PDA

View Full Version : 'Kalai Nilavu' RAVICHANDRAN



Pages : 1 2 [3]

vasudevan31355
4th June 2014, 06:37 AM
கிருஷ்ணா சார்,

வணக்கம். நீண்ட நாட்களுக்குப் பிறகு சந்திக்கிறோம். தாங்கள் கேட்டிருந்த அக்கரைப் பச்சை, ஜானகி சபதம் பட வீடியோ டிவிடிக்கள் பாண்டியில் கிடைக்கின்றன. நான் சென்னை வருகையில் தங்களுக்கு வாங்கி வருகிறேன். அதுவரை அப்படங்களின் சில பாடல்களைப் பர்ர்த்து கேட்டு ரசிக்கவும். ஆங்...சொல்ல மறந்து விட்டேனே! தங்கள் நெய்வேலி நண்பரும், அவரது துணைவியாரும் நல்ல சுகம். நான் வாக்கிங் செல்கையில் வழியில் பார்ப்பதுண்டு. தங்களை மிகவும் விசாரிப்பார்கள். நன்றி! பாடலைப் பார்த்து ரசிப்போமோ!

அக்கரை பச்சை

ஊர்கோலம் போகின்ற கிளிக் கூட்டம் எல்லாம்.


http://www.youtube.com/watch?v=dhik1ooA6LE&feature=player_detailpage

இக்கரைக்கு அக்கரை பச்சை


http://www.youtube.com/watch?v=6Nopeqe-lyI&feature=player_detailpage

ஜானகி சபதம்

இளமை கோவில் ஒன்று


https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=T2LzSwJ5wqc

உன்னை நெனச்சா இனிக்குது


https://www.youtube.com/watch?v=MotNmO0cs-0&feature=player_detailpage

RAGHAVENDRA
4th June 2014, 07:23 AM
வாசு சார்
சூப்பர்.... இளமை கோயில் ஒன்று பாடல் எல்லோரையும் உடனே காந்தம் போல் இழுத்து கேட்க வைக்கும் பாடல். மிக்க நன்றி.
ஜானகி சபதம் டிவிடியில் மனோரமா தேங்காய் பாடும் பாடல் இடம் பெறவில்லை. மனோரமா சிவாஜி ரசிகையாகவும் தேங்காய் எம்.ஜி.ஆர்.ரசிகராகவும் பாடும் நடிகர் திலகமா மக்கள் திலகமா பாடல் இணையத்தில் உள்ளதா பாருங்கள்.
தங்கள் பதிவுகள் பரவசமூட்டுகின்றன. தொடரவும்.

gkrishna
4th June 2014, 02:28 PM
வாசு சார்
சூப்பர்.... இளமை கோயில் ஒன்று பாடல் எல்லோரையும் உடனே காந்தம் போல் இழுத்து கேட்க வைக்கும் பாடல். மிக்க நன்றி.
ஜானகி சபதம் டிவிடியில் மனோரமா தேங்காய் பாடும் பாடல் இடம் பெறவில்லை. மனோரமா சிவாஜி ரசிகையாகவும் தேங்காய் எம்.ஜி.ஆர்.ரசிகராகவும் பாடும் நடிகர் திலகமா மக்கள் திலகமா பாடல் இணையத்தில் உள்ளதா பாருங்கள்.
தங்கள் பதிவுகள் பரவசமூட்டுகின்றன. தொடரவும்.

dear ragavender sir/vasu sir

thanks for the information

will you please help me for typing in tamil what is the best site. tried google.transliterate.tamil but not functioning properly.
unmaiyil "Ilamai koil ondru " jesudas meody voice. and the pair is whether it is sasireka

vasu sir

thanks for the help.
please convey my enquires to one of my good old friend Mr.Ramasamy,Neyveli.
one sunday will try to come there and meet both of you.
lovely pair of spb and LR in "Oorkolam pokindra kili cootam ellam oorarku sollungal endru"

ragavender sir

From Mr.Gopal came to know that your son got a chance in singing Movie. all the best
also namaskaram for your 60 year completion
request your blessing for all of our health

vasudevan31355
5th June 2014, 07:30 AM
நன்றி கிருஷ்ணா சார்.

தங்கள் நெய்வேலி வருகையை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். வருக! வருக!

'இளமைக் கோயில் ஒன்று' பாடலை ஜேசுதாசுடன் இணைந்து பாடியவர் என் அபிமானப் பாடகி சொர்ணா ஆவார். இவர் பிரபல இசையமைப்பாளர் வி.குமார் அவர்களின் துணைவியார். அற்புத குரல்வளம் கொண்ட இந்த அபூர்வ பாடகி பாடிய பாடல்கள் சொற்பமே! ஆனால் ஒவ்வொன்றும் வைரமே!

தாங்கள் தமிழில் சரளமாக டைப் செய்ய கீழ்க்காணும் லிங்கை சொடுக்கவும்.

http://tamil.changathi.com/

vasudevan31355
5th June 2014, 07:31 AM
மிக்க நன்றி ராகவேந்திரன் சார்.

uvausan
5th June 2014, 11:45 AM
வாசு - இது அடுக்குமா ? நியாமா ? தெய்வத்திற்கே பொறுக்குமா ? நெய்வேலியில் வலை வீசி தேடினோம் கிடைக்க வில்லை - சிபிஐ யில் காணவில்லை என்று புகார் கொடுத்தோம் - பலனில்லை - சென்னையில் இருப்பதாக bbc நியூஸ் சேனலில் செய்தி ஒன்று வந்தது - துப்பு துலக்க ஆரம்பிப்பதற்கு முன் சென்னையில் இருந்தும் கிளம்பி விட்டீர்கள் - போன் நீங்கள் அறியாத ஒன்று , sms உங்களக்கு வராத கலை - இந்த திரியில் எதேச்சையாக எட்டி பார்த்தவுடன் உங்கள் கைவண்ணம் கிடைத்தது - தமிழை சந்தித்தோம் , இழந்த இன்பம் மீண்டும் கிடைத்தது - அதன் விளைவுதான் என் இந்த பதிவு

அன்புடன் ரவி

vasudevan31355
5th June 2014, 12:36 PM
வாசு - இது அடுக்குமா ? நியாமா ? தெய்வத்திற்கே பொறுக்குமா ? நெய்வேலியில் வலை வீசி தேடினோம் கிடைக்க வில்லை - சிபிஐ யில் காணவில்லை என்று புகார் கொடுத்தோம் - பலனில்லை - சென்னையில் இருப்பதாக bbc நியூஸ் சேனலில் செய்தி ஒன்று வந்தது - துப்பு துலக்க ஆரம்பிப்பதற்கு முன் சென்னையில் இருந்தும் கிளம்பி விட்டீர்கள் - போன் நீங்கள் அறியாத ஒன்று , sms உங்களக்கு வராத கலை - இந்த திரியில் எதேச்சையாக எட்டி பார்த்தவுடன் உங்கள் கைவண்ணம் கிடைத்தது - தமிழை சந்தித்தோம் , இழந்த இன்பம் மீண்டும் கிடைத்தது - அதன் விளைவுதான் என் இந்த பதிவு

அன்புடன் ரவி

:exactly:

:-D :-D :-D :-D :-D

mr_karthik
5th June 2014, 01:08 PM
அன்புள்ள வாசுதேவன் சார்,

உங்கள் பதிவுகளை மீண்டும் தரிசிக்க வைத்ததற்கு நன்றி. தங்கள் எழுத்துக்களை நாங்கள் ரொம்பவே தொலைக்கிறோம் ('மிஸ் பண்ணுகிறோம்' என்பதன் தமிழாக்கம்).

ஈகறை இணைப்பு என் கணினிக்கு எட்டாததால் உங்கள் சமீபத்திய பதிவுகளை (ஸாரி) படைப்புகளை கண்ணுற, இன்புற முடியவில்லை. அதனால் தங்களின் பழைய பதிவுகளையே திரும்பத் திரும்ப படித்து மனப்பாடம் செய்கிறோம்.

மீண்டும் தங்களை நடிகர்திலகம் திரியில் காண விழைகிறோம். விரைவில் காண்போம் என நம்புகிறோம்.

mr_karthik
5th June 2014, 01:16 PM
Thanks to Vinodh sir (esvee),

gkrishna
5th June 2014, 02:51 PM
அன்பு வாசு சார்
மிக்க நன்றி
நீங்கள் அனுப்பிய தமிழ்.சங்கதி.கம மூலமாகத்தான் இதை டைப் செய்துள்ளேன்
ஸ்வர்ண பாடிய இன்னொரு பாடல் (tms உடன் ) "எழுதாத பாடல் ஒன்று தழுவாத பாவை என்று எனக்காக நேரீல் வந்ததோ" கமல் மற்றும் பத்ரகாளி புகழ் ராணி சந்திர நடித்த தேன் சிந்துதே வானம்
அதே போல் ஜெயச்சந்திரன் உடன் "என்னோடு என்னவோ ரகசியம் உன்னோடு சொல்ல வேண்டும் அவசியம்" தூண்டில் மீன் பட பாடல் நினைவிற்கு வருகிறது

ScottAlise
8th June 2014, 09:34 AM
Welcome back Vasu Sir

Gopal.s
8th June 2014, 03:04 PM
Vasu,

nijamagave asanthu ponen. ravi-latha pair very cute and bubbly.

gkrishna
9th June 2014, 10:53 AM
டியர் வாசு சார்
ரவி லதா ஜோடி போட்டோ எங்கு உள்ளது
தெரிய படுத்த முடியுமா
அன்புடன் கிருஷ்ணா

mr_karthik
9th June 2014, 01:02 PM
ravi-latha pair very cute and bubbly.
கருப்பு வெள்ளைக்கே இப்படி அசந்தால் எப்படி?. 'சொர்க்கத்தில் திருமணம்' படத்தில் கலரில் பாருங்கள். குறிப்பாக லதா நீச்சல் உடையில் ரவியுடன்.

gkrishna
9th June 2014, 02:48 PM
கருப்பு வெள்ளைக்கே இப்படி அசந்தால் எப்படி?. 'சொர்க்கத்தில் திருமணம்' படத்தில் கலரில் பாருங்கள். குறிப்பாக லதா நீச்சல் உடையில் ரவியுடன்.

dear karthi sir

நீங்களாவது சொல்லுங்கள் அந்த போட்டோ எங்க attach செய்யப்பட்டு உள்ளது

Gopal.s
10th June 2014, 12:05 PM
மருத்துவம் அது இது என்று கடவுள் எங்களை 2000 முதல் காப்பாற்றியே வந்தான்.அதற்கும் இப்போது பெரும் சோதனை.கடவுளே!!காப்பாற்று.அதுவம் இசை வடிவத்தில்.....

Russellcaj
10th June 2014, 12:53 PM
மருத்துவம் அது இது என்று கடவுள் எங்களை 2000 முதல் காப்பாற்றியே வந்தான்.அதற்கும் இப்போது பெரும் சோதனை.கடவுளே!!காப்பாற்று.அதுவம் இசை வடிவத்தில்.....

Not able to understand the contents.
Explain please.
Are they any code words?.

RAGHAVENDRA
10th June 2014, 01:07 PM
சொர்க்கத்தில் திருமணம் திரைப்படத்தின் காணொளியோ அல்லது நிழற்படமோ இணையத்தில் இருப்பதாகத் தெரியவில்லை. ஆனால் ஒரு சில பாடல்கள் மட்டும் இன்பமிங்கே இணைய தளத்தில் இடம் பெற்றுள்ளன.

http://www.inbaminge.com/t/s/Sorgathil%20Thirumanam/

இதிலும் வாணி ஜெயராம் பாடிய எனக்கென்ன மனக் கவலை பாடல் இல்லை.

Gopal.s
11th June 2014, 08:00 PM
neeyaa padaththil dheepavudan....

gkrishna
12th June 2014, 10:56 AM
ஒரு கோடி இன்பங்கள் கோபால் சார்

mr_karthik
12th June 2014, 01:06 PM
டியர் கோபால்,

நீயா படத்தில் ரவியுடன் தீபா மிகவும் அருமை. தமிழில் கொஞ்சமே படங்களில் நடித்திருந்தாலும் ரசிகர்கள் மனதில் நன்றாகப் பதிந்தவர் தீபா. இவரைப்பற்றி 'ஐட்டம் நடிகையர்' வரிசையில் (நல்லதொரு குடும்பம், தச்சோளி அம்பு உள்ளடக்கி) ஒரு பதிவு ட்ராப்ட் பண்ணி வைத்திருந்தேன். பதிவிட முடியாத சூழல் வந்ததால் நிறுத்திக்கொண்டேன். (வேறு ஒன்றுமில்லை. இதுபோன்ற பதிவுகளால் நடிகர்திலகம் திரி களங்கப்படுகிறதாம். சிலர் பி.எம்.அனுப்பியிருந்தனர். அதனால் ஜெயமாலினி, ஜோதிலட்சுமி ஆலம், தீபா பதிவுகளில் தொங்கலில் உள்ளன. மாடரேட்டர்கள் அனுமதித்தால் தனித்திரி துவங்கலாம்).

தேசிய நடிகை தீபாவின் காங்கிரஸ் கட்சிப்பணி குறித்து ஒரு பதிவு எழுதியுள்ளேன். அதை விரைவில் பதிக்கிறேன். அவருக்கென்று தனித்திரி இல்லை. இங்குதான் போஸ்ட் பண்ண வேண்டும்.

Gopal.s
14th June 2014, 03:28 AM
ரவி சந்திரன் - ஒரு urbanised Handsome looks .துரு துருப்பு . அட்டகாசமான Style .Dance movements .ஷம்மியை விடவே நன்றாக dance பண்ணுவார். கற்றை முடி நெற்றியில் புரள அந்த கால கல்லூரி படித்த இளைஞர்களை மிக கவர்ந்தவர்.அவரின் பொன்னான கைகள், விஸ்வநாதன் வேலை வேண்டும், நெஞ்சத்தை அள்ளி, காத்திருந்த கண்களே, நீ போகுமிடமெல்லாம், வருஷத்தை பாரு, ஜாவ்ரே ஜாவ்,மலரை போன்ற, பயணம் எங்கே, என்ன என்ன நெஞ்சுக்குள்ளே, நான் போட்டால் தெரியும் போடு,அட பாதங்களே, க்வாக் க்வாக்,போதுமோ இந்த இடம், ஒத்தையடி பாதையிலே, ஆடு பார்க்கலாம்,சிங்கபுரு மச்சான்,கண்ணுக்கு தெரியாதா,பொம்பளை ஒருத்தி, லவ் லவ், அரசனை பார்த்த ,மாடி வீட்டு பொண்ணு, எல்லாம் என்னை பித்து கொள்ள வைத்த சாதனைகள். அதே கண்கள் படத்தில் கொள்ளை handsome இந்த ஆள். என்ன ஒண்ணு constipation வந்த மாதிரி குரல், stiff நடிப்பு, ஸ்டைல் என்ற பெயரில் தேவைக்கும் மேல் ரெண்டு இன்ச் கூட வளைவார். ஆனாலும் வண்ண இதய நாயகனே.பட்டண த்தில் பூதம்,வல்லவன் ஒருவன் இவர் நடித்திருக்க வேண்டியவை.

Gopal.s
14th June 2014, 03:29 AM
கலைக்கு சூரியன் உண்டு ,நட்சத்திரங்கள் ஏராளம்,
நிலவாக வந்தவன் நீ ஒருவனே,

தமிழர்கள் சராசரி வயதை நாற்பதிலிருந்து ஒரே நாளில்
இருபதாக்கிய விந்தை வாலிபனே,

உன்னுடன் சேர்ந்து எங்கள் மனமும் குதித்து பயிற்சி செய்து
இளமையாகி இளைத்து வண்ணமாக்கியது வாழ்வை.

கவலைகள் எங்கள் வீட்டு ஆணி சுவர்களில் , மகிழ்வு
மட்டுமே நீ வருகை தந்த கொட்டகையில்

எங்களுக்கு பாடம் சொல்ல ஆசிரியர்கள் மட்டுமே
இருந்த போது ,விடுமுறை நண்பன் நீ.

காதலிக்க நேரமில்லை என்ற முகவரி அட்டையுடன் வந்து,
நேரமிருந்த எங்களை காதலிக்க வைத்தாய்,

எங்கள் இதய கமலங்களில் குமரி பெண்கள்,அதே கண்கள்,
துள்ளி ஓடும் புள்ளி மான்களின் மீது,

நீ தண்ணீரை மட்டுமே குடித்திருந்தால், உன் நலத்தோடு,
எங்கள் நலமும் இன்னும் நீடித்திருக்குமே.

நீ தொலைத்தது உன் வாழ்வை மட்டுமா? எங்கள் இன்ப
நிலவு கண்டு மகிழ்ந்த மாலைகளையும்தான்.

vasudevan31355
14th June 2014, 10:12 AM
கோ,

சற்றே கண் கலங்கச் செய்து விட்டாய் நண்பா!

நடிகர் திலகம் மாதிரியே ரவி விஷயத்திலும் நாம் ரொம்ப ஒற்றுமை. என்ன செய்து தொலைப்பது? ரசனை விஷயத்தில் இருவருக்கும் ஒரே டேஸ்ட்டாகப் போய் விட்டதே!

மனசாந்தி கொள்.

இரவில் வந்த குருவிகளை ரவி கலாய்ப்பதைப் பார்த்து கலகலப்பு கொள்.


https://www.youtube.com/watch?v=DPZkiRNJS0M&feature=player_detailpage

vasudevan31355
14th June 2014, 10:20 AM
கோ,

பொன்னுசாமி கலக்கிட்டாரு இல்ல! 'முஸாபிரி கானா... என் முத்துமுத்து மைனா'...

வாவ்! காதுகளில் இவ்வளவு மட்டமான பாட்டு விடாமல் 'நொய்ங்' ன்னு குடையுது.

செம பாட்டு நைனா!

gkrishna
14th June 2014, 11:32 AM
vasu sir
ஆடு டு டு ஆடு டு டு
ஆடு
ஆடு பார்க்கலாம் ஆடு உன் அழகை பார்க்கும் என்னோடு
சூடு போதும இன்னும் வேண்டுமா ஆடு

mr_karthik
14th June 2014, 11:41 AM
டியர் கோபால்,

நீங்கள் சொன்னது முற்றிலும் சரி. ரவிக்கு எதிரி வேறு யாருமில்லை, அவரேதான், அவரது பழக்க வழக்கங்கள்தான். கதாநாயகப்பஞ்சம் நிலவிய காலத்தில் புதியவர்கள் நால்வர்களில் ஒருவராக நுழைந்த இவர் துவக்கத்திலேயே மகத்தான வெற்றிகளைக் கொடுத்தார். ஆனால் அதைத் தக்கவைத்துக்கொள்ள தவறினார்.

'ஒழுங்காக படப்பிடிப்புக்கு வராதவர்', 'ஒத்துழைப்புக் கொடுக்காதவர்', போன்ற அவப்பெயர்களால் தயாரிப்பாளர்களின் ஆதரவை படிப்படியாக இழந்தார். இவரது வெற்றிகளோடு ஒப்பிடுகையில் சற்று சுமாரான வெற்றிகளையே கொடுத்திருந்த ஜெய், ஒத்துழைப்பு, பணவிஷயத்தில் அட்ஜஸ்ட் செய்துகொள்வது போன்ற விஷயங்களினால் தயாரிப்பாளர்களின் ஆதரவை தக்க வைத்துக்கொண்டதுடன், பெரிய தயாரிப்பாளர்கள் தன்னை நாடாத சமயங்களில் தானே புதிய, சிறிய தயாரிப்பாளர்களை உருவாக்கினார். இதுபோன்ற விஷயங்களில் ரவி கோட்டைவிட்டு விட்டார் என்றுதான் சொல்ல வேண்டும்.

Gopal.s
14th June 2014, 12:56 PM
இரவில் வந்த குருவி ,என் நாளையே பொன்(னுசாமி) ஆக்கி விட்டது. (இப்போதுதான் ஒரு பிள்ளை பிடிக்கும் வல்லூருவிடம் போராடி விட்டு வந்தேன்)

Richardsof
14th June 2014, 01:15 PM
கல்கத்தா காளியின் ஆசிபெற்ற கோபாலரே
இசை உலகம் பராட்டும் நல்லோரே விடாது கருப்பு ....
இனி உமக்கு தூக்கமில்லை .....

Richardsof
14th June 2014, 07:15 PM
http://i59.tinypic.com/149r3k.jpg

vasudevan31355
14th June 2014, 08:34 PM
தூள் வினோத் சார்.

Gopal.s
15th June 2014, 05:33 AM
Thanks vinodh sir. We await more contribution of yours in this elite Ravi thread.

eehaiupehazij
15th June 2014, 11:11 AM
Ravichandran.... though not a versatile actor...he made his presence very sweet and refreshing as a young and handsome actor when Tamil Cinema was donned by the trinity of MGR, Sivaji and Gemini. He had carved a niche for his unique style of dances and stunt performances. His song sequences are still so refreshing...the songs in Kaadhalikka Neramillai, Idhayakkamalam, Naan, Adhey Kangal, Moonderuththu, Meendum Vazhven, Naangu Suvargal and the evergreen song in NT's Motor Sundarampillai with J ' Kaaththirundha Kangale'. During my college days I had an opportunity to interact with him in one of our college functions as the chief guest. An actor who does not know acting in real life! Without any ego he praised his competitor Jai Shankar and showed his respect for NT as a co-star in MSP. In later films he tried some matured act in films like OOmai Vizhigal, Kavari Maan, Neeyaa,.....He was always compared with his Telugu counterpart Krishna for similarity in appearance. He was reckoned as the 'silver jubilee' hero of Tamil Cinema but painful to observe that he could not sustain his popularity graph in the following years. My favourite Ravi movie is always 'Naan'and my favourite Ravi song-dance sequence is 'kannukku theriyaatha... Nenjukku Puriyadha...' in Adhey kangal. He was also reckoned as 'chinna vaadhyar' in comparison with MGR's stunt choreography. He has proved it to some extent in movies like Naan, Moondreluthu and Adhey kangal. When Mu.Ka. Muthu was introduced with vested interest as an 'alternative' (?!) to MGR , he miseraly failed since under the disguise of MGR attire,dancing style or stunt scenes he could remind us Ravichandran and not MGR!Long live Ravi's memory and his contributions to Tamil Cinema.

gkrishna
16th June 2014, 02:37 PM
esvee sir
நயம் அக் மார்க் சொக்க தங்கம்

Richardsof
18th June 2014, 09:46 AM
http://i62.tinypic.com/2yzn8s4.jpg

mr_karthik
18th June 2014, 10:48 AM
டியர் வினோத் சார்,

கலியுக மார்க்கண்டேயன் சிவகுமார் வரைந்த ரவிச்சந்திரனின் ஓவியம் மிக மிக அருமை. ஹேர்ஸ்டைல் பார்க்கும்போது 'நான்கு சுவர்கள்' ஸ்டில்லைப் பார்த்து வரைந்தது போலத் தோன்றுகிறது.

அபூர்வமான ஆவணத்துக்கு நன்றி.

gkrishna
18th June 2014, 03:10 PM
exactlly karthik sir
என்ன ஒரு மெமரி சார்
இது உபசார வார்த்தை அல்ல
எஸ்வி சார்
தேங்க்ஸ் for uploading ரவி பென்சில் ஸ்கெட்ச் போட்டோ

vasudevan31355
18th June 2014, 09:00 PM
வினோத் சார்,

ரவியின் ரம்மியம் சூப்பர்.

eehaiupehazij
18th June 2014, 10:40 PM
Dear Vinodh Sir. You are extending your tentacles like an Octopus in various threads with balanced postings, rare photographs and informations, creating a right ambience for the fellow hubbers to emulate. Hope Ravi's thread will become active and lively with your contributions joining the ranks and files of stalwarts like Pammalar, Gopal Sir, Karthik Sir,Vasudevan Sir and gKrishna sir and the likes.

Richardsof
19th June 2014, 05:30 AM
இனிய நண்பர் திரு செந்தில்

உங்களின் அன்பான பாராட்டுகளுக்கு நன்றி .தமிழ் திரை உலகின் பொற்காலம் என்றால அது மூவேந்தர்கள் ஆண்ட
திரை உலக வரலாற்று ஆவணங்களை பார்க்கும் போது கிடைக்கும் இன்பம் அளவிட முடியாத மகிழ்ச்சியாகும் . அவர்களுக்கு பிறகு ரவி , ஜெய் , முத்துராமன் படங்கள் சிறப்பு இடத்தை பிடிக்கிறது . ஒரு ரசிகனாக எல்லா திரிகளிலும் இடம் பெறுவது மன நிறைவு அளிக்கிறது .

Gopal.s
19th June 2014, 05:58 AM
ஒரு ரசிகனாக எல்லா திரிகளிலும் இடம் பெறுவது மன நிறைவு அளிக்கிறது .
தூணிலும் இருப்பான்,துரும்பிலும் இருப்பான். வினோத நாராயணர்.

gkrishna
19th June 2014, 05:37 PM
எஸ்வி சார்
நீங்கள் சொல்வது உண்மை
எல்லா நடிகர்களுக்கும் ரசிகனாக இருப்பது மனநிறைவை நிச்சயம் தரும்

Gopal.s
19th June 2014, 06:11 PM
இது என்னவோ எனக்கு விநோதமாக படுகிறது. ஒரு பெண் இதை வேறு விதமாக சொன்னால் என்ன விமரிசனம் எழுமோ, அதுதான் எனக்கு இப்படி சொல்வோரை கண்டாலும் தோன்றும். விருப்பு-வெறுப்பு ரசனை அடிப்படையில் எழ வேண்டும் கலையை பொறுத்த அளவில்.

eehaiupehazij
19th June 2014, 08:17 PM
கோபால் சார் . ஒரு குறிப்பிட்ட நடிகரை மட்டுமே பிடிப்பது என்பது ஒரு வகையான வெறித்தனமான பாரபட்சம் நிறைந்த ரசிப்புத்தன்மை. நடிகர் திலகத்தின் ரசிகனாக இருந்தும் சிலருக்கு ரவியின் நடிப்பும் பிடிக்கும். வேறு சிலருக்கு மக்கள் கலைஞரின் நடிப்பு பிடிக்கும். நாம் ஒரு போட்டி மனப்பான்மையில் மக்கள் திலகத்த்தின் படங்களை விமர்சிக்கிறோம். ஜெமினிகணேசனையும் விமர்சிக்கிறோம். இவர்கள் அனைவருமே ஏதோ ஒரு வகையில் தங்களது உன்னதமான பங்களிப்பை தமிழ் ரசிகர்களுக்கு அளித்திருக்கிறார்கள். மக்கள் கலைஞரும் ஒரு ஜேம்ஸ்பாண்ட் பாணியில் தன்னுடைய தனித்த்துவத்தை நிலை நிறுத்தியிருக்கிறாரே! ஒரு நல்ல திரை விமர்சகரான தங்களுக்கு ஜெய் பிடிக்காமல் போனது வருத்தமளிக்கிறது.

Gopal.s
19th June 2014, 08:26 PM
நல்லதை தூக்கி வைத்து கொண்டாடுவதும் அல்லாததை புறம் தள்ளுவதும் ஒவ்வொரு மனிதனின் கடமை. எல்லாம் பிடிக்கும் என்பது மடமை.(escapism ). பார்த்தவுடனே குமட்டும் ஆட்களை ரசிக்க தலையெழுத்தா என்ன?

eehaiupehazij
19th June 2014, 08:38 PM
Sorry Sir. I do not want to create a rift in Ravi's exclusive thread. I dont drag in any more Jai isssue here. I like both these contemporary youngsters. Ravi for his excellent rhythmic and stylish dance movements and Jai for his successful incarnation of Bond image and his philanthropy.

Richardsof
19th June 2014, 08:40 PM
[:notthatway::notthatway::notthatway::notthatway::n otthatway::notthatway::notthatway::notthatway::not thatway::MR.Gopal

Gopal.s
20th June 2014, 04:16 AM
நான் பாட்டுக்கு சிவனே என்று இருந்தாலும் தூண்டி வம்புக்கு இழுக்கராங்கப்பா. எனக்கு செக்குக்கும் சிவலிங்கத்துக்கும் வித்யாசம் தெரியாமல் எல்லாவற்றையும் நக்க தெரியாது. நான் தேர்வு செய்துதான் ரசிப்பேன்.இதுதான் ரசனையின் உச்சம்.

Richardsof
20th June 2014, 05:29 AM
ரசிப்பு தன்மை என்பது அவரவர் விருப்பம் . ஆனால் பிடிக்கவில்லை என்றால் இந்த அளவிற்கு தரம் தாழ்ந்து வெறுப்பை உமிழும் நிலைக்கு தள்ளப்பட்ட நிலை ,அதுவும் சான்றோருக்கு அழகல்ல .மேலும் ஆத்திரம் கண்ணை மறைக்கும் போது தன்னிலை மறந்து கீழ்த்தரமான செந்தமிழ் வார்த்தைகளை பிரயோகம் செய்வது உயர்ந்த இடத்தில ஒருவருக்கு அழகல்ல .புரியவில்லை என்றால் தமிழ் ஆசான் கல்கத்தாவிலிருந்து விளக்குவார் .

Richardsof
20th June 2014, 09:21 AM
http://i57.tinypic.com/vyo3kh.jpg

gkrishna
20th June 2014, 10:29 AM
ராஜா படத்தில் ஒரு டயலாக்
சிவாஜி கலைசெல்வியிடம் சொல்வார்
"நான் உங்களை புத்திசாலினு நினச்சேன் "
நீங்கள் என்னை முட்டாளா(க) (ஆக்க) பார்கிறீர்கள்"

ஓகே இது ரவி thread

parthasarathy
20th June 2014, 11:22 AM
ரசிப்புத் தன்மை மனிதனுக்கு மனிதன் வேறுபடும். இது மட்டுமல்ல ஒவ்வொரு மனிதனும் வேறு வேறு. அந்த ஒரு மனிதனும் ஒவ்வொரு கணமும் வேறு வேறு - சூழ்நிலையினாலும், இன்ன பிற விளைவுகளாலும், சார்ந்திருப்பவர்களாலும்.

எனக்கும் நடிகர் திலகம் மட்டும் தான் ஆதர்சம். இருப்பினும், மற்ற பல கலைஞர்களையும் பிடிக்கும், மக்கள் திலகம் உட்பட - குறிப்பிட்ட சில படங்களில்.

அன்புடன்,

இரா. பார்த்தசாரதி

Russellbpw
20th June 2014, 03:16 PM
ரவி சந்திரன் - என்ன ஒண்ணு constipation வந்த மாதிரி குரல், stiff நடிப்பு, ஸ்டைல் என்ற பெயரில் தேவைக்கும் மேல் ரெண்டு இன்ச் கூட வளைவார்.

CONSTIPATION மற்றும் கூடுதல் வளைவுக்கு காரணம் வேறு ஒன்றும் அல்ல !

தன்னை ஒரு POOR MAN 's சிவாஜி என்று நினைத்து கொண்டு நடிகர் திலகத்தின் MANNERISM பலவற்றை நூதனமாக திருட முயற்சி செய்ததன் பலன் !

சிவாஜியை போல சிகை அலங்காரம் பல படங்களில் ..ஆனால் சிவாஜியை போல ஒரு பினிஷிங் இவர் சிகையில் பார்க்க முடியாது....சிவாஜியை போல நடை பழகல் ..BUT AN INCOMPLETE வாக் ! .ஒ..ஒ..எத்தனை அழகு பாடலில் காஞ்சனா கை பிடித்து நடக்கும்போது நாம் கண்கூடாக பார்க்கலாம், திரும்பி பார்ப்பது...நடந்துகொண்டே திரும்புவது...இப்படி பல விஷயங்கள் நடிகர் திலகத்தை கோப்பி செய்து படுதோல்வி..!

ஊமை விழிகள் படத்தில் பார்த்தால் இன்னும் அப்பட்டமாக தெரியும்...அப்படியே நடிகர் திலகத்தை போலவே தன்னை நினைத்துகொண்டு நடிக்க முயற்சிப்பது !

நிலவு இல்லை என்றால் என்ன ? ஒன்றும் இல்லை ! காரணம் நமக்கு அமாவாசை பழகியதுண்டு

ஆனால் சூரியன் இல்லாவிடில் ! நடிகர் திலகம் இல்லாத ஒரு திரை உலகம் ! இன்னும் நாதா ...நாதி....என்று ஒரு 50 வருடம் இழுத்திருக்கும் !

அது தான் சூரியன் என்னும் நடிகர் திலகம் !

Russellbpw
20th June 2014, 03:27 PM
கலைக்கு சூரியன் உண்டு ,நட்சத்திரங்கள் ஏராளம்,
நிலவாக வந்தவன் நீ ஒருவனே,- அப்படி என்றால் சூரியன் மட்டும் இரண்டு மூன்று உண்டோ ?

தமிழர்கள் சராசரி வயதை நாற்பதிலிருந்து ஒரே நாளில்
இருபதாக்கிய விந்தை வாலிபனே, முதன் முதலில் ஆக்கியது யார் என்ற கேள்வி கேட்கவும் வேண்டுமோ ?

உன்னுடன் சேர்ந்து எங்கள் மனமும் குதித்து பயிற்சி செய்து
இளமையாகி இளைத்து வண்ணமாக்கியது வாழ்வை.

கவலைகள் எங்கள் வீட்டு ஆணி சுவர்களில் , மகிழ்வு
மட்டுமே நீ வருகை தந்த கொட்டகையில்

எங்களுக்கு பாடம் சொல்ல ஆசிரியர்கள் மட்டுமே
இருந்த போது ,விடுமுறை நண்பன் நீ.

காதலிக்க நேரமில்லை என்ற முகவரி அட்டையுடன் வந்து,
நேரமிருந்த எங்களை காதலிக்க வைத்தாய்,

எங்கள் இதய கமலங்களில் குமரி பெண்கள்,அதே கண்கள்,
துள்ளி ஓடும் புள்ளி மான்களின் மீது,

நீ தண்ணீரை மட்டுமே குடித்திருந்தால், உன் நலத்தோடு,
எங்கள் நலமும் இன்னும் நீடித்திருக்குமே.ஒழுக்கம் உயிரினும் ஓம்பப்படும் என்பதை மறந்தவர்களுக்கு ஒழுக்கம் என்றுமே பாடம் என்ற பரிசு கொடுக்க தவறியதில்லை. பரிசு பெற்றவர்களில் நிலவு நிச்சயம் அடங்கும் !

நீ தொலைத்தது உன் வாழ்வை மட்டுமா? எங்கள் இன்ப
நிலவு கண்டு மகிழ்ந்த மாலைகளையும்தான்.
.....

eehaiupehazij
20th June 2014, 07:53 PM
வேண்டாமே RKS Sir. இது ரவியின் சிறப்புத் திரி. அவருடைய நல்ல அம்சங்களை மட்டுமே நினைவு கூர்வோமே !

Russellrhz
2nd July 2014, 03:07 PM
I am also a fan of kalainilavu. Honestly i am pleased to read about actor Ravichandran and please
try to discuss only about him. do not compare with other actors, Remember one man's food is another
man's poison. i didnot have the chance to watch sorgathil Thirumanam. Please upload if can.

Gopal.s
2nd July 2014, 03:21 PM
நீயும் நானும் என்றொரு படம். ரவி-ராஜஸ்ரீ ஜோடி.யாரடி வந்தார் உன் நெஞ்சத்தை கொள்ள

Gopal.s
5th July 2014, 07:28 AM
Kaarthik/Vinodh/vasu,

Pl.contribute regularly in this thread.

Gopal.s
5th July 2014, 08:05 AM
சிறு வயதில் எனக்கு சினிமா பார்க்கும் ஒரே தியேட்டர் அமராவதி(நெய்வேலி). சொன்னால் வெட்க கேடு. சென்னை சென்று சாந்தி,தேவி,மிட்லண்ட் என்று குளு குளு ஏ.சி தியேட்டர்களில் பார்த்த படத்தை கூட விடுமுறைக்கு வரும் போது அமராவதி திரையரங்கில் பார்த்தால்தான் நிறைவாகும்.ரொம்ப நாள் சுலேகா என்ற அடாசு தையல் காரனை ஆஸ்தான டெய்லர் ஆக பாவித்து சென்னையில் பெரிய பெரிய கடைகளை புறக்கணித்து,இவரிடமே லீவிற்கு வரும் போது அனைத்தையும் தைத்து போவேன்.அப்போது பாக்கெட் மணி சினிமாவிற்கே செலவாகி விடும். நைஸ் ஆக ஜெயா மெடிக்கல் கடையில் சோப்பு ,சீப்பு,கண்ணாடிகளை account இல் வாங்கி சென்று விடுவேன்.அம்மா அப்பா அவ்வப்போது செல்லமாக கண்டித்து மன்னித்தும் விடுவார்கள். நான் இவ்வளவு பற்று வைத்திருந்த tailor என்னை படுத்திய பாடு கொஞ்ச நஞ்சமில்லை.தீபாவளிக்கு முதல் நாள் அம்மா பதறுவார்கள். டேய் ...சுலேகா இன்னும் உங்கள் யார் டிரஸ்உம் தரவில்லை.எதை கட்டி கொள்ள போகிறீர்கள் என்று?அப்போ இப்போ என்று காஜா மட்டும் எடுக்கணும் என்று ஒரு வாரமாக தட்டி கழித்து வரும் சுலேகாவிடம் இரவு 10 மணிக்கு சென்றால் ,தம்பி அந்த துணிகளை எடு என்பார்..புது மெருகு அழியாமல் நாங்கள் கொடுத்த கடை label உடன் எங்கள் துணிகள்.நீங்க போங்க தம்பி.ஒரே மணிநேரம் ,முடிச்சு கொடுத்துறேன் என்ற சத்தியத்தை நம்பாமல் அங்கேயே உட்கார்ந்து ,கண்ணுறங்காமல் ,வேலை முடித்து ,சரியாக 4.32 க்கு காவல் தெய்வம் சிவகுமார் போல் வீடு வந்து சேருவேன்.(ஒரு
தீபாவளிக்காவது முதல் நாள் உறங்கும் சுகத்தை எனக்கு சுலேகா தந்ததில்லை).இந்த முறை வாசுதேவனுடன் மெயின் பஜார் சுற்றிய போது சுலேகா அங்கு இல்லாதது ஒரு வெறுமையை தந்தது.இத்தனைக்கும் எங்கள் தங்க ராஜா பாணியில் பெல்ஸ் தைத்து ,நண்பர்களிடம் என்னை நாண செய்யும் tailor .

அப்போது டவுன் கிளப் என்ற பொழுது போக்கு கிளப்பில் ஒவ்வொரு வாரம் புதன் ஒரு ஆங்கில படமோ,தமிழ் படமோ போடுவார்கள்.35mm with projector . ஆஜராகி விடுவோம். அதில் என்னை கவர்ந்த இரு படங்கள் வரிசையாக இரு வாரங்கள் .தேன் மழை (காமெடி,பாடல்கள் பிடிக்கும் ),
நினைவில் நின்றவள் (முழுபடமும் பிடிக்கும்)அதிலும் குறிப்பாக குமாரின் இசையில் ,ஈஸ்வரி குரலில்,ஆனந்தன்-தேவகி இணைவில் இந்த பாடல்.(எனக்கு மனோகர்-ஷீலா இணைவில் அம்மாம்மாவும் உயிர்)

பார்த்து மகிழுங்கள்.

https://www.youtube.com/watch?v=VSsqzU1JCoU&feature=player_embedded

vasudevan31355
5th July 2014, 06:24 PM
http://i1.ytimg.com/vi/2K-uLw-55S0/maxresdefault.jpg

Gopal.s
6th July 2014, 07:34 PM
அப்போது பாலன் பிக்சர்ஸ் பட நிறுவனம் பெரும்பாலும் (பெரிய நடிகரின் தாய் படத்தில் கையை சுட்டு கொண்டதாலோ என்னவோ)ஜெமினி,ஏ.வீ.எம்.ராஜன்,ரவிச்சந்திரன் ,இன்னும் சில வளரும் நடிகர்களை வைத்தே படங்கள் எடுத்து வந்தனர்.பெரும்பாலும் நாம் இருவர் முதல் எனது பிரிய நண்பர் மகேந்திரன் கதை. எஸ்.எம்.எஸ். இசையமைப்பு. அப்போது மோகன் பிக்சர்ஸ் ,சரவணா,பீ.எஸ்.வீ முதலியோர் இதே பார்முலா கையாண்டு கொண்டிருந்தனர்.
ரவி சந்திரன் முதன் முதலில் இரட்டை வேடமேற்று நடித்த பணக்கார பிள்ளை ,பெரும் வெற்றி கண்டு (நாம் இருவர்,பந்தயம்,சக்கரம் வரிசையில்)பணம் வாரி கொடுத்தது.இதில்தான் ரவி தி.மு.க வாக காட்டி கொண்டார்.(சிக்கினார்)இந்த படத்தில் பெரும்பாலும் நடிகர்திலகத்தின் sobre style நடிப்பை கையாண்டிருப்பார்.
ஒரு ஜோடி கலை செல்வி.மற்றொரு ஜோடி கவர்ச்சி புயல் ஜோதி.
ஜோதியை பெரிய இடத்து பெண் காலத்திலிருந்து தொடர்ந்து வருகிறேன். பூவும் போட்டும் படத்தில் ,எண்ணம் போல பாட்டில் பின்னழகில் சொக்கி ரேகையை அழித்து கொண்டிருக்கிறேன்.
படத்தின் இரண்டு பாடல்களும் சூப்பர் ஹிட் ராகம்.(மாணிக்க,பட்டம்) .அதில் இந்த ராட்சஷி -டி.எம்.எஸ் பாடும் இந்த பாடல் துள்ளல் குறும்பு. ஜோதியை துள்ள விட்டு ,ரவி நடிகர்திலகம் பாணியில் நடித்திருப்பார். (profile பார்க்க நிறைய சிவாஜி சாயல் )
பாடல் பார்த்து கேட்டு மகிழ (மச மச என்று இருக்கும்)

http://www.youtube.com/watch?v=Wk9Rzk5p3qU&feature=kp

Russellrhz
6th July 2014, 08:48 PM
Mr. Vasu thank you for the beautiful photo of Naan.
Mr. Gopal keep up the good work. Your articles are very interesting to read.

Gopal.s
7th July 2014, 11:06 PM
தேடி வந்த திருமகள் - 18.6.1966


http://www.youtube.com/watch?v=cjhQSWKNaHQ

Gopal.s
8th July 2014, 06:25 AM
ரவி சந்திரன் என்ற அழகிய 1964 இன் இளமை சுனாமி.

17/10/1952 இல் நடந்த அதிசயத்துக்கு சற்றும் குறையாத மற்றொரு அதிசயம் 27/2/1964 இலும் நடந்தது. அதுதான் முதல் படத்திலேயே ஒரு நாயகன் இமாலய வெற்றி பெற்று தமிழகம் முழுதும் தன் ரசிகர்களாக திருப்பிய விந்தை. ரவி சந்திரன் என்ற இனிய புயல் சுமுகமாக கரை கடந்தது. இது ஒரு வண்ண மயமான வாண வேடிக்கை. அதுவரை senior நடிகர்களின் மோகத்தில் மூழ்கியிருந்த தமிழகம் ,தமிழ் பட உலகம் சற்றே stale ஆக போனதை உணர்ந்து, தங்களுக்கு ஹிந்தியில் அன்றிருந்த musical romance trend படி sweet nothings பேச ஒரு இளம் அழகிய நாயகன் வருகையை உணர்ந்தது. அடுத்த நான்கு வருடம் அந்த அலை ஓயவே இல்லை.அது நம் சீனியர் நாயகர்களையும் தாக்கி ஒரு அன்பே வா கொடுக்க வைத்தது. நடிகர்திலகத்தை இளைக்க வைத்து தங்கையின் கலாட்டா கல்யாணத்தை நடத்தி ராஜாவாக்கியது.

அப்போது திலகங்களை தவிர ஜெமினி,எஸ்.எஸ்.ஆர் இவர்களாலோ ,முன்னேறி கொண்டிருந்த முத்துராமன்,ஏ.வீ.எம்.ராஜனாலோ கனவிலும் நினைக்க முடியாத ஒரு status மற்றும் மாற்றம்.

இத்தனைக்கும் அபார அழகு,துரு துருப்பு இருந்ததென்றாலும், நடிப்பு திறமை சுமார்தான்.சிவாஜி ஸ்டைலை பின்பற்றி பொழுது போக்கு படங்கள்தான் கொடுத்தார். ஆனால் நடனத்தில் ஒரு style ,grace ,unique execution இவற்றினால் கலக்கினார். இவர் வரவில்லையென்றால் ஒரு நான், ஒரு அதே கண்கள் சாத்தியமில்லாமல் போயிருக்கும்.madras to pondichery படத்தில் இவர் கலக்கிய கலக்கலில் 10% கூட அன்றைய இளம் அமிதாப் பச்சன் Bombay to Goa படத்தில் கொடுக்க இயலவில்லை. நான்,அதே கண்கள் remake ஆகியிருந்தாலும் ,அன்று ரவி கொடுத்த உணர்வை கொடுக்க அகில இந்தியாவிலும் ஆளில்லை.

டான்ஸ் பண்ணுவதிலும் மிக மிக கஷ்டமான movements ,படு பிரமாத படுத்தி விட்டு ,சாதாரண அசைவை சொதப்புவார்.ஆனாலும் நமக்கு இவர் படம் பார்க்கும் போது ஒரு pleasantness இழையோடும். கலாட்டா பண்ணி கொண்டே நடக்கும் இளமை திருவிழா.காதல் காட்சிகளில் ரசனை இருக்கும். அத்து மீறிய crassness அறவே இருக்காது.

நடிப்பு பற்றி யார் கவலை பட்டது?அதை கொடுக்கத்தான் நமக்கு நடிப்பு அசுரன் நடிகர்திலகம் இருந்த போது ,அதை கொடுக்க இன்னொருவர் எதற்கு என்று ரவியை ரசித்தோம்.

ஒரு urbanised Handsome looks .துரு துருப்பு . அட்டகாசமான Style .Dance movements .ஷம்மியை விடவே நன்றாக dance பண்ணுவார். கற்றை முடி நெற்றியில் புரள அந்த கால கல்லூரி படித்த இளைஞர்களை மிக கவர்ந்தவர்.அவரின் பொன்னான கைகள், விஸ்வநாதன் வேலை வேண்டும், நெஞ்சத்தை அள்ளி, காத்திருந்த கண்களே, நீ போகுமிடமெல்லாம், வருஷத்தை பாரு, ஜாவ்ரே ஜாவ்,மலரை போன்ற, பயணம் எங்கே, என்ன என்ன நெஞ்சுக்குள்ளே, நான் போட்டால் தெரியும் போடு,அட பாதங்களே, க்வாக் க்வாக்,போதுமோ இந்த இடம், ஒத்தையடி பாதையிலே, ஆடு பார்க்கலாம்,சிங்கபுரு மச்சான்,கண்ணுக்கு தெரியாதா,பொம்பளை ஒருத்தி, லவ் லவ், அரசனை பார்த்த ,மாடி வீட்டு பொண்ணு, எல்லாம் என்னை பித்து கொள்ள வைத்த சாதனைகள். அதே கண்கள் படத்தில் கொள்ளை handsome இந்த ஆள்.சிகரெட் தூக்கி போட்டு பிடிக்கும் style அவர் நான்கு சுவர்கள் படத்தில் பண்ண வேண்டியது.அது படத்துக்கு பொருந்தாது என்று சொல்லி, கே.பீ பிறகு மூன்று முடிச்சில் அதை உபயோகித்து ரஜினியை தூக்கி விட்டார்.


ஆனால், ஒரு புதையலை குப்பை தொட்டியில் வீசுவது போல ,சராசரிகளுக்கு இடமளித்து விட்டு, ரவி தன் ஸ்தானத்திலிருந்து தன்னை தானே இறக்கி கொண்டார். தயாரிப்பாளர் மற்று சக கலைஞர்களோடு ஒத்து போகாமல் ,குடித்து தொழிலில் போதிய கவனமின்றி,படங்களை சரியாக தேர்வு செய்யாமல், சறுக்குவதை உணர்ந்து சரியான நேரத்தில் விழித்து கொள்ளாமல் தான் வெட்டிய பள்ளத்தில் தானே விழுந்தார்.

சிவாஜி முதல் ரஜினி வரை தொடரும் சில ஸ்டைல் களின் மத்திய கால சங்கிலி இவர்.

gkrishna
8th July 2014, 01:02 PM
dear gopal sir
excellant write up
best wishes for your continued support
regards
gk

vasudevan31355
8th July 2014, 01:33 PM
http://www.thehindu.com/multimedia/dynamic/01502/CM01KADHALIKKA_NER_1502491g.jpg

Gopal.s
24th July 2014, 02:42 AM
Kalpana, B.S. Ravichandran (later Ravichandran), Nagesh, Manorama, A. Karunanidhi, ‘Pakoda’ Kadhar, V.K. Ramasami, V.S. Raghavan, A. Veerappan, ‘Kalla Part’ Natarajan, K.S. Angamuthu, O.A.K Thevar and Karikol Raju

The Hindu By Randor Guy

‘Road’ movies are popular in the West, but rarely are such films made in India. It is a genre in which the main character or characters leave home to travel from place to place. They usually leave home to escape their current lives and meet with many adventures that have a profound impact not only on their lives but also on those they come across during their travel.

Popular road movies include Easy Rider, which created a sensation in America and elsewhere, especially among the youth of the Beat or Flower Power era, and Bonnie and Clyde, a story of criminals robbing people and having fun in the process. Both these films created history at many levels and also fared well in India. Another such film, If It’s Tuesday It must be Belgium enjoyed a 100-day run in Madras city.

An unusual film in this genre (script: Usilai Somanathan), Madras To Pondicherry was made in Tamil in the Sixties by the successful multilingual filmmaker, producer and studio owner A. Bhim Singh who created many classics in Tamil and Hindi.

This film was his production shot at Venkateswara Cinetone, the name he gave the historic Newtone Studios in Kilpauk, Madras, which he took on lease for a period. Sadly, the historic studio has vanished and the famed Rajaji School run by Bharathiya Vidhya Bhavan functions today on the site.

The film was directed by Thirumalai-Mahalingam, a talented duo brought into the limelight by Bhim Singh. They made quite a few films and this was one of them which proved successful.

In this film, a young woman (top Kannada movie star Kalpana who acted in a few Tamil films) leaves home because of her interest in a movie career which is kindled by a group of crooks. One of them shoots a member of his gang which she witnesses. To escape them, she jumps onto a running bus going from Madras to Pondicherry and then the fun starts.

The gangsters engage a man who boards the bus the young woman is in to eliminate her. However, a young man also gets in (Ravichandran, credited in this film as ‘B.S. Ravichandran’, his original name being B.S. Raman.) During his heyday, Ravichandran was a top star ranking only next to Sivaji Ganesan, MGR and Gemini Ganesan. Handsome, he played the hero in many movies with success and this was one of them.

He too travels on the bus with his pals and realises that the young woman is in trouble. He takes up the task of saving her and in the process falls in love with her. In the end, it turns out that he is her prospective bridegroom to avoid whom she leaves home!

There are many subplots involving interesting characters who travel on the same bus — the wisecracking conductor (Nagesh) and driver (Karunanidhi), a Brahmin couple (Veerappan and Manorama) with a thumb sucking, fat son crazy about ‘pakoda’ (Khader). His role attracted so much attention that he came to be known as ‘Pakoda’ Khader. He went on to act in quite a few films.

The film also had tuneful music (T.K. Ramamurthi), and a song filmed on Ravichandran (sung by T.M. Soundararajan) in the running bus with his friends playing Western instruments became popular (lyrics: Alangudi Somu, Panchu Arunachalam, Thanjai Vaanan and Namakkal Varadarajan).

The film was a success and was remade in Hindi by comedian Mehmood as Bombay To Goa. Mehmood was a great admirer of Nagesh and played many of his roles in the Hindi versions and this is one such. The lead role was performed by Amitabh Bachchan in one of his early roles and it fetched him name and fame.

(Not many are aware that Rajiv Gandhi was offered this role by Mehmood, but for many a reason he turned it down.) Veerappan, who plays the Brahmin, was a popular comedy writer and wrote comedy dialogues for many comedians such as ‘Gounda’ Mani and Senthil. Manorama, as the Brahmin woman, impresses in her inimitable style. Angamuthu also raises laughter…

Nagesh with his brand of comedy impresses a lot and so does the sadly underrated comedian Karunanidhi.

A road movie with a religious theme and background was later made by A.P. Nagarajan as Thirumalai Thenkumari which also fared well.

Remembered for the interesting storyline, subplots that raised laughs, pleasing music and fine portrayals by Nagesh, Manorama, Kalpana, Ravichandran and ‘Pakoda’ Khader.

மெட்ராஸ் டு பாண்டிச்சேரி என்னை ரவியை நோக்கி ஈர்த்த ஆரம்ப கால படங்களில் முக்கியமான ஒன்று.(மற்றொன்று குமரி பெண்)

படு வித்யாசமான ஜாலி படம். ரவி அலம்பல் .இந்த படம் ஹிந்தியில் எனக்கு ஏமாற்றமே.(ஒரு பாடல் தவிர)

இதில் இந்த simple duet song அவ்வளவு பிடிக்கும். டி.கே.ராமமுர்த்தி இசையில். படமாக்கம் நன்றாக இருக்கும். ரவியின் கொள்ளை அழகை விவரிக்க வேண்டாம்.பார்த்தாலே தெரியும்.மிதமான நடனம் ,ஸ்டைல் இல் அசத்துவார்.(சிவாஜி சாயல்) .கல்பனா petite &sleek .அன்றைய கதாயகியர் மாதிரி voluptuous ரகமல்ல. ரவியோடு chemistry பாந்தமாக வந்திருக்கும் . ரவியின் டூயட் பாடல்கள் என்றுமே அழகாக ,முகம் சுளிக்காத படி இருக்கும்.

https://www.youtube.com/watch?v=MCoeS9mQtQU

Gopal.s
24th July 2014, 03:23 AM
1968 இல் ரொம்ப பேச படாத ரவியின் படம் சத்தியம் தவறாதே.
ஆனால் இந்த படத்தில் ரவியின் performance பிரமாதம்.
இந்த படம் பெரிதும் பேச பட்டது இசையமைப்பு. படு வித்யாசமாக சி.என்.பாண்டுரங்கன் இசையமைத்திருந்தார்.முக்கியமான இரண்டு பாடல்கள் எதுடா வாழ்க்கை (பீ.பீ.ஸ்ரீநிவாஸ்), முத்து குளிப்பவரே (டி.எம்.எஸ்,பீ.சுசிலா).

இந்த பாடலை பார்த்து மகிழுங்கள். எவ்வளவு அழாக ரவி-விஜய நிர்மலா ஜோடி. ரவிக்கு எந்த நடிகையுடனும் chemistry பிரமாதமாய் அமையும். பாரதி,காஞ்சனா,கலை செல்வி முதல் இறுதியில் சுகம் சுகம் லதா, நீயா தீபா வரை தொடர்ந்தது.

http://www.youtube.com/watch?v=IKFr30tply4

vasudevan31355
25th July 2014, 10:58 AM
இன்று 'கலைநிலவு' ரவிச்சந்திரன் அவர்களின் நினைவு தினம்.

பெரியவர், சிறியவர், ஆண்கள், பெண்கள் என்றில்லாமல் அனைவரையும் கவர்ந்த அந்தக் கால ரஜினி.

வண்ணத்திலேயே குழைந்த வடிவழகன்

இளைஞர்களை இன்றுவரை ஈர்ப்பவன்

வெள்ளி முளைக்கும் போதே வெள்ளி விழாக்கள் தந்தவன்

விஸ்வநாதனிடம் வேலை கேட்டு போராடி 'இதயக் கமல'ங்களில் அமர்ந்த வாலிப விருந்தன்.

ரவி என்ற இரண்டெழுத்து அழகு என்ற 'மூன்றெழுத்'தானது

சாட்டை கையில் கொண்டு நான் போட்டால் தெரியும் போடு என்று டிஷ்யூம்களை தங்கத் தமிழால் தந்த 'நாலும் தெரிந்தவன்'.

மீண்டும் வாழ்வேன் என்று சபதமிட்டவன் மீண்டு வராமல் மாண்டு போன நினைவுநாள் இன்று.

அதனால் என்ன?

அன்று உன்னைப் பார்த்த அதே கண்களால் என்றும் உன் அழகைப் பருகுவோம்.

இன்று நமது திரியில் இதுவரை இணையத்தில் வெளிவராத ரவிச்சந்திரனின் அழகிய புகைப்படம்

'பேசும் படம்' இதழிலிருந்து.

நீங்கள் அதிகம் கேள்விப் பட்டிராத, வெளிவராத 'மெட்ராஸ் மைனர்' திரைப்படத்திலிருந்து.

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/3801fd85-2c67-49aa-be8e-0fccfd9eb1a2.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/3801fd85-2c67-49aa-be8e-0fccfd9eb1a2.jpg.html)

vasudevan31355
25th July 2014, 01:00 PM
ரவியின் மிரட்டும் தோற்றம் 'ஊமை விழிகளி'ல் இருந்து

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/r.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/r.jpg.html)

gkrishna
25th July 2014, 03:19 PM
ஊர்கோலம் போகின்ற கிளி கூட்டங்கள் எல்லாம் ஊரார்க்கு சொல்லுங்கள் இன்று ரவி யின் நினைவு நாள் என்று
https://encrypted-tbn1.gstatic.com/images?q=tbn:ANd9GcQPqpQtqutDs-1xYnJpuqCHibhWEJhf7Lf_-n31zmIecSTWLd6dhttp://www.aambal.co.uk/static/uploads/2011/07/ravicha.pnghttp://www.aambal.co.uk/static/uploads/2011/07/Ravichandran.jpghttp://antrukandamugam.files.wordpress.com/2013/07/ravichandran-naan-2jpg.jpg?w=487
ரவிச்சந்திரன் – அற்புதமான ஒரு திரைப்படக் கலைஞன்
ரவிச்சந்திரன் திருச்சியில் பிறந்த ஒரு தமிழர்; ஆனால் அவரது இளமைக் காலம் மலேசியாவின் தலைநகரம் கோலாலம்பூரில்தான் கழிந்தது. அவர் 1951ஆம் ஆண்டு தனது சகோதரியின் திருமணத்திற்காக இந்தியா திரும்பினார். அதன்பின் திருச்சியில் பட்டப்படிப்பை செயின்ட் ஜோசப் கல்லூரியில் மேற்கொண்டார்.
1963ல் பிரபல இயக்குநர் ஸ்ரீதரைப் பார்த்தபொழுது அவரது வாழ்க்கையில் மாபெரும் திருப்பம் ஏற்பட்டது. 1964ல் தமிழில் மிகச்சிறந்த படங்களில் ஒன்றான ‘காதலிக்க நேரமில்லை’ வெளிவந்தபொழுது, அதன் நேர்த்தியான கதை அமைப்பு, ஒளிப்பதிவு, இயக்கம் மற்றும் நடிகர்கள் நாகேஷ், பாலையா போன்றோரின் நகைச்சுவை, புதிய பொலிவுடன், துடுக்கான இளைஞனாக கதாநாயகனாக அறிமுகமாகிய ரவிச்சந்திரனை மிகவும் எதிர்பார்ப்புடன் மக்கள் கவனிக்கத் தொடங்கினர்.
தமிழ் திரைப்பட வரலாற்றில் தியாகராஜ பாகவதரா, பி.யூ. சின்னப்பாவா? எம்.ஜி. ராமச்சந்திரனா அல்லது சிவாஜி கணேசனா என்ற ரசிகர்களின் போட்டியின் தொடர்ச்சியாக ரவிச்சந்திரனா, ஜெய்சங்கரா என்ற போட்டியும் விவாதமும் ஆரோக்கியமான வளர்ச்சியாக அமைந்தது.
ரவிச்சந்திரன் தனது ஆளுமையால் 150க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து விட்டார். அதுமட்டுமல்லாமல் திரைப்படங்களின் பல நுணுக்கங்களையும், பெற்றிருந்தார். நடிப்புடன் நில்லாது தயாரிப்பு, இயக்கம், கதை, திரைக்கதை, பாடல்கள், படத்தொகுப்பு என பல்துறைகளிலும் தனது முத்திரையைப் பதித்து வருகிறார். பல குணசித்திர வேடங்களிலும் நடித்தவர் நடிகர் ரவிச்சந்திரன்.

ஒருகாலகட்டத்தில் தமிழ்ப்பட வளர்ச்சியில், திரைப்படக் கல்லூரி மாணவர்கள் ஒரு திருப்பத்தை ஏற்படுத்தினர். அந்த வகையில் திரைப்படக் கல்லூரியில் பயின்ற அரவிந்தராஜ் இயக்கத்தில் வெளிவந்த ‘ஊமை விழிகள்’ படம் இளந்தலைமுறையை ஒரு உசுப்பு உசுப்பியது. அதில் வில்லன் கதாபாத்திரத்தில் தோன்றி தமிழ்த் திரைப்பட ரசிகர்கள் உள்ளத்தில் மாறாத இடத்தை பிடித்தவர் நடிகர் ரவிச்சந்திரன்.
பிரபல மலையாள நடிகை ஷீலாவைத் திருமணம் செய்த இவர், பின்னர் அவரை விட்டு பிரிந்து, மீண்டும் முதல் மனைவியிடம் தஞ்சம் அடைந்தார்
அண்மையில் இவரது மகனான அம்சவிர்தனை வைத்து ‘மந்திரன்’ என்னும் திரைப்படத்தை இயக்கினார்.
நடிகர் ரஜினிகாந் நடித்த ‘அருணாச்சலம்’, கமல்ஹாசனின் ‘பம்மல் கே சம்பந்தம்’ ஆகிய திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் தோன்றிய இவர் அண்மையில் வெளிவந்த ‘ஆடு புலி’ திரைப்படத்திலும் குறிப்பிடத்தக்க வேடத்தில் நடித்திருக்கிறார்.
தமிழ்த் திரைப்படத்தில் ஸ்டைல் நடிப்பை புகுத்திய பெருமைக்கு சொந்தக்காரராக இவர் விளங்குகிறார்.

(நன்றி - ஆம்பல)

நடிகர் ரவிச்சந்திரன் மரணம்- தினமலர்:-ஜூலை 25,2011,21:06 IST

சென்னை: தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டிருந்த, பழம்பெரும் நடிகர் ரவிச்சந்திரன் இரவு சிகிச்சை பலனின்றி காலமானார்.”காதலிக்க நேரமில்லை’ படத்தின் மூலம் டைரக்டர் ஸ்ரீதரால் கதாநாயகனாக அறிமுகம் செய்யப்பட்டவர் ரவிச்சந்திரன்,71. இதயக்கமலம், குமரிப்பெண், நான், மூன்றெழுத்து, மாடி வீட்டு மாப்பிள்ளை, அதே கண்கள், அருணாச்சலம், ரமணா <உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்துள்ளார். சென்னை தேனாம்பேட்டையில் குடும்பத்துடன் வசித்து வந்தார். அவருக்கு, கடந்த சில மாதங்களுக்கு முன், சிறுநீரகக் கோளாறு ஏற்பட்டது. இதனால், இரண்டு சிறுநீரகங்கள் செயலிழந்தன. இதையடுத்து, தனியார் மருத்துவமனையில்,”டயாலிசிஸ்’ சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.<உடல் உறுப்புகள் ஒவ்வொன்றாக செயலிழந்த நிலையில், அவருக்கு கடந்த 19ம் தேதி இரவு கடும் மூச்சுத் திணறல் ஏற்பட்டது. இதையடுத்து, மேல் சிகிச்சைக்காக அப்பல்லோ மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். மூச்சுத் திணறல் இருந்ததால், செயற்கைச் சுவாசம் அளிக்கப்பட்டு வந்தது.இந்நிலையில், இரவு 8.50 மணிக்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருக்கு விமலா என்ற மனைவியும், இரண்டுமகன்களும் உள்ளனர்.

gkrishna
25th July 2014, 04:17 PM
ரவிச்சந்திரன் நடித்த சில மலையாள படங்கள்

விமோச்சனசமரம் (1971)
அக்னிம்ருகம் (1971)
ஆரோமளுண்ணி (1972)
ஓமனா (1972)
சிஹரங்கள் (1979)

http://www.malayalachalachithram.com/posters/410.jpghttp://www.malayalachalachithram.com/posters/366.jpg

eehaiupehazij
26th July 2014, 08:24 PM
ரவிச்சந்திரன் ஜெயலலிதா நடிப்பில் வண்ணமயமான இரண்டு பாடல் காட்சிகள்

https://www.youtube.com/watch?v=Ofc0R8XAFEE

https://www.youtube.com/watch?v=VVqZ9AwfNf8

eehaiupehazij
3rd August 2014, 09:20 PM
வெள்ளிவிழா நாயகராக ரவியும் வெள்ளிக்கிழமை கதாநாயகராக ஜெய்யும் வலம்வந்த வசந்தகால நினைவலைகளில் மகிழ்ச்சி பொங்கும் நண்பர்கள் தினத்தை கொண்டாடுவோம்

https://www.youtube.com/watch?v=_Eua4rMaghU

https://www.youtube.com/watch?v=bXkkNe7Kk8c

Gopal.s
5th August 2014, 07:10 PM
https://www.youtube.com/watch?v=xdU7XAdVbn4

Gopal.s
5th August 2014, 07:18 PM
எதிரிகள் ஜாக்கிரதை படம் மாடர்ன் தியேட்டர்ஸ் படங்களில் சற்றே வித்தியாசமான நல்ல படம்.மனோகர் ஏறக்குறைய ஹீரோ போல வருவதால் ரவி ரசிகர்களுக்கு ஏமாற்றம்.அதனால் படம் சுமாராக போனது. ஆனாலும் ரவி-விஜி pair அவ்வளவு அழகு.(ரவி பக்கம் நின்றாலே கதாநாயகிகளுக்கு ஒரு ஒளி வந்து விடும்)

நேருக்கு நேர் நின்று ,எனக்கொரு ஆசை இப்போது,நீயாக என்னை தேடி வருகின்ற நேரம்,அஹ்ஹாஹா இன்று தேன் நிலவு,ஜிலுக்கடி ஜிலுக்கடி,அம்மா பக்கம் வந்தா என்று வேதா கிளப்பியிருப்பார்.(videos-Thanks Madhu)

ஜிலுக்கடி ஜிலுக்கடி ஜிகினா பாட்டின் வீடியோ இந்தாங்கோ..

http://youtu.be/R6DxEYEaLs0


நீயாக எனைத்தேடி வருகின்ற நேரம்

http://youtu.be/SJB9sZ_WCWI

ஆஹாஹா.. இன்று தேனிலவு

http://youtu.be/V2TaVZ6uOpM

https://www.youtube.com/watch?v=cL5DIFvoe-Q

https://www.youtube.com/watch?v=ksxw4Ezr5BQ

Gopal.s
16th August 2014, 08:15 PM
காதலிக்க நேரமில்லை- 50 ஆவது வருட பூர்த்தி விழா.

காதலிக்க நேரமில்லை வெற்றியில் கோபு -விஸ்வநாதன்-ராமமூர்த்தி-வின்சென்ட்-பாலைய்யா-நாகேஷ்-முத்துராமன் -ஸ்ரீதர்- ஈஸ்ட்மன் கலர் என்று பல அம்சங்கள் இருந்தாலும் ,50 நாள் ஓடி வெற்றி பெற்றிருக்க வேண்டிய படத்தை, 200 நாள் படமாக்கியது ,இந்த எழில் புது முக நாயகனே.

ரவி சந்திரன் நினைவு எழுகிறது.

eehaiupehazij
16th August 2014, 09:52 PM
ரவிச்சந்திரனின் நடன அசைவுகளில் ஒரு நளினம் இளமைத்ததும்பலோடு இசையுடன் இசைந்து வெளிப்படும் காதலிக்க நேரமில்லை மட்டுமின்றி இதயக் கமலம், நடிகர்திலகத்துடன் இணைந்த மோட்டார் சுந்தரம்பிள்ளை, நான், அதே கண்கள், மூன்றெழுத்து.....அவரது அலட்டல் இல்லாத நடனதிறமைக்கு கட்டியம்
கூறும் படங்களாக அமைந்து இன்றளவும் மக்களால் ரசிக்கப்படுகின்றனவே!

https://www.youtube.com/watch?v=oscylVvZ-w8

https://www.youtube.com/watch?v=GRMs-mIsrGQ

https://www.youtube.com/watch?v=oRS_BNiuWcA

https://www.youtube.com/watch?v=VnPFosSJOho

https://www.youtube.com/watch?v=60Y7HErO6_A

https://www.youtube.com/watch?v=YNwwNagH_VE

https://www.youtube.com/watch?v=5FvC0Bf_f9U

https://www.youtube.com/watch?v=NQv_NSIkGiU

https://www.youtube.com/watch?v=DOTiyjWxuYk

Gopal.s
17th August 2014, 03:18 AM
இன்று மாலை காமராஜர் அரங்கில் காதலிக்க நேரமில்லை படத்தின் 50-வது ஆண்டு பொன்விழா கொண்டாட்டம் நடைபெற்றது. நமது ஒய் ஜி மகேந்திரா அவர்கள் initiative எடுத்து நடத்தினார். அவருக்கு தமிழ் ஹிந்து நாளேடு கை கொடுக்க சிறப்பான விழாவாக நடந்தது.

சும்மா சொல்லக்கூடாது. YGM அவர்கள் மிகுந்த முயற்சி எடுத்து படத்தில் பங்கு பெற்ற அனைவரையும் வரவழைத்திருந்தார். ரவியின் மனைவி விமலா,காஞ்சனா, ராஜஸ்ரீ, சச்சு, விஎஸ் ராகவன், ஜூனியர் பாலையா, ஆனந்த் பாபு, அவரின் மகன் (இப்போது திரையில் ஹீரோவாக அறிமுகம் ஆகிறார்), யேசுதாஸ், ஈஸ்வரி, சிவசிதம்பரம், PBS மகன் பனீந்தர், சித்ராலயா கோபு, CVR, தேவசேனா ஸ்ரீதர் என்று அனைவரையும் மேடையேற்றி கௌரவித்தார். கார்த்திக்கை தொடர்பு கொள்ள முடியவிலையாம், வழக்கம் போல் MSV வரவில்லை. வர வேண்டும் என்று மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தும் உடல் நலம் ஒத்துழைக்காத வின்சென்ட், சுசீலாம்மா ஆகியோர் மட்டுமே ஆப்சென்ட்.

இவர்களைப் பாராட்டும் சிறப்பு அழைப்பாளர்களாக சேரன், மனோபாலா, கிரேஸி மோகன், ARS, வித்யாசாகர் என்று ஏராளமான VIPஸ். அங்கேயும் நடிகர் திலகத்தை மறக்காத சேரன் (சிவந்த மண் பற்றி அபப்டி சொன்னார்), கூடுதலாக வித்யாசாகர் பெரிய சிவாஜி ரசிகர் என்பதையும் வெளிப்படுத்தினார். கோபுவின் நகைச்சுவை இழையோடும் fluent நினைவு கூறல் [அவரும் தான் ஒரு முறை நாடகத்தில் நடித்த போது நடிகர் திலகம் நாடகம் பார்க்க வந்திருந்ததையும் மறுநாள் வீட்டிற்கு கூப்பிட்டு பாராட்டியதையும் சொன்னார் (எனக்கு கிடைத்த ஆஸ்கார் பரிசு]. மனோபாலா தான் காதலிக்க நேரமில்லை படத்தின் ரீமேக் உரிமையை ஸ்ரீதரிடம் வாங்கியதையும் பின் அதை பண்ண முடியாது என்று தெரிந்தவுடன் திருப்பிக் கொடுத்ததையும் விவரித்தார். குறிப்பாக பாலையா ரோலிற்குதான் தன்னால் யாரையும் யோசிக்கவே முடியவில்லை என்றார். விஎஸ் ராகவன் நெஞ்சிருக்கும் வரை படபிடிப்பு சமயத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியை விவரித்து விட்டு ஸ்ரீதருக்கு சிவாஜி எந்தளவிற்கு மரியாதை கொடுத்தார் என்பதை சொன்னார்.

கடைசி வரை இருந்தது மட்டுமல்லாமல் மேடையேறிய போது பேசியதோடு மட்டுமல்லாமல் என்ன பார்வை உந்தன் பார்வையை ஒரு பிடி பிடித்த தாஸேட்டன் பலத்த கைதட்டல்களை அள்ளிக் கொண்டு போனார். ஈஸ்வரி மேடைக்கு வரும் போது இரண்டு வரியாவது பாடுவார் என எதிர்பார்த்திருக்க அவர் பாடவில்லை. [வாசு உங்கள் நினைவுதான் அப்போதெல்லாம்].

முக்கியமான காட்சிகளையெல்லாம் கிளிப்பிங்க்ஸ் போட்ட YGM, அது மட்டுமல்லாமல் ரீ ரெகார்டிங் பற்றி விவரிக்கவும் செய்தார். அவரின் இசைக்குழு படத்தின் அனைத்து பாடல்களையும் பாட மாடி மேல மாடி வைத்து பாடல் காட்சி மட்டும் ஒரிஜினல் வாய்ஸுடன் கிளிப்பிங் ஆக வந்தது. சிவசிதம்பரம் காதலிக்க நேரமில்லை பாடினார்.

மேடையேறிய அனைவருமே அளவோடு பேசியது மகிழ்ச்சியான விஷயம். வழக்கம் போல் கிரேஸி மோகன் தன trade mark ஸ்டைலில் கலக்கினார். பெருமாள் கோவிலில் சடாரி வைப்பார்கள். சடாரிக்கு மற்றொரு பெயர் சடகோபம். அந்த சடகோபம்தான் இந்த கோப்பு என்றார். அந்த சடாரி சாற்றிக் கொண்டால் நகைச்சுவை எழுத்து தானாக வரும் என்றார். ஆங்கில் கிளாஸிக் படங்களை நினைவு கூற MGM, தமிழ் கிளாஸிக் படங்களை நினைவு கூற YGM என்றார். அவரும் தன பங்கிற்கு நடிகர் திலகம் பற்றி குறிப்பிட்டு விட்டு தான் கல்கியில் கேள்வி பதில் எழுதியபோது வந்த ஒரு கேள்வியைப் பற்றி சொன்னார். அந்த கேள்வியை அனுப்பிய வாசகர் சிவாஜி ஓவர் ஆக்டிங் என என் நண்பன் சொல்லுகிறானே என்று கேட்க அதற்கு கிரேஸி மோகன் இப்படி பதில் சொன்னாராம். உங்கள் நண்பரிடம் கூறுங்கள், சிவாஜிக்கு அப்புறம் ஆக்டிங் ஓவர் என்று.

இறுதியாக நெஞ்சத்தை அள்ளித்தா பாடலை குழுவினர் பாட YGM அருமையாக விஸில் அடிக்க அதன் பிறகு திருமதி தேவசேனா ஸ்ரீதர் மேடையேற்றப்பட்டு படக்குழுவினர் அனைவரும் சேர்ந்து அவரை கௌரவித்தனர். பிறகு அனைவரும் சேர்ந்து YGM அவர்களை கௌரவித்தனர்.

அருமையான மாலைபொழுது! இனிமையான விழா!

அன்புடன்

கிருஷ்ணாஜி, உங்களை கூட்டி செல்லலாம் என்று அலைபேசியில் விளித்தால் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது.

YGM நடத்தும் விழா என்று சொல்லும்போது மேடையின் பின்னணியில் இருந்து செயல்பட்டவர் நமது ராகவேந்தர் சார் என்பதை சொல்லவும் வேண்டுமோ?

Courtesy -Murali.(But he has no direct courtesy to post it in the most deserving thread.)

eehaiupehazij
17th August 2014, 09:45 AM
அந்த கேள்வியை அனுப்பிய வாசகர் சிவாஜி ஓவர் ஆக்டிங் என என் நண்பன் சொல்லுகிறானே என்று கேட்க அதற்கு கிரேஸி மோகன் இப்படி பதில் சொன்னாராம். உங்கள் நண்பரிடம் கூறுங்கள், சிவாஜிக்கு அப்புறம் ஆக்டிங் ஓவர் என்று.


சிரிப்பு மூட்டும் கேள்வி சிந்திக்க வைக்கும் பதில்.

Gopal.s
20th August 2014, 10:07 AM
காதலிக்க நேரமில்லை வயது 50

ஒரு திரைப்படம் 50 ஆண்டுகள் தாண்டியும் நம்மை மகிழ்ச்சியில் ஆழ்த்தும் என்றால் அது இந்த படம் தான் .. முழு நீள நகைச்சுவை திரைப்படம் எவ்வளவோ வந்துள்ளது ஆனாலும் ஒரு காதலிக்க நேரமில்லை மட்டும் தான் இன்றும் கலையை ரசிப்பவர்களையும் சரி நகைச்சுவை ரசிகர்களையும் சரி கட்டி இழுக்கத்தான் செய்கிறது .. அப்படிப்பட்ட படம் இது. இதற்கெல்லாம் காரணம் இயக்குனர் ஸ்ரீதரும் சித்ராலயா கோபுவும் தான்.

முழுக்க முழுக்க சீரியஸ் படங்களை எடுத்துக்கொண்டிருந்த ஸ்ரீதர் முழு நீள நகைச்சுவை சித்திரமாக ஒரு வெற்றியை கொடுக்க முடியும் என நிரூபித்தார்

படமா இது . இல்லை இல்லை காவியம் . எளிமையான கதை தான் . ஆனால் அதற்க்குள் மிகப்பிரமாதமான திரைக்கதை அமைத்து ஒரு நகைச்சுவை தோரணாமாக தொங்க விட்டார் என்றால் அது மிகையில்லை.

புது நாயக நாயகியரை வைத்து இப்படி ஒரு மாபெரும் வெற்றி கொடுத்தார் என்றால் அது எவ்வளவு பெரிய சாதனை .. இதற்கு முன்னால் முத்துராமன் சோகமான வேடங்களே செய்து வந்தார் .. அப்படி நடித்தவரை ஒரு வித்தியாசமான முழுக்க முழுக்க நகைச்சுவை நாயகனாக அதுவும் பெரும்பகுதியில் முதியவராகவும் வந்து நம்மை அசத்தியிருப்பார்.

மூன்று பெருமைக்குரிய அறிமுகமாக ரவிச்சந்திரன், காஞ்சனா மற்றும் ராஜஸ்ரீ .. ஆஹா இவர்களின் வளர்ச்சி பற்றி நான் சொல்லித்தெரியவேண்டுமா ..

இந்த படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு இன்னொரு முக்கிய காரணம் இருவர் .
ஆம நாகேஷ் மற்றும் டி.எஸ்.பாலய்யா .. தந்தை மகன் வேடமேற்று நகைச்சுவை காட்சிகளை இவர்கள் செய்தவிதம் வேறு எவரும் செய்ய இயலாத ஒன்று … இது போன்ற நடிகர்கள் கிடையாது.

கதை . மிகவும் எளிமையான கதைக்கரு .. ஒரு பெரிய பணக்காரர் விஸ்வ நாதன்(பாலய்யா) , அவருக்கு ஒரு மகன் செல்லப்பா, மகள்கள் ராஜி மற்றும் காஞ்சனா. இவருக்கு கவுரவம் மிகவும் முக்கியம், இவரது மில்லில் வேலை செய்யும் அசோக்(ரவி) இவரிடம் வம்பு செய்ய அவரை வேலையில் இருந்து நீக்கிவிடுகிறார். அதை தாங்கமுடியாத அசோக் அவரது வீட்டின் முன் கூடாரம் அமைத்து தர்ணா செய்கிறார். இதன் நடுவே கல்லூரி தேர்வு முடிந்து இரு மகள்களும் ஊர் திரும்புகின்றனர். இரு மகள்களிடமும் ரவி மோத அதில் ஒருவருடன் காதல் மலர .. அதை பெரியவர் ஒப்புக்கொள்ள மாட்டார் என்பதால் தன் ஆருயிர் நண்பனான வாசு(முத்துராமன்) வரவழைத்து தன் அப்பாவாக, விஸ்வநாதனைவிட பெரிய பணக்காரராக நடிக்க வேண்ட முதலில் மறுக்கும் வாசு பின் ஒப்புக்கொள்கிறான். இதனால் ஏற்படும் களேபரம் மீதி கதை
இதன் நடுவே வெட்டியாக சுத்தும் செல்லப்பா சினிமா படம் எடுக்கபோவதாக சொல்லிக்கொண்டு அப்பாவிடம் பணம் கேட்டு தொல்லை படுத்துகிறார்,பின் தன் அப்பாவின் மில்லில் மேனேஜர் வேலை செய்யும் தொழிலாளியின் மகளை நடிக்கவைக்கிறேன் பேர் வழி என்று அவர் அடிக்கும் லூட்டி அபாரம்…

ஒவ்வொரு வசனமும் நச்… இப்பொழுது பஞ்ச் டயலாக் பேசுகிறேன் என்று பலரும் கடித்து துப்புகிறார்களே ,..இதில் திரு சித்ராலயா கோபு அவர்கள் குறும்பாகவும் குசும்பாகவும் வசனம் எழுதியிருப்பது படத்திற்கு பெரிய பலம்
ஊரிலிருந்து வந்த தங்கைகள் தன் அண்ணாவிடம் பேசும்பொழுது நாகேஷ் சொல்கிறார் படம் எடுக்க போகிறேன் என்று … உடனே ராஜியும், காஞ்சனாவும் “ வீ டோண்ட் சி டமில் மூவீஸ் வி சீ ஒன்லி இங்லீஷ் முவீஸ்” என்று கூறுவதாகட்டும், ஓஹோ ஃப்ரொடக்ஷன்ஸ் என்று கூற உடனே இருவரும் ஓஹோ என்று சொல்ல இது வேற ஓஹோ என்று நாகேஷ் சொல்வது …. அடேயப்பா

நாகேஷ் சச்சுவை தன் சினிமாவில் நடிகையாக்குவதற்கு அவரது தந்தையிடம் சென்று பேசும் அந்த வசனங்கள் .. நச் நச்..
அதுவும் அவரை தன் அப்பா போல் பணக்காரர் ஆக வேண்டாமா, கார் வாங்க வேண்டாமா என ஆசை காட்ட அவரும் கார் வாங்கலாமா . என்று சொல்லிக்கொண்டே வர, நாகேஷ் அப்படியே கால் மேலே கால் போட்டு ஆட்டலாம் என்று சொல்ல உடனே அவர் “அது மரியதையில்ல அது மரியாதையில்ல” என்று சொல்வாரே .. அதெல்லாம் சொல்லி மாளாது ..

நாகேஷ் சச்சுவை புக் செய்துவிட்டு அவரிடம் கம்பெனி காண்ட்ராக்ட் பற்றி சொல்லுவாரே .. அதுவும் நடிப்பு அனுபவம் உண்டா என்று கேட்க சச்சுவோ ஒ பள்ளியில் ராணியாக நடித்தவருக்கு சாமரம் போடும் வேடமேற்றதை சொல்வாரே , நாகேஷின் முகத்தை பார்க்க வேண்டுமே

இந்த வசனம் தான் என்று இல்லை. படம் முழுக்க முழுக்க சிரிப்பு வசனங்கள்
இதற்கெல்லாம் மைல்க்கல்லாக அமைந்தது தந்தை மகன் கதை படலம்
ரொம்ப காஷுவலாக பாலய்யா டேய் செல்லப்பா ஏதோ படம் எடுக்கிறேன்னு சொல்லிக்கிட்டு திரியிரியே .. எங்க கத சொல்லு பார்ப்போம் என்று கூற .. உடனே நாகேஷ் பணம் கேட்க உடனே பாலய்யா நீ கதைய சொல்லுடா .. நல்லாருந்தா கண்டிப்பா பணம் தரேன் என்று சொல்லி ஆரம்பிக்கும் அந்த திகில் கதை. அப்பப்பா … நாகேஷ் சொல்லும் விதமும் சரி, பாலய்யாவின் முக பாவங்கள் , அந்த திடுக்கிடும் மர்ம கதையை சொல்ல சொல்ல முகமெல்லாம் வேர்த்து பாலய்யா படும் அவஸ்தை … அப்பா நடிப்பா அது … இருவருக்கும் சாஷ்டாங்க நமஸ்காரம்..

ஒவ்வொரு நடிகர்களையும் பார்ப்போம்
படத்தின் ஹீரோ திரு பாலய்யா…. இவர் பிறவிக்கலைஞனய்யா … நடிப்பா அது .. அந்த விஸ்வநாதனாகவே வாழ்ந்திருப்பார், அசோக்கிடம் காட்டும் கண்டிப்பு, பெண்களிடம் காட்டும் பாசம், நாகேஷிடம் குதர்க்கம், தன்னை விட பெரிய பணக்காரர் என்று தெரிந்த முத்துராமனிடம் குழைவதாகட்டும் .. அப்பப்பா ….. இதற்கு மேல் சொல்ல முடியவில்லை அப்படி ஒரு பட்டய கிளப்பும் நடிப்பு
அடுத்து நாகேஷ் … செல்லப்பா வேடத்திற்கு இவரைத்தவிர யாரையும் யோசித்து கூட பார்க்க முடியாது .. அந்த ஒல்லி வெட வெட உருவத்துடன் இவர் இந்த படம் முழுக்க நடத்தும் காமெடி ராஜாங்கம் சொல்லி மாளாது.. ஆங்கிலத்தில் சொல்வது போல் “viewer’s delight” அப்படித்தான் இந்த கதாப்பாத்திரம்.
அடுத்து வாசுவாகிய முத்துராமன்.. அதுவரை சீரியஸாகவே நடித்து வந்த இவர் இதில் அருமையான வேடம்.. படத்தின் முக்கால்வாசி வரை இவருக்கு வயதான வேடம்.. அதிலும் விஸ்வநாதனை எதிர்க்கும் அந்த முரட்டு கம்பீரம் மிடுக்கு என இவர் செய்யும் ரகளை அசத்தல் .

ரவி .. ஆஹா அழகன் அறிமுகம். இளம்பெண்களின் மனதை கவரும் வசீகர முகம்,,, குறும்பு, ரொமான்ஸ் என எல்லாவற்றையும் அழகாக வெளிப்படுத்தும் முகம்… தூள் .. பெருமைக்குரிய அறிமுகம்..
ராஜஸ்ரீ… முதலில் பணக்கார அப்பாவின் பெண்ணுக்கே உரிய அகங்காரமும் அகம்பாவமும் பின் ரவியுடன் காதலுக்கு பின் நாணம் கலந்து வரும் இவரது நடிப்பு … அழகு

காஞ்சனா .. துடுக்கு திமிர் அழகு பின் நளினம் என எல்லாமும் கலந்த நடிப்பு.. மேலே விமானத்தில் பறந்து கொண்டிருந்த இவர் சினிமா வானில் பறக்க தொடங்கினார்.
சச்சு .. அப்பாவி மீனாவாக இவர் அடிக்கும் லூட்டி சொல்ல முடியாது.
நாகேஷ் என்ற ஜாடிக்கு ஏத்த மூடி ..
இவர்களுடன் வி.எஸ்.ராகவன், ராதாபாய், வீராச்சாமி என எல்லோரும் அளவான நடிப்பை வெளிப்படுத்தினார்கள்.

படத்தின் அடுத்த பலம் பாடல்கள் மற்றும் கண்ணுக்கு குளிர்ச்சியான படப்பிடிப்பு .. காரணம் மெல்லிசை மன்னர்கள் மற்றும் ஏ.வின்செண்ட்
படத்தின் ஓப்பனிங் சாங். சாந்தோம் பீச் ..”என்ன பார்வை உந்தன் பார்வை “
ஏசுதாஸ் இசையரசி குரல்களில் அருமையோ அருமை..
நாளாம் நாளாம் திரு நாளாம் … இதுவெல்லாம் பொக்கிஷ பாடல்
பி.பி.ஸ்ரீனிவாசும் இசைத்த காதல் காவிய்ப்பாடல்
நெஞ்சத்தை அள்ளி கொஞ்சம் தா தா.. என யேசுதாஸ், இசையரசியுடன் ஈஸ்வரி ..
ஈஸ்வரி தனித்து பின்னி பெடலெடுத்த பாடல் . விப்ராட்டோவெல்லாம் வந்து விழும்… மல்ரென்ற முகம் இன்று சிரிக்கட்டும் .. என்ன பாட்டு என்ன நடனம்

இதையெல்லாம் விட .. வேலை போன அசோக் தன் குழுவினருடன் வேலையை திரும்ப கேட்டு பாடும் பாடலாக அமைந்த விஸ்வ நாதன் வேலை வேண்டும் பாடலாகட்டும் நடனமாகட்டும் .. இன்று வரை இது ஒரு Classic example of Song making “

மொத்தத்தில் காதலிக்க நேரமில்லை .. எத்தனை வருடங்களானானும் சோடை போவதில்லை . அப்படிப்பட்ட ஒரு காவிய படைப்பு..
இதன் 50’ஆண்டு நிறைவு விழாவை திரு ஒய்.ஜி. மகேந்திரன் ஏற்பாடு செய்து சித்ராலாயவில், இந்த படத்தில் பணிபுரிந்த அனைவரையும் அழைத்து கெளரவித்ததற்கு நெஞ்சார்ந்த நன்றிகள். இன்றைக்கு செத்தா நாளைக்கு பால் என்ற விவேக்கின் வசனத்த்றிகேற்ப இன்று மறைந்தவர்களை இன்றே மறந்துவிடக்கூடிய சினிமா உலகமிது .. அப்படியிருக்கையில் இது போன்ற ஒரு சிலாரால் தான் தமிழ் சினிமா அங்கீகாரம் தர மறுத்த பல பிரம்மாண்ட கலைஞர்களும் படைப்பாளிகளும் நம்முள் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். மீண்டும் ஒரு முறை மனமார்ந்த நன்றிகள் ஒய்.ஜி.எம்மிற்கு.,

ராஜேஷ்

Russellrhz
22nd August 2014, 04:08 AM
I am also a fan of kalainilavu. Honestly i am pleased to read about actor Ravichandran and please
try to discuss only about him. do not compare with other actors, Remember one man's food is another
man's poison. i didnot have the chance to watch sorgathil Thirumanam. Please upload if can.

Thank You very much Mr.Sivajisenthil and Mr.Gopal S for keeping the thread active. By the way can anyone of you have
ever seen the movie Poi Sollathe, I emember seeing when i was very young. Kalainilavu had given a super performance.
Please write about the movie and upload if possible. its quite difficult to get the movie in Malaysia.

Russellrhz
22nd August 2014, 04:11 AM
I am also a fan of kalainilavu. Honestly i am pleased to read about actor Ravichandran and please
try to discuss only about him. do not compare with other actors, Remember one man's food is another
man's poison. i didnot have the chance to watch sorgathil Thirumanam. Please upload if can.

Thank You very much Mr.Sivajisenthil and Mr.Gopal S for keeping the thread active. By the way can anyone of you have
ever seen the movie Poi Sollathe, I emember seeing when i was very young. Kalainilavu had given a super performance.
Please write about the movie and upload if possible. its quite difficult to get the movie in Malaysia.

mr_karthik
23rd August 2014, 02:59 PM
காதலிக்க நேரமில்லை வயது 50

மூன்று பெருமைக்குரிய அறிமுகமாக ரவிச்சந்திரன், காஞ்சனா மற்றும் ராஜஸ்ரீ .. ஆஹா இவர்களின் வளர்ச்சி பற்றி நான் சொல்லித்தெரியவேண்டுமா ..

ராஜேஷ்

ராஜேஷ் சார் மற்றும் கோபால் சார்,

பதிவு மிக அருமையாக உள்ளது. நிறைய விஷயங்களை சேகரித்து தொகுத்துள்ளீர்கள். பாராட்டுக்கள்.

ஒரு சின்னத்திருத்தம். ராஜஸ்ரீ அறிமுகமானது இந்தப்படத்தில் அல்ல. அதற்குமுன்னரே அறிமுகமாகி பல படங்களில் நடித்தவர். இப்படத்தில் அறிமுகம் ரவி மற்றும் காஞ்சனா மட்டுமே...

Gopal.s
24th August 2014, 07:42 AM
ஒரு சின்னத்திருத்தம். ராஜஸ்ரீ அறிமுகமானது இந்தப்படத்தில் அல்ல. அதற்குமுன்னரே அறிமுகமாகி பல படங்களில் நடித்தவர். இப்படத்தில் அறிமுகம் ரவி மற்றும் காஞ்சனா மட்டுமே...

உண்மை. குசும குமாரி (தோட்டா பஞ்சஜன்யத்தின் மனைவி) 1962 இல் மலையாள,கன்னட படங்களில் அறிமுகமாகி,தமிழில் துண்டு துக்கடா வேஷங்களில் வந்தார். கதாநாயகியாக தமிழில் காதலிக்க நேரமில்லை பிரேக் தந்தது.

eehaiupehazij
24th August 2014, 08:33 AM
In the context of the golden jubilee remembrances of Ravi's debut silver jubilee movie 'Kaadhalikka Neramillai' and the centenary of thespian and the hub of that movie TS Baaliah enjoy the clippings


https://www.youtube.com/watch?v=gmeSmwlX8To

https://www.youtube.com/watch?v=4IjW7cojPRs

Gopal.s
25th August 2014, 09:56 AM
ESVEE,

Its long time you visited here. Any avanangal for us?

Richardsof
25th August 2014, 10:08 AM
GOPAL SIR

UNGALUKKAGA

http://i61.tinypic.com/1z6ftsm.jpg

Gopal.s
25th August 2014, 10:11 AM
From RPRajanayahem Blog on Ravi chandran


அவர் காலத்தில் வந்த மற்ற நடிகர்கள் மிகுந்த சிரமப்பட்டுத்தான் சினிமாவில் கதாநாயகனாக ஆக முடிந்தது.ஆனால் ரவிச்சந்திரன் மட்டும் முழுக்க அதிர்ஷ்டம் காரணமாக காதலிக்க நேரமில்லை(1964) படத்தில் அறிமுகமானார்.

காதலிக்க நேரமில்லையை அடுத்து இதயக்கமலம்(1965)அதேகண்கள்(1967), நான்(1967), மூன்றெழுத்து(1968) போன்ற கலர்ப்படங்களில் நடித்து கலர் கதாநாயகன் என்று கிராமத்தார் மத்தியில் பிரபலம்.
நடிகை காஞ்சனா ரசிகர்களால் கலர் காஞ்சனா என்றே அழைக்கப்பட்டார்.

ஜெய்சங்கர்-ரவிச்சந்திரன் இரண்டு பேரும் அன்றைக்கு இருமை எதிர்வுகள்!

ஜெய்சங்கருக்கு நடிக்க வந்து இரண்டு வருடத்தில் ஒரே ஒரு படம் ‘பட்டணத்தில் பூதம்’(1967) தான் அப்போது கலர் படம்.
அன்று வண்ணப்படம் என்பது கொஞ்சம் அபூர்வம்!

காதலிக்க நேரமில்லை, இதயக்கமலம் படங்களுக்குப் பிறகு இவரை எப்படி பயன்படுத்துவது என்பது பற்றி ஒரு குழப்பம் இயக்குனர்களுக்கு நிச்சயம் இருந்திருக்கும்.ராமண்ணாவின் படம் குமரிப்பெண்(1966) ரிலீஸ். ராணி பத்திரிக்கை ரொம்ப உணர்ச்சி வசப்பட்டு ”ரவிச்சந்திரனா? ராமச்சந்திரனா?” என்று எம்.ஜி.ஆர் படம் பார்த்த பரவசம் ஏற்பட்டதாக எழுதி விட்டது!
அப்புறம் என்ன?

காதலிக்க நேரமில்லை, இதயக்கமலம், அதே கண்கள், நான் ஆகிய படங்கள் எப்போது பார்த்தாலும் சலிக்காதவை.
இதயக்கமலம் சீரியஸ் படம் தான்.
ஆனால் பி.பி.ஸ்ரீநிவாஸின்
“ நீ போகுமிடமெல்லாம் நானும் வருவேன் போ போ”
தோள் கண்டேன், தோளே கண்டேன்”
பி.சுசிலாவின் மோகன ராக “ மலர்கள் நனைந்தன பனியாலே” போன்ற அற்புதமான பாடல்கள். எல்.வி.பிரசாத் இயக்கம். கே.ஆர்.விஜயா தான் நடித்த படங்களில் பிடித்த படமாக இதயக்கமலத்தை தான் சொல்வது வழக்கம்.


மதராஸ் டூ பாண்டிச்சேரி(1966),நினைவில் நின்றவள்(1967), உத்தரவின்றி உள்ளே வா (1971)முழு நீள நகைச்சுவைப் படங்கள்.
1971 வருடம் தான் ஜெய்சங்கருக்கு இரண்டாவது வண்ணப்படம் ரவிச்சந்திரனுடன் நடித்த ’நான்கு சுவர்கள்’, மூன்றாவது வண்ணப்படம் ’வீட்டுக்கு ஒரு பிள்ளை’!
ஜெய்சங்கர் வில்லன் ரோல் செய்து முரட்டுக்காளை யிலிருந்து வேறு நடிகர் ஆன பின்னும் ரவிச்சந்திரன் அதே பாணியில் மாறிய போதும் ஜெய்சங்கருக்கு தான் அதிக வாய்ப்புகள் வாய்த்தன.
வில்லனாக ரவிச்சந்திரன் ஊமை விழிகளில் நடித்ததை மறக்கமுடியாது.அதே படத்தில் ஜெய்சங்கருக்கு குணச்சித்திர வேடம்- பி.பி.எஸ் பாடல் “தோல்வி நிலையென நினைத்தால் வாழ்வை நினைக்கலாமா?”


காதலிக்க நேரமில்லை படத்தை 100 தடவை சித்ராலயா கோபுவும்,ரவிச்சந்திரனும் பார்த்தார்களாம்.
முத்துராமன்,ஏ.வி.எம்.ராஜன் போல கடுமையாய் போராடாமல், ஜெய்சங்கர் போல சிரமப்படாமல் ஒவர் நைட் ஹீரோ வான பிரமிப்பு ரவிச்சந்திரனை விட்டு கடைசி வரை நீங்கவில்லை.



சிவாஜியுடன் மோட்டார் சுந்தரம் பிள்ளை,கவரிமான்
ஜெமினி கணேசனுடன் காவியத்தலைவி,மாலதி,சினேகிதி, ரங்கராட்டினம்,
ஏ.வி.எம் ராஜனுடன் ’ஏன்’ ’ஜீவநாடி’, ’புகுந்த வீடு’.

நடன அசைவுகள் ரவிச்சந்திரன் நன்றாகச் செய்வார்.

’கண்ணிரெண்டில் வெண்ணிலா கதைகள் சொல்லும் பெண்ணிலா
நானிருந்தும் நீயிலா வாழ்வில் ஏது தேனிலா’

‘பூவைப்போலே சூடவா போர்வையாலே மூடவா
காதல் என்றால் என்னவென்று கண்ணை மூடி காணவா.....
ஆசை வெள்ளம் போகும்போது ஓசை கொஞ்சம் கேட்குமோ’

டப்பாங்குத்து,குத்தாட்டம்

’கண்ணுக்கு தெரியாதா நெஞ்சுக்குப் புரியாதா’

’பொம்பள ஒருத்தி இருந்தாளாம் பூதத்தை பாத்து பயந்தாளாம்.’

’ராஜா கண்ணு போகாதடி நீ போனா நெஞ்சுக்கு ஆகாதடி’


சண்டைக் காட்சிகளில் உணர்ச்சி வசப்பட்டு அடித்தே விடுவார் என்று ஸ்டண்ட் நடிகர்கள் சொல்வார்கள்.





ரவிச்சந்திரன் நடித்த படங்கள் இந்தியில் ரீமேக் ஆகியிருக்கின்றன்.
காதலிக்க நேரமில்லை இந்தியில்’ப்யார் கி ஜா’ -சசிகபூர், (முத்துராமன் ரோலில் கிஷோர்குமார்)
’நான்’ இந்தியில் ’வாரிஸ்’-ஜிதேந்திரா,
மதராஸ் டூ பாண்டிச்சேரி இந்தியில் ’பாம்பே டூ கோவா’-அமிதாப் பச்சன்!


ரவிச்சந்திரன்முதல் மனைவி விமலாவுக்கு இரண்டு மகன்கள்,ஒரு மகள்.
ஷீலா இரண்டாவது மனைவியான பின் ’மஞ்சள் குங்குமம்’(1973) ரவிச்சந்திரன் அவர் டைரக்*ஷனில் நடித்தார். எஸ்.பி.பி யின் ‘என் காதல் கண்மணி ஏதேதோ நினைத்தாளோ சொல்ல நாணம் வந்ததோ சொல்லாமல் மறைத்தாளோராதா ராதா ராதா’ பாடல் இந்தப்படத்தில்.
ஷீலாவுக்கு ஒரு மகன்.ஜார்ஜ்.இந்த உறவு நீடிக்கவில்லை.
ஷீலாவின் உறவு காரணமாக ரவிச்சந்திரன் அன்று சில மலையாளப்படங்களில் கதாநாயகனாக நடிக்க முடிந்தது. முத்துராமனுக்கோ,ஜெய்சங்கருக்கோ,ஏவிஎம் ராஜனுக்கோ மலையாளப்பட கதாநாயகனாக வாய்ப்பு கிடைத்ததில்லை.


ரவிச்சந்திரனின் வாரிசுகள் ஜார்ஜும்,ஹம்ஸவர்த்தனும் சினிமாவில் முயற்சி செய்தும் நிலைத்து நிற்க முடியவில்லை.
ஹம்ஸவர்த்தனை திரையில் நிறுத்த பெரு முயற்சி ரவிச்சந்திரன் செய்தார். இவரே மகனுக்காக படம் தயாரித்தது சரி.ஆனால் இவரே அந்தப்படத்தை பிடிவாதமாக இயக்கியது தான் மிகப்பெரிய தவறு.


........

October 10, 2008

ரவிச்சந்திரன்





திருச்சி பீமநகர் ராஜா காலனி வீடு .

இங்கே நான் குடியிருந்த போது ( இந்த வீடு தான் சிலவருடம் கழித்து கார்கில் தியாகி மேஜர் சரவணன் குடும்பம் குடியேறி தேசியகல்லூரியில் படித்து பின்னால் அவர் மேஜர் ஆகி உயிர் துறந்த போது பிரபலமானது ) எதிரே கணபதி புரத்தின் பின் பகுதி .

அங்கே குடியிருந்த மாமிக்கு என் ஒரு வயது மகன் கீர்த்தியின் மீது மிகவும் பிரியம் . எந்நேரமும் குழந்தை அவர் வீட்டில் தான் .



குழந்தை கீர்த்தியை அவர் சீராட்டினார் . அப்போது அங்கே உள்ளவர்கள் சொல்வார்கள் . சென்ற வருடம் வரை அந்த மாமி அந்த தெருவில் குடியிருந்த நடிகர் ரவிச்சந்திரன் ( காதலிக்க நேரமில்லை ரவிச்சந்திரன்தான் ) அவர்களின் இரண்டாவது மகன் ஹம்சவர்த்தனை தான் கொஞ்சி சீராட்டிகொண்டிருந்தார் . ரவிச்சந்திரன் குடும்பம் எதிரே யானை கட்டி மைதானம் தெருவில் குடி புகுந்தது .

அதன் பின் அந்த மாமிக்கு சீராட்டி பாராட்ட கிடைத்த குழந்தை தான் கீர்த்தி . மாமியும் 'எப்படியோ ரவிச்சந்திரன் குடும்பம் எதிர் தெரு போன பின் குழந்தை ஹம்சவர்தன் போய்விட்டானே என தவித்து போய் இருந்த போது ராஜநாயஹம் மகன் கீர்த்தி வந்து கவலையை தீர்த்து விட்டான் 'என சொல்வார்கள்.



பீம நகரில் கிருஷ்ணன் கோவிலுக்கு போனால் 'இப்போ தான் ரவிச்சந்திரன் வந்து பகவானை சேவிச்சிட்டு போறார் .' என அய்யர் சொல்வார் . மெயின் கார்ட் கெட் போனால் பர்மா பஜாரில்' இப்போ தான் நடிகர் ரவிச்சந்திரன் வந்துட்டு போனார் 'என்பார்கள் . நான் பார்த்ததில்லை.





ஆனால் நான் சிறுவனாய் இருக்கும்போது( 14 வயது )

கரூரில் ஒரு நாடகமொன்றிற்கு தலைமை தாங்கினார் நடிகர் ரவிச்சந்திரன் .
சரியான கூட்டம்.
அந்த நாடகம் பார்க்க ரவிச்சந்திரன் உட்கார்ந்த போது அவருக்கு பக்கத்தில் நான் தான் உட்கார்ந்தேன் .உட்கார வைக்கப்பட்டேன்.
ஒரு இரண்டு மணி நேரம் அவர் பக்கத்தில் நான் அமர்ந்திருந்தும் நடிகர் ரவிச்சந்திரன் என்னிடம் திரும்பி ஒரு வார்த்தை கூட பேசவில்லை .
' 'என்ன தம்பி , என்ன படிக்கிறே, உன் பேர் என்ன '-இப்படி கேட்பார் என சிறுவனாய் இருந்த நான் ரொம்ப ஏங்கினேன் .
ஆனால் ரவிச்சந்திரன் நிறைய சிகரெட் பிடித்துகொண்டே இருந்தார் .என்னிடம் பேசவே இல்லை!

gkrishna
25th August 2014, 07:44 PM
நேற்று முன்தினம் 23/8/14 கலைஞர் டிவி யில் அதே கண்கள் திரை படம் பார்த்த போது மனதில் தோன்றிய எண்ணங்கள் எல்லாம் எஸ்வி சார் பதிப்பித்த அதே கண்கள் விமர்சனத்தில் அப்படியே பிரதி பலிக்கிறது

நன்றி எஸ்வி சார்

Russellrhz
25th August 2014, 08:44 PM
Gopal Sir. There is another movie "Magalukkaga" in which Ravi sir acted with A.V.M Rajan.








From RPRajanayahem Blog on Ravi chandran


அவர் காலத்தில் வந்த மற்ற நடிகர்கள் மிகுந்த சிரமப்பட்டுத்தான் சினிமாவில் கதாநாயகனாக ஆக முடிந்தது.ஆனால் ரவிச்சந்திரன் மட்டும் முழுக்க அதிர்ஷ்டம் காரணமாக காதலிக்க நேரமில்லை(1964) படத்தில் அறிமுகமானார்.

காதலிக்க நேரமில்லையை அடுத்து இதயக்கமலம்(1965)அதேகண்கள்(1967), நான்(1967), மூன்றெழுத்து(1968) போன்ற கலர்ப்படங்களில் நடித்து கலர் கதாநாயகன் என்று கிராமத்தார் மத்தியில் பிரபலம்.
நடிகை காஞ்சனா ரசிகர்களால் கலர் காஞ்சனா என்றே அழைக்கப்பட்டார்.

ஜெய்சங்கர்-ரவிச்சந்திரன் இரண்டு பேரும் அன்றைக்கு இருமை எதிர்வுகள்!

ஜெய்சங்கருக்கு நடிக்க வந்து இரண்டு வருடத்தில் ஒரே ஒரு படம் ‘பட்டணத்தில் பூதம்’(1967) தான் அப்போது கலர் படம்.
அன்று வண்ணப்படம் என்பது கொஞ்சம் அபூர்வம்!

காதலிக்க நேரமில்லை, இதயக்கமலம் படங்களுக்குப் பிறகு இவரை எப்படி பயன்படுத்துவது என்பது பற்றி ஒரு குழப்பம் இயக்குனர்களுக்கு நிச்சயம் இருந்திருக்கும்.ராமண்ணாவின் படம் குமரிப்பெண்(1966) ரிலீஸ். ராணி பத்திரிக்கை ரொம்ப உணர்ச்சி வசப்பட்டு ”ரவிச்சந்திரனா? ராமச்சந்திரனா?” என்று எம்.ஜி.ஆர் படம் பார்த்த பரவசம் ஏற்பட்டதாக எழுதி விட்டது!
அப்புறம் என்ன?

காதலிக்க நேரமில்லை, இதயக்கமலம், அதே கண்கள், நான் ஆகிய படங்கள் எப்போது பார்த்தாலும் சலிக்காதவை.
இதயக்கமலம் சீரியஸ் படம் தான்.
ஆனால் பி.பி.ஸ்ரீநிவாஸின்
“ நீ போகுமிடமெல்லாம் நானும் வருவேன் போ போ”
தோள் கண்டேன், தோளே கண்டேன்”
பி.சுசிலாவின் மோகன ராக “ மலர்கள் நனைந்தன பனியாலே” போன்ற அற்புதமான பாடல்கள். எல்.வி.பிரசாத் இயக்கம். கே.ஆர்.விஜயா தான் நடித்த படங்களில் பிடித்த படமாக இதயக்கமலத்தை தான் சொல்வது வழக்கம்.


மதராஸ் டூ பாண்டிச்சேரி(1966),நினைவில் நின்றவள்(1967), உத்தரவின்றி உள்ளே வா (1971)முழு நீள நகைச்சுவைப் படங்கள்.
1971 வருடம் தான் ஜெய்சங்கருக்கு இரண்டாவது வண்ணப்படம் ரவிச்சந்திரனுடன் நடித்த ’நான்கு சுவர்கள்’, மூன்றாவது வண்ணப்படம் ’வீட்டுக்கு ஒரு பிள்ளை’!
ஜெய்சங்கர் வில்லன் ரோல் செய்து முரட்டுக்காளை யிலிருந்து வேறு நடிகர் ஆன பின்னும் ரவிச்சந்திரன் அதே பாணியில் மாறிய போதும் ஜெய்சங்கருக்கு தான் அதிக வாய்ப்புகள் வாய்த்தன.
வில்லனாக ரவிச்சந்திரன் ஊமை விழிகளில் நடித்ததை மறக்கமுடியாது.அதே படத்தில் ஜெய்சங்கருக்கு குணச்சித்திர வேடம்- பி.பி.எஸ் பாடல் “தோல்வி நிலையென நினைத்தால் வாழ்வை நினைக்கலாமா?”


காதலிக்க நேரமில்லை படத்தை 100 தடவை சித்ராலயா கோபுவும்,ரவிச்சந்திரனும் பார்த்தார்களாம்.
முத்துராமன்,ஏ.வி.எம்.ராஜன் போல கடுமையாய் போராடாமல், ஜெய்சங்கர் போல சிரமப்படாமல் ஒவர் நைட் ஹீரோ வான பிரமிப்பு ரவிச்சந்திரனை விட்டு கடைசி வரை நீங்கவில்லை.



சிவாஜியுடன் மோட்டார் சுந்தரம் பிள்ளை,கவரிமான்
ஜெமினி கணேசனுடன் காவியத்தலைவி,மாலதி,சினேகிதி, ரங்கராட்டினம்,
ஏ.வி.எம் ராஜனுடன் ’ஏன்’ ’ஜீவநாடி’, ’புகுந்த வீடு’.

நடன அசைவுகள் ரவிச்சந்திரன் நன்றாகச் செய்வார்.

’கண்ணிரெண்டில் வெண்ணிலா கதைகள் சொல்லும் பெண்ணிலா
நானிருந்தும் நீயிலா வாழ்வில் ஏது தேனிலா’

‘பூவைப்போலே சூடவா போர்வையாலே மூடவா
காதல் என்றால் என்னவென்று கண்ணை மூடி காணவா.....
ஆசை வெள்ளம் போகும்போது ஓசை கொஞ்சம் கேட்குமோ’

டப்பாங்குத்து,குத்தாட்டம்

’கண்ணுக்கு தெரியாதா நெஞ்சுக்குப் புரியாதா’

’பொம்பள ஒருத்தி இருந்தாளாம் பூதத்தை பாத்து பயந்தாளாம்.’

’ராஜா கண்ணு போகாதடி நீ போனா நெஞ்சுக்கு ஆகாதடி’


சண்டைக் காட்சிகளில் உணர்ச்சி வசப்பட்டு அடித்தே விடுவார் என்று ஸ்டண்ட் நடிகர்கள் சொல்வார்கள்.





ரவிச்சந்திரன் நடித்த படங்கள் இந்தியில் ரீமேக் ஆகியிருக்கின்றன்.
காதலிக்க நேரமில்லை இந்தியில்’ப்யார் கி ஜா’ -சசிகபூர், (முத்துராமன் ரோலில் கிஷோர்குமார்)
’நான்’ இந்தியில் ’வாரிஸ்’-ஜிதேந்திரா,
மதராஸ் டூ பாண்டிச்சேரி இந்தியில் ’பாம்பே டூ கோவா’-அமிதாப் பச்சன்!


ரவிச்சந்திரன்முதல் மனைவி விமலாவுக்கு இரண்டு மகன்கள்,ஒரு மகள்.
ஷீலா இரண்டாவது மனைவியான பின் ’மஞ்சள் குங்குமம்’(1973) ரவிச்சந்திரன் அவர் டைரக்*ஷனில் நடித்தார். எஸ்.பி.பி யின் ‘என் காதல் கண்மணி ஏதேதோ நினைத்தாளோ சொல்ல நாணம் வந்ததோ சொல்லாமல் மறைத்தாளோராதா ராதா ராதா’ பாடல் இந்தப்படத்தில்.
ஷீலாவுக்கு ஒரு மகன்.ஜார்ஜ்.இந்த உறவு நீடிக்கவில்லை.
ஷீலாவின் உறவு காரணமாக ரவிச்சந்திரன் அன்று சில மலையாளப்படங்களில் கதாநாயகனாக நடிக்க முடிந்தது. முத்துராமனுக்கோ,ஜெய்சங்கருக்கோ,ஏவிஎம் ராஜனுக்கோ மலையாளப்பட கதாநாயகனாக வாய்ப்பு கிடைத்ததில்லை.


ரவிச்சந்திரனின் வாரிசுகள் ஜார்ஜும்,ஹம்ஸவர்த்தனும் சினிமாவில் முயற்சி செய்தும் நிலைத்து நிற்க முடியவில்லை.
ஹம்ஸவர்த்தனை திரையில் நிறுத்த பெரு முயற்சி ரவிச்சந்திரன் செய்தார். இவரே மகனுக்காக படம் தயாரித்தது சரி.ஆனால் இவரே அந்தப்படத்தை பிடிவாதமாக இயக்கியது தான் மிகப்பெரிய தவறு.


........

October 10, 2008

ரவிச்சந்திரன்





திருச்சி பீமநகர் ராஜா காலனி வீடு .

இங்கே நான் குடியிருந்த போது ( இந்த வீடு தான் சிலவருடம் கழித்து கார்கில் தியாகி மேஜர் சரவணன் குடும்பம் குடியேறி தேசியகல்லூரியில் படித்து பின்னால் அவர் மேஜர் ஆகி உயிர் துறந்த போது பிரபலமானது ) எதிரே கணபதி புரத்தின் பின் பகுதி .

அங்கே குடியிருந்த மாமிக்கு என் ஒரு வயது மகன் கீர்த்தியின் மீது மிகவும் பிரியம் . எந்நேரமும் குழந்தை அவர் வீட்டில் தான் .



குழந்தை கீர்த்தியை அவர் சீராட்டினார் . அப்போது அங்கே உள்ளவர்கள் சொல்வார்கள் . சென்ற வருடம் வரை அந்த மாமி அந்த தெருவில் குடியிருந்த நடிகர் ரவிச்சந்திரன் ( காதலிக்க நேரமில்லை ரவிச்சந்திரன்தான் ) அவர்களின் இரண்டாவது மகன் ஹம்சவர்த்தனை தான் கொஞ்சி சீராட்டிகொண்டிருந்தார் . ரவிச்சந்திரன் குடும்பம் எதிரே யானை கட்டி மைதானம் தெருவில் குடி புகுந்தது .

அதன் பின் அந்த மாமிக்கு சீராட்டி பாராட்ட கிடைத்த குழந்தை தான் கீர்த்தி . மாமியும் 'எப்படியோ ரவிச்சந்திரன் குடும்பம் எதிர் தெரு போன பின் குழந்தை ஹம்சவர்தன் போய்விட்டானே என தவித்து போய் இருந்த போது ராஜநாயஹம் மகன் கீர்த்தி வந்து கவலையை தீர்த்து விட்டான் 'என சொல்வார்கள்.



பீம நகரில் கிருஷ்ணன் கோவிலுக்கு போனால் 'இப்போ தான் ரவிச்சந்திரன் வந்து பகவானை சேவிச்சிட்டு போறார் .' என அய்யர் சொல்வார் . மெயின் கார்ட் கெட் போனால் பர்மா பஜாரில்' இப்போ தான் நடிகர் ரவிச்சந்திரன் வந்துட்டு போனார் 'என்பார்கள் . நான் பார்த்ததில்லை.





ஆனால் நான் சிறுவனாய் இருக்கும்போது( 14 வயது )

கரூரில் ஒரு நாடகமொன்றிற்கு தலைமை தாங்கினார் நடிகர் ரவிச்சந்திரன் .
சரியான கூட்டம்.
அந்த நாடகம் பார்க்க ரவிச்சந்திரன் உட்கார்ந்த போது அவருக்கு பக்கத்தில் நான் தான் உட்கார்ந்தேன் .உட்கார வைக்கப்பட்டேன்.
ஒரு இரண்டு மணி நேரம் அவர் பக்கத்தில் நான் அமர்ந்திருந்தும் நடிகர் ரவிச்சந்திரன் என்னிடம் திரும்பி ஒரு வார்த்தை கூட பேசவில்லை .
' 'என்ன தம்பி , என்ன படிக்கிறே, உன் பேர் என்ன '-இப்படி கேட்பார் என சிறுவனாய் இருந்த நான் ரொம்ப ஏங்கினேன் .
ஆனால் ரவிச்சந்திரன் நிறைய சிகரெட் பிடித்துகொண்டே இருந்தார் .என்னிடம் பேசவே இல்லை!

Gopal.s
28th August 2014, 11:13 AM
Courtesy-Mr.Vasudevan .

http://i.ytimg.com/vi/iGDLklzLT_Y/hqdefault.jpg

அன்று திரும்பிய இடங்களிலெல்லாம் எதிரொலித்த சூப்பர் ஹிட் பாடல். அனைத்து வானொலிகளிலும் தினம் தினம் ஒலித்த உற்சாகப் பாடல். பாகுபாடின்றி அனைவரும் ரசித்த ஒரு பாடல். பாலாவின் மணிமகுடத்தில் வைரமாய் பதிந்த பாடல். நம் நெஞ்சங்களில் நிறைந்த பாடல்.)[/b][/color][/size]

படம்: மஞ்சள் குங்குமம் (1973)
பாடல்: 'வாலிப கவிஞர்' வாலி
இசை: சங்கர் கணேஷ்
பாடியவர் : பாலா )

கொள்ளை அழகு கொஞ்சும் ரவிச்சந்திரன். இந்தப் படத்தில் பிளாக் அண்ட் ஒயிட்டில் ரொம்ப ரொம்ப சுந்தரனாகத் தெரிவார். உடம்பும் படு ஸ்லிம். சொந்த மனைவி ஷீலாவுடனான பாடல். ரவியைப் பொருத்தவரையில் இது டூயட். ஷீலாவைப் பொருத்தவரை இது சோகம்.

நர்ஸ் ஷீலாவை விரட்டி விரட்டிக் காதலிக்கும் ரவி. பிடி கொடுக்காத ஷீலா. ஆனால் தனக்கு ஏற்பட்ட நோயினால் மரண வாசலை எதிர் நோக்கும் ஷீலா. ஆனால் ரவியிடம் காதலை சூழ்நிலை காரணமாக சொல்லிவிட, ரவி மகிழ்ச்சித் தாண்டவம் ஆடி 'இதுவரை உன் காதலை என்னிடம் சொல்லாமல் மறைத்து வைத்திருந்தாயே' என்ற அர்த்தத்தில் பாட, ஆனால் அது ஷீலாவைத் தாக்கியுள்ள நோயை அவர் ரவியிடம் சொல்லாமல் மறைக்கும் அர்த்தத்தை நமக்கு உணர்த்தும் அருமையான வரிகள். ' என்னடா இது இப்படியா கதை'?! என்று படம் பார்த்தவர்கள் என்னை ஒரு பிடிபிடித்துவிடப் போகிறீர்கள்?

நான் இந்தப் படத்தை இன்னும் பார்க்கவில்லை. சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. இந்தப் பாடலுக்கான காட்சியையும், பாடல் வரிகளையும் வைத்து என் மனதில் இப்படத்தின் கதை இப்படித்தான் இருக்க வேண்டும் என்று கற்பனை செய்து வைத்திருந்தது. அது ஓரளவிற்கு சரியாக இருக்கும் என்று எண்ணுகிறேன். (கார்த்திக் சார் இருக்கும் போது எனக்கென்ன பயம்?))

நோயின் கொடுமை தாளாமல் தள்ளாடித் தள்ளாடி மயங்கி விழப் பார்க்கும் ஷீலா. ரவி தன்னிடம் நெருங்கி வரும்போது அதை மறைக்குமிடம் பரிதாபம். அது தெரியாமல் காதல் வெற்றி பெற்றதே என்று ரவியின் அளவு கடந்த உற்சாக வெள்ளம். 'பிளாக் அண்ட் பிளாக்' பேண்ட் ஷர்ட்டில் ரவி கண் கவருவார். அந்த நடையும், ஓட்டமும், துள்ளலும், சுறுசுறுப்பும் நம்மை 'ரவி ரவிதான்' என்று சந்தோஷக் கூப்பாடு போட வைக்கின்றன. முகம் வசீகரம். (ஷீலா ஏன் மயங்க மாட்டார்?)

https://i.ytimg.com/vi/0D2MkQnXEZw/mqdefault.jpg

நடிகர் திலகத்தை பாலோ பண்ணி அதே போல் விக், உடை வகையறாக்கள் என்றாலும் அது இவர் ஒருவருக்குப் பொருந்துவது போல வேறு யாருக்கும் பொருந்த வில்லையே! அழகான நடிகர் திலக ஜெராக்ஸ். (திருப்பதி லட்டு கிடைக்காத பட்சத்தில் தி.நகர் லட்டு கிடைத்ததைப் போல)

பூங்காக்களிலும், மெரினாவிலும் படமாக்கப்பட்ட பாடல். உச்சி வெயிலில் படமாக்கியிருப்பார்கள். ரவி நிழலுருவம் மிகச் சிறியதாக விழும்.

http://s1.dmcdn.net/CjdYw.jpg

பொலிவிழந்த ஷீலா பாடலுக்கு ஒரு மைனஸ் பாயிண்ட். கதை அப்படி இருக்கையில் ஒன்றும் செய்வதற்கில்லை.

வாலி கதை புரிந்து அதற்கேற்றவாறு பிளந்துகட்டியிருப்பார்.)

சங்கர் கணேஷின் மிகச் சிறந்த பத்துப் பாடல்களில் இப்பாடலும் இடம் பெறலாம். அற்புதமான இசைக்கருவிகளை ஆர்ப்பாட்டமாக உபயோகித்து காலத்தால் அழியாத காவியப் பாடலாக இரட்டையர்கள் இதைத் தந்து விட்டார்கள். இசைக்கருவிகளின் உன்னத ஆர்ப்பாட்டம். முக்கியமாக பாடலினூடே நிறைந்து வரும் அந்த புல்லாங்குழல் ஓசை. பாடல் முடிவடைந்தவுடன் நிறைவு தரும் அந்த இனிய ஓசை.

(எப்படிப்பட்ட பாடல்களையெல்லாம் தந்த திறமைசாலிகள்! கெடுத்துக் குட்டிச் சுவராக்கிய பெருமை தேவருக்கே உண்டு. சும்மா ஆட்டுக்கும், மாட்டுக்கும் 'டொன் டொன் டொய்ங்' பின்னணி போட வைத்து உருப்பட விடாமல் செய்த புண்ணியம். அப்புறம் இளையராஜாவின் போட்டியை சமாளிக்க 'கன்னிப் பருவத்திலே' கொடுத்து அது ஹிட்டாகித் தொலைக்க, டிராக் மாறியதால் நமக்குத்தான் நஷ்டம் நிறைய.)

சரி! எல்லோரையும் சொல்லியாயிற்று. இப்பாடலின் ஹீரோ யார்? ரவியா? ரவி இரண்டாவதுதான்.)

'பாடும் நிலா' பாலுதான் இப்பாடலின் ஹீரோ. மனிதர் மனதை அப்படியே கொள்ளை கொண்டு விட்டார். வேகம், தெளிவு, வைப்ரேஷன்ஸ், கம்பீரம், உற்சாகம், சந்தோஷம், ஹைபிட்ச், குழைவு, நெளிவு, சுளிவு என்று அமர்க்களமோ அமர்க்களம். அதுவும் 'ராதா' என்று முடிக்கும் போது தரும் அதிர்வுகள் அருமை. 'சொல்ல நா... ணம் வந்ததோ' அந்த 'நா' வுக்குப் பிறகு சின்ன இடைவெளிவிட்டு 'ணம்' தொடருவது பிரமாதம். இது ரவியின் சொந்தப்படம் என்று சொல்வார்கள்.)

என் காதல் கண்மணி
ஏதேதோ நினைத்தாளோ
சொல்ல நாணம் வந்ததோ
சொல்லாமல் மறைத்தாளோ
ராதா ராதா ராதா

என் காதல் கண்மணி
ஏதேதோ நினைத்தாளோ
சொல்ல நாணம் வந்ததோ
சொல்லாமல் மறைத்தாளோ
ராதா ராதா ராதா

(இடையிசை அமர்க்களம்)

என் வீட்டுத் தோட்டத்தின் புது மல்லிகை
எந்நாளும் சிந்தட்டும் இளம் புன்னகை
என் வீட்டுத் தோட்டத்தின் புது மல்லிகை
எந்நாளும் சிந்தட்டும் இளம் புன்னகை
வாடாத மலரே தேயாத நிலவே
வாடாத மலரே தேயாத நிலவே
நாள்தோறும் என்னோடு உறவாட வா
ராதா ஆஆ.......... ஆ

என் காதல் கண்மணி
ஏதேதோ நினைத்தாளோ
சொல்ல நாணம் வந்ததோ
சொல்லாமல் மறைத்தாளோ
ராதா ராதா ராதா

(ஷீலாவுக்கு வரப் போகும் ஆபத்தை முன்னமேயே அருமையாக உணர்த்தும் இசை)

கண்ணுக்குள் விளையாடும் கலை அன்னமே
காலத்தில் அழியாத எழில் வண்ணமே
கடல் வானம் யாவும் தடம் மாறினாலும்
கடல் வானம் யாவும் தடம் மாறினாலும்
மாறாத நிலை கொண்ட மனம் உண்டு வா
ராதா ஆஆ.......... ஆ

என் காதல் கண்மணி
ஏதேதோ நினைத்தாளோ
சொல்ல நாணம் வந்ததோ
சொல்லாமல் மறைத்தாளோ
ராதா ராதா ராதா

உன் நெஞ்சம் பொன் நெஞ்சம் அறியாததோ
உனதெல்லாம் எனதென்று தெரியாததோ
பனி தூங்கும் விழியே
பால் போன்ற மனமே
பனி தூங்கும் விழியே
பால் போன்ற மனமே
வருங்காலம் நமதென்ற முடிவோடு வா
ராதா ஆஆ.......... ஆ

என் காதல் கண்மணி
ஏதேதோ நினைத்தாளோ
சொல்ல நாணம் வந்ததோ
சொல்லாமல் மறைத்தாளோ
ராதா ராதா ராதா


https://www.youtube.com/watch?v=iGDLklzLT_Y&feature=player_detailpage

eehaiupehazij
5th September 2014, 04:06 PM
An ideal teacher is one who continues to be a student in learning and updating his knowledge and wisdom for the ultimate benefit of a society. He acts as a candle that lights thousands of other lights to eliminate the darkness of illiteracy. Tributes to Dr.Servapalli Radhakrishnan, in whose memory we celebrate the Teachers' Day. Respectful Greetings to all our teachers who helped us reach this stage of our life!

https://www.youtube.com/watch?v=StUK5uoBw_Y

Gopal.s
8th September 2014, 05:56 AM
https://www.youtube.com/watch?v=JVfuAws-lpY



நினைத்தால் நான் வானம் சென்று
நிலவில் ஓடி ஆடி உன்னை
நெருங்கி நெருங்கிப் பாடுவேன்

மேகம் கொண்டு வீடொன்று
மின்னல் கொண்டு விளக்கொன்று
விண் மீனால் பூவொன்று சீர்கொண்டு
உன்னோடு நானும் வருவேன்
நிலவில் ஓடி ஆடி உன்னை
நெருங்கி நெருங்கிப் பாடுவேன்

காமதேனு வந்து கறந்த பாலைத் தந்து
அருந்தும்போது உன்னை அணைக்க வேண்டும் கண்ணே
வானவீதி ஓரம் தெய்வ வீணை நாதம்
கேட்கும்போது மெல்ல கிள்ள வேண்டும் கன்னம்

தேவமாதர் கூட்டம் காம தேவன் ஆடம்
ஆடும்போது நாமும் ஆடிப் பார்க்க வேண்டும்
ஆகாய கங்கை அருகில் இந்த மங்கை
குளிக்கும்போது நானும் ஒளிந்து பார்க்க வேண்டும்

Gopal.s
8th September 2014, 08:14 PM
http://i62.tinypic.com/2s60bgm.jpg
http://youtu.be/oUrnn-lPcqM

Gopal.s
8th September 2014, 08:17 PM
ரவி வழக்கம் போல ரகளைதான்.

http://i1.ytimg.com/vi/L_t8ON6U4sQ/maxresdefault.jpg

கியூட் மேடம். திருஷ்டி படும் அழகு.

http://images.mavshack.com/PicturePublishing/IND-DVD-09-116--KUMARI_PENN--S_65e0d2be-fb59-421d-84df-ef77fdb23b8a.jpg

நாகேஷின் நகைச்சுவை தனி சுவை

https://i.ytimg.com/vi/6YJBW2HlKNY/0.jpg

வருஷத்தைப் பாரு ஈஸ்வரி ஈர்ப்பு

https://i.ytimg.com/vi/BkOgesr7AC0/0.jpg

நடந்தது என்னவென்று நீயே சொல்லு. பேக் புரஜெக்ஷன் சைக்கிள் ஷாட்ஸ்.

http://i.ytimg.com/vi/0MelToooF2s/0.jpg

நட்சத்திரப் பட்டாளம்

https://i.ytimg.com/vi/dta_rNZ3wQE/0.jpg

https://i.ytimg.com/vi/l5lrR0SbU2Q/0.jpg

http://i.ytimg.com/vi/oUrnn-lPcqM/hqdefault.jpg

குணச்சித்திர நடிப்பில் ரங்காராவ் கலக்கல்.

http://i1.ytimg.com/vi/gozJDiJRF3g/sddefault.jpg

வில்லன் ஜாபுக்கு நம்ம விஸ்வம்

http://i1.ytimg.com/vi/xwiiCyOFLNU/sddefault.jpg

Richardsof
19th September 2014, 08:37 AM
http://i60.tinypic.com/909bhw.jpg

gkrishna
8th October 2014, 10:54 AM
https://antrukandamugam.files.wordpress.com/2014/10/latha-ravichandran-veettukku-vandha-marumagal-1973-5.jpg?w=593

gkrishna
8th October 2014, 10:55 AM
https://antrukandamugam.files.wordpress.com/2014/10/latha-ravichandran-veettukku-vandha-marumagal-1973-4.jpg?w=593

gkrishna
8th October 2014, 10:56 AM
https://antrukandamugam.files.wordpress.com/2014/10/latha-ravichandran-veettukku-vandha-marumagal-1973-7.jpg?w=593

vasudevan31355
11th October 2014, 08:05 PM
'சபதம்' (1971)

இது ஒரு புதிய பதிவு

தேவநாயகி பிலிம்ஸ் 'சபதம்' (1971) என்ற அருமையான ஒரு படம். ரவிச்சந்திரன், கே.ஆர்.விஜயா, நாகேஷ், டி கே.பகவதி, வி.கே.ராமசாமி, சஹஸ்ரநாமம், அஞ்சலிதேவி, பண்டரிபாய் நடித்த இத்திரைப்படம் கதாநாயகிக்கு மிகவும் முக்கியத்துவம் அளித்த ஒரு படம். (கிருஷ்ணா! இதிலும் இந்திராதேவி உண்டு) நடனத்தை சலீம் அமைத்திருப்பார். நமது பி.என்.சுந்தரம் ஒளிப்பதிவு இயக்குனராக பணியாற்றி இருப்பார். இயக்கம் நமது பிரிய பி.மாதவன்.

கதை

மிக நல்லவரான பெரிய மனிதர் செல்வநாயகத்திற்கு (டி கே.பகவதி) அவரைப் போலவே உருவ ஒற்றுமையும், குரல் ஒற்றுமையும் கொண்ட துரைசிங்கம் (டி கே.பகவதி) என்ற தறுதலை தம்பி. அண்ணனிடமிருந்து சொத்தை பாகம் பிரித்துக் கொண்டு குடி, காமம் என்று சொத்தை அழிக்கிறான் அவன். தம்பியின் போக்கு கண்டு, மனம் நொந்து, மறுபடியும் அவனைத் தன்னுடன் சேர்த்துக் கொள்கிறார் செல்வநாயகம். தன் மனைவி கண் தெரியாத ராஜேஸ்வரி (அஞ்சலிதேவி), மகன் முத்து மேல் அதிக பாசம் அவருக்கு. தம்பி துரைசிங்கத்திற்கு லஷ்மி (பண்டரிபாய்) என்ற பண்பான மனைவி.


வியாபார விஷயமாக அண்ணனும் தம்பியும் வெளியூர் புறப்பட, அந்த சந்தர்ப்பத்தைத் தனக்கு சாதமாக்கிக் கொள்கிறான் தம்பி. உருவ ஒற்றுமையைப் பயன்படுத்தி, அண்ணனைக் கொன்றுவிட்டு, அண்ணன் வேடத்தில் வந்து நல்லவன் போல ஊரில் கபடமாடுகிறான் துரைசிங்கம். ஊரும் அவனை செல்வநாயகம் என்று பரிபூரணமாக நம்பி ஏமாறுகிறது. குழந்தையுடன் இருக்கும் தன் அண்ணியை பைத்தியம் என்று பட்டம் கட்டி அவள் வீட்டை விட்டு ஓடும்படி செய்கிறான் செல்வநாயகம்.


தன் கணக்கப்பிள்ளை வள்ளிமுத்துவின் (சஹஸ்ரநாமம்) மகள் சிவகாமி (கே.ஆர்.விஜயா) என்ற பெண்ணின் மீது காமப் பித்து பிடித்து அலைந்து, அவளை ஆசைநாயகியாய் வைத்துக் கொள்ள வள்ளிமுத்துவிடமே அனுமதி கேட்கிறான். இல்லையென்றால் கொன்று விடுவதாக பயமுறுத்துகிறான். அவன் சுயரூபம் தெரிந்து கொண்ட வள்ளிமுத்து செய்வதறியாமல் திகைத்து தூக்கில் தொங்குகிறான். (உண்மையில் துரைசிங்கத்தால் தூக்கில் தொங்கவிடப் படுகிறான்) வெளியூரில் படிக்கும் சிவகாமி தன் தந்தை இறந்த சேதி கேட்டு துடிதுடித்துப் போகிறாள். தன் தந்தையின் கடிதம் மூலம் செல்வநாயகம் ஒரு காமுகன் என்று புரிந்து கொள்கிறாள். தந்தை சாவுக்குக் காரணமானவனை பழி வாங்கத் துடிக்கிறாள். ஆனால் செல்வநாயகம் போர்வையில் இருக்கும் துரைசிங்கம் ஊர்மக்களை அப்படியே தன்னை நல்லவன் என்று நம்பும்படி செய்திருக்கிறான். இதனால் சிவகாமி துரைசிங்கம் கெட்டவன் என்று ஆதாரத்துடன் ஊர் மக்களிடம் நிரூபித்தாலும் தன் சாமர்த்தியப் பேச்சாலும், பசுத்தோல் போர்த்திய புலி நடிப்பாலும் சிவகாமியின் ஆதாரங்கள் ஒவ்வொன்றையும் உடைத்தெறிகிறான் துரைசிங்கம். அவனை அயோக்கியன் என்று ஊர் மக்கள் முன்னிலையில் விரைவில் நிரூபிப்பதாக துரைசிங்கத்திடம் 'சபதம்' போடுகிறாள் சிவகாமி.

http://i.ytimg.com/vi/yPRAkU6T8zk/0.jpg

வீட்டை விட்டு ஓடிப்போன ஓடிப்போன ராஜேஸ்வரியின் மகன் முத்து (ரவிச்சந்திரன்) வளர்ந்து பெரியவனாகி எல்லா உண்மையையும் தன் தாயின் மூலம் அறிகிறான். முத்து சிவகாமியைக் காதலித்து துரைசிங்கம் மூலம் சிவகாமி பட்ட துயரங்களை அறிந்து கொள்கிறான். பாதிக்கப்பட்ட சிவகாமி, முத்து இருவரும் கூட்டணி அமைத்து, திட்டம் போட்டு துரைசிங்கம் வீட்டில் தம்பதிகளாக நுழைகிறார்கள். இவர்களுடன் துரைசிங்கத்தின் மகன் நாகேஷும் தன் தந்தையின் கபட நாடகத்தைத் தெரிந்து கொள்ள, மூவரும் துரைசிங்கத்துடன் ஆடு புலி ஆட்டம் விளையாட ஆரம்பிக்கிறார்கள். அவனுக்கெதிரான ஆதாரங்களைத் திரட்டி அவனை நிலைகுனிய வைத்து ஊருக்கு 'அவன் துரைசிங்கம்தான்...செல்வநாயகம் இல்லை' என்று புரிய வைக்கிறார்கள். இறுதியில் இறந்து போன செல்வநாயகமே உயிருடன் திரும்ப நேரில் வர, அதிர்ச்சியடைந்து தான் வாயாலேயே தன் அண்ணன் செல்வநாயகத்தைக் கொன்றதாக தன்னையுமறியாமல் ஊர் மக்கள் முன்னிலையில் கூறி காவலர் வசம் மாட்டிக் கொள்கிறான் துரை சிங்கம். ('புதிய பறவை' கோபால் போல) ஆனால் வந்தது உண்மையான அண்ணனா?..

இறுதியில் தன் 'சபத'த்தில் மாபெரும் வெற்றி காணுகிறாள் சிவகாமி.


இந்தப் படத்தின் மிகப் பெரிய பலமான தூண் இசையமைப்பாளர் ஜி.கே.வெங்கடேஷ். என்ன ஒரு திறமை! இவர் நம் திரையுலகிற்குக் கிடைத்த ஒரு குறிஞ்சி மலர். இசையமைப்பதோடு மட்டுமல்லாமல் வித்தியாசமான குரல் வளம் கொண்ட பாடகரும் கூட.

http://i.ytimg.com/vi/BAlryz7Jl2Q/hqdefault.jpg

இப்படத்தில் இடம் பெற்ற எஸ்.பி.பாலா தங்கக் குரலில் பாடிய சூப்பர் டூப்பர் ஹிட் பாடலான

'தொடுவதென்ன தென்றலோ மலர்களோ'

பாடல் ஒன்று போதும் ஜி.கே.வெங்கடேஷ் அவரின் திறமையை காலம் முழுதும் பறைசாற்ற. நமக்கு இறப்பு என்று ஒன்று வரும்போது இந்தப் பாடலைக் கேட்டுக் கொண்டே கண் மூடினால் கண்டிப்பாக சொர்க்கம் கிடைக்கும்.

இந்தப் படத்தில் அதே போல அருமையான ஒரு பாடல். ஆனால் அதிகம் பேசப்படாத அதிசயப் பாடல். அப்போது ஓரளவிற்குப் பிரபலம். பாடலென்றால் அப்படி ஒரு பாடல்.

'ஆட்டத்தை ஆடு
புலியுடன் ஆடு
போட்டிக்கு வருகின்ற ஆட்டம் ஆடு'

இந்தப் பாட்டின் இடையிடையே வரும் இசை சித்து வேலைகள் நிஜமாகவே பிரமிக்கக் கூடிய வகையைச் சேர்ந்தவை. புத்திசாலித்தனமான வரிகளுக்கு கமர்ஷியல் இசை கிளாஸிக்காக. நிறைய வித்தியாசங்களை இப்பாடலில் உணர முடியும். ஒரு குத்துப் பாட்டு ரேஞ்சுக்கு இருந்தாலும் கதையோடு ஒட்டிய பாடல் வரிகளாலும், பங்கு கொண்ட நடிகர்களின் உற்சாகமான நடிப்பாலும், துள்ளல் போட வைக்கும் இசையாலும் இப்பாடல் ஜோராக மிளிர்கிறது.


பாடலின் வரிகள் அற்புதம்.

'உயர்ந்து நின்றால் தேவாரம்
உருண்டு வந்தால் அடிவாரம்'

மகோன்னதமான வரிகள்.

"பொய் வேஷம் போடும் துரைசிங்கமே! இப்போது உயரத்தில் நிற்கலாம். என்னால் அடிவாரத்திற்கு உருண்டு வரப்போகிறாய்"

என்ற அர்த்தம் தொனிக்கும் அழகான வரிகள். கண்ணதாசன் ரகளை வரிகளை தந்திருப்பார்.

பாடலின் நடுவில் வரும் குத்திசைக்கு நாகேஷும், ரவியும் ஆடுகளின் முகமூடி அணிந்து கொண்டு குத்தாட்டம் போடுவது அமர்க்களம். நாகேஷுக்கு அவருக்காகவே பாடுவதற்கென்றே பிறந்த ஏ.எல்.ராகவனும், கே.ஆர்.விஜயாவிற்கு ராட்சஷியும், ரவிச்சந்திரனுக்கு ஜி.கே.வெங்கடேஷ் அவர்களும் குரல் தந்து பின்னியிருப்பார்கள். (ஜி.கே.வெங்கடேஷின் குரல் அம்சமான ஒரு குதூகலம். சாய்பாபா குரல் போல) ஈஸ்வரின் அபரிமிதமான தெள்ளத் தெளிவான உச்சரிப்பு இப்பாடலுக்கு கூடுதல் பலம். 'பொல்லாத சபதம்' என்று அவர் 'ல்' லிற்கு படு அழுத்தம் கொடுத்து உச்சரிப்பது அவரால் மட்டுமே முடிந்த ஒன்று.


'புன்னகை அரசி'க்கு இந்த மாதிரி ரோல் அல்வா சாப்பிடவது போல. கலக்கிவிடுவார். டி .கே.பகவதி நல்ல அண்ணனாகவும், கெட்ட தம்பியாகவும் அருமையான நடிப்பைத் தந்திருப்பார். படம் நெடுக கொஞ்சம் கூட அலட்டிக் கொள்ளாமல் அமைதியாகச் சிரித்தபடியே வில்லத்தனம் புரிவது ஏ.ஒன். இந்தப் படம் சென்னையில் பாரகன், கிரௌன், புவனேஸ்வரி ஆகிய தியேட்டர்களில் வெளியாகி வெற்றிகரமாக ஓடியது.

http://content.hungama.com/movie/display%20image/180x255%20jpeg/83168554.jpg

இனி பாடலின் வரிகள்.

தொகையறா

உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுவார்
உறவு கலவாமை வேண்டும்
உறவு கலவாமை வேண்டும்

தத்தளாங்கு தகஜும்... தத்தளாங்கு தகஜும்... தத்தளாங்கு தகஜும்

கே.ஆர்.விஜயா

ஆட்டத்தை ஆடு
புலியுடன் ஆடு
போட்டிக்கு வருகின்ற ஆட்டம் ஆடு
இன்று ஆடுகள் மோதட்டும் புலியோடு
வெள்ளாட்டின் சபதம்
அது பொல்லாத சபதம்

ஆட்டத்தை ஆடு
புலியுடன் ஆடு
போட்டிக்கு வருகின்ற ஆட்டம் ஆடு
இன்று ஆடுகள் மோதட்டும் புலியோடு
வெள்ளாட்டின் சபதம்
அது பொல்லாத சபதம்

ரவிச்சந்திரன்

கட்டு கட்டா திருநீறு
கழுத்தில் ஆடும் மணிமாலை
கட்டு கட்டா திருநீறு
கழுத்தில் ஆடும் மணிமாலை
பக்தி பொங்கும் புலியைப் பார்த்து
பயப்படாதே வெள்ளாடு
பயமில்லாமல் நீ ஆடு
அடுத்த ஆட்டம் நீ ஆடு

வெள்ளாட்டின் சபதம்
அது பொல்லாத சபதம்
வெள்ளாட்டின் சபதம்
அது பொல்லாத சபதம்

ஆட்டத்தை ஆடு
புலியுடன் ஆடு
போட்டிக்கு வருகின்ற ஆட்டம் ஆடு
இன்று ஆடுகள் மோதட்டும் புலியோடு

நாகேஷ்

தகப்பன் புலியோ தள்ளாடுது
அந்த புலிக்குப் பிறந்த வெள்ளாடிது
தகப்பன் புலியோ தள்ளாடுது
அந்த புலிக்குப் பிறந்த வெள்ளாடிது
அப்பாவி அப்பாவும்
இப்பாவி பப்பாவும்
தப்பான சொந்தங்கள் கொண்டாடுது
மொகத்தப் பார்த்து நீ ஆடு
களத்தைப் பாத்து காய் போடு

வெள்ளாட்டின் சபதம்
அது பொல்லாத சபதம்
வெள்ளாட்டின் சபதம்
அது பொல்லாத சபதம்

ஆட்டத்தை ஆடு
புலியுடன் ஆடு
போட்டிக்கு வருகின்ற ஆட்டம் ஆடு
இன்று ஆடுகள் மோதட்டும் புலியோடு

கே.ஆர்.விஜயா

உயர்ந்து நின்றால் தேவாரம்
உருண்டு வந்தால் அடிவாரம்
உயர்ந்து நின்றால் தேவாரம்
உருண்டு வந்தால் அடிவாரம்
கள்ளனாகி தோல்வி கண்டால்
கையில் உண்டு தேவாரம்
அதிகம் உண்டு ஆதாரம்
தவணை தந்தோம் ஒரு வாரம்.

பகவதி சரணாகதி அடைய ஒரு வாரம் தவணை தருகிறார்களாம். வாவ்!

வெள்ளாட்டின் சபதம்
அது பொல்லாத சபதம்
வெள்ளாட்டின் சபதம்
அது பொல்லாத சபதம்

ஆட்டத்தை ஆடு

மூவரும்

புலியுடன் ஆடு
போட்டிக்கு வருகின்ற ஆட்டம் ஆடு
இன்று ஆடுகள் மோதட்டும் புலியோடு

வெள்ளாட்டின் சபதம்
அது பொல்லாத சபதம்
வெள்ளாட்டின் சபதம்
அது பொல்லாத சபதம்

'சபதம்' முழுப் படத்தையும் கண்டு மகிழுங்கள்.


http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=NdqjFjFGso4

Gopal.s
16th October 2014, 07:34 AM
Thanks Vasu.

இன்றைய ஸ்பெஷல் (94)

மூவாயிரம் முத்தான பதிவுகள் அளித்த கோபால் அவர்களுக்கு என் அன்புப் பரிசு

1969-களில் ஒரு பாடல். அப்போதும் கூட அது அபூர்வ பாடல்தான். வழமை போல் சிலோன் ரேடியோ புண்ணியம் கட்டிக் கொண்டது.

துள்ளல் இசையுடன் உற்சாகம் கொப்பளித்த அந்தப் பாடல் முதல் முறை கேட்டவுடன் வஜ்ரம் போல் அப்படியே என் மனசுக்குள் 'ப்பச்சக்' என்று குந்திக் கொண்டது. அது என்ன படம் ஏது படம் என்று தெரியாது. ஷார்ட்வேவ் (SW2) அலைவரிசைகளில் 'இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத் தாபனம்' பட்டும் படாமலும், விட்டும் விடாமலும் கிடைக்கும் போது, இந்தப் பாடல் போடும் போது, அப்படியே காதை ரேடியோ பொட்டியின் ஸ்பீக்கரோடு ஸ்பீக்கராக ஒட்டி வைத்து அந்த மூன்று நிமிடங்களுக்கு மேலாக கேட்டு அனுபவித்த சில நாட்களின் இன்பங்கள் இருக்கிறதே. வார்த்தைகளில் கொட்டி விட முடியாது அதை.

அப்புறம் இந்தப் பாடல் கேட்க முடியாத பாடலாகி விட்டது. ஆனால் பசுந்தாள் உரம் போட்ட மாமரச் செடிபோல மனது உள்ளேயே இந்தப் பாடலின் தாக்கம் ராட்சஷத்தனமாக என்னையுமறியாமல் வளர்ந்து கொண்டிருந்தது.

ஒருமுறை கண்ணதாசன் அவர்களின் பாடல்களின் தொகுப்பு கொண்ட புத்தகம் ஒன்றை 1986 இல் படிக்க நேரிட்டது. அதில் கண்ணதாசனின் அபூர்வ பாடல்கள் சில தென்பட்டன. அதில் இந்தப் பாடலும் பதிக்கப்பட்டிருந்தது. அப்போதுதான் இந்தப் பாடல் இடம் பெற்ற படம் 'ஓடும் நதி' என்று தெரிந்து கொண்டேன்.

ஏற்கனவே 'ஓடும் நதி' என்ற படம் பற்றி கேள்விப்பட்டு இருக்கிறேன். ஆனால் அந்த அபூர்வமான படத்தை இன்றுவரை என்னால் பார்க்க முடியவில்லை. அந்தப் படத்தில் ரவிச்சந்திரன், சரோஜாதேவி, நாகேஷ் போன்றவர்கள் நடித்திருப்பார்கள் என்று படித்திருந்தேன் நூலகங்களில். இயக்கம் தாதாமிராசி என்றும், இசை 'மெல்லிசை மன்னர்' என்றும், பாடல்கள் எழுதியது கவிஞர் என்றும் தெரிந்து கொண்டேன்.

அடுத்த நிமிடமே ஆடியோ ரிகார்டிங் கடைக்கு சென்று 'இந்தப் பாடல் கிடைக்குமா? அவசியம் வேண்டுமே" என்றேன். ம்... கடைகாரர் கைவிரித்து விட்டார். 'விழுப்புரம் சென்றால் அங்கொரு கடையில் கிடைக்கலாம்' என்று அட்ரஸ் வேறு தந்து விட்டார். அடுத்த நாள் விழுப்புரம் பயணித்து அந்த குறிப்பிட்ட கடையில் இந்தப் படத்தின் எல்லாப் பாடல்களையும் ரிகார்ட் செய்து கொண்டு வந்து விட்டேன். என் ஆசை தீர அன்று முழுதும் இந்தப் பாடலைக் கேட்டு கேட்டுக் களித்தேன். ஒன்றிரண்டு வரிகள் மட்டுமே வானொலியில் கேட்டு தெரிந்த எனக்கு பாடல் முழுதும் அன்று மனப்பாடம் ஆயிற்று. (இந்தப் பாடலை நான் திரும்பத் திரும்ப கேட்டதனால் என் தந்தை கோபம் வந்து தாங்க முடியாமல் பக்கத்து டீக்கடைக்கு ஓடியே போய்விட்டார். ஒரு இரண்டு மணி நேரம் சென்று திரும்பி வந்தும் இதே பாடலைக் கேட்டு டென்ஷன் ஆகி விட்டார். அப்புறம் மனமில்லாமல் இப்பாடலை நிறுத்தினேன்)

அப்புறம் வீடியோக்களின் காலம் வந்ததும் இந்தப் படத்தின் கேசட் தேடித் தேடி அலைந்தேன். இப்பாடல் படத்தில் எப்படி இருக்கும் என்று தெரிந்து கொள்ள ஆர்வம். ஆனால் ஏமாற்றம். 60 வருட தமிழ்ப் படங்கள் எல்லாம் ஈஸியாகக் கிடைத்தன. 1969 -ல் வெளிவந்த இப்படம் இன்றுவரை எனக்குக் கிடைக்கவில்லை.

கோபாலின் நட்பு கிடைத்ததும் நடிகர் திலகத்தைப் பற்றிய பேச்சுக்களை முடித்துவிட்டு பிறர் நடித்த பாடல்களைப் பற்றி மணிக்கணக்கில் பேசுவோம். இருவரின் ரசனை வேறு ஒரே ராஜபாட்டையில் பயணித்ததால் இந்தப் பாடல் பற்றி விரைவிலேயே பேச்சு வந்தது. அலாவுதீன் பூத விளக்கு கிடைத்தது போல ஒருநாள் இருவரும் இந்தப் பாடலைப் பற்றி பேசிப் பேசி மகிழ்ந்தோம். இந்தப் பாடல் 'எனக்குத்தான் சொந்தம்' என்று அவர் சொந்தம் கொண்டாட, 'இல்லை இல்லை எனக்குத்தான் உரிமை' என்று நான் ராம் ஜெத்மாலனியாக வாதாட, இன்பச் சண்டை இனிதே இன்றுவரை நடந்து வருகிறது எங்களுக்கிடையில்.

தினமும் 'யூ டியூபி'ல் இப்பாடலைக் search செய்வேன். அப்படி சமீபத்தில் தேடிய போது யாரோ ஒரு புண்ணியவான் இந்தப் பாடலை அப்லோட் செய்து வைத்திருந்தார். அந்த மனிதரின் பெயரைத் தொட்டு ஒரு 'உம்மா' தந்துவிட்டு, அவரை வாயார வாழ்த்திவிட்டு, பாடலை அப்படியே 'லபக்'கிக் கொண்டேன். கோபாலின் 3000 பதிவுகளுக்காக பரிசாக கொடுக்க நினைத்து அது இன்று நிறைவேறியது.

இந்தப் படத்தின் பிற பாடல்களும் ஒன்றுக்கொன்று சளைத்தவை அல்ல.

1. சுசீலாம்மா பாடும்

'காலமகள் மடியினிலே ஓடும் நதி'

என்ற பாடல் அப்படியே உள்ளத்தை பனிக்கட்டியாய் உருக வைக்கும். இது அப்போது சூப்பர் ஹிட் பாடல்.

2. 'குன்றத்தில் கோவில் கொண்ட நம்பி நம்பி' என்ற இன்னொரு அருமையான பாடல். சுசீலா பாடியது.

3. 'தங்கச் சலங்கை கட்டி தழுவுது தழுவுது பூச்செண்டு'

என்ற இன்னொரு அதியற்புதமான பாடல் உண்டு. கோபாலுக்கும், எனக்கும் இதுவும் மிக மிகப் பிடித்த பாடல். இந்தப் பாடலை எனக்கு ஞாபகப்படுத்தியவர் 'கோ' தான். தேங்க்ஸ் கோ.

4. அடுத்தது தான் நான் பெரிய பீடிகை போட்டு உங்களை 'சொல்லித் தொலையேண்டா' என்று நீங்கள் என்னை அடிக்க வரும் 'இன்றைய ஸ்பெஷல்' பாடல்.

http://i.ytimg.com/vi/Cb7Aiy58Wfc/hqdefault.jpg

'வா அந்த உலகத்தின் ஒரு பக்கம் இங்கே
காதல் பருவத்தின் மறுபக்கம் இங்கே'

இந்த வரிகளை டைப் செய்யும் போதே மனவலிகள் அப்படியே கற்பூரமாய் கரைந்து போகின்றன. ஒன்றுமே இல்லைதான் இந்தப் பாடலில். ஆனால் இந்தப் பாடலில் விட்டலாச்சாரியாவின் மந்திர தந்திரங்கள் போல ஏதோ ஒரு அசாத்திய ஈர்ப்பு குடிகொண்டிருக்கிறது. அது என்னவென்றுதான் தெரியவில்லை.

'வா' என்று 'பாடகர் திலகம்' முதல் எழுத்தை ஒரு இழுப்பு இழுப்பு ஆரம்பித்து பாடத் தொடங்கும் போதே செத்தான் ரசிக்கத் தெரிந்த ஒவ்வொருத்தனும்.

அப்புறம் சுசீலாவும், டி.எம்.எஸ்ஸும் சும்மா விசிறி வீசியடிக்கும்,

அந்த

'பாயப்ப பாயப்ப பய பாயப்ப பாயப்ப பய'

(சுசீலாம்மா சில பாடல்களை ரொம்ப ரொம்ப அழகாகப் பாடுவார். அப்படிப்பட்ட ஒரு சில பாடல்களில் இது ஜனரஞ்சக உச்சம் என்று அடித்துச் சொல்வேன்)

அடப் போங்கப்பா! கர்ணன் காமெராவில் மாட்டி பறக்கும் 'கங்கா' குதிரை போல மனசு அப்படியே பறக்கும் பாருங்க.

பல்லவி முடிந்ததும் அந்த 'விறுவிறு' 'கிடுகிடு' வென ஒலிக்கும் புல்லாங்குழல் பிட் இடையிசை... அதை தொடர்ந்து சில வினாடிகளே வரும் அந்த ஷெனாயின் பங்கு. பட்டிக்காட்டான் 'ஒய்ங்க்' என்ற சத்தத்தை கேட்டுவிட்டு, எங்காவது ஏரோபிளேன் தென்படுகிறதா என்று கைகளை கண்களுக்கு மேல் சல்யூட் போட்டது போல் வைத்து, சூரிய வெளிச்சம் கண்களைக் கூச, வானத்தில் தேடிக் கண்டுபிடித்து 'அதோ பார்ரா 'ஏர்ர்ரோபிளேனு' என்று அதே வானத்துக்கும் பூமிக்கும் துள்ளிக் குதித்து குதூகலமடைவானே... அந்த குதூகலத்தையும் தாண்டிய சந்தோஷத்தை அளிக்கும் அந்த ஷெனாய் ஒலி.

இப்படி பாடல் முழுதும் இனம் காண முடியாத அற்புதம் பரவிக் கிடக்கும்.

'யோக மேடையில் மௌன நாடகம்'
ஆடிப் பார்க்கலாம் வா'

முதல் சரணத்தின் இரண்டாம் வரிகள் முடிந்ததும் 'டங் டங் டங் டங் டங்' என்று கிடார் இசை பின்னி இழையுமே! அப்படியே உச்சி முதல் உள்ளங்கால் வரை ஆனந்த கங்கை ஓடும்.

வழக்கமான சுறுசுறு ரவி. அதே குறும்பு. அதே 'கலகல'. அதே உடல் நெளிவு டான்ஸ். சற்றே சோகமும், மகிழ்வும் கலந்து சுடிதாரில் 'சிக்'கென்று அழகு சரோஜாதேவி. வெளியில் பாலையா.

ஒரு எழுத்தை கூட மாற்றி சாமர்த்தியமாக பாடலை எழுதிய கவிஞர். கண்டு பிடியுங்கள் பார்ப்போம்.

'என்னடா இருக்கிறது இந்தப் பாடலில்!? சாதாரண ஒரு பாடல் போலத்தானே இருக்கிறது... இதற்கு இவ்வளவு அமர்க்களமா?" என்று கண்டிப்பாக நீங்கள் நினைக்கலாம். ஒரு 3 தடவை இடைவிடாமல் நன்கு ரசித்து கேளுங்கள். என்னுடன் இசைப் பைத்தியக்கார இன்ப ஹாஸ்பிட்டலுக்கு என் பக்கத்துக்கு பக்கத்து பெட்டில் உங்களுக்கு இடம் கிடைக்கும். ரிசர்வுக்கு முந்துங்கள்.:) ஏனென்றால் என் பக்கத்து பெட்டில் கோபால் அடமிட் ஆகி ரொம்ப நாளாச்சு.:)

இனி பாடலின் வரிகள்

வா அந்த உலகத்தின் ஒரு பக்கம் இங்கே
காதல் பருவத்தின் மறுபக்கம் எங்கே
அந்த உலகத்தின் ஒரு பக்கம் இங்கே
காதல் பருவத்தின் மறுபக்கம் எங்கே

பூவைப் பார்ப்பதே வாசமா
ஆசைப் பார்வையால் தீருமா
பூவைப் பார்ப்பதே வாசமா
ஆசைப் பார்வையால் தீருமா...ஆ

பாயப்ப பாயப்ப பய பாயப்ப பாயப்ப பய
பாயப்ப பாயப்ப பய பாயப்ப பாயப்ப பய
பாயப்ப பாயப்ப பய பாயப்ப பாயப்ப பய
பாயப்ப பாயப்ப பய பாயப்ப பாயப்ப பய

(புல்லாங்குழலும், ஷெனாயும் பின்னி எடுக்கும்)

ஜன்னல் இல்லாத மாடி வீட்டிலே
மன்னன் பந்தாட வேண்டும்
ஜன்னல் இல்லாத மாடி வீட்டிலே
மன்னன் பந்தாட வேண்டும்

சாயும் கண்ணாடி மேனி மீதிலே
தங்கம் கொண்டாட வேண்டும்
சாயும் கண்ணாடி மேனி மீதிலே
தங்கம் கொண்டாட வேண்டும்

மூடும் கண்ணிலும் முன்னால் தரும்

மூன்று பாஷையும் தன்னால் வரும்

மூடும் கண்ணிலும் முன்னால் வரும்

மூன்று பாஷையும் தன்னால் வரும்

யோக மேடையில் மௌன நாடகம்
ஆடிப் பார்க்கலாம் வா (கிடார் பின்னல்)

வா அந்த உலகத்தின் ஒரு பக்கம் இங்கே
காதல் பருவத்தின் மறுபக்கம் எங்கே

அந்த உலகத்தின் ஒரு பக்கம் இங்கே
காதல் பருவத்தின் மறுபக்கம் எங்கே

பூவைப் பார்ப்பதே வாசமா
ஆசைப் பார்வையால் தீருமா

பூவைப் பார்ப்பதே வாசமா
ஆசைப் பார்வையால் தீருமா...ஆ

பாயப்ப பாயப்ப பய பாயப்ப பாயப்ப பய
பாயப்ப பாயப்ப பய பாயப்ப பாயப்ப பய
பாயப்ப பாயப்ப பய பாயப்ப பாயப்ப பய
பாயப்ப பாயப்ப பய பாயப்ப பாயப்ப பய

ஹாஹஹாஹஹாஹஹாஹா
லாலலாலலாலலால டாடாடடடாஜா

கொஞ்சும் பெண்ணோடு பேசும் வேளையில்
மஞ்சம் திண்டாட வேண்டும்
கொஞ்சும் பெண்ணோடு பேசும் வேளையில்
மஞ்சம் திண்டாட வேண்டும்

வஞ்சம் இல்லாமல் வாடைக் காற்றிலே
ஒன்றில் ஒன்றாட வேண்டும்
வஞ்சம் இல்லாமல் வாடைக் காற்றிலே
ஒன்றில் ஒன்றாட வேண்டும்

கேள்வி ஞானத்தில் வாராதது

கேட்டுப் பார்த்த பின் தீராதது

கேள்வி ஞானத்தில் வாராதது

கேட்டுப் பார்த்த பின் தீராதது

போதும் என்பது இல்லையென்று
நாம் வாழ்ந்து பார்க்கலாம் வா

வா அந்த உலகத்தின் ஒரு பக்கம் இங்கே
காதல் பருவத்தின் மறுபக்கம் எங்கே
அந்த உலகத்தின் ஒரு பக்கம் இங்கே
காதல் பருவத்தின் மறுபக்கம் எங்கே

பூவைப் பார்ப்பதே வாசமா
ஆசைப் பார்வையால் தீருமா
பூவைப் பார்ப்பதே வாசமா
ஆசைப் பார்வையால் தீருமா...ஆ

பாயப்ப பாயப்ப பய பாயப்ப பாயப்ப பய
பாயப்ப பாயப்ப பய பாயப்ப பாயப்ப பய
பாயப்ப பாயப்ப பய பாயப்ப பாயப்ப பய
பாயப்ப பாயப்ப பய பாயப்ப பாயப்ப பய

http://www.youtube.com/watch?v=Cb7Aiy58Wfc&feature=player_detailpage

Gopal.s
16th October 2014, 07:40 AM
Ragavendhar Response.


வாசு சார்
இது நியாயமா...
'ஓடும் நதி'யில் என்னைத் தவிக்க விட்டு விட்டு நீங்களும் கோபாலும் மட்டும் கரை கடந்து விட்டீர்களே..
நான் என்ன பாவம் செய்தேன்...

காலமகள் வழியினிலே ஓடும் நதியினில் நீந்தி வந்து தங்களுடன் இணைந்து விடுவேன்...

...

வா அந்த உலகத்தின் ஒரு பக்கம் பாட்டைப் பொறுத்த வரையில் நான் சென்னை வானொலி நிலையத்தை கோயில் கட்டி கும்பிடுவேன்... இப்படம் ஓடிய கால கட்டத்தில் ஒவ்வொரு நாளும் மதராஸ் ஏ அலைவரிசையிலும் இரவு 7 மணி சுமாருக்கு மதராஸ் பி அலைவரிசையிலும் இரவு விவித் பாரதியிலும் (அப்போது தான் விவித்பாரதி தமிழ் ஒலிபரப்பு ஆரம்பித்த புதிது. ஏப்ரல் 1969ல் தமிழ்ப்புத்தாண்டு நாளன்று ஆரம்பிக்கப் பட்டது.) சக்கைப் போடு போட்ட பாடல். அப்போதெல்லாம் படம் வெளியாகும் முன் விவித் பாரதியில் பாடல்களை ஒலிபரப்ப ஆரம்பித்தார்கள். விவித்பாரதிக்கு முன்னால் படம் வெளியான பிறகு தான் மதராஸ் வானொலியில் படப்பாடல்கள் ஒலிபரப்பாகும். சிலோன் ரேடியோவில் மட்டும் தான் முன்பாகவே ஒலிபரப்புவார்கள். அதுவும் புதியதாக ஒரு பாடலை அறிமுகம் செய்ய வேண்டுமென்றால் அதை பொங்கும் பூம்புனல் நிகழ்ச்சியில் தான் அறிமுகம் செய்வார்கள்.
இந்த ஓடும் நதி பாட்டைப் பொறுத்த வரையில் விவித்பாரதியில் அதிகம் ஒலிபரப்பினார்கள். அப்போதெல்லாம் சென்னை மற்றும் ஒரு சில ஊர்களில் மட்டும் தான் விவித்பாரதியின் ஒலிபரப்பைக் கேட்க முடியும். செங்கல்பட்டைத் தாண்டினால் அதிகம் சிக்னல் கிடைக்காது. சிலோன் ரேடியோவின் புண்ணியம் தான். அதே போல் சிலோன் ரேடியோவின் ஒலிபரப்பு சென்னைக்குக் கேட்காது. காலையில் ஒரு சில மணி நேரம், மாலையில் ஒரு சில மணி நேரம் மட்டுமே கேட்கும். ஷார்ட் வேவ் சிற்றலை ஒலிபரப்பில் தான் சிலோன் ரேடியோ கேட்கும். ஆனால் தெளிவாக இருக்காது.

அப்படி விவித்பாரதியில் இப்பாடல் சூப்பர் டூப்பர் ஹிட்டாகி அன்று முதல் இன்று வரை என் நெஞ்சில் நிரந்தரமாகக் குடிகொண்டதுடன் நம்மையெல்லாம் தீவிர எம்எஸ்வி வெறியர்களாகவும் ஆக்கி விட்டது.

விவித்பாரதி ஆரம்பித்த புதிதில் காலை 9.30 முதல் 10.00 வரை உங்கள் விருப்பம், மதியம் 2.30 மணிக்கு திரை அமுதம், மாலை 5.30 மணி முதல் 6.30 மணி வரை மாலை இசை, இரவு 7.45 மணி முதல் 9.00 மணி வரை தேன்கிண்ணம், 9.00-9.15 மணி வரை வண்ணச்சுடர் இவ்வளவு தான். இதில் காலை 9.30 மணிக்கு உங்கள் விருப்பம் நிகழ்ச்சியில் பல நாட்கள் இடம் பெற்றது. கூடவே சிவந்த மண், நம்நாடு, தங்க சுரங்கம், அடிமைப் பெண், சாந்தி நிலையம் என கொடிகட்டிப் பறக்கும்.

சென்னை குளோப் தியேட்டர் என நினைக்கிறேன். இந்தப் பாட்டிற்காகவே சென்று படம் பார்த்த ஞாபகம் இருக்கிறது. அதற்குப் பிறகு இது வரை பார்க்கவில்லை.

இப்பாடல் காட்சியில் சூழ்நிலையை மெல்லிசை மன்னர் தன்னுடைய இசையில் அருமையாக கொண்டு வந்திருப்பார். கதைப்படி ஒரு நிர்ப்பந்தத்திற்காக சரோஜா தேவி ரவிச்சந்திரனுடன் டூயட் பாடுவாரே தவிர மனதில் ஒரு சோகம், பயம் போன்ற வேறு உணர்வுகள் இருக்கும். ரொம்ப நாளைக்கு முன்பு பார்த்ததால் முழுசாக நினைவில்லை. ஆனால் சரோஜா தேவி சோகமாத்தான் டூயட் பாடுவார். அவருடைய முகத்தை நன்கு கவனித்தால் தெரியும். அதை விட அருமையாக இசையரசியின் குரலில் இதை கவனிக்கலாம். இதை கவியரசர் வரிகளில் சொல்லி யிருப்பார் வஞ்சம் இல்லாமல் வாடைக் காற்றிலே ஒன்றில் ஒன்றாக வேண்டும்.. இதிலேயே பாடல் மற்றும் படத்தின் கதையையே சொல்லி யிருப்பார்.

இந்தப் பாடல் முடிவடைந்தவுடன் சரோஜா தேவியின் நடிப்பு நம் கண்களைக் குளமாக்கி விடும்.

கொஞ்சம் கொஞ்சமாகத் தான் இப்படம் நினைவிருக்கிறது..

அருமையான பாடலை வழங்கிய வாசு சாருக்கு பாராட்டுக்கள்..

முக்கியமாகக் குறிப்பிட வேண்டிய விஷயம்..

இப்படத்தை ரவியின் அற்புதமான நடிப்பிற்காக கண்டிப்பாகப் பார்க்க வேண்டும்.

அப்புறம்..

ஒரு நூறு முறையாவது மெல்லிசை மன்னரின் பின்னணி இசைக்காகப் பார்க்க வேண்டும்.

Gopal.s
20th October 2014, 05:23 AM
திரை இசைத் திலகம்” கே.வி. மகாதேவன் -26 பிஜிஎஸ் மணியன் எழுதும் தொடர்


"இசை மனிதகுலத்தை ஒன்று சேர்க்கிறது. எந்த நாட்டைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், எந்த நிறத்தவராக இருந்தாலும் அனைவரும் ஒன்றுதான் என்று நிரூபிப்பது இசை." ஜான் டென்வர்.



தமிழ்த் திரை உலகின் சாதனைப் படங்களின் வரிசையில் "இதயக் கமலம்" படத்திற்கும் கண்டிப்பாக ஒரு இடம் கொடுக்கலாம்.



சிவாஜி-m.g.r போன்ற உச்ச நட்சத்திரங்கள் கிடையாது.



அப்போதுதான் திரை உலகில் அறிமுகமாகி இருந்த ரவிச்சந்திரன் - கே.ஆர். விஜயா ஆகிய இருவரின் திறமை மீது நம்பிக்கை வைத்து - அதிவும் வண்ணத்திரைப்படமாக தயாரித்து ஒரு வெள்ளி விழப்படமாக கொடுக்க முடிந்தது என்றால் அது மகத்தான சாதனை தானே.



ரவிச்சந்திரன் - கே.ஆர். விஜயா ஆகிய இருவரையும் தவிர ரசிகர்களுக்கு தெரிந்த முகங்கள் என்றால் அது ஷீலா, ருக்மணி (நடிகை லக்ஷ்மியின் தாயார்) ஆகிய இருவர்தான் என்னும்போது அந்த வியப்பு அதிகமாகத்தான் செய்கிறது.



அந்த வெற்றிச் சாதனைக்கு சரியான பக்கபலமாக கே.வி. மகாதேவனின் பாடல்கள் அமைந்தன.



கவியரசு கண்ணதாசன் பாடல்கள் அனைத்தையும் காட்சிக்குப் பொருத்தமாக எழுதிக்கொடுக்க-அந்த வரிகளைப் பார்த்தவுடன் தானாகவே கே.வி. மகாதேவனிடமிருந்து மெட்டுக்கள் துள்ளி வந்து விழுந்தன.



பாடல்கள் அத்தனையுமே சூப்பர் ஹிட் பாடல்கள்தான்.



கதாநாயகன் ரவிச்சந்திரனுக்கு பி.பி. ஸ்ரீநிவாஸையும், இரட்டை வேடமேற்ற கே.ஆர். விஜயாவுக்கு பி.சுசீலா, எஸ். ஜானகி ஆகிய இருவரையும் பாடவைத்தார் கே.வி. மகாதேவன்.



இரண்டாவது கதாநாயகியான ஷீலாவிற்கும் பி. சுசீலாவின் குரலில் ஒரு பாடல்.பாடல்



"நீ போகுமிடமெல்லாம் நானும் வருவேன் போ போ போ" - பி.பி. ஸ்ரீனிவாஸ் - பி. சுசீலாவின் இணைவில் ஒரு அருமையான டூயட். விறுவிறுப்பான இணைப்பிசையும் பாடலுக்கான மெட்டும் மனதை கவருகின்றன.



"தோள் கண்டேன் தோளே கண்டேன்" - பி.பி. ஸ்ரீநிவாஸின் கந்தர்வக் குரலில் பாடல் ஒலிக்க ஹம்மிங்கிலேயே அவரைத் தொடர்வார் பி.சுசீலா. கேட்பவரை மயங்கவைக்கும் பாடலில் சரணத்துக்குச் சரணம் மாறும் இணைப்பிசையில் தான் எத்தனை பரிமாணங்கள்!



இப்போதெல்லாம் வெரைட்டி வெரைட்டி என்று பெரிதாகத் தலையில் தூக்கி வைத்துக்கொண்டு ஆடுகிறோமே அந்தச் சாதனைகளைச் சத்தமே இல்லாமல் நிகழ்த்திக் காட்டியிருக்கிறார் கே.வி. மகாதேவன்.



இந்த ஒரு பாடலில் மட்டும் என்று இல்லை. கே.வி. மகாதேவனின் இசையில் வெளிவந்த பாடல்களில் ஒன்றுக்கொன்று அவர் கொடுத்திருக்கும் வித்தியாசமான நுணுக்கங்களும் அசைவுகளும் "அட" என்று புருவங்களை உயர்த்தவைக்கும்.



"மேளத்தை மெல்லத்தட்டு மாமா - உன் தாளம் இப்போ சரிதானா" - எஸ். ஜானகி பாடியிருக்கும் இந்தப் பாடலில் சரணங்கள் விருத்தமாகவும் பாடலாகவும் விரியும் அழகே தனி.



"மலர்கள் நனைந்தன பனியாலே" - மோகன ராகத்தில் மகாதேவன் அமைத்திருக்கும் இந்தப் பாடலின் அழகும் இனிமையும் வார்த்தைகளுக்கு அவர் கொடுத்திருக்கும் அழுத்தமும் .. வருணிக்க வார்த்தைகளே இல்லை.



மோகன ராகத்தில் எத்தனையோ திரைப்படப் பாடல்கள் அமைந்திருந்தாலும் இந்தப் பாடல் முதலிடம் பெறும் முத்தான ஒரு பாடல்.



கதைப்படி மனைவி இறந்துவிட்டதால் அவள் நினைவாகவே வாழும் கதாநாயகனின் மனதுக்கு உற்சாகம் கொடுக்க அவனது முறைப்பெண்ணாக வரும் இரண்டாவது கதாநாயகி நடனமாடிப் பாடுவதாக ஒரு காட்சி.



அவள் ஆடிப்பாடும்போது அவளுடைய இடத்தில் கதாநாயகனின் மனக்கண் முன்னால் அவன் மனைவி தோன்றுவதாக காட்சி விரியும்.



இப்படிப்பட்ட சூழலில் அமைந்த பாடலை மகாதேவன் அமைத்திருக்கும் விதமே தனி.



முறைப்பெண் பாடும்போது ஒரு ராகத்திலும், அவனது கற்பனை நாயகி பாடுவதாக அமையும்போது வேறு ஒரு ராகத்திலும் அமைத்து ஒரே பாடலில் இரு வேறு சூழ்நிலைகளையும் வேறுபடுத்திக் காட்டி இருக்கிறார் கே.வி. மகாதேவன்.



ராகம் மட்டும் என்று அல்ல. தாளக் கட்டும், இணைப்பிசையுமே மாறுபடும்.



"என்னதான் ரகசியமோ இதயத்திலே.." என்று துவங்கும் இந்தப் பாடல் காட்சியில் ஷீலா, கே.ஆர். விஜயா ஆகிய இருவருமே நடித்திருப்பார்கள். பி.சுசீலாதான் இருவருக்குமே பாடி இருப்பார்.



ஷீலா பாடுவதாக அமைந்த பல்லவியும், சரணங்களும் "காபி" ராகத்திலும், கே.ஆர். விஜயா பாடும் சரணங்கள் "திலங்" ராகத்திலும் முற்றிலும் மாறுபட்ட நடையில் அமைந்த பாடல் இது.



இப்படி எல்லாம் பாடல்கள் இருந்தாலும் படத்தின் பெயர் சொன்னாலே பளிச்சென்று செவிகளில் வந்து அலைமோதும் பாடல் "உன்னைக் காணாத கண்ணும் கண்ணல்ல" பாடல் தான்.



"பாட்டைப் பார்த்ததுமே தானாகவே மெட்டு வந்து விழுந்த பாட்டு" என்று கே.வி. மகாதேவன் சிலாகித்துக் கூறிய பாடல் இது.



சுசீலாவின் தேன்குரலில் இனிமையாக ஒலிக்கும் இந்தப் பாடலின் இணைப்பிசையில் தான் சிதாரும், குழலும், வயலினும் தான் எவ்வளவு ரம்மியமாக தபேலாவுடன் இணைந்து மனத்தைக் கவர்கின்றன.!



படத்தில் பலமுறை இடம்பெறும் பாடல் இது. தீம் சாங் என்பார்களே அது இந்தப் பாடல்தான். படம் முடிவதும் இந்தப் பாடலுடன் தான்.



ஆகமொத்தம் "இதயக் கமலத்தில்" இடம் பெற்ற பாடல்கள் அனைத்துமே இன்றளவும் வாடாமல் திரை இசை ரசிகர்களின் மனங்களை நிறைத்துக் கொண்டு மணம் வீசிக்கொண்டே இருப்பது மறுக்க முடியாத உண்மை.

eehaiupehazij
21st October 2014, 05:44 PM
Happy Diwali Greetings to all fellow hubbers and visitors to this thread on RAVI the elite hero with a flair for foot tapping and rhythmic dance movements that are enjoyable even today!

eehaiupehazij
24th October 2014, 06:01 PM
SSR : Unforgettable 2nd Generation actor! May his soul rest in peace
On behalf of the 3rd Generation hero Ravi's thread, we express our heartfelt condolences for the sudden demise of beloved SSR.

Gopal.s
16th November 2014, 07:38 AM
சிவாஜியை தவிர்த்து மிக மிக ஆண்மையான அழகு சுடர் விடும் நடிகர் என்றால் ரவிச்சந்திரனே. ஹிந்தியில் கொண்டாட பட்ட ஷம்மி கபூர் உடன் ஒப்பிட்டால் ரவி மிக இளைஞர்.மிக அழகர். நடனத்திலும் wild and graceful .மிக அழகாக choreographer திட்டத்தில் இணைவார்.மிக மிக கடினமான நடன அசைவுகளை அலட்சியமாக கையாளுவார்.

அவரின் அழகும்,இளமையும் உச்சம் தொட்ட அற்புத படம் அதே கண்கள். கண் கொட்டாமல் பார்க்கலாம். இவர் சிவாஜியின் தம்பியாக ஒரு படம் முழுதும் தோன்றியிருக்கலாம் .(தீபம் படத்தில் இவரை பயன் படுத்தியிருக்கலாமோ?)

கண்ணுக்கு தெரியாதா என்ற ஒரு கிளப் நடனம். அப்பப்பா ரவியின் spontaneous and crisp execution .

https://www.youtube.com/watch?v=DOTiyjWxuYk

ஒரு குழு நடனம், காதலும் இணைந்து தரும் அதீத உற்சாகம்.

https://www.youtube.com/watch?v=NBcuYZ_v69g

டீஸிங் பாடல் ஆபாசம் இல்லாமல் சுவையுடன்,சுகமாக.என்ன ஒரு ஜாலி.

https://www.youtube.com/watch?v=z-3lvLNcmMM

படத்தில் இடம் பெறாத சின்ன பெண் ஒருத்தி சிரிக்கிறாள்.(வேறு யாரோ கொல்டி நடிகருடன் re mix )

https://www.youtube.com/watch?v=11vlthrRpU4

Gopal.s
21st November 2014, 03:37 PM
Thanks to Saradha.





ரவிச்சந்திரன் அவர்களுடன் எனது சந்திப்பு

நான் ஸ்டெல்லா மாரீஸ் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தபோது, ஒரு கல்ச்சுரல் விழாவுக்காக தோழிகள் சிலர் நாட்டிய நாடகம் ஒன்றை நடத்த ஏற்பாடு செய்திருந்தனர். (அந்த நாட்டிய நாடகத்தில் நான் இல்லை, காரணம் நாட்டியம் பார்க்க மட்டுமே தெரிந்தவள் நான்). அதற்கு இசையமைக்க நல்ல இசையமைப்பாளர் ஒருவரை ஏற்பாடு செய்யலாம் என்று யோசித்து, கடைசியில் ‘முத்து’ என்பவரை போடலாம் என்று முடிவெடுத்தனர். திரு முத்து, அப்போது இசைஞானி இளையராஜா ட்ரூப்பில் இசை உதவியாளர்களில் ஒருவராக இருந்தார். அவரைச்சந்திக்க சென்ற சின்ன குழுவில் என்னையும் சேர்த்துக்கொண்டனர். (இம்மாதிரி திரையுலக சம்மந்தப்பட்டவர்களைச் சந்திக்க செல்லும் குரூப்பில் நானாக ஒட்டிக்கொள்வது வழக்கம். காரணம் நான் ஒரு சினிமா பைத்தியம் என்பது தெரிந்த விஷயம்).

மாலை சுமார் ஆறு மணியிருக்கும். மயிலாப்பூர் சித்திர குளத்துக்கு சற்று தொலைவில் ஒரு தெருவில்தான் முத்து குடியிருந்தார். விசாரித்துக் கொண்டே அவருடைய வீட்டை அடைந்தோம். அவரது வீட்டுக்கு எதிரே சின்னதாக ஒரு அழகிய பங்களா தென்பட்டது. வாசலில் போர்டு எதுவும் இல்லை. பார்த்தால் யாரோ பெரிய புள்ளியின் வீடுஆக இருக்கும் என்பது மட்டும் தெரிந்தது. யாராவது பெரிய பிஸினஸ்மேன், அல்லது அதிகாரி வீடாக இருக்கும் என்று எங்களுக்குள் பேசிக்கொண்டே முத்துவின் வீட்டுக்குள் சென்று அவரிடம் கல்லூரி நாட்டிய நாடகத்துக்கு இசையமைக்கக்கேட்டோம். அவர் டைரியைப் புரட்டிப்பார்த்து விட்டு நாங்கள் கேட்ட அந்த தேதியில் அவர் முக்கியமான ரிக்கார்டிங்கில் வாசிக்க இருப்பதாகச் சொல்லி, எங்கள் கோரிக்கையை மறுத்துவிட்டார். இதனிடையே அவருக்கு ஏதோ முக்கியமான போன் வரவே, 'ஸாரி, வருத்தப்பட்டுக்காதீங்க. அவசரமா போக வேண்டியிருக்கு. என் மனைவியிடம் பேசிவிட்டு எல்லோரும் டீ சாப்பிட்டு விட்டுப்போங்க' என்று எங்களிடம் சொல்லி விட்டு, வாசலில் நின்ற பைக்கில் ஏறி பறந்தார். முத்துவின் மனைவி எங்களிடம் அன்போடு உரையாடினார். அப்போது எதார்த்தமாக, எதிரில் இருக்கும் பங்களா வீட்டில் இருப்பது யார் என்று கேட்டோம். 'உங்களுக்குத்தெரியாதா?. நடிகர் ரவிச்சந்திரன் சாரும், அவர் மனைவி ஷீலாவும் அந்த வீட்டில் இருக்காங்க' என்று சொல்லி, இன்ப அதிர்ச்சி கொடுத்தார்.

இப்போது எங்களுக்குள், 'ஏய் எப்படியாவது அவங்களை சந்திச்சிட்டுப் போகலாம்டி. இந்த மாதிரி சந்தர்ப்பம் இனிமே கிடைக்காது' என்று சொல்ல, எங்களில் ஒருத்தி, 'நாம நினைச்சவுடன் அவங்களை சந்திக்க முடியுமா?. திடீர்னு வாசலில் போய் நின்னா உள்ளே விடுவாங்களா?' என்று சந்தேகம் கிளப்ப, இன்னொருத்தி, 'ஒரு ஐடியா, இவங்க (முத்துவின் மனைவி) மூலமாகவே பெர்மிஷன் கேட்போமே' என்று சொல்லி அவங்களிடம் சொல்ல (இதனிடையே டீ வந்தது, குடித்தோம்). நாங்க சொன்னதைக்கேட்டு சிறிது தயங்கிய அவர், பின்னர் போன் செய்தார். ரிஸீவரை கையில் பொத்திக்கொண்டு, எங்களிடம் ரகசிய குரலில் 'சார்தான் பேசுறார்' என்றவர் போனில், 'சார், நான் எதிர்வீட்டிலிருந்து முத்துவின் மனைவி பேசுறேன். இங்கே வந்த சில கேர்ள்ஸ் ஸ்டூடண்ட்ஸ் அவரைப் பார்க்க வந்தவங்க உங்களைப்பார்க்க பெர்மிஷன் கேட்கிறாங்க...(gap)... அப்படியா?..(gap).. ரொம்ப தேங்க்ஸ் சார்' என்று ரிஸீவரை வைத்தவர், 'சார் வரச்சொல்றார்' என்றதும், எங்கள் மனதுக்குள் சந்தோஷம். முத்துவின் மனைவிக்கு நன்றி சொல்லிவிட்டு, எதிர்வீட்டுக்குப்போனோம். வாசலில் நின்றவரிடம் விஷயத்தைச்சொல்ல, உள்ளே போய் கேட்டு வந்தவர், 'உள்ளே போங்க' என்றார்.

கூடத்தில் சோபாவில் பூப்போட்ட லுங்கி, ரோஸ் கலர் காட்டன் ஜிப்பா அணிந்து, ரிலாக்ஸ்டாக நியூஸ் பேப்பர் படித்துக்கொண்டிருந்த ரவிச்சந்திரன், எங்களைப்பார்த்ததும் பேப்பரை மடித்துக்கொண்டே, 'வாங்க வாங்க, உட்காருங்க. நீங்கள்ளாம் யாருன்னு தெரிஞ்சிக்கலாமா?' என்றவாறு பேச்சைத்துவக்கினார். சோபாவில் உட்கார்ந்ததும் எங்களை அறிமுகப்படுத்திக்கொண்டோம். 'ரொம்ப சந்தோஷம், நான் நடிச்ச படங்கள்ளாம் பார்த்திருக்கீங்களா?' என்று அவர் கேட்டதும், தோழிகள் மெல்ல என்னை உசுப்பினார்கள் (காரணம், அந்தக்கூட்டத்தில் நான்தான் அதிகமாக சினிமா பார்ப்பவள், நினைவிலும் வைத்திருப்பவள்). காதலிக்க நேரமில்லையில் ஆரம்பித்து வரிசையாக அவர் படங்களைப்பற்றியும் அவர் நடிப்பையும் சொல்லத்துவங்கியதும், பாதியிலேயே சற்று சத்தமாக சிரித்தவர், 'ஏது, காலேஜ்ல போயி பாடம் படிச்ச மாதிரி தெரியலையே. பாதிநாள் தியேட்டரிலேதான் குடியிருந்திருப்பீர்கள் போலிருக்கு' என்று மீண்டும் சிரித்தார். திடீர்னு போறோமே எப்படி பேசுவாரோ என்று நினைத்துப்போன எங்களுக்கு, அவர் பேசிய விதம் ரொம்ப ரிலீஃப் ஆக இருந்தது. ரொம்ப சகஜமாக பேசினார்.

'ஷீலா மேடம் இருக்காங்களா?' என்றதும், 'ஷீலா ஒரு மலையாளப்பட ஷூட்டிங் போயிருக்காங்க. இங்கே மெட்ராஸ்லதான். வர நைட் பதினோரு மணியாகும்னு இப்போதான் போன் பண்ணினாங்க' என்றார். 'அப்போ உங்களுக்கு இன்னைக்கு ரெஸ்ட் டேயா சார்?' என்று கேட்டோம். 'இல்லேம்மா, காலைல ஃபர்ஸ்ட் ஷெட்யூல் முடிச்சிட்டு இப்போதான் நாலு மணிக்கு வந்தேன். இங்கேதான் ஓஷியானிக் ஓட்டல்ல சீன் எடுத்தாங்க. நாளைக்கும் கண்டினியூட்டி இருக்கு' என்றார். அவரது சகஜமான பேச்சு கொஞ்சம் தெம்பைத் தந்ததால் நான் தைரியமாகக் கேட்டேன், 'ஏன்சார் ஃபைட் சீன்ல டூப் போடுறாங்க?. டூப் இல்லாமல் எடுத்தால் என்ன?' என்று கேட்டதும், தோழிகள் என்னை இடித்து 'ஏய் என்னடி இதெல்லாம்' என்று சொன்னதைப் பார்த்துவிட்ட ரவி சார், 'தடுக்காதீங்க, அவங்க கேட்கட்டும்' என்றவர், சோபாவின் கைப்பிடியில் கையை ஊன்றி தீர்க்கமாக என் கண்ணைப்பார்த்தபடியே பெரிய லெக்சர் கொடுக்க ஆரம்பிச்சார்.....

'அதாவதும்மா, இந்த மாதிரி டூப் போடறதுல பல விஷயங்கள் அடங்கி இருக்கு. அதாவது கதாநாயகர்கள் ஆன நாங்க ப்ரொபெஷனல் பைட்டர்ஸ் கிடையாது, ஸ்டண்ட் மாஸ்ட்டர் சொல்லிக்கொடுக்கிறதை வச்சு செய்றோம். சில சமயம் நம்மை மீறி மிஸ் ஆச்சுன்னா, கீழே விழுந்து பலமா அடிபட்டா ஒண்ணு உயிருக்கு ஆபத்து, அல்லது உடல் உறுப்புகளுக்கு ஆபத்து, அடுத்து அடிபட்டு படுத்துட்டோம்னா மொத்த படப்பிடிப்பும் நின்னு போயிடும். ப்ரொட்யூசருக்கு பெரிய அளவுல லாஸ் வரும்.

ரெண்டாவது, டூப் பைட்டர்ஸுக்குத்தான் அந்த டைமிங் கரெக்டா தெரியும். அதாவது ஒரு மாடியிலிருந்து, கீழே ஓடும் ஒரு ட்ரக்கில் குதிக்கணும்னா, எப்போ குதிச்சா, ட்ரக் அந்த இடத்துக்கு வரும்போது கரெக்டா அதன்மீது விழுவோம்னு அவங்களுக்குத்தான் தெரியும். அதுமாதிரி கரெக்டா குதிச்சிடுவாங்க. நாங்க குதிச்சா, கொஞ்சம் மிஸ் ஆனாலும் அவ்வளவுதான்.

அடுத்து ஸ்டண்ட் யூனியனில் இருப்பவங்களுக்கு இம்மாதிரி ஃபைட் படங்கள்ளதான் வாய்ப்புக்கிடைக்கும். வருமானமும் கிடைக்கும். அதை நாம ஏன் தட்டிப்பறிக்கணும்?. அவங்களுக்கு பாலச்சந்தர் சார் படத்திலோ, கே.எஸ்.ஜி.சார் படத்திலோ வாய்ப்புக்கிடைக்காது. எம்.ஜி.ஆர்.சார் படம், என் படம், ஜெய்சங்கர் படம், இப்போ ஒரு பத்து வருஷமா சிவாஜி சார் படங்கள்ளேயும் பைட் சீன் வைக்க ஆரம்பிச்சுட்டாங்க. ஸோ, இந்த மாதிரி சந்தர்ப்பங்கள்ளேதான் அவங்களுக்கும் சான்ஸ் கிடைக்கும்.... இதை நீங்க ஸ்டூடண்ட்ஸ்ங்கிறதாலே சொல்றேன். நீங்களே பிரஸ் ரிப்போர்ட்டரா வந்திருந்தா சொல்லியிருக்க மாட்டேன். பிரச்சினையாயிடும் (சிரித்தார்).

இன்னொரு முக்கியமான விஷயம் கால்ஷீட் பிரச்சினை. நாங்க Heros ஒரே சமயத்துல நாலைந்து படங்கள்ளதான் நடிப்போம், ஆனா எங்களோடு காம்பினேஷன் சீன்ல நடிக்கிற கேரக்டர் ஆர்ட்டிஸ்ட் பல படங்கள்ள நடிச்சிக்கிட்டிருப்பாங்க. வி.எஸ்.ராகவன் சார், வி.கே.ஆர்.சார், மேஜர் சார், மனோரமா மேடம் இவங்கள்ளாம் ஒரே நேரத்துல முப்பது, நாற்பது படங்கள்ள நடிச்சிக்கிட்டு இருக்குறவங்க. எவ்வளவு கஷ்ட்டப்பட்டு இவங்க கிட்டே கால்ஷீட் வாங்கியிருப்பாங்கன்னு நமக்குத்தெரியும். நாம பெரிய பந்தாவா டூப் போடாம செய்றேன்னு செஞ்சு அடிபட்டு ஒரு பதினைந்து நாள் படுத்துட்டோம்னா போச்சு. எல்லோர்கிட்டே வாங்கின கால்ஷீட்டுமே வேஸ்ட் ஆயிடும். அப்புறம் அவங்களையெல்லாம் ஒண்ணு சேர்த்து கால்ஷீட் வாங்குவது லேசான விஷயமா?. அதே தேதியிலே ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு படத்துக்கும் கொடுத்திருப்பாங்க. அதனால் தயாரிப்பாளர் மாசக்கணக்கா வெயிட் பண்ண வேண்டி வரும். ஷெட்யூல்படி படத்தை முடிக்கலைன்னா எவ்வளவு பெரிய லாஸ்ல கொண்டுபோய் விடும் தெரியுமா?'

என்று முடித்தார். என் சிறுமதியை நான் நொந்துகொண்டேன். அதே சமயம் பரவாயில்லை, கேட்டதால்தானே இவ்வளவு விவரமும் சொன்னார் என்று சமாதானம் அடைந்தேன். (அடேயப்பா டூப் போடுறதுல இவ்வளவு அட்வான்டேஜ் இருக்கா).

மேலும் சிறிது நேரம் சில விஷயங்களைப்பற்றிப்பேசினோம். எங்கள் ஒவ்வொருவருடைய படிப்பைப் பற்றியும் கேட்டறிந்தார். இதனிடையே பணியாளர் டீயும் பிஸ்கட்டும் கொண்டு வந்து வைத்தார். 'சார் நாங்க முத்துசார் வீட்டுல இப்போதான் டீ சாப்பிட்டோம்' என்று சொன்னதும், 'அது அவர் வீட்டுக்கு போனதுக்கு. இப்போ என் வீட்டுக்கு வந்ததுக்கு சும்மா அனுப்ப முடியுமா?. டீ தானே. எத்தனையும் சாப்பிடலாம். எடுத்துக்குங்க' என்றார்.

'சார், உங்களை சந்திப்போம்னு ஒருமணி நேரத்துக்கு முன் வரை நினைக்கவேயில்லை. பெர்மிஷன் கொடுத்ததுக்கும், ஒரு விருந்தினரைப்போல கவனிச்சதுக்கும் ரொம்ப தேங்க்ஸ் சார்' என்றோம் கோரஸாக. 'என்ன பெரிசா செஞ்சுட்டேன்னு தேங்க்ஸ் எல்லாம் சொல்றீங்க. நாம இன்னைக்கு சந்திக்கணும்னு ஆண்டவன் எழுதி வசிருக்கான். அதான் உங்களைக்கொண்டு வந்து சேர்த்துட்டான். நான்தான் உங்களுக்கு தேங்க்ஸ் சொல்லணூம். ரொம்ப லோன்லியா ஃபீல் பண்ணிக்கிட்டிருந்தேன். ஒரு மணி நேரம் நல்லா ரிலாக்ஸ்டா போச்சு. ஷீலாவைப்பார்க்கணும்னா இன்னொரு நாளைக்கு போன் பண்ணி கேட்டுகிட்டு வாங்க' என்று வாசல் வரை வந்து அன்புடன் வழியனுப்பி வைத்தார்.

முத்து எங்களுக்கு இசையமைக்க முடியவில்லையே என்ற வருத்தம் எல்லாம் போச்சு. மாறாக, ரவிச்சந்திரன் அவர்களின் சந்திப்பும் உரையாடலும் மனம் முழுக்க நிறைந்தது. எதிர் வீட்டிலிருந்த முத்துவின் மனைவியைச் சந்தித்து மீண்டும் நன்றி தெரிவித்து விட்டு வந்தோம். ஆட்டோ பிடிக்கணும் என்ற எண்ணம்கூட இல்லை. சள சளவென்று பேசிக்கொண்டே 'லஸ்கார்னர்' வரை நடந்தே வந்தோம்.

இந்தச் சந்திப்புக்குப்பின் ரவிச்சந்திரன் என மனதில் பல படிகள் உயர்ந்துவிட்டார். இந்த திரி துவங்கியதற்கு அவருடன் எதிர்பாராமல் நேர்ந்த அந்த சந்திப்பும் ஒரு காரணம் எனலாம்.

Gopal.s
21st November 2014, 04:11 PM
"மூன்றெழுத்து"(Thanks to Saradha)
ராமண்ணா - ரவிச்சந்திரன் – ராமமூர்த்தி(tk) என்ற 'r' அணியின் முந்தைய படைப்பான 'நான்' திரைப்படத்தின் அபார வெற்றியைத்தொடர்ந்து, அதே போன்றதொரு வித்தியாசமான படைப்பாக வந்தது 'மூன்றெழுத்து' திரைப்படம்.

முதல்காட்சியில், மலேசியாவிலிருந்து சென்னைக்கு வந்துகொண்டிருக்கும் கப்பல். அதில் பயணம் செய்துகொண்டிருக்கும் கதாநாயகன் ரவிச்சந்திரன், கப்பல் கேண்டீனில் போய் அமர, அங்குள்ள பணிப்பெண் ஒரு புத்தகத்தைக்கொடுக்கிறாள். புத்தகத்தைத் திறக்க, டைட்டில்கள் ஓடத்துவங்குகின்றன. டைட்டில் முடிந்ததும், கப்பலில் திருட்டுத்தனமாக பயணம் செய்து வரும் ஆனந்தனைக் கப்பல் காவல்துறையினர் விரட்டிவர, அவர் ரவியிடம் உதவி கேட்டுக் கெஞ்ச, இவரும் நம்பி அடைக்கலம் கொடுக்கிறார். சென்னையில் இறங்கியதும் தன்னுடைய வீட்டுக்கு அழைத்துச்சென்று தங்க வைத்து விட்டு, தந்தை மேஜரைப்பார்க்கச்செல்கிறார். எங்கே?. சிறைச்சாலைக்கு. சிறைச்சந்திப்பில் மேஜர், தான் சிறைக்கு வந்த சம்பவத்தைக்கூற....... 'ப்ளாஷ்பேக்' ஆரம்பம்......

லட்சாதிபதியொருவர் தன்னுடைய பார்ட்னருடனான பார்ட்னர்ஷிப் பிஸினஸை முடித்துக்கொண்டு, தன் மனைவி மக்களோடு ஊர் திரும்பிச்செல்ல இருந்த நேரம், பார்ட்னரிடமிருந்து தனக்கு வரவேண்டிய பங்குத்தொகை வர தாமதமாகியதால், தன் குடும்பத்தினரை விமானத்தில் ஊருக்கு அனுப்பிவிட்டு, தன்னிடமிருக்கும் ஐந்து லட்ச ரூபாயை (இன்றைய மதிப்பு ஐந்துகோடி) நோட்டுக்கட்டுகளாக (அப்போது அதிகபட்ச கரன்ஸி நோட்டே நூறு ரூபாய்தான், எனவே 5,000 கட்டுக்கள்) பெட்டியில் அடுக்கிக்கொண்டிருக்கும்போது பார்ட்னர் 'என்னத்தே' கன்னையா தன் பரிவாரங்களுடன் வருகிறர். வீட்டில் தனியே இருப்பவரிடம், பணத்தை செட்டில் பண்ணுவதாகச்சொல்லி, எதிர்பாராத நேரம் துப்பாக்கியால் சுடுகிறார். சுடப்பட்டபோதும் அவர் கையிலிருந்த துப்பாக்கியைப்பிடுங்கி, அதைக்காட்டி மிரட்டியபடியே பணப்பெட்டியுடன் வெளியேறும் அந்தப்பணக்காரர், அப்போதுதான் தன் குடும்பத்தை விமானத்தில் அனுப்பி விட்டு திரும்பிக்கொண்டிருக்கும் தன் விசுவாசமான டிரைவரான மேஜர் சுந்தர்ராஜனிடம் பணப்ப்ட்டியை ஒப்படைத்துவிட்டு உயிரை விடுகிறார். பணப்பெட்டியுடன் காட்டுக்குள் ஓடும் டிரைவர், அதை ஒரு இடத்தில் புதைத்து வைத்துவிட்டு, அது எங்கே புதைக்கப்பட்டுள்ளது என்று ஒரு பேப்பரில் குறிப்பு எழுதிக்கொண்டிருக்கும்போது, தன்னைத்தாக்கி பெட்டியை அபகரிக்க வரும் ஒருவனைக்கொன்று விடுகிறார். பின்னர் குறிப்பை பூர்த்தி செய்து, அதை மூன்று பகுதிகளாகக்கிழித்து, தன் நண்பர்களான ஊட்டியிலிருக்கும் அசோகனிடம் ஒரு பகுதியையும், நாகர்கோயிலில் இருக்கும் ஓ.ஏ.கே.தேவரிடம் ஒரு பகுதியையும், ஐதராபாத்திலிருக்கும் சுருளிராஜனிடம் ஒரு பகுதியையும் கொடுத்துவிட்டு, போலீஸில் சரண்டர் ஆகி சிறைக்குச்செல்கிறார்.

ஃப்ளாஷ்பேக் முடிகிறது. தான் குறிப்புக்களைக்கொடுத்த அம்மூவரின் விலாசங்களையும் ரவியிடம் மேஜர் கொடுத்து, அந்தக்குறிப்புகளை ஒன்று சேர்த்து அவற்றின் உதவியுடன் பணப்பெட்டியை எடுத்து, தன் முதலாளி குடும்பத்திடம் ஒப்படைக்குமாறு தன் மகனிடம் பொறுப்பை ஒப்படைக்கிறார். வீட்டுக்குச் செல்லும் அவர் தன்னுடன் தங்கியிருக்கும் ஆனந்தனிடம் பேச்சோடு பேச்சாக அந்த விலாசங்களைச்சொல்லி விட்டுப்புறப்படுகிறார். வந்தது வில்லங்கம். ஆம்... ஆனந்தன் யாருமல்ல வில்லன் 'என்னத்தே' கன்னையாவின் கையாள்தான். அட்ரஸைக் கைப்பற்றியதுபோல அந்த குறிப்புகளையும் கைப்பற்றுமாறு ஆனந்தனை அனுப்ப, ரவிக்கு முன்பாகவே ஒவ்வொரு இடத்துக்கும் ஆனந்தனும் போகிறார். அந்த குறிப்புகளை எப்படி ஒவ்வொருவரிடமிருந்தும் கைப்பற்றி அந்தப்பணப்பெட்டியை எடுக்கின்றனர் என்பதை, மூன்று மணி நேரம் படு சுவாரஸ்யமாக எடுத்திருப்பார்கள்

முதலில் அசோகனைத்தேடி தன் நண்பன் தேங்காயுடன் ரவி போவதற்குள், அசோகனை வில்லனின் ஆட்கள் கடத்தியிருப்பார்கள். அவரைத்தேடிப்போகும்போது, அசோகனின் மகள் ஜெயலலிதாவும் இவர்களோடு சேர்ந்துகொண்டு அப்பாவைத்தேடி புறப்படுவார். (அப்படிப்போகும்போது, நாளடைவில் ரவியும் ஜெயலலிதாவும் ஒருவரை ஒருவர் விரும்பத்தொடங்கிவிடுவார்கள் என்பதை ஊகிக்காவிட்டால் நாம் தமிழ்ப்படம் பார்க்க லாயக்கில்லாதவர்கள்). ........(2)

இரண்டாவது ஆளான ஓ.ஏ.கே.தேவரோ, தன்னிடம் இருக்கும் குறிப்புக்களைத்தராமல் அடம் பிடிப்பார். அங்கே தேவரின் மைத்துனரும் தெருக்கூத்தாடியுமான நாகேஷும் இவர்களுடன் சேர்ந்துகொள்வார். ஏகப்பட்ட மின்சார வேலிகளுக்கு மத்தியில் அதைப்பதுக்கி வைத்திருப்பார். அவரை ஏமாற்றி அதை எடுக்கும் நேரம் ஆனந்தனும் அவரது ஆட்களும் வர, கடுமையாக சண்டையிட்டு, வில்லன் கோஷ்டியை மின்சார வேலிகளுக்குள் மாட்டிவிட்டு, இவர்கள் தப்பிப்பார்கள். அப்பாடா ஒரு குறிப்பு கிடைத்தது. அசோகனிடம் இருப்பதைக்கைப்பற்ற வேண்டுமே. அதைத்தேடி, அவரைப்பிடித்து வைத்திருக்கும் வில்லன் கூட்டம் தங்கியிருக்கும் இடத்துக்கு இரவில் போய்த்தேட, அவர் தன் குடுமிக்குள் மறைத்து வைத்திருப்பார். விளைவு?. அசோகனின் குடுமி கட். குறிப்பு ரவியின் குரூப் கையில்.

இதனிடையே, முதலாளியின் குடும்பம் வறுமையில் வாடுகிறது. முதலாளியின் மூத்த மகள் ஷீலா, ஓட்டலில் நடனமாடி சம்பாதித்து குடும்பத்தைக் காப்பாற்றுகிறார். அதைப் பார்த்து தவறாகப் புரிந்துகொண்டு ரவி ஷீலாவைக்கண்டிக்க, அந்த வேலையையும் விட்டுவிடுகிறார். அடுத்த முறை அவர்களை ரவி சந்திக்கும்போது, அம்மாவைத்தவிர மொத்தக்குடும்பமும் பாட்டுப்பாடி பிச்சையெடுத்துக்கொண்டிருக்கிறது. அதிர்ந்து போன ரவி அவர்களை அழைத்துக்கொண்டு வீட்டுக்குப்போனால், அங்கே ஷீலாவின் அம்மா தற்கொலைக்கு முயற்சிப்பதைப்பார்த்து அவரைக் காப்பாற்றி, குடும்ப மொத்தத்தையும் தன்னுடன் அழைத்துக்கொண்டு, பிளானின் மூன்றாவது பகுதியைப்பெற ஐதராபாத் போகிறார்.

மூன்றாவதாக ஐதரபாத்திலிருக்கும் சுருளியிடம் போனாலோ, அவர் ரவி தன் மகளான ஷ்ரீவித்யாவை ரவி ஊட்டி ஏரியில் காப்பாற்றியதிலிருந்து அவரையே நினைத்து உருகுவதாகவும், வித்யாவை திருமணம் செய்ய ரவி சம்மதித்தால் மட்டுமே குறிப்பைத்தர முடியும் என்றும் கறார் செய்ய, ரவிக்கு (ஷண்முகி கமல் பாணியில்) 'போங்கடா' என்றாகிறது. ஆனாலும், ரவி தன் முயற்சியில் வெற்றிபெற்று, அந்தப்பணப்பெட்டியை கண்டெடுத்து, வறுமையில் வாடும் முதலாளியின் குடும்பத்தைக்காப்பாற்ற வேண்டுமென்பதற்காக ஜெயலலிதா, ரவியுடனான தன் காதலை விட்டுத்தர சம்மதிக்கிறார். (இந்த இடத்தில் ஒவ்வொருவரும் பேசுவதாக டி.என்.பாலு 'மூன்றெழுத்து வசனம்' எழுதியிருப்பார் பாருங்க... வாவ்....). இறுதியில் மனம் நெகிழ்ந்துபோன சுருளி, தன் குறிப்பைத்தர சம்மதிக்கிறார்.

மூன்று குறிப்பும் கையில் ரெடி. ஒன்றாக சேர்த்துப்பார்த்தால் 'தி.மு.க.' என்று வருகிறது. (நாகேஷ்: “ஏண்டாப்பா, உங்க அப்பா பெரிய அரசியல்வாதியாக இருப்பாரோ?”). அப்புறம் மாற்றி மாற்றி வைத்துப்பார்த்தால் வருவது 'கமுதி ‘. ஓ... அந்த ஊரில்தான் புதைக்கப்பட்டிருக்கிறதா?. அதே வரிசையில் வைத்து பிளானைத்திருப்பினால், பணப்பெட்டி எங்கே புதைக்கப்பட்டுள்ளது என்பதை பிளான் தெளிவாகக் காட்டுகிறது. என்ன பயன்?. திடீர் பவர் கட். மீண்டும் கரண்ட் வந்தபோது மொத்த பிளானும் மாயம். சரி, இடம்தான் தெரிந்துவிட்டதே என்று அங்கு போனால், கையில் பிளானுடன் பணப்பெட்டியை தோண்டியெடுத்துக்கொண்டிருக்கும் ஸ்பெஷல் வில்லன் மனோகர் (கிளைமாக்ஸில் மட்டும் வருவார்). வழக்கம்போல கிளைமாக்ஸ் சண்டை.

அங்கு கட்டிட வேலைகள் நடந்து கொண்டிருப்பதால், அங்கு நிறுத்தப்பட்டிருக்கும் நவீன எந்திரங்கள் உதவியுடன் சண்டை போடுகின்றனர். ஓடிக்கொண்டிருக்கும் புல்டோஸரின் பிளேடுக்கு முன்னால், டூப் போடாமல் ரவி, வில்லன் ஆட்களுடன் புரண்டு புரண்டு சண்டை போடுவது நம் உடலை சிலிர்க்க வைக்கும். ஒருவழியாக வில்லன் கோஷ்டியுடன் சண்டையிட்டு பணப்பெட்டியைக் கைப்பற்றியாகிவிட்டது. ஆனால் அதற்குள் மெயின் வில்லன் 'என்னத்தே' கன்னையா தன் ஆட்களுடன் சுருளியின் வீட்டுக்கு வந்து அங்கிருக்கும் சுருளி, அவர் மகள் வித்யா, ஜெயலலிதா மற்றும் முதலாளியின் மொத்தக்குடும்பத்தையும் துப்பாக்கி முனையில் பணயக் கைதிகளாக வைத்து, சோபாவின் பின்னால் துப்பாக்கியுடன் ஒளிந்துகொண்டு பணப்பெட்டியுடன் ரவியின் வரவை எதிர்பார்த்திருக்க, வெற்றிகரமாக பெட்டியுடன் ரவி, தேங்காய், நாகேஷ் கோஷ்டி வர..... யாரும் எதுவும் பேசவில்லை, எல்லோரும் பிரமைபிடித்தவர்கள் போல சோபாக்களில் உட்கார்ந்திருக்க, சுற்றும் முற்றும் பார்க்கும் ரவிக்கு, சற்று தொலைவில் கிடக்கும் கன்னையாவின் அந்த ஃபேமஸான தொப்பி கண்ணில் படுகிறது....... புரிஞ்சு போச்சு. எதிர்பாராமல் மின்னல்வேகத்தில் வில்லன் கூட்டத்தின்மேல் தாக்குதல் நடத்த, கிளைமாக்ஸ் சண்டையாச்சே. சொல்லணுமா?. பயங்கரமாக சண்டையிட்டு எல்லோருடைய கையும் ஓயும்நேரம் அசோகன் போலீஸுடன் நுழைய... அப்புறம் என்ன முதலாளி மனைவியிடம் பணப்பெட்டியை ஒப்படைப்பதும், ரவியும் ஜெயலலிதாவும் ஒன்று சேர்வதும், எல்லோர் முகத்திலும் மகிழ்ச்சி தாண்டவமாடுவதும்.... கொடுத்த காசுக்கு மேலேயே படம் திருப்தியளித்த சந்தோஷத்துடன் ரசிகர்கள் அரங்கை விட்டு வெளியேறுவதுமாக.........

"மூன்றெழுத்து"ரவிச்சந்திரனின் புகழ் மகுடத்தில் மற்றுமோர வைரம் என்றால் அது மிகையில்லை. 'மாறன்' என்ற கதாபாத்திரத்தில் வரும் அவர், படம் முழுக்க அற்புதமான பங்களிப்பைத் தந்திருப்பார். சண்டைக்காட்சிகளில் படு சுறுசுறுப்பு, பாடல் காட்சிகளில் வேகம் என்று அசரவைத்திருப்பார்.

பளபளவென்ற தங்க நிற முழு கோட், அதே நிறத்தில் தொப்பி இவற்றுடன் மெயின் வில்லனாக வரும் 'என்னத்தே' கன்னையாவை அந்தப் பாத்திரத்தில் போட்ட இயக்குனர் ராமண்ணாவின் தைரியத்தை பாராட்ட வேண்டும். அவரும் வழக்கமான வில்லன்களின் உறுமல் பாணியை விட்டுவிலகி நாசூக்கான வில்லனாக, ஆனால் செயலில் படுபயங்கரமான ஆளாக அந்த வேடத்துக்கே புதுப்பொலிவைத் தந்திருந்தார். பிற்காலத்தில் சத்யராஜ் போன்றோர் நடித்த அலட்சிய வில்லன் ரோல்களுக்கு முன்மாதிரி இவர்தான். நெடுநாளைக்குப்பிறகு ஆனந்தன் முழுப்படத்திலும் வில்லனாக வந்து நிறைய சண்டைகள் போட்டார். அசோகனின் நடிப்பை எப்படி பாராட்டுவதென்றே தெரியவில்லை, அந்த அளவுக்கு 'நான்' படத்தில் பெற்ற நல்ல பெயரைத் தொடர்ந்தார்.

ஜெயலலிதா மாடர்ன் உடைகளில் வந்து இளைஞர்களைக் கவர்ந்ததுடன், வித்தியாசமான நடிப்பையும் தந்திருந்தார். குறிப்பாக, பாதியில் நின்று போன நாகேஷின் வள்ளித்திருமணம் தெருக்கூத்தை, ('கொஞ்சும் கிளி குருவி மைனாவே, கூட்டமாய் இங்கு வராதே') ஆங்கில மெட்டில் தொடர்வது. மெல்லிசை மன்னர் t.k.ராமமூர்த்தி, டி.எம்.எஸ்., l.r.ஈஸ்வரி மூவரின் அபார உழைப்புக்கும் திறமைக்கும் எடுத்துக்காட்டு.

ரவியின் படமென்றால் கதாநாயகியை டீஸ் செய்யும் பாடல் இருக்க வேண்டுமே...!. இருக்கின்றன, ஒன்றுக்கு இரண்டாக. முதல் பாடல், தங்கள் அறையில் புகுந்துவிட்ட பாம்புக்கு பயந்து ரவியிடம் தஞ்சம் புகும் ஜெயலலிதா மற்றும் தோழிகளை கிண்டலடித்து அவரும் தேங்காயும் பாடும் "இரவில் வந்த் குருவிகளா... அடி குட்டிகளா" tms மற்றும் பொன்னுசாமி பாடியது. செட்டுக்குள் படமாக்கப்பட்டது. இன்னொன்று, கிராமத்துப்பெண்களிடம் காருக்கு தண்ணீர் கேட்டு அடாவடியாக நடந்துகொள்ளும் ஜெயலலிதாவை டீஸ் செய்து "ஆடு பார்க்கலாம் ஆடு, இடையழகைப் பார்க்கும் என்னோடு" பாடல் கொடைக்கானலில் படமாக்கப்பட்டது.

ஓட்டல் அறையில் தங்கியிருக்கும்போது, குளிக்கும் இடத்தில் ரவியை நினைத்து ஜெயலலிதா பாடும் "காதலன் வந்தான் கண்களில் நின்றான்" பாடல் (சுசீலா) அருமையான மெலோடி.

ஏற்கெனவே நான் படத்தில் ஃபியட் காருக்குள் ஒரு டூயட் எடுத்தாச்சு. இப்போ அதைவிட சின்ன இடம் கிடைக்குமா என்று பார்த்தார் ராமண்ணா. வில்லனிடம் அகப்பட்ட ரவியையும் ஜெயாவையும், ஒரு பெட்டியில் அடைத்து லாரியில் அனுப்ப, நிமிர்ந்துகூட உட்கார முடியாத அந்தப்பெட்டியில் (tms, சுசீலா) டூயட் பாட்டு "பெட்டியிலே போட்டடைத்த பெட்டைக்கோழி, பெட்டைக்கோழி பக்கத்திலே கட்டுச்சேவல்" அருமையான மெட்டு. அதைவிட அற்புதமான துல்லியமான ஒளிப்பதிவு. ஒரு ஒளிப்பதிவாளரின் திறமை, இம்மாதிரி சவால் பாடல்களைப் படமாக்குவதில்தான் தெரியும்.

வில்லனின் கோட்டைக்குள் நுழைய தந்திரம் செய்து அவனுடைய அடியாட்களிடம் மயங்கியது போல ஜெயலலிதா பாடும் "பச்சைக்கிளி... இச்சைமொழி... பன்னீரில் போட்டெடுத்த மாங்கனி" பாடலை l.r.ஈஸ்வரி பாடியிருந்தார்.

இத்தகைய, மனதை வருடும் பாடல்களுக்கு நடுவே நம் மனதை உருக வைப்பது ஷீலாவும், அவரது தம்பி தங்கைகளும் தெருவில் பிச்சையெடுக்கும்போது பாடும் பாடல்....
"தெய்வத்தின் கோயில் தெய்வம்தான் இல்லையே
இது மனிதனின் பூமி மனிதன்தான் இல்லையே
இவை இரண்டும் இல்லா வேளையிலே ஏழைப்பெண்கள் வீதியிலே..
..........................................
வாழ்வது எங்கள் ஆசை ஒரு மாளிகை ராணியைப்போலே
ஆண்டவன் காட்டிய பாதை, ஒரு ஆண்டியின் பிள்ளையைப்போலே"
எல்.ஆர்.ஈஸ்வரியின் குரலில் இப்பாடல் நம் நெஞ்சை கனக்கச்செய்யும். கந்தல் உடையுடன் குழந்தைகள் தட்டேந்தி பிச்சையெடுக்கும்போது (எப்படி வாழ்ந்த குடும்பம்) நம் கண்கள் கண்ணீரைச் சிந்தும்.

ரவிச்சந்திரன், ஜெயலலிதா, அசோகன், ஆனந்தன், நாகேஷ், தேங்காய் சீனிவாசன், சுருளிராஜன், என்னத்தே கன்னையா, ஓ.ஏ.கே.தேவர், மேஜர் சுந்தர்ராஜன், மனோகர் (கௌரவத்தோற்றம்), ஷீலா, அம்முக்குட்டி புஷ்பமாலா, மாஸ்டர் பிரபாகர், 'பராசக்தி' ரஞ்சனி இவர்களோடு ஜெயலலிதாவின் தோழிகள் கூட்டம், வில்லனின் அடியாட்கள் கூட்டம் என்று படம் முழுக்க ஆட்கள் நிறைந்திருப்பார்கள்.

மெல்லிசை மன்னர் டி.கே.ராமமூர்த்தி படத்தின் அத்தனை பாடல்களையும் hit பண்ணியிருந்தார். இந்த அருமையான வண்ணப்படத்தை கொஞ்சமும் தொய்வின்றி இயக்கியிருந்தார் ராமண்ணா. கதை வசனத்தை டி.என்.பாலு எழுதியிருந்தார். (டி.என்.பாலு அடுத்த ஆண்டில் (1969) நடிகர்திலகத்தின் 'அஞ்சல்பெட்டி 520' மூலம் இயக்குனர் ஆனார். பின்னர் ரவி நடித்த 'மீண்டும் வாழ்வேன்', கமல் நடித்த 'சட்டம் என் கையில்' உள்பட பல வெற்றிப்படங்களை இயக்கினார்).

ஒரு முக்கியமான கொசுறு தகவல்: 1970-ல் தயாரிக்கத்துவங்கி 1973-ம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றியடைந்த, எம்ஜியார் பிக்சர்ஸ் தயாரிப்பான "உலகம் சுற்றும் வாலிபன்" படத்தின் கதை 'மூன்றெழுத்து' படத்தின் கதையைத் தழுவி எடுக்கப்பட்டதுதான்.

'மூன்றெழுத்து' 1968-ம் ஆண்டின் மிகப்பெரிய வெற்றிப்படங்களில் ஒன்றாக, சிறப்பாக ஓடியது.

AREGU
21st November 2014, 05:16 PM
தற்போது வெகு பிரபலமாக இருக்கும் லெக்கின்ஸ் உடையில் அந்தக்கால ஜெயா வெகு அழகாகத் தோன்றுவார். அவருக்குப் பொருந்தியது போன்று வேறெந்த தமிழ் நடிகைக்கும் லெக்கின்ஸ் பொருந்தியதாக எனக்குத் தெரியவில்லை. ( விஜயஸ்ரீ மட்டும் விதிவிலக்கு. அவர் இன்னும் அழகாக, கவர்ச்சியாகத் தோன்றுவார்.)

நாகேஷ், பூசாரியாக `நானி`ல் கலக்கினார் என்றால், இப்படத்தில் பிள்ளைத்தாய்ச்சியாக வந்து அசத்தியிருப்பார்.. வில்லன் நடிகர்களான அசோகனும், தேவரும் மூன்றெழுத்தில் நகைச்சுவையிலும் பின்னி எடுப்பார்கள். தேங்காயும் இப்படத்தில் தன் பங்குக்கு அதகளம் நடத்துவார். சுருளியைப்பற்றி சொல்லவே வேண்டாம்..

முரசொலி மாறனின் மேகலா பிக்சர்ஸ் தயாரிப்பு இது.. ( நான் மற்றும் இப்படத்திலிருந்தே எம்ஜிஆருக்கும், கலைஞர் குடும்பத்துக்கும் புகைச்சல் ஆரம்பமானதாகச் சொல்வார்கள்.)

ஷீலா ( பின்னாட்களில் ரவியின் காதல் மனைவி ) ஹோட்டலில் நடனமாடும் காட்சியில், துணை ஆட்டக்காரர்களுக்கு பொன்வண்ணம் பூசி ஆடவிட்டிருந்தது அந்நாட்களில் வியந்து பேசப்பட்டது. ஷீலாவின் தாயாக ஸ்ரீரஞ்சனி என்று நினைவு( பராசக்தி தங்கை கல்யாணி ). அனேகமாக அவர் நடித்த முதல் வண்ணப்படமாக இருந்திருக்கக்கூடும்..

மிக நல்ல பொழுதுபோக்குச் சித்திரம்.

AREGU
21st November 2014, 05:45 PM
உண்மை கார்த்திக் சார் மாலதி படத்தில் கூட சரோஜாதேவி ரவியின் மனைவி ஆக வந்து ரவியை திருத்துவார்.
கே.யார்.விஜயா ஜெய் கணேஷ்(அக்கா என்ற ஒரு படம பாலுவின் மேலோடி ஒன்று "மாலை மலர் பந்தல் இட்ட மேகம் " வாணி யின் துணை குரல் உடன் விச்சு இசை ) அதே போல்
விஜயகுமார் கூட வெள்ளிரதம் என்றஒருபடம் (ஜெயச்சந்திரனசுசீல ் அலைமகள மலைமகள கலைமகள என்ற பாடல் ) எல்லாம் ஜோடி போட்டு தாளித்து இருப்பார்
நாடகமே உலகம் முதலில் ரஜனி கால்ஷீட் கேட்டு அவர் இல்லை என்றவுடன் மோகன் ஜோடி என்று படித்த நினைவு

தெய்வீக உறவு படத்தில், தேவிகா ஜெய்யுடன் சோடி போட்டதும் இவ்வாறுதான்.. (இதில் ஸ்லீவ்லெஸ் டைட் சுடிதார் வேறு.. :) )

தற்போது ராதிகா, ரம்யா (கிருஷ்ணன்) உள்ளிட்ட சீனியர்களும் சீரியல்களில் அதேபாணியைப் பின்பற்றுகிறார்கள்..

adiram
21st November 2014, 07:57 PM
முரசொலி மாறனின் மேகலா பிக்சர்ஸ் தயாரிப்பு இது.. ( நான் மற்றும் இப்படத்திலிருந்தே எம்ஜிஆருக்கும், கலைஞர் குடும்பத்துக்கும் புகைச்சல் ஆரம்பமானதாகச் சொல்வார்கள்.)

இல்லை ரகு,

நான், மூன்றெழுத்து இரண்டுமே ராமண்ணாவின் சொந்த நிறுவனமான 'ஸ்ரீவிநாயகா பிக்சர்ஸ்' தயாரிப்பு.

AREGU
22nd November 2014, 03:14 PM
திருத்தியமைக்கு நன்றி ஆதிராம் சார்..

vasudevan31355
23rd November 2014, 10:29 PM
ரகு சார்

வாசுதேவன். தங்களுடைய இரு வரிப் பதிவுகள் தங்களுடைய தவிர ரசிகனாக என்னை ஆக்கி விட்டன. சும்மா வார்த்தைகள் அமர்க்களமாய் வந்து விழுகின்றன. கிருஷ்ணாவிடம் கூட உங்களைப் பற்றி பேசி மகிழ்ந்தேன். உங்களுடைய நல்ல ரசனையும் அற்புதம். உடை விஷயத்தில் ஜெயா மேடம் டாப் நீங்க சொன்னா மாதிரியே. விஜயஸ்ரீ அராபிய ஹார்ஸ். ஜெயலலிதா சேலையில் ரகசிய போலீஸ் 115 படத்தில் ரொம்ப அழகாகத் தெரிவார். ஒப்பனையும் கலரும் கதி கலக்கும்.

http://im.rediff.com/movies/2013/nov/08jayalalithaa5.jpg

http://im.rediff.com/movies/2013/nov/08jayalalithaa4.jpg

vasudevan31355
23rd November 2014, 10:32 PM
ரகு சார்,

உங்கள் சிக்நேச்சர் பற்றி என்ன சொல்ல! வயிறு வலிக்கிறது. if you don't mind cell.no.pl.

Gopal.s
18th April 2015, 05:36 PM
ரவி நடித்த ஒரு படம் கூட விட்டதில்லை.(சிங்கப்பூர் சீமான் உட்பட) . ஜெய்சங்கரை விட உயரமான நட்சத்திரமாக இருந்தும், சில பல பழக்கங்களால் தன் உயரங்களை இழந்தவர்.1964 இலிருந்து 1968 வரை இவரளவு வெள்ளி விழா படங்களையும், பிரம்மாண்ட வண்ண படங்களையும் அன்றைக்கு உச்ச பட்ச superstar நடிகர்திலகம் கூட அந்த 5 வருட காலகட்டத்தில் கொடுத்ததில்லை.

என்னுடைய ரவி பட்டியல்.
காதலிக்க நேரமில்லை,இதயகமலம், குமரி பெண், வாலிப விருந்து,நாம் மூவர்,நிமிர்ந்து நில், நான், மூன்றெழுத்து, அதே கண்கள்,பணக்கார பிள்ளை,மீண்டும் வாழ்வேன்,பாக்தாத் பேரழகி, அக்கரை பச்சை,மெட்ராஸ் டு பாண்டிச்சேரி,நினைவில் நின்றவள்,காதல் ஜோதி,சபதம்,உத்தரவின்றி உள்ளே வா,புகுந்த வீடு..

திருச்சியில் பிஷப் ஹீபர் கல்லூரியில் படிக்கும் போது , என் பெரியப்பா வீடிருந்த ஆனைகட்டி மைதானம் என்ற இடத்தில் இவர் மனைவி விமலா, விமலா தங்கை வத்சலா, மகன்பாலாஜி, மகள் லாவண்யா,மைத்துனர் கிருஷ்ணன் என்ற குட்டி பையா அருகாமையில் வசித்த நண்பர்கள். ரவி ,இவர்களை சந்திக்க வருவார்.(முழுவதும் மீளவில்லை அப்போது)என் பெரியப்பா வீட்டில் வந்துதான் போன் பேசுவார்.(அப்போது போன் அபூர்வம்)பொதுவாக நிலம்,விவசாயம் சம்பந்தமானது. பெரியப்பாவிற்கு இவர் மனைவி,பிள்ளைகளுக்கு இழைத்த துரோகம் உவப்பில்லாததால்,வாடா ஒன்னோட favourite வந்துட்டான்,நீயே வந்து நில்லு ,நான் போறேன் என்பார்.(1974-75). என்னுடன் சகஜமாக பேசுவார் ரவி. பிறகு 1982 இல் ஒரு முறை பார்த்தேன். மையமாக ஒரு புரிந்த சிரிப்பு. பிறகு தொடர்பிலில்லை.

ரவி படங்களை இன்று பார்க்கும் போதும் மனதில் அதே குதூகலம்.

நான் ஆனைகட்டி மைதான்,பீம நகர் திருச்சியில் ஒரு வருடம் என் ஒன்று விட்ட பெரியப்பா வீட்டில் p .u .c படிக்கும் போது இருந்ததை குறித்துள்ளேன்(என் சகோதர சகோதரியும் திருச்சியில் படித்ததால் இவர்கள்தான் காப்பாளர்கள்.). ரவிச்சந்திரன் ,விமலா வீடு அதே தெருதான். என் வாழ்வின் வசந்த நாட்கள்.பெரியப்பா தனது விதவையாகி விட்ட தங்கை மற்றும் அவர் குழந்தைகள் (ஆறு பேர்), மற்றும் அகாலத்தில் மரணித்த தம்பி குழந்தைகள் (ஆறு பேர்)

என்று அனைவரையும் ஆதரித்து கை தூக்கி விட்ட மகானுபாவர். மோகன்(என் அண்ணன் முறை) என்ற அவரது பையன் அவரின் ஒரே குழந்தை. வியாபாரம் ஓஹோ என்று இருந்த காலம், ராஜாகுட்டி போல வாழ வேண்டியவன் , இந்த மாதிரி 25 பேருடன் வாழ்ந்து அனுசரித்து எல்லோரையும் கை தூக்கி விட்டவன். செல்வர்க்கழகு செழுங்கிளை தாங்குதல், தர்மம் தலைகாக்கும் என்பதெல்லாம் வறட்டு சித்தாந்தம் போலும்.



மூன்று நாட்கள் முன்பு ,திண்டிவனம் அருகே ஒரு காரில் சென்று கொண்டிருந்த போது ,காரின் பின் சக்கரம் பழுதாகி, வேகத்தில் தன்னைத்தானே சுற்றி ,எல்லோரையும் தூக்கி வெளியே வீசியதில் , மண்டையில் அடிபட்டு மோகன், அவர் மகள் ரம்யா , வசந்தா (என் ஒன்று விட்ட தங்கை),அவள் மகள் எல்லோரும் சம்பவ இடத்திலேயே மாண்டனர்.



குடும்பமே சோகத்தில் தத்தளிக்கிறது. கடந்த முறை இந்தியா வந்த போது ,திருச்சி சென்று இவரை சந்திக்க முடியாமல் போன துக்கம் நெஞ்சை கவ்வுகிறது. எனக்கு இதுவரை இல்லாத கடவுள் நம்பிக்கை ,இனிமேலும் ஏற்பட வாய்ப்பே இல்லை போலும்

Russellrhz
1st May 2015, 11:17 PM
Mr. Gopal feel very sorry to hear about what happen to your relatives. By the way the web says you are in
Vietnam. Pls give your contact address to raymen2020@yahoo.com. During my visit to vietnam would like
to contact you if you dont mind. Tq

Gopal.s
16th May 2015, 09:40 PM
Courtesy- Chinnakannan

தேர்னு தேடிப்பார்த்தா தெரிஞ்ச பாட்டா இருக்கா
அப்புறம் ரதம்னு தேடிப்பார்த்தேனா இது கிடைச்சது

தேடிவரும் தெய்வ சுகம் ரவிச்சந்திரன் பாரதி..

https://youtu.be/droaLG0M8ts

அல்லி விழி துள்ளிவரும் வெள்ளி ரதம்னு வருதுங்க்ணா..:)[/

vasudevan31355
17th May 2015, 08:47 AM
கோ,

இந்தாங்க....ரொம்ப ரொம்ப அபூர்வமான நம்ம ரவியோட பாட்டு.

'அவளுக்கு ஆயிரம் கண்கள்' படத்தில் அபூர்வ பாட்டு.

ரவியுடன் அம்மா. ராமண்ணா கைங்கரியம். ஆனால் அம்மா இளமை முற்றி நிஜ அம்மா போல் தெரிவார். (அம்மா 'தாய்' படத்தின் 'எங்க மாமனுக்கும்' பாடலை ஞாபகப்படுத்துவார். ஆனா ரவி என்றும் இளமை. ராமண்ணா நல்ல ரசிகர். கிளாமரை வரைமுறையோடு காட்டி நம்மை ரசிக்க வைத்தவர். (ராமண்ணாவை பின்னால் பின்பற்றியவர் ஜெகந்நாதன். இவரும் நல்ல பெண் பித்தர்). ரவியையும், ஜெயாவையும் பல படங்களில் ஜோடி சேர்த்து அழகு பார்த்தவர் ராமண்ணா நம் இரண்டாம் கட்ட ரசனைக்குத் தக்கவாறு. (நான், மூன்றெழுத்து, பாக்தாத் பேரழகி, அவளுக்கு ஆயிரம் கண்கள்)


https://youtu.be/QX4NK2mdacw

Gopal.s
24th May 2015, 02:53 AM
Courtesy-Chinna Kannan

என்னமோ போங்க -1
**

வாழ்க்கையே ஒருகதை தாங்க..ம்ம் தோசை சாப்பிடலை..இனிமே தான்.. ஏனாம்..அது அப்புறம்.

இந்தக் கதை சிலபேருக்கு சந்தோஷமாகவும் சிலபேருக்கு சோகமாக்வும் இப்படியே மாறி மாறி போய்க்கிட்டே இருக்கா சமயத்துல பார்த்தா
ரிப்பீட் தான் ஆகிட்டிருக்கு..சுவாரஸ்யம் குறைய ஆரம்பிச்சுடுது.. இல்லியோ..( இப்ப என்ன சொல்ற ஏதாவது கதை பாட்டு கிடைச்சுடுத்தா..) ஆமாம்..


பொழுதெல்லாம் பேசச்சொல்லும் கதையொன்று கண்ணில் உண்டு
இரவெல்லாம் பாடச்சொல்லும் பாட்டொன்று நெஞ்சில் உண்டு

https://youtu.be/oF84MDVRa0U

ரவிச்சந்திரன் பாரதி தங்கதம்பி..அம்புலி போல் பெண்ணைக் கண்டேன்..

செந்தமிழே கண்ணில் திகழும் காண்பவர்க்கு தன்னால் புரியுமாம்.. ம்ம் என்னவோ போங்க..

தோசை ரெடி.. மிளகாப்பொடி செய்யணுமாம் அதுக்குள்ற ஃப்ரண்ட்ஸ் வந்துட்டாங்களா.. வீ.காவோட..எனில் கொஞ்ச நாழி கழிச்சுதான்..

அடுத்த போஸ்ட் ல வாரேன்..[/

RAGHAVENDRA
2nd June 2015, 05:50 PM
இதுவரை அதிகம் யாரும் பார்த்திராத திரைப்படம் துள்ளி ஓடும் புள்ளி மான்...

முழுப்படம்...

தரவேற்றிய ராஜ் வீடியோ விஷனுக்கு நன்றி

https://www.youtube.com/watch?v=Rf0zNSUj8cI

இதில் ஒரு விசேஷம்.. இயக்குநர் எல்லா நடிகர்களையும் இயக்கும் போது நடிகர் திலகத்தை நினைத்து இயக்கியிருப்பார் போல.. ஒருத்தர் பாக்கியில்லாமல் அத்தனை பேரும் அவருடைய நடிப்பை அப்படியே பின்பற்றியிருப்பார்கள்.

குறிப்பாக க்ளைமாக்ஸில் ரவி, ஆவேசம் வந்திருச்சு என்று சண்டைக்கு தயாராகும் கட்டம். மற்றும் ஒரு முகத்தில் ஏனிந்த ஒன்பது பாவம் பாடல் காட்சியில் நாயகனை அப்படியே நடிகர் திலகத்தைப் போல் நடிக்க வைத்திருப்பார்கள்.

Gopal.s
13th June 2015, 11:24 AM
Courtesy- Vasudevan


'வாடா மச்சான் வாடா'

'அன்று கண்ட முகம்' படத்தில் வரும் செம ஜாலி கலாய்ப்பு பாடல். 1968-ல் வந்த இந்தப் படம் நன்றாகவே இருந்தது.

http://media-images.mio.to/various_artists/A/Andru%20Kanda%20Mugam%20(1968)/Art-350.jpg

ரவி, நாகேஷ் இருவரும் சேர்ந்தால் கேக்கணுமா?

வில்லனின் அடியாட்களை அறிந்து கொண்டு, அவர்களைத் தொடர்ந்து சென்று, அவர்களிடம் சவால் விட்டு, புத்திமதி தந்து, கலாட்டா செய்து ரவியும், நாகேஷும் பாடி ஆடும் பாடல்.

சிறுவயது முதற்கொண்டே எனக்கு மனதில் ஊறி நிரம்பப் பிடித்துப் போன பாடல் அது.

ரவிக்கு இந்த மாதிரிப் பாடல்கள் அல்வா சாப்பிடுவது மாதிரி. கிண்டல் கேலிப் பாடல்களை குத்தகைக்கு எடுத்துக் கொண்டவர் அவர். அவருடன் சேர்ந்த இன்னொரு குத்தகைக்காரர் நாகேஷ்.

'வாடா மச்சான்' என்று ரவி ஒரு நீளக் குரல் கொடுத்தவுடன் சஸ்பென்சும், திகிலுமாய் ஒலிக்கும் மாமாவின் இசை. குறிப்பாக கிடார் பேஸ். அடுத்து ஒலிக்கும் அருமையான இசைக்கு ரவி கால்களை மாற்றி மாற்றி வைத்து நடனமாட செம ரகளையாய் ஆரம்பிக்கும் பாடல்.

ரவி ரகளை பண்ண ஆரம்பிக்க, நாகேஷ் பந்து போலத் துள்ளி வந்து ஜாயின் செய்து கொள்ளுவார்.

நக்கல்களும், நையாண்டிகளும் தொடரும்.

ரவிக்கு 'பாடகர் திலகம்' வாய்ஸும், நாகேஷுக்கு அவருக்கென்றே பிறந்த பாடகர் ஏ.எல்.ராகவன் வாய்ஸும். நானா நீயா என்று இருவரும் போட்டா போட்டி போடுவார்கள். கிண்டல் பாடல் என்பதால் எக்ஸ்ட்ரா கூக்குரல்கள் எல்லாம் கொடுத்து ராகவன் ஓட்டத்தில் முந்தி விடுவார்.

இந்த எக்ஸ்ட்ரா பிட்கள் கொடுப்பதில் சதனும், ராகவனும் சக்கரவர்த்திகள். சதன் பலகுரல். ராகவன் ஒரே குரல் ஆனால் பலவிதம்.

('நான் யார் தெரியுமா?' என்ற ஜெய்சங்கர் படத்தில் 'பார்த்ததும்... காதலை... தருவது அழகிய பெண்களே' என்றொரு பாடலில் இதே பாடகர் திலகத்துடன் சேர்ந்து எவருமே செய்ய முடியாத தர முடியாத 'எக்கோ' வாய்ஸை எதிரொலிக்கச் செய்து நான் யார் தெரியுமா என்று மார் தட்டியவர் ராகவன்).

'ஆசை மட்டும் பெருசா இருந்தா
அதிர்ஷ்டம் வருமாடா'

என்று முடித்துவிட்டு சௌந்தர்ராஜன் ஆஅ ஆஅ ஓஒ... என்று இழுப்பது ரகளை என்றால்

'மீசை மட்டும் பெருசா இருந்தா
வீரம் வருமாடா'

என்று நாகேஷ் குப்பைத்தொட்டியில் வில்லன் ஆள் ஒருவரை அமர வைத்து கேலி செய்வது ஜோர்.

'வெறும் காசுக்காக காரியஞ் செஞ்சா
கருணை வருமாடா'

என்று சௌந்தர் முடித்தவுடன்,

ராகவன் 'ஹெஹெஹ்ஹெஹே' என்று கொக்கரிப்பது அட்டகாசம்.

பின் இருவரும் மாறி மாறி

'ஏன்டா டேய்
ஏன்டா டேய்
ஏன்டா டேய்
டேய்! டேய்'

என்று எதிரிகளை அலட்சியமாய் எகத்தாளம் செய்வது கலக்கல்.

பாடலாசிரியர் வார்த்தைகளை அதிகமாக போட்டாலும் மாமா சாமர்த்தியமாக ராகவனை வேகமாக பாட வைத்து டியூனுக்குள் அடக்கி விடுவது செம விசேஷம். பாருங்கள்

'தண்டனைக்குத் தப்பிய திருடன் தரணியில் உண்டோடா'

இந்த 5 வார்த்தைகளையும் ராகவன் ரொம்ப அருமையாக, விரைவாக ஒரே வரியில் கொண்டு வந்து வருவார். அது மட்டுமல்ல. கூட 'அடா அடா அடா' வேறு சேர்த்து இன்னும் பரிமளிப்பார். பாட்டின் ராகத்தோடு சேர்ந்து இந்த 'அடா புடாக்கள்' எல்லாம் அற்புதமாக மேட்ச் ஆகும்.

'அண்டப் புழுகன் கொள்ளையன் கூட
அகப்பட்டுக் கொண்டான்டா'

என்று நாகேஷ் பாடியதும்,

'அவனே அப்படி ஆனா நீ என்ன
அப்பன் மகனோடா'

என்று ரவி தொடர,

உடனே நாகேஷ்

'போடா' என்று அலட்சியமாக சொல்லி விட்டுப் போவாரே! சூப்பரப்பா.

அடுத்து பல்லவி வரி பாடகர் திலகத்தின் குரலில் 'வாடா மச்சான் வாடா' வந்தவுடன் எக்ஸ்ட்ராவாக ராகவன்

'பயப்படாமே வாடா'

என்று அற்புதமாக இணைவார் பாருங்கள். அருமையோ அருமை. என்ஜாய் பண்ணலாம்.

'அம்மா இருந்தா அவளைக் கேளு
பாசம் என்னென்று'

என்று அன்பைக் குழைத்து சௌந்தாரராஜன் அந்த வரிகளில் எங்கோ போய் கொடி நாட்டுவார். திரும்பவும்

'உங்க' என்பதையும் சேர்த்து

'உங்கம்மா இருந்தா அவளைக் கேளு
பாசம் என்னென்று'

என்று பாடுவது அற்புதத்திலும் அற்புதம்.

முழுக்க முழுக்க மலைப் பிரதேசத்தில் எடுக்கப்பட்ட பாடல்.ஸ்டூடியோ ஷாட்களே இருக்காது. முழுதும் அவுட்டோரிலே படமாக்கப் பட்டது இன்னொரு சிறப்பு.

சவால் பாடல். சவால் பாடல்களுக்கு சவால் விடும் பாடல் கூட.

மனதில் துணிவையும், தைரியத்தையும், நம்பிக்கையையும் ஊட்டும் பாடல்.

'எதிரிகளைக் கண்டு அஞ்சாதே... துச்சமாக நினை....எவனாயிருந்தாலும் துணிவுடன் எதிர்த்து நில்லு...அடுத்துக் கெடுக்கும் ஆதிக்கக்காரகளை அடக்கு...வேஷதாரிகளின் வேடத்தைக் கலைத்து வெட்ட வெளிச்சமாக்கு...'

என்ற உற்சாக சக்தி தரும் டானிக் பாடல்.

'ஏடா மூடா உந்தன் ஜம்பம்
என்னிடம் பலிக்குமாடா
வாடா மச்சான் வாடா'

எனக்கு இப்போது மட்டுமல்ல...எப்போதும் பிடித்த வரிகள்.


வாடா மச்சான்

வாடா மச்சான் வாடா
வாடா மச்சான் வாடா
ஏடா மூடா உந்தன் ஜம்பம்
என்னிடம் பலிக்குமாடா
வாடா மச்சான் வாடா
ஏடா மூடா உந்தன் ஜம்பம்
என்னிடம் பலிக்குமாடா

வாடா மச்சான் வாடா

ஆசை மட்டும் பெருசா இருந்தா
அதிர்ஷ்டம் வருமாடா
ஆஆ ஆஆ ஒ.....ஒ

மீசை மட்டும் பெருசா இருந்தா
வீரம் வருமாடா
அஹா அஹா அஹா ஓஓ....ஓ

ஆசை மட்டும் பெருசா இருந்தா
அதிர்ஷ்டம் வருமாடா

மீசை மட்டும் பெருசா இருந்தா
வீரம் வருமாடா

காசுக்காக காரியஞ் செஞ்சா
கருணை வருமாடா
வெறும் காசுக்காக காரியஞ் செஞ்சா
கருணை வருமாடா

ஹெஹெஹ்ஹெஹே

கைக்குக் கையா சண்டை போட
தைரியம் உண்டோடா

ஏன்டா டோய்
ஏன்டா டோய்
ஏன்டா டேய்
டேய்! டேய்

வாடா மச்சான் வாடா
ஏடா மூடா உந்தன் ஜம்பம்
என்னிடம் பலிக்குமாடா
வாடா மச்சான் வாடா

தண்டனைக்குத் தப்பிய திருடன்
தரணியில் உண்டோடா அடா அடா அடா

தப்பிப் போன திருடனைக் கூட
தர்மம் விடுமாடா..டாய்..

தண்டனைக்குத் தப்பிய திருடன்
தரணியில் உண்டோடா
ஆ டஹா ஆ டஹா ஆ டஹா

தப்பிப் போன திருடனைக் கூட
தர்மம் விடுமாடா

அண்டப் புழுகன் கொள்ளையன் கூட
அகப்பட்டுக் கொண்டான்டா அடா அடா அடா

அவனே அப்படி ஆனா நீ என்ன
அப்பன் மகனோடா

போடா (நாகேஷ் ஜோர்)

வாடா மச்சான் வாடா

பயப்படாமே வாடா

ஏடா மூடா உந்தன் ஜம்பம்
என்னிடம் பலிக்குமாடா
வாடா மச்சான் வாடா

சொந்தப் புத்தி இருந்தா
நல்ல சோத்துக்கு வழி உண்டு ஓ ஓ ஓ
இந்தப் புத்தி இருந்தா
அங்கே கம்பிக் கதவுண்டு
ஓஹோ ஓஹோ ஓஹோ
ஓ ஓ ஓ

சொந்தப் புத்தி இருந்தா
நல்ல சோத்துக்கு வழி உண்டு
இந்தப் புத்தி இருந்தா
அங்கே கம்பிக் கதவுண்டு

அம்மா இருந்தா அவளைக் கேளு
பாசம் என்னென்று
உங்கம்மா இருந்தா அவளைக் கேளு
பாசம் என்னென்று
ஹெஹெஹே

அடுத்தவன் சொல்லைக்
கேட்டுக் கெட்டவன்
ஆயிரம் பேருண்டு

ஏன்டா டோய்
ஏன்டா டோய்
ஏன்டா டேய்
டேய் டேய்

வாடா மச்சான் வாடா
பயப்ப்படாமே வாடா
ஏடா மூடா உந்தன் ஜம்பம்
என்னிடம் பலிக்குமாடா
வாடா மச்சான் வாடா


https://youtu.be/FX_Nk4xLj24

Gopal.s
13th June 2015, 12:05 PM
Thanks Vasu.
தாடி கார மச்சான் இவரு நாடி பிடிச்சு பாரு - பாட்டு நினைவு இருக்கா//

நினைவு இருக்காவா? இந்தப் பாட்டோடேயே வாழ்ந்த காலங்கள் உண்டு கிருஷ்ணா. கோபாலருக்கு கோகோ கோலா இந்தப் பாடல். இப்ப ஓடி வரும் பாருங்களேன்.

'எட்டடி உயரம் ரெண்டடி அகலம் ஒட்டகம் என்பது இவன்தானோ'

ரவி தாடியுடன் செம ஸ்டெப்ஸ். கூட மாந்தோப்பில் நின்றிருந்த ரத்னா மாடர்ன் டிரெஸ்ஸில்.

இன்னா பாட்டு. 'வாடா மச்சான் போட்டா' நீர் 'சிங்கப்பூரு மச்சானை'கூப்பிடுறீர். (தலைவர் 'சவாலே சமாளி'யில் நம்பியாரிடம் தாலியைக் கையில் வைத்துக் கொண்டு சொல்வார் 'சும்மா இருடா மச்சான்' அந்த மச்சானுக்கு முன் எந்த மச்சானும் நிக்க முடியாது. )

நாம் மூவர் அல்ல. நால்வர் ... ஐவர்.. அறுவர்... ஏழ்வர். ஆனால் வீழ்வோர் அல்ல.

இன்னைக்கு முழுக்க மச்சான் பாட்டா இருக்கப் போவுது.

கிருஷ்ணா! மச்சானைப் பார்த்தீங்களா?


https://youtu.be/9WLCf9ij8jU

Gopal.s
14th June 2015, 05:11 AM
Courtesy- Chinna Kannan


வித்தை பலகாட்டி வீரமாக அங்குதான்
முத்ததன் சிப்பியை மூழ்கியே – பக்குவமாய்
தேர்ந்தே எடுத்தே திசையெங்கும் விற்றிடுவார்
பாசமிகு பாண்டிநாட் டார்..

எஸ்..முத்துக்கள் பெயருடைத்தது பாண்டிய நாடு என்பது அனைவருக்கும் தெரியும்.. அதை வைத்து எழுதப்பட்ட ஒரு மிகச் சிறப்பான நாவல் ராஜமுத்திரை.. சாண்டில்யன் எழுதியது..ஆஹா எத்தனை முறை படித்திருப்பேன்..

முன்னுரையில் அந்தக்காலத்தில் எப்படி முத்துக்கள் எடுத்தார்கள் என்பதை விலாவாரியாக எழுதியிருப்பார்..

அதைப்பற்றி விவரணையாக எழுத ஆசை தான்..ஆனால் மனம் மிகக் களைப்பாக இருக்கிறது..

ஆக என்ன சொல்லவந்தேன்..முத்து. செயற்கை முத்து இயற்கை முத்து பற்றி ஒரு வியாசமே எழுதியிருக்கலாம் ரவி..பட் அவருக்கும் என்ன மனக்களைப்போ..

சரி என்னபண்ணலாம் .. நீராடலாம்.. அழகாய்க் குளிர்ந்த நீரில் (யார் கண்போட்டார்களோ தெரியவில்லை ( நற நற) மஸ்கட்டுக்கு வரவிருந்த சைக்ளோன் கொஞ்சம் சூரில் சூறையாடிவிட்டுப் போய்விட்டது (மஸ்கட்டிலிருந்து இரண்டரை மணி நேரப் பயணம்) இங்கே மறுபடி வழக்கப்படி வெய்யில்

ஒரே வேலைகள்..டபக் டபக்கென போய்க்கொண்டிருந்ததில் நூறாவது பக்கத்திற்கு ஒரு ஓஹோ எனச் சொல்லும்படி இல்லாவிட்டாலும் ( என்னால் ஓஹோ என எழுதவேவராது.)

ரொம்ப சீரியஸா கண்ணா எழுதிட்டான்னு நினைக்கறியளா..என் நிலைமை அப்படி..

ஜல்ப்புன்னேன். அது போகவே இல்லை. கர் கர் என ஓடும் மூக்கு.. எதாவது உருப்படியாய் எழுதவும் வரவில்லை..

அடுத்தவாரம் முதல் லீவ்..வாசு கல்நாயக், ரவி,ராஜேஷ் கிருஷ்ணா கலை எஸ்வி – ஒன் மன் த் லீவ்பா சிக்கா.. ஸோ நான் வரும் போது இந்த மதுரகானம் திரி 250 பக்கங்கள் கடந்திருந்தால் உங்கள் எல்லாருக்கும் போனஸ்..

நான் எழுதவே எழுதாமல் கோபு 1954 போல மறைந்திருந்து லைக் போட்டுஆதரவு கொடுப்பேன். பட் பக்கங்கள் 90% எழுத்துக்களின் மூலமாக நிரம்பவேண்டும் என்பது என் விருப்பம்.

இங்க ரவியும் விஜியும் என்னமோ பாடி ஆடறாங்க.. காதல் தான் இப்படித் தான் ..மூழ்கி எழுந்து முத்தைக் கண்டெடுத்தா ஆபரணமாப் போட்டுக்க வேண்டாமோ.. என்னமோ போங்க
லிரிக்ஸ் நல்லா இருக்குங்க்ணா..
*
முத்துக்குளிப்பவரே கொஞ்சம் பக்கத்திலே வாங்க
முக்கனிச் சாறெடுத்துக் கொஞ்சம்கிண்ணத்திலே தாங்க..
மூழ்கி எழுந்துவிட்டேன்
இந்த முத்தை கண்டெடுத்தேன்
மனதில் பூட்டிவைத்தே
என் உயிரைக் காவல் வைத்தேன்..

உறக்கம் வராமல் என்னைத் தடுத்ததென்ன
பொறுக்கவிடாமல் உள்ளம் தவிப்பதென்ன

காற்று வந்து முத்தமிட்டால் கார்மேகம் நீர் பொழியும் (ஹை..)
காதல் வெள்ளம் பொங்கி வந்தால் காவியத்தில் தேன் பாயும்

இளமை வானிலே எண்ணம் பறப்பதென்ன
இனம்புரியாத சுகம் பிறப்பதென்ன

நெருங்கி வந்து நின்றுவிட்டால் நினைவுகள் மயங்கி வரும்
மயக்கம் வந்து தெளியும் முன்னே மறு நாளும் விடிந்துவிடும்


https://youtu.be/m205Gt7LfCk

Gopal.s
14th June 2015, 09:39 AM
'முத்துக் குளிப்பவ்ரே கொஞ்சம் பக்கத்தில வாங்க'.

எத்தனை முறை கேட்டாலும் முத்துதான்.

இந்தப் பாடலை ரவி த்ரெட்டில் தரவேற்றி எழுதிய ஞாபகம் வந்து விட்டது. ராகவேந்திரர் கொடுத்த உற்சாகத்தினால் செய்தேன். இப்படத்தின் எந்த தகவல்களும் அப்போது இல்லாத நிலையில் ராஜ் டிஜிட்டல் பிளசில் அதிர்ஷ்டவசமாக பதிவு செய்து வைத்திருந்த வீடியோவை அப்லோட் செய்து பதித்தேன்.(2011)

http://jollyhoo.com/wp-content/uploads/2010/02/Vijaya-Nirmala-Birthday-Celebration-Photo-Gallery-46.jpghttps://i.ytimg.com/vi/Ou6-Wl2jIsk/hqdefault.jpghttp://i.ytimg.com/vi/1esaLrBI9-4/hqdefault.jpg

'சத்தியம் தவறாதே' என்ற ரவிச்சந்திரன் அவர்களின் மிக மிக அபூர்வ படத்தைப் பற்றி பல பேர் அறிந்திருக்க வாய்ப்பில்லை. 20.12.1968-இல் வெளிவந்த இந்தப்படத்தில் 'கலைநிலா' ரவிச்சந்திரன், அவரது ஜோடியாக விஜயநிர்மலா ('பணமா பாசமா' புகழ் 'அலேக்' நிர்மலா தான். இவர் தெலுங்குத் திரைப்பட உலகின் 'சூப்பர் ஸ்டார்' கிருஷ்ணாவின் மனைவி ஆவார். 'பெஜவாடா பெப்புலி' என்ற நடிகர் திலகம், கிருஷ்ணா இணைந்து நடித்த தெலுங்குத் திரைப்படத்தை இயக்கிய பெருமைக்குரியவர். 'மோசக்காரனுக்கு மோசக்காரன்' என்ற தெலுங்கு மொழி மாற்றத் தமிழ் படத்தில் கிருஷ்ணாவின் ஜோடியாக நடித்தவர். கிருஷ்ணாவின் ஜோடியாக பல தெலுங்குப் படங்களில் இவர் நடித்ததினால் இவர்கள் இருவருக்கும் காதல் அரும்பி அதுவே கல்யாணத்தில் முடிந்தது) மற்றும் 'மாஸ்டர்' பிரபாகர், ராமதாஸ் ஆகியோர் நடித்திருந்தனர். பாண்டி செல்வராஜ் இப்படத்தை இயக்கியிருந்தார் என்று நினைக்கிறேன். (C.N. பாண்டுரங்கன் அவர்கள் மகா இசைமேதை. அவர்கள் இசையமைப்பில் மிக மிக அற்புதமான பாடல்கள் இந்தப் படத்திற்கு மகுடம் சூட்டின. (நடிகர் திலகத்தின் 'எதிர்பாராதது' படத்திற்கும் இசை இவர்தான். டைட்டிலில் பாண்டுரங்கம் என்று போடுவார்கள். தியாகராஜ பாகவதர் நடித்த 'புதுவாழ்வு' போன்ற படங்களுக்கு 'சங்கீதமேதை' ஜி.ராமநாதன் அவர்களுடன் சேர்ந்து இசை அமைத்தவர்)

'சத்தியம் தவறாதே... தாய் நாட்டினை மறவாதே' என்று மாஸ்டர் பிரபாகரன் பீச்சில் பாடுவதாக வரும் பாடல் சோஷலிச கொள்கைகளை அற்புதமாக வெளிப்படுத்தும் பாடல்.

இப்படத்தின் vcd,dvd எதுவும் அப்போது கிடைக்கவில்லை. இந்தப் படத்தைத் தேடி பல வருடங்கள் அலைந்திருக்கிறேன். ஆனால் இப்போது வாங்கி விட்டேன். ஏனென்றால் சிறுவயது முதற்கொண்டே

"முத்துக் குளிப்பவரே... கொஞ்சம் பக்கத்திலே வாங்க"...

பாடல் மனதில் மிக ஆழமாகப் பதிந்து விட்டது. சிலோன் ரேடியோவில் இப்பாடலை பலமுறை கேட்டு மெய்மறந்து போய் இருக்கிறேன். இப்படத்தை 'விஜய்' தொலைக்காட்சியில் கூட முன்பு ஒருமுறை போட்டார்கள். அப்போது இந்தப் பாடல் காட்சியை மீண்டும் பார்த்து பூரித்துப் போனேன். பாடலுக்கேற்றவாறு அற்புதமாகப் படமாக்கப் பட்டிருந்தது இந்தப் பாடல். அவுட்டோரில் படமாகப் பட்டவிதம் மனதுக்கு குளிர்ச்சியைத் தரும் விதமாக உள்ளது. ரவியும் கேப்பெல்லாம் போட்டுக் கொண்டு அழகாகவே தோன்றுவார். டி எம்.எஸ்ஸின் குரல் ரவிக்கு அற்புதமாக பொருந்தி இருக்கும். இசைக்குயில் சுசீலாவைப் பற்றிக் கேட்கவே வேண்டாம். "இளமை வானிலே எண்ணம் பறப்பதென்ன"... என்ற சரணத்தின் வரிகளை இருமுறை அவர் உச்சரிக்கும் விதம் அலாதியானது.

என்ன பாட்டுய்யா அது! 'சத்தியம் தவறாதே' ரவி, விஜயநிர்மலா ஜோடி. பாட்டுக்கள் ஒவ்வொன்றும் டாப் ரகம். இப்போது உங்கள் ரசனையால் இங்கேயே நானும் ரசிக்கிறேன்.

By Vasudevan

Gopal.s
15th June 2015, 03:24 AM
கொஞ்சம் நடக்கும் சில நடவடிக்கைகளைப் பார்த்ததில் மனதுக்குள் கொஞ்சம் கோபம் வந்தது. கொழுந்துவிட்டும் எரிந்தது..அலுவலகம் முடிந்து வீட்டிற்கு வந்து என்ன செய்தேன்…
அப்படியே பக்கத்தறைக்குச் சென்று கண்ணாடியில் பார்த்தேனா.. ஏற்கெனவே கொஞ்சம் சுமாரழகான முகம் இன்னும் கொஞ்சம் சுமாராக மாறி இருக்க ரொம்பவே கோபம்..

வந்து ஏதாவது அது இதுன்னு பாட்டுக் கிடைக்கிறதா என்று பார்த்தால் கீழே உள்ளபாட்டு தான் முதலில் கிடைத்தது..

அதற்கப்புறம் தான் அது இது ..

அந்த முதல்பாட்டு பார்த்த போது குறள் தான் நினைவுக்கு வந்தது

அடுத்தது காட்டும் பளிங்குபோல் நெஞ்சம்
கடுத்தது காட்டும் முகம்

மனஸ் புண்ணாய்டுச்சுன்னா அது எங்க தெரியுமாம் ஃபேஸ்புக்ல ஸாரி ஃபேஸ்ல தெரியுமாம் வள்ளுவர் அந்தக்காலத்திலேயே சொல்லியிருக்கார்..

அப்புறம் இந்தப் பாட் முழுக்கக்கேட்ட பிறகு மறுபடி கண்ணாடியைப்பார்த்தேன்.. என்முகம் சிரித்தபடி வெகு அழகாக..

ஸோ கோபம் வந்துச்சுன்னா டைவர்ஷனா ஒண்ணை எடுத்துக்கிட்டு பண்ணிடனும் என்று ஆன்றோர்கள் சொல்வாங்க..உண்மை தாங்க..நம்பலையா.. சரி..என்னமோ போங்க..

*
ரவிச்சந்திரனும் ஜெயலலிதாவும் (அது என்ன உடை சுடிதாரும் இல்லாமல் நைட்டி போலும் இல்லாமல்) வெகு அழகாக உடற்பயிற்சி போல் நடனம் ஆடுகிறார்கள்..(புலியூர் சரோஜா டான்ஸ் போல இருந்தது) பட் பாடல் வரிகள் வெகு அழகு..

*

நெஞ்சுக்கு முகமே கண்ணாடி நீ நினைப்பதைக் காட்டும் முன்னாடி
ஊரறியாமல் மறைத்த போதும் ஓடும் விழிகள் தள்ளாடி

சபையறியாமல் நடக்கும் அது
தலைமுறை கால்வரை அளக்கும்
இடையிடையே கொஞ்சம் சிரிக்கும்
அது ஏழையின் பசி போல் இருக்கும்

ஆசையை ப் பல நாள் அடக்கும்
அந்த அடக்கத்திலே உடல் இளைக்கும்

ஆயினும் நெஞ்சத்தை மறைக்கும்
அது ஆண்களுக்கெங்கே இருக்கும் இருக்கும்

பெண்ணுக்கு ரகசியம் ஏது
தலை பின்னலும் பேசிடும் போது

கண்ணுக்கு த் திரைகிடையாது
அது கலந்தபின் விலகுவதேது ஏது



https://youtu.be/RBzqNmOqcvo


By Chinna Kannan

Gopal.s
17th June 2015, 01:56 PM
Courtesy- Vasudevan



'மாடி வீட்டுப் பொண்ணு மீனா'

படம்: புகுந்த வீடு

சிறப்பு அம்சங்கள் நிறைந்த சிந்தை மயக்கிய பாடல்.

எனதருமை கோபால் சாருக்கு இப்பாடலை பரிசாக அளிக்கிறேன்.

பாடகர் திலகத்தின் ஆளுமை. இரட்டையர்கள் சங்கர்-கணேஷ் இசை இராஜ்ஜியம். இசைக்குழுவினர் ஒவ்வொருவரின் ஒற்றுமைப் பங்களிப்பு, ரவியின் ஸ்டைல், அழகு, ஆட்டம், ரவி இதுவரை செய்யாத சில புது முகபாவங்கள், லஷ்மியின் நடிப்பு

என்று பல சிறப்புகள் நிறைந்த பாடல்.

சந்தர்ப்ப வசத்தால் பிரிந்த தம்பதியர். கணவன் மேடைப் பாடகனாக இன்னிசைக் கச்சேரி மேடையில். அவன்தான் பாடப் போகிறான் என்று தெரியாமல் அரங்கின் உள்ளே வரும் மனைவி. அவனைக் கண்டதும் அதிர்ச்சி. அவனுக்கும் இன்ப, துன்ப அதிர்ச்சி. மைக்கை கையில் எடுத்து மனதில் உள்ளதை (அவள் மட்டுமே) புரியும்படி வார்த்தைகளில் இன்னிசையோடு கொட்டித் தீர்க்கிறான். அவள் தர்மசங்கடத்தில் ஆழ்கிறாள். அழுகிறாள்.

இது பாடலுக்கான காட்சி.

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/---Maadi%20veettu%20ponnu%20meena%20movie-%20Puguntha%20Veedu.TMS.mp4_20150617_110641.664.jp g (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/---Maadi%20veettu%20ponnu%20meena%20movie-%20Puguntha%20Veedu.TMS.mp4_20150617_110641.664.jp g.html)

இன்னிசைக் கச்சேரி ஒன்றில் ரசிகர்களிடம் சங்கர்-கணேஷ் இரட்டையர்களை ரவி நிஜமாகவே அறிமுகப்படுத்துவதுடன் இந்தப் பாடல் தொடங்கும். மேடையில் இன்னிசை வேந்தர்கள். இருவரும் இளமையாக. சுறுசுறுப்பாக.

பாடலின் ஆரம்பத்தில் ஆர்ப்பாட்டமாக டிரம்பெட் எடுத்து கூலிங் கிளாஸ் அணிந்த இசைக் கலைஞர் ஒருவர் வாசிக்க ஆரம்பிக்க, அப்படியே நாம் நம்மை நம் வசம் இழக்க ஆரம்பிப்போம். காதுகளில் ரீங்காரமிட்டு ஆர்ப்பாட்ட இசை நம்மை இன்ப சித்ரவதைகள் செய்ய ஆரம்பிக்கும்.

இசைக்கலைஞர்கள் கள்ளமில்லா புன்னகையோடு கிடார் கருவிகளை தீண்ட, மற்ற சிலர் 'பாங்கோஸ்' பரவசமாய் வாசிக்க, மற்ற கலைஞர்களும் அவரவர்கள் இசை வேலையைச் செவ்வனே செய்ய, பாடகர்கள் அணியும் வெண் கோட் சூட் அணிந்து ரவி உற்சாகக் கரை புரள பாடத் துவங்குவார்.

மாடி வீட்டுப் பொண்ணு மீனா
கோடி வீட்டுப் பக்கம் போனா
சின்னப் பையன் கண்ணு தேடினா
சேலையிட்டு மெல்ல மூடினா

கால்கள் தள்ளாடினா
கண்கள் போராடினா
நெஞ்சம் திண்டாடினா
நாணம் கொண்டோடினா
ஒரே பயம் பாவம்
ஒரே பயம்

மாடி வீட்டுப் பொண்ணு மீனா
கோடி வீட்டுப் பக்கம் போனா
சின்னப் பையன் கண்ணு தேடினா
சேலையிட்டு மெல்ல மூடினா

நேர் ஆங்கிளிலும் சைட் ஆங்கிளிலும் ரவி அழகு. சற்று முகம் முற்றியதும் தெரியும். ஆனாலும் அதவும் ஒரு தனி அழகு.

லஷ்மி இப்போது அரங்கத்தினுள் என்ட்டர். ரவியைப் பார்த்ததும் கண்களை உயர்த்தி அதிர்ச்சி அடைந்து நிற்பார்.

இப்போது இடையிசை. சங்கர்-கணேஷ் பின்னி எடுப்பார்கள். சங்கர் அக்கார்டின் எடுத்து அக்கிரமம் புரிகையில் கணேஷ் தன் கைகளால் இசைக் குழுவினரை வழி நடத்துவார். கண்ணாடி வாலிபர் கருமமே கண்ணாக டிரம்பெட் வாசித்து கலக்கிக் கொண்டிருப்பார். பின் ஐந்தாறு வயலின் விற்பன்னர்கள் புகுந்து புறப்படுவார்கள்.

லஷ்மி சீட்டு இருக்கை நம்பரை செக் செய்தபடி இருக்கை இருக்கும் வரிசையைத் தேடிச் செல்வார். இப்போது அனைத்து இசைக் கலைஞர்களும் சேர்ந்து காட்டப்படுவார்கள்.

இருபது வயது இளைஞன் ஒருவன்
வருவதைக் கண்டாள் பின்னாடி
இன்னும் கொஞ்சம் வேகம் கொண்டு

(ரவி குனிந்தபடி தத்தித் தத்தி நடந்து ஆடுவது செம அழகு)

அன்னம் நடந்தாள் தள்ளாடி
அங்கொரு பார்வை இங்கொரு பார்வை

(இந்த இடத்தில் ரவி, லஷ்மி ரகசிய முகபாவங்கள் ரசிக்க வைக்கும்)

அங்கொரு பார்வை இங்கொரு பார்வை
அச்சம் கொண்டாள் நெஞ்சோடு
காதல் என்னும் பாடல் கேட்டு
பின்னால் சென்றாள் அவனோடு
காதல் என்னும் பாடல் கேட்டு
பின்னால் சென்றாள் அவனோடு

மாடி வீட்டுப் பொண்ணு மீனா
கோடி வீட்டுப் பக்கம் போனா
சின்னப் பையன் கண்ணு தேடினா
சேலையிட்டு மெல்ல மூடினா

http://i.ytimg.com/vi/1nFZ5o4kKAo/hqdefault.jpg

பாங்கோஸ் உருட்டல், மிரட்டல்களுக்கு மத்தியில் (வாசிக்கும் அந்த அழகு இளைஞரிடம்தான் என்ன ஒரு உற்சாகம்!) அந்த ஓசைக்கேற்றவாறு லஷ்மியின் கண்கள் மிரட்சியில் மிரண்டு கவிதைகளாய் உருளும். உருக்கும். ரவி ஆர்வ எகத்தாளமாய் அவரைப் பார்ப்பது இன்னும் சுவை. லஷ்மி செய்வதறியாமல் கீழுதட்டை மெல்லக் கடிப்பார். டிரம்ஸ் புகுந்து விளையாடும்.

கிடார்கள் முழங்க, தொடர்ந்து புல்லாங்குழல் வாசிப்பாளர் குழல் வாசித்து புளகாங்கித புல்லரிக்க வைப்பார். சாக்ஸோபோன் பிடித்து சர்க்கஸ் வித்தைகள் நடத்திக் காட்டுவார் இன்னொரு வாசிப்பு ஜாம்பவான்.

(இந்த ஜாம்பவானுக்கு, அவர் வாசிக்கும் அழகிற்கு, அற்புதத்திற்கு என்ன விலை கொடுத்தாலும் தகும். மனுஷன் பின்னுவார் சாக்ஸில் மெய்மறந்து.)

மலரும் நினைவுகளில் மூழ்கிய லஷ்மியின் மௌன அழுகை அவரிடம் நம்முள் இரக்கம் பிறக்க வைக்கும்.

உறவினில் தொடங்கி ஊடலில் முடிய
இருவரும் பிரிந்தார் தனியாக
சென்றவன் தானே வந்திடக் கூடும்
என்றவள் நினைத்தாள் முடிவாக

என்று ரவி இதழ் மூடாமல் முகத்தில் சோகம் காட்டி தொடருவார். (அருமையாக பாவங்கள் காட்டுவார் ரவி இந்த இடத்தில் பழைய நினைவுகளை நினைத்தபடியே)

காதலில் நெஞ்சம் வாடிய பின்னால்
காதலில் நெஞ்சம் வாடிய பின்னால்

(லஷ்மியின் புருவங்கள் கோபத்தில் ஏறி இறங்கும் விதம் வித்தை)

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/---Maadi%20veettu%20ponnu%20meena%20movie-%20Puguntha%20Veedu.TMS.mp4_20150617_110957.473_1. jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/---Maadi%20veettu%20ponnu%20meena%20movie-%20Puguntha%20Veedu.TMS.mp4_20150617_110957.473_1. jpg.html)

இரண்டாம் முறை 'காதலில் நெஞ்சம்' எனும் போது ரவி வாயசைப்பது அப்படியே நடிகர் திலகத்தை ஞாபகப்படுத்தும். 'ம்' இழுக்கும் போது கவனியுங்கள்.

தானே வந்தாள் துணை தேடி

காலம் ஒருநாள் மாறும் என்று
மன்னன் நின்றான் இசை பாடி
காலம் ஒருநாள் மாறும் என்று
மன்னன் நின்றான் இசை பாடி

மாடி வீட்டுப் பொண்ணு மீனா
கோடி வீட்டுப் பக்கம் போனா
சின்னப் பையன் கண்ணு தேடினா
சேலையிட்டு மெல்ல மூடினா

'பாங்கோஸ்' இசையுடன் பாடல் முடியும். ஆனால் அப்போதுதான் மீண்டும் நம் மனதில் இசைக்கத் துவங்கும்.

நான் பார்த்து பார்த்து, அனுபவித்து அனுபவித்து, ரசித்து ரசித்து, மகிழ்ந்த பாடல். பாடகர் திலகத்தின் பாடல் வரிசைகளில் மாணிக்க மகுடம் சூட்டிக் கொண்ட பாடல். பாடல் கொஞ்சமும் அழகு கெடாமல் சுவை குன்றாமல் நாம் நினைத்ததற்கு மேலும் அற்புதமாக படமாக்கப் பட்டிருக்கும்.

இசைக் கலைஞர்களின் உற்சாகத்திற்கு மத்தியில் ரவி,லஷ்மி நடிப்பையும் சேர்த்து அவர்களோடு கலந்து இப்பாடலை சுவைத்து மகிழலாம்.

என்ன ஒற்றுமையான ஒருங்கிணைப்பு! பாடகர்கள், நடிகர்கள், இசைக் கலைஞர்கள், பாடலாசிரியர் என்று ஒருவரை ஒருவர் மிஞ்சும் திறமையான காலகட்டம். என்ஹி போயிற்று அந்த சொர்க்கபுரி நாட்கள்? திரும்ப வரவே வராதா? ஒவ்வொருவருக்கும் டைம் மெஷின் இருக்கக் கூடாதா? அதில் ஏறி அந்தக் காலத்திற்கு நாம் பறக்கக் கூடாதா?

இறந்தும் இசையால், நடிப்பால், கலையால் நம்மை வாழ வைக்கும் சாகசக் கலைஞர்களுக்கு இப்பாடல் அர்ப்பணம்.

அப்பாடி! ரொம்ப நாள் ஆசை இன்று நிறைவேறி விட்டது.

ரசித்த, ஏற்கனவே ரசித்த, இப்போது ரசிக்கப் போகும் அனைத்து ரசிக உள்ளங்களுக்கும் நன்றி!


https://youtu.be/9Zg31-cOuhA

vasudevan31355
17th June 2015, 07:24 PM
நன்றி கோ!

வேலையில்லாமல் பண்ணியதற்கு.:) இன்னும் ரவியை உயர்த்தலாம். :2thumbsup:

Gopal.s
22nd June 2015, 06:40 PM
கல்யாண மண்டபம் படத்தில் பீ.பீ.எஸ் -சுசிலா இணைவில் (கே.வீ.எம் இசை) ரவிச்சந்திரன் -மாலதி இணையில்.(அசப்பில் ஈ.வீ.சரோஜா மாதிரி இருப்பார்). ரவி ,நடிகர்திலகத்துக்கு அடுத்த தமிழக ஆணழகன். இந்த உடையிலும் அசத்தல். பாட்டுக்கு தகுந்த மாதிரி அடக்கி வாசிக்கிறார். படு பாந்தமான பாடல். படமாக்கம். எனக்கு மிக மிக பிடித்த ஒன்று.

https://www.youtube.com/watch?v=KwAm_UuufDc

Gopal.s
24th June 2015, 05:35 PM
Courtesy-Vasudevan

]'தங்கச் சலங்கை கட்டித்
தழுவுது தழுவுது பூச்செண்டு'

கோபால் சார்!

அடேங்கப்பா!

நம் எத்தனை நாள் கனவு நிறைவேறுகிறது?

எட்டு வயதில் சிலோன் வானொலியில் கேட்டு ரசிக்கத் துவங்கிய பாட்டு. கேட்டுக் கேட்டு மனதில் தங்கிப் புதைந்து போனது. அடிக்கடி கோபால், ராகவேந்திரன் சார் போன்றவர்களுடன் பேசும்போது பூதாகாரமாக வெளியே புறப்பட்டு வரும். அன்று முழுக்க முழுக்க ஆட்சி செலுத்தி விட்டு பின் கொஞ்சம் அடங்கும். இது போல நிறைய தடவை. சம்பந்தம் இல்லாமல் நடு இரவில் ஞாபகத்திற்கு வந்து உயிரை வாங்கும். தூக்கம் கெடுக்கும். அடுத்த நாள் டூ வீலரில் செல்லும்போது கூட பாடலின் முதல் நான்கு வரிகளை உதடு உச்சரித்துக் கொண்டே இருக்கும். பாடல் இடம் பெற்ற படமோ அபூர்வமானது. நடுவில் பார்க்கவே சந்தர்ப்பம் கிடைக்காதது. பாடலும் அப்படியே.

கோபாலும் நானும் பேசும்போது இப்பாடலைப் பற்றி நிறைய தடவை அகமகிழ்ந்து பேசியிருப்போம். இருவரும் ஒன்றாக சேர்ந்து பாடி வேறு அமர்க்களம். இருவருக்கும் ரவியைப் பிடிக்கும். அவர் சேட்டைகள் மிகவும் பிடிக்கும்.

எப்போது கிடைக்கும் என்று ஏங்கியிருந்த அந்தப் பாடல் இப்போது தேடுகையில் காணொளியாக கிடைத்தது.

https://lh3.googleusercontent.com/proxy/LIrxmMjTVn8yikRdgva_HHCsvcDN-dzHfhihfkg78zEP-Gsmb8PrmMJ-8Mgp2JdVbFUEzAdMDdWKY0OPLO5TMQ=w426-h320-n


'மெல்லிசை மன்னர்' இசையமைத்த 'ஓடும் நதி' படத்தில் பாடகர் திலகம் பாடிய பாடல். ரவி மனைவி ஷீலாவுடன் துள்ளல் ஆட்டம் போட்டு பாடும் பாடல்.

வரிகள் வளமானவை. ரவி உருவத்தில் திலகத்தின் ஜெராக்ஸ் என்றால் இப்பாடலில் உடையிலும். உள்ளே பனியன் தெரிய வெளியே அதே மெலிதான ஷர்ட். பாடலின் ஆரம்பத்தில் கால்களை முன் பக்கத்திலிருந்து பின்பக்கமாக வளைத்து சுழற்றியபடியே பின்னால் செல்வது பின்னல். இது அவருக்கே உரித்தானது.

ஷீலாவுடன் நெருக்கம் அதிகம் தெரியும். ரவியிடம் இன்னொரு அம்சம் பிடிக்கும். அடிக்கடி நிறைய செய்வார். பாடலின் போது லேசாக மார்பு குலுங்க ஷோல்டர்களைத் தூக்கி ஒரு வசீகரச் சிரிப்பை உதிர்ப்பார். ரொம்ப அழகாய் இருக்கும். முதல் சரணம் முடிந்து மீண்டும் பல்லவி தொடங்கி இரண்டாவது வரியின் போது அதாவது 'தன்னை நடக்கவிட்டு' எனும்போது இதை நன்றாக கவனிக்கலாம். முடிந்தவுடன் வரும் இசையில் சுழன்று ஆட்டம் போடுவதும் ஜோர்தான். இதுவும் பின்புறமாகத்தான்.

'இழுத்துப் போடுது
ஆயிரம் ஆயிரம் வண்ணங்கள்'

வரிகளில் ஷீலாவின் ஜடையைப் பின்பக்கம் கைகளால் இழுத்து சுற்றியபடியே பின்னாலேயே ஒரு ஸ்டெப் வைத்து அப்படியே அள்ளுவார். பின்னால் வரும் ஸ்டெப்களும் சர்வ சாதாரணமாக அலட்சியம் காட்டும்.

நீளமுக ஷீலா சீலா மீன் போல் வழு வழு. குட்டைப் பாவாடையுடன் மிஸஸ் ரவிச்சந்திரன் நல்ல ஜோடி.

டி.எம்.எஸ் இளமை ததும்ப அடி பின்னி எடுத்திருப்பார்.

இந்தப் பாடலை சற்று வித்தியாசப் படுத்தியிருப்பார் குரலில். அதாவது மூக்கடைத்த ஜலதோஷம் பிடித்தவர் குரல் எவ்வாறு இருக்குமோ அதே போல பாடியிருப்பார். ஆனால் அவ்வளவு அழகாக இருக்கும். டியூனோ ரொம்ப ரொம்ப அழகு.

அதே போல மூன்று சரணங்களிலும் 'ஒஹஹோ' போட்டு வார்த்தைகளை திரும்ப உடன் சேர்ப்பது இனிமையிலும் இனிமை.

ஒஹஹோ பெண் ஒன்று
ஒஹஹோ கண் ஒன்று

ஒஹஹோ வண்ணங்கள்
ஒஹஹோ எண்ணங்கள்

ஒஹஹோ கண்ணல்ல
ஒஹஹோ பெண்ணல்ல

இப்படி.

ஒரு இடத்தில் 'ஒஹஹோ..ம்ஹூஹூம்' என்று அர்த்தமே இல்லாமல் அசத்தல் ஹம்மிங்.

இந்தப் பாடலில் ஒரு வரி ரொம்ப அமர்க்களம்.

'அடிமை கொண்டபின் ஆதிக்கம் செய்பவள் பெண்ணல்ல'

கவிஞன் கலக்கிட்டான்யா.

('நான்தான் உன்னிடம் முழுசாக தஞ்சம் புகுந்து அடிமை சாசனம் எழுதிக் கொடுத்து விட்டேனே.. அப்புறம் என்னத்துக்கு இவ்வளவு பிகு? அடிமையானவன் கிட்ட போய் ஆதிக்கம் செய்யலாமா?')

சோமபானம், சுரா பானம் எல்லாம் இந்தப் பாட்டுகிட்ட என்ன பண்ணும்? டாஸ்மாக்கையும் மிஞ்சும் டக்கர் பாட்டு.


தங்கச் சலங்கை கட்டித்
தழுவுது தழுவுது பூச்செண்டு
தன்னை நடக்கவிட்டு
கலங்குது மயங்குது பொன்வண்டு

தங்கச் சலங்கை கட்டித்
தழுவுது தழுவுது பூச்செண்டு
தன்னை நடக்கவிட்டு
கலங்குது மயங்குது பொன்வண்டு

வைரத்திலே தட்டு
மலர்களிலே மொட்டு
பறவைகளில் சிட்டு
பறக்குதடி பட்டு
தரையில் நாட்டியம்
ஆடுது ஆடுது பெண் ஒன்று
இடையின் கோலத்தைத்
தேடுது தேடுது கண் ஒன்று

ஒஹஹோ பெண் ஒன்று
ஒஹஹோ கண் ஒன்று
ஒஹஹோ பெண் ஒன்று
ஒஹஹோ கண் ஒன்று

தங்கச் சலங்கை கட்டித்
தழுவுது தழுவுது பூச்செண்டு
தன்னை நடக்கவிட்டு
கலங்குது மயங்குது பொன்வண்டு

பூவிதழோ கிண்ணம்
புன்னகையோ மின்னும்
மாந்தளிரோ கன்னம்
மனமில்லையோ இன்னும்
இழுத்துப் போடுது
ஆயிரம் ஆயிரம் வண்ணங்கள்
வளைத்துப் போடுது
ஆசையில் ஓடிய எண்ணங்கள்

ஒஹஹோ..ம்ஹூஹூம்
ஒஹஹோ..ம்ஹூஹூம்
ஒஹஹோ வண்ணங்கள்
ஒஹஹோ எண்ணங்கள்

தங்கச் சலங்கை கட்டித்
தழுவுது தழுவுது பூச்செண்டு
தன்னை நடக்கவிட்டு
கலங்குது மயங்குது பொன்வண்டு

மரகதப் பூ மஞ்சம்
மணக்குதடி நெஞ்சம்
விருந்து கொள்வேன் கொஞ்சம்
விழுந்து விட்டேன் தஞ்சம்
விழுந்த நெஞ்சினை வேடிக்கை பார்ப்பது
கண்ணல்ல
அடிமை கொண்டபின் ஆதிக்கம் செய்பவள்
பெண்ணல்ல
ஒஹஹோ கண்ணல்ல
ஒஹஹோ பெண்ணல்ல
ஒஹஹோ கண்ணல்ல
ஒஹஹோ பெண்ணல்ல

தங்கச் சலங்கை கட்டித்
தழுவுது தழுவுது பூச்செண்டு
தன்னை நடக்கவிட்டு
கலங்குது மயங்குது பொன்வண்டு


https://youtu.be/KtPnKooiFh4

Gopal.s
24th June 2015, 05:51 PM
வாசு,

எழுந்தது முதலே இன்று நல்ல சகுனம். காலையில் நடிகர்திலகத்தின் திருவிளையாடல் அவதாரத்தை தரிசித்து கண் முழித்தேன்.

கண்ணதாசன்,எம்.எஸ்.விஸ்வநாதன் அவதரித்த திருநாள். நண்பர் மகேந்தரனுடன் 30 நிமிட அரட்டை ,இங்கே வந்து பார்த்தால் உன் என்னதான் முடிவு. கண் மூடி திறக்கும் நேரம் தங்கள் சலங்கை கட்டி.

ஒரு பெரிய வியாபாரம் முப்பது நாட்களாக இழுத்தது முடிவுக்கு வந்து பேரு மகிழ்ச்சி.உத்தம புத்திரன்.

vasudevan31355
1st July 2015, 11:34 AM
ஏன்? (1970)

ஏன்? ஏன்? ஏன்? ஏன்? ஏன்?

ஏன்? இத்தனை ஏன்?

ஏன்? என்று பார்ப்போம்.

http://i.ytimg.com/vi/tlqQoHrJRWQ/maxresdefault.jpg

ஈ.வி.ஆர் பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளிவந்த படம்தான் 'ஏன்?' அதுதான் இவ்வளவு பீடிகை. கொஞ்சம் அபூர்வமும் கூட.

குமுதம் இதழில் கிருஷ்ணா அவர்கள் எழுதிய 'மதுக்கிண்ணம்' என்ற கதையைத் தழுவி எடுக்கப்பட்ட படம் இது.

சரி! என்ன கதை? கொஞ்சம் சுருக்கமாகவே (!) பார்த்து விடலாம்.

ஏ.வி.எம்.ராஜன், லஷ்மி, மாஸ்டர் ஆதிநாராயணன் மூவரும் வீரராகவனின் பிள்ளைகள். வீரராகவன் ஒரு எஸ்டேட்டில் பணிபுரிகிறார். பிள்ளை ராஜனோ மதுரையில் தன் அத்தை வீட்டில் தங்கி பட்டப் படிப்பு படிக்கிறார். அத்தை சி.கே சரஸ்வதி ஒரு பணப் பேய். வீரராகவன் ராஜனுக்கு அனுப்பும் பணத்தையெல்லாம் அவர் எடுத்துக் கொள்கிறார். அவருடைய நல்ல மகன் நாகேஷ். அப்புறம் ராஜனின் படிப்பு ஏன்? என்னாயிற்று? என்று கேட்பீர்கள். வருகிறேன்.

லஷ்மி கவிதை எழுதும் ரவிச்சந்திரனைக் காதலிக்கிறார். ரவி லஷ்மி இருவர் வீட்டிலும் இவர்கள் திருமணத்திற்கு சம்மதம்.

தங்கையின் கல்யாணத்திற்கு ராஜன் புறப்பட்டு வருகிறார். சோதனை ஆரம்பமாகிறது. கல்யாணத்தன்று வீரராகவன் எதிர்பாராமல் வழுக்கி விழுந்து பிணமாகிறார். மணவீடு பிண வீடாகிறது. ரவியின் அம்மா அபசகுனமாக அதைக் கருதி கல்யாணத்தை நிறுத்துகிறார் மகன் ரவியின் வேண்டுகோளையும் மீறி.

அனாதைகளான மூவரும் அத்தை சரஸ்வதி வீட்டுக்கே வருகிறார்கள். வீரராகவன் இறந்ததும் அவருக்குண்டான எஸ்டேட் இறப்புப் பணத்தையும் சரஸ்வதி பிடுங்கிக் கொள்கிறார். லஷ்மியின் தம்பி சரஸ்வதியினால் துன்புறுத்தப்பட்டு காய்ச்சல் வந்து போலியோ நோயினால் பாதிக்கப்பட்டு நடக்க முடியாமல் போகிறான்.

பணத்துக்கு வழியில்லாததால் ராஜன் சூதாட்டம் ஆடி சம்பாதிக்கிறார். லஷ்மிக்கு இது தெரியவர அவரைக் கண்டிக்கிறார். அத்தை தன் படிப்புக்கு வந்த பணத்தையெல்லாம் சுருட்டிக் கொண்டதால் தன்னால் படிப்பைத் தொடர இயலவில்லை என்று ராஜன் கூறுகிறார்.

பட்டணத்தில் தம்பிக்கு வைத்தியம் பார்க்க லஷ்மியும், ராஜனும் மதுரையை விட்டு புறப்படுகிறார்கள்.

https://i.ytimg.com/vi/ye0lcLc5nP4/hqdefault.jpg

பட்டணத்தில் ராஜனின் நண்பன் எம்.ஆர்.ஆர்.வாசு இவர்களுக்கு வீடு வாடகைக்கு எடுத்துக் கொடுத்து உதவுகிறார். ஆனால் இவர் ஒரு கேடி. லஷ்மியின் மீது காதல் கொண்டு அவருக்கு ஈவ் டீசிங் டார்ச்சர் கொடுக்கிறார்.

அந்தக் காலனியில் இருக்கும் 'வெண்ணிற ஆடை' நிர்மலா ராஜனைக் காதலிக்கிறார்.

சி.கே சரஸ்வதி இறந்து போன தன் கணவரின் உறவினர் வி.எஸ்.ராகவன் வெளிநாட்டிலிருந்து சென்னை வந்திருப்பதாகவும், அவர் பெரிய பணக்காரர் என்றும், அவருடைய ஒரே மகளை தன் மகன் நாகேஷ் திருமணம் செய்து கொண்டால் சொத்துக்கள் முழுதும் தனக்கே சேரும் என்றும் முடிவு செய்து நாகேஷை பட்டணத்துக்கு வற்புறுத்தி அழைத்துச் செல்கிறார்.

ராஜன் திருடனாகிறார். ஒருசமயம் தம்பியின் வைத்தியத்திற்காக பணமில்லாமல் சிரமப்பட்டு லஷ்மி தன் வீட்டில் உள்ள வெள்ளித்தட்டை அடகு வைத்து பணம் கொண்டு வரும்போது அது ராஜனாலேயே திருடப் படுகிறது. இது தெரிந்து கொண்ட லஷ்மி கடுமையாக அண்ணனைச் சாடுகிறார். ராஜன் மனவருத்தத்துடன் வீட்டைவிட்டு வெளியேறுகிறார்.

இதற்கிடையில் ரவிச்சந்திரன் லஷ்மியின் நினைவால் வேறு திருமணம் செய்யாமல் தள்ளிப் போட்டுக் கொண்டே போகிறார்.

நிர்மலாவை ராஜன் அடிக்கடி கள்ளத்தனமாக சந்திக்கிறார். இது தெரிந்த லஷ்மி நிர்மலாவிடம் ராஜனை மறந்து விடச் சொல்கிறார். நிர்மலா மறுக்கிறார். காலனிக்கே இவர்களது கள்ளக் காதல் தெரிகிறது.

வீட்டுக்கார அம்மா சுந்தரிபாய் லஷ்மி நலன் கருதி அவரை பணக்காரப் பெரியவர் ராகவனை திருமணம் செய்து கொள்ளச் சொல்கிறார். அப்படியே தம்பியின் வைத்திய செலவுகளையும் பார்த்துக் கொள்ளலாம் என்கிறார். குடும்ப கஷ்டத்தின் சூழ்நிலையின் காரணமாக லஷ்மி தன்னைத் தியாகம் செய்ய முடிவெடுத்து ராகவனுக்குக் கழுத்தை நீட்டத் தயாராகிறார்.

ராஜன் போலிசாரால் பிடிபடுகிறார். அவரை ஜாமீனில் எடுக்க எம்.ஆர்.ஆர்.வாசு வக்கீல் (!) ரவிச்சந்திரன் உதவியை நாடுகிறார். அப்போது ரவி லஷ்மியை சந்திக்க நேரிடுகிறது. லஷ்மிக்காக இதுவரை திருமணமே செய்து கொள்ளாமல் இருப்பதை ரவி லஷ்மியிடம் கூறுகிறார். தான் தாயின் சம்மதத்தை பெற்று விட்டதாகவும், லஷ்மியை திருமணம் செய்து கொள்ளத் தயாராய் இருப்பதையும் கூற, லஷ்மி தான் ராகவனுக்கு வாழ்க்கைப் படப் போவதை கூறி விட்டு தன்னை மறந்து விடுமாறும் கூறிச் சென்று விடுகிறார்.

ஜெயிலில் இருந்து ஜாமீனில் வெளிவரும் ராஜன் லஷ்மி ராகவனைத் திருமணம் செய்து கொள்ள இருக்கும் விஷயம் தெரிந்து அவரைப் போய் தடுக்கப் பார்க்க, லஷ்மி குடுப்பம் தழைக்க நான் எடுத்த இம்முடிவை மாற்ற இயலாது என்று கூறி விடுகிறார்.

மனம் நொந்த அண்ணன் ராஜன் ஒருபுறம். காதலி வயதானவனுக்கு மனைவியாகப் போகிறாளே என்ற கவலையில் காதலன் ரவி ஒரு புறம்.

வைத்திய சாலையில் இருக்கும் தம்பிக்கு நடப்பதெல்லாம் தெரியவர, லஷ்மி ராகவனுக்கு மனைவியாகப் போகும் நேரம் தம்பியைக் காணவில்லை என்ற செய்தி வருகிறது. தம்பி அக்காளின் திருமணத்தைத் தடுக்க வைத்திய சாலையில் இருந்து தப்பித்து வருகிறான். லஷ்மி பதறிப் போய் ராகவனிடம் 'தம்பியைப் பார்த்து விட்டு வருகிறேன்' என்று சொல்ல, ராகவன் மறுக்க, அப்போது ராகவன் மார்பை ஒரு துப்பாக்கிக் குண்டு துளைக்கிறது. ராகவன் மரணம் அடைகிறார்.

கொலை செய்தது யார்? ஏன்?

காலனிக்காரர்கள் தன்னை அடித்து விட்டார்கள் என்று அவர்கள் மீது ஆத்திரம் கொண்டு வாசு காலனிக்கே வெடிகுண்டு வைத்துவிட, தம்பியும், அவன் நாயும் அதைக் கண்டுபிடித்து என்ன செய்வது என்று தெரியாமல் விழிக்க, அந்த நேரத்தில் அங்கு வரும் ராஜன் அதைத் தூக்கித் தூர எறிய முற்பட, வெடிகுண்டு அப்போது வெடித்து குற்றுயிரும், குலையுயிருமாக கிடக்கிறார் ராஜன்.
https://i.ytimg.com/vi/vJvABrx-4IY/hqdefault.jpg

போலீஸ் ராகவனைக் கொலை செய்தது யார்? என்று விசாரணை செய்கிறது. ரவி 'லஷ்மிக்கு இப்படி ஒரு வயதான கணவனா?' என்று மனம் நொந்து தான்தான் ராகவனை சுட்டதாக சொல்கிறார். பழியைத் தானே ஏற்கிறார்.

ஆனால் வெடிகுண்டில் காயமாகி கிடக்கும் ராஜன் உண்மை முடிச்சுகளை அவழ்த்து, போலீஸிடம் வாக்குமூலம் தருகிறார். தங்கைக்கு இப்படிப்பட்ட வாழ்வு அமைய வேண்டாம் என்று ராகவனைத் தான் சுட்டுக் கொன்ற உண்மையையும் கூறுகிறார். ரவி, லஷ்மி கைகளை இணைத்து வைத்து தன் உயிரை விடுகிறார்.

'வெண்ணிற ஆடை' நிர்மலா ராஜனை இழந்து வெண்ணிற ஆடை உடுத்தித்தானே ஆக வேண்டும்?:)

அப்பாடா! போதுமடா சாமி! தலை சுற்றுகிறது. :(

இந்தக் கதையை நீங்கள் முழுவதும் படித்தால் உங்களைப் போல பொறுமைசாலி பூமியிலே யாருமே இல்லை என்று அர்த்தம்.

மொத்தமாக சேர்ந்து எல்லோரும் நம் உயிரை எடுத்து விட்டார்கள்.:banghead:

ஒரே ஒரு நபரைத் தவிர.

அவர்தான் டி.ஆர்.பாப்பா.

'ஏன்? நிறுத்திவிட்டாய்?' என்று கேட்கிறீர்கள்.

ஏன்? என்று அடுத்த பதிவில் சொல்கிறேன்.:)

RAGHAVENDRA
1st July 2015, 07:44 PM
வாசு சார்
ஏன் என்று நான் கேட்க மாட்டேன்.
ஏன் என்றால், ஏன் படத்தைப் பற்றி நான் முன்னமே அறிந்திருந்தது மட்டுமல்ல, படத்தைப் பார்த்திருந்ததும் தான்.
ஏன் என்றால் கண்ணாடி பாத்திரத்தைக் கல்மீது வைப்பது போல் மெல்லப் பேசினால் யாரும் கண்டுகொள்ள மாட்டார்கள்.
ஏன் என்றால் உரக்க இப்படத்தைப் பற்றிப் பேசினால் எல்லோருக்கும் போய் சேருமல்லவா..

சரி.. சரி. யாராவது கல்லைத் தூக்கி ஓடி வரப் போகிறார்கள். ஐயா வுடு ஜூட்..

ஏன் பாட்டுப் புத்தகப் பக்கங்கள் உங்களுக்கு பரிசாக..

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/OLDSONGBOOKPAGES/Yaenp01fw_zpssneregwt.jpg

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/OLDSONGBOOKPAGES/Yaenp02fw_zpsevjn3yxr.jpg

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/OLDSONGBOOKPAGES/Yaenp03fw_zpsmftfdbos.jpg

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/OLDSONGBOOKPAGES/Yaenp04fw_zpswarljyqa.jpg

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/OLDSONGBOOKPAGES/Yaenp05fw_zpsjy1f8t8k.jpg

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/OLDSONGBOOKPAGES/Yaenp06fw_zpsc9ui3akq.jpg

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/OLDSONGBOOKPAGES/Yaenp07fw_zpsxwqjegyb.jpg

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/OLDSONGBOOKPAGES/Yaenp08fw_zpss2b1jpva.jpg

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/OLDSONGBOOKPAGES/Yaenp09fw_zpsvo9ydhg6.jpg

RAGHAVENDRA
1st July 2015, 07:47 PM
நம் நெஞ்சையெல்லாம் கொள்ளை கொண்ட அற்புதப் பாடல்...

விவரமாக விஸ்தாரமாக எழுதப் போவதில்லை.. வாசு சாரின் எழுத்தில் இதைப் பற்றிப் படியுங்கள்.

https://www.youtube.com/watch?v=SD1WGCUcVgU

RAGHAVENDRA
1st July 2015, 07:52 PM
உள்ளத்தைக் கொள்ளை கொண்ட மற்றோர் பாடல் ஏன் படத்திலிருந்து...

கண்ணன் எனக்கொரு பிள்ளை.. சூலமங்கலம் ராஜலகஷ்மியின் குரலில்...

https://www.youtube.com/watch?v=XM9aIhxNCDU

RAGHAVENDRA
23rd October 2015, 01:08 AM
வாசு சார்
நைட் ஷிஃப்ட் முடிஞ்சு காலைலே வந்திருப்பீங்க...
ஹப்பிற்கு வந்தவுடனே உங்களுக்கு ஒரு ப்ளெஸண்ட் சர்ப்ரைஸ்...

அன்னை சொன்ன சொல் படத்தின் ஸ்டில்... இணையத்திலேயே முதன் முறையாக... அதுவும் உங்களுக்காக...

அங்கே ஒருத்தர் சுனாமி ஊர்லேந்து பறந்து வரப்போறார் பாருங்க...

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/OldTamilFilmStills5/AnnaiSonnaSolfw_zpsqelep89m.jpg

RAGHAVENDRA
23rd October 2015, 02:23 PM
https://fbcdn-sphotos-c-a.akamaihd.net/hphotos-ak-xta1/v/t1.0-9/12039300_995810567136282_8518297928801647657_n.jpg ?oh=3c29faac37836fbdf5a1e454f09a2424&oe=56BAFAB7&__gda__=1455317310_e27214ac18bbda4203a383337c54c2f c

RAGHAVENDRA
23rd October 2015, 03:18 PM
இதோ நம் பார்வைக்கு ரங்க ராட்டினம் திரைப்பட நிழற்படங்கள்

https://scontent-frt3-1.xx.fbcdn.net/hphotos-xpf1/v/t1.0-9/10423283_995839957133343_8894672222272514148_n.jpg ?oh=f991444861388ac8d5681ce356d9adaf&oe=56CA88D2

https://fbcdn-sphotos-c-a.akamaihd.net/hphotos-ak-xat1/v/t1.0-9/1506651_995839943800011_2226964725266239232_n.jpg? oh=bec150cbf707e0731b286f326a350968&oe=56BCFC7B&__gda__=1456207503_672a36f17285da4ec895999703eaabb 7

yoyisohuni
26th November 2015, 12:30 PM
naan - classic movie
ravichandran and jayalalitha in sizzling romantic number

vandhaal ennodu inge va thendrale, ni marandhaal naan varavo

https://www.youtube.com/watch?v=cuwlDiX6nno

Gopal.s
29th December 2015, 02:46 PM
இன்றைய trend இல் ரவிச்சந்திரன் இருந்தால்?பெருமூச்சு விடுவதை தவிர வேறு வழியில்லை. அந்த அழகு,ஸ்டைல் ,ஆக்ஷன் நடனம் அவரை முதல் நிலை சூப்பர் ஸ்டார் ஆக்கி இருக்கும். அவரின் அகந்தை குணம் ரசிக்க பட்டிருக்கும்.



அன்றைய தமிழ் ரசிகர்களுக்கு நீதி போதனை ,கண்ணீர் இவை தேவை பட்டதால் ,ஹிந்தி ரசிகர்கள் போல sweet nothings genre படங்கள் ரசிக்க கற்று கொள்ளவில்லை.



ரவிச்சந்திரன் பண்ணியிருந்தால் அன்பே வா,நில் கவனி காதலி,எங்க மாமா ,பட்டணத்தில் பூதம்,வல்லவன் ஒருவன் போன்ற படங்கள் பொலிவு பெற்று ,காதலிக்க நேரமில்லை அளவு அமர காவியங்களாக நின்றிருக்கும்.



எங்க மாமா படம் பிரம்மச்சாரி படம் போல பொழுது போக்காக இருந்திருக்கும். அழுது வடிந்திருக்காது. அன்பே வாவில் இளமை துளிர்த்திருக்கும்.



வல்லவன் ஒருவன் வண்ணத்தில் மின்னியிருக்கும்.(பின்னே வண்ண நாயகனின் படமாயிருக்குமே)ரவி-பாரதி ஜோடியில் ஆஹா, வேறே range .



ரவிசந்திரனை ரசிக்க தமிழ் ரசிகர்கள் கற்று கொள்ளவில்லை. கல்லூரி மாணவர்களும் ,மாணவிகளும் கிழடு போல அம்மா அப்பாக்களின் நிழலில் படம் பார்த்து கொண்டிருந்ததால் , இவருக்கு உரிய அங்கீகாரம் கிட்டவில்லை.



ஐம்பது வருடங்கள் முன்னாலே பிறந்து விட்டாயே?

Russelldvt
9th January 2016, 06:49 PM
படம் : இதயகமலம்
பாடல் : உன்னை காணாத கண்ணும் கண்ணல்ல

http://i67.tinypic.com/2w5uef7.jpg

Russelldvt
9th January 2016, 06:50 PM
http://i68.tinypic.com/1zpqv08.jpg

Russelldvt
9th January 2016, 06:51 PM
http://i67.tinypic.com/29uu108.jpg

Russelldvt
9th January 2016, 06:52 PM
http://i67.tinypic.com/m9rlw6.jpg

Russelldvt
9th January 2016, 06:52 PM
http://i66.tinypic.com/5p0knn.jpg

Russelldvt
9th January 2016, 06:53 PM
http://i65.tinypic.com/iz52zp.jpg

Russelldvt
9th January 2016, 06:54 PM
http://i66.tinypic.com/dqkuiq.jpg

Russelldvt
9th January 2016, 06:54 PM
http://i67.tinypic.com/2e22ctk.jpg

Russelldvt
9th January 2016, 06:55 PM
http://i65.tinypic.com/11v6ucw.jpg

Russelldvt
9th January 2016, 06:56 PM
http://i68.tinypic.com/67qfqo.jpg

Russelldvt
9th January 2016, 06:56 PM
http://i68.tinypic.com/nq7kex.jpg

Gopal.s
22nd January 2016, 03:26 PM
Superb Muthaiyan.

Gopal.s
7th March 2016, 02:38 PM
Saradha Madam.



நடிகர்திலகத்துடன் ரவிச்சந்திரன்.....

மற்ற எல்லா கதாநாயகர்களுடனும் பல படங்களில் நடிக்கும் வாய்ப்புக்கிடைத்த ரவிச்சந்திரனுக்கு , நடிக்க வந்த அடுத்த வருடமே நடிகர்திலகத்துடன் நடிக்கும் வாய்ப்புக்கிடைத்தது.

மோட்டார் சுந்தரம் பிள்ளை : 1964-ல் முதல் படம் வெளியான ரவிக்கு 1965-லேயே நடிகர்திலகத்துடன் இப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு அமைந்தது. (படம் வெளியானது 1966 ஜனவரி 26. நடிகர்திலகத்துக்கு பத்மஷ்ரீ அறிவிக்கப்பட்ட அதே நாள்). ஜெமினி வாசன் தயாரித்து, அவரது மகன் பாலசுப்ரமணியம் இயக்கிய இப்ப்டத்தில் நடிகர்திலகத்தின் மாப்பிள்ளையாக (மூன்றாவது மகளான ஜெயலலிதாவின் ஜோடியாக) ரவிச்சந்திரன் நடித்தார். வாலி எழுதி, மெல்லிசை மன்னர் இசையமைத்த 'காத்திருந்த கண்களே கதையளந்த நெஞ்சமே' என்ற அருமையான டூயட் பாடல் இந்த ஜோடிக்கு. மைசூர் பிருந்தாவனம் கார்டனில் படமாக்கப்பட்டிருந்தது. ஒன்றாக படத்தில் நடித்திருந்தபோதிலும் சிவாஜி-ரவி இருவரும் சந்தித்துக்கொள்ளும் காட்சிகள் அபூர்வம். என் நினைவு சரியென்றால், ரவியை அவர் அப்பாவான கல்லூரி பிரின்ஸிபாலிடம் அழைத்துச்சென்று, அவர்களின் காதல் பற்றி புகார் செய்யும் இடம்தான் என்று நினைக்கிறேன். இதை விட்டால் கிளைமாக்ஸில்தான் சந்திப்பார்கள்.

கவரிமான் : மோட்டார் சுந்தரம்பிள்ளை படம் வெளியாகி 16 ஆண்டுகள் கழித்து 1979-ல் கவரிமான் படத்தில் ரவி சிவாஜியுடன் நடித்தார். இதிலும் அப்படித்தான். இருவரும் சந்திக்கும் வாய்ப்பே கிடையாது. அப்போது வந்த படங்களில் நடிகர்திலகத்துடன் துணைப்பாத்திரங்களில் மேஜர், சிவகுமார், விஜயகுமார், ஜெய்கணேஷ் போன்றோர்தான் நடித்து வந்தனர், இப்படத்தில் ஏற்கெனவே மேஜர் அண்ணனாகவும், விஜயகுமார் தம்பியாகவும் வருகின்றனர். எனவே இந்த ரோலில் அநேகமாக ஜெய்கணேஷதான் நடிப்பார் என்பது பெரும்பாலோரின் எதிர்பார்ப்பாக இருந்தது. ஆனால் படத்தின் இயக்குனர் எஸ்.பி.முத்துராமன் இந்த வேடத்தில் ரவிச்சந்திரன் நடிக்க இருப்பதாக அறிவித்தபோது எல்லோருக்கும் ஆச்சரியம். நடிகர்திலகத்தின் 106-வது படத்தில் நடித்தவர், அதன்பிறகு இருவரும் சேர்ந்து நடிக்காத வேளையில் மீண்டும் 201-வது படத்தில் சேர்ந்தது வியப்பாக இருந்தது. கூடவே இன்னொரு குண்டாக நடிகர்திலகத்தின் ஜோடி பிரமீளா என்றும் எஸ்.பி.எம். அறிவித்தார்.

கவரிமான் படத்தில் ரவி ஏற்றிருந்தது கொஞ்சம் வில்லங்கமான பாத்திரம். நடிகர்திலகத்துக்கு வில்லனாக, ஆனால் நேரடி வில்லன் அல்ல. கர்நாடக முதலமைச்சரின் முதன்மை செக்ரட்டியாக பணிபுரியும் நடிகர்திலகத்துக்கு வாய்த்த மனைவி பிரமீளா நாகரீக மோகம் பிடித்து சதா, கிளப், பார்ட்டி என்று சுற்றிக்கொண்டிருப்பவர். அப்போது கிளப்பில் ரவிச்சந்திரனின் அறிமுகம் கிடைத்து, அவரால் குடிப்பழக்கத்துக்கும் ஆளாகிறார். இந்நிலையில் முதல்வருடன் வெளிநாடு செல்வதாக சிவாஜி கிளம்பிப்போன பின், பிரமீளா, ரவியை வீட்டுக்கு அழைத்து, மதுவின் போதையில் இருவரும் படுக்கையறையில் இருக்கும்போது, பயணம் ரத்தாகி வீடு திரும்பும் சிவாஜி இருவரையும் அலங்கோல நிலையில் பார்த்து விட்டுத் துடிக்க, சந்தடி சாக்கில் ரவி அங்கிருந்து நழுவி ஓடிவிட, கையில் கிடைத்த பாட்டிலால் மனைவி பிரமீளாவை சிவாஜி அடிக்க, பிரமீளா ரத்த வெள்ளத்தில் பிணமாக, அதை அவர்களின் நான்கு வயதுப் பெண்குழந்தை பார்த்துவிடுகிறது. படத்தில் சுமார் 20 நிமிடங்களே வரக்கூடிய ரோலாக இருந்தாலும் ரவிச்சந்திரன் அதை சிறப்பாக செய்திருந்தார்.

Gopal.s
8th March 2016, 02:20 PM
வாலிப விருந்து-1968

எனது favourite pairs ரவி-பாரதி மற்றும் T .M .S -எல்.ஆர்.ஈஸ்வரி கலக்கிய ஜாலி படம்.

பாவம் வங்காள பாணியில் மறக்க முடியாமல் அடி பட்ட மாறன், மீள தேர்ந்தெடுத்த சுவாரஸ்ய வழி ,happening hero and safe bet . நன்றாகவே வெற்றி பெற்றார்.

ரவியும் ராதாவும் தற்செயலாய் teasing ஆரம்பித்து காதலிக்க ஆரம்பிக்கிறார்கள். மூர்த்தி என்ற allround கேட்டவன், தன சிங்கப்பூர் மாமா பெண் ராதாவை (சொத்தையும் )அடைய தன் மாமா உருவம் கொண்ட தனது சமையல் காரனை வைத்து ஆள்மாறாட்டம் செய்ய ,அதை ரவி தன் நண்பன் பாபுவுடன் சேர்ந்து முறியடிக்கும் குட்டி கதை.

உற்சாகம் வாலிப விருந்து பாடலில் தொடங்கி ,அவன் காதலித்தான் என விரிந்து ,மணமகள் தேவை என மனு போட்டு ,எங்கே எங்கே என் மனது என்று தேடி சுபமாய் சென்னபட்டினம் போய் முடியும். ரெண்டு teasing song ,ஒரு அருமையான டூயட் ,பாரதி தனியாக ஒரு பாடல் ,சந்திரபாபு பெண் வேட பாடல் என்று A ,B ,C என்று அத்தைனையும் குதூகலிக்கும். சுதர்சன் A .V .M விட்டு வேதனை பிரிவில் , பூம்புகார், வாலிப விருந்து ரெண்டு படங்களிலும் (வெவ்வேறு Genre ) அசத்தி பட்டை கிளப்பினார். இதில் வாசுவை மகிழ்விக்க என்றே அனைத்தும் ஈஸ்வரிக்கே.

ரவி -பாரதி இணையில் வந்த best இதுதான். ரெண்டு பெரும் திருஷ்டி சுத்தி போடலாம் போல அவ்வளவு அழகு ,பொருத்தம்.ரெண்டு பெரும் இளமை,உற்சாகம் பொங்கி வழிய முதல் காட்சி முதல் கடைசி காட்சி வரை தூள் கிளப்பியிருப்பார்கள்.பாலையா ,சந்திரபாபு ,அசோகன் அனைவருமே காட்சிகளுக்கு மெருகூட்டி சுவாரஸ்ய படுத்துவார்கள்.

படம் எந்த வித சிக்கல், செண்டிமெண்ட் இல்லாமல் முழுவதும் action ,romance ,situational comedy என்று போகும்.

கிளைமாக்ஸ் சண்டை ஜாலி. ஜூடோ ரத்னம் சண்டை, சின்னி-சம்பத் நடனங்கள் எல்லாமே நன்றாக வந்திருக்கும். மாறன் இந்த படத்திற்கு என்ன தேவையோ அதை அழகாக விருந்தாக்கி, வெற்றி கண்டார்.

நிஜ வாலிப விருந்துதான். (அத்தனையும் எனக்கு பிடித்த chat item கள் .)

Gopal.s
8th March 2016, 02:26 PM
From RPRajanayahem Blog on Ravi chandran


அவர் காலத்தில் வந்த மற்ற நடிகர்கள் மிகுந்த சிரமப்பட்டுத்தான் சினிமாவில் கதாநாயகனாக ஆக முடிந்தது.ஆனால் ரவிச்சந்திரன் மட்டும் முழுக்க அதிர்ஷ்டம் காரணமாக காதலிக்க நேரமில்லை(1964) படத்தில் அறிமுகமானார்.

காதலிக்க நேரமில்லையை அடுத்து இதயக்கமலம்(1965)அதேகண்கள்(1967), நான்(1967), மூன்றெழுத்து(1968) போன்ற கலர்ப்படங்களில் நடித்து கலர் கதாநாயகன் என்று கிராமத்தார் மத்தியில் பிரபலம்.
நடிகை காஞ்சனா ரசிகர்களால் கலர் காஞ்சனா என்றே அழைக்கப்பட்டார்.

ரவிச்சந்திரன் -ஜெய்சங்கர்-இரண்டு பேரும் அன்றைக்கு இருமை எதிர்வுகள்!

ஜெய்சங்கருக்கு நடிக்க வந்து இரண்டு வருடத்தில் ஒரே ஒரு படம் ‘பட்டணத்தில் பூதம்’(1967) தான் அப்போது கலர் படம்.
அன்று வண்ணப்படம் என்பது கொஞ்சம் அபூர்வம்!

காதலிக்க நேரமில்லை, இதயக்கமலம் படங்களுக்குப் பிறகு இவரை எப்படி பயன்படுத்துவது என்பது பற்றி ஒரு குழப்பம் இயக்குனர்களுக்கு நிச்சயம் இருந்திருக்கும்.ராமண்ணாவின் படம் குமரிப்பெண்(1966) ரிலீஸ். ராணி பத்திரிக்கை ரொம்ப உணர்ச்சி வசப்பட்டு ”ரவிச்சந்திரனா? ராமச்சந்திரனா?” என்று எம்.ஜி.ஆர் படம் பார்த்த பரவசம் ஏற்பட்டதாக எழுதி விட்டது!
அப்புறம் என்ன?

காதலிக்க நேரமில்லை, இதயக்கமலம், அதே கண்கள், நான் ஆகிய படங்கள் எப்போது பார்த்தாலும் சலிக்காதவை.
இதயக்கமலம் சீரியஸ் படம் தான்.
ஆனால் பி.பி.ஸ்ரீநிவாஸின்
“ நீ போகுமிடமெல்லாம் நானும் வருவேன் போ போ”
தோள் கண்டேன், தோளே கண்டேன்”
பி.சுசிலாவின் மோகன ராக “ மலர்கள் நனைந்தன பனியாலே” போன்ற அற்புதமான பாடல்கள். எல்.வி.பிரசாத் இயக்கம். கே.ஆர்.விஜயா தான் நடித்த படங்களில் பிடித்த படமாக இதயக்கமலத்தை தான் சொல்வது வழக்கம்.


மதராஸ் டூ பாண்டிச்சேரி(1966),நினைவில் நின்றவள்(1967), உத்தரவின்றி உள்ளே வா (1971)முழு நீள நகைச்சுவைப் படங்கள்.

1971 வருடம் தான் ஜெய்சங்கருக்கு இரண்டாவது வண்ணப்படம் ரவிச்சந்திரனுடன் நடித்த ’நான்கு சுவர்கள்’, மூன்றாவது வண்ணப்படம் ’வீட்டுக்கு ஒரு பிள்ளை’!

வில்லனாக ரவிச்சந்திரன் ஊமை விழிகளில் நடித்ததை மறக்கமுடியாது.அதே படத்தில் ஜெய்சங்கருக்கு குணச்சித்திர வேடம்- பி.பி.எஸ் பாடல் “தோல்வி நிலையென நினைத்தால் வாழ்வை நினைக்கலாமா?”


காதலிக்க நேரமில்லை படத்தை 100 தடவை சித்ராலயா கோபுவும்,ரவிச்சந்திரனும் பார்த்தார்களாம்.
முத்துராமன்,ஏ.வி.எம்.ராஜன் போல கடுமையாய் போராடாமல், ஜெய்சங்கர் போல சிரமப்படாமல் ஒவர் நைட் ஹீரோ வான பிரமிப்பு ரவிச்சந்திரனை விட்டு கடைசி வரை நீங்கவில்லை.



சிவாஜியுடன் மோட்டார் சுந்தரம் பிள்ளை,கவரிமான்
ஜெமினி கணேசனுடன் காவியத்தலைவி,மாலதி,சினேகிதி, ரங்கராட்டினம்,
ஏ.வி.எம் ராஜனுடன் ’ஏன்’ ’ஜீவநாடி’, ’புகுந்த வீடு’.

நடன அசைவுகள் ரவிச்சந்திரன் நன்றாகச் செய்வார்.

’கண்ணிரெண்டில் வெண்ணிலா கதைகள் சொல்லும் பெண்ணிலா
நானிருந்தும் நீயிலா வாழ்வில் ஏது தேனிலா’

‘பூவைப்போலே சூடவா போர்வையாலே மூடவா
காதல் என்றால் என்னவென்று கண்ணை மூடி காணவா.....
ஆசை வெள்ளம் போகும்போது ஓசை கொஞ்சம் கேட்குமோ’

டப்பாங்குத்து,குத்தாட்டம்

’கண்ணுக்கு தெரியாதா நெஞ்சுக்குப் புரியாதா’

’பொம்பள ஒருத்தி இருந்தாளாம் பூதத்தை பாத்து பயந்தாளாம்.’

’ராஜா கண்ணு போகாதடி நீ போனா நெஞ்சுக்கு ஆகாதடி’


சண்டைக் காட்சிகளில் உணர்ச்சி வசப்பட்டு அடித்தே விடுவார் என்று ஸ்டண்ட் நடிகர்கள் சொல்வார்கள்.





ரவிச்சந்திரன் நடித்த படங்கள் இந்தியில் ரீமேக் ஆகியிருக்கின்றன்.
காதலிக்க நேரமில்லை இந்தியில்’ப்யார் கி ஜா’ -சசிகபூர், (முத்துராமன் ரோலில் கிஷோர்குமார்)
’நான்’ இந்தியில் ’வாரிஸ்’-ஜிதேந்திரா,
மதராஸ் டூ பாண்டிச்சேரி இந்தியில் ’பாம்பே டூ கோவா’-அமிதாப் பச்சன்!


ரவிச்சந்திரன்முதல் மனைவி விமலாவுக்கு இரண்டு மகன்கள்,ஒரு மகள்.
ஷீலா இரண்டாவது மனைவியான பின் ’மஞ்சள் குங்குமம்’(1973) ரவிச்சந்திரன் அவர் டைரக்*ஷனில் நடித்தார். எஸ்.பி.பி யின் ‘என் காதல் கண்மணி ஏதேதோ நினைத்தாளோ சொல்ல நாணம் வந்ததோ சொல்லாமல் மறைத்தாளோராதா ராதா ராதா’ பாடல் இந்தப்படத்தில்.
ஷீலாவுக்கு ஒரு மகன்.ஜார்ஜ்.இந்த உறவு நீடிக்கவில்லை.
ஷீலாவின் உறவு காரணமாக ரவிச்சந்திரன் அன்று சில மலையாளப்படங்களில் கதாநாயகனாக நடிக்க முடிந்தது. முத்துராமனுக்கோ,ஜெய்சங்கருக்கோ,ஏவிஎம் ராஜனுக்கோ மலையாளப்பட கதாநாயகனாக வாய்ப்பு கிடைத்ததில்லை.


ரவிச்சந்திரனின் வாரிசுகள் ஜார்ஜும்,ஹம்ஸவர்த்தனும் சினிமாவில் முயற்சி செய்தும் நிலைத்து நிற்க முடியவில்லை.
ஹம்ஸவர்த்தனை திரையில் நிறுத்த பெரு முயற்சி ரவிச்சந்திரன் செய்தார். இவரே மகனுக்காக படம் தயாரித்தது சரி.ஆனால் இவரே அந்தப்படத்தை பிடிவாதமாக இயக்கியது தான் மிகப்பெரிய தவறு.

Gopal.s
11th March 2016, 07:45 AM
Saradha Madam write on puguntha veedu ,a mega hit Family Drama and the highlight is that Nadigarthilagam presided the 100th Day Function.

தாய்க்குலத்தின் அமோக ஆதரவு பெற்ற குடும்பச்சித்திரம்

'புகுந்த வீடு'

ஒரு ஏழைப்பாடகன் பாடுவதற்கான வாய்ப்புக்களைத்தேடி அலைகிறான். குடும்பத்திலோ வறுமை விரட்டுகிறது. காப்பாற்றப்பட வேண்டிய அம்மா மற்றும் தங்கை. இந்நிலையில் ஒரு பணக்காரப் பெண் இவன் பாடலில் மயங்கி இவன் மேல் மையல் கொள்ள, காதல் அரும்புகிறது. ஆனால் அவன் தன் கடமையை மறக்கவில்லை. பணக்காரப்பெண்ணின் அண்ணனுக்கும் பாடகனின் தங்கை மீது ஈர்ப்பு. பெண்கொடுத்துப் பெண் எடுக்கப்படுகிறது. பிரச்சினை முளைக்கிறது. பாடகனின் மேல் அவளுக்கிருந்த மையல் குறைகிறது. வாழ்க்கைக்கு வெறும் மனமயக்கம் மட்டும் போதாது, வாழ்க்கை என்பது அதற்கு மேலே என்று உணர்கிறாள். இரண்டு குடும்பமும் பிரிகிறது. பிறந்த வீட்டில் குழந்தைபெற்ற தன் தங்கையையும் அவள் குழந்தையையும் கூட கணவன் வந்து பார்க்க பாட்டுக்காரன் தடை போடுகிறான். பல்வேறு போராட்டங்களுக்குப்பிறகு குடும்பங்கள் ஒன்று சேர முடிவு சுபம்.

இப்படத்தில் பாடகனாக ரவிச்சந்திரன், தங்கையாக சந்திரகலா, பணக்காரப்பெண்ணாக லட்சுமி, அவளது அண்ணனாக (சந்திரகலா ஜோடியாக) ஏ.வி.எம்.ராஜன், ரவிச்சந்திரனின் அம்மாவாக நடிகையர்திலகம் சாவித்திரி நடித்திருந்தனர். ஏழையாக இருந்தாலும் முறைப்பான பாடகனாக ரவிச்சந்திரன் நடித்திருந்தார் என்றால் அதற்கு நேர்மாறாக பணக்காரனாக இருந்தாலும் பண்பு குறையாத அமைதியான இளைஞனாக ஏ.வி.எம்.ராஜன் நடிப்பில் அசத்தினார். லட்சுமிக்கு வழக்கம்போல வெடுக்கென்ற துடிப்பான நடிப்பு, சந்திரகலா குடும்பத்துக்கேற்ற குத்துவிளக்கு. சாவித்திரியின் அமைதியான, அப்பாவித்தனமான நடிப்பு நம் நெஞ்சை நெகிழ வைக்கும்.

"அம்மா, அன்னைக்கு நான் ரேடியோவில் பாடினேனே, அதற்கு...." மகன் முடிக்கும் முன்பே சாவித்திரி "என்னப்பா, பணம் வந்திருக்கா?" என்று ஆர்வத்துடன் கேட்க, "இல்லேம்மா, நிறைய பாராட்டுக்கடிதங்கள் வந்திருக்கு" என்று மகன் சொன்னதும் சோர்ந்து போய் "அப்போ பணம் எதுவும் வராதாப்பா?" என்று அப்பாவியாய் கேட்குமிடம் மனதைத்தொடுவதோடு, குடும்ப சூழ்நிலையையும் படம்பிடித்துக் காட்டும். அதுபோல் உறங்கிக்கொண்டிருக்கும் அம்மாவின் காலில் தலைவைத்து ரவிச்சந்திரன் தூங்கும் இடமும், "சாவு என்ற நிரந்தர தூக்கத்துக்கு ஒத்திகைதானேப்பா இந்த தூக்கம் எல்லாம்" என்று சாவித்திரி சொல்லும் இடமும் நம் மனதை சற்று இடம்பெயரச்செய்யும் காட்சிகள்.

படத்தை 'பட்டு' என்கிற ஆர்.பட்டாபிராமன் இயக்கியிருந்தார். படத்தின் மிகப்பெரிய சிறப்பம்சம் படத்தில் வரும் எல்லோரும் நல்லவர்கள். ஆனால் இடையிடையே ஏற்படும் மனப்போராட்டங்களே பிரச்சினைகளுக்கும் காரணம் என்பதை அழுத்தமாகச்சொல்லியிருந்தார். படத்தின் இன்னொரு பிளஸ் பாயிண்ட் 'இன்னிசை இரட்டையர்கள்' சங்கர் கணேஷ். பாடல்கள் அத்தனையும் மணி மணியாக அமைந்தன.

ரவிச்சந்திரன் ரேடியோவில் பாடிய பாடலை, தன் தோழிகளோடு சேர்ந்து லட்சுமி பாடும்...
'நான் உன்னைத்தேடுகிறேன்.. நாள்தோறும் பாடுகிறேன்
நீ போகும் பாதையெல்லாம்.. நிழலாக ஓடுகிறேன்'
என்ன ஒரு மெலோடி...!. இப்போதெல்லாம் இப்பாடல்கள் காணக்கிடைக்கவில்லையே.

குழந்தை பெற்ற தன்னைப்பார்க்க வந்த கணவனை, பார்க்கவிடாமல் தடுத்து நிற்கும் அண்ணனை குறித்து சந்திரகலா பாடும்...
'கண்ணன் பிறந்த வேளையிலே
அந்த தேவகி இருந்தாள் காவலிலே' பாடல் பெண்களைக்கவர்ந்தது என்றால்...

மேடைப்பாடகனாக உயர்ந்ததும், சங்கர் கணேஷை அறிமுகப்படுத்தி ரவி பாடும்
"மாடி வீட்டுப்பொண்ணு மீனா" பாடல் கல்லூரி மாணவர்கள் மத்தியில் எடுபட்டது.

ஐம்பதுகளிலும், அறுபதுகளின் துவக்கத்திலும் திரையிசையில் கொடிகட்டிப்பறந்த ஏ.எம்.ராஜா - ஜிக்கி ஜோடி, இந்த ஆண்டின் SUPER HIT பாடல்களில் ஒன்றை இப்படத்துக்காகப் பாடியிருந்தனர். நீண்ட இடைவெளிக்குப்பின் இதற்கு முந்தைய ஆண்டில் வெளியான ரங்கராட்டினம் படத்தில் 'முத்தாரமே.. உன் மோகம் என்னவோ' பாடலைப்பாடி மறு என்ட்ரி கொடுத்த ராஜா, புகுந்த வீடு படத்தில் ராஜன் - சந்திரகலா முதலிரவுப்பாடலான..
'செந்தாமரையே செந்தேனிதழே
பொன்னோவியமே, கண்ணே வருக'
பாடலை ஜிக்கியுடன் சேர்ந்து கலக்கலாகப்பாடி அசத்தியிருந்தார்.
(தொடர்ந்து தாய்க்கொரு பிள்ளை படத்தில் 'சின்னக்கண்ணனே' பாடலையும், வீட்டு மாப்பிள்ளை படத்தில் 'ராசி.. நல்ல ராசி' பாடலையும் பாடிய ஏ.எம்.ராஜா, இன்னொரு வெற்றி வலம் வருவார் என்று எதிர்பார்த்திருந்த வேளையில் மீண்டும் மறைந்து போனார்).

1972-ம் ஆண்டின் அருமையான குடும்பச்சித்திரமாக அமைந்த 'புகுந்த வீடு' திரைப்படம், தாய்க்குலத்தின் அமோக ஆதரவோடு, 100 நாட்களைக்கடந்து ஓடி மாபெரும் வெற்றி பெற்றது.

Gopal.s
14th March 2016, 08:29 AM
நான்கு சுவர்கள்(By Saradha Madam)

‘ஸ்மார்ட் ஹீரோ’ ரவிச்சந்திரன்,ஜெய்சங்கர் இணைந்து நடித்திருந்த படங்களில் இதுவும் ஒன்று. முழுக்க முழுக்க ஆக்ஷன் படமான இதற்கு கதை, வசனம் எழுதி இயக்கியவர் இயக்குனர் சிகரம் கே.பாலச்சந்தர் என்பதுதான் இன்னொரு ஆச்சரியம்.

நாடக மேடையிலிருந்து திரையுலகில் நுழைந்த காலம் தொட்டு, குடும்பக்கதைகளையே (அவற்றில் சீரியஸும் உண்டு, நகைச்சுவையும் உண்டு) இயக்கி வந்த கே.பி., முதன்முறையாக ஒரு ஆக்ஷன் படமாக இதை இயக்கினார். அதுமட்டுமல்லாது, அதுவரை கருப்புவெள்ளைப் படங்களிலேயே வெற்றிகளைக்குவித்து வந்த அவர் இயக்கிய முதல் வண்ணப்படமும் இதுதான். ஆனால் முழுக்க ஆக்ஷன் படமாக இல்லாது, அதில் செண்டிமெண்ட்டையும் புகுத்தியதால் படம் ஒருவித சொதப்பலாகப்போனது.

வழக்கம்போல ஸ்டுடியோ செட்களிலேயே அதுவரை முழம்போட்டு வந்த கே.பி., கிட்டத்தட்ட முக்கால்வாசிப்படத்தை வெளிப்புறங்களிலேயே எடுத்ததும் இப்படத்தில்தான். ஆக, இப்படம் பலவிதங்களில் கே.பி.க்கு பரீட்சாத்த முயற்சியாக ஆகிப்போனது.

இருவரது கைகளும் இணைத்து விலங்கிடப்பட்ட கைதிகளாக வரும் ரவிச்சந்திரன்,ஜெய்சங்கர் இருவரும் கோவாவில் இணைந்தே சுற்றுவதும், விலங்கிடப்பட்ட நிலையிலேயே தங்கள் காதலிகளோடு டூயட் பாடுவதுமாக கொஞ்சம் வித்தியாசமாகக் காட்ட முயற்சி செய்திருந்தனர். ஆனால் படத்தில் சௌகார் ஜானகி ஏற்றிருந்த கதாபாத்திரம் தான் ஓவர் செண்டிமெண்ட்டாக அமைந்து பார்ப்போர் பொறுமையை ரொம்பவே சோதித்து விட்டது.

1970-ம் ஆண்டு தயாரிக்கப்பட்டு, 71 துவக்கத்தில் வெளியான படம் இது. 1969-ல் 'இருகோடுகள்' படத்தின் பெருவெற்றிக்குப் பிறகு, கிட்டத்தட்ட எதிரொலி, நவக்கிரகம், காவியத்தலைவி, நான்கு சுவர்கள், நூற்றுக்கு நூறு ஆகிய ஐந்து படங்களை ஒருசேர ஒப்புக்கொண்டு இயக்கி வந்தார் கே.பாலச்சந்தர். அதனால் எல்லாவற்றிலுமே அவருக்கே உரித்தான முத்திரைக் காட்சிகள் ப்ஞ்சமாகிப்போகத் துவங்கின.

இதுபோக நவக்கிரகம், நான்கு சுவர்கள் இவ்விரண்டு படங்களையும் எப்படி உருவாக்கி வருகிறார் என்ற விவரங்களையும் குமுதம் வாரப்பத்திரிகையில் தொடராக எழுதிவந்தார். அதனால் இவ்விரண்டு படங்களைப்பற்றிய மக்களின் எதிர்பார்ப்பு அதிகமாகிப்போனது. குறிப்பாக நான்கு சுவர்கள் படத்தில், எண்ணெய் ஊற்றோ ஏதோவொன்று எப்படிப்பொங்கி வருகிறது என்பதைப்படமாக்கிய விதம் பற்றி அவர் சொல்லியிருந்த விதம் மக்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்தது. எதிரொலி சரியாகப்போகாத நிலையில், ஆகஸ்ட் 15 அன்று வெளியான 'நவக்கிரகம்' தோல்வியைத் தழுவியது. அதோடு வெளியான ராமன் எத்தனை ராமனடி, திருமலை தென்குமரி ஆகியன வெற்றியடைந்தன. தேடிவந்த மாப்பிள்ளை சுமாராக ஓடியது.

அடுத்து தீபாவளிக்கு 'காவியத்தலைவி' ரிலீஸாகி வெற்றியடைந்தது. உடன் வெளியான சொர்க்கம், எங்கிருந்தோ வந்தாள், சற்று முந்தி வெளியான எங்கள் தங்கம் என எல்லாமும் வெற்றியடைந்தன. மூன்று படங்கள் குறைந்துவிட்ட நிலையில் நான்கு சுவர்களை 71 பொங்கலுக்கு வெளியிட முயற்சி செய்தனர். ஆனால் தயாரிப்பில் ஏற்பட்ட தாமதத்தில், பிப்ரவரி 6 அன்று வெளியானது. 'கே.பி.யின் முதல் வண்ணப்படம், வித்தியாசமான கதை, கே.பி.இயக்கத்தில் முதல் ஆக்ஷன் படம், ‘ஸ்மார்ட் ஹீரோ’ ரவிச்சந்திரன் கோவாவில் வெளிப்புறப்படப்பிடிப்பு' என்றெல்லாம் ஓவர் எக்ஸ்பெக்டேஷனில் வந்ததால், மக்கள் எதிர்பார்த்த அளவுக்கு படம் அமையாமல் போகவே படம் தோல்வியடைந்தது.

தனது வழி எதுவென்று 'நான்கு சுவர்கள்' தெளிவாகக்காட்டிவிட்டதால் மீண்டும் பழைய பாதையிலேயே புன்னகை, கண்ணா நலமா, வெள்ளி விழா, அரங்கேற்றம் என பயணிக்கத்துவங்கினார் இயக்குனர் சிகரம். (தான் இயக்கிய படங்களிலேயே தனக்குப்பிடிக்காத படங்களாக நான்கு சுவர்கள், பத்தாம் பசலி இரண்டையும் ஒரு பேட்டியில் சொல்லியிருந்தார் பாலச்சந்தர்)

நான்கு சுவர்கள் படத்துக்கு மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வி. இசையமைத்திருந்தார். படத்தில் இரண்டு முறை இடம்பெறும் டூயட் பாடலான 'ஓ... மைனா... ஓ.. மைனா' பாடல் நன்கு பிரபலமடைந்தது. ரவிச்சந்திரனுக்காக எஸ்.பி.பி. பாடியிருந்தார். கதாநாயகியாக வாணிஸ்ரீ நடித்திருந்தார். ரவி ரொம்ப ஸ்மார்ட்டாக நடித்திருந்த இப்படம், இப்போது பார்த்தால் விரும்பக்கூடிய படமாக அமையக்கூடும்.

Gopal.s
15th March 2016, 09:49 AM
Thanks Mr.Ragavendhar.

இணையத்தில் முதன் முறையாக...

புகுந்த வீடு திரைப்படத்தின் நூறாவது நாள் விழா காட்சிகள், பேசும் பட இதழிலிருந்து.

இரு பக்கங்களாக இடம் பெற்ற நிழற்படங்கள்..

1. முழுமையாக

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/paper%20cuttings/magazinepages/PugunthaVeedu100NTfw_zps4a5ceabe.jpg (http://s1146.photobucket.com/user/imagivity/media/paper%20cuttings/magazinepages/PugunthaVeedu100NTfw_zps4a5ceabe.jpg.html)

2. இரு பக்கங்களும் தனித்தனியாக

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/paper%20cuttings/magazinepages/PugunthaVeedu100NT2fw_zpsc4b368e4.jpg (http://s1146.photobucket.com/user/imagivity/media/paper%20cuttings/magazinepages/PugunthaVeedu100NT2fw_zpsc4b368e4.jpg.html)

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/paper%20cuttings/magazinepages/PugunthaVeedu100NT1fw_zps2ffc6546.jpg (http://s1146.photobucket.com/user/imagivity/media/paper%20cuttings/magazinepages/PugunthaVeedu100NT1fw_zps2ffc6546.jpg.html)

நவநீதா பிலிம்ஸ் புகுந்த வீடு திரைப்படம் தமிழகமெங்கும் சிறப்பான வெற்றி பெற்றது. நூறு நாட்கள் ஓடிய இத்திரைப்படத்தின் நூறாவது நாள் விழாவில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் கலந்து கொண்டு கலைஞர்களுக்கு கேடயங்களை வழங்கி கௌரவப் படுத்தினார். அதனுடைய காட்சியைத் தான் மேலே பார்க்கிறீர்கள்.

Gopal.s
16th March 2016, 07:24 AM
நாலும் தெரிந்தவன் -1968

http://www.mayyam.com/talk/showthrea...HANDRAN/page16

'நாலும் தெரிந்தவன்' (1968)




படம் வெளி வந்த ஆண்டு: 1968

நடிகர், நடிகைகள்: ரவிச்சந்திரன், காஞ்சனா, நாகேஷ், அஞ்சலி தேவி, மனோகர், மனோரமா, வி.கே.ராமசாமி

இயக்கம்: ஜம்பு

ஒளிப்பதிவு: கர்ணன்

இசை: சுப்பையா நாயுடு

பாடல்கள்: கண்ணதாசன்










பக்கம் 16 இல் இதில் சம்பந்த பட்டவர்கள் விவரம் கதை சுருக்கம் எல்லாமே உள்ளது.

பாரதிக்கு அடுத்து ரவிக்கு ideal pair என்றால் காஞ்சனாதான். அதே கண்களுக்கு பிறகு இதில் கலக்கினார்கள். ஷம்மி கபூர் படங்களான professor ,பிரம்மச்சாரி எல்லாமே ஹிந்தியில் பார்க்கும் போது ஜாலியாக தோன்றினாலும் அவை என்ன genre என்று சிண்டை பிய்த்து கொள்ள வைக்கும். சிறிது காமெடி, சிறிது செண்டிமெண்ட், சிறிது என்டர்டெய்ன்மென்ட் ,அருமையான பாடல்கள், crazy டான்ஸ் என்று கலவையாக ,ஆனால் யோசித்தால் எதுவுமே பிரமாதமாக இருக்காது. ஆனால் நன்றாக ஓடி நற்பெயர் எடுத்து விடும்.அவற்றை remake செய்யும் போது ,யார் நடித்தாலும் பல்லிளித்து விடும்.

இந்த வகையில் ஒரு அருமையான காமெடி கருவை சுமாராகவே கையாண்டிருப்பார்கள். saving grace ரவியின் அருமையான நடிப்பு. நிறைய கோணங்களில் சிவாஜியை நினைவு படுத்துவார். வயதான ரோல் நடிக்கும் போது காதலிக்க நேரமில்லை முத்துராமன் பாணியில் underplay செய்து அசத்துவார்.

இந்த படத்தில் சண்டை காட்சிகள், பாடல் காட்சிகள் வழக்கமான ரவி பாணியில் பிரமாதமாக வந்திருக்கும்.கரும் புள்ளி SMS இசை. படு சுமார். கண்ணுக்குள் சிக்கி கொண்ட, பூவாய் பூவாய்,செல்ல மாமா,நிலவுக்கே, நரி ஒன்று என்று வானொலியில் கேட்டிருந்தாலும் படத்தின் இளமைக்கு தகுதியில்லாதவை.

இந்த படத்தில் நாகேஷ் பயங்கர உறுத்தல்.(இவர் குட்டிச்சுவர் பண்ணியது கொஞ்ச நஞ்சமா)காமெடி,கலகலப்பு காட்சிகள் படு சுமார். கதை சம்பத்த பட்ட காட்சிகள் நன்கு வந்திருந்தாலும் ,படத்தின் tone ,mood உற்சாகம் தர வேண்டிய படத்தில் இவை highlight ஆகவே தோன்றாது. இந்த அருமையான கருவை வைத்து சுமார் படத்தை கொடுத்து சுமார் வெற்றி படம் ஆக்கினார் நம்நாடு புகழ் ஜம்பு.

இதையே படு சுவாரஸ்யமான திரைகதை ,அற்புதமான காமெடி, இவற்றை வைத்து நடிகன் என்று பிரமாத படுத்தினார் வாசு.

ரவிச்சந்திரன் அவர்கள் ஹீரோவாக நடித்து வெளிவந்த மாடர்ன் தியேட்டர்ஸாரின் 'ஜஸ்டிஸ் விஸ்வநாதன்' படம் பின்னாளில் ரஜினிகாந்த் ஹீரோவாக நடிக்க முக்தா பிலிம்ஸ் தயாரிப்பில் 'பொல்லாதவன்' படமாக மீண்டும் ரீமேக் ஆகி வெற்றியடைந்தது பல பேருக்குத் தெரிய வாய்ப்பில்லை.

ரவிச்சந்திரனின் படங்கள் தமிழில் பின்னாட்களில் மீண்டும் ரீமேக் செய்யப்பட்டு வெற்றி அடைந்தது அவருக்கு பெருமையும், புகழும் சேர்க்கும் விஷயமல்லவா!


இந்த படத்தில் ரவியின் நடிப்பும், காஞ்சனாவின் அழகும் தூக்கி நிறுத்தியது. ரவியின் வித்யாசமான சுமார் படங்களில் ஒன்று.

Gopal.s
16th March 2016, 03:24 PM
அன்று கண்ட முகம்-1968

கதையை விட்டு சற்றும் அங்கே இங்கே நகராத (True to the story line ) ரக திரைக் கதை,காட்சியமைப்பு.. contemporary appeal நிறைந்த period போர்வையில் வந்த படம். கல்கி மூலக்கதை சற்றே தேவனின் வாசனை கொண்டது. கல்கி செக்ஸ் கதை எழுதினாலும் அதில் காந்தியம் ,மறியல், கதர் இல்லாமல் போகாதே. ராமகிருஷ்ணன் இயக்கி தயாரித்த ஐந்து லட்சம்,சிநேகிதி எல்லாமே சுவாரஸ்மான சுமார் வெற்றி படங்களே.

ஆத்மநாதன் என்கிற வக்கீல் தனது ஜூனியர் ஆக சேரும் காஞ்சனாவை நேசிக்கிறான். ஒரு சந்தர்ப்பத்தில் தன் பணக்கார கட்சிகாரர் அழைப்பை ஏற்று ஊட்டி செல்லும் போது காஞ்சனாவையும் அழைத்து சென்று தன் ஆசையை வெளியிட, காஞ்சனா ஏற்று கொள்ளாமல் ,சிறிது அவகாசம் கோருகிறாள். ஒரு முறை வெளியில் செல்லும் போது ஒரு வாலிபன் கைதி உடையில் மயக்கமாய் இருப்பதை பார்த்து ,வீட்டுக்கு எடுத்து வந்து சிகிச்சையளிக்கிறாள். ராஜேந்தர் என்ற வாலிபன் கண் விழித்ததும் ஆத்மநாதன் கண்டு அதிர்ச்சியாகி ,தன்னையும் தன் அன்னையையும் தவிக்க விட்டு ஓடிய மூத்த அண்ணனே என்றும், ஒரு வெள்ளை அதிகாரி கொலை வழக்கில் தான் தண்டனையடைய காரணமானவனும் அவனே என கூறுகிறான்.தான் சிறையிலிருந்து தப்பித்தது அன்று கண்ட பெண்ணின் முகத்துக்காக என கூறும் போது ,அந்த முகமான காஞ்சனாவும், ராஜும் காதலிக்க தொடங்கி விடுகின்றனர். போலீஸ் உடன் சில தனி நபர்களும் ராஜ் பின்னால் அலைய ,சிலர் அவனை கொல்லவும் முயல, பின்னர் உண்மை கொலையாளி ராஜின் நண்பனே என்றும், அந்த நண்பனை காக்க அவன் தந்தைதான் ராஜ் போலீசில் மாட்ட அல்லது தீர்த்து கட்ட அலைகிறார் என்று தெரிந்து பிரச்சினை தீர வேண்டிய சந்தர்ப்பத்தில் நண்பன் விபத்தில் மரணமடைய ,ஆத்ம நாதன் தம்பிக்கு தான் இழைத்த கொடுமைக்கு தற்கொலை செய்து கொள்கிறார். காஞ்சனா கோர்ட் டில் வாதாடி காதலனை மீட்டு சுபமாக்குகிறாள் முடிவை.

இதில் எனக்கு பிடித்தவை ரவியின் அருமையான நாலு சண்டை காட்சிகள் (ரவியின் சுறுசுறுப்பு கலந்த ஸ்டைலுக்கு ஜே )அக்கால சண்டை என்றால் கொஞ்சம் boxing ,கொஞ்சம் மல்யுத்தம், கொஞ்சம் ஜூடோ,அப்புறம் காலால் X பிடி,கைமுறுக்கல் இவைதான்..ரவி- ஜெயா மேடம் chemistry அருமை. பாடல்கள் இதயம் பொல்லாதது,கண் படைத்தான், வாடா மச்சான் இசை,படமாக்கம் அருமை.(வழக்கொன்று பாடல் சுமார் ,காட்சி ஜோர்).நாகேஷ்-ரவி இணைவு நடனம் எப்போதுமே களை கட்டும்.இதிலும் அப்படியே. இக்கால road chase படங்களின் சாயல் கொண்ட விறுவிறுப்பு. கடைசி கோர்ட் காட்சி படு matured ஆக ,sensible ஆக இருக்கும். வசனம் ,காட்சிகள் சில ரொம்ப surprise கொடுக்கும். ஜாக்ரதை என்று ஜெயா சொல்லி விட்டு கதவை உடனே தட்டி எச்சரிக்கையின்றி திறக்கும் ரவியை இதுதான் உங்க ஜாக்ரதையா என்று கேட்பது,நண்பர் வக்கீலி டம் நடந்து முடிந்ததற்கு உங்கள் அட்வைஸ் வேண்டாம். நடக்க போறதை பேசலாம் என்பது.இப்படி பல.ரவியின் constipation முக பாவம்,பேச்சு சிறையிலிருந்து தப்பி வந்த கைதியின் anxiety கலந்த கவலைக்கு படு பாந்தமாய் அமைகிறது.ஜெயா மேடம் superb .மற்றவர்கள் ஓகே .

பிடிக்காதவை -அவ்வப்போது உட்கார்ந்து விடும் லாஜிக் இல்லா காட்சிகள்.அசோகன் காதல் வெளியிடும் காட்சி. ரவியின் ஓவர் வளைசல் .

மொத்தத்தில் ரொம்ப வித்யாசமான ரவியின் படம். இயக்குனர் ராமகிருஷ்ணன், வசனம் (மாரா ),இசை (மாமா) பலத்துடன் ஜெயித்தார். (வெற்றி படமே)

Last edited by Gopal,S.; 20th June 2013

Gopal.s
16th March 2016, 03:32 PM
http://youtu.be/9WLCf9ij8jU

நாம் மூவர் படத்தில் சிங்கப்பூரு மச்சான் பாட்டும் ,அதற்கு ரவியின் நடனமும் எனக்கு பிடித்த ஒன்று. ரவி இந்த பாட்டுக்கு ஆடும் அழகை விவரிக்க வார்த்தைகளே இல்லை. side ways step எடுக்கும் நேர்த்தி, partition மேல் ஏறி எடுக்கும் steps என்று கிழித்திருக்கிறார். பாட்டும் பிரமாதம்.
இந்த டான்ஸ் steps ,expressions ,grace ,style ,Agility எல்லாவற்றிலும் நூற்றுக்கு நூறு அள்ளுகிறது.

Gopal.s
16th March 2016, 11:36 PM
நான்கு சுவர்கள் படத்தில் ரவிக்கு சுவையான பாத்திரம். ஓரளவு நல்லதனம் கொண்ட, அனைவரையும் அணைத்து செல்லும் குணம்.வாணியின் காதலை பற்றி குற்ற உணர்வு இருக்காது. அவருடைய performance அதிகமாய் ,ஸ்டைல் குறைவாய் .இருக்கும். இந்த கலர் பட ,வெள்ளிவிழா திரை உலக இளவரசன் அழகு,நடிப்பு எல்லாமே கூட மிளிர்வதற்கு காரணம் கூட நடித்தவரின் குறைபாடுகள்,இவற்றை இன்னும் தூக்கி கொடுக்கும்.

பாலசந்தர் விரும்பியே ,இவருக்கு ஜோடி கொடுத்து, நடிக்க நிறைய வாய்ப்பு கொடுத்து,கடைசியில் முக்கிய வில்லனை முடிக்கும் பொறுப்பையும் வழங்கி ,தான் யாரை நாயகனாய் வரித்தேன் என்று காட்டி விடுவார்.

இப்போது பார்க்கும் போது ,கொஞ்சம் பட்டி தட்டி ,பஞ்சர் போட்டு ,ஒடுக்ககளை சரி பார்த்திருந்தால் எங்கோ போயிருக்க வேண்டிய படம்.

ரவிதான் படத்தின் பலம். சிகரெட் தூக்கி போட்டு பிடிக்கும் ஸ்டைல் பண்ணி காட்ட கே பீ ,இந்த படத்தில் வேணாம் என்று சொல்லி,மூன்று முடிச்சில் உபயோக படுத்தி ,யாரையோ தூக்கி விட்டார்.

ரவியை வைத்து மூன்று முடிச்சுகள் என்று படம் ஆரம்பித்து ,ட்ராப் ஆனது.

Gopal.s
17th March 2016, 07:36 AM
'மாலதி' (1970) ஒரு சிறப்பு பிளாஷ்பேக்

http://74.208.147.65/ahtees/admin/movies/content/5681_17_Malathi.jpg

நடிகர்கள்--'கலை நிலவு' ரவிச்சந்திரன், ஜெமினி கணேசன், சரோஜாதேவி, வரலக்ஷ்மி, நாகேஷ், சுந்தரராஜன், 'தேங்காய்' சீனிவாசன்

படம் வெளி வந்த ஆண்டு: 29-10-1970

தயாரிப்பு:-சித்ரா புரொடக்ஷ்ன்ஸ்

பாடல்கள்:-"கவியரசு"கண்ணதாசன்

மூலக்கதை:-கோமதி சுப்ரமணியம்

இசை: "மெல்லிசைமன்னர்" எம்.எஸ்.விஸ்வநாதன்.

திரைக்கதை,வசனம், இயக்கம்: கே.எஸ்.கோபாலகிருஷ்ணன்.

'இயக்குநர் திலகம்' கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் அவர்கள் இயக்கத்தில் வெளி வந்த படம். கலைநிலாவும்,காதல் மன்னனும் இணைந்து நடித்த குடும்பச் சித்திரம்.

'கதை:

ஜெமினியும் சரோஜாதேவியும் காதலர்கள். சந்தர்ப்பவசத்தால் சரோஜாதேவி ரவியைத் திருமணம் செய்ய நேரிடுகிறது. ரவி குடிகாரனாகவும்,பெண் பித்தனாகவும் அலைய சரோஜாதேவி பொறுமை காத்து பழைய காதலனையும் ஆறுதல்படுத்தி, தன் குடிகாரக் கணவரைத் திருத்த சபதமெடுத்து, அவனால் பற்பல இன்னல்களை அனுபவித்து இறுதியில் அவனைத் திருத்தி வெற்றிவாகை சூடுவதே கதை.

இயக்குனர் திலகத்தின் குடும்ப செண்டிமெண்ட் வசனங்கள் ஆழாமாயும், கருத்துள்ளதாகவும் இருந்தது.

ரவியும் குடிகாரனாகவும் பெண் பித்தனாகவும் நன்றாகச் செய்திருப்பார். தான் செய்பவை தவறுகள் என மனைவி உணர்த்தியபின் உணர்ந்து மீண்டும் பழக்க வழக்கங்களில் இருந்து விடுபடமுடியாமல் தவிப்பதும், தன் தவறுகளைத் திருத்திக் கொள்ள முடியாமல் மனைவியிடம் புலம்புவதும் ரவிக்கு நடிக்க சந்தர்ப்பம் வாய்த்த இடங்கள். அதை அவரும் நன்றாகப் புரிந்து பயன்படுத்திக் கொண்டிருப்பார். ஜெமினி ஆரம்ப கால சரோஜாதேவியின் காதலனாக வந்து காதல் லீலைகளில் ஈடுபடுவது வழக்கம் போல. 'சிவந்தமண்' மேஜிக் ராதிகாவும் உண்டு. இவரும் K.S.G.யின் நிறையப் படங்களில் நடித்துள்ளார். (சின்னஞ்சிறு உலகம்' படத்தில் கே. ஆர் விஜயாவுக்கு அடுத்தபடியான ஹீரோயினாக வருவார். புதுமைப் பெண்களடி... பூமிக்குக் கண்களடி...என்ற பாடல் கூட அவருக்கு கோஷ்டியுடன் உண்டு).

ஹீரோயின் சப்ஜெக்ட் என்பதால் அபிநயசரஸ்வதிக்கு படம் நெடுக சுமைதாங்கியாய் வேலை. சற்று வயது முதிர்ந்த இரண்டாவது ரவுண்ட் வந்த சரோஜாதேவியை இதில் காணலாம். எனவே டூயட் சீன்கள் கொஞ்சம் நெருடல். இருந்தாலும் இந்தக் கால ஹீரோயின்களை விட நன்றாகவே சோபிப்பார். (இந்தக் கால இளசுகளின் சுடிதாரை அப்போதே அணிந்து அசத்தியிருப்பார்) தேங்காய் ரவியின் நண்பனாக வந்து சகல பழக்கங்களையும் ரவிக்கு கற்றுத் தருகிறார். அவருக்கு அது ச்சும்மா..என்பது போல.

K.S.G.யின் ஆஸ்தான நடிகை வரலக்ஷ்மி இல்லாமலா?... நாகேஷ் கிச்சு கிச்சு மூட்டுகிறார். மேஜரும் தன் பங்குக்கு குறை வைக்கவில்லை.

பாடல்கள்:

"கற்பனையோ கைவந்ததோ" என்ற பி.சுசீலாவுடன் இணைந்து இளம் S.P.B. யின் குழையும் காந்தக் குரலில் ஒலிக்கும் எத்தனை ஜென்மம் எடுத்தாலும் மறக்க முடியாத பாடல்

"சிடு சிடு சிடு சிடுவென...என்ற S.P.B., பி.சுசீலாவின் குரல்களில் ஒலிக்கும் உற்சாகப் பாடல்.

"எங்கே என் கிண்ணங்கள்" என்ற T.M.S இன் ஜாலி பாடல் (ராதிகா...தேவிகா...ஓடிவா... என்று வரிசையாக பெண்களின் பெயரை உச்சரிப்பது அழகு. இந்த டைப் பாடல்கள் ரவிக்கு எவ்வளவு பொருத்தமாய் இருக்கின்றன!)

http://www.buycinemovies.com/images/detailed/0289-vcd-37.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/2-25.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/9-6.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/1-24.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/4-13.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/5-13.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/3-19.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/6-12.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/7-7.jpg



அன்புடன்,
வாசுதேவன்.

Gopal.s
17th March 2016, 09:18 AM
'ஸ்மார்ட் ஹீரோ', 'கலை நிலவு' ரவிச்சந்திரன் அவர்களின் திரைப்படப் பட்டியல்:
(திரைப்படம் - வெளியான தேதி - சென்னை அரங்குகள் என்கின்ற ஃபார்மெட்டில்)

1. காதலிக்க நேரமில்லை - 27.2.1964 - காஸினோ, கிருஷ்ணா, உமா (210 நாட்கள் ஓடிய இமாலய வெற்றிப்படம்)

2. இதய கமலம் - 27.8.1965 - சித்ரா, மஹாராணி, உமா, ராம் (100 நாட்களுக்கு மேல் ஒடிய சூப்பர்ஹிட் படம்)

3. மோட்டார் சுந்தரம் பிள்ளை - 26.1.1966 - சாந்தி, கிரெளன், புவனேஸ்வரி (100 நாட்களுக்கு மேல் ஓடிய சூப்பர்ஹிட் படம்)

4. குமரிப்பெண் - 20.5.1966 - காமதேனு, முருகன், மஹாலட்சுமி, ஜெயராஜ் (100 நாட்களுக்கு மேல் ஓடிய நல்ல வெற்றிப்படம்)

5. தேடி வந்த திருமகள் - 18.6.1966

6. எங்க பாப்பா - 8.7.1966 - பிளாசா, பிராட்வே, சயானி, சீனிவாசா

7. கெளரி கல்யாணம் - 11.11.1966

8. மெட்ராஸ் டு பாண்டிச்சேரி - 16.12.1966

9. தங்கத்தம்பி - 26.1.1967 - பிரபாத், கிருஷ்ணவேணி, சரஸ்வதி, தங்கம்

10.மகராசி - 14.4.1967 - கிருஷ்ணவேணி, பிராட்வே, உமா

11. அதே கண்கள் - 26.5.1967 - வெலிங்டன், பிரபாத், ராக்ஸி, ராம் (100 நாட்களுக்கு மேல் ஓடிய பெரிய வெற்றிப் படம்)

12. வாலிப விருந்து - 2.6.1967 - சாந்தி, பத்மநாபா, மஹாலட்சுமி

13. மாடி வீட்டு மாப்பிள்ளை - 23.6.1967 - பாரத், சயானி, காமதேனு, லிபர்ட்டி

14. எங்களுக்கும் காலம் வரும் - 7.7.1967 - கெயிட்டி, கிருஷ்ணா, மஹாலட்சுமி

15. எதிரிகள் ஜாக்கிரதை - 28.7.1967 - கெயிட்டி, கிருஷ்ணா, சயானி

குறிப்பு:
1. நடிகர் திலகத்துடன் ரவிச்சந்திரன் இணைந்து நடித்த முதல் திரைப்படம் மோட்டார் சுந்தரம் பிள்ளை.

2. குமரிப்பெண் தென்னகமெங்கும் 6.5.1966 அன்று வெளியானது. சென்னையில் மட்டும், இரண்டு வாரங்கள் கழித்து, 20.5.1966 அன்று வெளியானது.

கலை நிலவு வளரும் ......

அன்புடன்,
பம்மலார்.

Gopal.s
17th March 2016, 09:22 AM
'கலைநிலவு' ரவிச்சந்திரன் அவர்களின்'மதறாஸ் TO பாண்டிச்சேரி' பட ஸ்பெஷல் ஆய்வுக்கட்டுரை.

http://t3.gstatic.com/images?q=tbn:ANd9GcQIxMgjC2yi7Kg7N5QloGowqsO394AG4 fyNZL9_qRUiNrPSSrNxopGHj7mq

http://t2.gstatic.com/images?q=tbn:ANd9GcQHXn_siebsw_-rwi7MZsE54GgPda9DKc6L_C1B2o7Gf0aCG9xKVrWFuEwC

படம் வெளியான ஆண்டு: 16-12-1966.
இசை: T.K.ராமமூர்த்தி.
ஒளிப்பதிவு: G.விட்டால் ராவ்.
சண்டைப் பயிற்சி: K.சேதுமாதவன்.
நடன அமைப்பு: சின்னி-சம்பத்
இயக்கம்: திருமலை-மகாலிங்கம்.
தயாரிப்பு: ஆதிநாராயணன்.
பேனர் : விவிதபாரதி

ரவிச்சந்திரன் அவர்களின் 'காதலிக்க நேரமில்லை' நகைச்சுவைப் பட லிஸ்டில் சேரும் மெகா காமெடி மூவி 'மதறாஸ் TO பாண்டிச்சேரி' பாண்டிச்சேரி. பரவலாக எல்லோருக்குமே நன்றாகத் தெரிந்த படம். இன்னும் சொல்லப் போனால் இன்றைய தலைமுறை கூட பார்த்து வயிறு குலுங்கச் சிரிக்கும் வண்ணம் எடுக்கப்பட்ட எவர்க்ரீன் மூவி என்று கூட இதைச் சொல்வேன்.

கதை என்று பார்த்தால் பெரிதாக ஒன்றுமில்லை. சினிமா நடிகையாக ஆசைப்பட்டு தன் நகைகள் மற்றும் பணத்தோடு கயவன் ஒருவன் பேச்சை நம்பி வீட்டை விட்டு ஓடி வந்து விடுகிறாள் ஒரு பெண். இத்தனைக்கும் வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவள் அவள். வீட்டை விட்டு வெளியேறியதும்தான் புரிகிறது தான் நம்பி வந்த ஆள் ஒரு அயோக்கியன் என்று. எனவே அவனிடமிருந்து தப்பி மெட்ராஸிலிருந்து பாண்டிச்சேரி போகும் ஒரு பஸ்ஸில் ஏறி விடுகிறாள். ஏற்கனவே அறிமுகமான நம் ஹீரோ ரவி பஸ்ஸில் இருக்க பின் அவளுடைய பாதுகாப்புக்குக் கேட்கணுமா?... அவளைக் கொல்ல ஒரு அடியாளை அவள் நம்பி வந்த கயவன் பஸ்ஸில் அனுப்ப அவனிடமிருந்தும், அந்த வில்லனிடமிருந்தும் அவளை ரவி காப்பாற்றி அவளுடைய சினிமா ஆசையினால் வந்த சோதனைகளையும், அதனால் ஏற்பட்ட விளைவுகளையும் அவளுக்கு உணர்த்தி அவளைக் கைப்பிடிப்பதே கதை.

இடையில் பஸ் கண்டக்டராக நாகேஷும், டிரைவராக ஏ.கருணாநிதியும், பயணிகளாக மனோரமா, ஏ.வீரப்பன், கரிக்கோல் ராஜ், நம்பிராஜன், 'பக்கோடா' காதர்' (உலகப் புகழ் பெற்ற இப்பட்டம் காதருக்கு இப்படத்தின் மூலமாகத்தான் வந்தது), பழம்பெரும் நகைச்சுவை நடிகைகள் சி.டி ராஜகாந்தம், அங்கமுத்து போன்ற மாபெரும் நகைச்சுவைப் பட்டாளமும் பஸ்ஸில் செய்யும் அட்டகாசங்கள் படத்தின் பெரும்பான்மையை ஆக்கிரமிப்பு செய்து படம் பார்ப்பவர்களின் வயிற்றை பதம் பார்த்தது. வில்லனாக 'கள்ளபார்ட்' நடராஜனும், சினிமா நடிகை ஆக வேண்டும் என்ற ஆசை கொண்ட ஹீரோயினாக கன்னட நடிகை கல்பனாவும் ('கட்டிலா தொட்டிலா' திரைப்படத்தில் ஜெமினி மற்றும் பானுமதியின் மகளாக நடித்திருப்பார். 'கன்னடத்துப் பைங்கிளி' சரோஜாதேவியை தோற்றத்தில் ஞாபகப்படுத்துவார்) நடித்திருந்தார்கள்.

ஹிந்தியில் வெற்றி பெற்ற 'பாம்பே டு கோவா' என்ற படத்தின் தழுவல் தான் இந்தப் படம் என்ற போதிலும் தழுவல் என்று நம்ப முடியாத வகையில் நகைச்சுவை நடிகர்கள் படத்தைத் தூக்கி நிறுத்தி இருந்தார்கள். ஹிந்தியில் ரவி ரோலை அமிதாப் பச்சனும் (ஆரம்பகால அமிதாப் பச்சன் 'வெட வெட' வென படு ஒல்லியாக ஆனால் உற்சாகமாக நடித்திருப்பார்) கல்பனா ரோலை அருணா ராணியும் செய்திருந்தார்கள்.

படம் ஆரம்பித்து ஒரு முக்கால் மணிநேரம் தவிர மீதி படம் முழுதும் ஓடும் பஸ்சிலேயே முடிந்துவிட (நிச்சயமாக தயாரிப்பாளருக்கும் இயக்குனர்களுக்கும் மகா துணிச்சல் தான்) ஆனால் சலிப்புத்தட்டாமல் பக்கா காமெடியுடன் படம் நகர்வதை பாராட்டத்தான் வேண்டும்.

ஓடும் பஸ்ஸில் பாம்பாட்டி ஒருவனின் கூடையிலிருந்து பாம்பு வெளியேறி விட, பஸ்ஸில் உள்ள அத்தனை பெரும் "குய்யோ முய்யோ" என்று அலற, அதைப் பார்த்து டிரைவர் கருணாநிதி கேலி செய்ய, கடைசியில் பாம்பு டிரைவர் ஓட்டும் ஸ்டியரிங்கின் மேல் சுற்றிக்கொண்டு களிநடம் புரிய, அதுவரை பயணிகளைக் கிண்டல் அடித்துக் கொண்டிருந்த கருணாநிதி பாம்பைப் பார்த்து "பாம்.. பாம்".. என்று வார்த்தை வெளிவராமல் வாயால் ஹாரன் அடிக்க, பாம்பாட்டி "அது ஒண்ணும் செய்யாது சாமி...கொழந்த மாதிரி" என்று பாம்பை லாவகமாகப் பிடித்துக் கொண்டு பாம்பைப் பார்த்து "அய்யாவுக்கு ஒரு முத்தம் கொடுடா" என்று கருணாநிதிக்கு மேலும் கிலி கிளப்ப ஏக களேபரம்தான்.

பஸ் தகர டப்பா மாதிரி ஊர்ந்து கொண்டிருக்க, ரோடு சைடு ஓரத்திலிருந்து நான்கைந்து பேர் ஓடிவர, நாகேஷ் வருவது பயணிகள்தான் என்று வண்டியை விசில் அடித்து நிறுத்த, ஓடிவந்த நபர்கள் பஸ் நகர்ந்ததும் பஸ்ஸில் ஏறாமல் ரோடிற்கு அடுத்த சைடில் வேறு வேலையாய் ஓடும் போது சிரிக்காதவர்களும் இருக்க முடியுமோ?..

பஸ்ஸில் அருகில் இருக்கும் நபர் பக்கோடா பொட்டலம் பிரித்து சாப்பிட, மனோரமாவின் மகன் காதர் அதைப் பார்த்து விட்டு "அம்மா பக்கோடா" என்று இடைவிடாமல் கத்த ஆரம்பிக்க, அவமானம் தாங்காமல் காதரின் வாயை மனோரமா துணியால் அடைக்க, விவரம் தெரியாத நாகேஷ் பரிதாபப் பட்டு துணியை எடுத்துவிட, மறுகணமே காதர் "அம்மா பக்கோடா" என்று ஜெபம் செய்ய ஆரம்பிக்க, மறுபடி நாகேஷே காதர் வாயில் துணியை வைத்து அடைப்பது உம்மணாம் மூஞ்சிகளையும் உற்சாகப் படுத்தி வயிறு வலிக்கச் செய்து விடும். (காதர் 'பக்கோடா' காதர் ஆன வரலாறு இதுதான். நிறைய நடிகர் திலகத்தின் படங்களில் காதர் இருப்பதைக் காணலாம். குறிப்பாக ராமன் எத்தனை ராமனடியும், பட்டிக்காடா பட்டணமாவும்)

இது போன்ற ஏராளமான நகைச்சுவைத் தோரணங்கள் படம் நெடுகிலும் வந்து நம்மை மகிழ்விப்பது நிஜம்.

சரி.. நம் ஹீரோவிடம் வருவோம்.. ரவி தன் ரோலை அழகாகவே செய்திருப்பார். ஓட்டலில் கல்பனாவை வெறுப்பேற்ற ஓட்டலின் மியூசிக் ட்ரூப்பிடம் துண்டுச் சீட்டுக் கொடுத்து அந்தத் தாளத்திற்கு ஏற்றவாறு நடனம் ஆடுவது ஜோர். பஸ்ஸில் கல்பனாவுடன் பழகுவதும், அட்வைஸ் செய்வதும் எதிர்களுக்கு தன் ஸ்டைலில் கும்மாங்குத்து கொடுப்பதும் நம்மை ரசிக்கவே வைத்தன. (அந்த லேசான தொட்டிக்கால் அவருக்கு தனி அழகுதான்).

கல்பனாவும் சினிமா நடிகை ஆக வேண்டும் என்ற வெறித்தனத்தை நன்றாகவே பிரதிபலித்திருப்பார். நாகேஷ், கருணாநிதி கேட்கவே வேண்டாம்...படத்தின் தூண்களே அவர்கள்தாம். (பஸ்ஸில் படிக்கட்டில் நின்றுகொண்டு நடிகை சிவகாமியை 'சைட்' அடித்துக் கொண்டே வரும் நாகேஷ் மெய்மறந்து ஒரு கட்டத்தில் பஸ்ஸிலிருந்து விழுந்து விட, பஸ் டிரைவர் கருணாநிதி அதைக் கவனியாமல் பஸ்ஸை நிறுத்தாமல் ஓட்டிச் செல்ல, சிவகாமி அதிர்ந்து பஸ்ஸை நிறுத்தச் சொல்லிக் குரல் கொடுக்க, கருணாநிதி அதற்கு கொஞ்சமுமும் பதட்டப் படாமல் "ஏம்மா சும்மா கத்தற... பஸ்ஸு இரும்பு மாதிரி...பய காந்தம் மாதிரி...வந்து ஒட்டிக்குவான் பாரு" என்று சொல்வதற்கேற்ப நாகேஷும் ஓடிவந்து பஸ்ஸில் தொற்றிக்கொள்ளும் ஒரு காட்சியே இருவருக்கும் போதும்)

பஸ் பிரேக் டவுன் ஆகி நின்றதும் கொஞ்சமும் பயணிகளைப் பற்றிக் கவலைப்படாமல் ரோடில் அமர்ந்து கொண்டு இருவரும் ஆடு புலி ஆட்டம் ஆடுவது, பஸ்ஸிலிருந்து வெளியே பறந்து சென்றுவிட்ட கோழியைப் பிடிக்க இருவரும் படாத பாடுபடுவது என்று கருணாநிதியும், நாகேஷும் அடிக்கும் கொட்டங்கள் சொல்லி மாளாது.

திரு. V.K.ராமசாமி அவர்கள் கூட தெருவில் மோடிமஸ்தான் வித்தை காட்டுபவராக ஒரு சீனில் வந்து கலக்குவார்.

O.A.K .தேவர் அவர்களும் ஹோட்டல் முதலாளியாக வந்து பிராமண மொழி பேசி அசத்துவார்.

இந்தப் படத்தின் பாடல்களைப் பற்றி அவசியம் கூறித்தான் ஆக வேண்டும். என்ன அற்புதமான பாடல்கள்!. T.K.ராமமூர்த்தி அவர்களின் இசையில் அற்புதமான மனதை மயக்கும் பாடல்கள்.

கல்பனா நடிகைக் கனவு ஆசையில் பாடுவதாக பி.சுசீலாவின் தேன் குரலில் இனிக்கும் "மை பிரெண்ட் நெஞ்சத்தில் என்ன" பாடல் கோடி முறை கேட்டாலும் தெவிட்டாத பாடல்.

பஸ்ஸில் பயணிகளை மனதில் வைத்து ரவி பாடுவதாக வரும் அருமையான டி.எம்.எஸ் குரலில் ஒலிக்கும் "பயணம் எங்கே?... பயணம் எங்கே?" பாடல் வரிகளிலும் அற்புதமான பாடல். பஸ்ஸில் பயணம் போகிறவர்கள் பலவித நோக்குடன் பயணம் செய்வார்கள் என்பதை அழகாக சித்தரிக்கும் பாடல்.

"என்ன வேலை என்ன தேவையோ..
சொந்தம் யாவும் பார்க்கும் ஆசையோ...
பயணம் எங்கே?... பயணம் எங்கே?...
கோயில் பார்க்கவோ...
பாவம் தீர்க்கவோ...
சொத்து சேர்க்கவோ...
சுமையைத் தூக்கவோ"...

என்ற கதையோடு பொருந்தி வரும் ஆலங்குடி சோமுவின் அருமையான வரிகள்.

பின் தன்னையும்,கல்பனாவையும் இணைத்து கிசுகிசு பேசும் பயணிகளின் மூக்குடைக்க ரவியும், கல்பனாவும் பாடுவதாக வரும், காட்சி சூழலுக்கு ஏற்ப நாமக்கல் வரதராசன் அவர்களின் வைர வரிகளில் மின்னும் "எந்த எந்த நெஞ்சுக்குள்ளே என்ன தோனுதோ"...என்ற அருமையான பாடல் கேட்க கேட்க இனிமை.

ஹோட்டலில் கல்பனாவைப் பார்த்து ரவி பாடும் பஞ்சு அருணாசலம் அவர்களின் "மலரைப் போன்ற பருவமே" பாடல் படு சூப்பர். (stop...listen...proceed... என்று பாடல் துவங்கும்) டி.எம்.எஸ் அதியற்புதமாகப் பாடியிருப்பார். இந்தப் பாடலில் ரவியின் சில நடன மூவ்மென்ட்கள் அசாத்திய அற்புதமாய் இருக்கும்.(சற்று அகலக் கால்களுடன் ஒவ்வொரு காலையும் மாற்றி மாற்றி இழுத்து ஒரு மூவ்மென்ட் கொடுப்பார்)

இயக்குனர்கள் திருமலை-மகாலிங்கம் இப்படத்தை ஒரு நல்ல காமெடி கலந்த பொழுதுபோக்குப் படமாக இயக்கியிருந்தனர். குறைந்த பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டு நல்ல வெற்றி அடைந்த படமும் கூட.

'மதறாஸ் TO பாண்டிச்சேரி' சில நிழற்படங்கள்

http://123tamilforum.com/imgcache2/2011/03/MadrasPondi0001-1.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/1-11.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/2-12.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/3-9.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/5-8.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/6-10.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/7-5.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/8-5.jpg


அன்புடன்,
வாசுதேவன்.

Gopal.s
17th March 2016, 01:03 PM
ரவி சந்திரன் என்ற அழகிய 1964 இன் இளமை சுனாமி.

17/10/1952 இல் நடந்த அதிசயத்துக்கு சற்றும் குறையாத மற்றொரு அதிசயம் 27/2/1964 இலும் நடந்தது. அதுதான் முதல் படத்திலேயே ஒரு நாயகன் இமாலய வெற்றி பெற்று தமிழகம் முழுதும் தன் ரசிகர்களாக திருப்பிய விந்தை. ரவி சந்திரன் என்ற இனிய புயல் சுமுகமாக கரை கடந்தது. இது ஒரு வண்ண மயமான வாண வேடிக்கை. அதுவரை senior நடிகர்களின் மோகத்தில் மூழ்கியிருந்த தமிழகம் ,தமிழ் பட உலகம் சற்றே stale ஆக போனதை உணர்ந்து, தங்களுக்கு ஹிந்தியில் அன்றிருந்த musical romance trend படி sweet nothings பேச ஒரு இளம் அழகிய நாயகன் வருகையை உணர்ந்தது. அடுத்த நான்கு வருடம் அந்த அலை ஓயவே இல்லை.அது நம் சீனியர் நாயகர்களையும் தாக்கி ஒரு அன்பே வா கொடுக்க வைத்தது. நடிகர்திலகத்தை இளைக்க வைத்து தங்கையின் கலாட்டா கல்யாணத்தை நடத்தி ராஜாவாக்கியது.

அப்போது திலகங்களை தவிர ஜெமினி,எஸ்.எஸ்.ஆர் இவர்களாலோ ,முன்னேறி கொண்டிருந்த முத்துராமன்,ஏ.வீ.எம்.ராஜனாலோ கனவிலும் நினைக்க முடியாத ஒரு status மற்றும் மாற்றம்.

இத்தனைக்கும் அபார அழகு,துரு துருப்பு இருந்ததென்றாலும், நடிப்பு திறமை சுமார்தான்.சிவாஜி ஸ்டைலை பின்பற்றி பொழுது போக்கு படங்கள்தான் கொடுத்தார். ஆனால் நடனத்தில் ஒரு style ,grace ,unique execution இவற்றினால் கலக்கினார். இவர் வரவில்லையென்றால் ஒரு நான், ஒரு அதே கண்கள் சாத்தியமில்லாமல் போயிருக்கும்.madras to pondichery படத்தில் இவர் கலக்கிய கலக்கலில் 10% கூட அன்றைய இளம் அமிதாப் பச்சன் Bombay to Goa படத்தில் கொடுக்க இயலவில்லை. நான்,அதே கண்கள் remake ஆகியிருந்தாலும் ,அன்று ரவி கொடுத்த உணர்வை கொடுக்க அகில இந்தியாவிலும் ஆளில்லை.

டான்ஸ் பண்ணுவதிலும் மிக மிக கஷ்டமான movements ,படு பிரமாத படுத்தி விட்டு ,சாதாரண அசைவை சொதப்புவார்.ஆனாலும் நமக்கு இவர் படம் பார்க்கும் போது ஒரு pleasantness இழையோடும். கலாட்டா பண்ணி கொண்டே நடக்கும் இளமை திருவிழா.காதல் காட்சிகளில் ரசனை இருக்கும். அத்து மீறிய crassness அறவே இருக்காது.

நடிப்பு பற்றி யார் கவலை பட்டது?அதை கொடுக்கத்தான் நமக்கு நடிப்பு அசுரன் நடிகர்திலகம் இருந்த போது ,அதை கொடுக்க இன்னொருவர் எதற்கு என்று ரவியை ரசித்தோம்.

ஆனால், ஒரு புதையலை குப்பை தொட்டியில் வீசுவது போல ,சராசரிகளுக்கு இடமளித்து விட்டு, ரவி தன் ஸ்தானத்திலிருந்து தன்னை தானே இறக்கி கொண்டார். தயாரிப்பாளர் மற்று சக கலைஞர்களோடு ஒத்து போகாமல் ,குடித்து தொழிலில் போதிய கவனமின்றி,படங்களை சரியாக தேர்வு செய்யாமல், சறுக்குவதை உணர்ந்து சரியான நேரத்தில் விழித்து கொள்ளாமல் தான் வெட்டிய பள்ளத்தில் தானே விழுந்தார்.

சிவாஜி முதல் ரஜினி வரை தொடரும் சில ஸ்டைல் களின் மத்திய கால சங்கிலி இவர்.

Gopal.s
17th March 2016, 01:05 PM
ரவி சந்திரன் இளைஞர்களை ஈர்த்த ரகசியம்.

தெரிந்த விஷயங்களை inhibitions இல்லாமல் செய்த சரளம். காட்சிக்கு prepare ஆகும் ஒரு pretensions இருக்காது.

நிறைய imperfections கொண்ட நடிப்பு பாணி(சில சமயம் Dumb தான்.). நிறைய அமெச்சூர் தனம் இருந்தாலும்,அன்றைய தினம் தமிழ் பட உலகின் இறுக்கத்தை தளர்த்தி இளக வைத்தது இவர் படங்களே.

கண்ணுக்கு தெரியாதா போன்ற பாடல்களில் ,ஒரு infection போல நம்மை தொற்றி கொள்ளும் உற்சாகம் ,நம் inhibition துறந்து குதியாட்டம் போட தோன்றும்.

படிப்பறிவு சிறிது அதிகரிக்க தொடங்கிய காலம்.அப்போது கல்லூரிகளில் நுழைந்து கொண்டிருந்த இளைஞர்களுக்கு கட்டற்ற சுதந்திரம் என்ற உணர்வு மிகுந்து . பொறுப்பு, குடும்பம், கடமை என்பதை மீறி கொண்டாட்ட மனநிலை எதிர்பார்த்த இளைஞர்கள் , இந்த sweet nothings விஷயங்களில் கவர பட்டு பைத்தியமானதில் என்ன ஆச்சரியம்?

நிஜமான handsome இளைஞரே இளமை துடிப்புடன் வந்த அதிசயம்.அதுவரை ஏ .வீ .எம் .ராஜன் போன்றவர்களை கல்லூரி மாணவர்களாக பார்த்தவர்கள் கண்களுக்கு பேராறுதல்.
ஒரு ஹிந்தி பட range இல் இங்கேயும் ஒரு இளைஞர்.

காதலிக்க நேரமில்லை ஒரு உண்மையை முகத்தில் அறைந்து சொன்னது நெஞ்சத்தை அள்ளி கொஞ்சம் தா தா பாட்டில். முத்துராமன் அசைவுகளை கவனித்து ,ரவியின் உற்சாகமான style நடிப்பு,நடனம் பார்த்த இளைஞர்கள் ,தங்கள் எதிர்பார்ப்பு நிறைவேற எதை தேர்ந்தெடுப்பது என்று உணர்ந்தார்கள்.

நான் இதை எழுதும் போது ,அன்றைய காலத்திற்கே சென்று ,அந்த கொண்டாட்ட மனநிலைகளை உணர முடிகிறது.

Gopal.s
17th March 2016, 01:09 PM
கலைக்கு சூரியன் உண்டு ,நட்சத்திரங்கள் ஏராளம்,
நிலவாக வந்தவன் நீ ஒருவனே,

தமிழர்கள் சராசரி வயதை நாற்பதிலிருந்து ஒரே நாளில்
இருபதாக்கிய விந்தை வாலிபனே,

உன்னுடன் சேர்ந்து எங்கள் மனமும் குதித்து பயிற்சி செய்து
இளமையாகி இளைத்து வண்ணமாக்கியது வாழ்வை.

கவலைகள் எங்கள் வீட்டு ஆணி சுவர்களில் , மகிழ்வு
மட்டுமே நீ வருகை தந்த கொட்டகையில்

எங்களுக்கு பாடம் சொல்ல ஆசிரியர்கள் மட்டுமே
இருந்த போது ,விடுமுறை நண்பன் நீ.

காதலிக்க நேரமில்லை என்ற முகவரி அட்டையுடன் வந்து,
நேரமிருந்த எங்களை காதலிக்க வைத்தாய்,

எங்கள் இதய கமலங்களில் குமரி பெண்கள்,அதே கண்கள்,
துள்ளி ஓடும் புள்ளி மான்களின் மீது,

நீ தண்ணீரை மட்டுமே குடித்திருந்தால், உன் நலத்தோடு,
எங்கள் நலமும் இன்னும் நீடித்திருக்குமே.

நீ தொலைத்தது உன் வாழ்வை மட்டுமா? எங்கள் இன்ப
நிலவு கண்டு மகிழ்ந்த மாலைகளையும்தான்.

Gopal.s
18th March 2016, 10:14 AM
'சத்தியம் தவறாதே' (20.12.1968)

"முத்துக் குளிப்பவரே... கொஞ்சம் பக்கத்திலே வாங்க" மிக மிக மிக அரிய பாடல் முதன் முதலாக இணையத்தில்.

'சத்தியம் தவறாதே' என்ற ரவிச்சந்திரன் அவர்களின் மிக மிக அபூர்வ படத்தைப் பற்றி பல பேர் அறிந்திருக்க வாய்ப்பில்லை. 20.12.1968-இல் வெளிவந்த இந்தப்படத்தில் 'கலைநிலா' ரவிச்சந்திரன், அவரது ஜோடியாக விஜயநிர்மலா (பணமா பாசமா புகழ் 'அலேக்' நிர்மலா தான். இவர் தெலுங்குத் திரைப்பட உலகின் 'சூப்பர் ஸ்டார்' கிருஷ்ணாவின் மனைவி ஆவார். 'பெஜவாடா பெப்புலி' என்ற நடிகர் திலகம், கிருஷ்ணா இணைந்து நடித்த தெலுங்குத் திரைப்படத்தை இயக்கிய பெருமைக்குரியவர். 'மோசக்காரனுக்கு மோசக்காரன்' என்ற தெலுங்கு மொழிமாற்றத் தமிழ் படத்தில் கிருஷ்ணாவின் ஜோடியாக நடித்தவர். கிருஷ்ணாவின் ஜோடியாக பல தெலுங்குப் படங்களில் இவர் நடித்ததினால் இவர்கள் இருவருக்கும் காதல் அரும்பி அதுவே கல்யாணத்தில் முடிந்தது) மற்றும் 'மாஸ்டர்' பிரபாகர், ராமதாஸ் ஆகியோர் நடித்திருந்தனர். பாண்டி செல்வராஜ் இப்படத்தை இயக்கியிருந்தார் என்று நினைக்கிறேன். (C.N. பாண்டுரங்கன் அவர்கள் மகா இசைமேதை. அவர்கள் இசையமைப்பில் மிக மிக அற்புதமான பாடல்கள் இந்தப் படத்திற்கு மகுடம் சூட்டின. (நடிகர் திலகத்தின் 'எதிர்பாராதது' படத்திற்கும் இசை இவர்தான். டைட்டிலில் பாண்டுரங்கம் என்று போடுவார்கள். தியாகராஜ பாகவதர் நடித்த 'புதுவாழ்வு' போன்ற படங்களுக்கு 'சங்கீதமேதை' ஜி.ராமநாதன் அவர்களுடன் சேர்ந்து இசை அமைத்தவர்)

'சத்தியம் தவறாதே... தாய் நாட்டினை மறவாதே' என்று மாஸ்டர் பிரபாகரன் பீச்சில் பாடுவதாக வரும் பாடல் சோஷலிச கொள்கைகளை அற்புதமாக வெளிப்படுத்தும் பாடல்.

இப்படத்தின் vcd,dvd எதுவும் கிடைக்கவில்லை. இந்தப் படத்தைத் தேடி பல வருடங்கள் அலைந்திருக்கிறேன். எந்தத் தகவலும் இல்லை. ஏனென்றால் சிறுவயது முதற்கொண்டே

"முத்துக் குளிப்பவரே... கொஞ்சம் பக்கத்திலே வாங்க"...

பாடல் மனதில் மிக ஆழமாகப் பதிந்து விட்டது. சிலோன் ரேடியோவில் இப்பாடலை பலமுறை கேட்டு மெய்மறந்து போய் இருக்கிறேன். இப்படத்தை சில வருடங்களுக்கு முன் 'விஜய்' தொலைக்காட்சியில் போட்டார்கள். அப்போது இந்தப் பாடல் காட்சியைப் பார்த்து பூரித்துப் போனேன். பாடலுக்கேற்றவாறு அற்புதமாகப் படமாக்கப் பட்டிருந்தது இந்தப் பாடல். அவுட்டோரில் படமாகப் பட்டவிதம் மனதுக்கு குளிர்ச்சியைத் தரும் விதமாக உள்ளது. ரவியும் கேப்பெல்லாம் போட்டுக் கொண்டு அழகாகவே தோன்றுவார். டி எம்.எஸ்ஸின் குரல் ரவிக்கு அற்புதமாக பொருந்தி இருக்கும். இசைக்குயில் சுசீலாவைப் பற்றிக் கேட்கவே வேண்டாம். "இளமை வானிலே எண்ணம் பறப்பதென்ன"... என்ற சரணத்தின் வரிகளை இருமுறை அவர் உச்சரிக்கும் விதம் அலாதியானது.



இதோ... அந்த அற்புதமான "முத்துக்குளிப்பவரே"...பாடல் கண்டு மகிழுங்கள்.


http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=0pj5iZOzX74


அன்புடன்,
வாசுதேவன்.

Gopal.s
19th March 2016, 11:59 PM
Madam Shardha

கொலை.... கொலை.... தினமொரு கொலை...

"அதே கண்கள்"

உங்களுக்குப்பிடித்த ரவிச்சந்திரனின் ஐந்து படங்களைச்சொல்லுங்கள் என்று யாரைக்கேட்டாலும் சரி. அவர்கள் சொல்லும் ஐந்து படங்களில் மற்ற படங்கள் இருக்கிறதோ இல்லையோ. கண்டிப்பாக ‘அதே கண்கள்’ படம் இருக்கும். திகில், மர்மம், பொழுதுபோக்கு, இனிய பாடல்கள், அற்புதமான வண்ண ஒளிப்பதிவு என அனைத்து அம்சங்களும் நிறைந்த படம். ஒரு பணக்காரரின் நான்கு வாரிசுகள். மூத்தவர் படம் துவங்கியதுமே கொல்லப்படுகிறார். கொன்றது யாராக இருக்கும் என்று துப்புத்துலங்கும்போதே அவரது மனைவியும் கொல்லப்படுகிறார். இறந்த மூத்தவருக்கு அடுத்தவர் அசோகன், அதற்கடுத்தவர் எஸ்.வி.ராமதாஸ். இவர்களோடு ஒட்டி உறவாடும் குடும்ப டாக்டர் பாலாஜி. இவர்களில் கொலையாளி யாராக இருக்கக்கூடும் என்று விசாரணை நடக்கிறது. வெள்ளை மஃப்ளரால் இறந்தவர்கள் கழுத்து நெறித்து கொல்லப்பட்டிருப்பதால், எப்போதும் வெள்ளை மஃப்ளர் அணிந்திருக்கும் பாலாஜியா?. இவர்களோடு வயதான துறவி போல தங்கியிருக்கும் கிழவனா?. மர்மம்... மர்மம்... போலீஸ் தலையைப் பிய்த்துக்கொள்கிறது.

வெளியூரில் படித்துக்கொண்டிருக்கும் (இறந்துபோன மூத்தவரின் மகள்) காஞ்சனா ஊருக்குத் திரும்பி வருகிறாள். தன் குடும்ப பங்களாவில் அடிக்கடி நடக்கும் கொலை அவரை பயமுறுத்துகிறது. அவர்களின் துணைக்கு வந்து தங்கியிருப்பதோடு, கொலையின் மர்மத்தையும், கொலையாளி யார் எனவும் கையும் களவுமாகப்பிடிக்கத் துடிக்கும் அவரது காதலன் ரவிச்சந்திரன். மர்மத்தைக் கண்டுபிடிக்கும் முன்பு ராமதாஸும் கொல்லப்படுகிறார். இதற்குமேலும் தாமதித்தால் இருப்பவர்களையும் இழக்க நேரிடும் என்று கதாநாயகன் ரவி முழுமூச்சாக இரவு முழுதும் விழித்திருக்க, யாரோ வரும் அரவம் கேட்டு நிமிர்ந்து பார்க்க, மாளிகையின் மேலிருக்கும் வட்ட வடிவ கண்ணாடி கதவு மெல்ல மூடுகிறது. அதிர்ந்து போய் மெல்ல மெல்ல ஒவ்வொரு இடமாகப் பார்த்துக்கொண்டு வரும்போது, ஓ.... அதோ... ரவியை முன்னே போகவிட்டு, கதவோடு ஒட்டியிருந்தவன மெல்ல கையில் மஃப்ளரோடு பின் தொடர... நம் முதுகுத்தண்டு சிலிர்க்கிறது. ( நமக்கு இந்தக் காட்சியில் "ரவி, கொலைகாரன் பின்னாடியே வரான் பாருங்க" என்று கத்ததோன்றும்).

நாம் எதிர்பார்த்தபடியே இருவருக்கும் பயங்கர சண்டை. முகமூடியணிந்திருக்கும் கொலையாளியின் முகமூடியைக்கிழிக்க ரவி முயற்சிக்க, அவன் தப்பியோடி விடுவான். ஆனால் அவன் கண்கள் மட்டும் அவர் மனதில் அப்படியே பதிந்திருக்கும். விசாரணையின்போது அந்தக்கண்களை வைத்துக் கண்டுபிடிப்பதற்காக ஒவ்வொருவர் முகத்தையும் மறைத்து கண்களை மட்டும் பார்த்துக்கொண்டே வரும்போது, ஒருவன் கண்களில் மட்டும் கொலைவெறி. 'இதோ... அதே கண்கள்... அதே கண்கள்' என்று ரவி கத்த, கொலையாளி மாட்டிக்கொள்கிறான். அது யார் என்று தெரியும்போது நமக்கே அதிர்ச்சி. இத்தனை கொலைகளையும் செய்தவன் இவனா?. (எவன்?. படம் வந்து 42 வருடங்கள் ஆகியும் இன்னும் கூட பார்க்காதவர்கள் பலர் இருக்கக்கூடும். ஆகவே சஸ்பென்ஸ் அப்படியே இருக்கட்டும்).

ரவிச்சந்திரன், காஞ்சனா, அசோகன், பாலாஜி, நாகேஷ், ராமதாஸ், ஏ.கருணாநிதி, மாதவி, ஜி.சகுந்தலா, கீதாஞ்சலி, டைப்பிஸ்ட் கோபு, பி.டி.சம்பந்தம் என நட்சத்திரக்கூட்டத்துக்கு குறைவில்லை. போதாக்குறைக்கு காஞ்சனாவின் தோழிகள் பட்டாளம் வேறு. சஸ்பென்ஸைக்கூட்டுவதாக நினைத்துக்கொண்டு நடுராத்திரியில் கருணாநிதி, கையில் கத்தியோடு குரல் எழுப்புவதையெல்லாம் காட்டி குழப்ப வேண்டுமா?. அதுபோலவே நடுராத்திரியில் கீதாஞ்சலி பாடும் "வா அருகில் வா" பாட்டும் அதற்கான காட்சியும்.

படத்துக்கு திருஷ்டிப்பொட்டு எதுவும் கிடையாதா? இதோ இருக்கிறதே. நாகேஷின் மகாமட்டமான காமெடி. பெண்வேடம் போட்டுவரும் அவர் பின்னால் பி.டி.சம்பந்தம் அலைவதெல்லாம் ஒரு காமெடியா?. அருவருப்பு.

'அதே கண்கள்' என்ற படத்துக்கு ஏ.வி.எம்.செட்டியார், வேதாவை இசையமைப்பாளராக போட்டார். அந்தப்படம் ஒரு திகில் படமென்பதால் வேதாவைப்போட்டால் நன்றாக இருக்கும் என்று அவரது மகன்கள் விரும்பினர்.

அப்போது வேதாவை அழைத்து செட்டியார் சொன்னார்: "இங்க பாருப்பா, நீ மற்ற சில கம்பெனி படங்களுக்கு (மாடர்ன் தியேட்டர்ஸ் என்று சொல்லவில்லை) இந்திப்பட மெட்டுக்களை காப்பியடித்து பாட்டுப்போடுறேன்னு எனக்கு தெரியும். நானும் கேட்டிருக்கேன். ஆனால் என் படத்துக்கு அத்தனை பாடல்களுக்கும் நீ சொந்தமாகத்தான் மெட்டுப்போடனும். என் நிறுவனத்துக்கென்று ஒரு பேர் இருக்கு. நாளைக்கு ' என்ன செட்டியாருமா இப்படீ?'ன்னு யாரும் பேசிடக்கூடாது. என் பையன் களோட விருப்பத்தால்தான் உன்னைப்போட்டேன். சொந்தமாக மெட்டுப்போட முடியலைன்னா சொல்லிடு. நான் வேறு இசையமைப்பாளரை வச்சிக்கிறேன்" என்று கறாராக பேசி விட்டார்.

விளைவு..?. 'அதே கண்கள்' படத்துக்கு அத்தனை மெட்டுக்களும் சொந்தமாகவே போட்டார் வேதா. அத்தனையும் SUPER HIT ஆயின. (இந்த விவரம் ஏ.வி.எம்.குமரன் ஒரு TV பேட்டியின்போது சொன்னது).

முதல் பாடல், காஞ்சனாவும் தோழிகளும் குடிசைப்பகுதியை சீரமைக்கும்போது பாடும் "பூம் பூம்பூம் மாட்டுக்காரன் தெருவில் வந்தான்டி" பாடலில் காஞ்சனா குழுவினர் கஷ்டப்பட்டு ஆடும் ஆட்டத்தை விட நம்மைக்கவர்வது, மாட்டுக்காரன் சின்னச்சின்ன அசைவுகளுடன் அசால்டாக ஆடும் ஆட்டம்தான். இப்பாடலை P.சுசீலா பாடியிருப்பார்.

கிளப்'பில் காஞ்சனா கோஷ்டியை டீஸ் செய்து ரவி (TMS) பாடும் "கண்ணுக்குத் தெரியாதா" பாடல், வேகமான அசைவுகளுடன் கூடிய ரவிச்சந்திரன் பிராண்ட்.

ரவி & நாகேஷ் பாடும் "பொம்பளை ஒருத்தி இருந்தாளாம்" பாடலில், நாகேஷ் மாடிப்படிகளில் படுவேகமாக, அதே சமயம் ரிதம் தவறாமல் இறங்கி வரும் காட்சி பிரபுதேவா, விஜய், சிம்பு காலத்திலும் கூட நமக்கு ஆச்சரியமூட்டுகிறது.

பிருந்தாவனம் கார்டனில் படமாக்கப்பட்ட "ஓ...ஓ... எத்தனை அழகு இருபது வயதினிலே" பாடல் வேதாவின் திறமைக்கு ஒரு எடுத்துக்காட்டு. அதிலும் குறிப்பாக துவக்கத்தில் வரும் அந்த ட்ரம்பெட் இசை அட்டகாசமான துவக்கம்.

"வா அருகில் வா" பாடல் யார் நீ படத்தில் வரும் 'நானே வருவேன்' பாடலை நினைவுபடுத்தும். கடற்கரையில் கீதாஞ்சலி நீச்சல் உடையில் பாடியாட அசோகன் ரசித்துக்கொண்டிருக்கும் "என்னென்னவோ நான் நினைத்தேன் நினைத்தேன் சொல்ல வார்த்தையில்லையே" பாடல், அதிகம் பாப்புலராகாத, அதே சமயம் அழகான பாடல். ஒளிப்பதிவாளருக்கு ஸ்பெஷல் அப்ளாஸ்.

திகில் படத்துக்கேற்ற திகில் செட். இந்திப்படத்துக்காகப் போடப்பட்ட இந்த செட்டைப் பயன்படுத்தி ஒரு தமிழ்ப்படமும் எடுக்க வேண்டும் என ஏ.வி.எம். செட்டியார் சொன்னபோது, இந்த செட்டுக்கு வேறெந்த கதையையும் விட திகில், மர்மம் நிறைந்த கதைதான் ‘ஸுட்’ ஆகுமென் எல்லோரும் அபிப்ராயம் சொல்ல அதன்பின்னரே இந்தக்கதையை செட்டியார் படமாக்கத்துணிந்தாராம்.

A.C..திருலோக்சந்தர் இயக்கிய 'அதே கண்கள்' படம் (உதவி இயக்குனர் SP.முத்துராமன்) பட்டிதொட்டியெங்கும் பட்டையைக்கிளப்பி, 1967-ம் ஆண்டின் மிகப்பெரிய வெற்றிப்படங்களில் ஒன்றாக அமைந்தது.

Gopal.s
20th March 2016, 12:16 PM
சிவாஜிக்கு அடுத்து கேமரா கண்களின் பேரழகன் ரவி. ரவியின் நடிப்பு பாணி சிவாஜியின் ஸ்டைல் தழுவிய ராமண்ணா படங்கள்.

இருவரின் உருவம், ஸ்டைல்,grace ,elegance ,poise , flow இவற்றை உணர கீழ்கண்ட பாட்டுகளின் வீடியோ பாருங்கள். சொல்ல வருவது புரியும்.

சிவாஜி

https://www.youtube.com/watch?v=ORqLDJZ6WJk

ரவி

https://www.youtube.com/watch?v=9dqQOjkJxkM

Gopal.s
21st March 2016, 07:15 AM
கல்யாண மண்டபம் படத்தில் பீ.பீ.எஸ் -சுசிலா இணைவில் (Parthasarathy Music) ரவிச்சந்திரன் -மாலதி இணையில்.(அசப்பில் ஈ.வீ.சரோஜா மாதிரி இருப்பார்). ரவி ,நடிகர்திலகத்துக்கு அடுத்த தமிழக ஆணழகன். இந்த உடையிலும் அசத்தல். பாட்டுக்கு தகுந்த மாதிரி அடக்கி வாசிக்கிறார். படு பாந்தமான பாடல். படமாக்கம். எனக்கு மிக மிக பிடித்த ஒன்று.

https://www.youtube.com/watch?v=KwAm_UuufDc

Gopal.s
21st March 2016, 01:11 PM
நூறாயிரம் ஹிட்ஸ் கண்டு ,பல்லாயிரமாக வளர்ச்சி காணவிருக்கும் ,ஐந்து நட்சத்திர திரியான "திரையுலக இளவரசன்", "கலை நிலவு " ரவி சந்திரன் திரிக்கு, வாழ்த்துக்கள். பல்வேறு பதிவர்கள் பங்களிப்புடன் நாளும் புது மெருகு கண்டு ,செழுமை பெற்று வரும் இளமை திரிக்கு எங்கள் வாழ்த்துக்கள்

eehaiupehazij
21st March 2016, 10:00 PM
From GG's Treasure Island with Love!

டப்பாங்குத்து டான்ஸ் பாடல்கள் !!
மனதை மகிழ்விக்கும் எத்தனையோ வகை ஆடல் பாடல்கள் இருந்தாலும் ஒரு இலக்கண;வரையறைக்குள் வராமல் மனம் போன போக்கில் இசைக்கும் பாடல் வரிகளுக்கும் ஏற்றபடி இடுப்பை அசைத்து கைகால்களை வீசி குதித்தாடும் டப்பாங்குத்து தரும் மகிழ்ச்சியே தனிதான் !
எனக்கு மிகவும் பிடித்த நான் பொழுதுபோக்கு சித்திரத்தில் உற்சாகத் துள்ளலான இப்பாடலுக்கு கலைநிலவு ரவிச்சந்திரன் ஆடியிருக்கும் விதம் கலக்கலே !!

Though this Silver Jubilian Star could not shine bright he was the star dancer at his times and his original approach of dancing to the tune with a perfect rhythm was commendable even today when we see his dance-song sequences in Channels!! This sort of foot tapping dancing I have also observed with the thespians Chandrababu Shammi Kapoor and the Global dancing supremo Gene Kelly of Singing in the Rain fame!

https://www.youtube.com/watch?v=PZuauTLKPUs

https://www.youtube.com/watch?v=vNiSTIT-Uyo

https://www.youtube.com/watch?v=_o3y7fvoVNM

https://www.youtube.com/watch?v=Aus1PA5-SyI

Gopal.s
23rd March 2016, 09:13 AM
'காவியத்தலைவி'- By Shardha.

சௌகார் ஜானகி இரட்டை வேடங்களில் நடித்து சொந்தமாகத்தயாரித்த படம் இது. அம்மா, மகள் என இரட்டைவேடம். அம்மா யார் என்று மகளுக்குத்தெரியாது (கிளைமாக்ஸ் வரையில்). அதே சமயம் மகள் யாரென்று அம்மாவுக்குத்தெரியும். இப்படியான ஒர் வித்தியாசமான கதை. இந்தியில் 'மம்தா' என்ற பெயரில் வெளியான படத்தை தமிழில் இயக்குனர் சிகரம் கே.பாலச்சந்தர் திரைக்கதை வசனம் இயக்கத்தில் படமாக்கியிருந்தனர். இரட்டை வேடம் என்பதாலும், சொந்த தயாரிப்பு என்பதாலும் படம் முழுக்க சௌகார் ஜானகியே வியாபித்து இருந்தார்.

அம்மா சௌகாரின் இளம் வயது காதலனாகவும், மகள் சௌகாரின் வளர்ப்புத்தந்தையாகவும் ஜெமினி கணேசன் நடிப்பில் கொடிகட்டிப்பறந்திருந்தார். இந்தப்படத்துக்காகத்தான் 1970-ம் ஆண்டின் சிறந்த நடிகராக தமிழ்நாடு அரசின் விருது பெற்றார். 1970 அவருக்கு பல வகையில் சிறப்பான ஆண்டு. ஆம், அந்த ஆண்டுதான் அவருக்கு மத்திய அரசின் பெருமைக்குரிய 'பத்மஸ்ரீ ' விருதும் வழங்கப்பட்டது.

இரண்டாவது (மகள்) சௌகாரின் ஜோடியாகவும், ஜெமினி கணேஷின் ஜூனியர் வழக்கறிஞராகவும் ரவிச்சந்திரன் நடித்திருந்தார். இவருக்கு ஜோடியாக நடித்ததாலோ என்னவோ சௌகாரும் நல்ல துடிப்பான நடிப்பை வெளிப்படுத்த முயன்றிருந்தார். ரவிச்சந்திரன் - சௌகார் ஜோடிக்கு ஒரு டூயட் பாடலும் உண்டு. இளிய சௌகாரின் உண்மையான அப்பாவாக எம்.ஆர்.ஆர்.வாசு நடித்திருந்தார். (வாசுவுக்கு பைஜாமா, ஜிப்பா, ஷெர்வாணி அணிவித்து அப்படியே வடநாட்டு சாயலை உண்டாக்கியிருக்க வேண்டுமா?). ஜெமினியின் அலுவலக அறையில் அமர்ந்திருக்கும் சௌகாரிடம், அவரது வருங்கால மருமகனைக்காட்ட, மேஜையின் கண்ணாடி வழியே பார்க்க வைத்திருப்பது போன்ற இடங்களில் பாலச்சந்தர் தெரிகிறார்.

கவியரசர் கண்ணதாசனின் பாடல்களுக்கு 'மெல்லிசை மன்னர்' எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைத்திருந்தார். வடநாட்டு சாயலில் அமைந்த
'என் வானத்தில் ஆயிரம் வெள்ளி நிலவு' பாடலை சுசீலா ரொம்ப அனாயாசமாகப் பாடி அசத்தியிருந்தார்.

ஜெமினி - சௌகார் டூயட் பாடலான (ஆனால் சௌகார் மட்டுமே பாடுவார்)
'கையோடு கை சேர்க்கும் காலங்களே
கல்யாண சங்கீதம் பாடுங்களேன்'
அன்றைய சூப்பர் ஹிட் பாடல்களில் ஒன்று.

ரவிச்சந்திரன் - சௌகார் ஜோடியின் டூயட் பாடலான
'ஆரம்பம் இன்றே ஆகட்டும்
ஆ.... ஆறேழு நாட்கள் போகட்டும்' பாடலை அன்றைய இளம் எஸ்.பி.பி.யும், எல்.ஆர்.ஈஸ்வரியும் பாடியிருந்தனர். (சௌகார் ஜானகியை 'பெல்பாட்டம் பேண்ட்'டில் எல்லாம் பார்ப்பதற்கு கொஞ்சம் கண்கள் உறுத்தத்தான் செய்தது).

இவை எல்லாப்பாடல்களையும் தூக்கி சாப்பிடும் விதமாக அமைந்த பாடல், பார்ட்டியில் இளம் சௌகார் தன் தாயை நினைத்துப் பாடும்...
'ஒரு நாள் இரவு பகல் போல் நிலவு
கனவினிலே என் தாய் வந்தாள்' என்ற பாடல்தான். பி.சுசீலாவின் மாஸ்ட்டர் பீஸ்களில் ஒன்று. அதில்'என்னுயிர் தாயே நீயும் சுகமா' என்ற வரிகளின்போது எழும் கோரஸ் வயலின் இசை, சட்டென்று நிற்கும்போது நம் உடம்பே சிலிர்க்கும். அதிலும் கடைசியாக வரும் சரணத்தின் முடிவில்....
'வானத்தில் இருந்தே பாடுகிறேன் - எந்த
வழியிலும் உன்னைத் தேடுகிறேன்
மகளே வாழ்கென வாழ்த்துகிறேன் - நான்
மறுபடி பிறந்தால் சேர்ந்திருப்பேன்
மறுபடி பிறந்தால் சேர்ந்திருப்பேன்

மறுபடி பிறந்தால் சேர்ந்திருப்பேன்... மறுபடி பிறந்தால் சேர்ந்திருப்பேன்..'

சுசீலாவின் குரலோடு எழும் வயலின் கூட்டத்தின் இசைவெள்ளம் அப்படியே பயணித்து அடங்கி ஓயும்போது... மழையடித்து ஓய்ந்தது போல் இருக்கும். எம்.எஸ்.வி... மனிதரா அவர்? இல்லை பிரம்ம ராட்சஸன். என்னவெல்லாம் சாதித்துவிட்டு எப்படி ஒண்ணுமே தெரியாதவர் போல அவரால் இருக்க முடிகிறது.

1970 தீபாவளியன்று சொர்க்கம், எங்கிருந்தோ வந்தாள், காவியத்தலைவி, மாலதி, சுகுண சுந்தரி ஆகிய படங்கள் வெளியாயின. அவற்றில் முதல் மூன்று படங்கள் பல இடங்களில் 100 நாட்களைக்கடந்து ஓடி சூப்பர் டூப்பர் ஹிட் ஆயின. மாலதி சுமாரான வெற்றியடைந்தது.



ராகவேந்திரன்

சகோதரி சாரதா அவர்களின் காவியத்தலைவி படத்தைப் பற்றிய குறிப்புகள் அப்படத்தைக் கண்முன்னே கொண்டு நிறுத்துகின்றன. எம்.ஆர்.ஆர். வாசுவின் அற்புத நடிப்பாற்றலில் வெளிவந்த ஒரு சில படங்களில் இதுவும் ஒன்று. மிகவும் திறன் வாய்ந்த நடிகர் உச்சத்தில் வந்திருக்க வேண்டியவர். சில தேவையற்ற பழக்கங்களுக்கு அடிமையாகி பல வாய்ப்புகளை இழந்தார். போதாக்குறைக்கு காங்கிரஸ் மேடைகளில் பேச்சாளராகப் பங்கேற்று ஊர்ஊராகச் சென்றதில் படவாய்ப்புகள் நழுவியதும் ஒரு காரணம். காங்கிரஸுக்காக வாழ்க்கையைத் தொலைத்த கலைஞர்களின் பட்டியலில் குறிப்பிடத்தக்க இடத்தைப் பிடித்தவர் எம்.ஆர்.ஆர்.வாசு.

1970ம் ஆண்டைப் பொறுத்தவரை, அதிலும் குறிப்பாக தீபாவளி 1970ல் வெளிவந்த 4 அசல் படங்களுக்கும் ஓர் ஒற்றுமை உண்டு. நான்கிலும் ஒரு கதாபாத்திரம் குடிகார கதாபாத்திரம். நான்கிற்கும் இசை மெல்லிசை மன்னர். சுகுண சுந்தரி மொழி மாற்றுப் படம்.

அண்ணா சாலையில் மாலதி வெலிங்டனிலும், காவியத் தலைவி மிட்லண்ட்டிலும், சொர்க்கம் தேவி பாரடைஸிலும், எங்கிருந்தோ வந்தாள் சாந்தியிலும் வெளியாயின. மாலதியில் கற்பனையோ கைவந்ததோ என்ற அற்புதமான பாடல் இடம் பெற்றது. மற்றொரு டூயட்டான சிடுசிடு என்ற பாடல் பார்க்க நெருடலாக இருக்கும். ஜெமினி சரோஜாதேவி இருவரும் பைக்கில் அமர்ந்து போகும் போது வரும் பாடல். முக்கால்வாசி பேக் ப்ரொஜக்ஷன். சரோஜாதேவி சற்று முதிர்த் தோற்றத்தில் சுடிதாரில் கையை காலை ஆட்டி வண்டியிலேயே டூயட் பாடு்ம் காட்சி தற்போது மிகவும் நகைச்சுவையாக இருக்கும். ஜெமினி வயதாகி டூயட் பாடியதை எவரும் எந்தப் பத்திரிகையும் விமர்சிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. வயதாகி டூயட் பாடியதாக விமர்சிக்கப் பட்ட ஒரே கலைஞர் நடிகர் திலகம் மட்டுமே. மற்றவர்கள் எவ்வளவு வயதாகி டூயட் பாடினாலும் யாரும் கேட்க மாட்டார்கள்.

மன்னிக்கவும் கருத்து ஓட்டத்தில் பாதை மாறிவிட்டிருக்கிறது. மீண்டும் ரவிச்சந்திரன் படங்களுக்கு வருவோம். ரவி நடித்து சில படங்கள் மறு வெளியீட்டில் திரையிடப்படவில்லை. அவற்றில் குறிப்பிடத்தக்கவை மயிலாடும் பாறை மர்மம், அன்னை சொன்ன சொல், துள்ளி ஓடும் புள்ளி மான், பொய் சொல்லாதே, சத்தியம் தவறாதே போன்றவையாகும். இவற்றில் துள்ளி ஓடும் புள்ளி மான் படத்தை முதல் நாள் முதல் காட்சியில் பார்த்ததோடு சரி, அதற்குப் பின் அப்படம் மறந்தே போய் விட்டது.

மற்ற படங்களை யாராவது பார்த்திருந்தால் அவர்கள் இங்கு அதைப் பற்றி எழுதினால் நலம். சாரதா அவர்கள் பார்த்திருப்பார்களா என தெரியவில்லை. பார்த்திருந்தால் எழுதுவார்கள் என எதிர்பார்க்கிறேன்.

eehaiupehazij
23rd March 2016, 08:15 PM
Ravichandran (Tamil actor)
From Wikipedia, the free encyclopedia

Born B.S. Raman
1939-40
Kuala Lumpur, Federated Malay States
Died 25 July 2011
Chennai, Tamil Nadu, India
Occupation Actor, director, Agriculturist
Years active 1964–2011
Spouse(s) Vimala (divorced)
Sheela (divorced)
Ravichandran (died 25 July 2011) was a Tamil film actor who played lead hero roles in Tamil movies from 1964-1979. He has also acted in supporting roles from 1986, and directed a few films.[1][2] He was given the title of Kalaingnar Thilagham in many of the on-screen credits of films starring him in the lead role. He was, also, called "Puratchi Kalaignar" (Refer: Anandha Bairavi Tamil Movie Title Scene). Before entering cine-field, during his studies in Trichy, he has acted in two dramas, namely., "AanaiyidungalAnna" and "Udhaya Suriyan". After entering cine-field, he has acted in two dramas, namely, "Mapplley Yen Magalaik Kadhali" and "That Man from Poonthamallee". In the drama "That man from Poonthamallee", he performed in double role and Thirumuruga Kirupanandha Variyar, who presided over the drama in Vellore, has appreciated and awarded a title "Nadaga Sigamani". He has, also, acted in a TV Serial namely., GEE boom ba in 1986. During his tenure of acting, his fans, journalists, movie-directors/producers have given many titles, viz., Kalai Ulaga Ilavarasar, Kalai Nilavu, Romantic Hero, Velli Vizha kathanayagan, Vannap Pada Nayagan, Evergreen Hero, Chennai MGR, Kalaignar Thilagam, Style King, Stunt Man an, Bhagdath Perazhagan, Kalai chelvan, Pudhumai Thilagam etc. He was much affectionate with his fans.

Contents [hide]
1 Life
2 Filmography
3 References
4 External links
Life[edit]
Ravichandran was born B.S. Raman in Kuala Lumpur, capital of the Federated Malay States. He moved to Tiruchirappalli, India in 1951, and studied at the St. Joseph's College. He was married twice; his first marriage was to Vimala, with whom he had a daughter, Lavanya, and two sons, Balaji and Hamsavardhan. There after, he married Malayalam actress Sheela, and had a son George. His sons Hamsavardhan and George also took up acting as a career, with Hamsavardhan starring in the film Manthiran, directed by Ravichandran himself. Lavanya is married and has 2 daughters.

The final movie is Theri as a protogonist.

Filmography[edit]
Year Film Role Language Director Co-stars Notes
1964 Kaadhalikka Neramillai Ashok Tamil C. V. Sridhar R. Muthuraman, Kanchana, Rajashri 1st Movie
1964 Nalvaravu Tamil Charlie / Manian Rajashri, Nagesh (actor)
1965 Idhayak Kamalam Tamil Srikanth K. R. Vijaya
1966 Gowri Kalyanam Tamil K. Shankar Jaishankar, Jayalalithaa
1966 Kumari Penn Tamil T. R. Ramanna Jayalalitha
1966 Motor Sundaram Pillai Tamil Balu Sivaji Ganesan,Jayalalithaa , Sivakumar
1966 Madras to Pondicherry Tamil
1966 Naam Moovar Tamil Jaishankar
1966 Kalyana Mandapam Tamil
1967 Adhey Kangal Bhaskar Tamil A. C. Tirulokchandar Kanchana, Sheela Remade in Telugu Simultaneously as "Ave Kallu"
1967 Maadi Veetu Mapillai Tamil Jayalalithaa
1967 Magaraasi Tamil Jayalalitha
1967 Naan Tamil Muthuraman, Jayalalithaa
1967 Ninaivil Ninraval Tamil
1967 Thedi Vantha Thirumagal Tamil S. S. Rajendran
1967 Thanga Thambi Tamil
1967 Valibha Virundhu Tamil
1967 Ethirigal Jakkirathai Dr. Baskar Tamil R. Sundaram R. S. Manohar, L. Vijayalakshmi
1968 Moondreezuthu Tamil Jayalalitha
1968 Nimindhu Nil Tamil
1968 Panakkara Pillai Tamil Jayalalithaa
1968 Delhi Mapillai Tamil
1969 Odum Nadhi Tamil
1969 Singapore Seeman Tamil
1969 Selviyin Selvan Tamil
1969 Nalum Therinthavan Tamil
1970 Kadhal Jothi Tamil
1970 Kaviya Thalaivi Tamil Gemini Ganesan, Sowkar Janaki
1970 Snegithi Tamil
1970 Malathi Tamil Gemini Ganesan, Saroja Devi
1971 Thulli Odum Pulliman Tamil
1971 Vimochanasamaram Malayalam
1971 Agni Mrugam Malayalam
1971 Poi Sollathey Tamil
1971 Sabhatham Tamil
1971 Justice Vishwanathan Tamil G. R. Nathan Major Sundarrajan Remake of 1969 Hindi movie Do Bhai (1969 film) starring Ashok Kumar and Jeetendra.
1971 Meendum Vazhven Tamil
1971 Utharavindri Ulle Vaa Tamil Kanchana
1972 Pugundha Veedu Tamil
1972 Varappirasadham Tamil jayachithra
1972 Aromalunni Malayalam
1972 Omana Baby Malayalam
1972 Sakthi Malayalam Crossbelt Mani Sheela, Thikkurissi Sukumaran Nair
1973 Engal Thaayi Tamil
1973 Manjal Kungumam Tamil
1973 Baghdad Perazhagi Tamil Jayalalitha
1974 Avalukku Nigar Avale Tamil Kalyan Kumar, Venniradai Nirmala
1974 Doctoramma Tamil
1974 Puthiya Manidhan Tamil
1974 Sorgathil Thirumanam Tamil
1975 Hotel Sorgam Tamil
1975 Thai Veetu Seedhanam Tamil
1975 Avalluku Ayiram Kangal Tamil Jayalalithaa
1976 Varaprasadham Tamil
1977 Nee Vaazha Vendum Tamil
1978 Iravu 12 Mani Tamil
1979 Neeya Ravi Tamil Durai Kamal Haasan
1979 Kavari Maan Tamil S. P. Muthuraman Sivaji Ganesan
1979 Sikharangal Malayalam
1980 Bombay Mail 109 Tamil
1986 Amman Kovil Kizhakale kanmani's father Tamil R. Sundarrajan Vijayakanth
1986 Oomai Vizhigal P.R.K Tamil Vijayakanth, Karthik, Jaishankar
1987 Sattam Oru Vilayaattu Tamil Vijayakanth
1987 Neethikku Thandanai Tamil Vijayakanth
1987 Ninaive Oru Sangeetham Tamil Vijayakanth
1988 Guru Sishyan Rajamanickam Tamil SP. Muthuraman Rajinikanth, Prabhu
1988 Therkathi Kallan Tamil
1989 Raja Chinna Roja Tamil SP. Muthuraman Rajinikanth, Raghuvaran
1989 Oru Thottil Sabadham Tamil
1989 Chinnappadass Tamil C. V. Rajendran Sathyaraj
1991 Manitha Jaathi Tamil
1992 Sevagan Tamil Arjun
1993 Pudhiya Mugam Tamil
1995 Karna Arjun's father Tamil Arjun
1997 Arunachalam Tamil Rajinikanth, Jaishankar
2002 Pammal K. Sambandam Tamil Kamal Haasan
2002 Ramana Tamil Vijayakanth
2003 Thennavan Tamil Vijayakanth
2003 Indru Mudhal Tamil
2003 Tagore Telugu Chiranjeevi
2004 Thendral Singara Velu Nayagar Tamil R. Parthiban
2006 Adaikalam Tamil Prashanth, Thiagarajan
2008 Arasangam Tamil Vijayakanth
2009 Kanden Kadhalai Tamil Bharath
2011 Aadu Puli Tamil Aadhi, Prabhu

RAGHAVENDRA
23rd March 2016, 10:55 PM
A rare song:

Film: Kathalikka 90 Naal.

https://www.youtube.com/watch?v=jBTSjerz3MY

RAGHAVENDRA
23rd March 2016, 11:04 PM
Kattuven kaiyil unnai...

Bombay Mail 109

https://www.youtube.com/watch?v=mxQI1NeOmIs

Russellcaj
24th March 2016, 11:07 AM
In Ravichandran Filmography......

Recently discussed Naangu Suvargal is not in the list.

Varaprasadham comes two times 1972 & 1976

Gopal.s
24th March 2016, 11:43 AM
In Ravichandran Filmography......

Recently discussed Naangu Suvargal is not in the list.

Varaprasadham comes two times 1972 & 1976

Yes .I agree with you.It is not accurate and complete.

Gopal.s
26th March 2016, 09:23 PM
Saradha Madam.



ரவிச்சந்திரன் அவர்களுடன் எனது சந்திப்பு .

நான் ஸ்டெல்லா மாரீஸ் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தபோது, ஒரு கல்ச்சுரல் விழாவுக்காக தோழிகள் சிலர் நாட்டிய நாடகம் ஒன்றை நடத்த ஏற்பாடு செய்திருந்தனர். (அந்த நாட்டிய நாடகத்தில் நான் இல்லை, காரணம் நாட்டியம் பார்க்க மட்டுமே தெரிந்தவள் நான்). அதற்கு இசையமைக்க நல்ல இசையமைப்பாளர் ஒருவரை ஏற்பாடு செய்யலாம் என்று யோசித்து, கடைசியில் ‘முத்து’ என்பவரை போடலாம் என்று முடிவெடுத்தனர். திரு முத்து, அப்போது இசைஞானி இளையராஜா ட்ரூப்பில் இசை உதவியாளர்களில் ஒருவராக இருந்தார். அவரைச்சந்திக்க சென்ற சின்ன குழுவில் என்னையும் சேர்த்துக்கொண்டனர். (இம்மாதிரி திரையுலக சம்மந்தப்பட்டவர்களைச் சந்திக்க செல்லும் குரூப்பில் நானாக ஒட்டிக்கொள்வது வழக்கம். காரணம் நான் ஒரு சினிமா பைத்தியம் என்பது தெரிந்த விஷயம்).

மாலை சுமார் ஆறு மணியிருக்கும். மயிலாப்பூர் சித்திர குளத்துக்கு சற்று தொலைவில் ஒரு தெருவில்தான் முத்து குடியிருந்தார். விசாரித்துக் கொண்டே அவருடைய வீட்டை அடைந்தோம். அவரது வீட்டுக்கு எதிரே சின்னதாக ஒரு அழகிய பங்களா தென்பட்டது. வாசலில் போர்டு எதுவும் இல்லை. பார்த்தால் யாரோ பெரிய புள்ளியின் வீடுஆக இருக்கும் என்பது மட்டும் தெரிந்தது. யாராவது பெரிய பிஸினஸ்மேன், அல்லது அதிகாரி வீடாக இருக்கும் என்று எங்களுக்குள் பேசிக்கொண்டே முத்துவின் வீட்டுக்குள் சென்று அவரிடம் கல்லூரி நாட்டிய நாடகத்துக்கு இசையமைக்கக்கேட்டோம். அவர் டைரியைப் புரட்டிப்பார்த்து விட்டு நாங்கள் கேட்ட அந்த தேதியில் அவர் முக்கியமான ரிக்கார்டிங்கில் வாசிக்க இருப்பதாகச் சொல்லி, எங்கள் கோரிக்கையை மறுத்துவிட்டார். இதனிடையே அவருக்கு ஏதோ முக்கியமான போன் வரவே, 'ஸாரி, வருத்தப்பட்டுக்காதீங்க. அவசரமா போக வேண்டியிருக்கு. என் மனைவியிடம் பேசிவிட்டு எல்லோரும் டீ சாப்பிட்டு விட்டுப்போங்க' என்று எங்களிடம் சொல்லி விட்டு, வாசலில் நின்ற பைக்கில் ஏறி பறந்தார். முத்துவின் மனைவி எங்களிடம் அன்போடு உரையாடினார். அப்போது எதார்த்தமாக, எதிரில் இருக்கும் பங்களா வீட்டில் இருப்பது யார் என்று கேட்டோம். 'உங்களுக்குத்தெரியாதா?. நடிகர் ரவிச்சந்திரன் சாரும், அவர் மனைவி ஷீலாவும் அந்த வீட்டில் இருக்காங்க' என்று சொல்லி, இன்ப அதிர்ச்சி கொடுத்தார்.

இப்போது எங்களுக்குள், 'ஏய் எப்படியாவது அவங்களை சந்திச்சிட்டுப் போகலாம்டி. இந்த மாதிரி சந்தர்ப்பம் இனிமே கிடைக்காது' என்று சொல்ல, எங்களில் ஒருத்தி, 'நாம நினைச்சவுடன் அவங்களை சந்திக்க முடியுமா?. திடீர்னு வாசலில் போய் நின்னா உள்ளே விடுவாங்களா?' என்று சந்தேகம் கிளப்ப, இன்னொருத்தி, 'ஒரு ஐடியா, இவங்க (முத்துவின் மனைவி) மூலமாகவே பெர்மிஷன் கேட்போமே' என்று சொல்லி அவங்களிடம் சொல்ல (இதனிடையே டீ வந்தது, குடித்தோம்). நாங்க சொன்னதைக்கேட்டு சிறிது தயங்கிய அவர், பின்னர் போன் செய்தார். ரிஸீவரை கையில் பொத்திக்கொண்டு, எங்களிடம் ரகசிய குரலில் 'சார்தான் பேசுறார்' என்றவர் போனில், 'சார், நான் எதிர்வீட்டிலிருந்து முத்துவின் மனைவி பேசுறேன். இங்கே வந்த சில கேர்ள்ஸ் ஸ்டூடண்ட்ஸ் அவரைப் பார்க்க வந்தவங்க உங்களைப்பார்க்க பெர்மிஷன் கேட்கிறாங்க...(gap)... அப்படியா?..(gap).. ரொம்ப தேங்க்ஸ் சார்' என்று ரிஸீவரை வைத்தவர், 'சார் வரச்சொல்றார்' என்றதும், எங்கள் மனதுக்குள் சந்தோஷம். முத்துவின் மனைவிக்கு நன்றி சொல்லிவிட்டு, எதிர்வீட்டுக்குப்போனோம். வாசலில் நின்றவரிடம் விஷயத்தைச்சொல்ல, உள்ளே போய் கேட்டு வந்தவர், 'உள்ளே போங்க' என்றார்.

கூடத்தில் சோபாவில் பூப்போட்ட லுங்கி, ரோஸ் கலர் காட்டன் ஜிப்பா அணிந்து, ரிலாக்ஸ்டாக நியூஸ் பேப்பர் படித்துக்கொண்டிருந்த ரவிச்சந்திரன், எங்களைப்பார்த்ததும் பேப்பரை மடித்துக்கொண்டே, 'வாங்க வாங்க, உட்காருங்க. நீங்கள்ளாம் யாருன்னு தெரிஞ்சிக்கலாமா?' என்றவாறு பேச்சைத்துவக்கினார். சோபாவில் உட்கார்ந்ததும் எங்களை அறிமுகப்படுத்திக்கொண்டோம். 'ரொம்ப சந்தோஷம், நான் நடிச்ச படங்கள்ளாம் பார்த்திருக்கீங்களா?' என்று அவர் கேட்டதும், தோழிகள் மெல்ல என்னை உசுப்பினார்கள் (காரணம், அந்தக்கூட்டத்தில் நான்தான் அதிகமாக சினிமா பார்ப்பவள், நினைவிலும் வைத்திருப்பவள்). காதலிக்க நேரமில்லையில் ஆரம்பித்து வரிசையாக அவர் படங்களைப்பற்றியும் அவர் நடிப்பையும் சொல்லத்துவங்கியதும், பாதியிலேயே சற்று சத்தமாக சிரித்தவர், 'ஏது, காலேஜ்ல போயி பாடம் படிச்ச மாதிரி தெரியலையே. பாதிநாள் தியேட்டரிலேதான் குடியிருந்திருப்பீர்கள் போலிருக்கு' என்று மீண்டும் சிரித்தார். திடீர்னு போறோமே எப்படி பேசுவாரோ என்று நினைத்துப்போன எங்களுக்கு, அவர் பேசிய விதம் ரொம்ப ரிலீஃப் ஆக இருந்தது. ரொம்ப சகஜமாக பேசினார்.

'ஷீலா மேடம் இருக்காங்களா?' என்றதும், 'ஷீலா ஒரு மலையாளப்பட ஷூட்டிங் போயிருக்காங்க. இங்கே மெட்ராஸ்லதான். வர நைட் பதினோரு மணியாகும்னு இப்போதான் போன் பண்ணினாங்க' என்றார். 'அப்போ உங்களுக்கு இன்னைக்கு ரெஸ்ட் டேயா சார்?' என்று கேட்டோம். 'இல்லேம்மா, காலைல ஃபர்ஸ்ட் ஷெட்யூல் முடிச்சிட்டு இப்போதான் நாலு மணிக்கு வந்தேன். இங்கேதான் ஓஷியானிக் ஓட்டல்ல சீன் எடுத்தாங்க. நாளைக்கும் கண்டினியூட்டி இருக்கு' என்றார். அவரது சகஜமான பேச்சு கொஞ்சம் தெம்பைத் தந்ததால் நான் தைரியமாகக் கேட்டேன், 'ஏன்சார் ஃபைட் சீன்ல டூப் போடுறாங்க?. டூப் இல்லாமல் எடுத்தால் என்ன?' என்று கேட்டதும், தோழிகள் என்னை இடித்து 'ஏய் என்னடி இதெல்லாம்' என்று சொன்னதைப் பார்த்துவிட்ட ரவி சார், 'தடுக்காதீங்க, அவங்க கேட்கட்டும்' என்றவர், சோபாவின் கைப்பிடியில் கையை ஊன்றி தீர்க்கமாக என் கண்ணைப்பார்த்தபடியே பெரிய லெக்சர் கொடுக்க ஆரம்பிச்சார்.....

'அதாவதும்மா, இந்த மாதிரி டூப் போடறதுல பல விஷயங்கள் அடங்கி இருக்கு. அதாவது கதாநாயகர்கள் ஆன நாங்க ப்ரொபெஷனல் பைட்டர்ஸ் கிடையாது, ஸ்டண்ட் மாஸ்ட்டர் சொல்லிக்கொடுக்கிறதை வச்சு செய்றோம். சில சமயம் நம்மை மீறி மிஸ் ஆச்சுன்னா, கீழே விழுந்து பலமா அடிபட்டா ஒண்ணு உயிருக்கு ஆபத்து, அல்லது உடல் உறுப்புகளுக்கு ஆபத்து, அடுத்து அடிபட்டு படுத்துட்டோம்னா மொத்த படப்பிடிப்பும் நின்னு போயிடும். ப்ரொட்யூசருக்கு பெரிய அளவுல லாஸ் வரும்.

ரெண்டாவது, டூப் பைட்டர்ஸுக்குத்தான் அந்த டைமிங் கரெக்டா தெரியும். அதாவது ஒரு மாடியிலிருந்து, கீழே ஓடும் ஒரு ட்ரக்கில் குதிக்கணும்னா, எப்போ குதிச்சா, ட்ரக் அந்த இடத்துக்கு வரும்போது கரெக்டா அதன்மீது விழுவோம்னு அவங்களுக்குத்தான் தெரியும். அதுமாதிரி கரெக்டா குதிச்சிடுவாங்க. நாங்க குதிச்சா, கொஞ்சம் மிஸ் ஆனாலும் அவ்வளவுதான்.

அடுத்து ஸ்டண்ட் யூனியனில் இருப்பவங்களுக்கு இம்மாதிரி ஃபைட் படங்கள்ளதான் வாய்ப்புக்கிடைக்கும். வருமானமும் கிடைக்கும். அதை நாம ஏன் தட்டிப்பறிக்கணும்?. அவங்களுக்கு பாலச்சந்தர் சார் படத்திலோ, கே.எஸ்.ஜி.சார் படத்திலோ வாய்ப்புக்கிடைக்காது. எம்.ஜி.ஆர்.சார் படம், என் படம், ஜெய்சங்கர் படம், இப்போ ஒரு பத்து வருஷமா சிவாஜி சார் படங்கள்ளேயும் பைட் சீன் வைக்க ஆரம்பிச்சுட்டாங்க. ஸோ, இந்த மாதிரி சந்தர்ப்பங்கள்ளேதான் அவங்களுக்கும் சான்ஸ் கிடைக்கும்.... இதை நீங்க ஸ்டூடண்ட்ஸ்ங்கிறதாலே சொல்றேன். நீங்களே பிரஸ் ரிப்போர்ட்டரா வந்திருந்தா சொல்லியிருக்க மாட்டேன். பிரச்சினையாயிடும் (சிரித்தார்).

இன்னொரு முக்கியமான விஷயம் கால்ஷீட் பிரச்சினை. நாங்க Heros ஒரே சமயத்துல நாலைந்து படங்கள்ளதான் நடிப்போம், ஆனா எங்களோடு காம்பினேஷன் சீன்ல நடிக்கிற கேரக்டர் ஆர்ட்டிஸ்ட் பல படங்கள்ள நடிச்சிக்கிட்டிருப்பாங்க. வி.எஸ்.ராகவன் சார், வி.கே.ஆர்.சார், மேஜர் சார், மனோரமா மேடம் இவங்கள்ளாம் ஒரே நேரத்துல முப்பது, நாற்பது படங்கள்ள நடிச்சிக்கிட்டு இருக்குறவங்க. எவ்வளவு கஷ்ட்டப்பட்டு இவங்க கிட்டே கால்ஷீட் வாங்கியிருப்பாங்கன்னு நமக்குத்தெரியும். நாம பெரிய பந்தாவா டூப் போடாம செய்றேன்னு செஞ்சு அடிபட்டு ஒரு பதினைந்து நாள் படுத்துட்டோம்னா போச்சு. எல்லோர்கிட்டே வாங்கின கால்ஷீட்டுமே வேஸ்ட் ஆயிடும். அப்புறம் அவங்களையெல்லாம் ஒண்ணு சேர்த்து கால்ஷீட் வாங்குவது லேசான விஷயமா?. அதே தேதியிலே ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு படத்துக்கும் கொடுத்திருப்பாங்க. அதனால் தயாரிப்பாளர் மாசக்கணக்கா வெயிட் பண்ண வேண்டி வரும். ஷெட்யூல்படி படத்தை முடிக்கலைன்னா எவ்வளவு பெரிய லாஸ்ல கொண்டுபோய் விடும் தெரியுமா?'

என்று முடித்தார். என் சிறுமதியை நான் நொந்துகொண்டேன். அதே சமயம் பரவாயில்லை, கேட்டதால்தானே இவ்வளவு விவரமும் சொன்னார் என்று சமாதானம் அடைந்தேன். (அடேயப்பா டூப் போடுறதுல இவ்வளவு அட்வான்டேஜ் இருக்கா).

மேலும் சிறிது நேரம் சில விஷயங்களைப்பற்றிப்பேசினோம். எங்கள் ஒவ்வொருவருடைய படிப்பைப் பற்றியும் கேட்டறிந்தார். இதனிடையே பணியாளர் டீயும் பிஸ்கட்டும் கொண்டு வந்து வைத்தார். 'சார் நாங்க முத்துசார் வீட்டுல இப்போதான் டீ சாப்பிட்டோம்' என்று சொன்னதும், 'அது அவர் வீட்டுக்கு போனதுக்கு. இப்போ என் வீட்டுக்கு வந்ததுக்கு சும்மா அனுப்ப முடியுமா?. டீ தானே. எத்தனையும் சாப்பிடலாம். எடுத்துக்குங்க' என்றார்.

'சார், உங்களை சந்திப்போம்னு ஒருமணி நேரத்துக்கு முன் வரை நினைக்கவேயில்லை. பெர்மிஷன் கொடுத்ததுக்கும், ஒரு விருந்தினரைப்போல கவனிச்சதுக்கும் ரொம்ப தேங்க்ஸ் சார்' என்றோம் கோரஸாக. 'என்ன பெரிசா செஞ்சுட்டேன்னு தேங்க்ஸ் எல்லாம் சொல்றீங்க. நாம இன்னைக்கு சந்திக்கணும்னு ஆண்டவன் எழுதி வசிருக்கான். அதான் உங்களைக்கொண்டு வந்து சேர்த்துட்டான். நான்தான் உங்களுக்கு தேங்க்ஸ் சொல்லணூம். ரொம்ப லோன்லியா ஃபீல் பண்ணிக்கிட்டிருந்தேன். ஒரு மணி நேரம் நல்லா ரிலாக்ஸ்டா போச்சு. ஷீலாவைப்பார்க்கணும்னா இன்னொரு நாளைக்கு போன் பண்ணி கேட்டுகிட்டு வாங்க' என்று வாசல் வரை வந்து அன்புடன் வழியனுப்பி வைத்தார்.

முத்து எங்களுக்கு இசையமைக்க முடியவில்லையே என்ற வருத்தம் எல்லாம் போச்சு. மாறாக, ரவிச்சந்திரன் அவர்களின் சந்திப்பும் உரையாடலும் மனம் முழுக்க நிறைந்தது. எதிர் வீட்டிலிருந்த முத்துவின் மனைவியைச் சந்தித்து மீண்டும் நன்றி தெரிவித்து விட்டு வந்தோம். ஆட்டோ பிடிக்கணும் என்ற எண்ணம்கூட இல்லை. சள சளவென்று பேசிக்கொண்டே 'லஸ்கார்னர்' வரை நடந்தே வந்தோம்.

இந்தச் சந்திப்புக்குப்பின் ரவிச்சந்திரன் என மனதில் பல படிகள் உயர்ந்துவிட்டார். இந்த திரி துவங்கியதற்கு அவருடன் எதிர்பாராமல் நேர்ந்த அந்த சந்திப்பும் ஒரு காரணம் எனலாம்.

Gopal.s
7th April 2016, 01:35 PM
Thanks to Madam Saradha.

ராமண்ணா - ரவி கூட்டணிக்கு அச்சாரமிட்ட

"குமரிப்பெண்"

‘பறக்கும் பாவை’யை வண்ணத்தில் எடுத்துவரும் அதே சமயத்தில், இன்னொரு பக்கம் ரவிச்சந்திரனை கதாநாயகனாக நடிக்க வைத்து கருப்புவெள்ளையில் உருவாக்கிய படம்தான் 'குமரிப்பெண்'. ஒருபக்கம் செண்டிமென்ட் படங்கள் கோலோச்சிக் கொண்டிருந்தபோதிலும், அதே சமயம் ஜனரஞ்சகமான படங்களும் வெற்றியடைந்துகொண்டிருந்த வேளையில் இப்படம் வெளியானது.

ரவிச்சந்திரனின் ஜோடியாக கலைச்செல்வி ஜெயலலிதா நடித்திருந்தார். குமரிப்பெண் படத்தின் பெயரைச்சொன்னதும் நமக்கு நினைவுக்கு வரும் முதல் காட்சி, கட்டுக்குடுமியுடன் கிராமத்திலிருந்து ரயிலில் வந்துகொண்டிருக்கும் ரவியை, நவநாகரீக உடையணிந்த ஜெயலலிதாவும், அவரது தோழிகளும் கிண்டலடித்துப்பாடும் "வருஷத்தைப்பாரு அறுபத்தி ஆறு" என்ற பாடல்தான். எல்.ஆர்.ஈஸ்வரி குழுவினர் பாடியது. இதே "வருஷத்தைப்பாரு அறுபத்தி ஆறு" பாடலை பின்னர் ரவிச்சந்திரன், ஜெயலலிதாவைக் கிண்டலடித்துப் பாடுவதாகவும் வரும். அதை ரவிக்காக டி.எம்.எஸ். பாடியிருந்தார். (என்ன சொல்றீங்க?. இதைப்பார்க்கும்போது உங்களுக்கு 'கட்டவண்டி... கட்டவண்டி...' பாடல் நினைவுக்கு வருதா?). அப்போதெல்லாம் ரவிச்சந்திரனின் படங்களில், கதாநாயகியை டீஸ் செய்து பாடுவதுபோல ஒரு பாட்டு வந்துவிடும். அதில் இதுவும் ஒன்று. (Music by Mellisai Mannar MSV)

P.B.S.பாடிய "ஜாவ்ரே ஜாவ்.. இந்த கேட்டுக்கு நீ ராஜா" பாடல், கடமையைச்செய்யாமல் தூங்கிக்கொண்டிருக்கும் கூர்க்காவை கிண்டலடித்து ரவி பாடுவதாக வரும். இந்தப்பாடலை T.M.S. பாடியிருந்தால் இன்னும் சுவையாக இருந்திருக்கும். சில பாடல்களுக்கென்று சில குரல்கள் பொருந்துமல்லவா?.

ரவிச்சந்திரன் ஜெயலலிதா டூயட் பாடல், "நீயே சொல்லு... நீயே சொல்லு... நடந்தது என்னவென்று நீயே சொல்லு. ரகசியம் பேசுகின்ற கண்ணால் சொல்லு" பாடலை P.B.S., L.R.ஈஸ்வரி பாடியிருந்தனர்.

ரவிச்சந்திரனின் சினிமா வாழ்க்கையில் அதுவரை கலர்ப்படங்களே வெற்றியடைந்து வந்த நிலையில், மாபெரும் வெற்றியைத்தந்த முதல் கருப்புவெள்ளைப்படம் குமரிப்பெண். 1966-ல் வெளியான மொத்தம் 42 தமிழ்ப்படங்களில் 10 படங்கள் மட்டுமே 100 நாட்களைக்கடந்து ஓடின. அவற்றில் 'குமரிப்பெண்'ணும் ஒன்று. (எந்தப்படமும் வெள்ளிவிழாவைத் தொடவில்லை). நான் முன்பே சொன்னதுபோல, சென்னை மவுண்ட்ரோடு ஏரியாவில் தியேட்டர் கிடைக்காமல், மயிலை காமதேனு அரங்கில் திரையிடப்பட்டு, அங்கு 100 நாட்களை வெற்றிகரமாகக் கடந்தபின், மவுண்ட் ரோடு காஸினோ அரங்குக்கு மாற்றப்பட்டு அங்கும் வெற்றிகரமாக ஓடியது.

இன்றைக்கும் பார்த்து ரசிக்கும்படியான பொழுதுபோக்கு அம்சங்களும் அருமையான பாடல்களும் கொண்ட படம் குமரிப்பெண்.


இதயத்தை வருடிய
"இதயக் கமலம்"

ரவிச்சந்திரன் நடித்த இரண்டாவது வண்ணப்படம். பழம்பெரும் இயக்குனரும் தயாரிப்பாளருமான எல்.வி.பிரசாத்தின் 'பிரசாத் புரொடக்ஷன்ஸ்' தயாரித்த இப்படத்தை எஸ்.ஸ்ரீகாந்த் இயக்கியிருந்தார். 'புன்னகையரசி' கே.ஆர்.விஜயாதான் ரவிச்சந்திரனின் ஜோடியாக நடித்திருந்தார். ஜோடி என்பதைவிட அவர்தான் முழுப்படத்தையும் வியாபித்திருந்தார். இறந்துபோன மனைவியை எண்னி எண்னி இவர் வருந்த, கொஞ்சம் கொஞ்சமாக ஃப்ளாஷ்பேக்கிலேயே படம் நகரும். 'மேளத்த மெல்லத்தட்டு மாமா' என்று பாடியபடி தெருக்கூத்தாடியாக அறிமுகமாகும்போதும் சரி, பைத்தியக்கார விடுதியில் பைத்தியங்களோடு அடைக்கப்பட்டு அவதிப்படும்போதும் சரி, தேர்ந்த நடிப்பை வெளிப்படுத்திருப்பார் K.R.விஜயா. முதன்முதலாக ரவிச்சந்திரன் சோக நடிப்பை வழங்கிய படம் இதுவாகத்தான் இருக்கும். நன்றாகச்செய்திருப்பார்.

திரையிசைத்திலகம் கே.வி.மகாதேவன் இசையில்...
"உன்னைக் காணாத கண்ணும் கண்ணல்ல" என்ற பாடலும்
"என்னதான் ரகசியமோ இதயத்திலே" என்ற பாடலும்
சுசீலாவுக்குப் பெயர் வாங்கிக்கொடுத்தன.
ரவிச்சந்திரனுக்காக, பி.பி.எஸ் பாடிய...
"தோள் கண்டேன் தோளே கண்டேன்" பாடலும்
"நீ போகுமிடமெல்லாம் நானும் வருவேன் போ போ போ" பாடலும் பாப்புலராயின. இதில் ஒரு பாடல் காஷ்மீரில் படமாக்கப்பட்டிருந்தது.

தாய்க்குலத்தின் ஏகோபித்த வரவேற்பைப்பெற்ற 'இதயக்கமலம்' ஒரு பெரிய வெற்றிப்படம்.

பி.ஆர். பந்துலுவின்

'எங்க பாப்பா'

தமிழ்த்திரையுலகுக்கு பல பிரமாண்டமான சரித்திரப் படங்களை உருவாக்கித் தந்த தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் பி.ஆர்.பந்துலு, தனது பத்மினி பிக்சர்ஸ் சார்பில் தயாரித்து இயக்கி, 1966-ல் வெளியான குடும்பச்சித்திரம் 'எங்க பாப்பா'

ரவிச்சந்திரன் பாரதி ஜோடியுடன், அப்போதைய பிரபலமான குழந்தை நட்சத்திரம் 'பேபி ஷகீலா' (நினைவிருக்கிறதா? கற்பகம், முரடன் முத்து, எங்கவீட்டுப்பிள்ளை..?) முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்த படம். படத்தில் இரண்டுமுறை பாடப்படும்
'ஒருமரத்தில் குடியிருக்கும் பறவை இரண்டு
ஒரு அன்னை தந்தது, ஒன்று காவல் கொண்டது
ஒன்று கண் மலர்ந்தது... கண்மலர்ந்தது'
பாடல் படத்துக்கே ஜீவநாடி. அதிலும் அந்தக்குழந்தை அண்ணன் ரவிச்சந்திரனை விசிறியால் விசிறிக்கொண்டே பாடித்தூங்க வைக்கும்போது, நம் கண்களில் நிச்சயம் நீர்கட்டும்.
'இரண்டு கண்கள் சேர்ந்து காணும் காட்சியும் ஒன்று
இரண்டு நெஞ்சும் சேர்ந்து சொல்லும் சாட்சியும் ஒன்று
அருகில் வைத்து தூங்கச்செய்யும் தாயில்லாதது
ஆசை வெட்கம் வெளியில் சொல்ல வாயில்லாதது... வாயில்லாதது

நாதியில்லை என்று உன்னை ஊர் சொல்லலாமா - இங்கு
நானிருந்தும் உனக்கு அந்தப்பேர் வரலாமா
ஜாதிப்பூவில் பாதிப்பூவை பிரிக்கக்கூடுமா
அண்ணன் தங்கை உறவைக்காக்கும் பெருமையாகுமா... பெருமையாகுமா'

சமீபத்தில் கவிஞர் பிறைசூடன் சொன்னதுபோல, 'இத்தனை ஆண்டுகளிலும் வாலி என்ற கவிக்கிழவன் யாராலும் பிடிக்க முடியாதபடி ஓடிக்கொண்டிருக்கிறார்' என்பது எத்தனை உண்மை. எங்கபாப்பாவுக்கு இசையமைத்தவர் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன். 1966-ல் வெளியான இப்படத்துக்கு 65-லேயே பாடல்கள் பதிவாகி படப்பிடிப்பு நடந்து வந்தது. தன் இணையான ராமமூர்த்தியை விட்டுத்தனியே பிரிந்து தனது முத்திரையைப் பதித்துக்கொள்ள மெல்லிசை மன்னர் அசகாய சூரத்தனங்கள் செய்துகொண்டிருந்த நேரம். அதன் விளைவாக ரசிகர்களுக்கு அற்புதமான பாடல்கள் கிடைத்துக்கொண்டிருந்தன.

இன்னொரு பாடல், எல்.ஆர்.ஈஸ்வரியின் கொஞ்சும் குரலில் (கூடவே டி.எம்.எஸ்)
'சொந்த மாமனுக்கும் ஒரு பெண்ணிருந்தால்
இந்த மாதிரித்தான் இருப்பாள்' பாடல் பார்க்கவும் கேட்கவும் தேனமுதம்.

ரவிச்சந்திரன் சண்டையிட்டுக்கொண்டே பாடுவதாக வாலி அமைத்திருந்த
'நான் போட்டால் தெரியும் போடு
தமிழ்ப்பாட்டால் அடிப்பேன் ஓடு'
என்ற பாடல் யாரையோ குறித்து எழுதியதாக ரசிகர்கள் எண்ணினர்.

தாய்க்குலத்தின் ஆதரவைப்பெற்ற 'எங்க பாப்பா' பெரிய வெற்றியைப்பெறாவிடினும் தமிழகம் முழுவதும் பரவலாக ஒடியது.

Gopal.s
14th April 2016, 08:57 AM
அனைத்து நண்பர்களுக்கும் ,எனது புத்தாண்டு வாழ்த்துக்கள்.

Gopal.s
30th April 2016, 05:43 PM
ரவி-பிரமிளா நடிப்பில் வள்ளி தெய்வயானை என்றொரு படம்.1972 அல்லது 1973 வாக்கில்.பிரமிளா இரட்டை வேடம். இந்த படத்தில் டி.ஆர்.பாப்பா போல ரேடியோ இசையில் பிரபலம் ஆன தியாகராஜன் என்பவர் இசை. பூத்திருந்து காத்திருந்தேன் சந்தோசம் -சோகம் என்று இரண்டு முறை. (சோகம் நன்றாக இருக்கும்)

இதில் ஒரு surprise package தனசேகரன் -மல்லிகா என்பார்கள் பாடிய (ஷோபா-சுரேந்தர் போல குரல் சாயல்.பின்னால் ஷோபா-சுரேந்தர் பிரபலம் ஆனது மாலை இளம் மனதில் ஆசைதனை தூண்டியது)
மலர்களில் ராஜா. இதற்கு வாயசைத்தது படத்தின் நாயக-நாயகி அல்ல.
சசி குமார் -பானுமதி . செம பிரபலம் இந்த பாடல்.

https://www.youtube.com/watch?v=qQTPVO8N3Bs

Gopal.s
8th May 2016, 03:11 PM
Thanks Vasu.

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/vasudevan31355086/drftyghui.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/vasudevan31355086/drftyghui.jpg.html)

காபரே கானங்களில் மட்டுமல்ல....கண்ணீர் வரவழைக்கும் கானங்களிலும் கில்லாடி ராட்சஸி. வறுமையில் வாடும் குமாரி ஷீலா வயிற்றுப் பிழைப்புக்காக தன் தங்கைகளுடன் ஆடிப்பாடி பிழைப்பு நடத்தும் பரிதாபம். ஈஸ்வரியின் குரலில் ஈட்டியாகத் துளைக்கிறது இதயத்தை இப்பாடல். இந்தப் பாடலைக் கேட்கும் போதெல்லாம் என் அடிவயிறு என்னையுமறியாமல் கலங்குவதை உணருவேன். மூன்றெழுத்தில் எனக்குப் பிடித்த முத்தான முதல் பாடல்.

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/vasudevan31355086/1.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/vasudevan31355086/1.jpg.html)

பாடலின் இன்னொரு விசேஷம் ஈஸ்வரியுடன் என்னுடைய இன்னொரு பிடித்தமான பாடகி சரளா கூட்டணி அமைத்ததுதான். சரியான சளைக்காத சரளா இணை...துணை... வேறென்ன வேண்டும்?

மது அண்ணாவும், நானும் இப்பாடலைப் பற்றி செல்லில் பேசி மகிழ்ந்தது நினைவுக்கு வருகிறது. அவருக்கும் மிக மிக பிடித்த பாடல். ஆனால் பாடலின் வீடியோ மிஸ்ஸிங். விரைவில் தர முயற்சி செய்கிறேன்.

தெய்வத்தின் கோவில்
தெய்வந்தான் இல்லையே
மனிதனின் பூமி
மனிதன்தான் இல்லையே
அவை இரண்டும் இல்லா வேளையிலே
ஏழைப் பெண்கள் வீதியிலே

முதலாவது சரணத்தில்,

'வாழ்வது எங்கள் ஆசை
ஒரு மாளிகை ராணியைப் போ...ல '

என்று முடித்து ஈஸ்வரி எடுக்கும் அந்த ஹம்மிங் சோகம். நெஞ்சக் காணியை அப்படியே குல்கந்து குரல் ஏர் பூட்டி உழுகிறது. வறுமையின் கொடுமையும், இளமைக்கால இன்னலையும் அந்த ஹம்மிங் ஒரே சேர பிரதிபலிக்கும்.

பின்வரும் இசையே இல்லாமல் வரும் வரிகளும் வறுமையை உணர்த்துவதே.

'ஆண்டவன் காட்டிய பாதை
ஒரு ஆண்டியின் பிள்ளையைப் போலே'

'தன்னைத்தானே காணும் உலகில் என்னைக் காண்பார் யாரம்மா?'

என்ற ஈஸ்வரி பாடும் வரிகளிலேயே அவர்களின் வறுமைக் கதை நமக்கு உணர்த்தப்படுவிடும்.

'யாரம்மா?' என்று ஈஸ்வரி முடித்தவுடன் சரளா குழுவினர் உடன் தொடரும் அந்த இரண்டு முறை 'யாரம்மா' இடியாக இருதயத்தில் இறங்கும்.

இதற்குப் பின்

சரளா சரளமாகப் பின்னுவார். டோட்டலாக பாடலைக் கேப்சர் பண்ணிவிடுவார். ஈஸ்வரிக்கே சவால் விடுவதுபோல இருக்கும்.

'தங்கைக்கென்றோர் அண்ணன் இருந்தான்
எங்கு சொல்வாய் ஏனம்மா?'
(மதுண்ணா! இந்த வரி கொஞ்சம் டவுட். சரி பார்க்கவும். காது பஞ்சர்):)

(அந்தக் குரலில் அவர் பாடிய இஸ்லாமிய தனிப்பாடல்கள் கண்டிப்பாக நம் நினைவுக்கு வந்துபோகும்).

ஷீலா மெச்சூர்டான அக்கா என்பதால் ஈஸ்வரி அவருக்கான சோக வரிகளை விரக்தியாக வெளிப்படுத்துவார். உடன் தங்கை விவரமறியா இளம்பெண் என்பதால் அவளுக்காகப் பாடும் சரளா குரலில் ஈஸ்வரியை விட அதிகமாக தழுதழுப்பில் சோகம் காட்டுவார். என்ன ஒரு புரிதல் தன்மை!

இப்போது பாடல் சோகத்தின் விளிம்பிற்கு சற்றே உச்ச ஸ்தாயியை அடையத் தொடங்கும்.

'கருணை நெஞ்சைத் தேடித் தேடி கண்ணீர் சிந்தும் பெண்ணம்மா
பெண்ணம்மா
பெண்ணம்மா'
கடமை என்று ஒருவர் வந்தால் காலில் விழுவேன் நானம்மா'

முடித்தவுடன் ஈஸ்வரியின் மீண்டும் இரக்கத்தை வரவழைக்கும் சோக ஹம்மிங்.

பாடலென்றால் அப்படி ஒரு பாடல் இது. ஒரு நாளைக்கு இரண்டு மூன்று முறையாவது இப்பாடல் நினைவுக்கு வராமல் போனதில்லை.

'மூன்றெழுத்'தில் இப்பாடலில் என் மூச்சிருக்கும் என்றும்.


https://youtu.be/zkflWIukjvQ

eehaiupehazij
12th May 2016, 11:29 AM
கலை நிலவின் குளிர் கிரணங்கள் !
ரசிப்புக் கடலில் இளமைப் புயலின் பிரளய நினைவலைகள் !!

பகுதி 1 காதலிக்க நேரமில்லை



அமரர் ரவிச்சந்திரன் அவர்கள் பொழுது போக்குத் தமிழ் திரை வரலாற்றில் தவிர்க்க முடியாத வெள்ளிவிழா நாயகர்! நகைச்சுவைத் திரைப்பட வரிசையில் இன்றும் என்றென்றும் முதலிடத்திலேயே சிம்மாசனமிட்டிருக்கும் ஸ்ரீதரின் காதலிக்க நேரமில்லை காவியத்தின் இளமைப் புயல் ரவிச்சந்திரனே!

நடிப்பில் எப்படியோ....... நடன அசைவுகளில் இளமை பொங்கிக் கூத்தாட வைத்ததில் நிகரற்ற கனவு நாயகர் ரவிச்சந்திரன் என்பதற்கு இன்றும் சின்னத்திரை ஒளியும் ஒலியும் பாடல் நடன அசைவுகளில் நளினமாக தூள் கிளப்புவதே அத்தாட்சி !

இளமைப் புனலின் துள்ளலை ரசிப்போமே! மனதை ஆகர்ஷித்த துள்ளாட்டம்......
வெள்ளிவிழா நாயகனாகக் கொண்டாடப்படுவதில் வியப்பென்ன?!

The way Ravi has donned the dance movements in this enchanting picturization of the song Unga 'Ponnaana Kaikal Punnaakalaamaa....'

கலர் கதாநாயகி காஞ்சனா மலர்ப்பூங்கொத்து ராஜஸ்ரீயுடன் நளின நடன நாயகர்! மனத்திரையிலிருந்து நீங்காத மனோரம்மியமான இளமை நாடகத்தின் அரங்கேற்றம் !

உங்க பொன்னான கைகள் புண்ணாகலாமா ....ஜெமினி குரலோன் பிபி ஸ்ரீனிவாசின் குரல்குழைவில்!

https://www.youtube.com/watch?v=Ka9Ghod_Sxo

Enjoy this Karaoke!

https://www.youtube.com/watch?v=JqLP2kychcM

The dynamic song in a static mood too!!

https://www.youtube.com/watch?v=Ej3w3fHjN2Q

Enjoy this ultaa too!

https://www.youtube.com/watch?v=dFQnIEydMQ0

eehaiupehazij
12th May 2016, 12:21 PM
Gap filler fortifying the dancing prowess of Ravi in a group song from the same Kadhalikka Neramillai!
Who can forget this evergreen melody that makes us feel like enjoying the sprinklings from geyser!! A bit of parody on MSV himself....Viswanathan vaelai vaendum! in the riproaring presence of TS Baalaiah and our heroines Kanchana and Rajshree!! Immortal song sequence that got reprised in a Prabudeva movie too!!

https://www.youtube.com/watch?v=gmeSmwlX8To

A funny remix!

https://www.youtube.com/watch?v=VzWfjFmBLqQ

Followers...!

https://www.youtube.com/watch?v=fyEg-t0keJE

Prabudeva too reminding Ravi's steps!

https://www.youtube.com/watch?v=Gw63atzHGyw

eehaiupehazij
13th May 2016, 08:08 PM
The Space Odyssey!


சிந்துபாத்தின் லைலாவை மந்திரவாதி மூஸா அவ்வப்போது ஒரு பொம்மை போல சிறுமியாக்கி சிறு பெட்டியில் அடைத்து முடிவில்லாத் தொடருக்கு சுவாரஸ்யம் ஏற்படுத்துவது போல இயக்குனர் ராமண்ணாவும் கலை நிலவையும் கலை செல்வியையும் சிறு பெட்டியிலோ காருக்குல்லோ அடைத்துப் பாடி ஆடி தண்டால் பஸ்கி எடுக்க வைப்பார்!!

From the Ravichandran entertainer Naan!!

https://www.youtube.com/watch?v=1cEod9d9yCk


From the Ravichandran entertainer Moodrezhuththu!

https://www.youtube.com/watch?v=Yh2_2g_-1wg

eehaiupehazij
13th May 2016, 10:13 PM
Gap filler from Ravi's prestigious movie Naan!

https://www.youtube.com/watch?v=XyjQACjiJoQ

eehaiupehazij
13th May 2016, 10:14 PM
A remix of olden goldies!

https://www.youtube.com/watch?v=MFLczvaSFoE

eehaiupehazij
13th May 2016, 10:26 PM
மூன்றெழுத்து திரைப்படத்தில் ரவியும் ஜெயலலிதாவும் ரொமான்சிங் சீனில் அசோகனை பரணுக்குள் அடைத்து விட்டார் ராமண்ணா!

https://www.youtube.com/watch?v=p1bg3a2OT04

eehaiupehazij
14th May 2016, 05:42 PM
தமிழில் வெளிவந்த மிக சிறந்த கதை மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களுடன் சஸ்பென்ஸ் கெடாமல் பின்னப் பட்ட திரில்லர் படங்களில் தலையானது நடிகர்திலகத்தின் புதிய பறவை !

அந்த வரிசையில் ரசிகர்களை ஹிட்ச்காக் பாணியில் சீட்டின் நுனிக்கு தள்ளிய படங்களில் மனதை அள்ளிய படம் ரவிச்சந்திரனின் துடிப்பான நடிப்பில் வெளியான அதே கண்கள் !


மிகவும் ரம்மியமான வண்ணக் குழைவில் வேதாவின் மிகச்சிறந்த ஹைலைட்டான த்ரில்லர் இசைக்கோர்ப்பில் நேர்த்தியாக விறுவிறுப்புக் குன்றாமல் சஸ்பென்ஸ் காப்பாற்றப்பட்டு சுவாரஸ்யமான காட்சித் தொகுப்பில் வெள்ளிவிழா நாயகனின் வெற்றி மகுடத்தில் வைர மின்னல் அதேகண்கள்!!

ரவிச்சந்திரனின் லாவகமான சண்டைக் காட்சிகளும் நளினம் நிறைந்த நடன அசைவுகளும் இன்றுவரை நம்மை மகிழ்வில் ஆழ்த்தும் சிறந்த பொழுது போக்கு சித்திரம் திருலோகசந்தர் இயக்கிய அதே கண்கள் !!

எத்தனைமுறை பார்த்தாலும் சலிக்காத சாதனைப் படம் ரவியின் அதேகண்கள் !!
படத்தைப் பற்றிய ஏனைய விவரணைகள் கோபாலின் டிபார்ட்மெண்ட் !!
எனக்கு மிகவும் பிடித்த பாடல் கண்ணுக்கு தெரியாதா ......



with Kanchana....enjoy Ravi's rhythmic steps!!

Yaayyaa yaayyaya yayaa!!....Innumoru samayam Ilamai Varaadhu...!!

https://www.youtube.com/watch?v=DOTiyjWxuYk

Gopal.s
27th May 2016, 07:53 AM
Ravichandran (Tamil actor)
From Wikipedia, the free encyclopedia
Ravichandran
Ravichandran (Tamil actor).jpg
Born B.S. Raman
1939-40
Kuala Lumpur, Federated Malay States
Died 25 July 2011
Chennai, Tamil Nadu, India
Occupation Actor, director, Agriculturist
Years active 1964–2011
Spouse(s) Vimala
Sheela (divorced)

Ravichandran (died 25 July 2011) was a Tamil film actor who played lead hero roles in Tamil movies from 1964-1979. He has also acted in supporting roles from 1986, and directed a few films.[1][2] He was given the title of Kalaingnar Thilagham in many of the on-screen credits of films starring him in the lead role. He was, also, called "Puratchi Kalaignar" (Refer: Anandha Bairavi Tamil Movie Title Scene). Before entering cine-field, during his studies in Trichy, he has acted in two dramas, namely., "AanaiyidungalAnna" and "Udhaya Suriyan". After entering cine-field, he has acted in two dramas, namely, "Mapplley Yen Magalaik Kadhali" and "That Man from Poonthamallee". In the drama "That man from Poonthamallee", he performed in double role and Thirumuruga Kirupanandha Variyar, who presided over the drama in Vellore, has appreciated and awarded a title "Nadaga Sigamani". He has, also, acted in a TV Serial namely., GEE boom ba in 1986. During his tenure of acting, his fans, journalists, movie-directors/producers have given many titles, viz., Kalai Ulaga Ilavarasar, Kalai Nilavu, Romantic Hero, Velli Vizha kathanayagan, Vannap Pada Nayagan, Evergreen Hero, Kalaignar Thilagam, Style King, Stunt Man an, Bhagdath Perazhagan, Kalai chelvan, Pudhumai Thilagam,Kalaiyulaga Ilavarasan etc. He was much affectionate with his fans.

Contents

1 Life
2 Filmography
3 References
4 External links

Life

Ravichandran was born B.S. Raman in Kuala Lumpur, capital of the Federated Malay States. He moved to Tiruchirappalli, India in 1951, and studied at the St. Joseph's College. He was married twice; his first marriage was to Vimala, with whom he had a daughter, Lavanya, and two sons, Balaji and Hamsavardhan. There after, he married Malayalam actress Sheela, and had a son George. His sons Hamsavardhan and George also took up acting as a career, with Hamsavardhan starring in the film Manthiran, directed by Ravichandran himself. Lavanya is married and has 2 daughters.

The final movie is Theri as a protogonist.
Filmography
Year Film Role Language Director Co-stars Notes
1964 Kaadhalikka Neramillai Ashok Tamil C. V. Sridhar R. Muthuraman, Kanchana, Rajashri 1st Movie
1964 Nalvaravu Tamil Charlie / Manian Rajashri, Nagesh (actor)
1965 Idhayak Kamalam Tamil Srikanth K. R. Vijaya
1966 Gowri Kalyanam Tamil K. Shankar Jaishankar, Jayalalithaa
1966 Kumari Penn Tamil T. R. Ramanna Jayalalitha
1966 Motor Sundaram Pillai Tamil Balu Sivaji Ganesan,Jayalalithaa , Sivakumar
1966 Madras to Pondicherry Tamil
1966 Naam Moovar Tamil Jaishankar
1966 Kalyana Mandapam Tamil
1967 Adhey Kangal Bhaskar Tamil A. C. Tirulokchandar Kanchana, Sheela Remade in Telugu Simultaneously as "Ave Kallu"
1967 Maadi Veetu Mapillai Tamil Jayalalithaa
1967 Magaraasi Tamil Jayalalitha
1967 Naan Tamil Muthuraman, Jayalalithaa
1967 Ninaivil Ninraval Tamil
1967 Thedi Vantha Thirumagal Tamil S. S. Rajendran
1967 Thanga Thambi Tamil
1967 Valibha Virundhu Tamil
1967 Ethirigal Jakkirathai Dr. Baskar Tamil R. Sundaram R. S. Manohar, L. Vijayalakshmi
1968 Moondreezuthu Tamil Jayalalitha
1968 Nimindhu Nil Tamil
1968 Panakkara Pillai Tamil Jayalalithaa
1968 Delhi Mapillai Tamil
1969 Odum Nadhi Tamil
1969 Singapore Seeman Tamil
1969 Selviyin Selvan Tamil
1969 Nalum Therinthavan Tamil
1970 Kadhal Jothi Tamil
1970 Kaviya Thalaivi Tamil Gemini Ganesan, Sowkar Janaki
1970 Snegithi Tamil
1970 Malathi Tamil Gemini Ganesan, Saroja Devi
1971 Thulli Odum Pulliman Tamil
1971 Vimochanasamaram Malayalam
1971 Agni Mrugam Malayalam
1971 Poi Sollathey Tamil
1971 Sabatham Tamil P. Madhavan K. R. Vijaya
1971 Justice Viswanathan Tamil G. R. Nathan Major Sundarrajan Remake of 1969 Hindi movie Do Bhai (1969 film) starring Ashok Kumar and Jeetendra.
1971 Meendum Vazhven Tamil
1971 Utharavindri Ulle Vaa Tamil Kanchana
1972 Pugundha Veedu Tamil
1972 Varappirasadham Tamil jayachithra
1972 Aromalunni Malayalam
1972 Omana Baby Malayalam
1972 Sakthi Malayalam Crossbelt Mani Sheela, Thikkurissi Sukumaran Nair
1973 Engal Thaayi Tamil
1973 Manjal Kungumam Tamil
1973 Baghdad Perazhagi Tamil T. R. Ramanna Jayalalitha, Nagesh, Shobha, Jayasudha
1974 Avalukku Nigar Avale Tamil Kalyan Kumar, Venniradai Nirmala
1974 Doctoramma Tamil
1974 Puthiya Manidhan Tamil
1974 Sorgathil Thirumanam Tamil
1975 Hotel Sorgam Tamil
1975 Thai Veetu Seedhanam Tamil
1975 Avalluku Ayiram Kangal Tamil Jayalalithaa
1976 Varaprasadham Tamil
1977 Nee Vaazha Vendum Tamil
1978 Iravu 12 Mani Tamil
1979 Neeya Ravi Tamil Durai Kamal Haasan
1979 Kavari Maan Tamil S. P. Muthuraman Sivaji Ganesan
1979 Sikharangal Malayalam
1980 Bombay Mail 109 Tamil
1985 Sugamana Raagangal Tamil R. Sundarrajan Sivakumar
1986 Amman Kovil Kizhakale kanmani's father Tamil R. Sundarrajan Vijayakanth
1986 Oomai Vizhigal P.R.K Tamil Vijayakanth, Karthik, Jaishankar
1986 Murattuk Karangal Muthu Tamil Rajasekhar Thiagarajan, Sathyaraj, Jaishankar, Bhanu Chander
1987 Sattam Oru Vilayaattu Tamil Vijayakanth
1987 Neethikku Thandanai Tamil Vijayakanth
1987 Ninaive Oru Sangeetham Tamil Vijayakanth
1988 Guru Sishyan Rajamanickam Tamil SP. Muthuraman Rajinikanth, Prabhu
1988 Therkathi Kallan Tamil
1989 Raja Chinna Roja Tamil SP. Muthuraman Rajinikanth, Raghuvaran
1989 Oru Thottil Sabadham Tamil
1989 Chinnappadass Tamil C. V. Rajendran Sathyaraj
1990 Paattukku Naan Adimai Tamil Shanmughapriyan Ramarajan
1990 Naanum Indha Ooruthan Tamil Shegar Raja Murali
1991 Manitha Jaathi Tamil
1992 Sevagan Tamil Arjun
1993 Pudhiya Mugam Tamil
1994 En Rajangam Kodandam Tamil Siraj|Anandaraj, Jaishankar
1995 Karna Arjun's father Tamil Arjun
1997 Arunachalam Tamil Rajinikanth, Jaishankar
2002 Pammal K. Sambandam Tamil Kamal Haasan
2002 Ramana Tamil Vijayakanth
2003 Thennavan Tamil Vijayakanth
2003 Indru Mudhal Tamil
2003 Tagore Telugu Chiranjeevi
2004 Thendral Singara Velu Nayagar Tamil R. Parthiban
2006 Adaikalam Tamil Prashanth, Thiagarajan
2008 Arasangam Tamil Vijayakanth
2009 Kanden Kadhalai Tamil Bharath
2011 Aadu Puli Tamil Aadhi, Prabhu

Gopal.s
27th May 2016, 08:30 AM
Bonanza of Ravichandran Era,Neeyum Nanum-1968.

Yaradi vandhar of Ratchasi L.R.E, Elegant T.M.S in jolly mood and Drunken mood.

https://www.youtube.com/watch?v=gB4nvDO2SGo

https://www.youtube.com/watch?v=74lAcTssmnA

https://www.youtube.com/watch?v=AIWECB9bvNQ

RAGHAVENDRA
27th May 2016, 08:40 AM
https://www.youtube.com/watch?v=txxK71TQkH0

கோபால்,
ரவி... அரசியல் ரீிதியாக மேடைகளில் நடிகர் திலகத்தை கடுமையாக விமர்சித்து நம் மனதில் வெறுப்பை சம்பாதித்தவர். சில சமயம் தொழிலிலும் அவரை விமர்சித்தவர். என்றாலும் நடிகர் என்கிற முறையில் தனக்கெனத் தனி முத்திரையைப் பதித்தவர். அந்த வகையில் அவருடைய நடிப்பில் சில படங்கள் எல்லோரையும் ரசிக்க வைக்கும். குறிப்பாக அவருடைய நடன அசைவுகள் ரசிக்கும் படி இருக்கும். அதில் இந்தப்பாடலும் ஒன்று.

மிட்லண்ட் தியேட்டரில் இந்தப் படம் ரிலீசான அன்று ரவி ரசிர்களுக்கும் லக்ஷ்மி ரசிகர்களுக்கும் துணி பேனர் வைப்பதில் போட்டியும் சண்டையும் வந்தது இன்றும் நினைவில் உள்ளது.

RAGHAVENDRA
27th May 2016, 08:42 AM
https://www.youtube.com/watch?v=HtiGCx79TCQ

Gopal.s
27th May 2016, 10:38 AM
ராகவேந்தர் ,

ரவி அரசியலில் இருந்தது 69 முதல் தி.மு.கவில். அவர் மேடைகளில் மோசமாக விமரிசித்ததே இல்லை.தொழில் முறையில் ,நடிகர்திலகத்தை தெய்வமாக போற்றியவர். தனி பட்ட முறையில் ,நான் சிவாஜியை தொழுபவன் என்று அவருக்கு தெரியும். மிக மிக மரியாதையுடனே,நடிகர்திலகத்தை குறிப்பார்.பெருந்தன்மையாளர் என்று போற்றுவார்.

இன்னும் சொல்ல போனால் ,நடிகர்திலகத்துக்கு போட்டி என்று மற்றவர் நினைக்கும் ஒரு நடிகரை பற்றி என்னிடம், யாரையும் முன்னேற விட மாட்டார் ,சதி செய்வார் என்ற ரீதியில் பேசியுள்ளார்.(நான் பீ.யூ .ஸீ திருச்சியில் படித்த ஒரு வருட பரிச்சயத்தில் என் நேரடி அனுபவம்)

என் நண்பனொருவன் , மெர்சி ஹோம் புகழ் ,ஹாய் என்று நண்பராக வர்ணிக்க படும் அகால மரணமடைந்த ஒரு நடிகருடன் (என்ன செய்வது,வேறு எப்படி குறிப்பது)தண்ணியடித்து கொண்டிருந்த போது ,தனக்கு பிரேக் கொடுத்த வல்லவரான சுந்தரமான தயாரிப்பாளரை வண்ணை வண்ணை யாக திட்டி தீர்த்தாராம்.தன்னுடன் நடித்த நடிகையரை பற்றி சொல்ல முடியாத அளவு ஆபாசமாக பேசினாராம்.

பத்திரிகைகள் எவ்வளவு பொய் சொல்ல முடியும் என்று உணர்ந்த தங்களுக்கு நான் விளக்க தேவையில்லை.

Gopal.s
30th May 2016, 07:22 AM
கடற்கரை மணலில் நடப்போமா[/COLOR] ...கதைகதையாகப் படிப்போமா....

Bachelors Reach Beach to Teach....Love ! But learn only to eat தேங்கா மாங்கா பட்டாணி சுண்டல்!



GG was then an eligible bachelor boy who wanted to become a Casanova type beach lover boy....but mostly ending with love failure making him eat beach 'thengaa maangaa pattaani sundal' eventually!!

When love fails or love is lost in family...beach is the ultimate solace transforming the youth into philosophers!!
Part 1 : Sumaithaangi....whence GG had to sacrifice love and to become the torch bearer for his family he goes to the edge of dejection...result...he teaches us the premises of life and the role of man as how to live even without love!!

https://www.youtube.com/watch?v=6Eg20JQwGYY

காதல் மன்னரின் நோதல் நிலை பொறுக்காத கலைநிலவு ஆறுதலுக்காக நாகேஷின் வழிகாட்டுதலில் விற்கிறார் தேங்கா மாங்கா பட்டாணி சுண்டல் !
இதுவே பீச் தேசிய கீதம் !!

https://www.youtube.com/watch?v=4IylB3TuS8Q

By Sivaji Senthil

Gopal.s
30th May 2016, 07:44 AM
ரவி-பாரதி ,இணை அழகோ அழகு. இரண்டு இளமை அழகுகள் இணைந்தால் வாலிப விருந்துதானே?

https://www.youtube.com/watch?v=L-zfwdlVW4k

இந்த இணையை பார்த்தாலே தேடி வரும் தெய்வ சுகம். பிறகென்ன ஒத்தையடி பாதையிலே அத்தை மகளை தேடித்தானே போவோம்?

https://www.youtube.com/watch?v=_JriOjGI9tM

https://www.youtube.com/watch?v=qzNioUyHYxc

வெள்ளி முத்துக்கள் நடனமாடும் தென்றல் இளங்காற்று தாலாட்ட சுண்டல் விற்றவர் கடற்கரையில் நீச்சல் அழகிகளுடன் கடலை போடும் காட்சி.

https://www.youtube.com/watch?v=FSVDrTsMvBI

இதுதான் இன்ப அதிர்ச்சியா ? ஒரு மரத்தில் குடியிருந்த சொந்த மாமனின் பெண்ணை, போட்டால் தெரியும் போடு என்று போட்டு புது வீட்டில் பொன்னான நேரத்தில் குடியேறுகிறார்.

https://www.youtube.com/watch?v=GmMxsMBy-Nw

Gopal.s
3rd June 2016, 09:01 AM
ரவியின் சோலோ பாடல்கள், அனாவசிய தற்பெருமை, அரசியல் ,சோகம்,அலட்டல் இல்லாத இளமை உற்சாகம். திலகங்களின் சோலோ பாடல்களால் விஷ ஜுரம் கண்டு ,உதறி கொண்டிருந்த இளைஞர்களுக்கு, ரவியின் சோலோ பாடல்கள் உற்சாக டானிக் ஆக மீட்சி தந்தது 60களின் பிற்பகுதியில்.இதை கேட்டாலே இன்றும் துள்ளி எழுவோம் .


காதலிக்க நேரமில்லாத இளைஞரின் பொன்னான கைகளை புண்ணாக்கி, மகிழ்ச்சி பெருக்கினால் இதயம் பொங்கி ,சிரித்து மகிழ்ந்து ரசிகர்களின் இதயம் புண்ணானதே .

https://www.youtube.com/watch?v=D7Fq6jzTs6Q


குமரி பெண்களின் கொட்டத்தை அடக்க கோட்டையில் புகுந்து எச்சரிக்கும் துடிக்கும் இளமை.அடடா ,இதை ரசிக்காதவன் நரகத்தில் வாழ கடவதாக.
https://www.youtube.com/watch?v=PRmbaCmZSK8


அடபாதங்களே கல்லு பட்டு மண்ணு பட்டு நோகாமல் , நான்தான் காக்க உள்ளேனே என்று வண்ண வெள்ளிவிழா நாயகனின் அழைப்பிலே ,பாதங்களா, இதயங்களும் கல்லு பட்டு மண்ணு பட்டு துடிக்காமல்,இளமை கொள்ளுமே.

https://www.youtube.com/watch?v=nIS5yGWR6KY


கண்ணுக்கு தெரியாதா,பெண்களுக்கு புரியாதா, ரவி என்ன வேஷத்தில் வந்தாலும் ,கல்லூரி பெண்களின் மயக்கம் காட்டி கொடுத்து விடாதா பேரழகு காளையனை.

https://www.youtube.com/watch?v=DOTiyjWxuYk


மணமகள் தேவை நல்ல மணமகள் தேவை,இந்த ஆணழகன் ஒருவனுக்கு ,அரும்பு மீசை காரனுக்கு.(விமலா,ஷீலாவுக்கு தெரியாமல்)மணமகள் கிடைத்த பின் வாலிப விருந்துதானே?

https://www.youtube.com/watch?v=pa9hNx_976o

Gopal.s
3rd June 2016, 09:18 AM
//Gopalji,

I am eagerly looking forward to the songs of 'Selviyin Selvan' 1968 - Ravichandran and Vijayakumari. It has beautiful songs like 'Konjava Konja Neyram', 'Naan Unggalai Keytkindreyn'. I can't recollect the other two songs which were in the record. For some strange reasons this film and its songs are not given prominence. Hope you will highlight about this film in your usual inimitable style. Regards. //

Dear Mahendraraj anna,

Even I am very keen to search and retrieve these songs from selviyin selvan. For some strange reasons ,this movie and songs are not traceable. K.V.M sirs ever reliable assistant Pugazhenthi did music for only two movies in Tamil. One is selviyin selvan other is Guru Dhakshinai. Konjava konja neram, Pennukku pennu ennadi,Naan ungalai ketkiren are fairly known songs. It is a Debut for Mohan Gandhiraman but due to mis casting (Ravi-Vijayakumari My God) this movie failed to draw the deserved attention. Ravi performance in some scenes are fabulous but not much takers for this reasonably good Film.

RAGHAVENDRA
3rd June 2016, 01:07 PM
அருமையான பாடல்.. ஆனால்...

அக்காவும் தம்பியும் டூயட் ஆடுவதைப் போல....படமெடுத்தால்.. எப்படி சார் ஜனங்க தியேட்டருக்கு வந்திருப்பாங்க...

வா அந்த உலகத்தின் ஒரு பக்கம் இங்கே... என்று ரவி அழைக்க...

போ அந்த உலகத்தின் மறு பக்கம் அங்கே.. என்று ஜனங்கள் துரத்தி விட்டார்கள்...

ஹீரோயின் மட்டும் மாற்றி யிருந்தால் இந்தப் படம் அட்டகாசமாகப் பின்னியிருக்கும்...

https://www.youtube.com/watch?v=0tKctmioKX4

அதே ஓடும் நதி படத்தில் சூப்பர் பாடல்... சூப்பர் நடனம்...

https://www.youtube.com/watch?v=DyqNnDKWTjE

mahendra raj
4th June 2016, 10:57 AM
Thanks Gopali - looking forward eagerly!

Gopal.s
5th June 2016, 09:05 AM
எஸ்.பீ.பாலசுப்ரமணியம் பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

முதல் முதல் கலை நிலவுக்கு ,பாடும் நிலாவின்
ஆரம்பம் .

https://www.youtube.com/watch?v=hotr2MsnbLQ

பொட்டு வைத்த முகத்தோடு சேர்ந்து வெளியான ரெட்டை சகோதரன்.எம்.எஸ்.வியின் சிஷ்ய நண்பர் ,கலை நிலவுக்கும் பாடும் நிலவுக்கும் தந்த அதிசய பரிசு.

https://www.youtube.com/watch?v=BAlryz7Jl2Q

கலை நிலவு கதாநாயகன் . இயக்குனர் சிகரத்தின் முதல் வண்ணம்.அழகனும் ,அழகியும் மைனாக்களாக .

https://www.youtube.com/watch?v=fOen-ZcPRAY

Gopal.s
6th June 2016, 09:47 AM
இளைஞர்கள் மாற தொடங்கிய காலம். பழங்கால மூட தனங்களை திராவிடம் (எந்த காரணங்களுக்காக இருப்பினும்)முறியடிக்க, ஆங்கில படங்கள் counter culture என்பதை நிறுத்தி,என்ன காரணங்களாலோ வெறுப்புற்று இலக்கின்றி இருந்த அமெரிக்க இளைஞர்களை ஹிப்பிகளாக்கி தள்ள (வியட்நாம் போரும் ஒரு காரணம்) ,இந்திய ஆண்கள் கல்லூரிகளை எட்டி பார்த்தல் அதிகரிக்க, யுவதிகளும் தொடர, ஹிந்தி படங்களில் ஷம்மி போன்றோர் திலிப்-ராஜ்-தேவ் அனைவரையும் விழுங்கி தலையை ஆட்டி ,ரசிகர்களை பைத்தியமாக்க ,தமிழக இளைஞர்கள் பாவம்.

அப்பாவி தமிழ் இளைஞர்கள் ,பொறுப்பற்ற பெற்றோரால் சுமத்த பட்ட பொறுப்புகள் ஒரு புறம் (சொத்தும் ஒன்றும் தேறாது), பிற்பட்ட கலாசார மதிப்பீட்டில் ,செக்கு மாடுகளாய் உழன்று,பெண்களை
பார்ப்பதோ,பேசுவதோ பாவம் என்று பொய் கலாசார சுமைகள் என்று வெறுப்புற்றிருந்தோம்.

தமிழ் சினிமாக்களோ கேட்கவே வேண்டாம். ஒரு புறம் சோகம்,அதீத குடும்ப சுமை,அங்கங்கள் இழப்பு என்று ஒரு புறம், இன்னொரு புறம் நேர்மையற்ற தற்பெருமை,போர் அடிக்கும் பிரச்சாரம், பொய் நீதிகள் , முதுமை என்று மற்றொரு புறம் . ஹிந்தி படங்கள்
பார்க்கையில் பொறாமையாக இருக்கும். முன்னேறி கொண்டிருந்த சிலர் முதலுக்கே மோசம் ரகம்.(முத்துராமன்,ஏ.வீ.எம்.ராஜன்,மெர்சி ஹோம் )

இந்நிலையில் ரவி சந்திரன் வருகையை பார்க்க வேண்டும்.10 முதல் 25 வயது படித்த ,படித்து கொண்டிருந்த இளைஞ,இளைஞிகளின் ஆறுதல்.சிவாஜியை ஒத்த ஸ்டைல், அழகு, இன்னொரு புறத்திலிருந்து entertainment quotient மட்டும் (குமரிப்பெண் ராமண்ணா உபயம்)எடுத்து, அதுவரை நாம் பார்க்காத liberated ,uninhibited execution .அதுதான் ரவி. இந்த திரியை இவ்வளவு ஈடுபாட்டோடு நான் செலுத்தும் அளவு உத்வேகம் பெற அந்த பதின்ம பருவத்தில் பெற்ற உற்சாகம்,புதுமை,கட்டற்ற இளமை துடிப்பு இவையே உந்து சக்தி.

ஷம்மியை பற்றி வட இந்தியர் பேசும் போது அவர் நடிப்பு திறனை குறிப்பதில்லை. அது தேவையும் இல்லை. உலகிலேயே ஒருவனே என உன்னதமான திறன் பெற்ற நடிகரை வைத்து நாம் அப்போது எடுத்தது பழனியும்,அன்பு கரங்களும் தானே?அது போல ரவியை பற்றி நாம் பேசும் போது இளமை,அழகு, நளினம் (Grace ),நடன திறமை,சண்டை காட்சிகளில் காட்டும் சுறுசுறுப்பு, ஸ்டைல் தடையற்ற உற்சாக சக்தி இவைகளை குறிக்க வேண்டும்.

சிங்கபூரு மச்சான், ,யாரடி வந்தார், கண்ணுக்கு தெரியாதா,பொம்பள ஒருத்தி,என்னடி ஆட்டம், ஜாவ்ரே ஜாவ்,விஸ்வநாதன் வேலை வேணும்,ராஜா கண்ணு போகாதடி,ஆடு டூ டூ ,இரவில் வந்த குருவிகளா,ஒத்தையடி பாதையிலே,நான் போட்டால் தெரியும் போடு ,வாலிப விருந்து,மணமகன் தேவை,தங்க சலங்கை,வாடா மச்சான், என்று பாருங்கள்.

ஒரு நடன பாங்கும்,ஒருங்கமைவும் கெடாமல் சுதந்திர வெளிப்பாடு,வேகம், உற்சாகம்,எதிர்பாராத கடின நடன வெளியீடு,என்று பின்னும் போது நமக்கு இளம் சிறகுகள் முளைத்து விட்ட உணர்வு.

இதை பின்னால் வந்த ரஜினி,கமல் கூட தர முடிந்ததில்லை.

தயாரிப்பாளருடன் ஒத்துழைக்காமல்,உடலை பராமரியாமல்,strategy இல்லாமல் கண்ட படி நடித்து,குடித்து, அரசியலில் பொடித்து,தடித்து தானே தனக்கு வெடி வைத்தவரின் பிற்கால பிரபல்யத்தை ஆராயாமல், அவர் உற்சாகமாக இருந்த நாட்களின் 1964 முதல் 1972 வரை பரவச உணர்வை சுகிப்போமே? அந்த நாட்களுக்கு சென்று சுவைத்து மீள்வோமே?

வண்ண வெள்ளிவிழா அழகனின் திரிக்கு வாருங்கள் ,எண்ணங்களை ,படங்களை,காட்சிகளை பகிருங்கள்.

Gopal.s
14th June 2016, 09:17 AM
மெட்ராஸ் டு பாண்டிச்சேரி -1966

அதுவரை Road movies என்ற genre ,hollywood காரர்களுக்கே ரொம்ப அரிது.(You only live twice,Persons in Hiding (1939??),They live by night,Gun Crazy,Breathless(1960),The Sadist(1964) போன்ற ஒரு சில.

இந்திய அளவில் Road movies முன்னோடி ,மெட்ராஸ் டு பாண்டிச்சேரியே .

விவித பாரதி என்ற வினோத banner இல் பீம்சிங் மேற்பார்வையில் திருமலை மகாலிங்கம் இயக்கிய இந்த படம், suspense ,thrill ,நகைச்சுவை ,romance ,புதுமை அத்தனையும் கொண்டு A ,B ,C அனைத்து தரப்பினரையும் ஒரு சேர சந்தோஷ படுத்திய படம்.கதை-வசனம் -உசிலை த. சோமநாதன் (சபாஷ்). மகா வெற்றி பெற்ற ஆரம்ப ரவிச்சந்திரன் படங்களில் ஒன்று (B .S .ரவிச்சந்திரன் என்று டைட்டில் ) .கொஞ்சம் சரோஜாதேவி சாயலடிக்கும் கன்னட நடிகை கல்பனாவின் ஒரே தமிழ் படம்.அழகன் ரவியின் இணையில் ஜொலிப்பார். ரவியும்,வில்லன் கள்ளபார்ட் நடராஜனும் பின்னுவார்கள்.நாகேஷ்,கருணாநிதி,பக்கோடா காதர் என்று செம காமெடி அணிவகுப்பு. படம் போவதே தெரியாது.

படத்தின் மற்றுமொரு சிறப்பு மெல்லிசை மன்னர் டி.கே.ராமமூர்த்தி யின் இசை. பிரிந்த பின் இவரை ஆதரித்தவர்கள் முக்தா, மேகலா ,ராமண்ணா, பீம்சிங் போன்றோர். ராமமூர்த்தி ,கண்ணதாசனை தவிர்த்தே வந்தார். (இந்த படத்திற்கு 5 பாடலாசிரியர்கள்.)கண்ணதாசன் ,தன் சுயநல நோக்கிற்கு,இரட்டையர்களை பிரித்தார். (இதை பற்றி ஏற்கெனெவே, எழுதியுள்ளேன்)இந்த படத்தில் ஹாய் Friend dear க்கு என்ன, மலரை போன்ற,பயணம் எங்கே,என்ன என்ன நெஞ்சுக்குள்ளே என்ற ஜாலி பாடல்கள் ,ரவியின் நடன திறமை,சின்னி-சம்பத் choreography யில் மிளிரும்.

கிட்டத்தட்ட மூன்று மணிநேரம் அசைய விடாமல் அசத்திய இந்த வெற்றி படம் பாம்பே டு கோவா என்று எஸ்.ராமநாதன் (தமிழிலிருந்து ஹிந்தி ரீமேக் புகழ்,இருதுருவம் இயக்குனர்) ஹிந்தியில் எடுத்தார். அமிதாப் பின் ஆரம்ப கால சுமார் வெற்றி படங்களில் ஒன்று. (ஒரிஜினல் கிட்டே வர முடியவில்லை)இதில் பயணம் எங்கே பாடலின் ஹிந்தி பதிப்பான தேக்ஹா நா ஹைரெ சொஜானா என்ற பாடல் அந்த கால மாணவர்களின் விருப்பம். (ஜெய் ஜெய் சிவ சங்கர் இன்னொன்று.)

https://www.youtube.com/watch?v=OybNT11fIvg

https://www.youtube.com/watch?v=-Ju_SPo1tKQ

Gopal.s
16th June 2016, 08:03 AM
"அதே கண்கள்"-1967 (A Tribute to A.C.Thirulokchandar)

உங்களுக்குப்பிடித்த ரவிச்சந்திரனின் ஐந்து படங்களைச்சொல்லுங்கள் என்று யாரைக்கேட்டாலும் சரி. அவர்கள் சொல்லும் ஐந்து படங்களில் மற்ற படங்கள் இருக்கிறதோ இல்லையோ. கண்டிப்பாக ‘அதே கண்கள்’ படம் இருக்கும். திகில், மர்மம், பொழுதுபோக்கு, இனிய பாடல்கள், அற்புதமான வண்ண ஒளிப்பதிவு என அனைத்து அம்சங்களும் நிறைந்த படம். ஒரு பணக்காரரின் நான்கு வாரிசுகள். மூத்தவர் படம் துவங்கியதுமே கொல்லப்படுகிறார். கொன்றது யாராக இருக்கும் என்று துப்புத்துலங்கும்போதே அவரது மனைவியும் கொல்லப்படுகிறார். இறந்த மூத்தவருக்கு அடுத்தவர் அசோகன், அதற்கடுத்தவர் எஸ்.வி.ராமதாஸ். இவர்களோடு ஒட்டி உறவாடும் குடும்ப டாக்டர் பாலாஜி. இவர்களில் கொலையாளி யாராக இருக்கக்கூடும் என்று விசாரணை நடக்கிறது. வெள்ளை மஃப்ளரால் இறந்தவர்கள் கழுத்து நெறித்து கொல்லப்பட்டிருப்பதால், எப்போதும் வெள்ளை மஃப்ளர் அணிந்திருக்கும் பாலாஜியா?. இவர்களோடு வயதான துறவி போல தங்கியிருக்கும் கிழவனா?. மர்மம்... மர்மம்... போலீஸ் தலையைப் பிய்த்துக்கொள்கிறது.

வெளியூரில் படித்துக்கொண்டிருக்கும் (இறந்துபோன மூத்தவரின் மகள்) காஞ்சனா ஊருக்குத் திரும்பி வருகிறாள். தன் குடும்ப பங்களாவில் அடிக்கடி நடக்கும் கொலை அவரை பயமுறுத்துகிறது. அவர்களின் துணைக்கு வந்து தங்கியிருப்பதோடு, கொலையின் மர்மத்தையும், கொலையாளி யார் எனவும் கையும் களவுமாகப்பிடிக்கத் துடிக்கும் அவரது காதலன் ரவிச்சந்திரன். மர்மத்தைக் கண்டுபிடிக்கும் முன்பு ராமதாஸும் கொல்லப்படுகிறார். இதற்குமேலும் தாமதித்தால் இருப்பவர்களையும் இழக்க நேரிடும் என்று கதாநாயகன் ரவி முழுமூச்சாக இரவு முழுதும் விழித்திருக்க, யாரோ வரும் அரவம் கேட்டு நிமிர்ந்து பார்க்க, மாளிகையின் மேலிருக்கும் வட்ட வடிவ கண்ணாடி கதவு மெல்ல மூடுகிறது. அதிர்ந்து போய் மெல்ல மெல்ல ஒவ்வொரு இடமாகப் பார்த்துக்கொண்டு வரும்போது, ஓ.... அதோ... ரவியை முன்னே போகவிட்டு, கதவோடு ஒட்டியிருந்தவன மெல்ல கையில் மஃப்ளரோடு பின் தொடர... நம் முதுகுத்தண்டு சிலிர்க்கிறது. (அந்தக்காலத்தில் எம்.ஜி.ஆர். படம் பார்க்கும்போது, எதாவது குகைக்குள் அவர் நுழையும் சமயம் "அண்ணே போகாதீங்க. அங்கே நம்பியார் ஒளிஞ்சிருக்கான்" என்று ஆடியன்ஸ் கத்துவார்களாம். அதுபோல நமக்கும் இந்தக் காட்சியில் "ரவி, கொலைகாரன் பின்னாடியே வரான் பாருங்க" என்று கத்ததோன்றும்).

நாம் எதிர்பார்த்தபடியே இருவருக்கும் பயங்கர சண்டை. முகமூடியணிந்திருக்கும் கொலையாளியின் முகமூடியைக்கிழிக்க ரவி முயற்சிக்க, அவன் தப்பியோடி விடுவான். ஆனால் அவன் கண்கள் மட்டும் அவர் மனதில் அப்படியே பதிந்திருக்கும். விசாரணையின்போது அந்தக்கண்களை வைத்துக் கண்டுபிடிப்பதற்காக ஒவ்வொருவர் முகத்தையும் மறைத்து கண்களை மட்டும் பார்த்துக்கொண்டே வரும்போது, ஒருவன் கண்களில் மட்டும் கொலைவெறி. 'இதோ... அதே கண்கள்... அதே கண்கள்' என்று ரவி கத்த, கொலையாளி மாட்டிக்கொள்கிறான். அது யார் என்று தெரியும்போது நமக்கே அதிர்ச்சி. இத்தனை கொலைகளையும் செய்தவன் இவனா?. (எவன்?. படம் வந்து 42 வருடங்கள் ஆகியும் இன்னும் கூட பார்க்காதவர்கள் பலர் இருக்கக்கூடும். ஆகவே சஸ்பென்ஸ் அப்படியே இருக்கட்டும்).

ரவிச்சந்திரன், காஞ்சனா, அசோகன், பாலாஜி, நாகேஷ், ராமதாஸ், ஏ.கருணாநிதி, மாதவி, ஜி.சகுந்தலா, கீதாஞ்சலி, டைப்பிஸ்ட் கோபு, பி.டி.சம்பந்தம் என நட்சத்திரக்கூட்டத்துக்கு குறைவில்லை. போதாக்குறைக்கு காஞ்சனாவின் தோழிகள் பட்டாளம் வேறு. சஸ்பென்ஸைக்கூட்டுவதாக நினைத்துக்கொண்டு நடுராத்திரியில் கருணாநிதி, கையில் கத்தியோடு குரல் எழுப்புவதையெல்லாம் காட்டி குழப்ப வேண்டுமா?. அதுபோலவே நடுராத்திரியில் கீதாஞ்சலி பாடும் "வா அருகில் வா" பாட்டும் அதற்கான காட்சியும்.

படத்துக்கு திருஷ்டிப்பொட்டு எதுவும் கிடையாதா? இதோ இருக்கிறதே. நாகேஷின் மகாமட்டமான காமெடி. பெண்வேடம் போட்டுவரும் அவர் பின்னால் பி.டி.சம்பந்தம் அலைவதெல்லாம் ஒரு காமெடியா?. அருவருப்பு.

'அதே கண்கள்' என்ற படத்துக்கு ஏ.வி.எம்.செட்டியார், வேதாவை இசையமைப்பாளராக போட்டார். அந்தப்படம் ஒரு திகில் படமென்பதால் வேதாவைப்போட்டால் நன்றாக இருக்கும் என்று அவரது மகன்கள் விரும்பினர்.

அப்போது வேதாவை அழைத்து செட்டியார் சொன்னார்: "இங்க பாருப்பா, நீ மற்ற சில கம்பெனி படங்களுக்கு (மாடர்ன் தியேட்டர்ஸ் என்று சொல்லவில்லை) இந்திப்பட மெட்டுக்களை காப்பியடித்து பாட்டுப்போடுறேன்னு எனக்கு தெரியும். நானும் கேட்டிருக்கேன். ஆனால் என் படத்துக்கு அத்தனை பாடல்களுக்கும் நீ சொந்தமாகத்தான் மெட்டுப்போடனும். என் நிறுவனத்துக்கென்று ஒரு பேர் இருக்கு. நாளைக்கு ' என்ன செட்டியாருமா இப்படீ?'ன்னு யாரும் பேசிடக்கூடாது. என் பையன் களோட விருப்பத்தால்தான் உன்னைப்போட்டேன். சொந்தமாக மெட்டுப்போட முடியலைன்னா சொல்லிடு. நான் வேறு இசையமைப்பாளரை வச்சிக்கிறேன்" என்று கறாராக பேசி விட்டார்.

விளைவு..?. 'அதே கண்கள்' படத்துக்கு அத்தனை மெட்டுக்களும் சொந்தமாகவே போட்டார் வேதா. அத்தனையும் SUPER HIT ஆயின. (இந்த விவரம் ஏ.வி.எம்.குமரன் ஒரு TV பேட்டியின்போது சொன்னது).

முதல் பாடல், காஞ்சனாவும் தோழிகளும் குடிசைப்பகுதியை சீரமைக்கும்போது பாடும் "பூம் பூம்பூம் மாட்டுக்காரன் தெருவில் வந்தான்டி" பாடலில் காஞ்சனா குழுவினர் கஷ்டப்பட்டு ஆடும் ஆட்டத்தை விட நம்மைக்கவர்வது, மாட்டுக்காரன் சின்னச்சின்ன அசைவுகளுடன் அசால்டாக ஆடும் ஆட்டம்தான். இப்பாடலை P.சுசீலா பாடியிருப்பார்.

கிளப்'பில் காஞ்சனா கோஷ்டியை டீஸ் செய்து ரவி (TMS) பாடும் "கண்ணுக்குத் தெரியாதா" பாடல், வேகமான அசைவுகளுடன் கூடிய ரவிச்சந்திரன் பிராண்ட்.

ரவி & நாகேஷ் பாடும் "பொம்பளை ஒருத்தி இருந்தாளாம்" பாடலில், நாகேஷ் மாடிப்படிகளில் படுவேகமாக, அதே சமயம் ரிதம் தவறாமல் இறங்கி வரும் காட்சி பிரபுதேவா, விஜய், சிம்பு காலத்திலும் கூட நமக்கு ஆச்சரியமூட்டுகிறது.

பிருந்தாவனம் கார்டனில் படமாக்கப்பட்ட "ஓ...ஓ... எத்தனை அழகு இருபது வயதினிலே" பாடல் வேதாவின் திறமைக்கு ஒரு எடுத்துக்காட்டு. அதிலும் குறிப்பாக துவக்கத்தில் வரும் அந்த ட்ரம்பெட் இசை அட்டகாசமான துவக்கம்.

"வா அருகில் வா" பாடல் யார் நீ படத்தில் வரும் 'நானே வருவேன்' பாடலை நினைவுபடுத்தும். கடற்கரையில் கீதாஞ்சலி நீச்சல் உடையில் பாடியாட அசோகன் ரசித்துக்கொண்டிருக்கும் "என்னென்னவோ நான் நினைத்தேன் நினைத்தேன் சொல்ல வார்த்தையில்லையே" பாடல், அதிகம் பாப்புலராகாத, அதே சமயம் அழகான பாடல். ஒளிப்பதிவாளருக்கு ஸ்பெஷல் அப்ளாஸ்.

திகில் படத்துக்கேற்ற திகில் செட். இந்திப்படத்துக்காகப் போடப்பட்ட இந்த செட்டைப் பயன்படுத்தி ஒரு தமிழ்ப்படமும் எடுக்க வேண்டும் என ஏ.வி.எம். செட்டியார் சொன்னபோது, இந்த செட்டுக்கு வேறெந்த கதையையும் விட திகில், மர்மம் நிறைந்த கதைதான் ‘ஸுட்’ ஆகுமென் எல்லோரும் அபிப்ராயம் சொல்ல அதன்பின்னரே இந்தக்கதையை செட்டியார் படமாக்கத்துணிந்தாராம்.

A.C..திருலோக்சந்தர் இயக்கிய 'அதே கண்கள்' படம் (உதவி இயக்குனர் SP.முத்துராமன்) பட்டிதொட்டியெங்கும் பட்டையைக்கிளப்பி, 1967-ம் ஆண்டின் மிகப்பெரிய வெற்றிப்படங்களில் ஒன்றாக அமைந்தது.

By Shardha.

Gopal.s
16th June 2016, 11:46 AM
http://tamil.filmibeat.com/news/ravichandran-s-grand-daughter-tanya-makes-her-debut-tamil-040573.html

Gopal.s
16th June 2016, 11:47 AM
'காதலிக்க நேரமில்லை' ரவிச்சந்திரன் பேத்தியை அறிமுகம் செய்யும் மிஷ்கின்! Posted by: Manjula Published: Wednesday, June 15, 2016, 15:33 [IST]

சென்னை:பழம்பெரும் நடிகர் ரவிச்சந்திரனின் பேத்தி தான்யா இயக்குநர் மிஷ்கின் படத்தின் மூலம் தமிழில் நாயகியாக அறிமுகமாகிறார். 'காதலிக்க நேரமில்லை' படத்தில் அறிமுகமாகி தமிழ் சினிமாவை ஒரு கலக்குக் கலக்கியவர் ரவிச்சந்திரன். இவரது பேத்தி தான்யா தற்போது மாடலிங் செய்து வருகிறார். இந்நிலையில் தான்யாவை ஒரு புகைப்படத்தில் பார்த்த மிஷ்கின் தன்னுடைய அடுத்த படத்தில் அவரை ஹீரோயினாக ஒப்பந்தம் செய்திருக்கிறார். மிஷ்கின் நடித்து வரும் சவரக்கத்தி படத்திற்குப் பின் விஷாலை வைத்து துப்பறிவாளன் படத்தை இயக்குகிறார். இந்த 2 படங்களுக்குப் பின் தான்யா நடிக்கும் புதிய படத்தை அவர் இயக்கவுள்ளார். நாயகன், தொழில்நுட்பக் கலைஞர்கள் தேர்வு முடிந்தவுடன் இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று கூறுகின்றனர். ஆக்ஷனை மையமாக வைத்து உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு இந்த வருடத்தின் இறுதியில் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தாத்தா போல பேத்தியும் தமிழ் சினிமாவில் தடம் பதிப்பாரா? என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.

Gopal.s
16th August 2016, 11:32 AM
ரவியின்(இரு வேடங்கள்) படங்களில் சுவாரஸ்யமான படங்களில் ஒன்று பணக்கார பிள்ளை. என் நண்பர் மகேந்திரன் கதை,கே .ஆர்.பாலன் தயாரிப்பு. செம வெற்றி படம். இரட்டை நாயகியர்.

ரவி அரசியல் என்ற படு குழியில் தேவையில்லாமல் நேரடியாக
விழுந்த படம். நமது அரசு,நமது நாடு என்ற திராவிட முழக்க பாடல்.

இரட்டையரில் ஒரு நாயகி ஜோதி லட்சுமி.

பட்டம் விட்டது போலெ.டி.எம்.எஸ் -எல்.ஆர்.ஈ .சுப்பையா நாய்டு இசை.

https://www.youtube.com/watch?v=Pdj8wXyPJRI

Gopal.s
19th August 2016, 08:08 AM
கலை நிலவு' ரவிச்சந்திரன்(Thanks Sardhaji for Good Start )

இன்றைக்கு சுமார் நாற்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு ஒருவர் திரையுலகில் நுழைவது என்பது அவ்வளவு சாதாரணமான விஷயம் அல்ல. அதிலும் நடிப்புத்துறையில் நுழைவது பகீரதப் பிரயத்தனம். எடுத்த எடுப்பிலேயே கதாநாயகனாக அவதாரம் எடுத்துவிட முடியாது. பல படங்களில் சின்னசின்ன வேடங்களில் நடித்தபின்பு, சில ஆண்டுகள் கழித்தே ஆக முடியும். சிலருக்கு பல கருப்பு வெள்ளைப்படங்களில் நடித்த பின்பே கலர்ப்பட வாய்ப்புக்கள் கிடைக்கும். சிலருக்கு முத்லில் சில படங்கள் தோல்விகளைக்கண்ட பின்புதான் வெற்றிப்படங்கள் அமையும். சிலருக்கு முதலில் சிறிய இயக்குனர்களிடம் நடித்த பின்பே பெரிய இயக்குனர்கள் அறிமுகம் கிடைக்கும்.

முதல் படத்திலேயே கதாநாயகன்
முதல் படத்திலேயே பெரிய டைரக்டரின் இயக்கம்
முதல் படமே கண்ணைக்கவரும் வண்ணப்படம்
முதல் படமே 200 நாட்கள் ஓடிய மாபெரும் வெற்றிப்படம்

1964-ல் இவை யாவும் ஒருவருக்கு சாத்தியமானது. அவர்தான் 'கலை நிலவு' கலைமாமணி ரவிச்சந்திரன். (1952-ல் கலர்ப்படங்கள் வராதகாரணத்தால் மற்ற மூன்றும் சாத்தியமானவர் 'நடிகர்திலகம்' சிவாஜி கணேசன் அவர்கள்).

காதலிக்க நேரமில்லையில் நடிக்க நேர்ந்த சம்பவம் குறித்து ரவியே சமீபத்தில் தொலைக்காட்சியில் சொல்லியிருந்தார். "மலேசியாவிலிருந்து (அப்போது மலேயா) கப்பலில் சென்னை வந்து, தெரிந்தவர்கள் வீட்டில் தங்கியிருந்த நான், திருச்சிக்குச்செல்ல வேண்டிய ரயிலைத்தவற விட்டதால், வீடு திரும்ப நேர, மறுநாள் காலை என்னைச்சந்தித்த ஒளிப்பதிவாளர் பி.என்.சுந்தரம், ஸ்ரீதர் எடுக்கும் புதுப்படத்துக்கு புதுமுகம் தேடுவதாகசொல்லி என்னை அழைத்துப்போனார். மிகவும் ஒல்லியாக இருந்த நான், 'நமக்கெல்லாம் எங்கே சான்ஸ் கிடைக்கப்போகிறது' என்ற எண்ணத்தில் டைரக்டர் ஸ்ரீதர் முன்பாகவே சிகரெட்டும் கையுமாக அசால்ட்டாக இருக்க, என்னுடைய அந்த அலட்சிய போக்கே ஸ்ரீதருக்குப் பிடித்துப்போக என்னை தேர்ந்தெடுத்துவிட்டார்" என்று தான் திரைக்கு வர நேரந்த அனுபவத்தைச் சொல்லியிருந்தார்.

Gopal.s
31st August 2016, 08:42 AM
வரப்பிரசாதம் -1976

https://www.youtube.com/watch?v=fEXasWd3ol8


ரவியின் பிற்கால படங்களில் குறிப்பிட பட வேண்டிய படங்களில் ஒன்று. மாதங்கன் (காலம் வெல்லும் புகழ்) கதை -வசனத்தில் ,கே.சங்கரின் தம்பி கே.நாராயணன் இயக்கிய வெற்றி படைப்பு. ஜெயசித்ரா ஜோடியாக, விஜயகுமார் துணை நாயனாக நடித்தது.கோவர்தன் இசையில்(இளையராஜா துணை) கங்கை நதியோரம் மிக மிக பிரபலம்.


ஒரு குடும்ப பொழுது போக்கு திரில்லர் வகை விறுவிறுப்பான படைப்பு. ஒரு அசம்பாவித கொலையில் தன்னையும் ,தன்னை சார்ந்தவர்களையும் காக்க ,தன் நண்பன் சந்தர்ப்ப வசத்தால் மாட்டி கொண்டும் அவனை காக்க துணை போகாத நண்பனின் காதலி,பழி சுமந்து சிறையில் இருந்து தப்பிக்கும் நண்பனுக்கே விதிவசத்தால் மனைவியாகி (ஜட்ஜ் பெண் ),பழியை துடைத்து ,உண்மையை வெளிச்சத்துக்கு கொண்டு வரும் கதை.


ரவியை பற்றி சொல்லவே வேண்டாம். அமைதியான,இதமான,அளவான நடிப்பு. சற்றே முதிர்ந்த ,அழகிய தோற்றம் ,கனிந்த நடிப்பு திறனுடன், ஜெயசித்ரா போன்ற நல்ல நடிகையின் துணையுடன் நமக்கு full meal கிடைக்கும்.


மறைந்து வாழும் ,சந்தர்ப்ப வசத்தால் கணவனாகி விட்ட ,ரவியை காண வரும் ஜெயசித்ரா ,விரக்தியுடன் விலகும் கணவனை,தன்னுடைய உண்மை அன்பையும்,தன்னுடைய இறுக்கமான உணர்ச்சியையும் உணர்த்தி,கானகத்தில் இணையும் ஜோடிகளின் சோக-சுக கீதம் கங்கை நதியோரம். அற்புத சூழ்நிலை பாடல் மற்றும் இதமான ஜோடியின் நடிப்பு.

https://www.youtube.com/watch?v=vdy6TG6QSP0

Gopal.s
7th September 2016, 08:49 AM
மஞ்சள் குங்குமம்.-1973

ஒரு தரமான படம்.(மூலம் மலையாளம்) ரவி-ஷீலா தம்பதியினரின் சொந்த தயாரிப்பு.

"புகுந்த வீடு "புகழ் பட்டு (பட்டாபிராமன்)கிருஷ்ணன்-பஞ்சுவின் உறவினர் இயக்கம் ,சங்கர்-கணேஷ் இசையில் ரவி-ஷீலாவின் தரமான நடிப்பு இவை இருந்தும் பழைய மலையாள வாசனையால், குலவிளக்கு போலவே படம் கொஞ்சம் எடுபடாமல் போனது.

இன்று ஞாபக மிச்சமாக டி.எம்.எஸ் இந்த கோமாளி கட்டி வச்ச பாடலும்(ரவியின் trade mark அட்டகாச நடனம்),எஸ்.பீ.பீயின் என் காதல் கண்மணி (ஹீரோ செம ரொமான்டிக் மூட்,ஹீரோயின் வியாதி தீவிரத்தால் பாதி சாவில்) என்ற வித்தியாச களம் .

https://www.youtube.com/watch?v=TaYnSYKvYdc

https://www.youtube.com/watch?v=iGDLklzLT_Y

Gopal.s
21st September 2016, 07:57 AM
டில்லி மாப்பிள்ளை-1968.-

அந்த காலத்தில் வந்த தமிழ் படங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்டது. கொக்கரிக்கும் வில்லன்கள் கிடையாது.பரபரப்பு கிடையாது.கிச்சு கிச்சு காமெடி கிடையாது.சுத்தமான காதல் காட்சிகள். உயர்ந்த ஒரு கரு பொருள். சோசலிசம்,தொழிலாளர் உரிமை,எல்லா வேலையிலும் கண்ணியம்,சமத்துவம், என்று உரத்து சொல்லாமல் தணிந்து சொன்னது.

நாம் தேவன்(இயக்குனர்),மா.ரா, ரவிச்சந்திரன் ,வீ.கே.ஆர்(தயாரிப்பு),கே.வீ.எம் ஆகியோருக்கு கடன் பட்டுள்ளோம்.

இந்த படம் பார்க்க என்னை தூண்டியவை இரண்டு பாடல்கள். ஒன்று நம்பிள்க்கி சொல்றதை நிம்பிள்க்கி கேட்டுக்கோ என்ற டி.எம்.எஸ் இன் அட்டகாச ஈட்டி கார பாடல். மற்றது கஸல் பாணியிலான தத்துவ பாடல் ஆண்டவன் ஒரு நாள்.

இவற்றிற்கு என்ன சம்பந்தம் இருக்க முடியும்? ரவியின் அறிமுக காட்சியே அட்டகாசம். தொழிலாளர்களுக்குள் நடக்கும் மாறுவேட போட்டியில் ,இவர் புகுந்து அதகள ஈட்டிக்கார பாடல். இதில் உண்மை குறத்தி மனோரமா வந்து எல்லோரையும் குழப்புவது அட்டகாச படித்தவர்களின் நகைசுவை.

அப்பாவை மாற்ற முடியாத ரவி,உழைத்து சாப்பிட முடிவு செய்து போவது, வீ.கே.ஆர் பாத்திரம்,அவர் தங்கை பாத்திரம்,என்று எல்லாமே நல்ல பாத்திரங்கள்.

மேல் குறிப்பிட்ட பாடல்களை தவிர பாடாத பாடல் இது, மலை முடியின் பனி அழகு என்று மாமாவின் வித்தியாச மெலடி.ரவியின் பாத்திர பொறுப்புணர்ந்த அளவான செறிவான நடிப்பு.

படம் தேவையற்ற சுவாரஸ்யமற்ற காமெடி , தேவையற்ற நீளம், கூறல் (ஒரு கட்டத்தில் நகராமல் உட்கார்ந்து விடும்) இவை இந்த படத்தை சுமார் வெற்றி ஆக்கியது.

https://www.youtube.com/watch?v=QlV9MyoI5e0

Gopal.s
27th September 2016, 08:14 AM
ரோஷக்காரி என்னும் பெயரில் வந்த மதுரை திருமாறன் என்ற ஏழைகளின் கே.எஸ்.ஜீ (poor man 's K .S .G.)படத்தில் ரவிக்கு கொஞ்சம் எதிர்மறை பாத்திரம்.பிராதன நாயகன் அவரே.பாத்திரமறிந்து பரிமளிப்பார். பார்க்கவே அமர்க்களமாக இருக்கும். இந்த மாதிரி சாதா படங்களை ஸ்பெஷல் படமாக்கியது

ரவிசந்திரன் தனது பாணியில் இருந்து முற்றும் மாறுபட்டு ,கதாசிரியரின் எண்ணப் படி நடித்த படம். நீண்ட படம். நிறைய நாடகத்தனம். crude என்றும் Crass என்றும் உதறி தள்ளி விடலாம்.

அப்படி செய்ய முடியாமல் தடுக்கும் ஒரே விஷயம் ,ரவி சந்திரன்.ஆரம்பத்திலிருந்தே தன்னுடைய தேவைகள்,ஆசைகள் ,பிரதானங்கள் இவற்றை தெளிவாக வெளியிடுவதுடன்,இவரின் மாறும் தேவைகளை புரிந்து அனுசரிக்காமல் சுமையாக மாறும் சொந்தங்களிடம்,குடும்பத்தின் மருமகளாக மட்டும் செயல் படும் விஜயாவிடம், முரண் என்பதை விட,சண்டை என்பதை விட drift என்பதை நடிப்பால் உணர்த்துவார்.

ரவி வெறும் சண்டை,நடன நாயகனல்ல,ஆழமான nuance காட்டும் நடிப்பு சுரங்கம் என்பதையும் விளக்கியது. இவரின் மைனஸ் பாயிண்ட் குரலை இவர் சாதகமாக உபயோகிக்கவும் கற்றார்.

Gopal.s
29th September 2016, 07:50 AM
சிறு வயதில் எனக்கு இரண்டு பாடல்களின் மீது மகா ஈர்ப்பு. ஒன்று தாராபுரம் சுந்தர்ராஜன் பாடிய மாடி வீட்டு மாப்பிள்ளை நான்
மறக்கல்ல,இன்னொன்று சௌந்தரராஜன் பாடிய ஜியா ஜியா மஸ்ஸாஜி,. கண்ணை மூடி கொண்டு கே.வீ.எம் இசை என்று நம்பி கிடந்தேன்.இந்த படம் வெளியான பார்க்க முடியவில்லை.பிறகு 1973 இல் ஒரு கீத்து கொட்டகையில் (திருவிடைமருதூர் ஸ்ரீதரன்??)பார்த்த ஞாபகம்.

எனக்கு எப்போதுமே டைட்டில் பார்க்கும் வழக்கம் உண்டு. இந்த படம் மூலக்கதை சதாசிவ ப்ரம்மம் ,இயக்கம் சாரி என்று சைவ-வைணவ -ப்ரம்மன்களின் இணைப்பு.வசனம் ஏ.எல்.நாராயணன் என்று நினைவு.

இதில் surprise package ,,அமர தீபம்,மீண்ட சொர்க்கம் படங்களின் இசையமைப்பாளர் சலபதி ராவ் இசை. மேற்சொன்ன பாடல்களுடன் கேட்டு பார், பகலிலே என்று பல ஹிட் பாடல்கள்.

இதிலும் ரவி, டில்லி மாப்பிள்ளை போன்று மாறுவேட போட்டியில் முதல் அறிமுக காட்சி. ரவியின் மாமா(வீ.கே.ஆர்), நல்ல மனம் கொண்ட பணக்காரர் சுந்தர்ராஜன்,அவரின் வில்லி மனைவி, மனைவியின் வில்லி அண்ணன் , அந்த அண்ணனின் வில்ல பையன், நாயகனின் இறந்து விட்டதாக கருத படும் தங்கை வில்லனின் காதலி ,வீ.கே.ஆரின் வீட்டோட மாப்பிள்ளை நாகேஷ் (காமெடி ,நாயகனின் உதவி) மாடி வீட்டு வீட்டோட ஏழை மாப்பிள்ளை ரவி ,அவர்களுக்குள் மூட்டி விட வீட்டோட வில்லன்கள் என்று யூகிக்க கூடிய கதை மற்றும் சம்பவங்கள்.

இதை மீறி படத்தில் நம்மை கட்டி போடுவது ரவி. சுந்தர்ராஜனின் பேச்சை மதித்து ,பணத்தை மதிக்காவிட்டாலும்,உறவுகளை மதித்து,அவமானம்,பழி இவற்றை சுமந்தும் ஓடி விடாமல்,உறவுகளை விட்டு கொடுக்காமல் அணைத்து பாலன்ஸ் பண்ணும் பாத்திரம்.வில்லன்களை கலாய்க்க பட்டா கத்தி பக்கிரி என்ற மாறுவேடம்.

இதே மாதிரி வேடத்தை பலர் ஏற்றாலும், நம்மை ரவியை மட்டுமே ஏற்க வைத்தது , நிஜ இளமை,சுறுசுறுப்பு,அமெரிக்கை-அட்டகாசம் என்று கதையோடு பயணிக்கும் நடிப்பு, தன்னை பற்றி புகழ்ந்து இமேஜ் ஏற்றும் அம்சங்கள் இல்லாத தன்மை (நம்மை கடுப்படிக்கும் தற்புகழ்ச்சி இருக்கவே இருக்காது) இவையே ரவியை நாம் ஏற்று ,சராசரி படங்களிலும் நம்மை கட்டி போட்டன. இதனால் அப்போது action ஹீரோ நடிகர்களின் தன்மை கொண்ட படங்களையே ரவி பண்ணும் போதும் நமக்கு பிடித்தது.

Gopal.s
16th January 2017, 08:11 AM
மறைந்த கலைச்செல்வியும் ,கலையுலக இளவரசன், இளைஞர்களின் கலைநிலவு ரவியும் இணைந்து மோட்டார் சுந்தரம் பிள்ளை முதல், அவளுக்கு ஆயிரம் கண்கள் வரை சுமார் 11 படங்களில் இணை. ரவிக்கு சரியான இணை என்றால் பாரதி, காஞ்சனா தவிர்த்து காலை செல்வி தான். விஸ்வநாதன் இசையமைத்த இந்த பாடல் எந்த இலக்கணத்திலும் அடங்காது. டி.எம்.எஸ் -சுசீலா பாடிய விதமும் அப்படியே. பின்னணி இடையிசையும் அப்படியே. பொதுவாக காதல் பாடல்கள் உச்ச ஸ்தாயியில் துவங்காது .முழக்க பாடல்களே அவ்வாறு துவங்கும். காதலியை வரணும் வரணும் மகாராணி என்று வரவேற்பு முழக்கம். சுசீலா நடுவில் அஞ்சாதது பெண் என்பது என்பதை இரு வித வேறுபாட்டுடன் பாடி சரணத்திற்கு ஒரு மெருகு கொடுப்பதது அழகு.

ஜெயா ரவியுடன் இணையும் போது ஒரு உண்மையான அழகான இளமையான துடிப்பான இளைஞருடன் சேரும் ஒரு உண்மை ஈடுபாடு முகத்தில் தெரியும்.(இருவரும் ஸ்ரீரங்கம் வைஷ்ணவர்கள் )ரவி தனது ப்ராண்ட்மார்க் சரளத்துடன் அளவான பாடலுக்கேற்ற தளத்தில் தாளத்தில் வேகத்தில் மாயம் செய்ய ,ஜெயாவின் இசைவான தோதான அசைவுகள் அள்ளும்.

இதோ அந்த அற்புத பாடல் உங்கள் பார்வைக்கு (கௌரி கல்யாணம் 1966)

https://www.youtube.com/watch?v=SjTrGjj95YI

Gopal.s
16th January 2017, 08:25 AM
Doing exclusive Analysis on trend-setting by Ravi from 1964 to change the focus of Tamil Films.

Gopal.s
30th March 2017, 09:57 AM
Tamil Actor Ravichandran Video Songs

Tamil Actor Ravichandran Video Songs

Ravichandran PhotosActor Ravichandran acted in Tamil films in leading roles in Tamil Movies from 1960s to 1970s. Ravichandran has also directed some films during his lifetime. He died at the aged of 71 from multiple organ failure on 25th of July 2011 at Apollo Hospital in Chennai.

We have a collection of actor Ravichandran’s Tamil Video songs for your entertainment at Tamilo.com

Athe Mugam From Naan Player 1 17/Dec/2015

Nee Pogum Idamellam Naanum - Idhaya Kamalam Player 1

Unnai Kaanaatha Kannum Kannalla - Idhaya Kamalam Player 1

Malargal Nanaindhana Paniyale From Idhaya Kamalam Player 1

Vandhal Ennodu From Naan Player 1

Pagalile Paarkavandadennu From Maadi Veetu Mapillai Player 1

Kettu Paar From Maadi Veetu Mapillai Player 1

Maanikka Magudam From Panakkara Pillai Player 1

Thottatha Thodathatha From Ninaivil Nindraval Player 1

10 Enna Theriyum From Ninaivil Nindraval Player 1

Pattam Vittathu Pole From Panakkara Pillai Player 1

Eppothu Naadagathai Fron Panakkara Pillai Player 1

Parisam Potta From Panakkara Pillai Player 1

RAGHAVENDRA
8th April 2017, 11:19 AM
நீயும் நானும் ... இப்படத்தைப் பற்றி கோபால் எழுத வேண்டுகிறேன்.

கதை சாதாரண கதையே. கிராமத்து இளைஞன் ரவி சந்தர்ப்ப வசத்தால் பட்டணத்துக்குப் போக அங்கே உருவ ஒற்றுமையால் இன்னொருவன் வீட்டிற்கு இவன் போக நேரிடுகிறது. அங்கே அவன் சநதிக்கும் பிரச்சினைகளே கதை.

மெல்லிசை மன்னரின் இசையில் எல்.ஆர்.ஈஸ்வரி பாடிய யாரடி வந்தார் என்றும் நெஞ்சை விட்டகலாத இனிய பாடல்.

Gopal.s
19th July 2017, 11:04 AM
ரவிக்கு, பாரதி,காஞ்சனா,ஜெயலலிதா அடுத்து சிறந்த இணை லதா.
இவர்கள் நடித்த பாடல்கள் இளமையில் என்னை சூடேற்றியவை.

நல்ல இணை. பாருங்களேன்.

https://www.youtube.com/watch?v=_FMaWM_m5P4

https://www.youtube.com/watch?v=xTjqNQ-9dFg

RAGHAVENDRA
10th August 2018, 01:12 PM
https://scontent.fmaa3-1.fna.fbcdn.net/v/t1.0-9/38829238_1907788762605120_3600692945067442176_n.jp g?_nc_cat=0&oh=bd141727af8dda5f4da967da2924dc15&oe=5BF7012A