PDA

View Full Version : 'ODI VILAIYAADU PAAPAA' (Kalingar TV)



saradhaa_sn
19th October 2008, 02:01 PM
[tscii:cc5c0d003e]‘ஓடி விளையாடு பாப்பா’

கலைஞர் தொலைக்காட்சியில் புதிதாக துவங்கப்பட்டுள்ள ரியாலிட்டி ஷோ. பள்ளி மாணவ மணவியர்கள் பங்குபெறும் நடன நிகழ்ச்சி.

கலைஞர் தொலைக்காட்சியில் நடைபெற்றுவந்த ‘ஆட்டம் பாட்டம்’, ‘கானா குயில் பாட்டு’ ஆகியவை ஏற்கெனவே முடிவுபெற்று பரிசுத்தொகைகள் வழங்கப்ப்ட்டு விட்டன. ‘மானாட மயிலாட – 2’ம் கூட நிறைவுபெற்றிருக்கலாம். துவங்கி வெகுநாட்களாகி விட்டதால் முடிந்திருக்கும் என்றொரு கணிப்பு. ஆக பெரும்பாலான ரியாலிட்டி ஷோக்கள் முடிவுபெற்று விட்டதால், புதிதாக சிறுவர் சிறுமிகளுக்கான ‘ஓடி விளையாடு பாப்பா’ என்ற நடன துவங்கியுள்ளது. ஒவ்வொரு சனிக்கிழமையும் இந்திய நேரப்படி இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது.

நேற்று முதல், போட்டிகள் துவங்கியதால்…. நேற்று, முதல் போட்டி துவங்கியது. (இந்த ‘கமா’வை இடம் மாறிப்போடுவதில்தான் எவ்வளவு சௌகரியம்..!).

ஆயிரம்தான் சொல்லுங்கள், இம்மாதிரி ரியாலிட்டி ஷோக்களுக்கு செட் போடுவதில் கலைஞர் தொலைக்காட்சியை மிஞ்ச எந்த சேனலாலும் முடியாது (அதாவது தமிழ் சேனல்களில்). இந்த ஷோவுக்கும் ஒரு பெரிய பாய்மரக்கப்பல் போன்ற செட் போட்டிருந்தனர், நங்கூரம், லைஃப் ரிங், சுற்றிலும் தண்ணீர் என எல்லாமே நேச்சுரல். ஆர்ட் டைரக்டருக்கு ஒரு சபாஷ்.

நடுவர்களாக ‘ஆட்டம் பாட்டம் புகழ்’ பிரசன்னா மாஸ்ட்டர் மற்றும் நடிகர் ஷாம் வந்திருந்தனர். (நடிகர் ஷாம் புதிதாக பெரிய மீசை வளர்த்திருப்பதால் சட்டென அடையாளம் காண முடியவில்லை). இருவரும் ரொம்ப நன்றாக கமெண்ட் மற்றும் மதிப்பெண்கள் அளித்தனர். (தயவு செய்து இவர்களை மற்றாதீர்கள், அல்லது அப்படியே மாற்றினாலும் உருப்படியான நடுவர்களைக் கொண்டுவாருங்கள். கலைஞர் தொலைக்காட்சியின் முந்தைய ரியாலிட்டி ஷோக்கள் சில (எல்லா விஷயத்தில்லும் அருமையாக இருந்தும்) “ஒரு சில” நடுவர்களால் ரசிகர்களின் பெரும் வெறுப்பைப் பெற்றது. இவ்வளவு ஏன்?. நானே ஆர்வமாக துவங்கி, ஆசை ஆசையாக போஸ்ட் பண்ணிய த்ரெட்டை விட்டு நானே வெறுத்து ஓடும்படி செய்தனர்).

கலைஞர் தொலைக்காட்சிக்கு மட்டும் எங்கிருந்துதான் இப்படி அருமையான காம்பியர்கள் கிடைக்கிறார்களோ தெரியவில்லை, இந்த நிகழ்ச்சிக்கும் ஒரு மாணவன் மற்றும் ஒரு மாணவி என இரண்டு 'வெடிச்சான்' காம்பியர்கள், அதிலும் அந்த பையன் நன்றாக செய்கிறான்.

மின்வெட்டு காரணமாக இப்போட்டியை துவக்கம் முதல் பார்க்க முடியவில்லை, 'பவர்' வந்த பின் பார்க்கத்துவங்கியபோது, ஏற்கெனவே மூன்று பேர் ஆடி முடித்து நான்காவதாக ஒரு சிறுமி, “ஆட்டமா தேரோட்டமா” பாடலுக்கு ஆடிக்கொண்டிருந்தாள். பார்த்ததும் அசந்துபோனேன். எவ்வளவு அருமையாக ஆடினாள் தெரியுமா?. காஸ்ட்யூம், ஸ்டெப்ஸ் எல்லாமே சூப்பர். நடனப்போட்டி மேடையில் வந்து, நடுவர்களோடு பேச்சுப்போட்டி நடத்திக்கொண்டிருக்கும் சிலர் பார்த்து வெட்கப்பட வேண்டிய அளவு சிறப்பான ஆட்டம். சிறுமியின் பெயரைக் கவனிக்க முடியாமல் போய்விட்டது. (அடுத்த எபிசோட்டில் பிடிச்சிடுவோம்).

சென்னையைச்சேர்ந்த ‘ஜெனிஃபர்’ என்ற சிறுமி ஆடியது சுமார்தான், பாட்டுக்களுக்குத் தேவையான ஸ்டெப்போ எனெர்ஜியோ இல்லை. இல்லை என்று சொல்ல முடியாது, மற்ற சிறுவர்களைவிட கொஞ்சம் குறைவு. (நின்ற இடத்திலேயே நின்றுகொண்டே இடுப்பை மட்டும் ஆட்டும் ‘உலகமகா ஆட்டக்காரர்களோடு’ ஒப்பிட்டால் இந்தக்குழந்தைகூட சூப்பர்தான்). ஜெனிஃபர் இரண்டு நடுவர்களிடமிருந்தும் சேர்த்து 20 க்கு 16 பெற்றாள்.

சென்னையைச்சேர்ந்த ‘அவினாஷ்’ என்ற பையன்… அலையடிக்குதே, குட்டிப்பிசாசே பாடல்களுக்கு நன்றாக ஆடினான். 20க்கு 19 பெற்றான்.

உடுமலைப்பேட்டையச் சேர்ந்த ‘எழில்’ என்ற மாணவி ‘ஐயாரெட்டு நாட்டுக்கட்டை’ பாடலுக்கு ஆடினாள். அருமையான மூவ்மெண்ட்ஸ். ஓரு குத்துப்பாட்டை இவ்வளவு நளினத்தோடு கூட ஆட முடியும் என்று நிரூபித்தாள். நல்ல காஸ்ட்யூம்ஸ், நல்ல நடனம்….. பயிற்சியளித்த மாஸ்ட்டர் நல்லா பெண்டு வாங்கியிருக்கிறார். எழிலுக்கு நடுவர்கள் 18 அளித்தனர்.

வந்தானய்யா சேலம் ‘தினேஷ்’…. அப்பப்பா என்ன ஆட்டம், என்ன நெளிவு சுளிவு.. என்ன பாய்ச்சல், சும்மா தரையிலேயே நீச்சலடிக்கும் வேகம் என்ன, ஷாம் ரொம்ப கரெக்டாக சொன்னதுபோல அந்த உடம்புக்குள் எலும்புகள் இருக்கின்றனவா அல்லது முழுக்க எலாஸ்டிக் உடம்பா… இப்படி நெளிந்து வளைந்து ஆடுகிறது, நடனத்திலும் என்ன வேகம், ஒரு ஸ்டெப் கூட மறக்காத அற்புத நினைவாற்றல். மற்ற நடன ஷோக்களில் தாங்கள் பெரிய பிஸ்தாக்கள் என்று பிதற்றுவோர் நிச்சயம் அவினாஷின் நடனம் பார்த்தால் தலைகுனிவர். சுருக்கமாகச் சொன்னால் வருங்கால பிரபுதேவா, வருங்கால ஆனந்தபாபு, வருங்கால சிம்பு. சூப்பரோ சூப்பர்டா கண்ணா. பிரசன்னா மாஸ்ட்டர் எந்த தயக்கமும் இல்லாமல் 10 கொடுக்க, ஷாம் ‘நான் என்னப்பா செய்வேன், நிறைய மார்க் கொடுக்கணும்னு எனக்கு ஆசை, ஆனால் 10க்கு மேல் மார்க் இல்லையே’ என்றார். மொத்தம் 20 பெற்றான்.

மொத்தத்தில் எட்டு பேர் போட்டியாளர்கள், (இவர்களை 2500 பேரிலிருந்து சலித்து எடுத்ததாக பிரசன்னா மாஸ்ட்டர் சொன்னார்). முதல் போட்டியாதலால் எலிமினேஷன் இல்லாமல் முடித்துவிடுவார்கள் என்று நினைத்தோம். அது பொய்யாகிவிட்டது.

ஆம் நேற்றைய போட்டியில் சென்னை ஜெனிஃபர் எலிமினேஷன் செய்யப்பட்டாள். பெரியவர்களைப்போல் அழுது ஒப்பாரி வைக்கவில்லை, மீண்டும் வந்து ஆடுவேன் என்று நம்பிக்கையோடு சொன்னாள். [/tscii:cc5c0d003e]

Madhu Sree
19th October 2008, 06:01 PM
Yeah I saw one performance by a smart and cute chutti payyan... I cudnt remember his name... But he danced for 'ஏ சுள்ளான் வா சுள்ளான்...' evlo speedaa aadinaan.. :o chance-ee illa... sema kuttiyaa irundhaan but he danced so brillaintly... :clap:

aanaa
19th October 2008, 06:35 PM
கலக்கிட்டீங்க, சாரதா

viraajan
19th October 2008, 08:02 PM
How abt the young compere Sriram? :roll:

saradhaa_sn
8th January 2009, 06:30 PM
குட்டிகள் பங்குபெறும் இந்த நடன நிகழ்ச்சியை நிறையப்பேர் விரும்பிப்பார்ப்பதில்லையோ என்று தோன்றுகிறது. ஆனால் உண்மையில் மிக அருமையான நடன நிகழ்ச்சி. சிறுவர்களின் நடனம்தானே என்று ஒதுக்கிவிட முடியாத அளவுக்கு பெரியவர்களை விட மிக அருமையாக, சிறுசுறுப்பாக, உடலை வில்லாக வளைத்து ஆடுகின்றனர்.

சனிக்கிழமை தோறும் மாலையில் 'லாஜிக் இல்லா மேஜிக்' மற்றும் 'தில் தில் மனதில்' என்ற இரண்டு நிகழ்ச்சிகளுக்கு மத்தியில் ஒளிபரப்பாகிறது. ஒருமுறை பார்த்தால் நிச்சயம் தொடர்ந்து பார்க்கத்தூண்டும் வகையில் சின்ன வயதிலேயே இவ்வளவு நடனத்திறமையா என்று ஆச்சரியப்படுத்துகின்றனர்.

நேரமின்மை காரணமாகவே இதை 'அப்டேட்' செய்ய முடியவில்லை.