PDA

View Full Version : Nadigar Thilagam Sivaji Ganesan - Part 5



Pages : 1 2 3 4 [5] 6

thamiz
5th October 2009, 11:11 PM
Nice. Thanks, Joe.

I wonder what Ram Kumar would feel personally when luminaries like Kamal, Rajini and now Azhagiri all claim to be NT's "sons" :lol: Anyway, it shows how much emotionally connected they all are to NT. :D

Did Rajni make a "claim" like this? Not that I know of. :)

Murali Srinivas
6th October 2009, 12:06 AM
நன்றி ராகேஷ்.

சாரதா நன்றி. நேற்று நிகழ்ச்சியை லைவ் ஆக மதுரையில் உள்ள லோக்கல் கேபிள் சானல்களான தயா டி.வி [அழகிரிக்கு சொந்தமானது] மற்றும் வைகை டி.வி. ஒளிப்பரப்பி விட்டது. எனவே வேறு தொலைக்காட்சியில் வருமா என்பது சந்தேகமே.

அன்புடன்

pammalar
6th October 2009, 01:18 AM
அருள்மிகு மீனாட்சி அம்மன் - சொக்கநாதர் அருள்பாலிக்கும் கோயில் மாநகராம் மதுரையிலே, மக்கள் மனங்களில் கோயில் கொண்டுள்ள மனிதருள் மாணிக்கமாம் தங்கத்தமிழன் சிவாஜி அவர்களுக்கு சிலை திறக்கும் வைபோக விழா ! (அக்டோபர் 4, 2009 ஞாயிறு மாலை)

கண்டு தரிசிக்க, நாமும் நமது ரசிக நல்லிதயங்கள் 15 பேரும், அக்டோபர் 3 இரவு பாண்டியன் எக்ஸ்பிரஸில் பயணித்தோம். நள்ளிரவு வரை நாங்கள் அனைவரும் நடிகர் திலகம் குறித்த பல்வேறு நினைவலைகளில் நீந்திக் கொண்டிருந்தோம். இரயில், மதுரையை நோக்கி விரைந்து பயணிக்க, எங்களது கண்கள், உறக்கத்தை நோக்கி மெல்ல பயணித்தது.

அன்புடன்,
பம்மலார்.

pammalar
6th October 2009, 02:55 AM
உதயசூரியனின் ஒளிக்கதிர்கள், கலைச்சூரியனுக்கு இன்று திருவிழா எனக் கூறுவது போன்று, எங்கள் அனைவரையும் தட்டி எழுப்ப, விழித்தெழுந்தோம் கூடல் நகரில். கூடல் நகரிலிருந்து மதுரை மாநகர் வரை, சாலையோரச் சுவர்களில், நடிகர் திலகத்தின் சிலை திறப்பு விழா குறித்த வண்ணமயமான போஸ்டர்கள், எங்கள் கண்களுக்கு காலை விருந்தளித்தன. உற்சாகத் துள்ளலோடும், மிகுந்த எதிர்பார்ப்புகளோடும் மதுரை ஜங்ஷனில் இறங்கினோம்.

ஒரு விடுதியில் தங்கி, சிறிது நேரம் ஓய்வெடுத்து, காலைக் கடமைகளை முடித்த பின்னர், கணேசர் விழாவுக்கு வந்த நாங்கள், கந்தனை தரிசிக்க , அறுபடை வீடுகளில் ஒன்றான, திருப்பரங்குன்றம் நோக்கிப் பயணித்தோம். செல்லும் வழி நெடுகிலும், சிலை திறப்பு விழா போஸ்டர்களும், பேனர்களும், எங்கும் சிவாஜி மயமாகக் காட்சியளிக்கச் செய்தன. திருப்பரங்குன்றத்தில் இறங்கி, கோயிலுக்கு செல்லும் வழியில், அதிசய ஆச்சரியம் ஒன்று எங்களுக்குக் காத்திருந்தது. அங்கே சாலையோரத்தில் பந்தல் போடப்பட்டு, விழா ஒன்று நடைபெற்றுக் கொண்டிருந்தது. ஆம், பிறவி நடிகரின் பிறந்த நாள் விழா தான். அவ்விழாவில் கலந்து கொண்டு சிறப்படைந்தோம். சிவாஜி ஜெயந்தி, காந்தி ஜெயந்தி மற்றும் பெருந்தலைவருக்கு அஞ்சலி என மும்மூர்த்திகளின் நினைவுகளைப் போற்றும் வகையில் விழா நடைபெற்றது. எதேச்சையாக, நாங்கள் அங்கே வந்து கலந்து கொண்டது, அவ்விழாவை நடத்திய நமது ரசிகர்களான திருப்பரங்குன்றம் நகர காங்கிரஸாருக்கு மிகுந்த மகிழ்ச்சியைக் கொடுத்தது. இரண்டு மிகப் பெரிய பேனர்கள் அங்கே வைக்கப்பட்டிருந்தன. அதன் கீழே, காந்தி, காமராஜ் படங்களின் நடுவே, வீரபாண்டிய கட்டபொம்மனாக நமது நடிகர் திலகத்தின் படமும் வைக்கப்பட்டிருந்தது. மூவரது படங்களும் மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தன. நாங்கள் வணங்கி வழிபட்டோம். விழா உரைகளுக்குப் பின் இனிதே இனிப்பு (ரவா கேசரி) வழங்கப்பட்டது. கணேச பிரசாதத்தை நாங்கள் அனைவரும் உண்டு மகிழ்ந்து , அவர்களிடமிருந்து உடலால் விடைபெற்று , கோயிலுக்கு புறப்பட்டோம். என்னே அதிசயம் ! கந்தனை தரிசிக்கும் முன் கணேச தரிசனம் எங்களை நெகிழச் செய்திருந்தது. பின், திருப்பரங்குன்றத்தில் குமரக்கடவுளையும் சிறந்த முறையில் தரிசித்து விட்டு , மகிழ்ச்சியுடன் மதுரை விடுதிக்குத் திரும்பினோம். நமது நடிகர் திலகத்துக்கு இன்றும் விழா எடுத்துக் கொண்டிருக்கும் திருப்பரங்குன்றத்தாரை எங்கள் உள்ளங்கள் பாராட்டிக் கொண்டேயிருந்தன.

அன்புடன்,
பம்மலார்.

groucho070
6th October 2009, 06:53 AM
Did Rajni make a "claim" like this? Not that I know of. :)Yeah, of recent events. He recalled a moment where NT was amazed about Rajini's ability to fill his free time going to himalaya and all, and he addressed NT as "Appa". The same event (Chandramukhi event, I believe) Prabhu addresses Rajini as "engga annan". Terinja vishayamaache. :D

At the same, during the interviews (and I recall even in the interview with Abdul Hameed [see front page for link] and later interviews) NT would address actors of younger generations as "namma kozhanthaingga", so its no harm all the actors address his as father. He is the Father of Acting as far as Tamizh film industry is concerned :D

abkhlabhi
6th October 2009, 06:08 PM
[tscii]
Saraswathi Sabatham (1966)
by Balaji Sivaraman

Tuesday, September 29, 2009

[html:8cd51584b7]
http://www.kusthi.com/MassTamilVideo/imgupload/SaraswathiSabatham.jpg
[/html:8cd51584b7]


Saraswathi Sabatham is the kind of movie that will make us reminisce about the grand old age of Tamil movies, for a variety of very different reasons. For one, it is based on the Hindu Goddesses, but doesn’t involve a child falling into a ‘hundial’ or an evil wizard trying to overpower God. It is also basically a “message” movie about the elementary qualities of life, but, unlike today’s movies, that message comes about only because of the interesting premise set up by the movie’s story. And most importantly, it features an ensemble of cast of actors and actresses who were probably in the prime of their careers at the time. Since that is something which will never happen in today’s climate, this movie works as a great reminder of a time where our top actors worked together without a hint of ego on display.

The film’s underlying premise is very simple. Which is better: knowledge, wealth or strength? In the opening sequences, we see the mischievous sage Naradha (‘Sivaji’ Ganesan) visit Saraswathi (Savithri, as the Goddess of Knowledge), Lakshmi (Devika, as the Goddess of Wealth) and Parvathi (Padmini, as the Goddess of Strength), and pose each of them with the above question. This sets up the clash between the three to see which quality is more essential. To this effect, Saraswathi provides Vidyapathi (‘Sivaji’ again), who is dumb by birth, with a voice and intelligence making him wise and all-knowing. Lakshmi makes the poorest girl in the country as the next queen to the throne, Naachiya (K.R. Vijaya), providing her with unquestionable wealth and fame. Parvathi transforms one of the biggest cowards into Veeramallar (‘Gemini’ Ganesan), the bravest and strongest man in the land, who also goes on to become Naachiya’s commander-in-chief. As the three come to grips with their new God-given gifts, they also battle each other to prove their superiority (obviously the Goddesses’ hands are involved in this also).

Notwithstanding the interesting set-up and story, the film’s biggest attraction is, of course, the cast. Not only does the movie feature two of Tamil cinema’s acting greats in ‘Sivaji’ Ganesan and ‘Gemini’ Ganesan, but also the most famous actresses of the time in Savithri, Padmini, K.R. Vijaya and Devika. When you think of the last time in recent memory that anything close has been attempted, you would probably go back to 1999’s Suyamvaram, but even that was mainly put together in order to obtain the world record. When combined with the fact that this movie is considered an ensemble for its female leads (with today’s heroines being used only for eye-candy, this is another thing to remember fondly) coming together as much as its male leads, it further drives home the fact that our yesteryear actors had little or no ego clashes coming in the way of sharing screen space.

Even with such a cast, the acting honours would obviously have to go to ‘Sivaji’ Ganesan. Of all the people who have played Naradha on-screen (and there are quite a few), none would probably come close to matching Sivaji. The mischievous glint is obviously visible in his eyes as he plays around with the three goddesses in order to obtain the obvious answer to the question. (Note him especially in the single sequence with the three in tandem.) As Vidyapathi, he also brings the dignity and ego of the knowledgeable character to life. Although K.R. Vijaya and ‘Gemini’ Ganesan are legends in their own right, the pride seen in Sivaji’s face and body language as he talks about the power of knowledge is unmatched by the former two. (In fact, such a comparison will be deemed unfair on all three by many; I just felt it is worth mentioning in the context of the movie.)

The above statement aside, K.R. Vijaya and ‘Gemini’ Ganesan are perfect for their respective roles. The self-importance of the queen, with all her wealth and fame, is skilfully depicted by the former. And since good screen-presence is the main pre-requisite for Veeramallar, the latter fits the bill perfectly. Savithri, Devika and Padmini are essentially in the background, but their sequences with each other and Naradha serve as special highlights. Nagesh and Manorama raise quite a few laughs with their separate comedy track (though it does fit in with the other characters in the movie). The actors playing Lord Shiva and Brahma are largely unknown to me, while a very young Sivakumar appears as Lord Vishnu.

Another major highlight of the film is K.V. Mahadevan’s music combined with Kannadasan’s lyrics. Agara Muthala Ezhuthellam... is the best song with each line starting from each of the Tamil alphabets in sequence, but the other songs don’t lag behind either. Kalviya Selvama Veerama... features great lyrics from Kannadasan underlining the significance of each of these qualities in life. Dheivam Iruppadhu Enge... is sung in praise of the wealth of knowledge and also sets up the straight head-to-head between knowledge and wealth. Thai Thandha Pichaiyile... has become the staple for a variety of beggary-related comedy scenes over the years, while Gomatha Engal Kulamatha... is a perfect song for the "Mattu Pongal" festival. Uruvathai Kaatidum Kannadi... and Rani Maharani... are mostly obscure remaining largely unheard outside the movie. T.M. Sounderarajan and P.Susheela are the only two voices heard in all the songs, and are the main reason why it is considered such a stellar soundtrack to begin with.

Despite all the high-praise accorded to the film, there are a few elements that can be off-putting for some viewers. Some sequences in the film do move quite slowly, but that is essentially a quality shared by all movies released at the time. The set design and costumes will also feel more akin to a stage-play than a movie; again, another aspect that is not unique to this movie alone. However, these are only worth mentioning for what they are: minor nitpicks.

Saraswathi Sabatham has become a staple for TV viewing on Saraswathi Pooja and Vijayadasami days. (In fact, I wrote this review the very next day after Vijayadasami.) And though not as good as director A.P. Nagarajan’s certain other films (Kandan Karunai and Thiruvilaiyadal, for starters), it is still a very entertaining film in its own right and is worth a watch on TV or by finding yourself a VCD.

thamiz
6th October 2009, 06:55 PM
Did Rajni make a "claim" like this? Not that I know of. :)Yeah, of recent events. He recalled a moment where NT was amazed about Rajini's ability to fill his free time going to himalaya and all, and he addressed NT as "Appa". The same event (Chandramukhi event, I believe) Prabhu addresses Rajini as "engga annan". Terinja vishayamaache. :D

Thanks, groucho! :D

HARISH2619
6th October 2009, 07:24 PM
NT's BIRTHDAY FUNCTION IN TIRUNELVELI
http://www.dinamani.com/edition/story.aspx?SectionName=Edition-Thirunelveli&artid=133980&SectionID=139&MainSectionID=139&SEO=&Title=சிவாஜி%20கணேசன்%20%20பிறந்தநாள்%20விழா#

NT's BIRTHDAY FUNCTION IN KANCHIPURAM

http://www.dinamani.com/edition/story.aspx?SectionName=Edition-Chennai&artid=133099&SectionID=135&MainSectionID=135&SEO=&Title=சிவாஜி கணேசன் பிறந்தநாள் விழா

NT'S BIRTHDAY FUNCTION IN PUDUCHERRY
http://search.webdunia.com/tamil/tag/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9C%E0%A E%BF-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%87%E0%AE%9A%E0%AE%A9%E0%A F%8D.html

WASHINGTON SIVAJI KALAIMANRAM ANNIVERSARY

http://www.tamilonline.com/Thendral/SubMoreContent.aspx?id=102&cid=18&aid=5647&sid=3

HARISH2619
6th October 2009, 07:36 PM
NT'S BIRTHDAY FUNCTION IN CHENNAI

http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=17703

REQUEST FOR NT's STATUE IN SIVAGANGAI
http://www.dinamani.com/edition/story.aspx?SectionName=Sivagangai&artid=131696&SectionID=115&MainSectionID=115&SEO=&Title=சிலை: சிவகங்கை நகராட்சியிடம் சிவாஜி மன்றம் கோரிக்கை

NT'S BIRTHDAY FUNCTION IN ERODE

http://www.dailythanthi.com/article.asp?NewsID=517886&disdate=10/3/2009&advt=2

pammalar
6th October 2009, 08:44 PM
Thanks Mr. Harish ! All the links are simply outstanding !!

Regards,
Pammalar.

pammalar
6th October 2009, 09:00 PM
Please visit the following Website on a daily or a frequent basis :

http://sivajistatuemadurai.webs.com/

This site is now under construction and will be ready in a short span of time.

Yours Truly,
Pammalar.

joe
6th October 2009, 09:26 PM
http://sivajistatuemadurai.webs.com/


Superb Banners :D Excellent stills selection :thumbsup:

HARISH2619
7th October 2009, 12:34 PM
DEAR PAMMAL SIR,
ஒரு சிலை திறப்பு விழாவிற்க்காக ஒரு வெப்சைட்டையே உருவாக்கிய தங்களின் கணேசபக்தியை என்னவென்று பாராட்டுவது?மிகவும் அற்புதமாக இருக்கிறது,அதை மேலும் மேலும் மெறுகேற்றி சொக்கத்தங்கமாக மாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையும் இருக்கிறது.

Dear murali sir,I know that you were not able to attend the function.

Dear raghavendran sir,we are eagerly waiting to read your take on the function,please post it as soon as possible

abkhlabhi
7th October 2009, 05:29 PM
http://www.dinakaran.com/cinema/english/cinenews/29-5-98/sivaji.htm

abkhlabhi
7th October 2009, 05:49 PM
http://www.dinakaran.com/cinema/english/cinenews/2002/13-03-02.html

saradhaa_sn
7th October 2009, 06:15 PM
Please visit the following Website on a daily or a frequent basis :

http://sivajistatuemadurai.webs.com/

This site is now under construction and will be ready in a short span of time.

Yours Truly,
Pammalar.

டியர் பம்மலார்,

அருமையானதொரு இணையதளம். அற்புதமான, காணக்கிடைக்காத வரவேற்பு பதாதைகள், போஸ்ட்டர்கள் என விழாவே களை கட்டியிருந்திருக்கிறது. மதுரை மக்களுக்கு மட்டுமே கிட்டிய அவையனைத்தையும் எல்லோர் கண்களுக்கும் காணக்கிடைக்கச்செய்தமைக்கும், அன்றைய விழாவோடு போயிருக்க வேண்டிய அவையனைத்தையும், இணையதளம் மூலம் நிரந்தரமாக்கியதற்கும் நன்றிகள் பல.

பேனர்கள், போஸ்ட்டர்கள் என மதுரையே குலுங்கியிருப்பது தெரிகிறது. விழாவைப்பாராட்டி 'மதச்சார்பற்ற ஜனதாதளம்' சார்பிலும்கூட போஸ்ட்டர் ஒட்டப்பட்டிருப்பதும், கமல் அவர்களை வரவேற்று சிவாஜி மன்றம் சார்பில் பேனர் வைக்கப்பட்டிருப்பதும், அண்ணனும் அண்ணியும் இணைந்திருக்கும் பேனர்கள் இடம்பெற்றிருப்பதும் குறிப்பிடத்தக்கவை. (புகைப்படத்தொகுப்பைப் பார்த்து மயங்கிய நான், சில புகைப்படங்களுக்கு என்னுடைய கமெண்ட்களையும் பதிய வைத்துள்ளேன்).

நடிகர்திலகத்தின் புகழைப்பரப்பும் உங்களின் முயற்சிகளையும், சேவைகளையும் பாராட்ட வார்த்தைகள் இல்லை என்பது பொய்யல்ல, உண்மை.

RAGHAVENDRA
7th October 2009, 10:47 PM
Dear friends,
First let us all give standing ovation to PAMMALAR for shifting Madurai to forumhub. He has covered almost every aspect of the gala evening. It was a most memorable trip to Madurai bringing nostalgia of old days of Sivaji Mandra Manadu. The festive look Madurai wore these days cant be repeated even for Diwali. We were all extremely delighted to see Madurai donning NT's avatars all over - graffitis, posters, banners and what not. We arrived on 2nd Oct morning for a very warm welcome in the form of these decorations. It was heart filled with joy. Immediately we jumbed in the bandwagon and prepared for the exhibition. It was a laudable effort by S.Vijayan for exposing those rare images and the pains he took to prepare them. It came out very well and it took us whole day to finalise the preparation. The exhibition was inaugurated at 11.00 a.m. by the Collector of Madurai, Commissioner of Police, Madurai and Deputy Mayor of Madurai, Shri Ramkumar, Shri V.N. Chidambaram and Shri Thyagarajan of Satyajothi films. All of them were full praise on the exhibition and there was good crowd even on 3rd Oct. On the evening of 3rd Oct., Mr. Sasikumar of Subramaniapuram fame, visited the hall and spent almost 75 minutes and browsed the images thoroughly and we explained him on some of the images.
The next day it was gaiety all over. Even before we reached the venue of exhibition at about 9.30 a.m. there was considerable crowd waiting for about 15 to 20 minutes and from then on it was amazing crowd. From about 10.00 a.m. the crowd started pouring and actually we thought of closing it at 3.00 p.m but were unable to do so on seeing the enthusiam of fans and upto around 5.15 pm we were unable to close. Our estimate was about 7 to 8 thousand people visited the exhibition.
Kalaignar TV spent almost 3 hours at the exhibition and covered. Mr. Vijayan, the audience, and a fewof those who helped us in arranging the exhibits, and myself spoke our mind in Kalaignar TV. And when we at last went to stage it was almost 5.35 p.m. and the function was about to start and we had no place to sit. At last some how I found a spot on the floor on the road and settled. And the real crowd could be seen after the events were over. (I was told that the approximate visitors to the event alone was 1.25 lakhs, which fact has been conveniently ignored by the GENEROUS MEDIA in Tamil Nadu).
WE LEFT MADURAI WITH HEAVY HEARTS ON 5TH .... HESITANTLY ...

Raghavendran

abkhlabhi
8th October 2009, 03:47 PM
http://www.flickr.com/photos/36022194@N03/3409462220/

abkhlabhi
8th October 2009, 03:56 PM
http://www.cinestarswallpapers.com/gallery/displayimage.php?album=46&pos=84

pammalar
8th October 2009, 04:22 PM
திரு. ஜோ, திரு. ஹரீஷ், திரு. ராகவேந்திரன் ஆகியோருக்கும், சகோதரி சாரதா அவர்களுக்கும் எமது உளங்கனிந்த நன்றிகள் !

நன்றி பாலா சார், அற்புதமான பல அபூர்வ லிங்க்குகளை அள்ளி வழங்கியமைக்கு !!

அன்புடன்,
பம்மலார்.

abkhlabhi
9th October 2009, 03:18 PM
NT thread started on 23/5/2005. Today is 1600 days since commencement of NT thread. Almost Four Years and 140 days completed.
Part I 23/05/2005 to 12/08/2006 = 447 days
Part II 12/08/2006 to 02/07/2007 = 324 days
Part III 02/07/2007 to 28/02/2008 = 241 days
Part IV 28/02/2008 to 17/11/2008 = 262 days
Part V 17/11/2008 to 09/10/2008 = 326 days

I am sure that no other thread has this type of unique achievement like NT films. I wish this thread should continue like this and reach greater height and hope this will continue for so many years.

Many many thanks and wishes to ALL NT FANS

HARISH2619
9th October 2009, 07:54 PM
SHORT AND SWEETLY WRITTEN LIFE HISTORY OF NT

http://www.lakshmansruthi.com/cineprofiles/sivaji.asp


TMS PAADALGALIL SIVAJI-A PHOTO ALBUM BY YAAZH SUDHAKAR

http://tms-sivaji.blogspot.com/

HARISH2619
9th October 2009, 07:57 PM
(டாக்டர் செவாலியே சிவாஜி கணேசன் மண்ணுலகை விட்டு மறைந்த அன்று, அவருக்காக நான் எழுதிய கவிதை பின் ரகுவின் 'மோகனம்' என்ற குருந்தட்டில் பாடலானது. அந்த பாடல் வரிகளை கவித்தமிழ் வாசகர்களோடு பகிர்ந்து கொள்கிறேன்..)

இமயம்

இமயம் ஒன்று வீழ்ந்து போனதே..
இயற்கை அன்று ஓய்ந்து போனதே..
விழிகளில் ஈரம்.. இதயத்தில் சோகம்..

சிகரம் ஒன்று சாய்ந்து போனதே..
சிங்கம் ஒன்று சோர்ந்து போனதே..
சிதையினில் வீரம்.. சிதைந்திடும் நேரம்..

உறங்கிடு வீர சிங்கமே.. இரு விழி மூடி..
ஓய்வெடு நீ செவாலியே.. அமைதியை நாடி..
இது நனவா.. வெறும் கனவா..
உணர்த்திட யாரும் இல்லையே..
இது குளமா.. நைல் நதியா..
விழிகளில் மீதமில்லையே..

கலைமகனே.. கதறுகிறோம்..
உயிர்களின் ஓலம் இன்னும் ஓயவில்லையே..
தலைமகனே.. தமிழ்மகனே
விடைபெறும் நேரம் நெஞ்சம் தாங்கவில்லையே..

கலைமகளே கதறுகிறாள்..
உனையன்றி சேவை செய்ய யாரும் இல்லையே
கலை உலகின்.. சுடரொளியே..
உனையன்றி பாதை சொல்ல நாதியில்லையே..

மறைந்திடுமா உனது புகழ்..
தமிழ் உள்ள காலம் மட்டும் காதில் கேட்குமே..
ஓய்ந்திடுமா.. உனது அலை
கலை உள்ள காலம் மட்டும் காற்றில் வாழுமே...

KAVITHAMIL.BLOGSPOT.COM

abkhlabhi
10th October 2009, 09:58 AM
Thanks Harish2619

http://sivaji-ganesan.blogspot.com/2007/09/sivaji-1.html

abkhlabhi
10th October 2009, 09:59 AM
http://nadigarthilagam.blogspot.com/2007/09/sivaji-1.html

abkhlabhi
10th October 2009, 10:00 AM
http://sivajiganesan.blogspot.com/2007/08/blog-post_8718.html

abkhlabhi
10th October 2009, 10:01 AM
http://sivajiganesan.blogspot.com/2007/08/blog-post.html

abkhlabhi
10th October 2009, 11:50 AM
http://shastrix.blogspot.com/2009/05/le-chevalier-sivaji-ganesan.html

abkhlabhi
10th October 2009, 11:50 AM
http://shastrix.blogspot.com/2009/05/le-chevalier-sivaji-ganesan.html

abkhlabhi
10th October 2009, 11:51 AM
http://shastrix.blogspot.com/2009/05/le-chevalier-sivaji-ganesan.html

abkhlabhi
10th October 2009, 11:51 AM
http://shastrix.blogspot.com/2009/05/le-chevalier-sivaji-ganesan.html

abkhlabhi
10th October 2009, 11:52 AM
http://shastrix.blogspot.com/2009/05/le-chevalier-sivaji-ganesan.html

HARISH2619
10th October 2009, 01:42 PM
THANKYOU VERY MUCH BALA SIR FOR PROVIDING SEPERATE LINKS OF EACH OF THE PHOTO ALBUMS.

MURALI SIR,WE ARE MISSING YOU A LOT.PLEASE COME SOON

RAGHAVENDRA
10th October 2009, 09:26 PM
மதுரையில் நடைபெற்ற நடிகர் திலகம் சிவாஜி கணேசன் திருவுருவச் சிலை திறப்பு விழா நிகழ்ச்சிகளின் தொகுப்பு நாளை 11.10.2009 மதியம் 3.00 மணிக்கு கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவுள்ளது. காணத்தவறாதீர்கள்.
ராகவேந்திரன்

NOV
11th October 2009, 06:26 PM
Just finished watching in Astro Thangathirai. What a film! Amazing performance by all with exceptional acting by Karn... :oops: Sivaji Ganesan. (Even if the real Karnan were to appear on earth, he will be rejected as the fake Karnan! That is the impact of NT's performance.)

[html:049ae9dfc0]
http://i10.tinypic.com/81gru2w.jpg
[/html:049ae9dfc0]

joe
11th October 2009, 06:49 PM
உடல் சிலிர்க்குது :) என்ன நடிகனய்யா! :notworthy:

sakaLAKALAKAlaa Vallavar
11th October 2009, 07:06 PM
NT thread started on 23/5/2005. Today is 1600 days since commencement of NT thread. Almost Four Years and 140 days completed.
Part I 23/05/2005 to 12/08/2006 = 447 days
Part II 12/08/2006 to 02/07/2007 = 324 days
Part III 02/07/2007 to 28/02/2008 = 241 days
Part IV 28/02/2008 to 17/11/2008 = 262 days
Part V 17/11/2008 to 09/10/2008 = 326 days

I am sure that no other thread has this type of unique achievement like NT films. I wish this thread should continue like this and reach greater height and hope this will continue for so many years.

Many many thanks and wishes to ALL NT FANS

:clap: :notworthy: :2thumbsup:

this is the real award for NT. this shows that his fans and his performance are always alive

Shakthiprabha
11th October 2009, 07:09 PM
மதுரையில் நடைபெற்ற நடிகர் திலகம் சிவாஜி கணேசன் திருவுருவச் சிலை திறப்பு விழா நிகழ்ச்சிகளின் தொகுப்பு நாளை 11.10.2009 மதியம் 3.00 மணிக்கு கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவுள்ளது. காணத்தவறாதீர்கள்.
ராகவேந்திரன்

நான் பார்த்தேன் நான் பார்த்தேன் நான் பார்த்தேன். :redjump: :bluejump:

மனமும் இதயமும் நெகிழ...நான் பார்த்தேன்....அவரை இத்தனை பேரும் சொந்தம் கொண்டாடும் போதெல்லாம், எனக்குள் பொறாமை மிக மிக ஆழமாக எழுகிறது :ashamed: :( (which is so unlike me :? :ashamed: ) எனக்குப் பிடித்த இந்த ம்னிதரை இத்தனை பேரும் சொந்தம் கொண்டாடுகிறார்களே என்று...

silly feeling! I am seriously astonished beyond measure about this feeling of mine :?

நான் இத்திரியில் அதிகம் எழுதுவதில்லை. அவரைப் பற்றி எழுத எனக்கு எதுவுமே இல்லை அல்லது எழுதத் தெரியாது என்ற எண்ணம் தான் காரணமாக இருக்கலாம்.

joe
11th October 2009, 07:16 PM
SP,
எங்களைப் போல கலைஞர் தொலைக்காட்சி பார்க்க வாய்ப்பில்லாதவ்ர்களுக்காக யாராவது ஒரு புண்ணியவான் இணையத்தில் ஏற்றுவார் என எதிர்பார்த்து காத்திருக்கிறேன்.

Btw , வடிவேலு நடிகர் திலகத்தை நினைவு கூர்ந்த பேச்சை கேட்டு கமல் மற்றும் அழகிரி கண்கலங்கும் படங்களை நக்கீரன் இதழில் பார்த்தேன்.

hamid
11th October 2009, 07:51 PM
Hi Joe/Prabha,

I also watched the programme.. initially it felt more like a political show for Azakiri..:sigh2:

They showed good clippings in between the speeches.. lots of nice clippings from Thevar makan. .also showed the song "Nii iraivanai nambi vanthaayo?" NT with Kamal...

Also they showed a clipping from a movie( I dont know the name) where NT talks for almost 5 minutes non stop in a single take.. too much of dialogue and superb expressions.. what an actor :notworthy:

RC
11th October 2009, 08:29 PM
SP,
எங்களைப் போல கலைஞர் தொலைக்காட்சி பார்க்க வாய்ப்பில்லாதவ்ர்களுக்காக யாராவது ஒரு புண்ணியவான் இணையத்தில் ஏற்றுவார் என எதிர்பார்த்து காத்திருக்கிறேன்.

Btw , வடிவேலு நடிகர் திலகத்தை நினைவு கூர்ந்த பேச்சை கேட்டு கமல் மற்றும் அழகிரி கண்கலங்கும் படங்களை நக்கீரன் இதழில் பார்த்தேன்.


nammala maadhiri aatkaLukku thaan aabathbaandhan techsatish irukkaaRE :P I hope they upload this sooner.

andha padaththai ingu konjam tharavERRungaLEn...

joe
11th October 2009, 08:43 PM
andha padaththai ingu konjam tharavERRungaLEn...
I have the Nakeeran Hardcopy ..will try to scan and upload. :)

joe
11th October 2009, 09:15 PM
RC,
As per your request... :) bear the quality of photo shots.
http://i18.photobucket.com/albums/b126/cdjm/NTmadurai1.jpg
http://i18.photobucket.com/albums/b126/cdjm/NTmadurai2.jpg

RC
11th October 2009, 09:27 PM
RC,
As per your request... :) bear the quality of photo shots.
http://i18.photobucket.com/albums/b126/cdjm/NTmadurai1.jpg
http://i18.photobucket.com/albums/b126/cdjm/NTmadurai2.jpg

Thanks, Joe! :)

RAGHAVENDRA
11th October 2009, 09:45 PM
Dear friends,
Happy to meet you all. Hope every body enjoyed the show on Kalaignar TV. And the latest news is that they are going to telecast the coverage of exhibition exclusively next week (unconformed report). Hope this materialises.
And the lengthy dialogue was from the film RAJA RANI, the clipping showed was only a part of the scene. And if any body watched it keenly, you might have observed Raja Sulochana's reaction for every phrase. Bhimsingh, the man of perfection has taken utmost care in the picturisation of this scene - which was done in one take ... awesome..! Only NT can do it...!

Raghavendran

Murali Srinivas
11th October 2009, 11:27 PM
மனமும் இதயமும் நெகிழ...நான் பார்த்தேன்....அவரை இத்தனை பேரும் சொந்தம் கொண்டாடும் போதெல்லாம், எனக்குள் பொறாமை மிக மிக ஆழமாக எழுகிறது :ashamed: :( (which is so unlike me :? :ashamed: ) எனக்குப் பிடித்த இந்த ம்னிதரை இத்தனை பேரும் சொந்தம் கொண்டாடுகிறார்களே என்று....

பிரபா,

நீங்கள் சொன்னது போன்ற எண்ணம் எனக்கும் தோன்றியதுண்டு. அதே போல் அதற்கு நேர்மறையான எண்ணமும், அதாவது நமக்கு பிடித்த நடிகர் திலகத்தை இத்தனை பேருக்கு பிடித்திருக்கிறதே என்ற மகிழ்ச்சியும் ஏற்பட்டதுண்டு. இந்த இரண்டு சிந்தனையோட்டங்களுமே ஒருவர் மீது நாம் வைத்திருக்கும் அதீதமான அன்பின் வெளிப்பாடு என்றே எடுத்துக் கொள்ள வேண்டும்.




நான் இத்திரியில் அதிகம் எழுதுவதில்லை. அவரைப் பற்றி எழுத எனக்கு எதுவுமே இல்லை அல்லது எழுதத் தெரியாது என்ற எண்ணம் தான் காரணமாக இருக்கலாம்.

இந்த திரியில் உங்களுக்கு எழுத நிறைய விஷயம் இருக்கிறது. இதை முன்பும் சொன்னேன், இப்போதும் சொல்கிறேன். எழுதுங்கள்.

அன்புடன்

Bala (Karthik)
11th October 2009, 11:50 PM
(Even if the real Karnan was to appear on earth, he will be rejected as the fake Karnan! That is the impact of NT's performance.)

[html:461e2bc4a0]
http://i10.tinypic.com/81gru2w.jpg
[/html:461e2bc4a0]
:exactly:

And :ty: Joe

groucho070
12th October 2009, 07:22 AM
What a weekend. My brother got back from India and what did he bring me? Voila! NT's Suya Saritham. and then Astro Tanggathirai showed Karnan (Thanks for the alert, NOV).

What an emotional roller coaster of a ride that film was. I was thinking this...the the papier mache set, the drawn exterior, the props...all those would be improved if the film was made today...but can we get THAT performance!!!! That intensity!!! Amazing!!! The meeting with the mother, no matter how many times I see it, never failed to draw tears. I mean, forget about NT, the others like OAK Thevar, Muthuraman, and the playful NTR as the cunning shrewd Krishna, that twinkle in eye, the only character who seemed to be talking to us the audience.

Anyway, the autobiography which is more of "Conversation With..."series popular in the other hemisphere. I have crossed 30 pages...that itself was a super freakin' ride. Every superlative thrown seemed like understatement. Still in his teens (the 30th page) NT is already showing that he had always wanted to be a great actor...his inspiration for the Navarathiri grew from the stage day itself watching a comedian doing so and NT credited him for giving the seed for that ambition. Also MRR in his company and how wonderful he was to all the kids in the company, even to the point of cleaning up the bathroom and all :shock: NT called MR Radha a genius! A genius calling another one. Wow!

Anyway, I am looking forward to devour the book and go on to another, one of the 100 series by Savitha Joseph on NT. :bluejump:

NOV
12th October 2009, 07:43 AM
I was thinking this...the the papier mache set, the drawn exterior, the props...all those would be improved if the film was made today...but can we get THAT performance!!!! what acute observation. :clap:
somehow whenever I watch the film, everything else melts into the background. Its NT all the way, and of course supported by all no less by Asokan. Who can forget the சிதறிய முத்துக்களை எடுக்கவா கோர்க்கவா? :bow: natppin ilakkanam!


That intensity!!! Amazing!!! The meeting with the mother, no matter how many times I see it, never failed to draw tears. mine is the finale scene of உள்ளத்தின் நல்ல உள்ளம். Never fails to move me - killer music by MSV, heart renching singing by Seergazhiyaar, and NT's performance.
:bow: :bow: :bow:

groucho070
12th October 2009, 07:54 AM
Its NT all the way, and of course supported by all no less by Asokan. Who can forget the சிதறிய முத்துக்களை எடுக்கவா கோர்க்கவா? :bow: natppin ilakkanam!Oh yeah, I forgot to include Asohan...he was especially good in that court scene when naming the Talabathi. While supremely arrogant, shooting down his uncle (Viduran? VSR), humiliating him, he was supportive of Karnan, and yet he was helpless once Bheeshmar was appointed. Interesting how with our Sympathy on Karna, helped by NT's performance, suddenly all the noble characters like Bheeshmar became bad guy for us :lol: Switch NT to the other camp, then we'd have hated Duriyotharar :P Athuthaan persuasive performance-nggurathu. We were sold!

NOV
12th October 2009, 08:12 AM
at the rate we are discussing Karnan, both here and in Kannadhasan thread, people might think that we are watching it for the first time.
in actual fact I've watched the film at least a dozen times or even more!

groucho070
12th October 2009, 08:16 AM
:lol: Yeah me too. Used to be my emo weekend movie back in the 90s

But yea, each time the effect is like watching and being amazed for the first time.

NOV
12th October 2009, 08:20 AM
Rakesh, we must do something.... imagine watching Karnan on the big screen!
I am sure State cineplex can screen the film as their hall is quite small. If they can dedicate a day every fortnight, it will be a wonderful opportunity to experience these films on the silver screen.
Thinking of Gouravam, Thanga Pathakkam, Vietnam Veedu alone is mouth watering.

groucho070
12th October 2009, 08:25 AM
Rakesh, we must do something.... imagine watching Karnan on the big screen! Crikey, I was thinking of the same thing last evening, NOV.

Really, can it be done? Some kinda arrangment. I know we have an association for NT here which is basically I pat your back, you pat mine, organisation with bunch of delusional personalities. We need real fan to do something like this. Aiyoo...nengga sonna padanggal ellam big screenla....ninaikkumbothey meysilirrkirathu! :shock:

NOV
12th October 2009, 09:28 AM
Firstly can you contact Columbia Pictures in Masjid India and ask them whether they have them in film? We cant go on without knowing this first.

groucho070
12th October 2009, 11:01 AM
76 pages into NT's memoir. At one point due to some issues and also poverty, NT worked as a mechanic. Imagine, if he had stuck to it we would have got ourself not Nadigar Thilagam, but mechanical thilagam, thank god! :lol:

And I have to share this incident in the book with those who have not read it. In one play NT is the bad guy, and it was attended by Periyar (this is after the famous Sivaji Kanda Hindu Rajyam drama where Periyar gave the title Sivaji to Ganesamoorthi). Okay, at the end of the play, the heroine shoots NT with a revolver and NT recalls...

ஆனல் நான் சுட்டவுடன் உடனே விழமாட்டேன். ஆ...ஊ...என்று சத்தம் போட்டு அப்படி, இப்படி என்று சுத்தி பல்டியடித்துதான் விழுவேன். ஆப்படி நடிதால்தான் மக்கள் கைதட்டுவார்கள். இதுபோல் நடித்துகொன்டிருக்கும்போழுது பெரியார் அவர்கள் உனர்ச்சிவசபட்டு, "டெய், மடையா அவள்தான் சுட்டு விட்டளே கீழே விழுந்து இரந்து போடா" என்று எழுந்து சத்தம் போட்டு சொன்னார் :lol:

joe
12th October 2009, 11:54 AM
நடிகர் திலகத்தின் மணிமகுடத்தில் 'கர்ணன்' எப்போதுமே தேயாத வைரக்கல் . எத்தனை முறை பார்த்தாலும் வியக்க வைக்கும் காவியம்.

என்னுடைய தாய்மாமா முன்பு நடிகர்தில்கத்தின் மீது எனக்குள்ள அதீத ஈடுபாட்டை கேலியும் கிண்டலும் செய்பவர் . நடிகர் திலகம் இறந்த போது இந்தியாவிலிருந்து சிங்கைக்கு எனக்கு தொலைபேசி ஆறுதல் சொன்னார் :lol: அப்போது அவர் குறிப்பிட்டது ..சிவாஜி-யை நான் பல முறை கிண்டல் செய்தாலும் 'கர்ணன்' படத்தில் குந்தி தேவியை அவர் 'அம்மா' என்றழைக்கும் போது மனதை அப்படியே உருக்கி விடும் ..அந்த ஒரு வார்த்தையை அவர் உச்சரிக்கும் விதமே என்னையறியாமல் கண்ணீரை வரவழைக்கும் ..நிச்சயமாக வேறு யாராலும் இதை செய்ய முடியாது ..என்று சொன்னார்.

joe
12th October 2009, 02:03 PM
மதுரையில் நடிகர் திலகம் சிலை திறப்பு விழா - கலைஞர் தொலைக்காட்சி வீடியோ :D
http://www.tubetamil.com/view_video.php?viewkey=6be360e0bb8052e56935

abkhlabhi
12th October 2009, 05:26 PM
http://yazhsuthahar.blogspot.com/2006/06/blog-post_23.html

abkhlabhi
12th October 2009, 05:28 PM
http://yazhsuthahar.blogspot.com/2006/07/blog-post_115405704013387616.html

Murali Srinivas
12th October 2009, 11:52 PM
Rakesh, we must do something.... imagine watching Karnan on the big screen! Crikey, I was thinking of the same thing last evening, NOV.


We are hearing some interesting news regarding this [Chennai]. Hope what we heard materialises soon.

NOV & Rakesh,

Did you check the scene (or shall we say shot) during the song மஞ்சள் முகம் நிறம் மாறி, especially during the lines கர்ணன் பெற்ற பிள்ளையென்றால் கார்மேகம் அல்லவா, எதிர்காலத்தில் இந்த தேசத்தில் அவன் கருணை செய்வான் அல்லவா when camera would focus on NT's face. A real treat to watch.

Regards

Regards

NOV
13th October 2009, 05:57 AM
You mean his face radiating with pride and happiness? :D

coincidentally sivaji raja contacted me last night (about some hindi fim shooting in my office). sivaji raja - there is no love lost between us :roll: - is a key figure in malaysia's sivaji rasigar mandram (as is obvious thru his name). but as rakesh said, the mandram is extremely political. :argh:

anyway, I take this as a sign from providence. who knows, our dreams may come through. :D

Karikalen
13th October 2009, 06:11 AM
Thanks for the link Joe. Nice speech by Kamal

Karikalen

groucho070
13th October 2009, 06:58 AM
coincidentally sivaji raja contacted me last night (about some hindi fim shooting in my office). sivaji raja - there is no love lost between us :roll: - is a key figure in malaysia's sivaji rasigar mandram (as is obvious thru his name). but as rakesh said, the mandram is extremely political. :argh: :lol: Him, Vijayasinggam.... :roll:

RAGHAVENDRA
14th October 2009, 12:36 AM
நட்பின் இலக்கணமாக தம்முடைய தலைமுறைதான் முன்னோடி - விஜய் டிவியில் கமலஹாசன்

திரையுலகில் 50வது ஆண்டு பொன் விழா கண்ட கமலஹாசன் அவர்களுக்கு 12.08.2009 அன்று நமது இணைய தளம் சார்பில் ஏற்கெனவே நாம் வாழ்த்துக்களைத் தெரிவித்திருந்தோம். தற்போது சென்னை மாநகரில் நடைபெற்று விஜய் டி.வி.யில் கமல ஹாசன் அவர்களுக்குப் பாராட்டு விழா ஒளிபரப்பானது. இதில் உரையாற்றிய கமலஹாசன் அவர்கள் உள்ளம் உருகும் வகையில் தமது நன்றியைத் தெரிவித்துப் பேசினார். உண்மையிலேயே அவருடைய அவையடக்கம் நம்மை நெஞ்சை நெகிழ வைத்தது என்றால் மிகையல்ல.

ஆனால் அதில் ஒரே ஒரு கருத்துக்கு மட்டும் நாம் நம்முடைய உடன்பாடின்மையைத் தெரிவிக்க வேண்டியுள்ளது. கடந்த பல ஆண்டு தமிழ்த்திரையுலக சரித்திரத்தில் ரசிகர்கள் தான் ஒருவருக்கொருவர் எதிரெதிர் இருந்தனரே தவிர இறுதி வரை எம்.ஜி.ஆர். அவர்களும் சிவாஜி அவர்களும் நட்பைப் பேணியுள்ளனர். 1962ல் நடிகர் திலகம் அவர்கள் அமெரிக்க விஜயததை முடித்துக் கொண்டு திரும்பியவுடன் அப்போதைய நடிகர் சங்கத் தலைவராக இருந்த எம்.ஜி.ஆர். அவர்கள் மிகச் சிறப்பான அளவில் வரவேற்பு விழா நடத்தி கௌரவித்தார். அதே போல் 1972ல் எம்.ஜி.ஆர் பாரத் பட்டம் பெற்ற போது அப்போதைய நடிகர் சங்கத் தலைவராயிருந்த நடிகர் திலகம் எம்.ஜி.ஆர். அவர்களுக்கு மிகச் சிறந்த முறையில் பாராட்டு விழா நடத்தி கௌரவித்தார்.

இந்த இரு நிகழ்ச்சிகளும் ஒரு உதாரணத்துக்காகத்தான் கூறப்பட்டுள்ளன. இவை போல் பல் வேறு சம்பவங்களில் தமிழ்த் திரையுலகக் கலைஞர்களுக்காக ஒருமித்து குரல் கொடுத்து வந்துள்ளனர். தனிப்பட்ட முறையிலும் அவர்கள் நட்பில் என்றுமே விரிசல் வந்ததில்லை. அதே போல் எம்.ஜி.ஆர் நோய்வாய்ப்பட்டு அமெரிக்காவில் சிகிச்சை பெற்ற போது நேரில் சந்தித்தும் பின்னர் தமிழ் நாட்டில் அவர் நலம் வேண்டி நடைபெற்ற கூட்டு வழிபாட்டின் போது பங்கு கொண்டும் நடிகர் திலகம் தன்னுடைய அன்பின் ஆழத்தை வெளிப்படுத்தினார். கலைஞர் கருணாநிதியுடன் எந்த அளவிற்கு நட்புடன் இருந்தாரோ அதே அளவிற்கு எம்.ஜி.ஆர். அவர்களுடனும் நட்புடன் இருந்தார்.

ஆனால் கமலஹாசன் பேசும்போது நட்பின் இலக்கணமாக முந்தைய தலைமுறை இல்லை என்றும் தம்முடைய தலைமுறைதான் அதற்கு முன்னோடியாக இருப்பதாகவும் விஜய் டிவியில் ஒளிபரப்பான அவரது பேச்சில் குறிப்பிட்டிருக்கிறார். இந்த கருத்தை நாம் ஏற்றுக் கொள்ள முடியாது என்பதை இத்தருணத்தில் குறிப்பிட வேண்டியுள்ளது.

ரசிகர்கள் எதிரெதிர் இருந்தாலும் அவர்களை தத்தம் வழியில் முறைப் படுத்தி தேச நலனுக்காக துணிந்து திசை காட்டி அவர்களுக்கு வழிகாட்டி நடத்திச் சென்றனர் எம்.ஜி.ஆரும் சிவாஜியும். அரசியலில் அவர்கள் தைரியமாக இறங்கியதோடு மட்டுமல்லாமல் ரசிகர் மன்றங்களுக்கு பாதையையும் காட்டினர். பகுத்தறிவு திராவிடம் போன்ற கொள்கைகளில் எம்.ஜி.ஆர். ரசிகர் மன்றங்கள் சென்றதென்றால், தேசியம், மத நல்லிணக்கம், இறையாண்மை, ஒருமைப்பாடு போன்ற கொள்கைகளில் சிவாஜி ரசிகர் மன்றங்கள் சென்றன.

அரசியலை மக்களுக்கு சேவை செய்யும் வாய்ப்பாகக் கருதியே இவ்விரண்டு அமைப்புகளும் செயல்பட்டன.

உயர்திரு கமலஹாசன் அவர்களுடைய தனிப்பட்ட கருத்துக்களைப் பற்றி நாம் விமர்சிக்க உரிமையில்லை. ஆனால் நட்பின் இலக்கணத்தை நடிகர் திலகம் ஏற்கெனவே ஏற்படுத்திச் சென்றிருக்கிறார் என்பதை அவர் உணர்ந்து கொள்ள வேண்டும் என்பதே நமது வேண்டுகோள். எம்.ஜி.ஆர்- சிவாஜி இருவரும் முந்தைய தலைமுறையிலேயே அதற்கான அஸ்திவாரத்தை ஆழப் போட்டிருக்கின்றனர் என்பதைக் கூற விரும்புகிறோம்.

www.nadigarthilagam.com

thamiz
14th October 2009, 01:52 AM
நட்பின் இலக்கணமாக தம்முடைய தலைமுறைதான் முன்னோடி - விஜய் டிவியில் கமலஹாசன்
-----

உயர்திரு கமலஹாசன் அவர்களுடைய தனிப்பட்ட கருத்துக்களைப் பற்றி நாம் விமர்சிக்க உரிமையில்லை. ஆனால் நட்பின் இலக்கணத்தை நடிகர் திலகம் ஏற்கெனவே ஏற்படுத்திச் சென்றிருக்கிறார் என்பதை அவர் உணர்ந்து கொள்ள வேண்டும் என்பதே நமது வேண்டுகோள். எம்.ஜி.ஆர்- சிவாஜி இருவரும் முந்தைய தலைமுறையிலேயே அதற்கான அஸ்திவாரத்தை ஆழப் போட்டிருக்கின்றனர் என்பதைக் கூற விரும்புகிறோம்.

www.nadigarthilagam.com

I dont think it was intented for undermining NT-MT relationship in anyway. I think it is rather just like saying , "ஆதிமனிதன் காதலுக்குப்பின் அடுத்தகாதல் இதுதான்" :D

I mean they both are sort of nervous (as you know how the fans are :lol:) and they just have exaggerated a bit, I suppose. :smile2:

groucho070
14th October 2009, 07:26 AM
Understand your disappointment, Raghavendra sar. Am reading NT's memoir now, and I can see nimishathukku nimisham NT saying, "en annan MGR" and seeing MGR's pix all over the book. They were divided by politics, but not in personal life. There was even a rare shot of MGR amongst the very small group of people who conducted NT's wedding, relaxing on the floor like some regular dudes hanging out. Their relationship was more than friendship, it was almost like blood relationship. Prabhu calls MGR periyappa. It extends more than that, it's an unusual group of people, NT, Kalaignar, Kannadhasan, MGR, Anna, all who somewhat share the same foundation ideology wise, but just diverted themselves later on that basis but never on personal relationship. That is what I understand.

As for Rajini Kamal, there was no politics in between them, and the relationship has been more on peer to peer basis, rather than sibling like earlier generation. That's my understanding. I could be wrong.

joe
14th October 2009, 01:36 PM
ராகவேந்திரர் சார்,
கமலோ ,ரஜினியோ எம்.ஜி.ஆர் சிவாஜியின் நட்பை குறைத்து மதிப்பிட்டதாக எனக்கு படவில்லை.

கமல் ,ரஜினி இருவரும் தொழில் முறையில் உறவு கொண்டவர்கள் .அதைத் தாண்டி கொள்கை ரீதியாக அல்லது ஒருவரை ஒருவர் தொழில் தாண்டி முரண்படுகிற சந்தர்ப்பம் நல்ல வேளையாக அவர்களுக்கு இல்லை.

சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் அவருடைய பேச்சில் குறிப்பிட்டது போல கமல் ,ரஜினி இருவரையும் பல இயக்குநர்கள் ,தயாரிப்பாளர்கள் ஒரே நேர்த்தில் கையாண்டிருக்கிறார்கள் .ஆனால் அந்த அளவுக்கு சிவாஜி - எம்.ஜி.ஆர் காலத்தில் அந்த அளவுக்கு இல்லை என்பது கசப்பான உண்மை .. நடிகர் திலகத்தை இயக்கும் இயக்குநர்கள் எம்.ஜிஆரை இயக்கினால் அவர் முகாம் மாறிவிட்டார் எனும் படியான தோற்றம் இருந்ததை மறுப்பதற்கில்லை ..நடிகர் திலகத்திற்கும் மக்கள் திலகத்திற்கும் தனித்தனியே ஒரு இயக்குநர் வட்டம் இருந்தது உண்மை ..இது போதாதென்று அவர்கள் எதிர் அரசியல் இயக்கங்களில் பங்கெடுத்துக்கொண்டதால் ,இயக்கத்திற்காக கருத்து முரண்படவும் வாய்ப்புகள் அதிகமாக இருந்தன ..அவர்களின் ரசிகர்கள் சினிமாவையும் தாண்டி கொள்கை ரீதியாகவும் எதிர் முனைகளில் நின்று பணியாற்றும் சந்தர்பங்கள் அமைந்தன.

நடிகர் திலகமும் ,மக்கள் திலகமும் ஒருவர் மேல் ஒருவர் உள்ளார்ந்த அன்புடன் இருந்தாலும் ,சுற்றியுள்ளவர்கள் அவர்களை தூண்டி விட்டு குளிர்காய நினைத்தார்கள் என்பது உண்மை ..மக்கள் திலகம் டாக்டர் பட்டம் பெற்ற போது திரையுலகம் சார்பில் நடைபெற்ற பாராட்டு விழா ஒளிக்காட்சியை நான் பார்க்க நேரிட்டது .அதில் எம்.ஜி.ஆர் பேசும் போது சிலர் தன்னை சிவாஜியை பற்றி தவறாக புரிந்து கொள்ளும் படி தவறான தகவல்களை சொல்லி தூண்டி விட்டதாக ஒப்புக்கொண்டார்.

எனவே இதிலிருக்கும் வேறுபாட்டை நாம் ஒத்துக்கொள்ள வேண்டும்.

pammalar
15th October 2009, 03:21 AM
அனைவருக்கும் மனமார்ந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள் !

தீபாவளி ஸ்பெஷல்

தீபாவளி ஹீரோவின் தீபாவளி வெளியீடாக வெளிவந்த திரைக்காவியங்கள் :

1. பராசக்தி - 17.10.1952 - 294 நாட்கள்

2. கண்கள் - 5.11.1953 - 35 நாட்கள்

3. கோட்டீஸ்வரன் - 13.11.1955 - 35 நாட்கள்

4. கள்வனின் காதலி - 13.11.1955 - 83 நாட்கள்

5. ரங்கோன் ராதா - 1.11.1956 - 71 நாட்கள்

6. அம்பிகாபதி - 22.10.1957 - 84 நாட்கள்

7. காத்தவராயன் - 7.11.1958 - 84 நாட்கள்

8. அவள் யார் - 30.10.1959 - 42 நாட்கள்

9. பாகப்பிரிவினை - 31.10.1959 - 216 நாட்கள்

10. பாவை விளக்கு - 19.10.1960 - 58 நாட்கள்

11. பெற்ற மனம் - 19.10.1960 - 36 நாட்கள்

12. கப்பலோட்டிய தமிழன் - 7.11.1961 - 68 நாட்கள்

13. பந்தபாசம் - 27.10.1962 - 77 நாட்கள்

14. அன்னை இல்லம் - 15.11.1963 - 104 நாட்கள்

15. முரடன் முத்து - 3.11.1964 - 79 நாட்கள்

16. நவராத்திரி - 3.11.1964 - 108 நாட்கள்

17. செல்வம் - 11.11.1966 - 64 நாட்கள்

18. ஊட்டி வரை உறவு - 1.11.1967 - 114 நாட்கள்

19. இரு மலர்கள் - 1.11.1967 - 100 நாட்கள்

20. எங்க ஊர் ராஜா - 21.10.1968 - 86 நாட்கள்

21. சிவந்த மண் - 9.11.1969 - 145 நாட்கள்

22. எங்கிருந்தோ வந்தாள் - 29.10.1970 - 100 நாட்கள்

23. சொர்க்கம் - 29.10.1970 - 100 நாட்கள்

24. பாபு - 18.10.1971 - 119 நாட்கள்

25. கெளரவம் - 25.10.1973 - 102 நாட்கள்

26. அன்பைத் தேடி - 13.11.1974 - 42 நாட்கள்

27. வைர நெஞ்சம் - 2.11.1975 - 42 நாட்கள்

28. டாக்டர் சிவா - 2.11.1975 - 53 நாட்கள்

29. சித்ரா பெளர்ணமி - 22.10.1976 - 42 நாட்கள்

30. அண்ணன் ஒரு கோயில் - 10.11.1977 - 114 நாட்கள்

31. பைலட் பிரேம்நாத் - 30.10.1978 - 222 நாட்கள்

32. பட்டாக்கத்தி பைரவன் - 19.10.1979 - 140 நாட்கள்

33. விஸ்வரூபம் - 6.11.1980 - 102 நாட்கள்

34. கீழ்வானம் சிவக்கும் - 26.10.1981 - 103 நாட்கள்

35. ஊரும் உறவும் - 14.11.1982 - 56 நாட்கள்

36. பரீட்சைக்கு நேரமாச்சு - 14.11.1982 - 75 நாட்கள்

37. வெள்ளை ரோஜா - 4.11.1983 - 111 நாட்கள்

38. வம்ச விளக்கு - 23.10.1984 - 63 நாட்கள்

39. படிக்காதவன் - 11.11.1985 - 175 நாட்கள்

40. லட்சுமி வந்தாச்சு - 1.11.1986 - 52 நாட்கள்

41. தேவர் மகன் - 25.10.1992 - 180 நாட்கள்

42. பாரம்பர்யம் - 13.11.1993 - 28 நாட்கள்

200 நாட்களும் அதற்கு மேலும் ஓடிய திரைக்காவியங்கள் : 3

வெள்ளி விழாவிலிருந்து 199 நாட்கள் வரை ஓடிய திரைக்காவியங்கள் : 2

20 வாரங்கள் முதல் 24 வாரங்கள் வரை ஒடிய திரைக்காவியங்கள் : 2

100 நாட்கள் முதல் 19 வாரங்கள் வரை : 12

10 வாரங்கள் முதல் 99 நாட்கள் வரை : 8

50 நாட்கள் முதல் 9 வாரங்கள் வரை : 7

7 வாரங்கள் வரை ஒடிய திரைக்காவியங்கள் : 8

தீபாவளி ஹீரோ என்றென்றும் நடிகர் திலகமே !!

மேலும் சாதனைகள் எனும் சாம்ராஜ்யத்திற்கு , நிரந்தர சக்கரவர்த்தி, நமது நடிகர் திலகம் ஒருவரே !!!

அன்புடன்,
பம்மலார்.

RAGHAVENDRA
15th October 2009, 05:55 AM
ராகவேந்திரர் சார்,
கமலோ ,ரஜினியோ எம்.ஜி.ஆர் சிவாஜியின் நட்பை குறைத்து மதிப்பிட்டதாக எனக்கு படவில்லை.

கமல் ,ரஜினி இருவரும் தொழில் முறையில் உறவு கொண்டவர்கள் .அதைத் தாண்டி கொள்கை ரீதியாக அல்லது ஒருவரை ஒருவர் தொழில் தாண்டி முரண்படுகிற சந்தர்ப்பம் நல்ல வேளையாக அவர்களுக்கு இல்லை.

சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் அவருடைய பேச்சில் குறிப்பிட்டது போல கமல் ,ரஜினி இருவரையும் பல இயக்குநர்கள் ,தயாரிப்பாளர்கள் ஒரே நேர்த்தில் கையாண்டிருக்கிறார்கள் .ஆனால் அந்த அளவுக்கு சிவாஜி - எம்.ஜி.ஆர் காலத்தில் அந்த அளவுக்கு இல்லை என்பது கசப்பான உண்மை .. நடிகர் திலகத்தை இயக்கும் இயக்குநர்கள் எம்.ஜிஆரை இயக்கினால் அவர் முகாம் மாறிவிட்டார் எனும் படியான தோற்றம் இருந்ததை மறுப்பதற்கில்லை ..நடிகர் திலகத்திற்கும் மக்கள் திலகத்திற்கும் தனித்தனியே ஒரு இயக்குநர் வட்டம் இருந்தது உண்மை ..இது போதாதென்று அவர்கள் எதிர் அரசியல் இயக்கங்களில் பங்கெடுத்துக்கொண்டதால் ,இயக்கத்திற்காக கருத்து முரண்படவும் வாய்ப்புகள் அதிகமாக இருந்தன ..அவர்களின் ரசிகர்கள் சினிமாவையும் தாண்டி கொள்கை ரீதியாகவும் எதிர் முனைகளில் நின்று பணியாற்றும் சந்தர்பங்கள் அமைந்தன.

நடிகர் திலகமும் ,மக்கள் திலகமும் ஒருவர் மேல் ஒருவர் உள்ளார்ந்த அன்புடன் இருந்தாலும் ,சுற்றியுள்ளவர்கள் அவர்களை தூண்டி விட்டு குளிர்காய நினைத்தார்கள் என்பது உண்மை ..மக்கள் திலகம் டாக்டர் பட்டம் பெற்ற போது திரையுலகம் சார்பில் நடைபெற்ற பாராட்டு விழா ஒளிக்காட்சியை நான் பார்க்க நேரிட்டது .அதில் எம்.ஜி.ஆர் பேசும் போது சிலர் தன்னை சிவாஜியை பற்றி தவறாக புரிந்து கொள்ளும் படி தவறான தகவல்களை சொல்லி தூண்டி விட்டதாக ஒப்புக்கொண்டார்.

எனவே இதிலிருக்கும் வேறுபாட்டை நாம் ஒத்துக்கொள்ள வேண்டும்.

ஜோ அவர்களின் கருத்துகளில் நான் மாறு பட வேண்டியிருக்கிறது.
நீங்கள் சொன்னது போல் அவர்கள் இருவரையும் சுற்றி ஒரு வேலி இருந்திருக்கிறது. ஆனால், அந்த வேலி அவர்களின் சுய எண்ணங்களுக்கு தடையாக இருந்ததில்லையே. அதை மீறியல்லவா அவர்கள் நட்பைப் பேணினார்கள். அவர்களிருவரடையே தூபம் போட்டது யார் என்பதெல்லாம் தனிக்கதை. எந்த அரசியல்வாதிகள் அவர்களால் பயனுற்றார்கள், அவர்களே எப்படி அவர்களிருவரையும் வீசி எறிந்தார்கள் என்பதெல்லாம் வரலாறு. ஆனால் அதையெல்லாம் தாண்டியல்லவா அவர்கள் நட்பைப் பேணிக் காத்தார்கள். எம்.ஜி.ஆர் முகாம் என்று கூறப்பட்டு நடிகர்திலகத்தை மேடையில் வாய்க்கு வந்தபடியெல்லாம் பேசிய கலைஞர்கள் அத்தனை பேரும் நடிகர் திலகத்தின் படங்களில் இடம் பெற்றனரே. தொழிலுக்கும் கொள்கைக்கும் இடைவெளியைக் கடைப்பிடித்து மனிதாபிமானம் ஒன்றையே பிரதானமாக அல்லவா நடிகர் திலகம் மேற்கொண்டார். பல்வேறு காரணங்களிருந்தாலும் அதையெல்லாம் மீறி நட்பைப் பேணுவது சிறந்ததா அல்லது எந்தப் பிரச்சினையும் இல்லாமல் நட்பைப் பேணுவது சிறந்ததா என்பதை நாம் தனியாக விளக்க வேண்டியதில்லை.
இது என் தனிப்பட்ட கருத்து.
ராகவேந்திரன்

joe
15th October 2009, 07:59 AM
ஜோ அவர்களின் கருத்துகளில் நான் மாறு பட வேண்டியிருக்கிறது.
பரவாயில்லை .நான் சொல்ல வந்ததை சரியாக சொல்லவில்லையோ என ஐயுறுகிறேன் .இருந்தாலும் இதைப் பற்றி அதிகம் பேசி என்ன ஆகப் போகிறது :)

groucho070
15th October 2009, 10:50 AM
NT's Humour. From Sivaji: 100 Sigaram Todda Sethigal book:


சிவஜி பிலிம்ஸ் படபிடிப்பு ஒன்று நடந்துகொன்டிருந்த நேரம். ஒரு அசிஸ்டன்ட் டைரக்டர் வேகமாக வெளியே ஓடிகொன்டிருந்தார். அவ்ரை நிருத்தி, "தம்பி என்னாசு? எங்க ஓடுர?" என்றார் சிவஜி. அவர், "ராதா அம்மவை கூப்பிட போரேன் சார்" என்றதும்,

"ராதாவை போய் கூபிட்டு வாங்க. அவங்க அம்மவை அடுத்த படத்துக்கு கூபிட்லாம்" - என்றார் சிரிக்காமல். அவரும் அப்படியே தலையாட்டி போனார். சுற்றி இருந்தவர்கள் விழுந்து சிரிதார்கள். :lol:

groucho070
15th October 2009, 10:58 AM
ஒரு தடவை பரதிராஜா, நடிகர் திலகத்திடம், "மதுரையிலிருந்து நான் நடிப்பதர்காக தான் சென்னைக்கு வந்தென். ஆனா இங்க வந்து கன்னாடியில் என் முகத்தை பார்த்த போதுதான் நடிக்க நான் லயக்கிலைன்னு தெரிஞ்சது,"என்றாராம்.

சிவஜி,:"ஏன் மதுரையில கன்னடி இல்லயா" :rotfl:

Plum
15th October 2009, 11:05 AM
ஒரு தடவை பரதிராஜா, நடிகர் திலகத்திடம், "மதுரையிலிருந்து நான் நடிப்பதர்காக தான் சென்னைக்கு வந்தென். ஆனா இங்க வந்து கன்னாடியில் என் முகத்தை பார்த்த போதுதான் நடிக்க நான் லயக்கிலைன்னு தெரிஞ்சது,"என்றாராம்.

சிவஜி,:"ஏன் மதுரையில கன்னடி இல்லயா" :rotfl:

:rotfl3:

saradhaa_sn
15th October 2009, 01:15 PM
அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

டியர் பம்மலார்,

தீபாவளி ரிலீஸ் பட்டியல் அருமை.

12. கப்பலோட்டிய தமிழன் - 7.11.1961 - 68 நாட்கள்
பட்டியலிலேயே மனதை வலிக்கச்செய்த இடம் இதுதான். தமிழ் ரசிகர்கள் இந்தப்படத்தில் என்ன எதிர்பார்த்து அப்படி ஏமாந்தார்கள்.....?????. இன்றைக்கு கப்பலோட்டிய தமிழனைப் பற்றி வாய்கிழியப் பாராட்டும் பத்திரிகைகளும், விமர்சகர்களும் ('கப்பலோட்டிய தமிழன் போன்ற படங்களில் நடித்த சிவாஜி தற்போது ஏன் "இப்படிப்பட்ட" படங்களில் நடிக்கிறார்?') அன்றைக்கு அப்படத்துக்கு அளித்த வரவேற்பு என்ன?. அவர்கள் குறிபிட்ட "இப்படிப்பட்ட" படங்களில்தானே தயாரிப்பாளர்கள் பல மடங்கு லாபம் கண்டனர்?. கப்பலோட்டிய தமிழன் போன்ற தரமான தயாரிப்புகளிலிருந்து தயாரிப்பாளர்களை அன்னியப்படுத்தியது யார்?. (போதிய வரவேற்பு அளிக்காததன் மூலம்) மக்கள்தானே?.

'நாங்கள் எடுக்க மாட்டோம்' என்று அவர்கள் சொல்லவுமில்லை, 'நான் நடிக்க மாட்டேன்' என்று இவர் சொல்லவுமில்லை. 'எடுத்தால் பார்க்கமாட்டோம்' என்று சொன்னது மக்கள்தான்.

கப்பலோட்டிய தமிழனைப்பற்றி பேச்சு வரும்போதெல்லாம் என் தந்தை சொல்லும் வார்த்தை இதுதான்... "அதை ஏம்மா கேட்கிறே..! காங்கிரஸ்காரன்களே கதர்ச்சட்டையைப் போட்டுக்கொண்டு தாயைக்காத்த தனயன் கியூவில் போய் நின்னானுங்க. அப்புறம் மத்தவங்களைப்பத்தி என்ன சொல்வது?".

abkhlabhi
15th October 2009, 06:03 PM
http://www.thehindu.com/thehindu/2001/07/27/stories/09270226.htm

HARISH2619
15th October 2009, 06:18 PM
DEAR PAMMAL SIR,
BEAUTIFUL COMPILATION OF NT's DIWALI FILMS.
I HEARD FROM MY FATHER THAT,MURADAN MUTHU,ENGA OOR RAJA AND PARITCHAIKKU NERAMACHU WERE ALL 100 DAY FILMS. IS IT TRUE? (MURALI SIR HAS TO CLARIFY)


DEAR SARADHA MADAM,
THOUGH KAPPALOTTIYA THAMIZHAN WAS NOT A BO HIT IN IT's FIRST RELEASE,IT MADE VERY GOOD MONEY IN IT'S RE RELEASES(IT WAS SAID BY OUR NT ONCE IN BOMMAI MAGAZINE)

saradhaa_sn
15th October 2009, 07:13 PM
DEAR PAMMAL SIR,
BEAUTIFUL COMPILATION OF NT's DIWALI FILMS.
I HEARD FROM MY FATHER THAT,MURADAN MUTHU,ENGA OOR RAJA AND PARITCHAIKKU NERAMACHU WERE ALL 100 DAY FILMS. IS IT TRUE? (MURALI SIR HAS TO CLARIFY)
டியர் செந்தில்,

முரடன் முத்துவும், எங்க ஊர் ராஜாவும் 100 நாட்களை எட்டவில்லை என்பது உண்மை. (பரீட்சைக்கு நேரமாச்சு பற்றி எனக்கும் சந்தேகம் உள்ளது).

முரளி ஏற்கெனவே சொன்னமாதிரி, 1964-ல் வெளியான ஏழு படங்களில் ஐந்து படங்கள் 100 நாட்களைக்கடந்து ஓடின. (கர்ணன், பச்சை விளக்கு, கைகொடுத்த தெய்வம், புதிய பறவை, நவராத்திரி ஆகியன). மற்ற இரண்டு படங்களான ஆண்டவன் கட்டளையும் முரடன் முத்துவும் 70 நாட்களைக்கடந்து ஓடின. ஆனால் தரத்தில் ஏழும் ஏழு வைரங்கள் என்பதில் ஐயமில்லை.

பட்டியலில், இன்னொரு விசேஷம் கவனித்தீர்களா?. தீபாவளி வெளியீடுகளில் மட்டுமே எட்டு தீபாவளிகளில் இரண்டிரண்டு படங்கள் வெளியாகியுள்ளன. இதுவும் யாரும் செய்திராத சாதனைதான்.

Plum
15th October 2009, 07:20 PM
DEAR PAMMAL SIR,
BEAUTIFUL COMPILATION OF NT's DIWALI FILMS.
I HEARD FROM MY FATHER THAT,MURADAN MUTHU,ENGA OOR RAJA AND PARITCHAIKKU NERAMACHU WERE ALL 100 DAY FILMS. IS IT TRUE? (MURALI SIR HAS TO CLARIFY)
டியர் செந்தில்,

முரடன் முத்துவும், எங்க ஊர் ராஜாவும் 100 நாட்களை எட்டவில்லை என்பது உண்மை. (பரீட்சைக்கு நேரமாச்சு பற்றி எனக்கும் சந்தேகம் உள்ளது).

முரளி ஏற்கெனவே சொன்னமாதிரி, 1964-ல் வெளியான ஏழு படங்களில் ஐந்து படங்கள் 100 நாட்களைக்கடந்து ஓடின. (கர்ணன், பச்சை விளக்கு, கைகொடுத்த தெய்வம், புதிய பறவை, நவராத்திரி ஆகியன). மற்ற இரண்டு படங்களான ஆண்டவன் கட்டளையும் முரடன் முத்துவும் 70 நாட்களைக்கடந்து ஓடின. ஆனால் தரத்தில் ஏழும் ஏழு வைரங்கள் என்பதில் ஐயமில்லை.

பட்டியலில், இன்னொரு விசேஷம் கவனித்தீர்களா? தீபாவளி வெளியீடுகளில் மட்டுமே எட்டு தீபாவளிகளில் இரண்டிரண்டு படங்கள் வெளியாகியுள்ளன. இதுவும் யாரும் செய்திராத சாதனைதான்.
Wanted to comment on that - ippollAm, adutha pOtti nadigan padamE same day-la veLivarAma pArthukkrAngaLAm. And every actor is advised and prefers to release solo than even fighting out with another big actor's movie. Ivaru ivar padamE ore nALLa rendu veLiyittu, on many occasions, rendu padamum 50 days+ - on one occasion both movies 100 days +!

RAGHAVENDRA
16th October 2009, 07:09 AM
அதிகாலை எண்ணெய்க் குளியல்
இறை வழிபாடு
புத்தாடை
வெடிகள்
இனிப்புகள்
நண்பர்கள் குழாம் சந்திப்பு
சாந்தி தியேட்டரில் முகாம்
நடிகர் திலகத்தின் படங்கள் முதல் நாள் முதல் காட்சியில் கொட்டம்
இரவு தாமதமாக வீடு திரும்புதல்
வீட்டில் வசவு

இந்த வரிசையில் தற்போது விட்டுப் போனவற்றைத் தவிர மற்றவை தீபாவளியில் தொடர்ந்து கொண்டுள்ளன. நமது கலாச்சாரம் பேணப் பட்டு வருகிறது

விட்டுப் போனவற்றை நினைவில் வைத்து மற்றவற்றை இருப்பில் வைத்து தீபாவளியை கொண்டாடி மகிழ்வோம்.
நம்முடன் கொண்டாட நடிகர் திலகம் உடன் வருவார்.
தாயெனும் செல்வங்கள் தாலாட்டும் தீபம் வைரங்கள் போலே ஒளி வீசட்டும் என வாழ்த்துவார்

நடிகர் திலகம் நம்முடனேயே இருப்பதால் வழக்கமான உற்சாகத்துடன் தீபாவளியை வரவேற்போம் கொண்டாடி மகிழ்வோம்

அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்

ராகவேந்திரன்

abkhlabhi
16th October 2009, 09:58 AM
WISH ALL NT FANS A HAPPY DEEPAVALI

NOV
16th October 2009, 10:53 AM
[html:362567a283]
http://i61.photobucket.com/albums/h42/N_O_V/Diwali.gif
[/html:362567a283]

HARISH2619
16th October 2009, 12:27 PM
சாரதா மேடம்,
பட்டியலில் இருந்த இன்னொறு விசேஷத்தை கோடிட்டு காட்டியதற்க்கு நன்றி.தமிழ்த்திரைப்பட வரலாற்றில் இவர் ஒருவர் மட்டுமே உன்மையான தைரியசாலி என்பதற்க்கு இதுவும் ஒரு சான்று.

நடிகர்திலகத்தின் அன்பு நெஞ்சங்களுக்கு இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்

Irene Hastings
16th October 2009, 04:23 PM
நடிகர் திலகம் மற்றும் மக்கள் திலகம் ரசிகர்களுக்கு என் அன்பார்ந்த தீபாவளி வாழ்த்துக்கள்.

அன்புடன்

joe
16th October 2009, 05:33 PM
நடிகர் திலகம் மற்றும் மக்கள் திலகம் ரசிகர்களுக்கு என் அன்பார்ந்த தீபாவளி வாழ்த்துக்கள்.


ரிப்பீட்டேய் 8-)

Murali Srinivas
16th October 2009, 11:47 PM
தீபாவளி திருநாள்

நமது மய்யத்தின் அனைத்து உறுப்பினர்களுக்கும் அவர் தம் குடும்பத்தினருக்கும் தீப திருநாளாம் தீபாவளி நல் வாழ்த்துகள்.

பராசக்தி ஜெயந்தி தினம் [17.10.1952]

இந்த நாள் கலையுலக சூரியன் திரையுலகில் உதித்த நாள்.

57 வருடங்கள் ஆகி விட்டன.எத்தனை வருடங்கள் கடந்தாலும் இந்த தமிழ் திரையுலகில் என்றுமே அந்த சூரியனுக்கு அஸ்தமனம் இல்லை.

தீபாவளி படங்கள்

பட்டியலிட்ட பம்மலாருக்கு நன்றி. இன்னொரு விஷயம் கவனித்தோம் என்றால் அவர் தொடர்ச்சியாக நடித்துக் கொண்டிருந்த 36 வருடங்களில் [1952 -1987] நான்கு வருடங்களில் மட்டுமே தீபாவளியை அவரது படங்கள் தவற விட்டிருப்பது தெரியும். அதிலும் அந்த 1987 -ம் வருட தீபாவளிக்கு அவரது படம் வராத போது எங்கள் மதுரையில் நடிகர் திலகத்தின் படம் வராத தீபாவளி எங்களுக்கு துக்க தீபாவளி என்று முதன் முதலில் போஸ்டர் ஒட்டினார்கள். பிற்காலத்தில் பல நடிகர்களின் ரசிகர்கள் பயன்படுத்திய இந்த டயலாக் முதலில் வெளிப்பட்டதும் நடிகர் திலகத்தின் மூலமாகத்தான்.

அன்புடன்

pammalar
17th October 2009, 02:42 PM
Wish you all a very Happy , Colourful & a Delightful DEEPAVALI !!!

Nadigar Thilagam's Parasakthi Jayanthi Wishes to All !!!

We can celebrate Parasakthi's 38th Jayanthi Day (17.10.2009) together by browsing the following website :

http://www.parasakthi1.webs.com/

Please specify your comments & feedbacks. This site will get updates forever !

Yours Truly,
Pammal R. Swaminathan

joe
17th October 2009, 10:21 PM
We can celebrate Parasakthi's 38th Jayanthi Day (17.10.2009)

why 38th? :roll: it should be 58th 8-)

Incidently ,today is 38th Jayathi for ADMK party ..Rendaiyum kuLapiteengala :lol:

pammalar
19th October 2009, 08:45 PM
Thanks Mr. Joe for pointing out the human error I have made.

It is a slip and a costly mistake and I feel sorry for that.

Yes Mr. Joe, You are right !

Nadigar Thilagam's Parasakthi was released on Deepavali day 17.10.1952 and 17.10.2009 was its 58th Jayanthi day, also a Deepavali day.

What an excellent & rare coincidence !!!

Regards,
Pammalar.

abkhlabhi
20th October 2009, 04:39 PM
http://itamilnet.blogspot.com/2007/11/movie-tenali-raman.html

abkhlabhi
20th October 2009, 05:18 PM
http://www.moovyshoovy.com/watch_tamil_movie.php?movie=Makkalai%20Petra%20Mah arasi

rangan_08
20th October 2009, 06:58 PM
And the lengthy dialogue was from the film RAJA RANI, the clipping showed was only a part of the scene. And if any body watched it keenly, you might have observed Raja Sulochana's reaction for every phrase. Bhimsingh, the man of perfection has taken utmost care in the picturisation of this scene - which was done in one take ... awesome..! Only NT can do it...!

Raghavendran

I was about to mention this sir. In the beginning of the speech NT will be holding Raja Sulochana and gradually leaves her as he gains momentum in his speech. Again he slowly comes back to her all the while saying those wonderful dialogues will all the necessary emotions, voice modulations etc. Now, there is a dialogue which says something like, " kanne, naan varuveno matteno, oru mutham vendum.... ". When he says this particular dialogue, he smiles and caresses her !!!

Inspite of mouthing those lengthy dialogues, look at his work conscious, complete understanding & total control over the scene !!!

rangan_08
20th October 2009, 07:01 PM
Dear Pammalar, Welcome to the hub ((லேட்டாக வரவேற்பதற்கு மன்னிக்கவும்). Thanks for your valuable contributions. Especially, your posts about statute unveiling function, including opening of an exclusive website is a real treat to all NT fans. Similarly, opening individual website for each of NT films really seems to be first of its kind. ALL THE VERY BEST to you. And by the way, உங்கள் பெயரைப் பார்த்தவுடன் ரசிகர்களுக்கு சட்டென்று நினைவுக்கு வருவது " சிக்கலார்" தான். And, that made me to ask you, “என்ன பம்மலாரே சொஹமயிருக்கீயளா ?? Please, தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம்.

உங்களைப் போன்ற ஒரு சிவாஜி பக்தரை எங்களுக்கு அறிமுகம் செய்து வைத்த பெருமை எங்கள் முரளி சாரையே சேரும். Thank you Murali Sir.

rangan_08
20th October 2009, 07:03 PM
[tscii:6090294e47]11/10/09 – Sunday afternoon, the function was telecasted in Kalaignar TV. Wow !!! what a grand gala event. (Sorry for posting it so late).

எங்கு பார்த்தாலும் நடிகர் திலகத்தின் புகைப்படங்கள், பேனர்கள், கட்-அவுட்கள் ஆர்ப்பரிக்கும் ரசிகர்கள் என அந்த இடமே விழாக்கோலம் பூண்டிருந்ததைப் பார்க்க உண்மையிலேயே மனதுக்கு மிகவும் நிறைவாக இருந்தது.

Kamal’s speech made it clear, yet again, the kind of bondage he had with NT.

சற்று அதிக நேரம் எடுத்துக் கொண்டாலும், தேவர் மகனில் தனக்கேற்பட்ட அனுபவத்தையும், மற்றும் பல சம்பவங்களையும், சுவைபட தனக்கேயுரிய பாணியில் ரசிக்கும்படி கூறினார் வடிவேலு.

விழாவில் நான் மிகவும் ரசித்த, என்னை ஆச்சர்யப்பட வைத்த விஷயம் அண்ணன் அழகிரியின் சிறப்புரை. To me, it was a pleasant surprise. The way in which he opened up his speech was something like, “நான் இந்தச் சிலையை திறக்கும் போது நீங்கள் என் கண்களைப் பார்த்திருந்தால் உங்களுக்குப் புரிந்திருக்கும் - என் கண்கள் அப்போது கண்ணீர் வடித்துக் கொண்டிருந்தன".

ஏதோ வந்தோம், பிறரிடமிருந்து எழுதி வாங்கிய குறிப்பை மேடையில் பேசினோம் என்றில்லாமல், உண்மையாகவும், மனதில் பட்டதை மிகையில்லாமல இயல்பாகப் பேசி அசத்தி விட்டார். குறவஞ்சி, ராஜா ராணி போன்ற படங்களில் வந்த காட்சிகளைக் குறிப்பிட்டுப் பேசி பிரமிப்பூட்டினார்.

தனது குடும்பத்தில் நடந்த எல்லா திருமணங்களிலும் நடிகர் திலகம் கலந்து கொண்டார், ஆனால் தன்னுடைய திருமணத்திற்கு மட்டும் அவர் வரவில்லையென்றும், அதனால் தான் அவர் மீது கோபம் கொண்டு ஓரிரு முறை அவரைப் பார்த்தும் பார்க்காதது போல சென்று விட்டதாகக் கூறினார். பிறகு அவரே தன்னையழைத்து சமாதானப் படுத்தினார் என்று அந்த சம்பவங்களை அழகாக நினைவு கூர்ந்தார். சிலைக்கு தினமும் மலர் மாலை அணிவிக்கும் பணி தொடர்ந்து தன் பொறுப்பிலேயே நடைபெறும் என்று அறிவித்தார்.

மேடைக்குக் கீழே கரகோஷம் செய்து கொண்டிருக்கும் எண்ணற்ற நடிகர் திலகம் ரசிகர்களுக்கு தான் எந்த வகையிலும் சளைத்தவனல்ல என்பதை தெள்ளத்தெளிவாக உணர்த்தியது திரு அழகிரி அவர்களின் உணர்ச்சிமயமான சிறப்புரை.

தமிழக அரசுக்கும், கலைஞர் தொலைக்காட்சிக்கும் மற்றும் விழாக்குழுவினர் அனைவருக்கும் நடிகர் திலகம் ரசிகர்களின் சார்பாக மனமார்ந்த நன்றிகள் பல.
[/tscii:6090294e47]

groucho070
21st October 2009, 07:11 AM
Sorry for the late wish.

Happy Deepavali to all Hubbers, especially NT fans who have been the reason why I keep logging in in here. Hope you had a great time :D

rangan_08
22nd October 2009, 07:36 PM
[tscii:0d152d5411]There are so many things that happen in our lives for which neither we can demand an explanation nor can we find a tangible reason. At times, even the most intelligent of the person may go crazy and do absurd things and the stupidest of the person will surprise you with a wise crack. Well, that’s quiet natural with us human beings.

Hence, I would say that this is the logic behind “ Anbe Aaruyire “ (bought this VCD a few days ago). Apart from NT, just look at the star cast – Manjula, Nagesh, Surulirajan, VKR, Major, Manorama, Sukumari, Ganthimathi, Thangavelu, Mouli, YGM, V.A.Murthy etc., And, I was able to spot Kishmu also, if I’m right. Music by MSV (Malligai Mullai….the only popular song). And guess, who is the director. He is none other than A.C. Tirulokchander !!! the man who gave us the evergreen Deiva Magan and has got many other hit films like, Enga mama, Babu, Avandhan manidhan etc., to his credit.

There’s not a single scene in the film that’s interesting enough to hold the audience’s attention. First half was a complete mess and I could say that almost the same kind of scene kept on repeating. In the second half, a bunch of artistes are introduced abruptly and even they couldn’t help save the movie from sinking deep down. All this chaos reaches its peak in the climax and the movie finally gets over much to the audience’s relief.

A A is a big disappointment for all NT fans, particularly for those who had expected a hit from the successful NT – ACT combo.
[/tscii:0d152d5411]

RAGHAVENDRA
22nd October 2009, 08:45 PM
DEar RAngan Sir,
I don't want to disappoint your enthusiasm for the movie Anbe Aruyire. So to keep your spirit alive, I would recommend you to view Part 2 of Anbe Aruyire, starring NT, Sripriya, .... music by Maestro Ilaiyaraja, directed by ACT's Sishyar SPM. Guru=Sishya have created a great sequel which even hollywood people can't match .... If you want some name to identify it, then you have it ...
VETRIKKU ORUVAN
thalaiyil adithu kolla ....sorry koLLa..?

RAghavendran

abkhlabhi
23rd October 2009, 12:13 PM
http://media.photobucket.com/image/sivaji/sanandane/SIVAJI03.jpg?o=49

abkhlabhi
23rd October 2009, 12:18 PM
http://media.photobucket.com/image/nadigar%20thilagam/cubepai4u/image007.jpg?o=1

abkhlabhi
23rd October 2009, 01:02 PM
http://www.tamilvanan.com/content/2008/10/06/sivaji-ganesan-chronicle/

Avadi to America
23rd October 2009, 06:06 PM
வசந்த மாளிகை, சரஸ்வதி சபதம், புதிய பறவை ஆகிய படங்களையும் ரஷ்யாவில் திரையிட ஏற்பாடு நடந்துவருகிறது

http://onlysuperstar.com/?p=5086

rangan_08
23rd October 2009, 06:43 PM
DEar RAngan Sir,
I don't want to disappoint your enthusiasm for the movie Anbe Aruyire. So to keep your spirit alive, I would recommend you to view Part 2 of Anbe Aruyire, starring NT, Sripriya, .... music by Maestro Ilaiyaraja, directed by ACT's Sishyar SPM. Guru=Sishya have created a great sequel which even hollywood people can't match .... If you want some name to identify it, then you have it ...
VETRIKKU ORUVAN
thalaiyil adithu kolla ....sorry koLLa..?

RAghavendran

:lol:

Raghavendra Sir, I've also seen VO - in fact Part-II modhalla parthen and then Part I :D

Adhuleyum Major dhan appa & NT's name is also Saravana (you were right calling it Part-II).

Saravana oru vai sapidra...endru Major konjuvar. Meenai mulloda saapidamatten endru NT adam pidippar.... :banghead:

saradhaa_sn
23rd October 2009, 07:38 PM
டியர் ராகவேந்தர் & மோகன்,

'அன்பே ஆருயிரே' பாகம் 1 மற்றும் 2 பற்றி பேசும்போது இன்னொன்றை நினைவுபடுத்த விரும்புகிறேன்.

முத்துராமன், இளையராஜா, பஞ்சு கூட்டணியில் உருவான பாகம் 2ன் பெயர் 'வெற்றிக்கு ஒருவன்' என்று படம் வெளியாக சில நாட்களுக்கு முன்புதான் பெயர் மாற்றப்பட்டது.

அதற்கு முன் அப்படத்துக்கு வைக்கப்பட்டிருந்த பெயர் என்னவென்று உங்களுக்கு தெரியும், இருந்தாலும் நினைவூட்டுகிறேன்.

அதற்கு முதலில் வைக்கப்பட்டிருந்த பெயர் "கண்ணே கண்மனியே" ("அன்பே ஆருயிரே" படத்தின் பாகம் 2 என்று ராகவேந்தர் சொன்னது எவ்வளவு பொருத்தம்...!!!!)

rangan_08
24th October 2009, 12:47 PM
டியர் ராகவேந்தர் & மோகன்,

'அன்பே ஆருயிரே' பாகம் 1 மற்றும் 2 பற்றி பேசும்போது இன்னொன்றை நினைவுபடுத்த விரும்புகிறேன்.

அதற்கு முதலில் வைக்கப்பட்டிருந்த பெயர் "கண்ணே கண்மனியே" ("அன்பே ஆருயிரே" படத்தின் பாகம் 2 என்று ராகவேந்தர் சொன்னது எவ்வளவு பொருத்தம்...!!!!)

Oh! that's real news.

rangan_08
24th October 2009, 01:07 PM
( sorry for my thanglish )

Recently when i was passing by near purasawalkam, i spotter this magazine on a news stand. It had a beautiful still from " Pudhiya Paravai " on the cover page. Immediately i grabbed a copy. It's a fantastic treat for all NT fans. Idhayakkani Cinema Special has come out with a " Sivaji Special " in their October 2009 issue. Price Rs.10/- only.

The magazine is packed with excellent & rare photographs of NT, articles by celebrities & famous personalities and many other interesting informations, particularly about the Madurai silai thirappu vizha.

rangan_08
24th October 2009, 01:30 PM
Exerpts from the magazine...

1. A warm welcome to the Madurai function on behalf of V.N Chidambaram & family (Kamala theatre) with a beautiful snap of NT in the background.

2. " Thalapathiyana Sivaji " - Bharathidasan kavidai
" Edhaicholven " - Kannadasan kavidhai

3. Sivajiyai eppozhudhum vazhthuven - article by Arignar Anna ( தம்பி கருணாநிதியின்vasanathal Sivaji Ganesanin nadippu perumai petradhu engirargal. Vasaname illadha padangalil kooda, (எ-டு " Andha Naal " padam ), Sivaji Ganesan arpudhamaga nadithu paaratu petrirukirar - ther's a photograph of NT with Anna.

4. Naanum Sivajiyum naditha nadagam - by கலைஞர் - photos of NT with kalaignar & NT with Kalaignar & Rama.Arangannal.

5. தமிழர்களின் சாயங்கால சந்தோஷம் by Vairamuthu

6. List of films in which NT had done multiple roles

7. Gunachithira nadigar Sivaji - by Kamarajar

8. En Undan pirava sagodharar annan Sivaji - by V.N. Chidambaram. Again we get to see some rare photographs - one in which NT is having a " விருந்து " at Mr. Chidambaram's residence along with VNC & Umapathy.

9. Sivajiyudan S. Varalakshmi - article about SV (still from Thanga Surangam ) who passed away recently. List of films she acted with NT is given - Edhirparadhadhu, Veerapandia Kattabomman, Chanakya Chandragupta (telugu), Bangaru Babu (telugu), Thanga Surangam, Kandhan karunai, Thaai, Savale samali, Cinema paithiyam, Raja raja Cholan, Tharasu ( 11 films altogether )

10. Stunning photographs in the center page - as Veera Sivaji in a Mumbai TV programme, Vanangamudi, Engal Thanga Raja, Appar, Edhiroli, Vietnam Veedu, Padikkadha Medhai & finally a superb & rare still from an unreleased film where NT, in a " Humphrey Bogart " style is leaning in a wall with a big rain coat, a round hat and with a grin on his face. He also stylishly holds a cigarette. I think we all really missed that film :(

rangan_08
24th October 2009, 01:39 PM
11. தம்பியைப் போற்றும் அண்ணா - article by MGR - stills from Koondukili, MGR greets NT when he returns from America, MGR giving a " மலர்ச்செண்டு " to NT and wishing him on getting the Padmashree. Another still of NT with Gemini, MGR, G.N.Velumani & Bhimsingh.

12. Vaari vazhangum paari vallal Sivaji - article by Kirubananda Variyaar - வட நாட்டில் மரியாதைக்காக பெயரோடு "ஜி " சேர்த்துக்கொள்வார்கள். Sivanodu " ji" serthal Sivaji !! Sivaji Ganesan endral Sivanum Ganesanum !!

Sivaji evvalavo udhavi seidhirukkirar. Avatrayellam pattiyal potu kaanbikkum vazhakkam avarukku kidayadhu. எனக்குக் கூட எவ்வளவோ உதவி செய்திருக்கிறார். Veliyil vilambarapaduthum budhi avarukku kidayadhu.

13. Sivaji oru nadippu payirchi nilayam - article by Seliv Jayalalitha - still from Deiva Magan

14. Sivaji patri prabalangal - brief comments on NT by famous personalities including Jawaharlal Nehru, Dr. Radhakrishnan, Periyar, SS Vasan, B.R. Bhanthulu & K.B. Sundarambal. Stills of NT & Nehru, NT with Periyar (during VKB drama - NT in full costumes)

15. Nadigar Thilagam Sivajiyai iyakkiya iyakkunargalin pattiyal - stills of NT with ACT, with BRB (SSR is also seen in this snap) & NT affectionately hugging Bhimbhai.

16. Photo taken during the VKB statue unveiling function in Kayathar. Kamarajar & Sanjeeva Reddy are present.

The Magazine was a real bonanza.

HARISH2619
24th October 2009, 06:26 PM
[tscii:48d431a0d8]FROM
http://reallogic.org/thenthuli/?p=99

21/07: எந்த நிலையிலும் எனக்கு மரணம் இல்லை- நடிப்பு July 21st, 2005 by பத்மா அர்விந்த் Add Comment
Trackback
Comments Feed
மரணம் இல்லாத சிலரை பற்றி எழுதலாம் என்று தோன்றிய எண்ணம் இன்று காலை விகடனை பார்த்ததும் செயலாகிவிட்டது. அரங்கின்றி வட்டாடுதல் தவறு என்றாலும் ஒரு விருப்பம்தான். பல செய்திகள் அறியாமை காரணமாக விட்டு போயிருக்கலாம். படிப்பவர்களில் இத்துறையில் பலபேர் ஜாம்பவான்கள் என்று தெரிந்தாலும், தைரியமாக இதோ:
இல்லாத மேடை ஒன்றில் எழுதாத நாடகத்தை நாம் எல்லோரும் நடிக்கின்றோம் என்பது உண்மையானாலும் நடிப்பு என்றால் இப்போது பலருக்கு திரைப்படங்கள் மட்டுமே நினைவுக்கு வருகிறது. நாடக கலையும் தெருக்கூத்தும் நசிந்து போகின்ற இந்நாளில் நடிப்பை பற்றி நான் எழுத ஒரு காரணம் இருக்கிறது.
கிட்டதட்ட ஒரு தலைமுறையை தன் வசன உச்சரிப்பாலும் நடிப்பாலும் கவர்ந்திருந்த நடிகன் இறந்த தினம் இன்று.

பள்ளியில் வருடநாள் போது நாடகம, நடனப்போட்டிகள் நடைபெறும். எல்லா போட்டிகளிலும் கலந்து கொள்வது எனக்கு பிரியமான செயல். அதிலும் பலராலும் அறியப்பட்ட வகையில் நான் எழுதி இயக்கிய நாடகங்கள் பலமுறை முதல் பரிசை பெற்றிருக்கின்றன.(ஆலையில்லாத ஊர்)

சில சமய ம் கருணாநிதியின் சில பழைய நாடகங்களையும், சிவாஜியின் திரைப்படங்களின் சில காட்சிகளையும் நடிப்பதுண்டு. அப்படி எனக்கு பரிச்சியமானவர் சிவாஜி. நல்ல தமிழ் உச்சரிப்பும் குரலும் என்னை மிகவும் கவர்ந்திருந்த காலம் உண்டு. பூசாரியை தாக்கினேன் கோவில் கூடாதென்பதற்காக இல்லை பக்தி பகல் வேஷம் ஆகிவிடக்கூடாதென்பதற்காக என்று முழக்கமிட்ட பராசக்தி, மன்னிப்பு கேட்கவேண்டுமா மனோகரன் என்ற மனோகரா, கப்பலோட்டிய தமிழனாக என்று பல கதாபத்திரங்களாகவே மாறி இருந்த அந்த கலைஞனின் தொழில் பக்தி என்னை வியக்க வைத்திருகிறது. கோடியாய் நடிகர்கள் பொருளீட்டாத காலத்தில், விருப்பத்தால் நடிப்பு துறைக்கு வந்தவர்களேஅதிகம்.இந்தியாவின் சிறந்த நடிகருக்கான பாரத் போன்ற பரிசுகள் கிடைக்காவில்லை.

ஆனால் சஞ்சீவ் குமார் உள்ளிட்ட பல வட இந்திய நடிகர்கள் செய்ய விரும்பிய பல கதாபாத்திரங்களை செய்திருகிறார்சிவாஜி என்றாலே பின்னாளில் ஒரு பறவையுடன் அழுது கொண்டே ஒரு சோக பாடலை பாடவேண்டிய நிர்ப்பந்தம் பாலும் பழமும் படத்தில் இருந்து தொடங்கியது. அதையே ஒரு வாய்ப்பாய் எண்ணி டிஎம்ஸ் பாடியதை சில சமயம் ரேடியோவை அணைத்து விட்டால் கூடகேட்கலாம் என்று கேலி பேசுவதுண்டு(பாலூட்டி வளர்த்தகிளி, யாருக்காக, பணம் என்னடா பணம்)
மிகைப்படுத்தப்பட்ட நடிப்பு என்ற சில காட்சிகள் ஒவ்வொரு படத்திலும் இருந்தாலும், உழைப்பை நம்பி உயர்ந்த ஒரு மனிதன் என்ற வகையில் எனது மரியாதைக்குரியவர்களில் ஒருவர்.

வியட்நாம் வீடு நாடகமாகவும், பிறகு திரைப்படமாகவும் பார்த்தேன்.தில்லானா மோகனாம்பாள் விகடனில் படித்த கதைக்கு உயிர் கொடுத்த நடிப்பும், பத்மினியின் நடனமும் இன்னமும் ரசிக்க கூடியவை.ஆனால் கும்பகோணத்தில் தியேட்டருக்கு எதிரே வசித்த போது அன்பைத்தேடி படம் வெளியான அன்று ரோஜாப்பூக்களால் சிவாஜியின் படத்திற்கு ஆராதனை நடந்தது இன்னமும் நினைவில் இருக்கிறது. டயமண்ட் தியேட்டரில் காஞ்சிதலைவன் படம் வெளி வந்து கல்லூரிகள் மூடும் வரை கலாட்டா நடந்ததும் போட்டியாக அன்பைத்தேடி பரபரப்பாக்க பட்டதும் இப்போது சில திரைப்பட வரவேற்பு பற்றி படிக்கும் போது நினைவுக்கு வருகிறது. இன்னமும் தனிமனித வழிபாடு போகவில்லை போலும்.

முதல் மரியாதை, தேவர் மகன் போன்ற சமீப (?) கால படங்களில் இன்னமும் சிவாஜியின் நினைவை விட அந்த கதாபத்திரங்களின் நினைவு வருவதே அவரின் வெற்றி என்பேன்.

திரைப்பட செல்வாக்கை வைத்து அரசியலுக்கு வந்து அனுபவப்பட்டவர்கலில் இன்னமும் சிவாஜியின் பெயரே முதன்மையாக இருக்கிறது.பந்தடிமேடையில் கூட்டத்திற்கு அண்ணன் வருகிறார், வந்து கொண்டே இருக்கிறார் என்று அறிவிப்புக்கள் வருமே தவிர அண்ணன் வர 12 மணி நேரம் தாமதமாகிவிடும். அதற்குமுன் சிலர் எங்கள் அண்ணன் இமயமலை நீ பறங்கிமலை என்று பேசும் வீரதீர பேச்சுக்கள் காதில் விழ, எப்போது இந்த ஒலிபெருக்கி நிறுத்தப்படும் என்று காத்திருப்போம்.

இறந்த பிறகு பலரும் எழுதிய அவரின் தொழில் பக்தி, பணம் கேட்டு தயரிப்பாளார்களிடம் இல்லாதபோது அவர்களை தர்மசங்கடத்தில் ஆழ்த்த கூடாது போன்ற செய்திகள் உண்மையாயின், அது அவரின் குணத்திற்கு கிடைத்த வெற்றி மாலை.

இந்தப் பதிவின் திறத்தை தமிழ்மணம்.காம் தளத்தின் வழியே பிறருக்குச் சொல்லுங்கள் இதுவரை இதன் தரக்கணிப்பு: கணிப்பைச் சுட்ட நட்சத்திரங்களில் சொடுக்கவும்
Comments madekarupy wrote:
நடிப்பின் சிகரம் சிவாஜி கணேசன் என்கின்றார்கள். என்னைப் பொறுத்தவரையில் சிவாஜியின் நடிப்பு என்னை ஒருபோதும் கவர்ந்ததில்லை. ஓவர் ஆக்டிங் என்ற வகைக்குள்தான் அவரது நடிப்பு அடங்குகின்றது. தமது இயல்பான நடிப்பால் என்னைக் கவர்ந்த கடந்த கால நடிகர்கள் என்று நான் ஜெமினி கணேசனையும் எஸ்.எஸ் ஆரையும் தான் கூறுவேன். சிவாஜியின் மிதமான செயற்கை நடிப்பு எனக்குள் உணர்சியை வரவழைக்காமல் சிரிப்பைத்தான் வரவழைத்திருக்கின்றது. இருந்தும் பல தமிழ் மக்களின் நெஞ்சைக் கவர்ந்த நடிகர் அவர் என்பதை ஒத்துக்கொண்டே ஆகவேண்டும்.

reply to this comment
21/07 11:29:31
Padma Arvind wrote:
கருப்பி:
இத்துறையில் இருப்பவர் என்பதாலும் நடிப்பதுடன் நடிகர்களை இயக்குவதாலும் உங்கள் கருத்தை மதிக்கிறேன். சில பாத்திரங்களில் மிக நன்றாக ஒன்றிப்போனதாக தோன்றுகிறது. சில படங்கள் என்னை பொறுத்தவரை மிகவும் செயற்கை. உதாரணம்: பட்டாக்கத்தி பரவன், லாரிடிரைவர் ராஜாகண்ணு போன்றவை…சிவாஜியின் தமிழ் உச்சரிப்பு நான் குறிப்பிட்ட படங்களில் என்னை கவர்ந்த ஒன்று.
ஜெமினிகணேசனின் சில கதாபாத்திரங்கள் பிடிக்கும், பிடிக்காதவையும் உண்டு.

reply to this comment
21/07 11:35:42
ராம்கி wrote:
எங்கெல்லாம் நீங்கள் இருந்தீர்கள்?வைத்தீஸ்வரன் கோவில்,பாண்டி,கும்பகோணம் என்று ஒவ்வொரு பதிவில் இருந்தும் ஒரு செய்தி கிடைக்கிறது.அப்பா பணி நிமித்தம் கிடைத்த மாறுதல்களா? இதனால் படிப்பில் ஏற்பட்ட பாதிப்புக்கள் பற்றி எழுதுங்களேன்.

reply to this comment
21/07 11:59:45
aruL wrote:
உங்களுடைய பல நல்ல பதிவுகளுக்கு பின்னூட்டமிடாமல் இதற்கு மட்டும் எழுதுவது தவறுதான். இருந்தாலும் சிவாஜி என்பதால்…..
சிவாஜியின் நடிப்பு என்பது கொஞ்சம் விரிவான விஷயம். அவருக்கு underplay செய்ய வராமல் அவர் நடியோ நடியென்று நடித்துத் தீர்க்கவில்லை. அவரிடம் மற்றவர்கள் எதிர்பார்த்ததை அவர் கொடுத்தார். அதற்கு மேலும் போற போக்கில் அவர் கொடுத்ததைப் பார்க்க உன்னிப்பாய் கவனிக்க வேண்டும். ஏதாவதொரு பழைய பாடலை (’நான் பேச நினைப்பதெல்லாம்’ போன்ற ‘நடித்த’ பாடல்களை அல்ல ‘சொர்க்கம் பக்கத்தில்’ போன்ற ஜனரஞ்சக கிளாசிக்குகளை ) வீடியோவில் பாருங்கள். watch his body language and fleeting mannerisms that last a microsecond. That will show what he is capable of. As some one said you must know how to act in the first place to overact. எப்பொழுதாவது விரிவாக எழுதுகிறேன்.
அருள்

reply to this comment
21/07 12:05:55
Padma Arvind wrote:
நன்றி அருள். நான் சொன்னபடியே சிவாஜியின் படங்களை உன்னிப்பாக நான் நிறைய பார்க்கவில்லை. என்னை கவர்ந்த சிவாஜி பட பாடல்களில் பிடித்தபாடல்உன்கண்ணில் நீர் வழிந்தால். அதில் நடிப்பும், பாடிய விதமும் நெகிழ்வானவை. அதே போல உத்தமபுத்திரன் படத்தில் போதையின் பிடியில் கண்மணி நிலையாய் நடன காட்சி முழுதும் ஒரு போதை அடிமையை போல இருக்கும்.என்னிடம் சிவஜி பாடல் DVD இருக்கிறது. பார்க்கிறேன். தங்கள் கருத்துக்களுக்கு நன்றி அருள்.

reply to this comment
21/07 12:14:41
Padma Arvind wrote:
ராம்கி: நான் தேரழுந்தூரில் 2 ஆம் படிவம் வரையும், வைத்தீஸ்வரன்கோவிலில் 5 ஆம் படிவம் வரையும் படித்தேன். பிறகு ஆடுதுறை, திருநாகேஸ்வரம் போன்ற இடங்களில் இருந்தாலும், கும்பகோணம் வந்து படித்தேன்.பிறகு கும்பகோணத்தில் தங்ki இருந்தோம். கல்லூரி ஜிப்மரிலும், அதன் பின் AIIMSஇலும் படித்து முடித்து இறுதியாய் NJ.உங்களை குழப்பத்தில் ஆழ்த்தியதற்கு வருந்துகிறேன்.

reply to this comment
21/07 12:17:52
aruL wrote:
சிவாஜி வீட்டிலிருந்து ரெண்டு நிமிஷ நடக்கும் தூரத்தில்தான் இப்போது வசிக்கிறேன். உடனே எழுத ஏரியாக்காரர் என்ற இந்த லோக்கல் அன்பும் காரணம்.
அருள்

reply to this comment
21/07 12:21:47
aruL wrote:
>>
தங்கள் கருத்துக்களுக்கு நன்றி அருள்.
————–
ஐயையோ. ‘தங்கள்’ என்றெல்லாம் எழுதாதீர்கள். பயமாக இருக்கிறது. எல்லோருக்கும் வெறும் ‘அருள்’ தான்.
அருள்

reply to this comment
21/07 12:27:54
Padma Arvind wrote:
அருள்:
பெயரிலேயே அருள் உள்ளவரல்லாவா? நன்றி .

reply to this comment
21/07 13:18:43
chandravathanaa wrote:
பத்மா
இன்றைய நாளுக்குப் பொருத்தமான பதிவு.

சிவாஜியின் நடிப்பு அதீதம் என்றுதான் பலர் அலுத்துக் கொள்கிறார்கள்.
ஆனால் எனது சின்னவயதில் எனக்கு சிவாஜியை நிறையவே பிடித்தது.
நீங்கள் சொன்னது போல அந்த உன் கண்ணில் நீர் வழிந்தால் பாடலை
அலுக்காமல் சலிக்காமல் திரும்பத் திரும்பப் பார்க்கலாம். அதில் பத்மினியின்
நடிப்பும் அருமை.இதே போல நலந்தானா நலந்தானா உடலும் உள்ளமும்…
தில்லானா மோகனாம்பாள் பாடலும் குறிப்பிடத் தக்கது.

reply to this comment
21/07 13:53:20
மயிலாடுதுறை சி wrote:
பத்மா,
நடிப்பு உலக மேதையை நினைவு கூர்ந்ததிற்கு மனதார பாராட்டுகள்.
கறுப்பி சொன்னதில் சில உடன் பாடு உண்டு என்றாலும், மக்கள் மனதில் இன்றும் வீர பாண்டிய கட்ட பொம்மனாக, கப்பல் ஓட்டிய தமிழனாக, சத்ரபதி சிவாஜியாக, அப்பராக, மாணிக்க வாசகராக, திருப்பூர் குமரனாக, இப்படி பல பாத்திரங்களில் குடிகொண்டவர் நடிப்பு திலகம் சிவாஜி அவர்கள். இறந்து போனது சிவாஜி மட்டும் அல்ல, மேற்சொன்ன காதபாத்திரங்களும் தான்.

பத்மா, நம்மவூர் பக்கம்தான், நான் பிறந்து வளர்ந்து படித்து எல்லாமே மயிலாடுதுறையில்தான், தற்பொழுது வாசிங்டன்னில். இந்த பக்கம் வந்தால் சொல்லுங்கள். வைத்திஸ்வரன் கோவில் பற்றி, ஆடுதுறை பற்றி, தேரந்தழுர் கம்பன் பற்றி நிறைய பேசலாம்…

நன்றி
மயிலாடுதுறை சிவா…

reply to this comment
21/07 13:58:28
kk wrote:
Thiruvilayadal sivaji

marakka mudiyuma…..
I will call it his masterpiece.

reply to this comment
21/07 16:07:32
வாசன் wrote:
மணமகன் தேவை, மரகதம்,தூக்குத்தூக்கி போன்ற படங்களில் அதீத நடிப்பு இல்லாமல் அட்டகாசமாக செய்திருக்கிறாரே சிவாஜி. இயக்குநர்களில் திறன் அல்லது திறன் இன்மையைப் பொறுத்து அவருடைய நடிப்பு அமைந்திருக்கலாம்.

reply to this comment
21/07 20:38:51
ராம்கி wrote:
நன்றி பத்மா..

reply to this comment
21/07 21:33:16
அல்வாசிட்டி.வி wrote:
//கறுப்பி: நடிப்பின் சிகரம் சிவாஜி கணேசன் என்கின்றார்கள். என்னைப் பொறுத்தவரையில் சிவாஜியின் நடிப்பு என்னை ஒருபோதும் கவர்ந்ததில்லை. //

மிகை நடிப்பு என்பது எல்லாருக்கும் கை கூடுவதில்லையே. சிவாஜி கணேசன் மேடை நாடகங்களிலிருந்து சினிமாவுக்கு வந்தவர். சிவாஜியின் சுயசரிதை நூலகத்தில் பார்த்தேன் படிக்க நேரமில்லை. மேலாக புரட்டியதில் இந்த மிகைநடிப்பை பற்றி அவரே பேசியிருந்ததாக ஞாபகம். மிகைநடிப்பு பற்றி சிவாஜியின் சமகாலத்து நடிகர் ‘ஜெமினி’கணேசன் ஒரு டிவி பேட்டியில் ஒரு கருத்தை சொல்லும் போது ‘மிகைநடிப்பு’ என்பதை ரசிக்கவும் தொடங்கினேன். நான் எழுதிய பதிவின் ஒரு பாகம் இங்கே.

மிகையான நடிப்பு தேவையா என்ற கேள்விக்கு….

டிராமா ஆர்டிஸ்ட் எல்லாம் கொஞ்சம் மிக நடிப்பை செய்ய வேண்டிய அவசியத்தை பகிர்ந்துக் கொண்டார். நாடகம் போடும் போது கடைசியில் உட்கார்ந்திருப்பவனுக்கும் கேட்கும் படி கத்தி தான் பேச வேண்டும். அப்போது நடிப்பு என்பது அவற்றில் கொஞ்சம் மிகைப்பட்டு தான் போகிறது. அதுவே சினிமாவென்று வரும் போது டிராமா ஆர்டிஸ்ட்களால் பழக்கத்தை விட முடியாமல் மிகை நடிப்பு வந்துவிடுகிறது. சில இடங்களில் ஒவர் ஆக்டிங்(மிகைநடிப்பு) தேவை என்பதை ஜெமினி பகிர்ந்துக் கொண்டார்.”

இந்த பதிவை விரிவாக படிக்க இங்கே சொடுக்கவும்.

reply to this comment
21/07 21:43:48
அல்வாசிட்டி.வி wrote:
நேரம் கிடைக்கும் போது சிவாஜி சொல்ல இன்னொருவர் எழுதிய சிவாஜிகணேசனின் ‘சுயசரிதை’ புத்தகத்தை படித்து ஒரு பதிவு போடுகிறேன்.

ஞாபகப்படுத்தியதற்கு நன்றி பத்மா.

reply to this comment
21/07 21:46:05
ஜோ wrote:
நடிப்புலக மாமேதை பற்றிய பதிவுக்கு நன்றி..

விரிவாக எழுத விருப்பம் ..நேரமின்மையால் பின்பு எழுதுகிறேன்.

ஆயிரம் காரணம் சொல்லி சிலர் அவரை குறை சொன்னாலும் ,மிகை நடிப்பு ,குறை நடிப்பு ,இயல்பு நடிப்பு மற்றும் எல்லா நடிப்பு வகைகளிலும் அவர் தான் KING .

சிவாஜி தமிழர்களின் பெருமை!

reply to this comment
21/07 22:35:15
அல்வாசிட்டி.வி wrote:
ஆஹா…ஜோ!! சிவாஜி பற்றிய பதிவை தமிழ்மணத்தில் பார்த்த உடன் உங்களை தான் நான் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்தேன். நீங்க பதிவு எழுத சிவாஜி சுயசரிதை புத்தகம் வேண்டுமென்றால் எஸ்பிளனாட் நூலகத்தில் கிடைக்கிறது. படிங்க ரொம்ப இண்ட்ரஸ்டிங்கா இருக்கு.

reply to this comment
21/07 22:39:03
ஜோ wrote:
//ஓவர் ஆக்டிங் என்ற வகைக்குள்தான் அவரது நடிப்பு அடங்குகின்றது.//

தேவர் மகன் ,முதல் மரியாதை கூட ஓவர் ஆக்டிங்கா?
உங்கள் பார்வையில் உணர்ச்சியே இல்லாமல் முகத்தை மட்டையாக வைத்துக்கொண்டு ,கையை அசைக்காமல் அல்லது ஒரே நிலையில் வைத்துக்கொண்டு வசனம் பேசுவது (ஜெமினி போல) தான் இயல்யு ஆக்டிங்கோ?

reply to this comment
21/07 22:44:05
ஜோ wrote:
விஜய்,
நான் ஏற்கனவே அந்த புத்தகத்தை சொந்தமாகவே வாங்கி விட்டேன்.நன்றி!

reply to this comment
21/07 22:46:09
அல்வாசிட்டி.வி wrote:
//விஜய்,
நான் ஏற்கனவே அந்த புத்தகத்தை சொந்தமாகவே வாங்கி விட்டேன்.நன்றி!
//

அதானே

reply to this comment
21/07 22:49:17
கருப்பு wrote:
சிவாஜியின் கண்களும் காவியம் சொல்லுமே… இந்த நூற்றாண்டின் அற்புத நடிகன்.

reply to this comment
22/07 05:14:48
avatharam wrote:
//நேரம் கிடைக்கும் போது சிவாஜி சொல்ல இன்னொருவர் எழுதிய சிவாஜிகணேசனின் ‘சுயசரிதை’ புத்தகத்தை படித்து ஒரு பதிவு போடுகிறேன்//

அல்வா சிட்டி இன்னும் நேரம் கிடைக்கலியா?




பொது

One Response
yuvaraj writes: November 24th, 2008 at 10:59 am
sivaji sir is evergreen acting sun & moon too. all other stars are rounds him. i don’t have any wods to prise sivaji sir. no one can ……………………….. him


[/tscii:48d431a0d8]

SEE THE RESPONSES...... IT'S AMAZING

HARISH2619
24th October 2009, 06:33 PM
SIVAJI MAULANA-AN ACTOR AND A SIVAJI FAN IN SRILANKA
READ THIS INTERESTING ARTICLE

http://www.thinakaran.lk/vaaramanjari/2009/10/04/?fn=f09100411&p=1

HARISH2619
24th October 2009, 06:38 PM
>> Fullstory







இமயம்

AvYj

ஐந்தடி உயரமே உள்ளவர். இந்த உயரக் குறைவை அவரைத் திரையில் கண்ட எவரும் உணரவில்லை. மாறாக ஒவ்வொரு படத்திலும் அவர் விஸ்வரூபம் எடுத்ததைத்தான் பார்த்திருக்கிறார்கள். கப்பலோட்டிய தமிழனில் யாருமே சிவாஜியைக் காணவில்லை; சிதம்பரம் பிள்ளையைத்தான் கண்டார்கள். கட்டபொம்மன் என்கிற குறுநில மன்னன் - வெள்ளையரை எதிர்த்தவன் - விடுதலைச் சரித்திரத்தின் சின்னமாக உருவானது, சிவாஜியால்தான். பாச மலரின் ராஜ சேகரன், அன்றைய முதலாளிகளுக்கு ஆதர்சம். வியட்நாம் வீடு நாடகத்தைப் பார்த்த ஜெமினி வாசன், கதறிக் கதறி அழுதாராம். அவர், இளமையும், அன்னையும், அவர் வாழ்க்கையில் முன்னுக்கு வரபட்ட சிரமங்களும் நாடகத்தின் ஊடே அவர் எண்ணத்திரையில் நிழலாடிக்கொண்டே இருந்திருக்கின்றன.

நாடக உலகின் பிதாமகர் டி.கே.ஷண்முகம், ஒளவையாராக நடித்துப் பெரும் புகழ் பெற்றவர்; கிழவியின் தோற்றம் வேண்டுமென்பதற்காக முன்னிரு பற்களைப் பிடுங்கிக் கொண்டவர் - ஒளவையாராய்க் கூன் போட்டுக் கூன் போட்டு கூன் அவரிடம் நிரந்தரமாகத் தங்கிவிட்டது. அவர் ஒரு நாடகம் பார்த்த பொழுது ராம பிரானின் அன்னையாக நடித்த நடிகையின் உணர்ச்சிகரமான நடிப்பில் மனத்தைப் பறி கொடுத்திருக்கிறார். நாடகம் முடிந்த பின் "யார் அந்த நடிகர்?' என்று கேட்டாராம். ""அவரைத் தெரியாதா? அவர் தான் வி.சி.கணேசன்'' என்று சொன்னார்களாம். அவர் தாம் நம்முடைய நடிகர் திலகம், சிவாஜி கணேசன்.

ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனியிலிருந்து வந்தவர்; சிறுவயதிலிருந்தே நாடகத்தில் பல்வேறு முகங்களையும் துறைகளையும் அநுபவ வாயிலாகக் கண்டவர்; மு.கருணாநிதி என்கிற காட்டாற்று வெள்ளம் வசனம் எழுதிய பராசக்தியின் கதாநாயகனாக அவர் ஆனது, விதி வசத்தால் என்று சொல்வதை விட, தமிழ்நாட்டின் அதிருஷ்டத்தால் என்றுதான் சொல்ல வேண்டும். "தென்றலைத் தீண்டியதில்லை தீயைத் தாண்டியிருக்கிறேன்'; "ஓடினாள் ஓடினாள் வாழ்க்கையின் ஓரத்துக்கே ஓடினாள்'; "அம்பாள் எப்போதடா பேசினாள் அறிவு கெட்டவனே' போன்ற நெருப்புப் பொறிகளைப் பொத்தி வைத்திருந்து கக்கியவர், சிவாஜி கணேசன். தமிழ்த் திரைப்பட உலகில் அன்றிலிருந்து ஒரு புது சகாப்தம் தொடங்கியது. குரலின் ஏற்ற இறக்கங்கள், உணர்ச்சியின் பாவத்தைப் பாதிக்காது இருக்க முடியும் என்று தமிழ் உலகிற்கு முதலில் மெய்ப்பித்தவர், சிவாஜி.

ஆரம்பத்தில் மிகை தவிர்த்த உணர்ச்சி வெளிப்பாடு அழுத்தமான வசனங்களின் உணர்வுத் ததும்பல்களை அடக்காமல் பார்த்துக்கொண்டது, அவரின் சாமர்த்தியம் என்றுதான் சொல்லவேண்டும்.

அவருடைய நடிப்பின் பிரிணாம வளர்ச்சியை மூன்று பிரிவாக நாம் பார்க்கலாம். முதலில் மிகை தவிர்த்த உணர்ச்சியுடன் கூடிய மிகை வசனங்கள், நடுவில் சற்றேமிகை கூடிய வசனங்கள் குறைந்த உணர்ச்சிகர நடிப்பு, பின்னால் மிகையும் உச்சரிப்பில் ஏற்றத்தாழ்வும் கூடிய உரத்த நடிப்பு. இந்தப் பரிணாம வளர்ச்சியைத் தமிழ்மக்கள் உன்னிப்பாகக் கவனித்து வந்த போதிலும் ஒவ்வொரு கட்டத்திலும் அவரின் ஆளுமைத் திறனை உண்மையாக ரசித்துப் பாராட்டினார்கள்.

இந்த நடிப்பு வளர்ச்சியில் நாம் சிவாஜியின் நடிப்பின் உச்சமாகப் பார்ப்பது நடுவில் வந்த காலக்கட்டத்தைத்தான். அப்போதுதான் சிவாஜி என்கிற குணச்சித்திர நடிகர், படிப்படியாக வளர்ச்சி பெற்று, தனக்கென்று ஓர் ஆளுமையையும் தனித்தன்மையையும் கொண்டு வலம் வரத் தொடங்கினார். கிட்டத்தட்ட ஒரு முரட்டுக் குதிரை போல் இருந்த இவரை ஒரு வட்டம் போட்டு அந்த வட்டத்தை மிகாமல், வெளிவராமல் திறமையை வெளிப்படுத்திய இயக்குநர் ஒருவர் இருந்தார். அவர்தான், பீம்சிங். இவர் கதை சொல்லும் பாணியே தனி. கதாபாத்திரங்களைப் பழங்காலக் கலைப் பொருட்களாக உலா விடுவது இவரின் பிரத்யேக பாணி. இந்தியக் கலாசாரத்தின் மரபு சார்ந்த படிமானங்கள் அழுத்தமாய்ப் படிந்திருந்த பீம்சிங், அதையொட்டியே திரைப்படங்கள் எடுத்தார். பாசமலர், பாகப் பிரிவினை, படித்தால் மட்டும் போதுமா, பார்த்தால் பசி தீரும் போன்ற அழுத்தமான திரைக் கதைகளில் இயல்பாக ஒன்றிப் பொருந்தினார், சிவாஜி கணேசன்.

ஒவ்வொரு படத்திலும் ஒவ்வொரு விதமான கதாபாத்திரம் - எல்லாமே சிவாஜிக்கு வடிவமைக்கப்பட்டது மாதிரி. படிக்காத மேதையில் விசுவாசமான வேலைக்காரன்; எஸ்.வி.ரங்காராவின் குணச்சித்திர மிகை தவிர்த்த நடிப்புக்கு ஈடு கொடுத்து நடித்திருந்தார் சிவாஜிகணேசன். அவரின் உணர்ச்சி பூர்மான நடிப்பில் மிகை இழையைச் சற்றும் வெளிக்காட்டாத சாதுர்யமான திரைக்கதை அமைப்பின் சாமர்த்தியம், பீம்சிங்கிற்கு உரியது. இசை சேகரத்தின் அந்நாள் மன்னர்கள் விஸ்வநாதன்-ராமமூர்த்தி, தத்துவ தரிசனம் கண்ட பாடலாசிரியர் கண்ணதாசன் போன்றவர்கள் இந்தப் படங்களுக்கு மெருகு கூட்டி, திரைப்படங்களைக் காவிய அந்தஸ்துக்கு உயர்த்தினார்கள்.

பாசமலரில் முரட்டுப் பாசம் காட்டும் அண்ணன் வேடம் சிவாஜிக்கு. அடர்த்தியான புருவங்கள், மெல்லிய மீசை, தங்கச் சங்கிலி கடிகாரம், சூட்டுடன் ராஜநடை நடந்த சிவாஜியின் நடிப்பில் மனத்தைப் பறிகொடுத்தது தமிழ்ச் சமூகம். ராஜா போல் வாழ்ந்த மனிதன், தங்கைக்காகச் சகலத்தையும் தியாகம் செய்துவிட்டுக் கடைசியில் பிச்சைக்காரன் போல் கண்களையும் இழந்து "கை வீசம்மா கைவீசு, கடைக்குப் போகலாம் கை வீசு' என்று அழும்போது பார்த்த மக்கள் அவ்வளவு பேரும் சேர்ந்து அழுதார்கள்.

தூக்குத் தூக்கியிலிருந்தும், கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரியிலிருந்தும் சிவாஜி என்கிற குணச்சித்திர நடிகர் தனித்த ஆளுமையுடன் பரிணமித்தது - பரிமளித்தது இப்படித்தான். கம்பீரமானவன், முரட்டுத் தனமாக அன்பு செலுத்துபவன், பாசத்துக்காக உயிரைத் தியாகம் செய்யும் உன்னத ஆதர்ச மனிதன், தமிழ் மண்ணில் வலம் வந்தது இப்படித்தான். இவனுக்குத் தெரிந்ததெல்லாம் அன்பு செலுத்துவதும் அன்புக்காக ஏங்குவதும். இப்படி ஒரு காலத்தின் பரிசோதனையைக் கடந்த திரைப்பட ஃபார்முலாவை முதன் முதலில் வெற்றிகரமாகப் பரிசோதித்தவர், சிவாஜிகணேசன்.

படித்தால் மட்டும் போதுமா, எதையும் வெளிப்படையாகச் செய்யும் ஓர் ஆளுமை நிறைந்த மனிதனுக்கும் (உஷ்ற்ழ்ர்ஸ்ங்ய்ற்) எல்லாவற்றையும் ரகசியமாகப் பூட்டி வைக்கும் (ஐய்ற்ழ்ர்ஸ்ங்ழ்ற்) மனிதனுக்கும் இடையில் நிகழும் போராட்டத்தைச் சித்திரிக்கும் படம், இது.

பீம்சிங்கின் பா வரிசையை அடுத்து வந்த படங்கள் எல்லாமே சிவாஜியின் ஆளுமை சார்ந்த மிகை நடிப்பை வெளிக்கொணருவதிலேயே குறியாய் இருந்தன.

உடல் பருமன் சற்றிளைத்த சிவாஜி, முரட்டு நல்லவன் இமேஜிலிருந்து நல்லவன் இமேஜிற்கு வளர்ந்திருந்த சமயம். பந்துலுவின் கர்ணனையும் பி.எஸ்.வீரப்பாவின் ஆலய மணியையும் கூட இதில் சேர்க்க முடியாது. கே.எஸ்.கோபாலகிருஷ்ணனின் கை கொடுத்த தெய்வத்தை ஓரளவு சேர்க்கலாம். பின்னர் வந்த ஸ்ரீதரின் படங்கள், எங்க மாமா, தங்கைக்காக போன்ற படங்கள் எல்லாமே சிவாஜியின் நடிப்பை நம்பியல்லாது இமேஜை நம்பி உருவாக்கப்பட்ட படங்கள். இவற்றில் அன்றிருந்த சந்தை எதிர்பார்ப்பிற்கு ஏற்ப நடித்திருந்தார் சிவாஜி என்று சொல்லலாமே ஒழிய அந்தந்தக் கதாபாத்திரங்களில் அவர் முழுமனதோடு ஈடுபாட்டோடு நடித்திருந்தாரா என்பது கேள்விக் குறியே. தெய்வ மகன், ஆஸ்காருக்குச் சென்றது. ஒரே நடிகர் மூன்று வெவ்வேறு பாத்திரங்களில் நடித்திருந்தது குறித்துத்தான் அப்போது பரபரப்பாகப் பேசப் பட்டதேயொழிய நடிப்பு, குறிப்பாக மூத்த மகன் கதாபாத்திரத்தின் நடிப்பு, வெகுவாகச் சிலாகிக்கப்படவில்லை.

இதுதான் சிவாஜியின் தோல்வியின் ஆரம்பம் என்று சொல்லலாம். குணச்சித்திரம் மாறி ஆளுமையும் நடிப்பும் என்று ஆகிக் கடைசியில் ஆளுமை மட்டுமே கோலோச்சியது தான், சிவாஜியின் நடிப்பை விரும்பிப் பார்த்தவர்களை அபிமானத்தால் சகித்துக்கொள்ள வேண்டிய நிலைக்குத் தள்ளியது. இதற்கு ஏற்கெனவே கூறியிருந்தபடி சிவாஜியைச் சுற்றிப் பின்னப்பட்ட மாய இமேஜ் வலைதான் காரணம் என்று நாம் பெருமூச்சு விட வேண்டியிருக்கிறது.

இந்த மிகை ஆளுமையின் நடுவிலும் அவ்வப்போது சில நட்சத்திரச் சிதறல்களை அள்ளி வீசாமல் இல்லை. ராமன் எத்தனை ராமனடியில் வீரசிவாஜியாக வசனம்பேசி விட்டுக் கடைசியில் வாளைக் கையில் ஏந்தி ஒரு நடை நடப்பார். சாம்ராஜ்யக் கனவைக் கண்களில் ஏந்திக் கனவில் மிதப்பது போன்ற நடை. உண்மையில் வீரசிவாஜி அதுபோல்தான் நடந்திருப்பார். வியட்நாம் வீட்டின் பிரஸ்டிஜ் பத்மநாபன் வேடத்திற்காக சிம்ஸன் நாராயண சாமி ஐயரைப்போய் சிவாஜி உன்னிப்பாகக் கவனித்தார் என்று சொல்கிறார்கள். அவர் காட்டிய முகபாவங்களும் நடையுடை பாவனைகளும் பேசிய வசனங்களும் ஓர் உண்மையான பிராமண கனவானைக் கண்களில் கொண்டு நிறுத்தியது. கௌரவத்தின் அநாசார வக்கீல்-சத்தத்தையும் மீறி அவரின் கம்பீர நடிப்பு, நம் உள்ளத்தில் நிற்கிறது. திருநாவுக்கரசராகத் திருவருட்செல்வரில் நாம் கண்டது ஒரு முதிய தவயோகியின் அருள் கனிந்த முகத்தை. தங்கப் பதக்கத்தில் நேர்மையும் கம்பீரமும் கண்டிப்பும் மிக்க போலீஸ் அதிகாரியைக் கண்டோம். அதில் பதக்கம் வாங்கக் கடைசியில் அவர் நடக்கும் நடை, உண்மையான போலீஸ் அதிகாரியைக் கூடப் பொருமைகொள்ளச் செய்யும்.

சிவாஜி மறைந்துவிட்டார். குழந்தை போன்றவர். உண்மையான தேசியவாதி.

படிப்பு அதிகமில்லாத, உருவ லட்சணங் களும் சுமாராக உள்ள ஒரு மனிதர், தம் நடிப்புத் திறமையை மட்டும் வைத்து நம்மையெல்லாம் நாற்பது ஆண்டுகளுக்குக் கட்டிப் போட்டிருந்தார்.

நாடகக் கலை மிகுதியும் வளராத தமிழ்ச் சூழலில் சினிமா, நாடகத்தைக் கபளீகரம் செய்திருந்த நிலையில், ஓர் உண்மையான நாடகக் கலைஞன், ஒப்பாரும் மிக்காரும் இல்லாமல் கோலோச்சியது ஆச்சர்யம் தான்

அவரை அபிமானிகள், "இமயம்' என்கிறார்கள். என்ன தவறு?




FROM
http://sify.com/news_info/tamil/amudhasurabi/august04/fullstory.php?id=13533626

pammalar
25th October 2009, 05:53 PM
தேவி வார இதழில், "பொன் விழாக் கமல்" என்கின்ற தலைப்பில், நடிகர் கமலஹாசனைப் பற்றிய தொடர் கட்டுரை , அதன் தீபாவளி இதழிலிருந்து வருகிறது. இதனை எழுதுபவர் திரு. குகன். லேட்டஸ்ட் (28.10.2009) இதழில் வெளிவந்துள்ள கட்டுரையிலிருந்து சில வரிகள் :

"குழந்தை நட்சத்திரமாக 'பார்த்தால் பசி தீரும்' படத்தில் சிவாஜியுடன் இணைந்தது, மாபெரும் கெளரவத்தையும், அந்தஸ்தையும் கமலுக்குக் கொடுத்தது. காரணம் கமலுக்கு அதில் இரட்டை வேடம்! அதுவும் நடிப்புலக மாமேதையுடன்!

முதன்முதலில் இரட்டை வேடத்தில் நடித்த குழந்தை நட்சத்திரம் என்ற பெருமைக்கு சொந்தக்காரர் கமல் தான். நம் சிற்றறிவுக்கு எட்டிய வரை உலக சினிமாவிலேயே அதற்கு முன்பு எந்தக் குழந்தை நட்சத்திரமும் இரட்டை வேடத்தில் நடித்ததில்லை. (பின்னாளில் தமிழிலேயே குட்டி பத்மினி 'குழந்தையும் தெய்வமும்' படத்தில் இரட்டை வேடத்தில் நடித்தார்).

கமல் தன் வாழ்நாளில் அடிக்கடி நினைத்துச் சிலிர்த்துப் பேசிய ஒரு சம்பவமும் , 'பார்த்தால் பசி தீரும்' படத்தில் நடந்தது. 'பிள்ளைக்குத் தந்தை ஒருவன்...' என்ற பாடல் காட்சி முழுவதும், கமல் நடிகர் திலகத்தின் கைகளில் தவழ்ந்து , மார்பில் படர்ந்து , தோள் பட்டையைப் பிடித்துத் தொங்கியபடி நடித்திருப்பார். இல்லையில்லை, தனது நடிப்பு ஆசானின் முகத்தைக் கவனித்தபடியே இருப்பார்.

இப்போதும் அந்தப் பாடலைப் பாருங்கள் !

குழந்தை நட்சத்திரமாக இருந்த போதே நல்ல நடிகனாக இருந்த கமல், அந்தக் காட்சியில் , முகபாவனைகள் காட்டுவதையே மறந்து , சிவாஜியின் கன்னங்களின் நாட்டியத்தை , அந்தக் கண்கள் பேசும் மொழிகளை , அந்த உதடுகள் பாடல் வரிகளை உழுது விதைக்கும் அழகை , அண்ணாந்து பார்த்து மெய்மறந்து ரசித்தபடி சும்மாவே படுத்திருப்பார்.

நடிப்பில் இன்றும் கமல் அண்ணாந்து பார்த்துக் கொண்டிருக்கும் ஒரே நடிகர் , சிவாஜி கணேசன் தானே !"

சாதனைகளின் சக்கரவர்த்தியாகிய நடிகர் திலகம் , ஒரு திரைவானம். சாதனையாளர் கமல் போன்ற திரைச்சிகரங்கள் , அந்தத் திரைவானத்தை அண்ணாந்து பார்த்துத் தானே ஆக வேண்டும்.

அன்புடன்,
பம்மலார்.

HARISH2619
26th October 2009, 07:25 PM
[tscii:b5e7eddd8b]http://www.cinemaexpress.com/cinemaexpress/story.aspx?Title=%C3%A0%C2%AE%EE%82%89%C3%A0%C2%AE %C2%B3%C3%A0%C2%AF%EE%82%8D%C3%A0%C2%AE%C2%B3%C3%A 0%C2%AE%C2%A4%C3%A0%C2%AF%EE%82%88%C3%A0%C2%AE%EE% 82%9A%C3%A0%C2%AF%EE%82%8D+%C3%A0%C2%AE%EE%82%9A%C 3%A0%C2%AF%EE%82%8A%C3%A0%C2%AE%C2%B2%C3%A0%C2%AF% EE%82%8D%C3%A0%C2%AE%EE%82%95%C3%A0%C2%AE%C2%BF%C3 %A0%C2%AE%C2%B1%C3%A0%C2%AF%EE%82%87%C3%A0%C2%AE%C 2%A9%C3%A0%C2%AF%EE%82%8D+%C3%A0%C2%AE%C2%AE%C3%A0 %C2%AE%EE%82%95%C3%A0%C2%AE%C2%BE+%C3%A0%C2%AE%EE% 82%95%C3%A0%C2%AE%C2%B2%C3%A0%C2%AF%EE%82%88%C3%A0 %C2%AE%EE%82%9E%C3%A0%C2%AE%C2%A9%C3%A0%C2%AF%EE%8 2%8D!&artid=107175&SectionID=128&MainSectionID=128&SectionName=News&SEO=



உள்ளதைச் சொல்கிறேன் மகா கலைஞன்!
1974-ஆம் ஆண்டு சிவாஜி நடித்து வெளிவந்த படங்களில் சினிமா ரசிகர்கள் எளிதில் மறக்க முடியாத படம் "தங்கப் பதக்கம்'. "வீரபாண்டிய கட்டபொம்மன்', "கப்பலோட்டிய தமிழன்' வ.உ.சி. ஆகியோருடைய பெயரைச் சொன்னவுடன் எப்படி எல்லோர் மனதிலும் அந்த வேடங்களை ஏற்ற நடிகர் திலகத்தின் தோற்றம் நிழலாடுகிறதோ, அதைப் போன்று கண்ணியமிக்க காவல்துறை அதிகாரி என்றவுடன் எல்லோர் மனதிலும் தோன்றக் கூடிய பெயர் எஸ்.பி.செüத்ரிதான். நடை, உடை, தோற்றம், பார்வை என்று எல்லா வகையிலும் "தங்கப் பதக்கம்' செüத்ரிக்கு உயிர் கொடுத்தவர் சிவாஜி.


"தங்கப் பதக்கம்' நாடகம் முதலில் நாடகமாக நடிக்கப்பட்டு பின்னர் திரைப்படமாக உருவாக்கப்பட்டது. முதலில் "தங்கப் பதக்கம்' நாடகத்தில் கதாநாயகனாக நடித்தவர் செந்தாமரை.


அப்போது அந்த நாடகத்தின் பெயர் "தங்கப் பதக்கம்' அல்ல; "இரண்டில் ஒன்று'. செந்தாமரையின் 42-வது நாடக நிகழ்ச்சியின்போது நாடகம் பார்க்க நடிகர் திலகம் வந்தார். நாடகத்தைப் பாராட்டி ரசிகர்கள் கைதட்டி உற்சாகப்படுத்துவதை உன்னிப்பாக பார்த்தார்.


நாடகம் முடிந்ததும் மேடைக்கு வந்த சிவாஜி அந்நாடகத்தின் இயக்குனரான எஸ்.ஏ.கண்ணனையும், செந்தாமரையையும் அழைத்து, ""நாளைக்கு எங்கே நாடகம்?'' என்று கேட்டார். அவர்கள் கூறினார்கள். நாடகத்தை நாளையோட நிறுத்திக்கங்க. இந்த நாடகத்தை நம்ம சிவாஜி நாடக மன்றம் போடட்டும். எஸ்.பி.செüத்ரியாக நானே நடிக்கிறேன்'' என்றார். எஸ்.ஏ.கண்ணன், செந்தாமரை ஆகிய இருவருமே சிவாஜி நடத்தி வந்த சிவாஜி நாடக மன்றத்தில் பணியாற்றியவர்கள்.


அந்த நாடக மன்றம் கலைக்கப்பட்டதால்தான் தனியாக நாடகக் குழு ஆரம்பிக்கும் எண்ணமே அவர்களுக்கு ஏற்பட்டது. ஆகவே சிவாஜியே தனது நாடகக் குழுவின் சார்பில் அந்த நாடகத்தை நடத்துவதாகச் சொன்னதும் இருவருமே மகிழ்ச்சியோடு ஒப்புக் கொண்டனர். "இரண்டில் ஒன்று' "தங்கப் பதக்கம்' என்று பெயர் மாறியது.


அடுத்து மூன்று நாட்கள் படப்பிடிப்பு முடிந்து வந்த பிறகு நாடக வசனங்களை படிக்கச் சொல்லி கண்மூடி கேட்டார் சிவாஜி. நான்காம் நாள் மேடையில் பிரதான ஒத்திகை. ஐந்தாம் நாள் "தங்கப் பதக்கம்' நாடகம் தலைவர் காமராஜர் தலைமையில் மியூசிக் அகாடமியில் அரங்கேற்றம் கண்டது. அந்த தினத்தை "சினிமாவும் நானும்' என்ற தனது நூலில் கதாசிரியர் மகேந்திரன் மிகவும் ரசனையோடு வர்ணித்துள்ளார்.


""அரங்கேற்ற தினத்தன்று ஒப்பனை அறையில் சிவாஜியை எட்டிப் பார்த்தேன். ஒப்பனை நடந்து கொண்டிருந்தது. கொஞ்சம் கொஞ்சமாக அவரது உடம்பு "எஃகு' போல் நிமிருகிறது. மூன்று நாள்தானே வசனம் படிக்கச் சொல்லி கேட்டார். எதையும் மறக்காமல் எப்படி வசனம் பேசுவார்? என்ற மாதிரியான கேள்விகள் எனக்குள் இருந்தது. மணி அடித்துவிட்டது. நாடகம் தொடங்கியது. நான் எழுதிய ஒரு வசனத்தைக் கூட அவர் மறக்கவில்லை. எனக்குள் பிரமிப்பு! எப்படி இது சாத்தியம்? நாடகம் முடியும்வரை கைத்தட்டல் ஓயவில்லை.


நாடகம் முடிந்து ஒப்பனை அறைக்குள் போனேன். ஒப்பனை கலைத்து விட்டு களைப்போடு உட்கார்ந்திருந்தார் நடிகர் திலகம். நாடகம் முழுக்க அவர் காட்டிய கம்பீரத்திற்கும், ஓப்பற்ற நடிப்பிற்கும் அவர் தனது உடல் சக்தி அத்தனையையும் தந்து விட்டு இப்போது ஒப்பனை கலைந்ததும் செüத்ரியாக வாழ்ந்து நடித்தவர் தனது இயல்பு நிலைக்குத் திரும்பி அவர் அவராகி விட்டார் என்று தெரிந்தது. என்னைப் பார்த்ததும், ""என்னப்பா உன் டயலாக்கை எல்லாம் ஒழுங்காக பேசினேனா?'' என்று ஒரு மாணவனைப் போல கேட்டார் அந்த மாபெரும் நடிகர். என் கண்கள் கலங்கின.


தமிழ் சினிமா உலக அளவில் தன் நெஞ்சை நிமிர்த்திக் கொள்ள அவதரித்த அற்புதக் கலைஞனே நடிகர் திலகம் சிவாஜி கணேசன்.


வாழ்வில் எனக்குக் கிடைத்த வரப்பிரசாதம் ஒன்று இருக்குமென்றால் அது தனது கதையின் கதாபாத்திரமேற்று நான் எழுதிய வசனத்தை அந்த மகா கலைஞன் பேசியதுதான். அதுவே எனக்குக் கிட்டிய மிகப் பெரும் பாக்கியம் என்று சொல்வேன்.


ஒரு திருவள்ளுவர்

ஒரு ஷேக்ஸ்பியர்

ஒரு மைக்கேல் ஏஞ்சலோ

ஒரு பீத்தோவன்

ஒரு நடிகர் திலகம் சிவாஜி கணேசன்


இப்படித்தான் உலக வரலாறு சொல்லப்பட முடியும்'' என்று பெருமிதத்துடன் அந்நூலில் குறிப்பிட்டுள்ளார் கதாசிரியர் மகேந்திரன்.


1975-ல் சிவாஜி நடித்து வெளிவந்த ஏழு படங்களில் "அவன்தான் மனிதன்', "அன்பே ஆருயிரே', "டாக்டர் சிவா' ஆகிய மூன்றும் ஏ.சி. திருலோகசந்தர் இயக்கத்தில் வெளிவந்தன. இதில் "அவன்தான் மனிதன்' படத்திற்கு அமைந்த கூடுதல் சிறப்பு என்னவென்றால் அது சிவாஜியின் 175-வது படம்.


1976 முதல் 1978 வரை வெளிவந்த 19 சிவாஜி படங்களில் வெற்றிப் படங்களும் கலந்திருந்தது. அவர் மலையாளத்தில் நடித்த முதல் படமான "தச்சொள்ளி அம்பு' 1978-ல்தான் வெளியாகியது.


1979-ஆம் ஆண்டின் துவக்கத்தில் வெளியான சிவாஜி கணேசனின் 200-வது படமான "திரிசூலம்' 200 நாட்கள் ஓடியது மட்டுமின்றி அவரது திரையுலக வரலாற்றில் மறக்க முடியாத வசூல் சாதனையை செய்தது.


சிவாஜியின் கலைப் பயணத்தில் அவர் நடித்த 287 திரைப்படங்களில் சிறந்த பத்து படங்களைப் பட்டியலிட வேண்டுமென்றால் பாராதிராஜா இயக்கிய "முதல் மரியாதை' படத்தை நீக்கி விட்டு எவராலும் பட்டியல் போட முடியாது. மிகவும் யதார்த்தமான நடிப்பை அப்படத்தில் வழங்கியிருந்தார் சிவாஜி.


இப்போதெல்லாம் ஒரு படத்தின் படப்பிடிப்பு 200 முதல் 300 நாட்கள் நடைபெறுகிறது. "முதல் மரியாதை' என்ற திரைக் காவியத்தை உருவாக்க பாரதிராஜா எடுத்துக்கொண்ட நாட்கள் எவ்வளவு தெரியுமா? 84 நாட்கள்! அப்படத்தின் பாடல் பதிவு ஆரம்பமானதிலிருந்து 84-வது நாள் படம் வெளியாகி விட்டது. மொத்த நாட்களே 84 தான் என்னும்போது படப்பிடிப்பு நடைபெற்ற நாட்கள் என்றால் அதிகபட்சமாக 50 நாட்கள் இருந்திருக்கும்.


அவ்வளவுதான். 50 நாட்கள் படப்பிடிப்பு நடைபெற்ற அப்படம் 175 நாட்களுக்கு மேல் ஓடி வசூலில் சாதனை படைத்தது மட்டுமின்றி மிகச் சிறந்த படைப்பு என்ற கலைத்துறை விமர்சகர்களின் பாராட்டையும் பெற்றது. "முதல் மரியாதை'யைத் தொடர்ந்து வெளிவந்து வெள்ளிவிழா கொண்டாடிய படம் "படிக்காதவன்'. இத்திரைப் படத்தில் ரஜினிகாந்த்தோடு நடித்திருந்தார் சிவாஜி.


1986-87 ஆகிய இரு ஆண்டுகளில் சிவாஜி நடித்த "சாதனை', "மருமகள்', "விஸ்வநாத நாயுக்குடு' என்ற தெலுங்கு படம், "ஜல்லிக்கட்டு' ஆகிய நான்கும் 100 நாள் படங்களாக அமைந்தன. இதில் "ஜல்லிக்கட்டு' படத்திற்கு கிடைத்த தனிச்சிறப்பு என்னவென்றால் வள்ளுவர்கோட்டத்தில் நடைபெற்ற இத்திரைப்படத்தின் 100-வது நாள் விழாவிற்கு தலைமை தாங்கி பரிசுக் கேடயங்களை வழங்கியவர் அன்றைய முதல்வரான புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். சிவாஜி கணேசன் நடித்த திரைப்படத்தின் 100-வது நாள் விழாவில் எம்.ஜி.ஆர். கலந்து கொண்ட ஒரே திரைப்பட விழா "ஜல்லிக்கட்டு' விழாதான். எம்.ஜி.ஆர். இறுதியாக கலந்துகொண்ட திரைப்பட விழாவும் அதுதான்.


1952 முதல் 1999 வரை 287 படங்களில் நடித்த சிவாஜி ஏற்ற வித்தியாசமான பாத்திரங்கள் 200-க்கும் மேலிருந்தது. ""அவர் நடிக்காமல் எங்களுக்கு விட்டுச் சென்ற பாத்திரப் படைப்புகளே இல்லை'' என்றுதான் ரஜினி, கமல் முதற்கொண்டு இன்றைய இளம் தலைமுறை நடிகர்கள் வரை எல்லோரும் கூறுகின்றனர்.


ஆனால் அப்படிப்பட்ட மாபெரும் கலைஞனுக்கு சிறந்த நடிகர் என்ற தேசிய விருது வழங்கப்படவே இல்லை என்பது நமது நாட்டில் விருதுகள் எந்த அடிப்படையில் வழங்கப்படுகின்றன என்பதற்கு ஒரு சான்றாக இன்றுவரை இருந்து கொண்டிருக்கிறது என்பது உண்மை.


""ஒரு கலைஞனை சிறந்த நடிகராக மக்கள் ஏற்றுக் கொள்ளும்போதுதான் அந்த கலைஞன் முழுமையடைகிறான். அதுதான் அங்கீகாரம். தான் ஏற்ற பாத்திரத்தை உணரும்போது தான் அதில் முழுமையாக ஒரு நடிகன் வெளிப்பட முடியும். அதுதான் அவனுக்கு அங்கீகாரத்தைப் பெற்றுத் தரும். எத்தனையோ பேர் நடிக்க வருகிறார்கள். எல்லோரையுமா சிறந்த நடிகன் என்று மக்கள் ஏற்றுக் கொள்கிறார்கள்?


அங்கீகாரம் கிடைப்பதற்கும், விருது கிடைப்பதற்கும் சம்பந்தமில்லை. யாரோ ஒருவர் கஷ்டப்பட்டு கொடுத்தாத்தான் விருது. அர்ஜுனா விருது, பாரத் விருது போன்றவற்றை பலருக்குக் கொடுத்திருக்கிறார்கள். அந்த விருதுகள் பெற்ற எல்லோருமா அதற்குத் தகுதியானவர்கள்?


ஒரு கலைஞனுக்கு விருது என்பது அவன் வேகமாக வளரும் இளம் வயதில் கிடைக்க வேண்டும். அப்போதுதான் அதை அவன் கொண்டாட முடியும். விருது தந்த ஊக்கத்தில் அவன் கூடுதலாகப் பரிமளிப்பான். கமல், ரஜினி, பிரபு, சத்யராஜ் போன்ற சின்னப் பிள்ளைகளுக்கு விருது கொடுத்தால் அவர்கள் கொண்டாடுவார்கள். நான் இதையெல்லாம் கடந்தவன்.


ஆனாலும் ஒன்றை நான் சொல்லித்தான் ஆக வேண்டும். உரிய காலத்தில் விருது கிடைக்கவில்லை என்ற ஆதங்கமும், வருத்தமும் என மனதின் ஓரத்தில் "விண் விண்' என்று இருக்கதான் செய்கிறது. நானும் மனுஷன்தானே! இதை மறைத்தால் என்னைவிட "அயோக்கியன்' இருக்க முடியாது'' என்று 1997-ஆம் ஆண்டு ஒரு பத்திரிகைப் பேட்டியில் தேசிய விருது குறித்து தனது எண்ணங்களைப் பதிவு செய்திருக்கிறார் சிவாஜி.


இந்தியத் திரைவானின் நட்சத்திரங்கள் அனைவரும் பார்த்து பிரமித்த நடிப்புச் சக்ரவர்த்தியான சிவாஜியைக் கவர்ந்த நட்சத்திரங்கள் யார் யார் தெரியுமா? ஆங்கிலப் பட நடிகர்களில் சார்லஸ் போயர், ரோனால்ட் கோல்மென் ஹிந்தி நடிகர்களில் தீலிப் குமார், சஞ்சீவ் குமார், நர்கீஸ் தமிழில் ராதா அண்ணன், டி.எஸ்.பாலையா. இவர்கள் இரண்டு பேருக்கும் ஈடான நடிகர்களே இல்லை என்பதுதான் சிவாஜியின் கருத்தாக இருந்திருக்கிறது.


நடிப்பில் தனது வாரிசாக யாரை சிவாஜி அடையாளம் காட்டுகிறார்?


""அதெல்லாம் சும்மா ஸôர். அதென்ன சொத்தா வைத்திருக்கிறோம்... வாரிசு என்று சொல்வதற்கு? வாரிசு என்று சொல்ல முடியாது. வித்தியாசமாக மேக்-அப் போட்டுக்கொண்டு, அதன் மூலம் ரசிகர்களை ஈர்க்கும் நடிப்பைத் தருவது கமல்தான்'' என்று ஆணித்தரமாக தன் அபிப்ராயத்தைப் பதிவு செய்துள்ளார் சிவாஜி.


""கலைமாமணி, பத்மஸ்ரீ, பத்மபூஷன், டாக்டர், செவாலியே, தாதா சாகேப் பால்கே'' போன்ற பல விருதுகளைப் பெற்ற சிவாஜி அவர்களின் சாதனைகளில் தலையாயதாக நடிகர் சங்கத்திற்கு கட்டிடம் கட்டிய சாதனையைக் கூறலாம்.


அப்படிப்பட்ட அரும்பெரும் சாதனையைச் செய்த சிவாஜி பின்னர் வேதனையுடன் நடிகர் சங்கத்தை விட்டு வெளியேறினார். இன்னும் சரியாகச் சொல்வதென்றால் அவர் வெளியே செல்வதற்கான சூழ்நிலை வலிந்து உருவாக்கப்பட்டது. அது குறித்து "எனது கலைப் பயணம்' என்ற தனது வாழ்க்கை வரலாற்று நூலில் விவரித்துள்ளார். வி.கே.ராமசாமி.[/tscii:b5e7eddd8b]

HARISH2619
26th October 2009, 07:34 PM
[tscii]சிவாஜி கணேசன் – ஒரு சரித்திரம்
ஆகஸ்ட் 6, 2004

Source : தமிழோவியம்

கவியோவியம்
சிவாஜி கணேசன் – ஒரு சரித்திரம்
———————————————–

திரையில் நீ சிரிக்கிறாய்,
நாங்கள் குதூகலம் அடைகிறோம்-
நீ துடிக்கிறாய், நாங்கள் பதறுகிறோம்-
நீ சவால் விடுகிறாய், நாங்கள் ஆயத்தம் ஆகிறோம்-
நீ அழுகிறாய், நாங்கள் உடைந்து போகிறோம்.

கை அசைத்து பிரிந்திருந்தால்
பரவாயில்லை….
இதயம் அசைத்து அல்லவா
இளைப்பாற சென்று விட்டாய் ?

உனக்கு கிடைத்த
கைத்தட்டல்கள் எல்லாம்
உயிர் கொடுக்குமென்றுகணக்கிட்டால் கூட…
ஓராயிரம் கோடி ஆண்டுகள்
நீ வாழ்ந்திருப்பாயே?

‘வானம் பொழிகிறது’
வசனத்தை பேசிப்பார்க்காமல்
ஒரு தமிழ்மகனாவது
இருந்திருந்தால்…
பாவம், அவனது புலன்களில்
ஏதேனும் பழுதுக்ள் இருந்திருக்கும்!

உன்னை மாதிரி
நடிக்க பழகியே…
இங்குசிலர் நடிகர்களாகி விட்டனர் !

குணத்தளவில் நீ
குழந்தையாக இருந்ததால் தான்
அரசியல்நாகம்
உனனைத் தீண்டிய போது
எஙகளுக்கு விஷம் ஏறியது!

நாங்கள் உன்னைத்தலைவனாய் தான் கொண்டாடினோம்..
அரசியல் தலைவனாய் அல்ல-
குடும்பத்தலைவனாய்!

எங்கள் கலைத்தாயின்
தலைமகனை
கரை வேட்டிகளுக்கும்,
கதர் சட்டைகளுக்கும்
தத்து கொடுப்பதற்கு
நாங்கள் ஒப்புக்கொள்வதாய் இல்லை!!!

‘ப்ரிஸ்டிஜ் பத்னாபன்’,
‘பாரிஸ்டர் ரஜினிகாந்த்’,
‘சிக்கல் ஷண்முகசுந்தரம்’
என்று கதாப்பாத்திரங்களின் பெயர்கள் கூட
மனப்பாடமாகி
மனசுக்குள் சப்பண்மிட்டு
அமர்ந்து விட்டதே?!

நிஜத்தில் திடீரென
நிகழ்ந்து விட்டால்
தாங்கமுடியாதென்பதால் தான்,
திரைப்படங்களில் இறந்து காட்டி
ஒத்திகை குடுத்தாயோ…?

எது எப்படியோ…
விண்ணுலகில்
அப்பரில் ஆரம்பித்து
கட்டபொம்மன் வரை
உனக்கு நன்றி செலுத்த வேண்டுமாம்-
வரிசை அங்கும்
பெரிசாய்தான் இருக்கிறது….
உனக்கு வந்த இறுதிஊர்வலம் போல்!

- அரூண்

joe
26th October 2009, 08:18 PM
- அரூண்

இந்த அருண் வேறு யாருமல்ல ..'அச்சமுண்டு அச்சமுண்டு' படத்தின் இயக்குநர் அருண் வைத்தியநாதன் . :)

Plum
26th October 2009, 08:22 PM
yes, joe. He is a big time NT fan. I mentioned it when pre-release of AA, we were talking about this ex-hubber who is directing an upcoming movie

pammalar
26th October 2009, 09:24 PM
சென்ற வார (21.10.2009) குமுதம் இதழில் , 'லைட்ஸ் ஆன் - சுனிலிடம் கேளுங்கள்' பகுதியில் , வெளியாகியிருந்த கேள்வி - பதில்களில் , இரு கேள்வி - பதில்கள் நெஞ்சுக்கு நெருடலையும் , மனதுக்கு வருத்தத்தையும் ஏற்படுத்தின.

முதல் கேள்வி - பதில் :
'தில்லானா மோகனாம்பாள்' படத்தை மீண்டும் ரீமேக் செய்தால், அதில் சிவாஜி - பத்மினி கேரக்டர்களில் இன்றைய நடிகர்கள் , நடிகைகளில் யார் , யார் பொருத்தமாக இருப்பார்கள் ?

சிவாஜிக்கு ஈடு யாரும் கிடையாது என்றாலும் என் சாய்ஸ் இது தான். அஜீத் - அசின் , விக்ரம் - ஸ்ரேயா , சூர்யா - நயன் தாரா.

இந்த பதிலில் ஒரே ஒரு சரியான விஷயம் 'சிவாஜிக்கு ஈடு யாரும் கிடையாது' எனக் கூறியது தான். மற்றதெல்லாம் அபத்தம் (கேள்வி உள்பட). குறிப்பிடப்பட்டுள்ள நடிகர், நடிகைகள் , நம்மைப் போன்று பல முறையல்ல , சில முறையாவது தில்லானா மோகனாம்பாள் திரைப்படத்தை அணுவணுவாக ரசித்து பார்த்திருப்பார்களா ? சிவாஜி - பத்மினி எங்கே ? இவர்கள் எங்கே ? உலகப்பொதுமறையாம் திருக்குறளையும் (சிவாஜி - பத்மினி) , கிண்டி ரேஸ்கோர்ஸ் புத்தகத்தையுமா ( குறிப்பிடப்பட்டுள்ள நடிகர் - நடிகைகள்) ஈடு கட்டுவது. கேவலம் , மிகமிகக் கேவலம்.

நடிகர் திலகத்தின் பெரும்பாலான படங்கள், என்றென்றும் பார்க்கும் வண்ணம், காலத்தை வென்ற காவியங்களாக உள்ளவை. தில்லானா மோகனாம்பாள் ஒரிஜினல் திரைப்படமே இன்றும் , என்றும் பார்க்கும் விதம் காலத்தை வென்ற காவியமாக இருக்க , அபத்தக் குப்பைகளான ரீமேக்குகளைப் பற்றி கற்பனை கூட செய்ய வேண்டியதில்லை. அப்படியிருக்க , இது போன்ற கேள்வி - பதில்களைக் காணும் போது 'அட கணேசா !, அட ராமா !' எனத் தலையில் அடித்துக் கொள்வதைத் தவிர வேறு என்ன செய்ய முடியும்.

அறிவாளிகள் நிறைந்த நமது இந்தியத் திருநாட்டில், இது போன்ற கேள்விகளைக் கேட்டு பதில் பெறும் , அறிவிலிகளுக்கும் பஞ்சமில்லை.

உலக சினிமா சரித்திரத்தில், தில்லானா மோகனாம்பாள் ஒரு தலைசிறந்த திரைப்படம் என்பதை யாரும் மறுக்க முடியாது.

குமுதம் மற்றும் இது போன்று எழுதுவோருக்கெல்லாம் யாம் விடுக்கும் வேண்டுகோள் இது தான் :

எவர்கிரீன் நட்சத்திரங்களான , பழைய தலைமுறைக் கலைஞர்களை (1975 - க்கு முன் திரையுலகில் ஜொலித்தவர்கள்), அதற்குப் பின் வந்த தலைமுறைகளுடனோ , இன்றைய தலைமுறையுடனோ , இனி வரப்போகும் தலைமுறைகளுடனோ ஒப்பிட்டுப் பார்க்க வேண்டாம்.அவர்கள் (பழைய கலைஞர்கள்) செய்ததில் 10 சதவீதம் (அதிகபட்சம் !) கூட இவர்களால் செய்ய முடியாது. ஆகவே, ஈடு , இணை செய்ய வேண்டாம்.

அவர்கள் அவர்கள் தான் ! இவர்கள் இவர்கள் தான் ! ஓல்டு ஈஸ் கோல்டு என்று சும்மாவா சொன்னார்கள் !!

உள்ளக் குமுறலுடன்,
பம்மலார்.

(மற்றொரு அபத்தக் கேள்வி - பதில் குறித்த விளக்கம் , எமது அடுத்த பதிவில்)

RAGHAVENDRA
27th October 2009, 12:22 PM
பம்மலாரின் உள்ளக் குமுறல் நியாயமானது. பல கலைஞர்கள் 50 ஆண்டுகளுக்கு மேலாக நிலைத்து இன்னமும் தம்மால் நிலைத்திருக்க முடியும் என்று நிரூபித்துள்ளனர். அதுவும் தொடர்ச்சியாக கிட்டத்தட்ட 55 ஆண்டுகளாக எம்.என்.ராஜம், மனோரமா போன்ற கலைஞர்கள் உள்ளனர். தொலைக்காட்சி சேனல்களுக்கு உண்மையிலேயே தமிழுணர்வு இருந்தால் இப்படி 50 ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ச்சியாக கலையுலகில் பணிபுரிந்த அனைத்துக் கலைஞர்களுக்கும் விழா எடுக்க வேண்டும், கௌரவிக்க வேண்டும். இல்லையேல் வணிக நோக்கத்தோடு எடுக்கப் படும் விழாக்களை மக்கள் புறக்கணிக்க வேண்டும்.

அவர்களை சிறந்த முறையில் கௌரவிப்பது ஒரு புறம் இருக்கட்டும், அவர்களின் படைப்புகளை ரீமேக், ரீமிக்ஸ் என்ற பெயரில் மீண்டும் எடுத்து அவர்களை அவமானப் படுத்தாமல் இருந்தாலே போதும். தமிழிலக்கிய உலகில் இல்லாத படைப்பாளிகளா மற்ற இடத்தில் இருக்கப் போகிறார்கள். கேரளமும் வங்கமும் படைப்பாளிகளை உருவாக்குவதை விட அதிகமாக நம்மால் உருவாக்க முடியும்.

பம்மலாரின் குமுறலில் நாம் அனைவரும் இணைவோம்.

ராகவேந்திரன்

P_R
27th October 2009, 01:04 PM
தில்லானா ஏற்கனவே 'ரீமேக்' செய்யப்பட்டிருக்கிறது: கரகாட்டக்காரன்.
அதை remake என்பதை விட reinterpretation, adaptation என்று சொல்லலாம். வெவ்வேறு சூழல்களில், வெவ்வேறு முக்கியத்துவங்களுடன் (emphasis) இப்படி செய்யலாம் என்பது என் கருத்து.

அக்காலத்தில் பரதநாட்டியக்கலைஞர்களின் சமூக நிலை, பொதுவாக கலைஞர்கள் patronகளை சார்ந்து இயங்கியது, அது சண்முகம் மீது ஏற்படுத்தும் அழுத்தம் போன்றவை எல்லாம் இன்று அப்படியே இன்று பொருந்தாது.

நமது பல பழைய திரைப்படங்களை தொடவே கூடாது என்று சொல்லமாட்டேன். அப்பட்ட பிரதி எடுக்கும் கேலிக்கூத்தைச் செய்யாமல், இன்றைய sensibilities-க்குத் தோதாக மாற்றி எழுதி ரசிக்கும்படி செய்யலாம்.

rangan_08
27th October 2009, 07:22 PM
நமது பல பழைய திரைப்படங்களை தொடவே கூடாது என்று சொல்லமாட்டேன். அப்பட்ட பிரதி எடுக்கும் கேலிக்கூத்தைச் செய்யாமல், இன்றைய sensibilities-க்குத் தோதாக மாற்றி எழுதி ரசிக்கும்படி செய்யலாம்.

That's a good suggestion. I know, thru your earlier posts that you have not seen much of NT films. But still, which of NT's films would you prefer to be remade, i mean only the context with possible changes, and any actors preferably ??

Plum
27th October 2009, 07:36 PM
andha nAL is a prime candidate. I'd like Kamal to write and remake it in the way PR has outlined - I'd like him to not announce it is a remake, though. There are so many possibilities there in terms of exploring the mindset of the person who 'betrays' his 'nation' when denied 'personal glory'.

Then there is pAsa malar but...well...not sure how you guys will take it... with an incest angle!(remba over-A pOyittEnO!). Again with Kamal/Madhavan as writer/actor team. bleddy bollywood-lAm flatten paNNidalAm.

Then mudhal mariyaadhai - with Kamal

A few years down the line...thevar magan with Surya and Kamal!

Aalavanthan
27th October 2009, 07:51 PM
Remaking the films of NT is no joke. Plum avargalin list-il Devar Maghan, will be a treat to watch to see the Kamal/Surya to raise their acting skills from their current margin to the level of the great Sivaji/Kamal !

I think if any NT's period movie had to be remade in Tamil, the only actor to be quoted for them will be Kamal. I dont think anybody in the current market, has the expertise to technically handle the tamil language as Kamal does. Maybe NT is the reason behind Kamal's inspiration towards Tamil and he would be the one would do justice to the movies like Kattabomman. The Rangaraja Nambi of Dasavatharam is running through my mind as I say this..

"சுங்கம் தவிர்த்த சோழனின் பேரனிடம் கர்வம் தவிர்க்க சொல்
அப்படிச் சொன்னவன் இந்த ரங்கராஜ நம்பி என்று சொல் "

RAGHAVENDRA
27th October 2009, 08:13 PM
Dear friends,
I too am not against remakes. But to my personal self, I feel the remake of the same language is itself not worthwhile. You may remake films from other languages, which is meaningful. But that too is not an immediate solution. Each and every language has its own culture and has immense talent available. As to my humble knowledge goes, the number of magazines publishing novels monthly is around 20 to 30 which itself is an achievement for a language. Why not producers and filmmakers encourage new talents and original writings and bring out more and more creations to limelight? This is one question.

Coming to remake of NT's movies - well, the best thing is leave him alone. There is no body who can match him, incl. Kamal. His diction of Tamil is unmatchable. How many actors nowadays have such a voice culture? Or will the directors allow to speak in such a tones and lengths when each and every letter is recorded separately. And how clear the words will be? Can you point out any actor who is capable of speaking the language of Tamil clearly?

In the name of reality, our language is sacrificed. That is a sad truth. NT alavukku thelivagavum thulliyamagavum Thamizhai pesa ingu yaar irukkiraargal? Yaarukku andha alavu kural valam ulladhu? Idhaiyellam puram thalli vittu avar padathai remake panninal adhu eppadi irukkum?

The skill in Adaptation, as we have seen for past so many years in Tamil cinema, is well known. Then how can we expect present day film makers would do justice for the remake films of NT?

Raghavendran

joe
27th October 2009, 08:21 PM
Though I am not for remake of NT film , in another angle it will be good .. when a remake of NT film comes ,more people can realise why NT is unmatched.

P_R
27th October 2009, 10:01 PM
But still, which of NT's films would you prefer to be remade, i mean only the context with possible changes, and any actors preferably ??
Yeah I mean remake in the context of reinterpretation.

For instance a man moving to a new love, finds his past haunting him. He knows it cannot be. But the only way to get past it is to confront it. And that would be suicidal to his newfound persona. At one point he breaks down and invites a confrontation upon himself. Only to know that a more cruel twist is yet to come.

Imagine taking just that shell alone from Pudhiya paravai. Don't do piano on a cruise boat, or the vestless wail of despair. There's no point.

I mean things of this sort.

For most of reinterpretable Sivaji films, with subtle performance demands and <given that we don't spend money for chewing cud thus :lol2:> I think Rajini will be great to watch.

But these reinterpretations, I like to believe, have happened anyway, distributed across films and characterizations in their own subtle way.

The most poignant moment in PadikkAdhai mEdhai is when Sivaji refuses to be insulted. He cannot understand it. It is we the audience who feels the insult and feels saddened and angry, he is just goodness personified that he just doesn't get it.

When in PKS, Simran says she does not have feelings for him, Kamal's response is : "yEn". That one moment, seemed to pick right out of Rangan.

Plum
28th October 2009, 03:33 PM
hey grouch, what do you think of remaking NT's movies. Yes? No? Maybe? If yes, chew some cud, no?

HARISH2619
28th October 2009, 05:37 PM
RAGHAVENDRA SIR WROTE:
Coming to remake of NT's movies - well, the best thing is leave him alone. There is no body who can match him, incl. Kamal. His diction of Tamil is unmatchable. How many actors nowadays have such a voice culture? Or will the directors allow to speak in such a tones and lengths when each and every letter is recorded separately. And how clear the words will be? Can you point out any actor who is capable of speaking the language of Tamil clearly?


I COMPLETELY AGREE WITH YOU SIR.

JOE SIR WROTE:

Though I am not for remake of NT film , in another angle it will be good .. when a remake of NT film comes ,more people can realise why NT is unmatched.

IT'S A GOOD POINT TOO.

MURALI SIR,
இங்கே இவ்வளவு ரனகளம் நடந்துகொன்டிருக்கிறது,எங்கள் தளபதியான நீங்கள் எங்கே?

jaiganes
29th October 2009, 01:31 AM
But still, which of NT's films would you prefer to be remade, i mean only the context with possible changes, and any actors preferably ??
Yeah I mean remake in the context of reinterpretation.

For instance a man moving to a new love, finds his past haunting him. He knows it cannot be. But the only way to get past it is to confront it. And that would be suicidal to his newfound persona. At one point he breaks down and invites a confrontation upon himself. Only to know that a more cruel twist is yet to come.

Imagine taking just that shell alone from Pudhiya paravai. Don't do piano on a cruise boat, or the vestless wail of despair. There's no point.

I mean things of this sort.

For most of reinterpretable Sivaji films, with subtle performance demands and <given that we don't spend money for chewing cud thus :lol2:> I think Rajini will be great to watch.

But these reinterpretations, I like to believe, have happened anyway, distributed across films and characterizations in their own subtle way.

The most poignant moment in PadikkAdhai mEdhai is when Sivaji refuses to be insulted. He cannot understand it. It is we the audience who feels the insult and feels saddened and angry, he is just goodness personified that he just doesn't get it.

When in PKS, Simran says she does not have feelings for him, Kamal's response is : "yEn". That one moment, seemed to pick right out of Rangan.

MMKR - Michael intro scene - the way kamal gets up from slumber and looks around - very similar to the thug Sivaji played in Bale Pandiya or Uththama puthiran villain sivaji..

groucho070
29th October 2009, 07:12 AM
hey grouch, what do you think of remaking NT's movies. Yes? No? Maybe? If yes, chew some cud, no?It has been done already, Plum. Except they were not called official remakes.

Rajini's Mullum Malarum is a beautiful reinterpretation of Pasa Malar. So does Padikathavan, though it is a Hindi remake, does it not remind you of NT and the Pa varisai films, as would Darmadurai? What about Kamal's Per Sollum Pillai, it was intentionally made with NTs early 60s films in mind and they hired KSG for the story. Let's not even talk about Karnan's remake. These are good interpretations.

And then there are podipassangga remakes. Totally unacknowledged one where due credits are not given. There was a Vijay film where Simran would not know who he really is owing to her blindness, does that not remind you of Niraikoodam?

Avavan kaapi adichittu busyyaa poykittirukkaangga. Ippo ethukku remake-u podalangga ellam :huh:

thamiz
29th October 2009, 07:25 AM
True, Grocucho, I would say dharmadurai is similar to remake of Bhimsingh's pazhani?

groucho070
29th October 2009, 08:11 AM
Yes, Thamiz, Pazhani comes to my mind.

There are only two actors who can do and have done NT film remakes - Rajini and Kamal.

It's amazing how sometimes when you think carefully, how some films have immediate narrative connection to some NT films.

Take Rajini's Muthu, for example. Sure, it is a Malayalam remake, but the film that came to my mind when I think about it is one with similar title, Muradan Muthu. Strange, considering both are remakes.

Just for fun.

Rajini's close relationship and loyalty to Sarath Babu, then he was forced to leave.
NT's close relationwhip and loyalty with Banthulu then he was forced (though it was his decision) to leave.

Ride on horse carriage with philosophic song.
Muthu: Oruvan Oruvan Muthalali.
M.Muthu: Ponnaasai Kondoorku Ullam Illai.

Rajini has love affair with someone of his own status, Meena.
NT has love affair with someone of his own status, Devika.

The end.
Rajini becomes part of the Jameen.
NT becomes part of Jameen (Asokan's family)

Of course, I did some selective thinking there, but you get the point. :wink:

Oh, did I mention that both lead characters name are the same :P

saradhaa_sn
29th October 2009, 12:26 PM
நேற்றிரவு வசந்த் தொலைக்காட்சியின் 'சிங்கத்தமிழன் சிவாஜி' நிகழ்ச்சியில், திரு ராம்குமார் அவர்கள் தயாரிப்பாளர், இயக்குனர் திரு வி.சி.குகநாதனைப்பற்றிச் சொல்ல்லும்போது, குகநாதனே நேரடியாக தொலைக்காட்சியில் தோன்றிப் பேசினார். பிசிறில்லாத தெளிவான கணீர்க்குரலில், தனக்கும் நடிகர்திலகத்துக்கும் இருந்த திரையுலகத் தொடர்பு பற்றியும், அதற்கு அப்பாற்பட்ட குடும்ப உறவு பற்றியும் விளக்கமாகச்சொன்னார். தான் 'ராஜபார்ட் ரங்கதுரை' படத்தைத் தயாரித்ததில் இன்றளவும் பெருமைப்படுவதாகவும், அந்தப்பெருமை தன் உயிர் இருக்கும்வரை தொடர்ந்து இருக்கும் என்று உணர்ச்சி வசப்பட்டார்.

ராஜபார்ட் ரங்கதுரை படத்தைப் பெருந்தலைவர் பார்த்து பாராட்டிய விஷயத்தை அவர் சொன்னபோது, சென்ற ஆண்டு என் தந்தை சொன்னதை இங்கே நான் பதித்திருந்தது அப்படியே நினைவுக்கு வந்தது. படத்தைப்பார்க்க அழைத்தபோது, இப்போதெல்லாம் தான் சினிமா பார்ப்பதில்லையென்று பெருந்தலைவர் மறுத்தார் எனவும், படத்தில் தேசியத்தை வலியுறுத்தும் காட்சிகள் நிறைய இடம் பெற்றிருப்பதைச் சொல்லி அழைத்ததும் தலைவர் வந்து பார்க்க ஆரம்பித்தவர், சிறிது நேரத்தில் படத்தோடு ஒன்றி விட்டார் என்றும், பகவத்சிங், திருப்ப்பூர் குமரன் ஆகியோர் இறக்கும் காட்சிகளில் அவர் கண்கலங்கினார் என்றும் சொன்னார். படம் முடிந்து வெளியே செல்லும்போது தன்னுடைய கைகளைப்பிடித்துக்கொண்டு, "படம் நல்லா இருக்கு. இதே மாதிரி நல்ல படங்களா எடுங்க" என்று பெருந்தலைவர் பாராட்டிச்சென்றது, தன் வாழ்க்கையில் தான் பெற்ற பெரிய விருது என்று சொன்னார். இன்றளவும் ராஜபார்ட் ரங்கதுரை தனக்கு பேர்சொல்லும் ஒரு படமாகத்திகழ்கிறது என்று மனம் நெகிழ்ந்தார் குகநாதன்.

Plum
29th October 2009, 06:45 PM
hey grouch, what do you think of remaking NT's movies. Yes? No? Maybe? If yes, chew some cud, no?It has been done already, Plum. Except they were not called official remakes.

Rajini's Mullum Malarum is a beautiful reinterpretation of Pasa Malar. So does Padikathavan, though it is a Hindi remake, does it not remind you of NT and the Pa varisai films, as would Darmadurai? What about Kamal's Per Sollum Pillai, it was intentionally made with NTs early 60s films in mind and they hired KSG for the story. Let's not even talk about Karnan's remake. These are good interpretations.

And then there are podipassangga remakes. Totally unacknowledged one where due credits are not given. There was a Vijay film where Simran would not know who he really is owing to her blindness, does that not remind you of Niraikoodam?

Avavan kaapi adichittu busyyaa poykittirukkaangga. Ippo ethukku remake-u podalangga ellam :huh:

:evil:
chew cud-nu sonnA....

I am not interested in the channeling efforts. Ofcourse, any actor would channel Sivaji Ganesan. I dont count those at all.
I am talking of serious remakes, reinterpretations.

thamiz
29th October 2009, 07:55 PM
Yes, Thamiz, Pazhani comes to my mind.

There are only two actors who can do and have done NT film remakes - Rajini and Kamal.

It's amazing how sometimes when you think carefully, how some films have immediate narrative connection to some NT films.

Take Rajini's Muthu, for example. Sure, it is a Malayalam remake, but the film that came to my mind when I think about it is one with similar title, Muradan Muthu. Strange, considering both are remakes.

Just for fun.

Rajini's close relationship and loyalty to Sarath Babu, then he was forced to leave.
NT's close relationwhip and loyalty with Banthulu then he was forced (though it was his decision) to leave.

Ride on horse carriage with philosophic song.
Muthu: Oruvan Oruvan Muthalali.
M.Muthu: Ponnaasai Kondoorku Ullam Illai.

Rajini has love affair with someone of his own status, Meena.
NT has love affair with someone of his own status, Devika.

The end.
Rajini becomes part of the Jameen.
NT becomes part of Jameen (Asokan's family)

Of course, I did some selective thinking there, but you get the point. :wink:

Oh, did I mention that both lead characters name are the same :P

I have seen muradan muththu but I dont remember anything about the movie. Only thing I remember is shivaji used to scare a child or of that sort. :oops:

Good analogy, Groucho! :)

thamiz
29th October 2009, 09:32 PM
Groucho:

We discussed about this earlier, R Madhavan's * Priyasakhi can be called as a remake of NT's P Madhavan directed, "pattikkAda pattNamA" :)

joe
29th October 2009, 09:33 PM
Tamizh,
Another notable one .. Sabash Meena - ULLaththai aLLiththaa

Murali Srinivas
30th October 2009, 01:51 AM
இன்று அக்டோபர் 29-ந் தேதி. 39 வருடங்களுக்கு முன்பு இதே நாளில் தான் எங்கிருந்தோ வந்தாளும் சொர்க்கமும் வெளியானது.இரண்டும் நூறு நாட்கள். ஒரு ஊரில் மட்டும் அல்ல. தமிழகத்தின் முக்கியமான ஐந்து ஊர்களில் நூறு நாட்களை கடந்தது. ஊமை படங்களின் காலம் தொட்டு அது வரை, ஏன் அதற்கு பின்னரும் சரி எந்த கொம்பாதி கொம்பனாலும் சாதிக்க முடியாத சாதனையை இரண்டாவது முறையாக [முதல் முறை 1967 -ல் ஊட்டி வரை உறவு, இரு மலர்கள்] நடிகர் திலகம் செய்துக் காட்டிய நாளின் துவக்கம் இது. வாழ்க அவர் புகழ்.

அன்புடன்

thamiz
30th October 2009, 03:27 AM
Tamizh,
Another notable one .. Sabash Meena - ULLaththai aLLiththaa

Joe: I have seen sabash meena long time ago. I think I have a copy of UAT, I will watch it. :oops:

abkhlabhi
30th October 2009, 12:24 PM
http://www.outlookindia.com/article.aspx?212777

groucho070
30th October 2009, 12:35 PM
Plum,

If I am a director, and Sivaji films approaches me and ask me to choose a film of theirs to be remade, I'll pick two:

1. Kungumam.
Could have been a brilliant movie, so we can repair it with stronger script.
2. Puthiya Paravai.
I know it already has great script, but imagine putting it in modern context, make it Sigappu Rojakkal-esque, explore characters psyche a bit more.

And you know whom I'd love to have as the lead.

NOV
30th October 2009, 12:45 PM
2. Puthiya Paravai.:shock:
:hammer: :hammer: :hammer:

groucho070
30th October 2009, 12:53 PM
Just the story NOV, it can work. It's not like VPK or Deiva Magan or Gauvaram where onscreen performance is vital.

It has a decent thriller plot, undercover cop, and a lead character who seemed to be not who he is. Can definitely be updated. Yen, Sigappu Rojakkal is a kinda updated Puthiya Paravai with additional horror elements and the character is made more psychotic.

RAGHAVENDRA
30th October 2009, 01:59 PM
உலகப் பெரும் நடிகர் எந்த நூற்றாண்டுக்கும் காணக் கிடைக்காத தமிழ்த் தாய் பெற்றெடுத்த தவப் புதல்வன் உலக அளவில் தமிழனை தலை நிமிர வைத்த நடிகர் திலகத்தைப் பற்றி -

தமிழ்த்தாய் வாரி அணைத்து ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கி பெருமை கொள்கிறாள் -

தமிழனோ தன் சக தமிழனை வர்த்தக நோக்கில் மாசு படுத்துகிறான்.

இது தான் தமிழுணர்வு என்பதோ..

தமிழகம் தன் தலை மகனைக் கொண்டாடும் விதம் புல்லரிக்க வைக்கிறது.

ராகவேந்திரன்

Waterloo
30th October 2009, 03:22 PM
Raghavendra

Today, nobody gains by degrading Sivaji or his hits . He was never a political force to reckon with . By covering up his cinema achievements what does one gain now ? Nothing. Sorry to say this but a fact. Sivaji's old movies are benchmark for world cinema . A learning experience for future generation. Legend

RAGHAVENDRA
30th October 2009, 04:04 PM
Raghavendra

Today, nobody gains by degrading Sivaji or his hits . He was never a political force to reckon with . By covering up his cinema achievements what does one gain now ? Nothing. Sorry to say this but a fact. Sivaji's old movies are benchmark for world cinema . A learning experience for future generation. Legend

Dear friend,
Politics never guides properly. Political successes irrespective of the century does not relate to morality, conscience or so on. Chanakya was famous for political calculations which is cited as examples in literature. We are really proud that NT was an honest, straight forward and open heart politician and hence if he failed in politics or if he was not a force to reckon with, it was not his fault and it shows how far we have kept these qualities at bay. It should be the people who must feel guilty for not voted to him. And he never brought his political considerations to his profession (and even if he had done it might not have been wrong, considering the nationalist and patriotic politics he was following). So we are not bothered about his so called failure in politics. If no one is gaining from covering up his achievements, then I do not know why all this discussions are for? What Mr. Murali and Pammalar bring out to say is only a reply to a particular magazine. Does it mean that NT's films did not collect a single paise, does it mean that all NT films producers became paupers and went begging in streets? does it mean that for 50 years producers did not know how to spend their money and as a a way to lose all their wealth, they produced NT's 300 and odd films?

Enough for God's sake. Pls don't drag NT, a Tamilian, to mud.

Raghavendran

Plum
30th October 2009, 04:12 PM
I have heard of producers going bankrupt and committing suicide dying because of certain movies - none of which happens to be NT's. Though I dont care too much for the box office status of NT's movies(it doesnt matter either way to me) - Kappalottiya Thamizhan was a BO failure for God's sake; so, I dont want approval from people who made KT a failure; I mean these are the same guys who made other lesser movies a success so BO success means approval of such people, and it matters least to me - this is something I wanted to note that no producer of NT's movies apparently had to go to the extreme whereas....I am not going to complete this sentence ;-)

Waterloo
30th October 2009, 04:50 PM
Raghavendra Sir

I must clarify you on what I intended.

See, today by defaming Sivaji's acting or his records / achievements , what does one gain ? I mean his so called arch rivals .

In cinema , none of his peers exist now
In politics, he was not a force , noone puts his image on posters / banners like MGR's to gain political mileage. So, what is the need for down grading his achivements ? this is my point.

Sivaji's greatest contribution to India have been the roles of freedom fighters VOC, Kattabomman .
Yes, he also spread bakthi cult ( or atleast minimised the so called aethist campaign of DK/ DMK group ) through Thiruvilayadal, etc .

Coming to Sivaji's stats. I would blame his own fans for letting him down on Kappalotiya thamizan and other nice movies which miserable failed at BO. Who is to be blamed for this mess ? fans like you all who couldnt distinguish between a valuable movie and ordinary movie.

For heaven's sake dont use TAMILIAN etc and regionalise Sivaji. I heard that he always used to end his public speech as JAIHIND indicating that he was always a nationalist. Dont corner him by earmarking as a tamilian. He was true Indian and a great patriot.

Lets put a full stop there. Tks

joe
30th October 2009, 05:14 PM
See, today by defaming Sivaji's acting or his records / achievements , what does one gain ?

That is the question we want to ask people like you .

வவுசி ,கட்டபொம்மனா நடிச்சார் ..அப்புறம் ஆன்மீக படத்துல நடிச்சார் -ன்னு எவ்வளவு சுருக்கமா முடிச்சிட்டீங்க.

நீங்க சிவாஜியை புகழத்தான் செய்யுறீங்க .நான் ஒத்துக்குறேன்.

Plum
30th October 2009, 05:18 PM
this is something I wanted to note that no producer of NT's movies apparently had to go to the extreme whereas....I am not going to complete this sentence

chE, ennoda matchbox ippo makki pOchu pOla - evLO patha vechAlum pathikka maatEngudhu :-)

RAGHAVENDRA
30th October 2009, 05:57 PM
Dear Waterloo,
I don't treat this forum as a waterloo for MGR vs Sivaji. But I dont think I committed a mistake by mentioning NT as Tamilian. This is a fact. When a man gets award for Nobel prize, we people celebrate it as a Tamilian. NT leaved until his last breath for Tamil. He was so proud to be Tamilian, which fact he was mentioning on every occasion. In almost all the other States, much less acclaimed artists are glorified to the highest owing to their nativity. No one in India equals NT. Raj Kumar has umpteen times been mentioning NT as his mentor and he is almost worshipped as God in Karnataka. The same applies to all the other States of India or any part of the world. What is wrong in saying NT as Tamilian. That is not regionalisation. In the guise of regionalisation does it mean that he should not be greeted in his own soil? He was the one who preached patriotism, he was the one who preached divinity in soul through his characters. And he followed it until his last. He was Tamilian as well as Indian. Then why should not Tamil Nadu glorify him? Had he been borne out side the State, all the awards would have been given to him first time itself. It is a pity that he was born here. This is a fact and not exaggeration or regionalisation. Just mentioning him as good actor and humiliating him on the other side .... is this what Tamil culture upto?
This is what runs in my mind. I hope any body would approve of it.

Raghavendran

P.S. என்னுடைய முந்தைய தமிழ்ப்பதிவில் ஈன்ற பொழுதில் பெரிதுவந்து என்று இருக்க வேண்டும். பெரிதுவக்கி என்று அச்சடித்துள்ளேன். தவறுக்கு வருந்துகிறேன். உவக்கி என்றாலும் உவகை தான் என்றாலும் உவந்து என்பது பழமொழியாதலால் இது தவிர்த்திருக்க வேண்டிய தவறு. சுட்டிக்காட்டிய அன்பு நண்பருக்கு நன்றி.

thamiz
30th October 2009, 08:25 PM
Dear Raghavendran!

Let us move on. :)

joe
30th October 2009, 08:27 PM
Watching Navarathiri @ Singapore Vasantham Central 8-)

joe
30th October 2009, 08:43 PM
"நவராத்திரி 9 நாளும் 9 கூத்து .கடவுள் புண்ணியத்துல 6 நாள் முடிஞ்சு போச்சு ..இன்னிக்கு 7- ம் நாள் ...சத்தியவான் சாவித்திரி ..நான் தான் சத்தியவான் போடுறவன் .." .

..க்காளி .என்ன மொழி நடை ,என்ன பாவம் ..என்ன வேடப்பொருத்தம் ...ஹூம் ..பொறந்து வரணும்.

tamizharasan
30th October 2009, 09:55 PM
Joe
What is your all time favorite of NT related to acting and overall good movie categories?

joe
30th October 2009, 10:01 PM
Joe
What is your all time favorite of NT related to acting and overall good movie categories?

Very tough to choose among Karnan , VPK ,Gowrawam ,ThiruviLayadal ,Antha NaaL ,uththama puthiran ,Deivamagan

tamizharasan
30th October 2009, 10:13 PM
Joe
What is your all time favorite of NT related to acting and overall good movie categories?

Very tough to choose among Karnan , VPK ,Gowrawam ,ThiruviLayadal ,Antha NaaL ,uththama puthiran ,Deivamagan

Ok. I liked thiruvilayaadal and Deivamagan in your list along with parasakthi, mudhal mariyadhai and Devar Magan.

One thing I noticed in NT is, he brings all sorts of facial expression in no time. It was so easy for him. Some actors are made and some are born. But Sivaji is the most natural talent in acting, I have ever witnessed.

pammalar
30th October 2009, 10:41 PM
நாளை (31.10.2009) பாராளும் நடிகர் திலகத்தின் பாகப்பிரிவினை திரைக்காவியத்தின் பொன் விழா ஆண்டு நிறைவு. எனவே, பாகப்பிரிவினை செய்த சிகர சாதனைகளிலிருந்து சில துளிகள், மலரும் நினைவுகளாக நமது பார்வைக்கு :

பாகப்பிரிவினை நடிகர் திலகத்தின் 58வது திரைக்காவியம், 57வது கறுப்பு-வெள்ளைக்காவியம். 1959 தீபாவளி வெளியீடாக, 31.10.1959 தீபாவளியன்று வெளியானது. (அதற்கு முந்தைய தினமான 30.10.1959 அன்று , தீபாவளி வெளியீடாக நடிகர் திலகத்தின் அவள் யார்? திரைக்காவியம் வெளியானது. அக்காவியத்திற்கு இன்று (30.10.2009) பொன் விழா நிறைவு).

பாகப்பிரிவினை திரைக்காவியம், வெள்ளிவிழாவையும் தாண்டி, 31 வாரங்கள் ஓடி, இமாலய சாதனையைப் படைத்தது. நடிகர் திலகத்துக்கு ஜோடியாக, முதன்முதலில் சரோஜாதேவி நடித்த இக்காவியத்தில், அனைவரது அபிமான நட்சத்திரங்களும் நடித்திருந்தனர்.

கதை, வசனம் : எம்.எஸ். சோலைமலை

தயாரிப்பு நிறுவனம் / தயாரிப்பாளர் : சரவணா பிலிம்ஸ் / ஜி.என். வேலுமணி

இசை : விஸ்வநாதன் - ராமமூர்த்தி

திரைக்கதை, இயக்கம் : ஏ. பீம்சிங்

வெள்ளி விழா கண்ட ஊர் / அரங்கு : 1 / 1

1. மதுரை - சிந்தாமணி (1560 இருக்கைகள்) - 216 நாட்கள்

100 நாட்களுக்கு மேல் ஓடிய ஊர்கள் / அரங்குகள் : 8 / 10

1. சென்னை - சித்ரா (929 இருக்கைகள்) - 125 நாட்கள்

2. சென்னை - கிரெளன் (1017 இருக்கைகள்) - 104 நாட்கள்

3. சென்னை - சயானி (842 இருக்கைகள்) - 104 நாட்கள்

4. மதுரை - சிந்தாமணி (1560 இருக்கைகள்) - 216 நாட்கள்

5. கோவை - ராயல் (1680 இருக்கைகள்) - 118 நாட்கள்

6. நெல்லை - ரத்னா (1064 இருக்கைகள்) - 100 நாட்கள்

7. சேலம் - ஓரியண்டல் (1210 இருக்கைகள்) - 110 நாட்கள்

8. திருச்சி - பிரபாத் (1289 இருக்கைகள்) - 125 நாட்கள்

9. திண்டுக்கல் - என்.வி.ஜி.பி. (1284 இருக்கைகள்) - 110 நாட்கள்

10. ஈரோடு - ஸ்டார் (1097 இருக்கைகள்) - 100 நாட்கள்

சற்றேறக்குறைய, 35 அரங்குகளில் வெளியான பாகப்பிரிவினை, 1 அரங்கில் 31 வாரங்களும், 9 அரங்குகளில் 100 நாட்களும் அதற்கு மேலும், ஏனைய அரங்குகளில் 50 நாட்களும் அதற்கு மேலும் ஓடிய மெகா மகா ஹிட் காவியம்.

நிறைவாக, அனைவருக்கும் நடிகர் திலகத்தின் பாகப்பிரிவினை திரைக்காவியத்தின் பொன் விழா ஆண்டு நிறைவின் பொன்னான வாழ்த்துக்கள் !

அன்புடன்,
பம்மலார்.

Murali Srinivas
31st October 2009, 12:22 AM
பாளை போல் சிரிப்பும் பக்குவமான குணமும், ஆளழகும் சேர்ந்து வந்த கன்னையனுக்கு இன்று ஐம்பத்து வயது. நூறாண்டு காலம் அவர் வாழ்வார்.

சுவாமி, அருமையான BO தகவல்களுக்கு நன்றி.

இன்னொன்றையும் சேர்த்துக் கொள்ளுங்கள். மதுரையில் ஒரே காலண்டர் வருடத்தில் இரண்டு படங்கள் வெள்ளி விழா கொண்டாடிய சாதனையை முதன் முதலாக நடிகர் திலகம் செய்தது பாகப்பிரிவினை மூலமாகத்தான்.[அதே வருடத்தில் மதுரையில் கட்டபொம்மனும் வெள்ளி விழா]. மற்றவர்களால் ஒரு முறை கூட செய்ய முடியாத சாதனையை நடிகர் திலகம் மதுரையில் மூன்று முறையும், சென்னையில் இரண்டு முறையும் செய்தார் என்பது நான் சொல்லாமலே உங்களுக்கு தெரியும்.

இன்று அக்டோபர் 30. 31 வருடங்களுக்கு முன்பு [1978] இதே நாளில் பைலட் பிரேம்நாத் வெளியானது. ஒரு அந்நிய நாட்டில் நூறு அல்ல இருநூறு அல்ல ஆயிரம் நாட்கள் ! ஆம் இலங்கையில் 1080 நாட்கள் ஓடிய ஒரே படம் பைலட் பிரேம்நாத்.

இலங்கையில் பைலட் பிரேம்நாத் ஓடிய அரங்குகளும் நாட்களும் பட்டியல்

யாழ்பாணம் - வின்சர் - 222 நாட்கள்

கொழும்பு - கேப்பிட்டல் -189 நாட்கள்

கொழும்பு - ராஜேஸ்வரா - 176 நாட்கள்

கொழும்பு - சவோய் - 189 நாட்கள்

இதற்கு பிறகு ஷிப்டிங் முறையில் பைலட் பிரேம்நாத் ஓடிய நாட்கள் - 1080.

கடல் கடந்து வேறொரு நாட்டிலே முதன் முதலாக திரைப்படங்கள் வெளி வர ஆரம்பித்த நாள் முதலாக இன்று வரை இந்த சாதனையை செய்த ஒரே நடிகன் நடிகர் திலகம் மட்டுமே.

சாதனைகளுக்கென்றே பிறந்த சரித்திர நாயகன் புகழ் வாழ்க.

அன்புடன்

P_R
31st October 2009, 12:12 PM
என்ன மொழி நடை ,என்ன பாவம் ..என்ன வேடப்பொருத்தம் ...ஹூம் ..பொறந்து வரணும்.
I can never talk enough about this. So I may repeat what I have said earlier about the quality of acting in a the Satyavan-Savitri episoide. Pls excuse.

10 minutes of sheer brilliance. Impossible to translate.

Actors playing actors is one thing. Actors doing 'bad' acting when they are playing actors is a completelt different thing. For instance when Sivaji plays the roles in Rajapart Rangadurai he is being 'as good' as Sivaji the talented actor himself. On the other hand as the koothu-actor Sivaji is consciously not giving his fullest and is consciously holding back. There is a generous dose of mocking humour where he mimicks the artificiality and loudness that is typical of those performances. The inappropriate pauses in the dialogues, the completely mismatched intonation (பெண்பாவாய்...) unnecessary fillers like அதாகப்பட்டது... were done to perfection.

One cannot be but astounded by Savitri's performance. She had to add another layer to the characterization. Apart from acting bad, she had to be bad at doing that too !! Her movements are graceless even within the internal logic of that stage. Her expressions intentionally do not match up to Sivaji and are further more inappropriate ( ஹையோ....ஸ்வாமீ) and the misplaced pauses are hilariouly (அதைக் கொன்று/பின் சென்று/ விட்டாரே)

It reflects a deep understanding of the art-form being represented, conceptualized by APN, written splendidly. spot-on singing by TMS and Suseela(?) and perfect execution by the best acting talents we have had. An absolute treasure.

rangan_08
31st October 2009, 12:26 PM
"நவராத்திரி 9 நாளும் 9 கூத்து .கடவுள் புண்ணியத்துல 6 நாள் முடிஞ்சு போச்சு ..இன்னிக்கு 7- ம் நாள் ...சத்தியவான் சாவித்திரி ..நான் தான் சத்தியவான் போடுறவன் .." .

..க்காளி .என்ன மொழி நடை ,என்ன பாவம் ..என்ன வேடப்பொருத்தம் ...ஹூம் ..பொறந்து வரணும்.

Joe, and another amazing factor in the film is that his physical stature. He would look with a very normal physique in that koothu kalaignan role & just look at his physique in the Forest Officer role. Yedho gym-muku poi udamba yethuna madhiri chumma ginnunu iruppar !!! :notworthy:

joe
31st October 2009, 12:27 PM
PR,
என் மனதில் இருந்து வார்த்தைகளில் சொல்ல தெரியாததை நீங்கள் அனாயசமாக சொல்லியிருக்கிறீர்கள் :clap:

rangan_08
31st October 2009, 12:28 PM
There is a generous dose of mocking humour where he mimicks the artificiality and loudness that is typical of those performances. The inappropriate pauses in the dialogues, the completely mismatched intonation (பெண்பாவாய்...) unnecessary fillers like அதாகப்பட்டது... were done to perfection.



Un nadayazhagum, udayazhagum, idayazhagummmmm......un kattazhagum, pottazhagummm !!!

saradhaa_sn
31st October 2009, 01:05 PM
டியர் பம்மலார்,

'பாகப்பிவினை' பொன்விழா ஆண்டில் அப்படத்தின் சாதனைகள் அனைத்தும் தேன் துளிகள். அதைச்சேகரித்துத்தரும் தேனீக்களாக நீங்களும் முரளியண்ணாவும் இருக்கையில் என்ன குறை?. வெறுங்கையோடு சண்டைக்குப்போகும் எங்களுக்கு அவை மகத்தான ஆயுதங்களாய் அமைகின்றன. சாதனைகள் மட்டுமல்லாது, அப்படத்தில் அண்ணனின் பெர்ஃபாமென்ஸும் இன்றைக்கும் எல்லோராலும் சிலாகித்துப்பேசப்படுகிறது. நன்றிகள்

டியர் முரளி,

'பைலட் பிரேம்நாத்' படத்தின் 31 வது ஆண்டு நிறைவை நினைவூட்டி, பழைய காலத்துக்குக்கொண்டு சென்றுவிட்டீர்கள். எத்தகைய தீபாவளி அது...!!. பட்டுப்பாவாடை கட்டிய சிறுமியாக வலம் வந்த நாளில், அந்த தீபாவளி வெளியீடுகள் இன்றும் பசுமையாய் நினைவில் உள்ளதே...

பைலட் பிரேம்நாத் - அலங்கார், (மகாராணி, ஈகா).
தச்சோளி அம்பு - சாந்தி
சிகப்பு ரோஜாக்கள் - தேவி பாரடைஸ்
தாய்மீது சத்தியம் - வெலிங்டன்
வண்டிக்காரன் மகன் - கெயிட்டி (3காட்சிகள்), சத்யம் (பகல் காட்சி)
தங்க ரங்கன் - பிளாசா
அதிஷ்டக்காரன் - மிட்லண்ட்
தப்புத்தாளங்கள் - பைலட்
கண்ணாமூச்சி - ஓடியன்
காஞ்சி காமாட்சி - பாரகன் (?)
மனிதரில் இத்தனை நிறங்களா - சித்ரா

அந்த அற்புத நாட்களெல்லாம் திரும்பி வாராதோ...

Waterloo
31st October 2009, 01:09 PM
Sister Saradha

I think you love Pilot Premnath very much ! How good was the movie ? How about Sivaji's performance ? Any review available ?

Waterloo
31st October 2009, 01:11 PM
I am keen to read reviews of Sivaji movies from the date RK / KH became stars. I mean after 75 ? Are they available here ? What was the performance levels of Sivaji then ? Were they matching with the earlier years ? I am sure, he would have collected well at the BO.

P_R
31st October 2009, 01:59 PM
Waterloo, first you make arguments about BO stats. When those are countered then you switch to performance 'quality'. Is it hard to pick a lane ?

btw you only have to read the archives to see the contributing fans in this thread making no bones about the ordinariness of many of Sivaji's later films.

Waterloo
31st October 2009, 02:13 PM
Waterloo, first you make arguments about BO stats. When those are countered then you switch to performance 'quality'. Is it hard to pick a lane ?

btw you only have to read the archives to see the contributing fans in this thread making no bones about the ordinariness of many of Sivaji's later films.

Moderator Sir,

The noof days run details have been posted in MGR site which for strange reasons have been shifted to an argument thread ! :oops:
And there is no lane switching . I have been posting more details of hit stats of MGR.

I went through the archives now but couldnt see any major listing of reviews of Sivaji's late 70s and onwards. A review can be made still no ? Wish to know how he had performed when the next gen started rolling. One thing for sure. Still his movies would have run well. Tks
Probably we take even movies from 70 onwards to see overall how he had performed as an artist . Normally an artist's performance will improve over a period of time and can only do better.Classic examples are RK / KH etc. Wish to know more about Sivaji .

If you can analyse , fine. Otherwise just leave it and be another hubber.

Bala (Karthik)
31st October 2009, 02:13 PM
Nakkeeran Sir, eppadi irukkeenga?

joe
31st October 2009, 02:17 PM
Wish to know more about Sivaji .
Sappa ..mudiyalla :rotfl:

rangan_08
31st October 2009, 02:46 PM
[b][color=blue]பைலட் பிரேம்நாத.

It seems Malini Ponsekha is still active in doing films. An advertisement of one of her recent films came in THE HINDU.

rangan_08
31st October 2009, 02:48 PM
For those who missed.....



( sorry for my thanglish )

Recently when i was passing by near purasawalkam, i spotter this magazine on a news stand. It had a beautiful still from " Pudhiya Paravai " on the cover page. Immediately i grabbed a copy. It's a fantastic treat for all NT fans. Idhayakkani Cinema Special has come out with a " Sivaji Special " in their October 2009 issue. Price Rs.10/- only.

The magazine is packed with excellent & rare photographs of NT, articles by celebrities & famous personalities and many other interesting informations, particularly about the Madurai silai thirappu vizha.

rangan_08
31st October 2009, 02:49 PM
Exerpts from the magazine...

1. A warm welcome to the Madurai function on behalf of V.N Chidambaram & family (Kamala theatre) with a beautiful snap of NT in the background.

2. " Thalapathiyana Sivaji " - Bharathidasan kavidai
" Edhaicholven " - Kannadasan kavidhai

3. Sivajiyai eppozhudhum vazhthuven - article by Arignar Anna ( தம்பி கருணாநிதியின்vasanathal Sivaji Ganesanin nadippu perumai petradhu engirargal. Vasaname illadha padangalil kooda, (எ-டு " Andha Naal " padam ), Sivaji Ganesan arpudhamaga nadithu paaratu petrirukirar - ther's a photograph of NT with Anna.

4. Naanum Sivajiyum naditha nadagam - by கலைஞர் - photos of NT with kalaignar & NT with Kalaignar & Rama.Arangannal.

5. தமிழர்களின் சாயங்கால சந்தோஷம் by Vairamuthu

6. List of films in which NT had done multiple roles

7. Gunachithira nadigar Sivaji - by Kamarajar

8. En Undan pirava sagodharar annan Sivaji - by V.N. Chidambaram. Again we get to see some rare photographs - one in which NT is having a " விருந்து " at Mr. Chidambaram's residence along with VNC & Umapathy.

9. Sivajiyudan S. Varalakshmi - article about SV (still from Thanga Surangam ) who passed away recently. List of films she acted with NT is given - Edhirparadhadhu, Veerapandia Kattabomman, Chanakya Chandragupta (telugu), Bangaru Babu (telugu), Thanga Surangam, Kandhan karunai, Thaai, Savale samali, Cinema paithiyam, Raja raja Cholan, Tharasu ( 11 films altogether )

10. Stunning photographs in the center page - as Veera Sivaji in a Mumbai TV programme, Vanangamudi, Engal Thanga Raja, Appar, Edhiroli, Vietnam Veedu, Padikkadha Medhai & finally a superb & rare still from an unreleased film where NT, in a " Humphrey Bogart " style is leaning in a wall with a big rain coat, a round hat and with a grin on his face. He also stylishly holds a cigarette. I think we all really missed that film :(

rangan_08
31st October 2009, 02:50 PM
11. தம்பியைப் போற்றும் அண்ணா - article by MGR - stills from Koondukili, MGR greets NT when he returns from America, MGR giving a " மலர்ச்செண்டு " to NT and wishing him on getting the Padmashree. Another still of NT with Gemini, MGR, G.N.Velumani & Bhimsingh.

12. Vaari vazhangum paari vallal Sivaji - article by Kirubananda Variyaar - வட நாட்டில் மரியாதைக்காக பெயரோடு "ஜி " சேர்த்துக்கொள்வார்கள். Sivanodu " ji" serthal Sivaji !! Sivaji Ganesan endral Sivanum Ganesanum !!

Sivaji evvalavo udhavi seidhirukkirar. Avatrayellam pattiyal potu kaanbikkum vazhakkam avarukku kidayadhu. எனக்குக் கூட எவ்வளவோ உதவி செய்திருக்கிறார். Veliyil vilambarapaduthum budhi avarukku kidayadhu.

13. Sivaji oru nadippu payirchi nilayam - article by Seliv Jayalalitha - still from Deiva Magan

14. Sivaji patri prabalangal - brief comments on NT by famous personalities including Jawaharlal Nehru, Dr. Radhakrishnan, Periyar, SS Vasan, B.R. Bhanthulu & K.B. Sundarambal. Stills of NT & Nehru, NT with Periyar (during VKB drama - NT in full costumes)

15. Nadigar Thilagam Sivajiyai iyakkiya iyakkunargalin pattiyal - stills of NT with ACT, with BRB (SSR is also seen in this snap) & NT affectionately hugging Bhimbhai.

16. Photo taken during the VKB statue unveiling function in Kayathar. Kamarajar & Sanjeeva Reddy are present.

The Magazine was a real bonanza.

rangan_08
31st October 2009, 03:25 PM
Sheer brilliance...

Mohana goes to Thiruvarur to meet Jillu, knowing that Shanmugam is staying with her. She watches Jillu's " koothu " and even Shanmugam is present there. They exchange hating glances at each other. Then during the koothu's interval she meets Jillu and comes to know the truth and at the same time understands the true love of Jillu.

Now that she is determined to prevent Shanmugam from going to Malaya, she deliberately teases him in front of the audience and throws an open challenge.

Ippo gavanikkanum, thalaivara.....summa kodhichu poiduvaru. Being a short tempered man, Shanmugam readily accepts the challenge. He will be in extreme anger that he will not be able to say the words completely...padhi padhi solluvaru.....like....

yei, irudi, irud (i)....unna vandhu pesikk....yenkitta, yenkit....paakalam..paaka....

He vigorously hits the screen that covers the entrance and leaves. Withing a few seconds, comes back again and warns Mohana.

It's almost more than a decade since i watched the film in theatre and that was a re-re-re-re-re-release. Even at that time itself, the audience response for this scene was amazing. The entire theatre was in uproar and there was deafening whistles and applause. I'm 100% sure that even if the movie is released now or even much later it will get the same kind of response !!!



:notworthy: :clap: :thumbsup:

rangan_08
31st October 2009, 03:37 PM
A'noon came home for lunch. Jaya max was playing, " Andha naal nyabagam nenjile vandadhe, nanbane......."

I know this has been beaten to death here, but still... :D

A neat light coloured striped shirt whose sleeves are carefully rolled up and goes above the elbow. It is perfectly tucked inside a dark coloured pant. A nice belt, shining leather shoes and a simple walking stick. A decent looking grey side burns - and what a magic this man does !!! :cool2:

And when the lyrics goes, " periyavan, siriyavan, nallavan, kettavan - ullavan, ponavan ulagiley parkirom...... ennamey sumaigalai, idhayamey bhaaramai...."

Verum rendu kayya vechikitte pinniyiruppar !!! :notworthy:

parka parka salikkadha oru paatu.


With all those great looks & style, this man has got complete right to deny the saying, " Born with a silver spoon "

joe
31st October 2009, 03:41 PM
Rangan_08 :clap:

NOV
2nd November 2009, 12:26 PM
NT's contributions live on..... even during this IT age. A small sample (just for laughs):

வானம் பொழிகிறது; பூமி விளைகிறது; உனக்கு ஏன் அனுப்ப வேண்டும் எஸ்.எம்.எஸ். என்னோடு கடைக்கு வந்தாயா? செல் வாங்கித் தந்தாயா? ஓசி சிம்கார்டு கொடுத்தாயா? பில் பணமாவது கட்டினாயா? அல்லது உன்னோடு கொஞ்சி விளையாடும் உன் அழகான கேர்ள் பிரண்ட்சுக்கு என் நம்பரையாவது கொடுத்தாயா!! மானங்கெட்டவனே! யாரிடம் கே...ட்கிறாய் எஸ்.எம்.எஸ். எடு உன் செல்லை; போடு அதைக் கீழே; எடு ஒரு கல்லை; கல்லைப் போட்டு நொறுக்கு உன் செல்லை!

:rotfl:

P_R
2nd November 2009, 12:40 PM
:thumbsup: @ rangan_08 Re. TM challenge scene.

abkhlabhi
3rd November 2009, 11:34 AM
[tscii:1a63f6eb77]Beyond the fiasco over the NT’s the so called over acting and BO hero and in some ways the cause, lies an unpleasant truth. The result is that every contention issue ends up in a cacophony instead of a sober debate. The NT fiasco is only the latest example.
First, here are some facts. It is incorrect to say that NT acting was over and he was not a BO hero.
All we have are photos and some articles and studies. (THIS IS ALREADY DONE BY THE GREAT MR.MURALI, MR.PAMMALAR, MR. RAGHAVENDRA, AND MANY OTHERS). According to others(fans), these are inconclusive and subject to varying interpretations. Without thorough research one cannot say that no such existed simply because there are no physical evidence remains since he was lived before IT age. If IT age exist in 60s and 70s itself, who knows we might have strong enough evidence.
It is necessary to correlate data from the wide range of sources including material evidence such as old books, advt., and from other sources.
No comparable research has been done. We are unlikely to find evidence for proving the historicity of NT unless we do the research. This being the case, to argue , because we have no evidence is dogmatic and unscientific. We won’t find any evidence unless we look for it. But we have ample reasons to believe that such evidence can be bound once we are prepared to do the research.
Proved beyond all doubt both the Natural and Over acting and BO (since he has not got any national award), but the same people who are now claiming that NT lacks Natural acting and BO, refused to acknowledge these facts even when proved. Can you convenience such people with any amount of evidence ?
To understand the motives behind the attack on NT and his acting and BO, we need to recognize that NT is more than Personality. He is a symbol of VALUES that all Tamilians, Non Tamilians and TF Industry hold dear. He is a symbol of UNITY. The NT MYTH is not just a personality cult of the founder. TF Industry can exist without NT for he is not its founder. But NT represents the highest values of the Tamilian civilization. HE IS ADARSHA PURUSHOTTAMA.
In attacking NT and everything associated with him the unity and greatness of Tamilians can be destroyed.
We may have gained some time with protests and debates, but it would be a serious error to assume that destruction forces have been fully uprooted. Bad ideas have a way of resurfacing especially when SELF INTEREST is at stake.
So let us understand what really is not stake, it is not whether NT acting was over nor even we can prove he was not a BO hero, but something is far more important - NT is a symbol of the VALUES that we hold sacred. What this campaign represents is on attack on NT as a value more than personality, as a step towards destroying the values and humanity that he stands for.


abkhlabhi

[/tscii:1a63f6eb77]

Waterloo
3rd November 2009, 04:35 PM
http://ithayakkani.com/CPDF/August.pdf

Some nice photos of Madurai function , statue opening ceremony for Sivaji.

VinodKumar's
6th November 2009, 01:11 AM
Sivaji's old radio interview

http://marancollects-music.blogspot.com/

Murali Srinivas
6th November 2009, 10:58 PM
வேட்டைகாரன்புதூர் முத்துமாணிக்கம் அவர்கள் எழுதிய வேட்டைக்கு வந்த சிங்கம் புத்தகத்தின் முதல் இரண்டு அத்தியாயங்கள் படித்தேன். நடிகர் திலகத்தின் வேட்டை அனுபவங்கள் என்று சொன்னாலும் கூட முதல் அத்தியாயத்தில் அவரைப் பற்றி மட்டும் எழுதாமல் திரு.முத்துமாணிக்கம் அவர்களின் குடும்ப சூழல், அவரின் கிராமத்து பின்புலம், அவர் கல்லூரியில் படித்த போது ஈடுபட்ட தொழில் என பலவற்றையும் சொல்கிறது.

இரண்டாவது அத்தியாயம் இன்னும் சுவாரசியம். வேட்டையில் பயன்படுத்தப்படும் துப்பாக்கிகள் என்னென்ன? Double Barrel Gun-ற்கும் Rifle-கும் என்ன வேற்றுமை, தோட்டாக்கள் எத்தனை வகைப்பட்டவை, ரவைகளில் எத்தனை விதங்கள், எந்தெந்த மிருங்களுக்கு எந்தெந்த துப்பாக்கிகளை பயன்படுத்தி சுட வேண்டும், வேட்டைக்கு செல்லும் போது எப்படிப்பட்ட Torch Lights தேவை, வேட்டையின் போது கடைபிடிக்க வேண்டிய முறைகள் என்று பல அரிய தகவல்களை அள்ளி தருகிறது. மரபின் மைந்தன் முத்தையா அவர்களின் நடை சுவை.

அன்புடன்

pammalar
8th November 2009, 05:20 PM
ஆனந்த விகடன் 4.11.2009 இதழில் , விக்ரம் 25 என்கின்ற கட்டுரையில் , நடிகர் விக்ரம் அவர்களைப் பற்றி 25 தகவல்கள் வெளியாகியுள்ளன. அதில் முதல் தகவல் :

"விக்ரமுக்கு மிகவும் உயிரான பாடல் 'பொன்னொன்று கண்டேன் , பெண் அங்கு இல்லை'. தினமும் ஒரு தடவையாவது டி.எம்.எஸ். , பி.பி.எஸ். குரலில் கேட்டு விட்டுத் தான் தூங்குவார் !"

பொன்னான ரசனை !

அன்புடன்,
பம்மலார்.

pammalar
8th November 2009, 05:57 PM
மதுரையின் மிகப் பெரிய திரையரங்குகளில் ஒன்றான சென்ட்ரல் சினிமா திரையரங்கில், 6.11.2009 வெள்ளி முதல் தினசரி 4 காட்சிகளாக , இரட்டை வேட நடிப்புக்கு இலக்கணமாகத் திகழும் , காலத்தை வென்ற காவியமாம் , நமது நடிகர் திலகத்தின் உத்தமபுத்திரன் திரைப்படம் திரையிடப்பட்டு வெற்றி நடை போட்டு வருகின்றது. முதல் நாளான 6.11.2009 வெள்ளியன்றே , கன மழையையும் பெரு வெள்ளத்தையும் பொருட்படுததாமல், பெருங்கூட்டம் அலை மோதியுள்ளது. 6.11.2009 , முதல் நாள் மொத்த வசூல் மட்டும் ரூ. 9890 /- (ஒன்பதாயிரத்து எண்ணூற்றி தொண்ணூறு). பழைய படங்களின் , முதல் நாள் வசூலில் , இது அசுர சாதனை.

இன்று 8.11.2009 ஞாயிறு மாலைக் காட்சிக்கு , மழையையும் மீறி , பெரும் ஜனத்திரள் வரக் கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

விக்ரமனையும் , பார்த்திபனையும் , வெள்ளித்திரையில் என்றென்றும் தரிசித்தே தீர வேண்டும் , என மக்கள் நினைக்கும் போது மழையாவது , வெயிலாவது !!!

அன்புடன்,
பம்மலார்.

pammalar
8th November 2009, 09:18 PM
9.11.2009 , நமது நடிகர் திலகத்தின் நடிப்பில் , மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வியின் இசையில், சித்ராலயாவின் தயாரிப்பில் , ஷ்ரீதரின் கதை , வசனம் , இயக்கத்தில் 9.11.1969 , தீபாவளியன்று வெளியான , பிரம்மாண்ட படைப்பான சிவந்த மண் திரைக்காவியத்தின் 40வது ஆண்டு நிறைவு. நடிகர் திலகத்தின் இமாலய வெற்றிப்படங்களுள் ஒன்றான சிவந்த மண் திரைப்படம் நிகழ்த்திய சாதனைகளில் சில :

சிவந்த மண் , நடிகர் திலகத்தின் 134வது திரைக்காவியம் , 13வது வண்ணப்படம். அயல் நாடுகளில் படமாக்கப்பட்ட முதல் படமான இக்காவியம் , 9.11.1969 ஞாயிற்றுக்கிழமை தீபாவளி தினத்தன்று , சென்னை மற்றும் தென்னாடெங்கும் வெளியானது.

இத்திரைக்காவியம் 50 நாட்களும் அதற்கு மேலும் ஓடிய திரையரங்குகள் :
(28.12.1969 அன்று தினத்தந்தி நாளிதழில் வெளிவந்த 50வது நாள் விளம்பரத்தின் அடிப்படையில்)

1. சென்னை - குளோப் (1282 இருக்கைகள்) - 145 நாட்கள்

2. சென்னை - அகஸ்தியா (1005 இருக்கைகள்) - 117 நாட்கள்

3. சென்னை - மேகலா (984 இருக்கைகள்) - 103 நாட்கள்

4. சென்னை - நூர்ஜஹான் (919 இருக்கைகள்)- 103 நாட்கள்

5. மதுரை - சென்ட்ரல் (1108 இருக்கைகள்) - 117 நாட்கள்

6. கோவை - ராயல் (1680 இருக்கைகள்) - 103 நாட்கள்

7. திருச்சி - ராஜா (728 இருக்கைகள்) - 100 நாட்கள்

8. சேலம் - ஓரியண்டல் (1210 இருக்கைகள்) - 100 நாட்கள்

9. தூத்துக்குடி - பாலகிருஷ்ணா (1102 இருக்கைகள்) - 101 நாட்கள்

10. தாம்பரம் - நேஷனல் (1057 இருக்கைகள்) - 50 நாட்கள்

11. காஞ்சீபுரம் - கிருஷ்ணா (1200 இருக்கைகள்) - 50 நாட்கள்

12. கடலூர் - ரமேஷ் (917 இருக்கைகள்) - 50 நாட்கள்

13. திருவண்ணாமலை - பாலசுப்ரமண்யா (992 இருக்கைகள்) - 50 நாட்கள்

14. வேலூர் - அப்ஸரா (901 இருக்கைகள்) - 54 நாட்கள்

15. பாண்டிச்சேரி - ராமன் (1040 இருக்கைகள்) - 50 நாட்கள்

16. திண்டுக்கல் - என்.வி.ஜி.பி. (1284 இருக்கைகள்) - 66 நாட்கள்

17. காரைக்குடி - அருணாசலா (1017 இருக்கைகள்) - 50 நாட்கள்

18. விருதுநகர் - நியூமுத்து (939 இருக்கைகள்) - 50 நாட்கள்

19. பழநி - சந்தானகிருஷ்ணா (1087 இருக்கைகள்) - 50 நாட்கள்

20. ஈரோடு - முத்துக்குமார் (1220 இருக்கைகள்) - 66 நாட்கள்

21. பொள்ளாச்சி - நல்லப்பா (1130 இருக்கைகள்) - 50 நாட்கள்

22. ஊட்டி - ஏ.டி.சி. (638 இருக்கைகள்) - 66 நாட்கள்

23. ஆத்தூர் - ஷ்ரீதரன் (1112 இருக்கைகள்) - 50 நாட்கள்

24. நாமக்கல் - ஜோதி (741 இருக்கைகள்) - 50 நாட்கள்

25. தர்மபுரி - கணேஷ் (866 இருக்கைகள்) - 50 நாட்கள்

26. பரமத்திவேலூர் - கணேசா (903 இருக்கைகள்) - 50 நாட்கள்

27. தஞ்சாவூர் - ஜூபிடர் (1009 இருக்கைகள்) - 50 நாட்கள்

28. மாயவரம் - கெளரி (1460 இருக்கைகள்) - 50 நாட்கள்

29. கும்பகோணம் - ஜூபிடர் (1137 இருக்கைகள்) - 50 நாட்கள்

30. பட்டுக்கோடை - நீலா (935 இருக்கைகள்) - 50 நாட்கள்

31. நெல்லை - சென்ட்ரல் (1405 இருக்கைகள்) - 76 நாட்கள்

32. நாகர்கோவில் - பயனீர்பிக்சர்பேலஸ் (1088 இருக்கைகள்) - 76 நாட்கள்

33. பெங்களூர் - ஸ்டேட்பிக்சர்ஹவுஸ் - 50 நாட்கள்

34. பெங்களூர் - அஜந்தா - 50 நாட்கள்

35. கொச்சி - ஸ்டார் - 50 நாட்கள்

36. கோட்டயம் - ஆனந்த் - 50 நாட்கள்

37. திருச்சூர் - மாதா - 50 நாட்கள்

38. தெள்ளச்சேரி - பிரபா - 50 நாட்கள்

39. ஆலப்புழை - சாந்தி - 50 நாட்கள்

நமது நடிகர் திலகத்தின் சிவந்த மண் திரைக்காவியம்,

20 வாரங்களுக்கு மேல் ஓடிய அரங்கு : 1

100 நாட்களிலிருந்து 19 வாரங்கள் வரை ஓடிய அரங்குகள் : 8

50 நாட்களிலிருந்து 99 நாட்கள் வரை ஓடிய அரங்குகள் : 30

ஆக, நமது நடிகர் திலகத்தின் சிவந்த மண் , இமாலய வெற்றி பெற்ற மெகா ஹிட் காவியம் என்பது தெள்ளத் தெளிவாகிறது.

சாதனைகள் எனும் சாம்ராஜ்யத்திற்கு , நிரந்தர சக்கரவர்த்தி , சிங்கத்தமிழன் சிவாஜி ஒருவரே !

அன்புடன்,
பம்மலார்.

Murali Srinivas
8th November 2009, 09:52 PM
சுவாமி,

நல்ல செய்தியை, மனம் மகிழும் செய்தியை தந்த உங்களுக்கு மனமார்ந்த நன்றி. இன்று மாலைக்காட்சியில் விக்ரமன் யாரடி நீ மோகினி என்று நடக்கும் போது அலப்பரையால் டவுன்ஹால் ரோடே அதிர்ந்திருக்கும். நீங்கள் சொல்வதை வைத்து பார்க்கும்போது மூன்று மாதங்களுக்கு முன்பு நடிகர் திலகத்தின் நினைவு நாளையொட்டி இதே சென்ட்ரலில் வெளியிடப்பட்ட தங்கப்பதக்கம் பெற்ற ரிகார்ட் வசூலை இது முறியடிக்கும் என்றே தோன்றுகிறது. என்றுமே எங்கள் மதுரை நடிகர் திலகத்தின் கோட்டை என்பதற்கு மீண்டும் ஒரு ஆதாரம்.

இதை எழுதும்போது வேறு ஒன்று நினைவுக்கு வருகிறது. இதே சென்ட்ரல். இதே நவம்பர் 9ந் தேதி. அதுவரை இந்தி படங்களுக்கு மட்டுமே சாத்தியம் என்ற நிலை மாறி முதன் முதலாக ஒரு தமிழ் படம் வெளி நாடுகளில் படமாக்கப்பட்டு வெளியான நாள். ஆம். கலையுலகில் ஒரு புதிய சரித்திரம் எழுதிய சிவந்த மண் வெளியாகி நாற்பது ஆண்டுகள் நிறைவு பெறுகிறது [1969 - 2009]. பாரத மண்ணின் காவிய நாயகன் பாரத் என்ற பாத்திரம் நடிகர் திலகத்தால் உயிர் பெற்ற நாள். முன்பே இங்கே பதிவு செய்தது போல் அந்த சென்ட்ரல் சினிமா சுற்று வட்டாரமே மக்கள் வெள்ளத்தில் மிதந்த நாள். படம் பார்க்க காத்திருந்த அந்த ஒரு வாரமும் எதிர்பார்ப்புகளும் இன்றும் பசுமரத்தாணி.

இனிமையான அந்த நினைவுகள் நெஞ்சில் நிழலாட அந்த நாட்களும் வந்திடாதோ என ஏக்கத்தை தூண்டுகிறது. நல்ல நினைவுகளுக்கு மீண்டும் அழைத்து சென்றதற்கு மீண்டும் நன்றி சுவாமி.

அன்புடன்

rangan_08
9th November 2009, 06:53 PM
" I will sing for you, I will dance for you ...". I don't know the film's name, but this is how the song goes, which was recently played in mega tv. The song featured NT alongwith Manorama & another girl whom i doubt to be Pramila. Or is it Vanishree ?? Not sure :confused2:

I should really than Mega TV because i thoroughly enjoyed this song. NT was so very hilarious and funny. He was sporting a french beard, wearing a banian and a pant which was rolled up. Though the opening words were in English, it was sung in typical classical style by TMS who has done a great job.

HARISH2619
9th November 2009, 07:07 PM
I think it was manidharul manickam where NT played a guest role while AVM rajan was the hero.

NOV
9th November 2009, 07:19 PM
yes, it indeed is in manidharul maanikkam, set to the raaga for sore throats by MSV - Karaharapriya. :lol:

I think a mad pramila will hold a knife and force sivaji to sing, thus I will sing for you I will dance for you :rotfl:

groucho070
10th November 2009, 06:55 AM
Manidharul Manickam...NT not only in guest role, but that of a side comedian as well. Film watchable only for NT. Those b*tching about NT and his over-performance should see this movie, look at AVM Rajan and repent.

saradhaa_sn
10th November 2009, 11:26 AM
'மனிதரில் மாணிக்கம்' படத்தில் கெஸ்ட் ரோல் என்று பெயரே தவிர படம் முழுதும் நடிகர்திலகம் வருவார். முக்கியமான கட்டங்களில் வந்து, படத்தின் கதையோட்டத்துக்கு காரணமாக இருப்பார். ஏ.வி.எம்.ராஜன் ரொம்ப எமோஷனலாக நடித்திருப்பதால், படம் பார்ப்பவர்களுக்கு பெரிய ரிலீஃப் தருவதே நடிகர்திலகம் ஏற்றிருந்த அந்த டாக்டர் பாத்திரம்தான். அவர் வரும் காட்சிகளனைத்தும் நமக்கு விருந்து படைக்கும். குறிப்பாக ' I will sing for you... I will dance for you...' பாடல் காட்சி. ராகேஷ் சொன்னதுபோல, படத்தின் காமெடி பகுதியை நடிகர்திலகம்தான் பூர்த்தி செய்வார். கடைசியில் 'Love is God' என்று சொல்லி குளோசப்பில் சல்யூட் அடித்து படத்தை முடித்து வைப்பதும் அவர்தான்.

(கின்னஸ் சாதனைக்காக, 24 மணி நேரத்தில் எடுக்கப்பட்டு, பெரும்பாலான நடிக, நடிகையர் பங்குபெற்ற "சுயம்வரம்" படத்தில் கார்த்திக் ஏற்றிருந்த அந்த ஞாபகமறதி டாக்டர் ரோல், கிட்டத்தட்ட மனிதரில் மாணிக்கம் படத்தில் நடிகர்திலகம் ஏற்றிருந்த ரோலை நினைவுபடுத்தும். ஆனால் கார்த்திக் கொஞ்சம் ஓவராக போனதால் அது கோமாளித்தனமாகப் போய்விட்டது).

மோகன்.... பிரமீளாவும் வாணிஸ்ரீயும் வித்தியாசம் கண்டுபிடிக்க முடியாத அளவுக்கா அப்படி ஒரே மாதிரி இருக்கிறார்கள்..?.

saradhaa_sn
10th November 2009, 11:51 AM
டியர் பம்மலார்....

சாதனைப்படமான 'சிவந்த மண்' நாற்பதாண்டுகளைப்பூர்த்தி செய்ததற்கான சிறப்புப்பதிவு அருமை. (பத்தாண்டுகள் ஆனமாதிரிதான் இருக்கிறது, அதற்குள் 40 ஆண்டுகள் ஓடி விட்டன....!!!!!!). தியேட்டர் வாரியான இருக்கை விவரங்கள், படம் ஒடிய நாட்களின் விவரங்கள் என சாதனைப் புள்ளி விவரங்கள் மலைக்க வைக்கின்றன.

திட்டமிட்டு செய்யப்பட்ட பொய்ப்பிரச்சாரங்களின் காரணமாக முன்பு இப்படததைப்பற்றி "இது ஓடாத படம்" என்ற ஒரு மாயை பரப்பப்பட்டிருந்தது. அதை நம்பி சிலரும், இத்திரியின் முந்திய பாகங்களில் 'சிவந்தமண் ஒரு ஃப்ளாப் மூவி" என்று வாதிட்டிருந்தனர். அத்தகைய பொய்ப்பிரச்சாரங்களில் இருந்து எல்லோரையும் தெளிய வைக்கும் விதமாக உங்கள் பதிவு அமைந்துள்ளது.

வாழ்த்துக்கள்.... நன்றிகள்.....

RAGHAVENDRA
10th November 2009, 01:58 PM
மனிதரில் மாணிக்கம் - படத்தின் சரியான பெயர். மிகவும் வெற்றிகரமாக பைலட் திரையரங்கில் ஓடிக் கொண்டிருந்த இப்படத்துக்கு போட்டியாக வந்ததும் நம்முடைய படமே. ராஜபார்ட் ரங்கதுரை. முதல் நாள் முதல் காட்சியிலேயே பைலட் தியேட்டரே அதிரும் வண்ணம் அளப்பரை, ஒவ்வொரு காட்சியிலும் புன்னகையுடன் நடிகர் திலகம் தோன்றும் போதெல்லாம் அரங்கமே எழுந்து நின்றாடும். ராயப்பேட்டை நெடுஞ்சாலையில் பைலட் தியேட்டர் பகுதியில் போக்குவரத்து பாதிக்கும் அளவிற்கு அந்தப் படத்திற்கு வரவேற்பிருந்தது. அதன் தொடர்ச்சியாக ராஜபார்ட் ரங்கதுரைக்கும் இருந்தது. என்றாலும் இதை எடுத்து விட்டு அதா என்பதே எங்களின் மன வருத்தமெல்லாம். குறிப்பாக "பெண்ணே உன் கையில் ராஜாங்கம் இருந்தா எல்லோரும் ஆடணுமா, ராஜாதி ராஜரும் ரவிக்கைக்கு பயந்து பின் பாட்டு பாடணுமா" , இந்த வரிகளை திரையரங்கில் கேட்டு பார்த்து ஆர்ப்பரித்த காட்சி இனிமேல் எத்தனை ஜென்மம் எடுத்தாலும் எத்தனை கோடி கொடுத்தாலும் கிடைக்காது.

பம்மலார் முரளி மற்றும் சாரதா உட்பட அனைத்து ரசிக இதயங்களுக்கும் சிவந்த மண் 40வது ஜெயந்தி நல் வாழ்த்துக்கள். குளோப் தியேட்டரில் தீபாவளி கொண்டாடினோம் நாங்கள். நான் ஏற்கெனவே இத்திரியில் கூறியிருந்தது போல, தீபாவளி என்றாலே நடிகர் திலகம் தான் அவர் படம் தான். அவர் படம் வராத தீபாவளி பருப்பில்லாத சாம்பார் போல. இதே நவம்பர் 10, 1969 அன்று மிகவும் சிரமப்பட்டு டிக்கெட்டு கிடைத்து உள்ளே போனால் எல்லோருக்கும் சாக்கலேட் .. உபயம் .. சைதை சிவந்த மண் ரசிகர் மன்றம்... வெளியே மலர் என்ன ... நோட்டீஸ் என்ன ... ஸ்டார்கள் என்ன ... பேனர்கள் என்ன ... அப்போதெல்லாம் இந்த கம்ப்யூட்டர் சமாச்சாரமெல்லாம் கிடையாது. அவரவர் தம் கையில் கஷ்டப்பட்டு சேர்த்து வைத்த காசில் டிக்கெட் போக மிச்சத்தை நோட்டீஸ் அச்சடிக்க கொடுத்து விடுவோம். சாப்பாடு டிபனெல்லாம் நினைவுக்கு வராது. முதல் நாள் முதல் காட்சியில் அதிக ஆரவாரம் பெற்ற காட்சி அந்த செங்கல்பட்டு மலையடிவாரத்தில் ஹெலிகாப்டர் துரத்தும் காட்சிதான். டூப் போடாமல் உயிருக்கு பயப்படாமல் தைரியமாக நடித்து அனைவரின் முகத்திலும் கரி பூசி ரசிகர்கள் நெஞ்சில் பால் வார்த்த காட்சி ... அதன் பின் அந்த மாளிகையில் அணிவகுப்பு ... பின்னர் பட்டத்து ராணி பாடல் ... இவை ஆரவாரத்தை அதிக அளவில் பெற்ற வரிசையில் குறிப்பிடப் பட்டுள்ளன.
இடைவேளையில் ரசிகர்கள் அனைவரின் முகத்திலும் மகிழ்ச்சி ஆரவாரம். படம் முடிந்து வெளிவரும் போது ஆனந்தத்தின் எல்லைக்கே சென்று விட்டோம். எனக்கு நன்கு நினைவிருக்கிறது. நான் பள்ளியில் படித்துக் கொண்டிருக்கிறேன். என் நண்பனிடம் சொன்னேன். இப்படம் 100 நாட்கள் நிச்சயம். வெள்ளி விழா ஒடும். குறைந்தது 20 வாரங்களுக்குக் குறையாமல் கூட்டம் இருக்கும். என் கணிப்பு ஒரளவு பலித்து 154 நாட்கள் 22 வாரம் குளோப்பில் ஓடியது.

வாய்ப்புக்கு நன்றி

ராகவேந்திரன்

HARISH2619
10th November 2009, 02:44 PM
DEAR PAMMAL SIR,
சிவந்த மண் சாதனையை ஒரு வாரம் முன்பாக NT vs mgr திரியில் போஸ்ட் செய்திருந்தால் மிகவும் நன்றாக இருந்திருக்கும்.

ராகவேந்தர் சார்,
உங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொண்டதற்க்கு நன்றி

leosimha
10th November 2009, 04:42 PM
Manidharul Manickam...NT not only in guest role, but that of a side comedian as well. Film watchable only for NT. Those b*tching about NT and his over-performance should see this movie, look at AVM Rajan and repent.

indeed a good movie. I was wondering why did Sivaji act in such a movie but I would he is the fulcrum of the movie. As a Doctor he did well. I thoroughly enjoyed the movie when they put it on Sun TV one afternoon.

abkhlabhi
10th November 2009, 06:07 PM
முதல் நாள் முதல் காட்சியில் அதிக ஆரவாரம் பெற்ற காட்சி அந்த செங்கல்பட்டு மலையடிவாரத்தில் ஹெலிகாப்டர் துரத்தும் காட்சிதான். டூப் போடாமல் உயிருக்கு பயப்படாமல் தைரியமாக நடித்து அனைவரின் முகத்திலும் கரி பூசி ரசிகர்கள் நெஞ்சில் பால் வார்த்த காட்சி


Dear Raghavendra and others,

You have taken back us to 69's. I still remember the Helicapter Scene. This is one scene I like very much. When some scenes or stories made in Tamil or any other languages, normally we say imported from Bollywood or hollywood. I think this one particular scene was not imported or copied from BW / HW. But I have seen this helicapter scene in an HW movie. SM was released 69's and this English movie was released 96's.


The movie name is Broken Arrow, released during Feb' 1996 , starring John Travolta, Christian Slater, etc. The helicapter scene (whole chasing scenen) in this movie is more or less similar to our SM.

saradhaa_sn
10th November 2009, 06:27 PM
Dear NT Devotees...

Due to the 41st 'Sivandha Mann Jayanthi', i think it will be nice to share the sweet memories about some very special scenes of that special movie.........

"சிவந்த மண்" படத்தின் ஒவ்வொரு ஃப்ரேமும் கண்ணில் ஒற்றிக்கொள்ளும்படி அமைந்திருக்கும். அதற்கு அருமையான ஒளிப்பதிவாளர் என். பாலகிருஷ்ணனின் கைவண்னத்தில் CAMERA ANGLES செட் செய்த இயக்குனர் SREEDHAR க்கு பாராட்டுக்கள். சிவந்த மண் என்றதும் பெரும்பாலோர் வெளிநாட்டில் படமாக்கப்பட்ட காட்சிகளையே சொல்வார்கள்

சொல்லப்போனால் வெளிநாட்டுக்காட்சிகளை விட உள்நாட்டில் எடுக்கப்பட்ட காட்சிகளே நம்மை பிரமிக்க வைக்கும். லைட் எஃபெக்டுகள் எல்லாம் அற்புதமாக அமைந்திருக்கும்.

உதாரணத்துக்கு சில:

1) நாகேஷ் - சச்சு நடத்தும் மதுபானக்கடையின் (பார்) அரங்க அமைப்பும், லைட்டிங்கும் ஆங்கிலப்படங்களுக்கு நிகராக அமைந்திருக்கும்.

2) கிளிமாக்ஸ் காட்சியில் ராணுவ ஜீப்கள் அனிவகுத்து வேகமாகப் பறந்து செல்லும் காட்சியமைப்பில் ஒளிப்பதிவு சூப்பர்.

3) எலிகாப்டர் காட்சியிலும், ஒளிப்பதிவாளரின் பங்கு அருமை. இயக்குனரும் கூட. குறிப்பாக, புரட்சிக்காரர்கள் ஓடி வந்து திடீரென்று தரையில் படுத்துக்கொள்ள அவர்களை ஒட்டியே குண்டுகள் வந்து விழும்போது, நம் ரத்தம் உறைந்து போகும். அதுபோல சிவாஜி ஓடிவந்து பள்ளத்தில் குதிக்க, அவர் தலையை உரசுவது செல்லும் எலிகாப்டர். இவற்றில் டைமிங் அருமையாக கையாளப்பட்டிருக்கும்.

4) கப்பலில் வெடிகுண்டு வைக்க புரட்சிக்காரர்கள் செல்லும்போது, கையாளப்பட்டிருக்கும் நைட் எஃபெக்ட் லைட்டிங்கும், கயிறு வழியாக சிவாஜி ஏறுவதை, கப்பலின் மேலிருந்து காட்டும் சூப்பர் ஆங்கிளும். அதே நேரம், கப்பலின் உள்ளே நடக்கும் ராதிகாவின் நடனமும், அதற்கு மெல்லிசை மாமன்னரின் இசை வெள்ளமும்.

5) ரயில் பாலத்துக்கு வெடிகுண்டு வைக்க சிவாஜி போவதை, கீழேயிருந்து படம் பிடித்திருக்கும் அற்புதக்கோணம், அப்போது சிவாஜியின் கால் சற்று சறுக்கும்போது நம் இதயமே சிலிர்க்கும்.

6) ஒளிந்து வாழும் சிவாஜி, தன் அம்மாவைப்பார்க்க இரவில் வரும்போது, மாளிகையைச்சுற்றி அமைக்கப்பட்டிகும் நைட் எஃபெக்ட் லைட்டிங்.

7) நம்பியாரால் கைது செய்யப்பட்டு, சிறைக்கு அனுப்பப்பட்ட சிவாஜி, ஜெயில் அதிகாரியை பிணையாக வைத்துக்கொண்டு, அத்தனை துப்பாக்கிகளையும் தன் வசப்படுத்தியதோடு, தன் கைவிலங்கை துப்பாக்கி குண்டால் உடைத்துக்கொண்டு தப்பிக்கும் காட்சி

8) வாகினி ஸ்டுடியோவில் அமைக்கப்பட்ட, சுழன்று சுழன்று தண்ணீர் ஓடும் ஆறு. அதை இரவு வேளையில் காண்பிக்கும் அழகு.

9) அரண்மனை முன்னால் போராட்டம் நடத்த வந்த கூட்டத்தினரை, துப்பாக்கி ஏந்திய குதிரை வீரர்கள் விரட்டியடிக்க மக்கள் சிதறி ஓடும் காட்சி.

Wow.... What a movie 'Sivandha Mann' is.......!!!!!!!!.

rangan_08
10th November 2009, 07:58 PM
dear harish, nov, groucho, saradha mam & raghavendra sir, thanks for not only giving the movie's name but also for giving some excellent info's about the film.


Congrats for Sivandha Mann 40th year celebrations. It would be a great treat for fans if the movie is re-released now in theatres.

Murali Srinivas
10th November 2009, 11:35 PM
செந்தில்,

முன்பொரு முறை ஜோ அவர்கள் சிவந்த மண் படத்தின் வெற்றி விவரங்களை பற்றி கேட்க அந்த படத்தின் வசூல் விவரங்களைப் பற்றியும் நமது திரியிலே வெளியிட்டோம். சென்ற வருடம் 2008 மார்ச் ஏப்ரல் என்று நினைவு. பின் மீண்டும் ஒரு முறை நமது ஹப்பிலேயே வேறொரு திரியில் அது இடம் பெற்றது. இப்போது வசூல் விவரங்களை தவிர்த்து, ஆனால் தியேட்டர் இருக்கைகளின் எண்ணிக்கையோடு அதை அழகுபடுத்தியிருக்கிறார் நண்பர் சுவாமி அவர்கள். முதலில் பதிவு செய்த போது தொடர் ஹவுஸ் புல் காட்சிகளின் விவரங்கள் கூட இடம் பெற்றது.

ராகவேந்தர் சாரும், சாரதாவும், பாலாவும் படத்தின் சிறப்புகளை வர்ணிக்க மீண்டும் பழைய நினைவுகள். செந்தில், மோகன் ஏன் சுவாமி போன்றவர்களுக்கு இது தெரியுமா என்பது தெரியவில்லை. படம் முதலில் வெளியான போது கிளைமாக்ஸ் முடிந்து அரண்மனை வாசலில் நடிகர் திலகம் மக்களிடையே பேசும் ஒரு காட்சி இருந்தது. நாட்டின் சுதந்திரத்தை பற்றிய ஒரு உரையாக அது அமைந்திருந்தது. முடிவில் நடிகர் திலகம் ஜெய்ஹிந்த் என்று சொல்லி முடிக்க வணக்கம் போடுவார்கள். முதல் சுற்றில் படம் ஓடிய போது இடம் பெற்ற இந்த காட்சி சில வருடங்களுக்கு பிறகு திரையிட்ட போது வெட்டப்பட்டிருந்தது. என்ன காரணம் என்று தெரியவில்லை. அது போல முதல் வெளியீட்டில், இறுதி பாடலான சொல்லவோ [சுசீலா பின்னியிருப்பார்] பாடல் ஆரம்பிப்பதற்கு முன்னால் மிக பெரிய Prelude இடம் பெற்றிருந்தது. சில வருடங்கள் கழித்து வெளியான பிறகு அந்த Prelude இல்லாமல் சட்டென்று ஆரம்பிக்கும்.

செங்கல்பட்டு பக்கத்தில் உள்ள மலையில் ஹெலிகாப்டர் துரத்தும் காட்சி படமாக்கப்பட்ட போது நடிகர் திலகம் நூலிழையில் உயிர் தப்பினார். அது போல வாகினி ஸ்டுடியோவில் அமைக்கப்பட்ட ஏரி செட் உடைந்து தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. அதை சரி செய்து மீண்டும் செட் போட்டார்கள். இந்த படத்தை பற்றி சொல்லிக் கொண்டே போகலாம்.

மோகன் சொன்னது போல் இப்போது தியேட்டர் ரிலீஸ் நடந்தால் ஒரு திருவிழாவை மீண்டும் பார்க்கலாம். அதெல்லாம் நடப்பதற்கு நாம் என்ன மதுரையிலா இருக்கிறோம்?

அன்புடன்

rangan_08
11th November 2009, 11:52 AM
செந்தில்,

முன்பொரு முறை ஜோ அவர்கள் சிவந்த மண் படத்தின் வெற்றி விவரங்களை பற்றி கேட்க அந்த படத்தின் வசூல் விவரங்களைப் பற்றியும் நமது திரியிலே வெளியிட்டோம். சென்ற வருடம் 2008 மார்ச் ஏப்ரல் என்று நினைவு. பின் மீண்டும் ஒரு முறை நமது ஹப்பிலேயே வேறொரு திரியில் அது இடம் பெற்றது. இப்போது வசூல் விவரங்களை தவிர்த்து, ஆனால் தியேட்டர் இருக்கைகளின் எண்ணிக்கையோடு அதை அழகுபடுத்தியிருக்கிறார் நண்பர் சுவாமி அவர்கள். முதலில் பதிவு செய்த போது தொடர் ஹவுஸ்புல் காட்சிகளின் விவரங்கள் கூட இடம் பெற்றது.

yes, i remember that.




ராகவேந்தர் சாரும், சாரதாவும், பாலாவும் படத்தின் சிறப்புகளை வர்ணிக்க மீண்டும் பழைய நினைவுகள். செந்தில், மோகன் ஏன் சுவாமி போன்றவர்களுக்கு இது தெரியுமா என்பது தெரியவில்லை. படம் முதலில் வெளியான போது கிளைமாக்ஸ் முடிந்து அரண்மனை வாசலில் நடிகர் திலகம் மக்களிடையே பேசும் ஒரு காட்சி இருந்தது. நாட்டின் சுதந்திரத்தை பற்றிய ஒரு உரையாக அது அமைந்திருந்தது. முடிவில் நடிகர் திலகம் ஜெய்ஹிந்த் என்று சொல்லி முடிக்க வணக்கம் போடுவார்கள். முதல் சுற்றில் படம் ஓடிய போது இடம் பெற்ற இந்த காட்சி சில வருடங்களுக்கு பிறகு திரையிட்ட போது வெட்டப்பட்டிருந்தது. என்ன காரணம் என்று தெரியவில்லை. அது போல முதல் வெளியீட்டில், இறுதி பாடலான சொல்லவோ [சுசீலா பின்னியிருப்பார்] பாடல் ஆரம்பிப்பதற்கு முன்னால் மிக பெரிய Prelude இடம் பெற்றிருந்தது. சில வருடங்கள் கழித்து வெளியான பிறகு அந்த Prelude இல்லாமல் சட்டென்று ஆரம்பிக்கும்.
:shock: :(



செங்கல்பட்டு பக்கத்தில் உள்ள மலையில் ஹெலிகாப்டர் துரத்தும் காட்சி படமாக்கப்பட்ட போது நடிகர் திலகம் நூலிழையில் உயிர் தப்பினார். அது போல வாகினி ஸ்டுடியோவில் அமைக்கப்பட்ட ஏரி செட் உடைந்து தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. அதை சரி செய்து மீண்டும் செட் போட்டார்கள். இந்த படத்தை பற்றி சொல்லிக் கொண்டே போகலாம். Oh !



மோகன் சொன்னது போல் இப்போது தியேட்டர் ரிலீஸ் நடந்தால் ஒரு திருவிழாவை மீண்டும் பார்க்கலாம். அதெல்லாம் நடப்பதற்கு நாம் என்ன மதுரையிலா இருக்கிறோம்?

அன்புடன் :(

rangan_08
11th November 2009, 12:10 PM
As fans of Nadigar Thilagam, we have immensely enjoyed his performance in various films. Now, I've just tried to list out some of NT's best performance in a particular song sequence, that i liked the most. Hope other's will continue the list.

1. Yaradi nee mohini - Style king !

2. Yaar andha nilavu - I've nothing new to say :)

3. Nalanthana - without any lip movements, see how this man stole the show with just a wink !!

4. Andha naal nyabagam - STYLE ! STYLE !! STYLE !!!

5. Neeyum naanuma kanna & Palooti valatha kili - expressions !

6. Un kannil neer vazhindhal - emotions

7. Devaney ennai parungal - again, walk, style, emotions...

8. Deivame deivame - anxiety, energy, wild joy !!!

9. Sakka podu podu raja - amazing swithover of expression on his face & body language

10. Yarai nambi naan porandhen - you will see only a desperate old man on screen - simply superb !

11. Oh! manida jadhiye, Yen yen yen & Mayakkamenna - just pierces your heart !

12. Ennirandhu 16 vayadhu - enna nada !!!

13. Engey nimmadhi - kaekkanuma, theatre-e chumma adhirumilla !!

14. Kadavul ninaithan mananal koduthan - graceful & subtle movements & eye expressions

15. Kodi asaindhadhum katru vandhadha - the lymping would be very rhythmic. And almost throughout that song he would sport a " vetkam kalandha punnagai " !!

16. Neeya enakku endrum nigaranavan - enna lip movement !!!

17. Malarndhum malaradha - aludhuduven !!

18. 6 maname 6 - ivar ippadi nadikka vendum enbadhu Aandavan Kattalai . Kadal saapidura scene onney podhum

19. All songs featuring NT in Mudhal Mariyadhai - kurippa " Poongathu thirumbuma "

20. Ponmagal Vandhal - style

21. Chinna Chinna kadhal from Once more - very graceful & smart looking

22. Sirippil undagum ragathile - amazing body language & expressions

23. Navarathiri therukoothu - quintessential !!

Sorry !! the films are not given in order - the list will continue...

saradhaa_sn
11th November 2009, 01:21 PM
'சிவந்த மண்' நினைவுகள்.......

வெளிநாட்டில் படப்பிடிப்பு மேற்கொண்ட நாள் முதலே, மக்கள் மத்தியில், குறிப்பாக ரசிகர்கள் மத்தியில் 'சிவந்த மண்' பற்றிய எதிர்பார்ப்பு வளர்ந்து வந்தது. போதாக்குறைக்கு, ஆனந்த விகடன் பத்திரிகையில் நடிகர்திலகம், தான் பங்கேற்ற வெளிநாட்டு படப்பிடிப்பு பற்றி 'அந்நிய மண்ணில் சிவந்த மண்' என்ற தலைப்பில் எழுதிவந்த தொடர் கட்டுரையும் ரசிகர்களின் பல்ஸை எகிற வைத்தது. தன்னுடைய ஒரு சாதாரண படத்தையே அனுபவித்துப் படமாக்கும் இயல்பு கொண்ட இயக்குனரும் தயாரிப்பாளருமான ஸ்ரீதர், சிவந்தமண்ணை அணு, அணுவாக செதுக்கிக் கொண்டிருந்தார். எடுத்தவரையில் அவ்வப்போது போட்டுப் பார்க்கும்போதெல்லாம் படம் அவருக்கு திருப்தியளிக்கவே, படம் தயாராகும்போதே ஒரு முடிவு செய்தார். தன்னுடைய படத்தை தமிழ்நாடு முழுதும், அந்தந்த ஊர்களில் சிறந்த தியேட்டர்களில் திரையிட வேண்டும் என்பது அவரது ஆவலாக இருந்தது. இது விஷயமாக அவ்வப்போது விநியோகஸ்தர்களிடம் கலந்து பேச, அவர்களும் அந்தந்த ஏரியாக்களில் நல்ல தியேட்டர்களாக புக் செய்து வைக்க, படம் தயாரிப்பில் ஏற்பட்ட தாமதம் காரணமாக, ஏற்கெனவே புக் பண்ணி வைத்திருந்த தியேட்டர்கள் கைமாறிப் போய்க்கொண்டிருந்தன.

1969 மே மாதத்திலேயே வெளியிடுவதாக ஏற்பாடு செய்திருந்த படம், நினைத்த வேகத்தில் முடியாததால், பின்னர் ஆகஸ்ட் 15 சுதந்திர தின வெளியீடு என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அப்படியும் முடியவில்லை. முரளி அவர்கள் சொன்னது போல, வாகினி ஸ்டுடியோவில் போடப்பட்டிருந்த ஆற்று வெள்ளம் செட் உடைந்து, வடபழனி கடைகளுக்கெல்லாம் தண்ணீர் புகுந்த சம்பவமும் ஒரு காரணம். (முதலில் ஏன் மே மாதத்தைத் தேர்ந்தெடுத்தார் என்பதற்கு காரணம் அன்றைய ரசிகர்களுக்கு தெரியும். 'அவரது' சொந்தப்படத்தை தன் படத்தால் எதிர்கொள்ள வேண்டும் என்பது ஸ்ரீதரின் எண்ணம். 'அன்று சிந்திய ரத்தம்' என்ற படத்தலைப்பைச்சொன்னால் போதும். அது ஆயிரம் அர்த்தங்கள் சொல்லும். புரியாதவர்கள் விட்டுவிடுங்கள்). இறுதியாக 1969 தீபாவளி வெளியீடு என்று திட்டவட்டமாக அறிவித்து விட்டார். அதற்கேறாற்போல தியேட்டர்கள் புக் செய்யப்பட்டன.

சென்னை மவுண்ட் ரோடு ஏரியாவில் 'குளோப்' தியேட்டர் என்பது கடைசி நேரத்தில் முடிவானதுதான். இப்போது இருக்கும் அதிநவீன தியேட்டர்கள் எல்லாம் அப்போது கிடையாது. தேவி காம்ப்ளேக்ஸ், சத்யம் காம்ப்ளெக்ஸ் எல்லாம் கூட அப்போது இல்லை. இருந்தவற்றில் சிறந்தவைகளாக (சித்ராலயாவின் கோட்டையான) காஸினோ, சாந்தி, ஆனந்த், சஃபையர் காம்ப்ளெக்ஸ் இவைகள்தான். இதில் சாந்தியில் தெய்வமகன், மிடலண்ட்டில் நிறைகுடம் ஓடிக்கொண்டிருந்தன. காஸினோவில் வேறு படம் புக் ஆகிவிட்டது. ஆகவே ஸ்ரீதர் குறி வைத்தது ஆனந்த் தியேட்டரைத்தான். கடைசி நேரத்தில் அது மிஸ்ஸாகிப்போக, வேறு வழியின்றி குளோப் அரங்கை புக் செய்தனர்.

அதே சமயம், வட சென்னையில் அப்போதைக்கு மிகச்சிறந்த தியேட்டராக விளங்கிய 'அகஸ்தியா'வையும், மூன்றாவது ஏரியாவான புரசைவாக்கம் பகுதியில் அப்போதைக்கு சிறந்த தியேட்டராக இருந்த 'மேகலா'வையும் சைதாப்பேட்டையில் 'நூர்ஜகான்' தியேட்டரையும் புக் செய்தனர். குறிப்பாக மேகலா தியேட்டரில் படம் வெளியாகப்போகிறது என்றதும் ரசிகர்களுக்கு ரொம்பவே மகிழ்ச்சி. காரணம், அந்த ஏரியாவில் 'புவனேஸ்வரி' நடிகர்திலகத்தின் கோட்டையாகத்திகழ்ந்ததுபோல, மேகலா, திரு எம்.ஜி.ஆரின் கோட்டையாகத்திகழ்ந்தது. ஏற்கெனவே நான் குறிப்பிட்டதுபோல, அந்த தியேட்டரில் 100 நாட்களைக்கடந்த படங்களின் பட்டியலை ஒரு ப்ளாஸ்டிக் போர்டில் அழகுறப் பதித்து வைத்திருந்தனர். அதில் சிவந்தமண் வெளியாவதற்கு முன் வரை (1964 - 1969) எட்டு படங்கள் 100 நாட்களைக்கடந்து ஓடியதில், 'எதிர்நீச்சல்' படம் தவிர மற்ற ஏழு படங்கள் (வேட்டைக்காரன், பணக்கார குடும்பம், எங்கவீட்டுப்பிள்ளை, ஆயிரத்தில் ஒருவன், அன்பே வா, காவல்காரன், அடிமைப்பெண்) என எம்.ஜி.ஆர். படங்கள்தான். நடிகர்திலகத்தின் நல்ல படங்களெல்லாம் சாந்தி, கிரௌன், புவனேஸ்வரி காம்பினேஷனில் வரும்போது, புவனேஸ்வரிக்குப் போய்விட்டதால் (அல்லது அதைவிட்டால் ராக்ஸி) 'சிவந்த மண்' மூலம் எப்படியும் எதிரியின் கோட்டையில் கொடியேற்றி அந்த போர்டில் இடம் பெற்றுவிட வேண்டும் என்பது ரசிகர்களின் தணியாத தாகமாக இருந்தது. அதிலும் புவனேஸ்வரியில் 'குடியிருந்த கோயில்' 100 நாட்கள் ஓடியதிலிருந்து, அண்ணனுக்கு ஒரு படமாவது மேகலாவில் 100 நாட்களைக்கடந்து ஓடியாக வேண்டும் என்ற ரசிகர்களின் ஆவலைப்பூர்த்தி செய்து, சென்னையில் 100 நாட்களைக்கடந்த நான்கு அரங்குகளில் ஒன்றாக மேகலாவில் 'சிவந்த மண்' 100 நாட்களைக்கடந்து ஓடி, வெற்றிகரமாக அந்த போர்டில் இடம்பெற்றது. மேகலாவில் அந்த போர்டையும், ஷீல்டு காலரியில் 'சிவந்த மண்' 100வது நாள் ஷீல்டையும் பார்க்கும்போது நமக்கு ஒரு பெருமிதம் தோன்றும்.

rangan_08
12th November 2009, 07:10 PM
'சிவந்த மண்' நினைவுகள்.......


அதே சமயம், வட சென்னையில் அப்போதைக்கு மிகச்சிறந்த தியேட்டராக விளங்கிய 'அகஸ்தியா'வையும், மூன்றாவது ஏரியாவான புரசைவாக்கம் பகுதியில் அப்போதைக்கு சிறந்த தியேட்டராக இருந்த 'மேகலா'வையும்

அண்ணனுக்கு ஒரு படமாவது மேகலாவில் 100 நாட்களைக்கடந்து ஓடியாக வேண்டும் என்ற ரசிகர்களின் ஆவலைப்பூர்த்தி செய்து, சென்னையில் 100 நாட்களைக்கடந்த நான்கு அரங்குகளில் ஒன்றாக மேகலாவில் 'சிவந்த மண்' 100 நாட்களைக்கடந்து ஓடி, வெற்றிகரமாக அந்த போர்டில் இடம்பெற்றது. மேகலாவில் அந்த போர்டையும், ஷீல்டு காலரியில் 'சிவந்த மண்' 100வது நாள் ஷீல்டையும் பார்க்கும்போது நமக்கு ஒரு பெருமிதம் தோன்றும்.

:exactly: :clap:

I've seen that famous " Board ". Enga areavache. :D

Avadi to America
12th November 2009, 11:42 PM
ROmba naala sivantha mann padam utter flopnnu nenaichu irunthen..... namakuu therinja pathathu, kettathu and padithathu vachi..... :clap:

tamizharasan
13th November 2009, 12:12 AM
ROmba naala sivantha mann padam utter flopnnu nenaichu irunthen..... namakuu therinja pathathu, kettathu and padithathu vachi..... :clap:

Atleast now you have understood.

கண்ணால் பார்ப்பதும் பொய். காதால் கேட்பதும் பொய். தீர விசாரிப்பதே மெய்.

groucho070
13th November 2009, 07:01 AM
Dear Raghavendra and others,

You have taken back us to 69's. I still remember the Helicapter Scene. This is one scene I like very much. When some scenes or stories made in Tamil or any other languages, normally we say imported from Bollywood or hollywood. I think this one particular scene was not imported or copied from BW / HW. But I have seen this helicapter scene in an HW movie. SM was released 69's and this English movie was released 96's.


The movie name is Broken Arrow, released during Feb' 1996I hate to break it to you, Ab, but that scene was certainly inspired by second James Bond film starring Sean Connery, From Russia With Love (1963). Bond would be chased by this chopper that chases him dangerously close to the ground, and keeps dropping hand grenade on him till our hero assembles a threadbare rifle from his briefcase and shoots the chopper pilot.

Now, do not despair. This scene is not original altogether. The filmakers were inspired by another scene, always named as one of the best action scenes ever, in a Hithcock film called North by Northwest (1959) where Cary Grant would be chased in similar fashion by crop duster.

So, nothing is fresh, but if inspired and remade to the point that it look better than original (as PR mentioned about MMKR's climax and Chaplin's same in Gold Rush) then it is an ultimate tribute. Film industries everywhere in the world can be excused for the OO7-mania and the influences that took place back in the 60s.

The point to be noted is this, whether its this film, Raja, or Tangga Churanggam, NT was NT. At no point did he try to replicate the Hollywood style of acting, or Sean Connery's coolness. He stuck to the plot, script and the needed emotion for the required scenes, and yes that's him most of the time during that scenes, without double!!! I have included this scene amongst the sadism inflicted on his onscreen characters in my recent article :D

joe
13th November 2009, 07:30 AM
தெய்வமகன் - விகடன் விமரிசனம்

இரண்டு மூன்று வேடங்களில் ஒரே நடிகர் தோன்றினால் நிச்சயமாக ஆள்மாறாட்டம், அடையாளக் குழப்பம் போன்ற சிக்கல்களைப் படத்தில் எதிர்பார்க்கலாம். இவற்றில் எதுவும் 'தெய்வ மகனி'ல் இல்லாதது தயாரிப்பாளர்களும் டைரக்டரும் செய்திருக்கும் சாதனை.

அப்பா, அண்ணன், தம்பி ஆகிய மூன்று வேடங்களில் சிவாஜி கணேசன் தோன்றுகிறார். இவர்களில் 'தம்பி சிவாஜி' தான் நடிப்பில் மூத்தவர். பணக்காரச் செல்லப் பிள்ளை பாத்திரம் திரைக்குப் புதிதல்ல; ஆனால், அந்தப் பாத்திரத்துக்கு இவ்வளவு மெருகும் அழகும் தந்து நடிப்பது சிவாஜியின் புதிய சாதனை. ஹோட்டல் நடத்த தந்தையிடம் பணம் கேட்கும்போதும், அண்ணனைக் கண்டு 'தீஃப்... தீஃப்...' (திருடன்) என்று நாகரிகமாகக் கத்தும்போதும் அவர் நடிப்பில் அப்பப்பா... அழகு கொழிக்கிறது.

'அண்ண'னின் பாத்திர அமைப்பு சற்று குழப்பமாக இருக் கிறது. ஆசிரமத்தில் 'பாபா'வின் மேற்பார்வையில் வளர்ந்த பையனை - அதுவும் ஓர் இசை மேதையை - அடிக்கடி டார்ஜான் மாதிரி கொந்தளிக்க விட்டிருக்க வேண்டுமா?


தன்னைப் போலவே முக விகாரத்துடன் பிறந்துவிட்ட குழந்தையைத் தந்தை கொன்றுவிடச் சொல்வது கொஞ்சம் கொடூரமான கற்பனைதான். இருந்தாலும், அதில் ஒரு வலுவான கதை பிறக்கிறது. பணத்துக்காக பையனைப் பிடித்து வைத்து மிரட்டுவது போன்ற அடிதடிக் காட்சிகளைத் திணித்திருக்காவிட்டால், இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.

இருந்தும், இந்தக் குறையே பல அழுத்தமான சம்பவங்களாக மாறி கதையின் வலுவைக் காப்பாற்றுகின்றன. ஒதுக்கப்பட்ட மகன், பெற்றோரைத் தேடி வந்து, திருட் டுப் பட்டமும், துப்பாக்கிச் சூடும் வாங்கிக் கொண்டு ஓடுவது நெஞ்சைச் சிலிர்க்க வைக்கும் காட்சி.

காதலுக்கு ஜெயலலிதா; கவர்ச் சிக்கு விஜயஸ்ரீ.

காதலனிடம் அழுதுகொண்டே 'ஐ டூ லவ்யூ' என்று கூறும்போதும் சரி, காதலனுக்கு சப்போர்ட்டாக அவனுடைய அப்பாவிடம் பேசும் போதும் சரி... ஜெயலலிதாவின் நடிப்பு ரசிக்கும்படி இருக்கிறது.



'சென்சார் தாராளமாக நடந்து கொள்ளவில்லை' என்று குறைப்படு பவர்கள் விஜயஸ்ரீயின் நடனத் தோற்றம் ஒன்றைப் பார்த்துவிட்டுப் பேசினால் தேவலை. இன்னும் என்ன தாராளம் வேண்டும்?

பண்டரிபாயை சரிவரப் பயன்படுத்திக் கொள்ளவில்லை. எதிரியிடம் மாட்டிக்கொண்ட இளைய மகனை மீட்பதற்காக தகப்பனார் பரிதவிப்புடன் பணத்தை எடுத்துக் கொண்டு புறப்பட்டுக் கொண்டிருக்கும்போது, மகனைப் பிரிந்த தாய் (பண்டரிபாய்) நிம்மதியாகத் தூங் கிக் கொண்டிருப்பதாகக் காட்டுவது பொருத்தமாக இல்லை.

பெரிய மண்டபத்தைக் கட்ட ஒரே ஒரு தூணின் பலத்தை நாடியிருக்கிறார்கள்! அந்தத் தூணின் பெயர் சிவாஜி கணேசன்

Plum
13th November 2009, 10:43 AM
'அன்று சிந்திய ரத்தம்' என்ற படத்தலைப்பைச்சொன்னால் போதும். அது ஆயிரம் அர்த்தங்கள் சொல்லும். புரியாதவர்கள் விட்டுவிடுங்கள்
romba theLivA solli irukkInga. Clear-A puriyudhu.
Nothing that today's heroes do is new-nu theriya varudhu - on screen or off screen :-)

Plum
13th November 2009, 10:44 AM
அதில் சிவந்தமண் வெளியாவதற்கு முன் வரை (1964 - 1969) எட்டு படங்கள் 100 நாட்களைக்கடந்து ஓடியதில், 'எதிர்நீச்சல்' படம் தவிர மற்ற ஏழு படங்கள் (வேட்டைக்காரன், பணக்கார குடும்பம், எங்கவீட்டுப்பிள்ளை, ஆயிரத்தில் ஒருவன், அன்பே வா, காவல்காரன், அடிமைப்பெண்) என எம்.ஜி.ஆர். படங்கள்தான்.

medhuvA sollunga, pinnALil, idhaiyE Hub-la quote paNNi avanga dhAn indha vishayathayE kandu pidichA maadhiri, pudhusA solrA maadhiri pEsuvainga avainga ;-)

Plum
13th November 2009, 10:45 AM
"Santhi Crown Bhuvaneswari" was a famous combination even until mid 80's for NT. Even now when someone is introduced as Santhi, I automatically tag "Crown. bhuvaneswari" to their name :-)

Plum
13th November 2009, 10:45 AM
'Globe' dhAnE pinnALil 'Alankar'?

groucho070
13th November 2009, 11:31 AM
அதில் சிவந்தமண் வெளியாவதற்கு முன் வரை (1964 - 1969) எட்டு படங்கள் 100 நாட்களைக்கடந்து ஓடியதில், 'எதிர்நீச்சல்' படம் தவிர மற்ற ஏழு படங்கள் (வேட்டைக்காரன், பணக்கார குடும்பம், எங்கவீட்டுப்பிள்ளை, ஆயிரத்தில் ஒருவன், அன்பே வா, காவல்காரன், அடிமைப்பெண்) என எம்.ஜி.ஆர். படங்கள்தான்.

medhuvA sollunga, pinnALil, idhaiyE Hub-la quote paNNi avanga dhAn indha vishayathayE kandu pidichA maadhiri, pudhusA solrA maadhiri pEsuvainga avainga ;-) :lol:

joe
13th November 2009, 11:43 AM
"Crown. bhuvaneswari"
Many posters we can see this combination.

ஆனா ரொம்ப காலமா 'கிரௌன்' - ஐ 'கி ரெ ள ன்' (KireLen' ன்னு வாசித்திட்டிருப்பேன் :lol:

saradhaa_sn
13th November 2009, 12:01 PM
'Globe' dhAnE pinnALil 'Alankar'?
:exactly:

But now 'Alankar' also demolished and re-structured as a big Offcial Complex.

rangan_08
13th November 2009, 06:47 PM
So, nothing is fresh, but if inspired and remade to the point that it look better than original (as PR mentioned about MMKR's climax and Chaplin's same in Gold Rush) then it is an ultimate tribute.

The point to be noted is this, whether its this film, Raja, or Tangga Churanggam, NT was NT. At no point did he try to replicate the Hollywood style of acting, or Sean Connery's coolness. He stuck to the plot, script and the needed emotion for the required scenes, and yes that's him most of the time during that scenes, without double!!! I have included this scene amongst the sadism inflicted on his onscreen characters in my recent article :D

well said !

rangan_08
13th November 2009, 06:50 PM
[tscii:e76f56fb46]கர்ணன்தான் தன்னோட மூத்த மகன் அப்படீன்னு தெரிஞ்சதும் குந்தி தேவிக்கு அளவு கடந்த மகிழ்ச்சி. உடனே, வேற எதப்பத்தியும் யோசிக்காம, இத்தனை வருஷமா பிரிஞ்சிருந் தன்னோட குழந்தைய பாக்குறதுக்கு கர்ணனின் அரண்மனையை நோக்கி ஓடிப்போறா.

அற்புதமான ஒரு அதிகாலை Silhouette காட்சியில் சூரிய பகவானை வணங்கிக் கொண்டிருப்பார் கர்ணன். பிறகு, அரண்மனைக்குப் போனதும அங்கே குந்தி தேவியை பார்த்து ஆச்சர்யமும் ஆனந்தமும் அடைந்து அவரை அன்பாக வரவேற்று உபசரிப்பார். "அம்மா, உங்களைப் பார்த்ததும் என் உடம்பெல்லாம் புல்லரிக்கிறது", அப்படீன்னு சொல்லுவார். அவருக்கு மட்டுமா ? அந்தக் காட்சியைப் பார்க்கும் நமக்கும் கூட அதே நிலைதான் .

தேரோட்டியின் மகன் என்ற பழிச்சொல் நீங்கி இப்போது தான் ஒரு அரசன் என்கிற சந்தோஷத்திலும் கர்வத்திலும் நெஞ்சு நிமிர்த்தி நிற்கும் அந்த அரசன், தன்னைப் பெற்றவளைப் போல தன்னிடம் பரிவு காட்டும் அந்தத் தாயுள்ளத்தைக் கண்டு நெகிழ்ந்துதான் போய்விடுகிறது.

இந்தக் காட்சியில் தலைவர் அசத்தியிருப்பார் பாருங்க.....நடிப்பின் எல்லைகளையெல்லாம் கடந்து வானளாவி உயர்ந்து நிற்பார். :notworthy: நானெல்லாம் அந்தக் காட்சியை வாயடச்சிப்போய் பார்ப்பேன். வசனம் பேசறது ஒரு பக்கம் இருக்கட்டுங்க, அவரு முகத்துல காட்ற expressions இருக்கே !!!!....கண்ணத்து சதையெல்லாம் அப்படியே பூரிச்சுப் போகும். அந்த பெரிய விழிகளை உருட்டி உருட்டி அதில் ஆயிரமாயிரம் செய்திகளை சொல்வாருங்க ! அப்புறம் அந்தக் குரல் ! கண்களை மூடிக்கிட்டு கேட்டா கூட அந்தக் காட்சியோட தன்மை நமக்குப் புரியும்.

M.V. Rajamma மட்டும் என்ன சாதாரணமானவங்களா ? அவங்களும் அசத்தியிருப்பாங்க. படம் பார்க்கும் நமக்கு இவங்க இரண்டு பேரும் நிஜமாவே தாயும் மகனும்தானா அப்படீன்னு தோனும்.

இது எல்லாத்துக்கும் மேல, Top Class-அ ஒரு scene. குந்தி தேவிதான் தன்னைப் பெற்ற தாய் என்று தெரிஞ்சதும் அவருக்கு தலை சுற்றி மயக்கம் வரும். இப்போ அவரு அப்படியே பக்கத்துல இருக்கும் இருக்கையில் விழுந்திருக்கலாம்,அல்லது காலை மடக்கி தரையில் விழுந்திருக்கலாம். ஆனால் நடிகர் திலகம் என்ன செய்வார் தெரியுமா? வெட்டப்பட்ட ஒரு பெரிய மரம் போல நின்ற நிலையில் இருந்து அப்படியே நிலத்தில் விழுவார். கொஞ்சம் யோசிச்சுப் பாருங்க, அந்த நேரத்தில் அவருக்கு இருந்த சற்று பெருத்த உடல் வாகும், அவர் போட்டிருக்கும் நகைகளின் எடை - இவற்றோடு அப்படியே நிலத்தில் விழுவது என்பது எவ்வளவு வலியையும் வேதனையையும் கொடுக்கக் கூடிய செயல். இருந்தாலும், எந்த சிரமத்தையும் பார்க்காமல் அந்த மகா நடிகன் அதைச் செய்தார். :notworthy:

I would like to add a piece of information here. Anthony Hopkins bagged his Best Actor Academy Award for his role in the film “ Silence of the Lambs “ of which most of you would be aware of. And can you imagine the duration his character appeared in that film – it is just over 25 minutes !!!

ஆனால் இங்கே, நடிப்பு ஒன்று தான் தன் உயிர் மூச்சு என்று வாழ்ந்த அப்பாவியான இந்த மகா கலைஞன், மாங்கு மாங்கென்று நூற்றுக்கணக்கான படங்களில் உயிரைக் கொடுத்து நடிச்சிருக்காரு. அவருக்கு இந்த நாடு என்ன செய்தது ??? :huh:

ஆனால் நம்ம “ Sarkar “ஐ யும் சும்மா சொல்லக் கூடாது. எவ்வளவு சீக்கிரம் அவருக்கு "பத்ம" விருது கொடுத்துட்டாங்க!!! யாருக்குத் தெரியும்? ஒரு வேளை அவர்,"பூப்பரிக்க வருகிறோம்" படத்துக்குப் பிறகு தொடர்ந்து நடிச்சிருந்தா, அவருக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது கூட கொடுத்திருப்பாங்க. பாவம், அவருதான் அதுக்குள்ள அவசரப்பட்டு போய் சேந்துட்டாரு.

வாழ்க பாரத நாடு !!!

Arey baba ! maaf keejiye.

“ Bharath Matha ki Jai “

Ab teek hai na ??

--------------------------------








[/tscii:e76f56fb46]

RAGHAVENDRA
13th November 2009, 07:26 PM
டியர் மோகன்,
தங்கள் போஸ்டிங் நம் அனைவரின் நெஞ்சினிலும் ஒரு இனம் புரியாத உணர்வை ஏற்படுத்தியிருக்கும். அந்த அளவிற்கு நடிகர் திலகத்தின் பால் தங்களுடைய பாசம் வெளிப்பட்டுள்ளது. இதைப் படித்து உணர்ச்சி வயப்படாத சிவாஜி ரசிகர் இருக்க முடியாது.
நடிகர் திலகத்தின் கண்கள் எப்போதும் சிவந்திருக்கும். அதைப் பற்றிப் பலர் பலவாறு கதை கட்டிய காலமும் உண்டு. சமீபத்தில் தான் அதன் காரணம் புரிய வந்தது. அந்த செய்தியைக் கேட்டதும் துடிதுடித்து விட்டேன் நான். இப்படி ஓர் ஆத்மார்த்தமான கலைஞன் ஏன் தமிழ்நாட்டில் வந்து பிறந்தார் என்று மிகவும் வருந்தினேன்.
நடிகர் திலகத்துடன் நெருங்கிய ஒருவர் சொன்ன தகவல்.
படப்பிடிப்பிற்கு நடிகர் திலகம் வந்து விட்டால் உணவு இடைவேளை தவிர மற்ற நேரங்களில் அரங்கை விட்டு செல்ல மாட்டார். குறிப்பாக சோகக் காட்சிகளில் நடிக்கும் போது சில சமயம் தாமதமாகலாம். சக நடிகர் ரீடேக் வாங்கியிருக்கலாம் அல்லது ஏதேனும் தொழில் நுட்ப காரணமாகக் கூட இருக்கலாம். ஆனால் அவ்வளவு நேரமும் அமைதியாக அந்த இடத்திலேயே இருந்து தன்னுடைய பங்களிப்பை செய்து விட்டுத் தொடர்ந்து மற்றவர்களின் நடிப்பையும் கவனிப்பார். இவையெல்லாம் தெரிந்த விஷயம். ஆனால் தெரியாத ஒன்று. அன்றைய தினம் உணர்ச்சி மயமான காட்சி அல்லது சோகக் காட்சி என்றால், வந்த உடனேயே கண்களில் கிளிசரின் ஊற்றிக் கொண்டு விடுவாராம். அவர் நடிக்க வேண்டிய நேரம் வரும் வரை அந்த கிளிசரின் அவர் கண்களுக்குள்ளேயே அடக்கி வைத்திருந்து அவர் நடிக்கும் போது வெளிப்படுத்துவாராம். அவ்வளவு நேரம் அவ்வளவு ஆண்டுகள் அவ்வாறு கிளிசரின் வைத்த கண்களை வைத்து அந்த வேதனையைத் தாங்கிக் கொண்டு அவர் நடித்தைக் கேள்விப் படும் போதே நமக்கு நெஞ்சு பதைக்கிறது. இப்படிப் பட்ட திறமையுள்ள கலைஞனை நமது நாடு எப்படியெல்லாம் கௌரவப் படுத்தியிருக்கிறது என்பதை எண்ணும் போது ....?

ராகவேந்திரன்

pammalar
13th November 2009, 08:19 PM
ராஜபாளையத்தில் உள்ள மீனாட்சி திரையரங்கில் , 12.11.2009 (வியாழன்) முதல் 5 நாட்களுக்கு , தினசரி 4 காட்சிகளாக , நமது நடிகர் திலகத்தின் நீதி திரைப்படம் திரையிடப்பட்டு , வெற்றிகரமாக நடைபெற்று வருகின்றது. கடந்த இரண்டு நாட்களாக , கணிசமான மக்கள் கண்டு களித்து வருகின்றனர். இத்தகவலை எமக்கு அளித்த மதுரை ரசிக நல்லிதயம் திரு. தி. அய்யம் பெருமாள் அவர்களுக்கு உளங்கனிந்த நன்றி !

அன்புடன்,
பம்மலார்.

abkhlabhi
14th November 2009, 10:19 AM
http://balajithoughts.wordpress.com/2009/10/11/thiruvilayadal-1965/

rangan_08
14th November 2009, 12:29 PM
Dear Raghavendra Sir,

I've always been sharing these thought with many people, whenever i get a chance. And, recently i happened to watch Karnan once again and was very much moved. So, i just thought of registering it here in the hub.

It was really shocking to know the reason behind NT's " Sivandha Kangal " !!! I have also come across people who used to blabber some nonsense about his red eyes, and unable to retaliate, i will just stay quiet. Now that you have revealed the reason, i will take them for a ride.

rangan_08
14th November 2009, 12:30 PM
dear pammalar,

good to know that Needhi is making a good run. Chennai is really a cursed city.

rangan_08
14th November 2009, 12:34 PM
In the previous pages, groucho had mentioned about AVM Rajan's over performance in Manidharul Manikkam. I would like to present here Case No.2.

Padmini's " paasa pazham ", military biradhar :banghead:

He appears on screen only for a few minutes, but successfully manages to bring tears of blood in the eyes of audience.

groucho070
16th November 2009, 07:05 AM
Padmini's " paasa pazham ", military biradhar :banghead:

He appears on screen only for a few minutes, but successfully manages to bring tears of blood in the eyes of audience. :lol: Case ellam pooda thevai illa. He already won in "that" therthal...parava illa vittuduvom :lol:

pammalar
16th November 2009, 07:09 PM
நாகர்கோவில் பயோனீர்முத்து திரையரங்கில் , 30.9.2009 முதல் 2.10.2009 வரை 3 நாட்களுக்கு தினசரி 4 காட்சிகளாக, நமது நடிகர் திலகத்தின் கெளரவம் திரையிடப்பட்டு , வெற்றிகரமாக ஓடியுள்ளது. பட வெளியீட்டாளருக்கு ரூ. 3000 /- (ரூபாய் மூவாயிரம்) லாபம் கிடைத்துள்ளது.

மீண்டும் இதே, நாகர்கோவில் பயோனீர்முத்து திரையரங்கில் , 7.10.2009 முதல் 10.10.2009 வரை 4 நாட்களுக்கு தினசரி 4 காட்சிகளாக , நமது நடிகர் திலகத்தின் ராஜா திரையிடப்பட்டு , அத்திரைப்படமும் வெற்றி வாகை சூடியுள்ளது. படத்தை வெளியிட்டவருக்கு ரூ. 3000 /- த்திற்கும் மேல் (ரூபாய் மூவாயிரத்திற்கும் மேல்) லாபம் கிடைத்துள்ளது.

இத்தகவலை , எமக்கு அளித்த ரசிக நல்லிதயம் , திரு. எஸ். ராமஜெயம் அவர்களுக்கு நன்றி !

அன்புடன்,
பம்மலார்.

mr_karthik
18th November 2009, 02:15 PM
நடிகர் திலகத்தின் கண்கள் எப்போதும் சிவந்திருக்கும். அதைப் பற்றிப் பலர் பலவாறு கதை கட்டிய காலமும் உண்டு. சமீபத்தில் தான் அதன் காரணம் புரிய வந்தது. அந்த செய்தியைக் கேட்டதும் துடிதுடித்து விட்டேன் நான். இப்படி ஓர் ஆத்மார்த்தமான கலைஞன் ஏன் தமிழ்நாட்டில் வந்து பிறந்தார் என்று மிகவும் வருந்தினேன்.

நடிகர் திலகத்துடன் நெருங்கிய ஒருவர் சொன்ன தெரியாத தகவல் ஒன்று. அன்றைய தினம் உணர்ச்சி மயமான காட்சி அல்லது சோகக் காட்சி என்றால், வந்த உடனேயே கண்களில் கிளிசரின் ஊற்றிக் கொண்டு விடுவாராம். அவர் நடிக்க வேண்டிய நேரம் வரும் வரை அந்த கிளிசரின் அவர் கண்களுக்குள்ளேயே அடக்கி வைத்திருந்து அவர் நடிக்கும் போது வெளிப்படுத்துவாராம். அவ்வளவு நேரம் அவ்வளவு ஆண்டுகள் அவ்வாறு கிளிசரின் வைத்த கண்களை வைத்து அந்த வேதனையைத் தாங்கிக் கொண்டு அவர் நடித்தைக் கேள்விப் படும் போதே நமக்கு நெஞ்சு பதைக்கிறது. இப்படிப் பட்ட திறமையுள்ள கலைஞனை நமது நாடு எப்படியெல்லாம் கௌரவப் படுத்தியிருக்கிறது என்பதை எண்ணும் போது ....?
WHY...? and FOR WHOM...?

I want to know, why he took this much efforts and troubles to act, when people / audience clearly said (in late 50s itself) that WE ARE MEASURING ALL ACTORS WITH SAME SCALE of talent..?.

Why he was too much punctual in shooting, 6.45 with make-up for 7'O clock shooting ( and even in meeting), when producers are ready to put all actors in same level, who came 10 AM for 7 AM shooting..?.

Because of his utmost care for emotional scenes, did he get good name..?. No. I personally witnessed 99.9% of people in theatres are mentioning the 'bad reason only' for his 'reddish eyes' , when they were shown in close-up. Even ladies were murmuring "see... he is fully '...............' even when he is playing Nadhaswaram" (in TM). Is it possible for fans like us to go to each and everyone there in theatres and explain the real reason..?.

When audience clearly showed by their act, that they were not ready to accept cinema is seperate and real life is seperate, why he played negative rolls in movies and get cursed by female audience..?. (example Pennin Perumai).

When he is not ready to choose and act the 'ALWAYS NALLAVAN ROLL', then why he wanted to enter in politics and got defeated..?.

He was not Nambiar or Asokan or Manohar. He was a HERO, and he must kept his image as HERO.

(a true fan's aadhangam).

HARISH2619
18th November 2009, 07:36 PM
KARTHIK SIR,
I differ from your opinion.If he would have chose to act only in NALLAVAN ROLES ,do you think we w'd have got a chance to watch the roles like barryster rajinikanth,chinnadorai anand etc.. and his cigarette smoking styles ?

RAGHAVENDRA
18th November 2009, 11:01 PM
இன்றைய சிங்கத் தமிழன் சிவாஜி நிகழ்ச்சியில் நிச்சயம் அனைவரின் நெஞ்சும் நெகிழ்ந்திருக்கும், நிறைந்திருக்கும். இலக்கியச் செல்வர் குமரி அனந்தன் அவர்கள் நடிகர் திலகத்துடன் தமக்கிருந்த பாசப் பிணைப்பை உள்ளன்போடும் உண்மையோடும் பகிர்ந்து கொண்ட போது அங்கே வெளிப்பட்டது உண்மையான விசுவாசம். பல நிகழ்ச்சிகளை நினைவு கூர்ந்தார். செல்வந்தராக இருந்தும் தன் மனைவியை அனைவருக்கும் உணவு பரிமாறச் செய்தது தமக்கு மிகவும் நெஞ்சைத் தொட்டதாகச் சொன்னார். கட்டபொம்மன் சிலையினை கயத்தாறில் பார்க்கும் போதெல்லாம் நடிகர் திலகத்தின் நினைவு தம்மை ஆழ்த்துவதாகக் கூறினார். தங்கப் பதக்கம் நாடகம் மூலம் காங்கிரஸ் கட்சிக்கு உதவியதைச் சொன்னார். இப்படி நடிகர்திலகம் பற்றிய நினைவுகளை அவர் நம்மிடம் பகிர்ந்து கொண்ட போது எனக்குள் தோன்றியது, காங்கிரஸில் இன்னும் மனசாட்சியுள்ளவர்களும் நன்றியுணர்வு கொண்டவர்களும் உள்ளனர் என்பதே.
இதையெல்லாம் விட குறிப்பாக ஒரு விஷயத்தை முத்தாய்ப்பாகச் சொன்னார். 1975 அக்டோபர் 1ம் தேதியன்று திருமலைப்பிள்ளை சாலையில் உள்ள பெருந்தலைவரின் இல்லத்தில் நடந்த நிகழ்ச்சி. பெருந்தலைவர் அன்னை இல்லம் செல்ல உத்தேசித்திருந்தார். ஆனால் அங்கிருந்த சிலர் இந்த உடம்பை வைத்துக் கொண்டு போகவேண்டுமா என்று ஆதங்கப் படும் சாக்கில் அவரை போக விடாமல் மனமாற்றம் செய்ய எத்தனித்தனராம். குமரி அனந்தன் அவர்கள் அவர்களை எதிர்த்தாராம். காங்கிரஸ் இயக்கத்தைப் பிரச்சாரம் செய்வதன் மூலம் நடிகர் திலகம் எதிர் கொண்ட பல்வேறு அவமானங்களையும் இன்னல்களையும் எடுத்துக் கூறினாராம். குறிப்பாக எதிர் தரப்பினர் நடிகர் திலகம் பட சுவரொட்டிகளில் சாணம் அடித்ததையும் அதை நடிகர் திலகம் உரமாக ஏற்றுக் கொள்வதாக கூறியதையும் எடுத்துச் சொன்னாராம. இந்த விவாதங்களையெல்லாம் கேட்டுக் கொண்டே அமர்ந்திருந்த பெருந்தலைவர் விருட்டென்று எழுந்து வாகன ஓட்டுனர் ஆறுமுகத்தை அழைத்து வண்டியை நேராக அன்னை இல்லத்திற்கு விடச் சொன்னாராம். அங்கே அன்னை இல்லத்தில் பெருந்தலைவருக்கு ராஜ மரியாதையுடன் சிறப்பான வரவேற்பு கிடைத்ததாம். பெருந்தலைவர் அன்னை இல்லத்தை முழுவதும் சுற்றிப் பார்த்து விட்டு பிறந்த நாள் வாழ்த்துக் கூறினாராம். அதன் பின் நடிகர் திலகத்திடம் சிவாஜி பட்டம் எப்படிக் கிடைத்தது, என்ற விவரங்களையெல்லாம் கூர்ந்து கேட்டுத் தெரிந்து கொண்டாராம்.

பெருந்தலைவர் இறுதியாக கலந்து கொண்ட நிகழ்ச்சியை குமரி அனந்தன் சிலாகித்துக் கூறினார்.

இறுதியாக நடிகர் திலகம் என்றும் நம்மை வாழ்த்துக் கொண்டிருப்பார் என்று கூறிவிட்டு வானத்தைப் பார்த்தார் குமரி அனந்தன்.

அங்கே நாம் பார்த்தது குமரி அனந்தனை அல்ல, அந்தக் கால காங்கிரஸ் தொண்டரை, அந்தக் கால சிவாஜி ரசிகரை, அந்தக் கால தேச பக்தரை ...

நிச்சயம் பலர் கண்கள் பனித்திருக்கும், பலர் உள்ளங்கள் நெகிழ்ந்திருக்கும், பலருக்கு உண்மைகள் புரிந்திருக்கும்...

சிலருக்கு மனசாட்சி உறுத்தியிருக்கும்...

ராகவேந்திரன்

mr_karthik
19th November 2009, 12:27 PM
செந்தில், நீங்க என்னதான் சொன்னாலும்

ஒருவர் தன் இமேஜைப்பற்றி கவலைப்படாமல் நடிப்பது வேறு. இமேஜை வேண்டுமென்றே தாழ்த்திக்கொள்வது வேறு.

வாணி ராணி படத்தில் பாட்டிலும் கையுமாக 'பார்த்துப்போ பார்த்துப்போ' பாடலுக்கு நடித்துதான் தீர வேண்டுமா?. அவ்வளவு பெரிய நடிகராக இருந்தும் கூட 'இந்திப்படத்தில் இருந்தால் என்ன?. தமிழில் அந்தப்பாடலை வெட்டி எறிய்யா' என்று இயக்குனரைப்பார்த்து சொல்லாதது ஏன்?. இரண்டு அருமையான டூயட் பாடல்களை சக நடிகருத் தூக்கிக்கொடுத்து விட்டு 'பார்த்துப் போ' என்ன வேண்டிக்கிடக்கு?. கொஞ்சம் கண்ணை மூடி யோசித்துப்பார்க்கிறேன். இதே கழைக்கூத்தாடி ரோலை 'வேறு ஒருவர்' பண்ணியிருந்தால் எப்படியிருக்கும்?. கழைக்கூத்தாடி ரோலில் கூட புத்தரின் மறு அவதாரமாக நடித்திருக்க மாட்டாரா?. சென்னை தி.நகர் ரசிகனை மாத்திரமல்ல, செங்கபடத்தான் காட்டில் மாடு மேய்ப்பவனைப்பற்றிக்கூட யோசித்து 'அவர்' என்ன அருமையாக காய் நகர்த்தியிருந்தார் என்பதை நினைக்கும்போது, நடிகர்திலகத்தை நினைத்தால் வயிறு பற்றி எரியத்தான் செய்கிறது.

கிளிசரினை அவ்வளவு நேரம் கண்களில் அடக்கி வைத்து, அதன் மூலம் வேதனையை அனுபவித்து, கண்கள் சிவக்க நடித்ததால் அவருக்கு நல்ல பெயரா கிடைத்தது?. மோசமான கெட்ட பெயர்தானே. தெரிந்தும் திரும்ப திரும்ப அதைச்செய்தது ஏன்?.

மக்கள்தான் 'நாங்கள் சினிமா நடிப்பு வேறு, உண்மையான வாழ்க்கை வேறு என்று பிரித்துப்பார்க்க மாட்டோம். நடிப்பைத்தான் உண்மையென்று நம்பி ஏமாறுவோம்' என்று பலமுறை தெளிவாகக்காட்டி விட்டார்களே. அப்படியிருந்தும் அவர்களை நம்பி நெகட்டிவ் ரோல்களை செய்தது ஏன்?.

வசனகர்த்தா எதை எழுதிக்கொடுத்தாலும் பேசி விட வேண்டுமா?. நீதி படத்தில் வயல்காட்டில் வைத்து இவரை குடிகாரன் என்று திட்டும் சுப்பையாவுக்கு இவர் சொல்லும் பதில் காதுகளை கூச வைக்குமே. ஏ.எல்.நாராயணனையும், சி.வி.ராஜேந்திரனையும் பார்த்து 'முதல்ல இந்த வசனத்தை மாத்தி வேறு எழுதுங்கைய்யா' என்று சொல்வதை விடுத்து, நாராயணன் எழுதிக்கொடுத்தாராம் இவர் பேசினாராம்.

அவர் இமேஜைப்பற்றி அவருக்கு கவலையில்லாமல் இருக்கலாம். நமக்கு இருக்கு.

Plum
19th November 2009, 01:10 PM
While I will strongly oppose the view that he shouldnt have acted in negative characters, the glycerine suffering was totally unrequired for the 70's movies. andha moviesku avLO kashtam pattirukkaNumA avasiyam? 60's Bhim Singh tearjerkers ok - even if one has fundamental difference with the director's vision there, and even if we view it through today's prism, they were the pinnacle of their genre and must be respected for that reason. adhukkAga kashtapattirundhA oru artham irukku. Hitler UmanathkellAM ipdi avar kashtapattirundhA, a colossal waste of effort and talent - as Kamal keeps saying "yaanaikku thayir saadham kuduthu kudhtae waste paNNittAnga" :-(

saradhaa_sn
19th November 2009, 03:39 PM
டியர் ராகவேந்தர் சார்,

நேற்றைய 'சிங்கத்தமிழன் சிவாஜி' நிகழ்ச்சியை நானும் பார்த்தேன். குமரி அனந்தன் அவர்களின் ஒவ்வொரு வார்த்தையும் உணர்ச்சிபூர்வமாக வந்து விழுந்தன. பெருந்தலைவர், நடிகர்திலகத்தின் வீட்டுக்குச்செல்ல வேண்டும் என்பதற்காகப்பேசிய குமரி அவர்கள், அதற்கான காரணங்களைச் சொல்லும்போது, 'அவர் இத்தனை காலம் காங்கிரஸுக்கு உழைத்ததற்காக நாம் அவருக்கு என்ன செய்துவிட்டோம்?' என்ற வார்த்தைகள் பொன்னெழுத்துக்களில் பொறிக்க வேண்டியது.

டியர் கார்த்திக்,

ஒரு ரசிகனின் வார்த்தைகளாக உங்களது ஆதங்கம் புரிகிறது. ஆனால் இனி அதைப்பேசி பயன் என்ன?. அவர் மறைந்துவிட்டார். இனி புதிதாக வந்து நடிக்கப்போவதில்லை. எனவே நடித்தவற்றுள் எப்படி நடித்திருந்தார் என்பது பேசுவதுதான் உசிதமே தவிர, ஏன் அப்படி நடித்தார் என்று வாதிப்பதில் பயன் இல்லை. தவிர உங்கள் போஸ்ட்களில் சில வார்த்தைகள் சற்று கடினமாக உள்ளன. அவற்றை எடிட் செய்தால், அல்லது நீக்கினால் நல்லது.

pammalar
19th November 2009, 07:03 PM
நாகர்கோவில் ராஜாஸ் திரையரங்கில் , கடந்த 13.11.2009 (வெள்ளி) முதல் 16.11.2009 (திங்கள்) வரை , 4 நாட்களுக்கு தினசரி 4 காட்சிகளாக , உலக மகா நாயகரின் உயர்ந்த மனிதன் திரைப்படம் திரையிடப்பட்டு , நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. தகவலை அளித்த ராமஜெயம் அவர்களுக்கு எமது நன்றி !

அன்புடன்,
பம்மலார்.

DHANUSU
19th November 2009, 07:39 PM
செந்தில்,

முன்பொரு முறை ஜோ அவர்கள் சிவந்த மண் படத்தின் வெற்றி விவரங்களை பற்றி கேட்க அந்த படத்தின் வசூல் விவரங்களைப் பற்றியும் நமது திரியிலே வெளியிட்டோம். சென்ற வருடம் 2008 மார்ச் ஏப்ரல் என்று நினைவு. பின் மீண்டும் ஒரு முறை நமது ஹப்பிலேயே வேறொரு திரியில் அது இடம் பெற்றது. இப்போது வசூல் விவரங்களை தவிர்த்து, ஆனால் தியேட்டர் இருக்கைகளின் எண்ணிக்கையோடு அதை அழகுபடுத்தியிருக்கிறார் நண்பர் சுவாமி அவர்கள். முதலில் பதிவு செய்த போது தொடர் ஹவுஸ் புல் காட்சிகளின் விவரங்கள் கூட இடம் பெற்றது.

ராகவேந்தர் சாரும், சாரதாவும், பாலாவும் படத்தின் சிறப்புகளை வர்ணிக்க மீண்டும் பழைய நினைவுகள். செந்தில், மோகன் ஏன் சுவாமி போன்றவர்களுக்கு இது தெரியுமா என்பது தெரியவில்லை. படம் முதலில் வெளியான போது கிளைமாக்ஸ் முடிந்து அரண்மனை வாசலில் நடிகர் திலகம் மக்களிடையே பேசும் ஒரு காட்சி இருந்தது. நாட்டின் சுதந்திரத்தை பற்றிய ஒரு உரையாக அது அமைந்திருந்தது. முடிவில் நடிகர் திலகம் ஜெய்ஹிந்த் என்று சொல்லி முடிக்க வணக்கம் போடுவார்கள். முதல் சுற்றில் படம் ஓடிய போது இடம் பெற்ற இந்த காட்சி சில வருடங்களுக்கு பிறகு திரையிட்ட போது வெட்டப்பட்டிருந்தது. என்ன காரணம் என்று தெரியவில்லை. அது போல முதல் வெளியீட்டில், இறுதி பாடலான சொல்லவோ [சுசீலா பின்னியிருப்பார்] பாடல் ஆரம்பிப்பதற்கு முன்னால் மிக பெரிய Prelude இடம் பெற்றிருந்தது. சில வருடங்கள் கழித்து வெளியான பிறகு அந்த Prelude இல்லாமல் சட்டென்று ஆரம்பிக்கும்.

செங்கல்பட்டு பக்கத்தில் உள்ள மலையில் ஹெலிகாப்டர் துரத்தும் காட்சி படமாக்கப்பட்ட போது நடிகர் திலகம் நூலிழையில் உயிர் தப்பினார். அது போல வாகினி ஸ்டுடியோவில் அமைக்கப்பட்ட ஏரி செட் உடைந்து தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. அதை சரி செய்து மீண்டும் செட் போட்டார்கள். இந்த படத்தை பற்றி சொல்லிக் கொண்டே போகலாம்.

மோகன் சொன்னது போல் இப்போது தியேட்டர் ரிலீஸ் நடந்தால் ஒரு திருவிழாவை மீண்டும் பார்க்கலாம். அதெல்லாம் நடப்பதற்கு நாம் என்ன மதுரையிலா இருக்கிறோம்?

அன்புடன்



Long time no see dear Friends! Glad to note that the NT thread is marching ahead.

A few more information on Sivanda Mann.

1. The film was a bilingual (Hindi and Tamil). In Hindi version Rajendra Kumar was the hero and NT dawned the role played by Muthuraman in Tamil version.

2. Sridhar himself had mentioned in one of his interviews that NT, because of reflex, escaped unhurt when the chopper flew very close his head. 'Had something happend the sin will continue to haunt several generations of my family' was the statement made by him.

3. According to Chitralaya Gopu, Sivaji was very casual and unassuming during the shooting in foreign locations. He used to carry some of the items/equipment, as engaging casual labour would be very exhorbitant for the producer.

One more general information on NT (as told by CV Rajendran in a TV programme).

During the making of "Yengirundho Vandhal" one day during lunch break CVR with some hesitation came to NT.

NT: Yenna samacharam.

CVR: Anne! ore vishayam. ippo yenakku oru scene thideernu manasula udhayamaachu. Adha yeppidi ungha kitta solradhunnu theriyala.

NT: Summa solluda.

CVR: Illa. indha scenela unghalukku nadikka scope kidayaadhu. Ungalukku ninaivu thirumbina udane vara scene idhu. JJ yaarunnu ungalukku theriyaadhu. Avanga oru oru incidenta ungha kitta solli 'theriyala' 'theriyala' appadinnu kettukitte varuvaanga. Neenga adhukku 'theriyala' appadinnu mattum sollanum. Camera avangala mattumdhan focus pannum, close up avangalukkudhan. Ungha face pakka vattula dhan varum. Aana scene nalla varum appadinnu yenakku nambikkai irukku.

NT: Adhukkenna. Scene nalla varum appadinna nee sonna maadhiriye nadikkaren.

The scene was also shown after the narration and as told only JJ was focussed and NT was hardly visible, restraining to mono syllables.

AVANDHAAN NADIGAN

joe
19th November 2009, 10:00 PM
நாகர்கோவில் ராஜாஸ்

நாகர்கோவில் ராஜேஷ் ..நடிகர் திலகத்தின் கோட்டை.

Murali Srinivas
19th November 2009, 10:46 PM
Warm Welcome Dhanusu. Where were you all these days? Hope you continue to be active here.

One small nit picking. It was not CVR but ACT who was the director for Engirundho Vandhal and he was the one who suggested to NT that the scene be created like this.

Raghavender Sir,

It was very poiganant to read about Kumariyaar's comment. It has come from his heart because he knows that if Congress is still an active force in Tamil Nadu, it is due to NT and his fans.

Regards

pammalar
20th November 2009, 04:52 PM
நாகர்கோவில் ராஜாஸ்

நாகர்கோவில் ராஜேஷ் ..நடிகர் திலகத்தின் கோட்டை.

நாகர்கோவில் சுவாமி திரையரங்கமே, தற்பொழுது ராஜாஸ் என்று பெயர் மாற்றம் கண்டுள்ளது.

நாகர்கோவில் சுவாமியில் இளையதிலகத்தின் இமாலய வெற்றிப்படமான சின்னதம்பி வெள்ளி விழா கண்டது.

அன்புடன்,
பம்மலார்.

joe
20th November 2009, 06:05 PM
நாகர்கோவில் சுவாமி திரையரங்கமே, தற்பொழுது ராஜாஸ் என்று பெயர் மாற்றம் கண்டுள்ளது.

ஓ! தகவலுக்கு நன்றி :D சுவாமி திரையரங்க பெயர் மாற்றம் நான் அறிந்திருக்கவில்லை :oops:

HARISH2619
20th November 2009, 06:40 PM
VALLAL THILAGAM
http://vikatandiary.blogspot.com/2009/10/blog-post_23.html

NADIGAR THILAGATHTHIN NANKODAI
http://vikatandiary.blogspot.com/2009/10/blog-post.html

pammalar
20th November 2009, 07:06 PM
Thanks a lot Mr. Harish ! Both the links are simply outstanding !!

Our NT is a perfect philanthropist to the core !!!

Regards,
Pammalar.

pammalar
20th November 2009, 07:26 PM
நாகர்கோவில் ராஜாஸ்

நாகர்கோவில் ராஜேஷ் ..நடிகர் திலகத்தின் கோட்டை.

நாஞ்சில் மாநகராம் , நாகர்கோவிலே நமது நடிகர் திலகத்தின் கோட்டை தானே !

கோலிவுட்டை பொறுத்தவரை , நாகர்கோவில் ஒரு B சென்டர்.

1952 முதல் 1978 வரை, நாகர்கோவிலில், நடிகர் திலகத்தின் 100 நாள் படங்கள் :
(திரைக்காவியம் - 100 நாள் ஒடிய அரங்கு - ஓடிய நாட்கள் என்கின்ற ஃபார்மெட்டில்)

1. வீரபாண்டிய கட்டபொம்மன் - பயோனீர் பிக்சர்பேலஸ் - 118 நாட்கள்

2. பாவமன்னிப்பு - பயோனீர் லட்சுமி - 103 நாட்கள்

3. பாசமலர் - பயோனீர் சரஸ்வதி - 112 நாட்கள்

4. திருவிளையாடல் - பயோனீர் தங்கம் - 111 நாட்கள்

5. எங்கள் தங்க ராஜா - ராஜேஷ் - 102 நாட்கள்

சாதனைகள் எனும் சாம்ராஜ்யத்திற்கு நிரந்தர சக்கரவர்த்தி சிங்கத்தமிழன் சிவாஜி ஒருவரே !

அன்புடன்,
பம்மலார்.

joe
20th November 2009, 08:30 PM
நாஞ்சில் மாநகராம் , நாகர்கோவிலே நமது நடிகர் திலகத்தின் கோட்டை தானே !

ஆம் பம்மலார் ! அன்று மட்டுமல்ல ..இன்றும் அதே நிலை தான் :D

நடிகர் திலகத்தின் அஸ்தி நாகர்கோவிலிருந்து கன்னியாகுமரி கொண்டு சென்ற போது நாஞ்சில் நகரே குலுங்கியது.

pammalar
20th November 2009, 08:46 PM
1979 முதல் 1999 வரை, நாஞ்சில் நகரில் , நடிப்புலகச் சக்கரவர்த்தியின் 100 நாள் படங்கள் :
(திரைக்காவியம் - 100 நாள் ஒடிய அரங்கு - ஓடிய நாட்கள் என்கின்ற ஃபார்மெட்டில்)

1. தேவர் மகன் - சக்கரவர்த்தி - 102

2. படையப்பா - சக்கரவர்த்தி - 100

குறிப்பு :

1. மெகாஹிட் காவியமான தியாகம், பயோனீர் பிக்சர்பேலஸில் வெளியாகி 77 நாட்கள் வெற்றிகரமாக ஓடியது. பின், பயோனீர் தங்கம் தியேட்டருக்கு ஷிப்ட் செய்யப்பட்டு , அங்கு 28 நாட்கள் வெற்றிகரமாக ஓடியது. ஆக மொத்தம், 105 வெற்றி நாட்கள்.

2. இருபதாம் நூற்றாண்டின் இமாலய ஹிட் காவியமான திரிசூலம், ராஜேஷில் வெளியாகி 77 நாட்கள் வெற்றிகரமாக ஓடியது. பின்னர், யுவராஜ் தியேட்டருக்கு ஷிப்ட் செய்யப்பட்டு , அங்கு 28 நாட்கள் வெற்றிகரமாக ஓடியது. ஆக, 105 வெற்றிகரமான நாட்கள்.

3. மெகா மகா வெற்றிப்படமான படையப்பா, சக்கரவர்த்தியில் 100 நாட்கள் ஓடிய பின்னர், பயோனீர் முத்து தியேட்டருக்கு மாற்றப்பட்டு, அங்கே 25 நாட்கள் நல்ல வரவேற்புடன் ஓடியது. ஆக, 125 வெற்றி நாட்கள்.

சாதனைகள் எனும் சாம்ராஜ்யத்திற்கு நிரந்தர சக்கரவர்த்தி சிங்கத்தமிழன் சிவாஜி ஒருவரே !

அன்புடன்,
பம்மலார்.

Murali Srinivas
23rd November 2009, 11:24 PM
சில நாட்களுக்கு முன்னால் கர்ணன் படத்தின் பாடல் காட்சிகள் மட்டுமே பார்ப்பது என்று முடிவு செய்து [thanks to NOV and Rakesh who had seen the movie in Astro Gold Channel] பார்க்க தொடங்கியவுடன் கூட இருந்தவர்களின் விருப்பதிற்கேற்ப சில பல காட்சிகளும் சேர்ந்துக் கொண்டன. அதைப் பற்றி எழுத வேண்டும் என்று நினைத்திருந்த போது நண்பர் மோகன் அந்த தாய் மகன் சந்திக்கும் காட்சியை மிக அழகாக எழுதியிருந்தார். குறிப்பாக அந்த கீழே விழும் இடம், அதை உவமைபடுத்தியிருந்த விதம் அருமை.

அதை அடுத்து அவர் தாயிடம் இரண்டு வரம் கேட்கும் காட்சி. அதிலும் இரண்டாவது வரம். அப்போது அவர் திரும்பி நின்று ஒரு கையை பேழையின் மேல் ஊன்றி, காமிரா அவரை கீழிருந்து பார்க்க, சொல்லுவாரே இன்று ஒரு முறைதானே எனக்கு தாயின் மடியில் தலை சாய்த்து படுக்க முடிந்தது. நான் இறந்த பிறகு மறுமுறையும் என்னை மடி மீது கிடத்தி மகனே மகனே என்று நீங்கள் உரத்த குரலில் அழ வேண்டும் என்று சொல்லும் போது அந்த கண்கள், அந்த முகத்தில் வந்து போகும் பாவங்கள், அந்த தழுதழுக்கும் ஆனால் கம்பீரம் குறையாத குரல் எல்லாம் எத்தனை தடவை பார்த்தாலும் அலுக்காத காட்சி. அதை கேட்டவுடன் குந்தி மகனே என்று, புறம் காண்பித்து நிற்கும் மகனை தழுவி கொள்ள, காமிராவிற்கு முதுகை காண்பித்துக் கொண்டே முகத்தை மட்டும் இடது பக்கவாட்டில் சிறிதாய் திருப்பும் நடிகர் திலகம். இடது கண் மட்டுமே பார்வையாளனுக்கு தெரிகின்ற அந்த கோணத்திலும் மனதில் உள்ள உணர்வுகளை அப்படியே பிரதிபலிக்க நடிகர் திலகத்தால் மட்டுமே முடியும். எத்தனை தடவை பார்த்திருப்போம்! ஆனாலும் மீண்டும் மீண்டும் ஒரு புதிய அனுபவத்தை பார்வையாளனுக்கு பகிர்ந்து கொடுக்க நடிகர் திலகத்தால் மட்டுமே முடியும்.

மீண்டும் பேசுவோம்.

அன்புடன்

RAGHAVENDRA
24th November 2009, 06:01 AM
டியர் முரளி சார்,
தாங்கள் கூறியுள்ளது போல் நடிகர் திலகம் ஒரு மனோரஞ்சித மலர். எத்தனை முறை முகர்ந்தாலும் ஒவ்வொரு முறையும் புதிய மணம் வீசும் மலரே மனோரஞ்சிதம். அது போன்று ஒவ்வொரு முறையும் புதிய கோணங்களில் நடிகர் திலகத்தின் நடிப்பு நமக்கு புதிய அனுபவங்களைத் தருகிறது, புதிய பாடங்களைத் தருகிறது, புதிய ரசனையைத் தருகிறது ....
நேற்று திங்கட்கிழமை ஜெயா தொலைக்காட்சியின் சிறப்புத் தேன் கிண்ணம் நிகழ்ச்சியை வியட்நாம் வீடு சுந்தரம் தொகுத்து வழங்கினார். பெரும்பாலானவை நடிகர் திலகத்தின் பாடல்களே. இருந்தாலும் ஒரு புதிய தகவல் நம்மை மெய்மறக்க, மெய்சிலிர்க்கச் செய்கிறது.
சட்டி சுட்டதடா பாடல் காட்சி ... படமாக்கப் பட்ட இடம் பாறைகளாலான பகுதி... காமிராவைப் பொருத்திப் படமாக்க சரியான வசதி, வழி, இடம் யாவும் இல்லாத சூழ்நிலை. இயக்குநர் சங்கரும் ஒளிப்பதிவாளர் தம்புவும் சேர்ந்து முடிவெடுத்தபடி அப்பாடல் முழுவதும் கிரேனிலேயே படமாக்க தீர்மானிக்கப்பட்டது. அதே போல் முழுப்பாடலையும் - நடுவில் வரும் உள்ளரங்க தொகுப்புக் காட்சி தவிர - வெளிப்புறப் படப்பிடிப்பு முழுவதும் கிரேனிலேயே படமாக்கப் பட்டுள்ளது. எண்ணற்ற முறை அப்பாடலைப் பார்த்துள்ள நாம், இத்தகவலைக் கேட்ட பின் இப் பாடலைப் பார்த்த பொழுது உண்மையிலேயே மலைப்பாக உள்ளது. காமிரா தொழில் நுட்பம், கோணங்கள் இவற்றுக்கேற்றவாறு அதுவும் கிரேனிலேயே முழுப்பாடலுக்கும் ஒளிப்பதிவு செய்யப்படும் போது அதற்கேற்றவாறு நடிப்பதென்பது நடிகர் திலகத்தால் மட்டுமே முடியும். இப்படி திரைக்கலையின் அத்தனை தொழில் நுட்பங்களையும் தெரிந்து கொண்டும், முந்திரிக்கொட்டைத்தனம் செய்யாமல், அதிகப் பிரசங்கித்தனமாக நடந்து கொள்ளாமல், மேதாவி போல் காட்டிக் கொள்ளாமல், நிறைகுடம் தளும்பாது என்ற மொழிக்கேற்ப, இயக்குநர் மாலுமியைக் கடவுள் போல் பாவித்து தொழில்பக்தியைக் காட்டி இன்றைக்கும் இறவாப்புகழோடு வாழும் நடிகர் திலகத்திற்கு ரசிகர்களாய் நாம் இருப்பதில் மட்டற்ற மகிழ்ச்சியும் பெருமையும் ஏற்படுகிறது.
வாய்ப்புக்கு நன்றி.
ராகவேந்திரன்

RAGHAVENDRA
26th November 2009, 08:24 PM
நாளை 27.11.2009 மாலை 6.30 மணிக்கு வின்டேஜ் ஹெரிடேஜ் அமைப்பின் சார்பில் உறுப்பினர்களுக்கான காட்சியாக நடிகர் திலகத்தின் 2வது படமான பணம் திரையிடப்படுகிறது. சென்னை மயிலை ராமகிருஷ்ணா உயர்நிலைப் பள்ளி விவேகானந்தர் ஹாலில் நிகழ்ச்சி நடைபெறுகிறது. வின்டேஜ் ஹெரிடேஜ் அமைப்பு மாதந்தோறும் 1940 மற்றும் 50களில் வெளியான தமிழ்த் திரைப்படங்களை ஆய்வு செய்து கலந்துரையாடும் நிகழ்ச்சியாக மாதந்தோறும் நடத்தி வருகிறது. வியாபார நோக்கம் சிறிதுமின்றி தமிழ்த்திரையுலகின் அந்தக் காலசிறப்புகளை எதிர் வரும் தலைமுறைக்கு எடுத்துச் சொல்லும் நோக்கத்துடன் இந்த அமைப்பு நிறுவப்பட்டுள்ளது. பல ஆண்டுகளாக நடைபெற்று வரும் இந் நிகழ்ச்சிகளை இந்தத் தலைமுறையினர் பயன் படுத்திக் கொண்டு அந்தக் காலத் திரைப்படங்களைப் பற்றிய பல்வேறு தகவல்களையும் நினைவுகளையும் தெரிந்து கொள்ளலாம்.

ராகவேந்திரன்

DHANUSU
27th November 2009, 07:30 PM
டியர் முரளி சார்,
தாங்கள் கூறியுள்ளது போல் நடிகர் திலகம் ஒரு மனோரஞ்சித மலர். எத்தனை முறை முகர்ந்தாலும் ஒவ்வொரு முறையும் புதிய மணம் வீசும் மலரே மனோரஞ்சிதம். அது போன்று ஒவ்வொரு முறையும் புதிய கோணங்களில் நடிகர் திலகத்தின் நடிப்பு நமக்கு புதிய அனுபவங்களைத் தருகிறது, புதிய பாடங்களைத் தருகிறது, புதிய ரசனையைத் தருகிறது ....
நேற்று திங்கட்கிழமை ஜெயா தொலைக்காட்சியின் சிறப்புத் தேன் கிண்ணம் நிகழ்ச்சியை வியட்நாம் வீடு சுந்தரம் தொகுத்து வழங்கினார். பெரும்பாலானவை நடிகர் திலகத்தின் பாடல்களே. இருந்தாலும் ஒரு புதிய தகவல் நம்மை மெய்மறக்க, மெய்சிலிர்க்கச் செய்கிறது.
சட்டி சுட்டதடா பாடல் காட்சி ... படமாக்கப் பட்ட இடம் பாறைகளாலான பகுதி... காமிராவைப் பொருத்திப் படமாக்க சரியான வசதி, வழி, இடம் யாவும் இல்லாத சூழ்நிலை. இயக்குநர் சங்கரும் ஒளிப்பதிவாளர் தம்புவும் சேர்ந்து முடிவெடுத்தபடி அப்பாடல் முழுவதும் கிரேனிலேயே படமாக்க தீர்மானிக்கப்பட்டது. அதே போல் முழுப்பாடலையும் - நடுவில் வரும் உள்ளரங்க தொகுப்புக் காட்சி தவிர - வெளிப்புறப் படப்பிடிப்பு முழுவதும் கிரேனிலேயே படமாக்கப் பட்டுள்ளது. எண்ணற்ற முறை அப்பாடலைப் பார்த்துள்ள நாம், இத்தகவலைக் கேட்ட பின் இப் பாடலைப் பார்த்த பொழுது உண்மையிலேயே மலைப்பாக உள்ளது. காமிரா தொழில் நுட்பம், கோணங்கள் இவற்றுக்கேற்றவாறு அதுவும் கிரேனிலேயே முழுப்பாடலுக்கும் ஒளிப்பதிவு செய்யப்படும் போது அதற்கேற்றவாறு நடிப்பதென்பது நடிகர் திலகத்தால் மட்டுமே முடியும். இப்படி திரைக்கலையின் அத்தனை தொழில் நுட்பங்களையும் தெரிந்து கொண்டும், முந்திரிக்கொட்டைத்தனம் செய்யாமல், அதிகப் பிரசங்கித்தனமாக நடந்து கொள்ளாமல், மேதாவி போல் காட்டிக் கொள்ளாமல், நிறைகுடம் தளும்பாது என்ற மொழிக்கேற்ப, இயக்குநர் மாலுமியைக் கடவுள் போல் பாவித்து தொழில்பக்தியைக் காட்டி இன்றைக்கும் இறவாப்புகழோடு வாழும் நடிகர் திலகத்திற்கு ரசிகர்களாய் நாம் இருப்பதில் மட்டற்ற மகிழ்ச்சியும் பெருமையும் ஏற்படுகிறது.
வாய்ப்புக்கு நன்றி.
ராகவேந்திரன்


In this connection I wish to quote the incident narrated by Shankar-Ganesh.

After recording of the song NT told he would not act in that scene, saying the song seems disrespectful with 'ada' in every line. K Shankar and MSV pursuaded NT to act in this song and as usual NT gave his flesh and blood to this song sequence.

NT the directors actor

1. Quoted by Director Durai.

During the making of "Thunai" NT used to insist on Durai to enact the scene and the later used to hesitate for obvious reasons. NT would tell him 'look you are the director of the movie and I will act according to your wish'. How many actors would make such a statement?

2. Quoted by ACT.

During the making of 'Babu' on one particular day ACT made NT to pull the rickshaw for a whole day. At the end of the shooting NT told him 'Thrilok, I am not a professional rickshaw puller. Dont tax me like this. My chest is paining'. Look the way NT, a mega star then, spoke to the director. Then only it dawned on ACT that he committed a great blunder by making NT pulling the rickshaw for a whole day under hot sun.

3. NT: A true artist.

Quoted by 'Chithralaya Gopu'

NT had come to see a drama acted by the above. The person had dawned the role of a singer (Bhagavathar) in the drama. After the drama was over the artistes were anxiously awaiting NT to visit the green room. But he did not turn up. Instead, NT's car driver informed Gopu that NT wanted him to come to his house at once. Gopu reached NT's house in a confused state, where he was given a warm welcome by Mrs and Mr Sivaji who also served him the dinner much to his joy! NT mentioned to him that it is very difficult to sing and act on the stage, which Gopu did well on the day and hence the dinner party.

4. NT: A great observer

Quoted by VVS

After listening to the narration of "Vietnam Veedu" the first question asked by NT to VVS was " Whose shirt are you wearing?". A stunned VVS confessed that since he had no good shirts he had borrowed a shirt from his friend.

5. NT: with nice sense of humour

Quoted by ARS.

During one the plays of UAA, NT was sitting on the stage during the invocation of God prior to the commencement of the drama. After the song was sung NT commented 'I really admire God. He has been bearing with your symphony, for so long a period!!'

6. NT: admired by MGR

Quoted by Kalaignanam.

After the completion of "Mirudanga Chakravarthi" it was screened to MGR in a special preview show. After the movie was over, MGR did not get up from his seat nor did he speak anything. There was deafening silence everywhere for about 5 minutes. None dared to open his mouth. Kalaignanam was in utter confusion whether he has committed any mistake in the movie but did not dare to ask MGR. Finally MGR broke his silence saying 'No actor in the world can match Sivaji, even in the years to come. Go and tell this to thambi'. On hearing this all heaved a sigh of relief and also wondered at the admiration MGR had for Sivaji.

Plum
27th November 2009, 07:34 PM
With all the respect he had for his directors, one just wishes he got a better set of directors than the ones he actually got, with due respect.

rangan_08
28th November 2009, 05:37 PM
Raghavendra sir, I too saw Mr Kumari Anandan's programme in Singathamizhan Sivaji. The way he expressed the incidents & the scenes supporting his speech was superb !

Murali Sir, glad to know that you enjoyed watching Karnan yet again.

rangan_08
28th November 2009, 05:43 PM
I've heard people saying that MGR won his best actor National award for Rickshawkaran and i also remember reading about it somewhere, long ago.

Anyway, i just " wiki" ied to get it confirmed. And, YES !!! it is true. According to the winner's list, the year is 1972, Actor M.G. Ramachandran and the film is Rickshawkaran. Unbelievable !!

இன்னாயா நாயம் இது ? அப்போ நம்ம பாபு வல்ச்சிகினதுக்குப் பேரு ரிச்சா இல்லையா ? இல்லைனா அவருதான் வஸ்தாதான ரிச்சாக்காரன் இல்லையா ?

Of course, there ought to be dirty politics behind this. But, I'm curious to know what actually happened and how the fans reacted.

joe
28th November 2009, 06:29 PM
எத்தனை நாளுக்கு தான் இந்த கேலிக்கூத்து தேசிய விருது பத்தி திரும்ப திரும்ப பேசுவீங்க :(

Murali Srinivas
28th November 2009, 11:22 PM
Mohan,

As Joe had mentioned, there had been lot of discussion on this in our thread itself. Since everybody could guess what must have transpired there, it needs no mention again.

But one thing that I want to correct is, everyone who is writing about that year's awards say that Babu was the movie which had gone for the competition. But as for as I know the movie that was sent for award consideration was Savaale Samali. In fact when the awards were announced in 1972 [awards were for 1971], Cho ran a series of articles in his Thuglak comparing both Savaale Samali and Rickshawkaran.

I am not sure if Babu was there but my understanding is it was not there. But yes even without Babu, performance in Savaale Samali itself definitely deserves the award.

Regards

rangan_08
29th November 2009, 01:10 PM
Joe, it's not that I'm keen to dig out some old garbage. Really, I've never come across this topic being discussed in this thread. Else, I wouldn't have raised this doubt.

Murali sir, I have metioned Babu only to co-relate the " Rickshawkaran " character. I have no knowledge about the movies that contended in that year. And, needless to say about NT's silent & cool performance in Savaley Samali :thumbsup:

Sorry for bringing out this " unwanted" subject. Let's keep moving.