PDA

View Full Version : Nadigar Thilagam Sivaji Ganesan - Part 6



Pages : [1] 2 3 4 5 6

pammalar
4th February 2010, 04:49 PM
"பாட்டும் நானே! பாவமும் நானே!!
பாடும் உனை நான் பாட வைத்தேனே!!!"

[html:94014a8416]
http://www.sharereel.com/thumb/1_1030.jpg

[/html:94014a8416]

என நம் எல்லோரையும் தமது ஈடு, இணையற்ற நடிப்பால், விண்ணை முட்டும் சாதனைகளால் இயக்கிக் கொண்டிருக்கும் பராசக்தி, நமது இதயதெய்வம், கலையுலகின் குலதெய்வம் நடிகர் திலகம் அவர்களின் புகழ் பாடும் இத்திரியின் ஆறாவது பாகம் இன்று முதல் மிக வெற்றிகரமாகத் தொடங்குகிறது. சிக்கல் சண்முகசுந்தரம் குழுவினர் நாதஸ்வரங்கள் இசைக்க, மேளங்கள் முழங்க, தில்லானா மோகனாம்பாளின் நாட்டியம் கண்களுக்கு விருந்தளிக்க மிக மிக மங்களகரமாக, விமரிசையாக இத்திரியின் இப்பாகம் தொடங்குகிறது.

இத்திரியும், இப்பாகமும் மென்மேலும் வெற்றிகளைக் குவிக்க எல்லாம் வல்ல இறைவனின் இறையருளையும், கலை தெய்வம் நடிகர் திலகத்தின் நல்லாசி மலர்களையும், நல்லிதயங்களின் நல்வாழ்த்துக்களையும் வேண்டுகிறோம்!

முரளி சாரின் தலைமையில், அவரது இணையற்ற பங்களிப்போடு, அனைவரது பங்களிப்புகளையும் எப்பொழுதும் போல் ஆவலுடன் எதிர்நோக்குகின்றோம்! இத்திரியின் மாடரேட்டர்களும், பங்களிப்பாளர்களும், பார்வையாளர்களுமே இதனை வளர்க்கும், சீர் தூக்கி நிறுத்தும் கல்தூண்கள்! அவர்கள் அனைவருக்கும் பல கோடி நன்றிகள்!

நடிகர் திலகம் திரியினுடைய ஆறாவது பாகத்தை, யாம் துவக்கி வைக்க, அனுமதியளித்த திரு. நெள அவர்களுக்கும் ஏனைய மாடரேட்டர்களுக்கும் மற்றும் அனைவருக்கும் எமது இரு கரம் கூப்பிய, சிரம் தாழ்த்திய பல கோடி பணிவான நன்றிகள்! இதனை எமது வாழ்வில் எமக்கு கிடைத்த மிகப் பெரிய கெளரவம், பாக்கியத்திலும் பாக்கியம் என்றே கூற வேண்டும். இதை விட வேறென்ன வேண்டும் ஒரு பக்தனுக்கு! வாய்ப்பளித்த திரு. நெள அவர்களுக்கும் மற்றும் ஏனையோருக்கும் மீண்டும் எமது நெஞ்சார்ந்த நன்றிகள் என்றென்றும்!

நடிகர் திலகம் திரியில் பங்களிப்புகளைச் செய்ய "வந்தவர்கள் வாழ்க! மற்றவர்கள் வருக!" எனக் கூறிக் கொண்டு வாருங்கள், நாம் அனைவரும் மீண்டும் மீண்டும் பேசுவோம், எழுதுவோம் நடிகர் திலகம் எனும் நல்லவரைப் பற்றி; மகானைப் பற்றி; தெய்வத்தைப் பற்றி. அவரைப் பற்றியே வாழ்நாள் முழுதும் பேசுவோம், எழுதுவோம் என மீண்டும் ஒரு முறை சபதமேற்போம்!

ஆம்! இது வேறுலகம், தனியுலகம், நடிகர் திலகம் எனும் நல்லுலகம்!

அன்புடன்,
பம்மலார்.



[html:94014a8416]
http://img143.imageshack.us/img143/3893/gauravam001.jpg

[/html:94014a8416]

sankara1970
4th February 2010, 05:54 PM
Best wishes from one of millions of NT fans around the world.

mr_karthik
4th February 2010, 06:53 PM
Congrats and Best Wishes for all NT fans (including me) for the successful inaguration of the 'SIXTH PART' of the Great Nadigar Thilagam thread.

Let us make it as a grand success, as usual :clap: :clap:

joe
4th February 2010, 09:08 PM
நடிகர் திலகம் சிவாஜி -பாகம் -1 (http://forumhub.mayyam.com/hub/viewtopic.php?t=2132&postdays=0&postorder=asc&start=0)

நடிகர் திலகம் சிவாஜி -பாகம் -2 (http://forumhub.mayyam.com/hub/viewtopic.php?t=7685&start=0)

நடிகர் திலகம் சிவாஜி -பாகம் -3 (http://www.mayyam.com/hub/viewtopic.php?p=1097336&sid=50c78d03e22feeed5b0fa648a83836da#1097336)

நடிகர் திலகம் சிவாஜி -பாகம் -4 (http://www.mayyam.com/hub/viewtopic.php?t=11237&start=0)

நடிகர் திலகம் சிவாஜி -பாகம் -5 (http://forumhub.mayyam.com/hub/viewtopic.php?t=12282&start=0&postdays=0&postorder=asc&highlight=)


முக்கிய பக்கங்களின் இணைப்புகள்**********************************

1.நடிகர் திலகம் - சிறப்பு இணையத்தளம் (http://nadigarthilagam.com/nadigarthilagam/)

2. சிவாஜியின் சாதனை சிகரங்கள்-தொடர் - -முரளி ஸ்ரீனிவாஸ் (http://www.mayyam.com/hub/viewtopic.php?t=12243)


திரைப்பட விமரிசனங்கள் / பார்வைகள்
-----------------------------------

1.அம்பிகாபதி -திரைப்படப் பார்வை -பாலாஜி (http://www.mayyam.com/hub/viewtopic.php?t=7685&postdays=0&postorder=asc&start=300)

2.என்னைப் போல் ஒருவன் -திரைப்படப் பார்வை -சாரதா (http://www.mayyam.com/hub/viewtopic.php?t=7685&postdays=0&postorder=asc&start=300)

3.ராஜா -திரைப்படப் பார்வை -சாரதா (http://www.mayyam.com/hub/viewtopic.php?t=7685&postdays=0&postorder=asc&start=330)

4.பொன்னூஞ்சல் -திரைப்படப் பார்வை -groucho070 (http://www.mayyam.com/hub/viewtopic.php?t=7685&postdays=0&postorder=asc&start=360)

5.சவாலே சமாளி -திரைப்படப் பார்வை -சாரதா (http://www.mayyam.com/hub/viewtopic.php?t=7685&postdays=0&postorder=asc&start=375)

6.அன்பைத் தேடி -திரைப்படப் பார்வை -சாரதா (http://www.mayyam.com/hub/viewtopic.php?t=7685&postdays=0&postorder=asc&start=390)

7.எங்க மாமா,மூன்று தெய்வங்கள் -திரைப்படப் பார்வை --சாரதா (http://www.mayyam.com/hub/viewtopic.php?t=7685&postdays=0&postorder=asc&start=405)

8.புதிய பறவை-திரைப்படப் பார்வை -பாலாஜி (http://www.mayyam.com/hub/viewtopic.php?t=7685&postdays=0&postorder=asc&start=510)

9.அந்த நாள்-திரைப்படப் பார்வை -பாலாஜி (http://www.mayyam.com/hub/viewtopic.php?t=7685&postdays=0&postorder=asc&start=540)

10.அந்த நாள்-திரைப்படப் பார்வை -சாரதா (http://www.mayyam.com/hub/viewtopic.php?t=7685&postdays=0&postorder=asc&start=555)

11.கப்பலோட்டிய தமிழன் - groucho070 (http://www.mayyam.com/hub/viewtopic.php?t=7685&postdays=0&postorder=asc&start=165)

<a href="http://www.mayyam.com/hub/viewtopic.php?t=7685&postdays=0&postorder=asc&start=105">
12.பிராப்தம்,மூன்று தெய்வங்கள்,தர்மம் எங்கே,ராஜராஜசோழன்,சிவகாமியின் செல்வன்,வாணிராணி -ஒரு பார்வை - முரளி ஸ்ரீனிவாஸ் </a>

13.தங்கச்சுரங்கம் - - சாரதா (http://www.mayyam.com/hub/viewtopic.php?t=7685&postdays=0&postorder=asc&start=615)

14. ஊட்டி வரை உறவு - - rajeshkrv (http://www.mayyam.com/hub/viewtopic.php?t=7685&postdays=0&postorder=asc&start=735)

15. ஆட்டுவித்தால் யாரொருவர் - அவன் தான் மனிதன் - - சாரதா (http://www.mayyam.com/hub/viewtopic.php?t=7685&postdays=0&postorder=asc&start=735)

16. பாசமலர் - - பாலாஜி (http://forumhub.mayyam.com/hub/viewtopic.php?t=10065&postdays=0&postorder=asc&start=60)

17. நிறைகுடம் - - முரளி ஸ்ரீனிவாஸ் (http://forumhub.mayyam.com/hub/viewtopic.php?t=10065&postdays=0&postorder=asc&start=435)

18. நிறைகுடம் ,கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி - - groucho070,முரளி ஸ்ரீனிவாஸ் (http://forumhub.mayyam.com/hub/viewtopic.php?t=10065&postdays=0&postorder=asc&start=465&sid=07ea5b3bb6217cbab41833632380ec08)

19. இரு மலர்கள் - - முரளி ஸ்ரீனிவாஸ் (http://forumhub.mayyam.com/hub/viewtopic.php?t=10065&postdays=0&postorder=asc&start=510&sid=29230a62a9c90103d6cd99c682ccf712)

20. விடிவெள்ளி - - NOV (http://forumhub.mayyam.com/hub/viewtopic.php?p=1186697#1186697)

21. நெஞ்சிருக்கும் வரை - - முரளி ஸ்ரீனிவாஸ் (http://forumhub.mayyam.com/hub/viewtopic.php?p=1190179#1190179)

22. மரகதம் - - முரளி ஸ்ரீனிவாஸ் (http://forumhub.mayyam.com/hub/viewtopic.php?p=1191364#1191364)

23. பாக்கியவதி - - NOV (http://forumhub.mayyam.com/hub/viewtopic.php?p=1194939#1194939)

24. அமர தீபம் - - முரளி ஸ்ரீனிவாஸ் (http://forumhub.mayyam.com/hub/viewtopic.php?p=1197866#1197866)

25. அன்னை இல்லம் - - NOV (http://forumhub.mayyam.com/hub/viewtopic.php?p=1205619#1205619)

26. உத்தம புத்திரன் - - முரளி ஸ்ரீனிவாஸ் (http://forumhub.mayyam.com/hub/viewtopic.php?p=1217235&sid=820767f50921e1ed24766d889a581b38#1217235)

27. கூண்டுக்கிளி - - முரளி ஸ்ரீனிவாஸ் (http://forumhub.mayyam.com/hub/viewtopic.php?p=1230154#1230154)

28. இளைய தலைமுறை - - சாரதா (http://forumhub.mayyam.com/hub/viewtopic.php?p=1235809&sid=a56b81b4d336df64c9e07b4b614cae9e#1235809)

29. பலே பாண்டியா - - முரளி ஸ்ரீனிவாஸ் (http://forumhub.mayyam.com/hub/viewtopic.php?p=1237378&sid=c2766712d2ba167268a13239d122499d#1237378)

30. படிக்காத மேதை - - முரளி ஸ்ரீனிவாஸ் (http://forumhub.mayyam.com/hub/viewtopic.php?p=1243166#1243166)

31. எங்கிருந்தோ வந்தாள் - - சாரதா (http://forumhub.mayyam.com/hub/viewtopic.php?p=1250952&sid=4a6196ee2c1e2d2b49e960eee39cb3bd#1250952)

32. சுமதி என் சுந்தரி - - சாரதா (http://www.mayyam.com/hub/viewtopic.php?p=1283743&sid=5a42487c4d6edaf27e3a2fa857c40c03#1283743)


33. நீதி - - சாரதா (http://www.mayyam.com/hub/viewtopic.php?p=1302568#1302568)

34. தெய்வமகன் -1 (http://www.mayyam.com/hub/viewtopic.php?p=1338163#1338163)
தெய்வமகன் -2 (http://www.mayyam.com/hub/viewtopic.php?p=1341525#1341525) தெய்வமகன் -3 - - முரளி ஸ்ரீனிவாஸ் (http://www.mayyam.com/hub/viewtopic.php?p=1342549#1342549)

35. வியட்நாம் வீடு - - சாரதா (http://www.mayyam.com/hub/viewtopic.php?p=1363202#1363202)

36. அம்மம்மா - ராஜபார்ட் ரங்கத்துரை - - mr_karthik (http://www.mayyam.com/hub/viewtopic.php?p=1417744#1417744)

37. பாசமலர் - - rangan_08 (http://www.mayyam.com/hub/viewtopic.php?p=1420033#1420033)

38. எதிரொலி - - groucho070 (http://www.mayyam.com/hub/viewtopic.php?p=1432263#1432263)

39. குங்குமம் - -NOV (http://www.mayyam.com/hub/viewtopic.php?p=1561522#1561522)

40. சரஸ்வதி சபதம் - -groucho070 (http://www.mayyam.com/hub/viewtopic.php?p=1623459#1623459)

41. திருவருட்செல்வர் - -சாரதா (http://www.mayyam.com/hub/viewtopic.php?p=1637915#1637915)

42. ஆண்டவன் கட்டளை - -முரளி ஸ்ரீனிவாஸ் (http://www.mayyam.com/hub/viewtopic.php?p=1656560#1656560)

43. குலமகள் ராதை - -முரளி ஸ்ரீனிவாஸ் (http://www.mayyam.com/hub/viewtopic.php?p=1662928#1662928)

44. ரத்தத்திலகம் - -முரளி ஸ்ரீனிவாஸ் (http://www.mayyam.com/hub/viewtopic.php?p=1680989#1680989)

45. சித்தூர் ராணி பத்மினி - -முரளி ஸ்ரீனிவாஸ் (http://www.mayyam.com/hub/viewtopic.php?p=1740574#1740574)

46. நீலவானம் - -முரளி ஸ்ரீனிவாஸ் (http://www.mayyam.com/hub/viewtopic.php?p=1771066#1771066)

47. பேசும் தெய்வம் - -முரளி ஸ்ரீனிவாஸ் (http://www.mayyam.com/hub/viewtopic.php?p=1788663#1788663)

48. காத்தவராயன் - -பிரபு ராம் (http://www.mayyam.com/hub/viewtopic.php?p=1826384#1826384)

49. வைர நெஞ்சம் - -சாரதா (http://www.mayyam.com/hub/viewtopic.php?p=1844367#1844367)

50. மகாகவி காளிதாஸ் - -முரளி ஸ்ரீனிவாஸ் (http://www.mayyam.com/hub/viewtopic.php?p=1846856#1846856)


51. கை கொடுத்த தெய்வம் - -முரளி ஸ்ரீனிவாஸ் (http://www.mayyam.com/hub/viewtopic.php?p=1866453#1866453)

52. ராமன் எத்தனை ராமனடி - -சாரதா (http://www.mayyam.com/hub/viewtopic.php?p=1880420#1880420)

53. தங்கை - - முரளி ஸ்ரீனிவாஸ் (http://www.mayyam.com/hub/viewtopic.php?p=1917233#1917233)

54. பார் மகளே பார் - - Irene Hastings (http://www.mayyam.com/hub/viewtopic.php?p=1987096#1987096)

55. என் தம்பி - - முரளி ஸ்ரீனிவாஸ் (http://www.mayyam.com/hub/viewtopic.php?p=2002727#2002727)

56. திருடன் - - முரளி ஸ்ரீனிவாஸ் (http://www.mayyam.com/hub/viewtopic.php?p=2022465#2022465)



மற்றவை
---------

1.உலக அளவில் விருதுகள்! -விகடன் கட்டுரை (http://www.mayyam.com/hub/viewtopic.php?t=7685&postdays=0&postorder=asc&start=30)

2.நடிகர் திலகத்தின் வெற்றி பரணி (1971-1975) -முரளி ஸ்ரீனிவாஸ் (http://www.mayyam.com/hub/viewtopic.php?t=7685&postdays=0&postorder=asc&start=45)

3.நடிகர் திலகத்தின் திரைப்படங்களின் முழுப் பட்டியல் - நக்கீரன் (http://www.mayyam.com/hub/viewtopic.php?t=7685&postdays=0&postorder=asc&start=120)

4.நாட்டிய மேதையும் நடிகர் திலகமும்!-விகடன் கட்டுரை (http://www.mayyam.com/hub/viewtopic.php?t=7685&postdays=0&postorder=asc&start=180)

5.நடிகர் திலகம் பிறந்தநாள் விழா நிகழ்ச்சி தொகுப்பு ,நடிகர் திலகம் சினிமாவும் அரசியல் பயணமும் (1980) -முரளி ஸ்ரீனிவாஸ் (http://www.mayyam.com/hub/viewtopic.php?t=7685&postdays=0&postorder=asc&start=270)


6.சிவாஜியும் அப்துல் ஹமீதும் (http://forumhub.mayyam.com/hub/viewtopic.php?t=10065&postdays=0&postorder=asc&start=45&sid=ea38c4b51df68c5c31f82a4323dfc67e)

7.நமது கலை மரபின் சிறந்த பிரதிநிதி -எழுத்தாளர் ஞானி (http://forumhub.mayyam.com/hub/viewtopic.php?t=10065&postdays=0&postorder=asc&start=90)


8.இமயம் -சிபி இணையத்தளம் (http://forumhub.mayyam.com/hub/viewtopic.php?t=10065&postdays=0&postorder=asc&start=270)

9.நடிகர் திலகம் நினைவுநாள் விழா நிகழ்ச்சி தொகுப்பு -முரளி ஸ்ரீனிவாஸ் (http://forumhub.mayyam.com/hub/viewtopic.php?t=10065&postdays=0&postorder=asc&start=330)

<a href="http://forumhub.mayyam.com/hub/viewtopic.php?p=1187325#1187325">10. நகைச்சுவைப் பாத்திரங்களில் நடிகர் திலகம் -karthik_sa2
</a>

<a href="http://forumhub.mayyam.com/hub/viewtopic.php?p=1194997#1194997">11. நடிகர் திலகம் பிறந்தநாள் விழா -2007 -முரளி ஸ்ரீனிவாஸ்
</a>

12. நடிகர் திலகத்தின் விருந்தோம்பல் - மோகன்லால் -முரளி ஸ்ரீனிவாஸ் (http://forumhub.mayyam.com/hub/viewtopic.php?p=1211054#1211054)

13. ** பெரிய தேவர் - நடிப்புக்கலையின் உச்சம் ...ஒரு அலசல் ** - பிரபுராம்
பாகம் 1 (http://www.mayyam.com/hub/viewtopic.php?p=1324582#1324582) பாகம் 2 (http://www.mayyam.com/hub/viewtopic.php?p=1324649#1324649) பாகம் 3 (http://www.mayyam.com/hub/viewtopic.php?p=1326697#1326697) பாகம் 4 (http://www.mayyam.com/hub/viewtopic.php?p=1327030#1327030) பாகம் 5 (http://www.mayyam.com/hub/viewtopic.php?p=1328510#1328510) பாகம் 6 (http://www.mayyam.com/hub/viewtopic.php?p=1329448#1329448) பாகம் 7 (http://www.mayyam.com/hub/viewtopic.php?p=1330725#1330725) பாகம் 8 (http://www.mayyam.com/hub/viewtopic.php?p=1331691#1331691) பாகம் 9 (http://www.mayyam.com/hub/viewtopic.php?p=1333831#1333831)

14. என்னை வென்ற நடிகர்திலகம் - - complicateur (http://www.mayyam.com/hub/viewtopic.php?p=1558507#1558507)

15. நடிகர் திலகம் 80-வது பிறந்தநாள் விழா தொகுப்பு - - முரளி ஸ்ரீனிவாஸ் (http://www.mayyam.com/hub/viewtopic.php?p=1559697#1559697)

16. அந்தநாள் ஞாபகம் - -முரளி ஸ்ரீனிவாஸ் (http://www.mayyam.com/hub/viewtopic.php?p=1666090#1666090)

17. நடிகர்திலகம் நினைவுநாள் 2009 - -முரளி ஸ்ரீனிவாஸ் (http://www.mayyam.com/hub/viewtopic.php?p=1853783#1853783)


18. நடிகர்திலகம் பிறந்த நாள் 2009 - -முரளி ஸ்ரீனிவாஸ் (http://www.mayyam.com/hub/viewtopic.php?p=1925534#1925534)

19. அவன் தான் நடிகன் -சிவாஜி இசை விழா - -பம்மலார் (http://www.mayyam.com/hub/viewtopic.php?p=2003530#2003530)

Murali Srinivas
4th February 2010, 11:47 PM
Good Decision NOV, allowing Swami to open the Part 6 thread of NT. This will continue to grow and flourish.

இதுவரை தங்களின் பங்களிப்பு மூலமாக இந்த திரியை "Thread of the Hub" என்று அனைவரும் பாராட்டத்தக்க வகையில் வளர்ச்சி அடையச் செய்த அனைத்து நல்லிதயங்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி.

அன்புடன்

ஜோ, விட்டுப் போன சில படங்களின் ஆய்வுகளின் சுட்டியையும் இங்கே முதல் பக்கத்தில் விரைவில் கொடுப்பீர்கள் என்ற நம்பிக்கையுடன்

pammalar
5th February 2010, 02:00 AM
டெல்லி சிவாஜி விழா இனிதே நடைபெற்றது. கண்டு களித்த அனைவருக்கும் மட்டற்ற மகிழ்ச்சி.

விழா விவரங்கள் மற்றும் ஏனைய செய்திகள் எமது அடுத்தடுத்த பதிவுகளில்.

அன்புடன்,
பம்மலார்.

pammalar
5th February 2010, 02:12 AM
My heartiest & sincere thanks to Murali Sir, Mr. Karthik & Sankara.

Thank you so much Mr. Joe for providing the links of previous parts & posts.

Let all of us as usual spread NT's name & fame throughout.

Regards,
Pammalar.

joe
5th February 2010, 06:42 AM
ஜோ, விட்டுப் போன சில படங்களின் ஆய்வுகளின் சுட்டியையும் இங்கே முதல் பக்கத்தில் விரைவில் கொடுப்பீர்கள் என்ற நம்பிக்கையுடன்

கண்டிப்பாக ..வார இறுதியில் செய்து விடலாம் 8-)

MADDY
5th February 2010, 11:44 AM
இதுவரை தங்களின் பங்களிப்பு மூலமாக இந்த திரியை "Thread of the Hub" என்று அனைவரும் பாராட்டத்தக்க வகையில் வளர்ச்சி அடையச் செய்த அனைத்து நல்லிதயங்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி.

surely this is the best thread of HUb in terms of structuring, information, details, analysis and participation from fans :clap: .....

Plum
5th February 2010, 11:48 AM
YES!

What is admirable is the way the fans focus on the subject in this thread, and digressions are killed quickly - although I am a digression-piriyan.
I am looking forward to more of the background details on the movies that Murali/saaradha_sn/others provide.

groucho070
5th February 2010, 11:53 AM
I had a question from wifey that stumped me. We were watching Mundru Theivanggal, and suddenly she asked, "how much was he paid per film at that time?" :shock:

Anyone? Or would it be sensitive?

NOV
5th February 2010, 12:41 PM
For Rakesh....
Have never heard of this group; suddenly appeared in my email!


- Dear Friends,

Please be informed that the 6th AGM of Sivaji Ganesan Cutural Society,
Malaysia would be held on 7th Feb (Sundary) at 10 am at SBA Hall, Jalan
Kampung Attap ( opp Wisma Tun Sambathan) KL.

We would welcome new Members into this organization during this AGM. You
are cordially invited to become Members of this active cultural group. This
Society was established in 2001 in memory of the great legend *Nadigar
Thilagam Sivaji Ganesan..*
**
*Membership Fees*
------------ --------- ------

*LIFE MEMBER* - RM 100.00 (payable once only)
*ORDINARY MEMBER* - Entrance Fees - RM10.00 and Annual Subscription
RN12,00.

Please join us to promote Tamil arts and culture in Malaysia. Please call me
for further info.

The AGM would at 1pm with lunch.

Regards

*EASHVARA LINGAM*
Founder / Committee Member
016-6880455

groucho070
5th February 2010, 01:12 PM
Is that "those" group? :?

Edit. Seriously bad grammer up here. Dang.

Karikalen
5th February 2010, 04:30 PM
I had a question from wifey that stumped me. We were watching Mundru Theivanggal, and suddenly she asked, "how much was he paid per film at that time?" :shock:

Anyone? Or would it be sensitive?

I believe it was about 2 to 3 lakhs per movie. Correct me if am wrong. I remember reading that the highest fee that the late legend earned was for Padayappa. It was a fee of 25 lakhs.

Regards

pammalar
5th February 2010, 05:17 PM
Dear Mr.Rakesh & Mr.Karikalen,

For Thiruvilayadal(1965) & Saraswathi Sabatham(1966) & also for other APN directed films, of that era, Our NT was charging Rs. 3 Lacs.
And, for other films of that time, he was charging Rs. 2.5 Lacs. Since the acting strain in APN directed films was immense & more, Our NT was charging a bit more for APN directed films. Moreover, NT has to wore heavyweight costumes, jewels & ornaments on his physique, for most of the mythological roles he played. That's why he charged half a lac rupees more for APN-directed films.

Moondru Dheivangal came in 1971. Going by the above notion, I strongly feel that our NT would have charged 3.5 to 4 lac rupees for that social film.

Regards,
Pammalar.

Karikalen
5th February 2010, 06:45 PM
Thanks for the info Mr Pammalar.

I am trying to think what would be NT's market value in todays global Tamil cinema.

Regards

saradhaa_sn
5th February 2010, 06:53 PM
ஆறு மனமே ஆறு அந்த ஆண்டவன் கட்டளை ஆறு
தேர்ந்து மனிதன் வாழும் வகைக்கு தெய்வத்தின் கட்டளை ஆறு

அண்ணன் நடிகர் திலகத்தின் புகழ்பாடும் திரி ஆறாவது அத்தியாயத்தில் அடியெடுத்து வைக்கும் இந்த இனிய வேளையில், ஐந்து அத்தியாயங்களை (நான் எப்போதும் சொல்வது போல, வெட்டி விவாதங்களால் நிரப்பப் படாமல்) வெற்றிகரமாக நடத்திச்சென்ற அத்தனை அன்பு இதயங்களுக்கும் நன்றி.

இந்த ஆறாவது பாகமும் விரைவில் நூறாவது பக்கத்தை எட்டும் வண்ணம் அவரது பெரும்புகழை எட்டுத்திக்கும் பரப்புவோம்.

துவக்கி வைத்த பம்மலார் அவர்களுக்கு பாராட்டுக்கள், வாழ்த்துக்கள், நன்றிகள்.

pammalar
5th February 2010, 10:41 PM
டெல்லி சிவாஜி விழா - 1

இந்தியத் துணைக்கண்டத்தின் தலைநகரான டெல்லியில், கலைப் பெருங்காண்டமாகத் திகழும் கலையுலகின் தலைமகன், தமிழ் கூறும் நல்லுலகின் பெருமகன், சிங்கத்தமிழன் நடிகர்திலகத்தின் "சிவாஜி - ஒரு வரலாற்றின் வரலாறு" நூல் அறிமுக விழா, டெல்லி முத்தமிழ்ப் பேரவை சார்பில், டெல்லி கர்நாடகா சங்கத்தில், 31.1.2010 ஞாயிறன்று மாலை 4:30 முதல் இரவு 9:30 வரை கோலாகலமாக நடைபெற்றது. டெல்லி முத்தமிழ்ப் பேரவையின் இரண்டு நாள் பொங்கல் விழாவின் இரண்டாம் நாள் விழாவாக, "சிவாஜி - ஒரு வரலாற்றின் வரலாறு" நூல் அறிமுக விழா நடைபெற்றது.

நிகழ்ச்சி நிரல் படி, விழாவினை முத்தமிழ்ப் பேரவையின் இணைச் செயலாளர் திரு.பி.அறிவழகன் தொகுத்து வழங்கினார். செல்வி பி.யாம்னியின் இறைவணக்கப் பாடலுடன் விழா இனிதே துவங்கியது. வரவேற்புரை நல்கிய முத்தமிழ்ப் பேரவையின் செயலாளர் திரு.ஆர்.முகுந்தன், விழாவுக்குத் தலைமை தாங்கிய ஐக்கிய நாடுகள் சபை வளர்ச்சித் திட்டத்தின் இயக்குனர் டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்களையும், சிறப்பு விருந்தினர்களாக அழைக்கப்பட்டு கலந்து கொண்ட சிறப்புப் பேச்சாளர் நகைச்சுவைத் தென்றல் பேராசிரியர் கு. ஞானசம்பந்தன் அவர்களையும், ஏனைய சிறப்பு விருந்தினர்களான நூல் வெளியீட்டாளர் திரு.இராம.சுகந்தன், நூலாசிரியர் திரு.கே.சந்திரசேகரன், நடிகர் திலகத்தின் நெருங்கிய நண்பர் ரிலயன்ஸ் திரு.வி.பாலசுப்ரமணியன், முத்தமிழ்ப் பேரவையின் துணைத் தலைவர் திரு.பி.ராகவன் நாயுடு மற்றும் திரு. குமரி மகாதேவன் ஆகியோரையும் மற்றும் விழாவிற்கு வந்திருந்த அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.

விழாவின் சிகர நிகழ்வாக "சிவாஜி - ஒரு வரலாற்றின் வரலாறு" நூலை விழாத் தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்கள் அறிமுகம் செய்து வெளியிட, முதல் பிரதியை சிறப்பு விருந்தினர் பேராசிரியர் கு. ஞானசம்பந்தன் அவர்கள் பெற்றுக் கொண்டார். விழாத் தலைவரின் உரை மிகச் சிறப்பாக அமைந்தது. சிறப்பு பேச்சாளரான பேராசிரியர் அவர்களும் நடிகர் திலகத்தின் சிறப்புக்களை நகைக்சுவை அம்சங்களோடு வழங்கினார். ரிலயன்ஸ் திரு.வி.பாலசுப்ரமணியன், திரு.இராம.சுகந்தன், திரு.கே.சந்திரசேகரன், திரு.பி.ராகவன் நாயுடு, திரு.குமரி மகாதேவன் ஆகியோரும் உரையாற்றினார்கள். வந்திருந்த அனைவருக்கும் நன்றிகளைத் தெரிவித்து நன்றியுரை நவின்றார் முத்தமிழ்ப் பேரவையின் துணைத் தலைவர் திரு.கே.வி.கே.பெருமாள்.

பின்னர், விழாவின் சிறப்பு அம்சமாக, அகன்ற ஒளித்திரையில் நடிகர் திலகத்தின் திரைப்படக் காட்சிகள் திரையிடப்பட்டன. அரங்கமே கரவொலியால் அந்த அரை மணி நேரம் அதிர்ந்தது. டெல்லியிலுள்ள பாராளுமன்றத்துக்கு மட்டுமல்ல, விழாத் தலைவர் இயக்குனராக உள்ள ஐ.நா.சபைக்கே இக்கரவொலி கேட்டிருக்கக் கூடும். இதன் பின்னர் விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக, சென்னையைச் சேர்ந்த ராஜ்குமார் ப்ரைட் மியூசிக் மெல்லிசை குழுவினர், திரைச் சக்கரவர்த்தியின் திரை இசைப் பாடல்களை, ஆர்க்கெஸ்ட்ராவுடன் பாடி இசை விருந்தளித்தனர். இந்த இசைக் கக்சேரி இரண்டரை மணி நேரம் நடந்தது. நிறைவாக, நாட்டுப்பண் ஒலிக்க, நடிகர் திலகத்தின் விழா இனிதே நிறைவடைந்தது. விழாவின் மூலம், செவிகளுக்கும், கண்களுக்கும் விருந்தளித்த டெல்லி முத்தமிழ்ப் பேரவையினர், விழா முடிந்ததும், வயிற்றுக்கும் விருந்தளித்து மகிழ்ந்தனர்.

டெல்லி முத்தமிழ்ப் பேரவையினருக்கு நமது நயமிகு நன்றிகள்! பாங்கான பாராட்டுக்கள்! வளமான வாழ்த்துக்கள்!

விழா உரைகள் வரும் பதிவில்.

அன்புடன்,
பம்மலார்.

joe
5th February 2010, 11:05 PM
ஜோ, விட்டுப் போன சில படங்களின் ஆய்வுகளின் சுட்டியையும் இங்கே முதல் பக்கத்தில் விரைவில் கொடுப்பீர்கள் என்ற நம்பிக்கையுடன்

கண்டிப்பாக ..வார இறுதியில் செய்து விடலாம் 8-)

செய்து விட்டேன் ..இன்னும் விடுபட்டவை இருந்தால் அறிய தரவும்.

pammalar
6th February 2010, 07:59 PM
ஆறாவது அத்தியாயத்தில், மிக வித்தியாசமாக "ஆறு மனமே ஆறு, அந்த ஆண்டவன் கட்டளை ஆறு" பாடல் வரிகளைக் கோடிட்டுக் காட்டி, தமது முதல் பதிவை அழகுற வெளியிட்டிருக்கும் சகோதரி சாரதா அவர்களுக்கு ஆத்மார்த்தமான நன்றிகள்!

அன்புடன்,
பம்மலார்.

DHANUSU
6th February 2010, 09:03 PM
Glad that our NT thread has crossed 5 and entered 6th. Kudos to one and all of NT fans.

A very great job indeed!!

pammalar
6th February 2010, 09:04 PM
தண்டாயுதபாணி அருள்பாலிக்கும் பழனி மாநகரின் ஓம் ஷண்முகா திரையரங்கில், கலையுலகின் சிகர சிகாமணி நமது நடிகர் திலகத்தின் "சுமதி என் சுந்தரி" திரைக்காவியம், 3.2.2010 புதன்கிழமை முதல், தினசரி 4 காட்சிகளாக திரையிடப்பட்டு, மிக வெற்றிகரமாக நடைபெற்று வருகின்றது. உள்ளூர் மக்களுடன், மதுரை மாநகர, மாவட்ட மக்களும் மற்றும் திருச்சியிலிருந்தும் மக்கள் அலைகடலெனத் திரண்டு வந்து இத்திரைக்காவியத்தைக் கண்டு களித்து வருகின்றனர்.

இத்தகவலை எமக்களித்த எமது நெருங்கிய நண்பரும், சிவாஜி மன்ற பேச்சாளருமான மதுரை திருமங்கலத்தைச் சேர்ந்த திரு.தி.அய்யம்பெருமாள் அவர்களுக்கும் மற்றும் பழனி நகர சிவாஜி மன்றத் தலைவர் திரு.முத்து விஜயன் அவர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்!

அன்புடன்,
பம்மலார்.

pammalar
6th February 2010, 10:27 PM
Please click the following link for Delhi Sivaji Vizha Photos:

http://www.freewebs.com/pammalar/apps/photos/album?albumid=8117827

Also please post your comments below the photos.

Happy Viewing,
Pammalar.

jaiganes
6th February 2010, 11:14 PM
http://passionforcinema.com/andha-naal-thamizh-1954/
my take on andha naal sometime back..

Murali Srinivas
6th February 2010, 11:16 PM
ஜோ, விட்டுப் போன சில படங்களின் ஆய்வுகளின் சுட்டியையும் இங்கே முதல் பக்கத்தில் விரைவில் கொடுப்பீர்கள் என்ற நம்பிக்கையுடன்

கண்டிப்பாக ..வார இறுதியில் செய்து விடலாம் 8-)

செய்து விட்டேன் ..இன்னும் விடுபட்டவை இருந்தால் அறிய தரவும்.

நன்றி ஜோ. நான் பார்த்தவரை எதுவும் விடுபட்டதாக தோன்றவில்லை. அப்படி இருந்தால் சொல்கிறேன்.

சுவாமி, விழா புகைப்படங்களுக்கு நன்றி.

Thanks Jai. Though it was repeat reading for me, still enjoyed it.

அன்புடன்

Murali Srinivas
6th February 2010, 11:59 PM
இன்றைய தேதிக்கு [பிப்ரவரி 6] ஒரு சிறப்பு உண்டு. பண்டிகை அல்லது விழா நாட்கள் அல்லது தேசிய தினங்கள் தவிர்த்து இந்த தேதியில் மட்டுமே எனக்கு தெரிந்து நான்கு நடிகர் திலகத்தின் திரைப்படங்கள் வெளியாகியிருக்கிறது. அது மட்டுமல்ல அவை அனைத்துமே வெற்றியும் பெற்றிருக்கின்றன.

விளையாட்டுப் பிள்ளை - 06.02.1970 - 84 நாட்கள் மதுரை நியூசினிமாவில் ஓடிய பிறகு ஷிப்டிங்கில் 100 நாட்களை கடந்தது.

தர்த்தி - இந்தி சிவந்த மண் - 06.02.1970.

தமிழில் முத்துராமன் ஏற்றிருந்த வேடத்தை இந்தியில் நடிகர் திலகம் செய்திருந்தார். சிவந்த மண் வெளியாகி இரண்டு மாதங்களுக்கு பின் தர்த்தி வெளியானது. பாம்பே நகரத்தில் 30 வாரங்களுக்கு மேல் ஓடிய படம் இது.

தங்கைக்காக - 06.02.1971 - சென்னை சாந்தியில் 83 நாட்கள். இரு துருவம், அருணோதயம், குலமா குணமா என்று சுற்றிலும் சிவாஜி படங்கள் ஓடிக் கொண்டிருந்த நேரத்திலும் இந்த படம் பெற்ற வெற்றி குறிப்பிடத்தக்கது.

வா கண்ணா வா - 06.02.1982 - சாந்தி, கிரவுன், புவனேஸ்வரி மூன்று திரையரங்குகளிலும் 100 நாட்களை கடந்தது இந்த படம். படம் முழுக்க வயதான தோற்றத்தில் நடிகர் திலகம் நடித்த இந்த படம் கமர்ஷியல் படங்களுக்கு இணையாக சென்னையில் 20 லட்சத்திற்கும் அதிகமான வசூலைப் பெற்றது.

பிப்ரவரி 6ந் வெளியாகாமல் ஒரு நாள் தள்ளி பிப் 7ந் தேதி வெளியான நடிகர் திலகத்தின் உத்தம புத்திரனும் இந்த வெற்றி வகையை சேர்ந்ததுதான். 07.02.1958 அன்று வெளியான உத்தம புத்திரன் 21 வாரங்கள் [147 நாட்கள்] ஓடியது.

நடிகர் திலகத்தின் இந்த சாதனை நாளை இன்று நினைவு கூர்வோம்.

அன்புடன்

MADDY
7th February 2010, 10:36 AM
//watched Sivaji productions "Asal " yesterday in a suburban chennai theater........when NT's photo appeared during start of the movie for shivaji production slide, there was a huge applause and roar in theater.......a similar applause was evoked when the "dushyantha" song containing "paartha nyabagam illayo" tune remixed for a couple of lines was displayed........

there were claps and whistles for prabhu's entry too :clap: //

pammalar
7th February 2010, 01:07 PM
திரு. தனுசு அவர்களுக்கு நன்றி!

அந்த நாள் பற்றி இந்த நாளில் படித்தாலும் இனிக்கிறது. எந்த நாளிலும் அது அப்படித்தான். நன்றி ஜெய்கணேஷ்!

அசல் திரைப்படத்தைக் கண்டு களித்த போது ஏற்பட்ட தியேட்டர் அனுபவங்களை நம்முடன் பகிர்ந்து கொண்ட அசல் ரசிகர் மேடி அவர்களுக்கு நன்றி!

அன்புடன்,
பம்மலார்.

saradhaa_sn
7th February 2010, 04:17 PM
டியர் பம்மலார்,

தலைநகர் டெல்லியில் நடந்த சிறப்பான விழாவில் கலந்துகொண்டதோடு, அவ்விழாவை உங்கள் அழகான தொகுப்புரை மூலமாகவும், கண்கவர் வண்ணப்படங்கள் மூலமாகவும் தந்து, நாங்களும் அவ்விழாவில் கலந்துகொண்ட உணர்வை ஏற்படுத்தி விட்டீர்கள்.

விழாத்தொகுப்பு, வண்ணப்பட வரிசை அனைத்துமே அருமை.
நன்றிகள் பல.

joe
7th February 2010, 07:24 PM
[tscii:47977e847d]முதல்வர் கருணாநிதி க்கு சென்னையில் நடந்த பாராட்டுவிழாவில் பேசிய நடிகர் கமல்ஹாசன் பேசுகையில், "இந்த விழாவில், மீண்டும் நான் அடக்கத்தை கற்றேன். நடிகர் திலகம் சிவாஜி வசனம் பேசி நடித்த அந்த காட்சியை திரையில் பார்த்தபோது, நான் எல்லாம் எங்கே? என்று நினைத்தேன்.

அதைப் பார்த்து என் கண்கள் பனித்தன. திரும்பி பார்த்தால், ஒரு குழந்தை (கருணாநிதி) தேம்பி தேம்பி அழுது கொண்டிருந்தது. பதவியை எல்லாம் பார்க்காமல், நட்புக்காக அவர் கண்ணீர் விட்டது என்னை உருக்கியது”
[/tscii:47977e847d]

pammalar
8th February 2010, 01:52 AM
சகோதரி சாரதா, விளக்கெரிய தூண்டுகோல் தேவை. தங்களைப் போன்ற நல்லோர்களது பாராட்டுக்கள், எமக்கு ஊக்கமளிப்பதோடு மட்டுமல்லாமல், மேலும் மேலும் செவ்வனே செய்யப் பணிக்கும் தூண்டுகோல்களாகவும் திகழ்கின்றன. தங்களுக்கு எமது நன்றி!

திரு. ஜோ, கலைஞானி கமல் அவர்களின் குரு பக்தி (சிவாஜி பக்தி) எப்பொழுதுமே பாராட்டுக்களுக்குரியது.

அன்புடன்,
பம்மலார்.

pammalar
8th February 2010, 03:49 AM
டியர் முரளி சார்,

விழா புகைப்படங்களைக் கண்டு களித்த தங்களுக்கு எமது நன்றி!

அத்தியாயம் ஆறில், பிப்ரவரி ஆறு பற்றிய ஆய்வு அருமை. (ஒரு சிறு திருத்தம் - விளையாட்டுப் பிள்ளை வெளியான தேதி : 20.2.1970)

அதில் மேலும் சில கூடுதல் தகவல்கள்:

1. விளையாட்டுப் பிள்ளை திருச்சியிலும் ஷிப்டிங் முறையில் 100 நாட்களைக் கடந்தது.

2. தர்த்தி (ஹிந்தி) திரைக்காவியம் வெள்ளி விழாக் கண்ட அரங்குகள்:
(நகரம் - அரங்கம் - ஓடிய நாட்கள் என்கின்ற ஃபார்மெட்டில்)

கல்கத்தா - இம்பீரியல் - 266

பம்பாய் - மினர்வா - 259

பம்பாய் - அசோக் - 203

பம்பாய் - ஆனந்த் - 231

டெல்லி - மோட்டி - 203

டெல்லி - அம்பா - 210

டெல்லி - லிபர்ட்டி - 203

டெல்லி - நட்ராஜ் - 217

மேலும் இந்தியா முழுவதும் 18 அரங்குகளில் 100 நாட்களுக்கு மேல் ஓடியது. ஆக, வெள்ளி விழாக் கண்ட 8 அரங்குகளையும் சேர்த்தால், தர்த்தி திரைக்காவியம் நாடெங்கும் 26 திரையரங்குகளில் 100 நாட்களுக்கு மேல் ஓடியுள்ளது.

3. தாங்கள் குறிப்பிட்டது போல் சென்னை சாந்தியில் 83 நாட்கள் வெற்றிகரமாக ஓடிய தங்கைக்காக திரைக்காவியம், கிரெளனில் 67 நாட்களும், புவனேஸ்வரியில் 67 நாட்களும் ஓடி சென்னை மாநகரில் சிறந்ததொரு வெற்றியை பெற்றது. ஏனைய ஊர்களிலும் நல்ல ஹிட் படமாக அமைந்தது. தங்கைக்காக சென்னையில் ஷிப்டிங்கில் 100 நாட்களுக்கு மேல் ஓடியது.

4. வா கண்ணா வா, சென்னை சாந்தி(104 நாட்கள்), கிரெளன்(100 நாட்கள்), புவனேஸ்வரி(100 நாட்கள்) முதலிய மூன்று திரையரங்குகளில் ஓடி முடிய அளித்த மொத்த வசூல் ரூ. 20,07,089 /-.

5. சென்னை காஸினோவிலும், மதுரை நியூசினிமாவிலும் 15 வாரங்கள் அபாரமாக நேரடியாகவே ஓடிய உத்தமபுத்திரன், இரண்டு ஊர்களிலும் ஷிப்டிங் முறையில் 21 வாரங்கள் ஓடியது.

அன்புடன்,
பம்மலார்.

groucho070
8th February 2010, 06:46 AM
I believe it was about 2 to 3 lakhs per movie. Correct me if am wrong. I remember reading that the highest fee that the late legend earned was for Padayappa. It was a fee of 25 lakhs.
Regards
Dear Mr.Rakesh & Mr.Karikalen,

For Thiruvilayadal(1965) & Saraswathi Sabatham(1966) & also for other APN directed films, of that era, Our NT was charging Rs. 3 Lacs.
And, for other films of that time, he was charging Rs. 2.5 Lacs. Since the acting strain in APN directed films was immense & more, Our NT was charging a bit more for APN directed films. Moreover, NT has to wore heavyweight costumes, jewels & ornaments on his physique, for most of the mythological roles he played. That's why he charged half a lac rupees more for APN-directed films.

Moondru Dheivangal came in 1971. Going by the above notion, I strongly feel that our NT would have charged 3.5 to 4 lac rupees for that social film.

Regards,
Pammalar.Thanks Karikalen & Pammalar sir. Appreciate it. :D

HARISH2619
8th February 2010, 02:52 PM
ஆறாம் பாகத்தில் அடியெடுத்து வைக்கும் நமது திரி அறுபதாம் பாகத்தையும் கானவேண்டும் என்று வாழ்த்துகிறேன்.நமது திரியின் தூண்களான திரு முரளி சார்,திரு ராகவேந்திரன் சார், திரு பம்மலார்,திருமதி சாரதா மேடம் போன்றவர்களால் அது சாத்தியம் ஆவது நிச்சயம்.

HARISH2619
8th February 2010, 02:53 PM
which NT movie's clipping was shown on the screen during kalaignar"s felicitation?

rangan_08
8th February 2010, 06:51 PM
All the very best to this never ending thread. Congratulations & thanks to every NT fan & fellow hubbers to make this happen.

Spl kudos to stalwarts Murali sir, Raghavendra sir, Saradha mam, groucho, NOV, Joe & Pammalar sir.

rangan_08
8th February 2010, 06:52 PM
[tscii:b4d0681cf7]I was just searching for “ Engal thanga raja “ in the net hoping to get some pictures and other details and I stumbled upon the songs featured in the film. My God ! I had found two precious gems, “ Iravukkum Pagalukkum…“ & “ Kalyana Aasai Vandha..” Stunning master-pieces from Thirai isai thilagam K.V. Mahadevan ayya.

Years back, during my school days, I’ve listened to these songs in radio and till now the tune has managed to stay in my memory. Now, one can imagine how intense & immortal these songs are. The fast number, “Irvukkum…” literally starts with a bang and the tempo is continued in the charanam also. And that’s what, probably made it evergreen.

“ Kalyana aasai..” is also an equally fast numbered song.

Like “ Thirudan “, “ En Thambi “ etc., ETR also tops my “ to-be-watched” list.[/tscii:b4d0681cf7]

rangan_08
8th February 2010, 06:54 PM
படிக்காத மேதையில் ஒரு அற்புதமான காட்சி.

ரங்காராவின் மகளை பெண் பார்ப்பதற்காக மாப்பிள்ளை வீட்டார் வந்திருப்பார்கள். நமது ரங்கனுக்கோ தெரிந்ததெல்லாம் உண்மையைப் பேசுவது, சொன்ன வேலையை செய்வது, எதிர்பார்ப்பில்லாமல் எல்லோரிடமும் அன்பைப் பொழிவது மற்றும் நன்றாக சாப்பிட்டு உடலை திடகாத்திரமாகவும் ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்வது, அவ்வளவுதான்.

ரங்கன் மெதுவாக மாப்பிள்ளை அருகில் சென்று அவரது புஜங்களைத் தொட்டுப் பார்த்துப் பரிசோதிப்பார். அவரும் தன்னைப் போலவே பலசாலியாகவும், ஆரோக்கியமாகவும் இருப்பதை அறிந்து மகிழ்ச்சியடைந்து, பூரிப்புடன் ரங்காராவிடம் சொல்வார், “மாமா, மாப்ள சும்மா...ம்ம்..ம்ம்...நல்லா..ம்ம்..." (பாதி விஷயத்தை அவர் கண்களும், முக பாவங்களும், அங்க அசைவுகளுமே கூறிவிடும் ).

சுற்றுப்புறம், சூழ்நிலை பற்றிய கவலையில்லாமல் தன் மனதில் தோன்றியதை உடனே வெளிப்படையாகக் கூறும் ரங்கன் கதாபாத்திரத்தின் இந்த அடிப்படை குணாதிசியத்தை, பீம்சிங் இந்தக் காட்சியில் மிக அழகாக நிலை நாட்டியிருப்பார். இது போன்ற பல முத்திரைக் காட்சிகள் இந்தப் படம் முழுவதும் இடம் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

தலைவரின் நடிப்பைப் பற்றி நான் சொல்லியா தெரிய வேண்டும் ?

“ மெய் மறந்து போனேன் “,என்று சொல்வதுதான் சரி.

NOV
8th February 2010, 07:34 PM
Its nostalgia time again. When I was a kid, there used to be re-runs on Sundays, called cheap matinees. Reserved seats at 65cents, 1st, 2nd & 3rd class at 40, 25 and 10cts. :D
There was this old Malay lady who would not miss a single Sivaji film then; but she couldnt speak a single word in Tamil! She would watch all the cheap matinees.

Anyway, my elder brother - a bigtime NT fan - would take us along for these shows. And boy, were those times simply memorable! I have seen several films, including Engal Thanga Raja mentioned by Rangan above. At that tender age, a lot of impressions were formed and while some of the subject matter were simply beyond me, I swallowed everything eagerly.

Astro Vellithirai showed one of those movies today .. which made me go nostalgic all over again. :)

NOV
8th February 2010, 08:21 PM
VC Suppuraman, Kasthuri Films Present

Nadigar Thilagam
in
Thenum Paalum
Cast: Sivaji Ganesan, Saroja Devi, Padmini, Nagesh, Ranga Rao, Sachu, SN Letchumi, etc

Lyrics: Kannadhasan
Music: MS Viswanathan
Director: P. Madhavan

[html:1239259838]
http://tamilmovieusa.bizland.com/store/media/ThennumPaallum.jpg
[/html:1239259838]

Advocate Ramanathan (Ranga Rao) has four daughters, but his favourite is Thangam (Saroja Devi) who has the choicest of selections. His wife Sivagami (SN Letchumi) constantly chides him for taking sides among the children.

One day Ramu (Sivaji Ganesan), son of Ramanathan's friend Sokkalingam, arrives at the household for some business deal. Ramanathan has to leave Ramnad to go to Chennai for some other business and requests Thangam to take care of Ramu.
The sisters joke that their father would like to match one of them to Ramu and true enough Thangam gets attracted to him. Thangam's sisters try to spy on Ramu and the song ottu kEkkum pengalE ulavu paarkkum kangalE by LRE comes on.

One day Ramu accidentally drinks some alcohol and loses sense. Realising that he may do something stupid, he tries to move away from the household. Unfortunately he meets Thangam and before realising what happens, they get carried away and indulge in ... :boo: Sivagami spots them and asks Ramu to marry Thangam immediately and save the family any embarrassment. Ramu then drops the bombshell that he is already married! (NT must be commended for taking such a negative character).

Ramu promises to marry Thangam but says that he has to seek consent from his wife first. Left with no choice, Sivagami packs them off and when Ramanathan returns, lies to him that she had gone missing in a Rameshwaram storm.

In the meantime, Rami takes Thangam to Thiruparangkundram and houses her in his peon Balu's (Nagesh) house. Balu and Abaya (Sachu ) are a couple and have a separate story track. aduththavan pOtta thaalaththukku aattam pOdaathE comes on now.

Janaki (Padmini), Ramu's wife's blood pressure shoots up when she discovers a necklace with the initials "tha" on it. Ramu manages to circumvent the issue and instead tests her on her acceptance of another partner.

ஒருவனுக்கு ஒருத்தி என்றே உறவு கண்டோம் திருக்குறளினிலே உலகமெனும் தமிழ்க் கோவிலிலே

pay attention to the first stanza...

நெஞ்சிருந்தால் நினைவிருக்கும் நினைவில் ஒரு மலர் இருக்கும்
ஒரு மலரில் மனது வைத்து உறவு கண்டால் நல்ல சுகம் இருக்கும்
கங்கையிலே குளிக்கையிலே காவிரியில் மனது வைத்தால்
அந்த சுகம் இது தருமோ இந்த சுகம் அது தருமோ

Janaki stresses that she is unable to accept a man with two wives and even when given the analogy of valli and deivayanai, she would rather die than to allow it.

Ramanathan arrives in Thiruparangkundram to seek Ramu's help to locate Thangam. At that moment Thangam calls his office and requests Ramu to come over. Ramu gets worried and asks her to return home immediately. Just as she puts down the phone, Thangam runs into Janaki!!!!

I N T E R V A L

It turns out that Thangam and Janaki were once classmates!
Back at Thangam's house Ramu arrives and asks why he was summoned. Thangam gets annoyed and asks why is she being treated like a mistress. It is then revealed that she is pregnant. But now she doesnt want Ramu to come back unless he takes her as his wife!

In the meantime there is a small drama. Abaya reveals to Akilandambal (Janaki's mother) that she is housing Ramu's mistress. But Balu changes the story and makes it seem like he is the one cheating on his wife.

Now, its Aadi Perukku and both Thangam and Janaki sing மஞ்சளும் தந்தாள் மலர்கள் தந்தாள் மங்கல மங்கை மீனாட்சி ... Jaanaki then invites Thangam to her house and on the way Thangam reveals her predicament, without realising that both of them share one husband.

In the house Janaki introduces Thangam to Ramu!!! She also requests Ramu to locate Thangam's husband and tell him off. Also in the meantime, she insists on Thangam working at Ramu's office.
At the office people find the two moving closely and gossips begin.
Ramu is mentally tortured - நதியினில் வெள்ளம் கரையினில் நெருப்பு இரண்டுக்கும் நடுவே இறைவனின் சிரிப்பு comes on.

Back in Ramnad, Ramanathan chances upon a letter from Thangam to her mother. He confronts Sivagami and learns the truth. Rushing to Thiruparangkundram he confronts Ramu in front of Janaki. All hell breaks loose....... watch the ending on the silver screen. :D

Watch the songs here... http://www.dishant.com/album/Thenum-Paalum.html

pammalar
8th February 2010, 11:33 PM
Thank you so much Mr.Senthil & Mr.Rangan!

With each & everyone's contribution we will continue to make this thread a grand success.

Regards,
Pammalar.

Murali Srinivas
8th February 2010, 11:54 PM
டியர் முரளி சார்,

அத்தியாயம் ஆறில், பிப்ரவரி ஆறு பற்றிய ஆய்வு அருமை. (ஒரு சிறு திருத்தம் - விளையாட்டுப் பிள்ளை வெளியான தேதி : 20.2.1970)

அன்புடன்,
பம்மலார்.

சுவாமி,

விளையாட்டுப் பிள்ளை 1970 பிப்ரவரி 6-ந் தேதி அன்றுதான் வெளியானது. சென்னையில் மட்டுமே 20 -ந் தேதி வெளியானது. படம் வெளியான மறுநாள் பிப் 7 -ந் தேதி சனிக்கிழமை மதுரை நியூசினிமாவில் இரவுக் காட்சி நான் பார்த்தேன். ராகவேந்தர் சார் அவர்களிடம், அவரின் நடிகர் திலகம் இணைய தளத்தில் இடம் பெற்றிருக்கும் இந்த தவறை திருத்தச் சொல்லி முன்பே சொல்லியிருக்கிறேன்.

நன்றி செந்தில். எங்கே ஆளே காணவில்லை? விழாவில் இடம் பெற்றது ராஜா ராணி படத்தில் இடம் பெற்ற சேரன் செங்குட்டுவன் ஓரங்க நாடக காட்சி. ஒரே டேக்கில் 16 பக்க வசனத்தை நடிகர் திலகம் பேசி நடித்த காட்சி

மோகன், நன்றி. எங்கள் தங்க ராஜா மறக்க முடியாத ஒரு படம். அந்த படத்தின் ஓபனிங் ஷோ இன்னும் கண் முன்னே நிற்கிறது.

NOV,

Thanks for Thenum Paalum. நடிகர் திலகத்தின் படங்களைப் பொறுத்தவரை ஒரு சாதாரண படம் என்று நாம் நினைப்பது கூட ஒரு கதையம்சம் கொண்டதாய், உணர்ச்சி போராட்டங்களை உள்ளடக்கியதாய் திகழும். படத்தின் திரைக்கதையை ஒருவர் வர்ணித்து எழுதும்போது அதன் சுவை கூடும். தேனும் பாலும் கலந்து கொடுத்த உங்களுக்கு நன்றி.

இந்த படம் மட்டும் சரியான நேரத்தில் படப்பிடிப்பு முடிந்து வெளி வந்திருந்தால் நல்ல வெற்றியை பெற்றிருக்கும்.

அன்புடன்

pammalar
9th February 2010, 12:08 AM
which NT movie's clipping was shown on the screen during kalaignar"s felicitation?

நமது நடிகர் திலகத்தின் "ராஜா ராணி" திரைக்காவியத்திலிருந்து (கலைஞர் வசனம்), சேரன் செங்குட்டுவன் ஓரங்க நாடகக் காட்சி தான், முதல்வர் கலைஞருக்கான பாராட்டு விழாவில் காண்பிக்கப்பட்டது. அக்காட்சி ஓடிக் கொண்டிருந்த போதும், பின்னர் ஓடி முடிந்ததும் முதல்வர் கண் கலங்கினார். மேடையிலிருந்தவர்களும் அப்படியே. அரங்கிலிருந்தவர்களும் கண் கலங்கியிருக்கின்றனர்.

ஈரேழு பதினான்கு லோகங்களிலும் தலைசிறந்த நடிகர் நமது நடிகர் திலகமே என்பது மீண்டும் ஒரு முறை ஊர்ஜிதமாகியிருக்கின்றது.

பெருமிதத்துடன்,
பம்மலார்.

Murali Srinivas
9th February 2010, 12:16 AM
சுவாமி,

விளையாட்டுப் பிள்ளை திருச்சியிலும் வெற்றி பெற்ற விவரத்தை [முன்பே தனிப்பட்ட முறையில் என்னிடம் சொல்லியிருந்தாலும்] அனைவரும் அறிந்துக் கொள்ளும் வண்ணம் பதிந்ததற்கு நன்றி. தங்கைக்காக படத்தைப் பற்றி குறிப்பிட்டது போலவே விளையாட்டுப் பிள்ளையும் சுற்றிலும் நடிகர் திலகத்தின் படங்களே ஓடிக் கொண்டிருந்த நிலையிலும் வெற்றிப் பெற்றது. ஒரு பக்கம் சிவந்த மண், மற்றொரு பக்கம் எங்க மாமா, இது தவிர வி.பிள்ளை வெளியாகி இரண்டு மாதங்களுக்கு உள்ளாகவே வெளியான வியட்நாம் வீடு, இந்த அனைத்துப் போட்டிகளையும் தாண்டியே வெற்றி பெற்றது.

தங்கைக்காக படம் ஓடிக் கொண்டிருக்கும் போது சுற்றிலும் ஓடிக் கொண்டிருந்த நடிகர் திலகத்தின் படங்களைப் பற்றி குறிப்பிட்டிருந்தேன். அதில் மற்றொன்றையும் குறிப்பிட வேண்டும். தங்கைக்காக 60 நாட்களை கடந்த போது சுமதி என் சுந்தரி மற்றும் பிராப்தம் ஆகியவையும் ஏப்ரல் 14-ந் தேதி வெளியானது. ஆக நடிகர் திலகத்தின் ஆறு படங்கள் ஒரே நேரத்தில் திரையரங்குகளில். எப்பேர்ப்பட்ட சாதனை!

அன்புடன்

groucho070
9th February 2010, 07:47 AM
Thanks for the write-up, NOV. Don't recall watching it. Were they playing it in Astro VT?

NOV
9th February 2010, 08:10 AM
...ஒரு கதையம்சம் கொண்டதாய், உணர்ச்சி போராட்டங்களை உள்ளடக்கியதாய் திகழும். :exactly:
viraga thaagamaa irukkattum, mana kuzhapamaaga irukkattum, namma NTkku ellaam kai vandha kalai thaan. :D

yes Rakesh, yesterday's Vellithirai. if possible try to watch the 6pm slot every day - lots of 70s films.

groucho070
9th February 2010, 08:41 AM
Revisited Savale Samali (in the process of converting wife to NTism).

Some notes:

- not-so-subtle promotion of socialism. In fact, one dialogue of NTs says just that, that the marriage between poor farmer (NT) and rich socialite (JJ) is a form of socialism. Literally.
- The actual highlight of this film is NT's relationship with his dad, played beautifully by VS Raghavan. Equally fiery, emotional but with deep respect and love for each other, the father and son's bickering is both touching and funny.
- Muthuraman looks buff, rough and tough, if you pardon the accidental rhyming there. His moment comes right at the end when he brawls with, or should I say, whups MN Nambiar's rear.
- Vijayakumari, who plays NT's sister, again demonstrates that no matter how many great actors sorrounded her, she still overemoted from here to Pluto. Oh, she played ditched wife of Muthuraman...somehow you don't symphatise her.
- Nagesh, that show stealer, precedes Gounder in side-kick bashing, when in one scene, out of anger towards rich man Bagavathi, beats the crap out of his assistant...and it was perhaps the most hillarious scene in the movie.
- JJ somehow does not look good here. Something not right about her makeup.
- On the contrary, NT looks great.
- All the songs are fabulous. From socialism promoting Aanaikoru Kaalam Vantha, to girl having fun fare, Cittukuruvikkenna Kattupaadu, and the ever famous, and easily spoofable, but deeply meaningful Nilavai Partu Vaanam sonnathu, these are sounds you can hear again and again and again.
- It's NT's show all the way, as usual. From the moment he appears he grabs us by the collar and run us through the familiar rich versus poor conflict. There is no repressed anger of an underdog here; you get full blown rage and no-one is spared from this man's outburst, not even his own mother is spared from no-nonsense taking NT. At one point, even my wife verbally cautioned others to not talk crap with him.
- One thing to look out for, NT and JJ, using their own voice sings. NT sings a lone of Cittukuruvikkenna Kattupaadu, and JJ sings Nilavai Paartu Vaanam sonnathu.
- All in all, a satisfying revisit. I can revisit this film again and again and not get bored. Not NT's most memorable film, but definitely most revisitable.

saradhaa_sn
9th February 2010, 01:17 PM
டியர் NOV...,

நடிகர்திலகத்தின் (அதிகம் பேசப்படாத) 'தேனும் பாலும்' படத்தைப்பற்றி அருமையாக நினைவு கூர்ந்துள்ளீர்கள். நன்றி.

1971 துவக்கத்தில் நான்கே மாதங்களில் ஏழு படங்கள் (பாதுகாப்பு, இருதுருவம், தங்கைக்காக, அருணோதயம், குலமா குணமா, பிராப்தம், சுமதி என் சுந்தரி) வெளியாகி, அவை ஓடி முடிந்து, ஒரு வழியாக அலப்பரைகள் அடங்கியபின்னர் வெளிவந்தது. நடிகர்திலகத்தின் 150 படமான சவாலே 'சமாளி வெளியாகி' 107 நாட்களுக்குப்பின் 'பாபு' வெளியாகும் வரை இடையே இரண்டே படங்களே வந்தன, (இது நமக்கு அதிசயம் இல்லையா?) தேனும் பாலும், மற்றும் மூன்று தெய்வங்கள். இருப்பினும் 'ஒருவனுக்கு ஒருத்தி' என்று துவங்கி, 'ஒருவனுக்கு இருவர்' என்று முடிந்த கதை தாய்க்குலத்துக்கு மத்தியில் அவ்வளவாக எடுபடவில்லை. சென்னை மிட்லண்டில் ஓப்பனிங் எல்லாம் நன்றாகத்தான் இருந்தது.

பத்மினியும், சரோஜாதேவியும் இணைந்து நடித்த ஒரே படம் இதுதான்னு நினைக்கிறேன் (வேறு படம் இருக்கா?). பத்மினியை விட சரோஜாதேவி நல்ல பாந்தமாக இருந்தார். 'ம்ஞ்சளும் தந்தாள் மலர்கள் த்ந்தாள் மங்கலமங்கை மீனாட்சி' பாடலை எஸ்.ஜான்கி, ஜிக்கி ஆகியோரைப் பாடவைத்து எம்.எஸ்.வி. HIT பண்ணியதைப்பார்த்துதான், தான் இசையமைத்த 'தலைவாழை இலைபோட்டு விருந்து வைத்தேன்' (நான் ஏன் பிறந்தேன்) பாடலை அதே இருவரைக்கொண்டு பாடவைத்ததாக இசையமைப்பாளர் (சங்கர்) கணேஷ் சொல்லியிருந்தார். மறு வெளியீடுகளில்கூட வெளியில் எட்டிப்பார்க்காத படம் 'தேனும் பாலும்'.

saradhaa_sn
9th February 2010, 01:33 PM
டியர் முரளி & பம்மலார்...

தமிழகம் முழுவதும் (1970) பிப்ரவரி 6-ம் தேதி வெளியான 'விளையாட்டுப்பிள்ளை', சென்னையில் மட்டும் 20-ம் தேதி (இரண்டு வாரம் தாமதித்து) வெளியானதற்கு ஸ்பெஷல் காரணம் ஏதும் உண்டா?. சென்னை மிட்லண்ட்டில்தான் வெளியானது. வேறு ஏதும் படத்தின் பூர்த்திக்காக வெய்ட் பண்ணியதா?.

mr_karthik
9th February 2010, 04:54 PM
Pammalar sir,

Photos and Nerration about Delhi function are very nice. Expecting the speeches of the distinguished guests, especially Radhakrishnan I.A.S., our beloved former collector.

NOV sir,

Nice rememberance about 'thEnum pAlum' another movie kept under shadow.

Rakesh sir,

Interesting hints about 'savAlE samALi' a worthwatch movie in repeated times. When talking about Nagesh, 'the election agreement signing scene' at temple, a hilarious one.

and also when talking about songs, you must have mention the three letters 'M.S.V.' பாவம் சார் அவர். everybody neglecting him to mention.

Murali Srinivas
9th February 2010, 11:04 PM
டியர் முரளி & பம்மலார்...

தமிழகம் முழுவதும் (1970) பிப்ரவரி 6-ம் தேதி வெளியான 'விளையாட்டுப்பிள்ளை', சென்னையில் மட்டும் 20-ம் தேதி (இரண்டு வாரம் தாமதித்து) வெளியானதற்கு ஸ்பெஷல் காரணம் ஏதும் உண்டா?. சென்னை மிட்லண்ட்டில்தான் வெளியானது. வேறு ஏதும் படத்தின் பூர்த்திக்காக வெய்ட் பண்ணியதா?.

சாரதா, என்ன காரணம் என்பது எனக்கு தெரியவில்லை. அன்றைய சென்னைவாசிகள் தான் சொல்ல வேண்டும்.

சுவாமி,

நேற்று சொல்ல மறந்து போன பாராட்டு, இதோ பிடியுங்கள். தர்த்தி படத்தின் வெற்றி செய்திகளை [பலருக்கும் தெரியாத] இங்கே பதிந்ததற்கு.

அன்புடன்

Rakesh, good points about Savale Samaali.

pammalar
10th February 2010, 03:52 AM
டியர் முரளி & பம்மலார்...

தமிழகம் முழுவதும் (1970) பிப்ரவரி 6-ம் தேதி வெளியான 'விளையாட்டுப்பிள்ளை', சென்னையில் மட்டும் 20-ம் தேதி (இரண்டு வாரம் தாமதித்து) வெளியானதற்கு ஸ்பெஷல் காரணம் ஏதும் உண்டா?. சென்னை மிட்லண்ட்டில்தான் வெளியானது. வேறு ஏதும் படத்தின் பூர்த்திக்காக வெய்ட் பண்ணியதா?.

விளையாட்டுப் பிள்ளை, 20.2.1970 வெள்ளிக்கிழமையன்று, சென்னையில் மிட்லண்ட், கிருஷ்ணா, மேகலா, நூர்ஜஹான் ஆகிய 4 திரையரங்குகளில் வெளியானது.

மேகலாவிலும், நூர்ஜஹானிலும், 9.11.1969 தீபாவளி முதல், விண்ணை முட்டும் வெற்றி முழக்கத்தோடு ஓடிக் கொண்டிருந்த சிவந்த மண் திரைக்காவியம், 20.2.1970 அன்று விளையாட்டுப் பிள்ளைக்காக வழி விட வேண்டியதாகி விட்டது. சிவந்த மண் மேகலாவில் 103 நாட்களும், நூர்ஜஹானில் 103 நாட்களும் ஓடி இமாலய வெற்றி பெற்றது.

மிட்லண்ட், கிருஷ்ணா விவரம் இது வரை தெரியவில்லை. தொடரும் தேடலில் இது பற்றி தகவல் கிடைத்தால், அவசியம் தெரிவிக்கிறேன்.

அன்புடன்,
பம்மலார்.

sankara1970
10th February 2010, 11:42 AM
Delhi muthamiz peravai nadathiya Sivaji vizha
news and photos are exiting.
As a true NT lover, we thank all those who organised the same

I wonder if such functions would have been organised if any other party is in power in TN
except DMK. I do not know if this has any relevance

But one thing is true-We have more and more functions organised ever since DMK came into power.

I happnened to see NT statue when I recently visited Chennai.

Day by day NT's pugaz is spreading Imayangalai kadanthu,
I do not know if such response and love is there for any other actor that too 9 years after he died

Hats off!

groucho070
10th February 2010, 11:44 AM
and also when talking about songs, you must have mention the three letters 'M.S.V.' பாவம் சார் அவர். everybody neglecting him to mention.Oh crap :( How could I? I'll write that name three times: MSV, MSV, MSV!!! :notworthy:

HARISH2619
10th February 2010, 02:47 PM
திரு முரளி சார் & திரு பம்மல் சார்,
தகவலுக்கு நன்றி.

நான் இங்குதான் உள்ளேன் முரளி சார்.மலைகளின் தகவல் பறிமாற்றங்களுக்கு மத்தியில் இந்த மடுவுக்கு எந்த வேலையும் இல்லை என்பதால் எந்த போஸ்டும் செய்யவில்லை.வெறும் தரிசனத்தோடு சரி.
மதுரை அரசமர க்ரூப்ஸ் விழா செய்திகளை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்

பம்மல் சார்,டில்லி விழா ஸ்டில்ஸ் சூப்பர்.விழா தொகுப்பை எதிர்பார்க்கிறோம்.ஒய்.ஜி.எம் விழா தொகுப்பை முழுமையாக முடிக்கும்படி பணிவோடு கேட்டுக்கொள்கிறேன்.

pammalar
10th February 2010, 04:57 PM
சிங்கத்தமிழனின் சாந்தி சாதனைகள் தொடர்கிறது ...

52. ரிஷிமூலம் - 26.1.1980 - 104 நாட்கள்

53. ரத்தபாசம் - 14.6.1980 - 83 நாட்கள்

54. விஸ்வரூபம் - 6.11.1980 - 102 நாட்கள்

55. சத்திய சுந்தரம் - 21.2.1981 - 105 நாட்கள்

56. லாரி டிரைவர் ராஜாக்கண்ணு - 3.7.1981 - 49 நாட்கள்

57. கீழ்வானம் சிவக்கும் - 26.10.1981 - 103 நாட்கள்

58. வா கண்ணா வா - 6.2.1982 - 104 நாட்கள்

59. தீர்ப்பு - 21.5.1982 - 105 நாட்கள்

60. தியாகி - 3.9.1982 - 72 நாட்கள்

61. பரீட்சைக்கு நேரமாச்சு - 14.11.1982 - 73 நாட்கள்

62. நீதிபதி - 26.1.1983 - 141 நாட்கள்

63. சந்திப்பு - 16.6.1983 - 100 நாட்கள்

64. மிருதங்க சக்கரவர்த்தி - 24.9.1983 - 100 நாட்கள்

65. திருப்பம் - 14.1.1984 - 105 நாட்கள்

66. சரித்திர நாயகன் - 26.5.1984 - 35 நாட்கள்

67. சிம்ம சொப்பனம் - 30.6.1984 - 46 நாட்கள்

68. எழுதாத சட்டங்கள் - 15.8.1984 - 30 நாட்கள்

69. வம்ச விளக்கு - 23.10.1984 - 46 நாட்கள்

70. பந்தம் - 26.1.1985 - 105 நாட்கள்

71. நீதியின் நிழல் - 13.4.1985 - 69 நாட்கள்

72. முதல் மரியாதை - 15.8.1985 - 177 நாட்கள்

73. ஆனந்தக்கண்ணீர் - 7.3.1986 - 63 நாட்கள்

குறிப்பு:
26.1.1985 வெளியான பந்தம், 12.4.1985 வரை 77 நாட்கள் தினசரி 3 காட்சிகளாக வெற்றி நடை போட்டது. 13.4.1985 அன்று நீதியின் நிழல் தினசரி 3 காட்சிகளாக வெளியானதால், பகல் காட்சிக்கு மாற்றப்ப்ட்ட பந்தம், அக்காட்சியில் தொடர்ந்து 28 நாட்கள் வெற்றிகரமாக ஓடியது. ஆக, பந்தம் மொத்தம் 105 வெற்றி நாட்கள்.

சாதனைகள் எனும் சாம்ராஜ்யத்திற்கு, நிரந்தர சக்கரவர்த்தி, சிங்கத்தமிழன் சிவாஜி ஒருவரே !

சாந்தி சாதனைகள் தொடரும் ...

அன்புடன்,
பம்மலார்.

saradhaa_sn
10th February 2010, 07:49 PM
[b
68. எழுதாத சட்டங்கள் - 15.8.1984 - 30 நாட்கள்
[/b]

'எழுதாத சட்டங்கள்' நல்ல படமாச்சே.

நடிகர்திலகம், ஜெய்சங்கர், நம்பியார், மனோகர், பிரபு, சரத்பாபு, ஷ்ரீவித்யா, நளினி, ஊர்வசி, தேங்காய் என ஏகப்பட்ட நட்சத்திரக்கூட்டம்,
நஸீர் வாப்பா ரோலில் நடிகர்திலகம் அருமையாக நடித்திருப்பார்,
கூடவே இளையராஜாவின் இசை.
எல்லாம் இருந்தும் ஏன்....?

இத்தனைக்கும் அடுத்த பட ரிலீஸுக்காகவும் மாற்றப்படவில்லையே.

rangan_08
10th February 2010, 08:23 PM
Murali sir, can you quote a single incident where your memory has ever proved you to be wrong. I'm afraid there's any. Once again you were absolutely right about that " Saturday afternoon En Magan. :D

All I was trying to say is that I'm sure that the DVD's of Balaji's films are not released and that I am not aware about the DVD release of En Magan, about which you had mentioned in your post.

rangan_08
10th February 2010, 08:25 PM
12/02/2010 - சிவ ராத்திரி

திருவருட்செல்வர் படத்தில் மெய் சிலிர்க்க வைக்கும் காட்சி.

திருநாவுக்கரசர் வேடம் நடிகர் திலகத்தின் மணிமகுடத்தில் ஒரு வைரக்கல். அந்த பொருத்தமான ஒப்பனையாகட்டும், முகபாவங்களாகட்டும், சற்று கூண் விழுந்தபடி அவர் நடந்து செல்லும் அந்த நடையழகாகட்டும் - எல்லாவற்றிற்கும் மேலாக, அவரைத் திரையில் பார்த்தவுடன் இவர உண்மையிலேயே அப்பர் பெருமானோ என்று கையெடுத்துக் கும்பிடத் தோன்றும் அந்த வேடப் பொருத்தம், அற்புதம்! அற்புதம்! இனி காட்சிக்கு வருவோம்.

திங்களூரில் வாழும் அப்பூதியடிகள் அருள்மொழி அம்மையார் தம்பதியர், தாங்கள் நேரில் பார்த்திராத திருநாவுக்கரசரை தங்களது குலதெய்வமாக எண்ணி அந்த ஊரில் பல நற்காரியங்களை செய்து வருகிறார்கள். அத்தம்பதியின் வேண்டுகோளை ஏற்று அவர்களது இல்லத்தில் ஒரு வேளை உணவருந்த வாக்களிக்கிறார் நாவுக்கரசர். அத்தம்பதியருக்கு ஒரே மகன், அவன் பெயரும் திருநாவுக்கரசுதான்.

விருந்து தினத்தன்று அச்சிறுவன் வாழையிலை பறிக்கச் செல்லும் போது அரவம் தீண்டி மாண்டு விடுகிறான். தம்பதிகள் பெரும் சோகத்தில் ஆழ்கிறார்கள். ஆலயத்திற்குச் சென்றிருந்த திருநாவுக்கரசர் உணவருந்த வருகிறார். அப்பூதியடிகளைப் பார்த்து, " ஏன் உங்கள் திருமுகம் வாடியிருக்கிறது?" என்று வினவுகிறார். பிறகு அவரையும் அவரது மகனையும் தன்னுடன் சேர்ந்து உணவருந்துமாறு கோருகிறார் (விருந்துண்ண வந்தவரும் விருந்துக்கழைத்தவரும் சேர்ந்து உண்டால் தான் அது விருந்து, இல்லாவிட்டால் மருந்து ).

சிறுவன் இறந்த செய்தியைக் கேட்டு அதிர்ச்சியடைந்து அவனது சடலம் இருக்கும் இடத்திற்கு விரைகிறார். விஷம் தலைக்கேறி இறந்து கிடக்கும் சிறுவனைப் பார்த்து இறைவனிடமே உரிமையோடு கோபப்பட்டு அவர் பேசும் போது பார்ப்பவர்க்கு மெய் சிலிர்த்துவிடும்.

சிறுவனது உடலைக் கையிலேந்தி, " இறைவா! இதென்ன நாடகம்? ஏன் இந்த விளையாட்டு? நல்லவர்களுக்கும், நாட்டிலே நன்மை செய்பவர்க்கும் தீமையை உண்டாக்கினால், நாதனே, நீ எங்கே? உன் ஐந்தெழுத்தெங்கே? உனது புகழெங்கே? உன்னைப் போற்றிப் பாடும் நானெங்கே? வேண்டாமப்பா இந்த வேடிக்கை ", என்று அப்பர் பெருமான் கதறும் அந்தக் காட்சியில் ரசிகர்களை கலங்கடித்துவிடுவார் நடிகர் திலகம்.

மகன் மீண்டும் உயிர்த்தெழுந்ததும், முத்துராமன் தட்டுத்தடுமாறி, " மண்ணிக்க வேண்டும் சுவாமி, உணர்ச்சிப் பெருக்கில் வார்த்தைகளே வர மறுக்கின்றன ", என்று சொல்வார். இந்தக் காட்சியைப் பார்க்கும் ஒவ்வொரு முறையும் எனக்கும் அதே நிலை தான்.

:notworthy:

pammalar
10th February 2010, 09:33 PM
Murali sir, can you quote a single incident where your memory has ever proved you to be wrong. I'm afraid there's any. Once again you were absolutely right about that " Saturday afternoon En Magan. :D

All I was trying to say is that I'm sure that the DVD's of Balaji's films are not released and that I am not aware about the DVD release of En Magan, about which you had mentioned in your post.

Dear Mohan Sir,

Our NT's "En Magan" VCD/DVD is now available in plenty at many CD retail shops in & around Chennai Anna Salai (Mount Road). I also came to know from an NT fan - Mr. R.Kumar who is a good friend of mine & who comes to Shanthi theatre regularly even today - that En Magan VCDs/DVDs are selling like hot cakes and the film print also looks good.

Regards,
Pammalar.

pammalar
10th February 2010, 09:58 PM
Dear Mohan Sir,

Please click the following link that provides a detailed listing of our NT films, released on VCD/DVD by Moserbaer.

http://www.moserbaerhomevideo.com/title-search.php?stimes=OK&language=10&CDTYPE&category[]=ALL&searchin=STA&keyword=Sivaji&x&y&sbox=OK&pos=0

You will find many Sivaji-Balaji combinations in it.

Happy Viewing,
Pammalar.

Murali Srinivas
10th February 2010, 11:30 PM
செந்தில்,

முன் போல் நீங்களும் சில செய்திகளை குறிப்பாக பெங்களூர் நகரில் நடிகர் திலகத்தின் சாதனைகளைப் பற்றி எழுதலாமே. மதுரை விழாவும் டெல்லி விழாவும் ஒரே நாளிலே நடைப்பெற்றதால் சுவாமி அவர்களால் மதுரைக்கு போக முடியவில்லை. ஆகவே மதுரை விழாவைப் பற்றி கேள்விப்பட்ட சில தகவல்களை சுவாமி இங்கே பகிர்ந்து கொள்வார்.

மோகன்,

உங்கள் பாராட்டுக்கு நன்றி. மகா சிவராத்திரியை வரவேற்று கட்டியம் கூறுவது போல் அழகாய் அமைந்துள்ளது தாங்கள் எழுதியுள்ள பதிவு. நடிக வேந்தன் அற்புதமாக அப்பர் பெருமானை திரையில் வார்த்தெடுத்த காட்சியினை மீண்டும் நினைவுப்படுத்தியதற்கு நன்றி.

சுவாமி,

Moser Baer லிஸ்டில் படங்கள் இருக்கின்றன. ஆனால் அவை கடைகளில் கிடைப்பதில்லை என்பதுதான் விஷயமே. உதாரணத்திற்கு தியாகம் டி.வி.டி, உனக்காக நான், ரத்த பாசம் போன்றவை கிடைப்பதில்லை. இன்னொரு விஷயம், ஏராளமான ரசிகர்கள் தேடிக் கொண்டிருக்கும் தங்கை, என் தம்பி, திருடன் போன்றவை அவர்கள் வெளியிட்டுள்ள பட்டியலிலே இல்லை. என் மகனும் இல்லை.

அன்புடன்

pammalar
11th February 2010, 12:33 AM
[b
68. எழுதாத சட்டங்கள் - 15.8.1984 - 30 நாட்கள்
[/b]

'எழுதாத சட்டங்கள்' நல்ல படமாச்சே.

நடிகர்திலகம், ஜெய்சங்கர், நம்பியார், மனோகர், பிரபு, சரத்பாபு, ஷ்ரீவித்யா, நளினி, ஊர்வசி, தேங்காய் என ஏகப்பட்ட நட்சத்திரக்கூட்டம்,
நஸீர் வாப்பா ரோலில் நடிகர்திலகம் அருமையாக நடித்திருப்பார்,
கூடவே இளையராஜாவின் இசை.
எல்லாம் இருந்தும் ஏன்....?

இத்தனைக்கும் அடுத்த பட ரிலீஸுக்காகவும் மாற்றப்படவில்லையே.

சகோதரி சாரதா,

எழுதாத சட்டங்கள் போன்ற நல்ல படங்களும், சில சமயங்களில், ஓட்டத்தில் சறுக்கி விடுகின்றன. என்ன செய்வது. இத்தனைக்கும் தாங்கள் குறிப்பிட்டது போல் நட்சத்திரக் கூட்டம், நமது நடிகர் திலகம் நஸீர் வாப்பா வேடத்தில் வாழ்ந்து காட்டியிருப்பார். அன்றைய கால கட்டத்தில், எழுதாத சட்டங்கள் போன்ற நல்ல படங்கள் ஓடாததற்கு, மக்களின் ரசனை வீழ்ச்சியே காரணம்.

எழுதாத சட்டங்கள், சாந்தியில் தினசரி 3 காட்சிகளாக, 15.8.1984 தொடங்கி 13.9.1984 வரை ஓடியது. 14.9.1984 அன்று சாந்தியில் தினசரி 3 காட்சிகளாக, மிதுன் சக்கரவர்த்தி நடித்த கராத்தே ஹிந்திப்படம் வெளியானது. மேலும் பகல் காட்சியில் அப்பொழுது சாந்தியில், கமல் நடித்த யாத்கார் ஹிந்தி திரைப்படம் ஓடிக் கொண்டிருந்ததால், எழுதாத சட்டங்கள் திரைப்படத்தை பகல் காட்சியிலும் திரையிட(மாற்ற) முடியாமல் போனது.

அன்புடன்,
பம்மலார்.

pammalar
11th February 2010, 02:54 AM
திரு முரளி சார் & திரு பம்மல் சார்,
தகவலுக்கு நன்றி.

நான் இங்குதான் உள்ளேன் முரளி சார்.மலைகளின் தகவல் பறிமாற்றங்களுக்கு மத்தியில் இந்த மடுவுக்கு எந்த வேலையும் இல்லை என்பதால் எந்த போஸ்டும் செய்யவில்லை.வெறும் தரிசனத்தோடு சரி.
மதுரை அரசமர க்ரூப்ஸ் விழா செய்திகளை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்

பம்மல் சார்,டில்லி விழா ஸ்டில்ஸ் சூப்பர்.விழா தொகுப்பை எதிர்பார்க்கிறோம்.ஒய்.ஜி.எம் விழா தொகுப்பை முழுமையாக முடிக்கும்படி பணிவோடு கேட்டுக்கொள்கிறேன்.

டியர் செந்தில் சார்,

நமது நடிகர் திலகத்தின் ஒவ்வொரு நல்லிதயமும் ஒரு மலையே. தாங்கள் குறிப்பிட்டுள்ள ஒவ்வொரு விழாவும், இன்னும் சில தினங்களில் நல்ல முறையில் முழுமையான தகவல்களோடு நிறைவு செய்யப்படும்.

அன்புடன்,
பம்மலார்.

pammalar
11th February 2010, 03:01 AM
தர்த்தி திரைக்காவியத்தின் சாதனை விவரங்களை வழங்கியமைக்காக எம்மைப் பாராட்டிய முரளி சாருக்கு நன்றி!

Thank you very much Mr.Karthik & Mr.Sankara.

Regards,
Pammalar.

joe
11th February 2010, 02:27 PM
பேச்சாளர் நெல்லை கண்ணன் நம் நடிகர் திலகம் பற்றி தன் வலைப்பூவில் எழுதியுள்ள கவிதைகள். (http://thamizhkadal.blogspot.com/search/label/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9C%E0%A E%BF%20%E0%AE%95%E0%AE%A3%E0%AF%87%E0%AE%9A%E0%AE% A9%E0%AF%8D)

pammalar
11th February 2010, 02:41 PM
டெல்லி சிவாஜி விழா - 2

விழா உரைகள்

ஐ-டியூட்டர் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் நிறுவன இயக்குனர், நூல் வெளியீட்டாளர் திரு. வாழப்பாடி இராம. சுகந்தன் அவர்களின் உரை:
"நடிகர் திலகம் சிவாஜி அவர்கள் எனது தந்தையார் திரு.வாழப்பாடியாரின் மிக நெருங்கிய நண்பர். காங்கிரஸ் பேரியக்கத்தில் இருவரும் ஒரு சேர இணைந்து தொண்டாற்றியவர்கள். நடிகர் திலகத்துக்கு ஒரு தொகுப்பு நூலை தயார் செய்து வருகிறேன் என நண்பர் திரு. சந்திரசேகரன் கூறிய போது, அதனை நானே வெளியிடுகிறேன் என அவரிடம் உறுதி கூறினேன். அதன்படி, ஐ-டியூட்ட்ர் இந்தியா நிறுவனத்தின் சார்பாகவே, இந்நூல் வெளிவந்துள்ளது. இது எனக்கும், எங்களது நிறுவனத்திற்கும், அதனைச் சேர்ந்தவர்களுக்கும் கிடைத்த மிகப் பெரிய பெருமை."

நடிகர் திலகம் சிவாஜி சமூக நலப் பேரவையின் தலைவர், நூல் தொகுப்பாசிரியர் திரு.கே.சந்திரசேகரன் அவர்களின் உரை:
"நடிகர் திலகம் சிவாஜி அவர்கள் தமிழ்நாட்டிற்கு மட்டுமல்ல, தமிழினத்திற்கு மட்டுமல்ல, இந்தியாவிற்கு மட்டுமல்ல, உலகத்திற்கே சொந்தமானவர். அவரைப் பற்றிய இந்தத் தொகுப்பு நூலை வெளியிடுவதற்கு உறுதுணையாக இருந்த திரு.இராம சுகந்தன் அவர்களுக்கும் மற்றும் இந்நூலுக்கு ஒத்துழைப்பு நல்கிய அனைத்து அன்பு இதயங்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்."

விழா உரைகள் தொடரும் ...

அன்புடன்,
பம்மலார்.

Murali Srinivas
11th February 2010, 08:23 PM
மதுரை சென்ட்ரல் திரையரங்கில் நடிகர் திலகத்தின் காலத்தால் அழியாத காவியம் புதிய பறவை நாளை வெள்ளி முதல் தினசரி 4 காட்சிகளாய் திரையிடப்படுகிறது.

அன்புடன்

மோகன், மதுரை ரசிகர்கள் உண்மையிலே கொடுத்து வைத்தவர்கள்.

tacinema
12th February 2010, 06:01 AM
டியர் NOV...,

நடிகர்திலகத்தின் (அதிகம் பேசப்படாத) 'தேனும் பாலும்' படத்தைப்பற்றி அருமையாக நினைவு கூர்ந்துள்ளீர்கள். நன்றி.

மறு வெளியீடுகளில்கூட வெளியில் எட்டிப்பார்க்காத படம் 'தேனும் பாலும்'.

Saradha,

தேனும் பாலும் மறு வெளியீடு - தமிழ்நாடு மற்ற மாவட்டங்களில் பற்றி தெரியவில்லை. அனால், எங்கள் மதுரையில் தேவி தியேட்டரில் தேனும் பாலும் மறு வெளியிட்டில் தான் நானும் மிக பெரிய NT ரசிகரான என் மாமாவும் பார்த்தோம். வெகு சில படங்கள் தவிர, மதுரையில் எல்லா NT படமும் மறு வெளியீட்டில் வந்துவிடும்.

Though not a great movie, thenum paalum is a nice one.

Regards.

tacinema
12th February 2010, 06:41 AM
Revisited Savale Samali (in the process of converting wife to NTism).

Some notes:

- On the contrary, NT looks great.


This is 100% true. NT looks fabulous with a great hair style, simple dhoti and cotton shirt. I am sure this is the only movie in modern tamil films in which a super hero appeared in simple dhoti and shirt and still managed to look great. I guess the best in savale samali is its strong dialogues and the wonderful delivery from NT. All in all Saveli samali - A well etched and very restrained performance from NT.

Out of his 40+ years in films, I guess NT looked best during Savale Samali times. Question to NT veterans: How did he manage to look so good during these years? How sweet it would have been if he had maintained the same look in 80s and 90s..... Imagine Sumathi en Sundari look in 80s and 90s - man, it just feels wonderful!!!

Regards

tacinema
12th February 2010, 07:08 AM
மதுரை சென்ட்ரல் திரையரங்கில் நடிகர் திலகத்தின் காலத்தால் அழியாத காவியம் புதிய பறவை நாளை வெள்ளி முதல் தினசரி 4 காட்சிகளாய் திரையிடப்படுகிறது.

அன்புடன்

மோகன், மதுரை ரசிகர்கள் உண்மையிலே கொடுத்து வைத்தவர்கள்.

Murali,

Great news from Madurai.

Any plan to visit Madurai for Pparavai? I wish I were there with fans for Sunday evening show......... Good old days in Madurai!!

Few memorable performances from NT, as Gopal, in this classic:

-- Gopal's introduction and song: Unnai Ontru Ketpen
-- Gopal's seductive looks and asks Saroja Devi to sing again
-- Gopal's ultra rich modern look in Singapore club when he meets Soukar first time. His cigar smoking style must have spoiled many in those days!!??
-- Gopal - MRRadha - Soukar confrontation
-- Gopal's classic Enge Nimmadhi song - wonderful depiction of a man wanders between fear and love in life
-- Gopal's performance in climax and finally ends the movie in his own unbeatable way revealing that he is still looking for love; at the end, you surely feel pity for him............

I always feel that PP is one of the best from MSV-TKR for NT movies. Sweet and evergreen songs!!

On the negative side, I never liked Saroja devi's performance in this movie - especially, her baby-like talk; it slows down the pace of the movie.

Overall, an evergreen classic from NT.

Please paste here posters and other alapparai's from theaters.

Regards.

tacinema
12th February 2010, 07:23 AM
சிங்கத்தமிழனின் சாந்தி சாதனைகள் தொடர்கிறது ...



56. லாரி டிரைவர் ராஜாக்கண்ணு - 3.7.1981 - 49 நாட்கள்

60. தியாகி - 3.9.1982 - 72 நாட்கள்

66. சரித்திர நாயகன் - 26.5.1984 - 35 நாட்கள்

67. சிம்ம சொப்பனம் - 30.6.1984 - 46 நாட்கள்

68. எழுதாத சட்டங்கள் - 15.8.1984 - 30 நாட்கள்

69. வம்ச விளக்கு - 23.10.1984 - 46 நாட்கள்



Honestly, this time period is not great and he should have avoided these movies. Wondering how did LDriver Rajakannu managed to run more than that of Eluthatha Sattangal???

Considering that most of these movies were starred by both NT and Prabhu, did NT try to indirectly help Prabhu to establish in tamil films? Nothing against Prabhu, but as a well wisher of NT and his movies, it is just an emotional feeling.

Anyway, it is a fact that these films damaged some of NT's fame. His rival fans got a ground to bring in this period while discussing records.

Regards.

saradhaa_sn
12th February 2010, 12:48 PM
Revisited Savale Samali (in the process of converting wife to NTism).

Some notes:

- On the contrary, NT looks great.


This is 100% true. NT looks fabulous with a great hair style, simple dhoti and cotton shirt. I am sure this is the only movie in modern tamil films in which a super hero appeared in simple dhoti and shirt and still managed to look great. I guess the best in savale samali is its strong dialogues and the wonderful delivery from NT. All in all Saveli samali - A well etched and very restrained performance from NT.

Out of his 40+ years in films, I guess NT looked best during Savale Samali times. Question to NT veterans: How did he manage to look so good during these years? How sweet it would have been if he had maintained the same look in 80s and 90s..... Imagine Sumathi en Sundari look in 80s and 90s - man, it just feels wonderful!!!

Regards
Dear tac.... வெகு நாட்களுக்குப்பின் தலைகாட்டியிருக்கீங்க..., வருக.

நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மையே. நீங்கள் குறிப்பிடும் அந்த கால கட்டம் நடிகர்திலகத்தின் அழகிய தோற்றம் கொண்ட காலம் எனலாம்.

அதாவது 'ஊட்டிவரை உறவு' துவங்கி 'அண்ணன் ஒரு கோயில்' வரையான காலம். (தியாகத்திலிருந்து மீண்டும் அவரது உருவம், அறுபதுகளின் துவக்கத்தில் இருந்த நிலை நோக்கி திரும்பியது). ஆனால் அறுபதுகளின் துவக்கத்தில் அந்த தோற்றத்தை தனது அலாதியான பெர்ஃபாமன்ஸைக்கொண்டு வென்று தள்ளினார். (குறிப்பாக 'பீம்பாய்' படங்கள்). ஆனால் தியாகத்துக்குப்பின் அவருக்கு அமைந்த ரோல்கள், அவரது உருவத்தோற்றத்தை மறக்கடிக்கப்போதுமானவையாக அமையவில்லை என்பதும் சற்று ஸ்டீரியோ டைப்பில் அமைந்தன என்பதும் உண்மை. அப்படியும் கூட அவர் ஏராளமான வெற்றிப்படங்களைக்கொடுத்தார். (உங்களது அடுத்த பதிவுக்கான பதிலில் சொல்லியிருக்கிறேன்). தமிழ்ப்பட வெற்றி வரலாற்றை திருப்பிப்போட்ட 'திரிசூலம்' போன்றவை வந்ததும் அந்தக்கால கட்டத்தில்தான்.

நான் எப்போதுமே சொல்லி சொல்லி மாய்வதுபோல 67 முதல் 77 வரையிலான அவரது தோற்றம் கண்ணில் ஒற்றிக்கொள்ளும்படியான அழகு. அப்போது வந்த அவரது படங்களுக்கு அவரது அந்த ஒல்லியான அழகு தோற்றம் ரொம்பவே பொருந்தியது. அந்நேரத்தில்தான் பாலாஜி படங்களில் துவங்கி எல்லா படங்களிலும் ஒன்றிரண்டு சண்டைக்காட்சிகளாவது இடம்பெறத்துவங்கி, படங்களுக்கு சிறப்பு சேர்த்தன. அவற்றில் ஒன்றுதான் நீங்கள் குறிப்பிட்ட 'சவாலே சமாளி'. அந்நேரத்தில் வந்த அவரது படங்களுக்கும் ஏற்றிருந்த ரோல்களுக்கும் அவரது ஸ்லிம் உடலமைப்பு எப்படி ஒத்துழைத்தது என்பது படங்களின் வரிசையைப் பார்த்தாலே தெரியும்.

சமீபத்தில் முரளியண்ணா ஆய்வு செய்த 'திருடன்' படமும் அவற்றில் ஒன்று. 'தங்கச்சுரங்கம்' சி.பி.ஐ ஆபீசரும் அவர்களில் ஒருவர். 'எங்கமாமா'வின் சொர்க்கம் பக்கத்தில் பாடலில், அழகிய நிர்மலாவோடு இவரும் சரிக்கு சரி ஒல்லியாக இருந்ததால்தானே அப்பாடல் காட்சி இன்னும் கண்களைக்கவர்கிறது. உள்ளே பனியன் போடாமல் வெறுமனே ஸ்பன் ஷர்ட்டோடு தெய்வமகனில் 'காதல் மலர்க்கூட்டம் ஒன்று' பாட முடிந்ததும் அந்த ஒல்லி உடம்பு தந்த போனஸ். புரட்சிக்காரன் 'பாரத்'துக்கு (சிவந்த மண்) தன் சாகசங்களில் ஒத்துழைத்தது அந்த ஸ்லிம் பாடிதான் என்றால் மறுப்பதற்கில்லை. நீங்கள் குறிப்பிட்ட சுமதி என் சுந்தரி நம் நெஞ்சங்களில் ஸ்டிக்கராக ஒட்டிக்கொள்ள உறுதுணையாக இருந்ததும் அந்த அழகு உடம்பு அல்லவா? (பொட்டுவைத்த முகமோ, ஒருதரம் ஒரேதரம் பாடல் காட்சிகளை இன்றைக்கும் கண்ணில் ஒற்றிக்கொள்கிறோமே). அந்த சிக்கென்ற தோற்றத்தில்னால் அல்லவா 'பொன்மகள் வந்தாள்' பாடும்போது விஜயலலிதாவை விட ஒல்லியாகத் தோற்றமளித்தார். இவற்றுக்கெல்லாம் சிகரம் வைத்தாற்போல அமைந்த துப்பறியும் 'ராஜா'.

ஜோவியல் படங்களில்தான் என்றில்லை. சீரியஸ் ரோல்களுக்கும் அந்த மெலிந்த உடல் ரொம்பவே பாந்தமாக பொருந்தியது. பேண்ட்டுக்குள் ஷர்ட் இன் பண்ணி சட்டைக்கைகளை முழங்கைகளுக்கு மேல மடித்து விட்டபடி 'அந்தநாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே நண்பனே' பாடிய அதே தோற்றத்தில் இருந்த அழகுக்கு மாறாக, ஏழு ஆண்டுகளுக்குமுன் அவர் நடித்த 'நான் பேச நினைப்பதெல்லாம்' பாடல் காட்சியில் உடல் கண்களை உறுத்தியது என்பதை மறுப்பதற்கில்லை.

'திருமால் பெருமை' திருமங்கை ஆழ்வாரும், சிக்கல் ஷண்முக சுந்தரமும், நாடக நடிகர் ரங்கதுரையும் சிறப்பான நடிப்போடு சேர்ந்து அழகிய தோற்றத்திலும் நம்மைக்கவர்ந்தனர் என்றால் அதற்கு முழுக்காரணம் அவரது அன்றைய அழகிய தோற்றம் என்பது உண்மைதானே. சுருக்கமாகச்சொன்னால், கட்டபொம்மனுக்குப்பின் காணாமல் போன அழகிய தோற்றம் திரும்பக்கிடைத்தது 67-ல் தான். இடைப்பட்ட காலத்தில் தன் அபார நடிப்புத் திறமையால் அந்தக்குறைபாடு தெரியாமல் ஊதித்தள்ளினார் (உதாரணம் நீங்களே இப்போது குறிப்பிட்ட 'எங்கே நிம்மதி' பாடல் காட்சி).

அனைத்துக்கும் மேலாக 'ஒரு குறிப்பிட்ட வார்த்தையால்' அவரது தோற்றத்தை கிண்டல் செய்து வந்தோரின் வாய்களுக்கு 'ரிவிட்' அடிக்கப்பட்டிருந்ததும் அந்த 'பிளாட்டினம் பீரியடில்'தான்.

HARISH2619
12th February 2010, 12:58 PM
PUDHIYA PARAVAI.............. the name itself is enough to bring joy in the faces of NT fans.what a lucky the madurai fans are.
I watched it for the 4th time in bangalore kino theatre in 1992 with all those amarkkalams and aarpaattams.all hell broke loose during enge nimmathi song on sunday night show and the theatre management stopped the movie without the climax scene as some fans burst the crackers inside the premesis during that song.I'm just thinking the way madurai fans will receive that song coming sunday night show.

BTW where is raghavendran sir ?

joe
12th February 2010, 01:01 PM
புதிய பறவைக்கு வசனம் எழுதிய அனுபவத்தை தனது நூலில் விரிவாக எழுதியிருந்தார் ஆரூர்தாஸ்.

HARISH2619
12th February 2010, 01:06 PM
சாரதா மேடம்,
உங்களுக்கு அவ்வளவாக பிடிக்காத படம் என்றாலும் "வசந்த மாளிகை" யில் அந்த அழகிய தமிழ்மகனின் அழகை வர்னிக்க வார்த்தைகளே இல்லை என்பதை உங்கள் பதிவில் விட்டுவிட்டீர்களே?

groucho070
12th February 2010, 01:39 PM
Yah...hubber Hamid will be upset that Vasantha Maaligai not mentioned. :)

Undoubtedly 60s to 77 would be my favourite period as well...athuvum in particular 67 to 77, which incidentally was the best year as far as Hollywood films and rock music is concerned...in my opinion of course.

That the look contributed is only secondary...the script and the mindset of the audience of that time required NT in those kind of films. It's the same audience that required NT in the kind of films we wish he didn't do in late 70s and 80s (though some were done out of favour to producers/directors). But yeah, those were NT's golden years in filmaking.

saradhaa_sn
12th February 2010, 01:56 PM
சிங்கத்தமிழனின் சாந்தி சாதனைகள் தொடர்கிறது ...



56. லாரி டிரைவர் ராஜாக்கண்ணு - 3.7.1981 - 49 நாட்கள்

60. தியாகி - 3.9.1982 - 72 நாட்கள்

66. சரித்திர நாயகன் - 26.5.1984 - 35 நாட்கள்

67. சிம்ம சொப்பனம் - 30.6.1984 - 46 நாட்கள்

68. எழுதாத சட்டங்கள் - 15.8.1984 - 30 நாட்கள்

69. வம்ச விளக்கு - 23.10.1984 - 46 நாட்கள்



Honestly, this time period is not great and he should have avoided these movies. Wondering how did LDriver Rajakannu managed to run more than that of Eluthatha Sattangal???

Considering that most of these movies were starred by both NT and Prabhu, did NT try to indirectly help Prabhu to establish in tamil films? Nothing against Prabhu, but as a well wisher of NT and his movies, it is just an emotional feeling.

Anyway, it is a fact that these films damaged some of NT's fame. His rival fans got a ground to bring in this period while discussing records.

Regards.
டியர் tac..,
நீங்கள் கொடுத்துள்ள வெற்றி வாய்ப்பை இழந்த படங்களின் பட்டியலும் அது தொடர்பான செய்திகளும், குறிப்பிட்ட அந்த காலகட்டத்தில் வந்த நடிகர்திலகத்தின் அனைத்துப்படங்களும் தோல்வியோ என்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்துகிறது.

அவற்றில் லாரி டிரைவரும், சரித்திர நாயகனும் அவர் நடித்திருக்க வேண்டியில்லாத படங்கள் என்பதை மறுப்பதற்கில்லை, (இன்னொரு படம் 'நாம் இருவர்'). மற்றபடி சிம்ம சொப்பனம், வம்ச விளக்கு, எழுதாத சட்டங்கள் போன்றவை எல்லாம் ஓட்டத்தில் சறுக்கினவையே தவிர தரத்தில் மோசமானவை அல்ல. ('தியாகி' தோல்விப்படம் அல்ல, சுமாரைக்கடந்த வெற்றிப்படமே).

அதே சமயம் இன்னொரு முக்கியமான விஷயம். குறிப்பிட்ட இதே கால கட்டத்தில்தான் நடிகர்திலகத்தின் வெள்ளிவிழாப்படங்களான

தீர்ப்பு,
சந்திப்பு,
நீதிபதி,
முதல் மரியாதை

ஆகினவும், மற்றும் 100 நாட்களைக்கடந்த மாபெரும் வெற்றிப்படங்களான

கீழ்வானம் சிவக்கும்,
வா கண்ணா வா,
மிருதங்க சக்ரவர்த்தி,
வெள்ளை ரோஜா,
திருப்பம்,
தாவணிக்கனவுகள்,
வாழ்க்கை,
பந்தம்
போன்ற படங்களும் வெளியாகின. இவ்வெற்றிப்படங்கள் பெரும்பாலானவற்றில் இளையதிலகம் பிரபுவும் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

(மற்றபடி 'சரித்திர நாயகன்' ஓட்டத்தில் 'சரிந்த நாயகனாகி'ப்போனது உண்மைதான். இப்படத்தின் கதையை நந்தமூரி டி.ராமாராவ் (என்.டி.ஆர்) எழுதினாராம். நல்லவேளை, இதோடு பேனாவை மூடிவைத்து விட்டு அரசியலுக்குப்போய்விட்டார்).

rangan_08
12th February 2010, 07:47 PM
Dear Pammalar sir,

Thank you for giving the Moser.link. But as Murali sir said, the movies which I'm longing to watch, " Thirudan " and other films are missing.

rangan_08
12th February 2010, 07:54 PM
Revisited Savale Samali (in the process of converting wife to NTism).

Some notes:

- The actual highlight of this film is NT's relationship with his dad, played beautifully by VS Raghavan. Equally fiery, emotional but with deep respect and love for each other, the father and son's bickering is both touching and funny.


Yes. The scene where NT is busily engaged in chopping down a big tree all by himself. VSR comes there and looks at his son's palms - feels so bad (he is the reason behind this ordeal) and then takes the axe and asks NT to go home ( MSV's bgm is ringing in my ears). Beautifully played by both the actors.

Similarly, the T.K Bhagavathy - S.Varalakshmi relationship is also beautifully etched. Again, excellently played by the actors.

rangan_08
12th February 2010, 07:57 PM
டெல்லி சிவாஜி விழா - 2


Saw an ad in newspaper, " DVD's available @Raj Video vision - " Imayathirku Indhia Anjali " - is it related to this function ??

rangan_08
12th February 2010, 08:06 PM
மதுரை சென்ட்ரல் திரையரங்கில் நடிகர் திலகத்தின் காலத்தால் அழியாத காவியம் புதிய பறவை நாளை வெள்ளி முதல் தினசரி 4 காட்சிகளாய் திரையிடப்படுகிறது.

அன்புடன்

மோகன், மதுரை ரசிகர்கள் உண்மையிலே கொடுத்து வைத்தவர்கள்.


Idhellam romba aniyayam. Annan Azhagiriya Chennaikku transfer pannungappa.

You wouldn't believe, Nataraja theatre, which is near by my house is continuously screening MGR films for almost 6 months in a row, by now.

Last week saw Ayirathil Oruvan @ Sai Shanthi and I was looking for the Manager to request about screening NT films atleast once in a month. But unfortunately, I couldn't find the right person. If this happens, I'm damn sure that the movie will run full houses and will make more collection than new films.

rangan_08
12th February 2010, 08:12 PM
சாரதா மேடம்,
உங்களுக்கு அவ்வளவாக பிடிக்காத படம் என்றாலும் "வசந்த மாளிகை" யில் அந்த அழகிய தமிழ்மகனின் அழகை வர்னிக்க வார்த்தைகளே இல்லை என்பதை உங்கள் பதிவில் விட்டுவிட்டீர்களே?

Yes. Right from oh manida jadhiye, the rocking, oru kinnathai yendugiren, mesmerising mayakkamenna, legendary yarukkaga, irandu manam....

Wow !! Chinna durai Anand is my all time favourite.

pammalar
12th February 2010, 08:33 PM
"சித்தமெல்லாம் எனக்கு சிவ மயமே - உன்னை
சேவித்த கரங்களுக்கு இல்லை பயமே"

இன்று (12.2.2010) சிவராத்திரி. சிவ பெருமானையும், சிவா ஜி பெருமானையும் வணங்கி இறையருளைக் கூட்டுவோம்!

பக்தியுடன்,
பம்மலார்.

joe
12th February 2010, 10:44 PM
[tscii:00925253d2]சிங்கை வசந்தம் செண்ட்ரல் தொலைக்காட்சியில் நடிகர் திலகத்தின் ‘உத்தம புத்திரன்’ பார்த்து முடித்தேன்.

என்னா நடை ,என்னா உடை ,என்னா பார்வை வீச்சு ,என்னா ஸ்டைல் ..அப்பப்பா ..நிகரில்லை :thumbsup:[/tscii:00925253d2]

omega
12th February 2010, 11:02 PM
[tscii:b3b5e50693]சிங்கை வசந்தம் செண்ட்ரல் தொலைக்காட்சியில் நடிகர் திலகத்தின் ‘உத்தம புத்திரன்’ பார்த்து முடித்தேன்.

என்னா நடை ,என்னா உடை ,என்னா பார்வை வீச்சு ,என்னா ஸ்டைல் ..அப்பப்பா ..நிகரில்லை :thumbsup:[/tscii:b3b5e50693]



அந்த நடனத்தை விட்டுட்டீங்க........ :clap:

joe
12th February 2010, 11:15 PM
[tscii:d9cc2c3310]சிங்கை வசந்தம் செண்ட்ரல் தொலைக்காட்சியில் நடிகர் திலகத்தின் ‘உத்தம புத்திரன்’ பார்த்து முடித்தேன்.

என்னா நடை ,என்னா உடை ,என்னா பார்வை வீச்சு ,என்னா ஸ்டைல் ..அப்பப்பா ..நிகரில்லை :thumbsup:[/tscii:d9cc2c3310]

அந்த நடனத்தை விட்டுட்டீங்க........ :clap:

பக்கத்தில் அமர்ந்து பார்த்த என் மனைவி சொன்னது “இவர் போன பிறவியில உண்மையிலேயே அரசரா இருந்திருப்பாரோ? “ 8-)

pammalar
12th February 2010, 11:17 PM
இன்று (12.2.2010) சிவராத்திரியில், நமது நடிகர் திலகத்தின் "நானே ராஜா (1956)" திரைக்காவியத்திலிருந்து நடிகர் திலகத்தின் கதாபாத்திரமான வில்லாள மஹாராஜா பாடுவதாக அமைந்த "ஆதியந்தம் இல்லா அருட்ஜோதியே" எனத் தொடங்கும் சிவபெருமானைப் போற்றும் அரிய, இனிய பாடல்.

இதனை செவிக்கு விருந்தாக்க கீழ்க்காணும் லிங்க்கை கிளிக் செய்யவும்:

http://musicmazaa.com/tamil/audiosongs/movie/Naane+Rajan.html

இந்தப் பாடலை இயற்றியவர் கவிஞர் கே.பி.காமாட்சி சுந்தரன், இசை டி.ஆர். ராமநாதன், பாடியவர் பாடகர் திலகம் டி.எம்.எஸ்.

அன்புடன்,
பம்மலார்.

pammalar
12th February 2010, 11:29 PM
[tscii:2789c5fc79]சிங்கை வசந்தம் செண்ட்ரல் தொலைக்காட்சியில் நடிகர் திலகத்தின் ‘உத்தம புத்திரன்’ பார்த்து முடித்தேன்.

என்னா நடை ,என்னா உடை ,என்னா பார்வை வீச்சு ,என்னா ஸ்டைல் ..அப்பப்பா ..நிகரில்லை :thumbsup:[/tscii:2789c5fc79]

அந்த நடனத்தை விட்டுட்டீங்க........ :clap:

பக்கத்தில் அமர்ந்து பார்த்த என் மனைவி சொன்னது “இவர் போன பிறவியில உண்மையிலேயே அரசரா இருந்திருப்பாரோ? “ 8-)

நடிப்பரசரே நம் சிவாஜி!!!

அன்புடன்,
பம்மலார்.

Murali Srinivas
12th February 2010, 11:30 PM
மதுரை சென்ட்ரல் திரையரங்கில் நடிகர் திலகத்தின் காலத்தால் அழியாத காவியம் புதிய பறவை நாளை வெள்ளி முதல் தினசரி 4 காட்சிகளாய் திரையிடப்படுகிறது.

அன்புடன்

மோகன், மதுரை ரசிகர்கள் உண்மையிலே கொடுத்து வைத்தவர்கள்.

Murali,

Great news from Madurai.

Any plan to visit Madurai for Pparavai? I wish I were there with fans for Sunday evening show......... Good old days in Madurai!!

No tac. Though, I would love to. This news was given to me by a friend from Madurai.




Please paste here posters and other alapparai's from theaters.

Regards
Will try to get the happenings. Swami will give the exact news.




BTW where is raghavendran sir ?

Senthil, Raghavendran Sir had recently shifted his house and the net connection is yet to come. Would be joining us soon.




pammalar wrote:
டெல்லி சிவாஜி விழா - 2



Saw an ad in newspaper, " DVD's available @Raj Video vision - " Imayathirku Indhia Anjali " - is it related to this function ??

No Mohan. When NT passed away in July 2001, Raj TV arranged a condolence meeting in September 2001, where all the actors participated. The same was shown in Raj TV at that point of time. The same has been brought out as DVD.




Last week saw Ayirathil Oruvan @ Sai Shanthi and I was looking for the Manager to request about screening NT films atleast once in a month.

This has already been hinted to "Mappillai" Venugopal [Shanthi Manager and NT's B-I-Law] by Raghavendran Sir and our Swami also spoke to him. It was only an exploratory talk. Let us see how it works. But two NT films with new prints are ready for release.

வெகு நாட்களுக்குப் பிறகு மீண்டும் அனைத்து ரசிகர்களும் பங்களிப்பு செய்யும் இந்த காட்சியை காணும் போது சந்தோஷமாக இருக்கிறது.

ஜோ, வெகு நாட்களுக்குப் பிறகு நடிகர் திலகத்தின் படத்தைப் பற்றி எழுதியிருக்கிறீர்கள். தொடருங்கள்.

அன்புடன்

pammalar
13th February 2010, 01:34 AM
டெல்லி சிவாஜி விழா - 2


Saw an ad in newspaper, " DVD's available @Raj Video vision - " Imayathirku Indhia Anjali " - is it related to this function ??

டியர் மோகன் சார்,

முரளி சார் சொன்னது முற்றிலும் சரி!

31.1.2010 ஞாயிறன்று நடைபெற்ற டெல்லி சிவாஜி விழாவும், "இமயத்திற்கு இந்திய அஞ்சலி" நிகழ்ச்சியும் வேறு வேறு. நடிகர் திலகத்தின் மறைவுக்குப் பின், அவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக அவரது நினைவைப் போற்றும் வகையில், ராஜ் டிவி நிறுவனம் 28.9.2001 வெள்ளியன்று சென்னை மீனம்பாக்கத்தில் நடத்திய "இமயத்திற்கு இந்திய அஞ்சலி" நிகழ்ச்சியின் வீடியோ தொகுப்பே இந்த "இமயத்திற்கு இந்திய அஞ்கலி" டிவிடி.

அன்புடன்,
பம்மலார்.

pammalar
13th February 2010, 10:49 AM
"ஆதியந்தம் இல்லா அருட்ஜோதியே" பாடலுக்கு இசையமைத்தவர் டி.ஆர்.ராமநாதன் என்கிற டி.ஆர்.ராம்நாத்.

28.9.2001 அன்று ராஜ் டிவி நிறுவனம் நடத்திய "இமயத்திற்கு இந்திய அஞ்சலி" நிகழ்ச்சி சென்னை மீனம்பாக்கத்தில் உள்ள இந்தியன் ஏர்லைன்ஸ் மைதானத்தில் நடைபெற்றது.

அன்புடன்,
பம்மலார்.

mr_karthik
13th February 2010, 01:04 PM
Saw an ad in newspaper, " DVD's available @Raj Video vision - " Imayathirku Indhia Anjali " - is it related to this function ??
31.1.2010 ஞாயிறன்று நடைபெற்ற டெல்லி சிவாஜி விழாவும், "இமயத்திற்கு இந்திய அஞ்சலி" நிகழ்ச்சியும் வேறு வேறு. நடிகர் திலகத்தின் மறைவுக்குப் பின், அவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக அவரது நினைவைப் போற்றும் வகையில், ராஜ் டிவி நிறுவனம் 28.9.2001 வெள்ளியன்று சென்னை மீனம்பாக்கத்தில் நடத்திய "இமயத்திற்கு இந்திய அஞ்சலி" நிகழ்ச்சியின் வீடியோ தொகுப்பே இந்த "இமயத்திற்கு இந்திய அஞ்கலி" டிவிடி.

அன்புடன்,
பம்மலார்.
இந்த டி.வி.டி. வெளியாவதற்கு ஓராண்டுக்கு முன்னர், ஏற்கெனவே ராஜ் டி.வி.யில் ஒளிபரப்பானதின் Recorded Version பார்க்க நேர்ந்தது. (I hope that must be this function). அதில் இன்னொரு ஷாக் மற்றும் சோகம் என்னவென்றால், அந்நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களிலேயே பலர் இப்போது நம்மிடையே இல்லை. மறைந்து விட்டனர்.

joe
13th February 2010, 01:07 PM
ராஜ் டிவி நிறுவனம் 28.9.2001 வெள்ளியன்று சென்னை மீனம்பாக்கத்தில் நடத்திய "இமயத்திற்கு இந்திய அஞ்சலி" நிகழ்ச்சியின் வீடியோ தொகுப்பே இந்த "இமயத்திற்கு இந்திய அஞ்கலி" டிவிடி.


அதீத ஆர்வக்கோளாறில் இதே vcd- ஐ இரண்டு முறை வாங்கியிருக்கிறேன். :lol:

mr_karthik
13th February 2010, 01:39 PM
BTW where is raghavendran sir ?

Senthil, Raghavendran Sir had recently shifted his house and the net connection is yet to come. Would be joining us soon.
Atleast our Raghavendran sir should post his valuable thoughts through Internet Cafe. We miss him a lot, and we need his wishes in this sixth part. Pl.come soon sir.

mr_karthik
13th February 2010, 02:10 PM
Revisited Savale Samali (in the process of converting wife to NTism).

Some notes:

- The actual highlight of this film is NT's relationship with his dad, played beautifully by VS Raghavan. Equally fiery, emotional but with deep respect and love for each other, the father and son's bickering is both touching and funny.


Yes. The scene where NT is busily engaged in chopping down a big tree all by himself. VSR comes there and looks at his son's palms - feels so bad (he is the reason behind this ordeal) and then takes the axe and asks NT to go home ( MSV's bgm is ringing in my ears). Beautifully played by both the actors.
Rakesh & Mohan, rightly pointed out.

Particularly that scene, இடுப்பில் கட்டியிருந்த துண்டை எடுத்து மகன் முகத்தை துடைத்து விடுவது. Here புத்திர பாசம் will conquer எஜமான விசுவாசம். ('உன் வயசுக்கு நீ இந்த மாதிரி வேலையெல்லாம் செஞ்சதில்லையேடா. பத்து பேர் செய்ய வேண்டிய வேலையை நீ ஒருத்தனில்லே செஞ்சிக்கிட்டிருக்கே')

Recently VSR told in a TV show 'savAlE samALi' as one of his best ten performances.

mr_karthik
13th February 2010, 03:33 PM
Revisited Savale Samali (in the process of converting wife to NTism).

Some notes:

- On the contrary, NT looks great.


This is 100% true. NT looks fabulous with a great hair style, simple dhoti and cotton shirt. I am sure this is the only movie in modern tamil films in which a super hero appeared in simple dhoti and shirt and still managed to look great. I guess the best in savale samali is its strong dialogues and the wonderful delivery from NT. All in all Saveli samali - A well etched and very restrained performance from NT.

Out of his 40+ years in films, I guess NT looked best during Savale Samali times. Question to NT veterans: How did he manage to look so good during these years? How sweet it would have been if he had maintained the same look in 80s and 90s..... Imagine Sumathi en Sundari look in 80s and 90s - man, it just feels wonderful!!!

Regards
Dear tac.... வெகு நாட்களுக்குப்பின் தலைகாட்டியிருக்கீங்க..., வருக.

நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மையே. நீங்கள் குறிப்பிடும் அந்த கால கட்டம் நடிகர்திலகத்தின் அழகிய தோற்றம் கொண்ட காலம் எனலாம்.

அதாவது 'ஊட்டிவரை உறவு' துவங்கி 'அண்ணன் ஒரு கோயில்' வரையான காலம். (தியாகத்திலிருந்து மீண்டும் அவரது உருவம், அறுபதுகளின் துவக்கத்தில் இருந்த நிலை நோக்கி திரும்பியது). ஆனால் அறுபதுகளின் துவக்கத்தில் அந்த தோற்றத்தை தனது அலாதியான பெர்ஃபாமன்ஸைக்கொண்டு வென்று தள்ளினார். (குறிப்பாக 'பீம்பாய்' படங்கள்). ஆனால் தியாகத்துக்குப்பின் அவருக்கு அமைந்த ரோல்கள், அவரது உருவத்தோற்றத்தை மறக்கடிக்கப்போதுமானவையாக அமையவில்லை என்பதும் சற்று ஸ்டீரியோ டைப்பில் அமைந்தன என்பதும் உண்மை. அப்படியும் கூட அவர் ஏராளமான வெற்றிப்படங்களைக்கொடுத்தார். (உங்களது அடுத்த பதிவுக்கான பதிலில் சொல்லியிருக்கிறேன்). தமிழ்ப்பட வெற்றி வரலாற்றை திருப்பிப்போட்ட 'திரிசூலம்' போன்றவை வந்ததும் அந்தக்கால கட்டத்தில்தான்.

நான் எப்போதுமே சொல்லி சொல்லி மாய்வதுபோல 67 முதல் 77 வரையிலான அவரது தோற்றம் கண்ணில் ஒற்றிக்கொள்ளும்படியான அழகு. அப்போது வந்த அவரது படங்களுக்கு அவரது அந்த ஒல்லியான அழகு தோற்றம் ரொம்பவே பொருந்தியது. அந்நேரத்தில்தான் பாலாஜி படங்களில் துவங்கி எல்லா படங்களிலும் ஒன்றிரண்டு சண்டைக்காட்சிகளாவது இடம்பெறத்துவங்கி, படங்களுக்கு சிறப்பு சேர்த்தன. அவற்றில் ஒன்றுதான் நீங்கள் குறிப்பிட்ட 'சவாலே சமாளி'. அந்நேரத்தில் வந்த அவரது படங்களுக்கும் ஏற்றிருந்த ரோல்களுக்கும் அவரது ஸ்லிம் உடலமைப்பு எப்படி ஒத்துழைத்தது என்பது படங்களின் வரிசையைப் பார்த்தாலே தெரியும்.

சமீபத்தில் முரளியண்ணா ஆய்வு செய்த 'திருடன்' படமும் அவற்றில் ஒன்று. 'தங்கச்சுரங்கம்' சி.பி.ஐ ஆபீசரும் அவர்களில் ஒருவர். 'எங்கமாமா'வின் சொர்க்கம் பக்கத்தில் பாடலில், அழகிய நிர்மலாவோடு இவரும் சரிக்கு சரி ஒல்லியாக இருந்ததால்தானே அப்பாடல் காட்சி இன்னும் கண்களைக்கவர்கிறது. உள்ளே பனியன் போடாமல் வெறுமனே ஸ்பன் ஷர்ட்டோடு தெய்வமகனில் 'காதல் மலர்க்கூட்டம் ஒன்று' பாட முடிந்ததும் அந்த ஒல்லி உடம்பு தந்த போனஸ். புரட்சிக்காரன் 'பாரத்'துக்கு (சிவந்த மண்) தன் சாகசங்களில் ஒத்துழைத்தது அந்த ஸ்லிம் பாடிதான் என்றால் மறுப்பதற்கில்லை. நீங்கள் குறிப்பிட்ட சுமதி என் சுந்தரி நம் நெஞ்சங்களில் ஸ்டிக்கராக ஒட்டிக்கொள்ள உறுதுணையாக இருந்ததும் அந்த அழகு உடம்பு அல்லவா? (பொட்டுவைத்த முகமோ, ஒருதரம் ஒரேதரம் பாடல் காட்சிகளை இன்றைக்கும் கண்ணில் ஒற்றிக்கொள்கிறோமே). அந்த சிக்கென்ற தோற்றத்தில்னால் அல்லவா 'பொன்மகள் வந்தாள்' பாடும்போது விஜயலலிதாவை விட ஒல்லியாகத் தோற்றமளித்தார். இவற்றுக்கெல்லாம் சிகரம் வைத்தாற்போல அமைந்த துப்பறியும் 'ராஜா'.

ஜோவியல் படங்களில்தான் என்றில்லை. சீரியஸ் ரோல்களுக்கும் அந்த மெலிந்த உடல் ரொம்பவே பாந்தமாக பொருந்தியது. பேண்ட்டுக்குள் ஷர்ட் இன் பண்ணி சட்டைக்கைகளை முழங்கைகளுக்கு மேல மடித்து விட்டபடி 'அந்தநாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே நண்பனே' பாடிய அதே தோற்றத்தில் இருந்த அழகுக்கு மாறாக, ஏழு ஆண்டுகளுக்குமுன் அவர் நடித்த 'நான் பேச நினைப்பதெல்லாம்' பாடல் காட்சியில் உடல் கண்களை உறுத்தியது என்பதை மறுப்பதற்கில்லை.

'திருமால் பெருமை' திருமங்கை ஆழ்வாரும், சிக்கல் ஷண்முக சுந்தரமும், நாடக நடிகர் ரங்கதுரையும் சிறப்பான நடிப்போடு சேர்ந்து அழகிய தோற்றத்திலும் நம்மைக்கவர்ந்தனர் என்றால் அதற்கு முழுக்காரணம் அவரது அன்றைய அழகிய தோற்றம் என்பது உண்மைதானே. சுருக்கமாகச்சொன்னால், கட்டபொம்மனுக்குப்பின் காணாமல் போன அழகிய தோற்றம் திரும்பக்கிடைத்தது 67-ல் தான். இடைப்பட்ட காலத்தில் தன் அபார நடிப்புத் திறமையால் அந்தக்குறைபாடு தெரியாமல் ஊதித்தள்ளினார் (உதாரணம் நீங்களே இப்போது குறிப்பிட்ட 'எங்கே நிம்மதி' பாடல் காட்சி).

அனைத்துக்கும் மேலாக 'ஒரு குறிப்பிட்ட வார்த்தையால்' அவரது தோற்றத்தை கிண்டல் செய்து வந்தோரின் வாய்களுக்கு 'ரிவிட்' அடிக்கப்பட்டிருந்ததும் அந்த 'பிளாட்டினம் பீரியடில்'தான்.
Saradha mam, several times I watched, whenever you talk about the slim body period of our NT, you will get some extra freshness. I noticed it in many of your movie reiviews and analysis.

If we go through the list of your analysis, what a surprise, all the movies analysed by you are belong to that period only (1967 -77).

This your 'NT's lean body analysis' also nicely presented here.

rangan_08
13th February 2010, 04:57 PM
பாடியவர் பாடகர் திலகம் டி.எம்.எஸ்.

அன்புடன்,
பம்மலார்.

just perfect :thumbsup:

rangan_08
13th February 2010, 05:01 PM
No Mohan. When NT passed away in July 2001, Raj TV arranged a condolence meeting in September 2001, where all the actors participated. The same was shown in Raj TV at that point of time. The same has been brought out as DVD.

Oh! thank you for the info sir. do you have a copy ?







Last week saw Ayirathil Oruvan @ Sai Shanthi and I was looking for the Manager to request about screening NT films atleast once in a month.

This has already been hinted to "Mappillai" Venugopal [Shanthi Manager and NT's B-I-Law] by Raghavendran Sir and our Swami also spoke to him. It was only an exploratory talk. Let us see how it works. But two NT films with new prints are ready for release.


Hope it materialises soon.

rangan_08
13th February 2010, 05:03 PM
MY VCD / DVD COLLECTION :D

1. PAASA MALAR
2. THILLANA MOHANAMBAL
3. NAVARATHIRI
4. UYARNDHA MANIDHAN
5. SAVALEY SAMALI
6. AVANTHAN MANIDHAN
7. THIRUVILAYADA
8. THIRUVARUTCHELVAR
9. KANDAN KARUNAI
10. UTHAMA PUTHIRAN
11. NAAN PETRA SELVAM
12. RAJA
13. BABU
14. ENGA MAMA
15. GOWRAVAM
16. DEIVA MAGAN
17. GNANA OLI
18. ENGA OOR RAJA
19. IRU MALARGAL
20. THANGAPPADAKKAM
21. SIVANDHA MANN
22. PATTIKADA PATTANAMA
23. VAIRA NENJAM
24. PUDHIYA PARAVAI
25. VASANTHA MALIGAI
26. THENUM PALUM
27. ANBALIPPU
28. PONNOONJAL
29. PADIKKADHA MEDHAI
30. AANDAVAN KATTALAI
31. SUMATHI EN SUNDARI
32. KAI KODUTHA DEIVAM
33. KUNGUMAM
34. AMARA DEEPAM
35. PUNAR JENMAM
36. ANDHA NAAL
37. PAAVAI VILAKKU
38. THAVAPUDHALVAN
39. THENALI RAMAN
40. ANNAN ORU KOIL
41. NAAN SOLLUM RAGASIYAM
42. ANBE ARUYIRE

This is juts a kid's collection. We have big daddies here in this hub. :D

rangan_08
13th February 2010, 05:05 PM
28.9.2001 அன்று ராஜ் டிவி நிறுவனம் நடத்திய "இமயத்திற்கு இந்திய அஞ்சலி" நிகழ்ச்சி சென்னை மீனம்பாக்கத்தில் உள்ள இந்தியன் ஏர்லைன்ஸ் மைதானத்தில் நடைபெற்றது.

அன்புடன்,
பம்மலார்.

thank you pammalar sir.

pammalar
13th February 2010, 07:19 PM
நன்றி திரு.மோகன், தங்களது பொக்கிஷம் (சிடி/டிவிடி சேகரிப்பு) வியக்க வைக்கிறது. அது மென்மேலும் வளர்ந்தோங்க வாழ்த்துக்கள்!

அன்புடன்,
பம்மலார்.

pammalar
13th February 2010, 07:33 PM
நாகர்கோவில் பயோனீர்முத்து திரையரங்கில், 25.12.2009(வெள்ளி) முதல் 27.12.2009(ஞாயிறு) வரை 3 நாட்களுக்கு, தினசரி 4 காட்சிகளாக, பாரத ஜோதியின் "பச்சை விளக்கு" திரைக்காவியம் திரையிடப்பட்டு, நல்லதொரு வெற்றியைப் பெற்றுள்ளது. இத்தகவலை எமக்களித்த எமது நெருங்கிய நண்பர் ரசிக நல்லிதயம் திரு.எஸ்.ராமஜெயம் அவர்களுக்கு நன்றி!

அன்புடன்,
பம்மலார்.

pammalar
13th February 2010, 08:03 PM
திருப்பூர் வெற்றி அரங்கில் 9.2.2010(செவ்வாய்) முதல் 11.2.2010(வியாழன்) வரை 3 நாட்கள், தினசரி 4 காட்சிகளாக, நமது நடிகர் திலகத்தின் "கெளரவம்" வெற்றி நடை போட்டுள்ளது. நகரெங்கும் நிறைய போஸ்டர்களும் காணப்பட்டதாம். போஸ்டர் வாசகம் : "கண்ணா நீயும் நானுமா - சிவாஜி மிரட்டும் கெளரவம்". இச்செய்தியைத் தெரிவித்த கடலைக்காட்டுப்புதூர் திரு.சங்கர் அவர்களுக்கும், திரு.தி.அய்யம்பெருமாள் அவர்களுக்கும் மனமார்ந்த நன்றி!

அன்புடன்,
பம்மலார்.

tacinema
13th February 2010, 08:31 PM
Revisited Savale Samali (in the process of converting wife to NTism).

Some notes:

- On the contrary, NT looks great.


This is 100% true. NT looks fabulous with a great hair style, simple dhoti and cotton shirt. I am sure this is the only movie in modern tamil films in which a super hero appeared in simple dhoti and shirt and still managed to look great. I guess the best in savale samali is its strong dialogues and the wonderful delivery from NT. All in all Saveli samali - A well etched and very restrained performance from NT.

Out of his 40+ years in films, I guess NT looked best during Savale Samali times. Question to NT veterans: How did he manage to look so good during these years? How sweet it would have been if he had maintained the same look in 80s and 90s..... Imagine Sumathi en Sundari look in 80s and 90s - man, it just feels wonderful!!!

Regards
Dear tac.... வெகு நாட்களுக்குப்பின் தலைகாட்டியிருக்கீங்க..., வருக.

நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மையே. நீங்கள் குறிப்பிடும் அந்த கால கட்டம் நடிகர்திலகத்தின் அழகிய தோற்றம் கொண்ட காலம் எனலாம்.

அதாவது 'ஊட்டிவரை உறவு' துவங்கி 'அண்ணன் ஒரு கோயில்' வரையான காலம். (தியாகத்திலிருந்து மீண்டும் அவரது உருவம், அறுபதுகளின் துவக்கத்தில் இருந்த நிலை நோக்கி திரும்பியது). ஆனால் அறுபதுகளின் துவக்கத்தில் அந்த தோற்றத்தை தனது அலாதியான பெர்ஃபாமன்ஸைக்கொண்டு வென்று தள்ளினார். (குறிப்பாக 'பீம்பாய்' படங்கள்). ஆனால் தியாகத்துக்குப்பின் அவருக்கு அமைந்த ரோல்கள், அவரது உருவத்தோற்றத்தை மறக்கடிக்கப்போதுமானவையாக அமையவில்லை என்பதும் சற்று ஸ்டீரியோ டைப்பில் அமைந்தன என்பதும் உண்மை. அப்படியும் கூட அவர் ஏராளமான வெற்றிப்படங்களைக்கொடுத்தார். (உங்களது அடுத்த பதிவுக்கான பதிலில் சொல்லியிருக்கிறேன்). தமிழ்ப்பட வெற்றி வரலாற்றை திருப்பிப்போட்ட 'திரிசூலம்' போன்றவை வந்ததும் அந்தக்கால கட்டத்தில்தான்.

நான் எப்போதுமே சொல்லி சொல்லி மாய்வதுபோல 67 முதல் 77 வரையிலான அவரது தோற்றம் கண்ணில் ஒற்றிக்கொள்ளும்படியான அழகு. அப்போது வந்த அவரது படங்களுக்கு அவரது அந்த ஒல்லியான அழகு தோற்றம் ரொம்பவே பொருந்தியது. அந்நேரத்தில்தான் பாலாஜி படங்களில் துவங்கி எல்லா படங்களிலும் ஒன்றிரண்டு சண்டைக்காட்சிகளாவது இடம்பெறத்துவங்கி, படங்களுக்கு சிறப்பு சேர்த்தன. அவற்றில் ஒன்றுதான் நீங்கள் குறிப்பிட்ட 'சவாலே சமாளி'. அந்நேரத்தில் வந்த அவரது படங்களுக்கும் ஏற்றிருந்த ரோல்களுக்கும் அவரது ஸ்லிம் உடலமைப்பு எப்படி ஒத்துழைத்தது என்பது படங்களின் வரிசையைப் பார்த்தாலே தெரியும்.

சமீபத்தில் முரளியண்ணா ஆய்வு செய்த 'திருடன்' படமும் அவற்றில் ஒன்று. 'தங்கச்சுரங்கம்' சி.பி.ஐ ஆபீசரும் அவர்களில் ஒருவர். 'எங்கமாமா'வின் சொர்க்கம் பக்கத்தில் பாடலில், அழகிய நிர்மலாவோடு இவரும் சரிக்கு சரி ஒல்லியாக இருந்ததால்தானே அப்பாடல் காட்சி இன்னும் கண்களைக்கவர்கிறது. உள்ளே பனியன் போடாமல் வெறுமனே ஸ்பன் ஷர்ட்டோடு தெய்வமகனில் 'காதல் மலர்க்கூட்டம் ஒன்று' பாட முடிந்ததும் அந்த ஒல்லி உடம்பு தந்த போனஸ். புரட்சிக்காரன் 'பாரத்'துக்கு (சிவந்த மண்) தன் சாகசங்களில் ஒத்துழைத்தது அந்த ஸ்லிம் பாடிதான் என்றால் மறுப்பதற்கில்லை. நீங்கள் குறிப்பிட்ட சுமதி என் சுந்தரி நம் நெஞ்சங்களில் ஸ்டிக்கராக ஒட்டிக்கொள்ள உறுதுணையாக இருந்ததும் அந்த அழகு உடம்பு அல்லவா? (பொட்டுவைத்த முகமோ, ஒருதரம் ஒரேதரம் பாடல் காட்சிகளை இன்றைக்கும் கண்ணில் ஒற்றிக்கொள்கிறோமே). அந்த சிக்கென்ற தோற்றத்தில்னால் அல்லவா 'பொன்மகள் வந்தாள்' பாடும்போது விஜயலலிதாவை விட ஒல்லியாகத் தோற்றமளித்தார். இவற்றுக்கெல்லாம் சிகரம் வைத்தாற்போல அமைந்த துப்பறியும் 'ராஜா'.

ஜோவியல் படங்களில்தான் என்றில்லை. சீரியஸ் ரோல்களுக்கும் அந்த மெலிந்த உடல் ரொம்பவே பாந்தமாக பொருந்தியது. பேண்ட்டுக்குள் ஷர்ட் இன் பண்ணி சட்டைக்கைகளை முழங்கைகளுக்கு மேல மடித்து விட்டபடி 'அந்தநாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே நண்பனே' பாடிய அதே தோற்றத்தில் இருந்த அழகுக்கு மாறாக, ஏழு ஆண்டுகளுக்குமுன் அவர் நடித்த 'நான் பேச நினைப்பதெல்லாம்' பாடல் காட்சியில் உடல் கண்களை உறுத்தியது என்பதை மறுப்பதற்கில்லை.

'திருமால் பெருமை' திருமங்கை ஆழ்வாரும், சிக்கல் ஷண்முக சுந்தரமும், நாடக நடிகர் ரங்கதுரையும் சிறப்பான நடிப்போடு சேர்ந்து அழகிய தோற்றத்திலும் நம்மைக்கவர்ந்தனர் என்றால் அதற்கு முழுக்காரணம் அவரது அன்றைய அழகிய தோற்றம் என்பது உண்மைதானே. சுருக்கமாகச்சொன்னால், கட்டபொம்மனுக்குப்பின் காணாமல் போன அழகிய தோற்றம் திரும்பக்கிடைத்தது 67-ல் தான். இடைப்பட்ட காலத்தில் தன் அபார நடிப்புத் திறமையால் அந்தக்குறைபாடு தெரியாமல் ஊதித்தள்ளினார் (உதாரணம் நீங்களே இப்போது குறிப்பிட்ட 'எங்கே நிம்மதி' பாடல் காட்சி).

அனைத்துக்கும் மேலாக 'ஒரு குறிப்பிட்ட வார்த்தையால்' அவரது தோற்றத்தை கிண்டல் செய்து வந்தோரின் வாய்களுக்கு 'ரிவிட்' அடிக்கப்பட்டிருந்ததும் அந்த 'பிளாட்டினம் பீரியடில்'தான்.


சாரதா மேடம்,
ரசித்து எழுதிய மிக அருமையான பதிவு. தமிழ் படங்களில் மிக "அழகான" சிவாஜி பார்க்க வேண்டுமா? பிடியுங்கள் இந்த பதிவை என்று சொல்லலாம்!! அந்த அளவுக்கு மிக விரும்பி ரசித்து எழுதிய பதிவு. நடிகர் திலகத்தின் புகழ் பரப்புவதில் உங்களுக்கு தனி இடம் இருக்க வேண்டும்.

இந்த லிஸ்டில் மற்ற சில படங்களையும் சேர்க்கலாம்

1- ராமன் எத்தனை ராமனடி: திரையுலகில் சூப்பர் ஸ்டார் ஆகி சென்னையில் இருந்து தன் சொந்த ஊருக்கு கே ஆர் விஜயாவை கல்யாணம் செய்து கொள்ளும் ஆசையுடன் ரயிலில் வரும் பாட்டு சீனில் என்னஅழகாக இருப்பார் பாருங்கள் - நம் கண்கள் அப்போது வேற எதையும் பார்க்காமல் அவரை மட்டும் தான் பார்க்கும்.

2 - உயர்ந்த மனிதன்: "பால் போலவே - நாளை இந்த வேலை" பாட்டு சீனில் என்ன அழகாக இருப்பார்!! Very handsome Ganesan

3 - கலாட்டா கல்யாணம் - இந்த காமெடி படத்திலும் அழகாக இருப்பார் - குறிப்பாக "மெல்ல வரும் காற்று" பாட்டில் சற்றே சரிந்த கேமரா கோணத்தில் தனக்கே உரிய நடையோடு சிறிய புன்னகை கொடுத்து ஸ்டைல் செய்வார் பாருங்கள் - Unique walking style of nadippu chakravarthy!!!

இன்னும் பல படங்கள் ..........

May be we should prepare a list of all such movies.

Regards

pammalar
13th February 2010, 10:00 PM
டியர் நெள, ராகேஷ், டாக், மோகன், கார்த்திக், சகோதரி சாரதா,

சவாலே சமாளி, தேனும் பாலும் குறித்த நடிப்பு ஆய்வுகள், அலசல்கள் அருமை. தங்களது பதிவுகளையெல்லாம் காணும் போது, நடிகர் திலீப்குமார் அவர்கள் நமது நடிகர் திலகத்தைப் பற்றிக் கூறியது நினைவுக்கு வருகிறது. "சிவாஜி அவர்கள், தனது நடிப்பின் ஒவ்வொரு சின்னச் சின்ன அசைவிலும் முத்திரை பதிப்பார். அவரைப் போல் வேறு எவராலும் நடிக்க முடியாது."

இக்கூற்று, மீண்டும் தங்களது பதிவுகளின் மூலம் மெய்ப்பிக்கப்படுகிறது. பற்பல நன்றிகள்!

தமிழ்த் திரைப்பட வரலாற்றிலேயே, பத்மினியும், சரோஜாதேவியும் இணைந்து நடித்த ஒரே திரைப்படம் "தேனும் பாலும்".

சவாலே சமாளி 100 நாட்களைக் கடந்த சூப்பர் டூப்பர் ஹிட் என்றால், தேனும் பாலும் 50 நாட்கள் ஓடிய சராசரி ஹிட்.

1990களில்(1990-1999), சென்னைத் தியேட்டர்களில் நடைபெற்ற சிவாஜி வாரங்களில் (7 நாட்கள் - 7 படங்கள் - தினசரி 3 காட்சிகள்), ஒவ்வொரு வாரத்திலும் ஒரு நாள் படமாக வலம் வந்த பெருமை "தேனும் பாலும்" திரைப்படத்திற்கு உண்டு.

நடிகர் திலகத்தின் அழகிய தோற்றம் (அவர் என்றுமே நமக்கு அழகு தான் என்பது வேறு விஷயம்) கொண்ட காலகட்டத்தை, தீபாவளி 1966-ல் வெளியான செல்வம் திரைப்படத்திலிருந்தே தொடங்கலாம். தீபாவளி 1977-ல் வெளியான அண்ணன் ஒரு கோயில் வரை சற்றேறக்குறைய அவருக்கு இந்த அழகிய தோற்றம் தான்.

அன்புடன்,
பம்மலார்.

tacinema
14th February 2010, 12:40 AM
சிங்கத்தமிழனின் சாந்தி சாதனைகள் தொடர்கிறது ...



56. லாரி டிரைவர் ராஜாக்கண்ணு - 3.7.1981 - 49 நாட்கள்

60. தியாகி - 3.9.1982 - 72 நாட்கள்

66. சரித்திர நாயகன் - 26.5.1984 - 35 நாட்கள்

67. சிம்ம சொப்பனம் - 30.6.1984 - 46 நாட்கள்

68. எழுதாத சட்டங்கள் - 15.8.1984 - 30 நாட்கள்

69. வம்ச விளக்கு - 23.10.1984 - 46 நாட்கள்



Honestly, this time period is not great and he should have avoided these movies. Wondering how did LDriver Rajakannu managed to run more than that of Eluthatha Sattangal???

Considering that most of these movies were starred by both NT and Prabhu, did NT try to indirectly help Prabhu to establish in tamil films? Nothing against Prabhu, but as a well wisher of NT and his movies, it is just an emotional feeling.

Anyway, it is a fact that these films damaged some of NT's fame. His rival fans got a ground to bring in this period while discussing records.

Regards.
டியர் tac..,
நீங்கள் கொடுத்துள்ள வெற்றி வாய்ப்பை இழந்த படங்களின் பட்டியலும் அது தொடர்பான செய்திகளும், குறிப்பிட்ட அந்த காலகட்டத்தில் வந்த நடிகர்திலகத்தின் அனைத்துப்படங்களும் தோல்வியோ என்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்துகிறது.

அவற்றில் லாரி டிரைவரும், சரித்திர நாயகனும் அவர் நடித்திருக்க வேண்டியில்லாத படங்கள் என்பதை மறுப்பதற்கில்லை, (இன்னொரு படம் 'நாம் இருவர்'). மற்றபடி சிம்ம சொப்பனம், வம்ச விளக்கு, எழுதாத சட்டங்கள் போன்றவை எல்லாம் ஓட்டத்தில் சறுக்கினவையே தவிர தரத்தில் மோசமானவை அல்ல. ('தியாகி' தோல்விப்படம் அல்ல, சுமாரைக்கடந்த வெற்றிப்படமே).

அதே சமயம் இன்னொரு முக்கியமான விஷயம். குறிப்பிட்ட இதே கால கட்டத்தில்தான் நடிகர்திலகத்தின் வெள்ளிவிழாப்படங்களான

தீர்ப்பு,
சந்திப்பு,
நீதிபதி,
முதல் மரியாதை

ஆகினவும், மற்றும் 100 நாட்களைக்கடந்த மாபெரும் வெற்றிப்படங்களான

கீழ்வானம் சிவக்கும்,
வா கண்ணா வா,
மிருதங்க சக்ரவர்த்தி,
வெள்ளை ரோஜா,
திருப்பம்,
தாவணிக்கனவுகள்,
வாழ்க்கை,
பந்தம்
போன்ற படங்களும் வெளியாகின. இவ்வெற்றிப்படங்கள் பெரும்பாலானவற்றில் இளையதிலகம் பிரபுவும் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

(மற்றபடி 'சரித்திர நாயகன்' ஓட்டத்தில் 'சரிந்த நாயகனாகி'ப்போனது உண்மைதான். இப்படத்தின் கதையை நந்தமூரி டி.ராமாராவ் (என்.டி.ஆர்) எழுதினாராம். நல்லவேளை, இதோடு பேனாவை மூடிவைத்து விட்டு அரசியலுக்குப்போய்விட்டார்).

டியர் சாரதா,

Oh no - my intention was totally different. நமது நடிகர் திலகம் நிச்சயமாக இந்த கால கட்டத்தில் நல்ல படங்கள் கொடுத்தவர். அந்த படங்கள் மிக பெரிய BO கூட - நான் மறுக்கவில்லை. அதே சமயம் சில சுமாரான படங்களையம் இந்த நேரத்தில் கொடுத்தவர்; உதாரணம்: லாரி டிரைவர் ராஜகண்ணு & சரித்திர நாயகன். சிவாஜி ரசிகன் என்கிற வரையில் என் ஆதங்கம்: இந்த மாதிரியானபடங்களை NT தவிர்த்திருக்கலாம். மற்ற படி தங்கள் குறிப்பிட்ட தீர்ப்பு, நீதிபதி, சந்திப்பு, முதல் மரியாதை ஆகிய யாவும் 175+ நாட்கள் ஓடிய நல்ல படங்களே. அதுவும் மதுரையில் தீர்ப்பு - நீதிபதி இரு படங்களை ஒரே நேரத்தில் ஒரே காம்ப்ளெக்ஸ் (priya complex, madurai) அந்த காலகட்டத்திலேயே நாட்கள் ஒட்டிய பெருமை அவருக்கு உண்டு.

மேலும் நான் முன்னால் குறிப்பிட படி அந்த கால கட்டத்தில் மற்ற நடிகர்கள் (including ரஜினி-கமல்) ரசிகர்களுடன் வாக்குவாதம் செய்யும்போது அவர்கள் எங்களை மடக்க உடனே கொண்டு வரும் NT படங்கள் தான் லாரி டிரைவர் ராஜகண்ணு & சரித்திர நாயகன் ஆகியவை.

இந்த மாதிரியான படங்களை அவர் செய்யாமல் இருந்திருக்கலாம் - ஒரு ரசிகனின் ஆதங்கமே இவை!

Regards

mr_karthik
14th February 2010, 11:16 AM
Pammalar sir,

Thanks a lot for 'collecting & presenting' the re-release details of NT films all over Tamil Nadu. Eagerly waiting to hear these good news from Chennai too.

pammalar
15th February 2010, 03:41 AM
Valentine Special (VASANTHA MAALIGAI SPECIAL)

http://www.youtube.com/watch?v=5jMGlz1bWrM

Warm Wishes,
Pammalar.

pammalar
15th February 2010, 12:05 PM
Pammalar sir,

Thanks a lot for 'collecting & presenting' the re-release details of NT films all over Tamil Nadu. Eagerly waiting to hear these good news from Chennai too.

நன்றி திரு.கார்த்திக்.

சிங்காரச் சென்னையில் சிங்கத்தமிழனின் திரைக்காவியங்கள் மீண்டும் வெற்றி பவனி வரப் போகும் நாட்களை, தங்களைப் போலவே ஆவலுடன் எதிர்நோக்குகின்றோம்!

அன்புடன்,
பம்மலார்.

pammalar
15th February 2010, 01:06 PM
திரைவானிலே என்றென்றும் புதிய பறவையாக சிறகடித்து பறந்து கொண்டிருக்கும் புதிய பறவை திரைக்காவியம், மதுரை மாநகரின் சென்ட்ரல் சினிமா திரையரங்கில், தினசரி 4 காட்சிகளாக, மீண்டும் வெற்றிக் கொடி நாட்டி, பட்டொளி வீசிப் பறந்து கொண்டிருக்கிறது. 12.2.2010(வெள்ளி) முதல் 14.2.2010(ஞாயிறு) வரையிலான 3 நாட்களில், புதிய பறவை அள்ளித் தந்த மொத்த வசூல் ரூ.25,000/- (ரூபாய் இருபத்து ஐந்தாயிரம்).

புதிய பறவை = பண மழை.

எந்தவொரு நடிகரின் எந்தவொரு புதிய படமும், சென்ட்ரல் தியேட்டர் மற்றும் இது போன்ற தியேட்டர்களில், ஷிஃப்டிங் முறையில் திரையிடப்படும் போது, ஒரு வாரத்தில் ரூ.35,000/- க்கும்(ரூபாய் முப்பத்து ஐந்தாயிரத்துக்கும்) குறைவாகவே மொத்த வசூல் கொடுக்கிறதாம்.

NADIGAR THILAGAM, THE KING OF ACTING IS ALWAYS THE KING AT BOX-OFFICE.

இத்தகவல்களை எமக்களித்த மதுரை ரசிக நல்லிதயம், எமது நெருங்கிய நண்பர், அரசமரம் செவாலியே சிவாஜி குரூப்ஸ் மன்றத்தைச் சேர்ந்த திரு.குப்புசாமி அவர்களுக்கு அன்பான நன்றிகள்!

அன்புடன்,
பம்மலார்.

Murali Srinivas
15th February 2010, 11:28 PM
புதிய பறவை வெளியிடப்படுகிறது என்று செய்தி வந்ததுமே பெரிய வசூலை எதிர்பார்த்தேன். ஆனால் என் எதிர்பார்ப்பையும் தாண்டிய வசூலை கொடுத்ததன் மூலம் மீண்டும் மதுரை தன்னை நிரூபித்துக் கொண்டிருக்கிறது. யார் யார் எல்லாமோ மதுரையை சொந்தம் கொண்டாடினாலும், எங்கள் நான்மாடக்கூடல் என்றுமே அன்னை இல்லத்திற்கே பட்டாபிஷேகம் செய்யும் என்பது தெளிவாகி இருக்கிறது.

நன்றி சுவாமி நன்றி. நல்ல தகவலை சொன்னதற்கு நன்றி.

அன்புடன்

RC
16th February 2010, 06:27 AM
thEnum paalum songs in youtube...
http://www.youtube.com/results?search_query=thenum+paalum&search_type=&aq=0&oq=thenum+p

pammalar
16th February 2010, 12:03 PM
எங்கள் நான்மாடக்கூடல் என்றுமே அன்னை இல்லத்திற்கே பட்டாபிஷேகம் செய்யும்


பிரமாதம். இந்த சொற்கள் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டியவை. மிக்க நன்றி முரளி சார்.

அன்புடன்,
பம்மலார்.

mr_karthik
16th February 2010, 12:41 PM
thEnum paalum songs in youtube...
http://www.youtube.com/results?search_query=thenum+paalum&search_type=&aq=0&oq=thenum+p
Thank you RC sir

abkhlabhi
17th February 2010, 01:57 PM
TMS - என்று என்றும் மறக்க முடியாத மிக சிறந்த பாடகர். விரைவில் குணமடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்

rangan_08
17th February 2010, 07:55 PM
Valentine Special (VASANTHA MAALIGAI SPECIAL)

http://www.youtube.com/watch?v=5jMGlz1bWrM

Warm Wishes,
Pammalar.


asathiteenga pammalar sir. thank you.

rangan_08
17th February 2010, 07:56 PM
Pammalar sir,

Thanks a lot for 'collecting & presenting' the re-release details of NT films all over Tamil Nadu. Eagerly waiting to hear these good news from Chennai too.

I second this wish.

Thank you pammalar sir for the info.

rangan_08
17th February 2010, 07:59 PM
Pudhiya Paravai continues to make history. :clap:

Thank you pammalar sir.

rangan_08
17th February 2010, 08:01 PM
நன்றி திரு.மோகன், தங்களது பொக்கிஷம் (சிடி/டிவிடி சேகரிப்பு) வியக்க வைக்கிறது. அது மென்மேலும் வளர்ந்தோங்க வாழ்த்துக்கள்!

அன்புடன்,
பம்மலார்.

Thank you. Will reach 50 soon and aiming for a century :)

RAGHAVENDRA
18th February 2010, 07:55 AM
சற்று நீண்ட இடைவெளிக்குப் பின்னர் அனைவரையும் சந்திப்பதில் பெரு மகிழ்ச்சி. அதற்குள் ஆறாவது பாகத்தில் நுழைந்து 8வது பக்கம் நிரம்ப உள்ளது. ... என்ன வேகம்... வேகம் மட்டுமா ... விஷயமும் கூட .. எவ்வளவு தகவல்கள் ... எவ்வளவு எண்ணப் பரிமாற்றங்கள்.... பம்மலாரின் பதிவுகள் இத்திரியை செய்திக் கூடமாகவே மாற்றியுள்ளன. புதிய பறவை மதுரையில் செய்து வரும் சாதனை ... முரளி சார் சொன்னது போல் மதுரை முந்திக் கொள்கிறது சிங்கத் தமிழனைப் பெருமைப் படுத்துவதில்...

குறந்தகடு நெடுந்தகடு வெளியீடு பற்றிய அலசலில் பல தகவல்கள் உள்ளன. பாராட்டுக்கள்.

சமீபத்தில் ராஜ் வீடியோ விஷனில் மிருதங்க சக்கரவர்த்தி வெளியிட்டுள்ளனர். நெடுந்தகடு வடிவில் தான். பல்வேறு நிறுவனங்களின் சார்பில் வெளியிடப் பட்டுள்ள நடிகர்திலகத்தின் படங்களைப் பட்டியலிட்ட பின்னர் இன்னும் மீதம் வெளிவர வேண்டியவை சிறிதே. அதை ஒரு கண்ணோட்டம் பார்ப்போம்.

பழைய படங்கள்

1. மனிதனும் மிருகமும் ... இது வெளிவர வாய்ப்புள்ளதாக தெரியவில்லை.
2. கண்கள் .. இதுவும் அதே போல்
3. பெற்ற மனம் ... இதுவும் அதே போல்
4. பூங்கோதை ... இதன் கதியும் தெரியவில்லை
5. திரும்பிப் பார்... 15 முதல் 50 சதம் வரை வாய்ப்புள்ளது
6. இல்லற ஜோதி - 90 சதம் வாய்ப்புள்ளது.
7. உலகம் பல விதம் ... 10 சதம் வாய்ப்புள்ளது. அருமையான நகைச்சுவை நிறைந்த படம். காக்கா ராதாகிருஷ்ணனுக்கு பெயர் சொல்லக் கூடிய படம்.
8. கோட்டீஸ்வரன்... வந்து விட்டதா தெரியவில்லை. வரவில்லையென்றால் வாய்ப்புள்ளது.
9. நல்ல வீடு ... முற்றிலும் வாய்ப்புக் குறைவு
10. நானே ராஜா ... வந்து விட்டதா தெரியவில்லை. வரவில்லையென்றால் வாய்ப்புள்ளது.
11. பெண்ணின் பெருமை ... வாய்ப்புள்ளது.
12. மணமகன் தேவை ... வந்து விட்டதா தெரியவில்லை. வரவில்லையென்றால் வாய்ப்புள்ளது.
13. பாக்கியவதி .. வந்து விட்டதா தெரியவில்லை. வரவில்லையென்றால் வாய்ப்புள்ளது.
14. தங்க பதுமை ... வாய்ப்புள்ளது
15. அவள் யார் ... வாய்ப்புக் குறைவு
16. குறவஞ்சி ... வாய்ப்புள்ளது
17. விடிவெள்ளி ... வந்து விட்டதா தெரியவில்லை. வரவில்லையென்றால் வாய்ப்புள்ளது.
18. எல்லாம் உனக்காக ... வாய்ப்புக் குறைவு
19. ஸ்ரீ வள்ளி ... 50 சதம் வாய்ப்புள்ளது
20. வளர் பிறை ... வாய்ப்பு தெரியவில்லை. ஆனால் வந்தே ஆகவேண்டும் என்கிற அளவிற்கு அருமையான படம் .. நடிகர் திலகத்தின் ஊமை நடிப்பிற்காகவே பார்க்க வேண்டயது.
21. செந்தாமரை ... வாய்ப்புக் குறைவு .. ஆனால் பூவிருக்கு வண்டிருக்கு என்ற இனிமையான பாடலுக்காகவும் அப்பாடலில் நடிகர் திலகத்தின் தோற்றத்திற்காகவும் டி.எம்.எஸ். பி.சுசீலா குரலுக்காவும் ஏங்க வைக்கும் படம். மற்ற படி படம் சொல்லும் படி பெரியதாக ஒன்றும் இல்லை. கே.ஆர்.ராமசாமி நடிகர் திலகம் இணைந்து நடித்த மற்றொரு படம்.
22. இருவர் உள்ளம் ... வாய்ப்புள்ளது
23. நான் வணங்கும் தெய்வம் ... வாய்ப்புக் குறைவு
24. பாலாடை ... வாய்ப்புள்ளது
25. தங்கைக்காக .. வாய்ப்புள்ளது
26. எங்கள் தங்க ராஜா ... வந்து விட்டதா தெரியவில்லை. வரவில்லையென்றால் வாய்ப்புள்ளது.
27. மனிதரில் மாணிக்கம் ... வந்து விட்டதா தெரியவில்லை. வரவில்லையென்றால் வாய்ப்புள்ளது.
28. தாய் .. வந்து விட்டதா தெரியவில்லை. வரவில்லையென்றால் வாய்ப்புள்ளது.
29. மனிதனும் தெய்வமாகலாம் .. வந்து விட்டதா தெரியவில்லை. வரவில்லையென்றால் வாய்ப்புள்ளது.
30. இளைய தலைமுறை ... வாய்ப்புக் குறைவு
31. ஜெனரல் சக்கரவர்த்தி .. வாய்ப்புள்ளது
32. விஸ்வரூபம் ... தெரியவில்லை
33. சத்திய சுந்தரம் ...தெரியவில்லை. வாய்ப்புள்ளது.
34. லாரி டிரைவர் ராஜாக்கண்ணு ... தெரியவில்லை.
35. மாடி வீட்டு ஏழை ... தெரியவில்லை
36. கருடா சௌக்யமா .. வாய்ப்புள்ளது
37. தியாகி ... தெரியவில்லை
38. பரீட்சைக்கு நேரமாச்சு .. வந்து விட்டதா தெரியவில்லை. வரவில்லையென்றால் வாய்ப்புள்ளது.
39. ஊரும் உறவும் ... தெரியவில்லை
40. திருப்பம் ... வந்து விட்டதா தெரியவில்லை. வரவில்லையென்றால் வாய்ப்புள்ளது.
41. சிரஞ்ஜீவி ... வந்து விட்டதா தெரியவில்லை. வரவில்லையென்றால் வாய்ப்புள்ளது.
42. தராசு... தெரியவில்லை
43. சரித்திர நாயகன் ... தெரியவில்லை
44. வம்ச விளக்கு ... தெரியவில்லை
45. நாம் இருவர் ... தெரியவில்லை
46. தாம்பத்யம் ... தெரியவில்லை
47. என் தமிழ் என் மக்கள் ... தெரியவில்லை
48. என் ஆச ராசாவே ... தெரியவில்லை
49. பூப்பறிக்க வருகிறோம் ... தெரியவில்லை

கௌரவத் தோற்றம்

1. தாயைப் போல பிள்ளை நூலைப் போல சேலை ... தெரியவில்லை .
2. குழந்தைகள் கண்ட குடியரசு .. வாய்ப்புள்ளது
3. தாயே உனக்காக .. வாய்ப்புள்ளது
4. நட்சத்திரம் . தெரியவில்லை


இவற்றைத் தவிர்த்து நடிகர் திலகத்தின் மற்ற தமிழ்ப் படங்கள் அனைத்தும் வெளியாகி விட்டன. மற்ற மொழிப் படங்களில் கிடைக்கக் கூடிய படங்கள்

1. தர்த்தி -
2. பங்காரு பாபு
3. பக்க துக்காராம்
4. ஸ்கூல் மாஸ்டர் கன்னடம்
5. தச்சோளி அம்பு
6. யாத்ரா மொழி

சில படங்கள் அந்தந்த மாநிலங்களில் கிடைக்கலாம். அந்தந்த மாநிலங்களில் வசிக்கும் நம் நண்பர்கள் தகவல் கிடைத்தால் தெரிவிக்கலாம்.

கிட்டத் தட்ட 200 முதல் 220 படங்கள் வெளிவந்துள்ளன.

முரளி சார் ஏற்கெனவே சொன்னது போல் இணைய இணைப்புக் கிடைத்தவுடன் என்னுடைய முதல் பதிவை எழுதியிருக்கிறேன். அடுத்தடுத்தப் பதிவுகளில் மீண்டும் சந்திப்போம்.

அனைவருக்கும் நன்றி

ராகவேந்திரன்

pammalar
18th February 2010, 03:24 PM
ஆறாவது காண்டத்தில், தமது முதல் பதிவை, வெளிவர வேண்டிய நடிகர் திலகத்தினுடைய திரைக்காவியங்களின் குறுந்தகடு/நெடுந்தகடு புள்ளி விவரங்களுடன், ஆதாரபூர்வமாக, ஆணித்தரமாக பதிவு செய்த, சிங்கத்தமிழனின் தங்க நிகர் ரசிகபக்தர், திரு. ராகவேந்திரன் அவர்களை வருக! வருக! என இரு கரம் கூப்பி அன்புடன் வரவேற்கிறோம்.

ராகவேந்திரன் சார், வாருங்கள்! தங்களது மேலான பதிவுகளை அளித்து தொடர்ந்து கலக்குங்கள்!

மோகன் சார், தங்களுக்கு எனது நன்றிகள்!

அன்புடன்,
பம்மலார்.

pammalar
18th February 2010, 03:41 PM
நடிகர் திலகத்தின் பாட்டுக்குரல், பாடகர் திலகம் டி.எம்.எஸ். அவர்கள் விரைவில் நலம் பெற எல்லாம் வல்ல இறைவனை இறைஞ்சுகின்றோம்.

பம்மல் ஆர். சுவாமிநாதன்.

pammalar
18th February 2010, 03:52 PM
NT's singing voice, TMS is returning back to normal health.

Please click the following link for more info.

http://cinema.dinamalar.com/tamil-news/1763/cinema/Kollywood/TMS-gets-discharged-tomorrow.htm

Regards,
Pammalar.

pammalar
18th February 2010, 04:16 PM
The Emperor of World Cinema, rules supreme in the Manchester of South India. Yes!

கோவை மாநகரின், பழம்பெரும் திரையரங்கமான டிலைட் திரையரங்கில், கலையுலகின் முழுமுதற்கடவுளான சிவாஜி கணேசரின், முழுமுதற் திரைக்காவியமான பார் போற்றும் பராசக்தி, 12.2.2010(வெள்ளி) முதல் 14.2.2010(ஞாயிறு) வரை 3 நாட்களுக்கு, தினசரி 4 காட்சிகளாகத் திரையிடப்பட்டு, அமோக வரவேற்பைப் பெற்றுள்ளது. பிப்ரவரி 14, ஞாயிறு மாலைக் காட்சியில் கோவை ரசிகர்கள் நிகழ்த்திய ஆரவார ஆர்ப்பாட்டங்களில் அரங்கமே குலுங்கியிருக்கிறது.

இத்தகவலை எமக்கு வழங்கிய ரசிக நல்லிதயம் சிவாஜி வெள்ளியங்கிரி அவர்களுக்கு எமது மனமார்ந்த நன்றிகள்!

அன்புடன்,
பம்மலார்.

Murali Srinivas
19th February 2010, 09:48 PM
மதுரையில் புதிய பறவையின் வெற்றி பவனி குறித்து நண்பர் சுவாமியுடன் பேசிக் கொண்டிருக்கும்போது ஒரு தகவலை சொன்னார். அதாவது கடந்த நான்கு வருடங்களாக எல்லா வருடமும் இதே சென்ட்ரல் திரையரங்கில் புதிய பறவை வெளியாகியிருக்கிறது. இடைவெளி என்பதே இல்லாமல் ரிலீஸ் ஆகியிருக்கிறது. இதை தவிர டி.வியில் இந்த நான்கு வருடங்களில் அதிகமாக ஒளிபரப்பட்ட படங்களில் புதிய பறவையும் ஒன்று. இதை தவிர இப்போது வெளியாகியிருக்கும் பிரிண்டில் சில பல இடங்களில் கட்கள் வேறு இருக்கின்றனவாம். இத்தனை எதிர்மறையான விஷயங்கள் இருந்த போதிலும் இந்த படம் பெற்ற வசூல் ஒரு பிரமிப்பான சாதனை. இந்த படத்தின் இடத்தில், அண்மைக் காலத்தில் மதுரையில் அதிகம் வெளியாகாத சிவந்த மண், எங்கள் தங்க ராஜா, சொர்க்கம் போன்றவை வெளியாகியிருந்தால் அந்த சென்ட்ரல் சினிமாவே தாங்கியிருக்காது.

அன்புடன்

PARAMASHIVAN
19th February 2010, 10:12 PM
I regard Shivaji sir as the GREATEST ACTOR INDIAN HAD EVER PRODUCED, but in the mid seventies till early 80's , he had spoiled his image by doing 'silly' roles like that song with ambika, where he looks like her grandfather

'Kaalam maaralam'

then another duet with Sridevi in some other movie...

NOV
20th February 2010, 09:27 AM
Moondru Deivangal on Vellithirai now!

Three convicts escape from jail and seek refuge in SV Suppiah's house. They are Siva, Muthu and Nagu... :rotfl:
The whole film is quite light and filled with lots of funny moments.

Surprisingly the first three songs DO NOT feature NT - its quite unthinkable that a big star will allow this, even now!

My beloved திருப்பதி சென்று திரும்பி வந்தால் ஓர் திருப்பம் நேருமடா by Sirgazhi is sung by SV Suppiah.

Then Sivakumar sings முள்ளில்லா ரோஜா முத்தாட பொன்னூஞ்சல் கண்டேன்

The first song for Sivaji appears after the interval - தாயென்னும் செல்வங்கள் தாலாட்டும் தீபம் வைரங்கள் போலே ஒளி விடட்டும் - a deepavali song.

HARISH2619
20th February 2010, 04:56 PM
DEAR NOV,
Two interesting things about moondru deivangal,
NT didn't have any makeup in this film,he would appear in his own hairstyle.
All the three had the first part of their real names as character names siva(sivaji),muthu(muthuraman) and naga(nagesh)

saradhaa_sn
20th February 2010, 07:11 PM
DEAR NOV,
Two interesting things about moondru deivangal,
NT didn't have any makeup in this film,he would appear in his own hairstyle.
All the three had the first part of their real names as character names siva(sivaji),muthu(muthuraman) and naga(nagesh)

NOV & செந்தில்...

'மூன்று தெய்வங்கள்' படம் பற்றிய நீங்கள் விரும்பும் சிறப்புக்கள் அனைத்தும், ஏற்கெனவே நான் பதிந்துள்ள கட்டுரையில் அலசப்பட்டுள்ளது. அதற்கான இணைப்பு:
(What are all you need about 'Moondru Dheivanggal' are completely analysed in my analysis in Tamil, in this link:)

http://www.mayyam.com/hub/viewtopic.php?t=7685&postdays=0&postorder=asc&start=405

and

http://www.mayyam.com/hub/viewtopic.php?t=7685&postdays=0&postorder=asc&start=420

(Totally four parts)

இதன் விவரம், நமது திரியின் முதற்பக்கத்திலும் இடம் பெற்றுள்ளது
(which is also available in the first page of our thread)

(சாரதாவுக்கு இங்கிலீஷ் தெரியுமாம் :lol: )

Vivasaayi
21st February 2010, 07:55 PM
is there a way to find "ennirendu pathinaru vayadhu" video on net.

All other famous songs of shivaji are there except this song.

RC
22nd February 2010, 12:40 AM
vivasaayi - This song used to be on youtube. A lot of accounts got inactivated and it could be one of those accounts that hosted this song... kidaichchaa post-REn...

joe
22nd February 2010, 11:17 AM
A lot of accounts got inactivated and it could be one of those accounts that hosted this song..

True ..one of those accounts is mine :oops:

Vivasaayi
22nd February 2010, 07:59 PM
vivasaayi - This song used to be on youtube. A lot of accounts got inactivated and it could be one of those accounts that hosted this song... kidaichchaa post-REn...

thanks RC :)

saradhaa_sn
23rd February 2010, 07:53 PM
I regard Shivaji sir as the GREATEST ACTOR INDIAN HAD EVER PRODUCED, but in the mid seventies till early 80's , he had spoiled his image by doing 'silly' roles like that song with ambika, where he looks like her grandfather

'Kaalam maaralam'

then another duet with Sridevi in some other movie...
அடடே தம்பி நீங்களா...?

LOCK- ஆகிறதுக்குன்னே THREAD OPEN பண்ற பார்ட்டி இல்லே நீங்க...?

HARISH2619
24th February 2010, 02:55 PM
I regard Shivaji sir as the GREATEST ACTOR INDIAN HAD EVER PRODUCED, but in the mid seventies till early 80's , he had spoiled his image by doing 'silly' roles like that song with ambika, where he looks like her grandfather

'Kaalam maaralam'

then another duet with Sridevi in some other movie...

MR PARAMASIVAN
The song which you had mentioned is from the movie "vaazhkkai" where shivaji sir ,THE GREATEST ACTOR INDIA HAS EVER PRODUCED appears in that younger getup only for 15 to 20 minutes.But do you know how good a movie that is? If u have not watched it please get a copy ,watch it and comment.

pammalar
24th February 2010, 03:40 PM
திரைவானில் என்றென்றும் அழகிய பறவையாக சிறகடித்துப் பறந்து கொண்டிருக்கும் "புதிய பறவை" திரைக்காவியம், மதுரையம்பதியின் சென்ட்ரல் சினிமா திரையரங்கில், தினசரி 4 காட்சிகளாக, 12.2.2010 வெள்ளி முதல் 18.2.2010 வியாழன் வரை, அமோக வரவேற்புடன் ஒடியுள்ள ஒரு வார கால கட்டத்தில், அள்ளித் தந்துள்ள மொத்த வசூல் ரூ.45,000 /- (ரூபாய் நாற்பத்து ஐந்தாயிரம்). பழைய படங்களைப் பொறுத்த வரை, இது மிகப் பெரிய, அரியதொரு சாதனை.

விரைவில், சென்ட்ரல் சினிமாவில், அவன் தான் நடிகனின் "அவன் தான் மனிதன்".

பெருமிதத்துடன்,
பம்மலார்.

pammalar
24th February 2010, 05:33 PM
சிங்கத்தமிழனின் சாந்தி சாதனைகள் தொடர்கிறது ...

74. வீரபாண்டியன் - 14.4.1987 - 32 நாட்கள்

75. அன்புள்ள அப்பா - 16.5.1987 - 34 நாட்கள்

76. ஜல்லிக்கட்டு - 28.8.1987 - 70 நாட்கள்

77. கிருஷ்ணன் வந்தான் - 28.8.1987 - 49 நாட்கள் (பகல் காட்சியில்)

78. என் தமிழ் என் மக்கள் - 2.9.1988 - 35 நாட்கள்

79. புதிய வானம் - 10.12.1988 - 100 நாட்கள்

80. ஞான பறவை - 11.1.1991 - 21 நாட்கள்

81. பசும்பொன் - 14.4.1995 - 56 நாட்கள்

குறிப்பு:
ஒரு நடிகரின், இரு புதிய திரைப்படங்கள், ஒரே நாளில் ஒரே திரையரங்கில் (அதுவும் மிகப் பெரிய திரையரங்கமான சாந்தி திரையரங்கில்) பகல் காட்சியாகவும், ரெகுலர் காட்சிகளாகவும் வெளியானது எமக்குத் தெரிந்த வரை நமது நடிகர் திலகம் ஒருவருக்கே.
(தேதி : 28.8.1987, திரைப்படங்கள் : கிருஷ்ணன் வந்தான்(பகல் காட்சி), ஜல்லிக்கட்டு(3 காட்சிகள்))

சிங்கத்தமிழனின் சாந்தி சாதனைகளின் புள்ளி விவரங்கள்:

பாவமன்னிப்பு முதல் பசும்பொன் வரை வெளியான புதிய தமிழ்த் திரைக்காவியங்கள் : 81

இதில் வெள்ளி விழா கண்டவை : 6

20 வாரங்கள் முதல் 24 வாரங்கள் வரை ஓடியவை : 2

100 நாட்கள் முதல் 139 நாட்கள் வரை ஓடியவை : 33

10 வாரங்கள் முதல் 14 வாரங்கள் வரை ஓடியவை : 12

50 நாட்கள் முதல் 69 நாட்கள் வரை ஓடியவை : 9

43 நாட்கள் முதல் 49 நாட்கள் வரை : 7

6 வாரங்கள் வரை : 12

சாதனைகள் எனும் சாம்ராஜ்யத்திற்கு, நிரந்தர சக்கரவர்த்தி, சிங்கத்தமிழன் சிவாஜி ஒருவரே !

சாந்தி சாதனைகள் நிறைவு.

சிங்கத்தமிழனின் சாந்தி சாதனை விளக்கங்கள் விரைவில் ...

அன்புடன்,
பம்மலார்.

saradhaa_sn
25th February 2010, 12:15 PM
நேற்றைய (24.02.2010) 'சிங்கத்தமிழன் சிவாஜி' (வசந்த் டி.வி.) நிகழ்ச்சியில், விநியோகஸ்தர்கள் சங்கத்தலைவர் 'கலைப்புலி சேகரன்' கலந்துகொண்டு நடிகர்திலகத்துடனான தன்னுடைய இனிய நினைவுகளைப் பகிர்ந்துகொண்டார். இதில் பெரிய விசேஷம், வழக்கமாக வரும் வி.ஐ.பி.க்கள் போல அரைத்த மாவை அரைக்காமல், புதிய கோணத்தில், கிட்டத்தட்ட ஒரு ரசிகனின் பார்வையில் அவரை ரசித்தார்.

தான் முதன்முதலில் வினியோகஸ்தரானதே, நடிகர்திலகத்தின் 'என் தம்பி' படத்தின் மறு வெளியீடு மூலம்தான் என்றும், அந்தப்படததை சென்னை ராயபுரம் பிரைட்டன் தியேட்டரில் வெளியிட்டு லாபம் பார்த்தபின்னரே, இதையே தொழிலாக தொடர்வது என்று முடிவெடுத்ததையும், இரண்டாவது வெளியீடாக 'நீதி' படத்தை மறு வெளியீடு செய்து அதிலும் பெரும் லாபம் கிடைக்கவே, அடுத்து 'வசந்த மாளிகை' படத்தை ஒன்றரை ல்ட்சம் ரூபாய் எனும் பெரும் தொகை கொடுத்து வாங்கி ஷிப்டிங் முறையில் பல அரங்குகளில் வெளியிட்டு, முழுசாக ஐந்து லட்சம் லாபம் கிடைத்ததையும் விவரமாகச்சொன்னார்.

இதைச்சொல்லும்போது நடிகர்திலகத்தோடு, மக்கள் திலகம் திரு எம்.ஜி.ஆரையும் சேர்த்துக்கொண்டு, இவர்கள் இருவரின் படங்கள் என்றென்றைக்கும் வசூலை வாரிக்குவிக்கும் படங்களாக விளங்கி வருவதையும், எத்தனையோ வெளியீட்டாளர்கள் புதிய படங்களை வாங்கி திரையிட்டு நஷ்டமடைந்தபின்னர், அதை ஈடு கட்ட நடிகர்திலகம் மற்றும் மக்கள் திலகம் படங்களை வாங்கி மறுவெளியீடு செய்து லாபம் பார்த்து, தங்கள் நஷ்ட்டங்களை ஈடு செய்தனர் என்றும் விலாவரியாக விளக்கினார்.

தானொரு சிவாஜி ரசிகர்மன்றத் தலைவனாக, நடிகர்திலகத்தை அன்னை இல்லத்தில் சந்தித்த நிகழ்வுகளை, ஒரு பக்தனின் ஸ்தானத்தில் இருந்து உணர்ச்சி பொங்கக் கூறினார். வி.ஐ.பி.க்கள் யாரும் அதிகம் பேசாத, சிவாஜி ரசிகர் மன்ற படை பற்றியும், அது காங்கிரஸுக்கு எவ்வளவு பெரிய தொண்டர் படையாக விளங்கியது என்பது பற்றியும் அவர் விளக்கியபோது, 'ஆகா, இப்படி ஒரு ஆளைத்தான் தேடிக்கொண்டிருந்தோம்' என்று மனம் குதூகலித்தது. நாம் இங்கே இணையத்தில் பகிர்ந்துகொள்ளும் பல விஷயங்களைப்பற்றி (மற்றவர்கள் யாரும் சொல்லாதவைகளை) அவர் தனது உரையில் குறிப்பிட்டார்.

நடிகர்திலகம், மக்கள் திலகம் இருவரையும் ஆயுதமாக ஏந்தி, இன்றைய நடிகர்கள் சிலருக்கு சின்ன சின்ன 'பஞ்ச்'கள் ஆங்காங்கே கொடுத்தார். நடிகர்திலகத்தின் ரசிகர்கள் இன்றைக்கும் கூட அவர்மீது உயிரையே வைத்திருப்பதையும், அவரது புகழ்பரப்ப மேற்கொள்ளும் முயற்சிகளையும் அழகுற எடுத்துரைத்தார்.

காமராஜர் சாலையில், மகாத்மா காந்தி, மற்றும் பெருந்தலைவர் காமராஜர் சிலைகளுக்கருகே நடிகர்திலகத்துக்கு சிலையமைத்து, வெளிநாட்டிலிருந்தும், வெளிமாநிலங்களில் இருந்தும் வரும் சுற்றுலா பயணிகளும் ரசிகர்களும் கண்டுகளிக்கும் வண்ணம் செய்த முதல்வர் கலைஞருக்கு அதிகம் நன்றி தெரிவித்துக்கொண்ட திரு. கலைப்புலி சேகரன், பள்ளி பாடப்புத்தகங்களில் நடிகர்திலகம் பற்றிய அத்தியாயம் மாணவர்களுக்கு பாடமாக வைக்கப்பட வேண்டுமென்று கலைஞருக்கு வேண்டுகோள் விடுத்தார்.

மொத்தத்தில் நேற்றைய நிகழ்ச்சி, வழக்கமாக வி.ஐ.பிக்கள் தரும் அரைத்த மாவு அல்ல, முற்றிலும் நாம் எதிர்பாராத இனிய விருந்து. ரசிகர்களின் உள்ளக்கிடக்கையை பிரதிபலித்த அற்புத உரை.

நன்றி, கலைப்புலி சேகரன் சார். நமது நடிகர்திலகத்தின் புகழ்பாட ஆண்டவன் உங்களுக்கு நீண்ட ஆயுளைத்தரட்டும்.

RC
26th February 2010, 04:53 AM
பாபு சினிமா விமர்சனம் (விகடன் பொக்கிஷம்)

'நடிப்பினால் ஒரு காவியமே படைத்திருக்கிறார்' என்று சொல்வதுகூட சிவாஜியின் அற்புதமான நடிப்புக்குப் போதுமான பாராட்டாக இருக்க முடியாது. அப்படி ஓர் அருமையான நடிப்பு!

ரிக்ஷாவின் கைப்பிடியைக் காலால் உதைத்து, லாகவமாகக் கையில் பிடித்துக்கொண்டு, துள்ளி ஓடும் இளமைத் துடிப்புள்ள ரிக்ஷாக்காரனாகத் தோன்றுவது முதல், கூனிக்குறுகி முதுமையடைந்து, ரிக்ஷாவைத் தூக்க முடியாத முதுமை வரை, ஒவ்வொரு நிலையிலும் சிவாஜியின் நடிப்பில் முத்திரை பதிகிறது.

பணக்கார சமதர்மவாதியான பாலாஜியின் பரிவைப் பார்த்து விட்டு, ''நீங்க எலெக்ஷனுக்குத்தானே நிற்கப் போறீங்க?'' என்று கேட்கும் அப்பாவித்தனம்; நொடித் துப்போன ஜானகி குடும்பத்துக்குக் காவல் நாயாகத் தன்னை அர்ப் பணித்துக் கொள்ளும் விசுவாசம் - இப்படிப் பல காட்சிகள் குறிப் பிடத்தக்கவை.

சிவாஜி-விஜயஸ்ரீயின் காதலில், கதை ஜிலுஜிலுப்பாக ஆரம்பிக்கிற ஜோர் பிரமாதமாக இருக்கிறது.

பாபுவின் லட்சியப்படி நிர்மலா, பட்டம் வாங்கியதோடு கதையை முடித்திருக்கலாம். அதற்கு மேலும் கதையை நீட்டியிருக்க வேண் டுமா?

பணக்காரத் தம்பதியாக வரும் பாலாஜி-சௌகார் ஜானகி, குழந்தை மூவரும் நெஞ்சையள் ளும் பாத்திரங்கள். பாலாஜி வெகு அநாயாசமாகவும் அழகாகவும் நடித்துப் பெயரைத் தட்டிக்கொள் கிறார். குழந்தை பிச்சையெடுத்து விட்டு அழும்போது இளகாத நெஞ்சமும் இளகும். சோதனை யால் நிலை தடுமாறி குன்றிப் போன உயர்குலப் பெண்மணி ஒருவரின் தவிப்பு, தயக்கம் அத்த னையையும் உருக்கமாகச் சித்திரித் திருக்கிறார், சௌகார் ஜானகி.

படத்துக்குக் கவர்ச்சியூட்ட வேண்டிய பொறுப்பை சிவ குமார்-நிர்மலா ஜோடியிடம் விட்டிருக்கிறார்கள். மினி டிரா யரைப் போட்டுக்கொண்டும், மழையினால் உடை, உடம்பில் ஒட்ட நனைந்துகொண்டும் நிர்மலா அந்தப் பொறுப்பை நிறைவேற்ற முயன்றிருப்பதில் குறையில்லை. ஆனால், சிவ குமார்-நிர்மலா காதலைவிட நம் மனத்தில் சுவையூட்டியது ஆரம் பத்தில் மின்னல் போல் தோன்றி மறைந்த சிவாஜி-விஜயஸ்ரீ காதல் காட்சிதான்.

'கஞ்சி வரதப்பா' பாட்டுக்கு ஏற்ப புன்னகை சிந்த, சாப்பாட்டுக்கூடையுடன் ஒயிலாக இடையை அசைத்து, விஜயஸ்ரீ நடந்து வரும் அழகில் சிருங்காரம் சொட்டுகிறது. முயன்றால் கதாநாயகி அந்தஸ் துக்கு சிறப்பாகத் தேறிவிடக்கூடிய நளினமும் அழகும் இவரிடம் பொருந்தியிருக்கின்றன.

சிவாஜியின் நடிப்பு என்ற தங்க விளக்கு இருக்கிறது; ஆனால் கதை என்ற திரி சரியாக இல்லையே!

tacinema
26th February 2010, 07:00 AM
திரைவானில் என்றென்றும் அழகிய பறவையாக சிறகடித்துப் பறந்து கொண்டிருக்கும் "புதிய பறவை" திரைக்காவியம், மதுரையம்பதியின் சென்ட்ரல் சினிமா திரையரங்கில், தினசரி 4 காட்சிகளாக, 12.2.2010 வெள்ளி முதல் 18.2.2010 வியாழன் வரை, அமோக வரவேற்புடன் ஒடியுள்ள ஒரு வார கால கட்டத்தில், அள்ளித் தந்துள்ள மொத்த வசூல் ரூ.45,000 /- (ரூபாய் நாற்பத்து ஐந்தாயிரம்). பழைய படங்களைப் பொறுத்த வரை, இது மிகப் பெரிய, அரியதொரு சாதனை.

விரைவில், சென்ட்ரல் சினிமாவில், அவன் தான் நடிகனின் "அவன் தான் மனிதன்".

பெருமிதத்துடன்,
பம்மலார்.

டியர் பம்மலர்
ரொம்ப நல்ல நியூஸ். மதுரை மக்கள், நடிகர் திலகம் ரசிகர்கள் மிகவும் கொடுத்து வைத்தவர்கள்.

நடிகர் திலகத்தின் 175 படம் அவன் தான் மனிதன்: அவரின் அட்டகாசமான ஸ்டைல்-க்கவும், அழகான தோற்றத்திற்க்காகவும் எத்தனை முறை வேண்டுமானாலும் பார்க்கலாம். புதிய பறவையின் வசூலை மிக சுலபமாக அடிக்கும் என்று நினைக்கிறேன்.

if possible, please post here rasigar mandra posters.

Regards

tacinema
26th February 2010, 07:18 AM
பாபு சினிமா விமர்சனம் (விகடன் பொக்கிஷம்)

'நடிப்பினால் ஒரு காவியமே படைத்திருக்கிறார்' என்று சொல்வதுகூட சிவாஜியின் அற்புதமான நடிப்புக்குப் போதுமான பாராட்டாக இருக்க முடியாது. அப்படி ஓர் அருமையான நடிப்பு!

ரிக்ஷாவின் கைப்பிடியைக் காலால் உதைத்து, லாகவமாகக் கையில் பிடித்துக்கொண்டு, துள்ளி ஓடும் இளமைத் துடிப்புள்ள ரிக்ஷாக்காரனாகத் தோன்றுவது முதல், கூனிக்குறுகி முதுமையடைந்து, ரிக்ஷாவைத் தூக்க முடியாத முதுமை வரை, ஒவ்வொரு நிலையிலும் சிவாஜியின் நடிப்பில் முத்திரை பதிகிறது.

சிவாஜியின் நடிப்பு என்ற தங்க விளக்கு இருக்கிறது; ஆனால் கதை என்ற திரி சரியாக இல்லையே!

Dear RC,
Thanks.

அந்த வாக்கியங்கள் முற்றிலும் உண்மை; பாபு - கொஞ்சம் வீக் ஸ்டோரி கொண்ட படம். நடிகர் திலகம் என்கிற நடிப்பு மேதையை மட்டுமே நம்பி எடுத்து வெற்றி பெற்ற படம்.

இந்த விமர்சனத்தில் இல்லாதது: இதோ எந்தன் தெய்வம் முன்னாலே என்கிற மிக அருமையான எவர்க்ரீன் பாடல் கொண்ட படம்.

Regards

pammalar
26th February 2010, 08:36 PM
தாராசுரத்திற்கு தங்கப்பதக்கம் செளத்ரி அதிரடி விஜயம்!

கும்பகோணத்திற்கு அருகாமையில், தாராசுரம் என்னும் ஊரில் உள்ள சூரியகாந்தி டூரிங் டாக்கீஸில், தினசரி 2 காட்சிகளாக(மாலை மற்றும் இரவு), 25.2.2010(வியாழன்) முதல் 27.2.2010(சனிக்கிழமை) வரை 3 நாட்களுக்கு, வெள்ளி விழாக் கண்ட தங்கப்பதக்கம் திரைக்காவியத்தின் மூலம் மாட்சிமை பொருந்திய மேதகு எஸ்.பி. செளத்ரி அவர்கள் தரிசனம் தருகிறார். இந்த தரிசனத்திற்காக காத்திருந்த ரசிக, பக்த, ஜன கோடிகள் மகிழ்ச்சிக் கடலில் மிதக்கின்றனர். அலைகடலெனத் திரண்டு, தங்கப்பதக்கம் வென்ற கடமை வீரரை கண்டு களித்து தரிசித்து வருகின்றனர். நேற்று 25.2.2010 மாலைக் காட்சியை 200 நபர்களுக்கும் மேல் கண்டு களித்துள்ளனர். ஒரு டிக்கெட்டின் விலை பத்து ரூபாய். ஒரே காட்சியில், அதுவும் டூரிங் டாக்கீஸில், ரூ.2000 /- த்துக்கும் மேல்(ரூபாய் இரண்டாயிரத்துக்கும் மேல்) வசூல் கிடைத்துள்ளது. இது ஒரு இமாலய சாதனை.

இந்த சாக்லெட் செய்திகளை எமக்கு வழங்கிய ரசிக நல்லிதயம் குடந்தை ராமலிங்கம் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்!

அன்புடன்,
பம்மலார்.

pammalar
26th February 2010, 09:07 PM
ரசிகப்புலியாகத் திகழும் திரு.கலைப்புலி சேகரன் அவர்கள், நடிகர் திலகம் மற்றும் அவரது ரசிகப்பெருமக்கள் பற்றிக் கூறியவற்றை மிக நேர்த்தியாக தொகுத்தளித்த சகோதரி சாரதா அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்!

நன்றி திரு.டாக். ரசிகர் மன்ற போஸ்டர்கள், நோட்டீசுகள் கிடைத்தால் அவசியம் போஸ்ட் செய்கிறேன்.

Mr.RC & Mr.Tac, Babu is strictly a ONE-MAN (NT) SHOW !!!

அன்புடன்,
பம்மலார்.

Jeev
27th February 2010, 06:55 AM
Vilaiyatu Pillai ran 100 days at Chennai, Midland Theatre. (Source - Pesum Padam - April 1971 issue)

rangan_08
27th February 2010, 12:04 PM
is there a way to find "ennirendu pathinaru vayadhu" video on net.

All other famous songs of shivaji are there except this song.

Raj digital plus plays this song very often.

What a walk !!!

I've already said this... Muthuraman is just an helpless spectator in this song.

rangan_08
27th February 2010, 12:11 PM
நேற்றைய (24.02.2010) 'சிங்கத்தமிழன் சிவாஜி' (வசந்த் டி.வி.) நிகழ்ச்சியில், விநியோகஸ்தர்கள் சங்கத்தலைவர் 'கலைப்புலி சேகரன்' கலந்துகொண்டு நடிகர்திலகத்துடனான தன்னுடைய இனிய நினைவுகளைப் பகிர்ந்துகொண்டார்.

தான் முதன்முதலில் வினியோகஸ்தரானதே, நடிகர்திலகத்தின் 'என் தம்பி' படத்தின் மறு வெளியீடு மூலம்தான் என்றும், அந்தப்படததை சென்னை ராயபுரம் பிரைட்டன் தியேட்டரில் வெளியிட்டு லாபம் பார்த்தபின்னரே, இதையே தொழிலாக தொடர்வது என்று முடிவெடுத்ததையும், இரண்டாவது வெளியீடாக 'நீதி' படத்தை மறு வெளியீடு செய்து அதிலும் பெரும் லாபம் கிடைக்கவே, அடுத்து 'வசந்த மாளிகை' படத்தை ஒன்றரை ல்ட்சம் ரூபாய் எனும் பெரும் தொகை கொடுத்து வாங்கி ஷிப்டிங் முறையில் பல அரங்குகளில் வெளியிட்டு, முழுசாக ஐந்து லட்சம் லாபம் கிடைத்ததையும் விவரமாகச்சொன்னார்.



Exactly. I too enjoyed the programme.

To quote NT's punctuality, he mentioned the professor role in Aandaval Kattalai, where people will come to know about the exact time when Prof. Krishnan crosses their place. This clearly proves that Sekaran is not a fake & that he is a true rasigan.

Brighton theatre has now been renovated and functions under the name i dreams cinemas.

rangan_08
27th February 2010, 12:14 PM
Welcome back Raghavendra sir. Thanks for the wonderful compilation of NT's yet to be released DVD's.

Out of the films you have mentioned, Manidhanum Mirugamum, Illara Jyothi, Koteeswaran & Pennin Perumai has been telecasted in Mega TV.

rangan_08
27th February 2010, 12:17 PM
மதுரையில் புதிய பறவையின் வெற்றி பவனி குறித்து நண்பர் சுவாமியுடன் பேசிக் கொண்டிருக்கும்போது ஒரு தகவலை சொன்னார். அதாவது கடந்த நான்கு வருடங்களாக எல்லா வருடமும் இதே சென்ட்ரல் திரையரங்கில் புதிய பறவை வெளியாகியிருக்கிறது. இடைவெளி என்பதே இல்லாமல் ரிலீஸ் ஆகியிருக்கிறது. இதை தவிர டி.வியில் இந்த நான்கு வருடங்களில் அதிகமாக ஒளிபரப்பட்ட படங்களில் புதிய பறவையும் ஒன்று. இதை தவிர இப்போது வெளியாகியிருக்கும் பிரிண்டில் சில பல இடங்களில் கட்கள் வேறு இருக்கின்றனவாம். இத்தனை எதிர்மறையான விஷயங்கள் இருந்த போதிலும் இந்த படம் பெற்ற வசூல் ஒரு பிரமிப்பான சாதனை. இந்த படத்தின் இடத்தில், அண்மைக் காலத்தில் மதுரையில் அதிகம் வெளியாகாத சிவந்த மண், எங்கள் தங்க ராஜா, சொர்க்கம் போன்றவை வெளியாகியிருந்தால் அந்த சென்ட்ரல் சினிமாவே தாங்கியிருக்காது.

அன்புடன் :clap:

I would like to quote Sarangapani's dialogue from Thillana Mohanambal...." adhil enna sandhegam, namma thambi medhaigalukkellam medhai "

saradhaa_sn
27th February 2010, 02:10 PM
I would like to quote Sarangapani's dialogue from Thillana Mohanambal...." adhil enna sandhegam, namma thambi medhaigalukkellam medhai "
பாலையா: "அடிச்சு சொல்லுங்க.... அடிச்சு சொல்லுங்க...."
----------------------------------------
டியர் பம்மலார்,

சாந்தி திரையரங்கில் நடிகர்திலகத்தின் திரைப்பட வெளியீடுகளை முழுமையாகத் தந்தமைக்கு மிக்க நன்றி. தமிழ்நாட்டில் எங்கெல்லாம் நடிகர்திலகத்தின் காவியங்கள் மறுவெளியீடுகளில் சாதனை படைத்து வருகின்றனவோ, அவற்றை தகவல் சேகரித்து அனைவரின் பார்வைக்கும் கொண்டு வரும் அரிய சேவைக்கும் மிக்க நன்றி.

டியர் ராகவேந்தர்,

நீண்ட இடைவெளிக்குப்பின்னர் அருமையான பட்டியல் தொகுப்போடு வந்திருக்கிறீர்கள். உங்கள் பதிவுகள் இல்லாமல் திரியில் ஒரு வெற்றிடம் காணப்பட்டது. அது இனி இருக்காது என்பது அறிந்து மகிழ்ச்சி. நீங்கள் கொடுத்துள்ள பட்டியலில் உள்ளவை வி.சி.டி / டி.வி.டி.க்களாக வரவில்லையே தவிர, வீடியோ கேஸட் யுகத்தில் அவற்றில் சில படங்கள் வீடியோ கேஸட்டுகளாக வந்திருந்தன. அவை ஏன் சிடிக்களாக மாற்றப்படவில்லை என்பது தெரியவில்லை.

saradhaa_sn
27th February 2010, 02:28 PM
ஜெயா டி.வி.யில் கடந்த திங்கள் முதல் வெள்ளி வரை வெளியான பேராசிரியர் ஏ.எஸ்.பிரகாசத்தின் 'திரும்பிப் பார்க்கிறேன்' நிகழ்சி நடிகர்திலகத்தின் ரசிகர்களுக்கு ஏமாற்றமளிப்பதாக இருந்தது. ஐந்து நாள் நிகழ்ச்சியில் நான்கு நாட்களை எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா புகழ்பாடுவதற்கே செலவழித்து விட்ட அவர், கடைசி நாளான நேற்று நடிகர்திலகத்தின் 'அந்தமான் காதலி' ஒரே படத்தைப்பற்றி மட்டுமே குறிபிட்டு முடித்துக்கொண்டார். அவரது கதைவசனத்தில் வந்த 'இமயம்' மற்றும் அவர் இயக்கிய படங்களிலேயே 125 நாட்களுக்கு மேல் ஓடி வெற்றியடைந்த 'சாதனை' உள்பட வேறெந்தப்படத்தையும் குறிப்பிடவில்லை. 'அக்கரைப்பச்சை' போன்ற நல்ல படங்களைப்பற்றியும் கூட மூச்சு விடவில்லை.

அதே சமயம், நிகழ்ச்சியின் ஆரம்பத்தில், நடிகர்திலகத்தை முதன்முதலில் கொடைக்கானலில் சந்தித்து திரைப்பட பிரவேசம் குறித்து சொன்னபோது, தன்னை சினிமாவுக்கு வரவேண்டாம் என்று நடிகர்திலகம் DISCOURAGE செய்ததாக ஒரு வார்த்தையை விட்டிருந்தார்.

pammalar
27th February 2010, 04:22 PM
டெல்லி சிவாஜி விழா - 3

விழா உரைகள் (தொடர்ச்சி ...)

ஐக்கிய நாடுகள் சபை வளர்ச்சித் திட்டத்தின் இயக்குனர் டாக்டர் ராதாகிருஷ்ணன்,ஐஏஎஸ் அவர்களின் உரை:
"நடிகர் திலகம் சிவாஜி அவர்களைப் போன்ற மிகப் பெரிய சாதனையாளர்களின் விழாவுக்கு, என்னை போன்ற சாதாரணமானவர்களை அழைத்து தலைமை வகிக்கச் செய்வது, என்னைப் போன்றவர்களுக்கு கொடுக்கப்படும் மிகப் பெரிய கெளரவமாகும். அதற்காக, டெல்லி முத்தமிழ்ப் பேரவையினருக்கும் மற்றும் இங்குள்ள அனைவருக்கும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். நான் 1970-களில் பிறந்தவன். வட இந்தியாவில் நாசிக்கில் வளர்ந்தவன். நாசிக்கில் கினோ தியேட்டர் என்று ஒரு திரையரங்கம் உண்டு. அங்கு பெரும்பாலும் தமிழ்த் திரைப்படங்களையே திரையிடுவார்கள். ஒரு சமயம், எனது தந்தையாருடன் கினோ தியேட்டருக்குச் சென்ற போது, அங்கே கட்டுக்கடங்காத பெருங்கூட்டம் ஒரு தமிழ்த் திரைப்படத்தைக் காண நின்று கொண்டிருந்தது. அதைக் கண்டு நான் அதிசயித்து நின்றேன். ஒரு தமிழ்ப் படத்துக்கு, அதுவும் வடநாட்டில் இத்தனைப் பெரிய கூட்டமா என்று. இது குறித்து எனது தந்தையாரிடம் கேட்டேன். அதற்கு அவர் பதில் சொன்னார். "நீ பார்க்கின்ற இந்த மிகப் பெரிய கூட்டம் சிவாஜி நடிக்கின்ற படத்திற்காக. சிவாஜி படங்கள் இங்கே இந்தத் தியேட்டரில் எப்பொழுது திரையிடப்பட்டாலும், அப்பொழுதெல்லாம் இதே போன்று அளவுக்கதிகமான பெரும் ஜனத்திரள் அலைகடலென இங்கே கூடும். சிவாஜி படங்களுக்கு மட்டும், இங்கே இந்த மக்கள் வெள்ளம் எப்பொழுதும் வரும்" என்று கூறினார். அவர் கூறியதைக் கேட்டு நான் அப்படியே அசந்து போனேன். நான் பெருங்கூட்டத்துடன் பார்த்த அந்த சிவாஜி படம், திரிசூலம். நடிகர் திலகத்தின் பழைய படங்களை பின்னாட்களில் பார்த்து வியந்திருக்கிறேன். அவரது நடிப்பின் எல்லையில்லாப் பரிமாணங்களைக் கண்டு அசந்து போயிருக்கிறேன். அவர் பின்னாளில் நடித்த படங்களில் முதல் மரியாதை, தேவர் மகன் ஆகியவை எனக்கு மிகவும் பிடித்தவை. திரையுலகினருக்கு, நடிப்பைப் பொறுத்த வரை, நடிகர் திலகம் என்னும் நடிப்புக் களஞ்சியமே அளவுகோல். அவர் இப்படிச் செய்திருக்கிறார், நாம் இப்படிச் செய்ய வேண்டும் என அவரை ஒரு தலைசிறந்த அளவுகோலாக வைத்துக் கொண்டு, அவரைப் போல நடிக்கவும், அவரை விஞ்சவும் முயன்று வருகின்றனர். ஆனால், நடிப்பில் நடிகர் திலகம் தொட்ட உச்சத்தை, காட்டிய உயரத்தை இவர்களால் தொட முடியவில்லை, காட்ட இயலவில்லை என்பதே உண்மை. 'ஒரு வரலாற்றின் வரலாறு' என்னும் இந்நூல் நடிகர் திலகம் பற்றிய அரிய தகவல்கள், அபூர்வ புகைப்படங்கள் கொண்ட முழுமையான தொகுப்பாக வெளிவந்துள்ளது. வெளியீட்டாளருக்கும், நூலாசிரியருக்கும் மற்றும் அவர்களது குழுவினருக்கும் மனமார்ந்த பாராட்டுக்கள், வாழ்த்துக்கள். இத்தகையதொரு சிறந்த புத்தகத்தை, எம்மை வெளியிட அழைத்த முத்தமிழ்ப் பேரவையினருக்கு மீண்டும் எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்."

'நகைச்சுவைத் தென்றல்' பேராசிரியர் கு. ஞானசம்பந்தன் அவர்களின் உரை:
"'ஒரு வரலாற்றின் வரலாறு' என்னும் இந்தப் புத்தகம், நடிகர் திலகம் பற்றிய ஓர் தகவல் களஞ்சியம். புத்தகத்தைப் புரட்ட புரட்ட, சிவாஜி அவர்களின் அழகிய வண்ணப்படங்களும், அவர் குறித்த அரிய, அபூர்வ தகவல்களும் பிரமிக்க வைக்கின்றன. நடிப்பில் மட்டுமல்ல, நிஜத்திலும் கர்ணனாகவே வாழ்ந்திருக்கிறார் என்பது அவர் அளித்த பல்வேறு நன்கொடைகளின் மூலம் தெரிய வருகிறது. இவை இப்புத்தகத்தில் மிக நேர்த்தியாக தொகுக்கப்பட்டுள்ளது. நடிகர் திலகம் நடித்த திரைப்படங்களின் பட்டியல், அவர் கெளரவ வேடங்களில் தோன்றிய திரைப்படங்களையும் சேர்த்து, புள்ளி விவரங்களோடு ஒரு முழுமையுடன் இந்நூலில் தரப்பட்டுள்ளது. இது போன்ற பல சிறப்பம்சங்கள் கொண்ட புத்தகமாக இந்நூல் வெளிவந்துள்ளது. நூல் வெளியீட்டாளருக்கும், நூலாசிரியருக்கும் மற்றும் இந்நூலுக்கு ஒத்துழைத்த அனைவருக்கும் பாராட்டுக்கள், நன்றிகள், வாழ்த்துக்கள்! நடிகர் திலகம் முன்னணிக் கதாநாயகனாக நடித்துக் கொண்டிருந்த போதே எதிர்மறை வேடங்களிலும் தோன்றினார் என்பது கவனிக்கப்பட வேண்டிய ஒன்று. ஹீரோவாக நடித்துக் கொண்டிருக்கும் எந்த நடிகருமே வில்லன் வேடம் செய்யத் தயங்குவார், மறுப்பார். ஆனால், சிவாஜி அவர்கள் உச்ச ஹீரோவாக வலம் வந்து கொண்டிருந்த போதே, வில்லன் வேடங்களில் எதிர்மறைப் பாத்திரங்களில் தூள் கிளப்பியிருக்கிறார். ஒன்றா, இரண்டா எத்தனை படங்கள் அந்த மாதிரி. திரும்பிப் பார், அந்த நாள், துளி விஷம், பெண்ணின் பெருமை, ரங்கோன் ராதா, உத்தமபுத்திரன் என அவர் வில்லன் வேடம் தரித்த படங்களை அடுக்கிக் கொண்டே போகலாம். திரும்பிப் பாரில் பெண் பித்தனாக, அந்த நாளில் தேசத்திற்கே எதிரானவனாக, துளி விஷம், பெண்ணின் பெருமை போன்ற படங்களில் கொடிய வில்லனாக, ரங்கோன் ராதாவில் தனது மனைவி, குழந்தை போன்றவர்களையே கொடுமைப்படுத்துபவராக, அவர் ஏற்ற எதிர்மறை வேடங்களில் ஒரு கலக்கு கலக்கியிருப்பார். உத்தமபுத்திரனில் கதாநாயகனாகவும், வில்லனாகவும் இரு வேடங்களில், இரட்டை வேட நடிப்புக்கே இலக்கணம் வகுத்திருப்பார். அதே போல், கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி, சபாஷ் மீனா, பலே பாண்டியா, கலாட்டா கல்யாணம் இன்னும் இது போன்ற காமெடி பொழுதுபோக்கு அம்சங்களை மையமாகக் கொண்ட படங்களில், கதாநாயகனாகவே காமெடி ரோல்களில் கலக்கி, தேர்ந்த நகைச்சுவை நடிகர்களையே வென்றிருப்பார். தேசிய, தெய்வீக, குடும்பப் பாங்கான படங்களில் அவர் காட்டிய விதவிதமான நடிப்புப் பரிமாணங்களை வேறு எவராலும் காட்ட முடியாது. அவர் காலத்தில், அவருடன் நடித்த சக நடிகர்களான எம்.ஆர்.ராதா, டி.எஸ்.பாலையா, எஸ்.வி.ரங்காராவ், எஸ்.வி.சுப்பையா போன்றவர்கள் சிறந்த குணச்சித்ர நடிகர்கள். இவர்கள், தாங்கள் ஏற்றுக் கொள்ளும் பாத்திரங்களில் மிகப் பிரமாதமாக சோபிக்கக் கூடியவர்கள். நடிகர் திலகம், இவர்களுடன் நடித்து, ஒவ்வொரு காட்சியிலும், ஒவ்வொரு படத்திலும், இவர்கள் மற்றும் இவர்களைப் போன்றோர்களையெல்லாம் ஜெயித்து நிற்பார். நடிகர் திலகத்தை நடிப்பில் விஞ்ச, நடிகர் திலகத்தால் மட்டுமே முடியும் எனக் கூறி விடைபெறுகிறேன், நன்றி, வணக்கம்!"

விழா உரைகள் நிறைவு.

அன்புடன்,
பம்மலார்.

pammalar
28th February 2010, 06:16 PM
Vilaiyatu Pillai ran 100 days at Chennai, Midland Theatre. (Source - Pesum Padam - April 1971 issue)

A warm welcome to our NT thread, Mr.Jeev.

NT's Vilaiyaattu Pillai ran exactly for 50 victorious days at Chennai Midland. It got released at Midland on 20.2.1970 and ran upto 10.4.1970. On 11.4.1970, Paththaam Pasali, a film directed by K.Balachandar got released at Midland as a Tamil New Year release. So. VP ran for exactly 50 days at Midland Theatre. The incredible source for this vital data is from the tamil newspapers of the month of April 1970.

On shifting basis, VP crossed 100 victorious days at Madurai & Tiruchy.

Regards,
Pammalar.

Murali Srinivas
28th February 2010, 08:04 PM
இரண்டு வாரங்களுக்கு முன் மதுரை சென்ட்ரலில் புதிய பறவை வெளியாகிறது என்ற செய்தியை சொன்ன நண்பனிடம் தியேட்டர் முகப்பை ஒரு சில புகைப்படங்கள் எடுத்து தருமாறு சொல்லியிருந்தேன்.

படம் வெளியான வெள்ளியன்று காலையே இது எடுக்கப்பட்டு விட்டது. கைபேசியில் எடுக்கப்பட்ட இந்த வீடியோவை அவன் அனுப்புவதற்கு ஏற்பட்ட தாமதம் ஒரு பக்கம் என்றால் என் கணினியில் ஏற்பட்ட ஒரு தொழில் நுட்பக் கோளாறும் இதை மேலும் தாமதப்படுத்தி விட்டது.

இனி, இது எடுக்கப்பட்ட நாள் படம் வெளியான வெள்ளி [12.02.2010] காலை 7 மணி. அப்போதே போஸ்டர் போர்டு- க்கு மாலை அணிவிக்கப்பட்டிருப்பதை காணலாம். புதிய படங்களுக்கு கூட இவ்வளவு அதிகாலையில் ரசிகர்கள் இதையெல்லாம் செய்வார்களா என்று தெரியவில்லை. ஆனால் நூற்றுக்கணக்கான முறை வெளியான படத்திற்கு கூட இப்போதும் இது போல் அலங்கரிக்கப்படுகிறது என்று சொன்னால் மதுரை எப்படிப்பட்ட நடிகர் திலகம் கோட்டை என்பதை சொல்லவும் வேண்டுமோ?.

http://www.youtube.com/watch?v=ovAV9sl5p5w

அன்புடன்

joe
28th February 2010, 08:12 PM
[html:f7641ae21b]<object width="853" height="505"><param name="movie" value="http://www.youtube.com/v/ovAV9sl5p5w&hl=en_US&fs=1&"></param><param name="allowFullScreen" value="true"></param><param name="allowscriptaccess" value="always"></param><embed src="http://www.youtube.com/v/ovAV9sl5p5w&hl=en_US&fs=1&" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="853" height="505"></embed></object>[/html:f7641ae21b]

joe
28th February 2010, 10:01 PM
http://dharumi.blogspot.com/2010/02/381.html
http://www.youtube.com/watch?v=vAE6xvRMn34

pammalar
28th February 2010, 10:55 PM
மதுரையம்பதியின் சென்ட்ரல் சினிமா அரங்க நுழைவாயிலின் மேலே - பலவகை முகபாவங்களில், பலவித கோணங்களில் நெஞ்சை அள்ளும் வண்ணம் போஸ் கொடுத்துக் கொண்டிருக்கும் திரு.கோபால் அவர்களுக்கு, அவரது அட்டகாச போஸ்களாலேயே களை கட்டியிருக்கும் போஸ்டர்-போர்டுகளுக்கு - நாங்கள் எல்லா ஊர் ரசிகர்களுக்கும் மேலே என மீண்டும் ஒரு முறை நிரூபிக்கும் வண்ணம், அதிகாலையிலேயே வண்ணக் கதம்ப மலர் மாலையை அணிவித்த மதுரை வாழ் ரசிக சிகரங்களுக்கு ஆத்மார்த்தமான நன்றிகள்!

இந்த அசத்தல் வீடியோவை வழங்கிய முரளி சாருக்கும், அவர்தம் நண்பருக்கும், திரியிலேயே பதிவு செய்த திரு.ஜோ அவர்களுக்கும் இரு கரம் கூப்பிய, சிரம் தாழ்த்திய நன்றிகள்!

தாமதமாக வந்தாலென்ன, எவர்கிரீன் அந்தஸ்தை அடைந்து விட்டது இந்த வீடியோ. மீண்டும் நன்றிகள்!

அன்புடன்,
பம்மலார்.

joe
1st March 2010, 10:36 AM
திரைப்படத் தொழிலாளர்கள் நடத்திய கலைஞருக்கு நன்றி விழாவில் , இராஜாராணி திரைப்படத்தில் கலைஞர் எழுதிய காவிய வரிகளை ஒரே காட்சியில் ஒரே மூச்சாக உலகின் ஒப்பற்ற நடிகன் நடிகர் திலகம் நிகழ்த்திக்காட்டிய சாதனை ஒளிபரப்பப்பட , உணர்ச்சிப் பெருக்கில் தலைவர் கலைஞர் கண்ணீர் உகுத்த காட்சி.

[html:e7d5712160]<object width="425" height="344"><param name="movie" value="http://www.youtube.com/v/sEriACKZgi4&rel=0&color1=0xb1b1b1&color2=0xcfcfcf&hl=en_US&feature=player_embedded&fs=1"></param><param name="allowFullScreen" value="true"></param><param name="allowScriptAccess" value="always"></param><embed src="http://www.youtube.com/v/sEriACKZgi4&rel=0&color1=0xb1b1b1&color2=0xcfcfcf&hl=en_US&feature=player_embedded&fs=1" type="application/x-shockwave-flash" allowfullscreen="true" allowScriptAccess="always" width="425" height="344"></embed></object>[/html:e7d5712160]

HARISH2619
1st March 2010, 03:21 PM
திரு பம்மல் சார்,
டெல்லி விழாவை சிறப்பாக தொகுத்து வழங்கிய தங்களுக்கு நன்றிகள் பல கோடி.

திரு முரளி சார்,
தியேட்டர் முகப்பை அப் லோட் செய்தமைக்கு நன்றி.வெள்ளி காலையே இந்த மாலை என்றால் ஞாயிறு இரவு வரை தியேட்டர் பிரமாதமாக அலங்கரிக்கப்பட்டிருக்கும் என்பது நிச்சயம்.ஞாயிறு இரவு எடுக்கப்பட்ட புகைப்படத்தை ஆவலோடு எதிற்பார்க்கிறோம்.

திரு ஜோ சார்,
விழாவை அப்லோட் செய்தமைக்கு நெஞ்சார்ந்த நன்றி.

rangan_08
2nd March 2010, 06:56 PM
Thank you Murali sir, for the beautiful gift ! Thank you Joe.

Hope that, very soon there will be a treat for Chennai rasigars also. Pammalar sir, please do let us know if any movie is released in Chennai.

pammalar
2nd March 2010, 09:11 PM
கும்பகோணத்திற்கு அருகே திருவிடைமருதூரில் உள்ள பஷீர் திரையரங்கில், 25.2.2010 (வியாழன்) முதல் 1.3.2010 (திங்கள்) வரை, ஐந்து நாட்களுக்கு தினசரி 3 காட்சிகளாக, புதுமை வேந்தரின் "புதிய பறவை" திரைக்காவியம் திரையிடப்பட்டு வெற்றி வாகை சூடியுள்ளது.

திரையுலகச் சக்கரவர்த்தியின் திரைக்காவியங்கள், தமிழகமெங்கும் மறுவெளியீடுகளாக வெற்றி பவனி வருவது, நம் எல்லோருக்கும் அளவு கடந்த மகிழ்ச்சியைத் தரும் செய்தி தானே!

அன்புடன்,
பம்மலார்.

PARAMASHIVAN
2nd March 2010, 09:46 PM
Hi all

I was watching 'Anbulla appa' of Shivaji sir...these kinds of roles are tailor made for him.. his affections and emotions as a father

:notworthy: :notworthy:

Murali Srinivas
2nd March 2010, 11:41 PM
நன்றி ஜோ. If you can adjust the resolution everybody can see it. I find it difficult to view it in my PC.

வார்த்தைகளினாலே வர்ண சித்திரம் வரைந்த சுவாமிக்கு நன்றி

செந்தில் நன்றி. இந்த படத்தை எடுத்த நண்பன் [மதுரையை சேர்ந்த] இப்போது சென்னை வாழ் நண்பன். ஒரு வேலையாக மதுரைக்கு சென்றவன் இந்த செய்தியையும் வீடியோவையும் கொண்டு வந்தான்.

ஞாயிறு மாலை காட்சிக்கு மதுரை வாழ் நண்பன் ஒருவனிடம் சொல்லியிருந்தேன். ஆனால் தவிர்க்க முடியாத காரணத்தினால் அவனால் போக இயலவில்லை.

Thanks Mohan. It is my pleasure.

Regards

jaiganes
3rd March 2010, 01:25 AM
ஜெயா டி.வி.யில் கடந்த திங்கள் முதல் வெள்ளி வரை வெளியான பேராசிரியர் ஏ.எஸ்.பிரகாசத்தின் 'திரும்பிப் பார்க்கிறேன்' நிகழ்சி நடிகர்திலகத்தின் ரசிகர்களுக்கு ஏமாற்றமளிப்பதாக இருந்தது. ஐந்து நாள் நிகழ்ச்சியில் நான்கு நாட்களை எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா புகழ்பாடுவதற்கே செலவழித்து விட்ட அவர், கடைசி நாளான நேற்று நடிகர்திலகத்தின் 'அந்தமான் காதலி' ஒரே படத்தைப்பற்றி மட்டுமே குறிபிட்டு முடித்துக்கொண்டார். அவரது கதைவசனத்தில் வந்த 'இமயம்' மற்றும் அவர் இயக்கிய படங்களிலேயே 125 நாட்களுக்கு மேல் ஓடி வெற்றியடைந்த 'சாதனை' உள்பட வேறெந்தப்படத்தையும் குறிப்பிடவில்லை. 'அக்கரைப்பச்சை' போன்ற நல்ல படங்களைப்பற்றியும் கூட மூச்சு விடவில்லை.

அதே சமயம், நிகழ்ச்சியின் ஆரம்பத்தில், நடிகர்திலகத்தை முதன்முதலில் கொடைக்கானலில் சந்தித்து திரைப்பட பிரவேசம் குறித்து சொன்னபோது, தன்னை சினிமாவுக்கு வரவேண்டாம் என்று நடிகர்திலகம் DISCOURAGE செய்ததாக ஒரு வார்த்தையை விட்டிருந்தார்.
makkalukku nalladhu panna try panni irukkaar Sivaji. sonna pechai kaettu irukkalaam.

joe
3rd March 2010, 11:21 AM
Murali sir,
I have changed to youtube video.pls chk.

PARAMASHIVAN
3rd March 2010, 08:53 PM
http://www.youtube.com/watch?v=LciGhDXliUE

:notworthy:

Can some one tell me which movie this song is from ?

Murali Srinivas
3rd March 2010, 10:06 PM
Murali sir,
I have changed to youtube video.pls chk.

Joe,

நீங்கள் போஸ்ட் செய்த அன்று நான் வேறு ஒரு கணினியில் பார்த்தேன். அப்போது அந்த embedded இமேஜ் தெரிந்தது. ஆனால் எனது PC-யில் இப்போதும் தெரியவில்லை. முன்பு கயத்தாறு விழாவின் பேப்பர் கட்டிங்கை இங்கே பதிவேற்றிய போதும் இதே போல் இருந்து பிறகு நீங்கள் அட்ஜஸ்ட் செய்தீர்கள். அதையே இப்போதும் செய்யவும்.

அன்புடன்

RC
4th March 2010, 10:01 AM
விளையாட்டுப் பிள்ளை (விகடன் பொக்கிஷம்)

பிரேமலதா: தயாரிப்பு தரத் திலேயும், டெக்னிகல் சைட்லேயும் உயர்வா இருக்கிற ஒரு படத்தைப் பார்த்தது எனக்குச் சந்தோஷமா இருக்கு. போட்டோகிராபி, கலர் சீன்ஸ் எல்லாம் நல்லா இருக்கு. கதை, காட்சி அமைப்பு எல்லாம் சிறப்பாக இருந்தபோதும், பார்த்து முடிந்த பிறகு, ஏனோ ஒரு முழுமை ஏற்படவில்லை.

ரங்கநாயகி: இந்தக் கதை நடந்த காலத்தில் எவர்சில்வர் பாத்திரம் இல்லாததைக்கூட ஞாபகம் வச்சு, ஒரு எவர்சில்வர் பாத்திரம்கூட உபயோகிக்காம ரொம்ப கவனமா படத்தை எடுத் திருக்காங்க.

ரமா: இது எந்தக் கதைன்னு உங்களுக்கு ஞாபகம் இருக்கா?

ரங்க: நல்லா ஞாபகம் இருக்கு. 'ராவ்பகதூர் சிங்காரம்'தானே..! கதை நடந்த காலத்திலே கிரா மத்துப் பெண்கள் எப்படி 'ஸாரி' கட்டிப்பாளோ, அதே மாதிரி பத்மினி புடவை கட்டியிருக்கிறது ரியலிஸத்தோட இருக்கு.

கதிரேசன்: படமே இரண்டு பகுதியா இருக்கு. ஒரு பாதி பாட் டும் விளையாட்டுமா இருக்கு. கிராமப்புறத்திலே இருக்கிறவங்க இடைவேளை வரை நல்லா ரசிப் பாங்க. இடைவேளைக்கு அப்பு றம் நகரத்திலுள்ளவங்க பார்க்கிற மாதிரி இருக்கு.

சீமைச்சாமி: படத்தின் பேர் 'விளையாட்டுப் பிள்ளை'ன்னு இருக்கே ஒழிய, கதையில வர பாத்திரம் பூராவும் ஒரே சீரியஸா இருக்கு. இது விவசாயியின் வாழ்க்கையைச் சரியா பிரதி பலிக்கலே. மொத்தத்திலே படம் சுமார்தான்!

நெல்லையாண்டார்: சில காட்சிகள் நல்லா இருக்கு. பத்மினி டெலிவரி சமயத்திலே, என்னதான் ஊர்க் கட்டுப்பாடா இருந்தாலும், நான் ஒரு பெண்ணு டான்னு சொல்லிட்டு அந்தப் பாட்டியம்மா மகனை மீறி மருத் துவம் பார்க்கத் துணிஞ்சு வராங் களே, அந்த இடம் ரொம்ப நல்லா இருக்கு.
சம்போ சங்கர ராவ்: எனக்கு ஒண்ணு புரியலை. முதல்லே ரேக்ளா ரேஸ் வரும்போது இளைய ராணி சின்னப் பெண்ணா இருக்கு. இது பெரிசா வளர்ந்தா பின்னாடி, சிவாஜி தாத்தா ஆகி யிருக்கணும். அது எப்படி இரண்டு பேரையும் வச்சு சந்தே கப்படறாங்கன்னு தெரியலே!

ஜான் ராஜப்பா: ஜல்லிக்கட் டுலே பல முறைகள் உண்டு. இந்தப் படத்தில் உள்ளது மேல் நாட்டு பாணி; இன்னும் சிறப்பா செஞ்சிருக்கலாம். கணேசன் 'டம்மி' போடாமல் செஞ்சிருக் கிறதைப் பாராட்டலாம். அதே மாதிரி பத்மினி ரேக்ளா ஓட்டுவ தையும் பாராட்டணும்.

ரங்க: காதல் காட்சியிலே வசனத்தை எழுத்துலே காண்பிச்சு சிவாஜியும் பத்மினியும் கண் ணாலே 'எக்ஸ்பிரஷன்' காட்டறது நல்லாயிருக்கு. 'வளர்த்த கடாவே மார்பில் பாய்ஞ்சுட்டது. இந்தக் கடா என்ன பண்ணும்'னு சிவாஜி சொல்ற இடத்திலே, நான் கண் கலங்கிட்டேன்...

ரமா: சிவாஜி தேவைக்கு அதி கமா சில இடங்கள்ளே கத்திப் பேசற மாதிரி தோணிச்சு.!

கிம்ஸி சீனிவாசன்: சிவகுமார் இன்னும் சிறப்பா செஞ்சிருக்க முடியும். எக்ஸ்பிரஷன் போறாது.

சீமை: இந்தப் படத்திலே எனக்குப் பிடிக்காத ஒரு இடம்... யானையை அடக்கறது. ரொம்ப அன்னேச்சுரல்! என்ன பலம் இருந்தாலும், ஒரு யானையை அடக்கறதுங்கிறதை யாருமே ஒத்துக்கமாட்டாங்க.

கிம்ஸி: யானையைக் கண்ட வுடனே கணேசன் வந்தார். கணேசனைப் பார்த்தவுடனே யானை அடங்கிடுச்சுன்னு வச்சுக் கங்களேன்.

பிரேம: சோ டல்லா இருக்கா ரில்லே?

கீதா: சில இடத்திலே டல்லா இருந்தாலும், சில இடத்திலே நல்லாவும் செய்றார். ஆனா, அவரை வில்லனா ஏற்றுக் கொள்ளமுடியலே!

ரமா: மனோரமா தெருக்கூத்து டயலாக் பேசறப்போ கத்திப் பேசறாங்க!

சீமை: ஏம்மா ரமா, உங்களுக்கு கத்திப் பேசினா அலர்ஜியா? இரண்டு தடவை சொல்லிட் டீங்க.

ரங்க: பத்மினியோட கன்னத் திலே சிவாஜி அறையும்போது, பத்மினியோட ஒரு காதிலே இருக்கிற தோடு பறந்துபோய் கீழே விழறதைக் கவனிச்சீங் களா?

பிரேம: பார்த்தேன். ரொம்ப நேச்சுரலாயிருக்கேன்னுகூட நினைச்சேன்...

கீதா: ஆமாம். ஆனா, அடுத் தாப்பலே அவங்களைக் காட்ட றப்போ, தோடு காதிலே இருக்கு.கன்டினியூட்டி இல்லை.

கிம்ஸி: இரண்டு தலைமுறைக் கதையாச்சே! சரித்திர காலமும் இல்லாம, நவீன யுகமும் இல்லாம ஒரு நடுவாந்திர காலத்துக் கதை. அது படத்துக்கு அவ்வளவு பல மாயில்லேன்னு நினைக்கிறேன்.இருந்தாலும், வரவேற்கத்தக்க கிராமிய சூழ்நிலைக்காக இந்தப் படத்தை என்னைப் போன்ற ஆண்கள் விரும்புவார்கள். ஆனா, 'ஜெமினி' படம் இன்னும் சிறப்பா இருந்திருக்கலாம்.

உரையாடலில் கலந்து கொண்ட மதுரை அன்பர்கள்.

1. திரு.கரு. சீமைச்சாமி, (தமிழ்நாடு சட்டசபை உறுப்பினர் - சுதந்திரா)

2. திரு.எம். நெல்லையாண்டார், (தமிழ்நாடு மீன்வளத் துறை உதவி டைரக்டர்)

3. திரு.கே. சம்போ சங்கர ராவ், (வழக்கறிஞர்)

4. திரு.வி. ஜான் ராஜப்பா, (பஞ்சாயத்து நிர்வாக அதிகாரி, 'ஜல்லிக்கட்டு' அனுபவம் மிக்கவர்)

5. திரு.கிம்ஸி சீனிவாசன், (நாடகக் கலைஞர்)

6. திரு.பி. கதிரேசன், (டி.வி.எஸ்.தொழிலாளி)

7. திருமதி ரங்கநாயகி ராகவன், (குடும்பத் தலைவி)

8. டாக்டர் பிரேமலதா, (சங்கீத விரிவுரையாளர்)

9. குமாரி சி.ரமா, (கல்லூரி மாணவி, பி.எஸ்ஸி. இரண்டாம் ஆண்டு)

10. குமாரி எல்.கீதா, (கல்லூரி மாணவி, பி.எஸ்ஸி. முதல் ஆண்டு)

pammalar
4th March 2010, 02:44 PM
இன்று (4.3.2010) கலைக்குரிசிலின் "குறவஞ்சி" திரைக்காவியத்திற்கு பொன்விழா ஆண்டு நிறைவு.

குறவஞ்சி குறித்த புள்ளி விவரங்களை நினைவுத் திரையில் மலரச் செய்வது பொருத்தமான ஒன்றாக இருக்கும்.

குறவஞ்சி நமது நடிகர் திலகத்தின் 60வது திரைக்காவியம், 59வது கருப்பு-வெள்ளைக் காவியம்.

வெளியான தேதி : 4.3.1960 (வெள்ளிக்கிழமை)

தயாரிப்பு : மேகலா பிக்சர்ஸ்

இயக்கம் : ஏ.காசிலிங்கம்

கதை-வசனம் : கலைஞர் மு.கருணாநிதி

இசை : டி.ஆர்.பாப்பா

பாடல்கள் : திரிகூட ராசப்பக் கவிராயர், கலைஞர் மு.கருணாநிதி, கவியரசு கண்ணதாசன், தஞ்சை ராமையாதாஸ், ரா.கிருட்டினமூர்த்தி

ஒளிப்பதிவு : ஜி.துரை

நடிப்பு : நடிகர் திலகம் சிவாஜி கணேசன், ஓ.ஏ.கே.தேவர், குலதெய்வம் ராஜகோபால், நடிகையர் திலகம் சாவித்திரி, மைனாவதி, பண்டரிபாய் மற்றும் பலர்.

நாடோடியாகவும், தளபதியாகவும் கொள்கை முழக்கமிட்டு, நாட்டுப் பணியாற்றும் வீர நல் இளைஞன் பாத்திரத்தை நமது நடிகர் திலகம் மிகுந்த கம்பீரத்தோடும், நேர்த்தியோடும் மிக அழகாகச் செய்திருப்பார்.

குறவஞ்சி, 4.3.1960 அன்று, சென்னையில் சித்ரா, கிரெளன், சயானி ஆகிய 3 திரையரங்குகளிலும் மற்றும் தென்னாடெங்கும் வெளியானது.

சென்னையில், சித்ராவில் 4.3.1960 முதல் 28.4.1960 வரை 56 நாட்கள் வெற்றிகரமாக ஓடியது. 29.4.1960 அன்று சித்ராவில், பெற்றவள் கண்ட பெருவாழ்வு என்கின்ற திரைப்படம் வெளியானது.

கிரெளனில் குறவஞ்சி, 4.3.1960 முதல் 22.4.1960 வரை 50 நாட்கள் ஒடி வெற்றி பெற்றது. 23.4.1960 அன்று கிரெளனில், நமது நடிகர் திலகத்தின் மனோகரா மறுவெளியீடாக வெளியானது.

சயானியில், 4.3.1960 முதல் 12.4.1960 வரை 40 நாட்கள் வெற்றிகரமாக நடைபெற்றது. 13.4.1960 அன்று, ரத்தினபுரி இளவரசி என்கின்ற திரைப்படம், தமிழ்ப் புத்தாண்டு வெளியீடாக சயானியில் வெளியானது.

ஆக, சென்னையில் குறவஞ்சி, சித்ராவில் 56 நாட்களும், கிரெளனில் 50 நாட்களும், சயானியில் 40 நாட்களும் வெற்றிகரமாக நடைபெற்றது.

மதுரை தேவி திரையரங்கில், 4.3.1960 முதல் 28.4.1960 வரை 56 நாட்கள் அமோக வரவேற்புடன் ஓடியது.

மொத்தத்தில், ஏ சென்டர்களில் 6 முதல் 8 வாரங்களும், பி மற்றும் சி சென்டர்களில் 4 முதல் 6 வாரங்களும் ஓடி, ஒரு சராசரி வெற்றிப்படம் என்கின்ற அந்தஸ்தைப் பெற்ற காவியம் குறவஞ்சி.

அன்புடன்,
பம்மலார்.

saradhaa_sn
4th March 2010, 03:45 PM
டியர் பம்மலார்,

ஏற்கெனவே அறிந்தவற்றையே திரும்ப திரும்ப பேசிக் கொண்டிராமல், அதிகம் பேர் அறிந்திராத பொக்கிஷங்கள் பலவற்றை வெளிக்கொணர்ந்து அறியத்தருவதில் உங்களின் பணி தலையானது.

அந்த வகையில் நமது திரியில் அதிகம் அறிந்திராத "குறவஞ்சி" திரைப்படத்தைப்பற்றிய அரிய பல தகவல்களை திரட்டித் த்ந்துள்ளீர்கள். நடிகர்திலகத்தின் ரசிகர்கள் சார்பில் அநேக நன்றிகள்.

டியர் RC,

'விளையாட்டுப்பிள்ளை' விகடன் விமர்சனத்தை இங்கே பதிந்தமைக்கு மிக்க நன்றி.

sankara1970
4th March 2010, 05:05 PM
Vikadan vimarsanam mudivil yar yar vimarsanam seitharkal endru payar and avarkalin tholil(!) ponra thagalvalkalum thanthathu
nanraka irunthathu.

sankara1970
4th March 2010, 05:09 PM
ஜெயா டி.வி.யில் கடந்த திங்கள் முதல் வெள்ளி வரை வெளியான பேராசிரியர் ஏ.எஸ்.பிரகாசத்தின் 'திரும்பிப் பார்க்கிறேன்' நிகழ்சி நடிகர்திலகத்தின் ரசிகர்களுக்கு ஏமாற்றமளிப்பதாக இருந்தது. ஐந்து நாள் நிகழ்ச்சியில் நான்கு நாட்களை எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா புகழ்பாடுவதற்கே செலவழித்து விட்ட அவர், கடைசி நாளான நேற்று நடிகர்திலகத்தின் 'அந்தமான் காதலி' ஒரே படத்தைப்பற்றி மட்டுமே குறிபிட்டு முடித்துக்கொண்டார். அவரது கதைவசனத்தில் வந்த 'இமயம்' மற்றும் அவர் இயக்கிய படங்களிலேயே 125 நாட்களுக்கு மேல் ஓடி வெற்றியடைந்த 'சாதனை' உள்பட வேறெந்தப்படத்தையும் குறிப்பிடவில்லை. 'அக்கரைப்பச்சை' போன்ற நல்ல படங்களைப்பற்றியும் கூட மூச்சு விடவில்லை.

அதே சமயம், நிகழ்ச்சியின் ஆரம்பத்தில், நடிகர்திலகத்தை முதன்முதலில் கொடைக்கானலில் சந்தித்து திரைப்பட பிரவேசம் குறித்து சொன்னபோது, தன்னை சினிமாவுக்கு வரவேண்டாம் என்று நடிகர்திலகம் DISCOURAGE செய்ததாக ஒரு வார்த்தையை விட்டிருந்தார்.
makkalukku nalladhu panna try panni irukkaar Sivaji. sonna pechai kaettu irukkalaam.

haha -well said

Murali Srinivas
5th March 2010, 12:01 AM
குறவஞ்சி படம் வெளியான தியேட்டர்கள் மற்றும் அது ஓடிய விவரங்களை அந்த படத்தின் பொன்விழா நாளில் வெளியிட்டு அனைவரையும் மகிழ்வித்த சுவாமிக்கு நன்றி.

இந்த நாளை நினைக்கும் போது என் மனம் 32 ஆண்டுகளுக்கு முன்னால் போகிறது.1978 -ம் ஆண்டு மார்ச் 4 -சனிக்கிழமை. அன்றுதான் பாலாஜி தயாரித்த வெள்ளி விழா படங்களில் ஒன்றான தியாகம் வெளியானது. முதல் நாள் மாலைக் காட்சி மதுரை சிந்தாமணியில் பார்த்தது இன்றும் பசுமரத்தாணி போல் இருக்கிறது.

தேன் மல்லிப் பூவேயும், நல்லவருக்கெல்லாம் தியேட்டர் அலறியது. முதல் நாள் மாலைக் காட்சி பார்த்ததுபோல் 175 -வது நாளான ஆகஸ்ட் 25 வெள்ளிக்கிழமை மாலைக்காட்சியும் அதே சிந்தாமணி தியேட்டரில் பார்த்தது மறக்க முடியாத ஒன்று. இந்த இரண்டுக்கும் நடுவில் ஒரு 5 முறை பார்த்தேன்.

அன்புடன்

என்னவோ தெரியவில்லை - விளையாட்டுப் பிள்ளையின் 40 -வது ஆண்டு நிறைவை குறிப்பிட்ட நாளிலிருந்தே அந்தப் படத்தைப் பற்றிய செய்திகள் நிறைய வருகின்றன.

saradhaa_sn
5th March 2010, 01:02 PM
இந்த நாளை நினைக்கும் போது என் மனம் 32 ஆண்டுகளுக்கு முன்னால் போகிறது.1978 -ம் ஆண்டு மார்ச் 4 -சனிக்கிழமை. அன்றுதான் பாலாஜி தயாரித்த வெள்ளி விழா படங்களில் ஒன்றான தியாகம் வெளியானது. முதல் நாள் மாலைக் காட்சி மதுரை சிந்தாமணியில் பார்த்தது இன்றும் பசுமரத்தாணி போல் இருக்கிறது.

தேன் மல்லிப் பூவேயும், நல்லவருக்கெல்லாம் தியேட்டர் அலறியது.
டியர் முரளி,

'தியாகம்' பட வெளியீட்டு நிகழ்வுகளைத்தந்து, நினைவலைகளைப் பின்னோக்கி தட்டி விட்டு விட்டீர்கள். நேற்று நடந்த்து போல் இருக்கிறது. அதற்குள் 32 ஆண்டுகள் ஒடி விட்டதா?. தாவணி கூட போடாமல் வெறும் பாவாடை, சட்டை போட்டிருந்த சிறுமியாக இருந்தபோது நடந்த சம்பவங்கள் இன்னும் பசுமையாக நினைவில் உள்ளன. படம் வெளியான அன்று சென்னை சாந்தி திரையரங்க வளாகத்தில்தான் ஆண்களும் பெண்களுமாக என்ன கூட்டம். அவ்வளவு பெரிய கார் பார்க்கிங் ஏரியா நிறைந்து, பக்கத்திலிருந்த 'பால்ஸ் ரெஸ்டாரண்ட்' கிரவுண்டுக்கு கார்கள் திருப்பி விடப்பட்டுக் கொண்டிருந்தன. (இப்போது அந்த கிரவுண்ட் எல்லாம் கட்டடங்களாக மாறி விட்டன). கொடிகளும், பேனர்களும், ஸ்டார்களும், மாலைகளுமாக தியேட்டரே விழாக்கோலம் பூண்டிருந்தது என்றால், நீண்ட சர வெடிகள் அந்த வழியே பேருந்தில் பயணித்தோரின் கண்களை ஈர்த்தன. மன்றத்தின் மூலம் ரிசர்வ் செய்யப்பட்டிருந்த மூன்று டிக்கட்டுகளும் பாக்கெட்டில் இருக்கும் தைரியத்தில் அப்பா இந்த கொண்டாட்டங்களை ரசித்துக்கொண்டிருக்க, நானும் அம்மாவும் அவர் பக்கத்தில் நின்று ஆச்சரியமாகப் பார்த்துக்கொண்டிருந்தோம்.

தியேட்டரின் உள்ளே படம் துவங்கியது முதலே ஆரவாரம் தான். படகில் அமர்ந்திருக்கும் 'தலைவரை' அவரது இரண்டு சிஷ்யர்களும் அழைக்க, தலையில் இருந்த பெரிய கூடைதொப்பியைக் கழற்றியபடி 'தலைவர்' தரிசனம் தந்ததும், ரசிகர்கள் மேடையில் ஏறி கற்பூர ஆரத்தி எடுத்தனர். பேப்பர் கட்டிங் களும், சில்லரைகளும் வீசப்பட்டன. காட்சிக்கு காட்சி ஆரவாரம். குறிப்பாக கோயிலில், 'உள்ளே போயிருவியாடா?' என்று கேட்கும் தேங்காயைப்பார்த்து, 'போவேண்டா' என்று சொல்லுமிடத்திலும், வாசுவை சேற்றில் தள்ளி புரட்டியெடுக்கும் காட்சியிலும் ஆரவாரம் என்றாலும் கூட, சாந்தி தியேட்டரே துவம்சம் ஆனது நடிகர்திலகம் - ஜஸ்டின் சண்டைக்காட்சியின்போதுதான். (மாற்றுமுகாமைச்சேர்ந்த ஜஸ்டினுடன் முதல் படம்). அந்த மீன் மார்க்கெட் சண்டைக்காட்சி படத்தின் ப்ளஸ் பாயிண்ட்களில் ஒன்று.

அதுபோல 'நல்லவர்க்கெல்லாம்' பாடல் காட்சியின்போதும் ஆரவாரம், கைதட்டல். குறிப்பாக, பாடல் முடிந்ததும் லட்சுமி நடிகர்திலகத்தைப்பார்த்து 'சூடு ஆறிப்போச்சு' என்று சொல்லும்போது.

ஹும்.... எப்படிப்பட்ட சுவையான நாட்கள் அவை.

Kambar_Kannagi
5th March 2010, 01:43 PM
http://www.youtube.com/watch?v=LciGhDXliUE

:notworthy:

Can some one tell me which movie this song is from ?

நான் வாழ வைப்பேன் (என்று நினைக்கிறேன் :roll: )

Murali Srinivas
5th March 2010, 03:17 PM
சாரதா,

நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை. ஜஸ்டினோடு போடும் சண்டைக் காட்சி பெரிய ஆரவாரத்தைப் பெறும் [காரணத்தை நீங்களே சொல்லி விட்டீர்கள்]. அது போல் உலகம் இருட்டு பாடல் காட்சி, பாடலே இல்லாமல் நடிகர் திலகமும் படாஃபட்டும் ஆடும் காட்சி, தொடர்ந்து 72 மணி நேரம் சைக்கிள் ஓட்டும் காட்சி, எல்லாமே அலப்பறை காட்சிகள்தான். போலீஸ் ஸ்டேஷன்-ல் முதலில் பாலாஜி சாட்டையால் அடிக்கும் போது பாலாஜியை அப்படி திட்டுவார்கள், உண்மை தெரிந்த பிறகு ஏன் இப்படி என்று கேட்கும் பாலாஜியிடம் புன்னைகைத்துக் கொண்டே எல்லோருக்கும் நேரா எழுதியிருக்க ஆண்டவன் எனக்கு கோணலா எழுதியிருக்கான் என்று கட்டை விரலால் நெற்றியை காண்பித்து விட்டு போவாரே அந்த சீன் இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். லட்சுமியும் நன்றாக செய்திருப்பார். அவர் அந்த படத்தில் அணிந்து வந்த புடவைகள் ரொம்ப பேஃமஸ். வசந்த கால கோலங்கள் [கண்ணன் எந்தன் காதலன் பாடல் மெட்டை நினைவுப்படுத்தினாலும்] காட்சியும் நன்றாக இருக்கும். வெளிப்புற காட்சிகள் முழுக்க கேரளத்தில் படமாக்கப்பட்டிருக்கும். ஆற்றில் நடக்கும் ஜல்லிக்கட்டு ஒரு புதுமை. A.L. நாராயணன் வசனம் சுவையாக இருக்கும்.

மதுரையில் முதல் 63 நாளில் நடைபெற்ற 207 காட்சிகளும் ஹவுஸ் புல். மதுரையில் 175 நாட்களில் வசூல் Rs 6,75,000/-. திரிசூலம் வந்து இதை முறியடிக்கும் வரை இதுவே ரிகார்டாக இருந்தது[அதாவது 175 நாட்களில் மதுரையில் அதிக வசூல் இதுதான்].

விட்டால் முழு படத்தையும் வசனத்தையும் எழுதி விடுவேன் என நினைக்கிறேன். என்னையும் மீண்டும் அந்த காலக்கட்டத்தை அசை போட வைத்ததற்கு நன்றி.

அன்புடன்

Murali Srinivas
5th March 2010, 03:30 PM
கோடீஸ்வரன் - Part I

தயாரிப்பு: கணேஷ் மூவி டோன்

இயக்கம்: சுந்தர்ராவ் நட்கர்னி

வெளியான நாள்: 13.11.1955

ஊரில் பெரிய மனிதர் ராவ் பகதூர் ராமசாமி. அவருக்கு ஒரு மகன் கண்ணன். ஒரு மகள் நீலா. கண்ணன் சென்னையில் எம்.ஏ. படித்துவிட்டு ஊருக்கு வருகிறான். மகள் நீலா வீட்டில் இருக்கிறாள். பணத்தாசை பிடித்த ராமசாமி தன் மகனுக்கு பெரிய அளவிலான வரதட்சணை எதிர்பார்க்கிறார்.

பக்கத்து வீட்டில் வசிப்பவர் சிதம்பரம். வசதிக் குறைவானவர். அவர் மகள் கமலா கல்யாணத்திற்காக காத்திருக்கிறாள். ஆனால் வரும் மாப்பிள்ளைகள் எல்லோரும் வரதட்சணை அதிகமாக கேட்க அவளின் கல்யாணம் தள்ளிப் போகிறது. ஒரு டாக்டர் அவளை பெண் பார்க்க வந்து விட்டு ஏராளமான கேள்விகள் கேட்டு ஏராளமான வரதட்சணையும் கேட்க அந்த வரனும் தட்டிப் போகிறது. கமலாவும் கண்ணனும் ஒருவரை ஒருவர் விரும்புகின்றனர்.

சிதம்பரத்தின் அண்ணன் மகன் சந்தர். சென்னையில் மருத்துவப் படிப்பு படித்து கொண்டிருக்கும் சந்தர் கண்ணனோடு ஊருக்கு வருகிறான். அது மட்டுமல்ல, ஆனந்தன் என்ற புனைப் பெயரில் கவிதை எழுதுபவன். ஊருக்கு வரும் சந்தர் பரமசிவத்தின் பண மோகத்தையும் கண்ணனும் கமலாவும் ஒருவரை ஒருவர்
விரும்புவதையும் தெரிந்துக் கொள்கிறான். கல்யாணமே வேண்டாம் என்று சொல்லிக் கொண்டிருக்கும் கண்ணனின் தங்கை நீலாவிற்கு சந்தர் மேல் ஒரு ஈர்ப்பு உருவாகுகிறது.

ஏற்கனவே பெண் பார்க்க வந்து வரதட்சனை கேட்டு தங்களை அவமானப்படுத்திய டாக்டர் பசுபதியை பழி வாங்க அவரை மீண்டும் வரவழைக்கிறார்கள் சந்தரும் நீலாவும். இப்போது கல்யாண பெண் இடத்தில் நீலா இருந்து டாக்டரை பாட தெரியுமா, ஆடத் தெரியுமா என்றெல்லாம் கேள்வி கேட்டு அவமானப்படுத்த, டாக்டர் அவர்கள் மேல் வன்மம் கொள்கிறார்.

கண்ணன் கல்யாணம் நடைபெற சந்தர் ஒரு யுக்தி செய்கிறான். முதலில் தயங்கினாலும் கண்ணன் ஒத்துக் கொள்கிறான். இதற்கு நீலாவின் ஆதரவும் இருக்கிறது. அதன்படி கண்ணன் வீட்டிற்கு பெண் கேட்க செல்லும் சிதம்பரத்துடன் உடன் செல்லும் சந்தர் தன் பணக்கார மாமா ஒருவர் இறந்து விட்டதாகவும் வாரிசில்லாத அவரது உயில்படி சொத்தெல்லாம் தன் பெயருக்கு வருவதாகவும் அதனால் தான் ஒரு கோடீஸ்வரன் என்றும் சொல்கிறான். அண்ணன் என்ற முறையில் தங்கை கல்யாணத்தை நடத்தி வைப்பதாக கூறும் சந்தர் வரதட்சனை பணத்தையும் சேர்த்து முப்பதாயிரம் ரூபாய் தருவதாக சொல்கிறான்.

இந்த பணத்தை கொடுப்பதற்காக ஒரு தந்திரம் செய்யும் சந்தர் கண்ணனிடம் அவனது தந்தையின் இரும்புப் பெட்டியில் இருக்கும் பணத்தை அவருக்கு தெரியாமல் எடுத்து வந்து கொடுக்கும்படி சொல்கிறான். நீலாவிடமும் இந்த திட்டத்தை சந்தர் ரகசியமாக சொல்வதை தங்கையான சிறுமியும் கேட்டு விடுகிறாள்.

தந்தையின் படுக்கைக்கு அடியில் இருக்கும் இரும்பு பெட்டி சாவியை எடுத்து பணத்தை எடுக்க சிரமப்படும் கண்ணனுக்கு நீலாவும் உதவுகிறாள். கல்யாணம் நல்லப்படியாக நடந்து முடிகிறது. தன் மகள் நீலாவை சந்தர் கல்யாணம் செய்துக் கொள்ள வேண்டும் என்று ராவ் பகதூர் கேட்க நீலா இப்போது வேண்டாம் என்று மறுத்து விடுகிறாள்.

இந்த நிலையில் சந்தருக்கு பணம் எப்படி கிடைத்தது என்பது பற்றி சிதம்பரம் தன் மனைவியுடன் பேசிக் கொண்டிருக்க சந்தரின் தங்கை தன் வயதையொத்த தன் கஸினிடம் கோவிலில் வைத்து [அவள் ஏற்கனவே சந்தர் நீலாவிடம் ரகசியமாக சொன்னதை கேட்டிருந்ததால்] உண்மையை சொல்கிறாள். இதை கோவிலுக்கு வந்திருக்கும் டாக்டர் பசுபதி தற்செயலாய் கேட்டு விட, அப்போதே ராவ் பகதூர் வீட்டிற்கு சென்று அவரிடம் சொல்லி விடுகிறார்.

தன்னிடம் வரும் நோட்டுக் கட்டுகளின் எங்களை எழுதி வைக்கும் வழக்கமுடைய ராவ் பகதூர் தன்னிடமிருந்த நோட்டுகளின் எண்களையும் சந்தர் கொடுத்த நோட்டுகளின் எண்களையும் ஒப்பிட்டு பார்க்க, குட்டு வெளிப்படுகிறது. கோவமுறும் ராவ் பகதூர் கண்ணனையும் கமலாவையும் வீட்டை விட்டு வெளியேற்றுகிறார். சந்தரையும் சிதம்பரத்தையும் கேவலமாகவும் பேசி விடுகிறார். தன் சொத்தையெல்லாம் விற்று பணமாக்கி ஒரு வங்கியில் வைப்பு நிதியாக வைத்து விடுகிறார்.

நடந்த தவறுகளுகெல்லாம் பொறுப்பேற்று கொள்ளும் சந்தர் மீண்டும் கண்ணனையும் அவனது தந்தையுடன் சேர்த்து வைக்க சபதம் எடுக்கிறான். ஆனால் இப்போதும் சந்தரை ராவ் பகதூர் ஒரு கோடிஸ்வரனாக நினைத்துக் கொண்டிருக்கிறார். தன் மகளுக்கு மாப்பிள்ளை பார்க்க முயற்சி எடுக்க, அவர் மகள் நீலாவோ தன் தந்தை வற்புறுத்தியதால் தன் மனம் சந்தரை நாட தொடங்கி விட்டது என கூறுகிறாள்.

இந்நிலையில் டாக்டர் பசுபதி நீலாவை மணந்து கொள்வதாக மீண்டும் வருகிறார். ராவ் பகதூர் வீட்டிற்கு வரும் சந்தர் தான் நீலாவை திருமணம் செய்துக் கொள்ள தயார் என்றும் ஆனால் அதற்கு ஒரு லட்சத்து ஐம்பதினாயிரம் ருபாய் செலவு செய்ய வேண்டுமென்று நிபந்தனை விதிக்கிறான். அதை கேட்டு விக்கித்துப் போகும் ராவ் பகதூருக்கு அடுத்த அடியாக ஒரு தந்தி வருகிறது. அவர் பணம் முதலீடு செய்திருந்த வங்கி திவாலாகி விட்டது என்பதே அந்த செய்தி. இதை கேட்டவுடன் டாக்டர் பசுபதி கல்யாணம் வேண்டாம் என்று ஓடி விட ராவ் பகதூர் கதறி அழுகிறார்.

தன் சம்பந்தி, மகன், மருமகளை எல்லாம் அழைத்து மன்னிப்பு கேட்கும் அவரிடம் வங்கி திவாலாகவில்லை என்றும் அவரது குணத்தை திருத்தவே இப்படி ஒரு நாடகமாடியதாக சந்தர் உண்மையை வெளிப்படுத்துகிறான். தான் கோடீஸ்வரன் அல்ல என்ற உண்மையையும் வெளிப்படுத்துகிறான்.

ராமசாமி மனம் மாறி அனைவரையும் ஏற்றுக் கொள்ள சந்தர் நீலா இணைகிறார்கள்.

அன்புடன்

Murali Srinivas
5th March 2010, 03:40 PM
கோடீஸ்வரன் - Part II

ஒரு மராத்தி நாடகத்தை தழுவி எடுக்கப்பட்ட படமே கோடிஸ்வரன். வரதட்சனைக்கு எதிரான ஒரு கதை களத்தை எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தோடு எடுக்கப்பட்ட படம் என்றே தோன்றுகிறது. நம்முடைய விமர்சனங்களில் 50- களில் அதிலும் குறிப்பாக நடிகர் திலகத்தின் முதல் 25 படங்களில் இங்கே எழுதப்பட்டவை ஒரு சில மட்டுமே. என் சிறு வயதில் நான் நடிகர் திலகத்தின் ரசிகனாக மாற ஆரம்பித்த நேரத்தில் இந்த படம்தான் அவரின் 25-வது படமாக எனக்கு சொல்லப்பட்டது. பின்னாளில் கள்வனின் காதலி 25-வது படம் என்று சொன்னார்கள். குழப்பத்திற்கு காரணம் இவை இரண்டுமே ஒரே நாளில் 13.11.1955 தீபாவளியன்று வெளியானது.

50- களில் வெளியான படம் என்றாலே இரண்டு விஷயங்கள் நம்மை சிறிது தயங்க வைக்கும். ஒன்று தூய தமிழ். ஆனால் படத்தின் முதல் காட்சியிலே பேச்சு தமிழ் இடம் பெற மனதில் ஒரு மகிழ்ச்சி. ஒரு சில இடங்களை தவிர படம் முழுக்க பேச்சு தமிழே இடம் பெறுவது குறிப்பிட வேண்டிய விஷயம்.

இரண்டாவது அந்த காலப்படங்களில் நொடிக்கொரு முறை இடம் பெறும் பாடல்கள். இந்த விஷயத்திலும் கோடிஸ்வரன் நமது பொறுமையை சோதிக்காமல் குறைந்த பாடல்களுடன் இருப்பது இன்னொரு சந்தோஷம்.

நடிப்பை பற்றி சொல்வதென்றால் நடிகர் திலகம் எவ்வளவு இயல்பாக பண்ணக் கூடியவர் என்பதற்கு இந்த படம் மேலும் ஒரு உதாரணம். அந்த டாக்டர் சந்தர் ரோல் அவருக்கு அல்வா சாப்பிடுவது போல். ஊதி தள்ளி விடுகிறார். ராவ் பகதூரின் காரியதரசியிடம் நக்கலாக பதில் கொடுப்பது முதல் பெண் பார்க்க வந்து பந்தா காட்டும் டாக்டர் பசுபதியை வஞ்ச புகழ்ச்சி செய்வது, கல்யாணத்திற்கு அதை செய்ய வேண்டும் இதை செய்ய வேண்டும் என்று பட்டியலிட்டு விட்டு ஒவ்வொன்றும் இறந்து போன தன் மனைவியின் ஆசை என்று அள்ளி விடும் ராவ் பகதூரை கிண்டல் செய்வது, பத்மினியுடனான கவிதை பற்றிய காதல் பேச்சு, கல்யாணத்தை நடத்த திட்டம் போடும் போது ஒரே வாசகத்தை [அப்படின்னு நான் நினைக்கிறேன்] மாறி மாறி பேசுவது, கோடிஸ்வரனாக வந்து ராவ் பகதூர் முன்பு பேசியது போல அவர் மகளை மணக்க ஒவ்வொரு செலவாக சொல்லி விட்டு இதெல்லாம் என் மாமாவின் ஆசை என்று திருப்புவது இப்படி சர்வ அலட்சியமாக செய்திருப்பார்.

நடிகர் திலகத்தின் தோற்றத்தைப் பொறுத்த வரை மிக இளமையாக இருப்பார். அவர் அணிந்து வரும் சில தொப்பிகள் அழகாக இருக்கும். ஆரம்பத்தில் பீக் cap வைத்து வரும் அவர் வேறு சில காட்சிகளில் ஷெர்வானி குர்தா அணிந்து இஸ்லாமியர் அணியும் தொப்பியை போன்று [பாவ மன்னிப்பு ரஹீம் போன்று] அணிந்து வருவார். கிளைமாக்ஸ்-ல் ஆந்திர பாணி வேட்டி உடுத்தி நெற்றியில் திலகம் இட்டு வருவார். கழுத்தில் தொங்கும் கயிற்றில் கண்ணாடி, அதுவும் சைடு பிரேம் இல்லாமல் மூக்கில் மட்டும் பிடிமானம் உள்ள லென்ஸ் வைத்திருப்பார். ராவ் பகதூர் கண்ணனை வீட்டை விட்டு வெளியேற்றும் போது மட்டுமே அவருக்கு உணர்ச்சி வசப்படும் காட்சி. அதை அமைதியாக செய்திருப்பார்.

பாடல் காட்சிகளில் அவர் ஸ்டைல் ஆரம்பித்தது உத்தம புத்திரனுக்கு பிறகுதான் என்று நினைத்தால் இந்த படத்திலேயே அசத்தியிருப்பார். டூயட் பாடலில் பிரமாதப்படுத்தியிருப்பார். அவர் எழுதிய வசந்த கானம் என்ற கவிதை தொகுப்பை தானே தன் அண்ணனிடம் கொடுப்பதாக வாங்கிக் கொள்ளும் பத்மினி வீட்டு வாசலுக்கு சென்று நின்று சற்றே திரும்பி ஒரு காதல் பார்வை வீசி விட்டு போக இடது கையில் பிடித்திருக்கும் வாக்கிங் ஸ்டிக்கை தூக்கி போட்டு வலது கையில் பிடித்து ஒரு நடை நடப்பார் - சூப்பர் [இந்த ஸ்டைலை கூட அப்போதே செய்து விட்டார்]. அது போல் கல்யாணத்திற்கு பிறகு தங்கையின் வீட்டிற்கு வருபவர் தங்கையும் அவள் கணவனும் பாடி மகிழ்வதைப் பார்த்துவிட்டு கேட் அருகே நின்று ஒரு போஸ், பின் சிறிது வெட்கத்துடன் பக்கவாட்டில் திரும்பி அந்த முகத்தை மட்டும் சிறிது உயர்த்தி ஒரு புன்னகை புரிவார். பிரமாதமாக இருக்கும். இந்த படத்தில் கிட்டத்தட்ட செயின் ஸ்மோக்கர் மாதிரி. பார்க்கில் நண்பனோடு பேசும் போது பத்மினி வந்து விட அப்போது அந்த சிகரட்டோடு காட்டும் ஸ்டைல், பத்மினியை பெண் பார்க்க வந்து எஸ்.பாலச்சந்தர் டான்ஸ் ஆடுவதை வாயில் புகையும் சிகரெட்டோடு சேரில் கம்பீரமாக அமர்ந்து பார்ப்பது - பெரிய கோடிஸ்வரன் என்று சொன்னதற்கேற்ப ஒயிட் கோட் சூட் போட்டு கூலிங் கிளாசோடு வாக்கிங் ஸ்டிக்கோடு சிகரட்டோடு தங்கவேலு வீட்டிற்கு வந்து நிற்பது -எப்பவுமே தான் ஸ்டைல் சக்கரவர்த்தி என்பதை நிரூபிப்பார்.

டாக்டர் பசுபதியாக வரும் வீணை எஸ்.பாலச்சந்தர் கலக்கியிருப்பார். ஒரு செமி லூஸ் செமி வில்லன் ரோலை நேர்த்தியாக பண்ணியிருப்பார். கட்டிக்கோ தாலி கட்டிக்கோ பாடலில் இங்கிலீஷ்,இந்தி, தமிழ்,தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் மொழிகளில் வரும் வரிகளுக்கேற்ப அவர் நடனம் ஆடுவார். பாராட்டப்படவேண்டிய முயற்சி.

ராவ் பகதூர் ராமசாமியாக தங்கவேலு. சரளமாக வசனம் பேசும் முறை அவரது பிளஸ் பாய்ன்ட். இந்த படத்தின் வசனங்கள் பேச்சு தமிழில் அமைந்திருப்பது அதற்கு பெரிதும் உதவி செய்கிறது. எதுக்கும் இது வேணும் என்று அடிக்கடி மூளையை தொட்டுக் காட்டி பேசுவது அவரது ட்ரேட் மார்க் என்றால் பண விஷயத்தில் அவர் ஏமாந்ததை அதே வசனத்தின் மூலமாக அவரது உதவியாளார் சட்டாம்பிள்ளை வெங்கட்ராமன் சுட்டிக்காட்டுவது ரசிக்கும்படியாக இருக்கும்.

கண்ணனாக வரும் ஸ்ரீராமுக்கு நடிப்பில் பெரிய வேலை ஒன்றுமில்லை. இரண்டு டான்சை தவிர்த்து விட்டு பார்த்தால் பத்மினி ராகினியும் அதே ரகத்தில் சேர்த்து விடலாம். நடிகர் திலகத்தின் தங்கையாக வரும் பேபி சச்சு துரு துறுவென்று இருப்பார்.

தஞ்சை ராமையாதாஸ், காங்கேயன் வசனங்கள் வெகு இயல்பு. இன்றைக்கும் பயன்படுத்தப்படும் சில வசனங்கள் [சம்மன் இல்லாமலே ஏன் ஆஜர் ஆகுறீங்க] அன்றைக்கே படத்தில் இருப்பது ஆச்சரியம். ராகினி கொடுக்கும் டீயை குடித்துவிட்டு அடிக்கும் கமென்ட் [குட்டி - சாரி good டி] இவை எல்லாம் ரசிக்கும்படி இருக்கும் [1955 என்று நினைக்கும் போது].

இசை - S V வெங்கட்ராமன்.

எனது உடலும் உள்ள காதலும்- கர்னாடிக் ராக பின்னணியில் எம்.எல்.வி பாடியிருப்பார். எஸ்.பாலச்சந்தர் பெண் பார்க்க வரும் போது ராகினி ஆடும் பாடல்.

கானத்தாலே காதலாகி போனேன் - பத்மினியை எஸ்.பாலச்சந்தர் பெண் பார்க்க வரும்போது பத்மினி பாடும் பாடல். ஜிக்கி என்று தோன்றுகிறது.

கட்டிக்கோ தாலி கட்டிக்கோ - அன்றைய காலக்கட்டத்தின் வழக்கத்திலிருந்து மாறி பேச்சு தமிழில் மட்டுமல்ல ஏற்கனவே சொன்னது மாதிரி அனைத்து தென்னிந்திய மொழிகளிலும் ஆங்கிலத்திலும் இந்தியிலும் வரும் இந்த பாடலை இசையமைப்பாளார் S V வெங்கட்ராமனே பாடியிருப்பார். நன்றாக பண்ணியிருப்பார்.

உலாவும் தென்றல் நிலாவைக் கண்டு - நடிகர் திலகத்திற்கு படத்தில் இந்த ஒரே பாடல்தான். அது மட்டுமல்ல ஏ எம் ராஜா பாடியிருப்பார். பத்மினிக்கு சுசீலா. நடிகர் திலகம் நாட்டியப் பேரொளி கெமிஸ்ட்ரி பிரமாதமாக இருக்கும். கொஞ்சம், கனவின் மாயலோகத்திலே பாடல் காட்சியை நினைவுப்படுத்தினாலும் [ஆனால் அன்னையின் ஆணை இந்த படத்திற்கு பின்தான் வெளியானது] அந்த ஸ்டைல் போஸ் அண்ட் நடைக்கே பார்க்கலாம்.

யாழும் குழலும் உன்னுடன் தானோ - ஸ்ரீராம் ராகினி டூயட் - ராஜா சுசீலா பாடியிருப்பார்கள்.

பகவானே கேளய்யா பச்சோந்தி உலகிலே - தன் தந்தை தங்கவேலுவின் பணத்தாசையை கிண்டல் செய்து பத்மினி பாடும் பாடல்.

சுந்தர்ராவ் நட்கர்னி இயக்கம். கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி படமும் அதன் வெற்றியும் இயக்குனரை நடிகர் திலகத்தை வைத்து இந்த படத்தை எடுக்க தூண்டியிருக்கக் கூடும். குறை சொல்ல முடியாதபடி போரடிக்காமல் படத்தை கொண்டு போன முறைக்கு இயக்குனர் பாராட்டப்பட வேண்டியவரே.

நடிகர் திலகத்தின் சீரியஸ் படங்களுக்கு கிடைத்த மாபெரும் வரவேற்பு இந்த படத்திற்கு கிடைக்கவில்லை. ஒரு ஆவரேஜ் வெற்றியை மட்டுமே இந்த படம் பெற முடிந்தது. சரியான முறையில் மறு வெளியீடு செய்யப்பட்டிருந்தால் படம் நிச்சயமாக ரசிக்கப்பட்டிருக்கும். ஆனால் நடிகர் திலகத்தின் சாதனை படங்களுக்கு நடுவே மாட்டிக் கொண்டதால் அந்த வாய்ப்பும் அமையவில்லை.

அன்புடன்

pammalar
5th March 2010, 10:17 PM
சிங்காரச் சென்னையின் ஸ்டார் திரையரங்கில், இன்று (5.3.2010) வெள்ளி முதல், தினசரி பகல் காட்சியாக, சிங்கத்தமிழனின் "தங்கப்பதக்கம்" திரைக்காவியம் திரையிடப்பட்டுள்ளது.

இத்தகவலை அளித்த ரசிக நல்லிதயம் திரு.ஆர்.குமார் அவர்களுக்கு பற்பல நன்றிகள்!

அன்புடன்,
பம்மலார்.

RAGHAVENDRA
6th March 2010, 06:37 AM
அனைத்து நல்லிதயங்களுக்கும் வணக்கம்.
சாரதா அவர்களின் தியாகம் பற்றிய முதல் நாள் காட்சிகளைப் பற்றிய நினைவுகள் மிகவும் நெகிழ்வூட்டுபவையாயிருந்தன. காரணம் அந்தத் தேதியில் அங்கு நானும் இருந்தேன். ஏற்கெனவே 26.01.1978 அன்று அப்படத்தைப் பார்த்து விட்ட படியால் எங்கெங்கெல்லாம் அளப்பரை ஆரவாரம் வரும் என அறிந்திருந்தோம். அதே போல் அரங்கின் வெளியிலும். அந்த நாட்கள், அந்த அனுபவங்கள் கோடி கொடுத்தாலும் தற்போதைய தலைமுறைகளுக்குக் கிட்டாது. படம் வெளியாகி சிலநாட்களுக்குப் பிறகு சேலம் சென்றிருந்தேன். அங்கு சாந்தி திரையரங்கில் வெளியாகியிருந்தது. அங்கும் அதே ஆரவாரம் தான், அதே காட்சி தான். உலகெங்கும் உள்ள அனைத்து சிவாஜி ரசிகர்களின் நல்லிதயங்களும் ஒரே கோணத்தில் தான் சிந்திப்பார்கள் என்பதற்கு இது மற்றோர் உதாரணம்.
முரளி சாரின் கோட்டீஸ்வரன் படத்தினைப் பற்றிய அலசல் மிகவும் மகிழ்வூட்டியது. சற்றும் விறுவிறுப்புக் குறையாமல் போரடிக்காமல் செல்லக் கூடிய படம் கோட்டீஸ்வரன். குறிப்பாக எஸ்.பாலச்சந்தர் அவர்களுக்கு சிறப்பான பங்களித்திருந்தார்கள். ராகினியும் பத்மினியும் சேர்ந்து அவரை முட்டாளாக்கும் காட்சிகளில் சிரிக்காதவர்கள் இருக்க முடியாது. உலாவும் தென்றல் பாடலில் எஸ்.வி.வெங்கட்டராமன் அவர்கள் பின்னணியில் ரயில் ஒடும் ஒலி போல் ஒரு சிறப்பு சப்தம் இணைத்திருப்பார். மிகவும் புதுமையாக இருக்கும். அனைத்து ரசிகர்களும் கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம் கோட்டீஸ்வரன். இப்படத்தை எந்த நிறுவனமாவது குறுந்தகடு அல்லது நெடுந்தகடாக வெளியிட்டால் மிகுந்த வரவேற்பைப் பெறும்.
பம்மலார் வழக்கம் போல் தகவல் களஞ்சியங்களை அள்ளித் தருகிறார். குறிப்பாக மதுரை புதிய பறவை வசூல் விவரம் அனைத்து ரசிகர்களையும் மிகவும் மகிழ்வூட்டிய செய்தியாக அமைந்தது.
ஸ்டார் திரையரங்கில் தங்கப் பதக்கம் - அதுவும் பகல் காட்சியாக ... ஆஹா..
தென் சென்னையில் பகல் காட்சியை அறிமுகப் படுத்திய திரையரங்கம் ஸ்டார் என நினைவு. திரையிடப் பட்ட முதல் படம் ஆலயமணி என எண்ணுகிறேன்.
மீண்டும் ஸ்டாரில் பகல் காட்சியில் நடிகர் திலகத்தின் படம் ...
நினைத்தாலே இனிக்கும்.

மற்றோர் மகிழ்வான செய்தி. சிங்காரச் சென்னையின் அடையாளச் சின்னமாம் நமது சாந்தி திரையரங்கு தற்போது 50வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. இதனையொட்டி இந்த 50 ஆண்டில் வெளியான நடிகர் திலகத்தின் திரைப்படங்கள், முக்கியமான சாதனைகளைப் பற்றிய குறிப்புகள் உள்ளிட்ட தகவல்களோடு நமது இணைய தளம் சார்பில் ஒரு நினைவூட்டல் பேனர் வைக்கப் பட்டுள்ளது. சாந்தி திரையரங்கம் செல்லும் வாய்ப்புக் கிடைப்பவர்கள் இதைப் பார்த்து விட்டு தங்கள் கருத்தைப் பகிரந்து கொள்ளலாம்.

ராகவேந்திரன்

rangan_08
6th March 2010, 03:31 PM
சிங்காரச் சென்னையின் ஸ்டார் திரையரங்கில், இன்று (5.3.2010) வெள்ளி முதல், தினசரி பகல் காட்சியாக, சிங்கத்தமிழனின் "தங்கப்பதக்கம்" திரைக்காவியம் திரையிடப்பட்டுள்ளது.

இத்தகவலை அளித்த ரசிக நல்லிதயம் திரு.ஆர்.குமார் அவர்களுக்கு பற்பல நன்றிகள்!

அன்புடன்,
பம்மலார்.


Thanks for the good news, pammalar sir. Couple of years back, Vasantha Maligai was screened in the same theatre. Went there to watch the celeberations along with Murali sir. But, unfortunately we couldn't watch the film though we witnessed all the fanfare.

Murali sir, do you have any plans for tomorrow ???

rangan_08
6th March 2010, 03:37 PM
Watching, " Vetrivel Veeravel " from Kandan Karunai is always a great pleasure for me and my 4 years old daughter. Nadigar Thilagam's unparalleled walking style in this song thrills me everytime.

My inference is that, when you see him walking in a slow & steady pace, particularly after the drum beat and when the lines, " aadhi shakthi annai thandha gnyanavel...." begins, one would wonder that a beautifully decorated chariot is moving gracefully. If you notice the movement of his legs alone ( he will be wearing a nicely shaped boots ), you begin to feel that as if the wheels of a Benz, fitted with designed steel spokes, is rotating slowly, which is a wonderful sight. I really find it very difficult to explain, but you have to watch it to experience sheer magic, on screen.

pammalar
6th March 2010, 05:34 PM
மனமார்ந்த பாராட்டுக்களை வழங்கிய முரளி சாருக்கும், ராகவேந்திரன் சாருக்கும், செந்தில் சாருக்கும், சகோதரி சாரதா அவர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்!

தங்கத்தமிழ்ப்பெருமகனின் "தியாகம்" திரைக்காவியத் தகவல்களை, இரு வேறு கோணங்களில் வழங்கிய முரளி சாருக்கும், சகோதரி சாரதாவுக்கும் ஸ்பெஷல் பாராட்டுக்கள்! கூடுதல் விவரங்களை வழங்கிய ராகவேந்திரன் சாருக்கு நயமிகு நன்றிகள்!

ரங்கன் சார், ஸ்டாரில் தங்கப்பதக்கம், தங்கள் ஏக்கம் தீர்ந்தது.

அன்புடன்,
பம்மலார்.

pammalar
7th March 2010, 02:10 PM
தவிர்க்க முடியாத காரணங்களால், ஸ்டார் தியேட்டருக்குத் தங்கப்பதக்கத்தைக் காண, அடியேனால் செல்ல இயலவில்லை. திரு.ராகவேந்திரன் அவர்களும், திரு.ரங்கன் அவர்களும் இத்திரைக்காவியத்தைக் கண்டு களிக்கச் சென்றுள்ளனர். அவர்களது பதிவுகளைக் காண ஆவல்.

அன்புடன்,
பம்மலார்.

pammalar
7th March 2010, 02:47 PM
சிங்காரச் சென்னையின் பெரம்பூர் பகுதியில் உள்ள மஹாலட்சுமி திரையரங்கில், வருகின்ற மார்ச் 26, வெள்ளிக்கிழமை முதல் ஏப்ரல் 1, வியாழக்கிழமை வரை, ஒரு வாரத்திற்கு, தினசரி 3 காட்சிகளாக, சிவாஜி வாரம் திரையிடுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இதனைச் சென்னையைச் சேர்ந்த சிவாஜி ரசிகர் மன்றத்தினர் செய்து வருகின்றனர். ஒரு நாளுக்கு ஒரு படம் என்கின்ற விகிதத்தில், 7 நாட்களுக்கு 7 படங்கள் திரையிடப்படும். 7 படங்களில் 5 படங்கள் இது வரை முடிவாகி உள்ளன. அவையாவன:

1. திருவருட்செல்வர்

2. பாரத விலாஸ்

3. எங்கள் தங்க ராஜா

4. கெளரவம்

5. மன்னவன் வந்தானடி

நமது நடிகர் திலகத்தின் ரசிக நல்லிதயங்களின் முயற்சிகள் மாபெரும் வெற்றி அடைய வாழ்த்துக்கள்!

இத்தகவல் ஒரு முன்னோட்டமே. விவரங்கள் ஊர்ஜிதமான பின், அவசியம் பதிவு செய்கிறேன்.

அன்புடன்,
பம்மலார்.

RAGHAVENDRA
7th March 2010, 06:28 PM
பல ஆண்டுகட்குப் பின்னர் பம்மலார் அவர்களின் உதவியுடன் இன்று எஸ்.பி.சௌத்ரி அவர்களின் திவ்ய தரிசனம் ... ஆஹா ... திரையரங்கிற்குச் சென்றால் அது நடிகர் திலகத்தின் திருமுகத்தைக் காண மட்டும் தான் என்ற ஆவல் இன்று பூர்த்தியானது. ஸ்டார் திரையரங்கில் நண்பர்களுடன் அளவளாவி எஸ்.பி.சௌத்ரியுடன் சந்திப்பு நிகழ்ந்தது. உடன் நமது ரங்கன் அவர்களும் .. கேட்கவா வேண்டும். ஒரு புறம் படத்தில் மெய்மறந்தோம் என்றால் மறுபுறம் சிவாஜி வாரம் பற்றிய செய்தியும் அதன் கற்பனையும் மனக்குதிரையைத் தட்டிவிட்டுக் கொண்டே இருந்தன. நமது நண்பர்கள் சொன்னபடி முதல்நாள் 26.3.10 அன்று கௌரவம், 27.03.10 அன்று மன்னவன் வந்தானடி, 28.03.10 ஞாயிறு அன்று நம்மையெல்லாம் கட்டிப் போட பட்டாக்கத்தி பைரவன் தரிசனம் தரும் எங்கள் தங்க ராஜா, மறுநாள் திங்கள் 29.03.10 அன்று ராஜபார்ட் ரங்கதுரை, 30.03.10 அன்று திருவருட் செல்வர் என முடிவாகியுள்ளதாக தகவல். மற்றும் போனஸாக ஞாயிறு அன்று மாலைக் காட்சியில் நமது உடன் பிறவா சகோதரர் ஒய்.ஜி.மகேந்திரா நம்முடன் பங்கேற்க உள்ளதாகவும் தகவல்.
இவை ஒரு புறம் கற்பனையைத் தட்டி விட, மறு புறம் சௌத்ரி அவர்கள் நம்மைக் கட்டிப் போட்டு வைத்து விட்டார். எத்தனை முறை பார்த்தால் என்ன, மக்களோடு மக்களாய் தலைவரை தரிசிப்பதில் ஜென்ம சாபல்யம் கிட்டிவிடுகிறது.
கூட்டத்தைப் பொறுத்த வட்டில் பரவாயில்லை ரகம். ப்ரிண்ட் சுமார். சரியான விளம்பரம் இல்லை. பம்மலார் சொல்லாவிட்டால் நமக்கு இந்த வாய்ப்புக் கிட்டியிருக்காது. அவருக்கு நமது நன்றிகள் பல.
தீட்டத் தீட்ட ஜொலிக்கும் வைரம் போல் ஒவ்வொரு முறையும் புதுப்புது அர்த்தங்களும் கலைநயமும் அவர் நடிப்பில் நாம் காண முடிகிறது. இன்றும் அப்படியே.
மொத்தத்தில் 07.03.10 மறக்க முடியாத நாள்.
நன்றி
ராகவேந்திரன்

Murali Srinivas
7th March 2010, 09:55 PM
தவிர்க்க முடியாத காரணத்தினால் நானும் Sp.சௌத்ரியை இன்று காணும் வாய்ப்பை பெற முடியவில்லை. மோகனோடு பேசிய போது அவர் பெரிதும் ரசித்தது தெரிந்தது. அவருடன் அவரது பாதர்-இன்-லாவும் சென்றிருந்ததாக சொன்னார். ராகவேந்தர் சார் அவர்களை சந்தித்தது பற்றியும் குறிப்பிட்டார். நண்பர் சுவாமியும் ராகவேந்தர் சாரும் இங்கே குறிப்பிட்டுள்ள சிவாஜி வாரம் பற்றியும் சொன்னார். அவரே வந்து தியேட்டர் அனுபவத்தை பற்றி எழுதுவார். அவர் குறிப்பாக சொன்ன இரண்டு விஷயங்கள் மட்டும் இங்கே.

இன்று தியேட்டருக்கு சென்ற பலருக்கும் இது ஒரு ரீயூனியன் [Reunion] ஆக அமைந்தது.

இன்றும் நடிகர் திலகத்திற்கு இருக்கக்கூடிய மாஸ்.

அரசியல்/பட்டம்/பதவி/சுயலாபம் இப்படி எந்த எதிர்பார்ப்பும் இல்லாத பெரிய ரசிகர்கூட்டம் இன்றைக்கும் இவ்வளவு பேர் இருக்கிறார்கள் என்பது.

நான் சொன்னேன் இது சென்னையில் மட்டுமல்ல. தமிழகம் முழுக்க இதே நிலைதான் என்று.

அன்புடன்

pammalar
7th March 2010, 09:59 PM
டியர் ராகவேந்திரன் சார்,

தங்களது பதிவுக்கும், பாராட்டுக்கும் பற்பல நன்றிகள்!

சிவாஜி வாரம் பற்றிய அட்டவணைக்கும் மிக்க நன்றி!

ரங்கன் சாரது பதிவையும் ஆவலுடன் எதிர்நோக்குகின்றோம்!

அன்புடன்,
பம்மலார்.

pammalar
7th March 2010, 10:46 PM
சென்னை ஸ்டாரில் பகல் காட்சியாக வெளியாகியுள்ள தங்கப்பதக்கத்தின் வசூல் விவரம்: (சற்றேக்குறைய)

5.3.2010 (வெள்ளி) = ரூ. 2,200/- (ரூபாய் இரண்டாயிரத்து இருநூறு)

6.3.2010 (சனி) = ரூ. 2,500/- (ரூபாய் இரண்டாயிரத்து ஐநூறு)

7.3.2010 (ஞாயிறு) = ரூ. 3,800/- (ரூபாய் மூவாயிரத்து எண்ணூறு)

இந்த விவரங்களை அளித்த எமது நெருங்கிய நண்பரும், நடிகர் திலகத்தின் ரசிக நல்லிதயமுமான திரு.எஸ்.ராமஜெயம் அவர்களுக்கு இதயபூர்வமான நன்றிகள்!

(திரு.ராமஜெயமும், திரு.எஸ்.பி.செளத்ரி அவர்களை இன்று 7.3.2010 ஸ்டாரில் தரிசித்திருக்கிறார்)

அன்புடன்,
பம்மலார்.

RAGHAVENDRA
7th March 2010, 10:49 PM
வசூல் விவரங்களை வழங்கிய பம்மலாருக்கு பாராட்டுக்கள்

ராகவேந்திரன்

RAGHAVENDRA
7th March 2010, 11:05 PM
சென்னை சாந்தி திரையரங்கின் பொன்விழா ஆண்டினை யொட்டி நமது நடிகர் திலகம் இணைய தளம் சார்பில் வைக்கப்பட்டுள்ள பேனரில் கூறியுள்ள படி நமது பம்மலார் அவர்கள் தனியாக இணையதளம் ஒன்றினை துவக்கியுள்ளார். படிப்படியாக தகவல்கள் முழுமை பெற்று விடும். அது வரை சாந்தி திரையரங்கினைப் பற்றிய தகவல்கள் மேலோட்டமாக நமது நடிகர் திலகம் இணையதளத்தில் வழங்கப் பட்டுள்ளது. அதற்கான இணைய முகவரி-
http://www.nadigarthilagam.com/ShanthiTheatre50/ST50.html

ராகவேந்திரன்

sankara1970
8th March 2010, 11:20 AM
Thiyagam was liked by audience due to many factors:

Many outdoor shots-lovely Kerala beach

Songs by Ilayaraja

Many scenes where NT had puch dialogues

This was the time when everyone started looking at NT films more closely. In one way the pick up was slow for the film initially.

The tiltle of the movie itself very liking

Scenes where Manorama, Thengai, Baby and NT where they talk about God belief and it is neatly penned. It suited NT.

The costumes, hair style also were good for NT.

The film will suit to current situation in South India.

Parakskthi vasanam -"Kovil kodiyavarkalin koodaram ahivitakoodathu"

saradhaa_sn
8th March 2010, 02:45 PM
டியர் முரளி,

நடிகர்திலகத்தின் 'கோடீஸ்வரன்' படத்துக்கு நீங்கள் எழுதியிருக்கும் ஆய்வுக்கட்டுரை மிக மிக அருமை. படிக்கும்போதே படத்தைப்பார்க்க வேண்டும் என்ற ஆவலைத்தூண்டுகிறது. நான் இதுவரை அப்படத்தைப்பார்க்கவில்லை. என் கணிப்பில் இதுவரை அப்படம் 'ரங்கோன் ராதா' போன்ற போர் படமாக இருக்கும் என்றே எண்ணியிருந்தேன். ஆனால் உங்கள் விமர்சனம் படித்தபிறகு, அது 'ராஜாராணி' போன்ற சுவாரஸ்யமான / ஜனரஞ்சகமான படமாக இருக்கிறதென்பதைப் புரிந்து கொண்டேன். எப்படியும் விரைவில் பார்த்துவிட வேண்டும். படத்தை நன்றாக அலசி ஆராய்ந்து எழுதியுள்ளீர்கள். மிக்க நன்றி.

HARISH2619
8th March 2010, 03:01 PM
சென்னை சாந்தி திரையரங்கின் பொன்விழா ஆண்டினை யொட்டி நமது நடிகர் திலகம் இணைய தளம் சார்பில் வைக்கப்பட்டுள்ள பேனரில் கூறியுள்ள படி நமது பம்மலார் அவர்கள் தனியாக இணையதளம் ஒன்றினை துவக்கியுள்ளார்.

ராகவேந்திரன்
ராகவேந்தர் சார்,
தயவு செய்து அந்த பேனரை இங்கே அப்லோட் செய்யவும்.

சிவாஜி வாரம் என்ற செய்தி கற்கண்டாக இனிக்கிறது.இது நடந்தால் ஞாயிறு மாலைகாட்சியில் பட்டாக்கத்தி பைரவனை ரசிகர்க்ள் எப்படி வரவேற்ப்பார்கள் என்று நினைத்து பார்த்தேன்
:bluejump: :cheer: :happydance:

murali sir,
another gem of an writing from you for not much heard movie kotteeswaran.unfortunately i think we dont have any chance to watch that movie now.I expect a review for annaiyin aanai from you, especially NT's style in that movie

pammal sir,
thankyou very much for providing the details of NT movies rereun all over TN.

rangan sir,
eagerly waiting for thangapadhakkam experience

rangan_08
8th March 2010, 06:59 PM
Ah! what to say?

Actually I was planning to watch Vinnaithandi varuvaya this Sunday, but once I saw Swamy sir's posting I really didn't want to miss the opportunity because I don't live in Madurai.

Once I conveyed the msg to my FIL, he readily accepted to join me. And off we went to the theatre to take part in the gala. Unfortunately, Murali sir was not able to make it.

Inside the theatre, there was this person who was in his fifties busily distributing NT pamphlets and yes, it was Raghavendra sir. Now, my joy knew no bounds. I was sure that it was going to be a very very wonderful experience and it was. I introduced him to my FIL and they happily slipped on to nostalgia since both of them belonged to " maadipoonga" rasigar mandram.

We went inside the cinema hall and eagerly searched for a seat under the ceiling fan (how many years have passed since we had indulged in such an act !!). There was a reasonable number of audience in the beginning but later the crowd increased and I could even spot family audience. The moment SP Choudhary appeared on screen, all we could hear was deafening applause and it continued till the end.

Raghavendra sir left during interval but we stayed on till the end. I spotted a handicapped person who who came to watch the film. He literally crawled in the theatre and now one can imagine the love & affection the rasigar's had for NT.

It was really a wonderful & memorable experience in my life.

All the credit goes to Swamy sir for sharing this info.

Let's meet again on 28th at NT fest.

joe
8th March 2010, 07:29 PM
3 years old says kattabomman dialogue
http://www.youtube.com/watch?v=DQm-eLkC8fs

NT will live forever :thumbsup:

RAGHAVENDRA
8th March 2010, 10:01 PM
Dear Rangan,
It was really an unforgettable occasion. And we in fifties are the most fortunate and lucky ones - our generation literally grew with Nadigar Thilagam on one side and MGR on the other side. We were completely dominated by the Heroes - NT/ MGR/ Gemini Ganesan, Music Directors - GR/ Mellisai Mannargal/ SMS/ KVM/ etc. - singers - TMS/ Seergazhi Govindarajan/ Tiruchy Loganathan / Susila / LR Easwari / - the list is endless. And yesterday TP took me to those days, and I could recollect each and every nuance of MSV's BGM - particularly one theme music was used for the title song of Manmadha Leelai. There were many instances of MM's repertoire outshone with his own compositions and TP is one among them.
I was brought up at Triplicane and Triplicane itself would identify me with NT. We fan friends would meet at the Shanthi Theatre and I had many friends from many mandrams in Chennai. Most heritageous were Madipoonga Sivaji Rasigar Mandram, Saidai Sivanda Mann Rasigar Mandram, Karnan Ganesan Kalai Mandram... These were most famous during early sixties. I had many friends at Madipoonga Rasigar Mandram and your f-in-l was one among them, though we were not so close, but still I could recognise him (leave our hair loss). It was really nice of you both to have come together and hope in the next occasion we are able to meet all the three generations from your family in a NT's film screening.
Thank you for the opportunity,
Regards,
Raghavendran

Murali Srinivas
8th March 2010, 11:07 PM
சாரதா,

மிக்க நன்றி. எனக்கும் இதுவே முதல் முறை.படம் பார்ப்பதற்கு முன்னால் நீங்கள் குறிப்பிட்டது போல ஒரு தயக்கம் எனக்கும் இருந்தது. படம் ரசிக்கக்கூடிய படமே. நான் சொன்னது போல் தயாரிப்பாளர்கள் சற்று முயற்சி எடுத்திருந்தால் மறு வெளியிடுகளில் புகழ் வந்திருக்கும்.

நன்றி செந்தில். நன்றி ராகவேந்தர் சாருக்கு தான் சொல்ல வேண்டும். அவரிடமிருந்து இரவல் வாங்கித்தான் நானே பார்த்தேன். உங்கள் ஆசையை [அன்னையின் ஆணை] நிறைவேற்ற முயற்சிக்கிறேன்.

Mohan,

Nice write up. Not only for Sp.Chaudary but also for Veerabagu. I very much liked the comparison of the Vetrivel walk with the well oiled Benz wheel.

Joe,

Thanks for the link.

Senthil,

Here is the small size replica of the banner prepared by Ragavender Sir.

https://mail.google.com/mail/?ui=2&ik=ddb7951de6&view=att&th=12713dc38db69e36&attid=0.1&disp=inline&realattid=f_g67mk9ys0&zw

NOV, can you blow up the picture so that everyone can see it?

Regards

pammalar
9th March 2010, 03:40 AM
மகளிர் தின ஸ்பெஷல்

சகோதரி சாரதாவுக்கும், சகோதரி கிரிஜாவுக்கும் மற்றும் நடிகர் திலகத்தின் ஏனைய ரசிகைகளுக்கும் மற்றும் மகளிர் அனைவருக்கும் மனமார்ந்த மகளிர் தின நல்வாழ்த்துக்கள்!

மகளிரின் பெயர்களைக் கொண்ட, மகளிரைப் போற்றுகின்ற, மகளிருக்கு பெருமை சேர்க்கின்ற வகையில் அமைந்த நடிகர் திலகத்தின் திரைப்படத் தலைப்புக்கள் (படப்பெயர்கள்):

1. பராசக்தி

2. பூங்கோதை

3.இல்லற ஜோதி

4. காவேரி

5. மங்கையர் திலகம்

6. கள்வனின் காதலி

7. பெண்ணின் பெருமை

8. ராஜா ராணி

9. ரங்கோன் ராதா

10. மக்களை பெற்ற மகராசி

11. ராணி லலிதாங்கி

12. பாக்கியவதி

13. பதிபக்தி

14. அன்னையின் ஆணை

15. சபாஷ் மீனா

16. மரகதம்

17. அவள் யார்?

18. பாவை விளக்கு

19. பெற்ற மனம்

20. பாசமலர்

21. ஸ்ரீ வள்ளி

22. வடிவுக்கு வளைகாப்பு

23. செந்தாமரை

24. சித்தூர் ராணி பத்மினி

25. இருவர் உள்ளம்

26. குலமகள் ராதை

27. பார் மகளே பார்

28. குங்குமம்

29. கல்யாணியின் கணவன்

30. அன்னை இல்லம்

31. சாந்தி

32. சரஸ்வதி சபதம்

33. தங்கை

34. தில்லானா மோகனாம்பாள்

35. லக்ஷ்மி கல்யாணம்

36. எங்கிருந்தோ வந்தாள்

37. தங்கைக்காக

38. சுமதி என் சுந்தரி

39. சிவகாமியின் செல்வன்

40. தாய்

41. வாணி ராணி

42. என் மகன்

43. ரோஜாவின் ராஜா

44. அந்தமான் காதலி

45. சத்திய சுந்தரம்

46. சுமங்கலி

47. மருமகள்

48. தாய்க்கு ஒரு தாலாட்டு

49. லட்சுமி வந்தாச்சு

50. தாம்பத்யம்

51. சின்ன மருமகள்

52. தாயை போல பிள்ளை நூலை போல சேலை (கெளரவ வேடம்)

53. தாயே உனக்காக (கெளரவ வேடம்)

அன்புடன்,
பம்மலார்.

RAGHAVENDRA
9th March 2010, 06:41 AM
Dear Mohan,
It was very nice of you to have mentioned our experiences at the Star Theatre. It was definitely a travel down memory lane. Regarding the handicapped person, I have some nostalgia to share.
He is in his mid 50s like me and is an ARDENT fan of NT, not for a few years, but almost for 40 to 45 years. I have seen him since Karnan/ Thiruvilaiyadal days at the Shanthi Theatre. He lives in Chepauk. He'd never miss a single opportunity to attend any NT function. He'd be present at almost all the public meetings organised by the Congress or Sivaji Mandrams without fail. There is another lady in Chepauk Lok Nagar who is in her mid 60s and has grand children and who is still active and engaged in our Mandram activities and is also active in Ilaiya Thilagam Prabhu Mandram and is also an office bearer in women's wing, if I am correct.
NT lives ...

Here is the link for the image of the flex banner at the Shanthi
http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/ShanthiTheatre50yrsBfluxforWeb2.jpg

[html:6f33be435d]
http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/ShanthiTheatre50yrsBfluxforWeb3.jpg
[/html:6f33be435d]

NOV சார்,
இந்த படத்தை நீங்கள் இந்த பக்கங்களிலேயே அப்லோட் செய்யலாம்.

பம்மலாரே (வசந்த மாளிகையில் அண்ணியாரே என்று நடிகர் திலகம் அழைக்கும் தொனியில் படிக்கவும்),
எங்களையெல்லாம் தாய்க்குலத்திற்கு எதிரி என்றா எண்ணி விட்டீர்.. நாங்கள் என்ன எச்சில் சோடா கொடுத்தோமா அல்லது கனவில் போய் தொல்லை கொடுத்தோமா ... அல்லது பாராளுமன்றத்தில் போய் பேப்பரைக் கிழித்தோமா ... நாங்கள் 100 சதவீதம் கூடத் தரத்தயாராய் இருக்கிறோம். ஆனால் என்ன செய்வது, தாய்க்குலம் அல்லவா நடிகர் திலகத்தை மொத்தமாகக் குத்தகைக்கு எடுத்துக் கொண்டு, நம்மிடம் கொடுப்பதற்கு எதுவுமில்லாமல் செய்து விட்டது.

மன்னிக்கவும் ஒரு மாறுதலுக்காக, ஆறுதலுக்காக, நகைச்சுவைக்காக இந்த தொனி..

தங்களின் மகளிர் தின நினைவூட்டல் படப் பட்டியல் வியக்க வைக்கிறது. தங்களுடைய உழைப்பு பெருமிதம் தருகிறது.

முரளி மற்றும் பம்மல் இருவருக்கும் நடிகர் திலகத்தின் நல்லாசிகள் எப்போதும் உண்டு.

ராகவேந்திரன்
Raghavendran

sankara1970
9th March 2010, 11:48 AM
Dear Ragavendra and Mr Rangan
I could not stop myself writing this.

I was enjoying the writings of Rangan's experience in theatre.

I had opportunity to talk to Murali sir when I visited Chennai, two years back.

My father now in sixties, lived in Madurai in his young days, has been ardent fan of NT and sure he will share his experience.

He used to tell me 100th day celebrations and first day first show experiences.

As told by Rangan, those in 50s and 60s are luckones.

RAGHAVENDRA
9th March 2010, 12:29 PM
Dear Nov,
Thank you very much for including the picture in this forum itself and that too immediately. This shows how dedicated you moderators are to the hubbers.
Thank you once again,
Regards,
Raghavendran
P.S.: There are a few errors that have appeared in my banner. I would like to point out them:
Sai Shanthi was inaugurated on 11.10.2006 and not 21.10.2006 as mentioned.
Bharatha Vilas release date should be read as 24.03.1973.
Avan Dhan Manidhan release date should be read as 11.04.1975.

pammalar
9th March 2010, 04:14 PM
Watching, " Vetrivel Veeravel " from Kandan Karunai is always a great pleasure for me and my 4 years old daughter. Nadigar Thilagam's unparalleled walking style in this song thrills me everytime.

My inference is that, when you see him walking in a slow & steady pace, particularly after the drum beat and when the lines, " aadhi shakthi annai thandha gnyanavel...." begins, one would wonder that a beautifully decorated chariot is moving gracefully. If you notice the movement of his legs alone ( he will be wearing a nicely shaped boots ), you begin to feel that as if the wheels of a Benz, fitted with designed steel spokes, is rotating slowly, which is a wonderful sight. I really find it very difficult to explain, but you have to watch it to experience sheer magic, on screen.

Wah! What a nice narration with regard to Veerabhagu's imperious swaggering walk. It is simply superb (especially the two swashbuckling sentences appearing in bold fonts in the quote). Hats off to you, Mr.Rangan. Expecting more & more of this kind from you.

(imperious swaggering walk in this context means commanding flourishing walk)

Here's the video link for the song:

http://www.youtube.com/watch?v=RCzd5fhVFwU

Regards,
Pammalar.

NOV
9th March 2010, 06:47 PM
Dear Nov,
Thank you very much for including the picture in this forum itself and that too immediately. This shows how dedicated you moderators are to the hubbers.
Thank you once again,
edhukku periya vaarththai ellaam? idhu namma kadamai. :)

watched Pattikada Pattanama again in Astro Vellithirai.
can never get tired of watching the film. :thumbsup:
ending is really cunning. :lol2:

rangan_08
9th March 2010, 07:15 PM
I am overwhelmed.

Raghavendra sir, thanks for your comments and really sorry for mentioning you as a person in fifties, because when it comes to NT you transform into a teen age guy and swing into action :)

Thank you Murali sir. Glad to know that you liked the write-up on Veerabhagu.

Thank you Sankara sir. Next time when you come to Chennai, we will definitely meet.

Pammalar sir, thanks for the excessive praise. I didn't write it just for the sake of writing - it just came from the bottom of my heart.

rangan_08
9th March 2010, 07:18 PM
[tscii:19363ee5ac]Upon thinking over the wonderful incidences that took place while watching Thangappadakkam last Sunday, I once again ascertained the greatness of Nadigar Thilagam, the legend. I give below two classic examples supporting my statement.

1) The theatre in which the film was screened was in no way comparable to any of the latest Malls, multiplexes or any other luxurious or posh theatres, for that matter. The screen, seats, projectors, audio system etc., was of very ordinary quality and other amenities were also very normal, though it is was not poor. None of these negative points were enough to deter the enthusiastic & ardent fans who thronged the theatre.

And the reason is…………….

2) Nowadays, in most of the cases, people produce a film, they distribute it, and as part of their marketing strategy, they advertise their product once in every five minutes in their own TV channels, to lure the audience. This is almost equal to selling brinjals & ladies fingers in the market. In spite of all their attempts, they get only a poor turn out and they readily blame the DVD, which is true only to an extent ( I own Thangappadakkam DVD and I’m sure that most of the audience who came that day also have one).

On the other hand, there was hardly any advertisement for TP and we were able to see only few posters and that too only around the vicinity of the theatre. There was neither an ad in the news paper nor in the TV. It was only word-by-mouth advertisement that worked out wonders. Had there been publicity, it would have been a different story altogether.

And the reason is ……………..

Yessss!!! The reason is one and only NADIGAR THILAGAM & the un-conditional love and affection the fans had for him. Now one can imagine the power & authority of this immortal legend.

There is a verse in the song, “ Nalladhoru kudumbam..”, where NT sings, “ paasam endru edhai solvadhu, bhakthi endru edhai solvadhu……”. Well, the answer is given above.
[/tscii:19363ee5ac]

saradhaa_sn
9th March 2010, 07:30 PM
டியர் மோகன்.....

வாவ்.... என்ன ஒரு வர்ணனை.

'வெற்றிவேல் வீரவேல் பாடலின் இடையே வீரபாகு (நடிகர்திலகம்) நடந்து வருவது ஒரு அலங்கரிக்கப்பட்ட தேர் அசைந்து வருவது போல் காட்சியளிக்கிறது" என்று நீங்கள் சொல்லியிருப்பது, இதுவரை யாரும் சொல்லாத, நினைக்காத, யாருக்கும் தோன்றாத ஒரு கருத்து.

சபாஷ்.

RAGHAVENDRA
9th March 2010, 08:03 PM
Dear Mohan,
There is no necessary at all to feel or say sorry. In fact we are more jealous on your age people and more on your child ... At the age of 3 or 4, NT has a fan in her. I feel if I were not the age of that child. And you have ended your posting on a touching note...
பாசம் என்று எதைச் சொல்வது
பக்தி என்று எதைச் சொல்வது
இதற்கு பதிலும் நீங்கள் அருமையாக அளித்துள்ளீர்கள்.
சாரதா அவர்களின் பதிவு எந்த அளவிற்கு அவருக்குள் நடிகர் திலகம் ஊடுருவியுள்ளார் என்பதைக் காட்டுகிறது.
பம்மலாரின் ஆங்கில வார்த்தைகள் சரியான இடத்தில் சரியான அளவிற்குப் பொருந்தி சரியான பொருளை அளித்துள்ளது. பாராட்டுக்கள். மேலும் கந்தன் கருணை பாடலுக்கு காட்சிக்கான இணைப்பையும் அளித்துள்ளார். பாராட்டுக்கள்.
மேலும் முரளி சார் நம்முடைய பேனரின் படத்தை அளித்துள்ளமைக்கும் நன்றிகள்.

நம்மோடு நடிகர் திலகம் நெஞ்சிருக்கும் வரை

ராகவேந்திரன்

pammalar
9th March 2010, 11:01 PM
டியர் முரளி சார்,

பலர் அறியாத கோடீஸ்வரன் காவியம் பற்றி, பற்பல அரிய விவரங்கள் அடங்கிய கண்ணோட்டத்தை தந்தமைக்கு மிக்க நன்றி! தங்களது திறனாய்வு எப்பொழுதும் போல் அழகாக, அசத்தலாக, அம்சமாக, அருமையாக, அட்டகாசமாக உள்ளது. பாசமிகு பாராட்டுக்கள்!

ராகவேந்திரன் சார் கொடுத்த நெடுந்தகடின் வாயிலாக இக்காவியத்தைக் காணும் அரிய வாய்ப்பு எமக்கும் கிட்டியது.

தங்களின் பதிவுகளின் மூலம், கோடீஸ்வரனை நினைவு கூர்ந்தேன் என்று கூறுவதை விட, அக்காவியத்தை மீண்டும் ஒரு முறை கண்டு களித்தேன் என்று செப்புவதே சாலப் பொருத்தமானது. நடிகர் திலகத்துக்கு அடுத்தபடியாக இக்காவியத்தில் பெயரைத் தட்டிச் செல்பவர் எஸ்.பாலசந்தரே. வீணை வித்வான், வில்ல ஹாஸ்யத்தில் விளாசி விளையாடியிருப்பார். ஸ்ரீராம்-ராகினி ஜோடி ஓகே என்றால் சிவாஜி-பத்மினி ஜோடி மேடு ஃபார் ஈச் அதர்.

"கட்டிக்கோ தாலி கட்டிக்கோ" பாடலில், பாலசந்தர் நடனத்திலும், நகைச்சுவையிலும் கலக்கியிருப்பார் என்றால், அப்பாடலைப் பின்னணியில் பாடிய இசை மாமேதை எஸ்.வி.வெங்கட்ராமன் தமிழ், ஆங்கிலம், ஹிந்தி, தெலுங்கு, செளராஷ்டிரம், கன்னடம், மலையாளம் எனப் பல மொழிகளில் பல அநாயாசமான சங்கதிகளைப் போட்டு மிக மிகப் பிரமாதமாகப் பாடி ஒரு திரை இசை ஜுகல்பந்தியையே நிகழ்த்தியிருப்பார். இந்த இரண்டு தூக்கலான விஷயங்களுடன் போட்டி போட்டுக் கொண்டு, மிக மிக ஸ்டைலாக சிகரெட்டுடன் இதையெல்லாம் ரசித்துக் கொண்டே, நடிகர் திலகம் நடிப்பில் ஜெயித்துக் கொண்டிருப்பார்.

பத்மினி பாடுவதாக உள்ள "பகவானே கேளய்யா பச்சோந்தி உலகிலே" என்கின்ற பாடலைப் பாடியவர் பி.லீலா.

அன்புடன்,
பம்மலார்.

saradhaa_sn
10th March 2010, 12:00 PM
டியர் ராகவேந்தர் சார்,

சென்னை சாந்தி திரையரங்கின் பொன்விழாவையொட்டி, நீங்கள் அமைத்திருக்கும் பதாகை (பானர்) மிக அருமை. அதை வெறுமனே பானர் என்று சொல்வதை விட 'சாந்தி தகவல் களஞ்சியம்' என்று சொல்லலாம். அதன் ஒவ்வொரு அங்குலத்திலும் உங்களது ஆர்வமும் உழைப்பும் தெரிகிறது. இங்கு கணிணியில் அளவில் சிறியதாகத் தோன்றியபோதிலும் அது எவ்வளவு தகவல்களை உள்ளடக்கியுள்ளது என்பதை ஊகிக்க முடிகிறது. (அதில் இடம் பெற்றுள்ள செய்தித்தாள் விளம்பரங்களில் பல, நம்முடைய இணையதளத்தில் கூட இடம்பெறவில்லை என்று நினைக்கிறேன். கூர்ந்து பார்க்கும்போது தெரிகிறது).

வலது பக்கம் இடம் பெற்றுள்ள புதுப்பிக்கப்பட்ட 'சாந்தியை' விட, இடது பக்கம் இடம் பெற்றிருக்கும் 'பழைய சாந்தி'யே நம் மனதுக்கு அதிகம் சாந்தியளிக்கிறது. முன்பு 'உத்தமன்' படம் திரையிடப்பட்டிருந்தபோது, முதல்நாளன்று கொடிகள் தோரணங்கள், இமாலய கட்-அவுட் இவற்றுடன் என் தந்தையால் எடுக்கப்பட்ட வண்ணப்புகைப்படம் இன்றும் என் வீட்டுக் கூடத்தை அலங்கரித்துக்கொண்டிருக்கிறது. (எனக்கென்னவோ புதுப்பிக்கப்பட்ட சாந்தி, நம்மை விட்டு விலகிப்போய்விட்டது போன்றதொரு உணர்வு. திரையில் நடிகர்திலகத்தின் தரிசனம் தோன்றாதது காரணமோ?).

உங்களது அபாரமான இந்த பேனரைப்பார்த்து 'மாப்பிள்ளை' (திரு.வேணுகோபால்) அவர்களும் மற்ற ஊழியர்களும் என்ன சொன்னார்கள்?. முதல் வகுப்புக்கு டிக்கட் வழங்கும் (பிரபல நடிகர்) 'சாந்தி குமார்' இப்போதும் அங்கே இருக்கிறாரா?. அல்லது ஓய்வெடுத்து விட்டாரா?. உங்களது இந்த அபார உழைப்புக்கு, 'சாந்தி பொன்விழா'வின்போது நிர்வாகத்தினரால் நீங்கள் சிறந்த முறையில் கௌரவிக்கப்பட வேண்டும். இது சாந்தி நிர்வாகத்தினருக்கு நான் வைக்கும் வேண்டுகோள்.

பெருந்தலைவர் அவர்கள் திறந்து வைத்த பழைய கல்வெட்டு, பல உண்மைகளை பறைசாற்றுகிறது. அதாவது 'காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் 'மந்திரி' என்ற சொல்தான் பயன்படுத்தப்பட்டது. கழக ஆட்சி வந்த பிறகுதான் 'அமைச்சர்' என்ற சொல வழக்கில் வந்தது' என்ற ஒரு தவறான பிரச்சாரத்தை முறியடிக்கும் விதமாக, 1961-ல் அமைக்கப்பட்ட திறப்புவிழா கல்வெட்டில் முதலமைச்சர், நிதியமைச்சர் என்று இடம்பெற்றுள்ளன. அதுபோலவே 'சென்னை மாகாண' என்றில்லாமல் 'தமிழக' என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. அவ்வகையில் சாந்தி திறப்பு விழா கல்வெட்டு, சரித்திரத்தைப் பறைசாற்றும் கல்வெட்டாகவும் திகழ்கிறது. சென்னையிலுள்ள மக்கள், அதிலும் குறிப்பிட்ட ஏரியாவிலுள்ள மக்கள், அதிலும் சாந்த்யில் முதல் வகுப்பு டிக்கட்டில் படம் பார்த்த மக்கள் மட்டுமே கண்டு வந்த அந்த கல்வெட்டை, இன்று தமிழ் கூறும் நல்லுலகின் பார்வைக்கு அளித்த நீங்கள் வாழ்க.

நடிகர்திலகத்தின் புகழ் பரப்பும் ஒரே காரணத்துக்காகவே ஆண்டவன் உங்களை நூறு ஆண்டுகளுக்கு மேல் வாழ வைக்கட்டும். (அப்போதும்கூட, கையில் கைத்தடி ஊன்றிக்கொண்டு சாந்தி வளாகத்தில்தான் சுற்றிக்கொண்டிருப்பீர்கள்).

sankara1970
10th March 2010, 12:56 PM
There is a verse in the song, “ Nalladhoru kudumbam..”, where NT sings, “ paasam endru edhai solvadhu, bhakthi endru edhai solvadhu……”. Well, the answer is given above.
[/tscii:5e4abdffa1][/quote]

I still remember when I was a kid (30 years back from now)I used to visit Madurai and the song Nallathoru Kudumbam was played in loudspeaker, a evergreen popular song. That was the time the film hit screens.

Hm... those are days memorable.

I made it practice to see evening shows of NT films in out locality (near Tiruchendur) during my school and college days. I used to slip away from cricket sessions midway and the teammates used to kid me.

RAGHAVENDRA
10th March 2010, 06:50 PM
சகோதரி சாரதா அவர்களுக்கு,
தங்களுடைய பதிவு என்னை மிகவும் மனம் நெகிழச் செய்துள்ளது என்றால் அது மிகையில்லை. வேறு யாருக்கும் கிட்டாத பெருமையை திரையரங்கு வடிவிலும் நடிகர் திலகம் பெற்றிருக்கிறார். தமிழகத்தின் முதல் குளிர்சாதன திரையரங்கு என்ற பெருமையை சாந்தி திரையரங்கு பெற்றுள்ளது. இதன் கூடவே ஏற்கெனவே இருந்த மற்றொரு திரையரங்கு புதுப்பிக்கும் வேலை தொடங்கப் பெற்று சாந்தி திரையரங்கு திறக்கப் பட்ட மறுநாள் குளிர்சாதன திரையரங்காக திறக்கப் பட்டது தனி வரலாறு. அந்த ஒரு நாளில் மட்டுமல்ல அன்றைய நாள் தொட்டு தொடர்ந்து சாந்தி திரையரங்கு இயங்கி வருவதும் குறிப்பிடத் தக்கதாகும். ஏனெனில் அந்த மற்றொரு குளிர் சாதன திரையரங்கு சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பாக மீண்டும் புதுப்பிக்கும் வேலைக்காக பல நாட்கள் மூடப்பட்டதும் உண்டு.
மேலும் நம்மைப் பொறுத்த மட்டில் சாந்தியில் கோடியில் உள்வாங்கிய வரிசையில் ரூ 1.25 அல்லது 0.84 காசு டிக்கெட் எடுத்து படம் பார்த்த நாட்களையும் நினைவுகளையும் ஈடுகட்ட இனிமேல் முடியாது. குறிப்பாக கல்லூரியில் காலை வகுப்பு பகலில் சாந்தி திரையரங்கு மாலையில் நண்பர்களுடன் கலந்துரையாடல் நேரங்கழித்து வீட்டுக்கு சென்று வசவு வாங்குதல் - இதுவே அன்றாட வாழ்க்கையாக கழிந்த நாட்கள் வாழ்வின் பெரும் பகுதி. எனவே நீங்கள் சொல்லும் கூற்றுக்கள் நூற்றுக்கு நூறு உண்மை . சாந்தி திரையரங்கு 100 ஆண்டுகளைக் காணும். நாமும் இறையருளால் உயிர் வாழ்ந்தால் கைத்தடி கொண்டு அங்கேயே சுற்றிக் கொண்டிருப்போம். அதுவும் உண்மை.
தங்களின் பதிவு என்னுள் பல நினைவுகளை கிளறி விட்டுள்ளது. குறிப்பாக உத்தமன் திரையிடப்பட்ட போது ரசிகர்கள் அமைதியாக வரிசையில் அமர்ந்திருப்பர். அதுவும் இரவுக்காட்சிக்காக சுமார் 7.30 மணி அல்லது 8.00 மணி வாக்கில் வரிசையாக அந்த விளக்கு வெளிச்சத்தில் கார்களின் பின்னால் வரிசையில் அமர்ந்திருக்கும் காட்சி நெஞ்சத்தில் நிலைத்திருக்கும்.
மேலும் 1978ம் ஆண்டு வாக்கில் ஜெனரல் சக்கரவர்த்தி படத்திற்காக நான் வைத்த சிறு சார்ட்டில் நடிகர் திலகத்தின் படங்களைப் பட்டியலிட்டு வைத்திருந்தேன். அதை அந்த ஆண்டின் ஆனந்த விகடன் சினிமாஸ்பெஷல் இதழில் மூன்றாம் பக்கத்திலேயே செய்தியாகப் போட்டு என்னுடைய பெயரையும் போட்டிருந்தார்கள். அது தந்த உத்வேகமே இன்று நீங்கள் காணும் பதாகைக் கான அடிப்படை. பின்னர் 1982 வாக்கில் நண்பர்களின் உதவியுடன் தேசிய இளைஞர் சிவாஜி கணேசன் ரசிகர் மன்றம் மற்றும் பத்மஸ்ரீ சிவாஜி இளைஞர் முன்னணி என்ற பெயர்களில் அமைப்புகள் அமைத்து பணியாற்றியது, பின்னர் அதே ஆண்டில் சாந்தி திரையரங்கில் சுவற்றில் நடிகர் திலகத்தின் படங்களைப் பட்டியலிட்டு எழுதி அதை சந்திப்பு வெளியீட்டு நாளன்று திறந்து வைத்தது (அதுவே பின்னர் இதய வேந்தன் ரசிகர் மன்றம் சார்பாக கல்வெட்டாகப் பதிக்கப் பட்டதற்கான அடிப்படையாக அமைந்தது).
இவையாவும் வாழ்க்கையில் மறக்க முடியாதவையாகும்.
மேலும் சிறு வயதாக இருந்த போது கர்ணன் ரிலீஸ் அன்றைக்கு நோட்டீஸ் கொடுத்த ரசிகர் மன்றங்களிடம் கொஞ்சம் வாங்கி மற்றவர்களுக்கு விநியோகம் செய்ததும் பசுமையாக நினைவுள்ளது. மேலும் திருவிளையாடல் மூதாட்டியுடன் ரசிகர்கள் பேசும்போது உடனிருந்து கேட்டது, இப்படி பல நினைவுகள்.
நன்றி.
அடுத்த சந்தர்ப்பத்தில் மேலும் நினைவுகள் தொடரலாம்... எச்சரிக்கை...

ராகவேந்திரன்


டியர் ராகவேந்தர் சார்,

சென்னை சாந்தி திரையரங்கின் பொன்விழாவையொட்டி, நீங்கள் அமைத்திருக்கும் பதாகை (பானர்) மிக அருமை. அதை வெறுமனே பானர் என்று சொல்வதை விட 'சாந்தி தகவல் களஞ்சியம்' என்று சொல்லலாம். அதன் ஒவ்வொரு அங்குலத்திலும் உங்களது ஆர்வமும் உழைப்பும் தெரிகிறது. இங்கு கணிணியில் அளவில் சிறியதாகத் தோன்றியபோதிலும் அது எவ்வளவு தகவல்களை உள்ளடக்கியுள்ளது என்பதை ஊகிக்க முடிகிறது. (அதில் இடம் பெற்றுள்ள செய்தித்தாள் விளம்பரங்களில் பல, நம்முடைய இணையதளத்தில் கூட இடம்பெறவில்லை என்று நினைக்கிறேன். கூர்ந்து பார்க்கும்போது தெரிகிறது).

வலது பக்கம் இடம் பெற்றுள்ள புதுப்பிக்கப்பட்ட 'சாந்தியை' விட, இடது பக்கம் இடம் பெற்றிருக்கும் 'பழைய சாந்தி'யே நம் மனதுக்கு அதிகம் சாந்தியளிக்கிறது. முன்பு 'உத்தமன்' படம் திரையிடப்பட்டிருந்தபோது, முதல்நாளன்று கொடிகள் தோரணங்கள், இமாலய கட்-அவுட் இவற்றுடன் என் தந்தையால் எடுக்கப்பட்ட வண்ணப்புகைப்படம் இன்றும் என் வீட்டுக் கூடத்தை அலங்கரித்துக்கொண்டிருக்கிறது. (எனக்கென்னவோ புதுப்பிக்கப்பட்ட சாந்தி, நம்மை விட்டு விலகிப்போய்விட்டது போன்றதொரு உணர்வு. திரையில் நடிகர்திலகத்தின் தரிசனம் தோன்றாதது காரணமோ?).

உங்களது அபாரமான இந்த பேனரைப்பார்த்து 'மாப்பிள்ளை' (திரு.வேணுகோபால்) அவர்களும் மற்ற ஊழியர்களும் என்ன சொன்னார்கள்?. முதல் வகுப்புக்கு டிக்கட் வழங்கும் (பிரபல நடிகர்) 'சாந்தி குமார்' இப்போதும் அங்கே இருக்கிறாரா?. அல்லது ஓய்வெடுத்து விட்டாரா?. உங்களது இந்த அபார உழைப்புக்கு, 'சாந்தி பொன்விழா'வின்போது நிர்வாகத்தினரால் நீங்கள் சிறந்த முறையில் கௌரவிக்கப்பட வேண்டும். இது சாந்தி நிர்வாகத்தினருக்கு நான் வைக்கும் வேண்டுகோள்.

பெருந்தலைவர் அவர்கள் திறந்து வைத்த பழைய கல்வெட்டு, பல உண்மைகளை பறைசாற்றுகிறது. அதாவது 'காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் 'மந்திரி' என்ற சொல்தான் பயன்படுத்தப்பட்டது. கழக ஆட்சி வந்த பிறகுதான் 'அமைச்சர்' என்ற சொல வழக்கில் வந்தது' என்ற ஒரு தவறான பிரச்சாரத்தை முறியடிக்கும் விதமாக, 1961-ல் அமைக்கப்பட்ட திறப்புவிழா கல்வெட்டில் முதலமைச்சர், நிதியமைச்சர் என்று இடம்பெற்றுள்ளன. அதுபோலவே 'சென்னை மாகாண' என்றில்லாமல் 'தமிழக' என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. அவ்வகையில் சாந்தி திறப்பு விழா கல்வெட்டு, சரித்திரத்தைப் பறைசாற்றும் கல்வெட்டாகவும் திகழ்கிறது. சென்னையிலுள்ள மக்கள், அதிலும் குறிப்பிட்ட ஏரியாவிலுள்ள மக்கள், அதிலும் சாந்த்யில் முதல் வகுப்பு டிக்கட்டில் படம் பார்த்த மக்கள் மட்டுமே கண்டு வந்த அந்த கல்வெட்டை, இன்று தமிழ் கூறும் நல்லுலகின் பார்வைக்கு அளித்த நீங்கள் வாழ்க.

நடிகர்திலகத்தின் புகழ் பரப்பும் ஒரே காரணத்துக்காகவே ஆண்டவன் உங்களை நூறு ஆண்டுகளுக்கு மேல் வாழ வைக்கட்டும். (அப்போதும்கூட, கையில் கைத்தடி ஊன்றிக்கொண்டு சாந்தி வளாகத்தில்தான் சுற்றிக்கொண்டிருப்பீர்கள்).

Murali Srinivas
11th March 2010, 12:09 AM
சாரதா,

சாந்தி திரை அரங்கைப் பற்றிய உங்களின் மலரும் நினைவுகள் நெகிழ்ச்சியாக இருந்தது. அதற்கு பதிலளித்த ராகவேந்தர் சாரின் பதிவும் அப்படியே. அனைத்து ஊர்களிலும் நமது ரசிகர்கள் படங்களோடு மட்டுமல்ல அவை வெளியான அரங்குகளோடும் மனதளவில் ஒன்றுவது என்பதை நான் பார்த்திருக்கிறேன்.

என்னை பொறுத்தவரை வசந்த மாளிகையை நினைக்கும் போதெல்லாம் எனக்கு நியூசினிமாவும் நினைவுக்கு வரும். சிவந்த மண்ணை யோசிக்கும் போது சென்ட்ரலும் படத்திற்கு வந்த கூட்டமும் ஞாபகம் வரும். நடிகர் திலகத்தோடு சம்பந்தப்படாத அரங்குகளின் மேலேயே அவ்வளவு கனிவு வரும்போது நடிகர் திலகத்தின் சொந்த திரையரங்கின் மேல் அதுவும் அங்கே படங்களின் வெளியீடுகளை பார்த்த உங்களுக்கு இருக்கும் அந்த பிடிப்பு புரிந்துக் கொள்ளக் கூடியதே. பதிவுகள் தொடரட்டும்!

அன்புடன்

pammalar
11th March 2010, 12:27 PM
ஜோரான லிங்க்கை வழங்கிய ஜோ அவர்களுக்கு நன்றி! அக்குழந்தை நீடூழி வாழ்க!

செந்தில் சார், நன்றி! பட மறுவெளியீடுகளை தகவல் கிடைத்தவுடன் பதிவு செய்ய வேண்டியது எனது கடமை.

ரங்கன் சார், தங்களின் தங்கப்பதக்க தியேட்டர் அனுபவப் பதிவுகள் மிக மிகப் பிரமாதம். அதில் ஒரு மினி சிவாஜி இலக்கியமே படைத்திருக்கிறீர்கள். பாராட்டுக்கள்!

அன்புடன்,
பம்மலார்.

pammalar
11th March 2010, 02:05 PM
டியர் ராகவேந்திரன் சார்,

தங்களின் தொடர் பாராட்டுக்களுக்கு இதயபூர்வமான நன்றிகள்!

கடலை கமண்டலத்துக்குள் அடக்கியிருக்கிறீர்கள்! ஆம்!

சாந்தி என்னும் கடலை, பதாகை(பேனர்) என்னும் கமண்டலத்துக்குள் கொண்டு வந்திருக்கிறீர்கள். இந்த வகையில் தாங்கள் ஒரு அகத்தியர். அகத்தியருக்கான கீர்த்தி தங்களுக்குள் இருப்பதனால் தான், இத்தகைய சாதனைகளை நிகழ்த்த முடிகிறது. அப்பப்பா......!!! ஒரு பேனருக்குள் எத்தனைப் பொக்கிஷங்கள். சகோதரி சாரதா கூறியது போல், இது சாதாரண பேனர் அல்ல, சாந்தியைப் பற்றிய தகவல் களஞ்சியமே. சகோதரி முன்மொழிந்ததையே நானும் வழிமொழிகிறேன். சாந்தி பொன்விழாவில், தாங்கள் இதற்காகவும், தங்களது இணையதளத் தொண்டுக்காகவும், இன்னும் பற்பல சேவைகளுக்காகவும், நிச்சயம் கெளரவிக்கப்பட வேண்டும்.

சிவபெருமானுக்கு 63 நாயன்மார்கள். அவர்களைப் பட்டியலிடும் போது, முதல்வராக வருபவர் அப்பர்.

சிவாஜி பெருமானுக்கு பல கோடி பக்த கோடிகள்(நாயன்மார்கள்). அவர்களில், அப்பராகத் திகழ்பவர், ரசிக முதல்வராகிய தாங்களே! இக்கூற்று மிகையல்ல, நிதர்சனமான உண்மை.

சாந்தி திரையரங்கின் நூற்றாண்டு விழாக் கொண்டாட்டங்களிலும், தாங்கள் இதே போன்று தூள் கிளப்பிக் கொண்டு தான் இருக்கப் போகிறீர்கள்! தங்களுக்கு எல்லாம் வல்ல இறைவனும், நமது இதயதெய்வமும் இதே போன்று நல்ல ஆரோக்கியத்தையும், தீர்க்க ஆயுளையும் நிச்சயம் கொடுப்பார்கள்.

வருகின்ற 2010 ஏப்ரலில், நான்காம் ஆண்டில் அடியெடுத்து வைக்கப் போகும் தங்களின் நடிகர் திலகம்.காம் இணையதளம் மென்மேலும் செழித்தோங்க எமது அட்வான்ஸ் வாழ்த்துக்கள்!

பாசப் பெருக்கில்,
பம்மலார்.

RAGHAVENDRA
11th March 2010, 10:45 PM
டியர் பம்மலார்,
தங்களுடைய கருத்துக்கள் மிகவும் உணர்வுபூர்வமாக உள்ளன, உள்ளத்தைத் தொட்டு ஊடுருவி உள்ள சப்பணமிட்டு அமர்ந்து கொலு வீச்சுகின்றன. அதற்கெல்லாம் எந்த அளவிற்கு தகுதியுற்றிருக்கிறேன் என்பது தெரியவில்லை. ஆனால் ஒன்று மட்டும் உறுதி. நடிகர் திலகம் என்ற ஜீவன் நம் அனைவருக்குள்ளும் சுற்றிச் சுற்றி வந்து கொண்டே இருக்கிறது, இருக்கும்.
பார்ப்பதற்கு சற்று கடினமான நிலையில் வைக்கப் பட்டிருந்த பதாகை தற்பொழுது மிகவும் சரியான இடத்தில் சரியான நிலையில் வைக்கப் பட்டுள்ளது. இதற்காக நாம் சாந்தி திரையரங்க நிர்வாகத்திற்கு, குறிப்பாக வேணுகோபால் சார் அவர்களுக்கு நம்முடைய நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவி்த்துக் கொள்கிறேன். சாந்தியில் நுழையும் போதே இப் பதாகைதான் வரவேற்கும். அந்த அளவிற்கு பார்வையாக வைக்கப் பட்டுள்ளது.

வரும் ஏப்ரல் 14ம் நாளன்று நம்முடைய நடிகர் திலகம் இணைய தளம் நான்காம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது. இதையொட்டி வாழ்த்துரைத்துள்ள பம்மலார் அவர்களுக்கு இதயபூர்வமான நன்றிகள். தங்களனைவரின் நல்லாதரவோடும் நடிகர் திலகத்தின் நல்லாசியோடும் மேலும் பல ஆண்டுகள் காணும் என்கின்ற நம்பிக்கையோடு பணி தொடரும்.

நன்றி

ராகவேந்திரன்

pammalar
11th March 2010, 11:25 PM
சென்னை ஸ்டாரில் பகல் காட்சியாக தங்கப்பதக்கம் - வசூல் விவரம் (சற்றேறக்குறைய)

8.3.2010 (திங்கள்) = ரூ. 1,200/- (ரூபாய் ஓராயிரத்து இருநூறு)

9.3.2010 (செவ்வாய்) = ரூ. 1,500/- (ரூபாய் ஓராயிரத்து ஐநூறு)

10.3.2010 (புதன்) = ரூ. 1,400/- (ரூபாய் ஓராயிரத்து நானூறு)

அன்புடன்,
பம்மலார்.

pammalar
12th March 2010, 12:44 PM
பெருந்தலைவர் அவர்கள் திறந்து வைத்த பழைய கல்வெட்டு, பல உண்மைகளை பறைசாற்றுகிறது. அதாவது 'காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் 'மந்திரி' என்ற சொல்தான் பயன்படுத்தப்பட்டது. கழக ஆட்சி வந்த பிறகுதான் 'அமைச்சர்' என்ற சொல வழக்கில் வந்தது' என்ற ஒரு தவறான பிரச்சாரத்தை முறியடிக்கும் விதமாக, 1961-ல் அமைக்கப்பட்ட திறப்புவிழா கல்வெட்டில் முதலமைச்சர், நிதியமைச்சர் என்று இடம்பெற்றுள்ளன. அதுபோலவே 'சென்னை மாகாண' என்றில்லாமல் 'தமிழக' என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. அவ்வகையில் சாந்தி திறப்பு விழா கல்வெட்டு, சரித்திரத்தைப் பறைசாற்றும் கல்வெட்டாகவும் திகழ்கிறது.


சகோதரி சாரதா,

தங்களின் இந்த பஞ்ச் வரிகள் நெத்தியடி.

அன்புடன்,
பம்மலார்.

pammalar
12th March 2010, 01:05 PM
Please click the following link to have a fine view of the posters of Thangappadhakkam which was screened at Chennai Star Theatre as a noon show from 5.3.2010 to 11.3.2010. These pictures were taken by me on Wednesday, 10th March at 6:55 PM.

http://pammalar.webs.com/apps/photos/album?albumid=8428409

Mr. Nov, I kindly request you to upload any one picture out of the three to our thread.

Happy Viewing,
Pammalar.

pammalar
12th March 2010, 04:25 PM
தங்கத்தமிழ்ப் பெருமகனின் வெள்ளித்திரைத் திருவிழா

சென்னை பெரம்பூர் மஹாலட்சுமி திரையரங்கில் செவாலியே சிவாஜி வாரம்:
(7 நாட்கள் - 7 திரைக்காவியங்கள் - தினசரி 3 காட்சிகள்)

அட்டவணை இதோ உங்கள் பார்வைக்கு:

26.3.2010 (வெள்ளி) - மன்னவன் வந்தானடி

27.3.2010 (சனி) - கெளரவம்

28.3.2010 (ஞாயிறு) - எங்கள் தங்க ராஜா

29.3.2010 (திங்கள்) - திருவருட்செல்வர் (பங்குனி உத்திரத்தை முன்னிட்டு)

30.3.2010 (செவ்வாய்) - பாரத விலாஸ்

31.3.2010 (புதன்) - ராஜபார்ட் ரங்கதுரை

1.4.2010 (வியாழன்) - சொர்க்கம்

6 நாள் காவியங்களையும் கண்டு களித்த பிறகு, 7-ம் நாள் பூலோகத்தில் சொர்க்கம்!

பெரம்பூர் மஹாலட்சுமிக்கு வருகை புரிந்து, கலையுலக மகானை தரிசித்து, அருளாசி மலர்களைப் பெற்று, வாழ்வில் வளங்களைக் கூட்டுங்கள்!!

சிவாஜி வாரம் திரையிடும் ரசிக, பக்த நல்லிதயங்களின் முயற்சிகள் இமாலய வெற்றி அடைய வளமான வாழ்த்துக்கள்!!!

அன்புடன்,
பம்மலார்.

rangan_08
12th March 2010, 05:13 PM
watched Pattikada Pattanama again in Astro Vellithirai.
can never get tired of watching the film. :thumbsup:
ending is really cunning. :lol2:

நல் வாழ்த்து நான் சொல்லுவேன்
நல்ல படம் பார்த்ததற்கு :D

rangan_08
12th March 2010, 05:22 PM
டியர் மோகன்.....

வாவ்.... என்ன ஒரு வர்ணனை.

'வெற்றிவேல் வீரவேல் பாடலின் இடையே வீரபாகு (நடிகர்திலகம்) நடந்து வருவது ஒரு அலங்கரிக்கப்பட்ட தேர் அசைந்து வருவது போல் காட்சியளிக்கிறது" என்று நீங்கள் சொல்லியிருப்பது, இதுவரை யாரும் சொல்லாத, நினைக்காத, யாருக்கும் தோன்றாத ஒரு கருத்து.

சபாஷ்.

Thanks for the appreciation mam. It's always a pleasure to watch, speak, think and write about our beloved NT.

rangan_08
12th March 2010, 05:24 PM
Dear Mohan,
There is no necessary at all to feel or say sorry. In fact we are more jealous on your age people and more on your child ... At the age of 3 or 4, NT has a fan in her. I feel if I were not the age of that child.

Dear Raghavendra sir, thank you. But, on the contrary, I really envy people like you because I was not able to take part in all the gala events that took place in the 60's during the release of many of NT's memorable films.

rangan_08
12th March 2010, 05:28 PM
ரங்கன் சார், தங்களின் தங்கப்பதக்க தியேட்டர் அனுபவப் பதிவுகள் மிக மிகப் பிரமாதம். அதில் ஒரு மினி சிவாஜி இலக்கியமே படைத்திருக்கிறீர்கள். பாராட்டுக்கள்!

அன்புடன்,
பம்மலார்.

Thank you swamy sir. And special thanks for listing out the films which is going to be screened from 26th onwards.

rangan_08
12th March 2010, 05:32 PM
பார்ப்பதற்கு சற்று கடினமான நிலையில் வைக்கப் பட்டிருந்த பதாகை தற்பொழுது மிகவும் சரியான இடத்தில் சரியான நிலையில் வைக்கப் பட்டுள்ளது. இதற்காக நாம் சாந்தி திரையரங்க நிர்வாகத்திற்கு, குறிப்பாக வேணுகோபால் சார் அவர்களுக்கு நம்முடைய நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவி்த்துக் கொள்கிறேன். சாந்தியில் நுழையும் போதே இப் பதாகைதான் வரவேற்கும். அந்த அளவிற்கு பார்வையாக வைக்கப் பட்டுள்ளது.

வரும் ஏப்ரல் 14ம் நாளன்று நம்முடைய நடிகர் திலகம் இணைய தளம் நான்காம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது. இதையொட்டி வாழ்த்துரைத்துள்ள பம்மலார் அவர்களுக்கு இதயபூர்வமான நன்றிகள். தங்களனைவரின் நல்லாதரவோடும் நடிகர் திலகத்தின் நல்லாசியோடும் மேலும் பல ஆண்டுகள் காணும் என்கின்ற நம்பிக்கையோடு பணி தொடரும்.

நன்றி

ராகவேந்திரன்

Very very sincere and fantastic effort Raghavendra sir. I will try to make it up this week end to go and watch the banner. If possible, I will take my kid also along with me. She will definitely feel glad to have a glimpse at it.

And, congratulations for Nadigarthilagam.com. Once again, a great & remarkable service. :clap:

rangan_08
12th March 2010, 05:35 PM
[tscii:4430ccd862][/tscii:4430ccd862]The last two episodes of Singathamizhan Sivaji featuring the hard core, die-hard fan, Mr. Y. G. Mahendra, in Vasanth TV was a treat to all NT fans. He actually represented the opinions, concerns & comments of millions of NT fans through out the world. More than a fan, he was a devotee of Nadigar Thilagam. Some interesting portions from the interview……..

After watching YGP’s “ Kannan Vandhan” play, NT decided to make it as a film (most of us are aware of this). During this period, there lived a famous Barrister who happened to be NT’s acquaintance. NT keenly observed this gentleman and picked up his pipe-smoking style, his body language & his mannerism and utilized it for portraying Barrister Rajinikanth with great panache. After watching the play, NT told YGP, “ YGP, indha character-a nalla panni irukke, aana cinemavula idha endha levelukku kondu pogapporen paru….”. YGP replied, “ Sivaji, un levelukku ennala kondu poga mudiyadhuppa…”


YGM re-called a scene from “ Annayin Aanai “ where Savithri pierces NT’s body with her sharp nails and tears his flesh. NT picks up a towel and slowly wipes off the blood which is oozing from his chest and suddenly turns around and furiously hits Savithri. YGM was so amazed at this and he asked NT, “ eppadinga indha madhiri oru Western style-la panneenga ? “ NT replied, “ aamanda, adhu Western style-dhan “.

NT used to sneak out very often to watch Hollywood films. In one such film, it seems that James Cagney had done a similar scene and he felt that it would be nice to use it for Annayin Aanai (probaby, he was referring to the famous grapefruit scene from the film “ Public Enemy “ starring James Cagney ). YGM also voiced his concern by saying that how nice it would have been had NT starred along with actors like Omar Sheriff in a film directed by the great David Lean. He said, “ ulagame avar nadippa parthu apdiye aadi pootirukkum. – Avardhan ULAGA NADIGAN”.

The programme was filled with many such interesting anecdotes.

It was really a very honest & emotional speech by YGM.

HARISH2619
12th March 2010, 07:58 PM
நான்காம் ஆண்டில் காலடி எடுத்து வைக்கும் நடிகர்திலகம்.காம் மென்மேலும் தழைத்தோங்க இதயபூர்வமான வாழ்த்துக்கள்.ராகவேந்தர் சார்,தங்களைப்போன்ற ஒரு நடிகர்திலத்தின் ரசிகர் மற்ற நடிகர்களின் ஒரு லட்சம் ரசிகர்களுக்கு சமம் என்று நான் பெறுமையுடன் நெஞ்சு நிமிர்த்தி சொல்வேன்.வளர்க உங்கள் தொண்டு.

பம்மல் சார்,
சிவாஜி வாரம் அட்டவணைக்கு மிக்க நன்றி.மன்னவன் வந்தானடி மற்றும் பாரத விலாஸ் இடத்தில் வேறு படங்கள் இருந்திருந்தால் நன்றாக இருக்கும் என்பது என் தனிப்பட்ட கருத்து.

ரங்கன் சார்,
கடந்த ஒரு வாரமாக இந்த திரியில் தங்களின் பங்களிப்பு மெய்சிலிர்க்க வைக்கிறது.இந்த திரியின் ஜாம்பவான்கள் வரிசையில் தாங்களும் சேர்ந்துவிட்டீர்கள்.வாழ்த்துக்கள்.

pammalar
12th March 2010, 09:34 PM
சென்னை ஸ்டாரில் பகல் காட்சியாக தங்கப்பதக்கம், 7வது நாளான வியாழனன்று (11.3.2010), சற்றேறக்குறைய ரூ.2,000/- (ரூபாய் இரண்டாயிரம்) வசூல் அளித்துள்ளது.

ஆக, பகல் காட்சியிலேயே, தங்கப்பதக்கம், ஒரு வார காலகட்டத்தில் (5.3.2010 முதல் 11.3.2010 வரை), சற்றேறக்குறைய ரூ. 14,600/- (ரூபாய் பதினான்காயிரத்து அறுநூறு) வசூல் கொடுத்துள்ளது. இது ஒரு சிகர சாதனை.

இத்திரைக்காவியத்தைத் திரையிட்டவருக்கு, எல்லாப் பிடிப்புகளும், செலவுகளும் போக, ரூ.3000/-த்துக்கும் மேல் (ரூபாய் மூவாயிரத்துக்கும் மேல்) லாபம் கிடைத்துள்ளது.

தங்கப்பதக்கம் என்றுமே சொக்கத்தங்கம்!!!

பெருமிதத்துடன்,
பம்மலார்.

RAGHAVENDRA
13th March 2010, 06:59 AM
Dear Rangan,
Thank you for your kind words. In all NT has no generation bar. He is beyond caste, creed, gender, nationaity, generation, time or whatever it may be. He is beyond all these limitations.

Dear Karthik (Harish),
தங்களுடையா வாழ்த்துக்களுக்கு மிகவும் நன்றி. நீங்கள் சொல்வதும் உண்மை. நடிகர் திலகத்தின் ஒவ்வொரு ரசிகரும் மற்றவர்களின் ஒரு லட்சம் ரசிகர்களுக்கு சமம் என்பது ஆணித்தரமான உண்மை. அதை நான் ஏற்றுக் கொள்கிறேன்.

அதற்கு சிறந்த உதாரணம் இத்திரியிலேயே நாம் காணும் முரளி சீனிவாஸ், பம்மலார், சாரதா உள்பட நீங்கள் ஒவ்வொருவருமே.

நடிகர்திலகம் நம்மோடு தான் இருக்கிறார் என்பதையே இது காட்டுகிறது.

ராகவேந்திரன்

rangan_08
13th March 2010, 02:41 PM
.

ஆக, பகல் காட்சியிலேயே, தங்கப்பதக்கம், ஒரு வார காலகட்டத்தில் (5.3.2010 முதல் 11.3.2010 வரை), சற்றேறக்குறைய ரூ. 14,600/- (ரூபாய் பதினான்காயிரத்து அறுநூறு) வசூல் கொடுத்துள்ளது. இது ஒரு சிகர சாதனை.



:clap: :notworthy:

rangan_08
13th March 2010, 02:42 PM
ரங்கன் சார்,
கடந்த ஒரு வாரமாக இந்த திரியில் தங்களின் பங்களிப்பு மெய்சிலிர்க்க வைக்கிறது.இந்த திரியின் ஜாம்பவான்கள் வரிசையில் தாங்களும் சேர்ந்துவிட்டீர்கள்.வாழ்த்துக்கள்.

thanks harish. neengalum asathikittuthan irukeenga.

rangan_08
13th March 2010, 02:45 PM
[tscii:da9083af2c]Murali sir often use to say here that much before the famous “ meen kuzhambu “ scene from “ Mudhal Mariyadhai “ there is a wonderful scene in “ Uyarndha Manidhan “. Sivakumar serves spicy “ kuruma” to NT and NT’s performance in that scene is extra ordinary. None of NT fans can disagree with Murali sir on this. We all love that scene.

There’s another favourite scene of mine from the same film. Asokan, in an inebriate condition drops in at NT’s place to reveal the “ truth” to him. This is a scene where Asokan is supposed to score the maximum and he gives his best shot utilising all his gimmicks to the max and as usual making jarring noice. NT gives his absolute support by staying quiet. The moment Asokan accuses NT as a coward, the final take-off begins and NT, effortlessly emerges as the winner.

It is a close-up shot and NT, with all emotion in his face, recites a lengthy dialogue. All the while, tears will be dancing in his eyes waiting to get his permission to roll down. Whenever I watch it, this particular scene makes me dumbfound.

NT is a master in this act.

:notworthy:
[/tscii:da9083af2c]

HARISH2619
13th March 2010, 03:56 PM
ரங்கன் சார்,
கடந்த ஒரு வாரமாக இந்த திரியில் தங்களின் பங்களிப்பு மெய்சிலிர்க்க வைக்கிறது.இந்த திரியின் ஜாம்பவான்கள் வரிசையில் தாங்களும் சேர்ந்துவிட்டீர்கள்.வாழ்த்துக்கள்.

thanks harish. neengalum asathikittuthan irukeenga.

மிக்க நன்றி ரங்கன் சார்.'
உங்களின் வர்ணனை அந்த காட்சியை மீன்டும் ஒரு முறை பார்க்கவேன்டும் என்ற ஆவலை தூண்டுகிறது.

பம்மல் சார்,
thank you so much for the details of TP collections.Hope sivaji week will set a new record in old movie collections in chennai.

rangan_08
13th March 2010, 05:07 PM
Harish, while acknowledging your kind words, I would also like to say that I really don't deserve the title. " Jambavan " is too big a word for me. I'm just an ordinary fan unlike the real jambavans, Raghavendra sir, Murali sir, Pammalar, Saradha mam & a hand full of others. They have all the statistics regarding NT right in their finger tips and I'm very poor in that subject. Besides they do a lot of service to spread the glory & fame of NT. All I know is just to watch thalaivar's films and share my views with other fans, that's it. :)

pammalar
13th March 2010, 09:41 PM
7.3.2010(ஞாயிறு) தேதியிட்ட தினமணி நாளிதழில், "வாழ்க ஊடக தர்மம் " என்கின்ற தலைப்பில் வெளியாகியுள்ள செய்திக் கட்டுரையிலிருந்து: (எழுதியவர் : துரும்பு)

"தொலைக்காட்சி சேனல்கள் அனைத்தும் போட்டி போட்டுக் கொண்டு, நேயர்களைத் தங்கள் பக்கம் இழுக்க அல்லது தக்க வைத்துக் கொள்ள முயன்றதால், கடந்த வாரம் பரபரப்புக்கும், விறுவிறுப்புக்கும் பஞ்சமில்லை.

கலைஞர் தொலைக்காட்சியில், சனிக்கிழமையின் (27.2.2010) தொடர்ச்சியாக பாசத்தலைவனுக்குப் பாராட்டு விழா, ஞாயிறன்றும் (28.2.2010) ஒளிபரப்பானது. ஞாயிறன்று கலைஞர் தொலைக்காட்சியில், பாசத்தலைவனுக்குப் பாராட்டு விழாவில் ஒளிபரப்பான, கலைஞரின் திரை வாழ்க்கைப் பயணத்தை விளக்கும் தொகுப்பு, நிகழ்ச்சியின் போக்கையே திசை திருப்பி விட்டது எனலாம். நடிகர் திலகம் சிவாஜி கணேசன், சேரன் செங்குட்டுவனாக, கலைஞரின் மிக நீண்ட வசனத்தைப் பேசி நடித்த காட்சி திரையில் தோன்றியதும், அரங்கமே அசைவற்றுப் போனது.

அரங்கில் கூடியிருந்த கூட்டம், சிம்மக்குரலில் சிவாஜி பேசிய வசனத்தில் மயங்கியதா, உடலின் ஒவ்வோர் அங்கமும் வசனத்திற்கேற்ப நடித்த நடிப்பில் மயங்கியதா என்பதைப் பிரித்தறிவது கடினம். காட்சி முடிந்ததும், கண்கள் கலங்க, நெஞ்சம் நெகிழ, அத்தனை பேரும் எழுந்து நின்று அரங்கம் அதிர எழுப்பிய கரவொலியில், கமல், ரஜினி, விஜய், சூர்யா, சர்ச்சையைக் கிளப்பிய அஜீத்தின் பேச்சு என அத்தனையும் மறந்து போனது மட்டுமல்ல, தமிழக மக்களின் நினைவுகளில் நிறைந்து, உணர்வுகளில் கலந்து, உயிர்களோடு ஒன்றிப் போன, சிவாஜி என்கிற சகாப்தம், சிறிய திரைத் துணுக்கு வடிவில் வந்து, பாசத்தலைவனின் பாராட்டு விழாவைத் தனதாக்கிக் கொண்டது."

தினமணியில் வெளியான இத்தகவலை, எமக்கு வழங்கிய ரசிக நல்லிதயம் திரு.கே.மகேஷ் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி!

அன்புடன்,
பம்மலார்.

pammalar
13th March 2010, 10:26 PM
சாதனைகளின் சக்கரவர்த்தி - 1

வெள்ளித்திரை வேந்தரின் வெள்ளிவிழாக் காவியங்கள்:
[காவியம்(வருடம்) - ஓடிய நாட்கள் என்கின்ற ஃபார்மெட்டில்]

1. பராசக்தி(1952) - 294 நாட்கள்

2. வீரபாண்டிய கட்டபொம்மன்(1959) - 181 நாட்கள்

3. பாகப்பிரிவினை(1959) - 216 நாட்கள்

4. பாவமன்னிப்பு(1961) - 177 நாட்கள்

5. பாசமலர்(1961) - 176 நாட்கள்

6. திருவிளையாடல்(1965) - 179 நாட்கள்

7. தர்த்தி[ஹிந்தி](1970) - 266 நாட்கள்

8. பட்டிக்காடா பட்டணமா(1972) - 182 நாட்கள்

9. வசந்த மாளிகை(1972) - 287 நாட்கள்

10. தங்கப்பதக்கம்(1974) - 181 நாட்கள்

11. உத்தமன்(1976) - 203 நாட்கள்

12. தியாகம்(1978) - 175 நாட்கள்

13. பைலட் பிரேம்நாத்(1978) - 222 நாட்கள் (ஷிஃப்டிங் முறையில் 1080 நாட்கள்)

14. திரிசூலம்(1979) - 200 நாட்கள்

15. தீர்ப்பு(1982) - 177 நாட்கள்

16. நீதிபதி(1983) - 175 நாட்கள்

17. சந்திப்பு(1983) - 175 நாட்கள்

18. முதல் மரியாதை(1985) - 200 நாட்கள்

19. படிக்காதவன்(1985) - 175 நாட்கள்

20. தேவர் மகன்(1992) - 180 நாட்கள்

21. படையப்பா(1999) - 210 நாட்கள்

22. ஸ்கூல் மாஸ்டர்[கன்னடம்](1958) - 188 நாட்கள் (கெளரவத் தோற்றம்)

மிகப் பெரிய திரையரங்குகளில், ரெகுலர் காட்சிகளாக, இத்தனை வெள்ளிவிழாப் படங்கள், தமிழ்த் திரைப்பட வரலாற்றிலேயே, நமது நடிகர் திலகம் ஒருவரைத் தவிர, வேறு எவருக்கும் இல்லை.

சாதனைகள் எனும் சாம்ராஜ்யத்திற்கு நிரந்தர சக்கரவர்த்தி சிங்கத்தமிழன் சிவாஜி ஒருவரே!

அன்புடன்,
பம்மலார்.

Karikalen
13th March 2010, 10:43 PM
சாதனைகளின் சக்கரவர்த்தி - 1

வெள்ளித்திரை வேந்தரின் வெள்ளிவிழாக் காவியங்கள்:
[காவியம்(வருடம்) - ஓடிய நாட்கள் என்கின்ற ஃபார்மெட்டில்]

1. பராசக்தி(1952) - 294 நாட்கள்

2. வீரபாண்டிய கட்டபொம்மன்(1959) - 181 நாட்கள்

3. பாகப்பிரிவினை(1959) - 216 நாட்கள்

4. பாவமன்னிப்பு(1961) - 177 நாட்கள்

5. பாசமலர்(1961) - 176 நாட்கள்

6. திருவிளையாடல்(1965) - 179 நாட்கள்

7. தர்த்தி[ஹிந்தி](1970) - 266 நாட்கள்

8. பட்டிக்காடா பட்டணமா(1972) - 182 நாட்கள்

9. வசந்த மாளிகை(1972) - 287 நாட்கள்

10. தங்கப்பதக்கம்(1974) - 181 நாட்கள்

11. உத்தமன்(1976) - 203 நாட்கள்

12. தியாகம்(1978) - 175 நாட்கள்

13. பைலட் பிரேம்நாத்(1978) - 222 நாட்கள் (ஷிஃப்டிங் முறையில் 1080 நாட்கள்)

14. திரிசூலம்(1979) - 200 நாட்கள்

15. தீர்ப்பு(1982) - 177 நாட்கள்

16. நீதிபதி(1983) - 175 நாட்கள்

17. சந்திப்பு(1983) - 175 நாட்கள்

18. முதல் மரியாதை(1985) - 200 நாட்கள்

19. படிக்காதவன்(1985) - 175 நாட்கள்

20. தேவர் மகன்(1992) - 180 நாட்கள்

21. படையப்பா(1999) - 210 நாட்கள்

22. ஸ்கூல் மாஸ்டர்[கன்னடம்](1958) - 188 நாட்கள் (கெளரவத் தோற்றம்)

மிகப் பெரிய திரையரங்குகளில், ரெகுலர் காட்சிகளாக, இத்தனை வெள்ளிவிழாப் படங்கள், தமிழ்த் திரைப்பட வரலாற்றிலேயே, நமது நடிகர் திலகம் ஒருவரைத் தவிர, வேறு எவருக்கும் இல்லை.

சாதனைகள் எனும் சாம்ராஜ்யத்திற்கு நிரந்தர சக்கரவர்த்தி சிங்கத்தமிழன் சிவாஜி ஒருவரே!

அன்புடன்,
பம்மலார்.

Fabulous achievement by the legend. I am surprised that Thillana Mohanammal and Vellai Roja are not in the list. It is great to know that he was involved in massive hits until the beginning of the new century. That is close to 50 years of pure achievement. I doubt very much if another actor will be able to match this.

Murali Srinivas
14th March 2010, 12:34 AM
மோகன்,

முன்பெல்லாம் தினசரி நமது திரியில் உங்கள் பங்களிப்பு இருக்கும். சில பல மாதங்களாக [உங்கள் அலுவலக பொறுப்பு காரணமாக] அவை குறைந்திருந்தன. அதற்கு வட்டியும் முதலுமாக இப்போது செலுத்திக் கொண்டிருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன். உயர்ந்த மனிதன் பற்றி நீங்கள் சொன்னது மிகச் சரி. ஏ.வி.எம்.சரவணன் சொன்னது நினைவுக்கு வருகிறது. அந்த காட்சியை எப்படி செய்ய வேண்டும் என்று அசோகனுக்கு நடித்துக் காட்டியதே நடிகர் திலகம்தான் என்ற அவர், நடிகர் திலகம் செய்ததில் ஒரு கால் பங்கு மட்டுமே அசோகன் செய்தார் எனச் சொன்னார்.

செந்தில்,

லிஸ்டில் உள்ள சில படங்கள் மன்னவன் வந்தானடி மற்றும் பாரத விலாஸ் பற்றி சொல்லியிருக்கிறீர்கள். மன்னவன் வந்தானடி வெகு பல காலமாக டி,வியில் கூட ஒளிப்பரப்படவில்லை என்று நினைக்கிறேன். ஆகவே ரசிகர்கள் அதை சேர்த்திருக்கிறார்கள். ஒரு நகைச்சுவை cum தேசிய நீரோட்டத்தில் இணைந்த படம் என்ற கோணத்தில் பாரத விலாஸ் தெரிவு செய்யப்பட்டிருக்கிறது. செந்தில், மேலும் ஒரு விஷயம். 28 -ந் ஞாயிறன்று எங்கள் தங்க ராஜா மாலைக்காட்சிக்கு பெங்களூரிலிருந்து ரசிகர்கள் வருவதாக செய்தி வந்திருக்கிறது என்று சுவாமி சொன்னார்.

ஒரு சுவாரஸ்யமான விஷயம். இப்படி ஒரு சிவாஜி வாரம் சென்னையில் நடைபெறப் போகிறது என்ற செய்தியை சுவாமி அவர்கள் மதுரை ரசிகர்களோடு பகிர்ந்துக் கொண்ட போது நன்றாக போகும் என்று நினைக்கிறோம் என்று சொன்னாராம். அதற்கு மதுரை ரசிகர்கள் உடனே பதில் சொன்னார்களாம் "உங்கள் ஊரில் நன்றாக போகும். இதையே எங்கள் ஊரில் திரையிட்டிருந்தால் வசூலில் ரிகார்ட் பிரேக்கே செய்திருக்கும்".

கரிகாலன் & செந்தில்,

உங்கள் பாராட்டுகளை எல்லாம் சுவாமியின் இந்த பட்டியல்களுக்கே [தங்கப்பதக்கம் வசூல் மற்றும் வெள்ளி விழாப் படங்களின்] கொடுத்து விடாதீர்கள். ஒரு சில டேட்டா -களை அவர் சேகரித்துக் கொண்டிருக்கிறார். அவை நமக்கு மிகுந்த சந்தோஷத்தைக் கொடுக்கப் போகிறது என்ற சுவையான முன்னோட்டத்தை மட்டும் சொல்லிக் கொள்கிறேன்.

அன்புடன்

சுவாமி,

தினமணி நாளிதழில் துரும்பு எழுதிய கரும்பு விஷயத்திற்கு நன்றி.

saradhaa_sn
14th March 2010, 11:18 AM
டியர் மோகன்..

முரளியண்ணா சொன்னது போல, தங்களின் தொடர்ந்த பங்களிப்பு மகிச்சியைத்தருகிறது. இது தொய்வில்லாமல் தொடரட்டும்.

டியர் செந்தில்...

உங்களின் பங்களிப்பும் அப்படியே. நீங்கள் குறிப்பிட்ட பாரத விலாஸ் மற்றும் மன்னவன் வந்தானடி ஆகியன வெளியான காலத்தில் 100 நாட்களுக்கு மேல் ஓடிய வெற்றிப்படங்களே. மேலும் 'மன்னவன் வந்தானடி' சமீப காலமாக ரசிகர்கள் பார்வைக்குக் கிடைக்கவில்லை. எனவே அவை திரையிடப்படுவது பொருத்தமே. இம்முயற்சி வெற்றிகரகமாக அமையும் பட்சத்தில், நடிகர்திலகத்தின் மற்ற காவியங்களும் சென்னை அரங்குகளில் வலம் வரும் என்பது திண்ணம். பம்மலார் அவர்கள் அளித்துள்ள 'தங்கப்பதக்கம்' (ஸ்டார்) வசூல் விவரம் அம்முயற்சிகளில் இறங்குவோருக்கு உரமிடும் வண்ணமாக அமைந்துள்ளது.

டியர் பம்மலார்...

நடிகர்திலகத்தின் 'வெள்ளிவிழாப்பட்டியல்' அபாரம். அவற்றில் முதல் 17 படங்களே நாம் பூரண உரிமையுடன் சொந்தம் கொண்டாட முடிந்தவை என்பது என் எண்ணம். (நீங்கள் இன்னும் ஏதோ ஒரு பெரிய முயற்சியில் ஈடுபட்டிருப்பதாக முரளியண்ணா இங்கே சொல்லி, எங்கள் ஆவலைக் கிளறிவிட்டுள்ளார். அது என்ன என்பதையறிய மிகுந்த ஆர்வமாயிருக்கிறோம்). கலைஞரின் பாராட்டுவிழாவில் சிங்கதமிழனின் சிம்ம கர்ஜனையில் அரங்கமே உறைந்துபோனது மட்டுமல்லாது, அவ்வப்போது உணர்ச்சிப்பெருக்கில் கைதட்டலும் ஆரவாரமும் வந்துகொண்டேயிருந்தது. (நடிகர் கார்த்திக் கண்களில் நீர் துளிர்த்ததை கவனித்தீர்களா?). இறுதியில் கர்ஜனை ஓய்ந்தபோது அரங்கம் முழுதும் எழுந்து நின்று கையொலி எழுப்பியது. இதை இங்கு நாமே எழுதுவதை விட, தினமணியில் பிரசுரமாகி மக்களிடம் சென்றடைந்தது மனதுக்கு மகிழ்ச்சியும் நெகிழ்ச்சியும் அளிக்கிறது. 'நான் இன்னும் வாழ்கிறேன்' என்று அந்த பிரம்மாண்ட அரங்கில் நிரூபித்தார் நடிகர்திலகம்.

டியர் கரிகாலன்.....

உங்கள் பங்களிப்புக்கு நன்றி. உங்கள் ஆதங்கம் நியாயமானதே. மேலும் பல படங்கள் வெள்ளிவிழாவை நெருங்கும் வாய்ப்பைப்பெற்றும் இடையில் நிறுத்தப்பட்டன. அவற்றில் குறிப்பிடத்தக்கவை...

பாலும் பழமும் - 133 நாட்கள்
சரஸ்வதி சபதம் - 133 நாட்கள்
தில்லானா மோகனாம்பாள் 133 நாட்கள்
சிவந்த மண் - 145 நாட்கள்
(எனக்கு சட்டென்று தோன்றியவை இவை. இன்னும் பல இருக்கின்றன).

joe
15th March 2010, 06:04 PM
கண்ணதாசன் எழுத வேண்டும்,​​ டி.எம்.​ சௌந்தரராஜன் பாட வேண்டும்,​​ சிவாஜி கணேசன் வாயசைக்க வேண்டும்.​ அப்படிப்பட்ட பாடல் நூறாண்டுகள் நிலைத்து விடும்.​

- கண்ணதாசன் விழாவில் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம்

abkhlabhi
15th March 2010, 06:07 PM
Giving few paras of the Income tax case between Dhanalakshmi Pictures and CIT. Madras - 1980


[1983] 144 ITR 452 (MAD.)


HIGH COURT OF MADRAS

Dhanalakshmi Pictures vs Commissioner of Income-tax

V. RAMASWAMI AND V. BALASUBRAHMANYAN, JJ.

TAX CASE NO. 460 OF 1976

SEPTEMBER 3, 1980

Para 2 :

..........................In these circumstances the ITO proceeded to make the assessment under section 144 of the Act on the firm as an unregistered firm. The ITO noticed that the assessee was carrying on the business of distribution of films during the year in Salem district, with a branch office at Salem. From the information available to the ITO he found that two films were distributed by the assessee during the year, viz., Vietnam Veedu and Kulama Gunama. The ITO found that in both these films, there was a popular artiste in the leading role and one of the films had a successful run of over 102 days in a theatre at Salem and for 55 days in a theatre at Vellore. The ITO noticed that the film Kulama Gunama was released by the assessee at Apsara Talkies at Vellore on March 26, 1971, and although this film had run only for a few days, the other film Vietnam Veedu had run throughout the year in the District of North Arcot, as a box office hit.


Para 4
..........................The Tribunal also, at the same time, recorded the argument addressed on behalf of the Department to the effect that the ITO had come to know on enquiry that the assessee had in fact distributed two films in the North Arcot District also, in addition to distribution of films in the districts of Salem and Dharmapuri. The Tribunal having recorded the rival contentions of the parties, proceeded to found that Vietnam Veedu was a successfully run picture which had celebrated the 100th day of its run in the relevant account year

abkhlabhi
15th March 2010, 06:13 PM
One more proof here, NT always a BO Hero.

Giving few paras of the Income tax case between Dhanalakshmi Pictures and CIT. Madras - 1980


[1983] 144 ITR 452 (MAD.)


HIGH COURT OF MADRAS

Dhanalakshmi Pictures vs Commissioner of Income-tax

V. RAMASWAMI AND V. BALASUBRAHMANYAN, JJ.

TAX CASE NO. 460 OF 1976

SEPTEMBER 3, 1980

Para 2 :

..........................In these circumstances the ITO proceeded to make the assessment under section 144 of the Act on the firm as an unregistered firm. The ITO noticed that the assessee was carrying on the business of distribution of films during the year in Salem district, with a branch office at Salem. From the information available to the ITO he found that two films were distributed by the assessee during the year, viz., Vietnam Veedu and Kulama Gunama. The ITO found that in both these films, there was a popular artiste in the leading role and one of the films had a successful run of over 102 days in a theatre at Salem and for 55 days in a theatre at Vellore. The ITO noticed that the film Kulama Gunama was released by the assessee at Apsara Talkies at Vellore on March 26, 1971, and although this film had run only for a few days, the other film Vietnam Veedu had run throughout the year in the District of North Arcot, as a box office hit.


Para 4
..........................The Tribunal also, at the same time, recorded the argument addressed on behalf of the Department to the effect that the ITO had come to know on enquiry that the assessee had in fact distributed two films in the North Arcot District also, in addition to distribution of films in the districts of Salem and Dharmapuri. The Tribunal having recorded the rival contentions of the parties, proceeded to found that Vietnam Veedu was a successfully run picture which had celebrated the 100th day of its run in the relevant account year

NOV
15th March 2010, 06:18 PM
watched AnbE Aaruyire one more time. eththanai thadavai paarththaalum salikkaadha comedy. NT is excellent in comic roles :thumbsup:
18 year old son was :rotfl: most of the time.

[html:c87357a57e]
http://www.jointscene.com/ahtees/admin/movies/content/6517_17_ANBE%20AARUYIRE%20(1975).jpg
[/html:c87357a57e]

rangan_08
15th March 2010, 07:00 PM
Pammalar sir, thanks for the Dinamani article.

Murali sir, thank you. Inspite of my tough schedule, I'm trying my best to visit the hub regularly and will be glad if it continues in the same manner.

And, by looking at the ways things are shaping up for NT fest (your news about B'lore fans), I think we need to make advance booking for Engal Thanga Raja :D

Saradha mam, thank you so much for your kind words & wishes.

rangan_08
15th March 2010, 07:02 PM
[tscii:4230ba4cd0]I can talk for hours together about Gowravam & Barrister Rajinikanth because it has cast such an indelible mark on me. He mesmerizes and ties me up with his superlative performance. I will even go on to the extent of saying that of all the characters that NT played, Barrister Rajinikanth tops the list in my books. Just a small sample….

When Kannan says to Rajnikanth that he is going to appear as the Public Prosecutor in Mohandoss case, Rajnikanth is shocked but, doesn’t reveals it. He maintains his cool and says,

Kanna, onnu pannu

Enna periappa

Aatha vittu poyidu


Wow!! He just says it as a matter of fact. So very bland.

If SP Choudhary had set the ball rolling for all cop stories in tamil cinema, it is Barrister Rajinikanth who created a bench mark for style and sophistication :thumbsup: :notworthy: .
[/tscii:4230ba4cd0]

HARISH2619
16th March 2010, 12:07 PM
திரு முரளி சார் & திருமதி சாரதா மேடம்,
விளக்கத்திற்க்கு நன்றி.என்னுடைய ஆதங்கம் என்னவென்றால்,ஆரவாரமிக்க ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கும் ரசிகர்களின் உற்சாக வெள்ளத்தை கரைபுரண்டு ஓடச்செய்ய ஒரு பாரிஸ்டர் ரஜினிகாந்த்,ஒரு பட்டாக்கத்தி பைரவன்,ஒரு ராஜபார்ட் ரங்கதுரை அளவுக்கு மற்ற படங்களும் இருக்க வேன்டுமே என்பதுதான்.

முரளி சார்,
தினமும் ஒரு பூச்செண்டு கொடுத்து வரும் பம்மலார் அவர்கள் விரைவில் ஒரு பூந்தோட்டத்தையே தரப்போகிறார் என்ற இனிக்கும் செய்தியை தந்ததற்க்கு நன்றி.

groucho070
16th March 2010, 12:47 PM
[tscii]I can talk for hours together about Gowravam & Barrister Rajinikanth because it has cast such an indelible mark on me. He mesmerizes and ties me up with his superlative performance. I will even go on to the extent of saying that of all the characters that NT played, Barrister Rajinikanth tops the list in my books.:thumbsup: My sentiments exactly.

When Kannan says to Rajnikanth that he is going to appear as the Public Prosecutor in Mohandoss case, Rajnikanth is shocked but, doesn’t reveals it. He maintains his cool and says,

Kanna, onnu pannu

Enna periappa

Aatha vittu poyidu


Wow!! He just says it as a matter of fact. So very bland.

Not to mention he was plainly drunk, anger boiling in him

BR: Kanna onnu pannu (heads bobbing a bit, drunk and controlling himself)
K: Enna periappa (thinking it might be normal favour thingy like asking to move that damned bail or something)

BR: Aatha vittu poyidu (like Rangan said, calm, still drunk, almost blowing his top here).

K: Periyappa!!!! (didn't expect it at all).

BR: (loses it) Get out, dammitTTT!!!!

Again, the co-ordination between the two actors...oh crap, co-ordination between NT & NT, unmaiyana two actors-kku kuda irukkathu :notworthy: :notworthy:

rangan_08
16th March 2010, 06:55 PM
Not to mention he was plainly drunk, anger boiling in him

BR: Kanna onnu pannu (heads bobbing a bit, drunk and controlling himself)
K: Enna periappa (thinking it might be normal favour thingy like asking to move that damned bail or something)

BR: Aatha vittu poyidu (like Rangan said, calm, still drunk, almost blowing his top here).

K: Periyappa!!!! (didn't expect it at all).

BR: (loses it) Get out, dammitTTT!!!!

Again, the co-ordination between the two actors...oh crap, co-ordination between NT & NT, unmaiyana two actors-kku kuda irukkathu :notworthy: :notworthy:

That makes my post complete. Thanks groucho.

:clap:

rangan_08
16th March 2010, 06:59 PM
மன்னவன் வந்தானடி வெகு பல காலமாக டி,வியில் கூட ஒளிப்பரப்படவில்லை என்று நினைக்கிறேன். ஆகவே ரசிகர்கள் அதை சேர்த்திருக்கிறார்கள்.

A couple of months ago we had a discussion here about the song, " Naan naata thirutha poren, andha koataya pudikka poren ". Is it from Mannavan Vandhanadi ?

rangan_08
16th March 2010, 07:01 PM
[tscii:29b06a67bd]NO PUCH DIALOGUES, NO FAST CUTS, NO GREAT BGM’S, NO COLOUR ( in some cases) & NO BUIL-UP. Here are some fantastic & dashing opening scenes for NT :

1. GOWRAVAM
2. DEIVA MAGAN
3. THANGAPPADAKKAM
4. RAJA
5. THILLANA MOHANAMBAL
6. SAVALE SAMALI
7. SUMATHI EN SUNDARI
8. THIRUVILAYADAL
9. VASANTHA MALIGAI
10. BABU

People can add on more to the list.
[/tscii:29b06a67bd]