PDA

View Full Version : New Singer Reeta



R.Latha
20th January 2009, 01:39 PM
நினைத்தது ஒன்று நடந்தது ஒன்று

பொதுவாய் தமிழ்த் திரையுலகில் பாடகர்கள் தமிழர்களாய் இருக்கமாட்டார்கள். மலையாளமோ, தெலுங்கோதான் அவர்களது தாய்மொழியாக இருக்கும். இல்லாவிடில் இந்தியிலிருந்து ஃப்ளைட் ஏற்றி கூட்டி வருவார்கள். ஆனால் சற்றே ஆச்சரியமாக ஒரு தமிழ்ப் பெண், தமிழ் சினிமாவில் தமிழ்ப் பாடல்களைப் பாடிக்கொண்டிருக்கிறார். தமிழ் மட்டுமல்லாது தெலுங்குப் படங்களிலும் பாடி `சிறந்த பாடகி' விருது பெற்றிருக்கிறார்.

ரீட்டா. ஒரிஜினல் பெயர் சுச்சரிதா தியாகராஜன். திரைக்காக ரீட்டா என்று பெயரை மாற்றி வைத்திருக்கிறார்.

``சுசித்ரான்னு ஒரு பாடகி இருக்காங்க. என் பேரும் அது மாதிரியே இருந்தா குழப்பம் வரும்னு மாத்திக்கிட்டேன்.'' பேச்சே பாடுவதுபோல் இருக்கிறது.

`கண்ணுக்குள் ஏதோ' என்ற `திருவிளையாடல் ஆரம்பம்' படப்பாடலும் `ஒரு நாளைக்குள் எத்தனை கனவோ' என்ற `யாரடி நீ மோகினி' படப்பாடலும் இவர் பாடியதில் சூப்பர் ஹிட் பாடல்கள்.

``எனக்கு சின்ன வயசிலேயே மியூசிக் மேல ஆர்வம் வந்துடுச்சு. எங்கம்மா அற்புதமா வீணை வாசிப்பாங்க. எங்க வீட்டுல எப்பவுமே வீணையின் இசை கேட்டுக்கிட்டே இருக்கும். அந்தச் சூழல்ல வளர்ந்ததுனால எனக்கு இயற்கையாகவே பாட்டுப் பாடற ஆர்வம் வந்தது'' என்கிறார் ரீட்டா. இந்துஸ்தானி இசையும் கர்நாடக சங்கீதமும் பயின்றிருக்கிறார்.

இவரது முதல் திரை அனுபவம் `அந்நியன்' படத்தில் கிடைத்தது. கோரஸ் பாடகியாக, ஹாரிஸ் ஜெயராஜ் இசையில்.

எப்படி கிடைத்தது அந்த வாய்ப்பு?

``ஸ்டெல்லாமேரிஸ் கல்லூரியில் ஃபைன் ஆர்ட்ஸ் படித்துக் கொண்டிருந்தேன். கல்லூரியில் நடக்கும் கலை விழாக்களில் கலந்துகொண்டு பாடுவேன். அப்படி ஒரு விழாவுக்கு வந்திருந்த பாடகர் ஸ்ரீனிவாஸ் என் குரலைக் கேட்டுவிட்டு `நீ திரைப்படங்களில் பாட முயற்சிக்கலாமே. உன் குரலை சி.டி.யில் பதிவு செய்து இசையமைப்பாளர்களிடம் கொடு' என்றார். அதன்படி சி.டி. செய்து, ஹாரிஸ் ஜெயராஜிடம் கொடுத்தேன். உடனே அழைப்பு வந்துவிட்டது. பாடல் பாட அல்ல, கோரஸ் பாட. `கண்ணும் கண்ணும் நோக்கியா' பாடலில் வரும் கோரஸ் பாடினேன். அதுவே பெரிய வாய்ப்பு. அதன்பிறகு இமான் இசையில் சில பாடல்கள். அதில் `கண்ணுக்குள் ஏதோ' பாடல் சூப்பர் ஹிட்டாகிவிட்டது. தனுஷ்-ஸ்ரேயா நடித்த அந்தப் பாடல் காட்சியை சேனல்கள் ஒளிபரப்பிக்கொண்டே இருந்தன. அதேபோல் யுவன்ஷங்கர் ராஜாவின் `ஒரு நாளைக்குள் எத்தனை கனவோ' பாடலும்.
இதில் தனுஷும் நயன்தாராவும். இந்தப் பாடலும் பெரிய ஹிட்'' என்று உற்சாகமாய் சொல்லும் ரீட்டா, விஜய்யின் இவ்வருட பொங்கல் ரிலீஸ் படமான `வில்லு'விலும் பாடியிருக்கிறார். `வாடா மாப்பிள்ளை' என்ற சூப்பர் குத்துப்பாட்டை பாடியிருப்பது இவர்தான்.

``இது தேவி ஸ்ரீபிரசாத் மியூசிக்கில் பாடியது. இந்த வருஷம் இது பெரிய ஹிட்டாகப் போகுது'' என்று சொல்லும்போது அவர் முகத்தில் மகிழ்ச்சி.

ரீட்டா மறக்கமுடியாத அனுபவ மாய் நினைப்பது, இளையராஜா இசையில் பாடியதைத்தான். ``யுவன் ஷங்கர் ராஜாதான் என்னை ராஜா சார்கிட்ட அறிமுகப்படுத்தி வச்சார். ரொம்ப பயபக்தியுடன் பாடப் போனேன். அத்தனை பெரிய ஜீனியஸ், ரொம்ப எளிமையா பழகுகிறார். அவரோட இசைல தனம், உளியின் ஓசை, அஜந்தா, மயில், ஜகன்மோகினின்னு நிறைய படத்துல பாடியிருக்கிறேன்.'' ரீட்டாவின் தந்தை எஸ்.தியாகராஜன் விளையாட்டு விமர்சகர். பிரபல ஆங்கில நாளிதழில் துணை ஆசிரியராக இருக்கிறார்.

``பெரிய கிராஃபிக் டிசைனரா வரணும்னுதான் நினைச்சேன். நான் பாடகியாக மாறுவேன்னு நினைக்கலை. ஆனால் கடவுள் வேறு மாதிரி நினைச்சிருக்கிறார். நான் பாடகியாகிவிட்டேன்'' என்கிறார் ரீட்டா.

கடவுள் அருளால் தமிழுக்கு ஒரு தமிழ்ப் பாடகி கிடைத்துவிட்டார்.

http://www.kumudam.com/magazine/Kumudam/2009-01-21/pg7.php

Plum
20th January 2009, 03:19 PM
The last time a daughter of a sports journalist in an Indian english newspaper came to playback was Anuradha Sriram. Interesting trend

dinesh2002
20th January 2009, 06:39 PM
yaare pa intha paapa reetha?? what songs she sang??