர அந்த நிகழ்ச்சியின் மூலம் லட்சுமி ராமகிருஷ்ணனும் இன்னும் பிரபலமானார் என்பதும் உண்மை.. ஆனால் அந்த நிகழ்ச்சியை கிண்டலடித்தும், அதில் லட்சுமி ராமகிருஷ்ணன் பேசும் சில வசனங்களை கிண்டலடித்தும் சில மாதங்கள் முன்புவரை ஒரு பெரிய அக்கப்போரே நடந்தது.. தற்போது அவை சற்றே அமுங்கியுள்ள நிலையில் லட்சுமி ராமகிருஷ்ணனுக்கு வேறுவகையில் பிரச்சனை ஒன்று தலைதூக்கியுள்ளது..


இந்த நிகழ்ச்சியை பொறுத்தவரை இரண்டு தரப்பினர் பங்கேற்கும்போது, இருவரின் அந்தரங்க உண்மைகள் அம்பலமாவது என்பது எழுதப்படாத விதி. தவிர இதுபற்றி கவலைப்படாதவர்கள் தான் இந்த நிகழ்ச்சியிலும் பங்கேற்கிறார்கள் என்றும் சொல்லலாம். ஆனாலும் நீதிபதி (!?) லட்சுமி ராமகிருஷ்ணன் கூறும் தீர்ப்பு யாரோ ஒருவருக்குத்தான் சாதகமாக இருக்கிறதே, தவிர மற்றவருக்கு பாதகமாகத்தான் அமைகிறது.. அந்தவகையில் இதில் லேட்டஸ்டாக கலந்துகொண்ட நாகப்பன் என்பவர், இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சில நாட்களிலேயே மன உளைச்சல் தாளாமல் தற்கொலை செய்துகொண்டாராம்..


இதற்கு காரணமாக அவரது உறவினர்கள் குறிப்பிடுவது, சம்பந்தப்பட்ட சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியில் கலந்துகொண்ட தங்களது நாகப்பனை, ஜட்ஜ் பாணியில் லட்சுமி ராமகிருஷ்ணன் ரொம்பவே அவமானப்படுத்தும் விதமாக, மனதை புண்படுத்தும் விதமாக கேள்விகளை கேட்டு நோகடித்து விட்டார் என்றும், அதனால் அவமானம் தாங்காமல் தான் தங்களது நாகப்பன் தற்கொலை செய்துகொண்டார் என்றும் குற்றம் சாட்டியுள்ளார்களாம். இதுகுறித்து லட்சுமி ராமகிருஷ்ணன் மேல் வழக்கு தொடுத்து நீதிமன்றம் மூலம் நடவடிக்கை எடுக்கவும் முயற்சி செய்து வருகிறார்களாம்.



நன்றி: தினமலர்

aanaa
8th September 2016, 07:32 PM
சின்னதிரைக்கு வரும் மெகா ஸ்டார் சிரஞ்சீவி?


தெலுங்கு திரை உலகின் மெகா ஸ்டார் சிரஞ்சீவி தற்போது கை எண் 150 எனும் தனது 150வது படத்தில் நடித்து வருகின்றார். இயக்குனர் விவி விநாயக் இயக்கும் இப்படத்தின் படப்பிடிப்புகளில் பிசியாக ஈடுபட்டு வரும் சிரஞ்சீவி சின்னத்திரை நிகழ்ச்சி ஒன்றை தொகுத்து வழங்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன.


மீலூ எவரு கோடீஸ்வரடு எனும் நிகழ்ச்சியை முதலில் பிரபல தெலுங்கு நடிகர் நாகார்ஜூனா தொகுத்து வழங்கினார். இடையில் நிறுத்தப்பட்ட இந்த நிகழ்ச்சியை மீண்டும் சிரஞ்சீவி தொகுத்து வழங்கவுள்ளதாகக் கூறப்படுகின்றது. இத்தகவல் உறுதிபடுத்தப்பட்டால் சிரஞ்சீவி நடத்தும் முதல் தொலைக்காட்சி நிகழ்ச்சி இதுவாகும்.


சிரஞ்சீவியின் 150வது படத்தை அவரது மகன் ராம் சரண் லைக்கா நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கின்றார். இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் இரட்டை வேடங்களில் நடித்த கத்தி திரைப்படம் தெலுங்கில் சிரஞ்சீவி நடிக்க கைதி எண் 150 என்ற பெயரில் உருவாகின்றது. காஜல் அகர்வால் சிரஞ்சீவிக்கு ஜோடியாக நடிக்கும் இப்படத்தில் நடிகை விஜயசாந்தி சிறப்பு தோற்றத்தில் நடிக்கின்றாராம்.
http://img1.dinamalar.com/cini//CNewsImages/NTLRG_20160907163019995146.jpg



நன்றி: தினமலர்

aanaa
8th September 2016, 07:33 PM
மீண்டும் சினிமாவுக்கு வருகிறார் சரண்யா


புதிய தலைமுறை சேனலில் 4 ஆண்டுகளாக நட்சத்திர செய்தி வாசிப்பாளராக பணியாற்றியவர் சரண்யா. ‛சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது , ‛ஆயிரம் முத்தங்களுடன் தேன்மொழி' போன்ற படங்களிலும் நடித்தார். திடீரென லண்டன் சென்றார். அங்கு சில மாதங்கள் இருந்துவிட்டு இப்போது மீண்டும் சின்னத்திரைக்கு திரும்பியிருக்கிறார். தற்போது நியூஸ் 18 சேனலில் செய்தியாளராக பணிக்கு சேர்ந்திருக்கிறார்.


தற்போது செய்தியாளராக பணியாற்றினாலும் தொடர்ந்து சினிமாவில் நடிக்க வேண்டும் என்பதே சரண்யாவின் விருப்பமாம், இதனால் நல்ல வாய்ப்புக்காக காத்திருக்கிறார். "சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது சர்வதேச படவிழாக்களில் நிறைய விருது வாங்கியது. எனக்கும் நல்ல பெயரை பெற்றுத்தந்தது. நட்புக்காக அந்தப் படத்தில் நடித்தேன். மீண்டும் நடிக்கும் எண்ணம் இல்லாமல் இருந்தது. தற்போது தோழிகள் உனக்கு நடிப்பு நன்றாக வருகிறது என்று வற்புறுத்துவதால் நடிக்க முடிவு செய்திருக்கிறேன். எனது செய்தியாளர் பணிக்கு பங்கம் வராமல் நல்ல கேரக்டர்கள் வரும்போது நடிப்பேன். மரத்தை சுற்றி டூயட் பாடுகிற சாதாரண ஹீரோயின்கள் கேரக்டரில் நடிக்க விருப்பம் இல்லை. நல்ல அழுத்தமான கேரக்டர்களில் நடிக்க ஆர்வமாக இருக்கிறேன்" என்கிறார் சரண்யா.



நன்றி: தினமலர்

aanaa
8th September 2016, 07:35 PM
தொகுப்பாளினி ஆனார் விஜி சந்திரசேகர்


நடிகை சரிதாவின் தங்கை விஜி சந்திரசேகர். கே.பாலச்சந்தர் இயக்கிய தில்லுமுல்லு' படத்தின் மூலம் நடிகை ஆனார். அதன் பிறகு பல படங்களில் நடித்த அவர் பின்னர் சின்னத்திரைக்கு வந்தார். தூர்தர்ஷனில் ஒளிபரப்பான முப்பது கோடி முகங்கள் தொடர் மூலம் நடிக்க ஆரம்பித்தார். அதன் பிறகு பந்தம், வாழப்பிறந்தவர்கள், ஜாதி மல்லி, அலைகள், பெண், அழகி உள்பட 20க்கும் மேற்பட்ட தொடர்களில் நடித்தார். ஆரோகணம் படத்தின் மூலம் மீண்டும் சினிமாவில் நடிக்க ஆரம்பித்துள்ளார்.


தற்போது தொகுப்பாளினி என்ற புதிய அவதாரத்தை எடுத்துள்ளார். புதுயுகம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக இருக்கும் உறவைத் தேடி என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார். அதாவது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சிக்கு நேர் எதிர்மாறான நிகழ்ச்சி. ஆண்டுக்கணக்கில் பிரிந்திருக்கும் சொந்தங்களை ஒரே இடத்தில் உட்கார வைத்து பேசி அவர்களுக்குள் இருக்கும் மனவருத்தங்களை போக்கி ஒற்றுமையாக்கி அனுப்பி வைக்கும் நிகழ்ச்சி.


வருகிற 8ம் தேதி முதல் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது. ஒவ்வொரு வாரமும் வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமையில் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகிறது. நிகழ்ச்சி வெற்றி பெற்றால் வார நாட்கள் முழுமைக்கும் விரிவுபடுத்தப்படும் என தெரிகிறது.



நன்றி: தினமலர்

aanaa
8th September 2016, 07:36 PM
சினிமா ஹீரோவான சரவணன்-மீனாட்சி கவின்ராஜ்!


விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி சீசன்-2வில் நாயகனாக நடித்தவர் கவின் ராஜ். அவர் நடித்த வேட்டையன் என்ற கதாபாத்திரம் பெரிய அளவில் ரீச் ஆனது. அதோடு, கனா காணும் காலங்கள், தாயுமானவன் போன்ற சீரியல்களிலும் நடித்திருக்கும் அவர், பீட்சா, இன்று நேற்று நாளை ஆகிய படங்களிலும் சிறிய வேடங்ளில் நடித்தார். தற்போது விக்ரம் பிரபு நாயகனாக நடித்துள்ள முடிசூடா மன்னன் படத்தில் முக்கிய ரோலில் நடித்திருக்கிறார் கவின்.


இந்த நிலையில், புதுமுக இயக்குனர் சிவகுமார் இயக்கும் நட்புனா என்னானு தெரியுமா -என்ற படத்தில் ஹீரோவாக நடிக்கிறார். இந்த படத்தில் பீட்சா, சேதுபதி உள்பட பல படங்களில் நாயகியாக நடித்த ரம்யா நம்பீசன் அவருக்கு ஜோடியாக நடிக்கிறார். ஆக, முதல் படத்திலேயே பிரபல நடிகை கவின்ராஜ்க்கு ஜோடியாக நடிக்கிறார். நட்பை மையமாக வைத்து இந்த படம் உருவாகிறது.



நன்றி: தினமலர்

aanaa
23rd September 2016, 07:09 AM
தெலுங்கு சேனலில் வித்யூலேகா ராமன்


தமிழில் வளர்ந்து வரும் காமெடி நடிகை வித்யூலேகா ராமன். பிரபல குணசித்ர நடிகர் மோகன் ராமனின் மகள். நாடகத் துறையிலிருந்து சினிமாவுக்கு வந்தவர். விண்னைத்தாண்டி வருவாயா படத்தில் த்ரிஷாவின் தோழியாக அறிமுகமானவர் இப்போது முக்கியமான காமெடி நடிகை. தற்போது தமிழை விட தெலுங்கில் அதிக படங்களில் நடித்து வருகிறார். தெலுங்கில் சரளமாக பேசக்கூடியவர் என்பது கூடுதல் சிறப்பு.


இந்த மாதத்தின் துவக்கத்தில் தெலுங்கில் ஆரம்பிக்கப்பட்ட ஜீ சினிமாலு என்ற சேனலின் பிராண்ட் அம்பாசிடராகியுள்ளார். ஜீ குருப்பின் தெலுங்கு பிரிவின் கீழ் இந்த சேனல் தொடங்கப்பட்டுள்ளது. ஒரு மூவீ சேனல். தொடங்கிய வேகத்தில் 60 கோடி ரூபாயில் 30 புதிய தெலுங்கு படங்களின் ஒளிபரப்பு உரிமைய பெற்றுள்ளது. இந்த சேனலில் வித்யூலேகா ராமன் டிராமா ஜுனியர் என்ற நிகழ்ச்சியை முதன் முறையாக தொகுத்து வழங்குகிறார். இது சிறுவர் சிறுமிகள் கலந்து கொண்டு நடிப்பு திறமையை வெளிப்படுத்தும் நிகழ்ச்சி. ஜீ சேனல் தனது தென்னிந்திய சேனல் அனைத்திலும் இந்த நிகழ்ச்சியை வெவ்வேறு பெயர்களில் நடத்தி வருகிறது.
http://img1.dinamalar.com/cini//CNewsImages/NTLRG_20160922103852175997.jpg



நன்றி: தினமலர்

aanaa
23rd September 2016, 07:16 AM
செய்தி வாசிப்பாளர்களுக்கு விருந்து கொடுத்த பாத்திமா பாபு

http://img1.dinamalar.com/cini//CNewsImages/NTLRG_20160918130604515785.jpg


ஒரு காலத்தில் நட்சத்திர தொகுப்பாளினியாக இருந்தவர் பாத்திமா பாபு. செய்தி எப்படி இருந்தாலும் இவர் முகத்தை பார்ப்பதற்கென்றே அன்று செய்தியை பார்த்தவர்கள் இருக்கிறார்கள். தனித்தன்மை வாய்ந்த உச்சரிப்பும், செய்திக்கேற்ற புருவ அசையும் பாத்திமாவின் தனித்தன்மை. அவரைப் பற்றி அப்போது பரபரப்பாக வதந்தி கிளம்பி பின்னர் அடங்கும்.


ஒரு காலத்தில் சினிமாவில் நடிக்கவே மாட்டேன் என்றவர் பின்னர் நடித்தார். தற்போது செய்தி வாசிப்பிலிருந்தும், நடிப்பிலிருந்தும் விலகி இருக்கும் பாத்திமா பாபு. அ.தி.மு.கவில் இணைந்து அந்த கட்சிக்காக பிரச்சாரம் செய்தார்.


தற்போது செய்தி சேனல்கள் பெருகிவிட்டது. புதிது புதிதாக செய்தி வாசிப்பாளர்கள் வந்து விட்டார்கள். ஒவ்வொருவரும் தனித்தனி ஸ்டைலுடன் செய்தி வாசிக்கிறார்கள். இந்த இளம் செய்தி வாசிப்பாளர்களுக்கு விருந்து கொடுத்து கவுரவிக்க விரும்பிய பாத்திமா பாபு, அவர்களை தனது வீட்டுக்கு அழைத்து விருந்து கொடுத்து அவர்களுடன் பேசி மகிழ்ந்தார். அப்போது தனது செய்தி வாசிப்பு அனுபங்களையும் அவர்களுடன் பகிர்ந்து கொண்டார். இதில் அனைத்து செய்தி சேனல்களையும் சேர்ந்த செய்தி வாசிப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
நன்றி: தினமலர்

aanaa
23rd September 2016, 07:26 AM
விழா தொகுப்பாளினி ஆனார் நிவேதிதா


சின்னத்திரையில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் அத்தனை தொகுப்பாளினிகளுக்கும் பொது விழாக்களில் தொகுப்பாளினியாகவேண்டும் என்பதுதான் கனவாக இருக்கும். காரணம் அதில் விளம்பர வெளிச்சமும் அதிகம், சம்பளமும் அதிகம், பலரின் அறிமுகமும் கிடைக்கும். அந்த வசையில் செந்தமிழ் பெண்ணே என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் நிவேதிதாவுக்கு அடித்தது பெரிய அதிர்ஷ்டம்.


சமீபத்தில் பிரமாண்டமாக நடந்த விளம்பரத்துறைக்கான டி.அவா£ட் நிகழ்ச்சியை அசாருடன் இணைந்து தொகுத்து வழங்கினார். நிவேதிதாவின் நுனிநாக்கு ஆங்கிலமும், டைமிங் சென்சும் அனைவரையும் கவர்ந்தது. நிகழ்ச்சிக்கு வந்திருந்த திவ்யதர்ஷினி நிவேதிதாவை கட்டிப்பிடித்து பாராட்டினார். பிலிம்ஃபேர் அவார்ட் மாதிரியான பெரிய நிகழ்ச்சியில் தொகுப்பாளினியாக கலக்க வேண்டும் என்பதே நிவேதிதாவின் ஆசையாம்.

நன்றி: தினமலர்

aanaa
28th September 2016, 08:06 PM
பர்சனல் பற்றி பேச மறுக்கும் தொகுப்பாளினி ரம்யா!


பெப்ஸி உமாவுக்கு பிறகு பேசப்படும் சில இளையதலைமுறை தொகுப்பாளினிகளில் ரம்யா குறிப்பிடத்தக்கவர். மொழி மற்றும் மணிரத்னத்தின் ஓ காதல் கண்மணி உள்பட சில படங்களிலும் நடித்துள்ளார். சேனல்கள் தவிர பல விழாக்களிலும் தொகுப்பாளினியாக பங்கேற்று தனது கலகலப்பான பேச்சினால் அனைவரையும் கவர்ந்து வருகிறார்.


மேலும், 2014ல் அபராஜித் என்பவரை திருமணம் செய்து கொண்ட ரம்யா, ஒரே வருடத்தில் அவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு தற்போது பிரிந்து வாழ்ந்து வருகிறார். அதோடு விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்து விட்டு தீர்ப்புக்காக காத்திருக்கிறார். இந்த நிலையில், யாராவது மீடியாவினர் தான் தாய் வீட்டில் வாழ்ந்து வருவது பற்றி கேட்டால், மீடியாவின் நான் பங்கேற்று வரும் நிகழ்ச்சிகள் பற்றி கேளுங்கள் சொல்கிறேன். ஆனால் சொந்த விசயம் பற்றி எதுவும் கேட்காதீர்கள் என்று அந்த பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்து விடுகிறார் ரம்யா.
நன்றி: தினமலர்

aanaa
28th September 2016, 08:09 PM
டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியிலிருந்து விலகினார் ராதிகா


ஜீ தமிழ் தொலைக்காட்சியில் கடந்த 17ந் தேதி முதல் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி டான்ஸ் ஜோடி டான்ஸ். இது மற்ற நடன நிகழ்ச்சிகளிலிருந்து வித்தியாசமானது. வெற்றி பெறுபவர்களுடன் நடிகைகள் இணைந்து ஆட இருக்கிறார்கள். இதற்கான போட்டியாளர்கள் தமிழ்நாடு முழுவதிலிமிருந்து தேர்வாகி இருக்கிறார்கள். அவர்களுடன் நடனமாட பியா, அனுயா, சாண்ட்ரா, மிஷா கோஷல் உள்ளிட்ட நடிகைகள் தயாராக இருக்கிறார்கள்.


இந்த நிகழ்ச்சியில் முதலில் நடிகை ராதிகாவும், சினேகாவும் நடுவர்களாக பணியாற்றுவார்கள் என்று விளம்பரம் செய்யப்பட்டது. தற்போது ராதிகா நிகழ்ச்சியிலிருந்து விலகிக் கொண்டார். அவருக்கு பதிலாக நடிகை சுதா சந்திரன் இணைந்துள்ளார். கூடுதலாக கவுதமியும் நடுவராக சேர்ந்துள்ளார்.


ராதிகா விலகியதற்கு இரண்டு காரணங்கள் சொல்லப்படுகிறது. ராதிகா கேட்ட சம்பளத்தை சேனல் தரத் தயங்கியது ஒரு காரணம். அவரது தொடர்கள் தற்போது ஒளிபரப்பாகி வரும் சேனல் நிர்வாகம் டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டால் ஒளிபரப்பாகும் தொடர்கள் நிறுத்தப்படும் என்று எச்சரித்ததால் விலக நேரிட்டதாகவும் கூறப்படுகிறது. நடுவர்களில் சினேகா மட்டுமே இளம் நடிகை என்பதால் அவருக்கு முக்கியத்துவம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
நன்றி: தினமலர்

aanaa
28th September 2016, 08:13 PM
ஹீரோவானார் டி.வி தொகுப்பாளர்


சந்தானம், சிவகார்த்திகேயன், மா.பா.கா.ஆனந்த் வரிசையில் ஹீரோவாகிவிட்டார் தொகுப்பாளர் சஞ்சய். மியூசில் சேனலில் நேயர்களோடு கடலை போட்டுக்கொண்டிருந்தவர் மியாவ் படத்தில் நான்கு ஹீரோக்களில் ஒருவர். ஹீரோவானது பற்றி அவர் கூறியதாவது:


எனக்கு சின்ன வயசுலேர்ந்தே சினிமால நடிக்கணும்னு தான் ஆசை. ஆனா படிச்சது ஹோட்டல் மேனேஜ்மெண்ட். முடிச்சுட்டு செஃப்பா வேலை பார்த்துட்டு இருந்தப்ப நடிக்க சான்ஸ் கேட்டு ஒவ்வொரு ஆபிஸா ஏறி இறங்கினேன். நான்கு ஆண்டுகள் அப்படியே போனது. எந்த வழியில உள்ளே போறதுனு தெரியாம சேனல்ல ட்ரை பண்ணலாம்னு அந்த முயற்சிகள்ல ஈடுபட்டேன். மியூசிக் சேனல் தொகுப்பாளராகிவிட்டேன். விஜேங்ற அடையாளம் தான் என்னை ஹீரோவாக்கியது.


சில படங்கள்ல பேசி​க்​கிட்டு இருக்கேன். லீட் ரோல்ஸ் பண்ணனும். இல்லை​ன்​னா பெரிய ஹீரோக்கள் படங்கள்ல சப்போர்டிவ் ரோல் பண்ணனும். பிடிச்ச கேரக்டர் தான் பண்ணனும்னு உறுதியா இருக்கேன். என்கிறார் சஞ்சய்.
நன்றி: தினமலர்

aanaa
28th September 2016, 08:16 PM
சீரியல் தயாரிப்பாளரானார் சரத்குமார்


கண் சிமிட்டும் நேரம் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் சரத்குமார், பத்து படங்களுக்குமேல் வில்லனாக நடித்துவிட்டு அதன் பிறகு நம்ம ஊரு மாரியம்மா படத்தின் மூலம் ஹீரோவானர். சேரன் பாண்டியன் அடையாளம் கொடுத்தது, இதுவரை 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து விட்டார். அரசியலுக்கு சென்ற சரத்குமார், தி.மு.கவில் இணைந்து பாரளுமன்ற உறுப்பினர் ஆனார். பின்பு தனிக்கட்சி தொடங்கி சட்டமன்ற உறுப்பினர் ஆனார். 9 ஆண்டுகளுக்கும் மேலாக தென்னிந்திய நடிகர் சங்கத்தில் பல்வேறு பொறுப்புகளை வகித்தார். கடைசியாக தலைவராக இருந்தார்.


இப்படி ஏறுமுகமாக இருந்த சரத்குமாரின் வாழ்க்கையில் சமீபகாலமா சற்று சரிவு. பட வாய்ப்புகள் குறைந்து விட்டது. நடிகர் சங்க தேர்தலில் தோற்றார். சட்டமன்ற தேர்தலிலும் தோற்றார். இப்போது நடிகர் சங்க ஊழல் குற்றச்சாட்டுகளில் சிக்கி உள்ளார். தற்போது ஹீரோ ஆசையை விட்டுவிட்டு குணசித்ர வேடங்களில் நடிக்கத் தொடங்கிவிட்டார். நடிகர் சங்கத்திலிருந்து ஒதுங்கி இருக்கிறார். அரசியலிலும் ஓரங்கட்டப்பட்டுவிட்டார்.


இந்த நிலையில் சரத்குமார் அடுத்த அவதாரமாக சீரியல் தயாரிப்பாளராகியிருக்கிறார். இதற்காக தனி தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்கியிருக்கிறார். அவர் முதலில் தயாரிக்கப்போகும் தொடருக்கு விண்ணைத்தாண்டி வருவாயா என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. பல சின்னத்திரை சீரியல்களை தயாரித்த அனுபவம் மிக்க சுந்தர்.கே.விஜயன் இயக்குகிறார்.


இளசுகளின் காதலை மையப்படுத்தி உருவாக இருக்கும் இந்த தொடரில் நடிக்க நடிகர், நடிகைகள் தேர்வு நடந்து வருகிறது. சீரியல் தயாரிப்புக்காக விஜய் டி.வியுடன் ஒப்பந்தம் போட்டிருக்கிறார் சரத்குமார். ஒரே நேரத்தில் பல தொடர்களை தயாரிக்கும் திட்டத்தில் இருக்கிறார்.


மனைவி ராதிகா சரத்குமாரின் தயாரிப்பு நிறுனமான ரேடான் நிறுவனத்திடமிருந்து தனித்த இந்த நிறுவனம் இயங்கும் என்று கூறப்படுகிறது. சரத்குமார் சின்னத்திரைக்கு புதியவர் அல்ல. நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி நிகழ்ச்சியை நடத்தியவர் "நான் ரெடி நீங்க ரெடியா" என்ற அவரது வசனம் புகழ்பெற்றது. இப்போது மீண்டும் சின்னத்திரைக்கு வந்திருக்கிறார்.
நன்றி: தினமலர்

aanaa
28th September 2016, 08:18 PM
மீண்டும் மலையாள சீரியலில் நடிக்கிறார் சந்திரா


பாசமலர் தொடரில் நடித்து வருகிறவர் சந்திரா லக்ஷ்மண். இந்த தொடர் மூலம் பெண்கள் மத்தியில் தனக்கென தனி இடத்தை பிடித்திருப்பவர். ஆயிரம் எபிசோட்களிலும் வந்த ஒரே நடிகை என்ற பெயரும் சந்திராவுக்கு உண்டு.


சந்திராவுக்கு தனது தாய்மொழியான மலையாள சீரியல்களில் நடிக்கும் ஆர்வம் எப்போதும் உண்டு. 7 வருடங்களுக்கு முன்பு மழையறியாதே என்ற மலையாள தொடரில் நடித்தார். மேலும் சில தொடர்களிலும் நடித்துள்ளார். பாசமலருக்கு பிறகு மலையாளத்தில் நடிக்கவில்லை. தற்போது மீண்டும் மலையாள தொடர் ஒன்றில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார். விரைவில் அதுபற்றிய அறிவிப்பை தயாரிப்பு நிறுவனம் வெளியிட இருக்கிறது. "மலையாள தொடர்களின் கதைகள் ஆழமாக இருக்கும். நடிப்பதற்கு நிறைய வாய்ப்பு இருக்கும். அதனால்தான் மலையாள சீரியல்கள் மிகவும் பிடிக்கும்". என்கிறார் சந்திரா லக்ஷ்மண்.
நன்றி: தினமலர்

aanaa
28th September 2016, 08:23 PM
நச்சுன்னு கேள்வி கேட்டால் விஜய் சேதுபதியை சந்திக்கலாம்; ஜீ தமிழ் சேனல் ஏற்பாடு


ஜீ தமிழ் சேனல் புதிய நிகழ்ச்சி ஒன்றை அறிமுகப்படுத்த இருக்கிறது. முன்னணி நட்சத்திரங்களை நோக்கி ரசிகர்களுக்கு நிறைய கேள்வி இருக்கும். அந்த கேள்விகளை ஜீ தமிழ் சேனல் டுவிட்டரில் கேட்க வேண்டும். நச்சுன்னு கேள்வி கேட்டவர்களை தேர்வு செய்து அவர்களை சென்னைக்கு வரவழைத்து சம்பந்தப்பட்ட நடிகரை, நடிகையை நேரில் சந்திக்க வைத்து, இன்னும் பல கேள்விகள் கேட்க வைத்து அதையே ஒரு நிகழ்ச்சியாக தயாரித்து ஒளிபரப்ப இருக்கிறார்கள். அதேபோல நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் பிரபல நடிகர்களின் வசனத்தை டப்மாஸாக பேசி அனுப்பியும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளலாம்.


இந்த நிகழ்சியின் முதல் செலிபிரிட்டி விஜய் சேதுபதி. அவரிடம் கேள்விகளை டுவிட்டர் மூலம் இப்போதே கேட்கலாம். தேர்ந்தெடுக்கப்படுகிறவர்கள் விஜய் சேதுபதியை சந்திக்கலாம். நேரில் இன்னும் பல கேள்விகளை கேட்கலாம். டி.வியிலும் தோன்றலாம்.
நன்றி: தினமலர்

aanaa
7th October 2016, 05:01 AM
அம்மா கணக்கு, விசாரணை: விஜய் டி.வியின் ஆயுத பூஜை விருந்து.


வெற்றி மாறன் இயக்கி பல வெற்றியையும் விருதுகளையும் அறுவடை செய்த படம் விசாரணை. அட்டகத்தி தினேஷ், சமுத்திரகனி, ஆனந்தி, ஆடுகளம் முருகதாஸ் நடித்திருந்தனர். ஜி.வி.பிரகாஷ் இசை, ஆர்.ராமலிங்கம் ஒளிப்பதிவு. சமுத்திரகனிக்கு சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருதை பெற்றுத் தந்த படம்.


போலீசின் விசாரணை வளையத்துக்குள் சிக்கும் அப்பாவிகளின் துயரத்தை வலியும், ரத்தமுமாய் சொன்ன படம். வொண்டர்பார் பிலிம்ஸ் சார்பில் தனுஷ் தயாரித்திருந்தார். கடந்த பிப்ரவரி மாதம் வெளியான படம் 6 மாதங்களுக்கு பிறகு விஜய் டி.வியில் ஆயுதப பூஜை விருந்தாக வருகிற 10ந் தேதி பகல் 12 மணிக்கு ஒளிபரப்பாகிறது.


இந்தியில் வெளியாகி வெற்றி பெற்ற படம் நில் பட்டே சனட்டா. அஸ்வின் அய்யர் திவாரி இயக்கிய இந்தப் படம் அப்படியே தமிழில் ரீமேக் செய்யப்பட்டது. அஸ்வின் அய்யர் திவாரியே இயக்கினார். தனுஷின் வொண்டர்பார் நிறுவனம் தயாரித்தது. அமலா பால், ரேவதி, சமுத்திரகனியுடன் யுவலட்சுமி நடித்திருந்தனர். இளையராஜா இசை அமைத்திருந்தார், கவுமிக் யு அரி ஒளிப்பதிவு செய்திருந்தார். படிப்பு மீது அக்கறை இல்லாத மகளை படிக்க வைக்க தானே மாணவியாக மாறி பள்ளிக்குச் செல்லும் ஒரு தாயின் கதை. அமலாபால் மற்றும் யுவலட்சுமியின் நடிப்பு பெரிய அளவில் பேசப்பட்ட படம்.


கடந்த ஜுன் மாதம் வெளிவந்த இந்தப் படம், வெளிவந்து 3 மாதங்கள் ஆன நிலையில் சின்னத்திரைக்கு வந்து விட்டது. வருகிற 11ந் தேதி அன்று விஜயதசமி பூஜையை முன்னிட்டு விஜய் டி.வி. அம்மா கணக்கு படத்தை பகல் 12 மணிக்கு ஒளிபரப்புகிறது. திரையரங்கில் தவறவிட்ட ஒவ்வொரு அம்மாக்களும் காண வேண்டிய படம்.http://img1.dinamalar.com/cini//CNewsImages/NTLRG_20161006103126859908.jpg

நன்றி: தினமலர்

aanaa
7th October 2016, 05:03 AM
சினிமாவில் நடிக்க ஆர்வம் காட்டும் மகேஸ்வரி


புதுக்கவிதை, தாயுமானவன் தொடர்களின் நாயகி மகேஸ்வரி. அழகாலும் நடிப்பாலும் ரசிகர்களையும், பெண்களையும் டி.வி.முன் கட்டிப்போட்டவர். புகழின் உச்சியில் இருக்கும்போதே திருமணம் செய்து கொண்டு குடும்ப வாழ்க்கையில் செட்டிலானவர். தற்போது ஒரு குழந்தைக்கு தாயாகியிருக்கும் நிலையில் மீண்டும் நடிக்க வந்திருக்கிறார், சீரியலில் அல்ல சினிமாவில்.


மகேஸ்வரிக்கு குடும்ப வாழ்க்கை சரியாக அமையவில்லை. கணவரை பிரிந்து வாழ்க்கிறார். இந்த நிலையில் சென்னை 28 இரண்டாம் பாகத்தின் மூலம் மீண்டும் நடிக்க வந்திருக்கிறார். இந்த படம் வெளிவருவதற்கு முன்பே அடுத்து தண்ணீர் தண்ணீர் என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார்/


சீரியலில் நடிக்க வாய்ப்புகள் வந்தாலும் சீரியலில் நடிப்பது சினிமா வாய்ப்புக்கு பாதகமாக இருக்கும் என்பதால் சீரியலில் நடிப்பதை தவிர்த்து விட்டார். ஆனால் தொகுப்பாளினியாக சின்னத்திரையில் தொடர முடிவு செய்திருக்கிறார்.
நன்றி: தினமலர்

aanaa
7th October 2016, 05:19 AM
சீரியல் தயாரிப்பாளரானார் சரத்குமார்


கண் சிமிட்டும் நேரம் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் சரத்குமார், பத்து படங்களுக்குமேல் வில்லனாக நடித்துவிட்டு அதன் பிறகு நம்ம ஊரு மாரியம்மா படத்தின் மூலம் ஹீரோவானர். சேரன் பாண்டியன் அடையாளம் கொடுத்தது, இதுவரை 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து விட்டார். அரசியலுக்கு சென்ற சரத்குமார், தி.மு.கவில் இணைந்து பாரளுமன்ற உறுப்பினர் ஆனார். பின்பு தனிக்கட்சி தொடங்கி சட்டமன்ற உறுப்பினர் ஆனார். 9 ஆண்டுகளுக்கும் மேலாக தென்னிந்திய நடிகர் சங்கத்தில் பல்வேறு பொறுப்புகளை வகித்தார். கடைசியாக தலைவராக இருந்தார்.


இப்படி ஏறுமுகமாக இருந்த சரத்குமாரின் வாழ்க்கையில் சமீபகாலமா சற்று சரிவு. பட வாய்ப்புகள் குறைந்து விட்டது. நடிகர் சங்க தேர்தலில் தோற்றார். சட்டமன்ற தேர்தலிலும் தோற்றார். இப்போது நடிகர் சங்க ஊழல் குற்றச்சாட்டுகளில் சிக்கி உள்ளார். தற்போது ஹீரோ ஆசையை விட்டுவிட்டு குணசித்ர வேடங்களில் நடிக்கத் தொடங்கிவிட்டார். நடிகர் சங்கத்திலிருந்து ஒதுங்கி இருக்கிறார். அரசியலிலும் ஓரங்கட்டப்பட்டுவிட்டார்.


இந்த நிலையில் சரத்குமார் அடுத்த அவதாரமாக சீரியல் தயாரிப்பாளராகியிருக்கிறார். இதற்காக தனி தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்கியிருக்கிறார். அவர் முதலில் தயாரிக்கப்போகும் தொடருக்கு விண்ணைத்தாண்டி வருவாயா என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. பல சின்னத்திரை சீரியல்களை தயாரித்த அனுபவம் மிக்க சுந்தர்.கே.விஜயன் இயக்குகிறார்.


இளசுகளின் காதலை மையப்படுத்தி உருவாக இருக்கும் இந்த தொடரில் நடிக்க நடிகர், நடிகைகள் தேர்வு நடந்து வருகிறது. சீரியல் தயாரிப்புக்காக விஜய் டி.வியுடன் ஒப்பந்தம் போட்டிருக்கிறார் சரத்குமார். ஒரே நேரத்தில் பல தொடர்களை தயாரிக்கும் திட்டத்தில் இருக்கிறார்.


மனைவி ராதிகா சரத்குமாரின் தயாரிப்பு நிறுனமான ரேடான் நிறுவனத்திடமிருந்து தனித்த இந்த நிறுவனம் இயங்கும் என்று கூறப்படுகிறது. சரத்குமார் சின்னத்திரைக்கு புதியவர் அல்ல. நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி நிகழ்ச்சியை நடத்தியவர் "நான் ரெடி நீங்க ரெடியா" என்ற அவரது வசனம் புகழ்பெற்றது. இப்போது மீண்டும் சின்னத்திரைக்கு வந்திருக்கிறார்.
நன்றி: தினமலர்

aanaa
14th October 2016, 09:09 PM
சத்தமில்லாமல் சாதனை படைக்கும் கார்டூன் சீரியல்கள்


பெரும்பாலும் மீடியாக்களிலும் சரி, பொது விழாக்களிலும் சரி சின்னத்திரை சீரியல்கள் பற்றித்தான் அதிகம் பேசப்படுகிறது. அதுவும் தற்போது டப்பிங் சீரியல்கள் அதிகமாக ஒளிபரப்பாகி பிரமாண்டங்களை இறக்குமதி செய்து கொண்டிருக்கிறது. ஆனால் டப்பிங் சீரியல்களுக்கு வழிகாட்டியதே கார்டூன் தொடர்கள்தான். அவைகள்தான் முதல் இறக்குமதி சீரியல்கள்.


சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் கதை சீரியல்களுக்கு அடுத்து விரும்பி பார்க்கப்படுவது கார்டூன் சீரியல்கள்தான். குழந்தைகளை சுற்றிய தயாரிப்புகளான பிஸ்கட், சாக்லெட், குளிர்பாணம், விளையாட்டு பொருட்களின் விளம்பரகள் இந்த தொடர்களிலேயே அதிகம் ஒளிபரப்படுகிறது. இதனால் குழந்தைகளுக்கான கார்ட்டூன் சேனல்கள் அதிக முக்கியத்துவம் பெற்று வருகிறது.


வருத்தப்படாத கரடி சங்கம், டோரா புஜ்ஜி, சோட்டா பீம், நிஞ்சா கட்டோரி, டாம் அண்ட் ஜெர்ரி, மோட்டு பட்லு ஆகிய சீரியல்கள் டாப்பில் இருக்கிறது. கார்டூன் தொடர்கள் குழந்தைகளுக்கு நல்ல அறிவுரைகளைத் தருகிறது. ஆரோக்கியமான உணவுகளைப் பற்றிச் சொல்கிறது. நட்பு, அன்பு போதிக்கப்படுகிறது. இதனால் பெற்றோர்களும் தங்கள் குழந்தைகளை கார்டூன் தொடர்களை பார்க்க அனுமதிக்கிறார்கள் குழந்தைகளும் தங்களுக்கு பிடித்தமான கற்பனை உலகத்தில் மிதந்து கொண்டே நல்ல விஷயங்களையும் கற்றுக் கொள்கிறார்கள்.http://img1.dinamalar.com/cini//CNewsImages/NTLRG_20161011144613259675.jpg



நன்றி: தினமலர்

aanaa
24th October 2016, 08:28 PM
உலகம் சுற்ற கிளம்புகிறார்கள் சூப்பர் சிங்கர்கள்


விஜய் டி.வியின் நட்சத்திர ரியாலிட்டி ஷோவான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் வெற்றி பெற்றவர்கள், பங்கேற்று சிறப்பாக பாடியவர்கள், திரைப்பட பின்னணி பாடகர், பாடகிகள் கொண்ட இசைக் குழு ஆண்டுதோறும் உலக சுற்றுலா கிளம்பி விடும். அதே போல இந்த ஆண்டும் உலக சுற்றுலா கிளம்புகிறார்கள்.


முதல் கட்டமாக வருகிற நவம்பர் 4ந் தேதி சிங்கப்பூருக்கு செல்கிறார்கள். அங்குள்ள சன்டெக் சிட்டியில் பிரமாண்ட இசை நிகழ்ச்சியை நடத்துகிறார்கள். இதற்கான டிக்கெட்டுகள் ஆன்லைனில் வேகமாக விற்பனையாகி வருகிறது. ஒரு திரைப்பட முன்னணி ஹீரோவும் கலந்து கொள்கிறார். அவர் யார் என்பதை சஸ்பென்சாக வைத்திருக்கிறார்கள். நிகழ்ச்சியை பிரியங்கா தேஷ் பாண்டேவும், மா.பா.கா.ஆனந்தும் தொகுத்து வழங்குகிறார்கள். சிங்கப்பூரை தொடர்ந்து லண்டன், பாரீஸ், அமெரிக்கா என பறக்க இருக்கிறார்கள் சூப்பர் சிங்கர்கள்.
நன்றி: தினமலர்

aanaa
1st November 2016, 09:32 PM
ஸ்ரித்திகாவுக்கு மாப்பிள்ளை தேடுகிறார்கள்


மலேசியாவில் நாடகங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துக் கொண்டிருந்த ஸ்ரித்திகா, இசை கற்க தமிழ்நாடு வந்தார். வந்த இடத்தில் சின்னத்திரை தொகுப்பாளினி, விளம்பர படங்கள் என்று பிசியானார். அதன்பிறகு வெண்ணிலா கபடி குழு படத்தில் சிறிய ரோலில் நடித்தார். மதுரை டூ தேனி படத்தில் ஹீரோயினாக நடித்தார். சினிமா அவருக்கு செட்டாகவில்லை. இந்த நேரத்தில் நாதஸ்வரம் தொடருக்கு திருமுருகன் நடிகை தேடுவதை கேள்விப்பட்டு ஆடிசனுக்கு சென்று தேர்வானார். அதன்பிறகு 5 வருடங்கள் நாதஸ்வரம் சீரியலில் மலராகவே வாழ்ந்தார். மீண்டும் திருமுருகன் இயக்கத்தில் இப்போது குலதெய்வம் சீரியலில் அலமேலுவாக நடித்துக் கொண்டிருக்கிறார்.


இதற்கிடையில் ஜீ தமிழில் மாமியார் தேவை, உயிர்மெய், ராஜ் டி.வியில் உறவுகள் சங்கமம், ஜெயா டி.வியில் வைதேகி என ஒரு ரவுண்ட் அடித்தார். ஸ்ரித்திகாவுக்கு இசை என்றால் உயிர். நிறைய பாடல்கள் பாடியிருக்கிறார். சினிமாவில் பாட வேண்டும் என்கிற ஆசையும் நிறைவேற இருக்கிறது. ஸ்ரிதிகா பற்றி இவ்வளவு பீடிகை போடுவதற்கு காரணம். விரைவில் அவருக்கு திருமணம் நடக்க இருக்கிறது. வீட்டில் மாப்பிள்ளை தேடிக் கொண்டிருக்கிறார்கள். 2017ல் திருமணம் இருக்கும் என்கிறார்கள்.
நன்றி: தினமலர்

aanaa
1st November 2016, 09:38 PM
சினிமாவில் நடிக்கிறார் சந்தியா


வம்சம் தொடரில் நடித்து வருகிறவர் சந்தியா. தெலுங்கு சேனல் தொகுப்பாளினியாக இருந்து, அதன் பிறகு தெலுங்கு சீரியல் நடிகையாகி தமிழ் சேனலுக்கு வந்தவர். தெலுங்கு, தமிழ் சீரியல்களில் நடித்து வரும் சந்தியா இப்போது சினிமாவிலும் நடிக்க ஆரம்பித்திருக்கிறார்.


நாய்கள் ஜாக்கிரதை படத்தில் சிறிய கேரக்டரில் தலைகாட்டியவர் இப்போது வனபத்ரகாளி என்ற படத்தில் நடிக்கிறார். இதில் அவர் வனபத்ரகாளியின் பக்தையாக முழுநீள கேரக்டரில் நடித்திருக்கிறார். இனி தொடர்ந்து நடிக்கவும் முடிவு செய்திருக்கிறார். "பாக்கெட் மணிக்காகத்தான் மீடியாவுக்குள் வந்தேன். அதில் அடுத்தடுத்த உயரங்கள் எளிதாக கிடைக்கவில்லை. போராடித்தான் இந்த இடத்தை பிடித்தேன். மீடியாவுக்கு அறிமுகமான புதிதில் சினிமாவில் நடிக்கும் ஆசை இருந்தது. பின்னர் சீரியல்களிலேயே நல்ல பெயரும், புகழும் கிடைப்பதால் சினிமா பற்றி யோசிக்கவில்லை. இப்போது எனது சீரியல்களை பார்க்கும் இயக்குனர்கள், என் தோற்றம் அவர்கள் கதைக்கு பொருத்தமா இருந்தால் அழைக்கிறார்கள். நானும் சீரியல் படப்பிடிப்பு பாதிக்காத அளவிற்கு நடிக்கிறேன்" என்கிறார் சந்தியா.
நன்றி: தினமலர்

aanaa
7th November 2016, 11:10 PM
வெட்கம் இல்லையா... டிவி நிகழ்ச்சியில் நடிகை கீதா ஆவேசம்


தெலுங்கு, டிவி சேனல் நிகழ்ச்சியில், நெறியாளராக செயல்பட்ட பிரபல நடிகை கீதா, விருந்தினர்களாக பங்கேற்ற, ஓரினச்சேர்க்கையாளர்களை திட்டி தீர்த்தது, சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாள சினிமாக்களில் நடித்தவர் நடிகை கீதா. இவர் நடித்த புதுப்புது அர்த்தங்கள் என்ற தமிழ்ப் படம், மிகப்பெரிய வெற்றியை பெற்றது.


தெலுங்கு, டிவி சேனல் ஒன்றில், குடும்ப பிரச்னையை தீர்த்து வைக்கும் நிகழ்ச்சியை நடத்தி வருகிறார். சமீபத்தில் ஒளிபரப்பான அந்த நிகழ்ச்சியில், 20 வயதான பெண் ஒருவரும், அவருடன் சேர்ந்து வாழ்ந்து வரும், 23 வயது திருநங்கை ஒருவரும் பங்கேற்றனர்; அவர்களது பெற்றோரும் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். அப்போது, திருநங்கையிடம் கேள்வி எழுப்பிய கீதா, இது போன்று செயல்படக் கூடாது என, அறிவுரை கூறினார். ஆனால், அந்த திருநங்கை, நான் பிறப்பால் ஆண் தான் என்றார்.


இதை கேட்டு ஆவேசப்பட்ட கீதா, பிறந்தது முதல் இப்படித் தான் இருந்தாயா; செருப்பால் அடிப்பேன் என ஆவேசப்பட்டார். வாய்க்கு வந்தபடி திட்டி தீர்த்தார். மேலும் திருநங்கையுடன் சேர்ந்து வாழும் இளம்பெண்ணின் பெற்றோரிடம், உங்கள் மகளை வேறு யாருக்காவது திருமணம் செய்து வைத்து, வெளியூருக்கு அனுப்பி விடுங்கள்; இது ஒன்று தான் பிரச்னைக்கு தீர்வு என்றார். இதனால், நிகழ்ச்சியை பார்த்துக் கொண்டிருந்த பார்வையாளர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர்.
நன்றி: தினமலர்

aanaa
7th November 2016, 11:14 PM
ஜோடி நிகழ்ச்சியின் நடுவர் டி.ராஜேந்தர்: ஆட்டத்திலும் கலக்குகிறார்


விஜய் தொலைக்காட்சியின் நட்சத்திர நிகழ்ச்சியான ஜோடி நம்பர் ஒன் நிகழ்ச்சியின் 9வது சீசன் வருகிற 12ந் தேதி முதல் ஒளிபரப்பாக இருக்கிறது. இதற்கான படப்பிடிப்பு தற்போது நடந்து வருகிறது. ரீல் வெஸ்சஸ் ரியல் என்பது இதன் கான்செப்ட்


சனிக்கிழமை மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது. இதன் முதன்மை நடுவராக டி.ராஜேந்தர் பணியாற்றுகிறார். துவக்க நிகழ்ச்சியில் ஆனந்த் பாபு ஆடிய "ஐ ஏம் எ டிஸ்கோ டான்சர்..." பாட்டுக்கு ஆடி கலக்க இருக்கிறார். அதோடு மட்டுமல்ல ஒவ்வொருவருக்கும் ஆடிக் காட்டியும். தவறு செய்பவர்கள் எப்படி தவறு செய்தார்கள். எப்படி ஆடியிருக்க வேண்டும் என்ற செய்து காட்டியும் மிரட்ட இருக்கிறார். இந்த நிகழ்ச்சியில் நடுவராக பணியாற்ற அவருக்கு பெரும் தொகையை சம்பளமாக கொடுக்கிறது சேனல்.
நன்றி: தினமலர்

aanaa
7th November 2016, 11:18 PM
தெலுங்கு சினிமாவில் அறிமுகமாகிறார் நிஷா


தேனி பக்கம் உள்ள சின்னமனூர் பொண்ணுதான் நிஷா. டாக்டருக்கு படிக்கணும்னு இருந்தவர் எப்படியோ தப்பித் தவறி மீடியாவுக்குள் வந்து விட்டார். எம்.ஓ.பி வைஷ்ணவா காலேஜில் விஷ்காம் முடித்து விட்டு ஆஹா தொடரில் அறிமுகமானார். அதன் பிறகு நிறைய தொடர்கள், நிறைய நிகழ்ச்சிகள் என நடிகையாகவும், தொகுப்பாளினியாகவும் பயணத்தை தொடர்ந்தவர். திரைப்பட நடிகர் கணேஷ் வெங்கட்ராமுடன் ஒரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியபோது காதலில் விழுந்து திருமணமும் செய்து கொண்டார்.


தற்போது தலையணை பூக்கள் தொடரில் நடித்து வரும் நிஷா ஆரம்பத்திலிருந்தே தேடி வந்த சினிமா வாய்ப்புகளை தவிர்த்து வந்தார். திருமணத்துக்கு பிறகு கணேஷ் வெங்கட்ராம் ஜோடியாக வேண்டுமானால் நடிக்கிறேன் என்று சொல்லி வந்தார். இந்த நிலையில் தற்போது கிருஷ்ணடுக்கி பாரசுடு என்ற தெலுங்கு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார். தெலுங்கு வழியாக அப்படியே தமிழுக்கும் வந்து விடுவார். எப்படியோ சினிமா விரதத்தை முடித்து விட்டார் நிஷா.
நன்றி: தினமலர்

aanaa
7th November 2016, 11:19 PM
தமிழ் சினிமாவில் நடிக்கிறார் நாகினி மவுனிராய்


இந்தி டப்பிங் தொடரான நாகினியில் நாகினியாக நடித்திருப்பவர் மவுனிராய். இந்தி சீரியல் நடிகையான மவுனிராய் நாகினி தொடர் மூலம் தமிழ் நாட்டில் பெரிய ரசிகர் வட்டத்தை பெற்றிருக்கிறார். அதுவும் பெண்களை மட்டுமல்ல ஆண்களையும் கவர்ந்திருக்கிறார். தனது கவர்ச்சியான நடிப்பின் மூலம் ஆண்களையும் டி.விமுன் உட்கார வைத்திருக்கிறார்.<p>அப்புறம் சும்மா விடுமா கோடம்பாக்க சினிமா. அவரை சினிமாவில் ஹீரோயினாக நடிக்க வைக்க பல சிறிய தயாரிப்பு நிறுவனங்கள் அவரை தொடர்பு கொண்டிருக்கின்றன. சில பெரிய தயாரிப்பு நிறுவனங்கள் பெரிய ஹீரோக்கள் நடிக்கும் படத்தில் ஒரு பாட்டுக்கு ஆட அழைப்பு விடுத்திருக்கின்றன.


மவுனிராய்க்கு சினிமா புதிதில்லை. அபிஷேக் பச்சன் நடித்த ரன் படத்தில் சிறிய கேரக்டரில் நடித்துள்ளார். ஒரு பஞ்சாபி படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார். அதன் பிறகு வாய்ப்பு கிடைக்காததால் இனி சின்னத்திரைதான் என்று முடிவு செய்து சீரியலுக்கு வந்துவிட்டார். இப்போது தமிழ் சினிமா அழைக்கிறது. விரைவில் அவர் நடிக்கும் படத்தின் அறிவிப்பு வர இருக்கிறது.
நன்றி: தினமலர்

aanaa
7th November 2016, 11:32 PM
கலைவாணர் சிந்தனை
எம்.ஆர்.ராதா ஒரு ஊரில் கேம்ப் போட்டு நாடகங்களை நடத்திக் கொண்டிருந்தார். நாளாவட்டத்தில் கலெக்ஷன் சரியாக ஆகவில்லை. கம்பெனி கலைஞர்கள் நஷ்டத்திற்கு உள்ளார்கள். அந்த சமயத்தில் அந்த ஊருக்கு என்.எஸ்.கே வந்திருப்பதாக தகவல் கிடைக்கிறது. அவரிடம் சென்று நிலைமையைச் சொல்லி நாடகத்திற்கு தலைமை தாங்க சொல்லலாம் என்று நினைத்து மகன் எம்.ஆர்.ஆர் வாசுவையும் அழைத்துக் கொண்டு . என்.எஸ்.கே தங்கியிருக்கும் இடத்திற்கு புறப்பட்டார் எம்.ஆர்.ராதா. என்.எஸ்.கே என்பதால்தான் இந்த உதவியைக் கேட்டு சென்றார் ராதா. மற்றவர்களிடம் அவர் செல்லக் கூடியவரல்ல. ராதா சென்றிருந்த சமயத்தில் என்.எஸ்.கே சாத்துக்குடி பழம் தின்று கொண்டிருந்திருக்கிறார். சுளையை உள்ளே தள்ளுவதும், தோலை ஒரு கூடையில் போடுவதுமாக ராதா சொன்ன கதையை எல்லாம் கேட்டுக் கொண்டார். பக்கத்தில் டி .ஏ .மதுரமும் இருந்திருக்கிறார். எல்லாம் கேட்டு முடிந்தவுடன் தன்னால் நாடகத்திற்கு தலைமை தாங்க வர முடியாது என்றும், உடனே தாங்கள் சென்னை செல்லவிருப்பதாகவும் என்.எஸ்.கே கூறி விட்டார். எம்.ஆர்.ராதாவுக்குஒரே ஏமாற்றம். வந்திருக்கவே கூடாது என்ற நினைப்பில் கிளம்பினார்.அந்த சமயத்தில் அவரிடமும் வாசுவிடமும் என்.எஸ்.கே, கூடையில் உரித்து போட்டிருந்த சாத்துக்குடித் தோல்களை வெளியே இருக்கும் குப்பைத் தொட்டியில் கொட்டச் சொல்லி விட்டு, மதுரத்துடன் உள்ளே போய் விட்டார். ராதாவுக்கு மகா கோபம். தலைமை தாங்கவும் செய்யாமல், உதவியும் செய்யாமல் குப்பை கொட்டுகிற வேலையை கொடுக்கிறாரே என்று திட்டிக் கொண்டே சென்றிருக்கிறார். கூடையுடன் பின்னால் சென்ற வாசு, குப்பைத் தொட்டியில் கொட்டியிருக்கிறார். உடனே 'நயினா' என்று அலறியிருக்கிறார். கூடையில் இருந்து தோல்களுடன் கரன்சிக் கட்டுகளும் விழுந்ததுதான் காரணம். ராதா அவற்றை பார்த்து அயந்துவிட்டார். அவருக்கு வெளிப்படையாக உதவி செய்ய முடியாத நிலை கலைவாணருக்கு.அது புரிந்துவிட்டது ராதாவுக்கு.தகவல்: எம்.ஆர்.ஆர்.வாசு

aanaa
30th November 2016, 08:15 PM
காதலரை திருமணம் செய்கிறார் ப்ரியா


விஜய் டி.வியின் நட்சத்திர தொடரான கல்யாணம் முதல் காதல் வரை சீரியலில் ஹீரோயினாக நடித்து வருகிறார் ப்ரியா. அமித் பார்கவ், ப்ரியா ஜோடி சரவணன், மீனாட்சி ஜோடி போன்று புகழ்பெற்று வந்தது. இந்த ஜோடி பொருத்தத்திற்காகவே சீரிலை பார்த்தார்கள்.


இந்த நிலையில் ப்ரியா தான் காதலித்து வரும் ராஜவேல் என்பவரை விரைவில் திருமணம் செய்து கொள்ள இருக்கிறாராம். ராஜவேல் ஆஸ்திரேலியாவில் பணியாற்றுகிறார். திருமணத்துக்கு பிறகு ஆஸ்திரிரேலியாவில் செட்டிலாகவும் ப்ரியா திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது. இதனால் ப்ரியா தொடரிலிருந்து விலகி விட்டாராம். திருமணம் செய்து கொண்டாலும் தொடர்ந்து நடிக்கலாமே என்ற சேனல் தரப்பும் சொல்லி வருகிறதாம். இறுதியான முடிவை ப்ரியா இன்னும் எடுக்கவில்லை என்கிறார்கள்.



நன்றி: தினமலர்

aanaa
16th December 2016, 08:17 PM
தெலுங்கு சீரியல்களில் பிசியான நளினி!


தமிழில் சின்ன பாப்பா பெரிய பாப்பா, மடிப்பாக்கம் மாதவன் உள்பட சில தொடர்களில் நடித்து வந்த நளினி, தெலுங்கு சீரியல்களிலும் பிசியாக நடித்து வந்தார். அதனால் ஒருகட்டத்தில் ஆந்திராவிலேயே வீடு பிடித்து செட்டிலாகி விட்ட அவர், தமிழ் சீரியல்களில் நடிக்கும்போதுமட்டும் சென்னைக்கு வந்து சென்றார். தற்போது ஜீ தமிழ் சேனலில் வெளியாகும் டார்லிங் டார்லிங் -என்ற தொடரில் நடித்து வருகிறார்.


இந்த நிலையில், தெலுங்கில் நளினி மாமியார் வேடத்தில் நடிக்கும் ஒரு தொடரில் அவரை மையமாக வைத்தே கதை உருவாகியிருக்கிறதாம். ஏற்கனவே அவர் நடித்த தொடர்களில் அவரது கேரக்டர் அங்கு பெரிய அளவில் ரீச்சாகியிருப்பதால், குடும்பப் பெண்கள் மத்தியில் நளினிக்கு பெரிய ரசிகை வட்டமே உள்ளதாம்.


இதனால் இப்போது நடிக்கும் தொடருக்கு பிறகு தெலுங்கு சீரியல் உலகில் இன்னும் பெரிய நடிகையாகி விடுவாராம் நளினி. அதனால் தற்போது தமிழை விட தெலுங்கில் நடிப்பதிலேயே அதிக ஆர்வம் காட்டி வரும் நளினிக்கு, தெலுங்கு படங்களிலும்கூட கேரக்டர்கள் கிடைத்து வருகிறதாம். இருப்பினும், தமிழ் நாட்டையும் மறந்து விடக்கூடாது என்பதற்காக, ஏதேனும் ஒரு தொடரில் முகம் காட்டிக்கொண்டிருக்கவும் திட்டமிட்டுள்ளாராம் நளினி.
நன்றி: தினமலர்

aanaa
4th January 2017, 03:10 AM
நடிகைகள் உடையை பற்றி யோசிக்காமல் நல்ல கதையை யோசிங்கள்: சுராஜுக்கு டிடி கோரிக்கை




கத்திச் சண்டை படத்தின் இயக்குனர் சுராஜ் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் "கோடிக் கணக்கில் சம்பளம் வாங்கும் நடிகைகள் ஆடையை குறைத்துதான் நடிக்க வேண்டும். நடிப்பு திறமையை காட்ட டி.வி.சீரியலில் நடிக்கட்டும்" என்று கூறியிருந்தார். இது பெரும் சர்ச்சையை கிளப்பியது. நயன்தாரா, "நடிகைகள் என்ன காட்சி பொம்மைகளா" என்று கொதித்தார். "சுராஜ் அனைத்து பெண்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்" என்றார் தமன்னா. விஷாலும், சுராஜ் பேட்டிக்கு கண்டனம் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து சுராஜ் மன்னிப்பு கேட்டார்.


இந்த நிலையில் சின்னத்திரை தொகுப்பாளினி திவ்யதர்ஷினி தனது டுவிட்டரில் எழுயிருப்பதாவது: சுராஜின் பேட்டி வருத்தமளிப்பதாக இருந்தது. பெண்களின் சார்பாகவும், அவர்களின் உரிமைக்காகவும் குரல்கொடுத்த நயன்தாராவுக்கும், தமன்னாவுக்கும் பாராட்டுகளும், நன்றிகளும். இயக்குனர் சுராஜ் நடிகைகளின் ஆடையை எப்படி குறைக்கலாம் என்று யோசிப்பதை விட்டுவிட்டு நல்ல கதையை யோசிக்கலாம்.


இவ்வாறு டிடி எழுதியிருக்கிறார்.



நன்றி: தினமலர்

aanaa
4th January 2017, 03:14 AM
2016ல் சின்னத்திரைக்கு வந்த சினிமா நட்சத்திரங்கள்


ஒரு காலத்தில் சின்னத்திரையில் நடிப்பது, தொகுப்பாளினியாக இருப்பது தகுதி குறைவாகவும், மார்க்கெட் குறைந்தவர்களின் வேலையாகவும் பார்க்கப்பட்டது. ஆனால் ராதிகா, குஷ்பு, ரம்யா கிருஷ்ணன், தேவயானி, ரோஜா போன்றவர்கள் சினிமாவுக்கு ஈடாக சின்னத்திரையிலும், பணத்தையும் புகழையும் சம்பாதித்தார்கள். அதன்பின் தைரியமாக சின்னத்திரைக்கு நடிகைகள் வர ஆரம்பித்தார்கள்.


இந்த ஆண்டு சினிமாவில் இருந்து சின்னத்திரைக்கு வந்தவர்களில் முக்கியமானவர் சினேகா. பிரசன்னாவை திருமணம் செய்து கொண்ட பிறகு விளம்பர படங்களில் நடித்துக் கொண்டிருந்த சினேகா, இப்போது ஜீ தமிழ் சேனலில் டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியின் நடுவராக இருக்கிறார். இதே நிகழ்ச்சியின் மூலம் பொய் சொல்லப்போறோம், கோவா, கோ படங்களில் நடித்த பியா, சிவா மனசுல சக்தி, மதுரை சம்பவம் படங்களில் நடித்த அனுயா ஆகியோர் சின்னத்திரைக்கு வந்திருக்கிறார்கள்


அடுத்தவர் சதா, ஷங்கர் இயக்கத்தில் விக்ரமுடன் அந்நியன் படத்தில் நடித்தவர். ஜெயம் படத்தின் மூலம் அறிமுகமானவர். இப்போது விஜய் டி.வியில் ஜோடி நம்பர் ஒன் நிகழ்ச்சியில் நடுவராக பணியாற்றுகிறார். பாபநாசம் படத்தின் மூலம் சினிமாவில் ரீ என்ட்ரி கொடுத்த கவுதமி இப்போது மீண்டும் சின்னத்திரைக்கு வந்திருக்கிறார் டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியின் நடுவராக பணியாற்றுகிறார்.
நன்றி: தினமலர்

aanaa
4th January 2017, 03:23 AM
படிப்பில் ஆர்வம் காட்டும் பவித்ரா


தொகுப்பாளினியாக அறிமுகமானவர் பவித்ரா. ரியலாட்டி ஷோ ஸ்பெஷலிஸ்ட் என்றும் பெயர் எடுத்தவர். ஆனால் தற்போது சீரியல் நடிகையாகியிருக்கிறார். விஜய் டி.வியில் சரவணன் மீனாட்சி, ஜீ தமிழ் சேனலில் மெல்ல திறந்தது கதவு தொடர்களில் நடித்து வருகிறார்.


தொகுப்பாளினி, நடிகை என இந்த இரண்டுக்கும் நடுவில் படிப்பையும் கெட்டியாக பிடித்துக் கொண்டிருக்கிறார். தற்போது எம்.பி.ஏ இறுதியாண்டு படித்து வரும் பவித்ரா. அடுத்து எம்.பில் பட்டதுக்காக ஆராய்ச்சியில் இறங்கப்போகிறார். "ஒரே நேரத்தில் இரண்டு சீரியல்களில் நடித்தாலும் இரண்டிலும் வித்தியாசமான கேரக்டர்கள். சரவணன் மீனாட்சியில் ராஜி என்கிற மாற்றுத் திறனாளி பெண்ணாக நடிக்கிறேன். வெளியில் சென்றால் என்னை மேலும் கீழும் பார்த்துவிட்டு நிஜமாகவே நீங்க மாற்றுத் திறனாளி இல்லையே என்று கேட்கிறார்கள். இதுதான் என் நடிப்புக்கு கிடைத்த வெற்றி. மெல்ல திறந்தது கதவு தொடரில் தெனாவெட்டான அல்ட்ரா மார்டன் பொண்ணு. இரண்டையும் சவாலா எடுத்துக்கிட்டு பண்றேன். மற்றபடி படிப்பு என்கிறது என்னோட ட்ரீம். அதை என்றைக்கும் விட மாட்டேன். நிறைய படிக்கணும், நிறைய நடிக்கணும் இதுதான் என்னோட ஆசை" என்கிறார் பவித்ரா.
நன்றி: தினமலர்

aanaa
4th January 2017, 03:33 AM
நாகினி இயக்குனருடன் சுதா சந்திரன் மோதல்


பிரபல இந்தி தொடரான நாகின் தற்போது நாகினி என்ற பெயரில் தமிழ் சேனலில் ஒளிபரப்பாகி வருகிறது. தற்போது இந்தியில் நாகின் தொடரின் இரண்டாம் பாகம் ஒளிபரப்பாகி வருகிறது. இதன் படப்பிடிப்புகளும் மும்முரமாக நடந்து வருகிறது. மவுனி ராய் இரண்டாம் பாகத்திலும் நாகினியாக நடிக்கிறார். அர்ஜுன் பிலானி, ஆதா கான், ஆகியோருடன் சுதாசந்திரனும் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பில் நடிகை சுதாசந்திரனுக்கும் இயக்குனர் குஷால் ஜவேரிக்கும் மோதல் ஏற்பட்டுள்ளது.


சீரியலில் நடிக்கும் நடிகர், நடிகைகள் அனைவருக்கும் அவர்களுக்கான வசனம் முதலிலேயே கொடுக்கப்பட்டு விடும். அதனை அவர்கள் வீட்டில் மனப்பாடம் செய்துவிட்டு வரவேண்டும். ஸ்பாட்டில் நடிப்பு மட்டுமே சொல்லித் தரப்படும். ஆனால் சுதா சந்திரன் வீட்டில் மனப்பாடம் செய்ய வேண்டிய வசனத்தை ஸ்பாட்டில் மனப்பாடம் செய்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த இயக்குனர் "எப்போதும் ஸ்கிரிப்டும் கையுமாக இருந்தால் எப்படி?" என்று கோபித்துக் கொண்டுள்ளார். அதற்கு சுதா சுந்திரன் "சூட்டிங் ஸ்பாட்டில் ஸ்கிரிப்டை கையில் வைத்திருக்காமல் பீர் பாட்டிலையா வைத்திருப்பார்கள்?" என்று திருப்பி கூறியுள்ளார். இதனால் இருவருக்கும் வாக்குவாதம் அதிகமாகி படப்பிடிப்பு தடைபட்டது.


>"குஷால் ஜவேரி இயக்கினால் நான் நடிக்க மாட்டேன். அவருக்கு நான் நடிப்பது பிடிக்கவில்லை. வேண்டுமானால் வேறு யாரையாவது நடிக்க வைத்துக் கொள்ளுங்கள்" என்று கூறிய சுதா சந்திரனை தயாரிப்பார்கள் சமாதானப்படுத்தி உள்ளனர். "இயக்குனர் மன்னிப்பு கேட்டால் மட்டுமே நடிப்பேன்" என்று கூறியுள்ளார். இயக்குனர் "நான் என் கடமையை செய்தேன். அதற்கு எதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும்" என்று கூறியிருக்கிறார். ஒரு வழியாக இருவரையும் சமாதானப்படுத்தியுள்ளனர். அரை நாள் படப்பிடிப்பு தடைபட்டு மீண்டும் நடந்திருக்கிறது. இப்போதைக்கு சமானதானம் ஆனாலும் சுதா சந்திரன் எப்போது வேண்டுமானாலும் தொடரில் இருந்து விலகலாம் என்கிறார்கள்
நன்றி: தினமலர்

aanaa
22nd January 2017, 09:18 PM
சீரியல் இயக்குனர் ஆனார் சுந்தர்.சி




முறைமாமன் படத்தில் தொடங்கி, அரண்மனை இரண்டாம் பாகம் வரை 30-க்கும் மேற்பட்ட படங்களை இயக்கி இருக்கிறார் சுந்தர்.சி. உள்ளத்தை அள்ளித்தா, மேட்டுக்குடி, அருணாச்சலம், அன்பே சிவம், வின்னர், கிரி அவற்றில் சில வெற்றிப்படங்கள்.


இயக்குனராக இருந்தவர் தலைநகரம் படத்தின் மூலம் நடிகரானார். வீராப்பு, சண்டை, ஆயுதம் செய்வோம், முரட்டுகாளை அரண்மனை உள்பட 15 படங்களுக்கு மேல் நடித்து விட்டார். தற்போது சங்கமித்ரா என்ற பிரமாண்ட பட்ஜெட் படத்தை 3 மொழிகளில் இயக்க ஆயத்தமாகி வருகிறார்


.இதற்கிடையில் அவர் சின்னத்திரை சீரியல் இயக்குனராகியிருக்கிறார். அவரது முதல் படைப்பு நந்தினி. அரண்மனை படத்தின் சாயலில் தயாராகும் பேண்டசி தொடர். வருகிற 22ந் தேதி முதல் ஒளிப்பாகிறது. திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகும் இந்த தொடரை தயாரிப்பது குஷ்ப சுந்தரின் அவ்னி சினி மேக்கர்ஸ் நிறுவனம்.
நன்றி: தினமலர்

aanaa
22nd January 2017, 09:21 PM
தொழில் அதிபர் தோனியை மணக்கிறார் மேக்னா நாயர்


குழந்தை நட்சத்திரமாக விளம்பர படங்களில் நடித்து அதன்பிறகு மலையாள சின்னத்திரை நடிகை ஆனவர் மேக்னா நாயர். மலையாளத்தில் பல சீரியல்களில் நடித்து விட்டு தற்போது தமிழில் தெய்வம் தந்த வீடு தொடரில் சீதாவாக நடிக்கிறார். இதே சீரியலின் மலையாள வெர்ஷனான சந்தனமழா தொடரிலும் மேக்னா நடித்து வருகிறார். கயல் படத்தில் ஆனந்தியின் தோழியாக நடித்தவர் அதன் பிறகு சினிமாவில் நடிக்கவில்லை.


மேக்னா தொழில் அதிபர் தோனியை திருமணம் செய்ய இருக்கிறார். மலையாள தொடர் ஒன்றில் உடன் நடித்த நடிகையின் அண்ணன் தோனி. நீண்ட நாட்களாக காதலித்து வந்தவர்கள் இப்போது திருமணம் செய்து கொள்ள இருக்கிறார்கள். வருகிற ஏப்ரல் 22ந் தேதி கேரளாவில் உள்ள எர்ணாகுளத்தில் நிச்சயதார்த்தம் நடக்கிறது. திருமணம் 30ந் தேதி திருச்சூரில் நடக்கிறது. திருமணத்துக்கு பிறகும் தொடர்ந்து சின்னத்திரை, பெரிய திரை இரண்டிலும் நடிக்க முடிவு செய்திருக்கிறார் மேக்னா.
நன்றி: தினமலர்

aanaa
8th February 2017, 02:33 AM
கேரவனுக்குள் சமையல் செய்யும் ரம்யா கிருஷ்ணன்!


ஆம்பள, பாகுபலி படங்களைத் தொடர்ந்து மீண்டும் பாகுபலி-2, சபாஷ் நாயுடு ஆகிய படங்களில் முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார் ரம்யா கிருஷ்ணன். அதோடு, வம்சம் என்ற சீரியலை தயாரித்து அதில் சக்தி, அர்ச்சனா என்ற இரண்டுவிதமான வேடங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில், வம்சம் சீரியல் ஸ்பாட்டில் சில நாட்களில் தானே சமைத்து அதை யூனிட்டில் உள்ள நடிகர் நடிகைகளுக்கு கொடுத்தும் அசத்துகிறாராம் ரம்யா கிருஷ்ணன்.


இதுகுறித்து வம்சம் சீரியல் குழுவினர் கூறுகையில், ரம்யா கிருஷ்ணன் மேடம் ஸ்பாட்டிற்குள் வந்தாலே ஜாலியாக இருக்கும். அனைவரிடமும் கலகலப்பாக காமெடியாக பேசுவார். இதனால் ரம்யா மேடம் ஸ்பாட்டிற்கு எப்போது வருவார் என்று அனைவருமே காத்திருப்பார்கள். அதோடு, சில நாட்களில் கேரவனுக்குள்ளேயே அவர் சமைக்கத் தொடங்கி விடுவார். கிச்சன் கில்லாடியான அவர், நான்வெஜ், வெஜிடேரியன் என சமையல் செய்து அதை யூனிட்டில் நடித்துக் கொண்டிருப்பவர்களுக்கு கொடுப்பார். அவரது சமையல் ரொம்ப டேஸ்டியாக இருக் கும் என்பதால் அவர் சமைத்ததை சாப்பிட அனைவரும் ஆர்வமாக இருப்போம் என்கிறார்கள்.
நன்றி: தினமலர்

aanaa
8th February 2017, 02:38 AM
சுதா சந்திரனுக்கு பதிலாக கலக்கும் ரூபாஸ்ரீ


90ளில் சினிமாவில் ஹீரோயினாக வலம் வந்தவர் ரூபாஸ்ரீ. எங்க வீட்டு வேலன், இதய நாயகன், பொண்டாட்டியே தெய்வம், டூயட், எல்லாமே என் ராசதான் படங்களில் நடித்தார். சினிமாவில் மார்க்கெட் குறைந்ததும் சின்னத்திரைக்கு வந்தார்.


அம்பிகை தொடர் மூலம் சீரியல் நடிகை ஆனார். மைடியர் பூதம், அகல்யா, உதிரிப்பூக்கள், வாணி ராணி உள்பட பல சீரியல்களில் நடித்தவர். தற்போது விஜய் டி.வியில் ஒளிபரப்பாகி வரும் தெய்வம் தந்த வீடு தொடரில் நடித்து வருகிறார். தெய்வம் தந்த வீடு தொடரில் இருந்து சுதா சந்திரன் விலகிய பிறகு அந்த கேரக்டரில் ரூபாஸ்ரீ நடிக்கிறார், இதற்கு முன்பக தெய்வம் தந்த வீடு தொடரின் மலையாள வெர்ஷனான சந்தனமழாவில் நடித்தார். இப்போது அதே கேரக்டரை தமிழில் நடிக்கிறார்.


20 படங்களில் ஹீரோயினாக நடித்தவர், 10க்கும் மேற்பட்ட சீரியல்களிலும் நடித்து முடித்து விட்டார். சுதா சந்திரன் இடத்தை மிக எளிதாக பிடித்துவிட்டார். தமிழ், மலையாளம் இரண்டு மொழிகளிலும் நடிக்கும் அழகான மாமியார். அடுத்து சினிமாவிலும் குணச்சித்திர ரோலில் தலை காட்ட இருக்கிறார்.
நன்றி: தினமலர்

aanaa
8th February 2017, 02:55 AM
தமிழ் சீரியலுக்கு வருகிறார் ரஞ்சனி


முதல் மரியாதை படத்தின் மூலம் அறிமுகமான ரஞ்சனி தமிழ் மற்றும் மலையாளத்தில் 20க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். ரஞ்சனி தமிழ் நாட்டை சேர்ந்தவர் என்றாலும் கேரள தொழில் அதிபர் பியரி கொமராவை திருமணம் செய்து கொண்டு கேரளாவில் செட்டிலாகிவிட்டார். பல வருட இடைவெளிக்கு பிறகு ரிங் மாஸ்டர் என்ற மலையாளப் படம் மூலம் ரீ-என்ட்ரி ஆனார்.


அதன் பிறகு சின்னத்திரைக்கு வந்தார். ஆசியாநெட், ஜெய்ஹிந்த், கைரளி, மழவில் மனோரமா டி.விக்களில் காமெடி மற்றும் நடன நிகழ்ச்சிகளுக்கு நடுவராக இருந்து தொகுத்து வழங்கினார். விரைவில் தமிழ் சேனலுக்கு வருகிறார். சின்னத்திரை தொடரில் நடிக்கவும் அவரை அணுகி உள்ளனர். நிகழ்ச்சி நடுவராகவோ சீரியல் நடிகையாகவோ விரையில் என்ட்ரி கொடுக்க இருக்கிறார் ரஞ்சனி. இது தொடர்பான பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.



நன்றி: தினமலர்

aanaa
4th March 2017, 05:54 AM
நந்தினியில் கலக்கும் மாளவிகா


இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்த படம் என்ன சத்தம் இந்த நேரம். இந்தப் படத்தில் ஹீரோயினாக நடித்தவர் மாளவிகா வேலஸ். இதில் இயக்குனர் ராஜா, நிதின் சத்யா உள்பட பலர் நடித்திருந்தார்கள். மாளவிகாவுக்கு இது முதல் தமிழ் படம் என்றாலும், மலையாளத்தில் ஏராளமான படத்தில் நடித்துள்ளார். மலர்வாடி ஆர்ட்ஸ் கிளப், மகரமஞ்சு, ஆட்டகதா முக்கிய படங்கள். இதுதவிர சில கன்னட படங்களிலும் நடித்துள்ளார். அழகு மகன், அறுசுவை அரசன் என்ற தமிழ் படங்ளிலும் நடித்தார்.


அதன்பிறகு சின்னத்திரைக்கு வந்தார். அமிர்தா டி.வியிலில் சூப்பர் ஸ்டார் அல்டிமேட் நிகழ்ச்சியை நடத்தியவர். அதன்பிறகு பொன்னம்பில்லி என்ற மலையாள தொடரில் நடித்தார். அதன் மூலம் இப்போது தமிழ் நந்தினிக்கு வந்திருக்கிறார். நந்தினியில் அவர் ஜானகி கேரக்டரில் நடித்து வருகிறார். அவரது கேரக்டருக்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. இதனால் உற்சாகமாக நடித்து வருகிறார். இதன் மூலம் தமிழ் சினிமா பக்கமும் கவனம் செலுத்தி வருகிறார். விரைவில் தமிழ் படங்களில் அக்கா, அண்ணி போன்ற குணசித்திர வேடங்களில் நடிக்க முடிவு செய்திருக்கிறார்.

http://img1.dinamalar.com/cini//CNewsImages/NTLRG_20170206135848043819.jpg
நன்றி: தினமலர்

aanaa
4th March 2017, 06:00 AM
சின்னத்திரையிலேயே தங்கி விட்ட ராம்ஜி


மனதில் உறுதி வேண்டும், மடிப்பாக்கம் மாதவன் தொடர்களில் நடித்த ராம்ஜி தற்போது ஜி தமிழில் ஒளிபரப்பாகும் டார்லிங் டார்லிங் தொடரில் நடித்து வருகிறார்.


ராம்ஜி அடிப்படையில் டான்சர். காதல் கோட்டை படத்தில் இடம்பெற்ற "வெள்ளரிக்கா பிஞ்சு வெள்ளரிக்கா..." பாடல் மூலம் புகழ் வெளிச்சத்துக்கு வந்தார். அதன் பிறகு பல படங்களில் ஒரு பாட்டுக்கு ஆடினார். பல படங்களில் நடன இயக்குனராக பணியாற்றினார். பல நடன நிகழ்ச்சிகளை நடத்தினார். பல படங்களில் குணசித்தர வேடங்களில் நடித்தார். சில படங்களில் இரண்டாவது நாயகனாக நடித்தார், வில்லனாகவும் நடித்தார். பல கேரக்டர்களில் நடித்து போராடியும் அவரால் சினிமாவில் ஜெயிக்க முடிவில்லை. அதன் பிறகு சின்னத்திரைக்கு வந்தார்.


தற்போது சின்னத்திரையில் வெற்றிகரமான நடிகராக வலம் வந்தாலும் அவருக்குள் இருக்கிற சினிமா ஆசை தீரவில்லை. நல்ல ஒரு வாய்ப்புக்காக காத்திருக்கிறார். இவரது மனைவி அமிர்தா ராம் சினிமாவில் காஸ்ட்டியூம் டிசைனராக இருக்கிறார். பல படங்களில் பணியாற்றியுள்ள அமிர்தா ராம். தற்போது வெற்றி மாறன் இயக்குனம் வடசென்னை படத்தின் காஸ்டியூம் டிசைனராக இருக்கிறார். கணவர் சினிமாவில் ஜெயிக்க வேண்டும் என்பது அமிர்தாவுக்கும் லட்சியமாக இருக்கிறது.
நன்றி: தினமலர்

aanaa
4th March 2017, 06:09 AM
முழுநேர சினிமா நடிகையாகும் திவ்யதர்ஷினி


சின்னத்திரையின் நட்சத்திர தொகுப்பாளினி டி.டி என்று செல்லமாக அழைக்கப்படும் திவ்யதர்ஷினி. நம்பர்-ஒன் தொகுப்பாளினியும் அவர்தான். பொது மேடை நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்க லட்சக்கணக்கில் சம்பளம் வாங்குகிற வரும் அவர்தான். தற்போது திவ்யதர்ஷினி சினிமாவில் நடிக்க அதிக ஆர்வம் காட்டுகிறார்


சினிமா அவருக்கு புதிதில்லை. 1990ம் ஆண்டு சுபயாத்ரா என்ற மலையாளப் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார். ஜூலி கணபதி, நளதமயந்தி, விசில் படங்களில் நடித்தார். சரோஜா படத்தில் கவுரவ வேடத்தில் நடித்தார்.


தற்போது தனுஷ் இயக்கி, தயாரித்து, நடிக்கும் பவர்பாண்டி படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார். சிறப்பு தோற்றம்தான் என்றாலும் கதையின் திருப்புமுனை கேரக்டரில் நடிக்கிறார். "திவ்யதர்ஷினி சூப்பராக நடிக்கிறார். அவர் தொடர்ந்து சினிமாவில் நடிக்க வேண்டும்" என்று தனுஷ் அவரிடம் கோரிக்கை வைத்திருக்கிறார்.


இதனால் திவ்யதர்ஷினிக்கு சினிமாவில் தொடர்ந்து நடிக்கும் எண்ணம் வந்திருக்கிறது. கதாநாயகியாக இல்லாமல் கதைக்கு முக்கித்துவம் வாய்ந்த கேரக்டர்களை தேர்வு செய்து நடிக்க முடிவு செய்திருக்கிறார். இதற்காக கதைகள் கேட்டு வருகிறார். வருகிற ஏப்ரல் 14ந் தேதி பவர் பாண்டி வெளிவருகிறது. அதன் பிறகே புதிய படத்தில் நடிப்பார் என்று தெரிகிறது. படங்களில் நடித்தாலும் சின்னத்திரையில் அவரது பங்களிப்பு தொடர்ந்து இருக்கும் என்று அவருக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கிறது.
நன்றி: தினமலர்

aanaa
4th March 2017, 06:11 AM
சினிமா இயக்குனர் ஆகிறார் தர்ஷிகா -


அக்மார்க் சென்னை பொண்ணு தர்ஷிகா. மெக்கானிக்கல் என்ஜினீயரிங் முடித்து விட்டு தேடி வந்த என்ஜினீரியங் வேலைகளை உதறிவிட்டு மீடியாவுக்குள் வந்தவர். மியூசிக் சேனலில் தொகுப்பாளினியாக தன் கேரியரை ஆரம்பித்தார். அதன் பிறகு வேந்தர் தொலைக்காட்சிக்கு வந்தார். ஜோதிட நேரம், புத்தம் புது காலை திரைப்படம் தொடர்பான நிகழ்ச்சிகளுக்கு தொகுப்பாளினியாக இருந்தவர் தற்போது அழகின் அழகே நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிக் கொண்டிருக்கிறார்.


தர்ஷிகாவுக்கு இயக்குனராக வேண்டும் என்பதுதான் கனவு. அதற்கான முயற்சியிலும் இருக்கிறார். நிறைய கதைகள் கைவசம் வைத்திருக்கும் தர்ஷிகா அதற்கான திரைக்கதைகளையும் எழுதி முடித்திருக்கிறார். விரைவில் சீரியல் ஒன்றிலும் நடிக்க இருக்கிறார். தர்ஷிகாவுக்கு இயக்குனர்களில் மணிரத்னமும், கவுதம் வாசுதேவ் மேனனும்தான் மானசீக குருவாம். தர்ஷிகா இயக்குனராகும் செய்தி விரைவில் வர இருக்கிறது.
நன்றி: தினமலர்

aanaa
11th April 2017, 09:07 PM
பரத நாட்டியத்தில் புகழ்பெற்று வரும் சீரியல் நடிகை ஜெயஸ்ரீ!


பல சீரியல்களில் மாறுட்ட கேரக்டர்களில் நடித்தவர் ஜெயஸ்ரீ. தற்போது ரம்யா கிருஷ்ணனின் வம்சம் தொடரில் ரோஜா என்ற கேரக்டரில் நடித்து வருகிறார். இதுதவிர பரத நாட்டிய நிகழ்ச்சிகளும் பிசியாக நடத்தி வருகிறார் ஜெயஸ்ரீ.


அதுகுறித்து அவர் கூறுகையில், நான் சிறிய வயதில் இருந்தே பரத நாட்டியம் பயிலத் தொடங்கி விட்டேன். என் அம்மா லட்சுமிராவ் பரத நாட்டிய கலைஞர் என்பதால் எனது ஐந்தாவது வயதிலேயே அரங்கேற்றம் நடத்தி விட்டார். அதனால் பள்ளியில் படித்த காலத்திலேயே பரத நாட்டிய நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வந்தேன். அது இப்போதுவரை தொடர்கிறது.


சீரியல்களில் நடிப்பது போக மீதமுள்ள நேரத்தை பரத நாட்டியத்திற்கு பயன்படுத்தி வருகிறேன். தமிழ்நாடு மட்டுமின்றி, சிங்கப்பூர், மலேசியா போன்ற வெளிநாடுகளிலும் பரத நாட்டிய நிகழ்ச்சிகள் நடத்தி வருகிறேன். அனைத்து தரப்பினரும் பரத நாட்டியத்தை ரசிக்க வேண்டும் என்பதற்காக வள்ளி கல்யாணம் போன்ற ஆன்மீக கதைகளை மையப்படுத்தும் நடன நிகழ்ச்சிகளை அதிகமாக நடத்துகிறேன். நான் சீரியல்களிலும் நடித்து பிரபலமாகியிருப்பதால், நடனமாட செல்லும் இடங்களில் எனக்கு மக்கள் நல்ல வரவேற்பு கொடுக்கிறார்கள். பரத நாட்டியத்தில் நல்ல பெயரும், புகழும் கிடைக்கிறது.


அந்த வகையில், இதுவரை 1500 பரத நாட்டிய நிகழ்ச்சிகள் நடத்தி விட்டேன். நான் கற்ற இந்த கலையை மற்றவர்களை ரசிக்க வைப்பது மனதுக்கு மகிழ்ச்சியாக உள்ளது. மேலும், எனது கணவரான சீரியல் நடிகர் ஈஸ்வரும் எனக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்கிறார். அதனால், எதிர்காலத்தில பரத நாட்டிய நிகழ்ச்சியினை இன்னும் பிரமாண்டமாக நடத்தவும் திட்டமிட்டிருக்கிறேன் என்கிறார் சீரியல் நடிகை ஜெயஸ்ரீ.
நன்றி: தினதந்தி

aanaa
11th April 2017, 09:09 PM
ரியல் இமேஜை கெடுக்கும் வேடங்களில் நடிக்க மாட்டேன்! -ஸ்வேதா




கனா காணும் காலங்கள், கார்த்திகை பெண்கள் ஆகிய சீரியல்களில் நடித்தவர் ஸ்வேதா. அதையடுத்து, ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பான டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியில் நடனமாடிய அவர், தற்போது அபூர்வ ராகங்கள் தொடரில் ஸ்வேதா என்றொரு டாக்டர் வேடத்தில் நடித்து வருகிறார்.


இந்த டாக்டர் வேடம் குறித்து ஸ்வேதா கூறுகையில், இதற்கு முன்பு நான் நடித்த சீரியல்களை விட இந்த அபூர்வ ராகங்கள் தொடரில் மெச்சூரிட்டியான வேடத்தில் நடிக்கிறேன். அதனால் என்னை சந்திக்கும் நேயர் கள் ஸ்வேதா டாக்டர் என்றே அழைக்கிறார்கள். அது ரொம்ப பெருமையாக உள்ளது. அதோடு, நல்ல ரீச் கிடைத்திருக்கிறது. அதனால் இனிமேல் இந்த மாதிரி நல்ல தரமான கேரக்டர்களை செலக்ட் பண்ணி நடிக்கப்போகிறேன்.


மேலும், நெகடீவ் வேடங்களில் நடிக்கும் வாய்ப்பும் வருகிறது. ஆனால் நான் அந்த மாதிரி கேரக்டர்களில் நடிப்பதில் ஆர்வம் காட்டவில்லை. கார ணம், அது வேற மாதிரி ரீச் கொடுத்து விடுகிறது. அதாவது, நிஜ வா ழ்க் கையில் நாம் என்னதான் நல்லவர்களாக இருந்தபோதும், அந்த கேரக்டரின் தன்மையை வைத்து நம்மையும் கெட்டவர்களாகவே நேயர்கள் பார்க்கிறார்கள். அதனால் எனது ரியல் இமேஜை கெடுக்கும் அந்தமாதிரியான கேரக்டர்களில் நான் நடிக்க மாட்டேன். இதில் உறுதியாக இருக்கிறேன்.


முக்கியமாக, நான் நடிக்கிற கேரக்டர்கள் மூலம் சமுதாயத்துக்கு ஏதேனும் நல்ல விசயங்கள் சொல்லவேண்டும் என்று ஆசைப்படுகிறேன். அதோடு, பெண்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தக்கூடிய சவாலான வேடங்களில் நடிக்க வேண்டும் என்பது எனது முக்கியமான ஆசைகளில் ஒன்றாக உள் ளது என்கிறார் நடிகை ஸ்வேதா.



நன்றி: தினதந்தி

aanaa
11th April 2017, 09:11 PM
விமான பணிப்பெண் ஆகிறார் நட்சத்திரா


புகழ்பெற்ற ராமானுஜர் தொடரில் ராமானுஜரின் மனைவியாக நடித்திருந்தவர் நட்சத்திரா. சரித்திர தொடரில் நடித்தவர் தற்போது தெய்வம் தந்த வீடு தொடரில் முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார். நடிப்புக்கு இடையில் விமான பணிப்பெண் வேலைக்கான பயிற்சியையும் எடுத்து வருகிறார். இது குறித்து அவர் கூறியிருப்பதாவது:


எனக்கு பூர்வீகம் தெலுங்கானா. ராமானுஜர் தொடர் ஆடிசன் போன போது நான் ராமானுஜரின் மனைவியின் சாயலில் இருந்ததால் அதில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. சீரியல் பார்த்தவர்கள் என்னை பக்தியுடன் பார்த்தார்கள். இப்போது தெய்வம் தந்த வீடு தொடரில் கலகலப்பான கேரக்டரில் நடிக்கிறேன்.


நடிப்பது போலவே எனக்கு விமானத்தில் பறப்பதும் உலகத்தை சுற்றி பார்ப்பதும் பிடித்தமான விஷயங்கள். அதற்கு பெரிய தொழில் அதிபாராக இருக்கணும். இல்லாவிட்டால் விமான பணிப்பெண்ணாக இருக்க வேண்டும் என்றார்கள். நான் விமான பணிப்பெண்ணாக மாற விரும்பினேன். அதற்காக படித்து வருகிறேன். தமிழ், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம், மலையாளம், பிரெஞ்சு என 6 மொழிகள் தெரியும் என்பது கூடுதல் பலம். ஒருபுறம் நடித்தாலும் இன்னொருபுறம் பறந்து கொண்டே இருக்க வேண்டும் என்கிற ஆசை என்கிறார் நட்சத்திரா.
http://img1.dinamalar.com/cini//CNewsImages/NTLRG_20170407100851966021.jpg



நன்றி: தினதந்தி

aanaa
11th April 2017, 09:17 PM
பளு தூக்கும் போட்டியில் தங்கம் வென்ற ரம்யா -


சின்னத்திரை தொகுப்பாளினி, ரேடியோ ஜாக்கி, திரைப்பட நடிகை என பன்முகம் கொண்டவர் ரம்யா. அவரது இன்னொரு புதியமுகம் தற்போது பளு தூக்கும் வீராங்கணை. கடுமையான பயிற்சிகள் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட வீராங்கணையாகியிருக்கிறார். கடந்த பிப்ரவரி மாதம் நடந்த மாநில அளவிலான 5வது பளு தூக்கும் போட்டியில் மூன்றவாது இடம் பிடித்து வெண்கல பதக்கம் வென்றார். அடுத்த போட்டியில் தங்கம் வெல்வேன் என்ற அப்போது அவர் கூறியிருந்தார்.


அதன்படி தற்போது சென்னை கோட்டூர்புரத்தில் நடந்து வரும் மாநில அளவிலான பளு தூக்கும் போட்டியில் 70 கிலோ, 75 கிலோ, மற்றும் 80 கிலோ பிரிவில் கலந்து கொண்டு தங்க பதக்கம் வென்றுள்ளார். இதன் மூலம் ரம்யா அடுத்து மும்பையில் நடைபெறும் தேசிய போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.
நன்றி: தினதந்தி

aanaa
11th April 2017, 09:19 PM
ரேடியோ ஜாக்கியான ஷனோ


அதென்னவோ தெரியவில்லை வீடியோ ஜாக்கிகள், சின்னத்திரை நிகழ்ச்சி தொகுப்பாளினிகள், பண்பலை ரேடியோ தொகுப்பாளினியாக மாறிக் கொண்டிருக்கிறார்கள். அதாவது வீஜே-விலிருந்து ஆர்ஜேவாக மாறுகிறார்கள். ரம்யா, அர்ச்சனாவைத் தொடர்ந்து தற்போது ஷனோவாவும் ரேடியோ ஜாக்கியாகி இருக்கிறார்


சின்னத்திரையில் பொழுதுபோக்கு, மருத்துவம், தொடர்பான நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிக் கொண்டிருந்தவர் தற்போது, பீவர் 91.9 ரேடியோவில் பண்பலை தொகுப்பாளராக பணியாற்றி வருகிறார். அவர் தற்போது லூஸ் கண்ட்ரோல் என்ற நிகழ்ச்சியை மாலை 5 மணிமுதல் இரவு 9 மணி வரை நடத்தி வருகிறார். "தொகுப்பாளினியாக பணியாற்றியது சந்தோஷமாகத்தான் இருந்தது. ஆனாலும் ஏனோ ஆர்ஜேவாக வேண்டும் என்கிற ஆசை ரொம்ப நாளாக மனதில் ஓடிக் கொண்டிருந்தது. அதற்கான வாய்ப்பு ஃபீவர் எம்.எம்.மில் கிடைத்ததும் அதனை பயன்படுத்திக் கொண்டேன். ஏசி அறையில் உட்கார்ந்து கொண்டு முகம் தெரியாதவர்களுடன் கலகலப்பாக பேசுவதே ஒரு தனி சுகம்தான்" என்கிறார் ஷனோ.
http://img1.dinamalar.com/cini//CNewsImages/NTLRG_20170404122326418728.jpg



நன்றி: தினதந்தி

aanaa
11th April 2017, 09:21 PM
சமூக சேவையில் ஆத்மதிருப்தி கிடைக்கிறது! மாரி ஜார்ஜ்


விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அது இது எது நிகழ்ச்சியில் பல்வேறு கெட்டப்புகளில் நடித்து வருபவர் ஜார்ஜ். அதோடு, மாரி, நாலு பேருக்கு நல்லதுன்னா எதுவும் செய்யலாம் போன்ற படங்களில் நடித்த அவர், தற்போது ஜூலியும் நான்கு பேரும் என்ற படத்திலும் நடித்து வருகிறார். மேலும், சமூக சேவையில் ஆர்வம் கொண்டவரான ஜார்ஜ், மாற்றுத்திறனாளிகள், மனநலம் குன்றிய பிள்ளைகள் உள்ளிட்ட பலரது திறமைகளை வெளிக்கொண்டு வரும் நிகழ்ச்சிகள் நடத்தி அவர்களுக்கு உதவிகள் பெற்று தருகிறார்.


இதுபற்றி ஜார்ஜ் கூறுகையில், சென்னை ஸ்பெசல் ஒலிம்பிக் என்ற பெயரில் வருடந்தோறும் நிகழ்ச்சி நடத்துகிறேன். இதில், முழுக்க முழுக்க உடல்ஊனமுற்ற பிள்ளைகள் 75 சதவிகிதமும், மனநலம் குன்றிய பிள்ளைகள் 25 சதவிகிதமும் இருப்பார்கள். எல்கேஜி பிள்ளைகளுக்கு நடத்துவது போன்ற விளையாட்டு போட்டிகள் வைப்போம். கடந்த மூன்று வருடங்களாக இதை நடத்தி வருகிறேன். எனக்கென ஒரு டீம் உள்ளது. இதற்கு என்ஜிஓக்கள் வந்து கலந்து கொள்வார்கள். அக்கம் பக்கத்தில் இருப்பவர்கள் ஸ்பான்சர் செய்வார்கள். பிள்ளை களுக்கு உணவுகள் வழங்குவார்கள். சான்றிதழ், மெடல் எல்லாம் கொடுப்பார்கள்.


மேலும், சமீபத்தில் கண்ணு தெரியாத ஒரு பெண்ணுக்கு ஜி.வி.பிரகாஷ் பாட வாய்ப்பு கொடுத்தார் அல்லவா. ஆனால் நாங்கள் அந்த மாதிரி பெண்ணுக்கு உதவிகள் செய்ய மாட்டோம். அந்த பெண்களை இந்த நிலைமைக்கு கொண்டு வர அவரது பெற்றோர் ரொம்ப கஷ்டப்பட்டிருப்பார்கள். அதனால் அவர்க ளுக்குத்தான் நாங்கள் உதவிகளும், விருதும் கொடுப்போம். அதுவும் வீடுதேடி சென்றே கொடுப்போம்.


அதேமாதிரி சென்னையில் வெள்ளம் வந்தபோது ஒரு தம்பதியினர் இலவசமாக மெழுகுவர்த்தி கொடுத்தார்கள். அவர்களையெல்லாம் உற்சாகப்படுத்தினால் இன்னும் பெரிய அளவில் சமூக சேவை செய்வார்களே என்பதால், அவர்கள் பேமிலி மெம்பர்களை வைத்தே அவர்களுக்கு விருது கொடுக்க வைத்தோம். அப்படி செய்வதால் அவர்களது பேமிலியும் அவர்கள் செய்த சமூகசேவையை பற்றி உணருவார்கள். முன்பு எதற்கு இந்த தேவையில்லாத வேலை என அவர்களை திட்டியவர்கள் கூட நாங்கள் உற்சாகப்படுத்துவதைப் பார்த்து அவர்களை அங்கீகரிப்பார்கள்.


.அவர்களுக்கு ஒரு விருது கொடுப்பதோடு நிறுத்திக்கொள்ளாமல், அவர்களுக்கு கார்ப்பரேட் நிறுவனங்களுடன் தொடர்பு கொடுத்து, இவர்களுக்கு அவர்களை உதவி செய்ய வைப்போம். அதன்பிறகு அந்த சமூகஆர்வலர்கள் அவர்களிடம் உதவி பெற்று இன்னும் அதிகப்படியான சமூகசேவை செய்வார்கள். பின்னர் எங்களுக்கும் அவர்களுக்குமிடையே தொடர்பு இருக்காது. 1998ல் இருந்து இந்த விசயத்தை தொடர்ந்து செய்து வருகிறேன்.


இப்போது நான் ஓரளவு முகம் தெரிந்த நடிகராகிவிட்டதால், இந்த உதவியை இன்னும் அதிகப்படியாக செய்யவிருக்கிறேன். டைரக்டர் பாலாஜிமோகன் என்னோட சோசியல் ஒர்க் ப்ரண்டுதான். தனுசும் என்னோட ஈவன்டுகளுக்கு வந்திருக்கிறார். முக்கியமாக நாங்கள் எந்த டோனர்களிடம் பணம் வாங்குவதில்லை. ஈவண்டில் கலந்து கொள்ளும் பிள்ளைகளுக்கு என்ன தேவை என்பதை அறிந்து அதை அவர்களை செய்து கொடுக்க சொல்லி விடுவேன். சமூக ஆர்வலர்கள் மற்றும் மாற்றுதிறனாளி, மனநலம் குன்றிய பிள்ளைகளை உற்சாகப்படுத்தவே இதை செய்து வருகிறேன். இதில் எனக்கு ஆத்ம திருப்தி கிடைக் கிறது என்கிறார் அது இது எது ஜார்ஜ்.



நன்றி: தினதந்தி

aanaa
11th April 2017, 09:23 PM
ஆண்களை சீரியல் பார்க்க வைத்தது நான்தான்! - நாகினி மெளனிராய்




பாலிவுட் திரையுலகில் சினிமா நடிகைகளுக்கு இணையாக சீரியல் நடிகை களும் பரபரப்பு வளையத்திற்குள் சிக்கிக்கொண்டு வருகிறார்கள். அந்தவகையில், இந்தியில் உருவாகி தமிழில் நாகினி என்ற பெயரில் டப் செய்யப்பட்டு ஒளிபரப்பாகி வரும் நாகினி சீரியலில் நாயகியாக நடித்துள்ள மெளனிராயும் பரபரப்பாக பேசப்படும் நடிகையாகியிருக்கிறார்


.காரணம், சீரியல்களில் குடும்பப்பாங்காக நடித்து வரும் அவர், நிஜத்தில் பயங்கர மாடர்ன் பெண். அதோடு, தான் பிகினி உடையணிந்து நீந்திக்குளிக்கும் போட்டோக்களையும் இணையதளங்களில் வெளியிட்டு ஏராளமான ரசிகர்களை கவர்ந்து வைத்துள்ளார். அதன்காரணமாக, நாகினி சீரியல் இந்தியில் வெளியானபோது பெண்களை விட ஆண்கள்தான் அந்த சீரியலை வெகுவாக ரசித்தார்களாம். இதை ஒரு பேட்டியில் தெரிவித்துள்ள மெளனிராய், மற்ற நடி கைகள் பெண்களை சீரியல் பார்க்க இழுத்தனர். ஆனால் நான்தான், பெருவாரியான ஆண்களையும் சீரியல் பார்க்க வைத்தேன். இந்த பெருமைக்குரிய ஒரே நடிகை நான் மட்டுமே என்று கூறியுள்ளார்.
http://img1.dinamalar.com/cini//CNewsImages/NTLRG_20170402094418459923.jpg
நன்றி: தினதந்தி

aanaa
11th April 2017, 09:50 PM
யூ டியூப் சேனலில் கலக்கும் ஸ்ரீரஞ்சனி


விஜய் டி.வியிலும், புதுயுகம் சேனலிலும் நிகழ்ச்சி தொகுப்பு, நடனம் என்று கலக்கிக் கொண்டிருந்தவர் ஸ்ரீரஞ்சனி. கல்யாணம் முதல் காதல் வரை ஹீரோ அமித் பார்கவை காதலித்து திருமணம் செய்து கொண்டபிறகு சத்தமின்றி சின்னத்தரையிலிருந்து ஒதுங்கி விட்டார்.


ஆனால் மீடியாவின் இன்னொரு தளத்தில் பிசியாக இயங்கிக் கொண்டிருக்கிறார். மெட்ராஸ் சென்ட்ரல் என்ற யூ டியூப் சேனலில் ரீல் அந்து போச்சு என்ற காமெடி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிக் கொண்டிருக்கிறார். இந்த நிகழ்ச்சிக்கு செம ரெஸ்பான்ஸ். இதுதவிர வெளிவரும் படங்களை விமர்சிக்கிறார். டுவிட்டர் பேஸ்புக் மூலம் திரைப்படங்களை புரமோட் செய்கிறார். இதற்கெல்லாம் காதல் கணவர் மிகவும் ஒத்துழைக்கிறாராம்.


கணவர் அமீத் பார்கவ் தற்போது கர்ஜனை என்ற படத்தில் நடித்து வருகிறார். கணவர் நடிப்பில் ஒரு படத்தை தயாரிக்கும் யோசனையிலும் இருக்கிறார் ஸ்ரீரஞ்சனி. டெக்னாலஜி வளரும்போது நாமும் அப்டேட் ஆகிக்கணும். ஒரே இடத்துல நிற்ககூடாது என்கிறார் ஸ்ரீரஞ்சனி.
நன்றி: தினதந்தி

aanaa
11th April 2017, 09:52 PM
நடிப்புக்கு பிரேக் கொடுத்த சுஜிதா!


குழந்தை நட்சத்திரமாக தென்னிந்திய படங்களில் நடிக்கத் தொடங்கியவர் சுஜிதா. அதன்பிறகு சீரியல்களில் லீடு ரோல்களில் கணவருக்காக, மகாராணி, மருதாணி, விளக்க வச்ச நேரத்திலே, மைதிலி, ஒரு கை ஓசை என பல சீரியல் களில் நடித்தார். தமிழ் மட்டுமின்றி, மலையாளம், தெலுங்கு சீரியல்களிலும் பிசியாக நடித்து வந்த சுஜிதாவை கடந்த இரண்டு ஆண்டுகளாக சீரியல்களில் காண முடியவில்லை.


என்ன காரணம்? என்று சுஜிதாவைக் கேட்டால், கடந்த இரண்டு ஆண்டுகளாக நான் சீரியல்களில் நடிக்காமல் பிரேக் கொடுத்ததற்கு என் மகன்தான் காரணம். அவன் குழந்தையாக இருந்தபோது என்னை தேடமாட்டான். ஆனால் ஓரளவு விவரம் தெரிந்த பிறகு நான் பக்கத்திலேயே இருக்க வேண்டும் என்று விரும்பினான். அதனால் அவனுக்காக இரண்டு வருடங்களாக சீரியல்களில் நடிக்கவிலை. தற்போது பிரீகேஜி படிக்கும் அவன், விரைவில் எல்கேஜி படிக்கப்போகிறான்.


அதனால், மீண்டும் நான் நடிக்க தயாராகி விட்டேன். ஏற்கனவே நடித்தது போன்று முக்கியத்துவம் வாய்ந்த வேடங்களில் நடிக்க விரும்புகிறேன் என்று கூறும் சுஜிதா, ஒரு அம்மாவாக இருந்து பாச உணர்வுகளை வெளிப்படுத்திய எனக்கு இப்போது செண்டிமென்ட் வேடங்களில் கிடைத்தால் உணர்வுப்பூர்வமாக நடித்து நேயர்களை உருக வைத்து விடுவேன் என்கிறார்.
http://img1.dinamalar.com/cini//CNewsImages/NTLRG_20170329091555423017.jpg



நன்றி: தினதந்தி

aanaa
10th May 2017, 05:34 AM
சின்னத்திரைக்கு டாடா காட்டிய நாகினி மெளனிராய்


கடந்த பத்து ஆண்டுகளாக இந்தி சேனல்களில் டிவி தொடர், ஸ்டேஜ் ஷோக்களில் பங்கேற்று வந்தவர் மெளனிராய். குறிப்பாக பாலிவுட் சினிமா நடிகைகளுக்கு இணையாக சின்னத்திரையில் கவர்ச்சிகரமாக தோன்றி கலக்கியவர் மெளனிராய். அவர் இந்தியில் நடித்த நாகினி சீரியல், தமிழிலும் ஒளிபரப்பாகி நாகினிராயை இந்திய அளவில் பிரபலப்படுத்தியது. இந்த சீரியலின் இரண்டாம் பாகம் அடுத்து தமிழில் டப்பாகி வெளியாகும் நிலையில், அடுத்தபடியாக நாகினி தொடரில் மூன்றாம் பாகம் இந்தியில் படமாக்கப்படுகிறது.


ஆனால், நாகினி தொடரின் முதல் இரண்டு பாகங்களில் நடித்த மெளனிராய், மூன்றாம் பாகத்தில் நடிக்கவில்லை. காரணம், இந்தியில் நடிகர் சல்மான்கான் தயாரிக்கும் ஒரு படத்தில் மெளனிராய்க்கு கதாநாயகி வேடம் கிடைத்துள்ளது. அந்த படத்தில் நாயகனாக சித்தார்த் மல்ஹோத்ரா நடிக்கிறார். இதற்கான பேச்சுவார்த்தை முன்பே முடிந்து விட்டதால், நாகினி மூன்றாம் பாகத்தில் நடிக்க தனக்கு அழைப்பு வருவதற்கு முன்பே, தான் சினிமாவில் என்ட்ரி கொடுக்கப் போவதை சொல்லி சீரியலில் இருந்து விலகிக்கொண்டுள்ளாராம் மெளனிராய்.

நன்றி: தினதந்தி

aanaa
10th May 2017, 05:37 AM
டிவி நடிகர் பிரதீப் குடும்பத்தினரிடம் போலீசார் தீவிர விசாரணை


சுமங்கலி சீரியல் நாயகன் பிரதீப் கடந்த 3-ம் தேதி ஐதராபாத்தில் உள்ள தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த அதிர்ச்சி செய்தி தமிழ், தெலுங்கு சீரியல் வட்டார நடிகர் நடிகைகளை உறைய வைத்தது. இதனால் சென்னையில் உள்ள சின்னத்திரை வட்டாரங்களில் அனைவரும் கவலையான முகத்துடன் காணப்பட்டனர்.


மேலும், நடிகர் பிரதீப்பின் மரணம் தற்கொலை என்றபோதும், அவரது உடம்பில் காயங்கள் இருந்ததாக கூறப்பட்டதால், யாரேனும் அவரை கொலை செய்திருப்பார்களோ என்ற சந்தேகத்தின் அடிப்படையில் அவரது உடலை போலீசார் மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் தற்போது அவரை யாரும் கொலை செய்யவில்லை. தற்கொலைதான் என்று மருத்துவ பரிசோதனை முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்த நிலையில், பிரதீப்பின் தற்கொலைக்கான காரணம் என்ன என்பது குறித்து அறிய, அவரது மனைவி மற்றும் குடும்பத்தினரிடம் ஐதராபாத் போலீசார் தீவிர விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர். குறிப்பாக, பிரதீப்பின் மனைவியும், நடிகையுமான பாவனி ரெட்டியின் உறவினர் ஷெராவன் என்பவரும் அவர்களது வீட்டில் தங்கியிருந்ததால், பிரதீப்பின் தற்கொலையில் அவருக்கும் சம்பந்தம் இருக்குமோ என்கிற அடிப்படையிலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
நன்றி: தினதந்தி

aanaa
10th May 2017, 05:43 AM
விபத்தில் உயிரிழந்தது நானில்லை : நடிகை ரேகா விளக்கம்


வேலூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அருகே நடந்த சாலை விபத்தில் சின்னத்திரை நடிகை ரீகா சிந்து மரணம். பெங்களூருவில் இருந்து சென்னை நோக்கி வந்த பொழுது, விபத்தில் சிக்கி அவர் உயிரிழந்தார்.


இதற்கிடையே விபத்தில் உயிரிழந்தது தெய்வ மகள் சீரியல் அண்ணியார் நடிகை காயத்ரி ரேகா என தகவல் பரவியது. இதனால் சினி உலகம் பரபரப்பானது. இதனையடுத்து விபத்தில் உயிரிழந்தது தான் இல்லை என ரேகா விளக்கம் அளித்துள்ளார். <br><br>வாட்ஸ்ஆப் வீடியோ மூலம் காயத்ரி ரேகா அளித்துள்ள விளக்கத்தில், கடவுள் அருளால் நான் நலமுடன் உள்ளேன். விபத்தில் சிக்கி உயிரிழந்தது வேறு சிந்து ரேகாவாக இருக்கலாம். நான் எனது குடும்பத்துடன் நலமாக இருக்கிறேன் என தெரிவித்துள்ளார்.

கார் விபத்தில் சின்னத்திரை நடிகை மர்ம மரணம்


வேலூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த சுண்ணாம்புகுட்டை பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் கார் கட்டுபாட்டை இழந்து விபத்துகுள்ளானது. இதில் பெங்களூருவைச் சேர்ந்த டிவி துணை நடிகை ரீகா சிந்து சம்பவ இடத்தில் உயிரிழந்தார். காரில் அவருடன் வந்த மூன்று பேர் லேசான காயத்துடன் உயிர் தப்பினர்.<br><br>பெங்களூருவில் இருந்து சென்னை திரும்பிக் கொண்டிருந்த போது, அதிகாலையில் சாலையின் தடுப்பு சுவரின் மீது கார் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. காரில் ரீகாவுடன் வந்த அவரது தோழி மற்றும் 2 ஆண் நண்பர்களும் தப்பி ஓடி உள்ளனர். இதனால் அவரது மரணத்தில் மர்மம் இருப்பதாக ரீகாவின் குடும்பத்தினர் சந்தேகம் எழுப்பி உள்ளனர்.
<hr>
அனைவரும் சீட்பெல்ட் அணிந்திருந்த போது ரீகா மட்டும் எப்படி காரில் இருந்து வெளியே வீசப்பட்டார் எனவும், விபத்து என்றால் உடன் வந்தவர்கள் சம்பவ இடத்தில் இருந்து ஓடியது ஏன் எனவும் கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது. கடந்த வாரம், சந்தீப்குமார் என்ற சின்னத்திரை நடிகர் மர்மமான முறையில் தற்கொலை செய்து கொண்ட நிலையில், ரீகாவும் மர்மமான முறையில் இறந்துள்ளது சின்னத்திரை வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.




நன்றி: தினதந்தி

aanaa
10th May 2017, 05:57 AM
மீண்டும் சின்னத்திரையில் ரோகினி


நடிகை ரோகினி தென்னிந்திய மொழிகளில் 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர். அதுமட்டுமல்ல ஆவணப்பட இயக்குனர், குறும்பட இயக்குனர், திரைப்பட இயக்குனர், டப்பிங் ஆர்ட்டிஸ்ட், சமூக ஆர்வலர் என பல முகங்களை கொண்டவர். கங்கா என்ற தொடர் மூலம் சின்னத்திரையில் கால் பதித்தார். அதன்பிறகு கேள்விகள் ஆயிரம், அழகிய தமிழ் மகள், ரோகினியின் பாக்ஸ் ஆபீஸ், கேள்வி நேரம் உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்.


>தற்போது ஒரு சிறிய இடைவெளிக்கு பிறகு ஜீ தமிழ் தொலைக்காட்சிக்கு வந்திருக்கிறார். லைட்ஸ் கேமரா ஆக்ஷ்ன் என்ற நிகழ்ச்சியை நடத்துகிறார். இது சினிமா தொடர்பான நிகழ்ச்சி. சினிமா செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், நடிகர், நடிகைகள், இயக்குனர்கள் பேட்டி என கலவையாக ஒளிபரப்பாகிறது. நேற்று (30ந்தேதி) ஒளிபரப்பை தொடங்கிய இந்த நிகழ்ச்சி ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் மாலை 4 மணிக்கு ஒளிபரப்பாகிறது. வார நாட்களில் மறு ஒளிபரப்பாகும்.
நன்றி: தினதந்தி

aanaa
10th May 2017, 06:00 AM
ஆங்கிலத்தில் பேசவே ஆடியோ விழாவுக்கு அழைத்தனர் - பாவனா


சினிமா படங்களின் ஆடியோ விழாக்களுக்கு சின்னத்திரையில் இருந்து ரம்யா, அஞ்சனா போன்ற தொகுப்பாளினிகள்தான் சமீபகாலமாக பங்கேற்று வருகிறார்கள். ஆனால், சிலதினங்களுக்கு முன்பு சென்னையில் நடைபெற்ற ஏன்டா தலையில எண்ண வைக்கல படத்தின் ஆடியோ விழாவுக்கு எதிர்பாராதவிதமாக விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் தொகுப்பாளினி பாவனா பாலகிருஷ்ணன் வந்திருந்தார்.


அப்போது அவரை அனைவரும் ஆச்சரியமாக பார்த்தனர். அதையடுத்து பேசிய பாவனா பாலகிருஷ்ணன், நான் இதுவரை எந்த சினிமா படங்களின் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டதில்லை. இந்த நிகழ்ச்சிக்கு திடீரென்று அழைத்தபோது என்னை எதற்காக அழைக்கிறீர்கள் என்று கேட்டேன். அதற்கு, இந்த படத்தின் தயாரிப்பாளர்கள் வெளிநாட்டை சேர்ந்தவர்கள். அதனால் ஆங்கிலத்திலும் தொகுத்து வழங்க வேண்டியுள்ளது. அதன்காரணமாகத்தான் உங்களை அழைத்தோம் என்று சொன்னார். நான் இந்த ஆடியோ விழாவிற்குள் வந்தது இப்படித்தான் என்று கூறிய பாவனா, தமிழ், ஆங்கிலம் என மாறி மாறி தொகுத்து வழங்கினார்.
நன்றி: தினதந்தி

aanaa
10th May 2017, 06:04 AM
டிடிக்கு போட்டியாக சுஹாசினியை களம் இறக்குகிறது ஜீ தமிழ்


விஜய் டி.வியின் நட்சத்திர நிகழ்ச்சியான காப்பி வித்த டிடி ரொம்பவே பாப்புலர். திரைப்பட நட்சத்திரங்கள் டிடி நடத்தும் நிகழ்ச்சியென்றால் மறுப்பேதும் சொல்லாமல் செல்வார்கள். அந்த அளவிற்கு டிடி நட்சத்திரங்கள் மத்தியில் பிரபலம். மற்றும் செல்லப்பிள்ளை. தற்போது புதிய பொலிவுடன் சில மாற்றங்களுடன் அதே நிகழ்ச்சி அன்புடன் டிடி என்ற பெயரில் ஒளிபரப்பாகி வருகிறது.<br>இந்த நிகழ்ச்சிக்கு போட்டியாக ஜீ தமிழ் சேனல் வீக்கெண்ட் ஸ்டார் என்ற நிகழ்ச்சியை இன்று முதல் (ஏப்ரல் 30) ஒளிபரப்புகிறது. இது ஒவ்பொரு வாரமும் ஞாயிற்றுக் கிழமை இரவு 8 மணக்கு ஒளிபரப்பாகும். வார நாளில் மறு ஒளிபரப்பாகும். இதனை சுஹாசினி தொகுத்து வழங்குகிறார். திரைப்பட நட்சத்திரங்களை ஜாலியாக பேட்டி எடுக்கும் அதே நிகழ்ச்சிதான் இதுவும். எந்த மாதிரியான அம்சங்கள் புதிதாக இருக்கும் என்பது நிகழ்ச்சி ஒளிபரப்பாகும்போது தெரியும்.


இந்த நிகழ்ச்சி குறித்து சுஹாசினி கூறியிருப்பதாவது: நிறைய சேனல்களில் நிறைய பேர் செலிபிரிட்டி சாட் ஷோ பண்றாங்க. அதையே நாமும் பண்ணணுமானுன்னு யோசித்தேன். ஆனால் அவர்கள் நம்முடன் பேசுகிற அந்த கொஞ்ச நேரத்தில் அவர்களோடு வாழ்க்கையையே திரும்பி பார்க்கிறது அற்புதமாக இருக்கும். அதனால் பண்ணலாமேன்னு தோணிச்ச்சு. பண்ண முடிவு பண்ணிட்டேன். எனக்கு எல்லா செலிபிரிட்டியும் தெரியும். ஆனால் அவுங்க பர்சனல் பற்றி தெரியாது. தெரிஞ்சுக்குவோம். அவுங்க என்னோட பேசுவாங்க. என்கிறார் சுஹாசினி.
நன்றி: தினதந்தி

aanaa
21st October 2017, 01:51 AM
யப் டிவிக்கு விருது


பிரபல இணையதள டிவி சேனலான யப் டிவிக்கு., 2017-ம் ஆண்டுக்கான பிராஸ்ட் அண்ட் சல்லிவன் விருது கிடைத்திருக்கிறது. மும்பையில் நடந்த இதற்கான விழாவில், பிராஸ்ட் அண்ட் சல்லிவனின் சர்வதேச தலைவர் அரூப் ஜட்ஸி, யப் டிவியின் நிர்வாகியான உதய் ரெட்டிக்கு இந்த விருதை வழங்கினார்


இந்த விருது கிடைத்தது பற்றி யப் டிவியின் உதய் ரெட்டி கூறுகையில், யப் டிவியின் ஒட்டுமொத்த குழு சார்பாக இந்த விருதை நான் பெறுவதில் நான் மிகுந்த மகிழ்ச்சி கொள்கிறேன். இதற்காக தேர்வுக்குழுவுக்கு எனது நன்றி என்று கூறியுள்ளார்.


இணையதள டிவி உலகில் யப் டிவி., 14 மொழிகளில் 250 சேனல்களை ஒளிபரப்பகிறது. குறிப்பாக தென்னிந்தியாவில் ஒளிப்பரப்பாகும் பல சேனல்களை இந்த இணையதளத்தில் காணலாம். டிவி நிகழ்ச்சிகள் மற்றும் இன்றி பல பொழுதுபோக்கு அம்சம் தொடர்பான நிகழ்ச்சிகளையும் ஒளிப்பரபுகிறது. கிரிக்கெட் போன்ற விளையாட்டு போட்டிகளையும் நேரடியாக ஒளிப்பரப்பி வருகிறது.
நன்றி: தினமலர்

aanaa
21st October 2017, 01:55 AM
கடந்த 2004ம் ஆண்டு ஜீ தமிழ் தொலைக்காட்சி தொடங்கப்பட்டது. ஆரம்பத்தில் சாதரணமாக இருந்த ஜீ தமிழ், தற்போது புதிய புதிய சீரியல்கள், புதிய புதிய ரியாலிட்டி ஷோக்கள், புதிய திரைப்படங்கள் மூலம் வேமாக முன்னுக்கு வந்திருக்கிறது. தற்போது முன்னணி சேனல்களில் முக்கிய சேனல்.


யாரடி நீ மோகனி, பூவே பூச்சூடவா, தலையணை பூக்கள், லட்சுமி வந்தாச்சு, மெல்ல திறந்தது கதவு, மகாமயி, நாகராணி, இனிய இரு மலர்கள், டார்லிங் டார்லிங், உள்ளிட்ட பல தொடர்களை ஒளிபரப்புகிறது. அதிர்ஷ்டலட்சுமி, ஜூனியர் சீனியர், சொல்வதெல்லாம் உண்மை, நம்பினால் நம்புங்கள், டான்சிங் கில்லாடிகள், உளிட்ட பல ரியாலிட்டி ஷோக்களையும் நடத்தி வருகிறது.


13 வருடங்களை கடந்து வந்துள்ள ஜீ தமிழ் சேனல் தற்போது டிஜிட்டல் தொழில்நுட்பத்துக்கு மாறி உள்ளது. சாதாரண தொழில்நுட்பம், டிஜிட்டல் தொழில்நுட்பம் இரண்டிலும் ஜீ தமிழ் சேனலை பார்க்கலாம். டிஜிட்டலுக்கு மாறியதன் அடையாளமாக தனது லோகோவையும் மாற்றி உள்ளது. அதோடு டிஜிட்டல் மாற்றத்தை அறிவிக்கும் வகையில் ஜோதிகா, ஆரி, துளசி நடித்த ஒரு புரமோவையும் வெளியிட்டுள்ளது.
நன்றி: தினமலர்

aanaa
5th November 2017, 04:42 AM
தொகுப்பாளினியானார் பிக்பாஸ் ஜூலி


தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது பங்கேற்று புகழ் பெற்றவர் ஜூலி. இதில் இவருக்கு கிடைத்த பெயரும், புகழும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் மூலம் அமுங்கி விட்டது. பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஆரம்பத்தில் எல்லோருடனும் சகஜமாய் இருந்த ஜூலில பின்னர் பொய் பேசுகிறார், நடிக்கிறார் என்ற குற்றச்சாட்டு எழுந்தது. அதிலும் ஓவியா விஷயத்தில் இவரது பெயர் மேலும் மங்கியது. தொடர்ந்து சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டார்.


ஆனால், அவைகள் எல்லாம் சந்தர்ப்ப சூழ்நிலைகளால் தன்னை அந்த போட்டியில் நிலை நிறுத்தி கொள்ள சிலரோடு சேர்ந்து கொண்டு அப்படி அவர் செய்ய வேண்டியதாகி இருந்தது. பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியே வந்த பின்னர் தான் தன் மீதான தவறுகளை உணர்ந்து கொள்ள தொடங்கியிருக்கிறார்.


இந்நிலையில் சமீபத்தில் கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார். அதன்பின்னர் சில டிவி நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். இப்போது தொகுப்பாளியாக களமிறங்கியுள்ளார்.


கலைஞர் டிவியில் ஓடி விளையாடு பாப்பா என்ற நிகழ்ச்சி ஒளிப்பரப்பாக வருகிறது. இதன் 6வது சீசன் தற்போது துவங்குகிறது. இந்த நிகழ்ச்சியை ஜூலி தான் தொகுத்து வழங்க போகிறார். நடன இயக்குநர் கலா மற்றும் நடிகர் கோகுல் ஆகியோர் இந்த நிகழ்ச்சியின் நடுவர்களாகப் பங்கேற்கிறார்கள். திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 8.30 மணிக்கு இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாக இருக்கிறது.

நன்றி: தினமலர்

aanaa
5th November 2017, 04:51 AM
தமிழ் பெண்கள் அழகா? கேரள பெண்கள் அழகா?: நீயா நானா நிகழ்ச்சிக்கு தடை


விஜய் டி.வியின் நட்சத்திர நிகழ்ச்சி நீயா நானா. ஆண்டனி இயக்கத்தில், கோபிநாத் நடத்தி வரும் இந்த நிகழ்ச்சி பல்வேறு சமூக பிரச்சினைகள் பற்றி அலசி வருகிறது. துணிச்சலுடன் பல பிரச்சினைகளை பேசியுள்ளது. இதன் தொகுப்பாளர் கோபிநாத் இந்த நிகழ்ச்சியின் மூலம் பெரும் புகழ் அடைந்தார். சினிமாவில் நடிக்கும் அளவிற்கு உயர்ந்தார். என்றாலும் அவ்வப்போது சில பிரச்சினைகளையும் இந்த நிகழ்ச்சி சந்தித்து வந்திருக்கிறது.


கடந்த சில தினங்களாக இந்த நிகழ்ச்சியின் புரமோ ஒன்று ஒளிபரப்பாகி வந்தது. "யார் அழகு கேரளத்து பெண்களா? தமிழ் பெண்களா?" என்ற தலைப்பில் அந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாக இருப்பதாக அந்த புரமோ கூறியது. 20க்கும் மேற்பட்ட கேரள பெண்களும், தமிழ்நாட்டு பெண்களும் இதில் கலந்து கொண்டு பேசியிருக்கிறார்கள். கேரள பெண்கள் மலையாள பாடல்களுக்கும், தமிழ் நாட்டு பெண்கள் தமிழ் பாடல்களுக்கும் ஆடியிருக்கிறார்கள். கோபிநாத் தொகுத்து வழங்கி இருக்கிறார். இந்த புரமோசை ஒரு கோடிக்கும் அதிகமானவர்கள் பார்த்துள்ளார்கள். நிகழ்ச்சிக்கும் நல்ல எதிர்பார்ப்பு இருந்தது.


ஆனால் இந்த நிகழ்ச்சியை ஒளிபரப்ப கூடாது என்று பல்வேறு பெண்கள் அமைப்பினர் கடும் கண்டனம் தெரிவித்தனர், சில இடங்களில் போலீசிலும் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதனால் கடந்த 22ந் தேதி மதியம் 3மணிக்கு ஒளிபரப்பாக இருந்த இந்த நிகழ்ச்சியை நிறுத்தி விட்டது விஜய் டி.வி. "நிகழ்ச்சி எந்த மாதிரி உருவாகி உள்ளது என்பதை பார்க்காமலேயே அதை நிறுத்தச் சொல்வது எந்த விதத்தில் நியாயம்?" என்று சேனல் தரப்பு கூறுகிறது
நன்றி: தினமலர்

aanaa
10th December 2017, 07:36 AM
பாடகியாகும் உஷா எலிசபெத்


கனா காணும் காலங்கள் மூலம் சின்னத்திரைக்கு வந்தவர் உஷா எலிசெபத். அதன் பிறகு அனுபல்லவி, ஒரு மனிதனின் கதை, கலாட்டா குடும்பம், வாணி ராணி உள்பட பல சீரியல்களில் நடித்தார். இடையில் திரைப்படங்களிலும் நடித்தார். நவீன சரஸ்வதி சபதம், வென்று வருவான் படங்கள் குறிப்பிடத்தக்கது. கடைசியாக பிரியமானவள் தொடரில் நடித்து வந்தார். தற்போது அதிலிருந்து விலகி விட்டார்.


தற்போது சில படங்களில் நடித்து வரும் உஷா, தன்னை ஒரு பாடகியாக நிலைநிறுத்தவும் போராடிக் கொண்டிருக்கிறார். முறைப்படி இசை கற்ற உஷா தானே சொந்தமாக இசை அமைத்து பாடிய பாடல்களை இணையதளத்தில் வெளியிட்டு வருகிறார். அவருக்கென்று தனி ரசிகர் வட்டம் உருவாகி வருகிறது.


விரைவில் திரைப்படத்திலும் பாட இருக்கிறார். நடிகையாக மட்டுமே இல்லாமல் வேறு திறமைகளையும் வெளிப்படுத்த வேண்டும் என்பதற்காக பாடி அதனை இணையதளத்தில் வெளியிட்டு வருகிறேன். பிரியமானவள் சீரியலில் இருந்து விலகியதற்கு முக்கிய காரணம் எதுவும் இல்லை. என்கிறார் உஷா.



நன்றி: தினமலர்

aanaa
10th December 2017, 07:38 AM
மீண்டும் சீரியல் நடிகை ஆனார் ஊர்வசி'


தென்னிந்திய மொழிகளில் 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருப்பவர் ஊர்வசி. கடைசியாக மகளிர் மட்டும் படத்தில் நடித்தார். அடுத்து அவர் நடித்த இட்லி படம் வெளிவர இருக்கிறது.


ஊர்வசிக்கு சின்னத்திரை புதிதில்லை டேக் இட் ஊர்வசி, பாக்யலட்சுமி, உள்பட பல நிகழ்ச்சிகளை நடத்தினார், பல நிகழ்ச்சிகளுக்கு நடுவராக இருந்தார். 5 வருடங்களுக்கு முன்பு பைரவி தொடரில் நடித்தார். இப்போது மீண்டும் சீரியலில் நடிக்க தொடங்கியிருக்கிறார். ரம்யா கிருஷ்ணன் நடித்து, தயாரிக்கும் வம்சம் சீரியிலில் சுந்தரி என்ற புதிய கதாபாத்திரத்தின் மூலம் என்ட்ரியாகியிருக்கிறார்.


வம்சம் தொடரில் ரம்யா கிருஷ்ணன் முக்கிய கேரக்டரில் நடித்து வந்தார். பாகுபலி படத்திற்கு பிறகு அவருக்கு சினிமா வாய்ப்புகள் பெருகி வருவதால் சீரியலில் நடிப்பதை குறைத்து வருகிறார். இருந்தாலும் வம்சம் சீரியலில் அவர் முக்கிய கேரக்டர் என்பதால் உடனடியாக வெளியேறிவிட முடியாது. இதனால் ஊர்வசியை, ரம்யா கிருஷ்ணனின் தோழி கேரக்டரில் சீரியலுக்கு கொண்டு வந்திருக்கிறார்கள். ரம்யா கிருஷ்ணனுக்கு இணையான முக்கியத்துவம் ஊர்வசிக்கு இருக்கும் என்றும், போகப்போக ஊர்வசியை முக்கிய கேரக்டராக்கி ரம்யா கிருஷ்ணன் வெளியேற வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது.


நன்றி: தினமலர்