PDA

View Full Version : Thenkachi. ko. Swaminadhan is dead



Shakthiprabha
16th September 2009, 03:57 PM
சென்னை: பிரபல எழுத்தாளரும் ரேடியோ-தொலைக்காட்சி பேச்சாளருமான தென்கச்சி கோ. சுவாமிநாதன் காலமானார்.

[html:f18c71165f]
http://www.sunnetwork.org/suntv/programs/breakfastshow/intha_naal_iniya_naal/image01.jpg
[/html:f18c71165f]

தென்கச்சியார் என்று வாசகர்களாலும், வானொலி நேயர்களாலும் அன்புடன் அழைக்கப்பட்ட இவர் தமிழ்நாடு அரசுப் பணியில் விவசாய அலுவலராக வாழ்க்கையைத் தொடங்கி, பின்னர் 1977ம் ஆண்டு முதல் 1984ம் ஆண்டு வரை திருநெல்வேலி வானொலி நிலையத்தின் பண்ணை இல்ல ஒலிபரப்புப் பிரிவில் உதவி ஆசிரியர் பணியாற்றினார்.

பின்னர் அதே பிரிவின் ஆசிரியராகிசென்னைவானொலிக்கு வந்து, அதன் உதவி இயக்குனராக பதவி உயர்வு பெற்று பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்.

எளிய குட்டிக்கதைகள் மூலம், வானொலியிலும் தொலைக்காட்சியிலும் இவர் வழங்கிய 'இன்று ஒரு தகவல்' நிகழ்ச்சி தமிழர்களிடையே மிகப் பிரபலம்.

http://thatstamil.oneindia.in/news/2009/09/16/tn-thenkachi-ko-swaminathan-no-more.html

Shakthiprabha
16th September 2009, 03:57 PM
:bow:

I feel Ive lost a part of my childhood memories.
Rest in peace. :bow:

hamid
16th September 2009, 04:00 PM
ivar voice kekkatha aal yaarum TN-la irukka maatanga.. RIP.. I never knew he was hospitalised.. it is a shock to me.. innamum avar voice en kaathula olikkira maathiriye irukku.. unique voice..

Madhu Sree
16th September 2009, 04:01 PM
Oh gud old childhood memories... :|

RIP... :( :bow: :(

wrap07
16th September 2009, 04:07 PM
Rest in peace
:notworthy:

Designer
16th September 2009, 04:31 PM
Ivar sollum kathaigaL swaarasyamaagavum, payanuLLathaagavum irukkum. RIP

Sourav
16th September 2009, 04:36 PM
RIP... :( :bow: enga school function-ku vanthiruntharu one time!

Dinesh84
16th September 2009, 06:09 PM
RIP :( .. Have met him once in person..

Thirumaran
16th September 2009, 06:16 PM
RIP :(

Almost a Daily routine to listen to his stories daily in Radio during childhood times.

Roshan
16th September 2009, 07:36 PM
RIP :(

aanaa
17th September 2009, 02:51 AM
:notworthy:

ஆத்மா சாந்தியடைய பிராத்திப்போமாக!!





புகழ்பெற்ற பேச்சாளரும்,எழுத்தாளருமான தென்கச்சி.கோ.சுவாமிநாதன் அவர்கள் உடல்நலக்குறைவுற்று சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் இன்று(16.09.2009)இயற்கை எய்தினார்.

அரியலூர் மாவட்டம் தென்கச்சிப்பெருமாள் நத்தம் என்ற ஊரில் பிறந்த கோ.சுவாமிநாதன் அவர்கள் வேளாண்மைப் பட்டதாரி ஆவார்.நெல்லை வானொலியில் அறிவிப்பாளராகப் பணியைத் தொடங்கிய இவர் தமது எளிமையான குரல்வளத்தால் நடிகர்திலகம் சிவாஜிகணேசன் உள்ளிட்டவர்களால் மதிக்கப்பட்டவர்.சென்னை வானொலி நிலையத்தில் இன்று ஒரு தகவல் நிகழ்ச்சி வழியாக உலகத் தமிழர் உள்ளங்களில் நிலையான இடம் பிடித்தவர்.திரைப்படங்களிலும் தொலைக்காட்சியிலும் நடித்தவர்.

மக்கள் தொலைக்காட்சியில் சென்ற ஆண்டு இவர் பிறந்த ஊருக்கு அழைத்துச்சென்று இவரின் இளமைக்கால வாழ்க்கையப் படமாக்கினர்.இவர் தம் பிறந்த ஊரில் ஊராட்சி மன்றத் தலைவராகவும் இருந்தவர்.செல்வ வளம் கொண்ட இவர் எளிமையாக வாழந்தவர்.இவர் மனைவியுடன் சென்னையில் வாழ்ந்து வந்தார்.ஒரே மகள் இவருக்கு.

மயிலாடுதுறையில் நடந்த ஒரு திருமண விழாவில் இலக்கிய வீதி இனியவன் ஐயா அவர்களுடன் தென்கச்சியாரைக் கண்டு வணங்கியுள்ளேன்.எங்கள் ஊருக்கும் அவர் ஊருக்கும் ஐந்து கல் தொலைவு இருக்கும்.எங்கள் பகுதியினரான கண்ணியம் இதழாசிரியர் கோ.குலோத்துங்கள் அவர்கள் தென்கச்சியாரின் வாழ்க்கைக்குறிப்பைப் படத்துடன் தம் இதழில் வெளியிட்டார்.அவருடன் இணைந்து எடுத்துக்கொண்ட படம் என்னிடம் உள்ளது.பிறகு வெளியிடுவேன்.

தென்கச்சியாரை இழந்து வருந்தும் குடும்பத்தினர், நண்பர்கள்,உறவினர்கள்,இலட்சக் கணக்கான வானொலி நேயர்களுக்கு என் ஆழ்ந்த இரங்கல் உரியதாகும்.

jovemac
17th September 2009, 09:56 AM
அவருடைய மறைவு ஒரு பேரிழப்பாகும்...

Benny Lava
17th September 2009, 10:35 AM
RIP :(

saradhaa_sn
17th September 2009, 03:49 PM
தென்கச்சியார் என்றாலே எல்லோருக்கும் நினைவுக்கு வருவது அவரது புகழ்பெற்ற 'இன்று ஒரு தகவல்' நிகழ்ச்சி. தொலைக்காட்சிகளில் அவர் தென்படுவதற்கு முன், வானொலியில் தன் குரல் வளத்தாலும், சிந்தனையைத் தூண்டும் கருத்துக்களாலும் அனைவரையும் கவர்ந்த மனிதர். தென்கச்சியார் இன்று என்ன தகவ்ல் சொல்லப்போகிறார் என்று வானொலியின்முன் ஆவலோடு காத்திருந்தவர்கள் பலர். 'இதைச்சொல்லும்போது எனக்கு ஒரு கதை ஞாபகம் வருது' என்று சொல்லியே நிறைய குட்டிக் கதைகள் மூலம் தான் சொல்ல வந்த கருத்தை நம் மனதில் பதிய வைத்தவர். அலங்காரச் சொல்லாடல்கள் இல்லாமல் எளிய தமிழில் யதார்த்தமாக பேசியவர்.

இன்றைய தகவல் அவரது மறைவுச்செய்தியாக அமைந்தது மிகவும் வருத்தமான விஷயம்.

அன்னாரின் ஆன்மா சாந்தியடைய பிரார்த்திப்போம்.

aanaa
18th September 2009, 05:05 AM
[html:dc39448f38]<div align="center"><object width="425" height="344"><param name="movie" value="http://www.youtube.com/v/hmsyVwZkz4E&color1=0xb1b1b1&color2=0xcfcfcf&hl=en&feature=player_embedded&fs=1"></param><param name="allowFullScreen" value="true"></param><param name="allowScriptAccess" value="always"></param><embed src="http://www.youtube.com/v/hmsyVwZkz4E&color1=0xb1b1b1&color2=0xcfcfcf&hl=en&feature=player_embedded&fs=1" type="application/x-shockwave-flash" allowfullscreen="true" allowScriptAccess="always" width="425" height="344"></embed></object></div>[/html:dc39448f38]