PDA

View Full Version : Podhigai TV



R.Latha
23rd March 2009, 12:51 PM
பெண்ணே உனக்காக



பொதிகை தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் காலை 8.15 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பெண்களுக்கான நிகழ்ச்சி "பெண்ணே உனக்காக.''

ஒரு பெண் வாழ்க்கையில் பல வகையில் பரிணமிக்கிறாள். அதோடு அவள் உடல் நலத்தோடு திகழும்போது அப்பெண் மட்டும் நலமாக இருக்கிறாள் என்றில்லை. அந்தப் பெண்ணை சார்ந்திருக்கும் சுற்றத்துக்கும் அது பயனுள்ளதாக அமைகிறது.

பெண்களுடைய உடல் நலம் பற்றிய விழிப்புணர்வு இருந்தாலே உடல்நலக்குறைவு வராமல் காத்துக்கொள்ள முடியும். அதை உறுதிப்படுத்தும் விதத்தில் பிரபல மகப்பேறு மருத்துவர் `ஜெயம்' கண்ணன் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு விளக்கம் அளிக்கிறார்.

P_R
23rd March 2009, 11:05 PM
kadhai nEram on podhigai too !!

Dunno what timings. Today the story was the one about the Tajmahal trip. Mounika and Mohanraman. I have seen it earlier though, very poignant story and well enacted. Dunno whose story it is.

R.Latha
24th March 2009, 11:23 AM
கதை நேரம்

மக்கள் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி, பாலு மகேந்திராவின் `கதை நேரம்'.

மிகச் சிறந்த தமிழ்ச் சிறுகதைகளை திரைமொழியில் சொல்லும் உன்னத படைப்புகளின் தொகுப்புதான் இந்த கதை நேரம். தினம் ஒரு சிறுகதையை எடுத்து அதை உணர்வு பூர்வமாக தந்திருக்கிறார் பாலு மகேந்திரா.

முடிவே தெரியாத நெடுந்தொடர்கள் போல் காத்திருக்க வேண்டிய அவசியமில்லை. ஒரு சிறுகதை 7 மணிக்கு தொடங்கினால் 7.30 மணிக்கு முடிந்து விடும்.

மூன்றாம்பிறை, வீடு, சந்தியாராகம், வண்ணவண்ண பூக்கள் போன்ற மிகச்சிறந்த திரைப்படங்களை தமிழ்த் திரையுலகுக்கு தந்த பாலுமகேந்திரா, சிறுகதைகளையும் ஒரு திரைப்படத்துக்கு உரிய நேர்த்தியுடன் காட்சிப்படுத்தியிருக்கிறார்.

R.Latha
24th March 2009, 11:24 AM
Prabhu Ram

hello, Now u know the timing right.

P_R
24th March 2009, 12:28 PM
:ty: