PDA

View Full Version : ungal OOr - endha oor?



jaiganes
30th January 2010, 04:06 AM
sondha oorai patri sollikkonde pogalaam
ungal Ooraippatri konjam sollungaLEn?

naan pirandhadhu punniyam siridhum kalavaa sennai.
naan pizhaippu thaedi pona oor bengaluru ippodhu pizhaiththukkondiruppadhu bentonville (USA).

enakku idhil pidiththa oor - pazhaya madras. indrirukkum madras(chennai) idam pidikkaadhadhu pazhayadhai sattena marandhu pudhumaikku thaavi kudhiththu oduvadhu. irundhaalum poookkadai station pinnaal kandha saami koyil arugil uLLa maaradha chennai enakku rombavum pidikkum.

mylapore Karpagaambaal mess enakku migavum pidiththa sitrundi vidudhi.
purasai walkam doveton cafeum pinnal sendral varum veppery saalaigalum adhan sandhu bondhugalum innum manadhil padhindhu iruppavai.
perambur maadha kovilum, adhan aruge ulla signalil veetrirukkum naramuga vinayagarum venus theatarum adhan arugil ulla meer sajjadh usen poongavum visiththiramaana kalavai - adhan maatram enakku pidikkum

moolakkadaikku peramburil irundhu sellum valaindhu pogum saalayum Simpson aalai ottiyamaindha pottal kaadukalum adhil cricket aadiya ninaivugalum pasumayaanavai - indru avai eppadi irukkindrana enbadhu ennul oru kelviyaanavai.
En ooraippatri indru enakku yaarenum sollungalen kaettukkolgiren.

pavalamani pragasam
30th January 2010, 08:58 AM
சொக்கநாதர் கைபிடித்த பாண்டிய ராணி மீனாட்சி கோவில் கட்டி குடியிருக்கும் தாமரை வடிவ அமைப்பில் மைய்யமாயிருந்து எட்டு திசையிலும் விரிந்து பரந்து கொண்டிருக்கும் மதுரை எனது சொந்த ஊர்-சொர்க்கமே என்றாலும் அது நம்ம ஊரை போல வருமான்னு பிறந்து வளர்ந்த ஊரை விட்டு திருமணமாகி கணவர் பணி நிமித்தமாய் பல ஊர் பார்த்துவிட்டு இறுதி மூச்சை விட இனிய இடமென தேர்வு செய்து வந்து சேர்ந்துவிட்ட மதுரையம்பதி சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மல்லியும் மருக்கொழுந்தும் மணக்கும் மரியாதையும் குசும்பும் கலந்த வெள்ளந்தியான மக்களை கொண்ட ஊர். பழைய பெருமைகளை புதிய சோதனைகளை மங்காத புகழை தாங்க முடியாத தடுமாற்றங்களை எழுதி மாளாது!

P_R
30th January 2010, 11:57 AM
எல்லூரும் சொல்லிடுவீர் தற்பெருமை இத்திரியில் - நங்கை
நல்லூரில் உதித்துலகம் உய்விக்க வந்தவன் நான்
வல்லூறாய் தேமதுர நகரிற்கே உடன்பெயர்ந்தேன்
கள்ளூறும் நினைவுளே அவ்வூரிலே யெனக்கு

நதியென்றே கொளப்பட்ட கிருதமாலின் கரைதனிலே
குதித்தோடி விளையாடி விழுப்புண்கள் பெறப்பட்ட
பதிவேற்கும் பருவமுதல் பதின்பருவம் கடைவரையில்
அதிசுந்தர நகரிருந்தேன், வளர்ந்தேனோ தெரியாது

வானுலகக் கதைகளுடை சோலைமலை ஒருகோடி
ஆணழகன் முருகனது பரங்குன்றம் மறுகோடி
காணவொரு நாள்போதும் ஆர்வமுள்ள மனிதருக்கு
மாநகர வேடமணி சிற்றூரே எம்மதுரை

விடியும் முன்னே விடிந்திடும் ஊரிது
முடியும் பொழுதை பொருட்படுத்தாது
தடியெடுத் தாண்டவர் சரித்திரம் தொடர
நெடியும் உண்டே சிலசந் துகளில்

முடியாதெனக்கு பட்டியலிட்டு
அடித்துக்கூற இது-இது-இதனால்
பிடித்துப் போனது ஊரெனெக்கென்று
பிடித்தல் முன்னம் காரணம் பின்னம்.

19thmay
1st February 2010, 06:29 PM
எதுகை மோனை, குற்றியலிகரம்
லுகரம் தெரியாது
முக்கியமாக தலை தட்டும்
இருந்தாலும் அன்பர்கள் பொறுத்துக்கொண்டு
என் ஊர் பெருமையை கேளுங்கள்.

சோழ நாடு சோறுடைத்து என்றபோதிலும்
நான் உடைப்பதென்னமோ தட்டச்சு விசைபலகயும்
முக்கியமாக என் மண்டையும்
இருந்தாலும் பல பெருமைகள் கொண்டிருக்கும்
தன்னடக்கம் மிகுந்திருக்கும் திருவாரூர் என் ஊர்.

முதலாம் அதித்ய சோழனும், ராஜ ராஜ சோழன் பின்
ராஜேந்திர சோழன் கட்டி காத்த தியாகராஜர் -
ஆழி தேரில் அசைந்து வரும் போது
'ஆருரா! தியாகேசா !!' என்ற பக்தர்கள் குரலால்
மெய் சிலிர்க்கும் அந்நேரம்

அப்பரும் , சம்பந்தரும் ஆரூர் வந்து
பாடல்களால் இறைவனை மெய் உருக வைத்ததும் வரலாறு
அறுபத்திமூன்று நாயன்மாரில் நானும் ஒருவன்
"திருவாரூரில் பிறந்தார்கள்" என்பதால்
இதைவிட வேறென்ன வேண்டும்?

பின் கர்நாடக சங்கீதத்தின் மும்மூர்த்திகள் தியாகராஜர் - முத்துசாமி- ஷ்யாமா
பிறந்த ஊரும்
என் ஊரே !
சிறப்பு சென்ற இடம்மோ திருவையாறுக்கே...
ஐயாரப்பா இது ஞாயமாப்பா?

ஆஸ்கார் நாயகன் ரகுமான் தேடி வரும்
நாகூர் தர்கா என் ஊர் பக்கம் தான்
இயேசு கிறிஸ்துவின் அன்னை வேளாங்கண்ணியும்
இங்கேதான்
மதனல்லினதிற்கு வேறெங்கே சான்று?

தமிழ்நாட்டின் தற்போதய முதல்வரும்
திருக்குவளை தான். வாரிசுகள் இங்கொன்னும்
அங்கொன்னும் இருந்தாலும் சொந்த ஊர் என் ஊர்தானே!
இருந்தாலும் என் ஊருக்கு செல்ல ஒரு ரயில் இல்லை
பல வருடங்களாக - இதை விரைவாக செய்தால்

கண்கள் பனிக்கும், இதயம் இனிக்கும்!

Plum
1st February 2010, 06:43 PM
...moolakkadaikku peramburil irundhu sellum valaindhu pogum saalayum Simpson aalai ottiyamaindha pottal kaadukalum adhil cricket aadiya ninaivugalum ...

Jai, what time period. I may not have been a participant but I am sure to have been a spectator if it is the early 90's
(appOlerundhE viewer & reviewer dhAn :lol:)

littlemaster1982
1st February 2010, 10:05 PM
Sridhar,

That was too good :notworthy: And the last line is a ripper :rotfl2:

joe
2nd February 2010, 06:44 AM
Sridhar :thumbsup:

joe
2nd February 2010, 08:14 AM
முத்தழின் முகவரியாய் முதல்மொழிக்கு தாலாட்டாய்
எத்திசையும் தமிழ்மணக்க எடுத்தளித்த வள்ளுவனை
முத்தமிட முக்கடலும் முழுநிலவும் முன்தோன்றும் ஞாயிறுவும்
பக்கமாக வந்து நின்று பாராட்டும் குமரி முனை.

வாழை தென்னை வயல்வெளிகள் எங்கும் சாலையோர தாமரைகள்
நீலக்கடலின் துறையில் நின்றே காணக்கவரும் மலைத்தொடர்கள்
பாலை தவிர்த்த நாற்திணையும் நாஞ்சில் பல்சுவைக்கும் மொழிநடையும்
கூடித் திளைக்கும் எழில் பாடு குமரி முனை.

கலைவாணர் ,கவிமணியும் ,கள்ளமில்லா ஜீவாவும்
புவி மீது வந்துதித்த புகழ்பூமி ..நாஞ்சில் நாடு.

pavalamani pragasam
2nd February 2010, 09:13 AM
விதி ஒன்றும் அறிவிக்கப்படாமலே அவரவர் ஊரைப் பற்றி சொல்ல விழையும் போது விளைகிறது கவிதை!!! :o

groucho070
2nd February 2010, 11:02 AM
:clap: Everyone. Indian tourism board need guys like you. Reading them makes me feel so inferior when it comes to my hometown :oops:

19thmay
2nd February 2010, 12:05 PM
Thanks LM, Joe and Groucho. :)

19thmay
2nd February 2010, 12:06 PM
முத்தழின் முகவரியாய் முதல்மொழிக்கு தாலாட்டாய்
எத்திசையும் தமிழ்மணக்க எடுத்தளித்த வள்ளுவனை
முத்தமிட முக்கடலும் முழுநிலவும் முன்தோன்றும் ஞாயிறுவும்
பக்கமாக வந்து நின்று பாராட்டும் குமரி முனை.

வாழை தென்னை வயல்வெளிகள் எங்கும் சாலையோர தாமரைகள்
நீலக்கடலின் துறையில் நின்றே காணக்கவரும் மலைத்தொடர்கள்
பாலை தவிர்த்த நாற்திணையும் நாஞ்சில் பல்சுவைக்கும் மொழிநடையும்
கூடித் திளைக்கும் எழில் பாடு குமரி முனை.

கலைவாணர் ,கவிமணியும் ,கள்ளமில்லா ஜீவாவும்
புவி மீது வந்துதித்த புகழ்பூமி ..நாஞ்சில் நாடு.


:clap:

19thmay
2nd February 2010, 12:10 PM
எல்லூரும் சொல்லிடுவீர் தற்பெருமை இத்திரியில் - நங்கை
நல்லூரில் உதித்துலகம் உய்விக்க வந்தவன் நான்
வல்லூறாய் தேமதுர நகரிற்கே உடன்பெயர்ந்தேன்
கள்ளூறும் நினைவுளே அவ்வூரிலே யெனக்கு

நதியென்றே கொளப்பட்ட கிருதமாலின் கரைதனிலே
குதித்தோடி விளையாடி விழுப்புண்கள் பெறப்பட்ட
பதிவேற்கும் பருவமுதல் பதின்பருவம் கடைவரையில்
அதிசுந்தர நகரிருந்தேன், வளர்ந்தேனோ தெரியாது

வானுலகக் கதைகளுடை சோலைமலை ஒருகோடி
ஆணழகன் முருகனது பரங்குன்றம் மறுகோடி
காணவொரு நாள்போதும் ஆர்வமுள்ள மனிதருக்கு
மாநகர வேடமணி சிற்றூரே எம்மதுரை

விடியும் முன்னே விடிந்திடும் ஊரிது
முடியும் பொழுதை பொருட்படுத்தாது
தடியெடுத் தாண்டவர் சரித்திரம் தொடர
நெடியும் உண்டே சிலசந் துகளில்

முடியாதெனக்கு பட்டியலிட்டு
அடித்துக்கூற இது-இது-இதனால்
பிடித்துப் போனது ஊரெனெக்கென்று
பிடித்தல் முன்னம் காரணம் பின்னம்.

It takes some time to understand your poem. Good one. 8-)

But why there is nothing much about Nanganallur?

P_R
2nd February 2010, 12:56 PM
:thumbsup: Joe and Sridhar


கண்கள் பனிக்கும், இதயம் இனிக்கும்! :lol:



But why there is nothing much about Nanganallur? Spent too little time there. That was just to say though I was technically born there I consider Madurai my native.

joe
2nd February 2010, 01:12 PM
கிருதமாலின் கரைதனிலே

பெயர் விளக்கம்? :)

P_R
2nd February 2010, 02:35 PM
திரு.முரளி போல் நகரத்தின் நடுவில் வாழ்ந்தவர்கள் தான் வைகைக்கரை என்று சொந்தம் கொண்டாட முடியும். நான் நகரத்திலிருந்து திண்டுக்கல்-திருப்பரங்குன்றம் வழியாக செல்லும் புறச்சாலை அருகே வளர்ந்தவன். முன்னொரு காலத்தில் அந்த கிராமம் பெயர்: பொன்மேனி ! :-)

கிருதமால் ஒரு புராண கால நதி. வைகையிலிருந்து பிரிந்து செல்லும் சிற்றாறு. இன்று அது கழிவுநீர்சாக்கடையாகி விட்டது. சிறு வயதில் 'எது கிருதமால்' என்று நண்பர்களுக்குள் விளையாட்டாய் கேள்வியெழ, எங்கள் குடியிருப்பு வழிசென்று, பெரியார் பேருந்து நிலையத்திற்குப் பின்னால் ஒரு மாபெரும் குட்டையில் தேங்கும் அது தான் என்று எங்களுக்கு நாங்களே நம்பிக்கொண்டோம்.

ஒரு பெருமழைக்காலத்தில் அதுவும் நுரைத்து ஓடி எங்கள் அனுமானத்துக்கு வலு சேர்த்தது.

joe
2nd February 2010, 03:50 PM
PR :D

ajaybaskar
2nd February 2010, 04:09 PM
முத்தழின் முகவரியாய் முதல்மொழிக்கு தாலாட்டாய்
எத்திசையும் தமிழ்மணக்க எடுத்தளித்த வள்ளுவனை
முத்தமிட முக்கடலும் முழுநிலவும் முன்தோன்றும் ஞாயிறுவும்
பக்கமாக வந்து நின்று பாராட்டும் குமரி முனை.

வாழை தென்னை வயல்வெளிகள் எங்கும் சாலையோர தாமரைகள்
நீலக்கடலின் துறையில் நின்றே காணக்கவரும் மலைத்தொடர்கள்
பாலை தவிர்த்த நாற்திணையும் நாஞ்சில் பல்சுவைக்கும் மொழிநடையும்
கூடித் திளைக்கும் எழில் பாடு குமரி முனை.

கலைவாணர் ,கவிமணியும் ,கள்ளமில்லா ஜீவாவும்
புவி மீது வந்துதித்த புகழ்பூமி ..நாஞ்சில் நாடு.

:notworthy: :clap: :notworthy: :clap:

இன்று இலக்கிய வானில் பிரகாசிக்கும் திரு. ஜெயமோகன் அவர்களும் மறைந்த மலையாள நடிகர் திரு. சத்யன் அவர்களும் தனது ஆங்கில புலமையால் தான் பிறந்த மண்ணிற்கு பெருமை (?!???!!!) சேர்க்கும் கல்வித்தந்தை திரு. ஜேப்பியார் அவர்களும் இம்மண்ணில் பிறந்தவர்களே....

jaiganes
12th February 2010, 04:45 AM
...moolakkadaikku peramburil irundhu sellum valaindhu pogum saalayum Simpson aalai ottiyamaindha pottal kaadukalum adhil cricket aadiya ninaivugalum ...

Jai, what time period. I may not have been a participant but I am sure to have been a spectator if it is the early 90's
(appOlerundhE viewer & reviewer dhAn :lol:)

late eighties and till 1991 is my time period in that ground - adhukkapuram +1 , +2 in St johns, villivaakkam.
most interesting aspect was to cycle from my house to Baba nagar which is a good 25 minutes in good weather through empty plots and new layouts. if it rains, it is a literal adventure to get back home through the waterlogged plots (so many layouts which were not developed). The last time i visited the area, everything was built up and I lost my way completely - what a strange thing to happen - the route was very clear when there was no roads and when there were roads - there was no route...

tvsankar
12th February 2010, 07:53 PM
Ennoda oor

6 vayadhil irundhu 20 vayadhu varai - Tharamangalam in Salem Dt , Tamil Nadu.

indha oorin special - Kovil dhan.

Idhai patri Jeyamohan - payana katturaiyil ezhudhi irukirar.

here is the link

http://www.jeyamohan.in/?p=641

Ezhuthalanin paarivaiyil .... Engal oor kovilai patri
padithadhum manadhil sandhosham...

from the age of 21 to 25 ennoda oor - Dharmapuri

after that, i got married.
21 varushama ennoda oor - Hosur........

Lambretta
12th February 2010, 10:27 PM
En ooru Hyderabad! 8-)

Born and grew up (mostly) here! :)

sathya_1979
12th February 2010, 10:40 PM
Uttiramerur near Kanchipuram. The great temple town with Ashtaanga Vimanam (Only one of the 3 temples in the world - Others being Thirukoshtiyur and Koodal Azhagar in Madurai).
Naan kavidhai ellaam ezhudhinaa, indha thread mooda vendiyadhudhaan :D