PDA

View Full Version : maramORsavam (Pavalamani Pragasam)



RR
30th November 2009, 02:45 PM
[tscii:25c58b7e5d]ÁçÁ¡üºÅõ

- ÀÅÇÁ½¢ À¢Ã¸¡ºõ


Á¡Ú¸¢ýÈ ÀÕÅí¸û
Á¡üÚ¸¢ýÈ Åñ½í¸û
ÁÃí¸Ç¢ø ź¢Âí¸û
ÁÂì̸¢ýÈ §¸¡Äí¸û
Á¡üÈÁ¢øÄ¡ ¿¢Â¾¢¸û
Áó¾¢Ã째¡Ä¢ý ¿¢¸ú׸û
ÓÊ¡¾ źó¾í¸û

Á½ì¸¢ýÈ ¸üÀ¨É¸û
ÁÄÕ¸¢ýÈ ¯Å¨Á¸û:

ÁÕ¾¡½¢ º¢¸ôÒ¸û
Á¸Ãó¾ Áïºû¸û
ÁñÁ¸Ç¢ý ´ôÀ¨É¸û
Á¢ýÛ¸¢ýÈ ¦ºó¾Æø¸û
Á½¢Â¡É ¿ÅÃò¾¢Éí¸û
Á¡½¢ì¸ ¨ÅÞâÂí¸û
Áø¾ò¾¢ý ÁÚÀì¸í¸û

Áí¨¸Ââý ¸É׸û
Á󾸡º ¿¢¨É׸û
Á¡Õ¾Á¡Ìõ º¡ÁÃí¸û
Á¡¨Ä Å¡É ¸¡ðº¢¸û
Á¡Â¡§Ä¡¸ ¾Ã¢ºÉí¸û
ÁÉõ ÅÕÎõ Á¢ĢÈ̸û
¦ÁøÄò ¦¾¡Îõ ¾Ç¢÷ Å¢Ãø¸û

Á¨Æì ¸¡Ä º¡Ãø¸û
§Á¡¸ÉÁ¡É á¸í¸û
¦ÁÇÉ ¿¡¼¸í¸û
¦Á¡Æ¢Â¢øÄ¡ ¸¡Å¢Âí¸û
Áí¸¡¾ µÅ¢Âí¸û
ÁÃÀ¢ý «¾¢ºÂí¸û
Áñ½¢ø §¾Å¾Õì¸û

Á¸¢ú¢ý øº¢Âí¸û
¦Á¡ð¼Å¢Øõ ¸Å÷¸û
Á¨¼ ¾¢Èó¾ ¦ÅûÇí¸û
Á¡º¢øÄ¡ ¸Ç¢ôÒ¸û
Áð¼üÈ ÀÃźí¸û
ÁÉÍìÌû §ÀâýÀí¸û
ÁÕó¾¡Ìõ Å¢Õóиû

Á£ñÎõ ´Õ þ¨ÄÔ¾¢÷ ¸¡Äõ
Á£ðʼ ¸¡ò¾¢ÕìÌõ ¿ÃõÒ¸û
[/tscii:25c58b7e5d]

pavalamani pragasam
3rd December 2009, 09:09 AM
unicode version

மரமோற்சவம்

மாறுகின்ற பருவங்கள்
மாற்றுகின்ற வண்ணங்கள்
மரங்களில் வசியங்கள்
மயக்குகின்ற கோலங்கள்
மாற்றமில்லா நியதிகள்
மந்திரக்கோலின் நிகழ்வுகள்
முடியாத வசந்தங்கள்

மணக்கின்ற கற்பனைகள்
மலருகின்ற உவமைகள்:

மருதாணி சிகப்புகள்
மகரந்த மஞ்சள்கள்
மண்மகளின் ஒப்பனைகள்
மின்னுகின்ற செந்தழல்கள்
மணியான நவரத்தினங்கள்
மாணிக்க வைடூரியங்கள்
மரகதத்தின் மறுபக்கங்கள்

மங்கையரின் கனவுகள்
மந்தகாச நினைவுகள்
மாருதமாகும் சாமரங்கள்
மாலை வான காட்சிகள்
மாயாலோக தரிசனங்கள்
மனம் வருடும் மயிலிறகுகள்
மெல்லத் தொடும் தளிர் விரல்கள்

மழைக் கால சாரல்கள்
மோகனமான ராகங்கள்
மெளன நாடகங்கள்
மொழியில்லா காவியங்கள்
மங்காத ஓவியங்கள்
மரபின் அதிசயங்கள்
மண்ணில் தேவதருக்கள்

மகிழ்ச்சியின் ரகசியங்கள்
மொட்டவிழும் கவர்ச்சிகள்
மடை திறந்த வெள்ளங்கள்
மாசில்லா களிப்புகள்
மட்டற்ற பரவசங்கள்
மனசுக்குள் பேரின்பங்கள்
மருந்தாகும் விருந்துகள்

மீண்டும் ஒரு இலையுதிர் காலம்
மீட்டிட காத்திருக்கும் நரம்புகள்

disk.box
4th December 2009, 03:57 PM
ஒவ்வொரு வரியிலும் ரசனை ரசனை ரசனை.
"இந்த வரி மிக அருமை", "இவ்வார்த்தை அதைவிட அழகு" என பிரித்தெடுக்க முடியவில்லை. அனைத்தும் அற்புதம்.

புல்வெளிகளையும் வயற்பரப்புகளையும் ஆடை என்று சொல்லி சலித்துவிட்டனர். ஆடை அழகோ அழகுதான். ஆயினும் ஒரு ச்ச்ச்சின்ன மூக்குத்தி அல்லது ஊஞ்சலாடும் ஜிமிக்கி மேலும் அழகாக்கிவிடுவதில்லையா?

"மண்மகளின் ஒப்பனைகள்" :clap:

பச்சைக்கு மாற்று? அடிப்படை நிறமாயிற்றே!
பசுமையைத் திருப்பிப் பார்த்தாலும் எழில்பூக்கும் பசுமையேதானே காட்சியைக் குளிரவைக்கும்.

"மரகதத்தின் மறுபக்கம்" :clap:

மீட்டிடக் காத்திருக்கும் 'தந்திகள்' என்றிருப்பின் அழகாக இருந்திருக்குமோ என்று முதல் முறை படித்தபோது நினைத்தேன்.
மரம்,பசுமை,இலை இவற்றோடு தொடர்பில்லாததாக "தந்திகள்" இருந்திருக்கும். "மீட்டிடக் காத்திருக்கும் நரம்புகள்" மிகச் சரியான தேர்வு.

மரங்கள் மட்டுமே மிகுந்திருந்த காலங்களில் தரவரிசையில் கீழிலும் கீழாக வைத்தே பாடிவிட்டார்கள்.
("மரம்போல்வர் மக்கட் பண்பில்லாதவர்", "குறிப்பறிய மாட்டாதவன் நன்மரம்")

தங்கள் கவியோற்சவம் மழைக்கு ஏங்கும் நம் மர நாட்களுக்கானது. :thumbsup:

படைத்தமைக்கும் பகிர்ந்தமைக்கும் நன்றி & நன்றி. :)

pavalamani pragasam
4th December 2009, 07:57 PM
அமெரிக்காவிலிருந்து மகள் அனுப்பிய புகைப்படங்களைப் பார்த்து சொக்கிப் போய் பரவசமாய் எழுதியதை இவ்வளவு அருமையாக விமரிசித்த தங்கள் ரசனை என்னை மகிழ்ச்சியில் திக்கு முக்காட வைக்கிறது! :D

ananth_v
5th December 2009, 09:59 PM
[tscii:3df0ddc48f]அற்புதமான கவிதை. முன்னம் பாராட்டியவர் சொன்னது போல ஒவ்வொரு வரியும் அமுதத் துளி.

‘"மரகதத்தின் மறுபக்கம்" பொருள் சரியாகப் பிடிபடவில்லை.
இலையுதிர் காலத்தில் வட அமெரிக்க மரங்களில் காணும் வண்ண ஜாலங்களில் ஒன்றா?

அனந்த்
[/tscii:3df0ddc48f]

pavalamani pragasam
6th December 2009, 09:34 AM
மிக்க நன்றி, ஆனந்த்! இலைகளின் நிறம் பொதுவாக பச்சை- இங்கே மரகதம் உருவகம், பச்சையின் மறுபக்கத்தில் இத்தனை வண்ணங்கள் ஒளிந்துள்ளனவே என்ற வியப்பை குறிக்க உதித்த தொடர் 'மரகதத்தின் மறுபக்கம்'.