PDA

View Full Version : Nadigar Thilagam Sivaji Ganesan - Part 6



Pages : 1 2 3 4 [5] 6

pammalar
8th June 2010, 08:17 PM
கேள்வி பிறந்தது! நல்ல பதில் கிடைத்தது! - 38

கே: மீண்டும் சிவாஜி, எந்த ஹீரோவுடனும் சேராமல் தனித்து வெற்றி பெற முடியுமா? (சீனிவாசன், சென்னை - 33)

ப: அவசியமில்லை...இமயமலையில் கொடி நாட்டி வந்த ஒருவர், பரங்கிமலைகளில் கொடி நாட்டிட அவசியமில்லை.

(ஆதாரம் : பொம்மை, ஏப்ரல் 1994)

அன்புடன்,
பம்மலார்.

pammalar
8th June 2010, 08:49 PM
கேள்வி பிறந்தது! நல்ல பதில் கிடைத்தது! - 39

கே: பெண் சிவாஜி என்று இருவரில் யாரைக் குறிப்பிடலாம் - சுஜாதா? கே.ஆர்.விஜயா? (ஆர்.திருநாவுக்கரசு, திருமருகல்)

ப: சிவாஜி தான் உண்டு. சிவாஜினி கிடையாது.

(ஆதாரம் : குமுதம், 6.3.1980)

அன்புடன்,
பம்மலார்.

pammalar
8th June 2010, 09:30 PM
சிங்காரச் சென்னையில் வெள்ளி விழாக் கொண்டாடிய சிங்கத்தமிழனின் திரைக்காவியங்கள்
[காவியம்(வருடம்) - அரங்கம் - ஓடிய நாட்கள் என்கின்ற ஃபார்மெட்டில்)

1. பாவமன்னிப்பு(1961) - சாந்தி - 177 நாட்கள்

2. பாசமலர்(1961) - சித்ரா - 176 நாட்கள்

3. திருவிளையாடல்(1965) - சாந்தி - 179 நாட்கள், கிரௌன் - 179 நாட்கள், புவனேஸ்வரி - 179 நாட்கள்

4. வசந்த மாளிகை(1972) - சாந்தி - 176 நாட்கள்

5. தங்கப்பதக்கம்(1974) - சாந்தி - 181 நாட்கள், கிரௌன் - 176 நாட்கள், புவனேஸ்வரி - 176 நாட்கள்

6. திரிசூலம்(1979) - சாந்தி - 175 நாட்கள், கிரௌன் - 175 நாட்கள், புவனேஸ்வரி - 175 நாட்கள்

7. முதல் மரியாதை(1985) - சாந்தி - 177 நாட்கள்

8. படிக்காதவன்(1985) - பால அபிராமி - 175 நாட்கள்

9. தேவர் மகன்(1992) - அன்னை அபிராமி - 175 நாட்கள்

10. படையப்பா(1999) - ஆல்பர்ட் & பேபி ஆல்பர்ட் - 210 நாட்கள், அபிராமி & சக்தி அபிராமி - 210 நாட்கள், உதயம் & சந்திரன் - 181 நாட்கள், ஸ்ரீபிருந்தா - 175 நாட்கள்

சாதனைகள் எனும் சாம்ராஜ்யத்திற்கு நிரந்தர சக்கரவர்த்தி சிங்கத்தமிழன் சிவாஜி ஒருவரே!

அன்புடன்,
பம்மலார்.

KCSHEKAR
10th June 2010, 11:45 AM
[b]

joe
10th June 2010, 11:47 AM
[b]

ஏதோ ரொம்ப போல்ட்-ஆ சொல்ல வந்தீங்க போல :D சீக்கிரம் சொல்லுங்க :) நல்வரவு! 8-)

KCSHEKAR
10th June 2010, 11:58 AM
[b]

நடிகர்திலகம் ரசிகர்கள் அனைவருக்கும் வணக்கம்.

K. சந்திரசேகரன்
நடிகர்திலகம் சிவாஜி சமூகநலப் பேரவை

KCSHEKAR
10th June 2010, 12:07 PM
I am unable to Post in Tamil because of Dififficulties in Unicode Tamil typing. I am a frequently watching / reading the hub - as a NT fan. I want to congratulate all of you participating in this thread / hub. Congratulations all of you again on behalf of Nadigarthilagam Sivaji Samooganala Peravai.

With regards,
K.Chandrasekaran

Irene Hastings
10th June 2010, 12:42 PM
சந்திரசேகர் அய்யா,

நல்வரவு. நீங்கள் பதிவு செய்யும் திரியில் கீழ் ஒரு பேட் காண்பீர்கள். அதை உபயோகித்தால் தமிழில் எழுதலாம்.

உங்கள் சமூகநலப்பேரவையில் செய்யும் பணிகளை பற்றி தயவுசெய்து விளக்கவும். நன்றி.

pammalar
10th June 2010, 02:51 PM
அருமை நண்பரும், நடிகர் திலகம் சிவாஜி சமூக நலப் பேரவையின் தலைவருமான திரு.கே.சந்திரசேகரன் அவர்களே,

வருக! வருக! தங்கள் வரவு இத்திரிக்கு நல்வரவு!

அன்புடன்,
பம்மலார்.

sankara1970
10th June 2010, 02:53 PM
Welcome Mr Chandra shekar.

We are eager to know the activities of Sivaji Peravai.

mr_karthik
10th June 2010, 03:22 PM
வருக திரு. சந்திரசேகரன் அவர்களே....

'சிவாஜி சமூக நலப் பேரவை' என்ற அமைப்பின் பெயரே ஆவலைத்தூண்டுகிறது. உங்களது அமைப்பின் செயலாக்கங்களை அறிய அனைவரும் ஆர்வம் கொண்டுள்ளோம்.

தங்கள் அமைப்பின் மூலம் ஆற்றப்பட்டுள்ள சமுதாயப்பணிகள் என்னென்ன?.

நடிகர்திலகத்தின் திரைப்பட வெளியீடுகளின்போது, தங்கள் அமைப்பின் பங்களிப்புகள் என்ன?.

தங்கள் அமைப்பின் சிறந்த குறிப்பிடத்தக்க சாதனைகள் என தாங்கள் கருதுவன எவையெவை?.

நடிகர்திலகத்தின் திரைப்படங்களை திரையரங்குகளில் மறு வெளியீடு செய்ய, தங்கள் அமைப்பின் மூலம் மேற்கொள்ளப்பட்டுள்ள ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் என்னென்ன?.

தங்கள் அமைப்பின் சார்பில், திரையரங்குகளில் கட்-அவுட்டுகள், பானர்கள், சாதனைகளை விளக்கும் பதாகைகள் அமைத்ததுண்டா?. அவற்றில் சிறந்தவை என தாங்கள் கருதுவது எவற்றை?.

நடிகர்திலகத்தின் ரசிகர்கள் அனைவரும் ஆவலாயுள்ளோம். 'ஜோ' அவர்கள் கூறிய முறையைப் பின்பற்றி தமிழில் பதியுங்கள்.

தங்களின் தொடர்ந்த பங்களிப்பை எதிர்நோக்குகிறோம்.

KCSHEKAR
10th June 2010, 03:48 PM
என்னுடைய வருகையை வரவேற்ற அனைவருக்கும் என்னுடைய நன்றி.

Mr.Pammalar, Mr.Ragavendran and some of our Hubber knows about Sivaji Peravai & activities. Nadigarthilagam Sivaji Samooganala Peravai started on 2005. We are continuously fight for Sivaji Manimandapam. This association started only to spread the Nadigarthilagam's Name and Fame

Last year - 2009 - Sivaji Peravai release a Book - Sivaji-Oru Varlatrin Varlaru.

I will explain in details about our Peravai.

Please visit the link below (interim).

sivajiperavai.blogspot.com/

Thanks & regards,

K.Chandrasekaran
Nadigarthilagam Sivaji Samooganala Peravai

KCSHEKAR
10th June 2010, 04:12 PM
அவ்வபோது தகவல்களைப் பறிமாறிக்க்கொள்ள விரும்புகிறேன். நேரம் கிடைக்கும்போது திரியில் அனைவரையும் சந்திக்கிறேன். வணக்கம்.

அன்புடன்

K. சந்திரசேகரன்

mr_karthik
10th June 2010, 04:36 PM
சந்திரசேகரன் அவர்களே...

நீங்கள் கொடுத்துள்ள இணைப்பில் சென்று பார்த்தோம். சாதனைகளும், நடவடிக்கைகளும் சிறப்பாக உள்ளன. நடிகர்திலகத்தின் அபூர்வப்படங்கள் மனதை அள்ளுகின்றன. வாழ்த்துக்கள்.

ஒரே வருத்தம்... இந்த திரியைப்பற்றி ஏற்கெனவே அறிந்துள்ள நீங்கள், இவ்வளவு தாமதமாக வந்துள்ளதுதான். (பதிவு கிடைக்க தாமதமாக இருக்கலாம். என் ந்ண்பரொருவர் இங்கு பதிவுக்கு விண்ணப்பித்து ஆறு மாதங்களாகி விட்டதாம். இன்னும் கிடைக்கவில்லையென்றார்).

நடிகர்திலகத்துடன் ரொம்ப நெருங்கிப்பழகியுள்ளீர்கள் என்று நினைக்க பொறாமையாக உள்ளது. நாங்கள் அவரை எட்டியிருந்து பார்த்ததுதான்.

Plum
10th June 2010, 04:48 PM
கேள்வி பிறந்தது! நல்ல பதில் கிடைத்தது! - 39

கே: பெண் சிவாஜி என்று இருவரில் யாரைக் குறிப்பிடலாம் - சுஜாதா? கே.ஆர்.விஜயா? (ஆர்.திருநாவுக்கரசு, திருமருகல்)

ப: சிவாஜி தான் உண்டு. சிவாஜினி கிடையாது.

(ஆதாரம் : குமுதம், 6.3.1980)

அன்புடன்,
பம்மலார்.

Lakshmi matrum manoramavai pombaLai sivaji-nu tamizh media makkaL ezhudhina dark ages-um uNdu :evil:

Plum
10th June 2010, 04:49 PM
Mr Chandrasekar, welcome. Looking forward to tales of your personal interaction with NT.

RAGHAVENDRA
10th June 2010, 05:23 PM
சந்திரசேகர் அவர்களுக்கு நல்வரவு. நடிகர் திலகத்தைப் பற்றிய பல புதிய தகவல்களை அறிய மிகப் பெரிய வாய்ப்பு. ஜமாயுங்கள். காத்திருக்கிறோம்.

ராகவேந்திரன்

mr_karthik
10th June 2010, 07:01 PM
கேள்வி பிறந்தது! நல்ல பதில் கிடைத்தது! - 39

கே: பெண் சிவாஜி என்று இருவரில் யாரைக் குறிப்பிடலாம் - சுஜாதா? கே.ஆர்.விஜயா? (ஆர்.திருநாவுக்கரசு, திருமருகல்)

ப: சிவாஜி தான் உண்டு. சிவாஜினி கிடையாது.

(ஆதாரம் : குமுதம், 6.3.1980)

அன்புடன்,
பம்மலார்.

Lakshmi matrum manoramavai pombaLai sivaji-nu tamizh media makkaL ezhudhina dark ages-um uNdu :evil:
சோகத்தில் கே.ஆர்.விஜயா
வீரத்தில் விஜயகுமாரி
சிருங்காரத்தில் தேவிகா
நளினத்தில் பத்மினி
நகைச்சுவையில் மனோரமா
கோபத்தில் ஜெயலலிதா
அலட்சியத்தில் லட்சுமி
இத்தனையும் சேர்ந்த ஒரு நடிகை இருந்தால் அவர்தான் 'பெண் சிவாஜி'.
ஆனால் அப்படி யாரும் இல்லையே.

sivank
11th June 2010, 10:17 AM
கேள்வி பிறந்தது! நல்ல பதில் கிடைத்தது! - 39

கே: பெண் சிவாஜி என்று இருவரில் யாரைக் குறிப்பிடலாம் - சுஜாதா? கே.ஆர்.விஜயா? (ஆர்.திருநாவுக்கரசு, திருமருகல்)

ப: சிவாஜி தான் உண்டு. சிவாஜினி கிடையாது.

(ஆதாரம் : குமுதம், 6.3.1980)

அன்புடன்,
பம்மலார்.

Lakshmi matrum manoramavai pombaLai sivaji-nu tamizh media makkaL ezhudhina dark ages-um uNdu :evil:
சோகத்தில் கே.ஆர்.விஜயா
வீரத்தில் விஜயகுமாரி
சிருங்காரத்தில் தேவிகா
நளினத்தில் பத்மினி
நகைச்சுவையில் மனோரமா
கோபத்தில் ஜெயலலிதா
அலட்சியத்தில் லட்சுமி
இத்தனையும் சேர்ந்த ஒரு நடிகை இருந்தால் அவர்தான் 'பெண் சிவாஜி'.ஆனால் அப்படி யாரும் இல்லையே.

அப்படி ஒருவர் இருந்தார். அவர் ஜெமினி என்ற மாயையில் விழுன்து அழிந்து போனார்.

Plum
11th June 2010, 10:26 AM
sivank, agree with you whole-heartedly. Savithiri is the only actress in Tamil Film History who could atleast be considered for an equal position with 'Sivaji' Ganesan in acting honours.

KCSHEKAR
11th June 2010, 11:13 AM
திரு.கார்த்திக் குறிப்பிட்டதைப் போல நான் ஏற்கனவே பதிவு செய்து பல காலம் ஆகிவிட்டது. மீண்டும் பதிவு செய்து தற்போது வந்துள்ளேன். நடிகர்திலகத்துடன் பழகும் வாய்ப்பு கிடைத்ததற்கு கடவுளுக்கு நன்றி. என்னை வரவேற்ற அனைத்து நண்பர்களுக்கும் நன்றி.

K. சந்திரசேகரன்
ந்டிகர்திலகம் சிவாஜி சமூகநல பேரவை

groucho070
11th June 2010, 11:14 AM
Welcome Mr. Chandrasekharan. Looking forward to your anecdotes :D

KCSHEKAR
11th June 2010, 11:23 AM
I will share many things about NT in future with you all as Mr.Ragavendran said.

Thanks

gkrishna
11th June 2010, 06:17 PM
வந்த இடம் நல்ல இடம்
வரவேண்டும் மதி அழகரே (சந்திரசேகர்)
இன்று முதல் புதிய தகவல்
பெற வேண்டும் நமது கண்மணிகள்

(கலாட்டா கல்யாணம் பாடல் முறையில்)

Gk

rangan_08
11th June 2010, 06:47 PM
Warm welcome Mr. Chandrasekaran.

Looking forward to your posts.

rangan_08
11th June 2010, 06:48 PM
[tscii:4d4776cd62]Pammalar sir,

As I said earlier, “ Kelvi pirandhadhu…” is a novel concept in this thread and your’e doing a great job. I believe that some of the Q&A’s that you post here dates back to even the 70’s & 80’s. It shows your diligence in preserving those magazines from where you pick the details. Actually, if you could compile this work and try to bring out as a book, it will be a great contribution. Kudos to you and keep it up sir.

Earlier, Murali sir used to write the nitty gritties of how a song has shaped up or “born” to sound literal, with some interesting anecdotes. Most of those articles had strange and interesting piece of information that were hitherto unknown. I used to tell him the same thing even then, i.e. to bring out that extra ordinary work into a book. Unfortunately, it didn’t materialize till now.
[/tscii:4d4776cd62]

rangan_08
11th June 2010, 06:50 PM
[tscii:b5398c2be8]Recently heard, “ Iniyadhu iniyadhu ulagam…” song from “ Thangai “. What a mesmerizing, haunting & yet a peppy tune !!!!

I remember listening to this song in Vividh bharati during my school days and it is still vivid in my memory. I am yet to watch this film and also “ En thambi “ & “ Thirudan “.[/tscii:b5398c2be8]

pammalar
12th June 2010, 01:31 AM
டியர் மோகன் சார்,

தங்களது மனம் திறந்த பாராட்டுக்களுக்கு மனமார்ந்த நன்றிகள்!

தங்களது ஆவல் பூர்த்தியாகும்!! காலம் கனியும், காத்திருப்போம்!!!

அன்புடன்,
பம்மலார்.

pammalar
12th June 2010, 02:44 AM
கேள்வி பிறந்தது! நல்ல பதில் கிடைத்தது! - 40

கே: நடிப்புக் கற்றுத் தரும் தரமான பயிற்சிக் கூடம் எங்குள்ளது? (கே.எம்.சுவிட் முருகன், கரடி கொல்லப்பட்டி)

ப: சென்னை, தி.நகர், செவாலியே சாலையில்!

(ஆதாரம் : பொம்மை, ஜூன் 1996)

அன்புடன்,
பம்மலார்.

pammalar
12th June 2010, 02:57 AM
கேள்வி பிறந்தது! நல்ல பதில் கிடைத்தது! - 41

கே: நடிகர் சங்கத்தின் இப்போதைய தலைவர் யார்? (கே.எல்.மல்லிகா கன்னியப்பன், சிலியாவ், மலேசியா)

ப: சிவாஜி கணேசன். அவர் தவிர வேறு யாருமே போட்டிக்கு மனு செய்யவில்லை.

(ஆதாரம் : பேசும் படம், அக்டோபர் 1971)

அன்புடன்,
பம்மலார்.

pammalar
12th June 2010, 03:29 AM
கேள்வி பிறந்தது! நல்ல பதில் கிடைத்தது! - 42

கே: சிவாஜி கணேசனுக்கு பிரான்சு அரசு 'செவாலியே' விருது வழங்கியிருக்கிறதே? (ஜோ. ஜெயக்குமார், நாட்டரசன் கோட்டை)

ப: எல்லா நாடுகளிலும் உள்ள கலைத்துறையாளர்கள் இணைந்து உலகத்தின் சார்பாக அவருக்கு ஒரு கலை விருது கொடுத்தாலும் அதற்கும் தகுதியானவர் தானே சிவாஜி!

(ஆதாரம் : குங்குமம், 19.8.1994)

அன்புடன்,
பம்மலார்.

kumareshanprabhu
12th June 2010, 12:03 PM
WELCOME TO CHANDRASEKAR MY DEAR FREIND

kumareshanprabhu
12th June 2010, 12:20 PM
i have seen the article in kumadam reporter

shekar it was good

RAGHAVENDRA
12th June 2010, 12:26 PM
வாழ்த்துக்கள் குமரேசன்,
தங்கள் பெயருடன் உள்ள புகைப்படத்தில் இருப்பது தாங்கள் தானே?

ராகவேந்திரன்

kumareshanprabhu
12th June 2010, 12:29 PM
thank yu raghavendra

kumareshanprabhu
12th June 2010, 12:30 PM
Mr Raghavendra you have any idea whether DVD OR cd of Vishvaroppam avilable

kumareshanprabhu
12th June 2010, 12:37 PM
hi harish this year we are planning to celebrate NT birthday in very grand manner we are planning to call our prabhu sir to Bangalore

kumareshanprabhu
12th June 2010, 12:57 PM
yes ragahavendra

HARISH2619
12th June 2010, 01:21 PM
hi harish this year we are planning to celebrate NT birthday in very grand manner we are planning to call our prabhu sir to Bangalore
Dear kumaresan sir,
thankyou for this sweet information.please take some steps to release any NT movie in bangaloe atleast for a day on his death anniversary or birthday.


a very warm welcome to mr chandrashekaran.


where our hero murali sir has gone?

rangan_08
12th June 2010, 05:15 PM
Watch " DHEEPAM " tonight 8 pm in Sirippoli channel.

NOV
12th June 2010, 05:35 PM
watched Kungumam on Astro Vellithirai this morning.
great songs, great acting.... prelude to many other latter day movies.

சின்னஞ்சிறிய வண்ணப் பறவை என்னத்தைச் சொல்லுதம்மா
அது இன்னிசையோடு தன்னை மறந்து சொன்னதைச் சொல்லுதம்மா
:musicsmile:

pammalar
13th June 2010, 03:00 AM
கேள்வி பிறந்தது! நல்ல பதில் கிடைத்தது! - 43

கே: "நிறைகுடம்" வெற்றிப் படமா?(ராஜூ-முனுசாமி நண்பர்கள், லால்குடி)

ப: தயாரிப்பாளர் மகிழ்ச்சியோடு அடுத்த படத்திற்குப் பூஜை போட்டிருக்கிறார். சிவாஜி தான் கதாநாயகன்.

(ஆதாரம் : பேசும் படம், பிப்ரவரி 1970)

அன்புடன்,
பம்மலார்.

pammalar
13th June 2010, 03:17 AM
'குமுதம் ரிப்போர்ட்டர்' வாரமிருமுறை இதழின் லேட்டஸ்ட் (17.6.2010) இதழின் பின் அட்டையில் (Back Wrapper) வெளியாகியுள்ள தகவல்:

http://pammalar.webs.com/apps/photos/photo?photoid=86499521

இதனை எமக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பிய நமது ஹப்பரும், நடிகர் திலகம் சிவாஜி சமூக நலப் பேரவையின் தலைவருமான திரு.கே.சந்திரசேகரன் அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்!

அன்புடன்,
பம்மலார்.

kumareshanprabhu
14th June 2010, 11:02 AM
Mr Raghavendra you have any idea whether DVD OR cd of Vishvaroppam avilable

RAGHAVENDRA
14th June 2010, 11:11 AM
No Kumaresh Sir, I too am trying for it. Almost 80 to 85% of NT's films are available in CD/ DVD format. Of the remaining Viswarupam is one which I am looking for.

Raghavendran

kumareshanprabhu
14th June 2010, 12:26 PM
raghavendra sir

can i have your mail id please

kid-glove
14th June 2010, 12:57 PM
Does anybody have a voice that could match the thespain command and control over the language? The gravitas (of his voice) was such that the opening of Gauravam is still memorable. Without him appearing in the frame, the camera is seen through First person POV of Barrister Rajinikanth. As the car makes its way to his bungalow, the camera is his view. AT first, he passes a (majestic) praise to his wife as he throws his vestment (court attire). And then watches Neelu do something disgusting 'Mr Neelakandam, sofa mukku salli thudaikkaradhukku illa..chi chi chichi chi Don't do that". Specially the 'don't do that' bit is impeccably delivered. This was perhaps done in recording studio. But there's still a'presence' of his. Such is the brilliance of his commanding 'textured' voice.

kumareshanprabhu
14th June 2010, 03:15 PM
yes shekar that to with b______ coffee

kumareshanprabhu
14th June 2010, 03:21 PM
shekar disuss on various issue as you know

kumareshanprabhu
14th June 2010, 03:23 PM
raghavendra add some photos in the Prabhuwebsite i can give yu many photos if you want

RAGHAVENDRA
14th June 2010, 05:48 PM
சமீப காலமாக தனியார் தொலைக்காட்சிகளில் பழைய படங்களையும் நடிகர்களையும் நகைச்சுவை என்கிற பெயரில் கேலிக்கூத்தாக சித்தரிக்கும் போக்கு பெருகி வருகிறது. சென்ற வாரம் நடிகர் திலகத்தின் புதிய பறவை படத்தின் கதையையும் காட்சிகளையும் நடிகர் திலகம் மற்றும் மற்ற நடிகர்களையும் நையாண்டி செய்து காட்சிகள் அமைக்கப் பட்டிருந்தன. இதே போல் எம்.ஜி.ஆர். அவர்கள் படத்தை நையாண்டி செய்ததைக் கண்டித்து எம்.ஜி.ஆர். பேரன் வலைப்பூவைச் சேர்ந்தவர்கள் சம்மந்தப் பட்ட தொலைக்காட்சி நிர்வாகத்தை நேரில் சந்தித்து தங்கள் வருத்தத்தையும் கண்டனத்தையும் தெரிவித்துள்ளார்கள். அது மட்டுமன்றி சம்பந்தப் பட்ட தொலைக்காட்சியிடமிருந்து இனிமேல் இதுபோல் நடக்காது என்கிற அளவிற்கு உறுதியும் பெற்று வநதுள்ளார்கள். இது மிகவும் பாராட்டப் பட வேண்டிய செயலாகும். எந்தக் கலைஞரையும் எந்தப் படைப்பையும் சகட்டு மேனிக்கு கிண்டலடிக்கும் போக்கு கண்டிக்கத் தக்கதாகும். இனிமேல் இது போல் மற்றவருக்கும் நடக்கா வண்ணம் நாமும் சம்பந்தப் பட்ட தொலைக்காட்சியினரை அல்லது சம்பந்தப் பட்ட மீடியாவை அணுகி நமது வருத்தத்தையும் கண்டனத்தையும் தெரிவித்துக் கொள்ள வேண்டும்.

திரு எம்.ஜி.ஆர். பேரன் வலைப்பூவைச் சார்ந்தவர்களுக்கு நமது பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ராகவேந்திரன்

rangan_08
14th June 2010, 06:48 PM
சரவணா, பாலாஜி, மேகலா, புவனேஸ்வரி தியேட்டர்க்ளெல்லாம் மாணவப்பருவத்தில் உருண்டு புரண்டு வளர்ந்த இடங்கள். இப்போது நினைத்தால் ஏக்கமாக இருக்கிறது.



Oh! Great.

rangan_08
14th June 2010, 06:53 PM
காணக் கண் கோடி வேண்டும்...
சென்னை சரவணா திரையரங்க வளாகத்தினுள் அமைந்துள்ள பாலாஜி திரையரங்கில் ராஜபார்ட் ரங்கதுரை ஞாயிறு மாலைக் காட்சியில் ரசிகர்களின் அளப்பரையைக் காணக் கண் கோடி வேண்டும். கொஞ்சம் கொஞ்சமாக வருகை தரும் ரசிகர்களின் எண்ணிக்கை கூடிக் கொண்டே போவது மகிழ்ச்சியாக இருக்கிறது. அரங்கு நிறைவினை எட்டவில்லை என்றாலும் கணிசமான எண்ணிக்கையில் பொதுமக்களும் ரசிகர்களும் நிறைந்திருந்தனர். சாலையின் இரு மருங்கிலும் மக்கள் வேடிக்கை பார்க்க கட்அவுட்டிற்கு மாலை, ஆரத்தி, பாலாபிஷேகம், வாண வேடிக்கை என அசத்தல் தான். இன்னும் விளம்பரம் அதிகமாக செய்திருந்து பரவலாக தகவல் பரவியிருந்தால் அளப்பரை அதிகமாகியிருக்கும். விவரமாக பின்னர் அலசலாம். தற்போதைக்கு அங்கே கண்ட காட்சிகள் உங்கள் பார்வைக்கு.

http://sivajimoviesinchennai2010.blogspot.com/

ராகவேந்திரன்

Raghavendra sir, thanks for the coverage and the link.

rangan_08
14th June 2010, 06:56 PM
Does anybody have a voice that could match the thespain command and control over the language? The gravitas (of his voice) was such that the opening of Gauravam is still memorable. Without him appearing in the frame, the camera is seen through First person POV of Barrister Rajinikanth. As the car makes its way to his bungalow, the camera is his view. AT first, he passes a (majestic) praise to his wife as he throws his vestment (court attire). And then watches Neelu do something disgusting 'Mr Neelakandam, sofa mukku salli thudaikkaradhukku illa..chi chi chichi chi Don't do that". Specially the 'don't do that' bit is impeccably delivered. This was perhaps done in recording studio. But there's still a'presence' of his. Such is the brilliance of his commanding 'textured' voice.

A nice moment from the film, kg. And, following that scene, when the audience get to see his face for the first time, the way he says, " Yess. I am Rajinikanth, Barrister Rajinikanth.." , holding a glass of beer....wow ! terrific performance.

rangan_08
14th June 2010, 06:58 PM
சமீப காலமாக தனியார் தொலைக்காட்சிகளில் பழைய படங்களையும் நடிகர்களையும் நகைச்சுவை என்கிற பெயரில் கேலிக்கூத்தாக சித்தரிக்கும் போக்கு பெருகி வருகிறது. சென்ற வாரம் நடிகர் திலகத்தின் புதிய பறவை படத்தின் கதையையும் காட்சிகளையும் நடிகர் திலகம் மற்றும் மற்ற நடிகர்களையும் நையாண்டி செய்து காட்சிகள் அமைக்கப் பட்டிருந்தன. இதே போல் எம்.ஜி.ஆர். அவர்கள் படத்தை நையாண்டி செய்ததைக் கண்டித்து எம்.ஜி.ஆர். பேரன் வலைப்பூவைச் சேர்ந்தவர்கள் சம்மந்தப் பட்ட தொலைக்காட்சி நிர்வாகத்தை நேரில் சந்தித்து தங்கள் வருத்தத்தையும் கண்டனத்தையும் தெரிவித்துள்ளார்கள். அது மட்டுமன்றி சம்பந்தப் பட்ட தொலைக்காட்சியிடமிருந்து இனிமேல் இதுபோல் நடக்காது என்கிற அளவிற்கு உறுதியும் பெற்று வநதுள்ளார்கள். இது மிகவும் பாராட்டப் பட வேண்டிய செயலாகும். எந்தக் கலைஞரையும் எந்தப் படைப்பையும் சகட்டு மேனிக்கு கிண்டலடிக்கும் போக்கு கண்டிக்கத் தக்கதாகும். இனிமேல் இது போல் மற்றவருக்கும் நடக்கா வண்ணம் நாமும் சம்பந்தப் பட்ட தொலைக்காட்சியினரை அல்லது சம்பந்தப் பட்ட மீடியாவை அணுகி நமது வருத்தத்தையும் கண்டனத்தையும் தெரிவித்துக் கொள்ள வேண்டும்.

திரு எம்.ஜி.ஆர். பேரன் வலைப்பூவைச் சார்ந்தவர்களுக்கு நமது பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ராகவேந்திரன்

Well said, sir. Hope the channels respect our sentiments and stop telecasting such craps.

rangan_08
14th June 2010, 07:04 PM
[tscii:3743e5d5c8]We all know that NT is phenomenal for his walking style. I have, with great difficulty, tried to list out a few scenes noted for this unique talent. In the below given scenes, NT is walKING.

1. The fearless, brilliant, arrogant & sophisticated BARRISTER RAJINIKANTH. Not just one scene, but he remains as a style statement through out this film. :thumbsup:

2. Veerabaghu’s stylish, dance-like move in the song, “ Vetrivel Veeravel.

3. Andha Naal Gnyabagam…..a fantastic rhythmic walk on the curvy mountain road, following the bgm, with a walking stick on his hand.

4. Deiva Magan – just before a conversation with Pandaribai (paavam, unakkuthan en mugatha pathu pathu salichi pochu), he slightly lifts himself and then walk slowly towards her in the most sophisticated manner. I always used to applaud for this scene, even if I’m watching it alone at home. Oh! there’s also Vijai in the film. See, that’s the problem, you can’t choose just one when it comes to NT.

5. Fisher folk in Thiruvilayadal – terrific audience response (the deafening whistle sound still rings in my ears).

6. The walking lesson he gives to JJ in Enga Mama. Holding a bunch of books on his head and the way he sways like a lady….. :clap:

7. Thillana Mohanambal – the scene where he quarrels with Padmini after watching Manorama’s drama. He challenges Mohana and leaves the place hurriedly with humiliation and with brimming anger. He comes back again, warns her (all the while, habitually adjusting his falling angavastram – terrific). His staggered movement perfectly portrays a short-tempered person who has lost control over the situation. :notworthy:

8. It is human nature to sympathize a handicap person. But, we all love this war veteran with a bullet wound in his leg :) . Thank God that he got wounded in war, otherwise we wouldn’t have got a chance to watch him limp stylishly – kodi asaindhadhum, kaatru vandhadha…… :thumbsup:

9. Padithal mattum podhuma – After Balaji gets killed accidentally, a literally shocked NT moves towards the corpse. A very cautious and measured step, like that of a cat, initially (an ace hunter he is) and then a few quick steps, slowing down again with shock and pain in his expression. Very dramatic and unique style.

10. NAVA RATHIRI – Is it possible to fill up the ocean in a tupperware ???

Well, that was just the tip of an ice berg and we have a whole bunch of them out there in his repertoire. Kattabomman, Appar, SP Choudhary, Antony aka Arun…………..it goes on and on and on………..

:notworthy:
[/tscii:3743e5d5c8]

mr_karthik
14th June 2010, 07:12 PM
சமீப காலமாக தனியார் தொலைக்காட்சிகளில் பழைய படங்களையும் நடிகர்களையும் நகைச்சுவை என்கிற பெயரில் கேலிக்கூத்தாக சித்தரிக்கும் போக்கு பெருகி வருகிறது. சென்ற வாரம் நடிகர் திலகத்தின் புதிய பறவை படத்தின் கதையையும் காட்சிகளையும் நடிகர் திலகம் மற்றும் மற்ற நடிகர்களையும் நையாண்டி செய்து காட்சிகள் அமைக்கப் பட்டிருந்தன. இதே போல் எம்.ஜி.ஆர். அவர்கள் படத்தை நையாண்டி செய்ததைக் கண்டித்து எம்.ஜி.ஆர். பேரன் வலைப்பூவைச் சேர்ந்தவர்கள் சம்மந்தப் பட்ட தொலைக்காட்சி நிர்வாகத்தை நேரில் சந்தித்து தங்கள் வருத்தத்தையும் கண்டனத்தையும் தெரிவித்துள்ளார்கள். அது மட்டுமன்றி சம்பந்தப் பட்ட தொலைக்காட்சியிடமிருந்து இனிமேல் இதுபோல் நடக்காது என்கிற அளவிற்கு உறுதியும் பெற்று வநதுள்ளார்கள். இது மிகவும் பாராட்டப் பட வேண்டிய செயலாகும். எந்தக் கலைஞரையும் எந்தப் படைப்பையும் சகட்டு மேனிக்கு கிண்டலடிக்கும் போக்கு கண்டிக்கத் தக்கதாகும். இனிமேல் இது போல் மற்றவருக்கும் நடக்கா வண்ணம் நாமும் சம்பந்தப் பட்ட தொலைக்காட்சியினரை அல்லது சம்பந்தப் பட்ட மீடியாவை அணுகி நமது வருத்தத்தையும் கண்டனத்தையும் தெரிவித்துக் கொள்ள வேண்டும்.

திரு எம்.ஜி.ஆர். பேரன் வலைப்பூவைச் சார்ந்தவர்களுக்கு நமது பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ராகவேந்திரன்

Well said, sir. Hope the channels respect our sentiments and stop telecasting such craps.
திருந்த வேண்டும். இல்லையேல் (உதைத்து) திருத்த வேண்டும்.

அவர்கள் இந்த ரசிகர், அந்த ரசிகர் என்றில்லை. எம்.ஜி.ஆர்., சிவாஜி, ரஜினி, கமல், அஜீத், விஜய், டி.ராஜேந்தர், கார்த்திக், சிம்பு என்று எல்லா கலைஞர்களையும் கிண்டல் செய்து எல்லா தரப்பு ரசிகர்களின் வெறுப்பையும் கோபத்தையும் பெற்றுள்ளனர். எனவே அவர்களை நடுரோட்டில் விட்டு உதைத்தால் கூட எவனும் கேட்கப்போவதில்லை.

அதற்கு முன் திருந்துவார்கள் என்று நம்புவோம்.

(சமீபத்தில் ஒரு நகைச்சுவை ஷோவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட நடிகர் வையாபுரி, அந்நிகழ்ச்சியில் நடிகர்திலகத்தைக் கிண்டல் செய்து ஒருவர் பெர்ஃபாமன்ஸ் கொடுத்ததை அங்கேயே வன்மையாக கண்டித்தார். சிவாஜி போன்ற சகாப்த கலைஞர்களையெல்லாம் இப்படி கிண்டல் செய்யக்கூடாது என்று தன் அதிருப்தியை வெளியிட்டார். அவருக்கு நம் நன்றிகள்)

mr_karthik
14th June 2010, 07:25 PM
மோகன் சார், நடிகர்திலகத்தின் நடை பற்றிய அலசல் அருமை...

'நடிப்பதற்காக பலபேர் கைதட்டல் வாங்கியிருக்கலாம். ஆனால் நடப்பதற்காக கைதட்டல் வாங்கும் கலைஞர் உலகத்திலேயே நடிகர்திலகம் சிவாஜி ஒருவர்தான்' - திண்டுக்கல் லியோனி.

இந்நேரம் ஒன்ஸ்மோர் படத்தின் வசனம் நினைவு வருகிறது.

விஜய்: 'அவர் ரொம்ப சூப்பரா நட்க்கிறார் இல்லே?'

எஸ்.எஸ்.சந்திரன்: 'உனக்கு மட்டுமல்ல, இந்த உலகத்துக்கே தெரியும் அவர் நடை சூப்பர்னு'.

RAGHAVENDRA
14th June 2010, 07:58 PM
டியர் மோகன்,
நடைக்கென்றே பிறந்த நடிகர் திலகத்தின் நடைகலை பற்றிய தங்கள் பதிவு அருமை. அவருடைய நடையைப் பற்றிப் பேசும் போது உடனே என் நினைவுக்கு வருவது ஆலயமணி காட்சி தான். துவக்கக் காட்சியில் எஸ்.ஏ.கண்ணன் நடிகர் திலகத்தின் நடையைப் பற்றி சிலாகித்துத் தன் தோழர்களிடம் கூறுவார், எஜமானோட நடையழகைப்பார்த்தியா. அதே காட்சி பின்னர் வரும் போது நடிகர் திலகம் வண்டியில் வரும் போது கூறுவார் - உங்க எஜமானோட நடையழகைப் பார்த்தீங்களா - இந்தக் காட்சியில் எஸ்.ஏ.கண்ணன் பாத்திரம் மட்டுமல்ல, அரங்கமே நெகிழ்ந்து விடும். இருவர் உள்ளம் படத்தில் முன்னாள் காதலியை உதறி விட்டு சரோஜா தேவியைப் பார்க்க வரும் காட்சி. அங்கே மாடியிலிருந்து வேகமாக இறங்குவார். பின்னர் அதே வேகத்தை அடுத்த காட்சியில் சரோஜா தேவியைப் பார்க்க வரும் போதும் பிரதிபலித்து விட்டு உள்ளே நுழைந்து சட்டென்று தன் நடையை மட்டுப் படுத்தி விட்டு மெல்ல மெல்ல நடந்து சரோஜா தேவிக்கு சற்று தள்ளி எதிரெதிர் நிற்பார். அப்போது சில விநாடிகளுக்கு உரையாடல் இல்லை. இருவரும் பார்வையிலேயே ஒருவரை ஒருவர் கலந்துரையாடிவிட்டு பின் சரோஜாதேவி அவர் காலில் விழுவார்.

இரண்டு காட்சிகளும எடு்க்கப் பட்ட நேரங்கள் வேறு வேறாக இருக்கலாம். நாள் வேறு வேறாக இருந்திருக்கலாம். முதல் இடத்தில் தான் நடந்த நடையை அப்படியே நினைவில் வைத்து அடுத்த இடத்தில் சிறிது தூரம் அதே வேகத்தைக் கடைப்பிடித்துப் பின் சற்று வேகத்தைக் குறைத்து மெல்ல நடக்கும் இந்த காட்சி ஒன்றிற்காகவே அவருக்கு ஆயிரம் ஆஸ்கார்கள் கொடுக்கலாம்.

ராகவேந்திரன்

kid-glove
14th June 2010, 08:00 PM
Does anybody have a voice that could match the thespain command and control over the language? The gravitas (of his voice) was such that the opening of Gauravam is still memorable. Without him appearing in the frame, the camera is seen through First person POV of Barrister Rajinikanth. As the car makes its way to his bungalow, the camera is his view. AT first, he passes a (majestic) praise to his wife as he throws his vestment (court attire). And then watches Neelu do something disgusting 'Mr Neelakandam, sofa mukku salli thudaikkaradhukku illa..chi chi chichi chi Don't do that". Specially the 'don't do that' bit is impeccably delivered. This was perhaps done in recording studio. But there's still a'presence' of his. Such is the brilliance of his commanding 'textured' voice.

A nice moment from the film, kg. And, following that scene, when the audience get to see his face for the first time, the way he says, " Yess. I am Rajinikanth, Barrister Rajinikanth.." , holding a glass of beer....wow ! terrific performance.

Never seen two distinctive performances with two different 'mode' of acting as he does here. :clap:

sivank
14th June 2010, 08:23 PM
Hi Mohan,

unga nadai list la vittu pona oru adhi mukkiyamaana padam- the mother of walks- thiruvarutselvar mannavan vandhaanadi pattu aarambathula varum walk thaan. enakku therinjavar oruthar kaasu koduthu ticket vaangi andha scene vara mattum paathuttu, adhu mudinja udane kilambi poiduvaar. ippadi avar indha scene a oru 5o thadava (enakku therinju) paarthu iruppaar.

pammalar
15th June 2010, 01:42 AM
டியர் மோகன் சார்,

நடிகர் திலகத்தின் நடை பற்றிய பட்டியல் அசத்தல்.

காண்பவர் தம் கண்களை மட்டுமல்ல, மனங்களையும் நிறைவு செய்யும் அவரது நடையழகே அழகு. அது குறித்த தங்களது வர்ணனைகளும் அவரது நடை போலவே அழகு.

தங்களது எழுத்து நடையால் அவரது நடை நேர்த்திகளை படம் பிடித்து காட்டி விட்டீர்கள்.

பாராட்டுக்கள்! நன்றிகள்! வாழ்த்துக்கள்!

[இதனைப் பதிவிடும் நேரத்தில் கூட 'குலமகள் ராதை'யில் 'ராதே உனக்கு கோபம் ஆகாதடி' பாடலில் அவர் நடந்து வரும் அழகு கண் முன்னே ஓடுகிறது. நடிகர் திலகம் நடையிலும் திலகம்.]

அன்புடன்,
பம்மலார்.

pammalar
15th June 2010, 02:09 AM
கேள்வி பிறந்தது! நல்ல பதில் கிடைத்தது! - 44

கே: "ராமன் எத்தனை ராமனடி" எப்படி? (சி.சதாசிவம், சோமந்தபுத்தூர்)

ப: நடிப்பில் மேலும் ஒரு படி!

(ஆதாரம் : பேசும் படம், டிசம்பர் 1970)

அன்புடன்,
பம்மலார்.

pammalar
15th June 2010, 03:33 AM
கேள்வி பிறந்தது! நல்ல பதில் கிடைத்தது! - 45

கே: நடிகர் திலகத்தின் நடிப்பைத் தானே எல்லோரும் காப்பி அடிக்கிறார்கள்? (கல்லார் ரஹ்மத், நாகை)

ப: நடிகர் திலகத்தின் நடிப்பை காப்பி அடிக்காதவர்களே இல்லை. அடிக்கிற காப்பியை ஒழுங்காக அடித்தால் பரவாயில்லை! அவரை காப்பி அடிப்பதாக எண்ணிக் கொண்டு மோசமாக நடித்து, அவரையும் படம் பார்க்கும் நம்மையும் அவமானப்படுத்தும் சில அக்ரமங்களைத் தான் காணக் சகிக்கவில்லை.

(ஆதாரம் : சினிமா எக்ஸ்பிரஸ், 16 செப்டம்பர் 2002)

அன்புடன்,
பம்மலார்.

kumareshanprabhu
15th June 2010, 09:34 AM
CAN ANY ONE DISCUSS ABOUT RAMAN ETHANAI RAMNADI AND ONE MORE WALKING STYLE IN RAJAPART RANGADURAI MADAN MALAIGAI YOU CAN SEE NT EYEBROWS ALSO ACT AND YOU CAN SEE 3 DIFFERENT STYLES OF WALKING

kumareshanprabhu
15th June 2010, 09:37 AM
ONJULAKU POCHUDI SONG IN AVANTHANMANITHAN 4 DIFFERENT STYLES OF WALKING ONE NEAR THE TRAFFIC SIGNAL AND 3 IN THE HILL TOP

kumareshanprabhu
15th June 2010, 09:41 AM
hi shekar

KCSHEKAR
15th June 2010, 01:13 PM
I will join with Mr.Ragavendran for Kindal / Keli for famous actors like our NT in TV Channels.

We all join together & fight against this.

I already make a noise about this on behalf of Sivaji Samooganala Peravai.

Please visit the Link below:
1)

http://2.bp.blogspot.com/_pW1CQtJaREk/SToCwn4TOEI/AAAAAAAAACw/NRjXrtIg2SA/s1600-h/CinemaExpressP3.jpg

&
2)

http://3.bp.blogspot.com/_pW1CQtJaREk/SToCApzEpfI/AAAAAAAAACo/ABkkE3ElJIw/s1600-h/CinemaExpressP2.jpg

kumareshanprabhu
15th June 2010, 02:42 PM
i will join wth you dear

Murali Srinivas
15th June 2010, 11:10 PM
Good to see thread growing by leaps and bounds!

A Warm Welcome to Mr.Chandrashekar.

Mohan,

As usual you have come out with a unique post. Though we have discussed NT's walking style at various points of time [ofcourse we never get tired of them], you have pointed out a rare walk, the one in Padithaal Mattum Pothumaa. Completely a rare and unique walk. Same way Raghavendar sir had pinpointed the scene in Iruvar Ullam. This observations stimulate the interest in you to watch the movies again and again.

Regards

pammalar
16th June 2010, 02:17 AM
கேள்வி பிறந்தது! நல்ல பதில் கிடைத்தது! - 46

கே: சிவாஜியின் மலரும் நினைவுகள் எப்படி? (வி.எஸ்.மூர்த்தி, அணைக்கரை)

ப: ஒரு மாபெரும் கலைஞனின் திறமைகளை மாத்திரையளவுக்குச் சுருக்கித் தந்த போது 'ஓ ஹி ஈஸ் ரியலி கிரேட்' என்று எண்ணத் தோன்றியது. தொகுத்தவர் வியட்நாம் வீடு சுந்தரமாம். சபாஷ்!

(ஆதாரம் : கல்கண்டு, 4.9.1986)

குறிப்பு:
நடிகர் திலகத்தின் மலரும் நினைவுகள் சென்னைத் தொலைக்காட்சியில் 15.8.1986 சுதந்திர தினத்தன்று வெளியாயிற்று.

அன்புடன்,
பம்மலார்.

RAGHAVENDRA
16th June 2010, 06:23 AM
நடிகர் திலகத்தின் மலரும் நினைவுகள் பற்றிய மலரும் நினைவுகளை நினைவூட்டிய பம்மலாருக்கு நன்றி.

தொலைக்காட்சி என்னவென்றே தெரியாத காலங்களில் வளர்ந்த சிறுவரகள் நாம். வியட்நாம் வீடு படம் வெளியான நேரம் தமிழ்ப் புத்தாண்டு தினத்தன்று இரவு சென்னை வானொலி விவித பாரதியின் வர்த்தக ஒலிபரப்பில் தேன்கிண்ணம் நிகழ்ச்சி, இரவு 7.45 மணிக்கு. ஜெயமாலா நிகழ்ச்சி எப்போது முடியும் என்று ஆவல் ( ஜெயமாலா நிகழ்ச்சிக்கு ரசிகனாக இருநதது அது ஒரு காலம்.). ஒரு மணி நேரம் நடிகர் திலகத்தின் குரலை வானொலியில் கேட்டுக் கொண்டே இருந்த போது ஆஹா இதை இன்னும் ஒரு மணி நேரமாவது ஒலிபரப்ப மாட்டார்களா என்ற ஏக்கம். அருமை சகோதரர் எம்.ஜி.ஆர். படப்பாடலையும் ஒலிபரப்பினார் நடிகர் திலகம். அந்த நிகழ்ச்சியில் தான் சுயநலம் கலந்த பொது நலம் மற்றும் பொது நலம் கலந்த சுயநலம் இவற்றைப் பற்றி விளக்கினார். தம்முடைய நாடக அனுபவங்கள், யதார்த்தம் சின்ன பொன்னுசாமி பிள்ளை அவர்கள் மீதான குருபக்தி, யாவையும வெளிப்படுத்தினார். வெளிநாட்டில் பரிசு பெற்றது, அமெரிக்காவில் கௌரவிக்கப் பெற்றது, இவற்றையெல்லாம் விளக்கினார். ஓரளவு நினைவுள்ளது. ஆனால் அத்தனை பாடல்களும் நினைவில்லை. புதிய பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் ஆயிரம் நிலவே வா பாடலைப் பற்றிப் பாராட்டியது நினைவுள்ளது.

ராகவேந்திரன்

NOV
16th June 2010, 07:39 AM
Moderator's Note: Kindly post all matters regarding the current screenings of NT's films in this dedicated thread:

http://forumhub.mayyam.com/hub/viewtopic.php?t=14382&postdays=0&postorder=asc&start=15

groucho070
16th June 2010, 07:46 AM
NOV, thanks for splitting the thread. I think we need a separate dedicated thread for all the screenings and events.

This will make it easier for NT fans and hubbers to look for information in the thread. Those discussing reviews, analysis of NT's performance and his films can look for it in this thread.

So, hopefully NT fans will understand the need. It's no different than the threads reserved for other stars, most of whom have separate threads for news, reviews, and latest releases.

Thanks again, NOV. :D

kumareshanprabhu
16th June 2010, 09:22 AM
as shekar said first we all to gether fight for kendil /keli from the tv artist. we fight and stop this first.

RAGHAVENDRA
16th June 2010, 03:25 PM
ஹாட் நியூஸ்

ஜெயம் ஆடியோஸ் நிறுவனம் நடிகர் திலகத்தின் இரு முக்கியமான திரைப்படங்களை டி.வி.டி. வடிவில் வெளியிட்டுள்ளது. உடனே வாங்கிப் பயன் பெறுங்கள்.

1. என் தம்பி/ பைத்தியக்காரன் - இரு படங்கள் ஒரு டி.வி.டி.
2. திருடன் மற்றும் ஜெமினி கணேசன் நடித்த நீதிபதி .

இதே போன்று சிம்போனி நிறுவனம் தங்க பதுமை திரைப்படத்தினை வி.சி.டி. யாக வெளியிட்டு அனைத்து பிரதிகளும் விற்று விட்டன. அடுத்த ஸ்டாக் வரும் வரை காத்திருக்க வேண்டியுள்ளது.

எனவே பிரதிகளை உடனே வாங்கிக் கொள்வது உத்தமம்.

ராகவேந்திரன்

NOV
16th June 2010, 05:57 PM
Notice given at Chennai Otteri Balaji Theatre on 13.6.2010 during the Sunday evening show of Rajapart Rangadurai.

courtesy: Hubber pammalar.

[html:966b5d3a0d]
http://farm5.static.flickr.com/4035/4705540243_7d42eb299a_b.jpg

[/html:966b5d3a0d]

rangan_08
16th June 2010, 06:47 PM
Thank you mr_karthik, sivank & pammalar sir.

Thank you raghavendra sir. I completely agree with you about aalayamani & iruvr ullam.

Thank you Murali sir, we've been missing you for quite some time. Glad that you have pointed out that " Padithal mattum podhuma" walk.

rangan_08
16th June 2010, 06:54 PM
[tscii:e315061cb2]


Does anybody have a voice that could match the thespain command and control over the language? The gravitas (of his voice) was such that the opening of Gauravam is still memorable. Without him appearing in the frame, the camera is seen through First person POV of Barrister Rajinikanth. As the car makes its way to his bungalow, the camera is his view. AT first, he passes a (majestic) praise to his wife as he throws his vestment (court attire). And then watches Neelu do something disgusting 'Mr Neelakandam, sofa mukku salli thudaikkaradhukku illa..chi chi chichi chi Don't do that". Specially the 'don't do that' bit is impeccably delivered. This was perhaps done in recording studio. But there's still a'presence' of his. Such is the brilliance of his commanding 'textured' voice.

A nice moment from the film, kg. And, following that scene, when the audience get to see his face for the first time, the way he says, " Yess. I am Rajinikanth, Barrister Rajinikanth.." , holding a glass of beer....wow ! terrific performance.

Never seen two distinctive performances with two different 'mode' of acting as he does here. :clap:

Extra ordinary, indeed.

The dialogues and performance following this scene is another stroke of brilliance.

After saying, “…..I am Rajinikanth…..”, holding a telephone, he continues, “ thozhilla en kooda modhanumnu nenacha, nichayam nanthan jeyippen. Akandhayilayo (look at the way he pronounces that word, pakka Brahmin kettaru pongo :notworthy: ), garvathilayo idha naan sollala, en thozhil mela naan vechikitirukkura nambikkayila solren..”. And then, after a pause, “ vaingo telephona “ (don’t miss that “ vaingo “ :clap: ).

This one character, this one film is just enough for me to last for a life time.

I am eager to know the success story of GOWRAVAM. Can any good soul list out the number of days it ran in theatres across Tamilnadu, please.

[/tscii:e315061cb2]

rangan_08
16th June 2010, 06:56 PM
ஹாட் நியூஸ்

ஜெயம் ஆடியோஸ் நிறுவனம் நடிகர் திலகத்தின் இரு முக்கியமான திரைப்படங்களை டி.வி.டி. வடிவில் வெளியிட்டுள்ளது. உடனே வாங்கிப் பயன் பெறுங்கள்.

1. என் தம்பி/ பைத்தியக்காரன் - இரு படங்கள் ஒரு டி.வி.டி.
2. திருடன் மற்றும் ஜெமினி கணேசன் நடித்த நீதிபதி .

இதே போன்று சிம்போனி நிறுவனம் தங்க பதுமை திரைப்படத்தினை வி.சி.டி. யாக வெளியிட்டு அனைத்து பிரதிகளும் விற்று விட்டன. அடுத்த ஸ்டாக் வரும் வரை காத்திருக்க வேண்டியுள்ளது.

எனவே பிரதிகளை உடனே வாங்கிக் கொள்வது உத்தமம்.

ராகவேந்திரன்

Thanks for the good news, sir.

rangan_08
16th June 2010, 07:02 PM
நடிகர் திலகத்தின் மலரும் நினைவுகள் பற்றிய மலரும் நினைவுகளை நினைவூட்டிய பம்மலாருக்கு நன்றி.

தொலைக்காட்சி என்னவென்றே தெரியாத காலங்களில் வளர்ந்த சிறுவரகள் நாம். வியட்நாம் வீடு படம் வெளியான நேரம் தமிழ்ப் புத்தாண்டு தினத்தன்று இரவு சென்னை வானொலி விவித பாரதியின் வர்த்தக ஒலிபரப்பில் தேன்கிண்ணம் நிகழ்ச்சி, இரவு 7.45 மணிக்கு. ஜெயமாலா நிகழ்ச்சி எப்போது முடியும் என்று ஆவல் ( ஜெயமாலா நிகழ்ச்சிக்கு ரசிகனாக இருநதது அது ஒரு காலம்.). ஒரு மணி நேரம் நடிகர் திலகத்தின் குரலை வானொலியில் கேட்டுக் கொண்டே இருந்த போது ஆஹா இதை இன்னும் ஒரு மணி நேரமாவது ஒலிபரப்ப மாட்டார்களா என்ற ஏக்கம். அருமை சகோதரர் எம்.ஜி.ஆர். படப்பாடலையும் ஒலிபரப்பினார் நடிகர் திலகம். அந்த நிகழ்ச்சியில் தான் சுயநலம் கலந்த பொது நலம் மற்றும் பொது நலம் கலந்த சுயநலம் இவற்றைப் பற்றி விளக்கினார். தம்முடைய நாடக அனுபவங்கள், யதார்த்தம் சின்ன பொன்னுசாமி பிள்ளை அவர்கள் மீதான குருபக்தி, யாவையும வெளிப்படுத்தினார். வெளிநாட்டில் பரிசு பெற்றது, அமெரிக்காவில் கௌரவிக்கப் பெற்றது, இவற்றையெல்லாம் விளக்கினார். ஓரளவு நினைவுள்ளது. ஆனால் அத்தனை பாடல்களும் நினைவில்லை. புதிய பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் ஆயிரம் நிலவே வா பாடலைப் பற்றிப் பாராட்டியது நினைவுள்ளது.

ராகவேந்திரன்

Golden moments.

Thanks for sharing, sir.

pammalar
16th June 2010, 07:18 PM
Thank You Very Much, Mr. NOV.

Regards,
Pammalar.

Murali Srinivas
17th June 2010, 01:06 AM
Thanks NOV for the double treat.

மோகன்,

நடிகர் திலகம் எப்படி "செல்லா பட்டு புடவை கட்டிண்டா நீயும் பத்து வயசு குறைச்சலாதாண்டி ஆயிடிற" என்று சொல்லுவாரோ அதே போல் கெளரவம் என்ற பெயரை கேட்டாலே உங்களுக்கும் பத்து வயது குறைந்து விடுகிறது என்று நினைக்கிறேன்.

ஜோ,

இந்த மன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் தேவைப்படுகிறது என்று நீங்கள் கேட்ட தகவல்களை ஒரு பக்க நோட்டிசின் மூலமாக நமது ரசிகர்கள் வழங்கியிருக்கிறார்கள் பார்த்தீர்களா?

அன்புடன்

sankara1970
17th June 2010, 11:30 AM
Info about NT's Radio program is new to me and quite interesting.

Also the notice issued in RR film show is again very nicely made and thalaivar's pose is simply superb
1986 Malarum Ninaivugal partha niyabakam irukku-DD National ilum 90s la oru interview with NT telecast panninargal. Appo VP Singh PM aha irunthathaga ninaivu.

Mahesh_K
17th June 2010, 12:21 PM
'கலைப்பூங்கா' வெளியிட்ட நோட்டீஸில் பல வியக்க வைக்கும் தகவல்கள் உள்ளன. அவற்றை இன்றைய திரைச்சூழலோடு ஒப்பிட்டு நோக்கும் போது வியப்பு பன்மடங்காகிறது.


- 46 படங்களில் ஜோடியே இல்லாமல் நடித்திருக்கிறார். :o
- 40 படங்களுக்கு மேல் சண்டைக் காட்சிகள் இல்லை. :o :o

இவை இரண்டும் இன்றி படமே வருவதில்லை இப்போது.


- சிவாஜி மூன்று வேடங்களில் நடித்த 'பலே பாண்டியா' வெறும் 13 நாட்களில் எடுக்கப்பட்டதா? :o :

இன்று, ஒரு ரோலில் நடிப்பதற்க்கு 'கேரக்டர் ஸ்டடி' செய்யவே பல மாதங்கள் ஆவதாக செய்திகள் வருகின்றனவே?



-22 திரைப்படங்கள், 34 வெவ்வேறு அரங்குகளில் வெள்ளி விழா - அனைத்தும் ரெகுலர் ஷோக்களில் - பகல் காட்சிகளில் அல்ல. :o
- 43 நாட்களில் 6 படங்கள் ரிலீஸ். :o :o
- 17 படங்கள் ஒரே நாளில் -இன்னொரு சிவாஜி படத்துடன் -ரிலீஸ். அவற்றில் 15 நூறு நாள் படங்கள் :o :o :o .

ஒரு முன்னணி நடிகர் ஆண்டுக்கு ஒரு படம் வெளியிடுவதே பெரிதாகி விட்டதே?

கண்டிப்பாக வேறு யாரும் நினைத்துக்கூட பார்க்க முடியாத சாதனைகள்தான். :clap: :clap: :clap:

pammalar
18th June 2010, 02:05 AM
கேள்வி பிறந்தது! நல்ல பதில் கிடைத்தது! - 47

கே: படத்தில் வில்லனே கதாநாயகனாக நடிக்க முடியுமா? (கே.எல்.கன்னியப்பன், சிலியாவ், மலேசியா)

ப: "திரும்பிப் பார்"த்தால் "அந்த நாள்" ஞாபகம் வருமே நண்பரே!

(ஆதாரம் : பேசும் படம், நவம்பர் 1970)

அன்புடன்,
பம்மலார்.

pammalar
18th June 2010, 02:24 AM
கேள்வி பிறந்தது! நல்ல பதில் கிடைத்தது! - 48

கே: நடிகர் திலகம் வீட்டிலுள்ள பிள்ளையார் கோவிலுக்கு யார் வேண்டுமானாலும் போகலாமா? (எஸ்.லீலா, கோவை)

ப: சென்னை மாம்பலத்தில் உள்ள சிலர் அங்கு வந்து வழிபடுகிறார்கள்.

(ஆதாரம் : பேசும் படம், பிப்ரவரி 1961)

அன்புடன்,
பம்மலார்.

pammalar
18th June 2010, 10:22 AM
I am eager to know the success story of GOWRAVAM. Can any good soul list out the number of days it ran in theatres across Tamilnadu, please.



"கௌரவம்", நமது நடிகர் திலகத்தின் 165வது திரைக்காவியம், 31வது வண்ணப்படம்.

1973-ம் ஆண்டு தீபாவளிக்குத் திரைக்கு வந்தது, வெளியான தேதி: 25.10.1973 (வியாழக்கிழமை)

100 நாட்களும் அதற்கு மேலும் ஓடிய திரையரங்குகள்:
(ஊர் - அரங்கம் (இருக்கைகள்) - ஓடிய நாட்கள் என்கின்ற ஃபார்மெட்டில்)

1. சென்னை - சாந்தி (1214 இருக்கைகள்) - 102 நாட்கள்

2. சென்னை - கிரௌன் (1017 இருக்கைகள்) - 102 நாட்கள்

3. சென்னை - புவனேஸ்வரி (1025 இருக்கைகள்) - 102 நாட்கள்

4. மதுரை - சிந்தாமணி (1560 இருக்கைகள்) - 100 நாட்கள்

5. சேலம் - சாந்தி (1055 இருக்கைகள்) - 100 நாட்கள்

மேலும், கோவை ராயல் அரங்கில் (1680 இருக்கைகள்) 93 நாட்கள்

திருச்சி பிரபாத் (1289 இருக்கைகள்) அரங்கில் 81 நாட்கள்

நெல்லை சென்ட்ரல் (1405 இருக்கைகள்) அரங்கில் 71 நாட்கள்

நாகர்கோவில் ராஜேஷ் (1036 இருக்கைகள்) அரங்கில் 53 நாட்கள்

பல்லாவரம் லட்சுமி அரங்கில் 50 நாட்கள்

இன்னும் கணிசமான ஊர்களில் 50 நாட்களும் அதற்கு மேலும் ஓடி சிறந்ததொரு வெற்றியைப் பெற்றது.

இலங்கையில் கௌரவம் வெற்றிகரமாக ஓடிய விவரங்களை தனியொரு பதிவாகத் தருகிறேன்.

குறிப்பு:
குவைத் நாட்டில் வெளியான முதல் தமிழ்த் திரைப்படம் "கௌரவம்". அங்கும் இக்காவியம் வெற்றிகரமாக ஓடியது.

சாதனைகள் எனும் சாம்ராஜ்யத்திற்கு நிரந்தர சக்கரவர்த்தி சிங்கத்தமிழன் சிவாஜி ஒருவரே!

அன்புடன்,
பம்மலார்.

pammalar
18th June 2010, 10:35 AM
நகைச்சுவை நடிகர், மிமிக்ரி மேதை சின்னி ஜெயந்த் அவர்கள் "கௌரவம்" திரைக்காவியத்தை முதல் வெளியீட்டிலேயே சற்றேறக்குறைய 80 முறை கண்டு களித்துள்ளார்.

அன்புடன்,
பம்மலார்.

HARISH2619
18th June 2010, 02:15 PM
என் மனதில் தோன்றிய ஒரு விஷயத்தை இங்கே பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
இந்த திரியின் முக்கிய நோக்கமே நடிகர்திலகத்தின் பெருமையை அவரது புகழை இந்த் தலைமுறையினரும் உனரும் வகையில் எடுத்துரைப்பதுதான்.அதே சமயத்தில் அவர் ஒரு மாபெரும் நடிகர் மட்டுமல்ல மாபெரும் வெற்றி படங்களையும் மற்ற எல்லா கதாநாயகர்களை விடவும் அதிகமாக கொடுத்தவர் என்பதை நிரூபிக்கவும் இந்த திரியில் பெரு முயற்சி எடுக்கப்படுகிறது.அதன் ஒரு அங்கமாக இன்றும் அவருக்கு இருக்கும் ரசிகர் கூட்டத்தை ஆதாரத்தோடு அனைவரும் தெரிந்துகொள்ளும் வகையில்,இன்றும் அவர் படங்கள் வெளியாகும் தியேட்டர்கள் மற்றும் அங்கு நடக்கும் அலப்பறைகளை இங்கு அப்லோட் செய்கிறார்கள்.
ஆனால் அவர் படங்கள் வெளியாகும் விபரத்திற்க்கு ஒரு தனி பகுதியை உருவாக்கினால் அவரின் தீவிர ரசிகர்களை தவிர மற்றவர்கள் அதை ஓபன் செய்து பார்ப்பார்களா என்பது சந்தேகம்தான்.அதனால் அவர் பட வெளியீடு விபரங்களுக்காக தனி பகுதி என்பது வேன்டாம் என நான் நினைக்கிறேன்.நான் சொல்ல வ்ருவதை தெளிவாக மற்றவர்கள் புரிந்து கொள்ளும்படி சொல்ல எனக்கு தெரியவில்லை.ஆனால் நான் சொல்ல வந்த கருத்தின் சாராம்சத்தை முரளிசார்,ராகவேந்திரன் சார் மற்றும் பம்மல் சார் போன்றவர்கள் புரிந்துகொள்வார்கள் என்று நம்புகிறேன்

RAGHAVENDRA
18th June 2010, 03:17 PM
அனைத்து ரசிகர்களுக்கும் ஓர் அரிய வாய்ப்பு. உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டையொட்டி கலைஞருக்குப் பாராட்டு விழாவும் பங்கேற்கும் அறிஞருக்குப் பாராட்டு விழாவும் சென்னை ருஷ்யக் கலாச்சார மையம் சார்பில் 21.06.2010 அன்று மாலை 6.00 மணியளவில் சோவியத் கலாச்சார அரங்கில் நடைபெற உள்ளது. மாநாட்டில் பங்கேற்க உள்ள ருஷ்ய அறிஞர் அலெக்ஸாண்டர் டுபியான்ஸ்கி மற்றும் லீனா ஆகியோர் பாராட்டப் பெற உள்ளனர். பாராட்டும் மேதகையோர் முனைவர் டி.எஸ். நாராயணசாமி மற்றும் முனைவர் ராஜலக்ஷ்மி ஆகியோர். விழாவில் நடிகர் திலகத்தின் நினைவலைகள் என்ற தொகுப்புப் படம் திரையிடப்படும். இதில் பல்வேறு வகையான தமிழ் நடைகளில் நடிகர் திலகத்தின் உரையாடல் இடம் பெற்ற காட்சிகள் திரையிடப் படும். திரைப்படத்தினைத் தொகுத்து வழங்குபவர் இயக்குநர் கா. பரத் அவர்கள். இவர் நடிகர் திலகத்தை தொலைக்காட்சிக்காக இயக்கிய ஒரே இயக்குநர் ஆவார்.

நிகழ்ச்சி 6.15 முதல் 8.30 வரை

அனைத்து ரசிகர்களும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டிய நிகழ்சசி இது.

ராகவேந்திரன்.

Murali Srinivas
18th June 2010, 11:59 PM
செந்தில்,

நீங்கள் சொல்வது எனக்குப் புரிகிறது. ஆனால் ஒரு விஷயம். இங்கே பங்களிப்பவர்களும் பார்வையாளர்களும் தமிழகத்திலிருந்து மட்டுமல்ல உலகெங்கும் பரவியுள்ளனர். சில நேரங்களில் நாம் மறு வெளியீடுகளைப் பற்றி பேசும் போது பெரும்பாலோருக்கு பங்களிப்பு செய்ய முடியாமல் மெளனமாக இருக்க நேர்கிறது. மேலும் அண்மைக் காலமாக நடிகர் திலகத்தின் படங்களின் மறு வெளியீடுகள் அடிக்கடி நடைப்பெறுவதால் அவற்றைப் பற்றிய பதிவுகள் திரியில் அதிகமாக இடம் பெற்றுவிட, பட விமர்சனங்களும் ரசித்த காட்சிகள் பற்றிய பதிவுகளும் குறைந்து போய் விட்டன என்றொரு மனக்குறையும் இருக்கிறது. இப்போது நடிகர் திலகத்தின் படங்களுக்கு மீண்டும் மவுசு ஏற்பட்டிருப்பதால் மறு வெளியீடுகள் அதிகமாவதற்கு [குறிப்பாக சென்னையில்] அறிகுறிகள் தெரிகின்றன. இவற்றையெல்லாம் கணக்கில் எடுத்துக் கொண்டுதான் தற்போது நடைப்பெறும் விழாக்கள், மறு வெளியீடுகள் போன்றவற்றிருக்கு தனி திரி தொடங்கப்பட்டுளது.

ஆனால் அதே நேரத்தில் எந்த தகவல்கள் எல்லோரையும் சென்று அடைய வேண்டும் என்று நினைக்கிறோமோ அவற்றை இங்கே பதிவு செய்யவும் போகிறோம். உதாரணமாக ராஜபார்ட் வெளியீட்டின் போது கொடுக்கப்பட்ட நோட்டீஸ், அது மெயின் திரியில்தான் அப்லோட் செய்யப்பட்டது. இனியும் அது தொடரும்.

அது மட்டுமல்ல. இது ஒரு சோதனை முயற்சியே. இதில் ஏதாவது குழப்பங்கள் நேர்ந்தால் மீண்டும் திரிகள் இணைக்கப்பட்டு விடும். ஆகவே இரண்டு திரிக்கும் உங்கள் ஆதரவும் பங்களிப்பும் தொடர வேண்டும்.

அன்புடன்

HARISH2619
19th June 2010, 12:12 PM
Thankyou murali sir,fully satisfied with your reply.but if the function or re release is in a big and grand manner please upload it in the main thread

KCSHEKAR
19th June 2010, 04:42 PM
Pammalar Timing is very good about Vinayagar Temple. Thanks

KCSHEKAR
19th June 2010, 04:44 PM
Data given by Pammalar is very good. Thanks

pammalar
20th June 2010, 01:38 AM
கேள்வி பிறந்தது! நல்ல பதில் கிடைத்தது! - 49

கே: "அவன் ஒரு சரித்திரம்" படத்தில் சிவாஜி கணேசன் கலெக்டராக நடிப்பதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? (மு. சிவாஜி சுந்தர், திண்டுக்கல்)

ப: யானைக்குக் கொடுத்த சோளப் பொறி!

(ஆதாரம் : பொம்மை, ஆகஸ்ட் 1975)

அன்புடன்,
பம்மலார்.

pammalar
20th June 2010, 01:46 AM
டியர் சந்திரசேகரன் சார்,

தங்களது மனம் திறந்த பாராட்டுக்களுக்கு எமது மனமார்ந்த நன்றிகள்!

அன்புடன்,
பம்மலார்.

pammalar
20th June 2010, 03:27 AM
கேள்வி பிறந்தது! நல்ல பதில் கிடைத்தது! - 50

கே: "சங்கிலி" படத்தில் நடித்துள்ள பிரபு, நடிப்பில் தந்தையை மிஞ்சுவாரா? (பழ.பாலு, அன்னதானபுரம்)

ப: அதை இப்போது சொல்லி விட முடியுமா? ஏழு கடல் தாண்டி, ஒரு குகையில், நெருப்பால் சூழப்பட்ட மாளிகையில், ராட்சஸ ஓணான்களாலும், பாம்புகளாலும் காவல் காக்கப்படும் ஒரு பெரிய இரும்புக் கூண்டில் அடைக்கப்பட்டுள்ள கிளியின் இடது காலில் உள்ள உயிர் நிலையைப் பிடிக்கும் மந்திர தந்திர படக் கதாநாயகனைப் போல, படாத பாடுபட்டு, இன்று நடிப்புத்துறையில் யாரும் தனக்குப் பிறகு தான் என்ற அளவு உயர்ந்துள்ள சிவாஜியை, அவர் மகனே மிஞ்சுவாரா என்கிறீர்களே, கலைத்துறையில் நடிப்பு, நடப்பு எல்லா விஷயங்களிலும் தந்தையைப் பின்பற்றினால் புகழ் பெற முடியும். அப்போதும் கூட, 'புலிக்குப் பிறந்தது பூனையாகுமா?' என்று மகனின் புகழையும் சேர்த்து தந்தை தான் தட்டிக் கொண்டு போவார்.

(ஆதாரம் : பேசும் படம், ஜூன் 1982)

அன்புடன்,
பம்மலார்.

RAGHAVENDRA
20th June 2010, 10:50 AM
தன்னுடைய படங்களைப் பற்றி எந்தக் கலைஞனிடம் கேட்டாலும் உள்ளார்ந்த பதிலை எதிர்பார்க்க முடியாது. தன்னுடைய எல்லா படங்களுமே தனக்குப் பிடித்தவை தான் என்பார்கள். ஆனால் உள்ளது உள்ளபடி உரைக்கக் கூடிய ஒரே கலைஞர் என்பதை நிரூபிக்கும் வகையில் தன்னுடைய படங்களைப் பற்றித் தன் மனதில் பட்டதைக் கூறியிருக்கிறார் நடிகர் திலகம். தன்னுடைய 43வது பிறந்த நாளையொட்டி அகில இந்திய சிவாஜி கணேசன் ரசிகர் மன்றம் வெளியிட்ட மலரில் அவருடைய படங்களைப் பற்றிய அவருடைய கருத்துக்கள் இடம் பெற்றிருந்தன. அதன் தொடர்ச்சியாக தினத்தந்தி 1996 வாக்கில் மற்ற படங்களைப் பற்றிய அவருடைய கருத்துக்களைக் கேட்டறிந்தது. அதன் மறு வெளியீடு நடிகர் திலகம் மறைந்து சில நாட்களுக்குப் பிறகு ஒரு ஞாயிறு மலரில் இடம் பெற்றது. அதிலிருந்த சில துளிகள் அவ்வப் போது இங்கே இடம் பெறும். மிருதங்க சக்கரவர்த்தி படத்திலிருந்து தொடங்கி அவரது கருத்துக்கள் அதில் இடம் பெற்றுள்ளன. அதனடிப்படையில் மிருதங்க சக்கரவர்த்தி படத்தைப் பற்றிய நடிகர் திலகத்தின் கருத்து இங்கே-

கேள்வி: "மிருதங்க சக்கரவர்த்தி எப்படிப்பட்டவர் "

நடிகர்திலகத்தின் பதில்: "உண்மையான மிருதங்க சக்கரவர்த்திகளே பார்த்து ஒத்துக்கொண்டு பெருமைப்பட்ட சக்கரவர்த்தி தான் "

அன்புடன்

ராகவேந்திரன்

pammalar
20th June 2010, 11:00 PM
கேள்வி பிறந்தது! நல்ல பதில் கிடைத்தது! - 51

கே: நடிகர் திலகத்தின் குறிப்பிடத்தக்க தனித்தன்மை என்ன? (மேஜர்தாசன், ஈரோடு)

ப: திரையுலக வட்டாரத்தில், ரசிகர்களிடத்தில் இன்னும் ஒரு சக்கரவர்த்தியாகவே இருக்கிறாரே!

(ஆதாரம் : பேசும் படம், டிசம்பர் 1983)

அன்புடன்,
பம்மலார்.

KCSHEKAR
21st June 2010, 10:33 AM
A News Clipping from The Times Of India, Chennai Edition Dated 17.6.2010.

http://pammalar.webs.com/apps/photos/photo?photoid=87318865

rangan_08
21st June 2010, 06:46 PM
மோகன்,

நடிகர் திலகம் எப்படி "செல்லா பட்டு புடவை கட்டிண்டா நீயும் பத்து வயசு குறைச்சலாதாண்டி ஆயிடிற" என்று சொல்லுவாரோ அதே போல் கெளரவம் என்ற பெயரை கேட்டாலே உங்களுக்கும் பத்து வயது குறைந்து விடுகிறது என்று நினைக்கிறேன்.



Yes, your Honour :D

rangan_08
21st June 2010, 06:53 PM
Thank you so much pammalar sir, for Gowravam statistics.

As usual, many theatres missed the 100 days mark very closely.

Thank you once again sir.

rangan_08
21st June 2010, 07:25 PM
[tscii:946da82465]A fewdays back saw, “ Vanangamudi “ in Sirippoli channel for a while (have seen it years back during its re-release @ Mekala theatre) but, now I’m going to share my views about Pasamalar!

After watching those two great actors as the immortal, dearest brother and sister ever portrayed in CINEMA, it has become impossible for me to see them as couples indulging in romance in films like Vanangamudi, Rathathilagam, Annayin aanai etc. Of course, Thiruvilayadal is an exception and we all know the reason :) .

It is strange, and I know that they are just actors and it’s just a movie and that I should not be too sentimental. But, the impact of Pasamalar is so intense that I just can’t imagine them as couples. Hope most of you share the same sentiment here.
[/tscii:946da82465]

SuraTheLeader
21st June 2010, 07:33 PM
The BoX -Office Success and stats of NT's films are bind-blowing.
Thank you PAMMALAR sir for your detailed explanation and statistics.
We are able to know more milestones and records by this legendary actor through this HUB.
And One more thing I want to know is whether there were any Producers who Celebrated/felicitated on the success of the movies.
I once heard in an old NAGESH Interview in TV that They had a Success function for THIRUVILAIYAADAL where NAGESH was not Invited due to some mis-understanding with someone from that Team :( .
* Today few movies simply celebrate 100 Days Function/150 Days function, without making any Impact on the viewers :lol: .
I think then all the old NT movies should have witnessed such success function [ VETRI VIZHA ] :thumbsup: :notworthy: .
Kindly share few Info on thi sir.

Murali Srinivas
21st June 2010, 11:26 PM
Sura,

Nadigar Thilagam's BO achievements are not only mind blowing but unsurpassed till date. No other actor in the history of Tamil cinema had given so many hits and his records remain unbroken. We have a seperate thread for the BO success of NT movies which is there in Tamil films classics section.

Regarding the vetri vizhas, yes they celebrated the 100th days and 25th weeks in a grand manner throughout Tamilnadu. The 100th day or Silver jublie function used to be celebrated not only in Chennai but in Madurai, Trichy, Salem, Coimbatore etc. The artists and technicians used to visit the respective theatres where the movie had been running and appear on the stage before the audience. This not only helped the theatres in other locations but also gave a chance for the audience to see their favourite actors/actresses in flesh and blood, which otherwise would not have been possible.

Thanks again for your keen interest on NT and his movies.

Regards

pammalar
22nd June 2010, 03:07 AM
கேள்வி பிறந்தது! நல்ல பதில் கிடைத்தது! - 52

கே: சிவாஜிக்கு மார்க்கெட் இல்லை என்று கூறுபவர்களைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? (ஆர்.கணபதிராமன், திருச்சி)

ப: முழுப் பூசணிக்காயைச் சோற்றில் மறைக்க முயற்சிப்பவர்களைப் பற்றிச் சொல்ல என்ன இருக்கிறது.

(ஆதாரம் : பேசும் படம், செப்டம்பர் 1966)

அன்புடன்,
பம்மலார்.

pammalar
22nd June 2010, 03:25 AM
இந்த வார (23.6.2010) குமுதம் இதழிலிருந்து: [குமுதம் இதழுக்கு முதல்வர் கலைஞர் அளித்த சிறப்புப் பேட்டி]

குமுதம் இதழின் கேள்வி : இன்றைய இளம் ஹீரோக்களில் உங்களைக் கவர்ந்தவர்?

முதல்வர் கலைஞர் பதில் : சிவாஜிக்குப் பிறகு இன்னும் பிறக்கவில்லை!

அன்புடன்,
பம்மலார்.

pammalar
22nd June 2010, 03:56 AM
நடிகர் திலகம் நற்றமிழ் மொழிக்கு என்ன செய்தார் எனக் கேட்கும் மேதாவிகளுக்கு, இன்று 21.6.2010 திங்கள் மாலை சென்னை ரஷ்ய கலாசார மையத்தில் நடைபெற்ற விழாவில் திரையிடப்பட்ட முக்கால் மணி நேர சிங்கத்தமிழனின் திரைப்படக் காட்சிகளின் தொகுப்பை திரையிட்டுக் காட்டினால், அதனைப் பார்த்துக் கொண்டிருக்கும் போதோ அல்லது பார்த்து முடிக்கும் சமயத்திலோ , அவர்கள் முகங்களில் கரி பூசப்பட்டிருக்கும் அல்லது முகங்கள் கரியாகியிருக்கும்!

வெள்ளித்திரையில் தங்கத்தமிழை தாலாட்டி, சீராட்டி வளர்த்த சிங்கத்தமிழனல்லவா நம் தங்கத்தமிழ்ப்பெருமகன்!!

இதன் தொடர்ச்சிப் பதிவு நாளை இந்த வேளை பார்த்து ஓடி வரும்...

அன்புடன்,
பம்மலார்.

RAGHAVENDRA
22nd June 2010, 08:37 AM
நாளை என்ன நாளை, இன்று கூட நமது தான். எனவே இன்றே இப்பொழுதே கண்டு மகிழுங்கள் அந்தக் காட்சிகளை என நான் சவால் விடவில்லை. பணிவோடு தங்கள் பார்வைக்கு சமர்ப்பிப்பதில் பெருமிதம் கொள்கிறேன். பம்மலார் கூறியது போல் தமிழ் மொழியின் வரலாறு எதிர்காலத்தில் சிம்மக் குரலோன் சிவாஜிக்கு என்று ஒரு அத்தியாயத்தை ஒதுக்கிக் கொள்ள வேண்டும். பம்மலாரின் நேர்முக வர்ணணைக்காக நாம் ஆவலோடு காத்திருக்கும் வரைக்கும்...
http://www.nadigarthilagam.com/newsroom.htm

அன்புடன்
ராகவேந்திரன்

sankara1970
22nd June 2010, 06:49 PM
From the question and answers, we can make out that few magazines were in support of NT.

During his time, NT would have faced stiff competition among his fellow actors and criticisms from some magazines.

Sure he won his fellow actors. He also won time.

Do we have any analysis or record of such films which faced criticism and won the hearts of people?

HARISH2619
22nd June 2010, 07:18 PM
The BoX -Office Success and stats of NT's films are bind-blowing.
Thank you PAMMALAR sir for your detailed explanation and statistics.
We are able to know more milestones and records by this legendary actor through this HUB.
And One more thing I want to know is whether there were any Producers who Celebrated/felicitated on the success of the movies.
I once heard in an old NAGESH Interview in TV that They had a Success function for THIRUVILAIYAADAL where NAGESH was not Invited due to some mis-understanding with someone from that Team :( .
* Today few movies simply celebrate 100 Days Function/150 Days function, without making any Impact on the viewers :lol: .
I think then all the old NT movies should have witnessed such success function [ VETRI VIZHA ] :thumbsup: :notworthy: .
Kindly share few Info on thi sir.

MR SURA,
The 200 day function of thirisoolam which was held in madurai was probably the best vetri vizhaa held in tamilnadu till date.I kindly request murali sir to provide the details

Murali Srinivas
22nd June 2010, 11:54 PM
Senthil,

It was not the 200th day function but a function organised to celebrate 200th Film of NT. [200-வது பட விழா]. It was held on 10th and 11th of March 1979. A Grand Gala affair indeed. I had written about it in the political innings thread. Would try to pull out some time.

சுவாமி & ராகவேந்தர் சார்,

என்னால் வர முடியவில்லை. உங்கள் போஸ்ட் பார்க்கும் போது மிஸ் பண்ணி விட்டேன் என தெரிகிறது. உங்கள் வர்ணனைக்காக காத்திருக்கும்

அன்புடன்

pammalar
23rd June 2010, 02:10 AM
கேள்வி பிறந்தது! நல்ல பதில் கிடைத்தது! - 53

கே: சிவாஜி தற்சமயம் எத்தனைப் படங்களில் நடித்து வருகிறார்? (இரா.பாண்டியன், சென்னை)

ப: சுமார் ஒரு டஜன் படங்களில் நடித்து வருகிறார்.

(ஆதாரம் : பொம்மை, ஜனவரி 1968)

அன்புடன்,
பம்மலார்.

pammalar
23rd June 2010, 03:11 AM
சரவணா திரையரங்கு என்றுமே எம்.ஜி.ஆர். அவர்களின் திரைப்படங்களின் கோட்டை என அழைக்கப்படும் அரங்காகும். நமது ரசிகர்கள் அங்கே அதிகம் சென்றதில்லை. நிறைய பேருக்கு அந்த அரங்கம் எங்கே உள்ளது எனவும் தெரியாது. நமக்கு தெரிந்த நமது நடிகர் திலகத்தின் முதல் வெளியீ்ட்டுத் திரைப்படம் என்றால் அது நீதி மட்டும் தான். என்னைப் பொறுத்த வரையில் கிட்டத்தட்ட 35 ஆண்டுகளுக்கு முன்னர் காலைக் காட்சியில் அதாவது 10.30 மணி, நடிகர் திலகத்தின் அபூர்வமான படங்கள் திரையிடப் படும். அப்போது பார்த்த பாக்கியவதி படம் தான் நான் அந்த திரையரங்கிற்கு கடைசியாக சென்றது. அதன் பின்னர் நேற்று தான் சென்றேன். அந்த நாளைய நினைவுகள் வந்து போயின. நல்ல வீடு, பாக்கியவதி, போன்ற அபூர்வமான படங்கள் அப்படி காலைக் காட்சியில் பார்த்தது தான்.
ராகவேந்திரன்

சென்னை ஓட்டேரி சரவணா திரையரங்கில், நமது நடிகர் திலகத்தின் 4 புதிய திரைக்காவியங்கள் வெளியாகியுள்ளன.

1. காவல் தெய்வம் - 1.5.1969 - 36 நாட்கள்

2. நிறைகுடம் - 8.8.1969 - 49 நாட்கள்

3. அருணோதயம் - 5.3.1971 - 41 நாட்கள்

4. நீதி - 7.12.1972 - 78 நாட்கள்

அன்புடன்,
பம்மலார்.

pammalar
23rd June 2010, 03:47 AM
வெள்ளித்திரையில் சிங்கத்தமிழன் முழங்கிய தங்கத்தமிழை 7 வகைகளாக வகைப்படுத்தியிருந்தார்கள்... [யார்? சென்னை ரஷ்ய கலாச்சார மையத்தில் 21.6.2010 திங்கள் மாலை நடைபெற்ற விழாவில், "நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நினைவுகள்" என்கின்ற தலைப்பில், நடிகர் திலகத்தின் திரைப்படக் காட்சிகளின் தொகுப்பை உருவாக்கிய வெள்ளித்திரை-சினனத்திரை இயக்குநர் திரு.க.பரத் அவர்கள்]

அந்த எழு வகை எழுச்சித் தமிழ்:

1. இலக்கியத் தமிழ்

2. இயலாகிய தமிழ்

3. இசைத் தமிழ்

4. பேச்சுத் தமிழ்

5. வழக்குத் தமிழ்

6. பாமரத் தமிழ்

7. நாடகத் தமிழ்

ஒவ்வொரு தமிழிலும், சிங்கத்தமிழனின் திரைக்காவியங்களிலிருந்து காட்சிகள் அம்சமாகப் பொருத்தப்பட்டிருந்தன. இதற்காகவே இயக்குநர் பரத் அவர்களுக்கு தமிழுலக விருது ஒன்று தாராளமாகத் தரலாம்.

இதன் தொடர்ச்சிப் பதிவு நாளை இந்த வேளை பார்த்து ஓடி வரும்...

அன்புடன்,
பம்மலார்.

KCSHEKAR
23rd June 2010, 04:30 PM
ரஷ்ய கலாச்சார மையத்தில் நடைபெற்ற விழாவின் தொகுப்பை நமக்கு வழங்கிய திரு.ராகவேந்திரன் மற்றும் திரு.பம்மலார் - க்கு நன்றி.

pammalar
23rd June 2010, 09:57 PM
கேள்வி பிறந்தது! நல்ல பதில் கிடைத்தது! - 54

கே: செந்தமிழ் - கொடுந்தமிழ் இரண்டிற்கும் உள்ள வித்தியாசம் என்ன? (கே.எம்.எம்.யூசஃப், கொழும்பு)

ப: சிவாஜி கணேசன் படங்களில் பேசும் வசனம் செந்தமிழ். அதை வேறு சிலர் பேசுவது கொடுந்தமிழ்.

(ஆதாரம் : பேசும் படம், அக்டோபர் 1958)

அன்புடன்,
பம்மலார்.

pammalar
24th June 2010, 02:55 AM
பார் போற்றும் பாரத ஜோதியின் "பட்டிக்காடா பட்டணமா" திரைக்காவியம் : ஓடிய புள்ளி விவரம்

1. சென்னை - சாந்தி - 146 நாட்கள்

2. சென்னை - கிரௌன் - 111 நாட்கள்

3. சென்னை - புவனேஸ்வரி - 104 நாட்கள்

4. மதுரை - சென்ட்ரல் - 182 நாட்கள்

5. சேலம் - ஜெயா - 146 நாட்கள்

6. திருச்சி - ராக்ஸி - 139 நாட்கள்

7. நெல்லை - பார்வதி - 111 நாட்கள்

8. கொழும்பு - சென்ட்ரல் - 121 நாட்கள்

9. யாழ்ப்பாணம் - ராணி - 105 நாட்கள்

10. கோவை - ராஜா - 90 நாட்கள் (பின்னர் வள்ளி அரங்கிற்கு மாற்றப்பட்டு 100 நாட்களைக் கடந்து ஓடியது)

11. வேலூர் - அப்ஸரா - 69 நாட்கள் (பின்னர் கிரௌன் அரங்கிற்கு மாற்றப்பட்டு 100 நாட்களைக் கடந்து ஓடியது)

மேலும் விவரங்கள் வெகு விரைவில்.....

அன்புடன்,
பம்மலார்.




பார் போற்றும் பாரத ஜோதியின் "பட்டிக்காடா பட்டணமா" திரைக்காவியம் : ஓடிய புள்ளி விவரம் (தொடர்ச்சி...)
[வெளியான தேதி : 6.5.1972 (சனிக்கிழமை)]

12. நாகர்கோவில் - பயோனீர் பிக்சர் பேலஸ் - 50 நாட்கள்

13. திருவொற்றியூர் - ஓடியன்மணி - 50 நாட்கள்

14. திண்டுக்கல் - என்.வி.ஜி.பி. - 41 நாட்கள்

15. விருதுநகர் - நியூமுத்து - 41 நாட்கள்

16. பழனி - சந்தானகிருஷ்ணா - 41 நாட்கள்

17. காரைக்குடி - நடராஜா - 41 நாட்கள்

18. ராஜபாளையம் - தனலக்ஷ்மி - 41 நாட்கள்

மேலும் விவரங்கள் வெகு விரைவில்.....

அன்புடன்,
பம்மலார்.

pammalar
24th June 2010, 04:02 AM
சென்னை ரஷ்ய கலாச்சார மையத்தில், 21.6.2010 திங்கள் மாலை நடைபெற்ற விழாவில், திரையிடப்பட்ட சிங்கத்தமிழனின் திரைப்படக் காட்சிகளின் தொகுப்பை, ஏழு வகைத் தமிழாக வகைப்படுத்தியிருந்தார் இயக்குநர் பரத் என்று பார்த்தோம். அந்த எழு வகைத் தமிழிலும் இடம் பெற்றிருந்த திரைப்படங்களையும், அதன் காட்சிகளையும் இன்று பார்ப்போம்.

1. இலக்கியத் தமிழ்

அ) மனோகரா(1954) [வசனம் : கலைஞர் மு. கருணாநிதி]
திரையிடப்பட்ட காட்சி : மனோகரன் சங்கிலியால் பிணைக்கப்பட்டு உயிரோட்டத்துடன் வசனங்களை முழங்கும் ராஜ தர்பார் (அரசவை) காட்சி.

ஆ) உத்தமபுத்திரன்(1958) [வசனம் : ஸ்ரீதர்]
திரையிடப்பட்ட காட்சி : கண்ணாம்பா விக்ரமனிடம் பார்த்திபனை உனது சகோதரன் என அறிமுகப்படுத்தும் காட்சி.

இ) வீரபாண்டிய கட்டபொம்மன்(1959) [வசனம் : சக்தி கிருஷ்ணசாமி]
திரையிடப்பட்ட காட்சி : "நீலவானிலே செந்நிறப்பிழம்பு" - போருக்கு செல்வதற்காக, கட்டபொம்மன் தனதருமை மனைவியிடமிருந்து வீரமுழக்கத்துடன் விடைபெறும் காட்சி.

2. இயலாகிய தமிழ்

அ) திருவிளையாடல்(1965) [வசனம் : அருட்செல்வர் ஏ.பி. நாகராஜன்]
திரையிடப்பட்ட காட்சி: புலவர் சிவபெருமானும், புலவர் நக்கீரரும் செண்பகப் பாண்டியனின் தமிழ்த் திருச்சபையில், தமிழ்ப் போரில் ஈடுபடும் காட்சி.

ஆ) சரஸ்வதி சபதம்(1966) [வசனம் : அருட்செல்வர் ஏ.பி. நாகராஜன்]
திரையிடப்பட்ட காட்சிகள் : வித்யாபதி கலைமகளின் அருள் பெற்று பேசத் துவங்கும் காட்சி மற்றும் யானையை நில் என ஆணையிடும் கிளைமாக்ஸ் காட்சி.

3. இசைத் தமிழ்

அ) பாவை விளக்கு(1960)
திரையிடப்பட்ட பாடல் : வண்ணத்தமிழ் பெண்ணொருத்தி என்னெதிரில் வந்தாள் (தொடக்கத்திலிருந்து சில வரிகள் மட்டும்)
[பாடல் : கவிஞர் அ.மருதகாசி, இசை : திரை இசைத் திலகம் கே.வி.மகாதேவன், பாடியவர்கள் : நடிகர் திலகம், இசைச் சித்தர் சி.எஸ்.ஜெயராமன்]

ஆ) ராஜ ராஜ சோழன்(1973)
திரையிடப்பட்ட பாடல் : தென்றலோடு உடன் பிறந்தாள் செந்தமிழ்ப் பெண்ணாள் (நடிகர் திலகம் பாடுவது மட்டும்)
[பாடல் : கவிஞர் உளுந்தூர்பேட்டை சண்முகம், இசை : குன்னக்குடி வைத்தியநாதன், பாடியவர்கள் : நடிகர் திலகம், டி.ஆர்.மகாலிங்கம்]

இ) நவராத்திரி(1964)
திரையிடப்பட்ட பாடல் : சத்தியவான்-சாவித்திரி கூத்து (சத்தியவான் துயில் நீங்கி எழுவதிலிருந்து)
[பாடல் : தவத்திரு. சங்கரதாஸ் சுவாமிகள், இசை : திரை இசைத் திலகம் கே.வி.மகாதேவன், பாடியவர்கள் : பாடகர் திலகம் டி.எம்.எஸ்., இசைக்குயில் பி.சுசீலா, எஸ்.சி.கிருஷ்ணன், கூத்தில் வரும் உரையாடல்களைப் பேசுபவர்கள் : நடிகர் திலகம், நடிகையர் திலகம்]
ஒரு போனஸ் தகவல் : இந்த கூத்துக் காட்சிக்கு மட்டும் காட்சியமைப்புக்களை ஏ.பி.என்னுக்கு அமைத்துக் கொடுத்தது யார் தெரியுமா? நடிகர் கள்ளபார்ட் நடராஜன். அவர் இதில் எக்ஸ்பர்ட்.

இதன் தொடர்ச்சிப் பதிவு நாளை இந்த வேளை பார்த்து ஓடி வரும்...

அன்புடன்,
பம்மலார்.

RAGHAVENDRA
24th June 2010, 06:42 AM
deleted

RAGHAVENDRA
24th June 2010, 08:34 AM
நடிகர் திலகத்தின் உன்னதத் திரைக்காவியமான தெய்வப் பிறவி, தற்போது மோசர் பேர் நிறுவனத்தால் மூன்று படத் தொகுப்பு டிவிடியில் வெளியிடப் பட்டுள்ளது. அதனுடன் அன்புக் கரங்கள் படமும் வெளியாகியுள்ளது. அன்பே ஆருயிரே, அன்புக்கரங்கள், தெய்வப் பிறவி மூன்றும் ஒரே டிவிடியில் இடம் பெற்றுள்ளன.

டிவிடி வரிசை எண் DTAFS674

ராகவேந்திரன்

pammalar
25th June 2010, 12:01 AM
கேள்வி பிறந்தது! நல்ல பதில் கிடைத்தது! - 55

கே: கவிஞர் கண்ணதாசன் இயற்றிய பாடல்களில் தங்களுக்கு பிடித்தமான பாடல் எது? (கே.ஆர்.பாலகுமார், காங்கேயம்)

ப: "நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும்" என்ற பாடல். காதல் காட்சியில் இப்படி ஒரு அருமையான வேறு பாடலை நான் ரசித்தது கிடையாது. ஈருடல் ஓருயிர் என்ற தத்துவத்தை அப்பாடலில் அழகாக விவரித்திருக்கிறார் கவிஞர்.

(ஆதாரம் : பேசும் படம், ஆகஸ்ட் 1970)

இன்று 24.6.2010 கவியரசு கண்ணதாசன் அவர்களின் 84வது பிறந்த தினம்.

அன்புடன்,
பம்மலார்.

Murali Srinivas
25th June 2010, 12:07 AM
உள்ளதை சொல்வேன்

சொன்னதை செய்வேன்

வேறொன்றும் தெரியாது

என்று பாடி தமிழ் சினிமாவின் அப்பாவி கதாநாயகனுக்கு Template போட்டுக் கொடுத்த ரங்கன் தன் பொன் விழா வயதை நிறைவு செய்யும் நாள் ஜூன் 25. இனியும் நல்ல படங்கள் வரும். நல்ல கதாபாத்திரங்கள் வரும். இந்த படங்கள் மறந்து போகலாம். ஆனால் ரங்கன் என்றும் வாழ்வான் என்று விமர்சனம் எழுதப்பட்டதை உண்மையாக்கி காலத்தை வென்று நிற்கும் படிக்காத மேதை என்றும் நிற்பார். நீடித்த புகழோடு வாழ்வார்.

படிக்காத மேதை வெளியான நாள் - 25.06.1960.

சுவாமி வந்து படிக்காத மேதையின் சாதனைகளை பட்டியலிடுவார். அதற்கு முன் நான் எங்கள் மதுரையின் பெருமையை பறை சாற்றி விடுகிறேன்.

ஆசியாவின் மிக பெரிய திரையரங்கமான தங்கத்தில் 100 நாட்கள் ஓடிய நடிகர் திலகத்தின் இரண்டாவது படம் படிக்காத மேதை. ஓடிய நாட்கள் 116. தமிழ் சினிமா வரலாற்றிலே தங்கத்தில் மூன்று 100 நாட்கள் படங்கள் கொடுத்த ஒரே நடிகன் நடிகர் திலகம் மட்டுமே [மற்றவர்கள் எல்லோருக்கும் ஒரு படம் மட்டும்தான்].

அந்த மூன்று படங்களிலும் அதிக நாட்கள் ஓடிய படம் படிக்காத மேதை.[பராசக்தி- 112,கர்ணன்-108].

அன்புடன்

pammalar
25th June 2010, 03:59 AM
சென்னை ரஷ்ய கலாச்சார மையத்தில், 21.6.2010 திங்கள் மாலை நடைபெற்ற விழாவில், திரையிடப்பட்ட சிங்கத்தமிழனின் திரைப்படக் காட்சிகளின் தொகுப்பை, ஏழு வகைத் தமிழாக வகைப்படுத்தியிருந்தார் இயக்குநர் பரத் என்று பார்த்தோம். அந்த எழு வகைத் தமிழில், மூன்றில் இடம் பெற்றிருந்த திரைப்படங்களையும், அதன் காட்சிகளையும் நேற்று பார்த்தோம். இன்று மேலும் இரு வகைத் தமிழில் இடம்பெற்ற திரைப்படங்களையும், காட்சிகளையும் பார்ப்போம்.

4. பேச்சுத் தமிழ்

அ) பாசமலர்(1961) [வசனம் : ஆரூர்தாஸ்]
திரையிடப்பட்ட காட்சி : முதலாளி ராஜசேகரனும், தொழிலாளி ஆனந்தனும் முதலாளியின் அறையில் வாக்குவாதம் செய்யும் சிகரக் காட்சி.

ஆ) தெய்வமகன்(1969) [வசனம் : ஆரூர்தாஸ்]
திரையிடப்பட்ட காட்சி : சங்கர், கண்ணன், விஜய் மூவரும் இணையும் Blank Cheque காட்சி.

இ) சவாலே சமாளி(1971) [வசனம் : மல்லியம் ராஜகோபால்]
திரையிடப்பட்ட காட்சி : ஏழை-பணக்கார வர்க்கம் குறித்து நடிகர் திலகம் கலைச்செல்வியிடம் ஸோலோவாக உரையாடும் காட்சி.

5. வழக்குத் தமிழ்

அ) மக்களை பெற்ற மகராசி(1957) [வசனம் : அருட்செல்வர் ஏ.பி. நாகராஜன்]
திரையிடப்பட்ட காட்சி: சாரங்கபாணி சகிதம், சிவாஜியும் பானுமதியும் வெட்கத்தோடு கருத்துப் பரிமாற்றம் செய்து கொள்ளும் காட்சி.

ஆ) பட்டிக்காடா பட்டணமா(1972) [வசனம் : பாலமுருகன்]
திரையிடப்பட்ட காட்சி : தமிழ்ப் பண்பாடு பற்றியும், தமிழர் நாகரிகம் குறித்தும் சிங்கத்தமிழன் முழங்கும் கிளைமாக்ஸ் காட்சி.

இ) வியட்நாம் வீடு(1970) [வசனம் : வியட்நாம் வீடு கே.சுந்தரம்]
திரையிடப்பட்ட காட்சி : தன் மகளை தன் மகனே இழிவாகப் பேசும் நிலையில், தந்தையார் பிரஸ்டீஜ் பத்மநாப ஐயர் மகனை அடித்து அவனிடம் ஆக்ரோஷமாக உரையாடும் காட்சி.

இதன் தொடர்ச்சிப் பதிவு நாளை இந்த வேளை பார்த்து ஓடி வரும்...

அன்புடன்,
பம்மலார்.

pammalar
25th June 2010, 04:08 AM
டியர் முரளி சார்,

"படிக்காத மேதை" பதிவுக்கு மிக்க நன்றி!

இக்காவியத்தின் சாதனைகளை அவசியம் பதிவிடுகிறேன்.

அன்புடன்,
பம்மலார்.

pammalar
26th June 2010, 02:02 AM
கேள்வி பிறந்தது! நல்ல பதில் கிடைத்தது! - 56

கே: நடிப்பரசன் சிவாஜியின் பாதிப்பு இல்லாமல் எந்த நடிகராலும் நடிக்க முடியாது என்கிறேன் சரிதானா? (த.சிவாஜி மூக்கையா, தர்காஸ்)

ப: நீங்கள் தமிழ்நாட்டிலோ, கேரளாவிலோ, உத்தரபிரதேசத்திலோ, வங்காளத்திலோ, இப்படி எந்த மாநிலத்தில் வசித்தாலும் இந்தியாவில் வாழ்வதாகத் தான் அர்த்தம். பாரதத்தின் விரிவான எல்லைக்கோட்டுக்குள் வாழ்கின்ற அனைத்துக் குடிமக்களும் இந்தியர்கள் என்ற அடையாளத்தைத் தொலைத்து விட முடியாது. அதுபோல் நடிகர் திலகம் தனது திறமையால் மிக விரிவான ஒரு எல்லைக்கோட்டை வரைந்துவிட்டு போயிருக்கிறார். அதை மீறுவது யாருக்கும் கடினம்.

(ஆதாரம் : சினிமா எக்ஸ்பிரஸ், 1-15 செப்டம்பர் 2005)

அன்புடன்,
பம்மலார்.

pammalar
26th June 2010, 03:24 AM
"எங்கிருந்தோ வந்தான்
இடைச்சாதி நான் என்றான்
இங்கிவனை யான் பெறவே
என்ன தவம் செய்து விட்டேன்...
ரங்கன்...எங்கிருந்தோ வந்தான்..."

படிக்காத மேதை ரங்கனை மறக்க முடியுமா! ரங்கனை அரவணைத்த ரங்காராவை மறக்க முடியுமா!!

நெஞ்சிருக்கும் வரை நினைவிருக்கும் காவியப் படைப்பாயிற்றே!!!

இன்று 25.6.2010 படிக்காத மேதை ரங்கனுக்கு பொன் விழா ஆண்டு நிறைவு.

51வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் அவரை வணங்குகிறோம்!

Happy Birthday Mr.Rangan! Many More Happy Returns!

படிக்காத மேதையின் சாதனைப் பதிவு விரைவில் வருகிறது...

அன்புடன்,
பம்மலார்.

pammalar
26th June 2010, 04:22 AM
சென்னை ரஷ்ய கலாச்சார மையத்தில், 21.6.2010 திங்கள் மாலை நடைபெற்ற விழாவில், திரையிடப்பட்ட சிங்கத்தமிழனின் திரைப்படக் காட்சிகளின் தொகுப்பை, ஏழு வகைத் தமிழாக வகைப்படுத்தியிருந்தார் இயக்குநர் பரத் என்று பார்த்தோம். அந்த எழு வகைத் தமிழில், ஐவகைகளில் இடம் பெற்றிருந்த திரைப்படங்களையும், அதன் காட்சிகளையும் இரு நாட்களாகப் பார்த்தோம். இன்று மீதமுள்ளவற்றில் இடம்பெற்ற திரைப்படங்களையும், காட்சிகளையும் பார்ப்போம்.

6. பாமரத் தமிழ்

அ) பலே பாண்டியா(1962) [வசனம் : மா.ரா.]
திரையிடப்பட்ட காட்சி : நடிகவேளும், ரௌடி மருதுவும் உரையாடும் காட்சி.

ஆ) படிக்காத மேதை(1960) [வசனம் : கே.எஸ்.கோபாலகிருஷ்ணன்]
திரையிடப்பட்ட காட்சி : ரங்காராவ் ரங்கனை வீட்டை விட்டு வெளியேறச் சொல்லும் காட்சி.

7. நாடகத் தமிழ்

அ) அன்னையின் ஆணை(1958) [வசனம் : முரசொலி மாறன்]
திரையிடப்பட்ட காட்சி: சாம்ராட் அசோகன் ஓரங்க நாடகம்.

ஆ) ராமன் எத்தனை ராமனடி(1970) [வசனம் (இந்நாடகத்திற்கு மட்டும்) : கவியரசு கண்ணதாசன்]
திரையிடப்பட்ட காட்சி : சத்ரபதி சிவாஜி ஓரங்க நாடகம்.

இதன் தொடர்ச்சிப் பதிவு நாளை இந்த வேளை பார்த்து ஓடி வரும்...

அன்புடன்,
பம்மலார்.

KCSHEKAR
26th June 2010, 10:49 AM
Russian Cultural Centre program coverage is very good. Welldone by Mr.Pammalar. Thanks

KCSHEKAR
26th June 2010, 02:41 PM
தமிழை ஏழு வகையாகப் பிரித்து படக்காட்சிகள் அமைத்திருப்பது மிகவும் அருமை. ஏழு அல்ல எழுபது வகையாகப் பிரித்தாலும் அதற்கு நடிகர்திலகத்தின் படக்காட்சிகளை விட்டால் வேறு வழியிலை.

rangan_08
26th June 2010, 04:13 PM
உள்ளதை சொல்வேன்

சொன்னதை செய்வேன்

வேறொன்றும் தெரியாது

என்று பாடி தமிழ் சினிமாவின் அப்பாவி கதாநாயகனுக்கு Template போட்டுக் கொடுத்த ரங்கன் தன் பொன் விழா வயதை நிறைவு செய்யும் நாள் ஜூன் 25. இனியும் நல்ல படங்கள் வரும். நல்ல கதாபாத்திரங்கள் வரும். இந்த படங்கள் மறந்து போகலாம். ஆனால் ரங்கன் என்றும் வாழ்வான் என்று விமர்சனம் எழுதப்பட்டதை உண்மையாக்கி காலத்தை வென்று நிற்கும் படிக்காத மேதை என்றும் நிற்பார். நீடித்த புகழோடு வாழ்வார்.

படிக்காத மேதை வெளியான நாள் - 25.06.1960.

சுவாமி வந்து படிக்காத மேதையின் சாதனைகளை பட்டியலிடுவார். அதற்கு முன் நான் எங்கள் மதுரையின் பெருமையை பறை சாற்றி விடுகிறேன்.

ஆசியாவின் மிக பெரிய திரையரங்கமான தங்கத்தில் 100 நாட்கள் ஓடிய நடிகர் திலகத்தின் இரண்டாவது படம் படிக்காத மேதை. ஓடிய நாட்கள் 116. தமிழ் சினிமா வரலாற்றிலே தங்கத்தில் மூன்று 100 நாட்கள் படங்கள் கொடுத்த ஒரே நடிகன் நடிகர் திலகம் மட்டுமே [மற்றவர்கள் எல்லோருக்கும் ஒரு படம் மட்டும்தான்].

அந்த மூன்று படங்களிலும் அதிக நாட்கள் ஓடிய படம் படிக்காத மேதை.[பராசக்தி- 112,கர்ணன்-108].

அன்புடன்

:clap:

50 golden years have gone and rangan continues to cast his spell among the audience. Over the years the film has sort of achieved a cult status, like many other NT films and even if you watch the film today, it strikes a chord.

What an actor! What a team!! What a film!!!

:notworthy:

RAGHAVENDRA
26th June 2010, 06:20 PM
திருவரங்கன் அருளைப் பெற்ற அந்த ரங்கனைப் பற்றிய இந்த ரங்கன் சாரின் கருத்துக்களை முற்றிலும் ஆமோதிக்கிறேன். ரங்கன் என்ற பெயர் காலத்தால் அழிக்க முடியாது. படிக்காத மேதை திரைப்படம் தனியார் தொலைக்காட்சிகள் வருவதற்கு முன்னர், அதாவது 1990 ஆண்டுக்கு முந்தைய காலத்தில், சென்னைத் தொலைக் காட்சியில் ஒரு ஞாயிறு ஒளிபரப்பப் பட்டது. அன்று மாலை திரைப்படத்தைப் பார்க்காமல் நண்பர்களுடன் சென்னையில் பல தெருக்களில் வலம் வந்தோம். எந்த வீட்டில் காதைக் கொடுத்தாலும் ரங்கன் குரல் ஒலித்துக் கொண்டிருந்தது. அன்று இரவு பல புதிய இளைய தலைமுறையினர் அப்படத்தைப் பற்றிப் பேசிக் கொண்டதையும் பலர் தம்மை மறந்து கண்ணீர் விட்டதையும் காண நேர்ந்தது. அதன் பிறகு சில நாட்களில் அன்றைய பிரபல நட்சத்திரங்கள் பலர் பத்திரிகைகளில் இப்படத்தைப் பற்றிப் பேசியதும் நினைவுக்கு வருகிறது.

" உள்ளதைச் சொல்வேன், சொன்னதைச் செய்வேன், வேறொன்றும் தெரியாது"

இது நடிகர் திலகத்திற்கு வார்த்தைக்கு வார்த்தை பொருந்தும் வரிகள்.

ராகவேந்திரன்

RAGHAVENDRA
26th June 2010, 06:24 PM
தன்னுடைய படங்களைப் பற்றிய நடிகர் திலகத்தின் கருத்துக்கள் (தொடர்ச்சி)

'வெள்ளை ரோஜா' பிடித்திருக்கிறதா

"அந்த ரோஜாவை மக்கள் மார்பிலே எப்போதும் அணிந்து கொள்ளலாம்"

(தினத்தந்தி 05.08.2001 ஞாயிறு மலர்)

NOV
27th June 2010, 08:31 AM
AN INVITATION
------------ --------- --

9TH Nadigar Thilagam SIVAJI GANESAN MEMORIAL YEAR FUNCTION
------------ --------- --------- --------- --------- --------- --------- --------- ----

The President and the Members of the Management Council of Sivaji Ganesan Cultural Society, Malaysia (SGCSM) hereby cordially invites you and your family to the above event.

Date: 23 July, 2010
Venue: Tan Sri KR Soma Auditorium, Wisma Tun Sambanthan, KL
Time: 7.30pm

Tentative Program
------------ --------- -----
*7.30 pm - Welcome speech by Organizing Chairman
*A special talk about Sivaji Ganesan by Rajendran - President , Tamil Writers Association, Malaysia
*Music performance ( popular songs from movies of Sivaji Ganesan)
*Q& A about Sivaji Ganesan ( Attractive prizes to be won)
*Thaeru Kuthu by Veersingam and Group ( Sathiavan Savithiri) from film Navarathri
Close

Chief Guest of Honor: Dato' AK NATHAN
Special Guest: Magalir Thilagam Annai Ratnavalli Vijeyaraj

Light Refreshments and snacks shall be served to all patrons.
Admission: FREE
All those who have passion for Nadigar Thilagam Sivaji Ganesan please attend along with your family members and friends and relatives.

Yours Sincerely,

Eashvara Lingam ( for and on behalf of SGCSM )

for info: call 016-6880455

kaveri kannan
27th June 2010, 08:44 PM
நீண்ட நாட்களாய் இந்தப்பக்கம் வர இயலாச் சூழல். நலமா நண்பர்களே..

பல பக்கங்கள் வளர்ந்துவிட்ட திரியை வாசிக்கத் தொடங்கிவிட்டேன்.

ஏழுவகை தமிழுக்கும் இலக்கணமாய் எடுத்துக்காட்டாய் விளங்கும் நம் எட்டாவது அதிசயம் பற்றிப் பகிர்ந்த அன்பின் பம்மலாருக்கு நன்றி.


கோவை மாநாட்டில் ஒரு ஜெர்மன் அறிஞர் சொன்னது நினைவுக்கு வந்தது - அவர் நம் அண்ணலின் தமிழ்ப் பேச்சைக் கேட்டுக் கேட்டு தமிழ்க்காதல் வளர்த்தவர்.

Murali Srinivas
29th June 2010, 12:53 AM
வருக காவேரி கண்ணன் அவர்களே! மீண்டும் நமது நடிகர் திலகத்தைப் பற்றி உங்கள் அழகு தமிழில் உரையாட வாருங்கள்.

சுவாமி,

படிக்காத மேதையின் சாதனை பதிவிற்காக காத்திருக்கிறோம்.

அன்புடன்

HARISH2619
29th June 2010, 02:04 PM
நடிகர்திலகம் அவர்கள் திருச்சி திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர்-அகிலான்டேஸ்வரி திருக்கோவிலுக்கு கானிக்கையாக கொடுத்த சாந்தி என்ற யானை நோய்வாய்ப்பட்டிருப்பதாகவும் மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருவதாகவும் படித்தேன்.அந்த யானை பூரன நலமடைய இறைவனை பிரார்திக்கிறேன்.

இளைய திலகம் பிரபு அவர்கள் கும்பகோனம் சென்றதாகவும் அங்கு அவருக்கு சிறப்பான வரவேற்ப்பு அளிக்கப்பட்டதாகவும்,அங்கு ரசிகர்களின் மத்தியில் பேசிய பிரபு அவர்கள் கும்பகோனத்தில் நடிகர்திலகத்தின் சிலையை வைக்க அரசுக்கு கோரிக்கை விடுத்ததாகவும் படித்தேன்.இதை பற்றிய முழு விவரத்தை அளிக்குமாறு நமது ஹப்பர்களை கேட்டுகொள்கிறேன்

Murali Srinivas
30th June 2010, 12:29 AM
வெகு நாட்களுக்குப் பிறகு நதியினில் வெள்ளம் கரையினில் நெருப்பு பாடல் காட்சி பார்க்க நேர்ந்தது. அந்த முகம், அந்த கண்கள், சொல்லவும் முடியாமல், மறைக்கவும் முடியாமல் மனம் தவிப்பதை அந்த நடையின் மூலமாகவும் உடல் மொழியின் மூலமாகவும் எவ்வளவு அழகாக வெளிப்படுத்துகிறார். அந்த பாத்திரதிற்கேற்ற உடல்வாகு!

கண்ணதாசனும் விஸ்வநாதனும் சேர்ந்து கைகொடுப்பது காட்சிக்கு கூடுதல் பலம்.

ஒரு நீதி கூண்டில் நின்றது

ஒரு நீதி சாட்சி சொன்னது

ஒரு நீதி தெய்வமானது

இதில் தர்மம் எங்கே போனது

இதை தவிர போனஸ்-ஆக தேவனே என்னை பாருங்கள், ஆறு மனமே ஆறு, சட்டி சுட்டதடா போன்றவையும். நன்றி இசை அருவி.

அன்புடன்

pammalar
1st July 2010, 01:01 AM
கேள்வி பிறந்தது! நல்ல பதில் கிடைத்தது! - 57

கே: நடிப்புக் கல்லூரி ஒன்றினை நிறுவி அதற்கு சிவாஜியை முதல்வராகப் போட்டால் எப்படியிருக்கும்? (வி.தர்மராஜன், செங்கோட்டை)

ப: அவரே ஒரு நடிப்புக் கல்லூரி ஆயிற்றே!

(ஆதாரம் : குங்குமம், 23.12.1979)

அன்புடன்,
பம்மலார்.

pammalar
1st July 2010, 01:09 AM
கேள்வி பிறந்தது! நல்ல பதில் கிடைத்தது! - 58

கே: சிவாஜியைப் பற்றி கேட்ட கேள்விக்கு 'அவரே ஒரு நடிப்புக் கல்லூரி ஆயிற்றே' என்று கூறியிருக்கிறீர்கள். சிவாஜி, கருணாநிதிக்கு எதிர் அணியில் இருந்தாலும் இதைக் கூறியிருப்பீர்களா? (த.சுப்பிரமணியம், சென்னை - 18)

ப: எந்த அணியில் இருந்தாலும் அவர் உலகத்தின் தலைசிறந்த நடிகர்களுள் ஒருவர் என்கிற உண்மையை யாரும் மறுக்க முடியாது.

(ஆதாரம் : குங்குமம், 6.1.1980)

அன்புடன்,
பம்மலார்.

pammalar
1st July 2010, 03:16 AM
கேள்வி பிறந்தது! நல்ல பதில் கிடைத்தது! - 59

கே: நான் சிவாஜிக்கு சிகரெட் அனுப்பலாமென்றிருக்கிறேன். அவர் என்ன சிகரெட் பிடிப்பார்? (பி.எஸ்.ராமசாமி, பனங்காட்டூர்)

ப: ஸ்டேட் எக்ஸ்பிரஸ் 555!

(ஆதாரம் : பேசும் படம், நவம்பர் 1958)

அன்புடன்,
பம்மலார்.

pammalar
1st July 2010, 03:24 AM
கேள்வி பிறந்தது! நல்ல பதில் கிடைத்தது! - 60

கே: சிவாஜி கணேசன் இளைத்ததன் காரணம் என்ன? (வாழவல்லான் ஜெயா, திருச்சி - 1)

ப: ஆசையை, உணவை கட்டுப்படுத்தியதாக அவரே கூறினார்.

(ஆதாரம் : பேசும் படம், ஏப்ரல் 1970)

அன்புடன்,
பம்மலார்.

pammalar
1st July 2010, 03:38 AM
கேள்வி பிறந்தது! நல்ல பதில் கிடைத்தது! - 61

கே: சிவாஜியால் தொடர்ந்து ஐம்பது ஆண்டுகள் எப்படி நிலைத்து நிற்க முடிந்தது? (மு.இருதயராஜ், வார்தா)

ப: திறமை, தொழிற்சிரத்தை; புதிது புதிதாய் அலைவீசும் கலையுலகில் காலத்திற்கு ஏற்ப தன்னை வளைத்துக் கொண்டு புதியவர்களுடனும் இணைந்து பணிபுரிகிறார். வளர்ந்தவர்களிடத்தில் வளையும் குணம் இருப்பது அபூர்வம்.

(ஆதாரம் : கல்கண்டு, 16.10.1986)

அன்புடன்,
பம்மலார்.

pammalar
1st July 2010, 04:29 AM
வெள்ளித்திரை சக்கரவர்த்தியின் வெள்ளிவிழாக் காவியங்கள் (திரையரங்கு வாரியாக)
[ஊர் - திரையரங்கம் : திரைக்காவியம் - ஓடிய நாட்கள் என்கின்ற ஃபார்மெட்டில்]

1. சென்னை - சாந்தி : பாவமன்னிப்பு - 177 நாட்கள், திருவிளையாடல் - 179 நாட்கள், வசந்த மாளிகை - 176 நாட்கள், தங்கப்பதக்கம் - 181 நாட்கள், திரிசூலம் - 175 நாட்கள், முதல் மரியாதை - 177 நாட்கள்

2. சென்னை - சித்ரா : பாசமலர் - 176 நாட்கள்

3. சென்னை - கிரௌன் : திருவிளையாடல் - 179 நாட்கள், தங்கப்பதக்கம் - 176 நாட்கள், திரிசூலம் - 175 நாட்கள்

4. சென்னை - புவனேஸ்வரி : திருவிளையாடல் - 179 நாட்கள், தங்கப்பதக்கம் - 176 நாட்கள், திரிசூலம் - 175 நாட்கள்

5. சென்னை - பால அபிராமி : படிக்காதவன் - 175 நாட்கள்

6. சென்னை - அன்னை அபிராமி : தேவர் மகன் - 175 நாட்கள்

7. சென்னை - ஆல்பர்ட் & பேபி ஆல்பர்ட் : படையப்பா - 210 நாட்கள்

8. சென்னை - அபிராமி & சக்தி அபிராமி : படையப்பா - 210 நாட்கள்

9. சென்னை - உதயம் & சந்திரன் : படையப்பா - 181 நாட்கள்

10. சென்னை - பிருந்தா : படையப்பா - 175 நாட்கள்

11. மதுரை - நியூசினிமா : வீரபாண்டிய கட்டபொம்மன் - 181 நாட்கள், வசந்த மாளிகை - 200 நாட்கள்

12. மதுரை - சிந்தாமணி : பாகப்பிரிவினை - 216 நாட்கள், தியாகம் - 175 நாட்கள், திரிசூலம் - 200 நாட்கள்

13. மதுரை - சென்ட்ரல் : பட்டிக்காடா பட்டணமா - 182 நாட்கள், படிக்காதவன் - 175 நாட்கள்

14. மதுரை - சினிப்ரியா & மினிப்ரியா : தீர்ப்பு - 177 நாட்கள், நீதிபதி - 175 நாட்கள்

15. மதுரை - சுகப்ரியா : சந்திப்பு - 175 நாட்கள்

16. மதுரை - ஸ்ரீமீனாக்ஷி & ஸ்ரீமீனாக்ஷிபாரடைஸ் : தேவர் மகன் - 180 நாட்கள்

17. மதுரை - அமிர்தம் : படையப்பா - 175 நாட்கள்

18. திருச்சி - வெலிங்டன் : பராசக்தி - 245 நாட்கள்

19. திருச்சி - பிரபாத் : தங்கப்பதக்கம் - 181 நாட்கள், திரிசூலம் - 175 நாட்கள்

20. கோவை - கீதாலயா : திரிசூலம் - 175 நாட்கள்

21. கோவை - தர்ச்சனா & அர்ச்சனா : முதல் மரியாதை - 177 நாட்கள்

22. கோவை - ராகம் & அனுபல்லவி : படையப்பா - 210 நாட்கள்

23. சேலம் - ஓரியண்டல் : திரிசூலம் - 175 நாட்கள்

24. வேலூர் - அப்ஸரா : திரிசூலம் - 175 நாட்கள்

25. தஞ்சை - கமலா : முதல் மரியாதை - 177 நாட்கள்

26. பெங்களூர் - ஸ்டேட்ஸ் : ஸ்கூல் மாஸ்டர்(கன்னடம்) - 188 நாட்கள்

27. கல்கத்தா - இம்பீரியல் : தர்த்தி(ஹிந்தி) - 266 நாட்கள்

28. பம்பாய் - மினர்வா : தர்த்தி(ஹிந்தி) - 259 நாட்கள்

29. பம்பாய் - ஆனந்த் : தர்த்தி(ஹிந்தி) - 231 நாட்கள்

30. பம்பாய் - அசோக் : தர்த்தி(ஹிந்தி) - 203 நாட்கள்

31. டெல்லி - நட்ராஜ் : தர்த்தி(ஹிந்தி) - 217 நாட்கள்

32. டெல்லி - அம்பா : தர்த்தி(ஹிந்தி) - 210 நாட்கள்

33. டெல்லி - மோட்டி : தர்த்தி(ஹிந்தி) - 203 நாட்கள்

34. டெல்லி - லிபர்ட்டி : தர்த்தி(ஹிந்தி) - 203 நாட்கள்

35. கொழும்பு - மைலன் : பராசக்தி - 294 நாட்கள்

36. கொழும்பு - கெப்பிடல் : வசந்த மாளிகை - 287 நாட்கள், பைலட் பிரேம்நாத் - 189 நாட்கள்

37. கொழும்பு - பிளாசா : வசந்த மாளிகை - 175 நாட்கள்

38. கொழும்பு - சென்ட்ரல் : உத்தமன் - 203 நாட்கள்

39. கொழும்பு - ராஜேஸ்வரா : பைலட் பிரேம்நாத் - 176 நாட்கள்

40. கொழும்பு - ஜெஸிமா : திரிசூலம் - 200 நாட்கள்

41. யாழ்ப்பாணம் - வெலிங்டன் : வசந்த மாளிகை - 217 நாட்கள்

42. யாழ்ப்பாணம் - ராணி : உத்தமன் - 179 நாட்கள், திரிசூலம் - 189 நாட்கள்

43. யாழ்ப்பாணம் - வின்ஸர் : பைலட் பிரேம்நாத் - 222 நாட்கள்

44. வெள்ளவெத்தை - சவோய் : பைலட் பிரேம்நாத் - 189 நாட்கள்

சாதனைகள் எனும் சாம்ராஜ்யத்திற்கு நிரந்தர சக்கரவர்த்தி சிங்கத்தமிழன் சிவாஜி ஒருவரே!

அன்புடன்,
பம்மலார்.

kaveri kannan
1st July 2010, 11:35 AM
அன்பு முரளி ஸ்ரீனிவாஸ் அவர்களே

கரையினில் நெருப்பு பாடல் காட்சியில் கவிதையான முகபாவங்கள் காட்டும் நடிப்பரசர் பற்றிய இனிய பகிர்வு அருமை.

அன்பு பம்மலார் அவர்களே

அறுசுவை 60 வினா-விடைகள் ..
பார்த்துப் பரிமாறும் சேவை வளரட்டும்.

நன்றிகள்.

kaveri kannan
1st July 2010, 11:36 AM
அன்பு பம்மலார் அவர்களே

சாதனைகளை மறைத்துப் பேசி ஏசிவந்த கூட்டம் இருந்த காலம் இருந்தது அன்று.


உங்களைப் போன்றவர்களின் தொண்டால் அந்தப் பொய்க்கோட்டைகள் பொடியாகின்றன இன்று!

Murali Srinivas
2nd July 2010, 12:23 AM
பாராட்டிற்கு நன்றி காவேரி கண்ணன் அவர்களே.

சுவாமி,

வெள்ளி விழா கண்டவை 34 அரங்குகள் என்று நினைத்திருந்தோம். 34 அல்ல மொத்தம் 44 அரங்குகள் நடிகர் திலகத்தின் வெள்ளி விழாவை கொண்டாடியிருக்கின்றன என்ற தித்திக்கும் செய்தியை புள்ளி விவரப் பட்டியலோடு தந்தமைக்கு நன்றி.

அன்புடன்

pammalar
2nd July 2010, 01:22 AM
திரு. காவேரிக் கண்ணன்,

பொங்கி வரும் காவிரி போல், துள்ளி வரும் தங்களின் தங்கத்தமிழ் நடை உள்ளத்தை அள்ளுகிறது. பாராட்டுக்களுக்கு பணிவான நன்றிகள்!

டியர் முரளி சார்,

தங்களின் இதயபூர்வமான பாராட்டுக்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள்!

அன்புடன்,
பம்மலார்.

pammalar
2nd July 2010, 02:23 AM
கேள்வி பிறந்தது! நல்ல பதில் கிடைத்தது! - 62

கே: நடிகர் திலகம் சிவாஜிக்கு 'பாரத்' பட்டம் கிடைக்கவில்லையே, காரணமென்ன? (ச.பழனிசாமி, மயிலை)

ப: பாரதத்திலேயே சிறந்த நடிகர் என்ற பட்டம் ஏற்கனவே அவருக்குக் கிடைத்துள்ளது.

(ஆதாரம் : சினிமா எக்ஸ்பிரஸ், 15.3.1983)

அன்புடன்,
பம்மலார்.

pammalar
2nd July 2010, 03:04 AM
26.6.2010 மாலை முரசு நாளிதழின் திருச்சி-தஞ்சை பதிப்பில் வெளிவந்துள்ள செய்தி:

http://pammalar.webs.com/apps/photos/photo?photoid=89974635

இதனை எமக்கு மின்னஞ்சல் செய்த நடிகர் திலகம் சிவாஜி சமூக நலப் பேரவையின் தலைவர் திரு.கே.சந்திரசேகரன் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்!

அன்புடன்,
பம்மலார்.

RAGHAVENDRA
2nd July 2010, 10:57 PM
இதயக்கனி சினிமா ஸ்பெஷல் மாத இதழின் ஜூலை மாத பதிப்பு நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நினைவு சிறப்பிதழாக வெளிவந்துள்ளது. அனைவரும் தவறாமல் வாங்கிப் படிக்கவும்.

ராகவேந்திரன்

pammalar
3rd July 2010, 03:32 AM
கேள்வி பிறந்தது! நல்ல பதில் கிடைத்தது! - 63

கே: நவயுக கலைக்கூடம், நவரச மணிமாடம் நடிகர் திலகம் சிவாஜியின் சிறந்த குணங்களில் நீங்கள் விரும்புவது எது? (சி.வி.சாணக்கியா, ஸ்ரீரங்கம்)

ப: கலைஞர் என்ற முறையில் அவரது குறையைச் சுட்டிக்காட்டுவோரை விரோதிகளாக மதிப்பதில்லை அவர். வளர்ந்து வருபவர்கள் தங்களைக் குறையற்றவர்களாக நினைத்து விடுகிறார்களே!

(ஆதாரம் : பேசும் படம், செப்டம்பர் 1970)

அன்புடன்,
பம்மலார்.

pammalar
3rd July 2010, 04:36 AM
மாணிக்கமாக இருந்தாலும் நவரத்தினங்களின் மகிமையை ஒருங்கே பெற்ற மாணிக்கத்திற்கு நாளை (3.7.2010) 40வது ஜெயந்தி தினம்.

ஆம்! "சவாலே சமாளி"க்கு 39 ஆண்டுகள் நிறைவு.

வெறும் வேட்டி-சட்டை காஸ்ட்யூமிலே கலக்கிய கலைக்குரிசிலுக்கு இப்படம்,

150வது திரைப்படம்; 100 நாள் பெருவெற்றிப்படம்.

நடிகர் திலகம் துணிச்சல் திலகம்!

அன்புடன்,
பம்மலார்.

rangan_08
3rd July 2010, 08:00 PM
[tscii:a66c7d2af6]Last week re-visited “ Enga oor raja “ climax. Another classic example for how an actor can manipulate and do wonders with his voice, switching over to various emotions within split seconds, perfect body language and overall stark P E R F O R M A N C E. Nadigar Thilagam’s “ Ruthrathandavam” begins with “Yarai nambi naan porandhen.” and pervades till the end, which keeps you hooked to the screen. He triumphantly holds the fort in those scenes.

The moment he enters his old, dilapidated palace after decades, he gets so excited and talks to himself in a fit of delirium while loads of emotions just flash across his face every second.. He fondly touches the dirty walls, pillars and furnitures and slips into past memories. When he comes near the staircase, he remembers how he used to play with his little sons and, in the most stunning manner he just bends down imitating an elephant, like how you do while playing with kids, and shouts vehemently, “ aana aana – ambari aana – aana aana…..”. My God!! One ROCKING PERFORMANCE that makes me end up with getting goose bumps after watching it.

பாணையிலே சோறிருந்தா
பூணைகளும் சொந்தமடா
வேதனையை பங்கு வெச்சா
சொந்தமில்லே பந்தமில்லே

:clap:
[/tscii:a66c7d2af6]

Murali Srinivas
4th July 2010, 12:00 AM
மோகன்,

எங்க ஊர் ராஜா பற்றி பிரமாதமாக எழுதியிருக்கிறீர்கள். அதிலும் அந்த ரகுபதி பவனம் காட்சி, நீங்கள் சொன்னது போல் அற்புதமாக அமைந்திருக்கும்.

சில நாட்களுக்கு முன்பு நண்பர் சுவாமி அவர்களிடம் இந்தப் படத்தை இப்போது வெளியிட்டால் நன்றாக போகும் என்று சொல்லிக் கொண்டிருந்தேன். உங்கள் பதிவை படித்த பின் அந்த நம்பிக்கை வலுப்பெறுகிறது.

சுவாமி,

சவாலே சமாளி திரைப்படத்தைப் பற்றி சரியான கணிப்பு. கிளாஸ் மற்றும் மாஸ் ஆடியன்சிற்கு ஒரு போல் பிடித்த, அவர்கள் மிகவும் ரசித்த நடிகர் திலகத்தின் பல படங்களில் இதுவும் ஒன்று. இது வெளியான நாள் தான் குலமா குணமாவின் 100-வது நாள்.

அன்புடன்

rangan_08
4th July 2010, 11:41 AM
Thanks Murali sir, and yes, EOR will be a treat for the fans if it is released now.

RAGHAVENDRA
4th July 2010, 06:46 PM
சமீபத்தில் கிடைத்த தகவலின்படி, 16.07.2010 அன்று தலைநகரில் புதிய பறவை திரையிடப் படலாம். அரங்கு விவரம் தெரியவில்லை. மதுரை சென்ட்ரலில் 16.07.2010 அன்று சிவகாமியின் செல்வன் மற்றும் அதே நாளில் மீனாட்சியில் தங்க சுரங்கம் இரு திரைக் காவியங்களும் திரையிடப் படலாம்.

ராகவேந்திரன்

abkhlabhi
5th July 2010, 10:47 AM
Read 2nd para.


http://www.deccanherald.com/content/79033/rebel-star-back.html

Mahesh_K
5th July 2010, 11:57 AM
Read 2nd para.


http://www.deccanherald.com/content/79033/rebel-star-back.html

NT மறைந்து பல ஆண்டுகள் ஆகி விட்டன. மேலும் அவர் ஒரு இந்தி படத்தில் தோன்றி (தர்த்தி) 40 ஆண்டுகள் ஆகி விட்டன. இத்தனை காலம் கழிந்தும் திரு. ஷம்மி கபூர் NT நடிப்பை நினைவு கூர்ந்து புகழ்கிறார்.

இதைப் படிக்கும் போது தமிழகத்தின் "அறிவு"ஜீவி எழுத்தாளர்களில் ஒருவர் ( அதுவும் உலக சினிமாவை கரைத்துக் குடித்ததாக தன்னைத் தானே புகழ்ந்து கொள்ளும் ஒருவர்) - "சிவாஜி கணேசனை நடிகர் திலகம் என்றார்கள். அவரைப் போன்ற நடிகர் உலகத்திலேயே இல்லை என்றார்கள். சொன்னதெல்லாம் தமிழர்கள். ஆனால் இந்தி சினிமாவில் அவர் பெயரே தெரியாது. " என்று blogல் பிதற்றியது நினைவுக்கு வருகிறது. இந்த லின்கை அவருக்கு மின்னஞ்சல் செய்கிறேன்.

Murali Srinivas
6th July 2010, 10:54 PM
ஹரிச்சந்திராவை மிஞ்சி தங்கப்பதுமை தன்னிகரற்ற சாதனை

தாராசுரத்தில் உள்ள சூரியகாந்தி டூரிங்கில், தங்கத்தமிழ்ப் பெருமகனின் "தங்கப்பதுமை" திரைக்காவியம், "ஹரிச்சந்திரா"வின் சாதனையை முறியடித்து புதிய சாதனையை ஏற்படுத்தியுள்ளது.

தங்கப்பதுமை திரைக்காவியத்தை 2.7.2010 வெள்ளியன்று, மாலை மற்றும் இரவு காட்சிகளில் சற்றேறக்குறைய 250 பேர் கண்டு களித்தனர். 3.7.2010 சனிக்கிழமையன்றும், இந்த இரண்டு காட்சிகளில் இதே போல் சற்றேறக்குறைய 250 நபர்கள் தரிசித்து மகிழ்ந்தனர். இந்த இரு நாட்களிலும் தங்கப்பதுமை அள்ளித் தந்த மொத்த வசூல் சற்றேறக்குறைய ரூ.5,000/- (ரூபாய் ஐந்தாயிரம்).
[ஒரு டிக்கெட்டின் விலை பத்து ரூபாய்]

4.7.2010 ஞாயிறு மாலைக் காட்சி சாதனையின் உச்சம். அந்த ஒரு காட்சியில் மட்டும் சற்றேறக்குறைய 500 பேர் இக்காவியத்தைக் கண்டு களித்துள்ளனர். அந்த ஒரு காட்சி மட்டும் அள்ளி அளித்த மொத்த வசூல் சற்றேறக்குறைய ரூ.5,000/- (ரூபாய் ஐந்தாயிரம்). அன்று இரவுக் காட்சியையும் சற்றேறக்குறைய் 100 நபர்கள் கண்டு களித்துள்ளனர். இரவுக் காட்சி மொத்த வசூல் சற்றேறக்குறைய ஓராயிரம் ரூபாய்.

வெள்ளி, சனி, ஞாயிறு மூன்று நாட்களுக்கு மட்டும் என்ற அறிவிப்புடன் வெளியான தங்கப்பதுமை, பெயரில் மட்டுமன்றி வசூலிலும் தங்கப்பதுமையே எனக் கட்டியம் கூறியதால், நேற்று 5.7.2010 திங்களன்றும் நான்காவது நாளாக இமாலய சாதனை படைத்தது. மாலைக் காட்சியை சற்றேறக்குறைய 400 பேர் கண்டு களித்தனர். இரவுக் காட்சிக்கும் சற்றேறக்குறைய 100 பேர் இருந்திருக்கின்றனர்.

நான்கு நாட்களில், தாராசுரம் சூரியகாந்தி டூரிங்கில், தங்கப்பதுமை அள்ளித் தந்த மொத்த வசூல் சற்றேறக்குறைய ரூ. 16,000/- (ரூபாய் பதினாறாயிரம்).

ஐந்தாவது நாளாக, இன்று 6.7.2010 செவ்வாய்க்கிழமையும் தங்கப்பதுமை வெற்றி நடை போட்டு விண்ணை முட்டுகின்ற சாதனையை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.

சாதனைகள் எனும் சாம்ராஜ்யத்திற்கு நிரந்தர சக்கரவர்த்தி சிங்கத்தமிழன் சிவாஜி ஒருவரே!

இச்சாதனைத் தகவல்களை அளித்த ரசிக நல்லிதயம் திரு.குடந்தை ராமலிங்கம் அவர்களுக்கு பற்பல நன்றிகள்!

பெருமிதத்துடன்,
பம்மலார்.

இது போன்ற சாதனைகள் தமிழகமெங்கும் தொடர்ந்து நடைபெறட்டும்.

அன்புடன்

ஜோ,
நடிகர் திலகத்தின் படம் சிங்கையில் உள்ள திரையரங்குகளில் இப்போது வெளியிடப்பட்டால் --- ?

pammalar
7th July 2010, 01:14 PM
கேள்வி பிறந்தது! நல்ல பதில் கிடைத்தது! - 64

கே: சிவாஜி சினிமாவில் நடிப்பதை பேரின்பமாகக் கருதுகிறாரே, எப்படி? (எஸ்.திருமலை, கோவை - 43)

ப: சிலர் பிழைப்புக்காக, பொழுதுபோக்குக்காக என்றெல்லாம் நடிக்கிறார்கள். ஆனால் சிவாஜி நடிப்பதற்காகவே - நடிகராகவே பிறந்தவர். நடிப்பு அவரது உயிர் மூச்சு, மற்றதெல்லாம் துச்சம்.

(ஆதாரம் : பொம்மை, ஜனவரி 1996)

அன்புடன்,
பம்மலார்.

pammalar
7th July 2010, 01:26 PM
கேள்வி பிறந்தது! நல்ல பதில் கிடைத்தது! - 65

கே: சிவாஜியின் தனிச்சிறப்பு? (எஸ்.ரவீந்திரன், நாகர்கோவில்)

ப: அவரது நடிப்பை ஒட்டித்தான் எந்தக் கலைஞரது நடிப்பும் அமைந்திருக்கும்.

(ஆதாரம் : பொம்மை, மார்ச் 1982)

அன்புடன்,
பம்மலார்.

joe
7th July 2010, 01:41 PM
ஜோ,
நடிகர் திலகத்தின் படம் சிங்கையில் உள்ள திரையரங்குகளில் இப்போது வெளியிடப்பட்டால் --- ?

தமிழ் முரசு நாளிதளில் விளம்பரத்தோடு வெளியிடப்பட்டால் நல்ல வரவேற்பு கிடைக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

ஏனென்றால் சிங்கையில் இப்போதும் அனைத்து வீடியோ கடைகளிலும் நடிகர் திலகத்தின் திரைப்பட வீடியோக்கள் அதிக அளவில் விறபனையாவது கண்கூடு.

NOV
8th July 2010, 06:46 PM
[html:7bc77f45fb]
http://farm5.static.flickr.com/4096/4773777293_5ed43b180c_b.jpg
[/html:7bc77f45fb]

pammalar
9th July 2010, 01:30 PM
கேள்வி பிறந்தது! நல்ல பதில் கிடைத்தது! - 66

கே: புதிதாக இணைந்து நடித்து, வெற்றியும் தோல்வியும் கண்ட இரண்டு ஜோடிகளைப் பற்றிக் கூறுவீர்களா? (சு.சந்திரா, திருச்சி)

ப: சிவாஜி-சுஜாதா நடித்த தீபம், அண்ணன் ஒரு கோயில், அந்தமான் காதலி ஆகிய படங்கள் பெரும் வெற்றி பெற்றன. சிவகுமார்-ஸ்ரீதேவி நடித்த கவிக்குயில், சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு, மச்சானைப் பாத்தீங்களா ஆகிய படங்கள் தோல்வி கண்டன.

(ஆதாரம் : பேசும் படம், மே 1978)

அன்புடன்,
பம்மலார்.

pammalar
9th July 2010, 02:10 PM
தினத்தந்தி : 26.6.2010 : திருச்சி பதிப்பு

http://pammalar.webs.com/apps/photos/photo?photoid=90120470

தினமணி : 26.6.2010 : திருச்சி பதிப்பு

http://pammalar.webs.com/apps/photos/photo?photoid=89974633

தினகரன் : 26.6.2010 : திருச்சி பதிப்பு

http://pammalar.webs.com/apps/photos/photo?photoid=89974634

காலைக்கதிர் : 28.6.2010 : திருச்சி பதிப்பு

http://pammalar.webs.com/apps/photos/photo?photoid=89974637

The Hindu : 26.6.2010 : Trichy Edition

http://pammalar.webs.com/apps/photos/photo?photoid=89974636

இந்த இனிய செய்திகளை எமக்கு மின்னஞ்சல் செய்த நடிகர் திலகம் சிவாஜி சமூக நலப் பேரவையின் தலைவர் திரு.கே.சந்திரசேகரன் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்!

திரு.சந்திரசேகரன் அவர்கள் எடுத்து வரும் பெருமுயற்சிகளுக்கு, செய்து வரும் அருஞ்செயல்களுக்கு நமது மனமார்ந்த பாராட்டுக்கள், வாழ்த்துக்கள், நன்றிகள்!

அன்புடன்,
பம்மலார்.

KCSHEKAR
9th July 2010, 02:10 PM
Congratulation Mr.Nov for that Nadigarthilagam 9th death anniversary function's success in Malaysia. Nadigarthilagam Sivaji Samooganala Peravai also doing some functions at Chennai on 21-07-2010 to mark the occasion. I will post the details soon.

Thanks

KCSHEKAR
9th July 2010, 02:15 PM
I thank you very much to Mr.Pammalar for post my mails in Hub.

Also I appreciate your data given in this hub, Particularly Kelvi Piranthathu - Nalla Pathil Kidaithathu - is very good one.

Thanks

Dilbert
10th July 2010, 07:51 PM
http://www.youtube.com/watch?v=m-xLGALYZyk

http://www.youtube.com/watch?v=6JRjHh91Gx4&feature=channel

2 shades of the same character ! :P

pammalar
12th July 2010, 01:26 PM
கேள்வி பிறந்தது! நல்ல பதில் கிடைத்தது! - 67

கே: சிவாஜி கணேசனைப் போல் யாராலும் நடிக்க முடியாது என்கிறேன்? (எஸ்.கருப்பையா, திருச்சி)

ப: நானும் உங்கள் ஆதரவாளன் தான். நடிப்புக்கு இலக்கணம் வகுத்தவர் சிவாஜி கணேசன். அவரைப் போல் பலவிதமான பாத்திரங்களை ஏற்று சிறப்பாக இதுவரை யாரும் நடித்ததில்லை.

(ஆதாரம் : மதி ஒளி, 10.9.1961)

அன்புடன்,
பம்மலார்.

pammalar
12th July 2010, 01:58 PM
கேள்வி பிறந்தது! நல்ல பதில் கிடைத்தது! - 68

கே: இனியும் சிவாஜி கணேசன் நடித்துத் தான் ஆக வேண்டுமா? (இரணியல் கலை, குமரி மாவட்டம்)

ப: ஆமாம். இன்றும் நடிப்பில் அவரால் புதிய பரிமாணங்களைக் காட்ட முடியும்.

(ஆதாரம் : பொம்மை, ஜூலை 1994)

அன்புடன்,
பம்மலார்.

pammalar
12th July 2010, 02:00 PM
டியர் சந்திரசேகரன் சார்,

பாராட்டுக்கு நன்றி!

அன்புடன்,
பம்மலார்.

pammalar
12th July 2010, 03:50 PM
கேள்வி பிறந்தது! நல்ல பதில் கிடைத்தது! - 69

கே: சிவாஜி கணேசன் ஒரு படத்தில் நடிக்க என்ன வாங்குகிறார்? (எம்.எம்.அபூபக்கர், மன்னார்)

ப: நல்ல கதையை - தன் திறமைக்கு ஏற்ற பாத்திரமாக உள்ளதை - வாங்குகிறார்.

(ஆதாரம் : பேசும் படம், ஜூலை 1965)

அன்புடன்,
பம்மலார்.

Murali Srinivas
13th July 2010, 12:15 AM
விளையாட்டுப் பிள்ளை - I

தயாரிப்பு: ஜெமினி

இயக்கம்: ஏ.பி.நாகராஜன்.

வெளியான நாள்: 06.02.1970

ஒரு கிராமம். அங்கே ஒரு பண்ணையார். அவரின் ஒரே மகள் மரகதம். தாய் தந்தையின் செல்லம். ஒரு காளையை அன்புடன் வளர்த்து வருகிறாள். அதே ஊரில் விளையாட்டுப் பிள்ளையாக சுற்றிக் கொண்டிருப்பவன் முத்தையன். முரடன். யாருக்கும் அடங்காமல் வீர விளையாட்டுகளில் காலத்தை ஓட்டும் அவனை நினைத்து அவன் தாய் மிகுந்த கவலையோடு இருக்கிறாள். முத்தையனின் சித்தப்பா அந்த ஊரில் வட்டிக்கு விட்டு தொழில் நடத்துபவர். பல பேரின் சொத்துகளை தன் வசமாக்கி கொள்பவர். அவருக்கு ஒரே மகன் நகரத்தில் கல்லூரியில் படிக்கிறான். முத்தையனுக்கும் அவனது சித்தப்பாவிற்கும் எப்போதும் ஆகாது.

கல்லூரியில் படிக்கும் சித்தப்பா மகன் படிப்பில் கவனம் செலுத்தாமல் நாடகத்தில் நடித்துக் கொண்டிருக்கிறான். கூட நடிக்கும் பெண்ணை கல்யாணம் செய்துக் கொள்வதாக வாக்கு கொடுக்கிறான்.

மரகதத்திற்கும் முத்தையனுக்கும் நடக்கும் மோதலில் ரேக்ளா பந்தயத்தில் இருவரும் ஒருவரை ஒருவர் எதிர்த்து போட்டி போடுகின்றனர். அதில் வெற்றி பெறும் முத்தையன் மரகதத்திடம் காதல் வயப்படுகின்றான். அவளுக்கும் அதே உணர்வுகள் அரும்புகின்றன. பந்தயத்தை பார்க்க வரும் பக்கத்து ஊர் சமஸ்தானத்து சிறு வயது இளவரசி முத்தையனுக்கு பரிசளித்துப் போகிறாள்.

பண்ணையாரின் மகளான மரகதத்தை தான் கல்யாணம் செய்துக் கொள்ள விரும்புவதாக தாயாரிடம் சொல்ல அவர் சித்தப்பாவை அனுப்பி பெண் கேட்க சொல்லலாம் என்று சொல்லுகிறார். முத்தையனுக்கு அதில் விருப்பமில்லை என்றாலும் கூட சித்தப்பாவிடம் சென்று தனக்காக பெண் கேட்க சொல்லுகிறான்.

இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொள்ளும் சித்தப்பா முத்தையனை பற்றி தவறாக சொல்லி பண்ணையாரின் மனதில் வெறுப்பை உருவாக்குகிறார். பட்டணத்தில் படிக்கும் தன் மகனை பற்றி புகழ்ந்து பேசி மரகதத்தை தன் மகனுக்கே நிச்சயம் செய்து விடுகிறார். மிகுந்த கோவம் அடையும் முத்தையன் கல்யாணத்தை தடுத்தி நிறுத்த ஏற்பாடு செய்கிறான். முதல் நாள் இரவு பின் பக்க வழியாக சென்று மரகதத்தை கூட்டிக் கொண்டு வந்து கல்யாணம் செய்துக் கொள்கிறான். விவரம் தெரிந்து வரும் பண்ணையார் தனக்கும் தன் மகளுக்கும் இனி ஓட்டும் உறவும் இல்லை என்று சொல்லி விடுகிறார். அது மட்டுமல்ல வேறொருவருக்கு நிச்சயம் செய்த பெண்ணை கடத்திக் கொண்டு போய் கல்யாணம் செய்த குற்றத்திற்காக முதையனையும் அவன் குடும்பத்தையும் ஊரை விட்டே விலக்கி வைக்கிறார்கள். அதை தவிர ஏற்கனவே முத்தையன் வெற்றுப் பத்திரத்தில் கையெழுத்து போட்டுக் கொடுத்ததை சொத்தின் மேல் கடன் வாங்கியதற்காக எடுத்துக் கொள்வதாக சித்தப்பா சொல்ல வீடும் பறி போகிறது.

அதை ஒரு சவாலாக எடுத்துக் கொண்டு ஊருக்கு வெளியே ஒரு குடிசை கட்டிக் கொண்டு முத்தையன் அதுவரை தன் வாழ்ந்து வந்த விளையாட்டுத்தனமான வாழ்க்கையை மாற்றிக் கொண்டு வயலில் உழைக்க ஆரம்பிக்கிறான். அவனுக்கு ஒரு ஆண் குழந்தை பிறக்கிறது.

இதற்கிடையில் கல்யாணத்திற்காக ஊருக்கு வந்த சித்தப்பா மகன் வீட்டிலிருந்து பணத்தை எடுத்துக் கொண்டு திரும்ப பட்டணத்திற்கு போய் விடுகிறான். அங்கே அந்த பெண்ணோடு வாழும் அவனுக்கு ஒரு குழந்தையும் பிறந்து விடுகிறது.

மரகதத்தின்தந்தை பிடிவாதமாக இருக்க தாய் மட்டும் பாசத்தில் தவிக்கிறாள். பெண் கர்ப்பமாக இருக்கும் போது மீண்டும் உறவாட ஆரம்பிக்கும் தாய் பேரன் பிறந்ததும் அவனை சீராட்டுகிறாள். இதற்கிடையில் முத்தையனின் தாய் காலமாகி விடுகிறார்.

மழை இல்லாததால் ஊரில் பஞ்சம் வர முத்தையனும் பாதிக்கப்படுகின்றான். அந்நிலையில் ஊரில் பண்ணையார் வீட்டில் தானியம் திருடியதாக தன் பேரனை தவறுதலாக அடித்து விடும் பண்ணையாரிடம் அவர் மனைவி உண்மையை சொல்ல தன் தவறை உணரும் அவர் மகள் வீட்டிற்கு சென்று மகளையும், மாப்பிள்ளையையும் பேரனையும் கூட்டிக் கொண்டு தன் வீட்டிற்கு வருகிறார்.

சில வருடங்கள் உருண்டோடுகின்றன. முத்தையனின் மகன் இப்போது நகரத்தில் கல்லூரியில் படிக்கிறான். கல்லூரி விழாவிற்கு தந்தையை கூட்டி செல்கிறான். அங்கே சிறப்பு விருந்தினர் முத்தையனின் பக்கத்து ஊர் சமஸ்தானத்து ராஜா. பல வருடங்களுக்கு முன்பு ரேக்ளா பந்தயத்தில் பரிசளித்த சிறு வயது பெண் இப்போது பருவப் பெண் இளவரசியாக விழாவிற்கு வந்திருக்கிறாள். விழாவிற்கு அழைத்து வரப்பட்டிருக்கும் யானை பட்டாஸ் சத்தத்தில் மிரண்டு ஆட்களை தாக்க ஆரம்பிக்க முத்தையன் யானையை அடக்கி ராஜாவை காப்பாற்றுகிறான்.

நன்றி சொல்லும் விதமாக தங்கள் சமஸ்தானத்து விருந்தாளிகளாக முத்தையனையும் அவனது மனைவி, மற்றும் மகனை அழைக்கிறார்கள். அங்கே செல்லும் அவர்களுக்கு தடபுடல் வரவேற்பு. குறிப்பாக வீர விளையாட்டுகளில் மிகுந்த ஆர்வம் கொண்ட இளவரசி முத்தையனிடம் நெருங்கி பழகுகிறாள். மரகதத்திற்கு இது தர்மசங்கடமாக இருக்கவே மகனை கூட்டிக் கொண்டு தங்கள் ஊருக்கு வந்து விடுகிறாள்.
முத்தையனின் சித்தப்பா மகன் இப்போது அரண்மனையில் வேலைக்காரனாக இருக்கிறான். நீ இந்த வேலையை செய்யலாமா என்று முத்தையன் கேட்க அதை தன்மானப் பிரச்சனையாக எடுத்துக் கொள்ளும் அவன் முத்தையனை எதிரியாக நினைத்து பழி வாங்க நினைக்கிறான். விருந்தின் போது முத்தையனும் இளவரசியும் சேர்ந்து இருக்கும் போது எடுக்கப்பட்ட ஒரு போட்டோவை மரகதத்திற்கு அனுப்பி வைக்க அவள் பெரிதும் கலக்கமுறுகிறாள்.

இந்நிலையில் ஊரில் திருவிழா நடக்க அதற்கு வருமாறு முத்தையனை சென்று மகன் அழைக்க இளவரசியுடன் சேர்ந்து வருகிறான் முத்தையன், இது மேலும் நிலைமையை சிக்கலாக்க தன் சொத்தை பிரித்து தருமாறு மகன் கேட்க முத்தையன் இடிந்து போய் விடுகிறான். மீண்டும் அரண்மனைக்கு வந்து விடும் அவனை பழி தீர்க்க ஒரு காளையை அடக்கும் பந்தயத்திற்கு அவனை அழைக்க வைக்கிறான் அவனது தம்பி.

காளையின் கொம்பில் விஷம் தடவி அவனை கொள்ளும் திட்டம் இருப்பதை தெரிந்துக் கொள்ளும் மகன் தானே காளையை அடக்க முற்படுகின்றான். ஆனால் அவனால் முடியாமல் போகவே முத்தையனே அடக்க அனைத்து உண்மைகளும் வெளி வர எல்லாம் நலம்.

அன்புடன்

Murali Srinivas
13th July 2010, 12:28 AM
விளையாட்டுப் பிள்ளை - II

தில்லானா மோகனாம்பாள் படத்தை, தானே தயாரிக்க வேண்டும் என்று நினைத்திருந்தாராம் ஜெமினி எஸ்.எஸ்.வாசன். ஆனால் ஏ.பி.என். வந்து கேட்டவுடன் உரிமையை கொடுத்து விட்டார். தில்லானாவின் வெற்றியைப் பார்த்துவிட்டு ஜெமினி பானரில் தில்லானா வெற்றிக் கூட்டணியை வைத்து ஒரு படம் எடுக்க வேண்டும் என்று முடிவு செய்து உடனே அதற்கான வேலையே ஆரம்பித்தார். அதுதான் விளையாட்டுப் பிள்ளை. கதை அவர் வசம் ரெடியாக இருந்தது. ஆனந்த விகடனில் வெளியான ராவ் பகதூர் சிங்காரம். இதையும் தில்லானா எழுதிய கொத்தமங்கலம் சுப்பு தான் எழுதியிருந்தார், ஒரு சிலரை தவிர அதே நடிகர் நடிகையர் கூட்டம்.

இந்தப் படத்தை பொறுத்தவரை நடிகர் திலகத்திற்கு ஒரு வித்தியாசமான ரோல் என்றே சொல்லலாம். அதாவது பல வகைப்பட்ட வீர விளையாட்டுகள் இதில் இடம் பெற்றன. சிலம்பாட்டம், ரேக்ளா, காளை அடக்குதல், மத யானையை அடக்குவது என்று வெரைட்டி வீர பிரதாபங்கள். இந்தப் படத்தை ஒரு சவாலாகவே அவர் எடுத்துக் கொண்டிருக்க வேண்டும். இவரால் இதையெல்லாம் செய்ய முடியாது என்று ஒரு தரப்பினர் பல காலமாக கிண்டல் செய்திருந்ததும் இந்த பாத்திரத்தை ஏற்க ஒரு காரணமாக இருந்திருக்கலாம். சவாலை திறம்படவே சமாளித்திருக்கிறார். முதலில் ஆடும் கபடியாகட்டும், சிலம்பு சுற்றும் போது ஒரு கால் ஊன்றி ஒரு கால் முட்டி போட்டு கழுத்தை மட்டும் பின் பக்கம் திருப்பி வலது கையை மட்டும் பயன்படுத்தி சிலம்பை பின்னால் கொண்டு வந்து தடுப்பதோடு மட்டுமல்லாமல் தாக்கவும் செய்யும் அந்த ஸ்டெப், டூப் போடாமல் அதி வேகத்தில் ரேக்ளா வண்டி ஒட்டி வரும் அந்த க்ளோசப் காட்சிகள், கல்லூரி விழாவில் யானையின் தந்தைகளை பிடித்து அடக்குவதோடு இல்லாமல் இதிலும் டூப் இல்லாமல் அந்த தந்தங்களை பிடித்தே யானையின் முதுகின் மேல் ஏறுவது, அதே காட்சியின் தொடக்கத்தில் யானையின் சீற்றம் கண்டதும் தாவி எழுந்து வேட்டியை மடித்துக் கட்டுவது, இறுதிக் காட்சியில் மாட்டை அடக்கும் காட்சிகள் என்று காட்சிக்கு காட்சிக்கு பிரமாதப்படுத்தியிருகிறார். ஆக்க்ஷனே இப்படியென்றால் ஆக்டிங் பற்றி சொல்லவும் வேண்டுமோ?

முதலில் வரும் அந்த முன்கோபக்காரன், யாரையும் எதிர்க்கும் தைரியம், மனைவியின் மேல் வைத்திருக்கும் பாசம், துரோகம் செய்த சித்தப்பாவின் மேல் வரும் ஆத்திரம், பணம் வந்தவுடன் வரும் அந்த மிடுக்கு, அரண்மனையில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று வகுப்பு எடுக்கும் மகனிடம் நடந்து காட்டும் ஸ்டைல்,அரண்மனையில் வரும் அந்த பவ்யம், இளவரசியின் நெருக்கம் தரும் சங்கடம், பார்ட்டியில் தவிர்க்க முடியாமல் குடித்து விட்டு முதன் முதலாக குடிக்கும் ஒருவனின் உடல் மொழியை வெளிப்படுத்தும் பாங்கு, அந்த தவறை நினைத்து மனைவியிடம் வந்து குற்ற உணர்வில் பேசும் பேச்சு[ 8 மாதங்களுக்கு பிறகு அதே 1970-ல் இதையே ஒரு 5 நிமிடக் காட்சியாக சொர்க்கத்தில் கலக்கியிருப்பார்], மனைவியே தன்னைப் பற்றி தவறாக பேசி விடும் போது வரும் கோபம் [கன்னத்தில் விழும் ஒரே அறையில் காது தோடு பறந்து போய் விழும்], மகன் சொத்தை தன் பெயருக்கு எழுதி வைக்க சொல்ல தன்னை புரிந்து கொள்ளவில்லையே என்ற ஆதங்கம் கோவமாக வெளிப்பட்டு சுயபச்சதாபமாக மாறும் அந்த கணங்கள், இதெல்லாம் எனக்கு சர்வ சாதாரணம் என்று வெகு இலகுவாக செய்திருப்பார் நடிகர் திலகம்.

மோகனாம்பாளாக கொடிக் கட்டி பறந்த நாட்டியப் பேரொளி இந்த படத்தில் also ran -தான். இளைய வயது மரகதமாக வரும் போது உடலும் ஒத்துழைக்க மறுக்கிறது. படத்தின் பின்பகுதியில் முக பாவங்களை வைத்தே சமாளிக்கிறார்.

சிவந்த மண்ணிற்கு பிறகு சிவாஜியோடு காஞ்சனா இணைந்த படம். இன்னும் சொல்லப் போனால் சிவந்த மண் ஓடிக் கொண்டிருக்கும் போதே இந்த படம் வெளியாகி விட்டது. [நான் படம் பார்த்த இரண்டாவது நாள் இரவுக் காட்சியில் காஞ்சனாவிற்கு கைதட்டல்கள் இருந்தன].பெரிதாக அவருக்கும் வாய்ப்பு இல்லை.

சிவகுமார் உயர்ந்த மனிதன் படத்தில் விட்ட இடத்திலிருந்து தொடர்வது போல இருக்கும். காரணம் பாத்திரப் படைப்பு அப்படி. சோ- மனோரமா ஜோடி. ஆனாலும் நகைச்சுவை பஞ்சம். சோ-வை வில்லன் ரோலில் [கடைசி அரை மணி நேரம்தான் என்றாலும் கூட] ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

தில்லானாவின் ஒரு பெரிய தூணான பாலையா இதில் வில்லன். ஆனால் ஒரு சில காட்சிகளை தவிர அந்த ஸ்பார்க் மிஸ்ஸிங். பத்மினியின் அப்பாவாக வி.எஸ்.ராகவன் அதீதமாக உணர்ச்சி வசப்படுகிறார். டி.ஆர். ராமச்சந்திரன் படத்தில் இருக்கிறார்.

பாடல்கள் கவியரசர். இசை திரை இசைத் திலகம்.

1.ஆணை முகன் நம்பியே - நடிகர் திலகத்தின் intro இந்தப் பாடலுடன்தான் ஆரம்பிக்கும். இதில் கபடி சிலம்பாட்டம், கயிறு இழுத்தல் எல்லாம் வந்து விடும். இதில் சரணத்தில் ஒரு வரி வரும் "வீரனுக்கும் வீரன் உண்டு வீரையா" இப்போதும் நினைவிருக்கிறது. தியேட்டரில் அப்படி ஒரு சவுண்ட்.

2. ஏரு பெருசா இந்த ஊரு பெருசா - படத்தின் மிக பிரபலமான பாடல். ஊரை எதிர்த்து நின்று வெற்றி கண்ட பின் வரும் பாடல். பத்மினியும் பாடுவார். இதிலும் சரணத்தில் இரு வரிகள். நெற்கதிர்களின் குவியல் மேல் நின்று ஒரு கையை மேலே உயர்த்தி நடிகர் திலகம் பாடும்

ஊரு பார்க்க ஒசந்து விட்டேன்

உலகம் பார்க்க ஒசந்து விட்டேன்

வரிகளின் போது அரங்கத்தின் ஆர்ப்பரிப்பு அடங்கவே நேரமாகும்.

3. ஆசைக்கு ஒரு பிள்ளை - சுசீலா. பத்மினி குழந்தையை தூளியில் வைத்துப் பாடும் தாலாட்டு பாடல். அவ்வளவாக பிரபலமாகவில்லை. ஆனால் இனிமைக்கு குறைவில்லை.

4.சொல்லாமல் தெரிய வேண்டுமே - அரண்மனையில் காஞ்சனா பாடும் பாடல். இதுவும் பிரபலமான பாடலே.நாங்கள் இங்கே அடிக்கடி குறிப்பிடுவது போல பாடல் காட்சியில் பாடுபவரின் ஆக்க்ஷன் மட்டுமல்லாது உடன் நடிப்பவரின் ரியாக்க்ஷனும் முக்கியம். அதை சிறப்பாக செய்வதில் நடிகர் திலகத்தை மிஞ்ச ஆளில்லை. அந்த நேர்த்தியை இந்த பாடல் காட்சியிலும் பார்க்கலாம். காஞ்சனா பியானோ வாசித்துக் கொண்டே பாட, நடிகர் திலகம் போதையில் தன்னை மறந்து செய்யும் செய்கைகள் [காமிரா டிராலியில் பயணிக்கும் லாங் ஷாட்களில் கூட இதை பார்க்கலாம்] இதற்கு மேலும் ஒரு உதாரணம்.

ஏ.பி.என். இந்த படத்தை பொறுத்தவரை வசனம் இயக்கம் மட்டும்தான். எஸ்.எஸ்.வாசன் முன்கூட்டியே இந்த கதைக்கு திரைக் கதை எழுதி வைத்து விட்டார். ஆகவே அதுவே அப்படியே பயன்படுத்தப்பட்டது. சமஸ்தானம், ராஜா, இளவரசி, ஜமீந்தார் போன்ற அமைப்புகள் இருந்த போது அதை கதைக் களமாக பயன்படுத்தி எழுதப்பட்ட தொடர்கதை. அவையெல்லாம் கிட்டத்தட்ட வழக்கொழிந்து போன சூழ்நிலையில் இந்த படம் வெளியானது. [தில்லானாவும் இதே அமைப்புகளின் ஊடே நடக்கும் கதையாக இருந்த போதிலும் இசையும் பரதமும் அந்த உயிர்த்துடிப்பான கலைஞர்களின் உணர்வும் சேர்ந்து தில்லானாவை என்றும் சிரஞ்சீவி தன்மை வாய்ந்த படமாக மாற்றியது].

முதல் பகுதியில் சரளமாக செல்லும் படம் இடைவேளைக்கு பிறகு அந்த சரளத்தை இழந்ததால் சற்று தொய்வு ஏற்படுகிறது. மேலும் தொடர்கதையாய் வந்த போது இரண்டு பாகங்களை கொண்டதாக வந்தது. அதை மூன்று மணி நேரமாக சுருக்கும் போது வரும் நடைமுறை சிக்கல்கள் வேறு இருந்தன.

திரைக்கதை எழுதிய வாசன் படத்தின் படப்பிடிப்பின் இடையில் காலமாகி விடவே திரைக்கதை அப்படியே கையாளப்பட்டது.

இந்த படத்தின் பாக்ஸ் ஆபிஸ் நிகழ்வுகளை பார்த்தோம் என்றால் சென்னைக்கு தெற்கே இந்த படம் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது. திருச்சியிலும், மதுரை - நியூசினிமாவிலும் 84 நாட்கள் ஓடிய படம் ஷிப்டிங்கில் [மதுரை வெள்ளைக்கண்ணு/மிட்லண்ட் தியேட்டர் என்று நினைவு] 100 நாட்களை கடந்தது. படம் வீர விளையாட்டுகளை கொண்டிருந்ததாலும், மேற் சொன்ன சமூக அமைப்புகள் தென் தமிழகத்தில் அப்போதும் நிலைப் பெற்றிருந்ததும் இதன் வெற்றிக்கு காரணமாக அமைந்தது. ஓடின நாட்களை மட்டும் வைத்து இதை சொல்லவில்லை. இந்த படம் வெளியான போது சிவந்த மண் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருந்தது. எங்க மாமா வெளியாகி 3 வாரங்களே ஆயிருந்தது. அது மட்டுமா? விளையாட்டுப் பிள்ளை வெளியான 60 நாட்களிலே வியட்நாம் வீடு ரிலீசானது. முன்னால் வெளி வந்த படங்கள் பொழுதுபோக்கு அம்சங்களோடு மக்களை கவர்ந்தது என்றால் பின்னால் வந்தது கதையம்சத்திலும் நடிப்பிலும் மக்களை ஈர்த்தது. அப்படியிருந்தும் விளையாட்டுப் பிள்ளை 100 நாட்களை கடந்தது என்று சொல்லும் போது அதன் வெற்றியின் வீச்சை புரிந்துக் கொள்ளலாம். மதுரை ராமநாதபுரம் நெல்லை குமரி மாவட்டங்களில் B, C சென்டர்களிலும் நன்றாக வசூல் செய்தது.

சுருக்கமாக சொன்னால் இவையெல்லாம்தானே என்னால் முடியாது என்று சொன்னீர்கள். இதோ பார்த்துக் கொள்ளுங்கள் என்று நடிகர் திலகம் சில பேருக்கு பதில் சொன்ன படம்.

அன்புடன்

goldstar
13th July 2010, 06:18 AM
Dear Pammalar,

Each question and answers of our NT is a diamond. I cannot imagine your dedicated and hardwork to publish of all kind of new informations about our NT. There is no word to express my happies to know about our NT and appreciate your efforts.

Murali sir,

Your VillayattuPillai writing is excellent as I felt watching this movie in Madurai Alankar theatre (only at Alankar I had watched this movie in my childwood).

Whole of last month I was in Madurai, only "Viduthalai" released in Madurai Meenatchi theatre. So I could not able to have some Sunday evening theatre experience. I have missed it.

If "Thanga Surangam" and "Sivakameeyin Selvan" released this week in Madurai then it would be festival atmosphere in the theatres.

Madurai guys, please post your experience, photos and videos of these two movies experience by coming Sunday.

Cheers,
Sathish

groucho070
13th July 2010, 07:55 AM
Read 2nd para.


http://www.deccanherald.com/content/79033/rebel-star-back.html

NT மறைந்து பல ஆண்டுகள் ஆகி விட்டன. மேலும் அவர் ஒரு இந்தி படத்தில் தோன்றி (தர்த்தி) 40 ஆண்டுகள் ஆகி விட்டன. இத்தனை காலம் கழிந்தும் திரு. ஷம்மி கபூர் NT நடிப்பை நினைவு கூர்ந்து புகழ்கிறார்.

இதைப் படிக்கும் போது தமிழகத்தின் "அறிவு"ஜீவி எழுத்தாளர்களில் ஒருவர் ( அதுவும் உலக சினிமாவை கரைத்துக் குடித்ததாக தன்னைத் தானே புகழ்ந்து கொள்ளும் ஒருவர்) - "சிவாஜி கணேசனை நடிகர் திலகம் என்றார்கள். அவரைப் போன்ற நடிகர் உலகத்திலேயே இல்லை என்றார்கள். சொன்னதெல்லாம் தமிழர்கள். ஆனால் இந்தி சினிமாவில் அவர் பெயரே தெரியாது. " என்று blogல் பிதற்றியது நினைவுக்கு வருகிறது. இந்த லின்கை அவருக்கு மின்னஞ்சல் செய்கிறேன்.Good job, Mahesh. May I know who that blogger is? Venumna, PM pannungga :D

groucho070
13th July 2010, 07:58 AM
Wonderful write-up, Murali-sar. Considering that it was the same team as Tillana Mohanambal, I suppose it is a bit of a disappointment. But as a standalone, I am sure NT made the film work (as did APN and the story itself).

HARISH2619
13th July 2010, 01:18 PM
முரளி சார்,
வழக்கம் போல் தங்களின் விமர்சன கட்டுரை அருமை.நீன்ட இடைவெளிக்கு பிறகு படத்தை நேரில் பார்த்த அனுபவம்.

பம்மல் சார்,
கேள்வி பதில் பகுதி பாதுகாக்கபட வேன்டிய பொக்கிஷம்.தொடரட்டும் தங்கள் அரும்பணி,வாழ்த்துக்கள்.

HARISH2619
13th July 2010, 01:29 PM
பெங்களூர் பிரகாஷ்நகர் 5வது மெயின் ரோடு சதுக்கத்தில் காமராஜரின் 108வது பிறந்த்நாள் விழா இம்மாதம் 15ம்தேதி நடைபெறவுள்ளது.விழாவுக்கு சிவாஜி அறக்கட்டளை தலைவர் மா நடராஜ் தலைமை வகிக்கிறார்.பிரகாஷ்நக வார்டு கவுன்சிலர் ரவீந்திரன் முன்னிலை வகிக்கிறார்.காமராஜர் ஜோதியை முன்னாள் எம்.பி கிருஷ்ணைய்யர் ஏற்றுகிறார்.ஏழை குழந்தைகளுக்கு இலவச நோட்டு புத்தகம்,பை மற்றும் சீருடைகளை பழனிச்சாமி நாடார்,பழனிச்சாமி நாயுடு வழங்குகின்றன்ர்.விழா ஏற்பாடுகளை கர்நாடக சிவாஜி அறக்கட்டளை,சிவாஜி-பிரபு நற்பனி இயக்கம்,பெங்களூர் சிட்டி டாக்டர் சிவாஜிகனேசன் பிரபு ரசிகர் மன்றத்தினர் செய்துள்ளனர்

sankara1970
13th July 2010, 02:48 PM
Vilaiyatu Pillai en avalai thoondi vittathu

adutha collection athu than

pammalar
14th July 2010, 12:12 AM
டியர் முரளி சார்,

'விளையாட்டுப் பிள்ளை' திரைப்படக் கண்ணோட்டம்/திறனாய்வு அருமை, அற்புதம், அபாரம். படத்தை அப்படியே கண்முன்னே கொண்டு வந்து விட்டீர்கள்.

பாராட்டுக்கள்! வாழ்த்துக்கள்!! நன்றிகள்!!!

அன்புடன்,
பம்மலார்.

Murali Srinivas
14th July 2010, 12:26 AM
Thanks Sathish. I was wondering where were you and now I realise that you had been quietly enjoying your vacation at Madurai.

Rakesh, thanks. Yes, definitely not in the league of Thillaana but nevertheless made interesting by that one man.

நன்றி செந்தில். உங்களையும் பார்த்து வெகு நாட்களாகி விட்டது. பெங்களூரில் நடைபெறும் பெருந்தலைவரின் பிறந்த நாள் விழா பற்றிய செய்திகளுக்கு நன்றி. விழா இனிதே நடைபெற வாழ்த்துக்கள்.

நன்றி சங்கர்.

நன்றி சுவாமி.


அன்புடன்

pammalar
14th July 2010, 02:03 AM
டியர் கோல்டுஸ்டார், செந்தில் சார்,

தங்கள் இருவரின் பாராட்டுக்களுக்கும் எமது பணிவான நன்றிகள்!

செந்தில் சார், பெங்களூர் விழாத் தகவலுக்கு நன்றி! விழா சிறக்க வாழ்த்துக்கள்!

அன்புடன்,
பம்மலார்.

pammalar
14th July 2010, 02:13 AM
கேள்வி பிறந்தது! நல்ல பதில் கிடைத்தது! - 70

கே: தமிழ்ப் படங்களில் சிவாஜி கணேசனின் மார்க்கெட் எப்படி உள்ளது? (எஸ்.பாஸ்கரன், BSF)

ப: ரொம்பவும் ஸ்டெடியாக இருக்கிறது.

(ஆதாரம் : பேசும் படம், ஜூலை 1981)

அன்புடன்,
பம்மலார்.

pammalar
14th July 2010, 02:21 AM
கேள்வி பிறந்தது! நல்ல பதில் கிடைத்தது! - 71

கே: இனி வரும் காலங்களில் நடிப்பு உலகில் சிவாஜி கணேசன் எனும் மேதையைப் போல் யாராவது பிறக்க முடியும் என்று நினைக்கிறீர்களா? (செ.மாணிக்கவாசகம், புதுக்கோட்டை)

ப: நிச்சயமாக முடியாது.

(ஆதாரம் : சினிமா எக்ஸ்பிரஸ், 15-31 ஜனவரி 2001)

அன்புடன்,
பம்மலார்.

goldstar
14th July 2010, 05:04 AM
Yes Murali. I had been to Madurai after 18 months and I could see some improvement happened/happening in Madurai and glad to see our Madurai turning into clean city.

Well, I was looking for at least one NT movie would be released in June, but only "Viduthalai" released in Meenatchi which I am not that interested to watch in theatre. It would have nice if "Thanga Surangam" or "Sivagamin Selvan" released in June.

But I could see our NT posters at SouthGate, Gandhi "Pottal" and other parts of Madurai.

Its sad that now a days, no old Tamil movies released in Alankar theatre. Mostly they show only Tamil version of English movies or Adults movies.

Murali, I am looking for "Dharmaraja" movie review. One of NT movie I have not got the chance to watch it yet. I have searched of this movie DVD in my Madurai visit, but I could not able to find it any where.

But this time, I bought more than 30 NT movies of DVD, so my NT collections has increased to around 125 movies.

Cheers,
Sathish

pammalar
14th July 2010, 01:20 PM
கலையுலக மகானின் 9வது அவதார நிறைவு நாளான 21.7.2010 புதனன்று, சென்னை திருமயிலை கபாலீஸ்வரர் திருக்கோயிலில், நடிகர் திலகம் சிவாஜி சமூக நலப் பேரவை சார்பில், சிறப்பு அன்னதான விழா நடைபெற உள்ளது. அன்னதான விழாவின் அழைப்பிதழை தரிசிக்க கீழ்க்காணும் சுட்டியைச் சொடுக்கவும்:

http://pammalar.webs.com/apps/photos/photo?photoid=90688174

சிறப்பு அன்னதான விழா சிறப்புற நடைபெற சீரிய வாழ்த்துக்கள்!

அன்புடன்,
பம்மலார்.

pammalar
14th July 2010, 01:38 PM
நாகர்கோவில் செய்திகள்

http://pammalar.webs.com/apps/photos/photo?photoid=90688502

நன்றி : சிவாஜி பேரவைத் தலைவர் திரு.கே.சந்திரசேகரன்

அன்புடன்,
பம்மலார்.

pammalar
14th July 2010, 06:10 PM
கேள்வி பிறந்தது! நல்ல பதில் கிடைத்தது! - 72

கே: "வீரபாண்டிய கட்டபொம்மனை" இன்று மீண்டும் படமாக எடுத்தால் யார் கட்டபொம்மனாக நடிக்கப் பொருத்தமாக இருப்பார்? (பி.பன்னீர்செல்வம், திருவாரூர்)

ப: இன்னொரு 'கட்டபொம்மன்' வர முடியாது. சிவாஜியின் அந்த நடிப்பை இன்னொருவர் நினைத்துக் கூடப் பார்க்க முடியாது!

(ஆதாரம் : சினிமா எக்ஸ்பிரஸ், 15-30 ஜூன் 2000)

அன்புடன்,
பம்மலார்.

pammalar
14th July 2010, 06:24 PM
கேள்வி பிறந்தது! நல்ல பதில் கிடைத்தது! - 73

கே: "கல்தூண்" போன்ற படங்களில் மாறுபட்ட பாத்திரங்களில் சிவாஜி நடிப்பது பற்றி என்ன நினைக்கிறீர்கள்? (எஸ்.சுப்பிரமணியன், சுந்தரபாண்டியபுரம்)

ப: மாறுபட்ட பாத்திரங்களில் நடித்துப் புகழ் பெற்றவர் சிவாஜி. இன்னும் அப்படி ஏதாவது புதுமையாகச் செய்ய வேண்டும் என்ற ஆர்வம் அவருக்கு இருக்கிறது. அதனால் தான் அவர் அசைக்க முடியாத 'கல்தூணாக' அழுந்த உட்கார்ந்து கொண்டிருக்கிறார்.

(ஆதாரம் : பேசும் படம், டிசம்பர் 1981)

அன்புடன்,
பம்மலார்.

Murali Srinivas
15th July 2010, 12:07 AM
Satish,

I am not sure whether Dharma Raja is available in the DVD/CD format. As for as the movie is concerned, well it was way below the mark. I have not seen the movie after the opening show which was on 26th of April 1980 at New Cinema. The only memories I have are the initial 15- 20 minutes which would be promising and the two good songs. In case if I happen to catch it, will let you know.

Regards

இன்று எங்கள் தங்க ராஜா தினம். 37 வருடங்கள் ஆனாலும் இன்றும் நெஞ்சில் பசுமையான அந்த நாட்கள்.

Murali Srinivas
15th July 2010, 12:24 AM
குழந்தைகளின் பசியை போக்கிய ஏழை பங்காளர்

அவர்களுக்கு இலவச கல்வி தந்த கர்ம வீரர்

நூற்றுக்கணக்கான தொழிற்சாலைகளை உருவாக்கிய நவ தமிழக சிற்பி

பல்வேறு அணைகளை கட்டி பாசனத்தையும் விளைச்சலையும் அதிகரித்த விவசாய நண்பன்

முதன் முதலில் விவசாயிகளுக்கு மின்சாரம் வழங்கிய வள்ளல்

உண்மையிலே தமிழை வளர்த்த சாதனையாளர்

பொது வாழ்வில் நேர்மை தூய்மை என்பதை வெறும் வாய் சொல்லில் நிறுத்தி விடாமல் வாழ்ந்து காட்டிய நெறியாளர்

நடிகர் திலகம் போற்றிய ஏற்றுக் கொண்ட பெருந்தலைவர்

அவர்தம் பிறந்த நாளில்

அந்த பொற்கால ஆண்டுகள் மீண்டும் வர வேண்டுவோம்.


அன்புடன்

Avadi to America
15th July 2010, 01:47 AM
குழந்தைகளின் பசியை போக்கிய ஏழை பங்காளர்

அவர்களுக்கு இலவச கல்வி தந்த கர்ம வீரர்

நூற்றுக்கணக்கான தொழிற்சாலைகளை உருவாக்கிய நவ தமிழக சிற்பி

பல்வேறு அணைகளை கட்டி பாசனத்தையும் விளைச்சலையும் அதிகரித்த விவசாய நண்பன்

முதன் முதலில் விவசாயிகளுக்கு மின்சாரம் வழங்கிய வள்ளல்

உண்மையிலே தமிழை வளர்த்த சாதனையாளர்

பொது வாழ்வில் நேர்மை தூய்மை என்பதை வெறும் வாய் சொல்லில் நிறுத்தி விடாமல் வாழ்ந்து காட்டிய நெறியாளர்

நடிகர் திலகம் போற்றிய ஏற்றுக் கொண்ட பெருந்தலைவர்

அவர்தம் பிறந்த நாளில்

அந்த பொற்கால ஆண்டுகள் மீண்டும் வர வேண்டுவோம்.


அன்புடன்

IIT yai chennaiku konduvantha perun thalivar vazhga (Real padikatha methai) :clap:

pammalar
15th July 2010, 02:01 AM
கேள்வி பிறந்தது! நல்ல பதில் கிடைத்தது! - 74

கே: நடிகர் திலகம் ஏன் ஹிந்திப் படங்களில் நடிப்பதில்லை? (டி.பாஸ்கரன், சென்னை)

ப: தமிழ்ப்பட உலகிற்கு தன் முழு சேவையையும் அர்ப்பணிக்க.

(ஆதாரம் : பேசும் படம், செப்டம்பர் 1958)

அன்புடன்,
பம்மலார்.

pammalar
15th July 2010, 02:10 AM
கேள்வி பிறந்தது! நல்ல பதில் கிடைத்தது! - 75

கே: தமிழ் சினிமா உலகில் அண்மையில் நடந்த ஏதேனும் நல்ல நிகழ்ச்சியை சொல்லுங்கள்? (ராதைக்குமரி, சென்னை - 5)

ப: சிவாஜி கணேசன் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்ததுடன் நில்லாது கலை நிகழ்ச்சிகள் சிலவும் நடத்தி பொருள் மிகத் திரட்டித் தந்ததைக் குறிப்பிடலாம்.

(ஆதாரம் : கலைப்பொன்னி, அக்டோபர் 1965)

அன்புடன்,
பம்மலார்.

pammalar
15th July 2010, 02:48 AM
பெருந்தலைவர் பற்றி நடிகர் திலகம்

"விலங்கினம் முதல் ஆறறிவு படைத்த மனிதன் வரை அன்பு செலுத்தும் ஒரே நபர் தாய் தான். அந்தத் தாய்மை உணர்ச்சியையும் கூட, கடமைப் பொறுப்பினால் கட்டுப்படுத்திக் கொள்ளும் செயல் வீரர் காமராஜ். தன் ஊரிலே, தன் தாய் குடியிருக்கும் தெருவிலே ஒரு கூட்டம் நடந்தால், அது முடிந்ததும் தன் தாயைக் கூடக் காணப் போகாமல், அடுத்த கூட்டத்திற்கு, தனது கடமையின் அடுத்த கட்டத்திற்கு செல்லும் ஒரு பொது நல ஊழியர். 'பகைவனுக்கு அருள்வாய்' என்ற பாரதியின் வாக்கை மெய்ப்பித்து வரும் உத்தம ஊழியர்."

[இக்கருத்து பெருந்தலைவரின் 60வது பிறந்த நாளன்று (15.7.1962) தினமணி நாளிதழில் வெளியானது.]

நாளை (15.7.2010) கர்மவீரர் காமராஜர் அவர்களின் 108வது பிறந்த தினம்.

அன்புடன்,
பம்மல் ஆர். சுவாமிநாதன்.

sankara1970
15th July 2010, 11:10 AM
Karmaveeran Kamaraj, perunthalaivar Kamaraj pirantha thinam

Thamizagathil Kamarajarin porkalam thirumba vara vendum endru prarthanai seivom

Palli chiruvarku mathiya unavu thantha ezhai pangalan pugaz vazga

Irene Hastings
15th July 2010, 03:39 PM
No parallel for Perumthalaivar. Vazga avar pugaz. The best ever CM of TN till date.

abkhlabhi
15th July 2010, 05:46 PM
Bangaloreil கர்மவீரர் காமராஜர் அவர்களின் 108வது பிறந்த தினம்.


http://www.dinasudar.co.in/e_paper/bangaluru/img/02.htm

pammalar
16th July 2010, 02:32 AM
வள்ளல் திலகம் சிவாஜி அவர்கள் திருவானைக்காவல் கோயிலுக்கு வழங்கிய கோயில் யானை சாந்தி இன்று 15.7.2010 வியாழக்கிழமை முற்பகல் 11:20 மணியளவில், இறைவனடி சேர்ந்தது. சிவாஜியடி சேர்ந்த கோயில் யானை சாந்திக்கு ஆத்மார்த்தமான அஞ்சலி.

http://www.thehindu.com/news/cities/Tiruchirapalli/article517173.ece

பம்மல் ஆர். சுவாமிநாதன்.

HARISH2619
16th July 2010, 01:21 PM
DEAR RAGHAVENDRA SIR,
In your website you have given the release date of oncemore as 04-07-1995.But I think the film was released in 1997.please check out and rectify.
thankyou

RAGHAVENDRA
16th July 2010, 04:41 PM
Dear Harish,
Thank you for your kind gesture. If you are meaning the filmography page it already shows 1997 (http://www.nadigarthilagam.com/Sivajimainc.htm, p.29). If you found it elsewhere kindly provide the link so that the correction can be carried out.
Once again I express my sincere thanks.
With warm regards,
Raghavendran

HARISH2619
16th July 2010, 07:53 PM
Dear raghavendra sir,
It's in the main sheet where you have given the list of movies which got released in the month of july

RAGHAVENDRA
16th July 2010, 08:39 PM
Dear Harish,
Thank you very much. The error has been corrected.
Seeking your continued support.
Raghavendran

RAGHAVENDRA
16th July 2010, 08:41 PM
VINTAGE HERITAGE, a film club to promote vintage Tamil cinema and music, is screening Nadigar Thilagam's ever green movie, "Koteeswaran", on Sunday 25th July, 2010, at Vivekananda Mini Hall, P.S. Senior Secondary School campus, Ramakrishna Mutt Road, Mylapore, Chennai-4. Time: 6.30 p.m. For details contact: 9444047714.

Raghavendran

pammalar
18th July 2010, 01:30 AM
தங்கப்பதுமையின் தொடர் வெற்றி பவனி

தாராசுரம் சூரியகாந்தி டூரிங்கில், "தங்கப்பதுமை" திரைக்காவியம், 2.7.2010 வெள்ளி முதல் 5.7.2010 திங்கள் வரை, 4 நாட்களில், தினசரி 2 காட்சிகளாக, ரூ.21,000/- (ரூபாய் இருபத்து ஒன்றாயிரம்) மொத்த வசூல் செய்து இமாலய வெற்றி அடைந்ததையும், 6.7.2010 செவ்வாயன்று 5வது நாளாக தொடர்ந்து வெற்றி நடை போட்டு விண்ணை முட்டும் வெற்றியை நோக்கி சென்று கொண்டிருந்ததையும் யாம் ஏற்கனவே தெரிவித்திருந்தோம்.

ஐந்தாவது நாளான 6.7.2010 செவ்வாயன்று 300 நபர்களும், ஆறாவது கடைசி நாளான 7.7.2010 புதனன்று 200 நபர்களும் தங்கப்பதுமையை தரிசித்துள்ளனர். ஆக மொத்தம் 6 நாட்களில், தாராசுரம் சூரியகாந்தி டூரிங்கில், தங்கப்பதுமை, மொத்தம் ரூ.26,000/- (ரூபாய் இருபத்து ஆறாயிரம்) கலெக்ஷன் செய்து, தங்க மழை போல் வசூல் மழை பொழிந்துள்ளது. இந்நிகழ்வு விண்ணைத் தொடும் சாதனை.

இதன் பின்னர், இதே தங்கப்பதுமை திரைக்காவியம், 8.7.2010 வியாழன் முதல் அருகிலுள்ள மயிலாடுதுறை (மாயவரம்) சுந்தரம் திரையரங்கில், தினசரி 4 காட்சிகளாக திரையிடப்பட்டு, 14.7.2010 புதன் வரை ஒரு வாரம் ஓஹோவென்று ஓடி வெற்றி வாகை சூடியுள்ளது. [மயிலாடுதுறை சுந்தரம் அரங்கில் டிக்கெட் விலை ரூ.15/- மற்றும் ரூ.20/-]

விரைவில், தாராசுரம் சூரியகாந்தி டூரிங்கில், தங்கத்தமிழ்ப்பெருமகனின் "என் மகன்".

இத்தகவல்களை அள்ளி வழங்கிய ரசிக நல்லிதயம் திரு.குடந்தை ராமலிங்கம் அவர்களுக்கு உளப்பூர்வமான நன்றிகள்!

பெருமிதத்துடன்,
பம்மலார்.

goldstar
19th July 2010, 10:50 AM
Hi all,

Yesterday watching "Thanga Pathakkam" in DVD and I was interested to watch only songs but in between had chance to see few scenes. I would like to mention 2 scenes

1. In the song "Sumai Thangi Saithaal" when our NT takes the "Rippon" from K.R. Vijaya and puts on his shoulder, oh god simply superb.

2. When our NT stands with his superior (K. Vijayan) and superior enquire about his mistake and he gets a phone call that missing person has been napped by AP police by the information provided by SP Chodury. All of sudden our NT body language changes and his hands are freely shaking. When superior office gets another phone and tells to SP Chodury that "I have a bad news", just check our NT hands, all of sudden it just stops. Marvelous, wonderful acting. I can see TP movie for 1000 times just for 2 scenes.

Long live our NT fame.

Guys any news about our NT movies released in Madurai? If possible can I get some photos, vidoes please?

Cheers,
Sathish

goldstar
19th July 2010, 10:55 AM
Hi all,

Regarding National Award not honoured to our NT. It it duty of Indian government to honour other actors with our NT name "Sivaji Ganeshan" award for best actor like ""Dada saab Balke" award.

If Indian government cannot do then, we can look at Singapore or Malaysia.

Joe, just curious question, Is Singapore giving away any National award for best actor/actrees with any other actor name. If not what would be best way to convey our wish to start giving an award with our beloved "Sivaji Ganeshan" award?

Will it too complicated or am I looking for too much?

I beleive people from Singapore like Joe or other can advise.

Cheers,
Sathish

HARISH2619
19th July 2010, 06:31 PM
கன்னட திரைஉலக முன்னனி நடிகர் திரு.அம்பரீஷ் அவர்கள் இன்று டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழுக்கு அளித்துள்ள பேட்டியில் தன்னுடைய ரோல்மாடல்கள் என்று சிவாஜிகணேசன்,ராஜ்குமார்,திலீப்குமார் மற்றும் ராஜ்கபூர் ஆகியோரை குறிப்பிட்டுள்ளார்.

pammalar
19th July 2010, 09:26 PM
கேள்வி பிறந்தது! நல்ல பதில் கிடைத்தது! - 76

கே: படத் தயாரிப்பாளர்கள் கடினமான குணச்சித்திரம் கொண்ட கதாபாத்திரம் என்றால் 'எங்கே சிவாஜி' என்று அவரைத் தேடிஓடுகிறார்களே - ஏன்? (மதுரைவாலா, மதுரை)

ப: "பத்மஸ்ரீ" பட்டம் சர்க்கார் கொடுத்திருக்கிறதே - அதே காரணத்துக்காகத் தான்! 'நடிகர் திலகம்' என்று அழைக்கப்படுகிறாரே - அதற்காகத் தான்!

(ஆதாரம் : பேசும் படம், ஏப்ரல் 1966)

அன்புடன்,
பம்மலார்.

PARAMASHIVAN
19th July 2010, 09:38 PM
[tscii:a27c7ab3bb]Hi all

Shivaji sir is "one of the most artists" I respect along with "Rajni/SPB/IR". After watching Shivaji sir's 50s/60s movies , we all have developed an 'Image' about him :notworthy:

But During the 70's , he has 'Suthapified' his 'Image' by doing few 3rd rted movies, I have seen many. But the first thing that comes to my mind is Dr.Siva. When I saw the movie , these were my feelings :shock: :banghead: :( .

Such a 'stupid' movie, why did Shivaji sir accept such crap :huh: to add further 'depression' we see 'Manjula' running around naked :banghead: absolutely disgusting :sigh2:
The only ‘saviour’ of this film was the mesmerising song (malarE kurinji ) by Dr.KJY & Janaki amma :notworthy:

why was Shivaji Sir not selecting good movies / scripts in the 70's ? :roll: :(
[/tscii:a27c7ab3bb]

pammalar
19th July 2010, 09:43 PM
கேள்வி பிறந்தது! நல்ல பதில் கிடைத்தது! - 77

கே: 'வியட்நாம் வீட்டி'ல் குடியிருக்கும் 'தெய்வமக'னிடம் 'தேனும் பாலும்' பருகி 'சொர்க்க'த்தைக் காண இந்த 'சாப்பாட்டு ராம'னுக்கு ஓர் ஆசை. அந்த 'உயர்ந்த மனிதன்' , 'பாதுகாப்பு' அளிப்பாரா? (எஸ்.சந்தானம், டேராடூன்)

ப: 'விளையாட்டுப் பிள்ளை'யான அந்த 'கர்ணன்' கையால் பலர் சாப்பிட்டிருக்கிறார்கள். 'அன்பு' மனம் கொண்ட அவரைப் 'பார்த்தா(லே)ல் பசி தீரு'மே!

(ஆதாரம் : பேசும் படம், மே 1970)

அன்புடன்,
பம்மலார்.

Murali Srinivas
20th July 2010, 12:09 AM
Guys any news about our NT movies released in Madurai? If possible can I get some photos, vidoes please?

Cheers,
Sathish

Satish,

The releases have been postponed. We will come to know of the release dates as soon as it is decided. Will let you know.

Regards

pammalar
20th July 2010, 02:03 AM
நடிகர் திலகம் சிவாஜி சமூக நலப் பேரவை சார்பில், நடிகர் திலகத்தின் நினைவு நாள் நிகழ்ச்சி, சென்னையில் 21.7.2010 புதனன்று நடைபெறுகிறது. அழைப்பிதழைக் காண கீழ்க்காணும் சுட்டிகளைச் சொடுக்கவும்:

http://pammalar.webs.com/apps/photos/photo?photoid=91297161

http://pammalar.webs.com/apps/photos/photo?photoid=91297162

http://pammalar.webs.com/apps/photos/photo?photoid=91297163

http://pammalar.webs.com/apps/photos/photo?photoid=91299234

அன்புடன்,
பம்மலார்.

pammalar
20th July 2010, 02:26 AM
கேள்வி பிறந்தது! நல்ல பதில் கிடைத்தது! - 78

கே: பழைய நடிகர்களில் சிவாஜிக்கு இருக்கும் மரியாதை ஏன் மற்ற நடிகர்களுக்குக் கிடைப்பதில்லை? (ப.குருராஜா, சின்னசேலம்)

ப: சிவாஜியின் நடிப்புத் திறமை மற்றவர்களுக்கு இல்லை என்பதுடன், தொழில் மீது அவருக்கு உள்ள அளவுக்கு பக்தியும், மரியாதையும் மற்றவர்களிடம் இல்லை, ஓரிருவரைத் தவிர!

(ஆதாரம் : சினிமா எக்ஸ்பிரஸ், 15.7.1986)

அன்புடன்,
பம்மலார்.

pammalar
20th July 2010, 02:40 AM
கேள்வி பிறந்தது! நல்ல பதில் கிடைத்தது! - 79

கே: நடிப்புக்கு ரத்தினச் சுருக்கமாக ஒரே வார்த்தையில் இலக்கணம் சொல்ல முடியுமா? (சங்கீதா பரந்தாமன், காரைக்கால்)

ப: ஏன் முடியாது? சிவாஜி!

(ஆதாரம் : ராணி, 28.6.2009)

அன்புடன்,
பம்மலார்.

pammalar
20th July 2010, 03:07 AM
கேள்வி பிறந்தது! நல்ல பதில் கிடைத்தது! - 80

கே: தமிழ் நடிகர்களில் எந்த நடிகருக்கு உலகமெங்கும் புகழ் உண்டு? (லெய்ரன் பொணிவஸ், யாழ்ப்பாணம், இலங்கை)

ப: சிவாஜி கணேசனுக்குத் தான்.

(ஆதாரம் : பேசும் படம், ஜூலை 1970)

அன்புடன்,
பம்மலார்.

Mahesh_K
20th July 2010, 11:21 AM
[tscii:01ff64e0d3]Hi all

Shivaji sir is "one of the most artists" I respect along with "Rajni/SPB/IR". After watching Shivaji sir's 50s/60s movies , we all have developed an 'Image' about him :notworthy:

But During the 70's , he has 'Suthapified' his 'Image' by doing few 3rd rted movies, I have seen many. But the first thing that comes to my mind is Dr.Siva. When I saw the movie , these were my feelings :shock: :banghead: :( .

Such a 'stupid' movie, why did Shivaji sir accept such crap :huh: to add further 'depression' we see 'Manjula' running around naked :banghead: absolutely disgusting :sigh2:
The only ‘saviour’ of this film was the mesmerising song (malarE kurinji ) by Dr.KJY & Janaki amma :notworthy:

why was Shivaji Sir not selecting good movies / scripts in the 70's ? :roll: :(
[/tscii:01ff64e0d3]

While Dr. Siva is not comparable to many other good movies of NT, I don't think it is as bad as you have projected.

Regarding poor choice of screenplays by NT , it has been by accepted NT fans & discussed many times in various threads here.

Though most of the pre 1975 movies are watchable even today, many commercial Tamil movies ( of all top heroes) of late 70s and early 80s had a distinct way of story telling which looks absurd when we watch them today.

This is not something unique only to NT movies . Since you have mentioned Rajini's name, let me add that a majority of Super star's movies from 1975-1885 too fall in this category - if you apply "Dr. Siva" yardstick to those movies.

groucho070
20th July 2010, 12:00 PM
PARAMASHIVAN = The Hub resident masochist. :roll:

*getting mental image of him sAttai adichufying himself :P

NOV
20th July 2010, 01:02 PM
~ What was the first film without any songs?

~ What was the first film that was filmed at foreign soil?

~ What was the first cinemascope film?

Nadigar Thilagam :bow: :bow: :bow:

groucho070
20th July 2010, 01:28 PM
~ What was the first cinemascope film?Came out in the 70s, for paramu's attention. :wink:

pammalar
20th July 2010, 08:24 PM
பொன் விழாக் காணும் சென்னை சாந்தி திரையரங்கில் வரும் 23.7.2010 வெள்ளி முதல், புதுமை வேந்தரின் "புதிய பறவை".

அன்புடன்,
பம்மலார்.

PARAMASHIVAN
20th July 2010, 08:58 PM
PARAMASHIVAN = The Hub resident masochist. :roll:

*getting mental image of him sAttai adichufying himself :P

:evil:

Grouch na

What is your view about posting? there was another film , where Sridevi is his daughter , had wonderful song by SPB ' Poo polE un punagiyil' ? This was not 'great' but not as bad as 'Dr Siva'

PARAMASHIVAN
20th July 2010, 09:07 PM
This is not something unique only to NT movies . Since you have mentioned Rajini's name, let me add that a majority of Super star's movies from 1975-1885 too fall in this category - if you apply "Dr. Siva" yardstick to those movies.

Completely disagree, Rajni's movie in the 90's may fall in this category, with exemptions of ' Thalapthy/mannan/baasha', not between 1975 -1985

Planning to watch Thiruvizhaiyadal today, esp that beach walk :notworthy:

m_23_bayarea
20th July 2010, 09:13 PM
I have to agree with Param, while I think Sivaji is the best actor of all time in the world, I'm definitely not a fan of his movies in the late 70s! Had Sivaji been born in the US, the Oscar panel would have drained the number of awards by giving them to him! :)

But his late 70s movies have nothing to do with my liking for him in other decades though! His Gowravam is my all-time fav movie, while I have a ton of other movies I love too. And in terms of looks, he was at his best in the later 60s - early 70s... 8-)

PARAMASHIVAN
20th July 2010, 09:22 PM
I have to agree with Param, while I think Sivaji is the best actor of all time in the world, I'm definitely not a fan of his movies in the late 70s! Had Sivaji been born in the US, the Oscar panel would have drained the number of awards by giving them to him! :)



:ty: :exactly:

jaiganes
20th July 2010, 09:59 PM
PARAMASHIVAN = The Hub resident masochist. :roll:

*getting mental image of him sAttai adichufying himself :P

:evil:

Grouch na

What is your view about posting? there was another film , where Sridevi is his daughter , had wonderful song by SPB ' Poo polE un punagiyil' ? This was not 'great' but not as bad as 'Dr Siva'

It was Kavarimaan - *ing along side Sivaji - Pramila of "Arangetram". The movie had a nice storyline spoiled by amateurish direction and horrible non acting from support casting and as usual Sivaji was left to salvage the remnants of a good story by his laboured acting.

PARAMASHIVAN
20th July 2010, 10:03 PM
PARAMASHIVAN = The Hub resident masochist. :roll:

*getting mental image of him sAttai adichufying himself :P

:evil:

Grouch na

What is your view about posting? there was another film , where Sridevi is his daughter , had wonderful song by SPB ' Poo polE un punagiyil' ? This was not 'great' but not as bad as 'Dr Siva'

It was Kavarimaan - *ing along side Sivaji - Pramila of "Arangetram". The movie had a nice storyline spoiled by amateurish direction and horrible non acting from support casting and as usual Sivaji was left to salvage the remnants of a good story by his laboured acting.

Thanks, I remember the film now! nice songs and like you said horrible direction indeed and NT was left to carry the movie on his shoulders by him self :yes:

Murali Srinivas
20th July 2010, 11:50 PM
[
This is not something unique only to NT movies . if you apply "Dr. Siva" yardstick to those movies.

Mahesh,

One request. Let us avoid this topic and comparison with others.

Thanks for your understanding

Regards

Murali Srinivas
21st July 2010, 12:15 AM
நடிப்பின் சிகரமே! நடிகர் திலகமே!

ஜூலை 21

ஒன்பது வருடங்களாகி விட்டதாம் நீ பூவுலகை விட்டு மறைந்து!

மறக்கவோ மறைக்கவோ முடியாத சூரியன் அல்லவா நீ!

ஒன்பது அல்ல 90 ஆண்டுகள் ஆனாலும்

உன்னை நினைக்காத நாள் தமிழகத்தில் வரப்போவதுமில்லை

உன்னை நினைக்காத தமிழனும் உலகில் இருக்கப்போவதில்லை

இன்று பார்த்த ஒரு சுவரொட்டி வாசகம் நினைவிற்கு வருகிறது

சிவாஜி தன்னை உலகினிற்கே ஈந்து
வான் புகழ் கொண்ட தமிழ்நாடு!

உண்மை உண்மையை தவிர வேறொன்றுமில்லை!

அன்புடன்

PS: பழைய உவமையை இங்கே பொருத்தமாக உருவகப்படுத்திய திரு.ஸ்ரீனிவாசன் அவர்களுக்கு நன்றி

m_23_bayarea
21st July 2010, 01:01 AM
Mahesh,

One request. Let us avoid this topic and comparison with others.

Thanks for your understanding

Regards

Wow! :shock:

pammalar
21st July 2010, 02:33 AM
கேள்வி பிறந்தது! நல்ல பதில் கிடைத்தது! - 81

கே: நடிகர் திலகத்தின் மறைவுச் செய்தியைக் கேட்டதும் என்ன தோன்றியது? (எம்.ஜெயபிரகாஷ், ஆரணி)

ப: குடும்பத்தில் ஒருவர் மறைந்து விட்டதைப் போன்ற துக்கம். இந்த உணர்வு, உறவு எல்லோருக்கும் வாய்த்து விடுவதில்லை.

(ஆதாரம் : லயன் வலம்புரி, 12.8.2001)

அன்புடன்,
பம்மலார்.

pammalar
21st July 2010, 02:46 AM
நாளை (21.7.2010), கலையுலகின் குலதெய்வம், நமது இதயதெய்வம் நடிகர் திலகம் சிவாஜி கணேசரின் ஒன்பதாவது அவதார நிறைவு தினம்.

"உலகை ஆண்டவனே! உமக்கு ஜனனம் மட்டுமே!"

பரம பக்தன்,
பம்மல் ஆர்.சுவாமிநாதன்.

NOV
21st July 2010, 06:14 AM
Nadigar Thilagam Sivaji Ganesan
October 1, 1927 - July 21, 2001

[html:2e5e690f74]
http://files.myopera.com/elfenom/blog/Sivaji%20Ganesan%20(1).jpg

[/html:2e5e690f74]

RAGHAVENDRA
21st July 2010, 06:36 AM
உலகத்திலே ஒருவனென உயர்ந்து நிற்கும் திலகமே
உடனிருந்து காலமெல்லாம் மணம் பரப்பும் இதயமே

ஜானகிக்கும் ராமனுக்கும் சரிதம் கண்டது இந்நாடு அந்த
சரித்திரத்தில் உங்களுக்கும் கிடைக்கும் ஒரு பொன்னேடு

- வியட்நாம் வீடு படத்தில் தீர்க்கதரிசி கண்ணதாசன்

உங்களுக்கு என்றுமே மரணமில்லை, ஜனனம் மட்டுமே
- நன்றி மேற்கோள் பம்மலார்

ராகவேந்திரன்

groucho070
21st July 2010, 06:37 AM
The Unforgettable Date. The Unforgettable Acting Genius. Never forgotten.

NOV, I noticed that there are no NT films in Vellithirai :huh:

NOV
21st July 2010, 06:49 AM
NOV, I noticed that there are no NT films in Vellithirai :huh:minnal's kaalai kathir is a NT special - listen if you can.

groucho070
21st July 2010, 06:56 AM
minnal's kaalai kathir is a NT special - listen if you can.Missed it :cry:

sankara1970
21st July 2010, 11:29 AM
Few days back, while having lunch with my colleagues in my office, one Keralite friend mentioned about NT as he read some news regarding Egypt president Naser was given reception by NT.

Me and another tamil friend, proudly told the other friends, he was only the second Indian to be handed over key for a city in US and mayor for one day.
My child 5 year old watching Thiruvilayadal regularly.

Kadavulukkum nadika katru koduthavan Nee.

Nee vittu chendru kal thadangal Tamil chamudayathin kala chuvadugal.

NT -Nee thamiz inathin vidi velli
Tamil natin Gna Oli
Unnai ninaithu Theebam yetruvom
Sivaji Annan Oru Koil


NT Unnai Pol Oruvan Nee matum than!

Vazga Sivaji

gkrishna
21st July 2010, 11:34 AM
இன்று நடிகர் திலகத்தின் 9 வது நினைவு நாள் . இந்த நாளிலே சகோதரி கிரிஜா அவர்களும் சகோதரர் ராகவேந்திர அவர்களும் சிவாஜி விருது பெறப்போவதாக கேள்விபட்டேன் மிக்க மகிழ்ச்சி எல்லாம் வல்ல அந்த "சிவா" பெருமான் அருள் என்றும் கிடைகட்டும

என்றும் அன்புடன்

கிருஷ்ணா G

Mahesh_K
21st July 2010, 11:43 AM
[
This is not something unique only to NT movies . if you apply "Dr. Siva" yardstick to those movies.

Mahesh,

One request. Let us avoid this topic and comparison with others.

Thanks for your understanding

Regards

Murali sir

I take your advice.

I was annoyed because when every single actor has got his own quota of horrible movies during the said period, only NT is being singled out.

Murali Srinivas
21st July 2010, 12:44 PM
Thanks Mahesh.

Bay,

Why shock? Any comparison would lead to emotional counter arguments and that would leave a bitter taste and unpleasantness which I want to avoid. That's the reason I told Mahesh not to compare. Hope you are fine with this.

இன்று மாலை ஹபிபுல்லா ரோட்டில் நடிகர் சங்க கட்டிடத்தின் அருகில் அமைந்திருக்கும் ஜெர்மன் ஹாலில் நடக்கும் நடிகர் திலகம் நினைவு நாள் கூட்டத்தில் நமது பெருமைக்குரிய ஹப்பரும் நடிகர் திலகம் டாட்.காம் இணையதள நிறுவனருமான ராகவேந்தர் சார் கௌரவிக்கப்படுகிறார். அவருடன் நடிகர்திலகம் சிவாஜி டாட்.காம் நிறுவனர் செல்வி கிரிஜா அவர்களும் பாராட்டப்பட உள்ளார். ராகவேந்தர் சார் அவர்களுக்கு நமது இதயங்கனிந்த வாழ்த்துகள்

அன்புடன்

NOV
21st July 2010, 12:57 PM
கூட்டத்தில் நமது பெருமைக்குரிய ஹப்பரும் நடிகர் திலகம் டாட்.காம் இணையதள நிறுவனருமான ராகவேந்தர் சார் கௌரவிக்கப்படுகிறார்.

[html:fb33a88536]
http://birthdayparties.promobiledisco.com/CONGRATULATIONSBannerAnimatedRainbowBalloonsConfet ti.gif

[/html:fb33a88536]

groucho070
21st July 2010, 01:13 PM
Raghavendra-sar, congratulations :clap:

HARISH2619
21st July 2010, 01:35 PM
நடிகர் திலகமே,
என்றென்றும் உனை நினைத்திருப்பேன்
என்றாவது ஒரு நாள் மறந்திருப்பேன்
அன்று நான் -
இறந்திருப்பேன்

HARISH2619
21st July 2010, 01:37 PM
Heartiest wishes to raghavendra sir for receiving sivaji award :clap:

PARAMASHIVAN
21st July 2010, 03:01 PM
[
This is not something unique only to NT movies . if you apply "Dr. Siva" yardstick to those movies.

Mahesh,

One request. Let us avoid this topic and comparison with others.

Thanks for your understanding

Regards

Murali sir

I take your advice.

I was annoyed because when every single actor has got his own quota of horrible movies during the said period, only NT is being singled out.


You have misunderstood me we all accept 'every actor' drawbacks, we are not children!, Please understand I was not singling out NT, you assumed like that because you probably don't visit other threads, I have criticised a lot about many Rajni films. Here I mentioned about NT's films, NOT NT.
I will reply to your PM soon, thanks :)

RAGHAVENDRA
21st July 2010, 03:25 PM
அன்பு நவ் சார், முரளி சார், கிருஷ்ணாஜி சார், ராகேஷ் சார், ஹரீஷ் சார், மகேஷ் சார், மற்றும் அனைத்து நண்பர்களுக்கும் இதயங்கனிந்த நன்றி. எல்லாம் சிவ(வாஜி ) பெருமான் கடாட்சம். சகோதரி கிரிஜா அவர்கள் கௌரவிக்கப் படுவது மிகவும் மகிழ்வுக்குரியதாகும். அவர்கள் தன் வாழ்க்கையையே நடிகர் திலகத்தின் புகழ் பாடுவதற்காக அர்ப்பணித்துள்ளார்கள். மற்றொரு சகோதரர் திரு ஜெகன் அவர்கள் கிட்டத்தட்ட 40 முறை நடிகர் திலகத்தின் புகழ் பாடி ரத்த தானம் அளித்துள்ளார்கள். இவர்கள் இருவருக்கும் நடிகர் திலகத்தின் நல்லாசிகள் என்றுமே நிலைத்துக் கிடைக்கும்.

நடிகர் திலகத்தைப் பொறுத்த வரை தன் வாழ்நாளில் அவர் சந்திக்காத கேலியில்லை, கிண்டல் இல்லை, ஏகாட்டியமில்லை. அனைத்தையும் பொருட்படுத்தாது அவர் தன் தொழிலில் காட்டிய ஈடுபாடும் பக்தியுமே அவரை உன்னத நிலைக்கு கொணடு சென்றுள்ளன. இருந்தாலும் ரசிகர்களாகிய நம்மால் அந்த வகை விமர்சனங்களை ஏற்றுக் கொள்ள முடிவதில்லை, அதனால் உணர்ச்சி வசப்படுகிறோம், நான் உட்பட. தொழில் முறையில் அவர் அனைத்து வகைப் படங்களையும் ஏற்று நடிக்க வேண்டியது அவர் கடமையாகக் கருதினார். இருந்தாலும் அவருக்கு சமுதாயத்தின் மீதிருந்த பொறுப்புணர்ச்சியின் காரணமாகத் தான் நம்மால் பல விடுதலைப் போராட்ட வீரர்களையும் தேசீயத் தலைவர்களைப் பற்றியும் விடுதலை வேள்வி போன்ற பல தேசிய உணர்வூட்டும் திரைப்படங்களைக் காண முடிந்தது. அவர்களைப் பற்றி அறிய முடிந்தது. அந்தப் படங்களையெல்லாம் வெற்றிப்படங்களாக்கி - குறிப்பாக கப்பலோட்டிய தமிழன் - மிகப் பெரிய வசூலாக்கி வரவேற்பளித்திருந்தால் அவருடைய மற்ற படங்களை விமர்சிக்கும் தகுதி நமக்கு வந்திருக்கும்.

எனவே நடிகர் திலகத்தின் படங்களைப் பற்றி விமர்சிக்கும் போது குறிப்பிட்ட பாணி விமர்சனங்கள் உள்நோக்கத்தோடு விமர்சிக்கப் படுவதைப் போல் தோற்றமளிக்கின்றன. எழுதுபவர்கள் திறந்த மனதோடு அதே சமயம் அந்த மாபெரும் கலைஞனை சிறுமைப் படுத்தாமலும், அவருடைய ரசிகர்களை வேண்டுமென்றே நோகடிக்கும் நோக்கில் எழுத்துக்கள் அமையாமல் பார்த்துக் கொள்வதுமே உண்மையாக அவருக்கு செலுத்தக் கூடிய நினைவு நாள் அஞ்சலியாகும்.

ராகவேந்திரன்